தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நெஞ்சுவிடு தூது

1. தலைவி தன் மனத்தைக் காதலன்பால் தூது விடுவதாக அதனை விளித்துப்பாடும் பிரபந்த வகை. இறைவனை நாயகனாகக் கொண்டு தம்மைத் தலைவி நிலையில்பாவித்துக் கவிஞர் இப்பிரபந்தம் பாடுவது இயல்பு.2. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று; உமாபதி சிவம்இயற்றியது. காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. (L)

நெடிலோடு உயிர்த்தொடர் இரட்டல்

டகர றகர மெய்களை ஊர்ந்து வரும் குற்றியலுகரம் நிற்கும்நெடில்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் உயிர்த்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் நாற்கணமும் வரு மிடத்து,வேற்றுமைப் புணர்ச்சிக்கண் டகர றகர ஒற்றுக்கள் பெரும்பான்மையும்இரட்டும்.எ-டு : ஆடு + கால், மயிர், வலிமை, அடி = ஆட்டுக்கால்,ஆட்டுமயிர், ஆட்டு வலிமை, ஆட்டடிபாறு + கால், மயிர், வலிமை, அடி = பாற்றுக்கால், பாற்றுமயிர்,பாற்றுவலிமை, பாற்றடிமுருடு + கால், நிறம், வலிமை, அடி = முருட்டுக்கால்,முருட்டுநிறம், முருட்டுவலிமை, முருட்டடி.முயிறு + கால், நிறம், வலிமை, அடி = முயிற்றுக்கால்,முயிற்றுநிறம், முயிற்றுவலிமை, முயிற்றடி.சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், சிறு பான்மை அல்வழிக்கண்இரட்டுதலும், சிறுபான்மை இருவழி யிலும் பிற ஒற்று இரட்டுதலும்கொள்க.எ-டு : நாடு கிழவோன், ‘கறைமிட றணியலும் அணிந் தன்று’ (புறநா.கடவுள்.) – வேற்றுமையில் இரட்டா வாயின.காட்டரண், களிற்றியானை – அல்வழியில் இரட்டின.வெருகு + கண் = வெருக்குக் கண் – வேற்றுமைஎருது + மாடு = எருத்துமாடு – அல்வழி பிற ஒற்றுக்கள்இரட்டின.

நெடிலோடு உயிர்த்தொடர்க்கண் டகர றகரஒற்று இரட்டாமை

எ-டு :‘காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’ (பொருந. ஈற்றடி)‘காடகம் இறந்தார்க்கே ஓடுமென்மனனேகாண்’ (யா. வி. மேற்.)‘கறை மிடறு அணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)இவை வேற்றுமைப் புணர்ச்சி. (நன். 183 சங்கர.)

நெடில்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் உயிர்நெடிலாம். இவை 18 மெய்யுடன் கூட18 x 7 = 126 உயிர்மெய் நெடிலாம். இவை தனித்தனி இரண்டுமாத்திரைபெறும். அளபெடைக்கண் ஐகார நெடிலுக்கு இகரமும், ஒளகார நெடிலுக்குஉகரமும் இனக்குறிலாகக் கொள்ளப்படும்.எ-டு : விலைஇ, கௌஉ.நெடில், நெடுமை, நெட்டெழுத்து என்பன ஒருபொருளன. (நன். 65)

நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகரப் புணர்ச்சியுள் சில

நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் சில வருமொழியொடுபுணருமிடத்து வேற்றுமையில் இனஒற்று (ட், ற்) மிகாமையும், அல்வழியில்மிகுதலும் உளவாம்.எ-டு :‘காடகம் இறந்தார்க்கே’ (யா.வி. மேற்.)‘நாடு கிழவோனே’ ( பொருந. 248‘கறை மிடறணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)இவை வேற்றுமைக்கண் மிகாவாயின.(மிகுதலாவது டற ஒற்று இரட்டுதலான் வரு மிகுதி.)காட்டரண், குருட்டுக் கோழி, முருட்டுப் புலையன்; களிற்றி யானை,வெளிற்றுப் பனை, எயிற்றுப்பல்; இவை அல்வழிக் கண் மிக்கன.வெருக்கு க் கண், எரு த் துக்கால் (செவி தலை புறம்) – எனப் பிற மெய்கள் மிக்கன. (நன்.182 மயிலை.)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

மொழியின் ஈற்றெழுத்து உகரம் ஏறிய வல்லொற்று ஆறனுள் (கு சு டு து புறு) ஒன்றாக, அயலெழுத்துத் தனிநெடிலாக இருப்பின், அவ்வீற்று உகரம்நெடில்தொடர்க் குற்றிய லுகரம் எனப்படும். இதனைத் தொல். ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரம் என்னும்.எ-டு : நாகு, காசு, காடு, காது, வெளபு, யாறு (நன். 94)

நெடுங்கணக்கின் அமைப்பு முறை

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாதலின் முதற்கண்வைக்கப்பட்டது. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பான் னகரம்பின்வைத்தார். குற்றெழுத்துக்களை முன் னாகக் கூறி அவற்றிற்கு இனம்ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரைகூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின்.அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின்வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும்சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. எகரம் அதன் பின் வைத்தார்,அகர இகரங்களொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்களின் இனமானகுற்றெழுத்து இலவேனும், பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின்பின்னர் ஐகார ஒளகாரங்கள் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடுகூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கிஐகாரத்தின் பின்வைத்தார். இன்னும் அஆ, உஊ, ஒஓ ஒள – இவை தம்முள் வடிவுஒக்கும்; இ ஈ ஐ வடிவு ஒவ்வா.இனி, ககாரஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார நகாரமும்,பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையேமெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதல்அண்ணமும், இடைநா வும்இடையண்ணமும், நுனிநாவும் நுனிஅண்ணமும், இதழ் இயைதலும் ஆகிப்பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞண ந ம என இம்முறையே வைத்தார். பிறப்புஒப்புமையானும், னகரம் றகரமாகத்திரிதலானும் றகாரமும் னகாரமும் சேரவைத்தார். இவை தமிழ் எழுத்து என்றுஅறிவித்தற்குப் பின்னர் வைத்தார்.இனி இடையெழுத்துக்களில் யகரம் முன் வைத்தார், அஃது உயிர் போலமிடற்றுப் பிறந்த வளி அண்ணம் கண்ணுற்ற அடையப் பிறத்தலின். ரகரம்அதனொடு பிறப்பு ஒவ்வாதே னும் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார்.லகாரமும் வகாரமும் தம்முள் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கால்வலிது – சொல் வலிது என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள்பெரும்பான்மை என்பது பற்றி, லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும்ளகாரமும் இயைபில வேனும், ‘இடையெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தஇன்பத்திற்கு இயைபுடைமை பற்றிச் சேரவைத்தார் போலும். (தொ. எ. 1 நச்.உரை)(எழுத்துக்களின் முறை வைப்பு (2) – காண்க.)

நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம்

சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும்முயற்சியால் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பதுஒன்றேனும் எழுத்தியல் தழா ஓசை போலக் கொள்ளினும் கொள்ளற்க, எழுத்தேயாம்என்று ஒற்றின்பாற்படுத்தற்குப் ‘புள்ளி’ எனப் பெயர் பெறுதலா னும்,உயிரும் ஒற்றுமாகிய இரண்டிற்குமிடையே வைக்கப் பட்டது. (இ. வி. 8உரை)

நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம்பற்றி வீரசோழியத்திற் கண்டது

ஆய்தம் உயிரையும் மெய்யையும் சார்ந்து இடையே வருதலின், தமிழ்நெடுங்கணக்கில் உயிர் பன்னிரண்டையும் அடுத்து மெய் பதினெட்டன் முன்னர்உயிர்க்கும் மெய்க்கும் நடுவே வைக்கப் பட்டது. (ஆய்தம் உயிர்போல அலகுபெற்றும் மெய் போல அலகு பெறாமலும் செய்யுளுள் வழங்கும் இரு நிலைமையும் உடைமையால், அஃது உயிரும் மெய்யுமாகிய அவற்றிடையே வைக்கப்பட்டதுஎனலாம்) (வீ. சோ. சந்திப். 1)

நெடுமுதல் குறுகாத இயல்பானசாரியைகள் புணருமாறு

தம் நம் நும் – என்ற சாரியை இடைச்சொற்கள் இயல்பாக அமைந்தவை. அவைதாம் நாம் நீஇர் என்பவற்றின் திரிபு அல்ல.எல்லாம் எல்லீர் எல்லார் – என்பன உருபேற்குமிடத்து இடையே வரும் நம்நும் தம் என்பன, நாம் நீஇர் தாம் என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து நம்நும் தம் என நெடுமுதல் குறுகி அகரச்சாரியை பெறுமாறு போல, அகரச்சாரியைபெற்று, வருமொழியாக வரும் உருபொடு புணரும்.(ஈண்டு உருபுகள் குவ்வும் அதுவும் என்க.)வருமாறு : எல்லாம் + கு > எல்லாம் + நம் + அ + கு + உம் = எல்லாநமக்கும்; எல்லீர் +கு > எல்லீர் + நும் + அ + கு + உம் = எல்லீர் நுமக்கும்; எல்லார் +கு > எல்லார் + தம் + அ + கு + உம் = எல்லார் தமக்கும் என்று,இறுதியில் உம்முச்சாரியை பெற்றுப் புணரும்.எனவே, நம் நும் தம் என்ற சாரியை இடைச்சொற்கள் வேறு; நாம் நீஇர்தாம் என்பன முதல் குறுகி வரும் நம் நும் தம் என்பன வேறு என்பது. (தொ.எ. 161 நச். உரை)

நெடுமுதல் குறுகும் மொழிகள்

யான் நீ தான் யாம் நாம் தாம் என்பன உருபேற்குமிடத்து நெடுமுதல்குறுகி என் நின் தன் எம் நம் தம் என்று நிற்பனவாம்.எ-டு : யான் + கு > என் + அ + கு = எனக்குநீ + கு > நின் + அ + கு = நினக்கு (தொ. எ. 161 நச்.)யான் யாம் நாம் நீ நீர் தான் தாம் என்பன நெடுமுதல் குறுகுவன. இவைமுறையே நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம் என்றாகிவேற்றுமையுருபு ஏற்கும். என்னை என்னால் எனக்கு என்னின் எனது என்கண் எனஆறுருபுகளோடும் பிறவற்றையும் ஒட்டிக் காண்க. (நான்காவதும் ஆறாவதும்வருவழி, நெடுமுதல் குறுகிநின்றவை அகரச்சாரியை பெறும் என்க.) (நன்.247)

நெட்டிசை

விருத்தமாகிய பாவினத்தில் பயிலும் நெடிய சந்தம். ( W) (L)

நெட்டுயிர் மடக்கு

யாதானும் ஒரு நெட்டுயிரெழுத்தே மெய்யொடும் கலந்து பாடல் முழுதும்வருவது. வரும் எடுத்துக்காட்டுள் ஆகார நெட்டுயிரே பயின்றுள்ளவாறுகாண்க:எ-டு : தாயாயா ளாராயா டாமாறா தாராயாயாமாரா வானாடா மாதாமா – தாவாவாயாவாகா காலாறா காவாகா காணாநாமாலானா மாநாதா வா.‘தாய் ஆயாள் ஆராயாள் (ஆதலின்) தா (-வருத்தம்) மாறாது. அதனை நீஆராயாய். (அங்ஙனம் ஆராயாத நினக்கு) யாம் ஆரா? (-யாவர் ஆகுவோம்?) வான்நாடா! (-தேவருலகை ஒத்த நாட்டை யுடையோனே!) மாது (-இப்பெண்) மா தா ஆம்(-பெரிய வருத்தம் அடைவாள்); வா; வா (வந்தால்) யா ஆகா? (-உனக்குஎப்பொருள் வாய்க்காது?) கால் ஆறா கா (-கால் ஆறி அவசர மின்றி வந்துஎங்களைக் காப்பாயாக). ஆகா காண் (-இத்துன்பம் தாங்க ஒண்ணாது என்பதனைநோக்குவாயாக) நா நாம் (-பழி கூறும் அயலார் நா எங்களுக்கு அச்சம்தருகிறது). மால் ஆனா (-மயக்கம் நீங்காத) மா நாதா! (-பெரிய தலைவனே!) வா(-எம்மிடம் அன்பு கொண்டு வருவாயாக) – என்று பொருள்படும் இப்பாடற் கண்ஆகார நெட்டுயிர் மடக்கியவாறு.இது மடக்கு வகைகளுள் ஒன்று. (தண்டி. 97 உரை)

நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம்ஒன்றியற்கிழமை யாதல்

தொழிற்பண்பும் குணப்பண்பும் ஒருபொருளினின்றும் பிரிக்க முடியாததொடர்புடையன ஆதலின், இவை ஆறாம் வேற்றுமைத் தற்கிழமைப் பொருளில்ஒன்றியற்கிழமை என்ற பகுப்பின்பாற் பட்டன.நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் அச்சொல்லொடு வேறல்லதாக,அச்சொல்லொடு பிரிக்கமுடியாத தொடர் புடையது ஆதலின் அஃது ஒன்றியற்கிழமைத்தாயிற்று, நிலத்தது அகலம் என்புழி அகலம் நிலத்தினின்று பிரிக்கமுடியாது ஒன்றுபட்டிருப்பது போல.காடு – நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரம் (டகரம் பற்றுக்கோடு)இச்சொல்லுள் ஈற்றுக் குற்றியலுகரம் பிரிக்க முடியாதவாறுஇணைந்துள்ளமை காண்க. (தொ. எ. 36 நச். உரை)

நெட்டெழுத்து வேறு பெயர்கள்

நெடுமை எனினும், தீர்க்கம் எனினும் நெட்டெழுத்து என்னும்ஒருபொருட்கிளவி. (மு. வீ. எழுத். 11)

நெல் என்ற சொல் புணருமாறு

நெல் என்ற பொருட்பெயர் வருமொழி வன்கணம் வந்துழி, அல்வழி வேற்றுமைஎன்ற இருவழியும் லகரம் றகரமாகப் புணரும்.எ-டு : நெல் + கடிது = நெற்கடிது – அல்வழிநெல் + கடுமை = நெற்கடுமை – வேற்றுமை(தொ. எ. 371 நச்.)

நெல் செல் கொல் சொல் : முடியுமாறு

இந்நான்கு பெயர்களும் வன்கணம் வருவழிப் பொதுவிதியான் (இயல்பாதலும்லகரம் றகரமாகத் திரிதலும் ஆகிய) உறழ்ச்சி பெறாது, அல்வழிக்கண்ணும்வேற்றுமைப் புணர்ச்சி போல லகரம் றகரமாகத் திரிந்து முடியும்.வருமாறு : நெற்கடிது செற்கடிது கொற்கடிது சொற் கடிது, சிறிது,தீது, பெரிது.(செல் – மேகம்; கொல் – கொல்லுத்தொழில்; அன்றிக் கொல்லனுமாம்).(நன். 232 சங்கர.)