ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
செக்குக்கணை : குற்றியலுகர மாத்திரை | செக்கு + கணை = செக்குக்கணை; செக்கினது கணையமரம் என ஆறாம்வேற்றுமைப்பொருளது. நிலைமொழி இறுதி ககர உகரமாகும் வன்றொடர்க்குற்றியலுகரஈற்றுச் சொல்; வருமொழி ககரமுதல். நிலைமொழியீற்றுக்குற்றியலுகரம் தன் மாத்திரையில் குறைகிறது.எஞ்சிய விளக்கங்களைச் ‘சுக்குக் கொடு : குற்றியலுகர ஓசை அளவு’என்பதன்கண் காண்க. (தொ. எ. 409, 410 இள. உரை 408, 409 நச். உரை) |
செங்கீரை | பிள்ளைத்தமிழாகிய பிரபந்தத்துள் ஆண்பால் பெண்பால் ஆகியஇருபாலுக்கும் பொதுவான பருவங்கள் ஏழனுள்ளும் இரண்டாவது பருவம்.குழந்தை பிறந்து ஐந்தாம் திங்களில் தன் தலையை நிமிர்த்தி முகத்தைஇங்குமங்கும் அசைத்தாடு வதைச் சிறப்பித்துப் பாடும் பகுதி. ஆசிரியச்சந்தவிருத்தம் பத்து அமையும். (இ. வி. பாட். 46) |
செந்தமிழ் இலக்கணம் | வீரமா முனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் பற்றிய இலக்க ணம். இது1730-இல் இலத்தீன் மொழியில் யாக்கப்பட்டது. செந்தமிழ் கற்கும்புறநாட்டு மாணாக்கர்க்குப் பயன்படவே எழுதப்பட்டது. ஆங்கில மொழியிலும்இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, |
செந்தமிழ் மாலை | யாதொரு பொருளைப் பற்றியேனும் 27 வகையாகப் பாடுவ தொரு பிரபந்தம்.“பாவானும் பாவினத்தானும் பாடுவாரு முளர்: நான்கு முதற்பாவானாதல் ஒருபாவினத்தானாதல் பாடுக என்பாரும் உளர்” என்பது பண்டைய குறிப்பு. (பன்.பாட். 306) |
செம்பூட் சேய் | அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் (பா.வி. பக். 104)கூற்றியல் என்னும் நூலாசிரியரும் இவரே என்ப.(இறை. அ. 56 உரை) |
செம்மை, சிறுமை முதலியன பண்புப்பகுதி ஆகாமை | செம்மை கருமை சிறுமை முதலியன உடைப்பொருளவாகிய செம்மையன் – கருமையன்- சிறுமையன் – முதலியவற்றிற் கல்லது, இன்னன் என்று பொருளவாகிய செய்யன்- கரியன் – சிறியன் முதலியவற்றிற்குப் பகுதி ஆகா.விகுதிப்புணர்ச்சிக்கண் குழையன் என்பது போல், செம்மையன் – கருமையன் -சிறுமையன் எனப் புணர்வதல்லது மையீறு கெடாது. வலைச்சி புலைச்சி முதலியன(வலைமை – புலைமை முதலாய வற்றின்) மையீறு கெடுதல் ‘விளம்பிய பகுதிவேறாதலும் விதியே’ என நன்னூலாசிரியர் கூறிய விதியால் அமையும்.பதப்புணர்ச்சிக்கண் கருங்குதிரை என்பது கருமையாகிய குதிரை எனவிரியாமையின், கரு என்பது பண்பல்லது, கருமை என்ற பண்புப்பெயர் நின்றுபுணர்ந்தது என்றல் பொருந்தாது. அப்பண்புப்பெயர் நின்று புணருங்கால்கருமைக்குதிரை எனப் புணர்வதல்லது கருங்குதிரை எனப் புணராது.இவ்வாற்றால், செம்மை கருமை சிறுமை முதலியன பண்புப் பகுதி ஆகாஎன்பது பெறப்படும். (இ. வி. எழுத். 45 உரை) |
செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டு முதல் நீண்டவை | உண் – தின் – கொள் என்னும் வினை முதல்நிலைகள் செயப்படு பொருண்மைஉணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டு, கெட்டவழி முதல் நீண்டுமுறையே ஊண் – தீன் – கோள் – என நிற்பவை போல்வன.ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் நடவை – சேக்கை – உடுக்கை -தொடை – விடை என்றாற் போல்வன வற்றுள் காணப்படும்.ஊண், தீன், கோள் முதலியன முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆதலும் உரிய.(சூ.வி. பக். 33) |
செயற்கை அளபெடை | இசை நிறைத்தற்பொருட்டுச் செய்யுளில் அளபெடுத்து வருவன செயற்கைஅளபெடை எனக் கொள்க.எ-டு : ‘நற்றாள் தொழாஅர் எனின்’ (நன். 91 இராமா.) |
செயற்கை ஈறு இரு வகைத்தாதல் | வட்டக்கல் – சதுரப்பாறை – என்றாற் போல மகரமாகிய ஒற்றீற்றினைஒழித்து (வட்ட, சதுர என) உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும், தாழக்கோல் -தமிழப்பள்ளி – என்றாற்போல (தாழ் + அ + கோல்; தமிழ் + அ + பள்ளி) இடையே(அகரத்தை) எய்துவித்து உயிரீறு ஆக்கிக் கொள்ளுதலும் எனச் செயற்கை யீறுஇருவகைத்தாம். (இ. வி. எழுத். 82 உரை) |
செயல்முறை | பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவுகூறுதல் பற்றி எழுந்த நூல் இது. “கலியுறுப்புக்கு அளவை, செயல்முறையில்கண்டுகொள்க” (யா.வி. பக். 298) முதலாயின வந்தவாறு காண்க. தலையளவுஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி ஆறடித் தரவு,நான்கடித் தாழிசை மூன்று, இரண்டடி அராகம் ஒன்று, பேரெண் இரண்டு,இடையெண் நான்கு, சிற்றெண்எட்டு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என்றஅமைப்பில் பாடப்படு வது செயல்முறையில் சொல்லப்பட்ட தொரு செய்தியாகும்.(யா. வி. பக். 310) |
செயிற்றியம் | பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள்கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின்வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம்மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.)இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர். |
செய்கைச் சூத்திரம் | ‘ணன வல்லினம் வரட் டறவும்’ (நன். 209)எனவும்,‘எழுவா யுருபு திரிபில் பெயரேவினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே’ (295)எனவும்,‘முதல்அறு பெயரலது ஏற்பில முற்றே’ (323)எனவும்வருவன போல்வன செய்கைச் சூத்திரங்கள். (நன். 20 இராமா.) |
செய்கையின் நால்வகைகள் | அகச்செய்கை, அகப்புறச் செய்கை, புறச்செய்கை, புறப்புறச் செய்கைஎன்பன செய்கையின் நால்வகைகள்.நிலைமொழி ஈறு இன்ன இன்னவாறு முடியும் என்பது அகச் செய்கை.நிலைமொழியீறு பெறும் முடிபன்றி, நிலைமொழி யீறு பெற்று வரும் எழுத்துமுதலியவற்றின் முடிபு கூறுவது அகப்புறச் செய்கை. வருமொழிச் செய்கைகூறுவது புறச் செய்கை. நிலைமொழி யீறும் வருமொழிமுதலும் செய்கை பெறாதுநிற்ப, அவ்விரண்டனை யும் பொருத்துதற்கு இடை யில் உடம்படுமெய் போன்றஓர்எழுத்து வருவது போல்வன புறப்புறச் செய்கை. (தொ. எ. 1 நச். உரை) |
செய்யா என்னும் எச்சம் புணர்தல் | செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால உடன்பாட்டு வினையெச்சமும்,செய்யா என்னும் வாய்பாட்டு எதிர்மறைப் பெயரெச்சமும் வருமொழிவல்லெழுத்து வரின், அவ்வல் லெழுத்து மிக்கு முடியும்.எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சென்றான், உண்ணாத் தந்தான்,உண்ணாப் போயினான்.உண்ணாக் கொற்றன், உண்ணாச் சாத்தன், உண்ணாத் தேவன்; உண்ணாப்பூதன் (தொ. எ. 222 நச்.)உண்ணா என்ற வாய்பாடே தொல்காப்பியம் சங்கவிலக்கியம்முதலியவற்றில் காணப்படுகிறது. ‘உண்ணாத’ என ஈறு விரிந்து அகர ஈறாகியசொல் திருக்குறள்காலம் தொட்டே வழக்கில் உள்ளது. ‘உளவரை தூக்காதஒப்புரவாண்மை’(கு. 480) முதலியன காண்க.உண்ணா என்பதே ‘உண்ணாத’ என்றாகின்றது என்பதனை நோக்காது, “உண்ணாதஎன்பது ‘உண்ணா’ என ஈறுகெட்டு நின்றது; அஃது ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சமாம்” என்று கூறுவது வியப்பான செய்தியாம். |
செய்யாத என்ற பெயரெச்சம் புணருமாறு | பண்டு, செய்யா என்ற பெயரெச்ச மறையே செய்யும் – செய்த – என்றஉடன்பாட்டு வாய்பாடுகளுக்கு எதிர்மறையாக வந்தது. அது வன்கணம் வரின்மிக்குப் புணரும்.செய்யா என்பதே பிற்காலத்துச் செய்யாத என ஈறு விரிந்து வந்தது. அதுவன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : உண்ணாத குதிரை, உண்ணாத செந்நாய், உண்ணாத தகர், உண்ணாதபன்றி. (தொ. எ. 210 நச். உரை) |
செய்யான், செய்யேன், செய்யாய் :சொல்லமைப்பு | செய்யான், செய்யேன், செய்யாய் என்பன உடன்பாட்டுப் பொருள்உணர்த்துமிடத்து, செய் + ஆன், செய் + ஏன், செய் + ஆய் என முதனிலையும்இறுதிநிலையுமாய்ப் பகுக்கப்பட்டு நிற்கும். (செய்தலை உடையான்,உடையேன், உடையாய் – எனப் பொருள் செய்க.)செய்யான், செய்யேன், செய்யாய் என்பன எதிர்மறைப் பொருள்உணர்த்துமிடத்து, இடையே எதிர்மறைப் பொருளை உணர்த்த ஆகாரஇடைநிலைபுணரவே, செய் + ஆ + ஆன், செய் + ஆ + ஏன், செய் + ஆ + ஆய் என முதனிலைஇடை நிலை ஈறு எனப் பகுக்கப்படல் வேண்டும். இடைநிலை ஆகார மாதல்,செய்யாது – செய்யாத – தெருளாதான் – அருளாதான் என மெய்முதலாகியவிகுதியொடு புணரும் சொற்களில் காணலாம். செய்யான், செய்யேன், செய்யாய்என உயிர் முதலாகிய விகுதி புணர்வுழி, அவ் ஆகாரம் சந்தி நோக்கிக்குன்றியதே ஆம். (சூ. வி. பக். 32, 33)“எதிர்மறை இடைநிலைகளாவன அல்லும் இல்லும் ஏயும் பிறவுமாம். உண்ணாய்உண்ணேன் என்புழி முறையே எதிர்மறை ஆகாரமும் ஏகாரமும் கெட்டு நின்றனஎனல் வேண்டும்” எனபர் சேனாவரையர். (தொ. சொ. 450)எனவே உண் + ஏ + ஏன் = உண்ணேன் என்றாயிற்று என்பது சேனா.கருத்து.செய்வாய் என்பதன் மறையாகிய ‘செய்யாய்’ எனும் சொல் படுத்தலோசையான்செய் என்று பொருள் தரும் என்பர் நச். (தொ. சொ. 451) |
செய்யுட் கலம்பகம் | பலவகைப் பாடல் திரட்டு. (L) |
செய்யுட் கோவை | எ-டு : சிதம்பரச் செய்யுட் கோவை. நால்வகைப் பாவும் பாவினங்களும்நிரலே அமைக்கப்பட்டு அமைந்த பிரபந்தம். (L) |
செய்யுட்கணம் | பிரபந்தத்தை இயற்றத் தொடங்கும் கவிஞன் செய்யுள் முதற்கண்மேற்கொள்ளத் தரும் நற்கணம் நான்கும், நீக்கத் தகும் தீக்கணம் நான்கும்ஆகிய எட்டும் ஆம். அவை முறையே நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம்(சந்திரகணம்), இயமான (சுவர்க்க, இந்திர) கணம் எனவும், சூரியகணம்,தீக்கணம், வாயு (மாருத) கணம், அந்தர (ஆகாய) கணம் எனவும் பெயர் பெறும்.(திவா. பக். 299; பிங். 1333; இ.வி. பாட். 40) |
செய்யுளுக்கே உரிய விதிகள் | அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டு ‘ஆயிரு திணை’ (தொ. எ. 208 நச்),‘ஊவயினான’ (256) என்றாற்போல வருதலும், பலவற்றிறுதி நீண்டு ‘பலாஅஞ்சிலாஅம்’ என உம்மைத் தொகையாக வருதலும் (213), ஆகார ஈற்றுள்,குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரஈறாகக் குறுகி உகரம் பெற்று (இறா -சுறா – புறா முதலியன) இறவு – சுறவு – புறவு முதலியனவாக வருதலும்(234),இன்றி – அன்றி – என்பன உகரஈறாகி, ‘உப்பின்று’ – ‘நாளன்று’ – எனஅமைந்து வன்கணத்தோடு இயல்பாகப் புணர்தலும் (237),‘அது’ என்ற உகரஈறு வருமொழி ‘அன்று’ என்பது வரின், ஆகாரமாகத்திரிந்து ‘அதாஅன்று’ எனப் புணர்தலும், ஐ வருமிடத்து உகரம் கெட்டு ‘அதைமற்றம்ம’ என்றாற்போலப் புணர்தலும் (258),வேட்கை + அவா = வேணவா என முடிதலும் (288),விண் என வரும் ஆகாயப்பெயர் அத்துச்சாரியை பெற்று விண்ணத்துக்கொட்கும் – விண்வத்துக் கொட்கும் – என்றாற் போலப் புணர்தலும்(305),பொன் என்பது பொலம் எனத் திரிந்து வருமொழி நாற்கணங் களொடும்புணர்தலும் (356),இலம் என்ற உரிச்சொல் படு என்ற வருமொழியொடு புணரும்வழி ‘இலம்படு’என இயல்பாக முடிதலும் (316) ,‘வானவரி வில்லும் திங்களும்’ என்புழி ‘வில்லும்’ எனச் சாரியைஉம் வந்து வானவரி வில்லுள் திங்கள் – என்று வேற்றுமை முடிபாதல்போல்வனவும், கெழு என்ற உரிச்சொல் ‘துறை கேழ் ஊரன்’ என்றாற் போலத்திரிந்து புணர்வதும் (481)தொல்காப்பியனாரான் செய்யுள்முடிபாகக் கூறப்பட்டனவாம். |
செய்யுள் இயல் | ஐந்து இலக்கணங்களும் கூறும் நூல்களுள் யாப்பிலக்கணம் கூறும் பகுதி.தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தில் எட்டாவதாக இவ்வியல் இடம் பெறும்.இச்செய்யுளியலின் தலைமையும் சூத்திரப் பன்மையும் பற்றித் தொல்காப்பியனாரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் முதலியோர்‘செய்யுளியலுடையார்’ என்று குறிப்பர். (யா. வி. பக். 125, 205).யாப்பு நூல்களிலும் சிதம்பரம் பாட்டியலிலும் செய்யுளியல் நால்வகைச்செய்யுள்களையும் அவற்றின் இனங்களையும் கூறும் பகுதியின் பெயராகஅமைகிறது. |
செய்யுள் இறுதிப் போலிமொழி | செய்யுளின் இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல், ‘பொன்னொடுகூவிளம் பூத்தது போன்ம்’ என்றாற் போல, போன்ம் எனத் திரிந்துமுடியும்.செய்யுளின் இடை இறுதிக்கண் வரும் போலும் என்னும் சொல்லும்‘அரம்தின்வாய் போன்ம் போன்ம் போன்ம்பின்னும் மலர்க்கண் புனல்’ (பரிபா. 10 : 97, 98)என்றாற்போல, போன்ம் எனத் திரிந்து வரும். செய்யுளடி இடையில் வரும்போலும் என்னும் சொல்லும்,‘பொன்போன்ம் பல் வெண்முத்தம் போன்ம்’ (மா. அ. பாடல் 160)என்றாற் போல, ‘போன்ம்’ எனத் திரிந்து வரும்.இவற்றை நோக்க, செய்யுளிறுதிச் சொல்லாக வரும் போலும் என்பது பண்டுபோன்ம் எனத் திரிந்தது போல, செய்யுள் இடை இறுதியிலும் அடிஇடைஇறுதியிலும் வரும் போலும் என்ற சொல்லும் ‘போன்ம்’ எனப் பிற்காலத்துத்திரிவதாயிற்று என்பது போதரும்.இதனை யுட்கொண்டு நச். ‘செய்யுளிறுதிப் போலிமொழி’ என்பதனைச்‘செய்யுள் போலிமொழி இறுதி’ என மாற்றிப் பொருள் கொண்டமை உய்த்துணரலாம்.(தொ. எ. 51 நச். உரை) |
செய்யுள் பொருத்தம் | ‘செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்’ காண்க. |
செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் | மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி,கணம் எனக் காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியில் பார்க்கும்பொருத்தம் பத்தாம். அவை மங்கலப் பொருத்தம் முதலாகப் பெயர் பெறும். (இ.வி. பாட். 10) |
செய்யுள் வழுக்கள் | பலரானும் உடன்பட்ட வழக்கொடு நூற்பயன் கொடுக்கும் இன்பத்தினை விட்டுமறுதலையால் புணர்த்தலும், வட வெழுத்தே மிகப்புணர்த்தலும், பழையோர்கூறிய இலக் கணச் சொற்களை விடுத்துக் காலத்திற்கு ஏற்றவாறு கூறும்வழூஉச்சொல் புணர்த்தலும், பொருள் மயக்கமுறக் கூறுத லும் என இவை. (இ.வி. பாட். 126) |
செய்யுள் விகாரங்களைஎழுத்ததிகாரத்தில் கூறுதல் | அல்வழி வேற்றுமைப் புணர்ச்சியால் வரும் விகாரங்கள் தோன்றல்,திரிதல், கெடுதல் என்பன. வலித்தல் மெலித்தல் முதலான ஆறும், ஒருமொழிமூவழிக் குறைதலும் ஆகிய செய்யுள் விகாரங்கள் ஒன்பது. இம்மூன்றும்ஒன்பதும் ஆகிய விகாரங்கள் செய்யுளகத்தே வருதலின், இவ்விரு திறத்தவற்றிடையே வேறுபாடு அறிதற்குச் செய்யுள் விகாரங்களை எழுத்ததிகாரத்தேகூறினார். (நன். 156 சங்கர.) |
செய்யுள் விகாரமும் குறையும் | தனித்த ஒரு மொழியின்கண் வரும் விகாரங்கள் ஒன்பதாம். மெலித்தலும்வலித்தலும் குறுக்கலும் நீட்டலும் தொகுத்த லும் விரித்தலும் அன்றி ஒருமொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலும் ஆம்.வாய்ந்தது என்பது வாய்த்தது – என வலித்தல் விகாரம்.தட்டை என்பது தண்டை – என மெலித்தல் விகாரம்.நிழல் என்பது நீழல் – என நீட்டல் விகாரம்.பாதம் என்பது பதம் – எனக் குறுக்கல் விகாரம்.தண்துறை என்பது தண்ணந்துறை – என விரித்தல் விகாரம்.வேண்டாதார் என்பது – எனத் தொகுத்தல்வேண்டார் விகாரம்.தாமரை என்பது ‘மரையிதழ் – என மொழி முதற்புரையும் அஞ்செஞ் சீறடி’ குறைந்த விகாரம்.யாவர் என்பது யார் – என மொழி இடைக் குறைந்த விகாரம்.நீலம் என்பது ‘நீல் உண்கண்’, – என மொழிக் கடைக்‘நீல் நிறப் பகடு’ குறைந்த விகாரம். (தொ. வி. 37 உரை) |
செய்யுள் விகாரம் ஆறு | செய்யுட்கண் தளையும் தொடையும் நோக்கி நிகழும் விகாரங்களாவனவலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்பனஆறும். இவற்றைத் தனித்தனியே காண்க. (நன். 155) |
செய்விப்பி என்னும் இருமடி ஏவல்பகாப்பதம் | செய் என்னும் ஏவல்வினையை அடுத்து வி, பி – என்னும் இரண்டுவிகுதிகளுள் ஒன்று வரின் செய்வி என்னும் பொருளைப் பெறும்.இவையிரண்டும் ஒருங்கு வரினும், (பி) இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல்தோன்ற மூவராவான் ஒரு கருத்தனைக் காட்டும்.நடப்பி, வருவி, மடிவி முதலாகச் செய்வி என்னும் ஏவல் வினைப்பகாப்பதம் வந்தவாறு.நடத்துவிப்பி, வருவிப்பி, மடிவிப்பி முதலாகவும், நடப்பிப்பி,கற்பிப்பி, முதலாகவும், (வி பி) இரண்டும் இணைந்தும் ஒன்றே (பி)இணைந்தும் ‘செய்விப்பி’ என்னும் ஏவல்மேல் ஏவல் பகாப்பதம் (இருமடிஏவல்) வந்தவாறு. (நன். 137 மயிலை.) |
செருக்களவஞ்சி | போர்க்களத்தினைச் சிறப்பித்துக் கூறும் தனிநிலைச் செய்யுள் வகை.இதன் யாப்பு ஆசிரியம் வஞ்சி என்னும் இவற்றால் அமையும் என்னும் பிரபந்தமரபியல் (39). போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரைஉடலையும், பேயும் பிசாசும் கழுகும் பருந்தும் காகமும் தின்று களித்துஆரவாரமாயிருக்க, பூதமும் பேயும் பாடி ஆட, இங்ஙனம் இருந்த சிறப்பினைப்பாடும் இதனைப் ‘பறந்தலைச் சிறப்புப்பாட்டு’ எனவும் கூறுவர் என்பதுசதுரகராதி. அந்நூல் ஆசிரியப் பாவால் செருக்களத்தைப் பாடுவது என்னும்(இ. வி. பாட். 109.) |
செருக்களவழி | பாட்டுடைத் தலைமகன் புகழ் நிலைபெறக் காரணமாகப் போர்க்களத்தே ஆற்றியவீரச்செயல்களை நேரிசை இன் னிசை பஃறொடை வெண்பாக்களால் புனையும் தொடர்நிலைச் செய்யுள். இது மறக்களவழி எனவும்படும். (பன்.பாட். 315,316). |
செல் என்ற பெயர் புணருமாறு | செல் என்ற பெயர்ச்சொல் மேகம் என்னும் பொருளது. அது நிலைமொழியாக,வருமொழி முதற்கண் வன்கணம் வரின், அல்வழி வேற்றுமை என்னும் ஈரிடத்தும்லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.எ-டு : செல் + கடிது = செற்கடிது (அல்வழி); செல்+கடுமை =செற்கடுமை (வேற்றுமை)சிறிது தீது பெரிது எனவும், சிறுமை தீமை பெருமை எனவும் ஏனையவல்லெழுத்தொடு முறையே இருவழியும் ஒட்டுக. (தொ. எ. 371 நச்.) |
செல்வுழி, சார்வுழி என்ற சொற்கள் | செல் + உழி = செல்வுழி; சார் + உழி = சார்வுழி; இடையே உடம்படுமெய்அன்று என்று கூறும் வகரம் தோன்றியது என்பர் சங்கர நமச்சிவாயர். (நன்.163 உரை)செல்வுழி, சார்வுழி என்பன பிரித்துப் புணர்க்கப்படா, வினைத் தொகையாதலின். அவற்றிடையே வகரம் வந்தது என்று கொள்வது சாலாது என்பர் நச்.(தொ. எ. 140 உரை)செல்வு சார்வு என்பனவே நிலைமொழிகளாதலின், அவை செல்வுழி சார்வுழி எனஇயல்பாகவே புணர்ந்தன. ஆண்டு வகரம் இடையே வரவில்லை என்பது எழுத்ததிகாரஆராய்ச்சி. (எ. ஆ. பக். 150) |
செவிப்புலனாம் எழுத்து | செவிப்புலனாம் எழுத்துக்கள், ‘தனித்துவரல் மரபின’ எனவும்,‘சார்ந்து வரல் மரபின’ எனவும் இருவகைய. தனித்துவரல் மரபின, உயிரும்மெய்யும் என இருவகைய, அவற்றுள் உயிர் குறிலும் நெடிலும் எனஇருவகைப்படும். மெய் வளிநிலையும் ஒலிநிலையும் என இருவகைப்படும். வலிமெலி இடை- என்ற மூவின மெய்களும் வளிநிலைப்பாற்படுவன; புள்ளியொற் றும்உயிர்மெய்யும் ஒலிநிலைப்பாற்படுவன. இனிச் சார்ந்து வரல் மரபின,குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் என மூன்றாம்.(தொ.எ..பக். XL ச.பால.) |