தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கா என்னும் நிறைப்பெயர் புணருமாறு

கா என்னும் நிறைப்பெயர் குறை என்ற வருமொழியொடு புணரும்வழி, இடையே
இன்சாரியை பெறும். காவின் குறை – எனவரும். இஃது உம்மைத்தொகை.
சிறுபான்மை காக்குறை எனச்சாரியை பெறாது வல்லெழுத்து மிகுதலுமுண்டு.
(தொ. எ. 169 நச். உரை)

காக்கைபாடினியம்

தொல்காப்பியனார் தோன்ற விரித்துரைத்த யாப்பிலக்கணத் தைப்பல்காயனார் வகுத்துரைப்பவே, நல்யாப்பினைக் கற்றார் மதிக்கும் கலைவல்லகாக்கைபாடினியார், அவ் விலக்கணத்தைத் தம் நூலுள் தொகுத்துரைத்தார்.காக்கை பாடினியார் பெயரானே, அந்நூல் காக்கைபாடினியம் எனவழங்கப்படுவதாயிற்று.தொல்காப்பியனார்தம் ஒருசாலை மாணாக்கர் எனக் கூறப்படும்பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பெற்ற இவ்வியாப்புநூல்அகவல்நூற்பாக்களால் ஆகியது. யாப்பருங்கலம் முதலிய பிற்கால நூல்கள்இதனை அடி யொற்றியே எழுந்தன. இதன் நூற்பாக்கள் 73 யாப்பருங்கலவிருத்தியுரை முதலியவற்றில் இடம் பெற்றுள. இவற்றுள் எதுகை முதலிய தொடைஇலக்கணம், ஆசிரிய வகைகள் சில, ஆசிரியத் தாழிசை, கலிவகைகள் சில, வஞ்சிவிருத்தம் – முதலிய சில நீங்கலான எல்லாச் செய்திகளும் காணப்படுகின்றன.(யா. வி. பக். 19 முதலியன.)இலக்கண விளக்கம் – செய்யுளியல் ‘பிற்சேர்க்கை’ காண்க.

காக்கைபாடினியார்

காக்கைபாடினியம் இயற்றிய ஆசிரியர்; தொல்காப்பியனார் தம் ஒரு சாலைமாணாக்கர் எனக் கருதப்படுபவர். (பா. வி. பக். 104)

காசு

வெண்பாவின் இறுதிச்சீர் உகர ஈற்று நேரீற்று இயற்சீராயின்,நேர்நேரான் வரும் இச்சீர்க்கு வாய்பாடு காசு என்பது.எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையும் கல்லாத வாறு .’ (குறள் 397) (யா. கா. செய்.5)

காஞ்சி மாலை

காஞ்சிமாலை சூடிப் பகைவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும்பிரபந்தம். (தொ. வி. 283 உரை)

காண்டம்

தொடர்நிலைச்செய்யுளின் நூலுட் பெரும்பிரிவு. கம்பரா மாயணத்துள் -பாலகாண்டம் முதலியன.

காதல்

1) காதல் பொருட்டாகிய பிரபந்த விசேடம். ‘கூளப்ப நாயக்கண் காதல்’ஓர் எடுத்துக்காட்டு. இது கலிவெண்பா வால் தலைவன் தசாங்கம் முதலியனவும்அவன் முன்னோர் சிறப்பும் அவன் பவனி வந்தபோது அவனால் விரும்பப்பட்டதலைமகள் சிறப்பும் பின் அவன் அவளைக் கூடி மகிழ்ந்த சிறப்பும் ஆகியசெய்திகளைக் குறிப்பிடுவதாகும்.2) தான் கொண்ட ஆசையை இரண்டுஅடிக் கண்ணியாகக் கொண்டு பாடுதல் காதல்ஆகும். (சாமி. 171 உரை)

காதைகரப்பு

மிறைக்கவிகளுள் ஒன்று.ஒரு செய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத்தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப்பாடுவது ‘காதை கரப்பு’ என்னும் சித்திரகவி எனத் தண்டியலங்காரமும்முத்துவீரிய மும் கூறும். இதனைக் ‘கரந்துறை பாட்டு’ எனவும் ‘கரந்துறைசெய்யுள்’ எனவும் முறையே வீரசோழியமும் மாறனலங்கார மும் கூறும். அவை‘கரந்துறை செய்யுள்’ என்று தண்டி யலங்காரமும் இலக்கண விளக்கமும்கூறும் சித்திரக் கவியைக் ‘காதை கரப்பு’ என மாற்றிக் கூறும்.மாறனலங்காரம் ஈற்று மொழியின் முதலெழுத்தை விட்டு ஈற்று மொழியின்ஈற்று உயிர்மெய்யைத் தொடங்கிக் கணக்கிடும்.வீரசோழிய உரையும் மாறலனங்காரமும் கூறும் காதை கரப்புக்குஎடுத்துக்காட்டாகக் ‘கரந்துறை பாட்டு’க் காண்க. (தண்டி. 98; வீ. சோ.181 உரை; மா. அ. 288; இ. வி. 690.)

காந்தி (1)

நான்கு மாத்திரைச் சீர்கள் நான்காகி நேரசையில் தொடங் கும் வெண்டளையாப்பிற்றாய சந்த விருத்தம்; கலிச்சந்த விருத்தம்.எ-டு : ‘வெய்தா கியகா னிடைமே வருநீரைதா தலினோ அயலொன் றுளதோநொய்தாய் வரவே கமுநொய் திலனால்எய்தா தொழியா னிதுவென் னைகொலாம்’ (கம்பரா. 3603)அப்பர் அருளிய ‘விடந்தீர்த்த பதிகம்’ இத்தகையதே (இரண்டாம்பாசுரம் தவிரக் கொள்க) (தே. IV 18)

காப்பியக் கலித்துறை

கலித்துறையைக் கோவைக் கலித்துறை என்றும், காப்பியக் கலித்துறைஎன்றும் இரண்டாக்குவர். இவற்றுள், எழுத்து வரையறையப்படாது நெடிலடியான்வந்த செய்யுள் காப்பியக் கலித்துறையாம்.எ-டு : ‘முன்றான் பெருமைக்க ணின்றான்முடி. வெய்து காறும்நன்றே நினைந்தான், குணமொழிந் தான்த னக்கென்றொன்றானு முள்ளான், பிறர்க்கே யுறுதி சூழ்ந்தான்,அன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே’.இதன்கண், முதலடி ஈற்றடிகள் பதினான்கெழுத்தாயும், இடையடிகள்பதின்மூன்றெழுத்தாயும் வந்தவாறு; இருவகை வெண்டளையோடு, அருகிஆசிரியத்தளையும் பயின்று வந்தமை காணப்படும். (வீ. சோ. 123 உரை)

காப்பு

1. எடுத்த நூற்பொருள் இனிது முடிதற்பொருட்டு நூலின்தொடக்கத்தில் செய்யும் தெய்வ வணக்கம். 2. பிள்ளைத் தமிழாகியபிரபந்தத்துள் பத்துப்பருவங்களில், “குழவியைக் கடவுள் காக்க!” எனமுதற்கண் வைக்கப்படும் பருவம். (L)

காப்பு மாலை

கடவுள் காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும்அந்தாதித்தொடையுறப் பாடும் பிரபந்தம்.(இ. வி. பாட். 72)

காப்புப் பருவக் கடவுளர்

மங்கலம் பொலியும் செங்கண் மாயோன் சங்கு சக்கரங் களைத் தரித்தலானும்காத்தல்கடவுள் ஆகலானும் பூமடந் தையைப் புணர்தலானும் அவனை முற்கூறி,கங்கை பிறை கொன்றை முதலியவற்றைப் புனைந்த உமையோர்பாகன் என்றுசிவபிரானைப் புகழ்ந்து கூறி, முழுதுலகு ஈன்ற பழுதறும் இமயமால் வரைச்செல்வியாம் பார்வதிதேவியை விருப்ப மாகக் கூறி, நாமகள் கேள்வனாம்அயனைப் புகழ்ந்து கூறி, கறுத்த மேகவாகனனாம் இந்திரனை அதன்பின்புகழ்ந்து கூறி, ஒற்றைக் கொம்பனாம் விநாயகனைப் புகழ்ந்து கூறி,வீரத்தன்மை பொருந்திய வேலனைப் புகழ்ந்து கூறி, சத்த மாதர்களைப்புகழ்ந்து கூறி, வாணியாம் கலைமடந்தையைப் புகழ்ந்து கூறி, பதினொரு கோடிஉருத்திரர், பன்னிரண்டு கோடி ஆதித்தர், இரண்டு கோடி மருத்துவர்,எட்டுக் கோடி வசுக்கள் இவர்களைப் புகழ்ந்து கூறி, ஏனைய காரி முதலியதேவரையும் பிள்ளையைப் பாதுகாத்தற் பொருட்டுக் காப்புக்கூறப்படும்.இக்கடவுளர் முறைவைப்பில் சில மாறுதல் உண்டு.(இ. வி. பாட். 48)

காப்புப் பருவம்

பிள்ளைத்தமிழாகிய பிரபந்தம் பாடும் பருவங்களுள் முதலாவது.இப்பருவம் பாடுங்கால் ஒன்பது பாட்டானும் பதினொரு பாட்டானும்பாடுதல்வேண்டும்.பருவங்கள் பத்தும் தம்மில் ஒப்பக் கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்படப்பாடுதல் சிறப்புடைத்து; இரட்டிக்கப் பாடுமிடத்து ஓசைபெயர்த்துப்பாடப்படும்.காப்பு முதற்கண் எடுத்த அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்துஒப்பப்பாடுதல் வேண்டும் என்பது பன்னிரு பாட்டியல் விதி (191)கடவுளர் பலரைப் பாடுமிடத்துப் பாடல் எண்ணிக்கை வரையறைப்படாதுவருதலும் கொள்க. (இ.வி. பாட். 51)

காம இன்னிசை

செந்துறைப்பாட்டின் வகை மூன்றனுள் ஒன்று; ஏனையன பரிபாடலும்மகிழிசையும் ஆம். (யா. வி. பக். 580)

காமத்துப்பால்

அறம் பொருள் இன்பம் என முப்பாலாக அமைந்த திருக் குறளில் இறுதியாகஅமைந்திருக்கும் இப்பகுதி 25 அதிகாரங் களை யுடையது.‘தகையணங்குறுத்தல்’ முதலாக ‘ஊடலு- வகை’ ஈறாக அவை அமைந்தவை. இங்குஇன்பம் என்பது காமவின்பத்தினை; அஃதாவது ஒருகாலத்து ஒரு பொருளான்ஐம்பொறியும் நுகர்தற் சிறப்புடையது. இக்காமத்துப்பாலைக் களவு ஏழுஅதிகாரங்களானும் கற்புப் பதினெட்டு அதிகாரங் களானும் பாகுபடுத்துப்பெரும்பான்மை பற்றிப் புணர்ச்சி யைக் களவென்றும், பிரிவினைக்கற்பென்றும் கூறுகிறார். (பரிமே. தோற்று. உரை.)

காயத்திரி

நான்கடிகட்குமாக இருபத்துநான்கு உயிரெழுத்துக்க ளுடைய சந்தம்;அடிதோறும் அவ்வாறு உயிரெழுத்தாக வருவது.எ-டு : ‘கருவி வானமேவருவர் மாதிரம்பொருவி லாமிதேபருவ மாவதே’ (வீ.சோ. 139 உரை.)

காய்

1. மூவசைச் சீரின் இறுதியில் உள்ள நேரசைக்குரிய வாய்பாடு2. காய்ச்சீர் (யா. கா.7)

காரிகை

பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் என்னும் சமணப் புலவரால்இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கண நூல். அவர் இயற்றிய யாப்பருங்கலம்என்னும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாக, காரிகை யென்னும்கட்டளைக் கலித்துறை யாப்பிற்றாக, மகடூஉ முன்னிலை பெரும்பான்மை யும்பயில இந்நூல் அமைந்தது. யாப்பருங்கலக் காரிகை என்னும்முழுப்பெயர்த்தாகிய இந்நூலுள் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனமூன்று இயல்களும், அவற்றுள் முறையே 18, 16, 10 ஆகிய காரிகைச்சூத்திரங்களும், நூல் தொடக்கத்தே தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும்அவையடக்கம் இரண்டும் ஆகிய காரிகைகளும் உள.பிற்காலத்தே யாப்புப் பயில்வார்க்குப் பெரிதும் துணையாகப்பயிலப்பட்ட இந்நூற்சிறப்புக் ‘காரிகை கற்றுக்கவிபாடு’ என்னும் தொடரால்புலனாம். இந்நூற்கு உரையாசிரியர் குணசாகரர் என்பார். அவரே யாப்பருங்கலவிருத்தியுரைகார ரும் ஆவார் என்பது ஒரு சாரார் கூற்று.காரிகை – அழகு, கட்டளைக் கலித்துறை, மகடூஉ எனப் பலபொருள்படும்.தற்சிறப்புப் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக அமைந்த 44 கட்டளைக்கலித்துறைகள் உதாரண முதல்நினைப்புக் காரிகைகளும் உள்ளிட்டன. இந்நூற்குயாப்பருங்கலப் புறனடை என்ற பெயரும் உண்டு.வடமொழியில் உரைநடையில் வரையப்படும் நூலுக்குக் காரிகை என்பதுபெயர். தமிழில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமையும் சூத்திரங்கள்காரிகை எனப்படும்.எ-டு : வீரசோழியத்துள் காரிகை

காரியகால பக்கம்

இஃது அதிகாரத்தின் இருவகையுள் ஒன்று. அரசனுடைய படையில் தாமே சென்று
நடத்தும் தண்டத்தலைவரைப் போல, ஓரிடத்து நின்ற சொல் பல
சூத்திரங்களொடும் சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது காரியகால
பக்கமாம்.
எ-டு : ‘குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்’ (தொ.எ.34 நச்.) என்ற
நுற்பாவிலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற சொற்றொடர் ‘குற்றிய லுகரம்
வல்லாறு ஊர்ந்தே’ (36 நச்.) என்ற நுற்பாத் தொடரொடு சென்றியைந்து
பொருள் பயப்பிப்பது போல்வன. ஏனைய வகை யதோத்தேச பக்கமாம். (சூ.வி.பக்.
17)

காரைக்கால் பேயார் பாடல்

இவர் பொய்கையாரோடு சேர்ந்து பாடிய பாடலொன்று இரண்டாமடி குறைந்துஆரிடப்போலி வெண்பாவாக எடுத்துக் காட்டப்படுகிறது. (யா. வி. பக்.371)இவருடைய மூத்த திருப்பதிகங்கள் அறுசீர் ஆசிரிய விருத் தத்தைச்சாரும். திரு இரட்டை மணி மாலை 10 வெண்பா, 10 கட்டளைக் கலித்துறைஆகும். அற்புதத்திருவந்தாதி வெண்பா ஆகும். இவை பதினோராம் திருமுறையைச்சார்ந்தன.

காலதேசி

தருக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 583)

காலப்பெயர்ப் பகுபதம்

காரான், காராள், காரார், காரது, காரன, காரேன், காரேம், காராய்,
காரீர் – என இவ்வாறு வருவன, இக்காலத்தை யுடையார் என்னும் பொருண்மைக்
காலப்பெயர்ப் பகுபத மாம். (கார் என்னும் காலப்பெயர் அடியாக இவை
பிறந்தவை) (நன். 133. மயிலை.)

காலம் (1)

இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தும் நிகழும்நிகழ்ச்சி செய்யுளுள் தோன்ற உரைப்பது; இது செய்யுள் உறுப்புக்களுள்ஒன்றாம். (தொ. பொ. 514. பேரா.)

காலம் காட்டும் விகுதிகள்

று, றும் – இரண்டும் இறப்பும் எதிர்வும் காட்டும்.
எ.டு : சென்று, சென்றும் (சென்றேன், சென்றோம்); சேறு, சேறும்
(செல்வேன், செல்வோம்).
து,தும் – இரண்டும் அவ்விரு காலமும் காட்டும்.
எ-டு : வந்து, வந்தும் (வந்தேன், வந்தோம்); வருது, வருதும்
(வருவேன், வருவோம்)
டு, டும்- இரண்டும்இறப்பினைக் காட்டும்.
எ-டு : உண்டு, உண்டும் (உண்டேன், உண்டோம்)
கு, கும்- இரண்டும் எதிர்வினைக் காட்டும்.
எ-டு : உண்கு, உண்கும் (உண்பேன், உண்போம்)
மின், ஏவல்வினைகளின் ஈறுகள், வியங்கோள், இ, மார் – இவை எதிர்வினைக்
காட்டும்.
எ-டு : உண்மின், உண்- தின்- செல்- வா, உண்க, உண்ணுதி, உண்மார்
(வந்தார்)
பவ்விகுதி இறப்பும் எதிர்வும் காட்டும்.
எ-டு : உண்ப
செய்யும் என்னும் முற்று நிகழ்வும் எதிர்வும் காட்டும்.
எ-டு : (குதிரை) உண்ணும்
எதிர்மறை ஆகாரவிகுதி முக்காலமும் காட்டும்.
எ-டு : உண்ணா (நன். 145)