தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பாகதம்

நாடுகளெல்லாம் வழங்கும் மொழி பாகதமாம். (மு. வீ. மொழி. 30)

பாகதவகை

தற்பவம், தேசிகம், தற்சமம் என பாகதம் மூவகைப்படும்.(மு. வீ. மொழி. 31)

பாக்களின் பண்புகளை எடுத்துரைக்கவல்லோர்

அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆமாறு சொன்ன நூல் களுள்ளும், அவைசார்பாக வந்த சோதிடமும் சொகினமும், வக்கின கிரந்தமும், மந்திரவாதமும்,மருத்துவ நூலும், சாமுத் திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும்,பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாயவற்றுள்ளும் உள்ள மறைப்பொருள் உபதேசிக்க வல்லராய், கவிப்பெருமையோடு,சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும் பாடப்படுவோருக்குவரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லராய், உரைக்கவல்லசான்றோர்கள். அவ்வல்லோராவர். (யா. வி. பக். 491)

பாசண்டங்கள்

வைதிக சமயத்தின் மாறுபட்ட புறச்சமயக் கொள்கைகளைக் குறிப்பிடும்நூல்கள். இவற்றின் அடிகள் சொற்சீரடியின் பாற்படும். (யா. வி. பக்.373)

பாடக மடக்கு

பாடகம் என்பது வளைவாக மடங்கியிருக்கும் ஒரு வகைக் காலணி. இக்காலணியை மடக்குவது போல இரண்டிரண்டு அடிகள் ஒரே அளவினை உடையனவாய்மடங்குவது பாடக மடக்காம்.எ-டு : ‘ஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவேஓத நின்றுல வாவரும் வேலைவாய்மாத ரங்க மலைக்கு நிகரவே.’ஓத நின்று உலவா அரு வேலைவாய் மாதர் அங்கம் அலைக்கும் நிகரவே, ஓதம்நின்று உலவாவரும் வேலைவாய் மாதரங்கம் மலைக்கு நிகரவே-நின்று சொல்லமுடியாத அரிய காலத்தின்கண் இப்பெண்ணுடைய உறுப்புக்களைத்துன்புறுத்துமாறு (அக்கால நிகழ்ச்சிகள்) பொருந்தின; வெள்ளம்நிலைபெற்று உலவி வருகின்ற கடலில் பெரிய திரைகள் மலைக்கு ஒப்பாகஇருக்கும்.முதல் ஈரடியும் மீண்டு பின் ஈரடிகளாக மடக்குதலின், பாடகமடக்காயிற்று, இப்பாடல். (தண்டி. 96)

பாடலனார் உரை

பாடலனார் என்பாரால் உரைக்கப்பட்ட இலக்கணநூல். இதன்கண், நூல்,நூல்வகை, நாற்பயன், எழுமதம், பத்து வகைக் குற்றம், பத்துவகை வனப்பு,முப்பத்திருவகை உத்தி என்பன விளக்கப்பட்டுள்ளன. (யா. வி. பக்.427)

பாடியகாரர்

பாணினீயத்தின் பேருரையாசிரியரான பதஞ்சலி. (பி.வி. 1 உரை)(L)

பாடியம்

பாஷ்யம்; விருத்தியுரையாகிய பேருரை. (L)

பாடுதுறை

1) புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை; ‘பாடுதுறை முற்றிய கொற்றவேந்தே’ (புறநா. 21 )2) தத்துவராயர் பாடிய பல (வேதாந்தி பனுவல். (L)

பாட்டின் வகை

பா உறுப்பான் எழுந்து ஒலிக்கும் பாட்டின் வகையாவன – ஆசுகவி,மதுரகவி, சித்திரகவி, அகலக்கவி என்பன. (இ.வி.பாட். 3)

பாட்டியல்

பிரபந்த இலக்கணம் கூறும் நூல். பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் முதலாயின காண்க.

பாட்டியல் கூறும் பாச் செய்திகள்

வெண்பா முதலிய நால்வகைப் பாவிற்கும் அவற்றின் இனங்களுக்கும் நிறம்,திணை, பூ, சாந்து, புகை, பண், திறன், இருது, திங்கள், நாள், பக்கம்,கிழமை, பொழுது, கோள், இராசி, தெய்வம், திசை, மந்திரம், மண்டிலம்,பொறி, எழுத்து முதலாகிய பண்புகள் கூறப்படும். இவற்றை அறிந்துஆராதிப்ப, இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி நன்மை பயக்கும்.இவை யெல்லாம் திணைநூலுள் விரிக்கப் படும். (யா. வி. பக். 488)

பாட்டியல் நுவல்வன

பாட்டு, நூல், உரை, பிசி, முதுசொல், மந்திரம், குறிப்புரை, வழக்குமரபு, செய்யுள் மரபு, வருண மரபு, நாற்புலவர், அவை, அகலக்கவியைச்செய்து கொடுப்போர், அகலக்கவி கொள் வோர் இப் பதினான்கு திறத்தஇலக்கணமும் ஆம். (இ. வி. பாட். 1 )

பாட்டியல் மரபு

இந்நூல் இறந்துபட்டதொரு பாட்டியல் பற்றிய நூல். இது ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றத்திற்கு இலக்கியமாகப்பேராசிரியரால் (தொ. பொ. 663) குறிப்பிடப் பட்டுள்ளது. பாட்டியல்கூறும் பத்துவகைப் பொருத்தம் போல்வன அவருக்கு உடன்பாடல்ல.இந்நூலின் 3 நூற்பாக்கள் ஆரிடச் செய்யுளுக்கும் அச் செய்யுள்பாடுவோருக்கும் உரிய இலக்கணங்களை உணர்த்து வனவாக யாப்பருங்கலவிருத்தியில் (பக். 370, 371) மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

பாணினி, பாணினீயம்

பாணினியால் இயற்றப்பட்ட இலக்கணத்தின் பெயர் பாணி னீயம். பாணினிபாரத நாட்டின் வடமேற்குக் கோடிப் பகுதி யில் வாழ்ந்தவர். இவரது காலம்கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. ஏறத்தாழ 4000 சூத்திரங்களைக்கொண்ட வடமொழி இலக்கணநூலைப் பாணினி இயற்றினார். இவர் தமக்கு முன்வாழ்ந்த இலக்கணம் வல்லார் அறுபத்து நால்வர் இந்நூலுள்குறிக்கப்பட்டுள்ளனர். தம் காலத்துக்கு முற்பட்ட நூல்கள் ஆகியதாதுபதம், கணபதம் என்ற இரண்டனையும் பாணினி குறித்துள்ளார். தாதுமஞ்சரி, பதமஞ்சரி எனப் பிற் காலத்தெழுந்தவை அவற்றை அடியொற்றியனவே.பாணி னியே உத்திவகைளை முதன் முதலாகக் கையாண்டவர். அவ்வுத்தி வகைகள்‘பாஷேந்து சேகரம்’ என்ற நூலாகச் 18ஆம் நூற்றாண்டில்அமைக்கப்பட்டுள.பாணினியால் மிகுதியும் குறிப்பிடப்பட்டவர் சாகடாயநர், கார்க்கியர்,சாகல்யர் முதலானோர். பெயர்ச்சொற்கள் யாவும் வினைப்பகுதியாகியதாதுக்களிலிருந்து தோன்றிய னவே என்ற சாகடாயநர் கொள்கையைப் பாணினி தம்நூலில் முழுதும் அடியொற்றியுள்ளார்.பாணினீயம் தோன்றிய பின்னர் ஏனைய இலக்கணங்கள் மறைந்துவிட்டசெய்தியொன்றே இதன் பெருஞ்சிறப்பினைக் காட்டும்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாணினீயத்தில் 1245 சூத்திரங்களுக்குக் காத்தியாயனர் என்ற வரருசி வார்த்திகம் (-காண் டிகை) ஒன்றுவரைந்தார். அடுத்துக் குணிவிருத்தி முதலிய உரைகள் தோன்றின. கி.மு.முதல் நூற்றாண்டில் பதஞ்சலி யால் வரையப் பட்ட மாபாடியம் என்ற பேருரைஇப்போது 1713 சூத்திரங்களுக்கே கிடைத்துள்ளது.பாணினீயம் முழுமைக்கும் கி.பி. 650-ஐ ஒட்டிய காலத்தில் காசி நகரில்வாழ்ந்த ஜயாதித்யர், வாமநர் என்ற பெருமக்க ளால் காசிகாவிருத்தி என்றவிளக்கவுரை இயற்றப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டில் பர்த்ருஹரி என்பவரால்மாபாடிய விளக்கமான வாக்கியபதீயம் என்ற நூலும், 13ஆம் நூற்றாண் டில்கையடர் என்பவரால் கையடம் என்ற நூலும் இயற்றப் பட்டன. 15ஆம்நூற்றாண்டில் இராமபத்திரர் என்பவரால் பிரகிரியா கௌமுதி என்ற நூல்இயற்றப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் பட்டோஜீ என்பவரால் சித்தாந்தகௌமுதி இயற்றப்பட்டது; அஃது இன்னும் எளிமையாக்கப்பட்டு 19ஆம்நூற்றாண்டில் வரதாசர் என்பவரால் லகு கௌமுதி என்று சுருக்கிவரையப்பட்டது. (பி. வி. பக் 434-436)

பாதமடக்கு

எழுத்துமடக்கு, அசை மடக்கு, சீர் மடக்கு, அடிமடக்கு என்ற மடக்குவகைகளில் சிறப்பான மடக்கு அடிமடக்கு எனப்படும். இம்மடக்கு இரண்டடிமடக்குதலும், மூன்றடி மடக்குதலும் நான்கடி மடக்குதலும் எனமூவகைப்படும்.முதல் ஈரடி மடக்குதல், முதலடியும் மூன்றாமடியும் மடக்கு தல்,முதலடியும் ஈற்றடியும் மடக்குதல், கடையிரண்டையும் மடக்குதல்,இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்குதல், இடையீரடி மடக்குதல் என ஈரடிமடக்கு ஆறும்; ஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல், இரண்டாமடிஒழித்து ஏனைய மூன்றடியும் மடக்குதல், மூன்றாமடி ஒழித்து ஏனை மூன்றடிமடக்குதல், முதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் மடக்குதல் – என மூவடிமடக்கு நான்கும்;நான்கடியும் மடக்குதலாகிய மடக்கு ஒன்றும்; ஒரு சொல்லானே நான்கடிமுழுதும் மடக்கும் சொல்மடக்கு ஒன்றும்; இரண்டடியாக மடக்கும் பாதமடக்கு1, 2 – 3, 4; 1, 3 – 2, 4; 1,4 – 2, 3 என மடக்கும் மூன்றும்; பாடகமடக்கு ஒன்றும்;எனப் பாதமடக்கு 6+4+1+1+3+1 = 16 ஆகும். (தண்டி. 96 உரை)

பாதமயக்கு

மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியைகொளுத்துவது.எ-டு : ‘ஈயல்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகநா. 8-1)கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37)நன்னாள் பூத்த பொன்னிணர் வேங்கை (அகநா. 85 – 20) மலர்கொயலுறுவதென் மனமவள் மாட்டே’இது பழவடி மூன்றினொடு தாம் ஓரடி பாடிப் பாக்கணார் பாடிய பாதமயக்கு. (யா. வி. பக். 541)

பாதாதி கேசம்

தலைமக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும்கூறும் பிரபந்தம். சிறப்பாகத் தெய்வங்களை அவ்வாறு பாடுப. (இ. வி.பாட். 111)

பாதிச் சமச் செய்யுள்

அளவழிச் சந்தங்களுள் நான்கடியும் சீர் ஒத்து முதலிரண் டடியும்எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து வருவதாம்.எ-டு : ‘மடப்பிடியை மதவேழம்தடக்கையால் வெயில்மறைக்கும்இடைச்சுரம் இறந்தோர்க்கேநடக்குமென் மனனேகாண்’இவ்வஞ்சித் தாழிசையுள் முதலிரண்டடியும் 9 எழுத்து; கடையிரண்டும் 8எழுத்து. (யா. வி. பக். 516)

பாதிச் சமப்பையுட் சந்தம்

அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்துமுதலடியெழுத்தும் மூன்றாமடி எழுத்தும் எண்ணிக்கை வேறாய் இரண்டாமடிநான்காமடி எழுத்து எண்ணிக்கை ஒத்து வருவது.எ-டு : ‘செஞ்சுடர்க் கடவுள் திண்டேர் இவுளிகால் திவளஊன்றும்மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயில் மாடத்தஞ்சுடர் இஞ்சி ஆங்கோர் அகழணிந் தலர்ந்த தோற்றம்வெஞ்சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.’ (சூளா.38)இதன்கண் முதலடி எழுத்து 17; மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடிநான்காமடி எழுத்து 15 என அமைந்துள்ள வாறு. (யா. வி. பக் 518)

பாதிச்சம விருத்தம்

முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும் ஏனை இரண்டடியும்எழுத்து மிக்கும் நான்கடியும் சீர் ஒத்து வந்த அளவழிச் சந்தப்பாடல்.எ-டு : ‘மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்துவெய்யகையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின்மையற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலைநெய்யற நிழற்றும் வேலோய் நினைத்தனை நினைக்க என்றான்’ (சூளா.198)இதன்கண், முதலடி மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடி நான்காமடிஎழுத்து 17 என அமைந்துள்ளவாறு. (யா. வி. பக். 517)

பாமாலை

பெரும்பான்மையும் இறைவனைப் பற்றிய துதிப்பாடல்க ளாகிய பதிகம்,இரட்டை மணிமாலை, நான்மணிமாலை முதலாயின. ‘மாலை’ என்றமையால் அந்தாதியாகவரத் தொடுப்பது சிறப்புடைத்து. (L)

பாயிர விருத்தி

தொல்காப்பியப் பாயிரத்துக்கு வரையப்பட்ட விருத்தியுரை.அரசஞ்சண்முகனார் இயற்றிய ‘பாயிர விருத்தி’ சென்ற நூற்றாண்டின்தொடக்கத்தில் இயற்றப்பட்ட விழுமிய தொரு விருத்தி. அவருக்கு முன்னர்மாதவச் சிவஞான முனிவர் பாயிரவிருத்தி எழுதியுள்ளார்.

பாரதியார் யாப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய கவிதைகளுள் வசன கவிதைகளும்இன்ன என்று யாப்பு வரையறுக்க இயலாத பாடல்களும் நீங்கலான பிறவெல்லாம்வெண்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக்கலிப்பா, கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித் துறை, கண்ணி, சிந்து,தாழிசை, கீர்த்தனை, தரவு கொச்சகக்கலிப்பா என்னும் யாப்புள் அடங்குவன.அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்களே மிக்குப் பயில்கின்றன.கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன அருகியே நிகழ்கின்றன. ‘புதியஆத்திசூடி’ சொற்சீரடி யாப்பிற்று. கலிவெண்பா யாப்பும் ஆண்டாண்டுநிகழ்கின்றமை காணலாம். (இலக்கணத். முன்.பக். 110, 111 )

பாரிசேடம்

பாரிசேடம் – எஞ்சியது. இது பிரமாணங்களுள் ஒன்று. பகுபதத்துள் பகுதிவிகுதி முதலிய உறுப்பெல்லாம் பகாப்பதம் ஆயினும், விகுதி முதலியவற்றைமேல் விதந்து கூறலின், ஈண்டுத் ‘தத்தம் பகாப்பதங்கள்’ என்றதுமுதனிலைகளையே என்பது பாரிசேடத்தால் பெற்றாம். (பிரமாணம் – அளவை) (நன்.134 சங்கர.)

பாற்பொருத்தம்

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் ஒன்று. குற்றெழுத்துஐந்தும் ஆண்பாலாம்; நெட்டெழுத்து ஏழும் பெண்பாலாம்; ஒற்றும் ஆய்தமும்பேடாம். ஆண்பாலைக் கூறுமிடத்து ஆண்பால் எழுத்துக்கள் அமையும். பெண்பாலைக் கூறுமிடத்துப் பெண்பால் எழுத்துக்கள் அமையும். இம்முறைமயங்கினும் அமையும். (இ. வி. பாட். 13)

பாலாசிரியன்

பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப்பாலாசிரியர் நற்றாமனார்(அகநா. 92) பாடியுள்ளமை காண்க.

பாலும் நீரும் போல

மெய்யும் உயிரும் உயிர்மெய்க்கண் முன்னும் பின்னும் பெற நிற்கும்என்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன்கலந்ததாகும்;விரல்நுனிகள் தலைப்பெய்தாற் போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது. (தொ.எ. 18 இள. உரை)

பால்வரை கிளவி

ஒருபொருளின் பகுதியை உணர்த்தும் சொற்களாகிய அரை, கால், முக்கால்,அரைக்கால் முதலியன.செம்பால் – சமபாதி (தொ. பொ. 463 பேரா.)பால் – ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின்மேற்றாதல்.(தொ. பொ. 13 நச். உரை)

பாளித்தியம்

பிராகிருத மொழிகளில் ஒருவகையாகிய பாளி மொழிக்கு அமைந்த இலக்கணம்கூறும் நூல். யாப்பருங்கலக்காரிகை இப்பாளித்தியம் போலக் காரிகையாப்பிற்றாக இருத்தலை அதன் உரையாசிரியர் குணசாகரர் சுட்டுகிறார். (யா.கா. பாயிர உரை)

பாழ் என்ற சொல் புணருமாறு

பாழ் என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின்அவ்வல்லெழுத்தினோடு ஒத்த மெல் லெழுத்தும் மிக்கு முடியும்.எ-டு : பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறுஇது பாழுட் கிணறு என ஏழாவது விரியும். வினைத்தொகை யாயின்,பாழ்கிணறு என இயல்பாகவே புணரும். (தொ. எ. 387 நச். உரை)

பாவிற்கு நிறஉரிமை

வெண்பாவிற்கு நிறம் வெண்மை, ஆசிரியப்பாவிற்கு நிறம் செம்மை;கலிப்பாவிற்கு நிறம் கருமை; வஞ்சிப்பாவிற்கு நிறம் பொன்மை ஆகும். (இ.வி. பாட். 119)

பாவிற்கு வருண உரிமை

வெண்பா அந்தணர்க்குரிய பா; அகவல் அரசர்க்குரிய பா; கலிப்பாவணிகர்க்குரிய பா; வஞ்சிப்பா வேளாளர்க்குரிய பா ஆகும். (இ. வி. பாட்.117)

பாவிற்குத் திணை உரிமை

முல்லைத்திணைக்கு வெண்பாவும், குறிஞ்சித்திணைக்கு ஆசிரியப்பாவும்,மருதத்திணைக்குக் கலிப்பாவும், நெய்தல் திணைக்கு வஞ்சிப்பாவும்உரியனவாம். (இ. வி. பாட். 118)

பாவில் புணர்ப்பு

ஒரு செய்யுள் நான்கு அடி யுடையதாக நால்வர் நான்கடி களுக்கும்ஈற்றுச் சீர்களைச் சொல்ல ஒருவன் ஏனைய சீர்களைப் பாடிச் செய்யுளைநிரப்பிக் கொடுப்பது என்ற சித்திரகவி வகை. (வீ. சோ. 181 உரை)நால்வர் முறையே பதியே, நதியே, யதியே, விதியே என்ற ஈற்றுச்சீர்களைக் கூற, ஒருவன்,‘பதிகளிற் சிறந்தது அரங்கப் பதியேநதிகளிற் சிறந்தது பொன்னிநன் னதியேயதிகளில் மிக்கோன் பூதூர் யதியேவிதிகளில் தக்கது வாய்மைசொல் விதியே’என்றாற்போலப் பாடி முடிப்பதாம்.பாவின் புணர்ப்பாவது நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால் அவையேஅடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது.எ-டு : மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கை பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன் கண்டகம் புக்க செங்கண் மறவன் யாழின் இன்னிசை மூழ்கவீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே.’தடித்த எழுத்தின, நால்வர் நான்கு பாவில் உரைத்த கட்டுரை யின்தொடக்கச் சொற்கள். அவை முறையே முதல் நான்கடி களிலும் முதற்சீராக அமைய,இந்நேரிசை ஆசிரியப்பாப் பொருள் முற்ற இயற்றப்பட்டமையின் ‘பாவின்புணர்ப்பு’ ஆகும். (யா. வி. பக். 541)

பாவைப்பாடல்கள்

பாவைப்பாடல்கள் ஒரே விகற்பத்தனவாகிய நாற்சீரடி எட்டுக் கொண்டபாடல்களாம். இவை வெண்டளையே பெற்று வருவன. பாடல் நிரையசையில்தொடங்கின், மிக அருகி ஈற்றுச்சீர் அடுத்த அடி முதற்சீரோடு இணையுமிடத்தே கலித்தளை வருதலுமுண்டு. நேரசையில் தொடங்குவன வெண்டளை பிறழாமல்வரும். இவை உண்மையில் ஈற்றடி அளவடியாக்கப்பட்ட பஃறொடை வெண்பாக்களேஎனலாம். வெண்பாக்களின் ஈற்றடியும் நாற்சீரடியாக்கப்படும் மரபுதொல்காப்பியத்தில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது (செய். 72 நச்.)பிற்காலத்தார் முழுதும் வெண்டளையாக வரும் இப்பாவைப்பாடலைத் தரவுகொச்சகம் என்று கூறுவா ராயினர். திருவாசகத்தில் வரும் அம்மானைப்பாடல்களும் பாவைப்பாடல் போன்றனவே. நேரசையில் தொடங்கும் அம்மானைப்பாடல் ஈற்றடியும் அளவடியாக நிரம்பிய ஆறடிப் பஃறொடை வெண்பாவே. அதனையும்பிற்காலத் தார் தரவு கொச்சகம் என்ப.பாவைப்பாடல் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிதலும், அம்மானைப்பாடல்‘அம்மானாய்’ என முடிதலும் மரபு.

பாவைப்பாட்டு

“ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசைவண்ணம் உடையன” என்பது. (யா. வி. உரை. பக். 415)திருப்பாவை, திருவெம்பாவை பாவைப்பாட்டுக்கு நூலாக அமைந்தஎடுத்துக்காட்டாம். இவை (பெரும்பான்மையும்) வெண்டளை பிறழாமல்அளவடியால் நிகழும் எட்டடிப் பாடல்கள்; பாடல்கள் ஒத்த அடி எதுகையால்ஒரு விகற்பம்பட நிகழ்ந்து ‘ஏலோரெம்பாவாய் என முடியும். ‘கோழியும்கூவின’ என்னும் பாவைப்பாட்டு ஐந்தடியால் நிகழ்ந்தது. (யா. வி. பக்.363)

பாவைப்பாட்டு (2)

ஈரசை, மூவசைச் சீர்களான் இயன்ற நாற்சீரடி எட்டான் அமைந்து, வெண்பாயாப்பால், இசையொடு பொருந்தி, பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னியரால்,வைகறையில் நன்னீராடற் பொருட்டு ஏனைய மகளிரைத் தம்மோடு உடன் வருமாறுதுயிலெடைநிலையாக, பாடப்பெறுவதே பாவைப்பாட்டாம்.எ-டு : ஆண்டாள் அருளிய திருப்பாவை, மணிவாசகர் அருளியதிருவெம்பாவை. (தென். இசைப். 16)(ஓரடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும்இடையே தளை இழுக்கினும் அமையும்)

பாவையாடல்

பெண்பாற்பிள்ளைத் தமிழின் உறுப்புக்களுள் ஒன்று; பாட்டுடைத் தலைவிபாவையை வைத்துக்கொண்டு விளை யாடுதல். (திவா. பக். 310)