ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தோடகம் | இஃது அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்.இதன் அமைப்பு, ஈற்றில் குருஎழுத்தைக் கொண்ட கணங்கள் நான்கு வருதல்.கீழ்க்காணும் விருத்தத் தில், முதலடி மூன்றாம் சீர், ஈற்றடி இரண்டாம்சீர் – இவை தவிர மற்றவகையில், மாத்திரை அளவிலும், எழுத்துக்களின்எண்ணிக்கையிலும், வடமொழியிலக்கணம் முற்றும் பொருந்து கிறது. இதுநான்கு மாத்திரைச் சீர்கள் நான்கான் ஆயது; நிரையசையில் தொடங்குவது;பெரும்பாலும் வெண் டளையே வருவது.எ-டு : ‘கமையா ளொடுமென் னுயிர்கா வலினின்றிமையா தவனித் துணைதாழ் வுறுமோசுமையா வுலகூ டுழறொல் வினையேன்அமையா துகொல்வாழ் வறியே னெனுமால்.’ (கம்புரா. 3616)‘னுயிர்கா’ ‘துகொல்வாழ்’ இரண்டும் என்ற ஒன்றும் நீங்க லாக ஏனையசீர்கள்யாவும் நான்கு மாத்திரையன. வி.பா. ஏழாம் படலம் – 4இது தோதக விருத்தம் போல்வது. |
தோணோக்கம் | தோள் நோக்கம்: மகளிரது விளையாட்டுவகை. ‘குழலினீர் தோணோக்கம் ஆடாமோ’(திருவா. 15-2) |
தோதக விருத்தம் போல்வது | 1. நான்கு மாத்திரை கொண்ட குற்றுயிரீற்ற கூவிளச்சீர் மூன்று,அடுத்து நான்கு மாத்திரைத் தேமாச்சீர் ஒன்று, கொண்ட அடி நான்கான்அமைவது.எ-டு : ‘எண்ணியி ருந்துகி டந்துந டந்தும்அண்ணலெ னாநினை வார்வினை தீர்ப்பார்பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்புண்ணிய னாருறை பூவண மீதோ. (தே. 7 : 11-2)2. நான்கு மாத்திரைச்சீர்கள் நான்கனுள் முதலாவதும் நான் காவதும்தேமா ஆக, ஏனைய கூவிளமாக அமைந்த அடிநான் கான் அமைவது.எ-டு : ‘எந்தாய் பண்டொரி டங்கர்வி ழுங்க(ம்)முந்தாய் நின்றமு தற்பொரு ளேயென்றுந்தாய் தந்தையி னத்தவ னோத(வ்)வந்தா னென்றன்ம னத்தின னென்றான்.’ (கம்பரா. 6281)3. நான்கு மாத்திரைச் சீர்கள் நான்கனுள் இரண்டாம் மூன்றாம் சீர்கள்கருவிளம், நான்காம் சீர் புளிமா, முதற்சீர் கூவிளம் என்றமைந்த அடிநான்கான் அமைவது.எ-டு : ‘தூணுடை நிரைபுரை கரமவை தொறுமக்கோணுடை மலைநிகர் சிலையிடைக் குறையச்சேணுடை நிகர்கணை சிதறின னுணர்வோடூணுடை யுயிர்தொறு முறையுறு மொருவன்.’ (கம்பரா. 9787)4. நான்குமாத்திரைச் சீர்கள் நான்கனுள் முதலாவதும் மூன்றா வதும்கூவிளம் ஆக, ஏனைய இரண்டும் புளிமா என்றமைந்த அடிநான்கான் வருவது.எ-டு : ‘குஞ்சர மனையார் சிந்தைகொ ளிளையார்பஞ்சினை யணிவார் பால்வளை தெரிவார்அஞ்சன மெனவா ளம்புக ளிடையேநஞ்சினை யிடுவார் நாண்மலர் புனைவார்.’ (கம்பரா. 1558)5. முதலாம் மூன்றாம் சீர்கள் நான்கு மாத்திரையுடைய கூவிளம்,இரண்டாம் நான்காம் சீர்கள் ஆறுமாத்திரையுடைய நடுவில் நெட்டெழுத்துமிகாத கூவிளங்காய் என்றமைந்த அடி நான்காய் வருவது.எ-டு : ‘கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்தவம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை யொப்பமராச்செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்கென்பொனை யென்மணியை யென்றுகொ லெய்துவதே.’ (தே. 7 : 83-7)6. இவ்வமைப்பில் இரண்டாம் நான்காம் சீர்கள் கூவிளங் காய்க்கு மாறாகபுளிமாங்காய் வர அமைந்த அடி நான்காய் நிகழ்வது.எ-டு : ‘ஏந்திள முலையாளே எழுதரு மெழிலாளேகாந்தளின் முகைகண்ணிற் கண்டொரு களிமஞ்ஞைபாந்தளி தெனவுன்னிக் கவ்விய படிபாராய்தீந்தள வுகள்செய்யும் சிறுகுறு நகைகாணாய்(கம்பரா. 2007)‘காந்தளின்’-5 மாத்திரை; ஏனைய கூவிளங்கள் 4 மாத்திரை.‘வுகள்செய்யும்’-7 மாத்திரை; ஏனைய புளிமாங்காய் 6 மாத்திரை. (வி.பா.ஏழாம்படலம். பக். 41, 81, 82, 51.) |
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரங்கள் | சாரியை பெறுதலும், உயிரும் ஒற்றும் உயிர்மெய்யும் என்றிவைமிகுதலும், தோன்றல் என்பதாம். இச்சொன்ன பெற்றியே முன் நின்ற எழுத்துவேறுபட நிற்றல் திரிபாம். இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுதல் கேடுஎன்பதாம். இம்மூன்று விகாரமும் இருமொழி மூவிடத்துமாம்.எ-டு : புளி ய ங்காய் என இடையே அம்மு மிக்கது.வா ன வில், மலை த் தலை, உரி ய நெய் என முறையே உயிரும் (அ), ஒற்றும் (த்), உயிர்மெய்யும் (ய)மிக்கன.அ றுபது, ம ட் குடம், ‘திருத்தார்நன் றென்றேன் தி யேன்’ என முறையே உயிரும் (ஆ), ஒற்றும் (ண்), உயிர்மெய்யும் (தீ)திரிந்தன. உயிர்மெய்க்கு இவ் வாறன்றித் திரிபுண்டாயினும்காண்க.பல்சாத்து, மரவேர், அங்கை என முறையே உயிரும் (அ), ஒற்றும் (ம்),உயிர்மெய்யும் (க) கெட்டன. (நன். 153 மயிலை.) |
தோன்றல் விகாரம் | இது புணர்ச்சி விகாரம் மூன்றனுள் ஒன்று. இருமொழிகள் புணருமிடத்துஇடையே சாரியையோ, வருமொழி வன்கணத் திற்கேற்ப ஒருமெய்யெழுத்தோ தோன்றுதல்தோன்றல் விகாரமாம்.எ-டு : புளி + பழம் = புளியம்பழம் – ‘அம்’ சாரியைதோன்றியது.நாய் + கால் = நாய்க்கால் – ககரமெய் தோன்றியது.பூ + கொடி = பூங்கொடி – ககரத்திற்கு இனமான ஙகரமெய் தோன்றியது.(நன். 154) |
தோரணமஞ்சரி | ஆற்றல் மிக்க களிற்றை வயப்படுத்தி அடக்கியவருக்கும், எதிர்ப்போரிடும் யானையை எதிர்த்துப் பொருது வெட்டி அடக்கியவருக்கும்,மதகளிற்றை அதட்டிப் பிடித்து வயப் படுத்தியவருக்கும் இப்பிரபந்தம்பாடப்பெறும். வஞ்சிப்பாவி னால் இஃது யாக்கப்படுவது. ‘வாதோரண மஞ்சரி’எனவும் இது பெயர்பெறும்.இப்பிரபந்தத்தை முத்துவீரியமும், பிரபந்த தீபிகையுமே குறிக்கின்றன.(மு. வீ. யா. ஒ. 118) |