தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பிங்கலகேசி

பொன்னிறமான மயிர்முடியை உடையாளொரு தலைவி யினுடைய பிறப்பு பண்புவரலாறு ஆகியவை கூறும் தொடர் நிலைச் செய்யுளும் அவள் பெயரால்அப்பெயர்த் தாயிற்று.பிங்கலகேசியின் முதற்பாட்டின் இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப்புரிக்காகப் புணர்க்கப்பட்டது. (யா. வி. பக். 39, 520)

பிங்கலம்

பிங்கலம் வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன்கண் விருத்தசாதிவிகற்பங்கள் பலவும் விரித்துக் கூறப் பட்டுள்ளன. நான்கடியும் ஒத்தும்ஒவ்வாதும் பருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும்,பிறவாற்றான் வருவனவும், மாராச்சையும் மிச்சாகிருதி முதலாகிய சாதியும்,ஆரிடமும் பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும் பிங்கலம் முதலியவடமொழி யாப்புநூல்களில் விரித்துக் கூறப்பட் டுள்ளன. (யா. வி. பக்.370, 486)

பிச்சியார்

கலம்பக உறுப்புப் பதினெட்டனுள் ஒன்று; சைவத்தவக் கோலத்தில் பிச்சையிரந்து நிற்பாளொருத்தியைக் காமுகன் ஒருவன் காமுற்றுப் பாடுவது.தவ வேடத்தில், நெற்றியில் திருநீறு அணிந்து கையில் சூலம் ஏந்திஇல்லம்தோறும் பிச்சை ஏற்றுச் செல்லும் இளம்பெண் ணின் வடிவழகு தன்உள்ளத்தைப் பிணித்த செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக்கூறுவதாகஅமைந்த அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது. (மதுரைக்கல. 33)

பிடா என்ற மரப்பெயர் புணருமாறு

பிடா என்ற மரப்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அகரஎழுத்துப்பேறளபெடையோடு, இனமெல்லெழுத்து மிகுத லும், அவ்வல்லெழுத்தேமிகுதலும், உருபிற்குச் செல்லும் இன்சாரியை பெறுதலும் ஆம்.எ-டு : பிடா + கோடு = பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு, பிடாவின்கோடு;பிடாஅத்துக் கோடு என அத்துப் பெறுதலுமுண்டு. (தொ. எ. 229, 230 நச்.உரை)

பிட்டன் + கொற்றன் : புணருமாறு

பிட்டனுக்கு மகன் கொற்றன் என்ற கருத்தில், நிலைமொழி ‘அன்’ கெட்டு‘அம்’ புணர்ந்து, அது வருமொழிக் கேற்பத் திரிந்தது என்று கூறுவதைவிட,நிலைமொழி ஈற்று னகரம் வருமொழிக்கேற்ற மெல்லெழுத்தாகத் திரியும் என்றல்ஏற்றது.பிட்டன் + கொற்றன் = பிட்டங் கொற்றன்; அந்துவன் + சாத்தன் =அந்துவஞ் சாத்தன்; விண்ணன் + தாயன் = விண்ணந்தாயன்; கொற்றன் + பிட்டன்= கொற்றம் பிட்டன் (எ. ஆ. பக். 158)

பிந்துமதி

சித்திரகவியுள் ஒன்று. எல்லா எழுத்தும் புள்ளியுடையன வாகவேவருவது.எ-டு : ‘நெய்கொண்டெ னெற்கொண்டெ னெட்கொண்டென்செய்கொண்டென் செம்பொன்கொண் டென்.’(முன்பு எகர ஒகரங்கள் குறில் எனக் காட்டப்புள்ளி பெற்ற னவாய்எழுதப்பட்டன.) (யா. வி. பக். 548)

பின் என்ற சொல் புணருமாறு

பின் என்ற சொல் பின்னுதல் தொழிலையும், கூந்தலை வாரிப் பின்னியபின்னலையும் உணர்த்தும். இஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும்வன்கணம் வந்துழி உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வந்துழி உகரமும், உயிர் வந்துழி ஒற்றிரட்டுதலும் பெற்றுப்புணரும்.எடு : பின்னுக்கடிது; பின்னு நன்று, பின்னு வலிது, பின் யாது,பின் னரிது; பின்னுக்கடுமை; பின்னுநன்மை, பின்னுவலிமை, பின்யாப்பு,பின்னருமை. (தொ. எ. 345 நச்.)பின் என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களுள்ஒன்று. இது பெயராகவும் வினை யெச்சமாகவும் நிற்கும். இடைச்சொல்லும்வினையெச்சமும் இயல்பாக முடியும்.எ-டு : என்பின் சென்றான், உண்டபின் சென்றான்பின் என்ற பெயர் வன்கணம் வருமொழியாக வந்துழி, பிற் கொண்டான் – எனனகரம் றகரமாகத் திரிந்தும், பின்கொண் டான் – என இயல்பாகவும் புணரும்.(தொ. எ. 333 நச்.)

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறல்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்றவற்றை முறையே இறந்ததுவிலக்கல், எதிரது போற்றல் – என்னும் உத்திகளால் விலக்கியும்போற்றியும் கூறுதல் முதலியன (வழிநூற்குப்) பின்னோன் வேண்டும் விகற்பம்கூறலாம். (நன். 7 சங்கர.)

பிபீலிகா மத்திமம் (1)

முதலடியும் ஈற்றடியும் எழுத்து மிக்கு, நடு இரண்டடியும் எழுத்துக்குறைந்து நாலடியும் சீரொத்து வரும் செய்யுள்.எ-டு : ‘பரவு பொழுதெல்லாம் பன்மணிப்பூட் டோவாவரவும் இனிக்காணும் வண்ணநாம் பெற்றேம்விரவு மலர்ப்பிண்டி விண்ணோர் பெருமான்இரவும் பகலும்வந் தென்தலைமே லானே’இதன்கண் முதலடியும் ஈற்றடியும் 13 எழுத்துப் பெற்றுவர, நடுஇரண்டடியும் 12 எழுத்துப் பெற்று வந்தவாறு. இஃது எறும்பின் உடலின்இடைப்பகுதிபோல இடையடிகள் இரண்டும் எழுத்துக் குறைந்துசுருங்கிவருவதால், தமிழில் ‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என்று இதனைமொழி பெயர்த்துக் கூறுவர். (யா. வி. பக். 515)

பிபீலிகா மத்திமம் (2)

எறும்பின் உடலிடை போல இடைப்பகுதி சுருங்கிவரும் பாடல்;‘எறும்பிடைச் சந்தச் செய்யுள்’ என (யா.வி.உரை) குறிக்கும் பாடல் (பக்.518), அளவழிச் சந்தச் செய்யுளெனவும் வழங்கும். அளவழிச்சந்தச்செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து, முதலடியும் முடிவடியும்எழுத்தெண்ணிக்கையில் ஒத்து, இடையிரண்டடியும் ஓரோரெழுத்து முறையேஎண்ணிக்கை குறைய நிகழ்வது இது; மேலைப் பிபீலிகா மத்திமத்தின் (1)சிறிதே வேறுபட்டது. (வீ.சோ. 139 உரை)எ-டு : மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும்சந்தனத்துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும்அணிமலர் நாற்றமும் என்ன அன்னவால்அணிவரு சிவகதி அடைவ தின்பமே’. (சூளா. 2075)இதன்கண், முதலடியும் ஈற்றடியும் எழுத்து 14; இரண்டாமடி எழுத்து 13;மூன்றாமடி எழுத்து 12 – என வந்தவாறு.

பிரகிருதி

இது தமிழில் முதனிலை எனவும், பகுதி எனவும் கூறப்படும். இதுபகுபதத்தினது முதல் பிரிவாய் நிற்றலின் முதனிலை (முதல் நிலை)எனப்பட்டது. பகாப்பதத்தின் சொல் முழுதும் பகுதியாம். இப்பகுதி,இடைநிலை விகுதி முதலிய ஏனை உறுப்புக்களொடு சேருமிடத்துவிகாரப்படுதலுமுண்டு. இரு, இடு முதலிய விகுதிகள் தன்னொடு சேரும்போதுஅவற்றைத் தன்னுள் அடக்கிய பகுதியாதலுமுண்டு. பகுதி இல்லாத சொல்லேஇல்லை எனலாம்.எ-டு : உண்டான் – உண் : பகுதியானை – இப்பகாப்பதம் முழுதும் பகுதி.வந்தான் – வா என்ற பகுதி குறுகி வ என நின்றது.எழுந்திருந்தான் – எழுந்திரு : பகுதிநட (ஏவலொருமை) – நட : பகுதி; ‘ஆய்’ விகுதி குன்றி வந்தது. (சூ.வி. பக். 41)

பிரகிருதி

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு 21 எழுத்தாக வரும்நாலடிச் செய்யுள்.எ-டு : ‘கந்தாரம் பாடியாடும் கான்மதுக ரமும் கன்னிகாரமும்செருந்தும்கொந்தாரும் குரவமும்கான் மலிதருங் கோகிலமும் தாதுகோதும்சந்தாரங் கோவையா ரமுந்தருணன் தடகடஞ்சா ரணங்கெள்ளிப்பார்வந்தார்தம் தேர்மிசையால் வரவுதனை அறிகுதிவண் தோகை நல்லாய்.’(வீ.சோ. 139 உரை)

பிரத்தரித்தல்

பிரத்தாரஞ் செய்தல். (L)

பிரத்தாரம்

கட்டளையடியிற் பல்வேறு வகையாக வரக்கூடும் அசை களையெல்லாம்மொத்தக் கணக்கிடுகை(யா. வி. பக். 503. ) (L)

பிரத்தியயம்

விகுதி இடைநிலை வேற்றுமையுருபுகள் ஆகிய இடைச் சொற்கள் வடமொழியில்பிரத்தியயம் எனப்படும். வடமொழி யில் விகுதியே காலம் காட்டலின்,இடைநிலை வினைமுதற் பொருண்மை முதலியன பற்றி வரும். (சூ. வி. பக்.55)

பிரத்தியயம்

தெளிவு; உறழ்ச்சி, கேடு, உத்திட்டம், இலகு குருச் செய்கை,விருத்தத் தொகை, நில அளவு என்பன ஆறும் தெளிவுகளாம். (வீ. சோ. 133)‘பிரத்தாரம் முதலாகிய ஆறு பிரத்தியயமும்’(யா. வி. பக். 502)

பிரபந்த தீபிகை

19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாட்டியல் நூல். ஆசிரியர்முத்துவேங்கட சுப்பையர் என்பார். இந்நூல் பி. பாஸ்கர ஐயரவர்களால்செந்தமிழில் (1918-19) வெளியிடப் பெற்றது. பன்னிரு சீர்க் கழிநெடிலடிஆசிரிய விருத்தமாக அமைந்த இதன் பாடல்கள் 26 கிடைத்துள. 26 ஆம் பாடலின்ஈற்றடி கிடைத்திலது. இன்னும் நான்கு பாடல்கள் இருந் திருக்கலாம்.கிடைக்கப்பெற்றவற்றுள் 80 பிரபந்த இலக் கணங்கள் சொல்லப்பட்டுள. எஞ்சியபாடல்கள் நான்கும் கிடைத்திருப்பின் 96 பிரபந்தங்களின் இலக்கணமும்முழுமை யாகப் பெறும் வாய்ப்புப் பெற்றிருப்போம். இலக்கண விளக்கம் -பாட்டியல் தஞ்சை சரசுவதி மகால் பதிப்பில் பிற்சேர்க்கையாக இந்நூல்சொற் பிரிப்போடு பொருள் புலப்படுவகையில் தரப்பட்டுள்ளது.

பிரபந்த மரபியல்

16ஆம் நூற்றாண்டில் இது தோன்றியது என்ப. இதன்கண் நூற்பாக்கள் 35உள. முதல் 21 நூற்பாக்களில் 96 பிரபந்த இலக்கணங்கள் குறிக்கப்பட்டுள.இந்நூலாசிரியர் பற்றிய செய்தி தெரியவில்லை.

பிரபந்தம்

தொடர்நிலைச் செய்யுளாகிய பிள்ளைத்தமிழ் கலம்பகம் பன்மணிமாலைமும்மணிக்கோவை முதலாயினவும், தனி நிலைச் செய்யுளாகிய வளமடல் உலாமடல்உலா அநுராக மாலை முதலாயினவும் பிரபந்தம் என்னும் பெயரால் பிற்காலத்தேவழங்கப்பட்டன. இப்பிரபந்தம் 96 வகைப்படும் என்ப. இவற்றின் இலக்கணம்கூறும் நூல் பாட்டியல் எனப்படும்பிரபந்தமானது சாதகத்தின் நிலையையும், திதி நிலை, வார நிலை,நாண்மீன் நிலை, யோக நிலை, கரண நிலை, ஓரை நிலை, கிரகநிலை ஆகியஇவ்வேழ்வகை உறுப்புக்களின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்துஅவற்றால் தலைவற்குறுவன கூறுவது என்னும் தொகையகராதி.

பிரமாணம்

லகுவும் குருவும் புணர்ந்து முறையே வரும் பாடல்.எ-டு : ‘கயற்க ருங்க ணந்நலார்முயக்க நீக்கி மொய்ம்மலர்புயற்பு ரிந்த புண்ணியர்க்கியற்று மின்க ளீரமே.’ (யா. வி. பக். 524)

பிரமாணம் ஆகாத நூல்கள்

சின்னூல் (-நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து,பிரயோக விவேகம், சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி,இலக்கணவிளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச்செய்யப்படினும், ஆசிரி யனது கருத்துணராமல் மரபுநிலை திரியச்செய்யப்பட்ட மையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம்.(பிரமாணம்-நூல்நெறிக்குச் சான்றாக எடுத்துக்காட்டாகத் திகழும்வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர்அரசஞ்சண்முகனார். (பா.வி. பக். 104, 105)

பிரயோக விவேகம்

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய, தமிழால் அமைந்த இலக்கண நூல். இதன்ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர். தமிழின் சொல்லிலக்கணத்தை வடமொழியின்சொல் லிலக்கணத்தோடு ஆய்ந்து உணர்த்தும் இந்நூற்கண் காரக படலம், சமாசபடலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்னும் நான்கு இயல்களும்அவற்றுள் 51 காரிகைச் சூத்திரங்களும் உள. நூலாசிரியரே உரையும்வரைந்துள்ளார். மிக நுண்ணிய திட்பம் வாய்ந்த உரை அது. வடமொழிக்கே உரியசெய்திகளொடு தமிழிற்கே உரிய செய்திகளும் பல இடங்களில் வரையறுத்துஉரைக்கப்பட்டுள. இருமொழிக் கும் பெரும்பான்மையும் இலக்கணம் ஒன்றே என்றகருத்தினர் இவ்வாசிரியர். இலக்கணத்கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகரும்இக்கருத்தினர். ஏற்ற வடமொழி இலக்கணச் சொற் களுக்கு விளக்கமாகஉரைச்சூத்திரம் பல இவ்வாசிரியர் ஆண்டாண்டு இயற்றியுள்ளமை இவ்வுரையின்தனிச்சிறப்பு.தற்சிறப்புப் பாயிரம் முதற்சூத்திரமாக அமைய, நூல் அரங்கேற்றம்இறுதிச்சூத்திரமாக அமைகிறது.1973 இல் வெளியிடப்பெற்ற தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு விரிவானவிளக்க உரையொடு நூலாசிரியர் கருத்தைத் தெளிவிக்க வல்லது.

பிராதிபதிகம்

பொருளுடையதாய், வினைமுதனிலை அல்லாததாய், இடைச் சொல் அல்லாததாய்வரும், பெயர் அடிப்படைச் சொல் வடமொழியில் பிராதிபதிகம் எனப்படும்.தமிழில் பிராதி பதிகமே முதல்வேற்றுமை ஆகும். வடமொழியில் பிராதி பதிகம்வேறு, முதல் வேற்றுமை ஏற்ற சொல்வடிவம் வேறு.உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொடராது பட்டாங்கு நிற்கும்பெயர்கள் பிராதிபதிகம் ஆம்.எ-டு : ஆ, அவன் (பி. வி. 7)

பிரித்துப் புணர்க்கப்படாத தொடர்கள்

‘புணரியல் நிலையிடை யுணரத் தோன்றாதன’ – காண்க.

பிரிந்தெதிர் செய்யுள்

முதலில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் ஈற்றெழுத்துத் தொடங்கி மடக்கிஎழுதப்பட்டால் பிறிதொரு செய்யுளாக அமையு மாறு பாடப்படும் சித்திரகவி.எ-டு : ‘நீர நாகமா, தார மாகமே,வார மாகமா, ணார ணாககா’.நீரநாக – நற்குணத்தவனே! நீரிலுள்ள பாம்பில் துயில்பவனே!மா தாரமாக – திருமகள் தேவியாக;மேவு ஆரம் ஆக – பொருந்திய மாலையை அணிந்த மார்பனே!மாண் ஆரண ஆக – மேம்பட்ட வேதவடிவினனே!கா – என்னைப் பாதுகாப்பாயாக.எதிரேறு வருமாறு:‘காக ணாரணா, மாக மாரவா,மேக மாரதா, மாக நார நீ’மாகமார் அவாம் – மேலுலகத்துள்ளார் விரும்பும்;நார – நற்குணத்தையுடையவனே!மேக மாக – மேக வடிவனே!மா ரதா – பெருவீரனே!நாரணா – நாராயணன் என்னும் திருநாமத்தோனே!நீ கண் – நீயே பற்றுக்கோடாவாய்;கா – காப்பாயாக. (பொருள் கொண்டுகூட்டியுரைக்கப் பட்டது) (மா. அ.பாடல் 796)

பிற மேல் தொடர்தல்

வன்மை ஊர் உகரம் தன் மாத்திரையின் குறுகுதற்கும் மொழிநிரம்புதற்கும் காரணம், அவ்வோரெழுத்துத் தொடர்தல் மாத்திரையின்அமையாது, பிற எழுத்துக்களுள் ஒன்றும் பலவும் மேல் தொடரவும்பெறுதல்.‘பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்’ (130) என்று வரை யறுத்தவற்றில்இங்ஙனம் ஈற்றயலும் ஈறுமாகக் கூறிய இரண்டும் ஒழித்து ஒழிந்த ஏழும்ஐந்தும் ஆகிய எழுத்துக் களைப் ‘பிறமேல் தொடரவும் பெறுமே’ என்றார்.‘தொடர வும்’ என்ற உம்மை இறந்தது தழீஇ நின்றது. ‘பெறுமே’ என்றது,தனிநெடில் ஒழிந்த ஐந்து தொடரும்; வன்மை ஊர் உகரம் குறுகுதற்கும் மொழிநிரம்புதற்கும் மேல் தொடர் தலும் இன்றியமையாமையின். (நன். 94சிவஞா.)

பிறப்பின் புறனடை

பல எழுத்துக்களுக்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்படினும், எடுத்தல்,படுத்தல், நலிதல் என்ற எழுத்துக்குரிய ஒலிமுயற்சி- யான் ஒன்றற்கொன்றுபிறப்பு வேறுபாடுகள் அவ்வற்றுள் சிறிது சிறிது உளவாம். ‘தந்தது’என்பதன்கணுள்ள தகரங் களின் ஒலிவேறுபாடு போல்வன காண்க. (நன். 88)

பிறப்புக்கு முதல்துணை இடவகை

எழுத்துக்கள் நெஞ்சும் தலையும் மிடறும் என்னும் முதல் இடவகையினும்,நாவும் அண்ணமும் இதழும் எயிறும் மூக்கும் என்னும் துணை இட வகையினும்புலப்படும். (நேமி. எழுத். 6)

பிறப்பொலியில் திரிபு

ஒவ்வொரு தானத்துப் பிறக்கின்ற எழுத்துக்கள் கூட்டிக் கூறப்பட்டனவாயினும், நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள்சிறியன சிறியனவாக உள. அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் – என்றவகையானும், தலையிசை மிடற்றிசை நெஞ்சிசை மூக்கிசை – என்ற வகை யானும்பிறவகையானும் வேறுபடுதல். ‘ஐ’ விலங்கலோசை உடையது. (இ. வி. எழுத். 14உரை.)

பிறிது படு பாட்டு

மிறைக்கவிகளுள் ஒன்று; ஒருவகை யாப்பமைதியுடன் அமைந்த பாட்டினைவேறுதொடையும் அடியும் கொண்ட பாட்டாகப் பிரித்தாலும் சொல்லும் பொருளும்வேறுபடா மல் அதுவும் ஓர் யாப்பமைதியுடைய செய்யுளாக அமை யும்படிசெய்வது.எ-டு : ‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டுவரியளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த்திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண் ணாத்தேமொழிஅரிவைதன் நேரென லாம்இயற் றையயாம் ஆடிடனே’இப்பாட்டுக் கட்டளைக் கலித்துறை யாப்பு. தலைவன் தலைவியது ஆடிடம்கண்டு நெஞ்சுடன் கூறியது இது.“தலைவியிடத்தே ஆசையால் இங்கு வந்த நாம் விரும்பத்தக்க தாய்,வண்டுகள் பாட, இடை போன்ற கொடிகள் ஆடி அசைய, அழகாக இருக்கும் இந்தஇடம், தன் ஆயத்துடன் இங்கே இன்று வாராத நம்தலைவியைப் போலவே தோன்றுகிறது” என்று தலைவன் நெஞ்சொடு கிளக்கும் இப்பாடலை ஆறடிகள் கொண்டநேரிசை யாசிரியப்பாவாகப் பிரிப்பி னும், தொடையழகும் பொருளும்கெடாமலேயே அமையும். பிறிதாக வரும் அப்பாடல் வருமாறு :‘தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும்பரிசு கொண்டு வரியளி பாடமருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதரும்காமர் மயிலியல் ஆயம் நண்ணாத்தேமொழி அரிவைதன் நேரெனல்ஆமியற்(று) ஐய யாம்ஆ(டு) இடனே.’ (தண்டி. 98 உரை)

பிற்காலத்து எழுந்த பாப்பாவினஎடுத்துக்காட்டு நூல்கள்

1. மாறன் பாப்பாவினம் – திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16ஆம்நூற்றாண்டு2. சிதம்பரச் செய்யுட் கோவை – குமரகுருபர சுவாமிகள் 17ஆம்நூற்றாண்டு3. திருஅலங்கல்திரட்டு – குமரகுருதாச சுவாமிகள் 20ஆம் நூற்றாண்டுமுற்பகுதி4. அரங்கன்துதி அமுதம் – சக்திசரணன் 20ஆம் நூற்றாண்டுபிற்பகுதி5. யாப்பும் பாட்டும் – அரங்க. நடராசன் (புதுவை) 21ஆம்நூற்றாண்டு

பிள்ளைக் கவிப்பருவம்

ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின் ஆண்பாற்குப் பதினாறாண் டும்,பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் பெண்பாற்குப் பூப்புப் பருவமும், எல்லைஎன்கிறது இந்திரகாளியம். மூன்று முதல் இருபத்தொரு திங்கள் அளவும் எனஎல்லை வகுக்கிறது. பன்னிரு பாட்டியல். அந்நூற் கருத்துப்படி ஆண்பாற்குஏழு, ஐந்து, மூன்று ஆண்டுகள் எனக் கொண்டு பாடுதலும், பன்னீ ராண்டுஎல்லையாகக் கொண்டு பாடுதலும் உண்டு. பெண் ணுக்குப் பன்னீராண்டு என்பதுவெண்பாப் பாட்டியல் செய்தி. அரசற்கு முடிகவித்தல் பருவம் எல்லைஎன்னும், நவநீதப் பாட்டியல். பிரபந்த தீபிகை பருவந்தோறும் திங்கள்அல்லது ஆண்டு எல்லை வகுக்கிறது. காப்பு – 2 திங்கள்; செங்கீரை 5திங்கள்; தால் – 7 திங்கள்; சப்பாணி – 9 திங்கள்; முத்தம் – 11திங்கள்; வருகை – ஓர் ஆண்டு நிறைவு; அம்புலி – ஒன்றரை ஆண்டு; சிற்றில்2 ஆண்டு; பறை முழக்கல் – 3 ஆண்டு; இரதம் ஊர்தல் – 4 ஆண்டு. மூன்றுமுதல் 21 திங்கள் வரை ஒற்றைப்படைத் திங்களில் இப்பருவங்கள் கொள்ளப்படும் என்று சிதம்பரப் பாட்டியல், இ.வி. பாட்டியல், தொ.வி.செய்யுளியல் என்பன கூறுகின்றன.இந்திரகாளியம் பல பருவங்களைக் கூறுகிறது. பிறப்பு, ஓகை, காப்பு,வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியன அவை.பிற பாட்டியல்கள் ஆண்பாற்பருவம் எனவும், பெண்பாற் பருவம் எனவும்,பத்தாக வகுத்துத் தனியே வரையறுக்கின் றன. காப்பு, செங்கீரை, தால்,சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற்பிள்ளைத் தமிழுக்கும்பொதுவான பருவங்கள். ஆண்பாற்கே சிறப்பாக உரிய இறுதி மூன்று பருவங்கள்சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன. இனிப் பெண்பாற்கே உரியஇறுதிப்பருவங்கள் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும், சிற்றிலிழைத்தல்,சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமன் நோன்பு எனவும் வெவ்வேறுபாட்டியல்களில் சொல்லப்பட்டுள்ளன. பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பலபருவங்கள் இறுதியில் கூறப்படினும், பொதுவான அவ்வே ழோடே சிறப்பானஎவையேனும் மூன்றே கூட்டிப் பத்துப் பருவமாகப் பாடுதலே மரபு.இந்நூல்கள் குறிப்பிடாத நீராடற்பருவம் மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழில்பாடப் பட்டுள்ளது.இனி, யாப்புப் பற்றிய கருத்து; இந்திரகாளியம், பருவ மொன்றுக்கு 1,3, 5, 7, 9 அல்லது 11 எனக் கொச்சகக்கலி, 12 அடியின் மிகாதநெடுவெண்பாட்டு ஆகிய இவ்யாப்பில் பாடப்படும் என்று கூறும். பிறப்பு,ஓகை, வளர்ச்சி, அச்சம் ஆகிய நான்கும் 1, 3, 5 அல்லது 7 எனச் செய்யுள்பாடப் பெறும் எனவும் அந்நூல் கூறுகிறது. பன்னிருபாட்டியல், அகவல்விருத்தம் கலிவிருத்தம் கட்டளை ஒலி நெடுவெண் பாட்டு இவற்றால்பிள்ளைக்கவி பாடப்படும் எனவும்; வெண்பாப் பாட்டியல்சிதம்பரப்பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல் தொன்னூல் விளக்கச்செய்யுளியல் சுவாமி நாதம் என்பன, வகுப்பு அகவல்விருத்தம் இவற்றால்பாடப்படும் எனவும்; நவநீதப்பாட்டியல், மன்ன விருத்தம் ஈரெண்கலை வண்ணச்செய்யுள் இவற்றால் பாடப்படும் எனவும்; முத்து வீரியம்அகவல்விருத்தத்தால் பாடப்படும் எனவும் கூறுகின்றன.பருவத்திற்குப் பத்துப்பாடல் என்பது பெரும்பான்மையான பாட்டியல்களதுவரையறை. காப்புப் பருவத்துக்கு பாடல்கள் 9 அல்லது 11 என வரவேண்டும் எனநவநீதப் பாட்டியலும் இ.வி. பாட்டியலும் குறிக்கின்றன.காப்புப்பருவத்தில் பாடப்படும் கடவுளர் இன்னார் என்பதும்,அவர்களுள் முதற்கண் பாடப்படுபவர் திருமாலே என்பதும், இப்பருவத்துள்பாடப்படும் அக்கடவுளர் பற்றிய செய்தியில் கொலைத் தொழில்தவிர்க்கப்படும் என்பதும் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல்,நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் – என இவை கூறும்சிறப்புச் செய்தி.

பிள்ளைக்கவி

1. பிள்ளைத்தமிழ் எனப்படும் பிரபந்தம்.2. முன்னோர் பாடிய செய்யுளடிகள் பலவற்றை எடுத்துக் கொண்டு, தான்சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன். (இ. வி. பாட். 45, 175)

பிள்ளைத் தமிழ்

பிள்ளைக் கவி; இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும், பெண்பாற்பிள்ளைத்தமிழ் எனவும் இருவகைப்படும். இதன் பருவங்கள் முதலியன‘பிள்ளைக்கவி’ யுள் காண்க.

பிள்ளைத்தமிழின் பருவங்கள்

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பனஇருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கேயுரியன.சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன; இனிப் பெண்பாற்கேயுரியன : கழங்கு,அம்மானை, ஊசல் என்பன. (இ. வி. பாட். 46)

பிள்ளைத்தமிழின் யாப்பு

வகுப்பும் ஆசிரியவிருத்தமும் பிள்ளைத்தமிழ் பாடும் யாப்பு. பிறபாட்டியல்கள் கூறுவன ‘பிள்ளைக்கவி’ எனும் தலைப்புள் காண்க. (இ. வி.பாட். 47)

பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம்,அதன் புறநடை

(பாட்டுடைத் தலைவனோ, தலைவியோ) பிறந்து மூன்றாம் திங்கள் முதல்இருபத்தொரு திங்கள்காறும் ஒற்றித்த திங்களில் நிறைமதிப் பக்கத்தில்பிள்ளைக்கவி கொள்ளப் படும்.பிள்ளைப்பருவம் கழியும் முன்னரே பாடுதல் வேண்டும் என்பது குறிப்பு.முதியோரைப் பிள்ளையாகக் கருதிப் பாடு மிடத்தும்இப்பிள்ளைப்பருவத்தினராகவே கொண்டு பாடவேண்டும். ஒற்றைப்படை மங்கலம்தருவது; நிறைமதிப் பக்கம் (-சுக்கில பக்கம்) வளர்ச்சி தருவது).இனி, பிள்ளைக்கவி, மேற்கூறிய திங்களெல்லையில் பாட முடியாக்கால்,மூன்று, ஐந்து, ஏழ் ஆகிய ஒற்றை பெற்ற ஆண்டிலும் கொள்ளப்படும். (இ. வி.பாட். 49, 50)

பிள்ளைப்பாட்டு

பிள்ளைத்தமிழ்; அது காண்க.