ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஞகர ஈற்றுப்பெயர் புணருமாறு | ஞகர ஈற்றுப் பெயர் உரிஞ் என்ற ஒரு சொல்லே. இஃது உருபேற்கு மிடத்துஇன் சாரியை பெறும். அல்வழிக்கண்ணும் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும் உகரம் பெற்று, வருமொழி வன்கணம் வரின்வலிமிக்கும், ஏனைய கணங்களுள் மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வரின்உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின் இயல்பாகவும்புணரும்.எ-டு : உரிஞுக் கடிது; உரிஞு ஞான்றது, உரிஞு வலிது, உரிஞ் யாது,உரிஞரிது; உரிஞுக்கடுமை; உரிஞுஞாற்சி, உரிஞுவலிமை; உரிஞ் யாப்பு,உரிஞருமை – என இருவழியும் முடிந்தவாறு. (தொ. எ. 296, 297 நச்.)உரிஞ் முன்னிலை ஏவலொருமை வினையாகுமிடத்து, வருமொழி வன்கணம் வரின்உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்ந்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வரின் உகரம் மாத்திரம் பெற்றும், யகரமும் உயிரும் வரின்இயல்பாகவும் புணரும்.எ-டு : உரிஞு கொற்றா, உரிஞுக் கொற்றா; உரிஞு நாகா, உரிஞு வளவா;உரிஞ் யவனா, உரிஞனந்தா என முறையே புணருமாறு காண்க. (152 நச்.உரை) |
ஞகர நகர ஈறுகள் உருபேற்குமாறு | ஞகர ஈற்றுச்சொல் உரிஞ் ஒன்றே; நகர ஈற்றுச் சொற்கள் பொருந் வெரிந்என்னும் இரண்டே. உரிஞ் – தேய்த்துக் கொள்; பொருந் – ஒப்பிடு; வெரிந் -முதுகு என்னும் பொருளன.இச்சொற்கள் உருபேற்கையில் இடையே இன்சாரியை பெறுவன. (உரிஞ், பொருந்என்னுமிவை தொழிற்பெயர்ப் பொருளவாய் உருபொடு புணரும்).எ-டு : உரிஞினை, உரிஞினால்; பொருநினை, பொரு நினால்; வெரிநினை,வெரிநினால் (தொ. எ. 182 நச்)ஆயின் இவை ஐந்தாம் உருபாகிய இன்னொடு பொருந்த மாட்டா. இவ்வுருபுஇச்சொற்களோடு இணையுமிடத்து இன்சாரியை இடையே வாராது. உரிஞின்,பொருநின், வெரிநின் என ஐந்தனுருபோடு இச் சொற்கள் வருமாறு காண்க.உரிஞினின், பொருநினின், வெரிநினின் என இடையே சாரியை புணர்தல் மரபன்று.(131 நச்.) |
ஞானாசாரியம் | வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் பலவகை யான சந்தச்செய்யுள்இலக்கணமும் தாண்டகச்செய்யுள் இலக்கணமும் கூறப்பட்டன. (யா.வி. பக்.486) |
ஞாபகம் | ஞாபகம் என்பது ஒருவகை அறியும் கருவி. இது ‘ஞாபகம் கூறல்’ என்றஉத்திவகையின் வேறானது. இது நேரிடையாகக் கூறப்படாத செய்திகளை அறிவினான்அறியச் செய்வது.பனியிற் கொண்டான், வளியிற் கொண்டான் எனத் தொழிற் கண் (கொண்டான்முதலியன) இன்னின் னகரம் திரியும் எனவே, பெயர்க்கண் இன்னின் னகரம்திரிதலும் திரியாமை யும் கொள்ளப்படும் என்பது ஞாபகத்தான்பெறப்படும்.குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி – எனத் திரிந்துவந்தன.குருகின் கால், எருத்தின் புறம் – எனத் திரியாது வந்தன.(தொ. எ. 124 நச்.)பல + பல என்பதன்கண் நிலைமொழி அகரம் கெடற்கு விதி கூறப்படவில்லை;“லகர ஒற்று றகர ஒற்றாகும்” என்பதே கூறப்பட்டுள்ளது. “அகரம் கெடும்”என்பது ‘வாராததனான் வந்தது முடித்தல்’ என்னும் உத்திவகை; ஞாபகம்என்பாரு முளர். (214 நச். உரை 215 இள. உரை)‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும் …… அவற்றோ ரன்ன’ என ஞாபகமாகக்கூறிய அதனால், மாங்கோடு என அகரம் இன்றியும் வரும். (231 நச். உரை) |
ஞெமை என்ற சொல் புணருமாறு | ஞெமை என்ற மரத்தை உணர்த்தும் பெயர் அல்வழிப் புணர்ச்சியில்நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : ஞெமை கடிது, சிறிது, தீது, பெரிது; ஞெமை ஞான்றது,நீண்டது, மாண்டது; ஞெமை யாது, வலிது; ஞெமை யழகிது. (யகரம்உடம்படுமெய்) (தொ. எ. 158 நச்.)வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், சே என்ற மரப்பெயர் போல, வன்கணம்வருவழி இனமாகிய மெல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வருவழி இயல்பாகவும்புணரும்.எ-டு : ஞெமைங்கோடு, ஞெமைஞ்செதிள், ஞெமைந் தோல், ஞெமைம்பூ;ஞெமைஞாற்சி, நீட்சி, மாட்சி; ஞெமை யாப்பு, வன்மை; ஞெமையருமை (யகரம்உடம்படு மெய்) (282 நச்.) |