ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தாண்டக அடி | இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துக்களான் இயன்றஅடி(யா. வி. பக். 476) |
தாண்டகச் சந்தம் | ‘சந்தத் தாண்டகம்’ காண்க.சந்தஅடி பலவாயும் தாண்டக அடி சிலவாயும் வருவன வற்றைச் ‘சந்தத்தாண்டகம்’ என்ப, ஒருசாரார்; தாண்டக அடி பலவாயும் சந்தஅடி சிலவாயும்வருவனவற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ என்ப, ஒருசாரார் (யா. வி. பக்.485) |
தாண்டகம் | இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடி யினவாய்,எழுத்தும் குரு லகுவும் ஒத்தும் ஒவ்வாதும் வருவன தாண்டகமாகும்.எழுத்தும் குரு லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம்; ஒவ்வாது வருவனஅளவழித் தாண்டகம் ஆம் என்பது. (யா. வி. பக். 476)எ-டு: 27 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘வானிலவிமுகிலார்ப்ப’37 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘கருநிறப் பொறிமுக’43 எழுத்தடி அளவியல் தாண்டகம்: ‘அனவரதம்அமரர்’47 எழுத்தடி அளவியல் தாண்டகம்: அல்லற் கோடை’அளவழித் தாண்டகம்: ‘மூவடிவி னாலிரண்டு’(இவை பாடல் தொடக்கம்.) (யா. வி. பக். 483 – 485) |
தாது | வினைச்சொல்லின் பகுதி தாது எனப்படும்.எ-டு : உண்டான் முதலிய வினைச்சொற்களிலுள்ள உண் முதலியனதாதுவாம். (சூ.வி. பக். 55) |
தாந்தா எனும் சந்தம் | கீழ்க்காணும் நால்வகையான எழுத்து அமைப்பால் ஆகிய சொற்கள் பயிலவருவது தாந்தா எனும் சந்தமாம்.1. ஒரு நெட்டெழுத்தும், அடுத்து மெல்லின ஒற்றும், அடுத்துவல்லினநெடில் உயிர்மெய்யுமாக வருவது. எ-டு : சேந்தா2. அம்மூன்றனையும் அடுத்து மெல்லினமோ இடையின மோ ஆகியமெய்யெழுத்து வருவது. எ-டு : நான்றான், வாங்கார்3. ஒரு நெட்டெழுத்து, ஓர் இடையினமெய், ஒரு மெல்லின மெய் எனஇவற்றையடுத்து வல்லின நெடில் உயிர்மெய் வருவது. எ-டு :நேர்ந்தோ4. அந்நான்கெழுத்தினையும் அடுத்து ஒரு மெல்லின மெய் யோ இடையினமெய்யோ வருவது. எ-டு : மாய்ந்தான், சார்ந்தோர் (வண்ணத். 43 -47) |
தானப் பொருத்தம் | அகலக்கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம்பத்தனுள் ஒன்று. உயிர் எழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ எனஐந்து இனங்களாகப் பகுத்துப் பாட்டுடைத் தலைவனது பெயர் தொடங்கும்உயிரினத்தைப் பால(த்தான)ப் பொருத்தம் எனக் கொண்டு தொடங்கி, மேல்குமாரப் பொருத்தம், இராசப் பொருத்தம், மூப்புப் பொருத்தம், மரணப்பொருத்தம், என உயிரினங்களை எண்ணி மூப்புத்தானப் பொருத்தமும் மரணத்தானப் பொருத்தமும் ஆகிய எழுத்துக்களை நீக்கி, பிற தானங்களி லுள்ளஎழுத்துக்களால் நூலைத் தொடங்கும் செய்யுள் முதல்மொழிப்பொருத்தமாம்.தலைவனது இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ, இ ஈ ஐ,உ ஊ ஒள- என்பனவற்றுள் ஒன்று முதற்கண்வரும் முதற்சீரே ஏற்றது.தலைவனது இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தின தாயின் இ ஈ ஐ, உஊ ஒள, எ ஏ என்பன வற்றுள்ஒன்று முதற்கண் வரும் முதற்சீரே ஏற்றது.பிறவும் இவ்வாறே இயைத்துக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 23) |
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு | தானம் – உரம் (மார்பு) முதலியன; முயற்சி – இதழ்முயற்சி முதலியன;அளவு – மாத்திரை; பொருள் – பாலன் விருத்த னானாற்போல, குறிலது விகாரமேநெடிலாதலின், இரண் டற்கும் பொருள் ஒன்று என்று முதனூலால்நியமிக்கப்பட்ட பொருள்; வடிவு ஒலிவடிவும் வரிவடிவும். இவற்றுள்ஒன்றும் பலவும் ஒத்து எழுத்துக்கள் தம்முள் இனமாய் வருதல் காண்க.(நன். 72 சங்கர.) |
தானை மாலை | ஆசிரியப்பாவால் அரசரது தூசிப்படையினைப் பாடும் பிரபந்தவகை.தூசிப்படை – முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படை (இ. வி. பாட்.109) |
தான் என்ற இயற்பெயர் தந்தை, மக்கள்முறைமையொடு புணர்தல் | தான் என்ற இயற்பெயர், தந்தை என்ற முறைப்பெயரொடும் மக்கள்முறைமையுடைய இயற்பெயர்களொடும் புணரும்வழி, தான் என்ற சொல்லின் னகரம்திரிபு பெறாமல் இயல்பாகவே புணரும்.வருமாறு : தான்த (ற) ந்தை, தான்கொற்றன். (தொ. எ. 351நச்.) |
தாப்புலி | ஒரு வகையான பழைய பா. (செங்கோன் தரைச்செலவு) (L) |
தாயுமானவர் பாடல் யாப்பு | நேரிசை வெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, நிலைமண்டிலஆசிரியப்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம்,கலித்துறை, சிந்து, எளிய சந்த அமைப் பினை உடைய வண்ணம் என்பனவாம்.குறள் வெண்செந் துறை எனப்படும் பாக்கள், தாழிசை எனவும் கண்ணி எனவும்இருவகைப்படும். அவை எண்சீர் அடி இரண்டாயும், நாற் சீரடி இரண்டாயும்நிகழ்வன. (இலக்கணத் முன். பக். 107) |
தாய் என்ற முறைப்பெயர் புணருமாறு | விரவுப்பெயருள் முறைப்பெயர் என்ற வகையைச் சார்ந்த தாய் என்ற சொல்,வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும், வரு மொழி வன்கணம் வந்துழியும்இயல்பாகப் புணரும்.எ-டு : தாய்கை, தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.தாய் என்ற சொல் தனக்கு அடையாக முன்வந்த மகனது வினையைப் பின்னாகஒருவன் கூறுமிடத்து, வருமொழியில் வன்கணம் வரின் மிக்குப் புணரும்.எ-டு : மகன்தாய்க் கலாம், மகன்தாய்ச் செரு, மகன்தாய்த்துறத்தல், மகன்தாய்ப் பகைத்தல்என வல்லொற்று மிக்கே வரும். இவை, மகன் தாயொடு கலாய்த்த கலாம், மகன்தாயொடு செய்த செரு, மகன் தாயைத் துறத்தல், மகன் தாயைப் பகைத்தல் – எனவிரியும் வேற்றுமைப் பொருண்மையவாம். (தொ. எ. 358, 359 நச்.) |
தாரகை மாலை | அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களைவகுப்பினால் பாடும் பிரபந்தவகை. ‘வகுப்பு’த் தனியே காண்க. (இ. வி.பாட். 107) |
தாற்பருவம் | பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத் தலைமக னையோ தலைமகளையோஎட்டாம் மாதத்தில் தாலாட்டு வதாகக் கூறும் மூன்றாம் பருவம். தாலப்பருவம் என்பதும் அது. தால் – நாவு; தாய் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுநாவசைத்துப் பாடுதலின், இப்பருவம் இப்பெயர்த்தாயிற்று. ஆசிரியவிருத்தம் பத்துப் பாடல்கள் சந்தவின்பம் பெற இது பாடப்பெறும். |
தாலப்பருவம் | பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் மூன்றாவதாக வரும் பருவம் பாட்டுடைத்தலைவனாகிய குழந்தையைத் தொட்டிலி லிட்டுத் தாய் நாவினை யசைத்துப்பாடிப் பாராட்டுவது. பத்து ஆசிரிய விருத்தத்தான் சந்தவின்பம் தோன்றப்பாடப் பெறும். (தால் – நாவு) |
தாலாட்டு | (1) குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப் பாடுதல்; ‘தாலாட்டுநலம்பல பாராட்டினார்’ (பெரியபு. திருஞான.44)(2) ‘தாலே லோ’ என்று முடியும் ஒருவகைப் பாட்டு(3) தாலாட்டுதற்குரியதாய்ப் பிரபந்தத் தலைவனுடைய சிறந்தசெயல்களைத் தெரிவிக்கும் பல கண்ணிகளை யுடையதொரு பிரபந்தம் எ-டு:சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு. (L) |
தாள ஓத்து | 108 தாளங்களை விவரிக்கும் ஒரு பழையநூல் (L) |
தாள சமுத்திரம் | பரத சூடாமணி என்ற அரசன் இயற்றிய தாள வகையைக் கூறும் பண்டைய நூல்.சிலப். முகவுரை (உ. வே. சா.) |
தாழக்கோல் : தொடர்வகை | தாழைத் திறக்கும் கோல் என விரியும். இஃது இரண்டன் உருபும் பயனும்உடன்தொக்க தொகை. தாழக்கோல் எனினும் திறவுகோல் எனினும் ஒக்கும்.தாழாகிய கோல் என விரிப்பின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம். முன்னதுவேற் றுமைப் புணர்ச்சி; பின்னது அல்வழி. (நன். 225 சங்கர.) |
தாழ் என்ற பெயர் கோலொடு புணர்தல் | தாழ் என்ற நிலைமொழி கோல் என்ற வருமொழியொடு புணருமிடத்து, இடையேஅக்குச்சாரியை பெற்றுத் தாழக் கோல் எனவும், வல்லெழுத்து மிக்குத்தாழ்க்கோல் எனவும் புணரும். தாழ்க்கோல் என்பதே பெரும்பான்மை. இதனைத்தாழைத் திறக்கும் கோல் என வேற்றுமைவழியிலும், தாழாகிய கோல் எனஅல்வழியிலும் பொருள் செய்யலாம். (தொ. எ. 384 நச்). |