தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கிருதி (1)

எழுத்துவகையால் இருபத்தாறுபேதமாம் எனப்பட்ட சந்தங் களுள் ஒன்று.ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய்யாவது பாதம் ஒன்றற்கு இருபது எழுத்துப்பெற்று வருவது.எ-டு : ‘ஒருவேனின் றுயிரன்ன தோகையுரை யுள்ளங்கிழித்தூடுபோம்செருவேநின் றசோகதரு வின்செழுந் தாதுதிரப் போதுகொண்டுபொருவேநின் றான்கொடிய வேனிலான் மதுவுணவுங்கொண்டானன்னோ,வருவேனென் றார்பிரிந்த வஞ்சருரை யிற்கொடிது வாணிலாவும்.” (வீ.சோ. 139 உரை)

கிருத்து

வினைப்பகுதிமேல் வரும் பெயர்விகுதி கிருத்து எனப்படும்.
எ-டு : நடப்பது, செல்பவன் – என்பவற்றிலுள்ள துவ்விகுதி,
அன்விகுதி போல்வன. (சூ. வி. பக். 55)

கிளவிக்கவி

அகப்பொருள் புறப்பொருள் தொடர்பான கூற்றுக்கள் பற்றி அமைந்தபாடல்கள் கிளவிக்கவி என்ற பெயரால் பல திறப்படும் என வீரசோழிய இறுதிநூற்பாக்காரிகை சொல்லும். (வீ. சோ. 183)

கிளவிக்கொத்து

அகப்பொருள் நூல்களில் பல கூற்றுக்களின் தொகுப்பாய் ஒருமுறையில்அடங்கும் இயற்கைப் புணர்ச்சி போன்ற சந்தருப்பங்களை இடம் எனவும்கிளவித் தொகை எனவும் கிளவிக் கொத்து எனவும் கூறுவர். (கோவை. பாயி.பேரா. உரை)

கிளவிக்கோவை

அகப்பொருட் கோவைநூல் கிளவிக்கோவை எனவும் கூறப் படும். (கோவை. 4.பேரா.உரை) கிளவி – கூற்று (நிகழும் சந்தகுப்பம்); கோவை -தொகுப்பு.

கிளிக்கண்ணி

கிளியை விளித்துக் கண்ணியமைப்பில் பாடப்படும் நூல்;பெரும்பான்மையும் அகப்பொருட் செய்தி பற்றியது. பாரதியார் பாடியகிளிக்கண்ணிகள் உலகியற்செய்திகளைக் கூறுவனவாக உள. பலசீர்களையுடைய ஒத்தஇவ்விரண்டடி அமைப்பினை யுடையவை அவை; தனிச்சீராக ‘கிளியே’ என்ற விளிநிகழும்.

கிளை எழுத்து

வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும்உயிரும் என இவை. (தொ. செய்.94. பேரா.)வருக்கமோனையும் வருக்க எதுகையும் வல்லின எதுகையும் மெல்லினஎதுகையும் இடையின எதுகையும் என ஐந்தாம்.கிளை எழுத்துக்கள் இவை என ஆசிரியர் எடுத்துக் கூறிற்றி லர். ஒருகhல் கூறப்பெற்ற சூத்திரங்கள் விடப்பெற்றிருத்தலும் கூடும்; ஆயினும்ஆசிரியர் இந்நூலுள் அமைத்துள்ள சூத்திரங்களிற் காணப்படுவனவற்றைநோக்கிக் கிளையெழுத் துக்களை ஓராற்றான் உய்த்துணரலாம். அம்முறையால்கொள்ளப் பெறுவன வருமாறு :அ, ஆ, ஐ, ஒள – இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். இ, ஈ, எ, ஏ – இவைதம்முள் கிளை எழுத்துக்களாம். உ, ஊ, ஒ, ஓ – இவை தம்முள் கிளைஎழுத்துக்களாம். இவை ஊர்ந்த மெய்களும் இம்முறையே கிளையாம்.இனி மெய்யெழுத்துக்களுள் வல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம்.மெல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம். இடையெழுத்து ஆறும் தம்முள்கிளையாம். ஞ், ந் – இவை யிரண்டும் தம்முள் கிளையாம். த், ச் -இவையிரண்டும் தம்முள் கிளையாம். ம், வ் – இவையிரண்டும் தம்முள்கிளையாம். இவை பிறப்பிட ஒற்றுமையால் கிளையாயின.(தொ. செய். 94 ச. பால.)

கிளைப்பெயர்கள் புணருமாறு.

கிளைப்பெயர்கள், ணகரம் – னகரம்- குற்றியலுகரம்- என்ற மூன்று ஈற்றன.
கிளைப்பெயராவன ஓரினத்தை உணர்த்தும் பெயர்கள். உயர்திணையில் இவை
திரிபின்றி வருமொழி யொடு புணரும்.
எ-டு : உமண்குடி, சேரி, தோட்டம், பாடி
எயின்குடி, சேரி, தோட்டம், பாடி
புரோசுகுடி, சேரி, தோட்டம், பாடி
பார்ப்பு + குழவி = பார்ப்பனக் குழவி – என அன்சாரியையும் அக்குச்
சாரியையும் பெற்றது. இது பார்ப்பினுள் குழவி – என வேற்றுமை
முடிபிற்று.
அரசு + அக்கு+ கன்னி = அரசக்கன்னி, என அக்குச்சாரியை பெற்றது. (தொ.
எ. 307, 338, 418 நச்.)
எயினக்கன்னி என னகரஈறு அக்குப் பெறுதலும், வெள்ளா ளன்+ குமரி =
வெள்ளாண்குமரி – எனவும் வேளாண்குமரி எனவும் முடிதல் போல்வனவும்
கொள்ளப்படும்.(338 நச். உரை)

கிளையெழுத்தும் வருக்கவெழுத்தும்

எதுகையும் மோனையும் ஆகிய தொடைகள் கிளையெழுத் துக்களைப் பெறும். அ ஆஐ ஒள, இ ஈ எ ஏ, உ ஊ ஒ ஓ என்னும் இவை தம்முள் கிளையெழுத்தாம். இனி மெய்யெழுத்துக்களுள், தகர சகரங்களும் – ஞகர நகரங்களும் – மகர வகரங்களும் -தம்முள் கிளையெழுத்தாம். இவை உயிர் மெய்க்கும் பொருந்தும். இனி,இனமாகிய உயிர்க்குறிலும் நெடிலும் – வல்லினப் புள்ளி ஆறும் மெல்லினப்புள்ளி ஆறும் இடையினப் புள்ளி ஆறும் – தம்முள் வருக்கம் பற்றியஎழுத்துக்களாம். (இனத்தை வருக்கத்துள் அடக்கினார் இவ்வாசிரியர்.)(தென். யாப். 51, 52)