ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தூக்கிற் சுட்டு நீடல் ‘நீட்டும்வழிநீட்டல்’ ஆகாமை | அ + வயினான, இ + வயினான, உ + வயினான, அ + இருதிணை = ஆவயினான,ஈவயினான, ஊவயினான, ஆயிருதிணை என வரும்.இவ்வாறு செய்யுட்கண் சுட்டு நீளுதல் இருமொழிப் புணர்ச்சிக்கண்ணேயேவரும். ஆதலின் இஃது அடிதொடை நோக்கி வரும் ‘நீட்டும்வழி நீட்டல்’என்னும் விகாரம் ஆகாமை உணரப்படும்.எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)இதன்கண், ‘பொத்தறார்’ எனற்பாலது மேலடித் ‘தீத் தொழிலே’ என்ற எதுகைநோக்கி முதல் ஒகரம் நீண்டது. ஆதலின் இவ்விகாரம் புணர்மொழிக்கண் அன்றிஒரு மொழிக் கண்ணேயே நிகழ்வது என்க. (இ. வி. எழுத். 80 உரை) |
தூசம் கொளல் | ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதனீறே முதல் எழுத் தாக மற்றொருவெண்பாப் பாடுவது. (வீ. சோ. 181 உரை)எ-டு : ‘கண்ணவனைக் காண்கஇரு காதவனைக் கேட்கவாய்பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க – எண்ணிறைந்தநெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்கையொத்து நேர்கூப்பு க’ (பு. வெ. மா. கடவுள். 2)கடிது மலர்ப்பாணம் கடிததனின் தென்றல்கொடிது மதிவேயும் கொடிதால் – படிதழைக்கத்தோற்றியபா மாறன் துடரியில்மான் இன்னுயிரைப்போற்றுவதார் மன்னாசொல் க. (மா. அ. பாடல். 563)என முதல் வெண்பாவின் ஈற்றெழுத்தே முதலெழுத்தாக மற்றொரு வெண்பாப்பாடுவது. (இப்பாடல் ஈற்றடி சிறிது மாற்றப்பட்டுள்ளது.)ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால் அதன் ஈற்றெழுத்தே ஈறாக, முதலெழுத்தேமுதலாக, மற்றொரு வெண்பா ஈற்றினின்றும் மேற்பாடுவது. (யா. வி. பக்.538)மேலை எடுத்துக்காட்டுள் இவ்வமைதியையும் காண்க. |
தூணி என்ற பெயர் புணருமாறு | தூணி என்ற அளவுப்பெயர் நிலைமொழியாய்த் தன்னுடைய செம்பாதிஅளவிற்றாகிய பதக்கு என்ற பெயரோடு உம்மைத் தொகைப்படப் புணருங்கால்,பொதுவிதிப்படி (தொ. எ. 164 நச்.) ஏகாரச் சாரியை பெற்றுத் தூணியேபதக்கு என்று புணரும். இஃது அடையடுத்து இருதூணிப் பதக்கு என்றாற்போலவும் வரும்.தூணிக் கொள், தூணிச் சாமை, தூணித் தோரை, தூணிப் பாளிதம்;இருதூணிக்கொள், தூணித்தூணி முதலியனவும் வருமொழி வன்கணம் மிக்குப்புணரும்.சிறுபான்மை இக்குச்சாரியை பெற்றுத் தூணிக்குத் தூணி எனவும்,இருதூணிக்குத் தூணி எனவும் இன்னோரன்னவாக வருதலும் கொள்க. தூணிப்பதக்கு- உம்மைத் தொகை. (தொ. எ. 239 நச். உரை) |
தூணிக்குத் தூணி | ‘தூணித் தூணி’ எனத் தூணி என்னும் அளவுப் பெயர் தனக்கு முன்னர்த்தான் வரின் வல்லெழுத்து மிகும்; தூணியும் தூணியும் என உம்மைத்தொகை.தூணிக்குத் தூணி- என இக்குச்சாரியை பெறுதலும் கொள்க என்றனர் உரையாசிரியன்மார். அது ‘நாளுக்கு நாள்’ என்றாற் போலத் தொறு என்னும் பொருள்படநின்ற இடைச்சொல் ஆதலின், சாரியை எனப்படாது என்க. (தொ. எ. 239 ச.பால.) |
தூது | கலிவெண்பாவினாலே, பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணைஇருபாலினையும், கேளா மரபின வற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னம்கிளி வண்டு மயில் குயில் முதலிய அஃறிணைப் பொருள்களையும் இளைய கலாம்முதிய கலாம் இவற்றின் துனி நீக்குதற்கு வாயிலாக விடுத்தல் தூதுஎன்னும் பிரபந்தத்தின் இலக்கண மாம். (இ. வி. பாட். 114) |