தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தகர வருக்க மடக்கு

பாடல் முழுதும் தகர ஒற்றும் தகரத்தை ஊர்ந்த உயிருமே வருவது.எ-டு : ‘தத்தித்தா தூதுதி; தாதூதித் தத்துதி;துத்தித் துதைதி; துதைத்ததா தூதுதி;தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்ததெத்தாதோ தித்தித்த தாது’பாய்ந்து மகரந்தத்தை ஊதும் வண்டினை நோக்கி, “தத்தித் தாது ஊதுதி;தாது ஊதித் தத்துதி; துத்தித் துதைதி; துதைத்த தாது ஊதுதி; தித்தித்ததாது எது? எத்தாது தித்தித்த தாது? தித்தித்தது எத்தாது?” என,மகரந்தங்களுள் சுவையுடைய மகரந்தம் யாது என மும்முறை வினவியவாறு.தகர ஒற்றும் தகர உயிர்மெய்வருக்கமுமே வந்தமையால் இப்பாடல் தகரவருக்க மடக்காம். (தண்டி. 97)

தகரஉகரம் நிகழ்காலம் காட்டுதல்

‘யாமவண் நின்றும் வருதும்’ (சிறுபாண். 143) எனத் தும் ஈற்றுத்தன்மைப் பன்மை வினைமுற்றுச் சிறுபான்மை நிகழ்காலம் காட்டுதலும்,தோற்றுது, வருது, போகுது எனத் துவ்வீற்று ஒன்றன்படர்க்கை வினைநிகழ்காலம் காட்டுதலும் கொள்க. (நன். 145 இராமா.)

தக்காணியம்

இஃது இடைச்சொல் உரிச்சொற்களைத் தொல்காப்பியம் – அவிநயம் – நல்லாறன்மொழிவரி – என்ற நூல்கள் போல விளக்கிக் கூறிய பண்டைய இயற்றமிழ் நூல்.(யா. வி.பக். 579)

தசகம்

பத்துச் செய்யுட்களைக் கொண்ட பிரபந்தம்.

தசாங்கத்தயல்

அரச உறுப்புப் பத்தினை, ஆசிரியப்பா பதினான்கால் பாடும் பிரபந்தம்.(பி. தீ. 24)அரசனுடைய தசாங்கத்தை ஆசிரிய விருத்தத்தால் பத்துச் செய்யுள்கூறுவது. (மு. வீ. யா. ஒ. 141)

தசாங்கத்திற்குச் சிறப்புவிதி

பாட்டுடைத் தலைவனுக்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒருசீராலேமுடிவுபெறப் பாடுவது இலக்கணமாம். பிரித்து வேறு சொல்முடிபு கொடுத்துக்கூறல் குற்றமாம். பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண்தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது.(கந்தர் கலிவெண்பாவுள் கண்ணி 64 – 74 காண்க)எ-டு : ‘ஐந்தொழிலும் ஓவா(து) அளித்துயர்ந்த வான்கொடியும்வந்த நவநாத மணிமுரசும்’ (70) (இ. வி. பாட். 43)

தசாங்கப்பத்து

நேரிசை வெண்பாவால் சிறப்புத் தோன்ற அரசன் படைத்த மலை நதி நாடு ஊர்முதலிய தசாங்கத்தினைப் பத்துக் கவியால் கூறும் பிரபந்தம். (இ. வி.பாட். 80)

தசாங்கம்

வேந்தனுடைய மலை, நதி, நாடு, ஊர், புனையும் தார் (-மார்பிலணியும்மாலை), குதிரை, மதவேழம், கொடி, முரசு, ஆணை (-ஆக்கினை) ஆகியஇவைபத்தும். இவற்றைப்பாடும் பிரபந்தமும் இப்பெயர்த்து. (இ. வி. பாட்.22)

தண்டகமாலை

முந்நூறு வெண்பாக்களால் இயன்ற பிரபந்த வகை. இது வெண்புகழ்ச்சி மாலைஎனவும்படும். (தொ. வி. 283 உரை)

தண்டிசைக் கவிதை

வேந்தனுடைய படையினைப் புகழ்ந்து இசைக்கும் பாடல். தண்டு – படை; இசை- புகழ்ச்சி. பிற்காலச் செய்யுள் வகையுள் இதுவும் ஒன்று. (இ. வி.பாட். பிற். 7)

தண்டியலங்காரம்

தமிழில் அணியிலக்கணத்தை அழகுற எடுத்தியம்பும் இலக்கணம். வடமொழியில்தண்டி என்ற பெருங்கவிஞர் காவியாதரிசம் என்ற அணியிலக்கணம் செய்தார்.அதனை வீரசோழியம் தமிழில் மொழிபெயர்த்துப் பாடுகிறது. காவியாதரிசத்தோடுஒருபுடை ஒத்தும் ஒவ்வாதும் தமிழில் தண்டியலங்காரம் பாடப்பெற்றது.வடமொழித் தண்டியின் இலக்கணச் செய்தியைப் பெரும்பாலும் தழுவ இயற்றப்பட்டமையால், இவ்வழிநூலும் முதல்நூல் ஆசிரியர் பெய ராலே தமிழில்தண்டியலங்காரம் எனப்பட்டது; அன்றி, இத்தமிழ்நூல் ஆசிரியர்தம் பெயர்தண்டி என்றும் இருத்தல் கூடும். இத்தண்டியாசிரியர் கம்பர் மகனாம்அம்பிகாபதியின் புதல்வர் என்ற வரலாறும் உண்டு.இவ்வணி நூலகத்தே பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்றமூன்று இயல்களும், அவற்றுள் முறையே 25, 64, 35 நூற்பாக்களும் உள. இவைநீங்கலாகத் தற்சிறப்புப்பாயிரமும் நாமகள் வாழ்த்துப் பாடலும் எனச்செய்யுள் இரண்டாம்.நூலாசிரியரே எடுத்துக்காட்டுப் பாடல்களையும் வரைந்தார். இவற்றுள்வெண்பாப் பாடலே பெரும்பான்மை.இரண்டாங் குலோத்துங்கன் அவைக்களத்தே இந்நூல் அரங்கேறியது என்ப.இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனலாம். மிக்க வழக்குப் பயிற்சியுடையஇவ்வணியிலக்கணம் உவமை முதல் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து அணிகளைமொழிகிறது. சொல்லணியுள் சித்திரகவிகள் பன்னிரண்டு சொல்லப்பெறுவன;மேலும் எட்டு உரையுள் கொள்ளப் பட்டன. பொதுவணியியல் பத்துக் குணங்களைப்பாரிக் கிறது. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணவிளக்கம் தனதுஅணியியலுள் தண்டியலங்காரத்தையே தழுவி யுரைத்துள்ளமை இவ்வணி நூலின்பெருமையைப் பறை சாற்றுவது.

தண்டியலங்காரம் குறிப்பிடும்சொல்லணிகள்

கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம்,நாகபந்தம், வினா உத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம்,சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகம் என்ற பன்னிரண்டும்.பலவகை மடக்கும், உரையில் கொள்ளப்பட்ட நீரோட்டகம், ஒற்றுப் பெயர்த்தல்,மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம், திரிபாதி,திரிபங்கி, பிறிதுபடுபாட்டு என்ற எட்டும் தண்டி யலங்காரம்குறிப்பிடுபவை. தண்டி. 92-98.

தத்தா எனும் சந்தம்

1. முதலில் குறில், அடுத்து வல்லொற்று, அடுத்து வல் லினத்துஉயிர்மெய் நெடில் அமைவது. எ-டு : அத்தா.2. முதலில் குறிலெழுத்து எழுத்து வல்லொற்று அடுத்து வல்லினஉயிர்மெய் நெடில், ஈற்றில் மெல்லின ஒற்றோ இடையின ஒற்றோ தொடர அமைவதுஎ-டு : தொட்டான், கற்றார்.3. முதலில் குறில், அடுத்து இடையின ஒற்று வல்லின ஒற்றுக்கள்,அடுத்து வல்லின உயிர்மெய் நெடில் தொடர அமைவது. எ-டு : பொய்க்கோ.4. முதலில் ஒரு குறில், அடுத்து முறையே இடையின ஒற்று வல்லின ஒற்று,வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில் இடையின ஒற்றோ மெல்லின ஒற்றோஅமைவது. எ-டு : நெய்க்கோல் – மெய்க்கோன்.இவை நான்கும் ‘தத்தாச்’ சந்த வகைகளாம். (வண்ணத். 13-17)

தத்திதம்

பெயர்ப்பகுபதத்தின் விகுதி தத்திதம் எனப்படும்.எ-டு : தச்சன் (அன்), வண்ணாத்தி (இ), பொன்னாள் (ஆள்)இவை போன்ற பெயர்ச்சொற்களிலுள்ள அன் இ ஆள் போன்ற விகுதிகள் தத்திதன்எனப்படும். (சூ. வி. பக். 55)

தத்திதம் பற்றிய திரிபுகள்

மொழி முதல் இகர ஏகாரங்கள் ஐகாரமாகும்; மொழிமுதல் உகர ஊகாரஓகாரங்கள் ஒளகாரமாகும். மொழிமுதல் அகரம் ஆகார மாகும்.வருமாறு : அ) கிரியிலுள்ளன கைரிகம்; வேரம் விளைப்பதுவைரம்ஆ) குருகுலத்தார் கௌரவர்; சூரன்மகன் – சௌரி; சோமன்மகன்சௌமியன்இ) சனகன் மகள் சானகி(அ) வேரம் – கோபம்; வைரம் – பகைமை) (மு. வீ. மொழி. 43 -45)

தத்திதாந்த முடிவுகள் சில

அருகன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக்கருதியவிடத்து, அகரத்தை ஆகாரமாக்கி ஆருகதன் என முடிக்க.‘தசரதன் மகன் தாசரதி’ என்புழி, நிலைமொழி (தசரதன்) ஈற்றில் நின்ற‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, இகரச் சுட்டை மிகுத்துத் தகரஒற்றிலே உயிரை ஏற்றி, முதல் நின்ற தகரஅகரத்தை ஆகார மாக்கித் தாசரதி எனமுடிக்க.சிவன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக்கருதியபொழுது, இகரத்தை ஐகாரம் ஆக்கிச் சைவன் என முடிக்க.புத்தன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன் எனக்கருதியபொழுது, உகரத்தை ஒளகாரமாக்கிப் பௌத்தன் என முடிக்க.இருடிகள் என நிறுத்தி, இவர்களால் செய்யப்பட்டது யாது எனக்கருதியபொழுது, ‘இரு’ என்பதனை ‘ஆர்’ ஆக்கி, இகரச் சுட்டை மிகுத்துரகரஒற்றிலே உயிரை ஏற்றி, ‘கடைக்குறைத் தல்’ என்பதனாலும் ‘ஒரோர்மறுவில் பதம் கெட்டு வரும்’ என்பதனாலும் ‘இகள்’ என்னும் பதத்தைக்கெடுத்து ‘அம்’ என்னும் பதத்தை மிகுத்து ஆரிடம் என முடிக்க.இருசொல்லிடத்து, நரன் என நிறுத்தி, இந்திரன் என வருவித்து,நிலைமொழி யிறுதியில் நின்ற ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஏஆம்இகரத்திற்கு’ என்பதனான், இகரத்தை ஏகாரமாக்கி ரகர ஒற்றின்மேல் உயிரைஏற்றி நரேந்திரன் என முடிக்க.குலம் என நிறுத்தி, உத்துங்கன் என வருவித்து, நிலைமொழி ஈற்றில்நின்ற அம் என்னும் பதத்தைக் கெடுத்து, உகரத்தை ஓகாரமாக்கி,லகரஒற்றின்மேல் உயிரை ஏற்றிக் குலோத் துங்கன் என முடிக்க.கூப + உதகம் = கூபோதகம் என்பதும் அது. பிறவும் அன்ன.வேரம் என நிறுத்தி, இதன் முதிர்ச்சி யாது என்று கருதிய விடத்து,ஏகாரத்தை ஐகாரமாக்கி வைரம் என முடிக்க.கேவலம் ‘கைவலம்’ (கைவல்யம்) என்றாயிற்று. வேதிகன் ‘வைதிகன்’என்பதும் அது.கோசலை (கோசலம் என்பது பொருந்தும்) என நிறுத்தி, இதனுள் பிறந்தாள்யாவள் எனக் கருதியவிடத்து, ஓகாரத்தை ஒளகாரமாக்கிக் கௌசலை எனமுடிக்க.சோமபுத்திரன் ‘சௌமியன்’ என முடிக்க. சௌமியனாவான் புதன். பிறவும்அன்ன. (நேமி. எழுத். 10, 11 உரை)

தத்துவ தரிசனம்

பண்டைய தருக்க நூல்களுள் ஒன்று; செய்யுள் வடிவில் அமைந்தது. (யா.வி. பக். 583)

தந்த எனும் சந்தம்

1. குறில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில் என வருவது எ-டு :மஞ்சு.2. குறில், மெல்லொற்று வல்லின உயிர்மெய்க்குறில் மெல்ஒற்றோஇடையொற்றோ ஒன்று என வருவது.எ-டு : கந்தன், கொண்கர்.3. குறில், இடையொற்று, மெல்லொற்று, வல்லினத்துயிர் மெய்க் குறில்,இறுதியில் மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருவது. எ-டு : மொய்ம்பு;மொய்ம்பன்; மொய்ம்பர்.இவை நான்கும் ‘தந்த’ச் சந்த வகைகளாம். (வண்ணத். 28-32).

தந்தா எனும் சந்தம்

1. குறில், மெல்லொற்று, வல்லினத்து உயிர்மெய் நெடில் என வருவது.எ-டு : அந்தோ.2. குறில், மெல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில்மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருதல். எ-டு : வந்தேன், தங்கார்.3. குறில், இடையொற்று, மெல்ஒற்று, வல்லின உயிர்மெய் நெடில் எனவருவது எ-டு : மொய்ம்பா.4. குறில் இடையொற்று மெல்லொற்று வல்லின உயிர்மெய் நெடில், ஈற்றில்மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என வருவது. எ-டு : மொய்ம்போன்,மொய்ம்போர்.இவை நான்கும் தந்தாச் சந்த வகைகளாம். (வண்ணத் 33-37)

தந்திரவாக்கியம்

நகைச்சுவை தோற்றும் ஒரு பழைய தமிழ் நூல்.(தொ. பொ. 485 பேரா.)

தன என்னும் சந்தம்

1. இரு குறில் இணைந்து வருவது. எ-டு : குரு.2. குறில் இரண்டு, இறுதியில் மெல்லொற்றோ இடை ஒற்றோ இவை கூடிவருவது. எ-டு: கதன், தவர்.இவை யிரண்டும் தனச் சந்தத்தின் வகைகளாம். (வண்ணத். 48 – 50)

தனிக்குறில் அடுத்த உகரஈற்றுச்சொற்கள்

நடு – படு – அறு – பொறு – என்பன போலத் தனிக்குறிலை அடுத்து வரும்வல்லெழுத்துக்களை ஏறி வந்த உகரங்கள் குறுகாதன. இவையும் தொடக்கத்தில்மெய்யீற்றுச் சொற்களே. இவை தனிக் குற்றெழுத்துக்களைச் சார்ந்தவைஆதலின் இவற்றை ஒலிக்க வந்த உயிரின் ஒலி நன்கு கேட்கிறது. ஏனை இடத்துவல்லொற்றுக்கள் நெட்டெழுத்தினையும் இரண்டு மூன்று எழுத்துக்களையும்அடுத்து வருதலின், அவ்வீற்று மெய்களை ஒலிக்க வரும் உகர உயிரின்ஒலிக்கும் முயற்சி குறைதலின், அது நன்கு கேட்கப்படாமையால், குற்றியலுகரம் ஆகும். நடு – படு – முதலிய சொற்களில் உகர உயி ரொலி நன்குகேட்கப்படுதலின், அவ்வுகரம் முற்றியலுகரம் ஆகும். (எ. ஆ. பக்.162)

தனிக்குறில் முன் ஒற்று இரட்டாதன

அவ் இவ் உவ் என்ற வகரஈற்று மூன்று அஃறிணைப் பன்மைச்சுட்டுப்பெயர்க்கு முன்னர் அற்றுச்சாரியை வந்தாலும், அ இ உ என்னும்முச்சுட்டின் முன்னும் எகரவினா முன்னும் இச் சாரியை வந்து வகரமெய்பெற்றாலும் தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர இரட்டாவாறு கொள்க.(இச்சூத்திரத்து ‘வழி’ என்ற மிகையால் உரையாசிரியர் கொண்டது இது.)(நன். 249 மயிலை.)

தனிநிலை

தனிநிலையாவது ஆய்தம். உயிர்களொடும் மெய்களொடும் கூடியும் கூடாதும்அலி போலத் தனித்து நிற்றலின், ஆய்தம் ‘தனிநிலை’ எனப்படும். ஆய்தம்உயிர்போல‘அற்றா லளவறிந் துண்க அஃதுடம்புபெற்றா னெடிதுய்க்கு மாறு’ (குறள். 943)என அலகு பெற்றும்,‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’ (236)என அலகு பெறாதும்,ஒருபுடை ஒத்து உயிரும் மெய்யுமாகிய அவற்றினிடையே சார்ந்து வருதலான்சார்பெழுத்தாயிற்று. (உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப்பிறத்தலானும், ஏனையவை தத்தம் முதலெழுத் தின் திரிபுவிகாரத்தால்பிறத்தலானும் சார்பெழுத்தாயின). (நன். 60 சங்கர.)

தனிநிலை அளபெடை வேண்டாவாதல்

ஆசிரியர் தனிநிலை அளபெடை வேண்டிற்றிலர், அது நெட் டெழுத்துஓரெழுத்தொரு மொழியாய், முதனிலை அளபெடையாகவோ, இறுதிநிலை அளபெடையாகவோஅடங்கும் ஆதலின். (இ. வி. எழுத். 192 உரை)

தனிநிலைச் செய்யுள்வகைப் பெயர்

வளமடல், உலாமடல், உலா, அநுராகமாலை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சிமாலை, நாமமாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை வரலாற்று வஞ்சி,செருக்களவஞ்சி, பல பொருள் வஞ்சி, நிலைபெறு குழமகன், பாதாதி கேசம்,கேசாதிபாதம், உவாத்தொழில், (கூத்தர் முதலியோர் தம்மைஆற்றுப்படுத்தும்) ஆற்றுப்படை, தூது, மஞ்சரி- என்னும் பெயர்வேற்றுமையால் தனிநிலைச் செய்யுள் இருபத் திரண்டாம். (இ. வி. பாட்.95)

தனிமொழி ஆய்தம்

ஆய்தம் மொழிக்கு முதலிலோ இறுதியிலோ வாராது. மொழிக்கு இடையில்குற்றெழுத்தை அடுத்து உயிரொடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலிடத்ததாய்வரும்.எ-டு : எஃகு, கஃசு, அஃகாமை, எஃகம் (தொ. எ. 38 நச்.)எழுத்துச்சாரியை இணையுமிடத்தும் அஃகான் – மஃகான் என எழுத்திற்கும்சாரியைக்கும் இடையே ஆய்தம் வருத லுண்டு. (136 நச்.)

தனிமொழிக் குற்றியலிகரம்

கேண்மியா, சென்மியா முதலாகத் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனைஎதிர்முகமாக்கும் கேள், சொல் முதலிய சொற்களை அடுத்து வரும் மியா என்றஇடைச்சொல்லி லுள்ள மி என்ற எழுத்தில் மகரத்தை ஊர்ந்து வரும் இகரம்.இது குற்றியலிகரமாய் ஒரு சொல்லினுள்ளேயே நிகழ்வது.மியா என்ற சொல் இடம்; மகரம் பற்றுக்கோடு; ‘யா’ என்ற சினையும் மகரம்போல இகரம் குறுகுதற்கு ஒரு சார்பு. (தொ. எ. 34 நச்.)

தனிமொழிக் குற்றியலுகரம்

தனிநெட்டெழுத்தை அடுத்தும் தொடர்மொழியின் ஈற்றிலும் குற்றியலுகரம்வல்லினமெய் ஆறனையும் ஊர்ந்து வரும்.எ-டு : நாகு, காசு, காடு, போது, மார்பு, காற்று (நாகு, பலாசு,வெய்து, கஃசு, பட்டு, கன்று)நெட்டெழுத்தும் தொடர்மொழியும் ஆகிய இவற்றது இறுதி இடம்;வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடனும் பற்றுக்கோடும் கூறவே,குற்றியலுகரம் மொழிக்கு ஈறாதலும் பெறப்படும்.நுந்தை என்ற முறைப்பெயரின் முதலெழுத்தாகும் நு என்பதும் இதழைமுற்றக் குவியாது ஒலிக்குங்கால் குற்றிய லுகரமாம். நகரத்தை ஊர்ந்துவரும் இஃதொன்றே மொழி முதற் குற்றியலுகரமாம். இம்முறைப்பெயர் இடம்;நகரம் பற்றுக்கோடு.இங்கு (பெருங்காயம்), ஏது, பரசு – என்ற வடசொற்கள் குற்றிய லுகரஈற்றுச் சொற்கள் ஆகா. இடனும் பற்றுக்கோடும் உளவேனும் இவற்றின் ஈற்றுஉகரம் குற்றெழுத்துப் போலவே ஒலிக்கப்படும். இது முற்றியலுகரமாம். (தொ.எ. 36. 67 நச். உரை)

தனியன்

(1) ஒரு நூலினை அல்லது அதனை ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும்தனிச்செய்யுள் (திவ்.) (2) குருவைத் தோத்திரம் செய்யும் ஒற்றைச்சுலோகம். (L)

தன் உரு இரட்டும் ஈறுகள்

தனிக்குறிலை அடுத்து வரும் மெய் வருமொழி உயிர்க்கணம் வரின் தன் உருஇரட்டும் எனவே, தனிக்குறிலை அடுத்து வரும் ண் ம் ய் ல் வ் ள் ன்என்பனவே தம்முரு இரட்டு வனவாம்.ஞகார ஈற்றுச்சொல் உரிஞ் – ஒன்றே. நகார ஈற்றுச்சொல் பொருந், வெரிந்என்பன இரண்டே . ஙகாரம் மொழிக்கு ஈறாகாது. வல்லெழுத்து ஆறும் மொழிக்குஈறாகா. ர் ழ் இரண்டும் தனிக்குறிலை அடுத்து வாரா. இங்ஙனம் விலக்கப்பட்ட 11 மெய்யும் நீங்கலான ஏனைய ஏழு மெய்களுமே தனிக்குறில்முன் ஒற்றுஈறாய் வரும் தகுதிய ஆதலின், தன் உரு இரட்டல் இவற்றிற்கே உண்டு.எ-டு: மண் + உயர்ந்தது = மண்ணுயர்ந்தது; மண் + உயர்ச்சி =மண்ணுயர்ச்சி; கம் + அரிது = கம்மரிது; கம் + அருமை = கம்மருமை; மெய்+ இனிது = மெய்யினிது; மெய் + இனிமை = மெய்யினிமை; பல் + அழகிது =பல்லழகிது; பல் + அழகு = பல்லழகு; தெவ் + அரிது = தெவ்வரிது; தெவ் +அருமை = தெவ்வருமை; கள் + இனிது = கள்ளினிது; கள் + இனிமை =கள்ளினிமை; பொன் + உயர்ந்தது = பொன்னுயர்ந்தது; பொன் + உயர்ச்சி =பொன்னுயர்ச்சிஇவை முறையே அல்வழிப்புணர்ச்சியும் வேற்றுமைப் புணர்ச்சியுமாம்.(தொ. எ. 160 நச்.)

தன், என், நின் என்பவற்றின் முன்வன்கணம்

தன், என், நின் என்பவை நிலைமொழியாக நிற்ப, வல் லெழுத்து முதலியவருமொழி நிகழுமாயின், தன் என் என்பவற்று ஈற்று னகரம் வல்லினத்தோடுஉறழும்; நின் ஈறு பெரும்பான்மையும் இயல்பாகவே புணரும். இது வேற்றுமைப்புணர்ச்சி.எ-டு : தன் + பகை = தன்பகை, தற்பகை – னகரம் றகரத் தோடு உறழ்தல்;என் + பகை = என்பகை, எற்பகை – னகரம் றகரத்தோடு உறழ்தல்; நின் + பகை =நின்பகை – இயல்பு (நன். 218)

தன்உரு இரட்டல்

நிலைமொழி தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ஒற்றாக அமைய, வருமொழிமுதற்கண் உயிர்க்கணம் வருமாயின், நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில்நிலைமொழியீற்று ஒற்று இரட்டித்து வருதல்.எ-டு : கல் + எறிந்தான் > கல் + ல் + எறிந்தான் = கல் லெறிந்தான் – வேற்றுமைகல் + அரிது > கல் + ல் + அரிது = கல்லரிது – அல்வழி(தொ. எ. 160 நச்.)இங்ஙனம் ஒற்று இரட்டுதலை இயல்புபுணர்ச்சியுள் அடக்குவர் நச்.

தமிழில் பயின்றுவரும் கலிச்சந்தவிருத்தம்

அ) 1, 3, 7, 11, 15ஆம் இடங்களிலுள்ள உயிர் நெடிலாய், மற்றவைகுறிலாய் வரும் அடி நான்கினையுடையது.எ-டு : ‘ ஒன் றோ டொ ன்றுமுனை யோ டுமுனை யுற் றுறவிழும்ஒன் றோ டொ ன்றுபினை யோ டலினச் சோ டுபுதையும்ஒன் றோ டொ ன்றுதுணி பட் டிடவொ டிக் குமுடனேஒன் றோ டொ ன்றிறகு கவ் வுமெதி ரோ டுகணையே’(நல்லா. பதினேழாம். 358)குற்றொற்றை 2 மாத்திரையளவான் நெடில்போலக் கணக்கிடுக.ஆ) 1, 3ஆம் சீர்கள் 4 மாத்திரைக் கூவிளம், 2,4 ஆம் சீர்கள் 6மாத்திரைக் கூவிளங்காய் அமைந்த அடி நான்காகி வரும்.எ-டு : ‘கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்தவம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்ப்புக்கென்பொனை என்மணியை என்றுகொ லெய்துவதே’ (தே. VII 83-7)இ) இக்கலிவிருத்தம் இரட்டித்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தமாகவும் வரும்.எ-டு : ‘தொண்டர டித்தொழலும் சோதியி ளம்பிறையும்சூதள மென்முலையாள் பாகமு மாகிவரும்புண்டரி கப்பரிசா மேனியும் வானவர்கள்பூசலி டக்கடனஞ் சுண்டக றுத்தமருங்கொண்டலெ னத்திகழும் கண்டமு மெண்டோளுங்கோலந றுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்கண்டுதொ ழப்பெறுவ தென்றுகொ லோவடியேன்கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே’. (தே. VII 84-1)மாத்திரையே கணக்கிடுவதால் நேரசைச் சீருக்கு அதே மாத்திரையுடையநிரையசைச் சீரும், நிரையசைக்கு அதே மாத்திரையுடைய நேரசைச் சீரும்மற்றசீர்களுக்கு அதே மாத்திரையுடைய வேறுசீர்களும் கொள்ளப்படலாம்.ஈ) முதல் சீர் தேமாங்கனி ஏனைய மூன்றும் புளிமாங்கனி என அமைந்தநாற்சீரடி நான்கான் அமைவது.‘நீர்கொண்டுதண் மலர்கொண்டுநன் னெறிகொண்டுநின்குறிகொண்டுவன்சீர்கொண்டுவந் தனைசெய்துனைச் செறிவார்களென் பெறுவார்களோபோர்கொண்டிலன் பொறிகொண்டிலன் பெரியோர்களா லருள்கொண்டிலன்கார்கொண்டுகண் டருள்சோதியே நாராயணா நாராயணா.’ (வி. பா. பக். 51,78, 84)

தமிழில் பயின்றுவரும் சந்தக்கலிவிருத்தம்

இது வனமயூர விருத்தம் போலக் குறிலீற்றுத் தேமாங்காய்ச் சீர்வருவது. முதலில் குறிலீற்றுத் தேமாங்காய், அடுத்துக் குறிலீற்றுவிளங்காய், அடுத்துக் குறிலீற்றுத் தேமாங்காய் அடுத்துத் தேமா எனஅமைந்த நாற்சீரடி நான்காய் வருவது.எ-டு : ‘வெங்கார்நி றப்புணரி வேறேயு மொன்றைப்பொங்கார்க லிப்புனல்த ரப்பொலிவ தேபோல்இங்கார்க டத்திரென வென்னாவெ ழுந்தாள்அங்கார தாரைபெரி தாலால மன்னாள்.’ (கம்பரா. 4815)2) தேமா ஒன்று கூவிளம் மூன்று என்றமையும் நாற்சீரடி நான்கான்வருவது.எ-டு : ‘வாழி சானகி வாழியி ராகவன்வாழி நான்மறை வாழிய ரந்தணர்வாழி நல்லற மென்றுற வாழ்த்தினான்ஊழி தோறும் புதிதுறு சீர்த்தியான்’. (கம்பரா. 5168)ஈற்றடியில் ‘தோறும்’ தேமாவாயினும், ‘புதிதுறு’ கருவிள மாயினும் ஓசைகெடாமையின் கொள்ளத் தக்கனவே. (வி. பா. 46, 87)

தமிழ் என்ற பெயர் புணருமாறு

தமிழ் என்ற ழகர ஈற்றுப் பெயர் அக்குச் சாரியை பெற்று வருமொழியொடுபுணரும். இது வேற்றுமைப்புணர்ச்சி.எ-டு : தமிழ் + கூத்து > தமிழ் + அக்கு + கூத்து = தமிழக் கூத்துதமிழ் + நாடு > தமிழ் + அக்கு + நாடு = தமிழநாடுதமிழ் + அரையர் > தமிழ் + அக்கு + அரையர் = தமிழ வரையர் (வகரம்உடம்படுமெய்)இயல்புகணத்துக்கண் சாரியை பெறாது புணர்தலுமுண்டு.எ-டு : தமிழ்நாடு, தமிழ்வணிகர், தமிழரையர்வன்கணம் வந்துழி அக்குப் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகாதுபுணர்தலுமுண்டு.எ-டு : தமிழ் + தரையர் > தமிழ் + அக்கு + தரையர் = தமிழ தரையர் (தொ. எ. 385நச்.)

தமிழ், ஆரியம்: பொதுசிறப்பெழுத்துக்கள்

அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற உயிர் பத்தும், க் ங் ச் ஞ் ட் ண் த்ந் ப் ம் ய் ர் ல் வ் ள் என்ற மெய்பதினைந்தும் தமிழுக்கும்ஆரியத்துக்கும் பொதுவான எழுத்துக்களாம். ஊகாரத்தின் பின்னுள்ளநான்கும் ஒளகாரத்தின் பின்னுள்ள இரண்டும் ஆகிய உயிர்கள் 6, கங – சஞ -டண – தந – பம என்ற ஐவருக்கத்திடையே நிற்கும் மும்மூன்று மெய்களாகவருவன 15, (‘சிவம்’ என்பதன் முதல் எழுத்தாகிய) ஶ ஷ ஸ ஹ க்ஷ ஷ்க ஷ்ப எனவரும் மெய்கள் 7 என்னும் 28சிறப்பெழுத்துக்கள் ஆரியத்தின்கண் உள்ளன. ற் ன் ழ் எ ஒ என்றஎழுத்துக்களும், உயிர்மெய் உயிரளபெடை அல்லாத எட்டுச் சார்பெழுத்துக்களும் தமிழுக்கே சிறப்பாக உரியன. (நன். 146, 150)

தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள்

‘எகர ஒகர ஆய்த ழகரறகர னகரம் தமிழ்; பொது மற்றே’ – லீலாதிலக மேற்கோள்(எ. ஆ. முன்னுரை)எனவே, எ ஒ ஆய்தம் ழ ற ன என்பன தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள்.இவற்றுள் எகர ஒகரம் இரண்டும் பிராகிருதத்திலும் உள.இனித் தொன்னூல் விளக்கம் கூறுமாறு : எகர ஒகரங்கள் என இருகுற்றுயிர் எழுத்தும், ற ன ழ என மூன்று ஒற்றும் – ஆக முதலெழுத்துஐந்தும், கூறிய பத்துச்சார்பெழுத்துள்ளே ஆய்தமும் ஒற்றளபும்ஆறுகுறுக்கமும் என எண் சார்பெழுத் தும் தமிழ்மொழிக்கு உரியன. (தொ. வி.6 உரை)

தமிழ்ச் சிறப்பெழுத்துக்கள்ஐந்தானும் திரிதல்

ஆரியச் சொற்கள் தமிழில் வடசொல்லாக வருமிடத்துத் தமிழ்ச்சிறப்பெழுத்துக்கள் ஆகிய எ ஒ ழ ற ன என்ற எழுத்துக்களாகத் திரிதலும்காணப்படுகிறது.எ – தைவம் என்பது தெ ய்வம் எனத் தமிழில் வழங்கும்.ஒ – கோங்கணம் என்பது கொ ங்கணம் எனத் தமிழில் வழங்கும்.ழ – அமிர்தம் என்பது அமி ழ் தம் எனத் தமிழில் வழங்கும்.ற – அத்புதம் என்பது அ ற் புதம் எனத் தமிழில் வழங்கும்.ன – சிவ: என்பது சிவ ன் எனத் தமிழில் வழங்கும்.என இவை முதலாகக் காண்க. (இ. கொ. 87)

தமிழ்நெறி விளக்கம்

இறையனார் அகப்பொருளுக்குப் பின்னர்த் தோன்றிய அகப்பொருள் நூல்களில்ஒன்று. இந்நூலின் பொருளியல் என்ற பகுதியே கிடைத்துள்ளது. அதுவும்முழுமையாகக் கிட்டவில்லை. அகப்பொருளின் பெரும்பான்மையான பகுதிகிட்டியுள்ளது. அகப்பொருளின் முதல் கரு உரிப் பொருள் களைக் கூறிக்கைக்கிளையை விடுத்து ஆசிரியர் களவினைத் தொடங்கியுள்ளார். அறத்தொடுநிலையும் உடன்போக்கும் இந்நூலுள் கற்பியலுள் அடக்கப்பட்டுள. தலைவனுடையநற்றாய் கூற்று ஒன்றும் இதன்கண் காணப்படுவது புதிய தொரு செய்தியாம்.நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார் போலும். இந்நூல் உதாரணப் பாடல்கள்பல களவியற் காரிகையில் மேற்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவர், பொருளியலைஅகம், புறம், அகப்புறம் என மூன்றாகப் பிரித்து விளக்கியுள்ளார்.இப்பொழுது கிட்டியுள்ள நூற்பகுதி அகத்தைப் பற்றியதே. இவர் ஓதல் தூதுமுதலிய கற்புக்காலப் பிரிவுகளைச் ‘சேயிடைப்பிரிவு’ எனவும், பரத்தையிற்பிரிவை ‘ஆயிடைப் பிரிவு’ எனவும் குறிப்பிடுகிறார். இந்நூலுள் 25நூற்பாக்களும், உரையில் 173 எடுத்துக்காட்டுப் பாடல்களும் உள்ளன.

தம் நம் நும் என்ற சாரியைகள்

தம் நம் நும் – என்பன தாம் நாம் நீம் – என்ற பெயர்களின் திரிபேஆதலின் தொல். இவற்றை நன்னூலார் போலச் சாரியைக ளோடு இணத்துக்கூறவில்லை. (எ. அ. பக். 129)தாம் நாம் நீயிர் (நீம்) என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய தம் நம்நும் என்பனவற்றைச் சாரியை இடைச்சொல் என்பர்.எல்லாம் என்னும் பொதுப்பெயரின் அடியாகப் பிறக்கும் எல்லீர் -எல்லார் – என்ற சொற்களை அவை சார்ந்து, இடப் பொதுமை நீக்கி,எல்லா(ம்)நம்மையும், எல்லீர் நும்மையும், எல்லார்தம்மையும் எனஉரிமைப்படுத்தலின், அவற்றைப் பெயர் என்றலே அமையும். (எ. ஆ. பக்.97)

தருக்க சங்கிரக தீபிகை

வடமொழியில் அன்னம்பட்டர் தாம் வரைந்த தருக்க சங்கிர நூலுக்குத்தாமே எழுதிய உரை இது. தமிழில் சிவஞான முனிவரால்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ( L)

தருக்க சங்கிரகம்

வடமொழியில் அன்னம்பட்டர் வரைந்த தர்க்க சங்கிரகத்தைசிவஞானமுனிவர் தமிழாக்கம் செய்த நூல். (L)

தருக்க சாத்திரம்

நியாய வாத நூல். (L)

தருக்க பரிபாஷை

கேசவமிசிரர் வடமொழியில் யாத்த தர்க்க பரிபாஷா என்னும்நூலினின்று சிவப்பிரகாச முனிவர் இயற்றிய தமிழ் மொழிபெயர்ப்புநூல். (L)

தற்சமம்

ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாம்என்க.எ-டு : அமலம், கமலம், காரணம் (மு. வீ. மொழி. 34)

தற்சுட்டளவு

ஐகாரம் தன்னைக் கருதித் தன்பெயர் கூறுமளவில் குறுகாது. சுட்டளவுஎன்பது வினைத்தொகை. ‘அளவு’ என்றார், எழுத்தின் சாரியை தொடரினும்குறுகும் என்பது கருதி. இனி ‘அளபு’ எனப் பாடங்கொண்டு அளபு என்பதனை அளபெடையாக்கித் தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபெடுத் தற்கண்ணும் ஐகாரம்குறுகாது என்பர். தன் இயல்பாய இரண்டு மாத்திரையினின்றும் குறுகுதல்இல்லனவற்றை ஒழிப்பார், விகாரத்தான் மூன்று மாத்திரையும் நான்குமாத்திரையுமாய் மிக்கொலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின் அதுபொருந்தாது. (நன். 95 சங்கர.)

தற்சுட்டு அளபு ஒழி ஐ, ஒள

தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபெடுத்தற்கண்ணும் அல்லாதவழி வந்தஐகாரம் முதல் இடைகடை என்னும் மூவிடத்தும் குறுகும். அவ்வாறு வந்தஒளகாரம் மொழிமுதற் கண் குறுகும்.எ-டு : ஐ ப்பசி, மை ப்புறம்; ம டை யன், உ டை வாள்; குவ ளை , தி னை ; மௌ வல்அந்தௌ, அத்தௌ என்பன கடையிலே குறைந்தன எனின், அவைஒருபொருட்சிறப்புடையவாய் நடப்பன அல்ல என்க. (நன். 94 மயிலை.)

தற்பவம்

ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தானும்தமிழில் சிதைந்து வருவது தற்பவமாம் என அறிக.எ-டு : சுகி, போகி (சிறப்பு); அரன், அரி (பொதுவும் சிறப்பும்)(மு. வீ. மொழி. 32)

தலைமடக்கு

செய்யுள் அடியில் முதற்சீரே அவ்வடியில் மடங்கி வரும் மடக்கணிவகை.‘ஆதிமடக்கு வகைகள்’ காண்க.

தலையாகு சந்தம்

நான்கடியும் ஒத்து வருவன.எ-டு : ‘போது விண்ட புண்ட ரீகமாத ரோடு வைக வேண்டின்ஆதி நாதர் ஆய்ந்த நூலின்நீதி யோதி நின்மி னீடு’. (யா. வி. பக். 522)(எழுத்து எண்ணுமிடத்தே ஒற்று நீக்கிக் கணக்கிடப்படும்.)

தளா என்ற பெயர் வேற்றுமைப் பொருளில்புணருமாறு

தளா என்ற பெயர் நிலைமொழியாக, வருமொழி வன்கணம் வரின், அகரமாகியஎழுத்துப்பேறளபெடையொடு வல் லெழுத்தோ மெல்லெழுத்தோ பெறுதலும்,இன்சாரியை பெறுதலும், அத்துச்சாரியை பெறுதலும் அமையும். தளா என்பதுஒரு மரப்பெயர்.தளா + கோடு = தளாஅக்கோடு, தளாஅங்கோடு, தளா வின் கோடு,தளாஅத்துக்கோடு (அத்தின் அகரம் ‘தளாஅ’ என்ற அகரத்தின் முன்கெட்டது).தளா என்ற பெயர் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.வருமாறு : தளாவினை, தளாவினால்………தளாவின்கண்(தொ. எ. 173 நச்.)இது பொருட்புணர்ச்சிக்கும் வரும். இன்சாரியை இடையே வர, வருமொழிமுதற்கண் வன்கணம் வரினும் மிகாது.எ-டு : தளாவின் கோடு, தளாவின் செதிள், தளாவின் தோல், தளாவின் பூ(230 நச்.)

தழாஅத் தொடராகியஅல்வழிப்புணர்ச்சியும் வேற்றுமைப்புணர்ச்சியும்

‘சுரை யாழ அம்மி மிதப்ப’ என்பது ‘சுரை மிதப்ப அம்மி யாழ’ எனக்கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்பஎன்பதையும் (பயனிலையாகத்) தழுவாமையால், இப்படி வருகின்றன எல்லாம்தழாத்தொட ராகிய அல்வழிப்புணர்ச்சியாம். ‘கைக் களிறு’ என்பது கையை உடையகளிறு என விரிக்கப்படுதலால், கை என்பது களிறு என்பதைத் தழுவாமையால்,இப்படி வருகின்றவை எல்லாம் தழாத் தொடராகிய வேற்றுமைப் புணர்ச்சியாம்.(தொ. வி. 22 உரை)

தழாஅத்தொடர்

புணர்ச்சியில்வழிப் புணர்ச்சி பெற்றாற்போல நிற்பன இக் காலத்தேதழாத்தொடர் எனப்படும். பொருள்தொடர்ச்சி இல்லாத இரு சொற்கள் நிலைமொழிவருமொழி போலத் தொடர்ந்து சந்தி பெறும் நிலையே தழாஅத்தொடர்நிலையாம்.எ-டு : ‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ ( அகநா. 3)ஓமை என்ற சொல் சினை என்பதனொடு பொருள் தொடர் புடையது. அதுபொருள்தொடர்பில்லாத ‘காண்பின்’ என்ற சொல்லை வருமொழியாகக் கொண்டுஅதனோடு ‘ஓமைக் காண்பின்’ என்று புணர்வது தழாத்தொடராம். (எ. ஆ. பக்.93)நிலைமொழி வருமொழிகள் பொருள் பொருத்தமுறத் தழுவாத தொடர்தழாத்தொடராம். எ-டு : கைக்களிறுகை என்ற நிலைமொழி களிறு என்ற வருமொழியொடு பொருள் பொருத்தமுறத்தழுவாமையால் தழாஅத் தொடர். கையை உடைய களிறு என இடையே சொற்களைவருவித்துப் பொருள் செய்ய வேண்டும். உருபும் பொருளும் உடன்தொக்கதொகையெல்லாம் வேற்றுமைக்கண் வந்த தழாஅத்தொட ராம். (தொ.வி. 22 உரை)‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பின்பரலவல் அடைய இரலை தெறிப்ப’ (அகநா. 4 )‘மருப்பின் இரலை’ என்பது பொருள் பொருத்தமுறத் தழுவு தொடர்.‘மருப்பிற் பரல்’ என்பது பொருள் பொருத்தமுறத் தழுவாமையால், தழாஅத்தொடராம். இதுவும் வேற்றுமைப் புணர்ச்சி.‘சுரை ஆழ அம்மி மிதப்ப’இதன்கண், சுரை மிதப்ப, அம்மி ஆழ என்பனவே தழுவு தொடராம். ‘சுரை யாழ’என்பதும் ‘அம்மி மிதப்ப’ என்பதும் அல்வழிக்கண் வந்த தழாஅத் தொடராம்.(நன். 152 சங்கர.)

தழுவுதொடர்

வேற்றுமைத் தழுவுதொடர் ஐ முதலிய ஆறுருபுகளும் விரிந்து நிற்பநிகழ்தலின் ஆறாம்; அல்வழிக்கண் தழுவுதொடர் வினைத்தொகை முதலியஐந்துதொகைகளும், எழுவாய்த் தொடர் முதலிய ஒன்பது தொகாநிலைகளுமாகப்பதினான் காம். இவ்வாறு தழுவுதொடர்கள் வேற்றுமை அல்வழிப் பொருள்நோக்கத்தான் அமைவன. (நன். 152)

தவம்

தவம் செய்வார்க்கு உளதாம் சிறப்பினை எடுத்துக் கூறி அத்தவம்செய்யும் உடல் துன்பமின்றியே பக்தியினால் எளிதில் இறைவனை அடையலாம்என்றாற் போலக் கூறும், கலம்பக உறுப்புக்கள் பதினெட்டனுள் ஒன்று.“காய்களையும் இலைகளையும் உணவுக்காகத் தின்றும், காட்டில்தங்கியும், நற்கதியை அடைதலை வேண்டி ஐந்தீ நாப்பண் நின்றும், உலகினைச்சுற்றியும் தவம் செய்து திரியும் சான்றோர்களே! நீயிர் அரிதின் முயன்றுதவம் செய்து பெறக் கூடிய பயனைப் பாம்பு அணையான் ஆகிய திருவரங்கன்திருக்கோயிலைப் பணிந்து தொழுவதனாலேயே எளிதில் எய்திவிடலாம்” என்பதுபோன்ற கூற்று. (திருவரங்கக். 18)

தவளைப் பாய்த்து

சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. தவனை பாய்கின்றவிடத்தே இடை யிடைநிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபுகொள்வது. (நன். 18 மயிலை.)எ-டு : ‘ஆவியும் ஒற்றும்’ என்னும் சூத்திரம் (101) ஒன்றிடையிட்டு நின்ற மேலைச்சூத்திரமாகிய ‘மூன்று உயிரளபு’ என்பதற்குப் புறனடைஉணர்த்தியமை.

தாண்டக அடி

இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துக்களான் இயன்றஅடி(யா. வி. பக். 476)

தாண்டகச் சந்தம்

‘சந்தத் தாண்டகம்’ காண்க.சந்தஅடி பலவாயும் தாண்டக அடி சிலவாயும் வருவன வற்றைச் ‘சந்தத்தாண்டகம்’ என்ப, ஒருசாரார்; தாண்டக அடி பலவாயும் சந்தஅடி சிலவாயும்வருவனவற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ என்ப, ஒருசாரார் (யா. வி. பக்.485)

தாண்டகம்

இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடி யினவாய்,எழுத்தும் குரு லகுவும் ஒத்தும் ஒவ்வாதும் வருவன தாண்டகமாகும்.எழுத்தும் குரு லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம்; ஒவ்வாது வருவனஅளவழித் தாண்டகம் ஆம் என்பது. (யா. வி. பக். 476)எ-டு: 27 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘வானிலவிமுகிலார்ப்ப’37 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘கருநிறப் பொறிமுக’43 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘அனவரதம்அமரர்’47 எழுத்தடி அளவியல் தாண்டகம்: அல்லற் கோடை’அளவழித் தாண்டகம்: ‘மூவடிவி னாலிரண்டு’(இவை பாடல் தொடக்கம்.) (யா. வி. பக். 483 – 485)

தாது

வினைச்சொல்லின் பகுதி தாது எனப்படும்.எ-டு : உண்டான் முதலிய வினைச்சொற்களிலுள்ள உண் முதலியனதாதுவாம். (சூ.வி. பக். 55)

தாந்தா எனும் சந்தம்

கீழ்க்காணும் நால்வகையான எழுத்து அமைப்பால் ஆகிய சொற்கள் பயிலவருவது தாந்தா எனும் சந்தமாம்.1. ஒரு நெட்டெழுத்தும், அடுத்து மெல்லின ஒற்றும், அடுத்துவல்லினநெடில் உயிர்மெய்யுமாக வருவது. எ-டு : சேந்தா2. அம்மூன்றனையும் அடுத்து மெல்லினமோ இடையின மோ ஆகியமெய்யெழுத்து வருவது. எ-டு : நான்றான், வாங்கார்3. ஒரு நெட்டெழுத்து, ஓர் இடையினமெய், ஒரு மெல்லின மெய் எனஇவற்றையடுத்து வல்லின நெடில் உயிர்மெய் வருவது. எ-டு :நேர்ந்தோ4. அந்நான்கெழுத்தினையும் அடுத்து ஒரு மெல்லின மெய் யோ இடையினமெய்யோ வருவது. எ-டு : மாய்ந்தான், சார்ந்தோர் (வண்ணத். 43 -47)

தானப் பொருத்தம்

அகலக்கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம்பத்தனுள் ஒன்று. உயிர் எழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ எனஐந்து இனங்களாகப் பகுத்துப் பாட்டுடைத் தலைவனது பெயர் தொடங்கும்உயிரினத்தைப் பால(த்தான)ப் பொருத்தம் எனக் கொண்டு தொடங்கி, மேல்குமாரப் பொருத்தம், இராசப் பொருத்தம், மூப்புப் பொருத்தம், மரணப்பொருத்தம், என உயிரினங்களை எண்ணி மூப்புத்தானப் பொருத்தமும் மரணத்தானப் பொருத்தமும் ஆகிய எழுத்துக்களை நீக்கி, பிற தானங்களி லுள்ளஎழுத்துக்களால் நூலைத் தொடங்கும் செய்யுள் முதல்மொழிப்பொருத்தமாம்.தலைவனது இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ, இ ஈ ஐ,உ ஊ ஒள- என்பனவற்றுள் ஒன்று முதற்கண்வரும் முதற்சீரே ஏற்றது.தலைவனது இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தின தாயின் இ ஈ ஐ, உஊ ஒள, எ ஏ என்பன வற்றுள்ஒன்று முதற்கண் வரும் முதற்சீரே ஏற்றது.பிறவும் இவ்வாறே இயைத்துக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 23)

தானம் முயற்சி அளவு பொருள் வடிவு

தானம் – உரம் (மார்பு) முதலியன; முயற்சி – இதழ்முயற்சி முதலியன;அளவு – மாத்திரை; பொருள் – பாலன் விருத்த னானாற்போல, குறிலது விகாரமேநெடிலாதலின், இரண் டற்கும் பொருள் ஒன்று என்று முதனூலால்நியமிக்கப்பட்ட பொருள்; வடிவு ஒலிவடிவும் வரிவடிவும். இவற்றுள்ஒன்றும் பலவும் ஒத்து எழுத்துக்கள் தம்முள் இனமாய் வருதல் காண்க.(நன். 72 சங்கர.)

தானை மாலை

ஆசிரியப்பாவால் அரசரது தூசிப்படையினைப் பாடும் பிரபந்தவகை.தூசிப்படை – முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படை (இ. வி. பாட்.109)

தான் என்ற இயற்பெயர் தந்தை, மக்கள்முறைமையொடு புணர்தல்

தான் என்ற இயற்பெயர், தந்தை என்ற முறைப்பெயரொடும் மக்கள்முறைமையுடைய இயற்பெயர்களொடும் புணரும்வழி, தான் என்ற சொல்லின் னகரம்திரிபு பெறாமல் இயல்பாகவே புணரும்.வருமாறு : தான்த (ற) ந்தை, தான்கொற்றன். (தொ. எ. 351நச்.)

தாப்புலி

ஒரு வகையான பழைய பா. (செங்கோன் தரைச்செலவு) (L)

தாயுமானவர் பாடல் யாப்பு

நேரிசை வெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, நிலைமண்டிலஆசிரியப்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம்,கலித்துறை, சிந்து, எளிய சந்த அமைப் பினை உடைய வண்ணம் என்பனவாம்.குறள் வெண்செந் துறை எனப்படும் பாக்கள், தாழிசை எனவும் கண்ணி எனவும்இருவகைப்படும். அவை எண்சீர் அடி இரண்டாயும், நாற் சீரடி இரண்டாயும்நிகழ்வன. (இலக்கணத் முன். பக். 107)

தாய் என்ற முறைப்பெயர் புணருமாறு

விரவுப்பெயருள் முறைப்பெயர் என்ற வகையைச் சார்ந்த தாய் என்ற சொல்,வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், வரு மொழி வன்கணம் வந்துழியும்இயல்பாகப் புணரும்.எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.தாய் என்ற சொல் தனக்கு அடையாக முன்வந்த மகனது வினையைப் பின்னாகஒருவன் கூறுமிடத்து, வருமொழியில் வன்கணம் வரின் மிக்குப் புணரும்.எ-டு : மகன்தாய்க் கலாம், மகன்தாய்ச் செரு, மகன்தாய்த்துறத்தல், மகன்தாய்ப் பகைத்தல்என வல்லொற்று மிக்கே வரும். இவை, மகன் தாயொடு கலாய்த்த கலாம், மகன்தாயொடு செய்த செரு, மகன் தாயைத் துறத்தல், மகன் தாயைப் பகைத்தல் – எனவிரியும் வேற்றுமைப் பொருண்மையவாம். (தொ. எ. 358, 359 நச்.)

தாரகை மாலை

அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களைவகுப்பினால் பாடும் பிரபந்தவகை. ‘வகுப்பு’த் தனியே காண்க. (இ. வி.பாட். 107)

தாற்பருவம்

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத் தலைமக னையோ தலைமகளையோஎட்டாம் மாதத்தில் தாலாட்டு வதாகக் கூறும் மூன்றாம் பருவம். தாலப்பருவம் என்பதும் அது. தால் – நாவு; தாய் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுநாவசைத்துப் பாடுதலின், இப்பருவம் இப்பெயர்த்தாயிற்று. ஆசிரியவிருத்தம் பத்துப் பாடல்கள் சந்தவின்பம் பெற இது பாடப்பெறும்.

தாலப்பருவம்

பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் மூன்றாவதாக வரும் பருவம் பாட்டுடைத்தலைவனாகிய குழந்தையைத் தொட்டிலி லிட்டுத் தாய் நாவினை யசைத்துப்பாடிப் பாராட்டுவது. பத்து ஆசிரிய விருத்தத்தான் சந்தவின்பம் தோன்றப்பாடப் பெறும். (தால் – நாவு)

தாலாட்டு

(1) குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப் பாடுதல்; ‘தாலாட்டுநலம்பல பாராட்டினார்’ (பெரியபு. திருஞான.44)(2) ‘தாலே லோ’ என்று முடியும் ஒருவகைப் பாட்டு(3) தாலாட்டுதற்குரியதாய்ப் பிரபந்தத் தலைவனுடைய சிறந்தசெயல்களைத் தெரிவிக்கும் பல கண்ணிகளை யுடையதொரு பிரபந்தம் எ-டு:சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு. (L)

தாள ஓத்து

108 தாளங்களை விவரிக்கும் ஒரு பழையநூல் (L)

தாள சமுத்திரம்

பரத சூடாமணி என்ற அரசன் இயற்றிய தாள வகையைக் கூறும் பண்டைய நூல்.சிலப். முகவுரை (உ. வே. சா.)

தாழக்கோல் : தொடர்வகை

தாழைத் திறக்கும் கோல் என விரியும். இஃது இரண்டன் உருபும் பயனும்உடன்தொக்க தொகை. தாழக்கோல் எனினும் திறவுகோல் எனினும் ஒக்கும்.தாழாகிய கோல் என விரிப்பின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம். முன்னதுவேற் றுமைப் புணர்ச்சி; பின்னது அல்வழி. (நன். 225 சங்கர.)

தாழ் என்ற பெயர் கோலொடு புணர்தல்

தாழ் என்ற நிலைமொழி கோல் என்ற வருமொழியொடு புணருமிடத்து, இடையேஅக்குச்சாரியை பெற்றுத் தாழக் கோல் எனவும், வல்லெழுத்து மிக்குத்தாழ்க்கோல் எனவும் புணரும். தாழ்க்கோல் என்பதே பெரும்பான்மை. இதனைத்தாழைத் திறக்கும் கோல் என வேற்றுமைவழியிலும், தாழாகிய கோல் எனஅல்வழியிலும் பொருள் செய்யலாம். (தொ. எ. 384 நச்).

திக்குவிசயம்

அரசனுடைய நாற்றிசை வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்தம். இது96 வகையான பிரபந்தத்தின் வேறுபட்டது. (இ. வி. பாட். பக். 505; சாமி.171)

திங்

வினைமுற்று விகுதி ‘திங்’ எனப்படும். எனவே, வினைமுற்றுத்‘திஙந்தம்’ என்னும் பெயரதாகும்.எ-டு : நடந்தான் என்பது திஙந்தம்; ஆன் என்பது திங்.(சூ. வி. பக். 55)

திங்கள் நிலைமொழியாக, வருமொழித்தொழில்நிலைக் கிளவியொடு புணருமாறு

மாதங்களின் பெயர்கள் இகர ஐகார ஈற்றனவே. இகர ஐகார ஈற்றனவாய் வரும்மாதப்பெயர்களின் முன் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வினைச்சொற்கள்முடிக்கும் சொற்களாக வரின், இடையே இக்குச் சாரியை வரும்.எ-டு : ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண் டான்; ஆடி +இக்கு + வந்தான் = ஆடிக்கு வந்தான்; சித்திரை + இக்கு + கொண்டான் =சித்திரைக்குக் கொண்டான்; சித்திரை + இக்கு + வந்தான் = சித்திரைக்குவந்தான்இவற்றிற்கு ஆடிமாதத்தின்கண், சித்திரை மாதத்தின்கண் எனவேற்றுமைப்பொருள் விரிக்கப்படும். (தொ. எ. 248 நச்.)

திசைப்பெயர்கள் புணருமாறு

பெருந்திசைகள் வடக்கு, தெற்கு என்பன. இரண்டு பெருந் திசைகள்தம்மில் புணரும்வழி இடையே ஏகாரச்சாரியை வரும்.வருமாறு : வடக்கே தெற்கு, தெற்கே வடக்கு. இவை உம்மைத் தொகை.(தொ. எ. 431 நச்.)பெருந்திசைகளொடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்கு மிடத்து,அவ்வுகரம் ஏறிநின்ற ஒற்றும் அவ்வீற்று உகரமும் (வடக்கு என்பதன்கண்ஈற்றயல் ககர ஒற்றும்) கெட்டு முடிதல் வேண்டும். தெற்கு என்னும்திசைச்சொல்லொடு புணருங் கால், தெற்கு என்பதன் றகர ஒற்று னகர ஒற்றாகத்திரியும்.கோணத்திசைகள் கிழக்கு, மேற்கு என்பன. இவை பண்டு குணக்கு – குடக்குஎன்னும் பெயரின.வருமாறு : வடகிழக்கு, வடகுணக்கு, வடமேற்கு, வடகுடக்கு;தென்கிழக்கு, தென்குணக்கு, தென்மேற்கு, தென் குடக்குபெருந்திசைப் பெயரொடு பொருட்பெயர் புணரினும்,வடகால், வடசுரம், வடவேங்கடம்; தென்கடல், தென்குமரி, தென்னிலங்கை எனவரும்.கோணத் திசைப்பெயர்களொடு பொருட்பெயர் புணரும்வழி,கிழக்கு + கரை = கீழ்கரை; கிழக்கு + கூரை = கீழ்கூரை; மேற்கு + கரை= மேல்கரை, மீகரை; மேற்கு + கூரை = மேல்கூரை, மீகூரை; மேற்கு + மாடு =மேன்மாடு; மேற்கு + பால் = மேல் பால்; மேற்கு + சேரி = மேலைச்சேரி -என்றாற் போல முடியும். (எ. 431, 432 நச். உரை)‘வடகு’ என்பதே வடக்கு என்பதன் பண்டைச் சொல் ஆகலாம். (எ. ஆ. பக்.170)வடக்கு கிழக்கு குணக்கு குடக்கு என்ற நிலைமொழிகள் ஈற்றுஉயிர்மெய்யும் அதன்மேல் நின்ற ககர ஒற்றும் கெடும். தெற்கு, மேற்குஎன்ற நிலைமொழிகளின் றகரம் முறையே னகரமாக வும் லகரமாகவும் திரியும்.பிறவாறும் நிலைமொழித் திசைப் பெயர் விகாரப்படுதலும் கொள்க.வருமாறு : வடக்கு + கிழக்கு, மேற்கு, திசை, மலை, வேங்கடம் =வடகிழக்கு, வடமேற்கு, வடதிசை, வடமலை, வடவேங்கடம்; குடக்கு + திசை,நாடு = குடதிசை, குடநாடு; குணக்கு + கடல், பால் = குணகடல்,குணபால்.கிழக்கு என்பதன் ழகரத்து அகரம் கெட்டு முதல்நீண்டு வருதலும்அவற்றோடு ஐகாரச் சாரியை பெறுதலும் கொள்க; அகரச் சாரியை பெறுதலும்கொள்க.இது ‘மேற்கு’க்கும் பொருந்தும்.கிழக்கு + திசை = கீழ்த்திசை, கீழைத் திசை, கீழத்திசை;கிழக்கு + நாடு = கீழ்நாடு, கீழைநாடு, கீழநாடு;தெற்கு + கிழக்கு, மேற்கு, குமரி, மலை, வீதி = தென்கிழக்கு,தென்மேற்கு, தென்குமரி, தென்மலை, தென்வீதி;மேற்கு + திசை, கடல், வீதி = மேல்திசை (மேற்றிசை), மேலைத் திசை,மேலத்திசை; மேல்கடல், மேலைக்கடல், மேலக்கடல்; மேல் வீதி, மேலைவீதி,மேலவீதி.வடக்குமலை, தெற்குக்கடல் முதலாக வரும் இயல்பும், கீழ்மேற்றென்வடல்போன்ற முடிவும், பிறவும் கொள்க. (நன். 186 சங்.)திசையொடு திசை புணருங்கால், நிலைமொழி பெருந்திசை எனவும், வருமொழிகோணத்திசை எனவும், நிலைமொழியாய் நிற்பன வடக்கும் தெற்குமே எனவும்,தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும் மேற்கு என்பதன் றகரம் லகரமாகவும்திரியும் எனவும், வருமொழித் தகரம் திரியும் எனவும், (கிழக்கு என்பதன்)ழகரத்து அகரம்கெட்டு முதல் நீண்டே (கீழ் என) வரும் எனவும்,பெருந்திசையொடு பெருந்திசை புணர்வழி இடையே ஏ என் சாரியை வரும் எனவும்(வடக்கே தெற்கு) கொள்க. (இ. வி. 105 உரை)

திணை நூல்

பிற்காலப் பாட்டியல் நூல்கள் போலப் பாக்களுக்கு நிறமும் திணையும்பூவும் சாந்தும் புகையும் பண்ணும் திறனும் இருதுவும் திங்களும் நாளும்பக்கமும் கிழமையும் பொழுதும் கோளும் இராசியும் தெய்வமும் திசையும்மந்திரமும் மண்டிலமும் பொறியும் – போல்வனவற்றை விளக்கிக் கூறும் பழையஇலக்கணநூல். (யா. வி. பக். 488)

திண்டிம கவி

திண்டிமம் முழக்கிக் கொண்டு வாதம் செய்யும் கவி. திண்டிமம் -ஓர் இசைக்கருவி. (திருச்செந். பிள். சப்பாணி 2) (L)

தினகவி

1. அரசன் திருவோலக்க மண்டபத்தில் அமரும் போதும், அங்குநின்றுஎழும்போதும் இசைக்கப்படும் பாட்டு. (L)2. நாட்கவி பாடுவோன்.

திரட்டு என்ற புணர்ச்சி விகாரம்

இருசொற்கள் ஒருமொழியாக ஒரோவிடத்து நிலைமொழி ஈற் றெழுத்தும் வருமொழிமுதலெழுத்தும் ஒன்றாகத் திரண்டு விகற்ப மாகும்.நிலைமொழி ஈற்றுயிர் நீங்க, வருமொழி முதலிலுள்ள அ ஆ என்பனஇரண்டும் ஆ ஆகும். எ-டு : வே தா ங்கம், வே தா கமம்.நிலைமொழி ஈற்றுயிர் (அ ஆ இ ஈ உ ஊ என்பன) கெடுதல் எல்லாவற்றுக்கும்கொள்க.வருமொழி முதலிலுள்ள இ ஈ என்பன ஈ ஆகும்.எ-டு : சுசீந்திரம், கிரீசன்வருமொழி முதலிலுள்ள உ ஊ என்பன ஊ ஆகும்.எ-டு : குரூபதேசம்வருமொழி முதலிலுள்ள இ ஈ என்பன ஏ ஆகும்.எ-டு : சுரேந்திரன்வருமொழி முதலிலுள்ள உ ஊ என்பன ஓ ஆகும்.எ-டு : கூபோதகம் (தொ. வி. 38 உரை)

திரிதல் விகாரம்

நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் ஓரெழுத்து மற்றோ ரெழுத்தாய்மாறுதல்.எ-டு : பொ ன் + குடம் = பொ ற் குடம் – நிலைமொழி னகரம் றகரமாகத் திரிந்தது.பொன் + தீ து = பொன் றீ து – வருமொழித் தகரம் றகரமாகத் திரிந்தது.பொ ன் + தூ ண் = பொ ற்றூ ண் – நிலைமொழியீற்று னகரமும், வருமொழி முதல் தகரமும் றகரமாகத்திரிந்தன. (நன். 154)

திரிபங்கி

திரிபங்கி – முன்றாகப் பிரிவது; மிறைக் கவிகளுள் ஒன்று.ஒரு செய்யுளின் உறுப்புக்களைப் பெற்று ஒரு வகை யாப்பால் வந்தபாட்டினை மூன்றாகப் பிரித்து எழுதினால், வேறு வேறுதொடையாக அமைந்துபயனிலையும் பெற்று முடியும் வகையில் செய்யுளை அமைத்தல்.எ-டு : ‘ஆதரம் தீர்அன்னை போல்இனி யாய்அம்பி காபதியேமாதர்பங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீள்முடியாய்ஏதம்உய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம் பிரான்இனியாய்ஓதும்ஒன் றேஉன்னு வார்அமு தேஉம்பர் நாயகனே.’கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த இப்பாடல் ஒன்றனையே,1 2 3‘ஆத ரம்தீர் ‘அன்னைபோ லினியாய்! ‘அம்பிகாபதியே!மாதர் பங்கா வன்னிசேர் சடையாய்! வம்புநீள்முடியாய்!ஏதம் உய்ந்தோர் இன்னல்சூழ் வினைதீர்எம்பிரான் இனியாய்!ஓதும் ஒன்றே! உன்னுவா ரமுதே! உம்பர்நாயகனே!என்று மூன்று பாடலாகப் பிரிப்பினும், அடியெதுகைத் தொடையொடுபொருளும் அமைய, வஞ்சித்துறை என்னும் யாப்பின்பாற்படுமாறு காணப்படும்.(தண்டி. 98 உரை)

திரிபதாதி

இது ‘திரிபாகி’ எனவும் வழங்கும் சித்திரகவியாம். அது காண்க. (மா.அ. பாடல். 808)

திரிபந்தாதி

ஒவ்வோரடி முதற்சீரிலும் முதலெழுத்து மாத்திரம் திரிய இரண்டு முதலியபலஎழுத்துக்கள் ஒன்றிப் பொருள் வேறுபட வரும் செய்யுளாகிய அந்தாதிப்பிரபந்தம்.எ-டு : திருவேங்கடத்தந்தாதி திரிபந்தாதியாக அமைந்துள்ள வாறுகாண்க.

திரிபாகி

மிறைக் கவிகளுள் ஒன்று. திரிபாகி – மூன்று பாகங்களைக் கொண்டது.மூன்றெழுத்தாலான ஒரு சொல்லின் முதலெழுத்தும் இறுதியெழுத்தும் சேரஒரு சொல்லாய், இடையெழுத்தும் இறுதி எழுத்தும் சேர மற்றுமொரு சொல்லாய்,வெவ்வேறு பொருள் தரும் வகையில் பாடல் அமைத்தல்.எ-டு : ‘மூன்றெழுத்தும் எம்கோன்; முதல் ஈ(று) ஒருவள்ளல்;ஏன்றுலகம் காப்ப(து) இடைகடையாம்; – ஆன்றுரைப்பின்பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்தும்காமாரி, காரி, மாரி’மூன்றெழுத்தும் சேர்ந்தால் எம் இறைவன் – காமாரி (-மன்மதனை அழித்தசிவபெருமான்);முதலும் இறுதியும் சேர்ந்தால் ஒருவள்ளல் – காரி;இடையெழுத்தும் கடையெழுத்தும் சேர்ந்தால் உலகினைக் காப்பது – மாரி.(தண்டி. 98 உரை)‘திரிபதாதி’ என்பதும் இதுவே.

திரிபிடன் மூன்று

மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் எனத் திரிபு மூவகைப்படும். மெய்பிறிதாதலாவது, ஓர் எழுத்து மற்றோரெழுத்தாய்த் திரிவது.எ-டு : யான் + ஐ = என்னை; யான் என்பது என் எனத் திரிதல்மெய் பிறிதாதல். மெய் – வடிவு.பொன் + குடம் = பொற்குடம்; னகர ஒற்று றகர ஒற்றாய்த் திரிந்ததும்அது.இத்திரிபு மெய்களிடையே பெரும்பான்மையும், உயிர் களிடையேசிறுபான்மையும் நிகழும்.நாய் + கால் = நாய்க்கால் – மிகுதல் (ககரம் மிக்கது)மரம் + வேர் = மரவேர் – குன்றல் (மகரம் கெட்டது)(தொ. எ. 108, 109 நச்.)நன்னூலார் இத்திரிபை விகாரம் எனப் பெயரிட்டு, மெய்பிறி தாதலைத்திரிதல் என்றும், மிகுதலைத் தோன்றல் என்றும், குன்றலைக் கெடுதல்என்னும் பெயரிட்டு, தோன்றல் – திரிதல் – கெடுதல் – என விகாரம்மூவகைப்படும் என்பர். (நன். 154)இவை ஒரு புணர்ச்சிக்கண் ஒன்றே வருதல் வேண்டும் என்ற வரையறை யின்றிஇரண்டும் மூன்றும் வருதலுமுண்டு.எ-டு : மக + கை > மக + அத்து + கை > மக + த்து + கை = மகத்துக்கை‘அத்து’த் தோன்றி, அதன் அகரம் குன்ற, வருமொழிக் ககரம் மிக்கது.(தொ. எ. 219 நச். உரை)மகம் + கொண்டான் > மகம் + அத்து + ஆன் + கொண்டான் = மகத்தாற் கொண்டான்.நிலைமொழியீற்று மகரஒற்றுக் குன்ற, அத்தும் ஆனும் மிக, ஆனின் னகரம்றகரமாக மெய் பிறிதாயிற்று. (331 நச்.)

திரிபு அணி (2)

மடக்கணியில் சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அது திரிபு மடக்காம். ‘திரிபுஅந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.எ-டு : ‘திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றனையால்தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன; தாழ்பிறப்பின்உருவேங் கடத்துக்(கு) உளத்தே இருந்தன; உற்றழைக்கவருவேங் கடத்தும்பி அஞ்சலென்(று) ஓடின மால்கழலே.’(திருவேங்கடத்.)முதலடி – திருவேங்கடத்து; இரண்டாமடி – தரு வேம் கடத்து; மூன்றாமடி- உருவேங்கள் தத்துக்கு; நாலாமடி – ‘வரு வேம் கட(ம்) தும்பி.திருமாலின் பாதங்கள் திருவேங்கடமலைமீது நிலைபெற்று நின்றன;இராமாவதாரத்தில், தாய் கைகேயியால், மரங்கள் வெப்பத்தில் கரியும்காட்டில் தரைமீது நடந்தன. தாழ்ந்த பிறப்பினால் இம்மானுடஉருவங்களையுடைய எம் துன்பங் களுக்காக அவற்றைப் போக்கவேண்டி எம்உள்ளத்தில் இருந்தன; பெருகும் வெப்பமான மதத்தையுடைய கசேந்திர னாம்யானை அபயக் குரல் எழுப்பிப் பொருந்தி அழைக்கவே “அஞ்சற்க!” என்று கூறிஓடி (அதனைக் காத்த)ன.

திரிபு எனப்படாத புணர்ச்சிகள்

திரிபு எனப்படாத புணர்ச்சி இயல்புபுணர்ச்சியாம். இதன்கண்,இயல்பாகப் புணர்தலொடு, தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈற்றின்முன் வருமொழிஉயிர் வரின், நிலைமொழியீற்று ஒற்று இரட்டுதலும், நிலைமொழியீற்றுஉயிர்க்கும் வருமொழிமுதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் கோடலும்,நிலை மொழியீற்று மெய்மீது வருமொழி முதல் உயிரேறி முடித லும் ஆகியமூன்றும் அடங்கும்.எ-டு : அவன் + கொடியன் = அவன் கொடியன் – இயல் பாகப்புணர்தல்.பல் + அழகிது = பல்லழகிது – ஒற்று இரட்டல்.விள + அரிது = விளவரிது – உடம்படுமெய் தோன்றல்.அவள் + அழகியள் = அவளழகியள் – மெய்மேல் உயிரேறி முடிதல்.“வருமொழி உயிர்க்கணமாயின் ஒற்று இரட்டியும், உடம்படு மெய்பெற்றும், உயிரேறியும் முடியும் கருவித்திரிபுகள் திரிபு எனப்படா;இவ்வியல்பின்கண்ண.” (தொ. எ. 144 நச். உரை)

திரிபுடையவற்றில் மரபுநிலை திரிந்தன

சார்பெழுத்து மூன்று என்று தொல். கூறியிருப்ப, சிலஉயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் கூட்டிச் சார்பெழுத்தாகஎண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர் திணை என்னாது விரவுத்திணை எனச்சாதித்தலும், பாலைக்கு நிலம் பகுத்துக்கோடலும் போல்வனதிரிபுடையவற்றில் மரபுநிலை திரிந்தன. (சூ. வி. பக். 8,9)

திரிபுடையவாயினும் மரபுநிலைதிரியாதன

தொல்காப்பியத்தில் செய்யுளியலுள் கூறப்பட்ட ஒற்றள பெடையை, அளபெடைஅதிகாரப்பட்டமை நோக்கி, நன்னூல் எழுத்தியலில் உயிரளபெடையைச் சாரக்கூறுதலும், தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈற்றுநிலை என்னும் நால்வகையிடங்களைத் தனிநிலையை முதல்நிலையில் அடக்கி மூவிடமாகக் கூறுதலும்,தங்கை நங்கை எங்கை, தஞ்செவி நஞ்செவி எஞ்செவி, தந்தலை நந்தலை, எந்தலை -இவற்றில் மகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிகும் என்று தொல். கூறவும்,நன்னூல் மகரமே இனமெல்லெழுத்தாகத் திரியும் என்று கூறுதலும், அகம்என்பதன்முன் கை வரின், அகரம் நீங்கலாக, ஏனைய எழுத்துக்கள் கெட்டுமெல்லெழுத்து மிகும் என்று தொல். கூறவும், இடையிலுள்ள ககர உயிர்மெய்கெட மகரம் திரிந்து முடியும் என்று நன்னூல் கூறுதலும், ஒன்று இரண்டுஎன்பனவற்றின் ஈறுகெட நின்ற ஒன் – இரண் – என்பனவற்றின் ஒற்று ரகரம்ஆகும் எனவும், இரர் என்பதன் ரகர உயிர்மெய் கெடும் எனவும் தொல்.கூறவும், நன்னூல் ஒன்று என்பதன் னகரம் ரகரமாகத் திரிய, இரண்டு என்பதன்ணகர ஒற்றும் (ரகர உயிர்மெய்யிலுள்ள) அகர உயிரும் கெடும் என்றலும்,நாகியாது என்புழிக் குற்றியலுகரம் கெட அவ்விடத்துக் குற்றியலிகரம்வரும் என்று தொல். கூறவும், நன்னூல் குற்றியலுகரமே குற்றியலிகரமாகத்திரியும் என்ற லும், நெடுமுதல் குறுகி நின்ற மொழிகளாகிய தன் தம் என்எம் நின் நும் என்ற நிலைமொழிகள் அகரச்சாரியை பெறும் என்று கூறிப் பின்‘அது’ உருபு வரும்போது அவ்வுருபின் அகரம் கெடும் என்று தொல். கூறவும்,நன்னூல் ‘குவ்வின் அவ்வரும்’ என அகரச்சாரியை நான்கனுருபிற்கே கோடலும்,தொல்காப்பியம் கூறும் அக்குச் சாரியையை நன்னூல் அகரச் சாரியைஎன்றலும், தொல். கூறும் இக்குச் சாரியையும் வற்றுச்சாரியையும் நன்னூல்முறையே குகரச் சாரியை அற்றுச் சாரியை என்றலும், தொல். இன்சாரியைஇற்றாகத் திரியும் என்று கூறவும், நன்னூலார் இற்று என்பதனைத் தனிச்சாரியையாகக் கோடலும், தொல். அ ஆ வ என்பன பலவின் பால் வினைமுற்றுவிகுதி என்னவும், நன்னூல் வகரத்தை அகரத்துக்கண் அடக்கிப் பலவின்பால்விகுதி அ ஆ என்ற இரண்டே என்றலும், தொல். அகம் புறம் என்று பகுத்தவற்றைப் பின்னூல்கள் அகம் – அகப்புறம் – புறம் – புறப்புறம் – எனநான்காகப் பகுத்தலும், தொல். கூறும் வெட்சித்திணை உழிஞைத்திணைகளின்மறுதலை வினைகளை வீற்று வீற்றாதலும் வேற்றுப்பூச் சூடுதலும் ஆகியவேறுபாடு பற்றிப் பின்னூல்கள் வேற்றுத் திணையாகக் கூறுதலும் போல்வன.வேறுபடினும், புணர்ச்சி முடிபும் சொல்முடிபும் பொருள் முடிபும்வேறுபடாமையின், மரபுநிலை திரியாவாயின. இவ்வுண்மை அறியாதார்புறப்பொருளைப் பன்னிரண்டு திணையாக் கூறும் பன்னிருபடலம் முதலியவற்றைவழீஇயின என்று இகழ்ந்து கூறுப. (சூ. வி. பக். 7, 8)

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருக்குருகா மான்மியம் முதலியநூல்கள் இயற்றிவர்; ஆழ்வார் திருநகரி என்னும் ஊரினர். இவர்காலம் 16ஆம் நூற்றாண்டு.

திருக்குறுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் இயற்றியதும், நாலாயிர திவ்விய பிரபந்தத்துள்அடங்கியதுமான பிரபந்தம்.அறுசீர்த் தாண்டகங்களாலாகிய தேவாரப் பதிகங்கள். (L)

திருக்கோலக் கவிதை

தலைவன் தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் திறத்தைச் சிறப்பித்துப்பாடும் பிரபந்தம். இது 96 வகைப் பிரபந்தங் களின் வேறுபட்டது. (இ.வி.பக். 505)

திருட்டுக்கவி

1. சோர கவி; ‘திருட்டுக் கவிப்புலவரை’ (தமிழ் நா. 221). பிறர்கவியைத் திருடித் தன்னுடையதாகப் பாடுபவன்; ‘கள்ளக் கவி’எனவும்படும். (L)

திருதி

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள்,அடிதோறும் பதினெட்டு எழுத்தாக வரும் விருத்தம் இது. இவ்வாறு எழுத்துஎண்ணுகின்றுழி ஒற்றும் ஆய்தமும் கணக்கிடல்பெறா.எ-டு : ‘கூரெயிற்றி னேர்தோற்ற முகைவென்று சீர்கொண்டு கொல்லைமுல்லைநேரிடைக்கு முன்தோற்ற பகைகொண்டு வந்துத னீல மேவுங்காரளக்கு நாளென்று கடனீந்து வார்சொன்ன கால மன்றாற்பேரமர்க் கற்றமன மேகுகின்ற வாறென்னை பேதை மாதர்.’ (வீ. சோ.139)

திருநாமப்பாட்டு

இயற்றியவர் பெயர், பயன் முதலியன கூறும் பதிக இறுதிப் பாடல்.

திருநெடுந் தாண்டகம்

1. நாலாயிர திவ்விய பிரபந்தத்துள் திருமங்கையாழ்வார் அருளிய ஒருபகுதி; 30 பாசுரங்களை உடையது.2. எண்சீர்த் தாண்டகத்தால் ஆகிய தேவாரப் பதிகங்கள். அப்பர் அருளியஆறாம் திருமுறை எடுத்துக்காட்டாம்.

திருப்பணிமலை

கோயில் திருப்பணிகளைக் கூறும் பாடல்நூல்.

திருப்பதிகம்

1. பெரும்பாலும் பத்து அல்லது பதினொன்று (மிக அருகியே பன்னிருபாடல்கள் வரும்) பாசுரங்களைக் கொண்டதாய்த் தேவாரத்தில் உள்ளது போலத்தெய்வத் தைப் புகழ்ந்துபாடும் பாடல் தொகை.2. புத்தன் அருமை பெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி.பா.சௌத். 2, ஞானம்.) (L)

திருப்பல்லாண்டு

1. நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒருபிரபந்தம்.2. சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். (L)

திருப்பாட்டு

1. கடவுளைப் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்; ‘இவ் விரண்டுதிருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம்’ (கோவை. 86 உரை)2. தேவாரம் (தொ. செய். 149 நச்.)3. வசைச்சொல். (L)

திருப்பாற்கடல்நாதன் கவிராயர்

முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூற்குப் பாயிரம் செய்தவர்.“தன்னாசிரியன் முதலாம் ஐவருள் இந்நூற் (சிறப்புப்) பாயிரம் செய்தார்தகும் உரைகாரராகிய திரு நெல்வேலி மகாவித்துவானாகிய திருப்பாற்கடல்நாதன் கவி ராயர்” – என வருதலின், இவரே இந்நூற்கு உரையாசிரியரும்ஆவார். இவரது காலம் 19ஆம் நூற்றாண்டு.

திருப்புகழ்

1. தெய்வப் புகழ்ச்சியான பாடல்; ‘தொண்டர் தங்கள் குழாம் குழுமித்திருப்புகழ்கள் பலவும் பாடி’ (திவ். பெருமாள். 1-9)2. அருணகிரிநாதர் முருகக்கடவுள் மேல் பாடிய சந்தக் கவிகளால்ஆகிய நூல். (L)

திருப்பூவல்லி

மகளிர் பூக்கொய்தல் பற்றிக் கூறுகின்ற திருவாசகப்பகுதி; 20பாடல்களையுடைய பதின்மூன்றாம் பகுதி. (L)

திருமஞ்சனக்கவி

கோயில் திருமூர்த்திகளின் அபிடேகக் காலத்திற் சொல்லும் கவி.(கோயிலொ. 68) (L)

திருமந்திரம்

1. சிவன், திருமால் இவர்களுக்கு உரியவான பஞ்சாக்கர அட்டாக்கரங்கள்;‘திருமந்திரமில்லை சங்காழி இல்லை’ (திருவேங்கடத்தந். 99)2. திருமூலநாயனார் அருளிச்செய்த மூவாயிரம் பாடல் களைக்கொண்டதொரு நூல். சைவத் திருமுறைகளில் பத்தாவதாக உள்ளது. (L)

திருமுகப்பாசுரம்

1. தான் அரசன் முதலியோரிடம் பரிசு வேண்டிப் புலவன் அவர்களிடம்எழுதி விடுக்கும் ஓலைப்பாட்டு; சீட்டுக்கவி, ஓலைத்தூக்கு,ஓலைப்பாசுரம் எனவும்படும். ‘சீட்டுக் கவி’ காண்க.2. மதுரை ஆலவாயின் அவிர்சடைக் கடவுள், சேரமான் பெரு மாள்நாயனாருக்கு, பாணபத்திரன் வறுமையைப் போக்கிப் பெருநிதியம்கொடுக்கவேண்டும் என வரைந்த பாடல். இது பதினோராம் திருமுறையில்முதற்கண் உள்ளது. (L)

திருமுகம்

1. பெரியோர் விடுக்கும் முடங்கல்; ‘உலகு தொழுதிறைஞ் சும்,திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி’ (சிலப். 8 – 53)2. அரசனது சாசனம்; ‘திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச்சொல்வது’ (ஈடு. 1-4-4)3. தெய்வ சந்நிதி. (L)

திருமுறை

மூவர் தேவாரம்; திருவாசகம், திருக்கோவையார்; திரு விசைப்பா,திருப்பல்லாண்டு; திருமந்திரம்; திருமுகப்பாசுரம் முதலியன;பெரியபுராணம் – என்னும் இச்சைவநூல்களது வைப்பு முறை. மூவர் தேவாரமும்முதல் ஏழு திருமுறையுள் அடங்கும். பிற, முறையே எட்டாவது, ஒன்பதாவது,பத்தாவது, பதினோராவது, பன்னிரண்டாவது திருமுறை யாம். மூவர்தேவாரத்துள் சம்பந்தர் அருளியவை முதல் மூன்று திருமுறையாம்;திருநாவுக்கரசர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறையாம்;சுந்தரர் அருளியவை ஏழாம் திருமுறையாம்.

திருவகுப்பு

சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை;எ-டு : ‘அருணகிரி நாதர் திருவகுப்பு’. ‘வகுப்பு’க்காண்க. (L)

திருவருட்பா

19ஆம் நூற்றாண்டினராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தோத்திரப்பாடல்கள் ஆறு திருமுறையாக அடங் கிய நூல். இறைவன் திருவருளால் பாடப்பெற்றமையின் சுவாமிகள் தம் நூற்கு இப்பெயர் இட்டார்.

திருவலங்கல் திரட்டு

பாம்பன் சுவாமிகள் என்னும் குமரகுருதாச சுவாமிகளின் படைப்பாகிய பலபாடல்களின் தொகுப்புநூல் இது. இஃது இறைவழிபாட்டுச் செய்யுள்கள்பலவற்றைக் கொண்டது, இரண்டு காண்டங்களாக உள்ளது. இதன் இரண்டாம் காண்டம்‘பல் சந்தப் பரிமளம்’ என்ற பெயரொடு முருகப் பெருமானைப் பாடும் பாக்கள்பாவினங்கள் சித்திரகவிகள் இவற்றைக்கொண்டு 532 செய்யுள்களில்அமைந்துள்ளது. சிதம்பரச் செய்யுள்கோவை, மாறன் பாப்பாவினம் போலயாப்புநூல்களின் செய்யுள்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் பாடல்களையுடையது இந்நூல்.

திரையக் காணம்

வெண்பா, விருத்தம் இவற்றால் செய்திகளை உய்த்துணர நிரல்நிறையாகஅமைத்துப் பாடப்பட்ட கோள்கள் பற்றிய பழையநூல். (யா. வி. பக். 386)

திவாகரம்

இதுபோது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிக்க தொன்மை யுடையது,அம்பர்ச் சேந்தன் என்பானது ஆதரவால், திவாகர முனிவர் இயற்றியது;ஆக்கியோனால் பெயர் பெற்றது. தெய்வப்பெயர்த் தொகுதி முதலாகப் பலபொருட்கூட்டத் தொரு பெயர்த்தொகுதி ஈறாக இதனகத்துப் பன்னிரண்டு தொகுதிகள் உள.நூல் தொடக்கத்திலுள்ள காப்பு விநாயகனைத் தொழுவது. நூற்பா யாப்பாக நூல்நிகழ்கிறது.

தீக்கணம்

கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும்.‘புளிமாங்கனி’ தீக்கணம் ஆம். இதற்குரிய நாள் கார்த்திகை; இதன் பயன்நோய். ஆதலின், அகலக் கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும்பொருத்தம் பத்தனுள், இத்தீக்கணம் ஆகாதது என்று விலக்கப்படுவது. (இ.வி. பாட். 40)செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் ‘நிரை நேர் நிரை’ எனவருவதும் ஆகிய செய்யுட்கணம். (திவா. பக். 299)

தீக்கவி

பிரபந்தத்தின் முதற்பாடல் முதல் சீர்க்கு ஓதிய பத்துப்பொருத்தங்களில் ஏற்பனகொண்டு சான்றோர் வகுத்த வழியின் வழுவாமல் பாடும்கவி நற்கவியாகும். அல்லாதன எல்லாம் தீக்கவியாகும். தீக்கவியினைப்பெற்றவனுக்குச் செல்வம் போம்; நோயாம்; சுற்றம் அறும்; மரணம் உறும்;கால்கள் சோரும். தீக்கவியைத் தெய்வங்கள் பற்றிப் பாடிய புலவனுக்கும்இத்தீங்கு உண்டாகும். (சிதம். பாட். மர. 20)

தீட்டுக்கவி

சீட்டுக்கவி; ‘அந்தத் தீட்டுக்கவி காட்டுக்கு எறித்த நிலவாகிப்போம்’ (தமிழ்நா. 255) (L)

தீத்தானம்

தலைவனது இயற்பெயரின் நான்கு ஐந்தாம் எழுத்துக்கள் பிரபந்த முதலில்வரப் பாடுதலாகிய கேடு விளைக்கும் செய்யுள்தானம். (பிங். 1347)

தீய அவை

அவையினது திறத்தை அறியாதவர், ஆராய்ந்து பொருந்த அமைதியாகச்சொல்லாதவர், குற்றமின்றிச் சொல்லமாட் டாதவர், அவ்வாறு கூற நாணாதவர்,சொற் பொருட்சுவை யுணரமாட்டாதவர், கலைநுட்பத்தைத் தெரியாதவர்,அஞ்சாதவர், செருக்குடையோர் இன்னோர் குழீஇயுள்ள அவை தீய அவையாம்.(வெண்பாப். பாட். பொ. 11)குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் அவை குறைஅவையும்தீஅவையுமாம். (இ. வி. பாட். 176 உரை)

தீர்க்க சந்தி

நிலைமொழியீற்று அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் வரு மொழி முதல் அகரஆகாரங்களில் ஒன்று வந்தால் (அவை யிரண்டும் கெட இடையே) ஓர் ஆகாரமும்,நிலைமொழி யீற்று இகர ஈகாரங்களில் ஒன்றன்முன் வருமொழி முதல் இகரஈகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஈகாரமும்,நிலைமொழியீற்று உகர ஊகாரங் களில் ஒன்றன்முன் வருமொழி முதல் உகரஊகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஊகார மும்,தோன்றுதல் தீர்க்க சந்தியாம். (நிலைப்பத ஈறும் வருமொழி முதலும் ஆகியஉயிர்கள் கெடவே, தீர்க்க சந்தியாக நெட்டுயிர் தோன்றும்).எ-டு : வேத + ஆகமம் = வேதாகமம் (குள + ஆம்பல் = குளாம்பல்);பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்; சிவ + ஆலயம் = சிவாலயம்; சரண + அரவிந்தம்= சரணார விந்தம்; சேநா + அதிபதி = சநாதிபதி; சுசி + இந்திரம் =சுசீந்திரம்; கிரி + ஈசன் = கிரீசன்; குரு + உதயம் = குரூதயம்; தரு +ஊனம் = தரூனம் (தொ. வி. 38 உரை)அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் அகர ஆகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஆகாரமாகும்.எ-டு : பத + அம்புயம் = ப தா ம்புயம் : சேநா + அதிபதி = சேநாதிபதிஇகர ஈகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் இகர ஈகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஈகாரமாகும்.எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; கரி + இந்திரன் =கரீந்திரன்உகர ஊகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் உகர ஊகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஊகாரமாகும்.எ-டு : குரு + உபதேசம் = குரூபதேசம்; சுயம்பூ + உபதேசம் =சுயம்பூபதேசம். (மு. வீ. மொழி. 36 -38)

து + கொற்றா: வல்லெழுத்து மிகல்வேண்டாமை

து + கொற்றா = துக்கொற்றா என வலிமிகும் என்பர் சங்கர நமச்சிவாயர்.‘நொ து முன் மெலி மிகலுமாம்’ என்ற உம்மைக்கு, “இயல்பாதலே யன்றி மெலிமிகுதலுமாம்” என்று பொருள் செய்ய வேண்டுமே யன்றி, வலி மிகலுமாம் என்றுபொருள் கொள்ளுதல் சாலாது. நொ கொற்றா, து கொற்றா என்பன இடையேவல்லெழுத்து மிகாது வரின் ‘வாழைபழம்’ போலாகும் ஆதலின் அது பொருந்தாதெனின், வாழைப்பழம் என்பது தொகைச்சொல் ஆதலின் ஒரு சொல் நீர்மைத்து.ஆயின் இத்தொடரோ பிளவுபட்டிசைப்பது ஆதலின் மிகாது வருதல் இதற்குஅமையும் என்பது. (எ. ஆ. பக். 113)

தும்பி பறத்தல்

மகளிரது விளையாட்டு வகை; உந்தி பறத்தல் போல்வது. மகளிர்பாடிக்கொண்டே அயரும் இவ்விளையாட்டில், அவர் பாடுவனவாக வரும் பாடல்கள்‘தும்பி பற’ என ஈற்றடி இரண்டும் முடிவு பெறுவவாக அமையும்.(திருவாசகத்துள் 14ஆம் பகுதியுள் இப்பாடல்களைக் காணலாம்.)

தும்பிப் பாட்டு

வண்டினை விளித்தலை ஈற்றில் கொண்டு அமையும் ‘கோத் தும்பி’ என்றதலைப்பில் அமைந்த இப்பாடல்கள் கலிப்பாக் களைப் போலக் குறில் அகவல்ஏந்திசை வண்ணத்தில் அமைவனவாம். இப்பாடல்களது தொகையாக அமைந்த‘தும்பிப்பாட்டு’ இறந்துபட்டதொரு பண்டைய நூல். (யா. வி. பக். 417)

தும்பை மாலை

தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து பாடும்பிரபந்த வகை. (தொ. வி. 283)

துயிலெடைநிலை

அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடும் பிரபந்தவிசேடம். (சது.) (L)

துயில் எழுமங்கலம்

பாணரும் விறலியும் முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. (கோவை. 375 பேரா.)இதனைத் துயிலெடை நிலை என்னும் தொல்காப்பியம். (பொ. 91 நச்.)

துறைக்கவி

அகப்பொருள் துறைகளேயன்றிக் கலம்பகம் முதலிய சிறு பிரபந்தங்களில்அமையும் மறம், களி, தூது, வயிரபம், சம்பிரதம், தவசு, குறம், கணிகம்முதலிய செய்திகள் பற்றிய பாடல்கள் எல்லாம் புறப்பொருள் பற்றியதுறைகளாதலின் இவை துறைக்கவி என்று கொள்ளப்படுகின்றன.வயிரபம் – வலிமை வாய்ந்த புயங்களின் சிறப்புக் கூறும்‘புயவகுப்பு’ என்ற கலம்பகத் துறை போலும்.கணிகம் – மிகக் குறுகிய நேரத்தில் தம் சித்துக் களால் புதுமைதோற்றுவித்தலைக் கூறும் ‘சித்து’ என்ற கலம்பக உறுப்பு.ஏனைய மறம் போல்வன கலம்பகங்களில் பெருவரவினவாக உணர்த்தப்படும்துறைகளாம். (வீ. சோ. 183)

துறைச் சுவடி

நீர்த்துறைகளில் இருந்து படிக்கப்படும் புராண ஏடு. ‘ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலேஎழுதியிட்டு வைத்தும்’ (ஈடு. 6 – 10 – 10) (L)

துறைப்பாட்டு

அகப்பொருள் புறப்பொருள் துறைகளைக் குறித்து வரும் செய்யுள். (இ.வி. 603 உரை)தாம் சொல்ல விரும்பும் கருத்தை நேரிடையாகக் கூறாமல் அகப்பொருள்புறப்பொருள் செய்திகள் அமைந்த பாடல் களாக இயற்றி அவற்றின் வாயிலாகத்தாம் கருதுவதைக் கவிஞர்கள் பெறப்படவைக்கும் வகையில் அமையும்பாடல்கள்.இத்தகைய துறைப்பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந் தத்துள் நிரம்பவந்துள்ளன.

துவரைக்கோமான்

இடைச்சங்கப்புலவருள் ஒருவர். (இறை. அ. 1 உரை)

துவாசி

சுழிகுளம் என்ற சித்திரகவியை எவ்வெட்டு அறைகள் கொண்ட நான்கடிகளாகக்கட்டங்களில் அமைத்து, முதல் வரிசை எட்டாம் வரிசை – இரண்டாம் வரிசைஏழாம் வரிசை, மூன்றாம் வரிசை ஆறாம் வரிசை, நான்காம் வரிசை ஐந்தாம்வரிசை – என்ற இரண்டிரண்டு பகுப்புக்களையும் இணைத்துக் காண, அப்பாடலேமீண்டும் வருமாற்றைக் காணலாம். இச் சுழிகுளத்தின்கள் 1, 8; 2, 7; 3,6; 4, 5 – என்ற இரண்டு வேறு பட்ட வரிசைகளையும் இணைத்து நோக்குதல்துவாசி எனப்பட்டது.துவாசி – இரண்டு வேறுபாடு. (வீ. சோ. 181 உரை)

தூக்கிற் சுட்டு நீடல் ‘நீட்டும்வழிநீட்டல்’ ஆகாமை

அ + வயினான, இ + வயினான, உ + வயினான, அ + இருதிணை = ஆவயினான,ஈவயினான, ஊவயினான, ஆயிருதிணை என வரும்.இவ்வாறு செய்யுட்கண் சுட்டு நீளுதல் இருமொழிப் புணர்ச்சிக்கண்ணேயேவரும். ஆதலின் இஃது அடிதொடை நோக்கி வரும் ‘நீட்டும்வழி நீட்டல்’என்னும் விகாரம் ஆகாமை உணரப்படும்.எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)இதன்கண், ‘பொத்தறார்’ எனற்பாலது மேலடித் ‘தீத் தொழிலே’ என்ற எதுகைநோக்கி முதல் ஒகரம் நீண்டது. ஆதலின் இவ்விகாரம் புணர்மொழிக்கண் அன்றிஒரு மொழிக் கண்ணேயே நிகழ்வது என்க. (இ. வி. எழுத். 80 உரை)

தூசம் கொளல்

ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதனீறே முதல் எழுத் தாக மற்றொருவெண்பாப் பாடுவது. (வீ. சோ. 181 உரை)எ-டு : ‘கண்ணவனைக் காண்கஇரு காதவனைக் கேட்கவாய்பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க – எண்ணிறைந்தநெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்கையொத்து நேர்கூப்பு க’ (பு. வெ. மா. கடவுள். 2)கடிது மலர்ப்பாணம் கடிததனின் தென்றல்கொடிது மதிவேயும் கொடிதால் – படிதழைக்கத்தோற்றியபா மாறன் துடரியில்மான் இன்னுயிரைப்போற்றுவதார் மன்னாசொல் க. (மா. அ. பாடல். 563)என முதல் வெண்பாவின் ஈற்றெழுத்தே முதலெழுத்தாக மற்றொரு வெண்பாப்பாடுவது. (இப்பாடல் ஈற்றடி சிறிது மாற்றப்பட்டுள்ளது.)ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதன் ஈற்றெழுத்தே ஈறாக, முதலெழுத்தேமுதலாக, மற்றொரு வெண்பா ஈற்றினின்றும் மேற்பாடுவது. (யா. வி. பக்.538)மேலை எடுத்துக்காட்டுள் இவ்வமைதியையும் காண்க.

தூணி என்ற பெயர் புணருமாறு

தூணி என்ற அளவுப்பெயர் நிலைமொழியாய்த் தன்னுடைய செம்பாதிஅளவிற்றாகிய பதக்கு என்ற பெயரோடு உம்மைத் தொகைப்படப் புணருங்கால்,பொதுவிதிப்படி (தொ. எ. 164 நச்.) ஏகாரச் சாரியை பெற்றுத் தூணியேபதக்கு என்று புணரும். இஃது அடையடுத்து இருதூணிப் பதக்கு என்றாற்போலவும் வரும்.தூணிக் கொள், தூணிச் சாமை, தூணித் தோரை, தூணிப் பாளிதம்;இருதூணிக்கொள், தூணித்தூணி முதலியனவும் வருமொழி வன்கணம் மிக்குப்புணரும்.சிறுபான்மை இக்குச்சாரியை பெற்றுத் தூணிக்குத் தூணி எனவும்,இருதூணிக்குத் தூணி எனவும் இன்னோரன்னவாக வருதலும் கொள்க. தூணிப்பதக்கு- உம்மைத் தொகை. (தொ. எ. 239 நச். உரை)

தூணிக்குத் தூணி

‘தூணித் தூணி’ எனத் தூணி என்னும் அளவுப் பெயர் தனக்கு முன்னர்த்தான் வரின் வல்லெழுத்து மிகும்; தூணியும் தூணியும் என உம்மைத்தொகை.தூணிக்குத் தூணி- என இக்குச்சாரியை பெறுதலும் கொள்க என்றனர் உரையாசிரியன்மார். அது ‘நாளுக்கு நாள்’ என்றாற் போலத் தொறு என்னும் பொருள்படநின்ற இடைச்சொல் ஆதலின், சாரியை எனப்படாது என்க. (தொ. எ. 239 ச.பால.)

தூது

கலிவெண்பாவினாலே, பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணைஇருபாலினையும், கேளா மரபின வற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னம்கிளி வண்டு மயில் குயில் முதலிய அஃறிணைப் பொருள்களையும் இளைய கலாம்முதிய கலாம் இவற்றின் துனி நீக்குதற்கு வாயிலாக விடுத்தல் தூதுஎன்னும் பிரபந்தத்தின் இலக்கண மாம். (இ. வி. பாட். 114)

தெம்மாங்கு

தேம் பாங்கு எனவும்படும்; தென்னாட்டில் நாட்டுப்புறத்தவர் வயல்முதலியவற்றில் பணியாற்றும்போது அப்பணியிடைக் களைப்புத்தோற்றாமலிருக்கப் பாடுவதோர் இசைப் பாட்டுவகை. (L)

தெய்வ வணக்கம்

நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து. ‘தெய்வ வணக்கமும்செயப்படு பொருளும்’. (யா. க. பாயிரம். 1 உரை) (L)

தெய்வக் காப்பு

பாட்டுடைத் தலைவனைத் திருமால் முதலாகிய தெய்வங்கள் காக்குமாறுபாடும், பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துள் முதலாக நிகழும் பகுதி.பத்துப் பாடல்களுக்குக் குறையாது ஆசிரியச்சந்த விருத்தத்தால்இக்காப்புப்பருவம் நிகழும். (திவா. பக். 309)

தெய்வச்சிலையார்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரையிட்ட உரை யாசிரியருள்ஒருவர். சில நூற்பாக்களுக்கும் அவற்றுட் சில சொற்களுக்கும் இவர்காணும் உரை, பிறர் உரையினும் நுட்பம் வாய்ந்தமை அறிந்தின்புறத்தகும்.எடுத்துக் காட்டாக ‘காலம் உலகம்’ (சொல். 55) என்னும் சூத்திரத்துள்இவர் சொற்களுக்கு விளக்கம் கூறும் நயம் காண்க. ‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய’ என்றதனான், இரண்டு சொல்லே தொகையாயினவாறு தோன்ற, ‘உலகம்உவப்ப… கணவன்’ (முருகு. 1 – 6) என்பதனை ஒரு சொல் நடை ஆக்கிக்காட்டும் உரை (சொல். 407) நயமுடையது. ‘கடிசொல் இல்லை’ (441) போன்றசூத்திரங்களுக்கு இவர் உரை பிறர் உரையின் வேறுபட்டுச் சிறந்தமைதெளிவு. ‘முன்னத்தின் உணரும்’ (448) என்றற்கு இவர் எடுத்துக்காட்டுவதுதெளி வானதொன்று. இன்ன நயம்பல இவருரையிற் காணலாம். இவர் காலம்நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது; என்ப 14 ஆம் நூற்றாண்டின்தொடக்கம் ஆதல் கூடும். ஆனால் இவர் உரை நச்சினார்க்கினியருக்குக்கிட்டவில்லை.

தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள்

நட முதலாக அஃகு ஈறாகக் கிடந்த எல்லா வினைச்சொற் களும், உயிரும்ஒற்றும் குற்றுகரமும் ஆகிய இருபத்து மூன்று ஈற்றினவாய்ப் படுத்தல்ஓசையான் அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினை மாத்திரமே உணர்த்திநிற்கும் தன்மை யுடையன. இவை இயற்றும் வினைமுதலான் நிகழ்த்தப்படும்தெரிநிலைவினைமுற்றுப் பகுபதத்தினுடைய பகுதிகள். குற்றுகரத்தை வேறுபிரித்ததனால், போக்கு – பாய்ச்சு – ஊட்டு – நடத்து – எழுப்பு – தீற்று- இத்தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும் கொள்ளப்படும். (இ. வி. எழுத்.43 உரை)

தெள்ளேணம்

கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகை. ‘நாம் தெள்ளேணம்கொட்டாமோ’ (திருவா. 11 – 1) (L)

தெவ் என்ற சொல் புணருமாறு

தெவ் என்ற உரிச்சொல் படுத்தல் ஓசையான் பெயராயவழி இன்சாரியை பெற்றுஉருபேற்கும்.எ-டு : தெவ்வினை, தெவ்வினொடு (தொ. எ. 184 நச்.)தெவ் என்பது அல்வழி, வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரின்உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின்உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ஒற்று இரட்டுதலும்பெற்றுப் புணரும். வருமொழி மகரம் வரின், ஈற்று வகரம் மகரம் ஆதலும்உண்டு.எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வுக்கடுமை; தெவ்வு நீண்டது,தெவ்வுநீட்சி; தெவ்வு வலிது, தெவ்வுவலிமை; தெவ் யாது, தெவ்யாப்பு;தெவ் வரிது, தெவ்வருமை; (வகரம் இரட்டுதல்); தெவ்வு மன்னர், தெம்மன்னர் (தொ. எ. 382, 483 நச். உரை)தெவ் என்பது தொழிற்பெயர் போல உகரச்சாரியை பெற்று அல்வழி வேற்றுமைஎன்ற இருவழியும் வருமொழி வன்கணம் மென்கணம் இடைக்கணம் என்றமுக்கணத்தொடும் புணரும். வருமொழி முதலில் மகரம் வருமிடத்தே தெவ்என்பதன் வகரம் உகரம் பெறாமல் மகரமாகத் திரிந்து முடிதலுமுண்டு.எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வு நீண்டது, தெவ்வு வலிது; -அல்வழிதெவ்வுக்கடுமை, தெவ்வுநீட்சி, தெவ்வுவலிமை – வேற்றுமைதெவ் + மன்னர் = தெம்மன்னர் (நன். 236)வருமொழி முதலில் யகரம் வரின் இயல்பாகப் புணர்தலும் இகரம் பெறுதலும்ஆம்.எ-டு : தெவ் + யாது = தெவ்யாது, தெவ்வியாது – அல்வழிதெவ் + யாப்பு = தெவ்யாப்பு, தெவ்வியாப்பு – வேற்றுமை (நன்.206)

தேசிகமாலை

அந்தாதித் தொடையால் பன்மணிமாலை, மும்மணிக் கோவை, உதயணன் காதை என்பனபோல அமைந்த பழந்தமிழ்த்தொடர்நிலைச் செய்யுள் தொகுப்பாம் இது. (யா. வி.பக். 196)

தேசிகம்

தேசிகம் என்பது திசைச்சொல்லாம்.எ-டு : தாயைக் குறிக்கத் ‘தள்ளை’ என வழங்கும் சொல்; தந்தையைக்குறிக்க ‘அச்சன்’ என வழங்கும் சொல். (மு. வீ. மொழி. 33)

தேன் என்ற நிலைமொழி புணருமாறு

தேன் என்பது நிலைமொழியாக, வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாக வரின்,திரிபு உறழ்ச்சி பெறுதலும், னகரம் கெட்டு வல்லெழுத்து மிகுதலும் ஆகியஇருநிலையும் உடைத்து.எ-டு : தேன் + குடம் = தேன்குடம் (இயல்பு), தேற்குடம் (திரிபு);தேன்குடம் – தேற்குடம் – என விகற்பித்து வருதல் உறழ்ச்சி; தேக்குடம்:(ஈறுகெட, வலி மிகுதல்)சிறுபான்மை னகரம்கெட்டு வருமொழி வல்லெழுத்துக்கு இனமானமெல்லெழுத்து மிகுதலும் உடைத்து.எ-டு : தேன் + குடம் = தேங்குடம்வருமொழிமுதல் மெல்லினம் வரின் நிலைமொழியாகிய தேன் என்பதன்னகரஒற்றுக் கெடுதலும் கெடாமையும் உடைத்து.எ-டு : தேன் + ஞெரி = தேஞெரி, தேன்ஞெரி; தேன் + மொழி = தேமொழி,தேன்மொழி.சிறுபான்மை னகரம் கெட்டு வருமொழி மெல்லெழுத்து மிகுதலும்மிகாமையும் உடைத்து.எ-டு : தேன் + ஞெரி = தேஞ்ஞெரி, தேஞெரிதேன் என்பது நிலைமொழியாக இறால் வருமொழி ஆகிய வழித் தேனிறால்,தேத்திறால் என இருவகையாகவும் புணரும்.தேன் என்பது அடை என்ற வருமொழியொடு புணரும்வழித் தேனடை எனஇயல்பாகவும், தேத்தடை என னகரம் கெட்டுத் தகரம் இரட்டியும்புணரும்.தேன் + ஈ = தேத்தீ – எனத் திரிபுற்றுப்புணரும்;தேனீ – என இயல்பாகவும் புணரும். (தொ. எ. 340 – 344 நச்.உரை)தேன் நிலைமொழியாக நிற்ப, வருமொழி முதல் மெய்வரின், இயல்பாகப்புணரும்.எ-டு : தேன் கடிது, தேன் ஞான்றது, தேன் வலிது; தேன் கடுமை,தேன்ஞாற்சி, தேன்வலிமைவருமொழிமுதல் மென்கணமாயின் இயல்பாதலேயன்றி நிலை மொழி யீற்று னகரம்கெடுதலுமுண்டு.எ-டு : தேன்மொழி, தேமொழி; தேன்மலர், தேமலர்வன்கணம் வருமிடத்தே, இயல்பாதலேயன்றி, நிலைமொழி யீற்று னகரம் கெடவல்லினமாவது அதற்கு இனமான மெல் லினமாவது மிகுதலுமுண்டு.எ-டு : தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு; தேன்குடம்,தேக்குடம், தேங்குடம்.அல்வழியும் வேற்றுமையும் என இருவழியும் இவ்வாறு காண்க. (தேன்,பூவின் தேனையும் மணத்தையும் குறிக்கும்) (நன். 214)

தேர்கை

தேர்கையாவன : குறைத்தலைப் பிணம் கண்டு ‘காவிப்பல் லன்’ என்றான்என்பதும், ‘குதிரை பட்ட நிலம் இது,’ ‘செத்தது பெட்டைக் குதிரை’என்றான் என்பதும் முதலா உடையன.‘விரலும் கண்டகமும் கண்டறிந்தான்’ என்பதுவும் பிறவும் அன்ன.சித்திர கவி வகைகளுள் தேர்கையும் ஒன்று. (இப்பொருள்உணரப்படாமையின், உரையில் கண்டவாறே குறிப்பிட்டுள் ளோம்.) (யா. வி.பக். 549)

தேர்க்கவி (1)

‘இரதபந்தம்’ எனப்படும் சித்திரகவி காண்க. (சாமி. 200)

தேர்க்கவி (2)

கடக பந்தம். (சாமி. 200)

தேவகணம்

‘கணம்’ காண்க. அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம்,சுவாதி, அநுடம், திருவோணம், ரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள்.

தேவகதி

நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800).

தேவர்கதி, மக்கட் கதிஎழுத்துக்கள்

க ச ட த ப, அ இ உ எ என்பன தேவகதி எழுத்துக்கள். மக்கட் கதிஎழுத்துக்கள் : ஆ ஈ ஊ ஏ, ங ஞ ண ந ம என்பன.இவற்றுள்ளும் மொழி முதற்கண் வரும் ஆற்றல் உடையன ஙகர, டகர ணகரங்கள்அல்லாத 15 எழுத்துக்களே ஆம் எனக் கொள்ளப்படும். (இ. வி. பாட்.38.)

தேவர்கதியும் மக்கட்கதியும்

றகர ஒற்று அல்லாத ஏனைய வல்லொற்று ஐந்தும், ஒ என்னும் குற்றுயிர்அல்லாத ஏனை நாற்குற்றுயிரும் தேவகதியின் கூறாம். ஆ, ஈ, ஊ, ஏ என்னும்நான்கெழுத்தும், னகர ஒற்றல் லாத ஏனைய ஐந்து மெல்லொற்றும் மக்கள்கதிக்குரிய எழுத்துக்களாம். இவ்விரு கதியும் முதல் மொழிக்குப்பொருந்தும். (மெய் ஈண்டு உயிர்மெய்யையே குறிக்கும்.) (இ.வி. 798)

தொகுத்தல் விகாரம்

செய்யுள்விகாரம் ஆறனுள் இதுவும் ஒன்று. உருபு முதலிய இடைச்சொல்அன்றி எழுத்து மறைதல் தொகுத்தல் விகார மாம். இஃது ஒருமொழிக்கண்நிகழாது; இருமொழிக் கண்ணேயே நிகழும். குறை விகாரம் பகுபதமாகிய ஒருமொழிக்கண்ணது. எ-டு : ‘மழவரோட்டிய’‘மழவரை ஓட்டிய’ என உயர்திiணப் பெயருக்கு ஒழியாது வர வேண்டியஐகாரஉருபு செய்யுட்கண் தொக்கமை தொகுத்தல் விகாரமாம்.தொட்ட + அனைத்து என்புழி, நிலைமொழியீற்று அகரம் விகாரத்தால்தொக்கு, தொட்ட் + அனைத்து = தொட் டனைத்து என முடிந்தது. இதுவும்இவ்விகாரமாம். (நன். 155 உரை)

தொகை என்பதன் ஒன்பது வகை விரி

தொகையுள் தொகை – எழுத்து; தொகையுள் வகை – எழுத்து முப்பது;தொகையுள் விரி – எழுத்து முப்பத்துமூன்று; வகையுள் தொகை – முப்பது;வகையுள் வகை – முப்பத்து மூன்று; வகையுள் விரி – அளபெடை தலைப்பெய்ய,நாற்பது; விரியுள் தொகை – முப்பத்து மூன்று; விரியுள் வகை – நாற்பது;விரியுள் விரி – உயிர்மெய் தலைப்பெய்ய (216 +40 =) 256. (தொ. எ. 1 இள.உரை)

தொகை வகை விரி யாப்பு

நால்வகை யாப்பினுள் ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்று போந்ததன்றித் ‘தொகைவகை விரி’ எனப் போந்ததில்லையே எனில், நடுவு நின்ற ‘வகை’ பின்னின்றவிரியை நோக்கின் தொகையாகவும், முன்னின்ற தொகையை நோக்கின் விரியாக வும்அடங்குதலின் இது ‘தொகை வகை விரி யாப்பு’ என்பதன் பாற்படும் என்க.எனவே, தொகை விரி என இரண்டாய் வரினும், மரத்தினது பராரையினின்றும் கவடு- கோடு – கொம்பு – வளார் – பலவாய் ஒன்றோடொன்று தொடர்பு பட்டு எழுந்துநிற்றல் போல், தொகையினின்றும் ஒன்றோ டொன்று தொடர்புபடப்பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும், தொகை விரி யாப்பேயாம் என்க. (நன்.சிறப்புப். சங்கர.)

தொகைப்பதம்

தொகைப்பதம், இரண்டும் பலவும் ஆகிய பகாப்பதமும் பகுபதமும், நிலைமொழிவருமொழியாய்த் தொடர்ந்து, இரண்டு முதலிய பொருள் தோன்ற நிற்கும். அவையானைக் கோடு, கொல்யானை, கருங்குதிரை என்றல் தொடக்கத்தன. (நன். 131மயிலை.)

தொகைமரபு

தொகைமரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் ஐந்தாம் இயலாகும். இதுமுப்பது நூற்பாக்களை உடையது.உயிரீறும் புள்ளியீறும் முறையே உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் ஈறுகள்தோறும் விரித்து முடிக்கப்படுவன, இவ்வியலில்ஒரோஒரு சூத்திரத்தான் தொகுத்து முடிபு கூறப்பட்டமையின், இவ்வியல்தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. (நச். உரை)

தொகைமரபு குறிப்பிடும் செய்திகள்

க ச த ப -க்குரிய மெல்லெழுத்துக்கள் முறையே ங ஞ ந ம – என்பன.இயல்புகணங்களாகிய ஞ ந ம, ய வ, உயிர் இவற்றை முதலாக உடைய சொற்கள்,24 ஈறுகளின்முன் வருமொழியாக வரின் இயல்பாகப் புணரும். அதன்கண் சிலவேறுபாடுகள் உள.ணகர னகரங்கள் அல்வழிக்கண் இயல்புமுடிபின; வேற்றுமைக் கண்ணும்இயல்புகணம் வரின் இயல்பு முடிபின.ல ன – முன் வரும் த ந-க்கள் முறையே ற ன – க்கள் ஆம்; ண ள – முன்வரும் த ந – க்கள் முறையே ட ண – க்கள் ஆம்.ஏவலொருமை வினைகள் இயல்பாகவும் உறழ்ந்தும் முடியும்.ஒள, ஞ் ந் ம் வ் என்ற ஈற்று ஏவல்வினைகள் உகரம் பெற்று உறழ்ந்துமுடியும்.உயர்திணைப் பெயர்களும் விரவுப்பெயர்களும் இயல்பாகப் புணரும்.இகர ஐகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் மிக்கு முடியும்.மூன்றாம்வேற்றுமையது எழுவாய்முன் வரும் செயப்பாட்டு வினைஇயல்பாகவும் உறழ்ந்தும் புணரும்.ஐகார வேற்றுமையின் திரிபுகள் பல வகையாக உள.ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் சொற்கள் வல்லெழுத்து மிக்குமுடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவு மாக இரு திறப்படுவன.தனிநெடில், குறிலிணை, குறில்நெடில் இவற்றை அடுத்து வரும் ஒற்று(வருமொழி முதலில் நகரம் வந்துவிடத்து) இயல் பாகாது கெடும்.தனிக்குறிலை அடுத்து ஒற்று உயிர்வரின் இரட்டும்.நெடுமுதல் குறுகும் மொழிகள் ஆறனுருபொடும் நான்கனுரு பொடும்புணரும்வழி இயைந்த திரிபுகள் சில பெறும்.உகரத்தொடு புணரும் ஞ ண ந ம ல வ ள ன என்னும் ஒற்றிறுதிச் சொற்கள்,யகரமும் உயிரும் வருமொழி முதலில் வரின் உகரம் பெறாது இயல்பாகப்புணரும்.எண் நிறை அளவுப்பெயர்கள் தமக்கேற்ற திரிபேற்றுப் புணரும்.யாவர், யாது என்றவற்றின் சொல்லமைப்பு, புறனடை – என்றின்னோரன்னசெய்திகளும் தொகைமரபில் கூறப்பட் டுள்ளன. (தொ. எ 143 – 172 நச்.)

தொங்கல்

சந்தப்பாக்களில் தனிச்சொற்களாக அடிதோறும் முடிவன தொங்கல்எனப்படும்.எ-டு : ‘வண்ணக் கழிநெடில் விருத்தம் – எழுசீர்’ காண்க.அடிதோறும் ஏழாம் சீராக வருவன ‘தொங்கல்’ ஆம்.

தொடக்கம் குறுகும் மூவிடப் பெயர்கள்புணருமாறு

தொடக்கம் குறுகும் மூவிடப் பெயர்கள் யான் யாம் நாம் நீ தான் தாம்என்பன. இவை முதலெழுத்தாகிய தொடக்கம் குறுகி என் எம் நம் நின் தன் தம்என நின்று உருபேற்கும்.எ-டு : என்னை, எம்மை, நம்மை, நின்னை, தன்னை, தம்மை;என்னால்…..வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண், என்கை, எங்கை, நங்கை, நின்கை,தன்கை, தங்கை என வன்கணம் வரின் னகரம் இயல்பாகவும், மகரம் வரும் வல்லினமெய்க்கு இனமெல்-லெழுத்தாய்த் திரிந்தும் புணரும்.மென்கணத்துத் தன்ஞாண், தன்னாண், தன்மாட்சி; தஞ்ஞாண், தந்நாண்,தம்மாட்சி முதலாகவும்,இடைக்கணத்துத் தன்யாப்பு, தம்யாப்பு முதலாகவும்,உயிர்க்கணத்துத் தன்னருமை, தம்மருமை முதலாகவும், மகரம் வருமொழிஞகரமும் நகரமும் வரின் (அவ்வந்த மெல்லொற் றாகத்) திரிந்தும்,உயிர்வரின் இரட்டியும் புணரும்.ஆறாம் வேற்றுமை ஏற்கும்போதும், நான்காம் வேற்றுமை ஏற்கும்போதும், அகரச் சாரியை பெற்று, என எம நம நின தன தம என்றாகி, வல்லொற்றுமிக்கு நான்கனுருபோடு எனக்கு எமக்கு முதலாகவும், ஆறுனுருபுகளுள் அதுஎன்பதனை ஏற்குமிடத்து, அவ்வுருபின் அகரம் கெட, என + அது > என + து = எனது என்பது முதலாகவும் இத்தொடக்கம் குறுகும்பெயர்கள் வருமொழியொடு புணரும். (தொ. எ. 115, 161, 192, 188, 320, 352நச்.)

தொடரில் பொருள் சிறக்குமிடம்

சொற்கள் நிலைமொழி வருமொழி செய்தால் முன்மொழி யிலே பொருள்நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இரு மொழியினும் பொருள்நிற்பனவும், இரு மொழியும் ஒழிய வேறொரு மொழியிலே பொருள் நிற்பன வும் எனநான்கு வகைப்படும். (பின், முன் என்பன இடம் பற்றி வந்தன.) அவைவருமாறு:அரைக்கழஞ்சு என்புழி, முன்மொழியிற் பொருள் நின்றது.வேங்கைப்பூ என்புழி, பின்மொழியிற் பொருள் நின்றது.தூணிப்பதக்கு என்புழி, இருமொழியினும் பொருள் நின்றது.பொற்றொடி (வந்தாள்) என்புழி, இருமொழியினும் பொருள் இன்றி ‘இவற்றையுடையாள்’ என்னும் வேறொருமொழி யிலே பொருள் நின்றது. (நேமி. எழுத். 12உரை)

தொடரெழுத் தொருமொழி வரையறை

ஒருசொல் பகாப்பதமாயின் ஏழெழுத்தின்காறும், பகுபத மாயின் ஒன்பதுஎழுத்தின்காறும் அமைதல் கூடும்.எ-டு : அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்தரட்டாதி -பகாப்பதம் ஈரெழுத்து முதல் ஏழ் எழுத்தின்காறும் உயர்ந்தது.கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத் தான்,உத்தராடத்தான், உத்தரட்டாதியான் – பகுபதம் ஈரெழுத்து முதல் ஒன்பதுஎழுத்தின்காறும் உயர்ந்தது.நடத்துவிப்பிக்கின்றான், எழுந்திருக்கின்றனன் – என்பன போலப் பகுதிமுதலிய உறுப்புக்கள் வேறுபட்டு வருவன வற்றிற்கு இவ்வரையறை இல்லை.(நன். 130)

தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்

பிள்ளைத்தமிழ், கலம்பகம், பன்மணிமாலை, மும்மணிக் கோவை, அகப்பொருட்கோவை, தொகைச்செய்யுள், இணைமணிமாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை,நான்மணிமாலை, இருபா இருபஃது, ஒருபா ஒருபஃது, ஒலி அந்தாதி, இன்னிசை,வருக்கமாலை, கைக்கிiள, மங்கல வள்ளை (வேறுவகை), இரட்டைமணிமாலை, நேரிசை,மெய்க்கீர்த்தி மாலை, காப்புமாலை, வேனில்மாலை, பல்சந்த மாலை,அங்கமாலை, வசந்தமாலை, நவமணிமாலை, பரணி, தசாங்கப்பத்து, பதிற்றந்தாதி,நூற்றந்தாதி, அட்டமங்கலம், அலங்காரப் பஞ்சகம், ஊசல், சின்னப்பூ,சதகம், எண் செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற் பது,முலைப்பத்து, நயனப்பத்து, வில் வாள் வேல் கோல் வேழம் குதிரை நாடு ஊர்கொடை என்னுமிவ் ஒன்பதனையும் தனித்தனியே பப்பத்தாகக் கூறும் ஒன்பது வகைவிருத்த மாகிய வில் விருத்தம் முதலியன, பெருங்காப்பியமும் காப்பியமும்எனப்பட்ட இருவகைக் காப்பியம் எனச் சொல் லப்பட்ட ஐம்பத்தைந்தும் தொகைபெற வகுத்த அகலக்கவி வேறுபாடும், அவை போல்வன பிறவும் தொடர்நிலைச்செய்யுளாம். (பல அடிகளான் அமைந்த பொருள் தொடர் புடைய வளமடல், உலாமடல்,உலா முதலியன தனிநிலைச் செய்யுளாம்.) (இ.வி.பாட். 45) சதுரகராதியும்பிரபந்த மரபியலும் தொடர்நிலை தனிநிலைச் செய்யுள் வகைகளைப் பிரபந்தமென96 ஆகக் கூறும். தொடை அகராதி – வீரமா முனிவரின் சதுரகராதியின் தொடைபற்றிய பகுதி.

தொடர்மொழி

ஒருபொருளின்பின் ஒருபொருள் செல்லுதலைத் ‘தொடர்ச்சி யாகச்செல்கிறது’ என்று கூறும் மரபு இன்றும் இல்லை. இரண்டற்கு மேற்பட்ட பலபொருள்களே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்கின்றன என்று கூறுதல்மரபு. இரண்டு தொடரன்று. தொல்காப்பியனார் இரண்டெழுத்து மொழியினைத்தொடர் என்னார்; ‘பல’ என்பதன் இறுதியைத் ‘தொடர் அல் இறுதி’ (எ. 214நச்.) என்பார். வடமொழியில் ஒருமை இருமை பன்மை என்பன வசனத்திற்கேயன்றி, மொழியின் எழுத்துக்களுக்கு அன்று. ‘ஒன்று இரண்டு தொடர்’ என்பதுதமிழ்வழக்கே. இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்களாலாகிய மொழிகளையே ‘தொடர்மொழி’ என்றல் தொல். கருத்து. இங்ஙனம் ஓரெழுத்தொரு மொழிஈரெழுத்தொருமொழி – தொடர்மொழி – என்று ஆசிரியர் கொண்டமை,குற்றியலுகரத்தைப் பாகுபடுக்க வேண்டி, ஈரெழுத்தொருமொழி -உயிர்த்தொடர்மொழி – இடைத் தொடர் மொழி – ஆய்தத் தொடர்மொழி – வன்தொடர்மொழி – மென்தொடர் மொழி என்ற முறை கொள்வதற் காகவேயாம்.குற்றியலுகரம் குற்றெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றாதுஎனவும், நெட்டெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றும் எனவும்,நெட் டெழுத்தை முதலாகக் கொண்ட ஈரெழுத்தைச் சார்ந்து ஈற்றில் தோன்றும்எனவும் கூறுவதற்காகவே மொழியை மூவகையாகப் பகுத்தாரே அன்றி, வடமொழியைப்பின்பற்றி அவ்வாறு பகுத்தாரல்லர், வடமொழியில் சொல் அவ்வாறுபகுக்கப்படாமையின். (எ. ஆ. பக். – 48, 49)

தொடர்மொழிஈற்றுக் குற்றியலுகரம்ஒன்றியற் கிழமையாதல்

தொழிற்பண்பும் குணப்பண்பும் ஒருபொருளினின்றும் பிரிக்க முடியாததொடர்புடையன ஆதலின், அவை ஆறாம் வேற் றுமைத் தற்கிழமைப் பொருளில்ஒன்றியற்கிழமை என்னும் பகுப்பின்பாற்பட்டன. தொடர்மொழியீற்றுக்குற்றியலுகரம், அச்சொல்லின் வேறுஅல்லதாய் அச் சொல்லொடு பிரிக்கமுடியாத தொடர்புடையது ஆதலின் அஃது ஒன்றியற் கிழமையதாயிற்று.எ-டு : காட்டு: இதன்கண் தொடர்மொழியீற்றுக் குற்றிய லுகரம்பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளமை காண்க. (தொ. எ. 36 நச். உரை)

தொண்ணூறு, தொள்ளாயிரம்

‘ஒன்பது வருமொழியொடு புணருமாறு’ காண்க.

தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவர் இயற்றிய ஐந்திலக்கண நூல். 18ஆம் நூற்றாண்டு.

தொன்னூல் விளக்கம் கூறும்சொல்லணிகள்

மறிநிலை அணி ஐந்தும், பொருள்கோள் எட்டும், சொல் எஞ்சு அணி பத்தும்,சொல் மிக்கணி மூன்றும், சொல் ஒப்பணி நான்கும் ஆக முப்பதும் தொன்னூல்விளக்கச் சொல்லணிகள். (தொ.வி. 325)

தொல்காப்பிய அகத்தியம்

இந்நூலுள் ஒரு சூத்திரம் “புறப்புறப் பொருளாவன வாகை யும் பாடாணும்பொதுவியல்திணையும்” என்று சுட்டுவதை யாப்பருங்கல விருத்திகுறிப்பிடுகிறது. இந்நூல் பொரு ளிலக்கணம் பற்றியிருக்கலாம் போலும்.(யா. வி. பக். 571).

தொல்காப்பிய எழுத்ததிகாரச் செய்தி

எழுத்துக்களின் பெயர் அளவு மயக்கம் – முதலியவற்றை முதலாவதாகியநூல்மரபில் கூறி, அதன்பின் மொழிகளின் வகையையும் மொழிகளின் முதலிலும்இறுதியிலும் நிற்கும் எழுத்துக்களையும் மொழிமரபில் கூறி, அதன்பின்எழுத்துக் களின் பிறப்பிடத்தைப் பிறப்பியலில் கூறி, அதன்பின் மொழிகள்புணரும் வகையையும் புணருமிடத்து நிகழும் திரிபுகளையும் புணரியலில்கூறி, அதன்பின் உயிரீறு புள்ளியீறு ஆகிய மொழிகளுள் புணர்ச்சிக்கண் ஒரேவிதி பெறுவனவாகிய பல ஈறுகளைத் தொகுத்து அவை புணரு மாற்றைத் தொகைமரபில்கூறி, அடுத்து வேற்றுமையுருபுக ளொடு புணருமிடத்துச் சாரியை பெறுவனஆகிய உயிரீறு புள்ளியீறுகளை உருபியலில் கூறி, அடுத்து உயிரீற்று மொழிகளொடு மொழிகள் புணரும் புணர்ச்சியை உயிர் மயங்கியலுள் ளும்,புள்ளியீற்று மொழிகளொடு மொழிகள் புணரும் புணர்ச்சியைப் புள்ளிமயங்கியலுள்ளும், குற்றியலுகர ஈற்று மொழிகளொடு மொழிகள் புணரும்புணர்ச்சியைக் குற்றிய லுகரப்புணரியலுள்ளும் கூறி, இவ்வாறுஎழுத்ததிகாரம் 483 நூற்பாக்களால் அமைந்துள்ளது. (எ. ஆ. பக். 1)

தொல்காப்பியச் சூத்திர விருத்தி

தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற்சூத்திரத்திற்கும் 18 ஆம்நூற்றாண்டினராகிய திருவாவடுதுறையைச் சார்ந்த மாதவச் சிவஞான முனிவரால்இயற்றப்பட்ட விருத்தியுரை. இவ் விருத்தி யுரைக்கு, சென்ற நூற்றாண்டுத்தொடக்கத்தே வாழ்ந்த பெரும்புலவர் சண்முகனார் மறுப்பு எழுதிய நூல்‘சண்முகனார் பாயிர விருத்தி’ எனப்படும். சண்முகனார், சிவஞான முனிவரதுபாயிர விருத்தியுரையை மாத்திரம் மறுத்துள்ளார்; முதற்சூத்திரவிருத்தியுரையை மறுத்து அவர் எழுதிய மறுப்புரை இந்நாள் கிடைத்திலது.சண்முக னாரது இப்பாயிர விருத்தியை மறுத்துச் சிவஞான முனிவ ருரையைஅரண்செய்து ‘செப்பறை விருத்தி’ என்பதொன் றும் சென்ற நூற்றாண்டுத்தொடக்ககாலத்தில் சண்முகனார் மறைவிற்குப் பின்னர்த் தோன்றியது.

தொல்காப்பியத்திற்கு முற்பட்டநூல்கள்

ஆதிநூலாகிய இசைநுணுக்கமும், அகத்தியமும், அதற்கு இணைநூலாகியதேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல்களும், என இவை முதலாய (செயற்கை)முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம் இசைநூல் ஆகிய இசைநுணுக்கம் முதலாய நூல்களும் எனப்பட்ட தலைச்சங்கத்துநூல்கள். (பா. வி. பக்.174)

தொல்காப்பியனார்

காப்பியக்குடியிற் பிறந்தவரும், அகத்தியனார்க்கு மாணாக் கரும்,தொல்காப்பியம் இயற்றியவருமாகிய ஆசிரியர்; இவர் இடைச் சங்க மிருந்தவர்என்னும் இறை. அ. உரை.

தொல்காப்பியன் என்ற சொல்லமைப்பு

‘தொல்காப்பியம் உடையான்’ என்னும் பொருட்கண் அம்முக் கெட்டுஅன்விகுதி புணர்ந்து தொல்காப்பியன் என நின்று, பின்னர்த்‘தொல்காப்பியனால் செய்யப்பட்ட நூல்’ என்னும் பொருட்கண் அன் விகுதிகெட்டு அம்விகுதி புணர்ந்து தொல்காப்பியம் என முடிந்தது. (சிவஞா. பா.வி. பக். 16)இதன் பொருந்தாமை சண்முகனாரால் விளக்கப்பட்டது. (பா.வி.ப. 233,234)தொல்காப்பியன், கபிலன் என்னும் பெயரிறுதி இவனால் செய்யப்பட்டதுஎன்னும் பொருள் தோன்ற அம் என்பதோர் இடைச்சொல் வந்து அன் கெடத்தொல்காப்பியம் கபிலம் என நின்றது. (தொ. சொ. 114 சேனா.)தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி என ஈறுதிரிதலும் கொள்க. (119நச். உரை)வினைமுதல் உரைக்கும் கிளவி – வினைசெய்தான்பெயர் சொல்ல, அவன்செய்பொருள் அறிய நிற்றல். அது தொல் காப்பியம், கபிலம் என்பன. (சொ. 110இள. உரை)வினைமுதல் உரைக்கும் கிளவி – தொல்காப்பியம், கபிலம்(சொ. 116 கல். உரை)தொல்காப்பியம், கபிலம், இவ்வாடை சேணிகன், கோலிகன்-(115 பழைய உரை)“அம்விகுதி, எச்சம் – தேட்டம் – நாட்டம் – முதலியவற்றுள் எஞ்சு -தேடு – நாடு – முதலாகிய வினைமுதல்நிலையொடு கூடியே வினைமுதற்பொருள்முதலாய அறுவகையுள் ஒருபொருளை உணர்த்தலன்றிப் பெயர்முதனிலையொடு கூடிவிகுதிப்பொருள் உணர்த்தல் யாண்டும் இன்மையானும்,பெயர்முதனிலையொடு கூடின் பகுதிப்பொருளையே உணர்த்தல் குன்று சங்குமுதலாய பெயரொடு கூடிக் குன்றம் எனவும் சங்கம் எனவும் நின்றுழி,விகுதிப்பொருள்களுள் ஒன்றும் உணர்த்தாமையின் அறியப்படும்ஆகலானும்,அம்விகுதி பிறபெயரொடு கூடி விகுதிப்பொருள் உணர்த்தா விடினும்அகத்தியன் தொல்காப்பியன் முதலாய உயர்திணைப் பெயரொடு கூடியவழிஉணர்த்துமெனின், தேடப்படுவன எல்லாம் தேட்டம் ஆயினாற்போல, அகத்தியன்முதலாயவ ரால் செய்யப்படுவன எல்லாம் அகத்தியம் எனவும் தொல் காப்பியம்எனவும் கபிலம் எனவும் பெயர்பெறல் வேண்டும்; அவ்வாறு அவர் செய்த தவம்முதலியவற்றுக்கெல்லாம் பெயராகாமல் அவர் செய்த நூல்களையே உணர்த்தலான்அதுவும் பொருந்தாமையானும்,செய் என்பது எல்லாத் தொழிற்கும் பொதுவாதலன்றி நூல் செய்தற்குமாத்திரம் பெயராகாமையானும் என்பது.” (பா. வி. பக். 233, 234)

தொல்காப்பியமும் ஐந்திரமும்

அகத்தியனார் தென்திசைக்குப் போந்த பின்னர்த் தென் திசையினும்ஆரியம் வழங்கத் தலைப்பட்டது. தமிழேயன்றி வடமொழியும் தொல்காப்பியனார்நிறைந்தார் என்பது விளங்க ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’எனப்பட்டார். அகத்தியனார்க்கு ஐந்திர இலக்கணமே உடன்பாடு. தொல்காப்பியனார்க்கு வடநூல் அறிவுறுத்திய ஆசிரியரும் அகத்தியனாரே.தொல்காப்பியனார் அகத்தியம் நிறைந்தமை எல்லாரானும் அறியப்படுதலின்வடமொழியினும் வல்லுந ராயினார் என்பது விளக்கிய ‘ஐந்திரம் நிறைந்ததொல்காப்பி யன்’ எனப்பட்டார்.தொல்காப்பியனார் ஐந்திரம் நோக்கி நூல் செய்தாரெனின், தமிழ்மொழிப்புணர்ச்சிக்கண் படும் செய்கைகளும், குறியீடு களும், வினைக்குறிப்புவினைத்தொகை முதலிய சில சொல் லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலியசொற் பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடு களும்,குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், வெண்பா முதலிய செய்யுள்இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியில் பெறப்படாமையானும், தாமேபடைத்துச் செய்தாரெனின் ‘முந்துநூல் கண்டு’ என்பத னொடு முரணுதலானும்.எல்லாரும் தொல்காப்பியனாரை அகத்தியனாருடைய முதல்மாணாக்கன் என்றேசிறப்பித்த லானும் ஐந்திரம் தொல்காப்பியனார் செய்த நூலுக்கு முதல்நூல் ஆகாது. (சிவஞா. பா. வி. பக். 6, 12)

தொல்காப்பியம்

முழுமையாகக் கிடைக்கப்பெற்ற இடைச்சங்ககாலத்துத் தமிழ்இலக்கண நூல்.இதன்கண், எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களும்,அதிகாரம்தோறும் ஒன்பது ஒன்பது இயல்களும், மூன்றதிகாரத்திலும் முறையே483, 463, 665 என நூற்பாக்களும், அமைந்துள. நூற்பாக்களின் எண்ணிக்கைஉரையாசிரி யன்மார்தம் உரை அமைதிக் கேற்பச் சிறிது வேறுபடும்.மூன்றுறுப்பு அடக்கிய பிண்டமாகத் தமிழில் தனித்து இயங்கும் சிறப்புடையஇந்நூற்கு இளம் பூரணஅடிகள் உரை முழுதும் உள்ளது. நச்சினார்க்கினியர்உரை பொருளதிகாரத்துள் மெய்ப்பாட்டியல், உவமஇயல், மரபியல்,இம்மூன்றற்கும் கிடைத்திலது. சொல்லதிகாரத் திற்குச் சேனாவரையர்,கல்லாடர், தெய்வச்சிலையார் இவர்கள்தம் உரைகள் உள. பேராசிரியர் என்பார்உரை பொருளதிகாரத்துள், மெய்பாட்டியல் உவம இயல், செய்யுளியல், மரபியல்இந்நான்கற்கும் அமைந்துள்ளது.கடைச்சங்க இலக்கியங்கட் கெல்லாம் தொல்காப்பியமே இலக்கணமாவது. இதன்காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்ப. வடமொழியாசிரியர் பாணினிக்கும்தொல்காப்பிய னார் காலம் முற்பட்டமை துணிபு. ‘ஐந்திரம் நிறைந்ததொல்காப்பியன்’ எனப் பாயிரம் கூறுதலின், இவர் பாணீ னியத்திற்குமுற்பட்ட காலத்ததாகிய ஐந்திரத்தில் புலமை மிக்கிருந்தமை தேற்றம். அதுபற்றியே, இவர் விளிவேற்று மையைத் தழுவிக் கொண்டார் என்ப. வடமொழிவழக்கில் ஏற்பனவே கொண்டு, தமிழின் தனித்தன்மைகளை வலியுறுத் திச்செல்லும் இந்நூலே. இன்றுகாறும் கண்ட தமிழ்ப்பனு வல்களில் காலத்தால்முற்பட்டது. இதன் முதனூல் எனப்படும் அகத்தியம் இயலிசைநாடகம் எனும்முத்திறமும் விரவ இயற்றப்பட்ட தெனவும், அவற்றுள் இவர் இயற்ற மிழையேமுப்படலமாக விரித்து நூல்யாத்தனர் எனவும் உரைகாரர்கள் கருதுப.இந்நூலுள் அமைந்த பொருள திகாரம் பிறமொழிகளில் காணலாகாப் பலதிறச்சிறப்பும் ஒருங்கமைந்து பண்டைத் தமிழரின் நாகரிகமேம்பாட்டைப்புலப்படுத்த வல்லது. இத்திறம் மேலும் விரிக்கின் பெருகும்.

தொல்காப்பியம் குறிப்பிடும்சாரியைகள்

இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன் – என்பன வும், தம்நம் நும் உம் ஞான்று கெழு ஏ ஐ – என்பனவும் தொல்காப்பியத்துள்குறிக்கப்படும் சாரியைகள். அவை முறையே நச்சினார்க்கினியத்தில் நிகழும்நூற்பா எண்கள் வருமாறு: (எழுத்ததிகாரத்துள் காண்க).இன் – 120; வற்று – 122; அத்து – 125; அம் – 129;ஒன் – 180; ஆன் – 199; அக்கு – 128; இக்கு – 126;அன் – 176; தம் – 191; நம் – 190; நும் – 191;உம் – 481; ஞான்று – 226, 331 உரை; ஏ – 164; ஐ – 80

தொல்காப்பியம் கூறும் பிரபந்தவகை

துயிலெடை நிலை, கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை,பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, பெருமங்கலம், மண்ணுமங்கலம்,குடைநிழல் மரபு, வாள்மங்கலம், எயில் அழித்த மண்ணு மங்கலம்,கடைக்கூட்டு நிலை, இருவகை விடை, காலம் கண்ணிய ஓம்படை, ஞாலத்து வரூஉம்நடக்கையது குறிப்பு – எனத்தொல்காப்பியனார் அகலக் கவியை விதந்துகூறுவனவாக வரும் இவையெல்லாம் (தொ. பொ. 91 நச்.) அவர் கூறும் பிரபந்தவகைகளாம்.இனி, ‘அகன்று பொருள் கிடப்பினும்’ எனவும், ‘மாட்டும் எச்சமும்’எனவும் (தொ. பொ. 522, 523 பேரா.) அவர் செய்யு ளியலுள் கூறுவனவற்றால்,முறையே பொருள் தொடர் நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும்பெறப்படும் என்பது.இவ்வாற்றான் பல அடியால் நடக்கும் தனிநிலைப் பாட்டு எனவும்,தொடர்நிலைப் பாட்டு எனவும் சொல்லப்பட்ட அகலக்கவி யாகிய பிரபந்தங்களின்வகை சிலவற்றைத் தொல்காப்பியம் கூறிற்று என்பது. (இ.வி.பாட். 7உரை).

தொல்லை இயற்கை நிலையல்

பழைய அரைமாத்திரையே பெறுதல் – இள.முன்பு கூறிய கால்மாத்திரையே பெறுதல் – நச்.குற்றியலுகரம், அல்வழி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்முற்றியலுகரமாக நிறைந்து நிற்றலைத் தவிர்ந்து பழைய அரைமாத் திரையேபெறுதல், வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றியலுகர ஈற்றின்முன் வருமொழிவன்கணம் வருமிடத்து உள்ளது.எ-டு : நா கு கடிது – கு : ஒரு மாத்திரை; கொக் கு க் கடிது = கு: அரைமாத்திரை (தொ. எ. 410 இள. உரை)அல்வழியிலும் வேற்றுமையிலும் அரைமாத்திரை பெறும் குற்றியலுகரம்,‘இடைப்படின் குறுகும்’ (37) என்றதனான், கூறிய அரை மாத்திரையினும்குறுகி நிற்கும் இயல்பிலே நிற்ற லும் உரித்து; பழைய அரைமாத்திரைபெறுதலும் உரித்து.எ-டு : கொக்குப் பெரிது – கு : அரைமாத்திரைகொக்குக் கடிது – கு : கால் மாத்திரை (409 நச். உரை)

தொழிற்பெயர் இயல

ஞ் ண் ந் ம் ல் வ் ள் ன் – ஈற்று முதனிலைத் தொழிற்பெயர்கள்வருமொழியொடு புணரும்வழி உகரச்சாரியை பெற்றுப் புணர்தல்.உரிஞ் மண் பொருந் திரும் செல் வவ் துள் தின் – என்பன முறையேஅப்புள்ளியீற்றுத் தொழிற்பெயர்கள். அவை முறையேஉரிஞுக் கடிது, மண்ணுக் கடிது, பொருநுக் கடிது, திருமுக் கடிது,செல்லுக் கடிது, வவ்வுக் கடிது, துள்ளுக் கடிது, தின்னுக் கடிது எனஅல்வழிக்கண்ணும்,உரிஞுக்கடுமை, மண்ணுக்கடுமை, திருமுக்கடுமை, செல்லுக் கடுமை,வவ்வுக்கடுமை, துள்ளுக்கடுமை, தின்னுக்கடுமை எனவேற்றுமைக்கண்ணும்உகரச்சாரியை பெற்றுப் புணரும். வன்கணம் வருவழி அவ்வல்லெழுத்துமிகும்.நகர ஈறு வேற்றுமைக்கண் பொருநக் கடுமை என உகரம் கெட அகரம் பெறும்.(தொ. எ. 296 – 299, 306, 327, 345, 376, 382, 401 நச்.)ஆசிரியர் னகரஈறு வகரஈறு இவற்றை விதந்து கூறிற்றிலர்.(345, 382 நச்.)

தொழிற்பெயர்ப் பகுபதம்

ஊணான், ஊணாள், ஊணார், ஊணது, ஊணன, ஊணேன், ஊணேம், ஊணாய், ஊணீர் எனஇவ்வாறு வருவன, இத்தொழிலையுடையார் என்னும் பொருண்மைத் தொழிற் பெயர்ப்பகுபதம். ஊண் என்னும் தொழிற்பெயர் அடியாகப் பிறந்தவை அவை. (நன். 133மயிலை. உரை)

தொழிற்பெயர்ப் புணர்ச்சி

தொல்காப்பியனார் வினைப்பகுதிகளைத் தொழிற்பெயர் என்றேகுறிப்பிடுவார். ஞ் ண் ந் ம் ல் வ் ள் ன் – ஒற்றுக்கள் ஈற்றனவாகியதொழிற்பெயர்கள் இருவழியும் வன்கணம் வரின் உகரமும் வந்த வல்லெழுத்தும்பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமாத்திரம்பெற்றும், யகரம் வரின் இயல்பாகவும், உயிர்க்கணம் வரினும் இயல்பாகவும், (தனிக்குறில் முன் ஒற்றாய் நிலைமொழி இருப்பின் இரட்டியும்)புணரும். (தொ. எ. 296 – 299 நச். உரை முதலியன).முரண் என்ற தொழிற்பெயர் இவ்விதிக்கு மாறாய், முரண் கடிது – எனஅல்வழியினும், முரண்கடுமை முரட்கடுமை என (டகரத்தோடு உறழ்வாய்)வேற்றுமையினும் புணரும். (309 நச்.)கன் பொருந் – என்பன வேற்றுமைக்கண் உகரச்சாரியை விடுத்து அகரச்சாரியை பெற்றுக் கன்னக் கடுமை – பொருநக் கடுமை – என்றாற் போலப்புணரும். (346, 299 நச்.)உருபிற்கு இன்சாரியை பெறுவன சிறுபான்மை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறும்.எ-டு : உரிஞினை, பொருநினை; உரிஞின்குறை, பொருநின் குறை – (182நச்.)உரிஞுக் கடிது, உரிஞுக் கடுமை – (296 நச்.)பொருநுக் கடிது, பொருநக் கடுமை – (298, 299 நச்.)மண்ணுக் கடிது, மண்ணுக் கடுமை – (306 நச்.)செம்முக் கடிது, செம்முக் கடுமை – (327 நச்.)கொல்லுக் கடிது, கொல்லுக் கடுமை – (376 நச்.)வவ்வுக் கடிது, வவ்வுக் கடுமை – (382 நச்.)துள்ளுக் கடிது, துள்ளுக் கடுமை – (401 நச்.)கன்னுக் கடிது, கன்னக் குடம் – (345, 346 நச்.)உரிஞ் யாது, உரிஞ்யாப்பு; பொருந் யாது, பொருந் யாப்பு;மண் யாது, மண்யாப்பு; தும் யாது, தும்யாப்பு;கொல் யாது, கொல்யாப்பு; வவ் யாது, வவ்யாப்பு;துள் யாது, துள்யாப்பு; கன் யாது, கன்யாப்பு(தொ. எ. 163 நச்.)உரிஞழகிது, உரிஞருமை; பொருநழகிது, பொருநருமை;மண் ணழகிது, மண்ணருமை; தும் மரிது, தும்மருமை;கொல் லரிது, கொல்லருமை; வவ் வரிது, வவ்வருமை;துள் ளரிது, துள்ளருமை; கன் னரிது, கன்னருமை.(163 நச்.)

தோடகம்

இஃது அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்.இதன் அமைப்பு, ஈற்றில் குருஎழுத்தைக் கொண்ட கணங்கள் நான்கு வருதல்.கீழ்க்காணும் விருத்தத் தில், முதலடி மூன்றாம் சீர், ஈற்றடி இரண்டாம்சீர் – இவை தவிர மற்றவகையில், மாத்திரை அளவிலும், எழுத்துக்களின்எண்ணிக்கையிலும், வடமொழியிலக்கணம் முற்றும் பொருந்து கிறது. இதுநான்கு மாத்திரைச் சீர்கள் நான்கான் ஆயது; நிரையசையில் தொடங்குவது;பெரும்பாலும் வெண் டளையே வருவது.எ-டு : ‘கமையா ளொடுமென் னுயிர்கா வலினின்றிமையா தவனித் துணைதாழ் வுறுமோசுமையா வுலகூ டுழறொல் வினையேன்அமையா துகொல்வாழ் வறியே னெனுமால்.’ (கம்புரா. 3616)‘னுயிர்கா’ ‘துகொல்வாழ்’ இரண்டும் என்ற ஒன்றும் நீங்க லாக ஏனையசீர்கள்யாவும் நான்கு மாத்திரையன. வி.பா. ஏழாம் படலம் – 4இது தோதக விருத்தம் போல்வது.

தோணோக்கம்

தோள் நோக்கம்: மகளிரது விளையாட்டுவகை. ‘குழலினீர் தோணோக்கம் ஆடாமோ’(திருவா. 15-2)

தோதக விருத்தம் போல்வது

1. நான்கு மாத்திரை கொண்ட குற்றுயிரீற்ற கூவிளச்சீர் மூன்று,அடுத்து நான்கு மாத்திரைத் தேமாச்சீர் ஒன்று, கொண்ட அடி நான்கான்அமைவது.எ-டு : ‘எண்ணியி ருந்துகி டந்துந டந்தும்அண்ணலெ னாநினை வார்வினை தீர்ப்பார்பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்புண்ணிய னாருறை பூவண மீதோ. (தே. 7 : 11-2)2. நான்கு மாத்திரைச்சீர்கள் நான்கனுள் முதலாவதும் நான் காவதும்தேமா ஆக, ஏனைய கூவிளமாக அமைந்த அடிநான் கான் அமைவது.எ-டு : ‘எந்தாய் பண்டொரி டங்கர்வி ழுங்க(ம்)முந்தாய் நின்றமு தற்பொரு ளேயென்றுந்தாய் தந்தையி னத்தவ னோத(வ்)வந்தா னென்றன்ம னத்தின னென்றான்.’ (கம்பரா. 6281)3. நான்கு மாத்திரைச் சீர்கள் நான்கனுள் இரண்டாம் மூன்றாம் சீர்கள்கருவிளம், நான்காம் சீர் புளிமா, முதற்சீர் கூவிளம் என்றமைந்த அடிநான்கான் அமைவது.எ-டு : ‘தூணுடை நிரைபுரை கரமவை தொறுமக்கோணுடை மலைநிகர் சிலையிடைக் குறையச்சேணுடை நிகர்கணை சிதறின னுணர்வோடூணுடை யுயிர்தொறு முறையுறு மொருவன்.’ (கம்பரா. 9787)4. நான்குமாத்திரைச் சீர்கள் நான்கனுள் முதலாவதும் மூன்றா வதும்கூவிளம் ஆக, ஏனைய இரண்டும் புளிமா என்றமைந்த அடிநான்கான் வருவது.எ-டு : ‘குஞ்சர மனையார் சிந்தைகொ ளிளையார்பஞ்சினை யணிவார் பால்வளை தெரிவார்அஞ்சன மெனவா ளம்புக ளிடையேநஞ்சினை யிடுவார் நாண்மலர் புனைவார்.’ (கம்பரா. 1558)5. முதலாம் மூன்றாம் சீர்கள் நான்கு மாத்திரையுடைய கூவிளம்,இரண்டாம் நான்காம் சீர்கள் ஆறுமாத்திரையுடைய நடுவில் நெட்டெழுத்துமிகாத கூவிளங்காய் என்றமைந்த அடி நான்காய் வருவது.எ-டு : ‘கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்தவம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை யொப்பமராச்செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்கென்பொனை யென்மணியை யென்றுகொ லெய்துவதே.’ (தே. 7 : 83-7)6. இவ்வமைப்பில் இரண்டாம் நான்காம் சீர்கள் கூவிளங் காய்க்கு மாறாகபுளிமாங்காய் வர அமைந்த அடி நான்காய் நிகழ்வது.எ-டு : ‘ஏந்திள முலையாளே எழுதரு மெழிலாளேகாந்தளின் முகைகண்ணிற் கண்டொரு களிமஞ்ஞைபாந்தளி தெனவுன்னிக் கவ்விய படிபாராய்தீந்தள வுகள்செய்யும் சிறுகுறு நகைகாணாய்(கம்பரா. 2007)‘காந்தளின்’-5 மாத்திரை; ஏனைய கூவிளங்கள் 4 மாத்திரை.‘வுகள்செய்யும்’-7 மாத்திரை; ஏனைய புளிமாங்காய் 6 மாத்திரை. (வி.பா.ஏழாம்படலம். பக். 41, 81, 82, 51.)

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரங்கள்

சாரியை பெறுதலும், உயிரும் ஒற்றும் உயிர்மெய்யும் என்றிவைமிகுதலும், தோன்றல் என்பதாம். இச்சொன்ன பெற்றியே முன் நின்ற எழுத்துவேறுபட நிற்றல் திரிபாம். இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுதல் கேடுஎன்பதாம். இம்மூன்று விகாரமும் இருமொழி மூவிடத்துமாம்.எ-டு : புளி ய ங்காய் என இடையே அம்மு மிக்கது.வா ன வில், மலை த் தலை, உரி ய நெய் என முறையே உயிரும் (அ), ஒற்றும் (த்), உயிர்மெய்யும் (ய)மிக்கன.அ றுபது, ம ட் குடம், ‘திருத்தார்நன் றென்றேன் தி யேன்’ என முறையே உயிரும் (ஆ), ஒற்றும் (ண்), உயிர்மெய்யும் (தீ)திரிந்தன. உயிர்மெய்க்கு இவ் வாறன்றித் திரிபுண்டாயினும்காண்க.பல்சாத்து, மரவேர், அங்கை என முறையே உயிரும் (அ), ஒற்றும் (ம்),உயிர்மெய்யும் (க) கெட்டன. (நன். 153 மயிலை.)

தோன்றல் விகாரம்

இது புணர்ச்சி விகாரம் மூன்றனுள் ஒன்று. இருமொழிகள் புணருமிடத்துஇடையே சாரியையோ, வருமொழி வன்கணத் திற்கேற்ப ஒருமெய்யெழுத்தோ தோன்றுதல்தோன்றல் விகாரமாம்.எ-டு : புளி + பழம் = புளியம்பழம் – ‘அம்’ சாரியைதோன்றியது.நாய் + கால் = நாய்க்கால் – ககரமெய் தோன்றியது.பூ + கொடி = பூங்கொடி – ககரத்திற்கு இனமான ஙகரமெய் தோன்றியது.(நன். 154)

தோரணமஞ்சரி

ஆற்றல் மிக்க களிற்றை வயப்படுத்தி அடக்கியவருக்கும், எதிர்ப்போரிடும் யானையை எதிர்த்துப் பொருது வெட்டி அடக்கியவருக்கும்,மதகளிற்றை அதட்டிப் பிடித்து வயப் படுத்தியவருக்கும் இப்பிரபந்தம்பாடப்பெறும். வஞ்சிப்பாவி னால் இஃது யாக்கப்படுவது. ‘வாதோரண மஞ்சரி’எனவும் இது பெயர்பெறும்.இப்பிரபந்தத்தை முத்துவீரியமும், பிரபந்த தீபிகையுமே குறிக்கின்றன.(மு. வீ. யா. ஒ. 118)