ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நகர ஈறு | நகர ஈறு ஒரு சொற்கே உரித்தாம். பொருந் என வரும். (மு. வீ. எழுத்.90) |
நகர ஈற்றுத் தொழிற்பெயர் | நகர ஈற்றுத் தொழிற்பெயர் பொருந் என்பது. அஃது அல்வழிப்புணர்ச்சிக்கண் உகரச்சாரியை பெற்றுப் பொருநுக் கடிது, பொருநு நன்று,பொருநு வலிது என்றாற் போலவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண்உகரச்சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெற்றுப் பொருநுக்கடுமை -பொருநக்கடுமை, பொருநுநன்மை – பொருநநன்மை, பொருநுவலிமை, பொருந வலிமைஎன்றாற்போலவும் முடியும். (நன். 208) |
நகரஈற்றுப் பொதுப்புணர்ச்சி | நகர ஈற்றுச் சொற்கள் இரண்டே. அவை வெரிந், பொருந் என்பன. இச்சொற்கள்அல்வழிக்கண் வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும் மென்கணமும்இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும் பெற்றும், யகரமும் உயிரும் வரின்இயல்பாகவும் புணரும்; வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரச் சாரியைக்குமாறாக அகரச் சாரியை பெறும். வெரிந் என்னும் சொல் வன்கணம் வருவழி நகரம்கெட்டு மெல்லெழுத்தோ வல்லெழுத்தோ பெற்றுப் புணரும். சிறுபான்மைஉருபுக்குச் செல்லும் சாரியையாகிய இன் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கும் பெறுதலுண்டு.எ-டு : பொருநுக் கடிது, பொருநு ஞான்றது, பொருநு வலிது, பொருந்யாது, பொருந் அரிது – இவை அல் வழி முடிபு. (தொ. எ. 298 நச்)பொருநக்கடுமை வெரிநக்கடுமை, பொருந ஞாற்சி, வெரிநஞாற்சி,பொருநவன்மை, வெரிநவன்மை, பொருநயாப்பு, வெரிநயாப்பு, பொருநருமை வெரிநருமை – இவை வேற்றுமை முடிபு. (299 நச்.) வெரிங்குறை வெரிஞ்செய்கைவெரிந்தலை வெரிம் புறம்; வெரிக்குறை வெரிச்செய்கை வெரித்தலைவெரிப்புறம் – வேற்றுமை முடிபு. (300, 301 நச்.)பொருநினை வெரிநினை (182 நச்.)பொருநின்குறை, வெரிநின்குறை (299 நச். உரை) |
நகரம் எதிர்மறைப் பெயரோடு இணையும்முறை | நின்ற மொழியின் பொருளை மாற்றுதற்கு முதலில் நிறுத்திய நகரஉயிர்மெய், அப்பொருள்மொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாகில், அவ்வுயிர்ஒழிய உடல் போம். (‘அ’ என நிற்கும்) அஃது உயிராயின், நகரஉயிர்மெய்பிரிந்து உயிர் முன்னும் உடல் பின்னும் ஆம். (‘அந்’ என நிற்கும்).வரலாறு:சஞ்சலம் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து,நகர உயிர்மெய்யை முன்னே வருவித்துச் ‘சார்ந்தது உடலாயின் தன்உயிர்போம்’ என்பதனால் பிரித்து நகர ஒற்றைக் கெடுத்து, ‘அசஞ்சலன்’ எனமுடிக்க.பயம், களங்கம் என இவையும் அவ்விலக்கணத்தான் அபயன், அகளங்கன் எனமுடிக்க.உபமன் என நிறுத்தி, இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து, நகரஉயிர்மெய்யை முன்னர் நிறுத்திச் ‘சார்ந்தது தான் ஆவியேல் தன் ஆவி முன்ஆகும்’ என்பதனால் பிரித்து அகரத்தை முன்னர் நிறுத்தி, நகரஒற்றின்மேல்உயிரை (உகரம்) ஏற்றி, அநுபமன் என முடிக்க.அகம் என்பது பாவம்; இதனை இல்லாதவன் யாவன் எனக் கருதியவிடத்து,இவ்விலக்கணத்தால் அநகன் என்க. உசிதம் என்பது யோக்கியம்; அஃது இல்லாததுஅநுசிதம் என முடிக்க.(நேமி. எழுத். 11 உரை) |
நக்கீரனார் அடிநூல் | ‘அடிநூல்’ காண்க. (யா. வி. பக். 367, 437) |
நச்சினார்க்கினியர் | 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்; பேருரை யாசிரியர்.பத்துபாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம்இவையெல்லாவற்றுக்கும், குறுந்தொகை யுள் பேராசிரியர் உரை வரையாதுவிடுத்த இருபது செய்யுட் கும் இவர் உரையியற்றியுள்ளார்.குறுந்தொகையுரையும், தொல்காப்பியத்துள் மெய்ப்பாடு, உவமம், மரபுஎன்னும் மூன்று இயல்கட்கு இவர் வரைந்த உரையும் இதுபோது காணப்பட்டில.மிக்க நினைவாற்றலோடு இவர் வரைந்த உரைநயம் பெரும்பான்மையும் ஆன்றோரான்போற்றப் படுவன. பண்டை இலக்கணத்துள் பிற்கால இலக்கியங்களை அடக்கிக்காட்ட வேண்டுமெனப் பெரிதும் முயன்று இவர் இயற்றிய உரையுள்கொண்டுகூட்டுப் பயிலும். ஆராய்ச்சியும் நுணுக்கமும் நனி பேரிலக்கியப்புலமையும் தொல்காப்பியத் துள் திளைத்த தமிழ்ப்புலமையும் சீர்த்தஇவ்வுரையாளரை ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்ப. இவர்அந்தணர்; பாரத்துவாசி; மதுரையில் வாழ்ந்த ஆசிரியர். |
நச்சினார்க்கினியர் குறிப்பிடும்ஈரெழுத்து மொழி முதலியன | செய்யுளியலில் ஒற்றும் குற்றியலுகரமும் எழுத்தாக எண்ணப் படாததைஉட்கொண்டு, அதனை எழுத்ததிகாரத்தும் ஏற்றி, ஒற்றையும்குற்றியலுகரத்தையும் விடுத்துச் சொற்களில் எழுத்தைக் கணக்கிடு முறையைநச்சினார்க்கினியர் குறிப்பிட் டுள்ளார். ஆனால் அம் முறையை அவரேநெடுகப் பின்பற்றிலர்.ஆ, கா – ஓரெழுத்தொருமொழி; மணி, வரகு, கொற்றன் – ஈரெழுத்தொருமொழி;குரவு – மூவெழுத்தொருமொழி; கணவிரி – நாலெழுத்தொருமொழி; அகத்தியனார் -ஐயெழுத் தொரு மொழி; திருச்சிற்றம்பலம் – ஆறெழுத் தொருமொழி;பெரும்பற்றப்புலியூர்-ஏழெழுத்தொருமொழி (தொ. எ. 45 நச்.) |
நச்சுச் சொல் | 1. செய்யுளில் வழங்கக் கூடாத தீய சொல். 2. கொடுஞ்சொல். (L) |
நச்செழுத்து | பாடப்படும் பிரபந்தத்தினது முதற்சொல் மங்கலமொழியாக இல்லாதவிடத்து,ஆதிமொழிக்கு ஆகாதன என்று கடியப் பட்ட எழுத்துக்கள். அவை யா ரா லா ளா,யோ ரோ லோ ளோ, ய்ர்ல்ள், ஆய்தம், மகரக்குறுக்கம், அளபெடை என்பன வாம்.எடுத்த மங்கல மொழிக்கண் இவ்வெழுத்து வரின், அவை குற்றமுடைய அல்லஎன்பது. (இ. வி. பாட். 20) |
நட வா முதலியன உரிச்சொற்களே | ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ ஆதலின், அவற்றைப் பெயர் வினைஇடை உரி எனப் பாகுபாடு செய்தது, உயர்திணை அஃறிணை என்றல் தொடக்கத்தனபோலப் பொருள் வேறுபாடு பற்றிக் கருவி செய்தற் பொருட் டேயாம். அவற்றுள்குறிப்பும் பண்பும் இசையும் பற்றி வருவன எல்லாம் ஒருநிகராக, சிலவற்றைஉரிச்சொல் எனவும் சிலவற்றை வேறுசொல் எனவும் கோடல் பொருந்தாமையின்அவற்றை உரிச்சொல் என்றே கொள்ளவேண்டும். இவை குணப்பண்பு, தொழிற்பண்புஎன இரண்டாய் அடங்கும். குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகிய பொருட்பண்பினைஉணர்த்தும் சொல் உரிச்சொல்லேயாம்.நடந்தான் என்புழி நடத்தலைச் செய்தான் என உருபு விரிதலின், நடஎன்பது பெயர்ச்சொல் அன்றோ எனின், நடந்தான் ஒருமொழித்தன்மைப்பட்டுநிற்றலின், அது நட வைத்தான் எனத் தன்சொல்லால் பிரித்துக் காட்டல்ஆகாமையின், நடத்தலைச் செய்தான் எனப் பிறசொல்லால் காட்டிமுடிக்கப்படும். நட என்பது தல் என்ற பகுதிப்பொருள் விகுதி பெற்றவழிப்பெயர்ச்சொல்லாம் ஆதலின், ஆண்டு உருபேற்றல் அமையும். வடநூலுள்ளும்பிரியாத் தொகை பிறசொல்லால் விரித்துக் காட்டப்படும். (சூ. வி. பக். 34- 36) |
நட வா முதலியன முன்னிலைஏவலொருமைவினை ஆகாமை | நடவாய் வாராய் முதலிய முன்னிலை ஏவலொருமை எதிர்கால வினைமுற்றுச்சொற்கள் ஆய் விகுதி குன்றி நட வா முதலியன- வாய் நின்றன அல்லது,முதனிலைகளே ஓசைவேறுபாட்டால் முன்னிலை ஏவல் ஒருமை வினைகள் ஆகா. (சூ.வி. பக். 32) |
நட, வா முதலியன | நட வா முதலிய இருபத்து மூன்று ஈற்றவாகிய இவை முதலாகியசொற்களெல்லாம் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றாகவும், ஏனைய வினைகளின்பகுதியாகவும் வரும். செய் என்னும் வாய்பாட்டின இவை.முன்னிலை ஏவலொருமை வினை ‘நடவாய்’ என்பதே கொண்டு, நட என்பதுஏவல்வினைக்குப் பகுதியே, அஃது ஏவல்வினை அன்று என்பார் சிவஞானமுனிவர்.(நன். 137) |
நடத்து, நடத்துவி, நடத்துவிப்பி:விளக்கம் | இவ்வாய்பாடுகளுள் நடத்து வருத்து முதலியன ஏவல்வினை- முதல்இரண்டையும் இயற்றும் வினைமுதல் இரண்டையும் மூவருள் இருவர்க்கு ஒருகருத்தனையும்,நடத்துவி வருத்துவி முதலியன ஏவல் வினைமுதல் மூன்றையும் இயற்றும்வினைமுதல் மூன்றையும் நால்வருள் மூவர்க்கு ஒரு கருத்தனையும்.நடத்துவிப்பி வருத்துவிப்பி முதலியன ஏவல்வினைமுதல் நான்கையும்இயற்றும் வினைமுதல் நான்கையும் ஐவருள் நால்வர்க்கு ஒரு கருத்தனையும்,தந்து நின்றன. இங்ஙனம் இருவர்முதல் ஐவரை உள்ளுறுத்த வாய்பாடுகளைஎடுத்துக் கூறவே, வரம்பின்றி ஏவல்மேல் ஏவலும் இயற்றல்மேல் இயற்றலுமாய்வருவனவற்றிற்கு வாய்பாடு இன்று என்பதும் பெற்றாம். (நன். 138சங்கர.) |
நடப்பி, நடப்பிப்பி ஏவற்பகாப்பதம்ஆகாமை | எடுத்தலோசையான் முன்னிலை ஏவலொருமை வினை முற்றுப் பகாப்பதங்களாகியநட – நடப்பி என்றாற் போல் வனவே பகுதியாம் எனவும், நடப்பிப்பி -வருவிப்பி – நடத்து விப்பி என இவை (வி பி விகுதிகள்) இணைந்துவரும்எனக் கூறியவற்றை இருமடியேவற் பகாப்பதம் எனவும், நடப்பிப் பித்தான் -வருவிப்பித்தான், நடத்துவிப்பித்தான் என்றாற் போல்வனவற்றிற்குநடப்பிப்பி முதலானவையே பகுதியாம் எனவும் கூறுவாருமுளர். அவர் கூறுவதுபொருந்தாது. என்னையெனில், அவ்வாறு கூறுவார்க்கும், நடப்பிப்பிமுதலானவை பகுதியாகுமிடத்து, அப்பொருண்மையில் திரிந்து படுத்தலோசையால்அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்கும்எனக் கூறவேண்டுதலின், முன்னிலை ஏவல்வினைமுற்றுப் பகாப் பதங்கள் பகுதிஆகா என்பது உணரப்படும். மேலும் இரு முறை ஏவுதல் கூறியது கூறல் ஆதலின்அவை இழிவழக்காம். அப் பகுதிகளால் பிறந்த பகுபதங்களும் அவ்வாறே இழிவழக்காய் முடியும். (இ. வி. எழுத். 44) |
நடு எழுத்து அலங்காரம் | சித்திரகவி வகைகளுள் ஒன்று. (விளக்கமும் எடுத்துக்காட்டும்புலப்பட்டில). |
நடைச்சவலைப் பாதச் சமவிருத்தம் | தம்மில் ஒத்த அடி நான்காய் வரும் செய்யுள் விருத்தமாம்.முடிவு இரண்டடி மிக்கும் முதல் இரண்டடி நைந்தும், முடிவு இரண்டடிகுன்றி முதல் இரண்டடி மிக்கும், இடையிடை அஃகியும் மிக்கும் வரினும்நடைச்சவலைப் பாதச் சம விருத்தம் என்பாருமுளர். நான்கடியின் மிக்கஅடிகளால் வரும் சவலைப் போலியுள் இது நிகழும். (வீ. சோ. 130 உரை) |
நட்சத்திரமாலை | 1. நட்சத்திரங்களைப் பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல். 2. இருபத்தேழ்பாடல் கொண்டதொரு பிரபந்த வகை. (பன். பாட். 305) |
நந்தம்மை, நுந்தம்மை : சாரியைவழுவமைதியாதல் | படர்க்கைக்குரிய தம்முச்சாரியை, நந்தம்மை நுந்தம்மை எனத்தன்மையிலும் முன்னிலையிலும் வருதல் ‘ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே’(380) என்னும் இடவழுவமைதியாம். (நன். 246 சங்கர.) |
நன்னிலை | சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு எனப்பட்ட பேதங்க ளுள் ஒன்று.ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு ஐந்தெழுத்தாகவரும் நாலடிப் பாட்டுள் நிகழ்வது.‘மன்ன னேரியன்சென்னி மானதன்கன்னி காவலன்பொன்னி நாயகன்.’ (வீ. சோ. 139 உரை) |
நன்னூலார் ‘தானெடுத்து மொழிந்த’தொல்காப்பியச் சூத்திரங்கள் | ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.’ (நன். பாயிரம். 6)‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளிஉயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.’ (நன். 89 மயிலை)‘அத்தின் அகரம் அகரமுனை இல்லை.’ (நன். 251)‘யாதன் உருபின் கூறிற் றாயினும்பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.’ (நன். 316)‘முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்அந்நிலை மருங்கின் மெய்ஊர்ந்து வருமே.’ (நன். 335)‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்.’ (நன். 403)‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே.’ (நன். 407)‘மாஎன் கிளவி வியங்கோள் அசைச்சொல்.’ ( நன். 438) |
நன்னூல் | தொல்காப்பியத்திற்குப் பின்னர் இயற்றப்பெற்ற இலக்கண நூல்களுள்நன்னூற்கு இணை வேறு எந்நூலும் இல்லை என்பது பெரியோர் பலர்தம் துணிபு.இதன் சூத்திரம் நூற்பா ஆகிய அகவலால் யாக்கப்பெற்றது. சிறப்புப்பாயிரம்பொதுப் பாயிரம் இவற்றோடு, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என் னும்இரண்டதிகாரங்களையுடைய இந்நூலின் நூற்பாக்கள் எண் 462.தொல்காப்பியத்திற்கு இது வழிநூல்; தொல்காப் பியத்தின் முந்து நூலாம்அகத்தியத்திற்குச் சார்பு நூல். இந் நூலாசிரியர் சமண முனிவராகியபவணந்தி என்பார். இவர் மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1216)காலத்துச் சிற்றரசனாகிய சீயகங்கன் வேண்டுகோட்கு இணங்க இந் நூலைஇயற்றினர் ஆதலின், இந்நூல் தோன்றிய காலமும் அக்கால அளவிலேயாம்;உரையாசிரியராம் இளம்பூரணர் காலத்துக்குப் பிற்பட்டது;நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது.சூத்திரங்களின் திட்ப நுட்பமும் கிடக்கை முறையும் இயற் பாகுபாடும்இந்நூலது பெருமையைப் புலப்படுத்துவன. தொல்காப்பியனார் விரிவாகக் கூறியகுற்றியலுகரப் புணரி யற் செய்தியை இவர் தொகுத்து உயிரீற்றுப்புணரியலுள் கூறினார்; அவர் இரண்டு சூத்திரங்களால் தொகுத்துக் கூறியவடமொழி ஆக்கத்தை இவர் பதவியல் இறுதியில் விரித்துக் கூறினார். பழையனகழித்துப் புதியன புகுத்திப் படைக்கப் பட்ட இந்நூல், தொல்காப்பியர்காலத்தினின்று இவர் காலம் வரை மொழித் துறையில் நேர்ந்துள்ள மாறுதல்களைப் புலப்படுத்த வல்லது.இந்நூற்கு மயிலைநாதர் என்ற சமணப்புலவரது காண்டிகை யுரை பழமையானது;அடுத்து ஆறுமுக நாவலர், இராமா நுசக் கவிராயர் முதலாகப் பலரும்காண்டிகையுரைத்தனர். சங்கர நமச்சிவாயர் இந்நூற்கு விருத்தியுரைவரைந்தார். அதனைச் சற்றே புதுக்கினார் மாதவச் சிவஞான முனிவர்.இடைக்காலத் தமிழிலக்கிய வளர்ச்சியை மனம்கொண்டு பவணந்தி இயற்றியஇந்நூல் காலத்திற்கு ஏற்ப வேண்டப் பட்ட தமிழிலக்கணம். இவ்வாசிரியர்ஏனைய பொருள் யாப்பு அணி அதிகாரங்களும் இயற்றியிருக்கக் கூடும்; அவைகால வெள்ளத்தில் அழிந்தன என்பது ஒருசாரார் கருத்து. ‘அரும்பொருள்ஐந்தையும் தருகென’ என்பது சிறப்புப் பாயிரம். |
நன்னூல் எழுத்ததிகாரத் தற்சிறப்புப்பாயிரம் | ‘பூமலி அசோகின்’ என்று தொடங்கும் நூற்பா, வணக்கம் அதிகாரம் என்னும்இரண்டனையும் சொல்லுதலின், தற் சிறப்புப் பாயிரமாம். ‘பூமலி அசோகின்புனைநிழல் அமர்ந்த நான்முகற் றொழுது’ என வணக்கம் சொன்னவாறு; ‘நன்கியம்புவன் எழுத்தே’ என அதிகாரம் சொன்னவாறு. (இவ்வாறேசொல்லதிகாரத்தும் ‘முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதனடிதொழுது’ என வணக்கமும், ‘அறை குவன் சொல்லே’ என அதிகாரமும் சொன்னவாறுகாண்க.) நூலினை நுவல்வான் புகுந்து ஈண்டு வணக்கம் வைக்க வேண் டியதுஎன்னையெனின், ‘வழிபடு தெய்வம் வணக்கம் செய்து, மங்கல மொழி முதலாகவகுப்பவே, எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம், இடுக்கண் இன்றி இனிதுமுடியும்’ என்பவாகலின் ஈண்டு வணக்கம் செய்யப்பட்டது. (நன். 55மயிலை.) |
நன்னூல் சார்பெழுத்துப் பத்துஎன்றதன் நோக்கம் | ஆசிரியர் தொல்காப்பியனார் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்துமூன்று எனக் கருவிசெய்தார் ஆதலின், இவ் வாசிரியர் செய்கையும்செய்யுளியலும் நோக்கிச் சார் பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார்என்பதுணர்க. (நன். 60 சிவஞா.) |
நன்னூல் மயிலைநாதர் உரையில் அவிநயச்சூத்திரங்கள் | ‘பதினெண் மெய்யும் அதுவே மவ்வோடுஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’ (நன். 59)‘ஆற்ற லுடைஉயிர் முயற்சியின் அணுஇயைந்துஏற்றன ஒலியாய்த் தோற்றுதல் பிறப்பே’ (ந ன். 73)‘கசதப ஙவ்வே ஆதியும் இடையும்டறஇடை ணனரழ லளஇடை கடையேஞநமய வவ்வே மூன்றிடம் என்ப’. (நன். 101)‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்சுட்டுதற் கண்ணேயாம் சொல்’. (நன். 127)‘அவைதாம்பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றாஇரண்டன் பாலாய் அடங்குமன் பயின்றே’, (நன். 130)‘றனழஎ ஒவ்வும் தனியும் மகாரமும்தன்மைத் தமிழ்பொது மற்று’, (நன். 149)‘அழிதூஉ வகையும் அவற்றின் பாலே’, (நன். 263)‘காலம் அறிதொழில் கருத்தனோடு இயையப்பால்வகை தோறும் படுமொழி வேறே’. (நன். 319)பத்து எச்சங்கள் (நன். 359)தொகைப்பொருள் சிறக்குமிடம் (நன். 369) |
நன்னூல் மயிலைநாதர் உரையில்அகத்தியச் சூத்திரங்கள் | ‘பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்.’ (நன். 130)‘வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே’. (நன். 258 )‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமேஅடிசில் பொத்தகம் சேனை அமைந்தகதவம் மாலை கம்பலம் அனைய’ (நன். 259)‘அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்தபன்னிரு திசையிற் சொன்னயம் உடையவும்’ (நன். 272 )‘ஏழியல் முறையது எதிர்முக வேற்றுமைவேறென விளம்பான் பெயரது விகாரமென்றுஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ (நன். 290)‘வினைநிலை உரைத்தலும் வினாவிற் கேற்றலும்பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே’. (நன். 294)‘ஆறன் உருபே அது ஆது அவ்வும்வேறொன்று உரியதைத் தனக்குரி யதைஎனஇருபாற் கிழமையின் மருவுற வருமேஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை’. (நன். 299)‘மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்முற்றி நிற்பன முற்றியல் மொழியே,’ (நன். 322)‘முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்முற்றுச்சொல் என்னும் முறைமையின் திரியா’. (நன். 332)‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாதுபெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே’ (நன். 339)‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாதுவினைகொள் ளும்மது வினையெச் சம்மே. (நன். 341)‘எனைத்துமுற் றடுக்கினும் அனைத்துமொரு பெயர்மேல்நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றேவினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய’, (நன். 354)‘கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவிநின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்காணா ஐயமும் பல்லோர் படர்க்கை’. (நன். 377)‘உலக வழக்கமும் ஒருமுக் காலமும்நிலைபெற உணர்தரும் முதுமறை நெறியான்’ (நன். 381)‘அசைநிலை இரண்டினும் பொருள்மொழி மூன்றினும்இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும்’. (நன். 394) |
நன்னூல் மயிலைநாதர் உரையில்தொல்காப்பியச் சூத்திரங்கள் | ‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்,’ (மொழிமரபு 34) (நன்.105)‘சொல்லெனப் படுப பெயரே வினையென்றுஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.’ (பெயரியல் 4) (நன்.130)‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாதுநினையுங் காலை காலமொடு தோன்றும், (வினயியல் 1) (ந ன். 319)‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்வருவகை தானே வழக்கென மொழிப’. (பொருளியல் 28) (நன்.357)‘உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையேபலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்’, (எச்சவியல் 25) (நன்.371)‘பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே’. (கிளவியாக்கம் 51) (நன்.377)‘எண்ணுங் காலும் அதுஅதன் மரபே’. (47) (நன். 388)‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவேஇரண்டறி வதுவே அதனொடு நாவேமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கேநான்கறி வதுவே அவற்றொடு கண்ணேஐந்தறி வதுவே அவற்றொடு செவியே…’‘புல்லும் மரனும் ஓரறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘நந்தும் முரளும் ஈரறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘சிதலும் எறும்பும் மூவறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘ஞெண்டும் தும்பியும் நான்கறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’‘மாவும் மாக்களும் ஐயறி வினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ (மரபியல் 27-32) (நன்.443-448) |
நம்பியகப்பொருள் | நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம். அகப் பொருள் விளக்கம்என்பது நூற்பெயர். சிறப்புப் பாயிரமாகிய ஒன்று நீங்கலாக இந்நூலில் 252நூற்பாக்கள் அமைந்துள. அகத்திணையியல் களவியல் வரைவியல் கற்பியல்ஒழிபியல் என இதன்கண் ஐந்து இயல்கள் உள. அகத்திணையியலுள் முதல் கருஉரிப்பொருள்கள் பற்றிய செய்திகளும், களவு கற்பெனும் இருவகைக் கைகோள்பற்றிய பொதுச்செய்தி களும், கைக்கிளை பற்றிய குறிப்புக்களும், பிறவும்கூறப்பட் டுள. களவியல், கைக்கிளை வகை நான்கனொடு, களவிற்குரிய பதினேழ்கிளவிகளையும் வகையும் விரியும் கூறி விளக்குகிறது. வரைவியலுள், வரைவுமலிவும் அறத்தொடு நிற்றலும் பற்றிய துறைகள் விளக்கப்பட்டுள.புணர்தலும் ஊடலும் ஊட லுணர்த்தலும் பற்றிய செய்திகள் கற்பியலுள் இடம்பெறு வன. இனி, ஒழிபியல் அகப்பாட்டுறுப்புக்கள் பன்னிரண் டனையும்விளக்குகிறது. அவ்வியலுள், அகப்புறக் கைக்கிளை பற்றியும்அகப்பொருட்பெருந்திணை பற்றியும் அகப்பாட் டுள் வருந் தலைமக்களைப்பற்றியும் பல செய்திகள் சில இயைபு பற்றிக் கூறப்பட்டுள.இதற்கொரு பழைய சிறந்த உரை உண்டு. இதன் துறை களுக்குப்பெரும்பான்மையும் தஞ்சைவாணன் கோவை எடுத்துக் காட்டாகும். இந்நூலின்காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.‘நம்பியப்பொருள்’ என்றே நூற்பெயர் நிலவுகிறது. |
நம்பியகப்பொருள் விளக்கம் | ‘நம்பியகப்பொருள்’ காண்க. |
நயனப்பத்து | தலைவனுடைய கண்களைப் பத்துப்பாடல்களால் புகழ்ந்து கூறும்பிரபந்தவகை. பாடல் ஆசிரியவிருத்தம் அன்றிக் கலித்துறையால் அமைதல்வேண்டும் எனச் சில பாட்டியல் நூல்கள் கூறும். (வெண்பாப்.செய்.25) (இ.வி. பாட்.92) |
நற்கணம் | செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய சுவர்க்கம், மதி,நிலன், நீர் என்ற நான்கு கணமும் நற்கணமாம். இவற்றுக்குரிய வாய்பாடுகள்முறையே தேமா, தேமாங்காய்; புளிமா, புளிமாங்காய்; கருவிளம்கருவிளங்கனி; கூவிளம் கூவிளங்கனி என்பனவாம்.இவற்றுக்குரிய தெய்வங்கள் முறையே பிரமன், திருமகள், சுரபி, கருடன்என்ப. (இவி.பாட்.42) சுவர்க்க கணத்தை இயமான கணம் என்னும் பிங்கலந்தை(1333). |
நற்கவி | ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்று சொல்லப்படும் நால் வகைக்கவியும் ‘நற்கவி’ எனப்படும். கவிப்புலவன் இந்நற் கவி பாடும்இயல்பினனாயிருத்தல் வேண்டும் என்பது, அவனுக்குச் சொல்லிய இலக்கணத்துள்ஒன்று. (இ. வி. பாட். 178) |
நற்றத்தம் | யாப்பிலக்கணம் பற்றிய பல நூல்கள் பெயர் தொல்காப்பியம் செய்யுளியல்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீர சோழியம் முதலியவற்றின்உரையில் உரிய சூத்திரங்களொடு காணப்படுகின்றன. இவற்றுள் மிகுதியும்காணப்படுவன யாப்பருங்கல விருத்தியுரைக்கண்ணேயே. இவ்வியாப்பு நூல்களிடைநத்தத்தம் எனவும் வழங்கப்படும் நற்றத்தமும் ஒன்று.இந்நூலிற்காணப்படும் (கிடைத்துள்ள) நூற்பாக்கள் 24. அவற்றான்,யாப்பு என்பது தூக்கு-தொடை-அடி- இம் மூன்றனையும் நோக்கிநிற்குமாறும், நேரசை நிரையசை ஆமாறும், அசை ஒரோவழிச் சீராகநிற்குமாறும், நேரடியாவது யாதென்ப தும், அவ்வடி பெறும் பாக்களாவன இவைஎன்பதும், முரண்-இயைபு-அளபெடை-இரட்டைத் தொடைகள் ஆமாறும், செந்தொடைஆமாறும், பல தொடைகளையுடைய செய்யுட் குத் தொடையால் பெயரிடுமாறும்,பாக்கள் தம்முள் மயங்குமாறும், பாக்களின் அடிவரையறையும், மோனை எதுகைஆமாறும்,அவ்விருதொடைக்கும் கிளை யெழுத் துக்கள் உரியவாமாறும், கூன்நிகழுமாறும், வகையுளி ஆமாறும், அடிவரை யில்லன இவை என்பதும் குறிக்கப்பெற்றுள. (இ. வி. செய்யுளியல் பிற்சேர்க்கை பக். 430-432) |
நற்றானம் | தலைவனது இயற்பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும் பிரபந்த முதலில்வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்கும் செய்யுள்தானம்.இனி, இலக்கண விளக்கம் (பாட்.23) சொல்லுவது வருமாறு:தலைவன் இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினதா யின், அ ஆ, இ ஈ ஐ,உ ஊ ஒள என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.தலைவன் இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தினதா யின், இ ஈ ஐ, உஊ ஒள, எ ஏ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.தலைவன் இயற்பெயர் முதலெழுத்து உ ஊ ஒள வருக்கத்தின தாயின், உ ஊ ஒள,எ ஏ, ஒ ஓ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.தலைவன் இயற்பெயர் முதலெழுத்து எ ஏ வருக்கத்தினதா யின், எ ஏ, ஒ ஓ, அஆ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.தலைவன் இயற்பெயர் முதலெழுத்து ஒ ஓ வருக்கத்தினதா யின், ஒ ஓ, அ ஆ, இஈ ஐ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.அ ஆ இயற்பெயர் முதலெழுத்தாயின், அ ஆ – பாலப் பொருத்தம்; இ ஈ ஐ -குமாரப் பொருத்தம்; உ ஊ ஒள – இராசப் பொருத்தம். (எ ஏ – விருத்தப்பொருத்தம்; ஒ ஓ மரணப் பொருத்தம்.)பிற இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றையும் இவ்வாறே இயைத்துக்காண்க.பாலப்பொருத்தம் முதலிய மூன்றையும் முறையே நட்பு அரண் எதி என்றுபெயரிட்டார் மாமூலனார். (இம்மூன்றும் நற்குணம் எனப்படும்) (பிங்.1347) |
நற்றாய் | தலைவியை ஈன்ற தாய். |
நற்றீக்காலம் | கால வகை ஆறனுள் ஒன்று. அவையாவன நன்னற் காலம், நற்காலம்,தீநற்காலம், தீக்காலம், நற்றீக்காலம், தீத்தீக்காலம் என்பன.குறிப்பிட்ட நேரத்தின் முற்பகுதி நன்றாகவும் பிற்பகுதி தீதாகவும்அமையும் காலம் நற்றீக்காலமாம். (யா. வி. பக். 573) |
நலுங்கு | மணமக்களை ஊசலில் அமர்த்திப் பாடும் ஒருவகை இசைப் பாட்டு; நடைபற்றிக் கருதாது இசையையே சிறப்பாகக் கொண்டமைவது. (L) |
நல்லவை, நிறையவை இலக்கணம் | காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் உட்பகைஆறனையும் அடக்கி, அருங்கலை அறுபத்து நான்கனையும் ஐயம் திரிபறஆராய்ந்து, அதனால் புவியில் பிறவிப்பயனாம் கீர்த்தி பெற்றோர்இருக்கலுறும் அவை நன்மையையுடைய அவையாம். (அவை – சபை)கல்வியான் நிறைந்த, அடக்கம் வாய்மை நடுவுநிலைமை – இவற்றையுடையோர்குழுமி, மாட்டாதார் தம் கவிகளை அரங்கேற்றுகையில் அவர்களது குற்றத்தைநினையாது குணங்களையே மேற்கொண்டு, அவர்களை வல்லமையுடைய ராக்கி வினவிக்கேட்போர் இருக்கலுறும் அவை நிறைஅவை யாம்.இவ்விரண்டு அவைகட்கும் மறுதலையாகக் குறையவையும் தீயவையும் முறையேகுறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் குழீஇய அவை என்பதுபெறப்படும். (இ. வி. பாட். 176) |
நல்லாதம் | நல்லாதனார் யாத்த பண்டைய யாப்பு நூல். இதன் செய்தி வரையறை பற்றியசூத்திரம் இரண்டு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக்.215) |
நல்லாறன் மொழிவரி | இஃது இடைச்சொல் உரிச்சொல் என்னும் இவைபற்றியும் விளக்கி வரையப்பட்டசொல்லிலக்கண நூல் என்பது அறியப்படுகிறது. (யா. வி. பக். 579) |
நல்லாறம் | பழைய யாப்பு நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று இனமாக வரும்அனுஎழுத்துக்களுக்கும், மற்றொன்று செய்தி வரையறைக்கும், ஏனையதொன்றுசீர் அமைப்புக்கும் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல்நல்லாறனாரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 206, 372, 454) |
நல்லிசைப்புலவர் செய்யுள் | மாத்திரை முதலாகிய இருபத்தாறு உறுப்புக்களும் குறை யாமல்செய்யப்படுவன நல்லிசைப்புலவர் செய்யுள் என்பது. பாட்டு நூல் உரைமுதலாகிய எழுநிலத்து எழுந்த செய்யு ளுள்ளும் அடி வரையறையுடையபாட்டுக்கே இக்கூறிய இருபத்தாறு உறுப்புமுள என்பதனையும், ஏனைய நூல்உரை முதலிய செய்யுளுக்குத் திணை கைகோள் முதலாகக் கூறும்உறுப்புக்களெல்லாம் உறுப்பாகா என்பதனையும், அவை ஒழிந்த உறுப்பில்ஏற்பன பெறுமாயினும் வரையறையுடை யன அல்ல என்பதனையும், அவை செய்தார்நல்லிசைப் புலவர் எனக் கொள்ளத்தகார் என்பதனையும், இவ்விலக் கணத்தில்பிறழ்ந்தும் குன்றியும் வருவன எல்லாம் வழு என்பதனையும்,‘நல்லிசைப்புலவர் செய்யுள்’ என்ற தொடர் புலப்படுத்துவது. (தொ. பொ. 313பேரா) |
நளினீ விருத்தம் | இஃது அடிக்குப் பதினைந்து எழுத்துக்கள் கொண்ட வடமொழிவிருத்தம்.இதன் அமைப்பு இறுதி இலகுவான கணங்கள் ஐந்து வருதல். மாத்திரைக்கணக்கில் அடிக்கு இருபது மாத்திரை. பின் வரும் எடுத்துக்காட்டுக்களில்முதலாவது இருபது மாத்திரை அளவில் அமைகிறது; இரண்டாவதில் மாத்திரைமிக்குளது.1) 4 மாத்திரைச்சீர் ஐந்து புணர்ந்த அடிநான்காய் வருவது. நான்குமாத்திரை மாச்சீர் அவை.எ-டு : அம்மா ணகருக் கரச னரசர்(க்) கரசன்செம்மாண் டனிக்கோ லுலகே ழினுஞ்செ லநின்றானிம்மாண் கதைக்கோ ரிறையா யவிரா மனென்னுமொய்ம்மாண் கழலோற் றருநல் லறமூர்த் தியன்னான். (கம்பரா.168)2) 4 கூவிளஞ்சீர்கள் நான்கு மாத்திரை அளவினவாக, இறுதிச்சீர்ஆறுமாத்திரைத் தேமாங்காய்ச்சீராக அமைந்த அடி நான்கான் வருவது.எ-டு : ஓர்பக னீர்நிறை பூந்தட மொன்றுறு பூக்கொய்வான்சீர்தரு திண்கரி சேறலு மங்கொரு வன்மீன (ம்)நீரிடை நின்றுவெ குண்டடி பற்றிநி மிர்ந்தீர்ப்பக்காரொலி காட்டிய கன்கரை யீர்த்தது காய்வேழம். (காஞ்சிப்புண்ணிய.10) (வி.பா.8 ஆம் படலம்) |
நவதாரணை | நாமதாரணை, அக்கரத்தாரணை, செய்யுட்டாரணை, சதுரங் கத் தாரணை,சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தா ரணை, நிறைவு குறைவாகியவெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதான வகைகள். (யா.வி. பக். 555). |
நவநந்தினி விருத்தம் | முதல் மூன்றும் காய்ச்சீர், இறுதி தேமாச்சீர் என அமைந்த அடிநான்கான் ஆவது. (வி. பா. ஏழாம்படலம் 14)நேர் அசையில் தொடங்கும் காய்ச்சீர்:தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்வீசப்பு லார்த்தியிட விண்படரும் வெய்யோன்ஆசுற்ற தானவர மர்ந்தினிதி ருந்தான். (கந்தபு. III நகர்புகு. 48)நிரை அசையில் தொடங்கும் காய்ச்சீர்:மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்முடிச்சிகையொ ராயிரமு மொய்ம்பினொடு கையால்பிடித்தவுணர் மன்னனமர் பேரவைநி லத்தின்அடித்தனனொ டிப்பிலவ ராவிமுழு துண்டான். (கந்தபு. III அவைபுகு. 156) |
நவநீதப் பாட்டியல் | கட்டளைக் கலித்துறையால் இயன்றமையின் ‘கலித்துறைப் பாட்டியல்’எனவும்படும். இந்நூலினை நவநீத நடன் என்ற வைணவப் புலவர் இயற்றினார்.காலம் 14 ஆம் நுற்றாண்டின் முற்பகுதி. இதன்கண் பொருத்த இயல்,செய்யுள்மொழி இயல், பொதுமொழி இயல் என்ற மூன்று பாகுபாடுகளும்,அவற்றுள் 108 காரிகைச் சூத்திரங்களும் உள. மிகையாகச் சில காரிகைகளும்காணப்படுகின்றன. பிற பாட்டியல்கள் உணர்த்தாத செய்திகள் சில இதன்கண்இறுதியியலுள் காணப்படும். |
நவபங்கி | ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியேஒன்பது வேற்றுப் பாடல்களாக அமைக்கப் படும் வகையில் இயற்றப்படுவதாகியசித்திரகவி. (தனிப் பாடல் திரட்டு) |
நவமணி மாலை | வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் ஒன்பது உற அந்தாதியாகப்பாடப்படும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 77) |
நாகபந்தம் | மிறைக்கவியாம் சித்திரகவிகளுள் ஒன்று. தண்டியலங்காரம் (உரை) இரட்டைநாக பந்தத்தையே சுட்டுகிறது. (மற்றொன்று அட்ட நாக பந்தம்) இரண்டுபாம்புகள் தம்முள் இணைவனவாகப் படம்வரைந்து, ஒரு நேரிசை வெண்பாவும் ஓர்இன்னிசை வெண்பாவும் எழுதி, சந்திகளில் நின்ற எழுத்தே மற்றையிடங்களினும் உறுப்பாய் நிற்கப் பாடுவது. மேற்சுற்றுச் சந்திநான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும்நான்கெழுத்தும் என்றிவ்வாறு சித்திரத்தில் அடைப்பது.வருமாறு: நேரிசைவெண்பா.அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்தெருளின் மருவாச்சீர்ச் சீரே – பொருவிலாஒன்றே யுமையா ளுடனே யுறுதிதருகுன்றே தெருள அருள்.(அறத்தின் அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்!ஒப்பற்ற தேவர்கள் அறிவிற்கும் எட்டாத அழகிய புகழ்ச்சி யுடையாய்!ஒப்பற்ற ஏகரூபத்தினையுடையாய்! உமையொடு கூடி எமக்குச் சிவபதம்அளிக்கும் மலைபோல் வாய்! யாங்கள் தெளிவு பெற மெய்யறிவினைஅருள்வாயாக.)இன்னிசைவெண்பா.மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சுபெருகொளியான் றேயபெருஞ் சோதி – திருநிலாவானம் சுருங்க மிகுசுடரே சித்தமயரு மளவை ஒழி.(நின்னை அடைந்தவருள்ளத்தின்கண் நிலைபெற்ற ஒளியாக உள்ளாய்! உண்டநஞ்சினால் விளைந்த பெருகிய நிறம் நிறைந்து பொருந்திய(திருநீலகண்டத்தினையுடைய) பெருஞ் சோதி வடிவனே! அழகிய மதியையுடைய வானம்சிறுகு மாறு பெருகிய ஒளித்திரு மேனியாய்! எனது நெஞ்சம் நின்திருவடிகளை மறக்கும் அளவினைப் போக்கியருள்வாயாக.)முன்னர் ‘இரட்டை நாக பந்தம்’ என்ற தலைப்பினைக் காண்க. (தண்டி.98) |
நாட்கவி | நாள்தோறும் அரசனைப் புகழ்ந்து பாடும் பாடல். ‘நாமே நாட்கவிபாடுநாட் போல’ (ஈட்டியெழுபது – 2) (L) |
நாட்பொருத்தம் | பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்திற்கு உரிய நாள் தொடங்கிவருகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப் பகுத்துச்சென்மம்-அநுசென்மம்-உபசென்மம்-என்று கூறப்பட்ட முப்பகுதியின்கண்ணும்ஒன்று மூன்று ஐந்து ஏழ் என்னும் எண்ணின் வந்த நாள்கள் பொருத்தம் உடையஅல்ல எனக்கொண்டு, இரண்டு நான்கு ஆறு எட்டு என்னும் எண்ணின் வந்தநாள்களைப் பொருத்தம் உடையன வாக முதற்சீரை எடுத்துச் சொல்லுவர். ‘பிறநூல் முடிந்தது தான் உடன்படுதல்’ என்னும் நியாயநூல் வழக்கால், இறை வன்பெயர் நாளுக்கு மூன்றாம் பரியாயத்தில் (உபசென்மம்) நின்ற மூன்று ஐந்துஏழ் என்பன பொருத்தம் உடையன என்று கோடலும், சென்ம நாள் தொடங்கி முன்கூறியவாறு பொருத்தம் கோடலும் கொள்ளப் படும்.இது நாட்பொருத்தம் கொள்ளும் வகை.மொழி முதலாகும் எழுத்துக்களுக்கு நாட்பொருத்தம் ஆமாறு :அ ஆ இ ஈ – கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ – பூராடம்; ஒ ஓ ஒள – உத்தராடம்; ககா கி கீ – திருவோணம்; கு கூ – திருவாதிரை; கெ கே கை – புனர்பூசம்; கொகோ கௌ – பூசம்; ச சா சி சீ – ரேவதி; சு சூ செ சே சை – அசுவனி; சொ சோசௌ – பரணி; ஞா ஞி ஞெ ஞொ – அவிட்டம்; த தா – சுவாதி; தி தீ து தூ தெ தேதை – விசாகம்; தொ தோ தௌ – சதயம்; ந நா நி நீ நு நூ – அனுடம்; நெ நே நை- கேட்டை; நொ நோ நௌ – பூரட்டாதி; ப பா பி பீ – உத்தரம்; பு பூ -அத்தம்; பெ பே பை பொ போ பௌ – சித்திரை; ம மா மி மீ மு மூ – மகம்; மெமே மை – ஆயில்யம்; மொ மோ மௌ – பூரம்; யா – உத்தரட் டாதி; யூ யோ -மூலம்; வ வா வி வீ – உரோகிணி; வெ வே வை வெள – மிருக சீரிடம்; இவ்வாறுமொழிமுதலாகும் எழுத்துக்குரிய நாட்பொருத்தம் சொல்லப்பட்டுள்ளது.(இ.வி. பாட் 25-36) செய்யுள் முதல்மொழிக்குரிய பொருத்தம் பத்தனுள்எட்டாவது நாட்பொருத்தம் ஆம். |
நானாற்பது | காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பா பொருந்த உரைப்பதாகியபிரபந்த விசேடம். இன்னாமையும் இனிமையும் எனப் பொருள் இரண்டு என்பது.காலம் பற்றி வருவது கார் நாற்பது; இடம்பற்றி வருவது களவழி நாற்பது;பொருள்பற்றி வருவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன. (இ.வி.பாட்.91) |
நான்கடி ஒருசொல் மடக்கு (யமகயமகம்) | ஒரு சொல்லே நான்கடியும் முழுதுமாக மடக்கி வருவது. இஃது இயமாவியமகம் எனவும் வழங்கப்பெறும்.எ-டு :உமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரன்.உமா தரன் – உமையைத் தரித்தவன்; ஆதரன் – ஆதரிக்கின்ற வன்; மா தரன் -மானைத் தரித்தவன்; மா தரன் – அழகை யுடையவன், திருவைத் தரித்தவன்; மாதரன் – மாமரத்தடியில் தங்கியிருப்பவன், இடபத்தைச் செலுத்துபவன்; மாதரன் – யானைத்தோலைப் போர்த்தியவன்; ஆதரன் – விருப்ப முடையவன்; மாதுஅரன் – பெருமை மிக்க சிவன். |
நான்கடி மடக்கு | முதலடியே நான்கடிகளாகவும் மடங்கி வரும் மடக்காகிய ஏகபாதம்.‘ஏகபாதம்’ காண்க.இவ்வாறு வஞ்சித்துறையாகிய இப்பாடலில் ஒரு சொல்லே நான்கடியும்வெவ்வேறு பொருள் தருமாறு மடக்கியவாறு காணப்படும். (தண்டி. 96 உரை) |
நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான்ஆதல் | இன் ஒன் ஆன் அன் என்ற னகரஈற்றுச் சாரியைகள் நான்கும் நிலைமொழிநான்கனுருபாகிய கு என்பதனொடு புணருங் கால், தாம் இடையே வரத் தம்முடையனகரம் றகரமாகத் திரியும்.எ-டு : விள + இன் + கு = விளவிற்கு – (தொ. எ. 173 நச்.)கோ + ஒன் + கு = கோஒற்கு – (180)இரண்டு + பத்து + கு > இருப் + ஆன் + கு = இருபாற்கு- (199)அது + அன் + கு = அதற்கு – (176) |
நான்காரைச் சக்கரம் | மிறைக்கவிகளுள் ஒன்று; சக்கரம் போன்ற அமைப்புடையது. இச்சக்கரம்நான்கு ஆர்க்கால்களையுடையது. வட்டை ‘சூட்டு’ எனப்படும்; சக்கரத்தின்இடையே விட்டமாகச் செல்வது ஆர்க்கால். (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள,குடத்தின் வளைவான பாகமாகிய, குறடு நான்காரைச் சக்கரத் தில் இல்லை; ஆறுஎட்டு ஆரைச்சக்கரங்களில் உண்டு.)பாட்டு :‘மேரு சாபமு மேவுமேமேவு மேயுண வாலமேமேல வாமவ னாயமேமேய னானடி சாருமே.’மேருவை வில்லாகக் கொள்பவனும், விடத்தை உணவாக விரும்புபவனும்,உயர்ந்த உருவினவாகிய கூளிக் கூட்டத்தை மேவியவனும் ஆகிய அத்தகையானுடையதிருவடிகளைச் சார்வீராக – என்பது இதன்பொருள்.இது, ‘மே’ எனும் எழுத்து நடுவே நின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்துநின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவிலிருந்து கீழ்ஆரின் வழியே இறங்கி இடமாகச் சென்று அடுத்த ஆரின் வழியாக நடுவையடைந்துமுதலடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து அந்த ஆரின் வழியாகவேஇடமாகத் திரும்பி வலமாகச் சூட்டின் வழியே அடுத்த ஆரில் இறங்கவேஇரண்டாம் அடி முடியவும்; மீண்டும் நடுவிலிருநது ஆர் வழியே மேலேறிச்சூட்டில் வலமாகச் சென்று அடுத்த ஆர்ப்பகுதியில் இடமாகச் செல்ல,மூன்றாமடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து ஆரின் வழியே வலமாகச்சென்று சூட்டின்கீழேயிறங்கி அடுத்த ஆர்ப்பகுதியில் மேலேறவே,நான்காமடியும் முடியவும் இப்பாடல் நிகழுமாறு. (தண்டி. 96 உரை) |
நான்காரைச் சக்கரம் | மேரு சாபமு மேவுமேமேவு மேயுண வாலமேமேல வாமவ னாயமேமேய னானடி சாருமே.இது, ‘மே’ என்னும் எழுத்து நடுவே நின்று ஆர்மேல் ஒவ்வோரெழுத்துநின்று சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடு வடைந்து முதலடி முற்றி,மறித்தும் நடுவுநின்று அவ்வாரின் வழித்திரும்பி யிடஞ்சென்று அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடி முற்றி, அவ்வாறே மூன்றாமடிநான்காமடிகளும் வலஞ்சென்று முற்றிய வாறு காண்க. |
நான்கு பொருள் சிலேடை இணைமடக்கு | முதலீரடிகள் நான்கு பொருள்களுக்குச் சிலேடையாகவும், பின் இரண்டுஅடிகள் மடக்காகவும் அமையும் மடக்கு வகை.எ-டு : கொம்பரஞ்சொன் மின்னார் குயம்பொன்னி யன்பருளமம்பரந்தோ யுந்தென் னரங்கமே – தும்பியுரைத்தா னுரைத்தா னுயர்திரை நீர் தட்டீனரைத்தா னரைத்தா னகம்.‘தும்பி உரைத்தான் நுரை தான் உயர் திரை நீர் தட்டு ஈனரைத் தான்அரைத்தான் அகம்’- கசேந்திரனால் அழைக் கப்பட்டவனும், நுரையை உயர்த்தும்அலைகளை உடைய கடலை அணைகட்டிக் கடந்து நீசராம் அரக்கரை அழித்த வனும்ஆகிய திருமாலது இருப்பிடம் அழகிய அரங்க நகராகும்;கொம்பர் அம்பரம் தோயும் அரங்கம் – கொடிகள் வான் அளாவியிருக்கும்அரங்கம்.மின்னார் குயம் அம்பரம் தோயும் அரங்கம்-மகளிர் தனம் மேலாடையைநீங்காதிருக்கும் அரங்கம்.பொன்னி அம்பரம் தோயும் அரங்கம் – காவிரி கடலைப் பொருந்தக்கிழக்குத் திக்கில் ஓடும் அரங்கம்.அன்பர் உளம் அம்பரம் தோயும் அரங்கம்-அடியார்உள்ளம் மேம்பட்ட பரம்ஆகிய இறைவனைத் தியானம் செய்யும் அரங்கம்.இவ்வாறு ‘அம்பரம் தோயும்’ என்ற சொற்றொடரைச் சிலேடைப் பொருளால்கொம்பர், மகளிர் தனம், காவிரி, அடியவர் உள்ளம் என்ற நான்கும் கொண்டுமுடிந்தமை நாற்பொருள் சிலேடை. இச்சிலேடையை அடுத்து, ஈற்றடிகளில்மடக்கு முதற் சீர்களில் இணைய அமைந்ததால், இப்பாடல் நாற்பொருள் சிலேடைஇணைமடக்கு ஆயிற்று. (மா. அ. பாடல் 757) |
நான்மணிக்கோவை | பத்து வெண்பா, பத்து அகவல், பத்துக்கலிப்பா, பத்து வஞ்சிப்பாஇந்நாற்பதனையும் வெண்பா அகவல் கலி வஞ்சி என்ற முறையால் அந்தாதியாகத்தொடுத்து மண்டலித்து வரப்பாடும் பிரபந்தம். (சாமி. 169) |
நான்மணிமாலை | வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆசிரிய விருத்தமும் அகவலும் எனஇந் நால்வகை யாப்புச் செய்யுளும் அந்தாதி யால் நாற்பது வருமாறு,முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்தம். இந்நால்வகையுள்விருத்தம் அகவல் என்பன இடம் மாறியும் வரலாம். (இ.வி.பாட். 61,மு.வீ.யா.ஒ. 91, பி.தீ. 11) |
நாம மாலை | அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மகனைப்புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 106) |
நாற்கவி | ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி.(திவா. பக். 286) (வெண்பாப். 24)ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள். (வெண்பாப். 25-28) |
நாற்கவி இயல்பு | பட்டினத்தடிகள் கழுமரம் எரியப்பாடியது போன்ற கவியினம் ஆசுகவியாம்.பாண்டியன் குலசேகரன் பாடிய அம்பிகைமாலை போல்வன மதுரகவியாம். கொங்குமன்னன் கொடுத்த கொடுவாள் அருணையூர்ப் புரவலனது அரண்மனையைச் சேருமாறுபாடிய நூல் முதலாயின சித்திரகவியாம். ஓராயிரம் முதலாக நூறாயிரம் வரைசெய்யுள் தொகைபெறும் வகையால் பலவகைப் பொருள் களையும் பாடும்பனுவல்எல்லாம் வித்தார கவியாம்; அகவல் பஃறொடைவெண்பா இவற்றால் 32, 64எனப்படும் கலை களை வகுத்துரைக்கும் விரிவான செய்திகளைக் கொண்ட பலபாடல்கள் கொண்டவையும் வித்தாரகவி ஆகும் தன்மைய. (அறுவகை. நாற்கவிஇயல்பு 1-4) |
நாற்கவிராச நம்பி | அகப்பொருள் விளக்கம் இயற்றிய சைன ஆசிரியர். அவரது பெயரொடு நூல்நம்பி அகப்பொருள் என்று வழங்கும். |
நாற்பயன் | அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் என்பன. (யா. வி. பக். 426; நன்;10) |
நாலசைச்சீர் முழுதொன்று இணையெதுகைஅணி | இணையெதுகை செவிக்கு இன்பம் பயக்கும் ஓசைத்தாய் இருத்தலின், அதனை‘இணைஎதுகையணி’ என்னும் பெயரிய ஓரலங்காரமாகக் குறிப்பிடும்மாறனலங்காரத்தில், ஓரடியில் நாலசைச்சீர் நான்கும் முழுதும்பெரும்பாலும் எழுத்து ஒன்றிவரும் இணை எதுகை அணிவகை உரையில் கூறப்பட்டுள்ளது.எ-டு : ‘குயில்போல்மொழியும் அயில்போல்விழியும்கொடிபோலிடையும் பிடிபோனடையும்’என்ற அடியில் இணையெதுகைஅணி நாலசைச்சீர் நான்கன் கண்ணும் வந்துசெவிக்கு இன்பம் செய்வது இவ்வணிவகை யாகக் காட்டப்பட்டுள்ளது. (மா. அ.180) |
நாலடி நாற்பது | இஃது அவிநயர் யாப்பிற்கு அங்கமாய் அமைந்த நூலாகும். இதன்நூற்பாக்களில் நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறையும்மேற்கோள்களாகக் கிடைத்துள் ளன. அதனால், இவ்விருவகை யாப்பாலும் இந்நூல்அமைந்தமை தெரிகிறது. இது நாற்பது நூற்பாக்களைக் கொண்டிருந்தது போலும்.கட்டளைக் கலித்துறை இந் நூலைச் சேர்ந்தது அன்று என்பாரும் உளர்.இந்நூலின் மேற்கோள் நூற்பாக்கள் அசைக்கு உறுப்பாவன பற்றியும்அடிமயக்கம் பற்றியும் குறிப்பிடும். (யா. வி. பக்.30,31, 129) |
நாலாயிர திவ்வியப் பிரபந்த யாப்பு | நேரிசைவெண்பா, நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா,கலிவெண்பா, தரவு கொச்சகம், ஆசிரியத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர்ஆசிரிய விருத்தங்கள், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை,கலிவிருத்தம்; வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம், இரண்டாம் நான்காம்அடிகள் ஏனைய முதலாம் மூன்றாம் அடிகளைவிடச் சீர்கள் குறைந்து வரும்சவலை விருத்தம் – ஆகிய பாவும் பாவினமும் ஆம். (இலக்கணத். முன்னுரைபக். 77) |
நாலெழுத்தால் வந்த மடக்கு | எ-டு : யானக வென்னே யினையனா வாக்கினகானக யானை யனையானைக்-கோனவனைக்கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக்கன்னிக் கனியனைய வாய்.‘என் ஏய் யான் நக, இனையனா ஆக்கின, கானக யானை அனையானை கோன் அவனைக்கொல் நயனவேல் நக்க கோகனகக் கைக் கன்னிக் கனி அனைய வாய் கன்னி’ என்றுபொருள் செய்யப்படும்.“எத்துணையும் சிறிய யானே எள்ளி நகைக்குமாறு, இவ்வாறு தன்னுணர்வுஅற்றுப் போம்படி ஆக்கிய, காட்டானையை ஒத்த என் தலைவனைத் துன்புறுத்தியகொல்லும் வேல்களை ஒத்த கண்களையும், மலர்ந்த செந்தாமரையை ஒத்தகைகளையும் உடைய இப்பெண்ணின் கொவ்வைக்கனி அனைய வாய் புதுமை அழகுஉடைத்தா யுள்ளது!” எனப் பாங்கன் தலைவியைக் கண்டு வியந்து கூறியஇப்பாடற்கண், க ய வ ன என்ற நான்கு மெய் வருக்கங்களே பெயர்த்து மடக்கிவந்துள்ளன. (தண்டி. 97) |
நால்வகை நூல்கள் | அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும்,இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையேபயப்பதா கிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லையும் பொருளையும்உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் என்பன. (பா. வி. பக். 62,63) |
நால்வகைத் தெரிநிலைப்பெயரெச்சத்தின் முன்னும் வலி இயல்பாதல் | உண்ட உண்ணாநின்ற உண்ணாத – எனவும், கடைக்கணித்த சித்திரித்த வெளுத்தகறுவிய அமரிய – எனவும், திண்ணென்ற பொன்போன்ற – எனவும், சான்ற உற்ற -எனவும்,வினை பெயர் இடை உரியடியாகப் பிறந்த நால்வகைத் தெரிநிலைப்பெயரெச்சத்தையும் நிலைமொழியாக நிறுத்தி வருமொழியாகக் குதிரை -செந்நாய் – தகர் – பன்றி – என்னும் வன்கணம் முதலாகிய சொற்களைப்புணர்ப்பவே இயல்பாக முடிந்தவாறு. (நன். 167 சங்கர.) |
நாழிகை வெண்பா | தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் நாழிகை அளவில் தோன்றிநடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாக் கூறும் பிரபந்த வகை. (இ. வி.பாட்.90) |
நாழிகைக் கவி | அரசரும் கடவுளரும் நாழிகைதோறும் செய்யும் செயல்களை முப்பது நேரிசைவெண்பாவாற் பாடும் பிரபந்தவகை. (பன். பாட். 292, 293 ) |
நாழிமுன் உரி புணருமாறு | நாழி என்னும் முகத்தல் அளவுப்பெயர் முன்னர், உரி என்னும் முகத்தலளவுப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து, அந் நாழி என்னும் சொல்லின்இறுதியில் நின்ற இகரம் தானேறிய மெய்யொடும் கெடும். அவ்விடத்து டகரம்ஒற்றாய் வரும். (இரண்டு உரி கொண்டது ஒரு நாழி. நாழியும் உரியும் எனஉம்மைத்தொகையாய் இஃது அல்வழிப் புணர்ச்சியாம்).வருமாறு : நாழி + உரி > நா + உரி > நா + ட் + உரி = நாடுரி. (தொ. எ. 240 நச், நன். 174) |
நாவல் என்னும் குறிப்பு | நாவல் என்பது நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொருசொல்.‘காவல் உழவர் கடுங்களத்துப் போரேறிநாவலோஒஒ என்றிசைக்கும் நாளோதை’ (முத்தொள்.)என்பதனால் இஃது அறியலாகும். (நன். 101 சங்கர.) |
நிகண்டு | 1. ஒருபொருட் பலசொல் தொகுதியையும், பலபொருள் ஒரு சொல் தொகுதியையும்பாவில் அமைத்துக் கூறும் நூல். நிகண்டு – கூட்டம்;2. வைதிகச் சொற்களின் ஒரு பொருட் பல சொல் தொகுதியை யும், பலபொருள்ஒருசொல் தொகுதியையும் உணர்த்தும் நூல்;3. அகராதி; 4. படலம்.தமிழில் தோன்றிய நிகண்டு நூல்கள் பலவாம். அவற்றுள் சில பின்வருமாறு:திவாகரர் இயற்றிய திவாகரம் தோன்றிய காலம் 8ஆம் நூற்றாண்டுஎன்ப.பிங்கலர் இயற்றிய பிங்கலந்தை தோன்றிய காலம் 9ஆம் நூற்றாண்டு.காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு தோன்றியகாலம் 11ஆம்நூற்றாண்டு என்ப.இரேவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு தோன்றிய காலம் 16ஆம்நூண்றாண்டு என்ப.மண்டல புருடர் இயற்றிய சூடாமணிநிகண்டு தோன்றிய காலம் 16ஆம்நூற்றாண்டு என்ப.ஈசுர பாரதியார் இயற்றிய வடமலைநிகண்டு தோன்றிய காலம் 17ஆம்நூற்றாண்டு என்ப.வீரமாமுனிவர் இயற்றிய சதுர அகராதி தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டுஎன்ப.அருமந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு தோன்றியகாலம் 18ஆம் நாற்றாண்டு.ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு தோன்றிய காலம் 18ஆம்நூற்றாண்டு என்ப.கயாதரர் இயற்றிய கயாதர நிகண்டு தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டுஎன்ப.திருவேங்கட பாரதி இயற்றிய பாரதி தீபம் தோன்றிய காலம் 18ஆம்நூற்றாண்டு என்ப.அண்ணாசாமி பிள்ளை இயற்றிய ஒருசொல் பலபொருள் விளக்கம் தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு என்ப.சுப்பிரமணிய தீக்ஷிதர் இயற்றிய கந்தசுவாமியம் தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு என்ப.வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.வேதகிரி முதலியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.வேதகிரியார் இயற்றிய மற்றொன்று தொகைப்பெயர் விளக்கம் 19ஆம்நூற்றாண்டு என்ப.முத்துசாமிபிள்ளை இயற்றிய நானார்த்த தீபிகை தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு.அருணாசல கவிராயர் இயற்றிய விரிவு நிகண்டு தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு.அரசஞ் சண்முகனார் இயற்றிய அந்தாதித்தொகை நிகண்டும், நவமணிக் காரிகைநிகண்டும் தோன்றிய காலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி.சிவசுப்பிரமணிய கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.கைலாசம் என்பார் இயற்றிய கைலாச நிகண்டு சூடாமணி தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு; ஏகபாத நிகண்டும் அக்காலத்ததே.இனி, இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றிய தமிழ் உரிச் சொல் பனுவல்அந்நூற்றாண்டில் தோன்றியது. |
நிகழ்கால இடைநிலை | ஆநின்று, கின்று, கிறு – ஆகிய மூன்றும் மூவிடத்தும் வரும்ஐம்பாற்கண்ணும் நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபதஇடைநிலைகளாம்.எ-டு : நடவாநின்றான் (நட + ஆநின்று + ஆன்); நடக்கின் றான் (நட +க் + கின்று + ஆன்); நடக்கிறான் (நட + க் + கிறு + ஆன்) (நன். 143; இ.வி. எழுத். 48)உரையிற்கோடலால், உண்ணாநின்றிலன் – உண்கின்றிலன்அ – எனஎதிர்மறைக்கண் ஆநின்று கின்று என்னும் இடை நிலைகள் வேறுசில எழுத்தொடுகூடி நிகழ்காலம் காட்டும் எனவும்,உண்ணா கிட ந்தான் -உண்ணா விரு ந்தான் – எனக் கிடவும் இருவும், உரைக்கிற்றி – ‘ நன்றுமன் என்இது நாடாய்கூ றி ’ – என றகரமும்,‘ கானம் கடத் தி ர் எனக் கேட்பின் ’ (கலி. 7 : 3) எனத் தகரமும்,நோக்கு வே ற்கு, உண் பே ற்கு என முறையே வினை வினைப் பெயர்க்கண் வகரமும் பகரமும்சிறுபான்மை நிகழ்காலம் காட்டும் எனவும் கொள்க. (இ. வி. 48உரை) |
நிசாத்து | அளவழிச் சந்தங்களுள் சீர் ஒத்து ஓரடியில் ஓரெழுத்துக் குறைந்துவருவது.எ-டு : பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (12)செங்கய லினநிரை திளைக்கும் செல்வமும் (13)மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி (13)அங்கயற் பிறழ்ச்சியு மமுத நீரவே. (13) (யா. வி. பக்.514) |
நியாய சூடாமணி | ஒரு தருக்க நூல். (வீ. சோ. 181 உரை இறுதிப்பகுதி) |
நிருத்தம் | நிருக்தம்; இடையாய ஓத்து எனப்பட்ட ஆறங்கங்களுள் ஒன்று;உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் அங்கம். (ஏனையனவியாகரணமும், கற்பமும், கணிதமும், பிரமமும், சந்தமும் ஆம்.) (தொ. பொ.75 நச்.)யாஸ்கர் என்பவரால் இஃது இயற்றப்பட்டது. |
நிரோட்டக யமக அந்தாதி | நிரோட்டகம் யமகம் என்னும் மிறைக்கவி வகையும் சொல் லணியும் அமைய,அந்தாதித்தொடையால் நிகழும் பிரபந்தம். இது பாடுதல்பெருஞ்சதுரப்பாடுடையது.எ-டு : திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி. |
நிரோட்டகம் | மிறைக்கவிகளுள் ஒன்று. உதடுகளின் தொடர்பில்லா மலேயே உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களாலான செய்யுள். உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் என்னும்எழுத்துக்கள் இதழ்களின் துணைகொண்டே உச்சரிக்கப்படுவன. இவ்வெட்டும்நீங்க லான பிற எழுத்துக்களால் அமையும் செய்யுள் இம்மிறைக்கவியின்பாற்படும்.எ-டு : சீலத்தான் ஞானத்தான் தேற்றத்தான் சென்றகன்றகாலத்தான் ஆராத காதலான் – ஞாலத்தார்இச்சிக்கச் சாலச் செறிந்தடி யேற்கினிதாங்கச்சிக்கச் சாலைக் கனி.“காஞ்சிமா நகரில் திருக்கச்சாலை எனும் திருத்தலத்தில் உள்ள கனிபோன்ற சிவபெருமான் ஒழுக்கத்தாலும் ஞானத் தாலும் மனத் தெளிவாலும்வரையறை இன்றியே பலகால மாக வழிபடுவதாலும், நீங்காத காதலாலும், மிகஉயரிய பெரியோர்களால் நினைக்கப்பட வேண்டியவனாயினும், தாழ்ந்தவனாகியஅடியேனுக்கும் இரங்கி என் மனத்தில் வந்து பொருந்தி இன்பம்தருகின்றான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உதடுகளின் தொடர்புஎவ்வாற்றானும் அமை யாத எழுத்துக்களே வந்துள்ளமையின் இது நிரோட்டகம்ஆயிற்று. ‘எய்தற் கரிய தியைந்தக்கால்’ என்ற குறளும் (498) அது.(தண்டி. 98 உரை) |
நிரோட்டிய ஓட்டியம் | ஒரு நேரிசை வெண்பாவில் முதலீரடியும் இதழியைந்தும் குவிந்தும் வரும்எழுத்துக்களான் இயலாத நிரோட்டியமாய் அமைய, கடையிரண்டடியும்அவ்வெழுத்துக்களைப் பெற்று வரும் ஓட்டியமாய் அமைவது.எ-டு : கற்றைச் சடையார் கயிலைக் கிரியெடுத்தான்செற்றைக் கரங்கள் சிரங்களீரைந் – தற்றழியஏஏவும் எவ்வுளுறு ஏமமுறு பூமாதுகோவே முழுதுமுறு கோ.சிவபெருமானது கயிலையை எடுத்த இராவணனுடைய வலியற்ற இருபதுகரங்களும்பத்துத்தலைகளும் அற்று விழுமாறு அம்பு தொடுத்த திருஎவ்வுள் என்றதிருப்பதியில் எழுந்தருளி, பூமாது புணரும் திருமாலே பரம்பொருள் – என்றகருத்தமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளும் உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் -என்னும் எட்டெழுத்துக்களும் இன்றியமைந்த நிரோட்டியமாக,ஈற்றடியிரண்டும் அவ்வெழுத்துக்களைக் கொண்ட ஓட்டியமாக அமைந்துள்ளமைகாணப்படும். (மா. அ. பாடல். 776). |
நிரோட்டியம் | ‘நிரோட்டகம்’ காண்க. ‘இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.’(மா. அ. 274) |
நிறுத்த சொல் | புணர்ச்சிக்குரிய இரண்டு சொற்களில் முதலில் கொள்ளப் படும் சொல்நிறுத்தசொல் எனப்படும் நிலைமொழியாம். இது குறித்து வரு கிளவியாகியவருமொழியுடன் கூடும்போது இயல்பாகவும் திரிபுற்றும் புணரும்.அந்நிறுத்த சொல் பெரும் பான்மையும் பெயராகவோ வினையாகவோ இருக்கும்;சிறுபான்மை இடைச்சொல்லோ உரிச்சொல்லோ ஆதல் கூடும். (தொ. எ. 107நச்.) |
நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் அடையொடு தோன்றல் | அடை என்றது, உம்மைத்தொகையினையும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையினையும். (அடையொடு தோன் றியவழி நிலைமொழி அல்லது வருமொழிஉம்மைத்தொகை யாகவும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையாகவும் நிற்கும்என்றவாறு.) அவை அல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும் பண்புத்தொகையும்பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொழித்தொகையும் தனக்குவேறொரு முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் தன்னினம் முடித்தல் என்பத னால் ஒருசொல்எனப்படும். உண்ட சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒரு சொல் எனப்படும்.எ-டு : பதினாயிரத் தொன்று – நிலைமொழி அடைஆயிரத் தொருபஃது – வருமொழி அடைபதினாயிரத் திருபஃது – இருமொழி அடைஇவ்வடைகள் ஒருசொல்லேயாம். (தொ. எ. 111 இள.) |
நிறையவை | எல்லாப் பொருளையும் அறிந்து மனம்கொண்டு வாதுபோர் புரிவோர், கருதிவிடுப்போர்தம் எதிர்வருமொழிகளை ஏற்றவாறு ஆன்றோர் உளம் ஏற்கும் வண்ணம்,எடுத்துரைக் கும் வல்லவர்கள் குழுமிய அவை.‘ நல்லவை நிறையவை’ காண்க. (யா. வி. பக். 554) |
நிலக்கணம் | பூமிகணம்; மூன்றும் நிரையசையாக வரும் மூவசைச்சீர் செய்யுள்தொடக்கத்தில் முதற்சீராக அமைவது பொருத்த முடையதொரு செய்யுட்கணம். இதுபூகணம் எனப்படும். ‘நிலக்கணம் தானே மலர்த்திரு விளங்கும்’ என்றார்மாமூலர். நீர்க்கணம், இந்திர கணம், சந்திரகணம், நிலக்கணம் என்பனநான்கும் நன்மை செய்யும் பொருந்திய கணங்களாம். (இ. வி. பாட். 40உரை) |
நிலத்து நூல் | அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களின் சார்பாக அமைந்தநூல்களில் ஒன்றாகிய இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டு உணரப்படும். (யா. வி. பக். 491) |
நிலா ‘இன்’ னொடு வருதல் | நிலா என்னும் சொல் இன்சாரியை பெற்று வரும்.எ-டு : நிலா + காந்தி = நிலாவின் காந்தி (மு. வீ. புண.93) |
நிலா என்ற பெயர் புணருமாறு | நிலா என்பது குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர். இது வருமொழிவன்கணம் வரின் எழுத்துப்பேறளபெடையும் வல்லெழுத்தும் பெற்றும், ஏனையகணங்கள் வந்துழி எழுத்துப் பேறளபெடை மாத்திரம் பெற்றும் புணரும்.(ஈண்டு அகரம் எழுத்துப்பேறளபெடையாம்.)எ-டு : நிலாஅக்கதிர், நிலாஅமுற்றம் (தொ. எ. 226 நச்.)நிலா என்ற சொல் அத்துச்சாரியை பெற்று, நிலாஅத்துக் கொண்டான்,நிலாஅத்து ஞான்றான் என வரும். (228 நச்.)செய்யுட்கண் நிலா என்பது நில என்றாகி உகரச்சாரியை பெற்று நிலவுஎன்றாகி வருமொழியொடு புணர்தலுமுண்டு.எ-டு : நிலவுக்கதிர் (234 நச்.) |
நிலை (1) | எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தம்; ஒற்றொழித்துஉயிராவது உயிர்மெய்யாவது அடி ஒன்றற்கு நாலெழுத்தாய் வருவது.எ-டு : ‘போதி நீழற்சோதி பாதங்காத லானின்றோத னன்றே’ (வீ. சோ. 139 உரை) |
நிலைமொழி யீறு, மூவினமெய் வருமொழிமுதற்கண் நிகழுமிடத்துப் புணருமாறு | மெய் அல்லது உயிரீறாக நிற்கும் நிலைமொழி மூவினமெய் வருமிடத்துஏற்கும் முடிவு ஆறு வகைகளாம். அவை இயல்பு, மிகுதல், உறழ்ச்சி,திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என்பன வாம். இக்கருத்துஇலக்கணக்கொத்தினின்றும் கொள்ளப் பட்டது. (இ.கொ. 113, 114)எ-டு : நிலா + முற்றம் = நிலாமுற்றம்; வாழை + பழம் =வாழைப்பழம்; கிளி + குறிது = கிளிகுறிது, கிளிக் குறிது; பொன் + குடம்= பொற்குடம்; மரம் + வேர் = மரவேர்; நாளி + கேரம் = நாரிகேளம் எனமுறையே காண்க. (சுவாமி. எழுத். 28) |
நிலைமொழி வருமொழி அடையடுத்தும்புணர்தல் | அடையாவன நிலைமொழி வருமொழிகளை உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையும்பட ஆக்க வல்லன ஆம்.எ-டு : பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று – நிலை மொழி அடை.ஆயிரம் + இருபஃது = ஆயிரத் திருபஃது – வருமொழி அடை. பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது – இருமொழி அடை.வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் பிளந்து முடிய, பண்புத்தொகையும்வினைத்தொகையும் பிளந்து முடியாமை யின், ஒரு சொல்லேயாம்.அன்மொழித்தொகையும் தனக்கு வேறொரு முடிபின்மையின் ஒருசொல்லேயாம்.இத்தொகைச்சொற்களெல்லாம் அடை யாய் வருங்காலத்து ஒரு சொல்லாய்வரும்.உண்ட சாத்தன் வந்தான் எனப் பெயரெச்சம் அடுத்த பெயரும், உண்டுவந்தான் சாத்தன் என வினையெச்சம் அடுத்த முற்றும் ஒருசொல்லேயாம்.இங்ஙனம் தொகைநிலையாகவும் தொகா நிலையாகவும் அடையடுத்த சொற்களும்நிலைமொழி வரு மொழிகளாகப் புணரும்.எ-டு : பன்னிரண்டு + கை = பன்னிருகை – நிலைமொழி அடை யடுத்துஉம்மைத்தொகைபட நின்றது.ஓடிற்று + பரிமா = ஓடிற்றுப் பரிமா – வருமொழி அடை அடுத்துஇருபெயரொட்டுப் பண்புத்தொகை பட நின்றது. (தொ. எ. 110 நச். உரை) |
நிலையிற்று என்றலும், நிலையாதுஎன்றலும் | நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வருதல் நிலை யிற்றுஎன்றலாம்.எ-டு : சாத்தன் வந்தான், வந்தான் சாத்தன் (நிறுத்த சொல்லைமுடித்தலைக் குறித்து வரும் சொல் ‘குறித்துவரு கிளவி’எனப்படும்.)பதினாயிரத் தொன்று, ஆயிரத் தொருபஃது, பதினாயிரத் தொருபஃது எனநிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் இருமொழியும் அடையடுத்தும்வந்தவாறு.முன்றில், மீகண் – இவை இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ.சோணாடு, பாண்டிநாடு – இவை இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ .இனி, நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபுஇன்றி வருதல் நிலையாது என்றலாம்.எ-டு :‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகநா. 3:2)‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்பரலவல் அடைய இரலை தெறிப்ப (அகநா. 4 : 34)‘தெய்வ மால்வரைத் திருமுனி அருளால்’ (சிலப். 3 : 1)இவ்வடிகளில் முறையே ஓமைச்சினை – மருப்பின் இரலை – தெய்வ வரை – எனஒட்டி ஓமையினது சினை – மருப்பினை யுடைய இரலை – தெய்வத்தன்மையையுடையவரை – எனப் பொருள் தருகின்றவை, முறையே காண்பு – பரல் – மால்என்பவற்றோடு ஒட்டினாற் போல ஒட்டி மிக்கும் திரிந்தும் கெட்டும்நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபின்றி வருதல்காண்க. (இ. வி. எழுத். 53 உரை) |
நீ என்ற சொல் புணருமாறு | நீ என்னும் முன்னிலை ஒருமைப் பொதுப்பெயர் எழுவாயாய் வரும்போதுநாற்கணத்தொடும் இயல்பாகவும், உருபேற்கும் போது நின் எனத் திரிந்தும்,இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வன்கணம் வரின் னகரம் றகரமாகத்திரிந்தும் வருமொழியொடு புணரும்.எ-டு : நீ குறியை, ஞான்றாய், வலியை, அரியை என நாற் கணத்தோடும்அல்வழியில் இயல்பாகப் புணர்ந்த வாறு.நின்கை, ஞாற்சி, வலிமை, அழகு என நீ ‘நின்’ எனத் திரிந்துவருமொழி நாற்கணத்தும் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகமுடிந்தவாறு.உயிர் வருமொழி முதற்கண் வருமிடத்தே, ‘நின்’ என்பதன் னகரம்(தனிக்குறில்முன் ஒற்று ஆதலின்) இரட்டியது. (இவ்விரட்டுதலும் இயல்புபுணர்ச்சியே என்ப)நின் + புறங்காப்ப = நிற்புறங்காப்ப – என இரண்டன் தொகைக்கண்னகரம் றகரமாகத் திரிந்து புணர்ந்த வாறு. (தொ. எ. 250, 253, 157நச்.) |
நீடவருதல் ‘நீட்டும்வழி நீட்டல்’அன்மை | நீட வருதலாவது செய்யுட்கண் அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டுவருமொழியோடு ‘ஆயிடை’ ‘ஈவயினான’ ‘ஊவயி னான’ என்றாற் போலப்புணர்வதாகும். ‘நீட்டும்வழி நீட்டல்’ விகாரம், (நிழல் – நீழல்என்றாற்போல) ஒருமொழிக் கண் நிகழ்வதாம் செய்யுள்விகாரம். ஆதலின் இவைதம்முள் வேறுபாடுடையன. (தொ. எ. 208 நச். உரை) |
நீட்டல் விகாரம் | செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடை நயம் நோக்கிக்குற்றெழுத்து இனமொத்த நெடிலாக விகாரப் படுவது நீட்டல் விகாரமாம்.எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)பொத்து என்பதே சொல். மேலடியுள் ‘தீத்தொழிலே’ என்ற முதற்சீரை நோக்கிஎதுகைவேண்டிப் ‘பொத்தறார்’ எனற் பாலது ஒகரம் நீண்டு ‘போத்தறார்’ என்றுநீட்டல் விகாரம் ஆயிற்று, எதுகைத் தொடைக்கு முதற்சீர்களின் முதல்எழுத்து அளவொத்து நிற்றல் வேண்டுதலின். (நன். 155 சங்.) |
நீதகச் சுலோகம் | ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவர் இயற்றிய வடமொழி இலக்கணநூலாம் உரூபாவதாரத்திற்கு அமைந் துள்ள முதல்நினைப்புச் சூத்திரம் இது.(யா. கா. 1 உரை) |
நீராடற்பருவம் | பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள் ஒன்று; பாட்டுடைத்தலைவியாம் சிறுமி தோழியர் புடைசூழக் குதூகலம் கொண்டு வாசனை கமழும்நறுநீரில் திளைத்துக் குளித்தலைப் பாடுவது. இதற்கு ஒப்பாக,கழற்சிக்காய் ஆடும் கழங்குப் பருவத்தைக் கொள்வாரும் உளர். சந்தவிருத்தமாகப் பத்துப்பாடல் இடம்பெறும் (இ. வி. பாட். 47). |
நீரொடு கூடிய பால் | நிலைமொழிப் புள்ளியீற்றொடு வருமொழி முதல் உயிர் கூடி(உயிர்மெய்யாக) நிற்றல் நீரொடு கூடிய பால்போல் நிற்றல் என்றுஒற்றுமைநயம் கூறினார். உயிர்மெய் மெய்யின் மாத்திரை தோன்றாதுஉயிரெழுத்தின் மாத்திரையே தன் மாத்திரையாக நிற்கும் நயம்ஒற்றுமைநயமாம். (மெய் முன்னரும் உயிர் பின்னருமாக உச்சரிக்கப்படுவதுஓசைபற்றி வரும் வேற்றுமை நயம்). (இ. வி. எழுத். 64 உரை) |
நீர்க்கணம் | செய்யுள் முதற்கண் மங்கலமாக அமைக்கத் தகும் கூவிளங் கனிச்சீர்.இதற்குரிய நாள் சதயம். “இதன் பயன் பாட்டுடைத் தலைவன் சீர் சிறப்புஎய்துதல்” என்றார் மாமூலர். இக்கணம் நிலைபேற்றினைத் தருவது என்றுஇந்திரகாளியர் பலன் கூறினார். (இ. வி. பாட். 40) |
நீலகேசி | ஐஞ்சிறு காப்பியம் எனப்படுவனவற்றுள் ஒன்று; நீலகேசி என்பாளைப்பற்றி எழுந்தமையால் இப்பெயர்த்தாயிற்று இதன் முதற்பாடல் வண்ணத்தான்நேரசை முதலாக வந்து அடிதோறும் 14 எழுத்துக்களையுடைய நான்கடிப் பாடல்ஆயிற்று. (யா. வி. பக். 39, 521). |
நுண்பொருண்மாலை | 16ஆம் நூற்றாண்டுப் புலவரான காரிரத்தின கவிராயர் என்பார்,தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினி யர் உரை, திருக்குறள்பரிமேலழகர் உரை என்னும் இரண்டற் கும் நுண்பொருள் வரைந்த பனுவல்.இதுபோது திருக்குறள் பரி மேலழகருரைக்கு விளக்கமாக அவர்வரைந்துள்ளநுண்பொருள் மாலையே கிட்டியுள்ளது.பரிமேலழகரது உரை நுட்பத்தினையும் திருக்குறள் சொல் லாட்சிமாண்பினையும் ஒரு சேர அதன்கண் காணலாம். |
நுந்தை ‘நு’ குற்றியலுகரம் அன்மை | ‘ கு ற்றியலுகரம் முறைப்பெயர்மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ எனத் தொல். குற்றியலுகரம் மொழிக்கு முதலாம்என்றாரெனின்,‘நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண்வந்த தெனின்உயிர்மெய் யாமனைத்தும் – சந்திக்குஉயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி யின்றிமயல்அணையும் என்றதனை மாற்று’என்பதால் விதியும் விலக்கும் அறிந்துகொள்க. (நன். 105 மயிலை.உரை) |
நுந்தை ‘நு’ குற்றியலுகரம் ஆதல் | நகரம் மேற்பல் முதலிடத்து நாநுனி பரந்து ஒற்றப் பிறத்த லானும்,உகரம் இரண்டு இதழும் குவித்துக் கூறப் பிறப்பது ஆதலானும், இரண்டு நகரஒலிகளுக்கு இடையே நன்கு இதழ் குவித்துக் கூறும் முயற்சி நிலையாமையான்,உகரம் அரை மாத்திரை அளவாக ஒலிக்கும் என்பது உய்த்துணரத்தக்கது.நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண் வந்தது என்றால், சந்தியில்,மொழிமுதற்கண் வரும் உயிர்மெய்கள் எல்லாம் உண்மையான புணர்ச்சிநிலைமாறும் என்று கொண்டு, மயிலைநாதர் நுந்தை குற்றியலுகரம் அன்றுஎன்றார்.இவன் + நுந்தை = இவனுந்தை; னு: ஒருமாத்திரை யுடையது. (எ. ஆ. பக்.68, 69)நுந்தை என்பதிலுள்ள உகரம் குற்றியலுகரமாகவும் முற்றியலு கரமாகவும்ஒலிக்கப்பட்டதை நோக்கி இச்சூத்திரம் கூறினார். (எ. கு. பக். 76)நுந்தாய் என்பது நுந்தையின் விளியாகவும், நும் தாய் என்று பொருள்படவும் என இருதிறம்பட வருதலின் முற்றியலு கரமாம். (எ.கு. பக். 77)(தொ. எ. 68 நச்.) |
நும் ‘நீஇர்’ ஆதல் | நீஇர் என்பதனைத் தொல். ‘நும்மின் திரிபெயர்’ என்றார். நும் என்பதுபெயர் வேர்ச்சொல்; நீஇர் என்பது அதன் முதல் வேற்றுமை ஏற்ற வடிவம்என்று தொல். கூறியுள்ளார்.நும் என்பது உகரம் கெட்டு ஈகாரம் பெற்று நீ என ஆகும்; நும் என்பதன்ஈற்று மகரம் ரகர ஒற்றாக, ‘நீர்’ என வரும்; அதுவே இடையே இகரம் வர‘நீஇர்’ என்றாகும்.ஆகவே, நும் என்பது நீம் நீர் நீஇர் என முறையே திரிந்துமுதல்வேற்றுமை வடிவம் பெறும் என்பது. (தொ. எ. 326 நச்.)பிற்காலத்தார் ‘நீஇர்’ என்பதன் இகரத்தை அளபெடை யாகக் கொண்டு நீக்கி‘நீர்’ என்பதே முன்னிலைப்பன்மைப் பெயர் எனக் கொள்ளலாயினர். சிலர்நீஇர் என்பதனை நீயிர், நீவிர் எனத் திரித்து வழங்கலாயினர். |
நும் என்ற பெயர்ப் புணர்ச்சி | தொல்காப்பியனார் நும் என்பதனைப் பெயராகக் கொண்டு அஃதுஅல்வழிப்புணர்ச்சிக்கண் நீஇர் எனத்திரிந்து வரு மொழியொடு புணரும்எனவும், வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ஈறுகெட்டு வருமொழி வன்கணத்துக்கேற்றமெலி மிக்கும், மென்கணம் வரின் அம் மெல்லெழுத்தே மிக்கும் புணரும்எனவும், ஐ உருபு ஏற்குமிடத்து ஈற்று மெய் (ம்) இரட்டியும்,நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து அகரச்சாரியை பெற்றும்,நான்கனுருபிற்கு வருமொழி வல்லொற்று மிக்கும். ‘அது’ உருபுஏற்குமிடத்து அவ்வுருபின் அகரம் கெட்டும், ‘கண்’ உருபு ஏற்குமிடத்துமகரம் கெட்டு வருமொழிக்கேற்ப ஙகர மெல்லொற்று மிக்கும் புணரும் எனவும்கூறியுள்ளார்.வருமாறு : நீஇர் கடியீர், நீஇர் நல்லீர் -அல்வழிநுங்கை, நும்செவி, நுந்தலை (நும்புறம் : இயல்பு);நுஞ்ஞாண், நுந்நன்மை, நும்மாட்சி – வேற்றுமைப்பொருட்புணர்ச்சிநும் + ஐ = நும்மை; நும் + அ + க் + கு = நுமக்கு; நும் + அ +(அ)து = நுமது; நும் + கண் = நுங்கண் – உருபு புணர்ச்சி (தொ. எ. 114,115, 187, 325, 326 நச்.) |
நும் தம் எம் நம் ஈற்று மகரம்திரியுமாறு | நீர் தாம் யாம் நாம் என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய நும் தம்எம் நம் என்பனவற்று முன் ஞகர நகர முதன்மொழி வருமிடத்தே, நிலைமொழிஈற்று மகரம் முறையே ஞகர நகரங்களாகத் திரியும். (நீர் என்பதன்திரிபாகிய உம் என்பதற்கும் இஃது ஒக்கும்). இது வேற்றுமைப்புணர்ச்சி.எ-டு : நும், தம், எம், நம் + ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண்,எஞ்ஞாண், நஞ்ஞாண்; நும், தம், எம், நம், + நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்உம் + ஞாண், நாண் = உஞ்ஞாண், உந்நாண்மகர முதல்மொழி வரின் நும்+மணி = நும்மணி என இயல் பாகப் புணரும்.பிறவற்றுக்கும் கொள்க. (நன். 221) |
நூறாயிரம், நிலைமொழிகளான ஒன்றுமுதல் ஒன்பதுகாறும் உள்ளவற்றொடு புணர்தல் | ஒன்றுமுதல் ஒன்பான் நிலைமொழிகளாக, வருமொழியாக ‘நூறாயிரம்’வரும்வழி, நூறு என்னும் வருமொழியொடு முடிந்தாற் போலவே விகாரம் எய்திமுடியும்.வருமாறு : ஒன்று + நூறாயிரம் = ஒருநூறாயிரம்; இரண்டு +நூறாயிரம் = இருநூறாயிரம்; மூன்று + நூறாயிரம் = முந்நூறாயிரம்;நான்கு + நாறாயிரம் = நானூ றாயிரம்; ஐந்து + நூறாயிரம் = ஐந்நூறாயிரம்; ஆறு + நூறாயிரம் = அறுநூறாயிரம்; ஏழ் + நூறாயிரம் =எழுநூறாயிரம்; எட்டு + நூறா யிரம் = எண்ணூறாயிரம்; ஒன்பது + நூறாயிரம்= ஒன்பதினூறாயிரம். |
நூறு, நிலைமொழிகளான ஒன்று முதல்ஒன்பான்காறும் உள்ளவற்றொடு புணர்தல் | ஒன்று + நூறு = ஒருநூறு – (தொ. எ. 460 நச்.)இரண்டு + நூறு = இருநூறு – (தொ. எ. 460 நச்.)மூன்று + நூறு = முந்நூறு – (தொ. எ. 461 நச்.)நான்கு + நூறு = நானூறு – (தொ. எ. 462 நச்.)ஐந்து + நூறு = ஐந்நூறு – (தொ. எ. 462 நச்.)ஆறு + நூறு = அறுநூறு – (தொ. எ. 460 நச்.)ஏழ் + நூறு = எழுநூறு – (தொ. எ. 392 நச்.)எட்டு + நூறு = எண்ணூறு – (தொ. எ. 460 நச்.)ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் – (தொ. எ. 463 நச்.) |
நூற்றந்தாதி | வெண்பா நூறு அல்லது கலித்துறை நூறு அந்தாதித் தொடை யமையமண்டலித்துப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 82)முதல் திருவந்தாதி முதலியன வெண்பாவான் இயன்றன. இராமாநுசநூற்றந்தாதி போல்வன கட்டளைக் கலித்துறை யான் இயன்றன. |
நூற்றொன்று….. நூற்றொன்பது:புணர்நிலை | நூறு நிலைமொழியாக, வருமொழிக்கண் ஒன்றுமுதல் ஒன்பது ஈறாகியஎண்ணுப்பெயர் வரின், இடையே றகரஒற்று மிக நிலைமொழி ‘நூற்று’ என்றுநிற்ப, ஒன்று முதலிய உயிர் முதல் மொழிகள் வருமொழியாகுமிடத்துக்குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். கொடுப்பவே, நூறு +ஒன்று = நூற்றொன்று எனப்புணரும். நூற்று + மூன்று, நூற்று + நான்குஇவை இயல்பாகப் புணரும்.நூற்பாவுள் ‘ஈறு சினை ஒழிய’ என்பது இறுதிச்சினையாகிய ‘று’ என்றஎழுத்துக் கெடாது நிற்ப என்று பொருள்படும்.‘ஒழியா’ என்பது பாலசுந்தரனார் பாடம். அதன் நுட்பத் தினையும் உணர்க.(எ. ஆ. பக். 176, தொ. எ. 472 நச்.) |
நூல்மரபின் பெயர்க்காரணம் | நூல்மரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இய லாகும். இது 33நூற்பாக்களையுடையது. இதன் பெயர்க் காரணம் பற்றிக் கருத்து வேறுபாடுகள்உள.இவ்வதிகாரத்தான் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான்தொகுத்து உணர்த்தலின் நூல்மரபு என்னும் பெயர்பெற்றது இவ்வியல் என்பர்இளம்பூரணர்.இந்த இயலில் கூறப்படும் விதிகள் மூன்று அதிகாரத்திற்கும்பொதுவாதலின் நூல்மரபு என்னும் பெயர்த்தாயிற்று இவ் வியல் என்பர்நச்சினார்க்கினியர்.எழுத்ததிகாரத்துள் கூறப்படும் எழுத்திலக்கணத்தினைத்தொகுத்துணர்த்துதலான் அதிகார மரபு எனப்படுவதன்றி நூல்மரபு எனப்படாதுஎனவும், இந்த இயலில் கூறப்படுவன செய்கை இயல்களுக்கும்பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி, மூன்றுஅதிகாரத்துக்கும் பொது ஆகாமையின் அக்கருத்துப் பற்றி நூல்மரபு எனப்பெயரிடவில்லை எனவும் முறையே இளம்பூரணர் உரையை யும் நச். உரையையும்மறுத்துச் சிவஞான முனிவர்,“நூலினது மரபு பற்றிய பெயர்கள் கூறலின் நூல்மரபு என்னும்பெயர்த்து. மலை கடல் யாறு குளம் என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றியபெயர்கள் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து குறில் நெடில் உயிர்உயிர்மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டுமுதனூல் ஆசிரிய னால் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூல்மரபு பற்றியபெயராயின. ஏனை ஓத்துக்களுள் விதிக்கப்படும் பெயர்களும் நூல்மரபு பற்றிவரும் பெயராதல் உணர்ந்து கோடற்கு இது முன் வைக்கப்பட்டது”என்றார்.(சூ.வி. பக். 18)‘நூல் மரபு ’ என்பதன்கண் உள்ள நூல், நூல் எழுதுதற்கு அடிப்படைக்காரணமாய எழுத்து என்ற பொருளை உணர்த்திற்றுப் போலும். (எ. ஆ. பக்.3)நூற்கு இன்றியமையா மரபு பற்றிய குறிகளை விதிக்கும் இயல் நூல்மரபு.(எ. கு. பக். 3) |
நூல்மரபு கூறும் மெய்ம்மயக்கம் | க் ச் த் ப் என்பன நான்கு மெய்களும் தம்மொடு தாமே மயங்கும்.ர் ழ் என்பன இரண்டு மெய்களும் தம்மொடு பிறவே மயங்கும்.ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும் தம் மொடு பிறவும்மயங்கும்.ட் ற் ல் ள் என்பனவற்றின் முன் க் ச் ப் என்பன மயங்கும்.அவற்றுள், ல் ள் – என்பனவற்றின்முன் ய் வ் – என்பனவும்மயங்கும்.ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற மெல்லினப்புள்ளிகளின் முன் க் ச் ட் த்ப் ற் – என்ற வல்லினப்புள்ளிகள் முறையே மயங்கும்.அவற்றுள், ண் ன் என்பனவற்றின் முன் க் ச் ஞ் ப் ம் ய் வ் என்றமெய்களும் மயங்கும்.ஞ் ந் ம் வ் என்ற மெய்களின் முன் யகரமும் மயங்கும்; அவற்றுள்மகரத்தின் முன் வகரமும் மயங்கும்.ய் ர் ழ் என்பனவற்றின்முன் க் ச் த் ந் ப் ம் ய் வ் என்பனவும்ஙகரமும் மயங்கும் – என்று மெய்ம்மயக்கம் கூறப்படுகிறது.இம்மெய்மயக்கத்தை நச். ஒருமொழிக்கண்ணது என்பர்; ஏனையோர்இருமொழிக்கண்ணது என்பர். (தொ.எ. 22-30 நச்). |
நூல்மரபு தனியெழுத்துக்களின் இயல்பேகூறுதல் | முதல் நூற்பா – முதலெழுத்து, சார்பெழுத்து: தொகை ; 2 – சார்பெழுத்துக்களின் பெயர்;3 – 13 – எழுத்துக்களின் மாத்திரை அளவுமுதலாயின; 14 – 18 – சில எழுத்துக்களின் வரிவரிவு; 19 – 21 -மெய்யெழுத்துக்களின் வகை; 22 – 30 – எழுத்துக்கள் ஒன்றோடொன்றுமயங்குமாறு; 31, 32 – சில உயிரெழுத்துக் களுக்கு வேறு பெயர்; 33 -எழுத்துக்களின் அளவினைக் குறித்துப் பிறநூற் கொள்கை;இவ்வாறு நூல் எழுதுதற்கு அடிப்படைக் காரணமாகிய தனி யெழுத்துக்களின்இயல்பே நூல்மரபில் கூறப்பட்டுள்ளது. (எ. ஆ. பக். 3) |
நூல்மரபு நுவல்வன | எழுத்து 30, சார்ந்து வரும் எழுத்து 3, குற்றுயிர் 5, நெட்டுயிர்7, மாத்திரை நீளுமாறு, மாத்திரைக்கு அளவு, உயிர் 12, மெய் 18,உயிர்மெய்க்கு அளவு, மெய் சார்பெழுத்து இவற்றின் அளவு, மகரக்குறுக்கம், அதன் வடிவு, மெய்யின் இயற்கை, எகர ஒகர இயற்கை, உயிர்மெய்இயல்பு, உயிர்மெய் ஒலிக்கு மாறு, வல்லினம் மெல்லினம் இடையினம் என்றமெய்வகை, மெய்ம்மயக்கம் பற்றிய மரபு, சுட்டு, வினா, உயிரும் மெய்யும்வரம்புமீறி ஒலிக்கும் இடம் – என்பன நூல்மரபினுள் கூறப் பட்டுள்ளன.(தொ. எ. 1 – 33 நச்.) |
நூல்மரபு மூன்றதிகாரக் கருத்தும்கொண்டமை | எழுத்துக்களின் பெயரும் முறையும் எழுத்ததிகாரத்திற்கும்செய்யுளியற்கும் ஒப்பக் கூறியன. எழுத்ததிகாரத்துக் கூறியமுப்பத்துமூன்றனைப் பதினைந்து ஆக்கி ஆண்டுத் தொகை கோடலின், தொகைவேறாம். அளவு, செய்யுளியற்கும் எழுத்திகாரத்திற்கும் ஒத்த அளவும்ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும் கூறிய மாத்திரைஇரண்டிடத் திற்கும் ஒத்த அளவு; ஆண்டுக் கூறும் செய்யுட்கு அளவுகோடற்கு எழுத்ததிகாரத்துக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு.அஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எ. 33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டுமாட்டெறிந்தொழுகு மாற்றான் உணரப்படும். இன்னும் குறிலும் நெடிலும்மூவகை இனமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் ஒப்பக்கூறியன. முறையும் எழுத்ததிகாரத்திற்கும் செய்யு ளியற்கும் ஒக்கும்.கூட்டமும் பிரிவும் மயக்கமும் எழுத்ததி காரத்திற்கே உரியனவாகக்கூறியன. ‘அம்மூவாறும்’ (எ. 22) என்னும் சூத்திரம் முதலியவற்றான்எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின்,சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம்மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் கூறலின் இவ்வோத்து நூலினது இலக்கணம்கூறியதாயிற்று. (தொ. எ. 1 நச். உரை) |
நூல்மரபு: சொற்பொருள் | இசைப்பதும் ஒலிப்பதுமாகிய ஒலியெழுத்துக்களின் மரபு களை உணர்த்தும்பகுதி- என்பது இத்தொடரின் பொருள். இஃது ஆறன் தொகை; அன்மொழித்தொகையான், எழுத் தொலிகளைப் பற்றிய இலக்கணம் கூறும் இயலை உணர்த்திநின்றது. நூல் என்பதன் இயற்பொருள் ஒலியெழுத்து. அது ‘சினையிற் கூறும்முதலறிகிளவி’ என்னும் ஆகுபெயரான், புத்தகமாகிய நூலினை வழக்கின்கண்உணர்த்தலாயிற்று. மரபு என்பது மருவுதல் என்னும் தொழிற்பெயரின்அடியாகப் பிறந்த குறியீட்டுச் சொல்; தொன்றுதொட்டு நியதியாக வருதல்என்னும் பொருட்டு. அஃது ஈண்டுத் தமிழ்நெறி உணர்ந்த சான்றோரான்தொன்றுதொட்டு வழங்கப்பெற்று வரும் இலக்கண நெறியை உணர்த்தி நின்றதுஎன்க. எனவே, இவ்விய லுள் கூறப் பெறும் எழுத்தொலி மரபுகள்தமிழ்மொழிக்கே உரியவை என்பது பெறப்படும். (தொ. எ. பக். 72 ச.பால.) |
நெஞ்சுவிடு தூது | 1. தலைவி தன் மனத்தைக் காதலன்பால் தூது விடுவதாக அதனை விளித்துப்பாடும் பிரபந்த வகை. இறைவனை நாயகனாகக் கொண்டு தம்மைத் தலைவி நிலையில்பாவித்துக் கவிஞர் இப்பிரபந்தம் பாடுவது இயல்பு.2. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று; உமாபதி சிவம்இயற்றியது. காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. (L) |
நெடிலோடு உயிர்த்தொடர் இரட்டல் | டகர றகர மெய்களை ஊர்ந்து வரும் குற்றியலுகரம் நிற்கும்நெடில்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் உயிர்த்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் நாற்கணமும் வரு மிடத்து,வேற்றுமைப் புணர்ச்சிக்கண் டகர றகர ஒற்றுக்கள் பெரும்பான்மையும்இரட்டும்.எ-டு : ஆடு + கால், மயிர், வலிமை, அடி = ஆட்டுக்கால்,ஆட்டுமயிர், ஆட்டு வலிமை, ஆட்டடிபாறு + கால், மயிர், வலிமை, அடி = பாற்றுக்கால், பாற்றுமயிர்,பாற்றுவலிமை, பாற்றடிமுருடு + கால், நிறம், வலிமை, அடி = முருட்டுக்கால்,முருட்டுநிறம், முருட்டுவலிமை, முருட்டடி.முயிறு + கால், நிறம், வலிமை, அடி = முயிற்றுக்கால்,முயிற்றுநிறம், முயிற்றுவலிமை, முயிற்றடி.சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், சிறு பான்மை அல்வழிக்கண்இரட்டுதலும், சிறுபான்மை இருவழி யிலும் பிற ஒற்று இரட்டுதலும்கொள்க.எ-டு : நாடு கிழவோன், ‘கறைமிட றணியலும் அணிந் தன்று’ (புறநா.கடவுள்.) – வேற்றுமையில் இரட்டா வாயின.காட்டரண், களிற்றியானை – அல்வழியில் இரட்டின.வெருகு + கண் = வெருக்குக் கண் – வேற்றுமைஎருது + மாடு = எருத்துமாடு – அல்வழி பிற ஒற்றுக்கள்இரட்டின. |
நெடிலோடு உயிர்த்தொடர்க்கண் டகர றகரஒற்று இரட்டாமை | எ-டு :‘காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’ (பொருந. ஈற்றடி)‘காடகம் இறந்தார்க்கே ஓடுமென்மனனேகாண்’ (யா. வி. மேற்.)‘கறை மிடறு அணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)இவை வேற்றுமைப் புணர்ச்சி. (நன். 183 சங்கர.) |
நெடில் | ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் உயிர்நெடிலாம். இவை 18 மெய்யுடன் கூட18 x 7 = 126 உயிர்மெய் நெடிலாம். இவை தனித்தனி இரண்டுமாத்திரைபெறும். அளபெடைக்கண் ஐகார நெடிலுக்கு இகரமும், ஒளகார நெடிலுக்குஉகரமும் இனக்குறிலாகக் கொள்ளப்படும்.எ-டு : விலைஇ, கௌஉ.நெடில், நெடுமை, நெட்டெழுத்து என்பன ஒருபொருளன. (நன். 65) |
நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகரப் புணர்ச்சியுள் சில | நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் சில வருமொழியொடுபுணருமிடத்து வேற்றுமையில் இனஒற்று (ட், ற்) மிகாமையும், அல்வழியில்மிகுதலும் உளவாம்.எ-டு :‘காடகம் இறந்தார்க்கே’ (யா.வி. மேற்.)‘நாடு கிழவோனே’ ( பொருந. 248‘கறை மிடறணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)இவை வேற்றுமைக்கண் மிகாவாயின.(மிகுதலாவது டற ஒற்று இரட்டுதலான் வரு மிகுதி.)காட்டரண், குருட்டுக் கோழி, முருட்டுப் புலையன்; களிற்றி யானை,வெளிற்றுப் பனை, எயிற்றுப்பல்; இவை அல்வழிக் கண் மிக்கன.வெருக்கு க் கண், எரு த் துக்கால் (செவி தலை புறம்) – எனப் பிற மெய்கள் மிக்கன. (நன்.182 மயிலை.) |
நெடில்தொடர்க் குற்றியலுகரம் | மொழியின் ஈற்றெழுத்து உகரம் ஏறிய வல்லொற்று ஆறனுள் (கு சு டு து புறு) ஒன்றாக, அயலெழுத்துத் தனிநெடிலாக இருப்பின், அவ்வீற்று உகரம்நெடில்தொடர்க் குற்றிய லுகரம் எனப்படும். இதனைத் தொல். ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரம் என்னும்.எ-டு : நாகு, காசு, காடு, காது, வெளபு, யாறு (நன். 94) |
நெடுங்கணக்கின் அமைப்பு முறை | எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாதலின் முதற்கண்வைக்கப்பட்டது. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பான் னகரம்பின்வைத்தார். குற்றெழுத்துக்களை முன் னாகக் கூறி அவற்றிற்கு இனம்ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரைகூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின்.அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின்வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும்சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. எகரம் அதன் பின் வைத்தார்,அகர இகரங்களொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்களின் இனமானகுற்றெழுத்து இலவேனும், பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின்பின்னர் ஐகார ஒளகாரங்கள் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடுகூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கிஐகாரத்தின் பின்வைத்தார். இன்னும் அஆ, உஊ, ஒஓ ஒள – இவை தம்முள் வடிவுஒக்கும்; இ ஈ ஐ வடிவு ஒவ்வா.இனி, ககாரஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார நகாரமும்,பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையேமெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதல்அண்ணமும், இடைநா வும்இடையண்ணமும், நுனிநாவும் நுனிஅண்ணமும், இதழ் இயைதலும் ஆகிப்பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞண ந ம என இம்முறையே வைத்தார். பிறப்புஒப்புமையானும், னகரம் றகரமாகத்திரிதலானும் றகாரமும் னகாரமும் சேரவைத்தார். இவை தமிழ் எழுத்து என்றுஅறிவித்தற்குப் பின்னர் வைத்தார்.இனி இடையெழுத்துக்களில் யகரம் முன் வைத்தார், அஃது உயிர் போலமிடற்றுப் பிறந்த வளி அண்ணம் கண்ணுற்ற அடையப் பிறத்தலின். ரகரம்அதனொடு பிறப்பு ஒவ்வாதே னும் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார்.லகாரமும் வகாரமும் தம்முள் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கால்வலிது – சொல் வலிது என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள்பெரும்பான்மை என்பது பற்றி, லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும்ளகாரமும் இயைபில வேனும், ‘இடையெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தஇன்பத்திற்கு இயைபுடைமை பற்றிச் சேரவைத்தார் போலும். (தொ. எ. 1 நச்.உரை)(எழுத்துக்களின் முறை வைப்பு (2) – காண்க.) |
நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம் | சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும்முயற்சியால் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பதுஒன்றேனும் எழுத்தியல் தழா ஓசை போலக் கொள்ளினும் கொள்ளற்க, எழுத்தேயாம்என்று ஒற்றின்பாற்படுத்தற்குப் ‘புள்ளி’ எனப் பெயர் பெறுதலா னும்,உயிரும் ஒற்றுமாகிய இரண்டிற்குமிடையே வைக்கப் பட்டது. (இ. வி. 8உரை) |
நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம்பற்றி வீரசோழியத்திற் கண்டது | ஆய்தம் உயிரையும் மெய்யையும் சார்ந்து இடையே வருதலின், தமிழ்நெடுங்கணக்கில் உயிர் பன்னிரண்டையும் அடுத்து மெய் பதினெட்டன் முன்னர்உயிர்க்கும் மெய்க்கும் நடுவே வைக்கப் பட்டது. (ஆய்தம் உயிர்போல அலகுபெற்றும் மெய் போல அலகு பெறாமலும் செய்யுளுள் வழங்கும் இரு நிலைமையும் உடைமையால், அஃது உயிரும் மெய்யுமாகிய அவற்றிடையே வைக்கப்பட்டதுஎனலாம்) (வீ. சோ. சந்திப். 1) |
நெடுமுதல் குறுகாத இயல்பானசாரியைகள் புணருமாறு | தம் நம் நும் – என்ற சாரியை இடைச்சொற்கள் இயல்பாக அமைந்தவை. அவைதாம் நாம் நீஇர் என்பவற்றின் திரிபு அல்ல.எல்லாம் எல்லீர் எல்லார் – என்பன உருபேற்குமிடத்து இடையே வரும் நம்நும் தம் என்பன, நாம் நீஇர் தாம் என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து நம்நும் தம் என நெடுமுதல் குறுகி அகரச்சாரியை பெறுமாறு போல, அகரச்சாரியைபெற்று, வருமொழியாக வரும் உருபொடு புணரும்.(ஈண்டு உருபுகள் குவ்வும் அதுவும் என்க.)வருமாறு : எல்லாம் + கு > எல்லாம் + நம் + அ + கு + உம் = எல்லாநமக்கும்; எல்லீர் +கு > எல்லீர் + நும் + அ + கு + உம் = எல்லீர் நுமக்கும்; எல்லார் +கு > எல்லார் + தம் + அ + கு + உம் = எல்லார் தமக்கும் என்று,இறுதியில் உம்முச்சாரியை பெற்றுப் புணரும்.எனவே, நம் நும் தம் என்ற சாரியை இடைச்சொற்கள் வேறு; நாம் நீஇர்தாம் என்பன முதல் குறுகி வரும் நம் நும் தம் என்பன வேறு என்பது. (தொ.எ. 161 நச். உரை) |
நெடுமுதல் குறுகும் மொழிகள் | யான் நீ தான் யாம் நாம் தாம் என்பன உருபேற்குமிடத்து நெடுமுதல்குறுகி என் நின் தன் எம் நம் தம் என்று நிற்பனவாம்.எ-டு : யான் + கு > என் + அ + கு = எனக்குநீ + கு > நின் + அ + கு = நினக்கு (தொ. எ. 161 நச்.)யான் யாம் நாம் நீ நீர் தான் தாம் என்பன நெடுமுதல் குறுகுவன. இவைமுறையே நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம் என்றாகிவேற்றுமையுருபு ஏற்கும். என்னை என்னால் எனக்கு என்னின் எனது என்கண் எனஆறுருபுகளோடும் பிறவற்றையும் ஒட்டிக் காண்க. (நான்காவதும் ஆறாவதும்வருவழி, நெடுமுதல் குறுகிநின்றவை அகரச்சாரியை பெறும் என்க.) (நன்.247) |
நெட்டிசை | விருத்தமாகிய பாவினத்தில் பயிலும் நெடிய சந்தம். ( W) (L) |
நெட்டுயிர் மடக்கு | யாதானும் ஒரு நெட்டுயிரெழுத்தே மெய்யொடும் கலந்து பாடல் முழுதும்வருவது. வரும் எடுத்துக்காட்டுள் ஆகார நெட்டுயிரே பயின்றுள்ளவாறுகாண்க:எ-டு : தாயாயா ளாராயா டாமாறா தாராயாயாமாரா வானாடா மாதாமா – தாவாவாயாவாகா காலாறா காவாகா காணாநாமாலானா மாநாதா வா.‘தாய் ஆயாள் ஆராயாள் (ஆதலின்) தா (-வருத்தம்) மாறாது. அதனை நீஆராயாய். (அங்ஙனம் ஆராயாத நினக்கு) யாம் ஆரா? (-யாவர் ஆகுவோம்?) வான்நாடா! (-தேவருலகை ஒத்த நாட்டை யுடையோனே!) மாது (-இப்பெண்) மா தா ஆம்(-பெரிய வருத்தம் அடைவாள்); வா; வா (வந்தால்) யா ஆகா? (-உனக்குஎப்பொருள் வாய்க்காது?) கால் ஆறா கா (-கால் ஆறி அவசர மின்றி வந்துஎங்களைக் காப்பாயாக). ஆகா காண் (-இத்துன்பம் தாங்க ஒண்ணாது என்பதனைநோக்குவாயாக) நா நாம் (-பழி கூறும் அயலார் நா எங்களுக்கு அச்சம்தருகிறது). மால் ஆனா (-மயக்கம் நீங்காத) மா நாதா! (-பெரிய தலைவனே!) வா(-எம்மிடம் அன்பு கொண்டு வருவாயாக) – என்று பொருள்படும் இப்பாடற் கண்ஆகார நெட்டுயிர் மடக்கியவாறு.இது மடக்கு வகைகளுள் ஒன்று. (தண்டி. 97 உரை) |
நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம்ஒன்றியற்கிழமை யாதல் | தொழிற்பண்பும் குணப்பண்பும் ஒருபொருளினின்றும் பிரிக்க முடியாததொடர்புடையன ஆதலின், இவை ஆறாம் வேற்றுமைத் தற்கிழமைப் பொருளில்ஒன்றியற்கிழமை என்ற பகுப்பின்பாற் பட்டன.நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் அச்சொல்லொடு வேறல்லதாக,அச்சொல்லொடு பிரிக்கமுடியாத தொடர் புடையது ஆதலின் அஃது ஒன்றியற்கிழமைத்தாயிற்று, நிலத்தது அகலம் என்புழி அகலம் நிலத்தினின்று பிரிக்கமுடியாது ஒன்றுபட்டிருப்பது போல.காடு – நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் (டகரம் பற்றுக்கோடு)இச்சொல்லுள் ஈற்றுக் குற்றியலுகரம் பிரிக்க முடியாதவாறுஇணைந்துள்ளமை காண்க. (தொ. எ. 36 நச். உரை) |
நெட்டெழுத்து வேறு பெயர்கள் | நெடுமை எனினும், தீர்க்கம் எனினும் நெட்டெழுத்து என்னும்ஒருபொருட்கிளவி. (மு. வீ. எழுத். 11) |
நெல் என்ற சொல் புணருமாறு | நெல் என்ற பொருட்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அல்வழி வேற்றுமைஎன்ற இருவழியும் லகரம் றகரமாகப் புணரும்.எ-டு : நெல் + கடிது = நெற்கடிது – அல்வழிநெல் + கடுமை = நெற்கடுமை – வேற்றுமை(தொ. எ. 371 நச்.) |
நெல் செல் கொல் சொல் : முடியுமாறு | இந்நான்கு பெயர்களும் வன்கணம் வருவழிப் பொதுவிதியான் (இயல்பாதலும்லகரம் றகரமாகத் திரிதலும் ஆகிய) உறழ்ச்சி பெறாது, அல்வழிக்கண்ணும்வேற்றுமைப் புணர்ச்சி போல லகரம் றகரமாகத் திரிந்து முடியும்.வருமாறு : நெற்கடிது செற்கடிது கொற்கடிது சொற் கடிது, சிறிது,தீது, பெரிது.(செல் – மேகம்; கொல் – கொல்லுத்தொழில்; அன்றிக் கொல்லனுமாம்).(நன். 232 சங்கர.) |
நேமிநாத எழுத்ததிகாரம் | நேமிநாதம் என்னும் சின்னூலில் எழுத்ததிகாரம் இயல்பகுப் பின்றிஉள்ளது. இதன்கண் எழுத்துக்களின் முதல்வைப்பு, துணைவைப்பு, பிறப்பு,முதல்நிலை, இறுதிநிலை, வடமொழி யாக்கம், வடமொழி எதிர்மறை முடிபு,பொதுப்புணர்ச்சி, உடம்படுமெய், உயிரீற்றுச் சந்திமுடிவு, ஒற்றிற்றுச்சந்தி முடிவு, குற்றியலுகரச் சந்திமுடிவு, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி,பகுபத அமைப்பு முதலியவற்றைக் காணலாம். இஃது இருபத்து நான்கு வெண்பாச்சூத்திரங்களால் ஆகியது. |
நேமிநாதம் | திரிபுவன தேவன் என்ற பெயரிய முதற்குலோத்துங்கன் (கி.பி. 1070 -1118) காலத்தில் தொண்டைநாட்டுப் பொன்விளைந்த களத்தூர் எனப்பட்ட களந்தைஎன்னும் ஊரில் தோன்றிய குணவீரபண்டிதர் என்னும் சமணச் சான்றவர், தென்மயிலா புரி நீல்நிறக்கடவுள் நேமிநாதர் பெயரால், தொல்காப்பியத்தைமுதனூலாகக் கொண்டு எழுத்து – சொல் – என்ற இரண்டு அதிகாரங்களைப்பாயிரத்தொடு 97 வெண்பாக்க ளால் நேமி நாதம் என்னும் இலக்கணநூலாகஇயற்றினார். இந்நூல் சின்னூல் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதன்எழுத்ததிகாரத்தே இயல்பகுப்பு இல்லை; சொல்லதிகாரம் தொல்காப்பியச்சொல்லதிகாரம் போல ஒன்பது இயல் களைக் கொண்டது. இந்நூற்கு ‘வயிரமேகவிருத்தி’ என்ற அழகிய சுருக்கமான உரை உள்ளது. |
நொ, து மூவினத்தொடும் புணருமாறு | நொ, து இவ்விரண்டும் (முன்னிலை ஒருமை ஏவல்) வினை யாதலின்,நொக்கொற்றா நொச்சாத்தா நொத்தேவா நொப் பூதா – எனவும், நொஞ்ஞெள்ளாநொந்நாகா நொம் மாடா எனவும், நொய்யவனா நொவ்வளவா – எனவும், மூவினம்வருவழியும் அவ்வம்மெய்யே மிக்கன. து என்பதனொடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. (நன். 158, 165 சங்கர.) |
நொச்சிமாலை | வீரர் எயில் காத்தலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்த வகை.(யாழ். அக.) (L) |
நொண்டி நாடகம் | ‘நொண்டிச் சிந்து’ காண்க; எடுத்துக்காட்டு : சீதக்காதி நொண்டிநாடகம். (L) . |
நொண்டிச்சிந்து | நொண்டி நாடகம், கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றனைக் களவாடமுயல்கையில் கால் வெட்டப்பட்டுப் பின்னர் நற்கதி பெற்ற வரலாற்றைச்சிந்துச்செய்யுளால் புனைந்து பாடும் நாடக நூல். சிந்து என்பது ஒருவகைஇசைப்பா. (L) |