தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இஃது ஒன்பதாம் உயிரெழுத்து. அகரமும் இகரமும், அகரமும் யகரமும்
இதற்குப் போலியாக வருவன. இஃது அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலால்
பிறக்கிறது. இது விலங்கல் வளியான் தோன்றுவது என்ப.
இது, பற
வை – பறத்தலைச் செய்வது என
வினைமுதற் பொருள் விகுதியாகவும்,
தொ
டை-தொடுக்கப்படுவது எனச்
செயப்படுபொருள் விகுதியாகவும்,
பார்
வை – பார்த்தற்குக் கருவி யாவது
எனக் கருவிப்பொருள் விகுதியாகவும்,
கொ
லை – கொல்லுதலாகிய தொழில் எனத்
தொழிற்பெயர் விகுதியாகவும்,
தொல்லை – பழமைத் தன்மை எனப் பண்புப்பெயர் விகுதியாகவும்,
அவனை (ஐ) என இரண்டாம் வேற்றுமை உருபாகவும்,
சென்றனை – செல்(ன்) + ற் + அன் + ஐ என முன்னிலை ஒருமை
விகுதியாகவும்,
பண்டு – பண்டை என ஒரு சாரியையாகவும்
வியப்புப்பொருளில் வரும் உரிச்சொல்லாகவும் (‘ஐ வியப்பா கும்’ தொ.
சொ. 385 சேனா.) – எனப் பல திறமாக வருவது.
அ இ ய் – இவற்றின் சேர்க்கையால் ஐகாரம் உண்டாயிற்று என்பர் சிவஞான
முனிவர். (சூ.வி. பக். 25)

ஐ அம் பல்என வரூஉம் அல்பெயர்

ஐ, அம், பல் – என்ற ஈறுகளையுடைய அளவுப்பெயரும் நிறைப் பெயரும்
அல்லாத எண்ணுப்பெயர்கள். ஐ: தாமரை;அம்: வெள்ளம்; பல்: ஆம்பல். தாமரை –
வெள்ளம்- ஆம்பல் – என்பன தமிழில் பேரெண்கள்.
இவை வருமொழியாக, நிலைமொழி ஏழ் என்பதுநிற்பின், இயல்பாக ஏழ்தாமரை,
ஏழ்வெள்ளம், ஏழ்ஆம்பல் – எனப் புணரும். (தொ. எ. 393 நச்.)

ஐ ஒரு மாத்திரை அளவிற்றாதல்

ஐகாரம் ஒரு சொல்லின் முதல் இடைகடை என்ற மூவிடத் தும் குறுகும். அது
செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டு ஒலிக்கு மிடத்துக் குறுகுதலே
பெரும்பான்மை.
‘ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே’
‘அடைப்பையையாய் கோல்தா எனலும்’
(‘யாரை’ என்புழிப்போல ஐகாரம் அசை; ‘அடைப்பையாய்’ என்பதே விளி.)
தவளை, குவளை
என ஐகாரம் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் மொழிக் கண் குறுகிற்று.
(தொ. எ. 57 நச். உரை)
மொழிமுதற்கண் ஐகாரம் குறுகின் ஒன்றரை மாத்திரை அளவிற்று எனவும்,
இடைக்கண்ணும் இறுதிக்கண்ணும் குறுகின் ஒரு மாத்திரை அளவிற்று எனவும்
கொள்ப. (நன். 95. சிவ.) (அவிநயம்.)
மொழிமுதற்கண் ஐகாரம் குறுகாது என்றார் இளம்பூரணர்.
(தொ. எ. 57)
சிவஞானமுனிவரும் இக்கருத்தினர். (சூ. வி. பக். 31)
நச். ஓரெழுத்தொருமொழியும் குறுகும் என்றார். கை, பை- என்பன
குறுகின் கய், பய், – என ஒன்றரை மாத்திரை அளவினவாம். (தொ. எ. 57
உரை)
ஐகாரம் மொழிமுதற்கண் குறுகாது. இடையினும் இறுதி யினும் சிறுபான்மை
குறுகும். அவ்வாறு குறுகுமிடத்து ஒரு மாத்திரையளவு ஒலித்தல்
பெரும்பான்மை; ஒன்றரை மாத்திரை ஒலித்தல் சிறுபான்மை எனக் கொள்க. (எ.
ஆ. பக். 65)
ஐகாரம் ஒன்றரை மாத்திரை அளவிற்றாய்க் குறுகும் என்பது யாப்பருங்கல
உரை. நேமிநாதம் மூன்றிடத்தும் ஐகாரம் குறுகும் என்றது. வீரசோழியம்
ஐகாரம் ஒன்றரை மாத்திரை யாய்க் குறுகும் என்றது. நன்னூல் ஐகாரம்
மூவிடத்தும் குறுகும் என்றது. இலக்கண விளக்கமும் அதுவே.

ஐ ஒள மாத்திரை பற்றி வீரசோழியம் கூறுவது

நெட்டெழுத்துக்களுள் ஐகார ஒளகாரங்கள் தனித்தனி ஒன்றரை மாத்திரை
அளவின என்பது வீரசோழியம் குறிப் பிடும் புதுச்செய்தி. (அவை
சந்தியக்கரங்கள் ஆதலின் அம் மாத்திரையளவே பெறும் என்பது ஆசிரியர்
புத்த மித்திரனார் கருத்து. அவற்றைக் குறுக்கங்களாகக் கொண்டு எழுதும்
பெருந்தேவனார் உரைப்பகுதி பிழைபட்டுள்ளது.) (சந்திப். 5)

ஐ ஒளக் குறுக்கங்களின் மாத்திரை

ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒரோ வொன்று
ஒன்றரை மாத்திரை. ஒன்றரை அறிவது எற்றாலோ எனின், ‘கட’ என்புழி டகரஅகரம்
ஒருமாத்திரை ஆயவாறும், ‘கடா’ என்புழி டகரஆகாரம் இரண்டு மாத்திரை
ஆயவாறும், ‘கடை’ என்புழி டகரஐகாரம் ஒரு மாத்திரையில் ஏறி இரண்டு
மாத்திரையின் குறைந்தவாறும் கண்டுகொள்க. (நேமி. எழுத். 5 உரை)

ஐ ஒளக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் மொழி முதற்கண் ஒன்றரை மாத்திரையா யும், ஏனைய
இடங்களில் ஒரு மாத்திரையாயும், ஒளகாரக் குறுக்கம் மொழி முதற்கண்
ஒன்றரை மாத்திரையாயும் குறுகும் என்பது உய்த்துணர்ந்து கொள்க. அவ்வாறு
உய்த்துணர்ந்து கொள்ளாக்கால்,
‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவார்’
(நாலடி. 39)
எனவும்,
‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்’
(குறள் 774)
எனவும்,
‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும்’
(குறள். 169)
எனவும் வரும் இலக்கியங்களுக்கு இலக்கணம் இன்றாய் முடியும். (நன்.
95 சிவஞா.)

ஐ ஒளக் குறுக்கம்

அளபெடுத்தலும் தனியே சொல்லுதலும் என்ற இரண்டிட மும் அல்லாதவழிவரும் ஐ ஒள தம் அளவிற் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். அவை மூவிடத்தும்குறுகும்.ஐ ப்பசி : பௌ வம் – முதற்கண், ஐயும் ஒளவும் ஒன்றரை மாத்திரைபெற்றன.இ டை யன், சிறுதலை நௌ வி – இடையே ஒன்றரை மாத்திரை பெற்றன.குவ ளை : அன் னௌ – இறுதிக்கண் ஒன்றரை மாத்திரை பெற்றன.பை – கௌ – தனியே நின்றவழியும் ஒன்றரை மாத்திரை பெற்றன. (யா. க.2உரை)

ஐ ஒளக் குறுக்கம் சார்பெழுத்தாதல்

கை, பை, மை, கௌ, வெள – என்பனவும் பொருளைச் சுட்டிய வழிக் குறுகும்
எனக் கொள்க. இங்ஙனம் அளவு குறுகலானும், சீரும் தளையும் சிதையுமிடத்து
அலகு பெறாமையானும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து எனஉயிரின்
வேறாயின. (இ. வி. 21 உரை)

ஐ ஒளத் தோற்றம் பற்றி வீரசோழியம் குறிப்பது

ஐ ஒள – என்பன ஈரெழுத்தொலிச் சேர்க்கையால் ஆகிய சந்தியக்கரங்கள்.
இவை உயிர்நெடிலேயாயினும் ஒன்றரை மாத்திரையே ஒலிக்கும் என்கிறது
வீரசோழியம். (சந்திப். 3)
அகரம் வகரத்தோ டியைந்து ஒள ஆகும் போலியைத் தொல் காப்பியனார்
குறிப்பிடவில்லை. அவர்கருத்துப்படி ஐ என்பது ‘அய்’ எனப் போலிஎழுத்தாக
வரும். (தொ.எ. 56 நச்.)

ஐ நெட்டுயிர் என்பது

ஐகாரத்தை நெடில் என்று சொல்வதற்கு அதற்கு இனமான குற்றெழுத்து
இன்றேனும், நெடில் போல இரண்டு மாத்திரை அளவிற்றாய் ஒலித்தலின் அதனை
நெடிலாகவே கூறி, அதன் ஒலியமைப்பை நோக்கி ஐகாரத்துக்கு இகரத்தை இனமாகக்
கொள்ள வைத்து அளபெடை எழுத்தமைப்புக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. (தொ.
எ. 4 இள., நச். உரை)

ஐகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி

ஐகாரஈற்றுப் பெயர் எழுவாய்த்தொடர்க்கண் இயல்பாயும் உறழ்ந்தும்
புணரும்.
எ-டு : காரை குறிது – இயல்பு; தினை குறிது, தினைக்குறிது –
உறழ்ச்சி
ஐகாரஈற்றுப் பெயர் இருபெயரொட்டு ஆதற்கண் மிக்குப் புணரும்.
எ-டு : சித்திரைத்திங்கள், புலைக்கொற்றன்.
உவமத்தொகைக்கண்ணும் குவளைக்கண்- என்றாற்போல மிக்குப் புணரும். வினை
இடை உரிச் சொற்கள் பெரும் பான்மை மிக்குப் புணரும்.
எ-டு : ஒல்லைக் கொண்டான் – ஐகார ஈற்று வினைச்சொல் வல்லெழுத்து
மிக்கது; தில்லைச் சொல் – ஐகார ஈற்று இடைச்சொல் வல்லெழுத்து மிக்கது;
பணைத் தோள் – ஐகார ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கது.
எனவே, ஐகார ஈ.ற்றுச் சொற்கள் எழுவாய்த்தொடர்க்கண் பெரும்பான்மை
இயல்பாகவும், சிறுபான்மை உறழ்ந்தும், இருபெயரொட்டும் உவமத்தொகையும்
என்பனவற்றின்கண் மிக்கும், வினை இடை உரிச்சொற்களாயின் பெரும்பான்மை
மிக்கும் புணரும். (தொ. எ. 158. நச். உரை)

ஐகார ஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி

தமிழில் நாட்பெயர்கள் இகர ஐகார மகர ஈற்றன. ஐகார ஈற்று நாட்பெயர்
வருமொழியொடு புணரும்வழி ஆன்சாரியை இடையே பெறும். வன்கணம் வரின் ஆனின்
னகரம் றகரம் ஆகும்.
சித்திரை + ஆன் + கொண்டான் = சித்திரையாற் கொண்டான் – என வரும்.
சித்திரைநாளின்கண் கொண்டான் என்பது பொருள். (தொ. எ. 286, 127
நச்.)

ஐகார ஈற்று மரப்பெயர்கள் புணருமாறு

ஆவிரை, பனை, தூதுணை, வழுதுணை, தில்லை, ஓலை, தாழை – முதலியன ஈற்று
ஐகாரம் கெட்டு அம்முச்சாரியை பெற்று வருமொழியொடு புணரும்; சிறுபான்மை
உருபிற்குச் சென்ற இன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவ
துண்டு.
வருமாறு : ஆவிரை + காய்
> ஆவிர்+ அம்+ காய்= ஆவிரங்
காய்; பனை + காய்
> பன் + அம்+ காய் = பனங்
காய்; தூதுணை + காய்
> தூதுண் + அம் + காய் =
தூதுணங்காய்; வழுதுணை + காய்
> வழுதுண்+ அம் + காய் =
வழுதுணங்காய்; தில்லை + காய்
> தில்ல் + அம் + காய் =
தில்லங் காய்; ஓலை + போழ்
>ஓல் + அம் + போழ் =
ஓலம்போழ்; தாழை + காய்
> தாழ் + அம் + காய் =
தாழங்காய் (தொ. எ. 283 நச்.)
ஈற்று ஐகாரம் கெடாமல் இன்சாரியை பெற்று, ஆவிரையின் காய் – பனையின்
காய் – துதுணையின் காய் – வழுதுணையின் காய் – தில்லையின் காய் –
ஓலையின்போழ் – தாழையின் காய் – (விசையின் கோடு – ஞெமையின் கோடு –
நமையின் கோடு) – எனவும் வரும். (தொ. எ. 283, 285 நச். உரை)

ஐகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

ஐகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
வல்லெழுத்து மிக்கு முடியும். இரண்டாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சியாயின் இயல்பாகப் புணரும்.
எ-டு : யானைக்கோடு, யானைச்செவி, யானைத்தலை, யானைப்புறம்.
இரண்டாம் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், ‘முறைகாட்டி’ – தினை
கொணர்ந் தான் – பனை பிளந்தான் – என இயல்பாகப் புணரும்
உருபேற்றவழியும் யானையைக் கொணர்ந்தான் – என்றாற் போல வல்லெழுத்து
மிகும். (தொ. எ. 280 நச்.)

ஐகார ஈற்றுக் கேட்டாமூலம் பாறாங்கல் என்னுமிவை புணர்ந்தவாறு

ஐகார ஈற்றுக் கேட்டை – பாறை- என்ற சொற்கள், ஈற்று ஐகாரம் கெட்டு
ஆம் சாரியையும் அம்முச்சாரியையும் பெற்று, வருமொழிகளொடு கேட்டை +
மூலம் = கேட்டாமூலம்; பாறை+ கல் = பாறங்கல் எனப் புணர்ந்தவாறு.
பாறாங்கல் என்பதும் அது. (ஆண்டுச் சாரியை ‘ஆம்’ என்க.) (தொ. எ. 284,
288 நச். உரை)

ஐகார ஈற்றுச் சொல் வேற்றுமைப்புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சியின்கண், ஐகார ஈற்றுச்சொல் இறுதி ஐகாரம்
கெட்டு அம்முச்சாரியை பெற்றும், ஐகாரம் கெடாது அம்முச்சாரியை
பெற்றும், ஐகாரம் கெடாது வருமொழி வல்லெழுத்து மிக்கும் முடிவன உள.
எ-டு : வழுதுணை + காய்
> வழுதுண் + அம் + காய் = வழு
துணங்காய்; புன்னை + கானல்
> புன்னை + அம் + கானல் =
புன்னையங்கானல்; முல்லை + புறவம் = முல்லைப்புறவம் (நன்.
202)

ஐகார ஈற்றுத் திங்கட் பெயர்ப் புணர்ச்சி

தமிழில் திங்கட் பெயர்கள் இகர ஐகார ஈற்றன. ஐகார ஈற்றுத் திங்கட்
பெயர் வருமொழியொடு புணரும்வழி இடையே இக்குச் சாரியை பெறும்.
சித்திரை+இக்கு+கொண்டான் = சித்திரைக்குக் கொண் டான் – என வரும்.
சித்திரைத்திங்களின்கண் கொண்டான் என்பது பொருள். (தொ. எ. 286, 127
நச்.)

ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்

ஐகாரம் தன்னைச் சுட்டுமளவில் குறுகாது மற்று மொழியின் முதல் இடை
கடை என்ற மூவிடங்களிலும் தன் இயல்பான இரண்டு மாத்திரையிற்
குறுகிவரும். ஒளகாரமும் மொழி முதற்கண் மாத்திரம் வருதலின் ஆண்டு
அவ்வாறு குறுகி வரும். மொழி முதற்கண் வரும் ஐகார ஒளகாரங்களின்
மாத்திரை ஒன்றரை எனவும், மொழி இடையிறுதிகளில் வரும் ஐகாரத்தின்
மாத்திரை ஒன்று எனவும் கொள்க.
எ-டு : ஐப்பசி – மைப்புறம், வலையன், குவளை, மௌவல் (நன்.
95)
ஓரெழுத்தொருமொழியாம் ஐகாரம் தனித்து வருமிடத்தும், நிலைமொழி
வருமொழியாய்த் தொடர்ந்து வருமிடத்தும் குறுகாது.

ஐகார ஒளகாரங்கட்கு மாற்றெழுத்துக்கள்

மொழி முதற்கண் அகரமும் இகரமும் இணைந்து ஐகாரத் திற்கு
மாற்றெழுத்துக்களாம். மொழி முதற்கண் அகரமும் உகரமும் இணைந்து
ஒளகாரத்திற்கு மாற்றெழுத்துக்களாம்.
எ-டு : அ) ஐவனம் என்பது அயிவனம் என வரும். (யகர உடம்படுமெய்
பெற்று வருதலே சான்றோர் வழக்கில் காணப்படுகிறது. அய்இவனம் –
அயிவனம்)
வைரம், கைலை என்பன வயிரம் கயிலை எனவரும். (இவை வடசொற்கள்)
ஆ) கௌரியர் என்பது கவுரியர் எனவும், மௌரியர் என்பது மவுரியர்
எனவும், மௌலி என்பது மவுலி எனவும்,
ஒளடதம் என்பது அவுடதம் எனவும் வரும். (இவை வட சொற்கள்).
இனி, மொழியிடையிலும் ஈற்றிலும் வரும் ஐகாரத்திற்குப் பிறிதொருவகை
மாற்றெழுத்து வருமாறு:
அகரத்தின் பின்னர் இகரமேயன்றி, அகரமும் அதன்பின் யகர ஒற்றும் ஐ
என்னும் நெட்டெழுத்தினது பொருள்பட வரும்.
எ-டு : நிலையம் – நிலயம்; குவளை – குவளய்; வினையம் –
வினயம்
அய் என்னும் இவ்வெழுத்துக்கள் மொழி முதல் ஐகாரத் திற்கு
மாற்றெழுத்துக்களாய் வரின் மாத்திரையளவு ஒன்றுமே வேறுபடுகிறது.
ஓசையாலும் அசைகொள்ளும் நிலையாலும் எவ்வேறுபாடும் அங்கு இன்று. ஆதலின்,
இவ்வெழுத்துக்கள் மாற்றெழுத்துக்களாய் மொழியிடையிலும் ஈற்றிலுமே வரும்
என்று உய்த்துணரப்படும்.
இம்மாற்றெழுத்தின் பயனாவது, செய்யுட்கண் சீரும் தளையும் சிதைய
வருமிடத்து அவை சிதையாமல் செய்துகோடலாம்.
எ-டு : ‘அன்னையையான் நோவ தவமால்’ என்புழி, வெண்பாவில்
நாலசைச்சீர் வந்து சீரும் தளையும் சிதையும்; அன்னயையான்’ என
மாற்றெழுத்தாற் கூறின் அவை சிதையாவாம் என்க. (தொ.எ.56. ச.பால.)

ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல்

ஐகாரவிகுதி செயப்படுபொருண்மை உணர்த்தல் நடவை, சேக்கை, உடுக்கை,
தொடை, விடை – போன்றவற்றில் காணப்படுகிறது.
நடவை – நடத்தப்படுவது – பகுதி: நட
சேக்கை – தங்கப்படுவது – பகுதி: சே
உடுக்கை – உடுக்கப்படுவது – பகுதி: உடு
தொடை – தொடுக்கப்படுவது – பகுதி: தொடு
விடை – விடுக்கப்படுவது – பகுதி:விடு
சூ.வி. பக். 33

ஐகார வேற்றுமைத் திரிபுகள்

1. ‘மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு வருதல்’: அஃதாவது மெல்லெழுத்து
மிக வேண்டிய இடத்து வல்லெழுத்து மிகுதல்.
அகர ஈற்று மரப்பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சியில் வன் கணம்
வரின், வந்த வல்லெழுத்தின் இனமெல்லெழுத்து மிகும். (தொ. எ. 217 நச்.)
எ-டு : விள
ங்கனி, விள
ம்பூ
ஆயின் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் விளக் குறைத்தான் – என வந்த
வல்லெழுத்தே மிகும்.
2. ‘வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றல்’:
மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மகரம் கெட, வந்த
வல்லெழுத்து இடையே மிக்குப் புணர்தல் மரபு (310 நச்.) எ-டு :
மரக்கிளை, மரச்சினை, மரத்தோல், மரப் பட்டை.
ஆயின் இரண்டாம் வேற்றுமைத்தொகையாயின், மகரம் கெட, வந்த
வல்லெழுத்தின் இனமெல்லெழுத்தே மிகும். எ-டு : மரங் குறைத்தான்.
3. ‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றல்’:
யகர ஈற்றுத் தாய் என்னும் முறைப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். (358 நச்.) எ-டு : தாய்கை,
தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில், தாயைக் கொன்ற கொலை
– என்ற பொருளில், தாய்க் கொலை – என வல்லெழுத்து மிக்குப் புணரும்.
4. ‘உயிர்மிக வருவழி உயிர்கெட வருதல்’:
குற்றெழுத்தை அடுத்தோ தனித்தோ வரும் ஆகார ஊகார ஏகார ஈற்றுப்
பெயர்கள், வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம் வர, எழுத்துப்பேறளபெடையும்
வல்லெழுத்தும் மிக்குப் புணரும். (226, 267, 277 நச்.) எ-டு :
பலாஅக்கோடு, உடூஉக்குறை, ஏஎக்கொட்டில்
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், வருமொழி முதற்கண்
வன்கணம் வரின், வந்த வல்லெழுத்தே மிக்குப் புணரும். எ-டு : பலாக்
குறைத்தான், கழூக் கொணர்ந்தான், ஏக் கட்டினான்
5. ‘சாரியை உள்வழிச் சாரியை கெடுதல்’:
வண்டு, பெண்டு – என்பன வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண் இன்சாரியை
பெற்றுப் புணரும் என்பது விதி. (420 நச்.) எ-டு : வண்டின்கால்,
பெண்டின் தலை
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை இன்றி வன்கணம்
வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : வண்டு கொணர்ந்தான், பெண்டு
கொணர்ந்தான்
6. ‘சாரியை உள்வழித் தன்உருபு நிலையல்’:
சாரியை பெறுமிடத்து, வண்டின் கால் – பெண்டின் தலை – என ஆறாம்
வேற்றுமையுருபு மறைந்து வருவதைப் போலல் லாது, பெரும்பாலும் தன்னுருபு
நிலைபெற்றே வண்டினைக் கொணர்ந்தான் – பெண்டினைக் கொணர்ந்தான் – என்று
தன்னுருபு விரிந்தே வருதல்.
7. ‘சாரியை இயற்கை உறழத்தோன்றல்’:
புளி, பனை, வேல் – முதலிய மரப்பெயர்கள் அம்முச்சாரியை பெற்றே
வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழிப் புணரும். (244, 283, 375
நச்.) எ-டு : புளியங்காய், புளியஞ் செதிள்;பனங்காய், பனந்தோல்;
வேலங்காய், வேலம்பட்டை
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை பெறாது வன்கணம்
வந்துழி, வல்லெழுத்து மிகாமலும் மிக்கும், ஈறு திரியாமலும் திரிந்தும்
புணரும். எ-டு : புளி குறைத்தான், புளிக் குறைத்தான்; பனை தடிந்தான்,
பனைத் தடிந்தான்; வேல் தடிந்தான், வேற்றடிந்தான்
8. ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல்’:
உயர்திணைப் பெயர்கள் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப்
புணரும்என்பது விதி. (153 நச்.) எ-டு : நம்பி கை, நம்பி தலை; நங்கை
கை, நங்கை செவி.
ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கு வன்கணம் வந்துழிஉருபு விரிந்து
வருமொழி வல்லெழுத்து மிக்கு வரல்வேண்டும்.
எ-டு : நம்பியைக் கொணர்ந்தான், நங்கையைக் கண்டான்
சிறுபான்மை உருபு மறைந்து, ‘ஒன்னார்த் தெறலும்’ (குறள் 264), என்று
மிக்கும், ‘ஆடூஉ அறிசொல்’ என்று உகரப்பேறு எய்தியும், அவற்கண்டு (அக.
48) மகற் பெற்றான், மகட் பெற்றான் என ஈறு திரிந்தும், ‘மழவர் ஓட்டிய’
(அகநா.1) என்று இயல்புகணத்துக்கண் இயல்பாயும் வருதலுமுண்டு.
9. அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையல்’:
உயர்திணையோடு அஃறிணை விரவும் பொதுப்பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்
உயர்திணைப்பெயர் போல வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும். (155
நச்.) எ-டு : சாத்தன் கை, கொற்றன் செவி, சாத்திதலை
ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கண் உருபு விரிந்தே வருதல் வேண்டும்.
(155 நச்.)
எ-டு: கொற்றனைக் கொணர்ந்தான், சாத்தனைத் தகைத்தான். சிறுபான்மை
சாத்தற் கண்டு, கொற்றற் சார்ந்து – என இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கு
நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலுமுண்டு. (உருபு தொக்கமை
யாற்றான் இத்திரிபு என்க)
10. ‘மெய்பிறிது ஆகுஇடத்து இயற்கை ஆதல்’:
ணகர னகர ஈறுகள் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
முறையே டகர றகரங்களாகத் திரியும் என்பது பொதுவிதி. (302, 332 நச்.)
எ-டு : மட்குடம், பொற்குடம்
ஆயின் இரண்டாம் வேற்றுமையுருபு தொக்க புணர்ச்சியில் வன்கணம்
வருமொழியாக வருவுழித் திரிபின்றிப் புணரும்.
எ-டு : மண் கொணர்ந்தான், பொன் கொணர்ந்தான்
11. ‘அன்ன பிறவும் ஐகார வேற்றுமைத் திரிபு’:
யான் என்பது என் என்று திரிந்து வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். ஏனை நெடுமுதல் குறுகும்
பெயர்களும் அவ்வாறே முடியும்.
எ-டு : என்கை, என்செவி, என்தலை, என்புறம்
ஆயின், யான் யாம் நாம் நீ தான் தாம் – என்பன நெடுமுதல் குறுகி என்
எம் தம் நின் தன் நம்- என்றாகிய நிலையில், இரண்டன் உருபு தொக்க
புணர்ச்சிக்கண், என்+ கண்டு = எற்கண்டு; தன்+ கொண்டான் = தற்கொண்டான்;
நம் + புணர்வு = நப்புணர்வு; என்றாற்போல, நிலைமொழி ஈற்று மெய்
திரிந்து புணரும். (உருபு தொக்கமையாற்றான் இத்திரிபு என்க.)
ஐகாரஈற்றுப் பெயரும் ரகரஈற்றுப் பெயரும் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண், வன்கணம் வரின், வல்லெழுத்து மிக்குப் புணரும்
என்பது பொது விதி. (280, 362 நச்.)
எ-டு : யானைக்கோடு, தேர்க்கால்
ஆயின், இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் வன்கணம் வரினும்
இயல்பாம்.
எ-டு : தினை பிளந்தான், மயிர் குறைத்தான்
சிலவிடத்தே இன்சாரியை பெறும் நிலைமொழிகள் இரண்ட னுருபு விரியாது
வருமொழியொடு புணரும் நிலையும் அருகியுண்டு. எ-டு : ‘மறங்கடந்த
அருங்கற்பின்… துணைவியர்’ (புற. 166) (கற்பினையுடைய துணைவியர்)
‘சில்சொல்லின்…. துணைவியர்’ (சொற்களையுடைய துணைவியர்) ‘ஆயிரு
திணையின் இசைக்குமன சொல்லே’ (சொ.1) (இருதிணை யினையும் இசைக்கும்)
இவையே யன்றிப் பொதுவிதியைப் பின்பற்றிக் கடுக்குறைத் தான் (254
நச்.) செப்புக்கொணர்ந்தான் (414 நச்.) என்று முடிவனவும்,
மைகொணர்ந்தான்- மைக்கொணர்ந்தான், வில்கோள் – விற்கோள் என உறழ்வனவும்
கொள்க. (தொ. எ. 157 நச். உரை)
கழி குறைத்தான், தினை பிளந்தான் – என்ற இயல்பும் கொள்க. (158 இள.
உரை)

ஐகாரக் குறுக்கம்

‘ஐ ஒரு
மாத்திரை அளவிற்றாதல்’
காண்க.

ஐகாரக் குறுக்கம்

‘படும ழை த் தண்ம லை வெற்பன், உ றை யும்நெடுந்த கையை க் கண்டதாம் நாள்’இஃது ஐகாரக் குறுக்கம் வந்த செய்யுள். (யா. வி.பக். 32)

ஐஞ்சீரடி மூன்று பாவிற்கும் வருதல்

வெண்பா, ஆசிரியம், கலி என்பனவற்றின் கட்டளைப்பா, சீர்வகைப்பா என்றஇரண்டன்கண்ணும் ஐஞ்சீரடியும் வரும்; வெண்பாவினுள் மிக அருகியே வரும்;கலியுள் அதற்கு உறுப்பாய் வரும் பாக்களுள் பெரும்பான்மையும் வரும்.கலிக் குக் கூறிய ஐஞ்சீரடி வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும்வரும். ஆசிரியத்துள் இரண்டு ஐஞ்சீரடி அடுக்கியும் வரும்.எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுலங்கஒண்செங் குருதியுள் ஓஒ கிடப்பதே – கெண்டிக்கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்அழுதகண் ணீர்துடைத்த கை.’என வெண்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது.‘சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!’ (புறநா.235)என ஆசிரியப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது.‘தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக’ (குறிஞ்சி. 3)எனக் கலிக்கு உறுப்பாகிய ஆசிரியச் சுரிதகத்துள் ஐஞ்சீரடிவந்தது.‘அணிகிளர் அவிர்பொறித் துத்திமா நாகத் தெருத்தேறித்துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்துமலைந்தனையே.’இக்கலித்தாழிசையுள் முதலடி ஐஞ்சீரான் வந்தது.(தொ. செய். 63 நச்.)

ஐந்தன் ஒற்று யகரமாதல்

வருமொழியில் ஆயிரம் வரின், நிலைமொழியாகிய ஐந்து என்பதன் ஈறாகிய
துகரம் கெட, நின்ற ‘ஐந்’ என்பதன் நகர ஒற்று யகர ஒற்றாக, ஐய்+ஆயிரம் =
ஐயாயிரம் என்றாயிற்று என்பர் தொல். (தொ. எ. 468 நச்.)
‘ஐவகை அடியும்’ என்புழி, ஐகாரம் நீங்கலாக ஏனைய எழுத்துக்கள்
கெட்டுப் புணர்வது போல், ஐ+ ஆயிரம்= ஐயாயிரம் என, யகர உடம்படுமெய்
பெற்றுப் புணர்ந்தது என்பதே ஏற்றது.
ஐயீராயிரம், ஐயுணர்வு – என்பனவற்றை நோக்க, யகரம் உடம்படுமெய்
என்பதே பொருந்தும். (எ. ஆ. பக். 175)

ஐந்திணைச் செய்யுள்

புணர்தல் முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறும் பிரபந்தம்.(இ. வி. பாட். 89)

ஐந்திரம்

இந்திரனால் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணமாகிய ஐந்திரவியாகரணம்;‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ (தொ. பாயிரம்)

ஐந்துபொருள் சிலேடை இணைமடக்கு

முதலீரடிகளும் ஐந்து பொருள்களுக்குச் சிலேடையாய்ப் பின்னீரடிகளும்மடக்காய் அமையும் பாடல்.எ-டு : ‘சூழி மறு(கு)ஆ டவர்தோள் விரல்பொழில்தேன்ஆழி பயிலும் அரங்கமே – ஊழிதிரிநாட் டிரிநாட் டினவுயிராய்க் கொண்டஅரிநாட் டரிநாட் டகம்’‘ஊழி திரிநாள் த்ரிநாட்டின் உயிர் உயக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டுஅகம் அரங்கமே’ – ஊழி முடிவில் மூவுலக உயிர்களையும் வயிற்றில் வைத்துப்பாதுகாத்த பாற்கடல் என்னும் இடத்தையுடைய ஹரி என்னும் திருநாமம்உடையானது பதி அரங்க நகராகும். அதன்கண்,சூழி ஆழிபயிலும் – குளங்கள் வட்டமாக அமைந்திருக்கும்; மறுகு ஆழிபயிலும் – தெருக்களில் தேர்வண்டிச் சக்கரங்கள் பொருந்தும்; ஆடவர்தோள்ஆழிபயிலும் – ஆடவர்களின் வலத்தோளில் திரு ஆழி முத்திரை வைக்கப்படும்;விரல் ஆழி பயிலும் – விரலில் மோதிரம் பொருந்தும்; பொழில் தேன் ஆழிபயிலும் – சோலையிலுள்ள தேன் கடலை நோக்கிச் செல்லும் என ஐம்பொருள்சிலேடை மடக்குடன் இணைந்து வந்தவாறு. இறுதியடிகளின் முதல் இரு சீர்கள்மடக்கின. (மா. அ. பா. 758)

ஐம்படை விருத்தம்

திருமாலின் ஐந்து ஆயுதங்களாகிய சக்கரம், வில், வாள், சங்கு, தண்டுஎன்னும் இவற்றை அகவல்விருத்தத்தால் பாடும் பிரபந்தவகை. (பன்.பாட்.29)

ஐம்பத்தொரு நிலம்

வெண்பாவின் நிலம் …. 10 (தொ. செய். 58) அகவற்பாவின் நிலம்…17 (52), கலிப்பாவின் நிலம் …. 8 (59), வஞ்சிப்பாவின் நிலம்… 10(57), 2,3,5, 6, 7, 8 சீர்கள் அடிகள் 6 (63, 64, 65, 69, 70) ஆக,நிலம் 51 (தொ. செய். 49 நச்.)

ஐம்பான் ஒன்றுதொடை

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை x 8 விகற்பம் = 40, எழுத்து, அசை, சீர், அடி அந்தாதி 4, இரட்டை,செந் தொடை 2, நெடில், மூன்றெழுத்து, உயிர், விட்டிசை, வருக்கம்(எதுகை) 5 = 51 (சாமி. 155)

ஐயனாரிதனார்

புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஆசிரியர்; சேரர் பரம்பரையில்வந்தவர்; தமிழ் நூல்களிற் சிறந்த புலமை மிக்கவர்; சிவபெருமானிடம்ஈடுபாடுடையவர்; சேர மரபினராயினும் சோழ பாண்டியர்களையும் ஒப்பச்சிறப்பித் துள்ளமை இவர்தம் நடுநிலைமை மனப்பான்மையைக் காட்டுவது; சைவசமயத்தவராயினும், திருமாலையும் உரிய இடத்தே போற்றியுள்ளமை இவர்தம்சமயத்துறைப் பொறையினைக் காட்டும்.பன்னிருபடலத்தை முதல்நூலாகக் கொண்டு ஐயனாரிதனார் புறப்பொருள்வெண்பாமாலை இயற்றினார். சூத்திரம் கொளு மேற்கோள்பாடல்கள் யாவும் இவர்இயற்றியவையே. இவரியற்றிய புறப்பொருள் வெண்பாமாலையை ஒத்த புறப்பொருள்நூல் தமிழில் பிறிதொன்று தோன்றி நிலைத்திலது.ஐயனாரிதனார் என்பது திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ் சேரியிலுள்ளசாஸ்தாவின் பெயர். ஆரித கோத்திரத்தைச் சார்ந்தவர் ஆதலின் ஐயன்ஆரிதனார் எனப்பட்டார் என்பதும் ஒன்று.இவர்காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பர்.

ஐயீற்றுடைக் குற்றுகரம்

பண்டைக் காலம் – இற்றை நாள் – எனவும், அற்றைக் கூலி – இற்றை நலம்-
எனவும் வரும். ‘ஐயீற்றுடைக் குற்றுகரம்’ எனப் பொதுப்படக் கூறியமையால்,
நேற்றைப் பொழுது என (மென்தொடர்க் குற்றியலுகரம் அல்லா)ப் பிற தொடர்கள்
ஐகாரம் பெறுதலும், ‘ஐயீற்றுடைக் குற்றுகரம்’ என உடைமை யாக்கிக்
கூறியமையால், ஒற்றை – இரட்டை – வேட்டை- என ஒருமொழியாய் நின்று ஐகாரம்
பெறுதலும், ஈராட்டை மூவாட்டை – எனத் தொடர்மொழியாய் நின்று ஐகாரம்
பெறுதலும் கொள்க. (நன். 185 சங்கர.)

ஐயீற்றுப் பகாப்பதம் ஈறுகெட ‘ஏயன்’ விகுதி பெறுதல்

ஐயீற்றுப் பகாப்பதங்களில் ஐ ஒழித்து விகுதியாக ‘ஏயன்’ என்று
முடிந்தால், ‘ஈன்ற மகன்’ என்று காட்டும் வடநடைப் பகுபதங்களாம்.
கார்த்திகையின் மகன் கார்த்திகேயன், கங்கையின் மகன் காங்கேயன்,
விநதையின் மகன் வைநதேயன்- என்று வரும் (தொ.வி. 86 உரை)

ஐயெழுத்துச்சீர் மூன்று

நரையுருமு, புலிவருவாய், விரவுகொடி என்பன. இவற்றுள் முற்றுகரம்எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது.(தொ. செய். 41 நச்.)

ஐவகை அடிகள்

குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்பன ஐவகை அடிகளாம். இவை 4எழுத்துமுதல் 20 எழுத்து முடிய உடையன. ஆதலின் இவற்றிற்கு நிலைக்களம்ஆகிய நிலன் 17. இவை 70 வகைக் குற்றமும் நீங்கி வரின், 625 என்னும்எண்ணிக்கை பெறும். (தொல். செய். 50 நச்.)

ஐவகைச் சீர்கள்

அசைச்சீர் , இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர்எனச் சீர் ஐவகைப்படும். அவை முறையே 4, 10, 6, 4, 60 ஆக, ஐவகைச்சீர்களும் 84 ஆகி நிகழும். இது தொல்காப்பியத் துள் கண்ட நெறி. (தென்.யாப். 19)