ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா | கொச்சகக் கலிப்பாவின் வகை ஐந்தனுள் ஒன்று. ஆறு முதலிய பலதாழிசையால் நிகழும் பஃறாழிசைக் கொச்சகத்தை நோக்க, தரவினை அடுத்துஇடையிடையே தனிச்சொல் பெற்று, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின்இலக்கணத்தின் வேறுபட்டு மூன்று தாழிசையே பெற்று வரும் கொச்சகம்சிஃறாழிசைக் கொச்சகம் எனப்பட்டது. ஆதலின் இதன் உறுப்புக்கள்(பெரும்பான்மையும் நாலடித் தரவு, இடை யிடையே தனிச்சொல் வரமும்மூன்றடியாக வரும் மூன்று தாழிசை, மீண்டும் ஒரு தனிச்சொல்,(பெரும்பான்மையும்) தரவடியின் மிக்க அடியான் வரும் சுரிதகம் என்பன.(யா. க. 86 உரை) |
சிகண்டி | இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர்; அகத்தியரின் பன்னிருமாணாக்கருள் ஒருவர். (சிலப். உரைச் சிறப்புப். அடியார்க்.) |
சிங்காதனப் பாட்டு | அரசன் தன் ஓலக்கத்தில் அரியணையில் ஐம்பெருங்குழு புடைசூழக்குறுநிலமன்னர் பரவ, பெருஞ்சிறப்புடன் வீற்றிருக்கும் சிறப்பைவிரித்துப் பாடும் பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.(இ. வி. பாட்பக். 505) |
சிங்கிப் பாட்டு | கைகளை முடக்கி விலாஎலும்புகளில் பொருந்துமாறு அடித்துக்கொண்டேகூத்தாடும் மகளிர் குழாத்தினர் அத்துணங்கைக் கூத்தின்போது பாடும்பாடல். சிங்கி – துணங்கைக் கூத்து.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.(இ. வி. பாட். பக். 505) |
சிதம்பரச் செய்யுட் கோவை | 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வ அருள் பெற்ற பெரும் புலவரானகுமரகுருபர அடிகளால் பாடப்பட்ட அரியதோர் இலக்கியம். வைணவ மாறன்பாப்பாவினம் என்ற யாப் பிலக்கணத்தை ஒருபுடை ஒத்தது இது. பாடல்கள்சிவபெருமானைப் போற்றுவன. யாப்பருங்கலக் காரிகையுள் சுட்டப்பட்ட பாப்பாவினம் அனைத்திற்கும் இந்நூலுள் காணப்படும் 84 செய்யுளும் சிறந்தஎடுத்துக்காட்டாவன. செய்யுள்களின் கீழ்க்குறிப்பு அடிகளே வரைந்தவைஎன்பர். அக்குறிப்புக்கள் திட்பநுட்பம் சான்றவை. |
சிதம்பரப் பாட்டியல் | 16ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரால் இயற்றப் பட்ட பாட்டியல்இலக்கணநூல்; 47 எண்சீர்விருத்த நூற்பாக் களையுடையது. உறுப்பியல்,செய்யுளியல், ஒழிபியல், பொதுவியல், மரபியல் என ஐந்து இயல்களையுடையது.முதல் மூன்று இயல்கட்குக் குறிப்புரை உளது. அவ்வுரை காரர் பெயர்தெரிந்திலது. இந்நூல் பாட்டியல் எனப்படினும் செய்யுளிலக்கணத்தையும்முழுதும் சொல்லுகிறது. |
சித்தர் பாடல்கள் யாப்பு | சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை, வண்ணம், ஆனந்தக் களிப்புபோன்றன.ஈரடிகள் அளவொத்து அமைவது சிந்து. சித்தர்தம் சிந்துக்கள்பெரும்பான்மையும் ஈரடிச் செய்யுளாய் நிகழ்வன. ஓரடிக்கும் அடுத்தஅடிக்கும் இடையே ஓசைநிறுத்தம் அமையுமாறு தனிச்சீர் ஒன்று நிகழ்தலும்காணப்படுகிறது. அடிகள் எதுகை பெற்று, அடிப்பகுதியில் மோனை பெற்றுவருதல் இயல்பு. அடிப்பகுதிகள் நாற்சீர் பெற்று நாற்சீர் இரட்டையாகவும், முச்சீர் பெற்று முச்சீர் இரட்டையாகவும், இன்னோ ரன்னவாகச்சிந்தின் அமைப்புச் சிறிது சிறிது வேறுபடுவன உள. ‘குதம்பாய்’ எனவிளியாக வரும் ஓரடிச் சிந்தினின்று இவ்வீரடிச் சிந்து கிளைத்ததுஎன்ப.கும்மியும் அளவொத்த ஈரடி அமைப்பு; வெண்டளை மிக்க எழுசீர் அடி;பாட்டில் அடியெதுகையொடு, பாட்டடியுள் முதலாம் ஐந்தாம் சீர்கள் மோனைத்தொடை அமைய வரும்.எ-டு : கொங்கணர்தம் வாலைக்கும்மி.கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பு தனித்த யாப்பும் இசையமைப்பும்உடையது. எதுகையுடைய அளவொத் திராத ஈரடி கொண்டது பல்லவி. 34 சரணங்கள்தொடர் கின்றன. இவை சிந்துக்கு உரிய தொடையமைதி பெற்றுப் பல்லவியொடுசிறிது வேறுபடுகின்றன. சரணங்கள் முடியுந் தோறும் பல்லவிபாடப்பெறும்.இடைக்காடரின் தாண்டவராயக்கோன் கூற்று கீர்த்தனைத் தோற்றமுடையது.பல்லவி அனுபல்லவியாக எட்டுத் தாழிசைகள் அமைகின்றன; பெரும்பான்மையும்வெண் டளை யாப்பு.அருணகிரியாரது திருப்புகழ் சந்தக் குழிப்புக்கள் அமைந்த வண்ணக்களஞ்சியம் என்ப. (இலக்கண. முன். பக். 100-103) |
சித்திர அகவல் | ‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. |
சித்திர கவி (3) | எழுத்துச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், வினாவிடை, கரந்துறைசெய்யுள், காதைகரப்பு, பிறிதுபடுபாட்டு, நடுவெழுத்தாக்கம்,எழுகூற்றிருக்கை, திரிபங்கி, நிரோட்டம், மாலைமாற்று, சக்கரபந்தம்,கமலபந்தம், தேர்ப்பந்தம், வேல்பந்தம், நாகபந்தம், தேள்பந்தம்,சுழிகுளம், கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோ பத்திரம் என்பனவும்பிறவும் தென்னூல் அணியியல் (50) சுட்டும் சித்திரகவிகளாம். |
சித்திரகவி (1) | பொருட்சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லமைப் பையே குறிக்கோளாகக்கொண்டு சொல்லழகு காணும் விருப்ப முடையோர் உள்ளம் உவகையுறும் வகையில்பாடப்படும் மடக்கும், மிறைக்கவிகளும் சித்திரகவிகளாம். (இ. வி. பாட்.6) |
சித்திரகவி (2) | அருங்கவியாகிய மிறைக்கவி,சித்திரகவி பாடும் புலவன் (இ. வி. பாட். 170) ( L) |
சித்திரப் பா | சித்திரகவி; நான்கு கூடின எல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது வருமாறு:எ-டு :அ) ‘ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்ஈரறம் பயந்த நான்முக அண்ணல் 1+3+2+4=10மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்நால்வகை யோனியுள் இருவினை கடிந்து 3+1+4+2=10முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்நால்வகை அளவையும் இருவகைப் பண்பும் 3+1+4+2=10ஒன்றி யுரைத்த முக்குடைச் செல்வன்ஈரடி பரவினர் என்பபேரா நால்நெறி பெறுகிற் போரே.’ 1+3+2+4=10(திருப்பாமாலை.10)இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப் பா. இதனைநான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்ளலாம்.எ-டு :ஆ) ‘இருவரமாம் எழுநாள் ஆறமர்ந்தான் கோயில் 2+7+6=15ஒருவனையே நாடிய போந்தேம் – ஒருவனும்எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோடு 8+3+4=15ஐந்தலைய நாகத் தவன்’. (திருப்பாமாலை) 1+9+5 = 15இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனைஈசானன் திசைமுதலாக எட்டுத்திசை மேலும் நிறுத்தி நடுவே பின் ஐந்துநிறுத்தி விடுவது. வருமாறு: (செய்தி விளங்கிற்றிலது.) (யா.வி.பக்.543) |
சித்திரவண்ணம் | நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விராய்ச் செய்வது. பல வண்ணம்படுதலின் இதனை சித்திரவண்ணம் என்றார்.எ-டு : ‘சூரல் பம்பிய சிறுகான் யாறேசூரர மகளிர் ஆரணங் கினரேவாரல் வரினே யானஞ் சுவலேசாரல் நாட நீவர லாறே’. (தொ. செய். 22 நச்., வீ.சோ. 142உரை) |
சித்து | இரசவாதிகள் தம் திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச்செய்யப்படும் செய்யுள்; கலம்பக உறுப்புக் களுள் ஒன்று. இரசவாதமாவதுஓர்உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுதல். சித்தர் என்பார் இரும்புமுதலிய இழிந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகங் களாகப்படைக்கும் வல்லமை உடையவர்.எ-டு : ‘பொற்பாவைக்குக் கஞ்சம் பொன்னாக்கிய சித்தரேம்திருமாலுக்(கு) இரும்பைப் பொன்னாக்கினேம்ஈயத்தை வெள்ளியதாக உருக்குவோம்.’வெண்கலத்தைப் பொன்னாக்கிய சித்தர்: பொற்றாமரை மலரைச் செய்துகொடுத்த சித்தர் யாங்களே என்பது.இரும்பைப் பொன்னாக்கினேம் – பெரிய காளீயன் என்னும் பாம்பின்படத்தை(க் கண்ணனுக்கு) நடிக்கும் இடமாச் செய் தோம்; ஈயத்தை வெள்ளியதுஆக உருக்குவோம் – ஈயத்தை நல்ல வெண்ணிறமாகுமாறு உருக்குவோம்.பொற்பாவைக்குக் கஞ்சம் (-வெண்கலத்தைப்) பொன் ஆக்குதல் -திருமகளுக்குப் பொற்றாமரைப் பூவினைக் கொடுத்தல். இவ்வாறு சிலேடையாகமற்றொரு பொருள் அமையப் பாடுதல் சிறப்பு. (திருவரங்கக். 42) |
சிந்தடி | முச்சீர்களைக் கொண்ட ஓரடி – (யா. கா. 12)7 எழுத்து முதல் 9 எழுத்துக்காறும் பெற்றுவரும் அடி. (தொ. செய். 37நச்.) |
சிந்தடி அளவடியால் வெண்பா வருவது | சிந்தடி 7 முதல் 9 முடிய எழுத்துப் பெறுவது.அளவடி 10 முதல் 14 முடிய எழுத்துப் பெறுவது.‘மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டு’ – 7 எழுத்தடி‘இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது’ – 8 எழுத்தடி‘சென்று முகந்து நுதல்சுட்டி மானோர்த்து’ – 9 எழுத்தடி‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு’ – 10எழுத்தடி‘ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்’ – 11எழுத்தடி‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்’ – 12 எழுத்தடி‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ – 13 எழுத்தடி‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்’ – 14 எழுத்தடிஇவையே அன்றிச் சீர்வகை வெண்பாவில்,‘முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம்’ – 15எழுத்தடி‘படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்’ – 16எழுத்தடிஎன்னும் நெடிலடிகளும் சிறுபான்மை வரும்.(எழுத்தெண்ணுகையில்) ஒற்றும் குற்றுகரமும் ஆய்தமும்எண்ணப்படா.) |
சிந்தடி வஞ்சிப்பா | முச்சீரடிகளையுடைய வஞ்சிப்பா; தனிச்சொல் பெற்று.நேரிசைஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :‘பரலத்தம் செலஇவளொடு படுமாயின்இரவத்தை நடைவேண்டா இனிநனியெனநஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர்சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும்ஆங்கண் தெவிட்டினர் கொல்லோஎனவாங்கு,நொதுமலர் வேண்டி நின்னொடுமதுகாமுற்ற ஆடவர் தாமே’. (யா. க. 90 உரை) |
சிந்தம் | ஆரிடப் போலிப் பாவகை நூல்களுள் ஒன்று. குடமூக்கிற் பகவர் செய்தவாசுதேவனார் சிந்தம், அறிவுடைநம்பி செய்த சிந்தம் என்ற சிந்தநூல்களுள்இரண்டு யாப்பருங்கல விருத்தி யுரையுள் கூறப்பட்டுள. முதலாவது ஆரிடச்செய்யுளாகவும் அடுத்தது உறுப்பழி செய்யுளாகவும் சுட்டப்படுகின்றன.(யா. வி. பக். 369, 372) |
சிந்தாமணி | திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் பாடல் ஒன்று பாதிச்சமவிருத்தத்திற்கு எடுத்துக்காட்டாகவும் (பாடல் 1488), கடவுள்வாழ்த்தாகிய முதற்பாடல் நேரசை முதலாய் அடிதோறும் 14 எழுத்துப் பெற்றுவண்ணத்தான் வந்த நாலடிச் செய்யுட்கு எடுத்துக்காட்டாகவும் உரையுள்சுட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516,521) |
சிந்தாமணி யாப்பு | திருத்தக்கதேவர் இயற்றிய விருத்த யாப்பில் அமைந்த சீவகசிந்தாமணிஎன்ற காப்பியத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தம் 1525, கலிவிருத்தம்1291, கலித்துறை 255, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, எண்சீர் ஆசிரியவிருத்தம் 16, வஞ்சித் துறை 16, கலித்தாழிசை 2 , ஆசிரியத் தாழிசை 1என்பன அமைந்துள்ளன. சிந்தாமணியின் கலித்துறை பல மா-மா-கனி-மா-மா-என்றசீர்அமைப்புடன் காப்பியக் கலித்துறை எனச் சிறப்பிக்கப்படும் நிலையில்உள்ளன.காந்தருவதத்தையார் இலம்பகப் பேடி வருணனையில் இரண்டு பாடல்கள்ஓரடிமிக்கு வந்த கொச்சக ஒருபோகுகள். அவை ஈற்றடி மிக்கு வந்தகலித்தாழிசையாகக் கொள்ளப்படு கின்றன.ஆசிரியத்துறை போன்ற ஒரு பாடல் (2578) நிகழ்கிறது.ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் இடையடிகள் மடக்கியும் வரும்இசைப்பாடல்கள் சில காமம் நுதலி வருகின்றன. இவற்றுள் சில கடவுள்வாழ்த்தாகும். (இலக்கணத். முன். பக். 93, 94) |
சிந்தியல் வெண்பா | மூன்றடியால் அமைந்த வெண்பா. இரண்டாமடி தனிச் சொல் பெற்று ஒருவிகற்பத்தானும் இரு விகற்பத்தானும் நிகழும் நேரிசைச் சிந்தியல்எனவும், தனிச்சீர் பெறாது ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும் நிகழும்இன்னிசைச் சிந்தியல் எனவும் இஃது இருவகைப்படும். (யா. கா. 26) |
சிந்தியல் வெண்பா ஓசை கெட்டவெண்டாழிசை | சிந்தியல் வெண்பாச் சிதைந்து தனித்து வருவது வெண் டாழிசையின்ஒருவகை.எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்முன்பு நின்று முனிவு செய்யார்அன்பு வேண்டு பவர்’.இது வெண்பா இலக்கணம் பெரும்பான்மையும் சிதைந்து சிந்தியல்வெண்பாப்போலவே மூன்றடியான் நடந்து, ஈற்றடி முச்சீராய்த் தனித்து வந்தவெண்டாழிசை.(வீ. சோ. 121 உரை) |
சிந்தியல்வெண்பாவின் இனம் | மூன்றடியால் வரும் விருத்தமும் துறையும் தாழிசையும் சிந்தியல்வெண்பாவின் இனம் என்பாரும் உளர். (வீ. சோ. 121 உரை) |
சிந்து | ஈரடி அளவொத்து அமைவது சிந்து (பஞ்ச மரபு). இவ் வடிகளுக்கிடையேதனிச்சீர் அமைவது ஒருவகை. ஒவ்வோர் அடியும் இருபகுப்புற்று இடையேதனிச்சீர் பெறுதலும் உண்டு. முதற்பகுப்புக்கும் இரண்டாம்பகுப்புக்கும் இடையே சிறு ஓசை நிறுத்தம் நிகழ்கிறது. தனிச்சீரால்நிகழ்கின்ற ஓசை நீட்சி சிந்தின் தனிச்சிறப்பு. முன்னிலைப்படுத்தும்நிலையிலும் தொடர்ச்சிதரும் நிலையிலும் பொருள் பொருத்தத்துடன்இத்தனிச்சொல் அமைகிறது.ஈரடி அல்லது இருபகுதி அளவொத்து வருதல் சிறிதே மாறுபட்டு ஓசை சிந்திநிற்றல் இங்கு அமைகிறது. இவ் வோசை சிந்துதலிலும் நிலைத்த அமைப்புண்டு.இவ்வியல் புகளே இலக்கணமாக இப்பா இப்பெயர் பெற்றது.பிறிதொருவகைச் சிந்து அளவொத்த ஈரடிகள் இவ்விரண் டாய்த் துண்டுபட்டுஅவற்றிடையே தனிச்சீர் உடைத்தாய் நாற்சீர் இரட்டை என்ற பெயருடன்அமைவது. ஒவ்வோ ரடிப் பகுதியும் நாற்சீர் பெறுவது இது. இவற்றின்கண்அடிகளின் ஈற்றில் வரும் இருசீரும் இயைபாக அமைகின்றன.அடிப்பகுதிகள் முச்சீர் பெறுவது முச்சீரிரட்டை, இருசீர் பெறுவதுஇருசீரிரட்டை. (சிந்துப் பாடல்களின் சொற்கள் மிருதங்கத் தாளத்தை ஒட்டிஅமைக்கப்பட்டவை; அசைசீர் வரையறைகொண்டு அமைக்கப்பட்டன அல்ல.)(இலக்கணத். முன். பக். 99, 100)சிந்தடி ‘சிந்து’ எனவும்படும். (யா. கா. 12) |
சிந்துப்பாடல் | தமிழ்ப்பாக்கள் இயற்பா, இசைப்பா என இருவகைப்படுவன. இசைப்பாக்களில்,பண்ணுடன் கூடியவையும், பண்ணுடனும் தாளத்துடனும் கூடியவையும் எனஇருவகையுள. பண்ணுட னும் தாளத்துடனும் கூடிய இசைப் பாக்களை வண்ணப்பா,சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி என நான்காகப் பாகுபடுத்த லாம்.இவற்றுள், வண்ணப்பாக்கள் சந்தக்குழிப்புக்களையும், சந்தப்பாக்கள்சந்தமாத்திரைகளையும், சிந்துப்பா உருப்படி என்னும் இருவகையும் -தாளநடைகளையும் – அடிப்படை யாகக் கொண்டுள்ளன. எழுத்துக்களின் ஒலியளவுநீளல் குறுகல்களில் ஓர் ஒழுங்குமுறையையும், மோனை எதுகை என்னும்தொடைகளோடு இயைபுத் தொடையையும், சிறுபான்மை எடுப்பு முடிப்புஉறுப்புக்களையும், மிகுதியான தனிச்சொற்களையும் பெற்று வரும்தனித்தன்மையுடையன சிந்துப் பாடல்கள். இத்தனித்தன்மைகளால் மற்ற இசைப்பாடல்களினின்று இவை வேறுபட்டு நிற்கின்றன.மிகவும் குறுகிய ஒன்றே முக்கால் அடியையுடைய குறளினும் சற்றுநெடியதாய் அளவொத்து இரண்டடியாக நிகழும் பாடல் சிந்து எனப்பட்டது.அசையும் சீரும் தனிச்சொல்லும் முடுகியலும் அடியும் சிந்துப்பாடலில்(இயற்பாவிற்கு அமைந்த யாப்பிலக்கண முறையில் காணாமல்) புதுமுறையில்அறியப்படும். குறிலசையும் நெடிலசையுமென அசை இருவகைத்து. குறிலசைதனிக்குறிலாக நிகழும். குறிலொற்று, நெடில், நெடிலொற்று என இம்முத்திறமாக நெடிலசை நிகழும். தாள அடிப்படையில் சீர்கள் அமைகின்றன. அவைதகிட, தகதிமி, தகதகிட, தகிடதகதிமி – என முறையே மூன்றும் நான்கும்ஐந்தும் ஏழுமாகிய அசைகளால் அமை வன. சிந்துப்பாவில் வரும் தனிச்சொல்அடியில் நிகழும் சீராக வரும்; அடிக்குப் புறம்பாக வாராது. முடுகியலின்சீரமைப்புச் சந்தப்பாடலின் இலக்கணம் பெறும். நான்கு முடுகியல்சீர்கள்ஓரடியில் இடம்பெறும். விரைவு நடையில் வருமவை ஓரசைக்கு இரண்டுயிராகநடப்பதுண்டு. சிந்துப்பா அடிகள் தாள அடிப்படையுடையன. 8, 12, 20, 24சீர்களையுடைய கழிநெடிலடிகளே சிந்துப்பாடலில் பயின்று வரக் காணலாம்.(ஒற்றைப்பட அவை நிலைத்தலில்லை); எத்தனை சீராலும் அடி நடக்கலாம்.நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, வளையல் சிந்து,தங்கச் சிந்து முதலாகச் சிந்து எனப் பெயரிய இசைப்பாடல்கள் பலவுன.(சிந். யாப். 9. 1, 2, 6) |
சிந்துப்பாட்டு (1) | ஆறு முதலிய பல சீர்களால் வரும் இரண்டடிகள் தனிச் சொல் இடையேவரத்தொடுப்பதும், ஈரடிகளின் பின்னர், இரு சீர் முதலாகப் பல சீர்கள்முடுகியல் சந்தத்தொடு வந்து இயையுமாறு தொடுப்பதும்,மோனை எதுகை முதலான தொடை நயம்பட, பலவகைத் தாளக் கொட்டொடு பல அடியாலேதனிச்சொல் இடையே வரத்தொடுப்பதும் என இவை சிந்துப்பாட்டாம்.இச்சிந்துப் பாடல் காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து – என இருவகைப்படும். (இப்பெயர்கள் காரணம் பற்றியவை). அடிதோறும் சீர்ஒத்து வருவனசமனிலைச் சிந்தாம்; சீர் ஒவ்வாது வருவன வியனிலைச் சிந்தாம். (தென்.இசைப். 35) |
சினை என்னும் சொல்லாட்சி | சினையாவது கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறு ஆதலின், ‘குறியதன்இறுதிச் சினை’ (குற்றெழுத்தினை அடுத்து நிற்கும் ஆகார ஈற்றுச்சொல்லின் இறுதியில் நிற்கும் ஆகாரம்) என்புழி, எழுத்தினது கூறு ‘சினை’எனப்பட்டது.‘ முதலும் சினையு ம் பொருள்வேறு படாஅ, நுவலுங்காலைச் சொற்குறிப் பினவே ’ (சொல். வேற். மயங். 6) என்றதனான், ஒன்றற்குச் சினையாவதேபிறிதொன்றற்கு முதலாக வருமாத லின், சொற்றொடரின் சினையாக நிற்கும்சொல்தான் முதலாயவழி, அதற்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து அச்சொற்குச்சினையாம்.‘ யாவென் சினைமிசை உரையசைக்கிளவிக்கு ’ (மொழிமரபு) என்புழி, மியா என்னும் சொற்கு உறுப்பாய் நிற்கும்‘யா’ என்னும் உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது.‘ சுட்டுச்சினை நீடிய ஐஎன்இறுதி ’ (தொகைமரபு 17), ‘சுட்டுச் சினை நீடிய மென்தொடர்மொழியும் ’ (குற்றிய. 22) என்புழி, சுட் டெழுத்தின் மாத்திரையளவு சினைஎனப்பட்டது.‘ நூறென் கிளவி ஒன்றுமுதல்ஒன்பா ற்கு, ஈறுசினை ஒழியா இனஒற்றுமிகுமே ’ (குற்றிய. 67) என்புழி, றகரமெய்யினை ஊர்ந்து நின்ற குற்றுகரம்சினை எனப்பட்டது.இவ்வாறே மொழியிடையிறுதிகளில் ஐகார எழுத்தின் மாற் றெழுத்துக்களாகவரும் அய் என்பதும் மொழியின் உறுப்பாக வருதலின், ‘ஐயென் நெடுஞ்சினை’எனப்பட்டது. (தொ. எ.234 ச.பால.) |
சினை எழுத்து | ஒரு சொல்லுக்கு இடைகடைகளில் உறுப்பாய் வரும் எழுத்துக்கள்சினையெழுத்துக்களாம். (சொல்லின் முதற்கண் வரும் எழுத்துச் சினைஎனப்படாது. அதனை ‘முதல்’ என்றலே மரபு).எ-டு : ‘யாஎன் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ (தொ.எ. 34)‘ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ (எ. 56)குறில் நீண்டவிடத்துச் ‘சினை நீடல்’ எனவும், நெடில் குறுகியவிடத்துச் ‘சினை கெடல்’ எனவும் கூறும் மரபுண்டு.எ-டு : ‘சுட்டுச்சினை நீடிய ஐ என் இறுதி’ (159 நச்.)‘சுட்டுச்சினை நீடிய மென்தொடர் மொழி’ (427 நச்.)‘குறியதன் இறுதிச் சினைகெட’ (234 நச்.) |
சினை நீடல் | நெட்டெழுத்துக் குற்றெழுத்தாதலைச் ‘சினை கெடல்’ என்றாற் போலக்குற்றெழுத்து நெட்டெழுத்தாதலைச் ‘சினை நீடல்’ என்ப.‘ சுட்டுச்சினை நீடிய இறுதி’ (தொ. எ. 159 நச்.) ஆண்டை, ஈண்டை, ஊண்டை – என்பன. இவற்றுள்முதலெழுத்து அ இ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள்ஆகும்.‘ சுட்டு ச்சினை நீடிய மென்தொடர்மொழி ’ (427 நச்.) ஆங்கு, ஈங்கு, ஊங்கு என்பன. இவற்றுள் முதலெழுத்து அஇ உ என்ற சுட்டுக்களின் நீட்டமாகிய நெடில்கள் ஆகும்.சொல்லில் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக் களைச் ‘சினை’ என்றல்‘ஐ என் நெடுஞ்சினை’, ‘ஈறுசினை ஒழியா’ (56, 472 நச்.) முதலியஇடங்களிலும் காணலாம். |
சினைப்பெயர்ப் பகுபதம் | தாளான், தாளாள், தாளார், தாளது, தாளன, தாளேன், தாளேம், தாளாய்,தாளீர் என இவ்வாறு வருவன ‘இவ் வுறுப்பினை யுடையார்’ என்னும்பொருண்மைச் சினைப் பெயர்ப் பகுபதம். (தாள் என்னும் சினைப்பெயர் அடியாகஇப்பெயர்ப்பகுபதங்கள் தோன்றின). (நன். 133 மயிலை.) |
சின்: புணருமாறு | சின் என்ற இடைச்சொல் முன்னிலைக்கே சிறப்பாயினும் ஏனையிடத்தும்ஒரோவழி வரும் அசைச்சொல்லாம். (தொ. சொ. 276, 277 நச்.)அது வருமொழி வன்கணத்தொடு புணரும்வழி வேற்றுமைப் பொருட் புணர்ச்சிபோல னகரஒற்று றகரஒற்றாய்த் திரிந்து புணரும்.‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகநா. 7 )என வரும். (தொ. எ. 333 நச். உரை) |
சின்னப்பூ | அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலால் சின்னப்பூ ஆயிற்று.தகுதி பெற்ற தசாங்கத்தினை (மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு,தார், பெயர், கொடி என்னும் இவற்றை)ச் சிறந்த நேரிசை வெண்பாவினால்நூறு, தொண் ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் எண்படப் பாடின் அதுசின்னப்பூவாம். (இ. வி. பாட். 86)வண்ணக ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைகட்கும் சுரிதகத்திற் கும் இடையேவரும் உறுப்பு ‘எண்’ எனப்படும். ஈரடி இரண்டான் வரும் எண். பேரெண்;ஓரடி நான்கான் வருவது சிற்றெண்; இருசீர் எட்டான் வருவது இடையெண்;ஒருசீர் பதினாறான் வருவது அளவெண் எனப்பட்டன. ஆகவே, ஒரு சீராகியமுடிவிற்கு எல்லையாக நிற்கும் அளவெண் ‘சின்னம்’ எனப் பெயர் பெறும்.(தொ. செய். 145 நச்.) |
சின்னூல் | 1. சிறுநூல்; ‘சின்மையைச் சின்னூல் என்றது போல ஈண்டுச் சிறுமையாகக்கொள்க’ (பதிற். 76 உரை)2. நேமிநாதம்; “சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்”(தொண்டை. சத. 32) (L) |
சிரக்விணீ விருத்தம் | வடமொழி விருத்த விசேடம்; அடிக்கு 12 எழுத்துக்களை யுடையது; இடையில்இலகு பெறும் கணங்கள் 4 வருவது; அவற்றை மாத்திரைஅளவுகொண்டுகணக்கிட்டால், அடிக்கு 20 மாத்திரை என ஆம். முதலாவது எடுத்துக்காட்டில் எழுத்தளவிலும் மாத்திரை அளவிலும் வடமொழி விருத்தத்தின் இலக்கணம்முற்றும் அமைந்துள்ளது. இரண் டாவதன்கண் எழுத்தளவு மாறுபடினும்மாத்திரையளவு பொருந்தும். ஒருபுடை ஒப்புமையான் அதுவும் இவ்வகைவிருத்தமே என்ப.எ-டு :அ) கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறைதேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே’. (தே. III 35-7)இஃது ஐந்து மாத்திரைக் கூவிளச்சீரினால் அமையும் நாற்சீரடிநான்கினையுடையது.ஆ) ‘மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுளார்எண்ணுளார் இயலுளார் இசையுளார் திசையுளார்கண்ணுளார் ஆயினார் பகையுளார் கழிநெடும்புண்ணுளார் ஆருயிர்க் கமுதமே போலுளார்’. (கம்பரா. 3788)இஃது ஐந்து மாத்திரைக் கூவிளத்திற்குரிய இடத்தே சில விடத்துக்கருவிளம் அமையும் நாற்சீரடி நான்குடையது. (வி. பா. ஏழாம்பட லம்.23) |
சிறப்பில்லா எழுத்துக்கள் | அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்துக்களாம்.அளபெடை தனக்கென வரிவடிவின்றி நெட்டெழுத்தின் பின்னர் ஓசை நிறைக்கவரும் இனக்குற் றெழுத்தே யாதலின் சிறப்பின்று. உயிர்மெய்புணர்ச்சிக்கண் மொழிமுதலில் மெய்யாகவும், இடையிலும் ஈற்றிலும்உயிராகவும் கொள்ளப்படுதலின், தனக்கெனத் தனிப்பட்ட முறையில் புணர்ச்சிவேறுபாடு இன்மையின், சிறப்புடைத் தன்று. வரிவடிவம் ஒலிவடிவைக்காட்டும் அறிகுறி மாத்திரை யாய், ‘எழுத்து ஓரன்ன பொருள்தெரிபுணர்ச்சி’க்கண் பொருளை அறிவுறுத்தும் ஆற்றலின்றிக் காலம்தோறும் மாறிவருதலின் சிறப்பிற்றன்று. (தொ. எ. 1. இள. உரை) |
சிறப்பில்லாத ஓரெழுத்தொரு மொழிகள் | ‘ஓரெழுத்தொருமொழி’ காண்க. |
சிறப்புக் கருவி | தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் நான்காம் இயலாகிய புணரியலில்கூறப்படுவன செய்கை ஒன்றற்கே உரியவாகலின், அடுத்த ஐந்து இயல்களிலும்கூறப்படும் செய்கையை நோக்க, இப்புணரியலில் கூறப்படுவன யாவும்சிறப்புக்கருவிகளாம். (சூ. வி. பக். 17). |
சிறப்புடைப் பொருளைத் தானெடுத்துமொழிதல் | ஒலியெழுத்துச் சிறப்புடைமையின் எடுத்தோதினார்; என்னை? ‘சிறப்புடைப்பொருளைத் தானெடுத்து மொழிதல்’ என்பது தந்திரவுத்தி ஆகலான். ஒரு சாரார்வேண்டும் உணர்வெழுத்து முதலான விகற்பம் எல்லாம் இவ்வதிகாரப்புறநடையுள் (சூ. 256) காண்க. (நன். 57 மயிலை.) |
சிறப்புடைய மடக்கு | அடி முழுதும் மடக்கி வருதலே மடக்குக்களுள் சிறப்புடைய மடக்காம்.அடி முழுதும் எனவே, இரண்டடி மடக்கி வருவதும், மூன்றடி மடக்கிவருவதும், நான்கடி மடக்குவதும் என்ற மூவகையும் கொள்ளப்படும். (தண்டி.96) |
சிறு நூல் | சூத்திரம் என்னும் ஓர் உறுப்பினையே அடக்கி, ஓத்து படலம் முதலியனஇன்றி வரும் இலக்கண நூல்.எ-டு : இறையனார்களவியல் (பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகைமுதலியனவும் கொள்க.)(சிவஞா. பா.வி.பக். 9) |
சிறுகாக்கைபாடினியம் | இவ்யாப்புநூலினின்று 34 சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியுரைமுதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட் டப்பட்டுள்ளன. சில தொடைவகைகள், சில பாவகைகள், சில இன வகைகள் நீங்கலாக எஞ்சிய செய்திகள்பலவும் இம்முப்பத்து நான்கு நூற்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.இந்நூலாசிரியர் சிறுகாக்கைபாடினியார் பெருங்காக்கைபா டினியார்க்குப்பிற்பட்ட யாப்பு நூலாசிரியர். இவர் காலத்தே தெலுங்குநாடு தமிழகத்தின்வடஎல்லையாயிற்று. |
சிறுகாக்கைபாடினியார் | ‘சிறுகாக்கைபாடினியம்’ காண்க. |
சிறுதேர்ப் பருவம் | ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் இறுதிப்பருவம், பாட்டுடைத்தலைவனாம் பாலன் சிறியதேரை உருட்டி விளையாடும் நிகழ்ச்சியைச்சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தினால் ‘சிறுதேர்உருட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு 10 பாடல்கள்பாடப்படும். |
சிறுபறைப் பருவம் | ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் ஒன்று. (-எட்டாவது).பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும்நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தால்‘சிறுபறை கொட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு பத்துப்பாடல்கள் பாடப்பெறும். |
சிற்றிற்பருவம் | ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் பருவம். சிறுமியர் இழைத்தமணற்சிற்றிலைப் பாட்டுடைத் தலைவனாகிய பாலன் சிதைக்க வருவது கண்டுஅச்சிறுமியர் ‘சிறியேம் சிற்றில் சிதையேலே!’ என்று வேண்டுவதாகப்பத்துச் சந்த விருத்தங்களாற் பாடுவது. |
சிற்றெட்டகம் | அகப்பொருள் பற்றிய ஓர் இலக்கியம். இதன் செய்யுள்கள் ஆசிரியப்பாவான்இயன்றன. பண்டையுரையாசிரியர்களால் மேற்கோளாக இதன் பாடல்கள்காட்டப்பட்டுள்ளன. |
சில என்ற பெயர் ஏனைய பெயர்களொடுபுணருமாறு | சில என்பது ஏனைய பெயர்களொடு புணரும்வழி ஈற்று அகரம் கெட்டும்புணரும்; வருமொழி உயிர் வரின் லகரஒற்று இரட்டும். (மென்கணம் வருவழிலகரம் னகரம் ஆகும்.)எ-டு : சில்காடு, சேனை, தானை, பறை; யானை, வேள்வி; சில்லணி,சில்லிலை.ஈற்று அகரம் கெடாமல் சில காடு – சில சேனை – என்றாற் போல இயல்பாகப்புணர்தலுமுண்டு. (தொ. எ. 214 நச்.)சில + மணி > சில் + மணி = சின்மணி என மென்கணத்தொடு புணருமாறு காண்க. (369நச்.) |
சிலப்பதிகார யாப்பு | சங்க காலத்தனவாகிய பத்துப்பாட்டு எட்டுத் தொகைபோல ஆசிரியம் வெண்பாகலி வஞ்சி பரிபாடல் என்ற யாப்போடு அமையாமல் சிலப்பதிகாரமானதுஉரைபெறுகட்டுரை, உரைப்பாட்டு, கருப்பம், கலி ஆசிரிய இணைப்புப்பா,ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை,கலித்தாழிசை என்ற பாவினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.ஆசிரிய விருத்தம் – கானல்வரி, ஆற்றுவரி முதலியன.கலி விருத்தம் – முரிவரி முதலியன.ஆசிரியத்துறை – கானல்வரியுள் முகமில்வரி, கானல்வரி முதலியன.ஆசிரியத் தாழிசை – ஆய்ச்சியர் குரவையுள் ‘கன்றுகுணிலா’ முதலியமூன்றும்.தரவு கொச்சகம் – ஆய்ச்சியர் குரவையுள் முன்னிலைப் பரவல்,படர்க்கைப்பரவல் முதலியன.கலித்தாழிசை – குன்றக் குரவையுள், சிறைப்புறம் முதலியன.உரைநடை போன்ற சீர்வரையறையின்றிப் பொருள் பொதிந்த சொற்களால் இனியதீவிய நடையில் அமைவது.எ-டு : ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்தவெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்நீங்கியது’.உரைநடை போன்று அடிசீர் என்ற வரையறையின்றி வரும் பாடல்களைப்பொருத்தி யமைப்பது.எ-டு :‘குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச்சென்றுவைகிஅருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்மலைவேங்கை நறுநிழலில் வள்ளிபோல்வீர் மனநடுங்கமுலையிழந்து வந்துநின்றீர் யாவிரோ என முனியாதே’ (சிலப். 24 :1-24)பின் நிகழ்ச்சிக்குரிய செய்தியைத் தாங்கிவரும் பகுதி இது.கலியடியும் ஆசிரிய அடியும் கொள்ளும் சீர்கள் விரவி உரை போல அடிவரையறைசெய்ய இயலாது அமைவதும் உண்டு.எ-டு :‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின்மடக்கண்ணீர் சோருதலும் உறியில் வெண்ணெயுருகாமையும்மறிநுடங்கி யாடாமையு மான்மணிநிலத் தற்றுவீழ்தலும்வருவதோர் துன்பமுண்டென மகளைநோக்கி மனமயங்காதேமண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியும் தான்காணஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் தம்முனாடியவாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கண்பிஞ்ஞையோடாடியகுரவை ஆடுதும் யாமென்றாள் கறவைகன்று துயர்நீங்குக என்னவே.’(சிலப். 17-5)எ-டு :‘என்றுதன் மகளைநோக்கி தொன்றுபடு முறையானிறுத்திஇடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள்குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்கைக்கிளை யுழையிளி விளரி தாரமென,விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். 17-13)இதன்கண் முதலீடியும் கலியடி; ஏனைய ஆசிரியஅடி. |
சிலேடை இணை மடக்குகளில்எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னும் ஓசைவேறுபட உச்சரித்துப்பொருள் வேறுபடுத்தல் | செய்யுளடியில் வெவ்வேறு பொருள் தந்து முதற்சீரும் இரண் டாம் சீரும்மடக்குதல் இணைமடக்காம். அடி அளவடியாகக் கொள்ளப்படும். அம்மடக்குக்கள்சிலேடைப் பொருளொடு வரும்போது வரிவடிவம் ஒன்றாயிருத்தலின். பொருள் வேறுபாட்டிற்கு ஏற்ப ஒலிவடிவத்தை உச்சரிக் கின்ற இடத்தே, பொருள் சிறந்தபகுதியை எடுத்தும், சிறவாப் பகுதியைப் படுத்தும், ஏனைய பகுதியை இடைநிகர்த்ததாயும், வடசொற் களை உரிய ஒலியோடும் உச்சரிக்க வேண்டும்.எ-டு :‘திரிநாட் டிரிநாட் டினவுயி ருய்க்கொண்டஅரிநாட் டரிநாட் டகம்.’இவை இணைஎதுகை.“(ஊழி) திரிநாள் த்ரி நாட்டின் உயிர் உய்யக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டு அகம்’ – ஊழி இறுதியில் உகங்கள் மீளவரும் நாளில் மூன்றுலகிலும்உள்ள உயிர்க்கணங்களை வயிற்றில் வைத்துக் காத்த பாற்கடல் என்னும்இடத்தை யுடைய திருமால் நாட்டிய பதி நிலைபெறச் செய்த அரங்கம்ஆகும்.இதன்கண், ‘திரிநாள் த்ரிநாடு அரிநாட்டு ஹரிநாட்டு’ என ஒலியைப்பொருளுக்கேற்ப மாற்றி ஒலித்தால் எளிதில் பொருள் புலப்படும். (மா. அ.பாடல் 758) |
சிலேடை வெண்பா | முன் இரண்டடிகளும் சிலேடையான் அமைய, பின் இரண் டடிகளிலும் மடக்குப்பயிலப் பாடப்படுவதொரு நேரிசை வெண்பா. பெரும்பான்மையும் இறைவனதுதிருத்தலம் ஒன்றுபற்றி இப்பாடல் வருணனையாக அமையும். பின் னிரண்டடியும்இறைவனது சிறப்பினைப் பாடி அவனது திருத்தலமாவது இஃது என்னும் பொருள்படஅமைய, முன்னிரண்டடியும் அத்திருத்தலத்தின் பெயரைச் சுட்டும். இத்தகுவெண்பாக்கள் 40 முதலாக 100 வரை அமையப் பாடும் பிரபந்தமும்அத்திருத்தலப் பெயருடன் புணர்த்து கலசைச் சிலேடை வெண்பா. திருவரங்கச்சிலேடை வெண்பா முதலாகப் பெயர் பெறும்.எ-டு :‘ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்காவலரைச் சூழும் கலைசையே – மேவும்அரிவையம் பாகத்தான் அரண்ஒருமூன் றெய்தோன்அரிவையம் பாகத்தான் அகம்.’அரிவை அம் பாகத்தான் அரி வை அம்பு ஆகத் தான் அரண் ஒருமூன்றுஎய்தோன் அகம் கலைசையே; ஆவலுடன் பாவலர் காவலரைச் சூழ்வதும், ஆறுகால்வண்டினம் கா அலரைச் சூழ்வதும் ஆகிய தலம் கலைசையே.உமாதேவியை தன் அழகிய வாமபாகமாகக் கொண்டவனும், திருமாலைக் கூரியஅம்பாகக் கொண்டு திரிபுரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிவபெருமானதுதலம் கலைசையே. விருப்பத்தொடு கவிஞர்கள் (பரிசில் பெற வேண்டி) அரசரைவந்து சூழ்வதும் (சூழ்தல் – ஆய்ந்து பாடுதல்), அறு கால்களை யுடையவண்டுகள் சோலைப்பூக்களை(மது அருந்த) வந்து மொய்ப்பதும் ஆகிய தலம்கலைசையே.இப்பாடற்கண் பின்னிரண்டடிகளும் மடக்கணி. இரண்டா மடிக்கண் ‘காவலரைச்சூழும்’ என்பது பிரிமொழிச் சிலேடை. |
சிவஞான முனிவர் | 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெரும்புலவர் வடமொழி தென்மொழிஇரண்டிலும் மிக்க புலமை சான்றவர். இருமொழியிலும் இலக்கிய இலக்கணங்களைநுணுகிப் பயின்றவர். சைவ சித்தாந்தச் சாத்திரப் பயிற்சியிலும்வல்லுநர். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தே சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என் பார்க்கு மயிலம்மையாரிடத்துத்தோன்றிய இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் என்பது. திருவாவடுதுறையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகராம்ஞானசிரியர்பால் சிவதீட்சையும் சைவத் துறவும் சிவஞானயோகி என்னும்தீட்சா நாமமும் பெற்று, சைவ ஆகம நூல்களைக் கற்றுத் தெளிந்து, மெய்கண்டசாத்திரங் களையும் பண்டாரச் சாத்திரங்களையும் அவர்பால் ஐயம் திரிபறக்கற்றார்; வடமொழி தென்மொழி யிரண்டிலும் பெரும்புலமை பெற்றுச்சைவசித்தாந்த வாழ்வே தமது உயிராகக் கொண்டு வாழ்ந்தார்.இலக்கியம் இலக்கணம் தருக்கம் சித்தாந்த சாத்திரம் முதலியன இவர்பால்பாடம்கேட்ட மாணாக்கர் பலராவர். குறிப்பாக அவர்களுள் கச்சியப்பமுனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் முதலாகப் பன்னிருவர் புகழ் மிக்கவர் என்பர்.இப்பெருமானார் இயற்றிய நூல்களும் பண்டை நூல்கள் ஆகியவற்றின்உரைகளும் குறிக்கத்தக்கன: காஞ்சிப் புராணம் முதற்காண்டம். சோமேசர்முதுமொழி வெண்பா, குளத் தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப்பதிற்றுப்பத்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைபிள்ளைத்தமிழ், செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசு வரி பதிகம்,திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, திருத்தொண்டர்திருநாமக் கோவை, பஞ்சாக்கர தேசிகர்மாலை, கம்பராமாயண முதற்செய்யுள்சங்கோத் தரவிருத்தி என்பன இலக்கியங்கள்;தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல்விருத்தியுரைத் திருத்தமாகிய புத்தம் புத்துரை என்பன இலக்கண நூல்உரைகள்:தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும், திராவிட மாபாடியம்எனப்படும் சிவஞானபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்திப்பொழிப்புரை – சுபக்கம், சித்தாந்தப் பிரகாசிகை, அரதத்தாசாரியார் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம்,‘என்னை இப்பருவத்தில்’ என்னும் செய்யுட் சிவசமவாத உரைமறுப்பு,‘எழுத்து’ எனும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம் என்பன. சைவமதச்சார்புடைய, இவரால் இயற்றப்பட்ட பிற நூல்கள். (தமிழ் பக். 169 -172) |