ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சே என்ற பெயர் புணருமாறு | சே என்பது ஒருவகை மரத்தையும் பெற்றத்தையும் குறிக்கும். அப்பெயர்மரத்தைக் குறிக்குமிடத்து வருமொழி வன்கணம் வரின், உரிய மெல்லெழுத்துமிக்கு முடியும்; பெற்றத்தைக் குறிக்குமிடத்து இன்சாரியை பெறும். இதுவேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணது.எ-டு : சே + கோடு, செதிள், தோல், பூ = சேங்கோடு, சேஞ்செதிள்,சேந்தோல், சேம்பூ – மரம்சே + கோடு, செவி, தலை, புறம் = சேவின்கோடு, சேவின்செவி,சேவின்தலை, சேவின்புறம் – பெற்றம்சே, பெற்றத்தைக் குறிக்குமிடத்து வேற்றுமைப் புணர்ச்சிக்கண்இயல்புகணத்தும் இன்சாரியை பெறும்.சேவினலம், சேவின்வால், சேவினிமில் என்றாற்போலமுடியும்.இயல்புகணத்து இன்பெறாது சேமணி என வருதலுமுண்டு. (தொ. எ. 278,279 நச். உரை)அல்வழிப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்,சேக் கடிது, சேச் சிறிது, சேத் தீது, சேப் பெரிது என வல்லெழுத்துமிக்கும், இயல்புகணம் வரின்,சே ஞான்றது, சே வலிது, சே வரிது (வகரம் உடம்படுமெய்) என்றாற்போலஇயல்பாயும் புணரும். (274 நச்.) |
சேகாநுப்ராஸம் | இரண்டிரண்டு மெய்கள் உயிர் ஏறப்பெற்று இடைவிடாது மறுத்துவருவது.எ-டு :‘பண்டு பண்டவழ் நாவினொர் பாவைதெம்மண்டு மண்டலத் தோரவை மாழ்கிமன்கொண்ட கொண்டலன் னாய்நின் திருப்பெயர்கொண்டு கண்டனன் கோதைப் புறத்தையே’.இதன்கண் ண், ட் என்பனவற்றுள் டகரத்தின்மேல் உயிரேறிவந்துள்ளது.அநுப்ராசம் – வழி எதுகை (யா. வி. பக். 208). வல்லொற்றை அடுத்துக்கொண்ட மெல்லொற்று வழிஎதுகையை வட நூலார் ‘சேகாநுப்ராஸம்’ என்பர். இஃதுஇணையெதுகை அலங்காரம் என்று மாறன் அலங்காரத்துள் கூறப்பட்டுள் ளது.(பக். 277)சொல்லும் பொருளும் ஒன்றாகவே தொடர்ந்து குறிப்பினால் பொருள்மாறுபடுதல் ‘லாடாநுப்ராஸம்’ (பிரதாபருத்ரீயம் சப்தாலங்கார ப்ரகரணம் -1 (5)) (L) |
சேணீ விருத்தம் | இது வடமொழியில் சிரேணி அல்லது சியேனி என்ற பெயருடையது; அடிக்குப்பதினோர் எழுத்துடையது.1. இடை இலகு, 2. இடைக்குரு, 3. இடைஇலகு என வருவது முதலில் மூன்றுமாத்திரைத் தேமாச்சீர் நான்கும், ஈற்றில் ஐந்தெழுத்துத்தேமாங்காய்ச்சீர் ஒன்றும் புணரும் ஐஞ்சீரடி நான்கு கொண்டதுஇவ்விருத்தம். இத்தகைய பாக்கள் வடமொழியிலேயே உள. இதுஎ-டு : ‘கண்டு சென்று நின்று காலை மீக்கொண்டுபண்டு நல்ல ஆசி மாற்ற மாண்போடுமண்டு போல விண்ட பான்மை உட்கொண்டுகொண்ட நல்ல இன்பு கூட ஏருற்றான்’.எனவரும். இதன்கண் மேற்கூறிய வடமொழியிலக்கணம் முழுதும்பொருந்தியுள்ளது. (வி. பா. பக். 52) |
சேந்தன் திவாகரம் | நிகண்டுகளுள் காலத்தால் முற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் திவாகரர்என்பதும், சேந்தன் என்னும் சிற்றர சனால் இவர் உபகரிக்கப்பட்டார்என்பதும் துணியப்பட்ட செய்திகள். திவாகரர் விநாயகனை வணங்கிப் பாடிநூல் செய்தமையின் சைவசமயத்தராதல் ஒருதலை. தம்மை ஆதரித்த வள்ளலை நூலின்பன்னிரு தொகுதியிலும் இறுதி தோறும் புகழ்ந்து பாடியுள்ளமையும்நூற்பெயரின் முன் மொழியாக அவன்பெயர் வைத்தமையும் இவருடைய செய்ந்நன்றியறிதலைப் புலப்படுத்துவன. சோழநாட்டில் காவிரிக் கரைக்கண் அமைந்தஅம்பர் நகரை ஆண்டு வந்த அக்குறு நில மன்னன் வடமொழி தென்மொழிஇரண்டிலும் புலமை சான்றிருந்தமையும், ஒளவையாரால் போற்றப்பட்டமையும்,கோதண்டம் காண்டீபம் காளியின் முத்தலைச் சூலம் இவற்றைக் கவிபாடிப்போற்றியுள்ளமையும் போன்ற செய்திகள் ஒவ்வொரு தொகுதியிலும்இறுதிச்செய்யுளால் போதருவன.இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகல் கூடும்.இதன்வழியாகவே அடுத்துப் பிங்கலந்தையும் அடுத்துச் சூடாமணி நிகண்டும்அவற்றை அடுத்தே பிற நிகண்டுகளும் தோன்றின. இதன் சூத்திரம் நூற்பாயாப்பிற்று. தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பல்பொருள் கூட்டத்தொருபெயர்த் தொகுதி யீறாகப் பன்னிரு பாகுபாடுகள் இதன் உட்பிரிவுகள். |
சேனாவரையம் | வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் தொல் காப்பியம்சொல்லதிகாரத்திற்கு எழுதியவுரை. அவர் பெய ரால் சேனாவரையம் எனவழங்கப்படும். இலக்கியத்திற்குத் திருக்குறட் பரிமேலழகரது உரைபோல,இலக்கணத்திற்கு இவ் வுரை பெரிதும் பாராட்டப்பெறும். சொற்சுருக்கமும்பொருள் ஆழமும் மிக்க இவ்வுரை, தனித்தவொரு நடைச் சிறப்புடை யது;ஆங்காங்கு வடநூலார் கருத்தை எடுத்துக்காட்டுவது; ஏற்றவிடத்துத்தமிழிலக்கண நெறியைப் பிறழாது எடுத்து ஓதுவது; சூத்திரங்கள்சிலவற்றுக்குப் பொழிப்புரை கூறாது கருத்துரையே கூறிச் செய்வது; ‘இனிஓருரை’ எனச் சூத்திரத்துக்கு மற்றொரு பொருள் உரைப்பதும், ‘இதுவும் ஓர்நயம்’ எனச் சிறப்பினை எடுத்துச் சுட்டு வதும் பிறவும் இவ்வுரையின்தனிச் சிறப்புக்கள். சேனாவரையரது காலம் 14ஆம் நூற்றாண்டின் முற்பட்டதுஎன்பது துணிவு. |
சேனாவரையர் | தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்குப் பிறரினும் சிறக்க உரைவகுத்தஉரையாசிரியர். தமிழ் வடமொழி இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்தவர்.‘வடநூற்கடலை நிலைகண்டு ணர்ந்த சேனாவரையர்’ என்று இவரை மாதவச் சிவஞானமுனிவர் தமது சூத்திர விருத்தியுள் பாராட்டுவர். இவர்காலம் பரிமேலழகர்காலமாகிய 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர் மு.இராகவையங்கார்அவர்கள். |
சேவல்பாட்டு | முருகப்பெருமானுடைய கொடி ஊர்தி ஆகிய கோழிச் சேவலையும், திருமால்ஊர்தி கொடி ஆகிய கருடச் சேவலையும் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது. |