ஃ | அ 540 |
ஆ 232 |
இ 317 |
ஈ 31 |
உ 163 |
ஊ 20 |
எ 178 |
ஏ 39 |
ஐ 37 |
ஒ 102 |
ஓ 43 |
ஔ | க் | க 200 |
கா 25 |
கி 9 |
கீ 13 |
கு 112 |
கூ 22 |
கெ 1 |
கே 3 |
கை 6 |
கொ 21 |
கோ 10 |
கௌ | ங் | ங 2 |
ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 84 |
சா 29 |
சி 51 |
சீ 4 |
சு 27 |
சூ 7 |
செ 34 |
சே 7 |
சை 1 |
சொ 19 |
சோ 4 |
சௌ | ஞ் | ஞ 2 |
ஞா 2 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ 1 |
ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு 2 |
டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண 5 |
ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 57 |
தா 20 |
தி 42 |
தீ 6 |
து 11 |
தூ 5 |
தெ 7 |
தே 10 |
தை | தொ 30 |
தோ 6 |
தௌ | ந் | ந 47 |
நா 27 |
நி 20 |
நீ 8 |
நு 6 |
நூ 10 |
நெ 17 |
நே 2 |
நை | நொ 4 |
நோ | நௌ | ப் 1 |
ப 90 |
பா 39 |
பி 38 |
பீ 2 |
பு 50 |
பூ 8 |
பெ 36 |
பே 6 |
பை | பொ 21 |
போ 5 |
பௌ | ம் | ம 66 |
மா 25 |
மி 6 |
மீ 3 |
மு 84 |
மூ 20 |
மெ 26 |
மே 2 |
மை 1 |
மொ 21 |
மோ 2 |
மௌ | ய் | ய 10 |
யா 12 |
யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர 4 |
ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல 3 |
லா 1 |
லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 102 |
வா 10 |
வி 46 |
வீ 11 |
வு | வூ | வெ 4 |
வே 12 |
வை 1 |
வொ | வோ | வௌ | ழ் | ழ 5 |
ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள 3 |
ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற 1 |
றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன 12 |
னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
குடமூக்கிற் பகவர் செய்தவாசுதேவனார் சிந்தம் | கும்பகோணத்தில் வாழ்ந்த அடியார் பகவர் என்பார். இவர் இயற்றியசெய்யுள் நூல் ‘வாசுதேவனார் சிந்தம்’ என்பது. இவர் பாடல்கள்ஆரிடச்செய்யுளின் பாற்படும். உலகியல் செய்யுட்கு ஓதிய உறுப்புக்கள்சில மிக்கும் குறைந்தும் இப்பாடல்கள் காணப்பட்டன. இந்நூல்இக்காலத்தில் இல்லை. (யா. வி. பக். 369) |
குட்ட ஆசிரியம் | ஈற்றயலடி ஒருசீர் குறைந்தனவும், இடையிடையே ஒருசீர் இருசீர்குறைந்தனவும் குட்ட ஆசிரியம் எனப்படும். ஒருசீர் குறைந்தன ஆசிரியஅடியாய் வரும்; இருசீர் குறைந்தன வஞ்சியடியாய் வரும். ஈற்றயலடிஒருசீர் குறைந்தவற்றை நேரிசை ஆசிரியப்பா எனவும், இடையிடையேஅடிகுறைந்து வருவனவற்றை இணைக்குறள் ஆசிரியப்பா எனவும் பின்னுள் ளோர்பெயரிட்டு வழங்குதல் தேவையற்றது. (தொ. செய். 117 பேரா.) |
குட்டமாவது | குட்டம் – குறுக்கம். அளவாற்குறுகியது என்பது பொருள். ‘நாற்சீர்கொண்ட தடியெனப் படுமே’ என்றதனான் அதனிற் குறைந்து வரும் முச்சீரடிஇருசீரடிகள் குட்டம் எனப்பட்டன.(தொ. செய். 115 ச. பால.) |
குட்டம் | தரவிற்கு ஒருபெயர்.தரவு கொச்சகமாகிய கொச்சக ஒருபோகிற்கும் பெயர்.(தொ. செய். 12.இள)குட்டம் – குறைந்து வருதல்; அஃதாவது நாற்சீரடி முச்சீரடி யும்இருசீரடியுமாகக் குறைந்து வருதல். (115 நச்.)இடையிடைக் குறைந்து வருவது குட்டம். ({MĒṞPAṬI} பேரா.) |
குணகாங்கி | இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல்.இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன்சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும்,யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண்,சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள்விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523) |
குணசந்தி | அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் இகர ஈகாரங்கள் முதலாகிய |
குணசாகரர் | யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டுயாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர்ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குணசாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச்சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும்,யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார்.இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றேசுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர்காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொருகருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்துவேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப. |
குணநூல் | பண்டை நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று.(சிலப். 3 : 12 அடியார்க். உரை) |
குணப்பெயர்ப் பகுபதம் | செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன், |
குணவீரபண்டிதர் | பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவர்; சமணப்பெரியார்; நேமிநாதம்என்ற பெயரை உடையதாய், எழுத்து சொல் என்ற ஈரதிகாரங்களை உடைய சின்னூல்என்ற இலக்கண நூலினையும் வெண்பாப் பாட்டியலையும் வெண்பாயாப்பில்இயற்றியவர். இவருடைய நேமிநாதத்தின் உரை வயிரமேக விருத்தி எனப்படும்.நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப் பியச் சொல்லதிகாரச் சுருக்கமாய்அமைந்துள்ளது. |
குண்டலகேசி | சொற்குற்றத்தால் பாட்டுடைத் தலைமகன் உடலுக்கு ஊனம் உண்டாம். பொருட்குற்றத்தால் உயிர்க்கு ஊனம் ஆதலின் பொருட்குற்றம் தவிர்தல்சிறப்புடைத்து. “சொற்பொருள் புலப்படினன்றே, அக்குற்றம்தவிர்க்கப்படும்? குண்டலகேசியில் தெரியாத சொல்லும் பொருளும்வந்தனவால்” என்னும் வினாவை எழுப்பி, உரைகாரர் விடை கூறுவார்:“அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது; அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருத்தல் கூடும் எனினும்அமையும் எனக் கொள்க.” (வீ. சோ. 146 உரை)குண்டலகேசி என்பாளது தோற்றமும் தொழிலும் போல் வன சொன்ன காப்பியம்அவள் பெயரால் குண்டலகேசி எனப்பட்டது. (யா. வி. பக். 39)குண்டலகேசியின் முதற்பாடல் வண்ணத்தால் வருவதாய் நேரசையால்தொடங்கியதால் அடிதோறும் பதினான்கு எழுத்துடையது. (யா. வி. பக்.520) |
குண்டலம் | தருக்க நூல்களில் ஒன்று. (யா. வி. பக். 583) |
குமிழ் என்ற மரப்பெயர் புணருமாறு | குமிழ் என்ற மரப்பெயர்,பீர் என்ற கொடியின் பெயர் போல, ஒருவழி |
கும்மி | வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்;ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும்முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று.(இலக்கணத். முன். பக்.101)எ-டு :அ) பெரிய திருமொழி 2 – 9 – 1‘சொல்லுவன் சொற்பொருள்’ஆ) திருவாசகம் – அன்னைப்பத்து. |
குயின் என்ற சொல் புணருமாறு | குயின் என்பது மேகத்தை உணர்த்தும் சொல். அது வேற்றுமைக் கண் |
குயின், ஊன் புணர்ச்சி | இவ்விருவகைப் பெயரும் இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் வருமொழி முதல் |
குரவைக் கூத்து | குரவையெனினும் அமையும்; கூத்துவகை ஏழனுள் ஒன்று.எழில் மிக்க மாதர் எழுவரோ எண்மரோ ஒன்பதின்மரோ இணைந்து ஒருவர்மற்றவர் கையினைக் கோத்துக்கொண்டு, காமமும் வெற்றியும் பொருளாகப் பெற்றஇன்பம் ஊட்டும் இனிய இசையுடன் பாடிக்கொண்டே ஆடும் கூத்து. (நாடக.202) |
குரவைப்பாட்டு | ஒரு வட்டத்தின் பன்னிருகோணப் பகுதியிலும் பொருந்து மாறு மாதர்எழுவர் வட்டமாய்க் கைகோத்து இணைந்தும் மாறி மாறி ஓடிச் சென்றுகைகோத்து இணைந்தும் எழு வகைப் பண்களையும் கொட்டும் பண்ணும் ஒட்டுமாறுபாடி ஆடுவதற்கு ஏற்குமாறு, நாற்சீரடி மூன்று தாழிசையாக ஒருபொருள்மேல்மூன்றடுக்கி வரவும், நாற்சீரடி நான்கு இடைமடக்காக வரவும்,வழிபடுகடவுளை முன்னிலைப்படுத் தியும் படர்க்கையாகத் தனியேநிறுத்தியும் வழுத்துவதாகப் பாடுவது குரவைப் பாட்டு எனப்படும்.(பன்னிரு கோணப் பகுதியும் மேடம், இடபம் முதலாகப் பன்னிரண்டு இராசிப்பெயர்பெறும். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் எனப்பண்கள் ஏழன் பெயர் பூண்ட மாதர் எழுவர் முறையே இடபம், கற்கடகம்,சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனம் இவற்றுக் கோணங்களில் நின்றுகைகோத்து வட்டமாக நிற்பர்) (தென். இசைப். 12) |
குருவும் லகுவும் | தனிநெட்டெழுத்தும் ஒற்றடுத்த நெட்டெழுத்தும், ஒற்றடுத்தகுற்றெழுத்தும் ‘குரு’. இஃது ஈரலகு பெறும். இது டகர வடிவிற்று.தனிக்குற்றெழுத்து ‘லகு’. இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று.அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் குருவாகஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. க. 95. உரை) |
குறட்போலி | எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்டடியாய், அவ்வடியும் தம்முள்அளவொவ்வாது வருவது; ஓரடியாலே ஒரு செய்யுளாய் வருவதும்குறட்போலியாம்.எ-டு : ‘உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்னதீமைசெய்தோர்க்கும் ஒத்த மனத்தராய்நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே’இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி.‘சிறியகுறள் மாணி செய்குணங்கள்ஓதுவன்காண்’இஃது ஓரடியான் வந்த குறட்போலி (வீ. சோ. 127 உரை) |
குறத்திப் பாட்டு | தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப் பற்றிக் குறத்திகுறிசொல்வதைக் கூறும் ஒரு பிரபந்தம். ‘குறவஞ்சி’ காண்க.(தொ. வி. 283) |
குறம் | கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃதுஒன்று. தலைவியின் உடலும் மனமும் வாடியமை கண்ட செவிலி, அவள் தலைவனொடுநிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறியாது, ஏதோ தெய்வக்குற்றத்தால் அவள்உடல் வாட்டமுற்றுள்ளதோ என்ற எண்ணத்தால் குறத்தி ஒருத்தியை அழைத்துத்தலைவியின் மனநிலையைக் குறியால் அறிந்து சொல்லும்படி வினவ, குறத்திதான் குறிசொல்லுமுகத்தான் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள அன்பினைஎடுத்துக்கூறித் தலைவி விரைவின் அவனை மணக்கும் வாய்ப்புப் பெறுவாள்என்று கூறும் அகப்புற மாய்ச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட பாடல்இது.“முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறவல்ல குறத்தி நான். நீமனத்துள் எதனை நினைத்தாயோ அதனைக் கூறவல்லேன். என் சிறுகுழந்தையின்தலையில் எண்ணெய் வாரு; ஒரு பழைய புடவையை எனக்குக் கொண்டுவந்து கொடு.அழகிய மலர்போன்ற கையை யுடைய தலைவி! நின்முலைக்கண்ணின் குறி நன்றாகஉள்ளது. ஆதலின் நீ உலகம் முழுதும் மகிழும்படி நாளையேதிருவரங்கநாதனாகிய நின்நாயகனை அடைவாய்!” (திருவரங்கக். 69)குறத்திஒருத்தி தலைவியை நோக்கிக் குறிசொல்வதாக அமையும்இவ்வுறுப்புக் கலம்பகம் என்ற பிரபந்தத்து நிகழும் 18 உறுப்புக்களுள்ஒன்று. (இ. வி. பாட்.52)குறத்தி தலைவிக்குக் குறிசொல்வதாகக் கூறும் குறம் என்ற சிறுபிரபந்தமும் ஒன்று.எ-டு : மீனாட்சியம்மை குறம். |
குறளடி | இருசீரான் வரும்அடிஎ-டு :‘திரைத்த சாலிகைநிரைத்த போனிரந்திரைப்ப தேன்களேவிரைக்கொண் மாலையாய்’ (சூளா. 744) (யா.கா. 12, யா.க. 24உரைமேற்.) |
குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்தல் | இருசீர் முதலா எழுசீரளவும் அவ்வைந் தடியினையும் இணைத்துக் கோடல்.(தொ. செய். 242 நச்.) |
குறளடி வஞ்சி | நான்கு எழுத்து முதல் பன்னிரண்டு எழுத்து முடிய ஒன்பது நிலத்தினும்முறையான் ஓங்கி வரும் இருசீரடி.எ-டு :‘கல்சேர்ந்து கல்தோன்று’ – 4 எழுத்தடி‘தண்பால் வெண்கல்லின்’ – 5 எழுத்தடி‘கண்டுதண்டாக் கட்கின்பத்(து)’ – 6 எழுத்தடி‘காழ்வரக் கதம்பேணா’ – 7 எழுத்தடி‘தாழிரும் பிணர்த்தடக்கை’ – 8 எழுத்தடி‘நிலனெளியத் தொகுபீண்டி’ – 9 எழுத்தடி‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’ – 10 எழுத்தடி‘தாள்களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4) – 11 எழுத்தடி‘குருகிரிதலின் கிளிகடியினர்’ – 12எழுத்தடிஎழுத்தெண்ணுமிடத்தே மெய்யெழுத்துக்களும் ஆய்தமும் குற்றியலுக ரமும்குற்றியலிகரமும் தள்ளுண்டு போம்.(யா. வி. பக். 500) |
குறளடி வஞ்சிப்பா | குறளடியால் மூன்றுமுதற் பல அடிகொண்டு, அடுத்துத் தனிச்சொல் பெற்றுஅடுத்து ஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :பூந்தாமரைப் போதலமரத்தேம்புனலிடை மீன்திரிதரவளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்நாளும்,மகிழும் மகிழ்தூங் கூரன்புகழ்த லானாப் பெருவண் மையனே’ (யா. க. 90 உரை) |
குறள் | குறள்வெண்பா; எழுசீர் அடி இரண்டாய் வருவது.எ-டு : உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்களரனையர் கல்லா தவர் (குறள் 406)இது முதலடி நாற்சீராய்க் கடையடி முச்சீராய் வந்த குறள். (வீ. சோ.127 உரை) |
குறள் தாழிசை | தாழிசைக் குறள் எனவும்படும்; குறள்வெண்பாவின் இனங் களுள் ஒன்று;இரண்டடிகளான் அமையும். இது மூவகைப் படும்:1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி வெண் செந்துறை போலச் சமமானஈரடிகளான் அமைவது.எ-டு : ‘திடுதிம் மெனாநின் றுமுழா அதிரப்படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’.2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது.எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாயஞானநற்கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.3. தளை வழுவி வரும் குறள் வெண்பா.எ-டு : ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்பண்டையள் அல்லள் படி’இக்குறள்வெண்பா மூன்றாம் நான்காம் சீர்களிடைக் கலித்தளை தட்டுவந்தது. (யா. க. 64, 65 உரை) |
குறள் மஃகான் | மகரக்குறுக்கம். லகர ளகர மெய்கள் திரிந்த னகர ணகரங்களின் முன் |
குறள் வெண்செந்துறை | இது குறள்வெண்பாவின் இனம்; தம்முள் ஒத்த இரண் டடிகள் விழுமியபொருளும் ஒழுகிய ஓசையும் உடையன வாய் வருவது. ஒவ்வோரடியும் நாற்சீர்முதல் பல சீர்களானும் வரும்.எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’.இது நாற்சீரடி இரண்டான் ஆகியது.‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’.இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது. (யா. க. 63) |
குறள், சிந்து, திரிபாதி, வெண்பாஇவை ஆமாறு | 1. குறள் ஆமாறு – குறள் காண்க2. அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம்.எ-டு. :‘வீசின பம்பர மோய்வதன் முன்னான்ஆசை யறவிளை யாடித் திரிவனே’ எனவும்,‘எடுத்த மாட மிடிவதன் முன்னான்அடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே’ எனவும் வரும்.3. மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம்.எ-டு : ‘மடிந்து வாழ்நாட் போக்கன்மின், மாந்தர்காள்!இடிந்திவ் யாக்கை இழிவதன் முன்னநீர்,தடிந்து தீவினை, தன்மம் செய்மினே’(புனைந்தது)4. நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவதுவெண்பாவாம். முதற்சீரும் ஐந்தாம்சீரும் எட்டாம் சீரும் ஒத்தஎதுகையாய், ஒன்பதாம் சீரும் பதின்மூன்றாம் சீரும் ஒத்த எதுகையாய்ப்பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம். இதனை நேரிசை வெண்பாஎன்பாருமுளர்.எ-டு : ‘ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்நின்றபதின் மூன்றொன்பான் நேரொத்து – நன்றியலும்நீடுசீர் மூவைந்தான் நேரிசைவெண் பாஎன்பர்நாடுசீர் நாப்புலவர் நன்கு.’இன்னிசை வெண்பாவினை இந்நூலுரையாசிரியர் வெண் பாப் போலியுள்அடக்குவர். (வீ. சோ. 127 உரை) |
குறள்வெண்பா | வெண்பாவிற்குரிய பொதுவிலக்கணம் பெற்று இரண்டடி யான் வருவது; முதலடிஅளவடி; ஈற்றடி சிந்தடி. ஒரு விகற்பமும் இரு விகற்பமும் பெறும். (யா.க. 59; யா. கா. 24) |
குறள்வெண்பாவின் நான்கு ஆறு அமைப்பு | இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என முடியுமாற்றான்குறள்வெண்பா நான்காம். இனி, முற்றுகர ஈற்று நேர்நேர், முற்றுகர ஈற்றுநிரைநேர் – எனும் இவற்றான் இறுதலைக் கூட்ட ஆறும் ஆம்.எ-டு :‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்’ (குறள் 1121)நன்றறி வாரின் கயவர் திருவுடையார்நெஞ்சத் தவல மிலர்’ (குறள் 1072)‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (குறள் 984)‘அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு’ (குறள் 1)எனவும்,‘இன்மலர்க் கோதாய் இலங்குசீர்ச் சேர்ப்பன்புனைமலர்த் தாரகலம் புல்லு’ (யா. கா. மேற்.)‘மஞ்சுசூழ் சோலை மலைநாட! மூத்தாலும்அஞ்சொல் மடவார்க் கருளு’ (யா. கா. மேற்)எனவும் முறையே அவை வந்தவற்றால் குறள் வெண்பாவின் இறுதிச்சீர்அமைப்பு நான்காகவும் ஆறாகவும் கொள்ளப் படும். (இ. வி. 728 உரை) |
குறவஞ்சி | நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுரஅகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்ததலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி,“உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவிபாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல்,குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்திமலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலியகூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்திதெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல்,புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடுகுறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலியகண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் -எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பாதரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்றஇச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும்பிரபந்தவகை. (நவ. பாட். 20-22) |
குறி, செய்கை விளக்கம் | சூத்திரவகை ஆறனுள் இவை சில. குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை |
குறிச்சூத்திரம் | பலவற்றையும் குறித்து அறிய வரும் சூத்திரம் குறிச்சூத்திரம். |
குறித்த பொருளை முடிய நாட்டல் | தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டாதுஅமைந்துமாறச் செய்தல்.எ-டு :‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்’ ஆசிரியம்‘துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு’(நாலடி.2)(வெண்பா)‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி.11) -(கலிப்பா)‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட்-1) – வஞ்சிப்பாஇந்நால்வகைச் செய்யுட்கண் முடியும்துணையும் அடிதோறும் குறித்தபொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.) |
குறிப்பிசை | ‘ஆவியும் ஒற்றும் அளவிறந்து ஒலிக்கும் இடங்கள்’ காண்க. |
குறிப்பிசை மாத்திரை ஆகாமை | செய்யுள் உறுப்பு இருபதாறனுள் முதலாவதாகிய மாத்திரை என்பதுஎழுத்தல்லாத ஓசையாகிய குறிப்பிசையைக் குறிக்கும் என்பர்ஒருசாரார்.அக்குறிப்பிசை உறுப்பாக வரும் சான்றோர் செய்யுள் இன்மையின்,மாத்திரை என்ற சொல் குறிப்பிசையைக் குறிப்பது ஆகாது. சிறுபான்மைபிற்காலச் செய்யுட்களில் குறிப்பிசை ஒரோவழி வரினும், அத்துணையானே அஃதுஇன்றியமையாத செய்யுள் உறுப்புக்களுள் தலையாயதாய் எண்ணப்படாதாகலின்,மாத்திரை என்பதற்கு எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு என்பதேபொருள். (தொ. செய். 2 பேரா.) |
குறிப்புச் செய்யுள் | பலவகையாக நிகழும் முன்னம், உள்ளுறை, அங்கதம், பிசி, மந்திரம்முதலாக ஆராய்ந்துணரும் வகையானே வருவன குறிப்புச் செய்யுளாம். (தென்.இயற். 43) |
குறிப்புத் தொடை | எழுத்தல்லாத மொழிக்குறிப்பு ஓசை. ‘கஃஃறென்னும்’, ‘சுஃஃறென்னும்’என்றாற்போல் மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படுதல். (யா. க. 49உரை) |
குறிப்புமொழி இலக்கணம் | எழுத்து முடிந்த வகையானும் சொல் தொடர்ந்த வகை யானும் சொற்கண்அமைந்துள்ள பொருளானும் செவ்வனே பொருள் அறிதற்கு அரிதாகிப்பொருட்புறத்த பொரு ளுடைத்தாய் நிற்பது. (தொல். செய். 179 நச்.,பேரா.)எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின்அடக்கிய மூக்கினர் தாம்’.“குடம் போலும் தலையராய், செவ்வாயிடைக் கொம்புகள் தோன்றினராய்,கையின்கண் அடக்கிய மூக்கினையுடை யார்” என்ற இஃது யானை என்பதனைஉணர்த்தியமை குறிப்பு மொழியாம். குறிப்புமொழி அடிவரையறைப் படாமையின்பாட்டின்கண் வாராது என்பது. (தொ. செய். 179 நச்.)இனி, இலக்கண விளக்கம் கூறுமாறு :எழுத்தாலும் சொல்லாலும் தெரிவிக்காமல் பொருட்கண் அபிநயத்தில்கிடப்பனவே குறிப்புமொழி.‘ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்துக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாறு.‘குடத்தலையர் …. மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்தகுறிப்பினுள் அடங்கும். (இ. வி. பாட். 147 உரை) |
குறிப்புமொழிச் செய்யுள் | அடிவரையறை இல்லாத செய்யுள் வகை ஆறனுள் குறிப்பு மொழிச்செய்யுளும்ஒன்று. எழுத்து முடிந்தவாற்றானும், சொல் தொடர்ந்தவாற்றானும்,சொற்படுபொருளானும், செவ்வன் பொருள் அறியலாகாமையின், எழுத்தொடும்சொல்லொடும் புணராது பொருட்புறத்தே பொருளுடைய தாயிருப்பதுகுறிப்புமொழியாம்.இது கவியை வாசித்த மாத்திரத்தில் பொருள் தோன்றாது, பின்னர் இன்னதுஇது என்று சொல்லி உணர்த்தப்படுவ தாம்.எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையில்அடக்கிய மூக்கின ராம்’.இதனைக் குறித்து உணர்ந்து யானை என்று பொருள் செய்க. இது பாட்டுவடிவில் அமைந்தமையின் விடுகதையாகிய பிசி எனப்படாது. நேரிதாகப் பொருள்உணர்த்தல் ஆற்றாமை யின் பாட்டெனப்படாது. இதற்கு அடிவரையறை இல்லை. ஓரடிமுதலா எத்தனை அடி அளவினதாகவும் இக்குறிப்பு மொழிச் செய்யுள் அமையலாம்.(தொ. பொ. 179 பேரா.)சொல்லால் பொருள் உணர்த்தலேயன்றிப் பொருளானும் சொல் பெறப்படச்செய்யும் எழுத்தினொடும் சொல்லி னொடும் புணராதாகிப் பொருட்கண்அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம். அதுஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்தினுக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றான் உணர்க.‘குடத்தலையர்… மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள்அடங்கும். (இ.வி. பாட். 147 உரை) |
குறியதன் கீழ் ஆ | தனிக்குறிலை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர் குறுகுதலும், அதனோடு உகரம் |
குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டல் | தனிக்குற்றெழுத்தை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் ஒற்றுக்கள் |
குறியது | குற்றெழுத்து; குறில் எனவும்படும். இப்பெயரான், உயிர்க்குற் |
குறிலிணை உகரம் | குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் என்பதுஇத்தொடர்ப்பொருள். தனிக்குறிலை அடுத்துக் குற்றியலுகரம் வாராதாகவே,சொல்லின் தொடக்கத்தே பிற எழுத்துக்கள் இருப்ப அடுத்து வந்தகுற்றெழுத்தினை அடுத்த குற்றியலுகரம் என்றே பொருள் கோடல்வேண்டும்.‘குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரம் – ஞாயிறு, வலியது2. குற்றெழுத்தோடு இணைந்த முற்றியலுகரம் – கரு, மழு.ஞாயிறு, வலியது என்பன முறையே நெடிலையும் குறிலிணை யையும் அடுத்தகுற்றெழுத்தைச் சார்ந்த குற்றியலுகரம். இவற்றை முறையே நேர் நேர்பு,நிரை நேர்பு என்று கோடல் கூடாது; நேர்நிரை, நிரைநிரை என்றே கோடல்வேண்டும்.கரு, மழு – ஆகிய தனிக்குறிலை அடுத்த முற்றியலுகரங்களும், நேர்புஅசை ஆகாது, நிரையசையாகவே கொள்ளப்பெறும். (தொ. செய். 5 நச்.) |
குறிலிணை, குறில்நெடில் முன்னர் ஒற்றுமெய் கெடுதல் | குறில் மாத்திரை நீண்டு நெடிலாகும். ஆகவே, குறில் நெடில் என்பன |
குறில் | அ இ உ எ ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரையே பெறும் |
குறில் மிக்கு வருதல் | ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக’ (குறள்)இக்குறள் வெண்பாவில் (உயிர்மெய்க்) குறிலே பெரும். பான்மையும்வந்தவாறு. (யா. க. 2 உரை) |
குறுகிய ஐ இணைந்த நிரையசை | சீர்க்கு இடையும் இறுதியும் நின்ற ஐகாரம் ஐகாரத்தோடு இணைந்தும்நிரையசையாம். ஆகவே முதற்கண் ஐகாரம் பிறிதோரெழுத்தோடு இணைந்துநிரையசையாகாது.‘கெண் டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள்’கெண்டையை – சீர்க்கடைக் கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால் அணியிழாய்’அன்னையையான் – சீரிடைக்கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘படு மழைத் தண்மலை வெற்பன் உறையும்’சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்துநிரையசையாயிற்று.‘தன் னைய ருங் காணத் தளர்ந்து’சீர் இடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசை ஆயிற்று.(யா. க. 9 உரை) |
குறுகுதல் | எழுத்துத் தன்மாத்திரையின் குறுகியொலித்தல்.ஐகாரஒளகாரங்கள் சொல்லின்கண் முதலில் நின்றவழி ஒன்றரைமாத்திரையாகவும், ஐகாரம் சொல்லின்கண் இடைகடைகளில் நின்றவழி ஒருமாத்திரையாகவும்,ஒரு மாத்திரை பெறும் இகர உகரங்கள் இடமும் பற்றுக் கோடும் காரணமாகச்சில விடங்களில் அரைமாத்திரையாக வும், அரை மாத்திரை பெறும் ஆய்தம்புணர்ச்சி வகையால் (சிலவிடத்தே லள மெய் திரிதலால் வரும் ஆய்தம்) கால்மாத்திரையாகவும், அரை மாத்திரை பெறும் மகரம் இட வகையால் சிலவிடத்தேகால் மாத்திரையாகவும் குறுகிவரும். (யா. கா. 4) |
குறுக்கல் விகாரம் | செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுட்கண் தளை சிதையாமை வேண்டி |
குறுக்கல் விகாரம் | செய்யுளில் ஓசையும் தளையும் கருதி, நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தியேன்‘தீயேன்’ எனற்பாலது வெண்டளை கருதி ‘தியேன்’ என நெட்டுயிர்குற்றுயிராயிற்று. (யா. க. 95 உரை) |
குறுஞ்சீர் வண்ணம் | குற்றெழுத்து மிக்கு வரும் வண்ணம்.எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’(அகநா.4)(தொ. செய். 221. நச்.) |
குறுவெண்பாட்டு | அளவியல் வெண்பாவின் குறைந்த அடியினையுடைய வெண்பா; இதன் அடிவரையறைஇரண்டும் மூன்றும். (தொ. செய். 118 நச்.) |
குறுவேட்டுவச் செய்யுள் | பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வர அமைந்தஇலக்கியங்களுள் ஒன்று. (யா. வி. பக். 491) |
குறை அவை | போலிச் சதுரப்பாட்டினைப் பேசி, பலகாலும் நகைத்தலைச் செய்து,பக்கத்திருப்பாரிடம் பேச்சு நிகழ்த்தி, தமக்கொரு தலைமையின்றிஅஃதுள்ளது போல நடிப்பு நிகழ்த்தி, நல்ல நூற்பொருளை ஏடு விரித்துநோக்காமல், மாறுபாட்டைத் தம்முள் பெருக்கிக்கொண்டு, அறம் துறந்து,மறைவான சொற்செயல்களால் பொல்லாங்கு விளைத்துப் பொய்யே கூறுவது குறைஅவை.குறைபாடுற்றார் கூடிய அவை குறை யவை எனப்பட்டது. நிறையவைக்குமறுதலையாயது குறைஅவை. அவையினரது குணக்குறைபாடு அவைமீது ஏற்றப்பட்டது.(நவ. பாட். 89) |
குறை ஈற்று ஒரு பொருள் இரட்டை | அடுக்கிவரும் நான்கு சீர்களுள் ஈற்றுச்சீர் ஓரெழுத்துக்குறைந்துவருவது.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’ஈற்றுச் சீர் ஏகாரம் குறைந்து வந்தது. நான்கிடத்தும் சொற் பொருள்ஒன்றே என்பது. (யா. வி. பக்.204) |
குறை ஈற்றுப் பலபொருள் இரட்டை | பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொல் ஈற்றில்ஓரெழுத்துக் குறைந்து வருவது.எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஒடை’இதன்கண், ஈற்றுச்சீர் இறுதியெழுத்தொன்று குறைந்து வந்தது.“ஓடையே! நீ ஐயே (-மெல்ல) ஓடு; என்னை விட்டு மெல்லப் பிரிந்துசென்று விட்ட என் தலைவனை நாடி நீயும் மெல்ல ஓடு” எனச் சொற்பொருள்பலவாக வந்தவாறு. (யா. வி. பக். 204, 191) |
குறை எண் நிரல்நிறை | முதற்கண் நிறுவிய பொருள்களைவிடக் குறைந்த எண் ணிக்கையுடையபொருள்களைப் பின்னர் நிறுவுவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’அடிதோறும் மூன்று பொருள்களை நிறுவுங்கால் ஓரடியில் இரண்டே பொருளைநிறுவியமை குறைஎண் நிரல் நிறை என்பர் ஒரு சாரார். (யா. வி. பக்.384) |
குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் | இடையிடையே தனிச்சொல் பெற்று ஈற்றடி குறைந்து வந்த மூன்று (சில)தாழிசை பெற்று வந்த குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் ஒன்று வருமாறு :(கொச்சகக் கலிப்பா வகை பத்தனுள் இதுவும் ஒன்று.)“மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்றஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடிமணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார்அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே (தரவு)தானவ்வழி, (தனிச்சொல்)எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்பவிழுக்குற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆங்கே, (தனிச்சொல்)வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக்கோளுற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆண்டே, (தனிச்சொல்)இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்பற்றாது நின்றாரும் பலர்; (தாழிசை)அதுகண்டு, (தனிச்சொல்)மைவரை நிறுத்துத்தன் மாலை இயல்தாழக்கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்பஅழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டனகோல வரிவளை தானும்காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே” சுரிதகம் (யா.வி.பக்.332) |
குறைப் பஃறாழிசைக் கொச்சகம் | கொச்சகக் கலிப்பாவகை பத்தனுள் இதுவும் ஒன்று; தாழிசை ஆறுபெற்று,அவ்வாறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரப்பெறுவது. (யா. க. 86உரை) |
குற்றமற்ற பாடல் கோடலின் பயன் | முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்துநன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால்புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர்,“பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்”எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமைஎய்தியிருப்பர்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி,எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ.வி. பாட். 180) |
குற்றியலிகர முற்றியலிகரம் பொருள் வேறுபாடு | நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக வருமொழி முதலில் யகரம் வரின், உகரம் |
குற்றியலிகரம் | நிலைமொழி ஈறு குற்றியலுகரமாக விருக்க வருமொழி முதலில் யகரம் வரின்குற்றியலுகரம் குற்றியலிகரமாம். கேண்மியா, சென்மியா முதலிய முன்னிலைஏவல் வினை களின் ஈற்றில் வரும் ‘மியா’ என்ற அசைச்சொல்லில் மகரத்தைஊர்ந்து வரும் இகரமும் குற்றியலிகரமாம். குற்றியலிகரம்புள்ளிபெறும்.நாகியாது, வரகியாது, வடாதியாது, பாக்கியாது, அரக்கி யாது,பனாட்டியாது, கட்டியாது, கேண்மியா என்றாற் போல வரும்.சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றியலிகரம் அலகு பெறாது.எ-டு : குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் – குறள் 66குற்றியலிகரம் அலகு பெறவில்லை; அலகு பெற்றால் தளை சிதைந்துநிரையொன்று ஆசிரியத்தளை ஆகிவிடும். (யா. க. 2 உரை) |
குற்றியலிகரம் ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்’தாதல் | குற்றியலிகரம் தனிமொழிக்கண்ணே யன்றி, நிலைமொழி வருமொழியொடு |
குற்றியலிகரம் (1) | நாகு யாது – என்ற தொடரில், கு ஒரு மாத்திரை பெற்ற முற்றியலுகரம். |
குற்றியலிகரம் (2) | ஒருமாத்திரை பெற்ற இகரம் தன் மாத்திரை குறைந்து அரையாக ஒலிப்பது |
குற்றியலிகரம் (செய்யுளுள்) வருதல் | ‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்’ (குறள் 66)‘சிலையன் செழுந்தலைவன் சென்மியா என்றுமலையகலான் மாடே வரும்’முதற்பாடலுள் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது;இரண்டாவதனுள் ‘மியா’ என மகரத்தின்மிசை நின்ற இகரம்குற்றியலிகரமாயிற்று.முதற்பாடலில் குற்றியலிகரம் அலகு பெறவில்லை;இரண்டாம் பாடலில் அலகு பெற்றது. (யா. க. 2 உரை) |
குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகல் | குற்றியலிகரம் சொற்கள் புணர்ந்தியலும் நிலைமைக்கண் தனக்குரிய அரை |
குற்றியலிகரம் முதலியன தமிழ்ச்சிறப்பெழுத்து ஆதல் | இங்கு (பெருங்காயம்), ஏது தாது என்பன குற்றியலுகர ஈறு போல |
குற்றியலிகரம், குற்றியலுகரம் சார்பெழுத்தாதல் | சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு |
குற்றியலிகரம், குற்றியலுகரம் : பெயர்க்காரணம் | கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், ‘போலும்’ என்புழி |
குற்றியலிகரம், குற்றியலுகரம்,அளபெடை இவற்றுக்குச் சிறப்பு விதி | தளையும் சீரும் வண்ணமும் கெடாத இடங்களில் குற்றிய லிகரமும்குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு பெறும்; அவை மூன்றும் கெடவரின்அலகு பெறா.எ-டு:‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்’ (குறள்-66)‘அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்’ (குறள் -254)இவ்வெண்பா அடிகளில், இரண்டாம் சீரின் முதற்கண் உள்ள குற்றியலிகரம்அலகு பெற்றால், முறையே நிரை யொன்றாசிரியத் தளையும் கலித்தளையும் தட்டுவெண்பா அடிசிதையும் ஆதலின், இன்னோரன்ன இடங்களில் குற்றியலிகரம்அலகுபெறாது.‘குன்’று, கோ, டு, நீ, டு குருதிபாயவும் – ஆறசைச்சீர்எனைப்பல எமக்,குத்,தண்,டா, து’ – ஐந்தசைச்சீர்இவ்வடிகளில் குற்றியலுகரம் அலகுபெறின், முறையே ஆறசைச்சீரும்ஐயசைச்சீரும் வந்து செய்யுளடி சிதையுமாத லின், குற்றியலுகரம்அலகுபெறாது என விலக்க, மூவசைச் சீராய் வரும்.‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)’‘பிண்ணாக்கோஒ என்னும் பிணாவின் முகத்திரண்டு’முதலடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் கலித்தளை வந்துதட்டும். அடுத்த அடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் நாலசைச்சீர்புகுந்துவிடும். ஆதலின் இன்ன இடங்களில் அளபெடை அலகு பெறாது.‘வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால்முந்தியாய் பெய்த வளைகழலும்’இவ்வடிகளில் முறையே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் வெண்பாயாப்புக் கெடாமையால் அலகுபெற்றன.கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் (குறள் 1087)என்னும் வெண்பா அடியில் அளபெடை அலகு பெற்றது.செறாஅஅய் வாழியென் நெஞ்சு (குறள் 1200)என்னும் வெண்பா அடியில் அளபெடை ஈரலகு பெறவே,செறா, அ, அய்- நிரைநேர்நேர் ஆயிற்று.அலகுபெறுமிடத்துக் குற்றிகர குற்றுகரங்களைக் குற் றெழுத்தே போலக்கொண்டு அலகிடல் வேண்டும்.தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்று; ஆஅ-நேர்நேர்இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்று; படாஅ-நிரைநேர்பரவை (-உலகியல்) வழக்கினுள் பண்டமாற்றும், நாவல் கூறலும், அவலமும்,அழுகையும், பூசலிடுதலும், முறையிடுத லும் முதலாக உடையவற்றுள்அளபெழுந்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடாஎன்பது இலக்கணம் இன்மையின், அவை செய்யுளகத்து வருவழித் தளைசீர் வண்ணம்கெடநின்றால் அலகு பெறா எனவும், அவை கெடாவழி அலகுபெறும் எனவும் கொள்ளப்படும்.‘நறுமாலை தாராய் திரையவோஒ என்னும்’என்புழித் திரை ய வோ ஒ – அளபெடையை நீக்கி, நிரைநேர் நேர் எனப்புளிமாங்காயாகக் கோடல் நேரிது;அளபெடையை நீக்கித் திரை யவோ – கருவிளம்என்று கோடலும் ஒன்று.ஒருவனது இயற்பெயரைச் சார்த்தி அளபெடை வருதல் எழுத்தானந்தம் என்னும்குற்றமாதலின், அளபெடையை நீக்கி விடுதலே முறையாகும். (யா. க. 4.உரை) |
குற்றியலுகர ஈறு முன்னிலை வினைக்கண் வாராமை | முன்னிலை ஏவலொருமை வினைக்கண் குற்றியலுகர ஈறு வாராது. வாராதெனவே, |
குற்றியலுகர ஈற்று அல்வழிப்புணர்ச்சி | குற்றியலுகர ஈற்றுச் சொற்களெல்லாம் பெரும்பாலும் அவ்வழிக்கண் |
குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ப் புணர்ச்சி | குற்றியலுகர ஈற்றனவாகிய (அகக்காழனவாகிய) மரப்பெயர் களும் |
குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சியின் சிறப்புவிதி | அவ்வழிப்புணர்ச்சிக்கண், வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றின் முன் |
குற்றியலுகர எண்ணிக்கை | தனிநெடில் ஏழுடனே, ஆய்தம் ஒன்றும், மொழி இடையீறு களில் வரப்பெறாத |
குற்றியலுகர முறைப்பெயர் | நுந்தை என்ற முறைப்பெயரில் முதலெழுத்தாகிய நகரத்தை ஊர்ந்து |
குற்றியலுகர முற்றியலுகரப் புணர்ச்சி | குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்று; வரிவடிவில் புள்ளி பெறுவது. |
குற்றியலுகர முற்றியலுகரப் பொருள் வேறுபாடு | பெருக்கு, கட்டு முதலாயின பெயராகியவழிக் குற்றியலுகர ஈற்றுச் |
குற்றியலுகரத்தை அசைக்குஉறுப்பாக்கியமை | செய்யுள் என்பது பலசொற்கள் இணைந்து அமைவது ஆகலானும், அல்வழிவேற்றுமைத் தொடர்களில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம்முற்றியலுகரமாக நிறைந்து ஒலிப்பதானும், குற்றுகரத்தையும்முற்றுகரத்தையும் கொண்ட இயற்கைச் சொற்களும் ஈறு மிகுந்த முதனிலைத்தொழிற் பெயர்களும் பலவாக இருத்தலானும், அவ்வுகரங் களின் ஒலிமொழியீற்றில் வரும்போது ஏனைய உயிர்மெய்க் குறிலொலியினின்று சிறிதுவேறுபடுதலானும், தமிழில் அசைபிரித்துக் காண்டல் பெரும்பாலும் பொருளைஅடிப் படையாகக் கொண்டே அமைதலானும் குற்றியலுகரம் அசைக்குஉறுப்பாக்கப்பட்டது.குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்ணும் ஒரு மொழிக் கண்ணும்முற்றியலுகரமாக நிறைந்து ஒலியாக்கால்,‘வேற்றார் அகலம் உழுமே ஒருகோடுமாற்றார் மதில்திறக்கு மால்’ (முத்தொள் 19.)‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ (முத்தொள் 22)‘முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாக’ (முத்தொள் 27)‘கூந்தல்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்’(முத்தொள் 38)என்னுமிடங்களில் செப்பலோசை கெட்டுப் பாவும் அழியும்.‘இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழைதொன்று சுண்ணத்தின் தோன்றிய வேறுபாடுஒன்றெ னாவிக்கொர் கூற்ற மெனநையாநின்று நீலக்கண் நித்திலம் சிந்தினாள்’ (சீவக.903)என்ற செய்யுளில் இன்று, தொன்று, நின்று என்னும் சொற்க ளிலுள்ளஈற்றுக் குற்றியலுகரம் ‘ஒன்றெ’ என்னும் சீரிலுள்ள எகர ஈறுபோல ஒருமாத்திரை அளவினதாய் ஒலித்தல் வேண்டும். (இலக். கட். அசை. பக். 47) |
குற்றியலுகரப் புணரியல் | இது தொல்காப்பிய எழுத்துப்படலத்தின் ஒன்பதாவதாகிய இறுதி இயல். |
குற்றியலுகரப் பொதுப்புணர்ச்சி | நிலைமொழியீற்றின்கண் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர் |
குற்றியலுகரமும் முற்றியலுகரமும்ஒற்றொடும் தோன்றி நிற்றல் | சேறு + கால் – சேற்றுக்கால் – நேர்பு நேர்; நாணு + தளை – நாணுத்தளை- நேர்புநிரை; நெருப்பு + சினம் – நெருப்புச்சினம் – நிரைபுநிரை; கனவு+ கொல் – கனவுக்கொல் – நிரைபுநேர் இவை இருவகை உகரமும் சந்தியில்ஒற்றடுத்து வந்தன.தோன்றிநின்ற ஒற்றுக்களே அன்றி, நிலைமொழியில் ஒற்று மிக்கு உண்ணும்நடக்கும் என வருவனவும், விக்குள் கடவுள் என வருவனவும் போல்வன தேமாபுளிமாவாகவே நிற்கும்; உரியசைகள் ஆகா. (தொ. செய். 10 நச்.) |
குற்றியலுகரம் | நெடில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று, குறி லிணையொற்று,குறில்நெடிலொற்று, குற்றொற்று இவற்றை யடுத்து வரும் வல்லெழுத்தேறியஆறு உகரங்களும் குற்றிய லுகரமாம். குற்றியலுகரம் புள்ளி பெறும்.எ-டு : நாடு, வரகு, வடாது, பாக்கு, அரக்கு, பனாட்டு,கட்டு.இவ்வாறு குற்றியலுகரத்தைக் கணக்கிடுவது ஒரு மரபு.(யா. க. 2 உரை)இதன்கண் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளை யாட்டு, போவது,வருவது, ஒன்பது முதலியன பல அடங்கா என்பது சூத்திரவிருத்தியில்விளக்கப்பட்டது. |
குற்றியலுகரம் (1) | இது தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்று. இது |
குற்றியலுகரம் (2) | தனிநெடில், ஆய்தம், (மெய்யினை ஊர்ந்த) உயிர், வல்லின மெய், |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி அறுவகைப்படும் என்பது | நெட்டெழுத்து ஏழு, ஆய்தம் ஒன்று, இடையிறுதிகளில் வாராத ஒளகாரம் |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 36 எனல் | ஈற்றயல் எழுத்தைச் சிறப்பாகக் கொண்டு, நெடில் 7-ஆய்தம் – ஒள |
குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 42 ஆதல் | தனிநெடில், குறிலிணை, குறில்நெடில், நெடிலொற்று, குறிலிணை |
குற்றியலுகரம் ஒரோவழி உடம்படுமெய் பெறுதல் | ‘தன்முக மாகத் தானழைப் பதுவே’ (நன். 303) – இதில் ‘அழைப்பது’ |
குற்றியலுகரம் கெடுதல் | ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என நன்னூலார் நூற்பா |
குற்றியலுகரம் செய்யுளான் வருதல் | ‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமதுகருப்புச் செருப்புப் பரப்பு’இதன்கண், ஏழுசீரிலும் குற்றியலுகரம் இறுதிக்கண் வந்த வாறு.இவற்றில் குற்றியலுகரம் தனிஅசையாக வந்துள்ளமை உணரப்படும். (யா. க.2 உரை) |
குற்றியலுகரம் புணரும் முறை | ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். அதுவும் |
குற்றியலுகரம் புள்ளி பெறுதல் | ஈற்றுக் குற்றியலுகரம் முற்றியலுகரத்தின் மாத்திரையில் தான் பாதியே |
குற்றியலுகரம் முப்பத்தாறு | குற்றியலுகரம் முப்பத்தாறு என்றது என்னெனின், ஒருமதம் குறைந்த |
குற்றியலுகரம் மெழிமுதற்கண் வரல் | நுந்தை என்ற முறைப்பெயரிடத்து வரும் ‘நு’, இதழைச் சிறிது குவித்த |
குற்றுகர ஈற்று நாற்பெருந்திசைகள் | அவை வடக்கு,தெற்கு, குணக்கு, குடக்கு என்பன. (நன்.185 மயிலை.) |
குற்றுகர வாய்பாட்டு வினைப்பகுதிகள் | குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனான், போக்கு பாய்ச்சு உருட்டு |
குற்றுகரஈற்றுத் தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள் | நட வா – முதலாக அஃகு ஈறாகக் கூறப்பட்ட இவ்விருபத்து மூன்றும் |
குற்றுகரம், குற்றிகரம் இரண்டின்மேலும் புள்ளியிடுதலின் பயன் | தாது – ஏது – என்றல் தொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு – கொட்டு – |
குற்றுயிர் மடக்கு | ‘அகரக் குற்றுயிர் மடக்கு’ நோக்குக. |
குற்றெழுத் தளபெடை | குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாய் நீண்டு மீண்டும் ஒலி மிக |
குற்றெழுத்து வேறுபெயர்கள் | குறுமை எனினும், இரச்சுவம் எனினும், குற்றெழுத்து எனினும் |
குற்றெழுத்துக்கள் இடைநின்ற ஒற்றை மாத்திரை மிகுத்தல் | குற்றெழுத்துப் பலவாக வருதலான் தோன்றும் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம். |
குற்றொற்றாக வாரா மெய்கள் | ரகரஒற்றும் ழகரஒற்றும் தனிக்குறிலின்பின் ஒற்றாக வாரா. அவை நெடில், |
குழமகன் | மகளிர் தம் கையிற் கொண்ட இளமைத்தன்மையுடைய குழமகனைக்கலிவெண்பாவினால் புகழ்ந்துபாடும் பிரபந்த வகை. (குழமகன் – ஆண்குழந்தை)(இ. வி. பாட். 110) |
குழமணிதூரம் | வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து. (பெரியதி. 10-3-3) |
குவலயானந்தம் | வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம்தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள்விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ எனவடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம்நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறுஅலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாகஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச்சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானாதிபதிஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சமஸ்தான வடமொழிப்பண்டிதராம் சங்கரநாராயணசாஸ்திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம்ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சமஸ்தானத் தமிழ்வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின்மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத்தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறைநூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்குஎடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகியசெய்யுள்கள் காணப்படுகின்றன.மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல்சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது. |