ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
து + கொற்றா: வல்லெழுத்து மிகல்வேண்டாமை | து + கொற்றா = துக்கொற்றா என வலிமிகும் என்பர் சங்கர நமச்சிவாயர்.‘நொ து முன் மெலி மிகலுமாம்’ என்ற உம்மைக்கு, “இயல்பாதலே யன்றி மெலிமிகுதலுமாம்” என்று பொருள் செய்ய வேண்டுமே யன்றி, வலி மிகலுமாம் என்றுபொருள் கொள்ளுதல் சாலாது. நொ கொற்றா, து கொற்றா என்பன இடையேவல்லெழுத்து மிகாது வரின் ‘வாழைபழம்’ போலாகும் ஆதலின் அது பொருந்தாதெனின், வாழைப்பழம் என்பது தொகைச்சொல் ஆதலின் ஒரு சொல் நீர்மைத்து.ஆயின் இத்தொடரோ பிளவுபட்டிசைப்பது ஆதலின் மிகாது வருதல் இதற்குஅமையும் என்பது. (எ. ஆ. பக். 113) |
தும்பி பறத்தல் | மகளிரது விளையாட்டு வகை; உந்தி பறத்தல் போல்வது. மகளிர்பாடிக்கொண்டே அயரும் இவ்விளையாட்டில், அவர் பாடுவனவாக வரும் பாடல்கள்‘தும்பி பற’ என ஈற்றடி இரண்டும் முடிவு பெறுவவாக அமையும்.(திருவாசகத்துள் 14ஆம் பகுதியுள் இப்பாடல்களைக் காணலாம்.) |
தும்பிப் பாட்டு | வண்டினை விளித்தலை ஈற்றில் கொண்டு அமையும் ‘கோத் தும்பி’ என்றதலைப்பில் அமைந்த இப்பாடல்கள் கலிப்பாக் களைப் போலக் குறில் அகவல்ஏந்திசை வண்ணத்தில் அமைவனவாம். இப்பாடல்களது தொகையாக அமைந்த‘தும்பிப்பாட்டு’ இறந்துபட்டதொரு பண்டைய நூல். (யா. வி. பக். 417) |
தும்பை மாலை | தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து பாடும்பிரபந்த வகை. (தொ. வி. 283) |
துயிலெடைநிலை | அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடும் பிரபந்தவிசேடம். (சது.) (L) |
துயில் எழுமங்கலம் | பாணரும் விறலியும் முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. (கோவை. 375 பேரா.)இதனைத் துயிலெடை நிலை என்னும் தொல்காப்பியம். (பொ. 91 நச்.) |
துறைக்கவி | அகப்பொருள் துறைகளேயன்றிக் கலம்பகம் முதலிய சிறு பிரபந்தங்களில்அமையும் மறம், களி, தூது, வயிரபம், சம்பிரதம், தவசு, குறம், கணிகம்முதலிய செய்திகள் பற்றிய பாடல்கள் எல்லாம் புறப்பொருள் பற்றியதுறைகளாதலின் இவை துறைக்கவி என்று கொள்ளப்படுகின்றன.வயிரபம் – வலிமை வாய்ந்த புயங்களின் சிறப்புக் கூறும்‘புயவகுப்பு’ என்ற கலம்பகத் துறை போலும்.கணிகம் – மிகக் குறுகிய நேரத்தில் தம் சித்துக் களால் புதுமைதோற்றுவித்தலைக் கூறும் ‘சித்து’ என்ற கலம்பக உறுப்பு.ஏனைய மறம் போல்வன கலம்பகங்களில் பெருவரவினவாக உணர்த்தப்படும்துறைகளாம். (வீ. சோ. 183) |
துறைச் சுவடி | நீர்த்துறைகளில் இருந்து படிக்கப்படும் புராண ஏடு. ‘ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலேஎழுதியிட்டு வைத்தும்’ (ஈடு. 6 – 10 – 10) (L) |
துறைப்பாட்டு | அகப்பொருள் புறப்பொருள் துறைகளைக் குறித்து வரும் செய்யுள். (இ.வி. 603 உரை)தாம் சொல்ல விரும்பும் கருத்தை நேரிடையாகக் கூறாமல் அகப்பொருள்புறப்பொருள் செய்திகள் அமைந்த பாடல் களாக இயற்றி அவற்றின் வாயிலாகத்தாம் கருதுவதைக் கவிஞர்கள் பெறப்படவைக்கும் வகையில் அமையும்பாடல்கள்.இத்தகைய துறைப்பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந் தத்துள் நிரம்பவந்துள்ளன. |
துவரைக்கோமான் | இடைச்சங்கப்புலவருள் ஒருவர். (இறை. அ. 1 உரை) |
துவாசி | சுழிகுளம் என்ற சித்திரகவியை எவ்வெட்டு அறைகள் கொண்ட நான்கடிகளாகக்கட்டங்களில் அமைத்து, முதல் வரிசை எட்டாம் வரிசை – இரண்டாம் வரிசைஏழாம் வரிசை, மூன்றாம் வரிசை ஆறாம் வரிசை, நான்காம் வரிசை ஐந்தாம்வரிசை – என்ற இரண்டிரண்டு பகுப்புக்களையும் இணைத்துக் காண, அப்பாடலேமீண்டும் வருமாற்றைக் காணலாம். இச் சுழிகுளத்தின்கள் 1, 8; 2, 7; 3,6; 4, 5 – என்ற இரண்டு வேறு பட்ட வரிசைகளையும் இணைத்து நோக்குதல்துவாசி எனப்பட்டது.துவாசி – இரண்டு வேறுபாடு. (வீ. சோ. 181 உரை) |