தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஈகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி

ஈகாரஈற்றுப் பெயர், அல்வழிக்கண் எழுவாய்த்தொடராயின், வருமொழி
வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், மென் கணமும் இடைக்கணமும் வரின்
இயல்பாகவும், உயிர்க்கணம் வரின் உடம்படுமெய் பெற்றும் புணரும்.
எ-டு : ஈக் கடிது, ஈ நன்று, ஈ யாது, ஈ யடைந்தது (தொ. எ. 249
நச்.)
(இக்காலத்து, வருமொழி வன்கணம் வரினும், எழுவாய்த் தொடரை
இயல்புபுணர்ச்சியாகவே கொள்ளும் வழக்கம் மிக்குளது.)

ஈகார ஈற்று அல்வழிப்புணர்ச்சியுள் இயல்பாவன

அல்வழிப்புணர்ச்சிக்கண் நீ என்ற முன்னிலை ஒருமைப்பெய ரும்,பீ என்ற
இடக்கர்ப்பெயரும், மேலிடத்தை உணர்த்தும் மீ என்ற பெயரும் இயல்பாகப்
புணரும். ‘மீ’ வலிமெலி மிகுதலு முண்டு. (நன். 178)
வருமாறு : நீ குறியை, பீ குறிது, மீகண்; மீக்கண், மீந்தோல் (தொ.
எ. 250, 251 நச்.)
‘மீ’ மெல்லெழுத்து மிகுதல் தொல்காப்பியனார் காலத் துக்குப்
பிற்பட்டது.

ஈகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

ஆ – என்ற சொல் முன் வரும் பீ என்ற ஈகார ஈற்றுச் சொல், ஈகாரம்
குறுகிப் பகரம் மிக்கு ஆப்பி – எனப் புணரும். இப் புணர்மொழிதான்
நிலைமொழியாக நிற்ப, நாற்கணம் வரினும், அல்வழிக்கண் இயல்பாக
முடியும்.
எ-டு : ஆப்பி +குளிரும், நன்று வலிது, அரிது = ஆப்பி குளிரும்,
ஆப்பி நன்று, ஆப்பி வலிது, ஆப்பி யரிது
பீ நீ மீ – என்பன அல்வழிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப் புணரும்.
எ-டு : பீகுறிது, சிறிது, தீது, பெரிது; நீ குறியை, சிறியை, தீயை,
பெரியை; மீகண், செவி, தலை புறம்.
மீ என்ற சொல்லுக்கு வல்லெழுத்து மிகுதலும் மெல்லெழுத்து
மிகுதலுமாகிய புணர்ச்சி ஒரோவழி உண்டு. எ-டு : மீக்கூற்று, மீந்தோல்
(நன். 178)

ஈகாரஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி

ஈகாரஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிகும்; பிற
கணங்கள் வரின் இயல்பாகப் புணரும்.
எ-டு : ஈக்கால், ஈச்சிறை, ஈத்தலை, ஈப்புறம்; ஈமாட்சி, ஈவன்மை,
ஈயாட்டம்,
வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் நீ என்ற முன்னிலைப் பெயர் நின்
எனத் திரிந்து வருமொழியோடு இயல்பாகப் புணரும். இரண்டாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சியில் நின் என்பது (வன்கணம் வருமிடத்து) நிற் எனத்
திரிந்து புணரும். உயிர்க்கணம் வரின் னகர ஒற்று இரட்டும்.
எ-டு : நின்கடமை, நின்நா(னா)டு, நின்யாழ், நின்னழகு, நிற்
புறங்காப்ப (தொ. எ. 252, 253 நச்.)

ஈன் புணருமாறு

ஈன் இவ்விடம் என்று பொருள்பெறும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள்
உணரநின்ற இடைச்சொல்லாம். இவ்விடைச் சொல் பெயர்த்தன்மை பெற்று
வருமொழியொடு புணர்வ தாம். வருமொழியில் வன்கணம் முதலெழுத்தாக வரின்,
ஈற்கொண்டான்-என்றாற்போல னகரம் றகரமாகத் திரிந்து புணரும்; ஈன்கொண்டான்
என்ற இயல்பு புணர்ச்சியுமுண்டு. (தொ. எ. 333 நச்.)

ஈம் கம் உரும்: புணருமாறு

இம்மூன்று சொல்லும் அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், முதனிலைத்
தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத மெய் வருமொழி முதலில் வரின், உகரச்
சாரியை பெற்றுப் புணரும்; ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே
அன்றி அகரச் சாரியையும் பெறும்.
எ-டு : ஈமுக் கடிது, கம்முக் கடிது, உருமுக் கடிது – அல்வழி;
ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை – வேற்றுமை; ஈமக்குடம்,
கம்மக்குடம் – வேற்றுமை (நன். 223)

ஈரசை மூவசைச் சீர்களுக்கு உதாரணம்

கருவிளம், கூவிளம், தேமா, புளிமா என்னுமிவை முறையே நிரை நிரை, நேர்நிரை, நேர் நேர், நிரை நேர் என்னும் ஈரசைச் சீர்க்கு உதாரணமாம்.கருவிளங்காய், கூவிளங்காய், தேமாங்காய், புளிமாங்காய்என்னுமிவையும், கருவிளங்கனி, கூவிளங்கனி, தேமாங்கனி, புளிமாங்கனிஎன்னுமிவையும் முறையே நிரை நிரை நேர், நேர் நிரை நேர், நேர் நேர்நேர், நிரை நேர் நேர்; நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை, நேர் நேர்நிரை, நிரை நேர் நிரை என்னும் மூவசைச்சீர்க்கு உதாரணமாம். இவற்றுள்வெண்சீர் நான்கனையும் இடைச்சீர் எனவும், வஞ்சிச்சீர் நான்கனையும்கடைச்சீர் எனவும் வீரசோழியம் குறிக்கிறது; ஈரசைச்சீராகிய ஆசிரியச்சீர்நான்கனையும் முதற்சீர் எனக் குறிக்கிறது. (வீ. சோ. 108)

ஈரசைச்சீர் மூவகைச்சீர்கள்

நேரசை நிரையசையாயுள்ளன இரண்டாய் ஒன்றினபோது ஈரசைச் சீராம் (நேர்நேர், நேர் நிரை; நிரை நிரை, நிரை நேர்) அவற்றின் ஈற்றசை நேரசையாகவும்(நேர் நேர் நேர், நேர் நிரை நேர், நிரை நிரை நேர், நிரை நேர் நேர்),நிரையசை யாகவும் (நேர் நேர் நிரை, நேர் நிரை நிரை, நிரை நிரை நிரை,நிரை நேர் நிரை) வரின் மூவசைச்சீராம். (வீ. சோ. 107)

ஈரடி மடக்கு

ஒரு பாடலில் நான்கடிகளுள் 1, 2; 1, 3; 1,4; 2, 3; 2,4; 3, 4 – ஆம்அடிகள் மடக்கி வரும் மடக்கு. இஃது அடிவகையால் ஆறு வகைப்படும். (தண்டி.96 உரை)

ஈரடி வருக்கம்

செய்யுள் வகை. முதலடி எழுத்துக்களே இரண்டாம் அடியினும் பொருள்வேறுபாட்டொடு மடக்கிவரப் பாடப்படும் ஈரடிப் பாடல். (w) (L)

ஈரடிப்பா

இரண்டடிகளால் இயன்ற பாட்டு; அவை குறள்வெண்பா, வெண் செந்துறை,குறட்டாழிசை போல்வன.

ஈரடிவெண்பா

குறள்வெண்பா; இஃது ஓரடி முக்கால் எனவும்படும்; அடியெதுகை பெற்றுஒருவிகற்பமாகவும், அது பெறாது இருவிகற்பமாகவும் வரும்.எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.’ (குறள். 1)இஃது ஒரு விகற்பம்‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு’ (குறள். 21)இஃது இரு விகற்பம். (யா .கா. 24)

ஈரளபு இசைத்தல்

தமிழில் உயிர்நெட்டெழுத்தும் உயிர்மெய்நெட்டெழுத்தும் ஒவ்வொன்றும்
இரண்டு மாத்திரை அளவிற்றாக ஒலிக்கும்.
(தொ. எ. 4, 10 நச்.)

ஈரளபெடைகளும் மயங்குதல்

எ-டு : ‘தேஎந் தாஅழ் பூஉங் காஅவளங்ங் கனிந்த மணிமன்றுள்விளங்ங் கொளியை உளங்கொளல் தவமே’ (சி. சொ. கோ. 42)முதலடி நாற்சீரும் உயிரளபெடை; ஏனைய அடியுள் முதற்சீர்கள்ஒற்றளபெடை. இவ்வாறு ஈரளபெடைகளும் ஒரு செய்யுட்கண்ணேயே மயங்கிவந்தன.(யா.வி.யுள் காட்டிய எடுத்துக்காட்டு ஏற்ப இல்லை.) (யா. க. 41உரை)

ஈராசிடை வெண்பா

இருகுறள் நேரிசை வெண்பாவுள், முதற்குறட் பாவினொடு தனிச்சீர்இடைவேறுபட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப் படாத உலோகங்களை ஒற்றுமைப்படப்பற்றாசு இடையிட்டு விளக்கினாற் போல முதற்குறட்பாவின் இறுதிக்கண்ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு வருவது ஒருசார் ஆசிடைநேரிசை வெண்பா. இரண்டு அசை கூட்டி உச்சரிக்கப்படுவது ஈராசிடை நேரிசைவெண்பாவாம்.எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன்வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்- வஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்வஞ்சியாய் வஞ்சியார் கோ’இதன்கண், முதற்குறட்பா இறுதிக்கண் ‘வாய்’ என்பத னொடு, நேர்ந் தேன்- என ஈரசை கூட்டி உச்சரிக்கப்படுதலால் இஃது ஈராசிடை நேரிசைவெண்பாவாயிற்று. (யா. கா. 24 உரை)

ஈரெழுத்து மடக்கு

மெய்வருக்கத்துள் இரண்டெழுத்துக்களே ஏனைய உயிர்க ளொடு சேர்ந்தும்தனித்தும் ஒரு பாடல் நிரம்ப வரும் மடக்கு.எ-டு : ‘மன்னுமான் மான்முன்ன மானமு மீனமாமின்னமா னேமுன்னு மானினி – மென்மெனமின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனேமன்னுமான் மானுமான் மான்,’‘மன்னுமால் மால்; முன்னம் மானமும் ஈனமாம், இன்ன முன்னும் மான்சனிமென்மென நாம் மின்னும் ஆம் என்னின், அன்ன மும் ஆம்; மான் மானும்(-ஒக்கும்) மால் மான் என் மனனே மன்னும்’ – எனப் பிரித்துப் பொருள்செய்யப்படும்.“எனக்குக் காமமயக்கம் உண்டாகிறது; முன்பிருந்த பெருமை குறைகிறது.இத்தகைய யான் நினைக்கும் தலைவி இப்போது மின்னலைப் போல மெல்ல மறைவாள்எனினும், அன்னம் போன்ற நடை அழகையும் காட்டுகின்றாள். மானினை ஒத்தமருண்ட பார்வையுடையாளாகிய இப்பெண் என்மனத் துள்ளும் தங்கியுள்ளாள்”என்று பொருள் தரும் பாடற்கண், மகரமும் னகரமும் ஆகிய இருமெய்யெழுத்துக்களே தனித்தும் உயிரொடு கலந்து உயிர்மெய்யாயும்வந்துள்ளன. (தண்டி. 97 உரை)

ஈரெழுத்துச்சீர்

தேமா, ஞாயிறு, போதுபூ, போரேறு, மின்னு, வரகு என்பன. இவை நேர்நேர்,நேர்நிரை, நேர்புநேர், நேர்நேர்பு, நேர்பு, நிரைபு ஆவன.எழுத்தெண்ணுங்கால், குற்றியலுகரம் எண்ணப்படாது முற்றியலுகரம்எண்ணப்படும் என்று கொள்ளும் பேராசிரி யர் நச்சினார்க்கினியர்முதலியோர் கருத்து, “இருவகை உகரமும் கூடி நேர்பு நிரைபு அசையாகும்”(செய். 4) என்று குறிப்பிடும் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று. (தொ.செய். 41 நச்.)

ஈரெழுத்துமொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி

கு சு து பு – என்ற நான்கனையும் ஈற்றெழுத்தாகவும், நெட்டெழுத்து
ஒன்றை முதலெழுத்தாகவும் கொண்ட ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர ஈற்றுச்
சொற்கள், வேற்றுமை அல்வழி என்ற இருவழியும் இயல்பாகப் புணரும்,
எ-டு : நாகுகால், நாகுஞாற்சி, நாகுவால், நாகசைவு – வேற்றுமை;
நாகு கடிது, நாகு நன்று, நாகு வலிது, நாகரிது – அல்வழி (தொ. எ. 412,
425 நச்.)
ஆறு என்ற எண்ணுப்பெயர், நிறை அளவுப் பெயர்களாகிய வன்கணம் வரின்,
அல்வழிக்கண் முதல் குறுகி இயல்பாகப் புணரும் (440); உயிர் முதல் மொழி
வரின், நெடில் குறுகாது இயல்பாகப் புணரும். வ-று : அறுகலம், அறு
கழஞ்சு; ஆறகல், ஆறுழக்கு. (தொ.எ. 449, 458 நச்.)
அவ்வெண்ணுப்பெயர் ஆயிரம் வருமொழியாயின் இயல்பா யும் நெடில்
குறுகியும் புணரும். வருமாறு : ஆறாயிரம், அறாயிரம் (தொ.எ. 469
நச்.)
யாது என்னும் வினாப்பெயர் அன்சாரியை பெற்று வேற் றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண் புணரும்.
எ-டு : யாதன் கோடு (தொ.எ. 422 நச்.)
ஈரெழுத்தொருமொழியாம் குற்றுகர ஈற்றுப்பெயர் சிறு பான்மை
அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணரும்.
எ-டு : ஏறங்கோள் (சீவக. 489) (தொ.எ. 417 நச்.)
சிறுபான்மை உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை என இன்சாரியை
பெறுவதுபோலப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் யாட்டின் கால் என்றாற் போல
இன்சாரியை பெறுதலுமுண்டு. (தொ.எ. 412 நச்.)
டு று – என்பனவற்றை ஈற்றிலுடைய ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர
ஈற்றுச் சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண்ணும் இனஒற்று இடையே மிக, வருமொழிக்கண் வந்த
வல்லெழுத்து இடையே மிகும். பொருட்புணர்ச்சிக்கண் இயல்புகணம் வரினும்
இனஒற்று இடையே மிகும்.
எ-டு : யாட்டை, யாட்டொடு; பாற்றை, பாற்றொடு; (தொ. எ. 196 நச்.)
யாட்டுக்கால், யாட்டுநிணம், யாட்டுவால், யாட்டதள்; ஏற்றுக்கால்,
ஏற்றுநிணம், ஏற்றுவால், ஏற்றதள் (தொ.எ. 411)
உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை, பாற்றினை – என்றாற்போல இன்சாரியை
பெறுதலும் கொள்க. (தொ.எ. 197)

ஈரேவல்

செய் என்ற ஏவல்வினையை அடுத்து வி-பி- என்ற விகுதிகளுள் ஒன்று
வருமாயின், செய்வி என்னும் ஓரேவல்மேல் ஓரேவல்; இவ்விகுதி மீண்டும்
இயையின் செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஈரேவல் நிகழும்.
எ-டு : நட – நடப்பி – நடப்பிப்பி; வா – வருவி- வருவிப்பி
செய் என்னும் ஏவல்வினைக்கண், ஏவல் வினைமுதல் ஒன்று; இயற்றும்
வினைமுதல் ஒன்று. செய்வி என்பதன்கண், ஏவல் வினைமுதல் இரண்டு; இயற்றும்
வினைமுதல் இரண்டு. செய்விப்பி என்பதன்கண், ஏவல் வினைமுதல் மூன்று;
இயற்றும் வினைமுதல் மூன்று.
நட – நடத்து – நடத்துவி – நடத்துவிப்பி; வருந்து – வருத்து –
வருத்துவி- வருத்துவிப்பி – எனவும் வரும். (நன். பத. 11 இராமா.)

ஈரொற்று உடனிலை

சொற்களில் யரழ என்னும் ஒற்றுக்களை அடுத்துக் கசதந பமஞங- என்ற
வல்லெழுத்துக்களும் மெல்லெழுத்துக்களும் வர, இவ்வாறு வெவ்வேறு
ஒற்றுக்கள் இரண்டு இணைந்து வருநிலை ஈரொற் றுடனிலையாம்.
எ-டு : வே
ய்
க்க, வா
ய்ச்சி, வா
ய்த்தல், வா
ய்ப்பு; கா
ய்
ங்கனி, தே
ய்ஞ்சது, கா
ய்ந்தனம், கா
ய்ம்புறம்; பீ
ர்க்கு, நே
ர்ங்கல்; வா
ழ்க்கை, வாழ்
ந்தனம்
செய்யுட்கண் லகர ளகரங்கள் திரிந்த னகரணகரங்களை அடுத்த மகரம்
ஈரொற்றாய் வந்து மாத்திரை குறுகும்.
வருமாறு : போலும்
> போல்ம்
> போன்ம்; மருளும்
> மருள்ம்
> மருண்ம். (தொ. எ. 29, 48,
51 நச்.)
மருண்ம் போல்வன தொல்காப்பியத்திற்குப் பிற்காலத்தன.
ஈரொற்றுடனிலை ஒருமொழியிலும் இருமொழியிலும் வரும்; சொல்லின்
இடையிலும் இறுதியிலும் வரும் என்பது பெற்றாம்.

ஈரொற்றுடனிலை, மூவொற்றுடனிலை பற்றி வீரசோழியம் குறிப்பன

ஈரொற்றுடனிலை, மூவொற்றுடனிலை என்பன மொழி யிடைத் தோன்றும் இடைநிலை
மெய்ம்மயக்கங்கள். வந்தார் என்புழி, தா என்ற எழுத்தை த்-ஆ என்று
பிரிக்குமிடத்தே, வந்த்ஆர் என ஈரொற்றுடனிலையாம். சார்ந்தார் என்புழி,
தா என்ற எழுத்தை அவ்வாறு பிரிக்குமிடத்தே, சார்ந்த்ஆர் என மூவொற்றுட
னிலையாம். (வீ. சோ. சந்திப். 4)

ஈரொற்றுத் தொடர்மொழி

குற்றியலுகர ஈற்றுச் சொற்களில் ஈற்றுக் குற்றியலுகரத்துக்கு
முன்னாக வல்லொற்றோ மெல்லொற்றோ வர, அதற்கு முன்னாக இடையொற்று ஒன்று வர
அமையும் சொற்கள் ஈரொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள்
எனப்படும். எ-டு : மொய்ம்பு, எய்ப்பு, ஆர்ந்து, ஆர்த்து, வாழ்ந்து,
வாழ்த்து. (தொ. எ. 407 நச்.)

ஈரொற்றுத்தொடர் இடைத்தொடர் ஆகாமை

யரழ – என்னும் மூன்று ஒற்றுக்களையும் அடுத்துக் கசதபங ஞநம-க்கள்
ஈரொற்றாக வர, அவற்றை அடுத்துக் குற்றியலுகர ஈறு அமையும். அப்பொழுது
குற்றியலுகரத்துக்கு முன்னே வந்த எழுத்து ஈரொற்றுத் தொடரில்
வல்லெழுத்தாகவோ மெல்லெழுத்தாகவோ இருக்கும். அடுத்த எழுத்தைக் கொண்டே
குற்றியலுகரத்துக்குப் பெயரிடப்படும் ஆதலின், குற்றியலுகரத்தை அடுத்த
எழுத்து ஈரொற்றுத் தொடரில் இடையெழுத்தாக வாராமையால், ஈரொற்றை இடையே
கொண்ட குற்றியலுகர ஈற்றுச் சொல் இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஆகமாட்டாது.
எ-டு : மொய்
ம்பு, நொய்
ம்பு, மொய்
த்து, பொய்
த்து; ஆர்
க்கு, ஈர்
க்கு; வாழ்
த்து, வாழ்
ந்து.
இரண்டு ஒற்று இடைக்கண் தொடர்ந்துநிற்கும் சொல்லின் கண், இடையின
ஒற்று முன்நின்றால், மேல் இடையினம் தொடர்ந்து நில்லா; வல்லினமும்
மெல்லினமுமே தொடர்ந்து நிற்கும். ஆதலின் சொல்லில் இடையின ஒற்று
இருப்பினும், குற்றியலுகரத்தை அடுத்த (ஈற்றயல்) எழுத்து வல்லொற் றாகவோ
மெல்லொற்றாகவோ இருத்தலின், அவ்வல் லொற்று மெல்லொற்றுப் பெயராலேயே
குற்றியலுகரம் குறிப்பிடப் பெறும் என்பர் நச். (தொ. எ. 407)

ஈறு இயல் மருங்கு

நிலைமொழி ஈற்றெழுத்து வருமொழி முதலெழுத்தொடு புணர்ந்து
நடக்குமிடம். நிலைமொழியீறு உயிராகவோ மெய்யாகவோ இருக்கலாம்; வருமொழி
முதலும் அவ்வாறே இருக்கலாம். ஈறு உயிர்மெய்யாயின் உயிராகவும், முதல்
உயிர்மெய்யாயின் மெய்யாகவும் கொள்ளப்படும். (தொ. எ. 39, 171 நச்.)

ஈற்றடி ஆதிமடக்கு

‘இவள்அளவு தீஉமிழ்வ(து) என்கொலோ, தோயும்கவள மதமான் கடாமும் – திவளும்மலையார் புனலருவி நீ அணுகா நாளின்மலையா மலையா நிலம்?’மலையா(ம்) மலைய அநிலம் – பொதியமலையில் தோன்றும் தென்றற்காற்று.“தலைவ! இவளை நீ வந்தடையாத நாள்களில், யானையின் முகத்தினின்றுவழியும் மதநீரை ஒத்து அருவி பாயும் பொதிய மலையினின்று தோன்றும்தென்றற்காற்று இவளொருத்திக்கு மாத்திரம் நெருப்பைக் கக்குவதன் காரணம்யாதோ?” என்று தோழி கூறிய இப்பாடல் ஈற்றடியின் ஆதியில் ‘மலையா மலையா’என மடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)

ஈற்றயல் அசை பற்றிக் குற்றியலுகரத்தைக் கணக்கிடுமாறு நிரம்பாமை

அது இது முதலிய முற்றுகரத்தை நீக்கவேண்டித் தனிக்குறிலி னாகிய
அசையை விடுத்து,
தனிநெட்டெழுத்தை அடுத்த குற்றியலுகரம் – காடு; தனிநெடிலொற்றை
அடுத்த குற்றியலுகரம் – காட்டு; குற்றொற்றை அடுத்த குற்றியலுகரம் –
கண்டு; குறிலிணையை அடுத்த குற்றியலுகரம் – பரசு; குறிலிணை ஒற்றை
அடுத்த குற்றியலுகரம் – வறண்டு; குறில் நெடில் அடுத்த குற்றியலுகரம் –
பலாசு; குறில் நெடில் ஒற்றை அடுத்த குற்றியலுகரம் – கிடேச்சு
என அசைபற்றிக் குற்றியலுகரம் வருமிடம் ஏழ் என்று கொள்ளின்,
பிண்ணாக்கு-சுண்ணாம்பு – பட்டாங்கு – விளை யாட்டு- இறும்பூது – முதலிய
சொற்கள் இவற்றுள் அடங்கா. பிண்ணாக்கு – சுண்ணாம்பு -பட்டாங்கு –
விளையாட்டு-என்பனவற்றை ஈற்றயலசை பற்றி நெட்டொற்றிறுதிக் குற்றிய
லுகரமாகவும்,இறும்பூது என்பதனை நெடிலிறுதிக் குற்றிய லுகரமாகவும்
அடக்கிக் கொள்ளினும், போவது – வருவது – ஒன்பது – முதலியன ஏழ்வகையுள்
ஒன்றனுள்ளும் அடங்காமை யின், அசையைக்கொண்டு குற்றியலுகரத்தை ஏழ்
வகையுள் அடக்குதல் நிரம்பாத இலக்கணமாம். (சூ. வி. பக். 29)

ஈற்றின் வரும் உயிர்மெய்கள்

உதாரணம்
இல்லன கூடுதல்
க் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள – – 10
ச் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ – – – 9
ஞ் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ ஓ – – – ஏ 8
ட் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ
x – – – ஏ,ஓ (2) 9
ண் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ
x – – – ஏ,ஓ (2) 9
த் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ ஓ – – – ஏ (1) 9
ந் அ ஆ
x ஈ – – ஏ ஐ ஓ ஒ – – இ (1)
8
ப் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ – – – 9
ம் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ ஓ ஏ (1) 9
ய் அ ஆ
x x x ஊ
x ஐ ஓ – – – இ,ஈ,உ,ஏ (4)
9
ர் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ
x – – – ஏ,ஓ (2) 9
ல் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ
x – – – ஓ (1) 9
வ் அ ஆ இ ஈ – – ஏ ஐ
x ஒள – – ஓ (1) 8
ழ் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ
x – – – ஏ,ஓ (2) 9
ள் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ
x – – – ஏ,ஓ (2) 9
ற் அ ஆ இ ஈ உ ஊ
x ஐ ஓ – – – ஏ (1) 9
ன் அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ – – – 9
கூடுதல் 20 161
மேலை அட்டவணையில் ஈற்றில் வரும் உயிர்மெய்கள்
எடுத்துக்காட்டுடையவை-141, எடுத்துக்காட்டில்லாதவை-20 ஆக 161ஆம்.
எகரம் எந்த மெய்யொடும் ஈற்றில் வாராது. ஒகரம் நகரமெய் யுடனேயே
வரும் (நொ). ஒளகாரம் ககர வகர மெய்களுடனே வரும்(கௌ,வெள).
உயிர்களுள் ஒளகாரம் நீங்கலான ஏனைய பதினொன்றும் மொழி யிறுதியில்
வரும். (தொ. எ. 77 நச்.)

ஈற்று உயிர்மெய்

சொல்லின் ஈற்று உயிர்மெய் உயிர்ஈறாகவே கொள்ளப்படும்.
உயிர்மெய்யாவது மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னு மாக ஒலிக்கும்
கலப்பெழுத்து ஆதலின், அதன் முதல்ஒலி மெய்யொலி, ஈற்றொலி உயிரொலியாம்.
ஆகவே உயிமெய் மொழிமுதலில் வரின் மெய்யெழுத்தாகவும், மொழியிறுதி யில்
வரின் உயிரெழுத்தாகவும் கொள்ளப்படும்.
‘பல’ என்பது ப் + அ + ல் + அ என்று அமைதலின், ஈற்றுயிர் மெய்
உயிரீறாகவே புணர்ச்சிக்கண் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 106 நச்.)

ஈற்று நிலை

உயிர் 12, ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் – என்ற மெய் 11,
குற்றிய லுகரம் – என்ற 24 எழுத்துக்களும் மொழியீற்றில் வருவனவாம்.
உயிர்க் குற்றெழுத்துக்கள் அளபெடையில் தனித்து ஈறாக வரும். ஆ அ, ஈ இ,
ஊஉ, ஏஎ, ஓஒ – என வருமாறு காண்க. எகரம் அளபெடைக்கண் தனித்து ஈறாதலன்றி,
மெய்யொடு கூடி ஈறாக வாராது. ஒகரம் நகரத்தொடு கூடி ‘நொ’ எனவும்,
ஒளகாரம் ககரத்தொடும் வகரத்தொடும் கூடிக் கௌ- வெள- எனவும் ஈறாம். (நன்.
107, 108)

ஈற்றுவினாப் புணர்ச்சி

நிலைமொழி ஈறாக வரும் ஆ ஏ ஓ-என்னும் வினாவிடைச் சொற்களும்,
முதலாகவரும் யா என்னும் அஃறிணைப்பன்மை வினாப்பெயரும் வருமொழி வன்கணம்
வருவழி இயல்பாம்.
எ-டு : உண்கா + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கா
கொற்றா……. உண்கே + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கே
கொற்றா……… உண்கோ + கொற்றா, சாத்தா, தேவா, பூதா = உண்கோ
கொற்றா………. யா + குறிய, சிறிய, தீய, பெரிய = யா
குறிய…………..
யா இயல்பு பற்றி உடன் கூறப்பட்டது. (நன். 159 மயிலை.)

ஈற்றெழுத்துக் கவி சொல்லல்

ஒருவர் கூறிய பாட்டின் கடையெழுத்தை முதலாகக் கொண்டு பிறர்இயற்றிவைத்த கவி ஒன்றனைக் கூறுதல். (L)