தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

இஃது உயிரெழுத்து வரிசையுள் மூன்றாவது; அங்காப்போடு அண்பல் முதலினை
நாவிளிம்பு உறப் பிறப்பது; ஒருமாத்திரை அளவினதாம் குற்றெழுத்து.
இஃது அண்மைச் சுட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் – இவன்,
இக்கொற்றன்.
இஃது ஒரு சாரியை – மண் + யாது = மண்ணியாது; வேள் + யாவன் =
வேளியாவன். (நன்- 206 சங்)
ய ர ல முதலவாகும் ஆரியச் சொற்களை இயக்கன், இராமன், இலாபம் என
வடசொல் ஆக்க இது முன் வருவது.
ஆரியச் சொற்களை வடசொல்லாக்க, வாக்யம் – வாக்கியம் க்ரமம் – கிரமம்,
சுக்லம் – சுக்கிலம் என, வல்லொற்றுக்களை அடுத்த ய ர ல இவற்றுக்கு
இடையே இது வருவது. (நன். 148, 149 சங்.)
இது விரவுப்பெயர் விகுதி – செவியிலி; ஆண்பாற்பெயர் விகுதி –
வில்லி; பெண்பாற்பெயர் விகுதி – கூனி; அஃறிணைப் பெயர் விகுதி – கனலி;
வினைமுதற்பெயர் விகுதி – அலரி; செயப்படுபொருள் விகுதி – ஊருணி;
கருவிப்பொருள் விகுதி – மண்வெட்டி; ஏவல் ஒருமை விகுதி – செல்லுதி;
வியங்கோள் விகுதி – காண்டி (காண்க); வினையெச்ச விகுதி – ஓடி; தொழிற்
பெயர் விகுதி – வெகுளி; பகுதிப்பொருள் விகுதி – உருளி. (இலக்கணச்
சுருக்கம் முதலியன)

இ ஈ முதலியவற்றின் பிறப்பிடமும் முயற்சியும்

இ ஈ எ ஏ ஐ என்பனவற்றின் பிறப்பிடம் மிடறு. இ ஈ என்பன அண்பல் முதலை
நாவிளிம்பு உறுதலால் பிறப்பன. அண்பல் முதலாவது மேல்வாய்ப்பற்களுக்குப்
பின்னர் உள்ள அண்ணம். (எ. கு. பக். 90).
பல்லினது அணிய இடத்தினை நாவினது அடிவிளிம்பு சென்று உற, இ ஈ
முதலியன பிறக்கும் என்பர் இளம்பூரணர் (தொ. எ. 86). இ ஈ முதலியன
அண்பல்லும் அடிநாவிளிம்பும் உறப் பிறப்பன என்பர் நச்.
இகரம் முதலாயின வடமொழியில் தாலவ்யம் எனப்படுத லின், இடைநாக்குத்
தாலுவினைச் சார அவை பிறக்கும். தாலுவாவது மூர்த்தாவின் மேற்பகுதி
(அண்ணம்) ஆதலின், அடிநாக்கின் விளிம்பு அண்பல்லைப்
பொருந்துதலின்று.
‘அண்பல் முதல்நா விளிம்பு உறல்’ (86) என்ற தொடரை ‘அண்பல்
முதல்நாவிளிம்பு உறல்’ என்று பிரித்துப் பொருள் கொள்ளாது,
‘அண்பல்முதல் நாவிளிம்பு உறல்’ என்று பிரித்துப் பொருள்கொள்ளல்
வேண்டும். இடைநாக்குத் தாலுவினில் அடுத்தலால் இகர ஈகாரம்
பிறக்கும்.
இ ஈ எ ஏ ஐ என்ற ஐந்தெழுத்துக்கும் பிறப்பிடமும் முயற்சியும்
ஒன்றாகக் கூறப்படினும், எகர ஏகாரங்களுக்கு முயற்சியில் சிறிது
வேறுபாடுண்டு. ஐகாரத்தில், கண்டத்துப் பிறக்கும் அகரம் முதலிலும்
தாலுவில் பிறக்கும் ஏகாரம் முடிவிலும் உள்ளன என்பதும், அவற்றின் ஒலி
முறையே அரைமாத்திரை யும் ஒன்றரை மாத்திரையும் ஆம் என்பதும் அறியப்படு
கின்றன. (எ. ஆ. பக். 77, 78, 79)

இகர ஈற்றுத் திங்கட்பெயர்ப் புணர்ச்சி

தமிழில் மாதங்களின் பெயர்கள் இகரம் ஐகாரம் என்ற இரண்டு ஈறுகளே
பெற்றுள. இகர ஈற்றுத் திங்கட்பெயர், வருமொழி வன்கணத்தில் தொடங்கும்
வினையும் வினைப் பெயரும் என்ற இவற்றொடு புணருமிடத்து, இக்குச்சாரியை
யும் இயைபு வல்லெழுத்தும் பெற்றுப் புணரும்.
எ-டு : ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான்; ஆடி + கொண்டவன் =
ஆடிக்குக் கொண்டவன்
ஆடிக்கு என்பது ஆடிமாதத்தின்கண் என்னும் ஏழன் பொருளது. (தொ. எ. 248
நச்.)

இகர யகரம் போலியாய் இருத்தல்

மொழியிறுதிக்கண் யகரம் வருமிடத்து அதற்குப் போலியாக இகரம் வந்து
இசைக்கும். எ-டு : நாய் – நாஇ (தொ. எ. 58 நச்.)

இகர விகுதியின் இயல்பு

இகர ஈறு தனித்து இயலாமையின் யாதானும் ஒரு மெய் யினை ஊர்ந்து வரும்.
அம்மெய் காலம் காட்டாது; அது காலம் காட்டின் இகர விகுதி காலம்
காட்டாது. (எ-டு: சேறி- இகரம் எதிர்காலம் காட்டிற்று (செல்+த்+இ);
ஆண்டுத் தகரம் காலம் காட்டாமல் நின்றது. அஃது எழுத்துப் பேறாம்.
சென்றி, செல்லாநின்றி- என்புழி இடைநிலைகள் காலம் காட்டின; ஆண்டு
இகரவிகுதி காலம் காட்டாது முன் னிலை யொருமைப் பாலையே சுட்டுவது. (நன்.
145 சங்கர.)

இகரஈற்று அல்வழிப் புணர்ச்சி

உயர்திணைக்கண் இகரஈற்றுப் பெயர், நம்பிக்கொல்லன் – நம்பிச்சான்றான்
– நம்பித்துணை – நம்பிப்பிள்ளை – எனவும், செட்டிக்கூத்தன் –
செட்டிச்சாத்தன் – செட்டித்தேவன் – செட்டிப் பூதன் – எனவும்,
இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கண் வருமொழி வன்கணம் வரின் மிகும்.
அஃறிணைக்கண் இகரஈற்றுப் பெயர், மாசித்திங்கள் – அலிக் கொற்றன் –
காவிக்கண் – குவளைக்கண் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையின் இடையே
வருமொழி வல்லெழுத்து மிகும்.
பருத்தி குறிது – எழுவாய்த்தொடர் இயல்பாகப் புணரும். உண்ணுதி
சாத்தா என வினைமுற்றுத் தொடர் இயல்பாகப் புணரும். கிளி குறிது
கிளிக்குறிது எனச் சிறுபான்மை எழுவாய்த் தொடர் உறழ்ந்து முடியும்.
ஓடிச் சென்றான் என வினை யெச்சம் மிக்கது. ‘சென்மதி பாக’ என இகரஈற்று
இடைச் சொல் இயல்பாக முடிந்தது. கடிகா என இகர ஈற்று உரிச் சொல் இயல்பாக
முடிந்தது. இனிக் கொண்டான் அணிக் கொண்டான் இக் கொற்றன் என இகர ஈற்று
இடைச்சொல் மிக்கது (தொ. எ. 236 நச்.) ( 158 நச். உரை)
அவ்வழி கொண்டான், அவ்வழிக் கொண்டான் என இகர ஈற்று இடைச்சொல்
உறழ்ந்து முடிந்தது. (159 நச். உரை)

இகரஈற்று இடைச்சொல் புணர்ச்சி

அதோளி – இதோளி – உதோளி – எதோளி – என்ற இடப் பொருளை உணர்த்தி நின்ற
இகரஈற்று இடைச்சொற்கள், அதோளிக் கொண்டான் என்றாற்போல் வல்லெழுத்து
மிக்கு முடியும். அவ்வழி – இவ்வழி – உவ்வழி – எவ்வழி – என்பன, அவ்வழி
கொண்டான் அவ்வழிக் கொண்டான் என்றாற் போல உறழ்ந்து முடியும்.
இனி – அணி – என்பனவும், சுட்டிடைச்சொல்லும், வன்கணம் வரின் வந்த
வல்லெழுத்து மிக்கு முடியும்.
எ-டு : இனிக்கொண்டான், அணிக்கொண்டான், இக் கொற்றன். (இனி –
இப்பொழுது; அணி – அணிய இடத்து; இ – இவ்விடத்து) (தொ. எ. 159, 236.
நச்).

இகரஈற்று நாட்பெயர்ப் புணர்ச்சி

நாள் – நாள்மீன். தமிழில் நாண்மீன்களின் பெயர்கள் இகரஈறு – ஐகார
ஈறு – மகரஈறு – என்ற மூவீற்று மொழிகளாகவே உள்ளன. இகரஈற்று
நாட்பெயர்கள், வருமொழி வன்கணத்தில் தொடங்கும் வினை வினைப்பெயர் என்ற
இவற்றொடு புணரு மிடத்து, ஆன்சாரியை பெற்று ஆனின் னகரம் றகரமாகத்
திரிந்து முடியும்.
எ-டு : பரணி + கொண்டான் = பரணியாற் கொண்டான்; பரணி + கொண்டவன் =
பரணியாற் கொண்டவன்.
இதற்குப் பரணிக்கண் என ஏழன்பொருள் விரிக்க. (தொ. எ. 247 நச்.)

இகரஈற்று வினைகள் எதிர்காலம்முதலியன காட்டல்

இகரஈற்று மொழிகட்கு இகரம் எதிர்காலம் காட்டுவதன்றி இடைநிலைநின்றும் காலம் காட்டும் என்பது தோன்ற ஐ ஆய் என்னும் விகுதிகளோடுஇகரவிகுதியை உடன் கூறினார்.இகரம் எதிர்காலம் காட்டுதல் ‘இ(ம்)மார் எதிர்வும்’ (145) என்றகாலம் காட்டும் விகுதிச் சூத்திரத்தான் அறியலாம். இடை நிலை நின்றுஇறந்தகாலமும் நிகழ்காலமும் காட்டும்.உண்டி : டகர இடைநிலை நிற்ப, இகரஈற்று முற்று இறந்த காலம்காட்டியது. உண்ணாநின்றி : இடைநிலை நிகழ்காலம் காட்டியது. இகரவிகுதிஎதிர்கால இடைநிலையும் பெற்று வருதல் வழக்கில் இல்லை. (இரண்டு வரினும்எது எதிர் காலம் காட்டிற்று என்ற ஐயப்பாடு எழும்.) (நன். 335சிவ.)வருவி நடப்பி – முதலியவற்றை இகர விகுதி வகர இடை நிலையும் பகரஇடைநிலையும் பெற்று எதிர்காலம் காட்டி வந்தமைக்கு உதாரணமாகக்காட்டுதல் சிவஞானமுனிவர்க்கு உடன்பாடன்று.

இகரஈற்றுச்சுட்டுப் புணர்ச்சி

இகரஈற்றுச் சுட்டிடைச்சொல், வன்கணம் வரின், வந்த வல்லெழுத்தும்,
மென்கணம் வரின் வந்த மெல்லெழுத்தும், இடைக்கணமாகிய யகரவகரங்கள் வரின்
வகரமும் இடையே பெற்றுப் புணரும்; உயிர்முதல்மொழி வருமிடத்துக் குறிலை
அடுத்த ஒற்றாக வகரம் இரட்டிக்கும்; செய்யுட்கண் இகரம் நீண்டு
புணரும்.
வ-று: இ + கொற்றன் = இக்கொற்றன்; இ + ஞாலம் = இஞ்ஞாலம்; இ +
நாய், மாடு = இந்நாய், இம்மாடு; இ + யானை = இவ்யானை; இ + வாடை =
இவ்வாடை; இ + ஆடு = இவ்வாடு; இ + வயினான = ஈவயினான (தொ. எ. 238
நச்.)

இகரஈற்றுப் பெயர் அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி

இகரஈற்று உயர்திணைப்பெயர் வன்கணம் வரின் மிக்குப் புணரும். எ-டு :
எட்டிக்குமரன், நம்பிப்பேறு (தொ. எ. 154 நச்.)
இகரஈற்றுப் பொதுப்பெயர், இருபெயரொட்டாயின் மிக்கும், எழுவாய்த்
தொடராயின் இயல்பாயும் வன்கணம் வந்துழிப் புணரும். எ-டு :
சாத்திப்பெண், சாத்தி பெரியள் என முறையே காண்க. (தொ. எ. 155 நச்.)
இவை அல்வழி முடிபு.
இகரஈற்று அஃறிணைப்பெயர், வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிக்கும்,
சிறுபான்மை உறழ்ந்தும் புணரும். எ-டு : கிளிக்கால், கிளிச்சிறகு –
மிகுதி; கிளிகுறுமை, கிளிக்குறுமை – உறழ்ச்சி (தொ. எ. 235 நச்.)
இகரஈறு இகரம் கெட்டு அம்முச்சாரியை பெறுதலுமுண்டு.
எ-டு : கூதாளி + கோடு = கூதாளங்கோடு; கணவிரி + கோடு =
கணவிரங்கோடு (தொ. எ. 246 நச்.)
இகரஈறு வருமொழியோடு இகரம் கெட்டுப் புணர்தலு முண்டு. எ-டு : கட்டி
+ இடி = கட்டிடி; கட்டி + அகல் = கட்டகல் (தொ. எ. 246. நச்.)
சில இகரஈறு அம்முப் பெறாது மெல்லெழுத்துப் பெறுதலு முண்டு. எ-டு :
புளிங்காய், புளிம்பழம் (தொ. எ. 246 நச்.)
இவை வேற்றுமை முடிபு.

இகரமுனை

முனை, முன், முன்னர் என்பன ஒருபொருளன. இகரம் நிலை மொழி
ஈற்றெழுத்தாக வருவதன் முன்னர் என்றவாறு. (தொ. எ. 126 நச்.)

இகரம் எகரமாகத் திரியும் வடநடைப் பதம்

சிபி மருமான்
செம்பியன் என்புழி, நிலைமொழி
முதல் இகரம் எகரமாகத் திரிந்தது. (தொ. வி. 86 உரை)

இகரவிகுதி வினைமுதற்பொருண்மை உணர்த்தல்

இகரவிகுதி வினைமுதற்பொருண்மையை உணர்த்துதலைச் சேர்ந்தாரைக் கொல்லி
– நூற்றுவரைக் கொல்லி – நாளோதி – நூலோதி – முதலிய சொற்களில் காணலாம்.
இவற்றுக்கு முறையே தன்னைச் சேர்ந்தவரை அழிப்பது – ஒரேநேரத்தில்
நூறுபேர்களை அழிப்பது – நட்சத்திரங்களைச் சொல்லு பவன் – நூலினை
ஓதுபவன் – என்று பொருள் கூறுக. (சூ. வி. பக். 33)

இக்குச்சாரியை புணருமாறு

இக்குச்சாரியை இகர ஐகார ஈற்று நிலைமொழிகளொடு புணரும்வழி அது தன்
முதலெழுத்தாகிய இகரம் கெடப் புணரும்; வருமொழி வன்கணம் மிகும்.
எ-டு : ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண் டான்; சித்திரை
+ இக்கு + கொண்டான் = சித்திரைக் குக் கொண்டான் (தொ. எ. 126, 127
நச்.)

இக்குச்சாரியை வரும் இடங்கள்

இகர ஐகார ஈற்றுத் திங்கட்பெயர்கள், வருமொழி வல் லெழுத்து முதலாகிய
வினைச்சொல்லோடு ஏழாம் வேற்று மைப் பொருளிற் புணருமிடத்து, இடையே
இக்குச்சாரியை வரும்.
எ-டு : ஆடிக்குக் கொண்டான், சித்திரைக்குக் கொண் டான்
தமிழில் திங்கட்பெயர்கள் பன்னிரண்டும் இகர ஐகார ஈற்றுள் அடங்கும்.
ஆடிக்கு, சித்திரைக்கு என்பன ஆடிக்கண், சித்திரைக்கண் என ஏழாம்
வேற்றுமைப் பொருள்படுவன. (தொ. எ. 248, 286 நச்.)

இங்கித கவி

1) பாட்டுடைத் தலைவன் கருத்தினை விளக்கும் பாடல்2) இனிமை தரும் கவி பாடுவோன் (L)

இசை அளவுபா

இசைப்பா – இசையுடன் சேர்ந்த பாக்களில் ஒருவகை.(சிலப். 6 : 35 உரை)

இசை குறிப்பு எச்சங்கள்

‘தும்முச் செறுப்ப அழுதாள்நுமருள்ளல், எ ம்மை மறைத் திரோ என்று’ (குறள் 1318) என்புழியும், ‘அந்தாமரை அன்னமே நின்னையான்அகன்று ஆற்றுவானோ’ (கோவை. 12) என்புழியும் முறையானே ‘ நும்மோடு யாதும் இயை பில்லாத என்னை’ எனவும், ‘ உயிரினும் சிறந்த நின்னை’, ‘இருதலைப் புள்ளின் ஓருயிரேன் ஆகியயான்’ எனவும் வந்த தொடர் மொழிகள் எச்சமாய் நின்ற இசைப்பொருளைஉணர்த்தலான் இசையெச்சமாயின வாறு காண்க. இவ்விசை விகாரத்தை வடநூலார்‘காகு’ என்ப.‘உ ண்டார்கண் அல்லது அடுநறாகாமம்போல், கண்டார் மகிழ்செய்தல் இன்று’ (குறள் 1090) என்புழியும், ‘கண்ணுளார் காத லவராகக் கண்ணும், எழுதேம்கரப்பாக்கு அறிந்து’ (1127) என்புழியும் முறையானே ‘மகிழ்செய்தற்கண் காமம் நறவினும்சிறந்ததே எனினும், இவள்குறிப்பு ஆராய்ந்தறியாமையின் யான் அதுபெற்றிலேன்’ எனவும், ‘யான் இடையீடின்றிக் காண்கின்ற வரைப் பிரிந்தார்என்று கருதுமாறு என்னை?’ எனவும் வந்த தொடர்மொழிகள் எச்சமாய் நின்றகுறிப்புப் பொருளை வெளிப்படுத்தலான் குறிப்பெச்சம் ஆயினவாறுகாண்க.(இ. வி. 350 உரை)

இசை நுணுக்கம்

இஃது ஓர் இசைத்தமிழ் இலக்கணநூல். இடைச் சங்கத் தார்க்கு நூலாகஇருந்தவற்றுள் இதனையும் ஒன்றாக இறை யனார் அகப்பொருள் உரை எண்ணும்.இந்நூல் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலம் வரைஇருந்து இறந்தது போலும். இது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன்பொருட்டுச் செய்த இடைச்சங்கத்து வழிநூல் என்ப. (சிலப்.அடியார்க்.உரை)‘முந்து நூல்’ எனப்பட்டவற்றுள் இசை நுணுக்கமும் ஒன்றாகஉரைக்கப்படும். (தொ. சிறப். நச்.)ஆதியின் முனைவன் தமருகத்தினின்று ஆரியத்திற்கு முதல் நூலாகமாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத் தில் தானே அவனதுவாயினின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்து மூன்று சொற்கள் தோன்றின.அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை நுணுகி ஆராய்ந்த விடத்தே,இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் முற்றத்தோன்றும் இயல்பினவாயிருந்தமை யால், அச்சூத்திரங்கட்கு ‘இசை நுணுக்கம்’எனப் பெயர் வழங்கிற்று. இசை என்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கைமுதல்நூல் எனப்படும். இசைநுணுக்கம் என்னும் பெயரான் இசைத்தமிழேகூறுவதாகிய நூலொன்றுமுண்டு. அது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன்பொருட்டுச் செய்த இடைச்சங்க காலத்து வழிநூல். (பா. வி. பக். 96, 97)

இசை நுவல் மரபின் இயன்ற பாடல்

‘இசைப்பா’ காண்க.

இசை விரளச் செந்தொடை

ஈரடிகளில் ஓரடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும்வருவது. (யா. வி. 50 உரை)எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறிமயிலினம் அகவு நாடன்நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே!என முதலடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும்வந்தவாறு.

இசைக்குமன : சொல்லிலக்கணம்

‘இசைக்குமன’ என்பது செய்ம்மன என்னும் வாய்பாட்டுத் தொழிற்பெயர்.அது ‘செய்யுமன’ என விரிந்து நின்றது. ‘இசைக்குமன சொல்லே’ என அதுபெயர்ப் பயனிலை கொண்டது. (இசைக்குமவை என்பது பொருள்.) (தொ. சொ. 1தெய். உரை)

இசைத்தமிழ்ச்செய்யுட்துறைக்கோவை

இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை என்னும் நூல் தன்கண் பயிலும்எடுத்துக்காட்டுக்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும் நூற்பாக்களையுடையது; இயல்தோறும் செய்யுள்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும்நூற்பாக்களை யும் அவ்வப்பகுதி இறுதிதோறும் உடையது. அதுபோலவேயாப்பருங்கலக்காரிகையும் உதாரணப்பாடல்கட்கும் இயல் தோறும்காரிகைச்சூத்திரங்கட்கும் முதல்நினைப்புணர்த்தும் காரிகைகளைத்தன்னகத்தே கொண்டது. முதல்நினைப்பு ஓதிய யாப்பருங்கலக்காரிகையாகியநூலுக்கு இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை எடுத்துக்காட்டாகஉரையாசிரியர் குணசாகரரால் எடுத்துக்காட்டப்படுகிறது. (யா. கா. 1உரை)

இசைத்தமிழ்ப்பா வகை

இசை துணையாக இயலால் சிறந்து வருவன இசைத்தமிழ்ப் பாவகையாம்பரிபாடல், வரிப்பாட்டு, பண்ணத்தி, குரவை, அம்மானை, குறத்திப்பாட்டு,ஊசல், பாவை, கோத்தும்பி, உழத்தி, பூவல்லி, தெள்ளேணம், உந்தி, சாழல்,புலம்பல், தாழிசை, வண்ணம், தாண்டகம், மங்கலம், ஓடம், தாலாட்டு, ஏசல்,ஒப்பாரி, வள்ளை, ஏற்றம், வில்லு, கிளிகடி, குயில், ஆனந்தக்களிப்பு -என்பனவும், அன்ன பிறவும் இசைத்தமிழ்ப் பாவின்பாற்படும்.தாள மாத்திரையோடு பொருந்தும் பலவகைக் கண்ணிகள், சிந்து,தென்பாங்கு, கும்மி, தேவாரம் என்பனவும் அன்ன. பிறவும் இசையும்இயலுமாகிய இரண்டும் சமமாக இசைக்கும் தன்மையுடையன. (தென். இசைப்.6,7)

இசைநிறை அடுக்கிற்கு வரையறை

செய்யுட்கண் இசைநிறை அடுக்கிற்கு வரையறை நான்கு ஆகும். ஆகவே,இசைநிறை இரண்டு முறையானும் மூன்று முறையானும் நான்கு முறையானும்அடுக்கி வரும்.எ-டு : ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’ – இரண்டு முறை.‘நல்குமே நல்குமே நல்குமேநாமகள் ’ – மூன்று முறை.‘பாடுகோ பாடுகோ பாடுகோபாடுகோ’ – நான்கு முறை. (தொ. சொ. 423. சேனா. உரை.)

இசைநிறை அளபெடை

செய்யுட்கண் ஓசையைநிறைக்க வரும் உயிரளபெடைகளும், ஒற்றளபெடைகளும்
(செய்யுள்) இசை நிறை அளபெடை களாம். அளபெடையுள் இவையே பெரும்பாலவாய்
நிகழ்வன.
எ-டு :


றாஅ
ர்க் குறுநோய் உரைப்பாய்
கடலைச்
செ
றாஅஅ
ய் வாழிஎன் நெஞ்சு’
‘க
ண்ண்
கருவிளை கார்முல்லை கூர்
எயிறு’
‘உறாஅர்’ என அளபெடுக்கவில்லையேல் ஓரசையாகிச் சீர் நிலை எய்தாது.
‘செறாஅஅய்’ என ஈரளபு எடாதொழியின் தளை சிதையும். ‘கண்ண்’ என ணகரமெய்
அளபெடாவிடில் ‘கண்’ ஓரசையேயாகிச் சீர்நிலை எய்தாது. ஆதலின் இவை
இரண்டளபெடையும் செய்யுளிசை நிறைக்க வந்தனவாம். (நன். 91 இராமா.)

இசைநிறை பொருள் உணர்த்துதல்

சொற்கள் ஓசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டு தலின்,இசைநிறையும் பொருளுணர்த்திற்றேயாம்.எ-டு : ‘அளிதோ தானேஅது பெறலருங்குரைத்தே’ (புறநா.5) (தொ. சொ. 157 நச். உரை)

இசைநிறைக் கிளவி

அசைநிலைக் கிளவி போலப் பிரிந்துநில்லாது, ஒரு சொல் லோடுஒற்றுமைப்பட்டு இசை நிறைத்தற் பொருட்டாகி நிற்பன. (தொ. சொ. 246 தெய்.உரை.)

இசைநிறைக் கிளவி ஆகி வருவன

இசைநிறைக்கிளவி இடைச்சொல்வகை ஏழனுள் ஒன்று. இசைநிறைக் கிளவிகள்செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வருவன.ஏ, குரை, ஆங்க, ஒப்பில்போலி என்பன இசைநிறைத்தற்கு வருவன.‘ஏஏ இஃதொத்தன் நாணிலன்’ (கலி.62)(தொ. சொ.274 நச். உரை)‘அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே’ (புறநா. 5)(தொ. சொ. 274 நச். உரை)‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’(தொ. சொ. 279 நச். உரை)‘நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்’ ( நாலடி 124)(தொ. சொ. 280 நச். உரை)

இசைநிறைவு ஆதல்

நெடில் நீண்டிசைக்க வேண்டின், அந்நீட்சிக்குரிய ஓசையை அந்நெடிலின்
இனமாகிய குறில் உடன்வந்து நிறைத்தல்.
எ-டு : ஐ ஒள நீண்டிசைக்க வேண்டின், அவற்றை அடுத்து முறையே இகர
உகரங்கள் வந்து அந்த நீளவேண் டிய இசையை நிறைவுசெய்தல்.
ஐஇ ஐஇஇ; ஒளஉ ஒளஉஉ எனவரும். (தொ.
எ.42 நச்.)

இசைநூல் அளபெடை

இலக்கணக்கொத்து விளக்கும் அளபெடை வகைகளுள் ஒன்று. மொழியின்முதல்இடைகடைகளில் வரும் குற்றெழுத் தளபெடை, நெட்டெழுத்தளபெடை,ஒற்றெழுத்தளபெடை என்ற மூன்றும், இயற்கையளபெடையும் செயற்கையள பெடையும்எழுத்துப்பேறளபெடையும் இசைநூலளபெடை யும் என நால்வகையாக வரும்.விளி பண்டமாற்று ஆர்த்தல் புலம்பல் முறையிடுதல் – முத லானவிடத்துச்சொற்குப் பின் தோன்றாது கூடப் பிறப்பது இயற்கையளபெடையாம்.எ-டு : ‘உப்போஒஒ என உரைத்து’ ‘அண்ணாவோஒஒஒ’சீர்தளை வழுவினவிடத்துச் சொல் பிறந்த பின் புலவன் பெய்து கொள்ளுதல்செயற்கையளபெடையாம்.எ-டு : ‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (குறள். 2)எழுத்துப்பேறு (அளபெடை) உயர்மயங்கியல் முதலான இடங்களில் ‘அராஅப் பாம்பு’ முதலான தொகைகளில் காணலாம்.இசையளபெடை வழக்கினுள் காமரத்தாரிடையே (இசை பாடுவோரிடம்) காண்க. (இ.கொ. 90)

இசைப்பா (1)

இசையொடு சேர்ந்த பாக்களில் ஒருவகை. (சிலப். 6: 38 உரை)(2) நாற்பெரும்பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசையுள் அடங்கப்பாடப்படும் பாடலாகிய செந்துறைப் பாடல். (யா.வி.பக். 579) இசைப்பாப்பத்துவகைப்படும் : அவையாவன- (1) செந்துறை, (2) வெண்டுறை, (3) பெருந்தேவபாணி, (4) சிறுதேவபாணி, (5) முத்தகம், (6) பெரு வண்ணம், (7)ஆற்றுவரி, (8) கானல்வரி, (9) வரிமுரண், (10) தலைபோகு மண்டிலம்என்பன.(சிலப். 6: 38 அடியார்க். உரை)

இசைப்பாட்டின் பெயர்

பாணி, வரி, பண், இசை, கானம், கொளை, பாண், கீதம், கந்தருவம்,கேயம், காமரம் என்பன . (திவா. பக். 235)

இசைப்பாட்டு

பண்ணும் திறமுமான இராகங்களும் இராக வகைகளும் பொருந்தி, குழலுடனும்யாழுடனும் இசைந்து, தாள வகைகளுடனும் முழவுடனும் சேர்ந்து இசைப்பதாய்,பொரு ளாழம் கொண்ட சொற்கள் புணரப் பாடுவது. இதைக் ‘கீதவுரு’ என்றும்சொல்லுவதுண்டு.கீர்த்தனம் (கீர்த்தனை) எனப்படுவதும் இதனுடன் அடங்கும் பல்லவி,அநுபல்லவி, சரணம் என்பவற்றைப் பெற்றுத் தாளமும் முறையும் வழுவாமல்,இராகதாளம் சேர்ந்து, இசை வல்லுநரால் செய்யப்படும் பாட்டேகீர்த்தனமாவது. அநுபல்லவியின்றி வரும் கீர்த்தனமும் உண்டு.வரிப்பாட்டு என்பதும் இசைப்பாட்டின் வகையே (சிந்து, ஆனந்தக்களிப்பு,கும்பி என்பனவும் இசைப் பாட்டுக்களே) (நாடக. 71-75)

இசைமரபு

இசையிலக்கணம் கூறும் ஒருநூல். (சீவக. 658 நச்.)

இசையிடன் மகரம் குறுகுதல்

லகரளகரங்கள் திரிந்த னகரணகரங்களின் முன் (இடமுன்) வரும் மகரம்,
தான் மொழியின் ஈற்றெழுத்தாக, தனக்கு முன்னருள்ள எழுத்தின் ஓசையான் தன்
அரைமாத்திரையின் குறுகுதல். போன்ம், மருண்ம் என வரும். (முன் –
காலமுன்).
இசையிடன் – தனக்கு முன்னருள்ள எழுத்தின் ஓசையிடத்து. (தொ. எ. 13
இள., நச்.) (பிறன்கோட் கூறல் எனும் உத்தி என்பது தவறு) இடையிடன் –
இசைநூலிடத்து (தொ. பொ. 665 பேரா.) இதுவே பிறன்கோள் கூறல் என்றும்
உத்திவகை.

இசையின் திரிதல்

எடுத்தல் படுத்தல் நலிதல் என்ற ஓசைவேறுபாட்டான் புணர்ச்சி
வேறுபடுதல்.
‘செம்பொன்பதின்றொடி’ என்ற புணர்மொழி, செம்பு என்ற சொல்லை எடுத்துச்
சொல்லியவழிச் செம்பு ஒன்பதின்தொடி எனவும், பொன் என்ற சொல்லை எடுத்துச்
சொல்லியவழிச் செம்பொன் பதின்தொடி எனவும் பிரிந்து பொருள்பட்டு
ஒரேவகையான புணர்மொழி ஆயினவாறு. (தொ. எ. 141 நச்.)

இசையெச்சம்

ஒரு தொடர்க்கண் இரண்டு முதலிய சொற்கள் எஞ்சி நின்று பிற பொருள்உணர்த்தற்கு வருவிக்கப்படும் நிலையில் இருப்பது இசையெச்சமாம்.எ-டு : ‘அளித்தஞ்சல் என்றவர்நீப்பின் தெளித்தசொல்தேறியார்க்கு முண்டோ தவறு’ (கு. 1154)என்னும் தொடர்க்கண் ‘நீத்தார்க்கே தவறு’ என்ற செய்தி எஞ்சிநிற்பதும்,“அகர முதல எழுத்தெல்லாம்ஆதிபகவன் முதற்றே உலகு” (குறள்.1)என்னும் குறட்பாவின் இடையில் ‘அதுபோல’ என்ற சொற்றொடர்மறைந்திருப்பதும் இசையெச்சம் என்றார் சேனாவரையர். (தொ. சொ. 440)‘வயிறு மொடுமொடுத்தது’ என்றால், இசையின் குறிப்பா கிய ‘உண்ண வேண்டா’ என்னும்எஞ்சுபொருளைத் தானே கூறி நின்றது இசையெச்சம் என்றார்நச்சினார்க்கினியர். (தொ. சொ. 440)இசையெச்சம் ஒன்றற்கு மேற்பட்ட சொற்கள் எஞ்சி நிற்பதாம்.நன்னூலார், வினையியலின் ஒழிபாகிய பெயரெச்ச வினை யெச்ச முடிவும்,இடையியலின் ஒழிபாகிய ஏனை உம்மை – சொல் – பிரிப்பு – என – ஒழியிசை -எதிர்மறை – ஆகிய அறு வகை எச்ச முடிபும் எடுத்து விதந்தார். இவ்வாறுஎடுத்து விதத்தற்கு வரையறைப்படாது வரும் சொல்லெச்சங்களை யெல்லாம்தொகுத்து ‘இசையெச்சம்’ என இறுதிக்கண் கூறி னார். இசை என்பது சொல்.இசையெச்சம் எனப் பொதுப் படக் கூறினமையின், இவ்வெச்சமும் இது கொள்வதும்பெயர் வினை இடை உரி – என்னும் நால்வகைச் சொல்லுள் ஒன்றும் பலவும்தனித்தும் தொடர்ந்தும் வரும் என்பது பெற்றாம். அவற்றுள் இசையெச்சம்வருமாறு :‘இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று’ (குறள். 308)இதன்கண், பிறவுயிர்க்கு இன்னா செய்யின் அவை பிழை யாது தமக்குவருதல் கருதித் தம்மாட்டு அன்பும் – பிறவுயிர்கள் மாட்டு அருளும் -இன்னாசெய்தலான் மேல் வளரும் பிறப்பின் அச்சமும் – நம்மால் இன்னாசெய்யப்பட்டாரை நாம் அடைந்து இரத்தல் கூடினும் கூடும், அதனால் யார்மாட்டும் இன்னா செய்யக் கடவேம்அல்லேம் என்னும் வருங் கால உணர்ச்சியும்- இலராய், ஒருவர் தன்னால் ஆற்றக் கூடாத இன்னாதவற்றைத் தன்கண்செய்தாராயினும், அவர் தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாதுதன்னை அடைந்தாராயின், அவர் செய்த இன்னாமை கருதி அவரை வெகுளாது அவற்றைமறந்து அவர் வேண்டும் குறை முடித்து, முன்செய்த இன்னாமையால்கூசியொகுதல் தவிர் தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலாயின தன்கண்குறிப் பின்றி நிகழ அவர்க்கு இனியவனாயிருத்தல் தன் சால்புக்கு நன்று -என, நால்வகைப் சொற்களுள் வேண்டுவன எல்லாம் தந்து அகலம் கூற வேண்டிநிற்பன இசையெச்சமாம் என்க. (நன். 360 சங்.)இசை என்பது சொல். இசை எனப் பொதுப்படச் சொன்னதினாலே, இந்த எச்சமும்இது கொண்டு முடிவதும் பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொல்லுள்ஒன்றும் பலவும் தனித்தும் தொடர்ந்தும் வரும். ‘இப்பட்டுச் சீனம்’என்றவழி, ‘இப்பட்டுச் சீனத்து உள்ளது’ என ஒருசொற் கூட்டி உரைப்பதும்பிறவும் இசையெச்சம் என்க.(நன். 401 இராமா.)இசையெச்சமாவது சொல் எஞ்சிநின்று குறிப்பால் பொரு ளுணர்த்தல். ஒருசொல் எஞ்சுவது சொல்லெச்சம் என்றும், இரண்டு சொற்கள் எஞ்சுவதுஇசையெச்சம் என்றும் பி.வி. நூலார் குறிப்பர்.எ-டு : ‘நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று’ (குறள்1318)எம்மை என்பதற்கு ‘நும்மோடு யாதும் தொடர்பில்லாத எம்மை’ என்றுபொருளுரைத்தல். இப்பொருள் இசையெச்சத் தால் வந்த குறிப்பு. இதனைஅலங்கார நூலார் ‘காகு’ என்பர். ‘காகு’ காண்க. (பி. வி. 50)

இசையெச்சம் : அதன் ஐவகை

ஒரு சொல் இரண்டு பொருள்பட நின்றவழி, தன்பொருள் ஒழியப் பிறிதுபொருளை உணர்த்தும் இசை எஞ்சிநிற்கு மன்றே? அஃது இசையெச்சமாவதுஎன்றுணர்க. ஏற்கும் சொற்களே கொள்ளப்படும்.பெயர்நிலைக் கிளவியின் ஆகுந – வேங்கை என்பது ஒரு மரத்திற்குப்பெயராயினும் புலிக்கும் பெயராயிற்று; ‘கை வேம்’ என்னும்பொருளும்பட்டது. இவ்வாறு ஒரு சொல்லி னானே பிறிதுபொருள் உணரின், அதைஉணர்த்தும் ஓசை எஞ்சிநின்றது என்க.திசைநிலைக் கிளவியின் ஆகுந – செந்தமிழ்நாட்டு வழங்கும் சொல்திசைச்சொல் ஆகியவழிப் பொருள் வேறுபடுவது இது. கரை என்பது வரம்பிற்குப்பெயர். ஆயினும் கருநாடர் விளித்தற்கண் வழங்குவர்.தொன்னெறி மொழிவயின் ஆகுந – செய்யுளகத்தும் பாவழக் கினும் வரும்தொடர்மொழி. ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று ஏறு ஆ மா எனவும்,குன்றின்கண் ஏறாநின்ற ஆமா எனவும், குன்றின்கண் ஏறா மா எனவும்பொருள்படும். இதற்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறு உணர்த்தலின்,அப்பொருண்மைகளை உணர்த்தலின், அப்பொருண்மை களை உணர்த்தும் இசை எஞ்சிநின்றது.‘காதற் கொழுநனைப் பிரிந்தலர்எய்தாமாதர்க் கொடுங்குழை மாதவி’ (சிலப் 5 : 189, 190)இது மாதவி என்ற பெண்ணுக்கும் குருக்கத்திக் கொடிக்கும் சிலேடை. இதுதொடர்மொழியாதலின் பெயர்நிலைக் கிளவியின் வேறோதப்பட்டது.மெய்ந்நிலை மயக்கின் ஆகுந – பொருள்நிலைமை மயக்கம் கூறுதல்.எ-டு : ‘குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி ஓங்கிய திருமணிக்காஞ்சி’(மணி . : 18 : 55, 56)குருகு – மாதவிக் கொடி, மாதவி என்ற பெண்; காஞ்சி – மேகலை என்ற அணி,அப்பெயருடைய பெண். (மாதவி பெற்ற மணிமேகலை என்றவாறு). இவ்வாறுபொருள்மயங்க வருவன இசையெச்சமாம்.மந்திரப் பொருள்வயின் ஆகுந : மந்திரம் என்பது பிறர் அறியாமல்தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறும் சொல். அதன்கண் ஆகுந – உலகினுள்வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டு வரும் ‘குழுவின்வந்த குறிநிலை வழக்கு’. அது வெளிப்பட்ட சொல்லால் உணரும்பொருட்டுமறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிற பெயரிட்டு வழங்குதலும் எனஇருவகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின்இசையெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன: வண்ணக்கர் காணத்தைநீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் போல்வன. இனி,எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு :‘மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும்எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும்திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே’என்னும் பாட்டுள், மண்ணைச் சுமந்தவன் – ந, வரதராசன் மகன் – ம,வரகாலி மூன்று – சி, இரண்டு மரம் – வா, ஓர்யாறு – ய – எனக் கூறநம(ச்)சிவாய’ எனப் பொருளாயிற்று. (தொ. சொ. 439 தெய். உரை)இவை ஐந்தும் தவிர, செய்யாய் என்னும் எதிர்மறை ‘செய்க’ என்றஉடன்பாட்டுப்பொருளைக் குறிப்பதும் இசையெச்ச மாம். (தொ. சொ. 440 தெய்.உரை)

இட உருபுகளின் வேறுபட்ட நிலைகள்

இடவுருபுகள் உருபினை ஏலாதும் ஏற்றும் பெயராய் நிற்றலேயன்றி, உருபுதொக்க பெயராதலும் உண்டு.எ-டு : கண் அகல் ஞாலம் – இடம்அகன்ற உலகம்கண் அகன் பரப்பு – இடம் அகன்ற பரப்புஇவற்றுள் கண் என்பது உருபு ஏலாத இடப்பெயராக நின்றது. கடையைக்காப்பான், இடையைக் காப்பான், தலையைக் காப்பான் என்பவற்றுள் கடை இடைதலை – என்பன உருபேற்றமை காண்க.முன்பிறந்தான் – பின்பிறந்தான் – தலைமழை – கடை காப்பான் -போன்றவற்றில் இடவுருபுகள் ஏற்ற வுருபுகள் தொக்கு நின்றன.உள்ளூர் மரம் – கீழ்நீர் ஆமை – மீகண் பாவை – என்பவற்றுள், ஊருள் -நீர்க்கீழ் – கண்மீ – என்பன உருபு முன்னும் சொல் பின்னுமாக முன்பின்மாறி நின்றன.இடவுருபுகள் வேறுருபும் சொல்லுருபும் ஆதல் உள.எ-டு : ஊரில் இருந்தான் – ‘இல்’ என்பது ‘கண்’ என்பதற்கு வேறுஉருபாய் வந்தது.ஊர்த்திசை இருந்தான் – ‘திசை’ இடப்பொருளில் வந்த சொல்லுருபு. (இ.கொ. 18)

இடஉருபுகள் இரண்டிணையின் ஒன்றுஉருபு ஆதல்

தலை – இடை – கடை – மருங்கு – என்பன ஏழாம் வேற்றுமைப் பொருளானஇடத்தைச் சுட்டும் உருபுகள். இவற்றின்மேல் வேறு ஏழாம் வேற்றுமைஉருபுகள் வரின், முன்னுள்ளதைப் பெயராகப் கொள்ளல் வேண்டும்.தலைக்கண் சென்றான் – தலை : பெயர் ; கண் : உருபு‘இடைக்கண் முரிந்தார்’ (கு.423) – இடை : பெயர் ; கண் : உருபுகடைக்கால் நின்றான் – கடை : பெயர் ; கால் : உருபுமருங்கில் இருந்தான் – மருங்கு : பெயர் ; இல் : உருபு (இ. கொ.18)

இடக்கருத்தா

இடப்பெயர் கருத்தா ஆதல்.எ-டு : குன்று குவட்டைத் தாங்கும், தூண் போதிகையைத்தொட்டது.இவற்றுள் குன்றும் தூணும் இடம்; இடம் கருத்தாவாக நின்றது. (இ. கொ.26)

இடக்கர் அடக்கல்

மூவகைத் தகுதிவழக்கினுள் இதுவும் ஒன்று. இடக்கர் என்பது மறைத்துக்கூற வேண்டிய சொல். இஃது ‘அவையல் கிளவி’ எனவும்படும். இடக்கர் தோன்றாதுஅதனை மறைத்து வேறொரு வாய்பாட்டால் கூறுதல் இடக்கரடக்காம்.எ-டு : ஈகார பகரம், ‘புலிநின்று இறந்த நீரல்ஈரத்து’ (சிறுநீரின் ஈரத்தை நீர்அல் ஈரம் என்றார்) (நன்.267)கண்கழீஇ வருதும், கால்மேல் நீர்பெய்து வருதும், வாய்பூசிவருதும், அந்தி தொழுது வருதும், கைகுறியராய் இருந்தார், பொறைஉயிர்த்தாள் – என்னும் தொடக்கத்தன இடக்கர் அடக்கல். இவைசெய்யுளகத்தும், ‘புலிநின்று இறந்த நீரல்ஈரத்து’ எனவும், ‘கருமுக மந்தி ’ , ‘செம்பின் ஏற்றை’ எனவும் வரும்.‘மருவிய இடக்கரடக்கல்’ காண்க. (நன். 266 மயிலை.)

இடத்திணை வழு

இடத்திணை வழுவாவது, பால்மயக்கமின்றி இடமும் திணையும் மயங்குவது.அது வந்தான் சேவலேன், வந்தாள் பேடையேன், வந்தார் மான்களேம் – எனவும்,வந்தது பாணனேன், வந்தது விறலியேன், வந்தன வயவரேம் – எனவும் படர்க்கைஇருதிணை வினைமேல் தன்மை இருதிணைப் பெயர்மயக்கம் ஆறும்;வந்தான் கடுவனை, வந்தாள் பேடையை, வந்தார் மான்களீர் – எனவும்,வந்தது தலைவனை, வந்தது தலைவியை, வந்தன மாந்தரீர் – எனவும் படர்க்கைஇருதிணை வினைமேல் முன்னிலை இருதிணைப் பெயர்மயக்கம் ஆறும்;சேவலேன் வந்தான், பேடையேன் வந்தாள், மான்களேம் வந்தார் – எனவும்,பாணனேன் வந்தது, விறலியேன் வந்தது, மல்லரேம் வந்தன – எனவும் தன்மைஇருதிணைப் பெயர்மேல் படர்க்கை இருதிணை வினைமயக்கம் ஆறும்;கடுவனை வந்தான், பேடையை வந்தாள், மறிகளிர் வந்தார் – எனவும்,தலைவனை வந்தது, தலைவியை வந்தது, மாந்தரீர் வந்தன எனவும் முன்னிலைஇருதிணைப் பெயர்மேல் படர்க்கை இருதிணை வினைமயக்கம் ஆறும்;ஆக, படர்க்கை வினையொடு தன்மை முன்னிலைப்பெயரும், அவற்றின்மேல்படர்க்கை வினையும் மயங்கின இடத்திணை வழு இருபத்து நான்காம். (நன். 374மயிலை.)

இடத்தின் இலக்கணம் : அதன் வகைகள்

ஏழாம்வேற்றுமைப் பொருளான இடம், உரிமை – ஒற்றுமை யிடம் – கூட்ட இடம்- எங்கும் பரத்தல் – என நான்கு வகைப் படும்.இடம், காலம் திக்கு ஆகாயம் வெயில் இருள் நிலம் அரு உரு – முதலியனநிலைக்களமாகும் இடங்களாம்.இடமல்லா இடம், கூட்டிப் பிரித்தல் – பிரித்துக் கூட்டல் – இருவரின்முடியும் ஒருவினையின் தொழிற்பெயர் – என மூவகைப் படும்.இடத்தில் நிகழும் பொருள் உருவுடையதாகவும் உருவற்ற தாகவும்இருக்கும்.எ-டு : இடம் :அ) நிலத்தின்கண் தேர் ஓடுகிறது – தேருக்கு நிலம் உரிமை.காட்டின்கண் புலி வாழ்கிறது – புலிக்குக் காடு உரிமை.ஆ) மதியின்கண் மறு, கையின்கண் ஒற்றுமையிடம்.விரல் – (பிரிக்க முடியாத தொடர்பு)இ) ஊர்க்கண் இருந்தான், தேர்க்கண்இருந்தான் – இவை கூட்ட இடம்.(பிரிக்கக் கூடிய தொடர்பு; அவ்விடத்து ஏகதேசமாய் இருத்தல்)ஈ) மணியின்கண் ஒளி, பாலின்கண் – இவை எங்கும்நெய் பரத்தல்.(அவ்வப் பொருளில் யாண்டும் பரந்துள்ளமை)இடமல்லா இடம்அ) ‘அரசருள் ஏறு’ (கு.381).: ஒருவனை அரசரொடு கூட்டிப் பின் அவர்களுள் உயர்ந்தவன்(ஏறு) எனப் பிரித்தல் – கூட்டிப் பிரித்தல்.ஆ) ‘தெய்வ த்துள் வைக்கப்படும்’ (கு. 50) மக்களிடமிருந்து ஒருவனைப் பிரித்துத் தெய்வத்தொடுசேர்த்தல் – பிரித்துக் கூட்டல்கூட்டிப் பிரித்தல் ‘யோக விபாகம்’ எனவும், பிரித்துக் கூட்டல்‘விபாக யோகம்’ எனவும் வடமொழியில் கூறப்படும். இவை ஆதாரம் என்னும்பொருளில் வாராத ஏழாவதன் பொருள்.இது வடமொழியில் ‘நிர்த்தாரணே சப்தமீ’ எனப்படும்.இ) ‘புல்லி விடாஅப் புலவியுள்தோன்றும்’ (கு. 1324),தட்டுப்புடைக்கண் வந்தான் -புல்லுதலும் புலவியும், தட்டுப்புடையும் ஒருவரன்றி இருவர்தொழிற்படுவன. புல்லுதல் – தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர்முயங்குதல்; புலவி – ஊடுதல்; தட்டுப்புடை – இருவர் தம்முள்பொருதல்.இவை இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்ஆகாயத்தின்கண் பருந்து – ஈண்டு இடம் அரு.காட்டின்கண் புலி – ஈண்டு இடம் உரு. (இ.கொ. 42,43)

இடத்தின் மயக்கம்

ஏழாம் வேற்றுமையான இடப்பொருளில் வேற்று வேற் றுமைகள் வந்துமயங்குதல்.தூண் போதிகை தொட்டது – முதல் வேற்றுமை (தூணின்கண் என்றவாறு)தூணைச் சார்ந்தான் – இரண்டாம் வேற்றுமை (தூணின்கண் என்றவாறு)இன்றைக்கு, நாளைக்கு – நான்காம் வேற்றுமை (இற்றைக் கண், நாளைக்கண்என்றவாறு)தூணின்கண் சார்ந்தான் – ஏழாவதுஆகவே, ஏழாவதன் பொருட்கண் முதலாம் இரண்டாம் நான்காம் வேற்றுமைகள்வந்து மயங்கியவாறு. (இ.கொ. 50)

இடத்தொகை, பெயர்த்தொகை : வேறுபாடு

வல்லொற்று இடையே வரின் இடத்தின்கண் தொக்க தொகை; மெல்லொற்று இடையேவரின் பெயரின்கண் தொக்க தொகையாம்.எ-டு : வடுகக் கண்ணன் – வடுகநாட்டிற் பிறந்த கண்ணன்.வடுகங் கண்ணன் – வடுகனுக்குப் பிறந்த கண்ணன்.வடுகநாதன், வடுகவாணிகன், வடுகஅரசன் – என இயல்பு கணம் வருமிடங்களில்சொல்லுவான் குறிப்பினாலேயே பொருள் செய்ய வேண்டும். (நன். 371)

இடப்பெயர்ப் பகுபதம்

வானான், வானாள், வானார், வானது, வானன, வானேன், வானேம், வானாய்,
வானீர் – என இவ்வாறு வருவன இவ் விடத்தினையுடையார் என்னும் பொருண்மை
இடப் பெயர்ப் பகுபதம். (நன். 133 மயிலை.)

இடமுன்

‘முன்’ எனப் பொதுப்படக் கூறினும், அது காலமுன் எனவும் இடமுன்
எனவும் இருவகையாகக் கொள்ளப்படும். கால முன்னைப் பயன்படுத்தினால்,
‘முன்னர்க் கூறப்பட்டது’ என்று கூறவேண்டும். எனவே, ‘காலமுன்’
இறந்தகாலச் செய்தியைக் குறிப்பதாம். இட முன்னைப் பயன்படுத்தினால்,
‘முன்னர்க் கூறப்படும்’ என்று கூற வேண்டும். எனவே, ‘இடமுன்’
எதிர்காலச் செய்தியைக் குறிப்பதாம்.
இனி, ஒரு சொல்லில் வைத்து நோக்குமிடத்து, ‘அது’ என்ற சொல்லில் அ
என்பது முன்னர் ஒலிக்கப்படுதலின் அது ‘காலமுன்’ எனப்படும். ‘து’
என்பது ‘காலப்பின்’ ஆகும். அ என்ற ஒலி கேட்கப்பட்டபின் இனிமேல்
கேட்கப்படும் ஒலி என அமையும் ‘து’ என்பது ‘இடமுன்’ ஆகும்; அப்பொழுது
முன்னர்க் கேட்கப்பட்ட அ என்ற ஒலி ‘இடப்பின்’ ஆகும்.
‘ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்’ –
தொ. எ. 27 நச்.
‘லளஃகான் முன்னர்’ –
தொ. எ. 24 நச்.
‘மஃகான் புள்ளிமுன்’ –
தொ. எ
28 நச்.
‘யரழ என்னும் புள்ளி முன்னர்’ –
தொ.
எ. 29 நச்.
‘முன்னர்த் தோன்றும்’ –
தொ. எ. 35
நச்.
‘ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்’ –
தொ. எ.
25 நச்.
‘குறியதன் முன்னர்’ –
தொ. எ. 38 ந
ச்.
‘யரழ என்னும் மூன்றுமுன் ஒற்ற’ –
தொ. எ. 48
இள.
‘னகாரை முன்னர்’ –
தொ. எ. 52
முதலிய இடங்களில் முன் – முன்னர் – என்பன ‘இடமுன்’ என்ற பொருளிலேயே
வந்துள்ளன.

இடமுன், காலமுன்

அரைமா என்புழி, முன்மொழியிலே பொருள் நின்றது; இஃது இடமுன்.தேங்காய் என்புழி, பின்மொழியிலே (தெங்கு) பொருள் நின்றது; காலமுன்.(நேமி. எச்ச. 4 உரை)(‘தந்தது’ என்புழி, முதலிலுள்ள தகரம் முன்னரேயே உச்சரிக்கப்படுதலின் காலத்தால் முற்பட்டதாகிய ‘காலமுன்’; மூன்றாம் எழுத்தாகியதகரம் பின்பாக உச்சரிக்கப்படுதலின் காலப்பின் எனப்படும். காலத்தால்பிற்பட்டது இடத்தால் முற்பட அமைதலின் ‘இடமுன்’ என்க. நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் நிலைமொழி யீற்றெழுத்துக் காலமுன், வருமொழிமுதலெழுத்து இடமுன் எனக் காண்க.)

இடம்

‘இடன்’ எனவும்படும். இடம் – வினைசெய் இடம். அஃதாவதுசந்தருப்பம். ஒருவழிப் பலவும் தொக்கு அவற்றிற்கெல்லாம் இலக்கணம்ஒன்றாகும் செயல் நிகழ்ச்சி இடம் எனப்படும். களம் எனவும் கூறப்படும்.ஒரு செய்யுள் கேட்டான் “இஃது இன்ன சந்தருப்பத்தில் நிகழ்ந்தது” என்றுஅறிதற்கு ஏதுவாகிய உறுப்பே இடம் என்பது. எடுத்துக்காட்டாக, காட்சிஐயம் துணிவு புணர்ச்சிநயப்பு பிரிவச்சம் வன்புறை என்பன எல்லாம்ஒருவழிப் பலவும் கூடி ‘இயற்கைப் புணர்ச்சி’ என்ற இடத்தின்பாற்பட்டன.இது செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கனுள் ஒன்று.(தொ. பொ. 513 பேரா.)

இடம் வரை கிளவி

மேல் என்ற இடத்தை வரையறுத்துணர்த்தப் பயன்படும், மேல் என்பதன்
திரிபாகிய ‘மீ’ என்ற சொல் ‘இடம் வரை கிளவி’ எனப்பட்டது.
இது வருமொழியொடு புணரும்வழி இயல்பாகவும், வல் லெழுத்து மிக்கும்,
சிறுபான்மை மெல்லெழுத்து மிக்கும் புணரும். வருமாறு : மீகண்,
மீக்கோள், மீந்தோல் (தொ. எ. 251 நச்.)

இடு என்ற விகுதி

இடு என்ற விகுதி தனக்கென ஒருபொருளின்றிப் பகுதியைச் சார்ந்து
பகுதிப்பொருள்விகுதியாய், மேல் இடைநிலை விகுதி என்பன பெற்றுச் சொல்லை
நிரப்ப உதவுவது.
எ-டு : எழுந்திட்டான், கடந்திடுவான் (இவை எழுந்தான், கடப்பான்
என்னும் பொருளன). (சூ. வி. பக். 41)

இடுகுறி : மரபும் ஆக்கமும்

ஆண் பெண் மரம் தெங்கு கமுகு – என்றாற் போல்வன இடுகுறிமரபுதொடர்ந்து வந்தன.‘மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்கானவேல் முட்டைக்கும் காடு’என்னும் இப்பொய்யாமொழிப் புலவர் பாட்டினுள், குமரன் பெயர் ‘முட்டை’என்றாற் போல்வன இடுகுறி ஆக்கம் தொடர்ந்து வந்தன.இடுகுறி மரபு, காரண மரபு – இரண்டும் ஒருவராலே ஆக்கப் பட்டனவன்றித்தொன்றுதொட்டு வருவனவாம்; இடுகுறி ஆக்கம், காரண ஆக்கம் – இரண்டும்ஒருவரால் இடையிலே ஆக்கப்பட்டு வருவனவாம். (நன். 275 இராமா.)

இடுகுறி காரணப் பெயர்

ஒரு காரணம் பற்றாது ஒரு பொருட்குத் தொன்றுதொட்டு இடப்பட்டு வரும்
பெயர் இடுகுறி எனப்படும். அஃது இடு குறிப் பொதுப்பெயர் எனவும்,
இடுகுறிச் சிறப்புப்பெயர் எனவும் இருவகைத்து.
மரம்: இடுகுறிப் பொதுப்பெயர்; பலா – இடுகுறிச் சிறப்புப்
பெயர்.
ஒரு காரணம் பற்றி ஒருபொருட்கு அமையும் பெயர் காரணப் பெயர்
எனப்படும். அதுவும் பொது சிறப்பு என இருவகைத்து.
அணி : காரணப் பொதுப்பெயர்; முடி: காரணச் சிறப்புப் பெயர்.
இனி, காரண இடுகுறிப் பெயராவது காரணம் பற்றி அமையும் பெயர்,
அக்காரணம் நிகழும் எல்லாவற்றிற்கும் பெயராகாது அவற்றுள் ஒன்றற்கே
இடுகுறிப்பெயர் போல வருவது.
எ-டு : முக்கண்ணன் – முக்கண்ணையுடைய இறைவர் பலருள் சிவனுக்கே
பெயராவது.; அந்தணர் – கருணையுடைய பலருள் பார்ப்பாருக்கே பெயரா வது;
மறவர் – வீரமிக்க பலருள் ஒரு சாதியார்க்கே பெயராவது; முள்ளி –
முட்செடிகள் பலவற்றுள் ஓரினச் செடிக்கே பெயராவது. (நன். 62
இராமா.)

இடுகுறி காரணம் ஆதல்

‘மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ (தொ. சொ. 394 சே.) என்றநூற்பாவால், ஒவ்வொரு சொற்கும் வெளிப்படையாகப் புலப்பட்டோ புலப்படாமலோகாரண முண்மை விளக்கப்பட்டுள்ளமையால், சொற்கள் யாவுமே காரணம் பற்றிவந்தன என்பது இலக்கண நூலார் கருத்தாம்.(இ. கொ. 116)

இடுகுறி, காரணம், பொதுவும் சிறப்புமென நான்காவன

ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர்; (அவற்றுள்)
அ ஆ, க ங என்ற தொடக்கத்தின இடுகுறிச் சிறப்புப்பெயர்.
குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் தொடக்கத்தன
காரணப் பொதுப்பெயர்; குற்றிகரம், குற்றுகரம், மகரக்குறுக்கம்,
ஆய்தக்குறுக்கம் என்னும் தொடக்கத்தன காரணச் சிறப்புப்பெயர். (நன். 61
மயிலை.)

இடுகுறிப்பெயர், காரணப்பெயர் வகை

ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுடையோ ரானும் இட்ட
குறியாகிய பெயர் இடுகுறிப் பெயர்; காரணத் தான் வரும் பெயர்
காரணப்பெயர். இவை பல பொருட்கும் பொதுப்பெயராகியும், ஒரு பொருட்குச்
சிறப்புப் பெயராகி யும் வரும்.
எ-டு : மரம் – இடுகுறிப் பொதுப்பெயர்; பனை – இடுகுறிச்
சிறப்புப் பெயர்; அணி – காரணப் பொதுப்பெயர்: முடி – காரணச் சிறப்புப்
பெயர் (நன். 62 சங்கர.)

இடுகுறிவகை மூன்று

சாத்தன் கொற்றன் கூத்தன் கெத்தன் நாகன் தேவன் பூதன் தாழி கோதைமுட்டை பொன்னன் – என்பன தனித்து வழங்கும் இடுகுறி.தனம் படை சேனை நிரை தொறு உலகு நாடு ஊர் – என்பன தொகுத்து வழங்கும்இடுகுறி.இடக்கரடக்கல் முதலான மூன்று வழக்கும் மறைத்து வழங்கும் இடுகுறி.(நன். 274 மயிலை.)

இடை அடியான வினை

வினைச்சொல்லுக்கு அடியான பகுதிகள், பெயர் வினை இடை உரி – என்னும்நால்வகைச் சொற்கள் அடியாகவும் பிறக்கும். அவ்வகையால், இடைச்சொல்பகுதியாகப் பிறந்த வினை வருமாறு:சாத்தா புலி போல் – ஏவல்.நெய்போலுதல் நீர்க்கு இல்லை – தொழிற்பெயர்.புலி போன்றான் – முற்றும், முற்றுப் பெயரும்.புலி போன்ற வீரன் – பெயரெச்சம்.புலி போன்று பொருதான் – வினையெச்சம். (இ.கொ. 68)

இடை ஈரடி ஆதிமடக்கு

குரவார் குழலாள் குவிமென் முலைநாம்விரவா விரவாமென் தென்றல் – உரவா!வரவா வரவாம் எனநினையாய் வையம்புரவாளர்க்(கு) ஈதோ புகழ்.(‘விரவா – இரவு ஆம் – மென் தென்றல் வரவு – ஆ / அரவு ஆம்’- எனஇடையீரடியும் பிரித்துப் பொருள் செய்யப்படும்.)“மனவலியுடைய தலைவ! குரவம்பூச் சூடிய இத்தலைவியின் குவிமென்முலையிடை நீ கலக்காத இராக்காலத்தில் வீசும் தென்றற்காற்றின் வரவு, ஆ!பாம்பு தீண்டியது போலத் துயரம் தரும் என நினையாது பிரியத்துணிந்துள்ளாய். உலகு புரக்கும் சான்றோர்க்கு இதுவோ புகழுக்குரியசெயல்?” எனத் தோழி தலைவனுடைய கற்புக்காலப் பிரிவினை விலக்கிய செய்திஅமைந்த இப்பாடற்கண், இரண்டாம் மூன்றாம் அடிகளில் முதற்சீர் மடக்கிவந்தவாறு. (தண்டி. 95)

இடை ஈரடி மடக்கு

‘கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்வருமாய வினைதீர ஒருநாளும் அருளார்கொல்’‘(மதன் ஆகம், மதன் நாகம்’ எனப் பிரித்துப் பொருள் கொள்க.)“உருவமே மறையுமாறு மன்மதன் உடலை அழிக்கும் செயலை மேற்கொள்ளவிரும்பிய சிவபெருமானை முன்னர்ப் பிறவித் தொடர்ச்சிதோறும் அன்புநீங்காது தொழுதாலும், இடி போன்று பிளிறி வரும் மதயானையைக் கொல்லும்தொழிலைப் புரிந்த அப்பெருமான், தொன்று தொட்டு வரும் மாயமான கொடியவினைகள் தீருமாறு ஒரு காலத்தும் அருள்புரியாரோ?” என்ற இப்பாடலில்இடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96)

இடை எண்

அம்போதரங்கம் எனினும், அசையடி எனினும், பிரிந் திசைக்குறள்எனினும், சொற்சீரடி எனினும், எண் எனினும் ஒக்கும். முச்சீர் ஓரடிஎட்டால் வரும் அம்போதரங்கம் இடையெண் எனப்படும். எட்டு நான்காகச்சுருங்கி வரினும் ஆம். (யா. கா. 31 உரை) (வீ. சோ. 117 உரை)யாப்பருங்கல விருத்தியில் அம்போதரங்க உறுப்பாகிய ஓரடி நான்குஇடையெண் என்று கூறப்பட்டிருப்பது ஏட்டிடை அமைந்த பிழையாம். அவற்றைஅளவெண் என்று கூறலே ஏற்றது. (யா. வி. பக். 317, 318, 320)‘காமரு கதிர்மதி முகத்தினைசாமரை இடையிடை மகிழ்ந்தனைதாமரை மலர்புரை அடியினைதாமரை மலர்மிசை ஒதுங்கினை….’ (யா. வி. பக். 311)

இடை வரும் உயிர்மெய்

சொல்லின் இடையில் வரும் உயிர்மெய் உயிரெழுத்தாகவே கொள்ளப்படும்.
படவே, வரகு என்பது உயிர்மெய்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படாது,
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றே பெயர் பெறுகிறது. (தொ. எ. 106
நச். உரை)

இடை, உரி, வடசொல், போலி, மரூஉ இவற்றது புணர்ச்சி

ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், வண்டின்கால், நாயின் கால்,
தேரின்செலவு, யாழின்புறம் என வேற்றுமைக்கண் சாரியை இடைச்சொற்கள் (ன்,
இன்) இயல்பாயின. தடந் தோள் என அகரஈற்று உரிச்சொல் (தட) மெல்லெழுத்து
மிக்கது. மழகளிறு, உறுகால் (நற். 300) என உரிச்சொல் (மழ, உறு)
இயல்பாயின. அளிகுலம் (கோவையார் 123), வயிரகடகம், தாமகண்ணன், கனகசாதி,
கமலபாதம், தனதடம் என வட சொல் இயல்பாயின. இல்முன் – முன்றில், படைமுன்
– முன்படை, கண்மீ – மீகண், பொதுவில் – பொதியில், வேட்கை நீர் – வேணீர்
(கலி. 23), வேட்கை அவா – வேணவா (நற். 61), பின் – பின்றை என்னும்
தொடக்கத்துப் போலிமொழிகளும், அருமருந்தன்னான் – அருமந்தான், கிழங்கன்ன
பழஞ்சோறு- கிழங்கம் பழஞ்சோறு, குணக்குள்ளது – குணாது, தெற்குள்ளது –
தெனாது, குடபாலது – குடாது, மலையமானாடு – மலாடு, சோழனாடு – சோணாடு,
பாண்டியனாடு – பாண்டி நாடு, தஞ்சாவூர் – தஞ்சை, பனையூர் – பனசை,
சேந்தமங்கலம் – சேந்தை, ஆற்றூர் – ஆறை, ஆதன்தந்தை – ஆந்தை, பூதன்தந்தை
– பூந்தை, வடுகன்தந்தை – வடுகந்தை என்னும் தொடக்கத்து மரூஉமொழிகளும்,
நிலைவருமொழிகளில் ஏற்கும் செய்கை அறிந்து முடிக்க. இவற்றுள்,
அருமந்தான் முதலானவற்றை வலித்தல் முதலிய விகாரங்களான் அமைக்க
என்பாரும், ஆந்தை முதலானவற்றை இலக்கண மொழிகளாக வேறெடுத்து
முடிப்பாரும் உளர். (நன். 238 மயிலை.)

இடைக்காடனார்

எழுத்தல்லாத முற்கு, வீளை முதலாயின செய்யுளில் வந்தால் அவைசெய்யுள்நடை அழியாமல் அசை சீர் தளை முதலா யின பிழையாமல் கொண்டுவழங்கப்படும். இடைக்காடனார் பாடிய ஊசிமுறி இவ்வகைய எழுத்தல்லாத ஓசைசெய்யுள் நடை அழியாவாறு எழுதப்பட்ட யாப்பினை உடையது. விட்டி சைக்கும்தற்சுட்டுக் குறிப்புச்சொற்கும் இவர் பாடலே எடுத்துக் காட்டாகவுள்ளது. (யா. வி. பக். 396, 153)

இடைக்குறை

பகாப்பதத்தில் இடையே ஓரெழுத்துக் குறைந்தும் எழுத்துக் குறையாத
சொல்லின் பொருளைத் தருவது.
எ-டு : ஓதி: இஃது ‘ஓந்தி’ என்பதன் இடைக்குறை; ஓணான் என்னும்
பொருட்டு. தொகுத்தல் விகாரம் பகுபதத்தின் கண்ணது; இது பகாப்பதத்தின்
கண்ணது என்பதே வேறுபாடு. (நன். 156)

இடைக்குறை

செய்யுட்கண் தொடைசீர் அமைப்புக் கருதி ஒரு பெயர்ப் பகாப்பதம்இடையெழுத்து நீங்க அமைக்கப்பட்டவழியும் தன் பொருளைத் தவறாதுவெளிப்படுத்துவது.‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ ( – குறுந். 140 – 1) என்புழி,ஓந்தி என்பது ஓதி என இடைக்குறைந்து வந்தது. (ஓதி என்பது ஓந்தியின்இயற்பெயர் என்பாரும் உளர்.) (யா. க. 95 உரை)வேண்டாதார் என்பதனை வேண்டார் எனக் கொள்ளும் பகுபதத்தில்ஓரெழுத்துத் தொக்கதனைத் தொகுத்தல் விகாரம் என்று மயிலைநாதர் (நன்.154) குறிப்பிடுவது கொண்டு, இடைக்குறை பெயர்ப் பகாப்பதத்தின்கண்ணதுஎன்பதே பெரும்பாலோர் கருத்து.

இடைக்குறையும் தொகுக்கும்வழித்தொகுத்தலும்

தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பது முழுதுமாம்; இடைக் குறை என்பதுஒரு சொல்லில் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல். இது தம்முள்வேற்றுமை.வந்தன்று என்பது ‘வந்து’ எனவும், என்பாரிலர் என்பது என்பிலர்எனவும், வினைக்கண்ணும் சிறுபான்மை வரும். இவை இடைக்குறை. (தொ. சொ.453, 454 நச். உரை)தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பது சந்தம் உளவாதற்கு ஒரு சொல்லைத்தொகுக்கவேண்டும்வழித் தொகுத்தல்.இடைச்சொல் என்பது ‘இடை’ எனத் தொக்கது. (சொ. 251)(தொ. சொ. 403 நச். உரை)மழவரை ஓட்டிய எனற்பாலது ‘மழவ ரோட்டிய’ (அக.1) என வேற்றுமையுருபுதொக்கது.‘குன்றி கோபம் கொடிவிடுபவளம்ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’- என்புழி, செவ்வெண்ணின் தொகை தொக்கு நின்றது. (தொ. சொ. 403 சேனா.உரை)இவை ஒருசொல் முழுதும் தொக்கமை காண்க.

இடைக்குறையும் தொகுத்தல் விகாரமும்

இடைக்குறை பெயர்ப் பகாப்பதத்தின்கண்ணேயே வரும்; தொகுத்தல் விகாரம்பகுபதத்தின்கண்ணும் இருசொற்கள் இயையும் சந்தியின்கண்ணும் வரும்.ஓந்தி என்பது ஓதி எனவருவது இடைக்குறையாம். உள்ளான் என்பது உளான்எனவும், ‘மழவரை யோட்டிய’ என்பது ‘மழவரோட்டிய’ (அகநா. 1) எனவும் வருவனதொகுத்தல் விகாரமாம். (தொ. சொ. 447 ; 398 இள.)

இடைச்சியார்

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைப்பாடல்களிடை இதுவும் ஒன்று. தெருவிடை மோர் விற்றுக் கொண்டு செல்லும்இடைக்குலக் கன்னியின் எழில் நலம் தன் உள்ளத்தை வருத்திய செய்தியைக்காமுகன் ஒருவன் எடுத்துக் கூறும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல்இது.( மதுரைக் கல. 63)

இடைச்சொல் : பெயர்க்காரணம்

மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடைவருதலின்இடைச்சொல் ஆயிற்று என்பர் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும். (தொ.சொ. 249, 251 சே.நச்.உரை)பெயரும் வினையும் இடமாக நின்று பொருளை உணர்த்து தலின் இடைச்சொல்ஆயிற்று என்பர் தெய்வச்சிலையார். (தொ. சொ. 246)பெயர்வினைகள் உணர்த்தும் பொருட்குத் தாம் இடமாக நிற்றலான்இடைச்சொல் எனப்பட்டன என்பர் கல்லாடர். (தொ. சொ. 251)(சாரியைகளைத் தவிர ஏனைய இடைச்சொற்கள் பெரும்- பாலும் மொழியிடையேவருவதில்லை. வினைவிகுதிகளும் வேற்றுமையுருபுகளும் மொழியிறுதியிலேயேவருகின்றன. அசைநிலை பெரும்பாலும் இறுதியிலேயே வரும். இசைநிறை தனிமொழிபோன்று மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும். உவம வுருபுகள் தனிமொழிபோன்று மொழிக்கு இறுதி யில் வரும். மொழிக்கண் இடையில் வரும் இடைச்சொற்களை விட இறுதியில் வரும் இடைச்சொற்களே மிகுதியாம். ஆகவே, தெய்.குறிப்பிடுவது போலப் பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின்இடச்சொல் என்பது ‘இடைச் சொல்’ என மருவி வந்தது என்றலே பொருத்தம்.இடைச்சொற்கள் பெயர்வினைகளுக்கு முன்னோ பின்னோ அடுத்து அவற்றின்பொருளை வேறுபடுப்பன என்றல் பொருந்தும்.)இடைச்சொல் நீங்கலான ஏனைய பெயர் வினை உரிச் சொற்கள், வேறுபடுக்கவருவன (அடைமொழி) – வேறு படுக்கப்படுவன (அடைகொளி) – என இருநிலையவாம்.(தொ. சொ. 455 சேனா. உரை)நச்சினார்க்கினியர் இடைச்சொல் என்று இடைப்பிற வரலைக் கொண்டுள்ளார்.(தொ. சொ. 455 நச். உரை)முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும் சொற்கள்,முடிக்கும் சொற்களை விசேடித்து நிற்கும் சொற்களாம். எழுவாயைமுடிக்கும் பயனிலைக்கும், முற்றை முடிக்கும் பெயர்க்கும்,வினையெச்சத்தை முடிக்கும் வினைக் கும், பெயரெச்சத்தை முடிக்கும்பெயர்க்கும் இடையே வருவன இடைச்சொல்.எ-டு : ‘கண்ணி கார்நறுங் கொன்றை’ (புறநா.1) – ‘கார் நறும்’ என்ற இடையே வந்த சொற்கள் கண்ணிஎன்பதன் முடிக்கும் சொல்லாகிய கொன்றையை விசேடித்தன.‘ஊர்தி வால்வெள் ஏறே’ (புறநா.1) – ‘வால்வெள்’ என்ற இடையே வந்த சொற்கள் ஊர்தி என்பதன்முடிக்கும் சொல்லாகிய ஏறு என்பதனை விசே டித்தன.‘ஈர்ந்தை யோனே பாண்பசிப்பனகஞன்’ (புறநா. 180) ‘பாண்பசி’ என்ற இடையே வந்த சொற்கள் ‘ஈர்ந்தை யோன்’என்பதன் முடிக்கும் சொல்லாகிய பகைஞன் என்ற சொல்லைவிசேடித்தன.இடைச்சொற்கள் எல்லாம் விசேடித்து நிற்கும் சொல் ஆகா; சிலவேவிசேடித்து நிற்பன. (தொ. சொ. 455 நச். உரை)இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினை களின் பொருள்களைவேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச் சொல் எனப்பட்டன. (தொ. சொ. 449 இள.உரை)தனித்து நடத்தலின்றிப் பெயர்வினைகள் இடமாக நடத்தலின் ‘இடைச்சொல்’ எனக் காரணக்குறி போந்தது என்று, அதன் தன்மை கூறிய முகத்தான்கூறியவாறு. முதல்நூலின் வழியாக நடக்கும் நூலை அங்ஙனம் கூறாது வழிநூல்,என்றாற்போல, பெயர்வினைகளின் இடமாக நடக்கும் சொல்லை அங்ஙனம் கூறாதுஇடைச்சொல் எனக் கூறினார். அங்ஙனமாயின் இடம் என இயற்சொல்லால் கூறாது‘இடை’ எனத் திரிசொல்லால் கூறியது என்னையெனின், இயற்சொல்லால் கூறின்இடப் பொருளை உணர்த்தும் சொல் எனப்படுமாதலின், அதனோடு இதற்கு வேற்றுமைதோன்றற்கு என்க. (நன். 420 சங்.)பெயர்ப்பொருளையும் வினைப்பொருளையும் வேறுபடுத் தும் இயல்பினதாய்அவற்றின்வழி மருங்கு தோன்றி அவற் றோடு ஒருங்கு நடைபெற்றியல்வதுஇடைச்சொல். இடைச் சொற்களுள் ஒருசாரன பெயரும் வினையுமாகிய சொற்களினின்று சிதைந்தும் சுருங்கியும் இலக்கணக் குறியீடாக அமைந்து இடுங்கியசொற்களாக வருதலானும், ஒருசாரன பெயரு மாகாமல் வினையுமாகாமல் அவற்றிற்குஇடைப்பட்டன வாக வருதலானும், ஒருசாரன திணை பால் இடம் காலம்முதலியவற்றைக் காட்டுதற்குரிய உறுப்பாக இடப்படுதலா னும், இடைச்சொல்என்னும் காரணக்குறி பெற்றன. ஆதலின் இடை என்னும் சொல், இடுங்குதல் -இடைநிகர்த்தது ஆதல் – இடப்படுதல் – என்பவற்றுக்குப் பொதுவாகநின்றது.வேற்றுமையுருபுகள் பலவும் பெயர்வினைகளின் இடுங்கிய சொற்கள். கொன்,தஞ்சம், அந்தில் – முதலியவை பெயர்ப் பொருளவாகவும் வினைப்பொருளவாகவும்,உவமவுருபு இடைச்சொற்கள் வினைப்பொருளவாகவும், ஏ ஓ மன் தில் – முதலியவைபெயர்வினைகட்கு இடைப்பட்டனவாகவும் நிற்கும்.அம் ஆம் அன் ஆன் – முதலிய ஈற்று இடைச்சொற்கள் திணைபால் இடம்காட்டற்கும், உம் க உ இன் – முதலிய ஈற்றிடைச் சொற்கள் காலம் இடம்காட்டற்கும், த் ட் ற் – முதலிய இடைநிற்கும் இடைச்சொற்கள் காலம்காட்டற்கும் இடப்பட்டன ஆகும். (தொ. சொ. பக். 274, 275 ச. பால.)

இடைச்சொல் : பொதுஇலக்கணம்

இடைச்சொல்லாவன சொற்புணருமிடத்துச் சாரியையாய் நின்றும், உருபாய்நின்றும், தத்தம் குறிப்பின் பொருள் செய்ய நின்றும், அசைச்சொல்லாய்நின்றும், வினைச் சொற்கு ஈறாய் நின்றும், இசைநிறையாய் நின்றும்நடைபெறுவதல்லது தனித்து நடைபெறுவன அல்ல என்றவாறு. (நேமி. இடை. 1)

இடைச்சொல் : பொருள்

தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம்,வினா, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம் என்னும் பதினான்கும்பிறவும் இடைச்சொற்குப் பொருளாம். ‘இன்னன’ என்றதனான் சில இடைச்சொற்கள்வருமாறு:தொறு தோறு ஞெரேர் அந்தோ அன்னோ கொல்லோ ஆ ஆவா அஆ இனி என் ஏன் ஏதில் நகல் ஒல் கொல் துடும் துண் பொள் கம் கொம் – என்பன.இவற்றுள், தொறு தோறு – என்பன தாம் புணர்ந்த மொழிப் பொருண்மையினைப்பலவாக்கி ஆங்காங்கு என்பது பட நிற்கும்.எ-டு : ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ (முருகு.217)ஞெரேர் என்பது வெருவுதல் பொருளில் வரும்.எ-டு : ‘ஞெரேரெனத், தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு’ (பொருந.141)அந்தோ, அன்னோ, கொல்லோ, ஆ, ஆவா, அஆ – என்பன இரக்கம் குறித்துவரும்.எ-டு : ‘அந்தோ விசயை பட்டனள்’ சீவக. 312‘அரக்காம்பல் நாறும்வாய்அம்மருங்குற்கு அன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி 396‘ ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ புற. 235‘ஆஅ அளிய அலவன்தான்பார்ப்பினோடு’‘ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்ஒருசாரா ர் ’‘அஆ, இழந்தான்என் றெண்ணப்படும்’ நாலடி 9இனி என்றது, காலத்தின்மேலும் இடத்தின்மேலும் முன் என்பது படவரும்.‘அளிதோ தானே நாணேநம்மொடுநனிநீ டுழந்தன்று மன்னே இனியே’ (குறுந். 149)என் என்பது சொல்லுதல் என்னும் தொழில் குறித்துப் பெயர்வினைகட்குரிய விகுதிகளுடனே வரும்.எ-டு : ‘எண் என்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும்கண் என்ப வாழும் உயிர்க்கு’ (கு. 392)‘மிடி என்னும் காரணத்தின் மேன் முறைக் கண்ணேகடி என்றார் கற்றறிந் தார்’ (நாலடி 56)ஏன் என்பது ஒழிதல்பொருள் குறித்து வரும்.எ-டு : ஏனோன், ஏனோள், ஏனோர், ஏனது, ஏனவை, ஏனைய,ஏனுழிஏதில் என்பது அயல் என்னும் பொருள் குறித்து வரும்.எ-டு : ஏதிலான், ஏதிலாள், ஏதிலார், ஏதிலது, ஏதில.ந என்பது சிறப்புப் பொருட்டு; பெயர்முன் அடுத்து வரும்.எ-டு : நக்கீரர், நச்செள்ளையார், நப்பாலத்தனார், நப்பிஞ்ஞை,நந்நாகனார், நக்கடகம்கல் என்றது முதல் நான்கும் ஓசைப்பொருள்மேல் வரும்.எ-டு : ‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தலின்’ (கலி. 5)‘ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ (ஐந். ஐம். 28)‘புள்ளும் கொல்லென ஒலிசெய்யும்’‘நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’ (புற. 243)துண் என்றது முதல் நான்கும் குறிப்புப்பொருள்மேல் வரும்.எ-டு : ‘ துண்ணென்னும் நெஞ்சமொடு’‘பொள்ளென ஆங்கே புறம்வேரார்’ (கு. 487)‘எம்மொடு கழிந்தன ராயின் கம்மென’ (அக. 11)‘கொட்புறு நெஞ்சின் கொம்மென உராஅய்’ நன். 420 மயிலை.பிற பொருள்களாவன :அக்கொற்றன், எக்கொற்றன் – என்பன சுட்டுப்பொருளும் வினாப்பொருளும்தந்தன.நக்கீரர், நப்பாலத்தனார் – என்புழி நகர இடைச்சொல் சிறப்புப் பொருள்தந்தது.‘அஆ, இழந்தான்என் றெண்ணப் படும்’ நாலடி. 9‘ஆஅ அளிய அலவன்தன்பார்ப்பினோடு‘அந்தோ விசையை பட்டனள்’ சீவக . 312‘அரக்காம்பல் நாறும்வாய்அம்மருங்கிற்கு அன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ’ நாலடி. 396இவை இரங்குதல் பொருள் தந்தன.‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ குறள் 1110‘சேரி தோறு இது செல்வத் தியற்கையே’ சீவக. 129தோறு, இடப்பன்மைப் பொருள் தந்தது. ‘தொறு’வும் அது.இனிச் செய்வான், இனி எம் எல்லை – ‘இனி’ காலப்பொரு ளும்இடப்பொருளும் தந்தன. (தொ. சொ. 421 சங்.)

இடைச்சொல் அடையும் வேறுபாடுகள்

இடைச்சொற்கள் தாம் இடையே வருதலன்றித் தம்மால் சாரப்படும் சொற்களைமுன்னும் பின்னும் தாம் அடைந்து வருதலும், தம் ஈற்றெழுத்து வேறுபட்டுவருதலும், ஓர் இடைச்சொல் நின்ற இடத்தே மற்றோர் இடைச்சொல் நிற்றலும்ஆகிய இலக்கணங்களை உடைய.வருமாறு :மன்னைச் சொல், கொன்னைச்சொல், னகாரை முன்னர் – என மன் கொன் என்னும்இடைச்சொற்கள் தம்மை உணர நின்ற வழியும் ஈறு திரிந்தன; காரம் என்னும்எழுத்துச்சாரியை ‘காரை’ எனத் திரிந்து வந்தது. (தொ. சொ. 251 சேனா.உரை)

இடைச்சொல் இலக்கணம்

இடைச்சொற்கள் தமக்கென வேறொரு பொருளை யுணர்த் தும் இலக்கணமுடையனஅல்ல; பெயரும் வினையும் உணர்த் தும் பொருளைச் சார்ந்து நின்றுஅவற்றையே வெளிப்படுத்து நடக்கும் இயல்பின. மொழிக்கு முன்னும் பின்னும்நிற்கு மேனும் பெரும்பாலும் இடையே நிற்றலின் இடைச்சொல் எனப்பட்டன.இடைச்சொற்கள் விசேடிக்கும் சொல்லாய் வருமேயன்றி விசேடிக்கப்படும்சொற்கள் ஆகா. பெயர்வினைகளின் பொருளை இவை விசேடிக்கும். தமக்கெனப்பொருளின் மையே இடைச்சொற்களின் சிறப்பு. சாரப்படும் சொல்லின் வேறாய்நிற்றலேயன்றி, உண்டான் என்றிசினோர் அருங் குரைத்து – என்பனவற்றிற்குஉறுப்பாய் வருதலும் கொள்க. (தொ. சொ. 251 நச். உரை.)இடைச்சொல்லாவது பெயரும் வினையும் போலத் தனித் தனிப் பொருளுணரஉச்சரிக்கப்படாது, பெயர்வினைகளைச் சார்ந்து புலப்படும்; பெயரும்வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல் ஆயிற்று. இது பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப்பொருண்மை உணர்த்தியும் வினைப் பொருண்மைஉணர்த்தியும் வருவதல்லது வேறு பொருள் இலதாயிற்று. (தொ. சொ. 246 தெய்.உரை)பெயர்வினைகள் உணர்த்தும் பொருட்குத் தான் இடமாக நிற்றலான்இடைச்சொல் ஆயிற்று; பெயரொடும் வினை யொடும் அவ்விடைச்சொற்கள் வருவழிச்சொற்புறத்து வருதலும் அச்சொல்வழி வருதலும் என அவ்வருகை இருவகைத்து.(சொல்வழி – சொல்லகம்)எ-டு : வருகதில், உண்டான் : இவை வினை . (‘தில்’ சொற் புறத்துவந்தது ; காலஎழுத்தும் ஆன் விகுதியும் சொல்லின் அகத்துநின்றன.)அதுமன், மற்றையது : இவை பெயர். (‘மன்’ சொல் புறத்து வந்தது;அகரச்சாரியை முதலியன சொல் அகத்து நின்றன.) (தொ. சொ. 251 கல்.உரை)தனித்து நடத்தலின்றிப் பெயர் வினைகள் இடமாக நடத்தலின் இடைச்சொல்என்னும் காரணக்குறி போந்தது. இடச்சொல் என்றால் இடமுணர்த்தும் சொல்லைக்குறிக் கும் என்று கருதித் திரிசொல்லால் இடைச்சொல் என்றுபெயரிடப்பட்டது. பெயர்வினைகளுக்கு அகத்துறுப்பாகவும்புறத்துறுப்பாகவும், அவற்றின் முன்னும் பின்னும் ஒன்றும் பலவுமாகஇடைச் சொற்கள் வரும். பகுபதத்தில் பகுதி நீங்கிய ஏனை உறுப்புக்கள்இடைச்சொற்களே. பகுதியையும் இடைச்சொல் என்பர் சங்கரநமச்சிவாயர். (நன்.420)

இடைச்சொல் சில பொருள்படுமாறு

அந்தில் – ஆங்கு என்ற பொருளிலும் அசைநிலையாவும் வரும்.எ.டு : ‘வருமே சேயிழை அந்தில்,கொழுந ற் காணிய’ (குறுந். 293)‘அந்தில் கச்சினன்கழலினன்’ (அக. 76) (நன். 437)அம்ம – ‘உரையசைப் பொருளிலும் கேண்மின் என்ற ஏவற் பொருளிலும்வரும்.’எ-டு : ‘அதுமற்று அம்ம’, ‘அம்ம வாழி தோழி’(நற். 158)(கேள் என்ற ஏவல்) (நன். 438)அரோ – எல்லா இடங்களிலும் வரும் அசைச்சொற்களில் ஒன்று.எ-டு : ‘நோதக இருங் குயில் ஆலுமரோ’ கலி. 33 (நன். 441)ஆங்கு – அசைநிலையாகவும் இடப்பொருளிலும் வரும்எ-டு : ‘ஆங்கத் திறனல்ல யாம் கழற’, (கலி. 86)‘ஆங்காங்கு ஆயினும் ஆக’ (முருகு. 250)(நன். 437)தில் – விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருளில் வரும்.எ-டு : ‘சின்மொழிஅரிவையைப்,பெறுகதில் அம்ம யானே’ (குறுந் 14)‘பெற்றாங்கு அறிகதில்அம்ம இவ்வூரே’ (குறுந்.14) ‘வருகதில் அம்மஎம் சேரிசேர’ (அக. 276) தெய்ய – இசை நிறைத்தற்கண் வரும் (நன்.431)எ-டு : ‘சொல்லேன் தெய்ய நின்னொடுபெயர்த்தே’(நன்.436)மற்று – வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும்பொருளில் வரும். (நன்.433)எ-டு : ‘மற்று அறிவாம் நல்வினை’ (நாலடி. 19) : விரைந்தறி வாம் என்பதனை ஒழித்து விரையாது அறிவாம்எனவருதலின் வினைமாற்று‘மற் று அடிகள் கண்டருளிச் செய்யமலரடிக்கீழ்’ (சீவக. 1873) : அசைநிலை‘ஊழின்…….. மற்றொன்றுசூழினும்’ (குறள். 380) : மற்று ஊழின் பிறிது என்னும் பொருட்டு. (நன்.433)மா – வியங்கோளை அடுத்து அசைநிலையாக வரும்.எ-டு : ‘ உப்பின்று புற்கை உண்கமாகொற்கையோனே’ (நன். 439)

இடைச்சொல் திறம் ஏழு, எட்டன்று

இடைச்சொல் திறம் ஏழுடனே குறிப்பு என ஒன்று கூட்டி எட்டு என்பாரும்உளராலோ எனின், அது ‘தத்தம் பொருள’ (251) என்பதனுள் அடங்குதல், ‘வினைபெயர் குறிப்பு இசை’ (255) என்பதனால் பெறப்படுதலின், மிகைபடக்கூறல் எனமறுத்து ஏழே என்க. (இ. வி. 251 உரை)

இடைச்சொல் தோன்று முறை

இடைச்சொற்கள் பெயர்வினைகளை அடைந்து தம் மருங்கி னான் தோன்றுதலும்,பெயர்வினைகளுடைய மருங்கினான் தோன்றுதலும் என இருவகையவாம்.எ-டு : அதுமன் : மன் என்னும் இடைச்சொல் பெயரின் புறத்தேதோன்றியதுஅவன், உண்டான் : அகரமாகிய சுட்டிடைச் சொல்லும், கால எழுத்தும்ஆண்பால் விகுதியுமாகிய இடைச்சொற்க ளும் முறையே பெயர்வினைகளின் அகத்தேஉறுப்பாய்த் தோன்றின. (தொ. சொ. 162 கல். உரை)

இடைச்சொல் நிலைபெறும் இடமும்வேறுபாடும்

இடைச்சொல் தனக்கென ஒரு பொருளின்றி, முன்னும் பின்னும் பெயரையோவினையையோ அடுத்து வருவது; ஈறு திரிந்தும் வரப்பெறும்; மற்றோர்இடைச்சொல்லோடு இணைந்து வருதலுமாம்.‘பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ’ (கலி. 39) மன்னும்கொல்லும் இணைந்து வந்தன. (தொ. சொ. 253 நச். உரை)

இடைச்சொல் புறனடை

இடைச்சொற்குப் பொருள் பற்றிய புறனடை, சொல் பற்றிய புறனடை என்றஇரண்டும் தொல்காப்பியத்து உள்ளன.பொருள் பற்றிய புறனடையான்,‘சென்றீ பெருமநிற் றகைக்குநர்யாரோ’ (அக. 46) – என ஓகாரம் ஈற்றசையாயும்,‘கள்ளென்கோ…..சூடென்கோ’ – என எண்ணாயும்,‘நீங்கின ளோஎன் பூங்கணோளே’ (ஐங். 375) – என இரக்கக் குறிப் பாயும் வரும்.‘ஊரெனப் படுவது உறையூர்’என, எனஎன்பது, சிறப்பின்கண் வந்தது. அவர் நமக்குத் தஞ்சம்அல்லர் என, தஞ்சம் என்பது பற்று என்ற பொருளில் வந்தது.மா – ‘ஓர்கமா தோழி’ – என முன்னிலைக்கண் அசையாகவும்‘தட்குமா காலே’ (புற. 193) – எனப் படர்க்கைகண் அசை யாகவும் வரும்.மன் – ‘அதுமன் கொண்கன் தேரே’ – என அசைநிலையாய் வரும்.இன் – ‘காப்பின் ஒப்பின்’ (சொ. 73) – என அசைநிலையாய் வரும்.ஐ – ‘முனையுண்டவர் உருகும்பசுந்தினைப் பி ண்டியும்’ என அசைநிலையாய் வரும்.சின் – ‘தண்ணென் றிசினேபெருந்துறை ப் புனலே’ (ஐங். 73)எனப் படர்க்கைக்கண் அசைநிலையாக வரும்.(தொ. சொ. 297 நச். உரை)மாள தெய்ய என ஓரும் அத்தை ஈ இசின் ஆம் ஆல் என்ப அன்று – என்பனஅசைநிலையாக வரும்.தொறு – இடப்பன்மைப் பொருளது. அது ‘தோறு’ என முதல் நீண்டும்நிற்கும்.ஆ – வியப்புப் பொருளும் மறுப்புப் பொருளும் தரும்.ஐ – இசையும் வருத்தமும் ஆகிய பொருளை உணர்த்தும்.பொள்ளென, பொம்மென, கதுமென – இவை விரைவு உணர்த்தும். கொம்மென -பெருக்கம் உணர்த்தும்.ஆனம், ஏனம், ஓனம் : எழுத்துச்சாரியைஎப்பொருள் : எகரம் வினா உணர்த்தும்.அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு – இவை இடப் பொருளன.இவையெல்லாம் இடையியலில் குறிக்கப்படா இடைச் சொற்கள். (தொ. சொ. 298நச். உரை)பின்வரும் இடைச்சொற்கள் குறித்தவாறு வெவ்வேறு பொருளில் வரும்.மன் – அசைநிலை ; உம் – இசைநிறை, அசைநிலை, சிறப்பு;போலும் – துணிவோடு ஐயம்; அன்றே – அசைநிலை; ஏ – ஈற்றசை ; குரை -ஒலிப்பொருண்மை; தொறு – பல என்னும் பொருண்மை; மாள, தெய்ய, என, ஆங்கு,ஓரும், அத்தை, ஆல், ஆன, யாழ – அசைநிலை. (தொ. சொ. 291, 292 தெய்.உரை)

இடைச்சொல் வகை

இடைச்சொற்கள்தாம், இருமொழி தம்மில் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்அவற்றின் பொருள்நிலைக்கு உதவி செய்து வருவனவும்,முதனிலை நின்று காரியத்தினைத் தோற்றுவிக்குமிடத்துக் காலம்காட்டும் இடைச்சொற்களோடே, பாலும் இடமும் காட்டும் இடைச்சொற்களாய்வருவனவும்,வேறுபடச் செய்யும் செயப்படுபொருள் முதலாயவற் றின்கண் உருபு என்னும்குறியவாய் வருவனவும்,தமக்கு ஓர் பொருளின்றித் தாம் சார்ந்த பெயர்வினைகளை அசைப்பப்பண்ணும் நிலைமையவாய் வருவனவும்,செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வருவனவும்,கூறுவார் தாம் தாம் குறித்த குறிப்பினாலே அவர் குறித்த பொருளைவிளக்கி நிற்பனவும்,நாடகவழக்கினான் உய்த்துணரினன்றி, உலகியல் வழக்கி னான்காட்டப்படுவதோர் ஒப்பு இன்றி நின்ற ஒப்புமைப் பொருண் மையைஉணர்த்திவரும் உவம உருபுகளும் – என்று சொல்லப் பட்ட அவ்வேழ் இயல்பினைஉடையனவாம். (தொ. சொ. 252 நச். உரை)ஐ முதலிய ஆறு வேற்றுமை உருபுகளும், அன் முதலிய சாரியை உருபுகளும்,போல முதலிய உவமை உருபுகளும், செய்யுளிசை நிறைத்து வருவனவும், அசைத்தலேபொருளாக நிற்பனவும், அன் ஆன் முதலிய வினையுருபுகளும் – ஆகிய ஆறுதிறத்தன வாம் இடைச்சொல்.‘நம்பியை’ என்புழிப் பெயரின் புறத்துறுப்பாய் ஐயுருபும்,‘முடியினன்’ என்புழி அகத்துறுப்பாய் விகுதியும் இடை நிலையும்,‘உண்ணான்’ என்புழி வினையின் அகத்துறுப்பாய் விகுதியுருபும் வந்தன.(மு. வீ. ஒழி.2 உரை)

இடைச்சொல் வேற்றுமைச் சொல்லே ஆதல்

இடைச்சொற்கள் தாமாக நின்று பொருளுணர்த்தாமல் பெயரையும் தொழிலையும்அடைந்து நின்று அவற்றையே பொருள் வேற்றுமைப்படுக்கும் ஆகலின்,இடைச்சொற்கள் வேறுபடுத்தும் சொற்களாம். (தொ. சொ. 449 இள. உரை)சொற்கள் விசேடிக்கும் (வேறுபடுக்கும்) சொல், விசேடிக்கப் படும்(வேறுபடுக்கப்படும்) சொல் – என இருவகைய. பெயர் வினைகளிலும்உரிச்சொல்லிலும் இருநிலைய ஆகும் சொற் களும் உள. ஆயின், இடைச்சொற்கள்எல்லாம் விசேடிக்கும் சொல்லாக வருதலன்றி விசேடிக்கப்படும் சொல்லாகவாரா. வேற்றுமைச்சொல் – வேற்றுமையைச் செய்யும் சொல். வேற் றுமை,வேறுபாடு, வேறுபடுத்தல், விசேடித்தல் – என்பன ஒருபொருள. (தொ. சொ. 455.சேனா. உரை)எ-டு : சாத்தனே கொற்றனே தேவனே வந்தனர் – என்புழி, ஏகாரஇடைச்சொல் பெயரோடு இணைந்து எண்ணுப்பொருள் தந்தவாறு.பெயரும் வினையும் போலப் பொருளை நேர் காட்டாது, ஐ ஒடு கு இன் அதுகண் – என்னும் வேற்றுமையுருபு போல, வேறுபட்ட பொருளைக் குறித்துநிற்றலின் இடைச்சொற்கள் பொருள் வேறுபடுக்கும் சொற்கள் எனப்பட்டன;பொருளு ணர்த்தும் சொற்கள் எனப்படா. மன் என்பது கழிவினும் ஆக்கத்திறனினும் ஒழியிசையினும் வந்தவழித் தான் இடைப்பட்டு நிலைமொழியின்வேறுபட்ட பொருளைக் குறித்து நின்ற தல்லது அப்பொருட்கு வாசகமின்றிநின்றமை கண்டு கொள்க. (தொ. சொ. 445 தெய். உரை)முடிக்கும் சொல்லை விசேடித்து நிற்கும் சொற்கள் எல்லாம்முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும் சொல்லாய்நிற்கும். ‘வேற்றுமைச்சொல்’ வேறுபாட்டினைச் செய்யும் சொல் எனவிரியும். எழுவாயை முடிக்கும் வினைக் கும், முற்றை முடிக்கும்பெயர்க்கும் வினையெச்சத்தை முடிக்கும் வினைக்கும், பெயரெச்சத்தைமுடிக்கும் பெயர்க்கும் இடையே வருதலின் ‘இடைச்சொல்’ என்றார்.எ-டு : எழுவாய் : ‘ கண் ணி கார்நறுங் கொன்றை’ (புறநா. 1)- ‘கொன்றை’யை விசேடித்தன.வினையெச்சம் :‘இழிபிறப்பினோன்ஈயப்பெற்று ,நிலம்கல னாக இலங்குபலி மிசையும்’ (புற. 363)பெற்று என்பதன் முடிபாகிய ‘மிசையும்’ என்ற வினையைவிசேடித்தன.பெயரெச்சம் : ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி’ (அக.4) ‘பொலிந்த’ என்பதன் முடிபாகிய ‘புரவி’ என்னும்பெயர்ச்சொல்லை விசேடித்தன. (தொ. சொ. 455 நச். உரை)[ (இஃது ‘இடைப்பிறவரல்’ இலக்கணமாம். தொல்காப்பி யரும்,இடைப்பிறவரலை ‘இடைநிலை’ என்பர். ‘தத்தம் எச்சமொடு……….வரையார்’ (தொ. 237 சேனா.) ]

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாய் ஈற்றயலெழுத்து இடை ஒற்றாக அமையும்
சொல்லின் ஈற்றிலுள்ள குற்றிலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரமாம்.
இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் அல்வழிக்கண் வன்கணம் வரின்
இயல்பாகப் புணரும்;வேற்றுமைக்கண் இயல்பாகவும் இன்சாரியை பெற்றும்
புணரும். எ-டு : தெள்குகடிது – அல்வழி; தெள்குகால், தெள்கின் கால் –
வேற்றுமை(நன். 182)

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் அல்வழிக் கண்ணும்
வேற்றுமைக்கண்ணும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : தெள்கு
கடிது, தெள்கு சிறிது; தெள்குகால், தெள்கு சிறை (தொ. எ. 425, 413
நச்.)
வருமொழி உயிர்க்கணம் வரின், குற்றியலுகரத்தின்மேல் உயிரேறி
முடியும். எ-டு : தெள்கு + அடைவு = தெள்கடைவு, தெள்கு + அருமை =
தெள்கருமை (தொ. எ. 413 நச்.)
இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் உருபுக ளொடு புணரும்வழி
இன்சாரியை பெறும். எ-டு : தெள்கு + ஐ
> தெள்கு + இன் + ஐ =
தெள்கினை; தெள்கு + ஆல்
> தெள்கு + இன் + ஆல் =
தெள்கினால்; அச்சாரியை பொருட் புணர்ச்சிக் கண்ணும் வரும். எ-டு :
தெள்கின்கால், தெள்கின் ஞாற்சி (தொ. எ. 195 நச்.)

இடைநிலை

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்பாகிய தனிச் சொல் இடைநிலைஎனப்படும்; கூன் என்பதும் அது. தாழிசை மூன்றனை அடுத்து இடைநிலை நிகழ,அடுத்துச் சுரிதகம் என்னும் உறுப்பால் இக்கலிப்பா முற்றும். பிறகலிப்பா வகைகளிலும் வெவ்வேறிடத்தே தனிச்சொல்லாகிய இவ்விடைநிலைவரப்பெறும். (யா. க. 82 உரை)

இடைநிலை அளபெடைத் தொடை

முதல் நின்ற சீரின் நடுஎழுத்து அளபெடுத்து ஒன்றிவரத்தொடுப்பது.எ-டு : ‘உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோவிராஅய கோதை விளர்ப்பு’(யா.க. 41 உரை)

இடைநிலை ஒற்றளபெடைத் தொடை

சீரின் இடையிலுள்ள ஒற்று அளபெடுத்து வருவது.‘வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள்பண்ண்டை நீர்மை பரிது’ (யா. க. 41 உரை)

இடைநிலை மெய்மயக்கத்தைக் குறிக்கும் பெயர்கள்

சங்கம் எனினும், புணர்ச்சி எனினும், சையோகம் எனினும், மயக்கம்
எனினும், புல்லல் எனினும், கலத்தல் எனினும் இடை நிலை மெய்மயக்கம்
என்னும் ஒருபொருட் கிளவி. (மு. வீ. எழுத். 66)

இடைநிலை மெய்மயக்கம்

ஒரு மொழியிலும் இருமொழியிலும் க ச த ப என்ற மெய்கள் தம்முன் தாமே
மயங்கும்; ர ழ – என்ற இரண்டு மெய்களும் தம்முன் பிறவே மயங்கும்; ஏனைய
பன்னிரண்டும் தம்முன் தாமும், தம்முன் பிறவும் மயங்கும்.
க ச த ப – என்ற நான்கு மெய்களும்நீங்கலாக ஏனைய பதினான்கு மெய்களும்
பிறமெய்களொடு கூடும் கூட்டம் வேற்றுநிலை மெய்மயக்கமாம். ரழ – என்ற
இரண்டு மெய்களும் ஒழித்து ஒழிந்த பதினாறு மெய்களும் தம்மொடு தாம்
கூடும் கூட்டம் உடனிலை மெய்மயக்கமாம். இவ்விரு பகுதி மயக்கமும்
மொழியிடையே நிகழும். மெய்யுடன் உயிரும், உயிருடன் மெய்யும் மயங்கும்
மயக்கத்திற்கு அள வில்லை. (நன். 110)

இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆவன

இடைநிலையாவன பெரும்பாலும் இனைய இத்துணைய என்றளத்தற்கு அரியவாய்ப்
பதம் முடிப்புழிக் காலமும் பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவன.
சாரியையாவன அன் ஆன் முதலாக எடுத்தோதப்பட்டு எல்லாப்
புணர்ச்சிக்கும் பொதுவாய்ப் பெரும்பாலும் இன் னொலியே பயனாக வருவன.
சந்தியாவன இன்னது வந்தால் இன்னது இன்னதாம் என வருவன.
விகாரமாவன பதத்துள் அடிப்பாடும் செய்யுள்தொடையும் ஒலியும் காரணமாக
வலித்தல் மெலித்தல் முதலாயினவாக வருவன. இவை இடைநிலை முதலானவற்றால்
முடியாதவழி வருவன எனக் கொள்க. (நன். 132 மயிலை.)

இடைநிலைகளை ஏலாத வினைகள்

றகரத்தொடு கூடிவந்த உகரஈறும் உம்ஈறுமான வினை முற்றுக்கள் கழிந்த
காலமும் வருங்காலமும் (சென்று, சென்றும்; சேறு, சேறும்), தகரத்தொடு
கூடிநின்ற அவ்விரண்டு ஈற்று வினையும் இறப்பும் எதிர்வும் (வந்து,
வந்தும்; வருது, வருதும்), டகரத்தொடு கூடிநின்ற அவ்விரண்டு ஈற்றுவினை
யும் இறந்தகாலமும் (உண்டு, உண்டும்), மின்ஈறும், ஏவல் பொருண்மையில்
வரும் அனைத்தீறுகளும், வியங்கோட் பொருளனவும், இகர ஈறும், மார் ஈறுமான
வினைகள் எதிர் காலமும் (உண்மின், உண், உண்க – வாழி – வாழியர், சேறி,
உண்மார்), பகர ஈற்று வினை இறந்தகாலமும் எதிர்காலமும் (உண்ப), செய்யும்
என்னும் வாய்பாட்டு வினை நிகழ்வும் எதிர்வும் (உண்ணும்), எதிர்மறைவினை
முக்காலமும் (உண்ணான்) காட்டும். (நன். 144 மயிலை.)

இடைநிலைப்பாட்டு

இடைநிலைப்பாட்டு என்பது தாழிசையையும் குறிக்கும். செய்யுளிடையேநிற்பனவாய்த் தாழம்பட்ட ஓசை இன்றி வருவனவற்றையும் குறித்தற்கு‘இடைநிலை’ எனப்பட்டது. அங்ஙனம் வருங்கால் பாட்டாய் வருதலும்,ஒன்றாயும் பலவாயும் வருதலும் கோடற்குப் ‘பாட்டு’ எனப்பட்டது. (தொ.செய்.132 நச்.)இஃது இறுதிநிலை கொண்டு முடியும் எனவும் கூறப்படும். (தொ. செய். 137பேரா., நச்.)(கலிப்) பாடலின் முகத்தே தரப்படுதலின் ‘தரவு’ எனப் பட்டது.உடம்பும் தலையும் தனித்தனிப் பிரித்து வழங்கு மிடத்து உடம்பிற்குக்கழுத்துப் போல இது முன் நிற்றலின் ‘எருத்து’ என்றும் கூறப்படும்.இசைநூலார் இத்தரவினை ‘முகம்’ என்பர். இத்தரவினை அடுத்துக் கலிப்பாவின்இடை யாகப் பெரும்பான்மையும் தாழிசை பயிலுதலின் இடை நிலைப்பாட்டுஎனப்பட்டது. (தொ. செய்.132 நச்.)

இடைநிலைப்பாட்டு வருமாறு

இடைநிலைப்பாட்டாவது தாழிசை. அது தரவின் அளவிற் குட்பட்ட அடிகளான்வரும் இலக்கணமுடையது என்ப. நாலடித் தரவிற்கு நாலடித் தாழிசை வரினும்அமையும் என்க.(தொ. செய். 134 ச.பால)

இடைப்புணர் தொடைகள்

ஓர் அளவடிக்கண் 2, 3ஆம் சீர்களில் வரும் தொடை இடைப் புணர் ஆம்.இடைப்புணர் மோனை, இடைப்புணர் எதுகை, இடைப்புணர் முரண், இடைப்புணர்இயைபு, இடைப்புணர் அளபெடை என முறையே வருமாறு காண்க. (யா. க. 39உரை)

இடைமை மிக்கு வரல்

“வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுளோர்வாழ்வாருள் வாழா தவர்”என்னும் இப்பாடற்கண், இறுதிச்சீர்த் தகரம் நீங்கலாக இடையினஎழுத்தே மிக்கு வந்தவாறு காண்க. (யா.க.2 உரை)

இடையாகு இன்பா

எல்லாப் பாக்களும் தம்சீரும் தம்தளையும் பிறபாவின் சீரொடும்தளையொடும் மயங்கி வருவன இடையாகு இன்பா என்பார் மயேச்சுரர். (யா. க. 92உரை)

இடையாகு எதுகை

அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப இரண்டாம் எழுத்தொன்றுமேஒன்றிவரத் தொடுப்பது.எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே யுலகு’ (குறள். 1)(யா.வி. 37 உரை)அகர, பகவன் – இடையாகு எதுகை – அடி யெதுகை.

இடையாகு சந்தம்

பாடலின் நான்கடியும் ஓர் எழுத்து மிக்கும் குறைந்தும் வருவனஇடையாகு சந்தமாம். (யா. வி. பக். 522)

இடையாகு மோனை

அடிதோறும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றிவரத் தொடுப் பது இடையாகுமோனையாம்.எ-டு : ‘ மா வும் புள்ளும் வதிவயின் படர மா நீர் விரிந்த பூவும் கூம்ப………………………………………………. மா யோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’அடிதோறும் ‘மா’ என்னும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றி வரத்தொடுத்தமையால் இப்பாடல் இடையாகு மோனை (அடிமோனை) ஆம். (யா. க. 37உரை)

இடையிட் டெதுகை

‘இடையிட்ட எதுகை’ காண்க.

இடையிட்ட எதுகை

அடிதோறும் எதுகைத்தொடை அமையாமல் முதலடி 3 ஆம் அடி 5 ஆம் அடி எனஇடையிடையே ஓரடிவிடுத்து அமையும் எதுகை இடையிட்ட எதுகையாம்.‘தோ டா ர் எல்வளை நெகிழ நாளும்நெய்தல் உண்கண் பைதல கலுழவா டா அவ்வரி புதைஇப் பசலையும்வைகல் தோறும் பைப்பையப் பெருகலின்நீ டா ர் இவணென நீ மனம் கொண்டோர்’இப்பாடற் பகுதியில் தோடார், வாடா, நீடார் என ஓரோர் அடிவிட்டுஎதுகைத்தொடை அமைந்துளது காண்க.(யா. க. 37 உரை)

இடையிட்டு வந்த இடைமுற்று மடக்கு

ஒரு பாடலின் முதலடி நடுவில் வரும் சீர் நான்கு அடிகளிலும்நடுச்சீராய் வர, ஏனைய சீர்கள் வெவ்வேறு சொற்களால் அமைய இயற்றப்பட்டபாடல், இடையிட்டு வந்த இடைமுற்று மடக் கினைப் பெற்ற பாடலாகும்.அவ்வாறு மடக்கிய சீர் வெவ்வேறு பொருள் தரும்.எ-டு : ‘வாச நாள்மலர் வண்டுகள் வாய்விடா வகையுண்டுமூசி ஏழிசை வண்டுகள் களிமுகிற் குழலாளைப்பூசல் மாமதன் வண்டுகள் பொரத்துழாய் புல்லாணிஈசன் நல்கிலன் வண்டுகள் இறைதுறந் தெழுமன்னோ’முதலடி : வண்டுகள் – வண் + துகள் – வளவிய மகரந்தப் பொடி3 ஆமடி – வண்டுகள் – வண்டுகள் மொய்க்கும் மலராகிய அம்புகள்4 ஆமடி – வண்டுகள் – கைவளைகள்பூக்களில் மகரந்தத்தைத் தெவிட்டாது உண்டு ஏழிசைபாடும் வண்டுகள்மொய்க்கும் மன்மதன் பஞ்சபாணங்கள் தலைவியைத் துன்புறுத்துமாறுதிருப்புல்லாணி ஈசன் தன் திருத்துழாய் மாலையை இவளுக்குத் தாராமையால்இவள் முன்கையினின்றும் வளையல்கள் கழன்றுவிட்டன என்பது பொருள். (மா. அ. பாடல். 731)

இடையிட்டு வந்த கடைமுற்று மடக்கு

ஏனைய சீர்கள் வெவ்வேறாக வரவும், நான்கடிகளிலும் கடைசி அசையோ சொல்லோஎழுத்துக் கூட்டமோ ஒன்றா கவே அமையப் பாடும்போது இடையிட்டுவந்தகடைமுற்று மடக்கு அமையும்.எ-டு : ‘மறைப யின்றவண் தமிழ்முனி குருகையில் மன்காவேஇறைவர் பின்னர்நெஞ்(சு) அகன்றது கன்றிடத்(து) இரங்காவே!அறையில் இங்(கு)இணை யாமென உயிர்உண அங்காவேயுறைபு ரந்தகண் மலர்களும் ஒல்லையும் உறங்காவே’குருகையில் மன் (-நிலைபெற்ற) காவே! (-சோலையே),கன்றிடத்து இரங்கு ஆவே! (-பசுவே), அறையில் இங்கு இணையாம் என்உயிர் உண அங்கா (-வாயைத் திறத்தல்), வேய் (தந்த) உறை புரந்த(-கண்ணீர்த் துளிகளைக் கொண்ட) கண்மலர்களும் ஒல்லையும் உறங்காவே – எனப்பிரித்துப் பொருள் செய்க.இப்பாடலின் நான்கடிகளிலும் ஈற்றில் ‘காவே’ என ஈரெழுத் துக்களேமடங்கி வந்தவாறு. (மா. அ. பாடல். 732)

இடையின எதுகை

அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப இரண்டாம் எழுத்தாகிய மெய்இடையினமெய்யாக இருப்பின் அவ் வெதுகை இடையின எதுகையாம்.எ-டு : ‘எ ல் லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொ ய் யா விளக்கே விளக்கு’இதில் எ ல் லா, பொ ய் யா இடையின எதுகை அடியெதுகை யாக வந்தது. (யா. க. 37உரை)

இடையின மோனை

அடிகளின் முதற்கண் வந்த உயிர்மெய்எழுத்துக்களில் மெய்கள் இடையினமெய்யாக இருப்ப, அவற்றின் மேலேறிய உயிர்கள் வெவ்வேறாக அளவுஒத்திருப்பின் அம்மோனை இடையின மோனையாம்.எ-டு : ‘ வே னில் உழந்த வறிதுயங் குடலின் யா னை செல்லும் அருஞ்சுர நெடுவழி’இவ்வடிகளில் முதற்கண் வந்த எழுத்துக்கள் முறையே வகர யகரஇடையினமெய்யாக, ஊரப்பட்ட நெட்டுயிர்களது இயைபால் இடையின மோனைவந்தவாறு. (யா.க. 37 உரை)

இடையினப் பாடல்

‘யாழியல் வாய வியலளவா லாயவொலியேழிய லொவ்வாவா லேழையுரை – வாழியுழையே லியலா வயில்விழியை யையோவிழையே லொளியா விருள்’‘யாழ் இயல் வாய இயல் அளவால் ஆய ஒலியின் ஏழ் இயல் ஏழை உரைஒவ்வாவால்; உழையேல் அயில்விழியை இயலா; ஐயோ! இழையேல் இருள் ஒளியா,வாழி’ என்று பொருள் செய்யப்படும்.“யாழிலிருந்து தோன்றிய தூய்மையான எழுவகை இசை ஒலிகள் இப்பெண்ணின்பேச்சினிமையை ஒவ்வா; மானின் விழியும் இவளுடைய கூரிய விழிகளை ஒவ்வா;வியத்தக்க இவள் அணிகலன்களின் ஒளியும் இவள் மேனி யொளிக்கு முன் தம் ஒளிமழுங்கி இருள்போல ஆகும்“ என்று தலைவன் தலைவியைப் புகழும் இப்பாடற்கண்,இடையின மெய்களும் இடையின உயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 96உரை)

இடையீட்டு எதுகை

‘இடையிட்ட எதுகை’ காண்க.

இடையெழுத்து ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி

வல்லினம் போன்று வல்லென்று ஒலியாமலும் மெல்லினம் போன்று மெல்லென்று
ஒலியாமலும் இடைநிகர்த்ததாய் ஒலித்தலானும், இடைநிகர்த்ததாய
மிடற்றுவளியான் பிறத்தலானும் இடையினம் என்பது காரணப் பெயராயிற்று.
மேல் யரலவழள என்ற ஆறு மெய்களையும் இடையெழுத்து என்ற பெயரான் ஆள்வதற்கு
நூல்மரபில் பெயரிடப்பட்டது. ஆதலின் இடையெழுத்து என்பது ஆட்சியும்
காரணமும் நோக்கிய குறி. (தொ. எ. 21. இள., நச். உரை).
உயிரெழுத்துக்கள் வளியைத் தடுக்காமல் வெளிவிடுதலின், தாமே ஒலிக்க
இயல்கின்றன. வளியை நன்கு தடுத்தலின் வல் லெழுத்து மெல்லெழுத்துக்கள்
தாமே ஒலிக்க வருவனவாய் இல்லை. சிறிதளவு தடுத்தலின், இடையெழுத்துக்கள்
தாமே ஓராற்றான் ஒலித்தல் கூடும். ஒலிக்கும் திறத்தில் உயிரெழுத்துக்
கட்கும் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கட்கும் இடைப்பட் டிருத்தலானே ய ர
ல வ ழ ள – க்கள் இடையெழுத்து எனப் பட்டன. (எ. ஆ. பக். 11.)
முழுதும் வாய்திறக்க உண்டாம் உயிருக்கும், வாய் முழுதும் மூட
உண்டாம் வல்லின மெல்லினங்கட்கும், வாய் சிறிது மூடியும் சிறிது
திறந்தும் இருத்தலால் உண்டாம் ய ர ல வ ழ ள – க்கள் இடையாய் நிற்றலின்
இடையெழுத்து எனப்பெயர் பெற்றன. (எ. கு. பக். 29)

இடையெழுத்து வேறுபெயர்கள்

இடைமை எனினும், இடைக்கணம் எனினும், இடை எனினும், இடையெழுத்து
என்னும் ஒருபொருட்கிளவி. இடையினம் என்பதும் அது. (மு. வீ. எழுத்.
19)

இடையொடு கடைமடக்கு

இடையொடு கடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம்.1. முதலடி இடையொடு கடைமடக்கு2. இரண்டாமடி இடையொடு கடைமடக்கு3. மூன்றாமடி இடையொடு கடைமடக்கு4. நான்காமடி இடையொடு கடைமடக்கு5. முதல் ஈரடியும் இடையொடு கடைமடக்கு6. முதலடியும் மூன்றாமடியும் இடையொடு கடைமடக்கு7. முதலடியும் நான்காமடியும் இடையொடு கடைமடக்கு8. கடையீரடியும் இடையொடு கடைமடக்கு9. இடையீரடியும் இடையொடு கடைமடக்கு10. இரண்டாமடியும் நான்காமடியும்இடையொடு கடைமடக்கு11. ஈற்றடிஒழிந்த ஏனைமூன்றடியும் இடையொடு கடைமடக்கு12. ஈற்றயலடி ஒழிந்த ஏனைமூன்றடியும் இடையொடு கடைமடக்கு13. முதலயலடி ஒழிந்தஏனை மூன்றடியும் இடையோடு கடைமடக்கு14. முதலடி ஒழிந்த ஏனைமூன்றடியும் இடையொடு கடைமடக்கு15. நான்கடியும் இடையொடு கடைமடக்கு (மா.அ. 258 உரை)

இடைவிடா மடக்கு

ஓரடி மடக்கு 4, ஈரடிமடக்கு 6, மூவடிமடக்கு 4, நான்கடி மடக்கு 1,என்னும் இவற்றை, ஆதி, இடை, கடை, ஆதி யோடிடை, ஆதியோடு கடை, இடையொடுகடை, முழுதும் என்னும் ஏழானும் உறழ, 15 x 7 = 105 ஆகும். இவ்வாறு இடைவிடாது வரும் மடக்கு 105 என்பதுவரையறுக்கப் பட்டுள்ளது. இவையன்றி, இடைவிட்ட மடக்கு 105, இடை விட்டும்விடாதும் அமைந்த மடக்கு 105 ஆக இம்மடக்குக் களின் கூடுதல் எண்ணிக்கை415 ஆகிறது. (தண்டி. 95 உரை)

இடைவிட்டும் விடாதும் இடையும்இறுதியும் நாலடியும் முற்றும் மடக்கிய மடக்கு

எ-டு : ‘தாமாலமால மருமென்ற மாலமாலநாமாலமால நளிநீர்க்கட மாலமாலதேமாலமால கரிசேர்மலர் மாலமாலமாமாலமால மலதாளுள மாலமால’’தாமாலம் ஆல் அமரும் மென்தமாலம் ஆல நாம் ஆலம் மால நளி நீர் கடமாலமால தே(ன்)மால மாலகரி சேர் மலர்மால மால மா மால் அ மால் அமலதாள்உளமால் அமால’ – எனப் பிரித்துப் பொருள் செய்க.தாமாலம் – பிரளயம்; ஆல் அமரும் – ஆலமரத்தில் தங்கும்; மென் தமாலம்ஆல – மெல்லிய இலையில் துயிலுதலை யுடைய; நாம் ஆலம் ஆல – அச்சம் தரும்விடம் போலக் கறுத்த; நளிநீர் கட மாலமால – கடலைக் கடக்கும் பெரியகுரங்கு ஒழுங்கினையுடைய; தே மால – தேன் துளும்ப; மா லகரி சேர் – பெரியவண்டு உண்டு களிக்கும்; மலர் மால – தாமரைப் பூவினை விருப்பமாக; மால -பெரிய இருப்பிடமாக் கொண்ட; மா – திருமகள்; – மால் – மயங்கும்; அ மால்- அத்திருமால் ; அமல தாள் – மலம் நீக்கும் திருவடிகளை; உளமால் -உள்ளத்திற் கொண்டிருப்பதால்; அமால – அந்தப் புதனுக்கு நிகராவோம்:மாலமால என்ற மடக்கு இடையிலும் இறுதியிலும் இடை யிடையேவேற்றுச்சீர் வரப்பெற்றும் பெறாதும், நான் கடியிலும் மடக்கியமுற்றுமடக்காக இப்பாடல் அமைந் துள்ளது. (மா. அ. பா. 733)

இணை அசை

நிரைஅசையினைக் குறிக்க ஒருசாரார் வழங்கும் பெயர் இது. (நேரசையினைத்தனியசை என்ப.) (யா. க. 5 உரை)

இணை அடி

ஈரடி

இணை அளபெடை

அளவடியின்கண் முதல் இருசீரிலும் அளபெடை வரத் தொடுக்கும்தொடைவிகற்பம்.எ-டு : ‘உ லாஅ அ லாஅ தொருவழிப் பட்டே’ (யா. க. 42 உரை)

இணை இயைபு

அளவடிக்கண் ஈற்றுச் சீர் இரண்டும் இறுதி எழுத்தாலோ அசையாலோசொல்லாலோ ஒன்றிவரும் தொடை விகற்பம்.எ-டு : ‘பிரிந்துறை வாழ்க்கையை யா மும் பிரி தும்’இவ்வளவடிக்கண் கடைச்சீர் இரண்டும் ‘உம்’ என்னும் ஓசையான் ஒன்றிவந்தமை இணைஇயைபாம். (யா.க. 42 உரை)

இணை எதுகை

அளவடிக்கண் முதல் இருசீர்களும் எதுகை ஒன்றிவரத் தொடுப்பது இணைஎதுகையாம். (யா. வி. 42 உரை)எ-டு : ‘க ல் லிவர் மு ல் லைக் கணவண்டு வாய்திறப்ப’இனி,‘கணையும் பிணையும் கடுவும் வடுவும்இணையொன் றியவிழியார் எய்தார்’எனவரும் இவ்விணை எதுகை மாறனலங்காரத்தே ஓரணி யாகக் கூறப்பட்டுள்ளது.(மா. அ. 180)

இணை நிரல்நிறை

ஓர் அளவடியின் முதல் இருசீர்களிலும் நிரல்நிறை அமைதல் இணைநிரல்நிறையாம்.‘நண்ணினர் பகைவர்என் றிவர்க்கு நாடொறும்தண்ணியன் வெய்யன்நம் தானை வேந்தனே’ (சூளா. 52)இவ்வடிகளில், நண்ணினர்க்குத் தண்ணியன், பகைவர்க்கு வெய்யன் எனமுதலிரு சீர்களையும் கொண்டு நிரல்நிறை அமைந்தவாறு. (யா. வி. பக்.387)

இணைக்குறள் ஆசிரியப்பா

இஃது ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. முதலடி யும்ஈற்றடியும் அளவடியாய் நிற்ப, இடையே இரண்டும் பலவுமாகிய அடிகள்குறளடியாகவும் சிந்தடியாகவும் நெடிலடியாகவும் நிகழும் ஆசிரியப்பா இது.(யா. க. 72)எ-டு : ‘தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தாவெண்மதிக் கண்ணி சூடும்கண்ணுதற் கடவுள்புண்ணியப் பொதுவில் ஆடும் பூங்கழல் இறைஞ்சுதும்விண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே’ (சி. செ. கோ. 43)இதன்கண், இடையடிகள் முறையே சிந்தடி குறளடி நெடிலடி யாய் நிகழ,முதலடியும் ஈற்றடியும் அளவடியாய் வந்தமை யால் இஃது இணைக்குறள்ஆசிரியப்பா ஆயிற்று.

இணைக்குறள் ஆசிரியப்பா இனம்

இரண்டடி குறைந்து வந்த இணைக்குறள்துறை இணைக் குறள்ஆசிரியப்பாவிற்கு இனமாம்.‘கோவித்த மன்னர் குலங்க ணலங்கெடவேவித்த கைச்சிலை தொட்டமாவித் தகனே மணிமுடி யாயெனைக்கூவித்த காரணம் கூறே’‘பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கழலொருபால் தேன்துளிநீடு குழலொருபால் நீண்ட சடையொருவன்வீடியமான் அதளொருபால் மேகலைசேர்ந்(து)ஆடுதுகி லொருபாலவ் வுருவாண்பெண் ணென்றறிவார் யாரே!’இவை இடையிடையே குறைந்துவந்த ஆசிரியத்துறை; இரண்டடி குறைந்து வந்தஇணைக்குறள்துறை. இவ்விரண் டும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனமாம்.(வீ. சோ. 122 உரை)

இணைத் தொடை

நாற்சீர்களையுடைய நேரடியாகிய அளவடிக்கண் முதற்சீரும் இரண்டாம்சீரும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற விகற்பத்தொடை பெற்றுவருதலாகிய சீரிடை அமைந்த தொடை இணைத்தொடையாம். ‘இணை மோனை’முதலியவற்றைத் தனித்தனியே காண்க. (யா. க. 42 உரை)

இணைமடக்கு

கலம்பகத்துள் வரும் அம்மானை என்னும் உறுப்புப் பற்றிய பாடல்களில்இரண்டாமடி மூன்றாமடியாக மடக்கி வருதலும், சிலேடை வெண்பாக்களில்கடையிரண்டடிகளில் முதல் இரண்டு சீர்கள் மடங்கி வருதலும் இணைமடக்குஎன்று வழங்கப்படுகின்றன. எனவே, இவ்விணைமடக்கு மாறனலங்காரத்துள்.1. அம்மனைப் பாடற்கண் இணைமடக்கு2. இருபொருள் சிலேடை இணைமடக்கு3. முப்பொருள் சிலேடை இணைமடக்கு4. நாற்பொருள் சிலேடை இணைமடக்கு5. ஐம்பொருள் சிலேடை இணைமடக்குஎன ஐவகையாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. தனித்தனித் தலைப்பிற்காண்க. (மா. அ. 267, 268)

இணைமணிமாலை

வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாகஇணைத்து, வெண்பாஅகவல் இணை மணி மாலை, வெண்பாக்கலித்துறை இணைமணிமாலை எனநூறு நூறு அந்தாதித்தொடையாக வரப் பாடுவது இணை மணிமாலை என்னும்பிரபந்தத்து இலக்கணமாம். முதற் பாடலின் முதற்சீரும் இறுதிப் பாடலின்இறுதிச்சீரும் மண்டலித்து வருதல் அந்தாதித் தொடையால் அமைந்தபிரபந்தங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். (இ. வி.பாட். 58)

இணைமுரண்

நாற்சீரடியாகிய அளவடிக்கண் முதலிருசீரும் முரண்படல் ‘கருங்கால்வெண்குருகு கனைதுயில் மடியும்’இதில் முதல் இருசீர்க்கண்ணும் முரண் அமைந்தவாறு காண்க. (யா. க. 42உரை)

இணைமோனை

ஓர் அளவடிக்கண் முதல் இருசீரிலும் முதல்எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது.எ-டு : ‘ த ண்ணறுந் த கரம் நீவிய கூந்தல்’(யா.க. 42 உரை)

இணையெதுகை முதலிய விகற்பம் ஏழற்கும்மூவகைச் செய்யுளிலும் எடுத்துக்காட்டு

‘பு ன் கால் உ ன் னத்துப் பகைவன் எங்கோ’ (பதிற். 16) – ஆசிரியம்‘ம ற ந்தும் பி ற ன்கேடு சூழற்க சூழின்’ (குறள். 204) – வெண்பா‘அ ட ங்காதார் மி ட ல்சாய அமரர்வந் திரத்தலின்’ (கலி.2) – கலிப்பா.‘பொ ன் னேர் மேனி ந ன் னிறம் சிதைத்தோன்’ – ஆசிரியம்‘உ ரு வக் கடுந்தேர் மு ரு க்கிமற் றத்தேர்’ (களவழி. 4) – வெண்பா‘பெ ரு வரை உறழ்மார்பன் தி ரு வோங்கு கரியோனை’ – கலிப்பா‘உ ள் ளார் கொல்லோ தோழி மு ள் ளுடை’ (ஐங். தனிப்.) – ஆசிரியம்‘வா ண் மாய் குருதி களிறுழக்கத் – தா ண் மாய்ந்து’ (களவழி. 1) – வெண்பா‘அ ணி வேங்கை செறிநீழல் கிளியோப்பு ம ணி நிறத்தாள்’ – கலிப்பா‘இ ன் னா ரெ ன் னா தி ன் பம் வெஃகி’ – ஆசிரியம்‘ப ற் றுக ப ற் றற்றான் ப ற் றினை அப்பற்றை’ (குறள்.350) – வெண்பா‘ம ணி வரை அ ணி மார்பிற் ப ணி மேவும் பெரியோனை’ – கலிப்பா.‘பொ ன் னார் மேனி து ன் னினர் ம ன் னோ’ – ஆசிரியம்‘கொ ண் டுபா ராட்டுவர் க ண் டிலர்கொல் – ம ண் டி’ – வெண்பா‘அ லை கடல் துயிலுணரா ம லை யெடுத்த நி லை யோனை’ கலிப்பா‘உ ள் ளின் உ ள் ளம் வேமே உ ள் ளாது’ (குறுந். 102) – ஆசிரியம்‘ப டி யை ம டி யகத் திட்டான் – அ டி யாருள்…’ (நான்மணி. கடவுள்) – வெண்பா.‘க தி பல வி தி யாற்சென் றழுந்தாமல் து தி த்தேத்தி’ – கலிப்பா‘க ன் னிப் பு ன் னை அ ன் னம் து ன் னும்’…. ஆசிரியம்‘இ ன் று கொல் அ ன் றுகொல் எ ன் றுகொல் எ ன் னாது’ (நாலடி. 36) – வெண்பா‘தி ரி புரம் எ ரி சூழ வ ரி வாங்கு பெ ரி யோனை’ – கலிப்பா (தொல். செய். 93 நச்.)

இதழ் அகல் அந்தாதி

இதழ் – உதடு ; அகலுதல் – நீங்குதல். இதழ் தொடர்பில்லாதஎழுத்துக்களாலாகிய பாடல்களை அந்தாதியாகத் தொடுத் தமைக்கும் நூல். உ ஊஒ ஓ ஒள ப ம வ என்னும் எட்டு எழுத்தும் இதழின் தொடர்புடையவை. இவைநீங்கிய ஏனைய எழுத்தால் அமைந்த பாடல்கள் அந்தாதியாக அமைந்த தொகுப்புஇதழகலந்தாதியாம். இது நீரோட்டக அந்தாதி என வடமொழியில்வழங்கப்படும்.

இதழ் இயைந்த ஓட்டியம்

ப் ம் வ் என்னும் மெய்கள் இதழ் இயைதலால் பிறக்கும் ஒலிகள் ஆதலின்,இவற்றாலேயே இயைந்த பாடற்கண் ‘இதழியைந்த ஓட்டியம்’ என்னும் சொல்லணிகாணப்படும்.எ-டு : ‘பம்மும்பம் மும்பம்மு மம்மம்ம மைமாமைபம்முமம்ம மும்மேமம் பாம்’மை பம்மும்; பம்மும் பம்மும்; அம்மம்ம! மாமை பம்மும் அம்மமும் ;ஏமம் பாம் – எனப் பிரித்து உரை செய்க.(பாகனே! நாம் ஊர் திரும்பிச் செல்வதன் முன்) மேகங்கள் (நம்ஊர்க்குச் சென்று) படியும்; விண்மீன் கணங்களும் மறைவதால் (வழி இருண்டுவிட்டது) ஐயோ! ஐயோ! பாலையுடைய தலைவிநகில்களும் மாமை மறைந்து பசலைபடிந்துவிடும். (கார்காலத் தொடக்கத்தில் மீண்டுவருவேன்“ என்ற என்சொற்கள் என்னாம் என்பது குறிப்பெச்சம்) என்ற இப்பாடற்கண், இதழ்குவிந்த ஓட்டியம் அமைதற்குரிய ப் ம் வ் என்னும் மெய்யெழுத்துக்களேவந்துள்ளன.மை – மேகம்; பம்முதல் – படிதல்; மறைதல்;பம் – விண்மீன்கள்; அம்மம் – நகில்கள்;ஏமம் – பொன் நிறத்த பசலை (மா. அ. பா. 772)

இதழ் குவிந்த ஓட்டியம்

மேலுதடும் கீழுதடும் குவிந்து ஒலிக்கும் உயிர்எழுத்துக்க ளாகிய உ ஊஒ ஓ ஒள என்னும் உயிரொடு கூடிய மெய் யெழுத்துக்களே அமையப் பாடும்சொல்லணி இதழ் குவிந்த ஓட்டியம்.எ-டு : ‘குருகு குருகு குருகொடு கூடுகுருகுகுரு கூருளுறு கோ’‘குருகு குருகொடு(ம்), குருகுகுருகொடு(ம்) கூடும் குருகூருள் கோ உறு’ என்க.‘சங்கு சங்கோடும், குருகு என்னும் பறவை குருகுகளோடும் திரண்டுஇயங்கும் குருகூரின் தலைவன் ஆன சடகோபனை நினைப்பாயாக’ என்ற பொருளமைந்தஇப்பாடலின், உ ஊ ஓ என்னும் உயிர்கள் கூடின உயிர்மெய்யெழுத்துக்களே வந்துள்ளமையால், இவையாவும் உதடு குவிந்து ஒலிக்கப்படு தலின் இஃது இதழ்குவிந்த ஓட்டியம் என்னும் சொல்லணி பெற்றுள்ளது. ஓட்டம் – உதடு;ஓட்டியம் – உதட்டொடு தொடர்புடைய எழுத்துக்களாலே அமைந்த பாடல்.(மா. அ. பா. 771)

இதழ் குவிந்தும் இயைந்தும் வந்தஓட்டியம்

இதழ் குவிதலால் பிறக்கும் உ ஊ ஒ ஓ ஒள என்னும் உயிர்களும் இதழ்இயைதலால் பிறக்கும் ப் ம் வ் என்னும் மெய்களும் கூடிய சொற்கள் வரப்பாடப்படும் செய்யுள் இவ்வோட்டிய அணிவகை வரப்பெறும்.எ-டு : ‘குருகுமடு வூடு குழுமுகுரு கூருளொருபெருமா னோவாமை ஊறு – முருகொழுகுபூமாது வாழும் புவிமாது மேவுமொருகோமா னுவாவோது கோ’குருகு மடுவூடு குழுமு குருகூருள் ஒருபெருமான்! ஓவாமை ஊறும் முருகுஒழுகு பூமாது வாழும் கோமான்! புவிமாது மேவும் ஒரு கோமான்! உவா ஓதுகோஎனப் பிரிக்க.சங்குகள் மடுக்களில் கூட்டமாகத் திரியும் குருகூரில் உள்ளதலைவனே! இளமையும் அழகும் மணமும் நீங்காமல் தன்னிடத்தே வெளிப்படும்திருமகள் தங்கப்பெற்ற பெரு மானே! நிலமகள் தன் பக்கலில்தங்கியிருக்கும் ஒப்பற்ற தலை வனே! உன் நிறைவை யான் யாங்கனம்எடுத்துரைப்பேன்?” என்ற கருத்தமைந்த இப்பாடலுள், இதழ் குவியத்தோன்றும் உ ஊ ஒ ஓ என்னும் உயிர்களும், இதழ் இயையத் தோன்றும் ப் ம் வ்என்னும் மெய்களுமே வந்துள்ளமையால் இதன்கண் இதழ் குவிந்தும் இயைந்தும்வந்த ஓட்டியம் வந்துளது. (மா. அ. பா. 773)

இந்திர கணம்

செய்யுட் கணங்களுள் ஒன்று. இதனைச் சுவர்க்க கணம் என்றும் கூறுப.கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப் பாகக் கொள்ளப்படும். முற்றும்நேராகிய தேமாங்காய் இந்திர கணமாம். இதற்குரிய நாள் பரணி என்றார்இந்திர காளியர். இதன் பலன் பெருக்கம் செய்தல் என்றார் மாமூலர். இன்பம்செய்தல் என்றார் இந்திரகாளியர். ஆகவே முதற் சீர்க்கு எடுத்த சீர்களுள்இதுவும் ஒன்று.(இ.வி.பாட். 40 உரை)

இந்திரகாளியம்

இஃது ஓர் இசைத்தமிழ்நூல்; யாமளேந்திரரால் இயற்றப் பட்டது. (சிலப்.பதிகம்.அடியார்க். உரை)

இன எழுத்து

அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒஓ- இவை தம்முள் இனமாம். க ங, ச ஞ, ட ண, த ந, ப ம, ற ன – என வல்லினம் மெல்லினம் தம்முள் இனமாம்.  இடையினத்திற்கு இனமின்று. இங்ஙனம் இனம் அடைத்தல் அளபெடையிலும் புணர்ச்சியிலும் பயன்படும். (நன். 71)

இன எழுத்து

அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒஓ- இவை தம்முள் இனமாம். க ங, ச ஞ, ட ண,
த ந, ப ம, ற ன – என வல்லினம் மெல்லினம் தம்முள் இனமாம்.
இடையினத்திற்கு இனமின்று. இங்ஙனம் இனம் அடைத்தல் அளபெடையிலும்
புணர்ச்சியிலும் பயன்படும். (நன். 71)

இனஎதுகை

வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என இனஎதுகைமூவகைப்படும். இனவகையான் எதுகை ஒன்றுவது இனஎதுகையாம். இதனைக் கடையாகுஎதுகை யாக வேண்டுவர் யா.க. விருத்தியுரையாசிரியர். விளக்கம்தனித்தனித் தலைப்பில் காண்க. (யா. க. 37 உரை)

இனஎழுத்துக்கள்

ஆ அ, ஈ இ, ஊ உ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ – என நெடிலுக்கு இனம் ஒத்த குறில்இனம்.அ, ஆ, ஐ ஒள – ஓர் இனம்இ, ஈ, எ, ஏ – ஓர் இனம்உ, ஊ, ஒ, ஓ – ஓர் இனம்ஞ, ந – ஓர் இனம்ம, வ – ஓர் இனம்ச, த – ஓர் இனம் (யா. க. 53 உரை)இவை அனு எழுத்துக்கள் எனவும் கூறப்பெறும்.

இனஒற்று மிகுதல்

தொல்காப்பியனார் க ச ட த ப ற – க்களுக்கு ங ஞ ண ந ம
ன-க்களை யாண்டும் இனவெழுத்து என்றோ இனஒற்று என்றோ கூறினரல்லர்.
முன்னர் வரும் வல்லெழுத்து மிகு தலையே இனஒற்றுமிகுதல் என்று
கூறியுள்ளார்.
எ-டு : நூறு என்னும் எண்ணுப்பெயர் ஒன்று முதல் ஒன்பான்கள்
வருமொழியாய் வருமிடத்து இனஒற்று மிகும் என்று கூறியது போல்வன. வருமாறு
: நூறு + ஒன்று
> நூற்று + ஒன்று =
நூற்றொன்று (தொ.எ.472 நச்.) (எ.ஆ.பக்.167)

இனக்குறள் வெண்பா

மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்னும் ஐந்து தொடையானும்வரும் குறள் வெண்பாக்களை இனக்குறள் வெண்பா என்பர்.‘ சு டச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சு டச்சுட நோற்கிற் பவர்க்கு’ (குறள். 267) – மோனை‘த ன் னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோம ன் னுயிர்க் கின்னா செயல்’ (குறள். 318) – எதுகை‘ இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (குறள். 615) – முரண்‘சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்புகதிர்வளைத் தோளும் கரும்பு ’ – இயைபு‘க டாஅ க் களிற்றின்மேல் கட்படா மாதர்ப டாஅ முலைமேல் துகில்’ (குறள். 1087) அளபெடை(யா. க. 59 உரை)

இனமோனை

இன எழுத்தால் வரும் மோனை. அது வல்லின மோனை மெல்லின மோனை, இடையினமோனை என மூவகைப் படும்.‘ க யலேர் உண்கண் கலுழ நாளும் சு டர்புரை திருநுதல் பசலை பாய’‘ ஞ hயிறு காயும் வெவ்வறை மருங்கின் நே யம் உந்தத் தொடர்ந்தனள் போகி’‘ வே னில் உழந்த வறிதுயங் குடலின் யா னை செல்லும் அருஞ்சுர நெடுவழி’என முறையே காண்க. அடி முதற்கண் உயிரால் ஊரப்பட்டமெய்யெழுத்துக்கள் இனவகையால் ஒன்றி வந்தவாறு. (யா. க. 37 உரை)

இனமோனை வகைகள்

‘இனமோனை’ காண்க

இனம்

‘இன எழுத்துக்’ காண்க

இனம் என்பதற்குக் காரணம்

மார்பு முதலிய தானம், இதழ்அசைவுமுதலிய முயற்சி, மாத்திரை என்ற
அளவு, பொருள், ஒலிவடிவு, வரிவடிவு – இவற்றுள் ஒன்றும் பலவும் ஒத்து
வருதல் இனம் அடைத் தற்குக் காரணம். பொருளாவது பாலன் விருத்தன் ஆனாற்
போலக் குறியதன் விகாரமே நெடில் ஆதலின், இரண்டற்கும் பொருள் ஒன்று
என்று முதல்நூலால் நியமிக்கப்பட்ட பொருள். (நன். 72 சங்.)

இனம் ஒத்தல்

இனம் ஒத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும்
ஒத்தல்.
அஆ, இஈ, உஊ, எஏ, ஒஓ என்ற உயிர்களும், கங,சஞ, டண, தந, பம, றன – என்ற
மெய்களும் இனம் ஒத்தனவாம்.
அஆ- எழுவாய்த்தொடர்ப் புணர்ச்சியும், பிறப்பும், ஓசையும், வடிவும்
ஒக்கும். இஈஐ – வடிவு ஒவ்வா; ஏனைய ஒக்கும்.
உஊஒள – உஊ வடிவு ஒக்கும். ஒள வடிவு ஒவ்வாது; ஏனைய ஒக்கும்.
எஏ, ஒஒ – வடிவும் ஏனையவும் பெரும்பாலும் ஒக்கும்.
கங, சஞ, டண, தந, பம, றன – பிறப்பு ஒக்கும்; ஏனைய பெரும் பாலும்
ஒவ்வா. புணர்ச்சிக்கண் வல்லினத்துக்கு இனமெல் லெழுத்தாய்ப் புணர்ச்சி
ஒக்கும். (தொ.எ.41 நச். உரை)

இனி என்ற இடைச்சொல் புணர்ச்சி

இனி என்பது இப்பொழுது என்னும் காலத்தை உணரநின்ற இடைச்சொல். அஃது
இனிக்கொண்டான் என்றாற்போல், வருமொழி வன்கணம் வரின் வல்லெழுத்து
மிக்குப் புணரும். (தொ. எ. 236 நச்.)
இனி + இனி – இன்னினி என்றாம். அஃது இன்னினிக் கொண் டான் என்றாற்போல
வன்கணம் வரின் மிக்குப் புணரும். ‘இனி’ பெயர்ச்சொல் நிலையது. (246
நச். உரை)

இன் இடைநிலை வருமாறு

இன்இடைநிலை எஞ்சியது (எஞ்சு + இ(ன்) + அ + து) எனக் கடைக்
குறைந்தும், போனது (போ + (இ)ன் + அ + து) என முதல் குறைந்தும் வரும்.
(நன். 142 சிவஞா.)

இன்உருபு இன்சாரியை பெறாமை

இன் என்னும் ஐந்தனுருபு இன்சாரியை பெற்றுப் புணர்தல்
இன்னோசைத்தன்று என்று கருதிப்போலும், தொல்காப்பிய னார் இன்உருபு
இன்சாரியை பெறாது என்றார். அவர் கருத்துப்படி, ஊரின் நீங்கினான் –
என்று கூறுவதே முறை; ஊரினின் நீங்கினான் எனல் பிழை.
ஆயின், தொல்காப்பினார்க்குப் பிற்பட்ட காலத்தே உலகவழக்கில்
‘பாம்பினிற் கடிது தேள்’ என்பது போலவும், செய்யுள்வழக்கில் ‘கற்பினின்
வழாஅ நற்பல உதவி’
(அகநா.86), ‘அகடுசேர்பு பொருந்தி
அளவினிற் றிரியாது’
(மலைபடு.33) எனவும் அருகி
வருவனவும் காணப்படுகின்றன. (தொ.எ. 131 நச். உரை)

இன்உருபு, இன்சாரியை : வேறுபாடு

இன் என்பது சாரியை ஆயினவிடத்து யாதானுமோர் உருபு ஏற்கும். அஃது
உருபானவிடத்துப் பிறிதோர் உருபை ஏலாது. இது தம்முள் வேற்றுமை. எ-டு :
விளவினை, விளவினான், விளவிற்கு, விளவினது, விளவின்கண் – என
இன்சாரியையின் பின்னர் (ஐந்தனுருபு நீங்கலான பிற) உருபுகள்
வந்தவாறு.
ஊரின் நீங்கினான் – என இன் உருபாயவழிப் பிறிதோர் உருபினை ஏலாமை
காண்க. (தொ.எ. 119 நச்.)

இன்கவி

1. மதுரகவி 2. மதுரகவிபாடும் புலவன் (யா. வி. பக். 551)

இன்சாரியை உள்வழி ஐஉருபு நிலையாமை

பெயர்ச்சொல் இன்சாரியை பெற்றவிடத்து இரண்டாம் வேற்றுமை யுருபு
தவறாது வருதல் வேண்டும் என்று தொல். கூறும். (தொ.எ.157 நச்.) ஆயின்
தொல்காப்பியத்திலேயே ‘சார்ந்துவரல் மரபின் மூன்று’ (1) (மரபினையுடைய
மூன்று), ‘ஆயிரு திணையின் இசைக்குமன’ (சொ.1) (திணையினையும் இசைக்கும்)
என, இன்சாரியை பெற்று இரண்டனுருபு விரியா மலேயே சொற்றொடர்
அமைந்திருத்தலைக் காணலாம்.
‘மறங்கடிந்த அருங்கற்பின்
சில்சொல்லின் பல்கூந்தல்… துணைத் துணைவியர்’
(புறநா.166)
கற்பினையும் சொல்லினையும் கூந்தலையுமுடைய துணைவி யர் – என
இலக்கியத்திலும் இன்சாரியை வந்து ஐஉருபு விரியாத பொருட்
புணர்ச்சியையும் காண்கிறோம். (தொ. எ. 157நச். உரை)

இன்சாரியை வரும் இடங்கள்

1. அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள – என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் உருபேற்கு
மிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : விளவினை, பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வெளவினை,
(தொ.எ.173 நச்.)
2. ஞ், ந் – ஈற்றுச் சொற்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.
வருமாறு : உரிஞினை, வெரிநினை (182)
3. மகரஈற்றுப் பெயர்கள் சில உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : உருமினை, திருமினை (186)
4. தெவ் என்ற உரிச்சொல் படுத்தல்ஓசையான் பெயராகி உருபேற்கு மிடத்து
இன்சாரியை பெறும். வருமாறு : தெவ் வினை, தெவ்வினொடு; தெவ்விற்கு…..
தெவ்வின்கண் (184)
5. அழன், புழன் – என்ற னகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து
இன்சாரியையும் பெறும். வருமாறு : அழனினை, புழனினை (193)
6. ஒற்று இரட்டும் நெடில்தொடர் உயிர்த் தொடர் நீங்கலான பிற தொடர்க்
குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : நாகினை, நாகினொடு; வரகினை, வரகினொடு (எஃகினை, பட்டினை,
பஞ்சினை, சால்பினை) (195)
இவையெல்லாம் ஐந்தனுருபு ஏற்குமிடத்தே இன்சாரியை பெற மாட்டா.
(131)
1. குற்றியலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றின் முன் குறை
என்னும் சொல் வருமிடத்து இடையே இன்சாரியை வரும். எ-டு : உழக்கின்
குறை, ஆழாக்கின் குறை, கழஞ்சின் குறை
இவை உம்மைத்தொகைப் பொருளன. உழக்கும் அதனின் குறையும் முதலாகப்
பொருள் கொள்க. உழக்கிற்குறை, ஆழாக்கிற்குறை, கழஞ்சிற்குறை: இவை ஆறாம்
வேற் றுமைப் பொருட்புணர்ச்சி (தொ.எ.167 நச்.)
2. பனை என்ற அளவுப்பெயர் முன்னும், கா என்ற நிறைப் பெயர்
முன்னும் குறை என்ற சொல் வந்து உம்மைத் தொகைப்படப் புணருமிடத்து
இன்சாரியை வரும். வருமாறு : பனையின் குறை, காவின் குறை (169)
3. மக என்ற சொல் மகவின்கை என்றாற்போல இன்சாரியை பெறும்.
(218)
4. பனி என்ற சொல் பனியிற்சென்றான் என்றாற்போல இன்சாரியை பெறும்.
(241)
5. வளி என்ற சொல் வளியிற் சென்றான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (242)
6. ஆடூ என்ற சொல் ஆடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும்.
(271)
7. மகடூ என்ற சொல் மகடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும்.
(271)
8. சே என்ற பெற்றத்தின் பெயர் சேவின் வால் என்றாற் போல
இன்சாரியை பெறும். (271)
9. மழை என்ற சொல் மழையிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (287)
10. வெயில் என்ற சொல் வெயிலிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (377)
11. இருள் என்ற சொல் இருளிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (402)
12. வண்டு என்ற சொல் வண்டின்கால் என்றாற் போல இன்சாரியை பெறும்.
(420)
13. பெண்டு என்ற சொல் பெண்டின்கை என்றாற் போல இன்சாரியை பெறும்.
(420)
14. பத்து நிலைமொழியாக, ஒன்று – மூன்று முதல் எட்டு ஈறான எண்கள்
– இவை வருமொழியாகப்புணரும்வழி, பதி னொன்று – பதின்மூன்று – பதினான்கு
– பதினைந்து – பதினாறு – பதினேழ்- பதினெட்டு- என இன்சாரியை இடையே
பெறும். (433)
15. பத்து ஆயிரத்தொடு பதினாயிரம் எனவும், ஒன்பது ஆயிரத் தோடு
ஒன்பதினாயிரம் எனவும் புணரும். (435, 470)
16. பத்து நிலைமொழியாக, நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருமொழியாக
வரினும், ஒன்பது நிலைமொழியாக அவை வரினும் இடையே இன்சாரியை
வரும்.
எ.டு : பதின்கலம், பதின்கழஞ்சு; ஒன்பதின்கலம், ஒன்பதின் கழஞ்சு
(436, 459)
17. ஒருபஃது, இருபஃது முதலியன ஆயிரத்தொடும் நிறைப் பெயர்
அளவுப்பெயர்களொடும் புணருமிடத்து இடையே இன்சாரியை வரும்.
வருமாறு : ஒருபதினாயிரம், இருபதினாயிரம், ஒருபதின் கழஞ்சு,
ஒருபதின்மண்டை, இருபதின் கழஞ்சு, இருபதின் மண்டை (476, 477)
18. ஆ, மா- என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து வரும் இன்சாரியையின்
இகரம் கெடுதலுமுண்டு.
வருமாறு : ஆவினை, ஆனை; மாவினை, மானை (120)
பதின்கலம் – பதிற்றுக்கலம் என்றாற்போல, இன்சாரியை ‘இற்று’ எனத்
திரிதலும் கொள்க. (121 நச். உரை)

இன்னிசை

இன்னிசை வெண்பா. இஃது ஒருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும்,இருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும், தனிச்சீர் பெற்றுப் பலவிகற்பமாகியும், தனிச்சீர் இன்றிப் பல விகற்ப மாகியும், அடிதோறும்ஒரூஉத்தொடை பெற்றும், நேரிசை வெண்பாவின் சிறிது வேறுபட்டு நான்கடியாய்இவ்வாறு பல வகையான் நிகழும்.எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்கஅகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2)இஃது இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி வந்தது.எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லைஅளந்தன போகம் அவரவர் ஆற்றான்விளங்காய் திரட்டினார் இல்லைக் – களங்கனியைக்காரெனச் செய்தாரு மில்.’ (நாலடி. 103)இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி ஆனால் மூன்றாம் அடிஇறுதியில் அது பெற்று வந்த இன்னிசை வெண்பா.எ-டு : ‘தலைக்கண் தலைஐந்தும் காணேன் கடைக்கணேல்என்னா இருவரும் ஈங்கில்லை – பொன்னோடைஆழியாய்! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ்ஏழியான் இக்கிடந்த ஏறு.’இஃது இரண்டாமடி இறுதியில் ஒரூஉஎதுகை பெற்று மூன்று விகற்பத்தால்வந்தது.எ-டு : ‘தேனார் மலர்க்கூந்தல் தேமொழியாய்! – மேனாள்பொருளைப் பொருளென்று நம்மறந்து போனார்உருடேர் மணியோசை யோடும் – இருடூங்கவந்த திதுவோ மழை.’இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலடி இறுதியில்ஒரூஉஎதுகை பெற்று மூன்றாம் அடி இறுதியிலும் அவ்வெதுகை பெற்று மூன்றுவிகற்பத்தான் வந்தது.எ-டு : ‘கடற்குட்டம் போழ்வர் கலவர் – படைக்குட்டம்பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில்தவக்குட்டம் தானுடையான் நீந்தும் – அவைக்குட்டம்கற்றான் கடந்து விடும்!’ (நான்மணி. 16)இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலாம் மூன்றாமடிக்கண்இறுதிச்சீர் ஒரூஉஎதுகை பெற்று நான்கு விகற்பத்தால் வந்தது; இரண்டாமடிஇறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்ற தெனினும் இழுக்காது. (யகர ஆசு இடையிட்டது.)எ-டு : ‘மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; – மழையும்தவமிலார் இல்வழி இல்லை; – தவமும்அரசிலார் இல்வழி இல்லை; – அரசனும்இல்வாழ்வார் இல்வழி இல்.’ (நான்மணி. 46)இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்தது.‘அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமருந்துதேய்வர் ஒருமா சுறின்’ (நாலடி 151)இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் பெற்று மூன்றுவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.‘உறுபுனல் தந்துல கூட்டி – அறுமிடத்தும்கல்லுற் றுழியூறும் ஆறேபோல் – செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் – சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பா லவை.’ (நாலடி. 185)இஃது ஈற்றடி ஒழித்து ஏனையடிகள் ஒரூஉத்தொடை பெற்று வந்தது[ இவற்றைத் தனிச்சொல் என்னும் வீரசோழிய உரைகா. 114 ] (யா. க. 61 உரை, யா. கா. 25 உரை)

இன்னிசை அளபெடை

பொருள் வேறுபாடோ யாப்பமைதியோ கருதாது, குற் றெழுத்து வரவேண்டிய
இடத்தில் குறில் நெடிலாகி அள பெடுத்திருக்கும் இடங்களிலுள்ள அவ்வகை
அளபெடையை, அது செய்யுளிசை நிறைக்க வந்ததன்மையின், இன்னோசை ஒன்றற்காகவே
அஃது அமைந்திருத்தல் வேண்டும் என்ற கருத்தான், இன்னிசை அளபெடை
என்ப.
பாட்டுக்களில் இன்னோசை அமைந்திருந்தலே வேண்டும் ஆதலானும், இன்னோசை
இல்லாவிடத்து ஓசை சிதைந்தது எனவே படும் ஆதலானும், இன்னிசை அளபெடை
என்று வேறு பெயரிட்டு ஒரு சார் உயிரளபெடையைப் பகுத்துக் கோடல்
வேண்டுவதின்று என்பர் ஒரு சாரார்.

கெடுப்பதும்… எடுப்பதும்
எல்லாம் மழை’ (குறள் 15) எனினும் செய்யுளோசை கெடாது
அமையுமாயினும்,

கெடுப்பதுஉம்… எடுப்பதுஉம்
எல்லாம்
மழை
’ எனக் குறில் நெடிலாகி அளபெடுத்
ததனால் வேறு பயனின்றி இனிய ஓசையொன்றே பயனாத லின், இத்தகையன
இன்னிசையளபெடை என்றே பெயர் பெறல் வேண்டும் என்பது சிலர் கருத்து.
சிலர் இவற்றைக் குற்றெழுத்தளபெடையில் அடக்குவர். (எ. ஆ. பக். 42)
(நன்.91 உரை)

இன்னிசை வெண்பா : காரணக்குறி

இனிதாய் இயலும் ஓசையும் சொல்லும் உண்டாய்ப் போய்ப் பாடு (எங்கும்பரவிப் பொருத்தம்) உடைத்தாகலின் இன்னிசை வெண்பா என்பதும் காரணப்பெயராம்.(யா. க. 58 உரை)

இன்னிசை வெண்பா ஐவகை

‘இன்னிசை’ காண்க.

இன்னிசை வெண்பாவின் இனம்

நான்கடியான் வரும் வெண்டுறை. (வீ. சோ. 121 உரை)

இன்னிசை வெள்ளை

இன்னிசை வெண்பா; வெள்ளை – வெண்பா (யா. கா. 14)

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

மூன்றடியாய் இன்னிசை வெண்பாப் போலவே தனிச்சீர் இன்றி ஒருவிகற்பமாகியும் இருவிகற்ப மாகியும் பல விகற்ப மாகியும் வரும் வெண்பா.‘நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரிபறநாட்டுப் பெண்டிர் அடி’ (யா. கா. 25 மேற்.)‘உம்பர் பெருமாற்(கு) ஒளிர்சடிலம் பொன்பூத்ததம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்தபொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து’ (சி.செ. கோ. 27)‘முல்லை முறுவலித்துக் காட்டின; – மெல்லவேசேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற; – போயினார்திண்டேர் வரவுரைக்கும் கார்’ (யா.கா. 25 மேற்.)இவை மூன்றும் முறையே ஒன்று இரண்டு பல எனும் விகற்பத் தால் வந்தஇன்னிசைச் சிந்தியல் வெண்பா. (இரண்டாம் சிந்தியல் வெண்பாவினை மெல்லினஅடியெதுகை எனக் கொள்ளாது இருவிகற்பமாகக் கொள்க. மூன்றாவதன்கண், முதலடிஇறுதிச் சீரும் இரண்டாமடி இறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்றன.)

இன்னிசைமாலை

அகப்பொருள்பற்றிய ஓர் இலக்கியம். கள. கா. பக். 24 (L)

இன்னின் இகரம் கெடுதல்

இன்சாரியையின் இகரம், ஆ என்ற சொல்லையடுத்து அச் சாரியை
வருமிடத்துக் கெடுதலுமுண்டு. மா என்ற சொற்கும் இதனைக் கொள்ப.
வ-று : ஆ+இன்+ஐ – ஆவினை, ஆனை; மா+இன்+ஐ – மாவினை, மானை;
ஆ+இன்+கோடு – ஆவின் கோடு, ஆன் கோடு; மா+இன்+கோடு – மாவின் கோடு,
மான்கோடு
நிலைமொழியீற்று நெடிலுக்குமுன் குறிலை முதலாகவுடைய மொழிகள்
வருமிடத்துப் புணர்ச்சிக்கண் அக்குறில் கெடுதலு முண்டு ஆதலின், ஆ என்ற
சொல்லின் முன் வந்த இன்சாரியை யின் இகரம் கெட்டது. நீ
இர் – நீர், மூ
உழக்கு = மூழக்கு, போ +
இன் +ஆன்= போனான் – எனப் பிற
நெட்டெழுத்தின் முன்னும் வந்த குற்றெழுத்துக்கள் கெடுதலைக் காணலாம்.
(எ. ஆ. பக். 99)

இன்னிய நடை

இது செய்யுள் நடை இரண்டனுள் ஒன்று. தண்டகம் நீங்க லான ஏனைச்செய்யுள்களின் நடை இன்னிய நடை எனப்படும். (வீ. சோ. 147 உரை)

இன்னியல் ஆசிரியப்பா

வேற்றுப்பாவின் அடிகள் விரவாத ஆசிரியப்பா இன்னியல் ஆசிரியப்பாஎனப்படும்.எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்திஆதி நாதற் சார்வோர்சோதி வானம் துன்னு வாரே’இதன்கண், நேரொன்றாசிரியத் தளையான் வரும் ஆசிரியச் சீர்களேஆசிரியஅடி அமைய வந்தவாறு. நிரை ஒன்று ஆரியத்தளையான் வரினும் அது. (யா.க. 70 உரை)

இன்னியல் வஞ்சிப்பா

வஞ்சியடியைத் தவிர ஏனைய பாக்களின் அடிகள் விரவாமல் அமையும்வஞ்சிப்பா.எ-டு : ‘பூந்தாமரைப் போதலமரத்தேம்புனலிடை மீன்திரிதரவளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்நாளும்மகிழும் மகிழ்தூங் கூரன்புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’இதன்கண், ஒன்றிய வஞ்சித்தளையான் வரும் வஞ்சியுரிச் சீர்களே குறளடிவஞ்சிப்பா அமைய வந்தவாறு; இது இன்னியல் குறளடி வஞ்சிப்பா. (யா. க. 90உரை)(முன்னிரண்டடிகளில் ஒன்றாத வஞ்சித்தளை வந்தது.)

இன்பசாகரம்

ஒரு காமநூல். (தத்துவப் 155 உரை.) (L)

இன்பமடல்

பவனிக்காதல், இன்பமடல், விரகமாலை என்னுமிவை தம்முள் சிறிதுவேறுபாடுடையன. தனது காமமிகுதியைத் தலைவி கூறுவதாக அமையும் பிரபந்தம்இன்பமடலாம். (சாமி. 168)

இன்பா நேரடி

கட்டளை ஆசிரியப்பாவான் வரும் அளவடி.(தொ. செய். 23 நச்.)

இன்பா நேரடிக்கு ஒருங்கு நிலையாதன

வெண்பாஉரிச்சீரும் ஆசிரியஉரிச்சீரும் ஆசிரியப்பாவின் ஓரடிக்கண்ஒருங்கு நிற்றலில்லை.இயலசைகளான் வரும் சீர்களை ‘இன்சீர்’ என்றாற் போல,இயற்சீர்களான்வரும் ஆசிரியத்தினை ‘இன்பா’ என்றல் தொல்லோர் மரபு.‘ஒருங்கு நிற்றலில்லை’ எனவே, இயற்சீர்களிடையிடையே தனித்தனியேநிற்கப் பெறும் என்றவாறு. ஈண்டு ஆசிரிய அடியாகிய நேரடி என்பது 10முதல் 14 எழுத்து வரையுள்ள அடிகளை. (தொ. செய். 23 ச. பால.)

இன்மணியாரம்

நாட்டியத்திற்குரிய நடச்செய்யுள்களாகிய வரி, குரவை, மதலை, மேடம்,முரி, தாழிசை, முன்னிலை வாழ்த்து, தேவபாணி, சிற்றிசை, நேரிசை,பாவைப்பாட்டு, மடல் போல்வன ‘இன்மணியாரம்’ என்ற நாட்டிய நூலால்அறியப்படும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக்.583)

இன்றி என்ற வினையெச்சம் ஈறு திரிதல்

இன்றி என்ற வினையெச்சம்

விருந்தின்றிக் கழிந்த
பகல்
’ என்றாற் போல, வருமொழி
வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ஈறு திரிந்து ‘இன்று’ என
வினைமுற்றுப் போல அமைந்தவழி, வருமொழி வன்கணம் மிகாது இன்னோசை
பயத்தலின் செய்யுளில் பயில வழங்கப்படுகிறது.
எ-டு :
‘உப்பின்று புற்கைஉண்கமா கொற்கையோனே’
‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’
(தொ.பொ. 111. நச்.)
‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’
(தொ.பொ. 151
நச்.)
‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்’
(
தொ.பொ. 151 நச்.)
‘தாவின்று உரிய தத்தம் கூற்றே’
(தொ.பொ. 241 நச்.)
எனத் தொல்காப்பியத்தில் இன்றி என்பது ‘இன்று’ என்று செய்யுளின்பம்
கருதி வழங்கப்பட்டுள்ளது. (தொ. எ. 237 நச்.)
இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரம் செவிக்கு இனிமை யாக
இல்லாததால், ஒன்று உகரமாக மாறியிருக்கவேண்டும். எனவே, அன்றி
என்பதன்கண் உள்ள இகரம் உகரமாகத் திரிய வேண்டுவதில்லை. அத் திரிபு
சற்றுப் பிற்காலத்தது என்ப. அதுவன்றி என்பது அதாஅன்று எனத் திரிந்ததோ
என்பது நோக்கத்தக்கது.

இமை, நொடி அளவாதல்

இமை என்றது இமைத்தலை; நொடி என்றது நொடித்தலை (நொடி – ஒலி).
இரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை உணர்த்தி நின்றன. ‘இயல்பு எழும்’
என்னும் பெயரெச்சம் இமை, நொடி என்னும் பெயர்களொடு முடிந்தது.
எழுத்தொலி முதலிய வற்றை இயல்பு கெடுத்து ஒருவன் வேண்டியவாறே எழுப்பி
னும் அவ்வாறு எழாநிற்கும்; இமையும் நொடியும் இயல்பு கெடுத்து எழுப்ப
வேண்டினும், அவ்வாறே எழாது இயல் பாகவே எழாநிற்கும் ஆதலின் ‘இயல்பு
எழும்’ என்றும், மேலைச் சூத்திரத்து எழுத்தொலிகளை வேண்டியவாறே
எழுப்பாது இவ்வளவான் எழுப்புக என்றும் கூறினார். (நன். 100
சங்கர.)

இம்பர் என்ற சொல்லாட்சி

இம்பர் என்ற சொல் ‘இடமுன்’ என்ற பொருளில் வருவது. காலம் பற்றி
நோக்கின் இம்பர் என்பது ‘காலப்பின்’ ஆகும்.
‘நெட்டெழுத் திம்பரும்… குற்றியலுகரம் –
தொ. எ. 36-காடு
‘நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்’ –
தொ. எ. 196 -காட்
டு
‘அகரத் திம்பர் யகரப் புள்ளி’
– தொ. எ. 56 – அய்
‘குற்றெழுத் திம்பரும்…… உகரக் கிளவி’ –
தொ. எ. 267 – உடூஉ
என்ற இடங்களில் இம்பர் என்பது இடம் பற்றி வரும் முன் என்ற பொருளில்
தொல்காப்பியத்தில் வழங்குவதாம். ஆகவே, “இம்பர் – உம்பர் என்பன கால இட
வகைகளால் மயங்கும்” என்று சிவஞான முனிவர் கூறுவது (சூ. வி. பக். 25)
பொருந்தாது, ‘இம்பர்’ இடமுன்னாகவே வருகிறது. (எ. ஆ. பக். 62)

இயமா வியமகம்

ஒரு சொல்லானே நான்கு அடிகளும் மடக்கி வரும் மடக்கினை இயமா இயமகம்என்ப. இஃது ஒரு சொல் முற்று மடக்கு. ஓரடியே நான்கடியும் மடக்கி வரும்ஏகபாதம் என்னும் சித்திரகவிவகையுள் இஃது அடங்கும்.எ-டு : ‘உமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரன்’உமாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் மாதரனும் ஆதரனும்மாது அரன் எனப் பிரித்துப் பொருள் செய்க. உமாதரன் – உமையைத்தரித்தவன்; மா தரன் – மானை ஏந்தியவன்; மாதரன் – அழகினை யுடையவன்;மாதரன் – மாமரத்தின் கீழே இருப்பவன்; மாதரன் – யானையின் தோலைமேலாடையாகத் தரித்தவன்; மாதரன் – காளையால் தாங்கப்படுபவன்; ஆதரன் -விருப்பம் உடையவன், மாது அரன் – பெருமை மிக்க சிவபெருமான். (தண்டி. 95உரை)

இயமான கணம்

சுவர்க்க கணம் எனவும், இந்திர கணம் எனவும், சொல்லப் பெறும்.பாடப்படும் முதற்பாடலின் முதற்சீர் தேமாங்காய் என்ற வாய்பாட்டால்நிகழ்வது. இதற்குரிய நாள் பரணி யாகும். (இ. வி. பாட். 40 உரை)

இயற்கை அளபெடை

குரீஇ, ஆடூஉ, மகடூஉ – என்றாற் போல்வன இயற்கை அளபெடை. (நன். 91
இராமா.)

இயற்சீரின் கணம்

தொடர்நிலைச் செய்யுளின் முதற்சீர் தேமா புளிமா வாகிய நேரீற்றுஇயற்சீரும், கூவிளம் கருவிளமாகிய நிரையீற்று இயற்சீருமாயிருப்பின்அவற்றுக்கும் பின்வருமாறு கணம் கூறப்படும்:சீர் கணம் தெய்வம்தேமா சுவர்க்கம் பிரமன்புளிமா சந்திரன் இலக்குமிகூவிளம் நீர் கருடன்கருவிளம் நிலம் சுரபி (இ.வி.பாட். 42)

இயற்சீரின் திறம்

இரண்டு அசை இணைந்து நின்ற சீர் இயற்சீர். ஈரசைச்சீர் பிறிதாகாதுஎல்லாப் பொருள்மேலும் சொல்லப்படும் சிறப்புடைமையாலும், முதற்பாஇரண்டனுள்ளும் (வெண்பா, ஆசிரியம்) பெரும்பான்மையும் இயன்று இனிதுநடத்தலா னும், இயற்சீர் என்பது காரணக்குறி. இதனை ஆசிரிய உரிச்சீர்என்றும் வழங்குவர், காக்கைபாடினியார். எனவே, ஈரசைச்சீர்க்கு இயற்சீர்,ஆசிரிய உரிச்சீர் என்ற பெயர்களும் உள. (யா. க. 11. உரை.)

இயற்சீரின் தொகை

இயற்சீர் நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை எனநான்காகும். இவற்றின் வாய்பாடுகள் பலராலும் பலவாகக்கூறப்படுகின்றன.நேர் நேர் -தேமா – பூமா – வாய்க்கால் – இம்மா – வேங்கை – காசுநிரைநேர் – புளிமா – மலர்பூ – தலைவாய் – எழினி – அரிமா -பிறப்பு.நிரைநிரை – கருவிளம் – கணவிரி – மலர்மழை – துலைமுகம் – இனிமொழி -வலம்புரி- வரிவளைநேர்நிரை – கூவிளம் – பாதிரி – பூமழை – வாய்த்தலை – இன்மொழி – சந்தனம் -நூபுரம்என்றாற்போல வாய்பாடு பலவாறு கூறுப. தேமா, புளிமா, கருவிளம்,கூவிளம்என்பனவே பெரிதும் வழக்காற்றில் உள்ளன. (யா. க. 11. உரை) (தொ. செய். 13பேரா.)

இயற்சீரின்பாற் படுவன

உரிஅசைகளாகிய நேர்பு நிரைபு என்ற இரண்டன் பின்னும் நேரசை நிற்பின்இயற்சீரின்பாற்படும். இவை நேர்புநேர் நிரைபு நேர் எனவரும். இவற்றின்வாய்பாடுகள் போதுபூ, விறகுதீ என்பன.சேற்றுக்கால்வேணுக்கோல் நேர்பு நேர்குளத்துநீர்முழவுத்தோள் நிரைபு நேர்நேர்பு நேர் கூவிளம் போலவும், நிரைபு நேர் கருவிளம் போலவும்கொள்ளப்படும்.நேர் நிரை என்ற இயலசை இரண்டன்பின்னும், நேர்பு நிரைபு என்ற உரியசைவரின் அவற்றாலும்நேர் நேர்பு – போரேறு, நன்னாணுநேர் நிரைபு – பூமருது, காருருமுநிரை நிரைபு – மழகளிறு, நரையுருமுநிரை நேர்பு – கடியாறு, பெருநாணுஎன்ற நான்கு சீர்கள் தோன்றும். இவற்றுள் நேர் முதலாயின கூவிளம்போலவும், நிரை முதலாயின கருவிளம் போலவும் கொள்ளப்படும்.போரேறு, நன்னாணு – நேர் நேர்புபூ மருது, காருருமு – நேர் நிரைபு இவை கூவிளம் போல்வனகடியாறு, பெருநாணு – நிரைநேர்பு இவை கருவிளம்மழகளிறு, நரையுருமு – நிரை நிரைபு போல்வன(குற்றியலுகரமும் முற்றியலுகரமுமாக இவ்விரண்டு வாய்பாடு-கள்காட்டப்பட்டன.) (தொ.செய். 15, 16 நச், பேரா.)

இயற்சீர்

நேர் நிரை என்னும் இயலசை இரண்டும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவும்மயங்கும்போது நேர்நேர், நிரை நிரை, நேர்நிரை, நிரை நேர் என்றுமயங்கித் தேமா கருவிளம் கூவிளம் புளிமா என்னும் வாய்பாடுகளால்வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரிஎனவும் வழங்கப்பெறும்.எ-டு : ‘கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை’தேமா கருவிளம் புளிமா கூவிளம் (குறுந். 216)என ஓர் அகவல்அடியில் இயற்சீர் நான்கும் வந்தன.(தொ. செய். 13 நச்.)

இயற்சீர் : பெயர்க் காரணம்

ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி என்னும் நான்குபாவிற்கும்இயற்றலானும், இயல்புவகையான் ஒரே சொல்லாய் வருதல் பெரும்பான்மைஆகலானும் இயற்சீர் எனப்பட்டன. (தொ. செய். 13 நச்.)

இயற்சீர் இருவகைப்படுதல்

தேமா : வந்தான் – 2 எழுத்து; நுந்தை – ஓர் எழுத்து.கருவிளம், கணவிரி – 4 எழுத்து; வலியது – 3 எழுத்து.கூவிளம், பாதிரி – 3 எழுத்து; ஞாயிறு – 2 எழுத்து.புளிமா ஒரே வகைத்து.இவ்வாறு தேமா, கருவிளம், கூவிளம் என்பன ஒருவகைய வாகவும்,(நுந்தை – ஓரெழுத்துத் தேமா, ஞாயிறு – ஈரெழுத்துப் – பாதிரி;வலியது – மூவெழுத்துக் கணவிரி என்க.)புளிமா ஒருவகைத்தாகவும் நிகழ்தலின், இயற்சீர் இருவகைத் தாம்.இவ்வெழுத்து வேறுபாடு குற்றியலுகரத்தைக் கணக் கிடாமையால் வந்தவாறு.(தொ. செய். 43 நச்.)

இயற்சீர் விகற்பம்

இயற்சீர் வருஞ்சீரோடு ஒன்றாத நிலை. அஃது, இயற்சீர் நின்றுஇயற்சீரொடு விகற்பித்து வருதலும், இயற்சீர் நின்று வேற்றுச் சீருடன்விகற்பித்து வருதலுமாம். முன்னது சிறப் புடைத்து; பின்னது சிறப்பிலது.விகற்பம் – ஒன்றாமைஎ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்’(குறள் 121)விளமுன் நேரும், மாமுன் நிரையுமாக, இஃது இயற்சீர் நின்றுஇயற்சீருடன் விகற்பித்து வந்த சிறப்புடைய இயற்சீர் வெண்டளை.எ-டு : ‘இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.’ (குறள் 1091)இஃது இயற்சீர் நின்று வேற்றுச் சீருடன் விகற்பித்து வந்தசிறப்பில்லா இயற்சீர் வெண்டளை. (யா. க.18 உரை)

இயற்சீர் வெண்டளை

மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரும் தளை.எ.டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி ’ (குறள் 1121)பாலொடு தேன்கலந் – விளமுன் நேர்தற்றே பணிமொழி – மாமுன் நிரை. (யா.க. 18 உரை)

இயற்சீர்பத்து

நேர் நேர் ; நிரை நிரை; நேர் நிரை; நிரை நேர்; நேர்பு நேர்; நிரைபுநேர்; நேர் நேர்பு; நேர் நிரைபு; நிரை நிரைபு; நிரை நேர்பு எனஇயற்சீர் பத்தாமாறு. (தொ. செய். 13, 15, 16 நச்.)

இயற்பெயர்ப் புணர்ச்சி

இயற்பெயர் – பெற்றோர் மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்.
நிலைமொழி இயற்பெயராக, வருமொழிக்கண் தந்தை என்ற
முறைப்பெயர்வரின், இயற்பெயரின் ஈற்றிலுள்ள ‘அன்’ என்பதும், தந்தை என்ற
வருமொழியின் முதற்கண் அகரம் ஏறிவந்த தகர ஒற்றும் கெட, சாத்தன் +
தந்தை
> சாத்த் + அந்தை = சாத்தந்தை
– என்றாற்போல் புணரும். (தொ. எ. 347 நச்.)
ஆதன், பூதன் என்பன நிலைமொழியாக, வருமொழியாகத் தந்தை என்ற சொல்
வரின், நிலைமொழி ‘தன்’ கெட்டு ஆ எனவும் பூ எனவும் நிற்க, வருமொழி
முதற்கண் உள்ள தகரம் முழுதும் கெட, ஆ + ந்தை, பூ + ந்தை = ஆந்தை,
பூந்தை என முடியும். (348 நச்.)
இயற்பெயர் பண்படுத்துப் பெருஞ்சாத்தன் என்றாற் போல வரின்,
இயற்பெயருக்கு அமைந்த சிறப்புப் புணர்ச்சியை விடுத்துப் பொதுப்
புணர்ச்சி பெற்று, பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை –
என்றாற் போல முடியும். (349 நச்.)
இன்னார்க்கு மகன் இன்னான் என்ற உறவுமுறையில் இயற்பெயர்கள்
புணரும்வழி, நிலைமொழி இயற்பெயர் ஈற்றிலுள்ள ‘அன்’ கெட, அதனிடத்து
அம்முச்சாரியை வந்து தனக்குரிய திரிபேற்று வருமொழியொடு புணரும். எ-டு
: சாத்தன் + கொற்றன்
> சாத்த் + அம் + கொற்றன் =
சாத்தங் கொற்றன். (350 நச்.)
இது போன்ற இடங்களில் ‘அன்’ கெட்டு ‘அம்’ புணரும் என்று கூறுதலை
விட, நிலைமொழியீற்று னகரம் வருமொழி வல்லெழுத்துக் கேற்ற
மெல்லெழுத்தாகத் திரியும் என்றல் எளிது. எ-டு : பிட்ட
ங் கொற்றன், அந்துவ
ஞ் சாத்தன், அந்துவ
ந் தாயன், அந்துவ
ம் பிட்டன். (எ. ஆ. பக்.
158).
பிறபெயர் இயற்பெயரொடு தொக்கவழிக் கொற்றங்குடி – சாத்தங்குடி – என
அன்கெட்டு அம் வந்து புணர்தலும், சாத்த மங்கலம் – கொற்ற மங்கலம் என
மென்கணத்தின் முன்னர் அம்மின் மகரம் கெடுதலும். வேடன் + மங்கலம்,
வேடன் + குடி என்பன முறையே வேட்டமங்கலம், வேட்டங்குடி என
அம்முச்சாரியை பெறுதலொடு நிலைமொழி ஒற்று இரட்டு தலும் கொள்ளப்படும்.
(தொ. எ. 350 நச். உரை)
தான் பேன் கோன் என்ற இயற்பெயர்கள் திரிபின்றி இயல் பாகப் புணரும்.
தான் கொற்றன், பேன் கொற்றன், கோன் கொற்றன் என இயல்பாக முடிந்தவாறு.
(351 நச்.)

இயற்றப்படும், ஏவப்படும் தெரிநிலை வினைப்பகுதிகள்

தெரிநிலை வினைப்பகுதிகள் இருவகைப்படும். இயற்றும் வினைமுதலான்
இயற்றப்படும் தெரிநிலை வினைப்பகுதிகள், ஏவும் வினைமுதலான் ஏவப்படும்
தெரிநிலைவினைப் பகுதிகள் – என்பன அவை.
எ-டு : நடந்தான் : இயற்றப்படும் தெரிநிலை வினைப்பகுதி;
நடப்பித்தான், வருவித்தான்: ஏவப்படும் தெரிநிலை வினைப்பகுதி (நன்.
137, 138 இராமா.)

இயற்றமிழ்

இயலிசைநாடகம் என்னும் முத்தமிழுள் முதலாயது. இசை யும் நாடகமும்நீங்கலான ஏனைய இலக்கிய இலக்கணங்கள் செய்யுளும் உரைநடையுமாக இயல்வனஇயலுள் அடங்கும்.

இயற்றமிழ்த் தேவபாணி

ஒத்தாழிசைக் கலியான் தேவரை முன்னிலைப்படுத்திப் பாடுவது இது.(தொ.செய். 138 ச. பால.)

இயற்றளை வெள்ளடி

இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பா அடி.எ-டு : ‘எறும்பி அளையுட் குறும்பல் சுனைய’ (குறுந்.12-1)(யா.கா. 41)

இயலசை

குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரை ஒவ்வாவேனும் அவற்றின் மாத்திரைநோக்காது எழுத்தாம் தன்மை நோக்கி ஒரோவோர் அலகு பெறும் என்று கொண்டு,தனிக்குறில் தனிநெடில் ஒற்றடுத்த குறில் ஒற்றடுத்த நெடில் என்னும்நான்கும் நேரசை என்றும், குறிலிணை – குறிலிணைஒற்று – குறில்நெடில் -குறில்நெடில் ஒற்று என்னும் நான்கும் நிரை யசை என்றும், இயற்றிக்கொள்ளப்படாது நின்றாங்கு நின்று தளைத்தலின் இவை இயலசை என்றுபெயர்பெற்றன என்றும் கொள்ளப்படும். (தொ. செய். 6 நச்.)எ-டு : உள் – ளார் – தோ – ழி – நேரசை நான்கும் வந்தனவரி – வரால் – கலா – வலின் – நிரையசை நான்கும் வந்தன. (தொ. செய்3 நச் .)இயலசை என்பது ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயராம். (தொ.செய்.பேரா.)

இயலசை மயக்கம்

இயலசைகளாவன நேர், நிரை என்பன. இயலசை மயக்க மாவது இவ்வசைகள் தம்மொடுதாம் கூடுதலும், தம்மொடு பிற கூடுதலுமாம்.நேர் நேர் – நிரை நிரை – தம்மொடு தாம் மயங்கின.நேர்நிரை – நிரை நேர் – தம்மொடு பிற மயங்கின.ஆகவே, இயலசை மயங்கிய இயற்சீர் நான்கேயாம். இவற்றின் வாய்பாடுகள்தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்பன. கூவிளம், கருவிளம்இவற்றிற்குப் பாதிரி, கணவிரி என்ற வேறு வாய்பாடுகளும் உண்டு. (தொ.செய். 13 ந ச்.)

இயலசையும் உரியசையும் சீர்களாகவருதல்

இயலசை இரண்டும் வெண்பாவின் ஈற்றடி இறுதிச்சீராக வரும்; சிறுபான்மைகலிப்பாவின் அம்போதரங்க உறுப்பி னுள் சீராக வரும்; பெரும்பான்மையும்முதல் இறுதிக்கண் கூனாக அன்றி வாரா. உரியசைகள் அடி மூவிடத்தும் ஏற்றபெற்றி சீராக வரும்.எ-டு : ‘கழல்தொழா மன்னர்தம் கை ’‘நற்றாள் தொழாஅ ரெனின் ’ (குறள் – 2)‘பகவன் முதற்றே யுலகு ’ (குறள். 1)‘தானமிழ்தம் என்றுணரற் பாற்று ’ (குறள் – 11)‘ முழங்கு முந்நீர் முழுதும் வளைஇ’‘கறவை தந்து பகைவ ரோட்டிய’ (புறநா. 204)‘வென்றி தந்து கொன்று கோள் விடுத்து ’ (புறநா. 260)(தொ. செய். 27 ச.பால.)

இயலடி

இயற்சீர் நான்கான் வரும் அடி இயலடியாம்.‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்’ – இவ்வடிக்கண் நிரைநேர்,நிரைநிரை, நேர்நிரை, நேர் நேர் என இயற்சீர் நான்கும் ஒருங்கேவந்தவாறு. (யா. க. 25 உரை)

இயலிசை அந்தாதி

பொருளானன்றி ஓசையான் முதற்பாடலின் அந்தம் அடுத்த பாடலின் ஆதியாகவருவது.எ-டு : ‘புரிவதும் புகைபூவே’ என முதற்பாடல் முடிய, அடுத்த பாடல்‘மதுவார் தண்ணந் துழாயான்’ என மகர வருக்க ஒசையில் தொடங்கும்அந்தாதிவகை இயலிசை அந்தாதி எனப்படும். (ஈ.டு 1:6:2 ஜீயர்அரும்பதவுரை)இது பொருளிசை அந்தாதிக்கு மறுதலையானது. (பூவின் ஆகுபெயராக மதுவந்தமையால் இஃது ஆகுபெயரந்தாதி யாம்.)

இயலும் படலமும்

இயல் என்றது ஒருசாதிப்பொருள் கொண்டது என்பதும், படலம் என்பது
பலசாதிப்பொருள் கொண்டது என்பதும் ஆயிற்று. இயல் என்பதற்கு உதாரணம்
இந்த நூலிலே எழுத்தியல் என்பதில் எழுத்திலக்கணமே வருதலும், பதவியல்
என்பதில் பதத்து இலக்கணமே வருதலும், புணரியல் என்பதில்
புணர்ச்சியிலக்கணமே வருதலும் ஆம்.
படலம் என்பதற்கு உதாரணம், படலவுறுப்பைக் கொண் டிருக்கிற
காவியங்களில், இயல்போல ஒருவழிப்படாமல், பாட்டுடைத் தலைவன் கதையைச்
சொல்வதும் அல்லாமல் மலை வருணனை- கடல் வருணனை – நாடு நகரம் முதலிய பல
வருணனைகளும் கலந்து வருதலும் காண்க. (நன். 17 இராமா.)

இயல் சிஃறாழிசைக் கொச்சகம்

இடையிடையே தனிச்சொல் வந்து நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிதுவேறுபட்டு, தாழிசை மூன்றேயாய், தன்தளையான் வரும் கலிப்பாவகை இயற்சிஃறாழிசைக் கொச்சகம் ஆம். இது தாழிசை ஈற்றடி குறையப் பெறாதது.எ-டு : ‘பரூஉத்தடக்கை’ என்று தொடங்கும் கலிப்பா. இது தரவு நான்கடியாய், மூன்றடித் தாழிசை மூன்றேயாய், ஒவ்வொரு தாழிசை முன்னரும்தனிச்சொல் பெற்று, தனிச்சொல் எனத் தாழிசை மூன்றன் இறுதியிலும் வேறாகப்பெற்று, ஏழடி ஆசிரியச் சுரிதகத்தான் இற்றது. (யா. க. 86 உரை)

இயல் தரவு கொச்சகம்

பிற கலி உறுப்புக்களைப் பெறாமல் தரவு மாத்திரமாய் வருவது இயல் தரவுகொச்சகமாம்.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழிமுல்லைத்தார் முடிமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.’இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமையால் அகவல்துள்ளலோசை பெற்ற இயல் தரவு கொச்சகம். (யா. க. 86 உரை)

இயல் தரவுஇணைக் கொச்சகம்

தரவு இரட்டித்துச் சுரிதகம் இல்லாதது இயல் தரவிணைக்கொச்சகமாம்.எ-டு : ‘வார்பணியத் தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்சஊர்பணிய மதியம்போல் நெடுங்குடைக்கீழ் உலாப்போந்தான்கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே!அவற்கண்டு,பூமலரு நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டைத்துமலர்க்கண் மடவார்க்கு தொல்பகையே அன்றியும்காவலர்க்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதே?’இது வெண்டளையும் கலித்தளையும் விரவிவந்த இயல் தரவிணைச்கொச்சகம். தரவிணைக் கிடையே, ‘அவற்கண்டு’ எனத் தனிச்சொல் வந்தது.கலியின் ஏனைய உறுப்புக்கள் ஆகிய தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனுமிவைவாராமை கண்டுகொள்க. (யா.க. 86 உரை)

இயல் பஃறாழிசைக் கொச்சகம்

ஈற்றடி குறையாத பல தாழிசையால் வரும் கொச்சக்கலி.எ-டு : ‘தண்மதியேர்’ எனத் தொடங்கும் கலிப்பா.இப்பாடல் சிறப்புடைத் தன்தளையால் நாலடித்தரவும், அடுத்துஇரண்டடித் தாழிசை ஆறும், அடுத்துத் தனிச் சொல்லும் பெற்று, நாலடிஆசிரியச் சுரிதகத்தால் இற்றது. தாழிசை மூன்றின் மிக்குப் பலவாய்வந்தமையின் இயல் பஃறாழிசைக் கொச்சகம் ஆயிற்று. (யா. க. 86 உரை)

இயல் மயங்கிசைக் கொச்சகம்

கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக்கள் மயங்கி வருவது இயல் மயங்கிசைக்கொச்சகமாம்.எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி’ என்னும் கலிப்பா.இது தரவு இரட்டித்துத் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம்நான்கும், பெயர்த்தும் தாழிசை ஆறும், தனிச் சொல்லும், இருசீர் ஓரடிஅம்போதரங்கம் எட்டும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் எனஇவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்பும் மிக்கும் குறைந்தும்பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தது. (யா. க. 86. உரை; பக்.335- 337)

இயல்பு புணர்ச்சி (1)

நிலைமொழி வருமொழியொடு புணரும்வழித் தோன்றல் திரிதல் கெடுதல் என்ற
மாற்றங்கள் நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ இருமொழிக்கும் இடையிலோ
நிகழா மல் இருமொழியும் இயல்பாகப் புணரும் புணர்ச்சி இயல்பு
புணர்ச்சியாம்.
1. நிலைமொழி மெய்யீற்றதாக, வருமொழிமுதலில் உயிர் வருவழி,
வருமொழி உயிர் நிலைமொழி யீற்றோடு புணர்வது. எ-டு : அவன் + அழகியன் =
அவனழகியன்.
2. நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக, வருமொழி உயிர் முதலதாக
வருவழி, அவ்வுயிர் அக்குற்றிய லுகரத்தின் மேல் ஏறிமுடிவது. எ-டு :
நாகு + அரிது = நாகரிது.
3. நிலைமொழி உயிரீற்றதாக, வருமொழி உயிர்முத லாக, இடையே
உடம்படுமெய் பெற்றுப் புணர்வது. எ-டு : பலா + அழகிது =
பலாவழகிது.
இவையாவும் இயல்பு புணர்ச்சியாம்.
கல் + எறிந்தான் = கல்லெறிந்தான் என, தனிக்குறில்முன் ஒற்று
வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டி முடிவதும் இயல்பு புணர்ச்சி என்பர்
நச். (தொ. எ. 144 நச். உரை.)

இயல்பு புணர்ச்சி (2)

நிலைமொழியும் வருமொழியும், இடையே தோன்றல் – நிலை மொழி ஈறு திரிதல்
– நிலைமொழி ஈறு கெடுதல் – வருமொழி முதல் கெடுதல் – வருமொழி முதல்
திரிதல் – என்ற திரிபுகள் இன்றி இயல்பாகப் புணர்வது இயல்பு
புணர்ச்சியாம். ‘உடல்மேல் உயிர் வந்தொன்றி’, ஆல் + இலை = ஆலிலை
என்றாற் போல வருவனவும், உடம்படுமெய் இடையே தோன்றி மணி + அழகிது =
மணியழகிது என்றாற்போல வருவனவும் இயல்புபுணர்ச்சியுள் அடங்கும்.
உயிர்வரின், நிலைமொழிக் குற்றொற்று இரட்டுவதும் அது. (நன். 153, 162,
204, 205)

இயல்பு, விகாரம்இவற்றை உணர்த்தும்பிற சொற்கள்

இயல்பு எனினும், தன்மை எனினும், சுபாவம் எனினும் ஒக்கும். விகாரம்
எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும் ஒக்கும்.
(நன். 151 சங்கர.)

இயல்புகணம்

வருமொழியாக வன்கணமாகிய க ச த ப – முதலாகிய மொழிகள் வருமிடத்தே
திரிபுகள் நிகழும். மென்கணமாகிய ஞ ந ம – முதலாகிய மொழிகள், ய வ
முதலாகிய இடைக்கண மொழிகள், உயிர் முதலாகிய உயிர்க்கண மொழிகள் வரும்
வழி நிலைமொழியும் வருமொழியும் பெரும்பான்மையும் இயல்பாகவே புணர்தலின்,
இம்மூன்று கணங்களும் இயல்பு கணம் எனப்பட்டன. (தொ. எ. 144 நச்.)

இயல்புகணம் வருமொழியாக வரின் திரியுமிடம்

தொடர்மொழிகளின் முன் ஞ ந ம என்ற மென்கணம் முதலா கிய மொழிகள் வரின்
மெல்லெழுத்து மிக்கு முடிதலுமுண்டு.
எ-டு : கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர்நுனி, கதிர்ந்நுனி;
கதிர்முரி, கதிர்ம்முரி.
சிறுபான்மை ஓரெழுத்து மொழிகளும் ஈரெழுத்து மொழி களும் மெல்லெழுத்து
மிக்கு முடிதலுமுண்டு.
எ-டு : பூஞெரி, பூஞ்ஞெரி; பூநுனி, பூந்நுனி; பூமுரி,
பூம்முரி;
காய்ஞெரி, காய்ஞ்ஞெரி; காய்நுனி, காய்ந்நுனி; காய்முரி,
காய்ம்முரி.
சிறுபான்மை, கைஞ்ஞெரித்தார் – கைந்நீட்டினார் – கைம் மறித்தார் -என
ஓரெழுத்து மொழிகளும், மெய்ஞ்ஞானம் – மெய்ந்நூல் – மெய்ம் மறந்தார் –
என ஈரெழுத்து மொழிகளும், மெய்ம்மை – பொய்ம்மை முதலிய
பண்புப்பெயர்களும் மிக்கே முடியும் என்பாரும், இவற்றை நலிந்து கூறப்
பிறத்தலின் இயல்பு என்பாருமுளர். பூஞாற்றினார் – போல்வன மிகாதன. (தொ.
எ. 145 நச். உரை.)

இயல்புபுணர்ச்சிக்கு வரும் வருமொழிகள்

உயிரொடு கூடிய ஞ ந ம – ய வ – முதலாகு மொழிகளும் உயிரெழுத்துக்கள்
முதலாகு மொழிகளும் இயல்புபுணர்ச் சிக்கு வரும் வருமொழிகளாம்.
விள என்ற நிலைமொழிbயாடு, ஞான்றது – நீண்டது – மாண்டது – யாது –
வலிது – அழகிது – ஆடிற்று – இனிது – ஈண்டிற்று – உண்டு – ஊறிற்று –
எழுந்தது – ஏய்ந்தது – ஐது – ஒன்றியது – ஓங்கிற்று – ஒளவியத்தது – என,
இம்மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணமாகிய வருமொழியைப் புணர்க்க, அவை இயல்
பாகப் புணர்ந்தவாறு. (தொ. எ. 144 நச்).

இயல்பொடு விகாரத்து இயையும் புணர்ப்பு

மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப்பதம் பகுபதம்
என்னும் இரண்டு பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய்
அல்வழிப் பொருளிலோ வேற்றுமைப் பொருளிலோ பொருந்துமிடத்து, நிலைமொழியும்
வரு மொழியும் இயல்பாகவும் திரிபுற்றும் புணர்வது புணர்ச்சியாம்.
எ-டு : மணி + அழகு, நிலம் + வலிது, மணி + பெரிது, நிலம் +
அழகிது – நிலைமொழியீற்று உயிரும் மெய்யும் வரு மொழி முதல் மெய்யும்
உயிரும் முறையே தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப்
புணர்ந்தன.
அவன் + வந்தான், பொன் + வண்டு, பொன்னன் + கை, கிளி + அழகிது –
பகுபதமும் பகாப்பதமும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப்
புணர்ந்தன. (நன். 151)

இயைபு

நூல்வனப்பு எட்டனுள் ஒன்று. ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்என்னும் 11 மெய்யெழுத்துள் ஒன்றனை ஈறாகக் கொண்டு செய்யுளைப் பொருள்தொடராகச் செய்வது இயைபு எனப்படும்.னகர ஈற்றான் முடிந்து பொருள் தொடர்ந்தன மணிமேகலை யும் உதயணன்கதையும். மற்ற மெய்யெழுத்தான் முடிந்தவற்றுக்கு இலக்கியம் இக்காலத்துவீழ்ந்தன போலும்.(தொ. செய். 240 நச்.)

இயைபு அந்தாதி

முதல் அடியின் இறுதியில் இயைபுத் தொடை அமைந்த சீர் அடுத்த அடிமுதலில் அந்தாதிப்பது இயைபு அந்தாதியாம்.(யா. க. 52 உரை)எ-டு : ‘கல்லா மதியே கதிர்வாள் நிலவேநிலவே கழிய நிமிர்ந்துள இருளே’நிலவே என்ற இயைபுத்தொடை அமைந்த சீர் அடுத்த அடி ஆதியாய்இயைபுத்தொடைக்குப் பயன்பட்டது.

இயைபு இணைக்குறள் வெண்பா

அடி இயைபுத்தொடை அமைய வரும் குறள் வெண்பா இது.எ-டு : ‘சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரு ம்பு கதிர்வளைத் தோளும் கரும்பு ’(யா. வி. பக். 236)

இயைபு என்ற வனப்பின் இலக்கணம்

மொழியிறுதிக்கண் நிற்றற்குரிய ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்என்னும் புள்ளி எழுத்துக்கள் நாற்கணத்தொடும் புணருங்கால் புணரியல்விதிதவறாமல் இயைபுபட்டு நிற்கும் வனப்பு இயைபு எனப்படும்.பாட்டு முதலாகிய எழுவகைச் செய்யுள்களைச் சொற் பொருள்விளங்கவேண்டும் என்று கருதிப் புணர்ச்சியின்றிச் சொல்லுதலும்எழுதுதலும் சிலரது வழக்காதலின், ஆண்டுப் புணர்ச்சியின்றி விட்டிசைத்துஓசையியைபு அழியுமன்றே? அங்ஙனம் ஓசை அழியாமற் செய்தல்இவ்வுறுப்பாம்.எ-டு : ‘கண்டா ங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தா ங் காட்ட யா ங் கண் டது’ (குறள். 1171)(தொ. செய். 239 ச.பால.)

இயைபு என்ற வனப்பு

ஞகரம் முதல் னகரம் ஈறாகிய மெல்லெழுத்து ஐந்தும், வருமொழி வன்கணம்வருமிடத்தே மெய்பிறிதாதல் முத லான ஏற்ற திரிபுகளைப் பெற்றுவருமொழியோடு ஒட்டியிசைக்கும் வனப்பு இயைபு எனப்படும்.(தென்.யாப்.96)எ-டு : உரி ஞு க் கொண்டனன், முரணுத் தொலைத்த,பொரு ந க் கடுமையின், வீழ்மர ங் கடுப்ப,செம்பொ ற் குடத்தர்.(தென். யாப். 96)

இயைபு என்றற்குப்பண்டையுரையாசிரியர் உரை பொருந்தாமை

ஞகாரம் முதலாக னகாரம் ஈறாகக் கிடந்த பதினொரு புள்ளியெழுத்துக்களைஇறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள்கள் இயைபு என்னும் வனப்பென்பர்உரையா சிரியன்மார்.இவற்றுள் ஞகாரம் முன்னிலை ஏவலாய் அன்றிப் பெயரீறாக வாராமையானும்,அது சாரியை பெற்றே வருமென ஆசிரியர் ஓதுதலானும், வகரஈறுசுட்டுப்பெயராயும் உரிச்சொல் ஈறாயுமன்றி வாராமையானும், தெவ் என்னும்உரிச்சொல் உகரச்சாரியை பெற்றே வருமாகலானும் இவற்றை ஈறாகக் கொண்டுசெய்யுள் முடிதற்கு இயையாமை அறிக. மற்று நகர ஈறு இருசொற்களின்கண்ஈறாகி வருதலின், அஃது ஈறாகி வருதல் அரிதென்க. அன்றியும், வனப்புஎன்பது ஒரு செய்யுளின்கண் விரவி நிறைந்து நிற்பதோர் உறுப்பாம்.ஈற்றெழுத்து ஒன்றனைக் கருதி வனப்புறுப்பு வகுக்கப்பட்டது என்றல்பொருந்தாது. (தொ. செய். 239 ச. பால.)

இயைபு வண்ணம்

இடையெழுத்து மிகுந்து வருவதாகிய வண்ணமாம்எ-டு : ‘அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்’இவ்வடியில் இடையெழுத்து மிக்கு வருமாறு காண்க.(தொ. செய். 218 பேரா.)

இயைபுத்தொடை

அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றிவரின் அஃது (அடி)இயைபுத்தொடையாம். இனி, ஓரடியுள்ளே கடையிணை முதலாக இயைபுத்தொடைவிகற்பம் கொள்ளப்படும் தொடைவிகற்பம் அளவடிக் கண்ணேயே கொள்ளப்படும்.இயைபுத்தொடையின்கண் இறுதிச்சீர் முதலாகக் கொண்டு இணை, பொழிப்பு முதலானதொடைவிகற்பம் காண்டல் வேண்டும்; அடி யியைபும் காணப்படும்.எ-டு : ‘மாயோள் கூந்தல் குரலும் நல்ல கூந்தலின் வேய்ந்த மலரும் நல்ல ’என அடி இயைபுத் தொடையும்‘மொய்த்துடன் தவழும் முகி லே பொழி லே’என ஓரடிக்கண்ணேயே இணைஇயைபுத்தொடையும் வந்தவாறு. (யா. க. 40உரை)இயைபுத்தொடை எழுத்தோ சொல்லோ ஒன்றி வரப் பெறும் (சாமி. 154)இயைபுத்தொடை எழுத்தோ அசையோ ஒன்றிவரப்பெறும் (மு. வீ. யாப்பு. 25)(யா. வி. 40 உரை)

இயைபுத்தொடை ஏனைய தொடையுடன் இணைதல்

இயைபுத்தொடை தனித்தும், மோனை எதுகை முரண் அள பெடை இவற்றுள்ஒன்றுடனோ பலவற்றுடனோ இணைந் தும் வரும். தனித்துவரும் இயைபுத் தொடைசெவ்வியைபுத் தொடை எனவும், மோனையுடன் கலந்து வருவது மோனை இயைபுஎனவும், எதுகையுடன் கலந்துவருவது எதுகை இயைபு எனவும், அளபெடையுடன்கலந்துவருவது அளபெடை இயைபு எனவும், பலதொடைகளுடன் கலந்து வருவது மயக்குஇயைபு எனவும் கூறப்படும். எடுத்துக்காட்டு அவ்வத் தலைப்புள் காண்க.(யா. க. 40 உரை)

இயைபுத்தொடை விகற்பம்

இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஓரூஉ இயைபு, கூழை இயைபு,மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு என்பன.அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க. (யா.க. 40 உரை)

இயைபுத்தொடையின் இலக்கணம்

இரண்டடியினும் பொருள்இயைபு இன்றி எழுத்தாவது அசையாவது சொல்லாவதுஈற்றிலே பொருந்தத் தொடுப் பது அடி இயைபுத்தொடைக்கு இலக்கணம். (தொ. செய். 96 பேரா., நச்.)சீர்களில் இந்நிலை காண்பது சீர் இயைபுத்தொடை. இயைபுத் தொடைஅடியீற்றுச்சீரிலிருந்தே விகற்பங்களுக்குக் கணக்கிடப்படும்.ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம். (தொ. செய். 92 இள.)‘இயைபுத் தொடை’ காண்க.

இரங்கற்பா

இறந்தவர்மீது வருந்திப் பாடும் சரமகவி. (L)

இரட்டை நாக பந்தம்

அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் //தெருளின்மரு வாருசிர்ச் சீரே – பொருவிலா // வொன்றே யுமையா ளுடனேயுறுதிதரு // குன்றே தெருள வருள்.மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு // பெருகொளியான்றேயபெருஞ் சோதி – திருநிலா // வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த // மயருமளவை யொழி.இவ்விரண்டு பாட்டும் இரண்டு நாகங்களின் தலை நின்று தொடங்கிவால்முனைக ளிறுதியாக இடையிடையே தத்தம் உடலினும், பிறிது பிறிதுடலினும்மாறாச் சந்திகளினின்ற எழுத்தே மற்றை யிடங்களினு முறுப்பாய் நிற்க,ஒவ்வொரு பாம்பிற்கும், மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும்,கீழ்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டு பாம்பிற்கும்நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாட்டிற்கும் பொருந்த நான்கெழுத்துமாகச்சித்திரத்தி லடைபட்டு முடியுமாறு காண்க.

இரட்டை நாகபந்தம்

‘அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்தெருளின்மரு வாருசிர்ச் சீரே – பொருவிலாஒன்றே யுமையா ளுடனே யுறுதிதருகுன்றே தெருள அருள்.’‘மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சுபெருகொளியான் தேயபெருஞ் சோதி – திருநிலாவானம் சுருங்க மிகுசுடரே சித்தமயரு மளவை ஒழி.’இரண்டு நேரிசை வெண்பாக்களையும் இரண்டு நாகங்களின் தலையினின்றுதொடங்கி, வாலின் முனைகள் இறுதியாக, இடையிடையே தத்தம் உடலினும்மறுபாம்பின் உடலிலும் மாறாடிச் சந்திகளின் நின்ற எழுத்தே மற்றைஇடங்களிலும் உறுப்பாய் நிற்க, ஒவ்வொரு பாம்பிற்கும் மேற்சுற்றுச்சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச்சந்தி நான்கினும்நான்கெழுத்தும், இரண்டுபாம்பிற்கும் நடுச்சந்தி நான்கினும் இரண்டுபாம்பிற்கும் பொருந்த நான்கு எழுத்துமாகச் சித்திரத்தில் அடைத்துஅமைத்தல் இதன் இலக்கணமாம். (தண்டி. 98-5)

இரட்டை மணிக்கோவை

பத்து வெண்பாவும் பத்து அகவலும், ஒரு பாவினை அடுத்து மற்றொருபாவருமாறு அந்தாதித்தொடையால் மண்டலித்து வரப் பாடுவதொரு பிரபந்தம்.இவ்விலக்கணம் சாமிநாதத் தில் மாத்திரமே காணப்படுகிறது. (சாமி.169)

இரட்டை மணிமாலை

முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும் அடுத்து வெண்பாவும்கலித்துறையுமாக. இவ்வாறு அந்தாதித் தொடையான் இருபது பாடல் பாடப்படும்பிரபந்தம். முதற் பாடலுடன் இறுதிப் பாடல் மண்டலித்து வரும்.(இ. வி. பாட். 59)

இரட்டை விருத்தம்

பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். (வீ. சோ. 109 உரை)

இரட்டை விருத்தம்

பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். (வீ. சோ. 109 உரை)

இரட்டைத் தொடை

நாற்சீரடியால் ஓரடி முடியும் அளவும் ஒருசீரே நடப்பது. ஈற்றுச்சீர்ஒன்று ஓர் எழுத்துக் குறைந்து வரினும் ஒக்கும்.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்குளக்கொட்டிப் பூவின் நிறம்’பொருள் வேறுபடினும் சொல் வேறுபடுதல் கூடாது.எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஓடையேகூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்நாடி உணர்வார்ப் பெறின்.’ஓடை – ஓடைக் கொடி, ஒருமரம், யானையின் நெற்றிப் பட்டம், நீரோடை என்றவேறு பொருளில் வந்தது. (நிரனிறையாகப் பொருள் கொள்க.)ஓரடி ஒரு முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெ துகையாய்வரின், அத்தொடையினை, ‘இருமுற்றிரட்டை’என்ப. ஒரு சாராரால் நிரல்நிறையும் இரட்டைத் தொடைப் பாற் படுத்துவழங்கப்படும். (யா. க. 51 உரை)

இரட்டைத்தொடை வகைகள்

ஒருபொருள் இரட்டை, பலபொருள் இரட்டை, ஒருமுற்றி ரட்டை,இருமுற்றிரட்டை என்பன. (யா. க. 51 உரை)

இரணத்தொடை

முரண்தொடை அது காண்க. (யா. கா. 42)

இரணமா மஞ்சுடை

வடமொழிவழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் சந்தங்கள் தாண்டகங்கள்இவற்றின் பலவகைகளுடைய இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (யா.வி. பக். 523)

இரண்டடி எதுகை

பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே எதுகைத்தொடைஅமைய வருமாயின், அவ் வெதுகை இரண்டடி எதுகையாம்.எ-டு : ‘உலக மூன்றும் ஒருங்குடன் ஒத்துமாண்திலக மாய திறலறி வன்னடிவழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்’ (வளை.)உ ல கம், தி ல கம்வ ழு வில், தொ ழு வல் } இரண்டடி எதுகை(யா. க. 37 உரை)

இரண்டடி மொழிமாற்று

‘அடி மொழிமாற்று’க் காண்க.

இரண்டடி மோனை

பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே மோனைத்தொடைபடஅமையுமாயின் அம் மோனை இரண்டடி மோனையாம்.எ-டு : ‘ஆகங் கண்டகத் தாலற்ற ஆடவர்ஆகங் கண்டகத் தாலற்ற அன்பினர்பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார்பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்.’ஆகங், ஆகங்பாகங், பாகங் } இரண்டடி மோனை.(யா. க. 37 உரை)

இரண்டாமடி அளபெடைத்தொடை பெற்றநேரிசை வெண்பா

எ-டு : ‘தாஅய்த்தாஅய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார்போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து – போஒய்ப்போஒய்நிற்குமோ நீடு நெடும்புதவம், தானணைந்துபொற்குமோ என்னாது போந்து’இப்பாடலின் (முதலடி முதற்சீரோடு) இரண்டாமடி முதற் சீரும் நான்காம்சீரும் ஒரூஉத் தொடையாய் அளபெடை பெற்று உள்ளமையால், அளபெடைத் தொடையால்வந்த நேரிசை வெண்பாவாம். (யா. க. 60 உரை)

இரண்டாமடி ஆதிமடக்கு

எ-டு : ‘கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கின்இனியார் இனியார் எமக்குப் – பனிநாள்இருவராய்த் தாங்கும் உயிரின்றி எங்குண்(டு)ஒருவராய்த் தாங்கும் உயிர்’“காவல! கொவ்வைக்கனி போன்ற வாயளாகிய இவள் தனித்திருக்க நீஇவளைப்பிரிந்து சென்றால், எங்களை இனி யார் இன்சொற் பேசிமகிழ்விப்பவர்? பனிக்காலத்தில் கூடியவராகிய தலைவன் தலைவியர் ஆகியஇருவரும் தாங்கும் உயிரே அன்றி, பிரிந்து ஒருவராய் இருந்து தாங்கும்உயிரும் உண்டோ?” என்று கற்புக் காலத்துத் தோழி தலைவன்பிரிவைத் தடுத்தஇப்பாடற்கண், “இனி யார் எமக்கு இனியார் ஆவர்?” என்ற பொருளில்,இரண்டாமடி ஆதியில் ‘இனியார் இனியார்’ என மடக்கியவாறு. (தண்டி. 95)

இரண்டாமடி ஒரூஉ மோனைத்தொடை பெற்றநேரிசை வெண்பா

எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன் வ ஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்; – வ ஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்;வஞ்சியாய் வஞ்சியார் கோ.’இப்பாடலின் இரண்டாமடியின் முதற்சீரும் நான்காம் சீரும்‘வஞ்சியான்’ என்றே வந்தமை ஒரூஉ மோனைத் தொடை யாம். (யா. க. 60 உரை)

இரண்டாமடி ஒரூஉஎதுகை பெற்ற நேரிசைவெண்பா

‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கிமுலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்குதார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோகார்மாலை கண்கூடும் போது’இப்பாடலின் இரண்டாம் அடியில் முதற்சீர் ‘முலை விலங் கிற்று’நான்காம்சீர் ‘மலைவிலங்கு’ ஆதலின், இவ்விரண் டாமடி ஒரூஉஎதுகைத்தொடைபெற்றதாம். இவ்வொரூஉ எதுகையே நேரிசைவெண்பாவின் இரண்டாமடியில்நிகழும்.(யா. க. 60 உரை)

இரண்டாமடி ஒழிந்த மூவடி மடக்கு

எ-டு : ‘கடிய வாயின காமரு வண்டினம்அடிய வாயகன் றாருழை வாரலர்கடிய வாயின காமரு வண்டினம்கடிய வாயின காமரு வண்டினம்…’கடிய ஆயின வண்டு இனம் அடியவாய், அகன்றார் உழை வாரலர்; காமரு வண்டுஇனம் கடிய ஆயின, காமரு வண் தினம் கடிய ஆயின’ எனப் பொருள் கொள்க.அடிகள் 1, 2 : விளக்கம் உற்றனவாகிய விருப்பம் மருவும் வளைகள்பாதங்களை நோக்கிக் கழன்று விழவும், நம்மை அகன்ற தலைவர் நம் நலிவுகண்டு நம்பக்கல் மீண்டு வரவில்லை.3. சோலைகளில் மருவும் வண்டினங்கள் அச்சம் தருவன வாயுள்ளன.4. விரும்பத்தக்க சிறந்த (பழைய) நாள்கள் நமக்கு நீக்கப்பட்டனஆயின.‘கடிய வாயின’ – விளக்க முற்றனவாகிய, அச்சம் தருவன வாயுள்ளன,நீக்கப்பட்டன ஆகிவிட்டன – எனப் பொருள் கொள்ளப்படும்.காமரு – விருப்பம் மருவின (1, 4), சோலையில் மருவின (3);வண்டினம் – வளையல்கள் (1), வண்டுக் கூட்டம் (3) சிறந்தநாள்கள் (4).இப்பாடலில் இரண்டாமடி ஒழிந்த மூவடியும் மடக்கிய வாறு காண்க.(தண்டி. 96)

இரண்டாமடி கீழ்க்கதுவாய்த்தொடைபெற்ற நேரிசை வெண்பா

எ-டு : ‘எற்றே பலியிரக்கும் இட்டால் அதுஏலான்நெ ற் றிமேல் ஒ ற் றைக்கண் நீறாடி – மு ற் றத்துப்பொற்றொடிப்பந் தாடிப் பொடியாடித் தீயாடிக்கற்றாடும் நம்மேற் கழறு.’இப்பாடலில் இரண்டாமடி 1, 2, 4ஆம் சீர்களில் எதுகை விகற்பம்பெற்றமையால் கீழ்க்கதுவாய்த் தொடை வந்தவாறு. (யா. க. 60 உரை)

இரண்டாமடி நான்காம் அடி ஆதிமடக்கு

எ-டு : ‘மழையார் கொடைத்தடக்கை வாளபயன் எங்கோன்விழையார் விழையார்மெல் லாடை – குழையார்தழையாம் உணவும் கனியாம் இனமும்உழையா முழையா முறை.’விழையார், விழை ஆர் மெல்லாடை எனவும்உழையாம், முழையாம் உறை எனவும் மடக்கடிகளைப்பிரித்துப் பொருள் செய்க.“மழைபோல் வழங்கும் அபயனாகிய எம் அரசனால் விரும்பப்படாதபகைவர்க்கு (தோற்றுக் காட்டில் ஓடுதலால்) அவர்கள் விரும்பத்தக்கமெல்லிய ஆடை காட்டில் தளிர்த் தலையுடைய தழைகளே; உணவும் கனிகளே;அவர்கட்குச் சுற்றமும் மான்களே; அவர்கள் தங்கும் இடமும் குகைகளே”என்று பொருள் செய்யப்படும் இப்பாடற்கண், இரண்டாம் அடியுடன் ஈற்றடிஆதிமடக்கு வந்தவாறு. (விழையார் – விரும்பப்படாத பகைவர், விருப்பம்பொருந்திய; உழை – மான்; முழை – மலைக்குகை.) (தண்டி. 95)

இரண்டாமடி முரண்தொடை பெற்ற நேரிசைவெண்பா

எ-டு : ‘கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர் – தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே;தொன்மை யுடையார் தொடர்பு.’ (நாலடி. 216)இரண்டாமடி இடையாயார் தலையாயார் என முதற்சீரும் நான்காம் சீரும்ஒரூஉ முரண்தொடை பெற்றன.(யா. க. 60 உரை)

இரண்டாமடி முற்றுத்தொடை பெற்றநேரிசை வெண்பா

எ-டு : ‘பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்ததொ ல் லவையார் எ ல் லாரும் சொ ல் வதூஉம் – மெ ல் லிணர்ப்பூந்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத்தேந்தாம வேலான் திறம்.’இப்பாடல், இரண்டாமடி நான்கு சீர்களும் முற்றெதுகை யாய்வந்தமையின் முற்றுத்தொடை பெற்ற நேரிசை வெண்பாவாம். (தொடை -எதுகை) (யா. க. 60 உரை)

இரண்டாமடி மூன்றாமடி நான்காமடிஆதிமடக்கு

எ-டு : ‘பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றேமாலைவாய் மாலைவாய் இன்னிசை – மேலுரைமேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ,காவலர் காவலராங் கால்?’‘காவலர், காஅலர் ஆங்கால், மாலைவாய், மாலை வாய் இன்னிசை மேல், உரைமேவலர் மேவு அலர்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.“தலைவர் என்னை மணந்து பாதுகாப்பவர் அல்லாதகாலை, மாலைக்காலத்தில்,வரிசையாக ஆயர் வாயினின்று வெளிப் படும் இனிய குழலிசை பாலையாழைவிடஇருபது மடங்கு துன்பம் தரவும், புகழை விரும்பாத தீயமக்கள் விரும்பிக்கூறும் அலர் என் உயிரை வாட்டாதோ?” என்று தலைவன் சிறைப்புறத்தானாகத்தலைவி தன் துயரைத் தோழிக்கு உரைத்தது இப்பாடல்.மாலைவாய் – மாலைப்பொழுது, வரிசையாக வாயினின்று வரும்;மேவலர் – (உரை) மேவாத தீயமக்கள், சொல்லும் பழிச் சொல்;காவலர் – தலைவர், நம்மைக் காவாதவர் – என முதலடி ஒழிந்த மூவடியிலும்ஆதிமடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)

இரண்டாமடி மேற்கதுவாய்த் தொடைபெற்றநேரிசைவெண்பா

எ-டு : ‘எல்லைநீர் ஞாலம் முதலாய ஏழுலகும்வ ல் லனாய் முன்னளந்தான் அ ல் லனே – தொ ல் லமரைவேட்டானை வீய வியன்புலியை வெஞ்சமத்துவாட்டானைக் கூற்றிழந்த மால்’இப்பாடலின் இரண்டாமடி 1, 3, 4ஆம் சீர்களில் எதுகை விகற்பம்பெற்றமையால் மேற்கதுவாய்த் தொடை வந்தவாறு. (யா. க. 60 உரை)

இரண்டாமடியும் நான்காமடியும்மடக்கு

எ-டு : நலத்தகை பெறஇரு சரணம் ஓதும்நம்குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனேநலத்தகை மகளொரு பாகம் நண்ணுமேல்குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே.மேம்பட்ட நலம் பெற, திருவடிகள் இரண்டனையும் பரவிப் பணியும் அடியார்குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும்ஏகாம்பரநாதன், பார்வதியை ஒருபாக மாக கொண்டு, குலத்தான் மேம்பட்டபாம்புகளைக் கொண்டு புனையப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன் என்றுபொருள்படும் இப்பாடற்கண்,நலத்தகை பெற, இரு சரணம் ஓதும் நம்குலத்த கை பணிகொள் ஏகாம்பரத்தனே,நலத்தகை மகள் ஒரு பாகம் நண்ணவும் குலம் தகை பணி கொள் ஏக அம்பரத்தனாம்- எனப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.ஏக + அம்பரத்தன் – ஒற்றை மாமரத்தடியில் இருக்கும் பெருமான்.ஏக + அம்பரத்தன் – ஒற்றை ஆடையை உடையவன்.பணி – தொண்டு, பாம்பு. (தண்டி. 96 உரை)

இரண்டாமடியும் மூன்றாமடியும்நான்காமடியும் மடக்கு

எ-டு : ‘வரிய வாங்குழல் மாத ரிளங்கொடிஅரிய வாங்கயத் தானவ னங்களேஅரிய வாங்கயத் தானவ னங்களேஅரிய வாங்கயத் தானவ னங்களே.’வரி அவாம் குழல் மாதர் இளங்கொடி! அரிய ஆங்கு அயத்து ஆன வனங்களே,அரி அவாம் கயத்(துத்) தான வனங்களே, அரி அவாம் கயத் தான வனங்களே – எனப்பிரித்துப் பொருள் கொள்க. அரி – வண்டு, சிங்கம்; கய – யானை, பெருமை;வனம் – நீர், காடு.“வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய விரும்பத்தக்க இளங்கொடியே!அடைதற்கரிய அவ்வழியிலே பள்ளத்தில் நீர் ஊறியுள்ளது. வண்டுகள்அவாவத்தக்கனவாய்க் களிறு களின் மத வெள்ளங்கள் உள்ளன; காடுகள்சிங்கங்கள் விரும்பும் பெரிய இடங்களை யுடையன (ஆதலின் நீ என் னுடன்வருதல் எளிதன்று)” என்னும் பொருளுடைய இப்பாடலில், இரண்டாமடிமூன்றாமடியாகவும் நான்காமடி யாகவும் மடக்கியதால் இப்பாடல் மூவடிமடக்கில் ஒன்றாம். (தண்டி. 96 உரை)

இரண்டு முதல் ஒன்பான்களொடு மா என்ற சொல் புணர்தல்

மா என்னும் சொல் இரண்டு முதல் ஒன்பான் முடிய உள்ள எண்களோடு
இயல்பாயும் திரிந்தும் புணரும்.
வருமாறு : ஒருமா, இருமா இரண்டுமா, மும்மா மூன்றுமா, நான்மா
நான்குமா, ஐம்மா ஐந்துமா, அறுமா ஆறுமா, ஏழ்மா எழுமா, எண்மா எட்டுமா,
ஒன்பதின்மா ஒன்பதிற்றுமா ஒன்பதுமா. (ஒருமா எனப் புணருமே யன்றி,
ஒன்றுமா என இயல்பாகப் புணராது.) (தொ. எ. 480, 389 நச்.)

இரண்டெழுத்தான் வந்த மடக்கு

‘ஈரெழுத்து மடக்கு’க் காண்க.

இரத பந்தம்

நாராரா ராய நயன யணாவிண்ண்ணாராம ணாயனில மாயவா – சீராயநன்கா நமநம நன்கா நமநமமன்காமன் றாதாய் நம.மாயவனே! வேத மதியே! வயநாகபாயவனே! தே!நளின பாதா! பராபரா!தூயவனே! காரணா! பூரணா! தோணிலமானாயகனே! சீராக நாராய ணாய நம.இவற்றுள் முதற்பாட்டு, மேற் பாதியின் சிகரத்தி னின்றும் இருமருங்கிலுமிடையிலும் நாராயணாயநம வென்னும் மந்திரம் நிற்க வலமிடமாகமடங்கியிறங்கி முடியுமாறும், பிற் பாட்டு, கீழ்ப்பாதி யின்மேற்றளத்தின் முதலறை தொடங்கி வலமிடமாக மடங்கி யிறங்கி அடியறையி னின்றுநடுப்பத்தி யில் நாராயணாய நமவென் றேழ் தளத்தும் மாறாடியேறிமுடியுமாறுங் காண்க. இதனுள் விண்ண் என்னுமொற்றளபெடை யோரெழுத்தாதலால்அறிகுறியொழிய வோரறையுள் நின்றது.

இரதபந்தம்

சதுரங்க அறையுள் தேர்செல்வதெனவும் மந்திரி செல்வ தெனவும்ஒருசெய்யுட்கு உண்டான எழுத்துக்களைத் தேரினது அறைக்கு நடுவே ஒருதிருநாமமோ பழமொழியோ அழகுபெற நிற்க இரதத்திலே பந்திப்பது என்னும்சித்திரகவி வகைஎ-டு : ‘நாராரா ராய நயனய ணாவிண்ணணாராம ணாயனில மாயவா – சீராயநன்கா நமநம நன்கா நமநமமன்காமன் தாதாய் நம’இவ்விரதபந்தத்துள் நடுவும் இருபக்கமும் ‘நாராயணாயநம’ எனும்திருநாமம் நின்று அழகு செய்வது காண்க.(மா. அ. 286 பாடல் 791)

இரதோத்தத விருத்தம்

இரதோத்தம் என்று விருத்தப் பாவியலில் சொல்லப் பட்டிருப்பினும்,‘இரதோத்ததம்’ என்பதே சொல். இவ்வட மொழி விருத்தம் 11 எழுத்தே பெறுவது.1, 3, 7, 9, 11 என்ற இடங் களில் நெட்டெழுத்தும் மற்ற இடங்களில்குற்றெழுத்தும் கொண்டியல்வது. அடிக்கு எழுத்தெண்ணுங்கால் ஒற்றெழுத்துநீக்கப்படும். (வி. பா. பக். 48)‘காவி யோவிழி கலாஞ்செய் வேலெனாமேவி யேஎனை விராவி வீடவேஓவி லாதுற உணாவின் றூனையேகாவி யேஉயிர் கடாவப் போதர்வேன்’ (புனையப்பட்டது)இடைச்சுர மருங்கில் செலவழுங்கி மீண்டவன் தலைவியை நோக்கிக் கூறுவதாகஅமைந்த இவ்விருத்தத்தில் மேற் சொன்ன இலக்கணம் முற்றும் அமைந்துளது.(இது புலனெறி வழக்கிற்கு மாறுபட்டது;)‘ கா வி யா ம்விழி க லா ஞ்செய் வே ல்க ளேமேவி யேநகில் விழூஉமுள் நீர்மையேகோவை வாயிதழ் கொளூஉமெல் லாவியேபாவை தூநகைப் படூஉமென் சீலமே’ (இதுவுமது)தன்னைத் தலைவி வருத்தியதாகத் தலைவன் தோழிக்குக் கூறுவதாக வரும்இப்பாடற்கண், மேற்கூறிய இலக்கணம் அமைந்துள்ளமையால் இஃது இரதோத்ததவிருத்தமாகக் கொள்க. எழுத்தெண்ணுகின்றுழி அளபெடை யெழுத்தும்அலகுபெறாமையால் எண்ணப்படாது எனக் கொள்க. (வி. பா. பக். 48)

இரா அகரம் பெறுதலும், பெறாமையும்

இரா என்பது இரவுக்காலத்தைக் குறிக்கும் ஆகார ஈற்றுப் பெயரும், இராத
என்ற பொருள் தரும் எதிர்மறைப் பெயரெச்சமும் ஆம்.
இரவுக் காலத்தைக் குறிக்கும் இரா என்ற காலப்பெயர்
இருபெயர்உம்மைத்தொகையில் இராஅப்பகல் என எழுத்துப்பேறளபெடையாகும் அகரம்
பெறும். அங்ஙனமே எழுவாய்த்தொடரிலும் இராஅக் கொடிது என அகரம் பெறும்.
ஆயின் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் பெயர்கொண்டு முடியினும் வினை
கொண்டு முடியினும் அகரப்பேறின்றி முடியும்.
இராக்கொண்டான் – இராவிடத்துக் கொண்டான் என ஏழன் பொருளது;
இராக்காக்கை – இராவிடத்துக் காக்கை என ஏழன் பொருளது; இராக்கூத்து –
இராவிடத்துக் கூத்து என ஏழன் பொருளது; இராஅக் காக்கை – இல்லாத காக்கை
என்னும் பெயரெச்ச எதிர்மறை; இராஅக் கூத்து – இல்லாத கூத்து என்னும்
பெயரெச்ச எதிர்மறை.
எனவே, இரா என்பது பெயரெச்சமறை ஆகியவிடத்து அகர எழுத்துப்பேறளபெடை
பெறும். அஃது இரவுக் காலத்தைக் குறிக்கும் பெயராயவழி அல்வழிப்
புணர்ச்சியில் அகரம் பெறும்; வேற்றுமைப் புணர்ச்சியில் அது பெறாது.
(தொ. எ. 223, 227 நச். உரை) (எ. ஆ. பக். 137)

இராச பவித்திரப் பல்லவ தரையர்

அவிநயனார் இயற்றிய அவிநயநூல் உரையாசிரியர். ‘பெயர் வினை யும்மை’(நன். 359) என்னும் சூத்திரத்துள் கூறிய பத்துவகை எச்சங்கட்கும் இராசபவித்திரப் பல்லவதரையர் மொழிந்தவாறு மயிலைநாதர் உரை கூறினார். ‘இந்தப்பத்தெச்சமும் புவிபுகழ் புலமை அவிநயநூலுள் தண்டலம் கிழவன் தகைவரு நேமிஎண்டிசை நிறை பெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி என்றறிக’என்பது அவர் உரை.

இராசி உரிமை

வெண்பாவிற்கு உரிய இராசி கடகம், விருச்சிகம், மீனம் என்பன.ஆசிரியப்பாவிற்குரிய இராசி மேடம், சிங்கம், வேணு (வில்) என்பன.கலிப்பாவிற்கு உரிய இராசி மிதுனம், துலாம், கும்பம் என்பன. ஏனையவஞ்சிப்பாவிற்குரிய இராசி இடபம், கன்னி, மகரம் என்பன. (இ. வி. பாட்.122)

இராட்சத கணம்

கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம்,அவிட்டம், சதயம் என்பன. (விதான. கடிமண உரை)

இராப் பெயர்க்கு ‘இன்’ இன்மை

இரா என்னும் பெயர்ச்சொல் இன்சாரியை பெறாது முடியும் என்க. வருமாறு
: இராக் கொண்டான். (மு.வீ.புண. 94)

இராமாநுச கவிராயர்

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த இயற்றமிழ் ஆசிரியர். இவர்நாற்பது வயதுக்குப் பின்னரேயே கற்றுப் புலமைப் பெற்றார் என்பர்.இவருடைய ஆசிரியர் சிவஞான முனிவருடைய மாணவருள் ஒருவராகிய சோமசுந்தரக்கவிராயர் (முனிவருடைய மாணாக்கர் பரம்பரையைச் சார்ந்த வராகச்சோமசுந்தரக் கவிராயர் இருத்தலும் கூடும்) இவருடைய மாணாக்கர்களாகவிசாகப்பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர், டாக்டர் போப்பையர் முதலியோர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றனர். நாயுடு வகுப் பினைச் சேர்ந்தஇவர் இயற்பெயர் இராமாநுசர் என்பது. ஆசுகவிபாடும் ஆற்றல்கைவரப்பெற்றவர் என்பது இவரது வரலாற்றில் காணப்படும். ஆத்திசூடி,கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, திருக்குறள், நன்னூல் இவற்றுக்கு இவர்உரை இயற்றியுள்ளார். திருவேங்கட அனுபூதி, பார்த்தசாரதி பதம் புனைபாமாலை, வரதராசர் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் பஞ்சரத்தினமாலிகை, இலக்கணச் சுருக்கம் என்பன இவரியற்றிய நூல்களாம். குடாரம் என்றமறுப்பு நூலொன்றும் ஆத்தும போதப் பிரகாசிகை என்னும் வடமொழியினின்றும்மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றும் இவரால் ஆக்கப்பட்டவையாக அறியமுடிகிறது. இவ ருடைய பேருதவி, தாம் ‘ஆங்கிலம் – தமிழ்அகராதி’தொகுக்கப் பெரிதும் பயன்பட்டதாக வின்ஸ்லோ அவ்வக ராதி முன்னுரையில்குறித்துள்ளார். இவர் 1853இல் உயிர் நீத்ததாகத் தெரிகிறது.

இராமாயணம்

கம்பர் இயற்றிய இராமாவதாரப் பெருங்காப்பியத்திற்கு மிக முற்பட்டுத்தமிழில் பல அடியான் வந்த பஃறொடை வெண் பாக்களையும் உள்ளடக்கிய‘இராமாயணம்’ என்ற பெருங் காப்பிய நூல் இருந்தமை யா.க. விருத்திஉரையினால் உணரப்படுகிறது. (யா. வி. பக். 250)

இரு என்ற விகுதி

இரு என்ற விகுதி தனக்கென ஒருபொருளின்றிப் பகுதியைச் சார்ந்த
பகுதிப்பொருள் விகுதியாய், மேல் இடைநிலை விகுதி என்பன பெற்றுச் சொல்லை
நிரப்ப உதவுவது.
எ-டு : எழுந்திருந்தான் – எழுந்தான் என்னும் பொருளது.
உண்டிருந்தான் – உண்டான் என்னும் பொருளது.
எழுந்திருந்து, உண்டிருந்தான் என்பன வினையெச்சமும்
வினைமுற்றுமாய்ப் பிரிக்கப்படாத ஒருசொல் நீர்மையன. (சூ. வி. பக்.
41).

இரு துள்ளல் கொண்ட கலையால் வந்தவண்ணம்

‘தந்தனதத் தானத் தனதாந்த தாந்தனா’ என்னும் ஓசையால் வரும் எண்சீர்க்கழிநெடிலடி விருத்தத்துள் இவ்வண்ணம் நிகழும்.

இரு முதல் நிரல்நிறை

இரண்டு தொகுப்புக்களில் முற்பட்டவற்றையே கூறி ஏனையவற்றை உணரவைப்பதுஇது.எ-டு : ‘வெண்பா முதலா வேதியர் ஆதியாமண்பால் வகுத்த வருணமாம் – ஒண்பாஇனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்மனந்தட்பக் கற்றார் மகிழ்ந்து’வெண்பா முதலா, வேதியர் ஆதியா – என இருதொகுப் புக்களின் முதற்பெயரைமாத்திரம் சுட்டி ஏனையவற்றை மனம் கொள்ள வைத்தமை இருமுதல்நிரல்நிறையாம். வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா, அந்தணர், அரசர்,வணிகர், வேளாளர் எனக் கொள்க. (யா.வி.பக். 385)

இரு விகற்ப நேரிசை வெண்பா

முதல் இரண்டடி ஓரெதுகையாகவும், கடை இரண்டடி மற்றோர் எதுகையாகவும்வரும் நான்கடி வெண்பா; இரண்டாமடியின் இறுதிச்சீர் முதற்சீருடன் ஒத்தஎதுகை பெற்றுத் தனிச்சீராக வரப்பெறும்.‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கிமுலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்குதார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோகார்மாலை கண்கூடும் போது.’ (தண்டி. 16 மேற்.)இரண்டாமடி தனிச்சீர் பெற்று, முதலீரடி ஓரெதுகை யாகவும் பின்னீரடிமற்றோர் எதுகையாகவும் இருவிகற்பமாக இந்நேரிசை வெண்பா வந்தவாறு. (யா.வி. 60 உரை)

இருகுறள் நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா வகை. இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதல்தொடைக்கேற்ற தனிச்சீரால் அடி நிரம்பி, செப்ப லோசை வழுவாது, முதல்இரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பமாய்வரினும், நான்கடியும் ஒரே விகற்பமாய் வரினும் இருகுறள் நேரிசை வெண்பாஎனப்படும்.எ-டு : ‘தடமண்டு தாமரையின் தாதா டலவன்இடமண்டிச் செல்வதனைக் கண்டு – பெடைஞெண்டுபூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்(து)ஊழி நடாயினான் ஊர்.’இதன்கண், ‘பெடைஞெண்டு’ என்பது தனிச்சீராய் அடி நிரப்ப வந்தவாறு.(யா. கா. 24)

இருக்குக் குறள்

சிறிய பாவகை; ‘ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி’ (பெரியபு. திருஞான. 276); இரு சீரான் இயன்ற அடி உடைய பாட்டுத்‘திருவிருக்குக் குறள்’ எனச் சம்பந்தர் தேவாரத்துள் ளும்திருவாய்மொழியுள்ளும் காணப்படும்.‘அரனை உள்குவீர்பிரம னூருளெம்பரனை யேமனம்பரவி உய்ம்மினே’ (தே. I – 90-1)இவ்விருக்குக் குறளின்கண், குறளடியில் சீர் இயற்சீராகவேவந்தவாறு.

இருதிசை புணர்தல்

வடக்கு தெற்கு குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என நான்கு
திசைகளில் ஒருதிசைப்பெயர் நிலைமொழியாகவும் மற்றொரு திசைப்பெயர்
வருமொழியாகவும் அமைந்து புணரும்வழி, இரு மொழிக்குமிடையே ஏ என்னும்
சாரியை வரும்.
வருமாறு : வடக்கே தெற்கு, குணக்கே குடக்கு, கிழக்கே மேற்கு,
வடக்கே கிழக்கு, தெற்கே குணக்கு, தெற்கே குடக்கு, வடக்கே குணக்கு –
என்றாற்போல வருதல் காண்க. (தொ. எ. 431 நச்).
பெருந்திசைகளாவன வடக்கும் தெற்கும்; இவற்றொடு கோணத் திசைகளாகிய
குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என்பன புணரும்வழி, வடகுணக்கு –
வடகிழக்கு – வடகுடக்கு – வடமேற்கு – தென்குணக்கு – தென்கிழக்கு –
தென்குடக்கு – தென்மேற்கு – என, நிலைமொழிகளாகிய வடக்கு ‘வட’ எனவும்
தெற்கு ‘தென்’ எனவும் திரிந்து வருமொழிகளொடு புணரும். (தொ.எ. 432
நச்.)
தொல்காப்பியனார் காலத்து வடக்கு ‘வடகு’ என்றே வழங்கப்பட்டிருத்தல்
வேண்டும். (கிழக்கு மேற்கு என்பன குணக்கு குடக்கு என்ற பெயர்களாலேயே
வழங்கப்பட்டன). (எ. ஆ. பக். 170).

இருதொடை

அடியிரண்டு இயைந்தவழித் தொடை அமைதலின், இரு தொடை அமைய மூவடிவேண்டுதலின், இருதொடை என்பது மூன்றடிப் பாவினைக் குறிக்கும். (யா. க.59 உரை)

இருபத்திரண்டுதொடை

மோனை 2. எதுகை 8. முரண் 5 இயைபு 1. பொழிப்பு முதலியன 5.குறிப்புத்தொடை 1. ஆக 22.மோனை 2 : அடிமோனை, கிளைமோனைஎதுகை 8 : இரண்டாம் எழுத்து ஒன்றியது, மூன்றாம் எழுத்து ஒன்றியது, சீர்முழுதும் ஒன்றியது, கிளையெதுகை, வன்பால் எதுகை, மென்பால் எதுகை,இடைப்பால் எதுகை, உயிர்ப்பால் எதுகை.முரண் 5 : சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும்,சொல்லும் பொரு ளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடுமுரணுதலும், சொல் லும் பொருளும் சொல்லொடும் பொருளொ டும்முரணுதலும்.இயைபு 1 : உட்பிரிவில்லைபொழிப்பு முதலிய 5 : பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, இரட் டைத் தொடை,நிரல்நிறை என்பன.குறிப்பு : 1. உட்பிரிவில்லை. ஆகத் தொடை 22 ஆம். (யா. க. 49 உரை)

இருபா இருபஃது

பிரபந்தவகைகளுள் ஒன்று, பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித்தொடையாக இருபது இணைந்து வருவது. முதலும் இறுதியும் பாடல்மண்டலிக்கும். (இ. வி. பாட். 62)

இருபாதம்

சித்திர கவியுள் ஒன்று.எ-டு : பாரினன குடையின கண்டங்கவெசிரி (நிர) (னிக) (னிர) தறகிருந (த, (த) (தி) மா (லி) (ர) (ர)னெஇஃது இருபாதம்; இதனையே இரண்டாமுறையும் உச்சரித் துப் பொருள்வேறாக்கிக் கண்டுகொள்க. (பாடல் மிக்க வேறுபாட்டிற்கு இடனாக வுள்ளது.)(வீ.சோ. 181 உரை )முதலீரடியும் முற்றும் மடக்கியும் பின் ஈரடியும் முற்றும்மடக்கியும் அமையும் சித்திரகவி இது.எ-டு : ‘ஒன்றி னம்பர லோகமேஒன்றி னம்பர லோகமேசென்று மேவருந் தில்லையேசென்ற மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)‘சென்று தில்லை மேவரும்; பரலோகமே ஒன்றினம்; ஒன்று இ (ன்) னம்பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ – என்று பொருள் கொள்க.இஃது ஓரடியே நான்குமுறை மடக்கிவரும் ஏகபாதத்தின் வேறாகிஇரண்டிரண்டடிகள் மடக்கி வருதலால் இருபாதம் என்னும் பெயர்த்து.

இருபுற வாழ்த்து

இருபுற வாழ்த்தாவது வைவது போல வாழ்த்தல்.எ-டு : ‘பண்டும் ஒருகால்தன் பைந்தொடியைக் கோட்பட்டுவெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் – தென்களந்தைப்பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால்வாமான்தேர் வையையார் கோ’இதன்கண், பண்டு இராமனாக அவதரித்து வில்வீரம் காட்டிய திருமாலேஇன்று பாண்டியனாகத் தோன்றித் தென்களந்தைச் செல்வமாகிய திருமகளை அடையமுயல் கிறான் – என்பது குறிப்பாகப் பெறப்படுதலின், வைவது போன்றவாழ்த்துப் புலப்பட்டது. முன்பு சீதைக்காகப் புலம்பியவன் இப்பொழுதுதென்களந்தை மன்னனுடைய திருமகளுக்காகப் புலம்புகிறான் என்ற வெளிப்படைவசை யிலே மேல் குறித்த குறிப்பு வாழ்த்து அமைந்தமை காண்க. (யா. வி.பக். 551)

இருபுறவசை

இருபுறவசையாவது வாழ்த்துவது போல வைதல்.எ-டு : ‘படையொடு போகாது நின்றெறிந்தான் என்றும்கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் – படையொடுபாடி வழங்கும் தெருவெல்லாம் தான் சென்றுகோடி வழங்கு மகன்’இதன்கண், பெண்டிர்க்குக் கொடையும் வீரர்க்குப் புத்தாடை யும்வழங்கும் கொடையாளன் என்று வாழ்த்துவது போல, போர்க்களத்தேபோரிடச்செல்லும் ஆற்றலின்றிப் பாடி வீட்டில் தங்கி வீரர்க்கு ஆடைவழங்குவதிலும் மகளிருடன் வைகுவதிலும் காலங்கழிக்கும் வீரமிலி என்றுகுறிப்பாக வைதவாறு. (யா. வி.பக். 551)

இருபொருள் சிலேடை இணை மடக்கு

எ-டு : ‘மூவுலகெண் முத்தரைப்போல் முந்நீர் முகிற்பெயல்போல்காவலர்கள் வீழ்வேங் கடவெற்பே – தேவர்பெருமான் பெருமான்கண் பெண்வளைக்கை யார்மூ -வருமால் வருமாலின் வைப்பு’இப்பாடலில், முதல் ஈரடியும் சிலேடை; பின் ஈரடியும் இணை மடக்கு.மூவுலகும் புகழும் முத்தரைப் போலக் காவலர்கள் (-அரசர்கள்) விழுந்துவணங்கும் வேங்கடமலை, கடலில் படிந்த மேகம் மழைபொழிவது போலக் காஅலர்களினின்று தேன் சொரியும் வேங்கடமலை என்பது சிலேடை. காவலர் -அரசர்; கா அலர் – சோலைமலர்கள்.தேவர்கள் பெருமானாய், பெரிய மான் போன்ற கண்ணி னரும் வளையல் அணிந்தகையினருமான திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் ஆகிய மூவருள்ளத்தும் வேட்கையைப் பெருகச் செய்யும் திருமாலின் இருப்பிடம்.பெருமான் என்பது பெரு மான்; (மூ)வரு(ம்) மால், வருமால் என்பதுமடக்கு.இவ்வாறு இப்பாடல் இருபொருட் சிலேடை இணைமடக்கு ஆதல் காண்க. (மா.755)

இருமுற்று இரட்டை

எ-டு : ‘அ டி யியற் கொ டி யன ம டி புனம் வி டி யல்ம ந் தி த ந் த மு ந் து செ ந் தினைஉறுப்பார்ப் பருத்தும் நாடனொடுசிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே’ஓரடி ஒரு முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு முற்றெது கையாய்வரின்,அவற்றின் தொடை இருமுற்றிரட்டை எனப்படும். இப்பாடற்கண் (முதல்இரண்டடிகளில்) இரு முற்றிரட்டை வந்தவாறு. (யா. க. 51 உரை)

இருமொழிக் குற்றியலிகரம்

நிலைமொழி குற்றியலுகரச்சொல்லாக, வருமொழி யகர முதல் மொழியாக வரின்,
நிலைமொழி ஈற்றிலுள்ள உகரம் கெட, அவ்விடத்தே வரும் இகரம்
குற்றியலிகரமாம்.
எ-டு : நாகு + யாது = நா
கியாது; வரகு + யாது = வர

கியாது;
குரங்கு + யாது = குரங்
கியாது
‘முப்பே பிணியே வருத்தம் மென்மையோ,
டியாப்புற வந்த இளிவரல் நான்கே’
(தொ. பொ. 254 பேரா.) (தொ.எ. 35,410 நச்.)

இருமொழிக் குற்றியலுகரம்

நிலைமொழி குற்றியலுகரஈற்றதாய் வருமொழி நாற்கணத் தொடும் அல்வழிப்
பொருளிலும் வேற்றுமைப் பொருளிலும் புணரும்வழி, நிலைமொழியீற்றுக்
குற்றியலுகரங்கள் யாவும் முற்றியலுகரமாக ஓசை நிரம்பும். ஆயின்,
வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம், வருமொழி வல்லெழுத்து முதலதாக
வரின், முற்றியலுகரம் ஆகாது அரைமாத்திரை ஒலியிற்றாய குற்றியலுகரமாகவே
நிற்கும்.
எ-டு : நா
கு கடிது, வர
கு கடிது, எஃ
கு கடிது முதலிய சொற்றொடர்களில்
நிலைமொழியீற்றெழுத்து முற்றியலுகரம் ஆயிற்று.
செக்
குக்கணை, சுக்
குக்கொடு என்ற தொடர்களில் நிலை
மொழி யீற்றெழுத்து அரைமாத்திரை அளவிற்றாய குற்றிய லுகரம் ஆம். (தொ. எ.
409, 410 இள. உரை)
நாகு + யாது = நாகியாது என்ற தொடரில், நிலைமொழியீறு
முற்றியலுகரமாகிவிடவே, அதனிடத்தில் குற்றியலிகரம் வருமிடத்து,
முற்றியலுகரம் கெடக் குற்றியலிகரம் வந்து, நா
கியாது என்று முடியும் என்றார்
தொல்காப்பியனார். (எ.ஆ.பக். 166)
பெருமுரசு, திருமுரசு – என்பன முற்றியலுகர ஈற்றன என்பர் நச்.
(தொ.எ.36. நச்)

இருமொழிப் பொதுவெழுத்தும், வடமொழிச் சிறப்பெழுத்தும்

வடமொழியுள் ‘அச்சு’ என்று வழங்கும் உயிர் பதினாற னுள்ளும், இடையில்
நின்ற ஏழாமுயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டுமான ஆறும்
ஒழிந்து நின்ற ஆ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் பத்தும்,
‘அல்’ என்று வழங்கும் மெய் முப்பத்தேழனுள்ளும், க ச ட த ப என்னும்
ஐந்தன் வருக்கத்துள் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும்
சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க ங ச ஞ ட ண த ந ப ம என்னும்
பத்தும், ய ர ல வ என்னும் நான்கும், ளவ்வுமான இருபத்தைந்தும் தமிழ்
மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாம்.
இவையன்றி, மேல் உயிரில் ஒழிந்த ஆறும், ஐந்து வர்க்கங் களிலும்
இடைகளில் ஒழிந்த பதினைந்தும், முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம்
ஒழிந்த ஏழுமான இருபத் தெட்டும் வடமொழிக்கே உரியவாய்த் தமிழ்மொழிக்கு
வருங்கால் தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும். (நன். 145
மயிலை.)

இருவகை அடியும் தொடுத்த அடிமோனை

‘யாண்டும் காணேன் மாண்டக் கோனையானுமோர் ஆடுகள மகளே என்கை’ (குறுந். 31)முதலடி கட்டளை அடி; ஏனைய அடி எழுத்தொவ்வா மையால் பிற அடி.இவ்விருவகையான (ஆசிரியப்பாவில் நிகழும்) அடிகளின் முதற்சீர்களில்முதல்எழுத்து ‘யா’ என ஓரெழுத்தே வந்தமை யால் அடிமோனை வந்தவாறு.(தொ.செய். 92 நச்.)

இருவகை வெண்டளைக்கும்எடுத்துக்காட்டு

‘முனிவாள் – மலைவிலங்குதார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோகார்மாலை கண்கூடும் போது’ (தண்டி. 16 மேற்.)தார்மாலை மார்ப : காய்முன் நேர் – சிறப்பில்லா வெண்சீர்வெண்டளை.கார்மாலை கண்கூடும் : காய் முன் நேர் – சிறப்புடைய வெண்சீர்வெண்டளை.மார்ப தனிமை : மா முன் நிரை – சிறப்புடைய இயற்சீர் வெண்டளை.முனிவாள் மலைவிலங்கு : மாமுன் நிரை – இயற்சீர் முன் வெண்சீர்ஆதலின் சிறப்பில்லா இயற்சீர் வெண்டளை. (யா. க. 18 உரை)

இருவிகற்ப இன்னிசை வெண்பா

எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லைஅளந்தன போகம் அவரவர் ஆற்றான்விளங்காய் திரட்டினார் இல்லை – களங்கனியைக்காரெனச் செய்தாரும் இல்’ (நாலடி. 103)இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீரின்றி மூன்றாமடி இறுதிக்கண்தனிச்சீர் பெற்று, இருவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா. (யா. க. 61உரை)

இருவிகற்ப ஈராசிடை நேரிசை வெண்பா

முதல் ஈரடி ஓரெதுகையாய்ப் பின்னீரடி மற்றோர் எதுகை யாய், முதற்குறட்பாவின் ஈற்றசைச்சீர் இரண்டாமடியின் நான்காம் சீரொடு பொருந்துதல்பொருட்டு இடையே இரண்டு அசைகள் ஆசாக வருமாறு அமையும் நேரிசைவெண்பாவகை.எ-டு : ‘வண்மை மதம்பொழிந்து மாற்றார் திறம்வாடத்திண்மை பொழிந்து திகழும்போன்ம் – ஒண்மைசால்நற்சிறைவண் டார்க்கும் நளிநீர் வயற்பம்பைக்கற்சிறை என்னும் களிறு.’இதன்கண், முதல் ஈரடி ஓரெதுகையும், பின் ஈரடி மற்றோர் எதுகையும்பெற்று வந்துள. இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘திகழ்’ என்பதனோடு ‘உம்,போன்ம்’ என்ற ஈரசைகள் ஆசாக வந்தமையத் ‘திகழும்போன்ம்’ என்றாயிற்று.(யா. க. 60 உரை)

இருவிகற்ப ஓர் ஆசிடை நேரிசை வெண்பா

முன்னிரண்டடியும், பின்னிரண்டு அடியுமாக நான்கடியும் இரண்டு அடியெதுகை பெற்று, இரண்டாமடியின் மூன்றாம் சீர் குறள்வெண்பாவின்ஈற்றுச்சீர் போல இராது அச்சீர் நான்காம் சீரோடு இணைக்கப்படுதற்கேற்பஓரசை இடையே இணைந்து வருவது இந்நேரிசை வெண்பா வகையாம்.‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கிமுலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்குதார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ,கார்மாலை கண்கூடும் போழ்து?’ (தண்டி. 16 மேற்)இப்பாடல், இரண்டா மடிக்கண் மூன்றாம் சீர், அது குறள் வெண்பாவாயின்,‘முனி’ என்று ஓரசையான் முடிய வேண்டி யதனை ‘முனிவாள்’ என ஓரசை கூட்டிநீட்டப்பட்டது, ஓராசு இடையிட்ட நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது. இதன்நான்கடிகளும் ஈரடியெதுகையே பெற்றமையின் இரு விகற்பம். (யா. க. 60உரை)

இருவிகற்ப நேரிசைச் சிந்தியல்வெண்பா

முதல் இரண்டடிகள் ஓரெதுகையாய் இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர்பெற்றுப் பின் மூன்றாமடி அமைய இயற்றப்படும் சிந்தியல் வெண்பா.எ-டு : ‘நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டுசுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே – பொற்றேரான்பாலைநல் வாயின் மகள்’முதல் ஈரடிகளும் ஓரெதுகை, மூன்றாமடி தனிவிகற்பம் ஆதலின்,இருவிகற்பம் உடையது ஆயிற்று. (யா. க. 59 உரை)

இருவிள என்ற பெயர்

இருவிள என்பது அகர ஈற்றுப் பெயர்களில் ஒன்று. இருவிள என்பது ஓலை,
வேணாட்டகத்து ஓரூர், கருவூரினகத்து ஒருசேரியும் என்ப.
இப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், இருவிளக்கொற்றன்- என
வல்லொற்று மிக்குப் புணரும். இருவிளவிலுள்ள கொற்றன் என்பது பொருள்.
இருவிளக்குறுமை என்பது இரு விளவினது குறுமை என்னும் பொருளது.
அவ்வழியிலும், இருவிளக் கடிது – இருவிளச் சிறிது – இருவிளத் தீது –
இருவிளப் பெரிது – என வல்லொற்று மிக்குப் புணரும். (தொ.எ. 216 நச்.
உரை)

இறந்தகால இடைநிலை

க ட த ற – என்னும் நான்கு மெய்களும் ‘இன்’னும் ஆகிய ஐந்தும்
ஐம்பால் மூவிடத்தும் இறந்தகாலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப்
பகுபதங்களில் இடைநிலைகளாம். இவற்றுள், ககரம் முதனிலை எழுத்தாயே வரும்;
தகரம் முதனிலை எழுத்தாகாமல் வரும்; ஏனைய டகரமும் றகரமும் முதனிலை
எழுத்தாயும் அதற்கு இனமாயும் வரும்.
எ-டு : நக்கான்; உரைத்தான்; விட்டான், உண்டான்; உற்றான்,
தின்றான்; உறங்கினான்.
உரையிற் கோடலால், நக்கிலன் – உரைத்திலன் – உண்டிலன் – நின்றிலன் –
உறங்கிலன் என எதிர்மறைக்கண் இவ்விடை நிலைகள் எதிர்மறையைக் காட்டும்
‘இல்’ இடைநிலையொடு வருமாறு காண்க.
எஞ்சியது, போயது. போய – என யகரமும், போயன – என அன்னும், போனான்,
போனது – என னகரமும் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். (இ. வி. எழுத்.
47)
எஞ்சியது தப்பியது நீங்கியான் – என இகரத்தை அடுத்த யகர ஒற்றும்
(எஞ்சு + இ + ய் + அ + து; தப்பு +இ + ய் + அ+து; நீங்கு +இ +ய் +
ஆன்), போயது போய – என யகர ஒற்றும் (போ+ய்+அ), போனான் போனது – என னகர
ஒற்றும் (போ +ன் + ஆன்;போ + ன் + அ + து)சிறுபான்மை இறந்த காலம்
காட்டும். (நன். 142 இராமா.)
[இன் என்ற இறந்தகால இடைநிலையது
விகாரமே இகரமும் னகரமும் என்பர் சிவஞா. (142)
]

இறுதி நிலை உரைத்தல்

சுரிதகமானது இடைநிலைபாட்டின் பொருளை முடிவு கட்டி நிற்றல்.இறுதிநிலை ‘நுனிவிரல்’ என்றாற்போல் ‘நிலையிறுதி’ என மாற்றிக்கொள்ளப்பட்டு, இடைநிலைப்பாட்டின் இறு தியைக் கூறும் எனவே, அவற்றின்பொருளினை முடித்து நிற்கும் என்பதாம். ‘நிலை இறுதி’ என்பதுஇடைநிலைப்பாட் டினை. (தொ. செய். 137 நச்.)

இறுதி நில்லாமை

இறுதலொடு நில்லாமை என்பது பொருள். வஞ்சிப்பாவின் அடியில் சீர்கள்இரண்டே. முதற்சீர் வருஞ்சீரொடு தொட ருங்கால் இறுதற்றொழில் பெறுவதுமுதற்சீர் ஆதலின் நேரீற்றியற்சீர் கட்டளை வஞ்சியடியில் முதற்சீராகவாரா; வரின் தூங்கல் ஓசை நிகழாது.எ-டு : ‘கொற்றக் கொடியுயரிய’ என்ற நேரீற்றியற்சீர் முதற்கண்நின்று தூங்காதாயிற்று.‘மேதக மிகப்பொலிந்தஓங்குநிலை வயக்களிறு’ (மதுரைக் 14, 15)என்ற நிரையீற்றியற்சீர் முதற்கண் தூங்கின.‘புன்காற் புணர்மருதின்தேன்தாட் டீங்கரும்பின்’என்ற நேரீற்றியற்சீர்கள் நலிந்து கூறியவழியே முதற்கண் தூங்கின.(தொ. செய். 26 நச்.)அடியீற்றின்கண் வஞ்சிப்பாவில் நேரீற்று இயற்சீர் நில்லாதுமுதற்கண்ணேயே நிற்கும். (25 இள.)

இறுதிச் சினை கெடல், நீடல்

தொல்காப்பியனார் ஒரு சொல்லின் முதலெழுத்து அல்லாத எழுத்துக்களைச்
சினை எனவும், முதலெழுத்தினை முதல் – முதனிலை – எனவும் குறிப்பிடும்
இயல்பினர். முதலெழுத்து நெடிலாயின், அது குறுகும்போது ‘சினைகெடல்’
எனவும், முதலெழுத்துக் குறிலாயின் அது நீளும்போது ‘சினை நீடல்’ எனவும்
கூறுதலுமுண்டு.
இறுதிச்சினை கெடலாவது ஈற்றெழுத்தாகிய நெடிலின் ஒரு கூறாகிய ஒரு
மாத்திரை கெட அது குறிலாதல். நிலா
> நில.
குற்றெழுத்தின் நீட்டம் நெடில். அஃது இரண்டு மாத்திரை அளவிற்று.
அதன் செம்பாதி ஒரு மாத்திரை கெட்டு அது குறிலாதலைச் ‘சினை கெடல்’
என்றார்.
ஆண்டைக் கொண் டான்,
ஈண்டைக் கொண்டான்,
ஊண்டைக் கொண்டான்: இவை
சுட்டுச்சினை நீடியவை. (தொ. எ. 234, 159 நச்.)

இறுதிநிலை அளபெடைத்தொடை

முதல் நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத்தொடுப்பது.எ-டு : ‘க டாஅ க் களிற்றின்மேல் கட்படா மாதர்ப டாஅ முலைமேற் றுகில்’ (குறள். 1087)(யா. க. 41 உரை)

இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை

ஒற்றளபெடை முதல் நின்ற சீரின் இறுதியில் வருவது.எ-டு : உர ன்ன் அமைந்த உணர்வினா ராயின்அர ண்ண் அவர்திறத் தில். (யா. க. 41 உரை)

இறுதிப்போலி வேறு சில

இறுதிப்போலியை முன் சொன்ன நிலைதடுமாற்றத்தால், சுரும்பு –
சுரும்பர், அரும்பு – அரும்பர் (குற்றுகரத்திற்கு ‘அர்’ போலி),
சாம்பல் – சாம்பர், பந்தல் – பந்தர், குடல் – குடர் (லகரத்திற்கு
ரகரம் போலி), மதில் – மதிள் (லகரத்திற்கு ளகரம் போலி) முதலியனவும்
கொள்க. (நன். 122 இராமா.)

இறையனார்

குறுந்தொகை இரண்டாம் பாடலை இயற்றிய கடைச்சங்கப் புலவர். இறையனார்சிவபெருமானையே குறிப்பதாகக் கொண்டு புராண வழக்கொடு தொடர்புறுத்திக்கூறவும்படும். ‘அன்பின் ஐந்திணை’ முதலாகத் தொடங்கும் 60 சூத்திரங்களையும் கொண்ட அகப்பொருள் நூல் இறையனார் அகப்பொருள் எனவும் இறையனார்களவியல் எனவும் பெயர் வழங்கப்படுகிறது.இறைவன் அருளியதால் பிற்காலத்தே தோன்றினும் இதனை முதல்நூலே என்பர்.(தொ. பொ. 649 பேரா. உரை)

இறையனார் அகப்பொருள்

கடைச்சங்க காலத்தை ஒட்டி எழுந்ததோர் அகப்பொருட் சுருக்கநூல்.இதன்கண் 60 நூற்பாக்கள் உள்ளன. அவற்றுள் களவு பற்றியன 33; கற்புப்பற்றியன 27. இந்நூலில் களவு பற்றிய பகுதி மிக்கிருத்தலின் அம்மிகுதிபற்றியே இந்நூலை இறைய னார் களவியல் என்றும் கூறுவர். இதனை இயற்றியவர்சிவபெருமானே என்பது முன்னோர் கருத்து. இறையனார் என்ற புலவரது படைப்புஇஃது என்பது இக்காலத்தார் துணிபு. 60 அழகிய நூற்பாக்களைக் கொண்டஇந்நூலுக்கு விரிவான சிறந்த உரை ஒன்றுளது. கடைச்சங்க காலத்தை யொட்டியஇந்நூலுக்கு வரையப்பட்ட உரைப்பகுதிகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தபாண்டிக் கோவையோடு இணைக்கப்பட்டமைந்த உரையே இப்போது காணப்படு கிறது.தமிழில் இப்போது காணப்படும் உரைகளில் இது பழமையானது. (உரையாசிரியர்மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பது தொன்றுதொட்டுத்துணியப்பட் டமை தொ.பொ. 649 பேரா. உரையாலும் அறியலாகும்.)இந்நூற் கருத்துக்கள் சில தொல்காப்பியத்துடன் மாறு பட்டிருப்பினும்கற்க வேண்டிய சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இஃது இறைவன்அருளியதாதலின் பிற்காலத்தே தோன்றினும் இது முதல்நூலேயாம் என்பதுதொல்லா சிரியர் துணிவு (தொல். பொ. 649 பேரா. உரை)இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் செய்தான் யாரோ எனின்,மால்வரை புரையும் மாடக் கூடல் ஆலவா யில் பால்புரை பசுங்கதிர்க்குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாக வுடைய அழலவிர்சோதி அருமறைக் கடவுள்என்பது’ என்று காணப்படும் தொடரால் இந்நூலை ஆலவாய்ப் பெருமான் அடிகளேஇயற்றியருளினார் என்பது முன்னை யோர் கோட்பாடு. (இறை. அ. 1 உரை) அரசஞ்சண்முகனா ரும் இக்கருத்தினரே. (பா. வி. பக். 90)

இறையனார் அகப்பொருள் உரை

இவ்வுரை சொற்பொருள் நலம் சான்றது. மோனை எதுகை நயம்படச் சிலவிடத்தேநெடிய தொடராக நிகழ்வது; உவமைகள் பல இடையிடையே மிடையப் பெற்றது. இதனைஇயற்றியவர் நக்கீரர். இவர் சங்ககாலப் புலவர் அல்லர் என்பதும்அப்பெயரிய பிற்காலத்தொருவரே என்பதும் இக்காலத்து ஆய்வாளரின் துணிபு.இன்று காணப்படும் உரைகளில் இதுவே பழமை மிக்கது என்பது தெளிவு.

இலகுவும் குருவும் ஆமாறு

நெட்டெழுத்தும், நெடில் ஒற்றும் குறில் ஒற்றும் குரு என்பர். அஃதுஇரண்டு அலகுடைத்தாகி இளம்பிறை போன்ற குறியினைப் பெறும். குற்றெழுத்துஇலகுவாம். அஃது ஓரலகு உடைத்தாய், நேரே கீழ்நோக்கி வலிக்கப்பட்ட ஒருகீற்றினைப் பெறும்; ஈற்றின்கண் நின்றபோது குரு ஆதலும் ஒருகால்உண்டு.வடமொழி யாப்பிலக்கணம், விருத்தங்களுக்கு எழுத்துக் களையும்மாத்திரைகளையும் கணக்கிடும் வகையால் கூறும் அடிப்படைகள் இலகுவும்குருவும் ஆகும்.சிவ என்பது இரண்டு இலகு : ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை பெறும்.இதன் குறி I என்பது.தா என்பது ஒரு குரு; இரண்டு மாத்திரையுடையது இதன் குறி ‘ ’ என்பது. தார் என்பதும் ஒருகுரு; இரண்டே மாத்திரை. இதன்குறியும் ‘ ’ என்பதே. கண் என்பதும் ஒருகுரு; மாத்திரை இரண்டு. இதன்குறியும் ‘ ’ என்பதே. (வீ. சோ. 132)

இலக்கணக் கலிப்பா

13 எழுத்தடிக் கலிப்பா – ‘அன்றுதான் குடையாக வின்றுநனிநீர் சோரக், குன்றெடுத்து மழைகாத்த கோலப்பூண்மார்பினோய் !’14 எழுத்தடிக் கலிப்பா – ‘மாசற்ற மதிபோல வன ப்புற்ற முகங் கண்டு, தூசற்றதுகில்மருங்கிற் றுடிநடு வெனத் தோன்றி’15 எழுத்தடிக் கலிப்பா – ‘ஊனுடை உழுவையி ன் உதிரந்தோய் உகிர் போல, வேனிலைஎதிர்கொண்டு முருக் கெல்லாம் அரு ம்பினவே’16 எழுத்தடிக் கலிப்பா – ‘வாயாநோய் மருந்தாகிவருந்தியநாள் இதுவன்றோ.’17 எழுத்தடிக் கலிப்பா – ‘மாவலிசேர் வரைமா ர்பின் இகல் வெய்யோன்மனமகிழ’18 எழுத்தடிக் கலிப்பா – ‘அறனின்றமிழ் கையொழியான் அவலங்கொண் டதுநினையான்.’19 எழுத்தடிக் கலிப்பா – ‘உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிவொல்-லாய் செலவலித்தல் ’20 எழுத்தடிக் கலிப்பா – ‘நிலங்கிளையா நெடிதுயிராநிறை தளரா நிரைவளையாள்,கலந்திருந்தார் கதுப்புளரார் கயல்கடிந்த கருந் தடங்கண்.’13, 14 எழுத்தடி அளவடி. 15, 16, 17 எழுத்தடி நெடிலடி. 18, 19, 20எழுத்தடி கழிநெடிலடி.இவையெல்லாம் குற்றிகர குற்றுகரங்களும் ஒற்றும் ஆய்தமும் நீக்கிஎழுத்தெண்ண வேண்டும்.எனவே எழுத்தெண்ணிப் பாடப்படும் கட்டளைக் கலிப்பா விற்கு அளவு 13எழுத்துமுதல் 20 எழுத்தின்காறும் உள்ள எட்டு நிலங்களாம். இலக்கணக்கலிப்பா அல்லன மிக்கும் குறைந்தும் வரும். (யா. வி. பக். 499 -500)

இலக்கணக்கொத்து

17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகரால் சொல்லிலக் கணம் பற்றிய பலஇலக்கண நூல்களிலும் உரைகளிலும் இலைமறை காய்போலப் பொதிந்து கிடந்தஅருஞ்செய் திகள் பலவும் தொகுத்துரைக்கப்பட்ட அரிய இலக்கணநூல்.இந்நூல், பாயிரமாக அமைந்த 12 நூற்பாக்களொடு, வேற்று மையியல்,வினையியல், ஒழிபியல் என்னும் முப்பகுப்புக் களையுடையது. நூற்பா 131.இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் என்னும் இருநூல்கட்கும் இந்நூல்பிற்பட்டது, அவ்விரண்டற்கும் அவ்வவ்வாசிரியரே உரையும் வரைந்தாற் போல,இந்நூலுக்கும் இவ்வாசிரியர் உரை வரைந்துள்ளார். தமிழ்நூலார் பல வடமொழிஇலக்கணச் செய்திகளை யுணர இந்நூல் பெரிதும் துணைசெய்யும்.இந்நூற்பயிற்சி பிரயோகவிவேகம் பயிலுதற்குப் பெரிதும் துணைசெய்வது.தஞ்சைச் சரசுவதிமகால் பதிப்பு மிக விழுமியது. அதன்கண் விளக்கவுரைஅறிஞர்க்கு விருந்தூட்டவல்லது.

இலக்கணத்தொடு பொருந்தா மரூஉமுடிபு

இம்மரூஉமுடிபிற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறார்.
அருமருந்தன்ன, நாகப்பட்டினம், ஆற்றூர், சோழன்நாடு, பாண்டியன்நாடு –
முதலாயின முறையே அருமந்த, நாகை, ஆறை, சோணாடு, பாண்டிநாடு – முதலாக
வழங்குதல் ‘வழங்கியல் மருங்கின் மருவொடு திரி’யும் இலக்கணத்தொடு
பொருந்தா மரூஉமுடிபாகும்.
நச்சினார்க்கினியர் ஆங்காங்கே குறிப்பிடும் இலக்கணத் தொடு பொருந்தா
மரூஉமுடிபுகள் சில வருமாறு:
புளியின் காயினைப் புளிங்காய் எனல்
(தொ.எ. 130நச்.)
அதனை இதனை என்பவற்றை அதினை
இதினை எனல்
(தொ.எ. 176 நச்.)
உதி என்பதனை ஒதி எனல்
(தொ.எ.243 நச்.)
வேடக்குமரியை வேட்டுவக்குமரி எனல்
– தொ.எ. 338 ந
ச்.
மண்ணங்கட்டியை மண்ணாங்கட்டி எனல்
– தொ.எ. 405 நச்.
கானங்கோழியைக் கானாங்கோழி எனல்
– தொ.எ. 405 நச்.
கல்லம்பாறையைக் கல்லாம்பாறை எனல்
– தொ.எ. 405 நச்.
மூவுழக்கு என்பதனை மூழக்கு, மூழாக்கு எனல்
– தொ.எ. 457 நச்.
எழுமா என்பதனை ஏழ்மா எனல் –
தொ.எ. 480 நச்.

இலக்கணத்தொடு பொருந்திய மரூஉமுடிபு

இம்முடிபிற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறுவர்.
மேல் என்பது மீ என மருவிற்று (தொ.எ. 250 நச்.), கண்மீ- முதலியன
மீகண் – முதலியனவாக மருவி வழங்கும் (250 நச்.), ‘இல்முன்’ முன்றில்
என்றாகும் (தொ.எ. 355 நச்.). ‘யாவர்’ யார் என்றும், ‘யாது’ யாவது
என்றும் ஆம். (தொ.எ. 172 நச்.)

இலக்கணப்போலி, மரூஉமொழிகள் புணர்ச்சி

இல்முன் ‘முன்றில்’ என வரும்;பொதுஇ(வி)ல் ‘பொதியில்’ என வரும்.
இவ்வாறு வரும் இலக்கணப்போலி மொழிகளும் மரூஉமொழிகளும் நிலைமொழி
வருமொழிகளுள் ஏற்கும் செய்கை அறிந்து முடிக்கப்படும். (நன். 239
சங்கர.)

இலக்கணவிளக்கச் சூறாவளி

வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கணவிளக்கத்து எழுத் ததிகாரசொல்லதிகாரங்களுள் சில சூத்திரக் கருத்துக்களை மறுத்த தமது உரைக்குச்சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்று பெயரிட்டார். இலக்கணம்ஆகிய விளக்கை அணைந்து போமாறு வீசிய சூறைக்காற்று என்பதே பொருள்.இச்சூறாவளி மறுப்புரை பொருந்தாமை அரசஞ் சண்முகனார் உரை முதலியவற்றால்தஞ்சைச் சரசுவதி மகால் இலக்கண விளக்க எழுத்ததிகார சொல்லதி காரப்பதிப்பில் ஐயம் திரிபறப் புலப்படுத்தப்பட்டுள்ளமை தமிழறிஞர்தம்நடுவுநிலை ஆய்வுக்கொரு கலங்கரை விளக்கம் போல உதவும்.

இலக்கணவிளக்கப் பாட்டியல் நுவல்வன

பாட்டின்கண்ணவாகிய இலக்கணம், நூலின்கண்ணவாகிய இலக்கணம்,உரையின்கண்ணவாகிய இலக்கணம், பிசியின் கண்ணவாகிய இலக்கணம்,முதுசொற்கண்ணவாகிய இலக்கணம், மந்திரவாய்மைக்கண்ணவாகிய இலக்கணம்.குறிப்புமொழிக்கண்ணவாகிய இலக்கணம், வழக்கும் செய்யுளுமாகிய ஈரிடத்தும்நடக்கும் இருவகை மரபின் இலக்கணம், நால்வகை வருணத்து இலக்கணம்,நாற்புலவர் இலக்கணம், அவை இலக்கணம், அகலக்கவி செய்து கொடுப்போர்இலக்கணம், அதனைக் கொள்வோர் இலக்கணம் ஆகிய பதினான்கனோடும் ஏற்பனபிறவும் ஆம். பிற இலக்கணமாவன நான்குபாவிற்கும் வருண உரிமையும், நிலஉரிமையும், நிற உரிமையும், நாள் உரிமையும் இராசி உரிமையும் கோள்உரிமையும் அக்கோள்கட்கு உரிய பூவும் சாந்தும் கலையும், அகலக் கவியைக்கொள்ளும் ஓரையும் என்றவாறு.

இலக்கணவிளக்கம்

பதினேழாம் நூற்றாண்டினரான பெரும் புலவர் வைத்திய நாத தேசிகரால்எழுத்தும் சொல்லும் பொருளும் பற்றி இயற்றப்பட்ட சீரிய இலக்கண நூல்.‘குட்டித் தொல்காப்பி யம்’ என இது வழங்கப் பெறுதலே இதன் பெருமைக்குச்சான்று. நூல் ஆசிரியரே உரையாசிரியரும் ஆவர். இதன்கண் 941 நூற்பாக்கள்உள.இந்நூலின் மிக விழுமிய பதிப்புத் தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடு.அரிய விளக்கமும் ஆராய்ச்சியுமுடைய அதனைப் பின்பற்றியே கழகப்பதிப்புமுதலாகப் பிற வெளிவந்துள்ளன.இந்நூலின் பெருமையினைக் குறைக்க இலக்கண விளக்கச் சூறாவளி என்றகண்டனநூல் அடுத்த நூற்றாண்டில் வெளி யிடப்பட்டது. ஆயினும் இந்நூலின்பெருமை குன்றாது இன்றும் நின்று நிலவுகிறது.

இலக்கணவிளக்கம் கூறும் சொல்லணிகள்

தண்டியலங்காரம் குறிப்பிடும் மடக்கும், 12 சித்திரகவிகளும் உரையில்காணப்படும் 8 சித்திரகவிகளும் ஆக 20 சித்திர கவிகளுமே இலக்கண விளக்கம்குறிப்பிடும் சொல்லணிகள் ஆம்.

இலக்கணை

இலக்கணை என்பது ஒன்றை ஒன்றாகவும், ஒரு பொருளின் தன்மையை மறறொரு
பொருளின் தன்மையாகவும் கூறுவது.
எ-டு : இயற்கையைச் செயற்கையாக் கூறுவது; ‘நின்ற சொல்முன் இயல்பா
கும்மே’ (தொ. எ. 144 நச்.) என, இயற்கைத் தன்மைக்கு ஆக்கம் வருவித்தல்.
(நன். 151 இராமா.)

இலதை

எழுத்து அல்லாத இசையுள் இலதை ஒன்று. அஃதாவது கோழையைவெளிப்படுத்தல். இவ்வோசை செய்யுளில் வந்தால் செய்யுள் நடை அழியாமல்அசைசீர் முதலியன பிழையாமை கொண்டு வழங்கப்படும்.(யா.க. 95 உரை பக்.396)

இலம்பகம்

பெருங்காப்பியத்துள் உட்பிரிவு. சீவகசிந்தாமணியுள் நாமகள் இலம்பகம்முதலாக வருதல் காண்க. (தண்டி. 8)

இலம்பாடு என்ற சொல்லமைப்பு

இலம் என்பது இல்லாமைக்குறிப்பு உணர்த்தும் உரிச்சொல்; பாடு என்பது
உண்டாதல் என்று பொருள்படும் வினைக் குறிப்புப் பெயர். இலம்பாடு என்பது
இல்லாமை யுண்டாதல் என்னும் அல்வழிப் பொருளது. இலம் என்ற நிலைமொழி பாடு
என்ற வருமொழியொடு புணருமிடத்து மகரக்கேடும் திரிபும் இன்றி,
‘இலம்பாடு’ என்று இயல்பாகவே முடியும். (தொ. எ. 316 நச்.)

இலேசு

நூற்பாவுள் வரும் மிகையான சொல். அதனால் சில கருத் துக்களைவருவித்துரைப்பது உரையாசிரியர்தம் கொள்கை.

இலேசு

‘சில்வகை எழுத்தின் செய்யுட்டாகும்’நுற்பாவிலே மிகை யாகக்
காணப்படும் சொல் இலேசு எனப்படும். இலக்கண உரையாசிரியன்மார் இம்மிகைச்
சொல்லை வாளா விடுக்காது, நூல் செய்த காலத்துக்குப் பிற்பட்டுத் தம்
காலத்தில் வழங்கும் செய்திகளில் நூலில் குறிப்பிடப்படாமல்
விடுபட்டவற்றை இம்மிகைச்சொல் பெறப்பட வைப்பதாகக் கூறுதல் மரபு.
எ-டு : ‘பல்லவை நுதலிய அகர
இறுபெயர்
வற்றொடு சிவணல் எச்ச மின்றே’
(தொ.
எ. 174 நச்.)
இந்நூற்பாவில் ‘எச்சமின்றே’ என்ற சொற்றொடர் மிகை. இஃது இன்றி
‘வற்றொடு சிவணும்’ என்று கூறினும் நுற்பா வின் பொருள் முற்றும்.
இம்மிகைச்சொல்லைக் கொண்டு, “173ஆம் நுற்பாவில் இன்சாரியை பெற்றன
பிறசாரியை பெறுதல் கொள்க. நிலாத்தை, துலாத்தை, மகத்தை என வரும்.
இன்னும் இதனானே, பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாம் உருபு வற்றுப்
பெற்றே முடிதல் கொள்க” என்று நச்சினார்க் கினியர், நுற்பாவில்
கூறப்படாத செய்திகளைக் குறிப்பிட் டுள்ளார்.
இது போன்ற பல செய்திகளும் இலேசு என்ற மிகைச் சொல்லால்
உரையாசிரியன்மாரால் கொள்ளப்படுகின்றன.
‘சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது’
(தொ.பொ.353 பேரா.)
அசை சீராயவழி அவை மூன்றெழுத்தின் இறவா என்பது ‘தான்’ என்பதனை
இலேசுப்படுத்திக் கொள்வதால் கொள்ளப் படும் – என்று பேராசிரியர்
குறிப்பிட்டுள்ளார்.

இல் என்னும் இன்மைச் சொல் புணர்ச்சி

இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்பதனை நிலை மொழியாகக் கொண்டு,
வருமொழி வல்லெழுத்து முதல் மொழியாகப் புணரின், ஐகாரமும் வல்லெழுத்தும்
பெறுதல்- ஐகாரம் பெற்று இயல்பாகவே புணர்தல்- ஆகாரமும் வல்லெழுத்தும்
பெறுதல் – சாரியை எதுவும் பெறாது இயல் பாகவே முடிதல் – என்ற நான்கு
நிலைகள் உளவாம்.
வருமாறு : இல் + பொருள் – இல்லைப் பொருள், இல்லை பொருள்,
இல்லாப் பொருள், இல் பொருள் – என முறையே காண்க. (தொ.எ.372நச்.)
‘இல்’ என்னும் பண்படி நின்று வருமொழியுடன் புணர்வழி, ஐகாரமும்
ஆகாரமும் இடையே சாரியையாக வருதலின், இல்லைப் பொருள் – இல்லை பொருள் –
இல்லாப் பொருள் – என்பன ‘இல்பொருள்’ என்னும் இயல்பு புணர்ச்சி போல்
பண்புத்தொகையே ஆம். (நன். 233 சங்கர.)

இல்லம் என்ற மரப்பெயர் புணருமாறு

இல்லம் என்ற மரப்பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்- கண், உதி –
ஒடு- சே- விசை- என்ற மரப்பெயர்களைப் போல, வருமொழி முதலில் வன்கணம்
வரின், மகரம் கெட்டு வன்கணத்துக்கு இனமான மெல்லொற்று
மிக்குப்புணரும்.
எ-டு : இல்லம் + கோடு, தோல் = இல்லங்கோடு, இல்லந் தோல் (தொ. எ.
313 நச்.)
‘கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற’
(கலி.142)
என அத்துச் சாரியை பெறுதலுமுண்டு.
உருபுபுணர்ச்சிக்கண் சாரியை இன்றி ‘இல்லமொடு’ (அகநா.4) என ஒடுஉருபு
ஏற்கையில் இயல்பாகப் புணரும். அத்துச் சாரியை பெறுதலே பிற்காலத்துப்
பெரும்பான்மை எனலாம்.

இளம்பாலாசிரியன்

ஐந்து வயதுக்குட்பட்ட இளம்பாலார்க்குக் கற்பிக்கும் ஆசிரியன்.அகநா. 102ஆம் பாடல் பாடிய ஆசிரியர் இளம் பாலாசிரியன் சேந்தங்கூத்தன்எனப்பட்டார். (L)

இளம்பூரணர்

தொல்காப்பியத்திற்கு முதலாக உரை வரைந்த பெரியார்; இவரைப் பெயர்சுட்டாமல் உரையாசிரியர் என்றே வழங்கு வர். இளம்பூரண அடிகள் என்றும்கூறுப. இவரது காலம் 12 ஆம் நூற்றாண்டென்ப. ‘உளங்கூர் கேள்விஇளம்பூரணர் என்னும் ஏதமில் மாதவர்’ என்று மயிலைநாதரால் போற்றப்படுபவர். (நன். 359 மயிலை.)

இழுக்கா நடையது யாப்பு

குற்றமின்றி நடைபெறும் யாப்பெனவே, அதன் உறுப்புக்களா கிய எழுத்து,அசை, சீர், தளை, அடி, தொடை, பா என்ப வற்றின்கண் குற்றம் எதுவுமின்றியாப்பு நிகழின், அதன்கண் அம்மை அழகு முதலிய வனப்புக்கள் புலப்படும்என்பது.அரசன், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும்ஏழுறுப்புக்கள் அரசியற்கு வழுவற அமைதல் வேண்டும்; நல்லுடற்கு இரதம்,உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழுதாதுக்களும் வழுவற அமைதல் வேண்டும்; அவ்வாறே யாப்பிற்கு எழுத்து, அசை,சீர், தளை, அடி, தொடை, பா என்னும் ஏழுறுப்பும் வழுவற அமைதல் வேண்டும்என்பது. (யா. க. 1. உரை)

இழைபு

நூல் வனப்பு எட்டனுள் ஒன்று. வல்லொற்றடுத்த வல்லெழுத் துப்பயிலாமல் இருசீரடிமுதல் எழுசீர் அடி அளவும் அவ்வைந்து அடிகளையும்ஒப்பித்து, நெட்டெழுத்துப் போல ஓசை தரும் மெல்லெழுத்தும் லகாரனகாரங்களு முடைய சொற்களானே தெரிந்த மொழியான் கிளந்து ஓதல் வேண்டாமல்பொருள் புலப்படச் செய்வது இதன் இலக்கணம். ஒற்றும் குற்றுகரமும்குற்றியலிகரமும் ஆய்தமும் எழுத்தெண்ணப்படா.எ-டு : கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகியசெந்துறைமார்க்கத்தன. (தொ. செய். 242 நச்.)ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது, ஆசிரியப்பா விற்குஓதப்பட்ட நால்எழுத்து ஆதியாக இருபது எழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ்நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு என்னும்செய்யுளாம்.(தொ. செய். 230 இள. உரை)எ-டு : ‘பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து – 4 எழுத்துதேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து – 5 எழுத்துவண்டு சூழ விண்டு வீங்கி – 6 எழுத்துநீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் – 7 எழுத்துமணியேர் நுண்தோடு ஓங்கி மாலை – 9 எழுத்துநன்மணம் கமழும் பன்னெல் ஊர – 10 எழுத்துஅமையேர் மென்தோள் ஆயரி நெடுங்கண் – 11 எழுத்துஇணையீர் ஓதி ஏந்திள வளமுலை – 12 எழுத்துஇறும்பமர் மலரிடை எழுந்த மாவின் – 13 எழுத்துநறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் – 14 எழுத்துஅணிநடை அசைஇய அரியமை சிலம்பின் -15 எழுத்துமணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் – 16 எழுத்துஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு – 17 எழுத்துநனிமுழவு முழங்கிய அணிநிலவு நெடுநகர் – 18 எழுத்துஇருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை – 19 எழுத்துகலனளவு கலனளவு நலனளவு நலனளவு – 20 எழுத்துபெருமணம் புணர்ந்தனை என்பஅஃ.தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே.’4-6 குறளடி; 7-9 சிந்தடி; 10-14 அளவடி; 15-17 நெடிலடி; 18-20கழிநெடிலடி. (தொ. பொ. செய். 234 இள.)

இழைபு என்ற வனப்பின் இலக்கணம்

வல்லொற்றொடு புணர்ந்த சொற்களைத் தொடர்ந்தமைக் காமல்ஏனையெழுத்துக்கள் பயிலும் சொற்களான், நாற் சீரடிக்கண், எழுத்தளவையான்வரும் குறளடி முதலாகக் கழிநெடிலடியீறாக உள்ள ஐந்தடிகள் தம்முள் ஒத்து,எடுத்த லோசை மிக்க மொழிகளான் நடைபெறின் இழைபு என்னும் இலக்கணம் ஆங்குஇயைந்ததாகும்.ஐந்தடி ஒப்பித்தலாவது, ஒருசெய்யுளின்கண் வரும் நாற் சீரடிகள்குறளடியாயின் ஓரடிக்கண் 4 எழுத்து முதல் 6 எழுத்து வரையே வருதலும்,கழிநெடிலாயின் 18 எழுத்து முதல் 20 எழுத்து வரையே வருதலும் ஆம். ஏனையஅடி களும் தமக்குரிய எழுத்தெல்லைக்கண் வரப்பெறும். (தொ. செய். 241 ச.பால.)

இவ்வணி, ஆயிடை: உடம்படுமெய் பெறாமை

இ + அணி = இவ்வணி என இடையே வகரமெய் வந்து முடித லன்றி, இ + அணி
இ + ய் + அணி = இய்யணி என யகர உடம் படுமெய் பெற்று முடியாது.
சுட்டிடைச்சொல் செய்யுளில் நீண்டவழி, ஆ + இடை என இடையே யகரமெய் வந்து
முடித லன்றி, ஆ + இடை
> ஆ + வ்+ இடை = ஆவிடை என வகர
உடம்படுமெய் பெற்று முடியாது. (நன். 162 மயிலை. உரை)