தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
னஃகான் றஃகான் ஆதல்

பத்து என்னும் நிலைமொழி எண்ணுப்பெயரின்முன் உயிர்முத லாகிய அகல் -உழக்கு- என்ற அளவுப்பெயர்களும் அந்தை என்ற நிறைப் பெயரும் வருவழிஇடையே இன்சாரியை வரும். அதன் னகரம் றகரமாகத் திரிய, பத்து +இன்=பதின்;பதின் +அகல்=பதிறகல், பதின் +உழக்கு =பதிறுழக்கு, பதின்+ அந்தை= பதிறந்தை – என வரும். றகரத்தைப் பிறப்பிடம் நோக்கி நன்கு ஒலித்தலால்இரட்டித்தல்ஓசை ஏற்பட, பதிற்றகல்- பதிற் றுழக்கு- பதிற்றந்தை – எனஒலிக்கும். பிற்காலத்தவர் றகரத்தை நன்கு ஒலியாராய் ரகரம்போலஒலித்தலான், ஓசை அழுத்தம் காட்ட இரட்டித்து எழுதும் நிலை ஏற்பட்டது.பொறை காபு பாகு- என்பன பிற்காலத்தில் பொற்றை காப்பு பாக்கு – என ஒற்றுமிக்கு வழங்கலாயினமை நோக்கத்தகும். (எ.ஆ.பக். 99, 100)

னகர மகரப் போலியுட்படாத சொற்கள்

பொதுவாக மரன் நிலன் முகன் -போல்வன மரம் நிலம் முகம் – முதலாக னகரத் துக்கு மகரம் போலியாகவரும்.எகின் செகின் விழன் பயின்குயின் அழன் புழன் கடான் வயான் – என்பனஒன்பதும் னகரம் மகரமாகத் திரியாதன. வட்டம் குட்டம் ஓடம்பாடம் – போன்ற மகர ஈ றுகளும் னகரமாகத் திரியாதன. (தொ.எ. 82 நச் உரை)குறிலிணை ஒற்றாகிய னகரமே மகரத்தொடுமயங்கும் என்பது ஏற்புழிக்கோடலான் பெறப்படும்.(இ. வி. சூ. 30; ப. 65)163164173172165166குறில்நெடில்ஐகாரக்குறுக்கம்ஒளகாரக்குறுக்கம்ஆய்தம்மெய்குற்றியலிகரம்குற்றியலுகரம்ஆய்தக்குறுக்கம்மகரக்குறுக்கம்உயிரளபெடைஒற்றளபெடை171170167

னகரஇறுதி அல்வழிப் புணர்ச்சி

மன் சின் – ஆன் ஈன் பின் முன் – என்ற னகரஈற்று அசைச் சொற்கள்இரண்டும், ஏழாம்வேற்றுமைப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கள் நான்கும்,னகர ஈற்று வினையெச்ச மும், வன்கணம் வருமிடத்து, னகரம் றகரமாகத்திரிந்து புணரும்.எ-டு : ‘அதுமற் கொண்கன் தேரே’‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அக .நா. 7),ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண் டான், முற்கொண்டான்; வரிற்கொள்ளும், சொல்லிற் செய்வான் (தொ. எ. 333 நச். உரை)ஆன்கொண்டான், ஈன்கொண்டான் – என்ற இயல்பும் கொள்க. ஊன் கொண்டான் -என இயல்பாகவே முடியும். ஆன், ஈன் பெயர் நிலையின. (333 நச். உரை)அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின் – என ஏழாம் வேற்றுமைஇடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள், வன்கணம் வருமிடத்து, னகரம்றகரமாகத் திரிந்து முடியும்.எ-டு : அவ்வயிற் கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற்கொண்டான், எவ்வயிற் கொண்டான்.சுட்டு வினா அடுத்த வயின் பெயர்நிலையினது. (தொ. எ. 334)மின் பின் பன் கன் – என்பன, தொழிற்பெயர் போல உகரம் பெற்றும்,வன்கணம் வரின் வலி மிக்கும், ஏனைக் கணத்து இயல்பாயும், யகரம் வருவழிஉகரம் இன்றியும், உயிர் வருவழி னகரம் இரட்டியும் புணரும்.எ-டு : மின்னுக் கடிது;மின்னு நீண்டது, வலிது; மின் யாது; மின்னரிது,பின் பன் கன் – என்பவற்றுக்கும் இவ்வாறே முடிக்க.(-345)கன் என்பது வன்கணம் வரின் அகரமும் மெல்லெழுத்தும் பெறும்;ஏனைக்கணத்து அகரம் மாத்திரமே பெறும்;யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் இரட்டுதலும் கொள்க.எ-டு : கன்னங் கடிது; கன்ன ஞான்றது, கன்ன வலிது; கன் யாது,கன்னரிது. (-346)

னகரஈற்று இயற்பெயர்ப் புணர்ச்சி

சாத்தன் கொற்றன் முதலிய இயற்பெயர் முன் தந்தை என்ற முறைப்பெயர்வருமொழியாய் வரின், தந்தை என்பதன் தகரம் கெட அஃது ‘அந்தை’ எனநிற்கும். சாத்தன் முதலியவற்றில் ‘அன்’ ஈறு கெட, அவை சாத்த்-முதலியவாக நிற்கும்; பின்னர்ப் புணரும்வருமாறு : சாத்தன் +தந்தை > சாத்த்+ அந்தை =சாத்தந்தை; கொற்றன் +தந்தை > கொற்ற் +அந்தை = கொற் றந்தை; சாத்தன் றந்தை, கொற்றன் றந்தை -என்ற இயல்பு முடியும் கொள்க. (தொ. எ. 347 நச்.)ஆதன் பூதன் – என்பனவற்றின் முன் ‘தந்தை’ வரின், நிலை மொழிகளின்‘தன்’ என்ற சினையும் வருமொழித் தகரமும் கெட்டு முடியும்.வருமாறு : ஆதன்+ தந்தை > ஆ + ந்தை = ஆந்தை; பூதன்+ தந்தை > பூ + ந்தை = பூந்தை; ஆதந்தை, பூதந்தை – எனப் புணர்தலுமுண்டு.(348 உரை)அழான் +தந்தை =அழாந்தை , புழான் +தந்தை =புழாந்தை- எனவும் வரும்.(தொ. எ. 347 நச். உரை)பெருஞ்சாத்தன் முதலிய அடையடுத்த இயற்பெயர்கள் தந்தை என்ற சொல்லோடுஇயல்பாகப் புணரும்.பெருஞ்சாத்தன் றந்தை, கொற்றங்கொற்றன் றந்தை – என வருமாறு காண்க.(349)முதல் இயற்பெயர் தந்தை பெயராக, வருமொழி மகன் பெயராக வரின்,நிலைமொழியீற்று ‘அன்’ கெட்டு அம்முச் சாரியை வந்து புணரும்.எ-டு : கொற்றன் + கொற்றன் > கொற்ற் +அம் + கொற்றன் = கொற்றங்கொற்றன்சாத்தன் + கொற்றன் > சாத்த் + அம் +கொற்றன் = சாத்தங் கொற்றன்கொற்றன்+ குடி=கொற்றங்குடி, சாத்தன்+ குடி =சாத்தங் குடி – என அன்கெட்டு அம்முப் பெற்று வழங்கும் தொடர் களும் உள.கொற்றன் +மங்கலம், சாத்தன்+ மங்கலம் – என்பன நிலை மொழியீற்று ‘அன்’கெட்டு அம்முப் புணர்ந்து அம்மின் மகரம் கெட, கொற்றமங்கலம்சாத்தமங்கலம் – என முடிந்தன.வேடன் + மங்கலம், வேடன் + குடி – என்பன ‘அன்’ கெட்டு அம்முப்புணர்ந்து நிலைமொழி டகர ஒற்று இரட்ட, வேட்டமங்கலம் வேட்டங்குடி – எனமுறையே அம்மின் மகரம் கெட்டும் வருமொழி வல்லொற்றுக்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தும் முடிந்தன. ( 350 உரை)தான் பேன் கோன் – என்ற இயற்பெயர்கள் வருமொழி முதற் கண் தகரம்றகரமாகத் திரியும்; பிற வன்கணம் வருமிடத்து இயல்பாகப் புணரும்.எ-டு : தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை; தான்கொற் றன் பேன்கொற்றன் கோன் கொற்றன். (351)

னகரஈற்று வினையெச்சப் புணர்ச்சி

னகரஈற்று வினையெச்சத்தொடர் அல்வழியாயினும், வரு மொழி வன்கணம்வந்துழி வேற்றுமைத்தொடர் போல ஈற்று னகரம் றகரமாகத் திரிந்துபுணரும்.எ-டு : வரின் + கொள்ளும் = வரிற் கொள்ளும்.(தொ. எ. 333 நச். உரை)

னகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

னகரஈறு வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் றகரமாகத் திரிந்துபுணரும்.எ-டு : பொற்குடம், பொற்சாடி, பொற்றூதை, பொற் பானை, (தொ. எ. 332நச்.)குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும்.எ-டு : குயின்குழாம், குயின்றோற்றம்கான்கோழி, கோன்குணம், வான்கரை – எனச் சிலவும் இயல்பாகப் புணரும்.(335 உரை)எகின் என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.எ-டு : எகினங்கோடு, எகினஞ்செதிள், எகினந்தோல், எகினம்பூ(336)எகின் என்னும் அன்னத்தின் பெயர் அகரச்சாரியை பெற்று, வன்கணம் வரின்வல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ பெற்றும், ஏனைய கணங்கள் வரின்அகரப்பேற்றோடு இயல்பாயும் புணரும்.எ-டு : எகினக்கால், எகினங்கால்;எகினஞாற்சி, எகின வலிமை, எகினவ(அ) டைவு; எகின் சேவல், எகினச் சேவல் – என்ற உறழ்ச்சி முடிவு முண்டு.இஃது ஆறன் தொகை. (337)எயின் முதலிய கிளைப்பெயர்கள் எயின்குடி, எயின்பாடி- என இயல்பாகப்புணரும். சிறுபான்மை எயினக்கன்னி, எயினப் பிள்ளை – என அக்கும்வல்லெழுத்தும், எயினவாழ்வு – என அக்கும் பெற்றுப் புணரும். (338உரை)பார்ப்பான் + கன்னி, குமரி, சேரி, பிள்ளை – என்பன ஆகாரம் அகரமாகக்குறுகி அக்கும் வல்லெழுத்தும் பெற்றுப் பார்ப்- பனக்கன்னிபார்ப்பனக்குமரி பார்ப்பனச்சேரி பார்ப்பனப்- பிள்ளை – என முடிதலும்,பார்ப்பனவாழ்வு- என அக்கு மாத்திரம் பெற்று முடிதலும் உள.வெள்ளாளன் + குமரி, பிள்ளை, மாந்தர், வாழ்க்கை, ஒழுக்கம் – என்பனவெள்ளாண்குமரி – என்றாற்போல நிலைமொழி யீற்று ‘அன்’ கெட நின்ற ளகரம்ணகரமாக்கிப் புணர்க்கப் படும். அதுவே இடையிலுள்ள ளகரம் கெடுத்து முதல்நீட்டி வேளாண்குமரி – முதலாக வருதலுமுண்டு.பொருநன்+வாழ்க்கை = பொருநவாழ்க்கை – எனப் புணரும்.வேட்டுவன் +குமரி =வேட்டுவக்குமரி எனப் புணர்வது மரூஉவழக்கு. (338உரை)மீன் என்ற பெயர் னகரம் றகரத்தோடு உறழ்ந்து முடியப் பெறும்.எ-டு : மீன்கண், மீற்கண்; மீன்றலை, மீற்றலை (339)தேன் + குடம் = தேன்குடம், தேற்குடம், தேக்குடம்- என்றாற் போல,தேன் என்பது வல்லெழுத்து இயையின் இயல்பாயும், னகரம் றகரமாகத்திரிந்தும், னகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கும் புணரும்.னகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிக்குத் தேங்குடம் – தேஞ்சாடி -தேந்தூதை – தேம்பானை – என முடிதலு முண்டு. (340, 341)தேன் என்பதன் முன் மென்கணம் வரின் ஈற்று னகரம் கெட்டும் கெடாமையும்புணரும். எ-டு : தேன்ஞெரி தேஞெரி, தேன்மொழி தேமொழி (342). மேலும்தேஞ்ஞெரி, தேந்நுனி, தேம்மொழி – என னகரம் கெட்டு மெல்லெழுத்து மிகுதலுமுண்டு;தேஞெரி, தேநுனி, தேமொழி – என னகரம் கெட்டு இயல்பாய்முடிதலுமுண்டு. தேன் +இறால் =தேனிறால் எனவும், தேத்திறால் எனவும்புணரும். தேன்+அடை= தேத்தடை எனவும், தேன் +ஈ=தேத்தீ எனவும் புணரும்;தேனடை, தேனீ – என்ற இயல்பும் ஆம். (343, 344 உரை)மின் பின் பன் கன் – என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் தொழிற் பெயர்போல, வன்கணம் வரின் உகரமும் வல் லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும்,உயிர்வரின்தனிக்குறில்முன் ஒற்றாகிய னகரம் இரட்டுதலும் பெற்றுப் புணரும்.எ-டு : மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை கன்னுக்கடுமை;மின்னுஞெகிழ்ச்சி மின்னுஞாற்சி; மின்னுவலிமை; மின்யாப்பு; மின்னருமை.பிறவும் முடிக்க.மின் முதலியன மின்னுதல் முதலிய தொழில்களையும் மின்னல்முதலியவற்றையும் உணர்த்தித் தொழிற்பெயராகவும் பொருட் பெயராகவும்வரும். (345)கன் என்பது அகரச்சாரியை பெற்றுக் கன்னக்குடம்- கன்ன ஞாற்சி -கன்னவலிமை – எனவும், கன்னக்கடுமை கன்னங் கடுமை – எனவும்புணர்தலுமுண்டு. (346)சாத்தன் +தந்தை =சாத்தந்தை, ஆதன் +தந்தை =ஆந்தை, பெருஞ்சாத்தன் +தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை, கொற்றன் + கொற்றன் = கொற்றங்கொற்றன்,கொற்றன் + குடி = கொற்றங் குடி, கொற்றன் +மங்கலம் = கொற்றமங்கலம்,தான் – பேன்- கோன்+ தந்தை= தான்றந்தை – பேன்றந்தை – கோன்றந்தை – எனமுடியுமாறு கொள்க. (இவை இவ்வீற்றெழுத்துப் பற்றி முன்னர்ப்பிறவிடங்களில் முடிக்கப்பட்டுள. ஆண்டு நோக்குக.) (347, 351)அழன் + குடம் = அழக்குடம் – என ஈறு கெட்டு வல்லெழுத்து மிக்கது.வன்கணம் வரின் னகரஈறு கெட வல்லெழுத்து மிகும் என்க. (354)முன் +இல் =முன்றில் – என இடையே றகரமெய் பெற்றுப் புணரும்.(355)‘பொன்’ என்பது செய்யுளில் ‘பொலம்’ என்றாகும். பொலம் என்பதன் ஈற்றுமகரம் வன்கணம் வரின் இனமெல்லெழுத் தாகும்; மென்கணம் வருமிடத்துக்கெடும்.எ-டு : பொலங்கலம், பொலஞ்சாடி, பொலந்தூதை, பொலம்படை, பொலநறுந்தெரியல், பொலமலர். (356 உரை)

னகரஈற்றுச் சாதிப்பெயர்ப் புணர்ச்சி

‘னகரஈற்றுப் புணர்ச்சி – காண்க.

னகரஈற்றுத் தன்மைப்பெயர்ப்புணர்ச்சி

னகரஈற்றுத் தன்மைப்பெயர் யான் என்பது. அஃது அல்வழிக் கண் யான்கொடியேன், யான் செய்வேன் – என்றாற் போல, வல்லினம் வரினும் இயல்பாகப்புணரும்.வேற்றுமைப்புணர்ச்சிக்கண், உருபுபுணர்ச்சிபோல யான் என்பது என் எனத்திரிந்து என்னை என்னான் என்று உருபேற்பது போல, என் கை – என் செவி -என்றலை- என்புறம் -என வருமொழியொடு புணரும்; இயல்புகணத்தின்கண்ணும்என்ஞாண் – என்னூல் – என்மணி, என்யாழ் – என்வட்டு; என்ன(அ)டை -என்னா(ஆ)டை – எனப் புணரும்.இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், என்+புகழ்ந்து = எ ற் புகழ்ந்து, என் + பாடி = எற்பாடி – என னகரம் றகரமாகத் திரியும்.(தொ.எ.352, 353 நச். உரை)

னகரஈற்றுப் படர்க்கைப்பெயர்ப்புணர்ச்சி

னகரஈற்றுப் படர்க்கைப்பெயர் அல்வழிக்கண் நாற்கணம் வந்துழியும்இயல்பாகப் புணரும்.எ-டு : தான் குறியன், தான் ஞான்றான், தான் வலியன், தானடைந்தான்(தொ. எ. 353 நச்.)உருபுபுணர்ச்சிக்கண் தான் என்பது தன் எனக்குறுகித் தன்னை தன்னொடு -என உருபேற்றாற் போலப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் தன்கை தன்செவிதன்றலை தன்புறம், தன்ஞாண், தன்வலி, தன்ன(அ)டை- எனப் புணரும்.இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், தற்புகழ்ந்து – தற்பாடி – எனனகரம் றகரமாகத் திரிந்து புணரும். (352)

னகரஈற்றுப் புணர்ச்சி

வேற்றுமைக்கண் நிலைமொழியீற்று னகரம் வருமொழி முதற்கண் வல்லினம்வரின் றகரம் ஆகும்; பிறவரின் இயல் பாகும்; அல்வழிக்கண் வன்கணம்வரினும் இயல்பாகும்.எ-டு: பொன்+ கழஞ்சு=பொற்கழஞ்சு, பொன்+தகடு =பொற்றகடு:வேற்றுமைக்கண், வல்லினம் வர னகரம் றகரம் ஆதல்; பொன்ஞாற்சி, பொன்யாப்பு: மெலிஇடைவர இயல்பு ஆதல்; பொன்கடிது, ஞான்றது, யாது : அல்வழிக்கண்மூவின மெய் வரினும் னகரம் இயல்பு ஆதல்.தனிக்குறிலைச் சாராது ஈரெழுத்து ஒருமொழி தொடர்மொழி களைச் சார்ந்துநிலைமொழியீற்றில் வரும் னகரம், வரு மொழிக்கு முதலாக வந்த நகரம்னகரமாகத் திரிந்தவிடத்துத் தான் கெடும். இருவழியும் கொள்க.எ-டு: கோன் + நல்லன், நன்மை= கோனல்லன், கோனன்iம; அரசன்+நல்லன்,நன்மை = அரசனல்லன், அரச னன்மை; செம்பொன் + நல்லன், நன்மை = செம்பொனல்லன், செம்பொனன்மை (நன். 209, 210)னகரஈற்றுச் சாதிப்பெயர், வல்லினம் வருமொழிமுதற்கண் வரத் திரியாது இயல்பாதலும்,அகரச்சாரியை பெறுதலும் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணவாம்.எ-டு : எயின் +குடி, சேரி, தோட்டம் பாடி = எயின்குடி, சேரி,தோட்டம், பாடி; எயினக்குடி, எயினச்சேரி, எயினத்தோட்டம், எயினப்பாடி -என வரும்.எயினமரபு, எயினவாழ்வு, எயினவ(அ)ணி – என ஏனைக் கணத்தும்வேற்றுமைக்கண் அகரச்சாரியை கொள்க.எயினப்பிள்ளை, எயினமன்னவன் – என அல்வழிக் கண்ணும்அகரச்சாரியைப்பேறு கொள்க. (நன். 212)மீன் என்னும் பெயரீற்று னகரம் வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம்வருவழி றகரத்தோடு உறழும் (றகரமாகத் திரிந்தும் திரியாமலும்வரும்).எ-டு: மீன் + கண், செவி =மீற்கண், மீன்கண்;மீற்செவி, மீன்செவி(நன். 213)தேன் என்னும் னகரஈற்றுப்பெயர் மூவின மெய்களொடும் புணருமிடத்துஇறுதி னகரம் இயல்பாதலும். மென்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக்கெடுதலும், வன்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக் கெடுமிடத்து வந்தவல்லினமோ அதன் மெல்லினமோ மிகுதலும் ஆம். இவ்விதி இருவழிக்கண்ணும்கொள்க.அல்வழிப் புணர்ச்சி:தேன்கடிது, தேன் ஞான்றது, தேன்யாது இயல்பு; தேன்மொழி, தேமொழி -மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன்குழம்பு, தேக்குழம்பு,தேங்குழம்பு – வலிவரின் இயல்பும், வலிமெலி உறழ்வும்வேற்றுமைப் புணர்ச்சி :தேன்கடுமை, தேன்மாட்சி, தேன்யாப்பு – இயல்பு; தேன்மலர், தேமலர் -மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன் குடம், தேக்குடம்,தேங்குடம் – வலிவரின் இயல்பும், வலி மெலி உறழ்வும் (நன். 214)எகின் என்னும் அன்னப்பறவையை உணர்த்தும் னகர ஈற்றுப் பெயர்(அல்வழியில் இயல்பாதலே யன்றி) வேற்றுமைப் புணர்ச்சியிலும் வன்கணம்வருமிடத்தே இறுதி னகரம் இயல் பாதலும், இருவழியிலும் அகரச்சாரியை மருவவல்லெழுத் தாவது அதற்கு இனமெல்லெழுத்தாவது மிகுதலும் ஆம்.எ-டு : எகின்கால், சினை, தலை, புறம் – வேற்றுமையில் வலிவரஇயல்பாதல்; எகின் +புள் =எகினப்புள், எகினம்புள் – அல்வழியில் அகரம்வர வலிமெலி மிகுதல்; எகின் +கால் = எகினக்கால், எகினங்கால் -வேற்றுமையில் அகரம் வர, வலிமெலி மிகுதல்.எகினமாட்சி, எகின வாழ்க்கை, எகினவ(அ)ணி – என ஏனையகணத்தின்கண்ணும் அகரச்சாரியைப் பேற்றினைக் கொள்க. (நன். 215)குயின், ஊன்- என்னும் னகரஈற்றுப் பெயர்ச்சொற்கள்வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் இயல்பாகப் புணரும்.எ-டு : குயின்கடுமை, ஊன்சிறுமை (நன். 216)மின் பின் பன் கன் – என்ற நான்கு சொற்களும், அல்வழி வேற்றுமை எனஇருவழியும், மூவின மெய்களொடும் புணரு மிடத்து, தொழிற்பெயர் போலஉகரச்சாரியை பெற்றுப் புணரும். கன் என்பது உகரச்சாரியையேயன்றிஅகரச்சாரியை பெற்று, வன்கணம் வருவழி வந்த வல்லெழுத்தாதல் அதன் இனமானமெல்லெழுத்தாதல் மிகப் பெறும். (பிற சொற்க ளுக்கும் வன்கணம் வருவழிசாரியைப் பேற்றொடு வலி மிகுதல் கொள்க.)எ-டு : மின் + கடிது, நன்று, வலிது = மின்னுக் கடிது,மின்னுநன்று, மின்னு வலிது – அல்வழி; மின் + கடுமை, நன்மை, வலிமை = மின்னுக்கடுமை, மின்னுநன்மை, மின்னுவலிமை – வேற்றுமை.இவ்வாறே பின் – முதலிய மூன்று சொற்கும் கொள்க.கன் + தட்டு = கன்னத்தட்டு, கன்னந்தட்டு – அல்வழி(இருபெயரொட்டு); கன் + தூக்கு = கன்னத்தூக்கு, கன்னந்தூக்கு -வேற்றுமை .(மின்- மின்னல்; பன் – ஒருபுல் ; கன் – சிறுதராசுத்தட்டு)தன், என் – என்பவற்று ஈற்று னகரம் வருமொழி வல்லெழுத் தோடு உறழும்.எ-டு : தன் + பகை =தன்பகை, தற்பகை; என்+பகை = என்பகை, எற்பகை.‘நின்’ ஈறு இயல்பாகப் புணரும். எ-டு: நின்பகை (நன். 218)மின்கடிது, பன்கடிது; மின்கடுமை, பன்கடுமை – என இரு வழியும்இயல்பாகப் புணர்தலும், மான்குளம்பு வான்சிறப்பு- என வேற்றுமைக்கண்இயல்பாகப் புணர்தலும், வரிற் கொள்ளும் எனச் செயின் என்னும் வாய்பாட்டுவினை யெச்சம் ஈற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலும் சிறு பான்மைகொள்ளப்படும். (சங். உரை)

னகரஈற்றுள் அல்வழிக்கண் திரிவன

மன் சின் – என்ற அசைச்சொற்களும், ஆன் ஈன் பின் முன் – என்ற ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச் சொற்களும், வினையெச்சங்களும்னகரம் றகரமாகத் திரியும். அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின்- என்றஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்களின் ஈற்று னகரமும்றகரமாகத் திரிந்து வருமொழியொடு புணரும். ஆன் முதலியன பெயர்த்தன்மைய.(தொ. எ.333, 334 நச்.)எகின் + சேவல் = எகினச் சேவல் – என (இரு பெயரொட்டு)ப் பண்புத்தொகைஅகரமும் வல்லெழுத்தும் பெறும். – 337

னகரம் மகரத்தொடு மயங்கும் நிலை

பண்டைக் காலத்தில்அஃறிணையில் தொடர்மொழிப் பெயர்கள் பல னகரஈற்றவாய்இருந்தன. பின்னர் அவற்றை மகரஈறாக வழங்கலாயினர். அவ்வாறு மகரஈறாகக்கொள்ளா மல் விடப்பட்ட பெயர்கள் ஒன்பதே. அவை எகின் செகின் விழன் பயின்குயின் அழன் புழன் கடான் வயான் – என்ப. பலியன் வலியன் புலான் கயான்அலவன் கலவன் கலுழன் மறையன் செகிலன் – முதலியனவும் மயங்கப்பெறா என்பர்மயிலைநாதர். (நன். 121)“ஒன்றன்பால்பெயர் விகுதியாகக் காண்கின்ற ‘அம்’ பழங் காலத்தில்‘அந்’ என்றிருந்தது. பின் நகரம் அநுஸ்வாரமாய் மாறிப் போயது.நகரத்துக்கு அநுஸ்வார உச்சாரணம் நிகழக் கூடியதே.தாந் + தாந் = தா0ஸ்தாந் ; ரம் + ஸ்யதே =ரஸ்யதே;மந் + ஸ்யதே = ம0ஸ்யதே.“வடமொழியிற்போல மலையாளத்திலும் ‘அந்’ விகுதி ‘அம்’ என்றாகியதுஎன்று கொள்வதே அமைதி. தமிழிலும் கடம் பலம்- முதலிய சொற்கள் கடன் பலன்- முதலியனவாக உலக வழக்கில் காணப்படுகின்றன. பவணந்தி ஒன்றன்பால் பெயர்விகுதிகளில் அம் என்றும், அன் என்றும் விகுதி வரலாம் என்றுவிதித்துள்ளார். (எ-டு: நீத்தம், நோக்கம்; வலியன், கடுவன்)“பழங்காலத்தில் அஃறிணையிலும் அந்(அன்) என்பதுதான் விகுதியாகஇருந்தது. கிரமமாக ஆண்பாலினின்று வேற்றுமை தெரிவிக்கவேண்டி நகரத்தைஅநுஸ்வாரமாக மாற்றி ‘அம்’ என்றாக்கினர். கடன் பலன் முதலிய சொற்கள்பழைய வழக் காற்றில் எஞ்சினவாகும் – என்று ஊகித்தற்கு நல்ல வகை உண்டு”- என்பது கேரள பாணினீயம்.கன்னடத்திலும் மரன் மரம் – என்ற இருவடிவம் உண்டு. தெலுங்கில்ம்ரான் (மரன்) கொலன் (குளன்) – என னகரம் ஒன்றே உள்ளது. இவற்றால் னகரமேமகரமாக, குளன் ‘குளம்’ என்று மாறியது புலப்படும். இலக்கண விளக்கமும்தொல் காப்பியத்தை ஒட்டி, னகரத்திற்கு மகரம் போலியாக வரும் என்கிறது.னகரத்தொடு மகரம் மயங்காத சொற்கள் ஒன்பது எவை என்பது புலப்படவில்லை.அஃறிணையிலும் ஆண்பாற் பெயர்களாகக் கூடிய கடுவன் அலவன் வலியன் கள்வன்-போன்ற சொற்கள் ஒன்பது இருக்கலாம். இவை ஆண்பாற் பெயர்கள் ஆதலின்னகரஈறாகவே இருத்தல் அமையும் என விடப்பட்டனபோலும். (எ.ஆ.பக்.73-75)ஆசிரியர் காலத்தே னகரத்தொடர்மொழி மகரஈறாக மிகுதி யும் மயங்கிற்று.ஈரெழுத்தொருமொழியில் அம்மயக்கம் இல்லை. மகரத்தொடர்மொழினகரத்தொடர்மொழியாக மயங்காது. (எ.கு.பக். 83)