ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தெம்மாங்கு | தேம் பாங்கு எனவும்படும்; தென்னாட்டில் நாட்டுப்புறத்தவர் வயல்முதலியவற்றில் பணியாற்றும்போது அப்பணியிடைக் களைப்புத்தோற்றாமலிருக்கப் பாடுவதோர் இசைப் பாட்டுவகை. (L) |
தெய்வ வணக்கம் | நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து. ‘தெய்வ வணக்கமும்செயப்படு பொருளும்’. (யா. க. பாயிரம். 1 உரை) (L) |
தெய்வக் காப்பு | பாட்டுடைத் தலைவனைத் திருமால் முதலாகிய தெய்வங்கள் காக்குமாறுபாடும், பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துள் முதலாக நிகழும் பகுதி.பத்துப் பாடல்களுக்குக் குறையாது ஆசிரியச்சந்த விருத்தத்தால்இக்காப்புப்பருவம் நிகழும். (திவா. பக். 309) |
தெய்வச்சிலையார் | தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரையிட்ட உரை யாசிரியருள்ஒருவர். சில நூற்பாக்களுக்கும் அவற்றுட் சில சொற்களுக்கும் இவர்காணும் உரை, பிறர் உரையினும் நுட்பம் வாய்ந்தமை அறிந்தின்புறத்தகும்.எடுத்துக் காட்டாக ‘காலம் உலகம்’ (சொல். 55) என்னும் சூத்திரத்துள்இவர் சொற்களுக்கு விளக்கம் கூறும் நயம் காண்க. ‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய’ என்றதனான், இரண்டு சொல்லே தொகையாயினவாறு தோன்ற, ‘உலகம்உவப்ப… கணவன்’ (முருகு. 1 – 6) என்பதனை ஒரு சொல் நடை ஆக்கிக்காட்டும் உரை (சொல். 407) நயமுடையது. ‘கடிசொல் இல்லை’ (441) போன்றசூத்திரங்களுக்கு இவர் உரை பிறர் உரையின் வேறுபட்டுச் சிறந்தமைதெளிவு. ‘முன்னத்தின் உணரும்’ (448) என்றற்கு இவர் எடுத்துக்காட்டுவதுதெளி வானதொன்று. இன்ன நயம்பல இவருரையிற் காணலாம். இவர் காலம்நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது; என்ப 14 ஆம் நூற்றாண்டின்தொடக்கம் ஆதல் கூடும். ஆனால் இவர் உரை நச்சினார்க்கினியருக்குக்கிட்டவில்லை. |
தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள் | நட முதலாக அஃகு ஈறாகக் கிடந்த எல்லா வினைச்சொற் களும், உயிரும்ஒற்றும் குற்றுகரமும் ஆகிய இருபத்து மூன்று ஈற்றினவாய்ப் படுத்தல்ஓசையான் அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட்டு வினை மாத்திரமே உணர்த்திநிற்கும் தன்மை யுடையன. இவை இயற்றும் வினைமுதலான் நிகழ்த்தப்படும்தெரிநிலைவினைமுற்றுப் பகுபதத்தினுடைய பகுதிகள். குற்றுகரத்தை வேறுபிரித்ததனால், போக்கு – பாய்ச்சு – ஊட்டு – நடத்து – எழுப்பு – தீற்று- இத்தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும் கொள்ளப்படும். (இ. வி. எழுத்.43 உரை) |
தெள்ளேணம் | கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகை. ‘நாம் தெள்ளேணம்கொட்டாமோ’ (திருவா. 11 – 1) (L) |
தெவ் என்ற சொல் புணருமாறு | தெவ் என்ற உரிச்சொல் படுத்தல் ஓசையான் பெயராயவழி இன்சாரியை பெற்றுஉருபேற்கும்.எ-டு : தெவ்வினை, தெவ்வினொடு (தொ. எ. 184 நச்.)தெவ் என்பது அல்வழி, வேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரின்உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின்உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ஒற்று இரட்டுதலும்பெற்றுப் புணரும். வருமொழி மகரம் வரின், ஈற்று வகரம் மகரம் ஆதலும்உண்டு.எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வுக்கடுமை; தெவ்வு நீண்டது,தெவ்வுநீட்சி; தெவ்வு வலிது, தெவ்வுவலிமை; தெவ் யாது, தெவ்யாப்பு;தெவ் வரிது, தெவ்வருமை; (வகரம் இரட்டுதல்); தெவ்வு மன்னர், தெம்மன்னர் (தொ. எ. 382, 483 நச். உரை)தெவ் என்பது தொழிற்பெயர் போல உகரச்சாரியை பெற்று அல்வழி வேற்றுமைஎன்ற இருவழியும் வருமொழி வன்கணம் மென்கணம் இடைக்கணம் என்றமுக்கணத்தொடும் புணரும். வருமொழி முதலில் மகரம் வருமிடத்தே தெவ்என்பதன் வகரம் உகரம் பெறாமல் மகரமாகத் திரிந்து முடிதலுமுண்டு.எ-டு : தெவ்வுக் கடிது, தெவ்வு நீண்டது, தெவ்வு வலிது; -அல்வழிதெவ்வுக்கடுமை, தெவ்வுநீட்சி, தெவ்வுவலிமை – வேற்றுமைதெவ் + மன்னர் = தெம்மன்னர் (நன். 236)வருமொழி முதலில் யகரம் வரின் இயல்பாகப் புணர்தலும் இகரம் பெறுதலும்ஆம்.எ-டு : தெவ் + யாது = தெவ்யாது, தெவ்வியாது – அல்வழிதெவ் + யாப்பு = தெவ்யாப்பு, தெவ்வியாப்பு – வேற்றுமை (நன்.206) |