தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இது தமிழ் நெடுங்கணக்கில் ஆறாவது உயிர்; உகரஉயிரைத் தனக்கு இனமாகக்
கொண்டு அங்காப்போடு இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்தாகும்.
இது செய்யூ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி.
(தொ.சொ.228 சேனா.)

ஊ என்ற பெயர் புணருமாறு

ஊ என்பது இறைச்சியை உணர்த்தும் பெயர். அஃது ஆ என்ற சொல் போல னகர
ஒற்றினைச் சாரியையாகப் பெற்று ஊன் என்றாகும்.
அல்வழிக்கண் ஊன் என்பது இயல்பாகப் புணரும் (நகரமுதல் நீங்கலாக
வருமொழி கொள்க.)
எ-டு : ஊன் கிடந்தது, ஊன் மெலிது, ஊன் வலிது, ஊனரிது (தொ. எ.
269 நச்.)
வேற்றுமைக்கண் னகரச் சாரியையொடு, வருமொழி நாற்கணம் வரினும்
இயல்பாகப் புணர்தலும், அக்குச்சாரியை பெற்று வன்கணம் வரின் மிக்கும்
ஏனைக்கணம் வரின் இயல்பாயும் புணர்தலும் நிகழும்.
எ-டு : ஊன்குறை, ஊன்மென்மை, ஊன்வலிமை, ஊனருமை; ஊனக்குறை,
ஊனஞாற்சி, ஊன வன்மை, ஊன வருமை – என இருநிலை யுமுண்டு. (தொ.எ. 270 நச்.
உரை)
ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்காய்த் தொல்காப்பிய னார்
காலத்தது; அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (தொ.எ. 269 நச். உரை)

ஊகார ஈற்று அல்வழிப் பொதுப்புணர்ச்சி

ஊகார ஈற்று அல்வழி எழுவாய்த்தொடர் வன்கணம் வரின் மிக்கும்
ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும்
எ-டு : கொண்மூக் கடிது, கொண்மூ ஞான்றது, கொண்மூ வலிது, கொண்மூ
வரிது (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 264 நச்.)
ஊகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கு
முடிதலும், சிறுபான்மை எழுத்துப்பேறள பெடை பெற்று வருதலும், ஏனைய கணம்
வரின் இயல்பாகப் புணர்தலும் நிகழும்.
எ-டு : ஆடூக் குறியன், ஆடூஉக் குறியன்; மகடூக் குறியள், மகடூஉக்
குறியள்;ஆடூ நல்லன், ஆடூ வல்லன், ஆடூ வெளியன் (வகரம் உடம்படுமெய்).
(தொ.எ. 265 நச். உரை)

ஊகார ஈற்று ஏவல்ஒருமைமுற்றுப் புணருமாறு

ஊகாரஈற்று ஏவலொருமைமுற்று வருமொழி வன்கணம் வரின் மிக்கும், ஏனைய
கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : கைதூக் கொற்றா, கைதூ நாகா, கைதூ வளவா, கைதூ வரசா (வகரம்
உடம்படுமெய்) (தொ. எ. 265 நச்.)

ஊகார ஈற்று வினையெச்சப் புணர்ச்சி

ஊகாரஈற்று வினையெச்சங்கள் வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள்
வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : உண்ணூக் கொண்டான், உண்ணூ நடந்தான், உண்ணூ வாழ்ந்தான்,
உண்ணூ வடைந்தான் (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 265 நச்.)

ஊகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

ஊகாரஈற்றுப் பெயர் வன்கணம் வந்துழி மிக்கும், ஏனைய கணங்கள் வந்துழி
இயல்பாகவும் புணரும்.
எ-டு : கொண்மூக் குழாம்; கொண்மூநீட்சி, கொண்மூ வளர்ச்சி; கொண்மூ
வடைவு (வகரம் உடம்படு மெய்)
அவற்றுள் குற்றெழுத்தை அடுத்த ஊகாரஈறும், ஓரெழுத் தொரு மொழி
ஊகாரஈறும் எழுத்துப்பேறளபெடையும் பெறும்.
எ-டு : உடூஉக் குறை, உடூஉ ஞாற்சி, உடூஉ வன்மை, உடூஉ வடைவு;
தூஉக்குறை, தூஉநீட்சி, தூஉ வன்மை, தூஉ வாசை
உயர்திணைப்பெயரும் ஆடூஉக்கை மகடூஉக்கை – என்றாற் போல
எழுத்துப்பேறளபெடை பெறும்.
பூ என்னும் பெயர் எழுத்துப்பேறளபெடை உகரம் பெறாமல், வன்கணம்
வந்துழி வந்த வல்லெழுத்தும் அதற்கொத்த மெல் லெழுத்தும் பெற்றும்,
ஏனைக் கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : பூக்கொடி, பூங்கொடி; பூநீட்சி, பூவண்ணம், பூவழகு
ஊ என்ற பெயர் னகரச்சாரியையும் அதனோடு அக்குச்சாரி யையும் பெற்று
வன்கணத்தொடு புணரும்.
எ-டு : ஊன் குறை, ஊன் செய்கை; ஊனக்குறை, ஊனச் செய்கை
ஆடூ, மகடூ – என்பன இன்சாரியை பெற்றுப் புணர்தலு முண்டு.
எ-டு : ஆடூவின் கை, மகடூவின் கை, செவி, தலை, புறம்- என முடிக்க.
(தொ. எ. 266-271 நச்.)

ஊகாரமும் ஓகாரமும் ஒளகாரமாகத் திரியும் வடநடைப் பகுபதம்

ஊவும் ஓவும் ஒளவாகத் திரியும். சூரன் என்னும் சூரியன் மகனாம் சனி
சௌரி எனவும், கோசலையிடத்து (கோசல நாட்டிடத்து)ப் பிறந்தாள் கௌசலை
எனவும், சோமன் என்னும் சந்திரனுடைய மகனாம் புதன் சௌமன் எனவும்
வரும்.
ஐயாகத் திரிவன எல்லாம் அயி என்றும், ஒளவாகத் திரிவன எல்லாம் அவு
என்றும் முடியும். (அயிந்திரம், கவுரவர் – எனக் காண்க) (தொ.வி.86
உரை)

ஊகாரம் வகரத்தொடு நவிலாமை

ஊகாரம் வகரமெய் வருக்கத்தோடு இணைந்து ஈறாகாது. ஆகவே வகரமெய்,
யாண்டும் ஈறாக வாராத எகரம், விலக்கப் பட்ட ஊகாரம், நகரமெய்யோடன்றி
ஈறாகாத ஒகரம் என்ற மூன்று உயிர் நீங்கலாக ஏனைய ஒன்பது உயிர்களொடும்
மொழிக்கு ஈறாக வரும்.
எ-டு : உவ, வா, கருவி, ஒருவீ, கதவு, வே, வை, உறுபவோ, வெள (தொ.
எ. 74 நச்.)

ஊசற்சீர்

அஃதாவது ஊசல் வரி. ‘நாம்பாடும் சேயுயர் ஊசற்சீர்.’(கலி. 131 : 23, 24)

ஊசற்பருவம்

பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப்பருவம்; ஆசிரியச் சந்தவிருத்தம் பத்துடையதாக, ‘ஊசல் ஆடியருளே’ முதலிய வாய்பாடு இறுதிக்கண்முடியப் பாடப்பெறும்.( இ. வி. பாட். 47)

ஊசல் (1)

பிரபந்தத் தலைவன் தன்தேவிமாரோடு ஊஞ்சலாடுதலைப் புகழ்ந்து பாடும்ஊசல் என்ற துறை கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.“யான் பற்பல பிறப்புக்களிலும் உருவம் மாறிப் பிறந்தும் செத்தும்பிறவித்துயரில் ஊசலாடும் செயல் நீங்குமாறு, என் நெஞ்சையே பலகையாகவும்கருணை என்பதனையே ஊஞ் சலைத் தொங்கவிடும் கயிறாகவும் கொண்டு,திருத்துழாய் மாலையும் காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களும் அசையு மாறு,திருமகளோடும் நிலமகளோடும் திருவரங்கப்பெரு மான் ஊஞ்சல் ஆடுக!”(திருவரங்கக். 58) என்றாற் போலப் பாடுவது.

ஊசல் (2)

1. ஆசிரிய விருத்தத் தாலாவது கலித்தாழிசையாலாவது, சுற்றத் தோடும்பொலிக எனக் கூறி ‘ஆடீர் ஊசல்!’ ‘ஆடோமோ ஊசல்!’ எனச் செய்யுள்தோறும்முடிக்கும் சொல் வரப் பாடும் பிரபந்தம். (இ. வி. பாட். 85)2. கலம்பக உறுப்புக்களுள் ஓர் உறுப்பாவது ‘ஊசல்’(இ. வி. பாட். 52.)3. பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் ‘ஊசல்’ என்பதுஇறுதிப்பருவம். (இ. வி. பாட். 47)

ஊசல் (3)

வெண்டளை வழுவாது வரும் தரவுகொச்சகயாப்பினால், ‘ஆடாமோ ஊசல்!’,‘ஆடீர் ஊசல்!’ என்று ஊசலை வருணித்து, அசைவது போன்ற இசை பொருந்தப்பாடுவது ஊசற்பாட்டாம். (தென். இசைப். 15)

ஊசல் வரி

ஊஞ்சற்பாட்டு. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் ஊசல்வரியாகச்சேரமன்னனைப் புகழ்ந்து மூன்று பாடல்கள் ‘ஆடாமோ ஊசல்’ என முடிவனவாகஉள்ளன.இப்பாடல்கள் மூன்றும் வெண்டளையான் அமைந்தவை. நாற்சீரடி ஐந்துகொண்டு அமையும் இம்மூன்று பாடல்களும் ஈற்றடியிலும் ஈற்றயலடியிலும்‘ஆடாமோ ஊசல்’ என்று முடிகின்றன. வரி எனவே, இவை இசைப்பாடல்களாம்.

ஊசிமுறி

இடைக்காடனார் என்ற புலவர் எழுத்தொலி அல்லாத ஓசை அணுகரணம், விட்டிசைமுதலியவற்றைப் பெரும்பாலன வாக அமைத்துப் பாடிய நூல் ஊசிமுறிஎனப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் அமைக்க முடியாத பாடல்கள் எழுத்தாணிகொண்டு எழுத மறுப்பது பற்றி ஊசி பயன்படாமை கருதி ஊசிமுறி எனப்பட்டதுஇந்நூல். (யா. வி. பக். 396)

ஊஞ்சற்பாட்டு

ஊஞ்சல் ஆடும்போது பாடும் பாட்டு; ஊசல்வரி, ஊசற்சீர் என்பனவும்அது.

ஊன்: புணருமாறு

‘குயின், ஊன் : புணர்ச்சி’ காண்க.

ஊர் விருத்தம்

தலைவனது ஊரை விருத்தச்செய்யுள் பத்தினாற் பாடிச் சிறப்பிக்கும்பிரபந்தவகை. (இ. வி. பாட். 93)

ஊர்இன்னிசை

பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார இன்னிசைவெண் பாவால் தொண்ணூறேனும்எழுபதேனும் ஐம்பதேனும் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இ. வி.பாட். 65)

ஊர்நேரிசை

பாட்டுடைத்தலைவனது ஊரைச் சார்ந்து வர நேரிசை வெண்பாவால்தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதே னும் பாடிச் சிறப்பிக்கும்பிரபந்தவகை. (இ. வி. பாட். 70)