உ |
உகரம் தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிரெழுத்து. இஃது
அங்காப்போடு இதழ்குவித்தலான் பிறப்பது; ஊகாரத்திற்கு அளபெடையெழுத்தாக
வருவது(ஊ
உங்கு); யகர ரகர லகர முதல்
ஆரியச்சொற்கள் வடசொற்களாகத் தமிழில் வழங்கும் போது, அவற்றை இயக்கும்
மொழிமுதலெழுத்தாக வருவது (
உயுத்தம்,
உரோமம்,
உலோகம்); ஆரியச்சொல்லில் வல்
லெழுத்தை யடுத்து மகரம் வகரம் வருவனவற்றை வட சொல்லாக்குமிடத்து
அவ்வல்லெழுத்தை ஊர்ந்து, ஒலித் தலை எளிமையாக்குவது(பக்வம் – பக்குவம்;
பத்மம்-ப
துமம்); ஆரியச்சொற்களில்
மொழிமுதற்கண்
ஶ், ஸ் – வருமிடங்களில் அவற்றை
வடசொல்லாக்குகையில் அவ் வெழுத்துக்களின் இடத்தே தான் வந்து
ஒலிப்பது(
சுத்தி, ஸ்வாமி –
சுவாமி); தமிழ்ச்சொற்களில்
இடையிலும் ஈற்றிலும் சாரியையாக வருவது (பல்-பல்
லு,அவன் + கு(அவற்கு)-அவனுக்கு);
ஒளகார ஈற்றுத் தொழிற்பெயரும், ஞணநமல வளன- ஒற்றீற்றுத்
தொழிற்பெயர்களும் வருமொழியொடு புணருமிடத்து இடையே சாரியையாக வருவது
(கௌ
வுக் கடிது, உரி
ஞுக் கடிது, மண்
ணுக் கடிது, பொரு
நுக் கடிது, திரு
முக் கடிது, சொல்
லுக் கடிது, தெவ்
வுக் கடிது, துள்
ளுக் கடிது, மின்
னுக் கடிது); சேய்மை அண்மைக்கு
இடைப்பட்ட நிலையைக் குறிக்கும் சுட்டாக வருவது(
உவன்,
உப்பக்கம்); தொழிற் பெயர்
விகுதியாகவும், பண்புப்பெயர் விகுதியாகவும், வினை யெச்ச விகுதியாகவும்
நிகழ்வது(வர
வு, செல
வு; மழ
வு, குழ
வு; செய்து(செய் + த் +
உ)).
|
உகரஈற்று அல்வழிப் புணர்ச்சி |
உகரஈற்றுப் பெயர் எழுவாய்த்தொடராதற்கண், வருமொழி வன்கணம் வரின்
மிக்கும், மென்கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும், உயிர்க்கணம்
வரின் உடம்படுமெய் பெற்றும் புணரும்.
எ-டு : கடுக் குறிது, கடு நன்று, கடு வலிது, கடு வரிது
(தொ. எ. 254 நச்.)
உகரஈற்றுச் சுட்டுப்பெயர்கள் எழுவாய்த்தொடராதற்கண் வன்கணம் வரினும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : அது குறிது, அது நன்று, அது வலிது, அது வழகியது (தொ.எ.
257 நச்.)
செய்யுளில் அது + அன்று = அதாஅன்று எனவும், அது + ஐ + மற்று +
அம்ம = அதைமற்றம்ம எனவும் புணரும். (தொ.எ. 258 நச்.)
வரும்,மிகும், தொகும், பெறும், படும் – முதலியன அசையை
நிரப்புதற்காக வரூஉம், மிகூஉம், தொகூஉம், பெறூஉம், படூஉம் -முதலனவாக
நீண்டு உகர அளபெடை பெறுதலு முண்டு.
‘ஒளஎன வரூஉம் உயிரிறு சொல்லும்’
(தொ.எ.152
நச்.)
‘முத்தை வரூஉம் காலம் தோன்றின்’
(164)
‘தம்மிடை வரூஉம் …. நும்மிடை வரூஉம்’
(191)
‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’
(233)
‘வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழியும்’
(251)
‘தம்ஒற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை’
(260)
‘விண்என வரூஉம் காயப் பெயர்வயின்’
(305)
‘அகர ஆகாரம் வரூஉங் காலை’
(311)
‘மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான’
(350)
‘தகரம் வரூஉங் காலை யான’
(399)
‘ஒற்றுநிலை திரியாது அக்கொடு வரூஉம்’
(418)
‘முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே’
(
433)
‘நிறையும் அளவும் வரூஉங் காலை’
(436)
‘நுறா யிரமுன் வரூஉங் காலை’
(471)
‘லனஎன வரூஉம் புள்ளி இறுதிமுன்’
(481)
‘அஆ வஎன வரூஉம் இறுதி’
(தொ.சொ.
9 நச்.)
‘யாதென வரூஉம் வினாவின் கிளவி’
(32)
‘வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்’
(52, 53)
‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்’
(127)
‘விளிநிலை பெறுஉம் காலம் தோன்றின்’
(153)
‘திரிபுவேறு படூஉம்’, ‘பிரிபுவேறு படூஉம்’
(174, 224)
‘இஐ ஆய்என வரூஉம் மூன்றும்’
(225)
‘இர்ஈர் மின்என வரூஉம் மூன்றும்’
(226)
‘ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி’
(243)
‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’
(
246)
‘அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்’
(292)
‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்’
(301)
‘பேம் நாம் உரும்என வரூஉம் கிளவி’
(365)
முதலியன காண்க.
ஈற்று ழகரஉகரம் நீண்டு அளபெடுத்து உகரஈற்றுச் சொல்லா
தலுமுண்டு.
எ-டு : எழு – எழூஉ, குழு – குழூஉ, தழு – தழூஉ, பழு –
பழூஉ
(தொ. எ. 261 நச்.)
|
உகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி |
உகரஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும் .
எ-டு : கடுக்காய், கடுநன்மை, கடுவலிமை, கடுவருமை
(தொ. எ. 259 நச்).
எரு, செரு என்ற சொற்கள் அம்முச்சாரியை பெறும். செரு என்ற சொல்லின்
சாரியை அம்மின் மகரம் கெட, அகரம் மாத்திரம் செரு என்பதனொடும் புணர,
வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், ஏனைய கணம் வரின் இயல்பாகவும்
புணரும்.
எ-டு : எருவங்குழி, எருவஞ்சேறு, எருவந்தாது,
எருவம்பூழி;
எருவ ஞாற்சி, எருவ வன்மை; எருவ வருமை;
செருவக்களம், செருவச்சேனை, செருவத்தானை செருவப்பறை; செருவ
நன்மை, செருவ வன்மை, செருவ வெழுச்சி. (தொ.எ. 260 நச்.)
சிறுபான்மை எருக்குழி, செருக்களம். எனச் சாரியை பெறாது வல்லெழுத்து
மிக்கு முடிதலும், எருங்குழி – என மெல் லெழுத்து மிகுதலும் கொள்க.
சிறுபான்மை, உருபுபுணர்ச்சிக்குப் பயன்படும் இன்சாரியை வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்குப் பயன்படுதலுமுண்டு.
எ-டு : எருவினை, எருவின் குழி; செருவினை, செருவின் கடுமை (தொ.எ.
260 நச். உரை)
ஒடுமரப்பெயர், உதிமரப்பெயர் போல, வன்கணம் வரின் மெல்லெழுத்து
மிக்குப் புணரும்.
எ-டு : ஒடுங்கோடு, ஒடுஞ்செதிள், ஒடுந்தோல், ஒடும்பூ
(தொ.எ. 262 நச். உரை)
சிறுபான்மை ஒருவங்காடு என்றாற்போல அம்முப் பெறுதலுமுண்டு. (நச்.
உரை)
எழுவின்புறம், கொழுவின் கூர்மை – என இவையும் இன்சாரியை
பெற்றன.
உது + காண் = உதுக்காண்-என வல்லெழுத்து மிக்கே வருதலும் கொள்க.
(263 நச். உரை)
|
உகரஈற்றுச் சுட்டுபெயர்ப் புணர்ச்சி |
உகரஈற்றுச் சுட்டுப்பெயர்கள் அது இது உது என்பன. அவை எழுவாய்த்
தொடர்க்கண் இயல்பாகப் புணரும்.
எ-டு : அது குறிது, அது நன்று, அது வலிது (தொ.எ.
257நச்.)
உருபுபுணர்ச்சிக்கண் அது முதலிய சுட்டுப்பெயர்கள் இறுதி உகரம்
கெட்டு அன்சாரியை பெற்று உருபுகளொடு புணரும். நான்கனுருபிற்குச்
சாரியை னகரம் றகரம் ஆகும்.
வருமாறு : அது + ஐ
> அது + அன் + ஐ
> அத் + அன் + ஐ = அதனை; அது
+ கு
> அது + அன் + கு
> அத் + அற் + கு =
அதற்கு
அதனான், அதனின், அதனது, அதன்கண்; இதனை, உதனை, இதனான், உதனான்,
இதற்கு , உதற்கு – முதலாக ஒட்டிப் புணர்க்க.
வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அது முதலிய சொற்கள் ஈற்று
உகரம் கெட்டு அன்சாரியை பெற்று நாற்கணத்தொடும் இயல்பாகப் புணரும்,
எ-டு : அதன்கோடு, அதன்மயிர், அதன்வால், அதனழகு
(தொ.எ. 263 நச்.)
|
உகரச்சுட்டு |
உகரம் எதிர்முகமின்றிப் பின்நிற்கும் பொருளையும் சுட்டும் எனக்
காண்க. உகரம் அவ்வாறு சுட்டிநிற்பதை ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’
(குறள் 620) என்பதற்குப் ‘பின் பக்கமாய் முதுகு காட்டக் காண்பர்’ எனப்
பொருள் கூறுவதால் காண்க. (நன். 66 இராமா.)
உகரம் நடுவிலுள்ள பொருளையும் (‘அவன் இவன் உவன்’) மேலுள்ள
பொருளையும் (உம்பர்) குறித்து வருதலும் கொள்க.
|
உகரச்சுட்டுப் புணர்ச்சி |
உகரச்சுட்டு வன்கணம் வரின் வந்த வல்லெழுத்து மிக்கும், ஞநம
முதற்கண் வரும் சொற்கள் வருமொழியாக வரின் அவ்வந்த மெல்லெழுத்து
மிக்கும், யகர வகரங்கள் வரினும் உயிர்வரினும் வகரம் மிக்கும்,
செய்யுளில் உகரம் நீண்டும் புணரும்.
எ-டு : உக்கொற்றன், உச்சாத்தன், உத்தேவன், உப்பூதன்; உஞ்ஞாண்,
உந்நூல், உம்மணி; உவ்யாழ், உவ்வட்டி; உவ்வரசு; ஊவயினான. (தொ. எ.
255,256 நச்.)
உகரச்சுட்டின்முன் வகரம் வந்துழி, உயிர்முதல் வரின், தனிக்குறில்
முன் ஒற்றாய் வகரம் இரட்டும்.
உ + அரசு
> உவ் + அரசு
> உவ் + வ் + அரசு =
உவ்வரசு
|
உகரம் குறுகுஇடன் ஆறு |
ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர்மொழி, இடைத் தொடர் மொழி,
ஆய்தத்தொடர்மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி-என்ற ஆறு இடங்களிலும்
உகரம் குறுகிக் குற்றுகரமாகும்.
எ-டு : நா
கு, வர
கு, தெள்
கு, எஃ
கு, கொக்
கு, குரங்
கு – என முறையே காண்க. (தொ. எ.
406 நச்.)
|
உகரம் நகரத்தொடு நவிலாமை |
உகரம் தானே நின்றும் பிறமெய்களொடு நின்றும் பயில்வ தன்றி,
நகரத்தொடு பயிலாது. நகரம், பொருந – .நா – பொருநி – நீ – பொருநூ, (நூ)
-நே – நை – நொ – நோ – என்று பிறஉயிர்க ளொடு கூடி ஈறாமாறு காண்க.
(பொருநி, பொருநூ – ஒப்பிட்டு; நூ – எள்)
நகரஈறு வருமொழியொடு புணரும்வழியே உகரச்சாரியை பெற்றுப் பொருநுக்
கடிது என்றாற்போல வரும். எனவே, இயல்பாக ஒருமொழிக்கண் உகரம் நகரத்தொடு
கூடி மொழி யிறுதிக்கண் வாராது என்பது. (தொ. எ. 74 நச்)
|
உகரம் நிறைதல் |
தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம், வருமொழி நிலை மொழியொடு
புணர்ந்துவரும் அல்வழி வேற்றுமைப் பொருள்நிலைகளில், இருமொழிக்கண்ணும்
இடைவருதற் கண் மாத்திரை மிக்கு முற்றியலுகரமாக ஒலிக்கும். அங்ஙனம்
ஒலிக்குங்கால், வல்லொற்றுத் தொடர்மொழி ஈற்றுக் குற்றிய லுகரம்
மாத்திரம், வருமொழியாய் வல்லெழுத்து வருவழி, அரைமாத்திரை அளவிற்றாகவே
ஒலிக்கும். அதுவும் நிலை மொழியீற்றில் ககரஉகரம்(கு) நிற்க, வருமொழி
முதலில் ககர வருக்கம் வரும்வழியே தான் அரை மாத்திரை அளவிற் றாதலு
முண்டு. (‘நிலையும்’ என்பது நச். பாடம்)
எ-டு : உண்
டு சென்றான் – ஒரு மாத்திரை;
செக்
குக் கணை – அரை மாத்திரை;
சுக்
குக் கொடு – அரை மாத்திரை.
(தொ.எ. 409, 410 இள. உரை) ( எ. ஆ. பக். 163, 165)
|
உகரம் வகரத்தொடு வாராது எனல் |
கனவு, அரவு, நிலவு, இரவு, இறவு, புதவு – முதலிய சொற்கள் முறையே
கனா, அரா, நிலா, இரா, இறா, புதா – முதலிய ஆகார ஈற்றுச் சொற்களே.
இவை செய்யுட்கண் ஆகாரம் குறுகி உகரம் பெற்றுக் கனவு, அரவு –
முதலியவாக வரும். புணர்வு, சார்வு, சேர்வு, சோர்வு, அளவு, தளர்வு –
முதலிய வுகரஈற்றுச் சொற்கள் தொடக்கத்தில் புணர்பு, சார்பு, சேர்பு,
சோர்பு, அளபு, தளர்பு முதலாகப் புகரஈற்றுச் சொற்களே என்பது
உய்த்துணரப்படும், இவ்வாறு பகரத்தை வகரமாக ஒலிக்கும் இயல்பினானே, வட
சொற் களிலும் ஆரியசொற்களிலும் உள்ள பகரம் வகரமாக ஒலிப்ப தாயிற்று,
கோபம் – கோவம், ஆபத்து – ஆவத்து, தபம் – தவம், ஆதபன்-ஆதவன், பாதபம்-
பாதவம் என வருதல் காணப் படும்.
உகரம் வகரத்தொடு வரும் என்பார் கதவு,கனவு முதலிய உகரவிகுதி
பெற்றவற்றையும் இயல்பான சொற்களாகவே கொண்டனர். (எ. ஆ. பக். 70)
|
உக்குறள் மெய்விட்டோடல் முதலியன |
நிலைமொழியீற்றில் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர்
வரின், நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் தான் ஏறிய மெய்யை நிறுத்தித்
தான் கெட்டுவிடும்; வருமொழி முதலில் யகரம் வரின், தான் இகரமாகத்
திரியும். முற்றியலுகரமும் நிலைமொழியீற்றில் ஒரோவழிக் கெடும்.
எ-டு : காடு + அரிது
> காட் + அரிது = காடரிது;
காடு + யாது
> காடி + யாது = காடியாது:
குற்றியலுகர ஈறு
கதவு + அழகிது
> கதவ் + அழகிது = கதவழகிது:
முற்றியலுகரஈறு.
அது+அன்+ஐ
> அத்+அன்+ ஐ = அதனை:
இதுவுமது.
ஒரோவழிக் குற்றியலுகரம் கெடாது நின்று வருமொழி யோடு உடம்படுமெய்
பெற்றுப் புணர்தலுமுண்டு.
எ-டு : ஆது + உம்
> ஆது + வ் + உம் = ஆதுவும்
(நன். 300) – இடையே வகர உடம்படுமெய் வந்தது. (நன். 164)
|
உச்சகாரமொடு நகாரம் சிவணல் |
தமிழில் சு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உசு, முசு, என்ற
இரண்டே. அதுபோல, நகரமெய்யீற்றுச் சொற்களும் இரண்டே உள. அவையாவன
பொருந், வெரிந் – என்பன. பொருந் – ஒப்பிடுதல்; வெரிந் – முதுகு. (தொ.
எ. 79 நச்.)
|
உச்சகாரம் இருமொழிக்கு உரித்தாதல் |
மொழியிறுதியில் முற்றியலுகரமாக வரும் உகரத்தொடு கூடிய சகரமெய்யாகிய
சு என்பது தமிழில் இரண்டு சொற்களிலேயே வரும். அவையாவன உசு, முசு –
என்பன. உசு-உளு; முசு- குரங்கின் வகை.
பசு என்பது ஆரியச் சிதைவாதலின் தமிழ்ச் சொல்லாகக்
கொள்ளப்பட்டிலது.
தமிழிலுள்ள ஏனைய சொற்களின் ஈற்றில் வரும் சுகரங்கள் எல்லாம்
குற்றியலுகரங்களாம். (தொ. எ. 75 நச்.)
|
உச்சாடணை |
ஓர் எழுத்துவகை; உக்கிர எழுத்து என்ற எழுத்துவகையில் முதலாவது.(யா.வி.பக். 578)
|
உடன்நிலை மெய்ம்மயக்கம் |
சொற்களில் ரகரழகர ஒற்றுக்கள் நீங்கலான ஏனைய பதினாறு ஒற்றுக்களும்
தம்முன் தாமே வந்து சொல்லமையும் நிலையில் அவற்றின் சேர்க்கை உடனிலை
மெய்ம்மயக்கம் எனப்படும்.
எ-டு : காக்கை எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, கிண்ணம், தத்தை,
வெந்நெய், உப்பு, அம்மை, வெய்யர், எல்லி, தெவ்வர், கள்ளி, கொற்றி,
கன்னி – என முறையே காண்க. (தொ. எ. 30 நச்.)
ரழ – அல்லாத மெய்கள் ஒருமொழியிலும் இருமொழியிலும் தம்மொடு தாம்
மயங்கும் மயக்கம் உடனிலை மயக்கமாம்.
எ-டு : பக்கம், தச்சன், பட்டம், சத்தம், கப்பம், செற்றம்,
அங்ஙனம், அஞ்ஞானம், கிண்ணம், வெந்நீர், கம்மம், கன்னம், வெய்யர்,
வெல்லம், தெவ்வர், கள்ளம். (நன். 118)
|
உடன்நிலை மொழி |
நிலைமொழியோடு ஓசை இயைந்து நிற்றலையுடைய வருமொழி. எ-டு : மீக்கோள்,
மீப்பல், மீங்குழி, மீந்தோல் – இவற்றுள் கோள், பல் – முதலிய
வருமொழிகள் உடன்நிலை மொழிகளாம். (தொ. எ. 251 நச். உரை)
|
உடம்படுமெய் |
நிலைமொழியீற்று உயிரையும் வருமொழிமுதல் உயிரையும், உயிரோடு
உயிர்க்கு மயக்கம் இன்மையின், இணைத்து வைத்தற்கு இடையே வரும் மெய்
உடம்படுமெய் எனப்படும். ‘உடம்படுமெய் வேண்டும்’ என்னாது ‘உடம்படுமெய்
வரையார்’ என்று தொல்காப்பியனார் கூறுதலின், உடம்படு மெய் யாண்டும்
பெற்றே வரல் வேண்டும் என்ற வரையறை இல்லை. இதனை இளம்பூரணர்,
நச்சினார்க்கினியர், இலக்கண விளக்க ஆசிரியர் முதலியோர்
குறிப்பிட்டுள்ளனர். இது கன்னட மலையாள மொழிகளிலும்
கொள்ளப்படுகிறது.
இ ஈ ஏ ஐ – முன் யகரமும், அஆஉஊஓஒள முன் வகரமும் வருகின்றன. ஆகார
ஓகாரங்களின் முன் ஒரோவழி மாயிரு ஞாலம் – கோயில் – என்றாற்போல, யகர
உடம்படுமெய் வருதலும் கொள்க.
‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ என்று முத்துவீரியம்
மொழிகிறது. (புணரியல் 24)
இடையண்ணத்தில் பிறப்பனவாகிய இஈஎஏஐ- இவற்றுக்கு முன், இடையண்ணத்தில்
பிறப்பதாகிய யகரமும், இதழில் பிறப்பனவாகிய உ ஊ ஒ ஓ ஒள –
இவற்றுக்குமுன் இதழில் பிறப்பதாகிய வகரமும் உடம்படுமெய்யாக
வருகின்றன.
அஆ- இரண்டும் இவ்விடங்களுள் ஒன்றினும் பிறப்பன அல்ல ஆயினும், வாய்
அங்காந்து ஒலிக்கப் பிறக்கும் அவ்வொலி இதழிடையேயன்றி ஒலிப்பது
இயலாதாகலின், அவ்வெழுத் துக்களின் முன் இதழில் தோன்றும் வகரம்
வருவதாயிற்று.
அ ஆ இ ஈ எ ஏ ஐ ஓ – இவ்வீறுகளுக்கு முன் யகரம் வரும் எனவும், உஊஓஒள-
இவற்றின் முன் வகரம் வரும் எனவும் சப்தமணி தர்பணம் (55) கூறுகிறது.
தெலுங்கு மொழியிலும் அகரஆகார ஈறுகளுக்கு முன் யகரம் வருகிறது.
நிலைமொழியீறு தாலவ்யமானால் யகரமும், ஓஷ்ட்ரஸ்வர மானால் வகரமும்
உடம்படுமெய்யாக வரும் என்று கேரளபாணிநீயம் கூறுகிறது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற நான்கு மொழி களிலும் ஆகார
ஒளகாரங்களின் முன்னர் யகரம் வருதல் அறியப்படுகிறது. இவற்றின் முன்
யகரம் வருமொழி நோக்கி வந்தது எனல் அமையும். வடமொழியில் இகர
ஈகாரங்களின் முன்னர் இகர ஈகாரம் அல்லாத பிற உயிர் வரின், அந்த இகர
ஈகாரங்கள் யகரம் ஆகும்; உகர ஊகாரங்கள் இவ்வாறே வகரம் ஆகும்.
எ-டு : ததி + அத்ர = தத்
யத்ர; நதீ + ஏஷா = நத்
யேஷா; மது + அத்ர = மத்
வத்ர; வது + ஆனனம் = வத்
வானனம்
தமிழில் இ ஈ உ ஊ கெடாமல் நிற்க, முறையே யகர வகரம் வரும்.
வடமொழியில் அவை கெட யகர வகரம் வரும். இஃதொன்றே வேறுபாடு. (எ. ஆ. பக்.
107, 108, 109)
‘னகார
விறுவாய்’ – தொ.எ.9; ‘அவ்
வியல் நிலையும்’ – எ.12;
‘ஆ
யிரு திணையின்’ – சொ. 1;
‘ஆ
யிரண் டென்ப’ – எ.117; ‘ஆ
வின் இறுதி’ – 120;
‘இல்லா
வெல்லா மெய்யும்’ – 17;
‘நொடி
யென வவ்வே’ – 7; ‘கூட்டி
யெழுஉதல்’ – 6; ‘ஈ
யாகும்’ – சொ. 123; ‘உரு
வாகி’ – எ.17; ‘அம்மூ
வாறும்’ – 22; ‘ஏ ஒள
வென்னும்’ – எ.173; ‘உளவே
யவ்வும்’ – சொ. 68;
‘மூப்பே
யடிமை’ – 57;
‘உயர்திணைப்பெயரே
யஃறிணை’ – 117; ‘அரை
யளபு குறுகல்’ – எ.13; ‘ஓ
ஒள
வென
விசைக்கும்’ – 87
அ உ ஊ ஓ ஒள – இவற்றின் பின்னர் வகரமும், இ ஈ ஏ ஐ – இவற்றின்
பின்னர் யகரமும், ஆவின் பின்னர் யகரவகரங் களும் வரும் என்பதைக்
காண்கிறோம். (எ. கு. பக். 144)
‘உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்’ எனத் தொல்காப்பியனார்
பொதுப்பட ஓதினாரேனும், உயிர்களை உடம்படுத்தற்குரியன இடப்பிறவியான்
அவ்வுயிரோடு ஒத்த இடையெழுத்து என்பதும், அவற்றுள்ளும் மொழி முதற்கண்
வருதற்குரியன யகர வகரங்களே யாதலின் அவையே ஈண்டைக்கு வரப்பெறும்
என்பதும் பெறப்படும். அவற்றுள் ளும் பெரும்பாலும் இஈஏஐ – முன்
யகரமும், ஏனை உயிர் களின் முன் வகரமும் வரும் என்பது ஏற்புழிக்கோடல்
என்பதனால் பெறப்படும். (சூ. வி. பக். 42)
உயிரோடு உயிர்க்கு மயக்கம் இல்லாததினாலே, அவ்விரண்டும்
உடன்படுதற்பொருட்டு இடையே வரும் மெய்யினை உடம்படுமெய் என்றார். இனி,
வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனினும் அமையும்.
இந்த உடம்படுமெய்யின் தோற்றம், தோன்றல் விகாரம் போலாகாது, இடைவிட்ட
உலோகங்களை இணைக்கும் பற்றாசு போல வருதலின், இயல்பு புணர்ச்சி. (நன்.
162 இராமா.)
நிலைமொழியீற்றுயிர் இ ஈ ஐ – என இருப்பின் யகர உடம்படு மெய்யும்,
ஏனைய உயிரீறுகளின் முன் வகர உடம்படு மெய்யும், ஏகார ஈற்றின் முன்
இவ்விரண்டும் இடையே வரும்.
எ-டு : மணி + அழகிது = மணியழகிது; ஆ + அழகிது = ஆவழகிது; சே +
அழகிது = சேயழகிது, சேவழகிது (162 இராமா.)
|
உடம்படுமெய் உயிர் ஈற்றுக்கே வருதல் |
‘விண்வத்துக் கொட்கும்’ என மெய்யீற்றின் முன்னரும் உயிர் வரின்
உடம்படுமெய் பெறும் என்பாருமுளர். உயிர்ஈற்றின் முன் உயிர்முதல்வரின்,
உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மை யின் புணர்ச்சியின்றி விட்டிசைத்து
நிற்கும் ஆதலின், உடம் படாத அவ்விரண்டும் உடம்படுதற்பொருட்டாக இடையே
வரும் மெய்யை உடம்படுமெய் என்ப ஆதலின், வரும் உயிரேறி
ஒற்றுமைப்பட்டுப் புணர்தற்குரிய மெய்யீற்றின் வழித்தோன்றும் மெய்யை
உடம்படுமெய் என்பது பொருந் தாது. உடன்படல் ‘உடம்படல்’ என மரீஇயிற்று.
‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை’ (குறள் 890) எனவருதல் காண்க. உயிரோடு
உயிர்க்கு மயக்கம் இன்மையின், வரும் உயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய்
உடம்படுமெய் எனப் பொருள் கூறுதலும் ஒன்று. (நன். 162 சங்கர.)
|
உடம்படுமெய் செய்கை ஓத்தில்
கூறப்படாமை |
நிலைமொழி உயிரீறாக வருமொழி உயிர் முதலாக வரின், உயிரோடு உயிர்க்கு
மயக்கம் இன்மையான், அவ்வீருயிர் களையும் இணைத்து உடம்படுத்தற்கு இடையே
அடுத்துவரும் மெய்களாகிய யகர வகரங்கள் உடம்படுமெய்களாம். ஆகவே, விண்+
அத்து = விண்வத்து – என நிலைமொழியீற்றில் மெய் நிற்புழி இடையே வரும்
வகரம் எழுத்துப்பேறேயன்றி உடம்படுமெய் அன்றாம்.
தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதல் நான்கு இயல்கள் கருவி ஓத்து;
அடுத்த ஐந்து இயல்களும் செய்கை ஓத்து.
உடம்படுமெய் இருமொழிகளையும் உடம்படுவித்தற்கு வரும் கருவியாதலின்,
தொல்காப்பியனார் உடம்படுமெய்யைக் கருவி ஓத்து நான்கனுள் நான்காவதாகிய
புணரியலில் கூறி னார். இது புணர்மொழிச் செய்கையாயின், செய்கை ஓத்தில்
கூறப் பட்டிருக்கும். (சூ. வி. பக். 42)
ஆதலின், உடம்படுமெய் பெறுதல் இயல்புபுணர்ச்சி வகையுள் ஒன்று.
|
உடம்படுமெய் புணர்பு எழுத்துக்கள் |
உயிரான் முடிந்த சொல்லும் உயிரால் தொடங்கின சொல்லும் தம்முள்
புணருங்கால், அவ்விரண்டு உயிர் நடுவே ஒற்றிசைத்தல் வேண்டும்
இசைப்படும் எழுத்தே புணர்பெழுத்து எனப்படும்.
இ ஈ எ ஐ – என்னும் நிலைமொழி உயிரீற்றின் முன் வரு மொழிப்
பன்னீருயிரும் புணரில், யகர உடம்படுமெய்யாம். அஆஉஊஏஓஒள- என்னும்
நிலைமொழி உயிரீற்றின் முன் வருமொழிப் பன்னீருயிரும் புணரில் வகர
உடம்படுமெய் யாம். ஏகார ஈற்றின் முன் பன்னீருயிரும் புணரில் இவ்விரு
விதியும் பெறும். (தொ. வி. 20 உரை)
|
உடற் கூற்று வண்ணம் |
பட்டினத்தார் பாடியது. இவ்வண்ணம் ஒவ்வொரு கலையும் நான்குகுழிப்பும் ஒரு தொங்கலுமாக அமைந்துள்ளது. முதற் கலையும்மூன்றாங்கலையும் எதுகையும், முதலாவதும் இரண்டாவதும், இரண்டாவதும்மூன்றாவதும் மோனையும் பெறுகின்றன. தாயுமானவர் பாடும் வண்ணங்களிலும்இவ்வமைப்பைக் காணலாம். (இலக்கணத். முன். பக். 102)
|
உடுக்கை : சொல்லமைப்பு |
உடுக்கை – உடுத்துதல் என்னும் தொழிலையும் உடுக்கப்படும் ஆடையையும்
குறிக்கும். உடுக்கை என்பது உடுத்துதல் என்னும் புடைபெயர்ச்சியை
உணர்த்துங்கால், ‘கை’ விகுதி யுடையது. (உடு+க்+கை).அஃது உடுக்கப்படும்
ஆடையை உணர்த்துங் கால், ‘ஐ’ விகுதியுடையது (உடு+க்+க்+ஐ) (சூ. வி.
பக். 33)
கைவிகுதி தொழிற்பெயரை உணர்த்துவது; ஐவிகுதி செயப்படு பொருளை
உணர்த்துவது.
|
உடைப்பொருள் நீரவாய் வரும் முதனிலை |
கருமையன் – செம்மையன் – ‘பொருத்தம்
இன்மையேன் பொய்ம்மை
உண்மையேன்’ (திருவா. 5:93) –
எனவும், வலைச்சி -புலைச்சி – எனவும், கறுப்பன் – சிவப்பன்- அளியன்-
அன்பன்- எனவும் வரும் பண்புப் பகுபதங்கட்குக் கருமை செம்மை இன்மை
உண்மை என்ற பண்புப் பெயர்களும், வலைமை – புலைமை – என்ற சாதிப்பண்பு
உணர நிற்கும் பெயர்களும், கறுப்பு சிவப்பு அளி அன்பு – என்ற பல்வேறு
வகைப்பட்ட பண்புப்பெயர்களும் நெறிப்பட வாராது உடைப்பொருள் நீரவாகி
வரும் முதனிலையாகக் கொள்ளப் படும். (இ. வி. 45 உரை)
|
உண்டிப் பொருத்தப் புறனடை |
அமுத எழுத்தும் நச்செழுத்தும் செய்யுள் முதன்மொழிக் கேயன்றித்தசாங்கத்தயலிலும் வருதலும் வாராமையும் முறையே பொருந்தும். (இ. வி.பாட். 210)
|
உண்டிப் பொருத்தம் |
க ச த ப ந ம வ என்னும் மெய் ஏழோடும் அகரமும் இகரமும் உகரமும்எகரமும் என்னும் நான்கு உயிரும் செய்யுள் முதல் மொழிக்கு அமைதல் அமுதஎழுத்தாகிய உண்டிப் பொருத் தம் ஆம். ய ர ல ள என்னும் ஒற்றினை ஊர்ந்தஆகாரமும் ஓகாரமும், அவ்வொற்றுக்களும், ஆய்தமும், மகரக்குறுக்க மும்செய்யுள் முதல்மொழிக்கு ஆகா நச்செழுத்து ஆதலின், அவை நீக்கப்படும்.மங்கலமாக எடுத்த மொழிக்கண் இவ் வெழுத்துக்கள் வரின், அவை குற்றமுடையஅல்ல. இவ் வுண்டிப் பொருத்தம் தசாங்கத்தயலிலும் அமையும்.(இ. வி. பாட். 19, 20, 21)
|
உண்ணா குதிரை உண்ணாக் குதிரை ,
உண்ணாகிடந்தனஉண்ணாக் கிடந்தன : வேறுபாடு |
உண்ணா குதிரை(கள்) என்புழி, ‘உண்ணா’உண்ணாதவை என வினையாலணையும்
பெயராகப் பொருள்படும். உண்ணா தனவாகிய குதிரை(கள்) என்க. ஆண்டு வலி
மிகாது. ‘உண்ணா’ முற்றாய வழியும் அது.
உண்ணா கிடந்தன என்புழி, ‘உண்ணா’ உண்ணாதனவாய் என முற்றெச்சமாகப்
பொருள்படும். உண்ணாதனவாய்க் கிடந்தன என்க. ஆண்டும் வலி மிகாது.
எதிர்மறைப் பெயரெச்சமும் செய்யா என்றும் வாய்பாட்டு வினையெச்சமுமாக
‘உண்ணா’ என்பது நிற்பின், வருமொழி வல்லெழுத்து மிகப்பெறும், உண்ணாக்
குதிரை- உண்ணாத குதிரை; உண்ணாக் கிடந்தன- உண்டு கிடந்தன. (நன். 171
சங்கர.)
|
உண்மை செப்பும் உண்டு என்னும்
சொல்லின் புணர்ச்சி |
உண்மை செப்புதலாவது, ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது
கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மை யாகிய பண்பை உணர்த்துதல். இது
‘பொருண்மை சுட்டல்’ எனவும்படும். (தொ. சொ. 66 சேனா.)
உண்டு என்பது நிலைமொழியாக வருமொழி முதலில் வன்கணம் வரின், உண்டு
என்பது இயல்பாகப் புணர்தலும், உண்டு என்பதன் இறுதி கெட்டு ணகரம் ளகர
ஒற்றாகி உள் என நின்று வருமொழியொடு புணர்தலும் என்ற இரு நிலைமையும்
பெறும்.
வருமாறு : உண்டு+பொருள் = உண்டு பொருள், உள் பொருள்.
உண்டு என்பதன் முன் இயல்புகணம் வருவுழிக் கேடும் திரிபும் இன்றி,
உண்டு ஞானம் – உண்டு வட்டு – உண்டு அடை (உண்டடை) – என இயல்பாகப்
புணரும். (தொ. எ. 430 நச்.)
|
உதயணன் கதை |
இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக, னகர ஈற்றான்இற்றுப் பொருள் தொடர்ந்த இலக்கியமாக உதயணன் கதைஉரைக்கப்பட்டுள்ளது. (தொ. செய். 240 பேரா., நச்.)
|
உதி என்ற மரப்பெயர்ப் புணர்ச்சி |
உதி என்ற மரப்பெயர் வருமொழி வன்கணம் வரின் ஒத்த மெல்லெழுத்து இடையே
மிக்குப் புணரும்.
எ-டு : உதி
ங்கோடு, உதி
ஞ்செதிள் உதி
ந்தோல், உதி
ம்பூ.
பிற்காலத்து அம்முச்சாரியை பெற்று நாற்கணத்தொடும் புணரும் நிலையும்
ஏற்பட்டது.
எ-டு : உதி
யங்கோடு, உதி
யமரம், உதி
யவட்டை, உதி
யஆரம் (உதியவாரம்) (தொ. எ. 243
நச்.)
|
உதுக்காண்: புணருமாறு |
உது என்பதனொடு காண் என்ற சொல் புணரும்வழி, வல்லொற்று மிக்கு
உதுக்காண் – என முடியும். (தொ. எ. 263 நச். உரை)
(இதற்கு உதனைக் காண்பாயாக என்று இரண்டு சொல்லாய்க் கொண்டு பொருள்
கூறலுமுண்டு. இதனை ஒட்டி நின்ற இடைச்சொல்லாய் உங்கே என்று ஏழாம்
வேற்றுமை இடப் பொருணர்த்துவது என்று கூறலுமுண்டு. பரி. குறள் 1185
|
உத்தம் |
எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு ஓரெழுத்தாய்வருவது.‘கார், நேர், வார், யார்’ என வரும். (வீ. சோ. 139 உரை)
|
உத்தேசம், விதேயம் என்பன |
ஒவ்வொரு நுற்பாவின் தோற்றத்துக்கும் உத்தேசியமும் விதேயமும்
இன்றியமையாதன. உத்தேசியம் நுதலியது (கருதியது). விதேயம் –
உணர்த்தியது. தெரிந்த பொருளை நுதலித் தெரியாத பொருளைக் கூறுதலே
முறையாதலின், நுதலிய பொருளாகிய உத்தேசியம் மாணாக்கர்க்குத்
தெரிந்ததாயும், உணர்த்த வேண்டிய பொருளாகிய விதேயம் தெரியாததாயும்
இருக்கும். பொது இயல்பாய்த் தெரிந்தது நுதலிய பொருளாய் வருவதும்,
சிறப்பியல்பாய்த் தெரிய வேண்டியது உணர்த்த வேண்டிய பொருளாய் வருவதும்
ஆம்.
எ-டு : கோயில் சாத்தனால் கட்டப்பட்டது என்ற தொடரில், கோயில்
என்பது நுதலிய பொருளாகிய உத்தேசியம்; ‘சாத்தனால் கட்டப்பட்டது’ என்பது
உணர்த்திய பொருளாகிய விதேயம். ‘கோயில்’ தெரிந்ததாயினும், இன்னாரால்
கட்டப்பட்டது என்று தெரியாதானுக்கு உணர்த்திய செய்தி
தெரியாததாம்.
‘எழுத்தெனப்படுப அகர முதல னகர இறுவாய் முப்பஃது’ – இதன்கண்,
எழுத்து என்பது தெரிந்த பொருள்; முப்பஃது என்ற எண் தெரியாத பொருள்.
எழுத்து என்பதனைப் பொது வியல்பால் உணர்ந்த ஒருவனுக்குத் தமிழில்
வழங்கும் எழுத் துக்கள் அகர முதல னகர இறுவாய் அமைந்த முப்பதே –
என்றுணர்த்துவதே சூத்திரக் கருத்து ஆதலின், எழுத்து – உத்தேசியம்,
முப்பஃது- விதேயம் – பிறவும் அன்ன. (எ.ஆ.பக். 4,5)
|
உந்தியார் |
சிறுமியர் விளையாட்டாகிய ‘உந்தி பறத்தல்’ என்பதனை அடியாகக் கொண்டுசிறந்த தத்துவக் கருத்துக்களை மூன்றடிப் பாடலாகப் பல புனைந்து பாடும்பிரபந்த விசேடம். பாட்டின் இறுதியிரண்டடியும் ‘உந்தி பற’ என முடியும்.மாணிக்கவாசகர் அருளிய ‘திருவுந்தியார்’, சித்தாந்த சாத்திரங்கள்பதினான்களுள் ஒன்றாகிய ‘திருவுந்தியார்’ என்பனஎடுத்துக்காட்டுக்களாம். அவற்றது பெருமை கருதித் ‘திரு’ என முன்னும்அடைமொழி கூடிற்று; விகுதியாக ஆரைக்கிளவி ‘நாலடியார்’ போலப்புணர்ந்தது.
|
உபசர்க்கங்கள் |
பிர : பிரயோகம் ஆ : ஆகாரம்
பரா : பராபவம் நி : நிவாசம்
அப : அபகீர்த்தி அதி : அதிமதுரம்
சம் : சங்கதி அபி : அபிவிருத்தி
அநு : அநுபவம் சு : சுதினம்
அவ : அவமானம் உற் : உற்பாதம்
நிர் : நிர்க்குணம் பிரதி : பிரதிகூலம்
துர் : துர்க்குணம் பரி : பரிபாகம்
வி : விகாரம் உப : உபயோகம்
இப்பதினெட்டும் வடமொழிகளுக்கு முதலடுத்து வெவ்வேறு பொருளை
விளக்கிவரும் உபசர்க்கங்களாகும். (தொ. வி. 86 உரை)
|
உப்பகாரமொடு ஞகாரையும் அற்று’ ஆதல் |
பு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொல் தமிழில் ‘தபு’ என்று ஒன்றேயாய்
இருத்தல் போல, ஞகார ஒற்றீற்றுச் சொல்லும் ‘உரிஞ்’ என ஒன்றேயாய்
உள்ளது. ஆயின் தபு என்பது படுத்துக்கூறத் தன்வினையாகவும்
எடுத்துக்கூறப் பிறவினை யாகவும் பொருள்படுதல் போல, உரிஞ் என்ற சொல்
எடுத்தல் படுத்தல் ஒலிவேற்றுமையான் பொருள் வேற்றுமை தாராது. (தொ. எ.
80 நச்.)
|
உப்பகாரம் ஒன்று |
பு என்ற முற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொல் ‘தபு’ என்ற ஒன்றே
ஆகும் அதனைப் படுத்துக் கூறின், ‘நீ சh’ என்ற தன்வினைப் பொருள்படும்;
எடுத்து ஒலிப்பின், ‘நீ ஒன்றனைச் சாவப்பண்’ என்று பிறவினைப்
பொருள்படும். (தொ. எ. 76 நச்.)
|
உப்பும் நீரும் போல |
உயிர்மெய்யில், அரைமாத்திரை அளவு கொண்ட மெய் யொலி, ஒரு
மாத்திரையும் இரண்டு மாத்திரையும் கொண்ட உயிரொலியில், உப்பானது நீரில்
கரைந்து தன்னளவு கெடுதல் போல, கரைந்து போகவே, உயிரின் மாத்திரையே
உயிர்மெய்யினது மாத்திரையாக ஒலிக்கப்பெறும். (தொ. எ. 18 நச். உரை)
|
உம், கெழு என்ற சாரியைப் புணர்ச்சி |
உம் என்பதும், கெழு என்பதும் சாரியையாகவும் வரும்.
‘வானவரி வில்லுந் திங்களும் போலும்’ – உம்மின் மகரம் வருமொழி
நோக்கி நகரஒற்றாகவும் திரியாமல் இயல்பாகவும் அமைந்தது. இதற்கு ‘வானவரி
வில்லிடைத் திங்கள்’ என ஏழனுருபு விரித்துப் பொருள் செய்தல்
வேண்டும்.
‘மாநிதிக் கிழவனும் போன்ம்’ (அகம். 66) மாநிதிக் கிழவனைப் போலும்
என்று பொருள் செய்க.
‘கல்கெழு கானவர்’ (குறுந். 71) கல்லைக் கெழீஇயின கானவர் என்று
பொருள் செய்க.
‘கான்கெழு நாடு’ (அகநா. 93) கானைக் கெழீஇயின நாடு என்று பொருள்
செய்க.
‘பூக்கேழ்த் தொடலை’ (அக. 28) ‘துறைகேழ் ஊரன்’ (ஐங். 11)
‘செங்கேழ் மென்கொடி’ (அக. 80) – கெழு என்பது கேழ் எனத் திரிந்து
நின்றது. (தொ. எ. 481 நச். உரை)
|
உயர்திணை வினைச்சொல் முடிபு |
உயர்திணை வினைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன உள.
உண்கு, உண்டு, வருது, சேறு, உண்பல், உண்டேன், உண்பேன் – என்னும்
தன்மைவினைகள் கொற்றா – சாத்தா- தேவா- பூதா – ஞெள்ளா – நாகா – மாடா –
யவனா – வளவா – ஆதா – என்ற நாற்கணத்தொடும் புணரும்வழி இயல்பாகும்.
உண்டீர்+ சான்றீர், உண்டீர்+ பார்ப்பீர் – என முன்னிலைக் கண்ணும்,
உண்ப, உண்டார் + சான்றார் பார்ப்பார் – எனப்படர்க்கைக்கண்ணும்
இயல்பாகப் புணர்ந்தன.
உண்டனெஞ் சான்றேம் – மகரம் திரிந்து புணர்ந்தது.
உண்டே நாம் – மகரம் கெட்டுப் புணர்ந்தது.
(தொ. எ. 153 நச். உரை)
|
உயர்திணைப்பெயர், விரவுப்பெயர் கு,
கண் உருபொடு புணர்தல் |
உயர்திணைப்பெயர் குவ்வுருபு அடுத்தவழி வல்லெழுத்து மிகுதலும், கண்
உருபு அடுத்தவழி மிகாமையும் உடைத்து. விரவுப்பெயர் நிலையும்
அதுவே.
எ-டு : நம்பிக்கு; நம்பிகண்; நங்கைக்கு; நங்கைகண்; அவனுக்கு;
அவன்கண்; அவளுக்கு; அவள்கண் – என உயர்திணைப் பெயர் கு, கண் – இவற்றொடு
புணர்ந்தவாறு.
கொற்றிக்கு; கொற்றிகண் கோதைக்கு; கோதை கண்; தாய்க்கு; தாய்கண்;
மகனுக்கு; மகன்கண் – என விரவுப்பெயர் கு, கண் இவற்றொடு புணர்ந்த வாறு.
(தொ. எ. 114 நச். உரை)
|
உயர்திணைப்பெயர்புணர்ச்சியிடத்து
விகாரப்படுதல் |
ஆடூஉ
க் குறியன், மகடூஉக் குறியள்
(சிறியன் சிறியள்,தீயன் தீயள், பெரியன் பெரியள் – என ஏனை வன்கணமும்
கொள்க) எனவும், ஆடூஉக்கை, மகடூஉக்கை (செவி, தலை, புறம் – என ஏனை
வன்கணமும் கொள்க) எனவும், எட்டிப்பூ எட்டிப் புரவு, காவிதிப்பூ
காவிதிப்புரவு, நம்பிப்பூ நம்பிப்பேறு – எனவும் உயர்திணைப் பெயர்முன்
சில மிக்கன.
மக்க
ட் குணம், மக்கட்சுட்டு,
மக்கட்டலை, மக்கட் புறம் – எனத் திரிந்தன.
கபிலபரணர், பலசான்றார் – என ஈறு (ன்,ர்) கெட்டு
இயல்பாயின.
ஆசீவக
ப் பள்ளி, கணக்காயப் பள்ளி,
ஈழவக் கத்தி, கோலிகப் புடவை, வண்ணாரப் பெண்டிர் – என நிலைமொழி ஈறு
(ர், ர்,ர், ன், ம் ) கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கன.
வாசுதேவ கோட்டம் வாசுதேவக் கோட்டம், பிரம கோட்டம் பிரமக் கோட்டம் –
என நிலைமொழி ஈறு(ன்) கெட்டு வருமொழி வல்லினம் இயல்பும் மிகலுமாக
விகற்பம் ஆயிற்று.
பார்ப்பனக்கன்னி, சேரி, தோட்டம், பிள்ளை, மரபு, வாழ்க்கை – என,
(பார்ப்பான் என்னும்) நிலைமொழி ஈற்றயல் குறுகி அகரம் மிக்கது; வன்கணம்
வருவழி வல்லினம் மிகலும், ஏனைய மெய்க்கணம் வருவழி இயல்பாதலும் கொள்க.
(நன். 158 மயிலை.)
|
உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சி |
உயிரீறும் புள்ளியீறுமாக வரும் உயர்திணைப் பெயர்கள், வருமொழியில்
நாற்கணங்களும் வரினும், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும்
பெரும்பான்மையும் இயல்பாகப் புணரும்.
எ-டு : நம்பி குறியன்; நம்பிகை
அவள் குறியள்; அவள்கை
கபில பரணர், மருத்துவமாணிக்கர் – நிலைமொழி னகர ஈறு கெட்டு
இயல்பாய் முடிந்தன.
ஆசீவகப் பள்ளி, நிக்கந்தக் கோட்டம் – நிலை மொழி னகரஈறு கெட்டு
வல்லெழுத்து மிக்குப் புணர்ந்தன.
ஈழவக் கத்தி, வாணிகத் தெரு – நிலைமொழி ரகர ஈறு கெட்டு,
வல்லெழுத்து மிக்குப் புணர்ந்தன.
பிரம கோட்டம், பிரமக் கோட்டம் – நிலைமொழி னகரஈறு கெட்டு,
வல்லெழுத்து உறழ்ந்தது.
பலர் + சங்கத்தார், பலர் + அரசர் – பல்சங்கத் தார், பல்லரசர் –
இவை ரகரஈறும் அதன்முன் நின்ற அகரமும் கெட்டுப் புணர்ந்தன.
இகர ஈற்று உயர்திணைப் பெயர் வேற்றுமையிலும் அல்வழியி லும் மிக்கு
முடிதல் பெரும்பான்மை.
எ-டு : எட்டிப்பூ, நம்பிப்பேறு – ஆறாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சி; நம்பித்துணை, செட்டிக்கூத்தன்-இருபெயரொட்டுப்
பண்புத்தொகை;
ஐகார ஈறு சிறுபான்மை அல்வழிக்கண் மிக்குப் புணரும்.
எ-டு: நங்கைப் பெண், நங்கை
ச்சானி (தொ. எ. 153, 154 நச்.
உரை)
ஆடூஉக் குறியன், மகடூஉ
க் குறியள் – ஊகார ஈறு உகரமும்
வல்லெழுத்தும் பெற்ற அல்வழிப் புணர்ச்சி. (தொ.எ. 265 நச்.
உரை)
ஆடூ
உக்கை, மகடூ
உக்கை – ஊகார ஈறு உகரமும்
வல்லெழுத்தும் பெற்ற வேற்றுமைப் புணர்ச்சி (தொ.எ. 267 நச்.
உரை)
ஆடூவின்கை, மகடூவின்கை – ஊகாரஈறு இன்சாரியை பெற்ற வேற்றுமைப்
புணர்ச்சி
(தொ.எ. 271 நச். உரை)
|
உயர்ந்தோராவார் |
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்று எறிந்த முருகவேளும், ஆசிரியர் அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், நாரதரும்,நிதியின் கிழவனும் முதலாய தலைச்சங்கப் புலவர் உயர்ந்தோர் ஆவர்.(பா. வி. பக். 166)
|
உயர்ந்தோர் கிளவி |
உயர்ந்த மக்களாகிய அகத்தியர் முதலாயினோர் கூறும் கூற்று.அக்கூற்று வேதநெறியோடு ஒத்தது. அவ்வுயர்ந்தோர் சொற்கள்வழி அமைதலேசெய்யுட்கு இலக்கணமாம். (தொ. பொ. 217 நச்.)
|
உயிரது குறுக்கம் உயிரே |
சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு
போல, உயிர்களின் குறுக்கமாகிய குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஐகாரக்
குறுக்கம் என்பன உயிரேயாம்.
குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன புணர்ச்சி வேற்றுமையும் பொருள்
வேற்றுமையும் பற்றி வேறெழுத்துக்களாகக் கொள்ளப்பட்டன என்பது
இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரது கருத்தாம். (தொ. எ. 2 இள.,
நச். உரை)
|
உயிரது குறுமை நெடுமை அளவிற் கோடல் |
உயிர் ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் குறில், அதே உயிர் இரண்டு
மாத்திரை அளவிற்றாக ஒலிப்பின் நெடிலாம். ஆகவே, ஒலியின் குறுக்கம்
நீட்டம் இவற்றைக் கொண்டே குறிலும் நெடிலும் தோன்றின. எனவே,
புணர்ச்சியிடத்துக் குறிலிணையை நெடிலாகக் கொள்ளலாம். உயிர்மெய்க்கும்
இஃது ஒக்கும்.
எ-டு : கோள்+ நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது
குறள் + நிமிர்ந்தது = குறணிமிர்ந்தது
தனிநெடிலை யடுத்த ஒற்றுக்களுக்குக் கூறும் புணர்ச்சிவிதி குறிலிணை
ஒற்றுக்கும், சிறுபான்மை குறில்நெடில் ஒற்றுக்கும் (வரால் +
நிமிர்ந்தது = வரானிமிர்ந்தது; கோல் + நிமிர்ந்தது = கோனிமிர்ந்தது)
கொள்ளப்படுதற்கு இதுவே அமைதியாம். (தொ. எ. 50 இள. 161 உரை)
|
உயிரளபெடை (1) |
எழுத்துப் பல ஆயின ஒலிவேற்றுமையானன்றே? அங்ஙனம் ஆதலின் நெடிலது
விகாரமாய் ஓரொலியாய்ப் பிறப்பதே அளபெடை என்பார் ‘நெடில் அளபெழும்’
என்றும், ‘அவற்ற வற்று இனக்குறில் குறியே’ என்றும் கூறினார். ஆசிரியர்
தொல்காப்பியனாரும் நீரும் நீரும் சேர்ந்தாற்போல நெட் டெழுத்தொடு
குற்றெழுத்து ஒத்துநின்று நீண்டிசைப்பதே அளபெடை என்பார், `குன்றிசை
மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத், திம்பர் ஒத்தகுற்
றெழுத்தே’ (எழுத். 41) என்றார். இப்பெற்றி அறியாதார், நெடிலும்
குறிலும் விரலும் விரலும் சேர நின்றாற்போல இணைந்து நின்று
அளபெடுக்கும் எனத் தமக்கு வேண்டியவாறே கூறுப. நெடி லும் குறிலும்
அவ்வாறு நின்று அளபெடுக்கும் என்றல் பொருந்தாமைக்கு `எழுத்தெடை’
என்னாது அளபெடை என் னும் குறியீடே சான்றாதல் அறிக. அற்றேல், ஓர்
எழுத்தினையே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகப் பிரித்து
அசைத்து அதனால் சீர்செய்து தளையறுத்தல் பொருந்தாது எனின், அற்றன்று;
‘எழுத்து வகையான்’ என்னாது,
‘மாத்திரை வகையான் தளைதம கெடாநிலை
யாப்பழி யாமைஎன்று அளபெடை வேண்டும்’
எனக் கூறுப ஆதலின், எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும்
சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசைபற்றி யல்லது எழுத்துப் பற்றி அல்ல
என்க. (நன். 91 சிவஞா.)
|
உயிரளபெடை (2) |
உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்கு
மிடத்துத் தனிநிலை – முதனிலை – இடைநிலை – இறுதிநிலை- என்னும்
நான்கனோடும் உறழ 7
x 4 =28 ஆம்.
என்னை?
‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே’
‘ஐ ஒள என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகர உகரம் இசைநிறைவு ஆகும்’
(தொ. எ. 41, 42.)
என்றாராகலின்.
வரலாறு : ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ – என்பன தனிநிலை
அளபெடை.
மாஅரி, வீஇரம், கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை – இவை முதனிலை
அளபெடை.
படாஅகை, பரீஇயம், கழுஉமணி, பரேஎரம், வளைஇயம், உரோஒசம், அநௌஉகம்
– இவை இடைநிலை அளபெடை.
பலாஅ, குரீஇ, கழுஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அநௌஉ – இவை இறுதிநிலை
அளபெடை.
பிறவும் அன்ன. (நேமி. எழுத். 3 உரை)
|
உயிரளபெடை இருபத்தொன்று ஆதல் |
செப்பலோசை முதலிய ஓசை குன்றாது நெட்டெழுத்து ஏழும் மொழி முதலிடை
கடைகளில் நின்று அளபெடுக்குங்கால், ஒளகாரம் மொழி இடைகடைகளில்
வரப்பெறாமையால், அவ்விடங்களில் அஃது ஒழிய நின்று அளபெடுக்கும் அளபெடை
பத்தொன்பதோடு, இன்னிசை நிறைப்பவும் சொல்லிசை நிறைப்பவும் அளபெடுக்கும்
அளபெடை இரண்டும் கூட்டி, உயிரளபெடை எழுமூன்றாய் வருமாறு காண்க. (நன்.
91 சிவஞா.)
|
உயிரளபெடை சார்பெழுத்தாதல் |
கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல,
நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்தில் பிறந்து பின் பிளவு படாது
ஒலிக்கின்றது ஒன்று ஆகலானும், எள்ளாட்டிய வழியல்லது எண்ணெய்
புலப்படாவாறு போல நெடிலும் குறிலும் கூடிய கூட்டத் தல்லது புலப்படாது
நிற்பது ஒன்று ஆகலானும், அதுதான் இயற்கை யளபெடையும் செய்யுட்குப்
புலவர் செய்துகொண்ட செயற்கை யளபெடையுமாய் அலகு பெறாதும் பெற்றும்
நிற்பது ஒன்று ஆகலானும், சார்பெழுத்து என உயிரின் வேறாயிற்று. (இ.வி.
19)
|
உயிரீற்றின் முன் உயிர் வந்து
புணருமாறு பற்றி வீரசோழியம் குறிப்பிடுவது |
இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி
புணருமிடத்து இடையே யகார ஒற்று வந்து தோன்றும். இவை அல்லாத மற்ற
உயிரீற்று நிலைமொழி முன்னர் உயிர் முதலாகிய வருமொழி புணருமிடத்து
இடையே வகார ஒற்று வந்து தோன்றும். ஏகார ஈற்று நிலை மொழி முன்னர் உயிர்
முதலாகிய வருமொழி புணருமிடத்து யகார வகார ஒற்றுக்கள் இரண்டும் வந்து
தோன்றும். ஒரோ விடத்து நிலைமொழியினது ஈற்றில் நின்ற பதமாவது, உயிர்
மெய்யாவது, உயிராவது, ஒற்றாவது அழிந்து புணரும். (வீ.சோ. சந்திப்.
13)
வீரசோழியத்திலும் அதன் உரையிலுமே, உடம்படுமெய்யாம் எழுத்துக்கள்
பற்றியும், நிலைமொழி இன்ன ஈற்றுக்கு இன்ன உடம்படுமெய் என்பது
பற்றியும் முதன்முதலாக வரையறை கூறப்பட்டுள்ளது. இதனை யொட்டியே நன்னூல்
விதிக்கும்.
நிலைமொழியீறு கெட்டு முடிவது நேமிநாதத்தில் விளக்கப்
பட்டுள்ளது.
வருமாறு : ஒருபது + ஒன்று
> ஒருபது+ஆன் + ஒன்று =
ஒருபானொன்று – நிலைமொழியில் பது என்ற பதத்தின் ‘அது’
கெட்டது.
வாழிய + சாத்தா =வாழிசாத்தா – நிலை மொழி யில் யகர உயிர்மெய்
கெட்டது.
பனை + காய்
> பனை + அம் + காய்
> பன் + அம் + காய் =பனங்காய்
– நிலைமொழியில் ஈற்று ஐகாரஉயிர் கெட்டது.
மரம்+அடி
> மர+அடி =மரவடி – நிலை
மொழியீற்று மகரமெய் கெட்டது. (வகரம் : உடம்படுமெய்) (நேமி. எழுத். 19,
13 உரை)
|
உயிரீற்றின் முன் வன்கண முதல் மொழி |
இயல்பினாலும் விதியினானும் இறுதியாக நின்ற (நிலை மொழியீற்று)
உயிர்களின் முன்னர் (வருமொழி முதலில்) வரும் கசதப-க்கள் பெரும்பாலும்
மிகும்.
விதி உயிரீறாவன:முன்னைய உயிரீறும் மெய்யீறும் ஒழிய உயிரீறாய்
நிற்பனவும், யாதானுமோர் உயிர் இறுதிக்கண் தோன்றி நிற்பனவும் ஆம்.
எ-டு: நம்பிக் கொற்றன் – உயர்திணைக்கண் இயல்பு இகர ஈறு வலி
மிக்கது; ஆடூஉக் குறியன் – உயர்திணைக்கண் விதி உகரஈறு வலிமிக்கது;
சாத்திப் பெண் – விரவுத் திணைக்கண் இயல்பு இகரஈறு வலி மிக்கது; தாராக்
கடிது, ஒற்றைக்கை – அஃறிணைக்கண் இயல்பு ஆகார ஈறும் விதி ஐகாரஈறும் வலி
மிக்கன.
வட்டக் கல், தாழக்கோல் – அஃறிணைக்கண் விதி அகரஈறுகள் வலி
மிக்கன.
இவை அல்வழிப் புணர்ச்சி.
நம்பிப்பூ, ஆடூஉக் கை – உயர்திணைக்கண் இயல்பு இகரஈறும் விதி
உகரஈறும் வலி மிக்கன. விளக்கோடு, கடுக்காய், ஆட்டுக்கால் –
அஃறிணைக்கண் இயல்பு அகர உகர ஈறும் விதிக் குற்றியலுகரஈறும் வலி
மிக்கன. இவை வேற்றுமைப் புணர்ச்சி.
ஆடிக் கொண்டான், ஆடாக் கொண்டான், ஆடூஉக் கொண் டான், ஆடெனக்
கொண்டான், ஆடக் கொண்டான், உண் பாக்குச் சென்றான், பூத்துக் காய்த்தது,
பொள்ளெனப் பரந்தது, சாலப் பகைத்தது, இருளின்றிக் கண்டான் – பல வகைத்
தெரி நிலை குறிப்பு வினையெச்சங்களின் உயிரீறுகள் வலிமிக்கன.
மற்றைச் சாதி, கடிக் கமலம், சொன்றிக் குழிசி, கங்கைக் கரை- இடை உரி
திசை வடசொற்களின் உயிரீறுகள் வலிமிக்கன.
நொக் கொற்றா, துக் கொற்றா – உயிரீற்று ஏவல் முன் வலி மிக்கன. (நன்.
165 சங்.)
|
உயிரீற்று மரப்பெயர்ப் புணர்ச்சி |
உயிரீற்று மரப்பெயர் முன் வன்கணம் வந்துழி, பொதுவிதி யால் இடையே
வல்லெழுத்து மிகுதலேயன்றி, அவ்வல்லெழுத் துக்கு இனமான மெல்லெழுத்து
மிகுதலுமுண்டு. இது வேற்றுமைப் புணர்ச்சி.
எ-டு : பலாக்காய், இலந்தைக்கனி : வல்லெழுத்து மிக்கன.
விளங்காய், களங்கனி, மாங்கொம்பு, மாம்பழம்: இனமெல்லெழுத்து
மிக்கன. (நன். 166)
|
உயிரீற்றுப் புணரியல் என்ற குறியீடு |
பொதுவகையால் புணரும் இயல்பும், பல செய்திகளை உள்ளடக்கித் தொக்குப்
புணரும் இயல்பும், குற்றுகர ஈற்றுச் சொற்கள் நின்று புணரும் இயல்பும்
ஆகிய பிற புணர்ச்சி இயல்புகளும் இவ்வியலில் கூறப்படுகின்றன. தலைமை
பற்றி ‘உயிரீற்றுப் புணரியல்’ என்ற விசேடணம் கொடுக்கப்பட்டது.
இவ்விசேடணம், முற்கூறிய பிற புணர்ச்சி இயல்புகளை உணர்த்துதலோடு இயைபு
நீக்காது, உயிரீறு புணர்தல் ஆகிய தன்னோடு இயைபின்மை மாத்திரை
நீக்கியது. இக் குறியீடு ‘ஆ தீண்டு குற்றி’ என்பது போலத் தலைமை பற்றிய
அடையடுத்து வந்தது. (இ. வி. எழுத். 53 உரை)
|
உயிரெழுத்தின் இலக்கணம் |
உயிரெழுத்து உதானன் என்னும் மேலெழும் ஓசைக்காற்றி னால் தோன்றி,
வாயுறுப்புக்களின் ஒற்றுதல் தொழிலின்றி இதழ்களின் கோணத்தால்
மிடற்றுவளியாலே, கண்டத்தி னின்று தம் நிலை திரியாமல் உயிர்ப்பொடு
பிறந்து செவிப் புலனாகும்; தனித்தும், மெய்யினை ஊர்ந்தும்,
சொல்லாயும், சொல்லுறுப்பாயும் அமைந்து பொருள் குறித்து நிற்கும்;
மெய்யெழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்து ஆவதற்குத் துணை யாய் அவற்றை
இயக்கி அவற்றின் பிறப்பிடமே இடமாகத் தோன்றி வரும்; தனித்து
இசைக்குங்கால், குறுமை நெடுமை கொள்ளும்;உயிர்மெய்க்குத்
துணையாகுங்கால், வன்மை மென்மை இடைமை கொள்ளும்; தனித்தும் மெய்யினை
ஊர்ந்தும் செய்யுட்கண் பல ஓசைகளை நிகழ்த்தி அலகு பெறும்;
பண்ணிசைக்கும் வண்ணத்திற்கும் காரணமாகி நிற்கும். அகரம் தவிர்த்த ஏனைய
உயிரெழுத்துக்கள் மெய் யொலிகளைச் சிறிது திரியச் செய்யும். யாவும்
அவற்றிற்குக் குறுமை நெடுமைகளைக் கற்பித்தலைச் செய்யும். உயிரெழுத்
துக்கள் மொழி முதற்கண் தனித்தும், இடையிலும் ஈற்றிலும் அளபெடையாகவும்,
விகாரமாகவும் வரும்; தம்முன் தாம் தொடர நேரின், உடம்படுமெய் பெற்றுத்
தொடரும்; உயிர் மெய்க்குத் துணை யாகி வருங்கால், வரிவடிவின்கண் தம்
கூறுகளை நிறுத்தித் தம் வரிவடிவை இழந்துவிடும். (தொ. எ. பக். 18, 19
ச. பால.)
|
உயிரெழுத்துப் பிறக்குமாறு |
வாயுறுப்புக்களின் செயற்பாடின்றி அவை சமநிலையில் நிற்க, வாய்
அங்காப்ப,மிடற்று எழு வளியிசையாக வெளிப்படும் உயிர்ப்பு இசையே அகரம்
என்னும் அடிப்படை எழுத்தாம். இவ்அகரம் எல்லா எழுத்துக்களுக்கும்
மூலமாகவும் துணை யாகவும் அகநிலையில் எழுத்தாம். அஃதாவது அகர ஒலியின்
திரிபுகளே பல்வேறு எழுத்துக்களாகச் செவிப்புலனாம். அகர எழுத்தே
வாயிதழ்களின் கோணத்தாலும், நாவிளிம்பின் விரிவாலும் சுருக்கத்தாலும்,
ஏனைய பதினொரு வகையாகிய பன்னிரண்டு உயிரெழுத்துக்களாக நிகழ்கிறது.
(தொ.எ. பக். 10. ச. பால.)
|
உயிரைக் குறிக்கும் பெயர்கள் |
அச்சு எனினும், ஆவி எனினும், சுரம் எனினும், பூதம் எனினும், உயிர்
எனினும் ஒரு பொருட்கிளவி. (மு. வீ. எ. 7)
|
உயிர் இயல் |
உயிரின் மாத்திரையும், பெயரும், ஒன்று என்னும் எண்ணிக்கை யும்
உயிரின் இயல்பாம். அ,க – ஒரு மாத்திரை, அகரம் என்ற பெயர், ஒன்று என்ற
எண் – என்பன இவற்றில் உயிரின் இலக்கணமாம். (தொ. எ. 10 நச். உரை)
|
உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவி |
உயிரெழுத்துக்களை ஈறாக உடைய முன்னிலை வினைச் சொற்கள், முன்நின்றான்
தொழில் உணர்த்துவனவும் அவனைத் தொழிற் படுப்பனவும் என இருவகைய,
இ, ஐ – என்பன முன்நின்றான் தொழிலை உணர்த்துவன.
எ-டு : உண்டி, உண்டனை.
முன்நின்றhனைத் தொழிற்படுத்துவன, அகரம் முதல் ஒளகாரம் இறுவாய்
எகரம்நீங்கலாகப் பகுதி மாத்திரையாய் நின்று எடுத்தலோசையான் முன்னிலை
ஒருமை ஏவல் பொருண்மை உணர்த்துவன. அவை நட, வா, மடி, சீ, விடு, கூ, ஏ,
வை, நொ, போ, வெள என வரும். (தொ. எ. 151 நச். உரை)
|
உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவியின்
புணர்ச்சி |
முன்நின்றான் தொழிலை யுணர்த்தும் இகர ஈறும் ஐகார ஈறும் வன்கணம்
வரினும் இயல்பாகப் புணரும். எ-டு: நிற்றி கொற்றா, உண்டனை கொற்றா.
முன்நின்றானைத் தொழிற்படுத்தும் உயிரீறுகள் வன்கணம் வரின்
இயல்பாகப் புணர்வனவும், உறழ்ந்து முடிவனவும் உள.
எ-டு : கொணா கொற்றா, எறி கொற்றா - இயல்பு
நட கொற்றா, நடக் கொற்றா – உறழ்வு (தொ. எ. 151 நச். உரை)
|
உயிர் மயங்கியல் |
இது தொல்காப்பிய எழுத்ததிகாரத்து ஏழாம் இயல். புணர்ச்சி பற்றிய
அகத்தோத்தின் முதல் இயல் இது. இதன்கண் அகரம் முதல் ஒளகாரம் ஈறாகிய
பன்னிரண்டு உயிர்களையும் ஈறாக உடைய சொற்கள், அல்வழி வேற்றுமை என்ற
இருவழியும், பெரும்பான்மை வன்கணத்தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும்
புணரும் செய்கை நிலை 93 நுற்பாக்களில் விரித்துக் கூறப்பட்டுள்ளது.
இகர ஐகார ஈற்று அல்வழி முடிபும், இயல்புகணத்தின் பொதுப்புணர்ச்சி
முடிபும் தொகைமரபினுள் கூறப்பட்டமையின் (தொ.எ.158, 144 நச்.), ஏனையவே
உயிர்மயங்கியலில் கூறப்பட்டன.
|
உயிர் மெய்யோடு இயைதல் |
உயிர்மெய் என்ற கலப்பெழுத்தை உண்டாக்க உயிரானது மெய்யொடு
பொருந்தும். அங்ஙனம் பொருந்தினும் அது தன் மாத்திரையும் பெயரும்
எண்ணும் திரிந்து நில்லாது.
அ என்புழி நின்ற ஒரு மாத்திரையும், குறில் என்ற பெயரும், ஒன்று
என்ற எண்ணும் க என்புழியும் ஒக்கும். ஆ என்புழி நின்ற இரு
மாத்திரையும், நெடில் என்ற பெயரும், ஒன்று என்ற எண்ணும் கா
என்புழியும் ஒக்கும் பிறவும் அன்ன. (தொ. எ. 10. நச். உரை)
|
உயிர்: ஆட்சியும் காரணமும் நோக்கிய
குறி |
அகரம் முதல் ஒளகாரம் இறுவாயுள்ள பன்னிரண்டு எழுத்துக் களையும்
உயிர் என்ற பொதுப்பெயரானே வழங்குவது ஆட்சியாம். உயிர் பன்னிரண்டும்,
மெய் பதினெட்டனையும் இயக்கி உயிர்மெய்யாம் நிலையில் வரிவடிவின்றி
நிற்றலின், உயிர் என்ற பெயர் காரணம் பற்றியதாயிற்று. மெய்க்கு உயிராய்
நின்று மெய்களை இயக்கும் நிலையும் தனித்து நிற்கும் நிலையும்
உயிரெழுத்துக்கு உண்டு, இறை ஒன்றேயாய் நிற்கும் தன்மையும்,
பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல.
(தொ. எ. 8 நச். உரை)
|
உயிர்இயல் திரியாமை |
உயிரானது மெய்யொடு கூடி உயிர்மெய் ஆகிய காலத்தும் தன் மாத்திரையும்
குறியும் எண்ணும் திரியாதிருத்தல்.
அ என்புழி நின்ற ஒரு மாத்திரையும், குறில் என்ற பெயரும், ஒன்று
என்ற எண்ணும், அவ்வகரம் ககரமெய்யை ஊர்ந்து க என நின்றவழியும் ஒத்தல்
போல்வன; ஆ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்று என்னும் எண்ணும் கா என
நின்ற வழியும் ஒத்தல் போல்வன. (தொ. எ. 10 இள., நச். உரை)
|
உயிர்இல் எழுத்து |
உயிரெழுத்துக்கள் அல்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலுகர மும்;கட்டளையடிகட்கு எழுத்தெண்ணுமிடத்து இவை எண்ணப்படா. (தொ. செய். 44நச்.)
|
உயிர்இல் எழுத்து |
தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தம் தன்மையான் ஒலித்தல் தொழிலில்லாதஎழுத்துக்கள். இவை யாப்பில் எழுத்துக் களாக எண்ணப்படுதலும்அலகிடப்படுதலும் பொருந்தா.(தொ. செய். 44 பேரா.)
|
உயிர்எதுகை |
இரண்டாம் எழுத்து ஒன்றாது இரண்டாமெழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றிவருவது உயிர்எதுகையாம். (எதுகை யெனவே, சீர்களின் முதலெழுத்து அளவொத்துநிற்றல் வேண்டும் என்பது.)எ-டு : ‘து ளி யொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள்அ ணி கிளர் தாரோய் அருஞ்சுரம் நீந்தி’(யா. கா. 43 உரை)இவ்வடிகளில் இரண்டாமெழுத்து ஒன்றாது, அம் மெய் களின் மேல் ஏறிய இகரஉயிர் ஒன்றி வந்தது.
|
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் |
ஈற்றுக் குற்றியலுகரத்தை அடுத்த எழுத்து உயிர்மெய்யாக இருப்பின்
அச்சொல்லீற்றுக் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எனப்படும். அஃது அல்வழிக்கண் வன்கணம் (மென்கணம், இடைக்கணம்- இவை)
வருமொழி முதற்கண் வருமிடத்து இயல்பாகப் புணரும்.
எ-டு : வரகு + கடிது = வரகு கடிது (வரகு ஞான்றது, வரகு
யாது)
வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும் புணரும்;சிறுபான்மை
வல்லினமெய் இரட்டும்.
எ-டு : வரகு +கதிர் = வரகுகதிர், வரகின் கதிர்; வெருகு + கண் =
வெருக்குக்கண்; எருது+ கால் = எருத்துக்கால்.
உயிர்த்தொடர்க் குற்றுகரம் டற மெய்களை ஊர்ந்து வரு மிடத்து,
வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி வன்கணம் வரின், அவ்வல்லின மெய்கள்
இரட்ட வல்லெழுத்து மிகும்; ஏனைக்கணம்வரின், அவ்விரட்டுதலோடு இயல்பாக
முடியும்.
எ-டு : முருடு+ கால், ஞாற்சி, யாப்பு, அடி = முருட்டுக்கால்,
முருட்டுஞாற்சி, முருட்டியாப்பு, முருட்டடி
முயிறு+ கால், நிறம், வன்மை, அடி = முயிற்றுக் கால்,
முயிற்றுநிறம், முயிற்றுவன்மை, முயிற்றடி.
சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், அல்வழிக் கண் இரட்டுதலும்,
சிறுபான்மை இருவழியும் பிற ஒற்று இரட்டுதலும் உள. எ-டு : நாடு கிழவோன்
எனவும், காட்டரண் எனவும், வெருக்குக்கண் எருத்துமாடு எனவும் முறையே
காண்க. (நன். 182, 183)
|
உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகரப்
புணர்ச்சி |
உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண்
வல்லினம் வரினும் இயல்பாகப் புணரும்
எ-டு : வரகு கடிது, கிடந்தது குதிரை, கரிது குதிரை
(தொ. எ. 425 நச். உரை)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணம் வரின் இனஒற்று மிக்கு
வல்லெழுத்துப் பெறுதலும், இயல்புகணம் வருவழி இனஒற்று மிகுதலும்
உள.
எ-டு : கரடு + கானம் = கரட்டுக் கானம்; குருடு + கோழி =
குருட்டுக் கோழி; திருடு + புலையன் = திருட்டுப் புலையன்; வெளிறு +
பனை = வெளிற்றுப் பனை; எயிறு + பல் = எயிற்றுப் பல்
இவை வன்கணம் புணர்ந்தன.
வறடு + ஆடு = வறட்டாடு; குருடு + எருது = குருட்டெருது.
இவை இயல்புகணம் புணர்ந்தன. (தொ.எ. 425 நச்.
உரை)
வேற்றுமைக்கண் டு று ஈறாகிய சொற்கள், வருமொழி வன்கணம் வரின்
இனஒற்றும் வல்லெழுத்தும் மிகும்; இயல்புகணம் வரின் இனஒற்று
மிகும்.
எ-டு : முயிறு+ கால் = முயிற்றுக்கால்; கயிறு + புறம் =
கயிற்றுப்புறம்; வயிறு + தீ = வயிற்றுத் தீ; பகடு + கால் =
பகட்டுக்கால்; அகடு + தீ = அகட்டுத்தீ; முகடு + பகுதி =
முகட்டுப்பகுதி
இவை வன்கணம் புணர்ந்தன.
பகடு +ஞாற்சி = பகட்டுஞாற்சி; முயிறு + ஞாற்சி =
முயிற்றுஞாற்சி
இவை இயல்புகணம் புணர்ந்தன.
கு சு து பு – என்ற ஈறுகள் இயல்பாகப் புணரும்
எ-டு : வரகுகால், வரகுகதிர், வரகுசினை, வரகுதாள், வரகு பதர்,
வரகுஞாற்சி. (பிற ஈறுகளும் கொள்க.)
உருபுபுணர்ச்சி போல இன்சாரியை பெறுதலுமுண்டு.
எ-டு : வரகினை – வரகின் கதிர் (தொ.எ. 412 நச். உரை)
|
உயிர்மிக்கு வருதல் |
உயிரோசை மிகுந்து வருதல்.எ-டு : ‘ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோகையாயோ ஐயா களிறு.’இச்செய்யுளில் ஐ, ஆ, ஓ என்னும் நெட்டுயிர்கள் மிக்கு வரப்பெற்றன;எகரக் குற்றுயிர் இருமுறையே வந்தது.(யா. க. 2 உரை)
|
உயிர்மெய் |
உயிரும் மெய்யும் இணைந்து தோன்றும் சார்பெழுத்து உயிர் மெய்யாம்.
மெய் உயிரொடு கூடுமிடத்து – அகரத்தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய தன்
வடிவே வடிவாகவும், ஆகாரத் தொடு கூடும்வழிப் புள்ளி நீங்கிய வடிவொடு
கால்பெற்றும், இகர ஈகாரங்களொடு கூடும்வழி மேல் விலங்கும் – உகர
ஊகாரங்களொடு கூடும்வழிக் கீழ்விலங்கும் – எகர ஏகார ஐகாரங்களோடு
கூடும்வழி அவ்வவற்றைக் குறிக்கும் கொம்பும் – ஒகர ஓகாரங்களொடு
கூடும்வழிக் கொம்பும் காலும், ஒளகாரத்தொடு கூடும்வழி அதற்கென உரிய
கொம்பொடு கூடிய காலும் பெற்று வடிவு திரிந்தும், மெய்யின்மேல் ஏறிய
உயிரெழுத் தின் மாத்திரையே தனக்குரிய மாத்திரையாய், உயிர் வடிவத்தைப்
பெறாது, உயிர்மெய் என்ற பெயருடன் மெய் யொலி முன்னும் உயிரொலி
பின்னுமாய் ஒலிக்கும் சார் பெழுத்து உயிர்மெய்யெழுத்தாம். பன்னிரண்டு
உயிரும் பதினெட்டு மெய்யுடன் பொருந்த 216 உயிர்மெய் யெழுத்துத்
தோன்றும். (நன்.89)
|
உயிர்மெய் ஈறு |
சொற்களின் ஈறுகளை உயிரீறு மெய்யீறு என்று இரண்டாகப் பகுத்துக்
காணுமிடத்து, உயிர்மெய், மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாக
ஒலித்தல் என்ற தொடர்பு பற்றி, உயிர்மெய் ஈறு உயிரீறாகவே கொள்ளப்படும்.
(தொ. எ. 106 நச்.)
|
உயிர்மெய் ஈறு உயிரீறே |
மொழிகளின் ஈற்றிலே நின்ற உயிர்மெய்யை உயிரீறு எனலாம்; என்னை?
‘மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே’ (தொ.நூன். 18) என்றார் ஆகலின்.
‘உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே’ (தொ. புண. 4) என்பதனால்,
பிரித்தால் உடல் முன் உயிர் பின்னாம் ஆதலான் எனக் கொள்க. அன்றியும்,
வாளும் கூடும் இருப்பின், “வாளைக் கொடுவா” என்னும் அத்துணை யல்லது,
“கூட்டைக் கொண்டுவா” என்பது இல்லை. ஆதலான் இங்ஙனம் சொல்லப்பட்டது.
(நேமி. எழுத். 8 உரை)
|
உயிர்மெய் எழுத்துக்கள்சிறப்பில
என்பது |
எழுத்ததிகாரம் செய்கை பற்றியது ஆதலானும், செய்கைக்குப் பயன்படுவன
உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்துக்களே ஆதலானும், உயிர்மெய்
எழுத்துக்களைப் பிரித்து மொழி முதற்கண்வரின் மெய்யெழுத்து எனவும்,
மொழிஇறுதிக்கண் வரின் உயிரெழுத்து எனவும் பகுத்துக் கொள்ளுதலான்
உயிர்மெய் எழுத்துக்கள் சிறப்பில என்பது. (எ. ஆ. பக். 5)
|
உயிர்மெய் சார்பெழுத்தாதல் |
உயிர்மெய் என்பதனை ஒற்றுமைநயம் கொள்வழி உம்மைத் தொகை
நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாக வும், வேற்றுமைநலம் கொள்வழி
உம்மைத்தொகையாகவும் கொள்க. உயிரும் மெய்யும் கூடுகின்ற கூட்டத்தினை
‘எல்லா மெய்யும்’ என மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்னர்க்
கூறப்படுதல் நோக்கிப்போலும். இங்ஙனம் வருதலான் ‘உயிர் மெய்’
சார்பெழுத்து என முதலெழுத் தின் வேறாயிற்று. (இ. வி. 18 உரை)
|
உயிர்மெய் பிறக்குமாறு |
வாயிதழ்களின் பன்னிரண்டு கோணங்களில் வெளிவருகின்ற உயிர்ப்பு
இசையினை, நாவானது அண்பல்லொடும் அண்ணத் தொடும் உற்றும், உறழ்ந்தும்,
இதழானது பல்லொடும் இதழொடும் இயைந்தும், தடைப்படுத்தியும்
வெளிப்படுத்தும் நிலைமையால் வருவன உயிர்மெய்யெழுத்துக்களாம். (தொ.எ.
பக். 10. ச. பால.)
|
உயிர்மெய் மயக்கு |
மெய்யொடு மெய் மயங்குதலன்றி, உயிருடன் மெய்யும் மெய் யுடன் உயிரும்
மாறி உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறை இன்றி
வேண்டியவாறு மயங்கும். இனி ‘உயிர் மெய் மயக்கு அளவின்றே’ என்பதற்கு
உயிர்மெய் முன் உயிர்மெய் மயங்குதல் வரையறை இன்று என்று பொருள்
கூறுவாருமுளர். இங்ஙனம் உயிர்மெய்யை இரண்டெழுத் தாகப் பிரித்து
மயக்கவிதியும் கூறும் ஆசிரியர் அதனையே ஒன்றாக வைத்து மயக்கவிதி கூறார்
ஆதலானும், கூறினும் இடைநிலை மயக்கம் முழுதும் இச்சூத்திரத்துள்
அடங்காமை யானும் அது பொருந்தாது. (நன். 110 சங்கர.)
|
உயிர்மெய் மிக்கு வருதல் |
பிற மெய் உயிர் இவற்றினும் உயிர்மெய் மிகுதியாக வரப் பெறுதல்.எ-டு : ‘படைகுடி கூழமைச்சு நட்பர ணாறுமுடையா னரசரு ளேறு.’ (குறள். 381)இதன்கண், டகரமெய் ஒருமுறையே வந்தது; உயிர் வரப் பெற்றிலது;உயிர்மெய்யெழுத்துக்களே மிகுதியும் வந்தன. (யா. க. 2 உரை)
|
உயிர்மெய் முதலிய ஒன்பதும்
சார்பெழுத்து ஆமாறு |
உயிர்மெய் என்பது சார்பெழுத்து ஆமாறு ‘உயிர்மெய் சார்பெழுத்தாதல்’
என்ற தலைப்பில் காண்க.
கஃறீது – முஃடீது – என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி
என்றதனானும், ‘ஆய்தப்புள்ளி’ எனச் சூத்திரம் செய்தத னானும், இதனையும்
உடன்கூட்டி ஒற்றளபெடை பதினொன்று என்றதனாலும், ஆய்தம்
ஒற்றின்பாற்படுவதேனும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் இடம் பற்றி
நிகழ்வதொன்று ஆகலின், சார்பெழுத்தென ஒற்றின் வேறாயிற்று.
கோட்டு நூறும் மஞ்சளும் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல,
உயிரளபெடை நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்தில் பிறந்து பின்
பிளவுபடாது ஒலிக்கின்ற ஒன்று; எள் ஆட்டிய வழியல்லது எண்ணெய்
புலப்படாதவாறு போல, நெடிலும் குறிலும் கூடி ஒலிக்கும் கூட்டத்தல்லது
அது புலப்பட்டு நில்லாது. இயற்கை யளபெடையும் செய்யுட்குப் புலவர்
செய்துகொண்ட செயற்கை யளபெடையும் என இரண்டு திறத்ததாய், அலகு பெறாதும்
அலகு பெற்றும் அது நிற்பது. ஆதலின் உயிரளபெடை சார்பெழுத்தென உயிரின்
வேறா யிற்று.
ஒற்றளபெடை ஒருமாத்திரையாய் அலகு பெறுதலானும் பிறவாற்றானும்
சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.
சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோலாகாது சந்தனக் கோலேயாம்.
அதுபோல, உயிரினது குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி
வேற்றுமையானும். பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும்
சிதையுமிடத்தே அலகுகாரியம் பெறாமையானும் குற்றிகரமும் குற்றுகரமும்
சார்பெழுத்து என உயிரின் வேறாயின.
கை – பை – மை – என்பனவும், கௌ – வெள – என்பனவும் பொருளைச்
சுட்டியவழிக் குறுகும். இங்ஙனம் (ஒரு மாத்திரை யும் ஒன்றரை
மாத்திரையுமாக) அளவு குறுகுதலானும், சீரும் தளையும் சிதையுமிடத்தே
அலகு பெறாமையானும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து என,
உயிரின் வேறாயின.
கால் மாத்திரையாக அளவு குறுகியொலிக்கும் மகரக்குறுக்க மும்
சார்பெழுத்து என ஒற்றின் வேறாயிற்று.
இவ்வாற்றான் உயிர்மெய் முதலாய ஒன்பதும் சார்பெழுத்து எனப்பட்டன.
(இ. வி. 18, 17, 19, 20, 16, 21, 22 உரை)
|
உயிர்மெய் முதலியன சார்பெழுத்தாதல் |
சார்பெழுத்தென மூன்றே கொண்டார் தொல்காப்பியனார். அவர் கொண்ட
குற்றியலிகரம் – குற்றியலுகரம் – ஆய்தம் – என்ற மூன்றும் நீங்கலான
உயிர்மெய் முதலிய ஏழும் சார்பில் தோன்றுதலானும், முதலெழுத்தாம் தன்மை
அவற்றிற்கு இன்மையானும், முதலும் சார்பு மன்றி மூன்றாவதொரு பகுதி
சொல்லலாவது இன்மையானும், உயிர்மெய் முதலிய பத்தும் சார்பாகவே கொள்ள
வேண்டும் என்பது. (நன். 59 மயிலை.)
|
உயிர்மெய் முதலியன சார்பெழுத்து
ஆகாமை |
தமக்கெனப் பிறப்பிடம் ஒன்று தனிப்பட்ட முறையில் இன்றித் தாம்
சார்ந்த எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிட மாய்க் கொண்டு
ஒலிக்கும் குற்றியலிகரம்- குற்றியலுகரம் – ஆய்தம் – என்ற மூன்றுமே
சார்பெழுத்தாம்.
தனி எழுத்துக்களாகிய குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
மூன்றும் தனித்தோ, அகரஉயிரைச் சார்ந்தோ இயங்கும் ஆற்றலின்றி
மொழியிடைப் படுத்தே உணரப்பட வேண்டுத லின் சார்பெழுத்தாயின. ஏனைய
உயிர்மெய் முதலியன சார்பெழுத்து ஆகா.
ஆல் என்புழி உயிர் முன்னும் மெய்பின்னும் மயங்கினாற் போல, லா
என்புழி மெய் முன்னும் உயிர் பின்னும் நின்று மயங்கினவே அல்லது,
உயிரும் மெய்யுமாகிய தம் தன்மை திரிந்து வேறாயின அல்ல;உயிர்மெய் ஆகிய
காலத்தும், குறின்மை நெடின்மை என்ற உயிர்த்தன்மையும் வன்மை மென்மை
இடைமை என்ற மெய்த்தன்மையும் தம் இயல்பின் திரிவுபடவில்லை. ‘உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது’ ‘பொன்மணி’ போல இயல்புபுணர்ச்சியேயாம்.
புணர்ச்சியில் மெய்யையும் உயிரையும் பிரித்துக் கொள்வர். ‘துணங்கை’
என்பது மெய் முதல் உயிர்ஈறு எனவும், ‘வரகு’ என்பது உயிர்த்
தொடர்மொழிக் குற்றியலுகரம் எனவும் கூறுமிடத்தே, உயிர் மெய் உயிராகவும்
மெய்யாகவும் பகுத்துக் கொள்ளப்படு கிறது. ஆதலின் கலப்பெழுத்தாகிய
உயிர்மெய் சார்பெழுத்து ஆகாது.
அளபெடை, நெட்டெழுத்தோடு இனமான குற்றெழுத்து ஒத்து நின்று
நீண்டிசைப்பதொன்று ஆயினும், மொழிக் காரணமாய் வேறுபொருள் தாராது
இசைநிறைத்தல் மாத்திரை பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்து என்று வைத்து
எண்ணப்படாததாயிற்று.
ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்
குறுக்கம் என்பன ஒரு காரணம் பற்றிக் குறுகின ஆதலின், சிறுமரம்
பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம் ஆகாதது போல,
வேறெழுத்து எனப்படா.
வடவெழுத்துள் உயிரெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும்,
ஒற்றெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும், வல்லெழுத்தின் முன்
மெல்லெழுத்து வந்து மயங்குழி அவ் வல்லெழுத்தோடு ஒப்ப இடையே தோன்றும்
எனப்பட்ட வியம எழுத்தும் என்னும் இவற்றையே சார்பெழுத்தாக வடநூலார்
கொண்டனர்.
கால்மாத்திரை பெறும் வன்றொடர்க் குற்றியலுகரம் மாத்திரைக்
குறுக்கம் பற்றித் தனியெழுத்தாகக் கொள்ளப்பட வில்லை. இவற்றை நோக்கச்
சார்பெழுத்து மூன்றேயாம் என்பது. (சூ. வி. பக். 29, 30)
|
உயிர்மெய் வடிவு மெய்யின் வேறாதல் |
புள்ளிமாத்திரமே பெறும் மெய்போலன்றி, உயிர்மெய்கள் கொம்பும்,
காலும், கட்டும், வீச்சும் என இவை வேறுபடுதலின், வரிவடிவு பலவாக
வேறுபட்டு வருவனவாம். (நேமி. எழுத். 7 உரை)
ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தல் – (இள., நச். உரை) (தொ. எ.
17)
|
உயிர்மெய் வருக்க நாள்கள் |
க கா கி கீ – திருவோணம்கு கூ – திருவாதிரைகெ கே கை – புனர்பூசம்கொ கோ கௌ – பூசம்ச சா சி சீ – ரேவதிசு சூ செ சே சை – அசுவினிசொ சோ சௌ – பரணிஞா ஞி ஞெ ஞொ – அவிட்டம்த தா – சுவாதிதி தீ து தூ தெ தே தை – விசாகம்தொ தோ தௌ – சதயம்ந நா நி நீ நு நூ – அனுடம்நெ நே நை – கேட்டைநொ நோ நௌ – பூரட்டாதிப பா பி பீ – உத்தரம்பு பூ – அத்தம்பெ பே பை பொ போ பௌ – சித்திரைம மா மி மீ மு மூ – மகம்மெ மே மை – ஆயிலியம்மொ மோ மௌ – பூரம்யா – உத்தரட்டாதியூ, யோ – மூலம்வ வா வி வீ – உரோகிணிவெ வே வை வெள – மிருக சீரிடம்இவ்வாறு உயிர்மெய் வருக்கஎழுத்துக்கட்கு உரிய நாள்கள்கொள்ளப்படும். (இ. வி. பாட். 27-35)
|
உயிர்மெய்: இலக்கணம் |
அப்பொடு பெய்த உப்பே போல, உயிரொடு புணர்த்திய மெய் தன்னளவு
தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர்
பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின், ‘எண்’
அதிகாரத்துள் உயிர்மெய்யை ஒன்றாகச் சொன்ன ஆசிரியர் ‘ஈறு’ அதிகாரத்துள்
இரண் டாக வைத்து இலக்கணம் கூறினார். இவ்வாற்றான் உயிர்மெய் என்னும்
சொல், மாத்திரை வகையான் உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகையாகவும், ஒலிவகை யான் உம்மைத்தொகையாகவும் கொள்ளப்படும்.
(நன். 109 சங்கர.)
|
உயிர்மெய்: ஒற்றுமை நயம், வேற்றுமை
நயம் |
ஒற்றுமைநயம் என்பதன்கண் பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதும்,
பல எழுத்துக்கள் ஒலிஅளவான் ஒன்றாக இருத்தலும் கொள்ளப்பட்டுள்ளன.
உ ஊ ஒ ஓ ஓள- என்பன பல எழுத்துக்கள் ஒரே இடத்தில் பிறப்பதற்கு
எடுத்துக்காட்டு. காக்கை, கோங்கு – என்பனவற்றின் இடையிலுள்ள மெய்கள்
ஓரிடத்தில் பிறந்து ஒலியளவான் அரைமாத்திரை ஒலித்தல் என்னும் தன்மையில்
ஒன்று பட்டமை ஒற்றுமைநயமாம்.
தொடரும் எழுத்துக்கள் வெவ்வேறிடத்தில் பிறத்தல் வேற்றுமை நயம் என்ற
கருத்தில், வேய்க ஊர்க வீழ்க – என யரழ-க்கள் முன்பு ககரம் வருதல்
வேற்றுமைநயம் என்று கொள்ளப்பட்டது. (எ.ஆ)
உயிர்மெய்யினைத் தனி ஓரெழுத்தாகக் கோடல் ஒற்றுமை நயம்.
‘லகரம் றகரஒற்று ஆகலும் உரித்தே’ – பல என்பதன் லகரஉயிர்மெய்
‘லகரம்’ என்று குறிக்கப்பட்டதும்,
‘ஆயிடை வருதல் இகார ரகாரம்’ – ‘ரகாரம்’ என்பது உயிர்-மெய்யாய்த்
தொள்ளாயிரம் என்பதன்கண் வருதல் குறிக்கப் பட்டதும்,
‘முன்னர் தோன்றும் லகார மகாரம்’ – ‘பொலம்’ என்பதன் லகரஉயிர்மெய்
‘லகாரம்’ என்று குறிக்கப்பட்டதும்
என்னும் இவை ஒற்றுமை நயமாம். (தொ. எ. 214, 463, 356 நச்.)
(எ.ஆ.பக். 137)
இனி, உயிர்மெய்யினை மெய்யெழுத்தாகக் கோடல் வேற்றுமை நயம்
‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (தொ. எ. 19 நச்.) – இங்குக் ககரம் முதலிய
உயிர்மெய்கள் ககரஒற்று முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேற்றுமை
நயம்.
உயிர்மெய்யினை ஓரெழுத்தாகக் கொண்டு மாத்திரை கோடல் ஒற்றுமை நயம்.
அவ்விடத்து ‘உயிர்மெய்’ உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை. உயிர்மெய்யினை ஒலி பற்றி ஈரெழுத்தாக எண்ணுதல் வேற்றுமை
நயம். வேற்றுமை கொள்ளுமிடத்தே ‘உயிர்மெய்’ உம்மைத்தொகையாம். (தொ. எ.
17 இள. உரை)
உயிர்மெய்க்கு மாத்திரை கொள்ளுங்கால், உப்பும் நீரும் போல
ஒன்றேயாய் நிற்றல்
ஒற்றுமைநயம். அதனை வேறுபடுத்துக்
கூறுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றல்
வேற்றுமைநயம். (தொ. எ. 18 நச்.
உரை)
|
உயிர்மெய்: பெயர்க்காரணம் |
பன்னீருயிரும் பதினெட்டு மெய்யொடும் தனித்தனிக் கூட, மெய்யொலி
முன்னும் உயிரொலி பின்னுமாய் அமையும் கலப்பெழுத்து உயிர்மெய்யாம்.
ஆகவே, உயிர்மெய் என்பது ஒலிப்பு வகையால் உம்மைத்தொகை; மாத்திரை
கோடற்கண் உம்மைத்தொகை அன்மொழி என்க. (தொ. எ. 17 நச். உரை)
|
உயிர்மெய்ந்நிலை தம் இயல் மயக்கம்
கிளத்தல் |
உயிர்மெய் எழுத்தில் பன்னீருயிரும், மெய்யின் தன்மையாகிய வன்மை –
மென்மை – இடைமை – என்பவற்றில், தம்முடைய குறுமை நெடுமை என்ற தன்மைகள்
இணைந்தனவாகக் கூறுதல். உயிர்மெய்க் குறில் நெடில்களை வல்லெழுத்து
மெல்லெழுத்து இடையெழுத்து – என்று குறிப்பிடுதல் இக் கருத்துப்
பற்றியே. (தொ. எ. 47 நச். உரை)
|
உயிர்மெய்யினது மாத்திரை |
உயிர்மெய் மெய்யும் உயிரும் இணைந்து பிறப்பதோர் எழுத்து எனினும்,
உப்பு நீரில் கரைந்து தன்னளவு கெடுதல்போல, மெய்யின் ஒலி உயிரொலியில்
கரைந்துவிடுவதால், உயிர் மெய்க்கு மாத்திரை உயிரினது மாத்திரையேயாம்.
ஆகவே, உயிர்மெய்க்குறில் ஒரு மாத்திரையும், உயிர்மெய்நெடில் இரு
மாத்திரையும் பெறும் என்பது. ஒலிவகையான் உம்மைத் தொகையாகும்
‘உயிர்மெய்’, மாத்திரை வகையான் உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகையாம். (தொ. எ. 17 நச். உரை)
|
உயிர்மெய்யினைப் பிரித்துக் காண்டல் |
உயிர்மெய்யில் மெய், தன்னொடு கூடிநின்ற உயிர் புணர்ச்சி யிடத்துப்
பிரிந்து வேறு நின்றதாயின், தான் முன்னர்ப் பெற்ற புள்ளி வடிவே
பெறும்.
எ-டு : ஆலிலை – ஆல்+இலை; அதனை – அது+அன்+ஐ
(தொ. எ. 139 நச்.)
|
உயிர்வினாவுடன் யாவினாவும்
கூட்டியுரைத்தல் |
ஆ எ ஏ ஓ என்ற உயிர்வினாவுடனே யா என்னும் உயிர்மெய் வினாவைக்
கூட்டியுரைத்தமை மயங்கக் கூறல் என்னும் குற்றம் ஆகாது. என்னையெனில்,
இது தொகைவகைவிரிபடச் செய்கின்ற நூல் ஆகலானும், முதல்வினா (எ, யா)
என்னும் பொருள் ஒப்புமையானும் என்பது. (நன்.66 மயிலை.)
|
உய்த்துவிடும், காட்டிவிடும் :
சொல்லிலக்கணம் |
உய்த்து என்ற வினையெச்சத்தொடும் காட்டி என்ற வினை யெச்சத்தொடும்
விடு என்ற விகுதி புணர்ந்து முதனிலைத் தன்மைப்பட்டு உய்த்துவிடு
காட்டிவிடு என்ற முதனிலை களாகி, பின்னர் உம் முதலிய விகுதிகளொடும்
சேர்ந்து, உய்த்துவிடும் காட்டிவிடும் – முதலிய வினைச்சொற்களை
உண்டாக்கும். இச் சொற்களைப் பரிமேலழகர் முதலாயினார் ‘ஒரு சொல்’
என்றமை, இவை உய்த்துவிடு காட்டிவிடு – என்று முதனிலைகளோடு இணைந்து
மேல் விகுதிகளொடு சேர்ந்து சொல்லை உண்டாக்குதலினாலேயாம். இங்ஙனம் விடு
போன்ற விகுதிகள் பகுதிகளோடு இணைந்து பகுதித் தன்மைப் பட்டு மேல்வரும்
விகுதிகளோடு இணைதல் வடநூலார்க்கும் உடன்பாடாம். (சூ. வி. பக். 42)
|
உரலாணி இட்டாற்போலச் செறிதல் |
பலகாலும் பயன்படுத்தியதால் உட்குழி தேய்ந்து ஆழ்ந்த பள்ளமான உரலில்
பள்ளத்தை மறைக்கும்படி இடும் மரஆப்பு உரலாணி எனப்படும். அவ்வுரலாணி
பள்ளத்தில் அழுத்தமாக இணைந் திருக்கும். அதுபோல, ய் என்ற மெய் தோன்ற,
அடிநா மேல்வாயை உரலாணி யிட்டாற்போலச் செறியும் என்பது. (தொ. எ. 99.
நச். உரை)
|
உரிஅசை |
இயற்றிக்கொள்ளப்பட்டு இயலசையின் தொழில் செய்தற்கு உரியவாதலின்‘உரியசை’ எனப்பட்டன. உரியசை என்பதும் ஆட்சியும் குணமும் காரணமாகப்பெற்ற பெயராம்.நேரசையும் நிரையசையும் குற்றியலுகரத்துடனாவது முற்றியலுகரத்துடனாவது ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின், நேரசையோடு இயைந்தகுற்றுகரமும் நேரசையோடு இயைந்த முற்றுகரமும் ‘நேர்பு’ அசை எனப்படும்.நிரையசை யோடு இயைந்த குற்றுகரமும் நிரையசையோடு இயைந்த முற்றுகரமும்‘நிரைபு’ அசை எனப்படும்.நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு, நிரையின் பின் உகரம் வருதலின்நிரைபு என்பன ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர்களாம்.தனிக்குற்றெழுத்தை அடுத்த உகரம் நேர்பு அசை ஆகாது குறலிணையாகியநிரையசையேயாம். எ-டு : அது, தபு.ஆகவே, நேர்பு என்ற வாய்ப்பாட்டிற்கு உரியன.1. குற்றொற்றை அடுத்த உகரம் – வண்டு, மின்னு.2. நெடிலை அடுத்த உகரம் – நாகு, நாணு3. நெட்டொற்றை அடுத்த உகரம் – காம்பு, தீர்வு.குற்றொற்று, தனிநெடில், நெட்டொற்று என்ற மூன்றன் பின்னும் இருவகைஉகரமும் வந்தவாறு.இனி, நால்வகை நிரையசைப்பின்னும் குற்றுகரமோ முற்றுகரமோ வந்துநிரைபு அசையாம்.1. குறிலிணை அடுத்த உகரம் – வரகு, இரவு2. குறில் நெடில் அடுத்த உகரம் – மலாடு, உலாவு3. குறிலிணை ஒற்றினை அடுத்த உகரம் – குரங்கு, புணர்வு4. குறில்நெடில்ஒற்றினை அடுத்த உகரம் – மலாட்டு, உராய்வுகுறிலிணை, குறில்நெடில், குறிலிணைஒற்று, குறில்நெடில்ஒற்றுஎன்ற நான்கன் பின்னும் இருவகை உகரமும் வந்தவாறு.(தொ. செய். 45 நச்.)
|
உரிஅசை மயக்கம் |
உரியசைகளாவன குற்றியலுகர முற்றியலுகர ஈற்றவான நேர்பு நிரைபுஎன்பன.நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு – தம்மொடு தாம் மயங்கினநேர்பு நிரைபு, நிரைபு நேர்பு – தம்மொடு பிற மயங்கினஇவ்வாறு உரியசைகள் நான்காயின.வீடுபேறு, தடவு மருது, பாறுகுருகு, வரகுசோறு என்பன முறையேஇவற்றிற்குரிய வாய்பாடுகள். (தொ. செய். 13 நச்.)
|
உரிஅசை மயங்கிய இயற்சீரின் இருவகை |
நேர்பு நேர் – போதுபூ – 2 எழுத்து; மேவுசீர் – 3 எழுத்து.நிரைபுநேர் – விறகுதீ – 3 எழுத்து; உருமுத்தீ – 4 எழுத்து.நேர்நேர்பு – போரேறு – 2 எழுத்து; நன்னாணு – 3 எழுத்துநேர் நிரைபு – பூ மருது – 3 எழுத்து; காருருமு – 4 எழுத்து.நிரை நிரைபு – மழகளிறு – 4 எழுத்து; நரையுருமு – 5 எழுத்துநிரைநேர்பு – கடியாறு – 3 எழுத்து; பெருநாணு -4 எழுத்துமுற்றியலுகரம் எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குற்றியலுகரமும்மெய்யும் எழுத்தெண்ணப்படா.(தொ. செய். 43 நச். உரை)
|
உரிஅசைக்கண் வரும் ஒற்றுக்கள் |
இயலசைக்கண் நிற்கும் ஒற்று இயல்பீறாயும் விதியீறாயும் நிற்கும்.உரியசைக்கண் வரும் ஒற்று விதியீறாக அன்றி இயல்பீறாக நில்லாது.எ-டு : ‘ நாணுத் தளையாக வைகி’‘ கனவுக் கொல் நீகண் டது’‘ சேற்றுக் கால் நீலம்’‘ நெருப்பு ச் சினம் தணிந்த’ (‘ களிற்றுக் கணம் பொருத’)இனி, காணும் நோக்கும் புரக்கும் கடவுள் இயவுள் எனவரும்இயல்பீறுகள் நேர்நேர் – நிரைநேர் -ஆகிய இயலசைகளாம் என்றறிக. (தொ. செய். 10 ச. பால.)
|
உரிஅடி |
உரிச்சீராகிய மூவசைச்சீர் எட்டானும் வரும் அடி.(யா. வி. பக். 113)
|
உரிச்சீரால் வரும் வெள்ளொத்தாழிசை |
எ-டு : ‘வாராரே என்றென்று மாலைக்கண் நனிதுஞ்சாய்ஊராரே என்றென்றும் ஒன்றொவ்வா உரைசொல்லியார்யாரே என்றாளே யாய்’உரிச்சீரால் இவ்வெள்ளொத்தாழிசை வந்தது. ஈண்டு உரிச் சீராவதுவெண்சீர். இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வருதலும், இயற்சீரேவருதலும், உரிச்சீரே வருதலும் ஆகிய மூவகையுள் இஃது உரிச்சீரால் வந்தவெள்ளொத்தாழிசை எனப்படும். (யா. க. 15 உரை)
|
உரிச்சீரின் திறம் |
மூவசைச் சீர்களுள் நேர் இறுதியான நான்கும் பெரும் பான்மையும்வெண்பாவிற்கே உரிமை பூண்டு நிற்றலின் வெண்பா உரிச்சீர் எனவும், நிரைஇறுதியான நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டுநிற்ற லின் வஞ்சி உரிச்சீர் எனவும் வழங்கப்படலின் இம்மூவசைச் சீர்கள்எட்டும் இருவகைப் பாக்களுக்குப் பெரும்பான்மையும் உரிமை பூண்டுநிற்றலின் உரிச்சீர் எனப்பட்டன.வஞ்சியுரிச்சீர் பிற பாவினுள் அருகி வரினும் வஞ்சிப்பாவி னுள் போலஇனிது நடவா. (யா. க. 12 உரை)
|
உரிச்சீரின் வகைகள் |
நேர்நேர்நேர், நிரை நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர் எனநேரீறு நான்கும் வெண்பாஉரிச்சீர்.நேர்நேர் நிரை, நிரைநேர்நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை எனநிரையீறு நான்கும் வஞ்சிஉரிச்சீர். (யா. க. 12 உரை)
|
உரிச்சீர் |
மூன்று அசையான் ஆகிய சீர். இஃது எட்டு வகைப்படும். அவற்றுள் நேர்இறுதியாகிய நான்கும் வெண்பா உரிச்சீர்; ஏனைய நிரை இறுதியாகிய நான்கும்வஞ்சிஉரிச்சீர் எனப்படும்.இவற்றுக்கு வாய்பாடு முறையே தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்கூவிளங்காய் எனவும், தேமாங்கனி, புளிமாங் கனி கருவிளங்கனி கூவிளங்கனிஎனவும் வரும். (யா. க. 12 உரை)
|
உரிச்சீர் வெண்டளை |
வெண்பாஉரிச்சீர் நின்று வெண்பாஉரிச்சீரோடு ஒன்றுவது சிறப்புடைத்து;வேற்றுச்சீரோடு ஒன்றுவது சிறப்பின்று. இத்தளை வெண்சீர் வெண்டளைஎனவும்படும்.‘குன்றேறி யானைப்போர்’ (குறள் 758) காய்முன் நேர் – சிறப்புடையஉரிச்சீர் வெண்டளை.‘தார்மாலை மார்ப’ (தண்டி. 16-1) – காய் முன்நேர் – சிறப்பில்லாஉரிச்சீர் வெண்டளை. (யா. க. 182 உரை)
|
உரிச்சொற் பனுவல் |
நிகண்டு நூல்; ‘பிங்கலம் முதலான…………… உரிச்சொற் பனுவல்களுள்’ (மயிலை.) நிகண்டு நூல்களைத் தமிழ்நூலார் உரிச் சொல் பனுவல்என்றலே முறை. பிற்காலத்து ‘உரிச்சொல் நிகண்டு’ எனஒருபொருட்பன்மொழியாகப் பெயர் வழங்கலாயிற்று. (நன். 459)
|
உரிச்சொல் நிகண்டு |
காங்கேயர் இயற்றிய வெண்பாவான் அமைந்த ஒரு நிகண்டு நூல். (நிகண்டு – கூட்டம்.) (L)
|
உரு எழுத்து |
வரி வடிவம் எழுதப்படுவது. காணப்படும் உருவத்தைப் பிறர்க்கு நன்குகாட்டும் முறைமை நாடி வழுவற்ற ஓவியனது கைவினை போல எழுதப்படுவதுஉருஎழுத்தாகும் என்ப. (யா. வி. பக். 577)
|
உருட்டுவண்ணம் |
அராகம் தொடுத்து வருவது; உருட்டிச் சொல்லப்படுவது அராகம் ஆதலின்இது ஞெகிழாது உருண்ட ஓசைத்து.(தொ. செய். 232 நச்.)எ-டு : ‘உருகெழு முருகிய முருமென வதிர்தொறுமருகெழு சிறகொடு மணவரு மணிமயில்’(செய். 152 நச்.)
|
உருபின் முடிவன
பொருட்புணர்ச்சியிலும் ஒத்தல் |
உருபுபுணர்ச்சிக்கண் எல்லாம் என்பது அஃறிணை ஆனகாலை
அற்றுச்சாரியையும் உருபின்மேல் உம்மும், உயர்திணை ஆன காலை நம்முச்
சாரியையும் உருபின்மேல் உம்மும் பெறும் என்பார், வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ்வாறே, எல்லாவற்றுக்கோடும் – எல்லா
நங்கையும் – எனவும்,
தான் தாம் நாம் – என்பன முதல் குறுகும் எனவும், யான் யாம் – என்பன
என் எம் எனவும் நீ என்பது நின் எனவும் நீயிர் என்பது நும் எனவும்
ஆகும் எனவும் கூறுவார், ஈண்டும் அவ்வாறே, தன்கை தங்கை நங்கை – எனவும்,
என்கை எங்கை -எனவும், நின்கை நும்கை – எனவும்,
ஆ மா கோ – என்பன னகரச் சாரியை பெறும் என்பார், ஈண்டும் அவ்வாறே
ஆன்கோடு மான்கோடு கோன்குணம் – எனவும்,
சுட்டு முதல் வகரம் அற்றுச்சாரியை பெறும் என்பார், ஈண்டும் அவ்வாறே
அற்றுப் பெற்று அவற்றுக்கோடு – எனவும்,
முறையே கொள்ளவைப்பது. (நன். 237 மயிலை.)
|
உருபியல் நுவலும் செய்தி |
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் ஆறாம் இயலாகிய உருபியல் 30
நுற்பாக்களை உடையது. அவை நுவலும் செய்தி- களாவன:
அ ஆ உ ஊ ஏ ஒள – என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் வேற்றுமை யுருபுகளை
ஏற்கும்போது பொதுவாக இன்சாரியை பெறும். சில அகரஈற்றுப் பெயர்களும், யா
என்ற ஆகார ஈற்றுப் பெயரும் வற்றுச்சாரியை பெறும். சுட்டு முதல் உகரஈறு
அன்சாரியை பெறும். சுட்டு முதலாகிய ஐகார ஈறு வற்றுச் சாரியை பெறும்.
யாவை என்பதும் வற்றுச்சாரியை பெறும். நீ என்பது நின் என்றாகும். ஓகார
ஈறு ஒன்சாரியை பெறும். அஆ ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபு ஏற்கும்போது
அத்துச் சாரியையும் பெறும். ஞ் ந் – ஈறுகள் இன்சாரியை பெறும்.
மகரஈறு அத்தும் இன்னும் பெறும். எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றும்,
உயர்திணைக்கண் நம்மும் பெறும். யான், யாம், நாம், தான், தாம் – என்பன
நெடுமுதல் குறுகும். எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும்
என்பது நும்முச்சாரியையும் பெறும். அழன், புழன் – என்பன அத்தும்
இன்னும் பெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும்.
குற்றியலுகர ஈறுகள் இன்சாரியை பெறும், அவற்றுள் எண்ணுப்பெயர்கள்
அன்சாரியை பெறும். அஃது இஃது உஃது என்பனவும், யாது என்பதும் அன்சாரியை
பெறும். திசைப் பெயர்க்கு முன் ஏழனுருபு வரின் இன்சாரியை பெறுதலும்,
பெறாமல் புணர்தலும் என இருதிறனும் உள.
இன்ன செய்திகள் நிலைமொழிகள் உருபுகளை வருமொழி யாகக் கொண்டு
புணரும்வழி நிகழ்வனவாகக் கூறப்பட்டுள.
உயிரீற்றுள் இகரஈற்றுப் பெயர்களும், நீ என்னும் பெய ரொன்றும்
ஒழிந்த ஈகாரஈற்றுப் பெயர்களும், அவை இவை உவை யாவை- என்ற நான்கும்
ஒழிந்த ஏனைய ஐகாரஈற்றுப் பெயர்களும், தான் யான் – என்ற இரண்டும்
ஒழிந்த ஏனைய னகரஈற்றுப் பெயர்களும், ஏழ் என்ற எண்ணுப்பெயர் ஒழிந்த
ஏனைய ழகரஈற்றுப் பெயர்களும் – இவை யெல்லாம் உருபொடு கூடுமிடத்துச்
சாரியை பெற்றும் பெறாமலும் புணரும்.
அஆஉஊஏஓஒள – என்ற ஏழ் உயிரீற்றுப் பெயர்களும், ஞ் ந் ம்வ்- என்ற
நான்கு மெய்யீற்றுப் பெயர்களும், ஒற்று இடை மிகும் ஈரெழுத்தொரு மொழிக்
குற்றியலுகரச் சொற்கள் ஒழிந்த ஏனைய பெயர்களும், தொடர்மொழிக்
குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் உருபொடு கூடுமிடத்துச் சாரியை பெற்றே
வரும்.
நும் தாம் யாம் நாம் – என்ற மகரஈற்றுப் பெயர்களும், தான் யான் என்ற
னகரஈற்றுப் பெயர்களும், இடை ஒற்றுமிகும் ஈரெழுத்தொருமொழிக்
குற்றியலுகர ஈற்றுப் பெயர்களும் சாரியை பெறாமல் வரும்.
உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண்ணும் செல்லுமிடத்து அவை
அகத்தோத்துக்களில் மாட்டேற்றான் குறிக்கப்படும். (தொ. எ. 173 – 202
நச்.) (எ. ஆ. பக். 133)
|
உருபு ஏற்கும்போது அத்துச்சாரியை
பெறுவன |
அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபு ஏற்குமிடத்து இடையே
அத்துச்சாரியை பெறுதலுமுண்டு. மகரஈற்றுப் பெயர்களும், அழன் புழன் என்ற
னகரஈற்றுப் பெயர்களும் உருபுகள் ஏற்குமிடத்து அத்துச்சாரியை
பெறுதலுமுண்டு.
எ-டு : விள +கண்
> விள + அத்து + கண் =
விளவத்துக் கண்; பலா+ கண்
> பலா + அத்து + கண் = பலா
வத்துக்கண் (தொ. எ. 181 நச்.); மரம் + ஐ
> மரம் + அத்து + ஐ = மரத்தை
(தொ.எ. 185 நச்.); அழன் + ஐ
> அழன் + அத்து + ஐ = அழத்தை;
புழன் + ஐ
> புழன் + அத்து + ஐ =
புழத்தை. (தொ.எ. 193 நச்.)
|
உருபு ஏற்கும்போது அன்சாரியை பெறுவன |
அது இது உது – அஃது இஃது உஃது – யாது – ஒன்று முதல் பத்து ஈறாய
எண்ணுப்பெயர்கள் – ஆகியவை அன்சாரியை பெற்று உருபேற்கும்.
வருமாறு: அது + அன் + ஐ = அதனை; இது + அன் + ஐ = இதனை; உது +
அன் + ஐ = உதனை (தொ. எ. 176 நச்.)
அஃது + அன் + ஐ = அதனை; இஃது + அன் + ஐ = இதனை; உஃது + அன் + ஐ
= உதனை (தொ. எ. 200 நச்.)
(இடையே உள்ள ஆய்தம் கெடும் என்க)
யாது + அன் + ஐ = யாதனை (தொ.எ. 200 நச்.)
ஒன்று + அன் + ஐ = ஒன்றனை (தொ.எ. 198 நச்.)
ஏழ் + அன் + ஐ = ஏழனை (தொ.எ. 194 நச்.)
பத்து + அன் + ஐ = பத்தனை (தொ.எ. 198 நச்.)
|
உருபு ஏற்கும்போது ஆன்சாரியை பெறுவன |
ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்ணுப்பெயர்கள் நிலைமொழி யாய் நிற்க,
பத்து அல்லது பஃது வருமொழியாய் வருமிடத்து, பத்து பஃது – என்ற
சொல்லின் பகர ஒற்று நீங்கலாக எஞ்சியுள்ள அத்து அஃது கெட,
ஆன்சாரியையும் உருபும் புணரும் நிலைமையும் உண்டு.
வருமாறு : ஒரு பஃது+ ஐ
> ஒருப் + ஆன் + ஐ =
ஒருபானை
எண்பஃது + ஐ
> எண்ப் + ஆன் + ஐ =
எண்பானை
ஒருபது + ஐ
> ஒருப் + ஆன் + ஐ =
ஒருபானை
ஒன்பது + ஐ
> ஒன்ப் + ஆன் + ஐ =
ஒன்பானை
இருபது + ஐ
= இருபானை, முப்பது + ஐ =
முப்பானை…. முதலாயின கொள்க. (தொ. எ. 199 நச். உரை)
|
உருபு ஏற்கும்போது இடைஒற்று
இரட்டித்து உருபு ஏற்பன |
டு று என்பனவற்றை ஈறாகவுடைய ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகர ஈற்றுச்
சொற்களும், சிறுபான்மை உயிர்த் தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்களும்
இடையே ஒற்று மிக்கு இன்சாரியை பெறாமல் உருபேற்கும். பிற்காலத்தே
இன்சாரியை பெறும் மரபும் ஏற்பட்டது.
எ-டு : யாடு + ஐ = யாட்டை., யாட்டினை; பாறு + ஐ = பாற்றை,
பாற்றினை; குருடு + ஐ = குருட்டை, குருட்டினை; முயிறு + ஐ = முயிற்றை,
முயிற்றினை
(தொ. எ. 196, 197 நச். உரை)
|
உருபு ஏற்கும்போது இன்சாரியை பெறுவன |
அஆஉஊஏஒள- ஞ் ந் ம்வ் ன் – குற்றுகரம் – என்பவற்றை ஈறாகக் கொண்ட
பெயர்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : விளவினை, பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வெளவினை
(தொ. எ. 173 நச்.)
உரிஞினை, பொருநினை – (தொ.எ. 182 நச்.)
உருமினை – (தொ.எ. 186 நச்.)
தெவ்வினை – (தொ.எ. 184 நச்.)
அழனினை, புழனினை – (தொ.எ. 193 நச்.)
நாகினை, வரகினை – (தொ.எ. 195 நச்.)
ஓகார ஈறு : கோவினை, சோவினை, ஓவினை – 180 நச். உரை
உருபியல் புறனடையான் உயிரீற்றுள் இகர ஈகார ஐகார ஈறுகள் இன்சாரியை
பெற்றும் பெறாதும் உருபேற்கும்.
எ-டு : கிளியினை கிளியை; தீயினை, தீயை; தினையினை, தினையை
புள்ளியீற்றுள் ணகர யகர ரகர லகர ளகரங்கள் இன்சாரியை பெற்றும்
பெறாமலும் உருபேற்கும்.
எ-டு : மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை; கல்லினை,
கல்லை; முள்ளினை, முள்ளை (தொ.எ. 202 நச்.)
|
உருபு ஏற்கும்போது ஒன்சாரியை பெறுவன |
உருபுபுணர்ச்சிக்கண் ஓகார ஈற்றுப் பெயர்கள் சில ஒன்சாரியை பெற்று
உருபேற்கும். எ-டு : கோ+ஒன்+ஐ = கோஒனை (தொ. எ. 180 நச்.)
இது பிற்காலத்து‘ன்’ சாரியை ஆயிற்று. சோ – முதலிய ஓகார ஈற்றுச்
சொற்கள் ஒன்சாரியை பெறும் வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
|
உருபு ஏற்கும்போது தம்முச் சாரியை
பெறுவது |
உருபேற்குமிடத்து எல்லாரும் என்பது தம்முச்சாரியை பெற்று உருபேற்று
உம்மையை இறுதிக்கண் கொண்டு, எல்லார் தம்மையும் – எல்லார்தம்மொடும் –
எல்லார்தமக்கும் – என்றாற் போலப் புணரும். (தொ. எ. 191 நச்.)
|
உருபு ஏற்கும்போது தொடக்கம்
குறுகும் பெயர்களின் நிலை |
யான் யாம் நாம் நீ தான் தாம் – என்பன தொடக்கம் குறுகி முறையே என்
எம் நம் நின் தன் தம் – எனத் திரிந்து, என்னை எம்மை நம்மை நின்னை
தன்னை தம்மை – என்றாற் போல உருபேற்கும். (தொ. எ. 179, 188, 192
நச்.)
|
உருபு ஏற்கும்போது நம்முச்சாரியை
பெறுவது |
எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர்திணையைக் குறிக்கு மிடத்து,
நம்முச்சாரியையும் உருபின்மேல் உம்மும் பெறும்.
வருமாறு : எல்லாநம்மையும், எல்லாநம்மொடும் (தொ. எ.
190 நச்.)
|
உருபு ஏற்கும்போது நும்முச்சாரியை
பெறுவது |
எல்லீரும் என்பது நும்முச்சாரியை பெற்று உருபேற்று உம்மை
இறுதிக்கண் அடைய, எல்லீர்நும்மையும், எல்லீர்நும்மொடும் என்றாற் போல
வரும். (தொ. எ. 191 நச்.)
|
உருபு ஏற்கும்போது வற்றுச்சாரியை
பெறுவன |
பல்ல பல சில உள்ள இல்ல – என்னும் அகர ஈற்றுப் பெயர்கள், யாவினா,
அவை இவை உவை- என்பன, யாவை என்பது, எல்லாம் என்னும் மகரஈற்றுப் பெயர்,
அவ் இவ் உவ் – என்ற வகரஈற்றுப் பெயர்கள் – என்பன வற்றுச்சாரியை பெற்று
உருபேற்கும்.
வருமாறு : பல்லவற்றை, பலவற்றை, சிலவற்றை, உள்ள வற்றை, இல்லவற்றை
(தொ. எ. 174 நச்.); யாவற்றை (தொ.எ. 175 நச்.); அவையற்றை, இவையற்றை,
உவையற்றை (தொ.எ. 177 நச்.); யாவை + வற்று + ஐ = யாவற்றை (தொ.எ. 178
நச்.); எல்லா வற்றையும் (தொ.எ. 189 நச்.); அவற்றை, இவற்றை, உவற்றை
(தொ.எ. 183 நச்.)
என, அகர ஆகார ஐகார மகர வகர ஈற்றுச் சொற்கள் சில வற்றுச்சாரியை
பெற்று உருபேற்றன.
|
உருபு திரிந்து உயிர்த்தல் |
வரிவடிவு திரிந்து தோன்றுதல் என்பது பொருள். மெய்கள் உயிர்களொடு
கூடுமிடத்தே, அகரத்தொடு கூடியவழிப் புள்ளி நீங்கிய தம் பண்டை வடிவே
வடிவமாயும், ஏனைய உயிர்களொடு கூடும்வழித் தம் மெய்வடிவில் சிறிது
திரிபு கொண்டு மேல்விலங்கு கீழ்விலங்கு பெற்றும், கொம்பு பெற்றும்,
கொம்பும் காலும் பெற்றும், கால்பெற்றும் வரிவடிவில் எழுதப்படுதல்.
வருமாறு : கா, ஙா – கால்கள் பெற்றன. தி, தீ – மேல் விலங்கு
பெற்றன. பு, பூ – கீழ் விலங்கு பெற்றன. கெ, கே, கை – கொம்பு பெற்றன.
கொ, கோ, கௌ – கொம்பும் காலும் பெற்றன. (தொ. எ. 17 நச். உரை)
|
உருபு புணர்ச்சி |
நிலைமொழியாகிய பெயர்கள், உருபுகளை வருமொழியாகக் கொண்டு இடையே,
ஈறுகட்கு ஏற்ப இன் அன் அத்து வற்று ஆன் ஒன்- முதலிய சாரியைகள்
பெற்றும் பெறாமலும் புணரும் புணர்ச்சி உருபுபுணர்ச்சியாம்.
எ-டு : மரம் + அத்து + ஐ = மரத்தை – அத்துச்சாரியை (தொ. எ. 185
நச்.); ஆ + ஐ = ஆனை- (இ)ன்சாரியை (தொ.எ. 120 நச்.); பொன் + ஐ =
பொன்னினை, பொன்னை; இன்சாரியை பெற்றும் பெறாதும் உருபொடு புணர்ந்தது.
(தொ.எ. 202 நச்.); மலை + ஒடு = மலை யொடு; சாரியை பெறாதும் ஈறு
திரியாதும் உருபொடு புணர்ந்தது. (தொ.எ. 202 நச்.)
உருபுகளின் புணர்ச்சி இடைச்சொற் புணர்ச்சியே எனினும் பெரும்பாலும்
வேற்றுமைப் புணர்ச்சியின் இயல்பில் அமையும். ஈண்டு உருபு என்றது,
எழுவாயும் விளியும் ஒழிந்த ஏனைய ஆறு உருபுகளையேயாம்.
உருபொடு புணரும் நிலைமைக்கண், யான் யாம் நாம் நீ நீர் தான் தாம்
-என்ற மூவிடப் பெயர்கள் முறையே என் எம் நம் நின் நும் தம் தம் – என
நெடுமுதல் குறுகி வருதல் வேற்றுமைப் பொருள் நோக்கம் பற்றி
நிகழ்வதாதலின் உருபுபுணர்ச்சிக்குச் சிறப்பாகக் கொள்ளப்படும். இது
பொருட்புணர்ச்சிக் கும்ஒக்கும். (நன். 242 சங்கர.)
|
உருபுகள் நாற்பது ஆமாறு |
பெயர் – ஐ – ஒடு – கு – இன்- அது – கண்- விளி- என்ற எட்டும்,
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல – என்ற ஐம்பாற் பெயரொ டும் உறழ,
வேற்றுமையுருபுகள் நாற்பதாம். (நம்பி- நம்பியை- நம்பியொடு- நம்பிக்கு-
நம்பியின்- நம்பியது- நம்பிகண் – நம்பியே – என ‘ஒருவன்’ என்னும்
வாய்பாட்டு ஆண்பாற் பெய ரோடு எட்டு உருபுகளும் வந்தன. ஏனைய நான்கு
பால்கட்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.) (நன். 242)
|
உருபுகள் நிலைமொழியாய் நின்று
புணர்தல் |
ஒருபெயர் உருபேற்கையில் பெயர் நிலைமொழியாகவும் உருபு
வருமொழியாகவும் இருக்கும். பெயர் அவ்வுருபினை ஏற்றபின் உருபு பெயரினது
ஒரு கூறாகித் தானும் பெயரொடு சேர்ந்து நிலைமொழியாகி வருமொழியொடு
புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அடங்கும்.
எ-டு : நம்பியைக் கொணர்ந்தான், மலையொடு பொருதது, ஊர்க்குச்
சென்றான்.
இவ்வாறு உருபு நிலைமொழி ஈறாகி வருமொழியொடு திரிந்தும் இயல்பாகவும்
புணர்ந்தவாறு. இவ்வகையாக உருபு விரிந்து நிலைமொழியின் ஈறாகி
வருமொழியொடு புணர் தற்குத் தொல்காப்பியத்தில் தனியே விதி இல்லை.
(தொ.எ. 202 நச்.)
|
உருபுபுணரியலில் திசைப்பெயர்ப்
புணர்ச்சி |
உருபுபுணரியலில், திசைப்பெயர்கள் இன்சாரியை பெற்றும் பெறாமலும்,
ஐகாரம் பெற்றும், பலவாக விகாரப்பட்டும் புணரும்.
எ-டு : அ) வடக்கின்கண், வடக்கண்;தெற்கின்கண், தெற்கண்;
குணக்கின்கண், குணக்கண்; குடக்கின்கண், குடக்கண்; கிழக்கின்கண்,
கிழக்கண்; மேற்கின்கண், மேற்கண் – இவை இன்சாரியை பெற்றும் பெறாமலும்
உரு பொடு புணர்ந்தன.
ஆ) கிழக்கின்கண் – கீழை; மேற்கின்கண் – மேலை; – இவை ஐகாரச்சாரியை
பெற்றன.
இ) கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை;
வடசார், வடபுடை – இவை சாரியை இன்றிப் பல விகாரப்பட்டு உருபொடு
புணர்ந்தன.(தொ. எ. 201 நச். உரை)
|
உருபுபுணரியல் உரைப்பன |
வேற்றுமையுருபுகள் நிலைமொழியொடும் வருமொழி யொடும் புணருமாறும்,
இடையே சாரியை பெறுங்கால் வரும் திரிபுகளும், விகுதி பதம் சாரியை உருபு
– இவை பொது விதியான் புணர்வனவும், இரண்டாம் மூன்றாம் வேற்றுமைப்
புணர்ச்சிகளின் சிறப்புவிதியும், எழுத்ததிகாரப் புறனடையும்
உருபுபுணரியலில் இடம் பெற்றுள்ளன. நன்னூல் எழுத்ததி காரத்து
இறுதியியலாம் ஐந்தாவது இது. இதன்கண் 18 நுற்பாக்கள் உள. (நன்.
240-257)
|
உருபுபுணர்ச்சி
பொருட்புணர்ச்சிக்கும் பொருந்தி வருதல் |
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உருபிற்குச் சென்ற சாரியையை
(அவ்வுருபு தொக்க) பொருட்புணர்ச்சிக்கும் கொள்வர். ஆயின் அது
தொல்காப்பியனார்க்கு உடன்பாடு அன்று. உருபிற்குச் சென்ற சாரியை
பொருட்புணர்ச்சிக்கும் ஒக்குமாயின், அவர் மாட்டெறிந்தே கூறுவார்.
‘நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும்’
(தொ. எ. 253 ந
ச்.)
‘சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்’
(263)
‘உருபியல் நிலையும் மொழியுமா ருளவே’
(294)
என மாட்டெறிந்து, மாட்டேற்றான் அதிகாரவல்லெழுத்து விலக்கப்படாது
ஆதலின், அதனை நீக்க ‘வல்லெழுத்து இயற்கை’ என்பார்.
எ-டு : நீ + ஐ
> நின் + ஐ = நின்னை (தொ. எ.
179 நச்.)
நீ + கை
> நின் + கை = நின்கை
(253)
அது + கு
> அது + அன் + கு
> அத் + அன் + கு = அதற்கு;
(176)
அது + கை
> அது + அன் + கை
> அத் + அன் + கை = அதன்கை
(263)
கோ + ஐ
> கோ + ஒன் + ஐ = கோஒனை
(180)
கோ + கை
> கோ + ஒன் + கை = கோஒன்கை
(294)
|
உருபுபுணர்ச்சி சிறப்பு விதி |
எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச் சாரியையும், உயர்திணைக்கண்
நம்முச்சாரியையும் பெற்று உருபேற்கும்; உருபினை அடுத்து உம்மை
பெறும்.
வருமாறு : எல்லாவற்றையும், எல்லாநம்மையும்
எல்லாரும் எல்லீரும் – என்பன எல்லார் எல்லீர் என முறையே நின்று,
அவற்றின்பின் முறையே தம் நும் என்ற சாரியை பெற்று உருபேற்று
ஈற்றின்கண் உம்மை பெற்று முடியும்.
வருமாறு : எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும்
மூவிடப் பெயர்கள் நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம்
என நின்று உருபொடு புணரும். நான்கனுருபு ஏற்குமிடத்து இம் முதல்
குறுகிய பெயர்கள் அகரச் சாரியை பெறும். நான்கனுருபும் ஆறனுருபும்
ஏற்குமிடத்து, என் எம்- முதலிய தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈறாக அமைந்த
இச்சொற்கள் பொதுவிதிப்படி ஈற்று ஒற்று இரட்டமாட்டா.
வருமாறு : என்னை, என்னால், என்னின், என்கண்
எம், நம் – முதலியவற்றொடும் இவ்வாறே ஒட்டுக.
யான் + கு
> என் + கு
> என் + அ + கு
> என + கு =
எனக்கு
யான் + அது
> என் + அது =
எனது
பிறவற்றோடும் இவ்வாறே ஒட்டிக் காண்க
ஆ மா கோ – என்ற பெயர்கள் னகரச் சாரியை பெற்றும் பெறாமலும்
உருபேற்கும்.
வருமாறு : ஆனை, ஆவை; மானை, மாவை: கோனை, கோவை (வகரம் :
உடம்படுமெய்)
ஒருபது முதல் எண்பது ஈறாகிய எட்டு எண்ணுப்பெயர்களும் ஒன்பது என்ற
எண்ணுப்பெயரும் உருபொடு புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வரின், ‘பது’
என்பதில் பகரமெய் நீங்கலாக ஏனைய கெடப் புணர்ந்து முடியும்.
வருமாறு: ஒருபது+ஆன்+ ஐ
> ஒருப் + ஆன்+ ஐ = ஒரு பானை;
எண்பது+ ஆன் + ஐ
> எண்ப் + ஆன் + ஐ = எண்பானை;
ஒன்பது + ஆன் + ஐ
> ஒன்ப் + ஆன் + ஐ =
ஒன்பானை
ஆன்சாரியை இடையே வாராதொழியின், ஒருபதை – ஒருபஃதை, எண்பதை –
எண்பஃதை, ஒன்பதை – ஒன்பஃதை – என்றாற் போல முடியும்.
அவ், இவ், உவ் – என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி அற்றுச் சாரியை
பெற்று, அவற்றை -இவற்றை – உவற்றை – என்றாற் போல முடியும்.
அஃது இஃது உஃது – என்ற சுட்டுப்பெயர்கள் உருபேற்புழி, ஆய்தம்
கெட்டு அன்சாரியை பெற்றுப் புணரும்.
வருமாறு : அதனை, இதனை, உதனை – என்றாற் போல முடியும். அது இது
உது – என்பனவும் உருபேற் புழி அதனை – இதனை – உதனை – என்றாற் போலப்
புணரும். (நன். 245 – 251)
|
உரும் என்ற பெயர் புணருமாறு |
உரும் என்ற பெயர், அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், வன்கணம் வரின்
உகரப்பேறும் வல்லெழுத்தும், மென்கண மும் இடைக்கணத்து வகரமும் வரின்
உகரப்பேறும் எய்திப் புணரும். உயிர்க்கணமும் யகரமும் வரின்
உகரப்பேறின்றி இயல்பாகப் புணரும்.
எ-டு : உரும் + கடிது, கடுமை = உருமுக் கடிது, உருமுக் கடுமை;
உரும் + நீண்டது, நீட்சி = உருமு நீண்டது, உருமு நீட்சி; உரும் +
வலிது, வன்மை = உருமு வலிது, உருமு வன்மை; உரும் + அடைந்தது, அடைவு =
உருமடைந்தது, உருமடைவு; உரும் + யாது, யாப்பு = உரும் யாது,
உரும்யாப்பு. (தொ. எ. 328 நச். உரை)
|
உரூபாவதாரம் |
ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவரால் இயற்றப் பட்ட வடமொழிஇலக்கண நூல். இது பாணினியின் சூத்திரங் கட்கு உரை போல அமைவது.‘நீதகஸ்லோகம்’ என்ற முதல் நினைப்புச் சூத்திரம் இந்நூலுக்குண்டு.யாப்பருங்கலக் காரிகை முதல்நினைப்புக்காரிகைகளை யுடையது என்ப தனைக்குறிக்குமிடத்தே, உரையாசிரியர் குணசாகரர் ‘உரூபாவதாரத்திற்குநீதகச்சுலோகமே போலவும்’ என உதாரணம் கூறுகிறார். (யா.கா. பாயிரம்உரை)
|
உரைச்சூத்திரம் |
உரையினிடையே உரைகாரர் இயற்றிய சூத்திரப்பா. (இ. கொ. 25) (L)
|
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன
கொளல்’ |
விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும், இதற்குப் பொருந் தாது என
உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ, அவ்விதியை அதற்குக்
கொள்க.
விகுதிப் புணர்ச்சி: ‘றவ்வொடு உகர உம்மை’ (நன். 145) – சென்று
என்புழி இறந்தகாலமும், சேறு என்புழி எதிர்காலமும் பொருந்தும்.
பதப்புணர்ச்சி :‘அல்வழி இ ஐ’ (176) – ஆடி திங்கள்- என இயல்பாம்
என்றும், பருத்திக் குறிது – என மிகும் என்றும் கொள்ளற்க. பருத்தி
குறிது – என எழுவாய்க்கண் இயல்பாம் எனவும், ஆடித் திங்கள் – எனப்
பண்புத்தொகைக்கண் மிகும் எனவும் கொள்க.
சாரியைப் புணர்ச்சி: ‘பதமுன் விகுதியும்’ (243)- நாட்டினின்
நீங்கினான்- என ‘இன்என வரூஉம் வேற்றுமை யுருபிற்கு’ இன்சாரியை வரும்
எனவும், நாட்டுக்கண் இருந்தான் – எனக் கண்ணுருபிற்கு இன்சாரியை வாராது
எனவும் கொள்ளற்க. நாட்டின் நீங்கினான் – என இன் உருபிற்கு இன்சாரியை
வாராது என்றும், நாட்டின்கண் இருந்தான்- எனக் கண்ணுரு பிற்கு
இன்சாரியை வரும் என்றும் கொள்க.
உருபுபுணர்ச்சி: ‘ஒற்றுயிர் முதலீற்று’ (242)- நம்பிகண்- எனக்
கண்ணுருபு (வல்லொற்று) மிகாது எனவும், நம்பிக்கு- எனக் குவ்வுருபு
‘மன்’ என்ற மிகையால் வலி மிகும் எனவும் கொள்க.
இவ்வாறு பொருள் காணாமல், மேற்காணும் நால்வகைப் புணர்ச்சியுள்
ஒன்றற்குச் சொன்னவிதி மற்றொன்றற்கும் கொள்க எனப் பொருள்
கொள்வாருமுளர். (நன். 254 சங்கர.)
|
உரைநடை |
செய்யுள்நடைக்கு மறுதலையாகிய வசனநடை. செய்யுளுக்கு உரிய அசைசீர்அடி தொடை முதலிய தேவைகள் உரை நடைக்கு இல்லை. (L)
|
உரைநடை இருபகுதித்து ஆதல் |
உரைவகை நடை நான்கனுள், முதலன இரண்டும் ஒரு பகுதியாகவும், ஏனையஇரண்டும் ஒரு பகுதியாகவும் அவற்றால் பயன் கொள்ளுங்காலத்துக்கொள்ளப்படும். இறுதியில் நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கேஉரித்து; ஏனைய இரண்டன் தொகுதியாக ஒன்று வரைவின்றி எல்லார்க்கும்உரித்து. (வரும் தலைப்புக் காண்க.) (தொ. செய். 174, 175 பேரா.)
|
உரைநடை வகைக்குஎடுத்துக்காட்டுக்கள் |
அ) கதை தழுவி வரும் தொடர்நிலைச் செய்யுட்கண் கதை நிகழ்வினைத்தொடர்புபடுத்துவதற்குப் புலவர் இடை யிடையே அமைக்கும் குறிப்பு, ஆ)பாவாக நடைபெறாமல் செய்யுள் தொடர்களாக வருவன, இ) அஃறிணைப் பொருள் களைஉயர்திணைக்குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக்கற்பனையாக உரைக்கப்படுவன, ஈ) கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னும்பின்னும் இடையினும் விதூடகக் கூற்றாக வருவன – என்பன நான்கும் உரைநடைவகைகள்.இவற்றிற்கு முறையே எடுத்துக்காட்டு வருமாறு :அ) சிலப்பதிகாரத்துள் இடையிடையே வரும் உரைகளும் கட்டுரைகளும்(இக்குறிப்பு ஒரு சொல்லானும் ஒரு தொட ரானும் பல தொடரானும் பொருள்விளக்கத்திற்கு ஏற்ப வரும்); ஆ) ஆத்திசூடியின் அறிவுரை போல – அறஞ்செயவிரும்பு, ஆறுவது சினம் – பாட்டினமைப்பை ஒத்து வருவன; ஒருபாவிற்குரியதிணை துறை முதலியன கூறுவதும் இதன்கண் அடங்கும்; இ) விழாக்காலத்துநிகழும் பாரதக் கதை போல்வன; இக்காலத்துச் சிறுகதை தொடர்கதைகளை இவ்வகைஒக்கும்; ஈ) எள்ளல் இளமை பேதைமை மடன் என்னும் அடிப்படையில், கேட்போர்வெண்ணகை கொள்ளுமாறு நிகழ்வன. (தொ. செய். 172 ச. பால.)
|
உரைநூல் |
1. உரைபெற்ற நூல் (திருக்குறள் போல்வன)2. உரையாகிய நூல் (அடிவரையறையின்றி வரும் இலக்கணத்தையுடையனவாகிய ஆறனுள் உரையும் ஒன்று. (தொ. செய். 165) (L)
|
உரைப்பகுதி |
காண்டிகையும் அகலம் கூறலும் உரைப்பகுதியாவன. (இறை. அ. 1 உரை)கருத்து உரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டுதலாகியமுப்பகுதியும் காண்டிகை. காண்டிகைப் பொருளை விரித்துரைத்தல்,காண்டிகைப் பொருளேயன்றி அப்பொருட்கு இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்றஉரைத்தல், மறுதலைக் கடா மாற்றம் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூலானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள்ஒற்றுமைகொளீஇத்துணி வொடு நிற்ப உரைத்தல் என அகலங்கூறல் மூவகைப்படும்.(பா. வி. பக். 162)
|
உரைப்பாட்டு மடை |
அடி சீர் வரையறையின்றி வரும் உரையாகிய செய்யுள் நடையவாகிய அடிகளைநடுவே மடுப்பது. சிலப்பதிகாரத்தில் இந்நடை பயிலக் காணலாம்.உரைப்பாட்டுத் தொடக்கத்தில் மடுக்கப்படுவது உண்டு.எ-டு : ‘குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி’ முதலாகிய 10 அடிகளில், பின் தொடரும் 12 அடி (சிலப். குன்றக்.):நேரிசையாசிரியப்பாவிற்கு முன்னர் இவ்வுரைப் பாட்டு மடை வந்தவாறு. இவ்வுரைப்பாட்டு மடை எதுகை மோனைத் தொடைகள் பயில நிகழ்கிறது.‘குமரியொடு வடஇமயத் தொருமொழியைத் துலகாண்ட சேரலாதற்கு’ (சிலப்.வாழ்த்துக்.) எனத் தொடங்கும் உரைப் பாட்டுமடையும் அவ்வாறேதொடக்கத்தில் அமைகிறது. எதுகைமோனைத் தொடை நயமும் பிற அடியமைப்பும்முற்பகுதியில் நிகழ்ந்தில. (அவை பிற்பகுதியில் அமைந்துள.)‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமில் ஏற்றின்மடக்கணீர் சோருதலும்… வருவதொன் றுண்டு’ (சிலப்.ஆய்ச்.)எனத் தொடங்கும் ஆறு அடிகளும் உரைப்பாட்டு இடையேமடுக்கப்பட்டமைந்தன. எதுகை மோனைத் தொடைகள் நயம் சிறப்ப அமைந்துள.இவ்வாற்றால், தொடை நயம் பெற்றோ பெறாமலோ அடிசீர் வரையறையின்றி,முன்னரோ இடையோ மடுக்கப்பெறுவது உரைப்பாட்டுமடை எனலாம்.
|
உரையசைக் கிளவி |
தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக் கும் சொல். அது
கேள் முதலிய முன்னிலை ஏவல் ஒருமைச் சொல். (தொ. எ. 34 நச். உரை)
கேண்மியா என்பதன்கண் மியா என்பது உரையசைச் சொல். (தொ. எ. 34. இள.
உரை)
‘ஆங்க என்னும் உரையசைக் கிளவி’
(தொ
.எ. 204 நச்.)
‘அம்ம என்னும் உரைப்பொருட் கிளவி’
(210)
‘அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி’
(தொ. சொ
. 267 சேனா.)
என்பனவற்றை நோக்கின், மியா என்பதே உரையசைக் கிளவி;கேள் என்பது
உரையசைக் கிளவி ஆகாது.
‘ஏவல் குறித்த உரையசை மியாவும்’ (தொ. எ. 244 நச்.) என ஆசிரியர்
கூறுதலின், மியா என்பதே உரையசைக் கிளவி. (எ.ஆ.பக். 36)
வருமாறு : கேண்மியா கொற்றா – என இயல்பாகப் புணரும். (தொ. எ. 224
நச்.)
|
உரையசைக்கிளவிப் புணர்ச்சி |
கட்டுரைக்கண்ணே அசைத்த நிலையாய் வரும் ஆங்க என்னும் இடைச்சொல்
உரையசைக் கிளவியாம். கட்டுரை – புனைந்துரை;அசைத்தல் –
சேர்த்துதல்.
‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக்
கேள்வனை விடுத்துப் போகி யோளே’
என்புழி, ஆங்க என்பது அங்ஙனே எனப் புனைந்துரைத்து நின்றது. சிறிது
பொருள் உணர்த்துவனவற்றை உரையசை என்ப. (தொ. சொ. 279 நச். உரை)
அகரஈற்று ஆங்க என்னும் உரையசை இடைச்சொல் வன்கணம் வந்துழி மிக்குப்
புணரும். ஆங்கக் கொண்டான் என வரும். (தொ. எ. 204 நச்.)
|
உரையாசிரியன் |
உரைகாரன்; ‘நூல் உரை போதகாசிரியர் மூவரும்’ (இ. கொ. 6 :23) (L)
|
உரையாசிரியர் |
1. உரையாசிரியன்மார்2. இளம்பூரணர்; ‘உரையாசிரியரும் உயர்திணை எனப்பட்ட பகுப்பைவிரிப்புழி…………………’ (தொல்.சொல். 2 சேனா) (L )
|
உரையாசிரியர் குறிப்பிடும்அறுநூற்றிருபத்தைந்து அடிகள் |
அசைச்சீர் 4; ஈரசைச்சீர் 10 + 6 = 16; மூவசைச்சீர் 4 + 60 = 64;ஆகச்சீர்கள் 84.இந்த 84 சீர்களிலும் இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரியஉரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்துவருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடிஎனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடிஎனவும், ஓரசைச் சீரான் வருவதனை அசையடி எனவும் வழங்கல் வேண்டும்.இயற்சீரடி, நேரீற்றியற்சீரடி எனவும் நிரையீற்றியற் சீரடி எனவும்இருவகைப்படும். நேரீற்றியற்சீரடியாவது நேரீறு நேர்முதலாகிய இயற்சீர்வருதலும் நேர்பு முதலாகிய ஆசிரிய உரிச்சீர் வருதலும் நேர் முதலாகியவெண்பா உரிச்சீர் வருதலும், நேர் முதலாகிய வஞ்சி உரிச்சீர் வருதலும்,ஓரசைச் சீர் வருதலும் என ஐந்து வகைப்படும்.நீரையீற்று இயற்சீரும் இவ்வாறே நிரை முதலாகிய ஐந்து சீரோடும் உறழஐந்து வகைப்படும்.ஆசிரிய உரிச்சீரடி, நேர்புஈறும் நிரைபு ஈறும் என இரு வகைப்படும்.அவற்றுள் நேர்புஈற்றுச்சீரினை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்துசீரோடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபு ஈற்றுச் சீரும் அவ்வாறேநிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும்.வெண்சீர், நேர் முதலொடு உறழ்தலும் நிரைமுதலொடு உறழ்தலும் எனஇருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களொடு உறழ்தல்ஐந்து வகைப்படும்; நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களொடு உறழ்தல்ஐந்து வகைப்படும்.நிரையீற்று வஞ்சியுரிச்சீர், முதலசையோடு ஒன்றுவனவும், ஒன்றாதனவும்என இருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரைபும் நிரையும் முதலாகியசீர்களொடு உறழ ஐந்து வகைப்படும்; ஒன்றாதது நேர்பும் நேரும் முதலாகியசீர்களொடு உறழ ஐந்து வகைப்படும்.உரியசையீற்று வஞ்சிச்சீரும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும்.அசைச்சீர் இரண்டும் அவ்வாறு இருவகையாக்கி உறழப் பத்துவகைப்படும்.இவ்வாறு தளை நேரொன்றாசிரியத்தளை முதலிய எழு வகைப்படும். அவ்வழிஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரிய உரிச்சீரும் அது. மூவசைச்சீருள் வெண்பா உரிச்சீர் ஒழிந்தன எல்லாம் வஞ்சியுரிச்சீராம்.அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்ற ஐந்தனையும் முதற்சீராக நிறுத்தி இவ்வைந்து சீரும்வரும் சீராய் உறழும்வழி 25 விகற்பமாம். அந்த இருபத் தைந்தன் கண்ணும்மூன்றாவது சீராக ஐந்து சீரையும் உறழ 125 விகற்பமாம். அந்தநூற்றிருபத்தைந்தன்கண்ணும் நான் காவது சீராக ஐந்து சீரையும் உறழஅளவடிக்கண் 625 விகற்பமாம். (தொ. செய். 48 இள.)
|
உரையின் இருகூறு, மூவகை, ஆறும்
ஏழும் பத்தும் பதின்மூன்றும் ஆகிய கூறுகள் |
தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என்பன இரு
கூறாம்.
பொழிப்பு, அகலம், நுட்பம் என்பன மூவகையாம்.
எடுத்துக்கோடல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொரு
ளுரைத்தல், வினாதல், விடுத்தல் – என்பன ஆறு கூறாம்.
பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம், பதப்பொருளுரைத் தல்,
ஏற்புழிக் காட்டல், எண்ணல்- என்பன எழுகூறாம்.
‘சொல்லே, சொல்வகை, சொற்பொருள் சோதனை,
மறைநிலை, இலேசு, எச்சம், நோக்கே, துணிவே,
கருத்தே, செலுத்தல் என்று ஈரைந்து கிளவியும்
நெறிப்பட வருவது பனுவல் உரையே’
என்பன பத்துக்கூறாம்.
சூத்திரம் தோற்றல், சொல் வகுத்தல், சொற்பொருளுரைத்தல், வினாதல்,
விடுத்தல், விசேடம் காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல்,
துணிவு கூறல், பயனொடு புணர்த்தல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம்
காட்டல், அதிகார வரவு காட்டல் – என்பன பதின்மூன்று கூறாம்.
இம்மத விகற்பம் எல்லாம் ‘பாடம் கருத்தே’ என்னும் இச்சூத் திரத்துப்
பதினான்கனுள்ளே அடங்கும். (நன். 20 மயிலை.)
|
உரையிற் கோடல் |
உரையிற் கோடல் என்பது உத்திவகைகளுள் ஒன்று. தொல் காப்பியம்
கூறியவற்றுள் இஃது இடம் பெற்றிலது. இவ் வுத்திவகையை உரையாசிரியன்மார்
எடுத்தாண்டுள்ளனர். நூற்பா வாயிலாக நேராக உணர்த்தப்படாத இன்றியமை யாத
செய்திகளை உரைவாயிலாக வெளியிடுவது இவ்வுத்தி வகை குறிப்பிடும்
செய்தியாம்.
எ-டு : மகரம் தன் அரைமாத்திரையின் குறுகும் என்பதே நூற்பாச்
செய்தி. அது கால்மாத்திரையாகக் குறுகும் என்பது உரையிற்கோடல். (தொ.எ.
13 நச். உரை)
‘புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை’ என்பதுதான் நூற்பாச் செய்தி.
உயிர் வருவழிப் புளியவிலை என சாரியை மகரம் கெடுதலும், புளியிலை என
அம்முச் சாரியை முழுதும் கெடுவதும் உரையிற் கோடல். (தொ.எ. 130
நச்.)
‘ஏ என் இறுதிக்கு எகரம் வரும்’ என்பதே நூற்பாச் செய்தி. ஏஎக்
கொட்டில் – ஏஎ நெகிழ்ச்சி – என எகரப்பேறு யாண்டும் கொள்ளாது ஏற்புழிக்
கொள்க என்பது உரையிற்கோடல். (தொ.எ. 227 நச்.)
தெவ் என்ற சொல் தொழிற்பெயர் போல உகரம் பெறும் என்பதே நூற்பாச்
செய்தி. தெவ்வுமாட்சி என்பதனொடு தெம் முனை எனவும் வரும் என்று
குறிப்பிடுவது உரையிற்கோடல். தெவ்வுமுனை ‘தெம்முனை’ எனவும் வரும்.
(தொ.எ. 382 நச்.)
ஐகாரம் ஒருமாத்திரை அளவிற்றாகக் குறுகும் நிலையுமுண்டு என்பதே
நூற்பாச் செய்தி. ஐகாரம் முதல் இடை கடை என்ற மூன்றிடத்தும் குறுகும்
என்பதும், ஒளகாரம் மொழி முதற் கண் குறுகும் என்பதும் உரையிற்கோடல்.
(தொ. எ. 57 நச்.)
தொ. எ. இளம்பூரணர் உரையிலும் இவ்வுத்திவகை 131, 141, 155, 211,
269, 471 முதலிய நூற்பாக்களில் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாற்றான், எடுத்தோத்தான் சொல்லப்படாமல், இலேசுக ளானும்
கொள்ளப்பட இயலாமல் உள்ள செய்திகள் உரையிற் கோடல் என்ற உத்திவகையான்
கொள்ளப்படுதலை உரை களில் காணலாம்.
|
உரைவகை சில |
உரை செய்தற்பொருட்டு எடுத்தெழுதிய மூலமும், “மன்று பறித் துண்ணேல்’
என்பதனை ‘மண்பறித் துண்ணேல்’ எனப் பாடம் ஓதுவாருமுளர்” என்றாற்
போல்வனவும் பாடவுரை.
குன்றியக்கால் என்பது குன்றிக்கால் என விகாரப்பட்டுநின்றது
(குறள் 14) என்றாற் போலச் சொல்லுக்களைக் குறித்து எழுதும் உரை
சொல்வகையுரை.
‘மதிமருட்டும் சிறுநுதற் பேரமர்க்கட் செய்யவாய் ஐய நுண் ணிடையாய்’
(யா. கா. 4) என்பதற்கு, ‘அறிவினை மயக்கும் சிறுநுதல் முதலிய
உறுப்புக்களை உடையாய்’ எனத் தொகுத்து எழுதுமுரை தொகுத்துரை.
உதாரணம் எடுத்தெழுதும் உரை உதாரணவுரை. இதனை மேற்கோளுரை, காட்டுரை,
எடுத்துக்காட்டுரை என வழங்குவர்.
என் நுதலிற்றோவெனின் எனவும், என்பாரும் உளராலோ வெனின் எனவும்
வினாவி எழுதும் உரை வினாவுரை.
இது கருதிற்று எனவும், இது கருதி என்க எனவும் எதிர்மொழி எழுதும்
உரை விடையுரை.
சூத்திரத்து உட்பொருளன்றி அங்கே வேண்டியிருந்தால்
பெய்துரைப்பதுவிசேடவுரை.
வேற்றுமையுருபு முதலியன தொக்கு நிற்பின் அவற்றை விரித்தெழுதுவது
விரிவுரை.
அதிகரித்தல், ‘வருவிக்கப்பட்ட’தென அதிகாரத்தொடு பொருந்தக் காட்டி
எழுதும்உரை அதிகாரவுரை.
சந்தேகப்பட நின்றவிடத்து, இதற்கு இதுவே பொருள் எனத் துணிந்து
எழுதும் உரை துணிவுரை. (நன்.21 இராமா.)
|
உரைவகை நடை நான்கு ஆதல் |
ஒரு பாட்டினை இடையிடையே கொண்டு நிற்கும் கருத்தி னான் வருவனவும்,பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவன போல்வனவும், பொருள்முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவனவும், பொய்யெனப்படாதுமெய்யெனப் பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலையும் என்று உரைப்பகுதிவழக்கு இந்நான்காம்.(தொ. செய். 173 நச்.)
|
உறழ்கலி |
இது கலிப்பா நால்வகைகளுள் (தொ. செய். 130) ஒன்று. ஒருவன் ஒன்று கூறஅதற்கு மற்றவன் மறுமாற்றம் கூறப் பின் அவற்றை அடுக்குவதொரு சுரிதகம்இன்றி முடிவது உறழ்கலியாம். இதன் அளவு அம்போதரங்க ஒருபோகின் அளவேயாம்.இதன்கண் பா மயங்கி வரும். சுரிதகம் நீங்க லாகக் கலிவெண்பாட்டிற்குஓதிய ஏனைய உறுப்புக்களை யெல்லாம் இது பெறும். உறழ்கலியில் ஒரு சிலஅருகிச் சுரிதகம் பெற்று வருதலுமுண்டு. அச்சுரிதகம் ஆசிரியமாகவேஇருக்கும். சில உறழ்கலிகள் தரவும் போக்கும் குன்றியும் வரும். போக்குஉடையன தரவு இன்றி வாரா. வெள்ளைக் கொச்ச கத்தைச் சுரிதகமாகக் கோடல்கூடாது. அதற்குச் சுரிதகத்தின் முடிக்கும் பொருள் உறழ்கலியில்அமையாது. ஆதலின் போக்கியல் வர வேண்டிய இடத்தே ஆசிரியமே போக்கிய லாகிவரும்.‘அரிநீர் அவிழ்நீலம்’ கலி. 91இது தரவும் பாட்டும் உடைத்தாய் ஐஞ்சீரடுக்கியும் அறுசீர்அடுக்கியும் போக்கின்றி அமைந்த உறழ்கலி.‘நலமிக நந்திய’ – கலி. 113இது போக்கு வருதல் கூடாது என்ற விதியைக் கடந்து ஆசிரியச் சுரிதகம்பெற்ற உறழ்கலி.‘ஒரூஉ நீ எம்கூந்தல் கொள்ளல்’ (கலி. 87)இது தரவும் போக்கும் இன்றி ஐஞ்சீரும் அறுசீரும் இடை யிடையேபெற்றுவந்த உறழ்கலி. (தொ. செய். 156 நச்.)
|
உறழ்ச்சி |
பிரத்தாரம்அனைத்தும் குருவாய் அமைந்த அடி ஒன்றில் (1 முதல் 26 எழுத்து வரைபெற்றவற்றுள் எந்த விருத்தத்தினுடைய தாயினும்) முதலாவது குருவின் கீழேஇலகு எனக் குறித்துக் கொண்டால், முதல்வகை கிடைக்கும். இது போலவே,அடுத்த வகையை முதலாவது குருவாகவே அமைய இரண் டாவதை இலகுவெனக்குறித்துக் கொண்டால் இரண்டாம் வகை கிடைக்கும். இது போலவே, அனைத்தும்இலகுவே கொண்ட அடியிலும் செய்க. உதாரணமாக அடிக்கு நான்கெழுத்துக்கள்கொண்ட ஒரு விருத்தம் பிரத்தாரம் செய்யும்போது 16 வகையாக உறழ்ச்சிபெறுவது காண்க. குரு என்பதை ‘கு’ என்ற எழுத்தாலும், இலகு என்பதை ‘ல’என்ற எழுத்தாலும் குறிப்பர்.1. கு கு கு கு 9 ல ல ல ல2. ல கு கு கு 10. கு ல ல ல3. கு ல கு கு 11. ல கு ல ல4. ல ல கு கு 12. கு கு ல ல5. கு கு ல கு 13. ல ல கு ல6. ல கு ல கு 14. கு ல கு ல7. கு ல ல கு 15. ல கு கு ல8. ல ல ல கு 16. கு கு கு லஇவற்றுள் முதலெட்டும் அனைத்தும் குருவான அடியின் பிரத்தாரம்;பின்னெட்டும் அனைத்து லகுவான அடியின் பிரத்தாரம்.இது நிலை (- பிரதிட்டை) என்ற பெயரைக் கொண்ட, ஓரடிக்கு நான்குஎழுத்துக்கள் கொண்ட விருத்தத்தின் பிரத்தாரம்.இவ்வாறு ஐந்து எழுத்துக்களைக் கொண்ட விருத்தங்களைப் பிரத்தாரம்செய்தால், முப்பத்திரண்டு வகை வரும். இதுபோலவே 26 எழுத்துக்கள் வரைகொண்ட அடிகளைக் கொண்ட விருத்தங்களைப் பிரத்தாரம் செய்தால், ஒன்றொன்றினும் அடுத்ததற்கு இருமடங்கு வகைகள் வரும். ஆறெழுத் திற்கு 64; ஏழுஎழுத்திற்கு 128. இவ்வாறே இறுதிவரை செய்து கொள்க. (வீ. சோ. 133)
|
உறழ்ச்சி வாரம் |
திரிதரும் கூறு என்று இத்தொடர் பொருள்படும்; “உந்தியில் தோன்றும்
காற்றினது திரிதரும் கூறுகள் பரா, பைசந்தி, மத்யமா என்பவை. இவை
அக்காற்று உந்தி முதல் மிடறுவரை எய்துதற்குரிய இடைப்பகுதியில்
அக்காற்றின் திரிதரு கூறுகள் பற்றி இடப்பட்ட பெயர்கள் ஆகும். பரையில்
எழுத்துக்கள் எல்லாம் ஒரே தன்மையாய் இருக்கும்; அது மூலாதாரத்தில்
நிகழும். பைசந்தி உந்தியில் தோன்றும்; அது யோகிகளுக்கே புலப்படும்.
மத்யமை நெஞ்சில் தோன்றும்” என வடமொழி இலக்கணங்கள் கூறுகின்றன. (தொ. எ.
102 நச்.) (எ. கு. பக். 106)
நாம் பேசும் எழுத்தொலி நான்காவது கூறாகிய வைகரீ. அது ‘துரீயம்
வாசம் மனுஷ்யா வதந்தி’ என்று கூறப்படுகிறது. (எ. ஆ. பக். 86)
|
உறழ்நிலை |
பல நிலைமையவாகப் பொருந்திவரும் தன்மை.(தொ. செய். 57 நச்.)
|
உறுப்பின் அகவல் |
‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க.
|
உறுப்பெழுத்து |
ஏனைய எழுத்துக்களுடன் கூடிச் சொற்கு உறுப்பாய்ப் பொருள்தருவது.‘அது’ : இச்சொல்லில் அ, து – என்ற இரண்டும் உறுப் பெழுத்து. (யா.வி. 2 உரை)இது சினைஎழுத்து எனவும் பெயர் பெறும்.‘யா என் சினைமிசை’ (தொல். எ. 34 நச்.)‘மியா’ என்பதன்கண் உள்ள ‘யா’ தொல்காப்பியனாரால் சினைஎழுத்துஎனப்பட்டது.
|
உற்கிருதி |
எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங் களுள் ஒன்று.ஒற்றொழித்து உயிரும் உயிர் மெய்யுமாக அடி ஒன்றற்கு 26 எழுத்துக்களாகவரும். நிரை முதலாகத் தொடங்கும் ஐஞ்சீர்க் கலிநிலைத்துறையுள்இச்சந்தம் பயில்வது. அடி தோறும் முதல் நான்கு சீர்களும் கருவிளங்காயாக ஐந்தாம்சீர் கருவிளங் கனியாக வரும்.எ-டு : ‘தொழுவடிய ரிதயமல ரொருபொழுதும் பிரிவரிய துணைவனெனலாமெழுமிரவி கிரணநிக ரிலகுதுகில் புனைதருசெ யிறைவரிடமாங்குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனுமெவருந்தொழுதகைய விமையவரு மறமருவு துதிசெய்தெழு துடிதபுரமே’ (வீ. சோ.139 உரை)‘உற்கிருதி’ என்னும் இருபத்தாறாம் சந்தத்தின் நில அளவை அறுநூற்றுத்தொண்ணூற்றொன்பதின் காதமும், நூற்றொரு கோலும், ஒருமுழமும், ஏழ்விரலும்எனக் கொள்க. (யா. வி. பக். 51)
|
உற்பவமாலை |
திருமாலின் பிறப்புப் பத்தனையும் அகவல்விருத்தத்தால்அந்தாதித்தொடையுறப் பத்துப்பாடல் பாடும் பிரபந்தம்.(இ. வி. பாட். 108. )திருமாலின் தசாவதாரமும் தோன்ற வாழ்த்திப் பாட்டுடைத் தலைவனைக்காக்குமாறு வேண்டி அகவல் விருத்தம் பத்துப் பாடுவது இதன் இலக்கணமாகப்பன்னிருபாட்டியல் (298) பகரும்.
|
உலக்கைப் பாட்டு |
உலக்கையால் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடும் ஒருவகைஇசைப்பாடல் வள்ளைப்பாட்டு. இப்பாட்டுள் ஒரு தலைமகனது வீரம் முதலியவைஇடம் பெறும்.சிலப்பதிகாரத்துள் வாழ்த்துக்காதைக்கண் ‘தீங்கரும்புநல்லுலக்கையாக’ முதலான பாடல் மூன்றும் வள்ளைப் பாட்டு.கலித்தொகையிலும் (41, 42, 43) வள்ளைப்பாட்டு இடைநிலைப் பாடல்களாகவந்துள்ளது.
|
உலா |
இளமைப் பருவமுற்ற தலைமகனைக் குலத்தானும் குடிப் பிறப்பானும்மங்கலங்களானும் பரம்பரையானும் இன்னான் என்பது தோன்றக் கூறி,பெரும்பாலும் அணிகலன்களான் அலங்கரித்துக்கொண்டுள்ள மகளிர் நெருங்கியஅழகிய பரத்தையர் வீதியிடத்து அன்னோன் பவனி வரப் பேதை முதலிய ஏழ் பருவமானார் கண்டு தொழ உலாவந்ததனைப் பாடுவது இப்பிரபந்தம் ஆம். நேரிசைக்கலிவெண்பாவால் இவ்விரண்டடி ஓரெதுகையாய்த் தனிச்சீர் பெற்றுவர இதுபாடப்படும். இவ்விரண்டடியாகிய இவ்வமைப்புக் ‘கண்ணி’ எனப்படும்.(இ.வி.பாட். 98)எ-டு : விக்கிரமசோழனுலா
|
உலாமகள் பருவம் |
ஐந்து முதல் ஏழ் ஆண்டு அளவும் பேதை; எட்டு முதல் பதினோர் ஆண்டுஅளவும் பெதும்பை; பன்னிரண்டு பதின் மூன்று ஆண்டு அளவும் மங்கை;பதினான்கு முதல் பத் தொன்பது ஆண்டு அளவும் மடந்தை; அதன்மேல் ஆறாண்டுஅளவும் அரிவை; இருபத்தாறுமுதல் முப்பத்தோர் ஆண்டு அளவும் தெரிவை;முப்பத்திரண்டு முதல் நாற்பது ஆண்டு அளவும் பேரிளம்பெண். இவ்வாறு ஏழுபருவ உலாமகட்கு வயது எல்லை சொல்லப்படும்.இவ்வயது எல்லை பாட்டியல் நூல்களில் சிறிதுசிறிது வேறுபடும்.(இ. வி. பாட். 99 – 103)
|
உலாமடல் |
கனவின்கண் ஒரு பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந் தோன்,விழித்தபின், “அவள் பொருட்டாக மடலூர்வேன்” என்று கலிவெண்பாவால்சாற்றுதல் உலாமடலாம். இதுவும் உலாப் போல இவ்விரண்டடி ஓரெதுகையாய்த்தனிச்சொல் பெற்று நேரிசைக்கலி வெண்பாவால் அமைவது.(இ. வி. பாட். 97)
|
உலோக விலாசனி |
இஃது ‘ஆடைநூல்’ போலத் தன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம்வல்லார்வாய்க் கேட்டுணரத்தக்கது.(யா. வி. பக். 491)
|
உளவெனப்பட்ட, படாத அளவு
நிறைப்பெயர்கள் |
உளவெனப்பட்ட அளவுப் பெயர்கள்: கலம் சாடிதூதை பானை நாழி மண்டை வட்டி
அகல் உழக்கு – என்ற ககரம் முதலாகிய ஒன்பது எழுத்துக்களையும் முதலாகக்
கொண்டு வரும் சொற்களாம்.
உளவெனப்பட்ட நிறைப்பெயர்கள்: கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மா வரை
அந்தை- என்பனவும், உகரமுதல் நிறைப்பெயர் உண்டேல் அதுவும் ஆம்.
உளவெனப்படாத அளவுப்பெயர்கள் இம்மி ஓரடை மிடா என்பனவும்,
தேயவழக்காய் வரும் ஒருஞார் ஒருதுவலி- என்பனவும் ஆம். (தொ. எ. 170 நச்.
உரை)
|
உள்ளுறை |
ஆசுகவிக்குக் கொடுக்கும் சமதியை. ‘ஒருவன் நேர்கொடுத்தஉள்ளுறைக்கப்போது உரைப்பதனை ஆசென்றார்’ (வெண்பாப் செய். 2) (L)
|
உழத்திப்பாட்டு |
உழவுச் செய்திகளைக் கூறும் பிரபந்தவகை. கடவுள் வணக்கம், மூத்தபள்ளி – இளையபள்ளி – குடும்பன் – வரவோடு அவன் பெருமை கூறல், முறையேஅவர் வரலாறு, நாட்டுவளன் முதலான உறுப்புக்கள் உற, பாட்டுடைத் தலைவன்பெருமை ஆங்காங்குத் தோன்ற, சிந்தும் விருத்தமும் வரப் பாடுவது என,முக்கூடற் பள்ளினை இலக்கியமாகக் கொண்டு சதுரகராதி இப்பிரபந்த இலக்கணம்கூறும்.வேந்தனைப் பெயர் கூறி அவன் வாழ்க என்று தொடங்கி வயலுள் நிகழும்தொழில்களை ஒருசேரத் தான் உணர்ந்த னள் எனப் பாடும் பத்துப்பாடல்தொகுப்பு உழத்திப்பாட் டாம். (பன். பாட். 335)
|
உழிஞை மாலை |
மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூமாலை சூடிப் படை வளைப்பதைக்கூறும் பிரபந்தம். மாலை யெனவே அந்தாதி யாகப் பாடல்கள் வரத்தொடுக்கப்படும் என்பது; மண்ட லித்து வருதலும் கொள்ளப்படும். (தொ. வி.283 உரை)
|