தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நாகபந்தம்

மிறைக்கவியாம் சித்திரகவிகளுள் ஒன்று. தண்டியலங்காரம் (உரை) இரட்டைநாக பந்தத்தையே சுட்டுகிறது. (மற்றொன்று அட்ட நாக பந்தம்) இரண்டுபாம்புகள் தம்முள் இணைவனவாகப் படம்வரைந்து, ஒரு நேரிசை வெண்பாவும் ஓர்இன்னிசை வெண்பாவும் எழுதி, சந்திகளில் நின்ற எழுத்தே மற்றையிடங்களினும் உறுப்பாய் நிற்கப் பாடுவது. மேற்சுற்றுச் சந்திநான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும்நான்கெழுத்தும் என்றிவ்வாறு சித்திரத்தில் அடைப்பது.வருமாறு: நேரிசைவெண்பா.அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்தெருளின் மருவாச்சீர்ச் சீரே – பொருவிலாஒன்றே யுமையா ளுடனே யுறுதிதருகுன்றே தெருள அருள்.(அறத்தின் அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்!ஒப்பற்ற தேவர்கள் அறிவிற்கும் எட்டாத அழகிய புகழ்ச்சி யுடையாய்!ஒப்பற்ற ஏகரூபத்தினையுடையாய்! உமையொடு கூடி எமக்குச் சிவபதம்அளிக்கும் மலைபோல் வாய்! யாங்கள் தெளிவு பெற மெய்யறிவினைஅருள்வாயாக.)இன்னிசைவெண்பா.மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சுபெருகொளியான் றேயபெருஞ் சோதி – திருநிலாவானம் சுருங்க மிகுசுடரே சித்தமயரு மளவை ஒழி.(நின்னை அடைந்தவருள்ளத்தின்கண் நிலைபெற்ற ஒளியாக உள்ளாய்! உண்டநஞ்சினால் விளைந்த பெருகிய நிறம் நிறைந்து பொருந்திய(திருநீலகண்டத்தினையுடைய) பெருஞ் சோதி வடிவனே! அழகிய மதியையுடைய வானம்சிறுகு மாறு பெருகிய ஒளித்திரு மேனியாய்! எனது நெஞ்சம் நின்திருவடிகளை மறக்கும் அளவினைப் போக்கியருள்வாயாக.)முன்னர் ‘இரட்டை நாக பந்தம்’ என்ற தலைப்பினைக் காண்க. (தண்டி.98)

நாட்கவி

நாள்தோறும் அரசனைப் புகழ்ந்து பாடும் பாடல். ‘நாமே நாட்கவிபாடுநாட் போல’ (ஈட்டியெழுபது – 2) (L)

நாட்பொருத்தம்

பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்திற்கு உரிய நாள் தொடங்கிவருகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப் பகுத்துச்சென்மம்-அநுசென்மம்-உபசென்மம்-என்று கூறப்பட்ட முப்பகுதியின்கண்ணும்ஒன்று மூன்று ஐந்து ஏழ் என்னும் எண்ணின் வந்த நாள்கள் பொருத்தம் உடையஅல்ல எனக்கொண்டு, இரண்டு நான்கு ஆறு எட்டு என்னும் எண்ணின் வந்தநாள்களைப் பொருத்தம் உடையன வாக முதற்சீரை எடுத்துச் சொல்லுவர். ‘பிறநூல் முடிந்தது தான் உடன்படுதல்’ என்னும் நியாயநூல் வழக்கால், இறை வன்பெயர் நாளுக்கு மூன்றாம் பரியாயத்தில் (உபசென்மம்) நின்ற மூன்று ஐந்துஏழ் என்பன பொருத்தம் உடையன என்று கோடலும், சென்ம நாள் தொடங்கி முன்கூறியவாறு பொருத்தம் கோடலும் கொள்ளப் படும்.இது நாட்பொருத்தம் கொள்ளும் வகை.மொழி முதலாகும் எழுத்துக்களுக்கு நாட்பொருத்தம் ஆமாறு :அ ஆ இ ஈ – கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ – பூராடம்; ஒ ஓ ஒள – உத்தராடம்; ககா கி கீ – திருவோணம்; கு கூ – திருவாதிரை; கெ கே கை – புனர்பூசம்; கொகோ கௌ – பூசம்; ச சா சி சீ – ரேவதி; சு சூ செ சே சை – அசுவனி; சொ சோசௌ – பரணி; ஞா ஞி ஞெ ஞொ – அவிட்டம்; த தா – சுவாதி; தி தீ து தூ தெ தேதை – விசாகம்; தொ தோ தௌ – சதயம்; ந நா நி நீ நு நூ – அனுடம்; நெ நே நை- கேட்டை; நொ நோ நௌ – பூரட்டாதி; ப பா பி பீ – உத்தரம்; பு பூ -அத்தம்; பெ பே பை பொ போ பௌ – சித்திரை; ம மா மி மீ மு மூ – மகம்; மெமே மை – ஆயில்யம்; மொ மோ மௌ – பூரம்; யா – உத்தரட் டாதி; யூ யோ -மூலம்; வ வா வி வீ – உரோகிணி; வெ வே வை வெள – மிருக சீரிடம்; இவ்வாறுமொழிமுதலாகும் எழுத்துக்குரிய நாட்பொருத்தம் சொல்லப்பட்டுள்ளது.(இ.வி. பாட் 25-36) செய்யுள் முதல்மொழிக்குரிய பொருத்தம் பத்தனுள்எட்டாவது நாட்பொருத்தம் ஆம்.

நானாற்பது

காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பா பொருந்த உரைப்பதாகியபிரபந்த விசேடம். இன்னாமையும் இனிமையும் எனப் பொருள் இரண்டு என்பது.காலம் பற்றி வருவது கார் நாற்பது; இடம்பற்றி வருவது களவழி நாற்பது;பொருள்பற்றி வருவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன. (இ.வி.பாட்.91)

நான்கடி ஒருசொல் மடக்கு (யமகயமகம்)

ஒரு சொல்லே நான்கடியும் முழுதுமாக மடக்கி வருவது. இஃது இயமாவியமகம் எனவும் வழங்கப்பெறும்.எ-டு :உமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரன்.உமா தரன் – உமையைத் தரித்தவன்; ஆதரன் – ஆதரிக்கின்ற வன்; மா தரன் -மானைத் தரித்தவன்; மா தரன் – அழகை யுடையவன், திருவைத் தரித்தவன்; மாதரன் – மாமரத்தடியில் தங்கியிருப்பவன், இடபத்தைச் செலுத்துபவன்; மாதரன் – யானைத்தோலைப் போர்த்தியவன்; ஆதரன் – விருப்ப முடையவன்; மாதுஅரன் – பெருமை மிக்க சிவன்.

நான்கடி மடக்கு

முதலடியே நான்கடிகளாகவும் மடங்கி வரும் மடக்காகிய ஏகபாதம்.‘ஏகபாதம்’ காண்க.இவ்வாறு வஞ்சித்துறையாகிய இப்பாடலில் ஒரு சொல்லே நான்கடியும்வெவ்வேறு பொருள் தருமாறு மடக்கியவாறு காணப்படும். (தண்டி. 96 உரை)

நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான்ஆதல்

இன் ஒன் ஆன் அன் என்ற னகரஈற்றுச் சாரியைகள் நான்கும் நிலைமொழிநான்கனுருபாகிய கு என்பதனொடு புணருங் கால், தாம் இடையே வரத் தம்முடையனகரம் றகரமாகத் திரியும்.எ-டு : விள + இன் + கு = விளவிற்கு – (தொ. எ. 173 நச்.)கோ + ஒன் + கு = கோஒற்கு – (180)இரண்டு + பத்து + கு > இருப் + ஆன் + கு = இருபாற்கு- (199)அது + அன் + கு = அதற்கு – (176)

நான்காரைச் சக்கரம்

மேரு சாபமு மேவுமேமேவு மேயுண வாலமேமேல வாமவ னாயமேமேய னானடி சாருமே.இது, ‘மே’ என்னும் எழுத்து நடுவே நின்று ஆர்மேல் ஒவ்வோரெழுத்துநின்று சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடு வடைந்து முதலடி முற்றி,மறித்தும் நடுவுநின்று அவ்வாரின் வழித்திரும்பி யிடஞ்சென்று அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடி முற்றி, அவ்வாறே மூன்றாமடிநான்காமடிகளும் வலஞ்சென்று முற்றிய வாறு காண்க.

நான்காரைச் சக்கரம்

மிறைக்கவிகளுள் ஒன்று; சக்கரம் போன்ற அமைப்புடையது. இச்சக்கரம்நான்கு ஆர்க்கால்களையுடையது. வட்டை ‘சூட்டு’ எனப்படும்; சக்கரத்தின்இடையே விட்டமாகச் செல்வது ஆர்க்கால். (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள,குடத்தின் வளைவான பாகமாகிய, குறடு நான்காரைச் சக்கரத் தில் இல்லை; ஆறுஎட்டு ஆரைச்சக்கரங்களில் உண்டு.)பாட்டு :‘மேரு சாபமு மேவுமேமேவு மேயுண வாலமேமேல வாமவ னாயமேமேய னானடி சாருமே.’மேருவை வில்லாகக் கொள்பவனும், விடத்தை உணவாக விரும்புபவனும்,உயர்ந்த உருவினவாகிய கூளிக் கூட்டத்தை மேவியவனும் ஆகிய அத்தகையானுடையதிருவடிகளைச் சார்வீராக – என்பது இதன்பொருள்.இது, ‘மே’ எனும் எழுத்து நடுவே நின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்துநின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவிலிருந்து கீழ்ஆரின் வழியே இறங்கி இடமாகச் சென்று அடுத்த ஆரின் வழியாக நடுவையடைந்துமுதலடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து அந்த ஆரின் வழியாகவேஇடமாகத் திரும்பி வலமாகச் சூட்டின் வழியே அடுத்த ஆரில் இறங்கவேஇரண்டாம் அடி முடியவும்; மீண்டும் நடுவிலிருநது ஆர் வழியே மேலேறிச்சூட்டில் வலமாகச் சென்று அடுத்த ஆர்ப்பகுதியில் இடமாகச் செல்ல,மூன்றாமடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து ஆரின் வழியே வலமாகச்சென்று சூட்டின்கீழேயிறங்கி அடுத்த ஆர்ப்பகுதியில் மேலேறவே,நான்காமடியும் முடியவும் இப்பாடல் நிகழுமாறு. (தண்டி. 96 உரை)

நான்கு பொருள் சிலேடை இணைமடக்கு

முதலீரடிகள் நான்கு பொருள்களுக்குச் சிலேடையாகவும், பின் இரண்டுஅடிகள் மடக்காகவும் அமையும் மடக்கு வகை.எ-டு : கொம்பரஞ்சொன் மின்னார் குயம்பொன்னி யன்பருளமம்பரந்தோ யுந்தென் னரங்கமே – தும்பியுரைத்தா னுரைத்தா னுயர்திரை நீர் தட்டீனரைத்தா னரைத்தா னகம்.‘தும்பி உரைத்தான் நுரை தான் உயர் திரை நீர் தட்டு ஈனரைத் தான்அரைத்தான் அகம்’- கசேந்திரனால் அழைக் கப்பட்டவனும், நுரையை உயர்த்தும்அலைகளை உடைய கடலை அணைகட்டிக் கடந்து நீசராம் அரக்கரை அழித்த வனும்ஆகிய திருமாலது இருப்பிடம் அழகிய அரங்க நகராகும்;கொம்பர் அம்பரம் தோயும் அரங்கம் – கொடிகள் வான் அளாவியிருக்கும்அரங்கம்.மின்னார் குயம் அம்பரம் தோயும் அரங்கம்-மகளிர் தனம் மேலாடையைநீங்காதிருக்கும் அரங்கம்.பொன்னி அம்பரம் தோயும் அரங்கம் – காவிரி கடலைப் பொருந்தக்கிழக்குத் திக்கில் ஓடும் அரங்கம்.அன்பர் உளம் அம்பரம் தோயும் அரங்கம்-அடியார்உள்ளம் மேம்பட்ட பரம்ஆகிய இறைவனைத் தியானம் செய்யும் அரங்கம்.இவ்வாறு ‘அம்பரம் தோயும்’ என்ற சொற்றொடரைச் சிலேடைப் பொருளால்கொம்பர், மகளிர் தனம், காவிரி, அடியவர் உள்ளம் என்ற நான்கும் கொண்டுமுடிந்தமை நாற்பொருள் சிலேடை. இச்சிலேடையை அடுத்து, ஈற்றடிகளில்மடக்கு முதற் சீர்களில் இணைய அமைந்ததால், இப்பாடல் நாற்பொருள் சிலேடைஇணைமடக்கு ஆயிற்று. (மா. அ. பாடல் 757)

நான்மணிக்கோவை

பத்து வெண்பா, பத்து அகவல், பத்துக்கலிப்பா, பத்து வஞ்சிப்பாஇந்நாற்பதனையும் வெண்பா அகவல் கலி வஞ்சி என்ற முறையால் அந்தாதியாகத்தொடுத்து மண்டலித்து வரப்பாடும் பிரபந்தம். (சாமி. 169)

நான்மணிமாலை

வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆசிரிய விருத்தமும் அகவலும் எனஇந் நால்வகை யாப்புச் செய்யுளும் அந்தாதி யால் நாற்பது வருமாறு,முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்தம். இந்நால்வகையுள்விருத்தம் அகவல் என்பன இடம் மாறியும் வரலாம். (இ.வி.பாட். 61,மு.வீ.யா.ஒ. 91, பி.தீ. 11)

நாம மாலை

அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மகனைப்புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 106)

நாற்கவி

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி.(திவா. பக். 286) (வெண்பாப். 24)ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள். (வெண்பாப். 25-28)

நாற்கவி இயல்பு

பட்டினத்தடிகள் கழுமரம் எரியப்பாடியது போன்ற கவியினம் ஆசுகவியாம்.பாண்டியன் குலசேகரன் பாடிய அம்பிகைமாலை போல்வன மதுரகவியாம். கொங்குமன்னன் கொடுத்த கொடுவாள் அருணையூர்ப் புரவலனது அரண்மனையைச் சேருமாறுபாடிய நூல் முதலாயின சித்திரகவியாம். ஓராயிரம் முதலாக நூறாயிரம் வரைசெய்யுள் தொகைபெறும் வகையால் பலவகைப் பொருள் களையும் பாடும்பனுவல்எல்லாம் வித்தார கவியாம்; அகவல் பஃறொடைவெண்பா இவற்றால் 32, 64எனப்படும் கலை களை வகுத்துரைக்கும் விரிவான செய்திகளைக் கொண்ட பலபாடல்கள் கொண்டவையும் வித்தாரகவி ஆகும் தன்மைய. (அறுவகை. நாற்கவிஇயல்பு 1-4)

நாற்கவிராச நம்பி

அகப்பொருள் விளக்கம் இயற்றிய சைன ஆசிரியர். அவரது பெயரொடு நூல்நம்பி அகப்பொருள் என்று வழங்கும்.

நாற்பயன்

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் என்பன. (யா. வி. பக். 426; நன்;10)

நாலசைச்சீர் முழுதொன்று இணையெதுகைஅணி

இணையெதுகை செவிக்கு இன்பம் பயக்கும் ஓசைத்தாய் இருத்தலின், அதனை‘இணைஎதுகையணி’ என்னும் பெயரிய ஓரலங்காரமாகக் குறிப்பிடும்மாறனலங்காரத்தில், ஓரடியில் நாலசைச்சீர் நான்கும் முழுதும்பெரும்பாலும் எழுத்து ஒன்றிவரும் இணை எதுகை அணிவகை உரையில் கூறப்பட்டுள்ளது.எ-டு : ‘குயில்போல்மொழியும் அயில்போல்விழியும்கொடிபோலிடையும் பிடிபோனடையும்’என்ற அடியில் இணையெதுகைஅணி நாலசைச்சீர் நான்கன் கண்ணும் வந்துசெவிக்கு இன்பம் செய்வது இவ்வணிவகை யாகக் காட்டப்பட்டுள்ளது. (மா. அ.180)

நாலடி நாற்பது

இஃது அவிநயர் யாப்பிற்கு அங்கமாய் அமைந்த நூலாகும். இதன்நூற்பாக்களில் நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறையும்மேற்கோள்களாகக் கிடைத்துள் ளன. அதனால், இவ்விருவகை யாப்பாலும் இந்நூல்அமைந்தமை தெரிகிறது. இது நாற்பது நூற்பாக்களைக் கொண்டிருந்தது போலும்.கட்டளைக் கலித்துறை இந் நூலைச் சேர்ந்தது அன்று என்பாரும் உளர்.இந்நூலின் மேற்கோள் நூற்பாக்கள் அசைக்கு உறுப்பாவன பற்றியும்அடிமயக்கம் பற்றியும் குறிப்பிடும். (யா. வி. பக்.30,31, 129)

நாலாயிர திவ்வியப் பிரபந்த யாப்பு

நேரிசைவெண்பா, நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா,கலிவெண்பா, தரவு கொச்சகம், ஆசிரியத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர்ஆசிரிய விருத்தங்கள், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை,கலிவிருத்தம்; வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம், இரண்டாம் நான்காம்அடிகள் ஏனைய முதலாம் மூன்றாம் அடிகளைவிடச் சீர்கள் குறைந்து வரும்சவலை விருத்தம் – ஆகிய பாவும் பாவினமும் ஆம். (இலக்கணத். முன்னுரைபக். 77)

நாலெழுத்தால் வந்த மடக்கு

எ-டு : யானக வென்னே யினையனா வாக்கினகானக யானை யனையானைக்-கோனவனைக்கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக்கன்னிக் கனியனைய வாய்.‘என் ஏய் யான் நக, இனையனா ஆக்கின, கானக யானை அனையானை கோன் அவனைக்கொல் நயனவேல் நக்க கோகனகக் கைக் கன்னிக் கனி அனைய வாய் கன்னி’ என்றுபொருள் செய்யப்படும்.“எத்துணையும் சிறிய யானே எள்ளி நகைக்குமாறு, இவ்வாறு தன்னுணர்வுஅற்றுப் போம்படி ஆக்கிய, காட்டானையை ஒத்த என் தலைவனைத் துன்புறுத்தியகொல்லும் வேல்களை ஒத்த கண்களையும், மலர்ந்த செந்தாமரையை ஒத்தகைகளையும் உடைய இப்பெண்ணின் கொவ்வைக்கனி அனைய வாய் புதுமை அழகுஉடைத்தா யுள்ளது!” எனப் பாங்கன் தலைவியைக் கண்டு வியந்து கூறியஇப்பாடற்கண், க ய வ ன என்ற நான்கு மெய் வருக்கங்களே பெயர்த்து மடக்கிவந்துள்ளன. (தண்டி. 97)

நால்வகை நூல்கள்

அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும்,இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையேபயப்பதா கிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லையும் பொருளையும்உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் என்பன. (பா. வி. பக். 62,63)

நால்வகைத் தெரிநிலைப்பெயரெச்சத்தின் முன்னும் வலி இயல்பாதல்

உண்ட உண்ணாநின்ற உண்ணாத – எனவும், கடைக்கணித்த சித்திரித்த வெளுத்தகறுவிய அமரிய – எனவும், திண்ணென்ற பொன்போன்ற – எனவும், சான்ற உற்ற -எனவும்,வினை பெயர் இடை உரியடியாகப் பிறந்த நால்வகைத் தெரிநிலைப்பெயரெச்சத்தையும் நிலைமொழியாக நிறுத்தி வருமொழியாகக் குதிரை -செந்நாய் – தகர் – பன்றி – என்னும் வன்கணம் முதலாகிய சொற்களைப்புணர்ப்பவே இயல்பாக முடிந்தவாறு. (நன். 167 சங்கர.)

நாழிகை வெண்பா

தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் நாழிகை அளவில் தோன்றிநடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாக் கூறும் பிரபந்த வகை. (இ. வி.பாட்.90)

நாழிகைக் கவி

அரசரும் கடவுளரும் நாழிகைதோறும் செய்யும் செயல்களை முப்பது நேரிசைவெண்பாவாற் பாடும் பிரபந்தவகை. (பன். பாட். 292, 293 )

நாழிமுன் உரி புணருமாறு

நாழி என்னும் முகத்தல் அளவுப்பெயர் முன்னர், உரி என்னும் முகத்தலளவுப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து, அந் நாழி என்னும் சொல்லின்இறுதியில் நின்ற இகரம் தானேறிய மெய்யொடும் கெடும். அவ்விடத்து டகரம்ஒற்றாய் வரும். (இரண்டு உரி கொண்டது ஒரு நாழி. நாழியும் உரியும் எனஉம்மைத்தொகையாய் இஃது அல்வழிப் புணர்ச்சியாம்).வருமாறு : நாழி + உரி > நா + உரி > நா + ட் + உரி = நாடுரி. (தொ. எ. 240 நச், நன். 174)

நாவல் என்னும் குறிப்பு

நாவல் என்பது நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொருசொல்.‘காவல் உழவர் கடுங்களத்துப் போரேறிநாவலோஒஒ என்றிசைக்கும் நாளோதை’ (முத்தொள்.)என்பதனால் இஃது அறியலாகும். (நன். 101 சங்கர.)