தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நீ என்ற சொல் புணருமாறு

நீ என்னும் முன்னிலை ஒருமைப் பொதுப்பெயர் எழுவாயாய் வரும்போதுநாற்கணத்தொடும் இயல்பாகவும், உருபேற்கும் போது நின் எனத் திரிந்தும்,இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வன்கணம் வரின் னகரம் றகரமாகத்திரிந்தும் வருமொழியொடு புணரும்.எ-டு : நீ குறியை, ஞான்றாய், வலியை, அரியை என நாற் கணத்தோடும்அல்வழியில் இயல்பாகப் புணர்ந்த வாறு.நின்கை, ஞாற்சி, வலிமை, அழகு என நீ ‘நின்’ எனத் திரிந்துவருமொழி நாற்கணத்தும் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகமுடிந்தவாறு.உயிர் வருமொழி முதற்கண் வருமிடத்தே, ‘நின்’ என்பதன் னகரம்(தனிக்குறில்முன் ஒற்று ஆதலின்) இரட்டியது. (இவ்விரட்டுதலும் இயல்புபுணர்ச்சியே என்ப)நின் + புறங்காப்ப = நிற்புறங்காப்ப – என இரண்டன் தொகைக்கண்னகரம் றகரமாகத் திரிந்து புணர்ந்த வாறு. (தொ. எ. 250, 253, 157நச்.)

நீடவருதல் ‘நீட்டும்வழி நீட்டல்’அன்மை

நீட வருதலாவது செய்யுட்கண் அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டுவருமொழியோடு ‘ஆயிடை’ ‘ஈவயினான’ ‘ஊவயி னான’ என்றாற் போலப்புணர்வதாகும். ‘நீட்டும்வழி நீட்டல்’ விகாரம், (நிழல் – நீழல்என்றாற்போல) ஒருமொழிக் கண் நிகழ்வதாம் செய்யுள்விகாரம். ஆதலின் இவைதம்முள் வேறுபாடுடையன. (தொ. எ. 208 நச். உரை)

நீட்டல் விகாரம்

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடை நயம் நோக்கிக்குற்றெழுத்து இனமொத்த நெடிலாக விகாரப் படுவது நீட்டல் விகாரமாம்.எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)பொத்து என்பதே சொல். மேலடியுள் ‘தீத்தொழிலே’ என்ற முதற்சீரை நோக்கிஎதுகைவேண்டிப் ‘பொத்தறார்’ எனற் பாலது ஒகரம் நீண்டு ‘போத்தறார்’ என்றுநீட்டல் விகாரம் ஆயிற்று, எதுகைத் தொடைக்கு முதற்சீர்களின் முதல்எழுத்து அளவொத்து நிற்றல் வேண்டுதலின். (நன். 155 சங்.)

நீதகச் சுலோகம்

ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவர் இயற்றிய வடமொழி இலக்கணநூலாம் உரூபாவதாரத்திற்கு அமைந் துள்ள முதல்நினைப்புச் சூத்திரம் இது.(யா. கா. 1 உரை)

நீராடற்பருவம்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள் ஒன்று; பாட்டுடைத்தலைவியாம் சிறுமி தோழியர் புடைசூழக் குதூகலம் கொண்டு வாசனை கமழும்நறுநீரில் திளைத்துக் குளித்தலைப் பாடுவது. இதற்கு ஒப்பாக,கழற்சிக்காய் ஆடும் கழங்குப் பருவத்தைக் கொள்வாரும் உளர். சந்தவிருத்தமாகப் பத்துப்பாடல் இடம்பெறும் (இ. வி. பாட். 47).

நீரொடு கூடிய பால்

நிலைமொழிப் புள்ளியீற்றொடு வருமொழி முதல் உயிர் கூடி(உயிர்மெய்யாக) நிற்றல் நீரொடு கூடிய பால்போல் நிற்றல் என்றுஒற்றுமைநயம் கூறினார். உயிர்மெய் மெய்யின் மாத்திரை தோன்றாதுஉயிரெழுத்தின் மாத்திரையே தன் மாத்திரையாக நிற்கும் நயம்ஒற்றுமைநயமாம். (மெய் முன்னரும் உயிர் பின்னருமாக உச்சரிக்கப்படுவதுஓசைபற்றி வரும் வேற்றுமை நயம்). (இ. வி. எழுத். 64 உரை)

நீர்க்கணம்

செய்யுள் முதற்கண் மங்கலமாக அமைக்கத் தகும் கூவிளங் கனிச்சீர்.இதற்குரிய நாள் சதயம். “இதன் பயன் பாட்டுடைத் தலைவன் சீர் சிறப்புஎய்துதல்” என்றார் மாமூலர். இக்கணம் நிலைபேற்றினைத் தருவது என்றுஇந்திரகாளியர் பலன் கூறினார். (இ. வி. பாட். 40)

நீலகேசி

ஐஞ்சிறு காப்பியம் எனப்படுவனவற்றுள் ஒன்று; நீலகேசி என்பாளைப்பற்றி எழுந்தமையால் இப்பெயர்த்தாயிற்று இதன் முதற்பாடல் வண்ணத்தான்நேரசை முதலாக வந்து அடிதோறும் 14 எழுத்துக்களையுடைய நான்கடிப் பாடல்ஆயிற்று. (யா. வி. பக். 39, 521).