தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

அஃறிணையில் பெண்பாலை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று. இது பெற்றம்,
மரை, எருமை இவற்றின் பெண்பாலை உணர்த்தும்.
ஆ என்ற இவ்வோரெழுத்தொருமொழி, வருமொழி வன்கணத்தொடும் சிறுபான்மை
ஏனைய கணங்களொடும் புணரும்வழி னகரவொற்றைச் சாரியையாகப் பெற்றுப்
புணரும்.
எ-டு : ஆ
ன்கணம், ஆ
ன்நெய்(ஆனெய்), ஆ
ன்வரிசை, ஆ
னினம்; சிறுபான்மை, மென்கணம்
வருவழி னகரச் சாரியையோடு அகரச் சாரியையும் பெற்றுப் புணரும். எ-டு :

னநெய், ஆ
னமணி (தொ. எ. 231, 232
நச்.)

ஆ என்ற மறைவிகுதி தெரிநிலை வினைக்கேவருதல்

இல்லன, இல்ல – என்னும் எதிர்மறை வினைக்குறிப்பு முற்றின்- கண்மறைப்பொருளைப் பகுதியே தந்து நிற்றலின், இதற்கு எதிர்மறை ஆகாரம்வேண்டாமையின், ஏற்புழிக்கோடலான் இம்மறைவிகுதி தெரிநிலைக்கே எனக்கொள்க.எ-டு : உண்ணா, நடவா (நன். 329 சங்.)

ஆ, போ என்ற பகுதிகள்

ஆகு போகு – என்பன முதனிலை எனின், ஆகினான் போகி னான் – என முற்றும்அதன்கண் தோன்றல் வேண்டும். அங்ஙனம் வழங்காமையின், ஆ போ – என்பனமுதனிலை யாய்க் காலம் காட்டும் யகரஒற்றுப் பெற்று ஆயினான் – போயினான்- என முற்றாய்த் திரியும் என்று கொள்க. (தொ. சொ. 230 நச். உரை)

ஆ, மா, கோ ‘இன்’ அடைதல்

ஆ, மா, கோ இம்மூன்று பெயர்களும் இன்சாரியை பெறு தலுமாம்.
வருமாறு : ஆவை – ஆவினை, மாவை – மாவினை, கோவை – கோவினை. (மு. வீ.
புண. 16)

ஆ, மா, கோ புணருமாறு

ஆ மா கோ என்ற மூன்று பெயர்களுள், ஆ பசுவினை யுணர்த்தும் பெயர்; மா
விலங்கின் பொதுப்பெயர்; கோ இறைவனை யுணர்த்தும் பெயர். இவை உருபுகள்
புணருமிடத்து னகரச்சாரியை பொருந்தவும் பெறும்.
வருமாறு : ஆ + ஐ = ஆவை, ஆ
னை; மா + ஐ = மாவை, மா
னை; கோ + ஐ = கோவை, கோ
னை.
இவை னகரச்சாரியையோடு உகரச்சாரியையும் பெறும்.
எ-டு : நான்கனுருபொடு புணருமிடத்து ஆ
னுக்கு – மா
னுக்கு – கோ
னுக்கு – என வரும். ஆ
வுக்கு – மா
வுக்கு – கோ
வுக்கு – உகரச்சாரியை ஒன்றே
பெறுதல். ஆ
வினுக்கு – மா
வினுக்கு – கோ
வினுக்கு – இன்சாரி- யையும்
உகரச்சாரியையும் பெறுதல். ஆ
வினை, மா
வினை, கோ
வினை என இப்பெயர்கள் இன்னுருபு
ஒழிந்த ஏனை யுருபுகளொடு புணர்கையில் இன் சாரியை பெறுதலும்
கொள்க.
காட்டுப்பசுவைக் குறிக்கும் ஆமா என்ற பெயரும் ஆமானை, ஆமாவினை,
ஆமானுக்கு, ஆமாவினுக்கு என னகரச்சாரியை, இன்சாரியை, உகரச் சாரியை என
மூன்றும் பெறுமாறும் காண்க. (நன். 248)

ஆ, மா, மியா அல்வழிப் புணர்ச்சி

அல்வழிக்கண் ஆ மா என்ற பெயர்களும், மியா என்ற முன்னிலை
அசைச்சொல்லும் வன்கணம் வருமொழி முதற்கண் வரினும் இயல்பாகவே
முடியும்.
எ-டு : ஆ குறிது, மா குறிது, கேண்மியா கொற்றா (நன். 171)

ஆக என்ற பிரிவில் அசை

பிரிவில் அசையாவன, தாம் சார்ந்த சொற்களின் பொருள் களைப்பிரிதலின்றி உணர்த்தும் அசை.எ-டு :‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறநா.144)‘எம்சொல்லற் பாணி நின்றனன் ஆக’ (குறிஞ்சிப்152)செய என் எச்சம் முற்றாய்த் திரிவுழி ஆக என்னும் இடைச் சொல் வந்துஅவ்வெச்சப்பொருளை உணர்த்திப் பாட – நிற்க – என்ற பொருள் தந்தவாறு.ஒருவன் கூறியது கேட்ட மற்றவன்விடையில் ஆகஆக என அடுக்கி வந்துதனித்து நின்று அசையாகாமல், உடன்படா மையும் ஆதரம்இன்மையும் ஆகியபொருள்தந்து நிற்கும் என்றார் சேனாவரையர். அசைநிலை பொருள் தந்துநிற்கும் என்றல் பொருந்தாது. (தொ. சொ. 282 நச். உரை)

ஆக, ஆகல், என்பது : பிரிவில்அசைநிலை

ஆக – ஆகல் – என்பது – என்பன தாம் சேர்ந்த சொற்களின் பொருள்களைப்பிரிதலின்றி உணர்த்தும் அசைநிலையாம்.எ-டு : ‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறநா.144)‘அருளாய் ஆகலோ கொடிதே’ (புறநா. 144)‘…… நோய்தீர நின்குறி வாய்த்தாள் என்பதோ’(கலி.127)என ஆக – ஆகல் – என்பது – என்னும் குறிப்புச்சொற்கள் தாம் சார்ந்துநின்ற சொற்பொருளையே உணர்த்தி நின்றன. தாம் சார்ந்த சொற்களை அசைத்தேநிற்கும் என்றலின், இவை பிரிவில் அசைநிலையாம். (தொ. சொ. 282 நச்.உரை.)

ஆகமம், ஆதேசம், லோபம் என்பன

DUMMYஇவை போன்ற விகாரங்கள் தனிமொழியில் வருவனவுமுள.இவை எழுத்துத் திரிபு ஆகிய வன்ன விகாரம்.இனி யாதொரு விதியுமின்றிச் சான்றோர் கூறியதே விதியாய் வருவனவும்உள.மீ என்ற தாதுவின்மீது வரும் ‘ஊரன்’ என்ற பிரத்தியம் சேரக்காரணமின்றியே மீயூர – மையூர – என்றாகாமல், மயூர என வந்தது, வன்னவிகாரம்.நாளிகேரம் (தெங்கு) நாரிகேளம் என வந்தது, வன்ன விபரியயம்.பிருஷதுதரன் என்பது தகரம் கெட்டு வந்தது, வன்னநாசம்.கூட ஆத்மா (மறைந்துள்ள ஆத்மா) ‘கூடோத்மா’ என வந்ததும் வன்னவிகாரம்.ஹிம்ஸ என்பது ஸிம்ஹ (சிங்கம்) என வந்தது, வன்ன விபரியயம்.ஹம்ஸம், அஞ்சம் – அன்னம் – என வன்ன ஆகமத்தால் வந்தது.வலித்தல் மெலித்தல் போன்ற செய்யுள் விகாரங்கள் எதுகை முதலியனகருதியும், யாப்பில் சீர் தளை பிழை நேராமல் காக்கவும் வருவன ஆதலின்அவை இவ்வகையில் சேரா.இனிப் புணர்ச்சி விகாரங்களைப் பி.வி. உரை காட்டுமாறு:அராஅப் பாம்பு – நிலைமொழியும் வருமொழியும் மிக்க ஆகமம்பொற்றாலி – இருமொழியும் திரிந்த விகாரம்தொண்ணூறு (ஒன்பது + பத்து) – இருமொழியும் முற்றும் திரிந்தன.ஆதன்தந்தை – ஆந்தை. உபயபதமும் (நிலைமொழி வரு மொழி இரண்டும்) கெட்டலோபம்.பூதன் தந்தை – பூந்தை. இதுவும் அது.மராஅடி – பூர்வபதலோப விகாரம் (முன்மொழி கெட்டுத் திரிந்தது)பனாஅட்டு, அதாஅன்று – பூர்வபத விகாரம்இவை மூன்றும் வகர உடம்படுமெய் பெறாமை பிரகிருதி பாவம் (பெறவேண்டியதைப் பெறாமல் இயல்பானது). வடமொழியில், பிரம்மருஷி – ஹரீஏதௌ -என்பன போலத் தமிழிலும் ‘நாடு கிழவோன்’ (பொருந. 248), ‘காடகம்இறந்தோற்கே’ – என வந்தமையும் அது. (நாட்டுக் கிழவோன், காட்டகம் என இவைவரற்பாலன.)புணர்ச்சி விகாரங்கள் யாவும் ஆகமம் – ஆதேசம் – லோபம் – என்றமூன்றனுள் அடங்கும்.சட் + முகம் = சண்முகம், வாக் + மூலம் = வாங்முலம், வாக்1 + ஈசன் = வாகீ 3 சன்; பொன் + குடம் = பொற்குடம் : இவை போன்ற திரிதல் விகாரமும்ஆதேசம் என்பர்.எழுத்துத் திரிதலையும், தசரதன்மகன் தாசரதி – என முதலெழுத்துஅடையும் விருத்தியையும், வினைப்பதங் களுடன் சேரும் ஆ – ஆகு, சொல் -சொல்லு என்ற உகரம் போன்றவற்றையும் விகாரம் எனக் கொள்வர் சிலர்.கிளி கடிந்தார், கிளிக்கடிந்தார்; குளங்கரை, குளக்கரை; இல்பொருள்,இல்லை பொருள், இல்லைப் பொருள், இல்லாப் பொருள் – என்பனபோல,இருவகையாகவும் பலவகையாகவும் விதிபெற்று வருவன விகற்பம் – உறழ்ச்சி -எனப்படும்.கஃறீது – கல்தீது : இது விகார விகாரம். அது தனித்தலைப்பிற்காண்க.மேற்றிசை, பொன்னாடு : வருமொழி விகாரம். (பி.வி. 26)

ஆகல் என்ற பிரிவில் அசை

‘அருளாய் ஆகலோ கொடிதே’ (புறநா. 144)‘அனையை ஆகல் மாறே’ (புறநா. 4)ஆகல் என்ற வினைக்குறிப்புச்சொல் சார்ந்துநின்ற சொற் பொருளையேஉணர்த்தும். ஒருவன் ஒன்று கூறக் கேட்ட மற்றவன் கூறும் விடையில்‘ஆகல்ஆகல்’ என்பது தனித்து நின்று அசையாகாமல் அடுக்கி வந்துஉடன்படாமையும் ஆதர மின்மையும் ஆகிய பொருள்தந்து நிற்கும் என்றார்சேனாவரையர். வேறுபொருள் தந்து நிற்றல் அசைநிலைக்கு ஏலாது. (தொ. சொ.282 நச். உரை)

ஆகாங்கிசை

ஆகாங்க்ஷை; ஒருசொல் பொருள் விளங்க வேறொரு சொல்லை வேண்டி நிற்கும்இஃது அவாய்நிலை எனப்படும்.(பி.வி. 19)எ-டு : ‘உயர்திணை என்மனார் (தொ. சொ.1) என்புழி, என்மனார் என்றவினை ‘புலவர்’ என்னும் தோன்றா எழுவாயை அவாவி நின்றது.

ஆகாய கணம்

நூலின் முதற்பாடல் முதற்சீர்க்குப் பொருத்தமற்ற கணங் களுள் ஒன்று.அது பாட்டுடைத் தலைவன் வாழ்நாளைக் குறைக்கும் என்பர் மாமூலனார். இஃது‘அந்தரகணம்’ எனவும்படும். அது காண்க. (இ. வி. பாட். 40 உரை)

ஆகார ஈறு பெறும் எழுத்துப்பேறளபெடை

குற்றெழுத்தை அடுத்தும் தனித்தும் வரும் ஆகார ஈற்றுப் பெயர்கள்
அல்வழிப்புணர்ச்சியில் உம்மைத்தொகைக்கண் ணும், சிறுபான்மை பண்புத்தொகை
– எழுவாய்த் தொடர் – பெயரெச்ச மறை – இவற்றின்கண்ணும், நிலைமொழி வரு
மொழிகளுக்கிடையே ஆகாரஈற்றை அடுத்து அகரமாகிய எழுத்துப்பேறளபெடை
வரும்.
எ-டு : உவா
அப்பதினான்கு உம்மைத்தொகை;
காஅக்குறை (காவும் குறையும் – கா : ஒரு நிறைப்பெயர்); அரா
அப் பாம்பு – பண்புத்தொகை;
இரா
அக் கொடிது – எழுவாய்த் தொடர்;
இரா
அக் காக்கை – பெயரெச்ச மறைத்
தொடர் (இராத காக்கை); இறா
அ வழு துணங்காய் – உம்மைத் தொகை
(இயல்புகணம்)
இந்நிலை வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் உண்டு.
எ-டு : பலாஅக்கோடு, காஅக்குறை – ஆறாம் வேற்று மைத்தொகை;
பலாஅவிலை, (பலா+இலை) பலாஅநார் – ஆறாம் வேற்றுமைத் தொகை. (இயல்புகணம்
இவை)
இராப்பொழுதை உணர்த்தும் இரா என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
இவ் அகரம் பெறாது. இராக்காக்கை, இராக் கூத்து எனவரும். இராவிடத்துக்
காக்கை, இராவிடத்துக் கூத்து என்று இவை பொருள்படும்.
ஆகார ஈற்றுச் சொற்கள் சாரியை பெறுமிடத்தும் இடையே இவ்வெழுத்துப்
பேறளபெடை பெறுதலுமுண்டு.
எ-டு : அண்ணா
அ + அத்து + ஏரி = அண்ணா
அத்தேரி; திட்டா
அ + அத்து + குளம் =
திட்டா
அத்துக்குளம்; உவா
அ + அத்து + ஞான்று + கொண்டான் =
உவா-
அத்துஞான்றுகொண்டான்; இடா

அ + இன் + உள் + கொண்டான் =
இடா
அவினுட் கொண்டான்
நிலா என்று சொல் அகர எழுத்துப்பேறளபெடை பெறாது அத்துச்சாரியை
பெறுதலுமுண்டு. நிலா + அத்து + கொண் டான் = நிலாஅத்துக் கொண்டான்.
(நிலாவத்து என வகர உடம்படுமெய் பெறுதலுமாம்)
சாரியை பெறாது வேற்றுமைப்புணர்ச்சிக்கண் நிலாஅக்கதிர்,
நிலாஅமுற்றம் – என எழுத்துப்பேறளபெடை பெற்று முடிதலு முண்டு. (தொ. எ.
223, 226 – 228 நச். உரை)

ஆகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி

எழுவாய்த் தொடரில் ஆகார ஈற்றுப் பெயரை அடுத்து வன்கணம் வரின்,
அவ்வந்த வல்லொற்று இடையே மிக்கு முடியும். ஆயின், ஆ – மா – யா – என்ற
ஓரெழுத்து மொழிகள் மிகா.
எ-டு : மூங்காக் கடிது, தாராக் கடிது (ஆ குறிது, மா குறிது, யா
குறிய)
செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சமும், செய்யா என்னும்
எதிர்மறைப் பெயரெச்சமும், வன்கணம் வரின், வந்த வல்லொற்று மிக்கு
முடியும். ஆயின் எதிர்மறை வினைமுற் றும், வினைப்பெயரும்,
தன்மைவினைமுற்றுவினாவும் மிகா.
எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சோறு (உண்ணா குதிரைகள், உண்கா
கொற்றா; உண்கா – உண்பேனோ)
தனிக்குறிலை அடுத்த ஆகார ஈற்றுப்பெயர் நிலைமொழியாக நிற்க, வருமொழி
வன்கணம் முதலாகிய பெயர் வந்து உம்மைத் தொகையாகப் புணரின், அகரம்
எழுத்துப்பேறளபெடையாக வர, வந்த வல்லெழுத்து மிகும்.
எ-டு : உவா
அப் பதினான்கு, இரா
அப் பகல்
ஆகாரஈற்றுப் பெயர் நிலைமொழியாக வரும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை,
எழுவாய் முடிபு, பெயரெச்ச மறை என்பனவும் எழுத்துப்பேறளபெடையொடு வல்
லெழுத்து மிகப் பெறும்.
எ-டு : அரா
அப்பாம்பு, இரா
அக் கொடிது, இரா
அக் காக்கை (இல்லாத காக்கை
என்னும் பொருட்டு) என முறையே காண்க.
இயல்புகணத்தும் அகரப்பேறு இறா
அ வழுதுணங்காய் – என்றாற் போல
வரும்.
ஆகார ஈற்று விளித்தொடரும், இடைச்சொற்றொடரும் மிகா.
எ-டு : ஊரா கேள்; கேண்மியா கொற்றா. (தொ. எ. 221-224
நச்.)

ஆகார ஈற்றுள் ‘குறியதன் இறுதிச் சினைகெட உகரம்’ பெற்று வருவன

குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயராகிய ஈரெழுத்து மொழிகள் இறுதி
ஆகாரம் அகரமாகக் குறுகிப் பின் உகரம் பெறுதல் பெரும்பான்மையும்
செய்யுட்கே உரித்து; சிறு பான்மை உலகநடையிலும் வரும்.
எ-டு : இறா –

இறவுப் புறத்தன்ன’
(நற். 19
)
சுறா –

சுறவுக் கோட்டன்ன’
(நற். 19)
புறா –

புறவுப் புறத்தன்ன’
(குறுந். 274)
‘புறவு நிலையன்ன’ என இயல்புகணம் வரினும் இத் திரிபு நிலை உண்டாம்.
சிறுபான்மை ஆகாரம் குறுகி உகரம் பெறாமல் முடிதலும் கொள்க. அரவுயர்
கொடி, முழவுறழ் தோள், சுறவுயர் கொடி என வரும். (ஈண்டு வகரம் உடம்படு
மெய்யாக வந்தது). (தொ. எ. 234 நச்.)

ஆகார ஈற்றுள் இயல்பாகப் புணர்வன

1. ஆ என்னும் பெயர் – ஆ குறிது, ஆ குறிய; 2. மா என்னும் பெயர் – மா
குறிது, மா குறிய; 3. ஈற்றயல் நீண்டு ஆகாரமாகி ஈறு கெட்ட விளிப்பெயர்
– ஊரா கேள்; 4. யா என்னும் வினாப்பெயர் – யா குறிய; 5. பலவின்பால்
எதிர்மறை வினை முற்றும் வினைப்பெயரும் – உண்ணா குதிரைகள்; 6. மியா
என்னும் ஆகார ஈற்று இடைச்சொல் – கேண்மியா கொற்றா; 7. தன்தொழிலைச்
சொல்லும் ஆகார ஈற்று வினைமுற்றுச் சொல் – உண்கா கொற்றா (உண்கா –
உண்பேனோ)
இவ்வேழும் வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும் ஆகார ஈற்றுச்
சொற்களாம். (தொ. எ. 224. நச்.)
பலவற்றிறுதியில் வினைமுற்றொடு வினையாலணையும் பெயரையும் கொள்ளல்
வேண்டும் (5 காண்க). (எ.கு. பக். 213.)

ஆகார விகுதி

ஆகாரம் பலவின்பால் விகுதி. இஃது எதிர்மறைக்கண்ணேயே வரும். இல்லன,இல்ல – என்னும் எதிர்மறைக் குறிப்புமுற்றின் பகுதியே மறைப்பொருள்தந்து நிற்றலின் அவற்றிற்கு எதிர்மறை ஆகாரம் வேண்டாமையின், ஆகாரமறைவிகுதி தெரிநிலை வினைக்கே கொள்ளப்படும்.எ-டு : குதிரைகள் உண்ணா, ஓடா. (நன். 329 சங்.)

ஆகிய : சொல்லிலக்கணம்

செந்தாமரை – ஆயன்சாத்தன் – வேழக்கரும்பு – அகரமுதல – சகரக்கிளவி -எனவும், செந்நிறக்குவளை – கரும்புருவச்சிலை – எனவும் வரும் இன்னோரன்னபண்புத்தொகைகள் விரியு மிடத்து, செம்மையாகிய தாமரை – ஆயனாகிய சாத்தன்- முதலாகவும், செம்மையாகிய நிறமாகிய குவளை முதலாகவும் விரியும். இவ்ஆகிய என்னும் உருபின்கண் ஆக்கவினை இன்மையின், இலக்கணையால், செய்தஎன்னும் வாய்பாட் டிற் படுவதொரு வினையிடைச்சொல் இஃது என்று உணர்க.(நன். 365 சங்.)

ஆகிருதி

(வீ. சோ. 139) உரையில் மூலத்தில் அதிகிருதி என்றிருக்கிறது.ஆகிருதி என்பதே பொருந்தும்.)1) உருவம்2) அடிதோறும் ஒற்று நீங்கிய உயிரும் உயிர்மெய்யுமாகிய 22 எழுத்துக்கொண்ட நான்கடியை யுடைய சந்தம். கருவிளம் – கூவிளம் – கருவிளம் -கூவிளம் – கருவிளம் – புளிமாங்காய் என அடிதோறும் நிகழ்வது.எ-டு : ‘தளையவி ருட்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடேவளைமொழி நித்தில மனநில வைத்தரு மயிலையி லெழுகாரே!அளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயவீரா!விளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ழருளாயே’இவ்வறுசீர் விருத்தத்துள் அடிதோறும் ஒற்று ஒழிய 22 எழுத்து வருதல்ஆகிருதி என்ற சந்தமாம். (வீ. சோ. 139 உரை)

ஆகுபெயரின் இருவகை

ஆகுபெயராவது ஒன்றன் பெயரை ஒன்றற்கு இட்டுச் சொல்லுமது. அதுதான்தன்னொடு தொடுத்த பொருள்மேல் வருதலும், தனக்கு எவ்வியைபும்இல்லாததன்மேல் வருதலும் என இரண்டாம். அவைதாம் ஈறுதிரிந்து நிற்கவும்பெறும். அவை வருமாறு :கடுவது காய் தின்றானைக் கடுத் தின்றான் என்றும், புளியினது காய்தின்றானைப் புளித் தின்றான் என்றும் கூறும் இவை, தம் முதலொடு சேர்ந்தஆகுபெயர். பூ நட்டு வாழும், இலை நட்டு வாழும்: இவை சினையாகுபெயர்.நீலம் அடுத்ததனை நீலம் என்றும், சிவப்பு அடுத்ததனைச் சிவப்பு என்றும்,ஏறு பட்ட இடத்தை ஏறு என்றும், அடிபட்டதனை அடி என்றும், வெள்ளாளர்காணியிற் பிறந்ததனை வெள் ளாளர்காணி என்றும், சாலியனான் நெய்யப்பட்டதனைச் சாலியன் என்றும், நாழியால் அளக்கப்பட்டதனை நாழி என்றும்,துலாத்தால் எடுக்கப்பட்டதனைத் துலாம் என்றும் வருவன தம் முதலுக்குஅடையாய் வரும் ஆகுபெயர். இனி, தொல் காப்பியம் – அவிநயம் – வில்லி -வாளி – என்பன ஈறு திரிந்து வந்தன.இருபெயரொட்டாய் வரும் ஆகுபெயரும் உள. அவை பொற்றொடி – வெள்ளாடை -கனங்குழை – என்பன. அன் மொழித்தொகையாய்க் காட்டப்பட்டனவாயினும், ஆகுபெயர்த்தன்மைக்கு ஈங்குப் பெறும். (நேமி. உருபு. 3 உரை)

ஆகுபெயரின் நால்வகை இயல்புகள்

ஆகுபெயர்கள் தத்தம் பொருளிடத்துச் சிவணலும், தம்மொடு சிவணலும்,பொருத்தமில்லாத நெறிக்கண் சுட்ட லும், பிறிதின் கிழமைப் பொருள்சுட்டலும் ஆகிய அந்நால் வகை இயல்புகளை யுடையன.எ-டு : தத்தம் பொருளிடத்துச் சிவணுதல் :முதற்பொருள் சினைப்பொருளைக் குறித்தல். கடுத்தின்றான் என்புழி, கடுஎன்னும் முதல் அதன் காயினைக் குறித்தது. பொன்னினான் ஆகிய அணிகலத்தைப்பொன் என்றலும் அது.தம்மொடு சிவணுதலாவது சினைப்பொருள் முதற் பொருளைக் குறித்தல். பூநட்டு வாழும் என்புழி, பூ என்னும் சினை கொடி யாகிய முதலைக் குறித்தது.நீலநிறத்தையுடைய மணியை நீலம் என்றலும், சோற்றுக்குக் காரணமான நெல்லைச்சோறு என்றலும், துடி போன்ற இடையினை யுடையாளைத் துடியிடை என்றலும்,தாழ்குழலினை யுடையாளைத் தாழ்குழல் என்ற லும் எடுத்துக்காட்டாம்.ஒப்பில்வழிக்கண் சுட்டியது :எ-டு : வேளாகாணி . பயிர் செய்யப்படாத நிலம் வேளா காணியாம்; அஃதுஅதனை யுடையானைக் குறித்தது.பிறிது பொருளைச் சுட்டியது :எ-டு : சாலியன். சாலியனாற் செய்யப்பட்ட ஆடையை அக்கருத்தாவின்பெயர் குறித்தல் போலுவது.(தொ. சொ. 112 தெய். உரை)

ஆகுபெயரை ‘வேற்றுமை மருங்கிற்போற்றல்’

ஆகுபெயர் ஐ முதலிய ஆறு வேற்றுமைப் பொருண்மையிடத் தும்இயைபுடைத்தாய் வரும். மக்கட் சுட்டை (மக்களைச் சுட்டுவதனை) உயர்திணைஎன்ப, தொல்காப்பியனாற் செய் யப்பட்டது, தண்டூண் ஆதற்குக் கிடந்தது,பாவையினும் அழகி யாள், கடுவினது காய், குழிப்பாடியுள் தோன்றியது -எனவரும். (தொ. சொ. 117 நச். உரை)ஆகுபெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட்கண்ணேவருவது. அவை அப்பொருட் கண்ணே வந்தவாறு: முதலிற் கூறும் சினையறிகிளவியும், சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்பு கொள் பெயரும்,இருபெயரொட்டும் (துடியிடை) ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம்;பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள் மயக்கம்; இயன்றதுமொழிதலும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருள்மயக்கம். (தொ. சொ. 112 தெய். உரை)

ஆகுபெயர்

ஒரு பொருளின் பெயர் அதனொடு பிரிக்கக்கூடிய தொடர்போ,பிரிக்கமுடியாத தொடர்போ உடைய பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம்.அது ‘தத்தம் பொருள்வயின் தம்மொடுசிவணும்’ தற்கிழமை ஆகுபெயர், ‘ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டும்’ பிறிதின்கிழமை ஆகுபெயர் – என இரு வகைத்து. ஆகுபெயர், முதலிற்கூறும் சினைஅறி கிளவி – சினையிற் கூறும் முதல் அறிகிளவி – பிறந்தவழிக்கூறல் – பண்புகொள் பெயர் – இயன்றது மொழிதல் – இருபெயரொட்டு -வினைமுதல் உரைக்கும் கிளவி – அளவுப்பெயர் – நிறைப்பெயர் – முதலியனபற்றி வரும். இவையேயன்றிக் கருவிஆகுபெயர், உவமஆகுபெயர்,தொழில்ஆகுபெயர், காரணஆகுபெயர், வரையறைப் பண்புப்பெயர் ஆகுபெயர்,காரியஆகுபெயர், ஈறு திரிந்த ஆகுபெயர் – முதலாகப் பலவாறாக வருதலுமுண்டு. (தொ. சொ. 115 – 119 நச். உரை)யாதானும் ஒரு பொருத்தத்தினான் ஒன்றன்பெயர் ஒன்றதாக வருவது. வருமாறு: ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப்பொருளை முதலான் கூறும்பெயர்ச்சொல்; கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயர்ஆயிற்று.‘சினையிற் கூறும் முதலறி கிளவி’ யாவது முதற்பொருளைச் சினையான்கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது. நடப் படுவது பூவினது முதல்ஆதலின் அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெயர் ஆயிற்று.‘பிறந்தவழிக் கூறல்’ என்பது இடத்து நிகழ் பொருளை இடத்தான் கூறுதல்.வேளாகாணி என்பது, வேளாகாணியிற் பிறந்த ஆடையைக் குறித்தது. யாழ்கேட்டான் என்புழி, யாழிற் பிறந்த ஓசையையும் யாழ் என்றமையால்,பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயராம்.‘பண்புகொள் பெயர்’ ஆவது பண்பின் பெயரால் பண்புடை யதனைக் கூறல்.நீலம் என்பது அந்நிறத்தையுடைய மணியைக் குறிப்பது இது.‘இயன்றது மொழிதல்’ ஆவது இயன்றதனான் மொழிதல், இயன்றதனை மொழிதல் எனவிரியும். காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதலும், காரணப் பொருளைக்காரியத்தான் மொழிதலும் இவ்வாகுபெயராம். பொன் பூண்டாள் எனவும், இஃதோர்அம்பு – இஃதோர் வேல் என வும் வருமிடத்து, ‘பொன்’ பொன்னினான் ஆகியஅணிகலத் தையும் ‘அம்பு’ ‘வேல்’ என்பன அவை உடம்பிற்பட்ட வடு வையும் இவ்ஆகுபெயரான் உணர்த்தின. நெல்லாதல் காண மாதல் ஒருவன் கொடுப்பக்கொண்டவன், ‘இன்றைக்குச் சோறு பெற்றேன்’ என்பான். அவ்வழிச்சோற்றுக்குக் காரண மாகிய நெல்லும் காணமும் சோறு என இவ்ஆகுபெயரான்சொல்லப்பட்டன.‘இருபெயரொட்டு’ என்பது இரண்டு பெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டுமற்றொரு பொருள் தரு பெயராகி வருவது. துடியிடை என்பது துடிபோன்றஇடையினையுடை யாளைக் குறிப்பது இவ்வாகுபெயராம்.‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ என்பது வினையும் முதலும் உரைக்கும்கிளவி என உம்மைத்தொகையாகக் கொள்ளப் படும். படவே, வினையான் உரைக்கும்கிளவியும் வினைமுத லான் உரைக்கும் கிளவியும் ஆகுபெயர் என்றவாறு.எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும் சொல்லப்பட்ட தனையும்அப்பெயரான் வழங்குதலின் வினையான் உரைக்கப் பட்ட ஆகுபெயராம்; சாலியனான்நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது வினைமுதலான் உரைக்கப் பட்டஆகுபெயராம்.தாழ்குழல் என்பது, அதனையுடையாட்கு ஆகி வந்தது, ஈண்டு, குழல் ‘தாழ்’என்னும் அடையடுத்து வந்தவாறு – அடை யடுத்து வந்த ஆகுபெயர். (தொ. சொ.111 தெய். உரை)பொருளே இடமே காலமே சினையே குணமே தொழிலே என்னும் ஆறுடனே, இவற்றின்பகுதிய ஆகிய நால்வகை அளவையே சொல்லே தானியே கருவியே காரியமே கருத்தாவேஎன்னும் ஆறும் ஆதியாக வரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானேஅப்பொருளுக்கு இயைந்த பிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறிவருவன ஆகுபெயர்களாம்.இயையாதவற்றிற்கு வருவன பலபொருள் ஒருசொல் அன்றி ஆகுபெயர் ஆகாஎன்பதாம். ‘தொன்முறை உரைப்பன’ என்றமையான், ஆகுபெயர்மேல் ஆகுபெயராயும்அடை யடுத்தும் இருபெயரொட்டாயும் வழக்கின்கண்ணும் செய்யுட் கண்ணும்பயின்று பலபொருள் ஒருசொல் போல வருவன அன்றி, இடையே தோன்றியவாறுஆக்கப்படுவன அல்ல என்பது பெறப்படும். (நன். 290 சங்.)குறிப்பால் பொருளுணர்த்தும் பெயர்களுள் ஆகுபெயரும் ஒருவகை. பொருள்இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறுடனே, இவற்றின் பகுதியவாகியஎண்ணல் – எடுத்தல் – முகத்தல் – நீட்டல் – என்னும் நால்வகை அளவுப்பெயர் சொல் தானி கருவி காரியம் கருத்தன் என்னும் ஆறும் அடிப்படையாகவரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானே அப்பொருளினுக்கு இயைந்தபிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறி வருவன ஆகுபெயராம்.உவமையாகுபெயர், விட்ட ஆகுபெயர், விடாத ஆகுபெயர், ஆகுபெயர்மேல்ஆகுபெயர், இருபெய ரொட் டாகு பெயர் என்பனவும் கொள்க.

ஆகுபெயர் அந்தாதி

முதற்பாடலின் இறுதிச்சொல் நேராக அடுத்த பாடலின் முதலில் வாராதுஅச்சொல்லினது ஆகுபெயர்ப்பொருள் பற்றிய சொல் அடுத்த பாடல் முதற்கண்வருவது.எ-டு: 1. ‘பரிவதி லீசனைப் பாடிவிரிவதின் மேவ லுறுவீர்!பிரிவகை யின்றிநன் னீர்தூஉய்ப்புரிவது வும்புகை பூவே’ (திருவாய். 1-6-1)2. ‘மதுவார் தண்ணந் துழாயான்முது வேத முதல்வனுக்கெதுவே தென்பணி யென்னாததுவே யாட்செயு மீடே’ (திருவாய். 1-6-2)முதற்பாடல் இறுதிச்சீர் ‘பூவே’ என முடிகிறது. பூ என்பது ஆகுபெயரால்அதன்கண் உள்ள மதுவைக் குறிக்க, அம்மது என்னும் சொல்லைத் தொடக்கமாகக்கொண்டு அடுத்த பாடல் ‘மதுவார்’ எனத் தொடங்குவது ஆகுபெயர்அந்தாதியாகும். (மா. அ. பாடல் 66, 67)

ஆகுபெயர் ஈறு திரிதல்

தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி – என்பன ஆகுபெயர் ஈறுதிரிந்தனவாம். (தொ. சொ. நேமி. 119 நச். உரை)இவ்வாடை கோலிகன், இவ்வாடை சாலியன் – என்பனபோல, அகத்தியம்தொல்காப்பியம் கபிலம் என்றாற் போல்வனவும் வினைமுதல் பெயரால் அவரான்இயற்றப் பட்ட பொருளைக் கூறின. இவை ஈறு திரிதல் உரையில் கொள்க. (இ. வி.192 உரை)

ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கமே

செயப்படுபொருள் முதலிய வேற்றுமையுருபுகள் தம் பொரு ளின் தீர்ந்தும்தீராமலும் பிறவேற்றுமையொடு மயங்குதல் போல, ஆக்கப் பெயர்களும் தம்பொருளின் தீர்ந்தும் தீராமலும் ஆகுபெயராய் வந்து மயங்குதலின்,ஆகுபெயர் பற்றிய இலக்கணத்தை வேற்றுமைமயங்கியலுள் ஆசிரியர் ஓதினார்.ஆதலின் ஆகுபெயர் எழுவாய் என்பது தெளிவாம்.எழுவாய் வேற்றுமையாய் நிற்குமோர் ஆக்கப்பெயர், தன் இயற்பொருளைஉணர்த்தாமல் தன்னொடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி,அப்பொருளுணர்த்துங்கால் அஃது எழுவாயாகிய பெயரின் மயக்கமே என்பதைஓர்ந்து ஆகுபெயர் இலக்கணத்தை வேற்றுமை மயங்கியலுள் ஓதினார்ஆசிரியர்.மரபு காரணமாக ஆகுபெயர்களுள் பல, ஆக்கப் பெயராகவே இருவகை வழக்கிலும்வழங்கும். எ-டு : புளி என்பது ஒரு சுவையின் பெயர். அஃது அதனையுடையபழத்திற்கு ஆகிப் பின்னர் அப்பழத்தினையுடைய மரத்திற்கு ஆயிற்று.ஆயினும் இதுபோது மரம் ஆக்கப்பெயராகவும் பழம் ஆகுபெயராகவும்வழங்குகின்றன. (தொ. சொ. 113 ச. பால.)

ஆகுபெயர், அன்மொழித்தொகை : வேறுபாடு

ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் தம் பொருள் உணர்த்தாது பிறிது பொருள்உணர்த்தலான் ஒக்குமாதலின், அவைதம்முள் வேற்றுமை யாதோ என்னின்,ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு இயைபு பற்றிய பிறிதொன் றனை உணர்த்திஒருமொழிக்கண்ணதாம்; அன்மொழித் தொகை இயைபு வேண்டாது இருமொழியும் தொக்கதொகையாற்றலான் பிறிது பொருள் உணர்த்தி இருமொழிக் கண்ண தாம். இவைதம்முள் வேற்றுமை என்க.இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன்றோ எனின், அன்று; என்னை?வகரக் கிளவி – அதுவாகு கிளவி – மக்கட் சுட்டு – என்னும் இருபெயரொட்டுஆகுபெயருள், வகரமும் அதுவாகலும் மக்களும் ஆகிய அடைமொழிகள், கிளவி -சுட்டு – என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடி யாது, எழுத்தும்சொற்பொருளும் பொருளும் ஆகிய ஆகு பெயர்ப் பொருளை உணர்த்த, இருபெயரும்ஒட்டிநிற்கும் மாதலின். இனி, பொற்றொடி என்னும் அன்மொழித்தொகை யுள்,பொன் என்பது அவ்வாறு அன்மொழித்தொகைப் பொருளை விசேடியாது தொடியினையேவிசேடித்து நிற்ப. இவ்விரண்டன் தொகையாற்றலால் அன்மொழித்தொகைப் பொருளைஉணர்த்துமாறு அறிக. இக்கருத்தே பற்றி, மக்கட் சுட்டு முதலியவற்றைப்பின்மொழி ஆகுபெயர் என்பாரு முளர். (பின்: காலப்பின்) (நன். 290சிவஞா.)அன்மொழித்தொகைச்சொல், செய்யுள் ஆக்குவோன் ஒருவரை அதிசயம் முதலாயினகாரணம் பற்றித் தான் சொல் லுவதாகவும் பிறர் சொல்லுவதாகவும் சொல்லும்போது அந்தந்த இடங்களில் வருவதன்றி, ஆகுபெயர் போல் நியதிப் பெயராய்வருவதன்று. அவ்வாறாயினும் அன் மொழித் தொகைச் சொல்லும் ஆகுபெயரும் தம்பொருள் உணர்த்தா மலே பிறிது பொருள் உணர்த்தலால் ஒக்குமாத லின்,தம்முள் வேற்றுமை யாதோ எனின், ஆகுபெயர் ஒன்றின் பெயரால் அதனோடு இயைபுபற்றிப் பிறிதொன்றை உணர்த்தி ஒவ் வொரு சொல்லில்தானே வருவதாம்.அன்மொழித் தொகைச் சொல் இயைபு வேண்டாமல் இருமொழிகள் தொக்க தொகையாற்றலினாலேயே பிறிது பொருள் உணர்த்தி இருமொழி யிடத்து வருவதாம்.(நன். 290 இராமா.)

ஆகுபெயர்க்கண் வேற்றுமைகளைப் போற்றிஉணருமாறு

ஆகுபெயர்கள் செயப்படுபொருள் முதலாய வேற்றுமை களின் தொடர்பினால்வருமாதலின், இவ்விவ் வேற்றுமைப் பொரு ளான் இப்பொருள் ஆகுபெயராயிற்றுஎனப் போற்றி உணர்தல் வேண்டும்.வருமாறு :இவை தம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்தன.இஃது ஒப்பில் வழியால் பிறிது பொருள் சுட்டி வந்தது.ஆதலின் மூன்றாம் வேற்றுமை இருநிலைத்தாயும் வருமாறு காண்க. (தொ. சொ.116 ச. பால.)

ஆகுபெயர்ப் பதம்

ஆகுபெயர்ப்பதமும் காரணத்தினான் ஆமே எனினும், விகுதியின்றிப்
பகுதியான பகாப்பதம் தானே பிறிதுமொரு பொருளை விளக்கும். அவை தெங்கு,
கடு, புளி, குழிப்பாடி, சீனம், ஏறு, குத்து, நாழி – என்னும்
தொடக்கத்தன. (நன். 131 மயிலை.)

ஆகுபெயர்ப் புறனடை கூறுவன

யாழ், குழல் என்பன அவற்றிற் பிறந்த ஓசையை ஆகுபெயரான் உணர்த்தும்.பசுப் போல்வானைப் பசு என்றலும், பாவை போல்வாளைப் பாவை என்றலும்,எண்ணிற்கு ஏதுவாகிய இடங்களையும் ஒன்று – பத்து – நூறு – என்றலும்,எழுத்து என்பது எழுத்திலக்கணத்தை உணர்த்தலும் ஆகுபெயராம். ஆகுபெயர்ஈறு திரிதலுமுண்டு. (தொ. சொ.114 இள. உரை.)ஏறு, குத்து என்னும் தொழிற்பெயர் இஃதோர் ஏறு – இஃது ஒரு குத்து -என அத்தொழிலினான் ஆகும் வடுவின்மேல் ஆகுபெயராய் வந்தன. (தொ. சொ. 117சேனா. உரை)நெல்லாதல் காணமாதல் பெற்றானொருவன் ‘சோறு பெற்றேன்’ எனக் காரணப்பொருட்பெயர் காரியத்தின்மேல் ஆகுபெயராய் வந்தது. ‘ஆறுஅறி அந்தணர்’(கலி.கட.) என்புழி ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண் பினையுடைய அங்கத்தை உணர்த்தி நிற்றலும், ‘நூற்றுலாம் மண்டபம்’ என்புழி(சீவக. 2734) அவ்வெண்ணுப்பெயரினை அறிகுறியாகிய அலகுநிலைத் தானமும்அப்பெயரதாய் நிற்றலும், அகரம் முதலிய எழுத்துக்களை உணர்த்துவதற்குக்கருவியாகிய வரிவடிவுகளும் அப்பெயர் பெற்று நிற்றலும் கொள்க.கடிசூத்திரம் செய்ய இருந்த பொன்னைக் கடிசூத் திரம் என்றும், தண்டூண்ஆதற்குக் கிடந்த மரத்தைத் தண்டூண் என்றும் காரியத்தின் பெயரைக்காரணத்திற்கு இட்டு வழங்குவனவும், எழுத்து – சொல் – பொருள் – என்பனவற்றிற்கு இலக்கணம் கூறிய அதிகாரங்களை எழுத்து – சொல் – பொருள் -என்பன உணர்த்தி நிற்றலும் கொள்க. தொல் காப்பியம், வில்லி, வாளி – எனஈறு திரிதலும் கொள்க.(தொ. சொ. 119 நச். உரை)பாவை – திரு – என வடிவு பற்றியும், பசு – கழுதை – எனக் குணம்பற்றியும், புலி – சிங்கம் – எனத் தொழில் பற்றியும் ஒன்றன் பெயர்ஒன்றற்கு ஆகிவருவனவும் ஆகுபெயர் என்றே கொள் ளப்படும். ‘எயில்முகம்சிதையத் தோட்டி ஏவலின்’ (பதிற். 38) : தோட்டி யுடையானைத் தோட்டி எனஆகுபெய ரான் கூறினார். இவை ஆகுபெயர் ஆகுங்கால், பாவை வந்தாள் -சிங்கம் வந்தான் – எனத் தத்தம் பொருண்மை வாய் பாட்டான் முடியும். (தொ.சொ. 114 தெய். உரை)இனி, ஒன்று பத்து நூறு ஆயிரம் – என்னும் எண்ணுப் பெயர்களும்வரையறைப் பண்பின் பேர் பெற்ற ஆகுபெயர் எனக் கொள்க. தாழ்குழல்,திரிதாடி – என்பன இருபெய ரொட்டு அன்மையின் ஈண்டே கொள்க. பொன்னாலாகியகலத்தைப் பொன் என்றலும், மண்ணாலாகிய கலத்தை மண் என்றலும் ஆகுபெயர்.(தொ. சொ. 120 கல். உரை)

ஆக்க உம்மை

நெடியனும் வலியனும் ஆயினான் – என்பன ஆக்கம் குறித்து நிற்றலின்ஆக்கவும்மை. இஃது ‘அஃறிணை விரவுப்பெயர்இயல்புமார் உளவே’ எனப் பண்பு பற்றியும் வரும். ‘செப்பே வழீஇயினும்வரைநிலை இன்றே’ என்பதூஉம் வழுவை இலக்கண மாக்கிக் கோடல் குறித்தமையின்அதன்பாற்படும். (இ. வி. 256)நெடியனும் வலியனும் ஆயினான் என்புழி, உம்மை ஆக்கம் குறித்துநின்றது. நெடியன் ஆயினானும் வலியன் ஆயினா னும் ஒருவனே என ஒருபொருள்தன்னையே சொல்லுதலின், இவ்வும்மை எண்ணும்மை ஆகாது. (தொ. சொ. 257கல். உரை)

ஆக்க வினைக்குறிப்பின் இயல்

நல்லன் என்பது இய.ற்கை வினைக்குறிப்பாயின், விரிதல் தொகல் என்னும்இரண்டனுள் ஒருவாற்றானும் ஆக்கம் வேண்டாது ‘சாத்தன் நல்லன்’ என்றேவரும் என்பதாயிற்று, அங்ஙனமாகவே, வினைக்குறிப்பு ஆக்க வினைக்குறிப்புஎன்றும் இயற்கை வினைக்குறிப்பு என்றும் இருவகைப்படும் எனவும், அவைஇவ்வாறு நடக்கும் எனவும் கூறினாராயிற்று. வினையாயினும் ஆக்கத்தைநோக்கி ‘இயற்கை’ எனப்பட்டது. (நன். 347 சங்.)

ஆக்க வினைக்குறிப்பு

வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பும் ஆக்க வினைக் குறிப்பும்என இருவகைத்து. இயற்கை வினைக்குறிப்பு, சாத்தன் நல்லன் – என்றாற்போலஆக்கம் வேண்டாது வரும். செயற்கை வினைக்குறிப்பாகிய ஆக்கவினைக்குறிப்பு; சாத்தன் நல்லனாயினான் – சாத்தன் நல்லன்; கல்வியால்பெரியனாயினான் – கல்வியால் பெரியன்; கற்று வல்லனா யினான் – கற்றுவல்லன் – என ஆக்கச்சொல் விரிந்தும் தொக்கும் வரும். (நன். 347சங்.)செயற்கைப் பொருள், காரணச்சொல் முன் வர ஆக்கச்சொல் பின்வரப்பெற்றும், காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல் பெற்றும்,ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச் சொல் வரப்பெற்றும் நிகழும்;இவ்விருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் பெறும். வருமாறு :அ) கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின;எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்த மையால் பயிர்நல்லவாயின.ஆ) மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின.இ) கடுவும்…….. பெற்றமையால் மயிர் நல்ல : எருப்பெய்து……..யாத்தமையால் பயிர் நல்லஈ) மயிர் நல்ல, பயிர் நல்ல (நன். 405 சங்.)

ஆக்கப் பொருண்மை

மன், உம் – என்னும் இடைச்சொற்களுடைய பொருண்மை களுள்ஆக்கப்பொருண்மையும் ஒன்று. ‘ஆக்கம்’ ஆதல் தன்மையைக் குறிக்கும்.எ-டு : ‘அதுமன் எம்பரிசில்’ (புற. 147) – அதுவாம் எம் பரிசில் என ‘மன்’ ஆக்கப்பொருளில்வந்தது.ஆக்கம், உம்மையடுத்த சொற்பொருள்மேல் ‘ஆகும் நிலைமை’ குறித்துவரும்.எ-டு : வாழும் வாழ்வு, உண்ணும் ஊண் – எனத் தொழிலி னது ஆக்கத்தைஉம்மை குறித்து வந்தது. ‘வாழும் வாழ்வு’ என்புழி, உம்மை பெயரெச்சவிகுதிஇடைச் சொல் அன்றோ எனின், ஆம்; அதன்கண்ணும் இடைச்சொல் வரும்என்பது.பாயும் என்பது பாயுந்து என வரும். ‘உம் உந்து ஆகும் இடனுமார்உண்டே’ (287) என்பது விதி.நெடியனும் வலியனும் ஆயினான் – என்புழி, உம்மை (ஆக்கம் பற்றாது)எண்ணும்மையாய் வந்தது; தனியே வரின் எச்ச வும்மையாம். இக்கருத்துக்கல்லாடரால் மறுக்கப்பட்டது. ‘ஆக்கஉம்மை’ காண்க. (தொ. சொ. 249, 252தெய். உரை)

ஆக்கப்பெயரும் ஆகுபெயரும்

சொல்லானது பொருளை உணர்த்தும் நிலைமைக்கண், சொல்லினது இலக்கணமாக,வெளிப்படை குறிப்பு என்னும் இரண்டும் நிகழும். இவ்விரண்டு நிலையும்எழுவாயாக வரும் பெயர்க்கும் ஒத்தலின், அப்பெயர் வெளிப்படையாகச் செம்பொருள் தருமாயின் அதனை ஆக்கப்பெயர் எனவும், யாதா னும் ஓர் இயைபான்குறிப்புப்பொருள் தருமாயின் அதனை ஆகுபெயர் எனவும் இலக்கண நூலோர்கொண்டனர்.எ-டு : தெங்கு வளர்ந்தது : தென்னையைக் குறித்தலின்,ஆக்கப்பெயர். தெங்கு தின்றான் : தேங்காயைக் குறித்தலின், ஆகுபெயர்.(தொ. சொ. 113 ச. பால.)

ஆக்கம் காரண முதற்று ஆதல்

ஒரு காரணத்தான் தன்மை திரிந்த செயற்கைப்பொருள் காரணச்சொல்லைமுன்னாகப் பெற்று வரும்.எ-டு: கடுக் கலந்த கைபிழி எண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லவாயின;எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான் பைங்கூழ் நல்லவாயின.(தொ. சொ. 21 நச். உரை)

ஆக்கம் காரண முதற்று என்பது

ஆக்கம் காரணத்தை முதலாக உடையது என்பதாம். ஆக்கம் முற்கூறிக் காரணம்பிற்கூறுதலுமுண்டு ஆதலின், காரணத்தை ஆக்கத்தின் முன்னர்க் கூறவேண்டும்என்ற வரையறை இன்று. முன்னர்க் கூறுவதே பெரும்பான்மை என்க.(தொ. சொ. 21 கல். உரை)

ஆக்கம் காரணம் இன்றி வருதல்

ஒரு காரணத்தான் தன்மை திரிந்த பொருள் அக்காரணம் கூறப்படாமலும்வழக்கினுள் கூறப்படும்.எ-டு : மயிர் நல்லஆயின, பயிர் நல்லஆயின. (தொ. சொ. 22 நச்.உரை)

ஆங்க

ஆங்க என்னும் இடைச்சொல் உரையசையாகும். அஃதாவது கட்டுரைக்கண்ணேஅசைத்த நிலையாய் வரும்; என்றது, புனைந்துரைக்கண்ணே சேர்க்கப்பட்டுவரும் என்றவாறு.எ-டு : ‘ஆங்கக் குயிலும் மயிலும்காட்டிக்கேள்வனை விடுத்துப் போகி யோளே’ஒரு செய்தியைக் கூறிப் பிறகு ‘ஆங்க’ என்ற சொல்லைக் குறிப்பிடுமிடத்து அங்ஙனே என்று அவ்விடைச்சொல் பொருள் தரும். சிறிதுபொருளுணர்த்துவன உரையசை.(தொ. சொ. 279 நச். உரை)

ஆங்கு : அசைநிலை ஆதல்

அந்திலும் ஆங்கும் இடப்பொருளும் அசைநிலையும் ஆம் என நன்னூலார்சூத்திரம் செய்தார். அஃது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தன்று என்பதுஅவர் சூத்திரத்தா னும், ஆங்கு என்பது இடச்சுட்டுப் பெயர்ச்சொல் ஆதலானும், ‘ஆங்கு அசைநிலை’ எனக் கூறி ‘ஆங்க’ என உதாரணம் காட்டியதினாலும்பொருந்தாது என்க. இனி, ஆங்க என்னும் அகர ஈற்று இடைச்சொல் அசைநிலை எனக்கொள்ளின் அமையும். என்னெனின், ‘ஆங்க உரையசை’ எனக் கூறியதனானும், ‘ஆங்கக் குயிலும் மயிலும்கா ட்டி’ எனவும் ‘ஆங்கத் திறனல்லயாம்கழற’ (கலி. 85) எனவும் பயின்று வருதலானும் என்க.(நன். 369 இராமா.)

ஆசான் உவக்கும் திறத்துக்கு உவமை

‘எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்’ புரிந்ததை, மறையோன் வேண்ட
மாண்டாரைப் பண்டு அழைத்துத் தந்த கண்ணனிடத்தும், துரோணாசாரியன் வேண்ட
வலக்கைப் பெருவிரல் அறுத்துத் தந்த வனசரனிடத்தும் காண்க. (நன். 46
இராமா.)

ஆசிடுதல்

1) பற்றாசு வைத்தல். 2) நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும்சேர்த்தல். (யா. கா. செய். 3 உரை) 3) எதுகையில் ய், ர், ல், ழ் என்றநான்கிலொன்றை ஆசாக இடுதல். (இ. வி. 748) (ஆசிடையிடுதல் காண்க.)

ஆசிடை எதுகை (ஆசிடையிட்ட எதுகை)

ய், ர், ல், ழ் என்னும் நான்கு ஒற்றெழுத்துக்களும் வரல்முறைபிறழாமல் இடையே வந்து உயிர்ப்பின், அஃது ஆசிடை எதுகையாம் என்றார்காக்கைபாடினியார். இவ்வொற் றுக்கள் இரண்டாமெழுத்தாக வருதலால்,மூன்றாமெழுத் தாகிய எதுகை ஒன்றற்கு யாதொன்றும் தடையுமில்லை என்றவாறு.(யா. கா. 43 உரை)எ-டு : ‘காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து’ (சீவக. 31)இஃது யகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை.‘மாக்கொடி யானையு மௌவற் பந்தரும்கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை’ (சூளா. 35)இது ரகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை.‘ஆவே றுருவின ஆயினும் ஆபயந்தபால்வே றுருவின அல்லவாம்.’ (நாலடி. 118)இது லகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை.‘வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாழ்நாளும்போகின்ற பூளையே போன்று’இது ழகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை. (யா. கா. 43 உரை., யா. வி. பக்.150, 151)

ஆசிடை நேரிசை வெண்பா

இருகுறள் நேரிசை வெண்பாப் போலமையாது, முதற் குறட்பாவினொடுதனிச்சொல் இடை வேறுபட்டு விட் டிசைப்பின், ஒற்றுமைப்படாத உலோகங்களைஒற்றுமைப் படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல, முதற்குறட்பாவின்இறுதிக்கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப் பட்டு இரண்டுவிகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவன ஆசிடை நேரிசை வெண்பாஎனப்படும்.எ-டு : ‘தாமரையின் தாதாடி தண்டுவலைச் சேறளைந்துதாமரையின் நாற்றமே தானாறும் – தாமரைபோல்கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியென்கண்ணார்வம் செய்யும் கருத்து.’‘கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத்தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையேமுட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்பபட்டினம் பெற்ற கலம்.’ (நாலடி. 250)இவற்றுள் முதலாவது, முதற்குறட்பாவின் இறுதிக்கண், னா-றும் – எனஈரசையால் ஆசிடையிட்டு வந்தது; இரண்டாவது, முதற் குறட்பாவின்இறுதிக்கண் யா – என ஓரசையால் ஆசிடையிட்டு வந்தது. இவையிரண்டும் இரண்டுவிகற்பத் தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாக்கள். (யா. கா. 24 உரை)இவ்வெண்பா ‘ஆசிடை வெண்பா’ எனவும்படும் (பாப்பா. 7.)

ஆசிடை வெண்பா

‘ஆசிடை நேரிசை வெண்பா’ காண்க.

ஆசிரிப்பா

சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண்நிறுவிற்றாகலானும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போலநின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக் குறி. ஆசுஎனினும், சிறிது எனினும், நுண்ணிது என்னும் ஒக்கும். இதனைப் பாடுதல்எளிமை நோக்கி ‘மென்பா’ என்பர். இஃது அரச வருணத்தது என்பர். இஃதுஅகவிக் கூறும் ஓசையுடையது. நால்வகைப்பாக்களில் ஆசிரியம் இரண்டாவது.(யா. க. 55 உரை)

ஆசிரிய அடிக்குச் சிறப்பு விதி

ஆசிரிய அடியில், ஆசிரிய உரிச்சீர் வந்து, தளை கொள்ளுங் காலும், 4எழுத்து முதல் 20 எழுத்து முடிய வரையறுக்கப் பட்ட 17 நிலத்தைக் கடந்துவாராது, நேர்பு நிரை – நிரைபு நிரை – என்ற இருசீரும் தளைகொள்ளும்.ஏனைய நேர்பு நேர்பு, நேர்பு நிரைபு – நிரைபு நிரைபு, நிரைபு நேர்புஎன்ற நான்கும் தளை கொள்ளா. உரிச்சீரால் தளை கொள் ளுங்கால், ஓரடியின்இரண்டு உரிச்சீர் வரின் ஓசை உண்ணாது. ஆசிரிய உரிச்சீர் நான்கு நிரலேநிற்குமிடத்தே தூங்கல் ஓசை பிறத்தலின், இயற்சீர்கள் சீர்வகைஅடிகளுக்கு ஒன்று இடையிட்டு வரல் வேண்டும். அப்படி வரினும் இன்னோசைமிகவும் இன்று. நிரையீற்றனவாகிய நேர்புநிரை நிரைபு – நிரை என்றஉரிச்சீர் இரண்டும் இடையில் வாராது அடி முதற்கண்ணே இவற்றுள்ஒன்றுவந்து இயற்சீரொடு தட்டு இன்னோசைத்தாம். அவை ஓரடிக்கு இரண்டுவந்து தட்டாலும் இன்னோசைத்தாம்.‘ ஓங்குகோட்டுத் தொடுத்த பா ம்புபுரை அருவி’ நேர்பு நேர்பு, நேர்பு நிரை.‘ நிவந்துதோன்று களிற்றின் இலங்குகோடு புரைய’ – நிரைபுநேர்பு, நிரைபு நேர்பு-என்று இயற்சீர்கள் ஒன்று இடையிட்ட உரிச்சீரான் ஆசிரியஅடிகள்வந்தன.‘ பாம்புமணி யுமிழும் பானாள் ஈங் குவரல் ’ – நேர்புநிரை, நேர்பு நிரை – இஃது இரண்டு இயற்சீர்இடையிட்டது.‘ ஓங்குமலைப் பெருவில் பாம்புநா ண் கொளீஇ’ (புறநா. 55)‘ உவவுமதி உருவின் ஓங்கல் வெண் குடை’ (புறநா. 3)எனக் கட்டளையடிகள் இன்னோசை பெற்றன.‘ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து’ – ஐந்தெழுத்தடி‘ ஆடுகொடி நுடங்கு காடு போந்து’ – ஏழெழுத்தடி(தொ. செய். 54 நச்.)

ஆசிரிய அடியுள் தளைமயக்கம்

ஆசிரியஅடியுள் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,கலித்தளையும்ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வெண்டளையும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வெண்டளையும் கலித்தளையும் விரவி நிற்றலும்,வெண்டளையே வருதலும்,கலித்தளையே வருதலும்,வெண்டளையும் வஞ்சித்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும்வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்உண்டு.எ-டு : ‘நெடுவரைச் சாரல் குறுங்கோட்டுப் பலவின்விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன்உண்டுசிலம் பேறி ஓங்கிய இருங்கழைப்படிதம் பயிற்றும் என்பமடியாக் கொலைவில் என்னையர் மலையே’(யா. வி. பக். 199, 200)இவ்வாசிரியத்துள், இயற்சீர் வெண்டளையின் இருவகை யோடு, கலித்தளை,நேரொன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை, ஒன்றியவஞ்சித்தளை, நேரொன் றாசிரியத்தளை, ஒன்றாத வஞ்சித்தளை, நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை என்பன முதல் மூன்று அடிகளிலும்முறையே வருதலின், வேற்றுத்தளைகள் யாவும் மயங்கியவாறு. (ஆயினும்,முன்னடியில் வந்த வெண்டளை பற்றி, வெண்டளையால் வந்த ஆசிரியப்பா என்றுவழங்கப்படும். (யா. க. 53 உரை)

ஆசிரிய இணைக்குறள் துறை

நான்கடியாய் எனைத்துச்சீரானும் ஒரே விகற்பமாய் வரும் ஆசிரியத்துறையுள் ஈரடி குறைந்து வருவன ஆசிரிய இணைக்குறள் துறையாம்.எ-டு : ‘பாடகஞ்சேர் காலொருபால் பைம்பொற் கனைகழற்கால் ஒருபால்தோன்றும்;நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்;வீடிய மானின் அதள்ஒருபால் மேகலைசேர்ந்தாடும் துகில்ஒருபால்; அவ்வுருவம் ஆண்பெண்என்றறிவார் யாரோ?இது நடுவடிகள் இருசீர் குறைந்து ஏனைய அடிகள் இரண்டும் ஆறுசீரான்வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை.(யா.க. 76. உரை)

ஆசிரிய உரிச்சீர் : பெயர்க்காரணம்

பெரும்பான்மையும் ஆசிரியத்துக்கு உரிமையுடைய சீர் ஆகலான் ஆசிரியஉரிச்சீர் எனப்பட்டன. (தொ. செய். 13 நச்.)ஆசிரிய உரிச்சீர் எனினும் அகவல் உரிச்சீர் எனினும் ஒக்கும். (யா.க. 6 உரை)

ஆசிரிய உரிச்சீர் ஆறு

நேர்பு நிரைபு என்ற உரியசைகள் இரண்டும் தம்மொடு தாமும் தம்மொடுபிறவும் மயங்குவதனால் ஆகும் நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு, நேர்புநிரைபு, நிரைபு நேர்பு என்ற நான்கு சீர்களும் ஆசிரிய உரிச்சீர்களாம்.இவற்றின் வாய்பாடுகள் முறையே வீடுபேறு, தடவுமருது, பாறுகுருகு,வரகுசோறு என்பன.இவையன்றி நேர்பு நிரை, நிரைபு நிரை என்ற இரண்டும் ஆசிரியஉரிச்சீரின் பாற்படும். படவே, ஆசிரிய உரிச்சீர் ஆறு. நேர்பு நிரை :நீடு கொடி, நாணுத்தளை; நிரைபு நிரை : உரறு புலி (குளிறு புலி),விரவுகொடி என்பன. குற்றியலுகர வாய்பாடு ஒன்று, முற்றியலுகரவாய்பாடுஒன்று, என வாய்பாடு முறையே கொள்க.எ-டு : ‘வீற்றுவீற்றுக் கிடப்ப’ (புறநா. 35) – நேர்பு நேர்பு‘இறவுக்கலித்து’ (அகநா. 96) – நிரைபு நிரைபுபூண்டுகிடந்து – நேர்பு நிரைபு‘வசிந்துவாங்கு’ (முருகு. 106) – நிரைபு நேர்புஓங்குமலை, நாணுத்தளை – நேர்பு நிரைகளிற்றுக்கணம், (புறநா. 35) – நிரைபு நிரைஉவவுமதி (புறநா. 3) – நிரைபு நிரை(தொல். செய். 13, 14 நச்.)

ஆசிரிய உரிச்சீர் எட்டு

நேர்பும் நிரைபும் மயங்கிய நான்கும் (நேர்பு நேர்பு, நேர்புநிரைபு, நிரைபு நேர்பு, நிரைபு நிரைபு), நேர்பும் நிரைபும் நிரைஇறுதியாகிய இரண்டும் (நேர்பு நிரை, நிரைபு நிரை), தலைநிலை அளபெடைப்பின் நிரை வந்ததும் (நேஎர் நிரை), இறுதிநிலை அளபெடைப் பின் நிரைவந்ததும் (நிரைஇ நிரை) என ஆசிரிய உரிச்சீர் எட்டு வகைப்படும்.அவற்றுக்கு எடுத்துக்காட்டு வீடுபேறு, பாறுகுருகு, வரகு சோறு,முருட்டு மருது; நீடுகொடி, குளிறுபுலி; தூஉமணி, கெழுஉமணி என முறையேகாண்க. (யா.வி.பக். 447)

ஆசிரிய ஒத்தாழிசை

எனைத்துச் சீரானும் எவ்வகைத் தளையானும் ஒருவிகற்ப மாய் வந்து,ஒருபொருள்மேல் மூன்றடுக்கினவாய்ச் சமமான மூன்றடிகளான் வரும் பாடல்கள்ஆசிரிய ஒத்தாழிசை எனப்படும். (யா. கா. 75 உரை)எ-டு : ‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!’‘பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி!’‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி!’ (சிலம்பு. 17:1-3)என இவை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி இயற்சீர்ச் சிறப்புடையவெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை.இது நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க.77 உரை)

ஆசிரிய நிரைத்தளை

அஃதாவது நிரை ஒன்று ஆசிரியத்தளை; விளச்சீர் நின்றவழி, வரும் சீரின்முதலசை நிரையாக வந்து ஒன்றுவது.எ-டு : ‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்தியமணிதிக ழவிரொளி வரதனைப்பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’இதன்கண் முழுதும் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு.‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்விண்ணதிர் இமிழிசை முழங்கப்பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே’இதன்கண், ஒவ்வோரடியிலும் அமைந்த சீர்கள் பெரும் பான்மையும் தம்முள்ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு. (விசும்பின் விண்ணதிர்;முழங்கப் பண்ணமைந்; தவர்தேர் சென்ற; சென்ற வாறே – இவற்றிடை ஆசிரியநேர்த்தளையே வந்தன.) (யா. க. 19 உரை)

ஆசிரிய நிலைவிருத்தம்

கழிநெடிலடி நான்காய்ப் பெரும்பான்மையும் ஒரே விகற்ப மாய் அளவொத்துவருவது ஆசிரிய நிலைவிருத்தமாம்.‘துனைவருநீர் துடைப்பவளாய்த் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலைநீக்கிஇனவளைபோ லின்னலஞ்சோர்ந் திடருழப்பல் இகந்தவர்நாட் டில்லைபோலும்தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலந் தளையவிழ்க்குந் தருணவேனிற்பனிமலரின் பசுந்தாது பைம்பொழிலிற் பரப்பி வரும் பருவத்தென்றல்.’இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.இதனை நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் என்ப.(வீ. சோ. 122 உரை)அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டிலவிருத்தம் எனவும்,அடிமறியாகாது வருவனவற்றை ஆசிரிய நிலை விருத்தம் எனவும் வழங்குபஒருசார் ஆசிரியர்.(யா.வி. 77 உரை)எ-டு : ‘விடஞ்சூ ழரவின் இடைநுடங்க விறல்வாள் வீசி விரையார்வேங்கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கிவடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் நீல மலர்தாந்தாம்தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்கைத்தண்ணுமையே’இஃது அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய நிலைவிருத்தம். (யா. வி. பக். 286)

ஆசிரிய நேர்த்தளை

அஃதாவது நேர் ஒன்று ஆசிரியத்தளை; நிற்கும் மாச்சீரின் முன்னர்வருஞ்சீரின் முதலசை நேராக ஒன்றுவது.எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்திஆதி நாதற் சார்வோர்சோதி வானம் துன்னு வாரே’இதன்கண் முற்றும் ஒன்றிய சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளைபயின்றவாறு.‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங். தனிப். 2)என்ற அடியும் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நேர்த்தளை.(யா. க. 19 உரை)

ஆசிரிய நேர்த்துறை

நான்கடியாய் எனைத்துச்சீரானும் ஒரே விகற்பமாய் வரும்ஆசிரியத்துறையுள் ஓரடி மாத்திரம் குறைந்து வருவன ஆசிரியநேர்த்துறையாம்.எ-டு : ‘கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதி ராயின்அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி அகன்று போகநரையுரு மேறுநுங்கை வேலஞ்சும் நும்மைவரையர மங்கையர் வெளவுதல் அஞ்சுதும் வார லையோ’(யா. கா. 30 மேற்.)இஃது ஈற்றயலடி குறைந்து இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளை யாலும்சிறப்பில் வெண்டளையாலும் வந்த ஆசிரிய நேர்த்துறை. (யா. க. 76 உரை)ஆசிரிய நேர்த்துறை நேரிசை யாசிரியப்பாவின் இனம்.(யா. க. 77 உரை)

ஆசிரிய மண்டில விருத்தத்திற்கும்வெளிவிருத்தத்திற்குமிடையே வேறுபாடு

ஆசிரிய மண்டில விருத்தம் (1) காண்க.

ஆசிரிய மண்டில விருத்தம் (1)

கடிநெடிலடி நான்கு ஒத்துவரும் ஆசிரிய விருத்தத்துள், இறுதிச்சீர்வெளிவிருத்தமே போலத் தனிச்சீர் பெற்று வருவது. வெளிவிருத்தம் நெடிலடிநான்காய் இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும்; இது கழிநெடிலடி நான்காய்இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும். இவ்வளவே தம்முள் வேற்றுமை.எ-டு : ‘புரவுதரு குடியாகிப் புயல்வண்ணன் விரும்பியதூஉம்பொழில்சூழ் காஞ்சிகரியசுடர் வீதிதொறும் உலாப்போந்து கவர்வதூஉம்கலைசூழ் காஞ்சிநிரைவளையிவ் வுலகுய்ய நின்றுதவம் செய்வதூஉம் நிழல்சூழ்காஞ்சிசுரமகளிர் பாடுவதும் பயில்வதூஉம் சொன்மாலை தொடுத்தகாஞ்சி’இவ்வறுசீர் விருத்தம் அடிதோறும் இறுதிச்சீர் ‘காஞ்சி’ எனத்தனிச்சீராய் வந்தமையின், ஆசிரிய மண்டில விருத்தம் ஆம். (வீ. சோ. 122உரை)இனி, அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டில விருத்தம் என வழங்குபஒருசார் ஆசிரியர். (யாதோர் அடியை எடுத்து முதல்நடு இறுதியாகஉச்சரிப்பினும், ஓசையும் பொருளும் கெடாமல் வருவது.)எ-டு: ‘நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்;நீண்டதா ளாலாங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்;தலங்கா ரணமாகச் சங்குவாய் வைத்தான்;தாயலாள் வீயநஞ் சங்குவாய் வைத்தான்;துலங்காச்சீர்த் தானவரைத் துன்னத்தா னட்டான்;துன்னுவார்க் கின்னமிர்தம் தின்னத்தா னட்டான்;இலங்கா புரத்தார்தம் கோமானை எய்தான்;ஏத்தாதார் நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்.’இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் அடிமறியாய்க் கூறப் படுதலின்,அடிமறிமண்டில ஆசிரிய விருத்தம் ஆம். (யா. க. 77 உரை)

ஆசிரிய மண்டில விருத்தம் (2)

ஈற்றிலுள்ள சீர் மண்டலித்து ஏனைய அடிகளிலும் பொருந்தி வரும்ஆசிரியவிருத்தம்.எ-டு : ‘செங்கயலும் கருவிளையும் செருவேலும் பொருகணையும்செயிர்க்கும் நாட்டம்;பங்கயமும் இலவலரும் பனிமுருக்கும் பவழமுமே பழிக்கும்செவ்வாய்;பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும் புடைவீங்கல்குல்;கொங்கிவரும் கருங்கூந்தல் கொடியிடையாள் வனமுலையும் கூற்றம்கூற்றம்.இப்பாடலுள், ‘கூற்றம்’ என்ற சொல் மண்டலித்து நாட்டம் கூற்றம்,செவ்வாய் கூற்றம், அல்குல் கூற்றம் என வருதலின், இஃது ஆசிரிய மண்டிலவிருத்தம். இஃது அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க. 77உரை)

ஆசிரிய விருத்தத்துள் பிறதளை

‘வம்பலைத்த வனமுலையாள் முகமாய் வந்துமறுநீக்கி மறைந்திருந்தேற் கறிந்து தானும்’இவ் எண்சீர் ஆசிரியவிருத்த அடியுள், கலித்தளை 2,நேரொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை 2,நேரொன்றாசிரியத்தளை என முறையே ஆசிரியத்தளை யொடு பிறதளைகள்மயங்கியவாறு. (யா. க. 22 உரை)

ஆசிரிய விருத்தம்

ஆசிரியப்பா இனங்களுள் ஒன்று ஆசிரியவிருத்தம். கழி நெடிலடி நான்குஒத்துவருவது இது. இஃது ஆசிரிய நிலை விருத்தம் எனவும்படும். ஆசிரியமண்டில விருத்தம் என ஒருசார் ஆசிரியவிருத்தம் பெயர் பெறும். அது தனித்தலைப்பிற் காண்க. ஆசிரியவிருத்தம் எனினும் அகவல் விருத் தம் எனினும்ஒக்கும். (வீ. சோ. 122 உரை)

ஆசிரியஇனத்தின் விரி

தாழிசை, துறை, விருத்தம் எனத் தொகை மூன்று.ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத்தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரியஇணைக்குறள் துறை, ஆசிரிய நிலைவிருத்தம் ஆசிரிய மண்டில விருத்தம் எனவகை ஆறு.இவற்றைச் சிறப்புடைய ஏழுதளை, சிறப்பில்லாத ஏழுதளை இவற்றால் உறழ14 x 6 = 84 ஆம்.ஆகவே, ஆசிரியப்பா இனங்களின் விரி எண்பத்துநான்காம். (யா. க. 77 உரை)

ஆசிரியச் சீர்

அகவலுரிச்சீர்; அது காண்க.

ஆசிரியச்சுரிதகம்

அகவற்பாவாலாகிய சுரிதகம். இச்சுரிதக உறுப்பால் பெரும் பான்மையும்கலிப்பா முடியும்; சிறுபான்மை வெண்பாச் சுரிதகத்தால் முடிவனவும் உள.வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தானன்றி முடிவுறாது. ‘சுரிதகம்’காண்க.

ஆசிரியத்தளை

இயற்சீர் நான்கனுள் நேர் ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின்நேரசையோடு ஒன்றின் சிறப்புடைய நேரொன் றாசிரியத் தளை. நேர்ஈறு வருமொழிமூவசைச் சீரின் முதலில் உள்ள நேரசையோடு ஒன்றின் சிறப்பில்லாத நேரொன்றாசிரியத்தளை. நிரை ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின் முதலில் உள்ளநிரையசையோடு ஒன்றின் சிறப்புடைய நிரையொன்றாசிரியத்தளை. நிரைஈறுஇரண்டும் வருமொழி மூவசைச் சீரின் முதலில் உள்ள நிரையசையோடு ஒன்றின்சிறப்பில்லா நிரை ஒன்றாசிரியத்தளை.எ-டு : ‘ உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை ’ (ஐங். தனிப்.)‘ திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி’ (புறநா. 2)‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின் ’ (மலைபடு. 1)‘ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்’ (முதுமொழி. 1)என முறையே காண்க. (யா. க. 19 உரை)

ஆசிரியத்தளையால் வந்தவெண்டாழிசை

ஈரடிமுக்கால் என்னும் வெண்பாவின் இனமாகிய வெண் டாழிசை ஒருசாரனஆசிரியத்தளை விரவி ஒருபொருள்மேல் மூன்றடுக்காது ஒன்றேயாய் வருவது.வெண்பாஇனம் வெண்டாழிசை.எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்முன்பு நின்று முனிவ செய்யார்அன்பு வேண்டு பவர்’ (யா. கா. 28 மேற்.)இதன்கண், ‘நின்று முனிவ’ ‘வேண்டு பவர்’ என்னும் ஈரிடத் தன்றி, ஏனையஎட்டு இடத்தும் நேரொன்றாசிரியத் தளையே பயின்று வந்தவாறு.அவ்வீரிடத்தும் இயற்சீர் வெண்டளை விரவியது. (யா. க. 62 உரை)

ஆசிரியத்தாழிசை

எனைத்துச் சீரானும் எவ்வகைத் தளையானும், ஒரே விகற்பத் தினவாயமூன்று சமமான அடிகளால் வரும் ஆசிரியப்பா வினம். இவை ஒருபொருள்மேல்ஒன்றாயும் இரண்டாயும் மூன்றடுக்கிப் பொருள் வேறாயும் மூன்றின்மிக்கனவாயும் வரும்.எ-டு : ‘நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளிநிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவிவீடற்கும் தன்மையினான் விரைந்து சென்றுவிண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றிபாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்பகவன்தன் அடியிணையைப் பயிறும் நாமே.’இஃது ஒருபொருள்மேல் ஒன்றாய் எண்சீர்க் கழிநெடி லடியால் சிறப்புடையகலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை.இது நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க. 75 உரை.) (யா. வி.பக். 279)

ஆசிரியத்தாழிசை வகைகள்

ஆசிரியத்தாழிசை என்பது ஆசிரியப்பாவினத்துள் ஒன்று. அஃது ஆசிரியஒத்தாழிசை எனவும், ஆசிரியத் தாழிசை எனவும் இருவகைத்து என்பர் சிலர்.ஆசிரியத்தாழிசை என்னும் ஒன்றே அமையும் என்பர் பலர். (யா. க. 75உரை)

ஆசிரியத்தின் அடி அளவு

ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்குஎல்லை மூன்றடி. கூத்தராற்றுப்படை தலையள விற்கு எல்லை (583 அடி);பட்டினப்பாலை இடையளவிற்கு எல்லை (301 அடி) (தொ. செய். 157 நச்.)

ஆசிரியத்தின் ஐ ஈறு

ஏ, ஓ, ஈ, ஆய் (என்,) ஐ. என்பன. (சாமி. 157)

ஆசிரியத்திற்கு அடியும் தளையும்

ஆசிரியப்பாவில் நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட குறளடி சிந்தடி அளவடிநெடிலடி கழிநெடிலடி என்னும் ஐவகை அடிகளும் விரவப் பெறும். கட்டளைஅடிக்கண் தளை வழுவின் அது சீர்வகை அடி ஆகும்.ஆசிரியத்திற்கு இயற்சீர் 19; உரிச்சீர் 4; அசைச்சீர் 4. அசைச்சீர்இயற்சீரில் அடங்கும். ஆகவே, ஆசிரியத்துக்குச் சீர்கள் 23. இந்தஇருபத்து மூன்றும் தளையில் சில வழுவினும் 4 எழுத்து முதல் 20 எழுத்துமுடிய அமையும் ஓரடி என்ற வரையறை யைக் கடத்தல் இயலாது. ஆகவே சீர்வகைஅடிகள் 5 எழுத்து முதல் 20 எழுத்து முடிய ஓரடிக்கண் கொண்டு வரலாம்.(தொ. செய். 52, 53 நச்)

ஆசிரியத்திற்கு உரிய அடித்தொகை

இயற்சீர் பத்தும், தன்சீர் ஆறும் என ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்பதினாறாம். அவற்றுள், தன்சீர் ஆறும் (ஆசிரிய உரிச்சீர்) தளைவகுக்கப்படாமையின் கொள்ளப்படா; ஒழிந்த இயற்சீர் பத்தும்கொண்டு தளைவழங்கப்படும்.இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து, இரண் டெழுத்துச்சீரும் மூன்றெழுத்துச் சீரும் நான்கெழுத்துச் -சீரும் ஐந்தெழுத்துச்சீரும் என நான்கு நிலைமையவாம்.அவற்றுள், ஈரெழுத்துச் சீர் போதுபூ, போரேறு, பாதி, தேமா எனநான்காம். இவற்றுள், தேமாவும் பாதியும், சிறுமைஐந்தெழுத்தடியினின்றும் பெருமை பதினேழெழுத்தடி காறும் உரிமையாய்ப்பதின்மூன்று அடியும் ஒரோஒரு சீர் பெற, இரண்டுமாக இருபத்தாறு அடி;போதுபூ போரேறு என்னும் இரண்டும் ஆறெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்து பன்னீரடியும் ஒரோஒரு சீர் பெற, இரண்டுமாகஇருபத்து நான்கு அடியாம். ஆக, ஈரெழுத்து சீராமிடத்தே ஆசிரிய அடித்தொகைஐம்பது.இனி, மூவெழுத்துச் சீராவன பாதிரி, புளிமா, விறகுதீ, பேணுபூ,போராணு, பூமருது, கடியாறு என ஏழாம். இவற்றுள் பேணுபூ, விறகுதீ,கடியாறு என்னும் மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிகாறும்உயர்ந்த பன்னிரண்டடியும் பெற மூன்றுமாக முப்பத்தாறு அடி. எஞ்சியநான்கு சீரும் ஆறெழுத்தடி முதலாகப் பத்தொன்பதெழுத்தடிகாறும்பதின்மூன்றடியும் பெற, நான்குமாக ஐம்பத்திரண்டடியாம். ஆக மூவெழுத்துச்சீராம்வழி ஆசிரிய அடித்தொகை எண்பத்தெட்டு.இனி, நாலெழுத்துச்சீராவன ‘கணவிரி, பூமருவு, பெருநாணு, விரவுதீ,மழகளிறு’ என ஐந்தாம். இவற்றுள், ‘பூ மருவு’ ஏழெழுத்தடி முதலாகப்பத்தொன்பதெழுத்தடிகாறும் உயர்ந்த பதின்மூன்றடியும் பெற,பதின்மூன்றேயாம்; ஏனைய நான்கும் எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்பதெழுத்தடி காறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற நான்குமாகநாற்பத்தெட்டடியாம். ஆக, நான்கெழுத்துச் சீராம்வழி ஆசிரிய அடித்தொகைஅறுபத்தொன்று.இனி ஐந்தெழுத்துச் சீராவது ‘கலனளவு’ என்பது. அதுதான் ஒன்பதெழுத்துமுதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற,பன்னிரண்டேயாம்.இவ்வாற்றால் பத்து இயற்சீருள்ளும் ஆசிரிய அடித்தொகைஈரெழுத்துச்சீர் முதலாக ஐந்தெழுத்துச்சீர் ஈறாக ஆயின 211 ஆம்.(உரையுள் முற்றுகர வாய்பாட்டிற்குக் குற்றுகர வாய்பாடு பிழைபடவந்துள்ளவற்றை நீக்கி முறைப்பட எழுதப்பட்டுள் ளது.) (யா. வி. பக். 451- 461)

ஆசிரியத்தில் கலியடி விரவிவருதலுண்மை

‘ஆனாப் பெருமை அணங்குநனி யணங்கும்வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாதுமுருகவேள் உறையும் சாரல்அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே’என்னும் இந்நேரிசை ஆசிரியப்பாவின்கண் இரண்டாமடி கலியடியாக விரவிவந்தவாறு. (யா. க. 29 உரை)

ஆசிரியத்தில் சொற்சீரடியும்வருதலுண்மை

‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே;யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216)இவ்வாசிரியப் பாவுள் ‘அவரே,’ ‘யானே’ எனச் சொற் சீரடிகள் கூனாகவந்தன. (யா. க. 94 உரை)சீர் கூனாகக் கூறியவை சொற்சீரடியுள் அடங்கும்.(தொ. செய். 123 நச்.)

ஆசிரியத்துறை

ஆசிரியப்பாவின் இனம். ஈற்றயலடி குறைந்து நான்கடியாய் வருவனவும்,ஈற்றயலடி குறைந்து இடையந்தரத்து அடி மடக்காய் நான்கடியாய் வருவனவும்,இடையடி குறைந்து நான்கடியாய் வருவனவும் இடையிடை குறைந்து நான்கடி யாய்வருவனவும் ஆகிப் பெரும்பான்மையும் எண்சீர்காறும் எனைத்துச்சீரானும்ஒரே விகற்பமாய் அமைவன ஆசிரியத் துறையாம். முதலயலடி குறைந்தும், நடுஈரடி குறைந்தும், மிக்கும், வருவனவும் உள. இவற்றுள் ஓரடி குறைந்துவருவன ஆசிரிய நேர்த்துறை எனவும், ஈரடி குறைந்து வருவன ஆசிரியஇணைக்குறள் துறை எனவும் கூறப்படும். மிக்க சீரான் வரும் ஆசிரியத்துறைகளும் உள. (யா. க. 76 உரை)

ஆசிரியத்துறை நான்கு

சீர்வரையறையின்றி நான்கடியாய் வந்து ஈற்றயலடி குறைந்து வரலும்,ஈற்றயல் குறைந்து இடைமடக்கலும், முதலும் ஈற்றயலும் இடையிடை குறைந்துவருவனவும், இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும் என நால்வகைத்தாம்ஆசிரியத்துறை.எ-டு : ‘பனிக்காலம் எக்காலம் பட்டாற்றாய் என்றன்றோஇனிக்காதல் களித்துவப்ப இளவேனில் வாராதோ என்றனைநெஞ்சேஇனிக்காதல் களித்துவப்ப இளவேனில் வந்தகன்றுதுனிக்கால முதிர்வேனில் சுடச்சுடவந் துற்றதினி என்செய்வாய்நெஞ்சே’இஃது இடையடி இரண்டும் மடக்காய், முதலும் ஈற்றயலு மாகிய அடிகள்குறைந்துவந்த ஆசிரியத்துறை. (தொ. வி. 240)

ஆசிரியத்துறையுள் இடைமடக்கின் மூவகை

ஆசிரியத் துறையின் இடைமடக்கு, அடிமடக்கு சீர்மடக்கு அசை மடக்கு -என மூவகைப்படும்.எ-டு : ‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனாஅரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்செமென் செய்த திளவேனில்’என்ற பாடல் அடி மடக்கு (இரண்டாமடி மூன்றாமடியாய் மடங்கிற்று.)‘முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத்தொத்தலரும் கானல் துறையேம்துறைவழி வந்தெனது தொன்னலனும் நாணும்நிறைவளையும் வெளவி நினையானச் சேர்ப்பன்’இப்பாடற்கண், ‘துறை’ என்ற அசை இடைமடக்கியது. இதன் மூன்றாமடி‘துறையேம் வழிவந்தென் தொன்னலனும் நாணும்’ என வருமாயின், சீர் இடைமடக்காகும். (யா. க. 76 உரை)

ஆசிரியத்துள் இயற்சீர் வெள்ளடிவருதல்

இயற்சீர் வெள்ளடியையுடைய அடி முழுஅடியாக ஆசிரியப் பாவின்கண் இடம்பெறும்.எ-டு : ‘எறும்பி அளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்’ (குறுந். 12)என இயற்சீரானாகிய வெள்ளடி இவ்வாசிரியத்துள் முதலடி யாக முழுமையின்வந்தது.‘கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்தபுகர்முக யானை நுதல்மீ தழுத்தியசெங்கோற் கருங்கணை போலும் எனாஅதுநெஞ்சம் கவர்ந்தோள் நிரையிதழ்க் கண்ணே’என இவ்வாசிரியப்பா முழுதும் இயற்சீர் வெள்ளடி வந்ததெனக் கொண்டுஇதன்கண் அகவலோசை பிறக்கும் எனக் கொள்ளின், இயற்சீர் வெண்டளையான் வரும்கட்டளை வெண்பா இலதாகிவிடும். (தொ.செய். 62 நச்.)

ஆசிரியத்துள் இருசீரடி வருதல்

ஆசிரியத்துள் இருசீரடி பண்டைக்காலத்தே பெரும்பாலும்வருதலின்று.‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னேபெரியகட்பெறினேயாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே’ (புறநா. 235)என்ற ஆசிரியப்பாப் பகுதியில் இடைவந்த ‘பெரியகட் பெறினே’ என்பதுஇருசீரடியன்று; சொற்சீரடியாம்.‘உப்பிலாஅ அவிப்புழுக்கல்கைக்கொண்டு பிறக்குநோக்காதுஇழிபிறப்பினோன் ஈயப்பெற்றுநிலங்கல னாக விலங்குபலி மிசையும்இன்னா வைகல் வாரா முன்னே’ (புறநா. 363)என்ற பகுதியில் நிகழும் இரு சீரடிகள் யாவும் ஆசிரியப் பாவின் இடையேவந்த வஞ்சி அடிகள். ஆகவே, இருசீர் ஆசிரியஅடி ஆசிரியப்பாவுள் பண்டுவருதல் இன்று.(தொ. செய். 69 நச்.)இவற்றைக் குறளடியாக்கிப் பிற்காலத்தார் ‘இணைக்குறள் ஆசிரியப்பா’என்று ஆசிரியப்பாவகை ஒன்றற்குப் பெயரிட்டு, அதன்கண் இருசீர்ஆசிரியஅடியும் வரும் என்ப.

ஆசிரியத்துள் முச்சீரடி வருதல்

ஆசிரியப்பாவுள் ஈற்றயலடி யொன்றும் முச்சீரடியால் வருதல்பெரும்பான்மை. (பிற்காலத்தார் ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியத்தைநேரிசைஆசிரியம் எனப் பெயரிட்டு அதனுடன் இணைக்குறள், நிலைமண்டிலம்,அடிமறிமண்டி லம் என்ற மூவகையினையும் ஆசிரியப்பாவுட் கொண்டனர்.)‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ (குறுந். 3)என, ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீர்த்தாய் வந்தது.‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்சாரச் சார்ந்து தீரத் தீரும்சாரல் நாடன் கேண்மைசாரச் சாரச் சார்ந்துதீரத் தீரத் தீர்பொல் லாதே’என ஆசிரியப்பாவின் இடையே முச்சீரடிகள் இரண்டு இணைந்து வந்தன.‘சிறியகட் பெறினே’ என்ற புறப்பாடலுள் (235)‘நரந்தம் நாறும் தன்கையால்’ எனவும்,‘அருநிறத் தியங்கிய வேலே’ எனவும்முச்சீரடிகள் தனித்தும் வந்தன.இப்பாடற்கண் இரண்டாமடியாகிய ‘பெரியகட் பெறினே’ என்பதுஇருசீரடியன்று; சொற்சீரடியாம்.(தொல். செய். 68, 60 நச், பேரா.)

ஆசிரியப்பா இலக்கணம்

அகவலோசையோடு அளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும், அயற்சீர்விரவியும், தன்தளை தழுவியும், பிறதளை மயங்கி யும், நிரை நடுவாகியவஞ்சியுரிச்சீர் (கருவிளங்கனி, கூவிளங் கனி) வாராது, அயற்பா அடிமயங்கியும் மயங்காதும், ஐஞ்சீரடியால் அருகிவரும் என்றும் நாலெழுத்துமுதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ்நிலமும் பெற்றநாற்சீரடியால் நடைபெறும் என்றும் வேண்டப்பட்டது ஆசிரியப்பா. இப்பா ஏ,ஓ, ஈ, ஆய் என்று முடியும். ஏகார அசையால் முடிவது சிறப்பு (யா. க. 69)(யா. க. 70 உரை)

ஆசிரியப்பா, வெண்பா இவற்றில்முடுகியல் வருதல்

தனிப்பட்ட ஆசிரியப்பா வெண்பாக்களில் நாற்சீர் ஐஞ்சீர் அறுசீர்அடிகள் முடுகி வருதல் இல்லை. கலிக்கு உறுப்பாய் வரும் ஆசிரியம் வெண்பாஇவற்றில் முடுகியல் அடி வருதல் உண்டு.‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத்தகைமிகு தொகைவகை அறியும் சான்றவ ரினமாக’ (கலி. 39)என, கலிக்கு உறுப்பாகிய ஆசிரியச் சுரிதகத்தில் அறுசீரடியும்ஐஞ்சீரடியும் முடுகித் தொடர்ந்து வந்தன.‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன்எதிரெதிர் சென்றார் பலர்’ (கலி. 102)எனவும்,‘இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்கவரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன்கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும்வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்றுவெருவரு தூம மெடுப்ப வெகுண்டுதிரிதரும் கொல்களிறும் போன்ம்’ (கலி. 104)எனவும் இவை நாற்சீரடி முடுகியலொடு வந்த வெண்பா.இவ்வெண்பாவுள்,‘வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்று’ என்பது ஐஞ்சீரடி.‘மேனிலை மிடைகழி பிழிபுமேற் சென்றுவேனுதி புரைவிறல் திறனுதி மருப்பின் மாறஞ்சான்பானிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானைநோனாது குத்தும் இளங்காரித் தோற்றங்காண்பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்நீனிற வண்ணனும் போன்ம்’ (கலி. 104)என ஐஞ்சீரடி முடுகியலோடு ஒன்றாய் வந்த வெண்பா.‘மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇஎருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றிவருத்தினான் மன்றஇவ் வேறு’ (கலி 102)இஃது அறுசீரடி முடுகியலோடு ஒன்றாய்வந்த வெண்பா. (தொ. செய். 67நச்.)

ஆசிரியப்பாட்டின் அளவு

‘ஆசிரியத்தின் அடி அளவு’ காண்க.

ஆசிரியப்பாவின் அடி இயல்

மண்டிலம், குட்டம் என்ற இரண்டும் ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசைகெடாமல் அதன்கண் வரும். (ஈற்றயலடியும் நாற்சீராய் வருவது மண்டிலமாம்.குறளடி வஞ்சியும் சிந்தடி வஞ்சியும் இடையே விரவி வருதல் குட்டமாம்.)(தொ. செய். 117 நச்.)

ஆசிரியப்பாவின் இனங்கள்

ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன ஆசிரியப்பாஇனங்கள். (யா. க. 75- 77)

ஆசிரியப்பாவின் ஈறுகள்

ஆசிரியப்பாவின் ஈறுகளாக ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ, (ஆ) முதலாகப்பலவாம். வருமாறு :‘மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’ – ஏ குறுந். 138‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ – ஓ அகநா. 46‘செழுந்தே ரோட்டிய வென்றியொடு சென்றீ’ – ஈ‘உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்’ – ஆய் (ஐங். 21)‘புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்’ – என் (பெருங்- 1:54:145‘வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை’ – ஐ‘என்திறம் இகழல் கேட்டி மன்னா’ – ஆ (யா.க. 69 உரை)ஆசிரியப்பாவின் ஈறுகள் ஐந்து என்றே கூறும் சாமிநாதம் (157).

ஆசிரியப்பாவின் மறுபெயர்

அகவல் என்பது ஆசிரியப்பா ஆம். (யா. க. 69 உரை)

ஆசிரியப்பாவின் வகைகள்

நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறிமண்டிலம் என ஆசிரியப்பாநால்வகைத்து. வேற்றடி விரவிய ஆசிரியப்பா விரவியல் ஆசிரியம் எனவும்,வேற்றடி விரவாத ஆசிரியப்பா இன்னியல் ஆசிரியம் எனவும் கூறப்பெறும்.(யா. க. 69, 70 உரை)

ஆசிரியப்பாவில் பிற பா அடிகள்

1. ஈரசைச்சீராலாகிய வெண்பாஅடியும் வஞ்சியடியும் ஆசிரியஅடிகளொடுமயங்கி ஆசிரியப்பாவில் வரும்.எ-டு : ‘எறும்பி அளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை யேறி….நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே’ குறுந். 12என, முதலடியில் இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவில் வந்தது. (தொல்.செய். 62 நச்.)2. வெண்பா உரிச்சீரொடு விரவிவந்த இயற்சீர் வெள்ளடியும்ஆசிரியத்துள் வரப்பெறும்.எ-டு : ‘அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி……….தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே’ (யா.கா.39 மேற்.)என முதலடியில் வெண்சீர் விரவிய இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவில்வந்தது. (யா.க. 39 உரை)3. ‘இருங்கடல் தானையொடு பெருநிலங் கவைஇ……….உப்பிலாஅ அவிப்புழுக்கல்கைக்கொண்டு பிறக்குநோக்காதிழிபிறப்பினோ னீயப்பெற்றுநிலங்கல னாக விலங்குபலி மிசையும்…….முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே’ (புறநா. 363)என ஆசிரியப்பாவின் இடையே வஞ்சியடிகள் விரவிவந்தன. (அகத்திணைப்பொருளில் வரும் ஆசிரியப்பாவினகத்து வஞ்சியடி விரவி வரப்பெறாது.)(தொல். செய். 69 நச்.)4. ஆசிரியத்துள் கலியடி விரவி வருதலும் உண்டு.‘ஆனாப் பெருமை அணங்குநனி யணங்கும்வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாதுமுருகவேள் உறையும் சாரல்அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே’என, இரண்டாமடி ஆசிரியத்துள் கலியடி விரவி வந்தது.(யா. க. 29 உரை)5. ஆசிரியத்துள் அருகிச் சொற்சீரடியும் வரும்.‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே;யானே, தோடா ரெல்வளை நெகிழ ஏங்கிப்பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216)என ஆசிரியப்பாவுள் ‘அவரே’, ‘யானே’ என்னும் சொற் சீரடிகள் கூனாகவந்தன. (தொ. சொ. 49 நச்.)சீர் கூனாகக் கூறியவை சொற்சீரடியுள் அடங்கும்.(தொ. செய். 123 நச்.)

ஆசிரியப்பாவுக்கு முந்நூற்றிருபத்துநான்கு அடிகள் உரியவாதல்

ஆசிரியப்பாவிற்கு இயற்சீர் 19, உரிச்சீர் 4, அசைச்சீர் 4.ஆகச்சீர்கள் 27. அடிதோறும் நாற்சீர் வரும். நான்கு சீரிலும் உறழ்கின்றசீரினை அடிமுதற்கண் வைத்து அவ்வச்சீரின் அடியாக்கிப் பெயரும்கொடுத்து, நான்கெழுத்தடி முதல் பதினைந்தெழுத்தடி முடிய 12 அடியாகஒவ்வொன்றனையும் ஆக்கின், 27 x 12 = 324 ஆசிரிய அடிகள் உண்டாகும்.‘வண்டு வண்டு வண்டு வண்டு’ – 4 எழுத்தடி‘வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு’ – 15 எழுத்தடி5 எழுத்து முதலியவற்றான் ஆகிய 10 அடிகளும் (4 எழுத் தடிக்கும் 15எழுத்தடிக்கும்) இடையே அமைக்கப்படும்.இவ்வாறே எஞ்சிய 26 சீர்களையும் முதற்சீராக வைத்து ஒவ்வொன்றற்கும்12 அடிகள் வருமாறு காண்க.(தொல். செய். 50 நச்.)

ஆசிரியம் அரசர்குலம் ஆதல்

4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 நிலங்களையுடைய குறள், சிந்து,அளவு, நெடில், கழிநெடில் என்ற எல்லா அடிகளும் ஆசிரியப்பாவிற்குஉரியவாதல் உண்டு. எல்லாப் பொருள்மேலும் ஆசிரியம் வரும். எல்லா நிலமும்அடிப் படுத்தலும் எல்லாப் பொருள்மேலும் நண்ணுதலும் அரசர்க்கும் உரியன.ஆதலின் ஆசிரியம் அரசர்பா ஆகும். (யா. க. 74 உரை மேற்)

ஆசிரியம் அரசர்குலம் ஆதல்

4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 நிலங்களையுடைய குறள், சிந்து,அளவு, நெடில், கழிநெடில் என்ற எல்லா அடிகளும் ஆசிரியப்பாவிற்குஉரியவாதல் உண்டு. எல்லாப் பொருள்மேலும் ஆசிரியம் வரும். எல்லா நிலமும்அடிப் படுத்தலும் எல்லாப் பொருள்மேலும் நண்ணுதலும் அரசர்க் கும்உரியன. ஆதலின் ஆசிரியம் அரசர்பா ஆகும்.(யா. க. 74 உரை மேற்)

ஆசிரியம் ஆறுவகை

அகப்பா, புறப்பா, நூற்பா, உறுப்பினகவல், சித்திர அகவல், ஏந்திசை எனஆசிரியம் அறுவகைப்படும். (யா.க. 77 உரை)நேரிசை, நிலைமண்டிலம், இணைக்குறள், அடிமறி மண்டி லம், நூற்பா,மருட்பா என ஆசிரியம் ஆறுவகைப்படும். (சாமி. 158)

ஆசிரியம் கலி இவற்றுள் புகும் பத்துவஞ்சியுரிச்சீர்

வஞ்சியுரிச்சீர் அறுபதனுள் மா செல் சுரம், புலி செல் சுரம், மாசெல்காடு, புலி செல் காடு, மா செல் கடறு, புலி செல் கடறு, பாம்பு செல்வாய், பாம்பு படு வாய், களிறு செல் வாய், களிறு படு வாய் என்ற பத்துவஞ்சியுரிச்சீர்களே ஆசிரியத் துள்ளும் கலியுள்ளும் புகப்பெறும்.(யா.வி.பக். 452)

ஆசிரியம் முதலிய பாக்களிடை அடிவேற்றுமை ஆதல்

நாற்சீரடியுடைய ஆசிரியப்பாவின் ஈற்றயலடியே யன்றி இடையேயும்குறளடிவஞ்சியும் சிந்தடிவஞ்சியும் பொருந்தி வரும். ஆசிரியப்பா ஈற்றலடிமுச்சீரடியாதலே யன்றி, நாற் சீரும் நிரம்பிய அடியாய் வருதலுமுண்டு.இவை பெரும் பான்மை.வெண்பாவின் ஈற்றடியேயன்றி ஏனைய அடிகளுள் ஒன்று சிறுபான்மைமுச்சீரடியாக வருதல் அருகிக் காணப்படும். அவ்வாறே ஈற்றடியும் அருகிநாற்சீரடியாய் வருதலுமுண்டு.கலிப்பா துள்ளிவரும் ஓசைத்தாதலே யன்றித் தாழம்பட்ட ஓசையையுடையதாழிசைகள் ஒத்து மூன்றாய் வருதலும், தரவு ஈற்றடி ஒருசீர் குறைந்துவருதலும் உண்டு.ஈற்றயலடியும் நாற்சீர் பெற்ற ஆசிரியம் மண்டில ஆசிரியம் எனவும்,ஈற்றடி நாற்சீர் பெற்ற வெண்பா மண்டில வெண்பா எனவும் கூறப்படும்.ஈற்றயலடிகளில் ஒரு சீர் குறைந்த வெண்பா சவலை வெண்பா எனப்படும்.‘வளித்தலைஇய தீயும்தீமுரணிய நீருமென் றாஅங்கு’ (புறநா. 2)என ஆசிரியப்பா இடையே இருசீரடி முச்சீரடி வந்தன.‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ (குறுந். 18)என, ஆசிரியப்பாவின் ஈற்றயலடி நாற்சீர்த்தாயிற்று; மண்டிலஆசிரியம்.‘அட்டாலும் பால் சுவையில் குன்று தளவளாய்நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்குசுட்டாலும் வெண்மை தரும்’ (மூதுரை. 4)என, வெண்பாவின் இரண்டாமடி. முச்சீர்த்தாயிற்று; சவலை வெண்பா.‘அறையருவி ஆடாள் தினைப்புனமும் காவாள்பொறையுயர் தன்சிலம்பில் பூந்தழையும் கொய்யாள்உறைகவுள் வேழமொன் றுண்டென்றாள் அன்னைமறையறநீர் வாழிய மையிருங் குன்று’என வெண்பாவின் ஈற்றடி நாற்சீர்த்தாயிற்று; மண்டில வெண்பா.‘மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்…………………………………………………………………………………சொல்லர் சுடரும் கனங்குழைக் காதினர்நல்லவர் கொண்டார் மிடை.’ (கலி. 103)என கலிப்பாவின் தரவு ஈற்றடி முச்சீர்த்தாயிற்று.‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ’ (கலி.5)என, கலிப்பாவின் தாழிசை கலிக்குரிய துள்ளலோசையை விடுத்துத்தாழம்பட்ட ஓசையுடைத்தாய் வந்தது. இத் தாழிசை மூன்றடுக்கி வரும். (தொ.செய். 115-117 நச்.)

ஆசிரியம் முந்நூற்று முப்பத்தாறுஆதல்

நால்வகை ஆசிரியப்பாவினையும் ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை என்றமூவகை ஓசையோடும் உறழப் பன்னிரண் டாம். அவற்றை விரவியல், இன்னியல் என்றஇரண்டோடும் உறழ இருபத்துநான்காம். ஆசிரியப்பாவில் சிறப்புடைய ஏழுதளையும் சிறப்பில்லாத ஏழுதளையும் ஆகப் பதினான்கு தளையும் வருமாகவே,அவற்றால் அவ்விருபத்து நான்கு வகைகளையும் உறழ 24 x 14 = 336 வகை ஆகும்.(யா.க. 70 உரை)

ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பாஎன்ற முறை

பதினேழ் நிலத்தும் (நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடிய)வருதலானும், இனிய ஓசைத்தாகலானும், அடிப்பரப் பினானும் ஆசிரியப்பாமுற்கூறினார். அதன்பின், ஆசிரிய நடைத்தாகி, ஆசிரியத்தின் இறுதலின்,வஞ்சிப்பாக் கூறினார். இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஓசைத்தாகலான் வெண்பாஅதன்பின் கூறினார். அதன்பின், வெண்சீர் பயின்று வருத லானும் வெண்பாஉறுப்பாகி வருதலானும் கலிப்பாக் கூறினார். (தொ. செய். 101 இள.)

ஆசிரியம், வெண்பா இவற்றில் வரும்இயற்சீர்கள்

உரியசைகளாகிய நேர்பு நிரைபு என்ற இரண்டன் பின்னும் நேரசை நிற்பின்இயற்சீரின்பாற்படும். படவே நேர்பு நேர், நிரைபு நேர் என்பன இயற்சீரின்பாற்படுவனவாம். இவற்றின் வாய்பாடுகள் போதுபூ விறகுதீ என்பன.நேர் நிரை என்ற இயலசை இரண்டன் பின்னும் நேர்பு, நிரைபு என்ற உரியசைவரின் அவற்றானும் நேர் நேர்பு, நேர் நிரைபு, நிரை நேர்பு நிரை நிரைபுஎன்ற நான்கு சீர்கள் தோன்றும். இவற்றின் வாய்பாடுகள் முறையே போரேறு,பூமருது, கடியாறு, மழகளிறு என்பன.இவ்வாற்றான், உரியசையும் இயலசையும், இயலசையும் உரியசையும் என இவைமயங்கிய இயற்சீர் ஆறாம்.நேர், நிரை என்ற இயலசை தம்மொடு தாமும், தம்மொடு பிறவும்மயங்குகையில் நேர்நேர், நிரை நிரை, நேர் நிரை, நிரை நேர் என மயங்கி,முறையே தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்ற வாய்பாடுகளான்வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரிஎனவும் வழங்கப்பெறும். (தொ. செய். 13, 15, 16 பேரா. நச்.)இவ்வாற்றான் இயலசையால் வரும் இயற்சீர் நான்காம். இப்பத்துஇயற்சீர்களும், ஆசிரியம் வெண்பா இவற்றில் வருவன.

ஆசிரியர் தொல்காப்பியனார் ஒருமொழிஇலக்கணம் கூறாமை

தொல்காப்பியனார் விரிவஞ்சி ஒருமொழியிலக்கணம் கூறா ராயினார்.
பாணினியார் எட்டு அத்தியாயத்துள் விகுதிமாத்தி ரைக்கே மூன்று
அத்தியாயம் கூறி, விகுதிப்புணர்ச்சிக்கண் படும் செய்கை முதலியனவும்
வேறு கூறினார். அவற்றுள்ளும் அடங்காது எஞ்சி நின்ற சொற்களைப்
பின்னுள்ளோர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாகவே புணர்த்துச்
செய்கைசெய்து முடித்தனர்.
“இந்திரனுக்குப் பிரகற்பதி ‘இவை வழு, இவை வழுஇல்லன’ என வடசொற்களைத்
தனித்தனி எடுத்து ஓதலுற்றார்க்குத் தெய்வ யாண்டில் ஆயிரம் சென்றது;
சென்றும் சொற்கள் முடிந்தில” என்பது மாபாடியத்துள் கண்டது. தமிழ்மொழி
யும் அவ்வாறு பெருகிக் கிடத்தலின் எடுத்தோதப் புகின் முடிவு பெறாது
ஆதலின், சிலவற்றை எடுத்தோத்தானும் சிலவற்றை இலேசானும், சிலவற்றைப்
புறனடையானும் சிலவற்றை உத்திவகையானும் உணர்ந்து கொள்ளுமாறு தொகுத்துத்
தொல்காப்பியனார் நூல் செய்தார்.
நன்னூலார் பதவியலில் ஒருமொழியிலக்கணம் கூறினார்.
ஆயின், தொல்காப்பியனரால் புணர்க்கப்படாத சொற்களைப் பின்னுள்ளோர்
பிரித்து முடித்தல் முதல்நூலொடு மாறு கொளக் கூறலாம் என்பர்
நச்சினார்க்கினியர். (தொ. எ. 482 உரை)
‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் சிதைவுக்கு
எடுத்துக்காட்டுப் பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடல்
என்பர் பேராசிரியர். (தொ. பொ. 663 உரை)

ஆசிரியர் தொல்காப்பியனார் பத்தொன்பது என்பதற்குப் புணர்ச்சிவிதி கூறாமை

பதினொன்று முதல் பதினெட்டு ஈறாகிய எண்ணுப்பெயர் களுக்குப்
புணர்ச்சி விதி கூறிய தொல்காப்பியனார் பத்தொன் பது என்பதற்கு விதி
கூறவில்லை. பத்து என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் ஒன்பது என்பதன்
முதலெழுத்தாகிய உயிர் சார இடம் கொடுக்கும் இயல்பு புணர்ச்சியாதலின்
அதனைக் கூறிற்றிலர். இதனால் குற்றியலுகரம் கெடாது என்பதும், மெய்யீறு
போல் உயிர்ஏற இடம் கொடுக்கும் என்பதும் பெற்றாம். (எ. ஆ.பக்.
171.)

ஆசிரியவசனம் : பிற பெயர்கள்

ஆசிரியவசனம் எனினும், மேற்கோள் எனினும், பழஞ்சூத்திரத் தின் கோள்
எனினும் ஒக்கும். (நன். 9 சங்கர.)

ஆசு

ஆபரணங்கள் இடையே இணைப்புக்காகப் பொற்கொல்லர் வைத்துத் தீப்பட ஊதும்பற்றாசு ஆகிய உலோகத்துகள்.

ஆசு இடையிடுதல்

ஆசு – பற்றாசு; பொற்கொல்லர் அணிகளிடை இணைப்புக்கு வைத்தூதும்உலோகத்துகள். இஃது ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்குஇடையே இடப் பெறுவது. அதுபோல, முதற்குறட்பாவின் இறுதிச்சீர் இரண்டாமடியின் தனிச்சீராம் நான்காம் சீரோடு இணையாத நிலையில், அதனைஇணைப்பதற்கு, இடையே ஓரசையோ ஈரசையோ கூட்டி அம்மூன்றாம் சீரோடு இணைத்துநான்காம் சீரொடு தளை கொள்வர். மூன்றாம் சீரையும் நான்காம் சீரையும்இணைப்பதற்கு இடையே கூட்டப்படும் அசையோ, அசைகளோ ஆசு எனப்படும். (யா.கா. 24 உரை., யா.வி. பக். 243)இது போலவே, சீர் அமைப்புக்குப் பயன்பட்டு அடி எதுகை காணும்போதுகணக்கிடப்படாது விடப்படும் மெய்யெழுத் துக்களாகிய ய் ர் ல் ழ் என்னும்நான்கும். ‘ஆசு’ எனப்படும்.(யா. வி. பக். 150)

ஆசு எழுத்துக்கள்

முதலெழுத்தை அடுத்து இரண்டாமெழுத்தாகிய எதுகை யின் முன் அடிகளில்ய் ர் ல் ழ் என்னும் மெய்யெழுத்துக்கள் நிற்கும். அவற்றை நீக்கிவிட்டுஎதுகைத் தொடையை நோக்க வேண்டும். இடையே சொல்லிணைப்புக்காக வந்த அவ்வெழுத்துக்கள் ஆசெழுத்துக்கள் எனப்படும். ‘ஆசிடை எதுகை’ காண்க. (யா.க. 37 உரை)

ஆசு கவி

“இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருளாலே பாடுக,இவ்யாப்பாலே பாடுக, இவ் வலங்காரத்தாலே பாடுக” என்று ஒருவன் சொன்னஉள்ளுறைக்கு அவனெதிரே அப்பொழுதே பாடுவது. ஆசுகவி பாடும் புலவனும்ஆசுகவியாம். இவற்றில் இரண்டும் மூன்றும் அகப்படப் பாடுதல்சிறப்புடைத்து என்ப. மிக்க புலமைத் திறனோடு இறையருள் வாய்த்தவற்கேஇவ்வாறு பாடுதல் கூடுதலின், இக்கவி முதல்வகையாகக் கூறப்பட்டது.(வெண்பாப். செய். 2., இ.வி.பாட் 4)

ஆசெதுகை

ய், ர், ல், ழ் என்ற மெய்யெழுத்துக்களுள் ஒன்று அடியெது கையிடையேஆசாக வருவது. (யா. கா. 43 உரை)‘ஆசிடை எதுகை’ காண்க.

ஆடி

எழுத்து வகையால் இருப்பத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தத்துள் ஒன்று.அடிதோறும் பதினாறெழுத்தாக, கூவிளம் தேமா கருவிளம் புளிமா புளிமாங்காய்எனவரும் நெடிலடி முதலடியும் ஈற்றடியுமாக, நடுவடியிரண்டும் கூவிளம்தேமா கருவிளம் தேமா கருவிளங்காய் என நிகழும் செய்யுட்கண் இச்சந்தம்பயிலும்.எ-டு : ‘தேனுட னாடுஞ் சிலைபொழி மலினச் செயலாடஆனுட னாடுங் கவிரித ழாயத் தயில்விழியென்மானுட னாடும் மயிலன சாயல் மதர்விழியார்வானுட னாடும் மதிதரு துனிநோய் மதியாரோ’ (வீ. சோ. 139உரை)

ஆடூ மகடூ என்ற சொற்கள்

ஆடூ மகடூ என்பன முறையே உயர்திணை ஆண்பால் – பெண்பால் –
ஒருமைப்பெயர்களாம். இவை ஊகார ஈற்றுச் சொற்கள். இவை வருமொழியோடு
இணையுங்கால் இடையே எழுத்துப் பேறாகிய உகரம் பெறுதலுமுண்டு என்பர் உரை
யாசிரியன்மார்.
எ-டு : ஆடூஉக் குறியன், மகடூஉக் குறியள் -அல்வழிப் புணர்ச்சி;
ஆடூஉக்கை, மகடூஉக்கை – வேற்றுமைப் புணர்ச்சி (தொ. எ. 267 நச்).
இவை வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இன்சாரியை பெறுதலு முண்டு என்பர்
தொல்காப்பியனார். ஆடூஉவின்கை, மகடூஉவின் கை என வரும். (தொ.எ. 271
நச்.)
பொதுவாகத் தொல்காப்பியனார் உயர்திணைப் பெயர் களுக்கு இன்சாரியை
விதித்தாரல்லர். ஆடூ, மகடூ என்ற பெயர்களுக்கு இன்சாரியை
அமையாதாயினும், அவை சொல்லால் அஃறிணை போறலின் இன்சாரியை வருதல்
குற்றமில்லை எனப்பட்டது. (எ. ஆ. பக். 144).

ஆடூஉ வினை ஈறு

அன் ஆன் – என்பன இரண்டும் ஆடூஉவினை ஈறுகளாம்.எ-டு : உண்டனன், உண்டான். (தொ. சொ. 5 சேனா. உரை)

ஆடை நூல்

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக வந்தநூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டு உணரப்பட வேண்டுவது. (யா. வி. பக். 491)

ஆட்சியும் காரணமும் பற்றிய குறி

குறி – அடையாளம், இடப்படும் பெயர். ஆட்சி அச் சொல்லைப் பின்னர்
எடுத்துப் பயன்படுத்துதல்; காரணம் – அப்பொருளுக்கு அப்பெயர்
ஏற்பட்டதன் காரணமாம். ஆகவே, பின்னர்ச் சுருக்கமான பெயரால் எடுத்துக்
குறிப்பதற்கும், பெயரிடுவதற்குரிய காரணத்தை அறிவிப்பதற்கும் முன்னர்ப்
பெயரிடுவது ஆட்சியும் காரணமும் பற்றிய குறியாம்.
எ-டு : ‘ஒளகார இறுவாய்ப் – பன்னீரெழுத்தும் உயிரென மொழிப’ (தொ.
எ. 8 நச்.)
அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களுக்கும்
உயிர் என்ற பொதுப்பெயர், பின்னர்ப் புணர்ச்சி பற்றி இவற்றை உயிர் என்ற
பெயரான் எடுத்துக் கூறுவதற்கு எளிமையாக அமைதல் ஆட்சி பற்றிய குறியாம்.
பதினெட்டு மெய்களையும், அகரம் முதல் ஒளகாரம் ஈறாக உள்ள
பன்னீரெழுத்துக்களும், உடம்பினை உயிர் இயக்குதல் போல இயக்குதலின்,
அவற்றிற்கு உயிர் என்ற பொதுப்பெயர் வழங்குதல் காரணம் பற்றிய குறியாம்.
(தொ. எ. 8 நச். உரை)

ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை

ஆண் பெண் என்பன விரவுப்பெயராயினும், தனியே கூறிய வழிப் பெண்ணும்
ஆணும் பிள்ளையும் உயர்திணைக்கே உரியன. வாளாதே, பெண் வந்தது என்று
கூறியவழி அஃறிணைப்பொருள் என்பது உணரலாகாது. பெண்குரங்கு வந்தது என்று
விதந்தே கூறவேண்டும். பெண் பிறந்தது, ஆண் பிறந்தது, பிள்ளை பிறந்தது
என்று அடையடாது சொல்லிய வழி உயர்திணைக்கேயாம். ஆண் பெண் என்பன
உயர்திணைப் பெயர்களாயினும், அஃறிணைப் பெயர்கள் போலப் புணர்ச்சி விதி
பெறும் என்பது. (தொ. பொ. 624 பேரா.)
“ஆண் பெண் என்பன, ஆண் வந்தது, பெண் வந்தது என இரு திணைக்கண்ணும்
அஃறிணை முடிபே பெறுதலின், ‘அஃறிணை இயல்பின’ என்றார்” என்பர்
நச்சினார்க்கினியர். (தொ. எ. 303)

ஆணெழுத்து

உயிரெழுத்து. (பிங். 1358)

ஆண் என்ற பொதுபெயர்ப் புணர்ச்சி

ஆண் என்ற பொதுப்பெயர், அவ்வழி வேற்றுமை என்ற இருவழியிலும், வன்கணம்
வருமொழி முதலில் வரினும் இயல்பாகப் புணரும்.
எ-டு : ஆண் கடிது; ஆண்கை (தொ. எ. 303 நச்.)

ஆண் ஒழி மிகு சொல்

‘ஆண் ஒழி மிகு சொல்’ என்பதனைப் பெயரானும் தொழி லானும் உறழஇரண்டாம்; இவற்றை உயர்திணை அஃறிணை- யான் உறழ நான்காம். அவையாவன:உயர்திணை யிடத்துப் பெயரில் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்லும், தொழிலில்தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்லும் என இரண்டு வகைப் படும் என இரண்டுகாட்டியவழி, அஃறிணை மேலும் இவ் விரண்டும் வர நான்காம். அவை வருமாறு:பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் -என்றல், உயர்திணையிடத்துப் பெயரின் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல்.இன்று இச்சேரியார் தைந்நீராடுவர் – என்றல், உயர் திணை யிடத்துத்தொழிலின் தோன்றும் ஆண்ஒழி மிகுசொல். இவையிரண்டும் உயர்திணை எனக்கொள்க.நம்பி நூறு எருமை உடையன் – என்றல், அஃறிணையிடத்துப் பெயரின்தோன்றும் ஆண் ஒழி மிகுசொல்.இன்று இவ்வூரில் பெற்றம் எல்லாம் அறத்திற்குக் கறக்கும் – என்றல்,அஃறிணையிடத்துத் தொழிலின் தோன்றும் ஆண் ஒழி மிகு சொல். இவையிரண்டும்அஃறிணை எனக் கொள்க. (நேமி. மொழி. 12 உரை)

ஆண்பாற் பிள்ளைக்கவி

‘ஆண்பாற் பிள்ளைத்தமிழ்’ காண்க.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; சிவ பெருமான் நீங்கலானஆண்பாற்கடவுளரையோ ஆடவருள் மிக்காரையோ குழவியாகக் கருதி அதன்மேலேற்றிக்கூறும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி,சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் பத்தும்பருவத்திற்குப் பத்துப்பாடலாக ஆசிரியவிருத்தத்தாலும்சந்தவிருத்தத்தாலும் பாடப்பெறுவது இத்தொடர்நிலைச் செய்யுள். காப்புப்பருவத்துள் பத்துப்பாடல் மேலும் சில கூடப்பெறுதலும் உண்டு. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் ஓர் எடுத்துக்காட்டு. (இ. வி. பாட் 46,47)

ஆண்பாற் பிள்ளைப்பாட்டு

அஃதாவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ். தெய்வக்காப்புப் பருவம் இரண்டாம்திங்களிலும், செங்கீரை ஐந்தாம் திங்களிலும், தால் ஏழாம் திங்களிலும்,இன்னமுதூட்டல் எட்டாம் திங்களிலும், சப்பாணி ஒன்பதாந் திங்களிலும்,முத்தம் பத்தாம் திங்களிலும் வருகை ஓராண்டு நிறைவிலும், அம்புலிகாட்டல் பதினாறாம் திங்களிலும், சிறுபறைகொட் டல் இரண்டாம் ஆண்டிலும்,சிற்றில் சிதைத்தல் மூன்றாம் ஆண்டிலும், சிறுதேர் உருட்டல் நாலாம்ஆண்டிலும், இவ்வாறாகப் பன்னீராண்டுவரை பிள்ளைப்பாட்டுப் பாடப்பெறும்.(திவா. பக். 309)இதனைச் சிறிது வேறுபடக் கூறுதலுமுண்டு. (பிங். 1368)

ஆண்பாற்பெயர்ப்பகுபத முடிவு

அரசுத்தொழிலையுடையான் அரசன், வாணிகம் உடையான் வாணிகன்,
உழவையுடையான் உழவன், வேளாண்மை செய்வான் வேளாளன், கணக்கால்
முயன்றுண்பான் கணக்கன், குந்தத்தொழிலால் உண்பான் குந்தவன், வலையால்
முயன் றுண்பான் வலையன், உவச்சத்தொழிலால் முயன்றுண்பான் உவச்சன்,
தச்சுத் தொழிலால் முயன்றுண்பான் தச்சன், வண்ணாரத் தொழிலால்
முயன்றுண்பான் வண்ணான், கணவாளத் தொழிலால் முயன்றுண்பான் கணவாளன் –
என்று இவ்வாறே ஆண்பாற் பகுபதங்களெல்லாம் முடிக்கப் படும். (நன். 144
மயிலை.)

ஆண்பாலெழுத்து

அ இ உ எ ஒ என்னும் குற்றெழுத்து ஐந்தும் ஆம்.(இ. வி. பாட். 13)

ஆண்பால் படர்க்கை வினை

அன், ஆன் என்ற விகுதிகளையுடைய வினைமுற்று ஆண்பால் படர்க்கைவினையாம். நடந்தனன் நடந்தான், நடவாநின்றனன் நடவாநின்றான், நடப்பன்நடப்பான், குழையன் குழையான் – என வரும். ஆண்பால் பாகுபாடு உயர்திணைவினைக்கண் அன்றி அஃறிணை வினைக்கண் இன்மையின், ஆண்பால் வினை முற்றுஎனவே உயர்திணை ஆண்பால் வினைமுற்று என்பதே பொருள். (நன். 325 சங்.)

ஆண்பால் பெயர்

னகர ஈறாகி, கிளை எண் குழூஉ – முதலிய பொருளான் வரும் பெயர், திணைதேம் ஊர் வான் அகம் புறம் – முதலிய நிலத் தான் வரும் பெயர், யாண்டுஇருது மதி நாள் – முதலிய காலத் தான் வரும் பெயர், தோள் குழல் மார்புகண் காது – முதலிய உறுப்பான் வரும் பெயர், அளவு அறிவு ஒப்பு வடிவுநிறம் கதி சாதி குடி சிறப்பு – முதலிய பண்பான் வரும் பெயர், ஓதல் ஈதல்முதலிய பல வினையான் வரும் பெயர், (மேற்கூறிய பெயர் களை அடுத்து வரும்)சுட்டு வினா பிற மற்று – ஆகிய இடைச் சொற்களை முதலாகக் கொண்டு வரும்பெயர், நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல், இவையன்றி, வில்லிவாளி சென்னி – என்றல் தொடக்கத்து உயர்திணை ஆண் பாலைக் குறித்து வரும்பெயர்கள் எல்லாம் ஆண்பாற் பெயர்கள் ஆம். வருமாறு :தமன் நமன் நுமன் எமன்; ஒருவன்; அவையத்தான் அத்தி கோசத்தான்;பொன்னன் – பொருளான் வரு பெயர்.வெற்பன் மறவன் இடையன் ஊரன் சேர்ப்பன்; சோழியன் கொங்கன்; கருவூரான்மருவூரான்; வானத்தான் அகத்தான் புறத்தான்; மண்ணகத்தான் – இடத்தான் வருபெயர்.மூவாட்டையான், வேனிலான், தையான், ஆதிரையான், நெருநலான் – காலத்தான்வரு பெயர்.திணிதோளன், செங்குஞ்சியன், வரைமார்பன், செங்கண்ணன், குழைக்காதன்,குறுந்தாளன் – சினையான் வரு பெயர்.பெரியன் புலவன் பொன்னொப்பான் கூனன் கரியன் மானிட வன் பார்ப்பான்சேரன் ஆசிரியன்; நல்லன் தீயன் – குணத் தான் வருபெயர்.ஓதுவான் ஈவான் கணக்கன் – தொழிலான் வரு பெயர்.அவன் – எவன் யாவன் ஏவன் – பிறன் – மற்றையான் – சுட்டு முதலியநான்கானும் வரு பெயர். (நன். 276 சங்.)

ஆண்பால் பெயர் : இன்னன

‘இன்னன’ என்றதனானே, ஆண்மகன் ஏனாதி காவிதி எட்டி வில்லி வாளி குடுமிசென்னி கிள்ளி வழுதி செட்டி கொற் றந்தை சேய் ஏந்தல் செம்மல் அண்ணல்ஆண்டையான் ஆங்கணான் ஆயிடையான் – என்றாற்போல்வனவும் கொள்க. அந்தணன்முதலியன ஒரோவழிப் பாம்பு முதலியனவற் றையும் உணர்த்து மன்றே? அவ்வழிஅஃறிணைப் பெயரா மேனும், உயர்திணை ஆண்பால் உணர்த்துதல் பெரும்பான்மையாகலின் சாதிப்பெயராகக் கூறினார். (இ. வி. 177 உரை)‘இன்னன’ என்றமையால், வில்லி வாளி சக்கிரி வழுதி சென்னி கிள்ளி பாரி- என்றாற்போல உயர்திணை ஆண்பாற் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்க.(நன். 276 சங். இராமா.)

ஆண்பால் வினைமுற்று விகுதிகள்

அன் ஆன் என்பன படர்க்கை ஒருமை ஆண்பால் வினை முற்று விகுதிகளாம்.இவ்விரண்டும் முக்காலமும் எதிர்மறை யும் பற்றி வரும்.எ-டு : உண்டனன்; உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்;உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன்; உண்ணலன்;இவை அன்விகுதி பெற்று வந்தன.உண்டான் ; உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்;உண்ணாநின்றிலான், உண்கின்றி லான்; உண்பான், உண்குவான்;உண்ணான்.இவை ஆன் விகுதி பெற்று வந்தன.உண்டனன்அல்லன், உண்டான்அல்லன் – எனப் பிற வாய்பாட் டால் வரும்எதிர்மறையும் அறிக. (தொ. சொ. 207 நச். உரை)

ஆண்மரப்பெயர் பெறும் சாரியை

ஆண் என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அம்முச் சாரியை
பெற்று ஆணங்கோடு – ஆணநார் – என்றாற்போல முடியும். (தொ. எ. 304
நச்.)

ஆண்மை இளமை முதலிய எட்டும்இருதிணைக்கும் உரிய ஆதல்

ஆண்மை : ஆளும் தன்மை – ‘ஆயிடை, இருபே ராண்மைசெய்த பூசல்’ (குறுந். 43) என இருபாலையும் உணர்த் திற்று. ‘ஊரா ண் இயல்பினாள்’ (நாலடி. 384) என விகார மாயும் நிற்கும்.ஆண்மை : ஆண்பாலாம் தன்மை, ‘ ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்’ (சொ. 183) என உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுவாகியவிரவுப்பெயர்க் கண்ணும் வரும்.ஆண்மை : ஆள்வினை.இவ்வாண்மையும் பெண்மையும் உயர்திணை ஆண்பாலை யும் பெண்பாலையும்உணர்த்தா என்று கருதி,‘ஆண் பால் எல்லாம் ஆண்எனற்குரியபெண்பால் எல்லாம் பெண்எனற் குரிய’ (மர. 50)என அஃறிணைக்கே ஓதி, ‘ பெண்ணும் ஆணும் பிள்ளையும்அவையே’ (மர. 69) என்று கிளந்து கூறாவழி உயர்திணையை உணர்த்தும் என்றுமரபியலில் கூறினார்.இளமை : காமச் செவ்வி நிகழ்வதொரு காலம். ‘இளமை கழிந்த பின் றை வளமை, காமம் தருதலும்இன்றே’ (நற். 126) – என உயர்திணை இருபாலும் உணர்த்தும்.மூப்பு : ‘மூப்புடை முதுபதி’ (அகம். 7) என உயர்திணை இருபாலையும் உணர்த்திற்று. இளமையும்மூப்பும் பொருள்மேல் நில்லாது பண்பின்மேல் நிற்பின் அஃறிணையையும்உணர்த்தும்.விருந்து : ‘விருந்தெதிர் கோடலும்’ (சிலப். 16 : 73) என உயர் திணை இருபாலையும்உணர்த்திற்று. ‘ஆங்கவை விருந்தாற்றப்பகல்அல்கி’ (கலி. 66) என அஃறிணைக் கும் இது வரும்.பெண்மை : கட்புலன் ஆவதோர் அமைதித்தன்மை – பெண் பாலாம்தன்மை. ‘பெண்மை சுட்டிய எல்லாப்பெயரும்’ (சொ. 182) என விரவுப்பெயரைப் பகுத்தலின், இஃது இருதிணைக்கும்பொது.அரசு : ‘அரசுபடக் கடந்தட்டு’ (கலி. 105) என ஆண்பால் உணர்த்திற்று. ‘பெண்ணரசி ஏந்தினளே’ (சீவக. 736) என ஈறு வேறாயவழிப் பெண்பாலும் உணர்த் தும். ‘அரசுவா வீழ்ந்த களத்து’(கள. 35) என அஃறி ணைக்கும் வரும். குழவி, மக : ‘ குழவியும் மகவும் ஆயிரண்டுஅல்லவை, கிழவ அல்ல மக்கட் கண் ணே’ (மர. 23) என அஃறிணைக்கேயன்றி உயர்திணை இருபாற்கும் வரும். (தொ.சொ. 57 நச். உரை)

ஆண்மை சுட்டிய பெயர்

ஆண்மை சுட்டிய பெயர் என்பது இருதிணைக்கும் பொது வான விரவுப்பெயர்வகைகளுள் ஒன்று. ஆண்மை பற்றி வரும் பெயர் நான்கு. அவையாவன ஆண்மைஇயற்பெயர், ஆண்மைச் சினைப்பெயர், ஆண்மைச் சினைமுதற் பெயர், ஆண்மைமுறைப்பெயர் – என்பன. அவை அஃறிணை ஆண் ஒன்றற்கும் உயர்திணைஒருவனுக்கும் உரியன.எ-டு :நுந்தை வந்தது, நுந்தை வந்தான் – முறைப்பெயர். எந்தை உயர்திணைப்பெயராதலின் அஃறிணைக்கண்ணும் வந்து விரவுப் பெயர் ஆகாது. (தொ.சொ. 183 நச். உரை)

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி

ஆண்மையில் திரிந்து, பெண்மை நோக்கி நின்ற பெயர்ப் பொருளாம் பேடி.அது பேடிவந்தாள் – என வரும். சிறு பான்மை பேடி வந்தான் என ஆண்பாற்கும்ஏற்கும். (தொ. சொ. 12 இள. உரை)ஆண்மை திரிந்த பொருளைக் குறிக்கும் பேடி என்ற சொல் பெண்பால்வினைகொண்டு முடியுமன்றி ஆண்பால் வினை கொண்டு முடியாது.ஆண்மை திரிந்த பெயர் – பேடி பேடியர் பேடிமார் – என்பன.இவை பெண்பால் வினையும் பலர்பால் வினையும் கொண்டு முடியும் எனல்இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதி. (பேடி வந்தாள்; பேடியர், பேடிகள்,பேடிமார் வந்தார்) (தொ. சொ. 12 கல். உரை)உயர்திணையிடத்துப் பெண்மையைக் கருத வேண்டி ஆண்மைத்தன்மை நீங்கியபேடி என்ற பெயரான் சொல்லப் படும் பொருண்மை. இப்பெயர் ஆண்பாற்சொல்லான்சொல்லும் இடனில்லை, பெண்பாலானும் பலர்பாலானும் சொல்லுக என்றவாறு. பேடிவந்தாள், பேடியர் வந்தார் – என வரும். சிறுபான்மை பேடி வந்தான்என்பதும் ஆம். (தொ. சொ. 12 கல். உரை)இப்பெயர் பேடி என்பது. இது பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும்சிறுபான்மை பேடிவந்தான் எனவும் முடிவு பெறும். (தொ. சொ. 4, 12 ப.உரை)

ஆண்மை பெண்மை விரவுப்பெயர்கள்

ஆண்மைவிரவுப்பெயர் பெண்மை விரவுப் பெயர் ஒவ்வொன் றும் நந்நான்காம்,முதற்பெயரும் சினைப்பெயரும் சினை முதற் பெயரும் முறைப்பெயரும் பற்றிவருதலின்.எ-டு : அ) சாத்தன் வந்தான், வந்தது; மோவாய் எழுந்தான், எழுந்தது- (‘ முடங்குபுற இறவின் மோவாய்ஏற்றை’); முடவன் வந்தான், வந்தது; தந்தை வந்தான், வந்தது (தொ. சொ. 177தெய். உரை)ஆ) சாத்தி வந்தாள், வந்தது; முலை எழுந்தாள், எழுந்தது (பெருமுலைஎனப் பண்பு அடுத்து வருவதே பொருந்தும்); முடத்தி வந்தாள், வந்தது;தாய் வந்தாள், வந்தது. (தொ. சொ. 176 தெய். உரை)

ஆதாரம், ஆதேயம்

ஏழாம் வேற்றுமைப் பொருளான ஒன்றுக்கு இடமாயிருப் பது ஆதாரம். இஃதுஉருவாகவும் அருவாகவும் இருக்கும்.எ-டு : வடக்கண் வேங்கடம்எ ன்புழி, வடக்கு ஈண்டுஅரு.ஆதேயமாவது ஓரிடத்தில் இருப்பது (ஆதாரத்தில் இருப்பதுஆதேயமாம்).எ-டு : ‘நல்லார்கண் பட்ட வறுமை’ (குறள். 408) என்புழி, ஆதேயமாம் வறுமை அரு. (‘அதிகரண காரகபேதம்’ காண்க) (பி. வி. 13)

ஆதி மடக்கு

முதலடி முதல்மடக்கு, இரண்டாமடி முதல்மடக்கு, மூன்றாமடிமுதல்மடக்கு, நான்காமடி முதல்மடக்கு, முதலிரண்டடியும் முதல் மடக்கு,முதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்கு, முதலடியும் நான்காமடியும்முதல்மடக்கு, கடையிரண்டடியும் முதல்மடக்கு, இடையிரண்டடியும் முதல்மடக்கு, இரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்கு, ஈற்றடியொழித்துஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும்முதல்மடக்கு, ஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல்மடக்கு, முதலடிஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்கு, நாலடியும் முதல் முற்றுமடக்குஎன ஆதிமடக்கு பதினைந்து வகைப்படும். (மா. அ. 258 உரை)

ஆதி விருத்திசந்தி

ஒரு பதத்தினுள்ளே முன்னின்ற இகர ஈகார ஏகாரங்கள் ஐகாரமாகவும், உகர
ஊகார ஓகாரங்கள் ஒளகாரமாகவும், அகரம் ஆகாரமாகவும், ஏழாமுயிர் ஆர்
ஆகவும் திரிந்து வருதல் ஆதி விருத்திசந்தியாம்.
வருமாறு :
இ – சிவனைப் பணிவோன் :
சைவன்;
ஈ – வீரத்தின் தன்மை :
வைரம்;
ஏ – கேவலத் தன்மை :
கைவல் யம்;
உ – புத்தனைப் பணிவோன் :
பௌத்தன்;
ஊ – சூரன் தன்மை :
சௌரியம்;
ஓ – கோசலன் புத்திரி:
கௌசல்யை;
அ – தசரதன் புத்திரன் :
தாசரதி;
ரு – க்ருத்திகை
புத்திரன்:
கார்த்திகேயன் (தொ. வி. 38
உரை)

ஆதிப்புலவன்

தமிழில் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியத்தைத் தன் பெயரால் வழங்கியஅகத்தியனே ஆதிப்புலவன் எனப்படு வான்.

ஆதியொடு கடைமடக்கு

முதலொடு கடைமடக்குப் பின்வருமாறு பதினைந்தாகும்.முதலடி ஆதியொடு கடைமடக்குஇரண்டாமடி ஆதியொடு கடைமடக்குமூன்றாமடி ஆதியொடு கடைமடக்குநான்காமடி ஆதியொடு கடைமடக்குமுதலிரண்டடியும் ஆதியொடு கடைமடக்குமுதலடியும் மூன்றாமடியும் ஆதியொடு கடைமடக்குமுதலடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்குகடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்குஇடையிரண்டடியும் ஆதியொடு கடைமடக்குஇரண்டாமடியும் நான்காமடியும் ஆதியொடு கடைமடக்குமுதல் மூன்றடியும் ஆதியொடு கடைமடக்குமுதலடி ஒழிந்த ஏனைமூன்றடியும் ஆதியொடு கடைமடக்குஈற்றயலடி ஒழிந்த ஏனைமுன்றடியும் ஆதியொடு கடைமடக்குஇரண்டாமடி ஒழிந்த ஏனைமூன்றடியும் ஆதியொடு கடைமடக்குநான்கடியும் ஆதியொடு கடைமடக்கு- எனப் பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை)

ஆதியோடு இடைமடக்கு

முதலோடு இடைமடக்குப் பின் வருமாறு பதினைந்தாம்.முதலடி ஆதியோடு இடைமடக்குஇரண்டாமடி ஆதியோடு இடைமடக்குமூன்றாமடி ஆதியோடு இடைமடக்குநான்காமடி ஆதியோடு இடைமடக்குமுதலிரண்டடியும் ஆதியோடு இடைமடக்குமுதலடியும் மூன்றாமடியும் ஆதியோடு இடைமடக்குமுதலடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்குகடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்குஇடையிரண்டடியும் ஆதியோடு இடைமடக்குஇரண்டாமடியும் நான்காமடியும் ஆதியோடு இடைமடக்குமுதல் மூன்றடியும் ஆதியோடு இடைமடக்குமுதலடி ஒழிந்த ஏனைமூன்றடியும் ஆதியோடு இடைமடக்குஇரண்டாமடி ஒழிந்த ஏனைமூன்றடியும் ஆதியோடு இடைமடக்குஈற்றயலடி ஒழிந்த ஏனைமூன்றடியும் ஆதியோடு இடைமடக்குநான்கடியும் ஆதியோடு இடைமடக்கு- எனப்பதினைந்து ஆமாறு. (மா. அ. 258 உரை)

ஆதிவாயிலார்

ஆதிவாயிலார் என்னும் புலவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலைஇயற்றினார் என்ப. (சிலப். அடியார்க்குநல்லார் உரைப் பாயிரம்).அடியார்க்குநல்லார்தம் அரங்கேற்றுக் காதை யுரைக்கு இவ்விசைநூல்மேற்கோளாக உதவிற்று.

ஆதோரண மஞ்சரி

எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும் போந்த வீரனது சிறப்பினைவஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தம். (தொ. வி. 283 உரை)

ஆத்திரேயம்

வேதாங்கமாகிய கற்பத்தைப் பற்றிய ஒரு வடநூல். ‘போதா யனீயம்,பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும்’ (தொ. பொ.75 நச்.)

ஆத்திரையன் பேராசிரியன்

ஆத்திரைய கோத்திரத்திற் பிறந்த இவர் தொல்காப்பியம் முதலிய நூற்குப்பொருந்த பொதுப்பாயிரம் செய்த ஆசிரியர். (தொ. பொ. 653 பேரா.)இப்பொதுப் பாயிரத்தில் ஈவோன்தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன்தன்மை,கோடல்மரபு என்ற நான்கும் விரித் துரைக்கப்பட்டுள்ளன.இப்பொதுப்பாயிரத்துக்கு அரசஞ் சண்முகனார் தம் பேரறிவுடைமை தோன்றவிருத்தியுரை செய்துள்ளார்.

ஆனந்த ஓத்து

அகத்தியனார் இயற்றிய முத்தமிழ் நூலாகிய அகத்தியத்துள் இப்பெயருடையஇயல் ஒன்று உளதாகவும், அதன்கண் எழுத்தானந்தம் சொல்லானந்தம்பொருளானந்தம் யாப் பானந்தம் தூக்கானந்தம் தொடையானந்தம் ஆனந்தப்பை யுள்முதலிய குற்றங்கள் கூறப்பட்டுள்ளவாகவும் யாப்பருங் கல விருத்திகூறும். (யா. வி. பக். 45 முதலியன)இங்ஙனம் ஆனந்தஓத்து என்று இயலொன்று அகத்தியனா ரால்இயற்றப்பட்டதென்பது பொருந்தாக் கூற்று என்பது பேராசிரியர்,நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் கருத்து.(தொ. பொ. 312 பேரா.) (மலைபடு. 145 நச்.)

ஆனந்தக் களிப்பு

இது பல்லவியும் சரணம் பலவும் உடையது. பல்லவி, எதுகை ஒத்து அளவுஒவ்வா ஈரடிகளான் ஆனது. முதலடி முச்சீரும் தனிச் சொல்லும் பெற,இரண்டாமடி நாற்சீராகி ஓசை நீள்கிறது.பல்லவியும் முதற் சரணமும் ஒரே எதுகையாயின், பல்லவி யின் வடிவம்இரட்டித்துச் சரணத்தில் முச்சீர் நாற்சீர் இரட்டையாக அமைகிறது.சரணங்கள் சிந்துக்குரிய தொடை அமைதி பெற்றுப் பல்லவியினின்று சிறிதுமாறுபடுகின்றன. கடுவெளிச்சித்தரது ஆனந்தக்களிப்பு 34 சரணம்உடையது.பட்டினத்தாரின் முதல்வன் முறையீடு, பல்லவிப் பகுதியையும் வெண்டளைபெற்ற 72 கண்ணிகளையும் உடையது. நான்கு கண்ணிக்கு ஒருமுறை பல்லவிப்பகுதி பாடப்பெறல் வேண்டும்.கடுவெளிச்சித்தரது ஆனந்தக்களிப்புத் தனிப்பட்ட யாப் புடையது;பல்லவி அமைப்புடைய பகுதியும் 34 சரணமும் கொண்டு இயல்வது; பல்லவிஎதுகையுடைய அளவொத்து வாராத ஈரடியால் ஆனது; முதலடி முச்சீரும்தனிச்சொல் லும் பெற, இரண்டாமடி நாற்சீர் பெற்று ஓசை நீளுகிறது.பல்லவியும் முதற்சரணமும் ஒத்த எதுகை யுடையன. பல்லவி யின் வடிவம்இரட்டித்து முச்சீர்இரட்டை நாற்சீரிரட்டை யாகச் சரணம் அமைகிறது.சிந்துக் குரிய தொடைஅமைதி பெற்றவை சரணங்கள். அவை பல்லவியின் சிறிதுவேறுபடு கின்றன. சரணங்கள்தோறும் பல்லவி பாடப்பெற வேண்டி யுள்ளது.(இலக்கணத். முன் பக். 101, 102)

ஆனைமுகத்தானை ‘மும்மதத்தன்’ என்றல்

கழுத்திற்குமேலன்றி யானைஉறுப்பு இல்லாத கடவுள் விநாயகன்.
வேழமுகத்திற்கேற்ப அவனுக்கு இருமதமே உள என்றல் பொருந்தும். மற்று,
‘மும்மதத்தன்’ என்றது எவ்வாறு பொருந்துமெனின், பஞ்சாட்சரத்தின்
பேதமாகிய எட் டெழுத்து – ஆறெழுத்து – நாலெழுத்து – முதலாயினவும்
‘பஞ்சாட்சரம்’ என்றே கூறப்படுதலின், மும்மதத்தின் வகை யாகிய ஒருமதம்
இருமதங்களும் ‘மும்மதம்’ எனப்படுதல் பொருந்தும் என்பது. குற்றியலுகரம்
36 எனத் தொகை கொடுத் தமை, நெடிற்றொடர் முதலிய ஆறனையும் வன்மையூர்
உகரம் (கு சு டு து பு று என்னும்) ஆறனோடு உறழ்தலால் என்க. மயக்க விதி
இன்மையின் இடையின மெய்யினை டகார றகாரங்கள் ஊர்ந்த உகரம் தொடராது
ஆதலின், அவ்விரண் டனையும் விலக்கியே கணக்கிடல் வேண்டும். அவ்வாறு
விலக்காமை, ஆனைமுகத்துக் கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற் போன்ற
நியாயத்தின்பாற் பட்டது. (நன். 94 சங்கர.)

ஆன்ஈற்று உயர்திணைப் பெயர் விளிஏற்குமாறு

ஆன்ஈற்றுப் பெயர் பொதுவாக இயல்பின் விளியேற்கும்.எ-டு : சேரமான், மலையமான்தொழிற்பெயரும் பண்புப்பெயரும் ஆன் ‘ஆய்’ ஆகி விளியேற்கும்.எ-டு : வந்தான் – வந்தாய், சென்றான் – சென்றாய்;கரியான் – கரியாய், தீயான் – தீயாய்.அளபெடைப் பெயர்கள் மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய்விளியேற்கும்.எ-டு : உழாஅஅன், கிழாஅஅஅன்.தான் என்ற படர்க்கைப் பெயரும், யான் என்ற தன்மைப் பெயரும்விளியேலா. (தொ. சொ. 132-134 135, 137 சேனா. உரை)

ஆன்சாரியை வரும் இடங்கள்

ஒருபஃது இருபஃது…. எண்பஃது என்ற சொற்கள் உருபுக ளொடு
புணருமிடத்து, அச்சொற்களிலுள்ள ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை வர,
ஒருபான் இருபான்… எண்பான் – என நின்று உருபேற்று, ஒருபானை,
ஒருபானொடு ….. எண்பானை – எண்பானொடு – எனப் புணரும். ஒன்பது என்பதும்
ஒன்பான் என ஆன்சாரியை பெற்றுத் திரிந்து, ஒன்பானை – ஒன்பா னொடு என
உருபேற்றுப் புணரும்.
எ-டு : ‘ஒன்பான் முதனிலை’ – (தொ. எ. 463 நச்.)
‘ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே’ – (தொ. எ. 475) (தொ. எ. 199
நச்.)
இகர ஐகார ஈற்று நாட்பெயர், தம் முன்னர் வினைச்சொல் வரு மிடத்து
இடையே ஆன்சாரியை பெற்றுப் புணரும்.
எ-டு : பரணியாற் கொண்டான், சித்திரையாற் கொண் டான் (தொ. எ. 247,
286 நச்.)
மகரஈற்று நாட்பெயர் அத்துச் சாரியையோடு ஆன்சாரியை பெற்று
வருமொழியாக வரும் வினைச்சொல்லொடு புணரும்.
எ-டு : மகத்தாற் கொண்டான் (தொ. எ. 331 நச்.)
வினையெனவே, வினைப்பெயரும் அடங்கும்.
பரணியாற் கொண்டவன், சித்திரையாற் கொண்டவன், மகத்தாற் கொண்டவன் எனக்
கொள்க. இவை ஏழாம் வேற்றுமைப் பொருளன.

ஆன்சாரியை வேற்றுமைப்புணர்ச்சிக்கண் திரியுமாறு

நாட்பெயர்க்கு முன் வரும் ஆன்சாரியையின் னகரம், வரு மொழி
வினையாகவும் வினைப்பெயராகவும் வன்கணம் முதலெழுத்தாகவரின், றகரமாகத்
திரிந்து புணரும்.
எ-டு : பரணியாற் கொண்டான், சித்திரையாற் கொண் டான், மகத்தாற்
கொண்டான்
ஒருபாற்கு என உருபுபுணர்ச்சிக்கண்ணும், வன்கணம் வரின், ஆன்
சாரியையது னகரம் றகரமாகத் திரியும். (தொ. எ. 123, 124 நச்.)

ஆன்சாரியை, ஆன்உருபு இவற்றிடை வேறுபாடு

ஆன்சாரியை தோன்றியவிடத்து யாதானும் ஓர்உருபினை அஃது ஏற்கும்
ஆற்றலுடையது. எ-டு : ஒருபான் + ஐ = ஒரு பானை; ஒருபான் + கு =
ஒருபாற்கு. ஆன்உருபு தோன்றிய விடத்து அது வேறோர் உருபினை ஏலாது. எ-டு
: வாளான் வெட்டினான், வாணிகத்தான் ஆயினான். (தொ. எ. 119 நச். உரை)

ஆன்மாச்சிரயம்

இது ‘தன்னைப் பற்றுதல்’ என்னும் குற்றம்.
ஏனைய எழுத்துக்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் அகரம் தன்
தோற்றத்துக்கும் தானே காரணம் என்று கூறுதல் ஆன்மாச்சிரயமாம்.
காரணமும் காரியமும் ஒன்று என்று கொள்ளும் நிலையில் இக் குற்றம்
ஏற்படும். காரணம் முன்னரும் காரியம் பின்னரும் வருதலே முறை. இம்முறையை
விடுத்து இரண்டும் ஒன்றெனல் குற்றமாம். (சூ. வி. பக். 50).

ஆயன் சாத்தன் வந்தான் : முடிபு

ஆயன் சாத்தன் என்புழி, ஆயன் என்பதும் பெயர்; சாத்தன் என்பதும்பெயர். ஆயினும் இரண்டற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையின்,சாத்தன் என்பதும் வந்தான் என்பதும் ஆயன் என்பதற்கே பயனிலை. அதனால்சாத்தன் என்பது ஆண்டுப் பெயர்ப் பயனிலையாய் நின்றது.(எழுவாய் வேற்றுமை ஆயிற்று – என உரைப்பகுதி பிழைபட வுள்ளது.) (தொ.சொ. 66 இள. உரை.)

ஆயிடை : உடம்படுமெய் பெறாமை

‘இவ்வணி, ஆயிடை : உடம்படுமெய் பெறாமை’ காண்க.

ஆயியல்பு இன்று

அவ்வியல்பு என்பது செய்யுளின்கண் அகரச்சுட்டு நீண்டு யகர
உடம்படுமெய் பெற்று ஆயியல்பு என்று வரும். ஆயியல்பு இன்று – அந்த
இயற்கையைப் பெறாது; அஃதாவது அந்த ஈற்றுப் பொதுமுடிபைப் பெறாது
என்பது.
பூ என்ற ஊகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்
பொதுவாக அவ்வீற்றுச் சொற்களுக்குக் கூறப்படும் உகரப் பேறும்
வல்லெழுத்து மிகுதலும் பெறாது, வருமொழி முதல் வல்லெழுத்துக்கு இனமான
மெல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மை என்பது.
வருமாறு : பூ + கொடி = பூங்கொடி (தொ. எ. 268 நச்.)

ஆயிரம் அத்துப் பெறுதல்

ஆயிரம் தன்னைவிடக் குறைந்த அளவிற்றாகிய எண்ணுப் பெயர் தன்முன்
வருமிடத்தே, வழக்கமாகிய ஏ என்னும் சாரியை பெறாது, அத்துச்சாரியை
பெற்றுப் புணரும். சிறுபான்மை மகரம் கெட்டு வல்லெழுத்து
மிகுதலுமுண்டு.
வருமாறு : ஆயிரம் + ஒன்று
> ஆயிரம் + அத்து + ஒன்று =
ஆயிரத்தொன்று; ஆயிரம் + பத்து
> ஆயிரம் + அத்து + பத்து =
ஆயிரத்துப்பத்து; ஆயிரம் + பத்து
> ஆயிர + பத்து = ஆயிரப்பத்து
(தொ. எ. 317 நச்).

ஆயிரம் என்ற சொல்லமைப்பு

ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் தொல்காப்பியம், பத்துப் பாட்டு,
பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய தமிழ்
இலக்கணஇலக்கியங்களில் பயின்று வந்துள்ளது.
ஸகஸ்ரம் என்ற ஆரியச்சொல் சாசிரம் எனக் கன்னடத்தில் இன்றும்
வழங்குகிறது. ‘சாசிரம்’ ஆயிரம் எனத் திரிந்து அமைந்திருக்கலாம். (எ.
ஆ. பக். 153).

ஆயிருபாற் சொல்

அஃறிணைப்பொருண்மை, உயிர்ப்பொருள் – உயிரில் பொருள் – எனவும்,உயிர்ப்பொருட்கண் ஆண் பெண் எனவும், அவை யெல்லாம் பொருள்தோறும்ஒருமையும் பன்மையும் ஆகிய பாகுபடுமாயினும் அவையெல்லாம் ஒருமையாயின்வந்தது எனவும் பன்மையாயின் வந்தன எனவும் சொல்முடிவு நோக்கிவழங்கப்படுதலின், அஃறிணை ஒன்று – பல – என்னும் இரண்டு பகுப்பினைஉடையதாயிற்று.(தொ. சொ. 3 தெய். உரை)

ஆயுத நூல்

ஆடை நூல் போல், அறம்பொருளின்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின்சார்பாக அமைந்த வொருநூல். இதன்கண் கிடக்கும் மறைப்பொருள் உபதேசம்வல்லார்வாய்க் கேட்டுணரத் தக்கது. (யா. வி. பக். 491)

ஆயெண் கிளவி : முடிபு

‘அவ்வெண் கிளவி’ என்னும் அகரச்சுட்டு நீண்டு யகர உடம்படுமெய்பெற்றது. அவ்வெட்டுச் சொற்களும் என்பது பொருள். (தொ. சொ. 204நச்.)

ஆய் என்னும் ஈறு செய்யுளுள் திரிதல்

ஆய் என்னும் முன்னிலை வினையீறும் பெயரீறும் செய்யு ளுள் ஆ ‘ஓ’வாகத் திரியும்.எ-டு : வந்தாய் மன்ற – ‘வந்தோய் மன்ற’ அக. 80செப்பாதாய் – ‘செப்பாதோய்’ நற். 70. (தொ. சொ. 212, 195 சேனா. உரை)

ஆய் விகுதி வருமிடம்

ஆய் என்னும் முன்னிலைஒருமைவிகுதி மறையினும் ஏவலி னும் தொழிலினும்வரும். எ-டு : உண்ணாய், உண்டாய்.உண்ணாய் – உண்ணமாட்டாய் என்ற எதிர்மறையாகவும், நீ உண் என்னும்ஏவலாகவும் வரும். உண்டாய் என்பது முன்னிலை ஒருமை இறந்தகால முற்று.நட வா முதலிய ஏவல் வினைகள் ஆய்விகுதி குன்றி வருவன வாம். (தொ. சொ.217 தெய். உரை)

ஆய், ஓடி என்பனவற்றின் ஈறுகள்

ஆய் என்பது ஆதலைச் செய்து எனவும், ஓடி என்பது ஓடுதலைச் செய்துஎனவும் செய்து என்னும் வாய்பாட்டுப் பொருளவாய் நிற்றலின், ஆய் முதலியயகர ஈறுகளும் ஓடி முதலிய இகர ஈறுகளும் செய்து என்னும் வாய்பாட்டு உகரஈறுகளின் திரிபாகவே கொள்ளப்படும்.ஆய், ஓடி – என்பனவற்றின் எதிர்மறை, செய்து என்னும் வாய் பாட்டுஎதிர்மறையாக, ஆகாது – ஓடாது – என்பனவாகவே நிற்றலானும், அவை செய்துஎன்னும் வாய்பாட்டைச் சேர்ந்தன வேயாம். (தொ. சொ. 228 சேனா. உரை)

ஆய்த இறுதி

‘சுட்டுமுதலாகிய ஆய்த இறுதி’ – சுட்டினை முதலாக வுடைய அஃது இஃது
உஃது என்ற சொற்கள். ஆய்தம் ஈறாக எச்சொல்லிலும் வாராது. அஃது ஈற்றயல்
எழுத்தாகவே வந்துள்ளது. தொல்காப்பியனார் ஈற்றயல் எழுத்தையும் ஈறு
என்று குறிப்பிடும் வழக்கமுடையவர் என்பது பெறப்படும்.
எனவே, ‘ஆய்த இறுதி’ என்பது ஆய்த ஈற்றயல் சொல் என்னும் பொருளது.
(தொ. எ. 200, 422 நச்.)

ஆய்த எழுத்து அளபெடுத்தல்

நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும்
பொருள் குறித்தலையுடைய சொற்கள் ஆய்த வோசை மிக்கு நடக்கும். செய்யுளிசை
நிறைக்க ஆய்தம் அளபெடுத்தலுண்டு. சிலவிடங்களில் ஆய்தம் இசைநிறைக்
காகவே இடையே தோன்றி அளபெடுத்தலுமுண்டு.
வருமாறு :
‘கஃஃ றென்
னும் கல்லதர் அத்தம்’
– நிறம் பற்றியது.
‘சுஃஃ றெ
ன்னும் தண்தோட்டுப் பெண்ணை’- ஓசை
பற்றியது.
‘எஃஃ கிலங்கிய கையராய்
இன்னுயிர், வெஃஃகு வார்க்கில்லை
வீடு’ – இசை நிறைக்க ஆய்தம்
அளபெடுத்தது.
‘விலஃஃகு
வீங்கிருள் ஓட்டுமே மாதர்,
இலஃஃகு முத்தின் இன
ம்’ – இசை நிறைக்க ஆய்தம் தோன்றி
அள பெடுத்தது.
வெண்பாவில் தேமா என்ற ஈரசைச்சீரை உண்டாக்க எஃஃ, வெஃஃ என ஆய்தம்
அளபெடுத்தது. விலகு, இலகு என்பனவே சொல்லாயினும், அவை வருஞ்சீரொடு நேரே
இணையின் தளை பிழைக்கும் ஆதலின், விலஃகு என வரினும் அதே புளிமாவாய்த்
தளை தவறுதலின், விலஃஃகு என்று தோன்றிய ஆய்தத்தை அளபெடையாக்கப்
புளிமாங்காயாய் வரும் சீரொடு வெண்டளைக்கேற்ப ஒன்றும் என்பது. (தொ. எ.
40 நச்.)

ஆய்தக் குறுக்கம்

நிலைமொழி தனிக்குறிலை அடுத்த லகர ளகர ஈற்றுப் பெயர்களாக நிற்ப,
வருமொழி முதலில் தகரம் வரின், அல் வழிப்புணர்ச்சிக்கண்,
நிலைமொழியீற்று லகர ளகரங்கள் ஆய்தமாகத் திரியும். அவ்வாய்தம் தன்
அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாக ஒலிக்கும்
ஆய்தக்குறுக்கமாம்.
எ-டு : கல் + தீது = கஃறீது; முள் + தீது = முஃடீது (நன்.
97)

ஆய்தக்குறுக்கம் என ஒன்றில்லாமை

‘குறியதன்முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன்
மிசைத்தே’ (எ. 38) என ஒருமொழிக்கண் வரும் ஆய்தம் கூறி, ‘ஈறியல்
மருங்கினும் இசைமை தோன்றும்’ (39) என நிலைமொழியீறு வருமொழி முதலொடு
புணர்ந்து நடக்குமிடத்துக் கஃறீது – முஃடீது – எனத் தன் அரைமாத்
திரையே இசைக்கும் தன்மை தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியனார் அதனைப்
புணர்மொழிக்கண் வரும் ஆய்தமாகக் கூறினமையின், ஆய்தக்குறுக்கம் என
ஒன்று இன்று என்பது. (இ. வி. எழுத். 5 உரை)

ஆய்தத்தின் இடம் நெடுங்கணக்கில் ஆமாறு

சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகரஆகாரங்கள் போல அங்காந்து கூறும்
முயற்சியான் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பதாயினும்
எழுத்தியல் தழா ஓசைபோலக் கொள்ளலாகாது எழுத்தே யாகும் என்று
மெய்யெழுத்தின்பாற் படுத்துப் ‘புள்ளி’ என்று பெயர் வழங்கப்படுவது
ஆதலானும், உயிர்பன்னிரண்டும் மெய்பதினெட்டும் ஆகிய இவ்விரண்
டற்குமிடையே வைக்கப்பட்டது. (இ. வி. எழுத். 8 உரை)

ஆய்தத்தின் தோற்றம்

சார்பெழுத்தாகிய ஆய்தம், குற்றெழுத்தை அடுத்து உகர உயி ரெழுத்தை
யூர்ந்த வல்லினப் புள்ளி (யாகிய கு சு டு து பு று – என்ற
உயிர்மெய்யின்) முன்னர், சொல்லினிடையே வாய் திறந்து உரப்பிக் கூறும்
ஒலியால், மெய்யெழுத்துப் போன்ற இயல்பொடு தோன்றும். மாத்திரை வகையால்
மெய் யெழுத்தைப் போன்று ஒலிப்பினும், உயிரேற இடங் கொடா மல் தனித்து
நிற்கும் தன்மைத்து ஆய்தப் புள்ளி. (சுவாமி. எழுத். 18)

ஆய்தத்தின் பிறப்பிடம்

ஆய்த எழுத்து நெஞ்சின்கண் நிலைபெற்று ஒலிக்கும் ஓசை யானும்
அங்காந்து கூறும் முயற்சியானும் பிறக்கும். (இ. வி. எழுத். 13).

ஆய்தத்தின் பிறப்பு

ஆய்தம் சார்பெழுத்துள் ஒன்று ஆதலின், தனக்குமுன் நிற்கும்
வல்லெழுத்தோடு ஒத்து அது பிறக்குமிடத்தில் பிறக்கும். முதலிலுள்ள
குற்றெழுத்து ஆய்தத்துக்குச் சார்பாயினும், முன்நிற்கும்
வல்லெழுத்தின் பிறப்பிடமே ஆய்தத்துக்கும் பிறப்பிடமாக வரும். ஆய்தம்
தலையிடத்தில் பிறக்குமென இளம்பூரணரும் நன்னூலாரும் பிறப்பிடம்
கூறுவர். நச்சி னார்க்கினியரும் இ.வி. நூலாரும் ஆய்தத்துக்குப்
பிறப்பிடம் நெஞ்சு என்பர். ஆய்தம் தனக்கு முன்னுள்ள வல்லெழுத்துப்
பிறக்குமிடத்தே பிறந்து, அதன்ஒலியையே தனது ஒலிக்கும் அடிப்படையாகக்
கொண்டது. (முன் – இடமுன்)
எஃகு, கஃசு, அஃது, பஃது, பஃறி என்பன எக்கு, கச்சு, அத்து, பத்து,
பற்றி என்பன போல ஒலிக்கும்.
முட்டீது, முஃடீது, கற்றீது, கஃறீது என்பனவற்றின் ஆய்தம் டகரறகர
ஒலியை ஒட்டியமைவதால், டகர றகரங்கள் ஆய்தமாகத் திரியும் என்று
கூறப்பட்டன. எனவே ஆய்தம் தனக்கு முன்னுள்ள எழுத்தை நோக்க அறுவகை
ஒலிகளை யுடையது எனலாம். (எ. ஆ. பக். 84, 85).
பண்டைக் காலத்தில், ஆய்தம் என்பது ஓரிடத்தில் பிறவாது ஆறு
இடங்களில் பிறந்தது என்பதும், அக்காரணம் பற்றி அறுவகைப்பட்டது
என்பதும் வெளிப்படை. அவ்வாறே குற்றியலிகரமும் குற்றியலுகரமும்,
அவற்றின் பற்றுக் கோடாகிய வல்லினமெய் முதலியன பிறக்குமிடங்களில்
பிறந்து பலவகைப்பட்டன என்பதும் வெளிப்படை. இவற்றுள் முற்றியலிகரமும்
குற்றியலிகரமும் ஓரினம் அல்ல என்பதும் விளங்கும். எஃகு, கஃசு,
முஃடீது, இஃது, அஃபோகம், கஃறீது என்ற இடங்களில் ஆய்தத்தின் ஒலி
மாறுபட்டிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். இது முட்டீது என்றது
முஃடீது என்றேனும், கற்றீது என்றதும் கஃறீது என்றேனும் மாறலாம் என்று
கூறப்படுதலால் விளங்கும்.
சார்பெழுத்துக்களின் பிறப்பிடம் அவற்றிற்குச் சார்பான
எழுத்துக்களுக்கு அருகிலுள்ள அவற்றை ஒலிக்கத் தகுந்த இடமே யாகும். (எ.
கு. பக். 103 – 105).

ஆய்தத்தைக் குறிக்கும் பெயர்கள்

அஃகேனம் எனினும், தனிநிலை எனினும், ஆய்தம் எனினும் ஒக்கும். (மு.
வீ. எழுத். 28)

ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி

ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறு, வருமொழிக்கண் வன்கணம்
வரினும், அல்வழி வேற்றுமை என்ற ஈரிடத்தும் இயல்பாகப் புணரும்.
எ-டு : எஃகு கடிது, எஃகு பெரிது – அல்வழி (தொ. எ. 425 நச்.);
எஃகு கடுமை, எஃகு பெருமை – வேற்றுமை (413 நச்.)

ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகரம்

மொழியீற்றுக் குற்றியலுகரத்தின் அயலெழுத்து ஆய்தமா யின்,
அக்குற்றியலுகரம் ஆய்தத்தொடர்மொழிக் குற்றிய லுகரமாம்.
எ-டு : எஃகு, கஃசு
இக்குற்றியலுகரம் அல்வழிக்கண் இயல்பாகப் புணரும். வேற்றுமைக்கண்
இயல்பாயும், இன்சாரியை அடுத்து இயல்பாயும் புணரும்.
எ-டு : எஃகு கடிது, கஃசு தீர்ந்தது – அல்வழி; எஃகு கடுமை,
எஃகின் கடுமை – வேற்றுமை (நன். 181, 182)

ஆய்தப் புள்ளி

ஆய்தமான புள்ளி ஆய்தப்புள்ளி. ‘ஆய்தப்புள்ளி’ என்றார், இதனையும்
ஒற்றின்பால் சார்த்துதற்கு என்க. ஒற்றேல், உயிரேறப்பெறல்
வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிர் ஏறப்பெறாது என்க. (நன். 89
மயிலை.)

ஆய்தமும் ஒற்றும் அலகுபெறல்

ஆய்தஎழுத்தும் ஒற்றும் அளபெடை அல்லாத விடத்துத் தனித்துவரின் அலகுபெறா; ஓர் ஒற்று ஏனைய ஒற்றுக் களொடு சேர்ந்து வரினும் அலகுபெறாது.எ-டு : ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்வெஃஃகு வார்க்கில்லை வீடு’என ஆய்தம் அளபெடுத்தவழி அலகு பெற்றது.‘கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு’என ஒற்று அளபெடுத்தவழி அலகு பெற்றது.பாய்ந்து, பார்த்து, வாழ்ந்தனம்- என்பன ஈரொற்றடுத்த வழியும் அலகுபெறாமை காண்க.ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்தவழிக் குற்றெழுத்தின் பயத்த வாய் ஓரலகுபெறுவதல்லது, முன்னும் பின்னும் நின்ற எழுத்தினொடு புணர்ந்து நிரையசைஆகா.ஞணநமன வயலள என்னும் பத்து மெய்யும் ஆய்தமும் குறிற்கீழும்குறிலிணைக் கீழும் அளபெழும்.எ-டு : மண்ண்ணு, வரஃஃகு.மண், ண், ணு – நேர் நேர் நேர்வரஃ, ஃ, கு – நிரை நேர் நேர்இவ்வொற்றளபெடை செய்யுள்வழக்கினல்லது உலகு வழக்கில் வாராது. (யா. க.3 உரை)

ஆய்தமும் மெய்யாதல்

மெய்யெழுத்துக்குப் புள்ளி என்பதும் பெயர்; ஆய்தமும் புள்ளி
யெழுத்தாம். மெய்யின் மாத்திரை அரை; ஆய்தத்தின் மாத்திரையும் அரை.
மெய் புணரும் இயலைப் புள்ளி மயங் கியல் என்றே தொல். பெயரிட்டுள்ளார்.
ஆய்தத்தை அவர் ‘ஆய்தப் புள்ளி’ என்றே குறிப்பிடுகிறார். ஒருமெய்
மற்றொரு மெய்யாகத் திரியும் புணர்ச்சிக்கண், கல் + தீது = கஃறீது (தொ.
எ. 369. நச்.), முள் + தீது = முஃடீது (399) என்பன இடையே
கூறப்படுதலானும் ஆய்தம் மெய்யாகவே கொள்ளப்படும். (தொ. எ. 38, 39 நச்.
உரை)

ஆய்தம்

செய்யுட்கு உறுப்பாகிய பதினைந்து திறத்து எழுத்துக்களுள் ஒன்றாகி,‘முப்பாற்புள்ளி’ (தொ. எ. 1) எனப்படுவது. இது மொழிக்கண் இடையே வருவது.(யா. க. 2)வருமாறு : அஃகம், எஃகு.இது நெடுங்கணக்கினுள் உயிர்களை அடுத்து மெய்களின் முன்னர் இடையேஅமையும் எழுத்து. (வீ. சோ. 1)

ஆய்தம் : மறுபெயர்கள்

அஃகேனம், தனிநிலை, (முப்பாற்) புள்ளி, ஒற்று என்பன. (யா. கா.1)

ஆய்தம் அலகு பெறுதலும், பெறாமையும்

ஆய்தம் சில இடங்களில் உயிர்போல அலகு பெறும்.‘அற்றால் அளவறிந்து உண்க, அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கு மாறு’ (குறள் 943)‘அஃது’ என்பதன்கண் ஆய்தம் குற்றெழுத்துப் போல அகரத்தொடு கூடிநிரையசையாகியவழியே, தேமா முன் நிரையாய் இயற்சீர்வெண்டளை அமையும்.இத்தகைய இடங்களில் ஆய்தம் அலகுபெறும்.‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’ (குறள் 236)இக்குறட்பாவில் ஆய்தம் மெய்யெழுத்துப் போல அலகு பெறாதுஇயற்சீர்வெண்டளை அமைய உதவுகிறது.(நன். 60 சங்கர.)இங்ஙனம் ஆய்தம் அலகு பெறுதலும் பெறாமையும் உடை யதாய் அமைதலின்,மெய்எழுத்தொடு சேர்த்து எண்ணப் படாததாயிற்று. வீரசோழியம் உயிரையடுத்துமெய் முன்னர் ஆய்தத்தை நெடுங்கணக்கில் நிறுத்திய திறமும் இக்கருத்துப்பற்றியே போலும்.

ஆய்தம் இடையெழுந்து ஒலித்தல்

ஆய்தம் ஒருமொழிக்கண்ணும் (எஃகு), தொடர்மொழிக் கண்ணும் (அஃகடிய),
விதித்த முதலெழுத்துக்கள் இருமருங் கும் நின்றெழுப்ப, இருசிறகு எழுப்ப
எழும் உடலது போல, இடையெழுந்து ஒலிப்பதன்றி ஒருவாற்றானும் ஈறாய் வரும்
தன்மையது அன்று. ஆதலின், அஃகடிய முதலியவற்றின்கண் (வகரம்) திரிந்த
ஆய்தம், அஃகான் முதலியவற்றின்கண் தோன்றிய ஆய்தம் போலத் தொடர்மொழிக்கண்
இடையில் நிற்றலாகக் கொள்ளப்பட வேண்டுமன்றி, விதியீறாக வந்த தன்று.
இவ்வாறு அதன் உண்மை துணிந்து அதனை இறுதிக் கண் விலக்கி ஒற்றளபெடை 42
என்று ஆமாறு காண்க. (நன். 92 சங்கர.)

ஆய்தம் எட்டு ஆதல்

வல்லினவகையான் இயல்பாக வந்த ஆய்தம் ஆறு.
[எஃகு (அஃகான்), கஃசு, இருபஃது,
சுஃறென்னும்; ஏனைய டகர பகரங்கள் ஆய்தத்தைத் தொடர்ந்து வந்தனவாகக்
கஃடு, கஃபு – என எடுத்துக்காட்டுவர்
]; புணர்ச்சி விகாரத்தால் வந்த
ஆய்தம் ஒன்று (அவ் + கடிய = அஃகடிய); செய்யுள்விகாரத் தால் வந்த
ஆய்தம் ஒன்று (செய்வது எனற்பாலது செய்வஃது எனவிரியும்); ஆக
அரைமாத்திரையாக ஒலிக்கும் ஆய்தம் எட்டாம். (நன். 90
சங்கர.)

ஆய்தம் சார்பெழுத்தாதல்

கஃறீது முஃடீது என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனானும்
ஈண்டுப் ‘புள்ளி’ என்றதனானும் ஒற்றின் பாற்படுமேனும், உயிர் ஏறாது
ஓசைவிகாரமாய் இடம்பற்றி நிகழ்வதொன்றாகலின், ஆய்தம் சார்பெழுத்து என
ஒற்றின் வேறாயிற்று. (இ. வி. 17 உரை)

ஆய்தம் பற்றிய கருத்து

ஆய்தம் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்றாய் ஏனையவை போலப் புள்ளி
பெறும். இதன் தமிழ்ப்பெயர் அஃகேனம் என்பது. ஆய்தம் ஆச்ரிதம் என்பதன்
திரிபு. பழைய ஏடுகளில் ஆய்தமானது, : என இவ்வாறு இரண்டு புள்ளிகளோடு
எழுதப்பட்டது. ஒலியில் அது தன்முன் வரும் வல்லெழுத்தின் ஒலியைப்
பெறுகிறது. (முன் – இடமுன்) நெடுங்கணக்கில் ஆய்தம் உயிர்வரியின்
இறுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது வடமொழியிலுள்ள விஸர்க்கம் போல்வது.
வடமொழியில் விஸர்க்கம் ககர பகரங்கள் வருமிடத்து அவற்றின் ஒலி பெறும்.
“அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டு எழுதுப” என்று நச். கூறுவதால்,
அவர்காலத்தில் ஆய்தம் இரண்டு புள்ளி வடிவினதாகவே எழுதப்பட்டிருத்தல்
வேண்டும்.
ஆய்தத்துக்குத் தனியே ஒலியின்று. அஃது அடுத்து வரும் வல்லின
மெய்யின் ஒலிக்கு ஏற்பத்தானும் திரிந்தொலிக்கும். இக்காலத்தார்
ககரமெய்யை அடுத்த ஆய்த ஒலியையே ஏனைய வல்லெழுத்துக்களை அடுத்த
ஆய்தத்துக்கும் ஒலியாகக் கொண்டுள்ளனர். தன் சார்பின் பிறப்பொடு சிவணி
ஆய்தம் ஒலிக்கும் எனத் தொல்காப்பியனார் கூறலின், ஆய்தம் வல் லெழுத்து
ஆறனையும் அடுத்த எழுத்தாகக் கொண்டுவரும் அறுவகை இடங்களிலும் அவ்வொலியை
ஒட்டி அறுவகை ஒலித்தாகும். அடுத்த வல்லொலிக்கும் ஆய்த ஒலிக்கும் மிகக்
குறைந்த ஒலிவேறுபாடே இருத்தலின், முட்டீது, முஃடீது, கற்றீது கஃறீது
என்றாயினமை உளங்கொளத் தக்கது. (எ. ஆ. பக். 14, 84, 85)
ஆய்தம் நெடுங்கணக்கில் ஒளகாரத்துக்குப் பின்னரும் ககரமெய்க்கு
முன்னரும் இட்டு, முதலெழுத்துக்களை 31 என்று கணக்கிடும் வழக்கம்
வீரசோழிய காலத்தை ஒட்டி வந்தது. (எ. கு. பக். 5)
ஆய்தத்தை ஒலிக்கும்போது வாய் சிறிது திறந்தும் சிறிது மூடியும்
இருத்தலின், அதனை இடையெழுத்துப் போன்ற மெய் எனக் கூறல் தகும். (எ. கு.
பக். 48)

ஆய்தம் வருமாறு

‘அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்’ (குறள் 175)அஃகி, வெஃகி என்பன குறியதன் முன்னர் ஆய்தப்புள்ளி உயிரொடு கூடியவல்லெழுத்து மேலதாய் வருதற்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறுமொழியிடைக்கண் வருவதன்றி, இது முதற்கண்ணும் தனிமொழி இறுதிக்கண்ணும்இயல்பாக வாராது. (தொ. எ. 38 நச்.)

ஆரிடச் செய்யுள்

இருடியால் செய்யப்படுவது ஆரிடம். ஆக்கவும் கெடுக்கவும்ஆற்றலுடையராய் முக்காலத்துப் பண்பும் உணரவல்ல இருடிகள் பாடும்பாடல்கள் ஆரிடம் எனப்படும். அவை உலகியல் செய்யுள்களுக்கு ஓதியஉறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் வரும்.பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசு தேவனார்சிந்தம் முதலிய ஒருசார்ச் செய்யுளும் ஆரிடத்தின் பாற்படும்.பெருஞ்சித்திரனார் செய்யுளும் ஒளவையார் செய்யுளும் பத்தினிச்செய்யுளும் போல்வனவும், இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது பாடவும்சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூலபெருந்தலைச்சாத்தர் முதலியோர்தம் செய்யுளும் ஆரிடப் போலி எனவும் ஆரிடவாசகம் எனவும் கூறப்படும்.எ-டு : ‘கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத்தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார் – கிடங்கில்வளையாற் பொலிந்ததோள் வையெயிற்றுச் செவ்வாய்இளையாட்டி கண்ணொக்கு மென்று.’இஃது ஆரிடச் செய்யுள்; பொய்கையார் வாக்கு. நேரிசை வெண்பாவின்இரண்டாமடி நெடிலடியாய்த் தனிச்சீர் பெற்று வந்தது. (யா. க. 93உரை)

ஆரிடப் போலி

இருடிகள் அல்லாத ஏனையோராகிய, மனத்தது பாடவும் சாவவும் கெடவும்பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூல பெருந்தலைச்சாத்தர்இத்தொடக்கத்தோராலும், பெருஞ் சித்திரனார் ஒளவையார் பத்தினிஇத்தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுள் போலச் சீர் மிகவும் குறையவும்பாடப் படுவன ஆரிடப் போலிச் செய்யுளாம்.எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுலங்கஒண்செங் குருதியுள் ஓஒ கிடந்ததே – கெண்டிக்கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்அழுதகண் ணீர்துடைத்த கை.’இது பத்தினிச் செய்யுள். இந்நேரிசை வெண்பா, இரண்டா மடிநெடிலடியாய்த் தனிச்சீர் பெற்று வந்தது.அறிவுடை நம்பியார் செய்த ‘சிந்தம்’, தனிச்சொல் இல்லாவஞ்சிப்பாவாய், அதற்கு உரித்தல்லாத செவியறிவுறூஉப் பொருண்மைத்தாய்வருதலின் ‘உறுப்பழி செய்யுள்’ எனப்படும்; ஆரிடப் போலி ஆகாது. (யா. க.93 உரை)

ஆரிய படலம்

முதல்நூலால் பெயர் பெற்றதாகிய ஒரு பண்டைய நூல் இது.(நன். 49 மயிலை.)

ஆரியம் ‘திசைச்சொல்’ ஆகாமை

ஆரியச்சொல் ஒரு நிலத்திற்கே உரித்தன்றிப் பதினெண் நிலத்திற்கும்விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய் வருதலின் திசைச்சொல்லுள்அடங்காமையின் வேறு கூறி னார். அற்றேல் வடசொல் என்றது என்னையெனில்,ஆண்டு வழக்குப் பயிற்சி நோக்கி என்க. (இ. வி. 175 உரை)

ஆரியை விருத்தம்

ஆரியா விருத்தம் எனப்படும் ஆரியையும், வைதாளீயம் எனப்படும்வைதாளியையும் மாத்திரைக் கணங்களால் அமையும் விருத்தங்கள். (வீ. சோ.139 உரை)ஆரியைக்கு இலக்கணம் வருமாறு :ஆரியைக்கண் பாதம் நான்கெனக் கொள்வோரும், “பாதங்கள் இல்லை; இரண்டுபாகங்களான முன் அரை (பூர்வார்த்தம்) பின் அரை (உத்தரார்த்தம்) எனஇவையே உள” என்பாரும் என வடமொழியாப்பு நூலார் இருதிறத்தர். தமிழில்வீரசோழிய உரை இரண்டு பாகமெனக் கொண்டே இலக்கணம் கூறும்.மாத்திரை 4 கொண்ட 7 கணங்களும் இறுதியில் ஒரு குருவும் கொண்டு 30மாத்திரைகளில் அமைந்த இரு பாகங்களைப் பெற்று வருவது ஆரியை எனப்படும்.இவற்றுள் ஒற்றைப் படையான 1, 3, 5, 7 என்ற கணங்கள் நடுவில் குருஉடைய‘ஜகணம்’ ஆதல் கூடாது. ஆறாவது கணம் நான்கும் லகுவான கணமோ, இடைக்குருவானஜகணமோ ஆகலாம். பின் அரையில், அஃதாவது இரண்டாம் பாகத்தில் ஒரே லகுவுடையகணமாயிருத்தலும் கூடும்.வீரசோழிய உரை கூறும் ஆரியை மூன்றுவகையெனத் தெளியலாம்.1. மாத்திரைக் கணங்கள் ஏழும் ஈற்றில் ஒரு குருவும் பெற்று, இரண்டாமடியில், ஆறாவது கணம் ஒரு தனி லகு மாத்திரமே வந்த ஆரியை.எ-டு : ‘அம்பொற் கயிலைக் கிறைவாஆகம் பெறாத நோதக வதனாலேவெம்பித் திரிமதி மேவும்பார்வதி யாளா விகாவா யால்.’முதற்பகுதியில் ஆறாவது கணம் நான்கு லகுக்களால் வந்த ஆரியை.எ-டு : ‘இசைமிகு மொழியா ரனையேஅசைவுறு மனமொழி மதுமொழி யாரனையேநசைவுற நீபே துறலேபசையொடு சேருக வாழிய பேதுறலே’3. இரண்டாம் பாதியில் ஆறாவதுகணம் இடைக்குருவான ஜகணமாய் வரும்ஆரியை.எ-டு : ‘அனுபம பண்டித சோழமனுவவ னாகுல மொழிவள வாவருளேஎனவரு வரதா மிகவேஅனவர தமுமுனது தோகை பேதுறுமால்’செய்யுளில் நிறுத்துமிடமே பாதமெனக் கொள்ளும் வகையில், மேலேகாட்டப்பெற்ற மூன்று ஆரியை விருத்தச் செய்யுளுள்ளும், முதற்பாதமும்மூன்றாம் பாதமும் 12 மாத்திரையில் நின்று இறுவதையும், இரண்டாம்பாதமும் நான்காம்பாதமும் நந்நாள் கோணமாய் இறுதி இருபெற்று இறுவதையும்காணலாம்.இனி இந்த ஆரிய விருத்தம் இன்னும் வேறுபல வகையானும் வருவதுண்டு.(வீ. சோ. 139 உரை)

ஆர் என்னும் இடைச்சொல் இயற்கை

ஆர் என்பது பலர்பால் வினைமுற்று இறுதிநிலையாக வரும்; இயற்பெயர்உயர்திணைப் பெயர்களின் முன்னர் உயர்த்துதற் பொருட்டாய் நிகழும்.எ-டு : சாத்தன், நரி – சாத்தனார், நரியார் :இயற்பெயர்; தொண்டன் – தொண்டனார் : உயர்திணைப் பெயர்; வந்தார் -பலர்பால் வினைமுற்று விகுதி.உம்மையின் பின்னரும் உம் ஈற்றின் பின்னரும் இவ் விடைச் சொல்அசைநிலையாக வரும்.எ-டு : ‘பெயரி னாகிய தொகையுமார் உளவே’ (சொ. 67) -உம்மைப் பின் ‘ஆர்’ அசைநிலை.‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எ-டு) – உம் ஈற்றின் பின்‘ஆர்’ அசைநிலை.ஆர் என்னும் இடைச்சொல்லை ஏற்ற பெயர் பலர்பால் வினையையே கொண்டுமுடியும். சாத்தனார் வந்தார், தொண்டனார் வந்தார் – எனக் காண்க. (தொ.சொ. 270, 271 சேனா. உரை)

ஆர்த்த தாதுகம்

இது வடமொழியில் வினைச்சொற்களின் வகைகளான ஸார்வ தாதுகம் ஆர்த்ததாதுகம் – என்னும் இரண்டனுள் ஒன்று. முதலாவதான ஸார்வ தாதுகம் என்பதில்லட் என்ற நிகழ்கால வினைமுற்றுக்களும், பெரும்பாலும் விதிக்கும்பொருளில் வரும் லோட் – லிங் – என்ற முற்றுக்களும், இறந்த கால வினைமுற்றான லங் என்பதும், நிகழ்காலப் பெயரெச்சம் போன்ற சில எச்சமும்அடங்கும். மற்ற அனைத்துமே ஆர்த்த தாதுகம் ஆம். தமிழ்மரபில், செய்து -செய – என்னும் வாய் பாட்டு வினை யெச்சங்கள் ஆர்த்த தாதுகம் எனக் கொள்ளலாகும். (பி. வி. 38)

ஆர்த்தி

தண்டியாசிரியர் உவமஉருபுகளைச் சார்த்தி (ஸார்த்தி) – ஒப்புள்ளபொருள் வகையாலே ஆவன என்றும், ஆர்த்தி – ஒப்பில் வழியால் பொருள்படுவனஎன்றும் இருவகையாகக் கூறுவர். அவற்றுள் ஒப்பு உள்வழியால் வருவன : போல,ஒப்ப – என்பன; இவை சார்த்தி. ஆர்த்தி என்பன: அன்ன, மான, உறழ -போல்வனவாம். (பி. வி. 6)

ஆர்ப்புப் பற்றிய சொற்கள்

கம்பலை என்றும், சும்மை என்றும், கலி என்றும், அழுங்கல் என்றும்,ஆர்ப்பு என்றும் இவை அரவப் பெயராம்.வரலாறு : ஊர் கம்பலை யுடைத்து, ‘ தள்ளாத சும்மை மிகும்’, (சீவக. 20) மன்றார் கலிக் க ச்சி; ‘அழுங்கல் மூதூர்’(அக. 122), ‘ஆர்ப்புடை மூதூ ர்’ இவை அரவப் பொருள. (நேமி. உரி. 2 உரை)

ஆறன் உடைமைப் பொருளுக்கு இரண்டாவதுவிரியுமாறு

வனைந்தான் என்னும் தெரிநிலை முற்றுச்சொல் செய்தான் என்னும்காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும் உள்ளடக்கி வினைமுதலோடுஅமைந்துமாறி நின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள்முதலிய ஏழனையும் விரித்து நிற்குமாறு போல, உடையன் என்னும்வினைக்குறிப்பு முற்றுச்சொல்லும் உடையனாய் இருந்தான் என்றுவிரிந்துழி, உணரப்படும் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டனையும்உள்ளடக்கி வினைமுத லோடு அமைந்துமாறி நின்று அவாய்நிலை தோன்றியகாலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழனையும் விரித்து நிற்கும் ஆதலின்,உடையன் என்பதனுள் அடங்கி நின்ற செயப்படு பொருளுக்குக் ‘குழையை’ எனஉருபு விரித்தல் அதற்கு இயல்பு என்று உணர்க. (தொ. சொ. 215 நச்.உரை)

ஆறன் உருபிற்கும் பெயர்க்கும்வேற்றுமை

பெயர்கள் வேற்றுமையை ஏற்கும்; அவையேயன்றி ஆற னுருபும் அவ்வுருபுகளைஏற்கும். அஃதேல், பெயரோடு இதற்கு வேற்றுமை யாதோ எனின், உருபுஏற்புழியும் தன் இரு கிழமைப் பொருளினும் திரியாது நிற்றலாம்.(சாத்தனது – சாத்தனதை – சாத்தனதால் – சாத்தனதற்கு – சாத்தனதனின் -சாத்தன தனது – சாத்தனதன்கண் – என வரும்.) (நன். 292 மயிலை.)

ஆறன்உருபின் அகரம் கெடும் இடமும் கெடாத இடமும்

யான் – யாம் – நாம் – தான் – தாம் – நீ – என்பன நெடுமுதல்
குறுகி, என் – எம் – நம் – தன் – தம் – நின் – என்றாகி, அகரச்சாரியை
பெற்று, என – எம – நம – தன – தம – நின என்றாயவழி (தொ. எ. 161 நச்.),
வருமொழி முதற்கண் அது என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபின் அகரம் கெட, என
+ அது
> என + து = எனது
என்றாற்போலப் புணரும். நும் என்பதும் நும் + அது
> நும + து = நுமது எனப்
புணரும். வருமொழி முதற்கண் அகரம் என்ற ஆறனுருபு வரின், அவ்வுருபு
கெடாது, என + அ
> என + வ் + அ = எனவ என்றாற்
போல (இடையே வகரஉடம்படுமெய் பெற்று) அந்நெடுமுதல் குறுகும் சொற்கள்
புணரும். (தொ. எ. 115 நச். உரை.)

ஆறன்உருபு அல்லாத ஏனைய வேற்றுமைகள்வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கோடல்

சாத்தனது வந்தது – சாத்தன வந்தன – எனவும், சாத்தனது நன்று – சாத்தனநல்லன – எனவும், ஆறன் ஒருமை பன்மை யுருபுகள் வினையும்வினைக்குறிப்பும் கொண்டன. ஏனைய வேற்றுமைகள் வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர் களையே கொண்டு முடியுமாறு வருமாறு:அறத்தை அடைந்தவன் – மறத்தை மறந்தவன் – திருவைச் சேர்ந்தவன் -எனவும், பொருளை யுடையவன் – புதல்வனை இல்லவன் – அறத்தை ஆக்கல் – மறத்தைமாற்றல் – எனவும் இரண்டாவது வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர்கொண்டது.சுடரினால் கண்டவன் – அரசனால் பெற்றவன் – நெய்யான் நுகர்ந்தவன் -எனவும், குணத்தால் பெரியவன் – இனத்தால் செவ்வியன் – அரசனால் பெறுதல் -வாளால் வணக்குதல் – எனவும் மூன்றாவது வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர் கொண்டது.இரவலர்க்கு ஈந்தவன் – பொருட்குப் போனவன் – எனவும், எனக்கு இனியவன்- அவர்க்கு நல்லவன் , இரவலர்க்கு ஈதல் – எனவும் நான்காவது வினையும்வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டது.மலையின் இழிபவன் – மன்னரின் வாழ்ந்தவன் – பொன்னின் திகழ்பவன் -வாளியின் செகுத்தவன் – எனவும், காக்கையிற் கரியவன் – அறிவிற் பெரியவன்- வாளியிற் செகுத்தல் – எனவும் ஐந்தாவது வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர் கொண்டது.அரங்கின்கண் அகழ்ந்தவன் – ஆகாயத்தின்கண் சென்றவன் – ஆண்டின்கண்போனவன் – குணத்தின்கண் ஒழிந்தவன் – எனவும், நாட்டின்கண் நல்லது,கூதிர்க்கண் உள்ளது – வாளின்கண் உள்ளது – அரங்கின்கண் அகழ்தல் -பரணிக் கண் பிறத்தல் – எனவும் ஏழாவது வினையும் வினைக்குறிப்பும்பற்றிய பெயர் கொண்டது. (நன். 318 மயிலை.)

ஆறன்உருபு உருபு ஏற்றல்

பெயரேயன்றி ஆறனுருபும், ஐயும் ஆலும் குவ்வும் இன்னும் அதுவும்கண்ணும் விளியும் என்று கூறப்படும் அவ்வுருபுகளை யும் ஏற்கும்.ஏற்புழிக் கோடலான், எழுவாயும் விளியும் ஒழித்து ஏனையவே கொள்க. பெயரோடுஇதற்கு வேற்றுமை, உருபு ஏற்புழியும் தன் இரு கிழமைப் பொருளினும்திரிபின்றி நிற்றலாம்.சாத்தனதனை சாத்தனதனால் சாத்தனதற்கு சாத்தனதனின் சாத்தனதனதுசாத்தனதன்கண் – என வரும். (இ. வி. 195 உரை)ஒரோவழிப் பெயரேயன்றி ஆறனுருபும் சாத்தனது. சாத்தனதை சாத்தனதால் -சாத்தனதற்கு – சாத்தனதனின் – சாத்தனதனது – சாத்தனதன்கண் – காத்தனதே -என எட்டு வேற்றுமையிலும் உருபேற்று வரும். ஆறாவது உருபேற்றவழி தன் இருகிழமைப் பொருளும் ஏற்ற உருபின் பொருளும் தோன்ற நிற்கும். எழுவாயுருபுஏனைய உருபுகளை ஏற்பின் உருபின் பொருளே புலப்படுமன்றி எழுவாயுருபின்பொருள் புலப்படாது. (எழுவாயுருபு தன் பயனிலை கொள்ள நிற்குமாதலின் அதுபிற உருபுகளை ஏலாது; ஏற்குமேல் அது பெயர் எனப்படுவ தன்றி எழுவாயுருபுஎனப்படாது) ஆதலின் தன்னிலையில் நின்ற பெயரே எட்டுருபும் ஏற்றது என்க.(நன். 293 சங்.)

ஆறன்உருபு கெட அதன் உடைமைப்பொருள்விரியுமாறு

நின்மகள் (அக. 48) : அது உருபு கெட அதன் உடைமைப் பொருள் விரிந்துநின்னுடைய மகள் என விரியும். எம் மகன் (கலி.85) எம்முடைய மகன் எனஉடைமைப்பொருள் விரியும். இவற்றிற்கு நான்காவது விரிப்புழி, நினக்குமகளாகியவள் – எமக்கு மகனாகியவன் – என ஆக்கம் கொடுத்துக் கூறவேண் டும்;ஆண்டு அம் முறை செயற்கையாம். ஆதலின் அது பொரு ளன்று. நின்மகள் எம்மகன் – என்பனவற்றை நின்னுடைய மகள் – எம்முடைய மகன் – என அதுவுருபுகெடுத்து அதன் உடைமைப்பொருளையே விரித்தல் வேண்டும். (தொ. சொ. 95 நச்.உரை)

ஆறன்உருபு தொடர்இறுதிக்கண் நில்லாமை

ஆறனுருபு தொடரிறுதிக்கண் நில்லாது; நிற்குமேல் அதுவினைக்குறிப்பாம். சாத்தனது ஆடை என்பது ஆடை சாத்தனது எனமாற்றியுரைக்கப்படின், எழுவாய்த் தொடராகச் ‘சாத்த னது’ என்பதுவினைக்குறிப்புமுற்றாம். (தொ. சொ. 104 நச். உரை)

ஆறன்உருபு பிற உருபு ஏற்றல்

அது என்பது ஆறாம் வேற்றுமைக்கு உருபாம் எனினும், அதுவேமுதற்பெயரொடு கூடி அன்சாரியை பெற்று ஐ முதல் கண் ஈறாய ஆறுஉருபுகளொடும் புணர்ந்து வரும் எனக் கொள்க.வருமாறு : ‘சாத்தனது’ என்பது சாத்தனதனை – சாத்தன தனால் -சாத்தனதற்கு – சாத்தனதனின் – சாத்தனதனது – சாத் தனதன் கண் – எனஆறுருபும் ஏற்று வருதல் காண்க.(தொ.வி. 63 உரை)

ஆறன்உருபு பெயர் வினை கொண்டமை

சாத்தனது குணம், சாத்தனது கை, நெல்லது குப்பை, படையது குழாம்,எள்ளது சாந்து, சாத்தனது ஆடை – என ஆறனுருபு பெயர் கொண்டது.சாத்தனது வந்தது, சாத்தன வந்தன – எனவும், சாத்தனது நன்று. சாத்தனநல்ல – எனவும் ஆறனுருபு வினையும் வினைக்குறிப்பும் கொண்டது.‘ஆறன்உருபு உருபு ஏற்றல்’ காண்க. (நன். 318 மயிலை.)

ஆறன்உருபுகள்

அது என்னும் ஆறாம் வேற்றுமையுருபு ஆது எனவும் அ எனவும் திரிந்துவருதலால் ஆறன் உருபு ஒன்றே என்பது நேமி நாத நூலார் கருத்து. நன்னூலார்அது ஆது என்பன ஒருமை யுருபு எனவும் அகரம் பன்மையுருபு எனவும் கொள்வர்.(எனது தலை, எனாது தலை, என கைகள்)வரலாறு : சாத்தனது வாள், கொற்றனது வேல் – இவை பிறிதின்கிழமை.தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பல குழீஇய தற்கிழமையும் – வேறுபல குழீஇய தற்கிழமையும் – ஒன்றியல் தற்கிழமையும் – உறுப்பின்தற்கிழமையும் – மெய் திரிந்தாகிய தற்கிழமையும் என. அவை வருமாறு:ஒன்று பல குழீஇய தற்கிழமை – எள்ளது குப்பை;வேறு பல குழீஇய தற்கிழமை – படையது குழாம்;ஒன்றியல் தற்கிழமை – நிலத்தது அகலம்;உறுப்பின் தற்கிழமை – யானையது கோடு;மெய் திரிந்தாகிய தற்கிழமை – எள்ளது சாந்து;பிறவும் அன்ன.‘அது’ விகாரப்பட்டு ஆது என நின்று, நினது குதிரை – நினாது குதிரை,எனது வேல் – எனாது வேல் – என வரும். ஆறாம் வேற் றுமை அகரமாய்நிற்கவும் பெறும். அவை வரு மாறு : உத்திய கண் கரிய, கோளரிய கண் பெரிய,யானைய கோடு பெரிய, ஆனேற்ற கோடு கூரிய – என்பன. (நேமி. வேற். 5உரை)

ஆறறிவுயிர் என்ற பகுப்பு வேண்டாமை

ஆறறிவுயிரும் ஒன்றுண்டால் எனின், ஆசிரியர் தொல்- காப்பியனார்மனத்தையும் ஒருபொறியாக்கி அதனான் உணரும் மக்களையும் விலங்கினுள்ஒருசாரனவற்றையும் ‘ஆறறிவுயிர்’ என்றார். நன்னூலாசிரியர்அம்மனக்காரியம் மிகுதி குறைவாலுள்ள வாசியல்லது அஃது எல்லா உயிர்க்கும் உண்டு என்பார் மதம் பற்றி, ‘வானவர் மக்கள் நரகர்விலங்கு புள், ஆதி செவியறிவோடு ஐயறி வுயிரே’ என்று சொன்னார் என்க. (நன். 448மயிலை.)

ஆறாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது, ஆது, அ – என்பன. அதுவும் ஆதுவும்ஒருமை; அகரம் பன்மையுருபாம். இவ் வேற்றுமைப் பொருள், பண்பு – உறுப்பு- ஒன்றன் கூட்டம் – பலவின் ஈட்டம் – திரிபின் ஆக்கம் – என்னும்தற்கிழமைப் பொருளும், ஏனைய பிறிதின்கிழமைப் பொருளுமாய்த் தன்னை ஏற்றபெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலாம். பண்பு என்பதன்கண் குணப்பண்பும்தொழிற்பண்பும் அடங் குதலின், பொருள் ஆதி ஆறனுள் சினை குணம் தொழில்இம்மூன்றும் தற்கிழமை; ஏனைய பொருள் இடம் காலம் இம்மூன்றும்பிறிதின்கிழமை. ஒன்றன் கூட்டம் – பலவின் ஈட்டம் – திரிபின் ஆக்கம் -ஆகிய மூன்றும் பண்பு உறுப்பு இவற்றுடன் கூட, இவை ஐந்தும் தற்கிழமையாம்என்க.அது – ஆது – அ – என்பன அஃறிணை யுருபுகளே. உயர்-திணைக்கண் ‘உடைய’என்னும் சொல்லுருபும், முறைப் பொருட்கண்ணே குகர உருபும் வரும்.எ-டு : எனது தலை, எனாது தலை, என கைகள்; எனக்கு மகன். (நன்.300)

ஆறாம் வேற்றுமை உருபு ஏற்ற சொல்லின்இலக்கணம்

ஆறாம் வேற்றுமையுருபு ஏற்ற சொல் தொடரிடையே வரின், உருபின் பொருள்தந்து உடைமைச் சொல்லைக் கொண்டு முடியும்; தொடரிறுதிக்கண் வரின்வினைக்குறிப்பாம்.‘அம்முப் பாற்சொல் உயர்திணைய’ என்புழி, ஆறன்பன்மை யுருபாகிய அகரம்ஏற்ற அச்சொல் பெயராகாது குறிப்பு முற்றாய் நின்றது. (தொ. சொ. 2 நச்.உரை)

ஆறாம் வேற்றுமைப் பெயர்க்காரணம்

நான்காம் வேற்றுமையால் போந்த கொள்வோனையும் கொடைப்பொருளையும்ஐந்தாம் வேற்றுமையாகிய ‘இதனின் இற்று இது’ என விகற்பித்து உணர்ந்துகொடுத்தல், தற்கிழமையும் பிறிதின்கிழமையும் ஆகிய இவ்விரு கிழமைப்பொருள் உடையோர் செயல் என்பது தோன்றுமாறு இவ் வேற்றுமை ஆறாம் வேற்றுமைஎனப்பட்டது.(நன். 300 சங்.)

ஆறாம் வேற்றுமைப் பொருளும்முடிக்கும் சொற்களும்

ஆறாம் வேற்றுமைப் பொருள் ‘இதனது இது’ என்னும் உடைமைப் பொருளாம்.அது தற்கிழமை பிறிதின்கிழமை என இருவகைப்படும். தற்கிழமை – ஒன்று பலகுழீஇய தற் கிழமை, வேறு பல குழீஇய தற்கிழமை, ஒன்றியல் கிழமை,உறுப்பின் கிழமை, மெய் திரிந்தாய தற்கிழமை என ஐவகைப் படும்.பிறிதின்கிழமை, பொருள் இடம் காலம் என மூவகைப் படும்.எ-டு :எள்ளது குப்பை: ஒன்று பல குழீஇய தற்கிழமை.படையது குழாம்: வேறு பல குழீஇய தற்கிழமை.யானையது கோடு, புலியது உகிர்சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு – செயற்கைக்கிழமை(செயற்கையாவது தன்தன்மை திரிந்து வேறாம் தன்மையாதல்)அரசனது முதுமை, அரசனது முதிர்வு – முதுமைக்கிழமை (முதுமையாவதுஅறிவின் முதிர்ச்சி ; மூப்பு அன்று)சாத்தனது வினை, சாத்தனது செலவு – வினைக்கிழமைசாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் – உடைமைக் கிழமை.மறியது தாய், மறியது தந்தை – முறைமைக் கிழமை.இசையது கருவி, வனைகலத்தது திகிரி – கருவிக் கிழமை.அவனது துணை, அவனது இணங்கு – துணைக் கிழமை.நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனதுவிலைத்தீட்டு – கலக் கிழமை.(கலக்கிழமை இருபொருட்கு உரிமையாகலின் உடைமைக் கிழமையின்வேறாயிற்று)ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் – முதற்கிழமை.கபிலரது பாட்டு, பாரியது பாட்டு, பரணரது பாட்டியல் செய்யுட்கிழமை.(தெரிந்த மொழியான் செய்யப்படுதலின் செய்யுள் ‘தெரிந்து மொழிச்செய்தி’ எனப்பட்டது)முருகனது குறிஞ்சிநிலம் – கிழமைக் கிழமை. (நிலம்)வெள்ளியது ஆட்சி – கிழமைக் கிழமை. (காலம்)காட்டது யானை – வாழ்ச்சிக்கிழமை – பொருட் பிறிதின்கிழமை.யானையது காடு – வாழ்ச்சிக்கிழமை – நிலப் பிறிதின்கிழமை.வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால் தற்கிழமையும் ஆம்.எட்சாந்து, கோட்டுநூறு – முழுதும் திரிந்தன.சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள் -சிறிது திரிந்தன (தொ. சொ. 81 நச். உரை)

ஆறாரச்(ஆறாரைச்) சக்கரம்

இஃது ஆறு ஆராய், இங்குள்ள எடுத்துக்காட்டுப் பாடல் அமைந்தசக்கரவடிவில், நடுவே ரகர ஒற்று நிற்ப, குறட்டைச் சூழத் தா என்னும்எழுத்து நிற்ப, ஆர்மேல் ஏழு எழுத்துக்கள் நிற்ப, சூட்டின்மேல்பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று முடிவது; மிறைக்கவி வகைகளுள் ஒன்றானசக்கரத்தின் வகை.எ-டு : ‘பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார்கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு – மோங்குநன்மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற்பூக்கோதை மாதர்தன் பொற்பு.’இப்பாடலின் சக்கர பந்த அமைப்பினை அமைத்துக் காண்க. குறடு -ஆர்க்கால்களின் அடியிலமைந்த குடத்தின் வளை வான பகுதி.சூடு – வட்டைஆர்க்கால், ஆர், ஆரம், ஆரை – என்பன ஒருபொருட்கிளவி.நடுஆரை நெடுக முதலடியும், அதன்மேல் நின்ற இரண்டு ஆரை நெடுகஇரண்டாம் மூன்றாம் அடியும், நடு ஆரை இணையும் வட்டை வலமாக முழுதும் சூழஈற்றடியும் அமையுமாறு காண்க. நடுவே நின்ற ரகர ஒற்று முதல்மூன்றடிகட்கும் பொதுவாய் நின்றது. ஆறு ஆரைகளும் வட்டையில் இணையும்இடத்து நிற்கும் ஆறெழுத்துக்களும் பொதுவாக நின்று ஈற்றடிக்கு உபகாரப்பட்டமையும் காண்க. (யா. வி. பக். 528)

ஆறாரைச் சக்கரம்

தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்தகண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்தபண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்கதண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்கண்களே.இது, ஆறாய் நடுவே ரகரம் நின்று ஆர் ஒன்றுக்கு ஒன்பதொன்பதெழுத்தாய், குறட்டின்மேல் ‘போதிவானவன்’ என்னும் பெயர் நின்று,சூட்டின்மேல் இருபத்து நான்கெழுத்து நின்று, இடக்குறுக்காரின் முனைதொடங்கி அதனெதிராரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்தவலக்கீழாரின் முனைநின்று அதனெதிராரின் முனை யிறுதிசென் றிரண்டாமடிமுற்றி, அடுத்த வலக்கீழாரின் முனைநின்று எதிர்த்த மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி அதற்கடுத்த வலக்கீழாரின் முனைநின்று வட்டைவழிவலஞ்சுற்றி நான்காமடி முடிதல் காண்க.‘கண்மலர்’ என்ற அடிமுடிவில் வட்டையில் நிற்கும்தகரத்தை இவ்வடிக்கு உயிர்மெய்யாகவும், வட்டைசுற்றி வாசிக்கும்நான்காமடிக்கு மெய் யாகவும் கொள்க. தகர வுயிர்மெய்யில் (த) என் னும்மெய் இருத்தலான் இங்ஙனம் கொள்ளற்கு நியாயம் ஏற்பட்டதென்க. இன்னும்இவ்வடியை வாசிக்கும்போது நடுவே நிற்கும் ரகரவுயிர்மெய்யை மேற்கூறியநியாயப்படி மெய் (ர்) ஆகக் கூட்டிக் கொள்க.

ஆறாவதன் உயர்திணைத் தொகை விரியுமாறு

ஆறாவதன் உடைமைப்பொருள் தோன்ற அமையும் சாத்தன் மகன் என்பதுசாத்தற்கு மகன் என நான்காவது விரியும். சாத் தனது மகன் என ஆறாவதன்அதுவுருபு விரிப்பின், அவ்வுருபு அஃறிணைப் பொருள் சுட்டுதலின், மகன்என்ற பெயரொடு பொருந்தாது திணைவழுவாக முடிதலின், ஆறனுருபாகிய அதுஎன்பதனை விடுத்து நான்கனுருபாகிய குகரமே விரிக்கப்படல் வேண்டும்.‘அது’ இடையே தோன்றாது என்பது சேனாவரையர் கருத்து. (தொ. சொ. 94 சேனா.உரை)

ஆறாவதன் உறுப்பியல் தற்கிழமை பற்றியமுடிக்கும் சொற்கள், ஆறாவதன் ஒன்று பல குழீஇய தற்கிழமை பற்றியமுடிக்கும் சொற்கள்

‘தற்கிழமை’ காண்க.

ஆறாவதன் உறைநிலமும் உறைபொருளும்

ஆறனுருபு உறைநிலப் பெயரையும் உறைபொருளாம் பெயரை யும் அடுத்து வந்துபெயர் கொண்டு முடியும். இது வாழ்ச்சிக் கிழமையாம்.எ-டு : காட்டது யானை – காடு : உறைநிலம்யானையது காடு – யானை : உறைபொருள்காட்டது யானை என ‘அது’ விரிதலேயன்றிக் காட்டுள் யானை – என ஏழாவதுவிரிதலுமாம். (தொ. சொ. 97தெய். உரை)

ஆறாவதன் காலப் பிறிதின்கிழமை பற்றியமுடிக்கும் சொல்
ஆறாவதன் தற்கிழமை

ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப் பொருள்களில் தன்னிடத் திலிருந்துஎளிதின் பிரிக்கமுடியாத செய்திகளை உணர்த்தும் தற்கிழமை, ஒன்று பலகுழீஇய தற்கிழமை – வேறு பல குழீஇய தற்கிழமை – ஒன்றியற்கிழமை -உறுப்பின் கிழமை – மெய் திரிந்து ஆய தற்கிழமை – என ஐவகைப்படும்.எ-டு :

ஆறாவதன் நிலப் பிறிதின்கிழமை பற்றியமுடிக்கும் சொல்
ஆறாவதன் பிறிதின்கிழமை

ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப்பொருள்களில் தன்னிடத் திலிருந்துஎளிதின் பிரிக்கக் கூடிய தொடர்புடைய உடைமை களின் தொடர்புபிறிதின்கிழமை எனப்படும். இது பொருட் பிறிதின்கிழமை. இடப்பிறிதின்கிழமை, காலப் பிறிதின் கிழமை என மூவகைப்படும்.எ-டு : சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் – உடைமைக்கிழமை.மறியது தாய், மறியது தந்தை – முறைமைக்கிழமை.இசையது கருவி, வனைகலத்தது திகிரி – கருவிக்கிழமை.அவனது துணை, அவனது இணங்கு – துணைக்கிழமை.நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு -கலக்கிழமை.ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் -முதற்கிழமை.கபிலரது பாட்டு, பாரியது பாட்டு – தெரிந்து மொழிச்செய்திக்கிழமை.காட்டது யானை – வாழ்ச்சிக்கிழமை.இவையாவும் பொருட்பிறிதின்கிழமை.வெள்ளியது ஆட்சி – கிழமைக்கிழமை.இது காலப் பிறிதின்கிழமை.முருகனது குறிஞ்சி நிலம் – கிழமைக்கிழமை.யானையது காடு – வாழ்ச்சிக்கிழமை.இவை நிலப்பிறிதின்கிழமை. (தொ. சொ. 81 நச். உரை)செயற்கை, வினை – ஆகுபெயராயவழிப் பிறிதின்கிழமையாம்.எ-டு : சாத்தனது செயற்கை (செயற்கையால் வந்துற்ற விளைவு)சாத்தனது வினை (வினையால் வந்துற்ற விளைவு)உடைமை : சாத்தனது உடைமை (தற்கிழமையும் படும் போலும்)முறைமை, கருவி, துணை, கலம், முதல்: பிறிதின்கிழமைஎ-டு : ஆவினது கன்று, சாத்தனது வாள், சாத்தனது துணை, சாத்தனது(ஒற்றிக்)கலம், சாத்தனது முதல் (இத் தோட்டம்) – என முறையேகாண்க.பாரியது பாட்டு : பிறிதின் கிழமைகபிலரது பாட்டு : மெய் திரிந்தாய தற்கிழமை (பாடம்பிழைபட்டுள்ளது.) (தொ. சொ. 81 கல். உரை)

ஆறாவதன் பொருட் பிறிதின்கிழமைபற்றிய முடிக்கும் சொல்

‘ஆறாவதன் பிறிதின்கிழமை’ காண்க.

ஆறாவதன் பொருள் வேறுபாடு சில

இயற்கைக் கிழமை – பொருட்கு இயல்பாகிய பண்பு.எ-டு : நிலத்தது வலி, நீரது தண்மை, தீயது வெம்மைஉடைமைக் கிழமை – உடைப்பொருளின் பாகுபாடு உணர நில்லாது பொதுமை உணரநிற்பது. அப்பொதுக்கிழமை யினும் வரும் இவ்வேற்றுமைக் கிழமை.எ-டு : சாத்தனது உடைமைசாத்தனது குழை என்பதனோடு இதனிடை வேற்றுமை என்னையெனின், சாத்தனதுஉடைமை குழை எனவும் வந்து குறிப்புவினைப் பொருளொடு முடிதலின் வேறுஓதப்பட்டது.முறைமைக் கிழமை – உடையானும் உடைப்பொருளுமன்றி முறைமையாகியகிழமையான் வருவது.எ-டு : ஆவினது கன்று, மறியது தாய்கிழமைக் கிழமை – ‘இவற்கு இவள் உரியள்’ எனும் பொருள் பட வருவது.எ-டு : அரசனது உரிமைமுதுமைக் கிழமை – முதுமை என்பது பரிணாமம் குறித்து நின்றது.‘வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் இளமையும் கொள்க.எ-டு : சாத்தனது முதுமை, சாத்தனது இளமைகருவிக் கிழமை – உடைமை குறியாது ‘இதற்கு இது கருவி’ என வருவது.எ-டு : யானையது தோட்டி, வனைகலத்தது திகிரி.துணைக்கிழமை – நட்பின்மேல் வருவது. ‘வந்தது கண்டு வாராததுமுடித்தல்’ என்பதனான் பகையும் கொள்க.எ-டு : சாத்தனது துணை இது, சாத்தனது பகை (மாறு பாடும் இனம்ஆகுமோ எனின், அதுவும் அப்பொருள் குறித்து நிற்றலின் இனமாம்).தெரிந்து மொழிச் செய்தி – தெரிந்த மொழியினது செயல்கூறல்.எ-டு : பாட்டது கருத்து, பாட்டது பொருள்.நிலைக்கிழமை – அவரவர் நின்ற நிலை.எ-டு : சாத்தனது இல்வாழ்க்கை, சாத்தனது தவம்.திரிந்து வேறுபடுவன -எ-டு : எண்ணது சாந்து, கோட்டது நூறு. (தொ. சொ. 78 தெய்.உரை)

ஆறாவதன் வகைகள்

‘குறை என்பதன் வகைகள்’ காண்க. (இ. கொ. 57)

ஆறாவதன் வாழ்ச்சிக்கிழமைக்கண்ஏழாவது மயங்குதல்

‘வாழ்ச்சிக் கிழமை’ காண்க.

ஆறாவதன்கண் சிறிது திரிந்தனவும்முழுதும் திரிந்தனவும்

‘ஆறாம் வேற்றுமைப் பொருளும் முடிக்கும் சொற்களும்’ காண்க.

ஆறாவதற்கு ஓதிய முறைப்பொருட்கண்நான்காவது வருதல்

உயர்திணைப்பொருள் இரண்டு முறைப்பொருள் தோன்ற இணையுமிடத்து,அவ்வாறாவதன் முறைப்பொருட்கண் உருபு விரிக்குமிடத்து நான்காவதுவிரியும்.எ-டு : நம்பிமகன் – நம்பிக்கு மகன் என நான்காவது விரிந்த வாறு.(ஆறன்உருபு கெட்டுப்போக அதன் உடைமைப் பொருள் விரியும், நம்பியுடையமகன் என.)(தொ. சொ. 95 நச். உரை)

ஆறாவதில் சிறிது திரிவதும் முழுதும்திரிவதும்

‘சிறிது திரிவதும் முழுதும் திரிவதும்’ காண்க.

ஆறாவது குறையன்றி வேறு பொருளும்தருதல்

இலக்கணக்கொத்தில் ஆறாம் வேற்றுமைக்குரிய கிழமைப் பொருள் ‘குறை’என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளது. வட மொழியில் ‘சேஷம்’ என்றிருப்பதன்மொழிபெயர்ப்பு இது. ஆறாம் வேற்றுமை கிழமைப்பொருள் உணர்த்துவதன்றியும்வேறு பொருளும் உணர்த்தும். ‘வாளது வெட்டு’ என்புழி, வாளினால்வெட்டப்பட்ட வெட்டு எனக் கருவிப்பொருளை ஆறாவதன் உருபு உணர்த்திற்று.(இ. கொ.57)

ஆறு விகாரமும் மூன்று திரிபில் அடங்குமாறு

விரித்தல் விகாரம் தோன்றலாகவும், வலித்தல் – மெலித்தல் – நீட்டல் –
குறுக்கல் என்னும் விகாரங்கள் திரிதலாகவும், எஞ்சிய தொகுத்தல்
விகாரமும் முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலும் கெடுதலாகவும்
அடங்கும். ஆகவே செய்யுள் விகாரமும் மூன்றென அமையும். (இ. வி. எழுத்.
58.)

ஆறுமெய் பெறுதல்

தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகிய லடிஎன்னும் ஆறு உறுப்பினையும் கொச்சகக்கலி பெறுதல்.(தொ. செய். 148 இள.)இருசீர் அடுக்க, அடிக்கண் அறுசீர் பெறுதல்.(தொ. பொ. 154 பேரா., நச்.)

ஆறெழுத்து ஈற்றடி வெண்பா

எ-டு : ‘நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத் தேள் உலகு. ’ (குறள் 234)

ஆற்பனே பதம்

வினைச்சொல் வகை இது; தனக்குப் பயன்படும் வினை களுக்குப் பெயர்.பிறர்க்குப் பயன்படுவது பரப்பைபதம். இவ் வேறுபாடு தமிழில் இல்லை;வடமொழியிலும் வழக்கிழந்து பலகாலம் ஆயிற்று. (பி. வி. 36)

ஆற்றுப்படையில் ஒருமைப்பெயர்பன்மைமுடிபு பெறுதல்

ஆற்றுப்படையில் சுற்றத்தொடு சுற்றத்தலைவனை ஆற்றுப்- படுத்தற்கண்அவனை முன்னிலை ஒருமையில் ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ என விளித்து, ‘இரும்பே ர் ஒக்கலொடு பதமிகப்பெறுகுவிர்’ (மலைபடு. அடி. 50, 157) என முன்னிலைப் பன்மையில் முடிக்கும்வழக்கம் வழுவமைதியாம்.(தொ. சொ. 462 நச். உரை)

ஆளவந்தபிள்ளை

பத்துப்பாட்டுள் இறுதிப்பாட்டாகிய மலைபடுகடாத்தில் 145 ஆம்அடியாகிய ‘தீயி னன்ன ஒண்செங் காந்தள்’ என்றற்கு உரை வரையுமிடத்தே,“இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடு அடுத்த தன்மையின் ஆனந்தமாய்,பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர்கூறினாரால் எனின், அவர் அறியாது கூறினார்…………….. சான்றோர்செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளா ரென மறுக்க” என்றுநச்சினார்க்கினியர் குறித்த செய்திக் கண், ‘ஆளவந்த பிள்ளையாசிரியர்’என்பார் பெயர் காணப்படுகிறது. ஆளவந்த பிள்ளையாசிரியர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட காலத்தவராய், தொல்காப்பியத்தி லன்றிப்பின்னுள்ளோர் செய்த நூல்மரபு பற்றிய நூல்களில் தேர்ச்சி யுடையராய்இருந்தவர் என்பதும்; எழுத்து முதலிய ஆறு வகை ஆனந்தக் குற்றங்களும்பற்றி இலக்கியம் பாட்டின் பாடிய புலவனுக்கும் பாடப்பட்ட பாட்டுடைத்தலைமக னுக்கும் ஏதமுண்டாம் என்று துணிந்தவர் என்பதும்; யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் கொண்ட கருத்தே தம் கருத்தாதலின், பொருளானந்தம்நிகழ வந்தனவாக அவ்வுரை யாசிரியர் குறித்த மலைபடு. 145-150 அடிகளிடையே,145 ஆம் அடிக்கண், ‘இயற்பெயர் மருங்கின் மங்கல மழிய’த் ‘தீயினன்னஒண்செங் காந்தள்’ என்று நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவனது பெயர்தீயோடு அடுத்து வந்த தன்மையால் சொல்லானந்தக் குற்றம் வந்துற்றமையால்பாடிய புலவனும் பாட்டுடைத் தலைவனும் இறந்துபட்டனர் என்ற துணிவுடையார்என்பதும் புலப்படுகின்றன. இவ் வானந்தக் குற்றங்களைச் சொல்லியவர்குணசாகரர் போன்ற சமணப்புலவர் சிலரே.“பண்டை நூலாகிய தொல்காப்பியம் முதலியவற்றுள் அவை காணப்படாமையின்,சங்கச் சான்றோர் பாடலுள் அவை வரினும் குற்றம் உடையன அல்ல,அப்பாடல்கள்; அன்றியும், இப்பாடற் பகுதிக்கண் ‘நன்னன்’ என்பதுசொல்லன்றி ‘அன்ன’ என்பதே சொல்லாதலானும், ‘நன்ன’ என விளிக்கப்பட்டவிடத்தே “தீப்போன்ற நன்ன!” என்று பொருள்படுமாயினும், ஆண்டுப்படர்க்கையாக வரும் செய்திக்கண் முன்னிலைச் சொல் வருதற்கு இயைபுஇன்மையானும், இவ்வானந்தக் குற்றம் இவ்வடிக்கண் வந்தது என்று சொல்லற்குஇடனில்லை” என்பது நச்சினார்க் கினியரது மறுத்துரை.

ஆவயின் என்ற சொல்லமைப்பு

ஏழாம்வேற்றுமை யிடப்பொருள் உணர்த்தும் வயின் என்ற சொல் அகரமாகிய
சுட்டிடைச்சொல்லொடு புணர்ந்து அவ்வயின் என்றாகி (தொ. எ. 334. நச்),
செய்யுட்கண் சுட்டு நீண்டு ஆவயின் என்று முடிந்து அவ்விடத்தில் என்ற
பொருளில் வரும். (தொ. எ. 250 நச்.)
ஆவயினான – அவ்விடத்துக்கண் (தொ.எ. 148)

ஆவயின் மூன்றோடு : முடிபு

அவ்வயின் என்பது ‘ஆவயின்’ எனத் திரிந்து நின்றது. அப்பொருளிடத்துவரும் மூன்றோடு – என்பது பொருள்.(தொ. சொ. 162 சேனா.)

ஆவியும் ஒற்றும் அளவிறந்து இசைக்கும் இடம்

உயிரும் மெய்யும் இசை – விளி – பண்டமாற்று – நாவல் – குறிப் பிசை –
முறையீடு – புலம்பல் – முதலாய இடங்களில் தம் மாத் திரையளவினைக் கடந்து
ஒலிக்கும். இசையின் அளவிறந்து ஒலிக்குமிடத்து உயிர் 12 மாத்திரை
ஈறாகவும், மெய் 11 மாத்திரை ஈறாகவும் ஒலிக்கும் என்பர் இசைநூலார்.
நாவல் – நெற்போர் தெழிப்போர் பகட்டினங்களை ஓட்டுவதொரு சொல்.
பண்டமாற்று – பண்டங்களை (விலை கூவி) விற்றல்.
எ-டு :

நாவலோஒஒ என்றிசைக்கும்
நாளோதை’
– நாவல்
‘உப்
போஒஒ எனவுரைத்து மீள்வாள்’ –
பண்டமாற்று
‘கஃஃஃ றென்
னும் கல்லத ரத்தம்’, ‘சுஃஃஃ
றென்னும் தண்தோட்டுப்
பெண்ணை’ – குறிப்பிசை (நன்.
101)
ஆவியும் ஒற்றும் தமக்குச் சொன்ன மாத்திரையின் மிக்கு இசைக்கவும்
பெறும். நாவலும் முறையீடும் புலம்பும் குறிப்பிசையும் முதலாயின
கொள்க.
‘கஃஃ
றென்னும் கல்லதர் அத்தம்’

என்பது குறிப்பிசை.
உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் நீளும் என்றார்
கந்தருவநூலுடையார். அவை வந்தவழிக் காண்க. (நன். 100 மயிலை.)

ஆவிரை என்ற மரப்பெயர் புணருமாறு

ஆவிரை என்ற மரப்பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்- கண்
அம்முச்சாரியை பெற்று, நிலைமொழியீற்று ஐகாரம் கெட, ஆவிர் என்றாகி,
ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள், ஆவிரந்தோல் என்றாற் போலப் புணரும். (தொ. எ.
283 நச்.)