தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சகதி

ஒற்றொழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டு எழுத்தாய்த் தமிழில்வழங்கும் வடமொழி விருத்தம்.எ-டு :‘உருண்ட தேர்மேற் செலவுந்த னுள்ளமாம்மருண்ட தேர்மிசை மாதர்கண் மீட்சியுங்கருண்ட வாளுடைக் காளன் ஒருவனேஇருண்ட தேர்மிசை யெவ்வா றியங்கினான்’ (வீ. சோ. 139 உரை)

சகர அகரம் மொழிமுதற்கண் வாராமை

சத்தான் என்று வழங்கற்பால சொல் செத்தான் என்று தமிழில்
வழங்குகிறது. இச்சொல் தெலுங்கில் சச்செனு எனவும், கன்னடத்தில் சத்தனு
எனவும், மலையாளத்தில் சத்து எனவும் வழங்குகிறது. இவற்றால் சகரஅகரம்
பண்டு சகரஎகரச் சாயையில் தமிழில் ஒலித்திருக்கும் என்று
உய்த்துணரலாம்.
சரி சமழ்ப்பு சட்டி சருகு சவடி சளி சகடு சட்டை சவளி சவி சரடு சந்து
சதங்கை சழக்கு முதலிய சொற்கள் தொல்காப்பிய னார் காலத்து வழங்கப்பட்டில
என்பது அறியத்தக்கது. (எ. ஆ. பக். 66, 67)

சகர முதன்மொழி

‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே, அ ஐ ஒளஎனும் மூன்றலங் கடையே’
என்பது முதலாக இன்னோரன்ன சில எழுத்துக் களை மொழிக்கு முதலாகா என
ஆசிரியர் தொல். விலக்கினா ரெனின், இவ்வடமொழிகளும் திசைச்சொற்களும்
அக்காலத்து இவ்வாறு தமிழின்கண் பயின்று வாராமை பற்றி என்க. (நன். 106
சிவஞா.)

சகரம் மொழிமுதல் ஆதல்

சரி சமழ்ப்பு சட்டி சருகு சவடி சளி சகடு சட்டை சவளி சவி சரடு சந்து
சதங்கை சழக்கு முதலியன வழக்கு செய்யுள் எனும் ஈரிடத்தும் வரும்
சகரமுதன் மொழிகள். (நன். 105 மயிலை.)

சக்கரங்களில் பலவகை

பூமி சக்கரம், ஆகாயச் சக்கரம், பூமி ஆகாயச்சக்கரம், வட்டச்சக்கரம், புருடச்சக்கரம், சதுரச் சக்கரம், கூர்மச்சக்கரம், மந்தரச்சக்கரம், காடகச் சக்கரம், கலிபுருடச் சக்கரம், சலாபச் சக்கரம்,சக்கரச் சக்கரம், அரவுச் சக்கரம், முதலாக உடையன புணர்ப்பாவை,போக்கியம், கிரணியம், வதுவிச்சை என்ற நூல்களில் காணப்படும்.அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத்தது பாடுதற்கும்பற்றாகும் எனக் கொள்க. (யா. வி. பக். 532, 533)

சக்கரமாற்று

சீகாழியின் பன்னிருபெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒருபாடலின்இறுதியிற்கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு பாடிய சம்பந்தர்தேவாரப் பதிகம். (இரண்டாந்திருமுறை – பதிகம் 73)

சக்குவரி

ஒற்று ஒழித்து அடியொன்றற்குப் பதினான்கு எழுத்துக்கள் கொண்ட நாலடிவிருத்தம்.எ-டு : ‘சந்த நீழ லுலாவித் தண்ணென் றமருந் தெண்ணீர்சிந்து துவலை வீசித் தெண்ணி லாவூ டுலாவுமந்த வலைய மேன வல்லி தகர வாசந்தந்த பொழுது வாழ்வார் தமைவைத் தேகு நண்பர்’ (வீ. சோ. 139உரை)

சங்கதம் முதலாகிய நான்கு

சொல், சங்கதம் எனவும் பாகதம் எனவும் சநுக்கிரகம் எனவும்
அவப்பிரஞ்சனம் எனவும் நான்கு வகைப்படும். (மு.வீ. மொழி. 28)

சங்கயாப்பு

உயிர், குறில், நெடில், மாத்திரை அளவு, அரை மாத்திரை அளவு,குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறுதல், நேரசை நிரையசை,தொடர்வகை, வெண்பாஓசை, ஆசிரி யப்பாவின் ஓசை, கலிப்பாவகை, பாக்களின்அடிவரையறை முதலியன பற்றிய செய்திகளுக்கு இந்நூலின் சூத்திரங்கள்பதினான்கு யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்பட் டுள்ளன. (யா. வி.பக். 53 முதலாயின)

சங்கர நமச்சிவாயர்

நன்னூலுக்கு விருத்தியுரை கண்டவர். இவரது ஊர் திருநெல் வேலி. இவர்வாழ்ந்த இடம் தடிவீரையன் கோயில் தெரு என்றும், இவரது குலம்பாண்டிநாட்டு வேளாளர் குலம் என்றும் டாக்டர் ஐயரவர்கள்குறிப்பிட்டுள்ளார். நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்துச்சாமிநாத தேசிகரிடம் இவர் இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றார்.‘நன்னூலுக்குச் சிறந்ததோர் உரை செய்திடுக’ என்று தம் ஆசிரியர்பணித்தமையாலும், ஊற்றுமலை மருதப்பதேவரது வேண்டுகோளாலும் இவர்இவ்விருத்தியுரை வரைந்தமை அகச்சான்றுகளால் புலப்படுகிறது. தம்ஆசிரியர் போலவே இவரும் தொல்காப்பியம் திருக்குறள் திருக்கோவையார்என்னும் இம்மூன்றிலும் தக்க புலமையும் ஈடுபாடும் கொண் டிருந்தமை உரைவாயிலாக உணரப்படும். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு. அடுத்துத் தோன்றியவடமொழி தென் மொழி இரண்டிலும் புலமை நிரம்பிய மாதவச் சிவஞான முனிவர்இவரது புத்துரையை மேலும் புதுக்கிப் புத்தம் புத்துரை ஆக்கியமையேஇவரது உரைமாட்சிக்கொரு சான்று என்பர் டாக்டர் ஐயரவர்கள்.

சங்கியானம்

ஸங்கியானம்; 26 எழுத்தளவும் உள்ள சந்தங்களில் வரும் விருத்தங்களின்மொத்தத் தொகை.நான்கு எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் லகு, குரு அமைப்பால் 1 6வகையென்று, ஏக த்வி ஆதி லகுக் கிரியை என்னும் தெளிவில் அறியப்படும்.(‘ஏகத்வி ஆதிலகுக் கிரியா’ காண்க) அதே தொகைதான் நான்கெழுத்துச்சந்தத்தில் வரும் விருத்தங்களின் தொகையும் ஆம். அடுத்து,ஐந்தெழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் நான்கெழுத்துச் சந்தத் தொகையின்இருமடங்காகிய 32 விருத்தங்கள்; ஆறு எழுத்துக்கொண்ட சந்தத்தில்முன்னதினும் இருமடங்கு எனவே, 64 விருத் தங்கள்; ஏழெழுத்துச்சந்தத்தில் 128; எட்டெழுத்துச் சந்தத் தில் 256; இவ்வாறே 26எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் வரும் விருத்தங்களின் தொகை 6, 71, 08,864 ஆம். (வீ. சோ. 138 உரை)

சங்கிருதி

ஒற்று ஒழித்து ஓரடிக்கு 24 எழுத்துக் கொண்டதாய்த் தமிழில் வழங்கும்வடமொழிச் சந்தம்.எ-டு : ‘உடைய தானவ ருடைய வென்றவ உடைய தாணம சரண மாகுமே.’இது சங்கிருதி அமைந்த நாலடி விருத்தத்துள் ஓரடி. நாலடி யுமமைந்தவிருத்தம் வருமாறு :-அண்டர் குலபதி யாம்விடை வாகனனம்பொ னடிமலர் நாறிடு சேகரனெண்டி சையுமனு நீதிசெய் கோலினனெங்கு மொருகுடை யாலிடு நீழலன்மண்டு கிரணசி காமணி மௌலியன்வண்டு மதுநுகர் தாதகி மாலையன்மிண்டு முதுபுலி யேறுப தாகையன்வென்றி வளவனை யார்நிக ராவரே? (வீ. சோ. 139 உரை)

சச்சபுட வெண்பா

அங்கப் பிரமாணமாகிய சச்சபுடம் முதலிய 108 தாளங்களையும் விளக்கும்தாளநூல் இதனை அகத்தியமுனிவர் இயற்றியதாக நூலின் இறுதி வெண்பாகூறுகிறது. இந்நூலில் 210 வெண் பாக்கள் உள்ளன. ‘மறைகும்பமுனி சொற்றான்மிளிரிய; இருநூற்றொரு பதாம்’ என்பது இறுதிப்பாடலின் இறுதிப் பகுதிஅடிகள்.

சதகம்

விரும்பத்தகும் அகப்பொருள் ஒன்றன்மேலாவது புறப்பொ ருள்ஒன்றன்மேலாவது கற்பித்து நூறுகவி பாடுவதொரு பிரபந்தம். இதன்பாடல்களின் ஈற்றடிதோறும் பாட்டுடைத் தலைவன் பெயர் வருதல் பெருவழக்கு.(இ. வி. பாட். 87)பொருள் இடம் காலம் தொழில் என்னும் இவை பற்றி வெண்பா அல்லதுகலித்துறை யாப்பால், சதகம் பாடப் பெறும் என்னும் பிரபந்த மரபியல்(34). (சதகம் அந்தாதியாக முதலும் இறுதியும் மண்டலித்து வருதல்சிறப்புடைத்து என்ப.)

சதுரகராதி

பெயரகராதி தொகையகராதி பொருளகராதி தொடையக ராதி என்ற நாற்பிரிவுகள்உடையதாக, 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட அகராதி.

சதுரங்க பந்தம்

‘மானவனா மேவலா மாறனித்த மாமாலையானதவ போதனுமா யாய்ந்தகோ – மானவடிநாதனின்மே னன்கலன்பூ ணென்முனநீ வந்தெவனொன்றாதயமா வன்புலமா ய.’‘ஒன்றாத யமா! மானவனா! மேவல் ஆம் மாறன், நித்தம் ஆம் மாலை ஆன தவபோதனுமாய், ஆய்ந்தகோ, மானஅடி, நாதனின் மேல் நன்கலன் பூண் என் முனம் நீவந்து, எவன்? வன்புலம் ஆய’ எனப் பிரித்துப் பொருள் செய்க.“எவ்வான்மாக்களொடும் பொருந்தாத நமனே! மனுகுலம் காவலன் ஆகுக.நங்கையார்க்கும் காரியார்க்கும் புத்திரனாக மேவிய மாறன் என்னும்பிள்ளைத் திருநாமமுடையவன், நித்தமாக நிலைபெற்ற திருமாலைத் தன்னிடத்துஆக்கம் பெற்ற மெய்த்தவத்தொடு கூடிய ஞானவான், திருமாலே பரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன், ஆகிய சடகோப னுடைய பெருமையுடைய திருவடிகளை என்நாவிலும் தலையிலும் நல்ல ஆபரணமாகப் பூண்டுள்ள என் முன்னே வந்து நீசாதிப்பதுதான் யாது? (ஒன்றுமில்லை) என்னிடம் நீ வருதற்கு எளிய இடம்அன்று; வலிய இடமாகப்பட்டன” என்று பொருள்படும் இந்நேரிசை வெண்பாவினைச்சதுரங்க அரங்கின் நாலு பக்கமும் மையங்களில் நால்நான்கு பதினாறுஅறையிலும் நடுவில் நாலு அறையிலும். மாதவன் என்னும் திருநாமம்நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக் கொள்ளப் படும். சதுரங்க பெந்த வரைபடம்காண்க. சதுரங்கம் வரையப் பட்டுள்ளது. அறைகள் 64 தோன்றச் சதுரமாகவடிவம் கீறப்பட்டதன்கண், இப்பாடலை அமைக்குமாறு தெரிந் திலது. பலவாறுமுயன்றும் உரையுள் காணப்பட்டவாறு ‘மாதவன்’ அமையப் பெற்றிலது. (மா. அ.299 உரை; பாடல் 810)

சந்த அடி

நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த, தம்முள்ஒத்த, அடியான் இயன்ற விருத்தம் அள வியற் சந்தமாம். அவ்விருத்தத்தின்அடி சந்த அடி என்றவாறு. (யா. வி. பக். 476)

சந்த தாண்டகங்களில் எழுத்துஎண்ணல்

சந்தம், தாண்டகம் இவற்றுள் எழுத்து எண்ணும்வழிக் குற்றுகரம்,குற்றிகரம் இவற்றையும் எழுத்தாகவே கொண்டு கணக்கிடல் வேண்டும். (யா.வி. பக். 486)

சந்த விருத்த வகைகள்

ஓசை இயைபு காரணமாகச் சந்தம் என்னும் பெயரடை கொண்டுஎழுத்துவகையானும் அசைவகையானும் இயையும் யாப்புவகை, சந்த விருத்தம்ஆகும். ஆகவே, இஃது எழுத்துச் சந்தவிருத்தம், அசைச் சந்தவிருத்தம் எனஇருவகைப்படும். வடமொழியில் அட்சரகணம், மாத்ராகணம் என அமைந்த பகுப்புப்போன்றது இது. (புதுவை நடராசனார் நூற்செய்தி) (தொ. வி. 249)

சந்த விருத்தம்

எழுத்து வகையானும் அசைவகையானும் ஓசை இயைபு காரணமாகச் சந்தம்என்னும் பெயர் பொருந்திச் சமமான ஒருவிசுற்பத்து நான்கடிகளையுடையதுசந்தவிருத்தம். (தொ. வி. 249)

சந்தக் கலி விருத்தம்

நேரசை முதலாகத் தொடங்குமடி பதினோரெழுத்தும், நிரையசை முதலாகத்தொடங்குமடி பன்னீரெழுத்தும் கொண்டு வரும் கலிவிருத்தம் சந்தக்கலிவிருத்தமாம்.‘முன்றி லெங்கு முருகயர் பாணியும்சென்று வீழரு வித்திர ளோசையும்வென்றி வேழ முழக்கொடு கூடிவான்ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்’ (சூளா. 13)‘அணங்க னாரன ஆடல் முழவமும்கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்மணங்கொள் வார்முர சும்வயல் ஓதையும்இணங்கி எங்கும் இருக்குமோர் மாடெலாம்’. (சூளா. 15) (யா.வி. பக்.520)இவை முறையே அடி நேரசையிலும் நிரையசையிலும் தொடங்கி அடிக்குபதினோரெழுத்தும் பன்னீரெழுத்தும் பெற்று வந்தன.தமிழில் யாப்பில் கூறப்படும் தேமா புளிமா முதலிய சீர்களால்அமைக்கப்பட்டு மாத்திரை எண்ணிக்கைக்கும் பெரும்பான்மையும் ஒத்து வரும்கலிப்பாக்கள் சந்தக் கலி விருத்தமாம். இவை வடமொழி விருத்தங்களோடுஒருபுடை ஒத்து வருதலு முண்டு. (வி. பா. சந்தவிருத்தம் 5)I அ) நான்கு மாத்திரையுடைய தேமா புளிமாச் சீர்களால் ஆக்கப்பட்டநாற்சீரடி நான்கு கொண்டு வருவது :எ-டு : ‘நீரும் மலரும் நிலவும் சடைமேல்ஊரும் மரவம் முடையா னிடமாம்வாரும் மருவி மணிபொன் கொழித்துச்சேரும் நறையூர்ச் சீத்தீச் சரமே’ (தே. VII . 93-1)‘கொழித்துச்’ என்றசீர் 5 மாத்திரை; ஏனைய 4 மாத்திரை; யாவும்மாச்சீர்களே.ஆ) இக்கலி விருத்தம் இரட்டித்து எண்சீர் நாலடியாய் வருவதுண்டு.அதுபோது இஃது எண்சீர் ஆசிரிய விருத்த மாகும்.II அ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் நான்கு கொண்ட நான்குஅடிகளான் அமைவது; அடியிறுதி நெட்டெழுத் தாவதுஎ-டு : ‘வடிவே லதிகன் படைமா ளவரைக்கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்கொடிமா மதினீ டுகுறும் பொறையூர்முடிநே ரியனார் படைமுற் றியதே’. (பெரியபு. 41 : 27)(மாத்திரை கொண்டு நோக்கக் குற்றொற்று நெட்டெழுத்துப்போல்வதாம்)ஆ. நான்கு மாத்திரையுடைய புளிமாச்சீர் மூன்றும் இறுதிச் சீராகியபுளிமாங்காய் ஒன்றும் அமைந்த அடி நான்காய் வருவது.எ-டு : ‘பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம்சுலவும் மயில்கா முறுபே டையொடாடிக்குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டந்நிலவும் பெருமா னடிநித் தநினைந்தே’ (தே. I 31-6)‘பொழில்சூழ்ந்’ என்பது நீங்கலாக நாலடியிலும் முதல் மூன்றுசீர்களும் 4 மாத்திரை அளவின. அது சிறுபான்மைத்தாக 5 மாத்திரைகொண்டது.இ) இவ்வகையில் அடிதோறும் முதற்சீர் நேரசையில் தொடங்குவது.எ-டு : ‘சூலப் படையான் விடையான் திருநீற்றான்காலன் தனையா ருயிர்வவ் வியகாலன்கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே’ (தே. I 31-3)ருயிர்வவ் – பொழில்சூழ்ந் – கமழ்புன் – நீங்கலான முதல் மூன்றுசீர்களும் நாலடியிலும் 4 மாத்திரை அளவின. இவை மூன்றும் சிறுபான்மையவாக5 மாத்திரை பெற்றன.

சந்தக் கலித்துறை

சிந்தாமணி சூளாமணி குண்டலகேசி நீலகேசி அமிர்தபதி என்ற இவற்றின்முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடிக்குஎழுத்து 14, நிரையசை முதலாய் வரின் ஓரடிக்கு எழுத்து 15. இவை சந்தக்கலித்துறை யாம்.‘மூவா முதலா உலகம்மொரு மூன்று மேத்தத்தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்திஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்பதேவாதி தேவன் அவன்சேவடி சேர்து மன்றே’ (சீவக. கடவுள்.)‘மதியம் கெடுத்த வயமீனெனத் தம்பி மாழாந்துதிதற் குரியாள் பணியாலுடன் ஆய வாறும்நிதியின் னெறியின் அவன்தோழர் நிரந்த வாறும்பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்’. (சீவக. பதிகம்.28)இவை முறையே ஓரடிக்கு எழுத்துப் பதினான்கும் பதினைந் தும் பெற்றுவந்தன. (மூன்றாம் சீர் புளிமாங்கனியாக வருதல் குறித்துணரத் தகும்.இரண்டாம் பாடல் ஈற்றடிகளில் அச்சீர்கள் மாங்காய் வாய்பாடாக வருதலின்ஓரெழுத்துக் குன்றிவருதல் காண்க.) (யா. வி. பக். 520, 521)

சந்தக்குழிப்பு

சந்தச் செய்யுளின் ஓசை வாய்பாடு. சந்தங்களில் சிலபல சேர்ந்து ஒருதுள்ளலாம்; துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பாம். ‘சந்தப்பா’காண்க.எ-டு : தானதன தானதந்த தானதன தானதந்ததானதன தானந்த தனதானாஎன்னும் வாய்பாட்டால் வரும் சந்தக்குழிப்பு :பாவையரை யேவிரும்பி நாளுமவ ரோடுறைந்துபாழுமன மேமெலிந்து – நலியாதேபூவலய மேலனந்த லோபிகளை யேபுகழ்ந்துபோதவறி வேயிழந்து – மெலியாதேநாவலர்க ளோடுகந்து பூதிமணி யேயணிந்துஞானசிவ யோகமென்று – புரிவோனேஆவலுடன் மாமுகுந்த னோடுமய னார்வணங்கும்ஆதிபுரி வாழவந்த – பெருமாளே!‘நலியாதே’ போன்ற தனிச்சொற்கள் சந்தப்பாக்களில் ‘தொங்கல்’எனப்படும்.

சந்தங்களின் கலை

மூன்று சந்தக் குழிப்புக்களின் பின்னர், ஒரு தொங்கல், ஒரு தாழிசை,ஒரு துள்ளல் இவற்றைப் பாடுதல் ஒரு கலை என்று கூறப்படும். (வண்ணத்.87)இருதுள்ளல் கொண்ட கலையால் வந்த வண்ணம்.மின்னலையொத் தேயுற் றிருக்கின்ற வாழ்விலேவெம்மையுறத் தான்மிக் கிளைப்புண் டிராமலேயின்னலறுத் தேசிற் சுகத்தின்கண் மேவுமாஎன்னையெடுத் தாணற் றமிழ்ச்சந்த மோதுவேன்வன்னமலர்ச் சோலைத் திருச்செந்தில் நாயகா!வண்ணமிசைப் பாரைப் புரக்குந்த யாபரா!தென்னணிவெற் பானுக் குவப்பொன்று தேசிகா!சென்னைநகர்க் கோயில் திருத்தண்ட பாணியே! (வண்ணத். 87)

சந்தங்களின் துள்ளல்

சிலவகைச் சந்தங்களைப் புணர்ப்பது ஒரு துள்ளல். (வண்ணத். 85)

சந்தங்களின் தொகை

1. தத்த, தத்தா, 2) தாத்த, தாத்தா, 3) தந்த, தாந்தா, 4) தாந்த,தாந்தா, 5) தன, தனா, 6) தான, தானா, 7) தன்ன, தன்னா,8) தய்ய, தய்யா என எட்டு. (வண்ணத். 4)

சந்தங்களின் தொடர்ச்சி இயல்பு

குறில் நெடில் இவற்றின் சந்தம் ‘தனா’; குறில் நெடில் ஒற்று வரின்இத் ‘தனா’ என்னும் சந்தத்தைத் ‘தனான்’ என்னும் சந்தம் போலமனத்திற்கொண்டு கணக்கிடுக.எ-டு : கடாம், வரால் (வண்ணத். 83)

சந்தங்களின் மதிப்பியல்பு

வன்மை, மென்மை, இடைமை என்னும் மூவின மெய்களுள் ளும் சந்தியில்ஏற்படும் தோன்றல் திரிதல் கெடுதல்களை உட் கொண்டு அச்சந்திக்கு ஏற்பச்சந்த வாய்பாடு கொள்ளுதல். (வண்ணத். 84)

சந்தங்களின் விகாரம்

மெலித்தலால் தய்யச் சந்தம் ‘தன்ன’ எனவும், அது ‘தன’ எனவும்ஆகும்.எ-டு :நெய்நி – தய்ய; நெய்ந்நி – தன்னவர்ம – தய்ய; வர்ம்ம – தன்னதொய்வு – தய்ய, தன; செய்கை – தய்ய, தனசண்மு – தன்ன, தன; மன்வில் – தன்ன, தன (வண்ணத். 82)

சந்தங்களுக்கு உறழ்ச்சி முதலியஆறு தெளிவுகள்

அளவியற் சந்தங்களின் பெருக்கத் தொகையும் பரப்பும் தெளிதற்குத்துணையாகின்றமையின் இவை ‘தெளிவு’ எனப் பட்டன. அவை ஆறாவன : 1) உறழ்ச்சி(பிரத்தாரம்), 2) கேடு (நட்டம்), 3) உத்திட்டம் (இது நித்திட்டம்எனவும்படும்), 4) ஓர் இலகு உடையன, இரண்டு இலகு உடையன, ஒரு குரு உடையன,இரண்டு குரு உடையன என்றிவ்வாறு சந்தங்கள் அனைத்திற்கும்அமைத்துக்காட்டி (26 எழுத்துக்கள் கொண்டதாக)த் தொகை கூறுதல். (இதுவடமொழியில் ‘ஏக த்வி ஆதி லகுக்கிரியா’ எனப்படும். வடநூல் மரபில் ‘ல’எனும் எழுத்து இலகுவையும் ‘கு’ எனும் எழுத்து குருவையும் குறிக்கும்),(5) 26 எழுத்தளவும் உள்ள சந்தங்களின் விரிவினைக் காட்டி இத்தனை என்றுகூறும் விருத்தத் தொகை (ஸங்கியானம்), 6) நில அளவு (இச் சந்தங்கள்அனைத்தையும் குறித்த அளவுடன் நிலத்தில் வரைந்து பார்க்குங்கால்,ஒவ்வொன்றும் இத்தனை நிலப்பரப்பினைக் கொள்ளும் என்ற அளவு) என்பன. (வீ.சோ. 133 உரை)

சந்தங்களைப் பிரத்தரித்துக்காட்டுதல்

பிரத்தாரம் செய்தலாவது உறழ்ச்சி செய்தல்.அனைத்தும் குருவாய் அமைந்த அடியொன்றில் (1 முதல் 26 எழுத்து வரைபெற்றுள்ள எவ்விருத்ததினுடையதாயினும்) குருவின் கீழே இலகு எனக்குறித்துக் கொண்டால் முதல் வகை கிடைக்கும்.இதுபோலவே அடுத்த வகையை முதலாவது குருவாகவே அமைய இரண்டாவதை இலகுஎனக் குறித்துக்கொண்டால், இரண்டாம் வகை கிடைக்கும். இதுபோலவே,அனைத்தும் இலகுவே கொண்ட அடியிலும் செய்க.உதாரணமாக, அடிக்கு நான்கு எழுத்துக் கொண்ட ஒரு விருத்தம்பிரத்தாரம் செய்யும்போது 16 வகையாக உறழ்ச்சி பெறுவது காண்க. குருஎன்பதைக் ‘கு’ என்னும் எழுத்தாலும், இலகு என்பதை ‘ல’ என்னும்எழுத்தாலும் குறிப்பது மரபு.1. கு கு கு கு2. ல கு கு கு3. கு ல கு கு4. ல ல கு கு5. கு கு ல கு6. ல கு ல கு7. கு ல ல கு8. ல ல ல குஇவை எட்டும் அனைத்தும் குருவான அடியின் பிரத்தாரம்.9. ல ல ல ல10. கு ல ல ல11. ல கு ல ல12. கு கு ல ல13. ல கு ல ல14. கு ல கு ல15. ல கு கு ல16. கு கு கு லஇவையெட்டும் அனைத்தும் இலகுவான அடியின் பிரித்தாரம்.இது நிலை (பிரதிட்டை) என்னும் பெயரைக் கொண்ட ஓரடிக்கு நான்குஎழுத்துக்கொண்ட விருத்தத்தின் பிரத்தாரம்.இவ்வாறு ஐந்து எழுத்தடி விருத்தங்களைப் பிரத்தாரம் செய்தால், 32வகைப்படும். இதுபோலவே 26 எழுத்து வரை யுடைய அடிகளைக் கொண்டவிருத்தங்களை பிரத்தாரம் செய்தால், ஒன்று ஒன்றைவிட அடுத்ததற்குஇருமடங்கு வகைகள் வரும்; ஆறு எழுத்திற்கு 64; ஏழ் எழுத்திற்கு 128,அவ்வாறே இறுதிவரை செய்து காண். (வீ. சோ. 134 உரை)

சந்தங்கள் பதினாறு

(1) தத்த (2) தாத்த (3) தந்த (4) தாந்த (5) தன (6) தான (7) தன்ன(8) தய்ய என்பன எட்டும் இவற்றின் ஈற்றின் நீட்டமான (1) தத்தா (2)தாத்தா (3) தந்தா (4) தாந்தா (5) தனா (6) தானா (7) தன்னா (8) தய்யாஎன்பன எட்டும் ஆகப் பதினாறாம். (வண்ணத். 4)

சந்தட்ட யமகம்

ஸந்தஷ்டயமகம் – ‘முற்றுமடக்கு’க் காண்க.

சந்தத் தாண்டகம்

சந்தஅடி பலவாயும், தாண்டகஅடி சிலவாயும் வருவன வற்றைச் சந்தத்தாண்டகம் என்பர் ஒரு சாரார்.சந்தஅடி சிலவாயும், தாண்டகஅடி பலவாயும் ஓசைகொண்டு வருவனவற்றைத்‘தாண்டகச் சந்தம்’ என்பர்.எ-டு :‘அங்குயிலின் அவிரொளியால் அருண மாகிஅணியாழி மரகதத்தால் பசுமை கூர்ந்துமங்கலம் சேர் நூபுரத்தால் அரவம் செய்யும்மலரடியை மடவன்ன மழலை ஓவாச்செங்கமல வனமென்று திகைத்த போழ்தில்தேமொழியால் தெருட்டுதியோ செலவி னாலோ?தொங்கலம்பூங் கருங்கூந்தல் சுடிகை நெற்றிச்சுந்தரி! நிற் பணிவார்க்கென் துணிவு தானே!”ஒரு சாரார், சந்தஅடி பலவாய் வருவனவற்றைச் ‘சந்தத் தாண்டகம்’எனவும், தாண்டகஅடி பலவாய் வருவன வற்றைத் ‘தாண்டகச் சந்தம்’ எனவும்,இருவகை அடியும் ஒத்து வருவனவற்றைச் ‘சமசந்தத் தாண்டகம்’ எனவும்வழங்குவர். (யா. வி. பக். 486)

சந்தத்தின் தொகை அறியும் விதம்

நான்கு எழுத்துக்கள் கொண்ட சந்தத்தில் லகு, குரு அமைப்பால் 16 வகைஎன்று, ‘ஏகத்வி ஆதி லகுக்கிரியா’ என்ற தெளிவால் அறியப்படும்(அத்தலைப்புள் காண்க) அத் தொகையேதான் நான்கு எழுத்துச் சந்தத்தில்வரும் விருத்தத்தின் தொகையும் ஆம். அடுத்த ஐந்து எழுத்துக் கொண்டசந்தத்தில், நான்கு எழுத்துக் கொண்ட சந்தத் தொகையின் இருமடங்கு ஆகிய32 விருத்தங்கள். ஆறு எழுத்துக் கொண்ட சந்தத்தில், முன்னதினும்இருமடங்கு எனவே 64 விருத்தங்கள்; ஏழு எழுத்து 128; எட்டெழுத்து 256;இவ்வாறே 26 எழுத்துக் கொண்ட சந்தத்தில் வரும். விருத் தங்களின் தொகை6,71,08,864 (ஆறு கோடியே எழுபத்தொரு நூறாயிரத்து எண்ணாயிரத்துஎண்ணூற்று அறுபத்து நான்கு) (வீ. சோ. 138 உரை)விருத்தங்களின் தொகை 6, 71, 08, 864 என்பது.

சந்தத்தின் தொகை, அளவு முதலியன

அத்துவயோகம் என்னும் நில அளவு.விருத்தங்களைத் தரையில் பிரத்தாரம் செய்து வரைவதால் நிறையும்நிலத்தின் அளவு. எல்லாவகைச் சந்தங்களிலும் அமையும். பல்லாயிரக்கணக்கானவிருத்தங்களையும் விரற்கிடை போன்ற அளவுகள் வைத்து வரைவதால் அதன்பரப்பு இவ்வளவு என்று கூறும் அளவு எனும் தெளிவு பிரத்தியயம் ஆம்.இவ்விருத்தங்கள் சமம், விஷமம், அர்த்தசமம் என்னும் முறையில்பார்க்கும்போது கோடிக்கணக்கில் விரியும். இவற்றைத் தரையில்ஓரெழுத்திற்கு ஓரங்குலம் இடைவெளி விட்டு வரைந்துபார்க்க அவை அடையும்பரப்பின் அளவைப் பற்றிய இத்தெளிவில், ஒன்றையோ இரண்டையோ விடுவ தும்அல்லது கூட்டிக் கொள்வதும் போன்ற மாறுபட்ட கருத்துக்கள் வடமொழிநூல்களில் காணப்படுகின்றன. தமிழ்மரபிற்கேற்ப இது வீரசோழியத்திலும்யாப்பருங்கல விருத்தியிலும் கணக்கிட்டுக் கூறப்படுகிறது. விரற்கிடைகளைக் கூட்டிச் சாண் முழம் கோல் கூப்பீடு காதம் என்னும் நிலஅளவுகளும்கூறப்பட்டு. 26 எழுத்துள்ள ‘உற்கிருதி’ என்னும் சந்தத்திற்கு 699காதமும் 101 கோலும் 1 முழமும் 7 விரலும் என்று நிலஅளவைத் தொகையும்கொடுக்கப்பட் டுள்ளது. இதன் விரிவினை யா.வி. பக். 501-512 வரைகாண்க.சமம் – நான்கு அடிகளும் எழுத்தும் அலகும் ஒத்துவரும் விருத்தம்.வியமம் (விஷமம்) – நான்கு அடிகளும் தம்முள் ஒவ்வாது வரும்விருத்தம்.பாதிச் சமம் – (அர்த்தசமம்) முதலாம் அடியும் மூன்றாமடியும்ஒருவகையிலும், இரண்டாமடியும் நான்காம் அடியும் வேறு வகையிலும் வரும்விருத்தம். (வீ. சோ. 139)

சந்தத்தில் ஆய்தம்

சந்தத்தில் ஆய்தம் இடையின ஒற்றுடன் உறழும். (எ-டு. ‘அஃதே; எய்தா’)(வண்ணத். 3)

சந்தத்தில் ஐ ஒள

ஐயும் ஒளவும் ஈற்றில் குறளாயும், இடையிலும் முதலிலும் அய், அவ்எனக் குறில் அடுத்த ஒற்றாயும் நெட்டெழுத்தின் தன்மை யாண்டும் பெறாதுசந்தத்தில் கணக்கிடப்படும். (வண்ணத். 2)

சந்தத்தில் மெலித்தல் இயல்பு

தன்னவும் தய்யவும் ஆகிய சொற்களில் ஒற்றின்பின் வரும் உயிர்மெய்வேறாயின், சந்தி வேற்றுமையால் ‘தன’ என்னும் சந்தம் ஆகும்.எண்ண என்பது எண எனவும், சொன்ன என்பது சொன எனவும், செய்ய என்பது செயஎனவும், கொள்ள என்பது கொள எனவும் வரின், தன்ன, தய்ய என்ற சந்தங்கள்‘தன’ என்ற சந்தமாகும். (வண்ணத். 82)

சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாமை

சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது; அது போல,
இகரஉகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிராகற் பாலன. அவற்றைப்
புணர்ச்சிவேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கி வேறு எழுத்து என்று
வேண்டினார். (தொ. எ. 2 இள. உரை)
இகர உகரம் குறுகிநின்றன, விகாரவகையான் புணர்ச்சி வேறு படுதலின்.
இவற்றை இங்ஙனம் குறியிட்டு ஆளுதல் எல்லாருக் கும் ஒப்ப முடிந்தது.
சந்தனக் கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது; அது போல உயிரது
குறுக்கமும் உயிரேயாம். (2 நச். உரை)
ஐகாரக்குறுக்கம் முதலியன ஒரு காரணம் பற்றிக் குறுகின வாகலின்,
சிறுமரம் பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம்
ஆகாதவாறு போல, வேறெழுத்து எனப்படா. (சூ.வி. பக். 30).

சந்தப் பிறழ்ச்சி இயல்பு

குறிலுடன் இடையினத்தொற்றும் மெல்லினத்து உயிர்மெய் யெழுத்தும்ஒன்றினும், அவற்றொடு மீண்டும் மெல்லொற் றோ இடையொற்றோ வந்துஅடுப்பினும் தன்ன என்ற சந்தமும் தய்ய என்ற சந்தமும் ஆகிய இரண்டும்ஏற்கும்.எ-டு : பொய்மை, வர்மம்குறிலையடுத்து இடையொற்றும் அதனை அடுத்து மெல் லொற்றும் அடுத்துமெல்லின உயிர்மெய்யும், அடுத்து இறுதியில் மெல்லொற்றோ வல்லொற்றோவரினும் தன்ன, தய்ய என்ற இரண்டு சந்தத்திற்கும் பொருந்தும்.எ-டு : மெய்ம் மெய். (வண்ணத். 80, 81)

சந்தப்பா

தாளஅறுதிக் கேற்ப ஓசையைக் கொண்டு அமைக்கப்படும் பாக்கள். இவற்றின்வகைகளை வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நால்வகைப் பாக்களின் தாழிசைதுறை விருத்தம் என்னும் இனங்களின் அமைப்புக்களில் காணலாம்.விருத்தங்களிலேயே இவை மிகுதியும் பயிலும். சந்தக்குழிப் பினைஆதாரமாகக் கொண்டு வருவன சந்தப்பா எனலாம்; வண்ணப்பாவும் அது.சந்தங்களில் சிலபல சேர்ந்து ஒரு துள்ளலாம். துள்ளல் மூன்று கொண்டதுஒரு குழிப்பாம்; குழிப்பு ஒன்றும் ஒருசிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்துஒரு கலையாம். கலை எட்டுக் கொண்டது வண்ணமாம். சந்தங்கள் ‘தத்த’முதலாகப் பதினாறு ஆகும்.

சந்தப்பாச் சீர்களிடை வழுவமைதி

1. தேமா புளிமா புளிமாங்கனி, தேமா, தேமா என்ற 5 சீரடியுடையநான்கடிப் பாடல் பின்வருமாறு:எ-டு : ‘கால்வா னகத்தே குடைவெய்யவன் காய்க டுங்கட்கோல்மாய் கதிர்புல் லுளைகொல்சினக் கோளரிம்மாமேல்பால் மலையிற் புகவீங்கிருள் வேறி ருந்தமால்யானை யீட்ட மெனவந்து பரந்த தன்றே’ (கம்பரா. 882)‘நொய்தாங் குழவி யெனக்கொள்சில நோன்மை நாடின்வெய்தா மவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்எய்தாத மாய முளனாலிவன் றன்னை வெம்போர்செய்தாடல் கொள்வ மிவணென்றுதெ ரிந்து சூழ்ந்தார்’(கந்தபு. I 14-42)‘மால்யானை யீட்டம்’, தேமா முன் நிரை வரவேண்டியவிடத்துத்தேமாங்காய் முன் நேர்வந்து ஓசை கெடாமல் நின்றவாறு.‘எய்தாத மாயம்’, ‘செய்தாடல்கொள்வ’ என்பனவும் அது.முதற்பாடல் நான்காமடியில் புளிமாவும் (பரந்த) தேமாவும் (யீட்ட)இடம் மாறி நின்றவாறு. ‘மெனவந்து’ என்று புளிமாங்காய் வந்தது.2. ஒரு சீராகவே தேமாவோ புளிமாவோ வரலாம் என்ற இடங்களில்புளிமாச்சீரின் முதல் எழுத்தைப் பிரித்து முன் சீருடன் கூட்டி அதனைத்தேமாவாகக் செய்வது கூடாது.‘சென்று கருத்தை யின்றே தேரினை வருதி என்றான்’ என்பதனைச்‘சென்றுக ருத் தை யின்றே தேரினை வருதிஎன்றான்’ எனப் பிரித்துப் புணர்ப்பது கூடாது.3. ஆயினும், மொழிகளின்வழியேதான் சீர்கள் செல்ல வேண்டும் என்னும்வரையறையின்மையின், மொழி முதலி லுள்ள எழுத்து முதற்சீர் இறுதியிலும்,மொழிக் கடையி லுள்ள எழுத்து அடுத்த சீர் முதலிலும் சேர்ந்து வகையுளியாகி ஓசைநயம் கருதி ஒலிக்கப்படலாம்.எ-டு : ‘இறந்தனர்பி றந்தபயன் எய்தினர்கொ லென்கோமறந்தனர றிந்துணர்வு வந்தனர்கொ லென்கோ’ (கம்பரா. 5291)எனவும்,எ-டு : ‘என்றென் றுயிர்விம் மியிருந் தழிவாள்மின்றுன் னுமருங் குவிளங் கிழையாள்’ (கம்ப.5237)எனவும் வருவன காண்க.4. மெய்யொலியைச் சந்தப்பாக்களில் தேவைப்பட்டபோது கொண்டு மற்றையஇடங்களில் நீக்கி விடலாம்.எ-டு : ‘நீ ண் டவிழி நேரிழைதன் மின்னினிற மெல்லாம்பூ ண் டதொளிர் பொன்னனைய பொம்மனிற மெய்யேஆ ண் டகைதன் மோதிரம டுத்தபொரு ளெல்லாம்தீ ண் டளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ’ (கம்ப. 5295)இவ்வொற்றுக்கள் நீக்கப்பட்டால்தான் இப்பாடல் வனமயூர விருத்தவிதிக்குப் பொருந்தும். (முதற்சீர்களிற் காணப்படும் ணகர ஒற்று)5. ஒரு மாத்திரை மிக்கோ குறைந்தோ வருவதால் ஒரு விருத்தத்தின் பெயர்மாறிவிடாது.எ-டு : ‘இனமுற என்ன வுள்ள கரத்தி லொன்ற தெனலாலி தென்னதெனலால்மனமுநீ யல்ல வென்ற வதனாலு முந்து மதியல்ல வந்த வகையே’.‘இனமுற’ என்பதனை அடுத்த ‘மனமுநீ’ என்பது ஒரு மாத்திரை மிக்கதேனும்எண்சீர்க் சந்தவிருத்த இலக்கணத்தில் திரியாது.எ-டு : ‘செய்தா யேனும் தீவினை யோடும்பழியல்லால்எய்தா தெய்தா தெய்தினி ராமன் னுலகீன்றான்.வைதா லன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும்கொய்தா னன்றே கொற்றமு டித்துன் குழுவெல்லாம்’. (கம்பரா.3249)இப்பாடலில் மூன்றாமடியின் இரண்டாஞ்சீர் ஏனை அடிகளின் இரண்டாம்சீர்போல 4 மாத்திரையாகாமல் 3 மாத்திரையாகக் குறைந்து நின்றதேனும் அஃதுஒன்றுபற்றி இம் மத்தமயூர விருத்தம் தவறு என்று கோடல் கூடாது.6. மாத்திரையே கணக்கிடப்படும் சந்தவிருத்தங்களில் நேரசைச் சீருக்குஅதே மாத்திரையுடைய நிரையசைச் சீரும், நிரையசைச் சீருக்கு அதேமாத்திரையுடைய நேரசைச்சீரும் மற்ற சீர்களுக்கு அவ்வளவே மாத்திரையுடையவேறுசீர் களும் சிறுபான்மை கொள்ளப்படலாம்.எ-டு : ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்எண்ணுளா ரியலுளார் இசையுளார் திசையுளார்கண்ணுளா ராயினார் பகையுளார் கழிநெடும்புண்ணுளா ராருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)இப்பாடலடிகளில் 2, 3, 4 ஆம் சீர்கள் நேருக்கு ஒப்பாக நிரையில்தொடங்கினும் 5 மாத்திரை என்னும் அளவினை மாறாமையின் ஏற்றுக்கொள்ளப்படும்.

சந்தப்பாட்டு

நான்கு முதல் 26 எழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை.சந்தவிருத்தமும் சந்தப்பாட்டு எனப்படும். (திவா. பக். 233).

சந்தம்

1) செய்யுளின் வண்ணம் 2) வேதத்தில் வரும் யாப்பிலக் கணத்தைக்கூறும் வேதாங்க நூல்; ‘கற்பங்கை சந்தங்கால்’ (மணி. 27 : 100) 3) கவிதை(சூடா XI – பக். 35) 4) சந்தப்பாட்டு; 4 எழுத்து முதலாக 26 எழுத்தின்காறும் உயர்ந்த 23 அடியானும் வந்து அடியும் எழுத்தலகும் ஒத்தும்ஒவ்வாதும் வருவன. (யா. வி. பக். 477 – 482)எ-டு :தத்த – பத்தி, ஒற்று, சிட்டன், நெய்த்து, மெய்ச்சொல்,கர்த்தன்.தாத்த – காற்று, பாட்டர், கூத்தன், பார்ப்பு, தூர்த்தன்,தாழ்த்தல்.தந்த – மஞ்சு, கொண்கர், கந்தன், மொய்ம்பு, மொய்ம்பர்,மொய்ம்பன்.தாந்த – வேந்து, வேந்தர், பாங்கன், பாய்ந்து, சார்ங்கர்,சார்ங்கம்தன – குரு, தவர், சுதன்தான – காது, சூதர், பாதம், கேள்வி, சார்கண், கூர்முள், மான்மி,தேன்வி, மாண்மன், கூன்வில், மான்மர், மாண்வின்.தன்ன – கண்ணி, மென்வி, அண்ணன், பொன்வில், முன்னர், மென்வென்.தய்ய – வள்ளி, செய்தி, வள்ளல், செய்தல், மெய்யன், செய்கண்.தத்தா – அத்தா, அற்றார், தொட்டான், பொய்க்கோ, நெய்க்கோல்,மெய்க்கோன்.தாத்தா – சாத்தா, ஆற்றார், மாற்றான், வேய்ப்பூ, வாய்த்தோர்,சீர்க்கோன்.தந்தா – அந்தோ, தங்கார், வந்தேன், மொய்ம்பா, மொய்ம் போர்,மொய்ம்போன்.தாந்தா – சேந்தா, வாங்கார், நான்றான், நேர்ந்தோ, சார்ந்தோர்,மாய்ந்தான்.தனா – குசா, சிறார், கவான்.தானா – தாதா, போகார், மேவான், ஓர்பூ, கூர்வேல், சேர்மான், கேண்மோ,ஆன்வா, ஆண்மான், கூன்வாள், வான்மேல், தேன்வீண்.தன்னா – அண்ணா, மன்வா, முன்னோன், அன்னோர், பொன்வேல், தண்வான்.தய்யா – மெய்யே, நொய்தோ, தள்ளார், செய்தார், வல்லோன், ஓல்கேன்.(வண்ணத். 12, 23, 32, 42, 50, 60, 70, 76; 17, 27, 37, 47, 53, 67,73, 79.)

சந்தம் தாண்டகம் பற்றியபிறர்கருத்து

காக்கைபாடினியாரும் பாட்டியலுடையாரும் வாய்ப்பிய முடையாரும்சந்தம், தாண்டகம் இவற்றை இனத்தின்பாற் படுத்து வழங்குவர்.தொல்காப்பியனார் முதலியோர் இவற் றையும் பாவினங்களையும்கொச்சகக்கலிப்பாற்படுத்து வழங்குவர்.வடமொழிவழித் தமிழாசிரியர்கள் “ஒருபுடை ஒப்புமை நோக்கி இனம்எனப்படா; மூவகைப்பட்ட விருத்தங்களுள் ளும் (ஆசிரியம், கலி, வஞ்சி)சந்த தாண்டகங்களுள்ளுமே எல்லாப் பாவினங்களும் அடங்கும்” என்பர். (யா.வி. பக். 487)

சந்தம் பற்றிய நூல்கள்

ஞானசாரியம், சயதேவம், மிச்சாகிருதி, பிங்கலம், மாபிங் கலம்,இரணமாமஞ்சுடை, சந்திர கோடிச் சந்தம், குணகாங்கி என்னும் கருநாடகச்சந்தம், வாஞ்சியார் செய்த வடுகச்சந்தம், மாபுராணம் முதலியதமிழ்நூல்கள் ஆகியனவாம். (யா. வி. பக். 523)

சந்தி முடிவு மூன்றே

தோன்றிய சந்தியும், திரிந்த சந்தியும் கெட்ட சந்தியும் எனச் சந்தி
மூன்றாம்.
யானைக்கோடு என்பது தோன்றிய சந்தி; மட்குடம் என்பது திரிந்த சந்தி;
மரவேர் என்பது கெட்ட சந்தி. (இவற்றுள் முறையே ககரமெய் தோன்றியவாறும்,
ணகரம் டகரமாய்த் திரிந்தவாறும், மகரம் கெட்டவாறும் காண்க.)
சந்தியினை நால் என இயல்புசந்தியும் கூட்டிச் சிலர் சொல்ல,
இந்நூலுடையார் இயல்புசந்தியை நீக்கியது என்னையோ எனின்,
இயல்புசந்திகளில் மிக்கும் திரிந்தும் கெட்டும் வருவன இல்லை யாதலின்,
முடிக்கவேண்டும் சந்திகள் இல்லாமலே (இல்லாமையாலே என்பது பொருள்)
நீக்கினார். (நேமி. எழுத். 12 உரை)

சந்தியக்கரம்

அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் தம்முள் ஒத்து எய்தின் ஐ
என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும். அகரத்துடன் உகரமும் வகரமும் தம்முள்
ஒத்து ஒருதன்மையவாக எய்தின் ஒள என்னும் நெட் டெழுத்து ஒலிக்கும்.
‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று
முடித்தல்’ என்னும் உத்தியான், அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள்
ஒத்து எகரம் ஒலிக்கும்; அகரக் கூறும் உகரக் கூறும் தம்முள் ஒத்து
ஒகரம் ஒலிக்கும் எனக் கொள்க.
இனி இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, தமிழ்
நூற்பயிற்சி ஒன்றுமேயுடையார் எழுத்துப்போலி உணர்த்திற்று என்று பொருள்
கொண்டு,
அ இ = ஐ; அய் = ஐ; கஇ = கை; கய் = கை
அ உ = ஒள; அவ் = ஒள; கஉ = கௌ; கவ் = கௌ
என உதாரணம் காட்டுவர். அவ்வாறு பொருள்கொண்டு உதாரணம்
காட்டுமாற்றால் பெரும்பயன் இன்மையானும், வடநூலொடு மாறுபடும் ஆதலானும்
அது பொருந்தாது என்க. (நன். 125 சிவஞா.)

சந்திரகணம்

நூல் முதற்சீரில் அமையுமாறு புளிமாங்காய் என்னும் வாய் பாடு. பற்றிவரும் கணம். இதற்குரிய நாள் மிருகசீரிடம். இதன் பயன் வாழ்நாள்.தருதல். (சீர்த்தி பயத்தல் என்னும் பன்னிரு பாட்டியல்). (இ. வி. பாட்.40 உரை)

சந்திரகோடிச்சந்தம்

சந்தம், தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் வகுத்துக்கூறி விளக்கும் வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று.(யா. வி. பக். 486)

சந்திரா லோகம்

‘குவலயானந்தம்’ காண்க.19ஆம் நூற்றாண்டில் சந்திராலோகம் முத்துசாமி ஐயங்கார் அவர்களால்தமிழில் நூற்பா யாப்பில் மொழிபெயர்க்கப் பட்டது.

சந்தொட்டியமகம்

அடிதோறும் வரும் இறுதிச் சொல்லை அதன்மேல் வரும் அடிக்கு ஆதியாகத்தொடுப்பது அந்தாதி மடக்கு எனப்படும். இதனைச் சந்தொட்டி யமகம் எனவும்கூறுவர்.எ-டு :‘நாக முற்றவும் களிதர நிருதர் கோனாகநாக மையிரண் டொருங்கறப் பொருத. மைந்நாகநாக மூலமென் றழைத்தகார் துயிலிட நாகநாக மொய்த்தபூம் பொழில்திரு நாகையென் னாகம்’.‘நாகம் (-தேவருலகத்தார்) முற்றவும் களிதர நிருதர்கோன் (-இராவணன்)ஆகம், நா, கம் (-தலை) ஐஇரண்டு(ம்) ஒருங்கு அறப் பொருத மைந்நாகம்(-நீலமலை) நாகம் மூலம் என்று அழைத்த கார் துயிலிடம் நாகம்(-ஆதிசேடன்); நாகம் (-சுரபுன்னை) மொய்த்த பூம்பொழில் திருநாகை என்ஆகம். (-மனம்)’ எனப் பொருள் செய்க.“தேவர்கள் மகிழ இராவணனுடைய மார்பு, நா பத்து, தலைபத்து இவை ஒருசேரஅழியும்படி பொருத நீலமலை போல்வானும், கசேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்றுஅழைத்த கார்மேனி வண்ணனும், ஆதிசேடனில் துயில் கொள்வானும், சுரபுன்னைமரங்கள் செறிந்த சோலைகளையுடைய திருநாகை என்ற தலத்தில்உகந்தருளியிருப்பவனும் ஆகிய திருமால் என் நெஞ்சத்துள்ளான்” என்றஇப்பாடற்கண் நாகம் என்ற சொல்லே நான்கடிகளிலும் ஆதி அந்தமாக வந்துள்ளமை‘சந்தொட்டி யமகம்’ என்ற சந்தட்டய மடக்காம். (மா. அ. 266)

சந்தோவிசிதி

சந்தோபிசிதி; பிங்கலம், மாபிங்கலம், சயதேவம், ஞானா சிரியம்,சந்திரகோடிச் சந்தம், மயூரத்திரிசந்தம், மேடகத் திரிசந்தம் முதலியநூல்கள் சந்தோபிசிதிகள் எனப்படும். இவை எழுத்தொலி பற்றியன. (யா. வி.பக். 486)வேதங்களின் சந்தங்களை யுணர்த்தும் நூல். (L)

சனிப்பாட்டு

தம் ஆசிரியர் சம்மானம் பெறும்பொருட்டு ஆண்டு முடிவில்பலரிடத்தும் சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (W) (L )

சப்தபங்கி

ஒரே பாடல் அதன் அடிகளையும் சீர்களையும் பகுத்துத் தனித்தனியே ஏழுவேறுபாடல்களாக அமைக்கும் வகையில் பாடுவதாகிய சித்திரகவி வகை.

சப்பாணிப் பருவம்

பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்துக்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று;குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். ‘சப்பாணிகொட்டியருளே’, ‘கொட்டுக சப்பாணி’ என்றாற்போன்று இப்பாடல் முடியும். சக+ பாணி – சப்பாணியாயிற்று இருகைகளையும் சேர்த்தல் என்னும்பொருளது.

சமக்கிருதமும் வேற்றுப்பாடையும்விரவிய பாவினம்

சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிய பாவினம் அல கிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும் உலோகவிலாசனியும் பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையனவாம். (யா. வி.பக். 491)

சமசந்தத் தாண்டகம்

சந்த அடியும் தாண்டக அடியும் சமமாக வருவனவற்றைச் சமசந்தத் தாண்டகம்என்ப ஒரு சாரார். (யா. வி. பக். 486)

சமநடை வெண்பா

ஈற்றடி எழுத்தும் ஏனைய அடி எழுத்தும் ஒத்து வருகிற வெண்பா சமநடைவெண்பாவாம்.எ-டு : ‘சென்று புரிந்து திரிந்து செருவென்றான்மின்றிகழும் வெண்குடைக்கீழ் வேந்து’ஒற்றும் குற்றுகரமும் நீங்க அடிதோறும் 9 எழுத்து வந்தவாறு. (யா.வி. பக். 499)

சமநிலை மருட்பா

வெண்பாஅடியும் ஆசிரியஅடியும் ஒத்துவரும் மருட்பா வகை.எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும்இருநிலம் சேவடியும் தோயும் – அரிபரந்தபோகிதழ் உண்கணும் இமைக்கும்ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே’ (பு.வெ.மா. 14-3)இதன்கண், வெண்பாஅடி இரண்டும் ஆசிரியஅடி இரண்டு மாக வந்தமையால் இதுசமநிலை மருட்பா.(யா. கா. 36 உரை)

சமநிலை வஞ்சி

வஞ்சியடியின் இருவகையுள் ஒன்று. இவ்வடி இருசீர்களை யுடையது.ஒவ்வொரு சீரும் மூன்றெழுத்து முதல் 6 எழுத்து முடியப் பெறும்.எ-டு : ‘கொன்றுகொடுநீடு கொலைக்களிறுகடாய்’இச்சமநிலை வஞ்சியடியுள் முதற்சீர் 3 எழுத்து; இரண்டாம் சீர் 6எழுத்து (ஒற்றும் குற்றுகரமும் நீக்கிக் கணக்கிடப்படும்)(தொ. செய். 45, 46 நச்.)

சமநிலை வெண்பா

‘சவலை வெண்பா’ காண்க. (சங். அக.)

சமபாத விருத்தம்

இசைப்பா வகை.சிந்து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறைபெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்பன இசைப்பாக்கள் என்பார்பஞ்சமரபுடைய அறிவனார். (சிலப். 6 : 35 அடியார்க்.)

சமம் (2)

ஓரடிபோல் நான்கடியும் எழுத்தும் அலகும் ஒத்த விருத்தம்.(வீ. சோ. 139 உரை)

சமயதி

எல்லா அடிகளும் ஒத்த அளவினவாய் வரும் இசைப்பாட்டு வகை. (L)

சமவிருத்தம்

அளவழிச் சந்தங்களுள் முதலடியும் மூன்றாமடியும் எழுத்து மிக்குஇரண்டாமடியும் ஈற்றடியும் எழுத்துக் குறைந்து நாலடியும் சீர்ஒத்துவருவது.‘அடிமிசை அரசர்கள் வணங்க ஆண்டவன்பொடிமிசை யப்புறம் புரள இப்புறம்இடிமுர சதிர்தரவொர் இளவல் தன்னொடும்கடிமணம் புகுமிவள் கற்பின் நீர்மையே’. (சூளா. 2091)இதன் முதலடியும் மூன்றாமடியும் 14 எழுத்து வந்தன. ஏனைய இரண்டடியும்13 எழுத்து வந்தன. (யா. வி. பக். 516)

சமானம்

குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும் வரும் பாடலும்,முற்றக் குருவேயாயும் முற்ற இலகுவேயாயும் வரும் பாடலும் ஆம்.எ-டு : ‘போது விண்ட புண்ட ரீகமாத ரோடு வைக வேண்டின்ஆதி நாதர் ஆய்ந்த நூலின்நீதி ஓதி நின்மின் நீடு’முதலடி குருவும் லகுவும் வரிசையாகப் புணர்ந்து முழுதும்வந்தது.எ-டு : ‘காரார் தோகைக் கண்ணார் சாயல்தேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்போரார் வேற்கட் பொன்னே இன்னேவாரார் அல்லர் போனார் தாமே’இது முற்றக் குருவே வந்தது.எ-டு : ‘முருகு விரிகமலம்மருவு சினவரனதிருவ டிகடொழுமின்அருகு மலமகல’- முற்றவும் இலகுவே வந்தது. (யா.வி. பக். 523, 524)

சமுத்திர விலாசம்

தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவிகடற்கரையில் இருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்த வகை. (L)

சமுற்கம்

இரண்டடிகளோ பல அடிகளோ சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும்வரும் மிறைக்கவி வகையாகிய மடக்கு.எ-டு :‘காம ரம்பயி னீரம துகரம்காம ரம்பயி னீரம துகரம்காம ரம்பயி னீரம துகரம்நாம ரந்தை யுறனினை யார்நமர்’ (தண்டி. 95 உரை)‘கா மரம் பயில் நீர மதுகரம் காமரம் பயில் நீர; மது கரம் காமர்அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உறல் நினையார் நமர்’ எனப்பிரித்துப் பொருள் செய்யப்படும்.“சோலையின் மரந்தோறும் நெருங்கின வண்டினம் காமரம் என்னும் இசையைப்பாடுகின்றன; தேன் பொழியும் மதவேள் அம்புகள் வேலின் தன்மையும் உடன்உடையவாயின; வேனில் காலத்து (மது) எதிர்ப்பட்ட (கரம்) நாம் துயருறு வதைநம் காதலர் நினைவாரல்லர்” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதல்மூன்றடிகளும் சொல்லளவில் ஒத்துப் பொருளளவில் ஒவ்வாது வெவ்வேறு பொருள்பயக்க வந்தமையால் இது சமுற்கம் எனப்படும் மடக்காம்.

சம்பகமாலா சந்த விருத்தம்

நான்கு அடிகளிலும் 2, 3, 7, 8 ஆகிய இடங்களில் குற்றெழுத்து வருமாறுஅமைக்கப்படும் விருத்தம்.‘எ றிசு ற விளை யவ ரேந்து பூங்கொடிம றிதி ரை வரை புரை மாட மாக்கலம்பெ றவ ருந் தி ருவ னா ரமுதம் பேரொளிஅ றைக டல் வ ளந க ராய தொப்பவே. (சீவக. 1446)

சம்பந்தப் பாட்டியல்

வரையறுத்த பாட்டியல் என்பது சம்பந்தப்பாட்டியல் எனச் சிலபிரதிகளில்காணப்படுவதாகத் தெரிகிறது. சம்பந்தப் பாட்டியல் என்பது சம்பந்தமாமுனிவன் செய்வித்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பந்த மாமுனிபாதமலர் இறைஞ்சி நிகழ்த்துகின்றேன்’ என்ற பாடல் இதற்குச் சான்றாம்.இது மங்கலம் முதலிய 10 பொருத்தங்களில் மங்கலத்தை மாத்திரம் ஒன்பதுவிருத்தங்களில் கூறுவது.

சம்பந்தர் தேவாரயாப்பு

கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம், கலித்துறை, கொச்சகங்கள், ஆசிரியத்துறை, வஞ்சி விருத்தம், வஞ்சித் துறை, குறட் டாழிசை, நாலடிமேல்வைப்பு, ஈரடிமேல் வைப்பு, இணைக் குறள் ஆசிரியம் என்பன. சம்பந்தர்பாடிய 385 பதிகங்களில் இவ்யாப்புக்கள் முறையே 106, 88, 79, 54, 27,13, 9, 3, 3, 2, 1 ஆகிய பதிகங்களாம். இவற்றுள் திருவியமகம் 4,திருச்சக்கர மாற்று 2, ஏகபாதம் 1, எழு கூற்றிருக்கை 1,திருக்கோமூத்திரி 1, திருமாலைமாற்று 1 – ஆகியசித்திரகவிப்பதிகங்களும், மொழி மாற்றுப்பொருள்கோள் நிலையில் வரும்பதிகம் ஒன்றும் உள்ளன.இவற்றுள் மேல்வைப்பும் சித்திரகவியும் சம்பந்தர் புகுத்தி யருளியபுதுமை யாப்புக்களாம். (இலக்கணத். முன். பக். 81, 82)

சம்பிரதம்

இந்திரசாலம் முதலிய மாயவித்தை வல்லுநர் தம் சிறப் பினைத் தாமேஎடுத்துக் கூறுவதாகச் செய்யும் இவ்வுறுப்புக் கலம்பகத்துள்நிகழ்வது.“இதுவரை காணாத புதுமைபல காட்டுவேன்; அட்டமா நாகங்களையும்படமெடுத்து ஆடச் செய்வேன்; கடலைப் பருகுவேன்; மேருவைச் சிறியகடுகினுள் அடைத்து வைப்பேன்; அண்ட முகட்டை அடையுமாறு பேரொலிஎழுப்புவேன்; இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாறிவரச் செய்வேன்;ஆகாயம் முழுதையும் மறைப்பேன்; ஏழுலகங் களையும் எடுப்பேன்; இவையெல்லாம்எனக்கு எளிய செயல்; திருமாலாகிய அரங்கநாதனுடைய சக்கர முத்திரை தன்மீதுபொறிக்கப்பெறாத ஒரு தெய்வத்தைத் தேடிக் கொண்டுவந்து உங்கள் முன்னேவிடுவேன்” (திருவரங். 49) என்றாற் போன்ற இந்திரசால வித்தை பற்றியசெய்தி கூறுவது.

சம்மதம் சந்த விருத்தம்

அ) 1, 3 – குற்றெழுத்து ஈற்றுமாச்சீர், 2,4 – விளச்சீர் கொண்ட அடிநான்காய் அமைவது.எ-டு : ‘துலாம ணிந்தவர் சூளி கைத்தலைத்துலாமி வர்ந்தெழும் சோம திக்கினன்நிலாவி ரும்பொருள் நிறைந்த தாமெனநிலாவு மத்தலை யிவர்ந்து நிற்குமே’. (தணிகைபு.)ஆ) இதே அமைப்பில் 1 மாச்சீர், 2, 4 விளச்சீர், 3 முழுதும்புளிமாச்சீர் என்ற அமைப்பைக் கொண்ட நான்கடியாய் வருவது.எ-டு : ‘எழுது குங்குமத் திருவி னேந்துகோடுழுத மார்பினா னுருகி யுள்ளுறத்தழுவி நிற்றலுந் தாழ்ந்து தாளுறத்தொழுத மாருதிக் கினைய சொல்லுவான்’ (கம்பரா.8811)(வி. பா. படலம் 7 : 11. பக். 43, படலம் 9; பக். 82)

சயதேவம்

சந்தம் தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் விரித்துக்கூறி விளக்கும் வடமொழியாப்பு நூல்களுள் ஒன்று.(யா. வி. பக். 486)

சயந்தம்

இறந்துபட்ட நாடகத்தமிழ்நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்றுஅடியார்க்குநல்லார் உரையுள் (சிலப். பக். 80) உள்ளது.பதினோராடற்கு உரிய உறுப்பு ஐம்பத்து மூன்றும் இந்நூலில் விரித்துக்கூறப்பட்டதாக யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக்.581)

சரமகவி

இறந்தவர்மீது இரங்கிப் பாடும் கவி; இரங்கற்பா. (L)

சருப்பதோ பத்திரம்

மிறைக்கவியுள் ஒன்று. நான்கடிப்பாடல் செவ்வே முதல் நான் கடியும்,ஈற்றடியை முதலாகக் கொண்டமைத்த நான்கடியு மாக இருமுறை எழுதப்பட்டு,பாடலின் ஒவ்வோர் அடியை யும் முடிவிலிருந்து முதல் நோக்கி வாசித்தாலும்கீழிருந்து மேல் நோக்கி வாசித்தாலும் நான்கு நிலையிலும் அவ்வடியேவருமாறு அமைப்பது. இது மாறனலங்காரம் கூறும் இலக்கணம். (மா. அ.292)நாற்புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும் மடக்கிப்படித்தாலும் நான்கடியும் மேலிருந்து கீழ் இறக்கியும் கீழேயிருந்துமேலே ஏற்றியும் படித்தாலும் உருவம் கெடா மலேயே மாலைமாற்றாய் அமையுமாறுவருவது என்று தண்டி உரைக்கிறது. (தண்டி 98-11 உரை)

சருப்பதோ பத்திரம்

மாவா நீதா தாநீ வாமாவாயா வாமே மேவா யாவாநீவா ராமா மாரா வாநீதாமே மாரா ராமா மேதா.இது, நாற் புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப்படித்தாலும்,மடக்கிப் படித்தாலும், நான் கடிகளையும்மேனின்றுகீழிறக்கியும்,கீழ்நின்று மேலேற்றியும் படித் தாலும் சொரூபங் கெடாமல்மாலை மாற்றாய் முடியுமாறு காண்க.

சர்வதோ பத்திரம்

ஸர்வதோபத்ரம்; ‘சருப்பதோபத்திரம்’ காண்க.

சவலை

1. அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. முதலடி குறைந்துவரின் முதற்சவலை; கடையடி குறைந்துவரின் கடைச்சவலை; இடையடிகுறைந்துவரின் இடைச்சவலை (வீ. சோ. 130)2. இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6-35 உரை) (L)

சவலை வெண்பாட்டு

சவலை வெண்பா எனவும்படும். காசு நாள் மலர் பிறப்பு என்னும்வாய்பாட்டால் முடியாமல் மூவசைச்சீராய் இற்ற குறள் வெண்பாவை அடுத்துத்தனிச்சொல்லின்றி மேற்கூறிய வாய்பாட்டால் இற்ற குறள்வெண்பா இணைந்துவருவது.எ-டு : ‘அட்டாலும் பால்சுவையிற் குன்றா(து)அளவளாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்குசுட்டாலும் வெண்மை தரும்’ (மூதுரை. 4)இதன்கண் 7 ஆம் சீர் காய்ச்சீராய் நின்றது; 8 ஆம் சீர் வந்தி லது;மற்று 4 ஆம் அடியின் இறுதிச்சீர் மலர் வாய்பாட்டில் இற, மூன்றாம் 4ஆம்அடிகள் குறள் வெண்பாவாக அமைந்தன. (மா. அ. பாடல் 830 உரை)

சவலைப் போலி

நான்கடியின் மிக்க அடிகளால் நடைபெற்று அவ்வடிகள் ஒத்தும் ஒவ்வாதும்வரும்பா. இனி நான்கடியான் வரும் சவலை அடியெதுகையின்றிப் பலவிகற்பம்படவரினும் சவலைப் போலியாம். (வீ. சோ. 130 உரை)

சாதி (1)

மாராச்சை, மிச்சாகிருதி முதலியன. (யா. வி. பக். 486)ஆரியை, வைதாளியை எனச்சாதி இரண்டாம் (வீ.சோ. 139 உரை)சாதியாவது ஈண்டுச் செய்யுள் பற்றிய சாதி.

சாதி விருத்தமும், அதன் வகையும்

சாதிவிருத்தமாவது மாத்திரையாலும் எழுத்தாலும் வகை தெளியப்படும்விருத்தம்; ஆரியை எனவும், வைதாளியை எனவும் சாதி விருத்தம் இரண்டுவகைத்தாம். (வீ. சோ. 139 உரை)

சாத்துகவி

சிறப்புப் பாயிரக்கவி. (L)

சாத்துவி விருத்தம்

கூவிளச்சீர் முன்னும் கருவிளைச்சீர் பின்னுமாக எழுசீர் வந்துசெய்யுள் இறுதியில் நெட்டெழுத்துப் பெறும் அடிகளை நான்காக உடையவிருத்தம்.எ-டு : ‘போனதும் வருவதும் கருதுதல் தவிர்ந்துகொள்புசிப்பினுள் கிடைத்ததை மாந்திமேனியில் உடுத்துடை அருந்துதல் இரண்டையும்விருப்புடன் அளித்திடின் ஏற்றுநானெனத் தவநெறி தனிநடந் துளக்கடிநணுகிய துறவிகள் நாணும்வானவர்க் சரசென வருமொரு மழவனைவணங்கடி யவர்க்கிலை மாலே’ (வி. பா. 10ஆம் படலம் 2)

சாமிநாதம்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதிகை நிகண்டு என்ற நிகண்டுநூலை வரைந்த கல்லிடையூர் வேளாண்குலத் திலகரான சாமிகவிராயரால் எண்சீர்ஆசிரிய விருத்த யாப்பில், அந்தாதித் தொடையில், ஒவ்வோரதிகாரமும்மும்மூன்று இயல்களைக் கொண்டதாய், ஐந்து அதிகாரங் களையும் நுவலும்ஐந்திலக்கண நூலாய், பொதுப்பாயிரமும் நூன்மரபும் உட்பட 213 விருத்தச்செய்யுட்களில், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து,பிரயோக விவேகம், நம்பிஅகப்பொருள், புறப்பொருள்வெண்பா மாலை,யாப்பருங்கலம், காரிகை, தண்டியலங்காரம், பாட்டியல் நூல்கள் – எனஇவற்றை அடியொற்றி, அருகிய சிற்சில மாற்றங்களோடு புனையப்பட்ட நூல் இது.எழுத்து – 33; சொல் 37; பொருள் – 81; யாப்பு – 27; அணி – 24 என்றஎண்ணிக்கை உடைய விருத்தங்களால் மூலம் மாத்திரம் பாடப்பட்ட சாமிநாதம்என்னும் இந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் உரையோடுவெளியிடப்பட் டுள்ளது. உரை மிகவும் செப்பம் செய்யப்படும் நிலையிலுள்ளது. ‘சுவாமிநாதம்’ என நூற்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

சாமிநாதம் குறிப்பிடும்சொல்லணிகள்

தண்டியலங்காரம் கூறுவனவற்றொடு சதுரங்கம், கடக பெந்தம், தேர்க்கவிஎன்ற மூன்றும் சாமிநாதத்தில் இடம் பெறுகின்றன.

சாமுத்திரியம்

அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொன்ன நூல்களின் சார்பாக வந்தநூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டு உணரப்படல் வேண்டும் என்று யாப்பருங்கல விருத்தியுரைசுட்டுகிறது. (யா. வி. பக். 491)

சாம்பராக்கு

பாட்டின் இறுதிதோறும் ‘சாம்பராக்கு’ என்று முடியுமாறுபாடப்படும் ஒருவகைப் பாட்டு. (L)

சாரியை

இடைச்சொல் வகைகளுள் ஒன்று சாரியை. வேறாகி நின்ற இருமொழியும்தம்மில் சார்தல்பொருட்டு இடையே இயைந்து நிற்பது சாரியையாம். (தொ. எ.118 நச். உரை)சாரியைகள் பெயரொடு பெயரும் வினையும் இணைய வேற்றுமை யுருபுகள் இடையேவிரிந்து வரும் தொகாநிலைக் கண்ணும், வேற்றுமையுருபுகள் மறைந்து வரும்தொகை நிலைக்கண்ணும், தாம் இன்ன ஈற்றுக்கு இன்ன சாரியைதான் வரும் என்றுவரையறுத்த மரபுநிலை பெரும்பாலும் மாறா மல், அவ்விரு சொற்களுக்கும்நடுவிலேயே பெரும்பான்மை யும் வரும். ஒருசில இடங்களில் தனிமொழிஇறுதியிலும் சாரியை வரும். (தொ. எ. 132 நச்.)பதம் முன் விகுதியும் பதமும் உருபுமாகச் சார்ந்து கிடந்த வற்றைஇயைக்க வரும் இடைச்சொல் சாரியையாம்.எ-டு : நடந்தனன் – விகுதிப்புணர்ச்சி : ‘அன்’ சாரியைபுளியங்காய் – பதப்புணர்ச்சி : ‘அம்’ சாரியைஅவற்றை – உருபுபுணர்ச்சி : ‘அற்று’ ச் சாரியைமார்பம் : தனிமொழியிறுதிக்கண் ‘அம்’ சாரியைஅன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ,அ, உ, ஐ, கு, ன் என்பனவும் பிறவும் (தான், தாம், ஆம், ஆ முதலியன)பொதுவான சாரியைகளாம்.வருமாறு : ஒன் றன் கூட்டம், ஒரு பாற் கு, வண் டின் கால், தொடை யல் , பல வற்றை , பதி ற்று ப்பத்து, மர த்து க்கண், மன் றம் , எல்லார் தம் மையும், எல்லா நம் மையும், எல்லீர் நும் மையும், கல னே தூணி, நடந் தது , சாத் தனு க்கு, ஏற் றை , உய் கு வை, ஆ ன் , அவன் றான் , அவர் தாம் , புற்றாஞ் சோறு, இல் லாப் பொருள் (இல்லை பொருள்)தொல். காலத்து வற்று, அக்கு, இக்கு – என்னும் சாரியைகள்பிற்காலத்தே முறையே அற்று, அ, கு என்னும் சாரியைகளாகக் கொள்ளப்பட்டன.அல், அம், ஐ, ன், தான், தாம் என்பன இறுதியில் வந்தன. (நன். 244).தொடர்மொழியாகப் பதத்தொடு பதமும், பகுபதமாகப் பகுதியொடு விகுதியும்,பெயர்ப்பொருளாகப் பெயரோடு உருபும் புணருங்காலே, நிலைப்பதத்திற்கும்வரும் பதம் விகுதி உருபுகட்கும் இடையே, சில எழுத்தும் சில பதமும்ஒரோவிடத்து வரின் அவை சாரியை எனப்படும்.அ – த ன க்கு, ஏ – கல னே தூணி, உ – சாத்த னு க்கு, ஐ – மற் றை யவர்,கு – மொழி கு வன், ன் – ஆ ன் கன்று, அன் – ஒன் றன் கூட்டம்,ஆன் – இரு பான் (இருபானை), இன் – வண் டினை , அல் – ‘நறுந் தொடை யல் சூடி’, அற்று – பல வற்றை , இற்று – பதிற்று ப்பத்து, அத்து – நி லத்தி யல்பு, அம் – புளி யங் காய், தம் – எல்லார் தம் மையும், நம் – எல்லா ந ம் மையும், நும் – எல்லீர் நும் மையும் – என முறையே பதினேழு சாரியை என்றவாறு காண்க. இவை போல்வனபலவுமுள எனக் கொள்க. (தொ. வி. 52 உரை).

சாரியை இயற்கை

வழிவந்து விளங்கும் சாரியை, இடைநின்று இயலும் சாரியை எனச் சாரியைஇருவகைத்தாம்.மா ன் – கோ ஒன் – என்றாற் போல்வன சொல்லின் ஈற்றில் நின்றியலும் சாரியைகள்;சே வின் தோல், சித்திரை க்கு க் கொண்டான், எகி னங் கோடு- என்றாற்போல்வன (பொருள் நிலைக்கு உதவுவனவாய்ச்) சொற்களின்இடையே வந்து அவற்றை இணைப்பதற்கு இயலும் சாரியைகள்; ஈண்டு அவை முறையேஇன், இக்கு, அம்- என்பனவாம்.சாரியை வேற்றுமையுருபு நிலைபெறுமிடத்து உடைமையும் இன்மையும்ஒத்தனவாம். அஃதாவது சாரியை வருதலு முடைத்து; வாராமையும் ஆம்என்றவாறுஎ-டு : ஆவைக் கொணர்ந்தான், ஆவினைக் கொணர்ந் தான்; பூவொடு மணந்தகூந்தல், பூவினொடு மணந்த கூந்தல்; சொற்குப் பொருள், சொல்லிற்குப்பொருள்; நெல்லது பொரி, நெல்லினது பொரி; தேர்க்கண் நின்றான், தேரின்கண்நின்றான்.இனிச் சாரியை பெற்றே நிகழ்வன வருமாறு:எ-டு : மரத்தை வெட்டினான், பலவற்றொடு முரணினான், கூழிற்குக்குற்றேவல் செய்தான், ஆவினது கன்று, நிலாவின்கண் ஒளிவேற்றுமையுருபு நிலைபெறும் புணர்ச்சி உருபுபுணர்ச்சி; அவ்வுருபுதோன்றாது அப்பொருண்மை தொக்குப் புணர்வது பொருட்புணர்ச்சி.பொருட்புணர்ச்சிக்கண் சாரியை வருதலு முண்டு; வாராமையும் அமையும்.எ-டு : மகக்கை – மக வின் கை மக த்து க்கை; மட்குடம் – மண் ணின் குடம் (மண்ணினாகிய குடம்); கரும்பு வேலி – கரும் பின் வேலி; பலாஅக்கோடு – பலா வின் கோடு; புறம்நின்றான் – புறத் தின் கண் நின்றான். (தொ. எ. 132 ச. பால.)

சாரியை இயற்கை உறழத் தோன்றல்
சாரியை உள்வழிச் சாரியை கெடுதல்
சாரியை உள்வழித் தன்உருபு நிலையல்

‘ஐகார வேற்றுமைத் திரிபு’ காண்க.

சாரியை நிலையும் கடப்பாடு

உருபுகள் புணருமிடத்து இன்ன ஈறு இன்ன சாரியை பெறும் என்ற வரலாற்றுமுறைமையே சாரியை நிலையும் கடப் பாடாம்.உருபேற்கும்போது, அ ஆ உ ஊ ஏ ஒள என்ற ஆறு ஈறும் இன் சாரியை பெறுதல்;பல்ல பல சில உள்ள இல்ல, யா வினா என்பன வற்றுச் சாரியை பெறுதல்; அவைஇவை உவை என்பன வற்றுச் சாரியையும், சில உருபிற்கு வற்றுச்சாரியை யோடுஇன்சாரியையும் பெறுதல்; ஓகார ஈறு ஒன்சாரியை பெறுதல். அகர ஆகார ஈற்றுமரப்பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல்; (தொ. எ. 173 – 181 நச்).ஞகர நகர ஈறுகள் இன் பெறுதல் 182 ; அவ் இவ் உவ் என்பன வற்றுப் பெறுதல் 183 ; தெவ் என்பது இன் பெறுதல் 184 ; மகரஈற்றுப் பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல் 185, 186 ; யான் யாம் நாம் தாம் தான் என்பன என் எம் நம் தம் தன் எனவும்,நீ ‘நின்’ எனவும், நும் என்பது இயல்பாகவும் அமைந்து உருபேற்றல்187, 188, 192 ; எல்லாம் என்ற பெயர் உயர்திணைப்பொருட்கண் நம் சாரியையும்,அஃறிணைப் பொருட்கண் வற்றுச் சாரியையும் பெறுதல் 190, 189 ; எல்லார் என்ற பெயர் தம்மும் உம்மும் பெறுதல் 191 ; எல்லீர் என்ற பெயர் நும்மும் உம்மும் பெறுதல் 191 ; அழன் புழன் என்பன அத்தும் இன்னும் பெறுதல் 193 ; ஏழ் என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெறுதல் 194; குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் இன்சாரியை பெறுதல் 195 ; எண்ணுப் பெயர்கள் அன்சாரியை பெறுதல் 198 ; அஃது இஃது உஃது என்ற சுட்டுப் பெயர்கள் ஆய்தம் கெட்டுஅன்சாரியை பெறுதல் 200 ; யாது என்ற வினாப்பெயர் அன்சாரியை பெறுதல் 200 ; திசைப்பெயர்கள் ஏழனுருபு ஏற்குமிடத்து இன்சாரியை பெறுதலும்பெறாமை யும் 201 என்பன போல்வன பெயர்ச்சொற்கள் உருபேற்கு மிடத்துச் சாரியைநிலையும் கடப்பாடுகளாம். (தொ. எ. 173 – 202 நச்.)

சாரியை நிலையும் கடப்பாடு இல்லன

உருபேற்கும்போது சாரியை பெறும் என்று கூறாத ஈறுகள் உயிருள் இகரஈறும், மெய்யுள் ணகர யகர ரகர லகர ளகர ஈறுகளுமாம். இவை இன்சாரியைபெற்றும் பெறாதும் உருபேற்கும்.கிளியினை, கிளியை; மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை;கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை என உருபேற்குமாறு.கூறப்பட்ட ஈற்றுச்சொற்கள் நீங்கலாக, அவ்வீற்றுள் ஒழிந்த சொற்களும்பொன்னினை பொன்னை (னகர ஈறு), தாழினை தாழை (ழகர ஈறு), தீயினை தீயை,ஈயினை ஈயை, வீயினை வீயை (ஈகார ஈறு), தினையினை தினையை, கழையினை கழையை(ஐகார ஈறு) என்றாற் போல, இன்சாரியை பெற்றும் பெறாமலும்உருபேற்கும்.நம்பியை நங்கையை என்றாற்போல வரும் உயர்திணைப் பெயர்களும், கொற்றனைசாத்தியை என்றாற் போல வரும் விரவுப்பெயர்களும் சாரியை பெறாமல்உருபேற்கும். (தொ. எ. 202 நச். உரை)

சாரியை பற்றிய செய்தி

நடந்தனன் : இஃது அன்சாரியை வேண்டியே நின்றது.நடந்தான் : இது சாரியை வேண்டாது நின்றது.இவை விகுதிப்புணர்ச்சி.புளியமரம் எனவும் புளிக்கறி எனவும், நெல்லின் குப்பை எனவும்நெற்குப்பை எனவும் பதப்புணர்ச்சிக்கும்; அவற்றை மரத்தை எனவும், தன்னைஎன்னை எனவும், ஆனை ஆவை எனவும் உருபுபுணர்ச்சிக்கும்; முறையே சாரியைவேண்டியும் வேண்டாதும் நின்றவாறு காண்க.முகத்தினான் – குளத்தங்கரை – அவற்றினை – அவற்றினுக்கு -மரத்தினுக்கு – என்றாற் போல்வனவற்றில், முறையே அத்து இன், அத்து அம்,அற்று இன், அற்று இன் உ, அத்து இன் உ – எனப் பலசாரியை வருதல்காண்க.நிலக்கு – மாடக்கு – என்றாற்போல்வன நிலத்துக்கு – மாடத் துக்கு -எனச் சாரியை வேண்டியவழி இல்லாததனாலே செய்யுள் விகாரமாம் என்க. (நன்.243 இராமா.)

சாரியை வருதலும் தவிர்தலும்விகற்பமும்

நிலைமொழியின் முன்னர் விகுதியும் பதமும் உருபும் வந்துபுணருமிடத்து இடையே ஒன்றும் இரண்டும் சாரியை வந்து நிற்றலும்,வாராதொழிதலும், ஒன்றற்கே ஓரிடத்து வந்து ஓரிடத்து வாராது வழங்குதலும்ஆம்.எ-டு : ஊ ர து, உண்டது – சாரியை (அ) வேண்டியே நின்றன.வெற்பன், பொருப்பன், சாரியை வேண்டாவாயின.ஊரன், வீரன் }உண் டன ன், உண்டான்; சாரியைப் பேறு(அன்,கு)மொழி கு வன், மொழிவன் } விகற்பித்து வந்தன.இவை விகுதிப்புணர்ச்சி.அரை யே முந்திரிகை, கல னே இருநாழி – சாரியை (ஏ) வேண்டியே நின்றன.அத்திக்காய், அத்தி கடிது – இருவழியும் சாரியை வேண்டா வாயின.புளி யங் காய், புளி குறிது – சாரியைப் பேறு (அம்) வேற்றுமை யில்வேண்டியும், அல்வழியில் வேண்டாதும் உறழ்ச்சி ஆயிற்று.இவை பதப்புணர்ச்சிஅவற்றை, அவையிற்றை – சாரியை (அற்று, இற்று) வேண்டியே நின்றன.வேயை, வேயால், வேய்க்கு – சாரியை வேண்டாவாயின.செருவை – விளவை, சாரியைப் பேறு (இன்)செருவிற்கு – விளவிற்கு } விகற்பித்து வந்தன.இவை உருபுபுணர்ச்சி. (நன். 242 மயிலை.)விகுதிப் புணர்ச்சிக்கண், உண்டது – ஊரது என்றாற் போல்வன சாரியை (அ)வரவேண்டியே நின்றன; வெற்பன் – பொருப்பன் என்றாற் போல்வன சாரியைவேண்டாது நின்றன; வருவன, வருவ – உண்பன, உண்ப என்றாற் போல்வனஇருவகையும் ஒப்ப நின்றன.பதப்புணர்ச்சிக்கண், பலவற்றுக்கோடு – சிலவற்றுக்கோடு -என்றாற்போல்வன சாரியை (அற்று) வரவேண்டியே நின்றன; அத்திக்காய் -அகத்திக்காய் – என்றாற் போல்வன சாரியை வேண்டாது நின்றன; விளவின்கோடு,விளங்கோடு, அதவின் கோடு, அதங்கோடு – என்றாற் போல்வன இருவகையும் ஒப்பநின்றன.உருபுபுணர்ச்சிக்கண், மரத்தை, மரத்தொடு – அவற்றை, அவற்றொடு -என்றாற்போல்வன சாரியை (அத்து, அற்று) வரவேண்டியே நின்றன; நம்பியை -நம்பியொடு – கொற்றனை, கொற்றனொடு – என்றாற் போல்வன சாரியை வேண்டாதுநின்றன; மண்ணினை, மண்ணை – வேயினை, வேயை – என்றாற் போல்வன இருவகையும்ஒப்ப வந்தன. பூவினொடு விரி கூந்தல், பூவொடு விரிகூந்தல் -என்றாற்போல்வனவும் இருவகையும் ஒப்ப வந்தவாறு.அவையிற்றிற்கு, இவையிற்றிற்கு – என்றாற்போல்வன சாரியை பலவும்(இற்று, இன்) வந்தன. (இ.வி.எழுத். 61 உரை)

சாரியைப் புணர்ச்சி

ஒரு சொல்லின்முன் ஒரு சொல்லோ விகுதியோ உருபோ புணருமிடத்து ஒன்றும்பலவுமாகிய சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பித்தலும் நிகழும்.எ-டு : நடந்தனன்: அன்சாரியை; நடந்தான்: சாரியை இன்று.புளியமரம், புளியங்காய்: அ, அம் சாரியை; புளிக்கறி: சாரியை இன்று.நெல்லின் குப்பை, நெற்குப்பை: இன்சாரியை வருதலும் வாராமையும் ஆகியவிகற்பம். காலமொடு: காலத்தொடு, அத்துச் சாரியை வருதலும் வாராமையும்ஆகிய விகற்பம். மரத்தை, மரத்தினை: முறையே ஒரு சாரியையும் (அத்து), இருசாரியையும் (அத்து, இன்) பெற்றன. அவற்றை, அவற்றினை: முறையே ஒருசாரியையும் (அற்று), இரு சாரியையும் (அற்று, இன்) பெற்றன.‘மாடத்துக்கு’ என அத்துச் சாரியை வேண்டியவழி, சாரியை வாராது ‘மாடக்கு’என வருதல், தொகுத்தல் ஆகிய செய்யுள்விகாரமாம். (நன். 243).

சார்த்து கவி

ஒருவன் கவியிசையில் வேறு ஒரு செய்யுளைப் புணர்க்கும் கவிஞன்.இலக்கண விளக்கம் ‘சாத்துக்கவி’ என (பாட். 174) ஓதி, ‘ஒருவன் பாஇசைக்கு ஒப்ப மேவி உரைப்போன்’ எனவும் இலக்கணம் கூறும். (வெண்பாப்.செய். 482 உரை)

சார்பு வேறுபெயர்கள்

புல்லல் எனினும், சார்தல் எனினும், புணர்தல் எனினும், சார்பென்னும்
ஒருபொருட் கிளவி. (மு. வீ. எழுத். 23)

சார்பெழுத்தின் இடமும் முயற்சியும்

சார்பெழுத்துக்கள் தத்தம் முதலெழுத்துக்கள் தோன்றும் இடமே தமக்குப்
பிறப்பிடமாய் அவற்றின் தோற்றத்துக்குரிய முயற்சியே தம்
தோற்றத்துக்கும் முயற்சியாய்ப் பிறக்கும். ஆகவே, அவை தமக்கெனத்
தனிப்பிறப்பிடமோ முயற்சியோ உடையன அல்ல. (நன். 87)

சார்பெழுத்து

தனித்தானும் ககரஒற்று முதலியன போல அகரமொடு சிவணி யானும் இயங்கும்
இயல்பின்றி, ஒரு மொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாகவுடைய
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்தாம்.
சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றும் அகரம் போலத் தனித்து நிற்றல்
ஆற்றாமையின், நெடுங்கணக்கினுள் பெறப் படா ஆதலின், இவை ‘எழுத்து ஓரன்ன’
எனப்பட்டன. (சூ. வி. பக். 18, 19)
தமக்கெனத் தனித்த பிறப்பிடமின்றித் தாம் சார்ந்த எழுத்தின் பிறப்பே
பிறப்பிடமாகத் தோன்றும் குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற
மூன்றே சார்பெழுத்தாம். (தொ. எ. 101 நச்.)
உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்தைச் சார்ந்து அவற்றின் இடமாகப்
பிறப்பன சார்பெழுத்துக்களாம். அவையாவன உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை,
ஒற்றளபெடை, குற்றிய லிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்
குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்ற பத்தாம். (நன்.
60)
உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலானும், ஆய்தம் உயிர்போல
ஒரோவழி அலகு பெற்றும் மெய்போல ஒரோவழி அலகு பெறாதும் ஒருபுடை ஒத்து
அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனையவை தத்தம் முதலெழுத்தின்
திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின. (நன். 60 சங்.)
தம்மொடு தாம் சார்ந்தும், இடன் சார்ந்தும், இடனும் பற்றுக் கோடும்
சார்ந்தும் விகாரத்தால் வருதலின் சார்பெழுத் தாயின. (மயிலை.)

சார்பெழுத்து ஒன்பது என்றல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடே

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்து
என்ற ஆசிரியர் தொல்காப்பியனாரும், ஏனைய உயிர்மெய் உயிரளபெடை ஒற்றளபெடை
ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக் குறுக்கம் என்ற ஆறனையும்
பின்னர் ஒருவாற்றான் தழுவுதலானும், (முதலும் சார்பும் அன்றி)
மூன்றாவதொரு பகுதி இன்றாதலானும், முதலெழுத்தாம் தன்மை இவ்வொன்பதற்கும்
இன்மையானும், அவை சார்பில் தோன்றுதலுடைமையானும், இவ்வாறனையும்
அவற்றுடன் தலைப்பெய்து ‘ஒன்பதும் சார்பின் பால’ என்றார். (இ. வி.
எழுத். 5 உரை).

சார்பெழுத்து வகை

தொல்காப்பியத்தில் 3, இலக்கண விளக்கத்தில் 9, வீர சோழியத்தில் 5,நேமிநாதத்தில் 9, நன்னூலில் 10, தொன்னூல் விளக்கத்தில் 9,முத்துவீரியத்தில் 2, சுவாமிநாதத்தில் 10 என இவ்வாறு சார்பெழுத்துவகைப்படும்.

சார்பெழுத்துக்களது பிறப்பு

சார்பெழுத்துக்கள் மூன்றும், தாம் சார்ந்து தோன்றும் தலைமை
யெழுத்துக்களின் வளியிசை – வினைக்கள முயற்சி – பிறப்பியல்புகளோடு
ஒருங்கொத்து, தத்தம் இயல்பொடு கூடி அவ்விரண்டு தன்மையும் ஒத்த
தோற்றத்தோடு உருவாகிப் பிறக்கும்.
வருமாறு : மியா என்பதன்கண் நிற்கும் குற்றியலிகரம், மகரத்தினது
பிறப்பிடமாகிய இயைந்த இதழை யும் யகரத்தின் பிறப்பிடமாகிய அடிநா அண்ணத்
தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
நாகரிது என்னும் சொற்களுள் நிற்கும் குற்றியலுகரம், தனது
பற்றுக்கோடாகிய ககரமெய் பிறப்பிடத்தையும் சார்பாகிய அகரத்தின்
பிறப்பிடத்தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
அஃது என்னும் சொற்கண்நிற்கும் ஆய்தம், அகரத்திற்கும் தகர
மெய்க்கும் உரிய அண்ணம் – பல்- நா- ஆகிய உறுப்புக்களின் தொழிலான்
அவற்றைச் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். (தொ.எ.101.
ச.பால.)

சார்பெழுத்துக்களின் எண்ணிக்கை பற்றிய இலக்கண நூலார் கொள்கை

இல
க்கண தொல் வீரசோழி நேமி நன்
தொன்னூல் முத்து சுவாமி
விளக்கம் காப்பியம் யம் நாதம்
னூல் விளக்கம் வீரிய
ம் நாதம்
(9) (3) (5) (9) (10) (9) (2)
(10
)
உயிர்மெய் 216 – – 216 216 216 216 216
ஆய்தம் 1 1 – – 8 8 1 1
உயரளபெடை
7 – 7 7 21 21
– 7
ஒற்றளபெடை
11 – – 11 42 42 –
11
குற்றியலிகரம்
1 1 1 1 37 37 –
1
குற்றியலுகரம்
1 1 1 1 36 36 – 1
ஐகாரக்
குறுக்கம்
1 – 1 1 3 3
– 1
ஒளகாரக்
குறுக்கம்
1 – 1 1 1 1 – 1
ஆய்தக்
குறுக்க
ம்
– – – 1 2 – – 1
மகரக்குறுக்கம்
1 – – 1 3 3 – 1
உறுவிரி
240 3 11 240 369 367 217
241
192
177
178
191
190
179
180
189
குறில்
நெடில்
ஐகாரக் குறுக்கம்
ஒளகாரக் குறுக்கம்
ஆய்தம்
மெய்
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஆய்தக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
223
262
267
266

சாழல்

முன் இரண்டு அடிகள் வினாவாகவும் பின்னிரண்டடிகள் விடையாகவும்அவ்விடையின் இறுதியில் ‘சாழலே’ என்ற சொல் உடை யதாகவும் வரும் 10பாடல்களையுடைய பிரபந்தமாகக் ‘பெரிய திருமொழியில்’ உள்ளது. (11-5)திருவாசகத்தில் உள்ள ‘திருச்சாழல்’ 20 பாடல்களையுடைய பிரபந்தமாகச்‘சாழலோ’ என்று முடிகிறது.சாழல் என்ற பிரபந்தம் வெண்டளையால் அமைந்த நான்கடித் தரவு கொச்சகக்கலிப்பாக்களால் ஆகிய பிரபந்தமாகும்.

சாவ என்னும் வினையெச்சம் புணருமாறு

சாவ என்னும் செயவென் எச்சம், பொதுவிதியான் வருமொழி வன்கணம் வரின்வந்த வல்லொற்று மிக்கும், இயல்புகணம் வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : சாவக்குத்தினான், சாவ ஞான்றான், சாவ யாத்தான், சாவவடைந்தான் (வகரம் உடம்படுமெய்)(தொ. எ. 204 நச்.)ஈறாகிய வகர உயிர்மெய் கெட, வன்கணம் வரின் வல்லொற்று மிக்கும்,ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் இச்சொல் புணர்வதுண்டு.எ-டு : சாவ + குத்தி = சாக்குத்தி; சாவ + ஞான்றான் =சாஞான்றான்; சாவ + வந்தான் = சாவந்தான்; சாவ + அடைந்தான் =சாவடைந்தான் (வகரம் உடம்படு மெய்) (தொ. எ. 209 நச்.)சாவ என்னும் வினையெச்சம் ஈற்றுயிர்மெய் குன்றியது போலவே, அறிய என்றசெயவென் எச்சமும் ஈற்றுயிர்மெய் குன்றிப்‘பால் அறிவந்த உயர்திணைப் பெயரே’ (தொ. சொ. 164. நச்)என்றாற் போல வருவதுண்டு.சாவ என்பது, அகரஈற்று வினையெச்சம் ஆதலின், வருமொழி முதல் வன்கணம்வருமிடத்து மிக்குப் புணரும்; ஒரோவழி ஈற்று வகர உயிர்மெய் கெட்டுவன்கணம் மிக்குப் புணரும்.எ-டு : சாவ + குத்தினான் = சாவக் குத்தினான், சாக் குத்தி னான்‘கோட்டுவாய்ச் சாக்குத்தி’ (முல்லைக். 5 :35) (நன். 169)

சாவெழுத்து

நச்செழுத்து. யரலள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும்அவ்வொற்றுக்களும் ஆய்தமும் மகரக் குறுக்கமும் அளபெடையும் என்னுமிவை.இவை நூலின் முதற்சீர் முதன் மொழிக்கண் ஆகாதன. மங்கல மொழிக்கண்இவ்வெழுத் துக்கள் வரின் அவை குற்றமில. (இ. வி. பாட். 20)

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

கொச்சகக் கலிப்பாவின் வகை ஐந்தனுள் ஒன்று. ஆறு முதலிய பலதாழிசையால் நிகழும் பஃறாழிசைக் கொச்சகத்தை நோக்க, தரவினை அடுத்துஇடையிடையே தனிச்சொல் பெற்று, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின்இலக்கணத்தின் வேறுபட்டு மூன்று தாழிசையே பெற்று வரும் கொச்சகம்சிஃறாழிசைக் கொச்சகம் எனப்பட்டது. ஆதலின் இதன் உறுப்புக்கள்(பெரும்பான்மையும் நாலடித் தரவு, இடை யிடையே தனிச்சொல் வரமும்மூன்றடியாக வரும் மூன்று தாழிசை, மீண்டும் ஒரு தனிச்சொல்,(பெரும்பான்மையும்) தரவடியின் மிக்க அடியான் வரும் சுரிதகம் என்பன.(யா. க. 86 உரை)

சிகண்டி

இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர்; அகத்தியரின் பன்னிருமாணாக்கருள் ஒருவர். (சிலப். உரைச் சிறப்புப். அடியார்க்.)

சிங்காதனப் பாட்டு

அரசன் தன் ஓலக்கத்தில் அரியணையில் ஐம்பெருங்குழு புடைசூழக்குறுநிலமன்னர் பரவ, பெருஞ்சிறப்புடன் வீற்றிருக்கும் சிறப்பைவிரித்துப் பாடும் பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.(இ. வி. பாட்பக். 505)

சிங்கிப் பாட்டு

கைகளை முடக்கி விலாஎலும்புகளில் பொருந்துமாறு அடித்துக்கொண்டேகூத்தாடும் மகளிர் குழாத்தினர் அத்துணங்கைக் கூத்தின்போது பாடும்பாடல். சிங்கி – துணங்கைக் கூத்து.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.(இ. வி. பாட். பக். 505)

சிதம்பரச் செய்யுட் கோவை

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வ அருள் பெற்ற பெரும் புலவரானகுமரகுருபர அடிகளால் பாடப்பட்ட அரியதோர் இலக்கியம். வைணவ மாறன்பாப்பாவினம் என்ற யாப் பிலக்கணத்தை ஒருபுடை ஒத்தது இது. பாடல்கள்சிவபெருமானைப் போற்றுவன. யாப்பருங்கலக் காரிகையுள் சுட்டப்பட்ட பாப்பாவினம் அனைத்திற்கும் இந்நூலுள் காணப்படும் 84 செய்யுளும் சிறந்தஎடுத்துக்காட்டாவன. செய்யுள்களின் கீழ்க்குறிப்பு அடிகளே வரைந்தவைஎன்பர். அக்குறிப்புக்கள் திட்பநுட்பம் சான்றவை.

சிதம்பரப் பாட்டியல்

16ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரால் இயற்றப் பட்ட பாட்டியல்இலக்கணநூல்; 47 எண்சீர்விருத்த நூற்பாக் களையுடையது. உறுப்பியல்,செய்யுளியல், ஒழிபியல், பொதுவியல், மரபியல் என ஐந்து இயல்களையுடையது.முதல் மூன்று இயல்கட்குக் குறிப்புரை உளது. அவ்வுரை காரர் பெயர்தெரிந்திலது. இந்நூல் பாட்டியல் எனப்படினும் செய்யுளிலக்கணத்தையும்முழுதும் சொல்லுகிறது.

சித்தர் பாடல்கள் யாப்பு

சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை, வண்ணம், ஆனந்தக் களிப்புபோன்றன.ஈரடிகள் அளவொத்து அமைவது சிந்து. சித்தர்தம் சிந்துக்கள்பெரும்பான்மையும் ஈரடிச் செய்யுளாய் நிகழ்வன. ஓரடிக்கும் அடுத்தஅடிக்கும் இடையே ஓசைநிறுத்தம் அமையுமாறு தனிச்சீர் ஒன்று நிகழ்தலும்காணப்படுகிறது. அடிகள் எதுகை பெற்று, அடிப்பகுதியில் மோனை பெற்றுவருதல் இயல்பு. அடிப்பகுதிகள் நாற்சீர் பெற்று நாற்சீர் இரட்டையாகவும், முச்சீர் பெற்று முச்சீர் இரட்டையாகவும், இன்னோ ரன்னவாகச்சிந்தின் அமைப்புச் சிறிது சிறிது வேறுபடுவன உள. ‘குதம்பாய்’ எனவிளியாக வரும் ஓரடிச் சிந்தினின்று இவ்வீரடிச் சிந்து கிளைத்ததுஎன்ப.கும்மியும் அளவொத்த ஈரடி அமைப்பு; வெண்டளை மிக்க எழுசீர் அடி;பாட்டில் அடியெதுகையொடு, பாட்டடியுள் முதலாம் ஐந்தாம் சீர்கள் மோனைத்தொடை அமைய வரும்.எ-டு : கொங்கணர்தம் வாலைக்கும்மி.கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பு தனித்த யாப்பும் இசையமைப்பும்உடையது. எதுகையுடைய அளவொத் திராத ஈரடி கொண்டது பல்லவி. 34 சரணங்கள்தொடர் கின்றன. இவை சிந்துக்கு உரிய தொடையமைதி பெற்றுப் பல்லவியொடுசிறிது வேறுபடுகின்றன. சரணங்கள் முடியுந் தோறும் பல்லவிபாடப்பெறும்.இடைக்காடரின் தாண்டவராயக்கோன் கூற்று கீர்த்தனைத் தோற்றமுடையது.பல்லவி அனுபல்லவியாக எட்டுத் தாழிசைகள் அமைகின்றன; பெரும்பான்மையும்வெண் டளை யாப்பு.அருணகிரியாரது திருப்புகழ் சந்தக் குழிப்புக்கள் அமைந்த வண்ணக்களஞ்சியம் என்ப. (இலக்கண. முன். பக். 100-103)

சித்திர அகவல்

‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க.

சித்திர கவி (3)

எழுத்துச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், வினாவிடை, கரந்துறைசெய்யுள், காதைகரப்பு, பிறிதுபடுபாட்டு, நடுவெழுத்தாக்கம்,எழுகூற்றிருக்கை, திரிபங்கி, நிரோட்டம், மாலைமாற்று, சக்கரபந்தம்,கமலபந்தம், தேர்ப்பந்தம், வேல்பந்தம், நாகபந்தம், தேள்பந்தம்,சுழிகுளம், கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோ பத்திரம் என்பனவும்பிறவும் தென்னூல் அணியியல் (50) சுட்டும் சித்திரகவிகளாம்.

சித்திரகவி (1)

பொருட்சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லமைப் பையே குறிக்கோளாகக்கொண்டு சொல்லழகு காணும் விருப்ப முடையோர் உள்ளம் உவகையுறும் வகையில்பாடப்படும் மடக்கும், மிறைக்கவிகளும் சித்திரகவிகளாம். (இ. வி. பாட்.6)

சித்திரகவி (2)

அருங்கவியாகிய மிறைக்கவி,சித்திரகவி பாடும் புலவன் (இ. வி. பாட். 170) ( L)

சித்திரப் பா

சித்திரகவி; நான்கு கூடின எல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது வருமாறு:எ-டு :அ) ‘ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்ஈரறம் பயந்த நான்முக அண்ணல் 1+3+2+4=10மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்நால்வகை யோனியுள் இருவினை கடிந்து 3+1+4+2=10முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்நால்வகை அளவையும் இருவகைப் பண்பும் 3+1+4+2=10ஒன்றி யுரைத்த முக்குடைச் செல்வன்ஈரடி பரவினர் என்பபேரா நால்நெறி பெறுகிற் போரே.’ 1+3+2+4=10(திருப்பாமாலை.10)இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப் பா. இதனைநான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்ளலாம்.எ-டு :ஆ) ‘இருவரமாம் எழுநாள் ஆறமர்ந்தான் கோயில் 2+7+6=15ஒருவனையே நாடிய போந்தேம் – ஒருவனும்எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோடு 8+3+4=15ஐந்தலைய நாகத் தவன்’. (திருப்பாமாலை) 1+9+5 = 15இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனைஈசானன் திசைமுதலாக எட்டுத்திசை மேலும் நிறுத்தி நடுவே பின் ஐந்துநிறுத்தி விடுவது. வருமாறு: (செய்தி விளங்கிற்றிலது.) (யா.வி.பக்.543)

சித்திரவண்ணம்

நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விராய்ச் செய்வது. பல வண்ணம்படுதலின் இதனை சித்திரவண்ணம் என்றார்.எ-டு : ‘சூரல் பம்பிய சிறுகான் யாறேசூரர மகளிர் ஆரணங் கினரேவாரல் வரினே யானஞ் சுவலேசாரல் நாட நீவர லாறே’. (தொ. செய். 22 நச்., வீ.சோ. 142உரை)

சித்து

இரசவாதிகள் தம் திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச்செய்யப்படும் செய்யுள்; கலம்பக உறுப்புக் களுள் ஒன்று. இரசவாதமாவதுஓர்உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுதல். சித்தர் என்பார் இரும்புமுதலிய இழிந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகங் களாகப்படைக்கும் வல்லமை உடையவர்.எ-டு : ‘பொற்பாவைக்குக் கஞ்சம் பொன்னாக்கிய சித்தரேம்திருமாலுக்(கு) இரும்பைப் பொன்னாக்கினேம்ஈயத்தை வெள்ளியதாக உருக்குவோம்.’வெண்கலத்தைப் பொன்னாக்கிய சித்தர்: பொற்றாமரை மலரைச் செய்துகொடுத்த சித்தர் யாங்களே என்பது.இரும்பைப் பொன்னாக்கினேம் – பெரிய காளீயன் என்னும் பாம்பின்படத்தை(க் கண்ணனுக்கு) நடிக்கும் இடமாச் செய் தோம்; ஈயத்தை வெள்ளியதுஆக உருக்குவோம் – ஈயத்தை நல்ல வெண்ணிறமாகுமாறு உருக்குவோம்.பொற்பாவைக்குக் கஞ்சம் (-வெண்கலத்தைப்) பொன் ஆக்குதல் -திருமகளுக்குப் பொற்றாமரைப் பூவினைக் கொடுத்தல். இவ்வாறு சிலேடையாகமற்றொரு பொருள் அமையப் பாடுதல் சிறப்பு. (திருவரங்கக். 42)

சிந்தடி

முச்சீர்களைக் கொண்ட ஓரடி – (யா. கா. 12)7 எழுத்து முதல் 9 எழுத்துக்காறும் பெற்றுவரும் அடி. (தொ. செய். 37நச்.)

சிந்தடி அளவடியால் வெண்பா வருவது

சிந்தடி 7 முதல் 9 முடிய எழுத்துப் பெறுவது.அளவடி 10 முதல் 14 முடிய எழுத்துப் பெறுவது.‘மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டு’ – 7 எழுத்தடி‘இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது’ – 8 எழுத்தடி‘சென்று முகந்து நுதல்சுட்டி மானோர்த்து’ – 9 எழுத்தடி‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு’ – 10எழுத்தடி‘ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்’ – 11எழுத்தடி‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்’ – 12 எழுத்தடி‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ – 13 எழுத்தடி‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்’ – 14 எழுத்தடிஇவையே அன்றிச் சீர்வகை வெண்பாவில்,‘முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம்’ – 15எழுத்தடி‘படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்’ – 16எழுத்தடிஎன்னும் நெடிலடிகளும் சிறுபான்மை வரும்.(எழுத்தெண்ணுகையில்) ஒற்றும் குற்றுகரமும் ஆய்தமும்எண்ணப்படா.)

சிந்தடி வஞ்சிப்பா

முச்சீரடிகளையுடைய வஞ்சிப்பா; தனிச்சொல் பெற்று.நேரிசைஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :‘பரலத்தம் செலஇவளொடு படுமாயின்இரவத்தை நடைவேண்டா இனிநனியெனநஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர்சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும்ஆங்கண் தெவிட்டினர் கொல்லோஎனவாங்கு,நொதுமலர் வேண்டி நின்னொடுமதுகாமுற்ற ஆடவர் தாமே’. (யா. க. 90 உரை)

சிந்தம்

ஆரிடப் போலிப் பாவகை நூல்களுள் ஒன்று. குடமூக்கிற் பகவர் செய்தவாசுதேவனார் சிந்தம், அறிவுடைநம்பி செய்த சிந்தம் என்ற சிந்தநூல்களுள்இரண்டு யாப்பருங்கல விருத்தி யுரையுள் கூறப்பட்டுள. முதலாவது ஆரிடச்செய்யுளாகவும் அடுத்தது உறுப்பழி செய்யுளாகவும் சுட்டப்படுகின்றன.(யா. வி. பக். 369, 372)

சிந்தாமணி

திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் பாடல் ஒன்று பாதிச்சமவிருத்தத்திற்கு எடுத்துக்காட்டாகவும் (பாடல் 1488), கடவுள்வாழ்த்தாகிய முதற்பாடல் நேரசை முதலாய் அடிதோறும் 14 எழுத்துப் பெற்றுவண்ணத்தான் வந்த நாலடிச் செய்யுட்கு எடுத்துக்காட்டாகவும் உரையுள்சுட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516,521)

சிந்தாமணி யாப்பு

திருத்தக்கதேவர் இயற்றிய விருத்த யாப்பில் அமைந்த சீவகசிந்தாமணிஎன்ற காப்பியத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தம் 1525, கலிவிருத்தம்1291, கலித்துறை 255, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, எண்சீர் ஆசிரியவிருத்தம் 16, வஞ்சித் துறை 16, கலித்தாழிசை 2 , ஆசிரியத் தாழிசை 1என்பன அமைந்துள்ளன. சிந்தாமணியின் கலித்துறை பல மா-மா-கனி-மா-மா-என்றசீர்அமைப்புடன் காப்பியக் கலித்துறை எனச் சிறப்பிக்கப்படும் நிலையில்உள்ளன.காந்தருவதத்தையார் இலம்பகப் பேடி வருணனையில் இரண்டு பாடல்கள்ஓரடிமிக்கு வந்த கொச்சக ஒருபோகுகள். அவை ஈற்றடி மிக்கு வந்தகலித்தாழிசையாகக் கொள்ளப்படு கின்றன.ஆசிரியத்துறை போன்ற ஒரு பாடல் (2578) நிகழ்கிறது.ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் இடையடிகள் மடக்கியும் வரும்இசைப்பாடல்கள் சில காமம் நுதலி வருகின்றன. இவற்றுள் சில கடவுள்வாழ்த்தாகும். (இலக்கணத். முன். பக். 93, 94)

சிந்தியல் வெண்பா

மூன்றடியால் அமைந்த வெண்பா. இரண்டாமடி தனிச் சொல் பெற்று ஒருவிகற்பத்தானும் இரு விகற்பத்தானும் நிகழும் நேரிசைச் சிந்தியல்எனவும், தனிச்சீர் பெறாது ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும் நிகழும்இன்னிசைச் சிந்தியல் எனவும் இஃது இருவகைப்படும். (யா. கா. 26)

சிந்தியல் வெண்பா ஓசை கெட்டவெண்டாழிசை

சிந்தியல் வெண்பாச் சிதைந்து தனித்து வருவது வெண் டாழிசையின்ஒருவகை.எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்முன்பு நின்று முனிவு செய்யார்அன்பு வேண்டு பவர்’.இது வெண்பா இலக்கணம் பெரும்பான்மையும் சிதைந்து சிந்தியல்வெண்பாப்போலவே மூன்றடியான் நடந்து, ஈற்றடி முச்சீராய்த் தனித்து வந்தவெண்டாழிசை.(வீ. சோ. 121 உரை)

சிந்தியல்வெண்பாவின் இனம்

மூன்றடியால் வரும் விருத்தமும் துறையும் தாழிசையும் சிந்தியல்வெண்பாவின் இனம் என்பாரும் உளர். (வீ. சோ. 121 உரை)

சிந்து

ஈரடி அளவொத்து அமைவது சிந்து (பஞ்ச மரபு). இவ் வடிகளுக்கிடையேதனிச்சீர் அமைவது ஒருவகை. ஒவ்வோர் அடியும் இருபகுப்புற்று இடையேதனிச்சீர் பெறுதலும் உண்டு. முதற்பகுப்புக்கும் இரண்டாம்பகுப்புக்கும் இடையே சிறு ஓசை நிறுத்தம் நிகழ்கிறது. தனிச்சீரால்நிகழ்கின்ற ஓசை நீட்சி சிந்தின் தனிச்சிறப்பு. முன்னிலைப்படுத்தும்நிலையிலும் தொடர்ச்சிதரும் நிலையிலும் பொருள் பொருத்தத்துடன்இத்தனிச்சொல் அமைகிறது.ஈரடி அல்லது இருபகுதி அளவொத்து வருதல் சிறிதே மாறுபட்டு ஓசை சிந்திநிற்றல் இங்கு அமைகிறது. இவ் வோசை சிந்துதலிலும் நிலைத்த அமைப்புண்டு.இவ்வியல் புகளே இலக்கணமாக இப்பா இப்பெயர் பெற்றது.பிறிதொருவகைச் சிந்து அளவொத்த ஈரடிகள் இவ்விரண் டாய்த் துண்டுபட்டுஅவற்றிடையே தனிச்சீர் உடைத்தாய் நாற்சீர் இரட்டை என்ற பெயருடன்அமைவது. ஒவ்வோ ரடிப் பகுதியும் நாற்சீர் பெறுவது இது. இவற்றின்கண்அடிகளின் ஈற்றில் வரும் இருசீரும் இயைபாக அமைகின்றன.அடிப்பகுதிகள் முச்சீர் பெறுவது முச்சீரிரட்டை, இருசீர் பெறுவதுஇருசீரிரட்டை. (சிந்துப் பாடல்களின் சொற்கள் மிருதங்கத் தாளத்தை ஒட்டிஅமைக்கப்பட்டவை; அசைசீர் வரையறைகொண்டு அமைக்கப்பட்டன அல்ல.)(இலக்கணத். முன். பக். 99, 100)சிந்தடி ‘சிந்து’ எனவும்படும். (யா. கா. 12)

சிந்துப்பாடல்

தமிழ்ப்பாக்கள் இயற்பா, இசைப்பா என இருவகைப்படுவன. இசைப்பாக்களில்,பண்ணுடன் கூடியவையும், பண்ணுடனும் தாளத்துடனும் கூடியவையும் எனஇருவகையுள. பண்ணுட னும் தாளத்துடனும் கூடிய இசைப் பாக்களை வண்ணப்பா,சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி என நான்காகப் பாகுபடுத்த லாம்.இவற்றுள், வண்ணப்பாக்கள் சந்தக்குழிப்புக்களையும், சந்தப்பாக்கள்சந்தமாத்திரைகளையும், சிந்துப்பா உருப்படி என்னும் இருவகையும் -தாளநடைகளையும் – அடிப்படை யாகக் கொண்டுள்ளன. எழுத்துக்களின் ஒலியளவுநீளல் குறுகல்களில் ஓர் ஒழுங்குமுறையையும், மோனை எதுகை என்னும்தொடைகளோடு இயைபுத் தொடையையும், சிறுபான்மை எடுப்பு முடிப்புஉறுப்புக்களையும், மிகுதியான தனிச்சொற்களையும் பெற்று வரும்தனித்தன்மையுடையன சிந்துப் பாடல்கள். இத்தனித்தன்மைகளால் மற்ற இசைப்பாடல்களினின்று இவை வேறுபட்டு நிற்கின்றன.மிகவும் குறுகிய ஒன்றே முக்கால் அடியையுடைய குறளினும் சற்றுநெடியதாய் அளவொத்து இரண்டடியாக நிகழும் பாடல் சிந்து எனப்பட்டது.அசையும் சீரும் தனிச்சொல்லும் முடுகியலும் அடியும் சிந்துப்பாடலில்(இயற்பாவிற்கு அமைந்த யாப்பிலக்கண முறையில் காணாமல்) புதுமுறையில்அறியப்படும். குறிலசையும் நெடிலசையுமென அசை இருவகைத்து. குறிலசைதனிக்குறிலாக நிகழும். குறிலொற்று, நெடில், நெடிலொற்று என இம்முத்திறமாக நெடிலசை நிகழும். தாள அடிப்படையில் சீர்கள் அமைகின்றன. அவைதகிட, தகதிமி, தகதகிட, தகிடதகதிமி – என முறையே மூன்றும் நான்கும்ஐந்தும் ஏழுமாகிய அசைகளால் அமை வன. சிந்துப்பாவில் வரும் தனிச்சொல்அடியில் நிகழும் சீராக வரும்; அடிக்குப் புறம்பாக வாராது. முடுகியலின்சீரமைப்புச் சந்தப்பாடலின் இலக்கணம் பெறும். நான்கு முடுகியல்சீர்கள்ஓரடியில் இடம்பெறும். விரைவு நடையில் வருமவை ஓரசைக்கு இரண்டுயிராகநடப்பதுண்டு. சிந்துப்பா அடிகள் தாள அடிப்படையுடையன. 8, 12, 20, 24சீர்களையுடைய கழிநெடிலடிகளே சிந்துப்பாடலில் பயின்று வரக் காணலாம்.(ஒற்றைப்பட அவை நிலைத்தலில்லை); எத்தனை சீராலும் அடி நடக்கலாம்.நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, வளையல் சிந்து,தங்கச் சிந்து முதலாகச் சிந்து எனப் பெயரிய இசைப்பாடல்கள் பலவுன.(சிந். யாப். 9. 1, 2, 6)

சிந்துப்பாட்டு (1)

ஆறு முதலிய பல சீர்களால் வரும் இரண்டடிகள் தனிச் சொல் இடையேவரத்தொடுப்பதும், ஈரடிகளின் பின்னர், இரு சீர் முதலாகப் பல சீர்கள்முடுகியல் சந்தத்தொடு வந்து இயையுமாறு தொடுப்பதும்,மோனை எதுகை முதலான தொடை நயம்பட, பலவகைத் தாளக் கொட்டொடு பல அடியாலேதனிச்சொல் இடையே வரத்தொடுப்பதும் என இவை சிந்துப்பாட்டாம்.இச்சிந்துப் பாடல் காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து – என இருவகைப்படும். (இப்பெயர்கள் காரணம் பற்றியவை). அடிதோறும் சீர்ஒத்து வருவனசமனிலைச் சிந்தாம்; சீர் ஒவ்வாது வருவன வியனிலைச் சிந்தாம். (தென்.இசைப். 35)

சினை என்னும் சொல்லாட்சி

சினையாவது கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறு ஆதலின், ‘குறியதன்இறுதிச் சினை’ (குற்றெழுத்தினை அடுத்து நிற்கும் ஆகார ஈற்றுச்சொல்லின் இறுதியில் நிற்கும் ஆகாரம்) என்புழி, எழுத்தினது கூறு ‘சினை’எனப்பட்டது.‘ முதலும் சினையு ம் பொருள்வேறு படாஅ, நுவலுங்காலைச் சொற்குறிப் பினவே ’ (சொல். வேற். மயங். 6) என்றதனான், ஒன்றற்குச் சினையாவதேபிறிதொன்றற்கு முதலாக வருமாத லின், சொற்றொடரின் சினையாக நிற்கும்சொல்தான் முதலாயவழி, அதற்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து அச்சொற்குச்சினையாம்.‘ யாவென் சினைமிசை உரையசைக்கிளவிக்கு ’ (மொழிமரபு) என்புழி, மியா என்னும் சொற்கு உறுப்பாய் நிற்கும்‘யா’ என்னும் உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது.‘ சுட்டுச்சினை நீடிய ஐஎன்இறுதி ’ (தொகைமரபு 17), ‘சுட்டுச் சினை நீடிய மென்தொடர்மொழியும் ’ (குற்றிய. 22) என்புழி, சுட் டெழுத்தின் மாத்திரையளவு சினைஎனப்பட்டது.‘ நூறென் கிளவி ஒன்றுமுதல்ஒன்பா ற்கு, ஈறுசினை ஒழியா இனஒற்றுமிகுமே ’ (குற்றிய. 67) என்புழி, றகரமெய்யினை ஊர்ந்து நின்ற குற்றுகரம்சினை எனப்பட்டது.இவ்வாறே மொழியிடையிறுதிகளில் ஐகார எழுத்தின் மாற் றெழுத்துக்களாகவரும் அய் என்பதும் மொழியின் உறுப்பாக வருதலின், ‘ஐயென் நெடுஞ்சினை’எனப்பட்டது. (தொ. எ.234 ச.பால.)

சினை எழுத்து

ஒரு சொல்லுக்கு இடைகடைகளில் உறுப்பாய் வரும் எழுத்துக்கள்சினையெழுத்துக்களாம். (சொல்லின் முதற்கண் வரும் எழுத்துச் சினைஎனப்படாது. அதனை ‘முதல்’ என்றலே மரபு).எ-டு : ‘யாஎன் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ (தொ.எ. 34)‘ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ (எ. 56)குறில் நீண்டவிடத்துச் ‘சினை நீடல்’ எனவும், நெடில் குறுகியவிடத்துச் ‘சினை கெடல்’ எனவும் கூறும் மரபுண்டு.எ-டு : ‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ (159 நச்.)‘சுட்டுச்சினை நீடிய மென்தொடர் மொழி’ (427 நச்.)‘குறியதன் இறுதிச் சினைகெட’ (234 நச்.)

சினை நீடல்

நெட்டெழுத்துக் குற்றெழுத்தாதலைச் ‘சினை கெடல்’ என்றாற் போலக்குற்றெழுத்து நெட்டெழுத்தாதலைச் ‘சினை நீடல்’ என்ப.‘ சுட்டுச்சினை நீடிய இறுதி’ (தொ. எ. 159 நச்.) ஆண்டை, ஈண்டை, ஊண்டை – என்பன. இவற்றுள்முதலெழுத்து அ இ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள்ஆகும்.‘ சுட்டு ச்சினை நீடிய மென்தொடர்மொழி ’ (427 நச்.) ஆங்கு, ஈங்கு, ஊங்கு என்பன. இவற்றுள் முதலெழுத்து அஇ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள் ஆகும்.சொல்லில் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக் களைச் ‘சினை’ என்றல்‘ஐ என் நெடுஞ்சினை’, ‘ஈறுசினை ஒழியா’ (56, 472 நச்.) முதலியஇடங்களிலும் காணலாம்.

சினைப்பெயர்ப் பகுபதம்

தாளான், தாளாள், தாளார், தாளது, தாளன, தாளேன், தாளேம், தாளாய்,தாளீர் என இவ்வாறு வருவன ‘இவ் வுறுப்பினை யுடையார்’ என்னும்பொருண்மைச் சினைப் பெயர்ப் பகுபதம். (தாள் என்னும் சினைப்பெயர் அடியாகஇப்பெயர்ப்பகுபதங்கள் தோன்றின). (நன். 133 மயிலை.)

சின்: புணருமாறு

சின் என்ற இடைச்சொல் முன்னிலைக்கே சிறப்பாயினும் ஏனையிடத்தும்ஒரோவழி வரும் அசைச்சொல்லாம். (தொ. சொ. 276, 277 நச்.)அது வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி வேற்றுமைப் பொருட் புணர்ச்சிபோல னகரஒற்று றகரஒற்றாய்த் திரிந்து புணரும்.‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகநா. 7 )என வரும். (தொ. எ. 333 நச். உரை)

சின்னப்பூ

அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலால் சின்னப்பூ ஆயிற்று.தகுதி பெற்ற தசாங்கத்தினை (மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு,தார், பெயர், கொடி என்னும் இவற்றை)ச் சிறந்த நேரிசை வெண்பாவினால்நூறு, தொண் ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் எண்படப் பாடின் அதுசின்னப்பூவாம். (இ. வி. பாட். 86)வண்ணக ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைகட்கும் சுரிதகத்திற் கும் இடையேவரும் உறுப்பு ‘எண்’ எனப்படும். ஈரடி இரண்டான் வரும் எண். பேரெண்;ஓரடி நான்கான் வருவது சிற்றெண்; இருசீர் எட்டான் வருவது இடையெண்;ஒருசீர் பதினாறான் வருவது அளவெண் எனப்பட்டன. ஆகவே, ஒரு சீராகியமுடிவிற்கு எல்லையாக நிற்கும் அளவெண் ‘சின்னம்’ எனப் பெயர் பெறும்.(தொ. செய். 145 நச்.)

சின்னூல்

1. சிறுநூல்; ‘சின்மையைச் சின்னூல் என்றது போல ஈண்டுச் சிறுமையாகக்கொள்க’ (பதிற். 76 உரை)2. நேமிநாதம்; “சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்”(தொண்டை. சத. 32) (L)

சிரக்விணீ விருத்தம்

வடமொழி விருத்த விசேடம்; அடிக்கு 12 எழுத்துக்களை யுடையது; இடையில்இலகு பெறும் கணங்கள் 4 வருவது; அவற்றை மாத்திரைஅளவுகொண்டுகணக்கிட்டால், அடிக்கு 20 மாத்திரை என ஆம். முதலாவது எடுத்துக்காட்டில் எழுத்தளவிலும் மாத்திரை அளவிலும் வடமொழி விருத்தத்தின் இலக்கணம்முற்றும் அமைந்துள்ளது. இரண் டாவதன்கண் எழுத்தளவு மாறுபடினும்மாத்திரையளவு பொருந்தும். ஒருபுடை ஒப்புமையான் அதுவும் இவ்வகைவிருத்தமே என்ப.எ-டு :அ) கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறைதேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே’. (தே. III 35-7)இஃது ஐந்து மாத்திரைக் கூவிளச்சீரினால் அமையும் நாற்சீரடிநான்கினையுடையது.ஆ) ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்எண்ணுளார் இயலுளார் இசையுளார் திசையுளார்கண்ணுளார் ஆயினார் பகையுளார் கழிநெடும்புண்ணுளார் ஆருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)இஃது ஐந்து மாத்திரைக் கூவிளத்திற்குரிய இடத்தே சில விடத்துக்கருவிளம் அமையும் நாற்சீரடி நான்குடையது. (வி. பா. ஏழாம்பட லம்.23)

சிறப்பில்லா எழுத்துக்கள்

அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்துக்களாம்.அளபெடை தனக்கென வரிவடிவின்றி நெட்டெழுத்தின் பின்னர் ஓசை நிறைக்கவரும் இனக்குற் றெழுத்தே யாதலின் சிறப்பின்று. உயிர்மெய்புணர்ச்சிக்கண் மொழிமுதலில் மெய்யாகவும், இடையிலும் ஈற்றிலும்உயிராகவும் கொள்ளப்படுதலின், தனக்கெனத் தனிப்பட்ட முறையில் புணர்ச்சிவேறுபாடு இன்மையின், சிறப்புடைத் தன்று. வரிவடிவம் ஒலிவடிவைக்காட்டும் அறிகுறி மாத்திரை யாய், ‘எழுத்து ஓரன்ன பொருள்தெரிபுணர்ச்சி’க்கண் பொருளை அறிவுறுத்தும் ஆற்றலின்றிக் காலம்தோறும் மாறிவருதலின் சிறப்பிற்றன்று. (தொ. எ. 1. இள. உரை)

சிறப்பில்லாத ஓரெழுத்தொரு மொழிகள்

‘ஓரெழுத்தொருமொழி’ காண்க.

சிறப்புக் கருவி

தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் நான்காம் இயலாகிய புணரியலில்கூறப்படுவன செய்கை ஒன்றற்கே உரியவாகலின், அடுத்த ஐந்து இயல்களிலும்கூறப்படும் செய்கையை நோக்க, இப்புணரியலில் கூறப்படுவன யாவும்சிறப்புக்கருவிகளாம். (சூ. வி. பக். 17).

சிறப்புடைப் பொருளைத் தானெடுத்துமொழிதல்

ஒலியெழுத்துச் சிறப்புடைமையின் எடுத்தோதினார்; என்னை? ‘சிறப்புடைப்பொருளைத் தானெடுத்து மொழிதல்’ என்பது தந்திரவுத்தி ஆகலான். ஒரு சாரார்வேண்டும் உணர்வெழுத்து முதலான விகற்பம் எல்லாம் இவ்வதிகாரப்புறநடையுள் (சூ. 256) காண்க. (நன். 57 மயிலை.)

சிறப்புடைய மடக்கு

அடி முழுதும் மடக்கி வருதலே மடக்குக்களுள் சிறப்புடைய மடக்காம்.அடி முழுதும் எனவே, இரண்டடி மடக்கி வருவதும், மூன்றடி மடக்கிவருவதும், நான்கடி மடக்குவதும் என்ற மூவகையும் கொள்ளப்படும். (தண்டி.96)

சிறு நூல்

சூத்திரம் என்னும் ஓர் உறுப்பினையே அடக்கி, ஓத்து படலம் முதலியனஇன்றி வரும் இலக்கண நூல்.எ-டு : இறையனார்களவியல் (பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகைமுதலியனவும் கொள்க.)(சிவஞா. பா.வி.பக். 9)

சிறுகாக்கைபாடினியம்

இவ்யாப்புநூலினின்று 34 சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியுரைமுதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட் டப்பட்டுள்ளன. சில தொடைவகைகள், சில பாவகைகள், சில இன வகைகள் நீங்கலாக எஞ்சிய செய்திகள்பலவும் இம்முப்பத்து நான்கு நூற்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.இந்நூலாசிரியர் சிறுகாக்கைபாடினியார் பெருங்காக்கைபா டினியார்க்குப்பிற்பட்ட யாப்பு நூலாசிரியர். இவர் காலத்தே தெலுங்குநாடு தமிழகத்தின்வடஎல்லையாயிற்று.

சிறுகாக்கைபாடினியார்

‘சிறுகாக்கைபாடினியம்’ காண்க.

சிறுதேர்ப் பருவம்

ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் இறுதிப்பருவம், பாட்டுடைத்தலைவனாம் பாலன் சிறியதேரை உருட்டி விளையாடும் நிகழ்ச்சியைச்சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தினால் ‘சிறுதேர்உருட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு 10 பாடல்கள்பாடப்படும்.

சிறுபறைப் பருவம்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் ஒன்று. (-எட்டாவது).பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும்நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தால்‘சிறுபறை கொட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு பத்துப்பாடல்கள் பாடப்பெறும்.

சிற்றிற்பருவம்

ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் பருவம். சிறுமியர் இழைத்தமணற்சிற்றிலைப் பாட்டுடைத் தலைவனாகிய பாலன் சிதைக்க வருவது கண்டுஅச்சிறுமியர் ‘சிறியேம் சிற்றில் சிதையேலே!’ என்று வேண்டுவதாகப்பத்துச் சந்த விருத்தங்களாற் பாடுவது.

சிற்றெட்டகம்

அகப்பொருள் பற்றிய ஓர் இலக்கியம். இதன் செய்யுள்கள் ஆசிரியப்பாவான்இயன்றன. பண்டையுரையாசிரியர்களால் மேற்கோளாக இதன் பாடல்கள்காட்டப்பட்டுள்ளன.

சில என்ற பெயர் ஏனைய பெயர்களொடுபுணருமாறு

சில என்பது ஏனைய பெயர்களொடு புணரும்வழி ஈற்று அகரம் கெட்டும்புணரும்; வருமொழி உயிர் வரின் லகரஒற்று இரட்டும். (மென்கணம் வருவழிலகரம் னகரம் ஆகும்.)எ-டு : சில்காடு, சேனை, தானை, பறை; யானை, வேள்வி; சில்லணி,சில்லிலை.ஈற்று அகரம் கெடாமல் சில காடு – சில சேனை – என்றாற் போல இயல்பாகப்புணர்தலுமுண்டு. (தொ. எ. 214 நச்.)சில + மணி > சில் + மணி = சின்மணி என மென்கணத்தொடு புணருமாறு காண்க. (369நச்.)

சிலப்பதிகார யாப்பு

சங்க காலத்தனவாகிய பத்துப்பாட்டு எட்டுத் தொகைபோல ஆசிரியம் வெண்பாகலி வஞ்சி பரிபாடல் என்ற யாப்போடு அமையாமல் சிலப்பதிகாரமானதுஉரைபெறுகட்டுரை, உரைப்பாட்டு, கருப்பம், கலி ஆசிரிய இணைப்புப்பா,ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை,கலித்தாழிசை என்ற பாவினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.ஆசிரிய விருத்தம் – கானல்வரி, ஆற்றுவரி முதலியன.கலி விருத்தம் – முரிவரி முதலியன.ஆசிரியத்துறை – கானல்வரியுள் முகமில்வரி, கானல்வரி முதலியன.ஆசிரியத் தாழிசை – ஆய்ச்சியர் குரவையுள் ‘கன்றுகுணிலா’ முதலியமூன்றும்.தரவு கொச்சகம் – ஆய்ச்சியர் குரவையுள் முன்னிலைப் பரவல்,படர்க்கைப்பரவல் முதலியன.கலித்தாழிசை – குன்றக் குரவையுள், சிறைப்புறம் முதலியன.உரைநடை போன்ற சீர்வரையறையின்றிப் பொருள் பொதிந்த சொற்களால் இனியதீவிய நடையில் அமைவது.எ-டு : ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்தவெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்நீங்கியது’.உரைநடை போன்று அடிசீர் என்ற வரையறையின்றி வரும் பாடல்களைப்பொருத்தி யமைப்பது.எ-டு :‘குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச்சென்றுவைகிஅருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்மலைவேங்கை நறுநிழலில் வள்ளிபோல்வீர் மனநடுங்கமுலையிழந்து வந்துநின்றீர் யாவிரோ என முனியாதே’ (சிலப். 24 :1-24)பின் நிகழ்ச்சிக்குரிய செய்தியைத் தாங்கிவரும் பகுதி இது.கலியடியும் ஆசிரிய அடியும் கொள்ளும் சீர்கள் விரவி உரை போல அடிவரையறைசெய்ய இயலாது அமைவதும் உண்டு.எ-டு :‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின்மடக்கண்ணீர் சோருதலும் உறியில் வெண்ணெயுருகாமையும்மறிநுடங்கி யாடாமையு மான்மணிநிலத் தற்றுவீழ்தலும்வருவதோர் துன்பமுண்டென மகளைநோக்கி மனமயங்காதேமண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியும் தான்காணஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் தம்முனாடியவாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கண்பிஞ்ஞையோடாடியகுரவை ஆடுதும் யாமென்றாள் கறவைகன்று துயர்நீங்குக என்னவே.’(சிலப். 17-5)எ-டு :‘என்றுதன் மகளைநோக்கி தொன்றுபடு முறையானிறுத்திஇடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள்குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்கைக்கிளை யுழையிளி விளரி தாரமென,விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். 17-13)இதன்கண் முதலீடியும் கலியடி; ஏனைய ஆசிரியஅடி.

சிலேடை இணை மடக்குகளில்எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னும் ஓசைவேறுபட உச்சரித்துப்பொருள் வேறுபடுத்தல்

செய்யுளடியில் வெவ்வேறு பொருள் தந்து முதற்சீரும் இரண் டாம் சீரும்மடக்குதல் இணைமடக்காம். அடி அளவடியாகக் கொள்ளப்படும். அம்மடக்குக்கள்சிலேடைப் பொருளொடு வரும்போது வரிவடிவம் ஒன்றாயிருத்தலின். பொருள் வேறுபாட்டிற்கு ஏற்ப ஒலிவடிவத்தை உச்சரிக் கின்ற இடத்தே, பொருள் சிறந்தபகுதியை எடுத்தும், சிறவாப் பகுதியைப் படுத்தும், ஏனைய பகுதியை இடைநிகர்த்ததாயும், வடசொற் களை உரிய ஒலியோடும் உச்சரிக்க வேண்டும்.எ-டு :‘திரிநாட் டிரிநாட் டினவுயி ருய்க்கொண்டஅரிநாட் டரிநாட் டகம்.’இவை இணைஎதுகை.“(ஊழி) திரிநாள் த்ரி நாட்டின் உயிர் உய்யக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டு அகம்’ – ஊழி இறுதியில் உகங்கள் மீளவரும் நாளில் மூன்றுலகிலும்உள்ள உயிர்க்கணங்களை வயிற்றில் வைத்துக் காத்த பாற்கடல் என்னும்இடத்தை யுடைய திருமால் நாட்டிய பதி நிலைபெறச் செய்த அரங்கம்ஆகும்.இதன்கண், ‘திரிநாள் த்ரிநாடு அரிநாட்டு ஹரிநாட்டு’ என ஒலியைப்பொருளுக்கேற்ப மாற்றி ஒலித்தால் எளிதில் பொருள் புலப்படும். (மா. அ.பாடல் 758)

சிலேடை வெண்பா

முன் இரண்டடிகளும் சிலேடையான் அமைய, பின் இரண் டடிகளிலும் மடக்குப்பயிலப் பாடப்படுவதொரு நேரிசை வெண்பா. பெரும்பான்மையும் இறைவனதுதிருத்தலம் ஒன்றுபற்றி இப்பாடல் வருணனையாக அமையும். பின் னிரண்டடியும்இறைவனது சிறப்பினைப் பாடி அவனது திருத்தலமாவது இஃது என்னும் பொருள்படஅமைய, முன்னிரண்டடியும் அத்திருத்தலத்தின் பெயரைச் சுட்டும். இத்தகுவெண்பாக்கள் 40 முதலாக 100 வரை அமையப் பாடும் பிரபந்தமும்அத்திருத்தலப் பெயருடன் புணர்த்து கலசைச் சிலேடை வெண்பா. திருவரங்கச்சிலேடை வெண்பா முதலாகப் பெயர் பெறும்.எ-டு :‘ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்காவலரைச் சூழும் கலைசையே – மேவும்அரிவையம் பாகத்தான் அரண்ஒருமூன் றெய்தோன்அரிவையம் பாகத்தான் அகம்.’அரிவை அம் பாகத்தான் அரி வை அம்பு ஆகத் தான் அரண் ஒருமூன்றுஎய்தோன் அகம் கலைசையே; ஆவலுடன் பாவலர் காவலரைச் சூழ்வதும், ஆறுகால்வண்டினம் கா அலரைச் சூழ்வதும் ஆகிய தலம் கலைசையே.உமாதேவியை தன் அழகிய வாமபாகமாகக் கொண்டவனும், திருமாலைக் கூரியஅம்பாகக் கொண்டு திரிபுரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிவபெருமானதுதலம் கலைசையே. விருப்பத்தொடு கவிஞர்கள் (பரிசில் பெற வேண்டி) அரசரைவந்து சூழ்வதும் (சூழ்தல் – ஆய்ந்து பாடுதல்), அறு கால்களை யுடையவண்டுகள் சோலைப்பூக்களை(மது அருந்த) வந்து மொய்ப்பதும் ஆகிய தலம்கலைசையே.இப்பாடற்கண் பின்னிரண்டடிகளும் மடக்கணி. இரண்டா மடிக்கண் ‘காவலரைச்சூழும்’ என்பது பிரிமொழிச் சிலேடை.

சிவஞான முனிவர்

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெரும்புலவர் வடமொழி தென்மொழிஇரண்டிலும் மிக்க புலமை சான்றவர். இருமொழியிலும் இலக்கிய இலக்கணங்களைநுணுகிப் பயின்றவர். சைவ சித்தாந்தச் சாத்திரப் பயிற்சியிலும்வல்லுநர். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தே சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என் பார்க்கு மயிலம்மையாரிடத்துத்தோன்றிய இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் என்பது. திருவாவடுதுறையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகராம்ஞானசிரியர்பால் சிவதீட்சையும் சைவத் துறவும் சிவஞானயோகி என்னும்தீட்சா நாமமும் பெற்று, சைவ ஆகம நூல்களைக் கற்றுத் தெளிந்து, மெய்கண்டசாத்திரங் களையும் பண்டாரச் சாத்திரங்களையும் அவர்பால் ஐயம் திரிபறக்கற்றார்; வடமொழி தென்மொழி யிரண்டிலும் பெரும்புலமை பெற்றுச்சைவசித்தாந்த வாழ்வே தமது உயிராகக் கொண்டு வாழ்ந்தார்.இலக்கியம் இலக்கணம் தருக்கம் சித்தாந்த சாத்திரம் முதலியன இவர்பால்பாடம்கேட்ட மாணாக்கர் பலராவர். குறிப்பாக அவர்களுள் கச்சியப்பமுனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் முதலாகப் பன்னிருவர் புகழ் மிக்கவர் என்பர்.இப்பெருமானார் இயற்றிய நூல்களும் பண்டை நூல்கள் ஆகியவற்றின்உரைகளும் குறிக்கத்தக்கன: காஞ்சிப் புராணம் முதற்காண்டம். சோமேசர்முதுமொழி வெண்பா, குளத் தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப்பதிற்றுப்பத்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைபிள்ளைத்தமிழ், செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசு வரி பதிகம்,திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, திருத்தொண்டர்திருநாமக் கோவை, பஞ்சாக்கர தேசிகர்மாலை, கம்பராமாயண முதற்செய்யுள்சங்கோத் தரவிருத்தி என்பன இலக்கியங்கள்;தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல்விருத்தியுரைத் திருத்தமாகிய புத்தம் புத்துரை என்பன இலக்கண நூல்உரைகள்:தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும், திராவிட மாபாடியம்எனப்படும் சிவஞானபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்திப்பொழிப்புரை – சுபக்கம், சித்தாந்தப் பிரகாசிகை, அரதத்தாசாரியார் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம்,‘என்னை இப்பருவத்தில்’ என்னும் செய்யுட் சிவசமவாத உரைமறுப்பு,‘எழுத்து’ எனும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம் என்பன. சைவமதச்சார்புடைய, இவரால் இயற்றப்பட்ட பிற நூல்கள். (தமிழ் பக். 169 -172)

சீட்டுக்கவி

புலவன் ஒருவன் தன்னைப் பலவாறு புகழ்ந்து கூறி வள்ளலை யும்புகழ்ந்து கூறி இறுதியில் தான் வேண்டும் பரிசிலைக் குறிப்பாகவோவெளிப்படையாகவோ சுட்டி எழுதிவிடுக்கும் ஓலைப் பாசுரம். ‘ஓலைத் தூக்கு’என்பதும் அது.எ-டு :‘ஏடாயி ரங்கோடி எழுதாமல் தன்மனத்தெழுதிப் படித்தவிரகன்இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிவீரஇராகவன் விடுக்குமோலைசேடாதி பன்சிரம சைத்திடும் புகழ்பெற்றதிரிபதகைக் குலசேகரன்தென்பாலை சேலம்பு ரந்துதா கந்தீர்த்தசெழிய னெதிர் கொண்டுகாண்க;பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,பற்றிக்கோ லாத கோணம்,பறவாத கொக்கு,அனல் பண்ணாத கோடை, வெம்படையில்தொ டாதகுந்தம்,சூடாத பாடலம், பூவாத மாவொடு,தொடுத்துமுடி யாத சடிலம்,சொன்ன சொற் சொல்லாத கிள்ளையொன் றெங்கும்துதிக்கவர விடல் வேண்டுமே!’அந்தகக் கவி வீரராகவ முதலியார் விடுத்த சீட்டுக் கவி இது. 12சீர்ச் சந்த விருத்தம். இதன்கண், முதலடியில் தம்மைப் புகழ்ந்துகொண்டார்; இரண்டாம் அடியில் வள்ளலைப் புகழ்ந்தார்; ஈற்றடிகளில் தாம்விழைந்த பரிசிலைக் கல்வியறி வுடைய வள்ளற்குப் புலப்படுமாறு குறிப்பாற்பாடினர். வெளிப்படை என்னும் இலக்கணத்தால், வினை யெதிர் மறுத்துப்பொருள் புலப்படுத்தும் ‘விபாவனை’ அணிநயம் தோன்றக் கவி அமைந் துள்ளது.குதிரையின் பரியாயப் பெயர்கள் வந்துள்ளமை மற்றோர் அணிநயம். புலவர்விழையும் பரிசில் குதிரை என்பது.

சீர் ஓத்து

யாப்பருங்கலத்துள் சீரினைப் பற்றி விளக்கும் பகுதி. முதலாவதாகியஉறுப்பியலுள் மூன்றாவது. இதன்கண் மூவகைச் சீர்கள், இயற்சீரின் திறம்,தொகை, உரிச்சீரின் திறம், வகை, பொதுச்சீராவன, ஓரசைச்சீர், நால்வகைச்சீரும் செய்யுளுள் நிற்கும் முறை, கலியினும் ஆசிரியத்தினும் வரும்தனிச்சீர்கள் என்னும் செய்திகள் இடம் பெறுவன. இவ் வோத்தின்கண் ஏழுநூற்பாக்கள் உள்ளன.

சீர்மடக்கு

இஃது அடிதோறும் நிகழ்தல் ஆம்; அன்றி, முதல் இடை கடையில் நிகழ்தலும்ஆம். ‘முதல் இடைகடை மடக்கு வகைகள்’. நோக்குக. (தண்டி. 95)

சீவகசிந்தாமணி யாப்பு

‘சிந்தாமணி யாப்பு’க் காண்க.

சுக்குக் கொடு : குற்றியலுகர ஓசைஅளவு

சுக்கு + கொடு = சுக்குக் கொடு. நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரஈற்றது; வருமொழி ககர வல்லெழுத்து முதலது. இந்நிலையில்நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் தன் மாத்திரையின் குறுகுகிறது என்பதுஎல்லா ஆசிரியர்க்கும் உடன்பாடு. இக்குற்றியலுகரம் ககர ஈற்றுக்குற்றியலுகர மாகவே எல்லா ஆசிரியராலும் கொள்ளப்பட்டுள்ளது.நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரம், அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண்வருமொழியொடு புணருமிடத்து, முற்றிய லுகரமாகவே நீண்டொலிக்கிறது என்பர்ஒரு சாரார். அங்ஙனம் ஏனைய குற்றியலுகரங்கள் முற்றியலுகரங்களாகஒருமாத்திரையளவு நீண்டு ஒலிக்கும்போது, சுக்குக் கொடு என்றாற் போன்றககர வல்லொற்றுத்தொடர்க் குற்றிய லுகரங்கள் வருமொழியில் அதே ககரவல்லொற்று வரு மிடத்துக் முற்றியலுகரமாக நீண்டொலியாது பண்டைக்குற்றியலுகரமாகவே அரைமாத்திரையளவு ஒலிக்கும் என்பது ஒருசாரார்கருத்து. (தொ. எ. 409, 410 இள. உரை)மற்றொரு சாரார், அல்வழி வேற்றுமைப் புணர்ச்சியில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம் வருமொழி முதலெழுத்தொடு புணருமிடத்தும் தன்அரைமாத்திரையில் நிலைபெற் றிருக்கும்; ஆனால் வன்தொடர்மொழி ஈற்றுக்குற்றியலுகரம் வருமொழி முதற்கண் அதே வல்லெழுத்து வரின், தன்அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை அளவிற்றாகும் என்பர். (408,409 நச். உரை)நச்சினார்க்கினியரைப் பின்பற்றி இலக்கணக்கொத்து ஆசிரியர், இலக்கணவிளக்க ஆசிரியர் (எழுத். 16), சிவஞான முனிவர் (சூ.வி. பக். 30, 31)முதலாயினாரும் கால்மாத்திரை அளவைக் குறிப்பர்.ஆயின் இளம்பூரணர் கூறுவதே தொல். கருத்தாகும் என்பதே இக்காலஆய்வாளர் துணிவு. நன்னூலார் முதலாயினார் இச்செய்தியைக்குறிக்கவில்லை.

சுட்டின்முன் ஆய்தம்

அ இ உ என்னும் சுட்டின்முன் வரும் ஆய்தச் சொற்களாகிய அஃது இஃதுஉஃது என்பனவற்றின் ஆய்தம், அச்சுட்டுப் பெயர்கள் உருபொடு புணரும்வழிஅன்சாரியை இடையே வரின், கெடவே, அச்சுட்டுப் பெயர்கள் அது இது உதுஎனநின்று புணரும்.வருமாறு : அஃது + ஐ > அஃது + அன் + ஐ > அது + அன் + ஐ = அதனை.இதனை, உதனை என்பனவும் இவ்வாறே கொள்க. (நன். 251)

சுட்டு

அ இ உ என்பன மூன்றும் சுட்டுப்பொருளனவாகச் சொல்லின் பகுதியாகஇணைந்தோ, சொல்லின் புறத்தே இணைந்தோ வருமாயின், முறையே அகச்சுட்டுஎனவும் புறச்சுட்டு எனவும் பெயர் பெறும்.எ-டு : அவன், இவன், உவன் – அகச்சுட்டு.அக்கொற்றன், இக்கொற்றன், புறச்சுட்டு உக்கொற்றன் } (நன். 66)

சுட்டு முதல் உகர இறுதிச் சொல்புணருமாறு

சுட்டிடைச் சொல்லை முதலாக உடைய உகர ஈற்றுச் சொற்கள் அது இது உதுஎன்பன. அவை உருபொடு புணரு மிடத்து ஈற்று முற்றியலுகரம் கெட, அன்சாரியைபெற்று அதனை இதனை உதனை என்றாற் போலப் புணரும். (தொ. எ. 176 நச்.)அவை அல்வழிக்கண் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.வருமாறு : அது குறிது, சிறிது, தீது, பெரிது; இது குறிது,சிறிது, தீது, பெரிது; உது குறிது, சிறிது, தீது, பெரிது. (257நச்.)அது என்னும் சுட்டுப்பெயர் நிலைமொழியாக, வருமொழி ‘அன்று’ என்ற சொல்வரின் இயல்பாகப் புணர்தலேயன்றி, ஈற்று உகரம் ஆகாரமாகத் திரிந்துபுணர்தலுமுண்டு.வருமாறு : அது + அன்று = அதுவன்று (வகரம் உடம்படு மெய்);அதாஅன்று (258 நச்.)‘அது’ நிலைமொழியாக ஐ என்ற இடைச்சொல்லொடு புணரும்வழி, உகரம் கெட,அதைமற்றம்ம எனப் புணர்ந்து வரும். (258 நச். உரை)வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் அது முதலியன முற்றியலுகரம் கெட்டுஅன்சாரியை பெற்று வருமொழி யொடு புணரும்.எ-டு : அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; அதன் ஞாண், இதன்ஞாண்,உதன்ஞாண்; அதன்வட்டு, இதன்வட்டு, உதன்வட்டு; அதனினிமை, இதனி னிமை,உதனினிமை (263 நச்.)

சுட்டு யகரம் பெறும் இடம்

‘சுட்டு நீளின்’ எனவே நீளுதல் உடன்பாடு என்பதும், அது நிச்சய மன்றுஎன்பதும், ‘யகரம் தோன்றும்’ எனவே, இந்த நீட்சி அடி தொடை முதலிய நோக்கி‘நீட்டுவழி நீட்டல்’ விகாரம் அன்று என்பதும், ‘யகரமும்’ என்ற இழிவுசிறப் பும்மையால் யகரம் உயிர் வரும்வழியன்றிப் பிறவழித் தோன் றாதுஎன்பதும், வன்கணம் வரின் சுட்டு நீளாது என்பதும் பெறப்பட்டன.(அ+இடை=ஆயிடை) (நன். 163 இராமா.)

சுட்டு வினா கிளை முறைப் பெயர்கள்பகாப்பதம் ஆகாமை

அவன் இவன் உவன் என்னும் சுட்டுப்பெயரும், எவன் யாவன் என்னும்வினாப்பெயரும், தமர் நமர் நுமர் என்னும் கிளைப் பெயரும், தந்தை எந்தைநுந்தை என்னும் முறைப்பெயரும், இவை போல்வன பிறவும் சுட்டுப்பொருளும்வினாப்பொரு ளும் கிளைப்பொருளும் முறைப்பொருளும் (பிறபொருளும்)காரணமாகப் பிறபொருட்கு வரும் பெயராய், பகுதி விகுதி முதலிய உறுப்பும்உறுப்பின் பொருளும் தந்து வெள்ளிடைக் கிடக்கும் பகுபதமாய்ப்பகுக்கப்படுதலால், இவற்றைப் பகாப்பதம் எனக் கூறின் அது பொருந்தாது.(நன். 132 சங்கர.)

சுட்டு வேறு பெயர்கள்

காட்டல் எனினும், குறித்தல் எனினும் சுட்டு என்னும் ஒருபொருட்கிளவி. (மு. வீ. எழுத். 29)

சுட்டு, வினா

சுட்டு, வினா என்ற பொருளைத் தருவதால் அ இ உ, ஆ ஏ ஓ இவற்றைஇடைச்சொற்கள் என்று கூறுதலே ஏற்றது; எழுத்து என்று கூறுதல் கூடாது. அஇ உ, ஆ ஏ ஓ என்பன எழுத்தாம் தன்மையன்றி மொழி நிலைமைப்பட்டு வேறொருகுறிபெற்று நிற்றலின், இவற்றை நூல்மரபின் இறுதிக்கண் மொழி மரபினைச்சாரவைத்தார் என்றார் நச். இவை சொல் நிலைமை யில் பெறும் குறியாதலின்,குறில்நெடில்களைச் சார ஆண்டு வையாது மொழிமரபினைச் சார வைத்தார்என்றார் இளம் பூரணர். இவ்விருவர்க்கும் இவை இடைச்சொற்களே என்பதுகருத்தாகும். இவற்றைக் குற்றெழுத்து நெட்டெழுத்து என்றாற்போலச்சுட்டெழுத்து வினாவெழுத்து என்று தொல். குறிப்பிடாமல், சுட்டு வினாஎன்றே குறிப்பிட்டார். நன்னூல் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர்முதலில் ‘சுட்டெழுத் தாம்’ என்று எழுத்தியலில் (11) கூறினும், ஏனைஈரிடங்களாகிய உயிரீற்றுப்புணரியல் (13) பெயரியல் (19) என்ற இவற்றில்சுட்டிடைச்சொல் என்றே குறிப்பிட்டுள்ளார். தொல். இவற்றை நிறுத்தசொல்லாக வைத்துப் புணர்ச்சிவிதி கூறியதனானும் (எ. 334) இவை சொல்லாதல்பெற்றாம். நன்னூலாரும் 66, 67, 163, 179, 235, 250, 251, 276, 279,280, 314, 422, 423 ஆம் எண்ணுடைய நூற்பாக்களில் சுட்டு வினா என்றுகுறிப்பிட்டாரேயன்றிச் சுட்டெழுத்து வினாவெழுத்து என்று யாண்டும்குறிப்பிடவில்லை.கன்னடம் தெலுங்கு மலையாள மொழிகளில் ஆ ஈ என்ற சுட்டுக்களை ஸர்வநாமம்என்று வழங்குதலும் அறியற்பாலது. ஆதியில் ஆ ஈ ஊ என்பனவே சுட்டுக்கள். அஇ உ என்பன அவற்றின் திரிபுகள்.தொல்காப்பியனார் காலத்தில் ஆ ‘தன்தொழில் உரைக்கும் வினா’ ஆகும் (எ.224 நச்). ஏ ஓ இரண்டும் பழங்காலத்தில் முறையே முன்னிலை படர்க்கைவினாக்களாக இருந்திருக் கலாம். பிற்காலத்து அம்முறைநீங்கிவிட்டது.எழுத்தைப் பற்றிய நூல்மரபில் தொல். யா வினாவைக் கூறாமல்,வினாப்பெயராதலின் பெயரியலில் கூறினார். (சொ. 169 நச்.) எகரம் வினாவாகஅன்றி,‘எப்பொரு ளாயினும் அல்லது இல்லெனின்’ (சொ. 35 நச்.)‘எந்நில மருங்கின் பூவும் புள்ளும்’ (பொ. 19 நச்.)என்பனபோலத் தொடர்புடைப் பொருள் குறித்தும் வருதலின், அதுகூறப்படவில்லை. எகரம் யா வினாவின் திரிபு. யாவன் முதலியன எவன்முதலியனவாகத் திரியும். (எ. ஆ. பக். 30 – 32)

சுட்டு, வினா : ஆட்சியும் காரணமும்நோக்கிய குறி

அ இ உ என்ற மூன்றும் சுட்டுப்பொருள் தரும் இடைச் சொல்லாம். ஆ ஏ ஓஎன்ற மூன்றும் வினாப்பொருள் தரும் இடைச்சொல்லாம். இவற்றோடு எகரம்யகரஆகாரம் என்பனவும் பிற்காலத்துக் கொள்ளப்பட்டன.சுட்டுப்பொருள் வினாப்பொருள் என்பனவற்றைத் தெரிவிக் கும் காரணம்பற்றி இவை சுட்டு வினா எனப்பட்டன. மேல் புணர்ச்சி கூறுதற்கண் இவற்றை அஇ உ, ஆ ஏ ஓ – என எழுத்தைக் கூறி விளக்காமல், சுட்டு வினா என்றுகுறிப்பிட்டு விளக்குவது கொண்டு இப்பெயர்களைப் பின்னர் ஆளுவதற்குவாய்ப்பாக முன்னே பெயரிட்டமை ஆட்சி நோக்கிய குறியாம். (தொ. எ. 31, 32நச் உரை).

சுட்டுச்சினை நீளா மென்தொடர் மொழிபுணருமாறு

சுட்டுச்சினை நீளா மென்தொடர் மொழிகள் அங்கு, இங்கு, உங்கு என்பன.அவை(யும்) வன்கணத்தொடு புணரும்வழி வருமொழி வல்லெழுத்து மிக்கேமுடியும்.எ-டு : அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண்டான்.(தொ. எ. 429 நச்.)

சுட்டுமுதல் உகரம்

சுட்டிடைச் சொல்லை முதலாக வுடைய உகர ஈற்றுச் சொற்களாகிய அது இதுஉது என்பன.‘சுட்டுமுதல் உகர இறுதிச் சொல் புணருமாறு’ காண்க. (தொ. எ. 176நச்).

சுண்ணத்தின் அரிசனம், மாலையின் மலர்: உவமை விளக்கம்

அரிசனம் முதலியவற்றால் அமைந்த சுண்ணத்தில் அரிசனம் முதலியனஉருவிழந்து கிடத்தலின் அவற்றைப் பிரித்தல் இயலாது. ஆயின், மலர்களால்சமைத்த மாலையில் மலர்கள் உருவிழவாமல் இருத்தலின், அவற்றைப்பிரித்தெடுத்தல் இயலும். எழுத்தினான் ஆகிய பதத்துள் எழுத்துக்கள் தம்இயல்பு கெடாது நிற்றலின், பதம் சுண்ணம் போல்வதன்று, மாலை போல்வதேயாம்.ஆதலின், ‘எழுத்தே’ என்றார். (நன். 127 சங்கர.)

சுத்த விராட்டுச் சந்த விருத்தம்

அடிக்குப் பத்து எழுத்துக்கொண்ட வடமொழி விருத்தம். இதன் அமைப்பு :(1) முற்றிலும் குருவான கணம், (2) ஈற்றில் குருவரு கணம், (3) இடையில்குருபெற்ற கணம் ஈற்றில் குரு வருதல் – என மூவகைத்து. கீழ்வரும்நேரசையில் தொடங்கும் உதாரணத்துள் இந்த அமைப்பு முற்றிலும் உள்ளது;நிரையசையில் தொடங்குவதில் பொருந்தவில்லை.ஒவ்வோரடியிலும் ஒற்றெழுத்து நீக்கிக் கணக்கிடப்படும்.ஒவ்வோரடியிலும் 4, 5, 7, 9ஆம் எழுத்துக்கள் குறிலாகவும் ஏனையஇடங்களில் நெடிலாகவும் அமைந்த நான்கடி களையுடைய பாடல்.அ) நேரசையில் தொடங்குவது‘சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்சங்கா ரத்தணி தந்த செங்கையாள்உங்கா ரத்தினு ரத்த ஆடையாள்உங்கா ரத்தினு ரப்பு மோதையாள்’ (கந்தபு. IV 8-95)ஆ) நிரையசையில் தொடங்குவது‘கடற்சுற வுயரிய காளை மன்னவன்அடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணிலமடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாம்கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார்’ (சீவக. 1173)‘கா’ என்பது நீங்கலாக ஏனைய ஒத்தவாறு காண்க. (வி. பா. பக். 44)

சுத்தானந்தப் பிரகாசம்

சுத்தானந்தப் பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்ட கூத்து நூல். கூத்துவகைகளைப் பதினொன்று என இந்நூல் கூறு கிறது. பரத சேனாபதியம் 13என்கின்றது. இந்நூலில் முதலி லும் இறுதியிலும் வடமொழிப் பாடல்கள்காணப்படுகின் றன. இதுசெங்காட்டங்குடி எல்லாம் ஆனந்தம் ஆனந்தம்சிறுத்தொண்டர் மாமடமெல்லாம் ஆனந்தம் ஆனந்தம்பண்காட்டி நடந்ததொர் ஆனந்தம் ஆனந்தம்பாணிக்குள் நடந்ததும் ஆனந்தம் ஆனந்தம் – என முடிகின்றது.

சுந்தரர் தேவார யாப்பு

கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியத்துறை, கொச்சகக் கலி என்பன. (இலக்கணத். முன். பக். 85)

சுப்

ஐ ஒடு கு இன் அது கண் முதலிய வேற்றுமையுருபுகளை வடநூலார் சுப்என்ப. (சூ. வி. பக். 55)

சுப்பிரமணிய தீக்கீதர்

பிரயோக விவேகம் என்ற சொல்லிலக்கண நூலை இயற்றி யவர். 17ஆம்நூற்றாண்டினர்.

சுராட்டு

அளவழிச் சந்தங்களுள் சீர்ஒத்து ஓரடியில் ஈர் எழுத்து மிக்குவருவது.எ-டு : ‘கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன்றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்;அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள;மலையென நிவந்துள மதலை மாடமே’.முதன் மூன்றடிகளுள் 12 எழுத்து வர, ஈற்றடி 14 எழுத்து வந்தவாறு.(யா. வி. பக். 515)

சுழிகுளம்

மிறைக்கவிகளுள் ஒன்று. ஒரு செய்யுளை எட்டு எட்டு எழுத்துக்களாகநான்கடியும் நான்கு வரியாக எழுதி, மேல் இருந்து கீழாகவும், கீழிருந்துமேலாகவும் படிக்கும்போது, அவ்வடி நான்குமாகவே அமைந்து அச்செய்யுளேமுற்றுப் பெறுவது.எ-டு :‘க வி மு தி யா ர் பா வேவி லை ய ரு மா ந ற் பாமு ய ல் வ து று ந ர்தி ரு வ ழி ந் து மா யா.’கவிகளில் முதிர்ந்தோரின் பாடலே விலைமதித்தற்குரிய நல்ல பாவாகும்;இடைவிடாது முயன்று பாடுபட்டாரது செல்வம் அழிந்தாலும் அப்பா அழியாதுஎன்பது பொருள்.(தண்டி. 98 – 10)

சுழிகுளம்

கவிமுதி யார் பாவேவிலையரு மா நற்பாமுயல்வ துறு நர்திருவ ழிந்து மாயாஇது, செவ்வே யெழுதிய நாலடி நான்கு வரியுள், முதலடிமுதலெழுத்தினின்றும் சுழி ரேகை வழியே மேனின்று கீழிழிந்தும்,கீழ்நின்று மேலேறியும், புறநின்று வந்துள் முடிய இடஞ்சுற்றிப் படிக்கநாலடியு முடியுமாறு காண்க.

சுவர்க்க கணம்

இந்திர கணம்; நூல் முதற்சீருக்குப் பொருத்தமான தேமாங் காய் என்னும்சீரைக் குறிப்பது. இதற்குரிய நாள் பரணி; பயன் பெருக்கம். இந்திரகணம்என்பதும் யமானகணம் என்பதும் அது. (இ. வி. பாட். 40)

சுவாகதச் சந்த விருத்தம்

இஃது அடிக்குப் பதினோர் எழுத்துக்கள் வரும் வடமொழி விருத்தம். இதன்அமைப்பு 1) இடையில் இலகு வந்த கணம், 2) முற்றும் இலகுவான கணம், 3)முதலிற் குருக்கணம் ஈற்றில் இரு குருக்கள் என வருவது. இவ்வமைப்புஉதாரணத்தில் முற்றும் உள்ளது.அ) குற்றெழுத்தீற்று மாச்சீர் ஒன்று, மூன்று குற்றெழுத்துக்காய்ச்சீர் ஒன்று, கூவிளம் தேமா – என்ற இவை முறையே அமைந்த அடிநான்காகி வருவது. இரண்டாமடியிலும் நான்காமடியிலும் வந்த 2ஆம்சீர்களின் இறுதியில் உள்ள ஒற்றெழுத்துக்களை நீக்கியே அமைப்புக்காண்டல் வேண்டும்.எ-டு : ‘ஊரு லாவுபலி கொண்டுல கேத்தநீரு லாவுநிமிர் புன்சடை அண்ணல்சீரு லாவுமறை யோர்நறை யூரில்சேரும் சித்திசுரம் சென்றடை நெஞ்சே’. (தே. I 29-1) (வி.பா.பக். 47, 48)ஆ) மேற்கண்ட கலிவிருத்தம் இரட்டித்து எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரியவிருத்தமாகவும் அமையும். கீழ்வரும் பாடலில் எட்டு அரையடிகளில் மூன்றுநீங்கலாக ஏனைய வற்றில் இரண்டாம் சீரில் மூன்று குற்றெழுத்துக்கள்இறுதி யில் இணைந்து வந்தவாறு காணப்படும்.எ-டு : ‘வேட்ட நல்வரம ளித்துவி டுக்கும்வீறி லார்கள்பலர் விண்ணவர் மாட்டும்வேட்ட நல்வரம னைத்தும்வ ழங்கல்வேட்ட மாத்திரைவி ளைப்பவர் சில்லோர்வேட்ட நல்வரம ளித்ததன் மேலும்வேறு நல்வரம்வி னாவிய ளிப்பவேட்ட வண்ணங்கரு ணைத்திற நோக்கிவிம்மி தப்புணரி விம்முமு ளத்தான்’(தணிகைப். பிரமன். 97) (வி. பா. பக். 78)

சுவாமிநாத தேசிகர்

18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்துச் சைவத்துறவியார்; வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை மிக்கவர். சைவசித்தாந்தி; இலக்கணக் கொத்து, தசகாரியம் முதலியன இயற்றியவர்.சங்கரநமச்சிவாயர் இவருடைய மாணாக்கருள் ஒருவரே.

சுவாமிநாதம் குறிப்பிடும் சாரியைகள்

பதத்தொடு விகுதி – பதம் – உருபு – என இவை புணருமிடத்துச் சாரியைஒன்றோ பலவோ வருதலும் தவிர்தலும் (இவ்விருநிலையும் ஒருங்கே பெறுதலாகிய)விகற்பமும் நிகழும். அவ்வாறு வரும் சாரியைகள் : அன், ஆன், இச்சு, இன்,அத்து, நம், தன் (தம்), நும், ஐ , கு, ன், அல், இ, ஞ், ட், ய், து,அள், அவ், அண், அ, ஈ, அக்கு, ஓ, ஏல், ஆ, அற்று, ஆல், உ – முதலியன.(‘முப்பத்து நான்கு’ எனத் தொகை கொடுக்கப் பட்டுள்ள சாரியைஅவ்வெண்ணிக்கை நிரம்புமாறு இல்லை.) ‘இச்சினத்து நந்தனுமை’ என்று பாடம்கொள்க. பெயரிடை நிலைகள் சிலவற்றைச் சுவாமிநாத கவிராயர் ஆகிய இந் நூலாசிரியர் சாரியையாகக் கொண்டுள்ளார்; எழுத்துப்பேறும்உடம்படுமெய்யும்கூடச் சாரியையாக எண்ணப்பட்டுள. அவையெல்லாம் பொருந்தாமைவெள்ளிடை. (சுவாமி. எழுத். 26).

சுவாமிநாதம் குறிப்பிடும் புணர்ச்சிமுடிபுகள்

புணர்ச்சிவிதிகளைத் தொகுத்து மூன்று சூத்திரங்களுள் அடக்கிமொழிகிறது சுவாமிநாதம்.1. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் – வேல் + ஒன்று =வேலொன்று,2. தனிக்குறிலை அடுத்து வரும் புள்ளிமுன் உயிர் இரட்டுதல் -பொன் + அணி = பொன்னணி,3. நிலைமொழியீற்றுக் குற்றுகரம் உயிர் வருமிடத்துக் கெட,மெய்மேல் உயிர் ஏறிமுடிதல் – நாடு + அரிது = நாடரிது,4. வன்கணம் வருமிடத்து உயிரீற்று நிலைமொழி வந்த வல்லொற்றுமிகுதல் – வாழை + பழம் = வாழைப்பழம்,5. அன்றி, அவ்வல்லினமெய்க்கு இனமான மெல்லொற்று மிகுதல் – மா +பழம் = மாம்பழம்,6. நிலைமொழியீற்று உயிர் குறுகுதல் – நிலா + கண் > நில + இன் + கண் = நிலவின்கண்,7. மேலை உயிர் குறுகுதலோடு ஓர் உகரம் ஏற்றல் – கனா +இடை > கனவு + இடை = கனவிடை,8. வருமொழி முதலெழுத்துக் கெடுதல் – மக + அத்து > மக + த்து = மகத்து,9. நிலைமொழி முதல் குறுகுதல் – நீ + கை =நின்கை,10. நிலைமொழி முதலெழுத்தன்றிப் பிற எல்லாம் நீங்கல் – ஒன்று +ஒன்று = ஒவ்வொன்று,11. வருமொழி நடுவெழுத்துக் கெடுதல் – இரண்டு + பத்து =இருபது,12. நிலைமொழி நடுவே ஒற்றுமிகுதல் – ஆறு + நீர் =ஆற்றுநீர்,13. நிலைமொழியோ வருமொழியோ இரண்டுமோ கெட்டுப் புத்துருவமாகஇடம்பெறல் – ஒன்பது + பத்து = தொண்ணூறு,14. நிலைமொழியீற்று ஒற்று உகரச்சாரியை பெறுதல் – தெவ்+ கடிது =தெவ்வுக் கடிது,15. ஈற்றில் ஒற்று இரட்டுதல் (நிலைமொழி நடுவே வல்லொற்று மிகுதல்(12) என முன்காட்டியதே கொள்க. டகரமும் றகரமும் இரட்டும் ஒற்றுக்கள்;பிற இரட்டா.)16. நிலைமொழி வருமொழிகளில் பல கெடுதல் – பூதன் + தந்தை > பூதன் + அந்தை > பூத் + அந்தை > பூ + ந்தை = பூந்தை,17. நிலைமொழியீற்று நெட்டுயிர் அளபெடை ஏற்றல் – பலா + கோடு =பலாஅக்கோடு,18. உயிர் வருமிடத்து நிலைமொழி டகரம் ணகரம் ஆதல் – வேட்கை +அவா > வேட் + அவா > வேண் + அவா = வேணவா,19. நிலைமொழியீற்று மகரம் வன்கணம் வருமிடத்து இன ஒற்றாகத்திரிதல் – மரம் + குறிது, சிறிது, தீது, பெரிது = மரங்குறிது,மரஞ்சிறிது, மரந்தீது, மரம்பெரிது, (மகரம் பகரத்திற்கு இனமாதலின்திரிதல் வேண்டா ஆயிற்று)20. நிலைமொழியீறு ஆய்தமாகத் திரிதல் – அல் + திணை =அஃறிணை,21. வகரம் வருமொழியாகப் புணரின் நிலைமொழி முதல் நீண்டு இடையேஒற்று வருதல் – (எடுத்துக்காட்டுப் புலப்பட்டிலது) (நீண்டவழிஒற்றுவாராது: ஆவயின்; நீளாதவழியே ஒற்று வரும் : அவ்வயின்)22. நிலைமொழியீற்று னகர ணகரங்கள் முன்னர்த் தகரம் வருவழி, அதுமுறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் – மான் + தோல் = மான்றோல்; பெண்+ தன்மை = பெண்டன்மை,23. நிலைமொழி அவ்வாறே நிற்ப, நகரம் வருமிடத்து, அது முறையேனகரமாகவும் ணகரமாகவும் திரிதல் – மான் + நன்று = மானன்று, ஆண் +நல்லன் = ஆணல்லன், (நிலைமொழி ஈற்றுமெய் கெடும் என்க.)24. நிலைமொழி யீறாக லகரமும் ளகரமும் நிற்ப, ஞகர மகரங்கள்வருமிடத்து, லகர ளகரங்கள் முறையே னகர ணகரங்களாகத் திரிதல் – அகல் +ஞாலம், மாட்சி = அகன் ஞாலம், அகன் மாட்சி; மக்கள் + ஞானம், மாட்சி =மக்கண்ஞானம், மக்கண்மாட்சி,25. நிலைமொழி அவ்வாறே நிற்ப, ககர சகர பகரங்கள் வருமிடத்து,லகரளகரங்கள் முறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் – கல் + குறுமை,சிறுமை, பெருமை = கற்குறுமை, கற்சிறுமை, கற்பெருமை; முள் + கூர்மை,சிறுமை, பெருமை = முட்கூர்மை, முட்சிறுமை, முட் பெருமை,26. நிலைமொழியீறாக ணகர னகரங்கள் நிற்ப, தகரம் வரு மிடத்து,அம்மெய் முறையே டகரமாகவும் றகரமாகவும் திரிதல் – கண் + தரும் =கண்டரும், பொன் + தரும் = பொன்றரும்,27. நிலைமொழியீறாக லகர ளகரங்கள் நிற்ப, தகரம் வருமிடத்து,அம்மெய்கள் முறையே றகரமாகவும் டகரமாகவும் திரிதல் – கல் + தூண் =கற்றூண்; கள் + தாழி = கட்டாழி. (வருமொழி முதல் தகரமும் முறையேறகரடகரங்களாகக் திரிதலும் கொள்க),28. நிலைமொழி அவ்வாறே நிற்ப, நகரம் வருமிடத்து, நிலைமொழியீறும்வருமொழி முதலும் ஆகிய மெய்கள் முறையே னகரமும் ணகரமுமாகத் திரிதல் -(நிலைமொழி தனிக்குறில் முன் ஒற்றாக நிற்குமிடத்து இவ்விதி கொள்க.) கல்+ நன்று, நன்மை = கன்னன்று, கன்னன்மை; கள் + நன்று, நன்மை = கண்ணன்று,கண்ணன்மை,29. நிலைமொழியீற்று இகரம் வன்கணம் வருமிடத்து உகரமாகத் திரிதல்- (விண்) இன்றி + பொய்ப்பின் = விண்ணின்று பொய்ப்பின்; (நாள்) அன்றி +போகி = நாளன்று போகி,30. நிலைமொழியீற்று இகரம் வன்கணம் வருமிடத்து, இயல்பு ஆதலும்வலி மிகுதலும் ஆகிய உறழ்ச்சி பெறுதல் – கிளி + குறிது = கிளிகுறிது,கிளிக்குறிது,31. நிலைமொழியீற்று ஐகாரம் அகரமாகத் திரிதல் – காவ லோனைக்களிறஞ்சும்மே > காவலோனக் களிறஞ்சும்மே32. நிலைமொழியீற்று ணகரம் ளகரம் ஆதல் – உணவினைக் குறிக்கும்‘எண்’ எள் என வருதல், ‘ஆண்’ ஆள் என வருதல்,33. ஒரு புணர்ச்சி பல விதி பெறுதல் – ஆதன் + தந்தை > ஆதன் + அந்தை > ஆத் + அந்தை > ஆ + ந்தை = ஆந்தை,34. இடைச்சொல் இடையே வந்தியைதல் – வண்டு + கால் > வண்டு + இன் + கால் = வண்டின்கால்; கலன் + தூணி = கலனே தூணி(இன், ஏ : சாரியை இடைச்சொற்கள்).(எழுத். 29 – 31)

சுவாமிநாதம் குறிப்பிடும் வினைவிகுதிகள்

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று,என், ஏன், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும்,றும், ஐ, இ, மின், இர், ஈர், க, ய, ர், ஆல், ஏல் முதலானவைவினைவிகுதிகள். (இவற்றுட் சில பெயர் விகுதிகளாகவும் வரும்.) அன்விகுதிஇரண்டாமுறையாக எண்ணியது தன்மை யொருமை வினைமுற்றுக் கருதி. மற்றுஇகரவிகுதிக்கும் மின்விகுதிக்கும் இடையே ‘அ – யார்’ எனக்குறிக்கப்பட்டுள்ள வற்றின் உண்மையுருவம் புலப்பட்டிலது. பாட பேதம்இருக்க வேண்டும்போலும். ‘ஆய’ பாடபேதம் ஆகலாம். (நன்னூல் சொன்னவையே‘தானெடுத்து மொழி’யப்பட்டுள.) (சுவாமி. எழுத். 25)

சுவைப்புளிப்பெயர் புணருமாறு

புளிச்சுவையை உணர்த்தும் புளி என்ற பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின், மெல்லெழுத்து மிக்குமுடியும்.எ-டு : புளிங்கூழ், புளிஞ்சாறு, புளிந்தயிர்,புளிம்பாளிதம்புளிப்பையுடைய கூழ் என்றாற்போல விரியும். (தொ. எ. 245 நச்.)மரத்தையன்றிச் சுவையைக் குறிக்கும் புளி என்ற சொல்முன் வன்கணம்வருமிடத்து வந்த வல்லெழுத்தும், அதன் இனமாகிய மெல்லெழுத்தும் இடையேமிக்குப் புணரும்.எ-டு : புளி + கறி = புளி க் கறி, புளி ங் கறிபுளிப்பாகிய கறி எனப் பொருள்படின் அல்வழிப் புணர்ச்சி யாம்;புளிப்பையுடைய கறியெனின் வேற்றுமைப் புணர்ச்சி யாம். (நன். 175)

சூடாமணி நிகண்டு

16ஆம் நூற்றாண்டினரான மண்டல புருடர் என்ற சமண ஆசிரியரால் விருத்தச்செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. இதன்கண் சிறப்புப் பாயிரம் (8விருத்தங்கள்) நீங்கலாக, தெய்வப் பெயர்த் தொகுதி (93), மக்கட்பெயர்த்தொகுதி (106), விலங்கின் பெயர்த்தொகுதி (78),மரப்பெயர்த்தொகுதி (68), இடப்பெயர்த் தொகுதி (68), பல்பொருட் பெயர்த்தொகுதி (35), செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி (76), பண்பு பற்றியபெயர்த்தொகுதி (82), செயல் பற்றிய பெயர்த் தொகுதி (67), ஒலி பற்றியபெயர்த் தொகுதி (53) எனப் பத்துத் தொகுதிகள் உள்ளன. (பிறைவளைவுக்குறியுளிடப்பட்டவை சூத்திர மாகிய விருத்தங்களது எண்ணிக்கை.)

சூத்திர விருத்தி

தொல்காப்பியம் முதற்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் எழுதியவிரிவுரை.

சூரியகணம்

நூலின் முதற் செய்யுட்கண் முதற்சீராக அமைதல் கூடாது என்றுநீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்பாடு சூரிய கணமாம். இதற்குரியநாள் பூசம்; பயன் வீரியம் போக்கல். (இ. வி. பாட். 40)

சூர்ணிகை

செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனம்நிற்கும் சூர்ணிகையைப் பின்பற்றி வார்த்திகமும், வார்த்திகத்தைப்பின்பற்றி அதிகரணங்களும் பகுக்கப் பட்டுள்ளன. (சி.போ. பாண்டிப்.) இதுசூரணிகை, சூரணை எனவும் படும். (L)

சூர்ணிகைக் கொத்து

இரண்டு முதலாக வரும் சூர்ணிகைத் தொகுதி; அஃதாவது செய்யுட்கருத்தை இனிது விளக்கி நிற்கும் சொற்றொ டர்களின் தொகுப்பு. (L)

சூளாமணி

தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி என்னும் இச்சிறு காப்பியச்செய்யுள் சில பாதிச் சமவிருத்தம், சம விருத்தம், அளவழிப் பையுட்சந்தம், எறும்பிடைச் சந்தம், பாதிச்சமப் பையுட் சந்தம், அளவழிச்சந்தப்பையுள், நேரசை முதலாய் அடிதோறும் 12 எழுத்தும் 14 எழுத்தும்பெற்று வரும் சந்தச் செய்யுள் என்பனவற்றிற்கு யாப்பருங்கலவிருத்தியுள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக்.516-518; 520-522 உரை)

சூளாமணி யாப்பு

12 சருக்கங்களையும் அவற்றுள் 2131 பாடல்களையும் உடைய இந்நூலுள்கலிவிருத்தம் 1210, அறுசீர் ஆசிரிய விருத்தம் 735, பலவகைக்கலித்துறைகள் 92, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, வஞ்சி விருத்தம் 31,எண்சீர் ஆசிரிய விருத்தம் 14, தரவு கொச்சகம் 8, வஞ்சித்துறை 1வந்துள்ளன. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிய பாடல் 24 உள்ளன. இவை வஞ்சிவிருத்தம், கலி விருத்தம், கலித்துறை, அறுசீர் விருத்தம் என்றயாப்பைச் சார்ந்தன. (இலக்கணத். முன். பக். 98, 99)ஏனைய பல பாவினங்களொடு, முதலடியாக நான்காம் அடியாகும். இரட்டையாப்புவிசேடமாயதோர் யாப்பு.‘ஓடு மேமன மோடுமேகூடு மோதணி கோதையாய்காடு சேர்களி காண்டொறும்ஓடு மேமன மோடுமே’ என்பது. (1619)மற்று, முதற்சீர் ஒத்து வருதல், முதல் இருசீர் ஒத்து வருதல்,இரண்டாம் நான்காம் சீர் அடிதோறும் ஒத்துவருதல், இடையடி மடக்கி வருதல்,அவை அந்தாதியாக வருதல் போன்ற பிற நயமான வேறுபாடுகளையும் ஆங்காங்குக்காண்டல் கூடும்.

செக்குக்கணை : குற்றியலுகர மாத்திரை

செக்கு + கணை = செக்குக்கணை; செக்கினது கணையமரம் என ஆறாம்வேற்றுமைப்பொருளது. நிலைமொழி இறுதி ககர உகரமாகும் வன்றொடர்க்குற்றியலுகரஈற்றுச் சொல்; வருமொழி ககரமுதல். நிலைமொழியீற்றுக்குற்றியலுகரம் தன் மாத்திரையில் குறைகிறது.எஞ்சிய விளக்கங்களைச் ‘சுக்குக் கொடு : குற்றியலுகர ஓசை அளவு’என்பதன்கண் காண்க. (தொ. எ. 409, 410 இள. உரை 408, 409 நச். உரை)

செங்கீரை

பிள்ளைத்தமிழாகிய பிரபந்தத்துள் ஆண்பால் பெண்பால் ஆகியஇருபாலுக்கும் பொதுவான பருவங்கள் ஏழனுள்ளும் இரண்டாவது பருவம்.குழந்தை பிறந்து ஐந்தாம் திங்களில் தன் தலையை நிமிர்த்தி முகத்தைஇங்குமங்கும் அசைத்தாடு வதைச் சிறப்பித்துப் பாடும் பகுதி. ஆசிரியச்சந்தவிருத்தம் பத்து அமையும். (இ. வி. பாட். 46)

செந்தமிழ் இலக்கணம்

வீரமா முனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் பற்றிய இலக்க ணம். இது1730-இல் இலத்தீன் மொழியில் யாக்கப்பட்டது. செந்தமிழ் கற்கும்புறநாட்டு மாணாக்கர்க்குப் பயன்படவே எழுதப்பட்டது. ஆங்கில மொழியிலும்இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது,

செந்தமிழ் மாலை

யாதொரு பொருளைப் பற்றியேனும் 27 வகையாகப் பாடுவ தொரு பிரபந்தம்.“பாவானும் பாவினத்தானும் பாடுவாரு முளர்: நான்கு முதற்பாவானாதல் ஒருபாவினத்தானாதல் பாடுக என்பாரும் உளர்” என்பது பண்டைய குறிப்பு. (பன்.பாட். 306)

செம்பூட் சேய்

அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் (பா.வி. பக். 104)கூற்றியல் என்னும் நூலாசிரியரும் இவரே என்ப.(இறை. அ. 56 உரை)

செம்மை, சிறுமை முதலியன பண்புப்பகுதி ஆகாமை

செம்மை கருமை சிறுமை முதலியன உடைப்பொருளவாகிய செம்மையன் – கருமையன்- சிறுமையன் – முதலியவற்றிற் கல்லது, இன்னன் என்று பொருளவாகிய செய்யன்- கரியன் – சிறியன் முதலியவற்றிற்குப் பகுதி ஆகா.விகுதிப்புணர்ச்சிக்கண் குழையன் என்பது போல், செம்மையன் – கருமையன் -சிறுமையன் எனப் புணர்வதல்லது மையீறு கெடாது. வலைச்சி புலைச்சி முதலியன(வலைமை – புலைமை முதலாய வற்றின்) மையீறு கெடுதல் ‘விளம்பிய பகுதிவேறாதலும் விதியே’ என நன்னூலாசிரியர் கூறிய விதியால் அமையும்.பதப்புணர்ச்சிக்கண் கருங்குதிரை என்பது கருமையாகிய குதிரை எனவிரியாமையின், கரு என்பது பண்பல்லது, கருமை என்ற பண்புப்பெயர் நின்றுபுணர்ந்தது என்றல் பொருந்தாது. அப்பண்புப்பெயர் நின்று புணருங்கால்கருமைக்குதிரை எனப் புணர்வதல்லது கருங்குதிரை எனப் புணராது.இவ்வாற்றால், செம்மை கருமை சிறுமை முதலியன பண்புப் பகுதி ஆகாஎன்பது பெறப்படும். (இ. வி. எழுத். 45 உரை)

செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டு முதல் நீண்டவை

உண் – தின் – கொள் என்னும் வினை முதல்நிலைகள் செயப்படு பொருண்மைஉணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டு, கெட்டவழி முதல் நீண்டுமுறையே ஊண் – தீன் – கோள் – என நிற்பவை போல்வன.ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் நடவை – சேக்கை – உடுக்கை -தொடை – விடை என்றாற் போல்வன வற்றுள் காணப்படும்.ஊண், தீன், கோள் முதலியன முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆதலும் உரிய.(சூ.வி. பக். 33)

செயற்கை அளபெடை

இசை நிறைத்தற்பொருட்டுச் செய்யுளில் அளபெடுத்து வருவன செயற்கைஅளபெடை எனக் கொள்க.எ-டு : ‘நற்றாள் தொழாஅர் எனின்’ (நன். 91 இராமா.)

செயற்கை ஈறு இரு வகைத்தாதல்

வட்டக்கல் – சதுரப்பாறை – என்றாற் போல மகரமாகிய ஒற்றீற்றினைஒழித்து (வட்ட, சதுர என) உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும், தாழக்கோல் -தமிழப்பள்ளி – என்றாற்போல (தாழ் + அ + கோல்; தமிழ் + அ + பள்ளி) இடையே(அகரத்தை) எய்துவித்து உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும் எனச் செயற்கை யீறுஇருவகைத்தாம். (இ. வி. எழுத். 82 உரை)

செயல்முறை

பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவுகூறுதல் பற்றி எழுந்த நூல் இது. “கலியுறுப்புக்கு அளவை, செயல்முறையில்கண்டுகொள்க” (யா.வி. பக். 298) முதலாயின வந்தவாறு காண்க. தலையளவுஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி ஆறடித் தரவு,நான்கடித் தாழிசை மூன்று, இரண்டடி அராகம் ஒன்று, பேரெண் இரண்டு,இடையெண் நான்கு, சிற்றெண்எட்டு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என்றஅமைப்பில் பாடப்படு வது செயல்முறையில் சொல்லப்பட்ட தொரு செய்தியாகும்.(யா. வி. பக். 310)

செயிற்றியம்

பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள்கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின்வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம்மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.)இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர்.

செய்கைச் சூத்திரம்

‘ணன வல்லினம் வரட் டறவும்’ (நன். 209)எனவும்,‘எழுவா யுருபு திரிபில் பெயரேவினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே’ (295)எனவும்,‘முதல்அறு பெயரலது ஏற்பில முற்றே’ (323)எனவும்வருவன போல்வன செய்கைச் சூத்திரங்கள். (நன். 20 இராமா.)

செய்கையின் நால்வகைகள்

அகச்செய்கை, அகப்புறச் செய்கை, புறச்செய்கை, புறப்புறச் செய்கைஎன்பன செய்கையின் நால்வகைகள்.நிலைமொழி ஈறு இன்ன இன்னவாறு முடியும் என்பது அகச் செய்கை.நிலைமொழியீறு பெறும் முடிபன்றி, நிலைமொழி யீறு பெற்று வரும் எழுத்துமுதலியவற்றின் முடிபு கூறுவது அகப்புறச் செய்கை. வருமொழிச் செய்கைகூறுவது புறச் செய்கை. நிலைமொழி யீறும் வருமொழிமுதலும் செய்கை பெறாதுநிற்ப, அவ்விரண்டனை யும் பொருத்துதற்கு இடை யில் உடம்படுமெய் போன்றஓர்எழுத்து வருவது போல்வன புறப்புறச் செய்கை. (தொ. எ. 1 நச். உரை)

செய்யா என்னும் எச்சம் புணர்தல்

செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால உடன்பாட்டு வினையெச்சமும்,செய்யா என்னும் வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சமும் வருமொழிவல்லெழுத்து வரின், அவ்வல் லெழுத்து மிக்கு முடியும்.எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சென்றான், உண்ணாத் தந்தான்,உண்ணாப் போயினான்.உண்ணாக் கொற்றன், உண்ணாச் சாத்தன், உண்ணாத் தேவன்; உண்ணாப்பூதன் (தொ. எ. 222 நச்.)உண்ணா என்ற வாய்பாடே தொல்காப்பியம் சங்கவிலக்கியம்முதலியவற்றில் காணப்படுகிறது. ‘உண்ணாத’ என ஈறு விரிந்து அகர ஈறாகியசொல் திருக்குறள்காலம் தொட்டே வழக்கில் உள்ளது. ‘உளவரை தூக்காதஒப்புரவாண்மை’(கு. 480) முதலியன காண்க.உண்ணா என்பதே ‘உண்ணாத’ என்றாகின்றது என்பதனை நோக்காது, “உண்ணாதஎன்பது ‘உண்ணா’ என ஈறுகெட்டு நின்றது; அஃது ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சமாம்” என்று கூறுவது வியப்பான செய்தியாம்.

செய்யாத என்ற பெயரெச்சம் புணருமாறு

பண்டு, செய்யா என்ற பெயரெச்ச மறையே செய்யும் – செய்த – என்றஉடன்பாட்டு வாய்பாடுகளுக்கு எதிர்மறையாக வந்தது. அது வன்கணம் வரின்மிக்குப் புணரும்.செய்யா என்பதே பிற்காலத்துச் செய்யாத என ஈறு விரிந்து வந்தது. அதுவன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : உண்ணாத குதிரை, உண்ணாத செந்நாய், உண்ணாத தகர், உண்ணாதபன்றி. (தொ. எ. 210 நச். உரை)

செய்யான், செய்யேன், செய்யாய் :சொல்லமைப்பு

செய்யான், செய்யேன், செய்யாய் என்பன உடன்பாட்டுப் பொருள்உணர்த்துமிடத்து, செய் + ஆன், செய் + ஏன், செய் + ஆய் என முதனிலையும்இறுதிநிலையுமாய்ப் பகுக்கப்பட்டு நிற்கும். (செய்தலை உடையான்,உடையேன், உடையாய் – எனப் பொருள் செய்க.)செய்யான், செய்யேன், செய்யாய் என்பன எதிர்மறைப் பொருள்உணர்த்துமிடத்து, இடையே எதிர்மறைப் பொருளை உணர்த்த ஆகாரஇடைநிலைபுணரவே, செய் + ஆ + ஆன், செய் + ஆ + ஏன், செய் + ஆ + ஆய் என முதனிலைஇடை நிலை ஈறு எனப் பகுக்கப்படல் வேண்டும். இடைநிலை ஆகார மாதல்,செய்யாது – செய்யாத – தெருளாதான் – அருளாதான் என மெய்முதலாகியவிகுதியொடு புணரும் சொற்களில் காணலாம். செய்யான், செய்யேன், செய்யாய்என உயிர் முதலாகிய விகுதி புணர்வுழி, அவ் ஆகாரம் சந்தி நோக்கிக்குன்றியதே ஆம். (சூ. வி. பக். 32, 33)“எதிர்மறை இடைநிலைகளாவன அல்லும் இல்லும் ஏயும் பிறவுமாம். உண்ணாய்உண்ணேன் என்புழி முறையே எதிர்மறை ஆகாரமும் ஏகாரமும் கெட்டு நின்றனஎனல் வேண்டும்” எனபர் சேனாவரையர். (தொ. சொ. 450)எனவே உண் + ஏ + ஏன் = உண்ணேன் என்றாயிற்று என்பது சேனா.கருத்து.செய்வாய் என்பதன் மறையாகிய ‘செய்யாய்’ எனும் சொல் படுத்தலோசையான்செய் என்று பொருள் தரும் என்பர் நச். (தொ. சொ. 451)

செய்யுட் கலம்பகம்

பலவகைப் பாடல் திரட்டு. (L)

செய்யுட் கோவை

எ-டு : சிதம்பரச் செய்யுட் கோவை. நால்வகைப் பாவும் பாவினங்களும்நிரலே அமைக்கப்பட்டு அமைந்த பிரபந்தம். (L)

செய்யுட்கணம்

பிரபந்தத்தை இயற்றத் தொடங்கும் கவிஞன் செய்யுள் முதற்கண்மேற்கொள்ளத் தரும் நற்கணம் நான்கும், நீக்கத் தகும் தீக்கணம் நான்கும்ஆகிய எட்டும் ஆம். அவை முறையே நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம்(சந்திரகணம்), இயமான (சுவர்க்க, இந்திர) கணம் எனவும், சூரியகணம்,தீக்கணம், வாயு (மாருத) கணம், அந்தர (ஆகாய) கணம் எனவும் பெயர் பெறும்.(திவா. பக். 299; பிங். 1333; இ.வி. பாட். 40)

செய்யுளுக்கே உரிய விதிகள்

அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டு ‘ஆயிரு திணை’ (தொ. எ. 208 நச்),‘ஊவயினான’ (256) என்றாற்போல வருதலும், பலவற்றிறுதி நீண்டு ‘பலாஅஞ்சிலாஅம்’ என உம்மைத் தொகையாக வருதலும் (213), ஆகார ஈற்றுள்,குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரஈறாகக் குறுகி உகரம் பெற்று (இறா -சுறா – புறா முதலியன) இறவு – சுறவு – புறவு முதலியனவாக வருதலும்(234),இன்றி – அன்றி – என்பன உகரஈறாகி, ‘உப்பின்று’ – ‘நாளன்று’ – எனஅமைந்து வன்கணத்தோடு இயல்பாகப் புணர்தலும் (237),‘அது’ என்ற உகரஈறு வருமொழி ‘அன்று’ என்பது வரின், ஆகாரமாகத்திரிந்து ‘அதாஅன்று’ எனப் புணர்தலும், ஐ வருமிடத்து உகரம் கெட்டு ‘அதைமற்றம்ம’ என்றாற்போலப் புணர்தலும் (258),வேட்கை + அவா = வேணவா என முடிதலும் (288),விண் என வரும் ஆகாயப்பெயர் அத்துச்சாரியை பெற்று விண்ணத்துக்கொட்கும் – விண்வத்துக் கொட்கும் – என்றாற் போலப் புணர்தலும்(305),பொன் என்பது பொலம் எனத் திரிந்து வருமொழி நாற்கணங் களொடும்புணர்தலும் (356),இலம் என்ற உரிச்சொல் படு என்ற வருமொழியொடு புணரும்வழி ‘இலம்படு’என இயல்பாக முடிதலும் (316) ,‘வானவரி வில்லும் திங்களும்’ என்புழி ‘வில்லும்’ எனச் சாரியைஉம் வந்து வானவரி வில்லுள் திங்கள் – என்று வேற்றுமை முடிபாதல்போல்வனவும், கெழு என்ற உரிச்சொல் ‘துறை கேழ் ஊரன்’ என்றாற் போலத்திரிந்து புணர்வதும் (481)தொல்காப்பியனாரான் செய்யுள்முடிபாகக் கூறப்பட்டனவாம்.

செய்யுள் இயல்

ஐந்து இலக்கணங்களும் கூறும் நூல்களுள் யாப்பிலக்கணம் கூறும் பகுதி.தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தில் எட்டாவதாக இவ்வியல் இடம் பெறும்.இச்செய்யுளியலின் தலைமையும் சூத்திரப் பன்மையும் பற்றித் தொல்காப்பியனாரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் முதலியோர்‘செய்யுளியலுடையார்’ என்று குறிப்பர். (யா. வி. பக். 125, 205).யாப்பு நூல்களிலும் சிதம்பரம் பாட்டியலிலும் செய்யுளியல் நால்வகைச்செய்யுள்களையும் அவற்றின் இனங்களையும் கூறும் பகுதியின் பெயராகஅமைகிறது.

செய்யுள் இறுதிப் போலிமொழி

செய்யுளின் இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல், ‘பொன்னொடுகூவிளம் பூத்தது போன்ம்’ என்றாற் போல, போன்ம் எனத் திரிந்துமுடியும்.செய்யுளின் இடை இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல்லும்‘அரம்தின்வாய் போன்ம் போன்ம் போன்ம்பின்னும் மலர்க்கண் புனல்’ (பரிபா. 10 : 97, 98)என்றாற்போல, போன்ம் எனத் திரிந்து வரும். செய்யுளடி இடையில் வரும்போலும் என்னும் சொல்லும்,‘பொன்போன்ம் பல் வெண்முத்தம் போன்ம்’ (மா. அ. பாடல் 160)என்றாற் போல, ‘போன்ம்’ எனத் திரிந்து வரும்.இவற்றை நோக்க, செய்யுளிறுதிச் சொல்லாக வரும் போலும் என்பது பண்டுபோன்ம் எனத் திரிந்தது போல, செய்யுள் இடை இறுதியிலும் அடிஇடைஇறுதியிலும் வரும் போலும் என்ற சொல்லும் ‘போன்ம்’ எனப் பிற்காலத்துத்திரிவதாயிற்று என்பது போதரும்.இதனை யுட்கொண்டு நச். ‘செய்யுளிறுதிப் போலிமொழி’ என்பதனைச்‘செய்யுள் போலிமொழி இறுதி’ என மாற்றிப் பொருள் கொண்டமை உய்த்துணரலாம்.(தொ. எ. 51 நச். உரை)

செய்யுள் பொருத்தம்

‘செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்’ காண்க.

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்

மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி,கணம் எனக் காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியில் பார்க்கும்பொருத்தம் பத்தாம். அவை மங்கலப் பொருத்தம் முதலாகப் பெயர் பெறும். (இ.வி. பாட். 10)

செய்யுள் வழுக்கள்

பலரானும் உடன்பட்ட வழக்கொடு நூற்பயன் கொடுக்கும் இன்பத்தினை விட்டுமறுதலையால் புணர்த்தலும், வட வெழுத்தே மிகப்புணர்த்தலும், பழையோர்கூறிய இலக் கணச் சொற்களை விடுத்துக் காலத்திற்கு ஏற்றவாறு கூறும்வழூஉச்சொல் புணர்த்தலும், பொருள் மயக்கமுறக் கூறுத லும் என இவை. (இ.வி. பாட். 126)

செய்யுள் விகாரங்களைஎழுத்ததிகாரத்தில் கூறுதல்

அல்வழி வேற்றுமைப் புணர்ச்சியால் வரும் விகாரங்கள் தோன்றல்,திரிதல், கெடுதல் என்பன. வலித்தல் மெலித்தல் முதலான ஆறும், ஒருமொழிமூவழிக் குறைதலும் ஆகிய செய்யுள் விகாரங்கள் ஒன்பது. இம்மூன்றும்ஒன்பதும் ஆகிய விகாரங்கள் செய்யுளகத்தே வருதலின், இவ்விரு திறத்தவற்றிடையே வேறுபாடு அறிதற்குச் செய்யுள் விகாரங்களை எழுத்ததிகாரத்தேகூறினார். (நன். 156 சங்கர.)

செய்யுள் விகாரமும் குறையும்

தனித்த ஒரு மொழியின்கண் வரும் விகாரங்கள் ஒன்பதாம். மெலித்தலும்வலித்தலும் குறுக்கலும் நீட்டலும் தொகுத்த லும் விரித்தலும் அன்றி ஒருமொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலும் ஆம்.வாய்ந்தது என்பது வாய்த்தது – என வலித்தல் விகாரம்.தட்டை என்பது தண்டை – என மெலித்தல் விகாரம்.நிழல் என்பது நீழல் – என நீட்டல் விகாரம்.பாதம் என்பது பதம் – எனக் குறுக்கல் விகாரம்.தண்துறை என்பது தண்ணந்துறை – என விரித்தல் விகாரம்.வேண்டாதார் என்பது – எனத் தொகுத்தல்வேண்டார் விகாரம்.தாமரை என்பது ‘மரையிதழ் – என மொழி முதற்புரையும் அஞ்செஞ் சீறடி’ குறைந்த விகாரம்.யாவர் என்பது யார் – என மொழி இடைக் குறைந்த விகாரம்.நீலம் என்பது ‘நீல் உண்கண்’, – என மொழிக் கடைக்‘நீல் நிறப் பகடு’ குறைந்த விகாரம். (தொ. வி. 37 உரை)

செய்யுள் விகாரம் ஆறு

செய்யுட்கண் தளையும் தொடையும் நோக்கி நிகழும் விகாரங்களாவனவலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்பனஆறும். இவற்றைத் தனித்தனியே காண்க. (நன். 155)

செய்விப்பி என்னும் இருமடி ஏவல்பகாப்பதம்

செய் என்னும் ஏவல்வினையை அடுத்து வி, பி – என்னும் இரண்டுவிகுதிகளுள் ஒன்று வரின் செய்வி என்னும் பொருளைப் பெறும்.இவையிரண்டும் ஒருங்கு வரினும், (பி) இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல்தோன்ற மூவராவான் ஒரு கருத்தனைக் காட்டும்.நடப்பி, வருவி, மடிவி முதலாகச் செய்வி என்னும் ஏவல் வினைப்பகாப்பதம் வந்தவாறு.நடத்துவிப்பி, வருவிப்பி, மடிவிப்பி முதலாகவும், நடப்பிப்பி,கற்பிப்பி, முதலாகவும், (வி பி) இரண்டும் இணைந்தும் ஒன்றே (பி)இணைந்தும் ‘செய்விப்பி’ என்னும் ஏவல்மேல் ஏவல் பகாப்பதம் (இருமடிஏவல்) வந்தவாறு. (நன். 137 மயிலை.)

செருக்களவஞ்சி

போர்க்களத்தினைச் சிறப்பித்துக் கூறும் தனிநிலைச் செய்யுள் வகை.இதன் யாப்பு ஆசிரியம் வஞ்சி என்னும் இவற்றால் அமையும் என்னும் பிரபந்தமரபியல் (39). போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரைஉடலையும், பேயும் பிசாசும் கழுகும் பருந்தும் காகமும் தின்று களித்துஆரவாரமாயிருக்க, பூதமும் பேயும் பாடி ஆட, இங்ஙனம் இருந்த சிறப்பினைப்பாடும் இதனைப் ‘பறந்தலைச் சிறப்புப்பாட்டு’ எனவும் கூறுவர் என்பதுசதுரகராதி. அந்நூல் ஆசிரியப் பாவால் செருக்களத்தைப் பாடுவது என்னும்(இ. வி. பாட். 109.)

செருக்களவழி

பாட்டுடைத் தலைமகன் புகழ் நிலைபெறக் காரணமாகப் போர்க்களத்தே ஆற்றியவீரச்செயல்களை நேரிசை இன் னிசை பஃறொடை வெண்பாக்களால் புனையும் தொடர்நிலைச் செய்யுள். இது மறக்களவழி எனவும்படும். (பன்.பாட். 315,316).

செல் என்ற பெயர் புணருமாறு

செல் என்ற பெயர்ச்சொல் மேகம் என்னும் பொருளது. அது நிலைமொழியாக,வருமொழி முதற்கண் வன்கணம் வரின், அல்வழி வேற்றுமை என்னும் ஈரிடத்தும்லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.எ-டு : செல் + கடிது = செற்கடிது (அல்வழி); செல்+கடுமை =செற்கடுமை (வேற்றுமை)சிறிது தீது பெரிது எனவும், சிறுமை தீமை பெருமை எனவும் ஏனையவல்லெழுத்தொடு முறையே இருவழியும் ஒட்டுக. (தொ. எ. 371 நச்.)

செல்வுழி, சார்வுழி என்ற சொற்கள்

செல் + உழி = செல்வுழி; சார் + உழி = சார்வுழி; இடையே உடம்படுமெய்அன்று என்று கூறும் வகரம் தோன்றியது என்பர் சங்கர நமச்சிவாயர். (நன்.163 உரை)செல்வுழி, சார்வுழி என்பன பிரித்துப் புணர்க்கப்படா, வினைத் தொகையாதலின். அவற்றிடையே வகரம் வந்தது என்று கொள்வது சாலாது என்பர் நச்.(தொ. எ. 140 உரை)செல்வு சார்வு என்பனவே நிலைமொழிகளாதலின், அவை செல்வுழி சார்வுழி எனஇயல்பாகவே புணர்ந்தன. ஆண்டு வகரம் இடையே வரவில்லை என்பது எழுத்ததிகாரஆராய்ச்சி. (எ. ஆ. பக். 150)

செவிப்புலனாம் எழுத்து

செவிப்புலனாம் எழுத்துக்கள், ‘தனித்துவரல் மரபின’ எனவும்,‘சார்ந்து வரல் மரபின’ எனவும் இருவகைய. தனித்துவரல் மரபின, உயிரும்மெய்யும் என இருவகைய, அவற்றுள் உயிர் குறிலும் நெடிலும் எனஇருவகைப்படும். மெய் வளிநிலையும் ஒலிநிலையும் என இருவகைப்படும். வலிமெலி இடை- என்ற மூவின மெய்களும் வளிநிலைப்பாற்படுவன; புள்ளியொற் றும்உயிர்மெய்யும் ஒலிநிலைப்பாற்படுவன. இனிச் சார்ந்து வரல் மரபின,குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் என மூன்றாம்.(தொ.எ..பக். XL ச.பால.)

சே என்ற பெயர் புணருமாறு

சே என்பது ஒருவகை மரத்தையும் பெற்றத்தையும் குறிக்கும். அப்பெயர்மரத்தைக் குறிக்குமிடத்து வருமொழி வன்கணம் வரின், உரிய மெல்லெழுத்துமிக்கு முடியும்; பெற்றத்தைக் குறிக்குமிடத்து இன்சாரியை பெறும். இதுவேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணது.எ-டு : சே + கோடு, செதிள், தோல், பூ = சேங்கோடு, சேஞ்செதிள்,சேந்தோல், சேம்பூ – மரம்சே + கோடு, செவி, தலை, புறம் = சேவின்கோடு, சேவின்செவி,சேவின்தலை, சேவின்புறம் – பெற்றம்சே, பெற்றத்தைக் குறிக்குமிடத்து வேற்றுமைப் புணர்ச்சிக்கண்இயல்புகணத்தும் இன்சாரியை பெறும்.சேவினலம், சேவின்வால், சேவினிமில் என்றாற்போலமுடியும்.இயல்புகணத்து இன்பெறாது சேமணி என வருதலுமுண்டு. (தொ. எ. 278,279 நச். உரை)அல்வழிப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்,சேக் கடிது, சேச் சிறிது, சேத் தீது, சேப் பெரிது என வல்லெழுத்துமிக்கும், இயல்புகணம் வரின்,சே ஞான்றது, சே வலிது, சே வரிது (வகரம் உடம்படுமெய்) என்றாற்போலஇயல்பாயும் புணரும். (274 நச்.)

சேகாநுப்ராஸம்

இரண்டிரண்டு மெய்கள் உயிர் ஏறப்பெற்று இடைவிடாது மறுத்துவருவது.எ-டு :‘பண்டு பண்டவழ் நாவினொர் பாவைதெம்மண்டு மண்டலத் தோரவை மாழ்கிமன்கொண்ட கொண்டலன் னாய்நின் திருப்பெயர்கொண்டு கண்டனன் கோதைப் புறத்தையே’.இதன்கண் ண், ட் என்பனவற்றுள் டகரத்தின்மேல் உயிரேறிவந்துள்ளது.அநுப்ராசம் – வழி எதுகை (யா. வி. பக். 208). வல்லொற்றை அடுத்துக்கொண்ட மெல்லொற்று வழிஎதுகையை வட நூலார் ‘சேகாநுப்ராஸம்’ என்பர். இஃதுஇணையெதுகை அலங்காரம் என்று மாறன் அலங்காரத்துள் கூறப்பட்டுள் ளது.(பக். 277)சொல்லும் பொருளும் ஒன்றாகவே தொடர்ந்து குறிப்பினால் பொருள்மாறுபடுதல் ‘லாடாநுப்ராஸம்’ (பிரதாபருத்ரீயம் சப்தாலங்கார ப்ரகரணம் -1 (5)) (L)

சேணீ விருத்தம்

இது வடமொழியில் சிரேணி அல்லது சியேனி என்ற பெயருடையது; அடிக்குப்பதினோர் எழுத்துடையது.1. இடை இலகு, 2. இடைக்குரு, 3. இடைஇலகு என வருவது முதலில் மூன்றுமாத்திரைத் தேமாச்சீர் நான்கும், ஈற்றில் ஐந்தெழுத்துத்தேமாங்காய்ச்சீர் ஒன்றும் புணரும் ஐஞ்சீரடி நான்கு கொண்டதுஇவ்விருத்தம். இத்தகைய பாக்கள் வடமொழியிலேயே உள. இதுஎ-டு : ‘கண்டு சென்று நின்று காலை மீக்கொண்டுபண்டு நல்ல ஆசி மாற்ற மாண்போடுமண்டு போல விண்ட பான்மை உட்கொண்டுகொண்ட நல்ல இன்பு கூட ஏருற்றான்’.எனவரும். இதன்கண் மேற்கூறிய வடமொழியிலக்கணம் முழுதும்பொருந்தியுள்ளது. (வி. பா. பக். 52)

சேந்தன் திவாகரம்

நிகண்டுகளுள் காலத்தால் முற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் திவாகரர்என்பதும், சேந்தன் என்னும் சிற்றர சனால் இவர் உபகரிக்கப்பட்டார்என்பதும் துணியப்பட்ட செய்திகள். திவாகரர் விநாயகனை வணங்கிப் பாடிநூல் செய்தமையின் சைவசமயத்தராதல் ஒருதலை. தம்மை ஆதரித்த வள்ளலை நூலின்பன்னிரு தொகுதியிலும் இறுதி தோறும் புகழ்ந்து பாடியுள்ளமையும்நூற்பெயரின் முன் மொழியாக அவன்பெயர் வைத்தமையும் இவருடைய செய்ந்நன்றியறிதலைப் புலப்படுத்துவன. சோழநாட்டில் காவிரிக் கரைக்கண் அமைந்தஅம்பர் நகரை ஆண்டு வந்த அக்குறு நில மன்னன் வடமொழி தென்மொழிஇரண்டிலும் புலமை சான்றிருந்தமையும், ஒளவையாரால் போற்றப்பட்டமையும்,கோதண்டம் காண்டீபம் காளியின் முத்தலைச் சூலம் இவற்றைக் கவிபாடிப்போற்றியுள்ளமையும் போன்ற செய்திகள் ஒவ்வொரு தொகுதியிலும்இறுதிச்செய்யுளால் போதருவன.இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகல் கூடும்.இதன்வழியாகவே அடுத்துப் பிங்கலந்தையும் அடுத்துச் சூடாமணி நிகண்டும்அவற்றை அடுத்தே பிற நிகண்டுகளும் தோன்றின. இதன் சூத்திரம் நூற்பாயாப்பிற்று. தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பல்பொருள் கூட்டத்தொருபெயர்த் தொகுதி யீறாகப் பன்னிரு பாகுபாடுகள் இதன் உட்பிரிவுகள்.

சேனாவரையம்

வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் தொல் காப்பியம்சொல்லதிகாரத்திற்கு எழுதியவுரை. அவர் பெய ரால் சேனாவரையம் எனவழங்கப்படும். இலக்கியத்திற்குத் திருக்குறட் பரிமேலழகரது உரைபோல,இலக்கணத்திற்கு இவ் வுரை பெரிதும் பாராட்டப்பெறும். சொற்சுருக்கமும்பொருள் ஆழமும் மிக்க இவ்வுரை, தனித்தவொரு நடைச் சிறப்புடை யது;ஆங்காங்கு வடநூலார் கருத்தை எடுத்துக்காட்டுவது; ஏற்றவிடத்துத்தமிழிலக்கண நெறியைப் பிறழாது எடுத்து ஓதுவது; சூத்திரங்கள்சிலவற்றுக்குப் பொழிப்புரை கூறாது கருத்துரையே கூறிச் செய்வது; ‘இனிஓருரை’ எனச் சூத்திரத்துக்கு மற்றொரு பொருள் உரைப்பதும், ‘இதுவும் ஓர்நயம்’ எனச் சிறப்பினை எடுத்துச் சுட்டு வதும் பிறவும் இவ்வுரையின்தனிச் சிறப்புக்கள். சேனாவரையரது காலம் 14ஆம் நூற்றாண்டின் முற்பட்டதுஎன்பது துணிவு.

சேனாவரையர்

தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்குப் பிறரினும் சிறக்க உரைவகுத்தஉரையாசிரியர். தமிழ் வடமொழி இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்தவர்.‘வடநூற்கடலை நிலைகண்டு ணர்ந்த சேனாவரையர்’ என்று இவரை மாதவச் சிவஞானமுனிவர் தமது சூத்திர விருத்தியுள் பாராட்டுவர். இவர்காலம் பரிமேலழகர்காலமாகிய 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர் மு.இராகவையங்கார்அவர்கள்.

சேவல்பாட்டு

முருகப்பெருமானுடைய கொடி ஊர்தி ஆகிய கோழிச் சேவலையும், திருமால்ஊர்தி கொடி ஆகிய கருடச் சேவலையும் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.

சைமினி

பூருவ மீமாஞ்சையின் ஆசிரியராம் முனிவர். ‘அக்கபாதன் கணாதன்சைமினி’ (மணி. 27:82) (L)

சொகினம்

சகுனம்; அறம் பொருள் இன்பம் வீடு சொன்ன நூல்களைச் சார்ந்து தோன்றியஇந்நூல் குறிப்பிடும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுஉணரப்படும் என்பது உரை. (யா.வி. பக். 491)

சொக்கப்ப நாவலர்

பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்கு நல்லுரை கண்டசான்றவர் சொக்கப்ப நாவலர். இவர் காலம் புலப்பட்டிலது. குறிப்பிடும்கனவுக்கால நான்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் பின்வருமாறு:இயற்கைப் புணர்ச்சி – முதல் நாள் : இடந்தலைப்பாடு இரண் டாம் நாள்;பாங்கற் கூட்டம் – மூன்றாம் நாள்; பாங்கிமதி உடன்பாடு – மூன்றாம்நாள்; பாங்கியிற் கூட்டம் – நாலாவது நாள்; ஒரு சார்ப்பகற்குறி -ஐந்தாம் நாள்; பகற்குறி – ஆறாம் நாள்; இரவுக்குறி – ஏழாம் நாள்;இரவுக்குறி – இடையீடு – எட்டாம்நாள்; வரைதல் வேட்கை – 9, 10, 11 ஆம்நாள்; வரைவுகடாதல் – 12, 13, 14 ஆம் நாள்; ஒருவழித் தணத்தல் – 12, 13,14, 15 ஆம் நாள்; வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் – 16ஆம் நாள்தொடங்கி 50ஆம் நாள் முடிய; வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்டு வருதல் -51 ஆம் நாள்; வரைவுமலிவு – 51ஆம் நாள்; அறத்தொடு நிற்றல் – 52ஆம்நாள்; உடன்போக்கும் கற்பொடு புணர்ந்த கவ்வையும் – 53ஆம் நாள்; மீபசி -54ஆம் நாள்; உடன்போக்கு இடையீடு – 55ஆம் நாள்; தன்மனை வரைதல் – 56ஆம்நாள்.எனவே, களவொழுக்கம் தொடங்கியபின் 56ஆம் நாளில் திருமணம் நிகழும்என்பது சொக்கப்பநாவலரது கருத்தாகும்.

சொற்கட்டு

பண்டைய இலக்கியங்களுள் ஒன்றான இதன் பாடலடிகள் சொற்சீரடியின்பாற்படுவன. (யா.வி. பக். 373)

சொற்களில் ஒற்றும் குற்றுகரமும்எண்ணப்படுதல்

ஒற்றும் குற்றுகரமும் எழுத்தெண்ணப்படா எனச் செய்யுளிய லுள் கூறினமைபற்றிக் கால் மால் கல் வில் நாகு தெள்கு எஃகு கொக்கு கோங்குஎன்பனவற்றை ஓரெழுத்தொருமொழி எனவும், சாத்தன் கொற்றன் வரகு குரங்குஎன்பனவற்றை ஈரெழுத்தொருமொழி எனவும் கூறின், ஆகாது. என்னை யெனில்,செய்யுட்கண் அவை இசை பற்றி எண்ணப்படா எனவும், மொழியாக்கத்தின்கண்பொருள்பற்றி எண்ணப் படும் எனவும் கொள்க. (இ.வி. எழுத். 38 உரை)

சொற்பொருத்தம்

செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் இரண்டா வது; செய்யுள்முதற்கண் எடுத்த மங்கலச்சொல் விழுமிய பொருள் தன்னிடம் தோன்றநிற்றலோடே, பல்வேறு பொருள் படக் கூறுதலும் வகையுளியுறுதலும்ஈறுதிரிதலுமாகிய குற்றம் மூன்றும் இன்றி, புலவரால் செய்யப்படுவது.ஏற்புழிக் கோடலால், மங்கலச் சொல்லிற்கு ஏனைய பொருத்தங்கள் கருதிஅடைமொழியை முன் புணர்ப்பின் மங்கலச்சொல் சீரின் இடையே வரும்; அவ்வாறுவருவழி அடையடுத்த மங்கலச் சொல்லாகிய முதற்சீர் ஈறு திரிதலும் உண்டு;ஆண்டும் திரியாமையே சிறப்புடையதாவது. (இ. வி. பாட். 12)

சொல் அந்தாதி மடக்கு

எ-டு :கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரிகாவிரி மலருகக் கரைபொரு மரவமரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும்சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே.‘கயல் ஏர் பெற வரும் கடிபுனல் காவிரி, காவிரி மலர் உகக் கரை பொரும்அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், சிலம்புசூழ் தளிரடி (தலைவி)திருமனைக்கு அயலே’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.“கயல்மீன்கள் எழுச்சி பெறப் பெருக்கெடுத்து வரும் நறுமண மிக்கபுனலையுடைய காவிரியாறு, சோலையில் விரிந்த மலர்கள் கீழே உகுமாறுகரையைத் தாக்கும் ஒலி, மரவமரத் தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ளவண்டொலியோடு ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்கும் இடம் சிலம்பு அணிந்தஅணிகளால் சூழப்பட்ட தளிர் போன்ற அடிகளையுடைய தலைவியின் மனைக்குஅருகின்கண்ணேயாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், கயல் காவிரி. மரவம்சிலம்பு என்னும் சொற்கள் அந்தாதியாக வந்தமை சொல்லந்தாதி மயக்காம்.(அந்தாதி மண்டலித்தும் வந்தவாறு.) (தண்டி. 96)

சொல் இரட்டிக்கும்போது வரும்விகாரம்

ஒன்றன் மிகுதியைக் காட்ட, அதன் பெயர் இரட்டி, முதன் மொழி ஈற்றுஒற்று உளதெனில் கெட்டு, அதன்அயல் உயிர் ஆகாரமாகத் திரிந்து வல்லினம்மிகாமல் வழங்கும்.எ-டு : கோடா கோடி (பல பல கோடி), காலா காலம் (பலபல காலம்),நீதாநீதி, கோணாகோணம், குலாகுலம், தூராதூரம், தேசாதேசம், கருமாகருமம்(தொ. வி. 39 உரை)

சொல் என்ற பொருட்பெயர் புணருமாறு

சொல் என்பது நெல்லைக் குறிக்கும் சொல். அஃது அல்வழி வேற்றுமைஎன்னும் ஈரிடத்தும் வன்கணம் வரின் லகரம் றகரமாகத் திரிந்துபுணரும்.எ-டு : சொற் கடிது, சொற் சிறிது, சொற் றீது, சொற்பெரிது;சொற்கடுமை, சொற்சிறுமை, சொற்றீமை, சொற் பெருமை (தொ. எ. 371நச்.)

சொல் ஒப்பணி

இது தொன்னூல் விளக்கம் குறிப்பிடும் சொல் அணிவகை நான்கனுள் ஒன்று.ஒப்புமைபற்றி வருவனவற்றைக் கூறுதல் இதன் இலக்கணமாம். இது திரிபுஇயைபு,ஒழுகிசை, சமம், இயைபிசை என நால்வகைப்படும்.ஒரு பெயரோ ஒருவினையோ பலவேறு உருபு பெற்றும், பலவினையோ பலபெயரோஓர்உருபு பெற்றும் வரத் தொடுப்பது.எ-டு “படை வரவினால் காற்றெனவும், முழக்கத்தால் கடலெனவும்.அச்சத்தால் இடியெனவும், செய் கொலையால் கூற்றெனவும், மதகரி வந்துஎதிர்த்த படையை அழித்தது” என்றற்கண் கூறிய பெயர் களில் ஆல் உருபும்‘என’ என்பதும் பலமுறை மீண்டும் வந்தவாறு.இனிய ஓசை; இயற்றமிழிடத்துப் பெயரும் ஈரெச்சமும் உரிச்சொல்முதலியனவும் பலபல ஒப்ப வந்து பொருந்துதல்.எ-டு: ‘விடாது நறுநெய் பூசி, நீங்காது ஒளிமணி சேர்த்து, மங்காதுமதுமலர் சூடி’ என, இரண்டாம் வேற் றுமைத் தொகைகள் இணைந்து வந்தவாறு.செய்து என்னும் வினையெச்சமும், எதிர்மறை வினையெச்ச மும் ஒப்பவந்தவாறு. நெய்பூசி, மணிசேர்த்து, மலர் சூடி என்பன இரண்டன் தொகைகள்;இவற்றுள் முன்மொழி பெயராம். நறு, ஒளி, மது என்பன அம்மூன்றுபெயர்க்கும் முறையே அடையாக வந்து உரியாக நின்றவாறு.பற்பல வசனத்து இறுதிமொழிகள் தம்முள் உருவின் ஒப்புமையால் இணைந்துவருதல்.எ-டு : ‘செங்கதிர் நெடுங்கை நீட்டி, மல்கிருள் கங்குல் ஓட்டி,படரொளி முகத்தைக் காட்டி’ என இதன்கண், நீட்டி. ஓட்டி, காட்டி என்பனஓசை ஒப்புமையால் இணைந்து வந்தவாறு.இருமொழி பலமொழிகள் தம்முள் மாத்திரையாலும் ஓரெழுத்தாலும்வேறுபாடுடைய ஆதல் அன்றித் தம்முள் ஒப்ப வருவது.எ-டு : ‘கோடா ராவிப் பாற்குருகேகோடா ராவிப் பாற்குருகே’ – என மடங்கி வருவது.கோடு ஆர் ஆவிப் பால் குருகே – கரை பொருந்திய குளத்தை அடுத்துள்ள,பால் போன்ற நிறத்தையுடைய நாரையே; கோடாரா இப்பால் குருகே – தாம்கவர்ந்த என் வளைகளைத் தலைவர் மீட்டும் தாராரோ? என வருவது. இஃதுஇரண்டடி மடக்கு.இனிச் சமமாகாது, காந்தாரம் > கந்தாரம் > கந்தரம் என, மாத்திரை குறைந்து வேற்றுச்சொல் ஆயின; இதுமாத்திரைச் சுருக்கம் என்னும் சொல்லணி.கமலம் > கலம், மலம் இஃது எழுத்துச் சுருக்கம் என்னும் சொல்லணி. (தொ. வி.320-324)

சொல் நான்காதல் வேண்டுதலின்இன்றியமையாமை

சொல் நான்காக வேண்டியது என்னையெனில், பெயர்ச்சொல் பொருளைவிளக்குகிறது; வினைச்சொல் பொருளது தொழிலை விளக்குகிறது; இடைச்சொற்கள்இவ்விரண்டற் கும் விகுதியுருபுகளாகியும், வேற்றுமை உவமை சாரியையுருபுகளாகியும், சில வினையாகியும், தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண்சிறப்பு எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை பிரிப்பு கழிவு ஆக்கம்இசைநிறை அசைநிலை குறிப்பு முதலான பொருண்மை விளக்குகின்றன; உரிச்சொல்பெயராம் எனினும், பொருளை விளக்குதலின்றியும் பெரும் பான்மையும்உருபேற்றல் இன்றியும், பொருட்குணத்தையே விளக்குகிறது. உரிச்சொற்களுள்சில வினை போல் வருகின் றன. ஆதலின் சொல்லிற்கு இந்நாற்பகுதியும்இவண்கிடப்பும் வேண்டு மெனவே கொள்க. (நன். 130 மயிலை.)

சொல் மிக்கணி

வந்த சொல்லே மீண்டுமீண்டும் வருவது சொல்மிக்கணி என்று தொன்னூல்விளக்கம் கூறும். இவ்வணி மடக்கு, இசைஅந்தாதி, அடுக்கு எனமூவகைப்படும்.தனித் தலைப்பிற் காண்க.உரைநடையில் ஒருவசனத்துக்கு ஈறாக நின்ற மொழி மற்றொரு வசனத்துக்குஆதியாக வருவது. உருபு ஒன்றே ஆயினும் வேறே ஆயினும் ஏற்புடைத்தாம்.எ-டு : அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடம்சென்றது; செல்லப் பசிகடுகுதலும்…’‘மாந்தர்க்கெல்லாம் கேள்வியால் அறிவும், அறிவினால் கல்வியும்,கல்வியால் புகழும், புகழால் பெருமையும் விளையுமன்றே?’இது மாறனலங்காரம் முதலியவற்றுள் காரணமாலை அணி யாகக் கொள்ளப்படும்(செய்யுட்கண்ணேயே என்பது). இங்குச் சொல்அமைப்பு நோக்கிச் சொல்மிக்கணிஆயிற்று.சிறப்பினைக் காட்டவும், அன்பு துயர் களிப்பு முதலிய வற்றைத்தோற்றவும் ஒருபொருள் தரும் பல திரிசொற்கள் அடுக்கி வருவது.எ-டு : ‘என்னுயிர் காத்துப் புரந்(து)ஆண்ட என்னிறைவன்தன்னுயிர் பட்(டு)இறந்து சாய்ந்தொழிந்தான் – பின்னுயிராய்மீண்டென்னைக் காத்(து)ஓம்பி மேவிப் புரந்(து)அளிப்பயாண்டையும் யார்யார் எனக்கு?’காத்துப் புரந்து, பட்டு இறந்து, காத்து ஓம்ப, புரந்து அளிப்ப எனஒரு பொருள் தரும் பலதிரிசொற்களும் அடுக்கி வந்தமை இவ்வணியாம். (தொ.வி. 314 – 317)

சொல் மூவிடத்தும் குறைதல்

சொல் ஒரோவழி அருகிச் செய்யுட்கண் முதல் இடை கடை என்ற மூவிடத்தும்குறைந்து வருதலுமுண்டு. இக்குறைவிகாரம் பகாப்பதத்தின்கண்ணேயேநிகழும்.எ-டு : தாமரை ‘மரை’ என வருவது தலைக்குறை; ஓந்தி ‘ஓதி’ என வருவதுஇடைக்குறை; நீலம் ‘நீல்’ என வருவது கடைக்குறை (நன். 156சங்கர.)(தொகுத்தல் விகாரம் பகுபதத்தின்கண் நிகழ்வது என வேறுபாடறிக).

சொல்நிலையால் பகுபதம்,பொருள்நிலையால் பகாப்பதம்

பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின் பொருளும் தரும் ஒருசொல்லைப் பகுபதம் என்றமையின், சொன்மை பொருண்மை இன்மை செம்மை சிறுமைநடத்தல் வருதல் முதலிய சொற்கள், பகுதி விகுதியாகப்பகுக்கப்படுதலானும், விகுதிக்கு வேறு பொருளின்றிப் பகுதிப்பொருள்விகுதியாய் நிற்றலானும், சொல்நிலையால் பகுபதம் என்றும் பொருள்நிலையால் பகாப்பதம் என்றும் கொள்ளப்படும். (நன். 132 சங்கர.)

சொல்லகத்தியம்

கால வெள்ளத்தில் இறந்துபட்ட ஓர் இசைநூல். (சிலப். 8:24அரும்.) (L)

சொல்லணி (1)

செய்யுளிலுள்ள சொற்கள், பரியாயச் சொற்களாக மாற்றப் படின் அணிகெடுவது சொல்லணி. முல்லை நகைத்தன என்றதற்கு முல்லை பூத்தன என்றுகூறின் அணி நில்லாது. (தொ. வி. 302 உரை)இச் சொல்லணி மறிநிலை அணி, சொல் மிக்கணி, சொல் எஞ்சணி, சொல் ஒப்பணிஎன நான்கு வகையாம். (தொ. வி. 303)மறிநிலை 5, பொருள்கோள் 8, சொல் மிக்கணி 3, சொல் எஞ்சணி 10, சொல்ஒப்பணி 4, ஆகச் சொல்லணி விரி 30 என்னும் தொன்னூல் விளக்கம். (325)சொல்லணியை மடக்கு, சித்திரகவி என இருவகைப்படுத்தும்தண்டியலங்காரம். (92, 98)

சொல்லணி (2)

பலவகைத் தொடைகளையும் பாட்டடி சீர்களில் அமைத்தல்.அவ்வாறே பலவண்ணங்களையும் பயில அமைத்தல்.எழுத்துநிரல்நிறை, சொல்நிரல்நிறை, சொல்லையும் பொருளை யும் முரண்படநிறுத்துதல், சொல்லும் பொருளும் ஒன்றே பலமுறை தொடர்ந்து வரச்செய்தல்(ஒரு சொல் பலபொருட் படத் தொடர்ந்து வரவேண்டும்; ஒரு பொருளே பலசொல்வடிவத்தில் தொடர்ந்து பின்வரவேண்டும்), ஒரு சொல்லோ சொற்றொடரோ அடியோமீண்டும் வேறு பொருள் பட மடக்குதல், சித்திரக்கவி, எண்ணுமுறையாகத்தொடுத்தல் – என்பனவும் பிறவும் சொல்லணியின்பாற்படும். (எண்ணுமுறையாகத் தொடுத்தல் – எழுகூற்றிருக்கை)(தென். அணி. 47)

சொல்லலங்காரம்

சொல்லணி; சொல்லின்கண் தோன்றும் அணி. அதனைத் தண்டியலங்காரம் மடக்கு,சித்திரகவி என இருபாற்படுக்கும்.

சொல்லிசை அளபெடை

தேற்றப்பொருள், சிறப்புப்பொருள் – இவை குறிக்க வரும் அளபெடைகள்‘இயற்கை அளபெடை’ என்பர் நச்சினார்க் கினியரும் பேராசிரியரும்.எ-டு : அவனேஎ நல்லன்; அவனோஒ கொடியன்(தொ. பொ. 329 பேரா., நச்.)வடமொழிக்கண் அளபெடைகள் சேய்மைவிளி முதலியவற் றுக்கண் அன்றித்தமிழ்மொழியிற் போல இசை குன்றியவழி மொழிக்கண் வருதல் இல்லை.அளபெடையாவது தொல் காப்பியனார் கருத்துப்படி நீரும் நீரும் சேர்ந்தாற்போல்வ தும், கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ் வண்ணம்போல்வதும் அன்று; அது விரலும் விரலும் சேர்ந்தாற் போல்வது. ஆஅழிஎன்பது மூவெழுத்துப் பாதிரி (கூவிளம்) என்று பேராசிரியரும்நச்சினார்க்கினியரும் குறிப்பிட் டுள்ளமை இக்கருத்தைவலியுறுத்தும்.முதனிலைகளொடு து(த்) அல்லது இ சேர்ந்து இறந்தகாலத்தை உணர்த்துதல்தமிழ்வழக்கு.செய் + து = செய்து தட + இ = தடைஇஓடு + இ = ஓடி கட + இ = கடைஇபோகு + இ = போகி கவ + இ = கவைஇகொள் + இ = கொளீஇ பச + இ = பசைஇசெல் + இ = செலீஇ நச + இ = நசைஇ(அகரம் ஐகாரம் ஆயின)ஆதலின் வினையெச்ச விகுதியாகிய இகரம் சேர்ந்தது. சேர்ந்த இகரத்தைக்குறிப்பிட அறிகுறியாய் வரும் இகரத்தைக் கொண்டு பசைஇ முதலிய சொற்களைச்சொல்லிசை அளபெடை என்று குறிப்பிடுதல் சாலாது.பச + இ = பசைஇ; நச + இ = நசைஇநசை என்ற பெயர் வினையெச்சமானதால் அது சொல்லிசை அளபெடை என்றுகூறுதல் சாலாது. ஒருசொல் மற்றொரு சொல் ஆதற்கண் வரும் அளபெடையேசொல்லிசை அள பெடையெனின், குரீஇ என்பதன்கண் உள்ள அளபெடை எவ்வளபெடைஆகும்? அதற்கு வேறொரு பெயரிடல் வேண்டும். நன்னூலார் அளபெடை 21வகைப்படும் என்றார். ஒளகாரம் சொல்லின் இடையிலும் ஈற்றிலும்வாராமையால், அளபெடை 21 வகைப்படுதற்கு வாய்ப்பு இன்றாய், ஆ ஈ ஊ ஏ ஐ ஓஎன்பன முதலிடைகடைகளிலும், ஒளகாரம் முதலி லும் வருதலின் 19 வகையதாகவே,ஏனைய இரண்டு எண் ணிக்கையை நிரப்ப, இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடைஎன்பனவற்றைக் கொள்ளுதல் சாலாது. இன் னிசையும் சொல்லிசையும்மேற்குறிப்பிட்ட 19 வகையுள் அடங்கிவிடும். (எ. ஆ. பக். 41, 42, 43,44)‘உரன சைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரன சைஇ இன்னும் உளேன்’ (குறள். 1263)என அளபெடுத்துச் சொல்லிசை நிறைக்க வருவனவும் கொள்க. சொல்லிசைநிறைத்தலாவது: நசை என்பது ஆசை; ஆசைப்பட்டு என வினையெச்சம்நிறைதற்பொருட்டு நசைஇ என அளபெடுத்து நிற்கும். (நன். 91 இராமா.)வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் என்னுமிவை ஈறு திரிந்துஅளபெடுத்து வருவனவும், தன்வினையைப் பிறவினை யாக்க அளபெடுத்துவருவனவும் சொல்லிசை அளபெடை யாம்.எ-டு : நிறுத்தும் – நி றூஉம் : பெயரெச்சமும் முற்றும் திரிந்து அளபெடுத்தவாறு.செலுத்தி – செ லீஇ, உடுத்தி – உ டீஇ, அளவி – அ ளைஇ என வினையெச்சம் திரிந்து அளபெடுத்த வாறு.துன்புறும், இன்புறும் என்ற தன்வினைகள் துன்புறூஉம் இன்புறூஉம் எனஅளபெடுத்துப் பிறவினைப் பொருள வாயின (குறள். 94) துன்புறும் – தான்துன்புறும்; துன்புறூஉம் – பிறரைத் துன்புறுத்தும்.இவையாவும் சொல்லிசை அளபெடையாம். (நன். 91)

சொல்வகையான் நால்வகைப் புணர்ச்சி

பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடுபெயரும் புணர்வதால், புணர்ச்சி சொல்வகையான் நால்வகைத்து ஆயிற்று.சிறப்பில்லா இடைச் சொற் புணர்ச்சியும் உரிச்சொற்புணர்ச்சியும்சிறுபான்மை எடுத்தோத்தானும் எஞ்சிய புறனடையானும் கொள்ளப்படும். (தொ.எ. 108 நச்)

சோதிடம்

அறம் பொருள் இன்பம் வீடு ஆமாறு சொன்ன நூல்களின் சார்பாக வந்தசோதிடம் என்ற நூலின் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுஉணரப்படும். (யா.வி. பக். 491)

சோபன வாழ்த்து

சோபனம் – மங்கலம். சோபன வாழ்த்தாவது மங்கலப் பாட்டு. (W) (L)

சோரகவி

ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு மற்றவனிடம் கூறிவருபவன்; ‘கள்ளக்கவி’ எனவும்படும்.(இ.வி. பாட். 174)

சோழ நாடு, பாண்டி நாடு இவற்றின்முடிபு

‘ஓரோர் மறுவில் பதம் கெட்டு வரும்’ என்பதனால், சோழன் என நிறுத்திநாடு என வருவித்து, ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து (அகரம்வருவித்துச்) சோழ நாடு என முடிக்க. பாண்டியன் என நிறுத்தி நாடு எனவருவித்து ‘அன்’ என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஒற்றுப் போம்’ என்பதனால்யகரஒற்றை அழித்துப் பாண்டிநாடு என முடிக்க. (நேமி. எழுத். 16 உரை)