தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இது தமிழ் நெடுங்கணக்கில் பதினொன்றாம் உயிர்; அங்காத்தலோடு இதழ்
குவித்து எழுப்பும் உயிரொலிகளுள் ஒன்று; பெயராகவும் வினையாகவும் வரும்
ஓரெழுத்தொரு மொழியாம் நெடில். ஓகார இடைச்சொல் பிரிநிலை, வினா,
எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு – முதலிய பல பொருளில்
வரும்.
ஓஒ பெரியன் – என உயர்வுசிறப்புப் பற்றியும், ஓ ஒ கொடியன்- என
இழிவுசிறப்புப் பற்றியும், ஓஒ தமக்கோர் உறுதி உணராரே எனக் கழிவிரக்கப்
பொருள் பற்றியும், ஓ பெரிதுவப்பக் கேட்டேன்- என மகிழ்ச்சிக்குறிப்புப்
பற்றியும், ஓஒ கொடிது கொடிது – என வியப்புக் குறிப்புப் பற்றியும், ஓ
தெரிந்தது – என ஞாபகக்குறிப்புப் பற்றியும், ஓ மகனே – என
விளிக்குறிப்புப் பற்றியும் – ஓகாரம் அளபெடுத்தும் அளபெடாதும்
முதற்கண் வரும்.

ஓகார இடைச்சொல் புணருமாறு

ஓகார இடைச்சொல் எப்பொருளில் வரினும் வருமொழி வன்கணத்தோடு இயல்பாகவே
புணரும்.

இவருள், யானோ தேறேன்’(குறுந்.21)
– பிரிநிலை; நன்றோ தீதோ – தெரிநிலை; ஓஒ கொண்டான் – சிறப்பு; ‘
களிறென்
கோ
கொய்யுளைய மா என்கோ’ – எண்
(புற.387); யானோ கொண்டேன் – மாறுகோள் எச்சம்; நீயோ கொண்டாய்? – வினா;
புற்றோ புதலோ – ஐயம்; கொளலோ கொண்டான் – ஒழியிசை. (தொ. எ. 290, 291
நச். உரை)

ஓகாரஈறு ஒன்சாரியை பெறுதல்

‘ஓகார ஈற்றுப் பொதுப்புணர்ச்சி’ காண்க.

ஓகாரஈற்று இயல்பு புணர்ச்சி

ஓகார இடைச்சொல் மொழியீற்றில் மாறுகோள் எச்சம், வினா, ஐயம், ஒழியிசை
– என்ற பொருள்கள்மேலும், தெரி நிலை, எண், சிறப்பு, ஈற்றசை – என்ற
பொருள்கள்மேலும் வரும். அது வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : யானோ கொண்டேன்.
கோ என்ற பெயர் இல் என்ற வருமொழியொடு புணரும்வழி, ஒகரமாகிய
எழுத்துப்பேறளபெடை பெறாது (வகர) உடம்படுமெய் பெற்று இயல்பாகப்
புணரும்.
வருமாறு : கோ+இல்
> கோ+வ்+இல் =
கோவில்
(தொ. எ. 290, 291,293, நச்.) (மு.வீ. புணர். 24)

ஓகாரஈற்றுச் சாரியை

ஓகாரஈற்றுப் பெயர் உருபேற்குமிடத்தும் பொருட்புணர்ச்சிக் – கண்ணும்
ஒன்சாரியை பெறும். சாரியை பெறுங்கால் வருமொழி வல்லெழுத்து மிகாது.
எ-டு : கோ+ ஐ
> கோ + ஒன் + ஐ =
கோஒனை
(தொ.எ.180 நச்.)
கோ+கை
> கோ+ ஒன் + கை =
கோஒன்கை
(294 நச்.)
பிற்காலத்தில் ஒன்சாரியை னகரச் சாரியையாகவே, கோனை, கோன்கை என்று
புணர்வ ஆயின.

ஓகாரஈற்றுச் சொல் இல்லொடு கிளத்தல்

நிலைமொழி ஓகார ஈற்றுச் சொல்லாக, வருமொழி இல் என்ற சொல் வரின், ஓகார
இறுதிக்குரிய ஒன்சாரியை பெறாது உடம்படுமெய் அடுத்து இயல்பாகப்
புணரும்.
வருமாறு: கோ+ இல்= கோவில் (வகரம் உடம்படுமெய்)
(தொ.எ. 293 நச்.)
‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ (மு.வீ. புணரியல் 24)
என்பதனால் யகர உடம்படுமெய் பெற்று, கோ + இல் = கோயில் – என்றாதலே
இக்காலத்துப் பெரும்பான்மை ஆயிற்று.

ஓகாரஈற்றுப் பொதுப்புணர்ச்சி

ஓகார ஈறு அல்வழிக்கண் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்குப்
புணரும்.
எ-டு : ஓக் கடிது, சோக் கடிது (தொ. எ.289 நச்.)
ஓகார இடைச்சொல் எப்பொருளில் வரினும், வன்கணம் வரினும் இயல்பாகவே
புணரும்.
எ-டு : யானோ கொண்டேன் (290, 291 நச்.)
ஓகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்
எழுத்துப்பேறளபெடையாகிய ஒகரமும் வல்லெழுத்தும் பெறுதலும்,
உருபுபுணர்ச்சி போல் ஒன்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு.
எ-டு : ஓஒக் கடுமை, கோஒக் கடுமை, சோஒக் கடுமை;
கோஒன்கை, கோஒன்செவி (292, 294 நச்.)

ஓசை இரண்டாவன

எடுத்துக் கூறலும், படுத்துக் கூறலும் என ஓசை இருவகைப் படும்.
(மு.வீ. எழுத். 39)

ஓசை உண்ணுதல்

செய்யுள் ஓசை இயைதல்; வாய்பாட்டால் சீர் ஓசையை ஏற்றல்.‘வெண்பாவின் இறுதிச்சீர் நாள் மலர் காசு முதலாக ஓசை யுண்ணும்என்பது.’ (யா. க. 57 உரை)

ஓசை ஊட்டுதல்

சீர்களுக்கு வாய்பாடு கூறி ஓசை ஏற்பித்தல்; ‘வெண்பாவின் இறுதி(நாள் மலர் என்ற வாய்பாட்டால்) ஓசையூட்டுதற் பொருட்டு.’ (யா. வி. பக்.67 உரை)

ஓசை கெட்ட நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா ஓசைகெடில் வெண்டுறையாம்.எ-டு : ‘குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழிநிலாவணங்கு நீர்மணல்மேல் நின்று – புலாலுணங்கல்கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மை யோநீபிறர் உள்ளம்புக் காப்ப துரை.’இருவிகற்பத்தான் வந்த இந்நேரிசை வெண்பாவினுள்மூன்றாமடியிறுதிச்சீர் தேமாங்கனி எனக் கனிச்சீராய் வந்தமையால் ஓசைகெட்டு வெண்டுறைப்பாற்பட்டது. (வீ. சோ. 121 உரை)

ஓசைக் குற்றம் மூன்று

1) அறுத்திசைப்பு – ஓசை இடையறவுபட ஒலித்தல்2) வெறுத்திசைப்பு – செவிக்கு இன்னாதாக இசைத்தல்;3) அகன்றிசைப்பு – ஒருபாடலின் முற்பகுதி செய்யுளாகவும்பிற்பகுதி கட்டுரையாகவும், முற்பகுதியும் பிற்பகுதியும் ஒலி யால்வேறுபடுமாறு அமைத்தல் என்பன. விளக்கம் தனித் தனியே காண்க. (யா. வி.பக். 424)

ஓசைத்தொகை

செப்பல் அகவல் துள்ளல் தூங்கல் என ஓசை நான்காம். இவற்றுடன் கொஞ்சல்என்பதனைச் சேர்த்து ஓசை ஐந்து என்பர். (யா. வி. பக். 10)

ஓசைவகை

பா, தாஅ, வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர்,குறுஞ்சீர், சித்திரம், நலிபு, அகப்பாட்டு, புறப் பாட்டு, ஒழுகு,ஒரூஉ, எண்ணு, அகைப்பு, தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என வரும்வண்ணங்கள் இருபது. (யா. வி. பக். 10)

ஓசைவிரி

தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்றஐந்தனையும்; அகவல், ஒழுகல், வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனால் உறழவரும் வண்ணங்கள் இருபதனையும், மீண்டும் குறில் நெடில் வலி மெலி இடைஎன்பவற்றால் உறழ வண்ணங்கள் நூறாக விரியும். யா. வி. பக். 10 (யா. கா.43 உரை)

ஓசைவேற்றுமையான் எழுத்தின் மாத்திரைதிரியாமை

எடுத்தல் படுத்தல் நலிதல் ஓசைகள் ஒவ்வோரெழுத்தின் மாத்திரையும்திரிபு அடையுமாறு செய்யமாட்டா என்பது.

ஓடப்பாட்டு

ஓடம் ஓட்டுகையில் பாடப்படுவது; கப்பற்பாட்டு என்பதும்அது. (L)

ஓட்டிய நிரோட்டியம்

முதலிரண்டடி இதழ்குவிந்தும் கூடியும் ஒலிக்கப்பெறும் உ ஊ ஒஓஒள என்றஉயிர்களும் – ப் ம் வ் என்ற மெய்களும் – கொண்ட சொற்களாக அமைய, அடுத்தஇரண்டடியும் இவை நீங்கலான எழுத்துக்களைக் கொண்ட சொற்களாக அமையும்பாடலில் உள்ள சொல்லணி.எ-டு : ‘வதுவைஒரு போதும் வழுவாது வாழும்புதுவைவரு மாதுருவம் பூணும் – முதுமைபெறுநாதன் அரங்கனையே நன்றறிந்தார்க் கேஅடியேன்தாதனென நெஞ்சே தரி.’“மனமே! எப்போதும் திருமணங்கள் நிகழும் வளம் சான்றதிருவில்லிபுத்தூரில் தோன்றிய ஆண்டாளைத் தமக்குள் அணிந்துகொண்டசர்வக்ஞனான அரங்கன் அடியார்க்கே அடியவனாகும் தன்மை மேற்கொள்ளுவாயாக”என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளில் உ ஊ ஒ ஓ ஒள, ப்ம்வ் என்றஉயிரும் மெய்யும் அவை சேர்ந்தமைந்த உயிர்மெய் யெழுத்துக்களுமே வந்துஓட்டியம் ஆயவாறும், இறுதியீரடிகளில் இவ்வுயிரும் மெய்யும்உயிர்மெய்யும் தொடர்புறாத ஏனைய மெய் உயிர் உயிர்மெய்யெழுத் துக்களேவந்து நிரோட்டிய மாயவாறும் காணப்படும். (மா. அ. பா. 775)

ஓட்டியம்

இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்ற உயிரும் இதழ் இயைதலால்பிறக்கும் ப் ம் வ் என்ற மெய்களும் தொடர்புடைய உயிர்மெய்எழுத்துக்களால் இயன்ற பாடல் ஓட்டியம் என்ற சித்திர கவியாம்.இவ்வோட்டியம் இதழ்குவிந்த ஓட்டியம், இதழ் இயைந்த ஓட்டியம்,இருவகையும் வந்த ஓட்டியம் என மூவகைத்து. மேலும் ஒருபாடலில்முதலீரடிகள் ஓட்டியமாகவும் கடை யீரடிகள் நிரோட்டியமாகவும் வரின்,அப்பாடல் ஓட்டிய நீரோட்டியம் எனப் பெறும். முதலீரடிகள் நிரோட்டியமாகவும் கடையீரடிகள் ஓட்டியமாகவும் வரின், அது நிரோட்டிய ஓட்டியம்எனப்பெறும். அவ்வத் தலைப்பிற் காண்க.நிரோட்டியம் – மேற்கூறிய எட்டு எழுத்துக்களின் தொடர் பின்மையால்இதழ் குவியாமையும் இதழ் இயையாமையும் உடையதாய் ஒலிக்கப்படுவது. (மா. அ.275, 276)

ஓரசைச்சீர்

ஓரசையான் ஆகிய சீரும் பொதுச்சீர் (- சிறப்பு இல்லாத சீர்) ஆகும்.அது நேர், நிரை என இருவகைத்து.வெண்பா இறுதி ஓரசைச்சீரான் முடிதலுமுண்டு. அப் பொழுது இறுதிச்சீர்போல வரும் நேரசையும் நிரையசையும் முறையே நாள் எனவும் மலர் எனவும்வாய்பாடு பெறும்.எ-டு : ‘வாலெயி றூறிய நீர் ’ (குறள். 1121) நாள் ,நெஞ்சத் தவல மிலர் (குறள். 1072) மலர் .(யா. கா. 14 உரை)

ஓரடி ஒழிந்த மடக்குப் பதினொன்று

ஈரடி மடக்கு ஆறு :நாலடிப் பாடற்கண், முதலடியும் இரண்டாமடியும், முதலடியும் மூன்றாம்அடியும், முதலடியும் நான்காம் அடியும், இரண்டாம் அடியும்மூன்றாமடியும், இரண்டா மடியும் நான்காம் அடியும், மூன்றாமடியும்நான்காமடியும் மடங்கிவரும் ஈரடி மடக்கு ஆறாம்.மூவடி மடக்கு நான்கு :நான்கடிப் பாடற்கண், ஈற்றடி நீங்கலான ஏனைய மூன்றடிகள் (1, 2, 3),முதல் அயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 3, 4), ஈற்றயலடி நீங்கலானஏனைய மூவடிகள் (1, 2, 4), முதலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (2, 3, 4)மடக்கி வரும் மூவடி மடக்கு நான்காகும்.நான்கடி மடக்காகிய முற்றுமடக்கு ஒன்று. ஆகவே, ஓரடி ஒழிந்த ஈரடிமூவடி நான்கடி மடக்குக்கள் ஆறும் நான்கும் ஒன்றுமாகப் பதினொன்றாதல்காண்க. (தண்டி. 95 உரை)

ஓரடி மடக்கு நான்கு

நான்கடிச் செய்யுளுள் முதலடி மடக்குதல், இரண்டாமடி மடக்குதல்,மூன்றாமடி மடக்குதல், நான்காமடி மடக்குதல் என்பன. (தண்டி. 93)

ஓரடியால் நடப்பன

பாட்டு, உரை, நூல், மந்திரம், பிசி, முதுசொல், அங்கதம், வாழ்த்துமுதலியன என்பார் பல்காயனார். (யா. வி. பக். 429)

ஓராசிடை வெண்பா

‘ஒருவிகற்ப ஓராசிடை நேரிசை வெண்பா’. காண்க. (யா. க. 60 உரை)

ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆதல்

ஓரடி மடக்கு 4, ஈரடி மடக்கு 6, மூவடி மடக்கு 4, நான்கடி மடக்கு 1 =15இப்பதினைந்தனையும் அடிமுதல், அடியிடை, அடியிறுதி என மூன்றாகஉறழ்ந்து நோக்க, 15 x 3 என ஓரிடத்து வரும் மடக்கு 45 ஆயின. (மா. அ. 258)

ஓரெழுத்தினம்

இன எழுத்துப்பாட்டு மிறைக்கவி வகை. வல்லினப் பாடல்,மெல்லினப்பாடல், இடையினப்பாடல், குற்றெழுத்துப் பாடல்,நெட்டெழுத்துப்பாடல் என்பன பலவும் ஓரெழுத் தினம் என்ற சித்திரகவியில்அடங்கும். அவ்வத் தலைப்பிற் காண்க. (தண்டி. 97 உரை; யா.வி.பக்.540)

ஓரெழுத்து அடிமுதல் முற்றும்மடக்கு

அடி முதற்கண் ஓரெழுத்து மடங்கி மீண்டு வருதல் அடி முதல் மடக்கு.இவ்வாறு ஒவ்வோர் அடியிலும் முதலெழுத்து மடங்கி மீண்டும் வரின் அஃதுஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்காம்.எ-டு : ‘நாநா நாதம் கூடிசை நாடும் தொழிலோவாதாதா தார மாக வரைத்தண் மலர்மீதேவாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டேயாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்’‘நாநா (-பல விதமான) நாதம் கூடும் இசைநாடும் தொழில் ஓவா(மல்)தாது ஆதாரமாக (-மகரந்தம் சேர்க்க) மலர்மீது வாவா (-தாவி) வாழும்வரிவண்டே! யாய் ஆயாள் (-தாயானவள்) இல் சேர்த்துவது (என்னைஇற்செறிப்பதை) அன்பற்கு இசையாய்’ என்று பொருள்படும் இப்பாடற்கண்,நாநா, தாதா, வாவா, யாயா – என அடிதோறும் ஓரெழுத்து அடிமுதல் மடக்காகப்பாட்டு முழுதும் வந்தமை காணப் படும். (தண்டி. 97)

ஓரெழுத்து மடக்கு

ஓர் உயிரெழுத்தே மெய்யொடு கூடி உயிர்மெய் எழுத்தாய்ப் பாடலின்நான்கடிகளிலும் மடக்கி வருவது.எ-டு : ‘அரவ மகர சலசயன படஅரவ!கரசரண நயன வதன கமலதர!வரத! சரத! மகவர தசரதமக!பரம! பரம மமல! அநக! பரமபத!’“ஆரவாரத்தையுடைய கடலில் படுக்கையாக ஆதிசேடனை உடையவனே! கைகளும்கால்களும் முகமும் தாமரை போன்றவனே! வரதனே! என்றுமிருப்பவனே! மிகமேம்பட்ட தசரதனின் மைந்தனே! பரமே! களங்கமற்றவனே! பாவ மற்றவனே!பரமபதத்தை உடையவனே! உனக்கே மேம் பாடுகள் உரியன” என்ற பொருளமைந்தஇப்பாடற்கண், அகரமாகிய ஓரெழுத்தே பாடல் முழுதும் மடக்கி வந்தவாறு.பரமம் + அமல = ‘பரமமமல’ என அகரமாக வருதல் காண்க. (மா. அ. பா. 760)

ஓரெழுத்துச்சீர்

நுந்தை, வண்டு – இவை நேர், நேர்பு என ஓரெழுத்து அசைச் சீராம்.ஆகவே, ஓரெழுத்துச்சீர் இரண்டு. (முறையே மொழி முதற் குற்றுகரமும்மெய்யெழுத்தும், மொழியீற்றுக் குற்றுகரமும் எண்ணப்பட்டில.) (தொ. செய்.41 நச்.)

ஓரெழுத்துப்பாடல்

பாடல் முழுதும் ஒரே உயிரெழுத்தினாலாய உயிர்மெய் களைக் கொண்டுஅமைவது. இது வடமொழியில் ஏகாக்ஷரி (ஏகாட்சரி) என வழங்கும்.‘குற்றெழுத்துப்பாடல்’, ‘நெட்டுயிர் மடக்கு’ இவற்றை நோக்குக. இஃது ஓர்எழுத்து மடக்கு எனவும்படும். (மா. அ. பா. 760)

ஓரெழுத்தொரு மொழி

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள – என்ற நெட்டெழுத்துக்கள் ஏழும் எழுத்தாம்
தன்மையன்றிச் சொல்லாம் தன்மையும் பெறும் ஆற்றல ஆதலின், ஓரெழுத்தொரு
மொழிகளாம்.
ஆ – பசு; ஈ – கொடு; ஊ- இறைச்சி; ஏ- அம்பு; ஓ – மதகுநீர் தாங்கும்
பலகை; ஐ – வியப்பு; ஒள- அவை (ஒளகாரம் உயிர் மெய்க்கணல்லது வாராது
என்பதே நச். கருத்து)
இனி, குற்றெழுத்துக்களுள் அ இ உ – சுட்டிடைச் சொற் களாகவும், எகரம்
வினாஇடைச்சொல்லாகவும், ஒகரம் ஒப்பிடுதலைக் குறிக்கும் பகுதியாகவும்
வரினும் இவை இடைச்சொற்களாதலின், பெயர் வினைகளாக வரும்
நெட்டெழுத்துக்களை ஒத்த சிறப்பில. (தொ.எ. 43, 44 நச்.)
உயிர் நெட்டெழுத்துக்களிலும் ஒளகாரத்தை விலக்கி ஏனைய ஆறனையும்
கொள்வதே தொல்காப்பியனார் கருத்தாம். அவர் ஒளகாரத்தை ‘ஈரளபு இசைக்கும்
இறுதியில் உயிர்’ என்பர். (தொ.சொ. 281 சேனா.)
உயிர் வருக்கத்தில் ஆறு, மகர வருக்கத்தில் ஆறு, த ப ந –
வருக்கங்களில் ஐவைந்து, க வ ச வருக்கங்களில் நந்நான்கு, யகர
வருக்கத்தில் ஒன்று – ஆகிய நெடில்கள் 40, நொ து – என்னும் குறில்கள்
இரண்டு – ஆக நாற்பத்திரண்டும் ஓரெழுத்தொரு மொழிகளாம். இவை
சிறப்புடையன. சிறப்பில்லாதன பிறவுமுள.
வருமாறு : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ; மா மீ மூ மே மை மோ; தா தீ தூ தே தை; பா
பூ பே பை போ; நா நீ நே நை நோ; கா கூ கை கோ; வா வீ வை வெள; சா சீ சே
சோ;யா; நொ து – என்பன.
உயிர்க்குற்றெழுத்துக்கள் ஐந்தும், குவ்வும், கௌ வெள பீ சை என்னும்
உயிர்மெய்நெட்டெழுத்துக்களும் சிறப்பில.
(நன். 129 இராமா.)
இவற்றின் பொருள்:
ஆ – பசு; ஊ- இறைச்சி; ஏ-அம்பு; ஐ- வியப்பு; ஓ- மதகுநீர் தாங்கும்
பலகை; மீ, மே – மேல்; மூ- மூத்தல் என்பதன் பகுதி; மோ – மோத்தல்
என்பதன் பகுதி; தூ – பற்றுக்கோடு; தே- தெய்வம், பா- பாட்டு; பே- நுரை;
நே – அன்பு; நை- வருந்து; நோ- நோய்; கூ-பூமி; கோ- அரசு; வீ- மலர்; வை-
கூர்மை; வெள- கைக்கொள்; சீ- நீக்கு; சே-எருது; சோ- அரண்; யா- யாவை;
நொ-துன்பப்படு; து-உண். இவையாவும் தமக்குத் தாமே முதலும் இறுதியும்
ஆவன. (நன். சங். 129)
தொல்காப்பியனார் உயிர்மெய்யை விடுத்து நெடில் ஏழுமே
ஓரெழுத்தொருமொழிகள் என்றும், குற்றெழுத்து ஐந்தும் மொழியாக நிறைந்து
நில்லா என்றும் கூறினார். எனவே, குற்றெழுத்துக்களுள் அ இ உ –
சுட்டாகவும் எ வினாவாகவும் வரும் என்ற கருத்துப்படவும் உயிர்
வருக்கத்திற்கே ஓரெழுத் தொருமொழி கூறியுள்ளார். ( தொ. எ. 43, 44
நச்.)
இனி, சிறப்பில்லனவும் ஓரெழுத்தொருமொழியுள் சில உளவாயின. அவை ஆறாம்
உயிரும், பகர ஈகாரமும், சி சூ சை கௌ வெள- என்பன போல்வனவும் கொள்க.
(நன். 128 மயிலை.)
வகரஈற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான் உணர்த்தி நிற்றலான்
ஒள என்னும் ஓரெழுத்தொரு மொழியும், சுட்டு – வினா- உவமைப் பொருளைத்
தரும் இடைச்சொல் – ஆதலான் குற்றுயிர் ஐந்தான் ஆகிய ஓரெழுத்தொருமொழி
களும், கௌ- என்னும் உயிர்மெய்யானாய ஓரெழுத்தொரு மொழியும், இவைபோல்வன
பிறவும் சிறப்பில்லன எனக் கொள்க. (நன். 129 சங்கர.)

ஓரைப் பொருத்தம்

அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும் தத்தம் இனஎழுத்துக்களுடன் சார்த்தி, ஐகாரம் இகரத்தொடும் ஒளகாரம் உகரத்தொடும்சார்த்தி ஐவகை ஆக்கி, ஆதித்தன் உதயம் தொடங்கி நன்பகலின் முடிவுவரை ஓர்ஆறு ஆறாக வகுத்தவற்றுள் முன் நின்ற ஓரை மூன்றில் அகலக் கவியைப்புனைந்து இன்புறுதல் முறை. அகலக்கவியின் முதலெழுத்துஉயிர்மெய்யாயினும் அதன்கண் உயிரே கொள்ளப்படும். ஏனைய இரண்டு ஓரையும்ஆகா என்பது.அ. ஆ – உதயம் தொடங்கி முதல் 6 நாழிகை முடிய; 1-3 நாழிகை ஏற்றன.இ ஈ ஐ 7 முதல் 12 நாழிகை முடிய; 7 – 9 நாழிகை ஏற்றன.உ ஊ ஒள 13 முதல் 18 நாழிகை முடிய; 13 – 15 நாழிகை ஏற்றன.எ ஏ 19 முதல் 24 நாழிகை முடிய; 19-21 நாழிகை ஏற்றன.ஒ ஓ 25 முதல் 30 நாழிகை முடிய; 25- 27 நாழிகை ஏற்றன.ஒவ்வொரு பகுப்பிற்கும் உரிய அவ்வாறு நாழிகைகளில் முதல் மும்மூன்றுநாழிகைகளே ஏற்றனவாம். (இ.வி. பாட். 177)

ஓரொற்று வாரம்

தாளத்தில் ஒரு மாத்திரை பெற்று வரும் இசைச்செய்யுள்.(சிலப். 3 : 136 உரை) (L)

ஓரொலி வெண்டுறை

எ-டு : ‘தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்பீலிபோல் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.’இது முதலடி ஆறு சீரும், ஏனைய இரண்டடியும் நான்கு சீரும் பெற்றுவந்த மூவடி ஓரொலி வெண்டுறை. (யா. க. 67 உரை)

ஓர் அளபு ஆகும் ஐகாரமும் ஒளகாரமும்

மொழி இடையிலும் கடையிலும் அஇ, அய் – என்பன போல ஒலிக்கும் ஐகாரம்
ஒரே மாத்திரை அளவிற்றாதலும் அருகி நிகழ்வது.
சீவக சிந்தாமணியில் (933) ‘இவையின், கவிஞர், சுவையின், அவையின்’ என
அடியெதுகையில் ஐகாரம் இகரம் போல ஒரு மாத்திரை அளவு
ஒலிப்பதைக்குறிப்பதாம். ஆயின், மொழி முதற்கண் ஐகாரம் சுருங்காது.
பிற்காலத்தில், மொழி முதல் ஐகாரம் ‘அய்’ போலவும், ஒளகாரம் ‘அவ்’
போலவும் ஒலித்தலின், வீரசோழியமும் நேமிநாதமும் ஐ – அய் எனவும், ஒள –
அவ் எனவும் ஒலிக்கும் என்றன. அதனால் அந்த ஐ, ஒள – ஒன்றரை மாத்திரை
ஒலிக்கும். அவை அவ்வாறு ஒலித்தல் மொழிமுதற்கண்ணாம்.
‘கௌவை, வெவ்வேல், அவ்வேலே’; ‘கொய்தகை, செய்யசந், கைதரு, பெய்தொளி’
– என்ற அடி முதற்சீர்களை நோக்கி, ஒள- அவ் எனவும், ஐ- அய் எனவும்
ஒலிப்பதைக் காணலாம். (பு. வெ. மா. 4 : 23; சீவக. 1267)
தொல்காப்பியனார்க்கு ஒளகாரக்குறுக்கம் உடன்பாடன்று. (எ. ஆ. பக்.
63, 64)

ஓர் அளபு இசைத்தல்

ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலித்தல். அ இ உ எ ஒ – என்ற குற்றுயிர்
ஐந்தும், இவை மெய்மீது பொருந்த உண்டாகும் உயிர்மெய்க்
குற்றெழுத்துக்கள் தொண்ணூறும் – ஒவ்வொன் றும் ஒரு மாத்திரை அளவிற்றாக
ஒலிப்பதாம். (தொ.எ. 3, 10 நச்.)
ஐகாரக்குறுக்கம் மொழி இடைகடைகளில் ஒருமாத்திரை அளவிற்கு ஒலிப்பது
முண்டு. குற்றுகரம் புணர்மொழியிடை முற்றியலுகரமாய் ஒருமாத்திரை
அளவிற்றாகும். (57, 409 இள.)
ஒளகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒருமாத்திரை அளவினவாக ஒலிக்கும்
என்பது நன்னூல். (98)

ஓர் இலகு முதலாக உடையவிருத்தங்களை அறிதல்

இன்ன சந்தத்தினையுடைய ஓர் இலகுடைய விருத்தம் எத்தனை? இரண்டுஇலகுடைய விருத்தம் எத்தனை? மூன்றி லகுடைய விருத்தம் எத்தனை? என்றுஇப்படி ஏற வினவி னால், சந்தத்தில் எழுத்துக்களை வீடு வகுத்து இரண்டுமூன்று நான்கு ஐந்து எனக் கீழ்நின்று மேல் மேல் நிறுத்திப் பின்னையும்இடம் நின்று வலம் நோக்கி முன் வைத்த திரள்களே ஈறாக்கி இரண்டின் வீடுஇசையவிட்டுப் பின்பு ஒவ்வொரு பந்தியினும் ஒருவீடு குறைய வகுத்துவீடுதோறும் அதன் அயல் வீட்டிலக்கங்களைத் தொகுத்து வைத்து மேல் நின்றுகீழ்நோக்கி எண்ண ஓரிலகு முதலாக உடைய விருத்தங்களாம். அவையெல்லாம்கூட்டி முழுக்குரு இலகுவை இடத் தொகையாம். (வீ. சோ. 137 உரை)‘ஏக, த்வி, ஆதி லகுக் கிரியா’ காண்க.

ஓர் உயிரான் வரும் செய்யுள்

சொல்லணியில் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய குற்றுயிர் மடக்கு அல்லதுநெட்டுயிர் மடக்கு.எ-டு : ‘அமல லகல மகல லபயகமல பவன மவள – தமலமடர வளக சலச வதனமடர மதன நட.’‘அபய! அல் அகலம் அமலல்; அகல்; மதன! கமல பவனம் அவளது அமல அடர அளகசலச வதனம் அடரல்; நட, எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் செய்யப்படும்.(சலசம் – தாமரை. ‘அடரல்’ என்பது கடைக் குறைந்து நின்றது.)“அபயனே! எங்கள் மார்பினைத் தழுவாதே இரவில் அகலுக. காமனே!தாமரையை இடமாகவுடைய திருவை ஒத்த இத் தலைவியது களங்கமற்ற செறிந்தகூந்தலையுடைய முகத்து அழகினைக் கெடுக்காதே; நீங்குக” என்று,பரத்தையிற் பிரிந்து வந்த தலைவற்குத் தோழி வாயில் மறுக்கும் கூற்றாகவந்த இப்பாடற்கண், அகரமாகிய குற்றுயிரே தனித்தும் மெய்யுடன் கூடியும்வந்தமையின் இஃது ஓருயிரான் வந்த செய்யுள் எனவும், குற்றுயிர் மடக்குஎனவும் கூறப்பெறும். (எடுத்துக்காட்டுப் பாடல் இ.வி. 689 உரைவாயிலாகத் திருத்தியமைக்கப்பட் டுள்ளது.) (தண்டி. 97 உரை)

ஓர் மயக்க வகை

மகரஈறான அஃறிணைப் பெயர்களுள் சில னகரத்தோடு உறழ்ந்து வரும்
என்பது ஓர் மயக்கவகை உணர்த்தலாம்.
எ-டு: நிலம் – நிலன்.
மொழி முதலிலும் இடையிலும் நின்ற அகர ஐகாரங்கள் தம்மில்
வேறுபாடின்றிச் சகர ஞகர யகரங்களின் முன் வரின் ஒக்கும் என்பதும் அது.
எ-டு : பசல் – பைசல்; மஞ்சு – மைஞ்சு; மயல் – மையல்; அரசு – அரைசு;
இலஞ்சி – இலைஞ்சி; அரயர் – அரையர்.
ஐகாரம் யகரம் என்ற இவற்றின்வழியே வரும் நகரத்துடன் ஞகரம் உறழும்
என்பாருமுளர்.
எ-டு : ஐந்நூறு – ஐஞ்ஞூறு; மெய்ந் நன்று – மெய்ஞ் ஞன்று (நன்.
121 – 123 மயிலை.)

ஓலை முகப்பாசுரம்

கடிதத் தொடக்கத் தெழுதும் வணக்கம். (சிலப். 13 : 67 உரை)(L)

ஓலைத் தூக்கு

சீட்டுக் கவியாகிய ஓலைப்பாசுரம். (நன். 53). ‘ஓலைப் பாயிரம்’(தொ.பொ. 461, பேரா.) என்பதும், ஓலைத்தூக்கு என்பதும் ஓலைப்பாசுரத்தோடு ஒத்த ஒருபொருட்கிளவிகள். (நன். 53) (L)

ஓலைப்பாயிரம்

‘ஓலைப் பாசுரம்’ காண்க. ‘ஓலைப்பாயிரமும் முதலாயின வெல்லாம்’. (தொ.பொ. 461 பேரா. )

ஓவிய நூல்

ஓவியமுறை பற்றிக் கூறுவதொரு நூல். ‘ஓவியச் செந்நூல் உரைநூல்கிடக்கையும்’ (மணி. 2 : 31.) (L)