ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ககர மெய் வருக்க மடக்கு | ‘கூக்குக்கிக் காக்காகா!கூக்கக்கு கைக்கொக்கோகூக்கொக்கா கைக்காகாகூக்காக்கைக் கேகாகா’கூ – பூமியைகுக்கிக்கு – வயிற்றிற்குஆக்கு ஆகா – இரையாக்கும் திருமேனியுடையவனே!கூ – பூமியைகக்குகைக்கு ஒ – மீளப் புறத்து உமிழ்தற்கு ஒத்தகோ – கோவே!கூ – பூமியில்கொக்கு – குதிரை (-கற்கி) யாகஆகைக்காகா – அவதரிக்கப் போகின்றவனே!கூ – பூமியைகாக்கைக்கு – பாதுகாப்பதற்குஏகா – இந்நிலவுலகத்திற்குப் பரமபதத்தினின்று வந்தவனே!கா – என்னைக் காப்பாயாக.இப்பாடல் முழுதும் ககரமெய்யும் ககரமெய்யோடு உயிர் கூடியஉயிர்மெய்யுமாக அமைதலின், இது ககரமெய் வருக்க மடக்காம். (மா. அ. பா.762.) |
கடக பந்தம் | கோல நிலமேலழகு கூடு நெடு வீடுற மாமூலம்எனச் சென்று உதவு முன்னோனே! – நீலமணிவண்ணா! வடமலையா! மாதவா! கஞ்சமலர்க்கண்ணா! சரணாகதி.இது, முகப் பின் பூட்டுவாய் தொடங்கி வலமே இரண்டாமறை சென்றுகீழறையினிறங்கி, மறித்து மவ்வறை யின்வழியே மேலறையிலேறிநடுவறையிலிறங்கி யாறா மறைவரை சென்று, அதன்கீழறை யிறங்கி மறித்தும்முன் போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே சுற்றி யிறுதியறைசென்றுமுடியுமாறு காண்க. |
கடக பந்தம் (வேறு) | நாகநக ராகநிதி நாகரிக ராகநிறைஏகநக ராசிஇணை யில்லா – தார்கணிகழ்தென்அரங்கன் ஆளாய சீராளரா ஞானநன்னரங்கர்க் கேஅடியேன் நான்.இது, பூட்டுவாய் நின்று வலப்பக்கமிரண்டாமறைசென்று கீழறையினிறங்கிஅவ்வழியே மேலறையிலேறியிறங்கி வலஞ்சென்று இடையிடையேயுள்ள குண்டுகளாகியநான்கறைகளிலுஞ்சென்று மீண்டுமிறுதியறைசென்று முடியுமாறு காண்க. (இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும் சுத்தபாடந் தோன்றாமையாலும்பந்தத்திற்குப்பொருந்து மாறு இங்குச் சிறிதுவேறுபடுத்தியெழுதப்பட்டிருக்கிறது.) |
கடகண்டு | ஒரு பழைய நாடக நூல். (தொ. பொ. 492 பேரா.)பண்ணத்திக்கு இஃது எடுத்துக்காட்டாகும். |
கடகபந்தம் | ஒருமிறைக்கவி விசேடம்‘நாகநக ராகநிதி நாகரிக ராகநிறைஏகநக ராசி யிணையில்லா – தார்கணிகழ்தென்னரங்க னாளாய சீராள ராஞானநன்னரங்கர்க் கேயடியே னான்’ (மா. அ. பா. 812)இது, பூட்டுவாய்நின்று வலப்பக்கம் இரண்டாம் அறை சென்று கீழ்அறையில்இறங்கி அவ்வழியே மேல் அறையில் ஏறி இறங்கி, வலம்சென்று, இடையிடையேயுள்ளகுண்டுக ளாகிய நான்கு அறைகளிலும் சென்று மேலேறிக் கீழிறங்கி இவ்வாறாகஇறுதிஅறை சென்று முடியுமாறு காண்க.இஃது ஒருவகைக் கடக(b)பந்தம். பிறிதொருவகை மா.அ.பா. 811இல்சொல்லப்பட்டுள்ளது. முகப்பின் பூட்டுவாய் இரண் டிடங்களில்நடுவறையினின்று கீழிறங்கி அவ்வழியே மேலேறிக் கீழிறங்கி வலமாகச் சென்றுமுடிவதாக இப் (b)பந்த அமைப்பு எழுத்துக்கள் அடையும்; இதன்கண்இடையிடையே குண்டுகள் இல. |
கடப்பாடு அறிதல் | கடப்பாடு – தொன்றுதொட்டு வரும் மரபு. கடப்பாடு அறிதல் – |
கடாநிலை | கொற்றவைக்குப் பலியாக மறவர்கள் வீழ்த்தும் கடாவினது நிலையையுரைக்கும் பிரபந்தம்.வடதிசையில் கோவில் கொண்ட கன்னியாகிய கொற்றவைக்கு மன்னர் வீழ்த்தும்கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.வெற்றிபெற வேண்டியோ, வெற்றி பெற்றமைக்குக் கொடை நேர்ந்தோஎருமைக்கடாவை வீழ்த்தும் திறத்தைப் பலபட உரைப்பது. யாப்புவரையாமையால், பெரும்பான்மையும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவதாகக்கொள்க. (பன். பாட்.326,327) |
கடிகை வெண்பா | அரசர் கடவுளர் முதலியோர் தம் அருஞ்செயல்கள் ஒரு கடிகை (-நாழிகை)ப்பொழுதில் நிகழ்ந்தனவாகக் கூறும் பிரபந்த விசேடம். (தொ.வி.283 உரை) |
கடிய நன்னியம் | இது கடிய நன்னியார் என்பவரால் இயற்றப்பட்ட யாப்பு நூல். கைக்கிளைமருட்பாப் பற்றி இவர் இயற்றிய இரண்டு நூற்பாவும், கைக்கிளைஆசிரியப்பாப் பற்றி இவர் இயற்றிய ஒரு நூற்பாவும் ஆகிய மூன்றே இதுபோதுகிட்டியுள்ளன. கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியப்பா நிகழுமிடத்தேஈற்றயலடி முச்சீரான் வரப்பெறாது நாற்சீராக வரப்பெறும் என்பது ஒருநூற்பாக் கருத்து. (யா. வி. பக். 270, 215, 270) |
கடை இரண்டடி மடக்கு | ‘மூன்றாமடி நான்காமடி மடக்கு’ நோக்குக. |
கடை ஐந்து தொடையும் ஆவன | அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கடைமோனை(ஈண்டு அளவடியே கொள்க; பிற தொடை விகற்பத்திற்கும் அவ்வாறே கொள்க.)எ-டு : ‘வளரிளங் கொங்கை வான்கெழு ம ருப்பேபொறிவண் டோதியிற் பாடுமா ம ருளே’அடிதோறும் கடைச்சீர்கண் (முதலெழுத்து அளவொத்து நிற்பஇரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை ஒன்றிவரத் தொடுப்பதுகடைஎதுகை.எ-டு : ‘சுரிதரு மென்குழல் மாலைகள் சூ ட்டினீர்புரிமணி மேகலை ஆரமும் பூ ட்டினீர்அடிதோறும் கடைச்சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத்தொடுப்பது கடைமுரண்.எ-டு : ‘கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதேதடமுலைத் திவளும் தனிவடம் வெளிதே ’அடிதோறும் முதற்சீர்கள் ஈற்றெழுத்து ஒத்துவரத் தொடுப்பதுகடைஇயைபு.எ-டு : ‘ஈத்துவ க்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழ க்கும் வன்க ணவர்’ (குறள் 228)அடிதொறும் கடைச்சீர்கள் அளபெடுத்து வரத் தொடுப்பது கடை அளபெடை.எ-டு : ‘தொடுகடல் துறைதுறை திரிதரும் சுறாஅகருங்கழி கலந்து கலிதரும் கராஅ ’ (யா. க. 39) |
கடைஇணை ஐந்து தொடையும் ஆவன | ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது கடையிணை மோனை.எ-டு : ‘பூந்தார்ச் சிறுகிளி பு லம்பொடு பு லம்ப’ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்களில் (முத லெழுத்துஅளவொத்து நிற்ப இரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை வரத் தொடுப்பதுகடையிணை எதுகை.எ-டு : “வஞ்சியங் கொடியின் வணங்கிய நுணங்கிடை”ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம்சீர்கள் சொல்லானும் பொருளானும்மறுதலைப்படத் தொடுப்பது கடையிணை முரண்.எ-டு : ‘மீன் தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு’ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் சீர்கள் இறுதி ஒத்து வரத்தொடுப்பது கடையிணை இயைபு.எ-டு : ‘புய லும் போ லும் பூங்குழற் பிழம்பே’ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்கள் அளபெடுத்துவரத்தொடுப்பது கடையிணை அளபெடை.எ-டு : ‘மெல்லிணர் நறும்பூ வி டாஅ ள் தொ டாஅ ள்’ (யா. க. 39) |
கடைஇணைத் தொடை | அளவடிக்கண் ஈற்றிரண்டு சீர்களிலும் மோனை, எதுகை, முரண், அளபெடைஎன்னும் தொடை நான்கும் ஒன்றிவரத் தொடுப்பது; இயைபுத்தொடையொன்றும்இறுதிச்சீர் முதலாவதாகக் கொண்டு கணக்கிடப்படுதலின், முதலிருசீர்க்கண்ணும் கடையிணை இயைபு கொள்ளப்படும். (யா. க. 39) |
கடைக்காப்பு | பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு. ‘திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி’ (பெரியபு. திருஞான. 80) (L) |
கடைக்குறை | ஒரு பகாப்பதம் ஈற்றில் குறைந்துநின்று குறையாத சொல்லின் பொருள் |
கடைக்குறை | செய்யுட்கண் சீரமைப்பு முதலியன கருதி ஒரு பகாப்பதம் தனது ஈறுநீங்கப் பயன்படுத்தப்பட்டவழியும், தன் பொருளைத் தவறாதுவெளிப்படுப்பது.எ-டு : ‘நீலுண் துகிலிகை கடுப்ப’நீலம் எனற்பாலது ‘நீல்’ எனக் கடைக் குறைந்தவாறு. (யா. வி. பக்.395) |
கடைக்கூழை | அளவடியுள் முதற்சீரொழிந்த மூன்று சீர்க்கண்ணும் பெறுந் தொடைவகை(காரிகை. ஒழி. 5) |
கடைக்கூழை ஐந்து தொடையும் ஆமாறு | ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் முதலெழுத்துஒன்றிவரத் தொடுப்பது கடைக்கூழை மோனை.எ-டு : ‘தன்னடிச் சி லம்பு சி லம்பொடு சி லம்ப’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் எதுகை ஒன்றிவரத்தொடுப்பது கடைக்கூழை எதுகை.எ-டு : ‘வான்கதிர் வ ட மலி த ட முலை ம ட வரல்’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் மறுதலைப் படத்தொடுப்பது கடைக் கூழை முரண்.எ-டு : ‘காவியங் க ருங் கண் செவ் வாய்ப் பைந் தொடி’ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் மூன்றாம் சீர்கள் இறுதி ஒத்துவரத்தொடுப்பது கடைக்கூழை இயைபு.எ-டு. : ‘குயி லும் பா லும் ஆம்ப லும் மொழியே’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் அளபெடுத்துவரத்தொடுப்பது கடைக்கூழை அளபெடை.எ-டு : ‘விரிமலர் ம ராஅ ம் க ராஅ ம் வி ராஅ ம்’ (யா. க. 39.) |
கடைதலைப்பூட்டு | இது ‘பூட்டுவிற் பொருள்கோள்’ எனவும்படும். அது காண்க. |
கடைதிறப்பு | கதவு திறக்கை. பரணிப் பிரபந்தத்தின் உறுப்புக்களுளொன்று (இ. வி.பாட். 79) (L) |
கடைமடக்கு | ஈற்றடி மடக்கும், ஒவ்வோரடியின் கடைமடக்கும் இம் மடக்கின்கண்அடங்கும். ‘இறுதி மடக்கு’ நோக்குக. |
கடைமூன்று உயிர்களின் நாள் | ஒ, ஓ, ஒள என்னும் இக்கடை மூன்று உயிரெழுத்துக்களுக்கு உரிய நாள்உத்தராடம் ஆம். (இ. வி. பாட். 26) |
கடைமோனை | கடை ஐந்து தொடையும் ஆவன காண்க. |
கடையாகு இன்பா | எல்லாப்பாக்களும் தம்சீரும் தளையும் இன்றி வருவன ‘கடையாகு இன்பா’என்பர் மயேச்சுரர். (யா. க. 92 உரை) |
கடையாகு எதுகை | அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப, இரண்டா மெழுத்து வருக்கம்,நெடில், இனம் ஆகியவற்றுள் ஒன்றான் ஒன்றி வருவது.எ-டு : ‘நீடிணர்க் கொம்பர் குயிலாலத் தாதூதிப்பாடுவண் டஞ்சி அகலும் பருவத்து’இது வருக்க எதுகை; டகர வருக்கம்‘ஆ வா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார்கூ கூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்’இதுநெடில் எதுகை.‘த க்கா ர் தகவிலர் என்ப தவரவர்எ ச்ச த்தாற் காணப் படும்’ (குறள் 114)‘அ ன் பீனும் ஆர்வம் உடைமை, அதுஈனும்ந ண் பெனும் நாடாச் சிறப்பு’ (குறள் 74)‘எ ல் லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொ ய் யா விளக்கே விளக்கே.’ (குறள் 299)இவை முறையே வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஆகிய இன எதுகை.இவை மூன்று திறமும் கடையாகு எதுகையாம். (யா. க. 37 உரை) |
கடையாகு எதுகை வகை | வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை என்பன. (யா. க. 37 உரை) |
கடையாகு மோனை | வருக்கமோனை, நெடில்மோனை, இனமோனை என்பன.எ-டு : ‘பகலே, பல்பூங்கானல் கிள்ளை ஓப்பியும்,பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ’இது வருக்கமோனை‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை’ (முதுமொழிக்.)இது நெடில்மோனை‘ க யலேர் உண்கண் கலுழ நாளும்சு டர்புரை திருநுதல் பசலை பாய’இது (வல்லினமாகிய) இனமோனை (யா. க. 37 உரை) |
கடையிணைத் தொடை | மோனை முதலியவை அளவடியின் ஈற்றிரண்டு சீர்களில் வரத்தொடுக்குந்தொடை. (யா. கா. ஒழி. 5 உரை) |
கட்டளை அடி (1) | கட்டளை – வரையறை; எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடிகட்டளையடியாம். (தொ. செய். 25. பேரா) |
கட்டளை அடி (2) | கட்டளை – வரையறை; வரையறைப்பட்ட சீர்களான் அமைத லின், கட்டளையடிபிறக்கிறது. நால்வகைப் பாவிற்கும் கட்டளையடி வருமாறு.வெண்பாவின் கட்டளையடிக்கு மிக்க எல்லை 14 எழுத்தே ஆயினும் இரண்டுகாய்ச்சீர் அடுத்தடுத்து வருதல் துள்ள லோசையைக் காட்டுதலின்,கட்டளையடிக்கு அது கூடாது.எ-டு : ‘அறிவறிந்தார்த் தேற்றிய க்கா லஞ்சுவ தில்லை’ என, இவ்வடி 14 எழுத்துடையதே யாயினும் காய்ச்சீர் இரண்டுஇடையீடின்றி அடுத்தடுத்து நிகழ்தலின் கட்டளை யடி யாகாது. (தொ. செய்.58 நச்.)கட்டளையாசிரிய அடியில் வெண்சீரும் ஆசிரிய உரிச்சீரும் பொருந்தநிற்றல் இல்லை; நீடு கொடி, உரறு புலி என முன் நிரையீற்றனவாகிய ஆசிரியஉரிச்சீர் இரண்டும் வரலாம்.எ-டு :‘ ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ’ (புறநா. 55)‘ களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை’ (புறநா. 64) (தொ. செய். 24நச்.)நேர்நேர்பு, நேர்நிரைபு என்பன ‘பாதிரி’ போலக் கொள்ளப் பட்டுவருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவதும்.எ-டு. :‘ காரேறு பொருத கண்ணகன் செறுவின்’‘ வானிரைத்து மணந்து ……………..’நிரைநேர்பு ‘கணவிரி’ போலக் கொள்ளப்பட்டு வருஞ்சீர் முதலசையோடுஒன்றுவதும், நிரைநிரைபு வருஞ்சீர் முதலசையோடு (நிரையாக)ஒன்றுவதும்.எ.டு. :‘ வெயிலாடு முசுவின் (குருளை யுருட்டும்) ’ (குறுந். 38)‘ செழும்பயறு கறிக்கும் புண்கண் மாலை’ (குறுந். 338)என இவையெல்லாம் நிரையொன்றிய ஆசிரியத்தளையாம்; ({MĒṞPAṬI} 56நச்.)இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவின் கட்டளையடியாகாது;சீர்வகையடியேயாம்.எ-டு. : ‘எறும்பி யளையிற் குறும்பல் சுனைய’ (குறுந். 12)கட்டளைக் கலிப்பா அடியுள் தேமா புளிமாச் சீர்கள் வருதலில்லை.({MĒṞPAṬI} 25. நச்.)கலியடியில் முதல் மூன்றுசீரும் நிரை முதலாகிய வெண்சீராக நிற்ப,ஈற்றுச்சீர் நேர் முதலாகிய வெண்சீராக வரினும், அது நிரை முதலாகவேகருதப்படும், துள்ளலோசை பிறத்தலான்.எ-டு. ‘அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையால்’ (கலி. 11)({MĒṞPAṬI} 29 நச். )நேர்பு நிரை, நிரைபு நிரை என முதற்சீர் நின்று, பிற முச்சீர் களும்நிரை முதலாகிய வெண்சீராகவரினும், துள்ள லோசையே பிறத்தலின்கட்டளைக்கலியடியாம்.எ-டு : ‘ ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்கும் துறைவகேள்’‘ விளங்குமணி ப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி’({MĒṞPAṬI} 24. நச்.)இனி, நிரையீற்று இயற்சீரும் நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் நிற்ப,நிரை முதலாகிய வெண்சீர் வந்து நிரையாக ஒன்றினும் துள்ளல் ஓசைபிறத்தலின் கட்டளையடியேயாம்.எ-டு : ‘ மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்’‘ ஓங்குநிலை யகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’ ({MĒṞPAṬI} 60. நச்.)இனி, கட்டளை வஞ்சியடி இருசீரான் நடக்கும் சமநிலை வஞ்சியடியே யன்றிமுச்சீரான் நடக்கும் வியநிலை வஞ்சியடி யாகாது. வஞ்சிச்சீரின் மிக்கஎழுத்து ஆறு.1. வஞ்சிச்சீர், தன்முன்னர்தான் வந்தும், 2. நிரை நிரைபு என்றஇயற்சீர் நிற்பத் தன்சீர்வந்தும், 3. தன்முன்னர் வெண்சீர் வந்தும், 4இரண்டு வெண்சீர் வந்தும். 5 ஆசிரிய உரிச்சீர் வந்தும் தூங்கலோசைபிறத்தலின், அவ்வடியெல்லாம் கட்டளையடியே. அவை முறையே வருமாறு :எ-டு : 1. ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்2. திசைதிரிந்து தெற்கேகினும்3. தற்பாடிய தளியுணவின்4. புட்டேம்பப் புயன்மாறி’ (பட். 1 – 4)5. ‘புள்ளுதுயின்று புலம்புகூர்ந்து’ (செய். 22 நச்.)கட்டளையடியின் வேறுபட்டு வருவன சீர்வகை அடியாம். |
கட்டளை அடி இடையின எதுகை | எ.டு :’எ ல் லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொ ய் யா விளக்கே விளக்கு’ (குறள் 299) (தொ. செய். 94.நச்.) |
கட்டளை அடி வருக்கமோனை | எ-டு :‘ க ல்லாதான் ஒட்பம் கழிய நன் றாயினும்கொ ள்ளார் அறிவுடை யார் ‘ (குறள் 404) (தொ. செய். 94.நச்.) |
கட்டளை அடி வல்லினஎதுகை | எ-டு: ‘த க் கார் தகவிலர் என்ப தவரவர்எ ச் சத்தாற் காணப்படும்.’ (குறள் 114) (தொ. செய்.94.நச்.)வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்புநிரை நிரைபுநிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர்கள் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்குஉரியன அல்ல. (தொ. செய். 23. நச்.) |
கட்டளை அடி, சீர்வகை அடி வருக்கமோனை | எ-டு : ‘ வ யங்குகதிர் கரந்த வாடை வைகறைவி சு ம்புரி வதுபோல் வியலிடத் தொழுகி (அகநா. 24)(முதலடி கட்டளை ; ஏனையது சீர்வகை) (தொ. செய். 94 நச்.) |
கட்டளை அடி, சீர்வகை அடிஅளபெடைத்தொடை | எ-டு :‘உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழியென் நெஞ்சு’ (கு. 1200)உறாஅர்க், செறாஅஅய் – கட்டளை அளபெடைத் தொடை.‘பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரைமாஅல் யானையொடு மறவர் மயங்கி’ (கலி.5)பாஅல், மாஅல் – இருவகையடியும் வந்த அளபெடைத் தொடை.(முதலடிக்கட்டளை; ஏனையது சீர்வகை)‘எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்வெஃஃகு வார்க்கில்லை வீடு’எஃஃகு, வெஃஃகு – கட்டளை ஒற்றளபெடை‘கஃஃ றென்னும் கல்லதர்க் கானிடைச்சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’கஃஃ, சுஃஃ – சீர்வகை ஒற்றளபெடை. (தொ. செய்.97. நச்.) |
கட்டளை அடி, சீர்வகை அடிவருக்கஎதுகை | எ-டு :‘வா ரி யும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்சீ ரு டை நன்மொழி நீரொடு சிதறி’இஃது இருவகையும் தொடுத்து வந்த வருக்க எதுகை. (முதலடி கட்டளை;ஏனையது சீர்வகை) (தொ. செய். .94. நச்.) |
கட்டளை அடி, சீர்வகை அடிவல்லினஎதுகை | எ-டு : ‘அ த் தக் கள்வர் ஆதொழு அறுத்தெனபி ற் படு பூசலின் வழிவழி ஓடி’ (அகநா. 7). (தொ.செய். 94.நச்.) |
கட்டளை அடிமோனை | எ-டு : ‘ கா ன மஞ்ஞை யீன்ற முட்டைகா த லின்றி வீசு மந்தி’இஃது ஈரடியும் எழுத்தொத்தலின், தன்னொடு தான்வந்து தொடுத்த கட்டளைஅடிமோனை. ( தொ. செய். 92.நச்.) |
கட்டளை ஆசிரியம் | எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் ஆசிரியம்.(யா. க. பக். 502) |
கட்டளை இணை இயைபு | எ-டு : ‘ஓங்கிய சுரத்தை நீங் கி யே கி ’ (தொ. செய். 96 நச்.) |
கட்டளை இணைமுரண் | ‘ பன்மை சின்மை பற்று விடுதலென்(று) (தொல். செய். 95 நச்.) |
கட்டளை இணைமோனை | எ-டு : ‘ செ ம்முது செ விலியர் பலபா ராட்ட (அகநா. 254) (தொ.செய்.92.நச்.) |
கட்டளை உயிரளபெடைத் தொடை | எ-டு : ‘உ றாஅ ர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்செ றாஅ அ ய் வாழியென் னெஞ்சு’ (குறள் 1200) (தொ.செய். 97.நச்.) |
கட்டளை எழுத்து அடியியைபு | எ-டு : ‘அவரோ வாரார் கார்வந் த ன்றேகொடியேர் முல்லை கடிக்கரும் பி ன்றே ’ (தொ. செய். 96. நச்.) |
கட்டளை ஒரூஉ முரண் | எ-டு :‘ பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே ’ (நாலடி. 5) (தொ. செய். 95 நச்.) |
கட்டளை ஒரூஉ மோனை | எ-டு : ‘ வ டாஅது பனிபடு நெடுவரை வ டக்கும்’ (புறநா.6) (தொ. செய். 32. நச்.) |
கட்டளை ஒற்றளபெடைத் தொடை | ‘எ ஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்வெ ஃஃ கு வார்க்கில்லை வீடு’ (தொ. செய். 97. நச்.) |
கட்டளை முற்று இயைபு | எ-டு : இயற்கை யின் உடைமை யின் முறைமை யின் கிழமை யின் ’(தொ. செய். 96 நச்.) |
கட்டளை முற்று எதுகை | எ-டு : ‘ க ன் னிப் பு ன் னை அ ன் னம் து ன் னும்’ (தொ. செய். 93 நச்.) |
கட்டளை முற்று முரண் | எ-டு : ‘நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல்’ (தொ. செய். 95நச்.) |
கட்டளை முற்று மோனை | எ-டு : ‘ அ ரிதாய அ றனெய்தி அ ருளியோர்க்(கு) அ ளித்தலும்’(கலி. 11) (தொ. செய். 92 நச்.) |
கட்டளை மெல்லின அடி எதுகை | எ-டு : ‘அ ந் தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நி ன் றது மன்னவன் கோல்’ (குறள். 543) (தொ. செய். 94 நச்.) |
கட்டளை மேற்கதுவாய் இயைபு | எ-டு : ‘நீ ரு ம் தீ யு ம் ஆகிய இறைவ னு ம்’ (தொ. செய். 96. நச்.) |
கட்டளை மேற்கதுவாய் எதுகை | எ-டு : ‘கொ ண் டுபா ராட்டுவார் க ண் டிலர்கொல் – ம ண் டி’ (நாலடி 48) (தொ. செய். 95 நச்.) |
கட்டளை மேற்கதுவாய் முரண் | எ-டு : ‘க ண் ணும் என்னுடைக் கதுப்பு ம் தோளும் ’ (தொ. செய். 95 நச்.) |
கட்டளை மேற்கதுவாய் மோனை | எ-டு : ‘ அ ளியென உடையேன்யான் அ வலம்கொண்(டு) அ ழிவலோ’ (கலி. 20) (தொ. செய். 92 நச்.) |
கட்டளை வஞ்சிஅடி | முதற்சீர் ‘மாசேர்காடு ‘ – நேர் நேர் நேர்பு – மூவெழுத்துச்சீராகக் கொண்டு‘கால்காய்ந்தது காம்புநீடி’ 3 + 3 – ஆறெழுத்தடி‘நல்கூர்ந்தது வில்லோர்சுரம்’ 3+4 – ஏழெத்தடி‘வான்பெய்தது மண்குளிர்ப்புற’ 3+5 – எட்டெழுத்தடி‘தேன்பெய்தது செழுநகர்தொறும்’ 3+6 – ஒன்பதெழுத்தடிஎன, ஆறெழுத்து முதல் ஒன்பதெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘மாசேர்சுரம்’ நேர்நேர்நிரை – நாலெழுத்துச் சீராகக்கொண்டு,‘மண்மாய்ந்தென உள்வீழ்ந்தது’ 4+3 – ஏழெழுத்தடி‘விண்மாய்ந்தென மேல்தொடுத்தது’ 4 + 4 – எட்டெழுத்தடி‘காடோங்கிய கல்கெழுசுரம்’ 4 + 5 – ஒன்பதெழுத்தடி‘கோடோங்கிய குறும்பொறைமருங்கு’ 4+6 – பத்தெழுத்தடிஎன, ஏழெழுத்து முதல் பத்தெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘புலி சேர் சுரம்’ நிரைநேர்நிரை – ஐயெழுத்துச் சீராகக்கொண்டு,‘மழைபெய்தென வான்வெள்ளென்று’ 5+3 = எட்டெழுத்தடி. ‘தழைபச்செனத்தண்ணென் காவு’ 5+4 = ஒன்பதெழுத்தடி‘கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்’ 5+5 = பத்தெழுத்தடி‘இமிழ்தூங்கிசை இனச்சுரும்புவர’ 5+6 = பதினோரெழுத்தடிஎன, எட்டெழுத்து முதல் பதினோரெழுத்து முடிய கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘புலிவருசுரம்’ நிரை நிரை நிரை – ஆறெழுத்துச் சீராகக்கொண்டு,‘அமைவிடுநொடி அஞ்சியோர்த்து’ 6+3 – ஒன்பதெழுத்தடி‘கனைகுரலன கானத்தளகு’ 6+4 – பத்தெழுத்தடி‘தினைப்புனத்திதண் அயற்பிரியாது’ 6+5 = பதினோரெழுத்தடி‘மனைக்குறமகள் கடைப்புறந்தரும்’ 6+6 = பன்னீரெழுத்தடிஎன ஒன்பதெழுத்து முதல் பன்னீரெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்து கொள்ளப்படும். இருசீர்வஞ்சியடிக்கே கட்டளை சொல்லப்படும். (தொ. செய். 57 நச்.) |
கட்டளை வல்லின அடி எதுகை | எ-டு : ‘த க் கார் தகவில் ரென்ப தவரவர்எ ச் சத்தாற் காணப்படும்’ (குறள் 114) (தொ. செய். 94நச்.) |
கட்டளை வெண்பா | ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்தொத்து வருவது.எ-டு :‘வெறிகமழ் தன்புறவின் வீங்கி உகளும் (13)மறிமுலை உண்ணாமை வேண்டிப் – பறிமுன்கை (13)அஉ அறியா அறிவில் இடைமகனே! (13)நொஅலையல் நின்ஆட்டை நீ’ (யா. வி. பக் 497) |
கட்டளை வெண்பாவில் வெண்சீர் | வெண்சீர் முதற்சீராய் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளைகட்டளைவெண்பாவிற்கு வேண்டா. அது கட்டளைக்கலி ஓசைக்கே தக்கது. ஆகவே,வெண்சீர் நிற்ப இயற்சீர் வந்து ஒன்றிய வெண்டளையே கட்டளை வெண்பா விற்குஏற்றது.வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளை செப்ப லோசைக்கும்துள்ளலோசைக்கும் ஒப்ப உரியதாகலின் அஃது ஏற்றதன்று. வெண்சீர்இயற்சீரொடு தட்ட வெண்டளையே செப்பலோசைக்கு ஏற்றது. (தொ. செய். 55நச்.) |
கட்டளை, கலம்பகம் வகை | எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் பாடல் கட்டளைப் பாடல் எனவும்,எல்லா அடிகளும் எழுத்து ஒவ்வாது வரும் பாடல் கலம்பகப் பாடல் எனவும்ஒரு சாராரால் வழங்கப் படும். படவே,கட்டளை வெண்பா கலம்பக வெண்பாகட்டளை ஆசிரியம் கலம்பக ஆசிரியம்கட்டளைக் கலி கலம்பகக் கலிகட்டளை வஞ்சி கலம்பக வஞ்சிஎன நாற்பாக்களையும் இரு கூறுபடுத்து வழங்குதலும் உண்டு. (யா. வி.பக். 497. 502.) |
கட்டளைஅடி என்ற பாகுபாடு பொருந்தாமை | நாற்சீரடிகள் யாவும் எழுத்தெண்ணற்குரியவையே என்ப தனை மறந்தபேராசிரியரும் நச்சினார்க்கினியரும், வட மொழியை நோக்கிக் கட்டளைஎன்பதோர் இலக்கணம் கற்பித்துக் கூறுப.வடமொழியுள் ஓரடிக்கண் ஒன்று முதல் இருபத்தாறு எழுத்து வரை கொண்டுநான்கடிகளையும் ஒரே அளவை யாக அமைத்துக் கூறுதல் விருத்தம் என்னும்யாப்பு வகை யாம். சந்தம் தண்டகம் முதலிய யாப்புக்களிலும் எழுத் தெண்ணிஅமைத்தலும் உண்டு. தொல்காப்பியம் எந்த வொரு பாவினையும் நான்கடியாகவரையறை செய்ய வில்லை. கொச்சகக் கலிவகையுள் நான்கடி பெற்று வருவன வும்உள. ஆண்டு இசைநயமும் வண்ணமும் கருதிப் புலவோர் ஓர் அளவையாகச்செய்தலும் உண்டெனினும் அவ்வாறே செய்தல் வேண்டும் என்னும் யாப்புறவுஇல்லை. கட்டளை என்பது இசைத்தமிழுக்குரியதன்றி இயற்றமிழுக்கு உரியதன்று.இருசீர் முச்சீர்களானும் ஐஞ்சீர் முதலாகப் பலசீர்களானும்அமைவனவற்றை இடைக்காலத்தார் அடியெனக் கூறி இலக்கணம் செய்தமை கருதி,நாற்சீரடிகளைக் கட்டளையடி எனப் பிறழ உணர்ந்தனர் உரையாசிரியன்மார்;தொல்காப் பியம் யாண்டும் கூறாத சீர்வகையடி கட்டளையடி என்னும்பெயர்களைத் தாமே இட்டு உரைவிளக்கம் செய்தனர். அது ‘தன்னான் ஒருபொருள்கருதிக் கூறல்’ என்னும் குற்றமாம். (தொ. செய். 44 ச. பால) |
கட்டளைக் கலிக்கு உரிய சீர்கள் | தேமா புளிமா நீங்கலான இயலசை மயங்கிய இயற்சீர் இரண்டு, உரியசைமயங்கிய இயற்சீர் ஆறு – ஆக இயற்சீர்கள் எட்டும், முன் நிரை ஈற்றஆசிரிய உரிச்சீர் இரண்டு, வெண்சீர் நான்கு எனப் பதினான்கும்கலியடிக்கண் உறழும் சீராம். (தொ. செய். 28. நச். உரை) |
கட்டளைக் கலித்துறை | நெடிலடி நான்கான் ஒத்துவரும் பாவின வகை. அடிதோறும் முதற்சீர்நான்கும் வெண்டளை பிறழாமல் கடைச்சீர் ஒன்றும் விளங்காயாக நிகழும்;நேரசையில் தொடங்கும் அடிக்கு எழுத்துப் பதினாறு; நிரையசையில்தொடங்குவதற்குப் பதினேழு. நான்கடியும் ஒரு விகற்பமாகவே வரப்பெறும்.இப்பாவினம் ஏகாரஅசையில் இறுதல் சிறப்பு.எ-டு : குமர சேனாசிரியர் கோவை, தமிழ் முத்தரையர் கோவை,யாப்பருங்கலக் காரிகை.அடிதோறும் எழுத்து எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து,உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகர மும் கொண்டுஎண்ணப்படும். சீரும் தளையும் சிதைய வருமிடத்தே குற்றியலிகரமும்குற்றியலுகரமும் எண்ணப் பறடா.இப்பாவினத்தில் அடிதோறும் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெற்றுவருதல் சிறப்பு.வீரசோழியம் இவ்யாப்பினைத் ‘திலதம்’ என்னும். [ சைவத் திருமுறையும் திவ்விய பிரபந்தமும் ‘விருத்தம்’ என்னும்.நாலாம் திருமுறையுள் பதிகம் 80 முதல் 113 முடியக் காண்க. ‘நம்மாழ்வார்திருவிருத்தம்’ காண்க. ] (வீ. சோ. 128; யா. கா. பாயிரம் உரை.) |
கட்டளைக் கலித்துறை, கலிநிலைத்துறை | இவ்விரண்டிலும் முதற்சீரும் இறுதிச்சீரும் அடிதோறும் மோனைத் தொடைபெற்று வருதல் பொருந்தும் என்ப. இரண்டும் அடிதோறும் ஐஞ்சீர் பெற்ற ஒரேவிகற்பமுடைய நான்கடிப்பாடல். கட்டளைக் கலித்துறை எழுத்தெண்ணிப்பாடப்படுவது. (அறுவகை. யாப்பு 34, 36.) |
கட்டளைக் கலிப்பா | கலிப்பா இனத்துள் ஒன்று. முதல்சீர் மாச்சீரும் பின் மூன்று ஈரசைச்சீரும் கூடியது அரையடியும், அவ்வாறே பின்வரும் நான்கு சீர் அரையடியும்ஆக எண் சீரடி நான்குடையதாய், முதலசை நேரசையாயின் அரையடிக்கு எழுத்துப்பதினொன் றும். நிரையசையாயின் பன்னிரண்டும் பெற்று ஏகாரத்தால் முடிவதுஇவ்வினப்பா. இஃது எழுத்தெண்ணப் பெறுதலால் கட்டளைக் கலிப்பாஎனப்பட்டது. முதற்சீர் மாச்சீரும், ஏனை மூன்றும் கூவிளச்சீருமாகவருவது பெரும்பான்மை. ‘மாஞ்சீர் கலியுட் புகா’ (யா.கா. 40) என்றஇலக்கணம் இதற்குப் பொருந்தாது. (தொ. வி. 236)எ-டு : ‘இல்லை என்ப திலையோர் மருங்கிலேஎவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே’ (காசிக். 90)இது நேரசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி.எ-டு : ‘படுத்த பாயுட னேபிணி மூழ்கினும்பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்’ (காசிக். 24)இது நிரையசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி. |
கட்டளைக் கலியடியில் ஆசிரியஉரிச்சீர் மயங்குதல் | கலித்தளையானாய கட்டளைக் கலியடியில் நேர்பு நிரை, நிரைபு நிரைஎன்னும் ஆசிரியஉரிச்சீர் இரண்டுமே வரும்; ஏனைய நான்கு உரிச்சீர்களும்வாரா.எ-டு : ‘ ஓங்குதிரை அடுக்கம் பாய்ந் துயிர்செகுக்குந்துறைவகேள்’ நேர்பு நிரை‘ விளங் குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல்விளையாடி’ நிரைபு நிரை. (தொ. செய். 24.நச்.) |
கட்டளைக் கலியடியில் இயற்சீர்கள் | தேமா புளிமா நீங்கலான, நிரைநிரை, நேர்நிரை; நேர்பு நேர்,நிரைபுநேர்; நேர் நேர்பு, நேர் நிரைபு; நிரை நிரைபு, நிரை நேர்பு -என்பன எட்டும் கட்டளைக் கலியடிக்கண் வரும் இயற்சீர்கள். (தொ. செய்.25. நச்.) |
கட்டளைக் கீழ்க்கதுவாய் இயைபு | எ-டு :‘பொரு வனர் விடுகணை தகை வனர் எதிர் வனர் ’ (தொ. செய். 90. நச்.) |
கட்டளைக் கீழ்க்கதுவாய் எதுகை | எ-டு : ‘உ ள் ளி னு ள் ளம் வேமே யு ள் ளா(து)’ (குறுந். 102) (தொ. செய். 96. நச்.) |
கட்டளைக் கீழ்க்கதுவாய் முரண் | எ-டு :‘ கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் ’ (நற். 84) (தொ. செய். 95. நச்.) |
கட்டளைக் கீழ்க்கதுவாய் மோனை | எ-டு : ‘ எ ல்லை எம்மொடு கழிப்பி எ ல்லுற’ (தொ.செய்.92.நச்.) |
கட்டளைக் கூழை இயைபு | எ-டு : ‘பொருசமத் தெழு வனர் பொரு வனர் விரை வனர் ’ (தொ. செய். 96.நச்.) |
கட்டளைக் கூழை முரண் | எ-டு : ‘நிறுத்த லி னள வி னெண் ணி னென்றா’ (தொ. சொ. 73. நச்.) (இன்) (தொ. செய். 95.நச்.) |
கட்டளைக் கூழை மோனை | எ-டு : ‘ வா னம் வா ய்த்த வா ங்குகதிர் வரகின்’ (தொ. செய். 92.நச் ) |
கட்டளைக்கலி | எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் ‘கட்டளைக் கலி’ என்றுவழங்குபவர். (யா. வி. பக். 502) |
கட்டளைச் செந்தொடை | எ-டு : ‘நெடுவேள் மார்பின் ஆரம் போலச்செவ்வாய் வானம் தீண்டிமீன் அருந்தும் (அகநா. 180) (தொ. செய்.100 நச்.) |
கட்டளைச் சொல் அடி இயைபு | எ-டு : ‘பரவை மாக்கடல் தொகுதிரை வரவும்பண்டைச் செய்தி இன்றிவன் வரவு ம் ’ (தொ. செய். 96. நச்.) |
கட்டளைப் பொழிப்பு இயைபு | எ-டு : ‘விரிந்தானா மல ராயின் விளித்தாலும் குயி லாயின் ’ (கலி. 28-8) |
கட்டளைப் பொழிப்பு எதுகை | எ-டு :‘பொ ன் னேர் மேனி ந ன் னிறம் சிதைத்தோர்’ (தொ. செய். 93.நச்.) |
கட்டளைப் பொழிப்பு முரண் | எ-டு :‘ எழுநூறு நன்றிசெய்(து) ஒன்று தீ தாயின்’ (நாலடி. 357) (தொ. செய். 95 நச்.) |
கட்டளைப் பொழிப்பு மோனை | எ-டு :‘கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு’(குறள். 393) (தொ. செய். 92. நச்.) |
கட்டுரை எழுத்து | “வல்லார்வாய் கேட்டுணர்க” என்ற யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர்குறிக்கும் பலவகை எழுத்துக்களுள் ஒன்று.(யா. வி. பக். 578.) |
கட்டுரை வகை | 1. புனைந்துரை வகை. (தொ.செய்.123 நச்.)2. பாட்டின்றிப் பேச்சுப் போலத் தொடுக்கப்படுவது (123 பேரா., 119இள,) |
கட்டுரைப் போலி | கத்தியத்தின் வகை யிரண்டனுள் ஒன்று; ஏனையது செய்யுட் போலி.யானைத்தொழில் முதலாயின எல்லாம் கட்டுரைப் போலி என்பனவாம். (வீ. சோ.112 உரை.) |
கணக்கியல் | இந்நூல் எழுத்துக்களின் பிறப்பிடம் பற்றி விரித்துக் கூறஎழுந்ததாம். இதன் நூற்பா ஒன்று மெய்யெழுத்துக்களின் பொதுப்பிறப்பைச்சுட்டுகிறது. (யா. வி. பக். 69) |
கணக்கு | கணக்காவது நூல். மேற்கணக்கு எனவும், கீழ்க்கணக்கு எனவும் அஃதுஇருவகைப்படும்.அகவல் கலிப்பா பரிபாடல் என்னும் இவ்யாப்பால் ஐம்பது முதல் ஐந்நூறுபா எல்லையாக மிகுத்துடன் தொகுப்பன மேற் கணக்காம்; வெண்பாவும் அவ்வாறுதொகுக்கப்படின் கீழ்க் கணக்காம். அடிநிமிர்பு இன்றிச் சில அடிகளாகவெண்டளை யாப்பில் அறம்பொருள் இன்பம் பற்றி அடுக்கி அவ்வத்திறம்படஉரைப்பது கீழ்க்கணக்கின் முழுமை இலக்கணம். (பன். பாட்.344-348)பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கு ஆவன; அறம்பொருள்இன்பம் பற்றிய சங்க மருவிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்றேவழங்கப்படுவன காண்க. |
கணப்பொருத்தம் | செய்யுள் முதல்சீர்க்குப் பொருத்தவகை பத்தனுள் ஒன்று.ஆதியினும் இடையினும் இறுதியினும் முற்றினும் நேரசையும்நிரையசையுமாய் வரின், ஆதிநேர் நீர்க்கணம் எனவும், இடைநேர் தீக்கணம்எனவும், இறுதிநேர் ஆகாய கணம் எனவும், முற்றும் நேர் சுவர்க்ககணம்எனவும், ஆதிநிரை சந்திர கணம் எனவும், இடைநிரை சூரியகணம் எனவும்,இறுதிநிரை வாயுகணம் என வும், முற்றும்நிரை பூகணம் எனவும் ஆகும்.இவற்றுள், முற்று நேரும் முற்றுநிரையும் ஆதிநேரும் ஆதிநிரையும்முதற்சீர்க்குப் பொருத்தம் உடையனவாம்.கணப்பொருத்தம் மூவசைச்சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும். (இ. வி.பாட்.40) |
கணிகம் | இது கலம்பகத்துள் காணப்படும் பலதுறைக் கவிகளிடை ஒன்று. (வீ.சோ. 183உரை) கணநேரத்தில், சித்துக்களில் வல்லவர் தமது திறமையைப்பல்லாற்றானும் வெளிப்படுத்து வதாகக் கூறும் கருத்தமைந்த பாடல் இது.இதனைக் கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய ‘சித்து’ என்று கூறுவர். |
கண்கால் புறம் முதலியன | கண், கால், புறம் – முதலியன பெயராயும் வேற்றுமையுருபாயும் |
கண்டகட்டு | இஃது ஒரு மிறைக்கவி விசேடம் போலும்.“பசுக் கொண்டு போது” என்று சொல்லப் போயினான், சென்று கண்டு மீண்டுவந்து, “அவை உள்ளாயின” என்னில், “போதாவாயின” என்று அவிழ்ப்பது‘கண்டகட்டு’ என்பது யாப்பருங்கல விருத்தியுரை. (இதன்பொருள் தெளிவுறப்புலப் பட்டிலது) (யா. வி. பக். 550) |
கண்ணிமை அளவு | இயல்பாக ஒருமுறை இரு கண்களும் இமைத்தற்கு நிகழும் கால அளவு. இஃது |
கண்படைநிலை | ‘கண்படை கண்ணிய கண்படைநிலை’ (தொ. பொ. 90) என்னும் தொல்காப்பியத்துறைப் பொருளையுட்கொண்டு பாடப்படும் ஒரு பிரபந்தம்; சதுரகராதிசுட்டும் 28ஆம் பிரபந்தம். |
கதி நால்வகை | தேவர் கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரகர் கதி என்பன. இக்கதிநான்கும் எழுத்துக்கட்குக் கொள்ளப்படும். செய்யுள் முதன் மொழிக்குமுதலிரு கதியும் பொருந்தும்; ஏனையிரண்டும் விலக்கப்படும். (இ. வி.பாட். 38, 39) |
கதிப் பொருத்தம் | செய்யுள் முதல்மொழிக்குப் பொருந்தும் கதிகள் தேவர் கதியும்,மக்கட்கதியும் ஆம். தேவர்கதிக்குரிய எழுத்துக்கள் அ இ உ எ என்னும்குற்றுயிரும், க் ச் ட் த் ப் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்தஉயிர்மெய்யும் ஆம்; மக்கட்கதிக்குரிய எழுத் துக்கள் ஆ ஈ ஊ ஏ என்னும்நெட்டுயிரும், ங் ஞ் ண் ந் ம் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்தஉயிர்மெய்யும் ஆம். இவ் வுயிர்மெய்களுள்ளும் மொழிமுதற்கண் வரும்ஆற்றலில்லாத ஙகர டகர ணகரங்கள் நீங்கலான பிறவே கொள்ளப்படும் என்பது.(இ. வி. பாட். 38) |
கதுவாய் | செய்யுளது அளவடிக்கண் வரும் தொடைவிகற்பம்; மேற்கது வாய் எனவும்,கீழ்க்கதுவாய் எனவும் இஃது இருவகைப்படும். முதலயற்சீர்க்கண் மோனைமுதலிய தொடை இல்லாத தனை மேற்கதுவாய் என்றும், கடைஅயற்சீர்க்கண் அவைஇல்லாததனைக் கீழ்க்கதுவாய்’ என்றும் கூறுவர். |
கதுவாய் பற்றிய இரு கருத்து | நாற்சீரடியாகிய அளவடியில் முதலயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனைமுதலிய தொடை வருதல் ’மேற்கதுவாய்’ என்றும், கடையயற்சீர் ஒழித்து ஏனையசீர்களில் மோனை முதலிய தொடை வருதல் ’கீழ்கதுவாய்’ என்றும் இலக்கணஆசிரியர் பலரும் கொண்டனர்.கையனார் முதலிய ஒருசார் ஆசிரியர் முதலயற்சீர் ஒழித்த ஏனையசீர்களில் மோனை முதலிய தொடை வருதலைக் ‘கீழ்க்கதுவாய்’ என்றும்,கடையயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதலை ‘மேற்கதுவாய்’ என்றும் கொண்டனர். (யா. க. 47 உரை) |
கத்தியம் | செய்யுளெல்லாம் இரண்டு திறமாய் அடங்குவனவற்றுள் ‘கத்தியம்’ ஒன்று;ஏனையது ‘ பத்தியம்’. கத்தியமாவது கட்டுரைப் போலியும் செய்யுட்போலியும்என இருவகைப் படும். ‘யானைத் தொழில்’ முதலாயின எல்லாம் கட்டுரைப் போலிஎனப்படும்; ‘ஒருபோகு’ முதலாயின எல்லாம் செய்யுட்போலி எனப்படும். (வீ.சோ. 112) |
கந்துகவரி | மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல் வகை. சிலப்பதி காரத்துள்வஞ்சிமகளிர் பாண்டியனைத் ‘தேவர்ஆர மார் பன்வாழ்க என்றுபந்த டித்துமே’என வாழ்த்திப் பந்தாடு வதாக இவ்வரி நிகழ்கிறது.கந்துகம் – பந்து; வரி – ஒருவகை இசைப்பாடல். (சிலப். 29 பாடல்20-22.) |
கனக வைப்பு | காரைச் சித்தர் இயற்றியது. ஒரு சீரடி நான்காலமைந்த செய்யுளொன்றுஇதன்கண் உள்ளது. (யா. வி. பக். ) |
கனாநூல் | கனாப் பயன்களைப் பற்றி, 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமணராகியபொன்னவன் என்ற புலவர் இயற்றிய நூல். அம்பரில் இருந்த கணபுரத்தேவன்விரும்பியவாறு இந்நூல் இயற்றப் பட்டது என்ப. சிலப்பதிகாரம் 15 :106ஆம் அடியுள் கனாநூல் பற்றி அடியார்க்குநல்லாரது உரைக்குறிப்புநிகழ்வதால், இப்பெயரிய நூல் அவர் காலத்துக்கு முற்பட்டதொன்றாயிருத்தல் வேண்டும்; பொன்னவன் இயற்றியது அதன் வழிநூலாதல்கூடும். (L) |
கனிச்சீர் | நிரையசை இறுதியாகவுடைய மூவசைச் சீர் நான்கும் கனிச்சீராம். அவைநேர்நேர் நிரை, நிரை நேர் நிரை, நேர் நிரை நிரை, நிரை நிரை நிரைஎன்பனவாகிய தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்பன.(யா. க. 12) |
கன்:புணருமாறு | கன் என்பது கன்னாருடைய தொழிலையும், கன்னானையும், செம்பு என்ற |
கப்பற்பாட்டு | கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் (L) |
கமகன் | பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கற்றார் வியக்கும்வண்ணம், கல்லாத நூல்களையும் உய்த் துரைக்கும் கருத்துடைய புலவன்.(யா.வி.பக். 552; வீ.சோ. 181 உரை)நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப் பயிற்சியால் தெளிந்தஅறிவானும், முன்னர்க் கற்றுவல்லோர் கூறிய பொருளை ஞாபகத்தானும்செம்பொருள் நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும் விரித்துச் சொல்லவல்லோன். (இ. வி. பாட். 171) |
கமுகந் தோட்டம் | தோட்டத்துள் பிற மரம் செடிகொடிகள் உளவாயினும், மிகுதி பற்றிய |
கம்: புணருமாறு | கம் என்பது கம்மியரது தொழில். இத்தொழிலை உணர்த்தும் கம் என்ற சொல் |
கம்பராமாயண யாப்பு | பலவகைக் கலிவிருத்தம், வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்,கலிநிலைத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர் ஆசிரிய விருத் தங்கள்,பெரும்பான்மையும் வெண்டளை பயின்றுவந்த தரவு கொச்சகம் என்பன.கலிவிருத்தம் 5094. இவற்றுள் 86 தரவு கொச்சகம் போன்ற யாப்பு.அறுசீர் ஆசிரிய விருத்தம் 3195எழுசீர் ஆசிரிய விருத்தம் 178எண்சீர் ஆசிரிய விருத்தம் 6கலிநிலைத்துறை 1805வஞ்சி விருத்தம் 294வஞ்சித்துறை 4இலக்கணத் முன். பக். 95, 96 |
கரந்துறை செய்யுள் | வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத் தேயேஇருக்குமாறு பாடப்படும் பாடல் கரந்துறை செய்யு ளாம். கரந்து உறைதலாவதுஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம் மாறி மறைந்திருத்தல்.மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று.எ-டு :‘அகலல்குற் றேரே யதர மமுதம்பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதியம்முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீலமைத்தடங்கண் வெவ்வேறு வாள்’இப்பாடற்கண்‘அகர முதல வெழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே யுலகு’என்னும் குறட்பாவிற்குரிய எழுத்துக்கள் யாவும் இடம் மாறிஅமைந்துள்ளமையின் இப்பாடல் கரந்துறை செய்யுள் ஆகும்.(தண்டி. 98-8; இ.வி. 690 – 15)மாறனலங்காரம் காதைகரப்பைக் கரந்துறை செய்யுளாகவும், கரந்துறைசெய்யுளைக் காதை கரப்பாகவும்கொண்டு இலக்கணம் கூறும். இவ்விலக்கணம்அந்நூலுள் காதை கரப்புக்குக் கொள்ளப்படும். (மா. அ. 288, 289)முத்துவீரியம் இதனைக் கரந்துறை பாட்டு என்னும்.(சொல்லணி. 14) |
கரந்துறை பாட்டு | ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்று மொழிக்குமுதலெழுத்துத் தொடங்கி எதிரேறாக இடை யிடை ஓரெழுத்தாக இடையிட்டுமுதன்மொழி முதலெழுத்து வரை வாசிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்துமறைந் துறைவது கரந்துறை செய்யுளாம் என்று வீரசோழியமும் மாறனலங்காரமும்கூறும். (வீ. சோ. 181 உ ரை. மா. அ. 288)ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத்தொடங்கி ஒரோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப்பாடுவது காதை கரப்பு என்று தண்டியலங்காரமும் இலக்கண விளக்கமும்கூறும். (தண்டி. 98-7; இ.வி. 690-14; மு.வி. சொல்லணி 13)எ.டு -‘தாயேயா நோவவா வீரு வெமது நீபின்னை வெருவா வருவதொ ரத்தபவெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்தாவா வருங்கலநீ யே’“எங்களுக்குத் தாவா அருங்கலம் நீயே, தாயே! யாம் நோவு அவா ஈரு (க);எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஒ(ஓ)ர் (க); அது தபஎம்புகல் வேறு இருத்தி வைத்தி சின்; இச்சை கவர் (க)” எனப் பிரித்துப்பொருள் செய்க.இப்பாடலுள் முற்கூறிய முறையான் நோக்க,‘கருவார் கச்சித்திருவே கம்பத்தொருவா வென்னீமருவா நோயே’என்னும் வஞ்சித் துறைப்பாடல் அமைந்துள்ளமை காணலாம்.‘வருங்கல நீயே’ என்பதனுள் ஈற்றுமொழி ‘நீயே’. அதற்கு முதலெழுத்து‘ல’. லகரம் மொழி முதலாகாமையின் அதன் முன் நின்ற ககரம் முதலாகக்கொள்ளப்பட்டது. |
கரியவை முதலிய சொற்கள் உருபேற்றல் | யாவை என்ற வினாப்பெயர் இறுதி ஐகாரம் வகரத்தொடும் கெட வற்றுச் |
கருட நூல் | நாகங்களின் குலங்களை வகைப்படுத்திக் கூறும் செய்யுள் பலகொண்டஇந்நூலுள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோ ளும் பலஇடங்களில் உண்டு என்பதுயாப்பருங்கல விருத் தியுரைச் செய்தி. (யா. வி. பக். 382) |
கருநாடகச் சந்தம் | இது கன்னடமொழியில் பண்டு வழங்கிய யாப்பிலக்கண நூல். இதன்கண் மகடூஉமுன்னிலையும் அவையடக்கச் செய்யுளும் காணப்பட்டன. இது குணகாங்கிஎனவும், குணகாங்கியம் எனவும் வழங்கப்பட்டது. இது குணகங்கன் என்ற கன்னடஅரசன் ஆக்குவித்த யாப்புநூல் போலும்.(யா. வி. பக். 523; யா. கா. பாயிர உரை.) |
கருவியின் நால் வகைகள் | அகக்கருவி, அகப்புறக்கருவி, புறக்கருவி, புறப்புறக்கருவி – எனக் |
கருவிள நறுநிழல் | ‘நிரை நிரை நிரை நிரை’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு : ‘ நனந்தலையுலகுட னவைநீங்க’ (யா. கா. 8 உரை) |
கருவிள நறும்பூ | ‘நிரை நிரை நிரை நேர்’ எனவரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு :‘ முழுமதிபுரையு முக்குடைநிழல்’ (யா. கா. 8 உரை) |
கருவிளங்கனி | ‘நிரைநிரைநிரை’ எனவரும் மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ வளவயலிடைக் களவயின்மகிழ்’(யா. கா. 7 உரை) |
கருவிளங்காய் | ‘நிரை நிரை நேர்’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு : ‘பொன்னார மார்பிற் புனைகழற் காற் கிள்ளிபேர்’ (யா. கா. 7 உரை) |
கருவிளந்தண்ணிழல் | ‘நிரை நிரை நேர் நிரை’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு :‘ நலங்கிளர்பூமழை நனிசொரிதர’ (யா. கா. 8 உரை) |
கருவிளந்தண்பூ | ‘நிரை நிரை நேர் நேர்’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு : ‘ கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்ச’ (யா. கா. 8 உரை) |
கருவிளம் | ‘நிரை நிரை’ எனவரும் ஈரசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ அணிமல ரசோகம ர்ந் தருணெறி நடாத்திய ’ (யா. கா. 7 உரை.) |
கற்பியல் | இது தொல்காப்பியப் பொருளதிகாரத்து நான்காம் இயலாகும். இதன்கண்,முன்பு களவொழுக்கம் நிகழ்த்திய தலைவன் கரணமொடு புணரத் தலைவியை மணப்பதுமுதல் காமத்தில் பற்றறுத்து இருவரும் வீட்டின்பத்திற்குப் பாதுகாவலானசெயல்களில் ஈடுபடுவதுகாறும் உள்ள செய்திகள். 53 சூத்திரங்களில் (நச்)கூறப்பட்டுள்ளன.இறையனார் களவியலில் 34 முதல் 60 முடிய உள்ள நூற்பாக்கள் கற்பியற்பகுதியாம். நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள், இலக்கண விளக்கஅகத்திணையியல் முதலிய நூல்களிலும் கற்பியற் பகுதிகள் உள. |
கலம்பக வெண்பா | ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்து ஒவ்வாது வரும் வெண்பா;கட்டளைவெண்பாவிற்கு மறுதலையாயது.எ-டு :‘மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும்அந்தரமும் எல்லாம் அளப்பரிதே – இந்திரர்கள்பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்றஇன்சகள ஆசனத்தான் ஈடு’.இதன்கண், முதலடி எழுத்துப் பதினாறு, இரண்டாமடி எழுத்துப்பதினைந்து, மூன்றாமடி எழுத்துப் பதினான்கு – இவ்வாறு எழுத்துஎண்ணுகின்றுழி, ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் தவிர்க்கப்படும். (யா.வி. பக். 498)அலகு பெற்றாலும் குற்றுகரம் எழுத்தெண்ணப்படாது என்பதுவிருத்திகாரர் கருத்துப் போலும். |
கலம்பகக்கலி | அடிகள் எழுத்து ஒவ்வாது வரும் கலி. (யா. வி. பக். 502) |
கலம்பகப் பாடல் தொகை | தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத்தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்குமுப்பதுமாகக் கலம்பகப் பாடல் தொகை பெறும். அந்தணரைத் தேவர்க்குஒப்பவும், குறுநில மன்னரை அரசர்க்கு ஒப்பவும் பாடப்பெறும்.இத்தொகை பன். பாட் 214, வெண். பாட் 12, நவ. பாட். 34, சிதம். பாட்.30, மு. வீ. யா. ஒ. 80 இவற்றிலும் காணப்படும். (இ. வி. பாட். 53) |
கலம்பகமாலை | 1. பல பூக் கலந்த மாலை; ‘கலம்பக மாலையைப் பணியாக’ (ஈடு. அவ.)2. கலம்பகம் தான் ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி ஏனைஉறுப்புக்கள் எல்லாம் வரப் பாடுவது கலம்பகமாலை என்னும் இலக்கணவிளக்கம் (பாட். 54). ஒரு போகினையும் அம்மானையையும் நீக்கி,வெண்பாமுதலாக எல்லா உறுப்பானும் குறைவின்றி வருவது இப்பிரபந்தம்என்னும் பன்னிரு பாட்டியல் (960). ஊசலையும் நீக்கி வருதல் வேண்டும்என்னும் செய்தி பிற பாட்டியல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. கலம்பகமாலை ‘பன்மணிமாலை’ எனவும் படும். |
கலம்பகம் | 1. ‘கலவை; ‘கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல்’(திவ். திருப்பள்ளி. 5)2. குழப்பம்3. ஒரு கணித நூல் (கணக்கதி. 5 உரை) (L )4. ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவி உறுப்பாகமுற்கூறப்பட்டு, கலவையின் புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம்,சம்பிரதம், கார்,தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல்,கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் (கொற்றியார், பிச்சியார்,இடைச்சியார், வலைச்சியார் என்பன காலத்தான் மருவிப் போந்தன.) ஆகியபதினெட்டுப் பொருட்கூற்று உறுப்புக்களும் இயையுமாறு பிற்கூறப்பட்டு,மடக்கும் மருட்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும்ஆசிரியவிருத்தமும் கலிவிருத்தமும் கலித்தா ழிசையும், வஞ்சிவிருத்தமும் வஞ்சித்துறையும், வெண்துறை யும் ஆகிய கவிக் கூறுகளும்உடைத்தாய், இடையிடை வெண்பாவும், கலித்துறையும் பாடப்பட்டு, அந்தாதித்தொடை முற்றும் உற இறுதியும் முதலும் மண்டலித்துப் பாடுவதொருபிரபந்தம். (இ. வி. பாட். 52.) |
கலவைச் சந்தக் கலித்துறை | அ) தேமா புளிமா கலந்து முதல் நான்கு சீர்கள் அமைய, ஐந்தாம்சீர்மாங்காய் அல்லது கருவிளமாக அமைந்த ஐஞ்சீரடி நான்கான் அமைவது. (வி. பா.பக். 57)எ-டு : ‘கையால் தொழுதே தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும்விமலனார்நெய்யா டுதலஞ் சடையார் நிலாவு மூர்போலும்பைவாய் நாகங் கோடல் லீனும் பாசூரே’ (தே. II 60-3)ஆ) முதல் சீரும் மூன்றாம் சீரும் மூன்று மாத்திரை மாச்சீர்,இரண்டும் நான்கும் நான்கு மாத்திரையுடைய கூவிளம், ஐந்தாவது ஐந்துமாத்திரையுடைய நீண்ட கூவிளம் என் றமைந்த ஐஞ்சீரடி நான்கானாய கலவைச்சந்தக் கலித் துறையும் உண்டு.எ-டு : ‘முதலு மூன்றது மாவி னத்தொரு மூன்றெழுத்துதவு சீரதி ரண்டு நான்கொரு நான்கெழுத்துதவு கூவிள மைந்தி லோங்கிய கூவிளம்மதிநு தற்கலை யல்குல் மாந்தளிர் மேனியே’-என்னும் விருத்தப்பாவியற் காரிகை கொள்க.இ) மூன்று குற்றெழுத்தை இறுதியிலுடைய ஐந்து மாத் திரையவாய ஐந்துகாய்ச்சீரும் இறுதியில் ஒரு நெட்டெழுத் துமுடைய ஐஞ்சீரடி நான்கான்அமைவது.எ-டு : ‘கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்இற்பலிகொ ளப்புகுது மெந்தைபெரு மானதிட மென்பர்புவிமேல்மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியைவிற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரு வேதவனமே’ (தே. III 76-1)‘தந்தைமன முந்துதுயர் நந்தஇருள் வந்தவிறல் நந்தன்மதலைஎந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்றநகர்தான்மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்களாடுபொழில்சூழ்நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே’.(பெரிய தி. 5-10-7)இப்பாடல்கள் இறுதிச்சீர் நெடில் ஒன்று சேர்வதால் நான்கசைப்பூச்சீர்கள் ஆகின்றன.ஈ) நீண்ட உயிருடைய விளச்சீர் நான்கு, இறுதியில் காய்ச்சீர் ஒன்றுஎன்றமைந்த ஐஞ்சீரடி நான்கான் அமைவது.எ-டு : வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும்வாளரவும் // களங்கொளச் சடையிடை வைத்தவெங் கண்ணுதற் கபாலியார்தாம் //துளங்கு நூல் மார்பினர் அரிவையோ டொருபகல் லமர்ந்தபிரான் //விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே” (தே. III90-5)நீண்ட உயிருடைய விளச்சீர் ஐந்து மாத்திரையவாயின. காய்ச்சீர்கள்எட்டு மாத்திரை அளவு நீள்வன.உ) ஐந்து மாத்திரைக் காய்ச்சீரானும் முதல் நான்கு சீர்கள் அமைய,ஐந்தாம்சீர் ஏழு மாத்திரைக் காய்ச்சீரானும் கனிச்சீரானும் அமையும்ஐஞ்சீரடி நான்கான் அமைவது.எ-டு :‘மாடகமு றுக்கியிசை பாடுமுனி நீடுபிணிமாற்றுமுறைமை // நாடியுரை செய்தலும கிழ்ந்துகழன் மன்னவன யந்துபணியா //கூடியநல் லன்பினது கூறுவன ருந்தவக தம்பநகரில் // பீடுறவி ருந்தபெருமானையெவர் பூசனைகள் பேணினர்களே’. (விநாயக. இந்திரன் படலம் – 1)ஊ) முதற்சீரும் கடைச்சீரும் தேமாங்காயும் புளிமாவும்; மூன்றாம்சீர் புளிமாங்காய்; இரண்டாம் நான்காம் சீர்கள் தேமா – என அமையும்ஐஞ்சீரடி நான்கான் அமைவது. ஈற்றுப் புளிமாவிற்கு ஈடாக மாத்திரை மாறாததேமாவும் தேமாங்காயும் வருதல் அமையும்.எ-டு : ‘தேரோடு சென்ற அசுரன்ம கன்சே ணின் மீண்டுபாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கின்காரோடு வானந் தவறுற்று ழிக்கா மர்தாருத்தூரோடு சாய்ந்து மறிக்கின்ற தோர்தோற் றமொக்கும்’ (கந்த. முதல்நாட். 206) (வி. பா. பக். 56-60)இவை ஆறுமே பழக்கத்தில் மிக்குவரும் சந்தக் கலித்துறை களாம்.எ) சந்தக் கலித்துறையில் ஏழு மாத்திரை அமையும் ஐந்தாம் சீராகவிளங்காய்ச் சீர் வருதலும் உண்டு.எ-டு : ‘பொய்யுரைத் துலகினில் சினவினார் குலமறப்பொருதுதன்வேல்நெய்யுரைத் துறையினிட் டறம்வளர்த் தொருவனாய்நெறியினின்றான்மையுரைத் துலவுகண் மனைவிபால் வரமளித் தவைமறாதேமெய்யுரைத் துயிர்கொடுத் தமரரும் பெறுகிலாவீடுபெற்றான்’.(கம்பரா. 6154) (வி. பா.பக். 80)ஏ) புளிமா, தேமா, கூவிளம், தேமா புளிமாங்காய் என அமையும் ஐஞ்சீரடிநான்கான் அமைவது.எ-டு : ‘மலையே போல்வான் மால்கட லொப்பான் மறமுற்றிக்கொலையே யொப்பான் கூற்றைநி கர்ப்பான்கொடுமைக்கோர்நிலையே போல்வான் நீர்மையி லாதான் நிமிர்திங்கட்கலையே போலும் காலவெ யிற்றான் கனல்கண்ணான்’.(கம்பரா. 4595) வி. பா. பக். 80 |
கலி அடியில் நேரீற்று இயற்சீர் | தேமா, புளிமா என்ற நேரீற்றியற்சீர் இரண்டும் துள்ளல் ஓசையைநீக்கும் ஆதலின், அவை இரண்டும் கட்டளைக் கலியடிக்கண் வாரா; சீர்வகைக்கலியடிக்கண் வரும்.எ-டு : ‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38-3)கூவிளம் புளிமா புளிமா தேமாகாமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்’ (கலி. 39-1)தேமா (சீர்வகைக் கலியடி) (தொ.செய். 25 நச்.) |
கலி அந்தாதி | ஒலிஅந்தாதியைப் போல வண்ணப்பாக்கள் முப்பது கொண்டதாய்ப் பாடல்தோறும்32 கலைகளை உடையது கலி அந்தாதியாம். கலித்தல் – மிகுதல் ஆதலால், ஒலிஅந்தாதியின் மிகுந்த கலைகளையுடைய இப்பிரபந்தம் கலிஅந்தாதி எனப்பட்டது.இப்பாடல்களில் வெண்கலியும் சிறுபான்மை வரும். வெண்கலி வரும்காரணத்தால் இது கலி அந்தாதி எனப்பட்டது என்பதும் ஆம். ‘வண்ணப்பா’இலக்கணம் அத்தலைப்பில் காண்க.ஒவ்வோரடியிலுள்ள எட்டுக் கலைகளில் முதல் நான்கு கலைகள்ஓரொலியாகவும் பின் நான்கு கலைகள் வேற்றொலியாகவும் கலி அந்தாதியில்அமைதலும் கூடும். (பன். பாட். 265, 266, 268)சந்தக் குழிப்புக்கள் – தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன,தய்ய என்ற எட்டு.இவை ஈறு நீண்டு தத்தா, தாத்தா, தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா,தய்யா – எனவரும் எட்டுடன் பதினாறு.இப்பதினாறன்மேல் ன, னா என்னும் உயிர்மெய்கள் தனித்து வரினும் அவைத், ம் என்ற ஈற்றுக்களொடு கூடிவரினும், இவ் வொற்றுக்கள் தனித்துவரினும் அவை அரைச்சந்தமாம்.எ-டு : தந்தனத், தந்தனாத், தந்தனம், தந்தனாம், தந்தத்,தந்தம்.தந்த : முழுச்சந்தம்; னத்; அரைச் சந்தம்; தந்தனத் ; ஒன்றரைச்சந்தம்.இங்ஙனமே ஏனையவும் கொள்ளப்படும்.சந்தங்கள் சில சேர்ந்து அமைவது ஒரு துள்ளல் (தந்தன தந்தன) துள்ளல்மூன்று கொண்டது ஒரு குழிப்பு (தந்தன, தந்தன, தந்தன, தந்தன, தந்தனதந்தன)ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை.(தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன தனதான)தொங்கல்துள்ளல் குழிப்புத்துள்ளலில் சிறிது வேறு பட்டுள்ளமைகாண்க.கலை எட்டுக் கொண்டது ஒருவண்ணம்.அங்ஙனம் அடி தொறும் எட்டுக் கலைகள் கொண்ட நான் – கடிப்பாக்கள்முப்பது அந்தாதியாக அமைவது கலி அந்தாதியாம்.(பன். பாட். 265) |
கலி ஆசிரிய இணைப்பு | கலியடியும் ஆசிரியஅடியும் இணைந்து வந்த யாப்பு.எ-டு : ‘என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையானிறுத்திஇடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட்பெயரிடுவாள்குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்கைக்கிளை யுழையிளி விளரி தாரமெனவிரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப்.ஆய்ச்.)இதன்கண், முதலீரடியும், கலியடி; ஏனையவை ஆசிரியஅடி. |
கலி ஒத்தாழிசை | ஏனைய அடிகள் ஒத்து ஈற்றடி மிக்கு ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவருவன. கலியொத்தாழிசை, கலித்தாழிசை. இவற்றை ஒன்றாகக் கூறுவாருமுளர்.ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு ஏனையடிகள் ஒவ்வாது வரின்சிறப்பில்லாக் கலியொத்தாழிசையாம். இஃது ஒத்தாழிசைக் கலிப்பாவின்இனம்.எ-டு :‘கொய்தினை காத்தும்; குளவி யடுக்கத்தெம்பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’;‘ஆய்தினை காத்தும்; அருவி யடுக்கத்தெம்மாசில் சிறுகுடி வாரல் நீ ஐய! நலம் வேண்டின்’;‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக்குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’. (யா.க. 87உரை). |
கலி முதலிய சங்கேத எழுத்து | கலி, மாகமடையம் முதலிய சங்கேத எழுத்து வகையெல்லாம்எழுத்துவல்லார்வாய்க் கேட்டுணரப்படும் என்பது யாப் பருங்கலவிருத்தியுரை. அவ்வுரைகாரர் சுட்டும் எழுத்து விசேடங்கள் இன்று வழக்குவீழ்ந்தன. (யா. வி. பக். 578) |
கலி முதலுறுப்பு | தரவும் தாழிசையும் கலிப்பா முதலுறுப்புக்கள்; ஏனையவைதுணையுறுப்புக்கள். (தொ. வி. 228) |
கலி விருத்தம் | நாற்சீரடி நான்குடையன கலி விருத்தம். அடிமறியாய் நாற்சீரடிநான்காய் வருவன கலிமண்டில விருத்தம்; அடிமறி ஆகாதே நாற்சீரடி நாலாய்வருவன கலிநிலை விருத்தம். கலி விருத்தம் கலிவெண்பாவின் இனமாம்.கலிமண்டில விருத்தம் – அடிதோறும் பொருள் முடியும் கலி விருத்தம்;யாதோரடியையெடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும்பொருளும் மாறாது வருவது.எ-டு :‘இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி;வெந்திறல் ஞாயிற்றெழில் வீவிலொளி வெல்லுமடி;மந்திரத்தில் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி;அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி’கலிநிலை விருத்தம் வருமாறு :‘விரிகதிர் மதிமுக மடநடை கணவனொடரியுறு கொழுநிழல் அசையின பொழுதினில்எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன்தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே’ (யா.க. 89 உரை)நாற்சீர் ஓரடி நான்கு கொண்ட கவிகளிற் சில கலிவிருத்தம் எனப்படும்.ஈரசைச் சொற்கள் ஐந்து ஓரடியாக நிகழும் கலிவிருத்தங்களும் உள. (அறுவகையாப்பு. 38, 39.) |
கலி, ஆசிரியம் இவற்றில் வாராதசீர்கள் | தேமா, புளிமா – என்னும் நேரீற்றியற்சீர் இரண்டும் கலிப்பாவி னுள்புகப்பெறா; கருவிளங்கனி கூவிளங்கனி – என்னும் நிரை நடுவாகியவஞ்சியுரிச்சீர் இரண்டும் அதன்கண் வரப்பெறா.ஆசிரியப்பாவினுள்ளும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும்புகப்பெறா. (யா. கா. 40)வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்பு நிரை – நிரைபுநிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்குஉரியன அல்ல. (தொ. செய். 23 நச்.) |
கலிக்கு முடுகியல் வருதல் | கலிப்பாவில் எழுசீரடி பெரும்பாலும் முடுகிவரும்; அஃதன்றிஅறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகி வருதலுமுண்டு; சிறுபான்மைநாற்சீரடியும் முடுகிவரும்.எ-டு : ‘கவிரிதழ் கதுவிய துவரிதழ் அரிவையர் கலிமயிற் கணத்தொடுவிளையாட’என எழுசீரடி முடுகி வந்தது.’நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்தகைமிகு தொகைவகை யறியும் சான்றவ ரினமாக’ (குறிஞ்சிக். 3)‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன்’ (முல்லைக். 2)என முறையே அறுசீரடி ஐஞ்சீரடி நாற்சீரடி முடுகி வந்தவாறு. (தொ.செய். 65, 66, 67 நச்.) |
கலிக்குத் தளை விகற்பம் | கலிப்பாவிற்கு மூவசைச் சீருள் காய்ச்சீர் நின்று நிரை முதலாகியமூவசைச் சீரொடு தட்டல் வேண்டும் என்ற வரையறையின்று. நிரையீற்றுஇயற்சீரும், நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் (நிரை நிரை, நேர் நிரை,நேர்பு நிரை, நிரைபு நிரை) நிற்ப, நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய்ஒன்றினும் கட்டளைக் கலியடிக்குக் கலித்தளையாம்.எ-டு : ‘மணிபுரை திருமார்பின் மாமலராள் வீற்றிருப்ப’கருவிளம் என்ற இயற்சீர்முன் புளிமாங்காய் என்ற மூவசை வெண்சீர்வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று.‘ஒங்குநிலை அகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’நேர்பு நிரை என்ற ஆசிரிய உரிச்சீர் முன் புளிமாங்காய் என்ற மூவசைவெண்சீர் வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று.ஆகவே, நிரையீற்று இயற்சீர் முன்னும் ஆசிரிய உரிச்சீர் முன்னும்நிரை முதல் இயற்சீர் வந்து நிரை தட்பினும், அவற்றின் முன் நேர்முதல்வெண்சீர் வந்து ஒன்றாதொழி யினும் துள்ளலோசை பிறவாமையின், இவை கட்டளைக்கலியடிக்கு ஆகா; ஆயின் சீர்வகைக் கலியடிக்கு ஆம்.எ-டு : ‘அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும்மணிதிகழ் மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண்’ (குறிஞ்சிக்.28)அணிமுகம் மதியேய்ப்ப நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் வெண்சீர்வந்து நிரைதட்டுக் கலித்தனை ஆயிற்று; அடுத்து, (அவ்வடிக்கண்ணேயே)நேர்முதல் நிரைமுதல் வெண்சீர்கள் வரச் சிறிது துள்ள லோசைபிறந்தது.‘மணிதிகழ் மாமழை நின்’ – நிரையீற்று இயற்சீர் முன் நேர் முதல்வெண்சீர் வரினும், அடுத்து எல்லாச் சீர்களும் வெண் சீராக அடுக்கிவருதலின், சிறிது துள்ளலோசை பிறந்தது.(கட்டளைக் கலியடியில் முதற்சீரே இயற்சீராக வருதல் வேண்டும்.இயற்சீரினை இடையிலும் வரும் எனக் கொள்ளின் கலியடி பதின்மூன்றுஎழுத்தினும் சுருங்கிவிடும். ஆதலின் இயற்சீரை அடுத்த மூன்று சீரும்நிரை முதல் மூவசைச் சீராதலே கலியோசைக்கு ஏற்றது. (செய். 60 பேரா.)இங்ஙனம் சிறிது துள்ளலோசை பிறக்க வருதல் சீர்வகைக் கலியடிக்கேஏற்றது. ஆகவே, சீர் வகைக் கலியடிக்குப் பிறதளைகளும் விரவிவரலாம்.எ-டு :‘மடியிலான் செல்வம்போல் மரனந்தஅச்செல்வம்’ பாலைக். 34இவ்வடியுள் சீர்கள் 1, 2 – இயற்சீர் வெண்டளை.‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற’ பாலைக். 24இவ்வடியுள் சீர்கள் 1, 2 – இயற்சீர் வெண்டளை; 2, 3 நிரையொன்றியஆசிரியத்தளை; 3-4 – நிரையொன்றிய ஆசிரியத்தளை. (தொ. செய். 59, 60, 61நச்.) |
கலிச்சந்த விருத்தம் | தமிழில் சந்தப்பாக்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள சந்தக் குழிப்பைஅடியொற்றிப் பாடுதலை விடுத்து, வடமொழி மரபையொட்டி மாத்திரையைக்கணக்கிட்டு அடிதோறும் அடிதோறும் இவ்வளவு மாத்திரை வருதல் வேண்டும்என்ற முறைக்கு ஒப்பப் பாடப்படும் கலிவிருத்தப் பாடல்கள். சந்தமாவதுமாத்திரையளவால் அமைவது ஆதலின், அம்மாத்திரைத் தொகைகள் ஒழுங்காகவும்அடுக்காகவும் ஒருமுறையைப் பின்பற்றி நிற்றல் செவிக்கு முறையான இன்பம்தரும் என்ற கருத்தில் அமைந்தவை இவை.இத்தகைய விருத்தங்களில் குறில் ஒரு மாத்திரை, குற்றொற்று இரண்டுமாத்திரை, நெடிலும் நெட்டொற்றும் இரண்டு மாத்திரை, அடியின் இறுதியில்வரும் குறில் இரண்டு மாத்திரை என்று அளவு கணக்கிடப்படும். இரண்டுசமமான அரையடிகள் சேர்ந்து ஒரு முழு அடி ஆகும்போது, முதல் அரையடியின்இறுதியில் குறில் இருந்தாலும் அதுவும் இரண்டு மாத்திரை பெறும்.மனோரமா, தோடகம் முதலான அதன் வகைகளைத் தனித் தனியே காண்க (வி.பா.பக். 35-38) |
கலித்தளை | நேர் ஈறாகிய மூவசைச்சீர் முன்னர் நிரை முதல் வெண்சீர் வரின்சிறப்புடைய கலித்தளையாம்; நிரை முதல் வெண்சீர் அல்லாத சீர் வரின்சிறப்பில்லாக் கலித்தளையாம். ஆகவே காய்முன் நிரை வருவது கலித்தளை.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்தசினவாழி’‘முற்றொட்டு மறவினை (முறைமையான் முயலாதார்)’என முறையே காண்க. (யா. க. 20 உரை) |
கலித்தாழிசை | அடிகள் சிலவாயும் பலவாயும் வந்து தத்தமில் ஒத்தும் ஒவ்வாதும்ஈற்றடி மிக்கு வருவன கலித்தாழிசையாம். இவற்றுள் ஈற்றடி மிக்கு ஏனையடிஒத்து வருவன எல்லாம். ‘சிறப்புடைக் கலித்தாழிசை’ எனவும், ஈற்றடிமிக்கு ஏனைய அடி ஒவ்வாது வருவன எல்லாம் ‘சிறப்பில்லாக் கலித் தாழிசை’எனவும் கூறப்படும். கலித்தாழிசை ஒரு பொருள் மேல் ஒன்றாயும் வரும்; ஒருபொருள்மேல் மூன்றடுக்கியும் வரும். இது கொச்சகக் கலியின் இனம்.ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவன கலியொத்தாழிசை எனப்படும்;ஒரோவழிக் கலித்தாழிசை எனவும் வழங்கப்படும்.எ-டு : ‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்கேள்வரும் போழ்தின் எழால்வாழிவெண்திங்காள்!கேள்வரும் போழ்தின் எழாதாய்க்(கு) உறாலியரோநீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்!இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடிமிக்கு, ஏனை யடிகள் தம்முள்ஒத்து வந்துள்ளமையால் சிறப்புடைக் கலித்தாழிசை.எ-டு : ‘பூண்ட பறையறையப் பூதம் மருளநீண்ட சடையான் ஆடுமே;நீண்ட சடையான் ஆடும் என்பமாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே’.இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண் டாமடிகுறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்துள்ளமை யால் சிறப்பில்லாதகலித்தாழிசை.எ-டு : ‘கொய்தினை காத்தும்; குளவி அடுக்கத்தெம்பொய்தற் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம் வேண்டின்.’‘ஆய்தினை காத்தும்; அருவி அடுக்கத்தெம்ஆசில் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம்வேண்டின்.’‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக்குன்றச் சிறுகுடி வாரல்நீ; ஐய! நலம் வேண்டின்’.இவை இரண்டடியாய், ஈற்றடிமிக்கு, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவந்தமையால் கலியொத்தாழிசையாம். (யா.க. 87 உரை.) |
கலித்தாழிசை விரி ஐம்பத்தாறு | சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத் தாழிசை,சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித் தாழிசை என்னும் இவற்றைச்சிறப்புடைய தளை ஏழு – சிறப் பில்லாத தளை ஏழு – என்ற பதினான்கோடும்உறழக் கலித் தாழிசை (4 x 14) ஐம்பத்தாறாம். (யா. க. 87 உரை.) |
கலித்துறை | ஐஞ்சீரடி நான்காய் ஒரு விகற்பமாய் நிகழ்வது கலித்துறை யாம்.இவற்றுள் அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலி மண்டிலத்துறை;அடிமறியாகாதே ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலிநிலைத்துறை எனப்படும்.இவையிரண்டும் பதினான்கு தளையான் முரண இருபத்தெட்டு ஆகும். இதுகொச்சகக் கலிப்பாவின் இனம். (யா. க. 88 உரை) |
கலித்துறை பன்னிரண்டு வகைகள் | 1. குற்றெழுத்தையோ ஒற்றெழுத்தையோ இறுதியாக உடைய மாச்சீரொடுகூவிளச்சீரும் அடுத்து இரண்டு விளச்சீரும் இறுதியில் ஒரு மாச்சீரும்புணர வரும் ஐஞ்சீரடி நான்காகி அமைவது.மாச்சீர் – தேமா, புளிமா; விளச்சீர் – கருவிளம், கூவிளம்.எ-டு : ‘பூந டுங்கின மணிக்குலம் நடுங்கின புரைதீர்வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள்தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகண்தீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல’ (கந்த. திக்கு.29)‘நிருதர் கோன்’ என்ற காய்ச்சீர் விளச்சீரின் தானத்தில்வந்துளது.2. குற்றெழுத்தை இறுதியாகவுடைய மாச்சீர், கூவிளச்சீர், இரண்டுவிளச்சீர், இறுதியில் காய்ச்சீர் – புணர வரும் ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோ லெங்கோமான்விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம்’. (கந்த. மோன.1)3. மாச்சீர், புளிமாச்சீர், புளிமாங்கனி, தேமா, தேமா – என்றமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘அன்னா ரமருங் களஞ்சென்றயி லேந்து நம்பிநன்னா யகமாந் திருநாமந வின்று போற்றிப்பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்முன்னா லணுகி இருந்தானடல் மொய்ம்பின் மேலான்’(கந்த. வீரவாகு. 8)4. காய்ச்சீர், தேமா, புளிமாங்கனி, தேமா, தேமா – என அமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம்எறிகின்ற வேலை அமுதிற்செவி யேக லோடும்மறிகின்ற துன்பிற் சயந்தன்மகிழ் வெய்தி முன்னர்அறிகின்றி லன்போல் தொழுதின்னவ னறைத லுற்றான்’(கந்த. வீரவாகு. 9)5. இரண்டு மாச்சீர், விளச்சீர், மாச்சீர், காய்ச்சீர் – என அமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேனென்உண்ணே ராவி வேண்டினும் இன்றே உனதன்றோபெண்ணே வண்மைக் கேகயன் மாதே பெறுவாயேல்மண்ணே கொண்ணீ மற்றைய தொன்று மறவென்றான்’ (கம்பரா. 1522)6. நான்கு விளச்சீர், ஒரு காய்ச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது.எ-டு : ‘அஞ்சன வண்ணனென் னாருயிர் நாயக னாளாமேவஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரேசெஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோஉய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குக னென்றனை யோதாரோ’ (கம்ப.குகப.)7. மாங்கனிச்சீர், இரண்டு கூவிளம், இரண்டு தேமா – இவை. கொண்டமைந்தஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘தாமந்தரு மொய்ம்புடை வீரன்ச யந்தன் விண்ணோர்ஏமந்தரு வன்சிறைச் சூழலு ளேக லோடும்தாமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்புநீங்கிமாமந்திர மாம்வலைப் பட்டும யங்க லுற்றார்.’ (கந்த. வீரவாகு.4)8. மாச்சீர், காய்ச்சீர் அல்லது விளச்சீர், இரண்டு விளச்சீர்இறுதியில் ஒரு மாச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘வன்ம ருங்குல்வா ளரக்கியர் நெருக்கவங்கிருந்தாள்கன்ம ருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணாநன்ம ருந்துபோல் நலனற உணங்கிய நங்கைமென்ம ருங்குல்போல் வேறுள அங்கமு மெலிந்தாள்’ (கம்ப.காட்சிப்.)9. மாச்சீர், விளச்சீர் நான்கு – இவைகொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘செஞ்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே’. (தே. II 1-1)10. இரண்டு காய்ச்சீர், இரண்டு மாச்சீர், ஒரு காய்ச்சீர் – இவைகொண்டமைந்த அடி நான்காகி வருவது.எ-டு : ‘உருவார்ந்த மெல்லியலோர் பாகம் உடையீர்அடைவோர்க்குக்கருவார்ந்த வானுலகம் காட்டிக் கொடுத்தல்கருத்தானீர்பொருவார்ந்த தெண்கடலொண் சங்கம் திளைக்கும்பூம்புகலிதிருவார்ந்த கோஒயிலே கோயி லாகத் திகழ்ந்தீரே.’ (தே. II 54-1)11. முதலில் தேமா, பின் காய், அடுத்து இரண்டு மா அடுத்துக்காய்ச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும்வழுவிப்போய்நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டுஅஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் மடிகளே.’ (தே. I 45-1)12. முதலில் விளம், பின் கூவிளம், அடுத்துக் குறிலீற்று இரண்டுதேமா, இறுதியில் தேமா – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘நின்றுதொ டர்ந்தநெ டுங்கை தம்மை நீக்கிமின்றுவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்ஒன்றுமி யம்பலள் நீடு யிர்க்க லுற்றாள்மன்றல ருந்தொடை மன்ன னாவி யன்னாள்’. (கம்பரா. 1498) (வி. பா.படலம் 28) |
கலித்துறை வகை இரண்டு | கோவைக் கலித்துறை, காப்பியக் கலித்துறை என்பன. விளக்கம் அவ்வத்தலைப்புள் காண்க. (வீ. சோ. 123 உரை.) |
கலிநிலைத்துறை | அடிமறியாகாமல், ஐஞ்சீரடி நான்காய் வருவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும்துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’. (யா.க. 88உரை) |
கலிப்பா (1) | கலி என்ற சொல்லுக்கு எழுச்சி, பொலிவு, விரைவு, ஓசை என்ற பொருள்கள்உள ஆதலின், சீர் பொருள் இசைகளால் எழுச்சியும் பொலிவும் விரைவும் உடையபா கலிப்பா எனப்பட்டது. இது துள்ளலோசை பற்றி முரற்கை எனவும்வழங்கப்படும். இதனை வணிகர் வருணத்தது என்ப. இது துள்ளல் ஓசைத்து. (யா.க. 55 உரை) |
கலிப்பா (2) | நேரசை முதல் வரத் தொடுத்தலும், ‘ஏ’ என முடித்தலும் கலிப்பாவிற்குஅணியாம்; நிரைமுதல் வரத் தொடுத்தலும், ஆல் ஓ கொல் என்பன முதலாகமுடித்தலும் பிறிதொரு தன்மைய.தளை பிறழ்ந்துள்ள கலிப்பாவானது கொச்சகச் கலிப்பா என்றும், சிலரால்கொச்சகம் என்றும் கூறப்படும். (அறுவகை. யாப்பு 26, 27) |
கலிப்பா பொது இலக்கணம் | துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற்சீரும் நிரை நடுவாகியவஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்கு,நேரடித்தாய், தன்தளையும் அயல்தளையும் தட்டு வரும்; புறநிலை வாழ்த்து,வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்துமுதலாக 20 எழுத்து முடிய உயர்ந்த எட்டு நிலமும் பெற்று, அளவடிமிகுத்து வரும் இயல்பிற்று. இக்கலிப்பா ஒத்தாழிசைக்கலி, வெண்கலி,கொச்சகக்கலி என மூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார்அராகத்திலும் நேரீற்றியற்சீர் வரப்பெறும். (யா. க. 78 உரை.) |
கலிப்பா முதலுறுப்பு, துணையுறுப்பு | தரவு தாழிசை என்பன கலிப்பா முதலுறுப்பு; கூன், சுரிதகம், வண்ணகம்,அம்போதரங்கம் என்பன துணையுறுப்பு.(தொ. வி. 228.) |
கலிப்பா வகை நான்கு | ஒத்தாழிசைக் கவி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக்கலிப்பா நால்வகைத்து. (தொ. செய். 130 நச்.) |
கலிப்பாவினம் | கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் – என்பன. விரிவுஅவ்வத்தலைப்புள் காண்க. (யா. க. 87, 88, 89) |
கலிப்பாவின் இறுதி | கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் சேர ஏழு சீர்களை உடையவாய்வரும். அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப்பாவாகஅல்லது வெண்பாவாக இருக்கும். ஆசிரியப்பாவாயின், ஆசிரிய அடி பலவும்வந்து ஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளைவெண்பாவோ சீர்வகை வெண்பாவோ சுரிதகமாக அமையின் வெண்பாவிற்குரிய மரபுமாறாது ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும்.இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியிற் குறைந்த வெள்ளைச் சுரிதகம்வருதல் சிறப்பன்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரு மாகிய அடிகளால்முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவை இத்துணைச்சிறப்பில. கலிக்கு உறுப் பாய்வரும் வெண்பாவில் அருகி ஆசிரியத்தளைவருதலு முண்டு.எ-டு : ‘இனைநல முடைய கானகம் சென்றோர்புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்பல்லியும் பாங்கொத் திசைத்தனநல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே’ (கலி.11)இஃது ஆசிரியச் சுரிதகம்.‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல்எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர்இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப்பாணன் புகுதராக் கால்.’ (கலி. 70)இது வெள்ளைச்சுரிதகம். ‘மெல்லியான் செவிமுதல்’ என ஆசிரியத்தளையும்வந்தது.இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும்கலிப்பாக்கள் எல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான்முடியும் கலிப்பாவைப் போலச் சிறப்பில.வெள்ளைச்சுரிதகம் மூன்றடியில் குறைந்துவரின் கலிப்பா பண்புறமுடியாது. ஆதலின் சுரிதகம் மூன்றடியிற் குறையாத வெண்பாவாக இருத்தல்வேண்டும். ஆசிரியச் சுரிதகமும் மூன்றடியிற் குறையாதிருப்பதேசிறப்பு.எ-டு : ‘இரவின் வாரலை ஐய! விரவு வீஅகலறை வரிக்கும் சாரற்பகலும் பெறுவையிவள் தடமென் தோளே’ (குறிஞ்சிக். 13) (செய். 77நச்., பேரா.)இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம். (தொ. செய். 76, 77 நச்.) |
கலிப்பாவின் உறுப்புக்கள் | தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்பன.(யா. க. 84 உரை.) |
கலிப்பாவின் பொதுவிலக்கணம் | துள்ளல் ஓசைத்தாய், நேரீற்றியற்சீரும் நிரைநடுவாகியவஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர்மிக்கு,நேரடித்தாய், தன்தளையோடு அயல்தளை தட்டும் வருவது; புறநிலை வாழ்த்து,வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்துமுதல் 20 எழுத்து வரை உயர்ந்த எட்டு நிலமும் பெற்று அளவடி மிகுந்துவரும் இயல்பிற்று; ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி எனமூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார் அராகத்திலும்நேரீற்றியற்சீர் வரப்பெறும்.கலிப்பா வெள்ளைச் சுரிதகத்தாலோ ஆசிரியச் சுரிதகத் தாலோமுற்றுப்பெறுவது. ஒருசார்க் கொச்சகக்கலிகள் கலியடியானே இறுவனவுமுள.ஆசிரியநேர்த்தளைகள் (நேரொன்றாசிரியத்தளை) கலிப்பாவின் மிக்கு வாரா.(யா. க. 79 உரை) |
கலிப்பாவின் மோனை விகற்பங்கள் | ‘ இ ணையிரண் டி யைந்தொத்த முகைநாப்பண் பிறிதியாதும்’ (கலி. 77)‘ அ ரிமதர் மழைக்கண்ணீர் அ லர்முலைமேல் தெறிப்பபோல்’ (கலி. 77)‘ பெ ண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெ றுகிற்பின்’ (கலி. 77)‘ க ளிபட்டார் க மழ்கோதை க யம்பட்ட உருவின்மேல்’ (கலி. 72)‘ அ ளியென உடையேன்யான் அ வலங்கொண் டழிவலோ’ (கலி. 20)‘ ம ணிநிற ம லர்ப்பொய்கை வளர்ந்தருளு மயிலோனை’‘ அ ரிதாய அ றனெய்தி அ ருளியோர்க் களித்தலும்’(கலி. 11) (தொ. செய். 92 நச்.) |
கலிப்பாவின் வகை நான்கும் அவற்றின்முறைவைப்பும் | ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக் கலிப்பாநால்வகைத்து.ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள் ஒத்தாழிசை யாம்.ஒத்துஆழிசை – வினைத்தொகை. தாழிசை என்பது தானுடைய துள்ளல்ஓசைத்தாம். தாழ்தல் துள்ளலில் தாழம்படுதல் என்னும் பொருட்டு. தரவுஓசைசற்று வேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம்முதலியவற்றுள் இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடையனவன்றியும் வரலாம்.இதற்குப் பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்றடுக்கிவருதலானும், ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்த லானும் தாழிசை என்றபெயர் தலைமையும் பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக்கலிப்பாவுக்குத் தரவு மிகத் துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டுமூன்றடுக்கி வருதலின் ஒத்தாழிசை எனப் பெயர் பெற்றது. சீர்வகைக்கலியுள் தரவு மிகத் துள்ளி வரும். இதற்குத் தாழிசை ஓசை தாழம்பட்டேவருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருத லும், கொச்சகத்தில் தாழிசை(ஒத்த தாழிசை ‘ஒத்தாழிசை’ என்பது நச். கருத்து.)‘நீயே,வினைமாண் காழகம் வீங்கச் சுற்றிப்புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே’ (கலி. 7)எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும்.தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும் சிறப்புடைமையா னும்ஒத்தாழிசைக் கலி முதலில் கூறப்பட்டது. கலித்தொகை 150 கலியுள்ளும்ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது. (என்பர் பேரா.)இதற்கும் கொச்சகத்துக்கும் இடையே கலிவெண்பாட்டுக் கூறியது, அதுவும்இவைபோல உறுப்புக்களை உடைத்தாகி வரும் என்றற்கு.தரவும் போக்கும் சிறுபான்மை இன்றியும் வருதலின் கொச்சகம் அதன்பின்வைக்கப்பட்டது.தரவும் அடக்கியலும் இன்றி வருதலே பெரும்பான்மையாத லின், உறழ்கலிஈற்றில் வைக்கப்பட்டது. (தொ. செய். 130 பேரா., நச்.) |
கலிப்பாவின் விரி எழுநூற்றிருபது | ஒத்தாழிசை, கலிவெண்பா, கொச்சகக்கலி எனக் கலிப்பாவின் தொகைமூன்று.நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை,கலிவெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா,சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா,மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனக் கலிப்பாவின் வகை ஒன்பது.இவ்வொன்பது வகைகளையும் ஏந்திசைத்துள்ளல், அகவல் துள்ளல்,பிரிந்திசைத்துள்ளல் என்ற மூன்றான் உறழ, 9 x 3 = 27 ஆம். சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளை, சிறப்பில்லாத ஆசிரியநேர்த்தளை என்ற இரண்டனையும் விடுத்து ஏனைய ஆறுதளைகளையும், சிறப்புடையதளை சிறப்பில்லாத தளை என்ற இருவகையான் உறழ்ந்த பன்னிரண்டோடும்,முற்கூறிய இருபத் தேழனையும் உறழ, 12 x 27 = 324 ஆம்.இனி, கலிவெண்பாவின்கண்ணும் கொச்சகக் கலியின்கண் ணும் ஆசிரியநேர்த்தளை இரண்டும் அருகிவரப் பெறுத லின், கலிவெண்பா ஒன்று கொச்சகக்கலி வகை ஐந்து ஆக ஆறனையும், மூவகைத் துள்ளல் ஓசையோடும் இருவகை ஆசிரியநேர்த்தளையோடும் உறழ, 6 x 3 x 2 = 36 ஆம். அவற்றையும் கூட்டக் கலிவிரி 324 + 36 = 360ஆம்.இவற்றை மீண்டும் சிறப்புடையன, இல்லன என விரிக்க, 360 x 2 = 720 ஆம். (யா. க. 81 உரை)சிறப்பு வகை மூன்று, சிறப்பில் வகை 3; ஓசை 3 ; சிறப்புடைய தளைஆசிரிய நேர்த்தளை நீங்கலாக 6, சிறப்பில்லாத தளை ஆசிரிய நேர்த்தளைநீங்கலாக 6; இவற்றை முரண, 6 x 3 x 12 = 216 |
கலிப்பாவிற்கு உரிய நிலம் | அளவடியின் மேல்நிலையான 13, 14 எழுத்துக்களும், நெடிலடி நிலமாகிய 15முதல் 17 எழுத்து எல்லையும், கழிநெடிலடி நிலமாகிய 18 முதல் 20 எழுத்துஎல்லையும் ஆகப் பதின்மூன் றெழுத்து முதல் இருபது எழுத்து முடியக்கலிப்பா அடிக்கு உரிய எழுத்து எல்லையாம். இது கட்டளைக் கலியடிக்கேவரையறை.சீர்வகைக் கலியடி 13 முதல் 20 என்ற எழுத்தெல்லையின் குறைந்துவரும்.எ-டு :‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38 – 11எழுத்தடி.)‘சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்’ (கலி. 4 – 12எழுத்தடி.)(தொ. செய். 59 நச்.) |
கலிப்பாவிற்கு நூற்றிருபது அடிகள்உரியவாதல் | கலிப்பாவிற்கு இயற்சீர்கள் 16. (தேமா புளிமா ஆகிய நேரீற் றியற்சீர்இரண்டும் வருதலில்லை. 1) ஞாயிறு, 2) பாதிரி (இவைமுறையே இரண்டெழுத்தும்மூன்றெழுத்தும் ஆம்); 3) வலியது, 4) கணவிரி (இவை முறையேமூன்றெழுத்தும் நான்கெழுத்துமாம்). இவை நிரையீற்றியற்சீர்கள் இவ்விருவகையான் அமைந்தன. இனி, உரியசை மயங்கிய இயற்சீர் ஆறும் 5) போது பூ, 6)மேவு சீர், 7) விறகு தீ, 8) உருமுத்தீ, 9) போரேறு, 10) நன்னாணு, 11)பூமருது, 12) காருருமு, 13) மழகளிறு, 14) நரையுருமு, 15) கடியாறு, 16)பெருநாணு – எனக் குற்றுகர முற்றுகர வேறுபாட்டான் பன்னிரண்டாம். இவ்வாற்றான் இருவகை இயற்சீர்களும் 16 ஆமாறு காண்க.)கலிப்பாவிற்கு ஆசிரிய உரிச்சீர்கள் 4. 1) நீடு கொடி 2) நாணுத் தளை,3) உரறுபுலி, 4) விரவு கொடி எனக் குற்றுகர முற்றுகர வேறுபாட்டான்நான்காயவாறு காண்ககலிப்பாவிற்கு வெண்சீர் 4. அவை மாசெல்வாய், புலிசெல் வாய்,மாவருவாய், புலிவருவாய் என ஒருநிலையனவேயாம். இவ்வாற்றான்கலிப்பாவிற்குரிய சீர்கள் 16+4+4 = 24 ஆம்.(தொ. செய். 43 நச். உரை)இவ்விருபத்து நான்கு சீர்களும் முறையே அளவடியில் முதற்சீராக நிற்ப,கலிப்பாவின் அளவடி பின் வருமாறு முறையே உயரும்தோறும் அடிகள்பலவாம்.ஞாயிறு, போது பூ, போரேறு – என்னும் இவ்வீரெழுத்துச் சீர்கள்மூன்றும் முதற்சீராக நிற்ப, 13 முதல் 17 எழுத்து வரை முறையே உயரவே,வரும் அடிகள் 3 x 5 = 15 ஆம்.பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ,மாசெல்வாய், நீடுகொடி – என்னும் இம்மூவெழுத் துச் சீர்கள் ஒன்பதும்முதற்சீராக நிற்ப, 14 முதல் 18 எழுத்து வரை முறையே உயரவே, வரும்அடிகள் 9 x 5 = 45 ஆம்.கணவிரி, உரறுபுலி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு,நாணுத்தளை, புலிசெல்வாய், மாவருவாய் – என்னும் இந்நான்கெழுத்துச்சீர்கள் ஒன்பதும் முதற்சீராக நிற்ப, 15 முதல் 19 எழுத்து வரை முறையேஉயரவே, வரும் அடிகள் 9 x 5 = 45 ஆம்.இனி, விரவுகொடி, நரையுருமு, புலிவருவாய் – என்னும்இவ்வைந்தெழுத்துச் சீர்கள் மூன்றும் முதற்சீராக நிற்ப, 16 முதல் 20எழுத்து வரை முறையே உயரவே, வரும் அடிகள்3 x 5 = 15 ஆம்.ஆகவே கலிப்பாற்குரிய அடிகள் 15 + 45 + 45 + 15 = 120 ஆமாறுஅறியப்படும். இவ்வரையறை கட்டளைக் கலிப்பாவிற்கே என்பது. (செய். 50நச். உரை) |
கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும்வரும் கனிச்சீர்கள் | எ-டு : ‘புனற்படப்பைப் பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை’இக்கலித் தரவுஅடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற நிரைநடு இயலாவஞ்சி உரிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை’‘குறிஞ்சியொடு கமழும் குன்ற நாட’இவ்வாசிரிய அடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற வஞ்சிஉரிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘வீங்குமணி விசித்த விளங்குபுனை நெடுந்தேர்’இவ்வாசிரிய அடியுள் தேமாங்கனி புளிமாங்கனி என்ற வஞ்சிச் சீர்கள்வந்தவழி, இடையே ‘புளிமா’ என்ற இயற்சீர் வந்தது.எ-டு : ‘நிரைந்து நிரைந்து சிறுநுளைச்சிய ர் நெடுங்கானல் விளையாடவும்’எனக் கொச்சகக் கலியுள் அருகி நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர்வந்தது.பாவினங்களில் கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற நிரை நடுவாகிய வஞ்சிஉரிச்சீர் வரப்பெறும்.எ-டு : ‘ குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி’ (சூளா. தூது 4)எனக் கலிவிருத்த அடியுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘தனிவரலெனத் தலைவிலக்கலின் இறுவரைமிசைஎறிகுறும்பிடை’என ஆசிரியத் துறையுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன.(யா. க. 16 உரை.) |
கலிப்பாவில் அறுசீரடி எழுசீரடிவருதல் | கலிப்பாவில் நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரியவெண்டளையோடன்றி ஆசிரியத் தளையொடு வருதலும் உண்டு.எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப்போகஅன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் றலறிப் பேரும்தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம்புன்னை அரும்பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரேஎம்மூர்’இப்பாடற்கண், மூன்றாமடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீரடிகள்வந்தன.இனி, ஒரு பாடல் முழுதுமே அறுசீரடியாய் வருதலும் உண்டு.எ-டு :‘தொக்குத் துறைபடியும் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோள்மேல்பெய்வான்கைக்கொண்ட நீருள் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணிமெய்க்கண்ணும் பெய்கல்லார் மீண்டுங்கரைக் கேசொரிந்துமிளிர்வ காணார்எக்கர் மணற்கிளைக்கும் ஏழை மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை’இவை கொச்சகக் கலி.‘வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதற் பொருட்டுவந்தோய்’என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது.அறுசீரடியை இருசீர் முச்சீர் அடிகளாகத் துணித்தல் கூடாது.கலிக்கு எழுசீரான் வரும் அடி முடுகியற்கண்ணே பயின்று வரும்.எ-டு :‘கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடுவிளையாட’என எழுசீரடி முடுகி வந்தது. இங்ஙனம் முடுகி வருதல் கலிக்கும்பரிபாடலுக்கும் நிகழும். (தொ. செய். 64, 65. நச்.) |
கலிப்பாவில் பிற பா அடிகள்மயங்குதல் | கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.‘காமர் கடும்புனல்’ (கலி-39) என்ற கலிப்பாவுள், வெண்பாக்க ளும்ஆசிரிய அடிகளும் பலவாக மயங்கிவர, அப்பாடல் ஆறடிச் சுரிதகத்தான்முடிந்தது. (யா.க.30)முல்லைக்கலி 3ஆம் பாடலில், முடுகியலடியாகிய முதலடி யும், ஏனையமூன்றாமடியும் முச்சீரான் வந்தன.‘நின்கண்ணாற் காண்பென் மன்யான்’ (குறிஞ்சிக். 3)இஃது இடையில் வந்தது.‘செய்தானக் கள்வன் மகன்’ (குறிஞ்சிக் .15)இது கலிவெண்பாவின் ஈற்றடியாக வந்தது. (தொ. செய். 70 நச்.)சிந்தடி, ஏழு முதல் ஒன்பது எழுத்தின்காறும் பெற்று வருவது.(தொ. செய். 55 இள.)கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் எழுசீர்களையுடை யவாய் வரும்.அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப் பாவாக அன்றிவெண்பாவாக இருக்கும். ஆசிரியப் பாவாயின், ஆசிரியஅடி பலவும் வந்துஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளைவெண்பாவோ, சீர்வகை வெண்பாவோ, சுரிதகமாக அமை யின் வெண்பாவிற்குரியமரபின்படி ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும்.ஆகவே, இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியில் குறைந்த வெள்ளைச்சுரிதகம் வருதல் சிறப்பின்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீருமாகியஅடிகளால் முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவைஇத்துணைச் சிறப்பில. கலிக்கு உறுப்பாய் வரும் வெண்பாவில் அருகிஆசிரியத்தளை வருதலும் உண்டு.எ-டு : இனைநல முடைய கானகம் சென்றோர்புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்பல்லியும் பாங்கொத் திசைத்தனநல்லெழி லுண்கணும் ஆடுமால் இடனே’ (கலி. 11)இஃது ஆசிரியச் சுரிதகம்.‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல்எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர்இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப்பாணன் புகுதராக் கால்’ (கலி. 70)இது வெள்ளைச் சுரிதகம்; ‘மெல்லியான் செவிமுதல்’ என இதன்கண்ஆசிரியத் தளையும் வந்தது. (தொல். செய். 76, 77 நச்.)இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும்கலிப்பாக்களெல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான்முடியும் கலிப்பாப் போலச் சிறப்பில.வெள்ளைச் சுரிதகம் மூன்றடியில் குறைந்து வரின் கலிப்பா பண்புறமுடியாது ஆதலின், சுரிதகம் மூன்றடியிற் குறையா திருப்பதே சிறப்பு.எ-டு :‘இரவில் வாரலை ஐய விரவுவீஅகலறை வரிக்கும் சாரல்பகலும் பெறுவைஇவள் தடமென் தோளே! (கலி.49) (தொ.செய். 77 நச்.,பேரா.) |
கலிப்பாவில் முச்சீரடி வரப்பெறுதல் | கலிப்பாவில் முச்சீரடி ஒரு செய்யுள் முழுதும் நிறைந்திருத்த லும்உண்டு. அஃதன்றி முதல் இடை கடை என்ற மூன்றிடத் தும் ஓரோ அடியாகவும்இரண்டும் பலவுமாகிய அடிகளாக வும் நிற்கும்.எ-டு : நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக்கார்வரக் கண்டநம் காதலர்தேர்வரக் கண்டில மன்னோபீர்வரக் கண்டனம் தோளே!இது முச்சீரடி முழுதும் வந்தது.அரிபரி பறுப்பன சுற்றிஎரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்உருவ மாலை போலக்குருதிக் கோட்டொடு குடர்வ லந்தன (முல்லைக்.3)1,3 முச்சீரடி (தொல். செய். 70 நச்.) |
கலிப்பாவும் வஞ்சிப்பாவும்ஒருங்குவைத்த இயைபு | எடுத்துக்கொண்ட இனவெழுத்து இரண்டாமடி முதற்கண் பெற்றும் இடையிட்டுஎதுகை பெற்றும் பெறாதும் வந்த ஒரு சார் இருசீரடி வஞ்சிப்பாவின்இரண்டடியை உடன் கூட்டி இசை அறாமை அசைத்து ஒலிப்ப எழுத்தும் எதுகையும்பெற்றும் பெறாதும் வந்த ஒலித்தொடர்ச்சியால் கலிப்பா அடியாய்க்கைகலத்தலும், அனுவும் அடியெதுகையும் பொழிப்பெதுகையும் பெற்றும்பெறாதும் வந்த கலிப்பா அடியினைக் கண்டித்து இரண்டாக்கிக் காலஇடையீடும் கடைபற்றியது காகூவும் பட (-இசையெச்சம்) ஒலிப்பத் துள்ளலோசைவழுவித் தூங்கலோசைத்தாய் வஞ்சித்தலும் உடைத்து எனக் கலியும் வஞ்சியும்ஒருங்கு வைக்கப்பட்டன என்ப.‘தாழிரும் பிணர்த்தடக்கைத்தண்கவுள் இழிகடாத்துக்காழ்வரக் கதம்பேணாக்கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’என்ற வஞ்சியடிகளை,’தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள்இழிகடாத்துக்காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’எனக் கலியடிகளாகவும்,‘ஓங்குதிரை வியன்பரப்பின்ஒலிமுந்நீர் வரம்பாகத்தேன்தூங்கு முதிர்சிமையமலைநாறிய வியன்ஞாலத்து’ (மதுரைக். 1-4)என்ற வஞ்சியடிகளை,‘ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத்தேன்தூங்கு முதிர்சிமைய மலைநாறிய வியன்ஞாலத்து’எனக் கலியடிகளாகவும் உரைப்பின் துள்ளலோசை பெற்றவாறு.இனி,‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றும்குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்துமுன்னாட்கண்’(யா. வி. பக். 33 உரைமேற்.)என்னும் கலியடிகளைத் துணித்து இவ்விரண்டாக்கி,‘பரூஉத்தடக்கை மதயானைப்பணையெருத்தின் மிசைத்தோன்றும்குரூஉக்கொண்ட மணிப்பூணோய்குறையிரந்து முன்னாட்கண்’எனக் குறளடியாக்கியுரைப்பின், வஞ்சிப்பாவாய்த் தூங்க லோசைபெற்றவாறு. (குறளடி இறுதியில் ஓசை அறுதலின் கால இடையீடு உண்டாம்;வஞ்சியடி யிறுதிக்கண் இசை யெச்சம் தோன்ற அடுத்துப் பிற உறுப்புக்கள்தொடரும்.)இவ்வியைபு பற்றிக் கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப் பட்டன என்ப.(யா. க. 55 உரை.) |
கலிமண்டிலத்துறை | அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது.எ-டு :’மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளக்கும்;தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்.’இதன் கண், யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும்ஓசையும் பொருளும் மாறுபடாது நெடிலடி நான்காய் நிகழ்தலின் இது கலிமண்டிலத்துறையாம்.(யா. க. 88 உரை.) |
கலியடியுள் தளைமயக்கம் | கலியடியுள், தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,தன்தளையும் ஆசிரியத்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையே வருதலும் என்று இவ்வாற்றால் பலபட வரும்.எ-டு :‘குடநிலைத் 1 தண்புறவில் 2 கோவலர் 3 எடுத்தார்ப்பத் 4தடநிலைப் 5 பெருந்தொழுவில் 6 தகையேறு 7 மரம் பாய்ந்து 8வீங்குபிணிக் 9 கயிறொரீஇத் 10 தாங்குவனத் 11 தேறப்போய்க் 12கலையினொடு 13 முயலிரியக் 14 கடிமுல்லை 15 முறுவலிப்ப,எனவாங்குஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்கானுடைத் தவர்தேர் சென்ற வாறே’.இக்கலிப்பாவினுள் ‘இயற்சீர் வெண்டளை 1 , வெண்சீர் வெண்டளை 2 , நிரையொன்றாசிரியத்தளை 3 , கலித்தளை 4 , நிரையொன்றாசிரியத்தளை 5 , கலித்தளை 6 , கலித்தளை 7 , வெண்சீர் வெண்டளை 8 , ஒன்றிய வஞ்சித்தளை 9 , வெண்சீர் வெண்டளை 10 , ஒன்றாத வஞ்சித்தளை 11 , கலித்தளை 12 , கலித்தளை 13 , கலித்தளை 14 , கலித்தளை 15 கலித்தளை 16 என்பன நான்கடிகளினும் முறையே வருதலின், பிறதளைகள் யாவும்மயங்கியவாறு. (யா. க. 22 உரை) |
கலியொத்தாழிசை | ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் கலித்தாழிசைகள். ‘கலித்தாழிசை’காண்க. |
கலிவகை 9 | கலிப்பாவின் விரி – நோக்குக. |
கலிவிருத்தத்தின் பாற்படுவன | கலிவிருத்தம் சமமான நாற்சீரடி நான்காய் அமைவது என்பதுஇலக்கணமாயினும், கலிவிருத்தம் போன்று ஐந்தடி ஆறடி களான்வருவனவற்றையும் அவ்விருத்தத்துள் அடக்கிக் கொண்டு அவற்றைக் கொச்சகக்கலி என்று கூறுதலும் ஆம்.எ-டு :‘கோழியும் கூவின; குக்கில் அழைத்தன;தாழியுள் நீலத் தடங்கணீர்! போதுமினோ!ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்கூழை நனையக் குடைதும் குளிர்புனல்ஊழியும் மன்னுவாம் என்றேலோ ரெம்பாவாய்!’என ஐந்தடியான் வந்த பாடலை ஒப்புமை நோக்கிக்கலிவிருத்தத்தின்பாற்படுத்துவர். இதனைத் தரவு கொச்சகம் எனினும்அமையும். (யா. க. 93 உரை) |
கலிவிருத்தத்தில் பிற தளை | ‘மதுவிரிவன மலரணிவன மல்லிகையொடு மௌவல்’(சூளா. தூதுவிடு.)‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர்’ (சூளா. 7)என இக்கலிவிருத்த அடிகளுள், வஞ்சித்தளை இரண்டும் கலித்தளையும்,நிரையொன்றாசிரியத்தளையும், நேரொன் றாசிரியத்தளையும் வந்தன. (யா. க. 22உரை) |
கலிவிருத்தமும் தரவுகொச்சகமும் | இரண்டும் நாற்சீரடி நான்காய் ஒருவிகற்பமாய் அமைவன. கலியொலி வழுவாதுபெரும்பாலும் மூவசைச்சீரான் அமைவது தரவு கொச்சகம்; கலியொலி வழுவிவருவது கலிவிருத்தம். (யா. க. 89 உரை) |
கலிவிருத்தம் எட்டுவகை | நாற்சீரடி நான்கானாகிய கலிவிருத்தம் பெரும்பாலும் எட்டு வகையுள்அடங்கும்.1. ஒரு மா, மூன்று கூவிளம் கொண்ட அடி நான்கான் அமைவது.எ-டு : உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகி லாவிளை யாட்டுடை யாரவர்தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே! (கம்பரா. கடவுள். 1)2. இரண்டு விளம், ஒரு மா, ஒரு கூவிளம் கொண்ட அடி நான்கான்அமைவது.எ-டு : ‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர்இஞ்சிசூழ் அணிவரை இருக்கை நாடதுவிஞ்சைநீள் உலகுடன் விழாக்கொண் டன்னதுதுஞ்சுநீள் நிதியது சுரமை என்பவே’. (சூளா. 7)3. மூன்றுமா, ஒருகாய் அல்லது விளம் கொண்ட அடிநான்கான் அமைவது.எ-டு : ‘பரவக் கெடும்வல் வினைபா ரிடம்சூழஇரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடிஅரவச் சடையந் தணன்மே யஅழகார்குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே’. (தே. II 35-1)4. முதற்சீர் மா, இரண்டாவது மா அல்லது விளம், மூன்றாவதும் மாஅல்லது விளம், நான்காவது காய் – என்றமைந்த அடிநான்கான் அமைவது.எ-டு : ‘கண்ணார் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்தன்திண்ணா கம்பிளக் கச்சரம் செலவுற்றாய்விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேயஅண்ணா அடியேன் இடர்களை யாயே.’ (பெரியதி. I 10-1)5. மூன்று மா, ஒரு காய் கொண்ட அடி நான்கான் அமைவது.எ-டு : ‘வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைதிங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்கங்கை தங்கு முடியார் அவர்போலும்எங்கள் உச்சி உறையும் இறையாரே’ (தே. I 26-1)6. நாற்சீரும், மாச்சீராய் வரும் நான்கடியான் அமைவது.எ-டு : ‘தாந்தம் பெருமை அறியார் தூதுவேந்தர்க் காய வேந்தர் ஊர்போல்காந்தள் விரல்மென் கலைநன் மடவார்கூந்தல் கமழும் கூட லூரே’ (பெரியதி. II 2-1)7. மூன்று கனிச்சீர், ஒரு மாச்சீரால் வரும் நான்கடியான்அமைவது.எ-டு : ‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்மையோமர கதமோமறி கடலோமழை முகிலோஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’ (கம்பரா. 1296)8. விளம். விளம் அல்லது காய், மா, விளம் அல்லது காய் என்றமைந்தநாற்சீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘முடிகெழு மன்னர்முன் இறைஞ்சு தம்மைத்தம்கடிகமழ் அகலத்துக் கொண்ட காதலெம்அடிகளும் அயலவர் போல ஆயினார்கொடிதிது பெரிதெனக் குழைந்து போயினார்’ (வி. பா.படலம்.5) |
கலிவெண்பா (1) | தான் வெளிப்படையாக ஒரு பொருளைக் கூறவும், உள்ளார்ந்த பிறிதொருபொருள் அமையுமாறு வெண்பா அடியால் திரிவு இன்றிப் பாடப்படுவதுகலிவெண்பாவாம்.இங்ஙனம் வரும் கலிவெண்பாக்கள் யாவும் உள்ளார்ந்த ஒரு பொருள் கருதிவரல் வேண்டும் என்ற வரைறை இல்லை. கட்டளை அடியாய் வருதலும், தனக்குரியவெண்டளையான் வருதலும், பன்னீரடியான் வருதலும் பிறவுமாகிய இலக்க ணம்சிதையாதவற்றுக்கே ஒரு பொருள் நுதலி வரல் வேண்டும் என்பது விதி.அவ்விலக்கணத்தில் திரிந்தும், சீரும் தளையும் சிதைந்தும்,அடியிகந்தும், பாவகை சிதைந்தும், ஒரு பொருள் நுதலியும் நுதலாதும்வெண்பா இயலான் வந்தன வும் கலியோசையாம் ஆதலின் கலிவெண்பாஆதற்கு இழுக்கில்லையாம்.ஆகவே, ஒரு பொருள் நுதலியது கட்டளைக் கலியாய்த் திரி வின்றி வரும்என்பதும், ஒருபொருள் நுதலாதது சீர் வகைக் கலியாய்த் திரிவுடைத்தாய்வரும் என்பதும் பெறப்படும்.‘அரும்பொருள் வேட்கையின்’ (கலி. 18) என்பது பன்னீரடி யான் வந்துஒருபொருள் நுதலிய கட்டளைக் கலிவெண்பா. இதனுள் தோழி, பெண்தன்மைக்குஏலாத நுண்பொரு ளினைத் தலைவன் எதிர்நின்று உணர்த்துவாள், தலைவன் பண்டுகூறின சிலவற்றை மனங்கொண்டு கூறுவாளாய்க் கூறிய கூற்றின்கண், “‘நீமறந்தாய்’ என்பது யாம் உணருமாறு கூறுகின்றாள் இவள்” என்ற கருத்தமையநிற்றலின், இஃது ஒருபொருள் நுதலியதாயிற்று. இஃது அகப்பொருட்கேஉரித்து. இது வெண்டளை பிறழாமை யானும், பன்னீரடியின் இகவாமையானும்நெடுவெண்பாட்டு எனப்படாதோ எனின், இது வெண்பாவாயின், குறித்த பொருளைமறையக் கூறாது செப்பிக் கூறல் வேண்டும்; இஃது அன்னதன்றிப் பொருள்வேறுபடுதலானும் துள்ளிவருதலானும் கலி வெண்பா ஆயிற்று.‘சுடர்த்தொடீஇ கேளாய்’ (கலி. 51) என்பது.பன்னீரடியின் இகந்து ஒரு பொருள் நுதலிவரும் கலிவெண்பா.கலித்தொகை நூற்றைம்பது கலியுள்ளும் கலிவெண்பாக்கள் எட்டாம்.‘கயமலர் உண்கணாய்’ (கலி.37) என்பது,‘அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன்றென்ப’ (தொ.பொ. 218 நச்.) என்பத னால், மெய்யினும் பொய்யினும்தன்வழிபாட்டு நிலை குறையாமல் தோழி தலைவிக்கு உள்ளார்ந்த பொருள் ஒன்றனைஅவள் உணருமாற்றான் உட்கொண்டு கூறியது. (இவற்றை இக்காலத்தார் வெண்கலிஎன்பது சான்றோர் வழக்கொடு மாறுகொள்ளும்).‘தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம் (கலி.111)என்பது.தளைவிரவி ஐஞ்சீரடியும் வந்து, ஒரு பொருள் நுதலாது வருவது.‘இடுமுள் நெடுவேலி’ (கலி. 12) என்பது தளை விரவி வந்தது. இனிஇக்காலத்துப் பொருள்வகை சிதையக் கூறப்படும் உலாச் செய்யுளும் மடல்செய்யுளும் இக்கலிவெண்பாவின் பாற்படும். (தொ. செய். 153, 154நச்.)கலிவெண்பாட்டெனினும் வெண்கலிப்பாட்டெனினும் ஒக்கும். வெண்டளையான்வந்து ஈற்றடி முச்சீரான் வருவன வும், பிறதளை யானும் வந்து ஈற்றடிமுச்சீரான் வருவனவும், கொள்ளப்படும்.அகப்பொருளனவாம் பஃறொடை வெண்பா கலிவெண்பா;பிறபொருளனவாம் பஃறொடை வெண்பா பஃறொடைவெண்பாவேயாம்;பரிபாடல் உறுப்பாய் வரும் பஃறொடைவெண்பா பரிபாடல்;கொச்சகக்கலி உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாகொச்சகக்கலிப்பா.(தொ. செய். 147 இள.) |
கலிவெண்பா (2) | கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாவே போல முச்சீரான்முடிவது. ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு முச்சீரான்இறுவனவும் வெண்கலிப்பா எனப்படும், பெரும்பாலும் ஈற்றடி வெள்ளோசைகொண்டும் கொள்ளாதும் முச்சீரடியான் இறுவதே கொள்ளப்படும்.வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும்.(யா. க. 85 உரை.)இது சிறப்புடைக் கலித்தளையானும், உரிச்சீர் வெண்டளை யானும்,சிறப்பில்லாத ஆசிரிய நிரைத்தளையானும் சிறப்பில் லாத வஞ்சித்தளையானும்வரும்.ஒருசாரார் செப்பல் ஓசையில் சிறிதும் வழுவாது வருவன கலிவெண்பாஎன்றும், சிறிது வழுவி வருவன வெண்கலிப்பா என்றும் கூறுப. (யா. கா. 32உரை; யா. கா. 85 உரை)எ-டு : ‘பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானாவிண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும்பயில்வார்கள்விண்ணாளும் வேந்தரா வார்.’இது சிறப்புடைய கலித்தளையான் வந்த கலிவெண்பா.‘நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய்வானிறைஞ்சமாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கும்அல்லார்க்கும்தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்குமாதுயரம் தீர்ப்ப தெளிது.’இஃது உரிச்சீர் வெண்டளையான் (பெரும்பாலும்) வந்த கலிவெண்பா.‘ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண்வார்மலர்த் தடங்கண்ணாள் வலைப்பட்டு வருந்தியவென்தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்சீர்நிறை கொடையிடை சிறந்து.’இது சிறப்பில் ஆசிரிய நிரைத்தளையான் வந்த கலிவெண்பா.‘முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்ப்பொழிந்தமதக் கடுஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்துபெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்பொருகழற்கால் வயமன்னர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால்குணந்தாங்கிஅருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து’.இது சிறப்பில் வஞ்சித்தளையான் வந்த வெண்கலிப்பா. (யா. க. 85உரை) |
கலிவெண்பா பெயர்க்காரணம் | கலியாய் வந்து ஈற்றடி வெண்பாவே போன்று முச்சீராய் இறுதலானும்,வெண்பாவினிற் சிறிதே வேறுபட்ட கலி யோசைத்து ஆதலானும் கலிவெண்பா என்பதுகாரணக்குறி.(யா. க. 79 உரை) |
கலிவெண்பா விரி | சிறப்பு, சிறப்பில்லது; ஓசை 3; தளை (7 + 7 =) 14; இவற்றை முரண, 2 x 3 x 14 = 84சிறப்புடைய வகை 5; சிறப்பில்வகை 5; ஓசை வகை 3; தளை 14; இவற்றைமுரண, 10 x 3 x 14 = 420இவற்றால், 216 + 84 + 420 = 720 என விரி இம்முத்திறமும் பற்றிக்கொள்ளப்படும். (யா. க. 81 உரை.) |
கலிவெண்பா, வெண்கலிப்பா | இவ்விரண்டும் ஒரே பாவினுடைய இருபெயர்கள் என்பர் ஒரு சாரார்.வெண்டளை தட்டு வருவன கலிவெண்பா எனவும், வெண்டளையொடு கலித்தளை தட்டுவருவன வெண் கலிப்பா எனவும் கூறுவர் வேறொரு சாரார். (யா. க. 85உரை) |
கலிவெண்பாட்டு | ‘கலிவெண்பா’ – காண்க. |
கலிவெண்பாவின் இருவகை | வெண்பா இயலான் தோன்றும் கலிவெண்பா, விரவு உறுப் புடைய கலிவெண்பாஎன்பன. (தொ. செய். 153 நச். உரை) |
கல்லவல் | நாடு அறி சொற்பொருள் பயக்குமாறு பிழையாமல் வாசகம் செய்யும்வகை.வரலாறு :‘மனையிற்கு நன்று’‘முதுபோக்குத் தீது’‘முதுபோக்கே அன்று’‘பெருமூர்க்குத் தீது’என்பனவாம். (யா. வி. பக். 550) |
கல்லவல் | நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகம் செய்வது.எ-டு : ‘மனையிற்கு நன்று’, ‘முதுபோக்குத் தீது’, ‘முதுபோக்கேஅன்று’‘பெருமூர்க்குத் தீது’ என்பனவாம். (யா.வி. பக். 550)(இச் செய்தி விளங்கவில்லை.) |
கல்லாடர் | ‘கல்லாடம்’ என்னும் அகப்பொருளின் இலக்கியத்தை இயற்றிய ஆசிரியர்.நூறு அகவற்பாடலால் ஆகிய இந்நூல் திருக்கோவையார் குறிப்பிடும்அகப்பொருள் கிளவிகளை உட்கொண்டு சிவபெருமான் பெருமையை இடைமடுத்துப்பாடப்பட்டது; கடிய நடை உடையது.தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் நச்சினார்க்கினியர்உரைகளைப் பெரும்பான்மையும் உட் கொண்டு, வேண்டும் விகற்பம் கூறி உரைஎழுதிய கல்லாடர், கல்லாடம் என்ற நூல் இயற்றிய கல்லாடரின்வேறானவர்.சங்க காலத்துக் கல்லாடனார் என்ற நல்லிசைப் புலவர் ஒருவர்இருந்தார். அவர் பாடல்கள் எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ளன. |
களரியாவிரை | இறந்துபட்ட தலைச்சங்க நூலுள் ஒன்று. (இறை. அ. 1 உரை) |
களவியற்காரிகை | அகப்பொருள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் இந்நூல் அந்தாதிக்தொடையால் அமைந்த கலித்துறை நூற்பாக் களால் ஆகியது. இந்நூல் முதல் நடுஇறுதியாகிய மூவிடத் தும் சிதைந்துள்ளது. இறையறார் களவியற்குஅங்கமாவது.பாலைக்கருப்பொருள் பற்றிய கலித்துறையே, இதுபோது கிட்டியுள்ளவற்றுள்முதலாவது. உடன்போக்குவரையுமே இன்று கிட்டியுள்ளது. சுருக்கமான உரைதுறை விளக்கம் தருகிறது. உதாரணப்பாடல்களாகப் பாண்டிக்கோவை,திருக்கோவையார், பழம்பாடல்கள் ஆகியவையே அமைந் துள்ளன. இந்நூல்தமிழ்நெறி விளக்கத்தோடு பெரிதும் தொடர்புடையதாக உள்ளது.‘களவியற்காரிகை’ என்ற நூற்பெயர்தானும் பதிப்பாசிரியர் இட்ட பெயரேயாம்.அகப்பொருட் செய்திகள் பலவற்றை எடுத்துக்கூறும் இந்நூல் இந்நிலையிலும்ஓளரவு பயன்படுகிறது. தமிழ்ப் பேரறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்பரிசோதித்து வெளியிட்ட பதிப்பு 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது. |
களவியல் | இது தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் மூன்றாவது இயல்.அகத்திணையியலின்கண் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை ஓதி,அவற்றின் புறத்தே நிகழும் எழுதிணைகளும் புறத்திணையியலில் ஓதினார்.அகத்திணை ஏழனுள்ளும் ஒருதலை வேட்கை ஆகிய கைக்கிளையும் ஒப்பில்கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையவாகியநடுவண் ஐந்திணைக்கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும்ஊடலும் ஆகிய உரிப்பொருள்கள் களவு கற்பு எனும் இருவகைக் கைக்கோளிலும்நிகழுமாதலின், களவா கிய ஒழுக்கம் இம்மூன்றாம் இயலில் கூறப்படுகிறது.இதன்கண், தலைவனும் தலைவியும் விதிவயத்தால் ஒருவரை ஒருவர் காண்பதுமுதலாகக் களவு வெளிப்படும் துணையும் உள்ள செய்திகள் கூறப்படுகின்றன.இதன்கண் 50 சூத்தி ரங்கள் (நச். உரைப்படி) உள்ளன. |
களவியல் முதனூலே | தானே தலைவனாகிய முனைவனான் செயற்கைநலம் தோன்றச் செய்யப்பட்ட நூல்கள்ஆலவாய்ப் பெருமானடிகள் செய்த களவியல் போல்வன. அகத்தியம் தொல்காப்பியம்முதலிய நூல் தோன்றிய பிற்காலத்தே களவியல் செய்யப்படினும்,இயற்கைநூலின் வழித்தாகவோ செயற்கை நூலின் வழித் தாகவோசெய்யப்படாமையின், முனைவன் அருளிய முதல் நூல் எனவே அது சான்றோரால்கொள்ளப்பட்டது. (பா. வி. பக். 98) (தொ. பொ. சூ. 649 பேரா.) |
களி | கட்குடியர் தாம் குடிக்கும் கள்ளின் பெருமையைச் சிறப் பித்துக்கூறுவதாக அமையும் இத்துறை கலம்பக உறுப்புக் களுள் ஒன்று.“புத்தர்களே! அரங்கநாதனை வழிபடும் கட்குடியர் யாம். மனத்தில்பெருமகிழ்வு தரும் களிப்பு வந்து சேர்ந்தது. யாங்கள் செய்கின்றதுர்க்கை பூசையே வேள்விகளில் சிறந்தது. வானுலகத்தேவர் அருந்தும்அமிர்தமும் கள் போன்று வெண்ணிறத்ததுதான். சாதிகளைக் கொள்ளாத மனிதர்கள்உலகத்தில் இல்லையே; மந்திரத்துக்கு வசப்படாத தேவரும் வானுலகில் இல்லை;வடிவம் இல்லாத பொருள் கள் அண்டகோளத்துக்குட்பட்ட எவ்வுலகிலும் இல்லை.ஆதலின் சாதி, மந்திரம், வடிவு – இவை மிக இன்றியமை யாதவை. இவையெல்லாம்நாங்கள் குடிக்கும் கள்ளுக்குப் பெயர் ஆதலின், கள்ளின் பெருமையைஅறிக!” என்று கட்குடியர், கட்குடியை வெறுக்கும் பௌத்தர்களிடம்கூறுதல். (திருவரங். 65) |
களியர் வண்ணம் | கட்குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும்வண்ணப்பாட்டு. (L) |
கள்ளக்கவி | பிறனொருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன் (L)ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன்.(வெண்பாப். செய். 48 உரை) |
கழங்குப் பருவம் | பெண்பாற்பிள்ளைத் தமிழிற்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று;கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறுவது. |
கழிநெடில் | கழிநெடிலடி; ஐஞ்சீரின் மிக்க சீரான் வரும் அடி. (யா. கா. 12)யாப்பருங்கல விருத்தி அறுசீர் முதலாகப் பத்துச்சீர் இறுதி யாகவரும் அடியெல்லாவற்றையும், பத்துச்சீரின் மிக்கும் பதின்மூன்றுசீரின்காறும் வருவனவற்றையும் கழிநெடிலடி யின் பாற்படுத்து வழங்குகஎன்னும். (25).எண்சீரின் மிக்க அடியான் வருவன சிறப்பில என்றார் காக்கைபாடினியார். ஒன்பதின்சீரடியும் பதின்சீரடியும் இடையாகு கழிநெடிலடிஎனவும், பதின்சீரின் மிக்கு வருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனவும்யா.வி. உரை யாசிரியர் கூறுவர்.அறுசீர் முதலாகப் பதினொரு சீர் ஈறாகக் கழிநெடிலடி நிகழும் என்பர்வீரசோழிய உரைகாரர். (கா. 109) |
கவி அரங்கேறுதல் | 1) புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல். ‘அவருட் கவியரங்ககேறினார் மூவர் பாண்டியர் என்ப’. (இறை. அ.1. உரை)2) கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல். (L) |
கவி அரங்கேறுதல் பற்றிய செய்திகள் | உருவக அணி, உவமை அணி முதலாக வாழ்த்து ஈறாக எய்திய இருபத்தெட்டுஅலங்காரத்தாலும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு நெறியாலும் குற்றமறச்செய்யும் பாவலன், அவையும் அரசும் அறியப் பாடுவோன், முத்தமிழ் வல்லோன்,நாற்கவி பாடுவோன், உத்தமச் சாதியிற் பிறந்தோன், உறுப்புக் குறையாதுஒழுக்கமொடு புணர்ந்தோன், முப்பது முதலாக எழுபது ஈறாய பிராயமுடையோன்ஆகிய இத்தகைய கவிஞன் பாடிய செய்யுளைக் கொள்ளுமுறையாவது: தோரணம்நாட்டித் துகிற்கொடியை எடுத்து, முரசொலிப் பவும் மறையோர் வாழ்த்தவும்,அழகிய பூத்தொழிலுடைய கலிங்கத்தினைத் தரைமீது பரப்பி, பல தானியமுளைகள்தோன்றிய பாலிகைகளும் விளக்கும் பூரண கும்பமும் பிறவும் மங்கலப்பொருளாகஎடுத்து, விதானித்துப் படுத்த தூண் நிரைகள் அமைந்த பந்தரின்கீழ்ப்பலசுற்றமும் நெருங்க, பாவையர் பல்லாண்டிசைப்ப, அக்கவிஞனை அவ் வளமனைக்கண் அழைத்துக் கொண்டுவந்து, தான் உடுத்துச் சூடுவதன் மேலும்,அவனையும் வெண்துகில் உடுப்பித்து வெண்பூச் சூடுவித்துப் புரவலன் தன்தவிசின் மீது இருத்தித் தான் அயலில் இருந்து அம்மங்கலச் செய்யுளைமகிழ்ந்து கேட்டு, அவனுக்குப் பொன்னும் ஆடையும் பூணும் கடகமும்என்றின்னவற்றை அவன் வேண்டுவன பிறவற்றோடும் அளித்து, ஏழடி நிலம்புலவன்பின் போய் மீளுதல் அவ னுக்குக் கடனாவது. (பிங். 1370)இனி, அகலக் கவிகொள்ளு முறையாக இலக்கண விளக்கம் (பாட். 179)இயம்பும் செய்திகள் வருமாறு :நல்லாசிரியனுக்கு அமைந்த நற்குணங்களை எய்திய புலவ னால் செய்யப்பட்டசெய்யுளை, நல்லவை நிறையவை ஆகிய மன்றின்கண், ஒளிகிளர் அழகியவிளக்கத்தினோடும் ஏனை எழுவகை மங்கலங்களும் பொலிய, நான்மறையோர் ஆசிகூற, நாலவிட்ட பூமாலைகள் நறுமணம் செய்ய, பலவகை வாத்தியத் தொகுதிகள்ஒலிக்க, அஞ்சொல் மடவார்கள் செஞ்சொல்லால் வாழ்த்தெடுப்ப, பாமகளைப்புணரும் திறத் தாலே வெண்துகிலும் வெண்மலர்மாலையும் வெண்முத்துமாலையும் அலங்கரித்துக்கொண்டு, விசித்திரத்தவிசின் இருந்து, அப்புலவனுக்கும் அன்னதோர் தவிசு இட்டு, எண்திசையில் உள்ளாரும் துதிக்கத்தண்டமிழ்ப்பாமாலை சூடி, மருதநிலத்து உளவாகிய வளம் மாறாத ஊரும், பெரியஆபரணமும், பொன்னும், களிறும், பண் அமை இரதமும், குதிரையும் ஆகியவற்றைஅப்புலவற்குப் பரிசிலாகக் கொடுத்து ஏழடி புலவன் பின்போய் மீளுதல்தமிழ் நாட்ட கத்தே அகலக்கவியைக் கொள்வோர்க்கு வகுக்கப்பட்ட உரிமைத்திறமாம் என்ப. |
கவி, கமகன், வாதி, வாக்கிஎனுமிவர் | இந்நால்வரும் புலவர் எனப்படுவர். விளக்கம் தனித்தனித் தலைப்புள்காண்க. (இ. வி. பாட். 169) |
கவிப்புலவன் இலக்கணம் | கவிப் புலவன் – அகலக் கவிபாடுவோன். கற்கப்படும் ஆசிரிய ருக்கு ஓதியகுலம் முதலாய எண்வகை முறையும் எய்தி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்என்னும் கவி நான்கும் பாடும் தன்மையுடனே, இயலிசை நாடகம் என்னும்முத்தமிழ் வழக்கினையும் முற்ற உணர்ந்து, இருபது முதல் எழுபது வயதின்மிகாதிருக்கும் மாட்சிமையுடையோனே அகலக்கவி பாடும் ஆற்றலோன் ஆவான். (இ.வி. பாட். 178) |
கவிப்பெண் இயல் | கவிதையினைப் பெண்ணாக உருவகித்து அதன் இலக்க ணத்தைப் பிரபந்தமரபியல் கூறுகிறது.மதுரம் கனிந்த சொல்லும் இலக்கிய நலம் சான்ற நாவும் ஆகிய இருபாலும்,இலக்கணம் சுரப்பக் கலவி நிகழ்த்தலால், தோன்றிய கருவில் எழுத்தாகியகுழவி பிறக்கிறது. அக்குழவி தான் (அசையாகிய) சேயாக முற்றி, சுவைகலந்து சிறந்த முச்சீரில் தவழ்ந்து கவிதையாக வளர்தலால் தமிழ்க்குலப்பெண் என்று சாற்றுதல் தகும்.இக் கவிதையாம் குலமகட்கு உறவு கூறப்புகின் புலவனே தந்தை;பொருட்செல்வம் இல்லா வறுமையே தாய்; அக் கவிதைப் பொருளை அணிநயம் படவிரித்து உரைப்பக் கேட்பவரே மாதவர்; அவைமாந்தர் மனம் கொள்ளக்கவிதையைச் சந்தமுறப் படித்து அச்சந்தப் பொருளை உணரச் செய்பவனே தமையன்;அவ் அவைமாந்தரிடையே அக் கவிதையை நயந்தும் வியந்தும் போற்றி ஏற்றுக்கொள்பவரே உறவின் வந்த சுற்றத்தார்; அதனை மனம் மகிழ்ந்து கேட்டு அக்கவிபாடிய புலவனுக்கு உவகையொடு பரிசு கொடுப் போனே அக்கவிமகளுக்குக் கணவன்ஆவான். (பி. ம. 32, 33) |
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைபாடல்களின் யாப்பு | கவிமணியின் ஐந்து கவிதைநூல்களிலும் 1410 பாடல்கள் உள.அகவற்பாக்களும், அறுசீர் ஆசிரிய விருத்தம் – எழுசீர் ஆசிரிய விருத்தம்- எண்சீர் ஆசிரிய விருத்தம் – ஆகிய மூவகை ஆசிரிய விருத்தங்களும்,எண்சீர் – எழுசீர் – அறுசீர் – நாற்சீர் – அடிபடநிகழும் தாழிசைகளும்,பல்லவி – அனுபல்லவி – சரணம் – ஆகிய மூவுறுப்பும், பல்லவி – சரணம் -ஆகிய ஈருறுப் பும்பெற்ற கீர்த்தனங்களும், வெண்பா – கலிவிருத்தம் -கலித் துறை – தரவுகொச்சகம் – போன்ற பிறவும் இக்கவிஞரது யாப்பில் இடம்பெற்றுள்ளன. இவர் கையாண்ட சிறப்புற்ற கவிதை வடிவம் சிந்து ஆகும்.(இலக்கணத். முன். பக். 114 – 116) |
கவியாவான் இலக்கணம் | ஆசு, மதுரம், சித்திரம், அகலம் என்னும் நால்வகைப் பாடல் களில்ஒருவகையோ பலவகையோ யாவுமோ பாடும் ஆற்ற லுடையான் கவியாவான். அவன்எவ்வகையிற் சிறந்தானோ அவ்வகையால் அடையடுத்து, ஆசுகவி மதுரகவிசித்திரகவி அகலக்கவி (-வித்தார கவி) என்று சிறப்பிக்கப்படுவான்.(இ. வி. பாட். 170) |
கவிராசவிராசித விருத்தம் | கருவிளஞ்சீர் முன்வரப் பின் கூவிளஞ்சீர்கள் வர ஏழு சீர்களான்அமையும் அடிகள் நான்கான் அமைவது; அடிதோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காய்ஆம்.எ-டு :‘கொடிகளி டைக்குயில் கூவுமி டம்மயிலாலுமி டம்மழு வாளுடையகடிகொள்பு னற்சடை கொண்டநு தற்கறைகண்டனி டம்பிறைத் துண்டமுடிச்செடிகொள்வி னைப்பகை தீருமி டந்திருவாகுமி டந்திரு மார்பகலத்தடிகளி டம்மழல் வண்ணனி டங்கலிக்கச்சிய னேகதங் காவதமே’ (தே. ஏஐஐ 10-3)இதன்கண், இரண்டா மூன்றாமடி முதற்சீர்கள் ‘கருவிளம்’ என்பதற்குஈடாகப் ‘புளிமாங்காய்’ என வந்தன. (வி. பா. பக். 69) |
கா என்னும் நிறைப்பெயர் புணருமாறு | கா என்னும் நிறைப்பெயர் குறை என்ற வருமொழியொடு புணரும்வழி, இடையே |
காக்கைபாடினியம் | தொல்காப்பியனார் தோன்ற விரித்துரைத்த யாப்பிலக்கணத் தைப்பல்காயனார் வகுத்துரைப்பவே, நல்யாப்பினைக் கற்றார் மதிக்கும் கலைவல்லகாக்கைபாடினியார், அவ் விலக்கணத்தைத் தம் நூலுள் தொகுத்துரைத்தார்.காக்கை பாடினியார் பெயரானே, அந்நூல் காக்கைபாடினியம் எனவழங்கப்படுவதாயிற்று.தொல்காப்பியனார்தம் ஒருசாலை மாணாக்கர் எனக் கூறப்படும்பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பெற்ற இவ்வியாப்புநூல்அகவல்நூற்பாக்களால் ஆகியது. யாப்பருங்கலம் முதலிய பிற்கால நூல்கள்இதனை அடி யொற்றியே எழுந்தன. இதன் நூற்பாக்கள் 73 யாப்பருங்கலவிருத்தியுரை முதலியவற்றில் இடம் பெற்றுள. இவற்றுள் எதுகை முதலிய தொடைஇலக்கணம், ஆசிரிய வகைகள் சில, ஆசிரியத் தாழிசை, கலிவகைகள் சில, வஞ்சிவிருத்தம் – முதலிய சில நீங்கலான எல்லாச் செய்திகளும் காணப்படுகின்றன.(யா. வி. பக். 19 முதலியன.)இலக்கண விளக்கம் – செய்யுளியல் ‘பிற்சேர்க்கை’ காண்க. |
காக்கைபாடினியார் | காக்கைபாடினியம் இயற்றிய ஆசிரியர்; தொல்காப்பியனார் தம் ஒரு சாலைமாணாக்கர் எனக் கருதப்படுபவர். (பா. வி. பக். 104) |
காசு | வெண்பாவின் இறுதிச்சீர் உகர ஈற்று நேரீற்று இயற்சீராயின்,நேர்நேரான் வரும் இச்சீர்க்கு வாய்பாடு காசு என்பது.எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையும் கல்லாத வாறு .’ (குறள் 397) (யா. கா. செய்.5) |
காஞ்சி மாலை | காஞ்சிமாலை சூடிப் பகைவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும்பிரபந்தம். (தொ. வி. 283 உரை) |
காண்டம் | தொடர்நிலைச்செய்யுளின் நூலுட் பெரும்பிரிவு. கம்பரா மாயணத்துள் -பாலகாண்டம் முதலியன. |
காதல் | 1) காதல் பொருட்டாகிய பிரபந்த விசேடம். ‘கூளப்ப நாயக்கண் காதல்’ஓர் எடுத்துக்காட்டு. இது கலிவெண்பா வால் தலைவன் தசாங்கம் முதலியனவும்அவன் முன்னோர் சிறப்பும் அவன் பவனி வந்தபோது அவனால் விரும்பப்பட்டதலைமகள் சிறப்பும் பின் அவன் அவளைக் கூடி மகிழ்ந்த சிறப்பும் ஆகியசெய்திகளைக் குறிப்பிடுவதாகும்.2) தான் கொண்ட ஆசையை இரண்டுஅடிக் கண்ணியாகக் கொண்டு பாடுதல் காதல்ஆகும். (சாமி. 171 உரை) |
காதைகரப்பு | மிறைக்கவிகளுள் ஒன்று.ஒரு செய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத்தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப்பாடுவது ‘காதை கரப்பு’ என்னும் சித்திரகவி எனத் தண்டியலங்காரமும்முத்துவீரிய மும் கூறும். இதனைக் ‘கரந்துறை பாட்டு’ எனவும் ‘கரந்துறைசெய்யுள்’ எனவும் முறையே வீரசோழியமும் மாறனலங்கார மும் கூறும். அவை‘கரந்துறை செய்யுள்’ என்று தண்டி யலங்காரமும் இலக்கண விளக்கமும்கூறும் சித்திரக் கவியைக் ‘காதை கரப்பு’ என மாற்றிக் கூறும்.மாறனலங்காரம் ஈற்று மொழியின் முதலெழுத்தை விட்டு ஈற்று மொழியின்ஈற்று உயிர்மெய்யைத் தொடங்கிக் கணக்கிடும்.வீரசோழிய உரையும் மாறலனங்காரமும் கூறும் காதை கரப்புக்குஎடுத்துக்காட்டாகக் ‘கரந்துறை பாட்டு’க் காண்க. (தண்டி. 98; வீ. சோ.181 உரை; மா. அ. 288; இ. வி. 690.) |
காந்தி (1) | நான்கு மாத்திரைச் சீர்கள் நான்காகி நேரசையில் தொடங் கும் வெண்டளையாப்பிற்றாய சந்த விருத்தம்; கலிச்சந்த விருத்தம்.எ-டு : ‘வெய்தா கியகா னிடைமே வருநீரைதா தலினோ அயலொன் றுளதோநொய்தாய் வரவே கமுநொய் திலனால்எய்தா தொழியா னிதுவென் னைகொலாம்’ (கம்பரா. 3603)அப்பர் அருளிய ‘விடந்தீர்த்த பதிகம்’ இத்தகையதே (இரண்டாம்பாசுரம் தவிரக் கொள்க) (தே. IV 18) |
காப்பியக் கலித்துறை | கலித்துறையைக் கோவைக் கலித்துறை என்றும், காப்பியக் கலித்துறைஎன்றும் இரண்டாக்குவர். இவற்றுள், எழுத்து வரையறையப்படாது நெடிலடியான்வந்த செய்யுள் காப்பியக் கலித்துறையாம்.எ-டு : ‘முன்றான் பெருமைக்க ணின்றான்முடி. வெய்து காறும்நன்றே நினைந்தான், குணமொழிந் தான்த னக்கென்றொன்றானு முள்ளான், பிறர்க்கே யுறுதி சூழ்ந்தான்,அன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே’.இதன்கண், முதலடி ஈற்றடிகள் பதினான்கெழுத்தாயும், இடையடிகள்பதின்மூன்றெழுத்தாயும் வந்தவாறு; இருவகை வெண்டளையோடு, அருகிஆசிரியத்தளையும் பயின்று வந்தமை காணப்படும். (வீ. சோ. 123 உரை) |
காப்பு | 1. எடுத்த நூற்பொருள் இனிது முடிதற்பொருட்டு நூலின்தொடக்கத்தில் செய்யும் தெய்வ வணக்கம். 2. பிள்ளைத் தமிழாகியபிரபந்தத்துள் பத்துப்பருவங்களில், “குழவியைக் கடவுள் காக்க!” எனமுதற்கண் வைக்கப்படும் பருவம். (L) |
காப்பு மாலை | கடவுள் காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும்அந்தாதித்தொடையுறப் பாடும் பிரபந்தம்.(இ. வி. பாட். 72) |
காப்புப் பருவக் கடவுளர் | மங்கலம் பொலியும் செங்கண் மாயோன் சங்கு சக்கரங் களைத் தரித்தலானும்காத்தல்கடவுள் ஆகலானும் பூமடந் தையைப் புணர்தலானும் அவனை முற்கூறி,கங்கை பிறை கொன்றை முதலியவற்றைப் புனைந்த உமையோர்பாகன் என்றுசிவபிரானைப் புகழ்ந்து கூறி, முழுதுலகு ஈன்ற பழுதறும் இமயமால் வரைச்செல்வியாம் பார்வதிதேவியை விருப்ப மாகக் கூறி, நாமகள் கேள்வனாம்அயனைப் புகழ்ந்து கூறி, கறுத்த மேகவாகனனாம் இந்திரனை அதன்பின்புகழ்ந்து கூறி, ஒற்றைக் கொம்பனாம் விநாயகனைப் புகழ்ந்து கூறி,வீரத்தன்மை பொருந்திய வேலனைப் புகழ்ந்து கூறி, சத்த மாதர்களைப்புகழ்ந்து கூறி, வாணியாம் கலைமடந்தையைப் புகழ்ந்து கூறி, பதினொரு கோடிஉருத்திரர், பன்னிரண்டு கோடி ஆதித்தர், இரண்டு கோடி மருத்துவர்,எட்டுக் கோடி வசுக்கள் இவர்களைப் புகழ்ந்து கூறி, ஏனைய காரி முதலியதேவரையும் பிள்ளையைப் பாதுகாத்தற் பொருட்டுக் காப்புக்கூறப்படும்.இக்கடவுளர் முறைவைப்பில் சில மாறுதல் உண்டு.(இ. வி. பாட். 48) |
காப்புப் பருவம் | பிள்ளைத்தமிழாகிய பிரபந்தம் பாடும் பருவங்களுள் முதலாவது.இப்பருவம் பாடுங்கால் ஒன்பது பாட்டானும் பதினொரு பாட்டானும்பாடுதல்வேண்டும்.பருவங்கள் பத்தும் தம்மில் ஒப்பக் கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்படப்பாடுதல் சிறப்புடைத்து; இரட்டிக்கப் பாடுமிடத்து ஓசைபெயர்த்துப்பாடப்படும்.காப்பு முதற்கண் எடுத்த அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்துஒப்பப்பாடுதல் வேண்டும் என்பது பன்னிரு பாட்டியல் விதி (191)கடவுளர் பலரைப் பாடுமிடத்துப் பாடல் எண்ணிக்கை வரையறைப்படாதுவருதலும் கொள்க. (இ.வி. பாட். 51) |
காம இன்னிசை | செந்துறைப்பாட்டின் வகை மூன்றனுள் ஒன்று; ஏனையன பரிபாடலும்மகிழிசையும் ஆம். (யா. வி. பக். 580) |
காமத்துப்பால் | அறம் பொருள் இன்பம் என முப்பாலாக அமைந்த திருக் குறளில் இறுதியாகஅமைந்திருக்கும் இப்பகுதி 25 அதிகாரங் களை யுடையது.‘தகையணங்குறுத்தல்’ முதலாக ‘ஊடலு- வகை’ ஈறாக அவை அமைந்தவை. இங்குஇன்பம் என்பது காமவின்பத்தினை; அஃதாவது ஒருகாலத்து ஒரு பொருளான்ஐம்பொறியும் நுகர்தற் சிறப்புடையது. இக்காமத்துப்பாலைக் களவு ஏழுஅதிகாரங்களானும் கற்புப் பதினெட்டு அதிகாரங் களானும் பாகுபடுத்துப்பெரும்பான்மை பற்றிப் புணர்ச்சி யைக் களவென்றும், பிரிவினைக்கற்பென்றும் கூறுகிறார். (பரிமே. தோற்று. உரை.) |
காயத்திரி | நான்கடிகட்குமாக இருபத்துநான்கு உயிரெழுத்துக்க ளுடைய சந்தம்;அடிதோறும் அவ்வாறு உயிரெழுத்தாக வருவது.எ-டு : ‘கருவி வானமேவருவர் மாதிரம்பொருவி லாமிதேபருவ மாவதே’ (வீ.சோ. 139 உரை.) |
காய் | 1. மூவசைச் சீரின் இறுதியில் உள்ள நேரசைக்குரிய வாய்பாடு2. காய்ச்சீர் (யா. கா.7) |
காரிகை | பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் என்னும் சமணப் புலவரால்இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கண நூல். அவர் இயற்றிய யாப்பருங்கலம்என்னும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாக, காரிகை யென்னும்கட்டளைக் கலித்துறை யாப்பிற்றாக, மகடூஉ முன்னிலை பெரும்பான்மை யும்பயில இந்நூல் அமைந்தது. யாப்பருங்கலக் காரிகை என்னும்முழுப்பெயர்த்தாகிய இந்நூலுள் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனமூன்று இயல்களும், அவற்றுள் முறையே 18, 16, 10 ஆகிய காரிகைச்சூத்திரங்களும், நூல் தொடக்கத்தே தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும்அவையடக்கம் இரண்டும் ஆகிய காரிகைகளும் உள.பிற்காலத்தே யாப்புப் பயில்வார்க்குப் பெரிதும் துணையாகப்பயிலப்பட்ட இந்நூற்சிறப்புக் ‘காரிகை கற்றுக்கவிபாடு’ என்னும் தொடரால்புலனாம். இந்நூற்கு உரையாசிரியர் குணசாகரர் என்பார். அவரே யாப்பருங்கலவிருத்தியுரைகார ரும் ஆவார் என்பது ஒரு சாரார் கூற்று.காரிகை – அழகு, கட்டளைக் கலித்துறை, மகடூஉ எனப் பலபொருள்படும்.தற்சிறப்புப் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக அமைந்த 44 கட்டளைக்கலித்துறைகள் உதாரண முதல்நினைப்புக் காரிகைகளும் உள்ளிட்டன. இந்நூற்குயாப்பருங்கலப் புறனடை என்ற பெயரும் உண்டு.வடமொழியில் உரைநடையில் வரையப்படும் நூலுக்குக் காரிகை என்பதுபெயர். தமிழில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமையும் சூத்திரங்கள்காரிகை எனப்படும்.எ-டு : வீரசோழியத்துள் காரிகை |
காரியகால பக்கம் | இஃது அதிகாரத்தின் இருவகையுள் ஒன்று. அரசனுடைய படையில் தாமே சென்று |
காரைக்கால் பேயார் பாடல் | இவர் பொய்கையாரோடு சேர்ந்து பாடிய பாடலொன்று இரண்டாமடி குறைந்துஆரிடப்போலி வெண்பாவாக எடுத்துக் காட்டப்படுகிறது. (யா. வி. பக்.371)இவருடைய மூத்த திருப்பதிகங்கள் அறுசீர் ஆசிரிய விருத் தத்தைச்சாரும். திரு இரட்டை மணி மாலை 10 வெண்பா, 10 கட்டளைக் கலித்துறைஆகும். அற்புதத்திருவந்தாதி வெண்பா ஆகும். இவை பதினோராம் திருமுறையைச்சார்ந்தன. |
காலதேசி | தருக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 583) |
காலப்பெயர்ப் பகுபதம் | காரான், காராள், காரார், காரது, காரன, காரேன், காரேம், காராய், |
காலம் (1) | இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தும் நிகழும்நிகழ்ச்சி செய்யுளுள் தோன்ற உரைப்பது; இது செய்யுள் உறுப்புக்களுள்ஒன்றாம். (தொ. பொ. 514. பேரா.) |
காலம் காட்டும் விகுதிகள் | று, றும் – இரண்டும் இறப்பும் எதிர்வும் காட்டும். |
கிருதி (1) | எழுத்துவகையால் இருபத்தாறுபேதமாம் எனப்பட்ட சந்தங் களுள் ஒன்று.ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு இருபது எழுத்துப்பெற்று வருவது.எ-டு : ‘ஒருவேனின் றுயிரன்ன தோகையுரை யுள்ளங்கிழித்தூடுபோம்செருவேநின் றசோகதரு வின்செழுந் தாதுதிரப் போதுகொண்டுபொருவேநின் றான்கொடிய வேனிலான் மதுவுணவுங்கொண்டானன்னோ,வருவேனென் றார்பிரிந்த வஞ்சருரை யிற்கொடிது வாணிலாவும்.” (வீ.சோ. 139 உரை) |
கிருத்து | வினைப்பகுதிமேல் வரும் பெயர்விகுதி கிருத்து எனப்படும். |
கிளவிக்கவி | அகப்பொருள் புறப்பொருள் தொடர்பான கூற்றுக்கள் பற்றி அமைந்தபாடல்கள் கிளவிக்கவி என்ற பெயரால் பல திறப்படும் என வீரசோழிய இறுதிநூற்பாக்காரிகை சொல்லும். (வீ. சோ. 183) |
கிளவிக்கொத்து | அகப்பொருள் நூல்களில் பல கூற்றுக்களின் தொகுப்பாய் ஒருமுறையில்அடங்கும் இயற்கைப் புணர்ச்சி போன்ற சந்தருப்பங்களை இடம் எனவும்கிளவித் தொகை எனவும் கிளவிக் கொத்து எனவும் கூறுவர். (கோவை. பாயி.பேரா. உரை) |
கிளவிக்கோவை | அகப்பொருட் கோவைநூல் கிளவிக்கோவை எனவும் கூறப் படும். (கோவை. 4.பேரா.உரை) கிளவி – கூற்று (நிகழும் சந்தகுப்பம்); கோவை -தொகுப்பு. |
கிளிக்கண்ணி | கிளியை விளித்துக் கண்ணியமைப்பில் பாடப்படும் நூல்;பெரும்பான்மையும் அகப்பொருட் செய்தி பற்றியது. பாரதியார் பாடியகிளிக்கண்ணிகள் உலகியற்செய்திகளைக் கூறுவனவாக உள. பலசீர்களையுடைய ஒத்தஇவ்விரண்டடி அமைப்பினை யுடையவை அவை; தனிச்சீராக ‘கிளியே’ என்ற விளிநிகழும். |
கிளை எழுத்து | வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும்உயிரும் என இவை. (தொ. செய்.94. பேரா.)வருக்கமோனையும் வருக்க எதுகையும் வல்லின எதுகையும் மெல்லினஎதுகையும் இடையின எதுகையும் என ஐந்தாம்.கிளை எழுத்துக்கள் இவை என ஆசிரியர் எடுத்துக் கூறிற்றி லர். ஒருகhல் கூறப்பெற்ற சூத்திரங்கள் விடப்பெற்றிருத்தலும் கூடும்; ஆயினும்ஆசிரியர் இந்நூலுள் அமைத்துள்ள சூத்திரங்களிற் காணப்படுவனவற்றைநோக்கிக் கிளையெழுத் துக்களை ஓராற்றான் உய்த்துணரலாம். அம்முறையால்கொள்ளப் பெறுவன வருமாறு :அ, ஆ, ஐ, ஒள – இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். இ, ஈ, எ, ஏ – இவைதம்முள் கிளை எழுத்துக்களாம். உ, ஊ, ஒ, ஓ – இவை தம்முள் கிளைஎழுத்துக்களாம். இவை ஊர்ந்த மெய்களும் இம்முறையே கிளையாம்.இனி மெய்யெழுத்துக்களுள் வல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம்.மெல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம். இடையெழுத்து ஆறும் தம்முள்கிளையாம். ஞ், ந் – இவை யிரண்டும் தம்முள் கிளையாம். த், ச் -இவையிரண்டும் தம்முள் கிளையாம். ம், வ் – இவையிரண்டும் தம்முள்கிளையாம். இவை பிறப்பிட ஒற்றுமையால் கிளையாயின.(தொ. செய். 94 ச. பால.) |
கிளைப்பெயர்கள் புணருமாறு. | கிளைப்பெயர்கள், ணகரம் – னகரம்- குற்றியலுகரம்- என்ற மூன்று ஈற்றன. |
கிளையெழுத்தும் வருக்கவெழுத்தும் | எதுகையும் மோனையும் ஆகிய தொடைகள் கிளையெழுத் துக்களைப் பெறும். அ ஆஐ ஒள, இ ஈ எ ஏ, உ ஊ ஒ ஓ என்னும் இவை தம்முள் கிளையெழுத்தாம். இனி மெய்யெழுத்துக்களுள், தகர சகரங்களும் – ஞகர நகரங்களும் – மகர வகரங்களும் -தம்முள் கிளையெழுத்தாம். இவை உயிர் மெய்க்கும் பொருந்தும். இனி,இனமாகிய உயிர்க்குறிலும் நெடிலும் – வல்லினப் புள்ளி ஆறும் மெல்லினப்புள்ளி ஆறும் இடையினப் புள்ளி ஆறும் – தம்முள் வருக்கம் பற்றியஎழுத்துக்களாம். (இனத்தை வருக்கத்துள் அடக்கினார் இவ்வாசிரியர்.)(தென். யாப். 51, 52) |
கீதை | ‘கீதா’ என்ற வடசொற்குப் பொருள் பாடப்பட்டது என்பது. தத்துவநூல்சிலவும் இப்பெயரால் வழங்கப்பட்டன. மகாபாரதத்தில் போர்முனையில்கண்ணபிரான் பார்த்த னுக்கு அருளிய பகவத்கீதையே சிறப்பாகக் கீதைஎனப்படும். உபதேசங்களாக வரும் தத்துவ உரையாடல்கள் மகாபாரதத் தில் கீதைஎனப்படுகின்றன; அனுகீதை, உத்தரகீதை என்பன வேயன்றி, மங்கி கீதை, சமியாககீதை முதலாக வருவன காண்க. கடவுளர் தம் அடியார்க்கு உபதேசித்ததத்துவங்கள் பிற புராணங்களிற் காணப்படுவன சிலவும் கீதை எனப்படுகின்றன. தேவிகீதை, சிவகீதை, ராமகீதை கணேசகீதை, சூதகீதை முதலாகச்சொல்லப்படுவன உள. வேதாந்தம் முதலிய மதங்களின் கொள்கைகளைவிளக்குவனவாகச் சுருதிகீதை என்பது முதலாக சில உள. சீக்கிய மதக்கொள்கையை விளக்கும் நானக்கீதையும் தோன்றிற்று. |
கீர்த்தனம் | ‘கீர்த்தனை’ காண்க. |
கீர்த்தனை | பல்லவம், அதன் இருபங்கு அநுபல்லவம், அதன் இருபங்கு சரணம் -இவற்றொடு தாளம் பிழையாமல் அமைந்து, பேரின்பம் தருவது கீர்த்தனையாம்.அனுபல்லவமும் சரணமும் அளவிற் கூடியும் வரும்; ஆயின் தாளம் குழம்பாது.யாவரும் அறிவுறும் பொருண்மை பற்றியே கீர்த்தனை நிகழும். (அறுவகை.நாடகத்தமிழியல்பு. 1,2) |
கீழ்:புணருமாறு | கீழ் என்ற சொல் வருமொழி வன்கணம் வரின் இயல்பாகவும் மிக்கும் |
கீழ்க்கணக்கு | அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம்பொரு ளின்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிரு. 346) |
கீழ்க்கதுவாய் | நாற்சீரடிக்கண் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்மோனை எதுகை முரண் அளபெடை என்ற தொடை விகற்பம்படத் தொடுத்தலாகியகீழ்க்கதுவாய்த் தொடை. இயைபுத் தொடைக்கு ஈற்றுச் சீரையே முதற் சீராகக்கொண்டு கணக்கிடல் வேண்டும். (யா. க. 47) |
கீழ்க்கதுவாய் அளபெடை | நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்அளபெடுத்துவரத் தொடுப்பது.எ-டு : ‘ஆஅம் பூஉ மணமலர் தொடாஅ’ (யா. க. 47 உரை) |
கீழ்க்கதுவாய் இயைபு | நாற்சீரடியின் முதலயற்சீராகிய இரண்டாம் சீரொழித்து ஏனைய சீர்கள்ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.எ-டு : ‘அன்னையும் என்னையும் தன்னில் கடியும்’ (யா.க. 47உரை) |
கீழ்க்கதுவாய் எதுகை | நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்முதலெழுத்து அளவொத்து நிற்ப இரண்டா மெழுத்து ஒன்றி வருதலாகிய எதுகைவருமாறு தொடுப்பது.எ-டு : ‘அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்ப.’ (யா. க. 47உரை) |
கீழ்க்கதுவாய் நிரல்நிறை | நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்களில்நிரல்நிறை அமைவது. முடிக்கப்படும் சொற்களை யும் முடிக்கும்சொற்களையும் முறை பிறழாது வரிசைப்பட நிறுத்துவது. (முறை) நிரல்நிறையாம்.எ-டு : “பொறையன் செழியன் பூந்தார் வளவன்கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தைபாவை முத்தம் பல்லிதழ்க் குவளைமாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே.’இதன்கண், மாயோள் பொறையன் கொல்லிப்பாவை,(அவள்) முறுவல் செழியன் கொற்கை முத்தம்,(அவள்) கண்ணே வளவன் குடந்தைக் குவளை – என1, 2, 4 ஆம் சீர்களில் முறைநிரல்நிறை அமைந்தவாறு(யா. க. .95 உரை) |
கீழ்க்கதுவாய் முரண் | நாற்சீரடியின்கண் ஈற்றயற்சீராகிய மூன்றாஞ்சீர் ஒழித்து ஏனையசீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப் படத் தொடுப்பது.எ-டு : ‘விரிந்தும் சுருங்கியும் வில்லென ஒசிந்தும்’ (யா. க. 47உரை) |
கீழ்க்கதுவாய் மோனை | நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்முதலெழுத்தொன்றிவரத் தொடுப்பது.எ-டு : ‘குழலிசைக் குரல தும்பி குறைத்த’ (யா. க. 47 உரை) |
கீழ்க்கதுவாய்த் தொடை | ‘கீழ்க்கதுவாய்’ காண்க. கீழ்க்கதுவாய் மோனை முதலிய தொடைகளைத்தனித்தனியே காண்க. |
குடமூக்கிற் பகவர் செய்தவாசுதேவனார் சிந்தம் | கும்பகோணத்தில் வாழ்ந்த அடியார் பகவர் என்பார். இவர் இயற்றியசெய்யுள் நூல் ‘வாசுதேவனார் சிந்தம்’ என்பது. இவர் பாடல்கள்ஆரிடச்செய்யுளின் பாற்படும். உலகியல் செய்யுட்கு ஓதிய உறுப்புக்கள்சில மிக்கும் குறைந்தும் இப்பாடல்கள் காணப்பட்டன. இந்நூல்இக்காலத்தில் இல்லை. (யா. வி. பக். 369) |
குட்ட ஆசிரியம் | ஈற்றயலடி ஒருசீர் குறைந்தனவும், இடையிடையே ஒருசீர் இருசீர்குறைந்தனவும் குட்ட ஆசிரியம் எனப்படும். ஒருசீர் குறைந்தன ஆசிரியஅடியாய் வரும்; இருசீர் குறைந்தன வஞ்சியடியாய் வரும். ஈற்றயலடிஒருசீர் குறைந்தவற்றை நேரிசை ஆசிரியப்பா எனவும், இடையிடையேஅடிகுறைந்து வருவனவற்றை இணைக்குறள் ஆசிரியப்பா எனவும் பின்னுள் ளோர்பெயரிட்டு வழங்குதல் தேவையற்றது. (தொ. செய். 117 பேரா.) |
குட்டமாவது | குட்டம் – குறுக்கம். அளவாற்குறுகியது என்பது பொருள். ‘நாற்சீர்கொண்ட தடியெனப் படுமே’ என்றதனான் அதனிற் குறைந்து வரும் முச்சீரடிஇருசீரடிகள் குட்டம் எனப்பட்டன.(தொ. செய். 115 ச. பால.) |
குட்டம் | தரவிற்கு ஒருபெயர்.தரவு கொச்சகமாகிய கொச்சக ஒருபோகிற்கும் பெயர்.(தொ. செய். 12.இள)குட்டம் – குறைந்து வருதல்; அஃதாவது நாற்சீரடி முச்சீரடி யும்இருசீரடியுமாகக் குறைந்து வருதல். (115 நச்.)இடையிடைக் குறைந்து வருவது குட்டம். ({MĒṞPAṬI} பேரா.) |
குணகாங்கி | இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல்.இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன்சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும்,யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண்,சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள்விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523) |
குணசந்தி | அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் இகர ஈகாரங்கள் முதலாகிய |
குணசாகரர் | யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டுயாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர்ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குணசாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச்சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும்,யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார்.இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றேசுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர்காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொருகருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்துவேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப. |
குணநூல் | பண்டை நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று.(சிலப். 3 : 12 அடியார்க். உரை) |
குணப்பெயர்ப் பகுபதம் | செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன், |
குணவீரபண்டிதர் | பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவர்; சமணப்பெரியார்; நேமிநாதம்என்ற பெயரை உடையதாய், எழுத்து சொல் என்ற ஈரதிகாரங்களை உடைய சின்னூல்என்ற இலக்கண நூலினையும் வெண்பாப் பாட்டியலையும் வெண்பாயாப்பில்இயற்றியவர். இவருடைய நேமிநாதத்தின் உரை வயிரமேக விருத்தி எனப்படும்.நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப் பியச் சொல்லதிகாரச் சுருக்கமாய்அமைந்துள்ளது. |
குண்டலகேசி | சொற்குற்றத்தால் பாட்டுடைத் தலைமகன் உடலுக்கு ஊனம் உண்டாம். பொருட்குற்றத்தால் உயிர்க்கு ஊனம் ஆதலின் பொருட்குற்றம் தவிர்தல்சிறப்புடைத்து. “சொற்பொருள் புலப்படினன்றே, அக்குற்றம்தவிர்க்கப்படும்? குண்டலகேசியில் தெரியாத சொல்லும் பொருளும்வந்தனவால்” என்னும் வினாவை எழுப்பி, உரைகாரர் விடை கூறுவார்:“அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது; அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருத்தல் கூடும் எனினும்அமையும் எனக் கொள்க.” (வீ. சோ. 146 உரை)குண்டலகேசி என்பாளது தோற்றமும் தொழிலும் போல் வன சொன்ன காப்பியம்அவள் பெயரால் குண்டலகேசி எனப்பட்டது. (யா. வி. பக். 39)குண்டலகேசியின் முதற்பாடல் வண்ணத்தால் வருவதாய் நேரசையால்தொடங்கியதால் அடிதோறும் பதினான்கு எழுத்துடையது. (யா. வி. பக்.520) |
குண்டலம் | தருக்க நூல்களில் ஒன்று. (யா. வி. பக். 583) |
குமிழ் என்ற மரப்பெயர் புணருமாறு | குமிழ் என்ற மரப்பெயர்,பீர் என்ற கொடியின் பெயர் போல, ஒருவழி |
கும்மி | வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்;ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும்முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று.(இலக்கணத். முன். பக்.101)எ-டு :அ) பெரிய திருமொழி 2 – 9 – 1‘சொல்லுவன் சொற்பொருள்’ஆ) திருவாசகம் – அன்னைப்பத்து. |
குயின் என்ற சொல் புணருமாறு | குயின் என்பது மேகத்தை உணர்த்தும் சொல். அது வேற்றுமைக் கண் |
குயின், ஊன் புணர்ச்சி | இவ்விருவகைப் பெயரும் இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் வருமொழி முதல் |
குரவைக் கூத்து | குரவையெனினும் அமையும்; கூத்துவகை ஏழனுள் ஒன்று.எழில் மிக்க மாதர் எழுவரோ எண்மரோ ஒன்பதின்மரோ இணைந்து ஒருவர்மற்றவர் கையினைக் கோத்துக்கொண்டு, காமமும் வெற்றியும் பொருளாகப் பெற்றஇன்பம் ஊட்டும் இனிய இசையுடன் பாடிக்கொண்டே ஆடும் கூத்து. (நாடக.202) |
குரவைப்பாட்டு | ஒரு வட்டத்தின் பன்னிருகோணப் பகுதியிலும் பொருந்து மாறு மாதர்எழுவர் வட்டமாய்க் கைகோத்து இணைந்தும் மாறி மாறி ஓடிச் சென்றுகைகோத்து இணைந்தும் எழு வகைப் பண்களையும் கொட்டும் பண்ணும் ஒட்டுமாறுபாடி ஆடுவதற்கு ஏற்குமாறு, நாற்சீரடி மூன்று தாழிசையாக ஒருபொருள்மேல்மூன்றடுக்கி வரவும், நாற்சீரடி நான்கு இடைமடக்காக வரவும்,வழிபடுகடவுளை முன்னிலைப்படுத் தியும் படர்க்கையாகத் தனியேநிறுத்தியும் வழுத்துவதாகப் பாடுவது குரவைப் பாட்டு எனப்படும்.(பன்னிரு கோணப் பகுதியும் மேடம், இடபம் முதலாகப் பன்னிரண்டு இராசிப்பெயர்பெறும். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் எனப்பண்கள் ஏழன் பெயர் பூண்ட மாதர் எழுவர் முறையே இடபம், கற்கடகம்,சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனம் இவற்றுக் கோணங்களில் நின்றுகைகோத்து வட்டமாக நிற்பர்) (தென். இசைப். 12) |
குருவும் லகுவும் | தனிநெட்டெழுத்தும் ஒற்றடுத்த நெட்டெழுத்தும், ஒற்றடுத்தகுற்றெழுத்தும் ‘குரு’. இஃது ஈரலகு பெறும். இது டகர வடிவிற்று.தனிக்குற்றெழுத்து ‘லகு’. இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று.அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் குருவாகஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. க. 95. உரை) |
குறட்போலி | எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்டடியாய், அவ்வடியும் தம்முள்அளவொவ்வாது வருவது; ஓரடியாலே ஒரு செய்யுளாய் வருவதும்குறட்போலியாம்.எ-டு : ‘உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்னதீமைசெய்தோர்க்கும் ஒத்த மனத்தராய்நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே’இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி.‘சிறியகுறள் மாணி செய்குணங்கள்ஓதுவன்காண்’இஃது ஓரடியான் வந்த குறட்போலி (வீ. சோ. 127 உரை) |
குறத்திப் பாட்டு | தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப் பற்றிக் குறத்திகுறிசொல்வதைக் கூறும் ஒரு பிரபந்தம். ‘குறவஞ்சி’ காண்க.(தொ. வி. 283) |
குறம் | கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃதுஒன்று. தலைவியின் உடலும் மனமும் வாடியமை கண்ட செவிலி, அவள் தலைவனொடுநிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறியாது, ஏதோ தெய்வக்குற்றத்தால் அவள்உடல் வாட்டமுற்றுள்ளதோ என்ற எண்ணத்தால் குறத்தி ஒருத்தியை அழைத்துத்தலைவியின் மனநிலையைக் குறியால் அறிந்து சொல்லும்படி வினவ, குறத்திதான் குறிசொல்லுமுகத்தான் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள அன்பினைஎடுத்துக்கூறித் தலைவி விரைவின் அவனை மணக்கும் வாய்ப்புப் பெறுவாள்என்று கூறும் அகப்புற மாய்ச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட பாடல்இது.“முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறவல்ல குறத்தி நான். நீமனத்துள் எதனை நினைத்தாயோ அதனைக் கூறவல்லேன். என் சிறுகுழந்தையின்தலையில் எண்ணெய் வாரு; ஒரு பழைய புடவையை எனக்குக் கொண்டுவந்து கொடு.அழகிய மலர்போன்ற கையை யுடைய தலைவி! நின்முலைக்கண்ணின் குறி நன்றாகஉள்ளது. ஆதலின் நீ உலகம் முழுதும் மகிழும்படி நாளையேதிருவரங்கநாதனாகிய நின்நாயகனை அடைவாய்!” (திருவரங்கக். 69)குறத்திஒருத்தி தலைவியை நோக்கிக் குறிசொல்வதாக அமையும்இவ்வுறுப்புக் கலம்பகம் என்ற பிரபந்தத்து நிகழும் 18 உறுப்புக்களுள்ஒன்று. (இ. வி. பாட்.52)குறத்தி தலைவிக்குக் குறிசொல்வதாகக் கூறும் குறம் என்ற சிறுபிரபந்தமும் ஒன்று.எ-டு : மீனாட்சியம்மை குறம். |
குறளடி | இருசீரான் வரும்அடிஎ-டு :‘திரைத்த சாலிகைநிரைத்த போனிரந்திரைப்ப தேன்களேவிரைக்கொண் மாலையாய்’ (சூளா. 744) (யா.கா. 12, யா.க. 24உரைமேற்.) |
குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்தல் | இருசீர் முதலா எழுசீரளவும் அவ்வைந் தடியினையும் இணைத்துக் கோடல்.(தொ. செய். 242 நச்.) |
குறளடி வஞ்சி | நான்கு எழுத்து முதல் பன்னிரண்டு எழுத்து முடிய ஒன்பது நிலத்தினும்முறையான் ஓங்கி வரும் இருசீரடி.எ-டு :‘கல்சேர்ந்து கல்தோன்று’ – 4 எழுத்தடி‘தண்பால் வெண்கல்லின்’ – 5 எழுத்தடி‘கண்டுதண்டாக் கட்கின்பத்(து)’ – 6 எழுத்தடி‘காழ்வரக் கதம்பேணா’ – 7 எழுத்தடி‘தாழிரும் பிணர்த்தடக்கை’ – 8 எழுத்தடி‘நிலனெளியத் தொகுபீண்டி’ – 9 எழுத்தடி‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’ – 10 எழுத்தடி‘தாள்களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4) – 11 எழுத்தடி‘குருகிரிதலின் கிளிகடியினர்’ – 12எழுத்தடிஎழுத்தெண்ணுமிடத்தே மெய்யெழுத்துக்களும் ஆய்தமும் குற்றியலுக ரமும்குற்றியலிகரமும் தள்ளுண்டு போம்.(யா. வி. பக். 500) |
குறளடி வஞ்சிப்பா | குறளடியால் மூன்றுமுதற் பல அடிகொண்டு, அடுத்துத் தனிச்சொல் பெற்றுஅடுத்து ஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :பூந்தாமரைப் போதலமரத்தேம்புனலிடை மீன்திரிதரவளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்நாளும்,மகிழும் மகிழ்தூங் கூரன்புகழ்த லானாப் பெருவண் மையனே’ (யா. க. 90 உரை) |
குறள் | குறள்வெண்பா; எழுசீர் அடி இரண்டாய் வருவது.எ-டு : உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்களரனையர் கல்லா தவர் (குறள் 406)இது முதலடி நாற்சீராய்க் கடையடி முச்சீராய் வந்த குறள். (வீ. சோ.127 உரை) |
குறள் தாழிசை | தாழிசைக் குறள் எனவும்படும்; குறள்வெண்பாவின் இனங் களுள் ஒன்று;இரண்டடிகளான் அமையும். இது மூவகைப் படும்:1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி வெண் செந்துறை போலச் சமமானஈரடிகளான் அமைவது.எ-டு : ‘திடுதிம் மெனாநின் றுமுழா அதிரப்படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’.2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது.எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாயஞானநற்கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.3. தளை வழுவி வரும் குறள் வெண்பா.எ-டு : ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்பண்டையள் அல்லள் படி’இக்குறள்வெண்பா மூன்றாம் நான்காம் சீர்களிடைக் கலித்தளை தட்டுவந்தது. (யா. க. 64, 65 உரை) |
குறள் மஃகான் | மகரக்குறுக்கம். லகர ளகர மெய்கள் திரிந்த னகர ணகரங்களின் முன் |
குறள் வெண்செந்துறை | இது குறள்வெண்பாவின் இனம்; தம்முள் ஒத்த இரண் டடிகள் விழுமியபொருளும் ஒழுகிய ஓசையும் உடையன வாய் வருவது. ஒவ்வோரடியும் நாற்சீர்முதல் பல சீர்களானும் வரும்.எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’.இது நாற்சீரடி இரண்டான் ஆகியது.‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’.இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது. (யா. க. 63) |
குறள், சிந்து, திரிபாதி, வெண்பாஇவை ஆமாறு | 1. குறள் ஆமாறு – குறள் காண்க2. அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம்.எ-டு. :‘வீசின பம்பர மோய்வதன் முன்னான்ஆசை யறவிளை யாடித் திரிவனே’ எனவும்,‘எடுத்த மாட மிடிவதன் முன்னான்அடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே’ எனவும் வரும்.3. மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம்.எ-டு : ‘மடிந்து வாழ்நாட் போக்கன்மின், மாந்தர்காள்!இடிந்திவ் யாக்கை இழிவதன் முன்னநீர்,தடிந்து தீவினை, தன்மம் செய்மினே’(புனைந்தது)4. நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவதுவெண்பாவாம். முதற்சீரும் ஐந்தாம்சீரும் எட்டாம் சீரும் ஒத்தஎதுகையாய், ஒன்பதாம் சீரும் பதின்மூன்றாம் சீரும் ஒத்த எதுகையாய்ப்பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம். இதனை நேரிசை வெண்பாஎன்பாருமுளர்.எ-டு : ‘ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்நின்றபதின் மூன்றொன்பான் நேரொத்து – நன்றியலும்நீடுசீர் மூவைந்தான் நேரிசைவெண் பாஎன்பர்நாடுசீர் நாப்புலவர் நன்கு.’இன்னிசை வெண்பாவினை இந்நூலுரையாசிரியர் வெண் பாப் போலியுள்அடக்குவர். (வீ. சோ. 127 உரை) |
குறள்வெண்பா | வெண்பாவிற்குரிய பொதுவிலக்கணம் பெற்று இரண்டடி யான் வருவது; முதலடிஅளவடி; ஈற்றடி சிந்தடி. ஒரு விகற்பமும் இரு விகற்பமும் பெறும். (யா.க. 59; யா. கா. 24) |
குறள்வெண்பாவின் நான்கு ஆறு அமைப்பு | இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என முடியுமாற்றான்குறள்வெண்பா நான்காம். இனி, முற்றுகர ஈற்று நேர்நேர், முற்றுகர ஈற்றுநிரைநேர் – எனும் இவற்றான் இறுதலைக் கூட்ட ஆறும் ஆம்.எ-டு :‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்’ (குறள் 1121)நன்றறி வாரின் கயவர் திருவுடையார்நெஞ்சத் தவல மிலர்’ (குறள் 1072)‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (குறள் 984)‘அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு’ (குறள் 1)எனவும்,‘இன்மலர்க் கோதாய் இலங்குசீர்ச் சேர்ப்பன்புனைமலர்த் தாரகலம் புல்லு’ (யா. கா. மேற்.)‘மஞ்சுசூழ் சோலை மலைநாட! மூத்தாலும்அஞ்சொல் மடவார்க் கருளு’ (யா. கா. மேற்)எனவும் முறையே அவை வந்தவற்றால் குறள் வெண்பாவின் இறுதிச்சீர்அமைப்பு நான்காகவும் ஆறாகவும் கொள்ளப் படும். (இ. வி. 728 உரை) |
குறவஞ்சி | நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுரஅகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்ததலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி,“உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவிபாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல்,குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்திமலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலியகூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்திதெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல்,புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடுகுறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலியகண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் -எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பாதரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்றஇச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும்பிரபந்தவகை. (நவ. பாட். 20-22) |
குறி, செய்கை விளக்கம் | சூத்திரவகை ஆறனுள் இவை சில. குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை |
குறிச்சூத்திரம் | பலவற்றையும் குறித்து அறிய வரும் சூத்திரம் குறிச்சூத்திரம். |
குறித்த பொருளை முடிய நாட்டல் | தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டாதுஅமைந்துமாறச் செய்தல்.எ-டு :‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்’ ஆசிரியம்‘துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு’(நாலடி.2)(வெண்பா)‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி.11) -(கலிப்பா)‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட்-1) – வஞ்சிப்பாஇந்நால்வகைச் செய்யுட்கண் முடியும்துணையும் அடிதோறும் குறித்தபொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.) |
குறிப்பிசை | ‘ஆவியும் ஒற்றும் அளவிறந்து ஒலிக்கும் இடங்கள்’ காண்க. |
குறிப்பிசை மாத்திரை ஆகாமை | செய்யுள் உறுப்பு இருபதாறனுள் முதலாவதாகிய மாத்திரை என்பதுஎழுத்தல்லாத ஓசையாகிய குறிப்பிசையைக் குறிக்கும் என்பர்ஒருசாரார்.அக்குறிப்பிசை உறுப்பாக வரும் சான்றோர் செய்யுள் இன்மையின்,மாத்திரை என்ற சொல் குறிப்பிசையைக் குறிப்பது ஆகாது. சிறுபான்மைபிற்காலச் செய்யுட்களில் குறிப்பிசை ஒரோவழி வரினும், அத்துணையானே அஃதுஇன்றியமையாத செய்யுள் உறுப்புக்களுள் தலையாயதாய் எண்ணப்படாதாகலின்,மாத்திரை என்பதற்கு எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு என்பதேபொருள். (தொ. செய். 2 பேரா.) |
குறிப்புச் செய்யுள் | பலவகையாக நிகழும் முன்னம், உள்ளுறை, அங்கதம், பிசி, மந்திரம்முதலாக ஆராய்ந்துணரும் வகையானே வருவன குறிப்புச் செய்யுளாம். (தென்.இயற். 43) |
குறிப்புத் தொடை | எழுத்தல்லாத மொழிக்குறிப்பு ஓசை. ‘கஃஃறென்னும்’, ‘சுஃஃறென்னும்’என்றாற்போல் மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படுதல். (யா. க. 49உரை) |
குறிப்புமொழி இலக்கணம் | எழுத்து முடிந்த வகையானும் சொல் தொடர்ந்த வகை யானும் சொற்கண்அமைந்துள்ள பொருளானும் செவ்வனே பொருள் அறிதற்கு அரிதாகிப்பொருட்புறத்த பொரு ளுடைத்தாய் நிற்பது. (தொல். செய். 179 நச்.,பேரா.)எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின்அடக்கிய மூக்கினர் தாம்’.“குடம் போலும் தலையராய், செவ்வாயிடைக் கொம்புகள் தோன்றினராய்,கையின்கண் அடக்கிய மூக்கினையுடை யார்” என்ற இஃது யானை என்பதனைஉணர்த்தியமை குறிப்பு மொழியாம். குறிப்புமொழி அடிவரையறைப் படாமையின்பாட்டின்கண் வாராது என்பது. (தொ. செய். 179 நச்.)இனி, இலக்கண விளக்கம் கூறுமாறு :எழுத்தாலும் சொல்லாலும் தெரிவிக்காமல் பொருட்கண் அபிநயத்தில்கிடப்பனவே குறிப்புமொழி.‘ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்துக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாறு.‘குடத்தலையர் …. மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்தகுறிப்பினுள் அடங்கும். (இ. வி. பாட். 147 உரை) |
குறிப்புமொழிச் செய்யுள் | அடிவரையறை இல்லாத செய்யுள் வகை ஆறனுள் குறிப்பு மொழிச்செய்யுளும்ஒன்று. எழுத்து முடிந்தவாற்றானும், சொல் தொடர்ந்தவாற்றானும்,சொற்படுபொருளானும், செவ்வன் பொருள் அறியலாகாமையின், எழுத்தொடும்சொல்லொடும் புணராது பொருட்புறத்தே பொருளுடைய தாயிருப்பதுகுறிப்புமொழியாம்.இது கவியை வாசித்த மாத்திரத்தில் பொருள் தோன்றாது, பின்னர் இன்னதுஇது என்று சொல்லி உணர்த்தப்படுவ தாம்.எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையில்அடக்கிய மூக்கின ராம்’.இதனைக் குறித்து உணர்ந்து யானை என்று பொருள் செய்க. இது பாட்டுவடிவில் அமைந்தமையின் விடுகதையாகிய பிசி எனப்படாது. நேரிதாகப் பொருள்உணர்த்தல் ஆற்றாமை யின் பாட்டெனப்படாது. இதற்கு அடிவரையறை இல்லை. ஓரடிமுதலா எத்தனை அடி அளவினதாகவும் இக்குறிப்பு மொழிச் செய்யுள் அமையலாம்.(தொ. பொ. 179 பேரா.)சொல்லால் பொருள் உணர்த்தலேயன்றிப் பொருளானும் சொல் பெறப்படச்செய்யும் எழுத்தினொடும் சொல்லி னொடும் புணராதாகிப் பொருட்கண்அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம். அதுஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்தினுக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றான் உணர்க.‘குடத்தலையர்… மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள்அடங்கும். (இ.வி. பாட். 147 உரை) |
குறியதன் கீழ் ஆ | தனிக்குறிலை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர் குறுகுதலும், அதனோடு உகரம் |
குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டல் | தனிக்குற்றெழுத்தை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் ஒற்றுக்கள் |
குறியது | குற்றெழுத்து; குறில் எனவும்படும். இப்பெயரான், உயிர்க்குற் |
குறிலிணை உகரம் | குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் என்பதுஇத்தொடர்ப்பொருள். தனிக்குறிலை அடுத்துக் குற்றியலுகரம் வாராதாகவே,சொல்லின் தொடக்கத்தே பிற எழுத்துக்கள் இருப்ப அடுத்து வந்தகுற்றெழுத்தினை அடுத்த குற்றியலுகரம் என்றே பொருள் கோடல்வேண்டும்.‘குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரம் – ஞாயிறு, வலியது2. குற்றெழுத்தோடு இணைந்த முற்றியலுகரம் – கரு, மழு.ஞாயிறு, வலியது என்பன முறையே நெடிலையும் குறிலிணை யையும் அடுத்தகுற்றெழுத்தைச் சார்ந்த குற்றியலுகரம். இவற்றை முறையே நேர் நேர்பு,நிரை நேர்பு என்று கோடல் கூடாது; நேர்நிரை, நிரைநிரை என்றே கோடல்வேண்டும்.கரு, மழு – ஆகிய தனிக்குறிலை அடுத்த முற்றியலுகரங்களும், நேர்புஅசை ஆகாது, நிரையசையாகவே கொள்ளப்பெறும். (தொ. செய். 5 நச்.) |
குறிலிணை, குறில்நெடில் முன்னர் ஒற்றுமெய் கெடுதல் | குறில் மாத்திரை நீண்டு நெடிலாகும். ஆகவே, குறில் நெடில் என்பன |
குறில் | அ இ உ எ ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரையே பெறும் |
குறில் மிக்கு வருதல் | ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக’ (குறள்)இக்குறள் வெண்பாவில் (உயிர்மெய்க்) குறிலே பெரும். பான்மையும்வந்தவாறு. (யா. க. 2 உரை) |
குறுகிய ஐ இணைந்த நிரையசை | சீர்க்கு இடையும் இறுதியும் நின்ற ஐகாரம் ஐகாரத்தோடு இணைந்தும்நிரையசையாம். ஆகவே முதற்கண் ஐகாரம் பிறிதோரெழுத்தோடு இணைந்துநிரையசையாகாது.‘கெண் டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள்’கெண்டையை – சீர்க்கடைக் கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால் அணியிழாய்’அன்னையையான் – சீரிடைக்கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘படு மழைத் தண்மலை வெற்பன் உறையும்’சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்துநிரையசையாயிற்று.‘தன் னைய ருங் காணத் தளர்ந்து’சீர் இடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசை ஆயிற்று.(யா. க. 9 உரை) |
குறுகுதல் | எழுத்துத் தன்மாத்திரையின் குறுகியொலித்தல்.ஐகாரஒளகாரங்கள் சொல்லின்கண் முதலில் நின்றவழி ஒன்றரைமாத்திரையாகவும், ஐகாரம் சொல்லின்கண் இடைகடைகளில் நின்றவழி ஒருமாத்திரையாகவும்,ஒரு மாத்திரை பெறும் இகர உகரங்கள் இடமும் பற்றுக் கோடும் காரணமாகச்சில விடங்களில் அரைமாத்திரையாக வும், அரை மாத்திரை பெறும் ஆய்தம்புணர்ச்சி வகையால் (சிலவிடத்தே லள மெய் திரிதலால் வரும் ஆய்தம்) கால்மாத்திரையாகவும், அரை மாத்திரை பெறும் மகரம் இட வகையால் சிலவிடத்தேகால் மாத்திரையாகவும் குறுகிவரும். (யா. கா. 4) |
குறுக்கல் விகாரம் | செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுட்கண் தளை சிதையாமை வேண்டி |
குறுக்கல் விகாரம் | செய்யுளில் ஓசையும் தளையும் கருதி, நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தியேன்‘தீயேன்’ எனற்பாலது வெண்டளை கருதி ‘தியேன்’ என நெட்டுயிர்குற்றுயிராயிற்று. (யா. க. 95 உரை) |
குறுஞ்சீர் வண்ணம் | குற்றெழுத்து மிக்கு வரும் வண்ணம்.எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’(அகநா.4)(தொ. செய். 221. நச்.) |
குறுவெண்பாட்டு | அளவியல் வெண்பாவின் குறைந்த அடியினையுடைய வெண்பா; இதன் அடிவரையறைஇரண்டும் மூன்றும். (தொ. செய். 118 நச்.) |
குறுவேட்டுவச் செய்யுள் | பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வர அமைந்தஇலக்கியங்களுள் ஒன்று. (யா. வி. பக். 491) |
குறை அவை | போலிச் சதுரப்பாட்டினைப் பேசி, பலகாலும் நகைத்தலைச் செய்து,பக்கத்திருப்பாரிடம் பேச்சு நிகழ்த்தி, தமக்கொரு தலைமையின்றிஅஃதுள்ளது போல நடிப்பு நிகழ்த்தி, நல்ல நூற்பொருளை ஏடு விரித்துநோக்காமல், மாறுபாட்டைத் தம்முள் பெருக்கிக்கொண்டு, அறம் துறந்து,மறைவான சொற்செயல்களால் பொல்லாங்கு விளைத்துப் பொய்யே கூறுவது குறைஅவை.குறைபாடுற்றார் கூடிய அவை குறை யவை எனப்பட்டது. நிறையவைக்குமறுதலையாயது குறைஅவை. அவையினரது குணக்குறைபாடு அவைமீது ஏற்றப்பட்டது.(நவ. பாட். 89) |
குறை ஈற்று ஒரு பொருள் இரட்டை | அடுக்கிவரும் நான்கு சீர்களுள் ஈற்றுச்சீர் ஓரெழுத்துக்குறைந்துவருவது.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’ஈற்றுச் சீர் ஏகாரம் குறைந்து வந்தது. நான்கிடத்தும் சொற் பொருள்ஒன்றே என்பது. (யா. வி. பக்.204) |
குறை ஈற்றுப் பலபொருள் இரட்டை | பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொல் ஈற்றில்ஓரெழுத்துக் குறைந்து வருவது.எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஒடை’இதன்கண், ஈற்றுச்சீர் இறுதியெழுத்தொன்று குறைந்து வந்தது.“ஓடையே! நீ ஐயே (-மெல்ல) ஓடு; என்னை விட்டு மெல்லப் பிரிந்துசென்று விட்ட என் தலைவனை நாடி நீயும் மெல்ல ஓடு” எனச் சொற்பொருள்பலவாக வந்தவாறு. (யா. வி. பக். 204, 191) |
குறை எண் நிரல்நிறை | முதற்கண் நிறுவிய பொருள்களைவிடக் குறைந்த எண் ணிக்கையுடையபொருள்களைப் பின்னர் நிறுவுவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’அடிதோறும் மூன்று பொருள்களை நிறுவுங்கால் ஓரடியில் இரண்டே பொருளைநிறுவியமை குறைஎண் நிரல் நிறை என்பர் ஒரு சாரார். (யா. வி. பக்.384) |
குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் | இடையிடையே தனிச்சொல் பெற்று ஈற்றடி குறைந்து வந்த மூன்று (சில)தாழிசை பெற்று வந்த குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் ஒன்று வருமாறு :(கொச்சகக் கலிப்பா வகை பத்தனுள் இதுவும் ஒன்று.)“மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்றஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடிமணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார்அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே (தரவு)தானவ்வழி, (தனிச்சொல்)எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்பவிழுக்குற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆங்கே, (தனிச்சொல்)வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக்கோளுற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆண்டே, (தனிச்சொல்)இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்பற்றாது நின்றாரும் பலர்; (தாழிசை)அதுகண்டு, (தனிச்சொல்)மைவரை நிறுத்துத்தன் மாலை இயல்தாழக்கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்பஅழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டனகோல வரிவளை தானும்காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே” சுரிதகம் (யா.வி.பக்.332) |
குறைப் பஃறாழிசைக் கொச்சகம் | கொச்சகக் கலிப்பாவகை பத்தனுள் இதுவும் ஒன்று; தாழிசை ஆறுபெற்று,அவ்வாறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரப்பெறுவது. (யா. க. 86உரை) |
குற்றமற்ற பாடல் கோடலின் பயன் | முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்துநன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால்புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர்,“பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்”எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமைஎய்தியிருப்பர்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி,எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ.வி. பாட். 180) |
குற்றியலிகர முற்றியலிகரம் பொருள் வேறுபாடு | நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக வருமொழி முதலில் யகரம் வரின், உகரம் |
குற்றியலிகரம் | நிலைமொழி ஈறு குற்றியலுகரமாக விருக்க வருமொழி முதலில் யகரம் வரின்குற்றியலுகரம் குற்றியலிகரமாம். கேண்மியா, சென்மியா முதலிய முன்னிலைஏவல் வினை களின் ஈற்றில் வரும் ‘மியா’ என்ற அசைச்சொல்லில் மகரத்தைஊர்ந்து வரும் இகரமும் குற்றியலிகரமாம். குற்றியலிகரம்புள்ளிபெறும்.நாகியாது, வரகியாது, வடாதியாது, பாக்கியாது, அரக்கி யாது,பனாட்டியாது, கட்டியாது, கேண்மியா என்றாற் போல வரும்.சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றியலிகரம் அலகு பெறாது.எ-டு : குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் – குறள் 66குற்றியலிகரம் அலகு பெறவில்லை; அலகு பெற்றால் தளை சிதைந்துநிரையொன்று ஆசிரியத்தளை ஆகிவிடும். (யா. க. 2 உரை) |
குற்றியலிகரம் ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்’தாதல் | குற்றியலிகரம் தனிமொழிக்கண்ணே யன்றி, நிலைமொழி வருமொழியொடு |
குற்றியலிகரம் (1) | நாகு யாது – என்ற தொடரில், கு ஒரு மாத்திரை பெற்ற முற்றியலுகரம். |
குற்றியலிகரம் (2) | ஒருமாத்திரை பெற்ற இகரம் தன் மாத்திரை குறைந்து அரையாக ஒலிப்பது |
குற்றியலிகரம் (செய்யுளுள்) வருதல் | ‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்’ (குறள் 66)‘சிலையன் செழுந்தலைவன் சென்மியா என்றுமலையகலான் மாடே வரும்’முதற்பாடலுள் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது;இரண்டாவதனுள் ‘மியா’ என மகரத்தின்மிசை நின்ற இகரம்குற்றியலிகரமாயிற்று.முதற்பாடலில் குற்றியலிகரம் அலகு பெறவில்லை;இரண்டாம் பாடலில் அலகு பெற்றது. (யா. க. 2 உரை) |
குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகல் | குற்றியலிகரம் சொற்கள் புணர்ந்தியலும் நிலைமைக்கண் தனக்குரிய அரை |
குற்றியலிகரம் முதலியன தமிழ்ச்சிறப்பெழுத்து ஆதல் | இங்கு (பெருங்காயம்), ஏது தாது என்பன குற்றியலுகர ஈறு போல |
குற்றியலிகரம், குற்றியலுகரம் சார்பெழுத்தாதல் | சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு |
குற்றியலிகரம், குற்றியலுகரம் : பெயர்க்காரணம் | கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், ‘போலும்’ என்புழி |
குற்றியலிகரம், குற்றியலுகரம்,அளபெடை இவற்றுக்குச் சிறப்பு விதி | தளையும் சீரும் வண்ணமும் கெடாத இடங்களில் குற்றிய லிகரமும்குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு பெறும்; அவை மூன்றும் கெடவரின்அலகு பெறா.எ-டு:‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்’ (குறள்-66)‘அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்’ (குறள் -254)இவ்வெண்பா அடிகளில், இரண்டாம் சீரின் முதற்கண் உள்ள குற்றியலிகரம்அலகு பெற்றால், முறையே நிரை யொன்றாசிரியத் தளையும் கலித்தளையும் தட்டுவெண்பா அடிசிதையும் ஆதலின், இன்னோரன்ன இடங்களில் குற்றியலிகரம்அலகுபெறாது.‘குன்’று, கோ, டு, நீ, டு குருதிபாயவும் – ஆறசைச்சீர்எனைப்பல எமக்,குத்,தண்,டா, து’ – ஐந்தசைச்சீர்இவ்வடிகளில் குற்றியலுகரம் அலகுபெறின், முறையே ஆறசைச்சீரும்ஐயசைச்சீரும் வந்து செய்யுளடி சிதையுமாத லின், குற்றியலுகரம்அலகுபெறாது என விலக்க, மூவசைச் சீராய் வரும்.‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)’‘பிண்ணாக்கோஒ என்னும் பிணாவின் முகத்திரண்டு’முதலடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் கலித்தளை வந்துதட்டும். அடுத்த அடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் நாலசைச்சீர்புகுந்துவிடும். ஆதலின் இன்ன இடங்களில் அளபெடை அலகு பெறாது.‘வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால்முந்தியாய் பெய்த வளைகழலும்’இவ்வடிகளில் முறையே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் வெண்பாயாப்புக் கெடாமையால் அலகுபெற்றன.கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் (குறள் 1087)என்னும் வெண்பா அடியில் அளபெடை அலகு பெற்றது.செறாஅஅய் வாழியென் நெஞ்சு (குறள் 1200)என்னும் வெண்பா அடியில் அளபெடை ஈரலகு பெறவே,செறா, அ, அய்- நிரைநேர்நேர் ஆயிற்று.அலகுபெறுமிடத்துக் குற்றிகர குற்றுகரங்களைக் குற் றெழுத்தே போலக்கொண்டு அலகிடல் வேண்டும்.தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்று; ஆஅ-நேர்நேர்இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்று; படாஅ-நிரைநேர்பரவை (-உலகியல்) வழக்கினுள் பண்டமாற்றும், நாவல் கூறலும், அவலமும்,அழுகையும், பூசலிடுதலும், முறையிடுத லும் முதலாக உடையவற்றுள்அளபெழுந்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடாஎன்பது இலக்கணம் இன்மையின், அவை செய்யுளகத்து வருவழித் தளைசீர் வண்ணம்கெடநின்றால் அலகு பெறா எனவும், அவை கெடாவழி அலகுபெறும் எனவும் கொள்ளப்படும்.‘நறுமாலை தாராய் திரையவோஒ என்னும்’என்புழித் திரை ய வோ ஒ – அளபெடையை நீக்கி, நிரைநேர் நேர் எனப்புளிமாங்காயாகக் கோடல் நேரிது;அளபெடையை நீக்கித் திரை யவோ – கருவிளம்என்று கோடலும் ஒன்று.ஒருவனது இயற்பெயரைச் சார்த்தி அளபெடை வருதல் எழுத்தானந்தம் என்னும்குற்றமாதலின், அளபெடையை நீக்கி விடுதலே முறையாகும். (யா. க. 4.உரை) |
குற்றியலுகர ஈறு முன்னிலை வினைக்கண் வாராமை | முன்னிலை ஏவலொருமை வினைக்கண் குற்றியலுகர ஈறு வாராது. வாராதெனவே, |
குற்றியலுகர ஈற்று அல்வழிப்புணர்ச்சி | குற்றியலுகர ஈற்றுச் சொற்களெல்லாம் பெரும்பாலும் அவ்வழிக்கண் |
குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ப் புணர்ச்சி | குற்றியலுகர ஈற்றனவாகிய (அகக்காழனவாகிய) மரப்பெயர் களும் |
குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சியின் சிறப்புவிதி | அவ்வழிப்புணர்ச்சிக்கண், வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றின் முன் |
குற்றியலுகர எண்ணிக்கை | தனிநெடில் ஏழுடனே, ஆய்தம் ஒன்றும், மொழி இடையீறு களில் வரப்பெறாத |
குற்றியலுகர முறைப்பெயர் | நுந்தை என்ற முறைப்பெயரில் முதலெழுத்தாகிய நகரத்தை ஊர்ந்து |
குற்றியலுகர முற்றியலுகரப் புணர்ச்சி | குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்று; வரிவடிவில் புள்ளி பெறுவது. |
குற்றியலுகர முற்றியலுகரப் பொருள் வேறுபாடு | பெருக்கு, கட்டு முதலாயின பெயராகியவழிக் குற்றியலுகர ஈற்றுச் |
குற்றியலுகரத்தை அசைக்குஉறுப்பாக்கியமை | செய்யுள் என்பது பலசொற்கள் இணைந்து அமைவது ஆகலானும், அல்வழிவேற்றுமைத் தொடர்களில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம்முற்றியலுகரமாக நிறைந்து ஒலிப்பதானும், குற்றுகரத்தையும்முற்றுகரத்தையும் கொண்ட இயற்கைச் சொற்களும் ஈறு மிகுந்த முதனிலைத்தொழிற் பெயர்களும் பலவாக இருத்தலானும், அவ்வுகரங் களின் ஒலிமொழியீற்றில் வரும்போது ஏனைய உயிர்மெய்க் குறிலொலியினின்று சிறிதுவேறுபடுதலானும், தமிழில் அசைபிரித்துக் காண்டல் பெரும்பாலும் பொருளைஅடிப் படையாகக் கொண்டே அமைதலானும் குற்றியலுகரம் அசைக்குஉறுப்பாக்கப்பட்டது.குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்ணும் ஒரு மொழிக் கண்ணும்முற்றியலுகரமாக நிறைந்து ஒலியாக்கால்,‘வேற்றார் அகலம் உழுமே ஒருகோடுமாற்றார் மதில்திறக்கு மால்’ (முத்தொள் 19.)‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ (முத்தொள் 22)‘முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாக’ (முத்தொள் 27)‘கூந்தல்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்’(முத்தொள் 38)என்னுமிடங்களில் செப்பலோசை கெட்டுப் பாவும் அழியும்.‘இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழைதொன்று சுண்ணத்தின் தோன்றிய வேறுபாடுஒன்றெ னாவிக்கொர் கூற்ற மெனநையாநின்று நீலக்கண் நித்திலம் சிந்தினாள்’ (சீவக.903)என்ற செய்யுளில் இன்று, தொன்று, நின்று என்னும் சொற்க ளிலுள்ளஈற்றுக் குற்றியலுகரம் ‘ஒன்றெ’ என்னும் சீரிலுள்ள எகர ஈறுபோல ஒருமாத்திரை அளவினதாய் ஒலித்தல் வேண்டும். (இலக். கட். அசை. பக். 47) |
குற்றியலுகரப் புணரியல் | இது தொல்காப்பிய எழுத்துப்படலத்தின் ஒன்பதாவதாகிய இறுதி இயல். |
குற்றியலுகரப் பொதுப்புணர்ச்சி | நிலைமொழியீற்றின்கண் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர் |
குற்றியலுகரமும் முற்றியலுகரமும்ஒற்றொடும் தோன்றி நிற்றல் | சேறு + கால் – சேற்றுக்கால் – நேர்பு நேர்; நாணு + தளை – நாணுத்தளை- நேர்புநிரை; நெருப்பு + சினம் – நெருப்புச்சினம் – நிரைபுநிரை; கனவு+ கொல் – கனவுக்கொல் – நிரைபுநேர் இவை இருவகை உகரமும் சந்தியில்ஒற்றடுத்து வந்தன.தோன்றிநின்ற ஒற்றுக்களே அன்றி, நிலைமொழியில் ஒற்று மிக்கு உண்ணும்நடக்கும் என வருவனவும், விக்குள் கடவுள் என வருவனவும் போல்வன தேமாபுளிமாவாகவே நிற்கும்; உரியசைகள் ஆகா. (தொ. செய். 10 நச்.) |
குற்றியலுகரம் | நெடில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று, குறி லிணையொற்று,குறில்நெடிலொற்று, குற்றொற்று இவற்றை யடுத்து வரும் வல்லெழுத்தேறியஆறு உகரங்களும் குற்றிய லுகரமாம். குற்றியலுகரம் புள்ளி பெறும்.எ-டு : நாடு, வரகு, வடாது, பாக்கு, அரக்கு, பனாட்டு,கட்டு.இவ்வாறு குற்றியலுகரத்தைக் கணக்கிடுவது ஒரு மரபு.(யா. க. 2 உரை)இதன்கண் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளை யாட்டு, போவது,வருவது, ஒன்பது முதலியன பல அடங்கா என்பது சூத்திரவிருத்தியில்விளக்கப்பட்டது. |
குற்றியலுகரம் (1) | இது தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்று. இது |
குற்றியலுகரம் (2) | தனிநெடில், ஆய்தம், (மெய்யினை ஊர்ந்த) உயிர், வல்லின மெய், |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி அறுவகைப்படும் என்பது | நெட்டெழுத்து ஏழு, ஆய்தம் ஒன்று, இடையிறுதிகளில் வாராத ஒளகாரம் |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 36 எனல் | ஈற்றயல் எழுத்தைச் சிறப்பாகக் கொண்டு, நெடில் 7-ஆய்தம் – ஒள |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 42 ஆதல் | தனிநெடில், குறிலிணை, குறில்நெடில், நெடிலொற்று, குறிலிணை |
குற்றியலுகரம் ஒரோவழி உடம்படுமெய் பெறுதல் | ‘தன்முக மாகத் தானழைப் பதுவே’ (நன். 303) – இதில் ‘அழைப்பது’ |
குற்றியலுகரம் கெடுதல் | ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என நன்னூலார் நூற்பா |
குற்றியலுகரம் செய்யுளான் வருதல் | ‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமதுகருப்புச் செருப்புப் பரப்பு’இதன்கண், ஏழுசீரிலும் குற்றியலுகரம் இறுதிக்கண் வந்த வாறு.இவற்றில் குற்றியலுகரம் தனிஅசையாக வந்துள்ளமை உணரப்படும். (யா. க.2 உரை) |
குற்றியலுகரம் புணரும் முறை | ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். அதுவும் |
குற்றியலுகரம் புள்ளி பெறுதல் | ஈற்றுக் குற்றியலுகரம் முற்றியலுகரத்தின் மாத்திரையில் தான் பாதியே |
குற்றியலுகரம் முப்பத்தாறு | குற்றியலுகரம் முப்பத்தாறு என்றது என்னெனின், ஒருமதம் குறைந்த |
குற்றியலுகரம் மெழிமுதற்கண் வரல் | நுந்தை என்ற முறைப்பெயரிடத்து வரும் ‘நு’, இதழைச் சிறிது குவித்த |
குற்றுகர ஈற்று நாற்பெருந்திசைகள் | அவை வடக்கு,தெற்கு, குணக்கு, குடக்கு என்பன. (நன்.185 மயிலை.) |
குற்றுகர வாய்பாட்டு வினைப்பகுதிகள் | குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனான், போக்கு பாய்ச்சு உருட்டு |
குற்றுகரஈற்றுத் தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள் | நட வா – முதலாக அஃகு ஈறாகக் கூறப்பட்ட இவ்விருபத்து மூன்றும் |
குற்றுகரம், குற்றிகரம் இரண்டின்மேலும் புள்ளியிடுதலின் பயன் | தாது – ஏது – என்றல் தொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு – கொட்டு – |
குற்றுயிர் மடக்கு | ‘அகரக் குற்றுயிர் மடக்கு’ நோக்குக. |
குற்றெழுத் தளபெடை | குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாய் நீண்டு மீண்டும் ஒலி மிக |
குற்றெழுத்து வேறுபெயர்கள் | குறுமை எனினும், இரச்சுவம் எனினும், குற்றெழுத்து எனினும் |
குற்றெழுத்துக்கள் இடைநின்ற ஒற்றை மாத்திரை மிகுத்தல் | குற்றெழுத்துப் பலவாக வருதலான் தோன்றும் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம். |
குற்றொற்றாக வாரா மெய்கள் | ரகரஒற்றும் ழகரஒற்றும் தனிக்குறிலின்பின் ஒற்றாக வாரா. அவை நெடில், |
குழமகன் | மகளிர் தம் கையிற் கொண்ட இளமைத்தன்மையுடைய குழமகனைக்கலிவெண்பாவினால் புகழ்ந்துபாடும் பிரபந்த வகை. (குழமகன் – ஆண்குழந்தை)(இ. வி. பாட். 110) |
குழமணிதூரம் | வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து. (பெரியதி. 10-3-3) |
குவலயானந்தம் | வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம்தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள்விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ எனவடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம்நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறுஅலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாகஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச்சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானாதிபதிஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சமஸ்தான வடமொழிப்பண்டிதராம் சங்கரநாராயணசாஸ்திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம்ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சமஸ்தானத் தமிழ்வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின்மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத்தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறைநூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்குஎடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகியசெய்யுள்கள் காணப்படுகின்றன.மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல்சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது. |
கூட சதுக்கம் | சித்திரகவி வகைகளுள் ஒன்று; பாட்டின் நாலாவது அடி எழுத்துக்கள்ஏனைய முதல் மூன்றடிக் கண்ணும். மறைந்து கிடக்குமாறு பாடுவது.எ-டு :‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்தபகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித்துர்க்கைபொற்புத்தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தேதிகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே’இப்பாடற்கண், முதல் மூன்றடியுள் நான்காமடி மறைந் துள்ளது.கூடம் – மறைந்தது; சதுககம் – சதுர்த்தம் – நான்காவது.நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும்வெகுட்சிப் பார்வையையும் பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர்கூட்டம் அழியக் கொன்றவளும், காஞ்சி மாநகரில் உள்ளவளும், அழகு தங்கியஇனிய யாழொலி போன்ற சொற்களையுடைய வளும், கிளி போன்றவளுமான கொற்றவையிடம்பக்தி செய்யும் திறத்தில் ஈடுபடாத மனத்தை நல்வழிப்படுத்தினால்,இருவினையும் நீங்குதற்குக் காரணமான ஞானத்தை அறிதல் ஆம் என்பதுஇப்பாடற் பொருள். (தண்டி. 98-2) |
கூட சதுர்த்தம் | நான்கா மடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடி களுள்ளும்மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. ‘கூடசதுக்கம்’ என்பதும்அது. (தண்டி. 95)நாலடியாய ஒரு செய்யுளில் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேல்நின்று கீழும் கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றில்இடைவரியின் மறைந்து நிற்பது. (பதம். அடி) கூடசதுர்த்தமாம்.எ-டு :‘நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா!’ (மா. அ. 293)வரையுமாறு :நா ன ய ளா னா ரா ம தா னா விதா தா தா ணீ வா ம னா சீ த ராமா தூ ரு தா சீ னா போ மா ர மாபாடலின் நான்காமடி மேலை நடுவரிக்கண் நிகழுமாறு காண்க. |
கூட சதுர்த்தம் | நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா.இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும்கீழேகாட்டியவாறு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதத் தோன்றியபத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்து கிடைப்பது காண்க. |
கூட்டி எழூஉதல் | எழு – தன்வினை; எழூஉ – பிறவினை. கூட்டி எழூஉதலாவது சேர்த்து |
கூத்த நூல் | பண்டு தோன்றிய நாடகத்தமிழ் நூல்; அபிநயத்தைப் பற்றிய இந்நூற்பெயர்நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகிறது.(சீவக. 124) |
கூத்தர் ஆற்றுப்படை | நால்வகை ஆற்றுப்படையுள் ஒன்று. (ஏனைய மூன்றுமாவன: பாணாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப் படை என்பன.) வள்ளல்ஒருவனிடம்பரிசில் பெற்று மீளும் ஒரு கூத்தன், தான் வழியிற் கண்ட ஓர் ஏழைக்கூத்தனை நோக்கித் தனக்கு நிறைய வழங்கிய வள்ளலிடம் அவனும் சென்றால்வறுமை தீரப் பரிசில் பெற்று வாழலாம் எனக்கூறி, அவனை அவ்வழியில்செல்லுமாறு கூறுதல். ஆறு – வழி; படை – படுத்துதல்; தான் சென்றவழிக்கண்அவனும் சென்று பரிசில் பெறுமாறு செலுத்துதல் ஆற்றுப்படைப் பிரபந்தம்என்பது. (பு. வெ. மா. 9 : 29) |
கூன் | செய்யுளடியின் அளவிற்கு உட்படாது வரும் அசையும் சீரும் ‘கூன்’எனப்படும். வஞ்சியடியின்கண் நான்கு அசையும் கூனாக வரப்பெறும். முதல்இடை கடை என மூவிடத்தும் கூன் வரப்பெறும்.எ-டு. :‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா.4) – நேர்‘அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன’ – நிரை‘வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின – நேர்பு‘களிறு, கதவெறியாச் சிவந்துரைஇ’ (புறநா.4) – களிறு -நிரைபு.இவை வஞ்சியடியில் முதற்கண் நான்கு அசையும் கூனாக வந்தவாறு.இனிச் சீர் கூனாதல் ஏனைய மூவகைப் பாவிற்கும் உரித்து. சீர்அடிமுதற்கண்ணேயே கூனாக வரப்பெறும்.‘அவரே,கேடில் விழுப்பொருள் தருமார் பரிசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216)‘உதுக்காண்,சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’‘உலகினுள்,பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’இவ்வாறு முறையே ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்று பாவிலும்அடிமுதற்கண் சீர் கூனாயிற்று. (தொ. செய்.48, 49. நச்) |
கூன், சொற்சீரடி: இவற்றிடை வேறுபாடு | கூன் பொருளியைபு விட்டிசைக்கும்; சொற்சீரடி விட்டிசை யாது பொருள்தொடர்புற்று நிற்கும். (தொ. செய். 123. ச.பால) |
கூழை அளபெடை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் அளபெடை பெற்று வருதலாகியதொடை விகற்பம்.எ-டு : ‘ விடாஅ விடாஅ வெரீஇ ப் பெயரும்’ (யா. க. 45 உரை) |
கூழை இயைபு | நாற்சீரடியின்கண் முதற்சீரொழிய ஏனைய மூன்றன்கண்ணும் ஈற்றெழுத்துஒன்றிவரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பெருந்தோளி கண் ணும் இலங் கும் எயி றும் ’ (யா. க. 45 உரை) |
கூழை எதுகை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் எதுகை பெற்று வரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பொ ன் னின் அ ன் ன பு ன் னைநுண் தாது’ (யா. க. 45 உரை) |
கூழை நிரல்நிறை | நாற்சீரடியின்கண், முதல்மூன்று சீர்களிலும் நிரல் நிறை அமைதல்.எ-டு : ‘கண்ணும் புருவமும் மென்தோளும் இம்மூன்றும்வள்ளிதழும் வில்லும் விறல்வேயும்வெல்கிற்கும்’இவ்வடிகளில், முதல் மூன்று சீர்களிலும், கண் இதழ் – புருவம் – வில்- தோள்வேய் – என நிரல்நிறை முறையே அமைந்தவாறு. (யா. க. 95 உரை) |
கூழை முரண் | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் சொல்லாலும் பொருளாலும்மறுதலைப்பத் தொடுத்தலாகிய தொடை விகற்பம்.எ-டு : ‘ கரிய வெளிய செய்ய கானவர்’ (யா. க. 45 உரை) |
கூழை மோனை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுத்தலாகிய மோனை விகற்பம்.எ-டு : ‘ அ ருவி அ ரற்றும் அ ணிதிகழ் சிலம்பின்’ (யா. க. 45 உரை) |
கூழைத் தொடை | நாற்சீரடியின் முதல் மூன்று சீர்களும் மோனை எதுகை முரண் அளபெடைஎன்னும் தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை விகற்பம். இயைபுத்தொடை, ஈற்றுச் சீரையே முதற்சீராகக் கொண்டு கணக்கிடப் பெறு தலின்,முதற் சீரொழித்து ஏனைய மூன்று சீரிலும் வருதலே கூழை இயைபுத்தொடைவிகற்பமாகக் கொள்ளப் படும். கூழைமோனை முதலிய விகற்பங்களைத் தனித்தனித்தலைப்பிற் காண்க. (யா. க. 45) |
கூவிளங்கனி | ‘நேர்நிரைநிரை’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘தேம்புனலிடை மீன்திரிதரும்’ (யா. கா. 7 உரை) |
கூவிளங்காய் | ‘நேர்நிரைநேர்’ எனவரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் – கென்னோ’ (யா. கா. 7 உரை) |
கூவிளநறுநிழல் | ‘நேர் நிரை நிரை நிரை’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச்சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப’ (யா. கா. 8 உரை) |
கூவிளநறும்பூ | ‘நேர் நிரை நிரை நேர்’ என வரும் நாலசைச்சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்’ (யா. கா. 8 உரை) |
கூவிளந்தண்ணிழல் | நேர் நிரை நேர் நிரை எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ அந்தரதுந்துபி நின்றியம்ப’ (யா. கா. 8 உரை) |
கூவிளந்தண்பூ | ‘நேர்நிரை நேர்நேர்’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ வெங்களியானை வேல்வேந்தரும்’ (யா.கா. 8 உரை) |
கூவிளம் | ‘நேர்நிரை’ எனவரும் ஈரசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்” (குறள் 1121) |
கெடுதல் | புணர்ச்சி விகாரம் மூன்றனுள் கெடுதலும் ஒன்று. |
கேசாதி பாதம் | கலிவெண்பாவால் ஒருவரை முடி முதல் அடியளவும் வருணித்துக் கூறும் ஒருபிரபந்தம். மக்களில் ஆண்பாலரை யும் பெண்பாலரையும் கேசம் முதல் அடிவரைபாடுதலே முறை. தெய்வங்களைப் பாதாதி கேசமாகப் பாடவேண்டும் என்ப. (இ.வி. பாட்.111) |
கேடு அல்லது நட்டம் | உறழ்ச்சி என்னும் பிரத்தாரத்தால் விருத்தங்களின் தொகையைஅறியலாகும். ஆயின், இன்ன விருத்தத்தில் இத்தனையாவது எண்ணுடையது எவ்வகையில் லகு குருக்களின் அமைப்பைப்பெற்றிருக்கும் என்று அறிவதற்கான உபாயமே இத்தெளிவு. நட்டம் என்பதற்குஅறியப்படாதது என்றே பொருள் கொள்ளல் வேண்டும். விருத்தத்தின் எழுத்துக்களின் எண் மிகுந்து கொண்டே (இருபத்தாறு வரை) போகுங்கால்.விருத்தங்களின் மொத்தத்தொகை ஆயிரம் பல்லாயிரமாகப் பல்கிப்பெருகுதலின், அவற்றுள் ஒன்றின் (- எளிதில் அறியப்படாத ஒன்றின்) நட்டம்ஆனதின் குரு லகு அமைப்பை அறிவதற்கு எளிய வழி கூறும் தெளிவுஇது.எடுத்துக்காட்டாக, பிரத்தாரத்தில் காட்டிய நான்கெழுத்துக் களைக்கொண்ட அடிகளால் அமையும் விருத்தவகை பதினாறில், இத்தனையாவது விருத்தம்இன்னவகையில் குருலகு எழுத்துக்களைப் பெற்றிருக்கும் என்பதை இந்நட்டம்(-கேடு) என்னும் தெளிவால் அறியும் முறையைக் காண்போம்.இரண்டாவது எழுத்துக் காண, விருத்தத்தின் எண்ணைப் பாதியாக்கவும்,எண் விஷமமானால் ஒன்றனைச் சேர்த்துப் பாதியாக்கவும் வேண்டும்.1, 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை எண்கள் விஷமஎண்கள். இவை வியமன்என்றும் வியனிலை என்றும் கூறப்படும் 2, 4, 6, 8, 10 போன்ற இரட்டைப்படைஎண்கள் சம எண்கள்; இவை சமநிலை என்று கூறப்படும்.பின்வரும் முறையில் எழுத்துக்களைப் பகிர்ந்தும் கூட்டியும்செய்தபின் வரும் எண் விஷமமானால் குருவையும், சமமா னால் இலகுவையும்இட்டுக் கொள்ளல் வேண்டும்.இனி நான்கெழுத்தடிகளைக் கொண்ட விருத்தங்களில் பதினோராவதுவிருத்தத்தின் எழுத்தமைப்பு எங்ஙனம் என்றறிய, நட்டம் என்ற தெளிவுமுறையைக் காட்டுவோம். (இது குரு லகு குரு லகு என்ற அமைப்புக்கொண்டது.)அ) 11 என்பது விஷம எண்; ஆதலின் முதலில் குரு எழுத்து.ஆ) அதனுடன் ஒன்று கூட்டினால் 11 + 1 = 12.இது சமாண்; ஆகவே இரண்டாம் எழுத்து வரு. இந்த 12-ஐப் பாதியாக்கினால்வருவது 6; (இ) அதனைப் பாதியாக்கினால் வருவது 3. இது விஷமம். ஆகவேமூன்றா மெழுத்து குரு. (ஈ) மூன்றோடு ஒன்று சேர்த்தால் 4; அதன் பாதி 2.இது சமம். ஆகவே நான்காவது எழுத்து இலகு.இனிச் சமமான ஒன்றைப் பற்றி அறிய எடுத்துக்காட்டு:அடிக்கு நான்கெழுத்துக்கள் கொண்ட விருத்தங்களில் பன்னிரண்டாவதுஎங்ஙனம் அமையுமெனில், காண்போம். (லகு லகு குரு லகு என்பது இதன்அமைப்பு)12 என்பது சமம்; ஆகவே முதலில் லகு. அதன் பாதியும் (6) சமம்; ஆகவேஇரண்டாவதும் லகு. ஆறன் பாதி 3; இது விஷமம்; ஆகவே மூன்றாவது குரு.3+1=4; இதன் பாதி 2; இது சமம். ஆகவே நான்காவது லகு.இவ்வாறே, அனைத்து விருத்தங்களையும் அறியலாகும்.(வீ. சோ. 135) |
கேண்மியா : சொல்லமைப்பு | கேள் என்ற முன்னிலை வினைப்பகுதியொடு ‘மியா’ என்ற உரையசைச்சொல் |
கைக்கிளை | ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் பாடுவது கைக்கிளைச்செய்யுளாம்.பிரபந்த மரபு, பன்னிரு பாட்டியல் இவை கைக்கிளைமாலை எனச்சுட்டுதலின் (பி.ம.30, பன்.பாட்.295), பாடல்கள் அந்தாதித் தொடையுறவருதல் வேண்டும்போலும்.ஒருதலைக் காமத்தினை முப்பத்திரண்டு வெண்பாவாற் பாடுதலும்கைக்கிளைப் பிரபந்தம் என்ப. (மு. வீ. யா. ஒ. 149; தொ. வி. 283உரை) |
கைக்கிளை மருட்பா | கைக்கிளையாகிய பொருள் பற்றி வரும் மருட்பா.எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும்; தேங்கோதைவாடும்;இருநிலம் சேவடியும் தோயும்; – அரிபரந்தபோகிதழ் உண்கணும் இமைக்கும்ஆகும் மற்றிவன் அகவிடத்து அணங்கே’ (பு.வெ. 14:3) (யா.கா.செய்.15) |
கைக்கிளை மருட்பா அல்லாத மருட்பா | கைக்கிளை மருட்பா அல்லாத மருட்பாப் புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவியறிவுறுத்தல் ஆகிய பொருண்மை பற்றி அடிவரையறை இன்றிவரும்; முதலில் வெண்பா இயலிலும் இறுதியில் ஆசிரிய இயலிலும் வரும். இவைபுறத்திணையிலேயே வரும். மருட்பாவில் உள்ள இரண்டு பாவும் இயற்சீரான்வருதல் சிறப்பு.இதன்கண் வரும் வெண்பாவின் குறைந்த அளவு ஏழுசீர்; வெண்பா நாலடிமுதல் பன்னீரடி முடிய உயர்ந்து வருதல் சிறப்பு. வெண்பா பன்னீரடியின்இகந்து வரினும், மருட்பா வில் வரும் ஆசிரியம் மூன்றடியின் இகவாது;ஈற்றயலடி முச்சீர்த்தாகவே வரும்.எ-டு : ‘தென்ற லிடைபோழ்ந்த ’ என்ற பாடல் புறநிலை.‘பலமுறையும் ஓம்பப்படுவன’ என்ற பாடல் வாயுறை.‘பல்யானை மன்னர் முருங்க’என்ற பாடல் செவியுறை.(தொ. செய். 161. நச்.) |
கைக்கிளையுள் அடங்குவன | ஒருபொருள் நுதலாது திரிந்து வரும் கலிவெண்பாட்டும்நெடுவெண்பாட்டோடு ஒருபுடை ஒப்புமையுடைமையின், அக்கலிவெண்பாட்டாகஇக்காலத்தோர் கூறும் உலாச் செய்யுளும் மடற்செய்யுளும்புறப்புறக்கைக்கிளையுள் அடங்கும். (தொ. செய். 118. நச்.) |
கைந்நொடி அளவு | கட்டைவிரலை நடுவிரலில் ஊன்றி இரண்டனையும் முறுக்கி |
கையனார் யாப்புநூல் | கையனார் என்பவர் இயற்றிய இந்நூற்கருத்துக்கள் யாப் பருங்கலவிருத்தியுள் மேற்கோளாக எடுத்தியம்பப் பெற்றுள. மெய்யின் மாத்திரை அரைஎன்பது, ஆய்தம் சொற்களில் அமையும் இடம், இயைபுத்தொடைக்குஎட்டுவிகற்பங்கள், நேரிசை ஆசிரியப் பாவிற்கு எடுத்துக்காட்டு,இடைப்புணர் முரணுக்கு எடுத்துக்காட்டு ஆகிய கையனார் யாப்புச்செய்திகள் அதன்கண் இடம் பெறுகின்றன.“நாற்சீரடிக்கண் முதல் அயற்சீர்க்கண் தொடை இல்லதனைக் கீழ்க்கதுவாய்எனவும், ஈற்றயற்சீர்க்கண் தொடையில்லதனை மேற்கதுவாய் எனவும் வேண்டினார்கையனார் முதலிய ஒரு சார் ஆசிரியர்” என யாப்பருங்கலக்காரிகையுரைகையனார் யாப்பு நூற் செய்தியைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 23, 27,138, 159; யா. கா. 19. உரை) |
கொச்சக உறுப்பு | கொச்சகமாவது தாழிசையின் வேறுபட்டு வெண்பாவாகவும் வெண்பாவினை ஒத்ததழுவோசையின்றியும் வரும் இடை நிலைப் பாட்டு. இஃது அடுக்கியும்அடுக்காதும் வரும்.(தொ. செய். 152 ச.பால) |
கொச்சக ஒருபோகினைப் பாவினங்களுள்அடக்காமை | கொச்சக ஒருபோகுகளை ஒரு வரையறைப்படுத்துப் பாத் தொறும் இனம்சேர்த்திப் பண்ணிற்குத் திறம்போலப் பாவிற்கு இனமாகப் பின்னுள்ளஆசிரியர் அடக்குவர். அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்த ஆசிரியர்அவ்வாறு அதனை அடக்காமைக்குக் காரணம் கூறுவர். அவர் கூறுமாறு :‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!’இஃது ஈரடியான் வருதலின் குறட்பாவிற்கு இனமாகிய வெண்செந்துறையெனின், ஈற்றடி ஒருசீர் குறைவின்றி வருதலின், வெண்பாவிற்கு இனமாகாது;கலிப்பாவின் ஒரு கூற்றுக்கே இனமாகும்; இது சீரானும் தளையானும்ஆசிரியத்துக்கே இனமாம்.“அறுவர்க் கறுவரைப் பயந்தும் கவுந்திமறுவறு பத்தினி போல்வை கினீரே”இது சந்தம் சிதைந்து புன்பொருளாய் வருதலின் குறட் டாழிசை எனின்,தாழம்பட்ட ஓசையும் விழுமியபொருளும் இல்லனவற்றுக்குத் தாழிசை என்பதுபெயராதல் வேண்டும்.அங்ஙனம் கொள்ளின், சிறப்பாகக் கொள்ளப்படும் ஒத்தாழிசைக் கலியின்தாழிசைகளுக்கும் சந்தம் சிதைதலும் புன்பொருளாய் வருதலும்உரியவாகிவிடும். அதனால் குறட்டாழிசை என்ற பெயர் பொருந்தாது.‘கன்று குணிலா’ (சிலப்.ஆய்ச்சியர் குரவை) என்ற தாழி சைகள் மூன்றும்ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வெண்டளை யாக வருதலின், ஆசிரியத்திற்கு இனம்ஆகா; இவை அந்நிலத் தெய்வத்தைப் பரவுதலின் கைக்கிளை அல்ல.‘நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றிஉருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன்அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர்விருப்புச் செயநின்னை வேண்டுகின் றாரே’இதனை நான்கடியான் வருதலின் கலிவிருத்தம் என்பர். இது வெண்டளைதட்டலின் வெண்டாழிசை எனவும் கூறலாம். கலித்தளை இன்மையின் கலிக்கு இனம்என்றல் பொருந்தாது.குறளடி நான்கு ஒருபொருள்மேல் மூன்றடுக்கின் வஞ்சித் தாழிசை;தனித்துவரின் வஞ்சித்துறை; சிந்தடி நான்குவரின் வஞ்சி விருத்தம் என்ப.அவை நான்கடியான் வருதலானும் பா வேறுபடுதலானும் சீர் இயற்சீர் ஆகலானும்வஞ்சியொடு சிறிதும் தொடர்புடையன ஆகா. மேலும் தாழிசை துறை என்றுவஞ்சியுட் படுத்துதற்கு எவ்விதக் காரணமும் இன்று.இங்ஙனம் இனம் சேர்த்துதற்கு அரியனவற்றைப் பெரும்பா லும் கலியோசைகொண்டமை நோக்கிக் கொச்சகம் என அடக்கினார் தொல்காப்பியனார்.இக்கொச்சகம் வரையறுக்கப்படவே, ஆசிரியமும் வெண்பா வும்ஒருபொருள்மேல் பல மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்துமாகி வருதலும்பிறவாறு வருதலும் வரையறை இல. அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம்,கீழ்க்கணக்கு முதலியவற்றுள் அடங்கும். (தொ. செய். 149.நச்.) |
கொச்சக ஒருபோகின் அளவு | வண்ணக ஒத்தாழிசையின் அளவே இதற்கும் அளவாவது; சிறிது வேறுபட்டும்வரலாம். (தொ. செய். 155. நச்.) |
கொச்சக ஒருபோகின் இலக்கணம் | ‘தரவின்றாகித் தாழிசை பெற்றும்,தாழிசை இன்றித் தரவுஉடைத் தாகியும்,எண்இடை யிட்டுச் சின்னம் குன்றியும்,அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும்’யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைத்தாய்க் கொச்சக ஒருபோகுவரும். (தொ. செய். 149. நச்.)எனவே, ஒத்தாழிசை உறுப்புக்களுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவனகொச்சக ஒருபோகு எனப்பெயர்பெறும்; தனிச்சொல்லின்றி எண் இடையிட்டுவரினும் ஒருபோகு எனப்பெயர் பெறும். (143, 140 இள.)தரவின்றி தாழிசை முதலிய உறுப்புக்கள் பெற்றும், தாழிசை இன்றித்தரவு முதலிய உறுப்புக்கள் பெற்றும், தனித்தரவு தானே வரினும், தாழிசைதானே வரினும், எண்ணுறுப்புப் பெற்றுத் தனிச்சொல் வாராது போயினும்,எண்ணுறுப்பி னுள் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் சுரிதகம் இன்றித்தரவுதானே நிமிர்ந்து ஒழுகி முடியினும், ஒத்தாழி சையின் யாக்கப்பட்டயாப்பினும் அதற்கு உரித்தாக ஓதப் பட்ட கடவுள் வாழ்த்துப்பொருண்மையின்றிக் காமப் பொருளாக வரினும் கொச்சக ஒருபோகுஎனப் பெயர்பெறும். (143 இள.) |
கொச்சகக் கலிப்பா (1) | தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் முதலும் முடிவும்வருதலின்றி இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடி பல வந்தும், தரவுதாழிசை தனிச்சொல் சுரிதகம் சொற்சீரடி முடுகியலடி என்னும் ஆறுஉறுப்பினைப் பெற்றும் ஏனை உறுப்புக்களில் வெண்பா மிக்குப் பிற பாஅடிகளும் வந்து வெண்பா இயலான் முடிவன கொச்சகக் கலிப்பாக்களாம்.‘காமர் கடும்புனல்’ (கலி.39) என்ற குறிஞ்சிக் கலிப்பாடல், ஐஞ்சீர்அடுக்கிய ஓர் அடியினையுடைய தரவு, அடுத்து ஐஞ்சீர் முதலடிக்கண் வந்தவெண்பா, அடுத்து முதலடி ஆசிரிய அடியாக வந்த வெண்பா, அடுத்து ஒருவெண்பா, தனிச்சொல், பேரெண், இரண்டு தாழிசை, கொச்சகம், தனிச்சொல்,முதலடி அறுசீர் முடுகியலும் அடுத்த அடி ஐஞ்சீர் முடுகியலும், ஏனையஅடிகள் அளவடியும் பெற்ற ஆறடி ஆசிரியச் சுரிதகம் – என்றஉறுப்புக்களையுடையது. ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்குவந்தாற் போலக் கொச்சகக்கலிக்கு வெண்பா உறுப்பு மிக்கு வரும். (தொ.செய். 148. இள.) |
கொச்சகக் கலிப்பா பெயர்க்காரணம் | கொச்சகம் போல மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும்கிடக்கும் உறுப்பிற்று ஆகலானும், கலியோசைக்குச் சிறப்பில்லாத நேரீற்றுஇயற்சீரை யுட்கொண்டு நிற்றலானும் கொச்சகக்கலி என்பதும் காரணக்குறி.சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை எனவும் கொச்சகம் எனவும்வழங்குப.ஒத்தாழிசைக்கலி சிறப்புடைத்தாகலின் முன்னர் வைக்கப்பட் டது.வெண்கலி அளவிற்படாத அமைதித்தாய் ஈற்றடி முச்சீராதலின் இடைக்கண்வைக்கப்பட்டது. கொச்சகக்கலி சிறப்பின்மையின் இறுதிக்கண்வைக்கப்பட்டது. (யா. க. 79. உரை) |
கொச்சகக் கலிப்பா வகை (1) | தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து. (யா. க. 81. உரை) |
கொச்சகக் கலிப்பா விரி | 1. தரவு ஒன்றாகிச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவுசொச்சகம்.எ-டு : ‘குடநிலைத் தண்புறவில்’2. தரவு ஒன்றாகிச் சுரிதகம் இல்லாது வருவது இயல்தரவு கொச்சகம்.எ-டு : “செல்வப்போர்க் கதக்கண்ணன்”3. தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வடிவுடை நெடுமுடி’4. தரவு இரட்டித்துச் சுரிதகம் இல்லாது வருவது இயல் தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வார்பணியத் தாமத்தால்’5. ஈற்றடி குறையாத சிலதாழிசையால் வருவது இயல் சிஃறாழிசைக்கொச்சகம்.எ-டு. : ‘பரூஉத் தடக்கை’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும்தனிச்சொல் வந்தது.6. ஈற்றடி குறைந்த சில தாழிசையால் வருவது குறைச் சிஃறாழிசைக்கொச்சகம்.எ-டு : ‘மாயவனாய்’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும்தனிச்சொல் வருதலொடு, தாழிசையும் ஈற்றடி ஒருசீர் குறைந்துவந்தது.7. ஈற்றடி குறையாத பல தாழிசையால் வருவது இயல் பஃறாழிசைக்கொச்சகம்.எ-டு : ‘தண்மதியேர்’: தாழிசைகள் ஆறு வந்திருப்பதால்பஃறாழிசை.8. ஈற்றடி குறைந்த பல தாழிசையால் வருவது குறைப் பஃறாழிசைக்கொச்சகம்.இதன்கண், தாழிசை ஆறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரல்வேண்டும்.9. கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக்கள் மயங்கி வருவது இயல் மயங்கிசைக்கொச்சகம்.எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி’ – இது தரவு இரட்டித்து, தாழிசைஆறும் தனிச்சொல்லும் அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும்,தனிச்சொல்லும், எட்டு இருசீரோரடி அம்போதரங்கங்களும், தனிச் சொல்லும்,சுரிதகமும் இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புக்கள் மிக்கும்குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தது.10. பிறபாவினொடு மயங்கி வருவது அயல் மயங்கிசைக் கொச்சகம்.எ-டு.: ‘காமர் கடும்புனல்’ – இது வெண்பாப் பலவும் மயங்கி ஆசிரியஅடியும் விரவி வந்தமையால் அயல் மயங்கிசை யாயிற்று. (கலி. 39. நச். உரைகாண்க.)எ-டு : ‘நறுவேங்கைத் துறுமலர்’இஃது இருசீரடியும் முச்சீரடியுமாய் வரும் பிரிந்திசைக்குறள்எனப்படும் அம்போதரங்க அடிகளும், அந்தாதித் தொடை யாகிய அராக அடிகளும்,தனிச்சொற்களும் விரவி மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும்இடையிடை ஆசிரியங் களும் வெண்பாக்களும் மயங்கி வந்த அயல் மயங்கிசைக்கொச்சகம். (யா. க. 86 உரை) |
கொச்சகக்கலிப்பா (2) | தரவே வந்தும். தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசைபல வந்தும், தரவு முதலிய ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும்,வெண்பாவினொடும் ஆசிரியத்தினொ டும் மயங்கியும், தனிச்சொல் இடையிடையேவந்தும், அம்போதரங்க உறுப்பும் சுரிதகமும் அருகி வந்தும், கலிக்குஓதப்பட்ட பொதுமுறையில் மாறிவருவன கொச்சகக் கலிப்பாக்களாம். (யா. க.86. உரை) |
கொச்சகக்கலிப்பா வகை (2) | அகநிலைக் கொச்சகக் கலிப்பா, கொச்சக ஒருபோகின் இலக்கணங்களுள்‘தரவின் றாகித் தாழிசை பெற்றும்’ என்ற ஒன்று நீங்கலாக ஏனைய எல்லாஇலக்கணங்களையும் பெறும்; விரவுறுப்புடைய கலிவெண்பாவின் இலக்கணங்களையும் பெறும். ஆதலின் இவ்வகநிலைக் கொச்சகக் கலிப்பா தரவும் போக்கும்பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாகவும் இடையிடையேகொச்சகத்தில் ஐஞ்சீரடியும் அறுசீரடியும் பெற்றும் வருதலுண்டு. இதன்கண்இடையே வரும் பாட்டுக்கள் வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொரு ளும்வேறாகலின் கொச்சகம் எனப்பட்டன.தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒருதரவே வருதலும், தரவுஇணைந்து சுரிதகம் இன்றி வருதலும், தரவு இணைந்து தனிச்சொல்லும்சுரிதகமும் உடன்பெறுதலும், ஒத்தாழிசை மூன்றடுக்கினும் ஒவ்வொரு தாழிசைமுன்னும் தனிச்சொல் வருதலும், தேவபாணி ஆகாதவழிக் காமப் பொருளைப் பற்றிவாராது அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளும் பற்றிவருதலும், பாக்களின் அமைப்பில் வேறுபட்டு வருதலும் இவ்வகநிலைக் கொச்சகத்துள் அடங்கும்.எ-டு : “செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு’ (கலி.19)என்பது சுரிதகம் பெறாத தரவிணைக் கொச்சகம். கொச்சகம் வெண்பாவாயும்வருதலானும், தாழிசையொடு தொடராது வருதலானும் இவை கொச்சகம் ஆயின.ஒருபொருள் நுதலி இவ்வாறு வரினும் கொச்சகம் எனலாம்.எ-டு : ‘மாமலர் முண்டகம்’ (கலி.3.)இது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம் பெற்ற தரவிணைக்கொச்சகம்.எ-டு : “மின்னொளிர் அவிரறல்’ (கலி.55)இது தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்ற தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வெல்புகழ் மன்னவன்’ (கலி. 118)இது தாழிசைதோறும் முதற்கண் சொற்சீரடியாகத் தனிச் சொற்கள் பெற்றுவருதலின் ஒத்தாழிசை இலக்கணம் இன்றி, எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றியகொச்சகம்.சீவகசிந்தாமணி முதலிய நூல்கள் கொச்சகம் பல அடுக்கிப்பொருள்தொடர்நிலையாய், அறம்பொருள் இன்பம் என்பன விராய்ப் பொருள்வேறுபடவரும் தரவுக் கொச்சகங்களாம்.எ-டு : ‘கொடியவும் கோட்டவும்’ (கலி. 54)இஃது ‘அதனால்’ என்னும் தனிச்சொல் பெற்று அடக்கியல் இல்லாச்சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தது.எ-டு : ‘பால்மருள் மருப்பின்’ (கலி.21)இஃது ‘அவற்றுள்’ எனத் தொடங்கும் ஐஞ்சீரடி வந்து, தனிச் சொல்லும்அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்று அடி நிமிர்ந்தோடிற்று.எ-டு : “அகன்ஞாலம் விளக்கும்’ (கலி.119)இது, தனிச்சொல்லும் அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்றுஅடிநிமிர்ந்தோங்கியது.எ-டு : மன்று பார்த்துநின்ற தாயைக்கன்று பார்க்கும்இன்றும் வாரார்’இஃது இருசீர் நான்கடித் தரவுகொச்சகம்எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேறிஅஞ்சல் ஓம்பென் றகன்றவஞ்சர் வாரா ராயின்நெஞ்சம் நில்லா தேகாண்’இது முச்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.‘நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல்வாரல ராகி யவரோ வலித்தமைந்தார்ஆரலார் நாரைகாள் அன்றில்காள் அன்னங்காள்ஊரலர் தூற்றயான் உள்ளம் உகுவேனோ?இது நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.‘கன்னி ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்டபொன்னங் கொடியை ஈன்றோ ரில்லை போலுமால்மன்னன் காக்கும் மண்மேல் கூற்றம் வரஅஞ்சிஅன்ன தொன்று படைத்தா யாயின் எவன்செய்கோ?’இஃது ஐஞ்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.’திருவளர் தாமரை’ (கோவை1)‘போதோ விசும்போ’ (கோவை2)இவை அடிதொறும் பதினேழ் எழுத்தும் பதினாறு எழுத்துமாக வந்ததரவுகொச்சகம்.‘குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெம்கூத்தப்பிரான்கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்கும்கருங்கட்செவ்வாய்மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள்பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே’(கோவை.30)என்பதன் மூன்றாமடியும்,‘காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்சீரணி சிந்தா மணிஅணி தில்லைச் சிவனடிக்குத்தாரணி கொற்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்ஊரணி உற்றவர்க் கூரன்மற்றி யாவர்க்கு மூதியமே’(கோவை-400)என்பதன் நான்காமடியும் ஒரோ எழுத்து மிக்க தரவு கொச்சகம். (மிக்ககுற்றிய லிகரங்கள் எழுத்தெண்ணப் படாவாகும்)‘காண்பான் அவாவினாற் காதலன் காதலிபின் நடவா நிற்பநாண்பால ளாகுதலான் நன்னுதறன் கேள்வன்பின் நடவா நிற்பஆண்பான்மை குன்றா அயில்வே லவன்தனக்கு மஞ்சொ லாட்கும்பாண்பால் வரிவண்டு பாடு மருஞ்சுரமும் பதிபோன் றன்றே”இஃது அறுசீர் நான்கடிக் கொச்சகம்.‘இலங்கொளி வெண்மருப்பின் இட்டகை தூங்கவோ ரேந்தல் யானைகலங்கஞர் எய்திக் கதூஉம் கவளம் கடைவாய் சோரச்சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய்’இஃது அறுசீர் மூன்றடிக் கொச்சகம்.‘தண்ணந் துறைவன் தார்மேல் போனவண்ண வண்டு வாரா தன்றேவண்ண வண்டு வாரா தாயின்கண்ணியும் நில்லாதே காண்’இது நான்கடி ஆசிரியத்துள் இறுதி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டகொச்சகம்.‘நிணங்கொள் புலா லுணங்கு’ என்ற கானல் வரிப்பாடல் (சிலப்.)மூன்றாமடி நாற்சீர்த்தாய், ஏனைய மூன்றடிகளும் அறுசீர் பெற்று வந்தது.இஃது ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருதலுமுண்டு. இதுவும் கொச்சகம்.‘கோடல்விண்டு கோபமூர்ந்த கொல்லைவாய்மாடுநின்ற கொன்றையேறி மௌவல்பூத்த பாங்கெலாம்மாடுமஞ்ஞை அன்னசாய லாயவஞ்சொல் மாதராய்ஆடல்மைந்தர் தேரும்வந்து தோன்றுமே’.இது நடு ஈரடி மிக்கது.‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனாஅரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்அரங்கம் அணிபொழிலா ஆடுமாயின்மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்’இஃது இடைமடக்கி ஓரடி நீண்டும் ஒன்று குறைந்தும் வந்தது.‘புன்னை நீழல் நின்றார் யார்கொல்அன்னை காணின் வாழாளே தோழி’.‘மல்லல் ஊர! இவ்வில் அன்றால்பல்பூங் கோதை யில்’.இவை ஈரடியாய், ஈற்றடி குறையாதும் குறைந்தும் வந்தன.‘கொய்தினை காத்தும் குளவி அடுக்கத் தெம்பொய்தல் சிறுகுடி வாரன் ஐய! நலம்வேண்டின்’.இஃது ஈரடியாய் ஈற்றடி மிக்கது. இதுவும் ஒருபொருள்மேல்மூன்றடுக்குதலும் உண்டு.‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரியகடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்கொடிபடு வரைமார்பின் கோழியார் கோமானே!துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் தொடர்புண்டாங்(கு)இணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர் மாறென்றுதுணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே.அதனால்,செவ்வாய்ப் பேதை இவடிறத் (து)எவ்வா றாங்கொலி தெண்ணிய வாறே?’இது தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுப் பொருள் வேறுபட்டதரவிணை.‘ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம்’ (கலி.47)என்பது சொற்சீரும் தனிச்சொல்லும் வந்து, இடைநிலைப் பாட்டிலும்ஒன்று ஓரடிமிக்கு ஒருபொருள்மேல் மூன்று வருதலின் ஒத்தாழிசை ஆகாதுகொச்சகமாய்க் கலிவெண் பாட்டின் வேறாயிற்று.‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7)இது கலிவெண்பாவிற்குரிய உறுப்புப் பெற்றதேனும் தரவு வெண்பாவாய்,ஒழிந்தன வெண்பா அன்மையின் கொச்சக மாயிற்று.‘காமர் கடும்புனல்’ (கலி. 39)இது கொச்சகங்கள் வெண்பாவாய்ச் சில உறுப்புக்கள் துள்ளல் ஓசைவிராய்த் தளை ஒன்றிய கொச்சகமாய் ஒழிந்த பாவும் மயங்கிச் சுரிதகமும்முடுகிவருதலின் கொச்சக மாயிற்று.‘காலவை, சுடுபொன் வளைஇய’ (கலி. 85)இஃது இடைநிலைப்பாட்டே முழுதும் வந்தது. இஃது உறழ் பொருட்டுஅன்மையின் கொச்சகம். (தொ. செய். 155 நச்.) |
கொச்சகத்துள் இருசீரடி வருதல் | ‘மன்று பார்த்துநின்ற தாயைக்கன்று பார்க்கும்இன்னும் வாரார்’என்பது இரு சீரடிக் கொச்சகம். இதனைப் பிற்காலத்தார் ‘இனம்’ என்ப.(தொ. செய். 63 நச்.) |
கொச்சகமும் உறழ்கலியும் | கொச்சகக்கலியின் ஒருவகை, சுரிதகம் இன்றி யாப்பினும் பொருளினும்வேற்றுமையுடைத்தாய் வரும். உறழ்கலியும் சுரிதகம் இன்றி யாப்பினும்பொருளினும் வேறுபட்டு வரும் எனவே, உறழ்கலி கொச்சகக்கலியுள்அடங்குமெனின், கொச்சகக்கலி சுரிதகம் இன்றி வரின் அடிநிமிர்ந்துஒழுகும்; அங்ஙனம் அடிநிமிர்ந்து ஒழுகிசைத்தாய் வரும் கொச்சகக் கலிபோலாது, உறழ்கலி அடி நிமிராதும் ஒழுகிசையின்றியும் வரும். ஆதலின்கொச்சகக் கலியுள் உறழ்கலி அடங்காது. (தொ. செய். 130 பேரா.) |
கொச்சகம் (1) | சிறப்பில்லதனைக் கொச்சை என்பது போலச் சிறப்பில்லாதசெய்யுளுறுப்புக் கொச்சகம் எனப்பட்டது.(தொ.செய். 121 நச்.)கொச்சகம் என்பது ஒப்பின் ஆகிய பெயர். ஓராடையுள் ஒருவழி அடுக்கியதுகொச்சகம் எனப்படும். அதுபோல ஒரு செய்யுளுள் பலகுறள் அடுக்கப்படுவதுகொச்சகம் எனப் படும். (பேரா.)கொச்சகமாவது ஐஞ்சீர் அடுக்கி வருவனவும், நால்வகைப் பாக்களின் அடி,சொற்சீரடி, முடுகியலடி என்னும் அறுவகை யடியானும் அமைந்த பாக்களைஉறுப்பாக உடைத்தாகி வருவனவுமாகு, வெண்பா இயலான் புலப்படத் தோன்றும்.பரிபாடலுள் கொச்சகம் வருவழித் தரவும் சுரிதகமும் இடையிடையேயும்வரப்பெறும். (பேரா.) |
கொச்சகம் (2) | பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப ஆதலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்பஅடுக்கியும் வரும் செய்யுளைக் கொச்சகம் என்றார். இஃது ஒப்பினாகியபெயர் இக்காலத்து இது மகளிர்க்கு உரியதாய்க் ‘கொய்சகம்’ என்றுவழங்கிற்று. இது முறையே சுருங்கி வரும் எண்ணுப் போலாது அடியும் சீரும்தளையும் வேறுபட்டு வரும். (தொ. செய். 152 நச்.) |
கொச்சகம்: சொற்பொருள் | கொச்சகம் ‘கொய்சகம்’ என்பதன் மரூஉ. பின்னுமுன்னுமாக ஆடையைமடித்தமைக்கும் செயலினைக் கொய்சகம் என்பது வழக்கு. ஈண்டு அதுசீர்களின் தொழில்மேலாய் இலக்கணக் குறியீடாக நின்றது. (தொ. செய். 121ச. பால.) |
கொச்சத்துள் முச்சீரடி வருதல் | எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேற்றி’ என்றபாடல்.இஃது அடிதோறும் முச்சீர் நிகழும் நாலடிப்பாடல். பிற்காலயாப்பிலக்கணநூலார் இதனை வஞ்சிப்பாவிற்கு இனமாகிய வஞ்சிவிருத்தம் என்ப.(தொ. செய். 155 நச். உரை) |
கொண்டுகூட்டு | ஒரு பாடலின் பல அடிகளிலும்உள்ள சொற்களைப் பொருள் பொருத்தமுறமுன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது.எ-டு : ‘தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனிஅஞ்சனத் தன்ன பசலை தணிவாமேவங்கத்துச் சென்றார் வரின்’இப்பாடற்கண், “அஞ்சனத்தன்ன பைங்கூந்தலையுடையா ளின் தெங்கங்காய்போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனியின் பசலைவங்கத்துச் சென்றார் வரின் தணிவாம்” எனப் பல அடியிலும் நின்ற பலசொற்களையும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது இப்பொருள்கோளாம்.கொண்டுகூட்டின்கண், தன்னிடத்துள்ள சொல்லாவது பொருளாவதுகொண்டுகூட்டிச் சொல்லப்படுவனவும், தன் னிடத்தில்லாத சொல்லாவதுபொருளாவது கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் என்ற இருவகைகள் உள.(யா. வி. பக். 393) |
கொற்றியார் | கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள்இஃது ஒன்று. சிறந்த வைணவஅடியவர் வேடம் பூண்டு வைணவநாமத்தை நெற்றிமுதலான உறுப்புக்களில் தரித்துக்கொண்டு பிச்சையேற்க இல்லம்தோறும்வரும் இளம்பெண் ஒருத்தியின் வனப்பில் தனதுள்ளத்தைச் செல விட்ட காமுகன்ஒருவன் அவளது வடிவழகு தன்னை வருத்து வதாக எடுத்துக்கூறும் அகப்புறக்கைக்கிளைத் துறைப்பாடல்.எ-டு : மதுரைக்கலம்பகம். (பாடல். 36) |
கொல்யானை முதலிய வினைத்தொகையை ஒரு சொல்லாகக் கோடல் | முக்காலத்துக்கும் பொதுவான வினைத்தொகையை ஒரு காலத்திற்குரிய |
கொளு | கொளுவாவது கருத்து. பின்னர் எடுத்துக்காட்டாக வரும் பாடலின்கருத்தைக்கொண்டு நிற்பது இது. கொளு சூத்திரம் எனவும்படும்.புறப்பொருள் வெண்பாமாலையுள் துறை யினை விளக்குவதாகப் புறப்பொருட்குஅமைந்தாற்போல, திருச்சிற்றம்பலக்கோவையாருள் கிளவிகள்தோறும் கூற்றினைவிளக்குவதாக அகப்பொருட்கும் கொளுக்கள் அமைந்துள்ளமை காணலாம்.திருவாரூர்க்கோவைக்கும் கொளுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
கொள் என்னும் விகுதி | கொள் என்பது வினைப்பயன் வினைமுதலைச் சென்றடைத லாகிய தற்பொருட்டுப் |
கோ எனும் சொல் புணருமாறு | கோ என்ற ஓகார ஈற்றுச்சொல் உருபுபுணர்ச்சிக்கண்ணும் |
கோ, மா என்னும் சொற்கள் யகரம் பெறுதல் | கோ, மா என்பவற்று முன் உயிர் வரின், வகரமே அன்றி யகரமும் |
கோட்டுநூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் | சுண்ணாம்பும் மஞ்சளும் இரண்டறக் கூடியவழியே செந்நிறம் தோன்றுவது |
கோன் என்ற சொல் புணருமாறு | கோன் என்ற இயற்பெயர் ‘தந்தை’ என்ற முறைப்பெயரொடும், ‘மகன்’ என்ற |
கோமூத்திரி | பருவ மாகவி தோகன மாலையே // பொருவி லாவுழை மேவன கானமே// மருவு மாசைவி டாகன மாலையே // வெருவ லாயிழை பூவணி காலமே.இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவுமெழுதி, அவ்வரி இரண்டையும் மேலுங் கீழும் ஒன்றிடையிட்டுக் கோமூத்திரரேகைவழிப் படிக்க, ஒன்றுவிட் டொன்று மாறடி அச்செய்யுளே முடியுமாறுகாண்க. |
கோமூத்திரிகை | சித்திரகவி வகைகளுள் ஒன்று; கோமூத்திரி எனவும்படும்.பெற்றம் நடந்துகொண்டே நீர் விடுகையில் அந் நீர்த்தாரை பட்ட நிலம்நெளிந்த வடிவுடைத்தாகக் காணப்படுமாறு போல, இம்மிறைக்கவியின் வரிவடிவுஅமைந்திருக்கும்; இரண்டிரண்டு அடியாக ஒரு செய்யுளை எழுதி (மேல் வரிஇரண்டடி, கீழ் வரி இரண்டடி) மேலும் கீழுமாக அமைந்த அவ்விரண்டுவரிகளிலும் எழுத்துக்களை ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளேதோன்றுவது இச்சித்திரகவி யாம்.‘பருவ மாகவி தோகன மாலையேபொருவி லாவுழை மேவன கானமேமருவு மாசைவி டாகன மாலையேவெருவ லாயிழை பூவணி காலமே’ என்பது பாடல்.‘ஆயிழை! வெருவல்! கன மாலையில் கனம்மாலை ஆசை விடா(து) மருவும்; பொருஇலா உழை கானம் மேவன; (ஆதலின்) இது பருவம் ஆக, அவர் பூ அணி காலம்’என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.ஆயிழாய்! அஞ்சாதே. செறிந்த மாலைப்பொழுதில் மேக வரிசைகள்திக்கெல்லாம் நீங்காது பொருந்தி மழை பெய்தலை மேவும்; ஒப்பற்ற மான்கள்காட்டில் திரிகின்றன. ஆதலின் தலைவர் மீண்டு வந்து நின்னைப் பூஅணியால்ஒப்பனை செய்யும் காலம் இதுவாதல் வேண்டும்” என்று பருவ வரவின்கண் தோழிதலைவன் கடிதின் வருவான் என்று தலைவியை ஆற்றுவித்தவாறு. (தண்டி.98) |
கோள் | அகத்திணைச் செய்யுள் இலக்கணம் பத்தனுள் ஒன்று ‘கோள்’ ஆம். அஃதாவதுசெய்யுட்குப் பொருள்கொள்ளும் முறைமை.அஃது ஐந்து வகைப்படும்.1. விற்பூட்டு – செய்யுள் முதலும் கடையும் பொருள்கொண்டுநிற்பது.2. விதலையாப்பு – தலையும் நடுவும் கடையும் பொருள் கொண்டுநிற்பது.3. பாசிநீக்கு – சொல்தோறும் அடிதோறும் பொருள் முடிந்துநிற்பது.4. கொண்டு கூட்டு – எவ்வடிச் சொற்களையும் ஏற்புழிச் சேர்த்துப்பொருள் செய்ய நிற்பது.5. ஒருசிறைநிலை – பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்பது; இன்றியமையாத கருத்து ஈற்றடியில் நிற்பது.எ-டு : ‘வருவர் வயங்கிழாய்! வாட்டாற் றெதிர்நின்றுவாள்மலைந்தஉருவ மணிநெடுந் தேர்மன்னர் வீய ஒளிதருமேல்புருவம் முரிவித்த தென்னவன் பொன்னங்கழலிறைஞ்சாச்செருவெம் படைமன்னர் போலவெங் கானகம் சென்றவரே’இது விற்பூட்டுப் பொருள்கோள். ‘சென்றவரே வருவர்’ என இறுதியும்முதலும் எழுவாய்த் தொடராய்ப் பொருள் தந்தவாறு.பண்தான் அனையசொல் லாய்! பரி விட்டுப்பறந்தலைவாய்விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்தவண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவனகண்டால், கடக்கிற்ப ரோ?கட வார்அன்பர் கானகமே.’இது விதலையாப்புப் பொருள்கோள். சொல்லாய்! கொல்லிப் பாங்கர், கொடிநின் இடைபோல வணங்குவன கண்டால், அன்பர் கானகம் கடவார்’ எனத் தலை இடைகடைஎன எல்லா இடத்தும் பாடலில் பொருள் அமைந்தவாறு.‘சென்றார் வருவது நன்கறிந் தேன்;செருச் செந்நிலத்தைவென்றான் பகைபோல் மெலியல் மடந்தை! உம் வெற்பெடுத்துநின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது; நீள் புயலால்பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே’இது பாசிநீக்குப் பொருள்கோள். (1) ‘நன்கு அறிந்தேன்; (2) மடந்தை!மெலியல்; (3) நிலமும் குளிர்ந்தது; (4) பொலங் கொன்றை தாமும் பொலிந்தன- என அடிதோறும் சொற்கள் பொருள் தொடர்பு பட இயைந்து (கொண்டு கூட்டவேண்டாமல்) முடிந்தமை காணப்படும்.‘கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன்முந்நீர்தூவைச் சுடர்வே லவர்சென்ற நாட்டினும் துன்னும்கொலாம்பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப்பாவைக் கிணைஅனை யாய்! கொண்டு பண்டித்த பன்முகிலே!’இது கொண்டு கூட்டுப் பொருள்கோள். ‘பாவைக்கு இணை அனையாய்!முந்நீர்க் கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன் நெடுமாறன் திரைபொருநீர்க்குமரி கொண்டு பண்டித்த, பூவைப் புதுமலர் வண்ணன் (போன்ற)பன்முகில், தூவைச் சுடர் வேலவர் சென்ற நாட்டினுள் துன்னும்கொல்?’ என,பல அடிகளிலும் கிடந்த சொற்களை ஏற்றவாறு இயைத்துப் பொருள்கொள்ளப்பட்டவாறு. (பாவை – கொல்லிப்பாவை; முந்நீர் – கடல்; கடலிற்பிறந்த முத்துக்கள்; மாறனுடைய குமரித்துறை; குமரித்துறையிற்படிந்துண்ட பல மேகங்கள்; கண்ணன் போன்ற நிறத்தவாகிய மேகங்கள். பிரிந்துசென்றவர் நாட்டின்கண்ணும் அவை சென்றடை யுமோ?‘கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின; கொன்றைசெம்பொன்பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்றஆடல் நெடுங்கொடித் தேர்அரி கேசரி அம்தண்பொன்னிநாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய? நன்னுதலே!’இஃது ஒரு சிறைநிலைப் பொருள்கோள். கோடல் மலர்தல். குருக்கத்தி தளிர்ஈனுதல் (1), கொன்றை செம்பொன் போன்று பூக்களைப் பாரித்தல் (2) என்னுமிவற்றால் தலைவி கார்கால வரவுணர்ந்து தலைவன் இன்னும் மீண்டிலாமை கருதிமெலிய லுற்றாள் என, பாடற்பொருளாம் தலைவியது மெலிவு ஈற்றடியாகியஓரிடத்தே நின்றவாறு. (இறை. அ. 56 உரை) |
கோள் உரிமை | சந்திரனும் பிரகற்பதியும் வெண்பாவிற்கு உரியோர்; ஆதித்த னும்செவ்வாயும் ஆசிரியப்பாவிற்கு உரியோர்; புதனும் சனியும் கலிப்பாவிற்குஉரியோர்; சுக்கிரனும் இராகுகேது வாகிய பாம்பிரண்டும் வஞ்சிப்பாவிற்குஉரியோர். (இ. வி. பாட். 123) |
கோவைக் கலித்துறை | கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் காப்பியக் கலித்துறை எனவும்இருவகைத்து என்பர்.நெடிலடி நான்காய், நேரசையில் தொடங்கும் ஓரடிக்கு எழுத்து ஒற்றும்ஆய்தமும் ஒழித்துப் பதினாறும், நிரையசை யில் தொடங்கும் ஓரடிக்குஎழுத்துப் பதினேழும் என வர அமையும் யாப்புக் கலித்துறையாம்.இவ்விலக்கணம் கூறும் வீரசோழியக் காரிகை (124) கோவைக் கலித்துறை ஆமாறுணர்த்துவதாக அவ்வுரையாசிரியர் குறித்தார்; அக் கட்டளைக் கலித்துறைச்சூத்திரத்தினையே அதற்கு இலக்கிய மாகவும் கொள்ளுமாறு சுட்டினார்.ஆதலின் வீரசோழிய உரையாசிரியர் கருத்துப்படி கோவைக் கலித்துறைகட்டளைக் கலித்துறையேயாம். (வீ. சோ. 124) |
கோவைக் கலித்துறை, திலதக்கலித்துறை: வேறுபாடு | கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் திலதக் கலித்துறைஎனவும் இருவகைத்து.கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல் பக்கு விட்டுமுற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய் வரும்; இரண் டாம் நான்காம்சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம்.எ-டு : ‘மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே’ (கோவை. 2)‘நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே’ (தஞ்சை. கோ.2)திலதக் கலித்துறை, ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றிநிகழ்வது.எ-டு : ‘உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்(று) ஒளிர்கின்றதே’(கோவை. 1)வீரசோழியப் பழைய குறிப்புரையால் இவ்வாறு வேறுபாடு கொள்ளக்கிடக்கின்றது. (வீ.சோ. 128) |