தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்

உந்தியில் தோன்றிய உதானன் என்ற காற்று மிடற்றை அடைந்தபின், வாயை
அங்காத்தலால் பிறக்கும் எழுத்து இது. இதுவே எழுத்துக்களுள்
முதன்மையானது. எல்லா எழுத்துக் களும் பிறப்பதற்கும் வாயினை ஓரளவு
திறத்தல் வேண்டுதலின் எல்லா எழுத்துக்களிலும் அகரம் கலந்திருக்கிறது
என்பர் நச்சினார்க்கினியர் (தொ. எ. நச். 46). அகரம் உயிரெழுத்துக்
களில் முதலாவது. எகரம் முதல் ஒளகாரம் ஈறான உயிர்களிலும் அகரக்கூறு
கலந்துள்ளது என்பது சான்றோர் கொள்கை. தனிமெய்களைக் குறிப்பிடுமிடத்தே
அகரத்தைச் சேர்த்தே ‘வல்லெழுத்தென்ப கசட தபற’ (19) என்றாற்போல
ஒலித்துக் காட்டுவர் (46). அகரம் தனித்துச் சுட்டிடைச் சொல்லாக வரும்
(31); அவன் – அவள் – அவர் – அது – அவை என்ற பெயர் களில்
அகச்சுட்டாகவும், அக்கொற்றன் முதலிய பெயர்களில் புறச்சுட்டாகவும்,
‘அத் தம்பெருமான்’ (சீவக. 221) போன்ற இடங்களில் பண்டறி சுட்டாகவும்
வரும்.
வந்தன போன்ற வினைமுற்றுக்களிலும் வினைமுற்றுப் பெயர் களிலும்
பலவின்பால் விகுதியாகவும் (210), வருக முதலிய வியங்கோள் வினைமுற்று
விகுதியாகவும் (210), செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திலும்,
செய்யிய என் னும் வாய்பாட்டு வினையெச்சத்திலும் இறுதிவிகுதியாகவும்
(210), ‘தன்வழிய காளை’ (சீவக. 494) போன்ற இடங்களில் அசைச்சொல்லாகவும்
அகரம் நிகழும். நெடுமுதல் குறுகும் சொற்களான தாம் – நாம் – யாம் –
தான் – யான் – முதலியன அகரச்சாரியை பெற்றுப் பின்னர் நான்கனுருபும்
ஆறனுருபும் ஏற்கும் (161). எனவே, அகரம் நெடுமுதல் குறுகும் மொழி களின்
ஈற்றில் சாரியையாகவும் வரும். அகரம் ஆறாம் வேற் றுமைப் பன்மை யுருபாக
‘எனகைகள்’ என்பன முதலாகவும் வரும்; வடசொற்களில் மறுதலைப் பொருளைக்
காட்ட ‘அரூபம்’ என்றாற்போல முன் அடையாக வரும்; உம்மை எஞ்சிய
இருபெயருள் (223) முதற்பெயர் ஆகாரஈற்றதாய இடத்தும் (உவாஅப்
பதினான்கு), குறிலை அடுத்த ஆகார ஈற்றுச்சொல் முன்னரும், ஆகார ஈற்று
ஓரெழுத்தொரு மொழி முன்னரும் (பலாஅக் கோடு, காஅக்குறை) எழுத்துப்
பேறளபெடையாக (226) வரும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெற்று ஆன்
என்றாகிய இடத்து வருமொழி மென் கணத்தில் தொடங்கு மிடத்தும் (ஆனநெய்)
232, பொருந் – வெரிந் – என்ற சொற்களின் வேற்றுமைப் புணர்ச்சியிலும்
(299), எகின் என்ற சொல் வருமொழியொடு புணருமிடத்தும் (எகினக்கால்,
எகினச் சேவல்) 337, கன் என்ற சொல்லின் வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண்ணும் (கன்னக் குடம்) 346, வல் என்ற சொற்கு முன் நாய் –
பலகை – என்பன வரு மிடத்தும் (வல்லநாய், வல்லப் பலகை) 374 அகரம் சாரியை
யாக வரும். தொல்காப்பியனார் கூறும் அக்குச்சாரியையை நன்னூலார் அகரச்
சாரிiயாகக் கொள்வர். (தொ. சூ.வி. பக். 8)

அ ஆ கங இனம் ஆயினமை

அ ஆ – என்பன இரண்டற்கும் தானம் – கண்டம்; முயற்சி – அங்காத்தல்;
பொருள் – அங்கு ஆங்கு என்றல் முதலாக வருதல்;வடிவு – அ ஆ – என்ற
வரிவடிவு; இவ்வாறு மாத்திரை ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம் ஆயின.
க ங – என்பன இரண்டற்கும் முயற்சி – அடிநா அடியண்ணம் சேர்தல்; அளவு
– தனித்தனி அரை மாத்திரை; பொருள் – குளக் கரை, குளங்கரை – என்றல்
முதலாக வருதல்; இவ்வாறு தான மும் வடிவும் ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம்
ஆயின. (நன். 72 இராமா.)

அ ஆ முதலியன இனமாதல்

அ, ஆ என்பன இரண்டும், இடத்தானும்
– முயற்சியானும் – அறாயிரம் ஆறாயிரம் என்னும் பொருளானும் – வடிவானும்
-ஒருபுடை ஒத்து இனமாயின.
இ, ஈ என்பன இரண்டும், இடத்தானும்
– முயற்சியானும் – இராயிரம் ஈராயிரம் என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ஐகாரம், இவற்றுள் இடத்தானும்
முயற்சியானும் ஒத்து இகரத்தொடு கூடி இனமாயிற்று.
உ, ஊ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – உங்கு ஊங்கு என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ஒளகாரம், இவற்றுள் இடத்தானும்
முயற்சியானும் ஒத்து உகரத்தொடு கூடி இனமாயிற்று.
எ, ஏ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – எழாயிரம் ஏழாயிரம் என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ஒ, ஓ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – ஒராயிரம் ஓராயிரம் என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
க, ங இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – குளக்கரை குளங்கரை என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ச, ஞ இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – மச்சிகன் மஞ்சிகன் என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமா யின.
ட, ண இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – மட்குடம் மண்குடம் என்னும் பொருளானும் – ஒரு புடை
ஒத்து இனமாயின.
த, ந இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – பாழ்த்தூறு பாழ்ந்தூறு என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ப, ம இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – வேய்ப்புறம் வேய்ம்புறம் என்னும் பொருளானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ய, ர இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – வேயல் வேரல் என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின.
ல, வ இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – எல்லாவகை எவ்வகை என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின.
ழ, ள இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – காழக உடையான் காளக உடையான் என்னும் பொருளானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ற, ன இரண்டும் முயற்சியானும் –
மாத்திரையானும் – நற்கு நன்கு என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின. (நன். 71 மயிலை.)

அ ஆவாகத் திரியும் வடநடைப்பதம்

அதிதிமக்கள் – ஆதித்யர், தசரதன் மகன் -தாசரதி, சனகன் மகள் – சானகி,
தனுவின் மக்கள் – தானவர், சகரன் மக்கள் – சாகரர். (தொ. வி. 86)

அ இ உ முதல் தனி வருதல்

அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன்கண் அகரம் போலப் பின்
எழுத்துக்களொடு தொடர்ந்துநின்று ஒரு பொருளை உணர்த்தாது, மலையன்
என்பதன்கண் பகுதிபோல வேறுநின்று சுட்டுப்பொருள் உணர்த்தலின், அகத்து
வரும் இதனையும் ‘தனிவரின்’ என்றார். (இவ்வாறே இகரஉகரங் களுக்கும்
கொள்க.) (நன். 66 சங்கர.)

அ, இ இணைந்து இசைத்தல்

அகரமும் இகரமும் சேர்ந்து எகரமாக ஒலிக்கும் என்பர் வடநூலார்.
எகரத்தில் உள்ள கூட்டம் வடமொழியில் போலத் தமிழ்மொழியில் அத்துணைத்
தெளிவாதல் இல்லை. வடமொழியில் உப + இந்த்ர = உபேந்த்ர முதலிய சொற்களின்
சந்தியில் புணர்ச்சி தெளிவாதல் போலத் தமிழ்மொழியில் தெளிவாகக்
காண்டற்கு இல்லை. சேர்க்கையினது நொய்ம்மை யால் வடமொழியில்
ஏகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கையின்
திண்மையால் எ, ஏ என்ற குறில்நெடில் வேறுபாடும் உளதாயிற்று. (எ. ஆ.
பக். 8).
தமிழில் எகரம், இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆதலா னும்,
இகரஒலியின் திரிபு ஆதலானும், ‘அஇ – எ’ என்ற அமைப்புத் தமிழிற்குப்
பொருந்தாது. (எ. ஆ. பக். 7).
அகரமும் இகரமும் கூடி ஐகாரம் போல ஒலிக்கும். தமிழில் அஇவனம் என்பது
ஐவனம் போல ஒலிக்கும். பாகதத்தில் தைத்ய – தஇச்சோ, சைத்ர – சஇத்தோ,
பைரவ – பஇரவோ எனவரும்.
தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, கை – கயி, ஐது – அயிது எனவரும்.
கன்னடத்திலும் இவ்வாறே பாரயிஸிதம் – பாரை ஸிதம், தேரயிஸிதம் –
தேரைஸிதம், கோரயிஸிதம் – கோரை ஸிதம் என வரும். தமிழிலும் இவ்வாறே
வைத்தியன் – வயித் தியன் என வரும்.
எனவே, தமிழிற்போலப் பாகதம், தெலுங்கு, கன்னடம் என்ற மொழிகளிலும்
ஐகாரத்திற்குப் போலியாக
அஇ வருமாறு
உணரப்படும்.
ஐ என்பது அஇ என்பனவற்றின் சந்தியக்கரம் என்று கூறுதல் பொருந்தாது.
மொழியிடைப்பட்ட எழுத்துக்களின் இயல்பு கூறும் தொல்காப்பிய மொழிமரபில்
இச்செய்தி கூறப்பட் டிருத்தலின், இது தனியெழுத்தின் இயல்பு
கூறுவதன்று. (எ, ஆ. பக். 57, 58)

அ, உ இவற்றின் கூட்டம்

அகரக்கூறும் உகரக்கூறும் கலப்பதால் ஒகரம் பிறத்தல் உண்மையே
யாயினும், வடமொழியில் அது தெற்றெனப் புலனாதல் போலத் திராவிடமொழிகளில்
புலனாதல் இன்மை யின், அது கூறிப் பயனின்று. கங்
கா +
உதகம் = கங்
கோதகம் என வடமொழிச்சந்தியில்
அகரமும் உகரமும் ஓகரமாதல் தெளிவு. வடமொழியில் சேர்க்கையின் நொய்ம்
மையால், ஓகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கை
யின் திண்மையால் ஒ, ஓ எனக் குறில் நெடில் இரண்டும்
உளவாயின.
அகரமும் உகரமும் கூடித் தமிழில் ஒளகாரம் போல ஒலிக்கும்.
ஒளவை –
அஉவை
பௌர –
பஉரோ, கௌரவ –
கஉரவோ எனப் பாகதத்திலும் இதனைக்
காணலாம். தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, ஒளர –
அவுர, ஒள –
அவு எனவரும். கன்னடத்திலும் இவ்
வாறே தௌதலே –
தவுதலே, கௌகுழ் –
கவுகுழ் எனவரும். எனவே,
பாகதத்திலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒளகாரத்திற்குப்
போலியாக
அஉ வரும் என்க.
தொல்காப்பிய மொழிமரபில் கூறப்படும் இப்போலி யெழுத் தமைப்பினை, அஉ
என்பனவற்றின் சந்தியக்கரம் ஒள எனக் கூறல் பொருந்தாது. (எ. ஆ. பக். 57,
58, 59)

அஃகிய மஃகான்

மகரக் குறுக்கம். ‘மவ்வோடு, ஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’
என்பது அவிநயம். (நன். 59 மயிலை.)
‘குறள் மஃகான்’ காண்க.

அஃது ஒழித்து ஒன்றுதல்

எதுகையின் இலக்கணம், அடிதொறும் முதலெழுத்து ஒன்றாமல்இரண்டாமெழுத்து ஒன்றுவது. முதலெழுத்தினை ஒழித்து இரண்டடியினும் சீர்முழுதுமோ, இரண்டாம் எழுத்து ஒன்றுமோ ஒன்றுதல். முதல் எழுத்தின்மாத்திரை ஒத்தல் வேண்டும் என்பது.எ-டு : ‘மா யோ ன் மார்பி னாரம் போலும்சே யோன் சேர்ந்த வெற்பிற் றீநீர்’‘வா னி டு வில்லின் வரவறியா வாய்மையால்கா னி லம் தோயாக் கடவுளை – யாநிலம்’ (நாலடி. கடவுள்.)(தொ. செய். 93. நச்.)

அஃறிணை

உலகப் பொருள்களின் இருவகைப் பகுப்புக்களில் அஃறிணை ஒன்றாம். திணைஒழுக்கம் என்னும் பொருளது. உயர் திணைக்கு மறுதலை அஃறிணையாம். இதனை‘இழிதிணை’ என்றும் கூறுப. (நன். 245)அஃறிணை என்ற பண்புத்தொகைநிலைத்தொடர், உயர்வு அல்லாததாகிய ஒழுக்கம்என்று பொருள்பட்டு, மக்கள் அல்லாத ஏனைய உயிருடைய பொருள் – உயிரிலவாகியபொருள் – ஆகிய இருதிறத்தவற்றையும் குறிக்கும். (தொ. சொ. 1 நச்.உரை)சிலசொற்கள் பொருளான் உயர்திணையவற்றைக் குறிப்பினும், சொல்லளவில்இருதிணைக்கும் பொதுவாய்க் குடிமை நன்று – குடிமை நல்லன், அரசு நன்று -அரசு நல்லன் – என இரு திணை முடிபும் பெறுவதுண்டு. (தொ. சொ. 57நச்.)சில சொற்கள் பொருளான் உயர்திணையவாயினும் சொல் லான் அஃறிணையாய்அஃறிணைமுடிபே கொண்டு, காலம் ஆயிற்று – உலகு நொந்தது – பூதம் புடைத்தது- என்றாற்போல முடிவு பெறுவது முண்டு. (தொ. சொ. 58 நச்.)உயர்வு அல்லாத பொருளாகிய உயிருடையனவும் உயிரில்லன வும் அஃறிணையாம்.திணை – பொருள். அல்பொருள் என்னாது அஃறிணை என்றது, அவ்வாறுஆளுதல்வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறியாம். (தொ. சொ. 1 தெய். உரை)அல்லாததாகிய திணை எனக் குணப்பண்பு பற்றி வந்த பண்புத்தொகை.‘உயர்திணை அல்லாதது ஆகியது’ என உயர்திணை என்னும் சொல் வருவித்துமுடிக்க. உயர்திணை என்பதற்கு ஏற்ப, ‘இழிதிணை’ என்று (என்பது) இல்என்னும் பொருள்நோக்கம் என உணர்க. (தொ. சொ. 1 கல். உரை)மானிடம் என்பதும், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளிசனி கதிர் மதி திரு – முதலிய சொற்களும் பொருளான் உயர்திணையாயினும்சொல்லான் அஃறிணை முடிபு பெறும். (நன். 260 மயிலை.)‘திணை நிலன் குலம் ஒழுக்கம்’ என்ப ஆதலின், திணை என்னும் பலபொருள்ஒருசொல் ஈண்டுக் குலத்தின்மேல் நின்றது. உயர்திணை அல்லாத திணை அஃறிணைஎனப் பட்டது. அஃறிணை என்பது பண்புத்தொகை.(நன். 261 சங்கர.)

அஃறிணை : தொகையிலக்கணம்

உயர்திணை அல்லாதது ஆகிய திணை அஃறிணை, உய ரொழுக்கம் அல்லதாகியஒழுக்கம் எனப் பண்புத்தொகை. அஃது ஆகுபெயரான் அஃறிணைப் பொருளைஉணர்த்திற்று. (தொ. சொ. 1 நச். உரை)

அஃறிணை இயற்பெயர்

அஃறிணைப்பொருள்மேல் விரவிவரும் இயற்பெயர் பொரு ளும் உறுப்பும்பண்பும் தொழிலும் இடமும் காலமும் பற்றி வரும். அவை ஒருமைக்கும்பன்மைக்கும் பொது; வினை யாலேயே பால் காட்டும்.எ-டு : ஆ, தெங்கு – பொருள்; இலை, பூ – உறுப்பு ;கருமை, வட்டம் – பண்பு; உண்டல், ஓடல் – தொழில்; அகம், புறம் – இடம் ;யாண்டு, திங்கள் – காலம். ஆ வந்தது என்றவழி ஒருமை; ஆ வந்தன என்றவழிப்பன்மை. (தொ. சொ. 166 தெய். உரை)தொல்காப்பியனார் ‘அஃறிணை இயற்பெயர்’ என்று பெயரிட்டு வழங்கியதனைநன்னூலார் பால் பகா அஃறிணைப் பெயர் என்பர். ‘ஒருவிதி தனக்கே பலபெயர்வருமே’ என்ப தற்கு இலக்கணக் கொத்து இதனைக் காட்டுகிறது. (இ. கொ. 6,130.)

அஃறிணை இயற்பெயர் பால் விளக்குமாறு

அஃறிணை இயற்பெயராவன அஃறிணை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானபெயர்களாம். அவை ‘கள்’ விகுதி சேர்ந்தவிடத்துப் பன்மைக்கு உரியவாய்ப்பலவின்பாலை விளக்கும். தனித்து நின்றவழி அப்பெயர்கள் ஒருமை சுட்டுவனஎன்றோ, பன்மை சுட்டுவன என்றோ வரையறுத்துக் கூற இயலாது. முடிக்கும்சொல் சிறப்பு வினையாகவோ சிறப்புப் பெயராகவோ அமையும்வழியே அவற்றின்பால் உணரப் படும்.எ-டு : ஆ, குதிரை – ஒருமைக்கும் பன்மைக்கும்பொது.ஆக்கள், குதிரைகள் – பலவின்பாற் பெயர்ஆ வந்தது, ஆ அது; சிறப்பு வினையும் பெயரும்குதிரை வந்தது, குதிரை } அவை முடிக்க வந்தனஅவைஒருமைக்கோ பன்மைக்கோ சிறப்பாக உரிய வினைகளும் பெயர்களும்சிறப்புவினையும் பெயருமாம். (தொ. சொ. 169, 171 சேனா. உரை)[ஆ வரும் என்புழி, வரும் என்பது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானவினை; இவ்வினைகொண்டு ஆ ஒருமை யென்றோ பன்மையென்றோ உணர முடியாது. ஆவேறு, ஆ இல்லை – என்பனவும் அது.]ஆவின் கோடு, குதிரையின் குளம்பு – என்னும் முடிக்கும் பெயர்களும்ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலின், ஆ-குதிரை – என்பனவற்றைஒருமையென்றோ பன்மையென்றோ இத் தொடர்களில், வரையறுத்துக் கூறல்முடியாது.(தொ. சொ. 169, 171 சேனா.உரை)

அஃறிணை உம்மைத்தொகை இயல்பு

அஃறிணை ஒருமை உம்மைத்தொகைகளும், பொது ஒருமை உம்மைத்தொகைகளும்தத்தம் பன்மையீற்றனவேயாம் என்னும் நியதிய அல்ல என்றாராயிற்று. அவைவருமாறு:உண்மையின்மைகள் – உண்மையின்மை, நன்மைதீமைகள் – நன்மைதீமை,இராப்பகல்கள் – இராப்பகல், நிலம்நீர்தீக் காற்றாகாயங்கள் -நிலம்நீர்தீக்காற்றாகாயம் என்பனவும்; தந்தை தாயர் – தந்தைதாய்கள் -தந்தைதாய், சாத்தன் சாத்தியர் – சாத்தன்சாத்திகள் – சாத்தன்சாத்தி -என்பனவும் பன்மை யீற்றானும் இயல்பாகிய ஒருமையீற்றானும் வந்தன. (நன்.372 சங்.)

அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று

அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று து று டு என்னும் ஈற்றான் வரும்.அவற்றுள், து முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; று இறந்தகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; டு வினைக்குறிப்பு ஒன்றற்கேவரும்.எ-டு : நடந்தது – நடவாநின்றது – நடப்பது, அணித்து; கூயிற்று,அற்று ; பொருட்டு – குண்டுகட்டு.தகரஉகரம் இறந்தகாலத்து வருங்கால், புக்கது – உண்டது – வந்தது -சென்றது – போயது – உரிஞியது – எனக் கடதற வும் யகரமும் ஆகியஉயிர்மெய்ப் பின் வரும். போனது என்பது சிதைவுச்சொல்.நிகழ்காலத்தின்கண், நடவாநின்றது – நடக் கின்றது – உண்ணாநின்றது -உண்கின்றது – என நில் கின்று என்பவற்றோடு அகரம் பெற்று வரும்.எதிர்காலத்தின்கண், உண்பது – செல்வது – எனப் பகரமும் வகரமும் பெற்றுவரும்.றகரஉகரம், புக்கன்று உண்டன்று வந்தன்று சென்றன்று – எனக் கடதறஎன்பனவற்றின் முன் ‘அன்’ பெற்று வரும்; கூயின்று, கூயிற்று -போயின்று, போயிற்று – என ஏனையெழுத்தின் முன் ‘இன்’ பெற்று வரும்.வந்தின்று என்பது எதிர்மறை வினை.டகரஉகரம், குறுந்தாட்டு – குண்டுகட்டு – என வரும்.(தொ. சொ. 217 சேனா. உரை)

அஃறிணை ஒப்பினான் ஆகிய பெயர்

வினைச்சொற்களை ஈறு பற்றியும் வாய்பாடு பற்றியும் விளக்கும்ஆசிரியர் தொல்காப்பியனார், பெயர்ச்சொற்களை எடுத்தோதியே விளக்கும்இயல்பினர். அஃறிணைப் பெயர்கள் இவையிவை என்று எடுத்து விளக்குறும்போதுஒப்பினான் ஆகிய பெயர்வகையைக் குறிப்பிடுகிறார்.ஒப்பினான் ஆகிய பெயர் – உவமத்தினான் பெற்ற பெயர்ச் சொல். எ-டு :பொன்னன்னது, பொன்னன்ன (தொ. சொ. 170 நச். உரை) பொன்போல்வது,பொன்னனையது, யானைப் போலி (தொ. சொ. 164 தெய். உரை)

அஃறிணை வினைஈறு ஏழ்

அஃறிணை ஒருமைவினை ஈறு: து று டு ; பன்மைஈறு: அ ஆ வ; பொதுஈறு: னகரம்- என அஃறிணை வினைமுற்று ஈறாவன ஏழாம்.எ-டு : வந்தது, போயிற்று, குண்டுகட்டு; வந்தன, வாரா, வருவ; எவன்அது? (எவன் அவை?) (தொ. சொ. 218, 219, 221 நச்.)

அஃறிணை வினைக்குறிப்பு

அஃறிணை வினைக்குறிப்பு ஆமாறு: கரிது கரிய, அரிது, அரிய, தீது தீய,கடிது கடிய, நெடிது நெடிய, பெரிது பெரிய, உடைத்து உடைய, வெய்து வெய்ய,பிறிது பிற – இவையும் பிறவும் அஃறிணை வினைக்குறிப்பாம். (நேமி. வினை.10 உரை.)

அஃறிணை வினைப்பெயர்

வினைமுற்றுக்கள் பகுதியில் பொருள் சிறக்கும். வினைப் பெயர்கள்விகுதியிலேயே பொருள் சிறக்கும். ஆதலின், வினை முற்றுக்கள் எடுத்தும்,பெயர்கள் படுத்தும் சொல்லப்படும். வினைமுற்றுக்கள் எடுத்தலோசையான்அமைவன ஆதலின் அஃறிணை வினை முற்றுக்கள்படுத்தலோசையான் அஃறிணைவினையாலணையும்பெயர்களாம்.எ-டு : வருவது – வருவதாகிய பொருள்வருவன – வருவனவாகிய பொருள்என வினைமுற்று வினைப்பெயர் ஆயினவாறு. (இவ்வினைப் பெயர்களைப்பிற்காலத்தார் வினையாலணையும்பெயர், வினைமுற்றுப்பெயர் எனப் பெயரிட்டுவழங்குப.)(தொ. சொ. 170 நச். உரை)

அஃறிணை வினைவிகுதிகள்

து று டு – என்பன அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுக் களையும், அ ஆ வ -என்பன அஃறிணைப் பலவின்பால் முற்றுக்களையும் அமைக்கும்வினைவிகுதிகளாம். ஆகவே அஃறிணை வினைமுற்று விகுதி ஆறு ஆம். (தொ. சொ.218 சேனா.)

அஃறிணை விரவுப்பெயர்

உயர்திணை அஃறிணை என்ற இருதிணைக்கும் பொதுவான சாத்தன் முதலிய
பெயர்கள் விரவுப்பெயர்களாம். இவை உயர்திணையைச் சுட்டுமிடத்து உயர்திணை
விரவுப்பெயர் எனவும், அஃறிணையைச் சுட்டும்போது அஃறிணை விரவுப் பெயர்
எனவும் பெயர்பெறும். எ-டு :
சாத்தன் வந்தான் – உயர்திணை
விரவுப்பெயர்;
சாத்தன் வந்தது – அஃறிணை
விரவுப்பெயர். இஃது ஒருசாரார் கருத்து.
சாத்தன், சாத்தி, முடவன், முடத்தி – என வரும் விரவுப் பெயர்க்கண்
உயர்திணைக்கு உரியவாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற
ஈற்றெழுத்துக்களே, அஃறிணை ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தின எனல்
வேண்டும். அஃறிணைக்கு ஒருமைப் பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறுகள்
அன்றி, ஆண்பால் பெண்பால்களை உணர்த்தும் ஈறுகள் இல்லை. ஆதலின், அஃறிணை
விரவுப்பெயர் என்பது, ‘உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர்’ என
விரவுப்பெயரின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. தொல்காப்பியனார்
‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றே மூன்றிடங்களில் (எ. 155, 157; சொ. 173)
குறிப்பிட்டுள்ளார், ‘உயர்திணை விரவுப்பெயர்’ என்று அவர் யாண்டும்
சுட்டா மையே, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்பது உயர்திணை விரவுப்பெயர்க்கு
இனத்தைக் குறித்தது என்பது பொருந்தாமையைப் புலப்படுத்தும். இவ்வாறு
உரைப்பார் நச்சினார்க் கினியர். (தொ. எ. 155)

அஃறிணை விரவுப்பெயர்

இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுப்பெயர் எனப் படும். இஃதுஒருபோது ஒருதிணையையே குறிப்பிடும். உயர்திணையைக் குறிக்குமிடத்து‘உயர்திணை விரவுப்பெயர்’ எனவும் அஃறிணையைக் குறிக்குமிடத்து ‘அஃறிணைவிரவுப் பெயர்’ எனவும் பெயர் பெறும் என்பது சேனாவரையர்,தெய்வச்சிலையார் முதலியோர் கருத்தாம். தொல்காப்பியத் தில் ‘உயர்திணைவிரவுப்பெயர்’ என்ற தொடர் யாண்டும் இல்லை. ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றதொடரே தொ.எ. 155, 157; சொ. 152 நச். என்னும் மூன்று இடங்களில்வந்துள்ளது.நச்சினார்க்கினியர், உயர்திணை விரவுப்பெயர்க்கு மறுதலை அஃறிணைவிரவுப்பெயர் என்று குறிப்பிடாது, விரவுப் பெயரின் உண்மைத்தன்மைத்தோற்றம் குறிக்கவே, அல் வழியை ‘வேற்றுமை அல்வழி’ என்று குறிப்பிடுவதுபோல, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்று பெயரிட்டார் என்பர். அஃறிணைவிரவுப்பெயராவது உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர். சாத்தன்என்ற சொல்லில் உயர்திணை ஆண்பாற்குரிய அன் விகுதி அஃறிணை ஆண்பாலையும்சுட்டுதற்கு வருதலின் உயர்திணையோடு அஃறிணை விரவி அமைவதே விரவுப்பெயர்என்பது.அஃறிணைக்கு ஒன்மைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த் தும் ஈறன்றிஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின்,அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை ஆண்பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணையொடு சென்றுவிரவிற்று என்று அவற்றின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. ஆதலின்,‘அஃறிணை விரவுப்பெயர்’ என்புழி, அஃறிணை என்ற அடை சேனாவரையர்முதலாயினார்க்குப் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய் இனத்தைச்சுட்டும் அடை. நச்சினார்க் கினியர்க்கும் கல்லாடர்க்கும் அது தன்னோடுஇயைபின்மை நீக்கிய விசேடணம்; அஃதாவது செஞ்ஞாயிறு என்றாற் போல இனத்தைச்சுட்டாத அடை.எ-டு : சாத்தன் வந்தான், சாத்தி வந்தாள் -உயர்திணை விரவுப்பெயர்; சாத்தன் வந்தது, சாத்தி வந்தது -அஃறிணைவிரவுப்பெயர்இது சேனாவரையர் முதலாயினார் கருத்து.சாத்தன் சாத்தி – என்பன இருதிணை வினைகளும் கொண்டு முடிதலின், இவைஅஃறிணை விரவுப்பெயர் என்பது நச்சி னார்க்கினியர் முதலாயினார் கருத்து.(தொ. எ. 155 நச். உரை) (சொ. 120, 150 சேனா. உரை) (சொ. 152 நச். 153கல் உரை)அஃறிணைவிரவுப்பெயர் தன் முடிக்கும் சொல்லாம் வினையி னாலேயே இன்னதிணையைச் சுட்டுகிறது என்பது புலப்படும். (முடிக்கும் சொல் பெயரும்ஆம்.)எ-டு : சாத்தன் வந்தான், (அவன்) – உயர்திணைசாத்தன் வந்தது, (அது) – அஃறிணை(தொ. சொ. 174 நச். உரை)அஃறிணை விரவுப்பெயர் – உயர்திணைப்பெயரோடு அஃறிணை விரவி வரும்பெயர்கள். (தொ. சொ. 153 கல். உரை)

அஃறிணை விரவுப்பெயர் விளியேற்றல்

அஃறிணை விரவுப்பெயர், உயர்திணை விரவுப்பெயருக்கு ஓதப்பட்டவிதிகளைப் பின்பற்றியே விளியேற்கும். நீயிர் – தான் – என்ற ரகர னகரஈற்று விரவுப்பெயர்கள் விளி ஏலா.எ-டு : சாத்தி – சாத்தீ, பூண்டு – பூண்டே, தந்தை – தந்தாய்,சாத்தன் – சாத்தா, கூந்தல் – கூந்தால், மக்கள் – மக்காள்.இவை அண்மை விளியாங்கால், சாத்தி – பூண்டு – தந்தை – சாத்த – எனவருதலும் கொள்க.இனிக் கூறியவாறன்றி, பிணா வாராய் – அழிதூ வாராய் – என ஓதாத ஆகாரஊகாரங்கள் இயல்பாய் விளியேற்றலும்,சாத்தன் வாராய் – மகள் வாராய் – தூங்கல் வாராய் – எனஎடுத்தோதியஈறுகள் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்றலும்,மகனே – தூங்கலே – என, ஏகாரம் பெற்று விளியேற்றலும் கொள்ளப்படும்.(தொ. சொ. 150 சேனா. உரை) (152 நச். உரை)

அஃறிணை விரவுப்பெயர்ப் புணர்ச்சி

அஃறிணை விரவுப்பெயர் அவ்வழி, வேற்றுமை என்ற இரு திறத்துப்
புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் இயல்பாக முடியும்.
எ-டு : சாத்தன் குறியன், மாண்டான், வலியன், அடைந் தான்; சாத்தி
குறியள், மாண்டாள், வலியள், அடைந்தாள் என அவ்வழிக்கண்ணும்,
சாத்தன் கை, மாட்சி, வன்மை, அழகு; சாத்தி கை, மாட்சி, வன்மை,
அழகு என வேற்றுமைக் கண்ணும்
வன்மை – மென்மை – இடைமை – உயிர் – என்ற நாற்கணங் களும் வந்துழியும்
இயல்பாயினவாறு.
னகர ஈற்று விரவுப்பெயரின் முன் தகர நகர முதல் மொழிகள் வரின்,
அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், றகர னகர மாகத் திரியும்.
எ-டு : சாத்தன் + தீயன், நல்லன் = சாத்தன்றீயன், சாத்த னல்லன்
சாத்தன் + தீமை, நன்மை = சாத்தன்றீமை, சாத்தனன்மை (தொ. எ. 155
நச்.)
கப்பி + தந்தை = கப்பிந்தை, சென்னி + தந்தை = சென்னிந்தை என,
இயல்பாகாது வருமொழிமுதல் தகரஉயிர்மெய் கெட்டுப் புணர்ந்தவாறு. (தொ. எ.
246 நச்.)

அஃறிணைஒருமை துவ்விகுதிகாலஎழுத்துப் பெறுதல், அஃறிணைஒருமை றுவ்விகுதி காலஎழுத்துப் பெறுதல்

‘அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று’க் காண்க.

அஃறிணைக் குறிப்புமுற்று

இன்று இல உடைய அன்று உடைத்து அல்ல உளது உண்டு உள – என்னும்சொற்களும், பண்புகொள் கிளவி – பண்பி னாகிய சினைமுதற் கிளவி – ஒப்பொடுவரூஉம் கிளவி – முதலி யனவும் அஃறிணைக் குறிப்புமுற்றுக்களாம்.உண்டு என்பது உண்மையையும் பண்பையும் குறிப்பையும் உணர்த்தும்.எ-டு : ஆ உண்டு: உண்மைத் தன்மை. இது ‘பொருண்மை சுட்டல்’எனப்படும்.உயிருக்கு உணர்தல் உண்டு: பண்புஇக்குதிரைக்கு இக்காலம் நடை உண்டு: குறிப்புஉண்டு என்பதன் எதிர்மறையாகிய இன்று என்பது பொய்ம் மையையும்இன்மைப்பண்பினையும் இன்மைக் குறிப்பையும் உணர்த்தும்.எ-டு : முயற்குக் கோடு இன்று: பொய்ம்மைஇக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று : பண்புஇக்குதிரைக்கு ஈண்டு நடை இன்று : குறிப்புஉடைத்து, உடைய என்பன பெரும்பான்மையும் உறுப்பின் கிழமையும்பிறிதின்கிழமையும் பற்றி வரும்.எ-டு : யானை கோடு உடைத்து: உறுப்பின் கிழமை – பண்பு; மேரு சேர்காகம் பொன்னிறம் உடைத்து: குறிப்பு (பிறிதின்கிழமை); குருதிபடிந்துண்ட காகம் குக்கிற் புறம் உடைத்து, உடைய: (களவழி.5); (பிறிதின்கிழமை); ‘அறிந்த மாக்கட்டு’ (அகநா. 15), ‘குறை கூறும் செம்மற்று’(கலி.40), உயர்ந்ததாதல் மேற்று, வைகற்று, ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா.173) – இவை பிறிதின் கிழமையாகிய உடைமைப்பொருள் பட வந்தன.வடாஅது, தெனாஅது – ஏழன் பொருள்பட வந்தன.மூவாட்டையது, செலவிற்று என்பன காலமும் தொழிலும் பற்றி வந்தன.பண்புகொள் கிளவி – கரிது, கரிய முதலியன.பண்பினாகிய சினைமுதற்கிளவி – வெண்கோட்டது, வெண் கோட்டன;நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய.ஒப்பொடு வரூஉம் கிளவி – பொன்னன்னது, பொன்னன்னஇவையன்றி, நன்று தீது நல்ல தீய முதலியனவும் கொள்ளப் படும். (‘எவன்’என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவாய குறிப்பு வினைமுற்று.) (தொ. சொல்.222 நச். உரை.)இன்று என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடின்று என்பது. இலஎன்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடில என்பது. கோட்டினது இன்மைமுதற்கு ஏற்றிக் கூறும்வழி இவ்வாறாம். இனி அக்கோடுதனக்கே இன்மைகூறும்வழி இவ்வெருத்திற்குக் கோடின்று – என ஒரு பொருள்முதல்கூறி-யானும், இவ்விடத்துக் கோடின்று – என ஓரிடம் கூறியானும்,இக்காலத்துக் கோடின்று என ஒரு காலம் கூறியானும் வரும். (தொல். சொல்.222 கல். உரை)

அஃறிணைக்கண் ஆண்பெண் பாகுபாடின்மை

‘அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை’ என்பது சூத்திரம். ஆண் பெண்என்ற விகற்பம் அஃறிணைப் பெயர்க்கண் அன்றி அவ்வினைக்கண் இன்மையின்‘ஆண்’ என்றமையான் உயர்திணை என்பதும் ‘பால்’ என்றமையான் முற்று என்பதும், மேலைச் சூத்திரத்து ‘முற்று வினைப்பதம் ஒன்றே’ என விதந்தாற்போலஇதனுள் விதவாமையின், இருவகை முற்றிற்கும் பொது என்பதும் பெற்றாம்.(நன். 325 சங்.)

அஃறிணைக்கண் ஒன்றன்பாலே கொண்டமை

அஃறிணைக்கண் சேவல் என்றல் தொடக்கத்து ஆண்பாலும் பெடை என்றல்தொடக்கத்துப் பெண்பாலும் உளவேனும், அவ்வாண்பாலும் பெண்பாலும்உயிருள்ளனவற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின்அப்பகுப்பு ஒழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ‘ஒன்று’ எனப்பட்டது.(நன். 263. சங்.)

அஃறிணைக்கண் தன்மைவினை இன்றாதல்

கிளியும் பூவையும் தன்வினையான் உரைக்கும் ஆதலின், அஃறிணைக்கண்தன்மைவினை இன்று என்பது என்னை யெனின், கிளியும் பூவையும் ஆகியசாதியெல்லாம் உரையா டும் என்னும் வழக்கு இன்மையானும், அவ்வகைஉரைக்குங் கால் ஒருவன் உரைத்ததைக்கொண்டு உரைக்கும் ஆகலானும், ஒருவன்பாடின பாட்டை நரப்புக்கருவியின் கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக்கருவியும் உரையாடிற்றாதல் வேண்டும் ஆகலானும், அவ்வாறு வருவனமக்கள்வினை ஆகலான் தன்மைவினை இன்று என்பதே தொல்காப்பிய முடிபு. (தொ.சொ. 210 தெய். உரை)

அஃறிணைச் சொல்

அஃறிணை உயிருடையதும் உயிரில்லதும் என இரண்டாம். அவற்றுள்உயிருடையது ஆணும் பெண்ணும், ஆண்சிலவும் பெண்சிலவும், ஆண்பன்மையும்பெண்பன்மையும், அவ் விரண்டும் தொக்க சிலவும், அவ்விரண்டும் தொக்கபலவும், உயிரில்லது ஒருமையும் சிலவும் பலவும் – என இவ்வாற்றான் பலபகுதிப்படுமேனும், சொல்வகை நோக்க இரண்டல்லது இன்மையின் இரண்டே ஆயினஎன்பது. (தொ. சொ. 4 கல். உரை)

அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று

அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று அ ஆ வ – என்னும் விகுதிகளான்அமையும். அகரம் மூன்று காலமும் பற்றி வரும். ஆகாரம் எதிர்மறைவினையாய்மூன்று காலத்துக்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும்.வகரம் தனித்தும் உகரம் பெற்றும் வரும்.அகரம் இறந்தகாலம் பற்றி வருங்கால், க ட த ற என்னும் நான்கன்முன்னும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; ஏனை யெழுத்தின் முன் ரகாரழகாரம் ஒழித்து ‘இன்’ பெற்று வரும்; நிகழ்காலத்தில், நில் – கின்று -என்பனவற்றோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; எதிர்காலத்தில்பகரத்தொடும் வகரத்தொடும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்.எ-டு : தொக்கன, தொக்க ; உண்டன, உண்ட ; வந்தன,வந்த; சென்றன, சென்ற – எனவும், போயின , போய – என வும், உண்ணாநின்றன,உண்ணாநின்ற; உண்கின்றன, உண்கின்ற – எனவும், உண்பன, உண்ப ; வருவன, வருவ- எனவும் வரும்.உரிஞுவன, உரிஞுவ – என உகரத்தோடு ஏனை எழுத்துப்பேறும் ஏற்றவழிக்கொள்ளப்படும். வருவ, செல்வ – என்பன அகர ஈறு ஆதலும் வகர ஈறாதலும்உடைய.ஆகாரம் காலஎழுத்துப் பெறாது உண்ணா தின்னா – என வரும். வகரம்,உண்குவ தின்குவ – என எதிர்காலத்துக்கு உரித்தாய்க் குகரம் அடுத்தும்,ஓடுவ பாடுவ – எனக் குகரம் அடாதும் வரும். உரிஞுவ திருமுவ – என உகரம்பெறுதலும் ஏற்புழிக் கொள்ளப்படும். (தொ. சொ. 216 சேனா. உரை)

அஃறிணைப் பால் பகுப்பு

அஃறிணைப் பெயர்க்கண் ஆண்பால் பெண்பால் பகுப்பு உண்டு. ஆண்பாலைத்தெரிவிக்கும் சேவல் ஏற்றை முதலிய சொற்களும், பெண்பாலைத் தெரிவிக்கும்பேடை பெடை முதலிய சொற்களும் அத்திணையில் உள. ஆயின், அஃறிணைவினைமுற்றின்கண் ஆண்பால்ஈறு பெண்பால்ஈறு என்பன தனித்தனியே இல்லை.ஒன்றன்பால் என்னும் ஒருபகுப்பினுள் ளேயே எல்லாம் அடங்கி விடும்.ஆதலின், அஃறிணை ஆணொ ருமை பெண்ணொருமை என்ற இரண் டனையும் அடக்கும்ஒன்றன்பால், ஆண்பன்மை பெண்பன்மை என்ற இரண்டனை யும் அடக்கும்பலவின்பால், என்னும் இரண்டு பாற்பகுப்புக் களே அஃறிணை வினையை யொட்டிஅமைந்துள.“அஃறிணைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் உயிருள்ளன வற்றுள்சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின், எல்லாவற்றிற்கும்பொருந்த, அவ்வாண் பெண் பகுப்பினை ஒழித்து, ஒன்று எனப்பட்டது என்க.”(நன். 263. சங்.)

அஃறிணைப் பிரிப்பு

அஃறிணையை ஒன்று பல என்று பிரித்துக் கூறல்.எ-டு : ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்?’ (தொ. சொ. 24இள. உரை)ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணை இயற் பெயராகியபொதுச்சொல் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப் பட்டது.எ-டு : ஒன்றோ பலவோ என்று ஐயம் ஏற்பட்டவழி, ஒன்று கொலோ பலகொலோசெய்புக்க பெற்றம்’ என வினவுதல். பெற்றம் : அஃறிணை இயற்பெயர்.(தொ. சொ. 24 நச். உரை)ஒருமையும் பன்மையும் வினையாற் பிரிக்கப்படுதலின், ஆகுபெயரான்அஃறிணை இயற்பெயர் ‘அஃறிணைப் பிரிப்பு’ எனப்பட்டது. (தொ. சொ. 24 கல்.உரை)அஃறிணைப் பிரிப்பு என்றதனான், பொதுமை (பன்மை) யின் பிரிவதுஒருமையாதலின் ஒருமைச்சொல்லால் சொல்லுதல்.எ-டு : குற்றியோ மகனோ தோன்றுகின்ற அது?(தொ. சொ. 24 தெய். உரை)

அஃறிணைப் பெயர்கள்

பெயர்களை ஈறு பற்றிப் பகுத்தல் இயலாமையின், அவற்றை எடுத்தோதியேகுறிப்பிடுதல் தொல்காப்பிய மரபாகும்.அது இது உது, அஃது இஃது உஃது, அவை இவை உவை, அவ் இவ் உவ், யாது யாயாவை, பல்ல பல சில உள்ள இல்ல, வினைப்பெயர், பண்புகொள் பெயர்,இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப்பெயர், ஒப்பினாகிய பெயர் -என்பனவும்பிறிது பிற, மற்றையது மற்றையன, பல்லவை சில்லவை, உள்ளது இல்லது,அன்னது அன்ன – போல்வன பிறவும்,அஃறிணைப் பொருள்கள் பலவற்றின் இயற்பெயர்களும் அஃறிணைப்பெயர்களாம்.இவற்றுள் அது என்பது முதல் இல்ல என்பது ஈறாக உள்ளனவும், பிறிதுஎன்பது முதல் அன்ன ஈறாக உள்ளனவும் ஒருமை பன்மை காட்டுவன. இயற்பெயர்கள்ஒருமைபன்மை இரண்டற்கும் பொது. இவை கொண்டுமுடியும் வினை களைக் கொண்டேஇவற்றின் பால் உணரப்படும். (தொ. சொ. 169 – 172.நச்.)சுட்டு முதலாகிய உகர ஐகார ஈற்றுப் பெயரும், எண்ணின் பெயரும்,உவமைப் பெயரும், சாதிப் பெயரும், வினாப் பெயரும், உறுப்பின் பெயரும்அஃறிணைப்பெயராம். அவை வருமாறு:அது இது உது, அவை இவை உவை – சுட்டுப்பெயர்.ஒன்று, இரண்டு, மூன்று – எண்ணின் பெயர்.பொன்னன்னது, பொன்னன்னவை – உவமைப்பெயர்.நாய், நரி, புல்வாய் – சாதிப் பெயர்.எது எவை, யாது யாவை – வினாப் பெயர்.பெருங்கோட்டது, பெருங்கோட்டவை – உறுப்பின் பெயர்.இவை அஃறிணைப் படர்க்கைப் பெயராமாறு அடைவே கண்டுகொள்க. (நேமி.பெயர். 4 உரை)

அஃறிணைப்பெயரில் சாதிஒருமை,சாதிப்பன்மை

இனமுடைய பலபொருள்களைச் சாதி என்பர். அத்தகைய பல பொருள்களையும்சுட்டும் வகையில் ஒருமையில் வரும் சொல் சாதி ஒருமை (சாதி ஏகவசனம்)எனப்படும். இஃது ஈறு தோன் றியதும், தோன்றாததும் என இருவகைத்து.‘நூல்எனப் படுவ து நுவலுங் காலை’ (தொ. பொ. 478), ‘உலகத்தார் உண்டு என்ப து ’ (குறள் 850) என்பன போன்றவை ஈறு தோன்றிய சாதி ஒருமை. ‘ குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (குறள் 29) ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ’ (குறள் 43) என்பன போன்றவை ஈறு தோன்றாத சாதி ஒருமை. இவைவருமொழி நோக்காமலேயே தமக்குரிய ஒருமைப் பாலை விட்டுப் பன்மைப்பாலையேவிளக்குதலின், அஃறிணைக் கண் சாதி யொருமை ஆயின.‘எண்என்ப ஏனை எழுத்துஎன்ப’ (குறள் 392) என்றாற் போல்வன அஃறிணைப்பெயரில் சாதிப்பன்மை. (இ. கொ. 130, பி. வி. 50)

அஃறிணைப்பெயர் கள்ளொடு சிவணுதல்

அஃறிணை இயற்பெயர்கள் ஒருமைக்கும் பன்மைக்கும் பொது ஆவன. அவை கள்விகுதியொடு கூடியவழியே பன்மைப்பால் உணர்த்துவன.எ-டு : ஆக்கள், குதிரைகள்.‘கற்பனகள்’ (சீவக. 1795) என்ற சொல்லில் ‘கற்பன’ என்பதே பலவின்பாலைஉணர்த்துதலின், ஆண்டுக் கள்ஈறு இசை நிறைத்து நின்றதாம். (இதனைப்பிற்காலத்தார் விகுதிமேல் விகுதி என்ப.)வேந்தர்கள் (யா. க. 67 உரை), பிறந்தவர்கள் (சீவக. 2622), எங்கள்(சீவக. 1793) எனக் ‘கள்’ உயர்திணைக்கண்ணும் இசை நிறைத்து நின்றவாறு.(தொ. சொ. 171 நச். உரை.)

அஃறிணைப்பெயர் விளி ஏற்றல்

அஃறிணைப்பெயர்கள் உயிரீற்றனவாயினும் புள்ளியீற்றன வாயினும்விளியேற்குமிடத்து ஏகாரம் பெற்று விளியேற்றலே பெரும்பான்மை.எ-டு : கிளி – கிளியே ; மரம் – மரமே – ஏகாரம் பெற்றுவிளியேற்றன. முயல் – முயால்; நாரை- நாராய் – சிறுபான்மை பிறவாற்றான்விளியேற்றன‘நெஞ்சம்! வருந்தினை’‘வெண்குருகு! கேண்மதி’ சிறுபான்மை அண்மைக்கண் இயல்பாய்விளியேற்றன. (தொ. சொ. 153 நச். உரை)

அஃறிணைப்பெயர் விளிநிலை பெறூஉம்காலம்

அஃறிணைப் பொருள்களில், பழக்கப்பட்ட விலங்குகளும் பறவைகளும் தவிரஏனைய விளித்தலை உணராதன. ஆயின் புனைந்துரை கலந்த செய்யுட்கண்,‘முன்னிலை யாக்கலும் சொல்வழிப் படுத்தலும்’ (தொ. பொ. 101)வேண்டுமிடத்தேயே அஃறிணைப் பொருள்கள் விளிநிலை பெறும்.(‘தும்பி!……. கண்டது மொழிமோ’ குறுந். 2) (தொ. சொ. 153 நச்.உரை)

அஃறிணையில் ‘இனைத்தெனக் கிளக்கும்எண்ணுக்குறிப்பெயர்

எண்ணுப் பெயரெல்லாம் அஃறிணையாம்.எ-டு : ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்இவை இவ்வளவு எண்ணிக்கையுடையன என்று வரையறுக் கப்பட்டவை. இவையேஇத்துணைய என்று வரையறுக்கப் பட்ட எண்ணுக்குறிப்பெயர்களாய் ஆகுபெயர்ஆகாமலேயே பொருளைத் தாமே உணர்த்தும். (தொ. சொ. 170 நச். உரை)

அஃறிணையில் தொழிலிற் பிரிந்த ஆண்ஒழிமிகுசொல்

யானை நடந்தது – என்புழி, யானை என்னும் அஃறிணைப் பெயர் ஆண்பெண்இரண்டற்கும் பொது. ஆயினும் ‘நடந்தது’ என்னும் வினையான், யானை தொழிலிற்பிரிந்த ஆண் ஒழி மிகு சொல். [ இப்பெற்றம் அறம் கறக்கும் (இள.) ] (தொ. சொ. 50 நச். உரை)

அஃறிணையில் தொழிலிற் பிரிந்தபெண்ஒழி மிகுசொல்

யானை ஓடிற்று – என்புழி, யானை என்னும் அஃறிணைப் பெயர் ஆண்பெண்இரண்டற்கும் பொது. ஓடுதல் ஆண் யானைக்கே உரியது ஆதலின் யானை ஈண்டுத்தொழிலிற் பிரிந்த பெண்ஒழி மிகு சொல். [ இப் பெற்றம் உழவு ஒழிந்தன. (இள.) ] (தொ. சொ. 50 நச். உரை)

அஃறிணையில் பால்காட்டும்வினைவிகுதிகள்

அஃறிணைக்கு வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு, துவ்வும்றுவ்வும் டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறிசொல்; அவ்வும் ஆவும் வவ்வும்இறுதியாய் வருவன பலவறிசொல்.எ-டு :(நேமி. மொழி. 5 உரை)

அஃறிணையில் பெயரில் பிரிந்த ஆண்ஒழிமிகுசொல், அஃறிணையில் பெயரில் பிரிந்த பெண்ஒழி மிகுசொல்

‘பெயரினும் தொழிலினும் பிரிபவை’ காண்க.

அகக் கரணம்

மூன்றாம்வேற்றுமைப் பொருள்களில் ஒன்றான கரணம் (கருவி)இருவகைப்படும். அவை அகக்கரணம் புறக்கரணம் என்பன. வடமொழியுள் முன்னதுஅப்பியந்தரம் என்றும் பின்னது பாகியம் எனவும் வழங்கும். ‘மனத்தால்மறுவிலர்’ (நாலடி 180), ‘மனத்தானாம் உணர்ச்சி’ (குறள் 453), ‘உள்ளத்தால் உள்ளல்’ (குறள் 282) என்றல் போல்வன அகக்கரணம். (கண்ணால் கண்டான்,‘நெய்யால் எரி நுதுப்பேம்’ (குறள் 1148) என்றல் போல்வன புறக்கரணம்).(பி. வி. 12)

அகக்கருவி

எழுத்ததிகாரம் குறிப்பிடும் புணர்ச்சியாகிய செய்கைக்கு உதவும்
கருவி வகைகள் நான்கனுள் அகக்கருவி என்பதும் ஒன்று.
எழுத்துக்களின் இலக்கணமும் மொழியின் இலக்கணமும் தொன்றுதொட்டுப்
புணர்ச்சிக்குக் கருவியாதலின், நிலை மொழி வருமொழிப் புணர்ச்சிக்கண்
நிலைமொழியீறும் வருமொழிமுதலும் அத்தொடரின் அகத்தே அமைதலின்,
நிலைமொழியீற்றெழுத்தைப் பற்றிய விதிகளைக் கூறும் நூற்பாக்களும்
வருமொழி முதலெழுத்தைப் பற்றிய விதி களைக் கூறும் நூற்பாக்களும்
அகக்கருவியாகும்.
‘எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா’ (தொ. எ. 272) என்பது நிலைமொழியீறு
பற்றியது.
‘அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதல் ஆகி // உளவெனப்
பட்ட ஒன்பதிற் றெழுத்தே; // அவைதாம், // கசதப என்றா நமவ என்றா // அகர
உகரமோடு அவையென மொழிப’
(தொ. எ. 170) என்பது வருமொழி முதல்
பற்றியது.
(தொ. எ. 1 நச். உரை)

அகக்கருவி

மூன்றாம் வேற்றுமைக்குப் பொருளான கருவி என்பதனை இலக்கணக்கொத்துமூவகைப் படுக்கும். அவையாவன அகக்கருவி, புறக்கருவி, ஒற்றுமைக் கருவி -என்பன.எ-டு : மனத்தான் நினைத்தான் – மனம் : அகக்கருவி; வாளான்வெட்டினான் – வாள் : புறக்கருவி; அறிவான் அறிந் தான் – அறிவு :அறிதலுக்கு ஒற்றுமைக் கருவி (இ. கொ. 33)

அகச்செய்கை

எழுத்ததிகாரத்துக் கூறப்படும் செய்கையாவது புணர்ச்சியாம்.
அச்செய்கையின் நான்கு வகைகளுள் அகச்செய்கை என்பதும் ஒன்று. உயிரீறு,
புள்ளியீறு, குற்றியலுகர ஈறு ஆகியவை வருமொழி முதலொடு புணரும்வழி
நிகழும் புணர்ச்சி நிலையைக் குறிப்பிடும் இயல்கள் ‘அகத்தோத்து’
எனப்படும். நிலைமொழியீறு வருமொழியில் வன்கணம் முதலிய வரும் வழி
இன்னஇன்னவாறு முடியும் என்று கூறுவது அகச் செய்கையாம்.
எ-டு: பொன் + குடம் = பொற்குடம் (தொ. எ. 332)
நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்தது என்று கூறுதல் போல்வன
அகச்செய்கையாம். (தொ. எ. 1. நச். உரை)

அகண்ட பதம்

தமிழில் பகாப்பதம் என்பது இது. இது வடமொழியில் பிராதிபதிகம்எனப்படும். இதன் இலக்கணம் வருமாறு: பொருளுடையதும், வினைப்பகுதிஆகாததும், விகுதி உருபு இடைநிலை போன்ற எதுவும் ஆகாததும், அவற்றான்முடிந் துள்ளதாகாததும் ஆகிய பெயர்ப்பகாப்பதமே பிராதிபதிகம் என்பது.தமிழில் பெயர்ப்பகாப்பதமே வேற்றுமையுருபு பெற்று இரண்டாவது முதல்ஏழாவது வரையிலான வேற்றுமை களாம். (பி.வி.7)

அகதிதம்

வினை ஒன்று இரண்டு செயப்படுபொருள்களைப் பெறுதல். ஒரு சில வினைகளேஇங்ஙனம் வருபவை. ஐ வேற்றுமை பெற்ற இரண்டனுள் ஒன்று ஆறாம் வேற்றுமையாகவிரிவது. மற்றொன்று, அங்ஙன மின்றிச் செயப்படுபொருள் காட்டும்இரண்டாவதாகவே பொருள்படுவது.எ-டு : பசுவினைப் பாலைக் கறந்தான், ஆனையைக் கோட்டைக்குறைத்தான்.இவை பசுவினது பாலைக் கறந்தான் – எனவும், ஆனையது கோட்டைக்குறைத்தான் – எனவும் பொருள்படும்.ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் என்னும் தொட ரில், ஆசிரியனதுஎன்று ஆறாம்வேற்றுமை விரிய இட மில்லை. இதனை வடமொழியில் துகன்மகம்(துவி கர்மகம்) என்பர். (பி. வி. 12)

அகத்தியனார்

அகத்தியன் என்னும் சொல், உயர்வுபற்றிய ஆரைக்கிளவி பெற்றுஅகத்தியனார் என முடிந்தது.‘அகத்தியன்’ – காண்க.

அகத்தியனார் மாணாக்கர்

அகத்தியனார்க்கு மாணாக்கர் பன்னிருவர். அவர்களாவார்தொல்காப்பியனும், அதங்கோட்டாசானும், துராலிங்கனும், செம்பூட்சேயும்,வையாவிகனும், வாய்ப்பியனும், பனம்பார னும், கழாரம்பனும், அவிநயனும்,காக்கைபாடினியும், நற்றத்தனும், வாமனனும் என்ப. (பா. வி. பக்.104)

அகத்தியன்

முத்தமிழ் அகத்திய முதல்நூல் ஆசிரியன் அமர முனிவன் அகத்தியன்.குடத்தில் தோன்றிய காரணத்தான் கும்பமுனி, கும்பசம்பவன் முதலாய பெயர்அவனுக்கு வழங்கின. குறுமுனி, தமிழ்முனி முதலாய பிற பெயரும் வழங்கும்.அவனே தேவஇருடிகளுள் சிறந்தவன் எனப் புராணம் கூறும். அவன் புகழ் கூறாதபுராண இதிகாசம் இல்லை; தேவரும் முனிவரும் இல்லை.நகுடனை இந்திரபதத்தினின்றும் இழிந்து பூமியிற் சர்ப்பம் ஆகுமாறுசபித்தமை; பன்னீர்யாண்டு பொதியின்கண் இருந்து வேள்விசெய்து, இந்திரன்முதலாய தேவர் ஏலாமல் மழைவளம் தடுப்பவே, தன் தவவலியான் பலவளனும்படைத்து, நான்முகன் முதலாய மூவர்க்கும் வித்தினைக் கொண்டுஅவிஅளித்தமை; உயிர்க்கொலை வேள்வி புலைவினை ஆகா அறவினையே ஆயினும்,கடையாய வேள்வி என்றும், அல்லாத வேள்வியே உத்தம வேள்வி என்றும் கூறித்தேவர்க்கு வரம் அளித்த அருந்தவக் கொள்கை யுடைமை; வாதாபி இல்வலன்என்னும் அசுரர் இருவரையும் தனது தவவலியான் அழித்தமை; தேவர்கள் வேண்டத்தென்திசைப் போந்து, மேருத் தாழ்ந்து தெற்கு உயர்ந்த நிலையைச் சமம்செய்தமை; இராமன் இலங்கை சென்ற காலத்திற்கு முன்னும், பரசுராமனை அஞ்சிஒளித்த காந்தன் காலத்திற்கு முன்னும், காவிரி யுற்பத்திக்கு முன்னும்,எனக் கருதப்படும் பண்டைக் காலத்தே தென்திசை மலயத்திற்குப்போந்திருந்தபோது தமிழ் முதல்நூல் அளித்தமை – முதலா யின அகத்தியன்பெருமைகள். (பா. வி. பக். 98-101)கம்பராமாயணம் அகத்தியப் படலத்துள் தொடக்கக்கவிகள் அகத்தியன்பெருமைகளைப் பாரிப்பன.

அகத்தியம்

அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட இயல் இசை நாடகம் என்னும்முத்திறத்து இலக்கண நூல்; எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறஇலக்கணக் கூறுபாடும் தம்முள் விரவ இயற்பகுதி யாக்கப்பட்டது என்ப.தொல்காப்பியத்திற்கு இதுவும் முதல்நூல்.“தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவ ராயினார் அவனருளால்அவன் கண்ட இயற்கை முதல் நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் சூத்திரம்எனச் செயற்கை நலம் தோன்றச் செய்த நூல் செயற்கைமுதல் நூலாம். கலச யோனியாகிய ஆசிரியன் அகத்தியன், முனைவனாகிய திரிபுரம் எரித்த விரிசடைக்கடவு ளிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூல் உணர்ந்து, பின்னர் அதன்பொருளைக் குன்றெறிந்த முருக வேளிடத்துக் கேட்டுத் தெளிந்து, முத்தமிழ்இலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆகலின், அவன்அருளிச் செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இரு நூலும்தமிழிற்குச் செயற்கைமுதல்நூல் ஆயின.” (பா. வி. பக். 97)அகத்தியத்தைச் செயற்கைமுதல்நூல் என்பர் ஆசிரியர்அரசஞ்சண்முகனார்.தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின்,தலைவர்வழிநின்று தலைவனாகிய அகத்தியனான் செய்யப்பட்டதும் முதல்நூல்;அகத்தியமே முற்காலத்து முதல்நூல். (தொ. பொ. 649 பேரா)பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளது என்பது. அதுமுதல்நூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ்நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின். (தொ. பொ.484 பேரா.)

அகநிலை ஒத்தாழிசை உறுப்புக்கள்

அகப்பொருளைப் பற்றி வருதலின் அகநிலை ஒத்தாழிசைக் கலியாம்.அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் இடைநிலைப் பாட்டு, தரவு, போக்கு,அடையென்னும் நான்கும் பயின்றுவரும். (அடை- தனிச்சொல்) இவை பயின்றுவரும் எனவே, தாழம்பட்ட ஓசையினை உடையன அல்லாத இடைநிலைப்பாட்டும் ஒரோவழிவரும் என்பது.இவை பயின்று வரும் எனவே, இத்துணைப் பயிலாது அம்போதரங்கமும்அராகமும் சிறுபான்மை வரும் என்ப. ஆயின், கலித்தொகையிலுள்ள 150கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியுள் அம்போதரங்க உறுப்பும் அராக உறுப்பும்பயின்று வருவன இன்மையின், அங்ஙனம் கூறுதல் தொல்காப்பிய நூலுக்குமாறுபட்ட செய்தியாம்.இடைநிலைப்பாட்டு என்பது தாழம்பட்ட ஒசையுடையன, தாழம்பட்டஓசையில்லாதன என இரண்டனையும் குறிக்கும். தாழிசை என்பது தாழம்பட்டஓசையுடையனவற்றையே குறிக்கும்.இவ்வொத்தாழிசைக் கலியில் தாழம்பட்ட ஓசையில்லாதன வாகிய இடைநிலைஉறுப்பும் அருகி வருதலின், தாழிசை என்று கூறாது ‘இடைநிலைப்பாட்டு’என்று கூறப்பட்டது.இடைநிலைப்பாட்டினை முற்கூறினார், அதனால் இக்கலி ஒத்தாழிசை எனப்பெயர் பெறுதலின். எனவே, தரவு முன்வைத்தலே முறை. இவ்வொத்தாழிசைக்கலிதரவு, தாழிசை, போக்கு (-சுரிதகம்) என்ற மூன்று உறுப்பானும் வந்துசிறுபான்மை தனிச்சொல்லாகிய அடையின்றியும் வருதலின் தனிச்சொல்இறுதியில் கூறப்பட்டது.படவே, அகநிலை ஒத்தாழிசையின் உறுப்புக்கள் முறையே தரவு, தாழிசைமூன்று, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் என்பதுகொள்ளப்படும்.இடைநிலைப்பாட்டு தரவுக்கும் தனிச்சொல்லுக்கும் இடையில் வருவது.(தொ. செய். 132. நச். உரை)

அகநிலை ஒத்தாழிசைச் சுரிதகம் : அடிஅளவும், பொருள் வைப்பும்

அகநிலை ஒத்தாழிசையின் இறுதிப் பகுதியாகிய சுரிதகம் சிறுபான்மைதரவுகளோடு ஒத்தும் சிறுபான்மை ஏறியும் வருமாயினும், பெரும்பான்மைதரவின் பாகம் (-பாதி) பெறும்.சுரிதகம் பெரும்பான்மையும் இடைநிலைப் பாட்டின் பொருளை முடிவுகாட்டியே நிற்கும்; சிறுபான்மை தரவின் பொருள் கொண்டும் முடியும்;தனக்கெனப் பொருள் முடிதலும் உண்டு.சுரிதகத்தின் சிற்றெல்லை ஆசிரியத்துக்குக் கூறிய மூன்றடிச்சிறுமையாம். தரவின் பாகம் ஆகிய ஆறடியே உயர்விற்கு எல்லை. 12 அடித்தரவிற்கும் 3 அடிச் சுரிதகம் வரலாம். சுரிதகம் வெண்பாவும்ஆசிரியமாகவும் வரும்.எ-டு : ‘வலிமுன்பின்’ – (கலி. 4) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 4 அடி.‘பாஅ லஞ்செவி’ (கலி. 5) என்பதன் தரவு 9 அடி; சுரிதகம் 3 அடி.‘பாடின்றிப் பசந்தகண்’ (கலி. 16) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 5 அடி. (தொ. செய். 37.நச்.)துள்ளல் ஓசைத்தாய் நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்குச்சுரிதகம் ஆசிரியத்தானாவது வெண்பாவானாவது வரும். (தொ. செய். 132. இள.)சுரிதகம் தாழிசைப் பொருளேயன்றி. அவற்றொடு போக்கியற் பொருளும்கொண்டு புரைபடாது வருதலும் உண்டு.கலி 8 இன் சுரிதகம் 5 அடி உடையது. சுரிதகத்தின் முதல் இரண்டடிதாழிசையின் பொருள்; ஏனை மூன்றடியும் செய்யுளை முடிக்கும் பொருளாகும்.(செய். 137 நச். )

அகநிலை ஒத்தாழிசைத் தனிச்சொல்

அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைக்குப் பின்னும் சுரிதகத்துக்குமுன்னும் பெரும்பான்மையும் ‘ஆங்கு’ என்ற அசைச் சொல்லே தனிசொல்லாகவரும். (‘எனவாங்கு’ என்றாற் போன்ற தனிச்சொற்கள் பொருள் பெற்றுவரும்.எ-டு : கலி. 5 எனவாங்கு – என்று யாம் நினக்குச் சொல்லா நிற்க;(ஆங்கு – அசை – நச்.)ஆங்கு என்னும் அசைச்சொல் பயிலும் எனவே, அல்லாத வாகிய எனவாங்கு, எனஇவள், என நின், அதனால், என நீ, என நம், அவனை, என்று நின் – என்றாற்போல்வன பொருள் பெற வருதல் பெற்றாம். ஆங்கு என்பது ஆங்க எனவும் வரும்.ஆங்கு என்பது ஏழனுருபாய்ப் பொருளுணர்த்திற்றேல், யாண்டும்பொருளுணர்த்துதல் வேண்டும்; அங்ஙனம் நில்லாமையின் அசைநிலை ஆயிற்று.(தொ. செய். 135. நச்.)இது தாழிசை முன்னரும் சிறுபான்மைவரும்.(தொ. செய். 131. இள.)தாழிசைதோறும் தனிச்சொல் வரவும் பெறும்.(தொ. செய். 128. இள.)தனிச்சொல் சில, கலியுள் வருமாறு :என வாங்கு – கலி. க.டவுள் வாழ்த்து 3, 4, 5, 8, 9, 10, 11, 15, 16,17, 20, 22, 23, 25, 27,28, 39, 30 31, 33, 34, 35 முதலியன.என இவள் – கலி. 2.என நின் – கலி . 7 என நீ – கலி. 26அதனால் – கலி. 14, 49, 50, 54, 122, 124, 127என – கலி 105 அவனை – கலி. 47என்று நின்- கலி. 71 ஆங்க – கலி. 75,77, 78, 86, 106, 140என நாம் – கலி. 40, 131 என்றாங்கே – கலி. 141ஆயின் – கலி. 61 ஆங்கு – கலி. 99, 100, 103, 104, 128, 136, 137,149, 150தாழிசை முன்னர்த் தனிச்சொல் – கலி. 101தாழிசைதோறும் தனிச்சொல் – கலி. 130, 148.

அகநிலை ஒத்தாழிசைத் தரவு

அகநிலை ஒத்தாழிசைக் கலியின் முதற் கூறாகிய தரவு 4 அடிச்சிறுமையும், 12 அடிப் பெருமையும் உடையது; சிறுபான்மை 13 அடியாகவும்வரும்.எ-டு : ‘நீரார் செறுவின்’ (கலி. 75) என்ற கலியின் தரவு (13 அடி)(செய். 133. நச்.)12 அடியின் இகந்தன துள்ளல் ஓசையான் வாரா. (பேரா.)

அகநிலை ஒத்தாழிசைத் தாழிசை

தரவைவிடத் தாழிசை சுருங்கி வருதல் பெரும்பான்மை. இதன்தாழிசைக்கு 2 அடி சிறுமை, 6 அடி பெருமை. சிறுபான்மை நான்கடித்தரவுக்கு நான்கடித்தாழிசை வருதலும் உண்டு.எ-டு : கலி 4. (தொ. செய். 134. நச். உரை)தாழிசை 4 அடியின் பெரும்பாலும் உயர வாரா; சிறு பான்மை ஐந்தடியானும்வரும். கலி. 137-இல் ஐந்தடித் தாழிசை வந்தது.கலி 68-இல் தரவு 5 அடி உடையது; முதல் தாழிசை 6 அடி உடையதாகவந்துள்ளது. தாழிசை தரவின் மிக்கு வருதலின் இது கொச்சகமாகும். (கலி.68 நச்.)தாழிசையை இடைநிலைப்பாட்டு என்றலின், பாட்டு ஓரடியான் வருதல்கூடாதாதலின், தாழிசை ஈரடியிற் குறைந்து வருதல் கூடாது. (தொ. செய்.134. பேரா.)

அகநிலைக் கொச்சகக்கலி அளவு

அம்போதரங்க ஒருபோகின் அளவே அகநிலைக் கொச்சகக் கலியின் அளவாம். (தொ.செய். 155. நச்.)அகநிலைக் கொச்சகம் : கொச்சகபேதம். (கலி. 119 உரை)

அகநிலைச் செயப்படுபொருள்

வந்தான் என்பதற்கு வருதலைச் செய்தான் என்பதே பொரு ளாதாலின், வருதலைஎன்பது அகநிலைச் செயப்படுபொரு ளாம். வருதல் : வினை; செய்தல்: தொழில்ஆதலின் எந்த வினைச் சொல்லின்கண்ணும் ஒரு தொழில் இருக்கும் என்ப தனைக்கொண்டு இங்ஙனம் கூறப்பட்டது. கண்டான் முதலிய வினைச் சொற்கள் காணுதலைச்செய்தான் என்றல் முதலாக விரிக்கப் படுதல் காண்க. (இ. கொ. 31.)அகநிலைச் செயப்படுபொருளாவது அந்தர்ப்பாவித கர்மம். எல்லாவினைச்சொற்களும் ஒருவகையில் செயப்படுபொரு ளுடையன போலவே ஆம் என்னும்இலக்கண நூலுடை யோர் கருத்தும் தோன்ற வருவதொரு விளக்கம் இது.வந்தான் என்புழி, வருதலைச் செய்தான் – என இரண்டனுருபு அடுத்துவரும் தொழிற்பெயராகக் கொள்ளப்படுதலின், செய்தலுக்கு வருதல்செயப்படுபொருளாய் – உட்கிடையாய் – அமைந்திருத்தலின் – இஃது அகநிலைச்செயல்படுபொருள் ஆயிற்று.வருதலைச் செய்தான் என்பதன்கண், வருதல் வினை என்பதும் செய்தல்தொழில் என்பதும் சேனாவரையர் உரையானும் தெளியப்படும். (தொ. சொ. 112)(பி. வி. 12)

அகன்மக பரப்பை பதம்

வடமொழியில் குறிலை ஈறும் ஈற்றயலுமாகக் கொண்ட வினைச்சொற்கள்பரஸ்மைபதம் எனப்படும். குறித்த வினை பிறர்க்கு எனின் பரப்பைபதம்என்றும், தமக்கு எனின் ஆற்பனேபதம் என்றும் இருந்த மிகப் பண்டைய சொல்வழக்கம் மறைந்துவிட்டதொன்று. ஆகவே ஈறும் ஈற்றயலும் குறிலாக உள்ளவினைச்சொற்கள் பரப்பைபதம் என்றும், பிற ஈறும் ஈற்றயலும் கொண்டவினைச்சொற்கள் ஆற்பனேபதம் என்றும் வழங்குவதே இன்றுள்ள வழக்கம்.தமிழில் இப் பாகுபாடு இல்லை. செயப்படுபொருள் குன்றாத வினை முற்றுச்சொல்லொடு வரும் செயப்படுபொருள் கருத்தாவாக – எழுவாயாக – அமையும்.இது ‘செயப்படு பொருளைச்செய்தது போல’ என்னும் விதிப்படி, சோறு அட்டது – கூரை வேய்ந்தது – என்பன போலவரும். இது கருமகருத்தா என வடமொழியில் வழங்கப்படுகிறது. இது போன்றவினைச்சொற்கள் அகன்மக பரப்பை பதமாம். (பி. வி. 11 {{OR 36?: TVG_1973,p.239}})

அகப்படுதல்

தாழிசை தரவிற் சுருங்கின முறைமை யுடைத்து – என்பது நூற்பா.அகப்படுதலாவது, அகம் புறம் என்ற இருகூறு செய்தவிடத்தே முற்கூற்றினுள்படுதல். முன் காலமுன்னாம். ஆகவே, நான்கடி முதல் இரண்டடிகாறும் தாழிசைவரப்பெறும். (தொ. செய். 134. நச்.)‘பொதுமொழி பிறர்க்கின்றி’ என்ற கலியுள் (68) ஆறடித் தாழிசையும்வருதலின், அது கொக்கக்கலியாம். (நச்)பதினோரடி முதல் இரண்டடிகாறும் தாழிசை இழிந்து வரப் பெறும்என்றவாறு. தாழிசை தரவு அகப்பட்டது எனின், தரவின் அடியை விடத் தாழிசைஅடி குறைந்திருக்க வேண்டும் என்பது. இனி, ‘சுருங்கும்’ என்னாது‘அகப்படும்’ என்றது, தரவோடு ஒத்து வரும் தாழிசையும் உள என்றுகொள்ளுதற்கு. அகப்படுதல் – ஒத்தல் எனவும் பொருள்படும்.கலி 124 இல், தரவு 4 அடி; தாழிசையும் 4 அடி (தொ. செய். 134பேரா.)

அகப்பாட்டு வண்ணம்

அஃதாவது பாட்டின் இறுதியடி இடையடி போன்று நிற்பது. அவையாவனமுடித்துக் காட்டும் ஏகாரத்தான் அன்றி, ஒழிந்த உயிரீற்றானும்ஒற்றீற்றானும் வருவன. அவை‘தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன’(தொ. பொ. 560. பேரா.)‘உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்’ (ஐங். 21) முதலாக வரும். இவைஆசிரிய ஈற்றன.‘போயினான் யாண்டையான் போன்ம்’ என, இவ்வெண் பாவின் இறுதியடிமுடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று.‘கொடியுவணத் தவரரோ’ எனக் கலிப்பாவுள் ‘அரோ’ வந்து பின் முடியாத்தன்மையின் முடிந்ததாகலின், இவ்வடியும் அகப்பாட்டு வண்ணமாயிற்று. (தொ.செய். 224. பேரா.)

அகப்பாட்டுறுப்பு

அகப்பாட்டுக்களின் உறுப்புக்கள் 12 (ந.அ. 211) அவை.1. திணை : கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற ஏழுதிணைகள். (தொ.பொ.1)2. கைகோள் : களவு கற்பு ஆகிய ஈரொழுக்கம். காமப் புணர்ச்சி,இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு என்ற நான்குபகுதிகளை யுடையது களவு. மறை வெளிப்படுதல், தமரின் பெறுதல்என்னுமிரண்டும், இவற்றை அடுத்த மலிவு, புலவி, ஊடல், உணர்த்தல், பிரிவுஎன்ற ஐந்து பகுதிகளுமுடையது கற்பு. (தொ. பொ. 498, 499. பேரா.)3. கூற்று : களவியல் கூற்றுக்குரிய அறுவரும், கற்பியல்கூற்றுக்குரிய பன்னிருவரும். (தொ. பொ. 501-507)4. கேட்போர் : தலைவன் தலைவி முதலியோர் கூற்றைக் கேட்டற் குரியோர்.(தொ. பொ. 508-512)5. இடன் : ஒரு செய்யுள் கேட்டால், இஃது இன்ன இடத்து நிகழ்ந்ததுஎனச் சந்தருப்பத்தை உணர்த்துவது. (தொ. பொ. 513)6. காலம் : மூன்று காலத்திலும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச்செய்யுளுள்தோன்றச் செய்யும் காலம் என்ற உறுப்பு. (தொ. பொ. 514)7. பயன் : இச்செயலான் இன்னது பெறப்படும் என்னும் பயன். (தொ. பொ.515)8. மெய்ப்பாடு : சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்குஅறிதல் மெய்ப்பாடு. அது தேவர் உலகம் கூறினும் அதனைக் கண்டாற் போலவேஅறியச் செய்யும் உறுப்பு. அது நகை முதலிய எண் வகைத்து. (தொ. பொ.516-517)9. எச்சம் : கூற்றினாலும், குறிப்பினாலும் முடிக் கப்படும்இலக்கணத்தொடு பொருந்திய சொற்களும் சொற்றொடர்களும் (கூற்று -வெளிப்படக் கூறுவது) எச்சம் என்னும் உறுப்பாம். (தொ. பொ. 518)10. முன்னம் : ஒரு மொழியைக் கூறினோரும் கேட் டோரும் இன்னார் என்றுஅறியச் செய் யும் குறிப்பு நிலையில் உள்ள செய்யுள் உறுப்பு. (தொ. பொ.519)11. பொருள்வகை : எல்லாத் திணைகளுக்கும் பொதுவாகப் புலவனால்செய்யப்படுவது. (தொ. பொ. 620)12. துறை : ஐவகை நிலத்து மாக்களும் மாவும் புள்ளும் போல்வனகூறப்பட்டமுறையை மாற்றிச் செய்யுள் அமைப்பினும் அவ்வத் திணைக்கு ஏற்றஇலக்கணமும் வர லாற்று முறைமையும் பிறழாமை செய் யும் உறுப்பு. (தொ.பொ.521)இப்பன்னிரண்டும் செய்யுள் உறுப்பு 34இல் சிறப்புடைய 26இல்அமைந்தவை. (தொ. பொ. 313)

அகப்பாட்டெல்லை, புறப்பாட்டெல்லை

விளியுருபிற்குப் பெயரிறுதி அகப்பாட்டெல்லை. ஏனை ஆறு உருபிற்கும்பெயரிறுதி புறப்பாட்டெல்லை. இவ்விரண்டு எல்லைகளையும் தழுவிக்கோடற்கு‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ என்றார். (நன். 291 சங்.)

அகப்புறக் கருவி

இது கருவிவகை நான்கனுள் ஒன்று. புணர்ச்சிக்குரிய திரிபுகள் இவை
என்பதும், இயல்புபுணர்ச்சி திரிபுபுணர்ச்சி வகைகளும், நிலைமொழி
யீற்றில் இணையும் சாரியை வருமொழியொடு புணருங்கால் அடையும் திரிபுகளும்
ஆகி, நிலைமொழி வருமொழிகள் புணர்தற்கு ஏற்றனவாய் வரும் விதிகள் பற்றிய
நூற்பாக்கள் அகப்புறக் கருவிகளாம்.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்துள் நான்காம் இயலாகிய புணரியல்,
நிலைமொழி – வருமொழி – இயல்புபுணர்ச்சி – திரிபுபுணர்ச்சி – சாரியைகள்
– அவை இணையுமாறு – உடம்படு மெய் – முதலியன பற்றிக் கூறலின், அவ்வியல்
அகப்புறக் கருவியாம். (தொ. எ. 1 நச். உரை)

அகப்புறச் செய்கை

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. இது நிலைமொழியீறு பெறும் முடிவைக்
கூறாது நிலைமொழியீறு பெற்றுவரும் எழுத்து முதலியவற்றின் முடிவு
பற்றிக் கூறும் புணர்ச்சி யிலக்கணம் பற்றிய நூற்பாக்களின் இயல்பைச்
சுட்டுவ தாகும்.
அது, புள்ளியீற்றுள் உகரம் பெறும் என்று விதித்த ஞ – ண – ந – ம – ல
– வ – ள – ன – என்ற எட்டு ஈறுகளும் வருமொழி முதலில் யகரமோ உயிரோவரின்,
அவ்வுகரம் பெறா என்று விலக்குவது போல்வது.
‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை’
(தொ. எ. 163.
நச்.)
எ-டு : உரிஞுக்கடிது என உகரம் பெறும் ஞகரஈறு, அவ்வுகரம் பெறாமல்
உரிஞ் அனந்தா என்றாற்போல வருவது. இஃது ஈறறெழுத்தின் விதி ஆகாது,
ஈற்றெழுத்துப் பெற்றுவரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின், அகப்புறச்
செய்கை ஆயிற்று.
நகரஈறு உகரம் பெறும் என்பதனை விலக்கி, வேற்றுமைக்கண் உகரம் கெட
அதனிடத்து அகரம் வரும் (பொருநுக்கடிது – பொருநக் கடுமை) (தொ. எ. 299)
என்றாற் போல்வனவும், குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரமாகிய எழுத்துப்
பேறளபெடை பெறும் (226) என்பதனை, இராக்காலத்தைக் குறிக்கும் இரா என்ற
சொல் வேற்றுமையில் பெறாது (227) என்று விலக்குதல் போல்வனவும்,
நிலைமொழியீறு பற்றி அமையாமல் ஈறுபெறும் எழுத்துப் பற்றி அமைதலின், இவை
பற்றிய நூற்பாக்கள் அகப்புறச் செய்கையன வாம். (தொ. எ. 1 நச். உரை)

அகப்பொருட் கோவை

அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். இரு வகைப் பட்டமுதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப் பொருளும் பத்துவகைப்பட்டஉரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப்பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலேஎல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாக, திணைமுதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட 12 அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித்தோன்றப் பாடுவது அகப் பொருட் கோவை என்றவாறு. (இ. வி. பாட். 56உரை)அவ்வுறுப்புப் பன்னிரண்டாவன திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடன்,காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், திணைவகை, துறை என்பன. (ந.அ. 211)

அகப்பொருள் துறை

அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்று. தலைவனும் தலைவியும்களவினும் கற்பினும் இன்பம் நுகர்தலாகிய அகப்பொருள் பற்றிக்கவிஞர்களால் பல வகையாகப் பலர் கூற்றாகப் புனைந்துரைக்கப்பட்டசெய்திகள் அகப்பொருள் துறை எனப்படும். அகப்பாட்டு ஒவ்வொன்றும் நிகழும்சந்தருப்பம் ஒவ்வொரு துறையாம்.அகப்பொருள் இலக்கணம் வழுவாதவாறு தன்னையன்றி உரைப்போரும் கேட்போரும்உண்டாகலின்றிக் கவிசொல் லும் புலவன் தானே கூறுவது ‘துறை’ என்னும்உறுப்பாம். (ந. அ. 234)எ-டு : ‘எறிதேன் அலம்பும் சிலம்பில்….’ (தஞ்சை.கோ.15)“இம்மலையில் எப்போதும் இவள்பின்னர் வாளா திரிந்து மெலிந்தோம்;இவள்நினைவு வேறு போலும்”என்று வருந்திய பெருந்தகை மனம் தெளியுமாறுதலைவி சிறிதே புன்முறுவல் செய்தாள் – என்ற கவிகூற்று இப்பாடல்.

அகப்பொருள் நூல்கள்

இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள்,தமிழ்நெறிவிளக்கப் பகுதி, களவியற் காரிகை என்பனவும், தொல்காப்பியம்,வீரசோழியம், இலக்கண விளக்கம், சாமிநாதம், முத்து வீரியம் என்பவற்றிற்காணப் படும் அகப்பொருட் பகுதிப் படலங்களும் ஆம். திருக் கோவையார்உரையில் பேராசிரியர் அமைத்துள்ள அகப் பொருள் நூற்பாக்களும் அகப்பொருள்தொடர்பான நூலினவே. (நூல் – இலக்கணம்)

அகப்பொருள் விளக்கம்

இஃது அகப்பொருள் பற்றிய தனி இலக்கணநூல்; நாற் கவிராச நம்பிஎன்பவரால் இயற்றப்பட்டது. இதன்கண் அகத்திணையியல், களவியல், வரைவியல்,கற்பியல், ஒழி பியல் என ஐந்து இயல்கள் உள. இதன்கண்ணுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை 252. தொல்காப்பியத்துக்குப் பின்னர் இறையனார்அகப்பொருள் சுருக்கநூலாக அமைய, அகப் பொருள் பற்றிப் பிற்காலத்துஎழுந்த விரிவானநூல் இதுவே. அகப்பொருளைத் தொடர்நிலைச்செய்யுளாகக்கொள்வதற் கேற்ப, இதன்கண் கிளவிகள் தொடர்புறக் கூறப்பட்டுள்ளன. இன்றுதமிழில் வழங்கப்படும் அகப்பொருள் நூல்களுள் பெருவரவிற்றாக நிலவுவதுஇதுவே. கற்பியல் முடிய, தஞ்சைவாணன்கோவை கிளவிகட்கு எடுத்துக்காட்டாகத்தொடர்ந்து வருகிறது. ‘ நம்பி அகப்பொருள் ’ என்று இந்நூல் பெருவரவிற்றாகப் பெயர் கூறப்படும் இதன் காலம்கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.

அகம் புறம் முதலிய சொற்கள்

அகம் புறம் முதலியன ஓரிடத்தினை வரையறுத்து உணர்த் தும் – வழிஆறாவதாம்; இடம் என முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதாம்.எ-டு : மனையகத்து இருந்தான் – மனையினது அகத்து இருந்தான்; ஆறாம்வேற்றுமை.அறையகத்து இருந்தான் – அறைக்கண் இருந்தான்; ஏழாம் வேற்றுமை.(தொ. சொ. 83 கல். உரை)

அகம் முன் செவிகை வருவழிப் புணர்ச்சி

அகம் என்னும் சொல்லின்முன்னர்ச் செவி – கை – என்பனவரின்,
நிலைமொழியிடையில் நின்ற உயிரும் மெய்யும் கெடும்.
வருமாறு : அகம் + செவி
> அம் + செவி = அஞ்செவி; அகம்
+ கை
> அம் + கை =
அங்கை
ஒரோவழி, அகஞ்செவி, அகங்கை என இடைநின்ற உயிர்மெய் கெடாது முடியும்
இயல்பும் கொள்க. ஆண்டு ஈற்று மகரம் வன்கணத்துக்கு இனமாகத் திரிந்தது.
(நன். 222)

அகர ஆகார ஈற்று மரப்பெயர் உருபு புணரும்போது சாரியை பெறுதல்

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் பொதுவாக இன்சாரியை பெற்று உருபுகளொடு
புணரும் (தொ. எ. 173 நச்.); ஆயின், ஏழனுருபொடு புணருமிடத்து
இன்சாரியையாவது அத்துச் சாரியையாவது பெற்று முடியும்.
எ-டு : விளவினை – விளவிற்கு. . . . . . விளவின்கண், விளவத்
துக்கண்; பலாவினை – பலாவிற்கு. . . . . . பலாவின்கண், பலாவத்துக்கண்.
(தொ. எ. 181 நச்.)

அகர இகரம் எகரம் ஆதல்

வடமொழியில் அகர இகரம் எகரம் ஆகும். வடமொழியில், உப + இந்த்ர =
உபேந்த்ர என அகரஇகரம் ஏகாரமாதல் போல, எகரத்தி லுள்ள கூட்டம்
தமிழ்மொழியில் தெளிவாக இல்லை. ஆதலின் தமிழில் எகரத்தின் ஒலியை அகர
இகரக் கூறுகளின் ஒலி என்றல் சாலாது. (எ. ஆ. பக். 7, 8)

அகர இகரம் ஐகாரம் ஆதல்

அகரமும் இகரமும் இணைந்து ஐகாரம் போன்று இசைக்கும் போலியெழுத்தினை
உண்டாக்கும். ஐவனம் – அஇவனம். இப்போலி இக்காலத்து இல்லை. (தொ. எ. 54
நச்.)
‘அஇ இணைந்து இசைத்தல்’ காண்க.

அகர எழுத்துப்பேறளபெடை வருமிடங்கள்

ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை எழுத்துப் பேறளபெடையாக அகரம்
பெற்று வரும்.
எ-டு : உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் (தொ. எ. 223 நச்.)
பண்புத்தொகைக்கண் அராஅப்பாம்பு எனவும், எழுவாய்த் தொடர்க்கண்
இராஅக் கொடிது எனவும், பெயரெச்சமறைத் தொடர்க்கண் இராஅக் காக்கை
எனவும், அகரம் எழுத்துப் பேறளபெடையாக வரும்.
இயல்புகணத்துப் புணர்ச்சிக்கண்ணும் இறாஅவழுதுணங் காய் – என
அகரப்பேறு நிகழும். (தொ.எ. நச். உரை)
ஆகாரஈற்று வேற்றுமைக்கண், குற்றெழுத்தை அடுத்துவரும்
ஆகாரஈற்றுப்பெயர், ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார ஈற்றுப் பெயர் – இவை
வருமொழியொடு கூடும் பொருட் புணர்ச்சிக்கண் அகரம் எழுத்துப்பேறளபெடையாக
வரும்.
எ-டு : பலா
அக் கோடு, கா
அக் குறை; பலா
அ இலை, பலா
அ நார் – என இயல்புகணத்தும்
அகரம் வரும்.
இரா என்ற சொல் பெயராய் இராக்காலத்தை உணர்த்துவ தாயின், அஃது
எழுவாய்த் தொடர்க்கண் அகரம் பெறுமே யன்றி, வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
அகரமாகிய எழுத்துப் பேறளபெடை பெறாது, இராக்கொண்டான் – இராக்கூத்து –
என்றாற் போல முடியும். (தொ. எ. 226, 227)

அகரஈறு இயல்பாக முடிவன ஆறு

செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இறந்தகால – நிகழ்கால –
எதிர்மறை – குறிப்பு – அகரஈற்றுப் பெயரெச்சங்கள், வினையடி நான்கினும்
பிறந்த முற்றுக்கள், ஆறாம் வேற்றுமை யாகிய அகர உருபு, அஃறிணைப்பன்மைப்
பெயர், அம்ம என்னும் இடைச்சொல் – என்பன வருமொழி வன்கணம் வரினும்
இயல்பாகவே முடியும்.
எ-டு :
உண்ணிய கொண்டான் – செய்யிய
என்னும் வினை யெச்சம்;
உண்ட
, உண்ணாநின்ற, உண்ணாத, பெரிய
சாத்தன் – பலவகைப் பெயரெச்சம்
முற்றிற்கும் பொருள்வேறுபாடன்றிச் சொல்வேறுபாடு இன்மையின் இவையே
எடுத்துக்காட்டாம்.
வாழ்க சாத்தா – வியங்கோள்
முற்று
வினைமுற்று எச்சமாகியவழியும் இயல்பாம்.
எ-டு :
உண்ட கண்டன – முற்றெச்சம்;
அமர்
முகத்த குதிரை, அமர்
முகத்த கலக்கின: இவையும்
அது.
தன கைகள் – ஆறன்
அகரஉருபு;
பல கொடுத்தான் – அஃறிணைப்
பன்மைப் பெயர்;
அம்ம சாத்தா – அம்ம இடைச் சொல்
(நன். 167)

அகரஈற்று அண்மை விளிப்பெயர்ப் புணர்ச்சி

விளியேற்கும் பெயர்கள் ஈற்றெழுத்துக் கெட்டு விதி அகர ஈற்றுப்
பெயர்களாக நின்றுழி, வருமொழிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : ‘ஊரன்’ ஊர என நின்று ஊர கேள், நட, வா, அடு என இயல்பாகப்
புணரும். (தொ. எ. 210. நச்.)

அகரஈற்று அன்ன என்ற இடைச்சொற் புணர்ச்சி

அகரஈற்று அன்ன என்ற உவமஉருபு வருமொழியில் நாற்கணம் வரினும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : புலியன்ன சாத்தன், நாகன், வடுகன்,
அரசன்
அகரஈற்றுள் பலவாக வருகின்ற உவமவுருபுகளுள் இயல்பாகப் புணர்வது
இஃதொன்றே. (தொ. எ. 210 நச்.)

அகரஈற்று அம்ம என்னும் உரைப்பொருட் கிளவிப் புணர்ச்சி

அம்ம என்பது தான் கூறுவதனைக் கேட்டற்கு ஒருவனை எதிர்
முகமாக்குதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல். ‘அம்ம கேட்பிக்கும்’.
(தொ. சொ. 276 சேனா.)
அஃது அம்ம என்று இயல்பாகவும், அம்மா என ஆகார ஈறாக நீண்டும் வருமொழி
நாற்கணத்தொடு புணரும்வழி இயல் பாகப் புணரும்.
அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா
அம்மா சாத்தா, நாகா, வளவா, அரசா – எனவரும்.
(தொ. எ. 210, 212 நச்.)

அகரஈற்று இடைச்சொற் புணர்ச்சி

அகரஈற்று மான – விறப்ப – என்ன – உறழ – தகைய – நோக்க – எள்ள – விழைய
– புல்ல – பொருவ – கள்ள – மதிப்ப – வெல்ல – வீழ – கடுப்ப – ஏய்ப்ப –
மருள – புரைய – ஒட்ட – ஒடுங்க – ஓட – நிகர்ப்ப – போல – மறுப்ப – ஒப்ப
– காய்ப்ப – நேர – வியப்ப – நளிய – நந்த – ஆர – அமர – ஏர – ஏர்ப்ப –
கெழுவ – கொண்ட முதலிய உவமச் சொற்களும், என என்னும் எச்சமும்,
சுட்டும், ஆங்க என்னும் உரையசைக்கிளவியும் வருமொழி வன்கணம் வரின் வந்த
வல்லெழுத்து மிகும்.
வருமாறு : புலிபோலப் பாய்ந்தான் – உவமக்கிளவி; கொள் ளெனக்
கொண்டான் – எனவென் எச்சம்; அக் கொற்றன் – சுட்டிடைச் சொல்; ‘ஆங்கக்
குயிலு மயிலும் காட்டி’- ஆங்க என்னும் உரையசைக் கிளவி.
வருமொழியில் ஞநம – யவ – என்ற மென்கணமும் இடைக்கண மும் வரின்,
சுட்டு நீங்கலான ஏனைய இடைச்சொற்கள் இயல்பாகப் புணரும்; உயிர்க்கணம்
வரின் உடம்படுமெய் பெறும்.
வருமாறு : புலிபோல ஞான்றான் ….. புலிபோல வடைந்தான்;
(வ் : உடம்படுமெய்), கொள்ளென நினைந்தான் ….. வாவென வடைந்தான்;
(வ் : உடம்படுமெய்) ஆங்க மருண்டு …. ஆங்க வடைந்து; (வ் : உடம்படு
மெய்) (தொ. எ. 204 நச்.)
அகரஈற்றுள் அன்ன என்னும் உவமச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட்
கிளவியும் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.
வருமாறு : புலி
யன்
ன சாத்தன், நாகன், வளவன்,
அரசன்;

அம்ம சாத்தா, நாகா, வளவா, அரசா.
(தொ.எ. 210 நச்.)

அகரஈற்று உரிச்சொல் புணர்ச்சி

அகரஈற்று உரிச்சொல் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்கும் இனமான
மெல்லெழுத்து மிக்கும் புணரும்; ஏனைய கணங்கள் வரின் இயல்பாகப்
புணரும்.
எ-டு : தட + கை = தட
க்கை; தவ + கொண்டான் = தவ

க் கொண்டான்; குழ + கன்று =
குழ
க் கன்று – இவை வல்லெழுத்து
மிக்கன.
தட + செவி = தட
ஞ்செவி; கம + சூல் = கம
ஞ்சூல் – இவை மெல்லெழுத்து
மிக்கன.
தவ + நெடிய = தவநெடிய
தவ + வலிய = தவவலிய
தவ + அரிய = தவ (வ்) அரிய – என மென்கணம், இடைக்கணம்,
உயிர்க்கணம் வந்துழி, இயல்பு ஆகியவாறு. (உடம்படுமெய் பெறுதலும் இயல்பு
புணர்ச்சியாம்.) (தொ. எ. 203 நச்.)

அகரஈற்று எழுவாய்த்தொடர்ப் புணர்ச்சி

அகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் வருமொழி வன்கணம் வரின், வந்த
வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : விளக்குறிது, விளச்சிறிது, விளத்தீது,
விளப்பெரிது;
விளஞான்றது; விளவலிது; விள (வ்) அரிது எனவரும்.
(தொ. எ. 203 நச்.)

அகரஈற்று மரப்பெயரின் பொருட்புணர்ச்சி

அகரஈற்று மரப்பெயர் பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின்
இனமான மெல்லெழுத்து மிக்கு முடியும்.
எ-டு : விள : விள
ங்கோடு, விள
ஞ்செதிள், விள
ந்தோல், விள
ம்பூ; அத : அத
ங்கோடு, அத
ஞ்செதிள், அத
ந் தோல், அத
ம்பூ (தொ. எ. 217
நச்.)
விளவின்கோடு எனச் சிறுபான்மை உருபிற்குப் பயன்படும் இன் சாரியை
பொருட்புணர்ச்சிக்கண்ணும் வரும். (தொ. எ. 219 நச். உரை)

அகரஈற்று வினைமுற்றுப் புணர்ச்சி

அகரஈற்றுத் தெரிநிலைவினைமுற்றும் குறிப்புவினைமுற்றும் நாற்கணங்கள்
வந்துழியும் இயல்பாகப் புணரும்.
எ-டு :
உண்டன குதிரை, செந்நாய், தகர்,
பன்றி;
உண்டன நாய், யானை,
அரிமா
‘கரியன’ என்ற
குறிப்புவினைமுற்றையும் நிறுத்தி, இவ்வாறே வன்கணமும் இயல்புகணமும்
கூட்டி முடிக்க. (தொ. எ. 210 நச்).
அவற்றுள்
வாழிய என்னும் வியங்கோள்
வினைமுற்று ஈற்றுயிர்மெய் கெட்டும் கெடாதும் நாற்கணத்தொடும்
புணரும்.
வருமாறு :
வாழிய கொற்றா, வாழி கொற்றா;
வாழிய நாகா, வளவா, அரசா; வாழிநாகா, வளவா, அரசா (தொ. எ. நச்.
211).
அகரஈற்றுச் செய்ம்மன என்னும் முற்றும் நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும். (210)

அகரஈற்று வினையெச்சப் புணர்ச்சி

அகரஈற்று வினையெச்சம் பொதுவாக வன்கணம் வரின் மிக்கும், ஏனைக்கணம்
வரின் இயல்பாகவும் புணரும்.
எ-டு : உணக் கொண்டான்; உண நின்றான் (தொ. எ. 204 நச்.)
அவற்றுள்,
சாவ என்னும் வினையெச்சம்
ஈற்றுயிர்மெய் கெட்டுப் புணர்தலு முண்டு.
வருமாறு : சாவக் குத்தினான்; சாக்குத்தினான்
சாவ ஞான்றான்; சாஞான்றான் (தொ.எ. 209 நச்.)
இங்ஙனமே, அறிய என்னும் வினையெச்சம் ஈற்றுயிர் மெய் கெட்டுப்
புணர்தலுமுண்டு.
வருமாறு : ‘பால்அறி வந்த உயர்திணைப் பெயரே’ (தொ. சொ. 162
சேனா.)
செய்யிய என்னும் வினையெச்சம் பொதுவாக நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : உண்ணிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந் தான்.
(உயிர்க்கணம் வருமிடத்து வகர உடம்படு மெய் பெறுதல் இயல்பு
புணர்ச்சியே). (தொ.எ. 210 நச்.)

அகரஈற்று வியங்கோள் வினைமுற்றுப் புணர்ச்சி

அகரஈற்று வியங்கோள் வினைமுற்று நாற்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : (அவன்)
செல்க காட்டின்கண், நாட்டின்கண்,
வீட்டின்கண், அரணின்கண்.
அவற்றுள்,
வாழிய என்னும் முற்று
ஈற்றுயிர்மெய் கெட்டு வாழி என நின்று இயல்பாக முடிதலுமுண்டு. (211)
(தொ. எ. 210. நச்.)

அகரஈற்றுச் சுட்டின் புணர்ச்சி

அகர ஈற்றுக் சுட்டிடைச்சொல் வருமொழி வன்கணத்தொடு வந்த வல்லெழுத்து
மிக்கும், மென்கணத்தொடு வந்த மெல் லெழுத்து மிக்கும், யகர வகரம்
வருவழியும் உயிர் வருவழியும் வகரம் மிக்கும், செய்யுளில் அகரம்
நீண்டும் புணரும்.
வருமாறு : அக்கொற்றன், அச்சாத்தன், அத்தேவன், அப்பூதன் – வலி;
அஞ்ஞாண், அந்நூல், அம்மணி – மெலி; அவ்யானை, அவ்வளை – இடை; அ +
அடை
> அ + வ் + அடை
> அவ் + வ் + அடை = அவ்வடை; அ
+ ஆடை
> அ + வ் + ஆடை
> அவ் + வ் + ஆடை =
அவ்வாடை
நிலைமொழி அகரம் அவ் என்றாகித் தனிக்குறில் முன் ஒற்றாய் வருமொழி
முதல் உயிர் வந்தமையால் அவ்வொற்று இரட்டிப்பப் புணர்ந்தவாறு.
அ + இடை = ஆயிடை – தொ. பாயிரம்
அ + இரண்டு = ஆயிரண்டு – தொ. எ. 85 நச்.
அ + அறுமூன்று = ஆவறுமூன்று – தொ. சொ. 56 சேனா.
அ + வகை = ஆவகை – தொ. களவு. 22 நச்.
அ + வயின் = ஆவயின் – தொ. கற்பு. 8 நச்.
எனச் சுட்டு நீண்டவிடத்து, யகர வகர உடம்படுமெய் பெற்றும், வருமொழி
முதலெழுத்து இரட்டியாமலும், புணர்ந்தவாறு. (தொ. எ. 204 – 208
நச்.)

அகரஈற்றுப் ‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’ யின் புணர்ச்சி

பன்மைப் பொருளை யுணர்த்தும் அகரஈற்றுப் பெயர் களாகிய ஐந்தும்
வருமொழி நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.
அப்பெயர்களாவன பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்பன.
(தொ. சொ. 168 சேனா.)
வருமாறு : பல்லகுதிரை, பலகுதிரை, சிலகுதிரை, உள்ள குதிரை, இல்ல
குதிரை (தொ. எ. 210 நச்.)

அகரஈற்றுப் பெயரெச்சப் புணர்ச்சி

அகரஈற்றுப் பெயரெச்சம் வருமொழி நாற்கணம்வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : உண்டசோறு, மருந்து, வரகு, உணவு(தொ. எ. 210நச்.)
செய்ம்மன என்ற செய்யும் என்னும் பொருளதாகிய பெயரெச்சமும் இங்ஙனமே
நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : (யான்) உண்மன சோறு,
மருந்து, வரகு, உணவு (தொ. எ. 210 நச்.)

அகரஈற்றுள் இயல்பாகப் புணர்வன

அன்ன என்னும் உவமச்சொல், அண்மை விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று,
செய்ம்மன – செய்யிய – செய்த – என்ற வினைகள், அம்ம என்ற இடைச்சொல்,
பலவற்றை உணர்த்தும் பெயர்கள், வினைமுற்றுக்கள் என்பன வருமொழி வன்கணம்
வந்துழியும் இயல்பாகப் புணரும்.
எ-டு : புலி அன்ன சாத்தன் – உவம இடைச்சொல்; ஊர கேள் – அண்மை
விளிப்பெயர்; அவன் செல்க காட்டின்கண் – வியங்கோள் வினைமுற்று; உண்மன
சாத்தன் – செய்ம்மன என்னும் முற்று; யான் உண்மன சோறு – செய்ம்மன எனும்
பெயரெச்சம்; உண்ணிய சென்றான் – செய்யிய என்னும் வினை யெச்சம்; உண்ட
சோறு – செய்த என்னும் பெய ரெச்சம்; அம்ம கொற்றா – அம்ம என்னும்
இடைச்சொல்;பல குதிரை – பலவற்றை உணர்த்தும் பெயர்; உண்டன குதிரை –
கரியன குதிரை – தெரி நிலையும் குறிப்பு மாகிய வினைமுற்றுக்கள். (தொ.
எ. 210 நச்.)

அகரஉகரம் ஒளகாரம் ஆதல்

அகரமும் உகரமும் இணைந்து ஒளகாரத்தின் போலி யெழுத்தை
உண்டாக்கும். எ-டு : ஒளவை –
அஉவை.
பாகதத்திலும் பௌர –
பஉரோ, கௌரவ –
கஉரவோ என வரும். தெலுங்கிலும்
கன்னடத்திலும் வகரஉடம்படுமெய் பெற்று, ஒளடு –
அவுடு எனவும், தௌதலெ –
தவுதலெ, கௌகுழ் –
கவுகுழ் எனவும் வரும். தமிழிலும்
மௌனம் –
மவுனம் என வரும்.
தொல்காப்பிய மொழிமரபில் தனியெழுத்தின் இயல்பு கூறா மல்
மொழியிடைப்பட்ட எழுத்துக்களின் இயல்பே கூறப்படு தலின், ‘அஉ என்னும்
இவற்றின் சந்தியக்கரம் ஒள’ என்று கூறுதல் பொருந்தாது. (தொ. எ. 55 நச்)
(எ. ஆ. பக். 57, 58, 59)

அகரக் குற்றுயிர் மடக்கு

அகரம் என்னும் குற்றெழுத்தொன்றே ஏனைய மெய்களொடு கலந்துஉயிர்மெய்யாய்ப் பாடல் முழுதும் வருமாறு அமைக்கும் ஓரெழுத்துமடக்கு.‘ஓரெழுத்து மடக்கு’க் காண்க. (மா.அ. பாடல். 760)

அகரச்சாரியை வரும் இடங்கள்

உருபுபுணர்ச்சியில், தாம் – யாம் – நாம் – தான் – யான் என்பவை தம்
எம் நம் தன் என் எனத் திரிந்தவழி, அவை நான்கனுருபும் ஆறனுருபும்
ஏற்குமிடத்து இடையே அகரச் சாரியை வரும்.
வருமாறு : தாம்
> தம்
> தம
> தமக்கு, தமது, தமவ எனவரும்.
ஏனையவும் அன்ன.
இவை அது உருபு ஏற்குமிடத்து, அவ்வுருபின் முதலெழுத் தாகிய அகரம்
கெட, தாம் + அது
> தம் + அது
> தம + து = தமது என்றாற்போல
முடியும்; குவ்வுருபு ஏற்குமிடத்து இடையே ககர ஒற்று மிகும். (தொ. எ.
161 நச்.)
நும் என்ற சொல்லும் முன்னையவை போல நான்கனுருபும் ஆறனுருபும்
ஏற்குமிடத்து, அகரச்சாரியை இடையே பெற்று முற்கூறிய திரிபுகளைக்
கொள்ளும். (தொ.எ. 162 நச்.)
ஆ என்ற ஆகாரஈற்றுப் பெயர் னகரமெய்யினைச் சாரியை யாகப் பெற்று ஆன்
என ஆகுமிடத்துப் பெரும்பான்மையும் வருமொழியில் மென்கணம் வரின்
அகரச்சாரியை பெற்று ஆனநெய், ஆனமணி என வருதலு முண்டு. (தொ.எ. 232
நச்.)
நகார ஈற்றுச்சொற்களாகிய பொருந் – வெரிந் – என்பவை வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் நாற்கணமும் வருமொழி முதற்கண் வருவழி அகரச் சாரியை
பெறும்.
வருமாறு : பொரு
நக் கடுமை; பொரு
ந ஞாற்சி, வன்மை, அருமை;
வெரி
நக் கடுமை; வெரி
ந ஞாற்சி, வன்மை, அருமை. (தொ.எ.
299 நச்.)
மரப்பெயர் அல்லாத பறவையை உணர்த்தும் எகின் என்ற பெயர் வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் வருமொழி முதலில் நாற்கணம் வருவழியும் அகரச் சாரியை
பெறும்.
வருமாறு : எகினக்கால்; எகினமாட்சி, வலிமை, அடைவு
(தொ.எ. 337 நச்.)
கன் என்ற சொல் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண், வருமொழி முதலில்
நாற்கணம் வருவழியும், எகின் என்ற பறவைப் பெயர் போல, அகரச்சாரியை
பெறும்.
வருமாறு : கன்
னக்குடம்; கன்
னமாட்சி, வலிமை,
அடைவு.
(தொ.எ. 346 நச்.)
சூது என்ற பொருளில் வரும் வல் என்ற சொல்முன் பலகை – நாய் – என்ற
வருமொழிகள் புணருமிடத்து, வல்லுப் பலகை – வல்லு நாய் – என உகரம்
பெறுதலேயன்றி, வல்லப் பலகை – வல்ல நாய் – என அகரச் சாரியை
பெறுதலுமுண்டு. (தொ.எ. 374 நச்.)
பொருட்புணர்ச்சிக்கண் விதிக்கப்பட்ட அகரச்சாரியை ஆறன் பொருளில்
வந்ததாகும். கன்னடத்தில் ஆறனுருபாகவே அகரம் உள்ளது. அவ்வாறாயின்
எகினக்கால் என்பது எகினது கால் என்று பொருள் பெறும். அகரச்சாரியை
விதித்துள்ள ஏனைய இடங்களிலும் ஆறன் பொருளே வந்துள்ளது. ஆனமணி, பொருநக்
கடுமை, கன்னக் குடம், வல்லப் பலகை, வல்லநாய் முதலியன ஆறாம் வேற்றுமைப்
பொருளனவாகவே இருத்தல் கருதத்தக்கது. (எ. ஆ. பக். 157)

அகரத்தின் தொகை வகை விரி

அகரம் எனத் தொகையான் ஒன்றும், உயிர் அகரமும் உயிர் மெய் அகரமும் என
வகையான் இரண்டும், உயிர் அகரம் ஒன்றும் உயிர்மெய் அகரம் பதினெட்டும்
என விரியான் பத்தொன்பதும் ஆம். உயிர்மெய் அகரம் க ங ச ஞ ….. ற ன
எனக் காண்க. (நன். 60 மயிலை.)

அகரமோடு உயிர்த்தல்

அகரத்தொடு தோன்றுதல்; மெய்கள் அகரத்தொடு புணரும் வழி, தம்
வடிவிலுள்ள புள்ளியை நீக்கி அப்புள்ளி நீங்கிய வடிவமே தம் வடிவமாக
வரிவடிவில் தோன்றுதல். க் + அ = க.
ககரமெய்யின் புள்ளி நீங்கிய வடிவமே அஃது அகரத்தோடு இணைந்து
உயிர்மெய்யாங்கால் உரிய வடிவமாம் என்று குறிப்பிடும் இப்பகுதியில்,
உயிர்த்தல் என்பதற்குத் தோன்று தல் என்ற பொருளே தக்கது; ஒலித்தல்
என்பது தக்கதன்று. இத்தொடர் வரிவடிவம் பற்றிய இடத்தது. (தொ. எ.
17)
உயிர்த்தல் என்பதற்கு ஒலித்தல் என்பது பொருளன்று; உரு உருவாகி
உயிர்த்தலும், உருவுதிரிந்து உயிர்த்தலும், புள்ளி யுண்டாதலும்,
இலவாதலும் வரிவடிவிற்கேயன்றி ஒலிவடி விற்கு இன்மையின், தோன்றுதல்
என்பதே பொருளாம். (சூ.வி.பக். 43)

அகரம் ஆகாரமாகத் திரியும் வடநடைப் பகுபதம்

அதிதிமக்கள் –
ஆதித்யர்;
தசரதன் மகன் –
தாசரதி;
சனகன் மகள் –
சானகி;
தனுவின் மக்கள் –
தானவர்;
சகரன் மக்கள் –
சாகரர் (தொ. வி. 86
உரை)

அகரம் உகரம் ஒகரம் ஆதல்

ஒகரம் உகரம் பிறக்கும் இடத்தே பிறப்பது. உய் – ஒய், துளை -தொளை,
துடை – தொடை, துகை – தொகை எனச் செய்யுளி லும் வழக்கிலும் உகரஒகரங்கள்
விரவி வருகின்றன.
உய் – ஒய் எனவும் சுரிவ – சொரிவ எனவும் கன்னடத்திலும், புகழ்தல் –
பொகட்த எனவும் முகைகள் – மொக்குலு எனவும் தெலுங்கிலும் உகர ஒகரங்கள்
விரவிவருதல் அறியப்படும்.
வடமொழியில் அகரஉகரங்களின் சந்தியக்கரம் ஓ என்று
குறிக்கப்படுகிறது. கங்
கா +
உதகம் = கங்
கோதகம் (சந்திர + உதயம் =
சந்திரோதயம்) எனச் சந்தியில் அகர உகரங்கள் ஓகாரமாகும் புணர்ச்சி
வடமொழியில் தெளிவாதல் போலத் தமிழில் தெளிவாக இல்லை. ஆதலின்
அகரஉகரங்கள் ஒகர மாதல் தமிழிற்குப் பொருத்தமின்று. (எ. ஆ. பக். 7,
8)

அகரம் எழுத்துக்களுள் முதலாவதன் காரணம்

அகரம் தானே நடந்தும் நடந்து உடம்பை நண்ணியும்
நடத்தலானும்,
அரன் –
அரி –
அயன் –
அருகன் என்னும் பரமர்
திருநாமத்திற்கு ஒருமுதலாயும் அறம்பொருளின்பம் என்னும் முப்பொருளின்
முதற்பொருட்கும்
அருள் –
அன்பு –
அணி –
அழகு – முதலாயின நற்பொருட்கும்
முதலாயும் வருதலானும், முன்வைக்கப்பட்டது. (நன். 72
மயிலை.)
அகரமானது சைதந்நிய மாத்திரமாய்த் தனித்தும், எல்லா வுயிர் கட்கும்
காரணனாகி அவற்றொடு கலந்தும் அவற்றின் முன் நிற்கும் ஆதிபகவனே போல,
நாதமாத்திரையாய்த் தனித்தும், எல்லா எழுத்திற்கும் காரணமாய் அவற்றொடு
கலந்தும் அவற்றின் முன் நிற்றலால் ‘அம் முதல்’ என்றார். (நன். 73
இராமா.)

அகரம் ஏனைய முதலெழுத்துக்களொடு சிவணுதல்

தனிமெய்களின் நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும். ‘வல்லினம் க் ச்
ட் த் ப் ற்’ என்னாது, ‘வல்லினம் க ச ட த ப ற’ என்றே கூறுதல் போல்வன
இதற்கு எடுத்துக்காட்டு. எனவே, தனிமெய்களை நாவால் கருத்துப்பொருளாக
இயக்கும் இயக்கமும் கையால் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும்
இயக்கமும், அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்றவாறு.
இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு போல ஏனைய
பதினோருயிர்க்கண்ணும் அது கலந்து நிற்கும். இறைவன்
இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண் ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின்
தன்மையாய்க் கலந்து நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல்,
அகரமும் ஏனை உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற் றின்
தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது.
இஃது ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று வள்ளுவர் உவமை கூறியமையானும்,
கண்ணன் “எழுத் துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” எனக் கூறியவாற்றா னும்
உணரப்படும். (தொ. எ. 46 நச். உரை)
“எழுத்துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” என்று கண்ணன் கூறிய
தொடருக்கு, “என்னை ஓரெழுத்தாகத் தியானிக்க வேண்டுமாயின், அகரமாகத்
தியானிக்க வேண்டும்” என்பதே கருத்து. ‘அகர. . . . . உலகு’ என்ற
விடத்துக் கடவுள் உலகிற்கு எவ்வாறு முதற்காரணமோ, அவ்வாறு
எழுத்துக்களுக் கெல்லாம் அகரம் முதற்காரணம் என்று கொள்ள வேண்டா;
கடவுளும் அகரமும் முறையே உலகத்திற்கும் எழுத்திற்கும் முதன்மையாய்
இருத்தலின், முதன்மையே பொதுத் தன்மை யாகக் கொள்ளல் தகும். (எ. கு.
பக். 56)

அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்கள்

‘ஆ ஓ ஆகும் பெயருமா ருளவே’ என்ற எச்சவும்மையான், ஈற்றயல்ஆகாரம் ஓகாரமாக வரும் பெயர்களன்றி,ஈற்றயல் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயர்களும் உள என்பது பெற்றாம்.எ-டு : கிழவன் – கிழவோன் (‘நாடுகிழ வோனே’ பொருந. 248)கிழவள் – கிழவோள் (‘கிழவோள் தேஎத்து’ இறை. அ. 8) (தொ. சொ. 189தெய். உரை)

அகரம் முனை

அகரஈற்றுச் சொல்லின் முன் – என்னும் பொருளது இத் தொடர். முன்,
முனை, முன்னர் என்பன ஒரு பொருளன. (தொ. எ. 125 நச். உரை)
முன்னோனை ‘முனைவன்’ என்பது ஒரு சொல் விழுக் காடாம், முன் என்பதனை
முனை என்ப ஆதலின். (தொ. பொ. 649 பேரா.)

அகலக் கவிக்குப் புறனடை

மங்கலம் சொல் முதலாகக் கூறப்பட்ட பத்துவகைப் பொருத்த இலக்கணத்தில்குறைவின்றி, பலவகையாலும் தெளிந்த மூவசைச்சீர் முதலாக அகலக்கவிபாடப்படும். உண்டிப் பொருத்தத்தில் விலக்கிய நச்சுஎழுத்தும், கதிப்பொருத்தத்தில் விலக்கிய எழுத்தும் எடுத்த மங்கலச்சொல் லில் வருமாயின்அமுதமாய் அமைவுடையனவாம். (இ. வி. பாட். 44)

அகலக்கவி

வித்தார கவி; அகலமுற (-விரிவாக)ப் பாடப்படுவதால் இஃது அகலக்கவிஎன்னும் பெயர்த்தாயிற்று. தொடர்நிலைப் பாட்டு எனவும், பல அடியால்நடக்கும் தனிப்பாட்டு எனவும் இக்கவி இருவகைத்தாம். (இ. வி. பாட்.7)இது விருத்தக் கவிதை, அகலப்பா, அகலம் என்றும் வழங்கப் படும்.‘குண்டலகேசியும் உதயணன்கதையும் முதலாக உடைய வற்றுள் தெரியாதசொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதுஆகாது என்பது’(வீ.சோ. 146. உரை)

அகலக்கவி கொள்வோர் பெறும் பயன்

ஒண்மையான் புலவன் உரைத்த அகலக்கவியைக் கொடை முதலிய வரிசைசெய்துபுனைந்து கொள்பவர் “பெரிய புகழாலும் உருவத்தாலும் முறையே நிறைமதியும்இளஞாயி றும் இவராவார்!”எனச் சிறப்புற்று, இவ்வுலகில் புகழுடம் பான்நிலைபெற்றுத் தலைமை எய்தி நிலவுவர்.‘உருவும் புகழும் ஆகுவிர் நீர்’ (புறநா. 6) என்றார் பிறரும்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துபஎன்பதம் செய்வினை முடித்தே’ (புறநா. 27) என மறுமைப்பயன் மிகுதிகூறப்பட்டவாறு காண்க. (இ. வி. பாட். 180)

அகலக்கவி பாடுவோன்

அகலக்கவி பாடுவோனும் அகலக்கவியாம். வித்தார கவி, அகலக்கவி என்பனஒரு பொருட்கிளவி.(வெண்பாப். செய். 5. உரை)

அகலக்கவிக்குச் சிறப்பு விதி

அகலக்கவியுள், அகப்பொருளைக் கூறும் ஆசிரியப் பாவினுள் வஞ்சியடிஉறல் ஆகாது. அவ்வகப்பொருளின் கண் அன்றி ஏனைய பொருள்மேல்பெரும்பான்மையும் கலி வாரா; வஞ்சிப்பாத் தொகைபெற்று நிற்கப் பெறாமல்,தனித்துச் சொல்லப்படும். (இ. வி. பாட். 115)

அகலக்கவிக்குப் பெயரிடுமாறு

பொருள், இடம், காலம், தொழில், உறுப்பு, எல்லை (-அளவு), செய்தோன்பெயர், செய்வித்தோன் பெயர் என்னும் இவற்றால் அகலக்கவி பெயர்பெறும்.இவற்றுக்கு முறையே ஆசாரக் கோவையும், மதுரைக்காஞ்சியும், வேனில்விருத்த மும், யானைத் தொழிலும், பயோதரப்பத்தும், குமரேச சதகமும்,கல்லாடமும் பாண்டிக்கோவையும் உதாரணமாகக் கொள்க. (இ. வி. பாட்.116)

அகலப்பா

அகலக்கவி; அது காண்க.அகலம் – (1) அகலஉரை (2) அகலக்கவி. இரண்டு திறமும் தனியே காண்க.

அகவற்சீர்

‘அகவல் உரிச்சீர்’ காண்க.

அகவற்பா

இஃது ஆசிரியப்பா எனவும்படும். ‘ஆசிரியப்பா இலக்கணம்’ காண்க.

அகவல்

1) அழைத்தல் (பிங். 1996) (2) எடுத்தலோசை (பிங். 2109) (3) அகவற்பாவிற்குரிய ஓசை(யா.கா.செய்.1) (4) ஆசிரியப்பா (தொ.பொ. 393. பேரா) (5) மயிற்குரல்(பிங். 2318) (6) கூத்தாடல் (பிங். 1464)

அகவல் ஆறுவகை

நேரிசை, நிலைமண்டிலம், இணைக்குறள், அடிமறிமண்டிலம் எனப்பெரும்பான்மையும் கூறப்படும் அகவற்பாவின் வகைகள் நான்கனுடன், மருட்பா,நூற்பா என இரண்டையும் கூட்டி ஆறு எனக் கூறும் சாமிநாதம் (158)1. அகப்பா அகவல், 2. புறப்பா அகவல், 3. நூற்பா அகவல், 4. சித்திரஅகவல், 5. உறுப்பினகவல், 6. ஏந்திசை அகவல் என அகவல் ஓசையின் ஆறுவகைகளைஒருசார் ஆசிரியர் குறிப்பதாகக் கூறும் யாப்பருங்கல விருத்தியுரை.‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. (யா. வி. பக். 284. 285)

அகவல் உரிச்சீர்

நேர் நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை எனவரும் ஈரசைச்சீர்நான்கும் அகவல் உரிச்சீர் எனப்படும். (யா. கா. 6)

அகவல் சுரிதகம்

ஆசிரியச் சுரிதகம். கலிப்பாவின் உறுப்பு ஆகிய சுரிதகம்ஆசிரியப்பாவாலும் அமையும்; வெண்பாவாலும் அமையும்: பிறவிரிவு ‘சுரிதகஅளவு’ என்பதன்கண் காண்க.

அகவல் தாழிசை

‘ஆசிரியத் தாழிசை’ காண்க.

அகவல் துறை

‘ஆசிரியத் துறை’ காண்க.

அகவல் துள்ளல்

கலித்தளையொடு வெண்சீர்வெண்டளையும் கலந்து அமையும் செய்யுளின் ஓசைஅகவல் துள்ளல் ஆம்.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழிமுல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முறுக்கிப்போய்எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே’இப்பாடல் கலித்தளையும் வெண்சீர்வெண்டளையுமாய் விரவி அமைந்தமையால்,அகவல்துள்ளல் ஓசைத்தாம்.(யா. கா. 22. உரை)

அகவல் முதலிய ஓசையை ஒன்றுமும்மூன்று ஆக்குதல்

அகவலோசையை ஏந்திசை, தூங்கிசை, மயங்கிசை என மூன்றாகப் பகுப்பர்.செப்பல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசைகளையும் மும்மூன்றாகப்பகுப்பர். இயலசை மயங்கிய உரிச்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும்வெண்சீரும் பற்றி ஓசை வேறுபடத் தோன்றலின், நான்கு ஓசைகளையும்மும்மூன்று என்று பகுதிப்படுத்திப் பன்னிரண்டு என்று கூறும்வரையறையுள் அவை அடங்கா ஆதலின், அகவல் முதலிய ஓசையை மும்மூன்றாகப்பகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்று. (தொ. செய். 11 நச்.)

அகவல் விருத்தம்

கழிநெடிலடி நான்கு சமமாய் அமைவது. அறுசீர் விருத்தம்பெரும்பான்மைத்து. எழுசீர் எண்சீரான் வருவனவும் சிறப்புடைவிருத்தங்களே. எண்சீரின் மிக்கு வருவன சிறப்பில. அடிமறியாய் வருவனஆசிரிய மண்டில விருத்தம் எனவும், அடிமறி ஆகாது நிற்பன ஆசிரிய நிலைவிருத்தம் எனவும் வழங்கப்பெறும். (யா. க. 77 உரை)

அகவல் வெண்பா

அகவல்வெண்பாஆவது இன்னிசை வெண்பா ஆகும் என்பர் ஒருசாரார்.எ-டு : ‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார்!’ (நாலடி. 39)இஃது அகவல்வெண்பா என்று அணியியல் உடையார் காட்டின பாட்டு.மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான்செல்லும்திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்தஅவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ்கற்றறி வில்லா உடம்பு. (நான்மணி. 20)இஃது அகவல் வெண்பா என்று செய்யுளியல் உடையார் காட்டின பாட்டு. (யா.க. 57.உரை)

அகவல்ஒசையின் கூறுகள்

ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என்பன. இவை முறையே நேரொன்றாசிரியத்தளையான் வருவனவும், நிரையொன் றாசிரியத் தளையான் வருவனவும்,இவ்விருதளையும் தம்முள் ஒத்து இயலுதலால் வருவனவும் ஆகும். அவற்றைஅவ்வத் தலைப்புள் காண்க. (யா. கா. 69. உரை)

அகவல்ஓசை

இஃது ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. அகவிக் கூறலின் அகவல் ஆயிற்று.அஃதாவது ஒருவன் வினாவ அவனுக்கு மற்றவன் விடையிறுப்பது போன்று அமையாது,தான் கருதியவற்றை யெல்லாம் ஒருவனை அழைத்துத் தானே நேராகக் கூறுவது.அங்ஙனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்த ஓசை அகவ லாம்.அது களம்பாடு பொருநர்கண்ணும், கட்டும் கழங்கும்இட்டுரைப்பார்கண்ணும், தச்சுவினைமாக்கள்கண்ணும், தம்மின் உறழ்ந்துஉரைப்பார்கண்ணும், பூசல் இழைப்பார்- கண்ணும் கேட்கப்படும்.வழக்கின்கண் உள்ளதாய் அங்ஙனம் அழைத்துக் கூறும் ஓசை அகவல் ஓசையாம்.(தொ. செய். 81. நச்., பேரா.)

அகவல்ஓசை விகற்பம்

அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல்,உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்பன. இவற்றுள் அகப்பா அகவல்,அகப்பொருளைத் தழுவிப் பத்து உறுப்பிற்றாய் (‘அகப்பாட்டுறுப்புக்கள்’காண்க), வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா. புறப்பா அகவல்,பாடாண்துறைமேல் பாடப்படும் ஆசிரியப்பா. நூற்பா அகவல், விழுமியபொருளைத் தழுவிவரும் சூத்திரயாப் பாயிற்று. சித்திர அகவல், சீர்தோறும்அகவி வருவது. உறுப்பின் அகவல், ஒருபொருள்மேல் பரந்து இசைப்பது.ஏந்திசை அகவல் எழுத்து இறந்து இசைப்பது.(யா.க. 77. உரை)

அகவல்தூங்கல்

ஒன்றாத வஞ்சித்தளையான் வரும் ஓசை இது.எ-டு : ‘வானோர்தொழ வண்டாமரைதேனார்மலர் மேல்வந்தருள்ஆனாவருள் கூரறிவனை’இவ்வஞ்சியடிகளுள் கனி முன் நேர் வருதலின் ஒன்றாத வஞ்சித்தளை வந்து,அகவல்தூங்கல் ஓசை நிகழுமாறு காண்க. (யா. கா. 22 உரை)

அகவல்வண்ணமும் அமைப்பும்

குறில்அகவல் தூங்கிசைவண்ணம், நெடில்அகவல் தூங்கிசை வண்ணம், வலிஅகவல் தூங்கிசைவண்ணம், மெலிஅகவல் தூங்கிசை வண்ணம், இடையகவல் தூங்கிசைவண்ணம் என அகவல்தூங்கிசை வண்ணம் ஐந்தாம். இது சூறைக்காற்றும்நீர்ச்சுழியும் போல வருவது. ஆசிரியங்களும் பாவைப் பாட்டும் போல்வனஇவ்வண்ணத்துக்கு எடுத்துக்காட் டாவன. (யா. வி. பக். 411, 415)

அகைத்தல்

அகைத்தல் – அறுத்தல். இங்ஙனம் அறுத்தறுத்து அஃதாவது விட்டுவிட்டுச்சேறல், ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் செய்யுளடிவருவழி நிகழும் ஓசை வேறு பாடாம்.எ-டு : ‘வாரார் ஆயினும் வரினு மவர்நமக்கு’ (குறுந். 110)இவ்வடியில் முதல் இருசீர் நெடில் பயின்றும் அடுத்த இருசீர் குறில்பயின்றும் விட்டுவிட்டு ஒலித்தல் அகைத்தலாம். (தொ. செய். 229பேரா.)

அகைப்பு வண்ணம்

அறுத்தறுத்துப் பயில்வது அகைப்பு வண்ணமாம். விட்டு விட்டுச்செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று.எ-டு : ‘வாரா ராயினும் வரினு மவர்நமக்(கு)’யாரா கியரோ தோழி நீர (குறுந். 110)இவ்வடிகளில் ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும்அறுத்தறுத்து வண்ணம் ஒழுகியவாறு காண்க. (தொ. செய். 229. பேரா.)

அக்கர வருத்தனை

அக்கரம் – எழுத்து; வருத்தனை – கூட்டுதல் (-பெருக்கல்).மிறைக்கவியெனும் சித்திரகவியுள் ஒன்று. ‘எழுத்து வருத்தனம்’ என இதனைத்தண்டியலங்காரம் சுட்டும். ஒரு சொல், முதலெழுத்துஓரெழுத்தொருமொழியாய்ப் பொருள் தந்து, பின்னர், முறையே ஒவ்வோர்எழுத்தாய் அதனுடன் கூட்டுந் தோறும் வேறுவேறு பொருள் தருமாறுஅமைவது.எ-டு : ‘ஏந்திய வெண்படையும் (1), முன்னாள் எடுத்ததுவும் (2),பூந்துகிலும்(3), மால் உந்திப் பூத்ததுவும் (4), – வாய்ந்தஉலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் சேர்க்கத்தலைமலைபொன் தாமரைஎன் றாம்.’முழுச்சொல்லும் சேர்ந்து ‘கோகநகம்’ என்றாகித் தாமரை எனப்பொருள்படும்.1. திருமால் கையில் ஏந்தும் வெண்படை, கம் (-சங்கு)2. அவன் முன்பு கண்ணனாய்த் தூக்கியது, நகம் (-கோவர்த் தனமலை)3. திருமால் உடுத்த ஆடை, கநகம் (-பீதாம்பரம்)4. அவன் உந்தியில் மலர்ந்தது, கோகநகம் (-தாமரை)சங்கினைக் குறிக்கும் ‘கம்பு’ எனும் சொல் கடைக்குறையாய் நின்றது;மெய்யெழுத்துக் கணக்குப் பெறாத நிலையில் ஓரெழுத் தொருமொழியாயிற்று எனஅமைவு கொள்க. (தண்டி. 98 உரை)

அக்கர வர்த்தனம்

அக்கர வருத்தனை காண்க. இஃது எழுத்துப் பெருக்கம் எனவும் கூறப்படும்மிறைக்கவியாம். (பி. வி. 26 உரை)

அக்கரச்சுதகம்

சித்திரகவியுள் ஒன்று. அக்கரம்-எழுத்து; சுதகம் – நீங்கப் பெறுவது.ஒருபொருளைத் தருவதொரு சொல்லைக் கூறி, அதன் எழுத்துக்களை ஒவ்வொன்றாகநீக்க, வெவ்வேறு சொற்களாய் வெவ்வேறு பொருள் தருவது. அட்சரச் சுதகம்என்பதுமது.எ-டு : ‘பொற்றூணில் வந்தசுடர் (1), பொய்கை பயந்தஅண்ணல்(2),சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல் (3).மற்றியார் கொல்லெனில் மலர்தூவி வணங்கி நாளும்கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி,’பொன்மயமான தூணில் தோன்றிய சோதி (1) – கநகாரி; சரவணப் பொய்கையுள்தோன்றிய கடவுள் நகாரி; திருமால் பெண்வடிவங் கொண்டு சிவபெருமானுடன்கூடிப்பெற்ற மைந்தன் (3) – காரி.1. கநகனுக்கு (இரணியனுக்கு) அரி (பகைவன்) நரசிங்கப் பெருமான்.2. நகத்திற்கு (-கிரவுஞ்சமலைக்கு) அரி முருகன்;3. காரி என்பது சாத்தனுக்கு ஒரு பெயர். (தண்டி. 98 உரை)

அக்கரச்சுதகம் : அதன் ஒரு பேதம்

ஒரு பாடலில் ஓர் இன்றியமையாத சொல்லை முதலெழுத்து நீக்கியசொல்லாகவும், மற்றொரு சொல்லை இடை யெழுத்து நீக்கிய சொல்லாகவும் கொண்டுகூறக் கருதிய பொருளை விளக்குவது.எ-டு : ‘எந்தை இராமற்(கு) இமையோர் சரண்புகுதமுந்த நகரி முதலெழுத்தில் லாநகரி;உந்துதிரட் கிள்ளைஇடை ஒற்றில்லாக் கிள்ளைகள்தேர்சிந்த முழுதும் இழந்தான் தெசமுகனே.’இராமனுடைய திருவடிகளில் தம்மைக் காக்குமாறு தேவர்கள் சரண்புக்காராக, இராவணனுடைய இலங்கை மாநகரம், நகரி என்ற சொல்லில்முதலெழுத்து நீங்கியதா யிற்று. (கரியாயிற்று; அநுமன் வாலில் வைத்த தீநகரைக் கரியாக்கிவிட்டது). கிள்ளை என்பதன்கண் இடையொற்றில் லாதவற்றைத்தன் குதிரை தேர்ப்படையோடு இராவணன் முற்றும் இழந்தான். (கிள்ளை,இடையொற்று நீங்கின் கிளை; அஃதாவது உறவினர்.) இராவணன் தன் உறவினர்எல்லோ ரையும் இழந்துவிட்டான் என்ற கருத்திற்று.இவ்வாறு அமைக்கும் அக்கரச்சுதகமும் உண்டு என்பது. அக்கரச்சுதகம் -எழுத்துச் சுருக்கம். (மா. அ. பா. 809)

அக்கரத்தாரணை

நவதாரணையுள் ஒன்று. அவ்வொன்பதாவன : நாமம், அக்கரம், செய்யுள்,சதுரங்கம், சித்திரம், வயிரம், வாயு, நிறைவு குறைவாகிய ஒண்பொருள்,வத்து என்னும் தாரணைகள்.இதனை உரு அக்கர சங்கேதங்களால் இடம்பட அறிந்து தரித்து,அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும் பிறவாறாக வும் சொல்லும் திறம் தாரணைநூலுள் கூறப்பட்டது. அந்நூல் இக்காலத்து வழக்கு ஒழிந்தது. (யா. வி.96. பக். 555)

அக்கினி கணம்

செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும், நிரைநேர்நிரை யென வருவதும்ஆகிய செய்யுட் கணம். புளிமாங்கனி எனும் வாய்பாடு பெறும் இச்சீர் நோய்பயக்கும்.அக்கினிகணம், நெருப்புக்கணம், தீக்கணம், அனற்கணம் எனப் பரியாயப்பெயரால் இக்கணம் பல பாட்டியல்களில் சுட்டப் பெறும். இதற்குரியநாண்மீன் கார்த்திகை என்ப. (பன். பாட்.111)

அக்குச் சாரியை பெறுவன

பொருட்புணர்ச்சிக்கண், ஊகார ஈற்று ஊ என்னும் பொருட் பெயர் னகரச்
சாரியையோடு அக்குச்சாரியை பெறுதலு முண்டு.
ஊ + ன் + அக்கு + குறை = ஊனக்குறை – எனவரும். (தொ. எ. 269
நச்.)
மகரஈற்று ஈம் – கம் – என்ற பெயர்கள், நாற்கணமும் வருமொழி முதற்கண்
வரின், தொழிற்பெயர் போல முன்பு பெற்ற ஈமு – கம்மு – என்ற நிலைமொழித்
தொழிலாகிய உகரம் கெட்டு, ஈம்+அக்கு + நெருப்பு = ஈமநெருப்பு, கம் +
அக்கு + சாடி = கம்மச் சாடி எனப்புணரும். (தொ. எ. 329)
ழகரஈற்றுத் தாழ் என்ற பெயர் கோல் என்ற வருமொழி யொடு புணருமிடத்து
இடையே அக்குச்சாரியை வரும். தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல். இது
தாழைத் திறக்கும் கோல் எனப் பொருள்படும். (தொ. எ. 384)
தமிழ் என்ற ழகரஈற்றுச் சொல்லும், நாற்கணமும் வருமொழி யாகப்
புணருமிடத்து வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறும். தமிழ்
+ அக்கு + சேரி = தமிழச்சேரி; தமிழ் + அக்கு + நாடு = தமிழநாடு.
(தொ.எ. 385)
மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாத சில குற்றியலுகர ஈற்றுப்
பெயர்முன் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருமொழி நிகழின், அக்குச்சாரியை
வருதலுமுண்டு. குன்று + அக்கு + கூகை = குன்றக் கூகை; மன்று + அக்கு +
பெண்ணை = மன்றப் பெண்ணை. (தொ.எ. 418)
உருபுபுணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறுமாறு இல்லை.

அக்குச்சாரியை புணருமுறை

எவ்வகைப்பட்ட பெயர்ச்சொல் முன்னரும் வல்லெழுத்து வருமொழி
முதற்கண்வரின், இடையில் வரும் அக்குச் சாரியை, அகரம் நீங்கிய ஏனைய
எழுத்துக்களெல்லாம் கெடப் புணரும். இது வருமொழி இயல்புகணம் வரினும்
ஒக்கும்.
எ-டு : குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை
மன்று + அக்கு + பெண்ணை = மன்றப்பெண்ணை
தமிழ் + அக்கு + நூல் = தமிழநூல் – மென்கணம்
தமிழ் + அக்கு + யாழ் = தமிழயாழ் – இடைக்கணம்
தமிழ் + அக்கு + அரையர் = தமிழவரையர் – உயிர்க் கணம் (தொ. எ.
128 நச்.)

அங்கதச் செய்யுள்

வசைப்பாடல்கள் பொதுவாக அங்கதம் எனப்படும். (தொ. செய். 124.நச்.)அவை வசையொடும் நகையொடும் பொருந்திவரும். (தொ. செய். 125 இள.)

அங்கதச்செய்யுள் வருமாறு

அடிவரையின்றிக் குறிப்புமொழியாலாகி வரும் அங்கதத்தின் வேறானதுஅங்கதச் செய்யுள். இது வெண்பாயாப்பிற்று. (தொ. செய். 118 ச.பால)

அங்கதச்செய்யுள், அகத்திணைபுறத்திணையுள் நிகழுமாறு

அங்கதச் செய்யுள், அகத்திணையுள் கைக்கிளை பெருந் திணைபற்றியும், பிரிவுக்காலத்தில் தோழி இயற்பழித்தலும் பரத்தையர் கூற்றும்ஆகியவை பற்றியும் வரும்; புறத்திணை யுள் காஞ்சித்திணைப்பொருள்பற்றியும், ‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’, ‘வஞ்சினம்கூறல்’ முதலியவை பற்றியும் வரும். (தொ. செய். 129. ச. பால.)

அங்கதத்தின் இருவகை

அங்கதம் எனப்படும் செய்யுள் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம்என இருவகைப்படும். அவை வசை போன்று புகழாதலும், புகழ் போன்றுவசையாதலும் உரிய.எ-டு : ‘……. பேகன்கொடைமடம் படுதல் அல்லதுபடைமடம் படான்பிறர் படைமயக் குறினே.’ (புறநா. 142)எனக் கொடையிடத்து அறியாமை தோன்றப் பேகன் செயற் பட்டான் எனக்கூறுதல், வசைபோன்று புகழாய்ச் செம் பொருளின் பாற்படும்.‘நூற்றுவர் தலைவனைக், குறங்கறுத் திடுவான்போல்’(கலி.52) என வீமன் கண்ணன் செய்த குறிப்பினை உட் கொண்டுதுரியோதனனைத் தண்டினால் தொடையிலடித்து உயிர் போக்கியமை, புகழ்போன்றுவசையாக் கரந்த அங்கதத்தின் பாற்படும். (என்னை? இடைக்குக்கீழ்ப்பகுதியில் தாக்கிச் செகுத்தல் மேம்பட்ட மறத்திற்கு இழுக்குஆதலின்.)(தொ. செய். 124. நச்.)

அங்கதப்பாட்டின் அளவு

அங்கதப்பாட்டிற்கு ஈரடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமை யும்கொள்ளப்படும். வசைப்பாட்டாகிய அங்கதப் பாட்டின் அளவு குறுவெண்பாட்டுப்போல ஈரடிச் சிறுமையும் நெடுவெண்பாட்டுப் போலப் பன்னீரடிப் பெருமையும்ஆம்.(தொ. செய். 159 நச்., பேரா.)

அங்கதப்பாட்டு

‘அங்கதச் செய்யுள்’ காண்க.

அங்கதம்

‘அங்கதச் செய்யுள்’ காண்க.

அங்கமாலை

ஆண் பெண் எனும் இருபாலாருடைய அங்கங்களாகிய உறுப்புக்கள்அனைத்தையும், ஓருறுப்பில் அடங்கும் சிறு பகுதிகளையும்கூட விடாமல்,உள்ளங்கால், விரல், நகம் என்பன உட்பட, வெண்பாவாலோ வெளிவிருத்தத்தாலோ,கடவுளர்க்காயின் பாதாதி கேசம் – மக்கட்காயின் கேசாதி பாதம் – என்னும்முறை பிறழாமல், அந்தாதித் தொடை அமையப் பாடுவது இப்பிரபந்தம். (இ. வி.பாட். 75)நாவுக்கரசர் அருளிய திருவங்கமாலை (தே. 4 : 9 ஆம் பதிகம்.)

அங்காத்தல்

முதல்நாவும் முதல்அண்ணமும் சேர்கின்ற இடம் திறத்தல். (எ.கு. பக்.
90)

அங்கை என்ற முடிவு

அகம் என்ற நிலைமொழியின் முன் வருமொழியாகக் கை என்ற பெயர் வரின்,
அகரம் நீங்கலான ஏனையெழுத்துக்கள் நிலைமொழியில் கெட, எஞ்சிநின்ற
அகரத்தொடு கை என்பது இணையும்போது, இடையே ககரத்தின் இனமெல்லெழுத் தாகிய
ஙகர ஒற்றுவர, அகம் + கை
> அ + கை
> அங் + கை = அங்கை என
முடிவுபெறும். (தொ. எ. 315 நச்.)
பிற்காலத்தில், அகம் + செவி = அஞ்செவியாயிற்று. ‘அஞ்செவி நிறைய
ஆலின’ (முல்லைப். 89)

அங்ஙனம் முதலிய சொற்கள்

யரழக்களின் முன் மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துக் களும்
ஙகரமும் மயங்கும் என்ற செய்தியில், ஙகரத்தை உயிர் மெய்யாகக் கொண்டு,
வேய்ஙனம் – வேர்ஙனம் – வீழ்ஙனம் என்று உதாரணம் காட்டுவர். ஙனம் என்ற
சொல்லைத் தொல்காப்பியனார் குறிப்பிடவில்லை. யரழ முன்னர் ஙகரம்
மயங்குதற்கு வேய்ங்குழல் – ஆர்ங்கோடு – பாழ்ங்கிணறு என்பனவே தக்க
உதாரணமாம். இவற்றை ஈரொற்றுடனிலைக்கு உதாரணமாகக் கோடல் கூடாது.
ஈரொற்றுடனிலை ஒரு மொழிக்கண்ணது. அதற்கு எடுத்துக் காட்டுத் தேய்ஞ்சது,
மேய்ந்தது, சேர்ந்தது, வாழ்ந்தது முதலியனவாக ஒருமொழிக் கண் வருவனவாம்.
தொல்காப்பியனார் காலத்தில் ஙகரம் முதலாய் வரும் சொல் தமிழில் இல்லை;
ஆங்கனம், ஈங்கனம், ஊங்கனம், யாங்கனம், என்ற சொற்களே உண்டு. ஆங்ஙனம்,
ஈங்ஙனம், ஊங்ஙனம், யாங்ஙனம் – அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்
என்பன பிற்காலத்தில் திரிந்து வழங்கிய சொற்களே.
ஙகரம் தன் முன்னர்த் தான் மயங்குவதற்குப்
‘பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும்
உரைத்தனரே’
(கலி. 11:9) என்பது போன்ற
ஒற்றளபெடையே உதாரணமாம்.
(எ. ஆ. பக். 26 – 29)
யாங்கனம் – நற். 381 – 6
புறநா. 8-6, 30-11, 39-13, 49-3 மணி. 5 : 41
ஆங்கனம் – தொ. பொ. 358-1; மலைபடு. 402; கலி. 28 : 21; சிலப். 7
: 47 – 1; மணி. 2 : 58; 3 : 26; 11 : 36, 122; 16 : 104, 128; இறை.
கள. 3 – 1; 5 – 1
ஈங்கனம் – குறுந் 336 – 2; புறநா. 208 – 4
அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் – சீவக 1359 (முதலியன).
இவையும் ‘தங்கிய’ என்ற ஈற்றடி எதுகையை நோக்க, அங்கனம் முதலாக
இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆங்ஙனம் : இதனை ஆ + கனம் என்று பிரிப்பின் பொருளின்று. ஆங்கு +
அனம் என்று பிரித்தால், அனம் என்பது தனம் என்பதன் மரூஉவாய், ஆங்ஙனம்
என்பது அப்படிப்பட்ட தன்மை என்னும் பொருளில் முதற்கண் வழங்கிப் பின்னை
அத்தன்மை என்னும் பொருளில் அமைவதாயிற்று. நன்கனம் – செவ்வனம் –
என்பனவற்றை நோக்கின், நிலைமொழியோடு அனம் என்பதுவே சேர்ந்துள்ளது
என்பது புலப்படும்.
ஆங்கனம் முதலியவை பிற்காலத்தில் ஆங்ஙனம் – அங்ஙனம் – முதலாகத்
திரியவே, “சுட்டுக்கள் – யாவினா – எகரவினா என்பனவற்றை அடுத்து ஙகரமும்
மொழிக்கு முதலாகும்” என்று நன்னூலார் குறிப்பிடுவாராயினார். (தி. மொ.
மூ. பெ. பக். 118).

அசுவகதி விருத்தம்

இஃது அடிக்குப் பதினாறு எழுத்துக்கள் கொண்ட வட மொழி விருத்தம்.இதன் அமைப்பு, முதற்கண் குருவான கணம் ஐந்து வந்து ஈற்றில் ஒருகுருவருதல்; மாத்திரைகள் 22 கொண்டது ஓரடி. (இந்த இலக்கணம் ‘கொட்டுவ’ என்றபாடலில் ஒற்றுநீக்கிக் காண முற்றிலும் பொருந்தி நிற்கிறது.)அ) முதல் நான்கு சீர்கள் குற்றெழுத்தீற்று 4 மாத்திரைக்கூவிளச்சீர்கள், 5 ஆம் சீர் 6 மாத்திரை கொண்ட தேமாங்காய்,புளிமாங்காய், கூவிளங்காய் இவற்றில் ஒன்று என்றமைந்த 5 சீரடி நான்கான்ஆயது.எ-டு : ‘கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கைகுறுந்தாளன // விட்டுவ(ர்) பூதங்க லப்பில ரின்புக ழென்புலவின் // மட்டுவருந்தழ(ல்) சூடுவ(ர்) மத்தமு மேந்துவர்வான் // தொட்டுவ ருங்கொடிதோணிபு ரத்துறை சுந்தரரே’ (தே.1:117-5)(வி. பா. பக். 55)விட்டுவர், ருந்தழல், சூடுவர் – இம்மெய்கள் குறிலையடுத்து வரினும், குறிலை நெடில் ஆக்கா;‘பூதங்க’ என்பதிலும் ஙகரஒற்று தனக்கு முன்னுள்ள எழுத்தைநெடிலாக்காது.ஆ) இதே வகைப் பாவில் 5 ஆம் சீர் தேமாங்காயாகவே 6 மாத்திரை பெற்று 4அடியிலும் வருமாறு அமைவது.எ-டு : ‘கன்மிசை மஞ்ஞையி ருந்துக லாபம்வி ரித்தாட// வின்மணி சிந்தரு வித்திர டாழ்ந்துவி ழுந்தோற்ற // முன்னிய சேடனமஞ்ஞையை யஞ்சிமு ரன்றொரல்லை // தன்னுல கெய்துவ தன்மைத ருங்கயிலாயத்தில்’இஃது ஓரெழுத்துக் குறையினும், மாத்திரை 22 பெற்றது ஒக்கும்.(இ) புளிமா, கூவிளம், கூவிளம், கூவிளம் மாங்காய் அல்லது மாங்கனிஅல்லது கூவிளங்காய் என அமைந்த 5 சீரடி நான்கான் அமைவது. முதற்சீர் 5மாத்திரை, இறுதிச்சீர் 6 மாத்திரை, ஏனைய சீர்கள் 4 மாத்திரை.எ-டு : ‘இலங்கைத் தலைவனை ஏந்திற் றிறுத்ததிரலையின்னாள் // கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது //கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச் // சலங்கிளர்வாழ்வயற் சண்பையுள் மேவிய தத்துவரே’ (தே 1 : 117 -9)

அசேதனம் செய்வினை

வினைவகைகளாக இலக்கணக்கொத்துக் கூறுவன பலவற் றுள் இஃது ஒன்று;அறிவற்ற பொருள்கள் செய்யும் வினை.எ-டு : விளக்குக் காட்டிற்று, விடம் கொன்றது,காற்று அலைத்தது, இருள் மறைத்தது – என வருமாறு காண்க. (இ. கொ. 81)

அசை

செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. ஓரெழுத்தையும் பல எழுத்தையும்பொருத்தி ஓசை கொள்ளுதலின் அசை எனப்பட்டது. இது நேரசை நிரையசை எனஇருவகைத்தாய், சீருக்கு உறுப்பாக அமைவது. ஒரோவழி அசையே சீராதலும்உண்டு; அஃது அசைச் சீர் எனப்படும்.

அசை என்ற காரணக் குறியீடு

எழுத்துக்களின் மாத்திரையை முன்னும் பின்னுமாக மயக்கி ஓர்ஓசைத்தாக அசைத்து நிற்றலின் அசை என்பது காரணக் குறியீடாம். (தொ. செய். 3. ச. பால.)

அசை ஓத்து

இஃது யாப்பருங்கலத்துள் உறுப்பியலில் முதலாவது பகுதி. இதன்கண்நேரசை நிரையசை யென்னும் அசைவகையும், தனிக்குறில் நேரசையாகாதஇடங்களும், ஐகாரக் குறுக்கம் இணைந்த நிரையசை வருமாறும் இடம்பெறும்.

அசை சீர்நிலை ஆகலும் உரித்து ஆதல்

ஓசை நிலைமையால் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்பின்,அசைநிலைமைப்பட்ட சொற்கள் சீர்நிலையையும் பெறும். முச்சீர்களையுடையவெண்பாவின் ஈற்றுச் சீர்க்கண் இவை மிகுதியும் வரும்.வெண்பா :‘கழல்தொழா மன்னர்தம் கை ’ (தண்டி. 21-2) நேர் (இயலசை)‘புனல்நாடன் பேரே வரும் ’ (முத்.) – நிரை (இயலசை)‘எய்போல் கிடந்தானென் ஏறு ’ (பு.வெ.மா. 8:22) நேர்பு (உரியசை)‘மேவாரை அட்ட களத்து ’ (களவழி 25) – நிரைபு (உரியசை)ஆசிரியம் :‘கழிந்தோர்க் கிரங்கு நெஞ்சமொடு – நிரைபுஒழிந்திவண் உறைதல் ஆ ற்று வோர்க்கே’ – நேர்புவெண்பா :‘முலைவிலங்கிற் றென் று முனிவாள்’ (தண்டி : 16) நேர்பு‘நெய்த்தோர் நிறைத் து க் – கணம்புகல’ (பு. வெ. மா. 3 : 5) நிரைபுஎன இடை வரும் உரியசைகளும் சீர்நிலைப்படுதல் கொள்ளப்படல்வேண்டும்.இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால்இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும்,நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்படும். (தொ. செய். 28. நச்.)

அசை விரளச் செந்தொடை

ஓரடியிலுள்ள ஈரசைச்சீர்களிலோ மூவசைச்சீர்களிலோ ஒரேவகையான சீர்வாராமல் பலவகைச் சீர்களும் வருதல்.எ-டு : ‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்’ (அகநா. 270)நிரைநிரை நிரைநேர் நேர்நிரை நேர்நேர்கருவிளம் புளிமா கூவிளம் தேமாஇவ்வாறு ஈரசைச்சீர்களில் அசைகள் மாறி வருதல் அசை விரளச்செந்தொடையாம். (யா. க. 50. உரை)

அசைகளின் வடிவு

நேர், நிரை, நேர்பு, நிரைபு – அசைகள் முறையே ர – ட – ரு – டு -வடிவாக இடப்படும். நேர்நிரைகளின் குறியீடு வடமொழி லகு குருக்களின்குறியீட்டை ஒருபுடை ஒத்துத்துள்ளது. (லகு- I ; குரு – ~ ) நேர்பசை நிரைபசைகளைக் குறிப்பிட, நேரசை நிரையசைகளைக்குறிக்கும் எழுத்துக்களாகிய ர ட என்பவற் றுடன் உகரம் சேர்ந்த ரு, டுஎன்பன குறியீடுகளாகியன. (யா. க. 5. உரை)

அசைகளுக்கு அலகுகள்

நேரசை ஓரலகு; நிரையசை ஈரலகு; நேர்பு அசை மூவலகு; நிரைபு அசை நான்குஅலகு என்பர் அவிநயனார். அஃதாவது நேரசை முதலாவது அலகு, நிரையசைஇரண்டாவது அலகு, நேர்புஅசை, மூன்றாவது அலகு, நிரைபுஅசை நான்காவது அலகுஎன அலகுகள் நான்கு வகையாம். (யா. க. 5. உரை)முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதுஎன்பனவற்றை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என வழங்குவதுஉண்டு.‘ஒன்றென மொழிப’ (தொ. பொ. 261)‘இரண்டென மொழிப’ (தொ. பொ. 262)‘மூன்றென மொழிப’ (தொ. பொ. 263)‘நான்கென மொழிப’ (தொ. பொ. 264‘ஐந்தென மொழிப’ (தொ. பொ. 265)‘ஆறென மொழிப’ (தொ. பொ. 266)என்ற தொல்காப்பிய நூற்பாக்களும்,‘இரண்டென மூன்றென, நான்கென ஐந்தென- ஆறென ஏழென எட்டென தொண்டென’(பரி. 3 : 78,79)“இரண்டு முதலாகிய எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருள“, “ஈண்டும்ஏழு முதலாகிய எண்கள் பூரணப் பொருள”(பரிமேலழகர் உரை) என்ற செய்தியும்இங்ஙனம் பொருள் செய்வதற்கு எடுத்துக்காட்டான சான்றுகளாம்.

அசைகளுக்குப் புறனடை

ஐகாரக்குறுக்கம் பிறிதொன்றனோடு இயைந்தும், ஐகாரத்தி னோடு இயைந்தும்நிரையசையாம்.‘கெண் டையை வென்ற’ (யா.கா. 38 மேற்.) என்புழி, கெண்டையை எனச் சீர்க்கடைக்கண் ஐகாரம் இரண்டு இணைந்துநிரை யசையாயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால்’ (யா. கா. 38 மேற்.) என்புழி ‘அன்னையை’ எனச் சீர்நடு ஐகாரம் இரண்டிணைந்து நிரையசை ஆயிற்று.‘படுமழைத் தண் மலை வெற்பன்’ (யா. வி. பக். 55) என்புழி, ‘படு மழை ’ ‘தண் மலை ’ என்பவற்றில் சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இயைந்துநிரையசையாயிற்று.‘தன்னையரும் காணத் தளர்ந்து’ (யா. வி. பக். 55) என்புழி, ‘தன் னையரு ம் ’ எனச் சீர்நடு ஐகாரம் குற்றெழுத்துடன் கூடிநிரையசையாயிற்று.‘பையுள் மாலைப் பழுமரம்படரிய’ (தொ. கள. 23 மேற். நச்.) என்புழி, ‘ பையுள் ’ எனச்சீர் முதற்கண் நின்ற ஐகாரம், குறிலுடன் நிரையசையாகாது,தானே தனித்து நேரசை யாயிற்று. (யா. வி. பக். 55)‘அடைப்பை யாய் கோல்தாஎனலும்’ (யா. கா. 38 மேற்.) என்புழி ‘அடைப் பையாய் ’ எனச்சீர்நடு ஐகாரம் நெடிலோடு இயைந்து நிரையசை யாயிற்று. (யா.க. 9 உரை)

அசைக்கு உறுப்பாவனவும்,அவ்வெழுத்துக்களின் வகையும்

குறிலும் நெடிலும் குற்றியலுகரமும் என்னும் மூன்றும் அசைக்குஉறுப்பாவன என்பர், பேராசிரியரும் நச்சினார்க் கினியரும். (தொ. செய்.2)உயிரெழுத்து மெய்யெழுத்து சார்பெழுத்து என எழுத்தி யலைமூவகையாக்கி, குற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என உயிர் மூவகைப்படும்எனவும், வல்லினம் மெல்லினம் இடையினம் என மெய்யெழுத்து மூவகைப்படும்எனவும், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்துமூவகைப்படும் எனவும் பாகுபடுத்து, உயிரும் மெய்யும் கூடிஉயிர்மெய்யெழுத்தாம் என அதனையும் சுட்டி, ஐகாரக்குறுக்கம்மகரக்குறுக்கம் என இரண்டனையும் கூட்டி இவை யெல்லாவற்றையும்குறித்துப்போந்தார் இளம்பூரணர். (செய். 2)உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை,இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகார ஒளகார மகரக்குறுக்கங்கள் ஆகிய பதினைந்தும் அசைக்கு உறுப்பாம். (யா. க. 1)அளபெடையை உயிரளபெடை ஒற்றளபெடை என இரண் டாகப் பகுத்து அசைக்குஉறுப்புப் பதினாறு என்பாரும், அவற்றோடு ஆய்தக் குறுக்கமும் சேரப்பதினேழு என்பாரும் உளர்.பெருங்காக்கை பாடினியார், முற்கூறிய பதினைந்தில் ஒளகார மகரக்குறுக்கங்களை நீக்கி, ஏனைய பதின்மூன்றும் அசைக் குறுப்பென்றார்.சிறுகாக்கைபாடினியாரும், அவிஙயனாரும் முறையே அப் பதின்மூன்றனுள்ஆய்தத்தை நீக்கி எஞ்சிய பன்னிரண்டும், ஆய்தத்தையும் மெய்யையும் நீக்கிஎஞ்சிய பதினொன்றும் அசைக்கு உறுப்பு என்றனர்.நாலடி நாற்பது என்னும் நூலுடையார், மேற்காணும் பதினைந்தனுள் உயிர்- ஆய்தம் – ஒளகாரக் குறுக்கம் – என்னும் மூன்றையும் நீக்கி எஞ்சிய12-ஐயும் கூறினார். (யா.வி. பக். 30)பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், ஒற்றளபெடை மிகவும் அருகியேவருமாதலின் அதனை அசைக்கு உறுப்பாகக் கொள்ளாமல், தொடைக்கும்வண்ணத்திற்கும் உறுப்பாக்கி, மெய் அலகு பெறாதாகவே அதனை ஒத்தகுற்றியலிகரம் ஆய்தம் என்பனவற்றையும் மெய்யின் குறுக்கமாகிய மகரக்குறுக்கத்தையும் நீக்கி, உயிர்அளபெடையைக் குறிலும் நெடிலுமாகவும் ஐகாரஒளகாரக்குறுக்கங்களைக் குறிலாக வும் அடக்கி, அசைக்கு உறுப்பாவனகுறிலும் நெடிலும் குற்றுகரமும் ஆகிய மூன்றுமே என்றுகுறிப்பிட்டுள்ளமை உளங்கொளத்தக்கது.

அசைச்சீர் இயற்சீர் போல்வது

‘கழல்தொழா மன்னர்தம் கை’ (தண்டி 21-2)‘புனல்நாடன் பேரே வரும் .’ (முத்.)‘எய்போற் கிடந்தானென் னேறு.’ (பு. வெ. மா. 8 : 22)‘மேவாரை யட்ட களத்து’ (களவழி. 25)வெண்பாவின் ஈற்றடியாக வரும் இவற்றுள், முறையே நேரசையும்நிரையசையும் நேர்புஅசையும் நிரைபுஅசையு மாகிய அசை(ச்சீர்) இயற்சீராகநின்றன. (தொல். செய். 27. பேரா.)

அசைச்சீர் நான்கும், இயற்சீர்பத்தும், ஆசிரிய உரிச்சீர் ஆறும்

அசைச்சீர் 4 : நேர்; நிரை; நேர்பு, நிரைபு என்பன.(தொ. செய். 3, 4)இயற்சீர் 10 : நேர்நேர் – நிரைநேர் – நிரைநிரை – நேர்நிரை – நேர்புநேர் – நிரைபு நேர்- நேர் நேர்பு – நேர் நிரைபு – நிரை நேர்பு – நிரைநிரைபு என்பன.ஆசிரிய உரிச்சீர் 6 – நேர்பு நேர்பு – நேர்பு நிரைபு – நிரைபுநேர்பு – நிரைபு நிரைபு – நேர்பு நிரை – நிரைபு நிரை என்பன.(தொ. செய். 13 – 16)

அசைச்சீர், இயற்சீர் என்பனஇருவகைப்படுதல்

அசைச்சீர் – 2நேர்பு : வண்டு – ஓரெழுத்து; மின்னு – ஈரெழுத்து.நிரைபு : வரகு – ஈரெழுத்து; அரவு – மூவெழுத்து.இவற்றுள் குற்றுகரம் எழுத்தெண்ணப்பெறாது அலகு மாத்திரம் பெறுதலின்,இருநிலைமை எய்தின.நேர் நேர் : நு ந்தை – ஓரெழுத்துத் தேமா.நேர் நிரை : ஞாயி று – ஈரெழுத்துப் பாதிரிநிரை நிரை : வலியது – மூவெழுத்துக் கணவிரி.இவற்றுள், குற்றுகரம் எழுத்தெண்ணப்பெறாது அலகு மாத்திரம்பெறுதலின், இரு நிலைமை எய்தியவாறு. இவை இயலசை மயங்கினஇயற்சீர்கள்.நேர்பு நேர் : போதுபூ – ஈரெழுத்து; மேவுசீர் – மூவெழுத்து.நிரைபு நேர் : விறகுதீ – மூவெழுத்து; உருமுத்தீ – நாலெழுத்து.நேர் நேர்பு : போரேறு – ஈரெழுத்து; நன்னாணு – மூவெழுத்து.நேர் நிரைபு : பூமருது – மூவெழுத்து; காருருமு – நாலெழுத்து.நிரை நிரைபு : மழகளிறு – நாலெழுத்து; நரையுருமு – ஐயெழுத்து.நிரை நேர்பு : கடியாறு – மூவெழுத்து; பெருநாணு – நாலெழுத்து.உரியசை மயங்கின இவ்வியற்சீர்கள் ஆறும் குற்றுகர முற்றுக ரங்களான்இருநிலைமை எய்தின. (தொ. செய். 43. நச்.)

அசைச்சீர்க்குத் தளை வழங்குதல்

அசை சீராய் நின்றவிடத்துத் தளை வழங்கும்போது நேரசைச் சீருக்கு ஓர்அலகு கொடுத்து நேர்நேர் ஆகவும், நிரையசைச் சீருக்கு மற்றும் ஓர் அலகுகொடுத்து நிரைநேர் ஆகவும், நேர்புஅசைச்சீருள் ஓர் அலகு களைந்துதேமாவாகவும், நிரைபு அசைச்சீருள் ஓர் அலகு களைந்து புளிமாவாகவும்வைப்பர்.எ-டு : ‘ கழிந்தோர்க் கிரங்குநெஞ்சமொடு – நிரைபு ஒழிந்திவ ணுறைதல் ஆற்றுவோ ர்க்கே’ – நேர்பு. இஃது ஆசிரியப்பா.‘முலைவில ங்கிற் றென்று முனிவாள்’ (தண்டி. 16) நேர்பு‘நெய்த்தோர் நிறைத்துக் -கணம்புகல’ (பு. வெ. மா. 3 : 5) நிரைபு இவை வெண்பாஅடி.இவற்றுள் இடைவரும் உரியசைகளும் (நேர்பு, நிரைபு) சீர் நிலைப்படுதல்கொள்ளப்பட்டவாறு. (தொ. செய். 28. நச்.)இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால்இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும்,நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்பட்டுத் தளைகொண்டவாறு காண்க.இனி, யாப்பருங்கல விருத்தி உரைப்பது -ஓரசைச்சீர் இயற்சீர் போலக் கொள்ளப்பட்டு வரும் சீர் முதலசையோடுஒன்றியது ஆசிரியத் தளையாகவும் ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும்கொள்ளப்படும் என்பது. (யா. க. 21. உரை)

அசைச்சீர்த் தளைகள்

ஓரசைச்சீரை இயற்சீர் போலக் கொண்டு வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றியதுஆசிரியத் தளையாகவும், ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும் கொள்ளப்படும்.(சிறப்பில் லாத சீர்களாதலின் இவ்வோரசைச்சீரும் நாலசைச்சீரும்பொதுச்சீர் எனப்படும்.)‘அசைச்சீர் இயற்சீர் ஒக்கும் ஒண்தளைக்கே’ (யா. கா. 8) (21 உரை)எ-டு : ‘அரிமதர் மழை க் கண்ணாள்செருமதி செய் தீமையால்’‘மழை’ நிரையீற்று இயற்சீராகக் கொள்ளப்பட்டுக் ‘கண்ணாள்’என்பதனொடு தளை கொள்ளுமிடத்து இயற்சீர் வெண்டளை ஆயிற்று. ‘செய்’நேரீற்று இயற்சீராகக் கொள்ளப்பட்டுத் ‘தீமையால்’ என்பதனொடு தளைகொள்ளுமிடத்து நேரொன்றாசிரியத்தளையாயிற்று. (யா. கா. 11. உரை)

அசைச்சொல் மியா

மியா என்ற முன்னிலை அசைச்சொல்லிலுள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும்.
இஃது ஒருசொல்லில் வரும் குற்றிய லிகரம். கேண்மியா என்ற சொல்லில் யா
என்னும் எழுத்தின் தொடர்பால், மகரத்தை ஊர்ந்து வரும் இகரம்
குற்றியலிகர மாக ஒரு மாத்திரையிற் குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும்.
(நன். 93)

அசைச்சொல் விளியாதல்

ஒன்றனைக் கேட்பித்தல் பொருளில் வரும் அம்ம என்னும் அசைநிலைஇடைச்சொல் தனக்கெனப் பொருளின்று ஆயினும், அம்ம என்று இயல்பாயும் அம்மாஎன்று நீண்டும், விளியேற்கும் பெயரொடு தொடர்ந்து வரும். வருமாறு :அம்மா சாத்தா (தொ. சொ. 153 சேனா.)

அசைநிலை அளபெடை

‘அளபெடை அசைநிலை யாதல்’ காண்க.சீர்நிலை எய்திநின்ற அளபெடைகள் அசைநிலையாதலும் உண்டு. இயற்கையளபெடைஅசைநிலையாதல் செய்யுட்கே உரியது. புணர்ச்சிவகையான் எழுத்துப்பேறாகியஅள பெடையும் பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கை அளபெடைகள்சிலவும் அசைநிலை ஆதலும் உரிய.எ-டு : ‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’ (யா.கா. 38 மேற்.)என்புழி, அளபெடை சீர்நிலை எய்தின் வெண்பாச் சிதையும் ஆதலின்,பண்டமாற்றின்கண் இயற்கை அளபெடை அசைநிலை யாயிற்று.‘பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன் என்புழி, ‘பலாஅ’என்பதன்கண் எழுத்துப்பேறளபெடை சீராகாது அசையாயிற்று.‘கலம்போஒய்ப்போஒய்க் கவ்வை செய’ என்புழி,வெண்பா ஈற்றடியில் அளபெடை செய்கைக் குறிப்புப் புலப்பட வந்தது.அளபெடை சீராயின் வெண்பாச் சிதையும்.(செய்கைக்குறிப்பு – ஒரு செயல் பலகால் நிகழ்தல்). (தொ. செய். 17நச்.)

அசைநிலை பொருள் உணர்த்துதல்

தாம் சார்ந்த சொற்களின் பொருளை உணர்த்தியும், அச் சொற்களைஅசைத்தும் நிற்றலின் அசைநிலை பொருள் குறித்தனவேயாம். (தொ. சொ. 157நச். உரை)

அசைநிலை முதலியன பொருள் குறித்தல்

அசைநிலை இசைநிறை ஒருசொல்லடுக்கு – என்பன பொருள் குறித்திலவே எனின்,அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன. அன்றியும், எல்லாச் சொல்லும்பொருள்குறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்ளப்படும்; ‘இவ்வூரார்எல்லாம் கல்வியுடையார்’ என்றவழி, கல்லாதார் உளராயினும் கற்பார் பலர்என்பது குறித்து நின்றாற்போலக் கொள்ளப்படும்.(தொ. சொ. 151 தெய். உரை)

அசைநிலைக் கிளவி ஆகும் ஆரைக்கிளவி

ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலையாகும்வழி உம்மையை அடுத்தும்,உம்ஈற்றை அடுத்தும் வருதலே பெரும்பான்மை.எ-டு : ‘பெயரினாகிய தொகையுமார் உளவே’ (வேற். 6)- ஆர் உம்மையை அடுத்து வந்தது.‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எழுத். மொழி. 28)- ஆர் உம்ஈற்றை அடுத்து வந்தது. (தொ. சொ. 273 நச். உரை)

அசைநிலையாக அடுக்கி வரும் சொற்கள்

கண்டீர் கொண்டீர் (கேட்டீர்) சென்றது போயிற்று – என்னும் சொற்கள்,கண்டீரே கொண்டீரே (கேட்டீரே) சென்றதே போயிற்றே – என வினாவொடுகூடிக்கண்டீரே கண்டீரே – முதலாக அடுக்கிவரும்போது வினைச்சொல்லாகாதுஅசைச்சொற்களாம்.கேட்டை நின்றை காத்தை கண்டை – என்பன அடுக்கியும் அடுக்காதும் வந்துஅசைநிலை ஆகும்.(தொ. சொ. 425, 426 சேனா. உரை)ஆக ஆகல் என்பது – என்பன, ஆகவாக – ஆகலாகல் – என்ப தென்பது – என்றுஅடுக்கி நின்றவழியே அசைநிலையாம். (தொ. சொ. 280 சேனா. உரை)

அசைநிலையாக வரும் இடைச்சொற்கள்

யா கா பிற பிறக்கு அரோ போ மாது மா மன் (சாரியை யாகிய) இன் ஐ சின்மாள தெய்ய என ஓரும் அத்தை ஈ இசின் ஆம் ஆல் என்ப அன்று – என்பனஅசைநிலையாய் வரும்.வருமாறு :யா பன்னிருவர் மாணாக்கர் – ‘இவன் இவண் காண்டிகா’ கலி. 99 -‘தான் பிற வரிசை அறிதலின்’ புற. 140 – ‘நசைபிறக்கு ஒழிய’ புற. 15 -‘இருங்குயில் ஆலுமரோ’ கலி. 33 – ‘பிரியின் வாழா தென்போ தெய்ய -‘விளிந்தன்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே’ நற். 178 – ‘ஓர்கமாதோழி’ – ‘அதுமன் கொண்கன் தேரே’ – ‘காப்பின் ஒப்பின்’ வேற். 11 – ‘நேரைநோக்க நாரரி பருகி’ – ‘தண்ணென் றிசினே’ ஐங். 73 – ‘சிறிதுதவிர்ந் தீகமாளநின் பரிசிலர்’ – ‘சொல்லேன் தெய்ய’ – ‘அறிவார் யாரஃ திறுவுழிஇறுகென’ – ‘அஞ்சுவ தோரும் அறனே’ கு. 366 – ‘செலியர் அத்தைநின் வெகுளி’புற. 6 – ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’ – ‘காதல் நன்மா நீமற் றிசினே’- ‘பணியுமாம் என்றும் பெருமை’ கு. 978, – ‘ஈங்கா யினவால்’ – ‘புனற்கன்னிகொண் டிழிந்தது என்பவே’ சீவக. 39 – ‘சேவடி சேர்தும் அன்றே’ சீவக.1. (தொ. சொ. 281, 297 298 நச். உரை)

அசைபற்றிக் குற்றியலுகரம் வருமாறு

எ-டு : காசு – நெடிலசையை அடுத்தது; வரகு – குறிலிணை அசையை
அடுத்தது; மலாடு – குறில்நெடில் அசையை அடுத்தது; காற்று – நெடிலொற்று
அசையை அடுத்தது; எழுத்து – குறிலிணையொற்று அசையை அடுத்தது; விலாங்கு –
குறில்நெடிலொற்று அசையை அடுத்தது. கப்பு – குற்றொற்று அசையை
அடுத்தது.
இவையேழும் முறையே நெடிற்றொடர் – உயிர்த்தொடர் – உயிர்த்தொடர் –
வன்தொடர் – வன்றொடர் – மென்றொடர் – வன்றொடர்க்குற்றியலுகரங்களாக
அடங்குமாறு காண்க.

அசைபற்றிக் குற்றுகர வகை கோடல்

‘நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை // ஒற்றொடு
வருதலொடு குற்றொற் றிறுதிஎன்(று) // ஏழ்குற் றுகரக்(கு) இடனென
மொழிப’ என்னும் இவ்வேழிடத்தும் (அசைபற்றி) வரும் குற்றியலுகரங்
கள் நெடிற்றொடர் முதலாகிய ஆறு தொடர்களுள்ளும் அடங்கும். இவ்வாறு
ஏழிடம் கொள்வார்க்குச் சுண்ணாம்பு – ஆமணக்கு – பிண்ணாக்கு –
முதலாயினவும், ஆய்தம் தொடர்ந் தனவும் அடங்கா என்றறிக.
(நன். 93 மயிலை.)

அசையடி

கலிப்பா உறுப்புக்களில் ஒன்றாகிய அம்போதரங்கத்திற்கு ஒரு பெயர்.(வீ. சோ. 117 உரை, யா. கா. 32,) (யா. க. 83 உரை, இ. வி. 738)

அசையின் தொகை

நேரசையும் நிரையசையும் என அசையின் தொகை இருவகைத்து. அவற்றுடன்நேர்புஅசை நிரைபுஅசைகளைச் சேர்க்க அசையின் தொகை நான்காம். (யா. க. 5.உரை)

அசையின் வகை

எழுத்தின் ஒலியைக் கணக்கிட்டு வகைப்படுத்துவது அசை. அசையின்கூறுபாடுகள் அசைவகை எனப்படும். அவை இயலசையும் உரியசையும் என இரண்டாம்.(தொ. செய். 1 பேரா.)அசைவகை என்றது, இயலசையும் உரியசையுமாம் அசைக் கூறுபாட்டினை. (செய்.1 நச்.)எண்ணப்படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைத்து (-ஒலித்து) நிற்றலின்,அசையென்னும் பெயரும் தோன்றிற்று. (செய். 3 நச்.)நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்பன நான்கும் அசைவகைகளாம்.

அசையின் விரி

சிறப்புடைய நேரசை, சிறப்பில் நேரசை, சிறப்புடைய நிரையசை, சிறப்பில்நிரையசை, சிறப்புடைய நேர்பசை, சிறப்பில் நேர்பசை, சிறப்புடைய நிரைபசை,சிறப்பில் நிரைபசை என்பன. (யா. க. சிறப். 1. உரை)பொருள் பயந்து நிற்பன சிறப்பசை என்றும், மொழிக்கு உறுப்பாய் நிற்பனசிறப்பில் அசை என்றும் வழங்கப்படும்.(யா. க. 8 உரை)

அசையும் சீரும் இசையொடு சேர்த்தல்

செய்யுட்கண் பயின்று வரும் எழுத்தானாம் அசைகளையும் அசையானாம்சீர்களையும், தூக்கும் பாவும் வண்ணமும் ஆகிய உறுப்புக்களுக்கு ஏற்ப,ஆசிரியம் வெண்பா முதலிய ஓசைகள் வழுவாமல் அவ்வவற்றிற்குரிய இசையொடுசேர்த்தி அவற்றின் வேறுபாடு தோன்ற வகுத்துணர்த்துதல் செய்யுளிலக்கணம்வல்லோர் முறை.என்றது, ஒருசெய்யுட்கண் அதற்குரிய ஓசையின்றி மாறினும், அவை இன்னாஓசைய ஆயினும் வழுவாம் என்றவாறு.எ-டு : ‘வேண்டுதல்வேண் டாமை இலானடிசேர்ந்தார்க்கு’என்னும் குறள்வெண்பாவின் அடியை‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’என ஓதின் வழுப்படுகிறது. ஆதலின்,‘வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என அசையை இசையொடுசேர்த்து இசைக்கப் பிழையா தாயிற்று. (தொ. செய். 11. ச. பால.)

அசையும் சீரும் இசையொடு சேர்த்திவகுத்தனர் உணர்த்தல்

மாத்திரை என்னும் செய்யுளுறுப்பின் ஓசையை அளந்து இன்னோசையும் இன்னாஓசையும் அறிந்து உணரப்படும்.‘பொருப்புப் புடைத்துப் புடைத்து’ என்ற வெண்பா ஈற்றடி இன்னா ஓசைஉடையது. அது ‘பொருப்புத் தழைந்து பொலிந்து’ என மெல்லின ஓசை சேர்க்கஇன்னோசைத் தாயிற்று.‘நிலமிசை நீடுவாழ் வார்’ என்னும் திருக்குறள் (3) ஈற்றடியில்,‘வாழ்வார்’ என்னும் ஓசையை வகுத்து ‘வார்’ என்னும் நேரசைச்சீர் ஆக்க,இன்னோசைத்தாயிற்று. இது வகையுளி எனவும் வழங்கப் பெறும்.வெண்பாவிற்கு அடிதோறும் 7 எழுத்து முதல் 14 எழுத்து வரையில் வரலாம்என்னும் வரையறையை உட்கொண்டு, வெண்சீர் வெண்டளையினாலேயே ‘தேமாங்காய்தேமாங் காய் தேமாங்காய் தேமாங்காய்’ என 12 எழுத்தான் அமைக் கப்பட்டவெண்பாஅடியில் துள்ளல்ஓசை பிறக்குமாதலின், அப் பன்னிரண்டுஎழுத்துக்களையே கொண்டு ஈரசைச் சீர்களையும் இடைமிடைந்து, தேமாங்காய்கூவிளம் காருருமு (நேர் நிரைபு) காருருமு, என அமைப்பின் இன்னோ சையாகியவெண்பா ஓசை பிறக்கும்.‘கூவிளம் கருவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்’ இதனுள், கூவிளம் -நேர் நிரை; கருவிளங்காய் – நிரை நிரை நேர். கூவிளம் என்றஇயற்சீர்ப்பின் நிரை ஒன்றி, நிரை ஒன்றிய ஆசிரியத்தளை ஆயிற்றேனும்,கலித்தளை போல் ஓசை கொள்ளப்படும்.‘நுதல திமையா நாட்டம்; இகலட்டுக்கையது கணிச்சியொடு மழுவே’ (அகநா.கடவுள்)‘இகலட்டு’ என்னும் சீர் குறித்த பொருளை முடியநாட்டும் ‘யாப்பு’என்னும் உறுப்பினுள் அடங்காது; ஏனெனின் ‘நுதல திமையா நாட்டம்’ என்னும்மூன்று சீர்களாலேயே குறித்த பொருள் முடிந்துவிட்டது; ‘இகலட்டு’என்னும் சீர் அடுத்த அடியிலுள்ள கையது என்னும் சீரோடு இயைந்து பொருள்தருவது; எனினும் இசையொடு சேர்த்தி வகுக்கப் பட்டது ஆதலின்,சிறப்புடைத்து.‘சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’ என்புழி, ‘சுஃஃறு’ என்பதுஎழுத்து அல்லாத ஓசை. அதுவும் அசை யொடும் சீரொடும் சேர்த்துஉணரப்பட்டது.‘வண்கொன்றையை மருட்டுங்காண்’‘புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’இப்பாடல் அடிகளில் ஐகாரம் கடை இடை முதல் என்னும் மூவிடங்களிலும்குறுகி ஒருமாத்திரையாய்க் குற்றெழுத்து நீர்மைத்தாய் ஓசை கொண்டது.இவ்வாறே பிறவும் வகுத்துணர்த்தல் அத்துறையினோர்க்கே தெரிவதாம். இவைஎஃகு செவியும் நுண்ணுணர்வும் உடை யார்க்கன்றிப் பிறர்க்குஉணரலாகா.(தொ. செய். 11 நச். பேரா.)

அசையுள் எழுத்து அடங்காமை

‘உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ’ என்றதனான் (செய். 44) ஐயம்தோன்றுதலின், எழுத்து அசையுள் அடங்காது. பொரு ளுணர்ச்சிக்கு எல்லாஎழுத்தும் காரணமாதலின் எழுத்தினை விதந்து கூறினார். (தொ. செய். 78. ச.பால.)

அச்சக் கிளவிக்கண் உருபு மயங்குதல்

அச்சப்பொருள்மேல் வரும் சொல்லிற்கு வேற்றுமையுருபு தொக அதன் பொருள்நின்றவழி, ஐந்தாம் வேற்றுமையுருபும் இரண்டாம் வேற்றுமையுருபும் ஒத்தஉரிமையவாய் மயங்கும்.எ-டு : பழி அஞ்சும்இத்தொகைநிலைத் தொடரை விரிப்புழி, ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளைக்கொண்டால் பழியின் அஞ்சும் எனவும், இரண்டாம் வேற்றுமைச்செயப்படுபொருளைக் கொண் டால் பழியை அஞ்சும் எனவும் ஐந்தாவதும்இரண்டாவதும் மயங்கியவாறு. (தொ. சொ. 101 நச்.)

அச்சப் பொருள் உணர்த்தும்உரிச்சொற்கள்

பேம் நாம் உரும் – என்னும் மூன்றும் அச்சமாகிய குறிப்பை உணர்த்தும்உரிச்சொற்கள். வருமாறு :‘மன்ற மராஅத்த பே(ம்)முதிர் கடவுள்’ (குறுந். 87)‘நாம நல்லரா’ (அகநா. 72)(நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்து நின்றது)‘உரும்இல் சுற்றமொடு’ (பெரும்பாண். 447) (தொ. சொ. 365 நச்.உரை)

அச்சும் அல்லும்

அச் – உயிரெழுத்துக்கள். ஆவி, சுரம் (ஸ்வரம்) என்பனவும் அவையே.வடமொழி இலக்கணத்தின் அடிப்படையாகக் கொள்ளும் மாகேசுவர சூத்திரங்கள்பதினான்கு.இவற்றின் இடையேயுள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி முதல் இறுதிஎழுத்துக்களைச் சேர்த்துக் குறியீடு கொள்வது, வடமொழி இலக்கணமானவியாகரண சாத்திர மரபு. இந்த முறையில் முதல் நான்கு சூத்திரங்களையும்சேர்க்க அச் (சு) என நிற்குமதனுள் உயிரெழுத்துக்கள் அடங்கும்.(குறிலாய் உள்ளவற்றின் நெடிலும் கொள்ளப்படும்.) அம் என்னும்அநுஸ்வாரமும் அ: என்ற விஸர்க்கமும் சேர, வட மொழியில் உயிரெழுத்துக்கள்பதினாறாம்.இவ்வாறு சூத்திரங்களில் முதலெழுத்தினையும் ஈற்றெழுத் தினையும்இணைத்துக் குறியீடுகள் கொள்ளுமுறை பிரத்தி யாகாரம் எனப்படும்.அல் (ஹல்) – மெய்யெழுத்து – வியஞ்சனம் – என்பதும் இதுவே.பிரத்தியாகார முறையில் ஐந்தாவது மாகேசுவர சூத்திரத்தின் முதல்எழுத்தான ஹ என்பதனையும், பதினான்காவது சூத்திரத்தின் இறுதி யெழுத்தானல் என்பதனையும் சேர்க்க வந்த குறியீடே ஹல் என்பது.இதனுள் வடமொழியின் மெய்யெழுத்துக்கள் முப்பத் தைந்தும் அடங்கும்.அவை க ச ட த ப – வருக்கங்கள் (5 x 5) இருபத்தைந்தும், ய ர ல வ ஶ ஷ ஸ ஹள க்ஷ – என்னும் பத்தும் சேர முப்பத்தைந்து ஆம்.உயிரின்றித் தாம் இயங்கா ஆதலானும், இவையின்றி உயிர் களும் சிறவாஆதலானும், தாமே தனித்து இயங்கும் ஆற்றல் அற்ற மெய்யெழுத்துக்கள்வியஞ்சனம் எனப்பட்டன.இவற்றை மகாப் பிராணன், அர்த்தப் பிராணன், அற்பப் பிராணன் எனஇவற்றின் ஒலி பற்றிப் பிரிப்பதுமுண்டு. தமிழில் மூவினப் பகுப்புப்போன்றது இது. ஐந்து வர்க்கங் களின் 2, 4ஆம் எழுத்துக்களும், ஷ ஸ ஹஎன்பனவும் மகாப் பிராணன்; ய ர ல வ ள – என்பன அர்த்தப் பிராணன்;ஐவர்க்கங் களின் 1, 3, 5ஆம் எழுத்துக்கள் அற்பப் பிராணன். (இப்பகுப்புஅனைவர்க்கும் உடன்பாடு அன்று.) (பி. வி. 4)

அஞ்சனகேசி

இஃது ஒரு தருக்க நூல்; அஞ்சனம் என்றும் கூறப்படும். இக்காலத்துவழக்கு இறந்தது. (யா. வி. பக். 583)

அஞ்செவி அஞ்சிறை அங்கை : தொடர்வகை

நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றாற்போலச் செவியகம் – கையகம் –
என்னும் இவ்விடவுறுப்புத்தற்கிழமைப் பெயரொடு முடிந்த ஆறாம்
வேற்றுமைத்தொகைச் சொல்லை முன் பின்னாக வழங்கலின், இவ்விரண்டும்
இலக்கணப் போலி யாய்த் தழாத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம் என்க. அகஞ்சிறை
என்பது ஏனையவற்றின் சிறை போலப் புறத்தின் கண்ண அன்றி அகத்தின்கண்ண
ஆதலின் ஏழாம் வேற்றுமைத் தொகை. (நன். 222. சங்கர.)

அஞ்ஞவதைப்பரணி

இது வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம் (தக்க.பக். 153). பாசவதைப்பரணி, மோகவதைப் பரணி, என்பனவும்தத்துவத்தையுட்கொண்டு பாடப்பட்ட பரணிப் பிரபந்தங்கள் (கஞ்சவதைப் பரணி,இரணியன் வதைப் பரணி முதலியன வேறுபட்டவை.) (L)

அடக்கியல்

ஒத்தாழிசைக் கலிப்பாவின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் இது.முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத் தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியல் ஆயிற்று. (தொ. செய். 144 நச். உரை)சுரிதகம், அடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் என்பன ஒருபொருட்கிளவிகள். (வீ. சோ. 117. உரை)

அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்துஒழுகும் ஒருபோகின் அளவு

அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகிய கொச்சக ஒருபோகின் சிற்றெல்லை10 அடி, பேரெல்லை 20 அடி.எ-டு : ‘தடங்கடற் பூத்த தாமரை மலராகிஅடங்காத முரற்சியான் அருமறை வண்டிசைப்பஆயிர வாராழி அவிரிதழின் வெளிப்பட்டசேயிதழ் எனத்தோன்றும் செம்பகலின் இரவகற்றிப்படுமணிப் பகைநீங்கப் பருவத்து மழையானேநெடுநிலம் குளிர்கூர நீர்மைசால் நிழல்நாறிஅண்டங்கள் பலபயந்த அயன்முதலாம் இமையோரைக்கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாதலின்ஓங்குயர் பருதியஞ் செல்வநின்நீங்கா உள்ளம் நீங்கன்மார் எமக்கே’இது பத்தடியின் சுருங்காது அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியகொச்சக ஒருபோகு. (தொ. செய். 150 நச். )

அடக்கியல்வாரம்

ஒத்தாழிசைக் கலியின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் அடக்கியல்;இவ்வடக்கியலின்கண் தெய்வத்தை யன்றி மக்களைப் புகழ்ந்த அடியும்வருதலின், ஒரு கூறு என்று பொருள்படும் வாரம் என்னும் பெயர்த்தாயிற்று.முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியல் ஆயிற்று; தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்தஅடியும் வருதலின் வாரமாயிற்று. (தொ. செய். 144 நச்.)

அடி (1)

இரு சீரான் வந்த அடி குறளடி; முச்சீரான் வந்த அடி சிந்தடி;நாற்சீரான் வந்த அடி அளவடி அல்லது நேரடி; ஐஞ்சீரான் வந்த அடி நெடிலடி;அறுசீர் முதலாகப் பதினொரு சீர்காறும் வந்த அடி கழிநெடிலடி. (யா. கா.12)இவ்வடிகளுக்கு முறையே ஆகாய அடி, காற்றடி, நெருப்படி, நீரடி, மண்ணடிஎனப் பஞ்ச பூதங்களின் பேரே பெயராம்.(வீ. சோ. 109)பதின்மூன்று சீர்காறும் கழிநெடிலடி நிகழும் என்னும்(யா.க. 25 உரை)நாற்சீர் அடியையே எழுத்து எண்ணிக்கையை ஒட்டிக் குறளடி, சிந்தடி,அளவடி அல்லது நேரடி, நெடிலடி, கழி நெடிலடி எனத் தொல்காப்பியனார்பகுப்பர்.“நாலெழுத்து முதல் 6 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும்குறளடி;ஏழெழுத்து முதல் 9 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும் சிந்தடி;பத்தெழுத்து முதல் 14 எழுத்தின்காறும் உயர்ந்த 5 அடியும்அளவடி;பதினைந்தெழுத்து முதல் 17 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும்நெடிலடி;பதினெட்டெழுத்து முதல் 20 எழுத்தின் காறும் உயர்ந்த 3 அடியும்கழிநெடிலடி;இருபது எழுத்தின் மிக்க நாற்சீர் அடிப்பா இல்லை”. (யா. கா. 43 உரை)(யா. க. 25 உரை)குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய. சிந்தடியும்அளவடியும் நெடிலடியின் முதற்கண் இரண்டடி யும் வெண்பாவிற்கு உரிய.அளவடியுள் கடைக்கண் இரண் டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் இலக்கணக்கலிப்பா விற்கு உரிய.நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டு எழுத்தின்காறும் இருசீரடிவஞ்சிப்பாவிற்குரிய. முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு 8 எழுத்து முதலாகநெடிலடிக்கு ஓதிய எழுத்தளவும் வரப் பெறும். வெண்பா ஆசிரியம் கலியுள்வருஞ்சீர் 5 எழுத்தின் மிகா. வஞ்சிப்பாவின் சீர் 6 எழுத்தின் மிகா.சிறுமை மூன் றெழுத்தாவது சிறப்புடைத்து; இரண்டு எழுத்தினானும் சீர்அருகி வரப்பெறும். (யா.க. 25 உரை)

அடி (2)

பலவும் சிலவுமாகிய தளையொடு பொருந்திய சீர்களான் அடுத்து நடத்தலான்,அடியென்பது காரணக்குறி. இது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (யா. க.23 உரை)

அடி (3)

நான்கு சீர்களைக் கொண்டதொரு தொடரே அடி எனக் கூறப்படும்.எனவே, நாற்சீரின் மிக்கும் குறைந்தும் வரின் அவை அச்சீர்களின்எண்ணலளவையான் இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறுசீரடி, எழுசீரடி எனவிதந்து கூறப்படும் என்றவாறு.அடி என்று வாளா கூறின், நாற்சீரடியையே குறிக்கும் என்க. அதனான்நாற்சீரடிக்கு நேரடி, அளவடி என்ற பெயர்களும் உள. ‘பட்டாங்கு அமைந்தஅடி’ (சொல் 407) என்றமையும் காண்க.இந்நாற்சீரடிகளை உயிர்ப்புடையவாய் நிற்கும் எழுத்துக் களின்அளவையான் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்துவகையாக வகுத்தோதுவர்.குறியன், நெடியன் என்புழி உறுப்புக்களின் குறை நிறைகளைக் கருதாதுஅளவை கருதியே கொள்ளப்படுதல் போல, அடியி னது ஓசையை எழுத்தளவுகளைக்கருதியே குறளடி முத லாகப் பாகுபாடு செய்தார் என்பது. (தொ. செய். 32 ச.பால.)

அடி அறிதலின் அருமை

நீண்டு உரைநடை போல எழுதப்பட்டிருக்கும் செய்யுளை இஃது இன்ன பாஎன்றோ, இன்ன பாவின் இனம் என்றோ வரையறுத்துக் கூறுதல் என்பது,எண்எழுத்தில் திண்ணி யராய், எஃகு செவியராய், நுண்ணுணர்விற் சேர்ந்தநுழை வினராய், மண்மேல் நடையறிந்து கட்டுரைக்கும் நாவி னோர்க்கேஇயல்வது என்பதாம்.(யா. வி. பக். 135 உரை மேற்.)

அடி அறுநூற்றிருபத்தைந்தாதல்பாகுபாடு

ஆசிரியத்திற்கு அடி 324, வெண்பாவிற்கு அடி 181,கலிப்பாவிற்கு அடி 120 என, அடி 625 ஆயிற்று. (தொ. செய். 50நச்.)ஆசிரிய அடி 261, வெண்பா அடி 232, கலி அடி 132 என, அடி 625 ஆயிற்றுஎன்பர் பேராசிரியர். (தொ. செய். 50)

அடி அளபெடைத்தொடை

அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரின் அஃது அளபெடைத்தொடை எனப்படும்.எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்படாஅ முலைமேல் துகில்’ (குறள். 1087) உயிரளபெடை‘உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்அரண்ண் அவர்திறத் தில்’ – ஒற்றளபெடை (யா.க. 41 உரை)

அடி எல்லை கடந்து விரியுமாறு

நாற்சீரடியில் 625 விகற்பங்கள் வந்துள்ளன. அறுநூற்றிருபத்தைந்தோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ 3125 அடியாகும்.அதன்கண் ஆறாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 15625 அடியாகும். அதன்கண்ஏழாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 78125 அடியாகும். இவ்வகையான் உறழஅடிவரையறை கடந்தோடும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடிகளை அசையானும்எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம். ஆதலின் நாற்சீரடிக்கே வரையறைகூறப்பட்டது.(தொ. செய். 49. இள.)

அடி எழுத்து

பன்னீருயிரும் பதினெட்டுமெய்யும் ஆய்தமும் ஆகிய முத லெழுத்து;உயிர்மெய் முதலிய எல்லா எழுத்திற்கும் அடிப் படையான எழுத்து. இவைதலைஎழுத்து, தாளெழுத்து, ஆதி எழுத்து, முதலெழுத்து எனவும்படும். (பேரக7, 8)

அடி ஓத்து

யாப்பருங்கலநூலுள் முதலாவதாகிய உறுப்பியலுள் ஐந்தாவதாக வரும்ஓத்து.

அடி ஓத்துக் கூறும் செய்திகள்

தளைகளால் அடிகள் ஆமாறும், அடிகளின் பெயரும், அடிகளுக்கு உரிமையும்,அடிமயக்கமும், அடிவரையறையும் யாப்பருங்கலத்துள் அடியோத்தில்கூறப்படுகின்றன.

அடி வகுத்தல்

வஞ்சி மண்டிலத்துறை எந்த அடியையும் மாற்றிக் கொள்ள லாம்; வஞ்சிமண்டில விருத்தமும் அவ்வாறே மாற்றிக் கொள்ளலாம். யானைத்தொழில்முதலாகிய செய்யுள்களை யெல்லாம் அடிவகுத்தற்கு இலக்கணம் சொன்னார் அடிவகுத்தும் பயனின்மையானும், அடிவகுத்தற்குக் கட்டளைப் பட்டு நிரம்பியிருப்பதோர் இலக்கணம் இன்மை யானும் அதுவும் பிழை. இந்நூலார் எதுகையேகருவியாக அடி வகுத்தார். (வீ. சோ. 125 உரை)

அடிஇயைபுத்தொடை

அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றி வருவதுஇத்தொடை.எ-டு : ‘அவரோ வாரார் கார்வந் தன் றே கொடிக்கு முல்லையும் கடிக்கரும் பின் றே’ ‘பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவன் வரவும் ’இவை கட்டளை ஆசிரிய அடிகள்இவற்றின்கண் அடிதோறும் இறுதிக்கண் எழுத்து ஒன்றிய வாறும்,அடிதோறும் சீராகிய சொல் ஒன்றி வந்தவாறும் காண்க. (தொ. செய். 96.நச்.)

அடிஎதுகைத்தொடை

அடிதோறும் முதலெழுத்து அளவு ஒத்திருப்ப, இரண்டாம் எழுத்தோஇரண்டாமெழுத்து முதலாக அச்சீரிலுள்ள ஏனைய எழுத்துக்களோ ஒன்றிவரத்தொடுக்கும் தொடை. எதுகை முதலிய தொடைகளில் குற்றியலிகரம்,குற்றியலுகரம், ஆய்தம், ஒற்று முதலிய எழுத்துக்களும் சேர்த்துக்கணக்கிடப் படும்.எதுகைக்கு இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தாலும்மூன்றாம் எழுத்து ஒன்றிவந்தாலும் கூடக் கொள்வர். இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வருதலை உயிர் எதுகை எனவும், மூன்றாம் எழுத்துஒன்றி வருதலை மூன்றா மெழுத்தொன்று எதுகை என்றும் கூறுப. இன்னும்பிறவகை எதுகை சிலவுமுள.எ-டு : வ டி யேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்க டி யார் கனங்குழாய் காணார்கொல் காட்டில்இதன்கண் இரண்டாம் எழுத்து மாத்திரம் ஒன்றி வந்தவாறு.(யா. க. 36. உரை)

அடிஎதுகைத்தொடைக்குரிய அசைஅமைப்பு

அடி எதுகைத் தொடைக்கண் முதலடி நேரசையில் தொடங் கின், அடுத்தஅடியும் நேரசையாகவே தொடங்குதல் வேண்டும். முதலடி நிரையசையில்தொடங்கின், அடுத்த அடியும் நிரையசையாகவே தொடங்குதல் வேண்டும்.இரண்டாம் எழுத்து ஒன்றுவது மாத்திரம் எதுகையாகாது. முதல் எழுத்துஅளவொத் திருப்பதும் அதற்கு இன்றியமை யாதது ஆதலின் இம்மரபுகொள்ளப்பட்டது. (யா. க. 36. உரை)

அடிகளின் எண்ணிக்கை பற்றிஇளம்பூரணர் கூறுவன

அசைச்சீர் 4 ; ஈரசைச்சீர் 10 + 6 = 16; மூவசைச்சீர் 4 + 60 = 64;ஆக, சீர்கள் 84. இந்த 84 சீர்களிலும், இயற்சீரான் வருவதனை இயற்சீரடிஎனவும், ஆசிரிய உரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும்,இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான்வருவதனை வெண்சீரடி எனவும், வெண்சீர் விகற்பித்து வருவதைக் கலியடிஎனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடிஎனவும், ஓரசைச்சீரான் வருவதனை அசையடி எனவும் வழங்கவேண்டும்.இயற்சீரடி நேரீற்றியற்சீரடி எனவும், நிரையீற்றியற்சீரடி எனவும்இருவகைப்படும். நேரீற்றியற் சீரடியாவது நேர் ஈறு நேர்முதல் ஆகியஇயற்சீர் வருதலும், நேர்பு முதலாகிய ஆசிரிய உரிச்சீர் வருதலும்,நேர்முதல் வெண்பா உரிச்சீர் வருதலும், நேர்முதல் வஞ்சியுரிச்சீர்வருதலும் நேர் முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும்.இயற்சீர் வெள்ளடியும், நேர் ஈறும் நிரையீறும் என இரு வகைப்படும்.அவற்றுள் நேர்ஈறு, நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழஐவகையாம். அவ்வாறே நிரையீறும், நேர்பும் நேரும் முதலாகிய ஐந்துசீரொடும் உறழ, ஐவகையாம்.வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும், நிரைமுதலோடு உறழ்தலும் எனஇருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களோடு உறழ்தல்ஐந்துவகைப்படும். நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களோடு உறழ்தல்ஐந்துவகைப்படும்.நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதனவும் எனஇருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரையும் நிரைபும் முதலாகியசீர்களோடு உறழ ஐவகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலாகியசீர்களோடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சி யடியும் அவ்வாறே உறழ10 வகைப்படும்.அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழ 10 வகைப்படும்.இவ்வாறு தளை, நேரொன்றாசிரியத்தளை முதலாக ஏழ் வகைப்படும். அவ்வழி,ஓரசைச்சீர் இயற்சீரின் பாற்படும். ஆசிரிய உரிச்சீரும் அது.மூவசைச்சீருள் வெண்பா உரிச்சீர் ஒழிந்தன எல்லாம்வஞ்சியுரிச்சீராம்.அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர்என்னும் ஐந்தனையும் நிறுத்தி இவ்வைந்துசீரும் வருஞ்சீராய் உறழும்வழி25 விகற்பமாம். அவ்விருபத்தைந் தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும்உறழ நூற்றிருபத் தைந்து விகற்பமாகும். அந்தநூற்றிருபத்தைந்தின்கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ 625.விகற்பமாகும். (தொ. செய். 48. இள.)நிரையீற்றியற்சீரடியும் இவ்வாறே நிரை முதலாகிய ஐந்து சீரொடும் உறழஐந்து வகைப்படும்.ஆசிரிய உரிச்சீரடி இருவகைப்படும், நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என.அவற்றுள் நேர்பு ஈற்றுச் சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்துசீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபு ஈற்றுச் சீரும் அவ்வாறேநிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும்.

அடிகளின் பகுப்பு (எழுத்துக்களைஒட்டி)

சீர்களைக் கொண்டு பின்னையோர் அடிகளுக்குப் பெயரிட் டமை போலாது,தொல்காப்பியனார் எழுத்துக்களைக் கணக்கிட்டு அடிகளுக்குப்பெயரிட்டுள்ளனர்.4 முதல் 6 எழுத்து முடிய உடைய அடி – குறளடி7 முதல் 9 எழுத்து முடிய உடைய அடி – சிந்தடி10 முதல் 14 எழுத்து முடிய உடைய அடி – அளவடி15 முதல் 17 எழுத்து முடிய உடைய அடி – நெடிலடி18 முதல் 20 எழுத்து முடிய உடைய அடி – கழிநெடிலடி(தொல். செய். 36-40 பேரா., நச்.)

அடிகள் அளவிறந்தன ஆமாறு

புலவோர் பாக்களைப் பண்ணுங்கால் அவற்றைப் பதினேழ் நிலத்தும் உள்ளஐவகை அடிக்கும் சீர்வகையால் அடிகளை உறழ்ந்து கண்டாற்போல, குறளடிமுதலாக ஒவ்வோரடிக்கும் எழுத்தளவையான் உறழ்ந்து விரிப்பினும், பதினேழ்நிலங்களையும் மூவகைப்பாக்களுக்கும் உரிமை கூறியவாறு வைத்துத்தனித்தனியே விரிப்பினும் அவை அளவிறந்தன வாக விரியும்.அஃதாவது பதினேழ் நிலமும் ஆசிரியம் பெறும் என்னும் முறைமையால்எழுத்தளவையான் வைத்து உறழுமிடத்து 4 எழுத்தால் ஒன்றும், 5 எழுத்தால்மூன்றும், 6 எழுத்தால் நான்கும், 7 எழுத்தால் பன்னிரண்டும் ஆக இங்ஙனம்அடிகள் அளவின்றிப் பெருகுகின்றன. ஆசிரிய அடி 17, வெண்பா அடி 8, கலிஅடி 8, ஆக வைத்து அவற்றைச் சீர்களோடு உறழ, அளவின்றிப் பெருகுதல்மேலும் காணப்படும். (தொ. செய். 51 ச. பால.)

அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கு

முதலொடு இடைமடக்கு 15, முதலொடு கடை மடக்கு 15, இடையொடு கடைமடக்கு15 என, அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கும் 45 வகைப்படும். (மா.அ. 255 பாடல்கள் 670 – 729)

அடிதோறும் ஒருஉத்தொடை பெற்ற இன்னிசைவெண்பா

அடிதோறும் முதற்சீர் நான்காம் சீர்களில் மோனை எதுகை களாகியதொடைபெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட வந்த இன்னிசை வெண்பாஇது.(முதற்சீர்ச் சொல்லே சிறிது வேறுபட்டு ஒரூஉத்தொடையாக நிகழும்என்க.) (யா.கா.25. உரை)எ-டு :`மழையின்றி மாநிலத்தார்க் கில்லை – மழையும்தவமிலார் இல்வழி இல்லை – தவமும்அரசிலார் இல்வழி இல்லை – அரசனும்இல்வாழ்வார் இல்வழி இல்’ (நான்மணி. 46)

அடிநிமிர்வு இன்மை

அடி நிமிர்வு இன்மையாவது ஆறடியின் ஏறாமை. அம்மை என்னும்வனப்பிலக்கணம் கூறுமிடத்து அடிநிமிர்வு இன்மை நிகழ்கிறது. (தொ. செய்.235. நச்.)

அடிநிரல்நிறை

ஈரடிகளின் தொடக்கத்தில் நிரல்நிறைப் பொருள்கோள் அமைய வைப்பதுஅடிநிரல்நிறையாம்.எ-டு :‘முலைகலிங்கம் மூரி நிலமா மகட்குமலைபரவை மாரிமென் கூந்தல்’இதன்கண், முலை மலை, கலிங்கம் பரவை என்பன அடி நிரல்நிறை. (யா. க. 95உரை)

அடிநூல்

இது நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது; பாக்களின் அடிகள்பற்றிய செய்தியைக் குறிப்பிடுவது. இதன் நூற்பாக் கள் ஆசிரிய யாப்பில்அமைந்தவை. இந்நூற்பாக்களுள் ஒன்றே இதுபோது கிட்டியுள்ளது. (யா. வி.பக். 367.)

அடிமடக்கு

பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டுவருவது. பொருள் வேறுபட்டு வருவதே சிறப்புடைத்தாகச் சொல்லணிவகையுள்அடங்கும். தண்டி.96‘ஒன்றி னம்பர லோகமேஒன்றி னம்பர லோகமேசென்று மேவருந் தில்லையேசென்று மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)இதன்கண், முதலடியே இரண்டாமடியாகவும், மூன்றா மடியேநான்காமடியாகவும் மடக்கியவாறு காண்க. பொருள் வேறுபட்டு வந்தவாறு.‘சென்று தில்லையே மேவரும்; பரலோகமும் ஒன்றினம்; ஒன்று இன்னம் பரலோகமேசென்றுமே வருந்து இல்லையே’ – எனப் பொருள்செய்க.

அடிமயக்கு

1. ஒருபாவிற்குரிய அடி பிற பாவில் வந்து கலத்தல். ஆசிரியப்பாவில்இயற்சீர்வெள்ளடி, வெண்பா உரிச்சீர் கலந்த இயற்சீர் வெள்ளடி, வஞ்சியடி- இவை மயங்குதல்; கலிப்பாவில் வெள்ளடியும் ஆசிரியஅடியும் மயங்குதல்;வஞ்சிப்பாவில் ஆசிரியஅடியொடு கலியடியும் ஒருசார் வெள்ளடியும்மயங்குதல் – போல்வன, அடி மயக்கமாம்.எ-டு : ‘எறும்பி அளையின் குறும்பல் சுனைய………………………நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே’ (குறுந். 12)இவ்வாசிரியப்பாவில், முதலடி இயற்சீர் விரவிய வெள்ளடி.2. ‘ அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்………………………தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே’இவ்வாசிரியப்பாவில், முதலடி காய்ச்சீர் விரவிய இயற்சீர் வெள்ளடி;வெண்பா அடியாக வந்து மயங்கிற்று.3. ‘இருங்கடல் தானையொடு’ என்னும் புறநா. 363ஆம் பாடலில்,‘உப்பிலாஅ அவிப்புழுக்கல்கைக்கொண்டு பிறக்குநோக்காதிழிபிறப்பினோன் ஈயப்பெற்று’என்பன வஞ்சியடிகள்.4. ‘காமர் கடும்புனல்’ என்னும் கலி. 39-இல், இடையே கொச்சகங்கள்வெண்பாவாக வந்தன. அறுசீர் ஐஞ்சீரடிகள் முடுகியலாய் வர, ஆசிரியச்சரிதகத்தால் பாடல் முடிந்த வாறு.5. பட்டினப்பாலையுள்,‘நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்’ (22)என்றித் தொடக்கத்தன ஆசிரியஅடி.‘வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மிலைந்தும்’என்பது கலியடி‘கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’ (23)என்பது இயற்றளை வெள்ளடி (யா. க. 29-31)

அடிமறிஉவமம் கூடாமை

அடிமறிமாற்றுப் பொருள்கோள் உடையதாக அமைந்த பாடலில் ஓரடியுள் உவமம்கூறி ஓரடியுள் பொருள் வைத்தால் அப்பாடல் அடிகளை வேண்டியவாறு மாற்றிப்பொருள் கொள்ளுங்காலை, இன்ன உவமத்திற்கு இன்னது பொருள் (- உபமேயம்)என்பது நன்கு புலனாகாமல்போம் ஆதலின், அடிமறிப்பொருள்கோளுடையபாடல்களில் உவமமும் பொருளும் அமைத்தல் மயக்கம் தரும்; ஆதலின் அடிமறிஉவமம் கூடாது என்ப. (தொ. பொ. 312 பேரா.)

அடிமறிப்பொருள்கோள்

இப்பொருள்கோள் அமைந்த செய்யுளாவது, சீர் நின்ற விடத்தே நிற்பஅடிகள் தத்தம் நிலையில் திரிந்து ஒன்றனிடத் தில் ஒன்று சென்றுநிற்பது. ஆதலின் எல்லா அடியும் யாண்டும் செல்லும் என்பதாம்.எ-டு : மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய், தோழியான் வாழு மாறே’.இதனுள் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியும்தடுமாறியவாறு கண்டுகொள்க.இப்பொருள்கோள் பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட் கண் அல்லதுவாராது. (தொ. எச்ச. 11 சேனா.)பொருள்கோள், யாப்புப்பற்றிய நூல்களில் ஒழிபாகக் கூறப்படுகிறது.(யா. வி. பக். 389)

அடிமறிமண்டில ஆசிரியப்பா

நான்கடிகளும் ஒரே விகற்பமாக அமைந்து, அடிதோறும் செய்திமுற்றுப்பெறப் பொருந்தி, நாற்சீரடியாய், எந்த அடியையும் முதல் நடுஇறுதியாக மாற்றும்படிக்கு அமையும் ஆசிரியப்பாவாகிய இஃதுஆசிரியப்பாவின் நால்வகைகளுள் ஒன்று.எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய் தோழியான் வாழு மாறே’இந்நாலடி ஆசிரியப்பா எந்த அடியை யாண்டு வைத்து உச்சரிப்பினும்ஓசையும் பொருளும் மாறாதமைந்திருத்தலின், அடிமறிமண்டில ஆசிரியம் ஆம்.(யா. க. 73, யா. கா. 29.)அடிமறிமண்டில ஆசிரியப்பா மூன்றடியான் வருதலும் உண்டு.எ-டு : ‘தீர்த்தம் என்பது சிவகங் கையே;ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே;மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே’ (சி. செ.கோ. 45)

அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இனம்

அடிதோறும் பொருள் முற்றி வந்த ஆசிரிய விருத்தம் அடிமறி மண்டிலஆசிரியப்பாவிற்கு இனம் ஆம்.எ-டு : அன்றயனை உந்தியின் அளித்தபரன் மேவுவதும் அத்தி கிரியே;சென்றுகரி கவ்வுமுத லைக்கணற மேவுவதும் அத்தி கிரியே;வென்றவன் வணங்குவது மேலில கெயிற்றரிய தான வரையே;தன்றொழில் முருக்குவது தாளில கெயிற்றரிய தான வரையே;இவ்வறுசீர் ஆசிரிய விருத்தம் அடிதோறும் பொருள் முற்றியே வந்தவாறுகாண்க. யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் பொருளும்ஓசையும் மாறப் பெறாமையும் காண்க. (வீ. சோ. 122 உரை)

அடிமறிமண்டில வெளிவிருத்தம்

இது வெண்பா இனங்களுள் ஒன்றாகிய வெளிவிருத்தத்தின் இரு வகைகளுள்ஒன்று; பெரும்பாலும் மூன்றடியால் அமைவது; அடிதோறும் பொருள்முடியப்பெற்று, யாதோரடியை முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும்பொருளும் மாறாதது; அடிதோறும் ஒரு சீரே ஐந்தாம் சீராக வரப் பெறும்.(யா. க. 68, யா. கா. 28)எ-டு : ‘அங்கட் கமலத் தலர்க்கமல மேயீரும் – நீரே போலும்வெங்கட் சுடிகை விடஅரவின் மேயீரும் – நீரே போலும்திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும் – நீரே போலும்’(சி. செ. கோ. 39)இதன்கண், ‘நீரே போலும்’ எனும் சீர் ஐந்தாம் சீராக மூன்றடி யிலும்ஒப்ப நிகழ்ந்தவாறு காண்க. இது வெண்டளையான் அமைந்தமை காண்க.

அடிமறிமண்டிலம்

ஆசிரியப்பா வகையுள் ஒன்று; ‘அடிமறிமண்டில ஆசிரியப்பா’ காண்க.

அடிமறிமாற்றுப் பொருள்கோள்

பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்து நீக்காது கூட்டும் அடியையுடையனவும், யாதானும் ஓரடியை எடுத்து அச்செய்யுளின்இறுதிநடுமுதல்களில் யாதானும் ஓரிடத்துக் கூட்டினும் பொருளோடுஓசைமாட்சியும், ஓசையொழியப் பொருள் மாட்சியும் வேறுபடாதஅடியையுடையனவும் அடிமறி மாற்றுப் பொருள்கோளாம். வருமாறு :‘நடுக்குற்றுத் தற்சேர் ந்தார் துன்பம்துடையார்கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்விடுக்கும் வினைஉலந்தக் கால்’ (நாலடி. 93)இதனுள், “கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;விடுக்கும் வினை உலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றினும் செல்வம்நில்லாது; (இஃது அறியாதார்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம்துடையார்” என அடிகளை ஏற்கு மிடத்து எடுத்துக் கூட்டுக.‘மாறாக் காதலர் மலைமறந்தனரேஆறாக் கட்பனி வரல்ஆ னாவேவேறாம் என்தோள் வளைநெகி ழும்மேகூறாய் தோழியான் வாழு மாறே’இதனுள், எவ்வடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடாமைகாண்க.‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும்குற்ற ம்விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்கொலைப்பாலும் குற்றமே யாம்.’ (நான்மணி. 26)இதனுள், ஈற்றடி ஒழிந்த மூன்றடியுள் யாதானும் ஒன்றை எடுத்துயாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொரு ளும் ஓசையும்வேறுபடாமையும், ஈற்றடியை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டிஉச்சரித்து ஓசைவேறுபட்டுப் பொருள் வேறுபடாமையும் காண்க. (நன். 419சங்.)பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்துக் கூட்டும் அடிகளை யுடையவற்றை,பொருளும் ஓசையும் வேறுபடாத அடிமறி மாற்றுப் பொருள்கோளாகவே கொண்டார்,சில உறுப்புக் குறைந்தாரையும் மக்கள் என்றாற்போல. (நன். 419 சங்.)

அடிமறிமாற்றுப் பொருள்கோள்

பொருளுக்கு ஏற்குமிடத்தில் எடுத்து நீங்காது கூட்டப்படும்அடியையுடையனவும், யாதானுமோர் அடியை யெடுத்து அச்செய்யுளுள் முதல் நடுஇறுதியாகக் கூட்டினும் பொரு ளோடு ஓசையும் பொருள் மாத்திரமும் மாறாதஅடியை யுடையனவும் ஆகிய செய்யுட்கண் அமைந்த பொருள்கோள் அடிமறிமாற்றுப்பொருள்கோளாம்.எ-டு : ‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்விடுக்கும் வினையுலந்தக் கால்’ (நாலடி. 93)இதனுள், ‘கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;விடுக்கும் வினையுலந்தக் கால், மிக்குற்றுப் பற்றினும் நீங்காதுசெல்வம்; (இஃதறியாதவர்) நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம்துடையார்’ என அடிகள் ஏற்புழி எடுத்துக் கூட்டப்படும் அடிமறிமாற்றுஅமைந்தது.எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய் தோழியான் வாழு மாறே’.இதனுள், யாதானுமோர் அடியை எடுத்து முதல் நடு இறுதி யாகக்கூட்டினும் பொருளும் ஒசையும் மாறாத அடிமறி மாற்று அமைந்தது.எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்;சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;கொலைப்பாலும் குற்றமே யாம்’ (நான்மணி. 100)இதனுள், ஈற்றடி யொழிந்த மூன்றடியுள் யாதானுமொன்றை யெடுத்துயாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் பொருளும் ஓசையும் மாறாமல்,ஈற்றடியை யெடுத்து யாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் ஓசைவேறுபட்டுப் பொருள் வேறுபடாமல், வந்த அடிமறிமாற்று அமைந்தது. (நன்.419)ஒருசார் யாப்புநூலுள் பொருள்கோளும் ஒழிபாகத் தழுவப்பட்டது.

அடிமுதல்மடக்குப் பதினைந்து

முதலடி முதல் மடக்குஇரண்டாமடி முதல் மடக்குமூன்றாமடி முதல் மடக்குநான்காமடி முதல் மடக்குமுதல் ஈரடியும் முதல் மடக்குமுதலடியும் மூன்றாமடியும் முதல் மடக்குமுதலடியும் நான்காமடியும் முதல் மடக்குகடை ஈரடியும் முதல் மடக்குஇடை ஈரடியும் முதல் மடக்குஇரண்டாமடியும் நான்காமடியும் முதல் மடக்குஈற்றடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்குஈற்றயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்குமுதலயலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்குமுதலடி ஒழித்து ஏனை மூன்றடியும் முதல் மடக்குநான்கடியும் முற்றும் முதல்மடக்கு என்பன (மா. அ. 256. பாடல் 624-639)

அடிமுரண் தொடை

அடிதோறும் முதற்சீர்க்கண் சொல்லாலோ பொருளாலோ அவ்விரண்டாலோமறுதலைப்படத் தொடுப்பது.எ-டு : 1) ‘செந்தொடைப் பகழி வாங்கிச் சினம்சிறந்துகருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’செந்தொடை – செம்மைநிறம் இல்லை; செவ்விதாகத் தொடுக்கப்பட்ட என்பதுபொருள்.கருங்கை – கருமை நிறம் இல்லை; கொலைசெய்யும் கை என்பது பொருள்.இதன்கண், சொல்பற்றிய அடிமுரண் அமைந்தவாறு.2. ‘இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்நிலவுக்குவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை’எனப் பொருள் பற்றிய அடிமுரண் அமைந்தவாறு.3. நெடுநீர்ப் பொய்கை நாப்பண் சென்றுகுறுநர் தந்த அவிழ்மலர்நெடுநீர் – நெடுமை என்ற சொல்லும் உண்டு; நீரும் நெடிது.குறுநர் – பறிப்போர். குறிது என்ற சொல் உண்டு; பொருள் இல்லை. ஆகவே,இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடு முரணிய அடிமுரண் அமைந்தவாறு.4. ‘ செந்தீ அன்ன சினத்த யானை நீர் நசை பெறாஅக் கானல்’செந்தீ என்புழிச் செம்மையும் உண்டு; தீக்கண் செய்யது என்ற சொல்லும்உண்டு. நீர் நசை என்புழிச் சொல்முரண் இல்லை; தீக்கு நீர் மாறுபட்டதுஆதலின் பொருள் முரண் உண்டு. ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் பொருளொடுமுரணிய அடிமுரண் அமைந்தவாறு.5. ‘ செங்குரல் ஏனல் சிதையக் கவர்ந்த பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும்.’செங்குரல் என்புழிச் சொல்லும் உண்டு; செம்மை குரற் கண்ணும் உண்டு.பைங்கிளி என்புழிச் சொல்லும் உண்டு; பசுமை கிளிக்கண்ணும் உண்டு.ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியஅடிமுரண் அமைந்தவாறு. (தொ. செய். 95 நச்., யா.க. 38 உரை)

அடிமொழிமாற்று

இஃது இரண்டடி மொழிமாற்று எனவும்படும். இரண்டடி களிலும் உள்ளசொற்களைப் பிரித்துப் பொருள் பொருத்த முறக் கூட்டிப் பொருள்செய்யும்பொருள்கோள் இது.எ-டு : ‘ஆலத்து மேல குவளை குளத்துளவாலின் நெடிய குரங்கு’இதன்கண், ‘ஆலத்துமேல வாலின் நெடிய குரங்கு’ எனவும், ‘குவளைகுளத்துள’ எனவும் ஈரடிகளிலும் சொற்களைப் பொருள் பொருத்தமுறக்கூட்டியவாறு. (யா. வி. பக். 390)

அடிமோனைத்தொடை

முதலடி முதற்கண் வந்த எழுத்தே பிற எல்லா அடி முதற் கண்ணும்வருவது.எ-டு : ‘மாவும் புள்ளும் வதிவயின் படரமாநீர் விரிந்த பூவும் கூம்ப……………………………………………………………………………….மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’ (யா. க.35 உரை)

அடியந்தாதி

பாடலின் முதலும் ஈறும் மண்டலிப்பதன்றிப் பாடலின் ஓரடி அடுத்தஅடியாய் அந்தாதித்து வருவது அடியந்தாதியாம்.எ-டு : ‘ஆதியங் கடவுளை அருமறை பயந்தனைபோதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினைபோதியங் கிழவனை பூமிசை ஒதுங்கியசேதியஞ் செல்வ! நின் திருவடி பரவுதும்’இஃது இரண்டாம் அடியே மூன்றாமடியாக அந்தாதித்து வந்தமை காண்க. (யா.க. 52 உரை)

அடியார்க்குநல்லார்

சிலப்பதிகார உரையாசிரியருள் தலையாயவர். இவர் உரை 19 காதைகள்முடியக் கிட்டியுள்ளது. எஞ்சிய காதைகட்கும் இவர் உரைவரைந்திருந்தமைக்கு அகச்சான்று உளது. முத்தமிழிலும் இவரதுபெரும்புலமையை அரங்கேற்று காதை முதலியவற்றில் காணலாம். இவர் காலம்13ஆம் நூற்றாண்டு; நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது என்ப.‘கானல்வரி’க்கு இவர் இயற்றிய உரை இக்காலத்துக் கிட்டவில்லை.

அடியிடைமடக்குப் பதினைந்து

முதலடி இடை மடக்குஇரண்டாமடி இடை மடக்குமூன்றாமடி இடை மடக்குநான்காமடி இடை மடக்குமுதலீரடியும் இடை மடக்குமுதலடியும் மூன்றாமடியும் இடை மடக்குமுதலடியும் நான்காமடியும் இடை மடக்குகடையீரடியும் இடை மடக்குஇடையீரடியும் இடை மடக்குஇரண்டாமடியும் நான்காமடியும் இடை மடக்குஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்குஈற்றயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்குமுதலயலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்குமுதலடி யொழித்து ஏனை மூன்றடியும் இடை மடக்குநான்கடியும் முற்றும் இடை மடக்கு என்பன. (மா.அ. 257)(பாடல் 640 – 654)

அடியின் சிறப்பே பாட்டு

அடியின் பாட்டே சிறப்பு – நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டேசிறப்புடைய பாட்டு. எனவே, அடி என்று பொதுப்படக் கூறின், நாற்சீர்அடியினையே குறிக்கும்.(தொ. செய். 35 நச்.)

அடியின் தொகை

இயலடி, உரியடி, பொதுவடி என அடியின்தொகை மூன்று.(யா. க. சிறப்பு. உரை)

அடியின் வகை

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடியின் வகைஐந்து. (யா. க. சிறப்புப். உரை)

அடியின் விரி

இயல், உரி, பொது – என்பவற்றைக் குறளடி முதலிய ஐந்தடி களோடும்உறழ்ந்து கணக்கிட, இயற்குறளடி, உரிக்குறளடி பொதுக்குறளடி முதலாகஅடியின் விரி பதினைந்தாம்.(யா. க. சிறப்புப். உரை)

அடியின்றி நடப்பன

நூல், உரை, மந்திரம், பிசி, முதுசொல் என்பன. (யா. வி. பக். 428,429)நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்பன. (தொ. பொ. 477 பேரா.)

அடியிறுதி முற்று மடக்கு

அடிதோறும் நான்கடிப் பாடலில் நான்காம் சீரும் எட்டாம் சீரும்இடையிட்டு வந்து மடக்கவே, அடியிறுதி முற்று மடக்கு ஆம் என ஒருசாராரால் கொள்ளப்பட்டது. (தண்டி : 95)எ-டு : ‘வருமறை பலமுறை வசையறப் பணிந்தேமதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தேஅருநடம் நவில்வதும் அழகுபெற் றமன்றேஅருளொடு கடவுவ(து) அணிகொள்பெற் றமன்றேதிருவடி மலர்வன திகழொளிச் சிலம்பேதெளிவுடன் உறைவது திருமறைச் சிலம்பேஇருவினை கடிபவர் அடைபதத் தனன்றேஇமையவர் புகல்அவன் எனநினைத் தனன்றே’மறை பணிந்தே – வேதம் வணங்கி;மருவும் அப்பு அணிந்தே – (கங்கை) நீரை அணிந்து பொருந்தும்.அழகு பெற்ற மன்றே – அழகு பெற்ற சபை;அணிகொள் பெற்றம் அன்றே – அழகிய இடபம் அன்றோ?ஒளிச் சிலம்பு – ஒளியுடைய சிலம்பு ஆகிய அணி;மறைச் சிலம்பு – வேதமயமான கயிலைமலை.அடை பதத்தன் அன்றே – அடையும் திருவடியுடையன் அல்லனோ; நினைத்தல்நன்றே – நினைப்பது சிறந்தது – என்று இவ்வாறு மடக்கிற்குப்பொருள்கொள்க.

அடியிறுதிமடக்குப் பதினைந்து

முதலடி இறுதி மடக்குஇரண்டாமடி இறுதி மடக்குமூன்றாமடி இறுதி மடக்குநான்காமடி இறுதி மடக்குமுதலீரடியும் இறுதி மடக்குமுதலடியும் மூன்றாமடியும் இறுதி மடக்குமுதலடியும் நான்காமடியும் இறுதி மடக்குகடையீரடியும் இறுதி மடக்குஇடையீரடியும் இறுதி மடக்குஇரண்டாமடியும் நான்காமடியும் இறுதி மடக்குஈற்றடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்குஈற்றயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்குமுதலயலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்குமுதலடி ஒழித்த ஏனை மூவடியும் இறுதி மடக்குநான்கடியும் முற்றும் இறுதிமடக்கு என்பன. (மா. அ. 257 பாடல் 655-669)

அடிவகைகள் ஐந்து

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, என அடி வகைகள்ஐந்தாம். (இவற்றைச் சீர்வகைகளைக் கொண்டு கணக்கிடுவர் ஒரு சார்ஆசிரியர். நாற்சீரடியிலேயே எழுத் தெண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடுவர்ஒருசார் ஆசிரியர்.)குறளடி இருசீர்களையுடையது; சிந்தடி முச்சீர்களையுடை யது; அளவடிநாற்சீர்களையுடையது; நெடிலடி ஐஞ்சீர்களை யுடையது; கழிநெடிலடி ஆறுமுதல்பத்துச் சீர்கள் வரை யுடையது; ஆறுமுதல் எட்டுச்சீர்காறும் கொண்ட அடிதலையாகு கழிநெடிலடி எனவும், ஒன்பது பத்துச் சீர்களைக் கொண்ட அடிஇடையாகு கழிநெடிலடி எனவும், பத்துச் சீரின் மிக்குள்ள அடி கடையாகுகழிநெடிலடி எனவும், கூறப்படும். படவே, எண்சீரின் மிக்குவரும்கழிநெடிலடிகள் சிறப்பில. நாற்சீரடியே சிறப்புடைத்து ஆதலின், அதுவேநேரடி எனவும் அளவடி எனவும் வழங்கப்படும். (யா. க. 24, 25 உரை)இனி, குறளடி முதலிய ஐவகை அடிகளையும் நாற்சீரடி யிலேயே கொண்டுஎழுத்தெண்ணிக்கையால் பெயரிட்டு 4 முதல் 6 எழுத்து முடியக் குறளடிஎனவும், 7 முதல் 9 எழுத்து முடியச் சிந்தடி எனவும், 10 முதல் 14எழுத்து முடிய அளவடி எனவும், 15 முதல் 17 எழுத்து முடிய நெடிலடிஎனவும், 18 முதல் 20 எழுத்து முடியக் கழிநெடிலடி எனவும், 20 எழுத்தின்மிக்க நாற்சீரடி இல்லை எனவும், ஐவகை அடியும் ஆசிரியப் பாவிற்கு உரியஎனவும், சிந்தடியும் அளவடியும் நெடிலடி களின் முதற்கண் இரண்டடியும்வெண்பாவிற்குரியன எனவும், அளவடியின் கடைக்கண் இரண்டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் கலிப்பாவிற்குரியன எனவும், 4 முதல் 12 எழுத்துமுடியக் குறளடி வஞ்சிப்பாவிற்குரியன எனவும், முச்சீரடிவஞ்சிப்பாவிற்கு 9 முதல் 17 எழுத்தளவும் உரியன எனவும், வெண்பாஆசிரியம் கலி இவற்றில் வரும் சீர்கள் ஐந்தெழுத்தின் மிகா எனவும்,சீரின் எழுத்தளவின் சிறுமை மூன்று, ஒரோவழி ஈரெழுத்தானும் சீர் வரும்எனவும் கூறும் இலக்கண மரபும் உண்டு. எழுத்தெண்ணும்வழிக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒற்றும் என்னு மிவற்றை நீக்கிக்கணக்கிடல் வேண்டும். (தொல். செய். 36-44 பேரா.)

அடிவகைத் தொடைகள் 16, சீர்வகைத்தொடைகள் 50

1. ஒத்த எழுத்தால் வரும் மோனைத்தொடை2. கிளையெழுத்தால் வரும் மோனைத்தொடை3. ஒத்த எழுத்தால் வரும் எதுகைத் தொடை4. கிளையெழுத்தால் வரும் எதுகைத்தொடை5. சொல்லொடு சொல் முரணும் முரண்தொடை6. பொருளொடு பொருள் முரணும் முரண்தொடை7. சொல்லொடு பொருள் முரணும் முரண்தொடை8. எழுத்தியைபுத்தொடை9. அசையியைபுத்தொடை10. சீரியைபுத்தொடை11. உயிரளபெடைத்தொடை12. ஒற்றளபெடைத்தொடை13. பெயரொடு பெயர் நிரனிறைத்தொடை14. பெயரொடு வினை நிரனிறைத்தொடை15. இரட்டைத் தொடை16. செந்தொடை – என்பனவாம்.தலைமையாய தொடை பத்தாம். அவையாவன :1. ஒத்த எழுத்து மோனை 2. கிளையெழுத்து மோனை 3. ஒத்த எழுத்தெதுகை 4.கிளையெழுத்தெதுகை 5. சொல் முரண் தொடை 6. பொருள் முரண்தொடை 7.எழுத்தியைபுத் தொடை 8. அசையியைபுத்தொடை 9. அளபெடைத் தொடை 10.நிரனிறைத் தொடை என்பனவாம்.இப்பத்துத் தலையாய தொடைகளையும் இணை, பொழிப்பு, கூழை, ஒரூஉ, முற்றுஎன்னும் ஐந்தொடும் உறழ, 50 சீர்வகைத் தொடைகள் வரும். (தொ. செய். 101ச. பால.)

அடிவரையறை

1. பாட்டின் முதற்குறிப்பு வரிசை (மீனாட். சரித். i. பக். 10)2. இன்ன இன்ன பாடல் இன்ன இன்ன சிற்றளவு, இன்ன இன்ன பேரளவு உடையனஎன வரையறுத்தல். (L)சிற்றெல்லை பேரெல்லைவெண்பா 2 அடி 12 அடி (தொ.செய்.158 பேரா.)ஆசிரியப்பா 3 அடி 1000 அடி (தொ.செய்.157 பேரா.)கலிப்பா 4 அடி பாடுவோர் விருப்பம்வஞ்சிப்பா 3 அடி 1000 அடி(யா.க. 32, உரை பக். 132)

அடிவரையறை இல்லாத செய்யுள்

நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்னும் ஆறும்அடிவரையறை இல்லாத செய்யுள்களாம். இவற்றுள் பிசியும் முதுமொழியும்மந்திரமும் குறிப்பும் என நான்கும் வழக்குமொழி யாகியும்செய்யுளாகியும் வருதலின், அவற்றுள் செய்யுளே ஈண்டுக் கொள்ளப்படும்.(தொல். செய். 165 பேரா.)

அடிவரையறை இல்லாப் பாடல்கள்

கலிவெண்பாட்டும், கைக்கிளைச் செய்யுள் – புறநிலை வாழ்த்து – வாயுறைவாழ்த்து – செவியறிவுறூஉ – என்னும் நால்வகை மருட்பாவும்என்னுமிவற்றிற்கு அடிவரையறை இல்லை.கலிவெண்பாட்டு: உலாச்செய்யுள், மடற்செய்யுள் போல்வன.கைக்கிளை: அகப்புறமும் புறப்புறமுமாகி வரும் கைக்கிளை.(தொ. செய். 160 நச்.)

அடுக்கிசை

‘அடுக்கியல்’ காண்க.

அடுக்கிசைவண்ணம் இருபது

குறில் அகவல் அடுக்கிசைவண்ணம், நெடில் அகவல் அடுக்கிசை வண்ணம், வலிஅகவல் அடுக்கிசை வண்ணம், மெலி அகவல் அடுக்கிசை வண்ணம், இடை அகவல்அடுக்கிசை வண்ணம் – என அகவல் அடுக்கிசை வண்ணம் ஐந்து.எ-டு : ‘கொடியிடை மாதர் மேனி குவளைமலர் உண்கண் என்றும்பிடிநடை மாதர் மாண்ட நடைதானெனப் பேது செய்தும்வடிவொடு வார்ந்த மென்றோள் வளைசேர்ந்தகை காந்தள் என்றும்இடையிடை நின்று நின்று பலகாலும் உவப்ப தென்னோ!’(வளையாபதி)இன்ன பிறவும், எழுசீரடியால் வந்தனவும் எல்லாம் குறில் அகவல்அடுக்கிசை வண்ணத்தனவாம்.குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம்,வலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், மெலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், இடைஒழுகல் அடுக்கிசை வண்ணம் என ஒழுகல் அடுக்கிசை வண்ணம் ஐந்து.எ-டு : ‘மாலையால் வாடையால் அந்தியால் மதியால்மனமுனம் உணர்வது நோயுறச் செய்தசோலையால் தென்றலால் சுரும்பிவர் பொழிலால்சொரிதரு காரொடு விரிதரு பொழுதேகோலவால் வளையால் கொடுப்பறி யானேல்கொள்வதும் உயிரொடு பிறரொடும் அன்றோகாலையார் வரவே காதலும் ஆங்கோர்காலையென் னுங்கடல் நீந்திய வினையே’இன்ன பிறவும், எண்சீரடி மிக்கு வருவனவும் ஒழுகல் அடுக்கிசைவண்ணத்தனவாம்.குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் வல்லிசை அடுக்கிசைவண்ணம், வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி வல்லிசை அடுக்கிசைவண்ணம், இடை வல்லிசை அடுக்கிசை வண்ணம் – என வல்லிசை அடுக்கிசை வண்ணம்ஐந்து.எ-டு : கடியான் வெயிலெறிப்பக் கல்லளையுள் வெதும்பிய கலங்கற்சின்னீர்அடியால் உலகளந்த ஆழியான் ஆக்கிய அமிழ்தென் றென்ணிக்கொடியான் கொடுப்பக் கொடுங்கையால் கொண்டிருந்து குடிக்கல்தேற்றாள்வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம் பீன்றாளிவ்வருவாளாமே.’இவ்வாறு அறுசீரான் வருவன வெல்லாம் வல்லிசை அடுக்கிசை வண்ணமாம்.குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை அடுக்கிசைவண்ணம், வலி மெல்லிசை அடுக்கிசைவண்ணம், மெலி மெல்லிசை அடுக்கிசைவண்ணம், இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம் – என மெல்லிசை அடுக்கிசைவண்ணம் ஐந்து.எ-டு : ‘பிடியுடை நடையடு நடையினள் தெரியின்கடிபடும் இலமலர் அடிநனி தனதாம்துடியிடை அடுமிவள் நடுவொடி வதுபோல்வடுவடி அடுமிவள் நெடுமலர் புரைகண்’இவை போல்வன மெல்லிசை அடுக்கிசை வண்ணமாம்.இவை இருபதும் மேடு பள்ளமான நிலத்தில் வண்டிச்சக்கரம்செல்வதுபோலவும், நாரை இரைத்தாற் போலவும், தாரா என்னும் பறவையதுஒலிபோலவும், தார்மணி ஓசைபோல வும் வரும். (யா. வி. பக். 413, 418,419)

அடுக்கின் பலவகைச் சொல்நிலை

பாம்புபாம்பு – பெயரடுக்கு‘தேம் பைந்தார் மாறனைத் தென்னர்பெருமானைவேந்தனை வேந்தர்மண் கொண்டானை………வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ?’- ஓருருபு அடுக்கியது.சாத்தன் மரத்தை வாளான் குறைத்தான் – பலஉருபு அடுக்கி வந்தன.உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் – வினையும்வினைக்குறிப்பும் அடுக்கி வந்தன.‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’- பெயரெச்ச அடுக் கு(குறள் 448)வந்து உண்டு தங்கிப் போயினான் – வினையெச்ச அடுக்கு‘வருகதில் அம்ம’ அகநா.276 – இடைச்சொல் அடுக்கு‘தவ நனி நெடிய ஆயின’ ஐங்.259 – உரிச் சொல் அடுக்கு(அடுக்கின் வகைகளைப் பெயர்மாத்திரம் குறித்தார் தெய்வச் சிலையார்)(தொ. சொ. 99 தெய். உரை)

அடுக்கின் வகைகள்

பெயரும் முற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் உருபும் என இவைஅடுக்குதலான் அடுக்கு ஐந்தாம்; இரட்டைக் கிளவியையும் உடன்கொள்ளின்ஆறும் ஆம். அடுக்குப் பின்வருமாறு பல திறப்படும்.

அடுக்கிய எச்ச முடிவு

வினையெச்சமும் அடுக்கி வரும் ; பெயரெச்சமும் அடுக்கி வரும்.வினையெச்சம் ஒருவாய்பாட்டானும் பலவாய்பாட் டானும் அடுக்கி ஒரே முடிபுகொள்ளும்.எ-டு : ‘வருந்தி, அழிந்து, கொய்துகொண்டு, ஏற்றி, இன்றி, மறந்து,மிசைந்து, அறம்பழித்துத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்’(புறநா. 159 : 6 – 14) – என, செய்து என்னும் ஒரு வாய்பாட்டுவினையெச்சமே அடுக்கி வந்து. ஒருவினையே கொண்டு முடிந்தது.உண்டு பருகூத் தின்னுபு வந்தான் – என, பலவாய்பாட்டு வினையெச்சங்கள்அடுக்கி வந்து ஒரு வினையே கொண்டு முடிந்தன.‘வருந்தி முலையள் அழிந்து இன்றி மிசைந்து உடுக்கையள் (அறம்)பழித்து’ – எனச் செய்து என் எச்சத்தினிடையே அவ்வினையெச்சமுற்றும்(முலையள்)அதன் குறிப்பெச்சமும் (இன்றி) உடன் அடுக்கி முடிந்தன.எ-டு : ‘பாயுந்து, தூக்குந்து, தரூஉந்து, பாயும் மிழலை’- எனப்பெயரெச்சம் ஒருமுறையான் அடுக்கி ஒரு பெயர் கொண்டு முடிந்தது. (புறநா.24)முதல் எச்சம் கொண்டு முடியும் சொல்லை ஏனைய எச்சங் களும்கொண்டுமுடியும்வழியேதான் எச்சங்கள் அடுக்கி வரும். (தொ. சொ. 235 நச்.உரை)

அடுக்கியல்

வண்ணகம் எனவும், அராகம் எனவும், முடுகியல் எனவும் அடுக்கியல்எனவும் கூறப்படும் கலிப்பாவின் உறுப்பு இது. தாழிசை அம்போதரங்கம்என்னும் உறுப்புக்களுக்கு இடையே இது நிகழும். (யா. கா. 32 உரை)தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும்தாழிசையும் பெற்ற அடியளவு இவ் வுறுப்புப் பெறும்; தாழிசைப் பின்னர்த்தனிநிலை பெற்றும் அதன்பின் அராக அடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நான்குசீர் முதலாக பதின்மூன்று சீர் ஈறாக வரப்பெறும்; இடையே அந்தாதித்தும்வரப்பெறும்; குறிலிணை பயின்ற அடியும் வரப்பெறும்; அடுக்கியல்,முடுகியல், அராகம், என்று மூன்று பெயரும் பெறும்; தேவரது விழுப்பமும்வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் எனப்படும் என்ப ஒருசார்ஆசிரியர். (யா. வி. பக். 321)இவ் அராக உறுப்பு அளவடி முதலாகிய எல்லா அடியானும் வரப்பெறும்;சிறுமை நான்கடி, பெருமை எட்டடி, இடை யிடை எத்துணையாயினும் வரப்பெறும்;ஒருசாரனவற்றுள் அகவலும் வெள்ளையும் விரவி அராகமாயும் அருகிவரப்பெறும். (யா. வி. பக். 313 )

அடுக்கு அல்லவை அடுக்குப் போறல்

சொற்பின்வருநிலை போன்ற அணியிலக்கணம் கொண்டு சொற்கள் அடுக்குப் போலவருதல்.எ-டு :‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று’ (குறள் 296)(பொய்யாமையைத் தவறாது செய்யின்; செய்யாமையைச் செய்யாமையாவது -செய்தல்)‘இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை’ (குறள் 310)(இறந்தார் – சினத்தின்கண் மிக்கவர், இறந்தார் – செத்தவர்;துறந்தார் – (சினம்) விட்டவர், துறந்தார் – பிறவியைத் துறந்தமெய்ஞ்ஞானிகள்) (இ. கொ. 121)

அடுக்குதல்

இரண்டு முதல் பல சொற்கள் அடுக்கி வருவது.1. ‘ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ குறள். 448 ‘மூவா முதலா உலகம்’ (சீவக. 1.)நிகழ்காலப் பெயரெச்சம் எதிர்மறையாக அடுக்கி வந்தது.2. வந்து வந்தே கழிந்தது (கோவை. 61) – ‘யானை அறிந்தறிந்தும் பாகனையேகொல்லும்’ – (நாலடி. 213)என ஒரே வினையெச்சம் இரண்டு அடுக்கியது.3. ‘கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும்’ (குறள்.1101) – எனச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பலஅடுக்கி வந்தன.4. ‘சென் றது சென்றது’, ‘வந்ததுவந்தது’ (நாலடி.4) என வினை முற்று அடுக்கியது.5. அவரவர், தீத்தீத்தீ – எனப் பெயர்கள் அடுக்கின.இவை யெல்லாம் மக்களிரட்டையும் விலங்கிரட்டையும் போலப் பிரிந்தும்பொருள் தருவனவாம்.6. இனி இரட்டைக்கிளவியாகிய ‘கலகல’ – நாலடி 140, – ‘குறுகுறு’ (புற.88) – என்பன போன்றவை பிரித்தால் பொருள்படா. துடிதுடித்து,புல்லம்புலரி, செக்கச்சிவந்த, கன்னங்கரிய – என்பன போன்றவை பிரித்தால்பின் மொழியே பொருள் தரும்; முன்மொழி பொருள் தாராது.இவ்விரு நிலையினையுடைய சொற்கள் இலையிரட்டை பூவிரட்டை – போன்றபிரிக்கப்படாத இரட்டைக் கிளவி களாம். (பி.வி. 39.)வடமொழியிலும், சிவசிவ – ரக்ஷ ரக்ஷ – புநப்புந : என இரண்டு சொல் அடுக்கி வருதல் உண்டு. வினைச்சொல் வகையில்,தேதீவ்யமான – முதலாகச் சிறப்புப் பொருளில் இரட்டித்தல் உண்டு என்பர்பி.வி. நூலார் (பி.வி. 39)

அடுக்குத்தொடர்

ஒரு சொல் அசைநிலைக்கண் இரண்டு முறையும், விரைவு – வெகுளி – உவகை -அச்சம் – அவலம் – முதலிய பொருள் நிலைக்கண் இருமுறையும் மும்முறையும்,செய்யுளிசை நிறைக்குமிடத்து இருமுறையும் மும்முறையும் நான்முறையும்அடுக்கும்.எ-டு : 1. ஒக்கும் ஒக்கும் : அசைநிலை அடுக்கு2. உண்டேன் உண்டேன்,போ போ போ : விரைவுவருக வருக,பொலிக பொலிக பொலிக : உவகைபா ம்பு பாம்பு தீத்தீத்தீ :அச்சம்உய்யேன் உய்யேன்,வாழேன் வாழேன் வாழேன் : அவலம்எய் எய், எறி எறி எறி :வெகுளிஇவை பொருள்நிலை அடுக்கு.3. ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’‘நல்குமே நல்குமே நல்குமேநாமகள்’‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’இசைநிறை அடுக்கு (நன். 395சங்.)

அடுக்குப் பலபொருள் பற்றி வருதல்

ஒக்கும் ஒக்கும், மற்றோமற்றோ, அன்றேஅன்றே – அசைநிலை அடுக்குகள்ளர்கள்ளர், பாம்புபாம்பு, தீத்தீத்தீ, போபோபோ – விரைவுபற்றியது.எய்எய், எறி எறி எறி – வெகுளி பற்றியது.வருக வருக, பொலிக பொலிகபொலிக (திவ்.) – உவகை பற்றியது.படை படை, எங்கே எங்கே எங்கே – அச்சம் பற்றியது.உய்யேன் உய்யேன், வாழேன் வாழேன்; மயிலே மயிலே மயிலே, மடவாய் மடவாய்மடவாய்,‘புயலேர் ஒலிகூந்தல் இனியாய் இனியாய்குயிலேர் கிளவி நீ உரையாய் உரையாய்அயில்வேல் அடுகண் அழகீஇ அழகீஇ’‘ஐயாஎன் ஐயாஎ ன் ஐயா அகன்றனையே’ (சீவக.1802)- அவலம் பற்றியது.இவை பொருள்நிலை அடுக்கு.‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’இவை இசைநிறை அடுக்கு.“அசைநிலை இரண்டினும், பொருள்நிலை (இரண்டினும்) மூன்றினும், இசைநிறை(இரண்டினும் மூன்றினும்) நான்கி னும் ஒருமொழி தொடரும்” என்றார்அகத்தியனார். (நன். 394 மயிலை.)

அடைசினைமுதல் மயங்காமை

வண்ணச்சினைச்சொல் முதலில் அடைமொழியும் அடுத்துச் சினைப்பெயரும்அடுத்து முதற்பெயருமாக அமைந்து வருதலே வழக்கு. [ அடையாவது ஒரு பொருளது குணம் (இள.) ]எ-டு : செங்கால்நாரை, பெருந்தலைச்சாத்தன்வழக்கினுள் மரபு எனவே, செய்யுளில் ‘செவிசெஞ்சேவல்’,‘வாய்வன்காக்கை’ (புற. 238) என மயங்கியும் வரும் என்பது.வழக்கினுள் முதலொடு குணமிரண்டு அடுக்கி ‘இளம்பெருங் கூத்தன்’என்றாற் போலவும், செய்யுளுள் சினையொடு குணம் இரண்டு அடுக்கிச்‘சிறுபைந்தூவி’ (அக. 57) என்றாற் போலவும் வருதலுமுண்டு.அடையும் சினையுமாகப் பல அடுக்கி இறுதியில் முதலைக் குறிப்பிடும்சொல்லைக் கொண்டு, ‘பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கண் பேதை’ எனச்செய்யுளுள் மயங்கி வருதலுமுண்டு. (தொ. சொ. 26 நச். உரை)‘பெருந்தோள்…… பேதை’ என்புழி, பெருந்தோட்பேதை – சிறுநுசுப்பிற் பேதை – பேரமர்க்கட் பேதை – எனப் பிரித்து இணைத்தாலும்,பெருந்தோள் சிறுநுசுப்பு பேரமர்க்கண் – என்பன உம்மைத்தொகையாய் இணைந்துபேதை என்னும் முதற்பெயரோடு இணைந்தன என்றாலும், மயக்கம் இன்மை யின்,அத்தொடர்க்கண் அடைசினைமுதல் என்பன மயங்க வில்லை என்பது சேனாவரையர்கருத்து.

அடைநிலை

கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று. முன் தரவு தாழிசை என்னும்உறுப்புக்களையும், பின்னே வரும் சுரிதகத்தையும் அடைய நிற்றலின்அடைநிலை எனப்பட்டது. அது தனி நின்றும் சீராகலின் தனிநிலை எனவும்,தனிச்சொல் எனவும் கூறப் படும். (தொ. செய். 132 நச்.)

அடைமொழி இனம் அல்லதும் தருதல்

‘பாவம் செய்தான் நரகம் புகும்’ என்றமையான், அத்தொடர் ‘புண்ணியம்செய்தான் சுவர்க்கம் புகும்’ என்ற இனத்தைத் தருதலே யன்றி, அவன் ‘இதுசெய்யின் இது வரும்’ என்றறியும் அறிவிலி என்னும் இனம் அல்லதனையும்தந்தது.‘சுமந்தான் வீழ்ந்தான்’ என்றால், ‘சுமவாதான் வீழ்ந்தான் அல்லன்’என்னும் கருத்துச் சொல்லுவார்க்கு இன்றாதலின் அவ்வினத்தை ஒழித்து,‘சுமையும் வீழ்ந்தது’ என்னும் அல்லதனைத் தந்தது. (நன். 402 சங்.)‘காலை எழுந்து கருமத்திற் செல்வான் கோழி கூவிற்று’ என்றால், ‘ஏனைப்புட்கள் கூவுகில’ என்னும் கருத்துச் சொல்லுவானுக்கு இன்றாதலின்அவ்வினத்தை ஒழித்து, ‘பொழுது புலர்ந்தது’ என்னும் இனம் அல்லதனைத்தந்தது.‘பெய்முகில் அனையான்’ என்றால், ‘கைம்மாறு கருதாத பெருங்கொடையாளன்’என்னும் இனம் அல்லதனை இனம் இலதாகிய அடைமொழி தந்தது. இவ் அடை கொடாது‘முகில் அனையான்’ என வாளா கூறினும் இக்கொடைப் பொருள் தருமோ எனின்,அவ்வாறு கூறின் ‘முகில் வண்ணன்’ எனவும் பொருள்படும் ஆதலின், அதனைஒழித்துக் கொடைப் பொருளுக்கு உரிமை செய்தது இவ் அடையே (‘பெய்’) என்க.(நன். 443 இராமா.)

அடைமொழி வழக்கின்கண்ணும்செய்யுட்கண்ணும் இனம் உடையனவும் இல்லனவும் ஆதல்

வழக்கின்கண், நெய்க்குடம் – குளநெல் – கார்த்திகை விளக்கு – பூமரம்- செந்தாமரை – குறுங்கூலி – என்னும், பொருள் இடம் காலம் சினை குணம்தொழில் – பற்றிய அடைகள் இனம் உடையனவாய் இனத்தை நீக்கி வந்தன. உப்பளம்- ஊர்மன்று – நாள்அரும்பு – இலைமரம் – செம்போத்து – தோய்தயிர் -இவற்றுள் பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன.இனிச் செய்யுள்வழக்கில் வருமாறு:‘பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்’ (கு. 913), ‘கான் யாற்று அடைகரை’ (இனிய.5), ‘முந்நாள் பிறையின் முனியாது வளர்ந்தது’, ‘ கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன காயா’ (சீவக. 1558), ‘சிறுகோ ட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு’ (குறுந். 18), ‘ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமிர்தே’ – பொருள் முதல் ஆறும் பற்றியஅடைகள் இனம் உடையன வாய் இனத்தை நீக்கி வந்தன. ‘பொற்கோட்டு இமயம்’ (புற. 2), ‘ வட வேங்கடம் தென் குமரி’ (தொ. பாயி), ‘ வேனில் கோங் கின் பூம்பொகுட்டு அன்ன’ (புற. 321) ‘ சிறகர் வண்டு செவ்வழி பாட’ (சீவக. 74), ‘ செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்’ (புற. 38), ‘ முழ ங்கு கடல் ஓதம்’ – பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன.(நன். 401 சங்.)

அடைமொழி வழுவாமல் காத்தலும்வழுவமைதியும்

அடை சினை முதல் – என்பன முறையே வருதல் வழக்கிற்கு உரித்து.எ-டு : செங்கால்நாரை.‘ஈரடை முதலோடு ஆதலும் வழக்கியல்’:எ-டு : மனைச்சிறு கிணறு, ‘சிறுகருங் காக்கை’ (ஐங். 391)ஈரடை சினையொடு செறிதலும், இம்முறை மயங்கி வருதலும் செய்யுட்குஉரிய.எ-டு : சிறுபைந்தூவி, கருநெடுங்கண்;‘பெருந்தோள்சிறுமருங்குல் பேரமர்க்கண் பேதை’ (நன். 403 சங்.)

அட்ட நாக பந்தம்

எட்டுப் பாம்புகளின் உருவத்தால் அமையும் மிறைக்கவி இது.ஒரு நான்(கு)அக் கரத்தோடு நாற்பத் தொன்றாம்ஆறுடன்நாற் பத்தைந்தாம் எட்டுடன்ஐந் நான்காம்இருளறுபன் னிரண்டுடனே பதினெட் டாகும்இருபத்தி ரண்டுடனே நாற்பத் தேழாம்பரவுமிரு பத்துநான் குடன்முப் பத்தொன்பானாம்முப் பான்மூன்றோ(டு) ஐம்பத் தொன்றாம்அருமுப்பத் தேழுடன்நாற் பத்தொன் பானாம்அட்டநாக பந்த மாம்செய் யுட்கே.51 எழுத்துக்களால் அட்டநாகபந்தம் அமையும். பின்வரும் எண்களையுடையஎழுத்துக்கள் எழுத்தொன்றேயாகக் கணக் கிடப்படும்.4ஆம் எண்ணுடைய எழுத்தும் 41ஆம் எண்ணுடைய எழுத்தும்6ஆம் எண்ணுடைய எழுத்தும் 45ஆம் எண்ணுடைய எழுத்தும்8ஆம் எண்ணுடைய எழுத்தும் 20ஆம் எண்ணுடைய எழுத்தும்12ஆம் எண்ணுடைய எழுத்தும் 18ஆம் எண்ணுடைய எழுத்தும்22ஆம் எண்ணுடைய எழுத்தும் 47ஆம் எண்ணுடைய எழுத்தும்24ஆம் எண்ணுடைய எழுத்தும் 39ஆம் எண்ணுடைய எழுத்தும்33ஆம் எண்ணுடைய எழுத்தும் 51ஆம் எண்ணுடைய எழுத்தும்37ஆம் எண்ணுடைய எழுத்தும் 49ஆம் எண்ணுடைய எழுத்தும்ஓர் எழுத்தாகவே அமையுமாறு 51 எழுத்துக்களால் இம் மிறைக்கவிஅமையும். நாகங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் சந்திகளில் வருபவை4ஆமெழுத்து முதலியவை. (இ. வி. அணி. 690. உரை)

அட்டக வருக்கக்கோவை

வேதங்களின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதியாகிய வருக்கங்களின்முதல்நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை. இதற்கு அநுக்ரமணிகாஎன்ற பெயரும் உண்டு. யாப்பருங்கலக்காரிகை முதல்நினைப்புச் சூத்திரங்களை உடையது என்பதைக் குறிக்க வந்த உரையாசிரியர் குணசாகரர், ‘அருமறையகத்து அட்டகஓத்தின் வருக்கக் கோவை போல’ என உவமை எடுத்துரைத்தார்.(யா. கா. பாயிரம். 1 உரை)

அட்டகணம்

நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமான கணம்,சூரிய கணம், தீக்கணம், வாயு கணம், ஆகாய கணம் என எண்வகையுடையனவும்,நல்லவும் தீயவுமாய் வருவனவும் ஆகிய நூல் முதற்சீர்கள்.முதற்சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இறுதிக்கண்நின்றது கணம். (இ. வி. பாட். 10)

அட்டகம்

எட்டு உறுப்புக்களைக் கொண்ட கூட்டம். ‘உருவ மெலாம் பூத உபாதாயசுத்தாட்டக உருவம் என்னின்’ (சி. சி. புர. சௌத். மறு 17)பாடல்கள் எட்டனையுடைய தொகுதி பெரும்பான்மையும் அட்டகம்எனப்படுகிறது. ஆதிசங்கரர் அருளிய குருவஷ்டகம் காண்க. (L)

அட்டமங்கலம்

கடவுளைப் பாடி, அக்கடவுள் காக்க எனக் கவி எட்டால் பொருளுற அகவல்விருத்தத்தால் பாடப்படும் பிரபந்தம்.(இ. வி. பாட். 83)

அணி என்ற இடைச்சொல் புணர்ச்சி

அணி என்பது அணிய இடத்தை உணர்த்தும் இகரஈற்று இடைச் சொல். அஃது
அணிக்கொண்டான் என்றாற்போல வன்கணத்தொடு புணரும்வழி இடையே வல்லொற்று
மிகும். (தொ. எ. 236 நச்.)
அணி + அணி = அண்ணணி எனப் புணர்ந்து, அது வருமொழி வன்கணத்தொடு
புணரும்வழி இடையே வல்லொற்றுப் பெறும்.
வருமாறு : அண்ணணிக் கொண்டான். (தொ. எ. 246 நச்.)

அணிகல நூல்

யாப்பருங்கலம் 95ஆம் சூத்திரத்து அகலவுரையுள் குறிக்கப் பட்டுள்ளநூல்களுள் ஒன்று. அணிகலன்களை அமைக்குமா றும் அவை பூணுமாறும் பற்றியநாள் முதலாய விசேடங் களை இந்நூல் விளக்குவது. இந்நூல் முதலாயவற்றுள்நிகழும் மறைப்பொருள் உபதேசத்தை வல்லார்வாய்க் கேட்டுணர்க என்பது உரை.இந்நூல் இக்காலத்து இறந்தது. (யா. வி. பக். 491)

அணியியல்

தண்டியலங்காரத்துககு முற்பட்ட நூல். இதன்கண் தனிநிலை தொடர்நிலைச்செய்யுள் பற்றியும், இருது வருணனை பற்றியும் கூறப்பட்ட செய்தியாப்பருங்கல விருத்தியுரையுள் எடுத்தாளப்பட்டுள்ளது. (பக். 566, 573)இனி, சிலப்பதிகார உரையுள் அடியார்க்குநல்லார் அணியியல் என்ற நூல்மேற்கோளாகக் காட்டிய ‘உரையும் பாட்டும் விரவியும் வருமே’ ‘உதாரம்என்பது ஓதிய செய்யுளின், குறிப்பின் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றல்’என்ற இரண்டு நூற்பாக் களும் தண்டியலங்காரத்துள (11, 21). அதனைநோக்கின் அணியியல் நூற்பாக்கள் சில தண்டியலங்காரத்தில் ‘தானெடுத்துமொழிதலாகக்’ கொள்ளப்பட்டிருத்தல் கூடும் என்பது புலனாகிறது.

அணியியல் உடையார்

அணியியல் என்ற நூலை இயற்றியவர். இவ்வாசிரியர் தம் நூற்பாக்களில்செய்யுள்நடைபற்றிக் கூறுவதோடு, எடுத்துக் காட்டுக்களும் தந்துள்ளார்என்று கூறப்படுகிறது.(யா. க. 23, 57 உரை பக். 105, 229)

அணுத்திரள் ஒலி

ஒலி அணுத்திரளைக் காரணமாகக் கொண்டு அவற்றின் காரியமாக வரும்
எழுத்து. மொழிக்கு முதற்காரணம் எழுத் தானாற் போல, எழுத்துக்கு
முதற்காரணம் ஒலிஅணுத்திரள் என்பது பெறப்படும். (நன். 58 சங்)

அண்பல் முதல்

பல்லினது அணிய இடம் (தொ. எ. 96. இள. உரை)
அண்பல்லின் அடி (நச். உரை)
அண்பல் : வினைத்தொகை. நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமாகிய பல் என்று
அதற்கொரு பெயராயிற்று. (அண்பல் நாவிளிம்பு அணுகுதற்காகவே அமைந்தன
அல்ல. இங்ஙனம் உள்பொருள் அல்லதனை உள்பொருள் போலக் குறிப்பிடு தல்
தந்து புணர்ந்துரைத்தல் என்ற உத்திவகையாம்.) (தொ. எ. 86 நச். உரை)
மேல்வாய்ப் பற்களுக்குப் பின்னருள்ள அண்ணம் (எ. கு. பக்.40)
மேற்பல்லின் முதலிடம் (எ. ஆ. பக். 78)
மேல்வாய்ப்பல்லின் அடி என்பதே தெளிவான பொருளாம்.

அண்மைச்சொல் விளி ஏற்றல்

உயிரீற்றுப் பெயர்கள் அண்மை விளிக்கண் இயல்பாகும்.எ-டு : நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி.னகாரஈற்றுப் பெயர்கள் அண்மைவிளியில் அன் ஈறுகெட்டு அகரமாகும்.எ-டு : துறைவன் – துறைவ, ஊரன் – ஊர, சோழன் – சோழலகார ளகார ஈற்றுப் பெயர்கள் ஈற்றயல் நெடிதாயின் இயல் பாய்விளியேற்கும்.எ-டு : ஆண்பால், பெண்பால், கோமாள், கடியாள் இந் நிலைமைபெரும்பான்மையும் உயர்திணைக்கே கொள்ளப்படும். (தொ. சொ. 129, 133, 147நச். உரை)

அண்மையால் தொடர்தல்

‘ஆற்றங்கரையில் ஐந்து கனிகள் உள’ என்றாற் போல்வனவற் றுள் சொற்கள்அண்மைநிலையால் தொடர்ந்தன. அண்மை : ஆற்றிற்குக் கரை சமீபம் ஆதலால் ஆறு+ கரை = ஆற்றங்கரை என அவ்வாறு தொடர்தல். (நன். 260 இராமா.)

அதனகப்படுதல்

அதன் பாகம் பெறுதல்; அஃதாவது அதன் அளவில் செம்பாதி பெறுதல்.சுரிதகம் பெரும்பான்மை தரவின்பாகம் பெறுதல். (தொ. செய். 137 நச்.)பன்னீரடித் தரவிற்கு அதன்பாகமாகிய ஆறடியே சுரிதகத்தின்உயர்விற்கெல்லை. (பேரா.)

அதனின் ஆதல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றனான் ஒன்றுஆதல் என்னும் பொருண்மை இது.எ-டு : வாணிகத்தான் ஆயினான்.இது காரக ஏதுவாகிய கருவியின் பாற்படும்.(தொ. சொ. 74 சேனா. உரை)அதனின் ஆதலாவது ஆக்கத்திற்கு ஏதுவாகி வருவது.எ-டு : வாணிகத்தான் ஆயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையான்பைங்கூழ் நல்லவாயின.(தொ. சொ. 72 தெய். உரை)

அதனின் இயறல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : மண்ணான் இயன்ற குடம் – மண் முதற்காரணம்.முதற் -காரணமாவது காரியத்தொடு தொடர்புடையது. இதுகருவி.(தொ. சொ. 74 சேனா. உரை)ஒன்றனான் ஒன்று பண்ணப்படுதல் என்னும் பொருண்மை இது.இயலப்படுதற்குக் காரணமாகிய பொருள்மேல் உதாரண வாய்பாட்டான் வருவது.எ-டு : மண்ணினான் இயன்ற குடம்; அரிசியான் ஆகிய சோறு (தொ. சொ. 72தெய். உரை)

அதனின் கோடல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான்ஒன்றைக் கோடல் என்னும் பொருண்மை இது.எ-டு : காணத்தான் கொண்ட அரிசி – இது கருவியின்பாற் படும். (தொ.சொ. 74 சேனா. உரை.)

அதனொடு மயங்கல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்றுவிரவி வருதல் என்னும் பொருண்மை இது.எ-டு : பாலொடு கலந்த நீர், எண்ணொடு விராய அரிசி. (தொ. சொ. 72தெய். , 74 சேனா. உரை)

அதன் வினைப்படுத்தல்

ஒன்றனான் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை. இது மூன்றாம்வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : சாத்தனான் முடியும் இக்கருமம்; நாயான் கோட்பட்டான்.இது வினைமுதலின்பாற் படும். (தொ. சொ. 74 சேனா. 75 நச். உரை)அதன் வினைப்படுதலாவது ஒன்றன் தொழில்மேல் வருதல்.எ-டு : புலி பாய்தலான் பட்டான்; ஓட்டான் கடிது குதிரை.(தொ. சொ. 72 தெய். உரை.)

அதற்கு உடன்படுதல்

ஒன்றற்கு ஒரு பொருளை மேல் கொடுப்பதாக உடன்படுதல். இது நான்காம்வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றன் செயற்கு உடன்பாடுகூறியவழியும் நான்காவதாம்.எ-டு : சாத்தற்கு மகள் உடன்பட்டார், சான்றோர் கொலைக்குஉடன்பட்டார். (தொ. சொ. 76. சேனா. உரை)

அதற்கு நட்பு

ஒன்றற்கு ஒன்று நட்பாதல் என்னும் பொருட்டாய இஃது நான்காம் வேற்றுமைமுடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : அவற்கு நட்டான், அவற்குத் தமன்.(தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்கு யாப்புடைமை

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்றுபொருத்தமுடைத்தாதல் என்னும் பொருண்மை இது.எ-டு : கைக்கு யாப்புடையது கடகம். (தொ. சொ. 76 சேனா.உரை)அதற்கு யாப்புடைமையாவது உருபேற்கும் பொருட்கு வலியாதல் உடைமை.எ-டு : போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள். (தொ. சொ. 74தெய். உரை)

அதற்கு வினையுடைமை

ஒன்றற்குப் பயன்படுதல் என்னும் பொருட்டாகிய இது நாலாம் வேற்றுமைமுடிக்கும் சொற்களுள் ஒன்று. வினை – ஈண்டு, உபகாரம்.எ-டு : கரும்பிற்கு வேலி, ‘நில த்துக்கு அணிஎன்ப நெல்லும்கரும்பும்’ (நான். 9), மயிர்க்கு எண்ணெய். (தொ. சொ. 76 சேனா., 77 நச். கல்.உரை)உருபு ஏற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும்வழியும் நான்காம்வேற்றுமைப்பாலன.எ-டு : அவர்க்குப் போக்கு உண்டு, அவர்க்கு வரவு உண்டு,கரும்பிற்கு உழுதான். (தொ. சொ. 74 தெய். உரை.)

அதற்கு வினையுடைமை முதலியன

கோடற் பொருளுக்கு உரியவாய் வருமிவையெல்லாம் நான்காம்வேற்றுமைப்பாலனவாம்.அதற்கு வினையுடைமை – கரும்பிற்கு உழுதான், நெல்லுக்கு (நெல்லுவிதைப்பதற்கு) உழுதான்.அதற்கு உடன்படுதல் – சாத்தன் மணத்திற்கு உடன்பட் டான்.அரசன் போருக்கு உடன்பட்டான்.அதற்குப் படுபொருள் – ‘நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரைஉண்டு.’ (நாலடி. 221)அதுவாகு கிளவி – தாலிக்குப் பொன் கொடுத்தான். ஆடைக்கு நூல்தந்தான். (கிளவி – பொருள்)அதற்கு யாப்புடைமை – மழைக்குக் குடைபிடித்தான். பசிக்கு உணவுஅளித்தான்.நட்பு – நெருப்புக்கு நெய் வார்த்தான்; கபிலர்க்கு நண்பன்பாரி.பகை – நெருப்புக்கு நீர் விட்டான்; பாம்பிற்குப் பகை மயில்.காதல் – தலைவன் தலைவிக்குப் பூச்சூட்டினான்; நட்டார்க்குக்காதலன்.சிறப்பு -‘மனைக்கு விளக்கம் மடவாள்’ (நான். 101) ; கல்விக்குச்சிறந்தது செவி.அன்ன பிற பொருள்களாவன : அவன் போர்க்குப் புணை யாவான்; அடியார்க்குஅன்பு செய்தான் – போல்வன (தொ. சொ. 76 ச. பால.)

அதற்குக் காதல்

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்றுகாதலுடைத்தாதல் என்னும் பொருட்டு.எ-டு : நட்டார்க்குக் காதலன், புதல்வற்கு அன்புறும் (தொ. சொ. 76சேனா. உரை)

அதற்குச் சிறப்பு

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. சிறப்பு -ஒன்றற்கு ஒன்று சிறத்தல். சிறப்பு என்பது இன்றி யமையாமை பற்றிவரும்.எ-டு : வடுக அரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர்.கற்பார்க்குச் சிறந்தது செவி. (தொ. சொ. 76 சேனா. உரை)

அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி

இதனை விட்ட ஆகுபெயர் என்ப. அஃதாவது ‘ஒப்பில் வழியான் பிறிது பொருள்சுட்’ டும் ஆகுபெயர். [ இதனை ‘விட்ட அன்மொழித்தொகை’ என அன்மொழித்தொகைக்கும் கொள்வர்சிவஞான முனிவர் (சூ.வி) ] (பி. வி. 24)

அதற்குப் பகை

ஒன்றற்கு ஒன்று பகையாதல் என்னும் பொருட்டாய இது நான்காம் வேற்றுமைமுடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : அவற்குப் பகை, அவற்கு மாற்றான்(தொ. சொ. 76 சேனா. உரை.)

அதற்குப் படு பொருள்

பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒருபங்கில் படும் பொருள்;ஒன்றற்கு உரிமையுடையதாகப் பொதுவாகிய பொருள் கூறிடப்படுதல். இதுநான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று.எ-டு : சாத்தற்குக் கூறு கொற்றன் (தொ. சொ. 76 சேனா.உரை.)அதற்குப் படுபொருளாவது உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும்வழியும்நான்காவதாம்.எ-டு : இதற்கு நிறம் கருமை ; இதற்கு வடிவம் வட்டம்; இதற்கு அளவுநெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச்சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்குவிலை இது.அதற்குப் படு பொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும் காலத்திற்கு ஆம் பொருளும் ஆகி வருவன கொள்க.வருமாறு: அவற்குச் சோறு உண்டு, ஈழத்திற்கு ஏற்றின பண்டம்,காலத்திற்கு வைத்த விதை – என வரும். (தொ. சொ. 74 தெய். உரை)

அதற்பொருட்டாதல்

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒருபொருளினை மேல் பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல். [ ஒரு பொருட்டாக என்பதுபட வருதல் (தெய்.) ]எ-டு : கூழிற்குக் குற்றேவல் செய்யும். (தொ. சொ. 76 சேனா.உரை.)

அதற்றகு கிளவி

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான் ஒன்றுதகுதல் என்னும் பொருண்மை இது.எ-டு : வாயாற் றக்கது வாய்ச்சி, அறிவான் அமைந்த சான்றோர். இதுகருவிப்பாற்படும். (தொ. சொ. 74 சேனா. உரை.)அதற்றகு கிளவியாவது அதனால் தகுதியுடைத்தாயிற்று என்னும் பொருண்மைதோன்ற வருவது.எ-டு : கண்ணான் நல்லன் – நிறத்தான் நல்லன் – குணத்தான் நல்லன் -என உறுப்பும் பண்பும் பற்றி வருவன. (தொ. சொ. 75 தெய். உரை.)

அதாஅன்று

‘அது +அன்று’ என்னும் புணர்மொழி ‘அதாஅன்று’ என்பது. இப்புணர்மொழித்
தொடர் ‘அஃதன்று’ என முற்றாயும், ‘அதுவே அன்றியும்’ என எச்சமாயும் சங்க
விலக்கியத்துள் பயின்று வருதல் காணலாம். ஆகவே, இச் சொற்கள் வினா விடை
முறையில் ‘அதுவா? அன்று’ என நின்று (அது- ஆ – அன்று) அதா – அன்று,
அதாஅன்று – என்று புணர்ந்துள்ளமை அறியலாம். (தொ.எ. 258. ச.பால.)

அதாஅன்று என்ற சொல்லமைப்பு

அது என்ற நிலைமொழி அன்று என்ற வருமொழியொடு கூடுமிடத்து நிலைமொழித்
துகரம் ‘தா’ எனத்திரிய, அதாஅன்று என முடியும். (தொ. எ. 258 நச்.)
அதாஅன்று என்பது அதுவன்றி என்னும் பொருளது. அன்றி என்ற வினையெச்சம்
அன்று எனத்திரிந்ததோ எனக் கருத வேண்டியுள்ளது. இதனால், இன்றி என்பது
இன்று எனத் திரிவது போல, ஒரோவழி அன்றி என்பதும் அன்று எனத் திரிதலும்
பெறப்படும்.
அது இது உது என்பன மூலத் திராவிட மொழியில் அத் இத் உத் என
மெய்யீற்றுச் சொற்களாக இருந்தன. அது இது உது என்பன வட மலையாளத்தில்
போலவே, தமிழிலும் அத இத உத எனச் சிலவிடங்களில் வழங்கியிருத்தல்
கூடும். அகரஈற்றின் முன் அகரம் வரின், ஒருசொல் நீர்மையில் இவ்விரண்டு
அகரமும் ஓர் ஆகாரமாகி வழங்கும். ஆதலின் அத + அன்று = அதான்று என்று
வந்தது. மர + அடி = மராடி என்றாவது போல்வது இது. வருமொழி ‘அன்று’
என்பதைத் தெரிவிக்க, அதாஅன்று என்று அகரம் அறிகுறி என்ற அளவில் எழுதப்
பட்ட தாகும். (எ. ஆ. பக். 143)

அதிஉத்தம்

சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதப்படுவன வற்றுள்அதியுத்தமும் ஒன்று.‘போதி, யாதி, பாத, மோது’ என்றாற்போல வருவது இச்சந்தம். ஒற்றொழித்துஉயிராவது உயிர்மெய்யாவது அடியொன்றற்கு இரண்டெழுத்துப் பெறும்இச்சந்தம். (வீ. சோ. 139 உரை)

அதிகண்டம்

செய்யுட் சீர் இவ்வாறு கூறப்படும். “அதிகண்டம் என்றும் இசையென்றும்சீரைப், பதச்சேதம் என்றும் பகர்வர்.“எனவே அதிகண்டம் என்பது செய்யுட் சீரினைக் குறிக்கும் பரியாயப்பெயர்களுள் ஒன்று. (யா. வி. பக். 103)

அதிகரண காரகபேதம்

இடப்பொருள் என்னும் ஏழாம் வேற்றுமையுள், 1) உரிமை என்னும் விடயம்,2) ஒற்றுமை எனவும் கூட்டம் எனவும் இருவகைப்படும் ஓரிடம், 3) எங்கும்பரந்திருத்தல் – என இடம் மூவகைப்படும்.1. கடலுள் மீன் திரிகிறது; ‘நெடும்புனலுள் வெல்லும்முதலை’ (குறள் 495); ‘பகல்வெல்லும் கூகையை க் காக்கை’ (கு 431) – இவை விடயம் என்னும் ஆதாரப்பொருளான இடம். புனல்முதலைக்கும் பகல் காக்கைக்கும் உரிமை. ‘ கடல் ஓடா…… நிலத்து’(குறள். 496) என்புழி, எதிர்மறை யாலும் விடயம் உரிமை என்பதுஅறிக. கடல் நாவாய்க்கும், நிலம் தேர்க்கும் உரிமை.2. ஓரிடம் – ஒற்றுமை மேவுதலால் வந்தது; அ) மதிக்கண் மறு, கையின்கண்விரல், குன்றின்கண் குவடு, ஆண்டின்கண் இருது – போன்றன. பிரிதலின்றித்தொடர்புபட்ட சமவாய சம்பந்தம் எனும் தற்கிழமை இடமாகும் இது. ஆ)பாயின்கண் இருந்தான், தேர்க்கண் இருந்தான் – போல்வன பிரிதற்கு இயலும்தொடர்பான சையோக சம்பந்தம் எனும் பிறிதின் கிழமை.3. எங்கும் பரந்திருத்தல் (அபிவியாபகம்) – எள்ளின்கண் நெய்,தயிரின்கண் நெய் போல்வன எங்கும் மேவுதல். இஃது ஒரு பொருளின்கண்பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக் கலந்திருத்தல் என்றஏழாம் வேற் றுமைப் பொருளான அபிவியாபகம் வந்தது.ஆதாரம் என்பது ஏழாம்வேற்றுமை ஏற்ற பெயர் இட மாகவும் காலமாகவும்ஆதல். அதன்கண் உள்ள அல்லது நிகழும் அல்லது தொடர்பு கொள்ளும் பொருள்ஆதேயம் எனப்படும். இங்ஙனம் வரும் ஆதார ஆதேயங்கள் அருவா யும் உருவாயும்வரும்.எ-டு : வடக்கண் வேங்கடம், ஆகாயத்தின்கண் பருந்து – இவற்றுள்,ஆதாரம்: அரு, ஆதேயம் : உரு. ‘நல்லார் கண் பட்டவறுமை’ (குறள். 408), உடலில் உணர்வு – இவற்றுள், ஆதாரம் : உரு, ஆதேயம்: அரு. (பி. வி. 13)

அதிகரணத் துதியை

ஏழாம் வேற்றுமைப் பொருளில் வரும் இரண்டாம் வேற்றுமை. நெறியில்சென்றான் என்ற பொருளில் நெறியைச் சென்றான் – என வருவது. இஃதுஇந்நூலில் வேற்றுமைப் பொருள்மயக்கம் எனப்படுகிறது. (பி. வி. 15)

அதிகரணீ விருத்தம்

அ) மூன்று புளிமாங்கனியும் ஒரு புளிமாவும் பெற்று அமையும் அடிநான்காகி வரும் விருத்த வகை இது. (வி. பா. 24 பக். 49)எ-டு : ‘மயிலாலுவ குயில்கூவுவ வரிவண்டிசை முரல்வ;// மயில்பூவைகள் கிளியோடிசை பலவாதுகள் புரிவ; // அயில்வாள்விழிமடவாரென அலர்பூங்கொடி அசைவ; // வெயிலாதவர் புறமேகுற விரிபூஞ்சினைமிடைவ’ (விநாயக.)ஆ) மூன்று புளிமாங்கனிகளுக்கு ஈடாக முதலில் தேமாங்கனி அடுத்துஇருபுளிமாங்கனிகளும் இறுதியில் புளிமாவும் அமையும் அடி நான்காகிவருவதும் அது.எ-டு : ‘பூணித்திவை உரைசெய்தனை அதனாலுரை பொதுவே// பாணித்தது பிறிதென்சில பகர்கின்றது பழியால் // நாணித்தலையிடுகின்றிலென் நனிவந்துல கெவையுங் // காணக்கடி தெதிர்குத்துதியென்றான்வினை கடியான்’ கம்பரா. 7188இ) ஈற்றுச்சீர் புளிமாவுக்கு ஈடாகத் தேமா வர, மூன்றுகருவிளங்கனிகளும் ஒரு தேமாவும் அமைந்த அடி நான்காகி வருவதும் அதுஎ-டு : ‘எழுதுருவின எழுதளிரன இணரணிவன இரதம்இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொழிவன மதுகம்கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதைபொழுதுருவின அணிபொழிலின பொழிதளிரன புன்னை’(பின்னீரடிகளிலும் ஈற்றுச்சீர் தேமா என நின்றது.) சூளா.433

அதிகாரத்தால் மொழி வருவித்துமுடித்தல்

நூல்களில், சிறப்பாகச் சூத்திரங்களான் இயன்ற இலக்கண நூல்களில்,ஓரிடத்தே நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றியைதல் அதிகாரம்எனப்படும். இது வடமொழியில் அநுஷங்கம் எனப்படுதலுமுண்டு (பி. வி. 50).‘அதிகாரம்’ காண்க. (எடுத்துக்காட்டு (1))

அதிகாரம்

பதினான்கு வகையான உரையுள், அதிகாரமாவது எடுத்துக் கொண்ட அதிகாரம்
இதுவாதலின் இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தொடு
பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். (நன். 21 சங்கர.)

அதிகாரம்

அதிகாரம் என்னும் சொற்கு முறைமை என்று பொருள் கூறுவர் இளம்பூரணரும்நச்சினார்க்கினியரும்; பேராசிரியர் முறைமை, இடம், கிழமை என்று பொருள்கூறுவார் (பொ. 666). ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றுஇயைதலையும், ஒன்றன் பொருள் பற்றி வருகின்ற பல ஓத்துக் களின்தொகுதியையும் அதிகாரம் என்பார் சேனாவரையர்.எ-டு : 1) ‘விளிவயி னான’ என்னும் தொடர் (133 சேனா.) விளிமரபில்இத்தொடருள்ள சூத்திரத்திற்கு முன்ன ரும் பின்னரும் உள்ளசூத்திரங்களொடு சென் றியைதல்.2) எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதி காரம் – என்பன.

அதிகாரம் : சொற்பொருள் விளக்கம்

அதிகாரம் – அதிகரித்தல். ‘அதிகாரம் என்ற சொற்பொருள்’ காண்க.

அதிகாரம் என்ற சொற்பொருள்

அதிகாரம் – முறைமை (தொ. எ. 1. நச். உரை)
அதிகாரம் – அதிகரித்தல். வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல்
பலசூத்திரங்களொடு சென்றியைதலையும், ஒன்றன் இலக்கணம் பற்றி வரும்
பலசூத்திரத் தொகுதியையும் அதிகாரம் என்ப. (தொ. சொ. 1 சேனா. உரை)
அதிகாரம் அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று,
வேந்தன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச்
செய்வது போல, ஒருசொல் நின்றுழி நின்று பலசூத்திரங்களும் பல
ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது. மற்றொன்று, சென்று
நடாத்தும் தண்டத்தலைவர் போல, ஓரிடத்து நின்ற சொல் பலசூத்திரங்களொடு
சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிப்பது. இவற்றை முறையே வடநூலார்
யதோத்தேச பக்கம் எனவும், காரியகால பக்கம் எனவும் கூறுப. (சூ. வி. பக்.
17) (நன். 56 சிவஞா).
எ-டு : எழுத்துப் பற்றிவரும் பலசூத்திரங்களின் தொகுதி
எழுத்ததிகாரம் எனப்பட்டது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 34ஆம் சூத்திரத்தி லுள்ள ‘நிற்றல்
வேண்டும்’ என்ற தொடர் ‘குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்து
நிற்றல் வேண்டும்’ என்று
சென்றியைந்து தன் பொருளைப் பயப் பிப்பது அதிகாரத்தான்
வந்ததாகும்.

அதிகாரம் காரணமாகச் சொற்பொருள்உணர்த்தல்

அதிகாரம் என்பது முறைமை – மரபு – இலக்கணம் – என்னும்பொருள்களையுடைய சொல். சொற்பொருள் உரைக்கும் ஏதுக்களாக, இ.கொ.தருபவற்றுள் இதுவும் ஒன்று. ‘கூடின் இன்பம் பிரியின் துன்பம்’ என்பதுஅகப்பொருட்கண்ண தாயின், அவ்வதிகாரம் பற்றித் “தலைவன் தலைவியொடு கூடின்இன்பம்; ,ஓதல் பகை தூது பொருள் முதலியவற்றால் உடன்படாது அவளை நீங்கில்அளவில் துன்பம்” என்றும், புறச்செய்யுட்கண் வரின், “கற்றாருடன் கலைபயிலின் அளவு பட்ட இன்பம்; நித்தியம் நைமித்திகம் காமியம் – முதலியவிரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம்” என்றும்கூறுக. (இ. கொ. 129)‘சொற்பொருள் உரைக்க ஏதுக்களாவன’ காண்க.

அதிகிருதி

எழுத்து வகையான் இருபத்தாறு பேதமாகிய சந்தங்களுள் அதிகிருதிஎன்பதும் ஒன்று.எ-டு : ‘தளையவி ரும்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடேவளைமொழி நித்தில மளநில வைத்தரு மயிலையி லெழுகாரேயளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயவீராவிளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ழருளாயே’கருவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம் புளி மாங்காய் – எனஇவ்வாய்பாட்டால் அறுசீர்அடி நான்காய் வரும் விருத்தத்துள் இச்சந்தம்வருமாறு காண்க. ஒற்றெ ழுத்தை நீக்கி உயிரும் உயிர்மெய்யுமாக அடிக்குஎழுத்து 22 எனக் கொள்ளப்படும். (வீ. சோ. 139 உரை)

அதிசக்குவரி

எழுத்துவகையால் இருபத்தாறு பேதப்படும் சந்தங்களுள் ஒன்று இது.புளிமா புளிமா தேமா தேமா தேமா புளிமா என்னும் வாய்பாட்டால் அறுசீர்அடிமுதலாவதும் நான்கா வதும் நிகழ, இடையிரண்டடிகளும் புளிமா புளிமா தேமாபுளிமா தேமா தேமா என்னும் வாய்பாட்டால் நிகழும் ஆசிரிய விருத்தத்துள்இச் சந்தம் பயிலும். ஒற்றெழுத்து நீங்கலாக உயிரும் உயிர்மெய்யும்ஓரடிக்கு எழுத்து 15 எனக் கொள்க.எ-டு : ‘அருண கிரண மேபோ லங்க ராகங் குலவும்தருண கலவி மாரன் தயங்கு சிந்தை யென்னோய்தெருண முழைய தென்றா லதுவோ சேலாங் கண்ணார்கருணை சிறிது பெய்யுங் காலை யுண்டே லினிதாம்.’ (வீ. சோ. 139உரை)

அதிசயதி

எழுத்துவகையால் இருபத்தாறு பேதம் ஆம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று.ஐஞ்சீர்களை அடிதோறும் உடைய கலிநிலைத்துறை. (நெடிலடி விருத்தம்)முதலாம்நான்காம் அடிகள் கருவிளம் கூவிளம் தேமா தேமா தேமா என நிகழ,இடையீரடிகளும் கருவிளம் தேமா புளிமா தேமா தேமா என நிகழ்வதன்கண்இச்சந்தம் பயிலும். ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்குஎழுத்து 13 என்க.எ-டு : ‘பரிசில வெம்மொடு போது மம்பு மென்றாங்கரிசில வேந்தி யகன்று நீண்ட கண்மேற்குரிசிலை யன்று கனற்றி வெந்த காமன்கருசிலை போற்புரு வத்தாள் காட்சி மிக்காள்’ (வீ. சோ. 139உரை)

அதிதிருதி

எழுத்துவகையான் இருபத்தாறுபேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று.எழுசீர் விருத்தத்துள் பயின்றுவருவது : ஒற்றொழித்து உயிரும்உயிர்மெய்யுமாக ஓரடிக்கு எழுத்து 19 வரப்பெறுவதுஎ-டு : ‘பாரா வார மருங்கு லாவு மொலியி னோடு பரவைகொண்டேசாரா வார மளைந்து தங்குந் தொன்னுமர் தெள்ளு புகார்மன்னவர்வீரா வார மணிந்த வாழி வலவர் மென்பூங் கரும்பினறுங்காரா வார மருள ராய கவின்பூ மலரொண் சூடாமணி’அடிதோறும் முதற்சீர் நான்கும் தேமா தேமா புளிமா தேமா என நிகழ,ஐந்தாம்சீர் புளிமா அன்றித் தேமாவாக நிகழ, ஆறாம் சீரும் அவ்வாறே நிகழ,ஏழாம் சீர் காய்ச்சீராகவோ கனிச்சீராகவோ நிகழும் இவ்விருத்தயாப்பில்இச்சந்தம் பயிலுமாறு. (வீ. சோ. 139 உரை)

அதியாடி

எழுத்துவகையான் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று.மாச்சீரால் இயன்ற எழுசீர் விருத்த யாப்புள் இச்சந்தம் பயிலும்;விளச்சீர் சிறுபான்மை விரவினும் இழுக்காது.எ-டு : ‘தேனார் பொழுதிற் றிருந்தா தேநீ சிந்தைகொண் டேவே றூரிற்போனார் தேரூர் சுவடு புதையல் வாழிபொங் கோத வேலைவானூர் மாவும் கிரியு முதலா வாரல் கொடுவாய் மேவிக்கானார் சோலைத் தருவி லுலாவுங் காவல் யாவ ருளரே’இதன்கண், முன்னீரடிகளில் ஐந்தாம்சீர் கூவிளம் என வந்தவாறு காண்க.ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்கு எழுத்து 17 எனக் கொள்க.(வீ. சோ. 139 உரை)

அதியுத்தம்

‘அதிஉத்தம்’ காண்க. (வீ. சோ. 139 உரை)

அதுமுன் வரும் அன்று

‘அது’ நிலைமொழியாக, அதன்முன் வரும் ‘அன்று’ செய்யுட் கண் அதான்று
என முடியும். அதுவன்றி என்பது அதன் பொருள். (நன். 180)

அதுவாகு கிளவி

இது நான்காம் வேற்றுமை கொண்டு முடியும் சொற்களில் ஒன்று. உருபுஏற்கும் பொருள் தானேயாய்த் திரிவதொரு பொருண்மை இது.எ-டு : கடிசூத்திரத்துக்குப் பொன் . (தொ. சொ. 76 சேனா. உரை)பொன் கடிசூத்திரமாகத் திரியும் ஆதலின் ‘அதுவாகு கிளவி’ என்றார்.கிளவி – பொருள். ஒன்று ஒன்றாகத் திரிந்து வரும் பொருட்கு வருவதுஇப்பொருண்மை. (தொ. சொ. 74 தெய். உரை)

அதுவென் வேற்றுமைஉயர்திணைத்தொகைக்கண் பெறும் நிலை

நம்பிமகன் – உயர்திணைத்தொகைக்கண் அது என் உருபு வாரா மல் நம்பிக்குமகன் – என நான்கன்உருபு வருதல் வேண்டும்.நம்பியது மகன் – என ஆறாவது விரிப்பதாயின் அது என்னும் அஃறிணை ஒருமைகாட்டும் உருபு உயர்திணைப் பெயரோடு இணைதல் ஏலாது. ஆதலின், நான்காவதன்முறைப்பொருள் தோன்ற ‘நம்பிக்கு மகன்’ என விரித்தல் வேண்டும்.(தொ. சொ. 94 சேனா. உரை)நின்மகன் – நினக்கு மகன் ஆகியவன், எம்மகன் – எமக்கு மகன் ஆகியவன்,என்மகள் – எனக்கு மகள் ஆகியவள் என ஆக்கம் கொடுத்து நான்கனுருபுவிரித்துக் கூறல் வேண்டும். (தொ. சொ. 95 நச். உரை)நம்பிக்கு மகன் என்பது இலக்கணம் இல்வழி மயங்கல், ‘நம்பியது மகன்’என்பது இன்மையின் என்க. (தொ. சொ. 96 கல். உரை)

அத்தின் அகரம் அகரமுனைக் கெடுதல்

நிலைமொழி அகரஈற்றுச் சொல்லாக நிற்க, அது வருமொழி யொடு சேருமிடத்து
இடையே அத்துச்சாரியை வரின், அத்துச் சாரியையின் அகரம் கெட, ஏனைய
எழுத்துக்களே நிலை மொழியொடு புணரும் என்பது விதி.
எ-டு : மக+அத்து+கை
> மக+த்து+கை =
மகத்துக்கை
(தொ. எ. 125.நச்).
ஒழிக + இனி
> ஒழிக்+இனி = ஒழிகினி; உற்ற
+ உழி
> உற்ற் + உழி = உற்றுழி;
செய்க + என்றான்
> செய்க்+என்றான் =
செய்கென்றான்; நாடாக + ஒன்றோ
> நாடாக்+ஒன்றோ =
நாடாகொன்றோ
இவ்வாறு வருமொழிமுதற்கண் இ உ எ ஒ என்பன வரின், நிலைமொழியீற்று
அகரம் கெடுதலே பெரும்பான்மை. மக + அத்து = மகத்து என, இங்கும்
நிலைமொழியீற்று அகரமே கெட்டது எனல் வேண்டும். நிலைமொழியீற்று அகரம்
கெட வருமொழி அகரம் சேர ‘மகத்து’ என்றாயிற்று என்பதனை விட,
வருமொழிமுதல் அகரம் கெட்டுப் புணர்ந்தது என்று கூறுதல் எளிதாகலின்
அங்ஙனம் கூறப்பட்டது.
மக + அத்து
> மக் + அத்து = மகத்து
என்பதனைவிட, மக + அத்து
> மக + த்து = மகத்து என்றல்
எளிதாகலின், முடிந்த முடிவில் வேற்றுமையின்று ஆதலின் இவ்வாறு
கூறப்பட்டது. (எ.ஆ.பக். 101)
அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிறவுயிர் முன்னரும் ஒரோவழிக்
கெடுதலுண்டு.
எ-டு : அண்ணா + அத்து + ஏரி = அண்ணாத்தேரி; திட்டா + அத்து +
குளம் = திட்டாத்துக்குளம் (தொ. எ. 133 நச்.உரை)
நிலைமொழி மெய்யீற்றதாக, அத்துச்சாரியை வரின், நிலை மொழி ஒற்றுக்
கெடாது முடிதலுமுண்டு.
எ-டு : விண் + அத்து + கொட்கும் = விண்ணத்துக் கொட்கும்
வெயில் + அத்து + சென்றான் = வெயிலத்துச் சென் றான்; இருள் +
அத்து + சென்றான் = இருளத்துச் சென்றான் (நச். 133 உரை)

அத்தியாயம்

நூற்பிரிவு. அத்தியாயம், படலம், இலம்பகம், சருக்கம், காண்டம்,பரிச்சேதம் என்பன ஒருபொருட் கிளவிகள் (பிங்.2068)

அத்துச்சாரியை புணருமாறு

அகரஈற்றுச்சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து அச் சாரியையின் அகரம்
கெடப் புணரும்.
எ-டு : மக + அத்து + கை
> மக + த்து + கை =
மகத்துக்கை
மெய்யீற்றுச் சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து நிலைமொழியின்
ஈற்றுமெய் பெரும்பாலும் கெடும்.
எ-டு : மரம் + அத்து + கோடு
> மர + அத்து + கோடு
> மர+ த்து + கோடு = மரத்துக்
கோடு; வருமொழி வன்கணம் வரின், வந்த வல்லொற்று இடையே
மிகும்.
சிறுபான்மை நிலைமொழி யீற்றுமெய் கெடாமல், வெயி லத்துச் சென்றான் –
இருளத்துச் சென்றான் – விண்ணத்துக் கொட்கும் – என்று முடிதலுமுண்டு.
(தொ. எ. 133 நச். உரை)

அத்துச்சாரியை வரும் இடங்கள்

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபொடு புணரு மிடத்தும்,
மகரஈற்றுப் பெயர்கள் உருபொடு புணருமிடத்தும், அழன் புழன் என்ற சொற்கள்
உருபொடு புணருமிடத்தும் இடையே அத்துச் சாரியை வரும்.
எ-டு : விள + அத்து + கண் = விளவத்துக்கண்; பலா + அத்து + கண் =
பலாவத்துக்கண் (தொ. எ. 181 நச்.); மரம் + அத்து + ஐ = மரத்தை (தொ.எ.
185 நச்.); அழன் + அத்து + ஐ = அழத்தை; புழன் + அத்து + ஐ = புழத்தை
(தொ.எ. 193 நச்.); எகின் + அத்து + ஐ = எகினத்தை (தொ.எ. நச்.
உரை)
இனி, பொருட்புணர்ச்சிக்கண், கலம் என்ற சொல்முன் குறை என்ற சொல்
உம்மைத்தொகைப்படப் புணருமிடத்து அத்துச்சாரியை இடையே வரக்
கலத்துக்குறை என முடியும். (தொ.எ. 168 நச்.)
மக என்ற பெயர் பொருட்புணர்ச்சிக்கண் மகத்துக்கை என அத்துச் சாரியை
இடையே பெறும். (தொ.எ. 219 நச்.)
நிலா என்ற சொல் நிலாஅத்துக் கொண்டான் என அத்துச் சாரியை பெறும்.
(தொ.எ. 228 நச்.)
பனி, வளி, மழை, வெயில், இருள், விண், மகர ஈற்று நாட்பெயர், ஆயிரம்
என்ற எண்ணுப்பெயர் என்னுமிவையும் இடையே அத்துச்சாரியை பெற்று
முடிவன.
எ-டு : பனியத்துச் சென்றான் – தொ.எ. 241 நச்.
வளியத்துச் சென்றான் – தொ.எ. 242 நச்.
மழையத்துச் சென்றான் – தொ.எ. 287 நச்.
வெயிலத்துச் சென்றான் – தொ.எ. 377 நச்.
இருளத்துச் சென்றான் – தொ.எ. 402 நச்.
விண்ணத்துக் கொட்கும் – தொ.எ. 305 நச்.
மகத்தாற் கொண்டான் – தொ.எ. 331 நச்.
ஆயிரத் தொன்று – தொ.எ. 317 நச்.

அத்துச்சாரியையின் அகரம் கெடுதல்

அத்துச்சாரியை வருமிடத்து, நிலைமொழியீற்றில் இயல்பு வகையாலோ
விதிவகையாலோ அகரம் நிற்ப, அத்துச் சாரியை யின் அகரம் கெட்டு
முடியும்.
எ-டு : மக + அத்து + கை = மகத்துக்கை – இயல்பு அகரஈறு; மரம் +
அத்து + குறை
> மர + அத்து + குறை =
மரத்துக் குறை – விதி அகரஈறு (நன். 252)

அநபிகித கருமம்

தெரியாநிலைச் செயப்படுபொருள். வினைச்சொல் கொள் ளும் ஆற்றலால்செயப்படுபொருள் இது என, ஆராயப்படா மலேயே, இயல்பாகப் புலப்படும் நிலை.அஃது ஐந்து வகைப்படும்.1. ஈச்சிதம் – கருத்துள்வழி 2) அநீச்சிதம் – கருத்துஇல்வழி 3)அவ்விருவழியும் 4) கருத்தா கருமம் ஆதல் 5) அகதிதம் என்பன அவை.இவற்றுள் முதலிரண்டையும் கல்லாடர் முதலாயினார் கருத்துள்வழிச்செயப்படுபொருள் – கருத்தில்வழிச் செயப் படு பொருள் – என்ப.எ-டு : 1) பாயை நெய்தான்,துவர ப் பசித்தவன் சோற்றை உண்டான்என்பவற்றுள், பாயை நெய்தல் – சோற்றை உண்டல் -இரண்டும் கருத்துள்வழிச் செய ப்படு பொருள்கள்.2) சோற்றைக் குழைத்தான்,தீக்கனாவைக் க ண்டான் – என்பவற்றுள், இரண்டும்கருத்தில்வழிச் செயப்படு பொருள்கள்.3) ஊரைச் செல்வான் பசும்புல்லைமிதித்தான், பாற்சோறு உண்கின்ற சிறுவன் அதன்கண்வீழ்ந்த தூளியை (தூசியை)த் தின்றா ன் – என்பவற்றுள், புல்லை மிதித்தலும் தூசியைத்தின்றலும் அநீ ச்சிதம்; ஊரைச் சேறலும் பாற்சோறு உண்டலும்ஈச்சிதம். ஆதலால் இஃது அவ்விருவழியும்வந்தவாறு.4) மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான் ஆசிரியன், மகட்போக்கிய தாய் – என்பவற்றுள், மாணாக்கன் மகள் என்னும் இருவரும்தனித்தனியே போவாரும் போக் கப்படுவாரும் ஆகலின் கருத்தாவேகருமம் ஆயிற்று.5) ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் -என்புழியும் பசுவினைப் பாலைக் கறந்தான் – என் புழி யும் வரும் ‘துகன்மம்’அகதிதம் ஆகிய ஈருருபு இணைதல். (பி. வி. 12)

அநபிகிந கருத்தா

தெரியா நிலை எழுவாய் – கருத்தா. தச்சனால் எடுக்கப்பட் டது மாடம்என்புழி, மாடம் கருத்தா என்று தெரியப்படாம லேயே செயப்படுபொருள் நிலைமாறிக் கருத்தாவாக வருதலின், தெரியாநிலைக் கருத்தா ஆயிற்று. (பி.வி.11)

அநித்திய சமாசம்

அநித்தம் எனவும்படும். இவை தொக்கும் தொகாமலும் வருவன.இரண்டுமா – இருமா, மூன்றுறுப்பு – மூவுறுப்பு, நான்கு கடல் -நாற்கடல், ஐந்தறிவு – ஐயறிவு, ஆறுமுகம் – அறுமுகம், ஏழ்கடல் -எழுகடல், எட்டுத்திசை – எண்டிசை – என்றிவ் வாறு தொகா மலும் தொக்கும்என இருநிலைமைக்கண்ணும் வருதலான் அநித்தியம்; ஒருநிலையை மாத்திரமே ஏற்புடைத்து எனக் கொண்டால் நித்தியம் ஆம் என்க.வேட்கை + அவா என்பது ‘செய்யுள் மருங்கின்’ (தொ. எ. 288 நச்) என்றவிதிப்படி வேணவா என இருத்தல் நித்தியம்.‘ ஐவாய வேட்கை அவாவினை’ (நாலடி. 59) என்புழி, இயல்பாய் நிற்றல் அநித்தியம். (பி. வி.27)

அநித்திய லிங்கம்

லிங்கம் – பால். சொற்களின் பால் ஒரே நிலைத்தாய் இல்லாமல் திரிதல்அநித்திய லிங்கமாம். இது வடமொழிப் பண்புத் தொகைத் தொடர்களில்,பண்புச்சொற்களைப் பண்புடைச் சொற்களின் பாலை யுடையவாக்கி (விசேடணம்விசேடியத்தின் பாலைப் பெறும் என்ற மரபிற்கு ஏற்ப)ப் புணர்க்கும் மரபுபற்றியது. தமிழிலும் கருஞ்சாத்தன் – கருஞ் சாத்தி – கருஞ்சாத்தர் -கருங்குதிரை – கருங்குதிரைகள் – என்பன வற்றை விரிக்குங்கால், கரியன்சாத்தன் – கரியள் சாத்தி – கரியர் சாத்தர் – கரிது குதிரை – கரியனகுதிரைகள் – என்றே விரித்தல் வேண்டும் என்பது தொல்காப்பியம் கூறுமுறை. ‘கரிய’ எனப் பொதுப்பட விரித்தலுமுண்டு. நன்னூல் ஆசிரியர்,வாமனன் – சிநேந்திரன் – போன்றாருடைய சத்தநூல் கொள்கை பற்றிக் ‘கருமைகுதிரை’ என்பது போலப் புணர்த்துவார். மேலே கூறியவாறு ‘கரியது குதிரை’என விரித்தால் ‘குதிரை கரியது’ என எழுவாயும் பயனிலை யுமாகவேமுடிவதன்றித் தொகை ஆகாது என்பதும் ஒரு கருத்து. (பி.வி. 49)

அநிரா கர்த்திரு சம்பிரதானம்

மறாவிடத்துக் கொடை – கேளாது ஏற்றல். முக்கண் மூர்த்திக்குப் பூஇட்டான் – என்பது போன்றவற்றில் வரும் நான்காம் வேற்றுமை,மாறாவிடத்துக் கொடைப் பொருளில் அமையும். முக்கண் மூர்த்தியாம் இறைவன்தனக்குப் பூவிட வேண்டும் எனக் கேட்டிலன். பூ இடுதல் மக்கள் இயல்பு.இறைவன் இதனை மாறாமல் ஏற்பான். இது கிடப்புக் கோளி என்பதன் பாற்படும்.(வீ.சோ.) (பி. வி. 13.)

அநுதாத்தம்

அனுதாத்தம் காண்க.

அநுபூதி

அனுபவ ஞானம் (வேதா. சூ. 151). முருகனுடன் தாம் கண்டஅநுபவஞானத்தை அருணகிரிநாதர் பாடியது, கந்தர் அநுபூதி என்னும்தோத்திரநூல். (L)

அநுப்பிராசம்

‘வழிஎதுகை’ காண்க.

அநுமந்திரு சம்பிரதானம்

விருப்பாய் ஏற்றல். நான்காவது வேற்றுமைப் பொருளாகிய கொடைகொள்வோனால் அனுமதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுதல். இஃது ஆர்வக்கோளிஎனப்படும். (வீ. சோ.)எ-டு : ஆசிரியன் மாணாக்கனுக்குக் கசையடி கொடுத் தான் – இதுமாணாக்கன் திருந்துதல் வேண்டும் என்று விரும்பிக் கொடுத்தமையானும்,மாணாக் கனும் தன்னலம் கருதி அதனை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டமையானும்இப்பெயர் பெற்றது. (பி. வி. 13)

அநுராகமாலை

அனுராகமாலை காண்க. (இ. வி. பாட். 104)

அநுவாதம்

முன்னர்க் கூறப்பட்ட ஒருசெய்தியையே பின்னரும் பிறிதொரு காரணம்
பற்றி எடுத்துக்கூறுதல் கூறியது கூறல் என்ற குற்ற மாகாது, அநுவாதம்
என்னும் வழிமொழிதலாய் அடங்கும்.
எ-டு : ‘
அன் ஆன் அள் ஆள் அர் ஆர்
பம்மார்
அஆ குடு துறு என் ஏன் அல்
அன்’ (நன். 140).
என, அன் என்பதனைப் படர்க்கை ஆண்பால் விகுதியாதல் காரணத்தால்
முன்னர்க் கூறித் தன்மையொருமை விகுதி யாதல் காரணத்தால் பின்னரும்
கூறுதல் கூறியது கூறல் என்னும் குற்றமாகாது, வழிமொழிதல் என்னும்
அநுவாத மாம்.
‘கூறின பின்னும் கூறின சில; அவை
அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக’
என்னும்
இலக்கண
க் கொத்து 7 உரையினை
நோக்குக.

அநுவாதம்

ஒருமுறை ஒரு நிமித்தத்தால் முன்னர்ச் சொன்னதை மீண்டும் ஓரிடத்துவேறொரு நிமித்தத்தால் கூறுதல். இஃது இலக்கண நூல்களில் அண்மைநிலையும்தெளிவும் கருதிக் கைக் கொள்ளப்படும் நூற்புணர்ப்பு. இது கூறியது கூறல்என்னும் குற்றமாகாது; வழிமொழிதல் என்னும் சிறப்பேயாம். (இ. கொ.7)

அநேகவற்பாவி

பன்மைப்பொருளில் வரும் எண்தொகை. பஞ்சபாண்டவர், மூவேந்தர் – போல்வனஎடுத்துக்காட்டாம். (பி. வி. 21)‘பன்மொழி ஒப்புத்தொகை’ என்னும் துவிகு சமாசத்திற்கு முக்கோக்கள் எனஉதாரணங்காட்டுவார் வீரசோழிய உரையாசிரியர் (கா. 46)

அந்தணர் வருணம்

பன்னிரண்டு உயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும், மறையோர்வருணத்திற்குரிய எழுத்தாம். ஒற்று எனப் பொதுப்படக் கூறினும் உயிரொடுகூடிய மெய் என்றே கொள்ளப்படும். (இ. வி. பாட். 14)

அந்தம் தமக்கு இல்லாதன

தெய்வமும் பேடும் ஆகிய அவ்விருவகையும், நரகர் – அலி -மகண்மா-முதலியவையும் தம் பொருள் அறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடையஅல்லவாயினும், உயர்திணைக்குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும்.வருமாறு :தேவன் வந்தான் – தேவி வந்தாள் – தேவர்வந்தார்; பேடன் வந்தான் -பேடி வந்தாள் – பேடர் வந்தார்; நரகன் வந்தான் – நரகி வந்தாள் – நரகர்வந்தார்; அலி வந்தான் – அலி வந்தாள் – அலியர் வந்தார்; மகண்மாவந்தாள்; பேடு வந்தது – பேடுகள் வந்தன; தேவன்மார் – தேவர்கள் ;தேவியர் – தேவிமார் – தேவிகள் ; பேடன்மார் – பேடர்கள் – பேடியர் -பேடிமார் – பேடிகள் – என்றாற் போல் வருவனவும் கொள்க. (இ.வி. 165)

அந்தரகணம்

செய்யுட்கணத்து ஒன்று இது. இதற்குரிய நாள் புனர்பூசம்; பயன்வாழ்நாள் நீக்கம். ஆதலின் ஆகாயகணமாகிய இதற்குரிய ‘கருவிளங்காய்’முதற்பாடலின் முதற்சீராக வைத்துப் பாடார். (இ. வி. பாட். 40 உரை)

அந்தர்ப்பாவித கருமம்

அகநிலைச் செயப்படுபொருள். வந்தான் என்பது வருதலைச் செய்தான் எனப்பொருள்படுதலின், வருதல் என்பது அகநிலைச் செயப்படுபொருள். (பி.வி.12)

அந்தர்ப்பாவிதணிச்

ணிச் என்பது பிறவினை விகுதியாகும். அந்தர்ப்பாவிதம் என்பது மறைதல்
என்னும் பொருளது. எனவே, அந்தர்ப்பா- விதணிச் என்பது பிறவினைவிகுதி
மறைந்திருப்பதாம்.
தெரிவித்து என்ற சொல்லில் பிறவினையைக் காட்டும் விவ் விகுதி
வெளிப்படையாக உள்ளது. தெரிந்து என்ற சொல் தெரிவித்து என்று பொருள்
தருமிடத்துப் பிறவினை விகுதி மறைந்துள்ளது.
தபு என்பது ‘நீ சா’ என்ற பொருளில் தன்வினையாம்; ‘நீ ஒன்றனைச்
சாவப்பண்ணு’ என்ற பொருளில் பிறவினையாம்; பிறவினைப் பொருளில்
‘தபு
வி’ என்பதன்கண் உள்ள பிறவினை
விகுதி மறைந்து வந்தது. அஃது அந்தர்ப்பாவித ணிச் என்பர் பிரயோகவிவேக
நூலார். அவரைப் பின்பற்றிச் சிவஞான முனிவரும், “தெரிவித்து எனற்பாலது
‘தெரிந்து’ என வந்தமை அந்தர்ப்பாவித ணிச் ஆகிய பிறவினை விகுதி தொக்கு
நிற்றல்” என்றார். (பா. வி. சிவ. பக். 10).
அந்தர்ப்பாவித ணிச் என்பது தமிழ்மரபுக்கு ஏலாது என்பதை அரசஞ்
சண்முகனார் விளக்கிக் கூறியுள்ளார். (பா. வி. பக். 218 – 220)

அந்தர்ப்பாவிதணிச்

ணிச் என்பது பிறவினை விகுதி; பிறவினை விகுதி மறைந்து நிற்றல்இது.எ-டு : கோழி கூவிப் போது புலர்ந்தது – என்புழிக் கூவி என்-பதனைக் கூவுவித்து எனப் பிறவினையாக்கிப் பொருள்கொள்ளுதல் ஆம். ‘யானைஒடித்துண்டு எஞ்சிய யா (குறுந். 232) என்புழி ‘எஞ்சிய’ என்ப- தனைஎஞ்சுவித்த எனப் பிறவினையாக்கிப் பொருள் கொள்ளுதல் ஆம். ‘குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்’ (குறள் 171) என்புழிப் ‘பொன்றி’ என்பதற்குப்பொன்றச்செய்து என்று பிறவினை யாக்கிப் பொருள் கொள்ளப்படும். அவ்வாறுபொருள் கொண்டார் பரிமேலழகர்.இவ்வெடுத்துக்காட்டுக்களில் பிறவினை விகுதி மறைந்து நிற்றல் காண்க.(பி. வி. 39)

அந்தாதி

1) அந்தாதித்தொடை; அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும்அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா.கா.7)2) ஒரு பிரபந்தம். ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். -நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதிஎன்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும்.அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமேசிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9)

அந்தாதி

1) அந்தாதித்தொடை; அடிதோறும் – இறுதிக்கண் நின்ற எழுத்தானும்அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா.கா.7)2) ஒரு பிரபந்தம் ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். -நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதிஎன்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும்.அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமேசிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9)

அந்தாதி மடக்கு (முதல் வகை)

முதலும் ஈறும் ஒருசொல்லாய் இடையிடைப் பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதிமடக்கு எனவும், ஒரு சொல்லே முதலும் இறுதியும் ஒவ்வோரடியிலும் நிகழ்ந்தஅந்தாதி மடக்கென வும் அந்தாதி மடக்கு இருவகைத்து.எ-டு : ‘தேனே கமழ்நறுந் திருமகிழ் மாறன்மாறன் சேவடி வணங்கிறை! வரைவாய்;வரைவாய் அன்றெனில் வல்லைநீ இறைவா!இறைவால் வளையைநீப் பினும்வருந் தேனே!’“தேன்கமழும் நறிய மகிழம்பூமாலையை அணிந்த சடகோபன் புகழும் திருமால்அடியை வணங்கும் தலைவ! நீ இவளை மணந்து கொள்வாய். விரைவில்மணக்கவில்லையெனில், நீ இவளை உடன்கொண்டு சென்றாலும் வருந்தேன்; அல்லதுநீ சிலநாள் குறியிடை வருதல் தவிர்ந்தாலும் வருந்தேன்” என்பதுபொருள்.‘மால் தன் சேவடி வணங்கு இறை! வல்லைநீ வரைவாய். அன்றெனின் இறைவா!வளையலை அணிந்தாளொடு நீப்பினும் வருந்தேன்’ என்று பொருள் கொள்க.முதலும் ஈறும் ‘தேனே’ என்ற சொற்கள் வர, அடிதோறும் வேற்றுச் சொற்கள்அந்தாதியாக வந்தவாறு.இதன் இரண்டாம் வகை ‘சந்தொட்டியமகம்’ எனப்படும் அது காண்க.எ-டு : ‘நாகமுற்றவும்’ (மா. அ. 266, பா.751)

அந்தாதித் தொடை (2)

அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும்அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதித் தொடையாம்.எ-டு :‘ உல குடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர் மதிமதி நலன் அழிக்கும் வளங்கெழு முக் குடைமுக்குடை நீழல் பொற்புடை ஆசனம்ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்ஆசனத் திருந்த திருந்தொளிஅறிவனைஅறிவு சேர் உள்ளமோ டருந்தவம் புரிந்துது ன்னிய மாந்தர தென்பப ன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே ’எழுத்து முதலிய நால்வகையானும் அந்தாதித்தொடை நிகழ்ந்தஇச்செய்யுட்கண், முதலடி முதற்சீரும் இறுதியடி ஈற்றுச்சீரும்ஒன்றிவந்தமையால் இத்தொடை மண்டலித்து வந்தது எனப்படும். (யா. கா.17)

அந்தாதித்தல்

அஃதாவது அந்தாதித்தொடைபட நிகழ்தல். ‘அந்தாதித் தொடை’ காண்க.

அந்தாதித்தொடை (1)

மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்து அந்தாதி, மண்டல அசையந்தாதி,செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டலஅடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, செந்நடைமயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடி அந்தாதி, செந்நடை யிடையிட்ட அடிஅந்தாதி – எனப் பன்னிரண்டு அந்தாதித் தொடையாம். (யா. க. 52 உரை)

அந்தில்

அந்தில் என்ற இடைச்சொல், ஆங்கு என்னும் இடப் பொருளை உணர்த்தலும்,அசைநிலைச் சொல் ஆதலும் என்னும் ஈரியல்பினை உடையது.எ-டு : ‘வருமே, சேயிழை அந்தில் கொழுநற் காணிய, இடம். (குறுந். 293) – ‘அந்தில் கச்சின ன் கழலினன்’ (அக. 76) – அசைநிலை (தொ. சொ. 269 நச்., 267 சேனா.உரை)

அனு எழுத்து

மோனை எழுத்து. அ,ஆ, ஐ, ஒள; இ, ஈ, எ, ஏ; உ, ஊ, ஒ, ஓ; ஞ, ந; ம, வ; த,ச – இவை தம்முள் ஒத்த அனு.‘அகரமோ(டு) ஆகாரம் ஐகாரம் ஒளவாம்;இகரமோ(டு) ஈகாரம் எஏ; – உகரமோ(டு)ஊகாரம் ஒஓ; ஞநமவ தச்சகரம்ஆகாத அல்ல அநு’ யா. கா. 43 உரை மேற்.

அனுகரணம்

வேறு ஒன்று செய்வது போலச் செய்யும் இசைக்குறிப்பு. எழுத்து அல்லாதமுற்கும் வீளையும் இலதையும் அனுகரண மும் முதலாக உடையன செய்யுளகத்துவந்தால், அவற்றைச் செய்யுள்நடை அழியாமல், அசை முதலியன பிழையாமல்கொண்டு வழங்கப்பெறும்.‘மன்றலங் கொன்றை மலர்மலைந்(து) உஃகுவஃ(கு)என்று திரியும் இடைமகனே’இதன்கண், இருமல் ஆகிய அனுகரணஒலி உஃகுவஃகு என அசையும் சீரும்வெண்டளை பிழையாமல் வெண்பாவில் பயின்றவாறு. (யா. வி. பக். 395,396)

அனுட்டுப்பு

சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப் பட்டவற்றுள்‘அனுட்டுப்பு’ ஒன்று; அடிதோறும் இஃது எட்டு எழுத்துப் பெறுவது.எ-டு : ‘அணிதங்கு போதி வாமன்பணிதங்கு பாத மல்லாற்றுணிபொன் றிலாத தேவர்மணிதங்கு பாத மேவார்’எழுத்தெண்ணுமிடத்துப் புள்ளியெழுத்தும் ஆய்தமும் விலக்குண்ணும்.(வீ. சோ. 139 உரை)

அனுதாத்தம்

படுத்தல் ஒசை. இது நால்வகை ஓசைகளுள் ஒன்று. ஏனையன உதாத்தம்,ஸ்வரிதம், ப்ரசயம் என்பன. (தமிழ்நூலார் முறையே எடுத்தல், நலிதல்,விலங்கல் என்ப.)

அனுமோனை

இனஎழுத்தால் வரும் மோனைத்தொடை; ‘அனு எழுத்து’க் காண்க.அ ஆ ஐ, ஒள; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.இ, ஈ, எ, ஏ; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.உ, ஊ, ஒ, ஓ – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ஞ, ந; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ம, வ; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ச, த – இவை தம்முள் ஒத்த அனுமோனை.(யா. கா. 43 உரை)

அனுராகமாலை

தலைவன் கனவின்கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்துஇனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கற்கு உரைத்ததாக நேரிசைக்கலிவெண்பாவில் பாடுவதொரு பிரபந்தம். (இ. வி. பாட். 104)

அனுவதித்தல்

முன்னர்க் கூறியதனைப் பின்னுமொரு பயன்கருதி வழி மொழிதல்.


ணன முன்னும் வஃகான் மிசையும் மக்
குறுகு
ம்’
(நன். 96) என்று முன்னர்க்
கூறியதனை,
‘லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீர் ஒற்றாம் செய்யு ளுள்ளே’
என அனுவதித்தார்.
இவ்வநுவாதத்தின் பயன் : மகரம் குறுகுதற்குத் தொடரும் னகரமும்
ணகரமும் முறையே லகரமும் ளகரமும் திரிந்தன என்பதும், இம்
மகரக்குறுக்கம் செய்யுட்கண்ணது என்பதும் உணர்த்துதல். (நன். 120.
சங்கர.)
‘அநுவாதம்’ காண்க.

அன் சாரியை வருமிடங்கள்

அ) உருபு புணர்ச்சி: அது இது உது என்னும் சுட்டுப் பெயர்கள்
அன்சாரியை இடையே வர உருபொடு புணர்ந்து, நிலை மொழி உகரம் கெட, அது +
அன் + ஐ
> அத் + அன் + ஐ = அதனை
என்றாற் போலப் புணரும். (தொ. எ. 176 நச்.) ஏழ் என்பது உருபோடு
அன்சாரியை பெற்றுப் புணரும். ஏழனை என வரும். (194) குற்றியலுகர ஈற்று
எண்ணுப்பெயர்கள் அன்சாரியை பெற்று உருபொடு புணரும். ஒன்றனை, இரண்டனை
என வரும். (198) யாது என்ற வினாப்பெயரும், அஃது இஃது உஃது என்ற
சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்கும். அஃது
முதலியவற்றின் ஆய்தம் கெடும். யாதனை, அதனை, இதனை, உதனை என வரும்.
(200)
ஆ) பொருட்புணர்ச்சி: அது இது உது என்பன பொருட் புணர்ச்சிக்கண்
அதன்கோடு – இதன்கோடு – உதன்கோடு – என்றாற் போல அன்சாரியை பெற்று
முடியும். (263); ஏழ் என்னும் எண்ணுப்பெயர், ஏழன்சுக்கு – ஏழன்காயம் –
என்றாற் போல அன்சாரியை பெறும். (388); குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்,
ஒன்றன் காயம் – ஒன்றன் சுக்கு – என்றாற் போல அன் சாரியை பெறும்.
(419); பெண்டு என்னும் சொல்லும் பெண் டன்கை என்றாற் போல் அன்சாரியை
பெறும். (421); யாது அஃது இஃது உஃது என்பன உருபு புணர்ச்சி போலப்
பொருட் புணர்ச்சிக்கண்ணும் யாதன்கோடு – அதன்கோடு – இதன்கோடு –
உதன்கோடு – என்றாற் போல அன்சாரியை பெறும். (422)

அன்ஈற்று உயர்திணைப்பெயர்விளியேற்குமாறு

அன்ஈறு ‘ஆ’வாகத் திரிந்து விளியேற்கும்.எ-டு : துறைவன் – துறைவா, ஊரன் – ஊராஅண்மைவிளிக்கண் ஈறு கெட்டு அகர ஈற்றதாக விளியேற்கும்.எ-டு : துறைவன் – துறைவ, ஊரன் – ஊரமுறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும்.எ-டு : மகன் – மகனே, மருமகன் – மருமகனேஅவன் இவன் உவன் – என்ற சுட்டுப்பெயர்களும் யாவன் என்றவினாப்பெயரும் விளியேலா. (தொ. சொ. 130,131, 136, 137 சேனா. உரை)

அன்னோர் : சொல்லிலக்கணம்

அன்னோர் என்பது உவம உருபாகிய இடைச்சொல் (அன்ன) முதனிலையாகப் பிறந்தபெயர்.எ- டு : ‘நும்ம னோரு(ம்) மற்று இனையர் ஆயின்எம்ம னோர்இவண் பிறவலர் மாதோ’ (புற. 210)(தொ. சொ. 414 நச். உரை.)

அன்பு அருள் ஆசை அறிவு அறியாமையால்துணிதல்

பொருள்களைத் துணிவது பற்றி இ. கொ. மூன்று வகை கூறும். அவையாவனபொருளைப் பொருள் எனல், பொரு ளல்ல தனைப் பொருள் எனல், இது பொருளன்றுஎன்று அறிந்தும் இதுவே பொருள் எனல் – என்பன. இவற்றுள் முன் னதும்பின்னதும் வழு அல்ல; நடுவிலுள்ளது வழுவேயாம்.இதற்குப் புறனடையாக அன்பு முதலியவற்றால் துணியும் திறனும் முன்கூறிய மூன்றனுள் அடங்கும் என்றார். (இ. கொ. 122, 123.)பொருளல்லதனைப் பொருள் என்றல் அறியாமையால் துணிதல். பொருளைப் பொருள்எனல் அறிவால் துணிதல். ஏனையது அன்பு அருள் ஆசை என்னும் இவை காரணமாகத்துணிதல்.

அன்மை துணிபொருளிடத்துக் கூறல்

ஆண்மகன் என்று துணிந்தவழி, பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் எனவும்,பெண்டாட்டி என்று துணிந்தவழி ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி எனவும்,குற்றி என்று துணிந்தவழி மகனன்று குற்றி எனவும், மகன் என்று துணிந்தவழி குற்றி அல்லன் மகன் எனவும், பல என்று துணிந்தவழி ஒன்று அல்ல பலஎனவும், ஒன்று என்று துணிந்தவழி பல அன்று ஒன்று எனவும், துணியப்பட்டபொருள்மேல் அன்மைத்தன்மை வைத்துக் கூறுக. . (தொ. சொ. 25 கல். உரை)நச்சினார்க்கினியரும் இவ்வாறே கொள்வர். (25)

அன்மை முதலியன பண்பும் குறிப்பும்ஆதல்

பண்பு – ஒரு பொருள் தோன்றுங்காலத்து உடன்தோன்றி அது கெடும்துணையும்நிற்பது. குறிப்பு – பொருட்குப் பின்னர்த் தோன்றிச் சிறிது பொழுதுநிகழ்வது.எப்பொருளும் அல்லன் இறைவன் – பண்பு.அவன்தான் இவன் அல்லன் – குறிப்பு.எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் – பண்பு.மாற்றார் பாசறை மன்னன் உளன் – குறிப்பு.பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன் – பண்பு.மாற்றார் பாசறை மன்னன் இலன் – குறிப்பு.மெய் வலியன் (வன்மை) – பண்பு.‘சொலல் வல்லன்’ (வல்லுதல்) – குறிப்பு.(தொ. சொ. 216 நச். உரை)

அன்மொழிக்கு அன்மொழி

‘தகர ஞாழல்’ என்ற தொடர் தகரமும் ஞாழலும் கூட்டி அமைத்த சாந்து என்றபொருளில் அன்மொழித்தொகை யாகிப் பின்னர் அச்சாந்தைப் பூசினவள் என்றுபொருள் பட்டு அன்மொழிக்கு அன்மொழி ஆயிற்று. வடமொழியில், துவிரேபம்என்பது இரண்டு ரகரங்களைக் கொண்ட சொல் என அன்மொழித்தொகையாகிப் பின்னர்அத்தகைய சொல் லான பிரமரத்தை – வண்டினை-க் குறித்தலால் இஃது அன்மொழிக்கு அன்மொழியாம். (பி.வி. 24)

அன்மொழித்தொகை

தொக்க இருமொழியும் அல்லாத அன்மொழி மறைந்து நின்று பொருளைவெளிப்படுப்பது அன்மொழித்தொகை. இவ்வன்மொழித் தொகை, வேற்றுமைத்தொகை -வினைத் தொகை – பண்புத் தொகை – உவமத்தொகை – உம்மைத்தொகை – என்றதொகைகளின் புறத்து வரும்.இவ்வன்மொழித்தொகையும் இருபெயரொட்டாகுபெயரும் ஒன்று என்பர் சிலர்;வெவ்வேறு என்பர் சிலர்.வினைத்தொகையும் உவமத்தொகையும் பிறந்து அவற்றின் புறத்தேஅன்மொழித்தொகை பிறக்கும் என்று தொல்காப் பியனார் வெளிப்படையாகக்கூறவில்லை; பண்புத்தொகை உம்மைத் தொகை வேற்றுமைத்தொகை – என்னும்இவற்றின் ஈற்றில் நின்று இயலும் அன்மொழித்தொகை என்றே கூறுகிறார். (418நச்.)இவ்வன்மொழித்தொகையை விட்ட அன்மொழித்தொகை, விடாத அன்மொழித்தொகை -எனப் பகுப்பர் சிவஞான முனிவர். (சூ.வி.)‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்’ (குறள் 570) – இதன்கண் கடுங்கோல்: அன்மொழித்தொகை; கோலின் கடுமை அரசன் மேல் நின்றது. ஆதலின் இதுபண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.‘தகரஞாழல் பூசினார்’ – தகரஞாழல்: இவையிற்றை உறுப் பாக அமைக்கப்பட்டசாந்தினையும் தகரஞாழல் என்ப ஆதலின் அன்மொழித்தொகை ஆயிற்று.‘தூணிப்பதக்கு: அளவிற்குப் பெயராதலின்றி அளக்கப்படும் பொருளுக்குப்பெயராயவழி அன்மொழித்தொகையாம். (தூணியும் பதக்கும்) இவை உம்மை பற்றிவந்தன.பொற்றொடி என்பது வேற்றுமைத்தொகை; பொற்றொடி வந்தாள் – எனஅதனையுடையாட்குப் பெயராகியவழி (வேற் றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த)அன்மொழித் தொகை யாம். பொன், தொடியையுடையாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ்விரண்டு சொல்லும் அதனையுடை யாளைக் குறித் தவாறும் அறிக.துடியிடை : துடி இடையை விசேடித்தலன்றி, உடையாளை விசேடியாது.தாழ்குழல் : ‘தாழ்ச்சி’ குழலை விசேடிக்குமேயன்றி உடை யாளைவிசேடியாது. ஆதலின் இவ்விரண்டன் புறத்தும் அன்மொழித்தொகை பிறவாது. இவைஇருபெயரொட்டு ஆகுபெயராம். (தொ. சொ. 413 தெய். உரை)குறிப்பால் பொருள் தரும் தொடர்களில் அன்மொழித் தொகையும் ஒன்று.வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத் தொகைமொழிகளுக்கும் புறத்தே அவையல்லாதபுறமொழி களாகிய உருபு தொகுதல் அன்மொழித் தொகையாம்.எ-டு : பூங்குழல் – தாழ்குழல் – கருங்குழல் – துடியிடை – தகரஞாழல்எனவரும். இவை விரிவுழி, பூவையுடைய குழலினை யுடை யாள் – தாழ்ந்தகுழலினை யுடையாள் – கருமையாகிய கூந்தலை யுடையாள் – துடியன்ன இடையினையுடையாள்- தகரமும் ஞாழலும் விராய்ச் சமைந்த சாந்து – என விரியும்.(நன். 269, 369 சங்.)

அன்மொழித்தொகை : சொற்பொருள்

அன்மொழித்தொகை என்பதற்குப் பொருள், குறிக்கப்படு பொருளுக்கு அல்லாதமொழி எனவும், அப்பொருள் தொக்கு நிற்றலின் தொகை எனவும் கொண்டு,குறிக்கப்படு பொருளுக்கு அல்லாத மொழியில் அப் பொருள் தொக்கு நிற்பதுஎன்பதே சிறந்து காட்டிற்று. இனிப் பயனிலைக்கு அல்லாத மொழி அன்மொழிஎனவும், அப்பயனிலைக்கு உரிய பொருள் அதனில் தொக்கு நிற்றலின் தொகைஎனவும் கொண்டு அன்மொழித்தொகை எனப்பட்டது எனினும் அமையும். (நன். 410இராமா.)

அன்மொழித்தொகை ஈற்று நின்று இயலுதல்

முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்துதான்பின்னர்ப் பண்புத்தொகை முதலியவற்றான் கூறக் கருதியவழி, அத்தொகைகளின்இறுதிச் சொற்கண் எழுந்து படுத்தலோசையான் அத்தொகைச் சொல் தோன்றிப்பொருள் விளக்குதலின், அன்மொழித் தொகை ஈற்று நின்று இயலுவதாயிற்று.எ-டு : வெள்ளாடை – தகரஞாழல் – பொற்றொடிஇவை வெள்ளாடை உடுத்தாள் – தகரஞாழல் பூசினாள் – பொற்றொடி தொட்டாள் -என இறுதிச்சொற்கண் எழுந்து படுத்தலோசையான் தொகை தோன்றியவாறு.(தொ. சொ. 418 நச். உரை)

அன்றி, இன்றி என்பனவற்றின் முடிபு

இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனக் குற்றியலுகர ஈறாகத்
திரிந்தவழி, வருமொழி வன்கணம் வரினும் இயல் பாகப் புணரும்.
‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’
(பொ. 111. ந
ச்.)
‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’
(பொ. 151
. நச்.)
‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்
(பொ. 151. நச்.)
‘தாஇன்று உரிய தத்தம் கூற்றே’
(பொ. 241. நச்.)
எனத் தொல்காப்பியத்தில் ‘இன்றி’ என்பது செய்யுளின்பம் கருதி
‘இன்று’ என வழங்கப்பட்டது.
‘அதுவன்றி’ என்பது அதாஅன்று எனத் திரிந்து வந்துள்ளது.
இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரமும் காதுக்கு இனிமையாக
இராமையான், ஒன்று உகரமாக மாறியிருத்தல் வேண்டும். அன்றி என்பதிலுள்ள
இகரம் உகரமாகத் திரிய வேண்டியதின்று. அது பிற்காலத் திரிபு
போலும்.
இன்றி என்ற வினையெச்சம் ‘விருந்தின்றிக் கழிந்த பகல்’, என்றாற்
போல, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ‘இன்று’ என
வினைமுற்றுப் போல ஈறுதிரிந்த வடிவம் கொண்டவழி, வருமொழி வன்கணம் மிகாது
இன்னோசை பயத்தலின், செய்யுளில் பயில வழங்கப்பட்டது. அந்நிலை ‘அன்றி’
என்பதற்கும் பின்னர் ஏற்பட்டது.
வருமாறு : நாளன்றிப் போகி –

நாளன்று போகி’
(புறநா. 124)
உப்பின்றிப் புற்கை உண்க –

உப்பின்று புற்கை உண்க’
(
தொ. எ. 237 நச்.)

அன்றி, இன்றி என்ற வினையெச்சம்

அன்றி, இன்றி என்ற குறிப்பு வினையெச்சங்கள் வன்கணம் வரின்
பொதுவிதியால் வல்லெழுத்து மிக்கு முடியும். இகர ஈறு உகரமாகத் திரிந்து
அன்று – இன்று – என்றாகுமிடத்து இயல்பாகப் புணரும்.
எ-டு : ‘நாளன்று போகி’
(புறநா. 124),
‘உப்பின்று புற்கை யுண்க’
(நன். 173)

அன்று, அல்ல என்னும்சொல்லிலக்கணம்

அன்று, அல்ல – என்பன ஒருமையும் பன்மையும் உணர்த்தும் அஃறிணைக்குறிப்புமுற்றுக்களாம். இவை ‘உழுந்து அன்று பயறு’, ‘உழுந்தல்ல பயறு’எனப் பண்புணர்த்தியும், ‘வேலன் று வென்றி தருவது’ (குறள் 546), ‘படையல்ல வென்றி தருவன’ எனக் குறிப்புணர்த்தியும்நிற்கும். (தொ. சொ. 222. நச். உரை)

அபாதான காரக பேதம்

எல்லையாகிய அவதி என்னும் ஐந்தாம் வேற்றுமை. நீக்கம் என்பது இதன்பொருள். இஃது அசலம் (நிலையானது), சலம் (இயங்குவது) என இருபொருளில்வரும். எதனின்நின்றும் நீக்கம் நிகழுமோ, அது சலமும் அசலமும் ஆம்.எ-டு : -வெகிச்சீமை என்னும் புறப்பாட்டு எல்லை என்பதும் இதற்குப்பொருளாம்.எ-டு : ‘குற்றத்தின் நீங்கி’ (கு. 502) -குற்றத்தின் எல்லையி னின்றும் நீங்கி;‘சிறுமையின் நீங்கிய’ (கு. 98) – சிறுமையின்எல்லையி னின்றும் நீங்கிய (பி. வி. 11)

அபிகிருதி

எழுத்து வகையால் 26 பேதமாம் எனப்பட்ட சந்தத்துள் ஒன்றாம்.அடிதோறும் 25 எழுத்துக்கள் ஒற்று நீக்கி எண்ணப் படுமாறு காண்க.எ-டு : ‘அங்குலிய மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழஅந்தமுனி தேடுமினெனாப்புங்கமொடு புங்கமுற எய்தவன் எடுத்தமைபுகன்றருகு நின்றவரைநீர்இங்கித னிலைத்தொகைகள் யாவுமுரு வப்பகழிஏவுமினெ னாமுன்விசயன்துங்கவில் வளைத்தொரு கணத்தினில் வடத்திலைதுளைத்தனனி லக்கில் தொடையால்.’ (வில்லி. வாரணா. 51)இவ்வாறு காய்ச்சீரும் விளச்சீரும் சிறுபான்மை கனிச்சீரும்அறுசீரடியுள் விரவுமாறு நாலடியால் நிகழும் விருத்த யாப்பினுள்இச்சந்தம் பயிலுமாறு காண்க.(வீ. சோ. 139 உரை)

அபிவியாபகம்

எள்ளின்கண் எண்ணெய், தயிரின்கண் நெய் – என்றாற் போல, ஒருபொருளின்கண் பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக்கலந்திருத்தல். (பி. வி. 13)‘அதிகரண காரகபேதம்’ காண்க.

அபேத சட்டி

ஆறாம் வேற்றுமையின் தற்கிழமை வகை. ‘எனதுயிர்’ என்னுமிடத்து, யான்வேறு என்னுயிர் வேறு இல்லை. ‘இராகு வினது தலை’ என்பதும் அது. அபேதம் -வேறாதல் இன்மை.(பி. வி. 17)

அபேத சம்பிரதானம்

ஈவோன் ஏற்போன் – என்பாரிடை வேற்றுமையின்றி ஒருவனே இருவரும் ஆதல்.இப்பொருளில் வரும் நான்காம் வேற்றுமை.எ-டு : ‘அருமறை சோரும் அறிவிலான்செய்யும்பெருமிறை தானே தனக்கு’ (குறள். 847)இக்குறளில், ‘அறிவிலான் தானே தனக்குத் தீங்கு செய்து கொள்வான்’ எனவருதலின், ஈவோனும் ஏற்போனும் ஒருவனே ஆதல் காண்க. (பி. வி. 13)

அப்பர் தேவாரயாப்பு

திருநேரிசை – அறுசீர் விருத்தம்; திருவிருத்தம் – கட்டளைக்கலித்துறை; திருக்குறுந்தொகை – கலிவிருத்தம்; திருத்தாண் டகம் -எண்சீர் விருத்தம்; பழமொழியாப்பு – பழமொழியை இறுதியில் கொண்ட அறுசீர்விருத்தம்; சரக்கறைத் திரு விருத்தம் – கட்டளைக் கலித்துறையாலமைந்தவருக்கமாலை; இவையன்றித் கலித்தாழிசைப் பதிகம் இரண்டும் ( iv 3, 4) ஆசிரியத்துறைப் பதிகம் ஒன்றும் ( iv .20) சிறப்பாக அமைந்தன. நான்காம் திருமுறைத் தொடக்கத்தில் பலவகைஅறுசீர் விருத்தங்களும் தரவு கொச்சகமும் கலிவிருத்தமும் ஈரடிக்கலித்தாழிசையும் (அங்கமாலைப் பதிகம்) எனப் பலதிற யாப்புக் காணலாம்.(இலக். தொகை. முன். பக். 83-85)

அப்பிரதானம்

சிறப்பின்மை. ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் – என்பதில், ஒடுஉருபுஉயர்ந்த சொல்லொடு வந்தது. இது தமிழ்மரபு. வடமொழிமரபு மாறிவரப்பெறும்.எ-டு : மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான். (பி. வி. 16)

அப்பும் உப்பும் கலந்தமை போல்வது

தனிமெய்யின் மாத்திரை அரை, உயிர்க்குறிலின் மாத்திரை ஒன்று;
உயிர்நெடிலின் மாத்திரை இரண்டு. ஆயின் உயிர் மெய்க்குறிலின் மாத்திரை
ஒன்று; உயிர்மெய் நெடிலின் மாத்திரை இரண்டு. நீர் தனித்து அளந்தபோதும்
நாழியாய் அரைநாழி உப்பைக் கலந்தபோதும் ஒன்றரை நாழியாய் மிகாதவாறு
போல்வது, ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் பெற வேண்டிய
உயிர்மெய்க் குறிலும் உயிர் மெய் நெடிலும் முறையே ஒரு மாத்திரையும்
இரு மாத்திரை யும் பெறும் நிலை. நீர் உப்பின் சுவையது ஆயினவாறு போல,
உயிர்மெய்யிலுள்ள உயிரும் மெய்க்குரிய வன்மை – மென்மை – இடைமை – என்ற
ஒலிகளைப் பெறும் என்பது. (தொ. எ. 10, 47 நச். உரை)

அப்பொருட்கிளவி

அப்பொருள் என்றது, அன்ன பொருளை; ‘இவ்வாடையும் அந்நூலான் இயன்றது’என்றது போல. இச்சொற்றொடர் நான்காம் வேற்றுமை முடிக்கும் சொல் பற்றியநூற்பாவில் உள்ளது. ‘அப்பொருட் கிளவியும்’ என்றதனான், பிணிக்குமருந்து – நட்டார்க்குத் தோற்கும் – அவற்குத் தக்காள் இவள் -உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர் – என்பன போல்வன கொள்ளப்படும்.(தொ. சொ. 76 சேனா. உரை)இச்சொற்குப் பொருள் இது, அவற்குச் சோறுண்டு, நினக்கு வலி வாள்,அவ்வூர்க்கு இவ்வூர் காதம், ‘ மனைக்குப் பாழ் வாணுதல்இன்மை’, (நான். 20) ‘போர்க்குப் புணைமன்’ (பு.வெ. 80), ‘ த ன் சீர்இயல் நல்லாள்தான் அவற்குஈன்ற மைந்தன்’ – என்றாற் போல்வன கொள்க. (தொ. சொ. 77 நச். உரை)மக்கட்குப் பகை பாம்பு – போல்வன கொள்க. (தொ. சொ.77 ப. உரை)இவ்வூர்க்கு அவ்வூர் காதம், நாளைக்கு வரும், இவற்குத் தகும் இது,இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன் – பிறவும் இந்நிகரனஎல்லாம் கொள்க. (தொ. சொ. 74 தெய். உரை)பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு – என்பன போலவருவனவும் கொள்க. (தொ. சொ. 74 இள. உரை)

அமிதசாகரர்

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய செய்யுள் இலக்கணநூல்களைஇயற்றியவர். யாப்பருங்கல நூற்பாயிரத் தில், ‘அளப்பருங் கடற்பெயர்அருந்தவத் தோனே’ என்னும் அடி, இவரது பெயரினைக் குறிப்பாற் சுட்டும்.இவர் சமண சமயத்தவர் என்பது இந்நூல்களின் சிறப்புப் பாயிரத்தில்போதரும். இவரது காலம் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்ப.

அமிர்தபதி

இஃது ஒரு காவியம். “சிந்தாமணி சூளாமணி போல்வதொரு காப்பியம்அமிர்தபதி. இதன் முதற்பாட்டு வண்ணத்தான் அமைந்தது. நேரசை முதலாகவருவதால் இப்பாடலின் ஒவ்வோரடியும் பதினான்கு எழுத்துடையது.” என்றசெய்தி யாப்பருங்கல விருத்தியுரையில் போதரும்.(யா. வி. பக். 520,521)

அமுத வெழுத்து

காப்பியத்தின் முதற்செய்யுள் முதல்மொழியிலும், தசாங்கத் தயலிலும்வருதற்குரிய மங்கல எழுத்து அமுத எழுத்தாம். க ச த ப ந ம வ – என்னும்ஏழொடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்குஉயிர்எழுத்தும் முன்மொழிக்கு ஆம் அமுத எழுத்துக்கள். (இ. வி. பாட்.19, 21)

அமுதெழுத்து

‘அமுதவெழுத்து’க் காண்க.

அம் ஆம் எம் ஏம் விகுதிகள் முதலியன

அம் ஆம் – என்ற இந்த இரண்டு விகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள்முன்னிலையிடத்தாரையும், எம் ஏம் ஓம் – என்ற இந்த மூன்று விகுதிகளையும்ஈறாக உடைய மொழிகள் படர்க்கையிடத்தாரையும், உம் இடைச்சொல்லை ஊர்ந்த க டத ற ஒற்றுக்களாகிய கும் டும் தும் றும் என்னும் இந்நான்குவிகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள் முன்னிலை படர்க்கை என்னும் இரண்டுஇடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினை,வினைக் குறிப்பு முற்றாம்.உம்மைகளை ஐயவும்மையாக்கி, அம் ஆம் – என்பன முன்னிலையாரையாயினும்படர்க்கையாரையாயினும், உண்டனம் உண்டாம் யானும் நீயும் – எனவும்,உண்டனம் உண்டாம் யானும் அவனும் – எனவும் தம்மொடு படுக்கும் என வும்;ஆக்கவும்மைகளாக்கி அம் ஆம் என்பன முன்னிலை யாரையும் படர்க்கையாரையும்உண்டனம் உண்டாம் யானும் நீயும் அவனும் – என ஒருங்கு தன்னொடு படுக்கும்- எனவும் காண்க. (நன். 332 சங்.)

அம் முப்பாற் சொல்

உயர்திணைப்பொருள் பற்றி வரும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்மூன்று பகுதிய என்பது. ஆண் பெண் அலி – ஆண்பன்மை – பெண்பன்மை – ஆண்பெண் பன்மை – அலிப்பன்மை – இவையெல்லாம் தொக்க பன்மை – எனப்பலவகைப்படுமால் எனின், ஆசிரியர் பொருள் நோக்கிக் கூறினாரல்லர்;சொல்முடிபு மூவகை என்றே கூறினார். ஆண் பன்மையும் பெண்பன்மையும்இவ்விரண்டும் தொக்க பன்மையும் ‘வந்தார்’ என்றாற் போலவே முடிதலின்,உயர் திணை முப்பாலினுள் அடங்கின. முப்பாற்சொற்களாவன ஆண் – பெண் – பலர்என்பன. (தொ. சொ. 2. தெய். உரை)

அம்புலி

1) சந்திரன் (கலி. 80) (2) அம்புலிப்பருவம் (L)

அம்புலிப் பருவம்

பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஏழாம்பருவம் இது சாம தான பேததண்டங்கள் அமைத்துப் பாடப்படுவது.

அம்போதரங்க ஒத்தாழிசை :பெயர்க்காரணம்

அம்பு + தரங்கம் – நீர் அலை. அம்புதரங்கம் எனற்பாலது அம்போதரங்கம்என மருவிற்று. நீர்த்திரைபோல் ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கிவரும்அழகிற்றாய் ஒழுகும் அம்போதரங்க உறுப்பினை உடையதாய், தரவு தாழிசைஅம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புக்களொடுநிகழ்வது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலியாம். (யா. க. 80 உரை)

அம்போதரங்க ஒத்தாழிசை பற்றியஒருசாரார் கருத்து

தரவும் சுரிதகமும் ஆறடியால் வந்து, நான்கடியாய்த் தாழிசை மூன்றுவந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, அதன்பின் இரண்டடி யால் இரண்டு பேரெண்வந்து, ஓரடியால்நான்கு இடை யெண் வந்து, சிற்றெண் இருசீரால் எட்டாய், அவை இரண்டு கூடிஓரடியே போன்று, இம் முறை இம்மூன்று அம்போ தரங்க உறுப்பும் பெற்றுமுடிவது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும்,தரவும் சுரிதகமும் ஐந்தடியால் வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியால்வந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, அதன்பின் இரண்டு ஓரடியால் பேரெண் அறுசீரால் வந்து, இடையெண் நான்கு ஓரடியால் முச்சீராய் வந்து, எட்டுச் சிற்றெண் ஒரு சீரும்ஓரசையுமாய், இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது இடையளவுஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும்,தரவும் சுரிதகமும் நான்கடியால் வந்து, ஈரடியால் மூன்றுதாழிசைவந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, ஓரடியால் இரண்டு பேரெண் வந்து, இரு சீரால் நான்குஇடையெண் வந்து, ஒரு சீரால் எட்டுச் சிற்றெண் வந்து இம்மூன்றுஅம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா எனவும் வேண்டுவர். (ஓரடி நான்கு அளவெண் என்றலே ஏற்றது.)தலையளவு எ-டு : ‘அலைகடல் கதிர்முத்தம்’ யா. வி.பக். 308இடையளவு எ-டு : பிறப்பென்னும்’ யா. வி.பக். 310கடையளவு எ-டு : ‘கடையில்லா’ யா. வி. பக். 311இவை தலை இடை கடையளவுப் பெருந்தேவபாணிகள் (யா. க. 83 உரை).இம்மூன்றும் அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா; ஏனைய அளவழிஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. (யா. க. 83)

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

அராக உறுப்பை நீக்கி, தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம்என்னும் ஐந்துறுப்பானும் வருவதொரு கலிப்பா (வீ. சோ. 117.)கரைசாரக் கரைசார ஒருகாலைக்கு ஒருகால் சுருங்கி வரு கின்ற கடலலைபோல, நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடி யும் ஆகிய அசையடிகளைத்தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே தொகுத்து, தரவு தாழிசை அம்போதரங்கம்தனிச் சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடையதாய் வருவது அம்போதரங்கஒத்தாழிசைக் கலிப்பா. அசையடிதான் நாற்சீர் ஈரடியால் இரண்டும்,நாற்சீர் ஓரடியால் நான்கும், முச்சீர் ஓரடியால் எட்டும், இருசீர்ஓரடியால் பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து; எட்டும், பதினாறும்எனப்பட்டவை நான்கும் எட்டுமாய்க் குறைந்து வரப்பெறினும் அமையும். (யா.கா. 31, உரை)

அம்போதரங்க ஒருபோகின் உறுப்புக்கள்

எருத்து எனப்படும் தரவு, கொச்சகம் எனப்படும் இடையுறுப் புக்கள்,அராகம், சிற்றெண், அடக்கியல் – வாரம் – எனப்படும் சுரிதகம் ஆகஅம்போதரங்க ஒருபோகு ஐந்துஉறுப்புக்களை யுடையது. இதன் உறுப்புக்களில்தாழிசையும் பேரெண்ணும் இடம்பெறவில்லை. (தொ. செய். 152 நச்.)இனி யாப்பருங்கல விருத்தியின் எடுத்துக்காட்டால் பெறு மாறு :ஈரடித் தாழிசை 3 ; நாற்சீர் ஈரடி அராகம் 1; நாற்சீர் ஓரடியாகிய பேரெண்2; இருசீர் ஓரடியாகிய இடையெண் 4; சீரும் அசையுமாக நின்ற இருசீர்ஓரடியாகிய அளவெண் 8 ; தனிச்சொல்; நேரிசை ஆசிரியச் சுரிதகம் – எனஇவ்வாறு வருவது அம்போதரங்க ஒருபோகு ஆகும். இதனுள் தரவுநீக்கப்பட்டவாறு உணரப்படும். (யா. வி. பக். 342, 343)

அம்போதரங்க ஒருபோகு

அகநிலை ஒத்தாழிசை, ஏனை ஒத்தாழிசை என ஒத்தாழிசை இருவகைப்படும்.அவற்றுள் ஏனை ஒத்தாழிசை வண்ணகம், ஒரு போகு என இருவகைப்படும். அவற்றுள்ஒரு போகு, கொச்சக ஒரு போகு எனவும் அம்போதரங்க ஒரு போகு எனவும்இருவகைப்படும். அம்போதரங்க ஒரு போகின் இடையளவு அறுபதடியும், தலையளவுஅதன் இரட்டி யாகிய நூற்றிருபதடியும், கடையளவு பதினைந்தடியும் எனக்கொள்க. பிற செய்திகள் உரிய தலைப்பிற் காண்க. (தொ. செய். 147, 151நச்.)மயேச்சுரரால் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ண கமும் என்றிரண்டுதேவபாணியும் திரிந்து, தரவு ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், தாழிசைஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்ட மூவகைவண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கியஉறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதக மும் பெற்று வருவன ‘ஒருபோகு’எனப்படும். அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின அம்போதரங்க ஒருபோகு ஆம்.(யா. வி. பக். 342)

அம்போதரங்க ஒருபோகுக்கு அடியளவு

அம்போதரங்க ஒருபோகு எருத்து, கொச்சகம், அராகம், சிற்றெண்,அடக்கியல் என்னும் தன் ஐந்து உறுப்புக்களும் கூடத் தலையளவு 120 அடி,இடையளவு 60 அடி, கடையளவு 15 அடி என்னும் எல்லையைப் பெறும். எனவேதலையளவு 61 முதல் 120 அடி, இடையளவு 31 முதல் 60 அடி, கடையளவு 15 முதல்30 அடி அளவாம்.120 அடியுடைய அம்போதரங்க ஒரு போகிற்கு, தரவு 20 அடி; அடக்கியல் 20அடி; சிற்றெண் 16 அடி, அராகம் 4 அடி, ஆக 60 அடி; பத்தடிக் கொச்சகம்ஆறு என 60 அடி; ஆக 120 அடியாம். 60 அடியுடைய அம்போதரங்க ஒருபோகிற்கு,தரவு 10 அடி; அடக்கியல் 10 அடி; சிற்றெண் 8, அராகம் 2 அடி ஆக 30 அடி;பத்தடிக் கொச்சகம் மூன்று என 30 அடி; ஆக 60 அடியாம்.15 அடியுடைய கடையளவு அம்போதரங்க ஒருபோகிற்கு தரவு 2 அடி; அடக்கியல்2 அடி; இரண்டடிக் கொச்சகம் மூன்று என 6 அடி; சிற்றெண் 4 அடி, அராகம்ஓரடி, ஆக 15 அடியாம். இவை இக்காலத்து வீழ்ந்தன. (தொல்.செய். 151நச்.)

அம்போதரங்கம் (1)

நீர்த்திரை போல ஒருகாலைக் கொருகால் சுருங்கி வரும் அடிகளையுடையஅம்போதரங்க உறுப்பானது அசையடி, பிரிந்திசைக்குறள், சொற்சீரடி, எண்என்னும் பெயர்களை யுடைத்தாய், பேரெண் (இரண்டடி), சிற்றெண் (ஓரடி),இடையெண் (முக்காலடி), அளவெண் (அரையடி) என்னும் பகுப்பினை யுடைத்தாய்,தாழிசை உறுப்பின் பின்னர் ஈரடியால் இரண்டும், அதன் பின்னர்நாற்சீரடியால் நான் கும், அதன் பின்னர் முச்சீரடியால் எட்டும், அதன்பின்னர் இரு சீரடியால் பதினாறுமாய் வரும். (யா. க. 83, உரை)நாற்சீர்ஈரடி இரண்டு – பேரெண்; நாற்சீர்ஓரடிநான்கு – அளவெண்,முச்சீர்ஓரடி எட்டு – இடையெண்; இருசீர்ஓரடி பதினாறு – சிற்றெண்.எட்டும் பதினாறுமாகச் சொல்லப் பட்டவை நான்கும் எட்டுமாகச்சுருங்கியும் வரப்பெறும். (யா. கா. 31 உரை)சிறுகாக்கைபாடினியார் ஓரடி, முக்காலடி, அரையடி என்ற மூவகை எண்களையேகொண்டார். (யா. வி. பக். 306)

அம்போதரங்கம் (2)

கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று அம்போதரங்கம். பல உறுப்புக்களும்முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் முடுகியும் கடைக்கண்விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்கம் என்றார். (தொ.செய். 148நச்.) அம்போ தரங்கம், பேரெண் அளவெண் இடையெண் சிற்றெண் என்னும்இவ்வுறுப்புக்களைக் குறிக்கும் என்பது பின்னூலார் கருத்து.

அம்போதி

பாட்டின் உட்பொருள் (சங். அக.) (L)

அம்ம

அம்ம என்னும் இடைச்சொல் ‘யான் ஒன்று கூறுகிறேன், கேள்’ என்றுஒருவர்க்குக் ‘கேட்பிக்கும்’ பொருண்மையை உணர்த்தி நிற்கும். இதனைத்தொல்காப்பியனார் ‘உரைப் பொருட் கிளவி’ (எ. 210, 212 நச்.) என்றுகுறிப்பிடுவர். இது படர்க்கையானை முன்னிலையான் ஆக்கும் விளிப்பொருட்-கண் வரும். இஃது அம்மா என நீண்டும் தன் பொருளை உணர்த்தும்.எ-டு : அம்மா கொற்றா. (தொ. சொ. 278, 155 நச். உரை)

அம்மனை மடக்கு

1) கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக்கூறுவதாக இயற்றும் பாட்டு. கலம்பகப் பிரபந்தத்துள் இஃது அம்மானைஎன்னும் உறுப்பாக ஐந்தடியால் வெண்டளை யாப்பிற்றாக நிகழும்.2) அம்மனையைக் கைக்கொண்டு ஆடும் மகளிர் இருவருள் ஒருத்திதலைவன்ஒருவனை வஞ்சப்புகழ்ச்சி அணியால் ஒருவாறு வருணித்தலும், மற்றவள்அச்செய்யுள் இடைப் பட்ட அடியை மடக்காய் அந்தாதித்து அவ்வருணனை பற்றிவினவுதலும், அதன்பின் முதலாமவள் தான் கூறியது பிழை யாதபடிசிலேடைவாய்பாடு அமைய விடை கூறுதலும் ஆகிய அம்மனைப் பாடலில் காணப்படும்மடக்கு அம்மனை மடக்காம். (மா. அ. 267)எ-டு : ‘தேன்அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்ஆனவர்தாம் ஆண்பெண் அலிஅலர்காண் அம்மானை’என்றாள் முதலாமவள். இரண்டாமவள் அவ்விரண்டாம் அடியினைஅந்தாதித்து ‘ஆனவர்தாம் ஆண்பெ ண் அலி அலரே ஆமாகில், சானகியைக்கொள்வாரோ தாரமா அம்மானை ’ என வினவினாள். உடனே முதலாமவள் அதற்கு விடையாக,‘தாரமாக் கொ ண்டதுமோர் சாபத்தால்அம்மானை’ என, சாபம் என்ற சொல் வில் எனவும், சாபமொழி எனவும் இருபொருள்படச் சிலேடையாய் விடைகூறி முடித்தவாறு. (திருவரங்கக் 26)அம்மானையாடும் மகளிர் மூவராகக் கொண்டு கூற்று நிகழ்த்துவதாகக் கூறலும்உண்டு; முன்றா மவள் சிலேடை யாக விடை கூறுவதாகக் கொள்க.

அம்மானை (1)

1) அம்மானையாட்டம் (இ.வி. 807) 2) அம்மானை ஆடும் கருவி : ‘அம்மானைஆடி அருளே, (மீனாட்சி அம்மானை 1) 3) ஒருவகைப்பாடல் (திருவாசகம் 8) 4)அம்மானைப் பருவம் ஆகிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழ்வது 5)கலம்பகஉறுப்பு. (இ. வி. 812)ஐந்தடிக் கலிப்பாப் போன்ற யாப்பில், 2ஆம் 4 ஆம் அடி ஈற்றில்தன்பெயர் குலவப் பாடப்படும் அம்மானைப் பாட்டில், சொல்லுதல் – மறுத்தல்- விடை – யென்னும் மூன் றும் அமையும். ஈற்றில் வரும் விடைமொழியுள்இருபொருள் படச் சிலேடை அமைதல் இயல்பு. முப்பொருள் நாற்பொருள் படச்சிலேடை மொழியின் சிறப்பு மிகும். கலிப்பா வரையறை யாகக் கூட்டியும்,எதுகையின்றித் தனித்தனியே சேர்த்தும், காதை அம்மானை என்று சிலர்பாடினர். கொச்சகச் சீர்களால் பாடும் அம்மானை இழிவுடையது. (அறுவகை.யாப்பிலக்கணம் 29-32)திருவாசகத்திலுள்ள அம்மானைப் பாடல் வெண்டளை பிறழா அடிகளைக் கொண்டு,முதலடிக்கும் அடுத்த அடிக் கும் தளை கோடல் இன்றி ஓரெதுகையான் ஆறடியான்முற்றுப்பெற்று இறுதியில் அம்மானாய் என்ற சொல்லுடன் முடிவது.திருவாசகப் பகுதியாகிய திருஅம்மானையில் 20 பாடல்கள் உள்ளன.எ-டு : ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை //வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் // கல்லைப் பிசைந்துகனியாக்கித் தன்கருணை // வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் //தில்லை நகர்ப்புக்குச் சிற்றம் பலமன்னும் // ஒல்லை விடையானைப்பாடுதும்காண் அம்மானாய்’பெண்பாற் பிள்ளைத்தமிழில் உள்ள அம்மானைப் பருவத்துப் பாடல்கள்ஆசிரியவிருத்தங்களாக அமைவன.

அம்மானை (2)

மங்கையர் மூவர் அம்மானை ஆடுவர். முதலாமவள் பிரபந்தத் தலைவனுடையசிறப்பைக் கூறுவாள். இரண்டாமவள் அதன்கண் ஐயுற்று ஒரு வினாவினைஎழுப்புவாள். மூன்றா மவள் அவ்வையத்தை அறுத்து மொழிகையில், சிலேடைவாய்பாடு நயம் செய்யும். இவ்வாறு பாடும் அம்மானை என்னும் பாடல் கலம்பகஉறுப்புக்களுள் ஒன்று.“திருவரங்கப் பெருமானே எல்லாப் பொருளுமானவர்; அவர் ஆண் பெண் அலிஅல்லர்” என்றாள் முதலாமவள். “அங்ங னம் ஆயின் அவர் சீதையை மனைவியாகக்கொண்டது யாங்கனம்?” என்று வினாவினாள் இரண்டாமவள். “சீதையை மனைவியாகக்கொண்டது ஒரு சாபத்தினால்” என்றாள் மூன்றாமவள். ‘சாபம்’ என்பது பிருகுமுனிவரிட்ட சாபம் எனவும், சிவபெருமானுடைய வில் எனவும் இருபொருள்படும். (சிவதனுசை முறித்ததால் இராமன் சீதையை மணந்தமைவெளிப்படை.) (திருவரங். 26)

அம்மானை (3)

2, 4, 5 ஆம் அடிகளில் அம்மானை என்ற சொல் ஈற்றில் அமைய வரும்.அம்மானை 5 அடிக் கலிப்பாப் போல்வது. அதனில் சொல்லலும் மறுத்தலும்விடையும் அமையும். அம்மானையின் விடைமொழி சிலேடையாக அமையும்.ஓரடியெதுகையின்றி இரண்டிரண்டடி எதுகையுடைய கலிப்பாவாக அம்மானைப்பாடல்அமைதலு முண்டு. கொச்சகச்சீரால் பாடும் அம்மானை இழிபுடையது. (அறுவகை.யாப்பு. 31, 32)சந்த ஆசிரிய விருத்தமாகப் பாடப்படும் அம்மானைப் பருவம்பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழும். ஈற்றடி அம்மானைஆடியருளே போன்ற வாய்பாட்டால் முடியும்.

அம்மானை வரி

மகளிர் அம்மானை ஆடும்போது பாடும் ஒருவகையான இசைப்பாடல். இஃதுஐந்தடிப் பாடலாக நிகழும்.(சிலப். 29 : 17 – 20)வெண்டளை பயின்ற அளவடியால் நிகழும் இப்பாடல்களில் இரண்டு நான்குஐந்தாமடிகளின் இறுதிச்சீர் அம்மானை என முடிவுறும். இரண்டாமடிமூன்றாமடியிலும் அந்தாதித்து வரும்.எ-டு : ‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்// ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை? // ஓங்கரணம் காத்த உரவோன்உயர்விசும்பில் // தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை! //சோழன் பூம்புகார் பாடலோர் அம்மானை!’ (சிலப். 29: 17)

அம்மானைப்பருவம்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் எட்டா வது. முன்னர்உள்ள ‘அம்மானை’ காண்க.

அம்மானைப்பாட்டு

அம்மானை ஆட்டத்தில் பாடும் பாட்டு. ‘சிறுபான்மை பாவைப்பாட்டும்அம்மானைப்பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன ஆயின, (தொ. பொ.461 பேரா.)அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃதுஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானைஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானைசோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை’ – முதலிய 4 பாடல்(சிலப். 29 : 16-19)இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடிஇறுதிச்சீர்க்கும் அடுத்த அடி முதற்சீர்கும் தளைகோடல் கூடாது.‘வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானைவடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக் கெட்டும்’ (சிலப். 29 :18)முதலடியும் அடுத்த அடியும் தளைகொள்ளின் கலித்தளை வருதல் காண்க.

அம்முச் சாரியை திரியுமாறு

அம்முச் சாரியையின் மகரம் வருமொழி முதற்கண் ககர சகர தகரங்கள்
வருமிடத்து முறையே ஙகர ஞகர நகரங்களாகத் திரியும்; வருமொழி முதற்கண்
மென்கணமும் இடைக்கண மும் வருமிடத்தே கெடும். உயிர்க்கணம் வருமிடத்தே
மகரம் கெடுதலும் அம்முச் சாரியை முழுதும் கெடுதலும் ஆம். (பகரத்திற்கு
இனமெல்லெழுத்து மகரம் ஆதலின், பகரம் வருமொழி முதற்கண் வருமிடத்து
அம்முச் சாரியையின் மகரம் இயல்பாகவே நிற்கும்.)
எ-டு : புளி + அம் + கோடு = புளிய
ங் கோடு; புளி + அம் + செதிள் =
புளிய
ஞ் செதிள்; புளி + அம் + தோல் =
புளிய
ந் தோல்; புளி + அம் + ஞெரி =
புளிய ஞெரி; புளி + அம் + யாழ் = புளிய யாழ்; புளி + அம் + இலை =
புளிய விலை (வகரம் உடம்படுமெய்); புளியிலை (யகரம் உடம்படுமெய்); (புளி
+ அம் + பழம் = புளியம்பழம் – இயல்பு)(தொ. எ. 129, 130
நச்.)

அம்முச் சாரியை வருமிடங்கள்

பொருட்புணர்ச்சிக்கண் கீழ்க்கண்ட சொற்கள் நிலைமொழி- யாம்.
புளி என்னும் மரப்பெயர் – புளியங்கோடு, புளியஞெரி
(தொ. எ. 244 நச்.)
எரு, செரு என்னும் சொற்கள் – எருவங்குழி, செருவக்களம் (260)
பனை, அரை, ஆவிரை என்னும் மரப்பெயர்கள் – பனங்காய், அரையங்கோடு,
ஆவிரங்கோடு (283)
ஆண் என்ற மரப்பெயர் – ஆணங்கோடு (304)
எகின் என்ற மரப்பெயர் – எகினங்கோடு (336)
னகர ஈற்று இயற்பெயர்முன்னர் மக்கள் முறைப்பெயர் – கொற்றங்கொற்றன்,
சாத்தங்கொற்றன் (350)
பீர் என்னும் சொல் – பீரங்கொடி (365)
பூல், வேல், ஆல் என்னும் மரப்பெயர்கள் – பூலங்கோடு, வேலங்கோடு,
ஆலங்கோடு (375)
குமிழ் என்ற மரப்பெயர் – குமிழங்கோடு (386)
குற்றுகர ஈற்றுச் சொற்கள் ஆகிய ஏறு, சூது, வட்டு, புற்று முதலியன –
ஏறங்கோள், சூதம்போர், வட்டம் போர், புற்றம் பழஞ்சோறு முதலாகப்
புணரும். (417)
இவற்றுள், செரு என்பதன்முன் அம்மின் இறுதி கெடும்; பனை ஆவிரை
என்பவற்றின் ஈற்று ஐகாரம் கெடும்; னகர ஈற்று இயற் பெயரின் ஈற்று அன்
கெட்டு அம்முப் புணரும் என்பன கொள்க.

அம்முன் இகரயகரம் ஐ ஒத்து இசைத்தல், அம்முன் உகரவகரம் ஒள ஒத்து இசைத்தல்

உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், அஇ – அஉ – என இங்ஙனம் கூறிய
குற்றுயிர்களை வலிந்து மயக்கிக் கூறின் ஐகார ஒளகாரம் போல்
இசைத்தலானும், குற்றொற்றுக்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலின்
இரண்டுமாத்திரையவாகிய ஐகார ஒளகாரங்களோடு ஒவ்வாமையின் ஒலிவகையான்
மயக்கிக் கூறின் அவை ஒத்திசைத்தலானும், அவற்றுள்ளும் வகரம் பிறப்பு
வேறுபாட்டான் ஒலியும் ஒருபுடை ஒத்தலானும் ‘எய்தின்’ என்றார்.
வருமாறு : அஇ = ஐ, அய் = ஐ; கஇ = கை, கய் = கை.
அஉ = ஒள, அவ் = ஒள; கஉ = கௌ, கவ் = கௌ (நன்.125 சங்கர.)

அம்மை

நூல்வனப்புக்கள் எட்டனுள் ஒன்று. சின்மையவாய் மெல்லிய வாகியசொற்களாலும், இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தாலும் அடி பலவாய்வருதலின்றி நிகழ்வது அம்மை எனப்படும். அங்ஙனம் வந்தது பதினெண் கீழ்க்கணக்கு. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவனபோன்றும், இடையிடையே அவ்வாறு அல்ல ஆகியும், பதினெண்கீழ்க்கணக்குநூல்கள் நிகழுமாறு காண்க. ஆசாரக் கோவையுள் ‘ஆரெயில் மூன்றும்’ என்னும்தற்சிறப்புப் பாயிரம் ஆறுஅடியால் சிறுபான்மை வந்தது. ஆறடியளவிற்குறையப் பாடல் வருவதே பெரும்பான்மை.அம்மை – குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்பது அம்மை. (தொ. செய். 235நச்.)

அயம் ‘கலு’ ராஜா ஆஸீத்

‘இவன்தானோ அரசனாக இருந்தான்?’ என்பது இத் தொடரின் பொருள். இதன்கண்‘கலு’ என்பது வேண்டாச் சொல்; தொடருக்கு அணி செய்யவே இது சேர்ந்தது.இது ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்’ என்று தமிழ்வழக் கிலும் வரும்.ஒப்பில்போலியாக வருவது போன்றது ‘கலு’ என்பது. (பி. வி. 50)

அரசசட்டம்

இன்று இறந்துபட்ட கணிதநூல்களுள் ஒன்று. பதினாறு வரி கருமம், ஆறுகலாச வருணம், இரண்டு பிரகரணச்சாதி, முதகுப்பையும் ஐங்குப்பையும் என்றஇப்பரிகருமம், மிச்சிரகம் முதலிய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளைஎடுத்துக் கூறுவது. அவினந்தமாலை, வருத்தமானம் முதலியனவும் அரசசட்டம்போன்றவையே. (யா. வி. பக். 569)

அரசஞ் சண்முகனார்

கி.பி. 1868 முதல் 1911 வரை 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தபெரும்புலவர்; தந்தையார் அரசுப்பிள்ளையாதலின், அரசஞ் சண்முகன் என்றுதந்தையது பெயருடன் தமது இயற் பெயரையும் கொண்டார்; தமிழ் இலக்கணஇலக்கியங்களில் துறை போயவர்; வடமொழிப் புலமையும் உடையவர்; நுண்மாண்நுழைபுலம் மிக்கவர்; பண்டைய உரையாசிரியர் களிடம் பெருமதிப்புக்கொண்டவர்; நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்.கவிதைபாடும் சிறப்பும் அவர்பாலுண்டு. இவர் இயற்றியனவாகக் கூறப்படும்நூல்கள் முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசை இருநூறு, பஞ்ச தந்திரவெண்பா, மதுரைச் சிலேடை வெண்பா, மதுரை மீனாட்சி யம்மை சந்தத்திருவடிமாலை, திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி,தொல்காப்பியப் பாயிரம் சண்முக விருத்தி, ஆகுபெயர் அன்மொழித் தொகைஆராய்ச்சி என்பன. இவற்றுள் இன்று திருக்குறள் சண்முக விருத்திகாணப்பட்டிலது. இவரெழுதிய வேறுசில நூல் களும் இதுபோது கிட்டில.திருக்குறளும் தொல்காப்பிய முமே இவரது புலமைக்கு இருகண்கள் எனலாம்.தொல் காப்பியச் சண்முக விருத்தியை நல்வினையின்மையால் தமிழ்நாடுஇழந்துவிட்டது.

அரசன் விருத்தம்

இஃது ஒரு பிரபந்தவகை. “பாவாலும் பொருளாலும் அள வாலும்பிறகாரணத்தாலும் பிரபந்தங்கள் வேறுபடப் பெயர் பெறுவன உள” என்னும்இச்சூத்திரத்துள், பிற காரணத்தால் பெயர் பெறும் நூல்களுள் ஒன்றாக‘அரசன் விருத்தம்’ இடம் பெறுகிறது. (தொ. வி. 283 உரை)அரசனைச் சார்ந்துவரும் இலக்கியங்களில் அரசன் விருத்த மும் ஒன்று:மலை, நீர், நாடு, நிலம் ஆகியவற்றின் வருணனை களும், அரசனுடையதோள்மங்கலம், வாள்மங்கலம் ஆகியனவும், பத்துக் கலித்துறையும் முப்பதுவிருத்தமும் கலித்தாழிசையுமாகிய யாப்பினால் பாடி முடிப்பதொருபிரபந்தம். இது முடிபுனைந்த வேந்தர்க்கு ஆம். (நவ. பாட். மிகைச்செய்யுள்கள் – 1 சது. 5)

அரசர் பா

ஆசிரியப்பா. ஆற்றுப்படை அரசர்பாவால் பாடப்படுவது என, இப்பெயர்இச்சூத்திரத்தே ஆட்சிபெற்றுள்ளமை காண்க. (இ. வி. பாட். 113)

அரசர் வருணம்

த,ந,ப,ம,ய,ர என்னும் ஆறும் அரசர்க்கு உரியன. (மெய்யெழுத் தன்றிஉயிர்மெய்யே கொள்ளப்படும்) (இ. வி. பாட். 15)

அரவப் பொருளில் வரும் உரிச்சொல்

கம்பலை சும்மை கலி அழுங்கல் – என்ற நான்கும் அரவம் ஆகியஇசைப்பொருண்மையினை உணர்த்தும்.வருமாறு : ‘ களிறுகவர் கம்பலை போல’ (அக. 96), ‘கலிகொள் சும்மை ஒலிகொள்ஆயம்’ (மதுரை. 263), ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபுஎடுத்த’ (அக. 11). ‘உயவுப்புணர்ந் தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) (தொ. சொ. 349 நச். உரை)

அரவுச் சக்கரம்

நாகபந்தம் எனப்படும் இது சித்திரகவி வகையுள் ஒன்றாகும். (யா. வி.பக். 533)

அராகமும் முடுகியலும்

அராகம் முடுகியல் என்னும் இரண்டும் குற்றெழுத்துக்கள் தொடர்ந்துவருதலின் நிகழுமேனும், அராகமாவது பிறிதொன்றனொடு கூட்டி அற்றுவிடாமல்தானே தனித்து அற்று நிற்பதாம். அது பரிபாடல் செய்யுள் உறுப்பு என்பர்.முடுகியல் வேறு அடிகளொடு கூடிச் செய்யுள் அமைத்தற்கு உதவுவதாய்த் தான்தனித்து நில்லாது பிற அடிகளொடு கூடிவருவதாம். ஆசிரியத் தளையொடுமுடுகிய அடி கலிஅடி ஆகும். (தொ. செய். 67 நச்.)

அராகம்

கலிப்பா வகைகளின் உறுப்புக்களுள் ஒன்று. அராகம், வண்ணகம், முடுகுஎன்பன ஒருபொருட்கிளவிகள். அராகம் அளவடி முதல் பல அடியால் வந்து நான்குமுதல் எட்டு அடிவரை நடக்கும். (தொ. வி. 230)மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது, குற்றெழுத்துப் பயின்றநடைபெறுதலின் அறாது கடுகிச் செல்வது. பிறிதொன்று பெய்துஆற்றவேண்டும்துணைச் செய்யதாகிய பொன்னை அராகித்தது (-பொடியிட்டுநகைசெய்யத் தக்கதாய் உருக்கியது) என்ப ஆதலின், அராகம் என்னும் பெயர்கலியுறுப்பிற்கு வந்தமை ஒப்பின் ஆகிய பெயராம். அராகம் தனித்துவருதலின்று. (தொ. பொ. 152 பேரா.)

அராகம் : சொற்பொருள்

அராகம் இசையின்றித் தாளம் பட நடக்கும் நடை. இது வட சொல். நான்குசீர்களான் முடுகி வருவனவற்றை அராகம் என்றும், ஐந்து முதல் ஏழுசீரளவும் வருவனவற்றை முடுகியல் என்றும் வழங்குதல் மரபு. (தொ. செய்.121 ச. பால.)

அராகம்: மறுபெயர்கள்

அராகம் எனினும், வண்ணகம் எனினும், முடுகியல் எனினும், அடுக்கியல்எனினும் ஒக்கும். அராக அடி அளவடி முதலாக எல்லா அடியானும் வரப்பெறும்.அடி வரையாது சிறுமை நான்கடி, பெருமை எட்டடி; இடையிடை எத்துணையாயி னும்வரப்பெறும். ஒரு சாரனவற்றுள் அகவலும் வெள்ளை யும் விரவி அராகமாயும்அருகி வரப்பெறும்.(யா. க. 84 உரை)

அரி என்னும் உரிச்சொல்

அரி என்னும் உரிச்சொல் ஐம்மை (மென்மை) என்ற குறிப்புணர்த்தும்.‘அரிமயிர்த்திரள்முன்கை’ (புற. 11) என வரும்.(தொ. சொ. 356 சேனா. உரை)

அரிகண்டம் பாடுதல்

கழுத்திற் கத்திகட்டி எதிரி கொடுக்கும் சமத்திக்கு இணங்கப்பாடுதல் (சமத்தி – சமஸ்யை) (L)

அரிமா நோக்கு

சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரை யும் நோக்குமது
போல, இறந்த சூத்திரத்தினோடும் எதிர்ந்த சூத்திரத்தினோடும் ஒரு
சூத்திரம் இயைபுபடக் கிடக்கும் நிலை. எ-டு : தொ.எ. 88 நச். (நன். 18
மயிலை.)

அரில் தப நாடல்

இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன் றாகவே
உறுதியாகக் கொள்ளும் திரிபும் ஆகிய மயக்கங்கள் நீங்க ஆராய்தல். (தொ.
எ. 102 நச்.)

அரில் தபத் தெரிதல்

அரில் – மயக்கம்; தப – கெட.
இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன்றாகப்
பிறழக்கொள்ளும் திரிபும் ஆகிய மயக் கங்கள் நீங்குமாறு தெரிவித்தல்.
தெரிதல் என்ற தன்வினை தெரிவித்தல் என்ற பிறவினைப் பொருளது என்ப. (தொ.
சி. பாயி.)
கடா அறத் தெரிந்து கூறி – இள.
குற்றமற ஆராய்ந்து கூறி – நச்.
குற்றமறத் தெரிவித்து – சிவ. பா. வி., எ.கு.
‘அரில்தபத் தெரிந்து’ என்பதனைத் தன்வினையாகக் கொண்டு, நூற்குச்
சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி (ஒன்றனுள் பிறிதொன்று கலவாத
மரபினையுடைய தனது நூல்முறையைக் காட்டி) என்று உரை கூறுவர், அரசஞ்
சண்முகனார். (பா. வி. பக். 161)
“தெரிந்து என்பதற்கு விளங்கி என்று பொருள்கூறி மரபின் வினை
ஆக்காது, கடாஅறத் தெரிந்து கூறி எனவும், குற்றமற ஆராய்ந்து கூறி
எனவும், தெரிவித்து எனவும் ஆசிரியன் வினையாக்கி அம்மூவரும் உரைத்தார்.
கடாஅறத் தெரிதலும் குற்றமற ஆராய்தலும் நூல் செய்யுங்காலை
வேண்டப்படுதல் அன்றி நூல் அரங்கேற்றுங்காலை வேண்டப்படாமையானும், ஓர்
ஏதுவுமின்றிக் ‘கூறி’ என்னும் சொல் வருவித்தல் கூடாமை யானும்,
‘தெரிவித்து என்பது தெரிந்து என நின்றது’ எனல் இலக்கணம் ஆகாமையானும்
அவருரை பொருந்தா என்பது.” (பா. வி. பக். 215).
சண்முகனார் கருத்தால், ‘நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற
விளங்கி, ஒன்றனுள் ஒன்று கலவாத மரபினையுடையது தொல்காப்பியம்’ என,
‘அரில் தபத் தெரிதல்’ என்பது தொல்காப்பிய நூலுக்கு அடைமொழி ஆகும்.

அரிவை

இருபது வயது முதல் இருபத்தைந்து வயது ஈறாக உள்ள பெண். (பிங்.941); [ இச்சொல் பொதுப்படப் பெண் என்றும் பொருள்படும் (பிங்.945) ]. (இ. வி. பாட். 102)

அருங்கலச்செப்பு

குறள்வெண்பாவால் இயன்ற சமண மதத்து நீதிநூல். (L)

அருங்கலநூல்

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் சார்பாக வந்த நூல்களுள்ஒன்று. இதன்கண் மறைப்பொருள் உபதேசம் காணப்படுவதாயும் அதுவல்லார்வாய்க் கேட்டு உணரத் தக்கதாயும் யாப்பருங்கல விருத்திகூறுகிறது. இந்நூல் இப்போது வழக்கில் இல்லை. (யா. வி. பக். 491)

அருங்கலை விநோதன்

நூல் ஆராய்ச்சியையே விளையாட்டாக உடையவன். ‘அருங்கலை விநோதன்அமராபரணன்’ (நன். சிறப். 4) (L)

அருங்கவி

சித்திரகவி. அது காண்க. (தொ. பொ. 146 நச்.)

அருத்தாபத்தி

இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறியவழி, அச்சொல் தனக்குஇனமாகிய பிற பொருளைக் குறிப்பால் உணர்த்துதல். அறம் செய்தான் துறக்கம்புகும் – என்றால், மறம் செய்தான் துறக்கம் புகான் எனவும், ‘இழிவறிந்துஉண் பான்கண் இன்பம்’ எய்தும் (குறள் 946) – என்றால், கழிபேர் இரையான்இன்பம் எய்தான் – எனவும் இனம் செப்புதல்.மேலைச்சேரிக் கோழி அலைத்தது – என்புழிக் கீழைச்சேரிக் கோழிஅலைப்புண்டது என்பதும், குடம் கொண்டாள் வீழ்ந்தாள் – எனவே குடம்வீழ்ந்தது என்பதும் இனம் செப்பின. ‘ஆ வாழ்க அந்தணர் வாழ்க’ முதலாயின,ஒழிந்த விலங்கும் மக்களும் சாக முதலாகப் பொருள்படாமையின் இனம்செப்பாதன. (தொ. சொ. 61 நச். உரை)கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டலும் குடம் வீழ்தலும் பொருளாற்றலான்பெறப்பட்டன அன்றிச் சொல்லாற்ற லான் பெறப்பட்டன அல்ல. ஆ வாழ்கமுதலியவற்றில் சொல்லுவான் ‘ஒழிந்தன சாக’ என்று கருதினானாயின், அவையும் இனம் செப்புவனவாம். (தொ. சொ. 60 சேனா. உரை)அருத்தாபத்தி இனம் செப்புவது, தன்னொடு மறுதலைப் பட்டு நிற்பதொன்றுஉள்வழி யாயிற்று; மறுதலைப்பாடு பல உள்வழிச் செப்பாது. ஆவிற்கு மறுதலைஎருமை ஒட்டகம் எனப் பலவுள. அந்தணர்க்கு மறுதலை அரசர் வணிகர் வேளாளர்எனப் பலரும் உளர். அங்ஙனம் பல மறுதலை உள்வழிச் செப்பாது என்றுகூறினார் நச்சினார்க்கினியர். சேனாவரையரும் இளம்பூரணரும் காட்டியஎல்லா எடுத்துக் காட்டுக்களையும் தந்தனர் கல்லாடரும் பழைய உரைகாரரும்.(தொ. சொ. 61 நச். கல். உரை, ப. உ.)தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும்பொருளும் காட்டி நின்றது. இஃது இனம் செப்பியது.அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றிஅந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது.இனம் அல்லாதன செப்புதலும் உரித்து. குடம் சுமந்தான் விழுந்தான்என்றவழிச் சுமவாதான் விழுந்திலன் என்ற பொருளே யன்றிக் குடம் வீழ்ந்ததுஎன்றவாறும் காண்க. (தொ. சொ. 59 தெய். உரை)

அரை என்ற மரப்பெயர் சாரியை பெறுதல்

அரை (அரச மரம்) என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப்
பொருட் புணர்ச்சிக்கண் அரையங் கோடு – அரைய நுனி – அரையவட்டு
என்றாற்போல, அச் சாரியைக் குரிய திரிபுகள் பெற்றுப் புணரும். (தொ. எ.
283. நச்.)

அரைச்சந்தம்

தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய, தத்தா, தாத்தா,தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா என்ற பதினாறன்மேல் ன – னாஎன்ற உயிர்மெய் வரினும், இவ்வுயிர் மெய்யோடு த் – ம் – என்ற ஒற்றுவரினும், த் – ம் – என்பன அப்பதினாறு ஒலிகளுடன் தனித்து வரினும் அரைச்சந்தமாம்.தத்த என்பது – தத்தன, தத்தனா, தத்தனாத், தத்தனத், தத்தனம்தத்தனாம், தத்தத், தத்தம் – எனவும்தாத்த என்பது – தாத்தன, தாத்தனா, தாத்தனத், தாத்தனாத், தாத்தனம்,தாத்தனாம், தாத்தத், தாத்தம் எனவும் அரைச் சந்தமாகி வரும். ஏனையஓசைகளோடும் ஒட்டிக்கொள்க. (செய்யு. பக். 36)

அர்த்தப் பிராணன்

எழுத்துக்களின் ஒலி பற்றி வடமொழியில் மகாப் பிராணன் – அற்பப்பிராணன் – அர்த்தப் பிராணன் – என்ற பிரிவுண்டு. முதலாவதற்கும்இரண்டாவதற்கும் இடைப்பட்டது அர்த்தப் பிராணன். ய ர ல வ ள என்னும்எழுத்துக்கள் இவை. (பி. வி. 4)

அறம் போற்றி வாழ்மின் : உருபுவிரியுமாறு

அறம் போற்றி – அறத்தைப் போற்றி – எனப் போற்றப்படுவது அறம் என்னும்பொருளும் பட்டது. அறத்தால் போற்றி வாழ்மின் – எனப் போற்றப்படுவார்தாம்என்னும் பொருளும் பட்டது. (போற்றத்தக்காரை அறத்தால் போற்றி வாழ்மின்என்றவாறு.) (தொ. சொ. 93 தெய். உரை)

அறாயிரம் : புணர்ச்சி முடிபு

ஆறு + ஆயிரம்
> அறு + ஆயிரம்
> அற் + ஆயிரம் =
அறாயிரம்.
ஆறு என்பது நெடுமுதல் குறுகி அறு என்றாக, ஈற்று முற்றுகரம் கெடவே,
அது வருமொழி ஆயிரத்தொடு புணர்ந்து அறாயிரம் என்றாயிற்று. (எ. ஆ. பக்.
175).

அறிசொல்

அறிதற்குக் கருவியாகிய சொல், பொருளை அறிதற்குச் சொல் கருவியாகநின்று உதவுதலின். (தொ. சொ. 2 நச். உரை)

அறிதற் கருவி

கருவியாவது வினைமுதல் தொழிற்பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது.அக்கருவி இயற்றுதற் கருவியாகிய காரகக் கருவியும், அறிதற் கருவியாகியஞாபகக் கருவியும் என இருவகைப்படும். ஞாபகமாவது அறிவிப்பது. உணர்வினான் உணர்ந்தான்; புகையினான் எரியுள்ளது என உணர்ந் தான்: இவற்றிற்குஅறிவு முதற்காரணமாம். ஆகவே, இவை அறிதற் கருவியாகிய ஞாபகக்கருவியாம்.(தொ. சொ. 74 நச். உரை)

அறிந்து செய்வினையும், அறியாதுசெய்வினையும்

இலக்கணக்கொத்து வினைவகை விளக்கத்தில் இவற்றைக் குறிக்கும்.தூசியொடு பாலைப் பருகினான் என்புழி, பாலைப் பருகுதல் அறிந்துசெய்வினை; தூசியையும் சேர்த்துப் பருகுதல் அறியாது செய்வினையாம். (இ.கொ. 81)

அறிபொருள் வினா

இது வினாவகை மூன்றனுள் ஒன்று. ஏனையன அறியான் வினாவும் ஐயவினாவும்.அவ்விரண்டும் வழாநிலை. அறிந்த பொருளை வினாவுதல் தக்கதன்று எனினும் ஒருகாரணம் பற்றி வினவுதலின் இது வழுவமைதியாம்.இவ்வறிபொருள் வினா, அறிவு ஒப்புக் காண்டல் – அவனறிவு தான் காண்டல்- மெய் அவற்குக் காட்டல் – என மூவகைத்து.(தொ. சொ. 13 சேனா. உரை)கற்சிறார் தம்முள் கற்ற செய்தி பற்றி வினாவி விடைகோடல் அறிவொப்புக்காண்டலாம். ஆசிரியன் மாணாக்கனை அவன் தன்மாட்டுக் கற்ற பொருள்பற்றிவினாவுதல் அவனறிவினைத் தான் உணர்ந்து கோடற்கும், அவன் பிறழ உணர்ந்தவழிஉண்மையான செய்தியை அவற்குக் காட்டற் கும் ஆதலின், இவ்வறிபொருள்வினாவின் மூவகையும் ஒருபயன் நோக்கி அமைந்தன.

அறிபொருள் வினாவின் வேண்டற்பாடு

அறியப்பட்ட பொருளையே வேறு அறிதலும் அறிவுறுத் தலும் முதலியபயன்நோக்கி வினாவுதல் அறிபொருள் வினா. இதன்கண் அறிவு ஒப்புக்காண்டலும், அவன் அறிவு தான் காண்டலும், மெய் அவற்குக் காட்டலும்அடங்கின. இப்பயன் கருதி அறிபொருள் வினாவும் வேண்டற்பாலதே. (தொ. சொ. 13நச். உரை)

அறியான் வினா

வினாவகை மூன்றனுள் முதலாவது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள்வினாவப்படாமையின், பொதுவகை யான் அறிந்து சிறப்புவகையான் அறியலுறுவான்வினாவுவது அறியான் வினா. இவ்வினா வழாநிலை. “இச்சொற்குப் பொருள் யாது?”என்று பொருள் அறியாதான் அறிந்தவனை வினாவுவது அறியான்வினா. வினா,அறியலுறவினை வெளிப்படுப்பது. (தொ. சொ. 13 சேனா. உரை)

அறியாப் பொருள்

ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமை யின், பொதுவகையான்உணர்ந்து சிறப்புவகையான் அறி யாமையின் வினாவுகின்ற வினா அறியாப்பொருள்வயின் வினாவாம். (தொ. சொ. 12 சேனா. நச். உரை)

அறியாப் பொருள்வயின் செறியத்தோன்றும் வினாக்கள்

பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்புவகையான் அறியப் படாத பொருளைவினாவுதற்குரிய வினாச்சொற்கள் யாது, எவன் என்பனவாம்.எ-டு : இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருள்எவன்?இக்காலத்து எவன் என்பது என் எனவும் என்னை எனவும் மருவிற்று. யா -யாவை – யாவன் – யாவள் – யாவர் – யார் – யாண்டு – யாங்கு – என்னும்தொடக்கத்தன திணையும் பாலும் இடனும் முதலாகிய சிறப்பு வகையானும் சிறிதுஅறியப் பட்டன ஆதலின், அவை அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றாமையின்,யாது எவன் – என்ற இரண்டுமே ‘அறியாப் பொருள்வயின் செறியத் தோன்று’வனவாகக் கொள்ளப் பட்டன. (தொ. சொ. 31 சேனா. உரை)

அறிவனார்

பஞ்சமரபு என்னும் நூலின் ஆசிரியர். (சிலப். 6 : 35 உரை)

அறிவுடை நம்பி சிந்தம்

சிந்தம் என்ற இந்நூல் அறிவுடை நம்பி என்பவரால் இயற்றப் பட்டது. இதுசெவியறிவுறூஉ என்னும் புறத்துறை பற்றியது. இது நீண்ட பாடல் வடிவிற்று;தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத்தின் அருகு தனிச்சொல்லின்றி முழுதும்இருசீரடியா யமைந்தது. இது வஞ்சிப்பாப் போன்றது எனினும், வஞ்சிப்பாஆகாது. செவியறிவுறூஉ ஆனது ஆசிரியம் வெண்பா மருட்பா என்ற பாக்களாலேயேபாடப்படல் வேண்டும் என்ற வரையறை யுண்டு ஆதலின், இதனை வஞ்சியடியால்வந்து பொருள் உறுப்பு அழிந்தமை பற்றி ‘உறுப்பழி செய்யுள்’ என்க. (யா.வி. பக். 372)

அறுசீர்ச் சந்த விருத்தம்

1) மூன்று மாத்திரையுடைய அறுசீரும் ஈற்றில் ஒரு நெட்டெழுத்தும்பெற்ற அறுசீரடி நான்கால் அமைவது.எ-டு : ‘மரண சோக நரக வாதை பிணிம யக்கினோடரண மான விருளெ லாம கன்ற நீரராம்கரண நான்கு புலன்க ளோடு மனது கைப்படிற்சரண டைந்து ளாரு முத்தி சார்ப திண்ணமே’ (நல்லா. பாரதம்)2) நீண்ட புளிமாச்சீர் ஆறும் ஈற்றில் ஒருநெட்டெழுத்தும் பெற்றஅறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘அதிர்பொற் கழலான் விழுதிண் கிரியா லதிசூ ரன்மான்தேர்பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னாஉதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடறீர்ப்பான்.’(கந்தபு. இரண்டா. 57)3) குற்றுயிர் ஈற்றினுடைய ஆறு கூவிளச்சீரொடு நெட் டெழுத்து ஈற்றில்பெற்ற அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘மீட்டுமி ரும்படை மேவநெ டுங்கணை விட்டுவி யன்வழியில்மாட்டிவ ழக்கம றுத்துல கெங்கும லிந்தவு டற்குறையின்ஈட்டம றிந்துக னன்றுவி ழிப்பவெ ரிந்தவு டற்றொகுதிஓட்டறு சோரிவ றந்தது சூரனொ ருத்தனு நின்றனனே.’(தணிகைப்.)4) நான்கு மாத்திரை விளச்சீரும் மாச்சீரும் கடையில் ஒருகாய்ச்சீரும் அமையும் அறுசீரடி நான்கான் அமைவது.‘இறைவனெ ழிற்கதிர் மணிகள ழுத்திய தவிசினி ருத்தலுமேநெறுநெறெ னக்கொடு நிலவரை யிற்புக நெடியவ னப்பொழுதேமறலியெ னத்தகு நிருபனி யற்றிய விரகைம னத்துணராமுறுகுசி னத்துட னடிகள் பிலத்துற முடிக்கக னத்துறவே’எ-டு : ‘மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர்பெருமானார்நஞ்சைக் கண்டத் தடக்கும் மதுவும் நன்மைப் பொருள்போலும்வெஞ்சொற் பேசும் வேடர் மடவார் இதணம் மதுவேறிஅஞ்சொற் கிளிகள் ளாயோ வென்னும் அண்ணா மலையாரே’ (தே. I 69-2) ( I 60 -2)5) ஐந்து மாத்திரை யுடைய விளங்காய்ச்சீர் ஐந்தும் நெடி லடுத்தஈற்று விளங்கனிச் சீருமாகிய அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘வாவியொரு தேரைவடி வாளிபொழி யக்கனகன்வார்குருதி சோரவுடலின் // மேவினன்எ டுத்திரதம் விண்ணிடையு கைத்தனன்விளங்குதிற னீலனவுணன் // தாவியொரு தேர்புகவ ரக்கடிதெ ழுந்துதட மார்பிறவெருக்கிவரதன் // பாவிநில னிற்படமி தித்தனனு ருட்டுபுப ழங்கண்மிகுவித்தனனரோ’ (தணிகைப். சீபரி. 381)6) ஐந்து மாத்திரை யுடைய குறில் ஈற்று மாங்காய்ச்சீர் ஐந்தும்இறுதிச்சீராகிய ஆறு அல்லது ஏழு மாத்திரையுடைய கனிச்சீரும் சேர்ந்தஅறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல வெனதூனு முண்டகொடியோன்உண்ணாடு முயிர்கொண்டு வலிகொண்டு குறிதான வுதரங்கி ழித்துவருவன்அண்ணாவில் வலனேயெ னக்கூறி யேதம்பி யரிபோல்மு ழங்கியிடலும்மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்திட்ட மாயந்தெரிந்துவெகுள்வான்.’ (கந்தபு. வில்வ. பட. 30)7) ஒற்றடுத்த குறில் அல்லது நெடிலை ஈற்றினுடைய ஐந்து விளச்சீரும்இறுதி விளங்காய்ச்சீரும் கொண்ட அறுசீரடி நான்கான் அமைவது. நேரசையில்தொடங்குவது :எ-டு : ‘ஓதவார் கடலகத் துற்றவா ரமிழ்தெனா வோதினார் புலவர்மற்றுந்தீதிலாத் தீங்கனிச் சுவையெனப் பாலெனத் தேமொழிக் குவமைசொன்னார்ஏதமே புலனுறா வழிநினைப் பாலவை யின்பமே நல்கிலாவால்யாதெனக் கூறுகே னின்மொழிப் பண்பைநா னேந்திழைப்பொற்கொடிக்கே’(புலவர்மற்றுந் – இந்நாலசைச்சீர் கருவிளங்காய்ச்சீர்க்குஒப்பாம்.)நிரையசையில் தொடங்குவதுஎ-டு : ‘அரம்பையு ருப்பசி மேனகை முதலிய வரிமதர் விழிமடவார்நிரம்பிய காமந லங்கனி யவிநய நெறிமுறை கரமசையப்பரம்புமி டற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினொடும்வரம்பெறு மற்புத மின்னவிர் கொடியென மகிழ்நட மெதிர்புரிய’(காஞ்சிபு. திருநெறி. 190)8) நெடிலேனும் மெய்யேனும் இறுதியடையப் பெற்ற விளச்சீர்கள் – மூன்றுகுற்றெழுத்தாய் முடிந்த விளங்காய்ச் சீர்கள் – குறிலீற்று மாங்காய்ச்சீர்கள் – ஆகிய ஐந்து மாத் திரைச் சீர்கள் முதலைந்து சீர்களாய் நிற்க,இறுதிச்சீர் ஒன்றும் ஏழு மாத்திரை அளவுடைய மெய்யெழுத்து நடுவே மிகுந்தவிளங்காய்ச்சீரோ- மூன்று குறில் நடுவே பெற்ற விளங்கனிச்சீரோ -மாங்கனிச்சீரோ – வரும் அறுசீரடி நான்கான் அமைவது. (இலக்கணம் எடுத்துக்காட்டுள் பொருந்து மாறில்லை.)எ-டு : ‘சிலைக்குருவி றற்குருகு லக்குமர ருக்குவரு சிரமநிலைகாண்மினெனவேஅலைக்கிலைநி லாவெழுச ரிற்புதல்வ னுக்குநல் லறக்கடவுளுக்குமுறையானிலைப்படுவி லாசமணி யணிதிகழ ரங்குமிசை நிகழ்பலிகொ டுத்தரியுடன்கலைப்புரவி யூர்திருவை யுந்தொழுது புக்கனன கத்துணர்வுமிக்ககலையோன்’ (நல்லா. வாரணா. 66)(இரண்டாமடி 4, 5ஆம் சீர்கள் ‘னுக்குநல அறக்கடவு’ என இருத்தல்வேண்டும்.)9) முதற்சீர் குற்றுயிரீற்றுத் தேமா, இரண்டாவது நெடில் ஒன்றும்குறில் மூன்றும் இணைந்த கூவிளங்காய், மூன்றா வதும் நான்காவதும் குறில்ஈற்றுக் கூவிளம், ஐந்தாவது தேமா, ஆறாவது புளிமாங்காய் – என அமையும்அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடிக்காடு டையசுட லைப்பொடி பூசியெ னுள்ளங் கவர்கள்வன்ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்தபீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (தே I -1-1)8 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியது -எ-டு : ‘பண்ணேனு னக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்சவாங்கேபார்க்கின்ற மலரூடு நீயேயி ருத்தியப் பனிமலரெ டுக்கமனமும்நண்ணேன லாமலிரு கைதான்கு விக்கவெனி னாணுமென் னுளநிற்றிநீநான்கும்பி டும்போத ரைக்கும்பி டாதலா னான்பூசை செய்யல்முறையோவிண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமேமேதக்க வேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேயவ்வித்தின்முளையேகண்ணேக ருத்தேயெ னெண்ணேயெ ழுத்தேக திக்கான மோனவடிவேகருதரிய சிற்சபையி லானந்த நர்த்தமிடு கருணாக ரக்கடவுளே’(தாயுமானவர் பாடல்)இவ்யாப்பிற் சிறிது திரிந்தது ‘ஏடாயிரங் கோடி’ என்னும் அந்தகக்கவிவீரராகவர் விடுத்த சீட்டுக்கவியும் கொள்ளப் படும்.4 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியதுஎ-டு : காரென வாருயிர் மீதரு ளேபொழி கண்ணனை விண்ணவனைக்கந்தனை எந்தையை வந்தனை யன்பர்க டும்பகை கொன்றவனைச்சீர்சம ராபுரி யாளனை மாளுறு தேவர்ம ளாளனையோர்சின்மய ரூபனை நன்மையெ லாமுறு சேயினை யருள்புரிகஓர்வரி தாமுயிர் யாவையு நேர்வினை யொத்தும லப்பகை போய்ஒண்சுக மேவிட வைந்தொழி றந்திடு முத்தம சிற்பரமாய்ச்சேருரு வாயரு வாயிரு வகையுஞ் செறிபொரு ளாய் நிறைவாய்ச்செம்முக மைந்தொடு செம்மையி னின்றருள் செய்தச தாசிவமே! (திருப்போரூர் சந்நிதிமுறை காப்பு.2)10) நான்கு மாத்திரை மாச்சீர் ஆறுகொண்ட அறுசீரடி நான்கான்வருவது.எ-டு : ‘பிறியார் பிரிவே தென்னும் பெரியோய் தகவே யென்னும்நெறியோ அடியேம் நிலைநீ நினையா நினைவே தென்னும்வறியோர் தனமே யென்னும் தமியேன் வலியே என்னும்அறிவோ வினையோ வென்னும் அரசர்க் கரசே என்னும்’ (கம்பரா.1635)

அறுத்தல்

அறுத்தலாவது இரண்டாம் வேற்றுமை முடிக்கும் சொற் களுள் ஒன்று.அஃதாவது சிறிது இழவாமல் முதலை யாயினும் சினையையாயினும் இருகூறுசெய்தல்.எ-டு : மரத்தை அறுத்தான் (தொ. சொ. 72 சேனா. உரை)

அறுத்திசைப்பு

ஓசை இடையறவுபட ஒலித்தல் என்னும் ஓசைக்குற்றம் . இதுஓசைக்குற்றம் மூன்றனுள் ஒன்று.எ-டு : வீங்குமணிவிசித்த விளங்குபுனைநெடுந்தேர் காம்புநீடுமயங்குகாட்டுள்பாம்புபெரிது வழங்குதோறோங்குவயங்குகரிமா நிரைபுநிரைபுஎன்ற இக்குறளடி வஞ்சிப்பா அடிகளில், நாலசைப் பொதுச் சீர் பலவும்வந்து தூங்கினமையின் அறுத்திசைப்பு என்னும் குற்றமாயிற்று. (யா. வி.பக். 424)

அறுபது வஞ்சியுரிச்சீர்க்கும் வரும்வாய்பாடு 212 ஆதல்

நேரீற்று வஞ்சியுரிச்சீர் 12 அவை 32 வாய்பாடு பெறும்நிரையீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 36 வாய்பாடு பெறும்நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும்நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும்இந்நான்கு ஈற்று வகைகளும் முறையே 3 முதல் 7 எழுத்து வரையும், 4முதல் 8 எழுத்து வரையும், 3 முதல் 8 எழுத்து வரையும், 4 முதல் 9எழுத்து வரையும் நிகழும்.ஆசிரியப் பாவினுள் ஓரோவழி வஞ்சியுரிச்சீர் வருமாறு:எ-டு : ‘விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’ (குறுந். 210)‘மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூ’ (பதிற். 60)‘முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்’ (பதிற்.109)‘நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு ’ (சிறுபாண் 125)(தொ.செய். 21 ச. பால.)

அறுபத்துநாலடிச் சிந்து

64 என்ற அடிவரையறையுடைய தாளத்தொடு பாடப்படும் இசைப்பாட்டு.

அறுபொருள் (இடுகுறி) மரபு (காரண)ப்பெயர்

தேவன் தேவி மகன் மகள் மக்கள் மாந்தர் மைந்தர் ஆடூஉ மகடூஉ நாகன்நாகி யானை குதிரை ஆமா நாய் நரி மயில் குயில் பொன் மணி மரம் பனை தெங்குநீர் வளி நெருப்பு – என்றும் (பொருள்), வான் நிலம் அகம் புறம் கீழ்மேல் குழி அவல் – என்றும் (இடம்), ஊழி யாண்டு அயனம் இருது மதி பக்கம்நாள் இரா பகல் யாமம் நாழிகை மாத்திரை – என்றும் (காலம்), கை தலை கால்சினை தளிர் பூ காய் – என்றும் (சினை), வட்டம் சதுரம் குறுமை நெடுமைகருமை சிவப்பு தண்மை வெம்மை கைப்பு இனிப்பு புளிப்பு விரை மணம் உண்மைஇன்மை தீமை வன்மை மென்மை – என்றும் (குணம்), ஊண் தீன் உணல் தினல்உணப்படல் தினப்படல் ஏவப்படல் உணப் பாடு தினப்பாடு (தொழில்) என்றும்வரும் இத்தொடக்கத்தன பொருள் ஆதி இடுகுறி மரபு காரணப்பெயர். (நன். 274மயிலை.)

அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம்

இவ்விரு நூல்களையும் இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.இவற்றில் யாப்புப் பற்றிய செய்தியே யுள. எழுத்து முதலியஐந்திலக்கணத்துடன் புலமையிலக் கணத்தையும் கூறும் நூல் அறுவகைஇலக்கணம். இதனால் பெயர்க் காரணம் புலனாகும். இந்நூலில் 786நூற்பாக்கள் உள்ளன. பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் இத்தொகையுள் அடங்கும்.ஏழாம் இலக்கணம் அறுவகை இலக்கணத்திற்கு ஓர் அங்கமாய் அவற்றதுபுறநடையாக அமைகிறது. பாயிரமும் நூல் இறுதி வெண்பாவும் தவிர 318நூற்பாக்கள் இதன் கண்ணுள்ளன. புணர்ப்பு இயல்பு, சொன்னிலை இயல்பு,பெயர்ச்சொல் இயல்பு, விபத்தி இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல்இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு, பொருள் இயல்பு, யாப்புஇயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு என்னும் இவற்றுடன் தவஇயல்பு என்பதொன்றும் சேர 13 பிரிவுகளை யுடையது இந்நூல். புணர்ப் பியல்பும்சொன்னிலையியல்பும் பற்றியே பெரும்பாலான நூற்பாக்கள் அமைந்துள்ளன.

அறுவகை வினா

அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா- என வினா அறுவகைத்தாம்.ஆசிரியன் மாணாக்கனை ‘இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது?’ என்றுவினாவுதல் அறிவினா.மாணாக்கன் ஆசிரியனை அவ்வாறு வினாவுதல் – அறியா வினா.‘குற்றியோ மகனோ அங்கே தோன்றும் உரு?’ – ஐய வினா.‘பொன்உளவோ மணியுளவோ, வணிகீர்?’ – கொளல் வினா.‘சாத்தனுக்கு ஆடை இல்லையோ?’ என்பது கொடுத்தல் வினா.‘சாத்தா உண்டாயோ?’ என்பது ஏவல் வினா. (நன். 385 சங்.)

அறுவகைச் செய்யுள் விகாரங்கள்

வலித்தல் மெலித்தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் – என்பனஅறுவகைச் செய்யுள் விகாரங்களாம்.வலித்தல் – ‘முந்தை’ முத்தை எனத் திரிதல்‘முத்தை வ ரூஉம் காலம்தோன்றின்ஒத்த தென்ப ஏ-என் சாரியை’ (தொ. எ. 164 நச்.)மெலித்தல் – ‘தட்டை’ தண்டை எனத் திரிதல்‘தண்டையின் இனக்கிளி கடிவோள்பண்டையள் அல்லள் மானேக் கினனே.’விரித்தல் – ‘தண்துறை’ தண்ணந்துறை எனத் திரிதல்.‘தண்ணந் துறைவன் கொடுமை… நாணி’ (குறுந்9. )தொகுத்தல் – ‘இடைச்சொல்’ இடை எனப்படுதல்.‘இடை யெனப் படுப பெயரொடும் வினையொடும’ (தொ. சொ. 251)நீட்டல் – ‘விடும்’ வீடும் என உயிர்நீடல்.‘வெள்வளை நல்கான் வீடு மென் உயிரே.’குறுக்கல் – ‘தீயேன்’ தியேன் என நெட்டுவது குறுகுதல்‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ (தொ. சொ. 403 நச். உரை)இவை எதுகை முதலிய தொடை நோக்கியும், சீர் அமைதி நோக் கியும்அமைவன. ‘பாசிலை ’, ‘அழுந்துபடுவிழுப்புண்’ (நற். 97) என்றாற் போல்வன இரண்டு விகாரம் வருவன.குறுந்தாள் என்பது‘குறுத்தாள் பூதம் சுமந்தஅறக்கதிர் ஆழிநம் அண்ணலைத் தொழினே’ என்புழிமெல்லெழுத்து இனவல்லெழுத்தாக வலித்தது.மழவரை என்னும் இரண்டனுருபு ‘ மழவ ரோட்டிய’ (அகநா. 1) என்புழித் தொகுத்தல். பச்சிலை என்பது ‘பாசிலை’ என நீட்டல்.உண்டார்ந்து என்பது ‘உண்டருந்து’ என நெட்டுயிர் குறுக்கல்.(தொ. சொ. 398 இள. உரை)குறுக்கை (ஐங். 266), மு த்தை – வலித்தல் (ஙகரமும் நகரமும் இனவல்லெழுத்தாகவலித்தன.)‘சுடுமண் பாவை’, ‘குன்றியலுகரத் திறுதி’ (சொ. 9) – மெலித்தல் (டகரமும் றகரமும் இனமெல்லெழுத்தாகமெலித்தன.)தண்ணந் துறைவன் – விரித்தல் (அம்முச்சாரியை இடையே விரிந்தது.)மழவரோட்டிய – தொகுத்தல் (உயர்திணைக்கண் ஒழியாது வரவேண்டும் ஐகாரம் தொக்கது)செவ்வெண்ணின் தொகை தொக்கு வருதலும் தொகுத்தலாம்.வீடுமின், பாசிலை – நீட்டல் (முறையே இகர உயிரும் அகர உயிரும் நீண்டன.)உண்டருந்து, அழுந்துபடு – குறுக்கல் (உண்டார்ந்து, ஆழ்ந்து படு – என்புழி வரும் ஆகாரம்குறுகிற்று) (தொ. சொ. 403 சேனா. உரை)இவற்றுக்கு முறையே முத்தை – தண்டை – தண்ணந்துறைவர் – வேண்டார்வணக்கி – பாசிழை – தியேன் – என உதாரணம் காட்டுவார் தெய்வச்சிலையார்.(தொ. சொ. 399 உரை)

அறுவகைச் செய்யுள் விகாரம்

வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத் தல்என்பன அறுவகைச் செய்யுள் விகாரங்களாம்.செய்யுட்கண் தொடைநயம் கருதி மெல்லெழுத்து அதன் இனமானவல்லெழுத்தாகத் திரிதல். (மேலும் ல், ள் என்ற இடையெழுத்துக்கள் ற், ட்எனத் திரிதலும் வலித்தல் விகாரத்துள் அடங்கும்.)எ-டு : ‘கு று த்தாட் பூதம் சுமந்தஅறக்கதி ராழியெம் அண்ணலைத் தொழினே’‘குறுந்தாள்’ எனற்பாலது ‘குறு த் தாள்’எனத் தொடை நோக்கி வலித்தது.செய்யுளில் தொடைநயம் கருதி வல்லெழுத்தை அதன் இனமாய மெல்லெழுத்தாகத்திரித்துக் கோடல் (ல், ள் – ன், ண் எனத் திரிதலும் இதன்கண்அடங்கும்.)எ-டு : ‘த ண் டையின் இனக்கிளி கடிவோள்பண்டையள் அல்லள் மானோக் கினளே’‘த ட் டை’ எனற்பாலது ‘த ண் டை’ எனத் தொடை நோக்கி மெலித்தது.செய்யுளில் தொடை நயம் கருதிக் குறில் அதன் இனமான நெடிலாகநீட்டப்படுதல்.எ-டு : ‘ஞா னீ யும் உய்கலான் என்னாதே நாயகனைக்கானீயும் என்றுரைத்த கைகேயி’ (கம்பரா 1704)‘ஞா னி யும்’ எனற்பாலது ‘ஞா னீ யும்’ எனத் தொடை நோக்கி நீட்டப்பட்டது.செய்யுளில் ஓசையும் தளையும் கருதி நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தி யேன்’‘ தீ யேன்’ என்பது தளைகருதித் ‘ தி யேன்’ எனக் குறுக்கப் பட்டது.செய்யுளில் ஓசையும் தளையும் கருதி விரிக்கப்பட வேண்டியவேற்றுமையுருபு முதலியன தொகுக்கப்படுதல்.எ-டு : ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல்வேண்டுமாம் வேண்டார் மகன்’‘வேண்டாரை வணக்கி’ என உயர்திணைக்கண் இரண் டனுருபு விரிந்தேவரற்பாலது, செய்யுள் அமைப்புக் கருதி ‘வேண்டார் வணக்கி’ என உருபுதொகுக்கப்பட்டது.செய்யுளில் அசையை மிகுத்தல் கருதிச் சாரியை முதலியன இருசொற்களிடையே மிடைய அச்சொற்கள் விரிக்கப் படுதல்.எ-டு : ‘தண் ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்வண்ணம் கடைப்பிடியா தார்’‘தண்துறைவர்’ எனற்பாலது, சீரமைப்பு நோக்கித் ‘தண் ணந் துறைவர்’ என அம்முச் சாரியை விரிக்கப்பட்டது.யாப்பு நூல்கள் இவ்விகாரங்களை ஒழிபியலாகத் தழுவு கின்றன.

அறுவகைத் தொகையான் மொழி வருவித்துமுடித்தல்

மொழி வருவித்துச் சொற்பொருள் முடிக்கும் வகைகளுள் ஒன்று இது.அறுவகைத் தொகைநிலைத் தொடர்களையும் விரித்துரைத்துப் பொருள்கொள்ளுதல்.எ-டு : முறிமேனி என்ற தொடரை முறி (தளிர்) போலும் என்பதனுடன்அமையாது, மாவினது தளிரின் நிறத்தையும் அதன் தட்பத்தையும் போன்றுகண்ணுக் கும் மெய்க்கும் இன்பம் தரும் மேனி – என்று வருவித் துரைத்தல்போல்வன. (இ. கொ. 89.)

அறுவகைப் பெயர்கள்

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் – என்னும் ஆறும் பற்றி வரும்பெயர்கள் வினைமுற்றிற்கு முடிக்கும் சொற்களாய் வழும்.எ-டு : செய்தான் அவன் – நல்லன் அவன், குளிர்ந்தது நிலம், வந்ததுகார், குவிந்தன கை, பரந்தது பசப்பு, ஒழிந்தது பிறப்பு – என அவை முறையேவந்தவாறு. (நன். 323 சங்.)

அலகிடுதல்

(1) அளவிடுதல் (2) செய்யுளசையைக் கணக்கிடுதல் (இ. வி. 752) (3)துடைப்பத்தாற் பெருக்குதல். “உள்ளங்குளிர அலகிட்டான்” (இறை. அ. 1உரை) (L)

அலகிடும் முறைமை

செய்யுள்களில் ஒவ்வோர் அசையும் தனக்கெனச் சிறப்புப்பொருளுடையதாயிருத்தல் சிறப்பு. ஆதலின் அசைகளைப் பிரிக்கும் போது அவைபொருள் தருமாறு பிரித்தலே தகுதி.சீர்களின் முதலில் நிற்கும் தனிக்குற்றெழுத்தை மொழியி னின்றும்பிரித்து ஒரு நேரசையாகக் கூறுதல் ஆகாது. அஃதாவது‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ (முருகு. 1) என்னும் அடியில்முதற்சீராகிய உலகம் என்பதன் ‘உ’ என்பதனைத் தனியே பிரித்து நேரசையாகக்கொள்ளுதல் கூடாது.ஒரு சீரில் உள்ள சொற்களுள் முதற்சொல்லின் ஈற்று எழுத்தினையும்இரண்டாம் சொல்லின் முதல்எழுத்தினை யும் ஒருங்கு சேர்த்து ஓரசையாகக்கொள்ளுதல் தகாது. அஃதாவது “பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்”(தொ.உயிர். 77) என்னும் சூத்திரத்தில் ‘முற்றவின்’ என்னும் சீரை,முற்-றவின் – என்று பிரித்து ‘நேர் நிரை’ என்று கூறுதல் கூடாது.ஏனெனில் ‘முற்ற’ என்பது ஒருசொல். ‘இன்’ என்பது ஒருசொல் ஆகவே முற்றவின்என்பதனை ‘முற்-ற-இன்’ என்று மூவசைச் சீராகப் பிரித்தலே ஏற்றது. (தொ.செய். 7 நச்.)‘பொன்னிறம் அருமைநற் கறிந்தும் அன்னோள்’ (அகநா. 258) என்ற அடியில்‘அருமைநற்’ என்ற சீரை அரு-மை-நற் என்று மூவசைச் சீராகவே கோடல்வேண்டும். (தொ. செய். 30 நச்.)தொல்காப்பியம் சொல்லும் நேர்பு, நிரைபு அசைகளைப் பிற்காலத்தவர்கொள்ளாமல் விடுத்தலின்,விசும்புதைவரு வளியும் (புறநா. 2)வசிந்துவாங்கு நிமிர்தோள் (முருகு. 106) என்பனவற்றில் ‘விசும்பு தை வரு’ என்பதனை விசும் -புதை – வரு : கருவிளங் கனி எனவும், ‘வசிந்து வாங்கு’ என்பதனை வசிந் -துவாங் – கு: கருவிளங்காய் எனவும், கொள்கின்றனர். தொல்காப்பியமுறைப்படி, விசும்புதைவரு: விசும்பு – தை – வரு: நிரைபு நேர் நிரைஎனவும், வசிந்து வாங்கு; வசிந்து – வாங்கு; நிரைபு நேர்பு எனவும்பகுத்தே அலகிடல் வேண்டும். நேர்பு, நிரைபு அசைகளைக் கொள்ளாதஆசிரியர்களுக்கும், ஒரு சீரில் உள்ள சொற்களின் எழுத்துக்களைப்பிரித்துக் கூட்டுதல் என்பதும் உடன்பாடன்று.‘கொன்று கோடு நீடு’ என்பதனைக் கொன் – றுகோ – டுநீ – டு என்றுநாலசைச்சீராகக் கொள்ளாது, கொன்-று-கோ-டு-நீ-டு என்று ஆறசைச் சீராகவேபழைய உரையாசிரியர் கொள்வர்.(யா. கா. ஒழி1. உரை)‘அங்கண்வானத் தமரரசரும்’ என்னும் வஞ்சிப்பாட்டில் ‘அநந்தசதுட்டயம்’என்ற சீரினை அநந் – தச – துட் – டயம் என்று பிரிக்காமல், அநந் – த -சதுட் – டயம் எனப் புளிமாநறு நிழலாகவே கூறுவர். (யா. கா. 9. உரை)இவ்வாறே அப்பாடலில் ‘மந்தமாருதம்’ ‘இலங்குசாமரை’ என்பனவற்றைமந்-தமா-ருதம்; இலங்-குசா-மரை என நிரையீற்று மூவசைச் சீராகக்கொள்ளாமல், மந்-த-மா-ருதம்; இலங்-கு-சா-மரை என நாலசைச் சீராகவேகொள்வர்.யாப்பருங்கல விருத்தியிலும் ‘அங்கணீலத்’ என்ற சீரினை(15 உரை) அங் – கணீ – லத் எனப் பகுக்காது, அங்-க-ணீ-லத் எனநாலசைச்சீராகக் காட்டியதும், (பக். 72)‘வாதுவிட்டால்’ ‘சூடுநெற்றி’ என்பனவற்றை வா – து – விட் -டால்; சூ- டு – நெற் – றி என நாலசைச் சீர்களாகவே காட்டியதும் (பக். 78),‘மாரியொடு’ என்பதனை (16 உரை) மா – ரியொ – டு எனப் பகுக்காமல்,மா-ரி-யொடு எனத் தேமாங்கனி என்று குறிப் பிட்டதும் (பக். 81) பண்டையநேரிய அலகிடு மரபினை நினைவுறுத்தும் செய்திகளாம்.ஒரு சீரினுள் அமைந்த இரண்டு சொற்களின் எழுத்துக்களை இணைத்துஅசையாக்கும் வழக்கம் மிகுந்த காலத்தில், கனிச் சீர்களையுடையவெண்பாக்கள் காய்ச்சீராகக் கருதப்பட்டு யாக்கப்பட்டன.‘வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும்பரிந்துசில கற்பான் தொடங்கல்’ (நீதிநெறி. 9)‘உடைந்துளா ருட்குவரு கல்வி’ (நீதிநெறி 8)‘கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலாம் ’ (நீதிநெறி . 15)‘ சந்திசெயத் தாள்விளக்க’ (நள. கலிதொடர். 32)முதலியன எடுத்துக்காட்டுக்களாம்.பரிந்து – சில – நிரைபு நிரை ; பரிந் – துசி – ல : நிரை நிரைநேர்.உட்கு – வரு – நேர்பு நிரை ; உட்- குவ-ரு : நேர் நிரை நேர்.கற் – ற – வெலாம் – நேர் நேர் நிரை ; கற் – றவெ லாம் – நேர் நிரைநேர்.சந்-தி-செய – நேர் நேர் நிரை ; சந் – திசெ – ய: நேர் நிரை நேர்-என்று கொள்ளப்பட்டன.‘சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு’‘புந்திமிகத் தான்களித்துப் போதல்மனத் தேகொண்டு’‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்திஇரவில்வந்த’(யா. வி. பக். 78)‘தாளின்மறு’ என்பதும் ‘போதல்மனத்’ என்பதும் போல்வன கனிச்சீர்ஆகாமைப் பொருட்டு மெய்யெழுத்தை நீக்கிக் கணக்கிட்டுத் ‘தா – ளிம – று’எனவும் ‘போ – தம – னத்’ எனவும் பகுத்துச் சீராக்குதலும் ‘இரவில்வந்த’என்பதன்கண் நாலசைச்சீர் ஆகாமைப் பொருட்டு லகர மெய்யை நீக்கி ‘இர -விவந் -த’ எனப் பகுத்துச் சீரமைத்தலும் பிற்கால வழுவமைதிமுறைகளாயின.14 எழுத்தின் மேற்பட்ட வெண்பாஅடி கலியோசை ஏற்கும் என்பது பண்டையமரபு. இப்பொழுது சீர்வகைகளின் அடிகள் ஆதலின் எழுத்துக் கணக்கினைநோக்குவதில்லை.

அலகிருக்கை வெண்பா

மிறைக்கவி வகைகளுள் ஒன்று. இஃது இக்காலத்து வழக்கின்று. (யா. வி.பக். 548)

அலகு

அசைக்கு உறுப்பாகக் கணக்கிடுதல். அதற்கு வரிவடிவாக ஒருகுறிபண்டிருந்தது போலும்.

அலங்கார பஞ்சகம்

வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் ஆகியஇவ்வைந்தனையும் அந்தாதியாகப் பாடும் பிரபந்தம். (இ. வி. யாப்.84).

அலி என்ற பெயர் கொள்ளும் வினை

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி – பேடி; பெண்மை திரிந்தபெயர்நிலைக் கிளவி – அலி. அலிக்கு ஆண்மை திரித லுண்டேனும் பெண்மைதிரிதல் பெரும்பான்மை ஆதலின், ஆண்பாலை யொட்டி ஆண்பால் வினையினைக்கொண்டு, அலி வந்தான் என முடியும். (பேடிக்குப் பெண்மை திரிதலுண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை ஆதலின் பெண்பாலை ஒட்டிப் பேடிபெண்பால் வினையினைக் கொண்டு முடியும்; பேடி வந்தாள் – எனவரும்.) பேடுபோல ‘அலி’ இருபாலையும் குறித்து வருவதாகவும் கொள்ப; அஃறிணையாகவும்கொள்ப. (நன். 264.)

அலி எழுத்து

ஒற்றெழுத்தும் ஆய்தமும் அலிஎழுத்து எனப்படும். (வெண்பாப். 7)ஆயின், பிங்கலந்தை நிகண்டு அலியெழுத்தென மெய் யெழுத்தினைக்குறிக்கிறது. (1360)

அலி பேடி மகண்மா நிரயப்பாலர் :இவற்றை முடிக்கும் சொல்

அலி ஆண்பால் முடிபும், பேடியும் மகண்மாகவும் பெண்பால் முடிபும்,நிரயப்பாலர் பலர்பால் முடிபும் பெறும். அலி வந்தான், பேடி வந்தாள் -மகண்மா வந்தாள், நிரயப்பாலர் வந்தார் – என முடிக்க. (தொ. சொ. 4 நச்.உரை)

அலுக்கு

உருபு முதலியன தொகாமை. வடமொழியில் வினைச் சொற்களுக்கு உள்ள விகரணிஎழுத்துப் போலத் தமிழுக்கும் அ ஆ முதலிய சில எழுத்துக்களைக்கூறுகிறார், பி.வி. நூலார். அவ்வகையால், உண்ணுவோம் என்பது அலுக்கு.உண்டான் என்பது லுக்கு; உகரம் தொக்கு வந்தது அது. (பி.வி. 41.)இகழ்வார்ப் பொறுத்தல் ‘உயர்திணை மருங்கின் ஒழியாது(குறள் 151) வருவதற்கு (தொ. எ. 157) உரியகேளிர்ப் பிரிப்பர் (குறள் 187) ஐயுருபு தொக்கு வந்தமை விகாரம்.இது ‘லுக்கு’ எனப்படும்.புதல்வரைப் பெறுதல், மன்னரைச் சேர்ந்தொழுகல், ‘சேர்ந்தாரைக்கொல்லி’ (குறள் 306) நம்பியைக் கொணர்ந் தான் – இவை மேலை விதிப்படிஉருபு வெளிப்பட்டே நிற்றற் குரியன ‘அலுக்கு’ எனப்படும். (பி.வி..27)

அல்ஈறு காலம் உணர்த்துதல்

அல்ஈறு பகரமோ வகரமோ பெற்றுத் தன்மையொருமை வினைமுற்றாய்எதிர்காலத்து வரும்.எ-டு : உண்பல் (ப்), வருவல் (வ்)உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலமும் பெறும்; ஒழிவல் -தவிர்வல் – என எதிர்மறை வாய்பாட்டிலும் வரும்.(தொ. சொ. 205 நச். உரை)

அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதது அல்வழிப் புணர்ச்சியாம். அது
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகை, இந்நான்கன்
புறத்தும் பிறந்த அன் மொழித் தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர்,
இருவகை வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர்,
இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத்தொடர் எனப் பதினான்காம்.
(இத்தொகை தொகா நிலைத் தொடர்களில் நிலைமொழியும் வருமொழி யும் புணருமாறு
அல்வழிப்புணர்ச்சியாம்).
எ-டு : கொல்யானை, கருங்குதிரை – பலாமரம், மதிமுகம், கபில பரணர்,
கருங்குழல் (வந்தாள்) – இவையாறும் தொகைநிலைத் தொடர். பொன்னன் வந்தான்,
பொன்னா வா, வந்த மன்னன் – பெரிய மன்னன், வந்துபோனான் – மெல்லப்
போனான், வந்தான் பொன்னன் – குழையன் பொன்னன், மற்றொன்று, நனிபேதை,
பாம்பு பாம்பு – என முறையே காண்க. (தெரிநிலையும் குறிப்புமாக இருவகைப்
பெய ரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர்கள் வினை முற்றுத் தொடர்கள்
கொள்ளப்பட்டன). (நன். 152)

அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமை அல்லாவழிப் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சியாம்.வினைத்தொகையும், பண்பு உவமை உம்மை அன்மொழி – என்னும் நான்கும்விரியவும் தொகவும் வரும் தொடர்ச்சியும், எழுவாய்த்தொடர், விளித்தொடர்,பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர்,குறிப்புமுற்றுத் தொடர், இடைச் சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் – என் னும் ஒன்பதும் ஆக, இப்பதினான்கும் அல்வழிப்புணர்ச்சிஎனப்படும். (நன். 151 மயிலை.)

அல்வழிப் புணர்ச்சிக்கு உரியன

எழுவாயும், விளியும், தெரிநிலைவினையும் குறிப்புவினையு மாகிய
முற்றுச்சொற்களும், பெயரெச்சமும் வினையெச்சமும் ஆகிய எச்சச்
சொற்களும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய இவை (நிலைமொழியாக
நிற்ப,) தமக்கேற்ற பெயரொ டும் வினையொடும் புணரும் புணர்ச்சியும்,
விரைவு ஆதியின் வரும் அடுக்கும், உவமைத் தொகையும், உம்மைத் தொகையும்
(என்னுமிவற்றுள் நிலைமொழி வருமொழியாகிய) தமக்கேற்ற பெயரொடும்
வினையொடும் புணரும் புணர்ச்சியும் அல்வழிப் புணர்ச்சியாம். (இ. வி.
எழுத். 54)

அல்வழிப் பொருட்பெயர், வேற்றுமைப் பொருட்பெயர்

வினைச்சொல்லைச் சார்ந்த முதற்பெயராகி விரிக்குமிடத்து வேற்றுமை
யுருபு பெறாது நிற்கும் பெயரே அல்வழிப் பொருட் பெயர். (எ-டு : மரம்
பெரிது).
கல்லெடுத்தான் – கல்வீடு – கல்லியல்பு – என்பவற்றுள் உருபு
தோன்றாதாயினும் பொருளை விரித்தால் கல்லையெடுத்தான் – கல்லால் ஆகிய
வீடு – கல்லினது இயல்பு – என்று அவ்வுருபு கூட்ட வேண்டினமையால், இதிலே
கல் என்னும் சொல் வேற்றுமைப் பொருட்பெயர் எனப்படும்.
அவ்வுருபு தோன்றாமலும் கூட்டாமலும் விரித்துரைக்கப் படும் பெயர்
அல்வழிப் பொருட்பெயர் எனப்படும். (தொ. வி. 22 உரை)

அல்வழியாவன

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதன அல்வழிப் புணர்ச்சியாம். ‘வேற்றுமை
அல்வழி’ என்பதே அதன் முழுப்பெயர்; சுருக்கம் கருதி இஃது ‘அல்வழி’
எனப்படுகிறது.
எழுவாய் வேற்றுமையானது பொருண்மை சுட்டல் – வியங்கொள வருதல் –
வினைநிலை உரைத்தல் – வினாவிற்கு ஏற்றல் – பண்பு கொள வருதல் – பெயர்கொள
வருதல் – என்ற ஆறுபயனிலைகளொடும் புணர்ந்த புணர்ச்சியும், முற்றானது
பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும், பெய ரெச்சமும்
வினையெச்சமும் முறையே பெயரொடும் வினை யொடும் புணர்ந்த புணர்ச்சியும்,
உவமத்தொகையும் உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்
தம்முள் நிலைமொழி வருமொழியாகப் புணர்ந்த புணர்ச்சியும், இடைச்சொல்லும்
உரிச்சொல்லும் பெயரொடும் வினையொ டும் புணர்ந்த புணர்ச்சியும்,
அன்மொழித்தொகை பெயர் வினைகளோடு புணர்ந்த புணர்ச்சியும்,
வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த
புணர்ச்சி யும்
அல்வழிப் புணர்ச்சியாம். (தொ. எ.
112 நச்.)
புணர்ச்சி என்பது நிலைமொழி வருமொழி இரண்ட னிடையே நிகழ்வதாதலின்,
பண்புத்தொகையும் வினைத் தொகையும் பிரித்துப் புணர்க்கப்படா (தொ. எ.
483) என்று ஆசிரியர் கூறியதனான், அவற்றை இருசொல்லாக அவற்றின் இயல்பான
நிலையில் கொள்ளுதல் இயலாது என்று கருதி, நச்சினார்க்கினியர்
‘வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றுவழிப் புணரும்
புணர்ச்சி’ என்று விளக்கிக் கூறினார்.

அளபெடுக்கும் ஆன்ஈற்றுப் பெயர் ஆ‘ஓ’ ஆகாமை

அழாஅன் கிழாஅன் – என்னும் அளபெடைப்பெயர்கள் அளபெடுத்தால் ஆகாரம்ஓகாரம் ஆகா. (தொ. சொ. 197 நச். உரை)“உழாஅன் கிழாஅன் என்பனவோ எனின், அவை அன்ஈற்றுப் பெயர்கள் (உழவன்கிழவன்) ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றன. அவை ஆன் ஈறாயவழி,உழவோன் கிழவோன் – எனத் திரியுமாறு அறிக.” (தொ. சொ. 195 சேனா. உரை)உழவன் கிழவன் என்னும் அன்ஈற்றுப் பெயர்களே உழவோன் கிழவோன் – எனத்திரிந்துள. உழவான் கிழவான் – என ஆன் ஈற்றுச் சொற்களே இல்லை. ஆதலின்சிறுபான்மை அன்ஈறும் ஓன்ஈறு ஆகும் என்பது அறிக. (நச்.)

அளபெடை

அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களுள் அளபெடையும் ஒன்று. மாத்திரைகுறையின் சீர்குன்றித் தளைகெட நின்றவழி யாப்பு அழியாமைப்பொருட்டுநெட்டுயிர் ஏழும், மெய் ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் என்னும்பத்தும், ஆய்தமும், தம் மாத்திரை யின் நீண்டு ஒலித்தல் அளபெடையாம்.ஆகவே அளபெடை உயிரளபெடையும் ஒற்றளபெடையும் என இருவகைத்து. ஆஅ, ஈஇ, ஊஉ,ஏஎ, ஓஒ என நெட்டுயிர் ஐந்தும் தம் இனக்குறிலொடு சேர்ந்து அளபெடுத்தன.ஐகாரம் இகரத் தொடும் (ஐஇ) ஓளகாரம் உகரத்தொடும் (ஒளஉ) சேர்ந்துஅளபெடுத்தன. நெடிலும் குறிலும் சேர்ந்த உயிரளபெடை யின் மாத்திரைமூன்று. சிலவிடத்தே ஆஅஅ என ஈரளபெடுத்து நான்கு மாத்திரைபெறுதலுமுண்டு. உயிரள பெடை தனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை எனநான்கு வகைப்படும். விளி முதலியவற்றில் மூன்று மாத்திரை யின்மிக்கொலித்தல் செய்யுட்குப் பெரிதும் உதவுவதின்மை யின்விடுக்கப்பட்டது.இலங்ங்கு, எஃஃகு – என அளபெடுக்கும் புள்ளி எழுத்தின் பின்னர்அவ்வெழுத்தே மீண்டும் ஒருமுறை வரிவடிவில் எழுதப்படும். ஒற்றளபெடைசெய்யுளில் மிக அருகியே நிகழ்வது. இதன் மாத்திரை ஒன்றாம். (யா. கா. 4உரை)நெடிலும் குறிலும் சேர்ந்து ஓரொலியாய் வரும் மூன்று மாத்திரைபெற்றவையே அளபெடை யென்பர் வடநூலார். அதனை ஒட்டிப் பிற்காலத்தமிழ்நூலாகும் அளபெடை யைக் கொண்டனர்.மாத்திரை நீட்டத்திற்கு வரும் குற்றெழுத்தே அளபெடை யெழுத்து.மூன்று மாத்திரை கொண்டதோர் எழுத்துத் தமிழிற்கு இல்லை என்பதுதொல்காப்பியரின் கருத்து.சீரும் தளையும் சிதையின் அளபெடை அலகுபெறாது என்ற யாப்பிலக்கணவிதியும் (யா.கா. 38) இனக்குறிலையே அளபெடை எழுத்தாகக் கொள்ளும்கருத்துக்கு அரண் செய்கிறது.

அளபெடை அசைநிலை ஆகாமை

அளபெடை அசைநிலை ஆகாமையும் உரித்து (அதனையும் கூட்டிஅலகிட்டாலன்றிச் சீர்நிலை நிரம்பாது.)எ-டு : ‘கடாஅ உருவொடு’ குறள். 588 (தொ. செய். 16 இள.)அளபெடை சீர்நிலை ஆகலும் உரித்து.எ-டு : ‘தேஎந் தேரும் பூஉம் புறவில்……………………………………………………………………குராஅம் பிணைபல் விராஅங் குஞ்சி’ (தொ. 17 பேரா நச்.)

அளபெடை அசைநிலையாதல்

சீர்நிலை எய்திநின்ற அளபெடைகள் அசைநிலை ஆதலும் உண்டு. இயற்கைஅளபெடை அசைநிலையாதல் செய்யுட்nக உரியது. புணர்ச்சி வகையான்எழுத்துப்பேறாகிய அளபெடை யும், பொருட்புலப்பாட்டிற்குப் புலவர் செய்தசெயற்கை யளபெடைகள் சிலவும் அசைநிலை ஆதலும் உரிய.‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’இதன்கண், அளபெடை சீர்நிலை எய்தின் வெண்பாச்சிதையு மாதலின்,பண்டமாற்றின்கண் இயற்கையளபெடை அசை நிலையாயிற்று.‘பலாஅக்கோட்டுத் தீங்கனிமேல் பாய்ந்தகடுவன்’இதன்கண், பலாஅ என்பதன்கண் எழுத்துப்பேறளபெடை சீராகாதுஅசையாயிற்று.‘கலம்போஒய்போஒய்க் கவ்வை செய’இதன்கண், வெண்பா ஈற்றடியில் அளபெடை செய்கைக் குறிப்புப் புலப்படவந்தது. அளபெடை அலகுபெறின் வெண்பாச் சிதையும். செய்கைக்குறிப்பு – ஒருசெயல் பலகாலும் நிகழ்தல். (தொ. செய். 17 நச்.)அளபெடையை நீட்டம் வேண்டி வந்த இனக்குற்றெழுத் தாகவே கொண்டு, அந்தஇனக்குறில் அசையாக வருதலும் உரித்து, அசையாக வாராமையும் உரித்து என்றகருத்தும் உணரத்தக்கது.

அளபெடை அந்தாதி

முதலடியின் இறுதியில் அளபெடையாக வந்த சீர் அடுத்த அடிமுதலில்அந்தாதித்து வருவது. (யா.க. 52 உரை.)எ-டு : ‘மேஎய ஒற்றினை விழைவினன் கூஉய்க்கூஉ யதும் வந்தோற் கொண்டுடன் போஒய்ப்போஒய கருமம் போற்றிநன் குரையென’ (புனையப்பட்டது)‘கூஉய்’ என்ற முதலடி ஈற்றுச்சீர் அந்தாதித்து இரண்டாமடிமுதற்சீராகி நிற்ப, அவ்வாறே இரண்டாமடி ஈற்றுச்சீரும் அந்தாதித்துமூன்றாமடி முதற்சீராகி நிற்ப, அடியளபெடைத் தொடையும் ஏற்ப வந்தமைகாண்க.

அளபெடை இனக்குறள் வெண்பா

அளபெடைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா.எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்படாஅ முலைமேற் றுகில்’ (குறள் 1087)இதன்கண் அடிஅளபெடை வந்தவாறு காண்க.(யா.க. 59 உரை)

அளபெடை இயைபு

இயைபுத்தொடை அளபெடைத்தொடையுடன் இணைந்து வருவது அளபெடைஇயைபுத்தொடையாம்.எ-டு : ‘ஏஎ வழங்கும் சிலையாய் இரவரைமாஅ வழங்கும் வரை’இதன்கண், ஏஎ, மாஅ – அளபெடை; வரை, வரை என இரண்டடி இறுதியிலும் வந்தசொற்கள் இயைபு. ஆதலின், இப்பாட்டடிகளில் அளபெடை இயைபுத்தொடை வந்தவாறு.(யா. க. 40 உரை)இரவரை – இரவில் வருதலை நீக்குவாயாக.

அளபெடை இலக்கணம்

அளபெடை என்பது நெடில் நீண்டொலிக்குமிடத்தும், குறில் நெடிலாகி
நீண்டொலிக்குமிடத்தும் அந்நீட்சிக்கேற்ப ஒலிக்கப்பெறும் ஒலியளவை உணர
உடன்ஒலிக்கப்பெறும் இனக்குறில்களாம். இரண்டு மாத்திரை அளவிற்றாய
நெடில் ஒலி மூன்று நான்கு மாத்திரையாக நீண்டொலிக்க அதன் இனக்குறில்
முறையே ஒன்று இரண்டு அடுத்திணைத்து ஒலிக்கப்படும்.
தொல்காப்பியனார்க்கு இனமான குறிலே அளபெடை யெழுத்தாம்.
நெடிலொன்றே தனித்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாக
ஒலிக்க, அதன் இனக்குறில் ஒன்றோ இரண்டோ அறிகுறியாக எழுதப்படும் என்பது
நன்னூலார் கொள்கை.
இனி, மெய் அளபெடுக்குமிடத்து அந்த மெய்யே மீண்டும் ஒலிக்கப்படும்.
வரிவடிவில் அம்மெய்யே இரட்டித்து எழுதப்படும்.
உயிரளபெடையானது இயற்கையளபெடை, செயற்கை யளபெடை, எழுத்துப்பேறளபெடை,
இசைநூலளபெடை, குற்றெழுத்தளபெடை, நெட்டெழுத்தளபெடை, இன்னிசை யளபெடை,
சொல்லிசை யளபெடை எனப் பலவகைப்படும்.
எ-டு : இயற்கையளபெடை – குரீஇ;
செயற்கையள பெடை –
‘துப்பாய
தூஉ மழை’ (குறள் 12);
எழுத்துப்பேறளபெடை – உவா
அப்பதினான்கு; குற்றெழுத்தளபெடை
– தழூ
உ (தழு); நெட்டெழுத் தளபெடை –
ஆடூ
உ; இன்னிசையளபெடை –
‘கெடுப்பதூ
உம் கெட்டார்க்குச்……’
எடுப்ப
தூஉம் (குறள் 15);
சொல்லிசையளபெடை – எ
ழூஉ (எழுப்பி)
இவ்வளபெடை பொருள்வேறுபாடு அறிவிப்பதூஉம் உண்டு.
எ-டு : எழு : தன்வினை, எழூஉ : பிறவினை;
வெள – கைப்பற்று, வெள
உ – கைப்பற்றியே
விடு.
(தொ. சொ. 283 நச். உரை)

அளபெடை எழுத்துக்களின் தொகை

அளபெடைகளைத் தனியெழுத்தாகத் தொல்காப்பியனார் எண்ணவில்லை. நெடில்
ஏழும் அளபெடுத்தலின், இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்
அளபெடையெழுத்து ஏழ் என்றனர். இ.வி. நூலாரும் அளபெடை ஏழ் என்றே
கூறினார். தனி – முதல் – இடை – கடை – என அளபெடையை நால் வகைப்
படுத்திக் கூறுவாருமுளர்.
நன்னூலார் தனிநிலையை முதல்நிலையில் அடக்கி, ஏழ்
நெட்டெழுத்துக்களும் மொழி முதல் இடை கடை என்ற மூவிடத்தும் வர, அளபெடை
21 என்றார். நெடில் ஏழனுள் ஒளகாரம் மொழிமுதலிலேயே அளபெடையாக வருதல்
கூடும்; ஏனைய ஆறும் மொழிமூவிடத்தும் வரும். ஆதலின் அளபெடை எண்ணிக்கை
19 ஆக, அவற்றுடன் இன்னிசை யளபெடை சொல்லிசையளபெடை என்ற இவற்றைக் கூட்டி
அளபெடை 21 என்பர் சங்கரநமச்சிவாயர். இன்னிசை சொல் லிசையளபெடைகள்
முற்கூறிய அளபெடையுள் அடங்கும் ஆதலின், 21 என்று இவற்றைக் கூட்டிக்
கொள்ளுதல் சாலாது. அளபெடையின் கணக்கில் குரீஇ முதலிய இயற்கை
யளபெடையையும் கொள்ளுதல் வேண்டும்.
அளபெடை என்பன நெடிலையடுத்து ஓசை நிறைக்க வரும் இனக் குற்றுயிராகிய
ஐந்தே ஆதலின், அவற்றைச் சார்பெழுத் தாகக் கொண்டு தனியே கணக்கிடுதல்
தொல்காப்பிய னார்க்குக் கருத்தன்று.
அளபெடை பிளவுபடா ஓசையாயின், ‘கடாஅக் களிற்றின் மேல்’, ‘படாஅ
முலைமேல்’ (குறள் 1087) என்பனவற்றில் க, டாஅ; ப, டாஅ – என்று அலகு
பிரித்தல் வேண்டும். இவ்வாறு பிரித்தால் தளை சிதையும். ஆதலின் கடா, அ;
படா, அ – என்றே பிரித்தல் வேண்டும். ஓசையை நெடிலாகவும் குறிலாகவும்
பகுத்து அசைகொள்ளவேண்டு மெனில், ஒரு நெடிலையே இருகுறிலாகப் பகுத்துக்
கடா என்பதனைக் கட, அ என்றும் அசை கொள்ளலாம்; அவ்வாறு யாரும்
கொள்வதில்லை. ஆதலின் அளபெடை என்ற குற்றெழுத்துத் தனக்கொத்த நெடிலை
அடுத்த தனிக்குறிலாய் அசைநிலை பெறுதல், சீரும் தளையும் சிதையின்
அசைநிலை பெறாமை – ஆகிய இருநிலை யும் பெறுதல் உணரப்படும். (எ. ஆ. பக்.
44, 45)
(‘காட்டில் வளந்தழைத்தல்
காணூஉக் களித்துத்தன்’ என்னும்
வெண்பா அடிக்கண், அளபெடையாகிய உகரக் குற்றுயிர் அலகு பெறாது நிற்ப,
காணூ என்ற சொல் போல வருஞ்சீரோடு இயற்சீர்வெண்டளையான்
இசைந்தவாறு.)

அளபெடை ஏனைய தொடைகளொடும் வருதல்

அளபெடைத் தொடை – மோனை எதுகை முரண் என்ற பிறதொடைகளொடும் விரவிவரும்.முதலெழுத்து ஒன்றி வந்து அளபெடுப்பது இத்தொடை யாம்.‘ அறா அ லின்றரி முன்கைக் கொட்கும்….அறா அ தணிகஇந் நோய்’ என வரும். (கலி. 147)முதல் எழுத்து அளவொத்து நிற்ப, இரண்டாமெழுத்து ஒன்றி வந்துஅளபெடுப்பது.‘ கடா அக் களிற்றின்மேல் கட்படா மாதர்படா அ முலைமேற் றுகில்’ (குறள் 1087)‘ வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள்பண்ண் டை நீர்மை பரிது’ என வரும்.ஈரடிகளிலும் தொடக்கச்சீர்களில் முரணான சொற்கள் வந்துஅளபெடுப்பது.‘ சீஇ றடி மாதர் சினத்தினைக் காண்குவல்பேஎ ரெழில் கண்க ளிடை’ என வரும்.மோனை எதுகை முரண் முதலிய தொடைகள் தன்னிடைக் கலக்க அடிதோறும்முதற்சீர் அளபெடுத்து வருவது.எ-டு : வந்தவழிக் காண்க.ஏனைய தொடைகள் வாராமல் அளபெடைத் தொடை மாத்திரம் வருவது.‘ பூஉந் தண்ண் புனமயில் அகவமாஅங் குயில்கள் சாஅய்ந்து ஒளிப்ப’ (சி.செ.கோ. 42)என வரும் (யா. க. 41 உரை)

அளபெடை நிகழ வரையறை

உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் விளிக்கண்அளபெடுக்கும். (தொ. சொ. 155 கல். உரை)

அளபெடை மிக்கு வருதல்

பாட்டடிகளில் அளபெடைத் தொடை மிகுதியாக வருதல்.எ-டு : ‘ஏ எர் சிதைய அ ழாஅ ல், எ லாஅ நின்சேஎ யரி சிந்திய கண்’இக்குறள் வெண்பா அடிகளில் முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்னும்மூன்றும், அடியளபெடையுமாக நான்கு அளபெடையும் வந்தவாறு காண்க. (யா. வி.பக். 32)

அளபெடை வண்ணம்

அளபெடை பயின்று வரும் சந்தம் அளபெடை வண்ண மாகும்; இரண்டளபெடையும்பயிலச் செய்வது.எ-டு : ‘ மரா அ மலரொடு விரா அய்ப் பரா அம்’‘கண்ண் ட ண்ண் ணெனக் கண்டும் கேட்டும்’என வரும்.‘ தாஅம் படுநர்க்குத் தண்ணீ ருளகொல்லோ வாஅஅம் பல்விழி அன்பனை அறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒ நுவலுமிவ் வூர்’இஃது அளபெடைத் தொடையாம். (தொ. செய். 219 நச்.) அளபெடை வண்ணமாவதுஅளபெடையில் வருவது. (வீ. சோ. 142 உரை)

அளபெடை விகற்பம் 8

அளபெடைத் தொடை அடியளபெடையும், இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை,மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என விகற்பம் ஏழுமாக எட்டாம்.‘ தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப்பூஉங் குவளைப் போஒ தருந்திக்காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்மாஅத் தாஅ ள் மோஒ ட் டெருமைதே எம் புனலிடைச் சோஒ ர் பாஅல்மீஇன் ஆஅ ர்ந் துகளும் சீஇர்ஆஅ னாஅ நீஇள் நீஇர்ஊரன் செய்த கேண்மைஆய்வளைத் தோளிக் கலரா னாவே’இப்பாடற்கண் முதல் ஏழு அடிகளிலும் அடி அளபெடை யுடன், இணைமுதலியனவும் முறையே காண்க. (யா. கா. 20)

அளபெடை விளியேற்குமிடத்து ‘இயற்கையஆகும் செயற்கை’ நிலை

உயர்திணையிடத்து இகரஈற்று அளபெடைப்பெயர் விளி யேற்கு மிடத்து, ஏனையஇகரஈற்றுப் பெயர் போல இ ‘ஈ’ ஆகாமல், மாத்திரைமிக்கு இகரஈறாகவேநிற்கும். இ ‘ஈ’ ஆகாமை யான் ‘இயற்கைய ஆகும்’ என்றும், மாத்திரைமிகுதலின் ‘செயற்கைய’ என்றும் கூறினார்.எ-டு : தொழீஇ – தொழீஇஇ, தொழீஇஇஇ(தொ. சொ. 125 சேனா. உரை)இங்ஙனமே ஆன்ஈறும், ரகார லகார ளகார ஈறுகளும் விளியேற்கும்.எ-டு : கிழாஅன், உழாஅன் – கிழாஅஅன், உழாஅஅன் (தொ.சொ.135)சிறாஅர், மகாஅர் – சிறாஅஅர் மகாஅஅர் (தொ. சொ.141)மாஅல் – மாஅஅல்; கோஒள் – கோஒஒள் (தொ. சொ. 149)

அளபெடை விளியேற்றல்

இகரம் னகரம் ரகரம் லகரம் ளகரம் ஆகிய ஐந்து ஈற்றுப் பெயர்களும்அளபெடுக்கும். அளபெடைப் பெயரின் ஈற்று இகரம் ஈகாரம் ஆகாது மாத்திரைநீளும். ஏனைய ஈறுகளின் ஈற்றயல் உயிர்மெய்நெடிலை யடுத்த அளபெடையெழுத்துஒன்றற்குமேல் இரண்டு மூன்று நீண்டொலிக்கும்.எ-டு : தொழீஇஇ, அழாஅஅன், சிறாஅஅர், மாஅஅல், கோஒஒள் (தொ. சொ.128, 138, 144, 152 கல். உரை)

அளபெடை வேறெழுத்து ஆகாமை

தொல்காப்பியனார் அளபெடையை முதலெழுத்துள் அடக்கிக் கொண்டார்.
நன்னூலார் முதலாயினார் அள பெடையைச் சார்பெழுத்தாகக் கொண்டனர்.
தனக்கெனப் பிறப்பிட மின்றித் தான் சார்ந்த எழுத்தின் பிறப்பிடமே
தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டொலிக்கும் எழுத்தே சார்பெழுத் தாம்.
அந்நிலை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றற்கே உரியது
ஆதலின், அவற்றையே தொல்காப்பியனார் சார்பெழுத்தாகக் கொண்டார்; அள பெடை
உயிரெழுத்துள் அடங்கலின் அதனைத் தனியெழுத் தாகக் கொண்டிலர்.
அளபெடை, நெட்டெழுத்தோடு இனக்குற்றெழுத்து நின்று நீண்டிசைப்ப
தொன்று எனினும், மொழிக்காரணமாய் வேறுபொருள் தாராது இசைநிறைத்தல்
மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின், வேறெழுத்து எனவைத்து எண்ணப்
படாததாயிற்று. இப்பெற்றி அறியாதார் நெடிலும் குறிலும் விரலும் விரலும்
சேர நின்றாற்போல இணைந்து அளபெடுக் கும் எனவும், அளபெடையெழுத்து
உயிரெழுத்துள் அடங் காது எனவும், சார்பெழுத்து என வேறு வைத்து எண்ணப்
படும் எனவும், தமக்கு வேண்டியவாறு கூறுப. நெடிலும் குறிலும் விரலும்
விரலும் சேரநின்றாற்போல அளபெழும் என்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடை
என்னாது அள பெடை என்னும் குறியீடே சான்றாகும். அளபெடை யாப்பி னுள் ஓசை
பற்றியே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையு மாகப் பிரிக்கப்படும்.
(சூ. வி. பக். 24)

அளபெடைகளின் எண்ணிக்கை

தனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என்னும் நான்கு வகைகளுடன்ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்னும் ஏழு அளபெடைகளையும் பொருத்தஅளபெடை 4 x 7 = 28 ஆகும்.அவற்றை அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கது வாய்,கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டு வகையுடனும் உறழ 28 x 8 = 224 உயிரளபெடைகளாம்.ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆய்தம் என்னும் பதினொருபுள்ளி யெழுத்துக்களும் குறிற்கீழும், குறிலிணைக் கீழும் அளபு எடுப்ப22 ஆகும். அவற்றை அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய்,கீழ்க்கதுவாய், முற்று என்னும் 8 விகற்பங்களோடும் உறழ 22 x 8 = 176 ஒற்றளபெடைகளாம். இவற்றைச் சீரின் இடைவருவன இறுதி வருவனஎன இருபகுதிப்படுப்ப 176 x 2 = 352 ஆம்.இவ்வாற்றால், உயிரௌபெடை 224, ஒற்றளபெடை 352 ஆம். (யா. க. 41உரை)

அளபெடைச்சீர்

நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் அளபெடையானது நெடிலும்இனக்குறிலும் சேர்ந்து மூன்று மாத்திரை அளவிற்றாகிய ஈரெழுத்து எனக்கொண்டனர். சொல்லாந் தன்மை எய்தி நின்ற அளபெடை இரண்டாகப் பகுக்கப்பட்டுஇயற்சீர் ஆகும்.ஈரசைச் சீர்களுள் இயற்சீர் 10; உரிச்சீர் 6, இப்பதினாறனுள்உரிச்சீர் ஆறும், நேர்புநேர் நிரைபுநேர் ஆகிய இயற்சீர் இரண்டும்அளபெடைச் சீர் ஆகா. ஆகவே அளபெடைகள் நேர் நேர் – நிரை நேர் – நேர் நிரை- நிரை நிரை – நேர் நேர்பு – நிரை நேர்பு – நேர் நிரைபு – நிரை நிரைபுஎன்னும் எட்டு இயற்சீர்களாகவே அமைதல் கூடும்.ஆஅ – நேர் நேர் – ஆஅங்கு – நேர் நேர்புகடாஅ – நிரை நேர் – ஆஅவது – நேர் நிரைபுஆஅழி – நேர் நிரை – புகாஅர்த்து – நிரை நேர்புபடாஅகை – நிரை நிரை – பராஅயது – நிரை நிரைபுஇவ்விதி கட்டளை யடிக்கே உரியது. (தொ. செய். 17 நச்.)

அளபெடைத் தொடை

அளபெடை சீர்களில் ஒன்றி வருவது அளபெடைத் தொடையாம். அடிதோறும்முதற்சீர்களில் அளபெடுத்து ஒன்றுவது அடி அளபெடை. ஓரடியிலே சீர்களில்அளபெடுத்து ஒன்றுவது சீர்அளபெடைத்தொடையாம். அதன் விகற்பங்கள்பலவாம்.எ-டு : ‘ ஓஒ தல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅ தும் என்னு மவர்’ (குறள். 653)இஃது அடி அளபெடைத்தொடை.‘ மாஅ த் தாஅ ள் மோஒ ட்(டு) எருமை’சீர் அளபெடைத் தொடை. (யா. க. 41 உரை)

அளபெடைப் பெயர் விளியேற்றல்

அளபெடைப் பெயர்கள் இயல்பாகவே வினியேற்கும். தொழீஇ – அழாஅன் -மகாஅர் – மாஅல் – கோஒள் – என்னும் இகர னகர ரகர லகர ளகர ஈற்று அளபெடைப்பெயர்கள் இயல்பாக விளியேற்கும். பெயர்நிலையும் விளிநிலையும் ஒன்றேயாய்நிற்கும் என்பது. (தொ. சொ. 122, 132, 138, 146 இள. உரை)

அளபெடையின் ஓசை

அளபெடையாவது நெடிலொடு கூடி வரும் குற்றெழுத்தாகும். நெடிலோசையொடு
குறிலோசை பிளவுபடாது இணைந்து வருவதாம். கோட்டு நூறும் மஞ்சளும்
கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய
கூட்டத்துப் பின்னர் அப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர்
வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத் தல்லது புலப்படா, எள்ளாட்டிய
வழியல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என்பது. (தொ. எ. 6 நச். உரை)
உயிரளபெடையில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் தனித்தனியே நிற்கும்
ஆதலின், ‘கடாஅ’ என்பதனைக் கடா, அ என்று பிரித்து அசை அமைக்கிறோம்.
ஆதலின் அளபெடையில் நெடிலும் குறிலும், நீரும் நீரும் சேர்ந்தாற்
போலவும் கோட்டு நூறும் மஞ்சளும் கூடினாற் போலவும் இணையாது, விரலும்
விரலும் சேர்ந்தாற் போல இணைந்துள்ளவை என்பது உணரப்படும். (எ. ஆ. பக்.
46).

அளபெடையின் வகை

இயற்கையளபெடை, செயற்கையளபெடை, இன்னிசை யளபெடை, சொல்லிசையளபெடை,
நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை, எழுத்துப்பேறளபெடை என அளபெடை
எட்டு வகைப் படும்.
எ-டு : அழைத்தல், விலைகூறல், புலம்பல் – இவற்றில் எழுத்துச்
செயற்கையின்றிப் பிறந்தது இயற்கை யளபெடை. (சே
எய், நூறோ
ஒஒ நூறு, அம்மா- வோ
ஒ)
செய்யுளில் சீர்தளை கெட்டவிடத்துப் புலவன் கொள்ளுதல் செயற்கை
யளபெடை (‘நற்றாள் தொழா
அ ரெனின்’ குறள் 2)
‘கெடுப்ப
தூஉம் கெட்டார்க்குச் ….
(குறள். 15) : குற்றுகரம் அளபெடுத்த இன்னிசையளபெடை.
‘தளை
இ’ ஐகாரக்குறுக்கம் அளபெடுத்த
சொல்லிசை யளபெடை; ஆ
அ : நெடிலளபெடை; ம
ணீஇ : குற்றெழுத்து
நெட்டெழுத்தாகி அளபெடுத்த குறிலளபெடை; சின
ந்ந்து : ஒற்றளபெடை; சந்திரனை
அரா
அப் பற்றிற்று : விகாரத் தெழுந்த
எழுத்துப்பேறளபெடை. (மு. வீ.எழுத். 32)

அளபெடையின் வகைகள் எட்டு

உயிரளபெடை எட்டு இயற்சீர்களின் பாற்பட்டு எண்வகை யாக அமையும்.
எட்டு இயற்சீர்களாவன நேர்நேர் – நிரைநேர் – நேர்நிரை – நிரைநிரை –
நேர்நேர்பு – நேர்நிரைபு – நிரைநேர்பு – நிரைநிரைபு என்பன.
எ-டு : ஆ, அ – நேர் நேர்; ஆ, அங்கு – நேர்நேர்பு; கடா, அ – நிரை
நேர்; ஆ, அவது – நேர் நிரைபு; ஆ, அழி – நேர் நிரை; புகா, அர்த்து –
நிரைநேர்பு; படா, அகை – நிரை நிரை; விரா, அயது – நிரைநிரைபு
இவ்வாறு எண்வகையாக உயிரளபெடைகளைச் சீர்நிலையை யொட்டிக் கொள்வர்.
(தொ. எ. 41 நச். உரை; தொ. பொ. 329 பேரா. உரை)

அளபெடையின் வகைகள் நான்கு

உயிரளபெடை, தனிநிலை – முதனிலை – இடைநிலை – இறுதி நிலை – என
நால்வகைத்து.
எ-டு : ‘ஆ
அ அளிய அலவன்’ – தனிநிலை;

அழி – முதல்நிலை; படா
அகை – இடைநிலை; ‘நல்ல படா

அ பறை’ – இறுதிநிலை (குறள்
1115)
சொல்லமைப்பினை ஒட்டி உயிரளபெடை நான்கு வகைக ளாகப்
பகுக்கப்பட்டவாறு. (தனிநிலையை முதனிலையுள் அடக்கி உயிரளபெடை மூவகைத்து
என்றலுமுண்டு). (தொ. பொ. 329 பேரா. உரை)

அளபெடையில் இனக்குறில் குறி ஆதல்

ஒலிவேற்றுமையால் எழுத்துப் பலவாயின. அங்ஙனமாக நெடிலது விகாரமாய்
ஓரொலியாய்ப் பிறக்கும் அள பெடையை இரண்டெழுத்துக் கூடி மூன்று மாத்திரை
ஆயிற்று எனக் கொள்ளின், இரண்டு எழுத்தொலி அங்ஙனம் ஒன்றில்லை. அதற்கு
அளபெடை என்னும் பெயர் ஏலா தொழியும். ஆதலின் அவ்வாறு
இரண்டெழுத்தொலியாகக் கொள்ளாது அறிகுறியே என்று கோடற்குக் ‘குறியே’
என்றார். தொல்காப்பியனார், ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து’ என்றும், அவற்றின் பின் அறிகுறியாக வரும் ஒத்த
குற்றெழுத்து என்றும் கூறினார் (எனவே, நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப்
பிறக்கும் மூன்று மாத்திரை அளவிற்றாம் எழுத்தே உயிரளபெடையாம் என்பது.)
(நன். 91 சங்கர.)

அளபெடையில் குற்றுயிர் ஈறாய் நின்று உடம்படுமெய் பெறாமை

நெடில் அளபெடுக்குமிடத்து இனமொத்த குற்றுயிர் வரிவடிவில்
அறிகுறியாக வரும். அக்குற்றுயிர் நெடிலொடு தொடர்ந்து உடம்படுமெய்யுடன்
ஈறாம் தன்மையதன்றித் தனித்து நிற்றலின், ‘குற்றுயிர் அளபின் ஈறாம்’
என்றார். (ஆஅ என்ற அளபெடை இடையே வகரஉடம்படுமெய் பெற்று ஆ+வ்+அ = ஆவ
என்றும், ஈஇ என்ற அளபெடை இடையே யகரஉடம்படுமெய் பெற்று ஈ + ய் + இ =
ஈயி என்றும் ஒலிக்கப் படுவதோ வரிவடிவில் எழுதப்படுவதோ இல்லை.) அறிகுறி
மாத்திரமாய் நிற்கும் இவ்வெழுத்தைக் ‘குற்றுயிர்’ என்றாரே யன்றி,
அதனைத் தனியே ஓரெழுத்து என்றாரல்லர். (நன். 108 சங்கர.)

அளபெடையைக் குறிக்கும் பெயர்கள்

அளபு, புலுதம், அளபெடை என்பன ஒருபொருட்கிளவி களாம். (மு. வீ.
எழுத். 33)

அளவடி

நாற்சீர் கொண்ட அடி அளவடி எனப்படும்; நேரடி என்பதும் அது.‘உலகெ லாமுணர்ந் தோதற்க ரீயவன்நிலவு லாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்மலர்சி லம்படி வாழ்த்திவ ணங்குவாம்’ (பெரியபு. 1)இதன்கண் ஒவ்வோரடியும் அளவடியாம்.

அளவடி விருத்தம்

நான்கடியும் எழுத்தொத்து அலகு நிலை ஒவ்வாது வருவனவும், எழுத்தும்அலகும் தம்முள் இயையாது வருவனவும் ஆகிய இருவகை விருத்தமும்.எ-டு : ‘கொள்ளுங் கூற்றி னினைந்துணர் வுசிறிதுள்ள நிற்க வொழிந்திடு மாறுபோல்வள்ளல் தரள வனவ லையுளக்கள்வ ரைவரு மென்றே கரந்திட்டார்.’இது நான்கு அடியும் தம்மில் எழுத்து ஒத்து, அலகு ஒவ்வாதுவந்தது.எ-டு : ‘சொற்றவா வளவி னுளவா வெனுந்தடத்திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளதுசொற்றவாண் மனத்தினா லுறுவிப் பின்னரேமற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்.’இது நான்கடியும் தம்மில் எழுத்தும் அலகும் ஒவ்வாது வந்தது. (வீ.சோ. 139 உரை)

அளவடியில் கூன் வருதல்

அளவடிப் பாடல்களாகிய ஆசிரியம், வெண்பா, கலி இவற்றின்அடித்தொடக்கத்தில் சீர் கூனாக வரும்; ஆசிரியப் பாவின் இடையிலும்வரும்.எ-டு : ‘ அவரே , கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே , தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்பாடமை சேக்கையுள் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216)இஃது ஆசிரியப்பா அடித் தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘ உதுக்காண் , சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’: இது வெண்பாவின்அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘ உலகினுள் , பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’: இதுகலிப்பாவின் அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘யானோ தேறேன் அவர் பொய்வழங் கலரே’. (குறுந். 21): இஃது ஆசிரியப்பாவின் அடி இடையில்அசை கூனாய் வந்தவாறு. (தொ. செய். 49, 48 நச்.)தொல்காப்பியனார் காலத்தே வஞ்சிப்பாவின் முதலில் அசை கூனாய் வந்தது;வஞ்சிப்பாவின் இறுதியில் அசை கூனாய் வருதல் இடைப்பட்ட வழக்கு;வஞ்சிப்பாவின் இடையில் அசை கூனாய் வருதல் கடைப்பட்ட வழக்கு;வஞ்சிப்பாவில் சீர் கூனாய் வருதலும் கடைப்பட்ட வழக்கு.ஆசிரியம்வெண்பாக்கலிகளில் முதற்கண் சீர் கூனாய் வருதல்தொல்காப்பியர்கால வழக்கு. ஆசிரிய அடிகளின் இடையில் அசை கூனாய் வருதல்பிற்பட்ட வழக்கு.‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ (குறுந். 25)‘சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே’ (குறுந். 102)‘வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே’ (அகநா. 276)என ஆசிரியப்பாவின் ஈற்றடியின் இடையில் அசை கூனாக வந்தது.பிற்காலத்தே வஞ்சியடியிலும் சீர் கூனாய் வந்தமையாலும், ஆசிரியஅடியிலும் அசை கூனாய் வந்தமையாலும், இன்ன இடத்தே அசை கூனாய் வரும்,இன்ன இடத்தில் சீர் கூனாய் வரும் என்று கூறாது, பொதுவாகக் கூன்களைத்தனிச்சொல் என வழங்குவராயினர். அவிநயனார், காக்கைபாடினியார்,யாப்பருங்கல ஆசிரியர் முதலியோர் இக்கருத்தினர். (வேங். இலக்.பக்.83-85)

அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆறடித்தரவு, நான்கடித் தாழிசைமூன்று, தனிச்சொல், நாற்சீர் முதலாகப் 13 சீர்வரையில் பத்து அராகஅடிகள், இரு குறள் வெண் பாக்களாகிய பேரெண், இருசீர் அரையடியாம்சிற்றெண் எட்டு, தனிச்சொல், சுரிதகம் இவை பெற்ற பாடலாகும்.இவ்விலக்கணத்திற் பிறழ்ந்து வருவன யாவும் அளவழி வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பாவாம். (யா. வி. பக். 324)

அளவழிச் சந்த வகைகள்

நிசாத்து, விராட்டு, புரிக்கு, சுராட்டு, யவமத்திமம் (தோரை யிடைச்செய்யுள்), பிபீலிகா மத்திமம் (எறும்பிடைச் செய்யுள்), பாதிச்சமச்செய்யுள், அளவழிப் பையுட் சந்தம் என வடநூல்வழித் தமிழாசிரியர்அளவழிச் சந்தவகைகள் வகுத்துக் கூறுப. (யா. வி. பக். 513, 514)

அளவழிச் சந்தப் பையுள்

அளவழிச் சந்தச் செய்யுளில் நான்கு அடியும் சீரான் ஒத்து,ஒவ்வோரடியும் வெவ்வேறு எழுத்து எண்ணிக்கை பெற்று வருவது. (அளவு + அழி= அளவழி)எ-டு : ‘என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்றுகன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவி யாரும்சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்சென்று துளங்க ஆங்கோர்கொன்னவில் பூதம் போலும் குறள்மகள் இதனைச் சொன்னாள்.’ (சூளா.679)இது முதலடி 15 எழுத்தாய், இரண்டாமடி 17 எழுத்தாய், பின்னிரண்டுஅடிகளும் 16 எழுத்தாய் வந்தமையால் அளவழிச் சந்தப் பையுள் ஆயிற்று.(எழுத்தெண்ணிக்கையில் புள்ளியெழுத்து விலக்குண்ணும்.)(யா. வி. பக். 518)

அளவழிச் சந்தம்

நாலெழுத்து முதலாக 26 எழுத்தின்காறும் உயர்ந்த 23 அடியானும் வரும்நாலடிப்பாடல் அடிகளின் எழுத்து ஒத்தும் ஒவ்வாதும் அலகு ஒவ்வாதும்வருவது.எ-டு : ‘பொங்கு சாமரை தாம்வீசச்சிங்க பீடம் அமர்ந்தவெங்கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்செங்க ணானடி சேர்மினே’இவ்வஞ்சி விருத்தம் அடிதோறும் எழுத்தெண்ணிகையான் (8) ஒத்து, அலகுஒவ்வாது வந்த அளவழிச் சந்தம்.எ-டு : ‘அருங்கயம் விசும்பிற் பார்க்கும் அணிச்சிறு சிரலை அஞ்சிஇருங்கயம் துறந்து திங்கள் இடங்கொண்டு கிடந்த நீலம்நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்கருங்கயல் அல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே’ (சீவக. 626)இஃது எழுத்து ஒவ்வாதது.

அளவழித் தாண்டகம்

27 எழுத்து முதலாக உயர்ந்த அடியினவாய் எழுத்தும் குருலகுவும்ஒவ்வாது வருவன அளவழித் தாண்டகமாம். ‘மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண, (சூளா. 1904) – எனத் தொடங்கும் எண்சீர் விருத்தத்துள், முதலடி30, இரண்டாமடி 28, மூன்றாமடி 29, நான்காமடி 28 என அடிதோறும் எழுத்துஒவ்வாதும் குருலகுவும் ஒவ்வாதும் வந்தமை காண்க. (யா. வி.பக்.485)

அளவழிப் பையுட் சந்தம்

நான்கடிகளும் சீரான் ஒத்து எழுத்துக்களான் வேறுபட்டு வரும்சந்தப்பாடல்.‘ஆதியான் அருளாழி தாங்கினான் ஆயிரவெங் கதிரோன் நாணும்சோதியான் சுரர்வணங்கும் திருவடியான் சுடுநீற்றான் நனையப்பட்டகாதியான் அருளிய கதிர்முடி கவித்தாண்டான் மருகன் கண்டாய்ஓதியான் உரைப்பினும் இவன்வலிக்கு நிகராவார் உளரோ வேந்தர்’(சூளா. 250)இது முதலடி 19 எழுத்தாயும், இரண்டாமடி 22 எழுத்தாயும், மூன்றாமடி20 எழுத்தாயும், நான்காமடி 21 எழுத்தாயும் வந்தமையால் அளவழிப் பையுட்சந்தம். (யா. வி. பக். 517)(அளவழிச் சந்தப் பையுட்கும் அளவழிப் பையுட் சந்தத்திற் கும் இடையேவேறுபாடு அடிகளின் எழுத்தெண்ணிக்கை குறைவு மிகுதியாக அமைதலில்கிடப்பதுபோலும்)

அளவியல்

பாவினது அடிவரையறை (தொ. பொ. 313 பேரா)

அளவியல் சந்தம்

நாலெழுத்து முதலாக 26 எழுத்தின்காறும் உயர்ந்த 23 அடியானும் வரும்நாலடிப்பாடல் குருவும் இலகுவும் ஒத்து வருவது.4 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘ஆதி நாதர்’5 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘பந்தம் நீக்குறில்’6 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘திரித்து வெந்துயர்’7 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘பாடு வண்டு பாண்செயும்’8 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘முரன்று சென்றுவண்டினம்’9 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘வினையைத் தான்மிடைந்தோட்டிநீர்’10 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘கருதிற் கவினார்கயனாட்டத்’11 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘ஆதி யானறவாழியினானலர்’12 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘குரவு தான்வரிகொங்கொடு’13 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘கலையெலா முதற்கணே’14 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘குரவக் கோலக்கோங்கணி’15 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘யதிகணம் இருநிலம்’16 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘மாவரு கானல்வரையதர்ப்’17 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘செருவினை வைவேல்’18 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘பிணியார் பிறவிக் கடலு ட்’19 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘அன்னங் கண்டர விந்த’20 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘அருவிப் பலவரைகாள்’21 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘பின்தாழும் பீலிகோலிப்’22 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘அருமாலைத் தாதலர நின்றமர்குழுவினோ டாயிரச் செங்கணானும்’23 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘சோதிம ண்டலம் தோன்றுவ துளதேல் சொரியுமாமலர்த் தூமழை யுளதேல்’24 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘விலங்கு நீண்முடி யிலங்கமீமிசை விரிந்த மாதவி புரிந்தநீள்கொடி’25 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘திருகிய புரிகுழல் அரிவையரவரொடு திகழொளி இமையவரும்’26 எழுத்தடி அளவியற்சந்தம் – ‘கரிமருவு கடிமதிலி னிடுகொடிகள்திசைதடவு கடுமை யினவாய் .’ (யா. க. 95 உரை பக். 477 – 482)

அளவியல் தாண்டகம்

27 எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடியினவாய் எழுத்தும்குருலகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டக மாம்.எ-டு : ‘வானிலவி முகிலார்ப்ப மருவிமாண்பால்’எனத் தொடங்கும் எண்சீர்விருத்தம் (யா. வி.பக். 483) 27 எழுத்தடிஅளவியல் தாண்டகம். (யா. வி. பக். 476)

அளவியல் வெண்பா

நான்கு அடிமுதல் ஆறடி முடிய வரும் வெண்பா அளவியல் வெண்பா. இதுவேவெண்பாக்களில் சிறப்புடையது.(தொ. செய். 158 நச்.)

அளவியல்வகை அனைவகைப் படுமாறு

எழுத்திற்கு மாத்திரை கூறுவது முதலாக, எழுத்து அசை சீர் அடி தொடைஇவற்றுக்கு எண் பற்றிய அளவு கூறுதலும், உறுப்பினான் ஆகிய பாக்களுக்குஅவ்வவற்றின் உறுப்புக் களின் அளவு கூறுதலும், அவற்றைத் தொகுத்தும்வகுத்தும் விரித்தும் கூறுதலும், பெருக்கம் சுருக்கம் கூறுதலும், உடன்பாட்டாற் கூறுதலும், ‘வரையறை இன்று’ என எதிர் மறுத்துக் கூறுதலும்,பிறவும் எல்லாம் விளங்க, எடுத்தோத் தானும் உத்திவகையானும் விதப்பானும்கூறுதல். (தொ. செய். 183 ச.பால.)

அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகும் ஒன்பதெழுத்து

க ச த ப ந ம வ அ உ என்பன, அளவுப்பெயர் நிறைப்பெயர் என்பனவற்றின்
மொழி முதலாகிய ஒன்பது எழுத்துக்களாம். அவை கலம் – சாடி – தூதை – பானை
– நாழி – மண்டை – வட்டி – அகல் – உழக்கு – என்ற அளவுப்பெயர்க்கண்ணும்,
கழஞ்சு – சீரகம் – தொடி – பலம் – நிறை – மா – வரை – அந்தை – முதலிய
நிறைப் பெயர்க்கண்ணும் காணப்படுவன. இப்பெயர்கள் அக்காலத்து வழங்கின
(தொல்காப்பியனார் கலம் (எ. 168), பனை (169), உழக்கு (457), நாழி, உரி
(240) பதக்கு, தூணி (239) என்ற அளவுப் பெயர்களையும் கா என்ற
நிறைப்பெயரையும் (169) நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளார்). (தொ. எ.
170 நச். உரை)
இம்மி – ஓரடை – இடா – என்ற பெயர்களும், ஒரு ஞார் – ஒரு துவலி –
என்ற பெயர்களும் உரையாசிரியர்களால் கொள்ளப் பட்டன. (தொ. எ. 170
நச்.)
இம்மி – ஓரடை – ஓராடை என்பனவற்றை இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.
(தொ. எ. 171)

அளவு

1) மாத்திரை என்ற ஓசை அளவு (தொ. எ. 102 நச்)2) அளவியல் என்ற செய்யுள் உறுப்பு (தொ. செய். 1 நச்.)(அளபு – மாத்திரை – தொ. எ. 50 நச்.)

அளவுப்பெயரும், நிறைப்பெயரும், பொருட்பெயரும், ஒன்று முதல் எட்டு ஈறாக உள்ள எண்களொடு புணர்தல்:

ஒருகலம் ஒருகழஞ்சு ஒருகடல் – ஒன்று ‘ஒரு’ என்றாகும்.
இருகலம் இருகழஞ்சு இருசுடர் – இரண்டு ‘இரு’ என்றா கும். (தொ. எ.
446 நச்.)
முக்கலம் முக்கழஞ்சு முச்சுடர் – மூன்று ‘மு’ என நின்று வந்த
வல்லெழுத்து மிகும். (447)
நாற்கலம் நாற்கழஞ்சு நாற்பொருள் – நான்கு ஈறுகெட்டு னகரம் றகரம்
ஆகும். (442)
ஐங்கலம் ஐங்கழஞ்சு ஐந்தீ – ஐந்தன் நகரம் வரும் வல் லெழுத்தினது
இன மெல் லெழுத்து ஆகும். (448)
அறுகலம் அறுகழஞ்சு அறுசுவை – ஆறு ‘அறு’ எனக் குறுகிப் புணரும்.
(440)
எழுகலம் எழுகழஞ்சு எழுபொருள் – ஏழ் ‘எழு’ எனத் திரிந்து புணரும்
(389)
எண்கலம் எண்கழஞ்சு எண்பொருள் – எட்டு ஈறுகெட்டு டக ரம் ணகரமாகத்
திரிந்து புணரும். (444)
வருமொழி முதலில் ந ம வ என்பனவும் உயிரும் வரின், எட்டு ‘எண்’
என்றாக, வருமொழி நகரம் ணகரமாக எண்ணாழி எனவும், எண் மண்டை – எண் வட்டி
– என வேறு திரிபு இன்றியும், எண் + அகல் = எண்ணகல் என்றாற் போல நிலை
மொழியில் தனிக்குறிலை யடுத்த ணகர ஒற்று இரட்டித்தும் புணரும்.
(450)
ஒன்பது, ஒன்பதின் அகல் – ஒன்பதின் சாடி – எனவும், ஒன்பதிற்றுக்
கலம் – ஒன்பதிற்றகல் – எனவும், ‘இன்’ பெற்றும் ‘இன்’ இற்றாகத்
திரிந்தும் புணரும். (459)
ஐந்தும் மூன்றும், வருமொழியில் ந ம வரின், வந்த ஒற்று
மிகும்.
வருமாறு : ஐந்நாழி, ஐம்மண்டை; முந்நாழி, மும்மண்டை (451)
மூன்று, வருமொழியில் வகரம் வருவழி ஈறுகெட்டு (நெடு முதல் குறுகி)
னகரம் வகரமாகிப் புணரும். வருமாறு: முவ்வட்டி (452)
நான்கு, வகரமுதன்மொழி வருவழி, ஈறுகெட்டு னகரம் லகரமாகிப் புணரும்.
வருமாறு : நால் வட்டி (453)
ஐந்து, வகரமுதன்மொழி வருவழி ஈறுகெட்டு இடை நகரம் கெட்டும் வகரஒற்று
மிக்கும் புணரும். வருமாறு : ஐவட்டி, ஐவ்வட்டி (454)
ஒன்று இரண்டு என்பன நிலைமொழிகளாக, வருமொழி முதலில் உயிர்வரின்,
‘ஒரு’ ஓராகவும், ‘இரு’ ஈராகவும் திரிந்து,
ஓரகல் – ஈரகல் – ஓருழக்கு – ஈருழக்கு என்றாற் போலப் புணரும்.
(455)
மூன்றும் நான்கும் ஐந்தும் நிலைமொழிகளாக, வருமொழி முதலில் வகரம்
வரின், முவ்வகல் – முவ்வுழக்கு, நாலகல் – நாலுழக்கு, ஐயகல் – ஐயுழக்கு
– என வரும். (456)
ஆறு என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், ஆறகல் –
ஆறுழக்கு – என இயல்பாகப் புணரும். (458)
மூன்று என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், மூன்று +
உழக்கு = மூவுழக்கு, மூன்று + அகல் = மூவகல் என்றாற் போல,
நிலைமொழியில் முதலெழுத்து நீங்கலான ஏனைய கெட்டு உடம்படுமெய் பெற்றுப்
புணரும். (457)

அளவெண்

நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை அளவெண் எனப்படும்.(யா. கா. 31 உரை)இருசீர் ஓரடியாய்ப் பதினாறு வந்த அம்போதரங்க உறுப் பினை அளவெண்என்பர் வீ.சோ. உரையாசிரியர். (கா. 117)

அளவையின் எழுவகைகள்

1. நிறுத்து அளத்தல் – கழஞ்சு முதலிய நிறைப் படிக்கற்களைத் தராசின்
ஒரு தட்டிலிட்டு, நிறுத்தறிய வேண்டிய பொருளை மறுதட்டிலிட்டு
நிறுத்தளத்தல்; 2. பெய்து அளத்தல் – எண்ணெய் முதலியவற்றை
அளவுகலன்களில் ஊற்றி அளத்தல்; 3. தெறித்து அளத்தல் – ஒன்றனை ஒலித்து
ஒலி யுண்டாக்கி அவ் வொலியைச் செவிகருவியாக அளந்து கோடல்; 4.
தேங்கமுகந்து அளத்தல் – நெல் முதலியவற்றை அளவுகலன்களின் மேல்
குவியுமாறு குவியுமளவும் பெய்தளத் தல்; 5. நீட்டி அளத்தல் – சாண்,
முழம் முதலிய நீட்டல் அளவைகளால் துணி முதலியவற்றை அளத்தல்; 6. எண்ணி
அளத்தல் – ஒன்று இரண்டு முதலாக எண்ணியளத்தல்; 7. சார்த்தி அளத்தல் –
ஒன்றன் அளவொடு மற்றொன்றன் அளவை ஒப்பிட்டு அளத்தல்; கண்ணிமைப்பொழுது,
கைந்நொடிப்பொழுது ஆகிய அளவைகளோடு எழுத்தின் அளவை ஒப்பிட்டளத்தல். (தொ.
எ. 7 நச். உரை)

அளைமறி பாப்புப் பொருள்கோள்

செய்யுட்கண் ஈற்றில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்றபொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள் கோளாம். அளை மறி பாம்பு – புற்றிலேதலைவைத்து மடங்கும் பாம்பு. அது போலுதலால் இப்பொருள்கோள் அப்பெயர்த்தாயிற்று.எ-டு :‘தாழ்ந்த உணர்வினராய்த்தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்தாமும்சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார்தாமும்மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறிமுன்னி முயலாதாரே.’இதனுள், ‘வாழ்ந்த……… முயலாதார்’ மூழ்ந்தபிணி…….முனிவார், சூழ்ந்த வினை ……. சுழல்வார், தாழ்ந்தஉணர்வினராய்…….. தளர் வார் – எனத் தலைகீழாய் ஈற்றடி இடையிலும்முதலிலும் சென்று கூடுதல் காண்க. (நன். 417 சங்.)

அளைமறி பாப்புப் பொருள்கோள்

வளையில் நுழையும் பாம்பு முதலில் தலையை நுழைத்துத் தலை உள்ளே செல்லவாலை இறுதியில் உள்ளே இழுத்துக் கொள்ளும்; உள்ளே உடலை வளைத்துத்திரும்பித் தலையை வெளியிலும் வாலை உள்ளுமாகக் கொள்ளும். அதுபோல,பாடலில் அமைந்த முறையிலுள்ள முதலடி இரண்டாமடி மூன்றாமடி நான்காமடிஇவற்றைப் பொருள் செய்யும்போது மாற்றி ஈற்றடியிலிருந்து பொருள் கொள்ளஅமையும் பொருள்கோள், வளையில் நுழைந்து உடலைத் திருப்பிக் கொள்ளும்பாம்பின் செய்கையையுடையதாகிய அளைமறிபாப்புப் பொருள்கோளாம். (யா. வி.பக். 391)அம்பொன் நீடிய அம்ப லத்தினில் ஆடு வாரடி சூடுவார்தம்பி ரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மைதரித்துளார்நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம்செய் தவத்தினால்இம்பர் ஞாலம் விளக்கி னாரிளை யான்கு டிப்பதி மாறனார்’ (பெரியபு.இளையான். 1)இப்பாடலைப் பொருள் செய்யும்போது, இம்பர் ஞாலம் விளக்கினார் ஆகியஇளையான் குடிப்பதி மாறனார், நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், தம்பிரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மைதரித்துளார்; அவர் அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்- என ஈற்றடியினின்று முறையே முதலடிவரை இணைத்துப் பொருள் செய்யப்படுவதுஅளைமறி பாப்புப் பொருள் கோளாம்.

அழகு

நூல் வனப்புக்களுள் அழகு என்பதும் ஒன்று. வழக்குச் சொற் பயிலாமல்செய்யுளுள் பயின்றுவரும் சொற்களால் சீர்த்துப் பொலிவு பெறப் பாடின்அப்பகுதி அழகு எனப்படும். அஃது அகநானூறு முதலிய பாடல்களிற் காணப்படும்வனப்பாம். (தொ. செய். 236 பேரா.)

அழுகுணிச்சித்தர் பாடல்கள்

இவர் பாடிய 32 பாடல்களும் கலித்தாழிசையை ஒத்த ஒருவகைச் சிந்துஅமைப்பின. பாடல், நான்கு அடிகளும் தம்முள் அடியெதுகை பெற்று ஈற்றடிநீண்டிசைத்து ‘என் கண்ணம்மா’ என்ற தனிச்சொல் பெற்று வருகிறது; ஈற்றடிநீண்டிசைப்பதால் கலித்தாழிசை போல்வது. கலித்தாழி சையினின்றேபிற்காலத்துச் சிந்துயாப்புத் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர்.(இலக்கணத். முன். பக். 102, 103)

அழுங்கல் என்னும் உரிச்சொல்

அழுங்கல் என்னும் உரிச்சொல் ஓசையாகிய இசையினையும், இரக்கமும்கேடும் ஆகிய குறிப்பினையும் உணர்த்தும்.எ-டு :‘உயவுப் புணர்ந்தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) -ஓசை.‘அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே’(அக. 66) – இரக்கம்.‘குணன்அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும்’(நாலடி. 353) – கேடு. (தொ. சொ. 350 சேனா. உரை)

அவன, அவள : ஈற்று அகரம்

அவன அவள – என்னும் சொற்களிலுள்ள ஈற்று அகரம் ஆறாம் வேற்றுமைப்பன்மையுருபு. (அவனுடையவாகிய கண்கள், அவளுடையவாகிய கண்கள் – எனப்பன்மைப் பெயர் கொடுத்து முடித்துக் காண்க.) (தொ. சொ. 76 இள. உரை)

அவப்பிரஞ்சனம்

அவப்பிரஞ்சனமாவது இழிசனர் பேசுமொழி. (மு.வீ. மொழி. 28).

அவலோகிதன்

பௌத்த முனிவருள் ஒருவன். அவன்பால் அகத்தியன் பாடம் கேட்டுத்தண்டமிழ் இலக்கணம் வகுத்தான் என்னும் வீர சோழியம். (பாயிரம் 2)

அவலோகிதன்

பலரும் ஆய்ந்து போற்றும் பண்புடையன் அவலோகிதன் என்னும் பௌத்தப்
பெரியோன் எனவும், அவனிடத்தில் அகத்தியன் மாணாக்கனாக இருந்து பாடம்
கேட்டுத் தெளிந்து உலகோர் பயன்பெறத் தமிழிலக்கணத்தை இயற்றித் தந்தான்
எனவும் வீரசோழியம் அவலோகிதனைப் பற்றிக் குறிக்கிறது. (வீ. சோ. பாயி.
2)

அவா ‘வேட்கை’யொடு புணர்தல்

வேட்கை என்பது நிலைமொழியாக, அவா என்பது வரு மொழியாகப் புணரும்
வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வேட்கை + அவா = வேணவா என்று
புணரும். வேட்கை + அவா
> வேட் + அவா
> வேண் + அவா = வேணவா.
வேட்கை. யான் தோன்றிய அவா என்பது பொருள். வேட்கையாவது பொருள்கள்மேல்
தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டும் என
மேன்மேல் நிகழும் ஆசை. வேட்கையும் அவாவும் என அல்வழிப் புணர்ச்சி
கொள்ளினும் ‘வேணவா’ என்ற முடிபு ஒக்கும். (தொ. எ. 288 நச்.
உரை)
வேள் + அவா
> வேண் + அவா = வேணவா என
முடிந்தது. ஆள் – ஆண் எனவும், எள் – எண் எனவும் திரிந்தாற்போல, வேள் –
வேண் எனத் திரிந்து புணர்ந்தது எனலாம். (எ. ஆ. பக். 148)

அவாய்நிலை

தொடர்மொழிக்கண் நிலைமொழியும் வருமொழியும் இணைதற்குரிய திறங்களுள்அவாய்நிலை என்பதும் ஒன்று. (தொ. சொ. 1 சேனா. உரை) (இ. வி. 161)அவாய் நிலையாவது ஒரு சொல் தன்னொடு சேர்ந்து பொருள் முடித்தற்குரியமற்றொரு சொல்லை அவாவி நிற்பது. ‘ஆ நடக்கின்றது’ என்புழி, ஆ என்னும்நிலைமொழி நடக்கின்றது என்னும் வருமொழியை அவாவிநின்று, ஆ நடக்கின்றதுஎன்னும் தொடர்மொழியாகிப் பொருள் நிரப்புகிறது.

அவிநயனார்

அவிநய நூலாசிரியர்.

அவிநயம்

இஃது ஒரு காலத்தே எழுத்துச் சொற் பொருள் என்ற மூன்றனையும் விளக்கியபெருநூலாக வழங்கியதுபோலும். அவிநயம் என்ற நூலின் யாப்புப்பகுதியினின்று 63 நூற் பாக்கள் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள்இடம் பெற்றன. இந்நூற்கு இராசபவித்திர பல்லவதரையன் உரை வரைந்த செய்திநன்னூல் மயிலைநாதருரையால் (சூ. 359) புலப்படுகிறது. தளைச் செய்திகள்சில, தொடைச் செய்திகள் சில, ஆசிரியத்தாழிசை – வஞ்சிவிருத்தம்- போல்வனநீங்கலாக ஏனைய யாப்புப் பற்றிய செய்திகள் பலவும் மேற்கூறிய 63 நூற்பாவாயிலாகப் பெறப்படுகின்றன. இதன் ஆசிரியர் அவிநயனார். ஆசிரியனதுஇயற்பெயரால் பெயர்பெற்றது இந்நூல். (யா. வி. பக். 21, 25, 27முதலியன)

அவிநயம்

இஃது ஒரு காலத்தே எழுத்துச் சொற் பொருள் என்ற மூன்றனையும் விளக்கியபெருநூலாக வழங்கியதுபோலும். அவிநயம் என்ற நூலின் யாப்புப்பகுதியினின்று 63 நூற் பாக்கள் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள்இடம் பெற்றன. இந்நூற்கு இராசபவித்திர பல்லவதரையன் உரை வரைந்த செய்திநன்னூல் மயிலைநாதருரையால் (சூ. 359) புலப்படுகிறது. தளைச் செய்திகள்சில, தொடைச் செய்திகள் சில, ஆசிரியத்தாழிசை – வஞ்சிவிருத்தம்- போல்வனநீங்கலாக ,ஏனைய யாப்புப் பற்றிய செய்திகள் பலவும் மேற்கூறிய 63 நூற்பாவாயிலாகப் பெறப்படுகின்றன. இதன் ஆசிரியர் அவிநயனார். ஆசிரியனதுஇயற்பெயரால் பெயர்பெற்றது இந்நூல். (யா. வி. பக். 21, 25, 27முதலியன)

அவினந்த மாலை

கணித நூலுள் ஒன்று; பதினாறு வரிகருமம், ஆறு கலாச வருணம், இரண்டுபிரகரணச் சாதி, முதகுப்பை ஐங்குப்பை என்ற பரிகருமம், மிச்சிரகம்முதலாகிய எட்டு அதிகாரம் முதலாய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளைஎடுத்துக் கூறுவது. (யா. வி.பக். 569)

அவை நான்கு

அவை – சபை; நல்லவை, தீயவை, குறையவை, நிறையவை என்ற நான்கும் சபை.(யா. க. 96 உரை. பக். 553)

அவைப் பரிசாரம்

சபை வணக்கம். இது ஸபாஸ்தவம், விநயப்பிரசாரம் எனவும் கூறப்படும்.(சீவக. 647 அடிக்)

அவையடக்கம்

அவையினர்க்கு வழிபடுகிளவி கூறுதல். இஃது அவையடக்கு, அவையடக்கியல்எனவும் பெயர் பெறும். (சீவக. 4 உரை)

அவையடக்கியல்

இது வாழ்த்து வகையின்பாற்படும். அவை அடங்குமாற்றான் தன்னைஇழித்துக் கூறி அவையைப் புகழ்தலாம். அவைக்கண் தான் அடங்குதலின்‘அவையடங்கியல்’ என்பது பொருந்தாத பாடமாம். அவையோரிடம் தான்பொருந்தாதவற்றைக் கூறினும், அவற்றை அன்னோர் ஆராய்ந்து அமைத்துக் கொள்கஎன்று அவையிலுள்ளார் எல்லார்க்கும் வழிபடு கிளவி கூறுவது. இதற்கும்கலி, வஞ்சி, பரிபாடல் என்பன ஏற்பன அல்ல.‘திரைத்த விரிக்கில் திரைப்பினா வாய்போல்உரைத்த உரைபோகக் கேட்டும் – உரைத்தபயின்றவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்(து)இயன்றவா செய்வார் பலர்’இது பூதத்தார் அவையடக்கு. ‘அவையடக்கியலே’ என்னும் நூற்பாவில்,‘அரில்தப’ என்றதனால் சிறுபான்மை யாப்பினும் பொருளினும் வேறுபட்டகொச்சகத்தால் கூறும் தொடர் நிலைச் செய்யுட்கும் அவையடக்கியல்கொள்ளப்படும் என்பது.எ-டு : ‘கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாதுவிட்டால்’ என்ற பாடல் (சீவக. பாயிரம்) (தொ. சொ. 113 நச்.).

அவையடக்கு

‘அவையடக்கம்’ காண்க.

அவையம்

1) பண்டிதர் கூட்டம் 2) நியாயம் உரைக்கும் சபையோர் – ‘சிறந்தகொள்கை அறங்கூறவையமும்’ (மதுரைக் 492) 3 சபாமண்டபம் : ‘வாய்மையிகழ்ந்துளான் அவையத்தை முன்னீறு செய்து’ (கந்த. சதமுக. 21) (L)

அவையல் கிளவி

நன்மக்களிடைக் கூறத்தக்கன அல்லாத சொற்கள். இவற்றை அவ்வாய்பாட்டைமறைத்துப் பிற வாய்பாட்டான் கூறல் வேண்டும். அங்ஙனம்மறைக்குமிடத்தும், தொன்றுதொட்டு வழங்கி வருவனவற்றை மறைத்துப் பிறவாய்பாட்டான் கூறுதல் வேண்டா. இங்ஙனம் மறைத்துக் கூறுதல் தகுதிஎனப்படும்.எ-டு : ‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’ (எ. 233) – ஈகார பகரத்தை ஓர் உயிர்மெய்யெழுத்தாகக் கூறின் அவையல் கிளவியாம். அதையே உயிரும் மெய்யு மாகப் பிரித்து வேறொருவாய்பாட்டான் கூறின் அமை வுடைத்தாம்.கண்கழீஇ வருதும்; கால்மேல் நீர்பெய்து வருதும், கை குறிய ராய்இருந்தார், பொறை உயிர்த்தார், ‘புலிநின்று இறந்த நீர்அல்ஈரத்து ’ (நற். 103), கருமுக மந்தி, செம்பின் ஏற்றை – இவை இடக்கரடக்கிக்கூறியன.ஆப்பி, யானை இலண்டம், யாட்டுப் பிழுக்கை – என்பன மருவி வந்தமையின்கொள்ளப்பட்டன.(தொ.சொ.443 சேனா. நச். உரை)

அவையல்கிளவி, தகுதி : வேறுபாடு

அவையல் கிளவியாவது இழிந்தோர் கூறும் இழிசொற்களை நன்மக்களிடைமறைத்துக் கூறுதல்; மறைத்துக் கூறாக்கால் வழுவாம். தகுதியாவது‘செத்தான்’ எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டதைத் தகுதி நோக்கிச்சிறுபான்மை ‘துஞ்சி னான்’ என வழங்குதல். செத்தான் என வழங்குதலும் வழாநிலையேயாம். இஃது இரண்டற்கும் இடையே வேற்றுமை. (தொ. சொ. 442 நச்.உரை)

அவையினமைதி

அவையின் அமைதியாவது, நல்லோர் இருந்த நல்லவையும், தீயோர் இருந்ததீயவையும் எனக் கொள்க (வீ. சோ. 181 உரை)

அவ்வியய தத்திதன்

இடைச்சொற்கள் அடியாக வந்த பெயர்ப் பகுபதங்கள்: 1. அவ்வீடு – அந்தவீடு – இந்நாடு – இந்த நாடு – எனச் சுட்டுப் பெயர்கள் பிளந்துநின்றாற்போல நில்லாது வந்த இடப்பெயர்த் தன்மைப்பட்டஇடைச்சொற்களும்,2. எண் முதலியவை ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்துவனவும்தமிழுக்கு அவ்வியய தத்திதன் ஆகும்.எ-டு : 1. ஆங்குக் கொண்டான், ஆன்(ற்) கொண்டான்,ஈன்(ற்) கொண்டான்ஆங்கு : சுட்டாகும் முதலெழுத்து நீண்ட சொல். ஆன், ஈன் : அகரஇகரங்களை அடியாகக் கொண்டு திரிந்த சொற்கள்.அவ்வயின், இவ்வயின், எவ்வயின் (வினா); அங்கண், இங்கண், அவ்வாய்,ஆயிடை – இவை இடப்பொருள் உணர்த்தும் (ஏழாம் வேற்றுமை) இடைச்சொல்லானதத்திதம்.யாங்கு, யாண்டு, எங்கு – என்பனவும் அன்ன.2. ஒருவயின், இருவயின், பலவயின்; இவை எண்ணோடு இயைந்து இடப்பொருளைஉணர்த்துவன.வடாஅது (வேங்கடம்), தெனாஅது (குமரி), குணாது, குடாஅது – எனத்திசைப்பெயர்களும், ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா. 173) எனப் பண்புப்பெயர்களும் அடியாக வந்த விகுதி ஏற்றவினைக்குறிப்புப் பெயரெல்லாம் தத்திதனே ஆம்.வடமொழியில் யத்திர (எவ்வயின்) தத்திர (அவ்வயின்) அத்திர(இவ்வயின்), யத : (எதனால்) தத : (அதனால்) இத : (இங்கு) – என வினாவும்சுட்டுமாக வருவனவற்றை விவட்சி தார்த்தம் (சுட்டிக் காட்டவிரும்பியவற்றைப் பொருளாக உடையன) என்பர்.அப்பொருள் இப்பொருள் இக்கொற்றன் – போல்வன சுட்டும் பெயருமாகத்தொக்க தொகைநிலைச் சொற்களாம்; தத்திதன் ஆகா. (பி.வி. 33)(இடைச்சொற்கள் இங்ஙனம் அவ்விய தத்திதாந்த பதம் எனக் கூறப்படுதல்அனைவர்க்கும் உடன்பாடானதன்று. தமிழுக்கு இது புதுமை. வீரசோழியம்இவற்றைத் தத்திதன் என்று கூறவில்லை. இலக்கணக் கொத்து இவற்றை இப்பொருளுணர்த்தும் வினாச்சுட்டு எண் பெற இடைச்சொல்லாகவே எழுந்து நின்றன எனவிளக்கி, இவற்றைப் பகுபதம் எனக் காட்டி, யாண்டு யாங்கு எங்கே எங்கண்எவண் எங்ஙனம் யாங்ஙனம் – எனவும், ஆன ஈன அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்குஊங்கு அவண் இவண் உவண் அம்பர் இம்பர் உம்பர் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் -எனவும் உதாரணமும் காட்டியுள்ளது.)

அவ்வியய பூர்வபதம்

அவ்வியயீபாவ சமாசம் என்ற இடைத்தொகைச் சொற் றொடரில் முன்மொழிஇடைச்சொல்லாக இருத்தல்.எ-டு : மற்றை ஆடை (பி. வி. 23)

அவ்வியயம்

இடைச்சொல் உரிச்சொல் முதலியன அவ்வியயமாம்(பி. வி. 42)

அவ்வியயம் என்னும் உபசர்க்கம்

உபசர்க்கம் என்பது சொல்லுக்கு முன் வருவது.எ-டு : கைம்மிகல், மீக்கூர்தல் (கை, மீ) (பி. வி. 45)

அவ்வியயீ பாவ சமாசம்

இஃது இடைச்சொல்தொகை. அவ்வியம் என்பது, ஆண் பெண் அலி என்னும்வடமொழிச்சாத்திரலிங்கங்கள் (பால்) மூன்றிலும் ஒன்று போன்றதாய்,வேற்றுமைகளுக்கும் பொது வாய், வேற்றுமைப் படாததாய், ஒருமை இருமை பன்மைஎன்னும் மூன்றிலும் மாறுபடாததாய் வரும் சொல் – என்பது வடமொழிமரபு.தமிழில் இடைச்சொற்களும் அவ்வியயங்களைப் போல வருதலைக் கருதிப்பி.வி. நூலார் இடைச்சொல் முன்னும் பின்னும் வரும் தொடர்களை அவ்வியயீபாவ சமாசம் எனக் கொள்கிறார். உண்மையில் அத்தொடர்கள் தொகாநிலை யாகவேநிற்கின்றன. தொல்காப்பியனாரும் இடைச்சொல் ‘முன்னும் பின்னும்மொழியடுத்து வருதல்’ உடைத்தென்றே கூறுவார். இஃது இருவகை கொண்டது, 1.முன்மொழிப் பெயர் 2. பின்மொழிப் பெயர் – என.எ-டு : வாள்மன், அதுமன்; மற்றைஆடை, கொன்னூர் – என முறையே காண்க(பி. வி. 23)

அஷ்டகம்

அட்டகம்; அது காண்க.