ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சொகினம் | சகுனம்; அறம் பொருள் இன்பம் வீடு சொன்ன நூல்களைச் சார்ந்து தோன்றியஇந்நூல் குறிப்பிடும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுஉணரப்படும் என்பது உரை. (யா.வி. பக். 491) |
சொக்கப்ப நாவலர் | பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்கு நல்லுரை கண்டசான்றவர் சொக்கப்ப நாவலர். இவர் காலம் புலப்பட்டிலது. குறிப்பிடும்கனவுக்கால நான்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் பின்வருமாறு:இயற்கைப் புணர்ச்சி – முதல் நாள் : இடந்தலைப்பாடு இரண் டாம் நாள்;பாங்கற் கூட்டம் – மூன்றாம் நாள்; பாங்கிமதி உடன்பாடு – மூன்றாம்நாள்; பாங்கியிற் கூட்டம் – நாலாவது நாள்; ஒரு சார்ப்பகற்குறி -ஐந்தாம் நாள்; பகற்குறி – ஆறாம் நாள்; இரவுக்குறி – ஏழாம் நாள்;இரவுக்குறி – இடையீடு – எட்டாம்நாள்; வரைதல் வேட்கை – 9, 10, 11 ஆம்நாள்; வரைவுகடாதல் – 12, 13, 14 ஆம் நாள்; ஒருவழித் தணத்தல் – 12, 13,14, 15 ஆம் நாள்; வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் – 16ஆம் நாள்தொடங்கி 50ஆம் நாள் முடிய; வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்டு வருதல் -51 ஆம் நாள்; வரைவுமலிவு – 51ஆம் நாள்; அறத்தொடு நிற்றல் – 52ஆம்நாள்; உடன்போக்கும் கற்பொடு புணர்ந்த கவ்வையும் – 53ஆம் நாள்; மீபசி -54ஆம் நாள்; உடன்போக்கு இடையீடு – 55ஆம் நாள்; தன்மனை வரைதல் – 56ஆம்நாள்.எனவே, களவொழுக்கம் தொடங்கியபின் 56ஆம் நாளில் திருமணம் நிகழும்என்பது சொக்கப்பநாவலரது கருத்தாகும். |
சொற்கட்டு | பண்டைய இலக்கியங்களுள் ஒன்றான இதன் பாடலடிகள் சொற்சீரடியின்பாற்படுவன. (யா.வி. பக். 373) |
சொற்களில் ஒற்றும் குற்றுகரமும்எண்ணப்படுதல் | ஒற்றும் குற்றுகரமும் எழுத்தெண்ணப்படா எனச் செய்யுளிய லுள் கூறினமைபற்றிக் கால் மால் கல் வில் நாகு தெள்கு எஃகு கொக்கு கோங்குஎன்பனவற்றை ஓரெழுத்தொருமொழி எனவும், சாத்தன் கொற்றன் வரகு குரங்குஎன்பனவற்றை ஈரெழுத்தொருமொழி எனவும் கூறின், ஆகாது. என்னை யெனில்,செய்யுட்கண் அவை இசை பற்றி எண்ணப்படா எனவும், மொழியாக்கத்தின்கண்பொருள்பற்றி எண்ணப் படும் எனவும் கொள்க. (இ.வி. எழுத். 38 உரை) |
சொற்பொருத்தம் | செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் இரண்டா வது; செய்யுள்முதற்கண் எடுத்த மங்கலச்சொல் விழுமிய பொருள் தன்னிடம் தோன்றநிற்றலோடே, பல்வேறு பொருள் படக் கூறுதலும் வகையுளியுறுதலும்ஈறுதிரிதலுமாகிய குற்றம் மூன்றும் இன்றி, புலவரால் செய்யப்படுவது.ஏற்புழிக் கோடலால், மங்கலச் சொல்லிற்கு ஏனைய பொருத்தங்கள் கருதிஅடைமொழியை முன் புணர்ப்பின் மங்கலச்சொல் சீரின் இடையே வரும்; அவ்வாறுவருவழி அடையடுத்த மங்கலச் சொல்லாகிய முதற்சீர் ஈறு திரிதலும் உண்டு;ஆண்டும் திரியாமையே சிறப்புடையதாவது. (இ. வி. பாட். 12) |
சொல் அந்தாதி மடக்கு | எ-டு :கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரிகாவிரி மலருகக் கரைபொரு மரவமரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும்சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே.‘கயல் ஏர் பெற வரும் கடிபுனல் காவிரி, காவிரி மலர் உகக் கரை பொரும்அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், சிலம்புசூழ் தளிரடி (தலைவி)திருமனைக்கு அயலே’ எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.“கயல்மீன்கள் எழுச்சி பெறப் பெருக்கெடுத்து வரும் நறுமண மிக்கபுனலையுடைய காவிரியாறு, சோலையில் விரிந்த மலர்கள் கீழே உகுமாறுகரையைத் தாக்கும் ஒலி, மரவமரத் தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ளவண்டொலியோடு ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்கும் இடம் சிலம்பு அணிந்தஅணிகளால் சூழப்பட்ட தளிர் போன்ற அடிகளையுடைய தலைவியின் மனைக்குஅருகின்கண்ணேயாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், கயல் காவிரி. மரவம்சிலம்பு என்னும் சொற்கள் அந்தாதியாக வந்தமை சொல்லந்தாதி மயக்காம்.(அந்தாதி மண்டலித்தும் வந்தவாறு.) (தண்டி. 96) |
சொல் இரட்டிக்கும்போது வரும்விகாரம் | ஒன்றன் மிகுதியைக் காட்ட, அதன் பெயர் இரட்டி, முதன் மொழி ஈற்றுஒற்று உளதெனில் கெட்டு, அதன்அயல் உயிர் ஆகாரமாகத் திரிந்து வல்லினம்மிகாமல் வழங்கும்.எ-டு : கோடா கோடி (பல பல கோடி), காலா காலம் (பலபல காலம்),நீதாநீதி, கோணாகோணம், குலாகுலம், தூராதூரம், தேசாதேசம், கருமாகருமம்(தொ. வி. 39 உரை) |
சொல் என்ற பொருட்பெயர் புணருமாறு | சொல் என்பது நெல்லைக் குறிக்கும் சொல். அஃது அல்வழி வேற்றுமைஎன்னும் ஈரிடத்தும் வன்கணம் வரின் லகரம் றகரமாகத் திரிந்துபுணரும்.எ-டு : சொற் கடிது, சொற் சிறிது, சொற் றீது, சொற்பெரிது;சொற்கடுமை, சொற்சிறுமை, சொற்றீமை, சொற் பெருமை (தொ. எ. 371நச்.) |
சொல் ஒப்பணி | இது தொன்னூல் விளக்கம் குறிப்பிடும் சொல் அணிவகை நான்கனுள் ஒன்று.ஒப்புமைபற்றி வருவனவற்றைக் கூறுதல் இதன் இலக்கணமாம். இது திரிபுஇயைபு,ஒழுகிசை, சமம், இயைபிசை என நால்வகைப்படும்.ஒரு பெயரோ ஒருவினையோ பலவேறு உருபு பெற்றும், பலவினையோ பலபெயரோஓர்உருபு பெற்றும் வரத் தொடுப்பது.எ-டு “படை வரவினால் காற்றெனவும், முழக்கத்தால் கடலெனவும்.அச்சத்தால் இடியெனவும், செய் கொலையால் கூற்றெனவும், மதகரி வந்துஎதிர்த்த படையை அழித்தது” என்றற்கண் கூறிய பெயர் களில் ஆல் உருபும்‘என’ என்பதும் பலமுறை மீண்டும் வந்தவாறு.இனிய ஓசை; இயற்றமிழிடத்துப் பெயரும் ஈரெச்சமும் உரிச்சொல்முதலியனவும் பலபல ஒப்ப வந்து பொருந்துதல்.எ-டு: ‘விடாது நறுநெய் பூசி, நீங்காது ஒளிமணி சேர்த்து, மங்காதுமதுமலர் சூடி’ என, இரண்டாம் வேற் றுமைத் தொகைகள் இணைந்து வந்தவாறு.செய்து என்னும் வினையெச்சமும், எதிர்மறை வினையெச்ச மும் ஒப்பவந்தவாறு. நெய்பூசி, மணிசேர்த்து, மலர் சூடி என்பன இரண்டன் தொகைகள்;இவற்றுள் முன்மொழி பெயராம். நறு, ஒளி, மது என்பன அம்மூன்றுபெயர்க்கும் முறையே அடையாக வந்து உரியாக நின்றவாறு.பற்பல வசனத்து இறுதிமொழிகள் தம்முள் உருவின் ஒப்புமையால் இணைந்துவருதல்.எ-டு : ‘செங்கதிர் நெடுங்கை நீட்டி, மல்கிருள் கங்குல் ஓட்டி,படரொளி முகத்தைக் காட்டி’ என இதன்கண், நீட்டி. ஓட்டி, காட்டி என்பனஓசை ஒப்புமையால் இணைந்து வந்தவாறு.இருமொழி பலமொழிகள் தம்முள் மாத்திரையாலும் ஓரெழுத்தாலும்வேறுபாடுடைய ஆதல் அன்றித் தம்முள் ஒப்ப வருவது.எ-டு : ‘கோடா ராவிப் பாற்குருகேகோடா ராவிப் பாற்குருகே’ – என மடங்கி வருவது.கோடு ஆர் ஆவிப் பால் குருகே – கரை பொருந்திய குளத்தை அடுத்துள்ள,பால் போன்ற நிறத்தையுடைய நாரையே; கோடாரா இப்பால் குருகே – தாம்கவர்ந்த என் வளைகளைத் தலைவர் மீட்டும் தாராரோ? என வருவது. இஃதுஇரண்டடி மடக்கு.இனிச் சமமாகாது, காந்தாரம் > கந்தாரம் > கந்தரம் என, மாத்திரை குறைந்து வேற்றுச்சொல் ஆயின; இதுமாத்திரைச் சுருக்கம் என்னும் சொல்லணி.கமலம் > கலம், மலம் இஃது எழுத்துச் சுருக்கம் என்னும் சொல்லணி. (தொ. வி.320-324) |
சொல் நான்காதல் வேண்டுதலின்இன்றியமையாமை | சொல் நான்காக வேண்டியது என்னையெனில், பெயர்ச்சொல் பொருளைவிளக்குகிறது; வினைச்சொல் பொருளது தொழிலை விளக்குகிறது; இடைச்சொற்கள்இவ்விரண்டற் கும் விகுதியுருபுகளாகியும், வேற்றுமை உவமை சாரியையுருபுகளாகியும், சில வினையாகியும், தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண்சிறப்பு எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை பிரிப்பு கழிவு ஆக்கம்இசைநிறை அசைநிலை குறிப்பு முதலான பொருண்மை விளக்குகின்றன; உரிச்சொல்பெயராம் எனினும், பொருளை விளக்குதலின்றியும் பெரும் பான்மையும்உருபேற்றல் இன்றியும், பொருட்குணத்தையே விளக்குகிறது. உரிச்சொற்களுள்சில வினை போல் வருகின் றன. ஆதலின் சொல்லிற்கு இந்நாற்பகுதியும்இவண்கிடப்பும் வேண்டு மெனவே கொள்க. (நன். 130 மயிலை.) |
சொல் மிக்கணி | வந்த சொல்லே மீண்டுமீண்டும் வருவது சொல்மிக்கணி என்று தொன்னூல்விளக்கம் கூறும். இவ்வணி மடக்கு, இசைஅந்தாதி, அடுக்கு எனமூவகைப்படும்.தனித் தலைப்பிற் காண்க.உரைநடையில் ஒருவசனத்துக்கு ஈறாக நின்ற மொழி மற்றொரு வசனத்துக்குஆதியாக வருவது. உருபு ஒன்றே ஆயினும் வேறே ஆயினும் ஏற்புடைத்தாம்.எ-டு : அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடம்சென்றது; செல்லப் பசிகடுகுதலும்…’‘மாந்தர்க்கெல்லாம் கேள்வியால் அறிவும், அறிவினால் கல்வியும்,கல்வியால் புகழும், புகழால் பெருமையும் விளையுமன்றே?’இது மாறனலங்காரம் முதலியவற்றுள் காரணமாலை அணி யாகக் கொள்ளப்படும்(செய்யுட்கண்ணேயே என்பது). இங்குச் சொல்அமைப்பு நோக்கிச் சொல்மிக்கணிஆயிற்று.சிறப்பினைக் காட்டவும், அன்பு துயர் களிப்பு முதலிய வற்றைத்தோற்றவும் ஒருபொருள் தரும் பல திரிசொற்கள் அடுக்கி வருவது.எ-டு : ‘என்னுயிர் காத்துப் புரந்(து)ஆண்ட என்னிறைவன்தன்னுயிர் பட்(டு)இறந்து சாய்ந்தொழிந்தான் – பின்னுயிராய்மீண்டென்னைக் காத்(து)ஓம்பி மேவிப் புரந்(து)அளிப்பயாண்டையும் யார்யார் எனக்கு?’காத்துப் புரந்து, பட்டு இறந்து, காத்து ஓம்ப, புரந்து அளிப்ப எனஒரு பொருள் தரும் பலதிரிசொற்களும் அடுக்கி வந்தமை இவ்வணியாம். (தொ.வி. 314 – 317) |
சொல் மூவிடத்தும் குறைதல் | சொல் ஒரோவழி அருகிச் செய்யுட்கண் முதல் இடை கடை என்ற மூவிடத்தும்குறைந்து வருதலுமுண்டு. இக்குறைவிகாரம் பகாப்பதத்தின்கண்ணேயேநிகழும்.எ-டு : தாமரை ‘மரை’ என வருவது தலைக்குறை; ஓந்தி ‘ஓதி’ என வருவதுஇடைக்குறை; நீலம் ‘நீல்’ என வருவது கடைக்குறை (நன். 156சங்கர.)(தொகுத்தல் விகாரம் பகுபதத்தின்கண் நிகழ்வது என வேறுபாடறிக). |
சொல்நிலையால் பகுபதம்,பொருள்நிலையால் பகாப்பதம் | பகுதி விகுதி முதலிய உறுப்பும் உறுப்பின் பொருளும் தரும் ஒருசொல்லைப் பகுபதம் என்றமையின், சொன்மை பொருண்மை இன்மை செம்மை சிறுமைநடத்தல் வருதல் முதலிய சொற்கள், பகுதி விகுதியாகப்பகுக்கப்படுதலானும், விகுதிக்கு வேறு பொருளின்றிப் பகுதிப்பொருள்விகுதியாய் நிற்றலானும், சொல்நிலையால் பகுபதம் என்றும் பொருள்நிலையால் பகாப்பதம் என்றும் கொள்ளப்படும். (நன். 132 சங்கர.) |
சொல்லகத்தியம் | கால வெள்ளத்தில் இறந்துபட்ட ஓர் இசைநூல். (சிலப். 8:24அரும்.) (L) |
சொல்லணி (1) | செய்யுளிலுள்ள சொற்கள், பரியாயச் சொற்களாக மாற்றப் படின் அணிகெடுவது சொல்லணி. முல்லை நகைத்தன என்றதற்கு முல்லை பூத்தன என்றுகூறின் அணி நில்லாது. (தொ. வி. 302 உரை)இச் சொல்லணி மறிநிலை அணி, சொல் மிக்கணி, சொல் எஞ்சணி, சொல் ஒப்பணிஎன நான்கு வகையாம். (தொ. வி. 303)மறிநிலை 5, பொருள்கோள் 8, சொல் மிக்கணி 3, சொல் எஞ்சணி 10, சொல்ஒப்பணி 4, ஆகச் சொல்லணி விரி 30 என்னும் தொன்னூல் விளக்கம். (325)சொல்லணியை மடக்கு, சித்திரகவி என இருவகைப்படுத்தும்தண்டியலங்காரம். (92, 98) |
சொல்லணி (2) | பலவகைத் தொடைகளையும் பாட்டடி சீர்களில் அமைத்தல்.அவ்வாறே பலவண்ணங்களையும் பயில அமைத்தல்.எழுத்துநிரல்நிறை, சொல்நிரல்நிறை, சொல்லையும் பொருளை யும் முரண்படநிறுத்துதல், சொல்லும் பொருளும் ஒன்றே பலமுறை தொடர்ந்து வரச்செய்தல்(ஒரு சொல் பலபொருட் படத் தொடர்ந்து வரவேண்டும்; ஒரு பொருளே பலசொல்வடிவத்தில் தொடர்ந்து பின்வரவேண்டும்), ஒரு சொல்லோ சொற்றொடரோ அடியோமீண்டும் வேறு பொருள் பட மடக்குதல், சித்திரக்கவி, எண்ணுமுறையாகத்தொடுத்தல் – என்பனவும் பிறவும் சொல்லணியின்பாற்படும். (எண்ணுமுறையாகத் தொடுத்தல் – எழுகூற்றிருக்கை)(தென். அணி. 47) |
சொல்லலங்காரம் | சொல்லணி; சொல்லின்கண் தோன்றும் அணி. அதனைத் தண்டியலங்காரம் மடக்கு,சித்திரகவி என இருபாற்படுக்கும். |
சொல்லிசை அளபெடை | தேற்றப்பொருள், சிறப்புப்பொருள் – இவை குறிக்க வரும் அளபெடைகள்‘இயற்கை அளபெடை’ என்பர் நச்சினார்க் கினியரும் பேராசிரியரும்.எ-டு : அவனேஎ நல்லன்; அவனோஒ கொடியன்(தொ. பொ. 329 பேரா., நச்.)வடமொழிக்கண் அளபெடைகள் சேய்மைவிளி முதலியவற் றுக்கண் அன்றித்தமிழ்மொழியிற் போல இசை குன்றியவழி மொழிக்கண் வருதல் இல்லை.அளபெடையாவது தொல் காப்பியனார் கருத்துப்படி நீரும் நீரும் சேர்ந்தாற்போல்வ தும், கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ் வண்ணம்போல்வதும் அன்று; அது விரலும் விரலும் சேர்ந்தாற் போல்வது. ஆஅழிஎன்பது மூவெழுத்துப் பாதிரி (கூவிளம்) என்று பேராசிரியரும்நச்சினார்க்கினியரும் குறிப்பிட் டுள்ளமை இக்கருத்தைவலியுறுத்தும்.முதனிலைகளொடு து(த்) அல்லது இ சேர்ந்து இறந்தகாலத்தை உணர்த்துதல்தமிழ்வழக்கு.செய் + து = செய்து தட + இ = தடைஇஓடு + இ = ஓடி கட + இ = கடைஇபோகு + இ = போகி கவ + இ = கவைஇகொள் + இ = கொளீஇ பச + இ = பசைஇசெல் + இ = செலீஇ நச + இ = நசைஇ(அகரம் ஐகாரம் ஆயின)ஆதலின் வினையெச்ச விகுதியாகிய இகரம் சேர்ந்தது. சேர்ந்த இகரத்தைக்குறிப்பிட அறிகுறியாய் வரும் இகரத்தைக் கொண்டு பசைஇ முதலிய சொற்களைச்சொல்லிசை அளபெடை என்று குறிப்பிடுதல் சாலாது.பச + இ = பசைஇ; நச + இ = நசைஇநசை என்ற பெயர் வினையெச்சமானதால் அது சொல்லிசை அளபெடை என்றுகூறுதல் சாலாது. ஒருசொல் மற்றொரு சொல் ஆதற்கண் வரும் அளபெடையேசொல்லிசை அள பெடையெனின், குரீஇ என்பதன்கண் உள்ள அளபெடை எவ்வளபெடைஆகும்? அதற்கு வேறொரு பெயரிடல் வேண்டும். நன்னூலார் அளபெடை 21வகைப்படும் என்றார். ஒளகாரம் சொல்லின் இடையிலும் ஈற்றிலும்வாராமையால், அளபெடை 21 வகைப்படுதற்கு வாய்ப்பு இன்றாய், ஆ ஈ ஊ ஏ ஐ ஓஎன்பன முதலிடைகடைகளிலும், ஒளகாரம் முதலி லும் வருதலின் 19 வகையதாகவே,ஏனைய இரண்டு எண் ணிக்கையை நிரப்ப, இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடைஎன்பனவற்றைக் கொள்ளுதல் சாலாது. இன் னிசையும் சொல்லிசையும்மேற்குறிப்பிட்ட 19 வகையுள் அடங்கிவிடும். (எ. ஆ. பக். 41, 42, 43,44)‘உரன சைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரன சைஇ இன்னும் உளேன்’ (குறள். 1263)என அளபெடுத்துச் சொல்லிசை நிறைக்க வருவனவும் கொள்க. சொல்லிசைநிறைத்தலாவது: நசை என்பது ஆசை; ஆசைப்பட்டு என வினையெச்சம்நிறைதற்பொருட்டு நசைஇ என அளபெடுத்து நிற்கும். (நன். 91 இராமா.)வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் என்னுமிவை ஈறு திரிந்துஅளபெடுத்து வருவனவும், தன்வினையைப் பிறவினை யாக்க அளபெடுத்துவருவனவும் சொல்லிசை அளபெடை யாம்.எ-டு : நிறுத்தும் – நி றூஉம் : பெயரெச்சமும் முற்றும் திரிந்து அளபெடுத்தவாறு.செலுத்தி – செ லீஇ, உடுத்தி – உ டீஇ, அளவி – அ ளைஇ என வினையெச்சம் திரிந்து அளபெடுத்த வாறு.துன்புறும், இன்புறும் என்ற தன்வினைகள் துன்புறூஉம் இன்புறூஉம் எனஅளபெடுத்துப் பிறவினைப் பொருள வாயின (குறள். 94) துன்புறும் – தான்துன்புறும்; துன்புறூஉம் – பிறரைத் துன்புறுத்தும்.இவையாவும் சொல்லிசை அளபெடையாம். (நன். 91) |
சொல்வகையான் நால்வகைப் புணர்ச்சி | பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடுபெயரும் புணர்வதால், புணர்ச்சி சொல்வகையான் நால்வகைத்து ஆயிற்று.சிறப்பில்லா இடைச் சொற் புணர்ச்சியும் உரிச்சொற்புணர்ச்சியும்சிறுபான்மை எடுத்தோத்தானும் எஞ்சிய புறனடையானும் கொள்ளப்படும். (தொ.எ. 108 நச்) |