ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தீக்கணம் | கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும்.‘புளிமாங்கனி’ தீக்கணம் ஆம். இதற்குரிய நாள் கார்த்திகை; இதன் பயன்நோய். ஆதலின், அகலக் கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும்பொருத்தம் பத்தனுள், இத்தீக்கணம் ஆகாதது என்று விலக்கப்படுவது. (இ.வி. பாட். 40)செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் ‘நிரை நேர் நிரை’ எனவருவதும் ஆகிய செய்யுட்கணம். (திவா. பக். 299) |
தீக்கவி | பிரபந்தத்தின் முதற்பாடல் முதல் சீர்க்கு ஓதிய பத்துப்பொருத்தங்களில் ஏற்பனகொண்டு சான்றோர் வகுத்த வழியின் வழுவாமல் பாடும்கவி நற்கவியாகும். அல்லாதன எல்லாம் தீக்கவியாகும். தீக்கவியினைப்பெற்றவனுக்குச் செல்வம் போம்; நோயாம்; சுற்றம் அறும்; மரணம் உறும்;கால்கள் சோரும். தீக்கவியைத் தெய்வங்கள் பற்றிப் பாடிய புலவனுக்கும்இத்தீங்கு உண்டாகும். (சிதம். பாட். மர. 20) |
தீட்டுக்கவி | சீட்டுக்கவி; ‘அந்தத் தீட்டுக்கவி காட்டுக்கு எறித்த நிலவாகிப்போம்’ (தமிழ்நா. 255) (L) |
தீத்தானம் | தலைவனது இயற்பெயரின் நான்கு ஐந்தாம் எழுத்துக்கள் பிரபந்த முதலில்வரப் பாடுதலாகிய கேடு விளைக்கும் செய்யுள்தானம். (பிங். 1347) |
தீய அவை | அவையினது திறத்தை அறியாதவர், ஆராய்ந்து பொருந்த அமைதியாகச்சொல்லாதவர், குற்றமின்றிச் சொல்லமாட் டாதவர், அவ்வாறு கூற நாணாதவர்,சொற் பொருட்சுவை யுணரமாட்டாதவர், கலைநுட்பத்தைத் தெரியாதவர்,அஞ்சாதவர், செருக்குடையோர் இன்னோர் குழீஇயுள்ள அவை தீய அவையாம்.(வெண்பாப். பாட். பொ. 11)குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் அவை குறைஅவையும்தீஅவையுமாம். (இ. வி. பாட். 176 உரை) |
தீர்க்க சந்தி | நிலைமொழியீற்று அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் வரு மொழி முதல் அகரஆகாரங்களில் ஒன்று வந்தால் (அவை யிரண்டும் கெட இடையே) ஓர் ஆகாரமும்,நிலைமொழி யீற்று இகர ஈகாரங்களில் ஒன்றன்முன் வருமொழி முதல் இகரஈகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஈகாரமும்,நிலைமொழியீற்று உகர ஊகாரங் களில் ஒன்றன்முன் வருமொழி முதல் உகரஊகாரங்களில் ஒன்று வந்தால் (அவையிரண்டும் கெட இடையே) ஓர் ஊகார மும்,தோன்றுதல் தீர்க்க சந்தியாம். (நிலைப்பத ஈறும் வருமொழி முதலும் ஆகியஉயிர்கள் கெடவே, தீர்க்க சந்தியாக நெட்டுயிர் தோன்றும்).எ-டு : வேத + ஆகமம் = வேதாகமம் (குள + ஆம்பல் = குளாம்பல்);பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்; சிவ + ஆலயம் = சிவாலயம்; சரண + அரவிந்தம்= சரணார விந்தம்; சேநா + அதிபதி = சநாதிபதி; சுசி + இந்திரம் =சுசீந்திரம்; கிரி + ஈசன் = கிரீசன்; குரு + உதயம் = குரூதயம்; தரு +ஊனம் = தரூனம் (தொ. வி. 38 உரை)அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் அகர ஆகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஆகாரமாகும்.எ-டு : பத + அம்புயம் = ப தா ம்புயம் : சேநா + அதிபதி = சேநாதிபதிஇகர ஈகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் இகர ஈகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஈகாரமாகும்.எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; கரி + இந்திரன் =கரீந்திரன்உகர ஊகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன் உகர ஊகாரங்கள் முதலாகியசொல் வரின், நிலைமொழியீறும் வருமொழி முதலும் கெட, ஊகாரமாகும்.எ-டு : குரு + உபதேசம் = குரூபதேசம்; சுயம்பூ + உபதேசம் =சுயம்பூபதேசம். (மு. வீ. மொழி. 36 -38) |