தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இது தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்துக்களில் பத்தாவது;
அங்காத்தலோடு இதழ் குவிதலான்பிறக்கும் உயிரெழுத்துக் களுள் ஒன்று;
தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தனுள் ஒன்று; ஓகார நெடிலுக்கு இனமான குறில்;
ஓகாரம் அளபெடுக்கு மிடத்து அதனை அடுத்து வருவது; நகரஒற்று ஒன்றுடனேயே
கூடி (நொ – என) மொழியிறுதியில் வருவது; முன்னிலை ஏவ லொருமை வினையாகிய
ஓ என்பது அளபெடுக்குமிடத்தும், சிறப்புப் பொருளில் வரும் ஓகாரம்
அளபெடுக்குமிடத்தும், மொழியிறுதியில் ஒகரம் அளபெடை யெழுத்தாக
நிகழும்.

ஒகர ஈற்றுப் புணர்ச்சி

முன்னிலை மொழிக்கண் வரும் ஒகரஈறு வன்கணம் வரின் மிக்குப்
புணரும்.
எ-டு : ஓஒக் கொற்றா; ஓ – ‘இங்ஙனம் செய்தலை ஒழி’ என்னும்
பொருளது. (தொ. எ. 272 நச்.)
சிறப்புப் பொருளில் வரும் ஒகரஈறு வன்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : நீயோஒ கொடியை (273 நச்.)

ஒகரம் புள்ளி பெறுதல்

‘எகரம் புள்ளி பெறுதல்’ காண்க.

ஒகரம் மொழியீறாதல்

ஒகரம் நகரமெய்யுடன் கூடியே ‘நொ’ என மொழியீறாம். அது வன்கணம்
வரினும் இயல்பாகப் புணர்தலே பெரும் பான்மை; மென்கணம் வரின் மெலி
மிகுதலும் ஆம்.
எ-டு : நொ கொற்றா – இது விட்டிசைத்தலின் வல்லெழுத்து
மிகாதாயிற்று.
நொந் நாகா, நொம் மாடா – என மெல்லெழுத்து மிக்கும்
நொ நாகா, நொ மாடா – என விட்டிசைத்து இயல்பாகவும் வரும்.
நச்சினார்க்கினியர் நொக் கொற்றா என வல்லெழுத்து மிகும் என்றார்.
ஓரெழுத்தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க என்றார்
அவர். (தொ. எ. 151 நச்.)
ஓ என்ற முன்னிலை ஏவல்வினை, வருமொழி வன்கணம் வந்தவிடத்து அளபெடுத்து
வல்லெழுத்து மிக்கு முடியும்வழி, ஒகரம் நிலைமொழி யீற்றில் வரும். (272
நச்.)
எ-டு : ஓஒக் கொற்றா
சிறப்புப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் அளபெடுத்து வருமொழி
வன்கணம் வரினும் இயல்பாக முடியும். (273 நச்.)
எ-டு : யானோஒ கொடியன்

ஒடு என்ற மரப்பெயர் புணருமாறு

ஒடு என்ற மரப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், உதி என்ற
மரப்பெயர் போல, வருமொழி வன்கணம் வரின் ஒத்த மெல்லெழுத்து இடையே மிக்கு
முடியும்.
எ-டு : ஒடுங்கோடு, ஒடுஞ்செதிள், ஒடுந்தோல்,
ஒடும்பூ
சிறுபான்மை ஒடுவங்கோடு – என, அம்முச்சாரியை இடையே பெறுதலும் உண்டு.
(தொ. எ. 262 நச். உரை)

ஒட்டிய ஒற்று இடை மிகுதல்

ஒட்டிய ஒற்றாவது நிலைமொழி ஈற்றெழுத்தை ஒட்டி வருமொழி முதலில் வரும்
உயிர்மெய்எழுத்தின்கண் உள்ள மெய்யெழுத்து.
நிலைமொழியாகும் அ இ உ – என்ற மூன்று சுட்டிடைச் சொற்களும் வருமொழி
மென்கணத்தொடு புணரும்வழித் தமக்குப் பொருந்திய ஒற்றுக்களாக வருமொழி
முதற்கண் வரும் ஒற்றுக்கள் மிக்குப் புணர்தல்.
எ-டு : அஞ்ஞாண், அந்நூல், அம்மணி – தொ.எ. 205 நச்.
இஞ்ஞாண், இந்நூல், இம்மணி – தொ.எ.238 நச்.
உஞ்ஞாண், உந்நூல், உம்மணி – 256 நச்.

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கு

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்காவது சொற்கள் சாரியை பெறுதற்கு ஏற்ற
மொழியமைப்பாம். ஆகவே எல்லாச் சொற்களும் சாரியை பெறுதல் வேண்டும் என்ற
வரையறை இன்று. மேலும் இன்ன இன்ன சொற்கள் இன்ன இன்ன சாரியை பெறுதல்
வேண்டும் என்ற வரையறையும் உண்டு. இவ்வரை யறை சான்றோர் வழக்கும்,
சான்றோர் செய்யுளும் நோக்கிக் கொள்ளப்பட்டதாம்.
நிலா என்பது அத்துச்சாரியை பெறும் என்ற விதியை (எ. 228 நச்.),
(வருமொழி பெயராய் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி ஆகியவிடத்து) ஒட்டுதற்கு
ஒழுகிய வழக்கு அன்மையின், நிலாக்கதிர் – நிலாமுற்றம் – என்பன
பெறாவாயின. (தொ.எ. 132 நச்.)

ஒட்டுப்பெயர்

பல சொற்கள் ஒட்டி நின்று ஒரு பெயரைக் குறிக்க வருவது
ஒட்டுப்பெயராம். பகாப்பதம் இரண்டு முதல் ஏழெழுத்து ஈறாகவும், பகுபதம்
இரண்டு முதல் ஒன்பது எழுத்து ஈறாகவும் தொடரும். ஆனால் கங்கை கொண்ட
சோழபுரம், இரத நூபுரச்சக்கரவாளம் (சூளா. இரத.12.), பாண்டியன் பல்
யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – என்றல் தொடக்கத்து ஒட்டுப்பெயர்க்கு
வரையறை இல்லை என்க.(நன். 129 மயிலை.)

ஒத்த ஒற்று மிகல்

வருமொழி முதலில் க ச த ப – என்ற எழுத்துக்கள் வரின்,
அவ்வொற்றுக்களே நிலைமொழி வருமொழிகளுக்கு இடையே மிகுதல்.
எ-டு : விளக்குறிது, விளச்சிறிது, விளத்தீது,
விளப்பெரிது
எனவே, நிலைமொழியீறும் வருமொழி வல்லினமுதலும் புணரும்வழி, இடையே
வரும் வல்லொற்று வருமொழி முதலில் வரும் வல்லொற்றேயாம். அவை இயைபு
வல்லெழுத்து எனப்படும். (தொ. எ. 203 நச்.)

ஒத்த குற்றெழுத்து

உயிர்நெடில்களுக்கு இனமாக வரும் அவ்வக் குற்றெழுத் துக்கள்.
ஆகாரத்துக்கு அகரமும், ஈகாரத்துக்கு இகரமும், ஊகாரத்துக்கு உகரமும்,
ஏகாரத்துக்கு எகரமும், ஓகாரத் துக்கு ஒகரமும் ஒத்த
குற்றெழுத்துக்களாம். ஐகாரத்துக்கு இகரமும், ஒளகாரத்துக்கு உகரமும்
அளபெடையாய் இசை நிறைக்கும் ஒத்த குற்றெழுத்துக்கள். (தொ. எ. 41, 42
நச்.)

ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா

பாடல் முழுதும் ஒரே அடிஎதுகை பெற்றுவரும் பஃறொடை. வெண்பா. ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா என்பதும் அது.எ-டு : ‘சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்வேற்றுமை இன்றியே ஒத்தன மாஅடர்ஆற்றுக்கா லாட்டியர் கண்’இப்பாடல் 5 அடியும் ஓரடி எதுகை பெற்று ஒரே விகற்பமாய் வந்தவாறு.(யா. க. 62 உரை)

ஒத்தாழிசை ஆவது

ஒத்த தாழிசை ஒத்தாழிசை ஆயிற்று. ஒருபொருள்மேல் அடுக்கி மூன்றாகவரின் ஒத்தாழிசையாம். தழுவு இசை தாழிசையாயிற்று. முடுகுதலும்விட்டிசைத்தலுமின்றிச் சீரொடு சீர் தழுவிச் செல்லும் இசை தாழிசையாம்.அஃது ஈண்டுக் கலியுறுப்பாகிய செய்யுட் பகுதியைக் குறித்தது. (தொ. செய். 115 ச. பால.)

ஒத்தாழிசை முதலிய முறை வைப்பு

ஒத்தாழிசை – ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள். (ஒத்து தாழ்இசை என்பது ஒத்தாழிசை ஆயிற்று.) தாழிசை என்பது தானுடைய துள்ளல்ஓசைத்து. தாழ்தல் துள்ளல் என்னும் பொருளது. தரவு ஓசை சிறிதுவேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம் முதலியவற்றுள்இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடைய அன்றியும் வரலாம். ஆயின், தாழிசைக்குப்பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்று அடுக்கி வருதலானும்,ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்தலானும் தாழிசை என்ற பெயர் தலைமையும்பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக் கலிப்பாவுக்குத் தரவு மிகத்துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டு மூன்றடுக்கி வருதலின்ஒத்தாழிசை எனப்பட் டது. சீர்வகைக் கலியுள் தரவு மிகத் துள்ளிவரத்தாழிசை ஓசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர்வருதலும், கொச்சகத்தின் தாழிசை‘நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப்புனைமாண் மரீஇய அம்பு தெரிதீயே’ (கலி. 7)எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும்.தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும், சிறப்புடைமை யானும்ஒத்தாழிசைக்கலி முதலிற் கூறப்பட்டது. கலித் தொகை 150 கலியுள்ளும்ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது என்ப. இதற்கும் கொச்சகத்திற்கும் இடையேகலிவெண் பாட்டுக் கூறியது, அதுவும் இவை போல உறுப்புக்களையுடைத்தாகியும் வரும் என்றற்கு. தரவும் போக்கும் சிறுபான்மையின்றியும் வருதலின், கொச்சகம் அதன்பின் வைக்கப்பட் டது. அடக்கியல்இன்றியும் அடி நிமிர்ந்தும் ஒழுகிசை யின்றியும் வருதலே பெரும்பான்மையாகலின், உறழ்கலி ஈற்றில் வைக்கப்பட்டது. (68 என்ற எண்ணிக்கை சிலகுறைந்தே காணப்படுகிறது.) (தொ. செய். 130 நச்., பேரா.)

ஒத்தாழிசைக் கலிப்பா இருவகை

ஒத்தாழிசைக் கலிப்பா அகநிலை ஒத்தாழிசைக் கலிப்பா எனவும்,தேவர்களை முன்னிலைப்படுத்திப் பரவும் செய்தி யது ஆகிய தேவபாணி எனவும்இருவகைப்படும். (தொ. செய். 131 நச்.)

ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகைகள்

நேரிசை ஒத்தாழிசைக்கலி, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி, வண்ணகஒத்தாழிசைக் கலி என்பன. (யா. க. 80)

ஒத்தாழிசைக் கலியின் விரி

1. வெள்ளைச்சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா 2. அகவல்சுரிதகநேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 3. அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா. 4. அளவழி அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. 5. அளவியல் வண்ணகஒத்தா ழிசைக் கலிப்பா. 6. அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்பன.(யா. க. 82, 83, 84 உரை)

ஒத்தாழிசைக்கலியின் நேரிசை அமைப்பு

முதலில் எடுத்தல் ஓசையான் அமையும் தரவு என்ற உறுப் பினைப் பெற்று,அடுத்துத் தாழ்ந்த ஒசையவாய்த் தரவினை ஒத்தும் தரவினைவிடச்சுருங்கியும் வரும் அடிகளையுடைய தாழிசை மூன்று அடுக்கப் பெற்று,அடுத்துத் தனிச்சொல் பெற்று, இறுதியில் நலிதல் ஓசையையுடைத்தாய்த்தரவினை ஒத்தோ அதனிற் சுருங்கியோ, அருகிச் சிறிது மிக்கோ வரும்அடிகளையுடைய ஆசிரியச்சுரிதகத்தாலோ வெள்ளைச் சுரிதகத்தாலோ அகப்பொருள்பற்றியதாய் அமைவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. (யா. க. 82 உரை)

ஒத்து மூன்றாதல்

பொருளும் அளவும் தம்முள் ஒத்து மூன்றாய் வருதல். இது தேவபாணிக்கண்வரும் தாழிசையின் இலக்கணமாம்.(தொ. செய். 142 நச்.)

ஒன் சாரியை

ஓகார ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் ஒரோவழி ஒன்சாரியை
பெறும். ஒன்சாரியை பிற்காலத்து ‘ன்’ சாரியை ஆயிற்று.
எ-டு : கோ+ ஒன் + கை = கோஒன்கை – (தொ.எ.294 நச்.)
கோ+ ஒன் + ஐ = கோஒனை (180 நச்.)

ஒன்பதாம் திருமுறையாப்பு

இருபத்தெட்டுத் திருப்பதிகங்களையுடைய திருஇசைப்பா வும்,சேந்தனாரின் திருப்பல்லாண்டுமாக அமைந்தது ஒன்பதாம் திருமுறை.திருமாளிகைத் தேவரின் ‘உறவாகிய’, எனும் கோயிற் பதிகம் பன்னிரண்டுஆசிரியத் துறையால் அமைந்தது. திருஆலிஅமுதனாரின் பாதாதிகேசம் ஏறக்குறைய ஆசிரியத் துறை அமைப்பினையுடைய யாப்பிற்று. திருவாலியமுதனாரின்‘பவளமால் வரை’ எனும் கோயில் பதிகப்பாடல் அறுசீர் எழுசீரடிகள் விரவியதுபோன்ற அமைப்பிற்று. சேதிராயரின் கோயில்பதிகப் பாடல் சில ஈற்றடியில்முச்சீர் பெற்றுப் பொதுக் கலிவிருத்தயாப்பின் மாறுபட்டன. இவையெல்லாம்இசை முதன்மைக் காரணம் பற்றிப் புகுந்த யாப்புச் சிதைவுகள் ஆதல்கூடும். பிற வேறுபடாத யாப்பின. (இலக்கணத். முன். பக். 88)

ஒன்பது ‘நூறு’ என்பதனொடு புணர்தல்

ஒன்பது என்பதன் ஒகரத்தொடு தகரம் சேர, (‘பது’ கெட) னகரம் ளகரமாகி
இரட்ட, வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆகத் திரியத் தொள்ளாயிரம்- என
முடியும்.
ஒன்பது + நூறு
> தொன்பது + நூறு
> தொன்+ நூறு
>
தொள்ள் + நூறு
> தொள்ள் +ஆயிரம் =
தொள்ளாயிரம்
(தொ. எ. 463 நச்.)

ஒன்பது ‘பஃது’ என்பதனொடு புணர்தல்

நிலைமொழி ஒன்பது;வருமொழி பஃது. நிலைமொழி ஒகரத்தொடு தகரஒற்றுச் சேர
(நிலைமொழி ‘பது’ கெட), னகரம் ணகரமாகி இரட்ட, வருமொழியின்கண் ஆய்தமும்
பகரமும் கெட, ஊகாரம் வரத் துகரம் றுகரமாகத் திரிய, நிலைமொழி
ணகரத்தின்மேல் ஊகாரம் ஏறி முடியத் தொண்ணூறு ஆகும்.
ஒன்பது+ பஃது
> தொன்பது+ பஃது
> தொன்+ பஃது
> தொண்ண் + பஃது
> தொண்ண்+ ஊறு= தொண்ணூறு.
(தொ. எ. 445. நச்.)

ஒன்பது வகை விருத்தம்

வில்விருத்தம், வாள்விருத்தம், வேல்விருத்தம், செங்கோல் விருத்தம்,யானைவிருத்தம், குதிரைவிருத்தம், நாட்டுவிருத் தம், ஊர்விருத்தம்,கொடைவிருத்தம் என்பன. இவை ஒவ்வொன்றும் அகவல் விருத்தம் பத்தால்பாடப்பெறும். (இ. வி. பாட். 93; பன்.பாட். 290)

ஒன்பது விகாரமும் திரிபுமூன்றில் அடங்குதல்

விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்ட லும்
குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்துக் குறைதலும்
கெடுதலாகவும் அடக்கி ஒன்பது செய்யுள் விகாரமும் திரிபு மூன்றென
அமையும் என்பது. (இ.வி. 58)
செய்யுளிடத்து அல்வழி வேற்றுமையால் வரும் மூன்று விகாரமும்
வலித்தல் முதலிய ஒன்பது விகாரமும் வருதலால் வேறுபாடு அறிவதற்கும்,
விரித்தல் தோன்றல் விகாரமாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்டலும்
குறுக்கலும் திரிதலாக வும், தொகுத்தலும் மூவழிக்குறைதலும்
கெடுதலாகவும், இந்த மூவகையுள் அவ்வொன்பது வகை விகாரங்களும் அடங்கும்
என்பது அறிவித்தற்கும், செய்யுட்கேயுரிய ஒன்பது விகாரங் களையும்
புணர்ச்சி விகாரங்களொடு கூறினார். (நன். 156 இராமா.)

ஒன்பது, வருமொழியொடு புணருமாறு

ஒன்பது இன்சாரியை பெற்று வருமொழிகளொடு புணரும். இன்சாரியை ‘இற்று’
எனத் திரிந்து புணர்தலுமுண்டு.
ஒன்பதின் கலம், ஒன்பதிற்றுக் கலம், ஒன்பதின் சாடி, ஒன்பதிற்றுச்
சாடி முதலாக அளவுப்பெயரும், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதிற்றுக் கழஞ்சு,
ஒன்பதின் தொடி, ஒன்பதிற்றுத் தொடி – முதலாக நிறைப்பெயரும்,
ஒன்பதினாயிரம், ஒன் பதிற்றுக்கோடி – முதலாக எண்ணுப்பெயரும் என இவற்
றொடு நிலைமொழி ‘ஒன்பது’ புணர்ந்தவாறு. (தொ. எ. 459, 470 நச்.)
ஒன்பதினாழி என்புழி, வருமொழி நகரம் வருவழி, இன்சாரியையின் னகரம்
கெட, வருமொழி நகரம் னகரமாகத் திரிந்து புணரும். (459 நச்.)
ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு = தொள் ளாயிரம்; ஒன்பது
+ ஆயிரம் = ஒன்பதினாயிரம், ஒன்பது + கழஞ்சு, கலம் = ஒன்பதின்கழஞ்சு,
ஒன்பதின் கலம்; ஒன்பது + ஒன்று, இரண்டு, குருணி = ஒன்பதிற்றொன்று,
ஒன்பதிற் றிரண்டு, ஒன்பதிற்றுக் குருணி – என வரும்.
ஒன்பது+ பத்து : வருமொழி பத்து ‘நூறு’ஆம்;ஒகரத்தொடு தகரமெய்
பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும்; னகரம் ணகரமாகத் திரியும்.
ஒன்பது + பத்து
> ஒன்பது + நூறு
> தொன்பது + நூறு
> தொண் + நூறு =
தொண்ணூறு.
ஒன்பது + நூறு : வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆம். ஒகரத்தொடு தகர
மெய்பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும் : னகரம் ளகரமாகத்
திரியும். ஒன்பது + நூறு
> ஒன்பது + ஆயிரம்
> தொன்பது + ஆயிரம்
> தொன் + ஆயிரம்
> தொள் + ஆயிரம் =
தொள்ளாயிரம்.
ஒன்பது, எண் நிறை அளவுப்பெயர்களும் பிறபெயரும் வரு மொழியாக
நிகழுமிடத்து, இன் இற்று – என்ற சாரியையுள் ஏற்பதொன்று இடையே வரப்
புணரும். எடுத்துக்காட்டு மேலே குறிக்கப்பட்டுள்ளமை காண்க. (நன். 194,
197)

ஒன்பதுவகை இசைப்பா

சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை,பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்பனவாம் ஒன்பதுவகைஇசைப்பாக்கள். (பொ.நிக. 773)

ஒன்பதுவகை மயக்கம்

உயிரோடு உயிர், உயிரொடு மெய், உயிரோடு உயிர்மெய், மெய்யொடு மெய்,
மெய்யோடு உயிர், மெய்யோடு உயிர்மெய், உயிர்மெய்யோடு உயிர்மெய்,
உயிர்மெய்யோடு உயிர், உயிர் மெய்யொடு மெய் – என்பன ஒன்பது வகை
மயக்கங்களாம். இவற்றுள் மெய், அடுத்துவரும் தனிமெய்யுடனோ, அடுத்து
வரும் உயிர்மெய்யிலுள்ள மெய்யுடனோ மயங்கும் மயக்கமே சிறந்தமையின்,
இலக்கண ஆசிரியர்களால் அதுவே விளக்கப் பட்டது.
எ-டு: பா
ர்த்தார் – தனிமெய்யொடு தனிமெய்;
யா
த்தார் – தனிமெய்யோடு உயிர்மெய்
(தொ.எ.22 நச். உரை)

ஒன்பதெழுத்தடி வெண்பா

எ-டு : ‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள .’ (குறள் 222)

ஒன்றனை ஒன்று பற்றுதல்

இது வடமொழியில் இதரேதராச்ரயம் என்னும் குற்றமாம்; அந்யோந்யாச்ரயம்
எனவும் பெயர் பெறும். இதனைத் தடுமாற்றம் எனவும் கூறுப.
இடனும் பற்றுக்கோடும் சார்ந்து உகரம் குறுகும் எனவும், இடனும்
பற்றுக்கோடும் குற்றியலுகரத்துக்குச் சார்பாக வரும் எனவும் கூறுதல்
ஒன்றனை ஒன்று பற்றுதலாம். (சூ. வி. பக். 50)
வினைமுற்றுச் சொல் பெயராயவாற்றால் ஓசை வேறுபடும் எனவும், ஓசை
வேறுபட்ட காரணத்தான் வினைமுற்றுச் சொல் பெயராம் எனவும் கூறுதலும்
‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்றும் குற்றமாம். (சூ. வி. பக். 54)
குற்றியலிகரம் என்னும் குறியீட்டால் நாகு+ யாது = நாகியாது – என்று
புணர்ச்சிவிதி கூறி, அங்ஙனம் செய்கை செய்த பின்னர் அவ்வெழுத்தைக்
குற்றியலிகரம் என்று கூறுவது ‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்னும்
குற்றமாம் எனின், ஆகாது. நாகு+யாது=நாகியாது – என்று புணர்ந்தவழி,
அப்புணர்ச்சி வழு என்று காணலுற்றுழி, ‘யகரம் வருவழி இகரம் குறுகும்’
என்னும்சூத்திரம் வழாநிலை உணர்த்த வந்ததல்லாது, முன் இல்லாத
குற்றியலிகரத்தை விதிக்க வந்ததன்று ஆதலின், இங்ஙனம் கோடற்கண் ‘ஒன்றனை
ஒன்று பற்றுதல்’ என்ற குற்றமில்லை. (சூ. வி. பக். 20, 21)

ஒன்றாத வஞ்சித்தளை

வஞ்சியுரிச்சீரின் முன் நேரசை முதலாகிய சீர் வருமிடத்து நிகழும்தளை – நிரை முன் நேர் வருதலின் ஒன்றாதாயிற்று.எ-டு : `வான்பொய்ப்பினு தான்பொய்யா’(ப ட். 5)(யா. கா. 10 உரை.)

ஒன்றிய வஞ்சித்தளை

வஞ்சியுரிச்சீரின் முன்பு நிரை முதலாகிய சீர் வருமிடத்து நிகழும்தளை; அஃதாவது கனிமுன் நிரை வரும் தளை.எ-டு : வசையில்புகழ் வயங்குவெண்மீன் (யா. கா. 10)

ஒன்று முதலான எண்கள் இரட்டுமாறு

ஒன்று முதல் பத்து ஈறான எண்களுள் ஒன்பது ஒன்றும் நீங்கலான ஒன்பது
எண்ணுப்பெயர்களும் இரட்டுமாயின் (நிலைமொழி எண்ணுப்பெயரே
வருமொழியாகவும் நிகழுமாயின்), நிலைமொழியின் முதலெழுத்து நீங்கலாகப்
பிறவெல்லாம் கெடும். வருமொழி முதலில் உயிர் வருமாயின் வகரமெய்யும்,
மெய்வருமாயின் அவ்வந்த மெய்யும் இடையே மிகப்பெறும். (நிலைமொழி நெடில்
முதல் குறுகும் என்க.)
வருமாறு : ஒன்று+ ஒன்று
> ஒ + ஒன்று
> ஒ + வ் + ஒன்று =
ஒவ்வொன்று; மூன்று + மூன்று
> மு + மூன்று
> மு+ம்+மூன்று =
மும்மூன்று. பிறவும் இவ்வாறே இவ்விரண்டு, நந்நான்கு, ஐவைந்து,
அவ்வாறு, எவ் வேழு, எவ்வெட்டு, பப்பத்து – என முடியு மாறு கொள்க.
(நன். 199)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்களோடு ஆயிரம் புணருமாறு

ஒராயிரம், ஓராயிரம், இராயிரம், ஈராயிரம் : ஒரு, இரு – என்பன உகரம்
கெட்டும் முதலெழுத்து உள்ளபடியும் நீண்டும் புணரும். (தொ. எ. 464, 465
நச்.)
மூவாயிரம், முவ்வாயிரம் – மூன்றன் னகரம் வகரமாக, முதலெழுத்து
உள்ளபடியும் குறுகியும் புணரும். (466 நச்.)
நாலாயிரம் – நான்கன் னகரம் லகர ஒற்று ஆகும். (467 நச்.)
ஐயாயிரம் – ஐந்தன் நகரம் யகரமாகும். (468 நச்.)
ஆறாயிரம், அறாயிரம்

உகரம், வருமொழி ஆ ஏறி
முடிந்தும், முதல் ஆகாரம் குறுகியவழிக் கெட்டும் புணரும். (469
நச்.)
ஏழாயிரம், எழாயிரம் – ‘ஏழ்’ இயல்பாகியும் நெடில் குறுகி யும்
புணரும். (392, 391 நச்.)
எண்ணாயிரம் – எட்டு ‘எண்’ ஆகி ணகரஒற்று இரட்டிப் புணரும். (444,
160 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நூறு என்ற நிலைமொழியொடு புணர்தல்

நூறு என்பது நூற்றொன்று நூற்றிரண்டு, நூற்றுமூன்று, நூற் றெட்டு,
நூற்றுப்பத்து, நூற்றுக்கோடி, நூற்றுத் தொண்ணூறு, நூற்றுக்குறை,
நூற்றிதழ்த் தாமரை, நூற்றுக்காணம், நூற்றுக் கால் மண்டபம்- என இனஒற்று
மிக்கு, வன்கணமாயின் வருமொழி வல்லெழுத்து மிக்குப் புணரும். (தொ. எ.
472. நச்.)
நூற்றொருபஃது, நூற்றிருபஃது, நூற்றெண்பது – என ஆண்டும் ஈற்றின்
இனஒற்று இடையே மிக்குப் புணரும். நூற்றுக்கலம், நூற்றுக்கழஞ்சு –
முதலாயினவும் அன்ன. (473, 474 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நூறு என்ற வருமொழியொடு புணர்தல்

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்களின் (ஏழ் நீங்கலாக உள்ளவை) ஈற்றுக்
குற்றுகரம் மெய்யொடும் கெட்டு, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி,
ஒன்று இரண்டு – என்பன ஒரு இரு – என்றாகி, மூன்றன் ஒற்று நகரமாக,
நான்கும் ஐந்தும் ஒற்றுநிலை திரியாவாகப் புணரும்.
வருமாறு : ஒரு நூறு, இரு நூறு, முந்நூறு, நானூறு, ஐந்நூறு,
அறுநூறு, எண்ணூறு. (தொ. எ. 460- 462 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் பஃதொடு புணர்ந்து உருபேற்றல்

ஒன்று +பஃது+ ஆன் + ஐ
ஒன்று என்பதனொடு பத்து என்பது புணர்ந்து ஒருபஃது என்றாகும்.
இவ்வாறே இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது (எழுபஃது) எண்பஃது
– என்பனவும் ஆம்.
ஒருபஃது முதலியன உருபுகளொடு புணரும்வழி, பஃது என்பதன்கண் உள்ள பகர
ஒற்று நீங்கலான ஏனைய கெட, ஆன்சாரியை பெற்று ஒருப்+ஆன்= ஒருபான்-
என்றாகி, ஒருபானை – ஒருபானால் – ஒருபாற்கு- ஒருபானின் – ஒருபானது –
ஒருபான்கண்- என உருபேற்கும். இங்ஙனமே இருபானை, இருபானால்….
முதலாயினவும் கொள்க. (தொ. எ. 199 நச்.)

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் முன் ‘பத்து’ புணர்தல்

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் நிலைமொழியாக நிற்க, வருமொழியாகப்
பத்து என்ற எண்ணுப்பெயர் வருமிடத்து, வருமொழி இடையொற்று நீங்கிப்
‘பது’ எனவும் அஃது ஆய்தமாகத் திரியப் ‘பஃது’ எனவும் அமைந்து
புணரும்.
வருமாறு : ஒன்று + பத்து = ஒருபது, ஒருபஃது
எட்டு + பத்து = எண்பது, எண்பஃது (நன்.195)
நிலைமொழி திரிதல் ‘எண்ணுப்பெயர்களுக்குச் சிறப்புவிதி’ என்பதன்கண்
காண்க.

ஒன்று முன்னர் உயிரும் யாவும் வந்து புணருமாறு

வருமொழி முதலில் உயிரோ, யா என்ற உயிர்மெய்யோ வரு மிடத்து,
நிலைமொழியாகிய ‘ஒன்று’என்பது ‘ஒரு’ என்று திரிந்த நிலையை நீக்கி ‘ஓர்’
என்றாகி,
ஓரகல், ஓராடு, ஓரிலை, ஓரீ, ஓருரல், ஓரூசல், ஓரெருது, ஓரேணி,
ஓரையம், ஓரொழுங்கு, ஓரோடம், ஓரௌவியம், ஓர்யானை – எனவரும். ஈரடை,
ஈர்யானை, மூவசை, மூயானை – எனச் செய்யுட்கண் வருதலும்
கொள்ளப்படும்.
(வருமொழி அஃறிணையாயவழியே இம்முடிபு கொள்க.)
ஒன்று முதலிய எண்ணுப்பெயர்கள் அஃறிணையாம். எண்ணியற் பெயரே
உயர்திணையாம். (தொ. எ. 479 நச். உரை)

ஒயில்கும்மி

ஒயில் எனப்பட்ட ஒருவகைக் கூத்து ஒயிலாட்டம் எனவும் பெறும்.அக்கூத்துடன் பாடும் கும்மிப்பாட்டும் கூடியது ஒயில் கும்மியாம்.கும்மி என்பது பெண்கள் ஆட்டம் எனினும், ஒயில் கும்மி ஆடவர்க்கேஉரியது. யாதேனும் ஒரு பழங்கதை அல்லது வரலாறு பற்றி இசையுடன் இளைஞர்கள் இரவு முழுவதும் இக்கூத்தினைப் பாடியாடும் வழக்கம்தமிழ்நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது. தைப் பொங்கல்நாளில்இக்கூத்துச் சிறப்புற இடம்பெறும். இருவரிசையாக ஒத்த எண்ணிக்கையில்இளைஞர்கள் தலைப்பாகை முதலிய கோலத்துடன் கைக்குட்டை ஏந்திய வாறேபாடியாடுவர். வள்ளியம்மை ஒயில்கும்மி, சிறுத் தொண்டர் ஒயில்கும்மிஎனப் பலவுள. பாட்டின் சந்தம் வேறுபடுமிடத்து ஆட்டமும் வேறுபடும்.நாடோடிக் கூத்துக்களில் ஒயில்கும்மி சிறந்ததொன்று.

ஒரீஇத் தொடுத்தல்

பிறிதொன்றனை அவாவாமல் அறுத்துச் செய்வது. இஃது யாப்புப் போலப்பொருள் நோக்காது ஓசையைக் கோடலா னும் அடியிறந்து கோடலானும்யாப்பெனப்படாது.ஒரீஇத் தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால்தொடுத்தல் என்பாரும் உளர். செந் தொடையும் தொடையாகலான் அதுபொருந்தாது.எ-டு : ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறநா. 235)இதன்கண், வேறொரு சொற்றொடரை எதிர்பாராமல் அந்த அடியிலேயே பொருள்நிரம்பியிருத்தல் காண்க. இஃது ஒரூஉ வண்ணத்தின் இலக்கணம். (தொ. செய்.227 நச்.)

ஒரு தொடை

அடியிரண்டு இயைந்தவழித் தொடை அமைதலின் ஒரு தொடை என்பதுஈரடிப்பாவினைக் குறிக்கும்.(யா. க. 59 உரை.)

ஒரு புணர்ச்சிக்கண் முத்திரிபும் வருதல்

மகத்தாற் கொண்டான் – மக(ம்)+ அத்து+ ஆன்+ கொண்டான்;
இப்புணர்ச்சிக்கண், அத்தும் ஆனும் மிகுதல்; அத்தின் அகரம் கெடுதல்;
ஆன் சாரியையின் னகர ஒற்று றகர ஒற்றாக மெய் பிறிது ஆதல்.
இவ்வாறு ஒரு புணர்ச்சிக்கண்ணேயே, மெய்பிறிதாதல் – மிகுதல் –
குன்றல் – என்ற முத்திரிபுகளும் வந்தன. (தொ. எ. 109 நச்.)
எ-டு : யhனை + கோடு = யானைக்கோடு – வலி மிகல்; நிலம் + பனை =
நிலப்பனை – மகரம் கெடுதல், பகரம்மிகல்; பனை + காய் = பனங்காய் – ஐ
கெடுதல், ‘அம்’மிகல், அம்மின் மகரம் ஙகரமாகத் திரிதல். இவ்வாறு ஒரு
புணர்ச்சியில் இரண்டு மூன்று விகாரமும் வருதல் காண்க. (நன்.
157)

ஒரு போகு : பொருள்

ஒருபோகு என்பது காரணப் பெயர். போகு : ஒரு வகை நீட்சிஎனப்பொருள்படும். (உரி. 19) ஒருபோகின் இருவகையான கொச்சக ஒரு போகும்அம்போதரங்க ஒரு போகும் என்ற இவை முறையே 20 அடிகளும் 60 அடிகளுமாய்நிறைந்து நீண்டு வருதலின் ‘ஒருபோகு’ எனப்பட்டன. (தொ. செய். 148 ச.பால)

ஒரு முற்றிரட்டை

ஒரே முற்றெதுகையாக ஈரடிகள் அமையும் தொடை. (இரு முற்றிரட்டை என்றஉரையால் இவ்வாறு அனுமானம் செய்து கொள்ளப்பட்டது.)‘அ டி யிற் கொ டி யன ம டி புனம் வி டி யல்து டி யிற் க டி யது கொ டி ச்சி ம டி யுளம்’என ஈரடியும் ஒரு முற்றெதுகையாகவே வந்தவாறு.(யா. க. 51 உரை)

ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல்வெண்பா

மூன்றடிகளும் ஒர் எதுகையைப் பெற்றும், இரண்டாம் அடியின் இறுதிதனிச்சீர் பெற்றும் வரும் சிந்தியல் வெண்பா.எ-டு : ‘அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்துசிறந்தார்க்குச் செவ்வன் உரைக்கும் – சிறந்தார்சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.’மூவடிகளும் ஓரெதுகையாய் அமைந்து இரண்டாமடி இறுதி தனிச்சொல் பெற்றுவந்தவாறு. (யா. க. 59 உரை)

ஒருசாரார் கூறும் தொடை விகற்பங்கள்

கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என்பன ஒருசாராரால்கொள்ளப்படுவன. இவர்கட்கும் இயைபுத் தொடை ஈற்றிலிருந்தேகணக்கிடப்படும்.அடிதோறும் இறுதிச்சீர் (மோனை முதலியவற்றால்) ஒன்றி வருவது கடை;ஓரடியில், இறுதியிரண்டு சீர்கள் அவற்றால் ஒன்றிவருவது கடையிணை;இரண்டாம் நான்காம் சீர்கள் ஒன்றிவருவது பின்; முதற்சீர் நீங்கலாக ஏனையமூன்றும் ஒன்றிவருவது கடைக்கூழை; 2, 3 ஆம் சீர்கள் ஒன்றிவருவதுஇடைப்புணர். இத்தொடை விகற்பம் அளவடிக்கண்ணேயே கொள்ளப்படும். (யா.க.39)

ஒருசிறை நிலை

ஒரு பாட்டின் பொருள் ஒருவழியாக நிற்பது; யாப்பருங்கல விருத்தியுரை(பக். 393) கூறும் பொருள்கோள். சிங்கநோக்குத் தாப்பிசைப்பொருள்கோளிலும், தேரைப்பாய்த்துச் சுண்ண மொழிமாற்றுப் பொருள்கோளினும்,பாசிநீக்கமும் ஒருசிறை நிலையும் புனல்யாற்றுப் பொருள்கோளிலும்அடங்கும்.ஒருசிறை நிலையாவது ஒருபாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்பது (இறை. அ. 56. உரை)எ-டு : ‘கோடல் மலர்ந்து குரு(கு)இலை தோன்றின; கொன்றைசெம்பொன்பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்றஆடல் நெடுங்கொடித் தேரரி கேசரி அந்தண்பொன்னிநாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே!’கோடல் மலர்தல், குருக்கத்தி தளிர் ஈனல், கொன்றை பூத்தல் என்பனதலைவன்தேர் மீண்டு வருதலுக்குரிய கார்காலத் தைச் சுட்டுதலாகியஒரேபொருள் பற்றி அமைந்தமையின், இப் பாட்டிலுள்ள பொருள்கோள்ஒருசிறைநிலையாம். (இறை. அ. 56 உரை; யா. வி. பக். 393)

ஒருசெய்யுளகத்து நாலந்தாதியும்வருதல்

எழுத்து அசை சீர் அடி என்ற நான்கும் பற்றியும் அந்தாதி வருமாயின்,அவை முறையே எழுத்தந்தாதி சீர்அந்தாதி அசையந்தாதி அடிஅந்தாதி எனப்பெயர் பெறும். (ஓரடியின் இறுதி எழுத்தோ இறுதி அசையோ இறுதிச்சீரோ அடிமுழுதுமோ அடுத்த அடியின் முதலெழுத்தாகவோ முதலசை யாகவோ முதற்சீராகவோஅடுத்த அடியாகவோ வருவது அந்தாதியாம்.)எ-டு : ‘ நாவே உரனுறு நலமிகு முதற் பொருள் பொரு ளுரை ஆய்தரின் புகலுமற் றுளதே உளதே வண்டிமிர் உறுமலர் ஓடை ஓடை மால்வரை மூலமென் றுரைசெய ஓடை மால்வரை மூலமென் றுரைb சய உரை விசைத்(து) அடங்கா ஒல்லையில் குறுகு பு பு னிற்றா எனஅருள் புரிந்திடர் செகுத்தஅறைபுனல் அரங்கத்(து) அமுதினை அன்றியு ம் ம தித்தொரு முதலையே மகிழ்ந் து து திப்பதும் உளதோ சுரர்பெரு நாவே ’நாவே என முதலும் இறுதியும் மண்டலித்து வந்தவாறு. இப்பாடலுள்இரண்டாமடி அசைஅந்தாதி; மூன்றுநான்கா மடிகள் சீர்அந்தாதி; ஐந்தாமடிஅடிஅந்தாதி; ஆறாமடி அசையந்தாதி; ஏழாம்அடி எழுத்தந்தாதி; பிறவும் அன்ன.நான்கு அந்தாதியும் இச்செய்யுளகத்தே வந்தன. (மா. அ. பாடல் 65)

ஒருதுறைக் கோவை

அகப்பொருள் துறை ஏதேனும் ஒன்று பற்றிப் பல கட்டளைக் கலித்துறைப்பாடல்களால் இயற்றப்படுவதொரு பிரபந்தம் இது. பொன்னாங்கால்அமிர்தகவிராயர் என்பார் ‘நாணிக்- கண் புதைத்தல்’ என்னும் அகப்பொருட்கிளவிபட, தளவாய் இரகுநாத சேதுபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 400கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஒரு துறைக்கோவை பாடியுள்ளார்.கவிராயர்காலம் 17ஆம் நூற்றாண்டு. அக்கோவையுள் 311-399 வரையுள்ள 89பாடல்கள் கிடைத்தில. ‘நாணிக் கண்புதைத்தல்’ என்னும் இத் துறைப்படவே,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘திராவிடக் கவிமணி’ முத்துசாமி ஐயர்என்னும் பெரும் புலவர் ‘திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை’ 133 பாடல்களால்பாடியுள்ளார். ‘நாணிப் புறங்காட்டல்’ ஒருதுறைக்கோவை 100 பாடல்களால்சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில், வரகவி மு.கணபதியாப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டு அச்சிடப்பெற்று வெளியாகியது.மற்றும், வெறிவிலக்கல் – பாலனைப் பழித்தல் – முதலிய துறைப்படவும்19ஆம் நூற் றாண்டில் பாடப்பட்ட ஒரு துறைக்கோவைப் பிரபந்தங்கள் சிலவுள.பாடல் எண்ணிக்கை வரையறையின்றி இப்பிரபந்தம் அமைவதுபோலும்.மேற்போக்காக நோக்கின் ஒரு புறப்பொருள் துறையும், கூர்த்து நோக்கின்அகப்பொருட்கிளவி ஒன்றும் சிலேடை வகையால் தோன்றப் பாடல்கள் அமையும்இப்பிரபந்தம் பாடுதல் பெரும்புலமை வித்தகர்க்கே இயல்வதொன்று. ஆதலின்கோவைப் பிரபந்தம் பலவாகக் காணப்படுதல் போல, இவ்வொருதுறைக் கோவைப்பிரபந்தம் பல்கிக் காணப்படுவதில்லை.

ஒருபஃது முதலியவற்றின் முன் ஏனைய எண்கள்

ஒருபஃது முதலாய எட்டு எண்கள் நிலைமொழியாக நிற்ப, வரு மொழியாகஒன்று
முதல் ஒன்பது எண்களும் அவை யூர்ந்த பிறபெயரும் வருமாயின்,
நிலைமொழியின் ஆய்தம் கெடத் தகர ஒற்று அங்கு வரும்.
வருமாறு : ஒருபஃது + ஒன்று
> ஒருபத்து + ஒன்று = ஒருபத்
தொன்று; எண்பஃது + ஒன்பது
>எண்பத்து + ஒன்பது =
எண்பத்தொன்பது; இருபஃது + மூன்று கலம்
> இருபத்து + மூன்றுகலம் =
இருபத்து மூன்றுகலம்.
ஒருபது முதலியவற்றுக்கும் இப்புணர்ச்சி ஒக்கும்.
ஒருபது + ஒன்று = ஒருபத்தொன்று – எனவரும். (நன். 196)

ஒருபஃது முதலியவை உருபேற்கும்போது அடையும் திரிபுகள்

ஒருபஃது முதலியன உருபேற்குமிடத்து இடையே ஆன் சாரியை வர, பஃது
என்பதன் பகர ஒற்று நீங்கலாக ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை பெற்று,
ஒருபானை, இருபானை, முப்பானை, நாற்பானை, ஐம்பானை, அறுபானை, எழு பானை,
எண்பானை – என முடியும். (தொ.எ.199 நச்.)
பொதுவிதியான் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும் மரபை ஒட்டி, ஒருபஃது +
அன் + ஐ = ஒருபஃதனை…… எண்பஃதனை என முடிதலுமுண்டு. ( 199 நச்.
உரை)
ஒன்பஃது என்பதும் பஃது என முடியும் சொல்லாதலின், அதுவும் ஒன்பானை,
ஒன்பஃதனை – என்று உருபேற்கும் முடிவு கொள்ளும். ( 199 நச். உரை)

ஒருபஃது முதலியவை நிறை அளவுப் பெயர்களொடு புணருமாறு

ஒருபஃது முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருவழி,
ஒருபதின்கழஞ்சு, ஒருபதின்கலம், ஒருபதிற்றுக்கழஞ்சு, ஒருபதிற்றுக்கலம்-
என ‘இன்’ பெற்றும் இன் ‘இற்று’ ஆகியும் புணரும்.
இம்முடிபை ஒருபஃது முதல் எண்பஃது முடியவும் கொள்க.
எண்பதின்கலம், எண்பதிற்றுக்கலம் – எனப் புணர்க்க.
வருமொழி பொருட்பெயராயவழியும் பதிற்றுவேலி, பதிற்றுத் தொடி- என்றாற்
போல முடிவனவும் கொள்க. (தொ. எ. 436 நச்.)
உயிர் வருவழிப் பதிற்றகல், பதிற்றுழக்கு – என இன் ‘இற்று’ ஆகும்
என்க. (121 நச். உரை)

ஒருபது முதலியவை உருபொடு புணர்தல்

ஒருபது, இருபது….. எண்பது – என்னும் எட்டு எண்கள் நிலை மொழியாக
நிற்க, உருபு வந்து புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வருதலுமுண்டு;
வாராமையுமுண்டு. அது வருமிடத்து நிலைமொழியில் ‘பது’ என்பதன்கண் பகர
ஒற்று நீங்கலாகப் பிற கெடும். ஒன்பது என்ற நிலைமொழிக்கும் இது
பொருந்தும். ஒருபஃது இருபஃது…. ஒன்பஃது – என ஆய்தம் பெறினும்
இவ்விதி பொருந்தும்.
எ-டு: ஒருபது, ஒருபஃது+ ஐ
> ஒருப் + ஆன் + ஐ = ஒரு
பானை; ஒன்பது, ஒன்பஃது +ஐ
> ஒன்ப் + ஆன்+ ஐ = ஒன்பானை.
ஒருபது, ஒருபஃது + ஐ = ஒருபதை, ஒரு பஃதை; ஒன்பது, ஒன்பஃது + ஐ =
ஒன்பதை, ஒன் பஃதை எனச் சாரியை பெறாது; முடிந்தன. (நன்.249)

ஒருபா ஒருபஃது

அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவினால்பத்துப்பாடல் அந்தாதித்தொடையுறப் பாடப்படும் பிரபந்தவகை. (இ. வி.பாட். 63)திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 10 அகவல்களால் ஆகியது.

ஒருபொருட்பாட்டு

கவி தான் எடுத்துக்கொண்ட ஒரு செய்தியினையே வருணித்துப் பாடும்பாட்டாகிய சித்திரகவி வகை. (யா. வி. பக். 542)ஒன்றனையே துணித்துப் பாடுதல் (வீ. சோ. 181 உரை)துணித்துக் கூறலாவது வேறொன்றனொடு கலவாது தனியாகப் பிரித்துஎடுத்துக்கொண்டு கூறுதல் என்னும் கருத்துடையது.ஆகவே வருணித்துக் கூறுதலும், துணித்துப் பாடுதலும் ஆகிய இரண்டும்ஒரே பொருளன.எ-டு : ‘நெடுநல்வாடை 1-72 அடிகள்.இவ்வடிகளில் கூதிர்க்கால வருணனை வந்து இவ்வகைப் படுமாறு காண்க.

ஒருபொருள் இரட்டை

நாற்சீரடி முழுதும் ஒருசீரே பொருள்வேறுபாடு இன்றி நான்குமுறைஅடுக்கி வருவது.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்குளக்கொட்டிப் பூவின் நிறம்.’இதன்கண், முதலடி நாற்சீரிலும் ஒக்குமே என்றற்கு ஒத்திருக் கும்என்பதே பொருள். (யா. க. 51 உரை)

ஒருபொருள் நுதலுதல்

ஒரு பொருளையே கருதி வாராநிற்றல். கலிவெண்பாக்கள் பெரும்பாலும்ஒருதுறைப் பொருளை உட்கொண்டு பாடப் பெற்றனவாம். (தொ. செய். 153நச்.)சூத்திரத்தில் ஒரு செய்தியே கூறப்படல் வேண்டும். ஒன்றுக்குமேற்பட்ட செய்திகள் ஒரே சூத்திரத்தில் கூறப்பெறின் வாக்கிய பேதம் என்றகுற்றம் நிகழும். ‘ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்’ (தொ. செய். 168நச்.) என்றல் காண்க.

ஒருபோகின் இருவகை

ஒரு போகு, கொச்சக ஒருபோகு அம்போதரங்க ஒருபோகு என இருவகைப்படும்.இவற்றை ஒருபோகு என்ற பெயரின்றிக் கொச்சகம், அம்போதரங்கம் என்றுவழங்குதலும் உண்டு. (தொல். செய். 147, 148 நச்.)

ஒருபோகு

ஒத்தாழிசைக் கலியின் இரண்டு பெரிய பிரிவுகளாகிய அகநிலை ஒத்தாழிசை -தேவபாணி – என்ற இரண்டனுள், தேவபாணியின் இரு பிரிவுகளுள் (அவை வண்ணகஒத் தாழிசையும், ஒருபோகும் ஆம்) ஒன்று.ஒன்றாகிய போக்கினையுடையது எனப் பண்புத்தொகை அன்மொழித்தொகையாயிற்று.நடுவே வரப்பு முதலிய தடங்கல் இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல,நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத் தரவு தாழிசை பேரெண் அளவெண் சிற்றெண்சுரிதகம் எனப் பல உறுப்பு வேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல்,பெரும்பா லும் எடுத்தல் படுத்தல் நலிதல் அற்ற ஒரேவகை ஓசையொடு வருதலின்‘ஒரு போகு’ எனப்பட்டது.ஒன்றாகிய போக்கினை உடைத்து என்பதற்கு ஓர் உறுப்பு நீங்கியது என்றுபொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்புநீங்கியது; வண்ணக ஒருபோகு என்பது எண் உறுப்பு நீங்கியது. வண்ணகஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதாயினும் ஒன்று இல்லாமல் வருவதுஒருபோகு ஆயிற்று.திரிகோட்ட வேணி என்பது கொம்புபோல முறுக்கிய மயிர் முடியைக்குறியாது அதனையுடையவளைக் குறிப்பது போல, ஒரு போகு என்பது போகிய ஓர்உறுப்பினைக் குறியாது அதனையுடைய பாவினைக் குறித்தது.ஆதலின் ஓர் உறுப்பினை இழந்து வரும் தேவபாணியின் பகுதி ஒருபோகுஆகும். இஃது இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால் கொச்சக ஒரு போகு,அம்போதரங்க ஒரு போகு என இரு வகைப்படும். (தொ. செய். 147 நச்.)

ஒருபோகு தேவபாணி

தேவபாணியின் இருவகையுள் ஒன்று. தேவபாணி முன் னிலைக் கண்ணதேயாம்.தெய்வம் தானே மனித வடிவில் ஆவேசமுற்று “நின்னைப் புரப்பேன்“ என்றுகூறும் உலக வழக்கம் புலனெறிக்கு ஏலாது. இக்கலியின்கண் தாழிசை பெய்துபாடின் தேவபாணி ஆகாது. ‘ஆறறி அந்தணர்க்கு’ (கலி. 1) என்றகடவுள்வாழ்த்து தேவபாணி அன்றாயினமை நச்சினார்க்கினியர் உரையால்அறியப்படும்.ஒன்றாகிய போக்கினை யுடையது ‘ஒரு போகு’ எனப் பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாயிற்று. நடுவே வரப்பு முதலிய தடங்கல்இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல, நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத்தரவு தாழிசை பேரெண் அளவெண் கடையெண் சிற்றெண் சுரிதகம் எனப் பல உறுப்புவேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல், பெரும்பாலும் எடுத்தல்படுத்தல் நலிதல் அற்ற ஒருவகை ஓசையொடு வருதலின் இப்பாட்டும் ஒரு போகுஎனப்பட்டது.ஒன்றாகிய போக்கினையுடையது என்றற்கு ஓருறுப்பு நீங்கி யது என்றுபொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்புநீங்கியது; அம்போதரங்க ஒருபோகு என்பது எண் என்ற உறுப்பு நீங்கியது.அம்போத ரங்க ஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதானும் ஒன்றுஇல்லாமல் வருவது ‘ஒருபோகு’ ஆயிற்று. இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால்கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு எனப் பெயர் பெறும்.(தொ. செய்.138, 139, 147 நச்.)

ஒருமுதல் நிரல்நிறை

நிறுத்த முறையே முழுதும் சொல்லாது முதலிலுள்ள ஒன்றனையே சொல்லிநிறுத்துவது; நிரல்நிறைப் பொருள் கோள் வகையுள் ஒன்று.எ-டு : ‘மீனாடு தண்டேறு வேதியர் ஆதியாஆனாத ஐந்தொன்பான் ஆயினவும் – தேனார்விரைக்கமல வாள்முகத்தாய் வெள்ளை முதலாஉரைத்தனவும் இவ்வாறே ஒட்டு’‘வெள்ளை முதலா’ என வெண்பா ஒன்றனையே சுட்டி, ஏனையவற்றை ‘முதலா’என்பதனால் கொள்ள வைத்தமை ஒரு முதல் நிரல்நிறையாம்.மீன் – வெண்பா ; ஆடு – ஆசிரியப்பா; தண்டு (- துலாம்) – கலிப்பா;ஏறு – வஞ்சிப்பா.வெண்பாவின் இராசிகள் – கடகம், விருச்சிகம், மீனம்ஆசிரியப்பா இராசிகள் – மேடம் , சிங்கம், தனுசுகலிப்பாவின் இராசிகள் – மிதுனம், துலாம் , கும்பம்வஞ்சிப்பாவின் இராசிகள் – இடபம் , கன்னி, மகரம்(இ. வி. பாட். 122)வெண்பா முதலியவற்றிற்குரிய இராசிகள் அனைத்தையும் சொல்லாது, முறையேவெண்பா முதலிய நாற்பாவிற்கும் ஒவ்வொன்றே குறித்தமையின் ஒருமுதல்நிரல்நிறை எனினும் ஆம். (யா. வி. பக். 385)

ஒருமொழி இலக்கணம்

‘ஆசிரியர் தொல்காப்பியனார்
ஒருமொழி இலக்கணம் கூறாமை
’ காண்க.

ஒருவிகற்ப இன்னிசைச்சிந்தியல்வெண்பா

இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச்சொல் இன்றி மூன் றடித்தாய் ஓர்அடிஎதுகை பெற்று வரும் இன்னிசை வெண்பா.எ-டு : ‘நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரிபறநாட்டுப் பெண்டிர் அடி.’ (யா. க. 59 உரை)இது மூன்றடியும் ஓர் எதுகையே பெறுதலின் ஒரு விகற்பம்.

ஒருவிகற்ப இன்னிசைவெண்பா

இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெறாது நான்கடியும் ஓர் எதுகைபெற்றுவரும் இன்னிசை வெண்பா.எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;அகடுற யார்மாட்டும் நில்லாது, செல்வம்சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2)இது நான்கடியும் ஓர் எதுகை பெறுதலின் ஒரு விகற்பம்.` (யா. க.61)

ஒருவிகற்ப ஈராசிடை நேரிசைவெண்பா

நான்கடிகளும் ஓர்எதுகையாய் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர்அசைச்சீராம் தன்மை நீங்கி நான்காம் சீரொடு பொருந்து தற்கு ஏற்பப்பின்னும் ஈரசை பெற்று வரும் நேரிசை வெண்பா.எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன்வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன்; – வஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்;வஞ்சியாய் வஞ்சியார் கோ.’இப்பாடல் முழுதும் ஓர் அடிஎதுகை ஆதலின் ஒரு விகற்பம்;இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘வாய்’ என அசைச்சீராக அமையாது நான்காம்சீரோடு இணைதற்கு ஏற்ப நேர்ந் தேன் என ஈரசை பின்னும் பெற்றமை ஈராசிடை பெற்றதாம். (யா. க. 60உரை)

ஒருவிகற்ப ஓராசிடை நேரிசைவெண்பா

நான்கடிகளும் ஓரடிஎதுகை பெற, இரண்டாம் அடியின்3 ஆம் சீர் குறள்வெண்பாவின் ஈற்றசைச்சீர் போல இராது நாலாம்சீருடன் இணைக்கப்படுதற் கேற்ப ஓரசை இடையே இணையும்நேரிசைவெண்பா.எ-டு : ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞர் ஆயினும்காத்தோம்பித் தம்மை அடக்குப – மூத்தொறும்தீத்தொழிலே கன்றித் திரிதந்(து) எருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்.’ (நாலடி. 351)இப்பாடல் இரண்டாம் அடிக்கண் மூன்றாம்சீர், குறள் வெண்பாவாய்‘அடக்கு’ என முடிய வேண்டுவதனை ஓரசை கூட்டி ‘அடக்குப’ என நான்காம்சீர்க்கு ஏற்ப நீட்டப்பட்டது ஓராசிடை நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது.இப்பாடல் நான்கடியிலும் ஓர் அடிஎதுகைத்தாகலின் ஒரு விகற்பம்.(யா. க. 60 உரை)

ஒருவிகற்ப நேரிசைவெண்பா

நான்கடிகளும் ஓரெதுகையாய் இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்றுவரும் வெண்பா.எ-டு : ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்காத்தோம்பித் தம்மை அடக்குப – மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந்(து) எருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்.’ (நாலடி. 351)(ஆர்த்த: ரகரஒற்று ஆசுஎதுகை) (யா. க. 60 உரை)

ஒருவிகற்பக் குறள்வெண்பா

ஈரடிகளிலும் அடியெதுகை அமைய வரும் குறள் வெண்பா.எ-டு : ‘உ டை யார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்க டை யரே கல்லா தவர்.’ (குறள். 395)(யா.க. 59 உரை)

ஒருவிகற்பப் பஃறொடைவெண்பா

எல்லா அடிகளும் ஓர் அடிஎதுகையாய் வரும் பஃறொடை வெண்பா.எ-டு : ‘சே ற் றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்கூ ற் றுறழ் மொய்ம்பின் பகழி, பொருகயல்தோ ற் றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்வே ற் றுமை இன்றியே ஒத்தன மாஅடர்ஆ ற் றுக்கால் ஆட்டியர் கண்.’இஃது ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா எனவும் பெறும் அது காண்க.

ஒரூஉ நிரல்நிறை

ஓர் அளவடியில் முதலாம் நான்காம் சீர்க்கண் நிரல்நிறை அமைவது.எ-டு : ‘புரிகுழலும் பூணார் முலையாள் திருமுகமும்கொன்றையும் குன்றா(து) ஒளிசிறக்கும் திங்களும்’இவ்வடிகளில் குழல் – கொன்றை; திருமுகம் – திங்கள் எனமுதற்சீரின்கண்ணும் நான்காம் சீரின்கண்ணும் நிரல்நிறை அமைந்தவாறு.(யா. வி. பக். 387)

ஒரூஉ வண்ணம்

யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன் றனை அவாவிநிற்காதவாறு அறுத்துச் செய்வது; அவ்வாறு பொருள்கொண்டு செல்லும் சந்தம்இது.‘யானே ஈண்டை யேனே; என்நலனேஆனா நோயொடு கான லஃதே;துறைவன் தம்மூ ரானே;மறைஅலர் ஆகி மன்றத் தஃதே’ (குறுந். 97)எனவரும். (தொ. செய். 227 நச்.)ஒரூஉ வண்ணமாவது அடியடிதோறும். ஒன்றாய்த் தொடை யுடைத்தாவது. (வீ.சோ. 142 உரை)

ஒரூஉ வாய் முற்று

ஒரூஉத் தொடையும், மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்னும் இரண்டுகதுவாய்த்தொடையும் முற்றுத்தொடையும் என்பன. கதுவாய் என்பது முதல்குறைந்து ‘வாய்’ என நின்றது, கண்ணாடி ‘ஆடி’ என நிற்பது போல. (யா.க. 60உரை)

ஒரூஉத் தொடை

நாற்சீரடிகளாகிய அளவடிகளில் முதற்சீரை அடுத்து இருசீர் இடைவிட்டுமுதற்சீரும் நான்காம் சீரும் மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்றவிகற்பத்தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை ஒரூஉத் தொடை யாம்.இயைபு ஈற்றுச்சீரையே முதற்சீராகக் கொண்டு கணக் கிடப்படும். நடுஇருசீர்க்கண்ணும் இன்றி முதற்சீர் நான்காம் சீர்க்கண் அமையும் தொடைஒரூஉத் தொடை என்பது.எ-டு : ‘ பு யல்வீற் றிருந்த காமர் பு றவில்’ – ஒரூஉ மோனை‘ப ரி யல் யாவதும் பைந்தொடி அ ரி வை’ – ஒரூஉ எதுகை.‘கு று ங்கால் ஞாழல் கொங்குசேர் b நடு ஞ்சினை’ – ஒரூஉ முரண்‘பல் லே முத்தம் புருவம் வில் லே’ – ஒரூ இயைபு‘வ ழாஅ நெஞ்சிற்றம் தெய்வம் தொ ழாஅ’ – ஒரூஉ அளபெடை.(யா. க. 44 உரை.)

ஒற்றளபெடை

ங்ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஃ – என்னும் பதினொரு புள்ளியும்
குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுக்கும், என்னை?
‘வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழித்தாங்கு
அல்மெய் ஆய்தமோடு அளபெழும் ஒரோவழி’
என்ப வாகலின்.
வரலாறு : மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு,
மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், வெல்ல்க, கொள்ள்க, எஃஃகு – இவை
குறிற்கீழ் அள பெழுந்தன.
அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, மருந்ந்து, அரும்ம்பு,
முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு –
இவை குறிலிணைக்கீழ் அளபெழுந்தன. (நேமி. எழுத். 3 உரை)
செய்யுட்கண் ஓசையை நிறைப்பதற்கு ங ஞ ண ந ம ன வ ய ல ள – என்ற பத்து
மெய்யெழுத்துக்களும் ஆய்தமும், குறில்கீழும் குறிலிணைக்கீழும், மொழி
யிடையினும் இறுதியிலும் தம் மாத்திரையின் மிக்கு ஒருமாத்திரையாக
ஒலிப்பது ஒற்றள பெடையாம். அவ் வொற்று அளபெடுத்தமை தோன்ற அதுவே அடுத்து
வரிவடிவில் அறிகுறியாக எழுதப்படும்.
எ-டு :
‘நங்ங் களங்கறுப்பாம் நாம்’
‘இலங்ங்கு வெண்பிறைசூ டீசன் அடியார்க்கு’
‘வெஃஃகு வார்க்கில்லை வீடு’
‘இலஃஃகு முத்தின் இனம்’
பதினொரு புள்ளியெழுத்துக்களும் குறில்கீழும் குறிலிணக் கீழும்
சொல்லின் இடையும் இறுதியுமாகிய நான்கிடத்தும் அளபெடுப்பவே, வரும்
ஒற்றளபெடை 44 ஆகும். ஆய்தம் மொழியிடைக் கணன்றி வாராமையின், இறுதிக்கண்
இரண்டு நிலைகளையும் அதற்கு நீக்க ஒற்றளபெடை 42ஆம். (நன். 92)

ஒற்றளபெடை சார்பெழுத்தாதல்

ஒரு மாத்திரையாய் அலகு பெறுதலானும் பிறவாற்றானும் ஒற்றளபெடை
சார்பெழுத்து என, ஒற்றின் வேறாயிற்று. (இ.வி. 20 உரை)

ஒற்றளபெடை தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக் கூறப்படாமை

ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின், எழுத்ததிகாரத்துக் கூறப்படாமல்,
பொருளதிகாரத்துச் செய்யுளியலில் கூறப் பட்டது. (ஆயின் ‘ஒற்றிசை நீடல்’
(எ.33 நச்.) என எழுத்ததி காரத்தில் அது சுட்டப்பட்டுள்ளது) (தொ. எ. 6
நச். உரை)

ஒற்று அளபெடுக்குமாறு

ஒற்றெழுத்து அளபெடுத்து நிற்பினும் உயிரளபெடை போல அசைநிலைபெறுதலும் பெறாமையும் ஆம்.எ-டு : ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’‘அம்ம் பவள்ள் வரிநெடுங்கண்’‘விலஃஃகி வீங்கிருள் ஓட்டுமே’கண்ண் அம்ம், பவள்ள்-என்பவை தேமாவாகவும் புளிமா வாகவும், விலஃஃகி -என்பது ‘புலி செல் வாய்’ ஆகவும் அசைநிலை எய்தின.தண்ண்ணென – என்பது இன்னோசைத்தாய் நின்றதன்றி அலகு பெற்றதன்று.அலகிடின் ‘மாசெல்சுரம் என்றாகி அகவல்ஓசை பிழைக்கும். (தொ. செய். 18 ச.பால.)

ஒற்று அளபெடைச்சீர்

ங்ஞ்ண் ந்ம்ண் வ்ய்ல்ள் என்ற ஒற்றுக்களும் ஆய்தமும் குறிற்கீழும்குறிலிணைக்கீழும் அளபெடுக்கும்.எ-டு : ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’‘கண்ண்’ என்பதன்கண் ஒற்றளபெடை சீர்நிலை யெய்த, அச்சீர் தேமாவாயிற்று ‘சுஃஃ றென்னும்’ என்புழி, ஆய்தம் அளபெடுத்துச் சீர்நிலைஎய்திற்று.தண்மையின் மிகுதி கூறத் ‘தண்ண்ணென’ என்றமைத்த அளபெடை அலகுபெறின்,அச்சீர் தேமாங்கனி ஆகிவிடும். அஃது ஆசிரிய அடிக்குச் சிறப்பின்றுஆதலின் ‘தண்ண் ணென’ என்புழி ஒற்றளபெடை அசைநிலையதாகவே, அச்சீர் கூவிளம்என்ற இயற்சீர் ஆயிற்று.வழக்கிற்கும் செய்யுட்கும் உறுப்பாய் நின்றன அளபெடுத் தலும்,தோற்றிக்கொண்டன அளபெடுத்தலும் என ஒற்றள பெடை இருவகைத்து.சுள்ள்ளென்றது, புள்ள்ளென்றது, நள்ள்ளென்றது, கிண்ண் ணென்றது – இவைவழக்கிற்கும் செய்யுட்கும் உரிய.‘கண்ண் தண்ண்ணெனக் க ண்டும் கேட்டும்’ – இது போல்வன செய்யுட்கே உரிய.‘பனாட்டு’ என்பதன்கண் அளபெடைஎழுத்து, வரும் எழுத் துடன் கூடி‘பனாஅட்டு’ என நிரை நேர்பு ஆகும். ஆயின், ஒற்றளபெடையாகிய ‘குரங்ங்கு’என்பதன்கண் சீர்நிலை எய்தின ஒற்றளபெடை எழுத்து நிரை நேர் நேர் எனநிற்குமே யன்றி, வரும் எழுத்துடன் கூடி நிரை நேர்பு ஆகாது. சீர்நிலைபெறாதவழி, ‘குரங்ங்கு’ என்பது நிரைபு என்ற அசையின் நிலையிலேயேஇருக்கும்.செய்யுளில் ஓசை குறையுமிடத்து ஒற்றுக்களை விரித்துக் கொள்ளலாம்என்ற விதிப்படி, ‘அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன’ (சீவக. 1997) என ஒற்று விரிக்கப்பெறும். அதற்கும் வாய்ப்பில்லாதஇடத்தே ஒற்றளபெடை கொள்ளப்படும்.ஒற்றளபெடை அலகு பெறாது நிற்றல் சிறுபான்மை; அலகு பெறுதலேபெரும்பான்மை. (தொ. செய். 18 நச்.)

ஒற்று இசை நீடல்

மெய்யெழுத்துக்கள் தமக்குரிய அரைமாத்திரையின் நீண் டொலித்தல்.
ஒற்றுக்கள் இசைநூலின்படி பதினொரு மாத்திரையளவு நீண்டிசைக்கும் என்ப.
ஒற்றுக்கள் நீண் டொலிக்குமிடத்து ஒற்றளபெடை என்று பெயர் பெறும். ஓர்
ஒற்று ஒலி நீளும்போது அடுத்து எழுதப்படும் அதே ஒற்று ஒற்றளபெடை
எழுத்தாகும். (தொ. எ. 33 நச்.)

ஒற்றுதலும் வருடுதலும்

ஒற்றுதல் தட்டுதல் எனவும் அழுத்தித் தடவுதல் எனவும் பொருள் பெறும்.
வருடுதல் மெல்லத் தடவுதல் என்று பொருள் பெறும்.
நாநுனி மேல்நோக்கிச் சென்று மேல்வாயை ஒற்றுதலால் ற ன -வும், நாநுனி
மேல்நோக்கிச் சென்று மேல்வாயை வருடுத லால் ர ழ – வும் பிறக்கும்.
எனவே, வருடுதலால் இடைநிகரான ஒலியும், ஒற்றுதலால் அழுத்தமான ஒலியும்
பிறக்கும் என்பது. (ற ன ர ழ: மெய்யெழுத்தைக் குறிப்பன.) (தொ. எ. 94,
95 நச்.)

ஒற்றுப் பெயர்த்தல்

மிறைக் கவிகளுள் ஒற்றை மாற்றுதல் – ஒற்றைப் பிரித்தல். ஒருமொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படுவனவற்றை வேறு பொருள்பட, ஒற்றைப்பெயர்த்தலால் பாடுவது. இஃது ஓரளவு சிலேடையும் அமையும்.எ-டு : ‘வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்துமண்குளிரச் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்கொங்கார் அலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்கங்கா புரமாளி கை.’கங்காபுரம் ஆளி கை – கங்காபுரத்தை ஆள்கின்ற சோழனின் கைகள். அவன்தரும் பெருங்கொடை காரணமாக அக்கைகள் கார்மேகத்தைத் தோற்பித்துக்கற்பகமரத்துடன் போட்டி யிட்டுப் பொருது உலகினை அருள்செய்துமகிழ்விக்கும்.கங்காபுரத்து மாளிகைகள் மேகத்தையும் கடந்து வானரைவி தங்கள்உச்சியில் கற்பக மரங்களைத் தங்கச்செய்து தங்கள் பெரும்பரப்பால்உலகிற்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்றன. இவ்வாறு ‘கங்காபுரமாளிகை’என்ற தொடர்மொழி பிரிக்கப் பட் டுள்ளமை ஒற்றுப் பெயர்த்தலாம். (தண்டி.98 உரை.)ஒரு மொழியைப் பாட்டின் இறுதியில் வைத்துப் பிறிது பொருள் பயக்கப்பாடுவது ஒற்றுப் பெயர்த்தல். (யா. வி. பக். 541)ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒருமொழியைப் பாடி நிறுத்திவைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவதும், பலபெயர் கூட்ட ஒருபொருள் வரப்பாடுவதும் என இரண்டு வகைப்படும். (வீ. சோ. 181 உரை)இதன் இரண்டாம் வகையை ஏனைய அணிநூல்கள் வினா உத்தரத்துள் அடக்கும்(மா. அ. 280; மு.வீ. சொல்லணி. 15); இது தண்டியலங்காரத்தும்இலக்கணவிளக்க அணியிய லுள்ளும் ஒற்றுப் பெயர்த்தலை அடுத்துக்கூறப்படுவது. ‘வினா உத்தரம்’ காண்க.

ஒற்றெழுத்தில்லாப் பாடல்

எ-டு : ‘நுமது புனலி லளியி வரிவையமுத விதழி னிகலு – குமுதமருவி நறவு பருக வளருமுருவ முடைய துரை.’‘அளி! நுமது புனலில் இ(வ்)வரிவை அமுத இதழின் இகலு(ம்) குமுதம்மருவி நறவு பருக வளரும் உருவம் உடையது உரை’ என்று பொருள்செய்யப்படும்.“வண்டே! நீ பழகும் குளங்களில் இப் பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள்போலத் தோற்றம் அளிக்கும் குமுத மலர்களில் ஒருமுறை மருவித் தேனைநுகர்ந்த பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மையுடைய மலர்கள் உளவாயின்கூறு” என்று தலைவன் தலைவியது நலம் பாராட்டிய இப் பாடற்கண்,ஒற்றெழுத்து ஏதுமில்லாது எல்லாம் உயிர் மெய்யெழுத்தாக இருத்தல்காணப்படும். (தண்டி. 97 உரை)

ஒலி எழுத்து

நால்வகை எழுத்துக்களுள் ஒன்று; பறவை எழுப்பும். ஒலிபோலச்செவிக்குப் புலப்பட வருவது. (யா. வி. பக். 577)

ஒலி ஐந்தெழுத்தாதல்

உயிர், மெய், சார்பெழுத்து (குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம்ஆகிய) மூன்று, ஆக ஐந்தெழுத்தாம் (யா. வி. பக். 46)

ஒலிஅந்தாதி (1)

பல சந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாகிய முப்பது எண்ணால்அந்தாதித் தொடையாக அமையும் பிரபந்தமாம்.(இ. வி. பாட். 64)ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பலசந்தவகுப்புக்கள் அந்தாதியாக 30 செய்யுள் பாடுவது. ‘ஒலியலந்தாதி’ என்பதும்அது. (வெண்பாப். செய். 13)16 கலை ஓரடியாக வைத்து இங்ஙனம் நாலடிக்கு 64 கலைவகுத்துப் பலசந்தமாக வண்ணமும் கலைவைப்பும் தவறாமல் அந்தாதித்து வர 30 செய்யுள்பாடுவது; சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும்; அன்றியும்,வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத் தாகஅந்தாதித்துப் பாடுவதும் ஆம். (தொ. வி. 283 உரை)

ஒலியல் அந்தாதி

‘ஒலிஅந்தாதி’ காண்க.

ஒலைப்பாசுரம்

கடிதச் செய்தி. ‘வருக என்னுமளவும் ஓலைப்பாசுரம்’(சீவக. 2147 உரை) (L)

ஒல்வழி ஒற்று மிகுதல்

நிலைமொழிகளை அடுத்து வல்லெழுத்தை முதலாவதாகக் கொண்ட கு – கண் –
என்ற வேற்றுமையுருபுகள் புணரின், பொருந்துமிடத்து வல்லொற்றாயினும்
மெல்லொற்றாயினும் மிகும். சிறுபான்மை இயல்பாதலும், சிறுபான்மை நிலை
மொழி ஈறுதிரிதலும் உள.
எ-டு: மணிக்கு, மணிக்கண்; ஈக்கு, ஈக்கண்; தினைக்கு, தினைக்கண்;
வேய்க்கு, வேய்க்கண்; வேர்க்கு, வேர்க் கண்; வீழ்க்கு, வீழ்க்கண் –
இவை வல்லொற்றுமிக்கன. வல்லொற்று மிகும் நிலைமொழி ஈறுகள் இ, ஈ, ஐ, ய்,
ர், ழ் – என்ற ஆறாகும்.
தாம், நாம் – என்பன கண்ணுருபு வருமிடத்து, நெடுமுதல் குறுகி மகரம்
கெட்டு ஙகர மெல்லொற்று மிகுவனவாம்.
தங்கண், நங்கண் – என வரும்.
உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் கண்உருபு இயல்பாகப்
புணரும்.
எ-டு : நம்பிகண், நங்கைகண், அரசர்கண்;
தம்பிகண், தந்தைகண், தாய்கண் – என வரும்.
உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் குவ்வுருபு மிக்குப்
புணரும்.
எ-டு : நம்பிக்கு, நங்கைக்கு, அரசர்க்கு;
தம்பிக்கு, தந்தைக்கு, தாய்க்கு – என வரும்.
இங்ஙனம் கண்உருபு வருவழி இயல்பாகும் நிலைமொழி ஈறுகள் இ, ஐ, ய், ர்
– என்பன.
வேற்கு, வேற்கண்; வாட்கு, வாட்கண் – என லகர ளகர ஈறுகள்திரிந்தன.
(தொ. எ. 144 நச். உரை)

ஒள

இது நெடுங்கணக்கின்உயிர்வரிசையில் பன்னிரண்டாவ தாகிய இறுதி
யெழுத்தாம். இஃது அங்காத்தலோடு இதழ் குவிதலால் பிறக்கும்
ஐந்தெழுத்துக்களுள் ஒன்று. இஃது அளபெடுப்புழி உகரம் இசைநிறைக்க வரும்.
இஃது அள பெடுக்குங் காலத்தும் அளபெடை இன்றி வருங்காலத்தும் பொருள்
வேறுபடுதலுண்டு எனத் தொல்காப்பியம் கூறும். ‘அஉ’ என்பது ஒளகாரத்தின்
போலிவடிவாம்; ‘அவ்’ என்பதும் அது. ஒளகாரம் மொழி முதற்கண் குறுகும்
என்பர் சிலர். ‘அஉவ்’ என்பவற்றின் கூட்டம் ஒளகாரம் என்பர் சிவஞான
முனிவர் (சூ. வி. பக். 25). உயிரெழுத்துக்களுள் தனித்து இறுதியில்
வாரா எழுத்து இஃது.

ஒளகாரஈறு உருபொடு புணர்தல்

ஒளகாரஈற்றுச் சொல் இன்சாரியை பெற்று உருபேற்கும்.
எ-டு : கௌவினை, கௌவினொடு, கௌவிற்கு…. கௌவின் கண் (தொ. எ. 173
நச்.)

ஒளகாரஈறு முன்னிலைவினைக்கண் வாராமை

ஒளகாரஈறு முன்னிலை ஒருமை ஏவற்கண் வாராது. அஃது அவ்வாறு வருவதாயின்
உகரச்சாரியை பெற்றே வரும்; வன்கணம் வரின் உறழ்ந்து முடியும்.
எ-டு : கௌவு கொற்றா, வெளவு சாத்தா, வெளவு தேவா, வெளவு பூதா;
கௌவுக் கொற்றா, வெளவுச் சாத்தா…. (தொ. எ. 152 நச்.)

ஒளகாரஈற்றுப் புணர்ச்சி

ஒளகாரஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும், வருமொழி
வன்கணம் வரின் உகரப்பேறும் வல் லெழுத்தும், மென்கணம் இடைக்கணம்
வரினும் உகரப் பேறும்எய்திப் புணரும். சிறுபான்மை உருபு புணர்ச்சிக்கு
வகுத்த இன்சாரியை பெற்றும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி நிகழும்.
எ-டு : கௌவுக் கடிது, கௌவுச் சிறிது, கௌவுத் தீது, கௌவுப்
பெரிது; கௌவு ஞான்றது, நீண்டது, மாண்டது; கௌவு யாது, வலிது, – என அல்
வழிக்கண்ணும்; கௌவுக்கடுமை, கௌவுச்சிறுமை, கௌவுத்தீமை, கௌவுப்பெருமை;
கௌவுஞாற்சி, நீட்சி, மாட்சி; கௌவுயாப்பு, வலிமை; – என
வேற்றுமைக்கண்ணும் உகரம் பெற்றும், வன்கணம் வரின் வல்லெழுத்தும்
உடன்பெற்றும் புணர்ந்த வாறு. (உயிர்க்கணம் வரின் உகரம் பெறாது உடம்படு
மெய் பெற்றே முடிதல் கௌவழகிது, கௌவழகு – என இருவழியும் கொள்க.)
இனி, வேற்றுமைப் பொருட்புணர்ச்சி இன்சாரியை பெற்று, கௌவின் கடுமை,
கௌவின் ஞாற்சி, கௌவின் வலிமை, கௌவினருமை- என முடிந்தவாறும் காண்க.
(தொ. எ. 295 நச்.)

ஒளகாரக் குறுக்கம்

ஒளகாரக் குறுக்கம் வருமாறு: ஒளவை, பௌவம் – என முதற்கண் ஒளகாரம்
குறுகிற்று. இடையும் ஈறும் வந்தவழிக் கண்டுகொள்க.
‘மும்மை இடத்தும் ஐஒளவும் குறுகும்’ என எங்கும் ஒட்டிக் கொள்க.
(ஐகாரம் மொழி மூவிடத்தும் குறுகுமாறு போல, ஒளகாரமும் மொழி மூவிடத்தும்
வந்து குறுகும் என்பது நேமிநாத ஆசிரியர் கருத்து. ஒளகாரம் மொழி இடைகடை
களில் வாராமையின் அவ்விடங்களில் ஒளகாரக் குறுக்கம் இன்று என்பது
தெளிவு.) (நேமி. எழுத். 4 உரை)
‘ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்’ காண்க.

ஒளகாரக்குறுக்கம் வருதல்

‘நௌவிமான் நோக்கினார் அவ்வாய் மணிமுறுவல்வெளவாதார் கௌவை யிலர்’என ஒளகாரம் மொழிமுதல் நின்று ஒன்றரை மாத்திரை ஆயினவாறு. (யா. க. 2உரை)

ஒளகாரம் அளபெடுத்தும் அளபெடாதும் வருதல்

ஒளஒள இனிச் சாலும் – மாறுபாடு; ஒளஉ இனி வெகுளல் – போதுமானது என்ற
குறிப்பு; ஒளஉ ஒருவன் இரவலர்க்கு ஈத்தவாறு – வியப்பு (சொ. 281
சேனா.)
கௌ – ‘நினக்குக் கருத்தாயின் கைக்கொள்’ என்ற ஐயப் பொருள்; கௌஉ –
‘கைக்கொண்டேவிடு’ என்ற துணிவுப் பொருள்; வெள – ‘நினக்குக் கருத்தாயின்
கைப்பற்று’ என்ற ஐயப்பொருள்; வெளஉ – ‘கைப்பற்றியேவிடு’ என்ற துணிவுப்
பொருள். (சொ. 283 நச்.)

ஒழிந்ததன் நிலை

ஒழியிசை ஓகாரத்தின் நிலை. ஓகார இடைச்சொல் சுட்டும் பல பொருள்களில்
ஒழியிசைப் பொருளும் ஒன்று. ஏனைய ஓகாரங்களை அடுத்த நிலைமொழியீறுகள்
வருமொழி வன் கணத்தோடு இயல்பாகப் புணர்வது போலவே, ஒழியிசை ஓகாரமும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : கொளலோ கொண்டான் . (கொண்டு உய்யக்கொண் டான் அல்லன் என்பது
பொருள்.); செலலோ சென்றான் (சென்று உய்யச் சென்றான் அல்லன்.); தரலோ
தந்தான் (தந்து உய்யத் தந்தான் அல்லன்); போதலோ போந்தான் (போந்து
உய்யப் போந்தான் அல்லன்) – இவை இயல்பாகப் புணர்ந்தன. (தொ. எ. 291 நச்.
உரை)

ஒழியசை

இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறைதல் (தொ.செய். 119 இள.).தன்னை அசையென்று பகுத்துச் சொல்வதற்கேற்ற சீர்கள் வாராமையால்அசைத்தன்மை ஒழிந்து நிற்பது; இது சொற்சீரடிக்கண் வரும்.எ-டு : ‘ஒருசார்’ என்பதனொடு வேறு சீர்கள் வந்து அடிநிரப்பினால்-தான் அஃது அசையென்று பிரிக்கப்படும். அவ்வாறின்மையின் ஒழியசைஎன்றாயிற்று. 123 பேரா.வேறோர் அசையொடு கூடாது ஒழிந்து நிற்பதோர் இயலசை யாதல்.எ-டு : ‘ஒரூஉக், கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற’ கலி.88‘ஒரூஉ’ என்று நிரையசை தானே ஒழியசையாயிற்று. (123 நச்.)

ஒழுகல் வண்ண அமைப்பு

இது நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல் வருவது.(யா. வி. பக். 415)

ஒழுகிசை அகவல்

நேர் ஒன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் சிறுபான்மைஏனைய தளையும் விரவிவரும் அகவல் ஒசை.எ-டு : ‘குன்றக் குறவன் காதன் மடமகள்வரையர மகளிர் புரையும் சாயலள்ஐயள் அரும்பிய முலையள்செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.’இதன்கண் இருவகை ஆசிரியத்தளையும் இயற்சீர் வெண் டளையும் மயங்கிவந்தவாறு. (யா. க. 69 உரை.)

ஒழுகிசைச் செப்பல்

வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்துவரும் வெண்பாவின்ஒசை.எ-டு : ‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (கு. 984)இதன்கண், பிறர்தீமை என்ற வெண்சீர் சொல்லா என்ற சீருடன்ஒன்றுமிடத்து வெண்சீர் வெண்டளையும், ஏனைய சீர்கள் அடுத்த சீர்களுடன்ஒன்றுமிடத்து இயற்சீர் வெண் டளையும் வந்துள்ளன. ஆதலின் இப்பாடலின் ஓசைஒழுகிசைச் செப்பல். (யா. க. 57 உரை)

ஒழுகு வண்ணம்

ஒழுகிய ஓசையாற் செய்வது. அவ்வாறமைந்த சந்தம் இவ்வண்ணமாம்.எ-டு : ‘அம்ம வாழி தோழி காதலர்இன்னே பனிக்கும் இன்னா வாடையொடுபுன்கண் மாலை அன்பின்று நலிய…………. ………………….. ……………………………………பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே.’(தொ. செய். 226 நச்.)

ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா

பல அடிகளையுடைய பல விகற்பப் பஃறொடை வெண்பா வின் பெயர்.எ-டு : ‘வையகம் எல்லாம் கழனியாம் – வையகத்துச்செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் – செய்யகத்துவான்கரும்பே தொண்டை வளநாடு – வான்கரும்பின்சாறே அந்நாட்டுத் தலையூர்கள் – சாறட்டகட்டியே கச்சிப் புறமெல்லாம் – கட்டியுள்தானேற்ற மான சருக்கரை மாமணியேஆனேற்றான் கச்சி யகம்.’முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நீங்கலாக இடை யடிகள் அடிஎதுகைப்பட நிகழாமையின், இஃது ஒவ்வா விகற்ப மாயிற்று. (யா. க. 62உரை)