ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கூட சதுக்கம் | சித்திரகவி வகைகளுள் ஒன்று; பாட்டின் நாலாவது அடி எழுத்துக்கள்ஏனைய முதல் மூன்றடிக் கண்ணும். மறைந்து கிடக்குமாறு பாடுவது.எ-டு :‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்தபகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித்துர்க்கைபொற்புத்தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தேதிகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே’இப்பாடற்கண், முதல் மூன்றடியுள் நான்காமடி மறைந் துள்ளது.கூடம் – மறைந்தது; சதுககம் – சதுர்த்தம் – நான்காவது.நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும்வெகுட்சிப் பார்வையையும் பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர்கூட்டம் அழியக் கொன்றவளும், காஞ்சி மாநகரில் உள்ளவளும், அழகு தங்கியஇனிய யாழொலி போன்ற சொற்களையுடைய வளும், கிளி போன்றவளுமான கொற்றவையிடம்பக்தி செய்யும் திறத்தில் ஈடுபடாத மனத்தை நல்வழிப்படுத்தினால்,இருவினையும் நீங்குதற்குக் காரணமான ஞானத்தை அறிதல் ஆம் என்பதுஇப்பாடற் பொருள். (தண்டி. 98-2) |
கூட சதுர்த்தம் | நான்கா மடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடி களுள்ளும்மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. ‘கூடசதுக்கம்’ என்பதும்அது. (தண்டி. 95)நாலடியாய ஒரு செய்யுளில் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேல்நின்று கீழும் கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றில்இடைவரியின் மறைந்து நிற்பது. (பதம். அடி) கூடசதுர்த்தமாம்.எ-டு :‘நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா!’ (மா. அ. 293)வரையுமாறு :நா ன ய ளா னா ரா ம தா னா விதா தா தா ணீ வா ம னா சீ த ராமா தூ ரு தா சீ னா போ மா ர மாபாடலின் நான்காமடி மேலை நடுவரிக்கண் நிகழுமாறு காண்க. |
கூட சதுர்த்தம் | நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா.இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும்கீழேகாட்டியவாறு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதத் தோன்றியபத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்து கிடைப்பது காண்க. |
கூட்டி எழூஉதல் | எழு – தன்வினை; எழூஉ – பிறவினை. கூட்டி எழூஉதலாவது சேர்த்து |
கூத்த நூல் | பண்டு தோன்றிய நாடகத்தமிழ் நூல்; அபிநயத்தைப் பற்றிய இந்நூற்பெயர்நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகிறது.(சீவக. 124) |
கூத்தர் ஆற்றுப்படை | நால்வகை ஆற்றுப்படையுள் ஒன்று. (ஏனைய மூன்றுமாவன: பாணாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப் படை என்பன.) வள்ளல்ஒருவனிடம்பரிசில் பெற்று மீளும் ஒரு கூத்தன், தான் வழியிற் கண்ட ஓர் ஏழைக்கூத்தனை நோக்கித் தனக்கு நிறைய வழங்கிய வள்ளலிடம் அவனும் சென்றால்வறுமை தீரப் பரிசில் பெற்று வாழலாம் எனக்கூறி, அவனை அவ்வழியில்செல்லுமாறு கூறுதல். ஆறு – வழி; படை – படுத்துதல்; தான் சென்றவழிக்கண்அவனும் சென்று பரிசில் பெறுமாறு செலுத்துதல் ஆற்றுப்படைப் பிரபந்தம்என்பது. (பு. வெ. மா. 9 : 29) |
கூன் | செய்யுளடியின் அளவிற்கு உட்படாது வரும் அசையும் சீரும் ‘கூன்’எனப்படும். வஞ்சியடியின்கண் நான்கு அசையும் கூனாக வரப்பெறும். முதல்இடை கடை என மூவிடத்தும் கூன் வரப்பெறும்.எ-டு. :‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா.4) – நேர்‘அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன’ – நிரை‘வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின – நேர்பு‘களிறு, கதவெறியாச் சிவந்துரைஇ’ (புறநா.4) – களிறு -நிரைபு.இவை வஞ்சியடியில் முதற்கண் நான்கு அசையும் கூனாக வந்தவாறு.இனிச் சீர் கூனாதல் ஏனைய மூவகைப் பாவிற்கும் உரித்து. சீர்அடிமுதற்கண்ணேயே கூனாக வரப்பெறும்.‘அவரே,கேடில் விழுப்பொருள் தருமார் பரிசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216)‘உதுக்காண்,சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’‘உலகினுள்,பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’இவ்வாறு முறையே ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்று பாவிலும்அடிமுதற்கண் சீர் கூனாயிற்று. (தொ. செய்.48, 49. நச்) |
கூன், சொற்சீரடி: இவற்றிடை வேறுபாடு | கூன் பொருளியைபு விட்டிசைக்கும்; சொற்சீரடி விட்டிசை யாது பொருள்தொடர்புற்று நிற்கும். (தொ. செய். 123. ச.பால) |
கூழை அளபெடை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் அளபெடை பெற்று வருதலாகியதொடை விகற்பம்.எ-டு : ‘ விடாஅ விடாஅ வெரீஇ ப் பெயரும்’ (யா. க. 45 உரை) |
கூழை இயைபு | நாற்சீரடியின்கண் முதற்சீரொழிய ஏனைய மூன்றன்கண்ணும் ஈற்றெழுத்துஒன்றிவரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பெருந்தோளி கண் ணும் இலங் கும் எயி றும் ’ (யா. க. 45 உரை) |
கூழை எதுகை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் எதுகை பெற்று வரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பொ ன் னின் அ ன் ன பு ன் னைநுண் தாது’ (யா. க. 45 உரை) |
கூழை நிரல்நிறை | நாற்சீரடியின்கண், முதல்மூன்று சீர்களிலும் நிரல் நிறை அமைதல்.எ-டு : ‘கண்ணும் புருவமும் மென்தோளும் இம்மூன்றும்வள்ளிதழும் வில்லும் விறல்வேயும்வெல்கிற்கும்’இவ்வடிகளில், முதல் மூன்று சீர்களிலும், கண் இதழ் – புருவம் – வில்- தோள்வேய் – என நிரல்நிறை முறையே அமைந்தவாறு. (யா. க. 95 உரை) |
கூழை முரண் | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் சொல்லாலும் பொருளாலும்மறுதலைப்பத் தொடுத்தலாகிய தொடை விகற்பம்.எ-டு : ‘ கரிய வெளிய செய்ய கானவர்’ (யா. க. 45 உரை) |
கூழை மோனை | நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுத்தலாகிய மோனை விகற்பம்.எ-டு : ‘ அ ருவி அ ரற்றும் அ ணிதிகழ் சிலம்பின்’ (யா. க. 45 உரை) |
கூழைத் தொடை | நாற்சீரடியின் முதல் மூன்று சீர்களும் மோனை எதுகை முரண் அளபெடைஎன்னும் தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை விகற்பம். இயைபுத்தொடை, ஈற்றுச் சீரையே முதற்சீராகக் கொண்டு கணக்கிடப் பெறு தலின்,முதற் சீரொழித்து ஏனைய மூன்று சீரிலும் வருதலே கூழை இயைபுத்தொடைவிகற்பமாகக் கொள்ளப் படும். கூழைமோனை முதலிய விகற்பங்களைத் தனித்தனித்தலைப்பிற் காண்க. (யா. க. 45) |
கூவிளங்கனி | ‘நேர்நிரைநிரை’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘தேம்புனலிடை மீன்திரிதரும்’ (யா. கா. 7 உரை) |
கூவிளங்காய் | ‘நேர்நிரைநேர்’ எனவரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் – கென்னோ’ (யா. கா. 7 உரை) |
கூவிளநறுநிழல் | ‘நேர் நிரை நிரை நிரை’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச்சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப’ (யா. கா. 8 உரை) |
கூவிளநறும்பூ | ‘நேர் நிரை நிரை நேர்’ என வரும் நாலசைச்சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்’ (யா. கா. 8 உரை) |
கூவிளந்தண்ணிழல் | நேர் நிரை நேர் நிரை எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ அந்தரதுந்துபி நின்றியம்ப’ (யா. கா. 8 உரை) |
கூவிளந்தண்பூ | ‘நேர்நிரை நேர்நேர்’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ வெங்களியானை வேல்வேந்தரும்’ (யா.கா. 8 உரை) |
கூவிளம் | ‘நேர்நிரை’ எனவரும் ஈரசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்” (குறள் 1121) |