எ |
இது தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது எழுத்து; ஒரு மாத்திரை அளவிற்றாய
குறில். இதன் இனமாகிய நெடில் ஏ. எகரம் அகரக்கூறும் இகரக்கூறும்
சேர்ந்து அமைந்தது என்ற கருத்துத் தமிழ் எகரத்துக்கு அவ்வளவு
பொருந்தாது. எகரம் வாயை அங்காத்தலோடு அண்பல் அடியை நாவிளிம்பு உறப்
பிறக்கும் எழுத்துக்களுள் ஒன்று. இது மொழிமுதற்கண் வினாவாக வரும்.
எவன் என்ற வினாவினைக்குறிப்புக்கு இஃது அடியாக வருவது; அறியாப்
பொருள்வயின் செறியத் தோன்றுவது. இதனைத் தமிழ்ச்சிறப்பெழுத்து ஐந்தனுள்
ஒன்று என்ப. இது பிராகிருதத்திலும் உள்ளது. யகர முதல் வடசொற்கள்
தமிழில் எகர முதலாக, யந்த்ர- எந்திரம், யமன்- எமன் என்றாற் போல வரும்.
எகரம் அளபெடைக்கண்ணேயே ஈறாகி வரும். அஃது எம்மெய்யெழுத்தொடும் கூடி
ஈறாகாது.
|
எகர ஒகர வடிவு |
‘எகரம் ஒகரம் மெய் புள்ளி பெறும்’ என்ற சூத்திரத்தை ‘ஏகார ஓகாரம்
மெய் புள்ளி பெறும்’ எனத் திருத்த வேண்டிற்று என் னெனில்,
இக்காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளி யிட்டெழுதுவது பெருவழக்கு
ஆயினமையால் என்க. (நன். 98 இராமா.)
|
எகர வினா முச்சுட்டு புணர்ச்சி விதி |
எ – அ இ உ – என்னும் வினா சுட்டு இடைச்சொற்கள் நிலை-மொழியாக நிற்ப,
வருமொழி முதற்கண் உயிர்க்கணமோ இடைக்கணத்து யகரமோ வரின், இடையே வகர
ஒற்று மிகும்.
எ-டு : எ+ அணி = எவ்வணி, எ + யானை = எவ்யானை;
அ, இ, உ + யானை = அவ்யானை, இவ்யானை, உவ்யானை (அ+அணி – அவ்வணி;
பிறவும் கொள்க.)
வருமொழி முதற்கண் யகரம் ஒழிந்த பிற மெய்கள் வரின், வந்த அம்மெய்களே
மிக்கு முடியும்.
எ-டு : எக்குதிரை, எச்சேனை, எத்தண்டு, எப்படை; எங்ஙனம்,
எஞ்ஞாலம், எந்நாடு, எம்மனை, எவ்விதம்
சுட்டிடைச்சொற்கும் இவ்வாறே ஒட்டுக.
செய்யுளில் சுட்டு நீண்டவழி இடையே யகரம் தோன்றும். (அது
வருமொழிமுதல் உயிர் வருமிடத்தேயே என்க.)
வருமாறு : அ + இடை
> ஆ + ய் + இடை =
ஆயிடை
சுட்டு நீண்டவழியும் பொதுவிதிப்படி மெய்வரின் வந்த மெய்
மிகுதலுமுண்டு. யாவினாவும் அது.
வருமாறு : ஆங்ஙனம், ஈங்ஙனம், ஊங்ஙனம்; யாங்ஙனம் (நன்.
163)
|
எகரமுதல் வயின் |
எகரமாகிய முதல்வினாவையுடைய வயின் என்ற சொல். அஃது எவ்வயின் என்பது
(எவ்விடம் என்னும் பொருட்டு).
‘எவ்வயின்’ னகர ஈற்றதாய் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும்
இடைச்சொல். இது பெயர் நிலையதாய் வரு மொழி வன்கணத்தொடு புணரும்வழி
ஈற்று னகரம் றகரமாகத் திரிய ‘எவ்வயிற் பெயரும்’ என்றாற் போல
முடியும்.
இயல்புகணம் வருமொழி முதற்கண் வரின் இயல்பாகப் புணரும். (எவ்வயின்+
நடந்தான் என்புழி, எவ்வயினடந்தான் எனத் திரிபு நிகழ்தலின்,
மென்கணத்துள் நகரம் நீங்கலாகக் கொள்க.) (தொ. எ. 334. நச்.)
|
எகரம் ஈறாதல் எகரஈற்றுப் புணர்ச்சி |
எகரம் பெயர்க்கண் மொழி ஈறாக வாராது. அது முன்னிலை ஏவல் ஒருமைக்கண்
அளபெடையாய் மொழியிறுதியில் வரும். வன்கணம் வருவழி மிக்கும், பிறகணத்து
இயல்பாயும் முடியும்.
எ-டு : ஏஎக் கொற்றா, ஏஎ நாகா, ஏஎ வளவா, ஏஎ வரசா (வகரம்
உடம்படுமெய்)
ஏஎ – எனக்கு ஒரு கருமம் பணி என்னும் பொருட்டு. (தொ. எ. 272.
நச். உரை)
தேற்றப்பொருட்கண் எகரம் ஏகாரஇடைச்சொற்கு அள பெடை யெழுத்தாய்
இறுதியில் வரும்.
எ-டு : யானேஎ கொண்டேன், யானேஎ நடந்தேன், யானேஎ வந்தேன், யானேஎ
யடைந்தேன் (யகரம் உடம்படு மெய்) (தொ.எ. 273 நச்.)
|
எகரம் புள்ளி பெறுதல் |
உயிரெழுத்துக்களுள் எகரம் ஒகரம் ஒழிந்த பத்து எழுத்துக் களும்
புள்ளியில்லனவாய் வழங்க, இவ்விரண்டு எழுத்துக்கள் மாத்திரம் புள்ளி
பெற்று வழங்குதல் நோக்க, தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த
தொல்லாசிரியர்கள், எகர ஒகரங்கள் வடமொழியில் இல்லை யாதலின், அவற்றிற்கு
வடமொழியில் வரிவடிவு அமைக்க வாய்ப்பு இன்மையான், தமிழில் எகர
ஒகரங்களுக்கு வேறுவடிவு அமைக்காமல், ஏகார ஓகாரங்க ளின் வரிவடிவின்கண்
(எ ஒ என்பன பண்டை நெடில் வரி வடிவு) புள்ளியிட்டு (எ
{{special_puLLi}} ஓ
{{special_puLLi}} – என)
வழங்கினர் என்பது தோன்று கிறது.
முதன் முதலில் தமிழிலக்கணம் வகுத்த ஆசிரியர் வடமொழி நோக்கித்
தமிழ்நெடுங்கணக்கு வைப்புமுறையிலே வேறுபாடு செய்தது போலவே,
வரிவடிவிலும் வேறுபாடு செய்தனர் என்று தோன்றுகிறது.
மேலே புள்ளியிடுவதன்மூலம் மாத்திரை பாதியாகக் குறைப்பதை
அறிவிக்கும் மரபினைத் தமிழிலக்கண நூலார் கொண்டனர். (எ. ஆ. பக்.
20)
எ : 2 மாத்திரை, எ
{{special_puLLi}} : ஒரு
மாத்திரை; ஒ : 2 மாத்திரை, ஒ
{{special_puLLi}} : ஒரு
மாத்திரை; க : ஒரு மாத்திரை, க் : அரை மாத்திரை; ம் : அரை மாத்திரை,
ம்
{{special_puLLi}} : கால்
மாத்திரை; கு : ஒரு மாத்திரை, கு
{{special_puLLi}} : (குற்றிய
லுகரமாம்) அரை மாத்திரை.
|
எகின் புணர்ச்சி |
எகின் என்பது ஒரு மரத்தையும் ஒரு பறவையையும் குறிக்கும் சொல்.
எகின் என்ற மரப்பெயர், ஆண் என்ற மரப்பெயர் போல, அம்முச்சாரியை
பெற்று ஏற்ற திரிபுகளுடன் வருமொழி யொடு புணரும்.
எ-டு: எகினங்கோடு, எகினநார், எகினவட்டை, எகினவியல்பு (வகரம்
உடம்படுமெய்) (தொ. எ. 336 நச்.)
பறவையைக் குறிக்கும் எகின் என்ற பெயர் வருமொழி வன்கணத்தொடு
புணரும்வழி, அகரமும் வல்லெழுத்துப் பேறும், சிறுபான்மை
மெல்லெழுத்துப்பேறும், இயல்பு கணங்களொடு புணரும்வழி அகரப்பேறும் எய்தி
முடியும்.
எ-டு : எகின் + கால் = எகினக்கால், எகினங்கால்; எகின் + நீட்சி
= எகினநீட்சி; எகின் + யாப்பு = எகினயாப்பு; எகின் + அடைவு =
எகினவடைவு (தொ.எ. 337 நச்.)
உருபுபுணர்ச்சிக்கண் எகின் என்ற பெயர் அத்தும் இன்னும் பெற்று
எகினத்தை, எகினினை- எனப் புணரும். (தொ.எ. 194 இள. உரை)
எகின், புளியமரம்- அன்னப்பறவை – என இரு பொருளது.
|
எச்சம் (1) |
செய்யுட்கண் உணர்த்துதற்குச் சொல்லின்றிக் கேட்போர் உய்த்துணர்ந்துகொள்ளுமாறு கூற்றினானும் குறிப்பினா னும் முடிக்கப்படும் இலக்கணத்தொடுகூடிய சொல். இது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. இது கூற்றெச்சம்,குறிப் பெச்சம் என இரு வகைப்படும்.கூற்றெச்சமாவது, செய்யுளில் கூறாது விடப்பட்ட செய்தியைவெளிப்படையாகக் கூறினாலும் தவறின்றாக அமைவது. குறிப்பெச்சமாவது,செய்யுளில் கூறாது விடப்பட வேண்டி யதாய் வெளிப்படையாய்க் கூறத்தகாதாய் அமைவது.எ-டு : ‘செங்களம் படக்கொன்(று) அவுணர்த் தேய்த்தசெங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்கழல்தொடிச் சேஎய் குன்றம்குருதிப் பூவின் குலைக்காந் தட்டே’ (குறுந். 2)தலைவன் காந்தட்பூக்களைக் கையுறையாகக் கொண்டுவர, தோழி தம் மலையில்காந்தட்பூ நிறையவுள்ளது என்று குறிப்பான் உணர்த்திக் கையுறை மறுத்ததுஇப்பாடல். “எம் குன்றில் காந்தட்பூ மிகுதி” என்று மாத்திரம் கூறி,“இவற்றால் யாம் குறையுடையேம் அல்லேம்” என்பதைக் கூறாது விடுத் ததுகூற்றெச்சம். அதனைத் தலைவனிடம் கூறினும் தவறின்று.தோழி தலைவியைப் பகற்குறியிடத்து உய்த்து “முருகனது இக்குன்றத்தில்காந்தட்பூக்கள் நிறைய உள” என்று வெளிப் படையாகக் கூறி, “அவற்றைக்காண்பது உன் விருப்பமாயின் காண்” என்று கூறுவாள் போலத் தான்வெளிப்படையாகக் கூற முடியாத “குறிக்கண் தலைவன் இருக்குமிடம் இஃது”என்பதனைக் குறிப்பாற் கொள்ளவைத்தது குறிப்பெச்சம். எச்சம் என்னும்இவ்வுறுப்பின்றியும் செய்யுள் நிகழும். (தொ. பொ. 518 பேரா.)
|
எச்சம் (2) |
அகப்பொருள் உரை 27இல் இதுவும் ஒன்று (வி.சோ. 90) எச்சமாவதுஒழிந்தது. அஃதாவது தான் தன்பொருள் முற்றுப்பெறக் கொண்டு முடியவேண்டியசொல்லை விடுத்துத் தனியே இருப்பது. அது வினையெச்சம் பெயரெச் சம் எனஇருவகைப்படும். வினையெச்சம் வினைஒழிந்து நிற்பது; பெயரெச்சம் பெயர்ஒழிந்து நிற்பது. (வீ. சோ. 96 உரை மேற்.)
|
எச்சரிக்கை |
எச்சரிக்கை என்று ஈற்றடியில் முடியும் பலபாடல்களால் இயன்றபிரபந்தமும் உண்டு. இரு பெரும்பாலும் கோயில் களில் இறைவன் சந்நிதியில்பாடப்படும். (இ. வி.பாட்.பிற். 7)
|
எச்சவுரை |
எச்சத்தை விளக்கிக் கூறும் உரை. ‘எச்சம்’ காண்க.
|
எடுத்தல் படுத்தல் ஓசைகள் |
சொற்களைக் கூறுங்கால் பொருள் சிறக்கும் எழுத்தினை எடுத்தும், அயல்
எழுத்தினை நலிந்தும், ஏனைய எழுத்துக் களைப் படுத்தும் கூற வேண்டும்.
எடுத்தல் படுத்தல் முதலிய ஓசைகளும் எழுத்துச்சாரியையும்
தனித்தியங்கும் ஆற்ற லுடைய உயிர்க்கேயன்றி அவ்வாற்றல் இல்லாத மெய்க்கு
இல்லை.
வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் பகுதியில் பொருள்
சிறந்து நிற்கும். பெயர்ச்சொல் அவ்வாறன்றி விகுதி யில் பொருள் சிறந்து
நிற்கும்.வினைச்சொற்கள் பகுதியில் பொருள் சிறத்தலின் விகுதிப்பொருள்
வேறு விளக்குதற்கு ‘உண்டான் சாத்தன்’ என்றாற்போலப் பெயர் ஒருதலையான்
வேண்டப்பட்டது. இனி, உண்டான் கரியான் என்னும் பெயர்ச்சொற்கள்
விகுதியில் பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குதற்கு வேறோர் பெயர்
வேண்டாது, ‘உண்டான் வந்தான்’ ‘கரியான் வந்தான்’ எனத் தாமே எழுவாயாய்ப்
பயனிலை கொண்டும், ‘கரியானைக் கொணா’ என உருபேற்றும் வரும். உண்டான்,
கரியான் முதலிய வினைச் சொற்களும் வேறு; உண்டான், கரியான் முதலிய பெயர்
களும் வேறு.
தொல்காப்பியனார் பெயர்களுள் வினைப்பெயர் என்ற பகுப்பைக்
கூறியுள்ளார். சேனாவரையர் அதற்கு “வருவார், செல்வார் என்பன; தச்சன்,
கொல்லன்- என்பனவும் அவை” என எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.
“உண்டான்- தின்றான் – என்று படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர்,
வினைச்சொல் போலத் திணையும் பாலும் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன்
ஆன் முதலிய ஈற்றவாய் வருதலின் தொழில்நிலையை ஒத்தன” என்றும் அவர்
தொ.சொ. 70ஆம் நுற்பாவில் கூறியுள்ளார். பண்பு அடியாக வரும் பெயர்
பண்புப்பெயர் என்றாற்போல, வினை அடியாக வரும் பெயர் வினைப்பெயர் என்பதே
சேனா வரையர் கருத்து.
வினை வினைக்குறிப்பு முற்றுக்களை ஓசை வேறுபாட்டான் பெயராகுமெனில்,
பெயராயவாற்றானே ஓசை வேறுபடும், ஓசை வேறுபாட்டான் பெயராகும் என ‘ஒன்றை
ஒன்று பற்றுதல்’ என்னும் குற்றம் தங்குமாதலின், வினைமுற்றும்
வினைப்பெயரும் வெவ்வேறு சொற்களே; அங்ஙனமாயினும், சொல்சுருங்குதல்
பொருட்டு எழுத்தொப்புமை நோக்கிப் ‘பல பொருள் ஒருசொல்’ என்ப. (சூ. வி.
பக். 54, 55)
|
எட்டாம் திருமுறை யாப்பு |
திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை யாவன.நேரிசைவெண்பா, ஆசிரியப்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கலிநிலைத்துறை,கலிவிருத்தம், (6, 8, 12, சீர்) ஆசிரிய விருத்தம், 4, 6, 8 அடிகளால்வரும் தரவு கொச்சகம், பலவகைச் சீர்களாலாகிய அடக்கலப்பத்துப் பதிகம்,கட்டளைக் கலித்துறை என்பன இத்திருமுறையில் பயில்வன.திருக்கோவையார் முழுதும் கட்டளைக் கலித்துறை. திருவெம்பாவை,வெண்டளையான் வந்த இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா.திருவம்மானை திருப்பொன்னூசல் இவை ஆறடித் தரவு கொச்சகக்கலிப்பா.
|
எட்டாரைச் சக்கரம் |
மலர்மலி சோலை யகநலங் கதிர்க்கமடமயி லியற்றக மாதிரம் புதைத்துவளைந்து புகன்மே வல்லிருண் மூழ்கவரியளி துதைந்த கதுப்பினி தடைச்சிமன்னுமா மடமொழி வடிவாள் வளவன்கன்னித் துறைவன் கனகச் சிலம்பே.இது, எட்டாராய், ஆர் ஒன்றுக்கு அவ்வாறெழுத்தாய், நடுவே ககரம்நின்று குறட்டின்மேல் ‘அறமே தனமாவது’ என்னுஞ் சொல் நின்று,சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்து நின்று, இடக் குறுக்காரின் முனைநின்று தொடங்கி அதனெதிர் முனையி னிறுதி சென்று முதலடி முற்றி, முதல்தொடக்கத்துக்கு வலக்கீழாரின் முதற் றொடங்கி எதிரேறி இரண்டாமடி முற்றி,அதற்கடுத்தது அவ்வாறே ஏறி மூன்றாமடி முற்றி, அதற்கடுத்தது அவ்விதமேஏறி நான்காமடி முற்றி, முதல் தொடங்கிய ஆரின் முதலெழுத்திலிருந்துவட்டைமேல் வலஞ்சுற்றி ஐந்தாவது ஆறாவது அடிகள் முடிந்தமை காண்க.
|
எட்டாரைச்சக்கரம் |
மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது எட்டு ஆராய், ஆர் ஒன்றுக்குஅவ்வாறு எழுத்தாய், நடுவே ககரம் நின்று குறட்டின்மேல் ‘அறமே தநமாவது’என்னும் உறுதிமொழி நின்று சூட்டின்மேல் 32 எழுத்து நின்று,இடக்குறுக்கு ஆரின் முனையினின்று தொடங்கி அதன் எதிர்முனை இறுதி சென்றுமுதலடி முடித்து, முதல் தொடக்கத்திற்கு வலக்கீழ் ஆரின் முதல் தொடங்கிஎதிர் ஏறி இரண்டாம் அடி முடித்து, அதற்கு அடுத்ததும் அப்படியே ஏறிமூன்றாமடியும் அடுத்ததும் அப்படியே ஏறி நான்காம் அடியும் முடித்து,முன் தொடங்கிய நடுக்குறுக்கு ஆரின் முதலெழுத்தினின்று வட்டைமேல்இடம்சுற்றி ஐந்தாவதும் ஆறாவதும் ஆகிய அடிகள் முடியுமாறு.அமைக்கப்படும் கவி. சந்திகளில் நின்ற எழுத்து அடிகட்குப் பொதுவாய்நிற்பது இக்கவியுள் ஓர் அருமைப்பாடு; குறட்டைச் சூழ அதன்மேல்உறுதிமொழி யொன்று அமைவதும் ஒரு பெருவித்தகம்.ஆர், ஆரை, ஆர்க்கால், ஆரம் – இவை ஒரு பொருளன. குறடாவது குடத்தின்வளைவுப்பகுதி : சூட்டாவது வட்டை வளைவு. (தண்டி. 98)
|
எட்டிதழ்ப் பதும பந்தம் |
சித்திர கவியுள் ஒன்றுவானிதி சீரிய சாதநி கிழவா வாழகி நிதசார யிபவாரிபவாவாபரி வாபர மேநிச பதிவா வாதிப சநிசா டுபரா துணைவாவாணிது ராமவெ னாதக மதிவா வாதிம கதமெ னோதவா மிதுவாவாதுமி வதானி யாமண துறவா வாளது னமவே பரிசீ தினிவா.இக்கவியை எட்டிதழ்க் கமலவடிவில் அடைப்பின் இரண் டாம் வட்டத்தில்‘சீநிவாசராகவன்’ எனவும், மூன்றாம் வட்டத்தில் ‘திகிரிபதுமமிது’ எனவும்அமைந்தமை காண்க. (ஆனால் இதற்குரிய படம் அமைக்குமுறை இதுகாறும்புலப்பட்டிலது.)(மா. அ. 283) இனி மாறனலங்காரம் இச்சித்திர கவியைக் கூறுமாறு :ஒரு தாமரையை எட்டுக் கோணத்திலும் இவ்விரண்டாகப் பதினாறுஇதழ் எழுதி,நடுவே ஒரு பொகுட்டுத் தோன்றுமாறு செய்து, பொருட்டிலேயுள்ள முதலெழுத்தேஒவ்வோரடியின் ஆறாம் எழுத்தாகவும் முதலெழுத்தாகவும் அமையுமாறுஅடைக்கப்படும் கவி பதுமபெந்தம் ஆம்.வருமாறு :“மாறா மாலா லேமா றாமாமாறா மாவே ளேமா றாமாமாறா மாகோ வாமா றாமாமாறா மாவா தேமா றாமா.”(முதலடியீற்று) மா மாறா மாலால் ஏமாறா (இரண்டாமடி) மால் தா மா வேள்ஏ மாறு ஆம் (ஆம்); (மூன்றாமடியில் மகர ஒற்றைப் பிரிக்கவே) ஆறு ஆம் ஆ(-ஐயோ) கோ வா மாறா; (மூன்றாமடி ஈற்றில் நின்ற மா எழுத்தை ஈற்றடியில்கூட்டி) மா மாறா! மாவா தேம் ஆல் தாமா – இவ்வாறு பிரித்துப் பொருள்கொள்க.திரு அன்னவளாகிய தலைவி தனது நீங்காத காம மயக்கத்தால்வருந்தும்படிக்கு, மாயோனால் தரப்பட்ட கரிய மன்மதன் விடுத்த அம்புகள்மாற்றம் ஆகின்றன (ஆம் : அசை); அந்தோ! ஆறு போலப் பெருகும் கண்ணீர்வருதல் தீராது. பெரிய மாறனே! வண்டுகள் (தேனை யுண்ண) வருகின்ற, தேன்துளும்புகின்ற மாலை யணிந்தோனே!
|
எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்தபாடல் |
‘வீங்குபிணி 1 விசித்த விளங்குபுனை 2 நெடுந்தேர்காம்புநீடு 3 மயங்கு காட்டுப் 4பாம்புபெரிது 5 வழங்குதொறோங்கு 6வயங்குகலிமா நிரைபு நிரைபு வலவன்,வாம்பரி கடவி வந்தோன்கெழூஉமணி 7 அகலம் தழுஉமதி 8 விரைந்தே.’1. நேர்பு நிரை 2) நிரைபு நிரை 3) நேர்பு நேர்பு 4) நிரைபு நேர்பு5) நேர்பு நிரைபு 6) நிரைபு நிரைபு 7,8) இறுதிநிலை அள பெடைப்பின் நிரைவந்தவை.இவ்வஞ்சிப்பாவின் ஈற்றடி ‘தூஉமணி அகலம் தழூஉமதி விரைந்தே’என்றிருப்பின், அளபெடைச்சீர் நேர் அள பெடைப் பின் நிரை, நிரைஅளபெடைப்பின் நிரை என இரண்டாம்; ஆக, மேலை ஆறு சீர்களுடன் இவையிரண்டனையும் கூட்ட ஆசிரிய உரிச்சீர் எட்டும் வந்தவாறு. (யா. க. 95உரை. பக். 450)
|
எட்டுவகை எதுகைகள் |
எதுகைக்குத் தொடை என்பதும் ஒருபெயர். அதன் எட்டு வகையாவன : 1)மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, 2) இரண்டடி எதுகை, 3) சீர்முழுதும்ஒன்றி வந்த எதுகை, 4) வல்லின எதுகை, 5) மெல்லின எதுகை, 6) இடையினஎதுகை, 7) இரண்டாம் எழுத்து உயிரால் ஒத்தும் மெய்யால் ஒவ்வா தும்வரும் உயிர் எதுகை, 8) ஆசு இடையிட்ட எதுகை என்பன. (வீ. சோ. 111)
|
எட்டெழுத்தடி வெண்பா |
எ-டு : ‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன். ’ (குறள் 237)
|
எண் |
கலிப்பாவினுள் அம்போதரங்க உறுப்பு ‘எண்’ எனப்படும். இது முற்படப்பெருகி வழிமுறையாற் சுருங்கி வரப்பெறும்.ஈரடியிற் சுருங்கி ஓரடியாயும், ஓரடியிற் சுருங்கி இரு சீராயும்,இரு சீரிற் சுருங்கி ஒரு சீராயும் ஒன்றற்கொன்று பாதியாகச் சுருங்கும்என்பது. ஈரடியும் ஓரடியும் இருசீரும் ஒருசீருமாய்ச் சுருங்கிவரவும்,இரண்டற்கு நான்கும், நான்கற்கு எட்டும், எட்டற்குப் பதினாறுமாய்ஒன்றற் கொன்று உறுப்பு வகையில் இரட்டித்துவரவும் பெறும்.ஈரடி இரண்டனைப் பேரெண் தலையெண் எனவும், ஓரடி அதனிற் குறைதலின்சிற்றெண் எனவும், இருசீரை இடை யெண் எனவும், முடிவிற்கு அளவாய்நிற்கும் ஒரு சீராகிய சின்னத்தை அளவெண் கடையெண் எனவும் கூறுவர். (தொ.செய். 145 நச்.)
|
எண் இடை ஒழிதல் |
எண்கள் இன்றி வருதல் (146 நச்., பேரா.); எண்கள் ஒரோ வொன்று இடைஒழிந்து வருதல் (140 இள.). எண்ணாவது அம்போதரங்க உறுப்பு. எனவே, எண்இடை ஒழிதல் என்பது அம்போதரங்க உறுப்பு கலிப்பா இடையே வாராது நீங்குதல்எனவும், அம்போதரங்க உறுப்புக்களாகிய பேரெண் சிற்றெண் இடையெண் கடையெண்என்ற நான்கனுள் ஒன்றும் இரண்டும் இன்றி வருதல் எனவும் பொருள்படும்.(தொல். செய். 146 நச்.)
|
எண் இடையிட்டுச் சின்னம் குன்றுதல் |
எண்ணாகிய உறுப்புக்கள் இடையிட்டுத் தனிச்சொல் மாத்திரம்வாராதிருத்தல். எண்ணுள் இரண்டடி இரண்டு, ஓரடி நான்கு என்பன மாத்திரம்வந்து, குறளடியும் ஓரசைச் சீரும் இன்றி வருதல் என இருவகைப் பொருள்செய்வர் இளம்பூரணர் (தொ.செய். 143 பேரா.) இதற்கு ‘மாமலர் முண்டகம்’என்ற நெய்தற்கலிப்பாடலை (133) எடுத்துக் காட்டி, இப்பாடற்கண் தரவு (5அடி), ஓரடி எண் (9), ஐந்தடிச் சுரிதகம் வந்ததைச் சுட்டுவர்.எண்இடையிட்டுச் சின்னம் குன்றிய கொச்சக ஒருபோகு.வண்ணக ஒத்தாழிசைக்கு ஓதிய எண்ணும் சின்னமும் இன்றி ஒழிந்த தரவு,தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்பும் பெற்றுத்தேவபாணியாய் வருவதும் கொச்சக ஒருபோகு.‘ஆறறி அந்தணர்க்கு’ என்ற கலித்தொகைக் கடவுள் வாழ்த் துப் பாடல்தரவு, தாழிசை மூன்று, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்பான்வந்ததேனும் தேவபாணியாய் வருதலின் அகநிலை ஒத்தாழிசை ஆகாது, எண்ணும்சின்ன மும் இழத்தலின் கொச்சக ஒருபோகு ஆயிற்று. (தொ. செய். 149நச்.)
|
எண் என்னும் உணவுப்பெயர்ப்
புணர்ச்சி |
எள்ளினை உணர்த்தும் எண் என்னும் உணவுப்பெயர், எட்கசிவு என்றாற்போல
ணகரம் டகரமாகத் திரிந்து புணர்வது போல அல்வழிக்கண்ணும் சிறுபான்மை
எட்கடிது எனத் திரிதலும், பெரும்பான்மை எண் சிறிது – எண் பெரிது –
என்றாற் போல இயல்பாதலும் உடையது. இயல்புகணம் வருமொழி முதற்கண் வரின்
இருவழியும் இயல்பாகப் புணரும்,
எ-டு : எண் மாண்டது, எண்மாட்சி; எண் யாது, எண் யாப்பு; எண்
ணழகிது, எண்ணழகு (தொ. எ. 308, 144 நச்.)
வருமொழி நகரம் வரின் அது ணகரமாகத் திரிதலும், உயிர் வரின் ணகரம்
இரட்டுதலும் பொதுவிதிச் செய்கைகளாம்.
எண் + நன்று = எண் ணன்று; எண் + நன்மை = எண்ணன்மை; எண் + அடைந்தது
= எண்ணடைந்தது, எண் + அடைவு = எண்ணடைவு. (தொ. எ. 150, 160 நச்.)
|
எண் நிறை அளவுப்பெயர்கள் ஏகாரச்
சாரியை பெறுதல் |
உயிரீறும் புள்ளியீறும் ஆகிய எண்ணுப்பெயர்களும், நிறைப்
பெயர்களும், அளவுப்பெயர்களும் தமக்கு இனமாகிய பெயர் களாய்த் தம்மில்
குறைந்த பெயர்கள் தமக்கு வருமொழியாக வந்து புணருமிடத்து இடையே ஏகாரச்
சாரியை பெறும்.
எ-டு : ஒன்று+ கால் = ஒன்றே கால் எண்
கால் + காணி = காலே காணி
}
கழஞ்சு + குன்றி = கழஞ்சே குன்றி
கொள் + ஐயவி = கொள்ளேயையவி
} நிறை
நாழி + ஆழாக்கு = நாழியே யாழாக்கு
கலன் + தூணி = கலனே தூணி
} அளவு
எண் நிறை அளவுப் பெயர்களுக்கு அரை என்பது வருமொழி யாய்ப்
புணருமிடத்துச் சாரியை வாராது.
ஒன்றரை, கழஞ்சரை, கலவரை (வகரம் உடம்படுமெய்) என முறையே காண்க. (தொ.
எ. 164, 165, நச்.)
|
எண்கலை விருத்தம் |
குழிப்பு ஒன்றும், ஒருசிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை.இவ்வாறு எட்டுக் கலைகள் அமைந்த விருத்தம் எண்கலை விருத்தமாம்.தந்த தானன தனதன தனதன – தனதானா -அடி – 1 கஞ்ச மாமலர் மனையென வளர்தனிஅஞ்ச வாகன முதுகினில் வரும்விதிகன்றி யேபல உடலினி லலைதர – விதியாதேகங்கு லேயெனும் நிறமுறு பகடதில்வெம்பு தூதுவர் செறிதர அன்றுமிழ்கண்க ளானவை சினமிக நமனிவ – ணெதிராதேஅடி – 2 அஞ்சு வாள்விழி அரிவையர் படையொடுதென்ற லேறியொர் கணமதில் எணிலவர்அம்பி னாலடர் சமர்புரி தரமதன் – அடையாதேபந்த வானுறை அரியயர் பலர்தினம்நின்று தேடிட வழிபடும் இருமுனிஅன்று காணுற அருளிய திருவடி – தருவாயே,அடி – 3 செஞ்சொ லார்தரு கவுணிய மதலையைஎங்கள் தேசிக மணியென அருள்பரைசிங்க வாகினி பகவதி திரிபுரை – மணவாளா!செங்கை வேல்கொடு கரிமுகன் அரிமுகன்மிண்டு சூருயிர் கடல்வரை அடுமுயர்செந்தில் மேவிய சரவண குகன்வரும் – விழியானே!அடி – 4 மஞ்சு மாமதி வரநதி நகுதலைகொன்றை தாதகி அறுகணை அவைபுனைமங்க ளாகரம் இலகிய சடைமிசை – யுடையானே!வண்கொள் மாமறை உயிர்நிகர் பசுநிரைகொம்பு மேவிடும் வரமதை உதவிடவந்து மாதையில் வதிதரும் அழகிய – பெருமாளே!இப்பாடலில் நான்கடிகளுக்கு எட்டுக்கலைகள் வந்துள்ளன. இவ்வண்ணம்மிக்கு வருங்கால் அடிக்கு நான்கு கலையாக வும், எட்டுக் கலையாகவும்பதினாறு கலையாகவும் நீண்டு வருதலும் உண்டு. இவை ‘வண்ணத்தியல்பு’ என்றமுருகதாச சுவாமிகளது நூலில் காணப்படும்.
|
எண்கள் ‘இன்’ பெறுதல் |
எண்ணுப்பெயரெல்லாம் இன்சாரியை பெறும்.
எ-டு : ஒன்றினை, இரண்டினை, மூன்றினை, நான்கினை, பிறவுமன்ன. (மு.
வீ. புண. 69)
|
எண்சீரின் மிக்க அடியது சிறப்பின்மை |
குறளடி முதல் கழிநெடிலடி வரை அடி ஐந்து வகைப்படும். ஓரடியின்கண்இரண்டுசீர் முதல் எட்டுச்சீர் வரை வரலாம். எண்சீரின் மிக்க அடியெனின்அது சிறப்பின்று. (தொ. வி. 211)
|
எண்சீர்ச் சந்தவிருத்தம் |
குறிலீற்று விளச்சீர், தேமா-2, புளிமாங்காய், தேமா, புளிமாங்-காய்,தேமா, புளிமா எனவரும் எண்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்உளமேபு குந்த அதனால்’ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளிசனிபாம்பி ரண்டு முடனேஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியார வர்க்கு மிகவே. (தே. I 85-1)நாற்சீர்ச் சந்தக் கலிவிருத்தங்கள் இரட்டித்து எண்சீர்ச் சந்தவிருத்தம் ஆதலும் உண்டு. (வி. பா. பக். 73)
|
எண்செய்யுள் |
பாட்டுடைத் தலைவனின் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்துமுதல் ஆயிரம் அளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ்வெண்ணால் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுள் ஆகும். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத்தொள்ளாயிரம் என்பன. (இ. வி. பாட். 88)
|
எண்ணுப்பெயர் உருபொடு புணர்தல் |
ஏழ் என்ற எண்ணுப்பெயர் ழகரமெய் ஈற்றது. ஏனைய ஒன்று முதல் பத்து
ஈறாகிய எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈற்றன. இவை பெரும்பான்மை
அன்சாரியை பெற்று உருபொடு புணரும்; சிறுபான்மை இன்சாரியை பெறும்.
எ-டு : ஒன்றனை, ஏழனை, பத்தனை; ஒன்றினை, ஏழினை, பத்தினை (தொ.எ.
194, 198 நச். உரை)
எண்கள் ‘அன்’ பெறுதல் தொல்காப்பியமரபு. (தொ. எ. 198 நச்.)
|
எண்ணுப்பெயர் பெறும் பொதுச்சாரியை |
எண்ணுப்பெயர்கள் உருபேற்குமிடத்தும், வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் அன்சாரியை பெறும்.
எ-டு : ஒன்றனை, இரண்டனை – (தொ. எ. 198 நச்.); ஏழனை, ஏழற்கு –
(தொ. எ. 194 நச்.); ஒன்றன்காயம், இரண்டன் காயம் – (தொ. எ. 419 நச்.);
ஏழன்காயம், ஏழன்சுக்கு – (தொ. எ. 388 நச்.)
|
எண்ணுப்பெயர்களுக்குச் சிறப்பு விதி |
எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறவும் வருமொழியாக
அமைய, நிலைமொழியாக ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நிற்பின், முதல்
இரண்டு எண்கள் முதல் நீளும்;மூன்று ஆறு ஏழு – என்பன முதல் குறுகும்;
ஆறு ஏழு – அல்லாதவற்றின் ஈற்றின் உயிர்மெய்யும், ஏழு என்ற எண்ணின்
ஈற்றுயிரும் கெடும். ஒன்று என்பதன் னகரஒற்று ரகர ஒற்று ஆகும்; இரண்டு
என்பதன் ணகர ஒற்றும் ரகரத்தை ஊர்ந்து நின்ற அகரமும் கெட, அவ்விரண்டு
ரகரத்தின் மேலும் உகரம் வருதலுமுண்டு. (ஆண்டு அவ்விரண்டு எண்களிலும்
முதலுயிர் நீடல் இல்லை என்க.) மூன்று என்னும் எண்ணின் னகரஒற்றுக்
கெடுதலும், வரும் ஒற்றாகத் திரிதலும் ஆம். நான்கன் ஒற்று லகரஒற்றும்
றகரஒற்றும் ஆம். ஐந்து என்பதன் ஒற்று வரு மொழி முதல் ஒற்றாகியும்,
அதற்கு இனமாகியும், கெட்டும் முடிவதாம். எட்டு என்பதன் டகரமெய்
ணகரமெய் ஆகும்.
வருமாறு : ஒன்று+ இலை, கோடு = ஓர் இலை (ஓரிலை), ஒரு கோடு;
இரண்டு + இலை, கோடு = ஈர் இலை (ஈரிலை) இருகோடு; மூன்று + ஒன்று = மூ
ஒன்று (மூவொன்று); மூன்று + கழஞ்சு, நாழி, வண்டு = முக்கழஞ்சு,
முந்நாழி, முவ்வண்டு; நான்கு + எடை, குணம் = நால்எடை (நாலெடை),
நாற்குணம்; ஐந்து + மூன்று, கழஞ்சு, எடை = ஐம்மூன்று, ஐங்கழஞ்சு, ஐ
எடை (ஐ யெடை); ஆறு + பத்து = அறுபது; ஏழு + கழஞ்சு = எழு கழஞ்சு,
ஏழ்கழஞ்சு; எட்டு + குணம் = எண்குணம் (நன். 188-193)
|
எண்முறையால் கண்ட அசை |
நேரசை – 4 ; நிரையசை 4. தனிக்குறில் – க; ஒற்றடுத்த குறில் – கல்;தனிநெடில் – ஆ; ஒற்று அடுத்த நெடில் – ஆல் என நான்கும் நேரசை.குறிலிணை – பல; குறிலிணைஒற்று – பலம்; குறில் நெடில் – கலா; குறில்நெடில் ஒற்று – கலாம் என நான்கும் நிரையசை.(யா. க. 6, 8)
|
எண்வகை அளபெடை |
‘அளபெடையின் எட்டுவகை’ காண்க.
|
எண்வகை வனப்பு |
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு -என்பன. இவற்றைப் பற்றிய விளக்கம் தனித்தனித் தலைப்பில் காண்க. (தொ.செய். 1)
|
எண்வகைச் சந்தங்கள் |
1. தத்த, தத்தா (2) தாத்த தாத்தா (3) தந்த தந்தா (4) தாந்த தாந்தா(5) தன, தனா (6) தான, தானா (7) தன்ன, தன்னா (8) தய்ய தய்யா என இவை.(வண்ணத்.)
|
எண்வகைமாலை |
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகைஎன்னும் மாலைகள். (பிங். 734)
|
எதிர்கால இடைநிலை |
பகரமும் வகரமும் ஆகிய இரண்டு ஒற்றும் மூவிடத்து ஐம்பால்களிலும்
எதிர்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபத இடைநிலைகளாம்.
வருமாறு : உண்பன், உறங்குவன்
உரையிற் கோடலான், சிறுபான்மை பிற இடைநிலைகளும் எதிர்காலம்
காட்டுதல் கொள்ளப்படும்.
வருமாறு : ‘அண்க ணாளனை
நகுகம் யாமே’ (அகநா. 32:21)
இடைநிலை : க்;
‘பாடுக
ம் வாவாழி தோழி’ (கலி. 41: 1)
இடைநிலை : க்; ‘ஐய சிறிதென்னை
ஊக்கி, (கலி. 37: 15) இடைநிலை :
க்; ‘ஈதல் மாட்டு
ஒ
த்தி பெரும, (கலி. 86: 32);
இடைநிலை: த்; உண்
டி – இடைநிலை: ட்; உரைத்
தி – இடைநிலை: த்; தின்
றி – இடைநிலை: ற்
இவ்வாறு ககரமும் டகரமும் தகரமும் றகரமும் எதிர்காலம் காட்டின. (இ.
வி. எழுத். 49; நன். 144 இராமா.)
|
எதிர்கால விகுதி |
குடுதுறு – என்னும் குற்றியலுகர ஈற்று உண்கு – உண்டு – வருது –
சேறு -முதலிய தன்மை ஒருமை வினைமுற்றுக்களும், உம் என்னும் இறுதி
இடைச்சொல்லின் உகரம் ஏறிய கும் டும் தும் றும் என்னும் இவ் வீற்று
உண்கும்- உண்டும்- வருதும் – சேறும் – முதலிய தன்மைப் பன்மை
வினைமுற்றுக்களும், பகர உயிர்மெய்யும், மாரும் என்னும் இவ்வீற்று
உரிஞுப- உண்ப – கொண்மார்- முதலிய உயர்திணைப் பன்மை வினைமுற்றுக்
களும், மின் என்னும் ஈற்று உண்மின்- உரிஞுமின்- முதலிய முன்னிலைப்
பன்மை வினைமுற்றுக்களும், வியங்கோள் திறத்து வரும் கவ்வும் யவ்வும்
ரவ்வும் அல்லும் ஆலும் மாரும் உம்மும் மையும் என்னும் இவ்வீற்றுச்
செல்க- வாழிய- வாழியர்- ‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ (குறள் – 196) –
‘மரீஇயது ஒராஅல்’ (தொ.சொ. 443 சேனா.) – ‘காணன்மார் எமரே’ – ‘வாழ்தல்
வேண்டும்இவண் வரைந்த வைகல்’ – ‘அஞ்சாமை அஞ்சுவ தொன்றின்’ – முதலிய
வியங்கோள் முற்றுக்களும், அல்லும் ஆலும் ஏலும் காணும் என்னும்
இவ்வீற்று உண்ணல் – மறால்- அழேல் – சொல்லிக்காண்- முதலிய முன்னிலை
ஏவலொருமை வினைமுற்றுக்களும், உண்ணலன்- உண்ணான்- முதலிய எதிர்மறை
வினைமுற்றுக் களும் எனச் சொல்லப்படுவனவாகிய பகுபதங்கள் எல்லாம்
எதிர்காலம் காட்டும். (இ. வி. 50 உரை)
|
எதிர்நிரல்நிறை |
சொல்லையும் பொருளையும் (முடிக்கப்படும் சொல்லையும் முடிக்கும்சொல்லையும்) மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ள வரும் பொருள்கோள்நெறி.எ-டு :`களிறும் கந்தும் போல நளிகடற்கூம்பும் கலனும் தோன்றும்.’இவ்வடிகளில் களிறு போலக் கலன், கந்து போலக் கூம்பு என இவ்விருவகைச்சொற்களும் மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ளப்பட்டவாறு. (யா. வி. பக்.382)
|
எதிர்மறை |
வினைநிகழ்ச்சி இன்மையைக் குறிப்பது எதிர்மறையாம். எதிர்மறையினை
ஆகாரஈறும், ஆ ஏ ஆல் இல் – என்ற இடை நிலைகளும் காட்டும். ஆகார ஈறும்,
அல் இடைநிலையும், ஆவும், ஏயும் முக்காலத்துக்கும் பொதுவாவன.
எ-டு: புலிகள் புல் உண்ணா – ஆகார ஈறு
(உண்+ஆ) முக்காலத்துக்கும் பொது.
அவன் உண்ணலன் – அல் இடைநிலை
(உண்+அல்+அன்) முக்காலத்துக்கும் பொது.
அவன் உண்ணான் – ஆகார இடைநிலை (உண்+(ஆ)+ஆன்) முக்காலத்துக்கும்
பொது
யான் உண்ணேன் – ஏகார இடைநிலை
(உண்+(ஏ)+ ஏன்) முக்காலத்துக்கும் பொது
உண்டிலன் – உண்+ ட்+ இல் + அன் – இறந்தகால எதிர்மறை;
உண்கின்றிலன் – உண் + கின்று + இல் + அன் – நிகழ்கால எதிர்மறை;
உண்கிலன் – உண் + க் + இல் + அன் – எதிர்கால எதிர்மறை.
மேலை மூன்றுவினைமுற்றுக்களிலும் கால இடைநிலை யோடு எதிர்மறை
யிடைநிலை ‘இல்’ புணர்ந்து வந்தவாறு. (வினை நிகழ்ச்சி இல்லனவற்றை உடையன
போலக் காலத் தொடு புணர்த்து உரைத்தல் இலக்கணையாம்.) (நன். 145
சங்.)
|
எதிர்மறை இடைநிலை காலம் காட்டல் |
‘எதிர்மறை மும்மையும் ஏற்கும்’ என்புழி, மும்மையும் என்னும்
முற்றும்மையை ‘முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆகும்’ என்பதனான்
எச்சவும்மையாக்கி, நடந்திலன் நடவாநின்றிலன் – என எதிர்மறை (இல்) ஒரு
காலம் ஏற்று வருதலும் கொள்க. (நடந்திலன் : இறந்தகால எதிர்மறை; ஏனையது
நிகழ்கால எதிர்மறை) சென்றி, செல்லாநின்றி – என வருமாயின் இடை நிலை
காலம் காட்டிய இகர ஈற்றவாம். (நன். 145 சங்கர.)
|
எதிர்மறை ஏவல் விகுதி |
ஏல், அல், அன்மோ, அற்க- விகுதிகள் எதிர்மறை ஏவலொருமை யாம். ஏல் –
செய்யேல், அல் – செய்யல், அன்மோ – செய்யன்மோ, அற்க – செய்யற்க – என
இவை ஒருமையாக வரும்.
ஆமின், அன்மின், அற்பீர் – விகுதிகள் எதிர்மறை ஏவல் பன்மையாம்.
ஆமின் – செய்யாமின், அன்மின் – செய்யன்மின், அற்பீர் – செய்யற்பீர்
– என்றும், முனியாமின் முனியன்மின் முனியற்பீர் – என்றும் வரும்.
அற்க என்னும் விகுதி மூவிடத்து ஐம்பாற்கும் ஏற்பதன்றி வியங்
கோளினும் ஆம். (தொ. வி. 114 உரை)
|
எதிர்மறை வடநடைப் பகுபதம் |
எதிர்மறைப் பகுபதம் மொழி முதற்கண் ஒற்று உளவாயின் அவ்வும், உயிர்
உளவாயின் அந்நும், இருவகை மொழிக்கு நிருவும் புணர்ந்து பொருளின்மையும்
பிறிதும் எதிர்மறையும் காட்டும் வடநடைப் பதங்களாம்.
சயமிலான் –
அசயன்; நீதியின்மை –
அநீதி; மலமின்மை –
அமலம்; சீரணமின்மை –
அசீரணம்; சரமின்மை –
அசரம்; தருமம் இன்மை – அதருமம்.
பிறவுமன்ன.
அகம் என்னும் பாவமில்லான் அநகன்; அங்கமில்லான் அநங்கன்; ஆதியின்மை-
அநாதி; ஆசாரமின்மை – அநா சாரம். பிறவுமன்ன.
மலமின்மை – நிருமலம்; நாமம் இல்லான்- நிருநாமன்; ஆயுதம் இல்லான்-
நிராயுதன்; உவமையில்லான் – நிருவமன். பிறவுமன்ன.
மூவழியும் பகுபதப்பெயர் வடநடையால் வந்தவாறு காண்க. வடநுலார்
பகுபதத்தைத் தத்திதம் என்பர். (தொ. வி. 87)
|
எதிர்மறைவினை அமைப்பு |
நட வா முதலிய ஏவல்வினைப் பகாப்பதத்தைப் பகுதியாக நிறுத்தி
இடைநிலையின்றி ஏன் ஏம் ஓம் ஆய் ஈர் ஆன் ஆள் ஆர் ஆ து அ – என்ற
விகுதிகளை ஏற்றி முடிக்கின், மூவிடத்து ஐம்பால் எதிர்மறை வினைமுற்று
உண்டாகும்.
எ-டு : நடவேன் (யான்), நடவேம்(யாம்), நடவோம்(யாம்), நடவாய்(நீ),
நடவீர் (நீர்), நடவான் (அவன்), நடவாள் (அவள்), நடவார் (அவர்), நடவா
(குதிரைகள்), நடவாது (யானை), நடவாவின (அவை)- என்று வரும். (தொ. வி.
112 உரை)
|
எதுகை |
‘எதுகை இலக்கணம்’ காண்க.
|
எதுகை அந்தாதி |
முதலடியின் இறுதி அசையோ சீரோ அந்தாதியாக வரும் போது அடிஎதுகைத்தொடைபட அமைவது.(யா.க. 52 உரை)எ-டு : ‘மனமே தலைவர் பரிவதித் தினமேதினமேல் நமக்குக் கழிவ(து) உகமே’தினமே என்பது அந்தாதித்தவழி, அடியெதுகைத்தொடை பட அமைதலின் இஃதுஎதுகை அந்தாதியாம்.
|
எதுகை அளபெடைத்தொடை |
அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வருவது. (யா. க.41)“உறா அர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறா அஅய் வாழியென் நெஞ்சு” (குறள். 1200) உயிரளபெடை“வள ங்ங் கனிந்த மணிமன்றுள்விள ங்ங் கொளியை உளங்கொளல் தவமே” (சி.செ.கோ. 42) ஒற்றளபெடை.
|
எதுகை இனக்குறள் வெண்பா |
அடியெதுகைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா.எ-டு : ‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்’ (குறள். 318) (யா. க. 59 உரை)
|
எதுகை இயல்பு |
சிங்கம், தங்கம், பொங்கம் – எனத் தலையாகு எதுகையாகவருவது சிதையாத்தொடை (இரண்டாவது முதலாகச் சில எழுத்து ஒன்றுவது.)கொற்றி, செற்றம், கற்றை – என இரண்டாம் எழுத்து ஒன்றி மூன்றாம்எழுத்து அவ்வெதுகையின் வருக்கமாகிய உயிர் மெய்யாக வருவது சிதையும் தொடை.பார்த்திபன், காய்த்த – என இரண்டாம் எழுத்து ஒன்றாவிடி னும் 3.4 ஆம் எழுத்துக்கள் ஒன்றுவது ஓசைத்தொடை .பாலுக்கு, கூழுக்கு – என இரண்டாம் எழுத்து மெய்யாகஒன்றாவிடினும் உயிராக ஒன்றிவருவது இனத்தொடை.சீருற்ற, நீருற்ற – என இரண்டாவது முதலாகச் சீர்இறுதி வரைப் பலஎழுத்து ஒன்றிவரும் தலையாகு எதுகைத் தொடை அலங்காரத் தொடை.ஆடும் பரிவேல்……….. பாடும் பணியே – என வண்ண வகையால்ஒன்றும் எதுகை. வ ண்ண எதுகைத் தொடை.‘இவ்வகை எதுகையில் யாதும் இலதெனின், செவ்வியகவிகளும் சீர்அழி வுறுமே’ என்றார்.(அறுவகை. யாப்பு, எதுகை இயல்பு 1 – 7)
|
எதுகை இயைபு |
இயைபுத்தொடை எதுகைத் தொடையோடு இயைந்து வருவது.எ-டு : அ லை ப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் வி லை ப்பாலின் கொண்டூன் மிசைதலும் குற்றம். (நான்மணிக். 100)என இவ்வடிகளில் அடியெதுகைத் தொடையோடு அடி யியைபுத் தொடைஅமைந்திருத்தலின், இவ்வடிகளில் எதுகை யியைபு வந்துள்ளது என்பது. (யா.க. 40 உரை)
|
எதுகை இலக்கணம் |
அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்துநிற்ப, இரண்டாம் எழுத்து அவ்வெழுத்தாகவே வருவது அடியெதுகையாம்.இந்நிலை ஓரடிக்கண் சீர்களில் அமையின் சீர்எதுகை. முதலெழுத்தின்மாத்திரை தம்முள் ஒத்து நிற்ப, இரண்டாமடியிலும் முதற்சீர்களின் ஏனையஎழுத்துக்கள் ஒன்றிவரின் தலையாகு எதுகையாம் இனி நாற்சீர் அடிகளில்1, 2 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது இணையெதுகை1, 3 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது பொழிப்பு எதுகை1, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது ஒரூஉ எதுகை1, 2, 3 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது கூழை எதுகை1, 3, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது மேற்கதுவாய் எதுகை1, 2, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது கீழ்க்கதுவாய் எதுகை1, 2, 3, 4 என நான்கு சீரிலும் எதுகை வருவது முற்றெதுகை(தொல். செய். 93 நச். உரை)ஆகவே ‘கட்டு’ என்பதற்குப் ‘பட்டு’ என்பது எதுகை ஆவதன்றிப் ‘பாட்டு’என்பது எதுகையாகாது; ‘காட்டு’ என்பதற்குப் ‘பாட்டு’ எதுகையாவதன்றிப்‘பட்டு’ என்பது எதுகையாகாது. (யா. கா. 16, 19 உரை)
|
எதுகை எட்டு |
இரண்டாம் எழுத்து ஒன்றியது, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, சீர்முழுதும் ஒன்றியது, கிளை எதுகை, வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையினஎதுகை, உயிர் எதுகை என்பன. (யா. க. 49 உரை)
|
எதுகை முதலிய அந்தாதிகள் அடங்குமாறு |
எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை என்ற அந்தாதிகள் செந்நடை,எழுத்து, அசை, சீர் அந்தாதிக்கண் அடங்கும். (யா. க. 52உரைக்கருத்து)
|
எதுகை முரண் |
எதுகையும் முரணும் கலந்து வரும் தொடை.‘இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (குறள் 615)அடியெதுகையே யன்றி அடிமுரணும் அமைந்துளது. (யா. க. 53 உரை)
|
எதுகை மோனைகளின் சிறப்பு |
முரண், இயைபு, அளபெடையென்ற ஏனைய தொடைகள் இருப்பினும் பாவினங்கள்எதுகைத்தொடையானும் தலை யாகு மோனைத்தொடையானும் வருதலின் தொடைகளுள்எதுகையும் மோனையும் சிறப்புடையன. (யா. க. 37 உரை)
|
எதுகை வகை |
முதலெழுத்து அளவொத்து (நிற்ப) இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல்எதுகை. மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, ஆசு எதுகை, இனஎதுகை, தலையாகுஎதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என ஆறு பிறவகைகளும் உள.(தொ. வி. 214)
|
எதுகை விகற்பம் எடுத்துக்காட்டு |
இணையெதுகை முதலிய விகற்பம் ஏழற்கும் எடுத்துக்காட்டு -நோக்குக.‘பு ன் கால் உ ன் னத்துப் பகைவன் எங் கோ’ (பதிற்.61) – ஆசிரியம்‘ம ற ந்தும் பி ற ன்கேடு சூழ ற்க சூழின்’ (குறள். 204) – வெண்பா‘அ ட ங்காதார் மி ட ல்சாய அமரர்வந்திரத்தலின்’ (கலி.2) கலிப்பா‘பொ ன் னேர் மேனி ந ன் னிற ம் சிதைத்தோர்’ ஆசிரியம்‘உ ரு வக் கடுந்தேர் மு ரு க்கிமற் றத்தேர் ’ (களவழி. 4) வெண்பா‘பெ ரு வரை உறழ்மார் பின் தி ரு வோங்கு கரியோனை ’ கலிப்பா‘உ ள் ளார் கொல்லோ தோழி மு ள் ளுடை’ (ஐங்.) ஆசிரியம்‘வா ண் மாய் குருதி களிறுழக்கத் -தா ண் மாய்ந்து’ (களவழி.1) வெண்பா‘அ ணி வேங்கை செறிநீழல்கிளியோப்பு ம ணி நிறத்தாள்’ கலிப்பா‘ கு ன் றம் கொ ன் ற கு ன் றாக் கொற்றத்து’ (முருகு. 266) ஆசிரியம்‘ப ற் றுக ப ற் றற்றான் ப ற் றினை அப்பற்றை’ (குறள். 350) வெண்பா‘ம ணி வரை அ ணி மார்பிற் ப ணி மேவும் பெரியோனை’ கலிப்பா‘பொ ன் னேர் மேனி து ன் னினர் ம ன் னோ ’ ஆசிரியம்‘கொ ண் டுபா ராட்டுவார் க ண் டிலர்கொல் – ம ண் டி’ (நாலடி 48) வெண்பா‘அ லை கடல் துயிலுணரா ம லை யெடுத்த நி லை யோனை’ – கலிப்பா‘உ ள் ளின் உ ள் ளம் வேமே உ ள் ளாது’ – (குறுந். 102) ஆசிரியம்‘ ப டி யை ம டி யகத் திட்டான் – அ டி யினான்’ (நான்.கடவுள்.) வெண்பா‘க தி பல வி தி யாற்சென் றழுந்தாமல் து தி த்தேத்தி’ கலிப்பா‘க ன் னிப் பு ன் னை அ ன் னம் து ன் னும்’ ஆசிரியம்‘இ ன் றுகொல் அ ன் றுகொல் எ ன் றுகொல் எ ன் னாது’ (நாலடி. 36) வெண்பா‘தி ரி புரம் எ ரி சூழ வ ரி வாங் கும் பெ ரி யோனை’ கலிப்பாஇவ்வாறு இணை முதலிய விகற்பம் ஏழும் நாற்சீரடியாகிய அளவடிக்கண்ணேயேகொள்ளப்படும்.(தொ.செய். 93 நச்.)இனி இவ்வேழு விகற்பமும் முறையே வந்த எடுத்துக்காட்டு வருமாறு :(யா. க. 36 உரை)‘பொ ன் னி ன ன் ன பொறிசுணங் கேந்தி – இணைப ன் னருங் கோங்கி ன ன் னலங் கவற்றி – பொழிப்புமி ன் னிவ ரவிரொளி தாங்கி ம ன் னிய – ஒரூஉந ன் னிற மென்முலை மி ன் னிடை வருத்தி – கூழைஎ ன் னையு மிடுக்கண் து ன் னுவித் தி ன் னடை – மேற்கதுவாய்அ ன் ன மெ ன் பெடை போலப் ப ன் மலர்க் – கீழ்க்கதுவாய்க ன் னியம் பு ன் னை யி ன் னிழற் று ன் னிய – முற்றுமயிலேர் சாயலவ் வாணுதல்அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே’
|
எதுகையில் எல்லா எழுத்தும் பயன்படல் |
1. உயிர் : ‘ மனை க்குப்பாழ் வாணுதல் இன்மை, தான் செல்லும்தி சை க்குப்பாழ் நட்டோரை இன்மை……’ (நான்மணிக். 20)2. மெய் : ‘அ ன் பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்பு ன் கணீர் பூசல் தரும்’ (குறள். 71) (யா.க. 362 உரை)3. உயிர்மெய் : ‘வ டி யேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்க டி யார் கனங்குழாய் காணார்கொல் காட்டில்’4. ஆய்தம் : ‘அ ஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெ ஃகி வெறிய செயின்’ (குறள். 175)5. குற்றிய : ‘போ து சேர் கோதாய் பொருப்பன் தரக்குறித்தான்லுகரம் தா து சேர் மார்பின் தழை.’5. குற்றிய : ‘ஆ றி யான் முன்புக் கழுந்து வதுதவிர்த்தான்லிகரம் கூ றி யாய் கொள்ளுமா நின்று’ (யா.க. 36 உரை)
|
எதுகையில் ஐ, ஒள |
அகரத்துடன் யகர ஒற்று வந்தும், இகரம் வந்தும் ஐகாரத்தின்பயத்தவாம்; அகரத்துடன் உகரம் வந்தும், வகரம் வந்தும் ஒளகாரத்தின்பயத்தவாம்.வருமாறு :‘அய்ய(ஐய) மிலை இன்பமற னோடவையும் ஆக்கும்பொய்யில்பொரு ளேபொருள் மற்றல்ல பிற பொருளே.’ (சீவக. 497)கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமைவெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன்- அவ்வேலே-(கௌவை – கவ்வை)(பு.வெ. காஞ்சி. 23)அவ் (ஒள) வை, கவ் (கௌ), கய் (கை);அஇ = ஐ; அஉ = ஒள. இவையிரண்டும் வரிவடிவிற் கொள்ளப்படா. (தொ. எ.54, 55 நச்.)
|
எதுகையே கருவியாக அடிவகுத்தல் |
வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரனார் எதுகையே கருவி யாகஅடிவகுத்தார் என்பார் உரையாசிரியராகிய பெருந் தேவனார். (வீ. சோ. 125உரை)
|
எனப்படுப: சொல்லிலக்கணம் |
என் என்னும் முதனிலைமீது செயப்படுபொருண்மை உணர்த்தும் படு என்னும்
விகுதியும் அகரச்சாரியையும் வந்து புணர்ந்து ‘எனப்படு’ என்று
நின்றவழி, அதுவும் முதனிலைத் தன்மைப்பட்டு மேல்வரும் அகரவிகுதியும்
பகர இடைநிலை யும் பெற்று ‘எனப்படுப’ என முடிந்த பலவறி சொல்லாம். (சூ.
வி. பக். 40,41)
|
என்ப: சொல்லிலக்கணம் |
என்ப என்பது பகர ஈற்றுப் பலரறிசொல்லாகவும், அகர ஈற்றுப் பலவறி
சொல்லாகவும் வரும்.
பலரறிசொல் என் + ப- எனப் பகுக்கப்பட்டு இறுதிநிலை யாகிய பகரமே
எதிர்காலம் காட்ட அமைந்திருப்பதாம். பலவறிசொல் என் + ப் + அ – எனப்
பகுக்கப்பட்டு, அகரம் பலவின்பாலை மாத்திரம் உணர்த்த, பகர இடைநிலை
எதிர்காலம் காட்ட அமைந்திருப்பதாம்.
ஆகவே, என்ப என்ற பலரறிசொல் பகர ஈற்றது, பலவறிசொல் அகர ஈற்றது
என்பது உணரத்தக்கது. (சூ. வி. பக். 52)
பலவறிசொல் ஈறு அகரம் அன்று; வகரமே என்பது பாலசுந்தரனார் கருத்து.
(எ. 1)
|
என்மனார்: சொல்லமைப்பு |
‘செய்ம்மன என்னும் தொழில்இறு சொல்லும்’
(தொ. எ. 210. நச்.)
‘செய்ம்மன செய்யும் செய்த என்னும்’
(தொ. சொ. 222 சேனா.)
‘இசைக்குமன சொல்லே’
(
தொ. சொ. 1)
என்று செய்ம்மன என்னும் வாய்பாடு ஒன்று தொல்காப்பியத் தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வினைமுற்றுச் சொல் என்பர் சேனாவரையர்;
பெயரெச்சச் சொல் என்பர் நச்.
செய்யும் என்னும் வினைமுற்றுப் போலவே பண்டு வழங்கிய செய்(ம்) மன
என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேரச் ‘செய்மனார்’ என்று ஆகும்.
அதே வாய்பாட்டினதாகும் என்மன என்னும் முற்றுச்சொல்லோடு ஆர்விகுதி சேர
என்மனார் என்று ஆகும்.
என்ப+மன்+ஆர்; என்ப என்ற முற்றுச்சொல்லின் பகரம் கெடுத்து, மன்
ஆர்- இவற்றை இணைக்க என்மனார் என்றாயிற்று என்று இளம்பூரணர், கல்லாடர்,
யாப்பருங்கல உரையாசிரியர், இறையனார் களவியல் உரையாசிரியர்
என்னுமிவர்கள் கொள்வர். சேனாவரையர் என் +மன்+ஆர் எனக் கொண்டு, மன்
எதிர்கால இடைநிலை என்னும் கருத்துடையார். (எ. ஆ. பக். 17)
|
எருத்தடி |
தரவினுடைய ஈற்று அடி. (தொ.செய். 116 நச்.)ஈற்றயலடி என்பார் இளம்பூரணர் (112 இள.)
|
எருத்தம் |
‘தரவு’ காண்க.
|
எருத்து |
இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதொரு கலியுறுப்பு.பாட்டிற்கு முகம் தரவு ஆகலானும், கால் சுரிதகம் ஆகலானும், ஏனையஉறுப்புக்கள் இடைநிலைப்பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமுமாகக்கொள்ளக் கிடத்த லானும், எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப்பெயராக வேண்டுமாகலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல்வேண்டும்.‘தரவே எருத்தம் அராகம் கொச்சகம்அடக்கியல் வகையோடு ஐந்துறுப் புடைத்தே’(அகத்தியம்) என்பதனை நோக்கத் தரவும் எருத்தமும் வெவ்வேறுஉறுப்பெனவேபடுமேனும், தொல்காப்பியனா ருக்கு எருத்து என்பதும் தரவுஎன்பதும் ஒன்றேபோலும். (தொ. செய். 117 இள.)
|
எருத்து: சொற்பொருள் |
எருத்து – பிடர் ; முன்னுறுப்பு என்றவாறு இது பிற உறுப்புக் களைத்தருதற்கு முதலாகி நிற்றலின் தரவு எனவும் வழங்கப்படும்.இது பரிபாட்டிற்குரிய சிறப்புறுப்பு.(தொ. செய். 121 ச. பால)
|
எருபுணருமாறு |
எரு என்ற பெயர் நிலைமொழியாய் வருமொழி வன்கணத் தொடு புணருமிடத்து,
வல்லெழுத்தும் இனமான மெல் லெழுத்தும் மிகும். உயிர் நீங்கலாக ஏனைய
கணத்தொடு புணருமிடத்து அம்முச் சாரியை இடையே வருதலுமுண்டு.
எ-டு : எருக்குழி, எருங்குழி – வல்லெழுத்தும் மெல்லெழுத் தும்
முறையே மிக்கன. எருவங்குழி, எருவஞாற்சி, எருவயாப்பு – அம்முச் சாரியை
பெற்றன. எரு + ஈட்டம் = எரு வீட்டம் – என இயல்பாக உடம்படு மெய்
பெற்றுப் புணர்ந்தது. (தொ. எ. 260 நச். உரை)
உருபேற்குமிடத்து இன்சாரியை பெற்று எருவினை முதலாக
(தொ.எ. 173) வருவது போலப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் எருவின்
குறுமை எனச் சிறுபான்மை இன்சாரியை பெறுத லும் கொள்க. (தொ. எ. 260 நச்.
உரை)
|
எறும்பிடைச் செய்யுள் |
அளவழிச் சந்தச் செய்யுளுள் நான்கடியும் சீரான் ஒத்து முதலடியும்முடிவடியும் எழுத்தெண்ணிக்கையான் ஒத்து. இடையிரண்டடி எழுத்தெண்ணிக்கைவேறுபட்டுக் குறைந்து வருவது.மணிமலர்ந் துமிழ்தரும் ஒளியும் சந்தனத் (14)துணிமலர்ந் துமிழ்தரும் தண்மைத் தோற்றமும் (13)அணிமலர் நாற்றமும் என்ன அன்னவாய் (12)அணிவரு சிவகதி அடைவ தின்பமே. (14) (சூளாமணி. 2075)அளவழிப் பையுட் சந்தத்துள் ஒருவகை இது.(யா. வி. பக். 517, 518)
|
எல்லா எழுத்தும் மெய்ந்நிலை
தம்மியல் மயக்கம் கிளத்தல் |
‘உயிர் மெய்ந்நிலை தம்மியல் மயக்கம் கிளத்தல்’ காண்க.
|
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யும் உயிரும் ஆதல் |
மொழிமரபில் மொழிக்கு முதலாய் வருவனஉயிர் உயிர்மெய் குற்றியலுகரம்
எனவும், மொழிக்கு இறுதியில் வருவன உயிர் மெய் உயிர்மெய் குற்றியலுகரம்
எனவும் கூறப்பட்டன. மொழி முதற் குற்றியலுகரமும், மொழிமுதல்
உயிர்மெய்யும் மெய் யாகவே கொள்ளப்படும். மொழியிறுதி உயிர்மெய் உயிருள்
அடங்கும். எனவே மொழிக்கு இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டுள்
அடக்கப்பட்டன. (தொ. எ. 103 நச்.)
|
எல்லாம் என்னும் பொதுப்பெயர்
புணருமாறு |
எல்லாம் என்பது இருதிணைப் பொதுப்பெயர்களுள் ஒன்று. இது வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் அஃறிணையை உணர்த்தும் வழி வற்றுச்சாரியையும்,
உயர்திணையை உணர்த்தும்வழி நம்முச்சாரியையும் பெறும்; இறுதியில்
உம்மைச் சாரியை பெறும். உருபேற்றற்கண்ணும் இந்நிலை உண்டு; இயல்பு
கணத்து முன்னும் இஃதுண்டு.
எ-டு : எல்லாவற்றையும் – (தொ. எ. 189 நச்.); எல்லா நம்மையும் –
(தொ.எ. 190 நச்.); எல்லாவற்றுக் கோடும் – (தொ.எ. 322நச்.);
எல்லாநங்கால்களும் – (தொ. எ. 324 நச்.)
எல்லாவற்றுஞாணும், யாழும், உறுப்பும். (தொ. எ. 322 நச்.)
எல்லாநஞ்ஞாணும், எல்லாநம்யாழும், எல்லாநம்முறுப்பும் (தொ. எ. 324
நச்.)
அல்வழிக்கண் வற்றுச்சாரியை பெறாது இயல்பு ஆதலும், ஈறு கெடுதலும்,
வலிமெலி மிகுதலும், இறுதிக்கண் உம்முச் சாரியை பெறுதலும் நிகழும்.
வருமொழி இயல்புகணமாயின் எல்லாம் என்பதன் மகரம் கெட்டுப் புணரும்;
சிறுபான்மை இயல்பாகப் புணரும்.
எ-டு : எல்லாக் குறியவும் என ஈறுகெட்டு வலியும் உம்மும் மிக்கன;
எல்லாக் கொல்லரும் – ஈறு கெட்டு வலியும் உம்மும் மிக்கன; எல்லாங்
குறியரும் – ஈறு கெட்டு மெலியும் உம்மும் மிக்கன; எல்லா ஞாணும் யாழும்
வட்டும் அழகும் – ஈறு கெட்டு உம் மிக்கது; எல்லாம் வாடின, எல்லாம்
ஆடின என இயல்பு. எல்லா ஞான்றாரும், வணிகரும், அரசரும் என ஈறுகெட்டு
உம் மிக்கது. (தொ. எ. 322 -324 நச். உரை)
|
எல்லாம் என்பது உருபுஏற்றல் |
எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணையைக் குறிக்கு மிடத்து
உருபேற்குமாயின் அற்றுச்சாரியையும் அடுத்து உருபினையும் கொண்டு
முற்றும்மையை இறுதியில் பெற்று எல்லாவற்றையும் என வரும்.
எல்லாவற்றொடும், எல்லா வற்றுக்கும் முதலாகப் பிற உருபுகளொடும்
கூட்டுக.
இனி, அப்பெயர் உயர்திணைக்கண் வருமாயின் உருபேற்கு மிடத்து,
நம்முச்சாரியையையும் அடுத்து உருபினையும் பெற்று இறுதியில்
முற்றும்மையைஏற்று, எல்லாநம்மையும் – எல்லாநம்மொடும் – எல்லா நமக்கும்
– என்றாற் போல வரும். (நன். 245 சங்.)
|
எல்லாரும் என்ற பெயர் புணருமாறு |
எல்லாரும் என்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர், அல்வழிப்
புணர்ச்சிக்கண் வன்கணம் வந்தவழி மகரம் இனமெல்லொற் றாகத் திரிந்தும்,
மென்கணம் வந்தவழி மகரம் கெட்டும், இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்தவழி
இயல்பாகவும் புணரும்.
எ-டு : எல்லாரு
ங் கடியர், எல்லாரு
ஞ் சான்றார் – மகரம்
மெல்லொற்றாதல்; எல்லாரு ஞான்றார்; எல்லாரு நாணினார் – மகரம் கெடுதல்;
எல்லாரும் வளவர், எல்லாரு மடைந்தார் – இயல்பாகப் புணர்தல்.
எல்லாரும் என்பது வேற்றுமையுருபுஏற்குமிடத்து, உம்மையை நீக்கி
எல்லார் என்றாகித் தம்முச்சாரியை பெற்றுப் பின்னர் உருபும் உம்மையும்
பெற்று எல்லார்தம்மையும், எல்லார் தம்மொடும், எல்லார்தமக்கும் –
என்றாற் போல வரும். பொருட்புணர்ச்சிக்கும் இஃது ஒக்கும்.
எ-டு : எல்லார்தம்(ங்)கையும், எல்லார்தம்(ஞ்)ஞானமும்,
எல்லார்த(ம்)மாட்சியும், எல்லார்தம்மழகும்.
உம்மையை நீக்கிச் சாரியை பெறாது உருபேற்று ஈற்றில் உம் பெற்று,
எல்லாரையும் எல்லாரொடும் எல்லார்க்கும் என வருதலே பெரும்பான்மை. (தொ.
எ. 191 நச்., நன். 246)
|
எல்லீரும் என்ற பெயர் புணருமாறு |
எல்லீரும் என்னும் முன்னிலை உயர்திணைப்பெயர் அல்வழிப்
புணர்ச்சிக்கண் வன்கணம் வந்தவழி மகரம் இனமெல் லெழுத்தாகத் திரிந்தும்,
மென்கணம் வந்தவழி மகரம் குன்றி யும், இடைக்கணமும் உயிர்க்கணமும்
வந்தவழி இயல்பாகவும் புணரும்.
எ-டு : எல்லீருங் கடியீர், எல்லீருஞ் சிறியீர், எல்லீருந்
தீயீர் – மகரம் திரிதல்; எல்லீரு ஞான்றீர், எல்லீரு நல்லீர், எல்லீரு
மாண்டீர் – மகரம் கெடுதல்; எல்லீரும் யாவீர், வாரீர்,
எல்லீருமடைந்தீர் – இயல்பு.
எல்லீரும் என்பது உருபேற்குமிடத்து உம்மையை நீக்கி எல்லீர் என்று
நின்று நும்முச் சாரியை பெற்றுப்பின்னர் உருபும் உம்மையும் பெற்று,
எல்லீர்நும்மையும் எல்லீர் நும்மொடும் எல்லீர்நுமக்கும் – என்றாற்
போலப் புணரும். இது பொருட் புணர்ச்சிக்கும் ஒக்கும்.
எ-டு : எல்லீர்நுங்கையும், எல்லீர்நுஞ்ஞாணும், எல்லீர் –
நும்யாப்பும், எல்லீர்நும்மழகும் ;
உம்மையை நீக்கிச் சாரியை பெறாது உருபேற்று இறுதியில் உம்மை பெற்று,
எல்லீரையும் எல்லீரொடும் எல்லீர்க்கும்- என வருதலும் கொள்க. (தொ. எ.
191 நச். உரை) (நன். 246)
|
எல்லோர்க்கும் பொதுவான உரைநடை வகை |
உரைநடை வகை நான்கனுள்ளும், பாட்டிடை வைத்த குறிப்பினான் வரும்உரைநடையும் பாட்டின்றிச் சூத்திரத்திற் குப் பொருளுரைப்பன போல வரும்உரைநடையும் வரையறையின்றி எல்லார்க்கும் உரிய. (தொ. செய். 175நச்.)
|
எள்ளாட்டியவழி யல்லது எண்ணெய்
புலப்படாதவாறு போல |
“நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்து பின்னர்ப் பிளவுபடா
ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டி னார். இவை கூட்டிச் சொல்லிய
காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறு போல
என்று உணர்க” என்று, ‘நெடில் குறில்’ என்ற இரண்டன் கூட்டமாகிய
பிளவுபடாத ஓசையே அளபெடை என்ற கருத்தில் நச். குறிப்பிட்டுள்ளார். (தொ.
எ. 6. நச்.)
நெடிலையும் குறிலையும் சேர்த்துச் சொன்னாலன்றித் தனித்துச்
சொல்லுமிடத்து அளபெடை ஒலி புலப்படாது. ‘எள்ளாட்டுதல்’ சேர்த்துச்
சொல்லுதற்கும், ‘எண்ணெய் புலப்படுதல்’ அளபெடை ஒலி தோன்றுதற்கும்
உவமமாம்.
|
எழு, எழூஉ: வேறுபாடு |
எழு:தன்வினை; எழு +உ = எழூ : பிறவினை. முதனிலை உகரத்தொடு பிறவினைப்
பொருளில் வரும் உகரம் சேர ‘எழூ’ என்றாயிற்று. இச்சொல் இயல்பான ஊகார
ஈற்றுச் சொல் லன்று; பிறவினைப் பொருளில் வரும் உகரம் சேர எழூ என்றா
யிற்று என்பதனை விளக்க, ‘எழூஉ’என்று, முதனிலையொடு சேர்ந்த உகரத்தை
அறிவித்தற்காக உகரம் அறிகுறியாய் எழுதப்பட்டது. இங்ஙனம் எழு
முதலியவற்றுடன் உகரம் சேர்ந்து (இரு குறில் ஒரு நெடிலாய்) எழூ
முதலியனவாகிப் பின் எழூஉ – முதலியனவாக இருத்தல் பண்டை வழக்கு. உகரம்
சேர்ந்து, எழு +உ = எழுவு என்றாற்போல வருதல் பிற்கால வழக்கு.
மக +அர் = மகார். விகுதி அகரம் சேர்ந்ததை அறிவித்தற் காகவே,
‘மகாஅர்’ என்று இடையே அகரம் இட்டு எழுதுப. (எ. ஆ. பக். 16)
|
எழுகூற்றிருக்கை |
மிறைக்கவியுள் ஒன்றாக யாப்பருங்கலத்தில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது; விருத்தியுரை இதனை விளக்குகிறது. சம்பந்தர் தேவாரத்துள்இது காணப்படுகிறது. ஒன்று முதல் ஏழு வரையுள்ள எண்கள் கூடியும்குறைந்தும் பெரும்பான்மையும் இணைக்குறள் ஆசிரிய யாப்பில் இதுநிகழும்.எழுகூற்றிருக்கையில் சம்பந்தர் தேவாரத்தில் ஒரு பதிகம், திருமங்கைமன்னன் பிரபந்தங்களில் ஒன்று, நக்கீரதேவ நாயனார் இயற்றியதிருஎழுகூற்றிருக்கை என்ற 11 ஆம் திருமுறைப் பதிகம், மாறனலங்காரச்சொல்லணியியலின் மிறைக்கவிகளுள் ஒன்றாக உதாரணம் காட்டப்பெறுவது – என்பனபிரசித்தமானவை. யாப்பருங்கல விருத்தியுரையில் இரண்டுஎடுத்துக்காட்டுக்கள் உள. (யா. வி. பக். 534 – 537)
|
எழுசீர்ச் சுகந்தி விருத்தம் |
குறில் ஈற்றுத் தேமாச்சீர் ஏழனோடு இறுதியில் (பெரும் பாலும்)நெட்டெழுத்துப் பெறும் அடிநான்கான் ஆயது (வி. பா. பக். 68)நேரசையில் தொடங்குவது :எ-டு : ‘மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர்தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி லேந்தி யாடினான்ஒட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினைஇட்ட லர்ந்த போது போல ஏந்த லேந்தி நீக்கினான்’ (சீவக.690)நிரையசையில் தொடங்குவது.எ-டு : ‘உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெலாம்இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலேஉறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்.’ (கம்பரா.7316)
|
எழுத்ததிகாரப் புறனடையால்
கொள்ளப்படுவன |
தட என்ற உரிச்சொல், தடவுத் திரை என, வன்கணத்தொடு புணரும்வழி
உகரமும் வல்லெழுத்தும் பெற்றது. தடவு நிலை (புற.140) என
இயல்புகணத்தின்கண் உகரம் பெற்றது.
அத என்ற அகரஈற்று மரப்பெயர், அதவத்தங்கனி என, அத்துச்சாரியையும்
அம்முச்சாரியையும் பெற்றது.
‘கசதபத் தோன்றின்’ (எ.203) என, அகர ஈறாகிய எழுத்துத் தன்னை
உணரநின்றவழியும் வல்லெழுத்து மிக்கது.
நறவங்கண்ணி, குரவ(ம்) நீடிய – என, ஆகார ஈறு அகர ஈறாகி உகரம்
பெற்றவழியும், வேற்றுமை அல்வழி என இரு நிலையி லும் அம்முச்சாரியை
பெற்றது.
முளவுமா, பிணவு நாய் – என, இயல்புகணம் வரின் அம்முப்
பெறாதாயிற்று.
முழவொடு ஆகுளி (மலைபடு.3), சுற எறிமீன், ‘இர வழங்கு சிறுநெறி’ (அக.
318) – ஆகார ஈறு அகர ஈறாகி உகரம் பெறாது வந்தது. (முழ + ஒடு)
‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அக. 97) – இகர ஈறு
வேற்றுமைக்கண் அம்முச்சாரியை பெற்றது.
தீயின் அன்ன – (மலைபடு. 145) – ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன்சாரியை
பெற்றது.
திருவத்தவர் (நாலடி. 57) – உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துச்சாரியை
பெற்றது.
ஏப் பெற்ற (சீவக. 2965) – ஏகார ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது
வந்தது.
‘கைத்து உண்டாம் போது’ (நாலடி 19) – ‘கைத்து இல்லர் நல்லர்’ – ஐகார
ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது.
புன்னையங்கானல், முல்லையந் தொடையல் – ஐகார ஈறு வேற் றுமைக்கண்
அம்முப் பெற்றது.
கோ
யில் – ஓகாரஈறு யகர உடம்படுமெய்
பெற்றது.
அஞ்செவி – அல்வழிக்கண், அகம் என்ற நிலைமொழி ககரமும் அகரமும் (க)
கெட்டது.
மர
வம்பாவை, மர
வநாகம் – வேற்றுமை அல்வழி என
இரண்டன்கண்ணும் அம்முப் பெற்று மகரம் (மென்கணம் வருவழிக் ) கெட்டு
முடிந்தது. (மரப்பாவை, நாகமரம் என்பன பொருள்)
‘கா
னம் பாடினேம்’ (புற.144)
‘பொன்னந்திகிரி’, ‘பொன்னங் குவடு’ – கான் பொன் – என்ற னகர ஈற்றுப்
பெயர்கள் இருவழி யும் அம்முப் பெற்றன.
‘வெதி
ரத்துக் கால்பொரு’ (நற்.62) –
ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது.
‘நாவ
லந் தண்பொழில், (சிலப். 17:
1),’கான
லம் பெருந்துறை’ (ஐங்.158) லகர
ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது.
நெய்த
லஞ் சிறுபறை – லகரஈறு
அல்வழிக்கண் அம்முப் பெற்றது.
‘ஆ
யிடை இருபேராண்மை’ (குறுந். 43)
அவ் + இடை : அகரம் நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது.
‘
அன்றி யனைத்தும்’- அகரச் சுட்டு
‘அன்றி’ எனத் திரிந்தது.
தெங்கின் பழம் – குற்றுகர ஈறு
பொருட்புணர்ச்சிக்கண் இன்சாரியை பெற்றது.
‘
தொண்டு தலையிட்ட’ – ஒன்பது
‘தொண்டு’ எனத்
திரிந்தது.
அருமருந்தான், சோழனாடு, பாண்டியனாடு, தொண்டை – மான் நாடு, மலையமான்
நாடு, பொதுவில் – இவை முறையே அருமந்தான், சோணாடு, பாண்டிநாடு,
தொண்டைநாடு, மலாடு, பொதியில் – என்று திரிந்து மருவி வழங்கின. (தொ. எ.
483 நச். உரை)
|
எழுத்ததிகாரம் கூறும் இரு செய்திகள் |
இப்படலத்தில் விதிக்கப்படுவன எல்லாம் கருவியும் செய்கை யும் என இரு
வகைப்படும். அவற்றுள் கருவி எழுத்தியல் பதவியல் என்னும் இரண்டு
ஓத்தானும், செய்கை உயிரீற்றுப் புணரியல் முதலிய மூன்று ஓத்தானும்
கூறப்படும். கருவி பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் இரண்டு
ஓத்தினும் கூறப்படுவன பொதுக்கருவி. உயிரீற்றுப் புணரியல் முதற்கண்
புணர்ச்சி இன்னதெனக் கூறப்படுவனவும், உருபு புணரியல் இறுதிக்கண்
சாரியைத் தோற்றம் கூறப்படுவனவும் செய்கை ஒன்றற்கேயுரிய கருவியாதலின்
சிறப்புக் கருவியாம். (நன். 56 சிவஞா.)
|
எழுத்ததிகாரம்: சொல்விளக்கமும்
பொருள்நிலையும் |
எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகரித்தலையுடையது என
அன்மொழித்தொகையாய் அப்படலம் முழுதுக்கும் காரணக் குறியாயிற்று.
எழுத்தினை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியாகிய படலம் எழுத்ததிகாரம்
ஆயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்றவிடத்து,
‘எழுத்தினது’என்ற ஆறாம் வேற்றுமை ஏற்ற சொல் எழுவாயின் பொருளதாய்,
‘அதிகாரத்தையுடையது’ என்ற வினையைக் கொண்டு முடிந்தது. வேற்றுமை
வினைகொண்டு முடிவது காரகமாம். ஆறாவது நேராக வினையைக் கொண்டு முடியாது.
ஆகவே எழுவாயின் பொருளிலேயே அது வினை கொண்டு முடிந்தது. எழுத்ததிகாரம்
என்பது ஆறாவது வினைமுதற் பொருண்மை யின்கண் வந்த காரகமாம். (சூ. வி.
பக். 17)
எழுத்ததிகாரம் – எழுத்தை உணர்த்திய அதிகாரம் (இள. நச்.)
அதிகாரம் – முறைமை
எழுத்ததிகாரத்தில் எழுத்து இனைய என்றல், இன்ன பெயர என்றல், இன்ன
முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன
புணர்ச்சிய என்றல், இன்ன வடிவின என்றல், இன்ன தன்மைய என்றல் – என்ற
எட்டு வகையானும், எழுத்துக்களின் உண்மைத்தன்மை, குறைவு, கூட்டம்,
பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன்
திரிபு அது என்றல், திரிந்ததன் திரிபு பிறிது என்றல், திரிந்ததன்
திரிபு அதுவும் பிறிதும் என்றல், நிலையிற்று என்றல், நிலையாது என்றல்,
நிலையிற்றும் நிலையாதும் என்றல் – என்ற எட்டு இறந்த பலவகையானும்
எழுத்து உணர்த்தப்பட்டது. (தொ. எ. 1 இள., நச். உரை)
|
எழுத்ததிகாரம்: தொடரிலக்கணம் |
அதிகாரம் என்பது ஈண்டு அதிகரித்தலை யுடையதாம். அதனை யுடையது எனவே,
எழுத்தை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம்
என்றவாறாயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்புழி, ஆறாவது
வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம். (நன். 56 சிவஞா.)
|
எழுத்தந்தாதி |
ஒரு செய்யுளின் ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதலெழுத்தாகவரத்தொடுப்பது.எ-டு : ‘வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவிவிரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி’(யா. க. 52 உரை)
|
எழுத்தலங்காரம் |
எழுத்தைக் கூட்டல், குறைத்தல், மாற்றங்களால் தோன்றும் அழகு.எழுத்துப்பெருக்கம், எழுத்துச்சுருக்கம் என்ற மிறைக் கவிகள்இவ்வணியின்பாற்படுவன. (தண்டி. 98)
|
எழுத்தல் இசை |
எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும்அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடைஅழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டுவழங்கப்படும்.முற்கு – முக்குதல்; வீளை – சீழ்க்கை அடித்தல்;இலதை – கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவதுவேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவதுபோலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃகென்று திரியும் இடைமகனே – சென்றுமறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லேஅறியாயோ அண்ணாக்கு மாறு’என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள்காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாதஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்றபெயர். ஊசி – எழுத்தாணி; முறி – தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395,396)
|
எழுத்தளவு எஞ்சுதல் |
எழுத்துக் குறைந்தும் மிக்கும் தம் அளவு இறந்து வருதல். செய்யுளுள்குற்றியலுகரம் எழுத்தெண்ணப்படாது; முற்றிய லுகரம் எண்ணப்படும். ஆனால்,போது என்ற குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் மேவு என்ற முற்றியலுகரஈற்றுச் சொல் லும் ‘நேர்பு’ வாய்பாடே; அவை போல மருது என்பதும் உருமுஎன்பதும் ‘நிரைபு’ வாய்பாட்டசையே; வந்து என்பதும் மின்னு என்பதும்‘நேர்பு’ வாய்ப்பாட்டு அசையே.போதுபூ – 2 எழுத்துமேவு சீர் – 3 எழுத்து } இவை ‘நேர்பு நேர்’பூ மருது – 3 எழுத்துகாருருமு – 4 எழுத்து } இவை ‘நேர் நிரைபு’இங்ஙனம் எழுத்துக்கள் மிகினும் குறையினும் சீர் ஆகும் நிலையில்வேறுபாடு இல்லை என்பது உணர்த்தப்படுகிறது.(தொ. செய். 43 பேரா.)
|
எழுத்தழிவு அணி |
மிறைக் கவிகளுள் ஒன்று. ‘அக்கரச் சுதகம்’ காண்க.(மு. வீ. சொல்லணி. 17)
|
எழுத்தாகா ஒலிகள் |
முற்கு வீளை இலதை – முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும்,
எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத,
எழுத்தாகா ஒலிகளாம். முற்கு – வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல்
கர்ச்சனை; வீளை – சீழ்க்கையிடும் ஒலி; இலதை – அடிநா அடியில்
தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம்,
நச்.)
தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு
மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி
நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித்
தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா.
வி. பக். 170)
|
எழுத்தினை எட்டிறந்த பலவகையான்
உணர்த்தல், எழுத்தினை எட்டுவகையான் உணர்த்தல் |
‘எழுத்ததிகாரம்: சொல் விளக்கமும் பொருள் நிலையும்’ – பிற்பகுதி
காண்க.
|
எழுத்தினைக் குறிக்கும் பெயர்கள் |
இரேகை எனினும், வரி எனினும், பொறி எனினும், எழுத்து எனினும் ஒரு
பொருட்கிளவி. (மு. வீ. எழுத். 3)
|
எழுத்தின் தொகை |
சிறப்பெழுத்து, உறுப்பெழுத்து என்பன. (யா.க. பாயிர. உரை)
|
எழுத்தின் பிறப்பிடங்கள் |
எழுத்தின் பிறப்பிடங்கள் தலை, மிடறு, நெஞ்சு என்ற மூன்றுமாம்.
இவற்றுள் உயிரும் இடையினமெய்களும் மிடற்றுவளியானும், வல்லினம்
தலைவளியானும், மெல்லினம் மூக்குவளிக் கலப்பாலும், ஆய்தம்
நெஞ்சுவளியாலும் பிறக்கும். (தொ. எ. 84, 88, 101 நச். உரை)
|
எழுத்தின் பிறப்பிற்கு முயற்சித்
தானங்கள் |
பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் ஆகிய ஐந்தும் எழுத்தின்
பிறப்பிற்குரிய முயற்சித் தானங்கள்.
இ ஈ ஏ ஏ ஐ – என்ற ஐந்தும் சிறப்பாகப் பற்களையும், உ ஊ ஒ ஓ ஓள- என்ற
ஐந்தும் சிறப்பாக இதழ்களையும், ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற ஆறும்
சிறப்பாக மூக்கினையும், க் ச் ட் – என்பன சிறப்பாக மேல்வாயினையும்
நாவினையும், த் – என்பது சிறப்பாக நாவினையும் பற்களையும், ற் ய் ர் ழ்
– என்பன சிறப்பாக நாவினையும் மேல்வாயினையும், ல் ள் – என்பன நா பற்கள்
மேல்வாயினையும், ப் – என்பது இதழ்களையும், வ் – என்பது இதழ்களையும்
பற்களையும், – முயற்சித் தானங்களாகக் கொண்டு பிறப்பனவாம். (தொ. எ. 86
– 99 நச்.)
|
எழுத்தின் மாத்திரை |
உயிரளபெடை நான்கு மாத்திரைய ஆதலும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்
ஒன்றரை மாத்திரைய ஆதலும் ஆரிடத்துள்ளும் அவை போல்பவற்றுள்ளும் அருகி
வந்து செய்யுள் வழு வமைதியாய் முடிதலின் அவற்றை ஒழித்து,
எல்லார்க்கும் ஒப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும்
ஒருமாத்திரையுமே ஆதலின் ‘மூன்று உயிரளபு’ என்றும், ‘ஒன்றே குறிலொடு ஐ
ஒளக் குறுக்கம்’ என்றும் கூறினார். குற்றியலுகரம் புணர்மொழி
இடைப்படின் குறுகிக் கால் மாத்திரை பெறுதல் உரையிற் கோடல் என்பதனால்
கொள்க. உயிர்மெய்க்கு அளவு கூறாதொழிந்தார், மேல் ‘உயிரளவாய்’ (89)
என்றலின். (நன். 99 சிவஞா.)
உயிரளபெடைமூன்றும், நெட்டெழுத்து இரண்டும், குற்றெழுத்து – ஐகார
ஒளகாரக் குறுக்கங்கள்- ஒற்றளபெடை – இவை தனித்தனி ஒன்றும்,
ஒற்றெழுத்து- குற்றியலிகரம்- குற்றியலுகரம் – ஆய்தம் – இவை தனித்தனி
அரையும், மகரக் குறுக்கம்- ஆய்தக் குறுக்கம்- இவை தனித்தனியே காலும்
மாத்திரை பெறும். உயிர்மெய்யின் மாத்திரை உயிர்மாத் திரையே ஆதலின்
உயிர்க்குறில் உயிர்நெடில் மாத்திரையே இவற்றிற்கும் ஆம். (நன்.
99)
|
எழுத்தின் வகை |
ஒற்று, உயிர், உயிர்மெய் என்பன. (யா. க. பாயிர. உரை)
|
எழுத்தின் வரிவடிவம் |
மெய்யின் வடிவும் உயிர்மெய்யின் வடிவும் பலமுறை வேறுபடாமையானும்,
எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம் எப்போதும் ஒரு வடிவு ஆகையானும், மயக்கம்
நீப்பது வேண்டி மேற்புள்ளி கொடுத்தார் புலவர். ஆகையால்
குற்றெழுத்தின்மேல் நீண்ட புள்ளியும், ஒற்றெழுத்தின் மேல் சுழித்த
புள்ளியும் வரும் என்றுணர்க. (தொ. வி. 12 உரை)
|
எழுத்தின் விரி |
உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை,இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் என்பன. (யா. க. பாயிர உரை)
|
எழுத்தியல் பதவியல் தொடர்பு |
மேல் எழுத்திலக்கணம் பன்னிரண்டு பகுதியால் உணர்த்தப் படும்
என்றவற்றுள், எழுத்திற்கேயுரிய பத்திலக்கணமும் எழுத்தியலான் உணர்த்தி,
அவற்றின்பின் நின்றது அவ் வெழுத்தினான் ஆகிய பதம் ஆதலின் அதனைப்
பதவியலால் உணர்த்துதலின் இவ்வியல் மேலையியலோடு இயைபுடைத் தாம். (நன்.
127 மயிலை.)
|
எழுத்தியல் வகை |
செய்யுள் உறுப்பு 26-இல் இஃது இரண்டாவது. எழுத்து, உயிரெழுத்துமெய்யெழுத்து சார்புஎழுத்து என மூவகைப் படும். உயிரெழுத்தானதுகுற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என மூவகைப்படும். மெய்யெழுத்தானதுவல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். சார்பு எழுத்துகுற்றியலுகரம் குற்றியலிகரம், ஆய்தம் என மூவகைப்படும். (தொ. செய். 2இள.)செய்யுளியலில் கூறிய எழுத்தியல்வகை வேறு ஆயினும்,எழுத்ததிகாரத்தில் கூறப்பட்ட செய்தியொடு வேறுபடாமை கொள்ளப்படும்.எழுத்ததிகாரத்துள் 33 என்று கூறப்பட்ட எழுத்துக்கள் செய்யுளியலில் 15ஆகக் கூறப்படினும், இவை அவற்றின் வேறல்ல. எழுத்ததிகாரத்தில், குறிலும்நெடிலும் உயிரும் மெய்யும் இனம் மூன்றும் சார்புஎழுத்து மூன்றும் எனப்பத்தும் இயல்பு வகையான் கூறப்பட்டன. உயிர்மெய்யும் உயிரளபெடையும்தத்தம் வகையான் கூடுமாறும், யாழ் நூலகத்து ஒற்றிசை நீளுமாறும்எழுத்ததிகாரத்தில் தோற் றுவாய் செய்யப்பட்டன. அவை ஈண்டுக் கூறும்எழுத்தியல் வகையோடு ஒக்கும் என உய்த்துணர்ந்துகொள்ள வைக்கப் பட்டன.பாட்டுடைத் தலைவனுக்குக் கேடு விளைவிக்கும் மகரக்குறுக்கத்தோடு கூடஎழுத்தியல் வகை 16 என்பாரும் உளர்.இரண்டெழுத்தின் கூட்டமாகிய உயிர்மெய்யும், மொழி யாகும் அளபெடையும்,போலியாக வரும் ஐகார ஒளகாரங் களும் ஆகியவை ‘எழுத்தியல்வகை’ என்பதனான்எழுத்துக் களாக அடக்கப்பட்டன. இவை இயல்பான எழுத்துக்களைச் செய்யுட்குஏற்ப இயற்றிக் கொள்ளப்பட்ட முறைகள் என்பது.33 எழுத்துக்களையும் குறில், நெடில், உயிர், மெய், வல்லினம்,மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்பத்துவகைப்பட இயற்றி, கூட்ட வகையான் உயிர்மெய்யும் உயிரளபெடையும்,போலிவகையான் ஐகார ஒளகாரங்களும், யாழ் வேண்டும் வகையான் வரும் ஒற்றளபெடையும் கூட்டச் செய்யுளியலில் 15 வகைப்படும் எனினும் அவை எழுத்தில்கூறப்பட்டனவே. இவற்றுள் மெய்யினமும் ஆய்தமும் அசைக்கு உறுப்பாகா.இவற்றுள், நெடிலும், அளபெடை இரண்டும், உயிரும், உயிர் மெய்யும்,வல்லினமும், மெல்லினமும், இடையினமும், ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும் எனப் பத்தும் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும்அளபெடை இரண்டும் இனம்மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம்.இங்ஙனம் வேறுபட வந்த பயன் நோக்கி எழுத் தினை இயற்றிக்கோடலின்‘எழுத்தியல் வகை’ எனப்பட்டது. ஒற்றளபெடை கோடற்கு ஒற்றும், ஒற்றுப்போலஎழுத்து எண்ணப்படாமையும் உரித்து என்பதற்குக் குற்றியலுகரமும்,உடன்கூறப்பட்டன.ஆதலின் நேரிடையாக அசைக்கு உறுப்பாவன குறிலும் நெடிலும்குற்றுகரமும் ஆம். அளபெடை நெடிலும் குறிலு மாக அடங்கும். ஐகார ஒளகாரக்குறுக்கங்கள் குற்றெழுத்தா யடங்கும். (செய். 2 பேரா.)எழுத்து 33இல் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர் கொடுத்துஅவற்றைக் குறிலும் நெடிலும் அளபெடையும் குற்றியலிகரமும்குற்றியலுகரமும் ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் எனப் பெயர்வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும், சில எழுத்துக்களை மெய்என்னும் பெயர் கொடுத்து அவற்றை வல்லினமும் மெல்லின மும் இடையினமும்ஆய்தமும் ஒற்றளபெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடுஆறாக்கியும், இவை யிரண்டும் கூடியவற்றை உயிர்மெய் என வேறொருபெயராக்கியும் 15 பெயரவாய்ச் செய்யுளில் நடக்கும் என்றற்கு ‘எழுத்துஇயல்வகை’ எனப்பட்டது.ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக்கு உறுப்பாகா;ஒற்றளபெடைக்கு உறுப்பாம். (செய். 2 நச்.)
|
எழுத்திற்கு நால்வகையால் பெயரிடல் |
இடுகுறிப் பொதுப்பெயரும், இடுகுறிச் சிறப்புப்பெயரும், காரணப்
பொதுப்பெயரும், காரணச் சிறப்புப்பெயரும் என எழுத்து நால்வகையாற்
பெயரிடப்படும்.
உயிர், உயிர்மெய், உடம்பு – என்பன இடுகுறிப் பொதுப்
பெயர்;
அவற்றுள், அ ஆ க ங – என்பன இடுகுறிச் சிறப்புப்பெயர்;
குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் – முதலியன
காரணப் b பாதுப்பெயர்;
குற்றியலிகரம் குற்றியலுகரம் – முதலியன காரணச் சிறப்புப் பெயர்
எனக் கொள்க. ஆகையால் ‘நாகு’எனும் மொழி ஈற்றெழுத்து (கு), இடுகுறிப்
பொதுப்பெயரால் உயிர்மெய் என்றும், இடுகுறிச் சிறப்புப் பெயரால்
‘கு’என்றும், காரணப் பொதுப்பெயரால் குற்றெழுத்து என்றும், காரணச்
சிறப்புப் பெயரால் குற்றியலுகரம் என்றும் பெயரொடு வழங்கும். (தொ. வி.
72 உரை)
|
எழுத்திலக்கண வகை |
எழுத்திலக்கணம் எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை முதல்நிலை
ஈற்றுநிலை இடைநிலை போலி- எனவும், பதம் புணர்ப்பு – எனவும், பத்து
அகத்திலக்கணமும் இரண்டு புறத்திலக்கணமுமாகப் பன்னிரு வகைப்படும்.
(நன். 57)
|
எழுத்திலக்கணப் புறனடை |
எழுத்துக்கள் சொற்களாக ஆயினும், அச்சொற்கள் தம்மொ டும் உருபொடும்
புணரினும், எழுத்துக்களின் இலக்கணம் ஒரு தன்மைத் தாகவே இருக்கும்.
(நன். 127)
|
எழுத்திலக்கணம் |
மொழிக்கு முதற்காரணமாயும் நாதத்தினது காரியமாயும் வரும் ஓசை
எழுத்து எனப்படும். எழுத்தோசை காரணம் ஆமாறும், மொழி அதன் காரியம்
ஆமாறும், நாதம் காரணம் ஆமாறும் எழுத்தோசை அதன் காரியம் ஆமாறும் காண்க.
(இ. வி. எழுத். 3 உரை)
எழுத்தின் தோற்றமும் வகுப்பும் விகாரமும் என்ற இம்மூன்ற னுள்,
எழுத்து வகைப்பாடு எல்லாம் அடங்கும். என்னை? தோற்றம் என்புழி
எழுத்துப் பிறக்கும் இடமும் முறையும் எண்ணும் எனவும், வகுப்பு என்புழி
முதல் சார்பு உயிர்மெய் முதலிய கூறுபாடு எனவும், விகாரம் என்புழிப்
பதத்திலும் புணர்ப்பிலும் வரும் திரிபாக்கம் முதலிய வேறுபாடு எனவும்
தோன்றும். (தொ. வி. 2. உரை)
|
எழுத்து அளவிறந்து ஒலிக்கும் இடம் |
உயிரும் மெய்யும்ஆகிய எழுத்துக்கள் இசை,விளி, பண்ட மாற்று, நாவல்,
குறிப்பிசை, முறையீடு, புலம்பல்- முதலிய வற்றில் தம் மாத்திரை எல்லை
கடந்து ஒலிக்கும் . (இசை நூலார் உயிர் 12 மாத்திரை வரையிலும், மெய் 11
மாத்திரை வரையிலும் நீண்டொலிக்கும் என்ப.
எ-டு:
‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’
– பண்டமாற்று
‘நாவலோஒ என்றிசைக்கும் நாளோதை’
– நாவல்
‘கஃஃஃ றென்னும் கல்லதர் அத்தம்’
– குறிப்பிசை
‘அண்ணாவோஒஒ’ –
விளி (புலம்பலும் ஆம்) (நன்.
101)
|
எழுத்து இன்னது என்பது |
சொல் தோன்றுதலுக்குக் காரணமான ஒலி எழுத்து எனப்படும். எழுத்து
என்பது கட்புலனாகா உருவும் கட்புலனாகிய வடிவும் உடையதாக வேறுவேறு
வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும்
ஓசையாம். (தொ. எ. 1 நச். உரை)
எழுத்தெனப்படுவது யாதோ எனின், கண் முதலாய பிறவற்றுக் குப்
புலனாகாது செவிப்புலனேயாகும் ஒலிவடிவும், செவி முதலாய பிறவற்றுக்குப்
புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வரிவடிவும் உடைத்தாய்,
தனித்து நின்றாயினும் சார்ந்து நின்றாயினும், தன்னை உணர்த்தலுடன் பொரு
ளுணர்த்தும் சொல்லாகலும் அச் சொல்லுக்கு உறுப்பு ஆகலும் ஆகிய இரு
தன்மையும் ஒருங்கு பெற்றாயினும், அன்றி உறுப்பாக இயைதல்தன்மை ஒன்றே
பெற்றாயினும் நிற்கும் ஒலியாம். (பா. வி. பக். 170)
காற்றுக் கட்புலனாகா உருவினதாயினும் மெய்ப்புலனாயுற்று இன்பதுன்பம்
ஆக்கலானும், இயங்குதலானும், மரம் முதலிய வற்றை இயக்கலானும், இக்காற்று
வலிது – இக்காற்று மெலிது – எனக் கூறப்படலானும், பொருள் என்று
கொள்வோம். அதுபோல, ஒலியும் உந்தி முதலாகத் தோன்றி, தலை – மிடறு –
நெஞ்சு – பல் – இதழ் – நா- மூக்கு – மேல்வாய் – என்ற எண்வகை நிலத்தும்
பிறந்து, கட்புலனாம் தன்மையின்றிச் செவிக்கண் சென்றுறும் ஊறு
உடைமையானும், இன்பதுன்பம் ஆக்க லானும், வன்மை – மென்மை – குறுமை –
நெடுமை – கோட லானும், விசும்பின்கண் இயங்குவதொரு தன்மை யுடைமை யானும்,
பேரொலிக்கண் மண் அதிர்தல் காணப்படலானும், காற்றால் காரியப்படும் தன்மை
யுடையதாகும். (பா. வி. பக். 171)
மொழிக்கு முதற்காரணம் ஆகின்ற அணுத்திரளின் காரியம் ஒலி எழுத்தாம்.
அணுத்திரள் என்றது நாதம். ஒலி என்றது அதன் காரிய ஒலி. அணு என்றது
ஒலிநுட்பத்தை. ‘அணுத் திரள் ஒலி எழுத்து’ எனின், முற்கு-வீளை – இலதை –
முதலிய குறிப்பிசைகளும் அணுத்திரளே ஆதலால் அவை எழுத் தாகாமையானும்,
‘மொழி முதற் காரணமாம் ஒலி எழுத்து’ எனின், அவ்வொலி இன்ன ஒலி என
விளங்காமையால், ‘நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப, எழும்
அணுத்திரள் ஒலி’ எனக் காட்ட வேண்டுதலானும் ‘மொழி முதற் காரண மாம்
அணுத்திரள் ஒலி எழுத்து’ என்றார். (நன். 58 இராமா.)
|
எழுத்து இயலும் வகையும் அதுசெய்யுளுக்கு உறுப்பு ஆமாறும் |
எழுத்து இயலும் வகையாவது, உயிரும் உயிர்மெய்யும் ஒற்றும்சார்புமாய், உயிரளபெடையும் ஒற்றளபெடையுமாய், ஐகார ஒளகாரப் போலியுமாய்இயலுதல்.
|
எழுத்து எண்ணி அமைந்த வெண்பா |
வெண்பா 7 முதல் 16 எழுத்து வரை 10 நிலம் பெறும்.ஏழ் எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ மட்டுத் தான் உண்டு மதம்சேர்ந்துவிட்டுக் களியானை கொண்டுவா என்றான் – களியானைக்கியாரே எதிர்நிற் பவர்!’எட்டெழுத்தடி வெண்பா -எ-டு : ‘ ஆர்த்தார்த்துக்கண்சேந்து வேர்த்து விரைந்துதன் பொன்னோடை யானையின் மேற்கொண்டான் – என்னாங்கொல்மன்னர் உறையும் மதில்.’ஒன்பது எழுத்தடி வெண்பா -எ-டு : ‘சென்று முகந்து நுதலாட்டி மாறேற்றுவென்று பெயர்ந்தானெங் கோ.’இவை மூன்றும் சிந்தடிபத்தெழுத்தடி வெண்பா -எ-டு : ‘ நின்று திரியும் சுடருளை நில்லாது வென்று திரிதருவேன் யானுளனாச் – சென்றோங்கிமண்ணக மார்பின் மறையலோ மற்றினியென்கண்ணகத்துப் பட்ட படி.’பதினோர் எழுத்தடி வெண்பா -எ-டு : ‘இற்றே ன் உடம்பின் எழில்நலம்என்றென்று பற்றுவிட் டேங்கும் உயிர்போல – மற்றுநறுமென் கதுப்பினாள் தோள்தோயின் நண்ணும்மறுநோக் குடையவாம் கண்.’பன்னிரண்டு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ புறத்தன நீருள பூவுளமாவின் திறத்தன கொற்சேரி யவ்வே – அறத்தின்மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டிமுகனை முறை செய்த கண்.’ (தண்டி. 40- 10 மேற்)பதின்மூன்று எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற அரியிளஞ் செங்காற் குழவி – அருகிருந்தூமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்றன்நாமம்பா ராட்டாதார் நாடு.’ (முத்தொள். 77)பதினான்கு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார்மார்பன் அணிமகர வெல்கொடியான் அன்னான் – தனிநின்றுதன்னை வணங்காமைத் தானணங்க வல்லாளேஎன்னை அணங்குறியி னாள்’இவை ஐந்தும் அளவடிபதினைந்து எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ முகமறிந்தா ர் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார்காமம் அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் – ககமறையாமன்னை நீ வார்குழை வையெயிற்றாய் என்னோமற்றென்னையும் வாழும் எனல்.’பதினாறு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ (குறள் 606)வெண்பாவின் ஈற்றடி 5 எழுத்து முதல் 10 எழுத்து முடியப் பெறும்ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா -எ-டு : ‘பிண்டி மலர்மேல் பிறங்கெரியுள் கந்துருள்போல் வண்டு சுழன்று வரும் .’
|
எழுத்து என்பதன் சொல்லமைப்பு |
எழுதப்படுவது என்னும் பொருட்கண், எழுது என்னும் முதனிலைத்
தொழிற்சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருளை உணர்த்தும் ஐகார விகுதி
புணர்ந்து ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’ (தொ.சொ. 450 சேனா.)
என்னும்சூத்திரத்து ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும்
முட்டின்று முடித்தல்’ என்னும் உத்திவகையான் அவ்வைகாரம் கெட்டுக்
கெட்ட வழித் தகரம் இரட்டித்து எழுத்து என்று முடிந்தது.
எழுது என்னும் முதனிலை ‘எழுத்து’ எனத் தானே திரிந்து நின்று, அஃது
ஆகுபெயரான் எழுதப்படுவதாகிய செயப்படு பொருளை உணர்த்திற்று என்றல்
பொருந்தாது. ஒரு காரண மின்றித் திரிதல் கூடாமையானும், நட-வா-கரு-செ-
முதலிய முதனிலைகள் எல்லாம்விகுதியோடன்றித் தனித்தியங்கல்
ஆற்றாமையானும், இம்முதனிலைகள் உரிச்சொற்கள்
ஆதலின்பெயர்த்தன்மைப்பட்டுழியல்லது ஆகுபெயர் ஆதற்கு ஏலாமையானும்
என்பது. (சூ. வி. பக். 31, 32)
எழுத்து என்பது எழுதை என்பதன் திரிபாயின், நட என்பது நடவாய்
என்பதன் திரிபு என்று கொள்ளும்போது, நட என்பது போல நடவாய் என்பதும்
வழங்குமாறு போல, எழுத்து என்பது போல எழுதை என்பதும் வழக்காற்றில்
இருத்தல் வேண்டும்; அங்ஙனம் இன்மையின், எழுத்து என்பது எழுதை என்பதன்
திரிபு எனல் சாலாது. விளங்கு – பெருகு- மடங்கு- முதலாய முதனிலைகள்,
விளக்கு – பெருக்கு – மடக்கு- முதலாகத் திரிந்து, விளங்குவது-
பெருகுவது – மடங்குவது – எனப் பொருள்படுமிடத்து வினைமுதலும்,
கெடு என்பது, கேடு எனத் திரிந்து ஒருவன் கெடுதற்குக் காரணமாகிய
தீவினையை உணர்த்தும்வழிக் கருவியும்,
நீந்து – முடங்கு – இடுகு – என்பன, நீத்து – முடக்கு – இடுக்கு –
எனத் திரிந்து நீந்துமிடத்தையும் முடங்குமிடத்தையும் இடுகு
மிடத்தையும் உணர்த்தும்வழி நிலனும்,
பாடு – சூடு – கருது – என்பன, பாட்டு – சூட்டு – கருத்து – எனத்
திரிந்து பாடப்படுவது – சூடப்படுவது – கருதப்படுவது – எனப்
பொருள்படும்வழிச் செயப்படுபொருளும்,
சுடு என்பது சூடு எனத் திரிந்து சுடுதலானாகிய வடுவினை
உணர்த்துமிடத்துப் பயனும் –
என வினை கொள்வவற்றுள்ளே தொழில் ஒழிந்த ஏனைய பொருள்களை ஆகுபெயரான்
உணர்த்துமாறு போல,
எழுது – உண் – முதலாகிய முதனிலைகளும் எழுத்து – ஊண்- முதலியனவாகத்
திரிந்து தொழிற்பெயர்ப்பொருளையும், ஆகு – பெயராகிச்
செயப்படுபொருளையும் உணர்த்தும் என்பது. முதனிலை திரிந்து ஆகுபெயராகிக்
காலம் உணர்த்தல் வந்துழிக் கொள்க. (பா. வி. பக். 229, 230)
|
எழுத்து ஓரன்ன |
1. எழுத்தோடு ஒரு தன்மையன, 2. எழுத்தான் ஒரு தன்மையன. 1, ‘சார்ந்து
வரல் மரபின் மூன்று அலங்கடையே, எழுத்தெனப் படுப முப்பஃது’ எனவே,
சார்ந்து வரல் மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு
சிறந்தில எனவும் பொருள் தந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த
முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கும் என, அம்முப்பதனை யும்
உபமானமான மேம்பட்ட பொருளாயும் இம்மூன்றனை யும் உபமேயமான அவற்றின்
தாழ்ந்த பொருளாயும் காட்டுதற்கு, ‘எழுத்தோடு ஒருதன்மையன’ என்று பொருள்
தரும் ‘எழுத்தோ ரன்ன’ என்று குறிப்பிட்டார். (தொ. எ. 2 இள., நச். உரை)
(பொ. 663 பேரா.)
2. எழுத்தான் ஒரு தன்மையன என்பது, ஒலிவடிவில் எடுத்தல் படுத்தல்
ஓசையான் வெவ்வேறு பொருள்தரும் சொற் றொடர்கள் வரிவடிவில் எழுதும்போது
ஒன்றாகவே எழுதப் படுதல்.
எ-டு : செம்பு ஒன்பதின்தொடியும், செம்பொன் பதின் தொடியும்
வரிவடிவில் ‘செம்பொன்பதின்றொடி’ என ஒன்றாக எழுதப்படுதல் போல்வன. (தொ.
எ. 141 நச். உரை)
|
எழுத்து ஓரன்ன பொருள் தெரி
புணர்ச்சி’ |
இரண்டு வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கும் சொற் றொடர்கள்
ஒலிக்கும்போது எடுத்தல் படுத்தல் ஓசைகளான் வெவ்வேறாக உணரப்படினும்,
வரிவடிவில் எழுதும்போது ஒன்றாகவே சேர்த்து எழுதப்படும் நிலை.
செம்பு ஒன்பதின்தொடி, செம்பொன் பதின்தொடி- என்பன இரண்டும்
வரிவடிவில் ‘செம்பொன்பதின்றொடி’ என ஒன்றாகிச் செம்பு என்பதனையும்
செம்பொன் என்பதனையும் முறையே எடுத்து ஒலித்தவழி வெவ்வேறு பொருள்
உணர்த்தும் சொற்றொடர் ஆதல்.
இஃது ‘எழுத்துக்கள் ஒன்று பலவாதல்’ நிலையைச் சுட்டுவ தாம். (தொ. எ.
1 நச். உரை)
தமிழ்மொழியில் சொற்றொடர்களின் பொருள் அறியப் படாதவரை புணர்ச்சி
வேற்றுமைக்கண்ணதா அல்வழிக் கண்ணதா என அறிதல் இயலாமையின்,எழுத்துக்களது
‘ஒன்று பலவாதல் நிலை’யை நன்கு உணர்தல் வேண்டும். (எ. கு. பக்.
145)
|
எழுத்து காரணப் பெயராதல் |
எழுத்து என்பது ‘எழுப்புதலையுடையது’ என்னும் பொருளைத் தரும்
கருவிப்பெயர். அஃது ஈண்டுச் செவிப்புலனாம் ஒலி யெழுத்தைச் சுட்டிக்
கட்புலனாம் வரிவடிவத்திற்கும் உரியதாக நிற்றலின், காரணப் பெயராம்.
சாத்தன் என்பா னொருவனது உடம்பு, உயிரும் உணர்வுமாகத் திகழும் அச்
சாத்தனைச் சுட்டி உணர்த்துமாறு போல, எழுத்து வரிவடி வினையுற்று நின்று
ஒலியுருவை உணர்த்தும் தன்மைத்தாய் இலக்கணக்குறியீடு ஆயிற்று.
(தொ.எ.பக். 71 ச.பால.)
|
எழுத்து முறை காட்டல் |
எழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல் போல எழுத்திலக்கணம்
சொல்லுள் சென்று மயங்காத முறைமை- யானே எழுத்திலக்கணம்
தெரிவித்து…(தொ. பாயி. இள. உரை)
மூவகை இலக்கணமும் மயங்காத முறைமையால் செய்கின்ற மையின்,
எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி… (நச். உரை)
இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் முன்னூலுள் போல விரவாத
தன்மையானே, இயற்றமிழை வேறுபிரித்து முறையானே உலகிற்கு அறிவித்து….
(சூ.வி. பக். 3)
ஒன்றனுள் பிறிதொன்று கலவாத மரபினையுடைய நூல் முறையைக்
காட்டி….
‘முறைகாட்டி’ என்பதனை இரண்டன் தொகையாக்காமல் ‘முறையானே அறிவித்து’
என்ற மூன்றன்தொகையாகக் கொள்ளின், ‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்,
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே’ (தொ.எ.280. நச்.) என்ற
நூற்பாவிதிப்படி வல்லெழுத்து மிக்கு, ‘முறைக்காட்டி’ என அமைதல்
வேண்டும். அங்ஙனம் காணப்படாமையின் ‘முறை காட்டி’ என்பது மூன்றன் தொகை
ஆகாது. (பா. வி. பக். 234)
மேலும் பாயிரத்துள் அவையரங்கேறலைக் கூறலே முறை யன்றி, உலகிற்கு
அறிவித்தலைக் கூறல்இலக்கணமன்று ஆதலின், ’முறை காட்டி’ என்ற தொடர்க்கு
‘முறையானே உலகிற்கு அறிவித்து’ என்று பொருள் செய்தல் பொருந்தாது. (பா.
வி. பக். 141)
|
எழுத்து வகையடி |
சீர்களைக் கொண்டு பின்னையோர் அடிகளுக்குப் பெயரிட் டமை போலாதுதொல்காப்பியனார் எழுத்துக்களைக் கணக்கிட்டு அடிகளுக்குப்பெயரிட்டுள்ளார்.4 முதல் 6 எழுத்து முடிய உடைய அடி – குறளடி7 முதல் 9 எழுத்து முடிய உடைய அடி – சிந்தடி10 முதல் 14 எழுத்து முடிய உடைய அடி – அளவடி15 முதல் 17 எழுத்து முடிய உடைய அடி – நெடிலடி18 முதல் 20 எழுத்து முடிய உடைய அடி – கழிநெடிலடியாம்.ஆகவே, நாற்சீரடி 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய உள்ள 17நிலங்களைக் கொண்டு ஐந்து கூறுகளாகப் பகுக்கப்பட்டுப் பெயர் பெற்றுநிகழும் என்பது.எ-டு : போந்து போந்து சார்ந்து சார்ந்து (4 எழுத்தடி)கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20 எழுத்தடி)இடையடிகளையும் அறிக. (தொ. செய். 36 – 40 நச்.)
|
எழுத்து வருத்தனை |
‘அக்கர வருத்தனை’ காண்க. (வீ. சோ. 181. உரை மேற்.)
|
எழுத்து வர்த்தனம் |
‘அக்கர வருத்தனை’ காண்க. (தண்டி. 98)
|
எழுத்து, அசை முதலியவற்றின்பெயர்க்காரணம் |
(வரிவடிவமாயின்) எழுதப்படுதலின் எழுத்து (ஒலிவடிவமா யின்எழுப்பப்படுவது எழுத்து) என்பது. அவ்வெழுத்து ஒன்றும் பலவும் ஓசைபுடைபெயர்ந்து ஒலித்தலான் அசை யுண்டாகிறது. அசைகள் தம்முள் பொருந்திச்சீர்கொள்ள நிற்றலான் சீர் தோன்றுகிறது. சீரிரண்டு நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ் சீரின் முதல் அசையுமாகத் தம்முள் பொருந்தி நிற்பதுதளையாம். அத்தளைகள் ஒன்று இரண்டு மூன்று முதலாகத் தம்முள் அடுத்துநடத்தலான் அடியாம். அடிகள் இரண்டனைப் பொருட் பொருத்தமுறத் தொடுத்தல்தொiட யாம். அவ்வடிகள் ஓசைக்கேற்ப அறுக்கப்பட்டு நடக்க உதவுவதாகிய பாத்தூக்கு எனப்படும். (யா. க. 1 உரை)
|
எழுத்து, அசை, சீர் முதலிய ஏழ்உறுப்புகளது முறைவைப்பு |
எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின் சிறப்புடைத்து எனமுன்னும், அசை எழுத்தினான் ஆம் ஆதலின் அதனை அடுத்தும், சீர் அசையினான்ஆம் ஆதலின் அதன் பின்னும், தளை சீரினான் ஆம் ஆதலின் அதன் பின்னும்,அடி தளையினான் ஆம் ஆதலின் அதன் பின்னும், தொடை அடிக்கண் காணப்படுதலின்அதன் பின்னும், பலதொடைகளும் சேர்ந்து தூக்கு (-பா) ஆகும் ஆதலின்அதன்பின்னும் முறையே வைக்கப்படும். (யா. க. 1 உரை.)
|
எழுத்து, உயிர் வல்லினம் மெல்லினம்
இடையினம் என்ற நான்கு இனமாதல் |
நம் உடம்பினுள் சுவாசப்பையினின்றும் வெளிப்படும் வளி குரல்வளையுள்
புகுந்து, அடியண்ணம் இடையண்ணம் முதலிய இடங்களில் பட்டு வெளிப்படுதலின்
ஒலி உண்டா கிறது. அவ்வளி அண்ணம் முதலிய இடங்களில் படுகையில், நாவின்
செய்கையால் ஒலி வேறுபடுவதாகும். வளியை நாவின் நுனி – இடை – அடி –
விளிம்பு – ஆகியவற்றுள் ஒன்றனால் அடி யண்ணம் இடையண்ணம் முதலிய
இடங்களில் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும். தடுக்கும்போது
சிறிதளவு தடுத்தலும் முழுதும் தடுத்தலும் இயலும். உயிரெழுத்துக்களை
ஒலிக்கும்போது வளியை நாவினால் தடுக்காமல் வெளிவிடு கின்றோம்;
வல்லெழுத்து மெல்லெழுத்துக்களை ஒலிக்கும் போது நன்கு தடுத்து
வெளிவிடுகின்றோம்; இடையெழுத்துக் களை ஒலிக்கும்போது வளியைச் சிறிதளவு
தடுக்கின்றோம். வளியைத் தடுக்காமல் வெளிவிடுதலின் உயிரெழுத்துக்கள்
தாமே ஒலிக்க இயல்கின்றன. வளியை நன்கு நடுத்தலின் வல்லெழுத்து
மெல்லெழுத்துக்கள் தாமே ஒலிக்க வருவனவா யில்லை. சிறிதளவு தடுத்தலின்
இடையெழுத்துக்கள் தாமே ஓராற்றான் ஒலிக்க இயலும். ஒலிக்கும் திறத்தில்,
உயிரெழுத்துக் களுக்கும் வல்லெழுத்து மெல்லெழுத்துக்களுக்கும் இடைப்
பட்டிருத்தலானே ய் ர் ல் வ்ழ் ள் – என்பன இடையெழுத் துக்கள்
எனப்பட்டன. மெல்லெழுத்து, வல்லெழுத்தை ஒத்துப் பிறந்து ஒலி
சிறிதுசிறிதாக மூக்கின் வழியாக வெளியிடப் படுதலின் வேறாயின.
இக்காரணத்தால் மெல்லெழுத்துக்கள் வல்லெழுத்துக்களினின்றும் வேறுபட,
எழுத்துக்கள் உயிர் – வலி – மெலி – இடை – என நால்வேறு இனங்கள் ஆயின.
(எ. ஆ. பக். 11, 12)
|
எழுத்துக் கட்புலனாகா உரு என்பது |
உரு என்றது மனன் உணர்வாய் நிற்கும் கருத்துப்பொருளை. அது செறிப்பச்
சேறலானும், செறிப்ப வருதலானும், இடை எறியப்படுதலானும், இன்பதுன்பத்தை
ஆக்குதலானும், உருவும் உருவும் கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத்
தோன்றி நெஞ்சு – மிடறு – தலை- மூக்கு – அண்ணம் – நா – பல் – இதழ் –
என்ற எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாம் தன்மையின்றிச் செவிக்கண்
சென்றுறும் ஊறு உடைமை யானும், விசும்பில் பிறந்து இயங்குவதொரு
தன்மையுடைமை யானும், காற்றின் குணமாவதோர் உருவாம்; வன்மை மென்மை இடைமை
கோடலானும் உருவே ஆயிற்று, (தொ. எ. 1 ந.ச். உரை)
|
எழுத்துக் கட்புலனாகிய வடிவு
பெறுதல் |
செவிப்புலனாகிய எழுத்தொலியை மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும்
உணர்தற்கு எழுத்துக்களுக்கு வெவ்வேறு வடிவம் காட்டி எழுதப்பட்டு
நடத்தலின், கட் புலனாகிய வரிவடிவும் எழுத்திற்கு உளதாயிற்று .
மகரக்குறுக்கம் வெளியேயுள்ள புள்ளியொடு தன் வட்டத்தி னுள்ளும்
ஒரு புள்ளி பெறும்(ம்
{{special_puLLi}}) என்றாற்
போல்வன வரி வடிவிற்கு எடுத்துக்காட்டு. (தொ.எ. 14, 16
நச்.)
|
எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு
அது’ என்ற நிலை |
அல்+திணை=அற்றிணை, அஃறிணை.
நிலைமொழி ஈற்றில் லகரம் வர, வருமொழி முதலில் தகரம் வந்தால்,
நிலைமொழி ஈற்று லகரமும் வருமொழி முதல் தகரமும் றகரமாகத் திரியும்
என்பது விதி. லகரம் திரியாமையு முண்டு. (தொ.எ.149,369 நச்.)
நிலைமொழி ஈற்று லகரம் றகரமாகத் திரிதலேயன்றி ஆய்த மாகத்
திரியினும், அதனை லகரமாகத் கருதி வருமொழித் தகரத்தை றகரமாகத்
திரித்துக் கொள்வது. ‘திரிந்ததன் திரிபு அது’ என்ற நயமாம்.
திரிந்தது லகரம்; அதன் திரிபு ஆய்தம். திரிபாகிய ஆய்தத்தை லகரமாகவே
கருதிப் புணர்ப்பது அது என்பது.
‘மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்’ என்று கூறிப் பின்னர் அறு
என்பது அகல் என்பதனொடு புணருமிடத்து ‘அறுஎன் கிளவி முதல் நீ டும்மே’
(தொ. எ. 458 நச்.) என்னாது, ‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ என்றலும்,
(தொ. எ. 440 நச்.)
‘மூன்றன் முதல்நிலை நீடலும் உரித்தே
உழக்குஎன் கிளவி வழக்கக் தான’
(தொ. எ. 457 நச்.)
என்றலும் போல்வன திரிந்ததன் திரிபு அதுவாம்.
திரிந்தது ஆறு; அதன் திரிபு அறு; ஆறு என்பதும் அறு என்பதும்
ஒன்றே;
திரிந்தது மூன்று;அதன் திரிபு முன்று;மூன்று என்பதும் முன்று
என்பதும் ஒன்றே – என்று கருதி அமைக்கும் நயம் இது.
எனவே, இந்நயத்தால் ஆறு என்று கூறினும் அறு என்று கொண்டும், மூன்று
என்று கூறினும் முன்று என்று கொண்டும் பொருள் செய்யவேண்டும்
என்பது,
“அறு என்னாது ஆறு என்றார், திரிந்ததன் திரிபு அது என்னும்
நயத்தான்” (தொ. எ. 458 நச்.) (1 நச். உரை)
|
எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு
அதுவும் பிறிதும்’ என்றல் |
நெடுமுதல் குறுகும் மொழிகள் யான் யாம் நாம் நீ தான் தாம்- என்பன.
அவை ஆறனுருபும் நான்கனுருபும் ஏற்கும்போது. அகரச்சாரியை பெற்று,முறையே
என எம நம நின தன தம-என்றாகி, உருபுகளொடு புணரும்.
என+கு = வல்லெழுத்தை முதலாக உடைய வேற்றுமை யுருபு ஆதலின் இடையே
வல்லொற்று மிக்கு எனக்கு என்றாயிற்று.
என+அ = எனவ என்றாயிற்று (இடையே வகரம் உடம்படு மெய்).
என+அது =ஆறாம் வேற்றுமையுருபாகிய அது என்பதன்கண் உள்ள அகரம்,
நிலைமொழி(என்+அ=என-என்று) அகரச்சாரியை பெற்று நின்றமையின் கெட,
என+து=எனது என்றாயிற்று. நெடுமுதல் குறுகும் சொற்களின் ஈற்றில் வரும்
அகரமே கெடும் என்னாது, கெடுகின்ற அகரம் வேறே என்றல் ‘திரிந்ததன்
திரிபு அதுவும் பிறிதும்’ஆம்.
திரிந்தது – யான் ‘என்’ எனத் திரிந்தமை;
திரிந்ததன் திரிபு – ‘என்’ என்பது ‘என’ எனத் திரிதல்;
திரிந்ததன்திரிபு அதுவும் பிறிதும் எனல் – என்+அ=‘என’ என்றாகி,
அதனோடு அதுஉருபு சேரும்போது, முன்சேர்ந்த அகரச்சாரியை கெடாது அது
உருபின் அகரம் கெடும் எனல். (திரிபு அது; அகரப்பேறு; பிறிது;
‘அது’வின் அகரக்கேடு. இவ்விரண்டும் இப்புணர்ப்பில் உண்மை காண்க. (தொ.
எ. 161,114,115 நச்.) (தொ. எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு
பிறிது’ என்ற நிலை |
நிலைமொழிஈறு பிறிதோர் ஈறாகவே திரிந்து புணரும் என்றல்.
எ-டு : மரம்+கோடு = மரக்கோடு
மகரமாகிய ஈறுகெட்டு மர என்றே விதி அகர ஈறாகி நின்று, அகர
ஈற்றுக்குரிய செய்கை பெற்று மரக்கோடு என வருமொழி யொடு புணர்கிறது.
(தொ. எ. 310 நச்)
எ-டு : பொன்+குடம் = பொற்குடம்
னகரஈறு றகர ஈறாகத் திரிந்தே வருமொழியொடு புணரும் என்றல்
திரிந்ததாகிய னகரத்தின் திரிபாகிய றகரம் நின்றே வேற்றுமைப்
புணர்ச்சியில் வன்கணத்தொடு புணர்தல் (தொ. எ. 332). (தொ. எ. 1 நச்.
உரை)
|
எழுத்துக்களது ‘நிலையிற்று’என்ற
நிலை |
நிலைமொழியும் வருமொழியும் பொருள் பொருத்தமுறப் புணரும்
தழுவுதொடர்ப் புணர்ச்சி விதிகள் ‘நிலையிற்று என்றல்’ என்ற
நிலையின.
இங்ஙனம் பொருள் பொருத்தமுற நிலைமொழி வருமொழிகள் அமைதலாலே,
நிலைமொழியை ‘நிறுத்தசொல்’என்றும், வரு மொழியைக் ‘குறித்துவரு
கிளவி’என்றும் பெயரிட்டார் தொல்காப்பியனார். (தொ. எ. 107 நச்.) (தொ.
எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களது ‘நிலையிற்றும்
நிலையாதும்’ என்ற நிலை |
ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சிநிலை அது போன்ற பிறிதோரிடத் தில்
நிலைபெறாது என்றல்.
குற்றெழுத்தை அடுத்த ஆகார ஈற்றுச் சொல் வருமொழியொடு புணர்கையில்
‘நிலாஅக்கதிர், என்றாற்போல அகரமாகிய எழுத்துப்பேறளபெடை பெறும் (தொ. எ.
226 நச்.) என்று கூறி, இரவுப்பொழுதினை உணர்த்தும் இரா என்ற சொல்
வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இராவிடத்துக் காக்கை என்ற பொருளில் ‘இராக்
காக்கை’ என, அகர எழுத்துப்பேறள பெடை பெறாது (தொ. எ. 227 நச்.) என்றல்
‘நிலையிற்றும் நிலையாதும்’என்ற நிலையாம். (தொ. எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களது ஒன்று பலவாதல் நிலை |
ஒன்று பலவாகும் சொற்றொடர்களைப் பொதுமொழி என்ப. வரிவடிவில் ஒன்றாகக்
காணப்படும் சொற்றொடர் ஒலிவடி வில் எடுத்தல் படுத்தல் வேறுபாட்டான்
பல்வேறு சொற் றொடர்கள் ஆகும்.
‘எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி’ காண்க. (தொ. எ. 1 நச்.
உரை)
|
எழுத்துக்களது குறைவு |
எழுத்துக்கள் தமக்கு இயல்பாயுள்ள ஒலித்தல் அளவில் குறைந்த
குறுக்கங்கள் ஆதல்.
எ-டு : ஐகாரக் குறுக்கம் (தொ. எ. 57), மகரக்குறுக்கம் (தொ.எ.
13) (தொ. எ. 1 நச். உரை)
அறுவகையிலக்கண நூல் ஆ ஈ ஊ ஏ ஓ- என்பன நெடில் என்றும், ஐ
ஒள-இரண்டும் 1
½ மாத்திரை பெறுவன என்றும்,
எனவே இவற்றைக் ‘குறில்நெடில்’ என்றும் கொள்வர் என்றும்
குறிப்பிடும்.
|
எழுத்துக்களது கூட்டம் |
மெய்யோடு உயிர்கள் கூடி உயிர்மெய்யை உண்டாக்குதல் முதலியன. (தொ. எ.
17நச்.) (1 நச். உரை)
|
எழுத்துக்களது நிலை |
எழுத்துக்கள் மொழிமுதற்கண் நிற்கும் நிலையும், ஈற்றின்கண் நிற்கும்
நிலையும்.
மொழிமுதற்கண் நிற்கும் எழுத்துக்கள் பன்னிரண்டு உயிரும், உயிரொடு
கூடிய க்ச்த்ப் ஞ்ந்ம் ய்வ் – என்ற ஒன்பது மெய்யும், மொழிமுதற்
குற்றியலுகரமும் ஆகிய இருபத்திரண்டாம்.
மொழிஈற்றில் நிற்கும் எழுத்துக்கள் பன்னீருயிரும், ஞ்ண்ந்ம்ன் –
என்ற மெல்லினமெய் ஐந்தும், ய் ர் ல் வ் ழ் ள் – என்ற இடை யினமெய்
ஆறும்,ஈற்றுக் குற்றியலுகரம் ஒன்றும் ஆகிய இருபத்து நான்காம். (தொ. எ.
59-76 நச்.) (தொ.எ.1 நச். உரை)
|
எழுத்துக்களது பிறப்பமைதி |
எழுத்துக்கள் கருக்கொள்ள ஒலி ஊன்றும் இடமாகிய உறுப் புக்கள்
தலையும் மிடறும் நெஞ்சும் ஆம். ஈண்டு, தலை கருத்து மையமாக உணர்வு
அடிப்படை யாகும்;மிடறு, உணர்வு மையமாகக் குரல்வளை நரம்புகளை இயக்கும்;
நெஞ்சு வளியிசையைப் பூரித்துச் செலுத்தும்.
ஓசையை ஒலியெழுத்துக்களாக வெளிப்படுத்தும் உறுப்புக்கள் மிடறும்
மூக்கும். ஈண்டு,மூக்காவது உள்மூக்கு.
இனி எழுத்துக்களை வரிவடிவமைக்கும் உறுப்புக்கள் நிலை யுறுப்பும்
இயங்குறுப்புமாக இருவகைப்படும். அண்ணமும் பல்லும் நிலையுறுப்பாம்;
நாவும் இதழும் இயங்குறுப்பாம். (தொ. எ. பக்-
XL ச.பால.)
|
எழுத்துக்களது மயக்கம் |
இன்ன எழுத்துக்கு இன்னஎழுத்து நட்பெழுத்து, இன்ன எழுத்துப்
பகையெழுத்து என்பதனை உட்கொண்டு, ஒரு மொழி தொடர்மொழி என்ற ஈரிடத்தும் ,
க்ச்த்ப் – என்ற நான்கும் தம்மொடு தாமே இணைந்து வரும்;ர்ழ் என்ற
இரண்டும் தம்மொடு பிறவே இணைந்து வரும்; ஏனைய மெய் பன்னிரண்டும்
தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் இணைந்து வரும்.
இன்ன இன்ன மெய்களோடு இன்ன இன்ன மெய்கள்தாம் இணைந்து வரும் என்ற
செய்திகளை உட்கொண்ட பகுதி எழுத்துக்களது மயக்கம் பற்றிக் கூறுவதாம்.
மயக்கம்- சேர்க்கை. (தொ. எ. 23 – 30 நச்.) (தொ. எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களது மொழியாக்கம் |
மொழியாக்கமாவது எழுத்தினான் சொல்லை ஆக்கிக் கொள்ளுதலாம். அஃதாவது
உயிரெழுத்தோ மெய்யோடு உயிர் கூடுவதனாலாகிய உயிர்மெய் எழுத்தோ, தனித்தோ
இரண்டெழுத்துக்கள் இணைந்தோ, இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்கள்
தொடர்ந்தோ, தம்மை உணர்த்துவதனொடு நில்லாமல் பிறபொருளையும் சுட்டும்
நிலையில் அமைவதாம்.
எ-டு : ஆ,கா – ஓரெழுத்தொருமொழி; ஆல் – ஈரெழுத் தொருமொழி; நிலவு
– மூவெழுத்தொருமொழி; உத்தரட்டாதியான் – ஒன்பதெழுத்தொரு மொழி;
ஒன்பதனுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட தனி மொழி தமிழில்
இல்லை. (தொ. எ. 45 நச்.) (தொ. எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களது‘நிலையாது’என்ற நிலை |
நிலைமொழி வருமொழிகளாக இணைத்து எழுதப்படினும், நிலைமொழி ஈறு வருமொழி
முதல் இவற்றிற்குரிய புணர்ச்சி பெற்றும், பொருள் பொருத்தமுற அமையாத
தழாஅத் தொடர்களின் நிலை.
‘தெய்வ மால்வரைத் திருமுனி’
(சிலப். 3: 1)
‘தெய்வம் முனி’ என்றே நிலைமொழி வருமொழி ஆகற் பாலன; இடையே
‘மால்வரைத் திரு’ என்பன செய்யு ளோசை நலம் கருதி வந்தன.
தெய்வம் மால்வரை-என்பன பொருளியைபு இலவேனும், நிலைமொழி வருமொழி
போலப்புணர்ந்து ‘தெய்வமால் வரை’ என்றாதல் தழாஅத் தொடராய்,
‘நிலையாது’என்ற நிலை பெற்றவாறு.
நிலையாது என்றல் – நிலைமொழி வருமொழிக்கண் பொருள் தொடர்பு நிலையாது
என்றல். (தொ. எ. 111 நச். உரை)
|
எழுத்துக்களின் இனமும் முறையும் |
அ ஆ-க்கள் பிறப்பானும் செய்கையானும், அங்கு ஆங்கு என்னும்
பொருளானும் வடிவானும்; இ ஈக்கள் பிறப்பானும் செய்கையானும், இங்கு
ஈங்கு என்னும் பொருளானும்; உ ஊக்கள் பிறப்பானும் செய்கையானும்,உங்கு
ஊங்கு என்னும் பொருளானும் வடிவானும்; எ ஏக்கள் பிறப்பானும்
செய்கையானும், எவன் ஏவன் என்னும் பொருளானும் வடிவானும்; ஒ ஓ-க்கள்
பிறப்பானும் செய்கையானும் வடிவானும் ஒத்து ஓரினமாயின.
இன்னும் இவை அளபெடுப்புழி நெட்டெழுத்தொடு குற் றெழுத்திற்கு ஓசை
இசையுமாற்றானும் ஓரினமாம் என் றுணரப்படும். குற்றெழுத்துக்களை
முன்னாகக் கூறி அவற்றிற்கு இனம் ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின்
பின்னாகக் கூறினார், ஒருமாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூற
வேண்டுதலின். அன்றி இரண்டை முன் கூறின் ஆகாது; ஒன்று நின்று அதனொடு
பின்னரும் ஒன்று கூடியே இரண் டாவதன்றி, இரண்டு என்பது ஒன்று இன்று
ஆதலின். இதனான் ஒன்றுதான் பலகூடி எண் விரிந்தது என்பது
உணரப்படும்.
கங-க்களும், சஞ-க்களும், டணக்களும், தந-க்களும், பம-க்களும்
முயற்சியானும் மாத்திரையானும் செய்கையானும்; யர-க்கள் இடத்தானும்
மாத்திரையானும் செய்கையானும், லவ-க்கள் இடத்தானும் மாத்திரையானும்,
‘கல்வலிது’ ‘சொல்வலிது’ – என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும்
சொற்கள் பலவாத லானும்; ழள-க்கள் இடத்தானும் மாத்திரையானும் ‘இடை
யெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தவின்பத்திற்கு இயைபு ஆதலானும்;
றன-க்கள் முயற்சியானும் மாத்திரை யானும் செய்கையானும் ஒத்து
ஓரினமாயின.
இனி எழுத்துக்களின் முறை வருமாறு:
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு’ எனத்
திருவள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களுள் அகரமாக
நிற்கின்றேன் யான்’ என்று உண்மை கூறியவாற்றானும், இறைவன் எல்லாப்
பொருளின் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமாறு எல்லார்க்கும்
ஒப்ப முடிந்தாற்போல அகரமும் எல்லா எழுத்தின்கண்ணும் கலந்து அவற்றின்
தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது ஆகலின்,
அச்சிறப்பு நோக்கி எல்லா எழுத்திற்கும் முன்னர் அகரம் வைக்கப்பட்டது.
அகரத்திற்கு இனமாகலின் அதன்பின்னர் ஆகாரம் வைக்கப்பட்டது. பிறப்பும்
செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் அகரத்தோடு அளவும் ஒத்தலின் அதன்
பின்னர் இகரமும், அதற்கு இனமாதலின் அதன் பின்னர் ஈகாரமும்
வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் இகரத்தோடு
அளவும் ஒத்தலின் அவற்றின் பின்னர் உகரமும், அதற்கு இனமாதலின் அதன்
பின்னர் ஊகாரமும் வைக்கப்பட்டன. இடமும் செய்கையும் உகரத் தோடு அளவும்
ஒத்தலின் அவற்றின் பின்னர் எகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர்
ஏகாரமும் வைக்கப்பட்டன. பிறப்பும் செய்கையும் ஏகாரத்தோடு அளவும்
ஒத்தலின், தனக்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அதன் பின்னர்
ஐகாரம் வைக்கப்பட்டது. இடமும் செய்கையும் ஒத்தலின் அதன் பின்னர்
ஒகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஓகாரமும் வைக்கப்பட்டன.
பிறப்பும் செய்கையும் வடிவும் ஓகாரத்தோடு அளவும் ஒத்தலின், தனக்கு
இனமாகிய குற்றெழுத்து இன்றேனும், அவற்றின் பின்னர் ஓளகாரம்
வைக்கப்பட்டது.
இவ்வாறு உயிரெழுத்துக்கள் தம்முள் இயைய முறையே வைக்கப்பட்டன. இனி
மெய்யெழுத்துக்களின் முறை வைப்பு வருமாறு.
முதல்நாவும் முதலண்ணமும் உறப் பிறத்தலான் மெய்களில் முன்னர்க்
ககரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஙகரமும், இடைநாவும்
இடையண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் ககரத்தோடு இடம் ஒத்தலானும்
அவற்றின் பின்னர்ச் சகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ஞகரமும்,
நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறத்தலானும் அளவானும் சகரத்தோடு இடம்
ஒத்தலானும் அவற்றின் பின்னர் டகரமும், அதற்கு இனமாதலின் அதன்பின்னர்
ணகரமும், நுனிநாவும் அண்பல்முதலும் உறப் பிறத்தலானும் அளவானும்
டகரத்தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்த் தகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் நகரமும், இதழியையப் பிறத்தலானும் அளவானும்
தகரத் தோடு இனம் ஒத்தலானும் அவற்றின் பின்னர்ப் பகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் மகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.
வல்லெழுத்துக்களை முன்னாகக் கூறி, அவற்றிற்குஇனம் ஒத்த
மெல்லெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறி, இடை யெழுத்து ஆறனையும்
அவற்றின் பின்னாகக் கூறினார். வல்லெழுத்துள் நான்கும், மெல்லெழுத்துள்
மூன்றும், இடையெடுத்துள் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி
இம்முறைவைப்பு அமைந்தது. உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி கண்ணுற்று
அடையப் பிறத்தலான், இடை யெழுத்துக்களுள் முன்னர் யகரமும், அதற்கு
இனமாதலின் அதன்பின்னர் ரகரமும், இடமும் அளவும் ஒத்தலானும்
சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அவற்றின் பின்னர் லகரமும், அதற்கு
இனமாதலின் அதன் பின்னர் வகரமும், இடமும் அளவும் வகரத்தொடு முயற்சியும்
ஒத்தலானும் சந்தவின்பத்திற்கு இயைபுடைமையானும் அதன்பின்னர் ழகரமும்,
அதற்கு இனமாதலின் அதன்பின்னர் ளகரமும், அளவானும் ழகரம் போலத்
தமிழெழுத்து ஆகலானும் அவற்றின்பின்னர் றகரமும், அதற்கு இனமாதலின் அதன்
பின்னர் னகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன.
றகரனகரங்களை வல்லின மெல்லினங்களைச் சாரவையாது இறுதிக்கண் வைத்தமை,
அவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்கும், னகரம் வீடுபேற்றிற்குரிய
ஆண்மகனை உணர்த்தும் சிறப்புக் கருதியும் என்பது. (இ.வி.எழுத். 8
உரை)
(சூ.வி. கூறும் ‘எழுத்துக்களின் முறைவைப்பு (2)’ – காண்க.)
|
எழுத்துக்களின் இனம் |
எழுத்துக்களை உயிர்-மெய்- சார்பு – என மூவினம் ஆக்கலும்,
அவற்றுள்ளும் உயிரைக் குறில் – நெடில் – என ஈரினம் ஆக்கலும், மெய்யை
வல்லினம் – மெல்லினம் – இடையினம் – என மூவினம் ஆக்கலும்
எழுத்துக்களின் இனமாம். (தொ.எ. 2, 3, 4, 8, 9, 19, 20, 21. நச்.)
|
எழுத்துக்களின் பிரிவு |
உயிர்மெய் புணர்ச்சிக்கண் மெய் எனவும் உயிர் எனவும் பிரிந்து வேறு
நிற்றல். உயிர்மெய்யை மொழிமுதற்கண் மெய் முதல் எனவும்,
மொழியிறுதிக்கண் உயிரீறு எனவும், இடைக்கண் வரினும் உயிர் எனவும்
பிரித்துக்கொண்டு புணர்ச்சி விதி கூறப்படுதலைக் காண்கிறோம்.
‘நிலவு’ என்பதனை ந்+இ+ல்+ அ+வ் + உ – என்று பிரித்துக் கோடற்கண்,
உயிர்மெய்முதல் மெய்முதலாகவும், உயிர்மெய் யீறு உயிரீறாகவும் அமைதலைக்
காண்கிறோம்.
வரகு என்பதன்கண், வ+ர்+அ+கு- என இடையேயுள்ள உயிர் மெய்யைப்
பிரிப்பின், கு என்ற ஈற்றெழுத்துக்கு அயலதாக வருவது ர என்ற
உயிர்மெய்யிலுள்ள அகர உயிராதலின், வரகு என்பதனை உயிர்த்தொடர்
மொழியாகிய குற்றியலுகர ஈற்றுச் சொல் என்கிறோம். (தொ. எ. 103, 106
நச்.) (தொ. எ. 1 நச். உரை)
|
எழுத்துக்களின் பிறப்பிடமும்
கரணமும் |
எழுத்தை ஒலிக்கையில் எந்த இடத்தில் தொடுதல் நிகழ் கிறதோ, அந்த இடம்
அதன் பிறப்பிடமாகும். எதற்கு எது தொடுதலைச் செய்கிறதோ, அதற்கு அது
கருவியாகும்.
தொடுதல்-உபஸம்ஹாரம்-ஸமஸ்பர்ச்நாதி ஸம்ச்லேஷம்; தொடும் கருவி –
கரணம்.
அகரஆகாரங்களுக்குப் பிறப்பிடம் கண்ட்டம்(மிடறு). அகர வுயிர்க்கு
இதழையும் கவுளையும் மிகக் குவித்தல் செய்யாமை யும், ஆகாரவுயிர்க்கு
இதழையும் கவுளையும் மிக விரித்தல் செய்யாமையும் வேண்டும்;இவையே அகர
ஆகாரங்களின் தோற்றத்துக்குக் கருவி. (எ. ஆ. பக். 77)
நெஞ்சு மிடறு தலை-இவற்றை ஆசிரியர் கூறியதற்குக் காரணம் அவ்வளி
கொப்பூழிலிருந்து புறப்பட்டு அவற்றின் வழியே சென்று வாயை அடைதலேயாம்.
வாய்க்குள் காற்று வந் தடைந்த பின்னரே, அஃது உயிராகவோ வல்லின மெல்லின
மாகவோ இடையினமாகவோ ஆகும். சிறிது மூடியும் சிறிது திறந்தும் இருக்க
எழுத்தாகுமாயின் அஃது இடையெழுத் தாகவேனும் றகரமாகவேனும் ஆகும். வாய்
முழுதும் மூடப்பட் டிருக்க அவ்வளி எழுத்தாகுமாயின் றகரம் ஒழிந்த
வல்லின மெல்லின எழுத்தாம். வல்லினம் ஒலிக்கும் போது தொண்டையி லுள்ள
இரண்டு நரம்புகள் இடம் விட்டு நிற்கும்; மெல் லினங்கள் ஒலிக்கும்போது
அவை நெருங்கி நிற்கும்.(எ. கு. பக். 87)
‘வல்லினம் உரம், ஆய்தம் சிரம், உயிர் இடை கண்டம், மெலி மூக்கு’
என்ற வீரசோழிய உரையும் நன்னூலும் பொருந்தா. உந்தி முதலாகத் தோன்றிய
வளி எவ்வெழுத்தாக மாறினும் மிடற்றினின்று வாய்க்குள் வரும் வரை
தன்நிலையில் திரியாது, வாய்க்கண் அவ்விடத்தில் அவ்வளி மெய்யாக
மாறும்போது தடைபடும்;உயிராக மாறும்போது அவ்வளி தடைபடாமல் வாய்விட்டு
வெளிவரினும் அஃது அவ்வுயிராக மாறும் இடம் வாய்தான்.
பன்னீருயிரும் தத்தம் இடங்களில் திரியா(-திரிந்து) ஒலிக்கும்.
திரிதலுக்குக் காரணம் கருவி. எழுத்துக்களுக்குப் பிறப்பிடம் நெஞ்சு –
மிடறு – தலை – எனவும், கருவி,மூக்கு – அண்ணம் – நா – பல் – இதழ் –
எனவும் முறையே கொள்க. (எ. கு. பக். 87-89)
|
எழுத்துக்களின் பிறப்பு |
உந்தியில் தோன்றும் காற்று, மார்பு – கழுத்து- மூக்கு – தலை-
என்னும் தானங்களில் உற்று, பல் – இதழ் – நா- அண்ணம்- என்னும் இவற்றின்
முயற்சி வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்தொலியாய் வெளிப்படுதல்
எழுத்துக்களின் பிறப்பாம். (நன். 74)
|
எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய
வீரசோழியக் குறிப்பு |
உந்தியினின்று எழுகின்ற வாயு, உரம்(-மார்பு)-சிரம் – கண்டம்-
மூக்கு- இவற்றின் இடமாகப் பொருந்திப் புறப்படும்போது அண்ணம்-பல்-இதழ்-
நா-என்னும் உறுப்புக்களின் முயற்சி யால் வெவ்வேறு எழுத்தொலியாய்ப்
பிறக்கும். (வீ. சோ. சந்திப். 6)
இவற்றுள் உரத்தை வல்லினமும், சிரத்தை ஆய்தமும், கண்டத்தை உயிரும்
இடையினமும், மூக்கை மெல்லினமும் இடமாகப் பொருந்தும் என்ப. (6.
உரை)
|
எழுத்துக்களின் பெயர்
காரணக்குறியாதல் |
உயிர்கள் போல மெய்களை இயக்குதலான் உயிர் என்றும், தமக்கு இனமாகி
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்துக்களை நோக்கத் தாம் குறியவாய் ஓரளபு
இசைத்தலான் குறில் என்றும், தமக்கு இனமாகி ஓரளபு இசைக்கும் குற்றெழுத்
துக்களை நோக்கத் தாம் நெடியவாய் ஈரளபு இசைத்தலான் நெடில் என்றும்,
சுட்டுப்பொருளை உணர்த்துதலான் சுட்டு என்றும், வினாப் பொருளை
உணர்த்துதலான் வினா என்றும்,
மெய் போல உயிரான் இயங்குதலான் மெய் என்றும், மெல்லெழுத்தையும்
இடையெழுத்தையும் நோக்கத்தாம் வல்லென்று இசைத்தலானும் வல்லென்ற
தலைவளியான் பிறத்தலானும் வல்லெழுத்து என்றும், வல்லெழுத்தையும்
இடையெழுத்தையும் நோக்கத் தாம் மெல் லென்று இசைத்த லானும், மெல்லென்ற
மூக்குவளியான் பிறத்தலானும் மெல் லெழுத்து என்றும், மெல்லெழுத்தையும்
வல்லெழுத்தையும் நோக்கத் தாம் இடைநிகரவாய் ஒலித்தலானும், இடை நிகர்த்
தாய மிடற்று வளியான் பிறத்தலானும் இடையெழுத்து என்றும், தம்மால்
இயலும் சார்பெழுத்திற்குக் காரணமாகி முதல் நிற்றலான் முதலெழுத்து
என்றும், அவையே தம்மொடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் பற்றுக்கோடு
சார்ந்தும் தோன்றலான் சார்பெழுத்து என்றும், ஓரளபு இசைக்கும் இகரஉகரம்
குறுகி அரையளபு இசைத்தலான் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றும்,
அடுப்புக்கூட்டுப் போல ஆய்தவடி வாக எழுதப்படுதலின் ஆய்தம் என்றும்,
உயிரும் மெய்யும் கூடி ஒலித்தலான் உயிர்மெய் என்றும், உயிர் அளபெடுத்த
லான் உயிரளபெடை என்றும், ஒற்று அளபெடுத்தலான் ஒற்றளபெடை என்றும்,
ஈரளபு இசைக்கும் ஐகாரம் ஒளகாரம் குறுகி ஓரளபு இசைத்தலான் ஐகாரக்
குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் என்றும், அரையளபு இசைக்கும் மகரம்
குறுகிக் கால்அளபு இசைத்தலான் மகரக்குறுக்கம் என்றும், அ ஆ என்பன அ ஆ
என்று இசைத்தலான் அஆ என்றும் காரணக் குறி ஆயின. (இ. வி. எழுத். 7
உரை)
|
எழுத்துக்களின் பெயர் |
முதல், சார்பு; உயிர், மெய் (முதல்);குறில், நெடில் (உயிர்);
வல்லினம், மெல்லினம், இடையினம் (மெய்); உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை,
ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்
குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் (சார்பு) – என இவை
எழுத்தின் பெயர் களாம். (நன். 59, 60, 63, 68-70)
|
எழுத்துக்களின் பொதுப்பிறப்பிடம் |
பன்னீருயிரும் இடையெழுத்து ஆறும் மிடற்றின்கண்ணும், வல்லெழுத்து
ஆறும் உச்சியின்கண்ணும், மெல்லெழுத்து ஆறும் மூக்கின்கண்ணும்
நிலைபெற்றிசைக்கும் ஓசையான் பிறக்கும். (இ. வி. 10)
|
எழுத்துக்களின் முதலும் ஈறும் |
தனிஎழுத்து ஒவ்வொன்றற்கும் அதுவே முதலும் ஈறும் ஆகும். உயிர்மெய்
எழுத்திற்கு ஒலித்த முறையே மெய் முதலும், உயிர் ஈறும் ஆகும்.
புணர்ச்சிக்கண், உயிர்மெய் முதலை மெய்முதல் எனவும், உயிர்மெய் ஈற்றை
உயிரீறு எனவும் கூறுதல் காண்க. அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு
புணர்த்திய மெய் தன் மாத்திரை தோன்றாது ஒன்றாய் நிற்றலின் உயிர்மெய்யை
ஓரெழுத்து என்றும், ஒலித்து நின்ற நெறியான் ஈரெழுத்து என்றும் கொள்ப.
‘உயிர்மெய்’ என்பது ஒலி வகையான் உம்மைத்தொகை, மாத்திரை வகையான்
உம்மைத்தொகை அன்மொழி. (நன். 109 சங்.)
|
எழுத்துக்களின் முறைவைப்பு (1) |
“எழுத்துக்கட்கு எல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘மெய்யின்
இயக்கம் அகரமொடு சிவணும்” (தொ. எ. 46) என்பதனான் கூறுப.
வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த் தும் சிறப்பான் னகரம் பின்
வைத்தார். இனி எழுத்துக்கட்குக் கிடக்கை முறை ஆயினவாறு கூறுதும்:
“குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த
நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே
இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின். அன்றி, இரண்டை முற்கூறினாலோ எனின்,
ஆகாது; ஒன்று நின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி
இரண்டு என்பதொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பலகூடியே எண்
விரிந்ததென்று உணர்க.
“இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும்
ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு
ஒவ்வாதேனும் ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எ. 31) எனச்
சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. அவை ஐம்பாற்கண்ணும்
பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களொடு
பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற் றெழுத்து
இலவேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங் களின் பின்னர் ஐகார
ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யொடு கூடி நின்றல்லது தானாக
ஓரெழுத்தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ
இ உ எ- என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன்
– என மெய்யொடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும்
பெயர்களொடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம்
‘நொ’ என மெய்யொடு கூடியே தன் பொருளுணர்த்து வதல்லது தானாகப் பொருள்
உணர்த்தாது என்றுணர்க. இன்னும் அ ஆ, உ ஊ, எ ஏ, ஒ ஓ, – என்பன தம்முள்
வடிவு ஒக்கும். இ ஈ ஐ – தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை
அளபெடுக்குங்கால், நெட்டெழுத்தொடு குற்றெழுத்திற்கு ஓசை
இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்கள்
ஆதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுள்
பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.
“இனி, ககார ஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார
நகாரமும், பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின்,
வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்துவைத்தார். முதல் நாவும்
முதலண்ணமும், இடைநாவும் இடையண்ணமும், நுனிநாவும் நுனியண்ணமும்
நுனிநாவும் அண்பல் முதலும் உறுதலும், இதழ்இயைதலும் ஆகிப் பிறக்கின்ற
இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக் களைக் க ச ட த ப ங ஞ ண ந ம – என
இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த்
திரிதலானும் றகாரமும் னகாரமும் சேர வைத்தார். இவை தமிழெழுத்து என்பது
அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடை யெழுத்துக்களில் யகாரம்
முன் வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப் பிறந்த வளி அண்ணம்
கண்ணுற்றடையப் பிறத்தலின். ரகாரம் அதனொடு பிறப்பு ஒவ்வாதேனும், செய்கை
ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மில் பிறப்பும்
செய்கையும் ஒவ்வாவேனும், கல்வலிது சொல்வலிது – என்றாற் போலத் தம்மில்
சேர்ந்து வரும் சொற்கள் பெரும்பான்மை என்பது பற்றி லகாரமும் வகாரமும்
சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் ‘இடையெழுத்
தென்ப யரல வழள’ (தொ. எ. 21) என்றால் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை
கருதிச் சேர வைத்தார்போலும்.” (தொ. எ. 1 நச். உரை)
எழுத்துக்களின் இனமும் முறையும்
என்ற தலைப்பில், இலக்கணவிளக்க நூலார் சுட்டும் முறைவைப்பினைக் கண்டு
கொள்க. (இ. வி. எழுத். 8 உரை)
(நன்னூல் விருத்தியுரை சூ.வி. உரையே.)
|
எழுத்துக்களின் முறைவைப்பு (2) |
சிறப்பு, இனம் – என்ற இரண்டு காரணத்தானும் ஒன்றன் பின் ஒன்றாக
எழுத்துக்கள் அகர முதலாக னகரம் ஈறாக வழங்கி வருதலே எழுத்துக்கள்
நிற்கும் முறையாம். தனித்தியங்கும் ஆற்றலுடைய உயிரெழுத்துக்கள்
அவ்வாறு இயங்கும் ஆற்றல் இல்லாத மெய்யெழுத்துக்களுக்கு முன்
நிற்கின்றன. உயிரெழுத்துக்களுள்ளும், குற்றெழுத்துக்கள் அவற்றது
விகாரமாகிய நெட்டெழுத்துக்களுக்கு முன்நிற்கின்றன. மெய்
யெழுத்துக்களுள், வலியார் மெலியவர்களுக்கு முன் நிற்பது போல,
வல்லெழுத்துக்கள் மெல்லெழுத்துக்களுக்கு முன் நிற்கின்றன. இவை
நிற்குமுறை சிறப்பு எனும் காரணம் பற்றியது. குற்றெழுத்துக்களை அடுத்து
அவற்றின் இனம் ஒத்த நெட்டெழுத்துக்கள் முறையே நிற்பதும்,
வல்லெழுத்துக்களை அடுத்து அவற்றின் இனம் ஒத்த மெல்லெழுத்துக்கள்
முறையே நிற்பதும் இனம் என்னும் காரணம் பற்றியன. (நன். 73)
“உயிர்களுள் அ இ உ – என்பன முறையே அங்காந்து கூறும் முயற்சியானும்,
அவ்வங்காப்போடு அண்பல்லடி நாவிளிம் புறக் கூறும் முயற்சியானும்,
அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியானும் பிறத்தலான்,
அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள்
அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின், அவற்றைச் சார வைக்கப்பட்டன.
நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற் போலக் குற்றெழுத்து இரண்டு
ஒத்து நின்று நீண்டிசைப்ப தொன்று ஆதலின், அஃது உணர்ந்து கோடற்குக்
குற்றெழுத்துக் களின் பின்னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்டன. இனி
எகரமாவது அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்திசைத்து நரமடங்கல்
போல் நிற்பதொன்று ஆகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக் கூறும்
தம்முள் ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்று ஆகலானும், அவை அவற்றின்
பின்னர் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனம் ஆகலின், அவற்றின்
பின் முறையே வைக்கப் பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள்
ஒத்திசைத்து நிற்பதொன்று ஆதலின் எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும்,
அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆகலின் ஒகர
ஓகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறாதல் பற்றி ஏ ஓ ஐ
ஒள – என்னும் நான்கினையும் வடநூலார் சந்தியக்கரம் என்ப. கையடனார்
நரமடங்கல் போல் என்று உவமையும் கூறினார். இக்கருத்தே பற்றி ஆசிரியர்
‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு
புலப்படுதற்கு, அகர இகரங்களே அன்றி அவற்றிடையே யகரமும் ஒத்து
இசைக்கும் என்பார், ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும், ஐயென்
நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்றும், ‘மெய்பெற’ என்ற இலேசானே, ஒள
என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுதற்கு அகர உகரங்களே அன்றி
அவற்றிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும்……‘இகர யகரம் இறுதி
விரவும்’ என்றும் கூறினார்.
“இனி, கங – க்களும் சஞ-க்களும் டண-க்களும் தந-க்களும் பம-க்களும்
அடிநா அண்ணம் – இடைநா அண்ணம் – நுனிநா அண்ணம் – அண்பல் அடி – இதழ் –
என்னும் இவற்றின் முயற்சி யால் பிறத்தலான், அப்பிறப்பிடத்தின் முறையே
முறையாக வைக்கப்பட்டன. வலியாரை முன் வைத்து மெலியாரைப் பின் வைத்தல்
மரபாகலின், வல்லெழுத்துக்கள் முன்னும் அவ்வவற் றிற்கு இனம் ஒத்த
மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னு மாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும்
நோக்கியல்லது இடை நிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின் அது பற்றி இடை
யெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின் வைக்கப்பட்டன.
“ழகர றகர னகரங்கள் மூன்றும் தமிழெழுத்து என்பது அறிவித்ததற்கு
இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் ழகரம் இடையெழுத்தாகலின்,
அதுபற்றி இடையெழுத்தொடு சார்த்தி அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது.
வடமொழியில் லகாரம் ளகாரமாகவும் உச்சரிக்கப் படுவதன்றி தனியே ஓரெழுத்து
அன்மையின், அச்சிறப்பின்மை பற்றி இடை யெழுத்தாகிய ளகாரம்
ழகாரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. யரலவ-க்கள் நான்கும் முறையே
அடியண்ணமும் இடை யண்ணமும் அண்பல்முதலும் இதழும் என்னும் இவற்றின்
முயற்சியால் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறை யாக
வைக்கப்பட்டன.” (சூ. வி. பக். 22-25)
உயிரெழுத்துக்கள் தனித்து இயங்கும் இயல்பின ஆதலின், அவை அவ்வியல்பு
இல்லாத மெய்யெழுத்துக்கட்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள் அகரம், வேறு
முயற்சியின்றி வாய் அங்காந்து கூறப் பிறத்தலின் அச்சிறப்பு நோக்கி
முதற்கண் வைக்கப்பட்டது. அதனையே பின்னும் ஒரு மாத்திரையளவு நீட்டி
ஒலிக்கப் பிறத்தலின் ஆகாரம் அதன் பின் வைக்கப் பட்டது. மேல்,
குற்றெழுத்துக்களுக்குப் பின்னர் நெட்டெழுத் துக்களை நிறுத்தியதற்கும்
இவ்வாறே கொள்க. இகரம், மேற்பல்லின் அணிய இடத்தில் நாவிளிம்பு உறப்
பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி அதன்பின் வைக்கப்பட்டது. உகரம், இதழ்
குவித்து ஒலிக்கப் பிறத்தலின் பிறப்பிடம் நோக்கி இகரத்தின் பின்
வைக்கப்பட்டது. உயிரெழுத்துக்களுள் அ இ உ என்னும்மூன்றுமே
சிறப்புடையன; அதனானே அவை பொருள்களைச் சுட்டி உணர்த்த வரலாயின.எகரம்
இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், இகர ஒலியினது திரிபு
ஆகலானும் அச்சிறப்பின்மை நோக்கி உகரத்தின் பின் வைக்கப்பட்டது. ஐகாரம்
அகரமும் இகரமும் கூடிப் பிறப்பது ஆதலின், அஃது ஏகாரத்தின் பின்
வைக்கப்பட்டது. ஒகரம் உகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆகலானும், உகர
ஒலியினது திரிபு ஆகலானும், அகர இகரம் கூடிப்பிறக்கும் ஐகாரத்தின் பின்
வைக்கப்பட்டது. ஒளகாரம் அகரமும் உகரமும் கூடிப் பிறப்பது ஆதலின்,
ஓகாரத்தின் பின் வைக்கப்பட்டது. ஆகவே பிறப்பிடத்து முறையும்,
சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கியே உயிரெழுத்துப் பன்னிரண்டும்
வைக்கப்பட்டுள்ளன. இனி மெய்யெழுத்துக்களின் முறை வருமாறு:-
ககார ஙகாரங்கள் அடிநா அடியண்ணத்தை உறப் பிறத்தலின் முதலில்
வைக்கப்பட்டன. சகார ஞகாரங்கள் இடைநா இடை யண்ணத்தை உறப் பிறத்தலின்
அவற்றின் பின் வைக்கப் பட்டன. டகார ணகாரங்கள் நுனிநா நுனியண்ணத்தை
உறப் பிறத்தலின் அவற்றின் பின் வைக்கப்பட்டன. றகார னகாரங்கள்
நுனிநாக்கு மேல்வளைந்து சென்று அண்ணத்தை ஒற்றப் பிறத்தலின், டகார
ணகாரங்களை அடுத்து வைக்கப் படல் வேண்டும்; இவ்விரண்டு எழுத்துக்களும்
வடமொழியில் இல்லாமையின் ஈற்றில் வைக்கப்பட்டன. தகார நகாரங்கள்
மேற்பல்லின் அடியில் நாநுனி பரந்து ஒற்றப்பிறத் தலின் (றன-க்களின்
பின்னர் வைக்கப்படவேண்டுவனவாகவும்,
றன-க்கள் இறுதியில் வைக்கப்பட்டதனால்), டண-க்களின் பின்னர்
வைக்கப்பட்டன. பகார மகாரங்கள் இதழ்கள் சேரப் பிறத்தலின், தந-க்களின்
பின் வைக்கப்பட்டன. இவற்றால் அடியண்ணம் முதல் இதழ்வரையிலு முள்ள
இடங்களில் பிறத்தல் காரணமாக, கங – சஞ – டண – றன – தந – பம – க்கள்
முறையாய் அமைவனவாதல் காண்க. கங-க்கள் முதலிய வற்றுள் இரண்டிரண்டு
எழுத்துக்கள் ஓரோர் இடத்தில் பிறப்பன வாயினும், வல்லெழுத்துக்கள்
மார்பின் வளியால் பிறந்து வலியவாய் ஒலித்தலானும், மெல்லெழுத்துக்கள்
மூக்கின் வளியால் பிறந்து மெலியவாய் ஒலித்தலானும், அச் சிறப்பு நோக்கி
வல்லெழுத்துக்கள் முன்னும், சிறப்பின்மை நோக்கி மெல்லெழுத்துக்கள்
அவற்றின் பின்னும் வைக்கப் பட்டன. இனி இடையெழுத்துக்களின் முறை
வருமாறு:
மிடற்று எழுந்த வளி அண்ணம் சேர்ந்து பிறத்தலின், யகரம் முதலில்
வைக்கப்பட்டது. நுனிநாக்கு மேற்சென்று அண்ணத்தை வருடுதலான், ரகரமும்
ழகரமும் பிறப்பன எனினும், அவற் றுள்ளும் இடம் நோக்கி ழகரம் முன்னும்
ரகரம் அதன்பின் னும் வைக்கப்படல் வேண்டும். ஆயினும் ழகரம் வடமொழி யில்
இல்லாமையின், வடமொழியிலுள்ள இடையெழுத்துக் களின் பின் – அஃதாவது
யரலவ-க்களுக்குப் பின் – வைக்கப் பட்டது. ரகாரம் பிறப்பிடம் நோக்கி
(ழகாரத்தின் பின்னர்) வைக்கப்பட வேண்டுவதாயினும் ழகாரம் வகாரத்தின்
பின்னர் வைக்கப்பட்டதனான்) யகாரத்தின்பின் வைக்கப் பட்டது. ளகாரம்
நாவிளிம்பு தடித்து அண்ணத்தை வருடப் பிறத்தலின், அது ரகாரத்தின்
பின்னர் வைக்கப்பட வேண்டுவ தாயினும், வடமொழியில் தனியெழுத்தாக
இல்லாததனான், ழகரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ழகாரம் ளகாரம் ஆகிய
இரண்டு எழுத்துக்களும் வடமொழியில் இல்லையாயினும், அவற்றுள்ளும்
பிறப்பிடம் நோக்கி ழகாரம் முன்னும் ளகாரம் பின்னுமாக வைக்கப்பட்டன.
நாவிளிம்பு தடித்து அண்பல் லடியை ஒற்றுதலான் லகாரம் பிறக்கின்றது
ஆகலின், அது ழகார ளகாரங்களின் பின்னர் வைக்கப்பட வேண்டுவதாயி னும்
அவ்விரண்டு எழுத்துக்களும் ஈற்றில் வைக்கப்பட்டமை யின், அது
ரகாரத்தின் பின்வைக்கப்பட்டது. வகரம் மேற்பல் லும் இதழும் இயையப்
பிறத்தலின், அது லகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. ஆகவே, இடையினங்கள்
ஆறும் பிறப்பிடம் காரணமாக, ய ழ ர ள ல வ – என வைக்கப்பட வேண்டுவன.
அவற்றுள் ழகார ளகாரங்கள் வடமொழியில் இல்லாமை கருதி ஈற்றில்
வைக்கப்பட்டன ஆகலின், ய ர ல வ ழ ள – என்று அமைந்துள்ளன. இவற்றால்,
அ, ஆ; க ங – இவை அடியண்ணத்திலும்,
இ, ஈ; ச ஞ ய – இவை இடையண்ணத்திலும் (தாலத்திலும்),
எ, ஏ, ஐ; ட, ண, ழ, ர – இவை நுனியண்ணத்திலும்,
ற, ன, (ள) – இவை நுனியண்ணத்தை அடுத்த இடத்திலும்,
த, ந, ல – இவை பல்லின் அடியிலும்,
உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ – இவை இதழிலும் பிறப்பனவாதல் தெளிவாகும்.
(எ. ஆ. பக். 7 -10)
|
எழுத்துக்களின் வடிவம் |
எழுத்துக்கள் தொன்றுதொட்டு வழங்கும் பழைய வரிவடி வினையுடையன.
அங்ஙனம் வழங்குமிடத்துத் தனித்தும் மெய்யூர்ந்தும் வரும் எகரமும்
ஒகரமும் ஆகிய இரண்டு உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் தம்மேல்
புள்ளி பெறும் என்பர் நன்னுலார். (பிற்கால ஓலைச்சுவடிகளில் இந் நிலை
காணலாம். புள்ளியிடுதல் மாத்திரையைச் செம்பாதி யாகக் குறைப்பதற்கும்
பயன்படும்.) (நன். 98)
|
எழுத்துக்களுக்கு வெவ்வேறு ஒலி
உண்டாவதன் காரணம் |
சுவாசப்பையினின்று வெளிப்படும் வளி அடியண்ணம் முதலிய இடங்களில்
படுகையில் நாவின் செய்கையால் வெவ்வேறு எழுத்தொலி ஆகின்றது.
வெவ்வேறுவகை ஒலி உண்டாவதன் காரணம் ஐந்து. அவை 1. உள்முயற்சி, 2, வெளி
முயற்சி, 3. கூட்டம், 4. வழி வேறுபாடு, 5. இட வேறுபாடு – என்பன.
உள்முயற்சி: உள்நின்று எழும் வளியை வெளியே விடும்போது, நாவின் நுனி
இடை அடிவிளிம்பு – ஆகியவற்றுள் ஒன்றனால் வளியை அடியண்ணம் இடையண்ணம்
முதலிய இடங்களில் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுதல் கூடும்.
தடுக்கும்போது சிறிதளவு தடுத்தலால் இடையினமெய்களும், முழுதும்
தடுத்தலால் வல்லின மெல்லின மெய்களும், தடுக்காமல் விடுவதால்
உயிரெழுத்துக்களும் தோன்றுகின்றன.
வெளிமுயற்சி- வளியை வெளிவிடும்போது நம் குரல்வளை யின்
இருபக்கத்தும் உள்ள ஐவ்வுகள் பிரிந்து விரிந்தும், சேர்ந்து
சுருங்கியும், நாதஒலியையும் சுவாச ஒலியையும் உண்டாக்கும்.
வல்லெழுத்துக்கள் சுவாச காரியம், மற்ற எல்லா எழுத்துக் களும்
நாதகாரியம்.
கூட்டம்: ஓரொலியில் மற்றோர் ஒலியையும் ஒருங்கு சேர்த்தல். செம்பும்
ஈயமும் சேர்ந்து வெண்கலமாவது போலப் பிரிக்கமுடியாதபடி ஒன்றேயாய்,
இரண்டொலியின் சேர்க்கையால் ஓரொலியேயாய் அமையும் தமிழ் ஐகார ஒளகாரங்கள்
இப்பகுப்பைச் சார்ந்தன என்ப.
வழி வேறுபாடு: உள்நின்று வெளிப்படும் வளி வெளியே வரும் வழிகளின்
வேறுபாடு. அண்ணம் வரை வரும் வளியை அதற்குமேல் வாய்வழியாகவோ
மூக்குவழியாகவோ வெளி விடுதல் கூடும். வல்லினம் நீங்கலான ஏனைய
எழுத்துக்களை ஒலிக்கும்போது குரல்வளையின் துவாரம் சுருங்கச் செய்து
சிறிது சிறிதாக வெளிவரும் வளியை மூக்கின் வழியாக வெளிவிட்டால் அவ்வளி
மெல்லினம் ஆகும். வடமொழியில் உயிர், ய வ ல-க்களும் மூக்கின் வழியாக
வெளிவருதலுமுண்டு. அவை அநுநாஸிகம் எனப் பெயர் பெறும்.
இட வேறுபாடு: எழுத்துப் பிறப்பதற்குரிய வாயின் உள் ளிடங்கள் ஆகிய
அடியண்ணம், இடையண்ணம், நுனி யண்ணம், நுனியண்ணத்தை அடுத்த இடம்
(வர்த்ஸம்), பல், பல்லின் மேலிடம், இதழ்- என்ற இடவேறுபாட்டானே
வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் ஆறு ஆறு ஆயின. (எ. ஆ. பக். 11-13)
|
எழுத்துக்களை அசைகள் ஆக்குதல்,அலகிடுமுறை |
செய்யுள்களில் ஒவ்வோர் அசையும் தனக்கெனச் சிறப்புப் பொருள்உடையதாய் இருத்தலே சிறப்பு. ஆதலின் அசை களைப் பிரிக்கும்போது அவைபொருள் தருமாறு பிரித்தலே சிறப்பு.சீர்களின் முதலில் நிற்கும் தனிக்குறிலை மொழியினின்று பிரித்து ஒருநேரசையாகக் கூறுதல் ஆகாது. அஃதாவது‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ – முருகு. 1என்னும் அடியில் முதல்சீராகிய உலகம் என்பதன் ‘உ’ என்பதனைத் தனியேபிரித்து நேரசையாகக் கொள்ளல் ஆகாது. (தொ. பொ. செய். 7 நச்..)ஒரு சீரில் உள்ள சொற்களுள் முதற்சொல்லின் ஈற்றெழுத்தை யும்இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தையும் ஒருங்கு சேர்த்து அசை கொள்ளுதல்தகாது அஃதாவது.‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’ தொ. எ. 279 என்னும்சூத்திரத்தில் ‘முற்றஇன்’ என்னும் சீரினை, முற்-றஇன் என்று பிரித்து‘நேர் நிரை’ என்று கூறுதல் கூடாது. ஏனெனில் முற்ற என்பது ஒருசொல்லாம். ஆகவே, ‘முற்றஇன்’ என்பதனை முற் – ற – இன் என மூவசைச்சீராகவே கோடல் வேண்டும்.(செய். 30 பேரா.)தொல்காப்பியம் சொல்லும் நேர்பு நிரைபு அசைகளைப் பிற்காலத்தவர்கொள்ளாமல் விடுத்தலின்‘விசும்புதைவரு வளியும்’ (புறநா. 2)‘வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (முருகு. 106)என்பவற்றில் ‘விசும்புதைவரு’ என்பதனை விசும் – புதை – வரு =கருவிளங்கனி எனவும், வசிந்துவாங்கு என்பதனை வசிந் – துவாங் – கு =கருவிளங்காய் எனவும் கொள்கின்றனர். ஆனால் தொல்காப்பிய முறைப்படி‘விசும்புதைவரு’ விசும்பு – தை – வரு = நிரைபு நேர் நிரை; வசிந்து -வாங்கு = நிரைபு நேர்பு என்றே பகுத்து அலகிடல் வேண்டும்.நேர்பு நிரைபு அசைகளைக் கொள்ளாத ஆசிரியர்களுக்கும் ஒரு சீரிலுள்ளசொற்களின் எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டல் உடன்பாடன்று. ‘கொன்றுகோடு நீடு’ என்பதனைக் கொன் – றுகோ – டுநீ – டு என நாலசைச் சீராகக்கொள்ளாது கொன்-று-கோ-டு-நீ-டு என ஆறசைச் சீராகவே பண்டை யுரையாசிரியர்கொள்வர். (யா. கா. ஒழி. 1 உரை)‘அங்கண்வானத் தமரரசரும்’ என்ற வஞ்சிப்பாட்டில் ‘அனந்த சதுட்டயம்’ என்ற சீரினை அநந் – தச – துட் – டயம் என்று பிரிக்காமல், ‘அநந்- த – சதுட் – டயம் எனப் புளிமா நறுநிழலாகவே கூறுவர். (யா. கா.9)இவ்வாறே அப்பாடலில் ‘மந்தமாருதம்’ ‘இலங்குசாமரை’ என்பவற்றை மந் -தமா – ருதம், இலங் – குசா – மரை என நிரை யீற்று மூவசைச் சீராகக்கொள்ளாமல், ‘மந் – த – மா – ருதம், இலங் – கு – சா – மரை’ என நாலசைச்சீராகவே கொள்வர்.யாப்பருங்கல விருத்தியிலும் ‘அங்கணீலத்’ என்ற சீரினை (சீரோத்து. 6.உரை) அங் – கணீ – லத் எனப் பகுக்காது, அங் – க – ணீ – லத் எனநாலசைச்சீராகவே காட்டியதும், ‘மாரி யொடு’ (சீரோத்து – 7. உரை) என்பதனை‘மா – ரியொ- டு எனப்பகுக்காது’ ‘மா – ரி – யொடு’ எனத் தேமாங்கனி என்றுகுறித்தலும் பண்டை நேரிய மரபினை நினைவுறுத்தும் செய்திகளாம்.ஒரு சீர்க்குள் உள்ள இரண்டு சொற்களின் எழுத்துக்களை இணைத்துஅசையாக்கும் வழக்கம் மிகுந்த காலத்தே கனிச்சீர்களை யுடைய வெண்பாக்கள்காய்ச்சீராகவே கருதப்பட்டு யாக்கப்பட்டன.“வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும்பரிந்துசில கற்பான் தொடங்கல்” (நீதிநெறி . 9)“உடைந்துளா ருட்குவரு கல்வி” (நீதிநெறி. 8)“கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலாம் ” (நீதிநெறி 15)“ சந்திசெயத் தாள்விளக்க” (நள. கலி. தொ. 32)முதலியன எடுத்துக்காட்டுக்களாம்.பரிந்து , சில – நிரைபு நிரை; பரிந் – துசி – ல – நிரை நிரைநேர்உட்கு, வரு – நேர்பு நிரை; உட் – குவ – ரு – நேர் நிரை நேர்கற், ற, வெலாம் – நேர் நேர் நிரை; கற் – றவெ – லாம் -நேர்நிரைநேர்சந், தி, செய – நேர் நேர் நிரை – சந் – திசெ – ய – நேர் நிரை நேர்என்று கொள்ளப்பட்டன.‘சந்திசெயத் தாள்விளக்கத் தாளின் மறுத் தான்கண்டு,புந்திமிகத் தான்களித்துப் போதல்மனத் தேகொண்டு’ (நள.)‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த ’இவற்றின்கண் ‘தாளின்மறு’ என்பதும் ‘போதல்மனத்’ தென்பதும் கனிச்சீர்வெண்பாவிற் புகலாமைப் பொருட்டு மெய்யெழுத்தை நீக்கிக் கணக்கிட்டுத் தா- ளிம – று எனவும், போ – தம – னத் எனவும் பகுத்துச் சீராக்குதலும்;‘இரவின் வந்த’ என்பது கட்டளைக் கலித்துறையடியின் இறுதிச்சீர்விளங்காய் என வருதல் வேண்டுதலின், நாலசைச்சீர் ஆகாமைப் பொருட்டுனகரமெய்யை நீக்கிக் கணக்கிட்டு இர-விவந் – த எனப்பகுத்துச்சீராக்குதலும் பிற்கால வழுவமைதி முறைகளாயின.12 எழுத்தின் மேற்பட்ட வெண்பா அடி கலியோசை யேற்கும் என்பது பண்டைமரபு. பிற்காலத்தே சீர்வகை அடிகளாத லின் எழுத்துக் கணக்கினைநோக்குவதில்லை.
|
எழுத்துக்களைப் படைத்த இறைவர் |
12 உயிரெழுத்துக்களையும் நான்முகன் படைத்தான்; 18 மெய்களையும்இரண்டிரண்டாக முறையே அரன், அரி, முருகன், இந்திரன், ஆதித்தன்,சந்திரன், இமயன், வருணன், குபேரன் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர்.(இ.வி. பாட். 18)
|
எழுத்துக்கள் தம்பெயர்
குறிப்பிடப்படுதல் |
மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களும் தம்பெயர் குறிப்பிடுமிடத்து
மொழிக்கு முதலாக வரும்.
வருமாறு : ‘ஙகரமொடு தோன்றும்’ – (தொ.எ. 29 நச்.); ‘டகார மாகும்’
– 302; ‘ணகார இறுதி’ – 302; ‘யகார இறுதி’ – 357; ‘ரகார இறுதி’ – 362;
‘லளஃகான் முன்னர்’ – 24; ‘ழகார இறுதி’ – 383; ‘ளகார இறுதி’ – 396;
‘றகார மாகும்’ – 332; ‘னகார இறுதி’ – 332.
என மொழிக்கு முதலாகாத ங ட ண ய ர ல ழ ள ற ன- என்பனவும் தம்பெயர்
குறிப்பிடுமிடத்து மொழிக்கு முதலில் வந்தவாறு. (தொ. எ. 66 நச்.)
|
எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவு
அட்டவணை |
தொல்காப்பியம் 1 2 1 1
½
½
½
½ –
¼ – –
வீரசோழியம் 1 2 1 1
½ ½ ½ ½ – ¼ – –
நேமிநாதம் 1 2 1
½ 1
½ ½ ½ ½ ½ ¼ ¼ 3 –
நன்னூல் 1 2 1 1
½ ½ ½ ½ ¼ ¼ 3 –
இலக்கண
விளக்கம் 1 2 1 1
½
½
½
½
–
¼ – –
தொன்னூல்
விளக்கம் 1 2 1 1
½ ½ ½ ½ ¼ ¼ 3 1
சுவாமிநாதம் 1 2 1
½ 1
½ ½ ½ ½ ½ ¼ ¼ – –
முத்துவீரியம் 1 2 1 1
½ ½ ½ ½ ¼ ¼ – 1
அறுவகை
யிலக்கணம் 1 2 1
½ 1
½ ½ ½ ½ ½ – ¼ – –
|
எழுத்துக்குறிவெண்பா |
மந்திர வகையால் தகடுகளில் எழுத்துக்களைப் பொறிக்கும் திறத்தைவெளியிடும் ஒருவகையான வெண்பாநூல். இதனைப் புட்கரனார் என்பவர்இயற்றினர் என்பர்.‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடைநெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதேபுட்கரனார் கண்ட புணர்ப்பு’இது மந்திர நூலுள் புட்கரனார் கண்ட எழுத்துக் குறி வெண்பா. இவ்வாறுவருவதை யாப்பருங்கலம் 93ஆம் சூத்திர மாகிய புறனடையாற் கொள்ளுவர்உரையாசிரியர். இது சவலை வெண்பாவில் அடங்கும். (யா. வி. பக். 371)
|
எழுத்துச் சாரியைகள் |
காரம், கரம், கான் -என்பன எழுத்துச் சாரியைகள். காரச் சாரியை ஒன்றே
தமிழுக்கும் ஆரிய மொழிக்கும் பொதுவான சாரியை. காரச்சாரியை ஒன்றே உயிர்
மெய் எல்லாவற்றுக்கும் வரும்.
வருமாறு : ஆகாரம், ஈகாரம், ஊகாரம்……….. ஓளகாரம், அகாரம்,
ககாரம்.
காரம், கரம், கான்- என்ற மூன்றும் உயிர்க்குறிலுக்கும் உயிர்மெய்க்
குறிலுக்கும் வரும்.
எ-டு: அகாரம், அகரம், அஃகான்; மகாரம், மகரம், மஃகான். (குறில்
கான்சாரியை பெறுங்கால் இடையே ஆய்தம் வருதல் கொள்ளப்படும்.)
ஐ, ஒள- என்பன கான்சாரியையும் பெற்று ஐகான், ஒளகான் – என வரும்.
ஆனம், ஏனம், ஓனம் – என்ற எழுத்துச்சாரியைகளும் உள. உயிர்மெய்
நெடிலுக்குச் சாரியை இல்லை. (தொ. எ. 134- 137 நச். உரை)
மெய் பதினெட்டும் அகரத்தையும், நெட்டுயிர் ஏழும் காரத்தையும், ஐகார
ஒளகாரங்கள் காரத்துடனே கானையும், உயிரும் உயிர்மெய்யுமான
குற்றெழுத்துஐந்தும் காரம், கான்- இவற்றுடனே கரம் என்பதனையும்
சாரியையாகச் சார்ந்து நடக்கும். (நன். 125 மயிலை.)
|
எழுத்துச் சுருக்கம் |
‘அக்கரச் சுதகம்’ காண்க. (யா. வி. பக். 547)
|
எழுத்துச் செய்யுளுறுப்பு ஆமாறு |
எழுத்து, அசையாயும் அசைக்கு உறுப்பாயும் நிற்றலொடு தொடைகளையும்வண்ணங்களையும் தோற்றுவித்தலான் செய்யுள் உறுப்பாயிற்று. (தொ. செய். 2ச. பால)
|
எழுத்துச்சாரியை பிற |
‘பிற’ என்றதனாலே, குறிலொடு கான்சாரியை புணரும்போது இடையே ஆய்தம்
தோன்றுதலும் (அஃகான்), அ ஆனா – எ ஏனா – ஒ ஓனா- ஐயனா – ஒளவனா – என, ஆனா
ஏனா ஓனா அனா – முதலிய சாரியைகள் பெற்று வருதலும், ‘அ இ உ’ ‘ஆ ஈ ஊ’
எனச் சாரியை பெறாது வருதலும் கொள்க. (நன். 126 இராமா.)
|
எழுத்துப் பிறப்பு |
பன்னீருயிர்க்கும் ஆறுஇடையினத்திற்கும் மிடறே முதலிட மாகவும், ஆறு
வல்லினத்திற்கும் நெஞ்சே முதலிடமாகவும். ஆறு மெல்லினத்திற்கும்
உச்சியே முதலிடமாகவும், அன்றி உதடும் மூக்கும் அண்ணமும் பல்லும்
நாவும் என இவ் வைந்தே துணையிடமாகவும், எழுத்தெல்லாம் பிறக்கும்
என்றுணர்க. (தொ. வி. 3 உரை)
|
எழுத்துப் பெருக்கம் |
எழுத்து வர்த்தனம் என்னும் மிறைக்கவி ; ‘அக்கர வருத்தனை’காண்க.
|
எழுத்துப் பொருத்தம் |
முதற்சீர் எழுத்தினை எண்ணுமிடத்து வியனிலை ஆகிய மூன் றெழுத்தும்ஐந்தெழுத்தும் ஏழெழுத்தும் ஒன்பதெழுத்தும் பொருத்தமுடையனவாம்.சமனிலையாகிய நான்கெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும் பொருந்தாவாம்.ஒற்றெழுத் தும் உடன் எண்ணப்படும். (இ. வி. பாட்., 24; பன்.பாட்.14)
|
எழுத்துப் போலி |
அகரமும் வகரஒற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த ஆகலும், அகரமும்
யகரஒற்றும் கூடி ஐகாரத்தின் பயத்த ஆகலும் எழுத்துப் போலியாம்.
எ-டு : அவ்வை – ஒளவை எனவும், அய்யர் – ஐயர் எனவும் வரும்.
(நேமி. எழுத். 9)
மொழியிறுதியில் மகரத்திற்கு னகரம் போலியாக வரும். எ-டு : முகம்-
முகன்.
மொழி முதலிலும் இடையிலும் சகர ஞகர யகரங்களுக்கு முன் அகரத்துக்கு
ஐகாரம் போலியாக வரும்.
எ-டு : பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல் – மையல்;
அரசு – அரைசு. இலஞ்சி – இலைஞ்சி, அரயர் – அரையர்
மொழி இடைக்கண் சிலவிடத்து ஐகாரத்தின் பின்னரும் யகர ஒற்றின்
பின்னரும் நகரத்துக்கு ஞகரம் போலியாக வரும்.
எ-டு:மைந்நின்ற – மைஞ்ஞின்ற – செய்யுள்
ஐந்நூறு – ஐஞ்ஞூறு – உலக வழக்கு
செய்ந்நின்ற – செய்ஞ்ஞின்ற – செய்யுள்
சேய்நலூர் – சேய்ஞலூர் – உலக வழக்கு (நன். 122- 124)
|
எழுத்துப்பேறு அளபெடை |
இஃது உயிரளபெடை வகைகளுள் ஒன்று. இஃது இன் னோசைக்காகவோ, செய்யுளில்
இசை நிறைப்பதற்காகவோ அமைந்ததன்று. குறிலை அடுத்த ஆகார ஈற்றுப்
பெயர்க்கும் தனி ஆகார ஈற்றுப் பெயர்க்கும் உம்மைத்தொகைக்கண்ணும்
வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அகரமும், குறிலை அடுத்தும்
தனித்தும் வரும் ஊகார ஈற்றுப் பெயர்க்கு வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
உகரமும், ஏகார ஈற்றுக்கு எகரமும், ஓகார ஈற்றுக்கு ஒகரமும் எழுத்துப்
பேறளபெடை யாக வரும்.
உ வாஅப் பதினான்கு – உம்மைத் தொகை (தொ. எ. 223 நச்.)
பலாஅக்கோடு உவாஅப் பட்டினி
அராஅக் குட்டி – வேற்றுமைத்தொகை 226 நச்.
உடூஉக் குறை – வேற்றுமைத் தொகை 267 நச்.
ஏஎக் கொட்டில் – வேற்றுமைத் தொகை 277 நச்.
கோஒக் கடுமை – வேற்றுமைத் தொகை 292 நச்.
இவ்வெழுத்துப் பேறளபெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது. நீ இர்-
என்பது (326 நச்.) பண்டு ஒருமொழிக்கண் வந்த எழுத்துப்பேறள பெடை
எனலாம். இது குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் நெட்டெழுத்து
அல்லாவழி வந்த புலுதச்சந்தி (பி.வி. 5)
|
எழுத்துப்பொருள்படுமாறு |
அகரம் முதல் னகரம் ஈறாகிய முப்பதுக்கும் எழுத்து என்பது
தனித்தனியாகவும் ஒரு சேரவும் பொதுப்பெயர். “எழுத்து என்பது ஒரு
பொருள்; அதற்கு அ ஆ – முதலியன பெயர்” என்பது பொருந்தாது. எழுத்து
என்பது முப்பதனுக்கும் பொதுப்பெயர் எனவே, குறில் – நெடில் – உயிர் –
வன்மை – மென்மை – இடைமை – என்பன சிறப்புப்பெயராம். (சூ. வி. பக். 19,
20)
எழுத்து என்னும் தொழிற்பெயர், அப்பொருளை விட்டுப் பால்பகா அஃறிணைப்
பொருட் பொதுப்பெயராய், அப் பொருளை விட்டு ஓவியம் முதலியன போல அன்றி
அகரம் னகரம் முதலிய வடிவை உணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளை
விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்வொலியினது
இலக்கணத்தை உணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளை விட்டு
அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடியாகுபெயராய்,
அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்தது
எழுத்து’ எனக் கருமகருத்தாவையும் கருவிக்கருத்தாவையும் உணர்த்தும்
நான்மடியாகு பெயராய் நின்று பல பொருள் பட்டது. (இ. கொ. பக். 52)
|
எழுத்துமடக்கின் சிறப்பு |
அடிமடக்கும் சொல்மடக்கும் எழுத்தின் கூட்டம் என்பதும், ஓர்எழுத்தானும் ஓர்இனத்தானும் வருவனவும் எழுத்து மடக்கின்பாற்படும்என்பதும், கோமூத்திரி முதலிய மிறைக் கவிகளும் ஆராயுங்கால்பெரும்பான்மையும் எழுத்துமடக் கின் பாற்படும் என்பதும் பற்றிஎழுத்துமடக்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. (இ. வி. 709 உரை)
|
எழுத்துமுப்பத்துமூன்று எனல் |
தொல்காப்பியனார் வடமொழியில் வல்லுநராய் ஐந்திரம் நிறைந்தவராயினும்,
தமிழ்மரபை யுட்கொண்டே, “தமிழ் மொழிக்குரிய எழுத்துக்கள் உயிர் 12,
மெய் 18 ஆகிய முப்பதுமே” என்றார். ஒரு மொழியைச் சார்ந்து வரும் இயல்பு
அன்றித் தனித்தியங்கும் இயல்பு தமக்கு இல்லை என்றலின் அவைதம்மை
எடுத்தோதிக் காட்டலாகாக் குற்றியலிகரம் – குற்றியலுகரம் – ஆய்தம் –
என்பன, தனித்து எழுதப்படா ஆயினும் மொழியொடு சார்த்தி எழுதப்படுதலின்,
எழுத்து என்னும் குறியீட்டுக்கு உரியன ஆதலின் அவற்றை ‘எழுத்து ஓரன்ன’
என்று குறிப்பிட்டு, அம்மூன்றனையும் சேர்க்கத் தமிழெழுத்து முப்பத்து
மூன்று என்று அவர் தெரிவித்தது தமிழ்மரபு பற்றியே என்பது. (தொ. எ.
1)
|
எழுத்தும் பதமும் |
எழுத்து, தூளிலே மஞ்சள் புகையிலை முதலியன வடிவு வேறு படுவது போல
வேறுபடாமல், மாலையினிடத்தே மலர்போல நிற்பதனால் ‘முன்னனைத்து’ என்றார்.
(நன். 127 இராமா.)
|
எழுத்துவகையான் நால்வகைப் புணர்ச்சி |
நிலைமொழி உயிரீறு, நிலைமொழி மெய்யீறு, வருமொழி உயிர்முதல், வருமொழி
மெய்முதல் – என்ற நிலைகள் உண்மை யான், உயிரீறு உயிர்முதல்- உயிரீறு
மெய்முதல் – மெய்யீறு மெய்முதல் – மெய்யீறு உயிர் முதல் – என்ற
நால்வகையான் புணர்ச்சி நிகழும். (தொ. எ. 107 நச்.)
|
எழுத்தெண்ணிக்கை |
எழுத்து எனத் தொகையான் ஒன்றும், முதலெழுத்தும் சார்பெழுத்தும் என
வகையான் இரண்டும், இவ்விரண்டன் பகுதியும் கூட்ட விரியான் தமிழெழுத்து
இருநூற்றெழுபதும் ஆம் என உய்த்துணர்க. (இ. வி. 5 உரை)
இலக்கண விளக்க ஆசிரியர் தனியெழுத்தை யுட்கொண்டே, உயிர்மெய் 216,
உயிரளபெடை 7, ஒற்றளபெடை 11, ஏனைய வாகிய குற்றியலிகரம் – குற்றியலுகரம்
– ஐகாரக்குறுக்கம்- ஒளகாரக் குறுக்கம் – ஆய்தம் – மகரக் குறுக்கம்-
ஆகிய ஆறும் ஒவ்வொன்று, ஆகச் சார்பெழுத்து விரி 240;
உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்து 30;இவ்விருதிறமும் கூட்டத் தமிழ்
எழுத்து 270 ஆம் என்றார்.
|
எழுத்தை எழுவகையான் உணர்த்துதல் |
எழுத்தை எழுவகையான் உணர்த்தினான். எழுவகையாவன 1. எழுத்து இனைய
என்றலும், 2. இன்ன பெயரின என்றலும், 3. இன்ன முறையின என்றலும், 4.
இன்ன பிறப்பின என்றலும், 5. இன்ன மாத்திரையின என்றலும், 6. இன்ன
வடிவின என்றலும், 7. இன்ன புணர்ச்சியின என்றலும் ஆம். (நேமி. எழுத்.
பாயி. உரை)
|
எழுத்தொலி உண்டாதல் |
உந்தியில் தோன்றும் உதானவளி, மார்பு – கழுத்து – மூக்கு – தலை -பல் – இதழ் – நா – மேல்வாய்- என்னும் எட்டிடத்தும், எடுத்தல் படுத்தல்நலிதல் என்னும் ஒலியுடன், உயிர் மெய் குற்றியலிகரம் குற்றியலுகரம்ஆய்தம் என்ற ஐவகை எழுத்தா யும் அவற்றின் விகற்பமாயும் வெளிப்படுதலாம்.(யா. க. 4 உரை மேற்.)
|
எழுத்தோசை வெளிப்படல் |
பரை பைசந்தி மத்திமை வைகரி- என்னும் நால்வகை வாக்கி னுள், அகத்து
எழுவனவாகிய பரை முதல் மூன்றனையும் ஒழித்து, ‘எழுந்து புறத்து இசை’ப்
பதாகிய வைகரிவாக் கினையே (தொ.எ. 102 நச்.) இவர் எழுத்துக்களின்
பிறப்பாம் என்றார்.
பரைவாக்கு – உந்திஓசை; பைசந்திவாக்கு- நெஞ்சு ஓசை அல்லது நினைவு
ஓசை; மத்திமைவாக்கு – மிடற்று ஓசை; வைகரிவாக்கு – செவிஓசை.
இவற்றின் விகற்பமெல்லாம் சைவாகமத்துள் காண்க. (இ. வி. 9 உரை)
|
எழுபது வகைத் தளைவழு : சீர்கள்தட்கும்வழி வருவன |
ஆசிரியநிலம் 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 ஆவன.இப்பதினேழனுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழு வழுவும், கலித்தளை தட்பப்17 வழுவும் ஆக ஆசிரியப்பா விற்குத் தளைவழு 34 ஆகும்.வெண்பாநிலம் 7 எழுத்து முதல் 16 எழுத்துமுடிய 10 ஆவன.இப்பத்தனுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்து வழுவும், கலித்தளை தட்பப்பத்து வழுவும் ஆக வெண்பாவிற்குத் தளைவழு 20 ஆம்.கலிக்கு நிலம் 13 எழுத்து முதல் 20 எழுத்துமுடிய 8 ஆவன.இவ்வெட்டனுள்ளும் வெண்டளை தட்ப எட்டுவழுவும், ஆசிரியத்தளை தட்பஎட்டுவழுவும் ஆகக் கலிப்பாவிற்குத் தளைவழு 16 ஆம்.ஆகவே, தளைவழுக்கள் 34, 20, 16 ஆக 70 ஆகும்.(யா. வி. பக். 455, 456)ஒருசாரார்தம் இக்கருத்தினைப் பேராசிரியர் மறுப்பர்.(தொ. செய். 50 பேரா)இனித் தொல்காப்பியம் செய்யுளியல் 50ஆம் சூத்திரத்துள்பேராசிரியர் உரையையே பின்பற்றி -நச்சினார்க்கினியர் உரைக் கருத்து வருமாறு :அகவற்கு இயற்சீர் 19, உரிச்சீர் 4, அசைச்சீர் 4 – ஆக 27வெள்ளைக்கு இயற்சீர் 19, வெண்சீர் 4, அசைச்சீர் 4 – ஆக 27கலிக்கு இயற்சீர் 16, உரிச்சீர் 4, வெண்சீர் 4 – ஆக 24ஆக, கூடுதல் 78.(கலிக்கு நேர் ஈற்று இயற்சீர் 2, அசையானாகிய நேரீற்றியற்சீர் 1, ஆக3 இயற்சீரும் வாரா.)அகவற்கும் வெள்ளைக்குமாக அசைச்சீர் எட்டும் இயற்சீர்ப்பாற்படுத்துத் தளைகோடலின் அவை எட்டும் இயற்சீருள் அடங்குதலின், அவைஎட்டும் நீக்கப்படத் தக்கன ஆகவே, 78 சீர்களின் அவ்வெட்டனையும் நீக்கச்சீர்கள் 70 ஆகும்.சீர்கள் ஒன்று ஒன்றனொடு தட்குங்கால் அவை ஓசையைக் கடந்தால் எழுபதுவழுக்கள் உண்டாகும். அவ்வழுக்கள் நிகழாவகை ஓசை அமையுமாறு அடிகள்அமைதல் வேண்டும்.
|
எழுபது வகைமையின் வழு நேரா வண்ணம்625 அடிகள் விரியுமாறு |
‘வழு நேரும் எழுபது வகைமையாவன’ காண்க. அங்குக் கூறிய உரியசைச்சீர்,இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சி யுரிச்சீர் ஆகியஐந்துசீர்களையும் நிறுத்தி, இரண்டாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்திஉறழ, 25 ஆகும். அவற்றொடு மூன்றாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ,125 ஆகும். அவற்றொடு நான்காம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ, 625அடிகளாம். (ஆசிரியத்துள் ஒத்தசீர்கள் வரின் தளை வழுவின்றாம்;பிறசீர்கள் வரின் தளை வழுவின்றி அமைதல் வேண்டும். அசைச்சீரும்வெண்சீரும் தளைநிலைக்கு இயற் சீரோடு ஒக்கும் என்று கூறினாரேயன்றி,சீர்நிலைக்கண் அவை வேறாகவே நிற்கும் என்க.)625 நாற்சீரடிகள் ஆமாறு – விளக்கம் :முதற்கண் 25 நாற்சீரடிகளுள் முதற்சீர்களை முதலைந்து சீர்கள்உரியசைச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள் இயற்சீராக வும், அடுத்தஐந்து சீர்கள் ஆசிரியஉரிச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள்வெண்பாஉரிச்சீராகவும், இறுதி ஐந்து சீர்கள் வஞ்சி உரிச்சீராகவும்அமைக்க.இரண்டாம் சீர்களை உரியசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்,வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் – என்ற முறையே அமைக்க.மூன்றாம் நான்காம் சீர்களை உரியசைச்சீர் உரியசைச்சீராக அமைக்க.இம்முறையால் 25 நாற்சீரடிகள் கிட்டின.இனி, இவற்றுள் மூன்றாம் சீர்களாகிய உரியசைச்சீரை மாத்திரம் முறையேஇயற்சீராகவும் (25) ஆசிரியஉரிச்சீராக வும் (25) வெண்பாஉரிச்சீராகவும்(25), வஞ்சிஉரிச்சீராகவும் (25) மாற்றி உறழ்க.இவ்வாற்றால் 25 + (25 x 4) = 125 நாற்சீரடிகள் எய்தின. இவையெல்லாம் உரியசைச்சீரால்முடிந்தவை.இவ் ஈற்று உரிச்சீர்களை முறையே இயற்சீராகவும் (125) ஆசிரியஉரிச்சீராகவும் (125) வெண்பா உரிச்சீராகவும் (125) வஞ்சிஉரிச்சீராகவும் (125) மாற்றி உறழவே, இவ்வுறழ்ச்சியால் 125 +(125 x 4) = 625 நாற்சீரடிகள் எய்தப்பெறும். (தொ. செய். 50 ச.பால.)
|
எழுவகை மடக்கு |
ஆதிமடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு, ஆதியொடு இடை மடக்கு, ஆதியொடுகடைமடக்கு, இடையொடு கடை மடக்கு, முற்று மடக்கு என்பன. (தண்டி. 94)
|
எழுவாயும் விளியும் அல்வழி ஆயினமை |
எட்டு வேற்றுமைகளில் உருபுகள் தொக்கும் விரிந்தும் நின்று புணரும்
ஆற்றலுடைய இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை ஈறாகிய ஆறும்
வேற்றுமை குறித்த புணர்நிலை யன. எழுவாயுருபும் விளியுருபும் தொக்கு
நிற்கும் ஆற்றலின்றி விரிந்தே நிற்றலின், அவற்றை வேற்றுமைப்
புணர்ச்சியில் சேர்க்காது ‘அல்வழிப்புணர்ச்சி’ என்றனர்.
எழுவாய் வேற்றுமை ஆறு பயனிலையொடும் (தொ. சொ.66 சேனா.) புணர்ந்த
புணர்ச்சியும், விளிவேற்றுமை தன் பொரு ளொடு (-முடிக்கும் சொல்லொடு)
புணர்ந்த புணர்ச்சியும் அல்வழியாயின. (தொ. எ. 112. நச். உரை)
|
எவன் என்ற குறிப்பு வினையாலணையும்
பெயர் உருபேற்றல் |
எவன் என்பது குறிப்பு வினைமுற்று. அது படுத்தல்ஓசையான் பெயராயவழி,
எவன் என நிறுத்தி வற்றும் உருபும் கொடுத்து, வற்றின்மிசை ஒற்று என
னகரத்தைக் கெடுத்து, ‘அவை’ முதலியவற்றிற்கு வற்றுச்சாரியையின் வகர
ஒற்றைக் கெடுத்தது போல (எ.122) இதற்கு வகரத்தை முழுதும் கெடுத்து
உருபேற்றி, எவ+ற்று+ஐ= எவற்றை – எவற்றொடு – என முடிக்க. மீண்டும்
நிலைமொழி வகரத்தைக் கெடுத்து எற்றை – எற்றொடு – எனவும் முடிக்க.
எனவே, எவன் என்ற குறிப்பு வினைப்பெயர் உருபேற்கும் போது எவற்றை
எற்றை- எவற்றொடு எற்றொடு – என இரு திறத்தானும் வரும்.
தொல்காப்பியனார் காலத்தில் எவன் என்பது குறிப்பு வினைமுற்றாகவே
அஃறிணை இருபாற்கும் பொதுவினையாக இருந்தது. (தொ. சொ. 219 சேனா.), (தொ.
எ. 122,193 நச். உரை)
|