தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நிகண்டு

1. ஒருபொருட் பலசொல் தொகுதியையும், பலபொருள் ஒரு சொல் தொகுதியையும்பாவில் அமைத்துக் கூறும் நூல். நிகண்டு – கூட்டம்;2. வைதிகச் சொற்களின் ஒரு பொருட் பல சொல் தொகுதியை யும், பலபொருள்ஒருசொல் தொகுதியையும் உணர்த்தும் நூல்;3. அகராதி; 4. படலம்.தமிழில் தோன்றிய நிகண்டு நூல்கள் பலவாம். அவற்றுள் சில பின்வருமாறு:திவாகரர் இயற்றிய திவாகரம் தோன்றிய காலம் 8ஆம் நூற்றாண்டுஎன்ப.பிங்கலர் இயற்றிய பிங்கலந்தை தோன்றிய காலம் 9ஆம் நூற்றாண்டு.காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு தோன்றியகாலம் 11ஆம்நூற்றாண்டு என்ப.இரேவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு தோன்றிய காலம் 16ஆம்நூண்றாண்டு என்ப.மண்டல புருடர் இயற்றிய சூடாமணிநிகண்டு தோன்றிய காலம் 16ஆம்நூற்றாண்டு என்ப.ஈசுர பாரதியார் இயற்றிய வடமலைநிகண்டு தோன்றிய காலம் 17ஆம்நூற்றாண்டு என்ப.வீரமாமுனிவர் இயற்றிய சதுர அகராதி தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டுஎன்ப.அருமந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு தோன்றியகாலம் 18ஆம் நாற்றாண்டு.ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு தோன்றிய காலம் 18ஆம்நூற்றாண்டு என்ப.கயாதரர் இயற்றிய கயாதர நிகண்டு தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டுஎன்ப.திருவேங்கட பாரதி இயற்றிய பாரதி தீபம் தோன்றிய காலம் 18ஆம்நூற்றாண்டு என்ப.அண்ணாசாமி பிள்ளை இயற்றிய ஒருசொல் பலபொருள் விளக்கம் தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு என்ப.சுப்பிரமணிய தீக்ஷிதர் இயற்றிய கந்தசுவாமியம் தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு என்ப.வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.வேதகிரி முதலியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.வேதகிரியார் இயற்றிய மற்றொன்று தொகைப்பெயர் விளக்கம் 19ஆம்நூற்றாண்டு என்ப.முத்துசாமிபிள்ளை இயற்றிய நானார்த்த தீபிகை தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு.அருணாசல கவிராயர் இயற்றிய விரிவு நிகண்டு தோன்றிய காலம் 19ஆம்நூற்றாண்டு.அரசஞ் சண்முகனார் இயற்றிய அந்தாதித்தொகை நிகண்டும், நவமணிக் காரிகைநிகண்டும் தோன்றிய காலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி.சிவசுப்பிரமணிய கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு.கைலாசம் என்பார் இயற்றிய கைலாச நிகண்டு சூடாமணி தோன்றிய காலம்19ஆம் நூற்றாண்டு; ஏகபாத நிகண்டும் அக்காலத்ததே.இனி, இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றிய தமிழ் உரிச் சொல் பனுவல்அந்நூற்றாண்டில் தோன்றியது.

நிகழ்கால இடைநிலை

ஆநின்று, கின்று, கிறு – ஆகிய மூன்றும் மூவிடத்தும் வரும்ஐம்பாற்கண்ணும் நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபதஇடைநிலைகளாம்.எ-டு : நடவாநின்றான் (நட + ஆநின்று + ஆன்); நடக்கின் றான் (நட +க் + கின்று + ஆன்); நடக்கிறான் (நட + க் + கிறு + ஆன்) (நன். 143; இ.வி. எழுத். 48)உரையிற்கோடலால், உண்ணாநின்றிலன் – உண்கின்றிலன்அ – எனஎதிர்மறைக்கண் ஆநின்று கின்று என்னும் இடை நிலைகள் வேறுசில எழுத்தொடுகூடி நிகழ்காலம் காட்டும் எனவும்,உண்ணா கிட ந்தான் -உண்ணா விரு ந்தான் – எனக் கிடவும் இருவும், உரைக்கிற்றி – ‘ நன்றுமன் என்இது நாடாய்கூ றி ’ – என றகரமும்,‘ கானம் கடத் தி ர் எனக் கேட்பின் ’ (கலி. 7 : 3) எனத் தகரமும்,நோக்கு வே ற்கு, உண் பே ற்கு என முறையே வினை வினைப் பெயர்க்கண் வகரமும் பகரமும்சிறுபான்மை நிகழ்காலம் காட்டும் எனவும் கொள்க. (இ. வி. 48உரை)

நிசாத்து

அளவழிச் சந்தங்களுள் சீர் ஒத்து ஓரடியில் ஓரெழுத்துக் குறைந்துவருவது.எ-டு : பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (12)செங்கய லினநிரை திளைக்கும் செல்வமும் (13)மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி (13)அங்கயற் பிறழ்ச்சியு மமுத நீரவே. (13) (யா. வி. பக்.514)

நியாய சூடாமணி

ஒரு தருக்க நூல். (வீ. சோ. 181 உரை இறுதிப்பகுதி)

நிருத்தம்

நிருக்தம்; இடையாய ஓத்து எனப்பட்ட ஆறங்கங்களுள் ஒன்று;உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் அங்கம். (ஏனையனவியாகரணமும், கற்பமும், கணிதமும், பிரமமும், சந்தமும் ஆம்.) (தொ. பொ.75 நச்.)யாஸ்கர் என்பவரால் இஃது இயற்றப்பட்டது.

நிரோட்டக யமக அந்தாதி

நிரோட்டகம் யமகம் என்னும் மிறைக்கவி வகையும் சொல் லணியும் அமைய,அந்தாதித்தொடையால் நிகழும் பிரபந்தம். இது பாடுதல்பெருஞ்சதுரப்பாடுடையது.எ-டு : திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி.

நிரோட்டகம்

மிறைக்கவிகளுள் ஒன்று. உதடுகளின் தொடர்பில்லா மலேயே உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களாலான செய்யுள். உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் என்னும்எழுத்துக்கள் இதழ்களின் துணைகொண்டே உச்சரிக்கப்படுவன. இவ்வெட்டும்நீங்க லான பிற எழுத்துக்களால் அமையும் செய்யுள் இம்மிறைக்கவியின்பாற்படும்.எ-டு : சீலத்தான் ஞானத்தான் தேற்றத்தான் சென்றகன்றகாலத்தான் ஆராத காதலான் – ஞாலத்தார்இச்சிக்கச் சாலச் செறிந்தடி யேற்கினிதாங்கச்சிக்கச் சாலைக் கனி.“காஞ்சிமா நகரில் திருக்கச்சாலை எனும் திருத்தலத்தில் உள்ள கனிபோன்ற சிவபெருமான் ஒழுக்கத்தாலும் ஞானத் தாலும் மனத் தெளிவாலும்வரையறை இன்றியே பலகால மாக வழிபடுவதாலும், நீங்காத காதலாலும், மிகஉயரிய பெரியோர்களால் நினைக்கப்பட வேண்டியவனாயினும், தாழ்ந்தவனாகியஅடியேனுக்கும் இரங்கி என் மனத்தில் வந்து பொருந்தி இன்பம்தருகின்றான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உதடுகளின் தொடர்புஎவ்வாற்றானும் அமை யாத எழுத்துக்களே வந்துள்ளமையின் இது நிரோட்டகம்ஆயிற்று. ‘எய்தற் கரிய தியைந்தக்கால்’ என்ற குறளும் (498) அது.(தண்டி. 98 உரை)

நிரோட்டிய ஓட்டியம்

ஒரு நேரிசை வெண்பாவில் முதலீரடியும் இதழியைந்தும் குவிந்தும் வரும்எழுத்துக்களான் இயலாத நிரோட்டியமாய் அமைய, கடையிரண்டடியும்அவ்வெழுத்துக்களைப் பெற்று வரும் ஓட்டியமாய் அமைவது.எ-டு : கற்றைச் சடையார் கயிலைக் கிரியெடுத்தான்செற்றைக் கரங்கள் சிரங்களீரைந் – தற்றழியஏஏவும் எவ்வுளுறு ஏமமுறு பூமாதுகோவே முழுதுமுறு கோ.சிவபெருமானது கயிலையை எடுத்த இராவணனுடைய வலியற்ற இருபதுகரங்களும்பத்துத்தலைகளும் அற்று விழுமாறு அம்பு தொடுத்த திருஎவ்வுள் என்றதிருப்பதியில் எழுந்தருளி, பூமாது புணரும் திருமாலே பரம்பொருள் – என்றகருத்தமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளும் உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் -என்னும் எட்டெழுத்துக்களும் இன்றியமைந்த நிரோட்டியமாக,ஈற்றடியிரண்டும் அவ்வெழுத்துக்களைக் கொண்ட ஓட்டியமாக அமைந்துள்ளமைகாணப்படும். (மா. அ. பாடல். 776).

நிரோட்டியம்

‘நிரோட்டகம்’ காண்க. ‘இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.’(மா. அ. 274)

நிறுத்த சொல்

புணர்ச்சிக்குரிய இரண்டு சொற்களில் முதலில் கொள்ளப் படும் சொல்நிறுத்தசொல் எனப்படும் நிலைமொழியாம். இது குறித்து வரு கிளவியாகியவருமொழியுடன் கூடும்போது இயல்பாகவும் திரிபுற்றும் புணரும்.அந்நிறுத்த சொல் பெரும் பான்மையும் பெயராகவோ வினையாகவோ இருக்கும்;சிறுபான்மை இடைச்சொல்லோ உரிச்சொல்லோ ஆதல் கூடும். (தொ. எ. 107நச்.)

நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் அடையொடு தோன்றல்

அடை என்றது, உம்மைத்தொகையினையும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையினையும். (அடையொடு தோன் றியவழி நிலைமொழி அல்லது வருமொழிஉம்மைத்தொகை யாகவும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையாகவும் நிற்கும்என்றவாறு.) அவை அல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும் பண்புத்தொகையும்பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொழித்தொகையும் தனக்குவேறொரு முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் தன்னினம் முடித்தல் என்பத னால் ஒருசொல்எனப்படும். உண்ட சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒரு சொல் எனப்படும்.எ-டு : பதினாயிரத் தொன்று – நிலைமொழி அடைஆயிரத் தொருபஃது – வருமொழி அடைபதினாயிரத் திருபஃது – இருமொழி அடைஇவ்வடைகள் ஒருசொல்லேயாம். (தொ. எ. 111 இள.)

நிறையவை

எல்லாப் பொருளையும் அறிந்து மனம்கொண்டு வாதுபோர் புரிவோர், கருதிவிடுப்போர்தம் எதிர்வருமொழிகளை ஏற்றவாறு ஆன்றோர் உளம் ஏற்கும் வண்ணம்,எடுத்துரைக் கும் வல்லவர்கள் குழுமிய அவை.‘ நல்லவை நிறையவை’ காண்க. (யா. வி. பக். 554)

நிலக்கணம்

பூமிகணம்; மூன்றும் நிரையசையாக வரும் மூவசைச்சீர் செய்யுள்தொடக்கத்தில் முதற்சீராக அமைவது பொருத்த முடையதொரு செய்யுட்கணம். இதுபூகணம் எனப்படும். ‘நிலக்கணம் தானே மலர்த்திரு விளங்கும்’ என்றார்மாமூலர். நீர்க்கணம், இந்திர கணம், சந்திரகணம், நிலக்கணம் என்பனநான்கும் நன்மை செய்யும் பொருந்திய கணங்களாம். (இ. வி. பாட். 40உரை)

நிலத்து நூல்

அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களின் சார்பாக அமைந்தநூல்களில் ஒன்றாகிய இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டு உணரப்படும். (யா. வி. பக். 491)

நிலா ‘இன்’ னொடு வருதல்

நிலா என்னும் சொல் இன்சாரியை பெற்று வரும்.எ-டு : நிலா + காந்தி = நிலாவின் காந்தி (மு. வீ. புண.93)

நிலா என்ற பெயர் புணருமாறு

நிலா என்பது குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர். இது வருமொழிவன்கணம் வரின் எழுத்துப்பேறளபெடையும் வல்லெழுத்தும் பெற்றும், ஏனையகணங்கள் வந்துழி எழுத்துப் பேறளபெடை மாத்திரம் பெற்றும் புணரும்.(ஈண்டு அகரம் எழுத்துப்பேறளபெடையாம்.)எ-டு : நிலாஅக்கதிர், நிலாஅமுற்றம் (தொ. எ. 226 நச்.)நிலா என்ற சொல் அத்துச்சாரியை பெற்று, நிலாஅத்துக் கொண்டான்,நிலாஅத்து ஞான்றான் என வரும். (228 நச்.)செய்யுட்கண் நிலா என்பது நில என்றாகி உகரச்சாரியை பெற்று நிலவுஎன்றாகி வருமொழியொடு புணர்தலுமுண்டு.எ-டு : நிலவுக்கதிர் (234 நச்.)

நிலை (1)

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தம்; ஒற்றொழித்துஉயிராவது உயிர்மெய்யாவது அடி ஒன்றற்கு நாலெழுத்தாய் வருவது.எ-டு : ‘போதி நீழற்சோதி பாதங்காத லானின்றோத னன்றே’ (வீ. சோ. 139 உரை)

நிலைமொழி யீறு, மூவினமெய் வருமொழிமுதற்கண் நிகழுமிடத்துப் புணருமாறு

மெய் அல்லது உயிரீறாக நிற்கும் நிலைமொழி மூவினமெய் வருமிடத்துஏற்கும் முடிவு ஆறு வகைகளாம். அவை இயல்பு, மிகுதல், உறழ்ச்சி,திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என்பன வாம். இக்கருத்துஇலக்கணக்கொத்தினின்றும் கொள்ளப் பட்டது. (இ.கொ. 113, 114)எ-டு : நிலா + முற்றம் = நிலாமுற்றம்; வாழை + பழம் =வாழைப்பழம்; கிளி + குறிது = கிளிகுறிது, கிளிக் குறிது; பொன் + குடம்= பொற்குடம்; மரம் + வேர் = மரவேர்; நாளி + கேரம் = நாரிகேளம் எனமுறையே காண்க. (சுவாமி. எழுத். 28)

நிலைமொழி வருமொழி அடையடுத்தும்புணர்தல்

அடையாவன நிலைமொழி வருமொழிகளை உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையும்பட ஆக்க வல்லன ஆம்.எ-டு : பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று – நிலை மொழி அடை.ஆயிரம் + இருபஃது = ஆயிரத் திருபஃது – வருமொழி அடை. பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது – இருமொழி அடை.வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் பிளந்து முடிய, பண்புத்தொகையும்வினைத்தொகையும் பிளந்து முடியாமை யின், ஒரு சொல்லேயாம்.அன்மொழித்தொகையும் தனக்கு வேறொரு முடிபின்மையின் ஒருசொல்லேயாம்.இத்தொகைச்சொற்களெல்லாம் அடை யாய் வருங்காலத்து ஒரு சொல்லாய்வரும்.உண்ட சாத்தன் வந்தான் எனப் பெயரெச்சம் அடுத்த பெயரும், உண்டுவந்தான் சாத்தன் என வினையெச்சம் அடுத்த முற்றும் ஒருசொல்லேயாம்.இங்ஙனம் தொகைநிலையாகவும் தொகா நிலையாகவும் அடையடுத்த சொற்களும்நிலைமொழி வரு மொழிகளாகப் புணரும்.எ-டு : பன்னிரண்டு + கை = பன்னிருகை – நிலைமொழி அடை யடுத்துஉம்மைத்தொகைபட நின்றது.ஓடிற்று + பரிமா = ஓடிற்றுப் பரிமா – வருமொழி அடை அடுத்துஇருபெயரொட்டுப் பண்புத்தொகை பட நின்றது. (தொ. எ. 110 நச். உரை)

நிலையிற்று என்றலும், நிலையாதுஎன்றலும்

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வருதல் நிலை யிற்றுஎன்றலாம்.எ-டு : சாத்தன் வந்தான், வந்தான் சாத்தன் (நிறுத்த சொல்லைமுடித்தலைக் குறித்து வரும் சொல் ‘குறித்துவரு கிளவி’எனப்படும்.)பதினாயிரத் தொன்று, ஆயிரத் தொருபஃது, பதினாயிரத் தொருபஃது எனநிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் இருமொழியும் அடையடுத்தும்வந்தவாறு.முன்றில், மீகண் – இவை இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ.சோணாடு, பாண்டிநாடு – இவை இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ .இனி, நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபுஇன்றி வருதல் நிலையாது என்றலாம்.எ-டு :‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகநா. 3:2)‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்பரலவல் அடைய இரலை தெறிப்ப (அகநா. 4 : 34)‘தெய்வ மால்வரைத் திருமுனி அருளால்’ (சிலப். 3 : 1)இவ்வடிகளில் முறையே ஓமைச்சினை – மருப்பின் இரலை – தெய்வ வரை – எனஒட்டி ஓமையினது சினை – மருப்பினை யுடைய இரலை – தெய்வத்தன்மையையுடையவரை – எனப் பொருள் தருகின்றவை, முறையே காண்பு – பரல் – மால்என்பவற்றோடு ஒட்டினாற் போல ஒட்டி மிக்கும் திரிந்தும் கெட்டும்நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபின்றி வருதல்காண்க. (இ. வி. எழுத். 53 உரை)