தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நூறாயிரம், நிலைமொழிகளான ஒன்றுமுதல் ஒன்பதுகாறும் உள்ளவற்றொடு புணர்தல்

ஒன்றுமுதல் ஒன்பான் நிலைமொழிகளாக, வருமொழியாக ‘நூறாயிரம்’வரும்வழி, நூறு என்னும் வருமொழியொடு முடிந்தாற் போலவே விகாரம் எய்திமுடியும்.வருமாறு : ஒன்று + நூறாயிரம் = ஒருநூறாயிரம்; இரண்டு +நூறாயிரம் = இருநூறாயிரம்; மூன்று + நூறாயிரம் = முந்நூறாயிரம்;நான்கு + நாறாயிரம் = நானூ றாயிரம்; ஐந்து + நூறாயிரம் = ஐந்நூறாயிரம்; ஆறு + நூறாயிரம் = அறுநூறாயிரம்; ஏழ் + நூறாயிரம் =எழுநூறாயிரம்; எட்டு + நூறா யிரம் = எண்ணூறாயிரம்; ஒன்பது + நூறாயிரம்= ஒன்பதினூறாயிரம்.

நூறு, நிலைமொழிகளான ஒன்று முதல்ஒன்பான்காறும் உள்ளவற்றொடு புணர்தல்

ஒன்று + நூறு = ஒருநூறு – (தொ. எ. 460 நச்.)இரண்டு + நூறு = இருநூறு – (தொ. எ. 460 நச்.)மூன்று + நூறு = முந்நூறு – (தொ. எ. 461 நச்.)நான்கு + நூறு = நானூறு – (தொ. எ. 462 நச்.)ஐந்து + நூறு = ஐந்நூறு – (தொ. எ. 462 நச்.)ஆறு + நூறு = அறுநூறு – (தொ. எ. 460 நச்.)ஏழ் + நூறு = எழுநூறு – (தொ. எ. 392 நச்.)எட்டு + நூறு = எண்ணூறு – (தொ. எ. 460 நச்.)ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் – (தொ. எ. 463 நச்.)

நூற்றந்தாதி

வெண்பா நூறு அல்லது கலித்துறை நூறு அந்தாதித் தொடை யமையமண்டலித்துப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 82)முதல் திருவந்தாதி முதலியன வெண்பாவான் இயன்றன. இராமாநுசநூற்றந்தாதி போல்வன கட்டளைக் கலித்துறை யான் இயன்றன.

நூற்றொன்று….. நூற்றொன்பது:புணர்நிலை

நூறு நிலைமொழியாக, வருமொழிக்கண் ஒன்றுமுதல் ஒன்பது ஈறாகியஎண்ணுப்பெயர் வரின், இடையே றகரஒற்று மிக நிலைமொழி ‘நூற்று’ என்றுநிற்ப, ஒன்று முதலிய உயிர் முதல் மொழிகள் வருமொழியாகுமிடத்துக்குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். கொடுப்பவே, நூறு +ஒன்று = நூற்றொன்று எனப்புணரும். நூற்று + மூன்று, நூற்று + நான்குஇவை இயல்பாகப் புணரும்.நூற்பாவுள் ‘ஈறு சினை ஒழிய’ என்பது இறுதிச்சினையாகிய ‘று’ என்றஎழுத்துக் கெடாது நிற்ப என்று பொருள்படும்.‘ஒழியா’ என்பது பாலசுந்தரனார் பாடம். அதன் நுட்பத் தினையும் உணர்க.(எ. ஆ. பக். 176, தொ. எ. 472 நச்.)

நூல்மரபின் பெயர்க்காரணம்

நூல்மரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இய லாகும். இது 33நூற்பாக்களையுடையது. இதன் பெயர்க் காரணம் பற்றிக் கருத்து வேறுபாடுகள்உள.இவ்வதிகாரத்தான் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான்தொகுத்து உணர்த்தலின் நூல்மரபு என்னும் பெயர்பெற்றது இவ்வியல் என்பர்இளம்பூரணர்.இந்த இயலில் கூறப்படும் விதிகள் மூன்று அதிகாரத்திற்கும்பொதுவாதலின் நூல்மரபு என்னும் பெயர்த்தாயிற்று இவ் வியல் என்பர்நச்சினார்க்கினியர்.எழுத்ததிகாரத்துள் கூறப்படும் எழுத்திலக்கணத்தினைத்தொகுத்துணர்த்துதலான் அதிகார மரபு எனப்படுவதன்றி நூல்மரபு எனப்படாதுஎனவும், இந்த இயலில் கூறப்படுவன செய்கை இயல்களுக்கும்பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி, மூன்றுஅதிகாரத்துக்கும் பொது ஆகாமையின் அக்கருத்துப் பற்றி நூல்மரபு எனப்பெயரிடவில்லை எனவும் முறையே இளம்பூரணர் உரையை யும் நச். உரையையும்மறுத்துச் சிவஞான முனிவர்,“நூலினது மரபு பற்றிய பெயர்கள் கூறலின் நூல்மரபு என்னும்பெயர்த்து. மலை கடல் யாறு குளம் என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றியபெயர்கள் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து குறில் நெடில் உயிர்உயிர்மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டுமுதனூல் ஆசிரிய னால் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூல்மரபு பற்றியபெயராயின. ஏனை ஓத்துக்களுள் விதிக்கப்படும் பெயர்களும் நூல்மரபு பற்றிவரும் பெயராதல் உணர்ந்து கோடற்கு இது முன் வைக்கப்பட்டது”என்றார்.(சூ.வி. பக். 18)‘நூல் மரபு ’ என்பதன்கண் உள்ள நூல், நூல் எழுதுதற்கு அடிப்படைக்காரணமாய எழுத்து என்ற பொருளை உணர்த்திற்றுப் போலும். (எ. ஆ. பக்.3)நூற்கு இன்றியமையா மரபு பற்றிய குறிகளை விதிக்கும் இயல் நூல்மரபு.(எ. கு. பக். 3)

நூல்மரபு கூறும் மெய்ம்மயக்கம்

க் ச் த் ப் என்பன நான்கு மெய்களும் தம்மொடு தாமே மயங்கும்.ர் ழ் என்பன இரண்டு மெய்களும் தம்மொடு பிறவே மயங்கும்.ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும் தம் மொடு பிறவும்மயங்கும்.ட் ற் ல் ள் என்பனவற்றின் முன் க் ச் ப் என்பன மயங்கும்.அவற்றுள், ல் ள் – என்பனவற்றின்முன் ய் வ் – என்பனவும்மயங்கும்.ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற மெல்லினப்புள்ளிகளின் முன் க் ச் ட் த்ப் ற் – என்ற வல்லினப்புள்ளிகள் முறையே மயங்கும்.அவற்றுள், ண் ன் என்பனவற்றின் முன் க் ச் ஞ் ப் ம் ய் வ் என்றமெய்களும் மயங்கும்.ஞ் ந் ம் வ் என்ற மெய்களின் முன் யகரமும் மயங்கும்; அவற்றுள்மகரத்தின் முன் வகரமும் மயங்கும்.ய் ர் ழ் என்பனவற்றின்முன் க் ச் த் ந் ப் ம் ய் வ் என்பனவும்ஙகரமும் மயங்கும் – என்று மெய்ம்மயக்கம் கூறப்படுகிறது.இம்மெய்மயக்கத்தை நச். ஒருமொழிக்கண்ணது என்பர்; ஏனையோர்இருமொழிக்கண்ணது என்பர். (தொ.எ. 22-30 நச்).

நூல்மரபு தனியெழுத்துக்களின் இயல்பேகூறுதல்

முதல் நூற்பா – முதலெழுத்து, சார்பெழுத்து: தொகை ; 2 – சார்பெழுத்துக்களின் பெயர்;3 – 13 – எழுத்துக்களின் மாத்திரை அளவுமுதலாயின; 14 – 18 – சில எழுத்துக்களின் வரிவரிவு; 19 – 21 -மெய்யெழுத்துக்களின் வகை; 22 – 30 – எழுத்துக்கள் ஒன்றோடொன்றுமயங்குமாறு; 31, 32 – சில உயிரெழுத்துக் களுக்கு வேறு பெயர்; 33 -எழுத்துக்களின் அளவினைக் குறித்துப் பிறநூற் கொள்கை;இவ்வாறு நூல் எழுதுதற்கு அடிப்படைக் காரணமாகிய தனி யெழுத்துக்களின்இயல்பே நூல்மரபில் கூறப்பட்டுள்ளது. (எ. ஆ. பக். 3)

நூல்மரபு நுவல்வன

எழுத்து 30, சார்ந்து வரும் எழுத்து 3, குற்றுயிர் 5, நெட்டுயிர்7, மாத்திரை நீளுமாறு, மாத்திரைக்கு அளவு, உயிர் 12, மெய் 18,உயிர்மெய்க்கு அளவு, மெய் சார்பெழுத்து இவற்றின் அளவு, மகரக்குறுக்கம், அதன் வடிவு, மெய்யின் இயற்கை, எகர ஒகர இயற்கை, உயிர்மெய்இயல்பு, உயிர்மெய் ஒலிக்கு மாறு, வல்லினம் மெல்லினம் இடையினம் என்றமெய்வகை, மெய்ம்மயக்கம் பற்றிய மரபு, சுட்டு, வினா, உயிரும் மெய்யும்வரம்புமீறி ஒலிக்கும் இடம் – என்பன நூல்மரபினுள் கூறப் பட்டுள்ளன.(தொ. எ. 1 – 33 நச்.)

நூல்மரபு மூன்றதிகாரக் கருத்தும்கொண்டமை

எழுத்துக்களின் பெயரும் முறையும் எழுத்ததிகாரத்திற்கும்செய்யுளியற்கும் ஒப்பக் கூறியன. எழுத்ததிகாரத்துக் கூறியமுப்பத்துமூன்றனைப் பதினைந்து ஆக்கி ஆண்டுத் தொகை கோடலின், தொகைவேறாம். அளவு, செய்யுளியற்கும் எழுத்திகாரத்திற்கும் ஒத்த அளவும்ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும் கூறிய மாத்திரைஇரண்டிடத் திற்கும் ஒத்த அளவு; ஆண்டுக் கூறும் செய்யுட்கு அளவுகோடற்கு எழுத்ததிகாரத்துக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு.அஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எ. 33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டுமாட்டெறிந்தொழுகு மாற்றான் உணரப்படும். இன்னும் குறிலும் நெடிலும்மூவகை இனமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் ஒப்பக்கூறியன. முறையும் எழுத்ததிகாரத்திற்கும் செய்யு ளியற்கும் ஒக்கும்.கூட்டமும் பிரிவும் மயக்கமும் எழுத்ததி காரத்திற்கே உரியனவாகக்கூறியன. ‘அம்மூவாறும்’ (எ. 22) என்னும் சூத்திரம் முதலியவற்றான்எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின்,சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம்மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் கூறலின் இவ்வோத்து நூலினது இலக்கணம்கூறியதாயிற்று. (தொ. எ. 1 நச். உரை)

நூல்மரபு: சொற்பொருள்

இசைப்பதும் ஒலிப்பதுமாகிய ஒலியெழுத்துக்களின் மரபு களை உணர்த்தும்பகுதி- என்பது இத்தொடரின் பொருள். இஃது ஆறன் தொகை; அன்மொழித்தொகையான், எழுத் தொலிகளைப் பற்றிய இலக்கணம் கூறும் இயலை உணர்த்திநின்றது. நூல் என்பதன் இயற்பொருள் ஒலியெழுத்து. அது ‘சினையிற் கூறும்முதலறிகிளவி’ என்னும் ஆகுபெயரான், புத்தகமாகிய நூலினை வழக்கின்கண்உணர்த்தலாயிற்று. மரபு என்பது மருவுதல் என்னும் தொழிற்பெயரின்அடியாகப் பிறந்த குறியீட்டுச் சொல்; தொன்றுதொட்டு நியதியாக வருதல்என்னும் பொருட்டு. அஃது ஈண்டுத் தமிழ்நெறி உணர்ந்த சான்றோரான்தொன்றுதொட்டு வழங்கப்பெற்று வரும் இலக்கண நெறியை உணர்த்தி நின்றதுஎன்க. எனவே, இவ்விய லுள் கூறப் பெறும் எழுத்தொலி மரபுகள்தமிழ்மொழிக்கே உரியவை என்பது பெறப்படும். (தொ. எ. பக். 72 ச.பால.)