தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நுண்பொருண்மாலை

16ஆம் நூற்றாண்டுப் புலவரான காரிரத்தின கவிராயர் என்பார்,தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினி யர் உரை, திருக்குறள்பரிமேலழகர் உரை என்னும் இரண்டற் கும் நுண்பொருள் வரைந்த பனுவல்.இதுபோது திருக்குறள் பரி மேலழகருரைக்கு விளக்கமாக அவர்வரைந்துள்ளநுண்பொருள் மாலையே கிட்டியுள்ளது.பரிமேலழகரது உரை நுட்பத்தினையும் திருக்குறள் சொல் லாட்சிமாண்பினையும் ஒரு சேர அதன்கண் காணலாம்.

நுந்தை ‘நு’ குற்றியலுகரம் அன்மை

‘ கு ற்றியலுகரம் முறைப்பெயர்மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ எனத் தொல். குற்றியலுகரம் மொழிக்கு முதலாம்என்றாரெனின்,‘நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண்வந்த தெனின்உயிர்மெய் யாமனைத்தும் – சந்திக்குஉயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி யின்றிமயல்அணையும் என்றதனை மாற்று’என்பதால் விதியும் விலக்கும் அறிந்துகொள்க. (நன். 105 மயிலை.உரை)

நுந்தை ‘நு’ குற்றியலுகரம் ஆதல்

நகரம் மேற்பல் முதலிடத்து நாநுனி பரந்து ஒற்றப் பிறத்த லானும்,உகரம் இரண்டு இதழும் குவித்துக் கூறப் பிறப்பது ஆதலானும், இரண்டு நகரஒலிகளுக்கு இடையே நன்கு இதழ் குவித்துக் கூறும் முயற்சி நிலையாமையான்,உகரம் அரை மாத்திரை அளவாக ஒலிக்கும் என்பது உய்த்துணரத்தக்கது.நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண் வந்தது என்றால், சந்தியில்,மொழிமுதற்கண் வரும் உயிர்மெய்கள் எல்லாம் உண்மையான புணர்ச்சிநிலைமாறும் என்று கொண்டு, மயிலைநாதர் நுந்தை குற்றியலுகரம் அன்றுஎன்றார்.இவன் + நுந்தை = இவனுந்தை; னு: ஒருமாத்திரை யுடையது. (எ. ஆ. பக்.68, 69)நுந்தை என்பதிலுள்ள உகரம் குற்றியலுகரமாகவும் முற்றியலு கரமாகவும்ஒலிக்கப்பட்டதை நோக்கி இச்சூத்திரம் கூறினார். (எ. கு. பக். 76)நுந்தாய் என்பது நுந்தையின் விளியாகவும், நும் தாய் என்று பொருள்படவும் என இருதிறம்பட வருதலின் முற்றியலு கரமாம். (எ.கு. பக். 77)(தொ. எ. 68 நச்.)

நும் ‘நீஇர்’ ஆதல்

நீஇர் என்பதனைத் தொல். ‘நும்மின் திரிபெயர்’ என்றார். நும் என்பதுபெயர் வேர்ச்சொல்; நீஇர் என்பது அதன் முதல் வேற்றுமை ஏற்ற வடிவம்என்று தொல். கூறியுள்ளார்.நும் என்பது உகரம் கெட்டு ஈகாரம் பெற்று நீ என ஆகும்; நும் என்பதன்ஈற்று மகரம் ரகர ஒற்றாக, ‘நீர்’ என வரும்; அதுவே இடையே இகரம் வர‘நீஇர்’ என்றாகும்.ஆகவே, நும் என்பது நீம் நீர் நீஇர் என முறையே திரிந்துமுதல்வேற்றுமை வடிவம் பெறும் என்பது. (தொ. எ. 326 நச்.)பிற்காலத்தார் ‘நீஇர்’ என்பதன் இகரத்தை அளபெடை யாகக் கொண்டு நீக்கி‘நீர்’ என்பதே முன்னிலைப்பன்மைப் பெயர் எனக் கொள்ளலாயினர். சிலர்நீஇர் என்பதனை நீயிர், நீவிர் எனத் திரித்து வழங்கலாயினர்.

நும் என்ற பெயர்ப் புணர்ச்சி

தொல்காப்பியனார் நும் என்பதனைப் பெயராகக் கொண்டு அஃதுஅல்வழிப்புணர்ச்சிக்கண் நீஇர் எனத்திரிந்து வரு மொழியொடு புணரும்எனவும், வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ஈறுகெட்டு வருமொழி வன்கணத்துக்கேற்றமெலி மிக்கும், மென்கணம் வரின் அம் மெல்லெழுத்தே மிக்கும் புணரும்எனவும், ஐ உருபு ஏற்குமிடத்து ஈற்று மெய் (ம்) இரட்டியும்,நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து அகரச்சாரியை பெற்றும்,நான்கனுருபிற்கு வருமொழி வல்லொற்று மிக்கும். ‘அது’ உருபுஏற்குமிடத்து அவ்வுருபின் அகரம் கெட்டும், ‘கண்’ உருபு ஏற்குமிடத்துமகரம் கெட்டு வருமொழிக்கேற்ப ஙகர மெல்லொற்று மிக்கும் புணரும் எனவும்கூறியுள்ளார்.வருமாறு : நீஇர் கடியீர், நீஇர் நல்லீர் -அல்வழிநுங்கை, நும்செவி, நுந்தலை (நும்புறம் : இயல்பு);நுஞ்ஞாண், நுந்நன்மை, நும்மாட்சி – வேற்றுமைப்பொருட்புணர்ச்சிநும் + ஐ = நும்மை; நும் + அ + க் + கு = நுமக்கு; நும் + அ +(அ)து = நுமது; நும் + கண் = நுங்கண் – உருபு புணர்ச்சி (தொ. எ. 114,115, 187, 325, 326 நச்.)

நும் தம் எம் நம் ஈற்று மகரம்திரியுமாறு

நீர் தாம் யாம் நாம் என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய நும் தம்எம் நம் என்பனவற்று முன் ஞகர நகர முதன்மொழி வருமிடத்தே, நிலைமொழிஈற்று மகரம் முறையே ஞகர நகரங்களாகத் திரியும். (நீர் என்பதன்திரிபாகிய உம் என்பதற்கும் இஃது ஒக்கும்). இது வேற்றுமைப்புணர்ச்சி.எ-டு : நும், தம், எம், நம் + ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண்,எஞ்ஞாண், நஞ்ஞாண்; நும், தம், எம், நம், + நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்உம் + ஞாண், நாண் = உஞ்ஞாண், உந்நாண்மகர முதல்மொழி வரின் நும்+மணி = நும்மணி என இயல் பாகப் புணரும்.பிறவற்றுக்கும் கொள்க. (நன். 221)