செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

வ1 va,    தமிழ் வண்ணமாலையில் ‘வ்’ என்ற மெய்யெழுத்து ‘அ’ என்ற உயிரெழுத்து முன்னும் பின்னுமாயிணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the medial syllable formed by adding the short vowel ‘a’, to the consonant ‘v’.

     [வ் + அ – வ.]

வகரம் தமிழ் நெடுங்கணக்கில், பதினான்காவது உயிர்மெய்யெழுத்தாகும். மொழியியலாருள் ஒரு பிரிவினர், வகரத்தை உரசொலி யென்பர். மற்றொரு சாரார், “மேற்பல்லும், கீழிதழும் சேருங்கால், ஒலிப்பொடு மூச்சு வெளிவரும் பொழுது, கேட்கின்ற ஒலியாதலால், உரசொலி என்று உரைப்பதைக் காட்டிலும், ஒழுகொலி (Continuant); என்பதே பொருத்தப்பாடுடைத்து” என்பர். வகரத்தின் பிறப்பிடம் பற்றிப் பகருங்கால், “பல்லித ழியைய வகாரம் பிறக்கும்” (தொல்.எழுத்து.98); என்று தொல்காப்பியரும், “மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே” (நன்.85); யென நன்னூலாரும் குறித்துள்ளமை, இங்கு நினைவு கூரத்தக்கது.

இவ்வாறு, இதழ்ப் பல்லின் (labio-dental); ஒலியாக வகரம் இருந்தாலும், அது ஆங்கிலத்தில் “w” என்பது போல, ஈரிதழ்த் திறப்பொலியாகவும் (Bio-labial); ஒலிக்கின்றது என்றும் மொழியியலாருள் ஒரு பிரிவினர் கருதுவர்.

     “அகர உகரம் ஒளகார மாகும்” என்பர் தொல்காப்பியர். பின்வந்தோர், “அகர வகரமும் ஒளவாகும்” என்பர். ‘ஒள’ என்பதை, கழகக்காலச் செய்யுட்களில், ‘அவ்’ என்றே பன்மை ஈறாக, “அவ்வே” (புறம்.9:5);. “இவ்வே பீலியணிந்து” (புறம்.9:5);.நம் புலவர் பெருமக்கள் குறித்துள்ளனர். இந்த (உ → வ); உகர வகர மாற்றமே. வகரம் ஈரிதழ்த் திறப்பொலி என்னும் மொழியியல் கொள்கையின் அடிப்படையுண்மையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்பது மொழியியலார் கருத்தாகும். இந்த வகரம் சில திராவிட மொழிகளில் ஒலிப்புடைப் பகரமாகவும் (b); வழங்குகிறது.

த. வலை → க. பலெ

த. வண்டி → தெ., க. பண்டி (band);

வாகு → பரகு

வாட்டி → பரட்டி

வரவு → பரவு

தமிழிலும், சில திராவிட மொழிகளிலும், “‘ம”கரம், தம் மூக்கொலியை இழந்து “வ”கரமாக மாறுகின்றது.

உடம்படுமெய்:- இ, ஈ, எ, ஏ, ஐ முதலான எழுத்துகளின் சார்பில்லாத பிற இடங்களில் இரண்டுயிர்கள் அடுத்தடுத்து வருங்கால், இந்த வகரமே உடம்படுமெய்யாக வருகிறது. இவ்வகர வுடம்படுமெய் முற்காலத்தே வருமொழியின் முதலொலிக்கு இனமாயும், பிற்காலத்தில் நிலைமொழியின் ஈற்றிற்கு இனமாயும், வருமெனக் கூறலாம். “கவவகத் திடுமே” (தொல். உரி.59);.

தொல்காப்பியர் ‘வ’கரம், அவ், இவ், உவ், தெவ் என்ற நான்கு மொழிகளில்தான் ஈறாகப் பயின்று வரும் என்று வரையறுத்த ஞான்றும், வல்லெழுத்திற்குப் பின்னால் வருங்கால், ஆய்தமாகும் என்றுங் கூறியுள்ளார். (எ.கா.); கஃபு.

வெஃகா, கஃக.

     ‘அவ்’ போன்ற சொற்களில் பன்மைப் பொருளை, மக்கள் மறந்த ஞான்று “து” என்னும் ஒருமை விகுதியைச் சேர்த்து (அவ்+து); அஃது என்று வழங்கத் தலைப்பட்டனர்.

இவ்வாறு, ஒரிடைச் சொல் தன் பொருளை இழந்தபோது, அவ்விடத்தே வேறு இடைச்சொல்லைச் சேர்த்து வழங்குதல், திராவிட மொழிகளின் பொதுவியல்பாகும். ஆனால் ஒட்டுநிலை மொழியாம் நந்தமிழ்மொழி,

பொருளிழந்த இடைச்சொற்களைச் சாரியையெனப் பெயர்சூட்டி, வழங்கி வருகிறது. தொன்றுதொட்டு வகர மெய்யீறு மொழியின் இறுதியில் வழங்கி வந்தாலும், இடைக்காலத்திலிருந்தே இவ் வீற்றுக்குப் பின்னும், உகரச்சாரியை பெற்று வழங்குவது வழக்கமாகிவிட்டது.

பிற்காலத்தில் வகர மெய்யீறு உகரச் சாரியை பெற்ற போதும், வருமொழியில் யகரம் வருங்கால், அவ்வுகரம், இகரமாக மாறும்.

அவ் + யாது → அவ்வியாது

இலக்கணத்தில் வரும் எடுத்துக்காட்டுகளில் மட்டுமே, பிற்காலத்தல் இம்மயக்கத்தைக் காணலாம்.

வருமொழியில் வல்லெழுத்து வந்தால், நிலைமொழியில் உள்ள வகரமெய், ஆய்தவெழுத்தாக மாறும்.

வருமொழியில் மெல்லெழுத்து வந்தால், நிலைமொழியில் உள்ள வகரமெய், மெல்லெழுத்தாக மாறும்.

கவை, கவ்வை.

மேற்கூறிய எடுத்துக்காட்டின் வாயிலாக

இரட்டை வகரம் மொழியிடையில் மட்டுமே பயின்று

வரும் என்பது நன்கு போதரும்.

காலந்தோறும் கல்வெட்டுகளிற் காணப்படும் வகர உயிர் மெய்யின் வரி வடிவ வளர்ச்சி

கீழே ஒரு வட்டமும், அதன் மேலே நிற்கும் செங்குத்துக் கோடுமாகக் கொம்பிலிருந்து தொங்கும் உண்டையான பழம் போன்று, அசோகர் காலக் கல்வெட்டுகளிலும், (அசோகன்பிராமி); கி.மு.4-ஆம் நூற்றாண்டில் தமிழர்தம் குகைக் கல்வெட்டுகளிலும், தமிழி யெழுத்தாக எழுதப்பட்ட வரிவடிவம்.

பட்டிப்புரோலுக் கல்வெட்டில், கி.மு.2, 3-ஆம் நூற்றாண்டுகளில், ஒரு குடுவை போல உச்சியில் சிறு படுக்கைக் கோட்டுடன் காணப்படும் வரிவடிவம்.

கி.பி.2, 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இவ்வரிவடிவம் ஒரு முக்கோணத்தின் உச்சியிலுள்ள சிறு அழகுப் புள்ளியுடன் காணப் படுகிறது.

கி.பி.6, 7-ஆம் நூற்றாண்டு களில் பல்லவர் காலத்து வரிவடிவ வளர்ச்சி.

கி.பி.8-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கல்வெட்டுகளிற் காணப்படும் வரிவடிவம்.

கி.பி.9, 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலக் கல்வெட்டுகளிற் காணப்படும் வரி வடிவம்.

கி.பி.12, 13-ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளிற் காணப்படும் வரி வடிவம்.

கி.பி.14, 15-ஆம் நூற்றாண்டுகளில் விசயநகர மன்னர் காலத்துக் கல்வெட்டுகளிற் காணப்படும் வரி

கி.பி.16, 17, 18-ஆம் நூற்றாண்டு காலக் காணப்படும் வரிவடிவம்.

கி.பி.19, 20-ஆம் நூற்றாண்டு காலக் கல்வெட்டுகளில் ஏறத்தாழ இற்றை வரிவடிவ நிலையை எய்தியது எனலாம்.

 வ2 va,    கால் என்ற பின்ன வெண்ணின் குறியீடு; symbol of the fraction 1/4.

     ‘எட்டேகால் லெட்சணமே; ‘அவ” 8¼.

 வ3 va,    இடை.(part) பலவின்பால் ஈறுகளுள் ஒன்று (தொல்.சொல். 9); an ending indicative of neut. pl.

வஃகான்

வஃகான் vaḵkāṉ, பெ.(n.)

   வ என்னும் எழுத்து; the letter “va”,

     “வஃகான் மெய்கெட” (தொல், எழுத்து. 122);.

     [வ + கான் – வஃகான். கான் = பழந்தமிழ் எழுத்துச் சாரியை. இது புணருங்கால் இடையே ஆய்தந் தோன்றியது (நன்.எழுத்து.17);.);

வகச்சல்

வகச்சல் vagaccal, பெ.(n.)

   மாலை வகை; a kind of garland.

     “திருமாலை வகச்சல் வளையம்” (கோயிலொ, 59);.

     [வகைச்சல் → வகச்சல்.]

வகதி

வகதி vagadi, பெ.(n.)

   1. எருது (யாழ்.அக.);; bull.

   2. காற்று; wind.

   3. நண்பன்; friend.

வகத்திரம்

 வகத்திரம் vagattiram, பெ.(n.)

   வாகை (சங்.அக.);; siris.

வகந்தம்

வகந்தம் vagandam, பெ.(n.)

   1. காற்று (யாழ்.அக.);; wind

   2. குழந்தை

 child.

வகன்

வகன் vagaṉ, பெ. (n.)

   1. குபேரன் (யாழ்.அக.);; kuberan,

   2. பகன் என்னும் அரக்கன்; Bagan, an a asura or demon.

 வகன் vagaṉ, பெ. (n.)

   1. குபேரன் (யாழ்.அக.);; kuberan.

   2. பகன் என்னும் அரக்கன்; Bagan, an a asura or demon.

வகம்

வகம் vagam, பெ.(n.)

   1. காற்று (யாழ்.அக.);:

 wind,

   2. வழி (யாழ்.அக.);; path.

   3. குதிரை (இலக்.அக.);; horse,

   4. ஊர்தி (யாழ்.அக.);:

 vehicle.

வகரக்கிளவி

வகரக்கிளவி vagaraggiḷavi, பெ.(n.)

   மொழிக்கு முதலாகத் தொடங்கும் ‘வ’வெனுஞ் சொல்; the word begining with the letter of medial vagaram.

     “வகரக்கிளவி நான்மொழி ஈற்றது”(தொல் எழுத்து.81);.

     [வ + கரம் – வகரம் + கிள் → கிள → கிளவி (கரம் = எழுத்துச் சாரியை); (கிளவி = சொல்);.]

வகரம்

வகரம் vagaram, பெ.(n.)

     ‘வ’ என்னும் எழுத்து,

 the letter, va,

பல்லிதழிற் பிறப்பது வகரம்.

     [வ + கரம் = வகரம். கரம் = எழுத்துச் சாரியை. ‘வ’ பார்க்க see va’.தொல்காப்பியர் எழுத்ததி காரத்திலுள்ள 137-வது நூற்பாவில், “கரம்” என்பது குற்றெழுத்துச் சாரியைகளுள் ஒன்றென்று குறிப்பிட்டுள்ளார்.]

வகலியம்

 வகலியம் vagaliyam, பெ. (n.)

   மரம்; a kind of tree.

வகா

 வகா vakā, பெ. (n.)

   அகத்தி; a kind of tree Sesbania grandiflora.

வகாதரம்

 வகாதரம் vakātaram, பெ. (n.)

   வெம்புனல்; hot spring.

வகார வித்தை

வகார வித்தை vakāravittai, பெ. (n.)

   1. பொன்னாக்கக் கலை; alchemy.

   2. திருவைந்தெழுத்துக் கலை; magical art relating to the five mystic letters.

வகாரசூத்திரம்

 வகாரசூத்திரம் vakāracūttiram, பெ. (n.)

   அகத்தியர், அகப்பேய்சித்தர், உரோமர் செய்த ஒர் தமிழ் பொன்னாக்க நூல்; hermetic philosophy which is known under the name of alchemy, Agastiar, Agapey cittar, and Roma risi, each has written the book separately.

     [‘வ’காரம் + சூத்திரம்.]

வகாரத்தலைவன்

 வகாரத்தலைவன் vakārattalaivaṉ, பெ. (n.)

   பூரம்; impure subchloride of mercury.

வகாரத்திரவியவித்தை

 வகாரத்திரவியவித்தை vakārattiraviyavittai, பெ. (n.)

   திருவைந் தெழுத்து வித்தைகளுள் மூன்றுவித்தை; three magical arts of the five relating to five mystic letters.

மறுவ. மூலமந்திரம் (ஒம்);.

வகாரம்

வகாரம்1 vakāram, பெ. (n.)

   வகரவெழுத்து; the letter va.

     “வகார மிசையும் மகாரம் குறுகும்” (தொல். எழுத்து. 330);.

     “பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்” (தொல்.எழுத்து.98);.

     [வ + காரம்.]

காரம் = எழுத்துச் சாரியை. பழந்தமிழ் எழுத்துச் சாரியைகளுள் ஒன்று. கரம், காரம், கான்இம்மூன்றும் குற்றெழுத்துச் சாரியைகளாய் (தொல்.எழுத்து.137); வரும். கரம் குற்றெழுத்திற்கும், காரம் நெட்டெழுத்திற்கும் சொல்லும் வழக்கு அச் சாரியைகளில் அமைந்துள்ள குறில் நெடில் வடிவங்களால் ஏற்பட்டதென்க.

 வகாரம்2 vakāram, பெ. (n.)

   1. வெண்மையுஞ் செம்மையும் கலந்த பருந்தினம்; a mythical bird.

   2. தரங்குறைந்த மாழையினைப் பொன்னாக்கும் முயற்சி; alchemy.

   3. செயற்கை வெள்ளியினைப் பொன்னாக்கும் கலை; alchemical process of making artificial silver.

வகாரவுப்பு

 வகாரவுப்பு vakāravuppu, பெ. (n.)

   கல்லுப்பு (மூ.அ.);; rock – Salt.

வகாரவேலை

 வகாரவேலை vakāravēlai, பெ. (n.)

   இரும்பு, செம்பு போலும் தரம் தாழ்ந்த மாழைகளைப் பொன்னாக்கஞ் செய்வது; transmulation of base metals-iron. copper etc, into gold.

வகி-த்தல்

வகி-த்தல் vagittal,    4 செ.கு.வி (v.i.)

   தாங்குதல்; to bear, carry, as a load, to undertake, as a responsible work, to maintain, support, as a family, to endure, as fatigue, etc.

     ‘குடும்ப பாரத்தை வகிக்கிறான்.’

     [Skt. vah → த. வகி]

வகிடு

வகிடு vagiḍu, பெ. (n.)

   வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளி யொழுங்கு; parting in woman’s hair from the crown to the forehead.

     [வகு → வகிர் → வகிரு → வகிடு. (வகிர் = வகிர்ந்த உச்சி. உச்சிக்கோடு); (மு.தா.பக்.265);.]

வகிடெடு-த்தல்

வகிடெடு-த்தல் vagiḍeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வாகெடுத்தல்;  to make partition of hair.

   2. வகிரெடு-த்தல் பார்க்க;see vagiredu.

     [வகிடு + எடு-.]

வகிரு-தல்

வகிரு-தல் vagirudal,    2 செ.கு.வி. (v.i.)

   அறுத்தல்; cutting.

   2. பங்கு செய்தல்; slicing.

     [வகிர் → வகிரு.]

வகிரெடு-த்தல்

வகிரெடு-த்தல் vagireḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உச்சியினின்றும் நெற்றியின் நடுப்பகுதி வரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல்; to part the hair from the crown to the forehead.

     [வகு → வகிர் + எடு.]

வகிரேந்திரியம்

 வகிரேந்திரியம் vagirēndiriyam, பெ. (n.)

   அறிகருவியாகிய புலன் (யாழ்.அக.);; organ of sense.

 Skt. இந்திரிய

     [பகு → பகிர் → வகிர் + இந்திரியம்.]

வகிர்

வகிர்1 vagirtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. துண்டாக அறுத்தல் (சது.);; to slice, to cut in slips.

   2. பிளத்தல் (சது.);; to split.

   3. கீறுதல்; to cleave.

     “பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில” (கம்பரா.அதிகாய. 160);.

   4. கிழித்துத் திறத்தல்; to tear Open.

   5. பிரித்தெடுத்தல்; to rip up.

வாழைமரத்தை வகிர்ந்து தண்டினைப் பிரித்தெடுத்தனர் (உ.வ.);

     [வகு → வகிர்.]

 வகிர்2 vagir, பெ. (n.)

   1. பிளவு; tearing.

   2. கீறு (வின்.);; Scratch.

   3. பிளந்த துண்டு; slice.

     “மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்” (திருவாச.9, 2);.

   4. வகிடு;   வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு; parting in woman’s hair from the crown to the forehead.

   5. வார்க்கச்சு (வின்.);; leather girdle.

   6. தோல் வார் (யாழ்.அக.);; leather strap.

   7. நரம்பு (யாழ்.அக.);; tendon,

   8. வழி (பிங்.);; way.

   9. சாலை; road.

     [வகு → வகிர்.]

 வகிர்2 vagir, பெ. (n.)

   1. பிளவு; tearing.

   2. கீறு (வின்.);; Scratch.

   3. பிளந்த துண்டு; slice.

     “மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்” (திருவாச.9, 2);.

   4. வகிடு;   வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு; parting in woman’s hair from the crown to the forehead.

   5. வார்க்கச்சு (வின்.);; leather girdle.

   6. தோல் வார் (யாழ்.அக.);; leather strap.

   7. நரம்பு (யாழ்.அக.);; tendon.

   8. வழி (பிங்.);; way.

   9. சாலை; road.

     [வகு → வகிர்.]

வகு

வகு1 vaguttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கூறுபடுத்துதல்; to separate, to divide.

   2. பகிர்ந்து கொடுத்தல்; to apportion.

     “பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து” (நெடுநல்.78);.

   3. இனம்பற்றிப் பிரித்தல்; to classify.

   4. தலைப்புவாரியாக ஒதுக்கீடு செய்தல்; to allot under different heads.

   5. அமர்த்துதல்; to assign, appoint.

     “வகுத்தான் வகுத்த வகையல்லால்” (குறள், 377);.

   6. பகுத்துக் கணக்கிடுதல் (கணக்);; to divide.

   7. வகைப்படுத்திச் சொல்லுதல்; to narrate categorically.

அவன் கதை வகுப்பாய் (பாகவத.1 ஶ்ரீ.நாரதர். 5);.

   8. முறையோடு செலவிடுதல்; to expend methodically.

     “காத்த வகுத்தலும்” (குறள், 385);.

   9. படைத்தல்; to create, as for a Special purpose.

     “என்னை வகுத்திலையே லிடும்பைக் கிடம் யாது சொல்லே” (தேவா. 643, 2);.

   10. பூசுதல்; to daub.

     “அஞ்சனம் வகுத்து” (பெருங். உஞ்சைக். 34, 15);.

ஓ.நோ. L., facio, to make, do, E. manufacture.

     [பகு → வகு.]

 வகு2 vagudal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பிளத்தல்; to split.

     “மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு” (புறநா. 264);.

     [பகு → வகு-.]

 வகு2 vagu, வி. (V.)

   1. ஏற்படுத்துதல்; frame.

   2. உருவாக்குதல்; to set up.

   3. அமைத்தல்; to institute.

மக்களுக்காக வகுக்கப்படும் சட்டங்களை மக்கள் மதித்து நடக்க வேண்டும். முன்னோர் வகுத்த முறை இது அவர் தனக்கென்று ஒரு புது வழியினை வகுத்துக் கொண்டார்.

     [பகு → வகு-]

 வகு4 vagu, வி. (v.)

   1. வகைப்படுத்துதல்:

 classify, seperate, analyse.

செய்தியைத் தொகுத்தும் வகுத்தும் பார்க்கும்போது சில முடிவுகள் கிடைக்கும்.

   2. கணித்தல்; divide.

ஒரு எண்ணில் மற்றோர் எண் எத்தனை மடங்கு உள்ளது என்று கணக்கிடுதல்.

     [ப → வகு-]

வகு-தல்

 வகு-தல் vagudal, செ.கு.வி. (v.i.)

   பிளந்து போதல் உடைந்துபோதல்; to getsplit, divide, to break.

அது இரண்டாக வகுந்து போய்விட்டதும்”(உவ);.

     [பிள்-விள்-விகு-வகு]

வகுஞ்சம்

 வகுஞ்சம் vaguñjam, பெ. (n.)

   இரவு (மலை);; night.

வகுணி

 வகுணி vaguṇi, பெ. (n.)

   ஒலி (சூடா);; sound.

     [வகுளி → வகுணி.]

வகுண்டகி

 வகுண்டகி vaguṇṭagi, பெ. (n.)

   மருதோன்றி; nail dye-Lawsonia alba.

வகுண்டம்

 வகுண்டம் vaguṇṭam, பெ. (n.)

   கவிழ்ந்து பூக்கும் தும்பை வகை (மலை);; a low annual plant flourishing in dry localities.

மறுவ. கவிழ்தும்பை

     [P]

வகுண்டிகா

 வகுண்டிகா vaguṇṭigā, பெ. (n.)

   வாலுளுவை அரிசி; seeds of intellect plant – Celastrus paniculata.

வகுண்டிகை

 வகுண்டிகை vaguṇṭigai, பெ. (n.)

   கஞ்சாங் கோரை (மலை.);; white basil.

மறுவ. நாய்த்துளசி

வகுண்டிமடம்

 வகுண்டிமடம் vaguṇḍimaḍam, பெ. (n.)

   வாலுளுவை (சங்.அக.);; black oil tree.

     [வகுந்து → வகுண்டி + மடம்.]

வகுதரவு

 வகுதரவு vagudaravu, பெ. (n.)

   வகை தெரிவு (நாஞ்.);; discrimination.

வகுதி

வகுதி vagudi, பெ. (n.)

   1. பிரிவு; division.

   2. வகுப்பு; class.

     “வகுதியின் வசத்தன” (கம்பரா. இரணியன். 69);.

     [பகு → வகு → வகுதி (மு.தா.265);.]

ஒருகா. பகுதி → வகுதி என்றுமாம்.

   4. பத்தி; paragraph.

   5. இனம், குழு; clan, caste. மக்களிடையே முதற்கண் கிளைத்த தொழில் வகுப்பே (Craft class); நாளடைவில் பல்வேறு இனவகுப்புகளைத் தோற்றுவித்தது.

   6. தரம், தன்மை; class, standard, rank.

   7. தடுக்கப்பட்ட அறை; compartment, as in a railway carriage.

வகுப்புக்குப் பயணிகள் எண்மர் (உ.வ,);

   8. வகிடெடுத்த முன்தலை மயிரின் இடைவெளி யொழுங்கு; parting in woman’s hair from the crown to the forehead.

     “சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து” (கூளப்ப.131);.

   9. சந்தம், ஒத்தி தன்மையாய் இசைக்கும் வரி; uniform rhythmic flow of a stanza.

     “மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்….. இசை (வச்சணந். செய்யு. 132);.

   10. அழகு (சது.);; beauty.

   11. பொலிவு (யாழ்.அக.);; splendour.

     [வகு → வகுப்பு.]

 வகுதி vagudi, பெ. (n.)

   1. பிரிவு; division.

   2. வகுப்பு; class.

     “வகுதியின் வசத்தன” (கம்பரா. இரணியன். 69);.

     [பகு → வகு → வகுதி (மு.தா.265);.]

ஒருகா. பகுதி → வகுதி என்றுமாம்.

   4. பத்தி; paragraph.

   5. இனம், குழு; clan, caste.

மக்களிடையே முதற்கண் கிளைத்த தொழில் வகுப்பே (Craft class); நாளடைவில் பல்வேறு இனவகுப்புகளைத் தோற்றுவித்தது.

   6. தரம், தன்மை; class, standard, rank.

   7. தடுக்கப்பட்ட அறை; compartment, as in a railway carriage.

வகுப்புக்குப் பயணிகள் எண்மர் (உ.வ,);

   8. வகிடெடுத்த முன்தலை மயிரின் இடைவெளி யொழுங்கு; parting in woman’s hair from the crown to the forehead.

     “சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து” (கூளப்ப.131);.

   9. சந்தம், ஒத்தி தன்மையாய் இசைக்கும் வரி; uniform rhythmic flow of a stanza.

     “மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்….. இசை (வச்சணந். செய்யு. 132);.

   10. அழகு (சது.);; beauty.

   11. பொலிவு (யாழ்.அக.);; splendour.

     [வகு → வகுப்பு.]

வகுத்தல்

வகுத்தல் vaguttal, பெ. (n.)

   1. பிரித்தற் கணக்கு (கணக்.);; division.

   2. வடிவமைப்பு; design.

     [வகு1 → வகு-த்தல்.]

வகுத்தான்

வகுத்தான் vaguttāṉ, பெ. (n.)

   ஊழ்; fate, as the great dispenser.

     “வகுத்தான் வகுத்த வகையல்லால்” (குறள், 377);.

வகுத்தாலம்

 வகுத்தாலம் vaguttālam, பெ. (n.)

   கொடிப் பாசி; moss creeper-Hydrilla verticillata.

வகுத்திரம்

 வகுத்திரம் vaguttiram, பெ. (n.)

   தெப்பம் (யாழ்.அக.);; raft.

வகுத்திராபிகாரம்

 வகுத்திராபிகாரம் vaguttirāpigāram, பெ. (n.)

   மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி; five sense organs- body, mouth, eye, nose, ear.

வகுத்துக்காட்டல்

வகுத்துக்காட்டல் vaguttuggāṭṭal, பெ. (n.)

   உத்தி முப்பத்திரண்டனுள், முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது (நன்.14);; detailed exposition of what has been briefly summorised earlier stated, one of 32 utti.

     [வகுத்து + காட்டல்.]

வகுப்புவாதம்

 வகுப்புவாதம் vaguppuvātam, பெ. (n.)

   இனம், மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க எண்ணுகின்ற போக்கு; sectarianism, communalism.

     ‘வகுப்பு வாதத்தினால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைகிறது’.

     [வகுப்பு + Skt. Vada → த. வாதம்.]

வகுப்புவாரி

வகுப்புவாரி1 vaguppuvāri, பெ.எ. (adj.)

   1. இனப் பாகுபாடு; communal division.

இனப் பாகுபாடு அறநெறிக்கு ஒவ்வாதது.

   2. பிரிவுவாரிப் பகுப்பு; sectional division.

   3. கிளைவாரித் தேர்வு; divisional election.

     [வகுப்பு + வாரி.]

 வகுப்புவாரி2 vaguppuvāri, வி.எ. (adv.)

   1. வகுப்பு வாரியாக; communally.

வகுப்பு வாரியாகத் தலைவரைத் தெரிவு செய்வது தற்கால நடைமுறையாகிவிட்டது (உ.வ.);.

   2. பிரிவுவாரியாக; section ally.

   3. கிளை வாரியாக; divisionally.

     [வகுப்பு + வாரி.]

 வகுப்புவாரி2 vaguppuvāri, வி.எ. (adv.)

   1. வகுப்பு வாரியாக; communally.

வகுப்பு வாரியாகத் தலைவரைத் தெரிவு செய்வது

தற்கால நடைமுறையாகிவிட்டது (உ.வ.);.

   2. பிரிவுவாரியாக; section ally.

   3. கிளை வாரியாக; divisionally.

     [வகுப்பு + வாரி.]

வகுமை

வகுமை vagumai, பெ. (n.)

   1. களிப்பு, இன்பம்; joy.

   2. மகிழ்ச்சி (அக.நி.);; happiness.

வகுலி

வகுலி vaguli, பெ. (n.)

   மீன்; fish.

     “பயமிலாது திரியுஞ்சில் வகுலி போன்று” (வரத. பாகவத. நரசிங்க.234); (நாமதீப.269);.

வகுளப்பிகம்

 வகுளப்பிகம் vaguḷappigam, பெ. (n.)

   வஞ்சிக்கொடி (சங்.அக.);; a creeper.

வகுளம்

வகுளம் vaguḷam, பெ. (n.)

   மகிழம்பூ; pointed, leaved ape flower.

     “பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” (குறிஞ்சிப். 70);.

வகுளம்பூ

 வகுளம்பூ vaguḷambū, பெ. (n.)

   மகிழம்பூ; flower of mimusops elengi. It is very fragrant but not beautiful.

வகுளாபரணம்

 வகுளாபரணம் vaguḷāparaṇam, பெ. (n.)

   மேளகர்த்தாக்களுளொன்று; a primary rägа.

வகுளி

வகுளி1 vaguḷi, பெ. (n.)

   ஒலி (யாழ்.அக.);; sound.

     [வகுணி → வகுளி.]

 வகுளி2 vaguḷi, பெ. (n.)

   1. எவட்சாரம்; a prepared salt.

   2. மலைமாமரம்; mountain mango tree.

வகுளிநாதர்

வகுளிநாதர் vaguḷinātar, பெ. (n.)

   நவநாத சித்தருள் ஒருவர் (பொருட்.நிக.9);; siddha, one of na navanada-cittar.

வகுள்

வகுள்1 vaguḷ, பெ. (n.)

   1. சமுத்திராப்பச்சை; a kind of plant – Argyreia speciosa.

   2. மகிழ மரம்; a tree – Mimusops elengi.

 வகுள்2 vaguḷ, பெ. (n.)

   சமுத்திரப்பாலை (மலை.);; elephant creeper.

வகுவை

 வகுவை vaguvai, பெ. (n.)

   ஓர் கட்டி; an abscess.

வகை

வகை1 vagai, பெ. (n.)

   1. கூறுபாடு; division, section.

     “அவ்வகை யொன்பதும் வினை யெஞ்சு கிளவி” (தொல். சொல். 146);.

   2. கிளை, பிரிவு; section branch.

   3. சாதியினம், வகுப்பினம் (GTn.D.1145);; caste.

   4. பிரிவு, இனம்; kind, class, sort.

இது எவ்வகையைச் சேர்ந்தது?

   5. முறை; manner, method.

     “பாயினார் மாயும் வகையால்” (பு.வெ.5, 2);.

   6. வழி, சூழ்ச்சி; ways, means.

     “மாயும் வகையறியேன்” (திவ். திருவாய். 5, 4, 4);.

     “வகைமடிப்பிலே மாட்டிக் கொண்டது” (பழ.);.

   7. காரணம் (நாமதீப. 640.);; cause.

   8. தந்திரம்; artfulness.

     “வகையால் மதியாது மண்கொண்டாய்” (திவ்.இயற். நான்முகன். 25);

   9. திறமை, ஆற்றல், வலிமை; skill, ability.

     “வகைகொண்டு வந்தேன்” (கம்பரா.பாசப். 36);.

   10. இயல்பு, தன்மை; nature quality

     “வளமங்கையர் வகையுரைத்தன்று” (புவெ.9.50, கொளு.);.

   11. வணிக முதல் (வின்.);; the principal stock in trade.

   12. இடம் (பிங்.);; place.

   13. உறுப்பு; limb.

     “வகை நலமுடைய காளை” (சீவக. 695);.

   14. வாழ்க்கைக்குரிய செல்வம், பொருள் முதலியன (வின்);; goods, property, means of livelihood.

   15. குறுத்தெரு; short or narrow street.

     “மூதூ ரிடவகை யெல்லை யெல்லாம்” (சீவக. 462);.

   16. மனையின் பகுப்பு; apartments of a house.

     “வகைமா னல்லில்” (புறநா. 398);.

   17. விளக்கம் (இ.வ.);; details.

   18. கூட்டப்படும் எண்கள் (வின்.);; parts of the some total in addition.

   தெ., ம. வக;க., து. வகெ.

     [வகு1 → வகை.]

 வகை2 vagaidal,    2 செ.கு.வி. (v.i.)

   பிரிவுபடுதல்; to be divided, sub-divide.

     [வகு1 → =வகை-. (மொ.க.பக்.39);.]

 வகை2 vagaidal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. வகைப்படுத்துதல்; to arrange a subject.

     “மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்” (கம்பரா. மந்தரை.60);.

   2. வகிர்தல், பிளத்தல்; to divide, to cut.

     “வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ” (நற்.129);.

   3. ஆராய்தல்; to consider, weigh.

     “நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து” (கம்பரா.பிராட்டி.16);.

     [வகு1 → வகை-]

 வகை4 vagai, பெ. (n.)

   1. பொதுவான கூறுகளைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் பிரிவு; classification or compart one utilization based on theme or category.

இங்கு அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும்.

   2. பிரிவு; variety.

எத்தனையோ வகையான மனிதர்கள்.

   3. முறை; manner.

     ‘ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்’. ஒரு வகையில் நீ சொல்வது சரி.

     [வகு → வகை.]

 வகை5 vagaidal, பெ. (n.)

   குறுகலான சந்து; narrow lane.

     [வகு1 → வகை-. வகை = குறுந்தெரு (சீவ.நச்.462);.]

வகை சொல்(லு)-தல்

வகை சொல்(லு)-தல் vagaisolludal,    1 செ.கு.வி. (v.i.)

   1. விளக்கஞ் சொல்லுதல்; to give details.

   2. கணக்குக் காட்டுதல்; to render account.

வகை நூற்பா

வகை நூற்பா vagainūṟpā, பெ. (n.)

   தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறு வேறாக வகுத்துரைக்கும் நூற்பா (நன். 20);; nurpa, giving detailed exposition of that which has already been briefly stated.

     [வகை + நூற்பா.]

வகை மோசம்

வகை மோசம் vagaimōcam, பெ. (n.)

   1. இக்கட்டான, சிக்கல் நிலை; complicated.

   2. உதவியற்ற நிலை; helpless condition.

   3. நம்பிக்கைக் கேடு; betrayal or breach of trust.

     [வகை + மோசம்.]

வகைகணக்குமன்றம்

 வகைகணக்குமன்றம் vagaigaṇaggumaṉṟam, பெ. (n.)

   நஞ்சை யறுதிக் களநடை மிகுதி விளைச்சல் மகமை, மானியக் கொடை முதலியவற்றின் கணக்குகளை மேற்பார்வை செய்யும் கணக்கு மன்றம்; revenue collecting body in a joint meeting, once in a year, verifying the classified accounts of Wetlands, fixed land income groups and donated lands.

     [வகை + கணக்கு + மன்றம்.]

வகைகள்

வகைகள்   1. அழுக்குத் தேமல்    2. அழகுத் தேமல்

   3. பொங்கு தேமல்

   4. மங்கு தேமல்

   5. எச்சிற்றழும்பு (உத்கோடரோகம்);

 வகைகள்   1. வீட்டுத் தேனீ    2. சிறு தேனீ

   3. மலைத் தேனீ

   4. கொசுத் தேனீ

   5.கொம்புத் தேனீ

வகைகள்:

வகைகள்: 1   2. குழியுடலிகள்    3. செல்லிமீன்கள்

   4. மெல்லுடலிகள்.

வகைகாரன்

வகைகாரன் vagaigāraṉ, பெ. (n.)

   கெட்டிக்காரன்; clever man.

     “நீயாடும் வித்தை வெகுமாய வித்தை கண்டாய் வகைகாரா” (நெல்விடு.240);.

     [வகு → வகை + காரன் = வினைமுதல் குறித்த ஆண்பாலீறு.]

வகைகூறு-தல்

வகைகூறு-தல் vagaiāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒரு சொல்லிற்குரிய பொருளை பலவாறு வகைப்படுத்திக் கூறுதல்; to convey the meaning of a word, in various classifications.

     [வகை + கூறு-.]

வகைகூறுதல் என்பது, ஒன்றற்குரிய விளக்கத்தைக் கூறுமுகத்தான், அதன் இயல்புகளை வெளிப்படுத்த வேண்டி, அதனுடைய வகைகளைக் கூறுதலாகும்.

     “நகையென்பது சிரிப்பு: அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலு மென மூன்றென்ப” (தொல். பொருள்.251, பேரா.); எனப் பேராசிரியர் கூறும் சிரிப்பு வகை, வகை கூறுதலில் அடங்கும்.

வேட்கை பிறவாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என

மூவகையார் (சீவ.2529. நச்.); எனப் பெண்கள் வகைப்படுத்தப்படுதல் குறிப்பிடத் தக்கதாகும்.

 வகைகூறு-தல் vagaiāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒரு சொல்லிற்குரிய பொருளை பலவாறு வகைப்படுத்திக் கூறுதல்; to convey the meaning of a word, in various classifications.

     [வகை + கூறு-.]

வகைகூறுதல் என்பது, ஒன்றற்குரிய விளக்கத்தைக் கூறுமுகத்தான், அதன் இயல்புகளை வெளிப்படுத்த வேண்டி, அதனுடைய வகைகளைக் கூறுதலாகும்.

     “நகையென்பது சிரிப்பு: அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலு மென மூன்றென்ப” (தொல். பொருள்.251, பேரா.); எனப் பேராசிரியர் கூறும் சிரிப்பு வகை, வகை கூறுதலில் அடங்கும்.

வேட்கை பிறவாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என மூவகையார் (சீவ.2529. நச்.); எனப் பெண்கள் வகைப்படுத்தப்படுதல் குறிப்பிடத் தக்கதாகும்.

வகைகெட்டவன்

வகைகெட்டவன் vagaigeṭṭavaṉ, பெ. (n.)

   1. ஓழுக்கங் கெட்டவன்; a man lacking discipline.

   2. தரமறியாதவன்; the man who does not the know the dignity of value.

     [வகு → வகை + கெட்டவன்.]

வகைக்கு

 வகைக்கு vagaiggu, பெ. (n.)

   பிரிவு தோறும்; each item. வகைக்கு பத்து உருபா செலவாயிற்று.

 வகைக்கு vagaiggu, பெ. (n.)

   பிரிவு தோறும்; each item.

வகைக்கு பத்து உருபா செலவாயிற்று.

வகைசமாபந்தி

 வகைசமாபந்தி vagaisamāpandi, பெ. (n.)

வகைகணக்குமன்றம் பார்க்க;see vagaikanakku manram.

     [வகை + ப. சமாபந்தி.]

வகைசெய்-தல்

வகைசெய்-தல் vagaiseytal,    1 செ.கு.வி. (v.i.)

   1. ஏற்பாடு செய்தல்; to make arrangements.

   2. ஆயத்தப்படுத்துதல்; to prepare.

   3. கணக்கிற் பதிவு செய்தல்; to make entries in an account.

   4. வழி செய்தல் (இ.வ.);; to find a way out.

   5. நிலங்களுக்குத் தீர்வை யொழுங்கு செய்தல் (S.I.l. i., 64.);; to make a revenue settlement.

     [வகை + செய்-]

வகைசெய்கின்றவர்

வகைசெய்கின்றவர் vagaiseygiṉṟavar, பெ. (n.)

   நிலத்தின் அளவு முதலியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரி (I.M.PCg.720);; settlement officer.

     [வகை + செய்கின்றவர்.]

வகைச்சல்

வகைச்சல் vagaiccal, பெ. (n.)

   மாலை வகை; a kind of garland.

     “திருமாலை வகச்சல் வளையம்” (கோயிலொ. 59);.

     [வகை → வகைச்சல்.]

வகைதப்பு

வகைதப்பு vagaidappu, பெ. (n.)

   1. நேர் வழியினின்றும் பிறழுகை; swerving from the right path.

   2. தவறுகை; mistake.

   3. ஆய்ந்தறியாமை; thoughtlessness.

     “வகைதப்பா மோசம் வராதோ” (விறலிவிடு. 983);.]

     [வகை + தப்பு.]

வகைதிரிவு

 வகைதிரிவு vagaidirivu, பெ. (n.)

வகை தெரிவு (நாஞ்.); பார்க்க;see Vagai-terivu.

     [வகை + திரிவு.]

வகைதெரி-தல்

வகைதெரி-தல் vagaideridal,    2 செ.கு.வி. (v.i.)

   ஒன்றன் தனிச் சிறப்பினைத் தெரிந்து செயல்படுதல்; to do a thing after Considering its special features.

     [வகை + தெரி-]

வகைதெரிவு

 வகைதெரிவு vagaiderivu, பெ. (n.)

   ஒன்றைக் கூர்ந்து நோக்கி, பிற பொருள்களினின்று வேறுபடுத்தும் திறன்; discrimination.

அவன் வகை தெரிவு இல்லாதவன்.

     [வகு → வகை + தெரிவு.]

வகைதொகை

 வகைதொகை vagaidogai, பெ. (n.)

   விளக்கம்; details.

மேற்கொண்ட செலவினத்தின் வகைதொகை சொல்லியாதல் வேண்டும்.

தெ. வகதொக.

     [வகை + தொகை.]

வகைத்தார்

வகைத்தார் vagaittār, பெ. (n.)

வகை மாலை பார்க்க;see vagai-malai.

     “வகைத்தார் மார்பன்” (பெருங். வத்தவ.4, 8);.

     [வகை + தார்.]

வகைநிலைக்கொச்சகம்

வகைநிலைக்கொச்சகம் vagainilaiggoccagam, பெ. (n.)

   கொச்சக வகை (சீவக. 2514, உரை.);; a kind of koccagam Verse.

     [வகைநிலை + கொச்சகம்.]

வகைபண்ணு-தல்

வகைபண்ணு-தல் vagaibaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

வகைசெய்-, 1, 2, 3 (யாழ்.அக.); பார்க்க;see Vagai-sey-.

     [வகை + பண்ணு-]

வகைபுனை-தல்

வகைபுனை-தல் vagaibuṉaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

வகைசெய்-, 1, 2, 3 (யாழ்.அக.); பார்க்க;see vagai-sey-.

     [வகை + புனை-]

வகைபெறக்காட்டல்

வகைபெறக்காட்டல் vagaibeṟaggāṭṭal, பெ. (n.)

   தொகுத்துரைத்ததை விரித்துக் கூறும் உத்திவகை (மாறனலங் பாயி. 25.);; a literary device which consists in the detailed treatment of which has already been briefly stated.

வகைபெறு-தல்

வகைபெறு-தல் vagaibeṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. முட்டுப்பாடுகள் விலகுதல், தடைகள் அகலுதல்; to be cleared of difficulties.

   2. முறைப்படி அமைதல்; to be in proper order.

     [வகை + பெறு-]

வகைப்படுத்து-தல்

வகைப்படுத்து-தல் vagaippaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1 பங்கிடுதல் (சங்.அக.);; to divide.

   2. வகையாகப் பிரித்தல்; to classify and arrange.

     [வகு → வகை + படு → படுத்து.]

வகைப்பாடு

 வகைப்பாடு vagaippāṭu, பெ. (n.)

   பிரித்தல்; division, classification.

நோயின் அறிகுறிகள், வகைப்பாடு முதலியன அறிந்து பண்டுவமளிக்க வேண்டும்.

     [வகை + பாடு.]

வகைப்பேறு

 வகைப்பேறு vagaippēṟu, பெ. (n.)

   வரி வகையுளொன்று; a tax.

     [வகை + பேறு. பேறு = வரிவகை.]

வகைமடிப்பு

 வகைமடிப்பு vagaimaḍippu, பெ. (n.)

   உதவியற்ற நிலை; helpless condition.

     [வகை + மடிப்பு.]

வகைமாலை

வகைமாலை vagaimālai, பெ. (n.)

   தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை; a kind of garland in which tender leaves and flowers are alternately strung together.

     “வகைமாலையினையும் இழையினையு முடைய மகளிரை” (சீவக. 483, உரை);.

     [வகை + மாலை.]

வகைமுதலடுக்கணி

வகைமுதலடுக்கணி vagaimudalaḍuggaṇi, பெ. (n.)

   பல வகையான முதற் பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுவதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி (மாறனலங்.179);; a figure of Speech in which a whole stanza consists merely of the names of several objects strung together without any adjunct.

வகையரா

 வகையரா vagaiyarā, பெ. (n.)

   முதலியன (வின்.);; etcetera.

     [வகை → வகையரா.]

வகையறா

 வகையறா vagaiyaṟā, பெ. (n.)

   ஒன்றோடு தொடர்புடைய மற்றொன்று; and the rest, etcetera hails from a family.

     ‘வயலின் தம்பூரா வகையறாக்களுடன் வந்து இறங்கினார்’.

வகையறி-தல்

வகையறி-தல் vagaiyaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. செய்யும் முறை தெரிதல்; to know the way, to follow the proper course of action.

   2. கூறுபாடறிதல்; to understand the bearings.

     “சொல்லின் வகையறியார்” (குறள், 713);.

     [வகு → வகை + அறி-]

வகையறு

வகையறு1 vagaiyaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வழக்குத் தீர்த்தல்; to settle, as a dispute.

     ‘எங்களில் நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம்’ (S.I.I.viii. 155);.

     [வகை + அறு.]

 வகையறு2 vagaiyaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தெளிவாகப் பகுத்தறிதல்; to discern.

   2. நுணுக்கத்தை வேறுபடுத்தி விளக்குதல்; to distinguish.

   3. மறைக் குறியீடுகளைத் தெளிவுறுத்தல்; to decipher.

   4. சிக்கலறுத்தல், முடிச்சவிழ்த்தல்; to unravel.

 வகையறு3 vagaiyaṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடிப்படைப் பொருளை இழத்தல்; to lose the wherewithal,

   2. ஆதரவற்றுப் போதல்; to become helpless.

 வகையறு3 vagaiyaṟudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அடிப்படைப் பொருளை இழத்தல்; to lose the wherewithal.

   2. ஆதரவற்றுப் போதல்; to become helpless.

வகையற்றவள்

வகையற்றவள் vagaiyaṟṟavaḷ, பெ. (n.)

   1. வாழும் வழி தெரியாதவள்; a woman who does not know, how to live.

   2. நெறி பிறழ்ந்தவள்; Woman gone astray.

   3. கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவள்; woman lacking principles in life.

     [வகை + அற்றவள்.]

வகையாக

 வகையாக vagaiyāga,    பெ.அ. (ad.) வசமாக; inescapably, strongly.

பொய் சொல்லி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.

     [வகை + ஆக.]

 வகையாக vagaiyāga, பெ.அ. (ad.)

   வசமாக; inescapably, strongly.

பொய் சொல்லி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.

     [வகை + ஆக.]

வகையார்

 வகையார் vagaiyār, பெ. (n.)

   இனத்தார், பிரிவினர்; persons of same class or sect.

     [வகு → வகை → வகையார்.]

வகையிடு-தல்

வகையிடு-தல் vagaiyiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

வகைப்படுத்து (யாழ்.அக.); பார்க்க;see vagai-p-paduttu.

     [வகு → வகை + இடு-]

வகையுளி

வகையுளி vagaiyuḷi, பெ. (n.)

   அசை முதலுறுப்புகளைச் சொல் நோக்காது இசை நோக்கி வண்ணமறுக்கை (யாப்.வி. 375); (தண்டி. 111.);; scansion in disregard of speech rhythm.

     ‘வேண்டுதல் வேண்டாமை’ என்ற குறளில் வகையுளி பயின்று வருதல் குறித்து யாப்பருங்கலக் காரிகையாரும், இளம்பூரணரும் வரையறுத்துள்ளது வருமாறு:

வக்கசிப்பி

 வக்கசிப்பி vakkasippi, பெ.(n.)

   சிப்பிமுத்து; pearl oxyster.

     [வக்கம் + சிப்பி.]

வக்கடை

 வக்கடை vakkaḍai, பெ.(n.)

   நீர் பாய்வதற்காக, வயல்வரப்பில் வெட்டி விடப்படும் ஓடை; streamlet in between the ridges of paddy field.

மறுவ. வாய்மடை

     [வாய்க்கடை → வக்கடை.]

யாழ்ப்பாணத்தமிழர் “வக்கடை” என்று, இன்றும் வழங்கிவருதல் காண்க.

வக்கட்டை

வக்கட்டை1 vakkaṭṭai, பெ.(n.)

   மெலிந்த உயிரினம்; lean animal.

     [வட்கு → வக்கு → வக்கட்டை. வட்கு = மெலிவு]

 வக்கட்டை2 vakkaṭṭai, பெ.(n.)

   1. அளவுக் கதிகமான தண்ணிர் வெளியே செல்லுவதற் குரிய வழி; outlet for surplus water.

   2. செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டப்பட்ட நீர்மடை (யாழ்ப்.);:

 Channel cut through the ridge of a paddy field, to let the surplus water pass away, or for allowing water to run on to the adjoining field.

     [வாய் + கடை → கட்டை → வாய்க்கட்டை → வக்கட்டை.]

வக்கணத்தி

 வக்கணத்தி vakkaṇatti, பெ.(n.)

   மாகணத்தி; a kind of tree.

வக்கணப்பட்டை

 வக்கணப்பட்டை vakkaṇappaṭṭai, பெ.(n.)

   வக்கணத்தி; a kind of medicinal plant

வக்கணம்

வக்கணம்1 vakkaṇam, பெ.(n.)

   1. வக்கணை 1, 2 (யாழ்.அக.); பார்க்க; see { }

   2. பட்டப் பெயர் (யாழ். அக.);; title.

   3. விற்பன்னம் (யாழ். அக.);; learning, scholarship.

   4. நாகரிகம் (யாழ். அக.);; civilization.

   5. பண்பாடு; culture.

   6. செம்மை; refinement.

   7. ஒழுங்கு; order.

   8. வக்கணை1, 3 பார்க்க; see { }

   9. பழித்துரை; taunt, accusation.

வக்கணப் பேச்சு (யாழ்ப்.);.

தெ. வக்கண; க. ஒக்கணெ.

 Pkt. vaggana

     [வகு → வக்கு + அணம். அணம் = ஒரீறு.]

 வக்கணம்2 vakkaṇam, பெ.(n.)

   மார்பு (யாழ்.அக.);; breast.

வக்கணாத்தன்

 வக்கணாத்தன் vakkaṇāttaṉ, பெ.(n.)

   மர வகை, (L.);; heart-leaved mottled ebony.

வக்கணாத்தி

 வக்கணாத்தி vakkaṇātti, பெ.(n.)

   கொடி வகையிலொன்று (L);; a species of starvervain climber.

வக்கணாத்திப்பட்டை

 வக்கணாத்திப்பட்டை vakkaṇāttippaṭṭai, பெ.(n.)

வக்கணாத்தி); bark.

     [வக்கணாத்தி + பட்டை]

வக்கணாமரம்

 வக்கணாமரம் vakkaṇāmaram, பெ.(n.)

வக்கணைமரம் பார்க்க; see { }.

வக்கணி

வக்கணி1 vakkaṇittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விளக்கமாயுரைத்தல்; to expound in detail.

     “புராணஞ் சுருதிப்பொருள் வக்கணிப்பவன்”. (மேருமந்.244);.

     [வகு → வக்கு + அணம் – வக்கனம் → வக்கணி-.]

தெ.வக்கணிண்க; க.வக்கணிக.

 வக்கணி2 vakkaṇittal,    4 செ.கு.வி.(v.i.)

மனங்கோணியிருத்தல் சார்ந்திருத்தல்

     ‘வக்கணித்து வழக்குரைத்தவன் வழிமுறையின்றி அழிந்து போவான்’.

     [வங்கு → வக்கு → வக்கணி-.]

வக்கணை

வக்கணை2 vakkaṇai, பெ.(n.)

   திறமை; adeptness, skilfulness, smartness, expertise.

சமைத்த உணவு விரும்பி உண்ணும் வகையில் உள்ளது (இ.வ.);. படித்த பெண், அதுதான் வக்கனையாகப் பேசுகிறாள்.

 வக்கணை3 vakkaṇai, பெ.(n.)

   1. நீண்ட மரவகை; wight’s indian nettle.

   2. மரவகை; mottled ebony.

   3. மஞ்சள் நிறமுள்ள மரவகை; yellow wood ebony.

 வக்கணை4 vakkaṇai, பெ.(n.)

   மார்பு (யாழ்.அக.);; breast.

வக்கணைப்பேச்சு

 வக்கணைப்பேச்சு vakkaṇaippēccu, பெ.(n.)

   தனித்திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேச்சு; flowery or skilful talk.

வக்கனைப் பேச்சு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது (உ.வ.);.

     [(வகு → வக்கு + அணம் – வக்கணம் → வக்கனை + பேச்சு. அணம் = சொல்லாக்க ஈறு.]

வக்கணைமரம்

வக்கணைமரம் vakkaṇaimaram, பெ.(n.)

   1. ஒரு மரவகை; a kind of tree.

   2. இம்மரம் மேடான, காய்ந்த நிலப்பகுதியில் வளரும் தன்மைத்து இதன் பழங்கள் உணவாகவும் பயன்படும்; a small tree, common in plans and about the foot of mountains in dry localaties, fruit pulp is edible.

வக்கனஞ்சம்

 வக்கனஞ்சம் vakkaṉañjam, பெ.(n.)

   பாக்கு; areca-nut.

வக்கனை

வக்கனை1 vakkaṉai, பெ.(n.)

   1. கடிதம், ஆவணம் முதலியவற்றின் முகப்புச்சொல் அல்லது முதல் தொடர்மொழி (நாமதீப. 654);; formal portion of a letter or other document; honorific superscription in a letter.

   2. முகமன்மொழி; words of courtesy.

     “வக்கணையாலின்பம் வருமோ” (தாயு. பராபர.213);.

   3. அழகு மிளிரும் வண்ணனை அல்லது கருத்துரை; flowery or rhetorical speech or statement.

     “வக்கனைப் பேச்சல்ல” (இராமநா.உயுத் 30);.

   4. அறிவாற்றல், ஒழுங்கு, வரிசை, முறைவைப்பு; scholarship, order.

   5. திறமைமிக்க பேச்சு (இ.வ.);; skiiful talk.

   6. வக்கணம்1, 2, 3, 4, 5, 7 (யாழ். அக.); பார்க்க see { },

வக்கனைப் பேச்செல்லாம் வாசல்வரைதான் நிற்கும் (இ.வ.);.

க. வக்கணெ.

வக்கம்

 வக்கம் vakkam, பெ.(n.)

   நத்தைச்சூரி; a plant-Spemaciea gusoouda.

வக்கம்பிடி-த்தல்

வக்கம்பிடி-த்தல் vakkambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   சுள்ளென்று வெப்பம்பட ஒற்றடமிடுதல்; to foment.

     [வக்கு → வக்கம் + பிடி-.]

வக்கரஞ்சபயறு

 வக்கரஞ்சபயறு vakkarañjabayaṟu, பெ.(n.)

   கடலை; gram.

வக்கரனை

வக்கரனை vakkaraṉai, பெ.(n.)

   அனைத்துப் பண்களும் குழலின் ஆறு துளைகளில் உண்டாகும் வண்ணம், விரல்களில் சமஞ்செய்து தெரிவுசெய்கை (இசை.);; mainpulating the flute so as to produce all melody-types on its six stops.

     “வைத்த துளை யாராய்ச்சி வக்கரனை வழிபோக்கி யொத்த நிலை யுணர்ந்ததற்பின்” (பெரியபு. ஆனாய.24);. (செந்.vi.215);.

வக்கரன்

வக்கரன் vakkaraṉ, பெ.(n.)

   1. மாறுபாடுள்ளவன்; perverse, cross-grained person.

     “வக்கரனைக் கொன்றான் வடிவு” (திவ். இயற். மூன்றாந் 21, 3);.

   2. திருமாலால் அழிக்கப்பட்ட அரக்கன்; an asura slain by vishnu

     “வக்கரனை வடிவழித்த மாயவா” (பெருந்தொ.865);.

     “வக்கரன்” பாக்கமுடையான் கொஞ்கராயன். இடையெழுவள்ளல்களுள் ஒருவன் ஆயந்தனூர் ஏரிமதகு கல்வெட்டு.

வக்கரபுத்தி

 வக்கரபுத்தி vakkarabutti, பெ.(n.)

வக்கரபுத்தி பார்க்க; see { }

வக்கரம்

 வக்கரம் vakkaram, பெ.(n.)

வக்கிரம் பார்க்க; see { }.

     [வட்கு → வக்கு → வக்கரம்.]

வக்கரி

வக்கரி1 vakkari, வி.(v.)

   1. வக்கிரம்; perverse.

   2. கோணுகை, நெறி பிறழ்கை; distortion, contortion.

   3. மாறுபாடான சிந்தனையோடு இருத்தல்; have perverseness, act perversely.

அவருடைய வக்கரித்துப் போன ஆசைகள் இவை: குடும்பத்தில் ஒவ்வொருவரும் வக்கரித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

 வக்கரி2 vakkarittal,    4 செ.கு.வி.(v.i.)

   கோணியிருத்தல், முரண்பாடாயிருத்தல்; to be crooked, to be contradictory

     “வக்கரித்தால் நீ வாரா வண்மையென்ன’ (கொண்டல் விடு. 8.);. வக்கர காளியம்மன் கோயில்,

   2. வளைந்திருத்தல், மடங்குதல்; to be bent.

   3. மடங்கித் திருப்புதல்; to turn back.

   4. ஆலத்தி செய்தல்; to wave, as of camphor, etc. in front of an idol etc.

     [வக்கு → வக்கரம் → வக்கரி-.]

வக்கரிப்பு

வக்கரிப்பு vakkarippu, பெ.(n.)

   1. சிடுசிடுப்பு:

 frown.

   2. நெறிபிறழ்வு; perversion.

     [வக்கரி → வக்கரிப்பு.]

வக்கரை

வக்கரை1 vakkarai, பெ.(n.)

   1. வரிந்து கட்டும் முகட்டுக்கட்டை; wooden ridge-piece to hold the ropes that tie down the thatch; tie -piece.

   2. சேணம், துணிப்பை; saddle, cotton-bag.

     [வக்கரி → வக்கரை.]

 வக்கரை2 vakkarai, பெ.(n.)

பற்கரை (வின்.);:

 artifical blackness of the teeth.

வக்கற்றவன்

 வக்கற்றவன் vakkaṟṟavaṉ, பெ. (n.)

   பிழைக்கும் வாய்ப்பு இழந்தவன்; useless fellow.

     [வகை-வக்கு+அற்றவன்]

வக்கற்றவள்

வக்கற்றவள் vakkaṟṟavaḷ, பெ.(n.)

   1. வாழ்க்கைக்குரிய செல்வம், பொருள் முதலியன இல்லாதவள்; woman lacking wealth materials, etc.

     “வக்கற்றவள் வானவேடிக்கை பார்க்கலாமா?” (உ.வ.);.

   2. பிழைக்கத் தெரியாதவள்; woman who has no knack of living.

   3. வகையற்றவள் பார்க்க; see { }.

     [வக்கு + அற்றவள்.]

வக்கலாட்டி

 வக்கலாட்டி vakkalāṭṭi, பெ.(n.)

   ஒருவகைக் கூட்டு மருந்துச் சரக்கு; a compound of a catechu formed with the juice of tender coconuts, arecanuts and other spices.

மறுவ. காசுக்கட்டி.

வக்களி-த்தல்

வக்களி-த்தல் vakkaḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   வளைந்தது; to become crooked.

     [வங்கு → வக்கு → வக்களி-.]

வக்கவசப்பூடு

 வக்கவசப்பூடு vakkavasappūṭu, பெ.(n.)

   அங்கப்பிச்சு; bile of the body.

வக்கா

வக்கா1 vakkā, பெ.(n.)

   கொக்கினத்துளொன்று; a kind of a white-stork.

     “வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே” (குற்றா. குற. 93.2);.

த. வக்கா → Skt. baka.

     [வட்கு → வக்கு → வக்கா = கொக்குவகை (வ.வ.2 பக்.75);.]

இப்பறவை “ஆர்டியா” இனத்தைச் சார்ந்தது. வைக்கோலால் கூடுகட்டி வாழுந் தன்மைத்து 3 முதல் 5 வரையிலான எண்ணிக்கையில் முட்டையிடும். உச்சந்தலை, பிடரி, முதுகின் மேற்பகுதி, தோள்பகுதி கறுத்தும், பச்சை வண்ணத்திலும் காணப்படும்.

இப்பறவையின் கழுத்தும், மேற்பகுதியும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

     [P]

 வக்கா2 vakkā, பெ.(n.)

   சிப்பி வகை; a kind of cockle-shell,

     “வக்காவின் மணிபூண்டு” (குற்றா.குற.79);.

     [வக்கு → வக்கா. வளைந்த சிப்பி.]

 வக்கா3 vakkā, பெ.(n.)

   1. தேவாங்கு; sloth.

   2.. ஓர் வகை நாரை; a kind of stork.

     [வக்கு → வக்கா.]

 வக்கா1 vakkā, பெ. (n.)

   புல்லாங்குழலின் ஒசை யில் குரலெடுத்து அகவும் பறவைவகை; a kind of bird which produces the notes equal to that of a flute.

     [வங்கு-வங்கா-வக்கா]

 வக்கா2 vakkā, பெ. (n.)

ஒருவகை ஓணான்

 a kind of Chameleon.

     [வகை-வக்கு+அற்றவன்]

வக்காசீதம்

 வக்காசீதம் vakkācītam, பெ.(n.)

   எல்லாப் பொருள்களையும் கரைக்கும் ஆற்றலுடைய பொது நீர்மம்; universal acid or universal solvent.

வக்காணம்

வக்காணம் vakkāṇam, பெ.(n.)

   வாய்ப்பாட்டின் வாயிலாகப் பண்ணினை விரிவாக வெளிப்படுத்தும் ஆற்றல்; the free rendering of a pan in such a way as to bring out its form without reference to talam or words.

     “மீத்திறம் படாமை வக்கானம் வகுத்து” (சிலப் 3, 148);.

க. வக்காண.

வக்காணி

வக்காணி1 vakkāṇittal,    4 செ. குன்றாவி..(v.t.)

   விளக்கமாயுரைத்தல்; to expound in detail.

     “நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் “(சோழவமி. 53);.

தெ. வக்கணின்சு.

 வக்காணி2 vakkāṇittal,    4 செ.கு.வி. (v.i.)

   சொற்போர்புரிதல்; to carry on disputations.

     [வக்கணித்தல் → வக்காணி-த்தல்.]

வக்காணிக்குமண்டபம்

 வக்காணிக்குமண்டபம் vakkāṇikkumaṇṭabam, பெ.(n.)

   மறைகள் குறித்து சொற்போர் நிகழும் பட்டி மண்டபம்; the hall where disputations on the vedas are held.

     [வக்காணிக்கு + மண்டகம் → மண்டபம்]

வக்காப்புல்

வக்காப்புல் vakkāppul, பெ.(n.)

   1. களை வகை (தஞ்.);; a kind of weed.

   2. புல் வகை; a kind of grass.

     [வக்கா + புல்]

வக்காமணி

 வக்காமணி vakkāmaṇi, பெ.(n.)

   சிப்பிமணி வகை; bead of a kind of cockleshell,

     “வக்காமணிக்கு வழியில்லாதவன் வானவூர்தியில் வலம்வரமுடியுமா?

வக்காமணிச்செட்டிகள்

 வக்காமணிச்செட்டிகள் vaggāmaṇicceṭṭigaḷ, பெ.(n.)

   வக்காமணி செய்யும் செட்டி மரபினர் (வின்.);; traders dealing in { } who belongs to { }.

     [வக்காமணி + செட்டிகள்]

வக்காலத்து

 வக்காலத்து vakkālattu, பெ. (n.)

   முறை மன்ற வழக்கு நடத்துவதற்கு வழக்கறிஞ ருக்குக் கொடுக்கும் அதிகார ஆவணம் (பத்திரம்); (வின்.);;     [U. {} → த. வக்காலத்து]

வக்காளி-த்தல்

வக்காளி-த்தல் vakkāḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   வானம் வெளிவாங்குதல் (தஞ்.வழ.);; to clear up, as the sky.

     [வெக்காளி-, → வக்காளி-.]

வக்கி

வக்கி vakki, பெ.(n.)

   1. எருது; bull.

   2. காற்று:

 wind.

வக்கினி-த்தல்

வக்கினி-த்தல் vakkiṉittal,    4 செ.கு.வி.(v.i.)

   மனங்கோணியிருத்தல்; to be at variance.

வக்கிணித்த வீடு வாழாது (உ.வ.);.

வக்கிரகண்டகம்

 வக்கிரகண்டகம் vaggiragaṇṭagam, பெ.(n.)

   வளைந்த முள்ளுடைய இலந்தை (சங்.அக.);; jujube-tree, as having curved thorns.

     [வட்கு → வக்கு → வக்கரம் → வக்கிரம் + கண்டகம். கண்டகம் = முள். வட்கு = வளைவு]

வக்கிரகண்டம்

 வக்கிரகண்டம் vaggiragaṇṭam, பெ.(n.)

   குழந்தை; child.

     [வக்கிரம் + கண்டம்.]

வக்கிரகண்டி

 வக்கிரகண்டி vaggiragaṇṭi, பெ.(n.)

   செய்நீர் (திராவகம்); வடிக்க உதவும் நீண்ட கழுத்துள்ள பாத்திரம்; vessel with a long neck, used in distilling; still.

வக்கிரகதி

வக்கிரகதி vaggiragadi, பெ.(n.)

   1. நேர்மையற்ற செலவு (அக.நி.);; irregular course.

   2. பிற்போக்குத் தன்மையுள்ள கோள்நிலை; retrograde motion of a planet.

     [வக்கிரம் + கதி]

வக்கிரகந்தம்

 வக்கிரகந்தம் vaggiragandam, பெ.(n.)

   திருகுகள்ளி; twisting milk hedge – Euphorbia tirucalli.

     [வக்கிரம் _ கந்தம்]

வக்கிரக்கச்சு

வக்கிரக்கச்சு vakkirakkaccu, பெ.(n.)

   1. கருடன்; brahmini kite.

   2. கிளி; parrot.

   3. வலியான்; a small black bird.

வக்கிரக்கண்

 வக்கிரக்கண் vakkirakkaṇ, பெ.(n.)

   மாறுகண் (கொ.வ.);; squinting eye.

     [வக்கிரம் + கண்]

வக்கிரசச்சு

வக்கிரசச்சு vakkirasassu, பெ.(n.)

   1. ஒரு வகைப் பறவை; white headed kite

   2. கிளி; parrot.

   3. வலியான்; king crow.

     [வக்கிரம் + சஞ்சு → சச்சு]

வக்கிரசஞ்சு

 வக்கிரசஞ்சு vakkirasañsu, பெ.(n.)

வக்கிர சச்சு பார்க்க; see { }.

வக்கிரசந்திரன்

 வக்கிரசந்திரன் vakkirasandiraṉ, பெ.(n.)

   இளம்பிறை (யாழ்.அக.);; crescent moon.

வக்கிரசாரம்

 வக்கிரசாரம் vakkiracāram, பெ.(n.)

   மாறுபட்ட கோள்நிலை; retrograde motion of a planet.

     [வக்கிரம் + சாரம்]

வக்கிரசுரம்

 வக்கிரசுரம் vakkirasuram, பெ.(n.)

நேர்மையற்றியைந்த இசைச்சுரம்,

 irregular succession of notes.

     [வக்கிரம் + சுரம்]

வக்கிரதந்தன்

வக்கிரதந்தன் vakkiradandaṉ, பெ.(n.)

இயமன் (நாமதீப.87.);; { }.

     [வக்கிரம் + தந்தன்]

வக்கிரதந்தம்

வக்கிரதந்தம்1 vakkiradandam, பெ.(n.)

   1. வளைந்த பல் (வின்.);; curved tooth.

   2. கூரிய நச்சுப்பல், எந்திரக் கருவியின் பல்; fang.

     [வக்கிரம் + தந்தம்]

 வக்கிரதந்தம்2 vakkiradandam, பெ.(n.)

   1. சிங்கப்பல்; eye tooth.

   2. தின்பீர்க்கு; ribbed gourd.

   3. நாய்ப்பல்; dog tooth,

வக்கிரநஞ்சு

 வக்கிரநஞ்சு vakkiranañju, பெ.(n.)

   கிளி; parrot.

வக்கிரன்

வக்கிரன் vakkiraṉ, பெ.(n.)

   1.மாறுபாடுள்ளவன்; perverse, cross-grained person.

   2. கொடுமையானவன்; cruel man,

   3. காரி (சனி); (இலக். அக.);; saturn,

   4. செவ்வாய் (பிங்.);; mars,

   5. திருமாலாற் கொல்லப்பட்ட அகரன்; an asura slain by { }

     “வக்கிரனை வடிவழித்த மாயவனா” (பெருந்தொ.865);.

 வக்கிரன் vakkiraṉ, பெ. (n.)

   1. மாறுபாடுள்ளவன்; perverse, cross-grained person.

   2. குரூரன்;   3. சனி;   4. செவ்வாய்;   5. உருத்திரன்;   6. திருமாலால் அழிக்கப்பட்ட ஒர் அசுரன்; an asura slain by {}.

     “வக்கிரனை வடி வழித்த மாயவனா” (பெருந்தொ.865.);

     [Skt. vakra → த. வக்கிரன்]

வக்கிரப்பண்

 வக்கிரப்பண் vakkirappaṇ, பெ.(n.)

   நேராக ஏறியிறங்காமல் இடையில் மாறி வரும் பண் (இசை);; melody-type in which the ascent of the notes in the scale is interrupted by the descennting notes and the descent by the ascending notes.

     [வக்கிரம் + பண்]

வக்கிரப்பாதன்

வக்கிரப்பாதன் vakkirappātaṉ, பெ.(n.)

   அறநெறிக்கு மாறுபட்டவன்; unethical person, cruel person,

     “இதற்கு வக்கிரப்பாதன் சந்திராதித்ய ருள்ள தனையும் நரகத்தினிற்பானாகவும்”(தெ.கல். தொ.12 பகு.1. கல்.34);.

     [வக்கிரம் + skt.பாதன்]

வக்கிரப்பார்வை

வக்கிரப்பார்வை vakkirappārvai, பெ.(n.)

   1. பொறாமையுடன் கூடிய தீய பார்வை; jealousy and evil look.

   2. கடுபஞ்சினப் பார்வை

 fury look.

ஆளையே விழுங்குவது

போல் வக்கிரப் பார்வை பார்க்கிறான் (இ.வ.);.

   3. பேராசையுடன் கூடிய வஞ்சகப் பார்வை; greedy and hypocritic look.

   4. நெறி பிறழ்ந்த ஏக்கப் பார்வை; yearning look.

   5. குறுகிய விருப்பு வெறுப்புகளுடன் கூடிய கொடுமைப் பார்வை; parachial and cruel look.

     [வள் → வட்கு → வக்கு → வக்கரம் → வக்கிரம் + பார் → பார்வை.]

வக்கிரம் + பார்வை = பிறர்தம் ஆக்கமும், வளர்ச்சியும் கண்டு பொறாமையுடன் நோக்கும் பார்வை. சிறிது கற்றவர், கற்றுத்துறைபோய ஒருவரைக் கண்டு, மனங்குமுறுதலும், வக்கிரப் பார்வையாகும்.

சிறிது செல்வமுடையவர், பெருந் தனக்காரரைக் கண்டு, காழ்ப்புடன் நோக்குதலும் வக்கிரப் பார்வையே.

போட்டியும், பொறாமையும் மலிந்த, இம் மன்பதையில் வக்கிரவெண்ணத்துடன் இயைந்த வக்கிரப் பார்வை நிறைந்துள்ளமை கண்கூடு.

வக்கிரப்புத்தி

வக்கிரப்புத்தி vakkirapputti, பெ.(n.)

   குமுகாய நெறி, ஒழுங்கு, நேர்மை முதலியவற்றிலிருந்து மாறுபட்டு நோக்கு, மனம்; perverted mind.

     “வக்கிரப்புத்திக் காரனுக்கு வாழ்வு மட்டந்தான்”(உ.வ.);.

மறுவ. கோனல்புத்தி

     [வட்கு → வக்கு → வக்கரம் → வக்கிரம் + புத்தி.]

புல் → புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு. அறிவுறுப்பு அறிவுநூல். புலம் → புலன். புலன் – பொருளொடு பொருந்தும் அறிவு. அறிவுநூல் (க.வி.36);. புல் → புன் → புந்தி → புத்தி = அறிவு. நல்வழி, வழிவகை.

பிறர்தம் பொருளை, உடைமையை, நெறி முறையற்ற வழியில், எய்த எண்ணும் மனப்பாங்கே வக்கிரபுத்தி.

வக்கிரம்

வக்கிரம்1 vakkiram, பெ.(n.)

   குமுகாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்கு, முறைமை, ஒழுங்கு முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை, விகாரம்; perversity.

பள்ளிப்படிப்பால் குழந்தைகள் கெட்டுப் போகிறார்கள் என்பது வக்கிரமான சிந்தனை, வக்கிரமான பாலுறவு ஆசைகள்.

 வக்கிரம்2 vakkiram, பெ.(n.)

   1. வளைவு; curve, bend, winding,

     “வக்கிர சாபமழை பொழிந்து”(பாரத இரண்டா.12);.

   2. வட்டம் (பிங்.);; circle,

   3. சென்ற வழி மீள்கை (பிங்.);; retracing one’s steps.

   4. நேர்மையற்ற செலவு (அக.நி.);; irregular course.

   5. கொடுமை (பிங்.);; cruelty, malignancy, as of a planet.

   6. பொய் (திவா.);; lie.

   7. வஞ்சனை (வின்.);; fraud, dishonesty.

   8. கோணல் வழி (இ.வ);; indirectness, crookedness.

   9. பொறாமை (பிங்.);; envy.

   10. கலக்கம் (வின்.);; confusion.

     [வள்கு → வட்கு → வக்கு → வக்கரம் → வக்கிரம்.]

 வக்கிரம் vakkiram, பெ. (n.)

   1. வளைவு; curve, bend, winding.

     “வக்கிர சாபமழைபொழிந்து” (பாரத. இரண்டா. 12);

   2. வட்டம்;   3. சென்ற வழி மீளுகை;   4. நேர்மையற்ற செலவு;   5. கொடுமை;   6. பொய்;   7. வஞ்சனை;   8. கோணல் வழி; perversity.

   9. பொறாமை; envy.

   10. கலக்கம்; confusion.

     [Skt. vakra → த. வக்கிரம்]

வக்கிராங்கி

வக்கிராங்கி vakkirāṅgi, பெ.(n.)

   1. கடுகு

 Gosstästofl; a purgative drug.

   2. கூனி; one having crooked back.

   3. நீர் முள்ளி; a throny plant – Barleria longifolia.

வக்கிராசம்

 வக்கிராசம் vakkirācam, பெ.(n.)

   கற்கடக சிங்கி; galls of pistacia integerrima.

வக்கிராந்தம்

 வக்கிராந்தம் vakkirāndam, பெ.(n.)

   மறு துடரி; a plant.

வக்கிரி

வக்கிரி1 vakkirittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கோள்நிலை, மடங்கித் திரும்புதல் (யாழ்.அக.);; to retrograde, as a planet.

   2. வளைந்திடுதல்; to be crooked.

   3. மனங் கோணியிருத்தல்; to be at variance.

     [(வட்கு → வக்கு → வக்கரி → வக்கிரி-. வட்கு = வளைவு.]

 வக்கிரி2 vakkirittal,    4 செ.கு.வி.(v.i.)

   வாய்ப்பாட்டின் வாயிலாகப் பண்ணினை விரிவாகப் பயிற்சி செய்தல்; to elaborate tune or melody type.

     “இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து” (சிலம் 3 47);.

வக்கிரித்திட்டம்

வக்கிரித்திட்டம் vakkirittiṭṭam, பெ. (n.)

   ஆளத்தியினைப் பதினாறு வகையாகப் பிரித்துப் பாடும் முறை; a method of dividing as 16 kinds while improvising introduction to a melody.

     [வக்கரி+திட்டம்]

வக்கீல்

வக்கீல் vakāl, பெ. (n.)

   முறை மன்றத்தில் பிறருக்காக வழக்கை எடுத்து வாதிப்போர்; authorized attorney, counsel at law, pleader.

   2. மணவுடன் படிக்கையில் மணப்பெண் சார்பான செயல் புரிபவன்; one who represents the bride in a contract of marriage.

     [U. {} → த. வக்கீல்]

வக்கு

வக்கு1 vakkudal, செ.குன்றாவி.(v.t.)

   1. வதக்குதல்; singe, to roast.

     “கொழுப்பரிந்து… வக்குவன வக்குவித்து” (பெரியபு.கண்ணப். 145);.

   2. தீய்த்தல், பொசுக்குதல்; to burn,

     [வதக்கு → வக்கு.]

 வக்கு2 vakku, பெ.(n.)

   1. வேகுகை, தீய்க்கை; being singed or burnt.

   2. வதக்குகை; being roasted.

     “நெருப்புச் சிந்தலின்வக்கிலாத் திசைகளுமில்லை” (கம்பரா. இராவணன் வதை. 65);.

     [வட்கு → வக்கு. (ஒ.நோ.); மட்கு → மக்கு]

 வக்கு3 vakku, பெ.(n.)

   1. தோல் (யாழ். அக.);

 skin.

   2. ஊமைக்காயம்; contused wound.

வக்குண்ட காயம் (இ.வ.);.

   3. நீர்த் தொட்டி (யாழ்.அக.);; water-trough.

 வக்கு4 vakku, பெ.(n.)

   1. வழி; means, resources.

அவனுக்குக் கடன் கொடுக்க வக்கில்லை (C.G.);.

   2. இடம்; place.

     [வகு → வக்கு (மொ.க.பக்39);.]

 வக்கு5 vakku, பெ.(n.)

   1. மூத்திரக்குண்டிக் காய்; kidney,

   2. விதைக் கொட்டை (அண்ட விதை);; testicle.

உன்னை வக்கிலே உதைத்துச் சரியான வழி பண்ணுகிறேன் (இ.வ.); வக்கிலே அடிபட்டால் வாழ்வது எளிது இல்லை (உ.வ.);

     [வட்கு → வக்கு]

வக்குத்திரிகரணம்

 வக்குத்திரிகரணம் vagguttirigaraṇam, பெ.(n.)

   படுக்கை (வின்.);; bed.

வக்குநார்

வக்குநார் vakkunār, பெ.(n.)

   1. மரவகை; woolly ordure tree.

   2. சணல் நார்; hemp fibre.

   3. அணி நார்; sterculia villosa.

     [வக்கு + நார்.]

வக்குரி-த்தல்

வக்குரி-த்தல் vakkurittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வேதல்; to scorch.

   2. எரிதல்; to burn.

     “வாயாற் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி” (ஈடு 9, 9, 2);.

     [வக்கு → வக்குரி.]

வக்குவக்கெனல்

வக்குவக்கெனல் vakkuvakkeṉal, பெ.(n.)

   1. களைப்பு மேலிட ஒடும் ஒலிக் குறிப்பு (வின்.);; Onom. expr. of a running to exhaustion,

   2. கடுமையாய் இருமற் குறிப்பு (வின்.);; coughing hard.

   3. கடுமையாய் இடித்தற் குறிப்பு; pounding hard or ramming.

வக்தா

வக்தா vaktā, பெ. (n.)

   எடுத்துச் சொல்லுவோன்; one who speaks or expounds.

   2. பேச்சாளி; orator.

     [Skt. {} → த. வக்தா]

வக்து

 வக்து vaktu, பெ. (n.)

   காலம், வாய்ப்பு (இ.வ.);; time, season opportunity.

     [Arab. vaqt → த. வக்து]

வங்கசம்

 வங்கசம் vaṅgasam, பெ. (n.)

   ஒர்வகை வெள்ளி; a kind of silver.

     [வங்கம் → வங்கசம்.]

வங்கசிந்தூரம்

வங்கசிந்தூரம் vaṅgasindūram, பெ. (n.)

   ஈயத்தின் சிந்தூரம் (பதார்த்த.1208);; red lead.

     [வங்கம் + சிந்தூரம்.]

வங்கசிலை

வங்கசிலை vaṅgasilai, பெ. (n.)

   தமிழ்ச் சித்தர் கூறும் 120 வகை இயற்கை மருந்துகளுள் ஒன்று; one of the 120 kinds of natural bodies as classified in Tamil Siddar’s Science.

வங்கசெஞ்சாந்து

 வங்கசெஞ்சாந்து vaṅgaseñsāndu, பெ. (n.)

   செவ்வியம்; red lead.

வங்கசேனகம்

 வங்கசேனகம் vaṅgacēṉagam, பெ. (n.)

   வெள்ளகத்தி (மூ.அ.);; West Indian pea – tree.

வங்கடபாரை

 வங்கடபாரை vaṅgaḍapārai, பெ. (n.)

   மீன் வகையுளொன்று; a kind of fish-caranx crumenoph thalmus.

     [P]

வங்கடம்

 வங்கடம் vaṅgaḍam, பெ. (n.)

   இனம், குடும்பம்; race, family.

வங்கடவலை

 வங்கடவலை vaṅgaḍavalai, பெ. (n.)

   மீன் பிடிவலை வகைகளுளொன்று; a kind of fishing net.

வங்கடை

 வங்கடை vaṅgaḍai, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

வங்கணக்காரன்

வங்கணக்காரன் vaṅgaṇakkāraṉ, பெ. (n.)

   1. உயிர் நண்பன் (வின்.);; intimate friend.

   2. கள்ளக் காதலன்; paramour.

     [வங்கணம் + காரன்.]

வங்கணக்காரி

 வங்கணக்காரி vaṅgaṇakkāri, பெ. (n.)

வங்கணத்தி பார்க்க;see vanganatti.

     [வங்கணக்காரன் (ஆ.பா.); → வங்கணக்காரி (பெ.பா.);.]

வங்கணத்தி

வங்கணத்தி vaṅgaṇatti, பெ. (n.)

   1. உற்ற தோழி; intimate woman friend.

   2. காமக் கிழத்தி, கள்ளக்காதலி (வின்.);; concubine.

     [வங்கணம் + அத்தி (அத்தி = ஒரு பெண்பாலீறு.]

வங்கணன்

 வங்கணன் vaṅgaṇaṉ, பெ. (n.)

வங்கணக்காரன் (யாழ்.அக.); பார்க்க;see Vangana-k-karan.

     [வங்கணம் → வங்கணன்.]

வங்கணப்பேச்சு

 வங்கணப்பேச்சு vaṅgaṇappēccu, பெ. (n.)

   பொய்க்குற்றச்சாட்டு; slander.

     [வங்கணம் + பேச்சு.]

வங்கணம்

வங்கணம்1 vaṅgaṇam, பெ. (n.)

   1. நட்பு; friendship.

     “நேசமிலா வங்கணத்தி னன்று வலிய பகை” (தனிப்பா. i. 104,35);.

   2. காதல்; love.

   3. கள்ளக் காதல்; amour.

     “என் வங்கணச் சிங்கியைக் காணேனே” (குற்றா.குற.136);.

 வங்கணம்2 vaṅgaṇam, பெ. (n.)

   1. கத்தரிக்காய் வகை (அரு.நி.);; brinjal variety.

   2. செங்கத்தரி (சங்.அக.);; orbicular leaved caper.

   3. சேம்பு (சங்.அக.);; Indian kales.

 வங்கணம்3 vaṅgaṇam, பெ. (n.)

   தகுதி; propriety.

     “எனை ஆதரித்தல் வங்கணமே” (சர்வசமய. பக். 67);.

வங்கதாளேசுவரபற்பம்

 வங்கதாளேசுவரபற்பம் vaṅgatāḷēcuvarabaṟbam, பெ. (n.)

   இதளியம், தாம்பிரத்தூள், அரிதாரம், கந்தகம், சம எடை கொண்டு அரைத்துப் புடமிட்ட பற்பம். இதனால் கிரந்தி சூலை நீங்கும்; a calcined white powder prepared from mercury, copper, orpiment, or sulphur, it is prescribed for ulcers, rheumatic pains and gunmam.

வங்கதூசம்

 வங்கதூசம் vaṅgatūcam, பெ. (n.)

   பவளம்; Coral.

வங்கதோசம்

 வங்கதோசம் vaṅgatōcam, பெ. (n.)

   ஈயத்தினா லுடம்பிலேற்பட்ட நஞ்சு; lead poison-Plumbism.

வங்கத்துக்குவா-த ல் (வங்கத்துக்கு வருதல்)

வங்கத்துக்குவா-த ல் (வங்கத்துக்கு வருதல்) vaṅgaddukkuvādalvaṅgaddukkuvarudal,    18 செ.கு.வி. (v. i.)

   1. தெரிவு செய்தல்; to be put to the test.

   2. பயனுள்ளதாதல்; to be effective.

வங்கநடம்

 வங்கநடம் vaṅganaḍam, பெ. (n.)

   வெண் காரம் (மூ.அ.);; borax.

வங்கநாடு

வங்கநாடு vaṅganāṭu, பெ. (n.)

வங்கம்1, 5 பார்க்க;see vangam.

     [வங்கம் + நாடு.]

வங்கநாளம்

 வங்கநாளம் vaṅganāḷam, பெ. (n.)

   ஈயத்தால் செய்த குழாய், இது வளி முறையில் அடுப்பூதுவதற்காக பயன்படும்; a lead tube to blow the over.

வங்கநீர்

வங்கநீர் vaṅganīr, பெ. (n.)

   கடல்; sea.

     “வங்கநீர் வரைப்பெலாம்” (சூளா.இரத. 104);.

வங்கநீறு

 வங்கநீறு vaṅganīṟu, பெ. (n.)

   ஈயமணல் (மூ.அ.);; lead ore.

வங்கனம்

 வங்கனம் vaṅgaṉam, பெ. (n.)

   சேம்பு (மலை.);; Indian kales.

வங்கனி

 வங்கனி vaṅgaṉi, பெ. (n.)

   செங்கத்தரி; red brinjal.

வங்கன்

வங்கன்1 vaṅgaṉ, பெ. (n.)

   இழிசினன் (சூடா.);; Out caste.

மறுவ. கீழ் (கள்);

 வங்கன்2 vaṅgaṉ, பெ. (n.)

   வறுமையாளன் (கொ.வ.);; poor-man.

     “வங்கம்பயலுக்கு வாய்ப் பேச்சில் குறைவில்லை” (உ.வ.);.

     [வெங்கம் → வெங்கன் → வங்கன்.]

 வங்கன் vaṅgaṉ, பெ.(n.)

நாவாய்கன் பார்க்க: see navaygan.

     [வங்கம்-வங்கன்]

வங்கபற்பம்

 வங்கபற்பம் vaṅgabaṟbam, பெ. (n.)

   ஈயத்தின் தூள் (பற்பம்); (யாழ்.அக.);; carbonate of lead.

     [வங்கம் + பற்பம்.]

வங்கபேதி

 வங்கபேதி vaṅgapēti, பெ. (n.)

   சூத நஞ்சு; a kind of arsenic prepared from mercury or mercurial compound.

     [வங்கம் + பேதி.]

வங்கப்பற்று

 வங்கப்பற்று vaṅgappaṟṟu, பெ. (n.)

   இருவேறு மாழைகளை ஒன்றிணைக்க உதவும் பற்று; solder for metals.

     [வங்கம் + பற்று. பற்று = இணைக்கும் மாழைத்தூள்.]

வங்கப்பாண்டி

வங்கப்பாண்டி vaṅgappāṇṭi, பெ. (n.)

   பள்ளியோடம் போன்ற வண்டி; a boat-like cart.

     “வங்கப் பாண்டியிற் றிண்டே ரூரவும்” (பரிபா. 20, 16);.

     [வங்கம் + பாண்டி.]

வங்கப்பாத்திரம்

 வங்கப்பாத்திரம் vaṅgappāttiram, பெ. (n.)

   அடுகலங்களிலொன்று; domestic vessels prepared with white lead.

     [வங்கம் + பாத்திரம்.]

வங்கப்பாவை

வங்கப்பாவை vaṅgappāvai, பெ. (n.)

   மருந்துச்சரக்கு வகை; a drug.

     “வங்கப் பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லாம்” (பெருங். மகத. 17, 150);.

வங்கமணல்

வங்கமணல்1 vaṅgamaṇal, பெ. (n.)

   ஒரு வகைச் சரக்கு; one of the 120 kinds of natural substances.

     [வங்கம் + மணல்.]

 வங்கமணல்2 vaṅgamaṇal, பெ. (n.)

வங்கநீறு (யாழ்.அக.); பார்க்க;see Vanga-niru.

     [வங்கம் + மணல்.]

வங்கமலை

 வங்கமலை vaṅgamalai, பெ. (n.)

   ஈயமலை; mountain containing lead ore.

வங்கமாரணம்

 வங்கமாரணம் vaṅgamāraṇam, பெ. (n.)

   வங்க பற்பம்; calcined lead.

வங்கமுதலவ்வை

 வங்கமுதலவ்வை vaṅgamudalavvai, பெ. (n.)

   இலவங்கம்; cloves.

வங்கமூலி

 வங்கமூலி vaṅgamūli, பெ. (n.)

   பிரமியிலை; lead of brahmi.

வங்கம்

வங்கம்1 vaṅgam, பெ. (n.)

   1. தூய்மைப்படுத்திய ஈயம் (நாமதீப. 378.);; purified lead.

     “வங்கம் இறுகினால் மகாராசனாகலாம்” (பழ.);.

     “வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம்” (கந்தபு.மார்க். 123);.

   2. தகரம்; tin.

   3. துத்தநாகத் தூள் (யாழ்.அக.);; zinc.

   4. வெள்ளி (பிங்.);; silver.

     “வங்கம்குத்தத் தங்கம் தேயுமா?” (பழ.);.

   5. ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று (இரகு, திக்குவி. 56);; Bengal, one of 56 tesam.

   6. பதினெண் மொழியுளொன்றான வங்கநாட்டு மொழி; the Bengali language, one of padinenmoli.

   7. மரவகை; Indian calosanthes.

   8. சிறு மரவகை; tender wild jack.

   9. கத்தரி (பிங்.);; brinjal.

   10. வழுதுணங்காய்; a kind of brinjal.

 வங்கம்2 vaṅgam, பெ. (n.)

   அலை; wave.

 வங்கம்3 vaṅgam, பெ. (n.)

   1. ஆற்று வளைவு (யாழ்.அக.);; bend of a river.

   2. வளைவு; curve.

   3. கருத்து (அக.நி.);; idea.

 வங்கம்4 vaṅgam, பெ. (n.)

   1. மரக்கலம்; ship, as moving swiftly.

     “வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்” (மதுரைக்.536);.

   2. வண்டி வகையுளொன்று; a kind of vehicle.

     “திண்டேர்ப் புரவி வங்கம் பூட்டவும்” (பரிபா. 20, 16);.

     [வங்கு → வங்கம்.]

வளைந்த அல்லது வட்ட வடிவான மரக்கலம் (வே.க.4 : 99);.

 வங்கம்5 vaṅgam, பெ. (n.)

   வறுமை; poverty.

     [வெங்கம் → வங்கம்.]

வங்கம்நீற்றி

 வங்கம்நீற்றி vaṅgamnīṟṟi, பெ. (n.)

   மலை முருங்கை; mountain moringa tree.

வங்கம்விளையுங்கல்

 வங்கம்விளையுங்கல் vaṅgamviḷaiyuṅgal, பெ. (n.)

   வெள்ளைச் சுக்கான் கல் (யாழ்.அக.);; white kunker.

     [வங்கம் + விளை + உம் + கல்.]

வங்கராங்கீரை

 வங்கராங்கீரை vaṅgarāṅārai, பெ. (n.)

   கடற்கரையோர நெய்தல் நில நிலைத்திணை; a herb seen in coastal region.

     [வங்கர் + ஆம் + கீரை.]

வங்கராசன்

 வங்கராசன் vaṅgarācaṉ, பெ. (n.)

   ஈயம்; lead.

     [வங்கம் + ராசன்.]

வங்கரை

 வங்கரை vaṅgarai, பெ. (n.)

   வளைகை;   கோணுகை; bent, crook.

     “வங்கரை கொங்கரையாய் மாட்டிக் கொண்டான்” (பழ.);.

     [வங்கு → வங்கரை. வங்கு = வளைவு.]

வங்கர்

வங்கர்1 vaṅgar, பெ. (n.)

   வங்கதேயத்தார்; people of Bengal.

     “வங்கர் மாளவர்” (கம்பரா. உலாவி. 47);.

 வங்கர்2 vaṅgar, பெ. (n.)

   நெய்தனிலமாக்கள்; mariners.

     [வங்கம் → வங்கர்.]

வங்கல்

 வங்கல் vaṅgal, பெ. (n.)

   மூலிகை வகையு ளொன்று; amoora rohita.

வங்கவணம்

 வங்கவணம் vaṅgavaṇam, பெ. (n.)

   உப்பு; salt.

வங்கவலி

 வங்கவலி vaṅgavali, பெ. (n.)

   உப்பு வகையு ளொன்று; colico pictonum.

வங்கவிடம்

வங்கவிடம் vaṅgaviḍam, பெ. (n.)

   1. ஈய நஞ்சூட்டு; plur bism.

   2. வங்கதோசம் பார்க்க;see Vanga-tosam.

     [வங்கம் + விடம்.]

வங்கவுப்பு

 வங்கவுப்பு vaṅgavuppu, பெ. (n.)

   உப்பு வகை (இங்.வை.);; sugar of lead.

     [வங்கம் + உப்பு.]

வங்கவுப்புசெயநீர்

 வங்கவுப்புசெயநீர் vaṅgavuppuseyanīr, பெ. (n.)

   ஓர் வகை ஈயம் சேர்ந்த செய்நீர்; a pungent liquid extracted from lead salts.

வங்கா

வங்கா1 vaṅgā, பெ. (n.)

   பறவை வகை; a kind of bird.

     “வங்காக் கடந்த செங்காற் பேடை” (குறுந். 157); (தொல். எழுத்து. 225, உரை);.

     [வங்கு + வங்கா (வே.க.4 :99);.]

வளைந்த கழுத்துள்ள நாரை,

ஒருகா. வக்கா → வங்கா = பறவை வகை. வங்கு, வங்கம் = வளைவு. வளைவுப் பொருண்மை குறித்த சொல்.

 வங்கா2 vaṅgā, பெ. (n.)

   ஊதுகொம்பு வகை, நீண்டு வளைந்த ஊது குழல் (வின்);; a long winding trumpet, ram’s horn.

     [வங்கு + வங்கா (வே.க.4 : 99);.]

வங்கு = வளைவு. வளைத்து நீண்ட வடிவில் அமைக்கப்பட்ட ஊதுகுழல்.

வங்கான்

வங்கான் vaṅgāṉ, பெ. (n.)

   சிறு அணிகலன்; sundry jewellery.

     “வங்கானுந் தொங்கானுமாட்டிக் கிளுகிளுத்து” (ஆதி யூரவதானி. 64);.

வங்காரக்கண்டி

 வங்காரக்கண்டி vaṅgārakkaṇṭi, பெ. (n.)

   சேலை வகையுளொன்று; a kind of saree.

     [வங்காரம் + கண்டி.]

வங்காரம்

வங்காரம் vaṅgāram, பெ. (n.)

   1. பொன்; gold.

     “வங்கார மார்பிலணி தார்” (திருப்பு. 748);.

   2. மாழைக் கட்டி (பிங்.);; ingot, mass of metallic ore.

   3. செப்பம் (யாழ்.அக.);; good condition.

   தெ;   பங்காரமு;க. பங்கார.

வங்காரவச்சி

 வங்காரவச்சி vaṅgāravacci, பெ. (n.)

   மேற்கிந்தியாவிலுள்ள ஏழை மக்கள் பயன்படுத்தும் கீரை வகை; west Indian samphire purslane, a herb eaten by poor people.

     “தாயுந் தகப்பனுந் தள்ளிவிட்ட காலத்தே வாவென்றழைத்த வங்காரவச்சி” (வின்.);.

வங்காரவள்ளைக்கீரை

 வங்காரவள்ளைக்கீரை vaṅgāravaḷḷaikārai, பெ. (n.)

   ஓர் வகைக் கீரை, இது மழைக் காலத்தில் முளைக்கும்; a kind of vegetable greens used in culinary.

வங்காரவாசி

 வங்காரவாசி vaṅgāravāci, பெ. (n.)

வங்காரவச்சி (சங்.அக.); பார்க்க;see vangara-vacci.

வங்கால் ஆடு

 வங்கால் ஆடு vaṅgālāṭu, பெ. (n.)

கால்கள் வெள்ளை நிறத்திலமைந்த ஆடு,

 a goat with legs in white colour.

     [வெண்கால்-வங்கால்+ஆடு (கொ.வ.);]

வங்காள வேலம்

 வங்காள வேலம் vaṅgāḷavēlam, பெ. (n.)

   ஓர் வேல மரம்; bengal landanam-Morung elachi.

வங்காளகுடாக்கடல்

 வங்காளகுடாக்கடல் vaṅgāḷaguḍāggaḍal, பெ. (n.)

   நாவலந்தேயம் (இந்தியா); உள்ளிட்ட நிலஞ்சூழ்ந்த கடல்; the bay of Bengal.

     [வங்காளம் + குடாக்கடல்.]

நாவலந் தேயத்தை (இந்தியாவை); மூன்று பக்கஞ் சூழவமைந்த கடல் (குடாக்கடல் – மூன்று பக்கம் நிலஞ்சூழ்ந்த கடல், குடைவுள்ள கடல்);.

வங்காளக்கிழங்கன்

 வங்காளக்கிழங்கன் vaṅgāḷakkiḻṅgaṉ, பெ. (n.)

   மருந்திற்குப் பயன்படும் கிழங்கு வகைகளுளொன்று; bengal whiting scialinoides pama.

வங்காளச்சர்க்கரை

 வங்காளச்சர்க்கரை vaṅgāḷaccarkkarai, பெ. (n.)

   சருக்கரை வகையுளொன்று; a kind of sugar, Bengal sugar.

வங்காளச்சீனி

 வங்காளச்சீனி vaṅgāḷaccīṉi, பெ. (n.)

வங்காளச்சர்க்கரை பார்க்க;see vangala-c-carkkarai.

வங்காளத்தாறு

 வங்காளத்தாறு vaṅgāḷattāṟu, பெ. (n.)

   இலிங்கம், பச்சைக் கருப்பூரம், குங்குமப்பூ படிகாரம், சாரம், சுக்கு முதலியன. இவைகள் ஆறும் வங்காளத்திலிருந்து வருகின்றன; the six drugs from Bengal.

வங்காளத்திப்பிலி

 வங்காளத்திப்பிலி vaṅgāḷattippili, பெ. (n.)

   திப்பிலி வகை (மூ.அ.);; a species of long реррег, as from Bengal.

வங்காளத்தேவி

வங்காளத்தேவி vaṅgāḷattēvi, பெ. (n.)

   1. பரதவர் வழிபடும் கடவுள்; god worshipped by fisherman tribe.

   2. திருமகள்; Tirumagal.

     “தேவி தேவண்ணா ஏலேலோ வங்காளத் தேவி ஏலேலோ மலையாளத்தில் ஏலேலோ மலையாள தேவி ஏலேலோ” (நாட்டார் பாடல்);.

வங்காளப்பச்சை

வங்காளப்பச்சை vaṅgāḷappaccai, பெ. (n.)

   1. செம்பிலிருந்து உண்டாக்கப்படும் ஒருவகை வண்ணம்; verdigris – sub acetis cupris.

   2. பூடுவகை; a herb.

வங்காளமஞ்சள்

 வங்காளமஞ்சள் vaṅgāḷamañjaḷ, பெ. (n.)

   மகளிர் பூசிக்குளிக்கும் மஞ்சள் வகை; a kind of turmeric, used by women when bathing.

     [வங்காளம் + மஞ்சள்.]

வங்காளம்

வங்காளம்1 vaṅgāḷam, பெ. (n.)

வங்கம்1 5, 6 பார்க்க;see Vangam.

     “தங்காத சாரல் வங்காள தேசமும்” (S.I.I.i. 98);.

     [வங்கம் → வங்காளம்.]

 வங்காளம்2 vaṅgāḷam, பெ. (n.)

பண்வகை (சது.);;(mus.);

 a melody-type.

வங்காளவாத்து

 வங்காளவாத்து vaṅgāḷavāttu, பெ. (n.)

   வாத்து வகை (சென்.வழ.);; a kind of goose.

வங்காளி

வங்காளி vaṅgāḷi, பெ. (n.)

   1. வங்காள நாட்டான்; Bengal.

   2. வங்கம்1, 6 பார்க்க;see vangam.

   3. வாழை; plantation.

வங்கி

வங்கி1 vaṅgi, பெ. (n.)

   வேலிப்பருத்தி கொடி வகை; a variety of Cotton Creeper.

 வங்கி2 vaṅgi, பெ. (n.)

   கரைப்பேட்டு வகையுள் ஒன்று, கோடு போன்று வளைந்து செல்லும் முறையில் கரையில் விளிம்படுத்துச் செய்யப்படும் வேலைப்பாடு; decorative works on the margin of a cloth, a kind of margin pattern.

 வங்கி3 vaṅgi, பெ. (n.)

   1. தோளணியுளொன்று (வின்.);; a kind of armlet, as having a pecular curve.

   2. வளைந்த இரும்புக்கருவி; a kind of iron hook or curved instrument.

   3. வளைந்த கத்து (பிச்சுவா);;   நெளிவாள்; a kind of curved sword.

   தெ., க., வங்கி (ink);;து. வக்கி (gg.);.

     [வாங்கு → வங்கு → வங்கி. வங்கி = நெளி வளையல் (வே.க.4 : 99);.]

நெளிவளையல், நெளி மோதிரம் முதலானவை வளைதற் கருத்தினைக் குறிக்கும் அணிகலன்களாகும்.

 வங்கி4 vaṅgi, பெ. (n.)

   சித்திரைத் திங்களில் விதைக்கப் பெற்று, ஐந்து திங்களுக்குள் விளையும் மட்டமான சம்பா நெல் வகை; bengal paddy, an inferior kind of camba, sown in cittirai and maturing in five months.

 வங்கி5 vaṅgi, பெ. (n.)

   கொடுவேலி (சங்.அக.);; ceylon lead-wort.

 வங்கி vaṅgi, பெ. (n.)

   சிறிய கத்தி; small knife.

 வங்கி vaṅgi, பெ. (n.)

   வைப்பகம்; Bank.

     [E. bank → த. வங்கி.]

வங்கிக்காரை

 வங்கிக்காரை vaṅgikkārai, பெ. (n.)

   கழுத்தணிவகை (இ.வ.);; a necklet.

     [வங்கி + காரை.]

     [P]

வங்கிசன்

வங்கிசன் vaṅgisaṉ, பெ. (n.)

   1. வழித் தோன்றல்; scion.

   2. உறவினன் (வின்.);; kinsman.

வங்கிநெளிவு

 வங்கிநெளிவு vaṅgineḷivu, பெ. (n.)

   விரலணி வகை (இ.வ.);; a kind of ring, as having a peculiar curve.

     [வங்கு → வங்கி + நெளிவு = நெளிவாக வளைந்தமைந்த விரலணிவகை.]

வங்கினி

வங்கினி vaṅgiṉi, பெ. (n.)

   1. மை; black paste.

   2. பொட்டு; mark made in the forehead with black paste.

   3. கருமை; black.

     “நாணவே வங்கினியை வழித்தெடுத்து, நாலுதினம் பூமிக்குள் வைத்திடாயே” (கருவூ-குருநூல்);.

வங்கியம்

வங்கியம்1 vaṅgiyam, பெ. (n.)

   1. மூங்கில் (மலை);; bamboo.

   2. இசைக்குழல் (சூடா);; reed pipe.

     “வங்கியம் பலதேன் விளம்பின” (கம்பரா. கைகே.60);.

     [வங்கு → வங்கி → வங்கியம்.]

வங்கு = வளைவு. பெருவங்கியம் = வளைவாக அமைந்த இசைக் குழல்.

 வங்கியம்2 vaṅgiyam, பெ. (n.)

   இனம், பிரிவு, குடும்பம், கொடிவழி; race, family, lineage.

வங்கிலம்

 வங்கிலம் vaṅgilam, பெ. (n.)

   முள்; thorn.

     [வங்கி → வங்கியம்.]

வங்கிவளையல்

வங்கிவளையல் vaṅgivaḷaiyal, பெ. (n.)

   வளையல் வகை (வின்.);; a kind of bangle.

     [வங்கு → வங்கி + வளையல் = நெளிவளையல் (மு.தா.பக்.70);.]

     [P]

வங்கீபுரத்தாய்ச்சி

 வங்கீபுரத்தாய்ச்சி vaṅāpurattāycci, பெ. (n.)

   நூற்றெட்டுத் திருப்பதிகக்கோவை, நூற்றெட்டுத் திருப்பதித் தோத்திரம் ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; author of nurrettu-t-tiruppadiga-k-kovai. Nurrettu-t-tiruppadi-t-tottiram.

வங்கு

வங்கு1 vaṅgu, பெ. (n.)

   காய்ந்து வறண்ட செதில்களைப் போல, மேல் தோலை மாறச்செய்து வெடிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்; a kind of skin disease marked by dryness of the skin and cuts or cracks.

க. பங்கு (banku);

மறுவ. நாய்ச்சொறி.

     [மங்கு → வங்கு = மேனியில் மங்கல் நிறமாகப் படரும் ஒருவகைப் படை நோய் (வே.க. 4 : 59);.]

குளித்தபின் துவர்த்தாத மேனியிற் காணும் படை போன்ற தோற்றம்.

 வங்கு2 vaṅgu, பெ. (n.)

   மரக்கலத்தறி; a kind – of wooden loom.

 வங்கு3 vaṅgu, பெ. (n.)

   1. கல் முதலியவற்றின் உட்டுளை; orifice, hole, hollow, as in a stone.

     “தான் கிடக்கிற வங்குகளினுடைய வாசலிலே முத்துக்களை யீன்றன” (திவ். பெரியதி. 3, 4, 2, வ்யா.);.

   2. எலி, பாம்பு முதலியவற்றின் வளை (சது.);; rat-hole, snake-hole.

   3. மலைக் குகை உட்டுளை (பிங்.);; cave, cavern, hollow.

     “வங்குகளிலே நிறைத்துள்ள தேனிலே தோய்த்து” (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.);.

   4. மரப்பொந்து; hollow a tree.

     “வங்கினைப் பற்றிப்போகா வல்லுடும் பென்ன” (பெரியபு. கண்ணப்ப. 116);.

   5. தோணியின் விலாச் சட்டங்களுக்கு நடுவிலுள்ள இடம் (வின்);; space between the beams or ribs of a boat.

   6. பாய்மரக்குழி (வின்.);; socket for a mast.

   7. கப்பலின் விலாச்சட்டங்கள் (பரவ.);; Wooden ribs of a ship.

   8. தோல் நோய் வகையுளொன்று (இ.வ.);; spreading spots on the skin, a disease.

   9. நாய்ச்சொறி (இ.வ.);; blotches on a mangy dog.

   10. கழுதைப்புலி (சங்.அக.);; hyena, as spotted.

   11. தாழம்பூவின் மகரந்தம் (இ.வ.);; pollen of the screwpine.

க., ம. பங்கு, வங்கு.

     [வணங்கு → வங்கு (வே.க. 4 : 99);.]

   வல்’ என்னும் வளைதற் கருத்து வேரடியிலிருந்து கிளைத்த சொல்;உள் வளைந்து தோன்றும் படகு, தோணி, கப்பல் போன்றவற்றின் விலாச் சட்டங்கள்.

வங்குக்கட்டை

 வங்குக்கட்டை vaṅgukkaṭṭai, பெ. (n.)

வங்குக்கால் பார்க்க;see vangu-k-kal.

     [வங்கு + கட்டை.]

வங்குக்கால்

 வங்குக்கால் vaṅgukkāl, பெ. (n.)

   கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்கும் அடிப்படைச் சட்டம் (வின்.);; the keel of a vessel, the timber to which the side-planks are nailed.

     [வங்கு + கால்.]

வங்குசகோசனம்

 வங்குசகோசனம் vaṅgusaāsaṉam, பெ. (n.)

   குங்குமப்பூ; European saffron.

வங்குசம்

 வங்குசம் vaṅgusam, பெ. (n.)

   கூகை நீறு (சங்.அக.);; flour of arrow-root.

ஒருகா. கூகைக்கிழங்குசாறு.

வங்குபடர்தல்

வங்குபடர்தல் vaṅgubaḍartal, பெ. (n.)

வங்கு1 பார்க்க;see Vangu.

வங்குமாசம்

 வங்குமாசம் vaṅgumācam, பெ. (n.)

   புளிங்காடி; Vinegar.

வங்குமாறல்

 வங்குமாறல் vaṅgumāṟal, பெ. (n.)

   வங்கு; resolving of the black spots.

வங்குல்

 வங்குல் vaṅgul, பெ. (n.)

   மரவகை (L.);; spleen tree.

     [வங்கு → வங்குல் = வளைந்து வளர்ந்த மரம்.]

வங்குளம்

வங்குளம்1 vaṅguḷam, பெ. (n.)

   1. காற்று; wind.

   2. ஊதை; windy.

 வங்குளம்2 vaṅguḷam, பெ. (n.)

வங்கூழ்1 (சங்.அக.); பார்க்க;see Vangul.

     [வங்கூழ் → வங்குள் → வங்குளம்.]

வங்குவாசல்

 வங்குவாசல் vaṅguvācal, பெ. (n.)

   கருப்பையிலிருந்து பெண்குறிக்குள்ளடங்கி நீண்டு வந்திருக்கும் பூ; cervix.

வங்கூழ்

வங்கூழ் vaṅāḻ, பெ. (n.)

   1. காற்று; wind.

     “வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை” (அகநா. 328);.

   2. நோய் செய்யும் வளி (வாதக்.); முதலாய குறைபாடு (தைலவ.);; Vadam, one of the three humours of the body.

வங்கேசுவரம்

வங்கேசுவரம் vaṅācuvaram, பெ. (n.)

   1. வங்க பற்பம், சங்கு பற்பம், ரசபற்பம், தாளகபற்பம், இவைகளைக் கலுவத்திலிட்டு அரைத்து, புளித்த காடியில் உலர்த்திய ஒரு வகை மருந்து; a kind of medicine.

   2. இலங்கேசுவரம் (ஈழத்தீசுவரர்);; a Siva shrine in Srillanga.

வங்கேசுவரரசம்

 வங்கேசுவரரசம் vaṅāsuvararasam, பெ. (n.)

வங்கேசுவரம் பார்க்க;see vangasuvaram.

வங்கை

வங்கை1 vaṅgai, பெ. (n.)

   குறும்பு; mischief.

     ‘சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே’ (கனம். கிருட். கீர்த். 40);.

 வங்கை2 vaṅgai, பெ. (n.)

   பகை (யாழ்.அக.);; enmity.

     “வங்கை வைத்தால் தன்குடிக்குப் பகை” (உ.வ.);.

     [வகு → வங்கு → வங்கை.]

வங்கொலையாயிரு-த்தல்

வங்கொலையாயிரு-த்தல் vaṅgolaiyāyiruttal,    4 செ.கு.வி. (v.i.)

   கொடிய பசியுடன் இருத்தல்; to be in intense or severe hungry.

வசக்கட்டு

வசக்கட்டு vasakkaṭṭu, பெ. (n.)

   1. வணிகக் கூட்டாளி மூலமாகக் கொடுத்த தொகை; payment made to a partner.

   2. ஒப்படைத்த பொருள்; goods or monies left in charge of a person.

   3. இன்னதற் கென்று நியமித்து வைத்த தொகை; sum ear – marked for a particular purpose.

   4. செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த

   பணம்; imprest.

   5. ஆட்சி (வின்.);; possession.

வசக்கட்டுக்கணக்கு

 வசக்கட்டுக்கணக்கு vasakkaṭṭukkaṇakku, பெ. (n.)

   கணக்கர் அல்லது நிருவாகப் பணியாளரிடம் நிருவாகச் செலவுக்காகக் கொடுத்து வைக்கப்பட்ட பணத்தின் கணக்கு (C.G.);; account in respect of monies left in charge of a accountant or an agent.

     [வசக்கட்டு + கணக்கு.]

வசக்கி

 வசக்கி vasakki, பெ. (n.)

   காடும், மேடுமாய்க் கிடந்த நிலத்தைச் சீர் செய்கை; reclamation of lands from irregular shape.

     “ஊரின் மேலூர் புற்றும் தெற்றியுமாய்க் கிடந்த பாழ் நிலத்தை வசக்கி வயலும் குளமுமாக்கி”.

     [வயக்கி → வசக்கி.]

வசக்கு

வசக்கு1 vasakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வயப்படுத்துதல், பழக்குதல்; to break in, tame, train, subdue.

மாட்டை உழவுக்கு வசக்கவேணும்.

   2. வளையப் பண்ணுதல் (யாழ்.அக.);; to bend.

 வசக்கு2 vasakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நிலத்தைப் பண்படுத்துதல்; to reclaim or improve land.

     ‘கட்டை பறிச்சு வசக்கி’ (S.I.I. V. 307);.

     [வயக்கு → வசக்கு.]

 வசக்கு3 vasakkudal, செ.குன்றாவி. (v.t.)

   வாட்டுதல்; to roast.

     [வதக்கு → வசக்கு.]

வசக்கேடு

வசக்கேடு vasakāṭu, பெ. (n.)

   1. உடல் நலமின்மை (வின்.);; loss of health of unwell.

   2. மயக்கம் (வின்.);; delirium.

   3. தன்னிலை கெடல்; untowardness.

   4. இடர்ப்பாட்டு நிலை; awkward predicament.

   5. தவற்று நிலை; wrong.

   6. ஆறுதல் அளிக்கவியலாத நிலை; uncomfortable position.

     [வசம் + கேடு.]

வசங்கம்

 வசங்கம் vasaṅgam, பெ. (n.)

வசகம் பார்க்க;see vasagam.

வசங்களி-த்தல்

வசங்களி-த்தல் vasaṅgaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   கட்டு மீறுதல் (யாழ்.அக.);; to get out of control, to be uncontrolable.

     [வசம் + கழி → களி.]

வசங்கெட்டவன்

வசங்கெட்டவன் vasaṅgeṭṭavaṉ, பெ. (n.)

   1. செயலற்றவன், ஆண்மையற்றவன் (வின்.);; impotent man.

   2. உடல் நலமற்றவன் (வின்..);; unhealthy man (one who is not in health);.

   3. நிலைமை கெட்டவன் (வின்.);; man in reduced circumstances.

   4. மனமின்றி வேலை செய்பவன்; unwilling or involuntary worker.

   5. நட்பாங் கிழமையிலான் (யாழ்.அக.);; unfriendly man.

   6. கட்டினின்று விடுபட்டவன்; one who has freed himself from bonds.

   7. ஒழுங்கீனன், ஒழுக்கக்கேடன்; one who has gone astray.

வசங்கொண்டவன்

வசங்கொண்டவன் vasaṅgoṇṭavaṉ, பெ. (n.)

   1. உண்மையறிந்தவன் (வின்.);; one who is aware of the state of things.

   2. முற்பழக்கமுள்ளவன்; man of experience.

   3. ஏதாவதொரு பழக்கத்திற்கு அடிமையானவன்; man addicted to a habit.

அவன் ஊரார் பணத்தில் உடம்பு வளர்த்து வசங்கண்டவன் (உ.வ.);.

     [வசம் + காண் → கண்டவன்.]

வசஞ்செய்-தல்

வசஞ்செய்-தல் vasañseytal,    1 செ. குன்றாவி. (v.t.)

   1. வயப்படுத்துதல்; to entice,

 allure.

     “வாய் தரத் தக்க சொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல்” (கம்பரா.அங்கதன்றூது. 29);;

   2. (முற்றிலும் ஆளுகைக்கு உட்படுத்துதல்); அடக்குதல்; to overcome, subdue.

   3. கைப்பற்றுதல்; to take possession of.

     [வயம் → வசம் + செய்.]

வசட்டி

 வசட்டி vasaṭṭi, பெ. (n.)

   வயிரமண் (யாழ்.அக.);; diamond dust.

வசதி

வசதி1 vasadi, பெ. (n.)

   1. வீடு; house, residence.

   2. நல்லிடம் (சூடா.);; commodious and comfortable place.

   3. சமணர் கோவில் (இ.வ.);; jain temple.

   4. மருத நிலத்து ஊர் (பிங்.);; village in an agricultural tract.

   5. தகை நலம்; convenience.

   5. வாய்ப்பு நலம்; comfort.

     “முன்றிலிடை யுலவவே வசதி பெறுபோதும்” (தாயு. சச்சிதா.11);.

   6. இரவு (யாழ்.அக.);; night.

 வசதி2 vasadi, பெ. (n.)

   செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை; means, amenity.

     ‘அலுவலக நேரத்தை அவரவர் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடாது.

வசதிகம்

 வசதிகம் vasadigam, பெ. (n.)

   அடிவயிற்றைச் சுற்றியிருக்கும் எலும்பு; bone round the lower abdomen, pelvis.

வசதிக்கேடு

 வசதிக்கேடு vasadikāṭu, பெ. (n.)

   உடம்பின் மெலிவு; physical weakness.

வசத்திற்சோதினி

 வசத்திற்சோதினி vasattiṟsōtiṉi, பெ. (n.)

   எலுமிச்சை; sour lime.

வசநாபி

 வசநாபி vasanāpi, பெ. (n.)

   வசம்பு(அ); தான்றி வேரிலிருந்து எடுக்கப்படுங் கொடிய நஞ்சுவகை; a strong poison said to be prepared from vasampu or according to some, from {} root.

வசநீக்கம்

 வசநீக்கம் vasanīkkam, பெ. (n.)

   கைவசமிருந்ததை நீக்குகை; dispossession.

     [வயம் → வசம் + நீக்கம்.]

வசந்தங்கங்கரு

 வசந்தங்கங்கரு vasandaṅgaṅgaru, பெ. (n.)

   சித்தரத்தை; lesser galangul-Alpina officinarum.

வசந்தனடி-த்தல்

வசந்தனடி-த்தல் vasandaṉaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கும்மியடித்தல் (வின்.);; to perform the kummi dance.

   2. வசந்தன் கூத்து ஆடுதல் (யாழ்.அக.);; to dance the {} dance.

     [Skt. vasanta → த. வசந்தனடி-த்தல்.]

வசந்தன்

வசந்தன் vasandaṉ, பெ.(n.)

   1. காமன்(பிங்.);;{}

 the god of love.

   2. காமனுக்குத் தோழனும் இளவேனில் காலத்துக்குரியவனுமான ஒரு தேவன்; Vasanta the god of spring and friend of {}

     ‘சித்திரை வசந்தன் வருசெவ்வியுடன் மகிழா’ (பாரத சம்பவ. 101.);.

   3. தென்றல்; the south-wind.

     ‘வஞ்ச வசந்தனைநீ வாவென்று’ (காளத். உலா, 479);

   4. கூத்து வகை; a kind of dance.

     [Skt. vasanta → த. வசந்தன்.]

வசந்தபஞ்சமி

வசந்தபஞ்சமி vasandabañsami, பெ. (n.)

   காமனுக்குரியதாய் மாகமாதத்து வெண்பக்க (சுக்கிலபட்ச);த்து வரும் ஐந்தாம் நாள் (பஞ்.);; the 5th titi of the bright fortnight in the lunar month of makam, as sacred to{}.

     [Skt. vasanta+pnjami → த. வசந்தபஞ்சமி.]

வசந்தபயிரவி

 வசந்தபயிரவி vasandabayiravi, பெ. (n.)

   ஒரு பண் வகை. (வின்.);; a specific melody type.

த.வ. வேனிற் பண்.

     [Skt. vasanta + bhairavi → த. வசந்தபயிரவி]

வசந்தப்பு-தல்

வசந்தப்பு-தல் vasandappudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முறை கேடாதல் (வின்.);; to be on the wrong side, to be in the wrong place.

இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது.

   2. அறிவு மயங்குதல்; to lose consciousness.

அவன் வசந்தப்பி உளறுகிறான் (உ.வ.);.

     [வசம் + தப்பு.]

வசந்தமாலை

வசந்தமாலை vasandamālai, பெ. (n.)

   தென்றலைச் சிறப்பித்துக் கூறும் சிற்றிலக்கிய (பிரபந்த); வகை. (இலக். வி. 836.);; an {} verse describing the south-wind one of 96 pirapantam. (q.v.);

     [Skt. vasanta → த. வசந்தமாலை.]

வசந்தம்

வசந்தம் vasandam, பெ. (n.)

   1. இளவேனில் (பிங்.);; the spring season.

   2. மேழம் (சித்திரை); மாதம் (பிங்.);; the month of cittirai.

   3. நறுமணம் (சூடா.);; scent fragrance.

   4. கந்தப்பொடி (சது.);; scented powder.

   5. ஓர் இசைப் பண். (பரத. இராக. 56);

 a specific melody type.

   6. மகிழ்வான உரையாடல் (சல்லாபம்); (பிங்.);.

 pleasant conversation.

   7. சிறிய முத்து (யாழ்.அக.);; small pearl.

த.வ. இளவேனில்

     [Skt. vasanta → த. வசந்தம்]

வசந்தருது

 வசந்தருது vasandarudu, பெ. (n.)

   இளவேனில் (பிங்.);; spring season.

     [Skt. vasanta+rutu → த. வசந்தருது]

வசனம்

வசனம் vasaṉam, பெ. (n.)

   1. உரை; prose.

   2. உரையாடல்; dialogue.

     [Skt. vacana → த. வசனம்.]

வசப்படு

வசப்படு vasappaḍu, வி. (v.i.)

   1. ஆட்படுதல்; to be in the grip of (5th);, to entrap.

   2. உள்ளாதல்; be possessed by, subjected to.

காதல் வசப்பட்டுத் தூக்கத்தில் கூட உளற ஆரம்பித்துவிட்டான்.

வசப்படு-தல்

வசப்படு-தல் vasappaḍudal, செ.கு.வி. (v.i.)

   1. கட்டுப்படுதல்; to submit, to be brought into subjugation.

   2. ஆளுமைக்கு உட்படுதல்; to bring into one’s possession.

   3. தந்திரமாய் வசமாதல் (இ.வ.);; to be enticed.

     [வயம் → வசம் + படு.]

வசப்படுத்து-தல்

வசப்படுத்து-தல் vasappaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டுப்படுத்துதல்; to submit, to subjugate.

   2. ஆளுமைக்கு உட்படுத்துதல்; to bring into one’s possession.

   3. தந்திரமாய் வசமாக்குதல்; to entice.

     [வயப்படு → வசப்படு → வசப்படுத்து.]

 வசப்படுத்து-தல் vasappaḍuddudal,    5 செ.கு.வி. (v.i.)

வயப்படுத்து-தல் பார்க்க;see vaya-p-paduttu-.

     ‘வெள்ளையனே வெளியேறு, என்னும் காந்தியடிகளின் கொள்கை இளைஞர்களை வசப்படுத்தியது’.

     [வயப்படுத்து → வசப்படுத்து-தல்.]

வசப்பந்தேறு

 வசப்பந்தேறு vasappandēṟu, பெ. (n.)

   வசம்பு வேர்த் துண்டு (வின்.);; a piece of the root of sweet flag.

     [வசம்பு + தேறு.]

வசப்பிழை

வசப்பிழை vasappiḻai, பெ. (n.)

வசக்கேடு (வின்.); பார்க்க;see vasa-k-kédu.

     [வசம்1 + பிழை.]

வசமாக

வசமாக vasamāka, பெ.அ. (adj.)

   1. வகையாக; inescapably.

திருடன் காவலர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

   2. தப்பிக்க முடியாமல்; to under miscontrol or to grip.

     [வயம் → வசம்ச + ஆக.]

கயம் → கசம்

வசமொழிக்கை

 வசமொழிக்கை vasamoḻikkai, பெ. (n.)

வசநீக்கம் பார்க்க;see vasa-nikkam.

வசம்

வசம்1 vasam, பெ. (n.)

   1. பொறுப்பு; under one’s custody.

   2. இருப்பு; under one is one’s possession.

   3. உள்ளான நிலை; being under the control or fluence, as a consequence or result.

     ‘எல்லாம் விதியின் வசம்’.

     [வயம் → வசம்.]

ஒநோ. தேயம் → தேசம்

நேயம் → நேசம்

 வசம்2 vasam, பெ. (n.)

   1. உடைமை; possession.

   2. பொறுப்பு, அக்கறை; charge, care.

     “மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும்.” (திருவாச.33,8);.

   3. ஆட்சி (யாழ்.அக.);; power.

   4. அடக்கி வைக்கை; control.

   5. கீழ்ப்படிகை (வின்.);, பணிகை, சார்ந்திருக்கை; subordination, subjection, dependence.

   6. நேர் (இ.வ.);; directness, straightness.

   7. ஒழுங்கு (வின்.);; order, regularity.

   8. நிலைமை; real state or condition.

     “அவன் அங்கே வசமறியாமற் போனான்”.

   9. இயலுகை; ability, possibility.

     “பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்ப வசமோ” (தாயு.ஆனந்தமான.7);.

   10. பக்கம் (வின்.);; side.

     ‘சப்பட்டை வசமாய்வை’.

   11. எழுதும் தாள் (நாஞ்.);; copying paper, folio.

   12. பிறப்பு (யாழ்.அக.);; birth.

 வசம்3 vasam, இடை. (part.)

   மூலமாக; through.

அவர்வசம் பாவாணர் பொத்தகங்களை அனுப்பியிருக்கிறேன்.

 வசம்4 vasam, பெ. (n.)

வசம்பு (நாமதீப. 335.); பார்க்க;see Vasambu.

 வசம்5 vasam, பெ. (n.)

   இடம்; place.

     “தானத்தார் வசம் குடுத்து”.

வசம்பிருந்தை

 வசம்பிருந்தை vasambirundai, பெ. (n.)

   வசம்பு சுட்டகரி; charreel sweet flag.

வசம்பு

வசம்பு1 vasambu, பெ. (n.)

   1. பெருவேம்பு; a big species of margosa.

   2. தாமரை இலை; lotus leaf.

   3. மிளகு; pepper, pipper nigrum.

   4. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிற் பயிராகும் ஒர் விதப் பூண்டின் வேர்த்தண்டு; under ground stem of a plant, sweet flag, the root gives a very strong pungent odour, the leaf when wounded gives the smell, it is used for the following diseases, snake bite, enlarged spleen, gunmam, diarrhoea etc.

 Skt. உக்கிரந்தம்.

இது பாம்பு நஞ்சு குன்மம் அரத்தபித்தம், சூலை சன்னிபாதம், பீலிகம், யானைக்கால், செரியாமையானேற்படும் வயிற்று நோய் கழிமாசுக்கட்டிற் காண்புழு ஆகியவற்றை நீக்குகின்ற ஒர் மருந்தாகும்.

 வசம்பு2 vasambu, பெ. (n.)

   மருந்தாகப்பயன்படும் ஒரு பூண்டின் வழுவழுப்பான வேர்; white sweet flag, used as a medicine.

     ‘குழந்தைக்கு வயிற்று வலி வந்தால், வசம்பு குழைத்துத் தடவுவதுண்டு’.

 வசம்பு3 vasambu, பெ. (n.)

   செடிவகை; sweet flag.

     “வால்வெள் வசம்பும்” (பெருங்.உஞ்சைக் 50, 28);.

வசம்புகா

 வசம்புகா vasambukā, பெ. (n.)

   மலைவள்ளிக் கொடி; mountain sweet potato – creeper.

வசம்புசுட்டகரி

 வசம்புசுட்டகரி vasambusuṭṭagari, பெ. (n.)

   கரிய, நீண்ட சொரசொரப்பான இலையைக் கொண்ட செடிவகை; charred sweet flag.

வசம்புவாசா

 வசம்புவாசா vasambuvāsā, பெ. (n.)

   மிளைகு; pepper.

வசலிகா

 வசலிகா vasalikā, பெ. (n.)

   மல்லிகை; jasmine.

வசலை

வசலை vasalai, பெ. (n.)

   பசளைக் கொடி; a kind of creeper.

     “வசலை மென்கொடி வாடியதன்ன” (கந்தபு. இரணியன். புத். 56);.

தெ. பட்சட்சலி

 morning sickness and morbid longings of a pregnant woman.

     [வயா → வசா + கோட்டி.]

கருப்பமுற்றவளுக்கு மயக்கம் முதலியவற்றை யுண்டாக்குவது.

வசாசலம்

 வசாசலம் vacācalam, பெ. (n.)

   குருதியின் மேல் வடியும் ஊனீர்; serum (சா.அக.);.

வசாசில்லி

 வசாசில்லி vacācilli, பெ. (n.)

குடலைச் சூழ்ந்திருக்கும் ஊனம், ஊறுஞ்சவ்வு (serus);

 industrial membrane (சா.அக.);.

வசாதிகணம்

 வசாதிகணம் vacātigaṇam, பெ. (n.)

   வசம்பு, கக்கு, கடுக்காய், அதிவிடயம் ஆகியவைகளின் தொகுப்பு; species of drugs in the group of sweet flag, dry ginger, gallnut and Indian atee (சா.அக.);.

வசானியம்

வசானியம்1 vacāṉiyam, பெ. (n.)

   மிளகு (சங்.அக.);; black-pepper.

 வசானியம்2 vacāṉiyam, பெ. (n.)

வசாலியம் பார்க்க;see vasaliyam.

வசாபூயம்

 வசாபூயம் vacāpūyam, பெ. (n.)

   சீழு மூனீரும் சேர்ந்தவை; seropurulent (சா.அக.);.

வசாமேகம்

 வசாமேகம் vacāmēkam, பெ. (n.)

   ஒரு வகை நோய்; a kind of disease, fat in the urine (சா.அக.);.

வசாலியம்

 வசாலியம் vacāliyam, பெ. (n.)

   செவ்வியம்; pepper creeper (சா.அக.);.

வசி

வசி1 vasidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. பிளத்தல்; to split to cut.

   2. வெட்டுதல்; to cut.

     “வசிந்து வாங்கு நிமிர்தோள்” (திருமுரு. 206);

 வசி2 vasidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வடுப்படுதல்; to be dented or notched.

   2. வளைதல் (பிங்.);;(திருமுரு. 106. உரை.);; to bend.

 வசி3 vasi, பெ. (n.)

   1. பிளவு; cleft.

     “கொழுநர் மார்பினெடுவசி விழுப்புண்” (மலைபடு. 303);.

   2. நுனி, கூர்மை (பிங்.);; point.

   3. முனை; edge.

     “வசிகெழு சூலம்” (கந்தபு. மகாகாள.19);.

   4. நுனி கூர்மையான கோல்; pointed stake.

     “நாலு வசி நாட்டி நடுக்குதிக்கும் நன்னகரும்” (விறலிவிடு. 131);.

   5. கழுக்கோல் (வின்.);; impaling stake.

   6. அடையாளம், குறி; mark. .

   7. தழும்பு; scar, cicatrice.

     “வெள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்” (பதிற்றுப் 42, 4); (பிங்.);.

   8. வாள் (பிங்.);; sword.

     “இராவணனே கலந்தருள் பெற்றது மாவசியே” (தேவா. 151 10);.

   9. சூலம் (வின்.);; trident.

     [வள் → வய் → வயி → வசி. வசி + கூர்மை.

 வசி4 vasittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பிளத்தல்; to split, to cut.

     “இறைவன் கண்டமாக வசித்ததாகிய வசிதடியை” (பரிபா. 5, 39, உரை);.

 வசி5 vasittal,    4 செ.கு.வி. (v.i.)

   தங்குதல் (சூடா.);, வதிதல், வாழ்தல்; to dwell, live, abide, reside.

 வசி6 vasi, பெ. (n.)

   இருப்பிடம் (யாழ்.அக.);; residence.

 வசி7 vasittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வசியஞ் செய்தல், கிளர்ச்சியுறச் செய்தல், கவர்தல் (இ.வ.);; to cajole, wheedle, inveigle, gain one’s affections, entice

     “வசிந்து வாங்கு நுசுப்பின்” (புறநா. 383. 12, அடிக்குறிப்பு);.

 வசி8 vasi, பெ. (n.)

   1. வசியம் (திவா.);; fascination.

     “வசி செய்யுன் றாமரைக் கண்ணும்” (திவ். திருவாய் 10, 3, 8);.

   2. தன் வசஞ் செய்வது; that which fascinates.

     “காழி யரனடிமா வசியே” (தேவா. 151. 10);.

   3. தாழ்ச்சி, பணிகை (அக.நி.);; subjugation, submission.

   4. நம்பிக்கை, உறுதியளிக்கை, தேற்றுகை (அக.நி.);; convincing, assuring.

   5. வசிய வித்தைக்குரிய சொல்; magic word.

     “மாதர் மனைதொறும்…. வசிபேசு மரனார்” (தேவா. 1008, 2);,

   6. எண் வகை சித்தியுள், அனைத்தையும் தன் வயமாக்குகை (திருவிளை.அட்டமா. 27);; the supernatural power of subduing all to one’s own will, one of astama-sitti.

     “மணமலர் போலெவரானும் வாஞ்சிக்கப்படுகை வசி” (சிவதரு. சிவஞானயோ. 90);.

 வசி9 vasi, பெ. (n.)

   1. மழை; rain.

     “வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி” (சிலப்.5, 73);.

   2. நீர் (பிங்.);; water.

 வசி10 vasi, பெ. (n.)

   குற்றம் (அக.நி.);; fault. defect.

 வசி11 vasi, பெ. (n.)

   வெள்வெண்காயம் (சங்.அக);; garlic.

 வசி vasi, பெ. (n.)

   தட்டு; plate.

     [வைத்தி-வத்தி-வச்சி-வசி]

வசிகம்

 வசிகம் vasigam, பெ. (n.)

   மிளகு (மலை.);; black pepper.

வசிகரணம்

வசிகரணம்1 vasigaraṇam, பெ. (n.)

   1. வயப்படுத்துகை; subjugation.

   2. புணர்ச்சிக்கு இணங்குகை (யாழ்.அக.);; yielding to sexual advances.

   3. அழகு; beauty.

 வசிகரணம்2 vasigaraṇam, பெ. (n.)

   வாள் (யாழ்.அக.);; sword.

வசிகரத்தி

 வசிகரத்தி vasigaratti, பெ. (n.)

   கம்மாறு வெற்றிலை; a strong pungent betel leaf which is dark green in colour-piper betel.

வசிகரமருந்து

வசிகரமருந்து vasigaramarundu, பெ. (n.)

   உண்டோரைப் பயன்படுத்தச் செய்தவர் வயமாக்கும் மருந்து (கொக்கோ.1, 26);; a drug that charms and neslaves the person to whom it is administered.

வசிகரி

வசிகரி1 vasigari, பெ. (n.)

   1. காரெள்; a black species of gingeli seed.

   2. தொழுகண்ணி; a kind of plant.

   3. வசியம் செய்தல்; influencing, mesmerising, entresing (சா.அக.);.

 வசிகரி2 vasigarittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தன்வயப்படுத்துதல், கவர்ந்திழுத்தல்; to charm, captivate fascinate, to subjugate.

     “உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று” (கந்தபு.அசுரர்யா.23);.

     “பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும்” (உத்தரரா.இராவணன் பிறப்.19);.

   2. வேண்டுதல் (யாழ்.அக.);; to request.

வசிக்கல்

 வசிக்கல் vasikkal, பெ. (n.)

   மாடுகளைக் கயிற்றால் கட்டப் பயன்படும் ஒர் கல்; a stone to bind the cattle.

வசிதடி

வசிதடி vasidaḍi, பெ. (n.)

   துணித்த துண்டம்; piece cut off.

     “வசிதடி சமைப்பின்” (பரிபா.5, 39);.

வசிதம்

வசிதம் vasidam, பெ. (n.)

   1. ஆணைத் திப்பிலி; a large sized long pepper.

   2. மிளகு; pepper-Piper higrum (சா.அக.);.

வசித்துவம்

 வசித்துவம் vasittuvam, பெ. (n.)

   ஒன்பான் சித்திகளின் சிற்பக்காட்சி வடிவினில் ஒன்று; a type of sculpture.

     [வதி-வசி-வசித்துவ]

வசிநி

 வசிநி vasini, பெ. (n.)

   வன்னிமரம்; sama tree Prosopis spicigera, Indian mesquit tree (சா.அக.);.

வசிப்பிடம்

 வசிப்பிடம் vasippiḍam, பெ. (n.)

   குடியிருக்கின்ற அல்லது தங்கியிருக்கின்ற இடம்; abode, residence, dwelling place.

     ‘வசிப்பிடத்திற்கு அருகிலேயே அலுவலகம்’.

     [வதி → வசி → வசிப்பு + இடம்.]

வசிமாறத்தி

 வசிமாறத்தி vasimāṟatti, பெ. (n.)

   எட்டி மரம்; a tree bearing bitter poisonous fruit- Nux vomica (சா.அக.);.

வசிமூலி

 வசிமூலி vasimūli, பெ. (n.)

வசியமூலி பார்க்க;see vasiya-muli.

     [வசி + மூலி = மூலிகை என்பதன் கடைக் குறை.]

வசிய நூல்

 வசிய நூல் vasiyanūl, பெ. (n.)

   ஒருவர் மனத்தை வசப்படுத்திக் கொள்ளும் முறையை விரிக்கும் சாத்திரம்; treatise dealing with the art of bewitching a person.

     [வசியம் + நூல்.]

வசியகரன்

 வசியகரன் vasiyagaraṉ, பெ. (n.)

   வசியம் செய்வோன்; one who is influencing or mesmerising, a person by magical enchantments, mugician.

     [வசிய + Skt. மயசய → த. கரன்.]

வசியகுளிகை

வசியகுளிகை vasiyaguḷigai, பெ. (n.)

   தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச் செய்விக்கும் மாயமாத்திரை; magic pill which brings other persons under the influence of its possessor.

     “யாவரும் வசிய குளிகை…. மாதருக் கதிரூபவின்பம்” (திருவேங்.சத.89);.

     [வசியம்1 + குளி → குளிகை. குளிகை = மந்திர வலிமையுள்ள மாத்திரை.]

வசியக்கனி

 வசியக்கனி vasiyakkaṉi, பெ. (n.)

   ஆதொண்டை; a prickly creeper-Capparis horrida.

வசியப்பொருத்தம்

வசியப்பொருத்தம் vasiyapporuttam, பெ. (n.)

   திருமணப் பொருத்தம் பத்தனு ளொன்று (விதான. கடிமண.4, உரை);; a correspondence between the horoscopes of the propspective bride and bridegroom, one of ten tiru-manaporuttam.

     [வசியம் + பொருத்தம்.]

வசியப்போக்கு

 வசியப்போக்கு vasiyappōkku, பெ. (n.)

   வசியக் கலை; following the magic art (சா.அக.);.

வசியமதாசி

 வசியமதாசி vasiyamatāsi, பெ. (n.)

   பெருந் தும்பை; a large species of tumbai flower, dead nettle.

வசியமருந்து

வசியமருந்து vasiyamarundu, பெ. (n.)

   உண்டோரைப் பயன்படுத்தச் செய்தவர்தம் வயமாக்கும் மருந்து (கொக்கோ.1, 26);; a drug that charms and enslaves the person to whom it is administered.

     [வசியம் + மருந்து.]

வசியமூலி

 வசியமூலி vasiyamūli, பெ. (n.)

   கரும் பசளை, செங்கொடி வேலி, சிறியாணங்கை; enchanting plants.

     [வசியம் + மூலி = மூலிகை என்பதன் கடைக்குறை.]

வசியமை

 வசியமை vasiyamai, பெ. (n.)

   வசியப்படுத்துவதற்காக அழிஞ்சி விதைக் கொண்டு செய்யும் ஒருவகை மை; a magical black point having psychic or magical properties of influencing the person desired for (சா.அக.);.

     [வசியம் + மை.]

வசியம்

வசியம்1 vasiyam, பெ. (n.)

   1. வசப்படுகை; being docile or subjugated.

   2. நெருங்கிய நேயம்; great attachment.

   3. மாசற்ற காதல்; devoted love.

     “ஒய்வறு வசியமுண்டாய்” (கொக்கோ.1, 28);.

   4. தன்வயமாக்குகை; subjugation.

   5. எண்வகைக் கருமங்களுள் மக்கள், தேவர், கோள்கள் முதலானவற்றைத் தன்வயப்படுத்தும் வித்தை (வேதா.சூ.16, 2, 607);; magic art of bringing under control a person, spirit or deity, one of asta-karmam.

   6. கைவசம் (வின்.);; actual possession.

     [வயின் → வயம் → வசம் → வசி → வசியம்.]

மகளிரையும் பிறரையும் மந்திரத்தாலும் மனப்பயிற்சியாலும் வயப்படுத்துதல்.

 வசியம்2 vasiyam, பெ. (n.)

   கிராம்பு (மலை);; Cloves.

 வசியம் vasiyam, பெ. (n.)

   1. வயப்படுகை; being docile or subjugated.

   2. காதல்; great attachment, devoted love

     “ஓய்வறு வசிய முண்டாய்” (கொக்கோ. 1, 28);

   3. கைவயம் (வின்.);; actual possession.

     [Skt. {} → த. வசியம்]

வசியம்செய்-தல்

வசியம்செய்-தல் vasiyamseytal,    1 செ.கு.வி. (v.i.)

வசியம்பண்ணல் பார்க்க;see vasiyam-pannal.

     [வசி → வசியம் + செய்.]

வசியம்பண்ணல்

 வசியம்பண்ணல் vasiyambaṇṇal, தொ.பெ. (vbl.n.)

   மருந்திட்டு, மாய வலையிலகப்படச் செய்தல்; philter.

     [வசியம் + பண்ணு → பண்ணல்.]

வசியயீரு

 வசியயீரு vasiyayīru, பெ. (n.)

   மருந்தீடு; a love philter.

வசியர்

வசியர் vasiyar, பெ. (n.)

   வணிகர் (சூடா.);; members of the vaisya caste.

     “அன்பார் வசியர்க்கேயாம்” (சைவக. பொது. 95);.

வசியவாடை

 வசியவாடை vasiyavāṭai, பெ. (n.)

   வசியம் செய்வதற்காக தூவும் ஓர் பொடி; a powder blown for alluring a person.

வசியை

வசியை vasiyai, பெ. (n.)

   1. தம் வயப்படுத்தும் அன்புமிக்க மனைவி (யாழ்.அக.);; beloved wife.

   2. கற்புடைய பெண்; chast woman.

     [வசி + ஐயை – வசியை.]

வசிவாசி

 வசிவாசி vasivāsi, பெ. (n.)

   மீனைப்பூ; a kind of tree.

வசிவு

வசிவு vasivu, பெ. (n.)

   1. பிளத்தலால் உண்டாம் வடு; scar, cicatrice.

     “வானமின்னு வசிவு பொழிய” (மலைபடு. 97);.

   2. வளைவு (பிங்.);; curvature;bend.

   3. கவிகை மோடு போன்ற வளைவு (வின்.);; arch. vault.

வசீகரசக்தி

வசீகரசக்தி vasīkarasakti, பெ. (n.)

   1. மனத்தைக் கவரும் ஆற்றல்; power of attraction.

   2. வசியஞ் செய்யும் ஆற்றல்; magic spell, hypnotic power.

த.வ. வயக்காற்றல்

     [Skt. {}-kara → த. வசீகரம்]

வசீகரணம்

வசீகரணம் vacīkaraṇam, பெ. (n.)

   1. வயப்படுத்துகை; subjugation, attraction.

   2. காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு; the arrow of {} that subjugation a person.

   3. அறுபத்து நாலு கலையுள் பிறரை வயஞ் செய்வதாகிய வித்தை (வின்.);; art of subjugation by magic one of {}-kalai.

த.வ. வயப்பாடு

     [Skt. {} → த. வசீகரணம்]

வசீகரன்

 வசீகரன் vacīkaraṉ, பெ. (n.)

   வசியப்படுத்துவோன் (யாழ். அக.);; one who fascinates and charms.

     [Skt. {}-kara → த. வாசீகரன்.]

வசீகரம்

 வசீகரம் vacīkaram, பெ. (n.)

   ஈர்ப்பு; attract.

வசு

 வசு vasu, பெ. (n.)

   வெள்ளைப் பூண்டு (மலை.);; garlic.

வசுகூபம்

 வசுகூபம் vasuāpam, பெ. (n.)

   அமுரி; urine or urinary salt (சா.அக.);.

வசுநரை

 வசுநரை vasunarai, பெ. (n.)

   புளி (சங்.அக.);; tamarind.

வசூரி

 வசூரி vacūri, பெ. (n.)

   அம்மைநோய் (இ.வ.);; small-pox.

     [வைசூரி + வசூரி.]

வசூரிகைப்புண்

 வசூரிகைப்புண் vacūrigaippuṇ, பெ. (n.)

   அம்மைப்புண்; small pox-ulcer (சா.அக.);.

     [வைசூரி → வசூரிகை + புண்.]

வசூரை

 வசூரை vacūrai, பெ. (n.)

   வேசை (யாழ்.அக.);; hariot.

வசூலி-த்தல்

வசூலி-த்தல் vacūlittal,    4 செ.கு.வி. (v.i.)

   வரி முதலியவற்றைத் தண்டுதல்; to collect, as revenue.

இந்த ஆண்டு இன்னும் வரி வசூலிக்கவில்லை. (உ.வ.);

     [U. {} → த. வசூல்.]

வசூல்

வசூல் vacūl, பெ. (n.)

   1. சேகரிப்பு; collection.

   2. சேகரிக்கும் வரி முதலியன;     [U. {} → த. வசூல்.]

வசூல்பாக்கி

 வசூல்பாக்கி vacūlpākki, பெ. (n.)

   நிலுவைத் தொகை (வின்.);; uncollected balance.

     [U. {} → த. வசூல்.]

வசை

வசை1 vasaidal,    2 செ.கு.வி. (v.i.)

   வசைகூறுதல், பழித்துரைத்தல், பொய்க் குற்றஞ்சாட்டுதல்; to censire, blame, calumniate.

     “வசையுநர்க் கறுத்த பகைவர்” (பதிற்றுப்.32.15);.

 வசை2 vasai, பெ. (n.)

   1. பழிப்பு, குற்றம், திட்டுகை, பொய்க்குற்றச்சாட்டு; reproach, censure, blame, stigma, calumny.

     “அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை” (புறநா.10);.

   2. வசைகவி (தொல்.பொருள்.437);; satire poem.

   3. குற்றம், பிழை; defect.

     “வசை தீர்ந்த வென்னலம்” (கலித்.26.14);.

   4. அகப்பை (யாழ்.அக.);; ladle.

     [வை → வசை.]

   வசையும் இரண்டு வகைப்படும். மெய் வசையும் இருபுற வசையும் என (யாப்.95;யாப்.கா.58);. வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாதற் கூற வேண்டுவது வசையென்று கொள்ளப்படும் (தொல்.செய்யுள்.172, இளம்);. புகழ் போன்று வசையாதலும், வசைபோன்று புகழாதலும் படவரும் (தொல்.செய்யுள்.நச்124);.

 வசை3 vasai, பெ. (n.)

   1. வறட்டாமா (வறட்டுப்பசு); (சூடா.);,

   வறட்டுப்பசு; sterile cow.

   2. ஆமா (பசு); (யாழ்.அக.);; cow.

   3. பெண் யானை (யாழ்.அக.);; female elephant.

   4. கணவன் தமக்கை (யாழ்.அக.);; husband’s sister.

   5. பெண் (யாழ்.அக.);; woman.

   6. மகள் (யாழ்.அக.);; daughter.

   7. மனைவி (யாழ்.அக.);; wife.

 வசை4 vasai, பெ. (n.)

   கொழுப்பு, தசை; marrow, fat.

     “வசை கீசகமென் றிருவகையாய்த் துன்னும் புலவால்” (சேதுபு. வேதா.30);.

 வசை5 vasaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல், கோடுதல்; to bend, incline, to make crooked.

   2. சூழப்படுதல்;   வேலி போடுதல்; to be environed, to be encompassed;

 to be enclosed.

தெ. வஞ்சு.

 வசை6 vasaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வளைத்தல்; to bend, incline to make crooked.

   2. சூழ்தல், வளைத்தல்; to surround, encompass, encircle.

     [வசை → வசைத்தல்.]

 வசை7 vasai, பெ. (n.)

   1. இழிவுபடுத்துதல்; to abuse, to humiliation.

   2. குறைகூறும் வகையில் பேசுதல்; to talk slanderously, klemished saying.

     ‘அவன் வாயைத் திறந்தால் வசைதான்’.

வசைகவி

வசைகவி vasaigavi, பெ. (n.)

   வசைகூறும் அங்கதப் பாடல் (வின்.);; satiric poem;

 lampoon.

   2. வசைபாடுவோன், பழித்துரைப்போன்; satirist.

     [வசை + Skt. கவி.]

வசைகவியாண்டான்

 வசைகவியாண்டான் vasaigaviyāṇṭāṉ, பெ. (n.)

   காளிமடல் என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet who composed kali madal.

வசைகூறு-தல்

வசைகூறு-தல் vasaiāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பழி சுமத்துதல்; to blame or censure.

     [வசை + கூறு – குல்→ கூல் → கூறு. பொருத்தமாகப் பழிகூறுதலே வசைகூறுதலாகும்.]

வசைக்கடம்

வசைக்கடம் vasaikkaḍam, பெ. (n.)

   செம்பொருளங்கதம் பற்றிக் கலிப்பாக்களால் அமைந்த ஒரு பழையநுால் (தொல்.பொருள். 437, உரை);; an ancient poem in kali verse, dealing with satire.

வசைக்கவி

 வசைக்கவி vasaikkavi, பெ. (n.)

வசைகவி (வின்.); பார்க்க;see Vasai-kavi.

     [வசை + skt. கவி.]

வசைக்கூத்து

வசைக்கூத்து vasaikāttu, பெ. (n.)

   நகைதிறச் சுவைபற்றி நிகழும் நையாண்டிக் (கேலிக்); கூத்து (சிலப்.3:13, உரை);; a dance caricaturing persons and holding them upto ridicule.

     [வசை + கூத்து.]

வசைச்சொல்

 வசைச்சொல் vasaissol, பெ. (n.)

   பழிச் சொல் (இ.வ.);; abusive language.

     [வசை + சொல்.]

வசைநீங்கு-தல்

வசைநீங்கு-தல் vasainīṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கண்டனம் அல்லது குற்றத்திலிருந்து விலகுதல்; to leave censure or blame.

     [வசை + நீங்கு.]

வசைபாடு-தல்

வசைபாடு-தல் vasaipāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. திட்டுதல்; to abuse, to scold.

     ‘நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்’. சிலர் வசைபாடுதலையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் (உ.வ.);.

   2. தரம் தாழ்த்திப்பேசுதல்; to degrade.

     “அவர் வசைபாடுவதில் வல்லவர்” (உ.வ.);.

     [வசை + பாடு.]

இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பழித்தும் பேசுதல். பிறர்மீது குற்றஞ்சாட்டுதலும், பிறரை வீண்வம்பிற்கிழுத்துச் சண்டையிடுதலும் இதனுள் அடங்கும்.

வசைப்பாட்டு

 வசைப்பாட்டு vasaippāṭṭu, பெ. (n.)

   அங்கதப்பாட்டு, வசைகூறும் பாடல்; satiric poem.

மறுவ. அங்கதச் செய்யுள்.

     [வசை + பாட்டு.]

வசையம்

வசையம் vasaiyam, பெ. (n.)

   கருநிறமுள்ள மான்வகை (நாமதீப.224.);; black deer.

வசையழி-த்தல்

வசையழி-த்தல் vasaiyaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   குற்றம் அல்லது பழியினை முழுதும் போக்குதல்; to destroy or ruin.

     [வசை + அழி.]

வசையுநர்

வசையுநர் vasaiyunar, பெ. (n.)

   1. வசை கூறுவோர், பழித்துரைப்போர், குற்றஞ் சுமத்துவோர் (பதிற்றுப். 32, 15. உரை);; those who blame or censure;calumniators.

   2. பகைவர்; enemies, as revilers.

     “வசையுநர்க்கறுத்த பகைவர்” (பதிற்றுப்.32, 15);.

மறுவ. அங்கதர்

     [வசை → வசையுநர்.]

வசையொழி-த்தல்

வசையொழி-த்தல் vasaiyoḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பழியினை முற்றும் துடைத்தல் அல்லது போக்குதல்; to exonerate.

     “வசையொழித்த வாழ்வே வளமான வாழ்வு’ (உ.வ.);.

     [வசை + ஒழி.]

வசைவக்கணம்

 வசைவக்கணம் vasaivakkaṇam, பெ. (n.)

   பழிப்பு (யாழ்ப்.);; reproach.

     “வசை வக்கணம் பேசுகிறான்”.

     [வசை + வக்கணம்.]

வசைவினை

 வசைவினை vasaiviṉai, பெ. (n.)

   நன்றல்லா நடத்தை (வின்.);; balme-worthy conduct or act.

     [வசை + வினை.]

வசைவு

வசைவு1 vasaivu, பெ. (n.)

   குற்றம் (திவ். பெரியாழ். 3, 4, 2 வ்யா. பக். 594);; fault;blemish.

     [வசை → வசைவு.]

 வசைவு2 vasaivu, பெ. (n.)

வசை, 1 பார்க்க;see vasai.

     “செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும்” (திவ். திருவாய் 7, 5, 3);.

     [வை → வசை → வசைவு.]

வச்சஆள்

 வச்சஆள் vaccaāḷ, பெ. (n.)

   பணிக்கு அமர்த்திய வேலையாள்; engaged servant.

     [வைத்த → வச்ச + ஆள்.]

வச்சகத்தண்டுகம்

 வச்சகத்தண்டுகம் vaccagattaṇṭugam, பெ. (n.)

   வெட்பாலையரிசி; the seed of a tree, – Herium antidysentricum.

வச்சகம்

வச்சகம்1 vaccagam, பெ. (n.)

   1. காட்டு மல்லி வகை, நீண்ட மரமல்லி; Indian cork.

   2. வெட்பாலை (தைலவ. தைல.);; conessi bark.

 வச்சகம்2 vaccagam, பெ. (n.)

   மரமல்லிகை; a tree-Milingtonia hortenair, it is also known as malai malligai.

வச்சணத்தி

வச்சணத்தி vaccaṇatti, பெ. (n.)

   அன்பு, வாற் சல்லியம் (அருங்கலச். 23);; tenderness, affection, fondness, love.

     [Skt. vatsala → த. வச்சணத்தி]

வச்சணந்திமாலை

 வச்சணந்திமாலை vaccaṇandimālai, பெ. (n.)

   தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர் பெயரால் குணவீரபண்டிதரென்பவர் வெண்பா யாப்பில் இயற்றிய பர்ட்டியல் நூல்; a treatise on poetics, in {} verse, by {}, named after his preceptor {}.

வச்சதாகம்

 வச்சதாகம் vaccatākam, பெ. (n.)

   கருங்கொள்ளு; black horse gram.

 வச்சதாகம் vaccatākam, பெ. (n.)

   கருங் கொள்ளு; black horse gram.

வச்சத்தொள்ளாயிரம்

 வச்சத்தொள்ளாயிரம் vaccattoḷḷāyiram, பெ. (n.)

   வச்சதேயத்தரசனைப் பற்றித் தொள்ளாயிரம் வெண்பாக்களால் அமைந்த ஒரு நூல்;

வச்சநாகம்

 வச்சநாகம் vaccanākam, பெ. (n.)

   பாம்பு வகையுளொன்று; a kind of snake.

     [P]

வச்சநாபி

 வச்சநாபி vaccanāpi, பெ. (n.)

   நச்சுப்பூடு வகை (யாழ்.அக.);; hepal aconite.

வச்சநாவி

 வச்சநாவி vaccanāvi, பெ. (n.)

வச்சநாபி பார்க்க;see Vacca-nabi.

 வச்சநாவி vaccanāvi, பெ. (n.)

வச்சநாபி பார்க்க;see Vacca-naibi.

வச்சநி

 வச்சநி vaccani, பெ. (n.)

   மஞ்சள்; turmeric.

வச்சநீர்

 வச்சநீர் vaccanīr, பெ. (n.)

வச்சநி பார்க்க;see vaccani.

 வச்சநீர் vaccanīr, பெ. (n.)

வச்சநி பார்க்க;see Vachani.

வச்சனி

வச்சனி1 vaccaṉi, பெ. (n.)

   மஞ்சள்; turmeric.

 வச்சனி2 vaccaṉi, பெ. (n.)

   காற்சேம்பு; a kind of plant.

வச்சம்

வச்சம் vaccam, பெ.(n.)

   1. இந்தியாவின் வடபாகத்துள்ள நாடு; an ancient province in North India.

     ‘வச்சத்திளங்கோவை’ (வீரசோ. அலங். 11, உரை.);

     [Skt. vatsa → த. வச்சம்]

வச்சயம்

வச்சயம் vaccayam, பெ. (n.)

   1. கலைமான் (பிங்.);; stag.

   2. கருநிறமுள்ள மான் வகை; black stag.

     [Skt. vatsaka → த. வச்சயம்]

வச்சரி

 வச்சரி vaccari, பெ. (n.)

   வேம்பு (சங்.அக.);; neem tree.

வச்சாகம்

 வச்சாகம் vaccākam, பெ. (n.)

   காட்டாடு; wild goat.

வச்சாங்கம்

 வச்சாங்கம் vaccāṅgam, பெ. (n.)

   வீரம், இரசம் இவைகளை விளக்கெண்ணையில் அரைத்து, பதங்கித்து மேகப்புண்களுக்காக கொடுக்கும் மருந்து வகை; a medicine prepared with mercury and perchioride of mercury and prescribed for syphilitic sores.

வச்சாதனி

 வச்சாதனி vaccātaṉi, பெ. (n.)

   சீந்தில்; moon creeper-Tinospracordifolia alias Menispermum cordifolium.

வச்சி

 வச்சி vacci, பெ. (n.)

   செடி வகை; Oblong cordate-leaved tree bilberry.

வச்சிதண்ணீர்

 வச்சிதண்ணீர் vaccidaṇṇīr, பெ. (n.)

   அரத்தம்; blood.

வச்சிரஅப்பிரகம்

 வச்சிரஅப்பிரகம் vacciraappiragam, பெ. (n.)

   காக்கைப் பொன்; a variety of mica.

வச்சிரகங்கடன்

 வச்சிரகங்கடன் vacciragaṅgaḍaṉ, பெ. (n.)

   அனுமான் (யாழ்.அக.);; Hanuman.

     [Skt. vajra + {} → த. வச்சிரகங்கடன்]

வச்சிரகங்கடம்

 வச்சிரகங்கடம் vacciragaṅgaḍam, பெ. (n.)

   மிக்க உறுதியுள்ள சட்டை வகை (யாழ். அக.);; a cloth of great durability.

     [Skt. vajra + {} → த. வச்சிரகங்கடம்]

வச்சிரகண்டம்

 வச்சிரகண்டம் vacciragaṇṭam, பெ. (n.)

   இலந்தை; a jujube tree-Zizyphus jujube.

வச்சிரகண்டா

 வச்சிரகண்டா vacciragaṇṭā, பெ. (n.)

   அரையாப்புக்குக் கொடுக்கும் மருந்து; a pl prescribed for bubo.

வச்சிரகந்தம்

 வச்சிரகந்தம் vacciragandam, பெ. (n.)

   தாளகச் செய்நஞ்சு (சங்.அக.);; yellow orpiment.

வச்சிரகந்தரசம்

 வச்சிரகந்தரசம் vassiragandarasam, பெ. (n.)

   ஏலம்; a plant bearing fragrant Capsules-Cardamum.

வச்சிரகம்

 வச்சிரகம் vacciragam, பெ. (n.)

   தாமரைக் காய் (சது.);; pericarp of the lotus.

வச்சிரகாயம்

வச்சிரகாயம்1 vaccirakāyam, பெ. (n.)

   உரமிகு உடம்பு; a strong robust body.

 வச்சிரகாயம்2 vaccirakāyam, பெ. (n.)

   மருந்து வகை; a medicine.

     “தயிராற் குழப்பதொரு மருந்துண்டு, வச்சிர காயம் என்பது” (தக்கயாகப். 547, உரை);.

வச்சிரக்கட்டு

 வச்சிரக்கட்டு vaccirakkaṭṭu, பெ. (n.)

   வலுவான அமைப்பு; strong – build.

     [வச்சிரம் + கட்டு]

     [Skt. vajra → த. வச்சிரம்]

வச்சிரக்காரை

 வச்சிரக்காரை vaccirakkārai, பெ. (n.)

   பனஞ்சாறு, முட்டை, கண்ணாம்புக் கலவை முதலியவற்றின் கலவை; a mixture of Sweet totaly or juice extracted form palmra, egg and calcium or lime.

வச்சிரக்கியாழம்

 வச்சிரக்கியாழம் vaccirakkiyāḻm, பெ. (n.)

   மகப் பெற்ற மகளிர்க்கு, அரத்தப் போக்கு நிற்க கொடுக்கின்ற மூங்கிலைக் கருக்கு நீர்; a decoction of bamboo leaves given to woman after delivery of child, to arrest oozing or wasting of blood.

     [வச்சிரம் + கியாழம்.]

வச்சிரக்குகை

 வச்சிரக்குகை vacciraggugai, பெ. (n.)

   புற்றுமண், கூழாங்கல், கழுதை லத்தி. சுட்ட உமி, பழங்கந்தை முதலியவற்றை புளிக்க வைத்து, அரைத்துச் செய்கின்ற ஓர் கெட்டியான மூசை; a strong Crucible, the method of its preparation is given.

உருக்குவதற்கும், நீறு செந்தூரம் சுண்ணம் உருவாக்க வேண்டியும் அதிகச் சூடு வேண்டியிருந்தால் இம் (மூசை); மட்குகையைப் பயன்படுத்துவதுண்டு.

 வச்சிரக்குகை vacciraggugai, பெ. (n.)

   புற்றுமண், கூழாங்கல், கழுதை லத்தி, சுட்ட உமி, பழங்கந்தை முதலியவற்றை புளிக்க வைத்து, அரைத்துச் செய்கின்ற ஓர் கெட்டியான மூசை; a strong crucible, the method of its preparation is given.

உருக்குவதற்கும், நீறு செந்தூரம் சுண்ணம் உருவாக்க வேண்டியும் அதிகச் சூடு வேண்டி யிருந்தால் இம் (மூசை); மட்குகையைப் பயன்படுத்துவதுண்டு.

வச்சிரக்குருந்து

 வச்சிரக்குருந்து vaccirakkurundu, பெ. (n.)

   பொதிகை மலையில் விளையும் ஒருவகைக் குருந்து; a plant growth in the podigai mountain.

வச்சிரக்குளிகை

 வச்சிரக்குளிகை vacciragguḷigai, பெ. (n.)

   ஒரு வகை மருந்து; a kind of medicine.

வச்சிரக்கோட்டம்

வச்சிரக்கோட்டம் vaccirakāṭṭam, பெ. (n.)

   காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனது வச்சிராயுதம் நிற்க அமைந்த கோயில்; an ancient temples at {}, where Indra’s thunderbolt was installed.

     ‘வச்சிரக் கோட்டது

மணங்கெழுமுரசம்’ (சிலப். 5, 141.);

வச்சிரங்கம்

வச்சிரங்கம் vacciraṅgam, பெ. (n.)

   1. சதுரக்கள்ளி; a scuare spurge.

   2. வச்சிரம் பார்க்க;see vacciram.

வச்சிரசரீரம்

வச்சிரசரீரம் vassirasarīram, பெ. (n.)

   உறுதியான உடம்பு (பிங்.);; robust, strong body.

     ‘அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார்’ (தக்கயாகப் 54, உரை.);

     [Skt. vajra + {} → த. வச்சிரசரீரம்]

வச்சிரசலம்

 வச்சிரசலம் vassirasalam, பெ. (n.)

   கோரைக்கிழங்கு; fragrant root tuber of a grass or sedge cyperus rotundus.

வச்சிரசீதம்

 வச்சிரசீதம் vacciracītam, பெ. (n.)

   பேய்ச் சீந்தில்;а creeper.

வச்சிரசுவாலை

 வச்சிரசுவாலை vassirasuvālai, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish (சா.அக.);.

வச்சிரதந்தி

வச்சிரதந்தி1 vacciradandi, பெ. (n.)

   ஒரு வகைப் பூடு; a kind of herb (சா.அக.);.

 வச்சிரதந்தி2 vacciradandi, பெ. (n.)

   ஒரு வகைப் புழு; a kind of worm.

     “வச்சிரதந்தி யெனப்படு முந்துகீடம்” (கந்தபு. மகாசாத். 42);.

வச்சிரதந்திவேர்

 வச்சிரதந்திவேர் vacciradandivēr, பெ, (n.)

   ஒருவகை வேர்; a kind of root (சா.அக.);.

வச்சிரதரு

 வச்சிரதரு vacciradaru, பெ, (n.)

   கஞ்சா; Indian hemp-cannabis sativa (சா.அக.);.

வச்சிரத்தலைச்சி

வச்சிரத்தலைச்சி1 vaccirattalaicci, பெ. (n.)

   கதண்டுக்கல்; a kind of mineral stone (சா.அக.);.

 வச்சிரத்தலைச்சி2 vaccirattalaicci, பெ. (n.)

   கருவண்டு (யாழ்.அக.);; black beetle.

மறுவ. கதண்டு

வச்சிரத்துரு

 வச்சிரத்துரு vacciratturu, பெ. (n.)

   சதுரக் கள்ளி (இலக்.அக.);; square spurge.

வச்சிரத்துருவம்

 வச்சிரத்துருவம் vacciratturuvam, பெ. (n.)

   நாட்டு அதிமதுரம் அல்லது குன்றிமணி வேர்; Indian liquorice – Abrus precatrious (Root of); (சா.அக.);.

வச்சிரத்தைத்தோயமாக்கி

 வச்சிரத்தைத்தோயமாக்கி vaccirattaittōyamākki, பெ. (n.)

   அத்திபேதி; a drug that resolves hardness of the bone (சா.அக.);.

வச்சிரத்தைப்பற்பமாக்கி

 வச்சிரத்தைப்பற்பமாக்கி vaccirattaippaṟpamākki, பெ. (n.)

   பிரண்டை; medicinal climber-vitis quadrangularis (சா.அக.);.

வச்சிரத்தோகை

 வச்சிரத்தோகை vaccirattōkai, பெ. (n.)

   செங்கத்தாரி; a medicinal shrub Niebuhria linearis (சா.அக.);.

வச்சிரநாடு

வச்சிரநாடு vacciranāṭu, பெ, (n.)

   பாண்டி நாட்டிலிருந்ததொரு பெயர் பெற்ற கடற்கரை நாடு; the coastal region in the Pändiyaa country.

     “வச்சிர நாடன்ன வாணுதல்” (களவியற்.47);.

வச்சிரநிணம்

வச்சிரநிணம் vacciraniṇam, பெ, (n.)

   1. மலைவேம்பு; thus;

 a species of mountain or hill margosa.

   2. கருவேம்பு; black species of margosa-Garuga pinnata (சா.அக.);.

வச்சிரபுட்பம்

 வச்சிரபுட்பம் vaccirabuṭbam, பெ, (n.)

   எள்ளுப் பூ (மூ.அ.);; blossom of sesamum.

வச்சிரப்படையோன்

 வச்சிரப்படையோன் vaccirappaḍaiyōṉ, பெ.(n.)

   இந்திரன்; Indra, as armed with the thunderbolt.

வச்சிரப்பால்

 வச்சிரப்பால் vaccirappāl, பெ, (n.)

   சதுரக்கள்ளிப்பால்; milk of square spurge-Euphorbia quadratus (சா.அக.);.

வச்சிரமூசை

வச்சிரமூசை vacciramūcai, பெ, (n.)

   1. சாம்பல், புற்றுமண், இரும்பு கிட்டம், வெள்ளைக்கல் சூரணம், தலைமயிர் இவற்றை ஆட்டுப்பாலில் வேகவைத்து அரைத்து ரசம், மற்ற மாழைகளை உருக்க வேண்டி பயன்படுத்தும் ஒரு வகை மூசை; Crucible for melting metals, the method of preparing it is given.

   2. வச்சிரக்குகை பார்க்க;see vaccira-k-kugai.

 pவச்சிரம் + மூசை]

வச்சிரமூலி

வச்சிரமூலி vacciramūli, பெ, (n.)

   1. பிரண்டை; medicinal climber, square-stalked vine, vitis quadrangularis.

   2. எருக்கு; madar shrub, calotrophis gigantia.

   3. சதுரக்கள்ளி; square spurge-Euphorbia quadrata.

வச்சிரம்

வச்சிரம் vacciram, பெ. (n.)

   1. இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஒராயுதம். (சிலப் 2, 46 – 8 உரை);; thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle.

     ‘கூர்கெழு வச்சிரங்கொண்டு’

   2. மிகவும் உறுதியானது; that which is excedingly strong, hard or adamant.

     ‘வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தனானான் (சீவக. 2732);.

   3. வைரமலை (சூடா.);; diamond, as very hard.

   4. மரத்தின் காழ். core of a tree.

     “வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ” (சீவக. 2613.);;

   5. சதுரக்கள்ளி (சூடா.);; squre sparge.

   6. மல்லர் கருவி வகை (வின்.);; a weapon used by boxers.

   7. ஒரு வகைப் பசை; a kind of glue.

   8. சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று; a treatise on architecture, one of 32 cirpanul, q.v.

   9. ஒக மிருபத்தேனுள் ஒன்று (சோதிட சிந்);;     [Skt. vajra → த. வச்சிரம்]

வச்சிரயாப்பு

வச்சிரயாப்பு vaccirayāppu, பெ. (n.)

   1. மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை; gluing, in woodwork.

     ‘அச்சு மாணியும் வச்சிரயாப்பும்’ (பெருங். உஞ்சைக் 58, 47);

   2. வச்சிராயுதத்தால் எழுதியது போன்று என்றும் அழியா எழுத்து; indelible writing, as the marks made by the {}.

     ‘நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின்’ (சீவக. 544.);

     [வச்சிரம் + யாப்பு]

     [Skt. vajra → த. வச்சிரம்]

வச்சிரரூபகவாதம்

 வச்சிரரூபகவாதம் vaccirarūpagavātam, பெ. (n.)

   கழுத்து பிடரியில் வலி, விழிகள் அசைவின்மை, கொறுக்கை தலைநோய், நடுக்கல், குதிகால் நரம்புகளில் நோவுடன் திமிர், கழிமாசுக் குறைவு ஆகியவிக்குணங்களைக் காட்டுகின்ற ஊதை வகை; a vada disease marked by cramps, pain in the nape, immobility of the eyes, head ache tremors pain in heels etc (சா.அக.);.

வச்சிரரேகை

வச்சிரரேகை vaccirarēkai, பெ. (n.)

   பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி வகை (சிவக். பிரபந். சரபேந்திர குற. 51,1.);;     [Skt. vajra+rekha → த. வச்சிரரேகை.]

வச்சிரவண்ணன்

வச்சிரவண்ணன் vacciravaṇṇaṉ, பெ. (n.)

   செல்வக் கடவுள்r; Kuberan, the god of wealth.

     “வச்சிர வண்ணன் காப்ப வாழிய ரூழி” (சீவக. 2494.);

     [Skt. {} → த. வச்சிரவண்ணன்.]

வச்சிரவரிகை

வச்சிரவரிகை vacciravarigai, பெ. (n.)

   பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரிகை வகை (சிவக். பிரபந். சரபேந்திர. குற. 51, 1);; a kind of distinctive mark in the palm of the hand, believed to indicate female issue.

வச்சிரவல்லி

வச்சிரவல்லி vacciravalli, பெ. (n.)

   1. பிரண்டை (சங்.அக.);; square-stalked vine.

   2. சூரிய காந்தி; sun – flower.

வச்சிரவல்லிலேகியம்

 வச்சிரவல்லிலேகியம் vacciravallilēkiyam, பெ. (n.)

   மருந்து வகை; a kind of medicine.

வச்சிரவல்லிவேர்

 வச்சிரவல்லிவேர் vacciravallivēr, பெ. (n.)

   பிரண்டை வேர்; root of vitis quadrangularis. (சா.அக.);.

வச்சிரவிதளியம்

 வச்சிரவிதளியம் vacciravidaḷiyam, பெ. (n.)

   தூய்மையாக்கப்பட்ட இதளியம் (சங்.அக.);; purified mercury.

வச்சிராங்கம்

 வச்சிராங்கம் vaccirāṅgam, பெ. (n.)

   சதுரக்கள்ளி; square spurge.

வச்சிராங்கி

வச்சிராங்கி1 vaccirāṅgi, பெ. (n.)

   மூக்குத்திக் காய்; a (creeping); plant (சா.அக.);.

 வச்சிராங்கி2 vaccirāṅgi, பெ. (n.)

   1. உறுதியான கவசம் (சூடா.);; invulnerable armour.

   2. வைரம் பதித்த கவசம்; armour or cloak set with diamonds.

வச்சிராஞ்சி

 வச்சிராஞ்சி vaccirāñji, பெ. (n.)

பிரண்டை

 vitis quadrangularis (சா.அக.);.

வச்சிராப்பியாசம்

 வச்சிராப்பியாசம் vaccirāppiyācam, பெ. (n.)

     (கணிதம்); பெருக்கல் வகை. (வின்.);;

     [Skt. {} → த. வச்சிராப்பியாசம்.]

வச்சிரி

 வச்சிரி vacciri, பெ. (n.)

   சதுரக்கள்ளி; square spurge.

வச்சை

வச்சை vaccai, பெ. (n.)

   பழிப்பு; disgrace, contempt.

     “வச்சையா மெனும் பயமனத் துண்டு” (கம்பரா.கரன்வதை.142);.

     [வை → வசை → வச்சை.]

 வச்சை vaccai, பெ. (n.)

   1. வாஞ்சை (இலக்.அக.);; kindness.

   2. இவறன்மை (உலோபம்);; avarice, stinginess.

     ‘நலிவுசெயுநற் குதவும் வச்சைமாக்கள்’ (இராகு. இந். 25.);.

     [Skt. {} → த. வச்சை.]

வச்சைமாக்கள்

வச்சைமாக்கள் vaccaimākkaḷ, பெ. (n.)

   இவறன்; misers, stingy persons.

     “வச்சைமாக்க ளேன்றமா நிதியம் வேட்ட விரவலர்” (கம்பரா. உண்டாட்.19);.

     [வசை → வச்சை + மாக்கள் (மாக்கள் + கயவரான பொல்லா மாந்தர்.]

வச்சையன்

வச்சையன் vaccaiyaṉ, பெ. (n.)

   இவறன் மாலையன்; miser.

     “வச்சையன்போலொர் மன்னன்” (கம்பரா. பூக்கொய். 19);.

     [வச்சை → வச்சையன்.]

வச்சையம்

 வச்சையம் vaccaiyam, பெ. (n.)

   கலைமான்; stag-roe buck-Capreolus dorcus.

வஞ்சகச்சொல்

 வஞ்சகச்சொல் vañjagaccol, பெ. (n.)

   ஏமாற்றம் பேச்சு; deceitful talk or speech.

த. Skt. vañc.

     [வங்கு → வஞ்சு → வஞ்சம் → வஞ்சகம் + சொல்.]

வங்கு;வளைவு, கோணல். பிறரை ஏமாற்றும் தன்மையுள்ள மனக் கோணலான பேச்சு.

வஞ்சகன்

வஞ்சகன் vañjagaṉ, பெ. (n.)

   1. சூழ்ச்சிக்காரன், தந்திரக்காரன் (சூடா.);; artful Cunning man.

     “இருணிறவஞ்சகர்” (கம்பரா.படைத் தலைவர்வதை.10);.

   2. ஏமாற்றுபவன்; deceiver, impostor, cheat.

     “இந்த வஞ்சகனை யாள நினையாய்” (தாயு.மெளன.6);

   3. கயவன் (யாழ்.அக.);; rogue.

   4. நரி (யாழ்.அக.);; jackal.

     [வஞ்சகம் → வஞ்சகன்.]

வஞ்சகமூடி

 வஞ்சகமூடி vañjagamūṭi, பெ. (n.)

   ஆமை (யாழ்.அக.);; tortoise.

     [வஞ்சகம் + மூடி.]

     [P]

வஞ்சகம்

வஞ்சகம் vañjagam, பெ. (n.)

   1. சூழ்ச்சி, தந்திரம்; artfulness, cunning.

   2. ஏமாற்றம், ஏய்ப்பு; fraud, deceit.

     “வஞ்சகப் பெரும் புலையனேனையும்” (திருவாச.5, 96);.

   3. மறைவு (யாழ்.அக.);; hiding.

   4. நரி (யாழ்.அக.);; jackal.

 Skt. வஞ்சக.

     [வங்கு → வஞ்சு → வஞ்சம் → வஞ்சகம்.]

வஞ்சகி

வஞ்சகி vañjagi, பெ. (n.)

   1. தந்திரக்காரி, சூழ்ச்சிக்காரி; artful, cunning woman.

   2. ஏமாற்றுபவள்; deceitful woman.

     “என் சகிமார் வஞ்சகிமா ரென்றால்” (தனிப்பா. 1, 321, 15);.

     [வஞ்சகன்(ஆ.பா.); → வஞ்சகி (பெ.பா.);.]

வஞ்சகுனி

 வஞ்சகுனி vañjaguṉi, பெ. (n.)

   வெள்ளி லோத்திரம்; the bark of wood apple tree.

வஞ்சத்தன்மை

 வஞ்சத்தன்மை vañjattaṉmai, பெ. (n.)

   சூழ்ச்சித்திறம்; deceitfulness.

     [வஞ்சம் + தன்மை.]

வஞ்சநவிற்சி

வஞ்சநவிற்சி vañjanaviṟci, பெ. (n.)

   ஏதேனும் ஒரு காரணத்தால் நிகழ்ந்த மெய்ப்பாடு முதலியவற்றை மற்றொரு காரணத்தால் நிகழ்ந்தனவாகக் கூறும் அணி (அணியி.86);; a figure of speech in which the effect of one cause is ascribed to another or a feeling is dissembled by being attributed to a cause other than the real.

மறுவ. வஞ்சப்புகழ்ச்சி

     [வஞ்சம் + நவில் → நவிற்சி.]

வஞ்சந்தீர்-தல்

வஞ்சந்தீர்-தல் vañjandīrtal,    4 செ.கு.வி. (v.i.)

   பழிவாங்குதல் (யாழ்.அக.);; to be take revenge, to be revenged.

     [வஞ்சம் + தீர்.]

வஞ்சனம்

வஞ்சனம் vañjaṉam, பெ. (n.)

   1. சூழ்ச்சி, ஏய்ப்பு, வஞ்சகம்; craftiness, fraud, deceit.

     “தலைவன் கண் நிகழ்ந்த வஞ்சனம்” (கலித். 4. உரை);. 2. வஞ்சர மீன் வகை (யாழ்.அக.);;

 a kind of seer fish.

     [வஞ்சி → வஞ்சனம். அனம் = ஒரு தொழிற் பெயரீறு.]

வஞ்சனவளி

 வஞ்சனவளி vañjaṉavaḷi, பெ. (n.)

   வளியின் விளைவாலேற்பட்ட குடலிறக்கம்; inguinal hernia.

வஞ்சனி

வஞ்சனி vañjaṉi, பெ. (n.)

   1. காளியின் ஏவற்பெண் இடாகினி (பிங்.);; Idagini a female servant of kali.

   2. மலைமகள் (நாமதீப. 23);; parvadi

   3. மாயையென்னும் பெண் தெய்வம்; the goddess mayā or illusion.

     “வஞ்சனி தன்படை யாண்டு போந்துழி” (கந்தபு. யுத்தகாண். நகர்புகு. 45);.

   4. பெண் (சது.);; woman.

   5. வஞ்சமகள் (இலக்.அக.);; cunning woman.

   6. ஆணை (யாழ்.அக.);; asseveration, solem or declaration.

     [வஞ்சம் → வஞ்சனி.]

வஞ்சனை

வஞ்சனை1 vañjaṉai, பெ. (n.)

   ஒரு வகை நோய்; a kind of disease (சா.அக.);.

 வஞ்சனை2 vañjaṉai, பெ. (n.)

   1. வஞ்சகம், 1, 2 பார்க்க;see vanjagam.

     “புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” (திருவாக.1,55);.

   2. மாயை (பிங்.);; illusion.

     “வஞ்சனை மானின்யின் மன்னைப் போக்கி” (கம்பரா. உருக்காட்.17);.

   3. வஞ்சனைப்புணர்ப்பு பார்க்க;see Vanjanai-p-punarppu.

     “சித்திரவஞ்சனை புல்லியவறிந்து” (சிலப்.3,56);.

   4. பொய் (பிங்.);; lie, falsity.

   5. போலித்தன்மை; falsehood, duplicity.

   6. சூளுரை (வின்.);; oath, pledge.

   7. ஆணையிட்டுக் கூறுதல்; asseveration.

   8. தெய்வப் பெண் (பிங்.);; Goddess.

   9. பெண் (பிங்.);; woman.

     [வஞ்சம் → வஞ்சனை.]

வஞ்சனைப்புணர்ப்பு

வஞ்சனைப்புணர்ப்பு vañjaṉaippuṇarppu, பெ. (n.)

   இசைகொள்ளா எழுத்துகளின் மேலே வல்லொற்று வந்த போது, மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்க்கை (சிலப். 3, 56,அரும்.);; a method of composition, in which the letters of the vankanam, sound like those of the me/7-kasham the stress not falling on them.

     [வஞ்சனை + புணர்ப்பு.]

வஞ்சனையாளன்

 வஞ்சனையாளன் vañjaṉaiyāḷaṉ, பெ. (n.)

   ஏமாற்றுவோன், வஞ்சிப்போன் (பிங்.);; deceiver, guileful person, cheat.

     [வஞ்சனை → வஞ்சனையாளன்.]

வஞ்சன்

வஞ்சன் vañjaṉ, பெ. (n.)

   1. சூழ்ச்சித் திறமுடையவன்; deceitful person.

     “வஞ்சனே னடியே னெஞ்சினிற் பிரியா வானவா” (திவ்.பெரியதி.1, 6, 7);.

   2. வஞ்சகன் 1, 3 பார்க்க;see vanjagan.

     [வஞ்சம் → வஞ்சன்.]

வஞ்சபாவம்

வஞ்சபாவம் vañjapāvam, பெ. (n.)

வஞ்சத் தன்மை பார்க்க;see vanja-t-tanmai.

     “வஞ்சபாவம் வரும்வழி மாற்றி” (உத்தரரா. அரக்கர் 226);.

வஞ்சப்பழிப்பு

வஞ்சப்பழிப்பு vañjappaḻippu, பெ. (n.)

   ஒன்றன் பழிப்பினால், மற்றொன்றன் பழிப்புத் தோன்றக் கூறும் அணிவகை (அணியி.31);; apparent censure of an object, artfully suggesting the censure of another object, a figure of speech.

     [வஞ்சம் + பழிப்பு.]

வஞ்சப்புகழ்ச்சி

வஞ்சப்புகழ்ச்சி1 vañjappugaḻcci, பெ. (n.)

   புகழ்வதைப் போன்று இகழ்வது, இகழ்வதைப் போன்று புகழ்வது; apparent praise of censure suggesting the opposite, irony.

     [வஞ்சம் + புகழ்ச்சி.]

 வஞ்சப்புகழ்ச்சி2 vañjappugaḻcci, பெ. (n.)

   ஒன்றன் பழிப்பினால் அதன் புகழ்ச்சியேனும் மற்றொன்றன் புகழ்ச்சியேனும், ஒன்றன் புகழ்ச்சியால் அதன் பழிப்பேனும் மற்றொன்றன் பழிப்பேனுந் தோன்றக் கூறும் அணிவகை (அணியி.30);; apparent praise or censure of an object, artfully suggesting the censure or praise either of the same object or another, an irony.

     [வஞ்சம் + புகழ்ச்சி.]

பழிப்பது போன்று புகழ்ந்துரைக்கும் கபிலர்

பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் வருமாறு:-

     “பாரி பாரி யென்று பலவேத்தி

ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனு மல்லன்

மாரியு முண்டீண் டுலகுபுரம் பதுவே”

உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரியொருவனையே புகழ்வர். செந்நாப் புலவரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு என்னை? யெனின்,

     “நாட்டிற் புலவர் பலரும்,”

     “பாரி பாரி” யெனப் பாரியொருவனையே புகழ்கின்றனர். இவ்வுலகுயிர்களைப் புரத்தற்கண் பாரியொருவனேயன்றி மாரியும் உண்டே. இஃதென்ன வியப்பு” என்று கபிலர் உரைத்துள்ளது, ஓர்ந்துணரத் தக்கது.

   மழை மிகுதியாகப் பெய்தால், பேரிழப்பே மிஞ்சும். வேளாண் பயிர்கள் அழியும்;   மாந்தவுயிர்கள் காட்டாற்று வெள்ளத்தில் மடியும்;ஆனால், பாரியின் வள்ளண்மையால், புலவர் பெருமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்த குறிப்பும் பெறப்பட்டதறிக.

புகழ்வது போல இகழ்ந்துரைக்கும், திருக்குறளில் அமைந்துள்ள பாடல் வருமாறு,

     “பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்றில்” (குறள். 839);.

பேதையர் அல்லது அறிவற்றவர்களிடம் கொள்ளும் நட்பு, எஞ்ஞான்றும், துன்பம் தாராது. ஏனெனில், நட்புசெய்து பிரியுங்காலத்தே துயரொன்றும் நேராது.

அறிவற்றவர்தம் நட்பினைப் புகழ்ந்துரைத்தல் போல், இகழ்ந்துரைக்கும் பாங்கு, உணர்த்தப்பட்டதெனலாம்.

வஞ்சப்புகழ்ச்சியணி

வஞ்சப்புகழ்ச்சியணி vañjappugaḻcciyaṇi, பெ. (n.)

வஞ்சப்புகழ்ச்சி2 பார்க்க;see vaոja-p-puglcci.

     [வஞ்சப்புகழ்ச்சி + அணி.]

வஞ்சப்பெண்

வஞ்சப்பெண் vañjappeṇ, பெ. (n.)

   1. கொற்றவையின் ஏவற்பெண்; a female servant of korravai.

   2. சூழ்ச்சிக்காரி; artful, cunning woman, a woman of deceitful nature, sly woman.

     “வஞ்சப் பெண்ணஞ்சுண்ட வண்ணல்” (திவ்.பெரியதி. 2 6, 7);.

     [வஞ்சம் + பெண்.]

வஞ்சமகள்

வஞ்சமகள் vañjamagaḷ, பெ. (n.)

வஞ்சப் பெண், 2 பார்க்க;see vanja-p-pen.

     [வஞ்சம் + மகள்.]

வஞ்சம்

வஞ்சம் vañjam, பெ. (n.)

   1. ஏய்ப்பு, ஏமாற்றுகை, சூழ்ச்சி; fraud, deceit, craftiness.

     “போற்றுமின் வஞ்சம்” (நாலடி. 172);.

   2. பொய்; lie, falsity.

     “வருந்த னின் வஞ்ச முரைத்து” (கலித்.89);.

   3. கொடுமை, வன்முறை; cruelty, violence.

     “வஞ்சக் கருங்கட னஞ்சுண்டார் போலும்” (தேவா.519, 4);.

   4. வாள் (பிங்.);; sword.

   5. வஞ்சினம் (அரு.நி.);; oath, asseveration.

   6. பழிக்குப் பழி; revenge.

   7. மாயம்; illusion.

   8. சிறுமை (திவா.);; smallness, littleness.

   9. அழிவு, சிதைவு; destruction, ruin.

     “நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி வஞ்ச மில்லோர்க் கமிழ்தா கற்றே” (ஞானா. 32,2);.

     [வஞ்சி → வஞ்சம்.]

வஞ்சம்வை-த்தல்

வஞ்சம்வை-த்தல் vañjamvaittal, பெ. (n.)

   4 செ.கு.வி. (v.i.);

   பழி வாங்கப் பார்த்தல் (வின்.);; to harbour malicious thoughts and be on the watch for revenge.

வஞ்சரம்

 வஞ்சரம் vañjaram, பெ. (n.)

வஞ்சிரம் பார்க்க;see vanjiram.

தெ. வஞ்சரமு

வஞ்சலம்

 வஞ்சலம் vañjalam, பெ. (n.)

   பாம்பு (சங்.அக.);; serpent.

வஞ்சவம்

 வஞ்சவம் vañjavam, பெ. (n.)

வஞ்சலம் (சது.); பார்க்க;see vanjalam.

வஞ்சவிறுதி

வஞ்சவிறுதி vañjaviṟudi, பெ. (n.)

   பொய்ச்சாக்காடு; pretended death.

     “வஞ்சவிறுதி நெஞ்சுணத் தேற்றி” (பெருங்.இலாவணா.9.39);.

     [வஞ்சம் + இறு → இறுதி.]

வஞ்சவிளக்கம்

 வஞ்சவிளக்கம் vañjaviḷakkam, பெ. (n.)

வஞ்சகாரம் பார்க்க;see varja-kāram.

வஞ்சி

வஞ்சி1 vañjittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏமாற்றுதல், மோசடி செய்தல், சூழ்ச்சி செய்தல்; to deceive, defraud, cheat.

     “வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்” (குறள். 276);.

     [வங்கு → வஞ்சு → வஞ்சி.]

த. வஞ்சி → Skt. vaflc (வஞ்ச்);.

பொங்கு → பொஞ்சு. தமிழிலும், வடமொழியிலும், வஞ்சித்தல், வஞ்சம், வஞ்சகம் போன்ற சொற்களுக்கு

     “வங்கு” என்பதே மூலம்.

     “வங்கு” என்னும் சொல்,

     ‘வள்’ என்னும் மூலவேரினின்று கிளைத்தது.

     ‘வள்’ என்ற வேரடி, வளைதற் கருத்தினை அடிப்படைப் பொருண்மையாகக் கொண்டது. வளைதற் கருத்திலிருந்து, ஏமாற்றுக் கருத்துப் பிறந்தது என்பார் மொழிஞாயிறு. ஏமாற்றுக் கருத்தில் பிறந்த சொற்கள், உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும், பேராளமாக, அஃதாவது வரையிறந்து மக்களிடையே வழக்கூன்றியுள்ளன.

மக்கள் வழக்கு:-

கூட்டுச்சொற்களுள் சில:-

வஞ்சகப்பேர்வழி : வஞ்சனையாளன்

வஞ்சகக்காரன் : வஞ்சகக்காரி

வஞ்சனைசெய்தல்.

இச்சொல்லின் வரலாறு பற்றி மொழிஞாயிறு மொழிவது. இருமொழியிலும் வங்கு என்பதே மூலம். ஆயின், வடவர், வக்கு (வக்); என்னும் வலித்தல் வடிவிற் காட்டுவர். இதினின்றே வக்ர, வக்ரீகரண முதலிய வடசொற்கள் பிறக்கும்.

ஒருவனை ஏமாற்றுவது, வட்டஞ்சுற்றி அவனை வளைவது போலிருத்தலால், வளைதற் கருத்தில், ஏமாற்றுக் கருத்துப் பிறந்தது. Circumvent என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.

இலக்கிய வழக்கு :

   1.”வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்” (குறள். 276);.

   2.”வஞ்சே வல்லரே” (தேவா. 823:3);.

   3.”வஞ்சகப் பெரும்புலைய னேனையும்” (திருவாச.5:6);.

   4.”இருணிற வஞ்சகர்” (கம்பரா.படைத்தலைவர்வதை.10);.

   5.”போற்றுமின் வஞ்சம்” (நாலடி, 172);.

 வஞ்சி2 vañji, பெ. (n.)

   1. வஞ்சிப்பா பார்க்க;see vanji-p-pa.

     “வஞ்சி யடியே யிருசீர்த் தாகும்” (தொல்.பொருள்.357);.

   2. மருத யாழ்த்திறத்து ளொன்று (பிங்.);; a secondary melody-type of marudam class.

 வஞ்சி3 vañji, பெ. (n.)

   1. வஞ்சிக்கொடி பார்க்க;see vanji-k-kodi.

     “கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே” (திருவாக 6, 19);.

   2. மரவகை (L.);; glabrous mahua of the Malabar coast.

   3. மரவகை (L.);; four seeded willow.

   4. சீந்தில் படர்கொடி (மூ.அக.);; guiancha.

   5. கூகைநீறு (நாமதீப.398);; arrow-root four.

   6. குடை (பிங்.);; umbrella.

 வஞ்சி4 vañji, பெ. (n.)

   1. புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர் மேற்செல்வதைக் கூறுவது (தொல்.பொருள். 62);; major theme describing the advance of a kind against his enemies with a view to annexing their territories, one of purattinaj.

   2. அரசன் வஞ்சிமலரைத் தலையிற் சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர் மேற்செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை (பு.வெ.3, 1);; theme describing the decision of a king to wear the vasji flowers on his head and to advance against his enemies, with a view to annexing their territories.

வஞ்சிப்போர் பற்றி நச்சினார்க்கினியர் கூறுவது:-

வஞ்சி யென்றது ஒருவர் மேல் ஒருவர் சேரல் (தொல்.பொருள்.61, நச்.);.

 வஞ்சி5 vañji, பெ. (n.)

   1. பெண் (பிங்.);; woman.

   2. அறத்தேவி (யாழ்.அக.);; Goddess of virtue.

 வஞ்சி6 vañji, பெ. (n.)

   1. சேரர் தலைநகரான கருவூர்; karūr, capital of the céra country.

     “வாடாவஞ்சி வாட்டும்” (புறநா.39, 17);.

   2. கொடுங்கோளூர்; kodungolur.

     “வஞ்சி மணிவா யிலையணைந்தார்” (பெரியபு. வெள்ளானைச். 22);.

   3. சேரநாடு (மனோன். ii, 3, 75);; the cèra country.

 வஞ்சி7 vañji, பெ. (n.)

   1. படகு; canoe.

   2. கோயிலிற் காணிக்கை செலுத்தும் உண்டிப் பெட்டி; hundi chest or box kept in a temple for voluntary contributions to satisfy a row.

இவன் வஞ்சி முறித்த கள்வன் (இ.வ.);.

ம. வஞ்சி

 வஞ்சி8 vañji, பெ. (n.)

   1. நம்பச்செய்து கைவிடுதல்; betray.

   2. கொடுமையாக ஏமாற்றுதல்; cheat cruelly, deceive, desert.

     ‘கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்’.

 வஞ்சி vañji, பெ. (n.)

   மருதநிலத்தின் திறப்பண் வகை; melody type belonging to agricultural tract.

     [வள்+சி-வஞ்சி]

வஞ்சிக் கொடிச்செய நீர்

 வஞ்சிக் கொடிச்செய நீர் vañjikkoḍicceyanīr, பெ. (n.)

   சாகா உப்பு செயநீர்; a kind of pungent liquid preparation.

வஞ்சிக்களம்

வஞ்சிக்களம் vañjikkaḷam, பெ. (n.)

வஞ்ச3 9, 10 பார்க்க;see vanja.

     “எழில் வஞ்சிக் களத்திற்றோன்றி” (தேசிகப் பிரபந்தஸாரம். 8);.

     [வஞ்சி4 + களம்.]

வஞ்சிக்கொடி

வஞ்சிக்கொடி vañjikkoḍi, பெ. (n.)

   1. தொப்புள் கொடி; umbilical cord.

   2. நஞ்சுக் கொடி; placental cord (சா.அக.);.

 வஞ்சிக்கொடி2 vañjikkoḍi, பெ. (n.)

   கொடி வகை (L.);; common rattan of South India.

     [வஞ்சி3 + கொடி.]

வஞ்சிக்கொடிச்சுண்ணம்

 வஞ்சிக்கொடிச்சுண்ணம் vañjikkoḍiccuṇṇam, பெ. (n.)

   குடற்சுண்ணம்; a kind of medicine prepared from the umbilical Cord (சா.அக.);.

வஞ்சிச்சீர்

வஞ்சிச்சீர் vañjiccīr, பெ. (n.)

வஞ்சியுரிச்சீர் (தொல்.பொருள்.332); பார்க்க;see vanji-y-uri-cir.

     [வஞ்சி + சீர்.]

வஞ்சித்தாழிசை

வஞ்சித்தாழிசை vañsittāḻisai, பெ. (n.)

   இருசீரடி நான்காய், ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம் (காரிகை, செய்.14);; a poem of three stanzas of four lines each, each line having two material feet and the whole poem dealing with the single theme.

     [வஞ்சி + தாழிசை.]

தாழிசை = தாழம்பட்ட ஒசையால் அளவொத்து ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவது.

இரண்டு சீர்களால் ஆக்கப்பெற்ற நான்கடிகளைக் கொண்டு வரும். ஒரு பொருள்மேல் மூன்று செய்யுட்கள் கோவையாக அடுக்கி வரும் வஞ்சித்தாழிசைப் பாடல் வருமாறு:-

   1. “பிணியென்று பெயராமே

துணிநின்று தவஞ்செய்வீர்

அணிமன்ற லுமைபாகன்

மணிமன்று பணியிரே”

   2. “எள்னென்று பெயராமே

கன்னின்று தவஞ்செய்வீர்

நன்மன்ற லுமைபாகன்

பொன்மன்று பணியிரே”

   3. “அதிதென்று பெயராமே

வரைநின்று தவஞ்செய்வீர்

உருமன்ற லுமைபாகன்

திருமன்று பணியிரே”

மேற்குறித்த வஞ்சித்தாழிசை மன்று பணிதல் வேண்டும் என்ற பொருண்மேல், மூன்று செய்யுட்களும் அடுக்கி வந்தன. ஒவ்வொரு செய்யுளும் நான்கடிகள் கொண்டுள்ளமையையும் ஒவ்வோரடியும், இரண்டுசீர்களால் ஆக்கப்பெற்றமையையும் காண்க.

வஞ்சித்தாழிசை பற்றி யாப்பருங்கலக்காரிகை நுவல்வது:

     “ஒருபொருண்மேல் மூன்றடுக்கி யல்லது வாரா” (யாப்.கா.46);.

இளம்பூரணர், வஞ்சித்தாழிசை பற்றிப் பகர்வது:-

     “குறளடி நான்கினால் ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வரும்” (தொல்.செய்யுள்.175, இளம்.);.

வஞ்சித்திணை

வஞ்சித்திணை vañjittiṇai, பெ. (n.)

வஞ்சி4, 1 (பு.வெ.3, உரை); பார்க்க;see vanji.

     [வஞ்சி4 + திணை.]

வஞ்சித்துறை

வஞ்சித்துறை1 vañjittuṟai, பெ. (n.)

   இருசீரடி நான்காய், ஒரு பொருள்மேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம் (காரிகை, செய். 14);; a stanza of four lines of two metrical feet each, dealing with the single theme.

     [வஞ்சி2 + துறை.]

ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வராது, தனிச் செய்யுளாய் வரும். அச்செய்யுள் இரண்டு சீர்களைக் கொண்ட நான்கு அடிகளை உடையது.

     “மைசிறந்தன மணிவரை

கைசிறந்தன காந்தளும்

பொய்சிறந்தனர் காதலர்

மெய்சிறந்திலர் விளங்கிழாய்”

மேற்குறித்த பாடலின் கண்ணே முதற்சீர் கூவிளங்கனியாயும், மற்றச்சீர் விளச்சீராயும் வந்துள்ளமை காண்க.

 வஞ்சித்துறை2 vañjittuṟai, பெ. (n.)

வஞ்சி4, 2 பார்க்க;see vanji.

     “வஞ்சியும் வஞ்சித் துறையுமாகும்” (பு.வெ.3);.

     [வஞ்சி3 + துறை.]

வஞ்சித்தூக்கு

வஞ்சித்தூக்கு vañjittūkku, பெ. (n.)

   பரிபாடலில் வஞ்சியடிகளால் வரும் பகுதி (தொல்.பொருள்.433, உரை);; the lines of vañji metre, mainly occuring in paripadal.

     [வஞ்சி2 + தூக்கு.]

வஞ்சிநாடு

வஞ்சிநாடு vañjināṭu, பெ. (n.)

   1. சேரநாடு (மனோன். Ii, 3, 75);; the cērā country.

   2. திருவிதாங்கூர் மாநிலம்; the (erstwhile); Travancore state.

     [வஞ்சி6 + நாடு.]

வஞ்சிநெடும்பாட்டு

 வஞ்சிநெடும்பாட்டு vañjineḍumbāḍḍu, பெ. (n.)

   பத்துப்பாட்டுள் கரிகாற் பெரு வளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பாட்டு; a poem on the Cola king Karikār-peruvalattān by Kadyasūr-uruttirarikannamär one of the pattu-pattu.

     [வஞ்சி + நெடு(மை); + பாட்டு.]

வஞ்சிப்பனிநீர்

 வஞ்சிப்பனிநீர் vañjippaṉinīr, பெ. (n.)

   பனிக்குடத்து நீர்; liquor amni (சா.அக.);.

வஞ்சிப்பா

வஞ்சிப்பா vañjippā, பெ. (n.)

   நால்வகைப் பாவினுளொன்று; one of the four chief kinds of metre.

     [வஞ்சி2 + பா4.]

வஞ்சி = வஞ்சமுடையது. அளவடி முதலிய அடிகளையும் புறநிலை வாழ்த்து முதலிய பொருள்களையும், அமைந்து வரவிடாது, வஞ்சம் பொருந்தி நிற்றலால் வஞ்சிப்பா எனப்பட்டது.

   1. இரண்டு சீர்களைக் கொண்ட அடியாலேனும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாலேனும் வரும். அளவடி முதலிய மற்றைய

   அடிகள் வரப்பெறா;   2. பெரும்பான்மையுந் தன் தளையும் சிறுபான்மை பிறதளையும் தழுவிவரும்;   3. தூங்கலோசை யுடையதாய் வரும்;   4. தனிச்சொற் பெற்று அகவற் கரிதகத்தால் முடிவு பெறும். வெள்ளைச் சுரிதகம் வரப்பெறாது.

தூங்கலோசை :-

   1. ஏந்திசைத் தூங்கல்;   2. அகவற்றூங்கல்;   3. பிரிந்திசைத் தூங்கல் என மூவகைப்படும்.

   1. ஏந்திசைத் தூங்கல் : ஒன்றிய வஞ்சித்தளை (கனி முன் நிரையும், நிழல் முன் நிரையுமாம்);யால் வருவது. (எ.டு);

     “வளவயலிடைக் களவயின்மகிழ்”.

   2. அகவற்றூங்கல் : ஒன்றாத வஞ்சித் தளை (கூனிமுன் நேரும், நிழல் முன் நேரும்);யான் வருவது. (எ-டு);

     “தேம்புனலிடை மீன்றிரிதரும்”.

   3. பிரிந்திசைத் தூங்கல் : ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை, பிறதளைகள் என்பன கலந்து வருவது. (எ-டு);

     “துணையில்லாத் துறவுநெறி” (பிற தளையாகிய கலித்தளை வந்தது);.

குறளடி வஞ்சிப்பா

பூந்தாமரைப் போதலமரத்

தேம்புனலிடை மீன்றிரிதரும்

வளவயலிடைக் களவயின்மகிழ்

வினைக்கம்பலை மனைச்சிலம்பவு

மனைச்சிலம்பிய மணமுரசொலி

வயற்கம்பலைக் கயவார்ப்பவும்

மகிழும் மகிழ்தூங் கூரன்

நாளும்

புகழ்த லானாப் பெருவண் மையனே.

இச்செய்யுள் குறளடியால் வரப்பெற்று

     “நாளும்” என்னுந் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.

சிந்தடி வஞ்சிப்பா

     ‘எறிவெண்டிரைக் கடல்சூழ்புவி யெளிதெய்தினும்

இறவந்துடைப் பொழுதுய்ந்திட லுளதென்னினும்

அறிவின்றிறத் துயர்ந்தோர்படி றிசைக்கின்றிலர்

அதனால் முன்வரு மின்பினு முறைப்பட நாடிற்

பின்வரு மிடர்மிகப் பெரிதா மெனவே’

இச்செய்யுள் சிந்தடியால் வந்து

     “அதனால்” என்னும் தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. (வஞ்சி – வஞ்சமுடையது. அளவடி முதலிய அடிகளையும், புறநிலை வாழ்த்து முதலிய பொருள்களையும் அமைந்து வர விடாது வஞ்சம் பொருந்தி நிற்றலால் வஞ்சிப்பா எனப்பட்டது);.

வஞ்சிப்பாவின் இனம் :-

   1. வஞ்சித் தாழிசை;   2. வஞ்சித் துறை:

   3. வஞ்சி விருத்தம் என்பன வஞ்சிப் பாவின் இனங்கள் ஆகும்.

பத்துப் பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலை, பெரும்பாலும் வஞ்சி அடிகளான் அமைந்து, ஆசிரிய அடிகளால் முடிவதனால், அதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் கூறுவர். புறநானூற்றுச் செய்யுட்களிற் சில வஞ்சியடிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளன.

வஞ்சிப்பா குறித்து இளம்பூரணர் இயம்புவது:- வஞ்சியுரிச் சீரானும், ஏனைச் சீரானும் இருசீரடியானும், முச்சீரடியானும், தூங்க லோசையானும் வந்து, தனிச்சொல் பெற்று, ஆசிரியச் சுரிதகத்தான் இறுவது. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும். ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற இருசீரடி வஞ்சிப்பா தனிச்சொற் பெறுதலுண்டு (தொல்.செய்யுள்.113, இளம்.);.

யாப்பருங்கலக்காரிகை கூறுவது :- வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தால் இறுவதல்லது வெள்ளைச் சுரிதகத்தால் இறப்பெறாது (யாப்.கா.47);.

வஞ்சிப்பாட்டு

வஞ்சிப்பாட்டு1 vañjippāṭṭu, பெ. (n.)

   பழைய நாடக நூல்களுளொன்று (தொல்.பொருள்.492, உரை);; an ancint dramatic poem.

     [வஞ்சி2 + பாட்டு.]

 வஞ்சிப்பாட்டு2 vañjippāṭṭu, பெ. (n.)

   ஓடப்பாட்டு (நாஞ்.);; boatman’s song.

     [வஞ்சி + பாட்டு.]

வஞ்சிப்பால்

 வஞ்சிப்பால் vañjippāl, பெ. (n.)

   முலைப் பால்; breast milk (சா.அக.);.

வஞ்சிப்பு

வஞ்சிப்பு vañjippu, பெ. (n.)

   ஏமாற்றுகை (இலக்.அக.);; deceit, cheating, guile.

     [வஞ்சி1 → வஞ்சிப்பு.]

வஞ்சிமாலிதழி

 வஞ்சிமாலிதழி vañjimālidaḻi, பெ. (n.)

   கொத்தான்; a twiggy plant-Cassytha filiformis (சா.அக.);.

வஞ்சியன்

வஞ்சியன் vañjiyaṉ, பெ. (n.)

வஞ்சியான் (மனோன்.); பார்க்க;see vanjiyan.

     [வஞ்சி1 → வஞ்சியன்.]

வஞ்சியரவம்

வஞ்சியரவம் vañjiyaravam, பெ. (n.)

   வீர முரசுடனே யானை பிளிறப் பகைவர்மீது சேனை மிகுசினத்துடன் கிளர்ந்தெழுவதைக் கூறும் புறத்துறை (பு.வெ.3, 2);; theme describing the furious advance of an army, against the enemy, with drums beating and elephant’s roaring.

     [வஞ்சி4 + அரவம்.]

வஞ்சியர்காட்சி

 வஞ்சியர்காட்சி vañjiyarkāṭci, பெ. (n.)

   கண்ணாடி (யாழ்.அக.);; mirror.

     [வஞ்சி → வஞ்சியர் + காட்சி.]

வஞ்சியர்மயக்கி

வஞ்சியர்மயக்கி vañjiyarmayakki, பெ. (n.)

   1. பெருந்தும்பை; a big species of dead nettle flower.

   2. இருமல், கோழை முதலியவற்றை நீக்கும் மருந்துக் குணமுள்ள தும்பை; a kind of of herbal medicine’Tumbai’.

இது பதினேழு வகை தும்பை வகைகளுள் ஒன்றென. சா.அ.க. மருத்துவ அகரமுதலி கூறும்.

வஞ்சியான்

வஞ்சியான் vañjiyāṉ, பெ. (n.)

   1. சேர மன்னன்; the céra king.

   2. சேர நாட்டான்; native of the céra king.

     “வஞ்சியான் வஞ்சியான்” (முத்தொள்.616);.

வஞ்சியுரிச்சீர்

வஞ்சியுரிச்சீர் vañjiyuriccīr, பெ. (n.)

   தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்ட, நிரையசையீற்றிலமைந்த மூவசைச் சீர்கள்; metrical foot of three asai or syllables, chiefly found in vanji-p-pā, of four varieties, viz. tēmārikani pu/imārikani kUvisarikani karuwi/arikani

     [வஞ்சி + உரிச்சீர்.]

நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோ டொன்றுவனவும், ஒன்றாதனவும் என இரு வகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரைபு முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது, நேர்பு, நேர் முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும்.

உரியசையீற்று வஞ்சியடியும், அவ்வாறே உறழ ஐந்து வகைப்படும் (தொல்.செய்யுள்.48, இலம்.);.

வஞ்சியெரு

 வஞ்சியெரு vañjiyeru, பெ. (n.)

   ஒர் வகை மருந்துப்பு; a rare salty preparation acting as king of medicine (சா.அக.);.

வஞ்சிரம்

வஞ்சிரம் vañjiram, பெ. (n.)

   1. நீலநிறமும் ஆறடி வளர்ச்சியுமுடைய கடல்மீன் வகை; sea-fish, bluish, attaining 6 feet in length.

   2. நீல நிறமும், மூன்றடி வளர்ச்சியுமுடைய கடல்மீன் வகை; seer, bluish, attaining 3 feet in length.

     [வன்-மை + சிரம்.]

     [P]

   பாப்பிளாக்சை மாவுலசி என்னும் இனத்தது. எலும்புச் சட்டகமுள்ள கடல் மீன்கள் சிபியம் (Cybium);, சகாம்பொரோமோரசு (Scombero-mours); என்னும் குலங் (சாதி);களைச் சேர்ந்தவை. 4, 5 அடி நீளம் வளரக்கூடியவை;இவற்றின் செதில்கள் மிகச் சிறியவை. சில சமயங்களில் செதில்கள் இருப்பதில்லை. முதுகின் நடுக்கோட்டிலே இருக்கும் இரண்டாவது முதுகு துடுப்புக்குப் பின்னால் ஏழு அல்லது இன்னும் மிகுதியான சிறு துடுப்புகள் உண்டு. அவ்வாறே மலவாயில் துடுப்புக்குப் பின்னாலும் சிறு துடுப்புகள் இருக்கும். வாலின் இரு பக்கங்களிலும் நெடுக்கில் செல்லும் புடைப்புக்கள் பக்கத்திற்கு நன்றாக இருக்கும். வால் நன்றாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். நிறம் உடம்பின் மேற்பாகம் எஃகு போன்ற நீலநிறமுள்ளது. அடிவயிற்றுப் பாகம் வெள்ளி போன்று வெண்மையாக இருக்கும்.

உடம்பின் பின் பக்கங்களிலே தெளிவில்லாத பட்டைகள் அல்லது புள்ளிகள் உண்டு.

வஞ்சிரம் மிக விரைவாக நீந்திச் செல்லும். பொதுவாக இது மேற்பரப்பும் ஆழமும் இல்லாத நடுப்பரப்பு நீரில் திரியும். அடிக்கடி உயரக் காற்றில் துள்ளும். இது கூட்டமாகச் செல்லும் சிறு மீன்கள். இறால் முதலியவற்றைப் பின் தொடர்ந்து சென்று பிடித்து விழுங்கும்.

இதைத் தூண்டில் கயிறு எறிந்து பிடிப்பது சிறந்த வேட்டையாகும். வஞ்சிரம் மிக நல்ல உணவு மீன்.

வஞ்சிரா

 வஞ்சிரா vañjirā, பெ. (n.)

   கொடிவேலி; a plant lead wort, plumbage zeylanica (சா.அக.);.

வஞ்சிரி

 வஞ்சிரி vañjiri, பெ. (n.)

   விருசு; a kind of tree (சா.அக.);.

வஞ்சிவிருத்தம்

வஞ்சிவிருத்தம் vañjiviruttam, பெ. (n.)

   முச்சீரடி நான்காய் வரும் வஞ்சிப்பாவினம் (காரிகை,செய்.14);; a stanza of four lines of three metrical feet each.

     [வஞ்சி2 + Skt. விருத்தம்.]

விருத்தமென்பது தமிழில் மண்டில மெனப்படும். பிற்றைத் தமிழ் யாப்பில் விருத்தமே பெருவழக்கானமையான் மண்டிலமென்னும் பெயர் மறைந்து விருத்தமென்னும் பெயர் வேறூன்றிய தென்க.

இருசீரடி பெறாது, முச்சீரடியாய்த் தனித்து வரும் வஞ்சிவிருத்தப்பா வருமாறு :-

     “ஒன்றி னம்பர லோகமே

யொன்றி னம்பர லோகமே

சென்று மேவருந் தில்லையே

சென்று மேவருந் தில்லையே”

வஞ்சிவிருத்தம் பற்றி இளம்பூரணர் கூறுவது :- முச்சீரடி நான்காகி வரும்” (தொல்.செய்யுள்.48, இளம்.);.

வஞ்சிவேந்தன்

வஞ்சிவேந்தன்1 vañjivēndaṉ, பெ. (n.)

   சேரர்கள் கொண்டிருந்த பட்டப் பெயர்களுள் ஒன்று; one of the title of cérás kings.

     [வஞ்சி + வேந்தன்.]

     ‘வஞ்சி வேந்தன்’ என்ற பெயருக்கு ‘வஞ்சி’யை தலை நகராக கொண்டிருந்தவன் என்ற பொருளும் உண்டு.

 வஞ்சிவேந்தன்2 vañjivēndaṉ, பெ. (n.)

   1. மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர் செய்யும் அரசன் (தொல். பொருள்.62, உரை);; king who makes constant war, impelled by land-hunger.

   2. சேரன் (பிங்.);; cera king.

   3. வஞ்சி நகர்த் தலைவன்; cera king, as ruler of vanji.

     [வஞ்சி6 + வேந்தன்.]

வஞ்சீசன்

வஞ்சீசன் vañjīcaṉ, பெ. (n.)

   திருவிதாங்கூர் மன்னன்; the king of Travancore.

     ‘வஞ்சீச மங்களம்’.

     [வஞ்சி6 + Skt. ஈசன்.]

வஞ்சு

வஞ்சு vañju, பெ. (n.)

வஞ்சகம் பார்க்க;see vanjagam.

     “வஞ்சே வல்லரே” (தேவா.828, 3);.

     [வங்கு → வஞ்சு = ஒருவனை ஏமாற்றுகை. ஏய்க்கை (வ.வ.பக்.75);.]

வஞ்சுலோவு

 வஞ்சுலோவு vañjulōvu, பெ. (n.)

வஞ்சி பார்க்க;see vanji. (சா.அக.);.

வஞ்சுளன்

 வஞ்சுளன் vañjuḷaṉ, பெ. (n.)

   காரிப்புள் (பிங்.);; a species of king crow.

மறுவ. கரிக்குருவி

வஞ்சுளம்

வஞ்சுளம்1 vañjuḷam, பெ. (n.)

   1. அசோகு, 1 (மலை.);; Asoga tree.

   2. வேங்கை மரம்(மலை.);; East Indian kino.

   3. வஞ்சிக்கொடி (நாமதீப.311); பார்க்க;see vanji-k-kodi.

 வஞ்சுளம்2 vañjuḷam, பெ. (n.)

வஞ்சுளன் (அரு.நி.); பார்க்க;see vanjulan.

வஞ்சூரன்

 வஞ்சூரன் vañjūraṉ, பெ. (n.)

   மீன் வகை (வின்.);; a kind of fish.

வஞ்சூலிகம்

 வஞ்சூலிகம் vañjūligam, பெ. (n.)

   சூரத் தாவரை; a plant, senna from surat Cassia angustifolia of Surat (சா.அக.);.

வஞ்சை

வஞ்சை vañjai, பெ. (n.)

வஞ்சி6 1, 2 பார்க்க;see vanji.

     “வஞ்சையப்பர்க் கறிவிப்பதே” (தேவா.1167, 10);.

     [வஞ்சி6 → வஞ்சை.]

வஞ்சைக்களம்

வஞ்சைக்களம் vañjaikkaḷam, பெ. (n.)

வஞ்சி6 1, 2 (மனோன்.); பார்க்க;see vañji.

     [வஞ்சி6 → வஞ்சை + களம்.]

வட

வட1 vaḍa, பெ.அ. (adj.)

   வடக்கு என்பதன் பெயரடை; adjective of north.

வட மாநிலங்களில் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

     [வட → வடக்கு + திசை → வடதிசை.]

 வட2 vaḍa, பெ.எ. (adj.)

வடக்கத்தி பார்க்க;see Vadakkatti.

வடஒன்பதுபார்

 வடஒன்பதுபார் vaḍaoṉpadupār, பெ. (n.)

   வடக்கு ஒன்பது பார்; northern bank in nine fathoms.

வடகதி

 வடகதி vaḍagadi, பெ. (n.)

   மஞ்சள் நிறக் குருந்தம் (புட்பராகம்);; one of the nine gems-Topaz.

வடகபாகவிதி

 வடகபாகவிதி vaḍagapāgavidi, பெ. (n.)

   வடகம்; process or method of preparing Vadagam.

வடகம்

வடகம்1 vaḍagam, பெ. (n.)

   1. அரிசிமாக் கூழால் செய்யப்படும் வடகவற்றல்; water cakes of flour, seasoned and dried in the sun.

   2. வத்தல்; dried paste of flour.

   3. தாளிப்பதற்கு பயன்படுத்தும் நறுமணக் கூட்டு; condiment used in cookery.

     [வட்டம் → வடம் → வடகு → வடகம்.]

 வடகம்2 vaḍagam, பெ. (n.)

   அரைத்தமாவுடன் கறிச்சரக்குகளைச் சேர்த்து உலர்த்திய தாளிப்புருண்டை; a mixture of flour, herbs, spices, etc., made into lumps or balls and dried in the sun.

த. வடகம் → Skt. வடக..

     [வட்டம் → வடம் → வடகு → வடகம்.]

நன்கு அரைத்த பருப்புடன் கறிச்சரக்குகளைச் சேர்த்துலர்த்திய தாளிப்புருண்டை (வ.வ.பகுதி 2, பக்.78);.

 வடகம்3 vaḍagam, பெ. (n.)

   1. தோல்; skin.

   2. ஒரு வகை மருந்து; a class of medicine.

   3. தாளிப்பதற்கு பயன்படும் வாசனைக் கூட்டு; condiment or mixture of spices etc. used in coockery.

 வடகம்4 vaḍagam, பெ. (n.)

   1. மேலாடை; upper garment.

     “வடகமுந் துகிலுந் தோடும்” (சீவக.462);.

   2. துகில்வகை (சிலப்.14, 108, 2, உரை);; a superior kind of cloth, a fine fabric.

   3. தோல் (பிங்.);; skin.

     [வட்டம் → வடம் → வடகம். அத்தவாளம்;

உடைச் சிறப்பு (விசேடம்); (சீவ.468. நச்.);.]

 வடகம்5 vaḍagam, பெ. (n.)

   தாளிதம் செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கறி வடகம்; balls of condiments or spices used in preparation of food saucer etc. in ancient time.

கடுகு, சீரகம், வெந்தயம், வெங்காயம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றின் கலவை உருண்டை.

வடகயிலாயம்

வடகயிலாயம் vaḍagayilāyam, பெ. (n.)

   சிவனுறையும் பனிமலை; Mt. Kailasa, in the Himalayās, abode of Šiva.

     “கயிலை மலையானே” (தேவா. 1159, 1);.

   2. கோயம்புத்தூர் மாவட்டத்தில், பேரூருக்கு அருகிலுள்ளதொரு சிவன் கோயில்; a swap temple near Pêror in Coimbatore District.

     [வடக்கு + கயிலாயம்.]

வடகயிலை

வடகயிலை vaḍagayilai, பெ. (n.)

வட கயிலாயம், 1 பார்க்க;see vadakayilayam.

     “வடகயிலை யண்டர்நாயக ரிருக்கும்” (பெரியபு. திருநாவுக்.364);.

     [வடக்கு + கயிலாயம் → கயிலை (மரூஉ.);.]

வடகலை

வடகலை1 vaḍagalai, பெ. (n.)

   1. வடமொழி நூல்; sanskrit literature.

     “செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர்” (திவ். பெரியதி. 7, 7, 7);.

   2. வடமொழி; sanskrit.

     “வடகலை

தென்கலை வடுகு கன்னடம்” (கம்பரா.பாயி);.

   3. வடகலைநாமம் பார்க்க;see vadagalai-námam.

   4. மாலியப் பிரிவினருள் ஒரு சாரார்; a vaisnava sect, dist fr ten-kalai.

 வடகலை2 vaḍagalai, பெ. (n.)

   ஞாயிற்றின் (சூரிய); கலை; vital air passing through right nostril.

மறுவ. பிங்கலை

     [வலம் → வட(ம்); + கலை.]

வடகலைநாமம்

 வடகலைநாமம் vaḍagalaināmam, பெ. (n.)

   வடகலை ‘ரு’ வடிவத் திருப்பாத மில்லாத மாலியர் தரிக்கும் திருமண் காப்பு; the U-shaped mark indication of the Vadakalas-Vaisnavas, sectarian.

வடகலையார்

வடகலையார் vaḍagalaiyār, பெ. (n.)

வடகலை1, 4 பார்க்க;see Vada-kalai.

     [வடகலை → வடகலையார்.]

வடகளவழி

 வடகளவழி vaḍagaḷavaḻi, பெ. (n.)

   பாண்டியர் நாடு; Pandiyar territory

     “பராந்தக ஸ்ரீ வீரநாரணைகளால் வடகளவழி நாட்டின் கட்டிசைச் சுடர்மங்கலம் (பா.செ.ப.);.

     [வடக்கு+களம்+வழி]

வடகாரம்

 வடகாரம் vaḍakāram, பெ. (n.)

   உப்பு வகை (மூ.அ.);; a kind of salt.

வடகாற்று

 வடகாற்று vaḍakāṟṟu, பெ. (n.)

   வடதிசைக் காற்று (சூடா.);; north wind.

மறுவ. வாடைக்காற்று, வாடை.

     [வடக்கு + காற்று.]

வடகாவிசேர்

 வடகாவிசேர் vaḍakāvicēr, பெ. (n.)

   வடகாவி மரத்திற் கட்டப்படும் பாய்; main top sail.

வடகாவிமரம்

 வடகாவிமரம் vaḍakāvimaram, பெ. (n.)

   வடமரத்தின் அடிக்கட்டைக்கு மேலுள்ள பகுதி; main top mast.

வடகிரி

 வடகிரி vaḍagiri, பெ. (n.)

   மேருமலை (யாழ்.அக.);; Mt. Méru, as the northern mountain.

மறுவ. வடமலை, வடவரை.

     [வடக்கு + Skt. கிரி.]

வடகிழக்கு

 வடகிழக்கு vaḍagiḻggu, பெ. (n.)

   வடக்குங் கிழக்குஞ்சேருங்கோணத்திசை; north east.

     [வடக்கு + கிழக்கு.]

வடகிழக்குப்பருவக்காற்று

 வடகிழக்குப்பருவக்காற்று vaḍagiḻggupparuvaggāṟṟu, பெ. (n.)

   இந்தியாவில், குறிப்பிட்ட மாதங்களில் மழை பெய்விக்கும் வகையில் வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்று; North-East monsoon in India.

     [வடகிழக்கு + பருவக்காற்று. குறித்த பருவத்தில் ஒருமுகமாயடிக்குங் கடற்காற்று.]

வடகிழக்குப்பருவமழை

 வடகிழக்குப்பருவமழை vaḍagiḻggupparuvamaḻai, பெ. (n.)

   தமிழகத்தை வளப்படுத்தும் பருவ மழையுள் ஒன்று; North-East monsoon.

மறுவ. அடைமழை.

     [வடகிழக்கு + பருவமழை.]

வடகீலியம்

 வடகீலியம் vaḍaāliyam, பெ. (n.)

   சூரைச் செடி; a kind of medicinal plant.

வடகீழ்த்திசை

 வடகீழ்த்திசை vaḍaāḻttisai, பெ. (n.)

   வடகிழக்கு (யாழ்.அக.); பார்க்க; Vadakilakku.

வடகீழ்த்திசைப்பாலன்

 வடகீழ்த்திசைப்பாலன் vaḍaāḻttisaippālaṉ, பெ. (n.)

   வடகிழக்குத் திசைக் காவலன் (ஈசானன்); (யாழ்.அக.);; isanan as the regent of the north-east.

வடகு

 வடகு vaḍagu, பெ. (n.)

   தோல் (இலக்.அக.);; skin.

     [வடகம் → வடகு.]

வடகுணதிசை

 வடகுணதிசை vaḍaguṇadisai, பெ. (n.)

வடகிழக்கு பார்க்க;see vada-kilakku.

     [வடக்கு + குணதிசை. குணம் + திசை (குணம் – கிழக்கு);.]

வடகோடி

 வடகோடி vaḍaāḍi, பெ. (n.)

   வடமுனை; northern end.

வடகோடு

 வடகோடு vaḍaāḍu, பெ. (n.)

   பிறைமதியின் வடக்கு முனை; the northern horn of the cresent moon.

     “வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான் பிறைக்கே” (பட்டினத்.திருப்பா.);

வடகோடை

 வடகோடை vaḍaāḍai, பெ. (n.)

   வட மேற்குக் காற்று; northwest wind.

வடக்கத்தி

 வடக்கத்தி vaḍakkatti, பெ.அ. (adj.)

   வடக்கிற்குரிய (கொ.வ.);;  north, northern.

வடக்கத்திப்பாணி

 வடக்கத்திப்பாணி vaḍakkattippāṇi, பெ. (n.)

   தெருக்கூத்தின் ஒரு வகை; a northern style of dance performed in street drama.

     [வடக்கு+அத்து+இ+பாணி]

வடக்கத்திமுடிச்சு

 வடக்கத்திமுடிச்சு vaḍakkattimuḍiccu, பெ. (n.)

   முடிச்சு வகை; a kind of knot.

வடக்கத்திய

 வடக்கத்திய vaḍakkattiya, பெ.அ. (adj.)

   வடக்குப் பகுதியைச் சார்ந்தவை; concerning northern region.

     ‘வடக்கத்திய உணவு’.

வடக்கத்தியான்

வடக்கத்தியான்1 vaḍakkattiyāṉ, பெ. (n.)

   தொப்புள் நீண்டிருக்கும் மாடு; a kind of sturdy bull having elangated umbilical growth.

வடக்கத்தியா (கொ.வ.);.

     [வடக்கு + அத்து + ஆன்.]

 வடக்கத்தியான்2 vaḍakkattiyāṉ, பெ. (n.)

   வடபுலத்தான் (இ.வ.);; northerner.

வடக்கத்திக்காரனுக்கு வாய் கொஞ்சம் நீளம் (இ.வ.);.

     [வடக்கத்தி → வடக்கத்தியான்.]

வடக்கன்

வடக்கன் vaḍakkaṉ, பெ. (n.)

   1. வடக்குப் பக்கத்தான் (இ.வ.);; northerner.

   2. புகையிலை வகை (இ.வ..);; a variety of tobacco.

ம. வடக்கன்.

வடக்கயிறு

வடக்கயிறு1 vaḍakkayiṟu, பெ. (n.)

   மாடுகளைப் பிணைத்து கவலை ஒட்டுபவர் பயன்படுத்தும் கயிறு; a rope used by a person to draw water from a well, by lagging two bulls.

வடகவுறு (கொ.வ.); கமலை என்பது பாண்டிய நாட்டு வழக்கு.

     [வடம் + கயிறு.]

 வடக்கயிறு2 vaḍakkayiṟu, பெ. (n.)

   1. தேர் முதலியவற்றை இழுக்கும் பெருங்கயிறு; large, stout rope or cable, as for drawing a temple-car.

     “வடக்கயிறு வெண்ணரம்பா” (தாயு.சச்சிதா,2);.

   2. ஏர் நாழிக்கயிறு (வின்.);; cord of the er-nali.

வடக்காட்சி

 வடக்காட்சி vaḍakkāḍci, பெ. (n.)

   ஒளி பரப்பப்படும் பல்வேறு அலைவரிசைகளை ஈர்த்து வடத்தின் வழியாக, வீட்டுத் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்படும் செயல்முறை; the operation which received more telecasting channels and distributed to the home television sets through cables; cable television.

வடக்காட்சி அமைப்புப் பழுதுற்றதால், நேற்று ஒளிபரப்பான செம்மொழிக் கருத்தரங்க நிகழ்ச்சியை எல்லையம்மன் குடியிருப்பு மக்களால் கண்ணுறுதற்கியலவில்லை (இ.வ.);.

     [வடம் + காட்சி

     ‘சி’ பண்புப்பெயரீறு. காண் + சி → காட்சி = கண்ணுறல்.]

வடக்காலூர்

 வடக்காலூர் vaḍakkālūr, பெ. (n.)

   வடக்குத் திசையில் உள்ள ஊர்; a town or village on the northern side.

அவன் வடக்காலூரிலிருந்துவந்தான் (வடார்க்.வ);.

     [வடக்கு+ஆல்+ஊர் – வடக்காலூர்]

     ‘ஆல்’மூன்றன் உருபு ஏழின் உருபுப்பொருளில் வந்த உருபு மயக்கம்

வடக்காளிமூலி

 வடக்காளிமூலி vaḍakkāḷimūli, பெ. (n.)

   கோவை; a climber-Coccinia indica.

வடக்கிரு-த்தல்

வடக்கிரு-த்தல் vaḍakkiruttal,    4 செ.கு.வி. (v.i.)

   உயிர்துறக்குந் துணிவுடன், வடக்கு நோக்கியிருந்து மேற்கொள்ளும் உண்ணா நோன்பு (கூர்மபு. சூதக.27);; to sit facing north direction, taking a vow of fasting to death.

     “புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே” (புறநா.66.8);.

     [வடக்கு + இரு.]

போரிற் பெற்ற புறப்புண் நாணியும், புதல்வர் தன்னொடு பொரவருகைநாணியும், உலகப் பற்றைத் துறந்தவிடத்தும், அரசர் ஊருக்கு வடக்கிலிருந்து உயிர் துறத்தல். பகைவரால் சிறைப்பட்டிருந்து உண்ணா திறத்தலும் வடக்கிருத்தலின்பாற்படும்.

இம் மன்பதை நுகர்ச்சியைத் துறந்து, பசியால் உடலை மெலிவித்து, ஒக முயற்சியினால், உயிரை விடுதற்பொருட்டு, தான் வாழ்ந்த இடத்தை விட்டு வடதிசையிற் சென்று தங்குதலும், மீண்டும் வாராது, கொண்முடியுடன் தவஞ்செய்யுமுகத்தான் வடக்கு நோக்கிச் செல்லுதலும், பண்டைய மரபாகும்.

வாழ்வில் நாணத்தகு நிலை நேர்ந்ததனால் சிலர் வடக்கிருந்ததாகக் கழக இலக்கியங்களில் பதிவு காணப்படுகின்றது.

   1. சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருதுபட்ட, புறப்புண்ணாணி வடக்கிருந்தான் (புறநா.65);.

   2. அகநானூற்றிலும் இச் செய்தி இடம் பெற்றுள்ளது.

     “அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென, இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத்தவனொடு

செலீஇயர் பெரும்பிறிது ஆகியாங்கு” (அகநா.55);.

   3. கோப்பெருஞ்சோழன். தன் மக்கள் தன்னொடு பொரவந்த செயலுக்கு நாணி வடக்கிருந்தமை குறித்துப் புறநானூற்றுப் பாடல்கள் (214, 216, 218); தெரிவிக்கின்றன.

   4. சிறுபஞ்ச மூலத்திலும் (73); வடக்கிருத்தல் பற்றிய கருத்து வந்துள்ளது.

   5. கழகக்கால வாழ்வியலுடன் இணைந்த, இந்நிகழ்வினை, வில்லிபாரதம் (இந்திரப்.25);: தஞ்சைவாணன் கோவை (374); ஆகிய நூல்களும், எடுத்தியம்புகின்றன.

வடக்கு

 வடக்கு vaḍakku, பெ. (n.)

   நாற்றிசையுளொன்று; north, the north point of the compass.

   தெ. ம. வடக்கு;க. படுகு.

     [வடம் + கு. ஒருகா. வட + அக்கு + பின்னொட்டு என்றுமாம்.]

வடக்குத் திருவீதிப்பிள்ளை

வடக்குத் திருவீதிப்பிள்ளை2 vaḍakkuttiruvītippiḷḷai, பெ. (n.)

   நம்பிள்ளை இசைக் கதையைத் திருவாய் மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படியென்று விரிவா யெழுதின மாலியவாசிரியர்; a vasnava àcăryawho embodied the lectures of Nambisai on Tiruvây-mos; into a commentary, named, idu-muppatt-ārāyira-p-padi.

     “வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை…… நன்குரைத்த தீடு முப்பத்தாறாயிரம் (உபதேசரத்.44);.

     [வடக்கு + திருவீதிப்பிள்ளை.]

வடக்குத்திருவீதிப்பிள்ளை

வடக்குத்திருவீதிப்பிள்ளை1 vaḍakkuttiruvītippiḷḷai, பெ. (n.)

   திருவாய்மொழியின் உரையாசிரியர்; commentator of poetry titled Tiruvaymoli.

   15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிரப்படி உரை செய்தவர்.

வடக்குநோக்கி

வடக்குநோக்கி vaḍakkunōkki, பெ. (n.)

   காந்தம் ஏற்றிய திசைகாட்டுமுள் (மனோன். iii, 3, 95);; magnetic needls, as always position indicating north.

     [வடக்கு + நோக்கு → நோக்கி.]

ஒருகா. காந்தவூசி

வடக்குப்பார்த்தவீடு

 வடக்குப்பார்த்தவீடு vaḍakkuppārttavīḍu, பெ. (n.)

   தெருவாசல் வடக்குப்பக்கமாக அமைந்த வீடு; north facing house

வடக்குமலையான்

வடக்குமலையான் vaḍakkumalaiyāṉ, பெ. (n.)

வடமலையான்1 பார்க்க;see vadamalaiyān.

     [வடக்கு + மலையான்.]

வடக்குவடக்கா-தல்

வடக்குவடக்கா-தல் vaḍakkuvaḍakkātal,    6 செ.கு.வி. (v.i.)

   மயிர் முதலியன சடை பற்றுதல் (இ.வ.);; to become matted, as hair.

     [வடம் + கு + வடம் + கு + ஆ.]

வடக்குவாசற்செல்வி

 வடக்குவாசற்செல்வி vaḍakkuvācaṟcelvi, பெ. (n.)

   ஊரின் வடபுறத்து எல்லைத் தெய்வமாகிய காளி (இ.வ.);; Kali as presiding at the northern gate of or border of a village or town or city.

மறுவ. வடக்குவாய்ச்சி

     [வடக்கு + வாசல் + செல்வி.]

வடக்குவேர்

 வடக்குவேர் vaḍakkuvēr, பெ. (n.)

   வடக்கே ஓடும் வேர்; root running towards north.

வடக்கேபோ-தல்

வடக்கேபோ-தல் vaḍakāpōtal,    5 செ.கு.வி. (v.i.)

   மணமகனும் மணமகளும் காரி அல்லது ஞாயிற்றுக் கிழமையில் ஆலயத்திற்கு சென்றுவருதல்; to go to temple or praying spots and come back there from by newly wedded couples.

வடக்கேயோடும்சங்கவேர்

 வடக்கேயோடும்சங்கவேர் vaḍakāyōḍumcaṅgavēr, பெ. (n.)

   சங்கஞ் செடியின் வடக்கு வேர்; the root of the four spined monetia that runs towards north.

வடக்கொட்டை

 வடக்கொட்டை vaḍakkoḍḍai, பெ. (n.)

   புங்கங் கொட்டை; soap nut.

வடங்கன்

 வடங்கன் vaḍaṅgaṉ, பெ. (n.)

   வெங்காரம் (சங்.அக.);; borax.

வடசரமுனை

 வடசரமுனை vaḍasaramuṉai, பெ. (n.)

   புதிய செயல்கள் தொடங்க ஏற்ற காலம்; period conducive for commencing new ventures or works.

வடசவர்சவாய்

 வடசவர்சவாய் vaḍasavarsavāy, பெ. (n.)

   வடசவர் மரத்திற்கு முன்பக்கத்தில் தாங்கும் வண்ணம் இழுத்து (ஆதாரமாக);க் கட்டப்படுங்கயிறு; main top gallant stay.

இது கப்பல் கட்ட பயன்படும் மரம்.

வடசவர்சேர்

 வடசவர்சேர் vaḍasavarsēr, பெ. (n.)

   வடசவர் மரத்தில் கட்டப்படும் பாய்; main top gallant sail.

வடசவர்பறுவான்

 வடசவர்பறுவான் vaḍasavarpaṟuvāṉ, பெ. (n.)

   வடசவர் மரத்தின் குறுக்கே போடப்படும் மூங்கிற்கழி; main-top gallant yard.

     [வடசவர் + பறுவான். பறுவான் + பாய்மரந் தாங்குங் குறுக்குக்கழி.]

வடசவர்பெற்பறோடி

 வடசவர்பெற்பறோடி vaḍasavarpeṟpaṟōḍi, பெ. (n.)

   வடசவர் மரத்திற்குப் பக்க ஆதாரமாய்க் கட்டப்படுங்கயிறு (M.Navi.);; main top gallant backstays.

வடசவர்மரம்

 வடசவர்மரம் vaḍasavarmaram, பெ. (n.)

   வடமரத்திலுள்ள காவிமரத்துக்கு மேலுள்ள பகுதி; main top-gallant mast.

வடசவர்லவுரான்

 வடசவர்லவுரான் vaḍasavarlavurāṉ, பெ. (n.)

வடசவர் சவாய் பார்க்க;see Vadasavar-Savài.

வடசேடி

வடசேடி vaḍacēḍi, பெ. (n.)

   வெள்ளி மலையின் வடக்கு பகுதி (தக்கயாகப், 371);; the northern range of the mythical silver mountain.

வடசேர்

 வடசேர் vaḍacēr, பெ. (n.)

   கப்பலின் வடமரத்தில் விரிக்கப்படும் பாய்; main sail.

வடசொல்

வடசொல் vaḍasol, பெ. (n.)

   1. வட (சமற்கிருத); மொழி; sanskrit language.

     “வடசொற்கிளவி” (தொல்.சொல்.401);.

   2. வடமொழி பார்க்க;see vada-moli.

     [வடக்கு + சொல்.]

 வடசொல் vaḍasol, பெ. (n.)

   1. சமற்கிருதச் சொல்; Sanskrit word.

   2. வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத); பாலிமொழிச் சொல்; Prakrit and Pali words of north India.

     [வடக்கு+சொல்-வடசொல்]

வடசொல்மரபு

வடசொல்மரபு vaḍasolmarabu, பெ. (n.)

   திரிந்த சொல்; corrupted word.

திரிந்த வகையாகிய சொல்மரபு (தொல்.செய்யுள்.76, இளம்.);. வடசொல் என்பது ஆரியச் சொற் போலுஞ் சொல் (தொல்.சொல்.391,இளம்.);.

     [வட சொல் + மரபு.]

வடதமிழ்

 வடதமிழ் vaḍadamiḻ, பெ. (n.)

   தமிழகத்தின் வடபுலத்து மக்களிடையே வழங்கிவந்த தமிழ்; language speaking in northern part of Tamil-nadu, is called Vada-tamil.

     [வடக்கு + தமிழ் → வடதமிழ்.]

 வடதமிழ் vaḍadamiḻ, பெ. (n.)

பாலி தவிர்த்த பல்வகைப் பிராகிருதங்கள் பாகதம் என்னும் பெயரில் வடநாட்டில் பேசப்பட்ட திரிபுற்றதமிழ்

 colloquial Tamil spoken in north India in the name of different Prakrit languages.

வடதமிழ்.

     [வடக்கு+தமிழ்]

துருக்கரின் கலப்புற்ற அபப்பிரஞ்சம், வடபுல வணிகரின் பைசாசி, அடிமைத்தொழிலாளரின் சூரசேனி. இழிந்தோரின் மாகதி, பொதுமக்கள் பேச்சுமொழியான பிராகிருதம் ஆகிய ஐந்தும் வடதமிழ் எனப்பட்டன.

வடதரம்

வடதரம் vaḍadaram, பெ. (n.)

   1. வடதாரை பார்க்க;see vaga-tārai.

   2. விடதாரை; dichrosta chyscineria.

வடதலை

 வடதலை vaḍadalai, பெ. (n.)

   வடக்குத் தலைப்பு; northern part.

     “ஊர் வடதலையில் நத்தமும்”.

மறுவ. வடகோடி

     [வடக்கு + தலை.]

வடதளம்

வடதளம் vaḍadaḷam, பெ. (n.)

   ஆலிலை; banyan leaf

     “வடதள வுதரவாணீ” (மனோன்.i, 2,110);.

     [வடம் + தளம் (தளம் = இலை);.]

வடதிசை

வடதிசை vaḍadisai, பெ. (n.)

   நாற்றிசையு ளொன்றான வடக்கு; north, the north point of the compass.

     [வடக்கு + துகு → (தெகு); → திகை → திசை.]

திகைத்தல், மயங்கல். திகைப்பதற்கிடமானது திசை. திசைத்தல் திகைத்தல்.

     “வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” (சிலப்.11:21, 22);.

வடதிசைத்தலைவன்

 வடதிசைத்தலைவன் vaḍadisaiddalaivaṉ, பெ. (n.)

   எண்டிசைக் காவலருள் (பாலகர்); வட திசைக்குரிய குபேரன் (பிங்.);; Kuběra as the regent of the North.

வடதிசை + தலைவன்.]

வடதிசைப்பாலன்

 வடதிசைப்பாலன் vaḍadisaippālaṉ, பெ. (n.)

   வடதிசைத்தலைவன் பார்க்க; vada-tissai-t-talaivan.

     [வடதிசை + பாலன்.]

வடதிரவிடம்

 வடதிரவிடம் vaḍadiraviḍam, பெ. (n.)

   வட நாட்டில் (வட இந்தியாவில்); வழங்கி வரும் திராவிட மொழிகள்; north Dravidian languages.

     [வட + திரவிடம்.]

ஒருகா. வடஇந்தியப் பிராகிருதம், பிராகிருதம்.

வடதிரவிடம் தோன்றிய பாங்கு பற்றிப் பாவாணர் பகருவது வடதிரவிடம் என்பது பிராகிருதமாகும். பிராகிருதம் என்பது சமற்கிருதம் தோன்றுவதற்கு முன்பு வேதக்காலத்திலேயே, இந்தியா முழுதும் வழங்கி வந்த வட்டார மொழிகளாகும். பிராகிருதம் என்னும் சொல், முந்திச் செய்யப் பெற்றது அல்லது இயற்கையாகவுள்ளது என்று பொருள்படும். பைசாசம், சூரசேனி, மாகதி, மகாராட்டிரி, திராவிடீ எனப் பிராகிருதம் ஐந்தாக வகுக்கப் பெற்றிருந்தது. இவற்றுள் முன் நான்கே பெரும்பாலும் பிராகிருதம் எனப்படும். அவற்றுள்ளும், மராட்டிரம் முதற்காலத்தில் பஞ்ச திராவிடத்துள் ஒன்றாகக் கொள்ளப்பெற்றது. விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள கூர்ச்சரம், மகாராட்டிரம், ஆந்திரம், கன்னடம், திராவிடம் (தமிழ்); ஆகிய ஐந்நாடுகளும் பஞ்ச திராவிடம் என வழங்கிவந்தன. ஆகவே, முதற்காலப் பிராகிருதம், பைசாசம், சூரசேனி, மாகதி என்னும் மூன்றே. இவற்றையும் மொழியளவிலன்றிச் சொல்லளவில் வேறுபடுத்திக் காட்டுவது வழக்கமன்று. மூவகைப் பிராகிருதச் சொற்களையும் பிராகிருதம் என்று பொதுப்படக் குறிப்பதே வழக்கம்.

வடஇந்தியப் பிராகிருதமும் ஒருகாலத்தில் திரவிடமாயிருந்து திரிந்ததே. அது வேதக்

   காலத்திற்கு மிக முந்தியதாகும். ஆகவே, வேத ஆரியர் வருகைக்கு முன், இந்தியப் பழங்குடிமக்கள் மொழிகளெல்லாம், தெற்கில் தமிழும் வடக்கில் திரவிடமுமாக இருவேறு நிலைப்பட்டிருந்தனவென்றறிதல் வேண்டும். திரவிடமும் தென்திரவிடம், நடுத்திரவிடம், வடதிரவிடம் என மூவகைப் பட்டிருந்தது. தென்திரவிடம் வடுகு போன்ற கொடுந்தமிழ்;   நடுத்திரவிடம் மராட்டிரமும் குச்சரமும்;வடதிரவிடம் வட இந்தியப் பிராகிருதம்.

காலக்கடப்பினால் மட்டுமன்றி இடச் சேய்மையினாலும் மொழிகள் திரிகின்றன. தமிழ் போன்ற இயன்மொழியில்தான் செம்மை என்னும் வரம்பிட்டு, இலக்கிய வாயிலாகவும் உயர்ந்தோருலக வழக்கு வாயிலாகவும் அதன் திரிபைத் தடுக்க முடியும். தெலுங்கு, மராத்தி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய திரிமொழிகளெல்லாம் திரிபினாலேயே தோன்றியுள்ளன. ஆதலால், அவற்றின் திரிபைத் தடுக்குமாறும் விலக்குமாறும் இல்லை. திரியை நீக்கிவிடின் திரிமொழிகள் அவ்வம் மொழிகளாகா. தெலுங்குத் திரிபை நீக்கிவிடின், அது தமிழாய்விடும். அங்ஙனமே பிரெஞ்சுத் திரியை நீக்கிவிடின், அது இலத்தினாகிவிடும்.

   திரிபிற்கு ஒர் எல்லையுமில்லை;ஒரு தனிப்பட்ட வகையுமில்லை. திரிமொழிகள் பல்வேறு வகையில் மேன்மேலுந் திரியத்திரிய, புதுப்புது மொழிகள் தோன்றிக்கொண்டே அல்லது பிரிந்துகொண்டே போகும். இதனால், ஒர் இயன்மொழிக்கும் அதன் திரிமொழிகட்கும் இடைப்பட்ட உறவு அல்லது தொடர்பு, திரிபின் அளவிற்கேற்ப நெருங்கியோ நீங்கியோ இருக்கும். திரிமொழிகட்குள்ளும் ஒரு தாய்மொழிக்கும் அதன் கிளைமொழிகட்கும் இடைப்பட்ட உறவும் இத்தகையதே.

பாலினின்றே தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவை உருவாக்கப் பெறுகின்றன. ஆயின், இவற்றிற் கிடைப்பட்ட உறவு திரிபிற்கேற்பத்

தோற்றத்திலும் பண்பிலும், வேறுபட்டுள்ளது. உருக்கின நெய் தோற்றத்திற் பாலினின்று முற்றும் வேறுபட்டு விடுகின்றது. நெய் உருவாகும் வகையை அறியாதவன் நெய்க்கும் பாலிற்குமுள்ள தொடர்பை உணர முடியாது. இங்ஙனமே மொழிகட் கிடைப்பட்ட உறவுமென்க. வடதிரவிடம் என்னும் பிராகிருதம், தமிழுக்கு யிருந்ததென்பதைப் பின்வருஞ் சொற்களாற்கண்டு கொள்க.

தமிழ் பிராகிருதம் தமிழ் பிராகிருதம்

அச்சன் அஜ்ஜ சாவம் சாவ

அத்தன் அத்த சிப்பி-இப்பி சிப்பீ

அத்தை அத்தா சுண்ணம் சுண்ண

அப்பன் அப்ப சுன்னம் சுன்ன

இதோ இதோ செட்டி சேட்டி

எட்டி-செட்டி சேட்டி சேணி சேணி

ஏழகம் (ஆடு); ஏளக சொக்கம் சொக்க

ஐயவி சசவ நட்டம்-(நடம்); நட்ட

ஐயன் அய்ய நீல்-நீலம் நீல்

கச்சை கச்ச நேயம் நே அம்

கசடு கசட, சகட படிக்கம் படிக்கஹ

கட்டை கட்ட (th); படிமை படிமா

கந்தன் கந்த பரிவட்டணை பரிவட்டண

கப்பரை கப்பர(kh); பரிவட்டம் பரிவட்ட

கற்பூரம் கப்பர பல்லக்கு பல்லங்க(nk);

கம்பம் கம்ப(kh.bh); பளிங்கு பலிக (ph);

கம்மாளன் கம்மார புடவி புடவீ (dh);

கலாவம் கலாவ பேய் பேந்து,பேத

கவாளம் கவாட்ட பையுள் பய்யாவுல

காவு காவ் (gh); மண்டபம் மண்டவ

குள்ளம் குல்ல(kh); மாது மாது

கொக்கு கொக்கை வக்கணம் வக்கன(gg);

சகடி சாடீ(t); வக்கு வக்க

சரி (ஒப்பு); சரி வட்டம் வட்ட

வண்ணம் வண்ண

வடதுருவசக்கரம்

 வடதுருவசக்கரம் vaḍaduruvasakkaram, பெ. (n.)

   நிலத்தின் வடி கோடியிலுள்ள குளிர்ச்சியான மண்டலத்தை வரையறுக்கும் சுற்றுரேகை; arctic circle.

     [வடதுருவம் + சக்கரம்.]

வடதுருவம்

 வடதுருவம் vaḍaduruvam, பெ. (n.)

   வடக்கிலுள்ள நிலவுலக முனைக்கோடி (துருவம்);; the north pole.

     [வடக்கு + துருவம்.]

வடதெற்கு

வடதெற்கு vaḍadeṟku, பெ. (n.)

   வடக்கும் தெற்கும்; north and south.

     “வடதெற்கு விலங்கி” (பதிற்றுப்.31);.

     [வடக்கு + தெற்கு.]

தென்வடலின் எதிர்மறை வடதெற்காம்.

வடதேசம்

 வடதேசம் vaḍatēcam, பெ. (n.)

   வடநாடு (யாழ்.அக.);; northern country or region.

மறுவ. வடபுலம்

     [வடக்கு + தேசம்.]

தேசம். இடம், நாடு, முடிவு, எல்லை, பக்கம். திசை → தேக → தேசம். தேசம் என்னும் சொல், முதலில் எல்லையைக் குறித்தது. ஈண்டு வடதேசம் என்பது வடநாட்டையும், வடவெல்லையையும் குறித்து வழங்கிற்று.

வடதேசவடமன்

 வடதேசவடமன் vaḍatēcavaḍamaṉ, பெ. (n.)

   வடமருள் ஒரு பிரிவினன்; a sub-sect of Vadaman.

     [வடதேசம் + வடவர்மகன் → வடமன்.]

வடநாடு

 வடநாடு vaḍanāḍu, பெ. (n.)

   தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர்த்த பிற வட மாநிலங்கள்; northern part of India other than four southern states.

     ‘அவனுக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது’.

     [வடக்கு + நாடு.]

வடநூலார்

வடநூலார் vaḍanūlār, பெ. (n.)

   வடமொழியில் வல்லார்; sanskritists, proficient an expert or adept in sanskirit.

     “வடநூலார் தாமே பதிகமு முரையுஞ் செய்வார்” (பி.வி.3,உரை);.

     [வடநூல் + வடநூலார்.]

வடநூல்

வடநூல் vaḍanūl, பெ. (n.)

   வடமொழியிலுள்ள நூல்; Sanskrit literature,

     “வடநூன்மரபும் புகன்று கொண்டே” (வீரசோ.பாயி.3);.

வடநெறி

வடநெறி vaḍaneṟi, பெ. (n.)

   வடநூன்முறை; literary convention or usage in sanskirit.

     “மன்னும் வடநெறியே வேண்டினோம்” (திவ்.இயற்.பரிய.ம.40);.

     [வட + நெறி.]

வடந்தாங்கி

 வடந்தாங்கி vaḍandāṅgi, பெ. (n.)

   கோயில் தேர்வடத்தைத் தாங்கும் வட்டஞ்சுற்றி; temple car rope round shape supported.

வடந்திங்கி

 வடந்திங்கி vaḍandiṅgi, பெ. (n.)

   கப்பற்பாயின் அடிப்புறத்தை மேலிழுக்கும் கருவி (Naut.);; main clew-garnet;

 purchase, consisting of two single blocks and a fall, by which the lower corner of a square mainsail is hauled upto the yard.

வடந்தை

வடந்தை vaḍandai, பெ. (n.)

   1. வடக்கிலுள்ளது; that which is in the north.

     “வடந்தைத் தண்வளி” (நெடுநல். 173);.

   2. வடகாற்று; northern wind.

     ‘தண்பனி வடந்தை” (ஐங்குறு.263);.

வடந்தைக்கனல்

 வடந்தைக்கனல் vaḍandaikkaṉal, பெ. (n.)

வடந்தைத்தீ பார்க்க;see vadandai-t-ti.

     [வடந்தை + கனல். வடதிசை நெருப்பு.]

வடந்தை = வடக்கிலுள்ளது. குல் → குன் → கன் → கனல் = எரிந்து கொண்டிருக்கும் தீ. வடக்கில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு.

வடந்தைத்தீ

வடந்தைத்தீ vaḍandaittī, பெ. (n.)

   வடதிசை நெருப்பு (L.);; aurora borealis.

     “சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்” (காஞ்சிப்பு. இருபத்.384);.

     [வடம் → வடந்தை + தீ = வடதிசை நெருப்பு அல்லது வட வைக்கனல் (வ.மொ.வ.2 பக்.78);. வடந்தை = வடக்கிலுள்ளது. வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் கனல்.]

வடனகலாயம்

 வடனகலாயம் vaḍaṉagalāyam, பெ. (n.)

வடகயிலாயம் பார்க்க;see vadakayilāyam.

வடபடி

 வடபடி vaḍabaḍi, பெ. (n.)

வடப்படி (இ.வ.); பார்க்க;see vada-p-padi.

வடபத்தி

 வடபத்தி vaḍabatti, பெ. (n.)

வடபத்திரம் (சங்.அக.); பார்க்க;see vada-pattiram.

வடபத்திரசாயி

 வடபத்திரசாயி vaḍabattiracāyi, பெ. (n.)

   ஆலிலையிற் பள்ளி கொண்ட திருமால்; visnu, as in a sleeping posture on a banyan leaf.

வடபத்திரம்

 வடபத்திரம் vaḍabattiram, பெ. (n.)

மர வகை (யாழ்.அக.); a kind of tree.

வடபத்திரிகா

 வடபத்திரிகா vaḍabattirikā, பெ. (n.)

   கிளுவை; balsam tree-Balsmodendron beryi.

வடபரதம்

 வடபரதம் vaḍabaradam, பெ. (n.)

   வட இந்தியா (வின்.);; Northern India.

மறுவ. வடநாடு, வடபுலம்.

     [வட + பரதம்.]

வடபல்லி

வடபல்லி vaḍaballi, பெ. (n.)

   தலைக் கோலத்திற் புல்லகமென்னும் அணிகலன் (சிலப். 6, 107, உரை);; woman’s ornament for the forehead, part of tasai-k-kösam or decoration.

வடபாங்கு

 வடபாங்கு vaḍapāṅgu, பெ. (n.)

   தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள தெருக் கூத்து வகையுளொன்று; a street play normally performed in South Arcot District.

வடபாற்பரதம்

 வடபாற்பரதம் vaḍapāṟparadam, பெ. (n.)

   தொண்பது (ஒன்பது); கண்டத்துள்ளொன்று (பிங்.);; a continent, one of nava-kandam.

     [வடபால் + பரதம்.]

வடபாலிரேவதம்

 வடபாலிரேவதம் vaḍapālirēvadam, பெ. (n.)

   ஒன்பது நிலப்பெரும் பிரிவிளொன்று (பிங்.);; a continent, one of a nava-kandam.

வடபால்விதேகம்

 வடபால்விதேகம் vaḍapālvitēkam, பெ. (n.)

   ஒன்பது நிலப்பெரும் பிரிவுளொன்று (பிங்.);; a continent, one of nava-kandam.

வடபுலம்

வடபுலம் vaḍabulam, பெ. (n.)

   1. வடநாடு; northern country.

     “வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த” (சிறுபாண்.48);.

   2. வடதிசைக்குரு (பதிற்றுப்.68, 13);; uttaraguru, the earthly paradise.

{வட + புலம்.]

வடபூமி

 வடபூமி vaḍapūmi, பெ. (n.)

   வடநாடு; northern country.

வடபெருங்கல்

வடபெருங்கல் vaḍaberuṅgal, பெ. (n.)

வடமலை, 2 பார்க்க;see vadga-malai

     “தென்குமரி வடபெருங்கல்” (மதுரைக்.70);.

     [வடக்கு + பெரு-மை+கல்.]

வடபொழில்

வடபொழில் vaḍaboḻil, பெ. (n.)

   வடக்கிலுள்ள நிலப்பரப்பு; northern region.

     “நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை” (பரிபா.5;8);.

மறுவ. வடபுலம்

     [வடக்கு + பொழி → பொழில்.]

வடப்படி

வடப்படி vaḍappaḍi, பெ. (n.)

   144 பலங்கொண்ட நிறை (G.Tn.D.1,237);; a weight of 144 palam.

வடப்படிரம்

 வடப்படிரம் vaḍappaḍiram, பெ. (n.)

   சந்தனம்; sandel ptero carpus santalinus (சா.அக.);.

வடப்பிலவம்

 வடப்பிலவம் vaḍappilavam, பெ. (n.)

   அத்தி மரம்; tailed oval leaved fig-Ficus talboti.

வடமகீதரம்

வடமகீதரம் vaḍamaātaram, பெ. (n.)

   மேருமலை; big Mt.Meru.

     “சிரவுட மகீதர மெனக் குவித்து” (பாரத.இராசசூய.44);.

வடமதுரை

வடமதுரை vaḍamadurai, பெ. (n.)

   நாவலந் (இந்து);தேயத்தின் வட பாகத்திலுள்ள மதுரை; Madurai, in north India.

     “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” (திவ்.திருப்பா. 5);.

     [வட(ம்); + மதுரை.]

வடமநெடுந்தத்தனார்

வடமநெடுந்தத்தனார் vaḍamaneḍundattaṉār, பெ. (n.)

   கழகக்காலப் புலவருள் ஒருவர்; an ancient Sangam poet.

வடநெடுந்தத்தனார் என்றும், வடம நெடுந்தத்தனாரெனவும் அழைக்கப்படுகின்ற இவர், புறநானூற்றில் 179-ஆம் பாடலை இயற்றியவராவார்.

     ‘நாலைகிழவன் நாகன்’ என்பவனைப் பற்றி பாடியுள்ளார்.

     “ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென

ஏலாது கவிழ்ந்தான் இரவல் மண்டை

மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர்

விசிபிணி முரசமொடு மண்பல தந்த

திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்

படைவேண் டுவழி வாளு தவியும்

வினைவேண் டுவழி அறிவு தவியும்

வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து

அசைநுகம் படாஅ ஆண்டகை யுள்ளத்துத்

தோலா நல்லிசை நாலை கிழவன்

பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்

திருந்துவேல் நாகற் கூறினர் பலரே” (புறம் 179);

வடமன்

 வடமன் vaḍamaṉ, பெ. (n.)

   வடநாட்டான்; man of the north country.

     [வடவர்மகன் → வடமன்.]

வடமரம்

வடமரம்1 vaḍamaram, பெ. (n.)

   கப்பலின் நடுவில் இருக்கும் பாய்மரம்; main mast.

 வடமரம்2 vaḍamaram, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree-Ficus Bengalensis.

மறுவ. தொன்மரம்

     [வடம் + மரம்.]

வடம்போன்ற விழுதுகளை விடுவது, வட (ஆல); மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது “Fiscus bengalensis’ என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது.

வடமருது

 வடமருது vaḍamarudu, பெ. (n.)

   மருத மரவகை; flowering murdah.

வடமலை

வடமலை vaḍamalai, பெ. (n.)

   1. மேரு மலை; big Mt. Meru.

     “வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்” (பட்டினப். 187);.

   2. இமயமலை; the Himalayas.

     “வடமலைப் பெயர்குவை யாயின்” (புறநா.67);.

   3. தமிழகத்தின் வடவெல்லையாக அமைந்த திருப்பதி மலை; the Tiruppadi hills, as the northern boundary of the Tamil country.

     “தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும்” (திவ்.இயற்.பெரிய.ம, 6);.

   4. மந்தர மலை; Mt. Mandara.

     “மன்னு வடமலையை மத்தாக” (திவ்.இயற்.பெரிய. ம.105);.

   5. வடமலையப்பபிள்ளையன் (பெருந்.தொ.1321); பார்க்க;see vada-malaiyappa-pillaiyan.

     [வடக்கு + மலை.]

வடமலையப்பன்

வடமலையப்பன் vaḍamalaiyappaṉ, பெ. (n.)

வடமலையப்பபிள்ளையன் (பெருந்.தொ. 1327); பார்க்க;see Vadamalai-y–appa-pillaiyan.

     [வடமலை + அப்பன்.]

வடமலையப்பபிள்ளை

வடமலையப்பபிள்ளை vaḍamalaiyabbabiḷḷai, பெ. (n.)

   17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a poet, lived in 17 C.

இவர் நாநூற்றுக்கோவை, நீடூர்த்தலபுராணம், மச்ச புராணம், நாற்கவி வண்ணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வடமலையப்பப்பிள்ளையன்

வடமலையப்பப்பிள்ளையன் vaḍamalaiyappappiḷḷaiyaṉ, பெ. (n.)

   கி.பி.1706-ஆம் ஆண்டில் நாயக்க மன்னரின் ஆளுமைக்குட்பட்டு திருநெல்வேலிச் சீமையை ஆண்டவரும் மச்சபுராணம் இயற்றியவருமான பெருமகன்; a viceroy of the Tirunelveli regions under the Naiks of Madurai, 1706 A.D.

     [வடமலையப்பன் + பிள்ளையன்.]

வடமலையான்

வடமலையான் vaḍamalaiyāṉ, பெ. (n.)

   1. திருப்பதி மலையுறையுந் திருமால்; visnu as residing in the Tiruppadi hills.

     “வடமலையாய்… அஞ்சேலென்று வந்தருளே” (அஷ்டப்.திருவேங்கடத்தந்.6);.

   2. நெல் வகையு ளொன்று (வின்.);; a kind of paddy.

மறுவ. வேங்கடவன்.

     [வடமலை → வடமலையான்.]

வடமலைவாணன்

 வடமலைவாணன் vaḍamalaivāṇaṉ, பெ. (n.)

வடமலையான் (யாழ்.அக.); பார்க்க;see Vada-malaiyān.

     [வடமலை + வாழ் → வாழ்நன் → வாணன்.]

வடமலைவாண்டன்

 வடமலைவாண்டன் vaḍamalaivāṇḍaṉ, பெ. (n.)

வடமலையான் (யாழ்.அக.); பார்க்க;see Vadamalaiyan.

     [வடமலை + வாழ்நன் → வாண்டன்.]

வடமவண்ணக்கன்

வடமவண்ணக்கன் vaḍamavaṇṇakkaṉ, பெ. (n.)

   வடமொழி பேசும் வடநாட்டு மக்கள்; northerners who speak sanskirit.

கழகக்கால புலவர்களுள் ஒருவர். இவர் குறுந்தொகையில் 81 வது பாடலை பாடியவராவார்.

வடமவண்ணக்கன் தாமோதரனார்

வடமவண்ணக்கன் தாமோதரனார் vaḍamavaṇṇakkaṉtāmōtaraṉār, பெ. (n.)

   சங்கப்புலவருள் ஒருவர்; an ancient sangam poet.

இலக்கியங்களில் வடமன் தாமோதரனார் என்று காணப்படும்

இப்பெயர், வண்ணக்கன் என்பதன் பொருள் நாணய நோட்டஞ் செய்பவன் என்பதாகும். புறநாநூற்றின் 172ஆம் பாடலில்

     ‘பிட்டங் கொற்றன்’ குறித்து பாடியுள்ளார். இவர் வடதிசையில் இருந்து வந்தவராக கருதப்படுகிறார். யாரினும் இனியன் பேரன் பினனே’என்னும் பாடலும் இவர் பாடியது.

     “யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளுர்க் குரீஇத் துள்ளுடைச் சேவல்

சூல்முதிற் பேடைக் கீனி விழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாண ரூரன் பாணன் வாயே” (குறுந். 85);.

வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்

வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் vaḍamavaṇṇakkaṉpēricāttaṉār, பெ. (n.)

   கழகக்காலப் புலவர்களுள் ஒருவர்; an ancient so sangam poet.

மாந்தரஞ் சேரலிரும்பொறையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் போர் செய்தபோது, சோழனின் படைத்தலைவன் தேர்வண் மலையனைப் பற்றிப் பாடியவர். இவர், புறநா 198, 125 அகநா:38, 214, 242 268, 305, குறுந்: 81. 159, 278, 314, 366 நற்.25, 37, 67, 104, 199, 299, 323, 378 முதலானவை இவர் பாடியவையே.

வடமாது

 வடமாது vaḍamātu, பெ. (n.)

   புளி; tamarind.

வடமாலிகை

 வடமாலிகை vaḍamāligai, பெ. (n.)

   பருத்தி; cotton shrub.

வடமீதி

 வடமீதி vaḍamīti, பெ. (n.)

   வடபாதி (நாஞ்);; the northern half.

     [வட + மீதி.]

வடமீன்

வடமீன் vaḍamīṉ, பெ. (n.)

   அருந்ததி யென்னும் விண்மீன்; the star called arundadi.

     “வடமீன் புரையுங் கற்பின் மடமொழி” (புறநா. 122);.

     [வட → வடமீன்.]

வடமுகம்

வடமுகம்1 vaḍamugam, பெ. (n.)

   வடபால் (யாழ்.அக.);; the northern quarter, towards north.

     [வட + முகம்.]

 வடமுகம்2 vaḍamugam, பெ. (n.)

   கால்வாயின் முகப்பு (யாழ்ப்.);; head of a water-course or channels (சா.அக.);.

     [மடைமுகம் → வடமுகம்.]

வடமுகில்

 வடமுகில் vaḍamugil, பெ. (n.)

   பாண்டியன் (அக.நி.);; pandiyan.

வடமுருங்கை

 வடமுருங்கை vaḍamuruṅgai, பெ. (n.)

   காட்டு முருங்கை; a plant wild moringa-Оrmоcarpum sennoides. (சா.அக.);.

வடமூலகன்

 வடமூலகன் vaḍamūlagaṉ, பெ. (n.)

   சிவபிரான் (சங்.அக.);; Sivan.

வடமேரு

வடமேரு vaḍamēru, பெ. (n.)

மேருமலை Mt. Meru.

     “கல்லன்றோ… வடமேரு” (கம்பரா. மாயாசனகப்.81);.

மறுவ. கனகமலை.

     [வடக்கு + மேரு.]

வடமேற்காறு

 வடமேற்காறு vaḍamēṟkāṟu, பெ. (n.)

   வடமேற்கு நாட்டில் விளையும் சமுத்திராப்பழம், கடுக்காய், சீயக்காய், பொன்னிளங்காய், தேற்றான் வித்து, வலம்புரிக்காய் ஆகிய ஆறு வகைச் சரக்குகள்; six drugs that grow in the north west territory.

வடமேற்கு

 வடமேற்கு vaḍamēṟku, பெ. (n.)

   வடக்கும் மேற்குஞ் சேர்ந்த கோணத்திசை; north-west direction.

     [வடக்கு + மேற்கு.]

வடமேற்றிசை

 வடமேற்றிசை vaḍamēṟṟisai, பெ. (n.)

வட மேற்கு பார்க்க;see Vada-mérku.

     [வடமேற்கு + திசை.]

வடமேற்றிசைக்குறி

 வடமேற்றிசைக்குறி vaḍamēṟṟisaikkuṟi, பெ. (n.)

   கழுதை (திவா.);; ass.

     [வடமேற்றிசை + குறி.]

வடமேற்றிசைப்பாலன்

வடமேற்றிசைப்பாலன் vaḍamēṟṟisaippālaṉ, பெ. (n.)

   வளி வழங்கு தேவன் (யாழ்.913.);; väyu, as the regent of the northwest.

     [வடமேற்றிசை + பாலன்.]

எண்டிசைப் பாலகருள் வடமேற்கு மூலைக்குரியவனும் காற்றுக்கு அதிகாரியுமான தேவன்.

வடமொழி

வடமொழி vaḍamoḻi, பெ. (n.)

   1. சமற்கிருத மொழி; sanskrit language.

     “வடமொழி முதலான பிற கலைக்கடல்களுள்ளும்” (நன்.459, மயிலை.);.

   2. வடசொல் (இலக்.);; sanskrit word.

     “செந்தமிழ்க்கண் வந்த வடமொழியு மாற்றாதே” (யாப்.வி.பக். 461);.

மறுவ. ஆரியம், ஆரியமொழி.

     [வட + மொழி = வடக்கினின்று வந்த அயன்மொழி (தேவ.12 பக்.223);.]

சமற்கிருதத்தைத் தொன்று தொட்டு, வடமொழியென்று வழங்கினர். வேதமொழி அல்லது அதன் செயற்கை வளர்ச்சியான இலக்கிய நடைமொழி (literary dialect);. வடக்கினின்று வந்ததால் வடமொழி என்றும், நன்றாகச் செய்யப்பட்டது என்னும் பொருளில் சமற்கிருதம்

வடமொழி என்னுமிச்சொல் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணி மேகலையிலும் இடம்பெற்றுள்ளன.

     “வடமொழி வாசகம் செய்தநல் லேடு” (சிலப்.15:58);.

     “வடமொழி யாளரொடு வருவோன் கண்டு” (மணிமே.5:40);.

     “வடமொழியாட்டி மறைமுறை யெய்தி” (மணிமே 13:73);.

ஆரியமும், வடமொழியும் ஒரு பொருட் சொற்களாகத் தமிழகத்தில் வழக்கூன்றியிருந்தன வென்பதைப் பின்வரும், கம்பராமாயணப் பாடல் வரியால் அறியலாம்.

     “ஆரியம் முதலிய பதினெண் பாடையின்” (கம்பரா. பம்பா.14);

வடமொழி ஒரு திரிமொழியும், கலவை மொழியுமாகும். வடமொழி பின்வருமாறு ஐவேறு நிலைகளைக் கொண்டதாகும்.

   1. தென்திரவிடம் (வடுகு);;   2. வடதிரவிடம் (பிராகிருதம்);;   3. கீழையாரியம்;   4. வேதமொழி;   5. சமற்கிருதம்.

இயன்மொழியாகிய செந்தமிழின் சீர்மை களையும், திரிமொழியாகிய வடமொழியின் தன்மைகளையும், பாவாணர் வேறுபடுத்திக் காட்டும் பாங்கு வருமாறு :-

தென்மொழி வடமொழி வேறுபாடு :- செந்தமிழாகிய தமிழும் கொடுந்தமிழ்களாகிய திரவிட மொழிகளும் சேர்ந்தது தென்மொழியாகும்.

தென்மொழி வடமொழி

தோன்றிய இயன்மொழி தமிழால் வளம்படுத்தப்பெற்ற

திரிமொழி.

வாழும் உண்ணிமொழி அதனால் பிறமொழிகளையே

சார்ந்து வாழும் உண்ணிமொழி

மொழிக்கோவையின் முதனிலை கோவையின் இறுதிநிலை

இலக்கண நிறைமொழி. யால் இலக்கணக் குறைமொழி.

பெயர்ப்பிலக்கிய மொழி.

அன்பு முதலியவற்றை ஒருகுல முன்னேற்றம்

உணர்த்தும் முதலியவற்றையுணர்த்தும்

பண்பாட்டு மொழி பண்பாடற்ற மொழி.

-யென்று ஒப்பும் மொழி ஏமாற்றும் மொழி.

சமற்கிருதத்தை வடமொழியென்றும் தமிழைத் தென்மொழியென்றும் தொன்று தொட்டு வழங்கி வருவதால், முன்னது வடக்கினின்று வந்த அயன் மொழி என்றும், பின்னது முதலில் இருந்தே

தெற்கின்கண் வழங்கி வந்த நாட்டுமொழியென்றும் தெள்ளத் தெளிவாக அறியலாம்.

மொழிக்குச் சொன்னது மொழியாளர்க்கும் ஒக்கும். சிலர் வரலாற்றுண்மைக்கு மாறாக வடமொழியும் முற்காலத்தில் இருந்தே தென்னாட்டில் வழங்கி வந்த தென்பர். அவர்க்கு வடமொழி என்னும் பெயரே வாயடைத்தல் காண்க (சொல்.21);.

வண்ணமாலை (வர்ண மாலா);: வடமொழி நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு வர்ணமாலா எனப்பெறும். வண்ணம்-வர்ண. மாலை-மாலா. வர்ண, அக்ஷா என்பன எழுத்தின் பொதுப் பெயர்கள். இவற்றுட் பின்னது அசையையுங் குறிக்கும் (வ.வ.);.

ஒலியும் பிறப்பும்: உயிரெழுத்துகளுள்: ருகரம் குற்றியலுகரம் சேர்ந்த ரகரமாகும். ரூகாரம் அதன் நெடில் அல்லது நீட்டம். லுகரம் குற்றிய லுகரம் சேர்ந்த லகரம்.

ஐ, ஒள என்னும் இரு நெடிலும் முதற்காலத்தில் ஆய், ஆவ் என நீண்டொலித்தனவென்றும், ஆரியம் தமிழொடு தொடர்பு கொண்டபின், அவை தமிழிற்போல் அய், அவ் எனக் குறுகி யொலிக் கின்றனவென்றும் கூறுவர்.

தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான பிற எழுத்துகளெல்லாம், தமிழிற்போன்றே ஒலிக்குமென அறிக.

   எ, ஒ இரண்டும் தமிழில் எகர ஒகரங்களின் நீட்டமான தனி யொலிகளாகக் (Simple vowels); கொள்ளப்பெறும்;சமற்கிருதத்தில் தவறாகப் புணரொலிகளாகக் (Diphthongs); கொள்ளப் பெறுகின்றன. இதற்கு அம்மொழியில் எகர ஒகர மின்மையும் குணசந்தியுமே காரணம்.

அ, ஆ + இ ஈ-ஏ. எ-டு: மஹா + இந்திர(ன்); = மஹேந்திர(ன்);

அ, ஆ+உ, ஊ, ஒ, எ-டு : குல + உத்துங்கன் = குலோத்துங்கன்.

எழுத்துச் சாரியை :

     ‘காரமும் சுரமும் கானொடு சிவணி

நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை’ என்பது தொல் காப்பியம் (134);.

உயிரெழுத்தின் உதவியின்றித் தாமாக வொலிக்காத மெய்யெழுத்துகளை ஒலிப்பித்தற் பொருட்டும், தாமாக வொலிக்கும் உயிரெழுத்துகளையும் எளிதாக ஒலிப்பித்தற் பொருட்டும். சில துணையொலிகளைப் பண்டைத் தமிழிலக்கண நூலார் அமைத்துள்ளனர். அவை சாரியை எனப்பெறும்.

முறை: மேலையாரிய மொழிகட்குள் ஒன்றிற்காவது முறை என்னும் எழுத்திலக்கணம் இன்றுமில்லை. வேத ஆரியர் எழுத்தும் இலக்கியமுமின்றி இந்தியாவிற்குட் புகுந்தனர். வேத மொழிக்கும் வேதத்திற்கும் எழுதாக்கிளவி என்று பெயர். வேதத்தைக் குறிக்கும் ச்ருதி (கேள்வி); என்னும் பெயரே ஆரியர்க்கு எழுத்தின்மையை உணர்த்தும்.

உயிர் வரிசையுட் செருகப்பட்ட சிறப்பெழுத்துகளை நோக்கினும், முற்றுகரத்தை யடுத்துக் குற்றுகரமும், ரகரக் குற்றுகரத்தின் பின் லகரக் குற்றுகரமும் வைக்கப் பெற்றிருப்பது, எத்துணைத் தமிழ் முறையொட்டியது!

   அளபு : அளவு என்பது எழுத்தொலியின் மாத்திரை அல்லது அளவு அளபு மாத்திரை என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுள் முன்னது தமிழ்ச் சிறப்புச் சொல்;பின்னது தென்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுச் சொல்.

மெய்க்கு அரையும் குறிற்கு ஒன்றும் நெடிற்கு இரண்டும் மாத்திரை என்பது இருமொழிக்கும் பொது. வடமொழியில் ப்லுதம் என்னும் அளபெடையையும் உயிர் அல்லது உயிர்மெய் வகைகளுள் ஒன்றாகச் சேர்த்து, அதற்கு மும்மாத்திரை என வகுத்துள்ளனர்.

அளபெடையையும் ஒர் உயிர் வகையாகக்

கொண்டது வடமொழியிலக்கணத்தின் பின்மையையே காட்டும்.

வடிவம் : வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ் நாட்டில் தான். அது தமிழ் எட்டெழுத்தினின்று திரிந்த கிரந்த வெழுத்து. அதன் காலம் தோரா கி.மு.10ஆம் நூற்றாண்டு.

ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணம் தொல்காப்பியத்திற்கு முந்திய நூலாதலால், வடமொழிக் கிரந்தவெழுத்து அதற்கு ஓரிரு நூற்றாண்டு முற்பட்டதாயிருத்தல் வேண்டும்.

கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப்பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்.

இன்றுள்ள தேவநாகரி கி.பி.4ஆம் நூற்றாண்டிற் கருக் கொண்டு 11ஆம் நூற்றாண்டில் முழுநிறைவடைந்தது. அதையும் உற்று நோக்கின், அதற்கும் கிரந்தவெழுத்திற்குமுள்ள நுண்ணிய வடிவொப்புமை புலனாகும்.

புணர்ச்சி:- எழுத்துப் புணர்ச்சி. சொற்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும்.

தமிழிலக்கணத்தை முதன் முதல் ஆய்ந்து கண்டு நூலியற்றியவர் தலைசிறந்த முனிவர் என்பது,

     “வினையின் நீங்கி விளங்கிய வறிவின்

முனைவன் கண்டது முதனூ வாகும்” (தொல்.1594); என்னும் தொல்காப்பிய நூற்பாவால் விளங்கும்.

முனிவர் மெய்ப்பொருளுணர்வு முதிர்ந்தவ ராதலின், உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் உயிர். உயிரில்லது (மெய்);, உயிருள்ளது (உயிர்மெய்); என மூவகையாக இருக்கக்கண்டு, அவற்றை யொத்த மூவகை எழுத்தொலிகட்கும் அவற்றின் பெயரையே உவமையாகு பெயராக இட்டு, உயிர்மெய்க்குத் தனி வடிவும் அமைத்தனர்.

இதனால், உயிர்மெய்யொலியை உயிரும் மெய்யுமாக முதன்முதற் பகுத்தவர் தமிழர் என்பதும், உயிர்மெய்யிலேயே எழுத்துப் புணர்ச்சி தோன்றிவிட்டதென்பதும், தெளிவாம்.

சொற்புணர்ச்சி எல்லா மொழிகளிலுமுண்டு. ஆயின், இயன்மொழியிலேயே புணர்ச்சி ஒழுங்காகவும் புணர்ச்சொற்கள் எளிதாய்ப் பகுக்கக் கூடியனவாகவுமிருக்கும். திரிமொழிகளில் தனிச்சொல்லும் கூட்டுச் சொல்லும் பெரும்பாலும் திரிந்திருப்பதாலும், திரிபுப் புணர்ச்சி நிகழவேண்டிய விடத்தும் இயல்புப் புணர்ச்சியே பெரும்பான்மையாய் நிகழ்வதாலும், திரிபுப் புணர்ச்சி நிகழ்ந்தவிடத்தும் அது வரிவடிவிற் காட்டப் பெறாமையாலும், அவற்றிற் புணர்ச்சியிலக்கணம் வகுக்கப் பெரிதும் இடமில்லை.

சமற்கிருதம் திரிமொழியாயினும், தொன்று தொட்டுத் தமிழொடு தொடர்பு கொண்டமையானும், ஐந்திலிரு பகுதிக்குக் குறையாது தமிழாயிருத்தலானும், தமிழைத் தழுவியே இலக்கணஞ் செய்யப் பெற்றமையானும், புணர்ச்சியிலக்கணம் அதற்கமைந்ததென்க. ஆயினும், திரிமொழியாதலின், தமிழ்ப் புணர்ச்சிபோற் பெரும்பாலும் ஒழுங்குபடாது எத்துணையோ விலக்குகளைக் கொண்டுள்ளதென அறிக.

சமற்கிருதம் ஆரியமும் திரவிடமுங் கலந்த மொழியாதலின், பல முதிரொலிகளைக் கொண்டிருப்பதுடன், வல்லின் ஐவகையுள்ளும் பொலி (voice); யொலியுடனும் பொலியா (voicless); வொலியுடனும் மூச்சொலியை ஒழுங்காகச் சேர்த்து அவற்றிற்குத் தனி வடிவம் அமைந்துள்ளது.

 kh, gh;

 ch, jh, th, dh: th, dh ph, bh என்னும் பத்துக் கூட்டு மெய்கட்கும். வடமொழியில் தனி வடிவம் அமைந்திருத்தல் காண்க. இந்நிலைமை வேறெம் மொழியிலுமில்லை.

வடமொழி வண்ணமாலையின் பின்மை :- வடமொழி வண்ணமாலையின் பின்மை பின்வருஞ் சான்றுகளால் துணியப்பெறும்.

   1. வடமொழியின் பின்மை.

   2. ஆரிய வேதம் பன்னூற்றாண்டு எழுதாக் கிளவியாயிருந்தமை.

   3. தமிழெழுத்தைப் பின்பற்றிய கிரந்தம் தேவநாகரிக்கு முற்பட்டமை.

   4. ஒலி வடிவு, மாத்திரை, சாரியை, வரிவடிவு, முறை முதலியவற்றில் இயன்றவரை தமிழைப் பின்பற்றியிருத்தல்.

   5. ஒலிப்பெருக்கம்.

   6. கூட்டுமெய்கட்குத் தனிவடிவு கொண்டுள்ளமை

   7. மேலையாரியம்போற் குறுங்கணக்கு மட்டுங் கொண்டிராது தமிழ்போல் நெடுங்கணக்குங் கொண்டிருத்தல் (வ.வ);.

   பால் (லிங்க); : வடமொழியில் திணையில்லை;பால்மட்டும் உண்டு. அது புல்லிங்கம் (ஆண்பால்);, திரீலிங்கம் (பெண்பால்);, நபும்ஸகலிங்கம் (அலிப்பால்); என மூவகைப்படும்.

வடமொழிப் பால்வகுப்பு இயற்கையான பொருளியல்பு பற்றியதன்று : பெரும்பாலும் செயற்கையான இலக்கண முறை பற்றியது. சில பெயர்களே உண்மையான பால்காட்டும்.

எ-டு: பு தகம் (ஆ.பா.);. சிலா (பெ.பா.); = கல்.

வேற்றுமை (விபக்தி); : கிரேக்க இலக்கணத்தில், எழுவாய் வேற்றுமை, விளிவேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கிழமை வேற்றுமை, கொடை வேற்றுமை என்னும் ஐவேற்றுமைகளும், இலத்தீன் இலக்கணத்தில் எழுவாய் வேற்றுமை, கிழமை வேற்றுமை, கொடை வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, விளிவேற்றுமை, நீக்கவேற்றுமை, என்னும் அறுவேற்றுமைகளுமே, கூறப்படுகின்றன.

முதற்கால ஆங்கிலத்தில் எழுவாய், விளி, செய்பொருள், கிழமை, கொடை கருவி என்னும் அறுவேற்றுமைகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆயின் மேலையாரிய மொழி ஒன்றிலாவது எண் வேற்றுமை சொல்லப்பட வில்லை.

வடமொழியிலோ தமிழிற்போல் எண்வேற்றுமை காட்டப்பெறுவதுடன், அவற்றின் வரிசையும் பெயரும் பொருளும் முற்றும் தமிழை ஒத்திருக்கின்றன.

வேற்றுமைப்பெயர் வேற்றுமைப்பொருள்

தமிழ் வடமொழி தமிழ் வடமொழி

முதல்வேற்றுமை ப்ரதமா விபக்தி வினைமுதல் கர்த்தா

இரண்டாம்

     ” த்விதீயா

     ” செய்பொருள் கர்ம(ம்); மூன்றாம்

     ” த்ருதீயா ”

வினைமுதல், கருவி

கர்த்தா,

கரணம்

நான்காம்

     ” சதுர்த்தி

     “கொடை ஸம்பிரதானம்

ஐந்தாம்

     ” பஞ்சமி

     ” நீக்கம் உபாதானம்

ஆறாம்

     ” ஷஷ்டி

     ” கிழமை லம்பந்த(ம்

ஏழாம்

     ” ஸப்தமி

     ” இடம் அதிகரணம்

எட்டாம்

     ” ஸம்போதன” விளி ஸம்போதனம்

ப்ரதமா

இங்ஙனம் முற்றும் ஒத்திருப்பதால், வடமொழி வண்ணமாலை போன்றே வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியதென்பது வெள்ளிடைமலை.

   தமிழில் எண்வேற்றுமையும் எண்வரிசையால் மட்டுமின்றி, எழுவாய், செய்பொருள், கருவி, கொடை, நீக்கம், கிழமை, இடம், விளி எனப் பொருள்பற்றியும்;பெயர், ஐ, ஒடு, கு. இன், அது, கண், விளி என உருபுபற்றியும் பெயர்பெறும்.

வடமொழியில் எட்டாம் வேற்றுமை எண்ணாற் பெயர்பெறாதிருப்பதும் கவனிக்கத்தக்கதாம்.

   தமிழ் இயன்மொழியாதலால் அதில் முதல் வேற்றுமைக்கு உருபில்லை;சமற்கிருதம் திரிமொழியாதலின், அதற்கு அஃதுண்டு.

வடமொழி திரிமொழியாதலின், அதன் வினைகட்கு வேர்ச்சொற்கள் அம்மொழியிலில்லை. அவை பெரும்பாலும் இயன் மொழியாகிய தமிழில்தான் உள்ளன. ஆயினும், வடமொழி தேவ மொழியென்னும் ஏமாற்றிற்கேற்ப வடமொழி வினைச் சொற்களின் முதனிலைகளையும் (Themes); அடிகளையும் (Stems); வேர்களாகக் (Roots); காட்டியுள்ளனர். மேனாட்டாரும், தமிழை வரலாற்று முறைப்படி ஆராயாமையால், வடமொழியை இயன்மொழியென்றும், ஆரியத் தாய்மொழியென்றும் மயங்கி வடவர் காட்டியுள்ள போலி வேர்ச்சொற்களை உண்மையான வேர்ச்சொற்ளென்றே நம்பியிருக்கின்றனர்.

வடவர் காட்டியுள்ள தாதுக்கள் (வேர்ச் சொற்கள்); ஏறத்தாழ 1750. அவை எங்ஙனம் தவறானவை என்பது, இங்கு ஐந்தாதுக்களால் எடுத்துக் காட்டப்பெறும்.

கீர்த்

சீர் = சிறப்பு, புகழ், சீர் – சீர்த்தி = பெரும்புகழ்.

சீர்த்தி மிகுபுகழ் (தொல்,796);.

சீர்த்தி – கீர்த்தி, ச-க. ஒ.நோ. : செய் – (கெய்);-கை, செம்பு-கெம்பு, சேரலம்-கேரளம், சேது-கேது.

சீர் என்னும் முதனிலையும்,

     ‘தி’ என்னும் ஈறும்,

     ‘த்’ ஆகிய புணர்ச்சித் தோன்றலும், கொண்ட சீர்த்தி என்னும் தொழிற் பெயரின் (அல்லது தொழிலாகு பெயரின்); முற்பகுதித் திரிபாகிய கீர்த் என்பதை முதனிலையாகக் கொள்வது எத்துணையியற்கைக்கு மாறானது. வடமொழி நூன்மொழியேயாதலால், அதில் எச்சொல் வடிவையும் எப்பொருளிலும் ஆளலாம்.

கீர்த்தி என்பதனோடு நேர்த்தி என்பதனை ஒப்பு நோக்குக.

இனி, இதற்கு வேராக, க்ரு என்பதனைப் பாணினியார் (3:3:97); குறித்துள்ளார். அது கரை என்னும் தென்சொல்லின் திரியே.

கரைதல் =

   1. அழைத்தல்.

     “கலங்கரை விளக்கம்” (சிலப்.);.

   2. சொல்லுதல், கற்பித்தல்

அறங்கரை நாவின் நான்மறை முற்றி (தொல்.சி.பா.);.

   3. எடுத்துச் சொல்லுதல், புகழ்தல்.

அழைத்தலைக் குறிக்கும் அகவல் என்னும் சொற்போல், கரைதல் என்னும் சொல்லும் பாடுதலை உணர்த்தும். ஆதலால், வடமொழியிற் பாணனை அல்லது பாவலனைக் காரு (இ.வே.); என்பர்.

சுட்டும் வினாவும் : சுட்டும் வினாவும், ஆரியமும் சேமியமுமான பிறமொழிகளிலெல்லாம் சொற்களாகவே யிருக்கின்றன. தமிழிலோ அவை சொற்களாக மட்டுமின்றிச் சொற்கட்கு மூலமான எழுத்துகளாகவும் இருக்கின்றன. அவ்வெழுத்துகள் உண்மையில் ஒரெழுத்துச் சொற்களே.

நெட்டெழுத் தேழே ஒரெழுத் தொருமொழி.

குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.

ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே.

அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு.

ஆஏ ஒ.அம் மூன்றும் வினா.

எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி…. என்று தொல்காப்பியம் (43, 44, 301, 31, 32, 552); கூறுவதாலும், சுட்டும் வினாவும் இன்றும் தனி நெடிலாகத் திரவிடத்திலும் வடதிரவிடக் கான் முளையாகிய இந்தியிலும் வழங்குவதாலும், குறில் நெடில் பலுக்க வெளிதா யிருப்பதனாலும், ஆண்டு ஈண்டு யாண்டு (எண்டு); என்னுஞ் சொற்கட்கு முதல் குறுகிய வடிவின்மையாலும், சுட்டு வினாவெழுத்துகள் முதற்காலத்தில் நீண்டேயிருந்து பின்னர்க் குறுகியமை அறியப்படும்.

சுட்டடிகளும் வினாவடிகளும் தனி யெழுத்துகளா யிருப்பதனால், அவற்றை இடைச் சொல்லென்று கொண்டனர் முன்னோர். அவை தனியெழுத்துகளாயினும், பொருளுணர்த்துவதாற் சொல்லாயும் பலவெழுத்துச் சொற்போன்றே பொருள் நிரம்பியும், இருப்பதை அறிக.

தமிழில் உறவியல் (Relative); வினாவும் நேர்வினாவும் ஒரேவகையடி கொண்டிருக்கும். வடமொழியில் உறவியல்வினாயகரவடி கொண்டும் நேர்வினா ககர வடிகொண்டும் உள்ளன. எ-டு:-

உறவியல் வினாச்சொல் நேர்வினாச்சொல்

யத்(d); கிம் யார், எது

யத்ர குத்ர + எங்கு

வடமொழி : தொடரியல்

வேதமொழியின் மூலமாகிய மேலையாரிய முறைப்படி சமற்கிருதச் சொற்றொடரமைப்பு ஒரு மருங்கு வேறுபட்டிருப்பினும், வேத மொழியின் வடதிரவிட அல்லது பிராகிருதக் கலப்பினாலும், சமற்கிருதத்தின் தமிழ்த் தொடர்பினாலும், அது ஒரு மருங்கு தமிழையும் தழுவியுள்ளது.

அடுக்குத் தொடர் (வீப்ஸா);

தமிழிற் போன்றே வடமொழியிலும் சொற்கள் அடுக்கி வரலாம்.

எ-டு : வ்ருக்ஷ்ம் வ்ருக்ஷ்ம் ஸிஞ்சதி = மரம் மரமாய்த் தண்ணீர் ஊற்றுகிறான்.

   2. சொற்றொடர் (வாக்ய);

வடமொழிச் சொற்றொடர்ச் சொல்வரிசை பெரும்பாலும் தமிழ் முறையை ஒத்ததே.

எழுவாய் முன்னும் செயப்படுபொருள் இடையும் பயனிலை பின்னும் வருவதே இயல்பான முறை.

வடமொழியிலக்கணம் எழுத்து, சொல், சொற்றொடர் என்னும் மூன்றொடு முடிகிறது. செய்யுளிலக்கணம் சந்த என்றும், அணியிலக்கணம் அலங்கார சாத்திரம் என்றும் வேறு நூல்கள் போல் வெவ்வேறாகக் கூறப்படும்.

   9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை.

   10. ஆண்பால், பெண்பால், அலிப்பால் என வடமொழியில் பால் மூன்று;அவை ஈறு பற்றியன: தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து அவை பொருளும் எண்ணும் பற்றியன.

   11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை.

   12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு;தென்மொழியில் இல்லை.

   13. குறிப்புவினை வடமொழியில் இல்லை.

   14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமையேற்கும்.

   15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix); சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix); சொற்களாயிருக்கும்.

   16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியா யிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும்.

   17. வினைத்தொகை வடமொழியில் இல்லை.

   18. தமிழில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை.

   19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வடமொழியில் இல்லை.

   20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை.

வடமொழி நூல்

வடமொழி நூல் vaḍamoḻinūl, பெ. (n.)

   சிந்தாமணி முதல் வைத்திய மாலை ஈறாகவுள்ள 32 நூல்கள்; thirty two scientific Sanskrit books from Cindaimans to Vaittiyamālai.

     [வடமொழி + நூல்.]

வடமொழியாட்டி

வடமொழியாட்டி vaḍamoḻiyāḍḍi, பெ. (n.)

   பார்ப்பனத்தி; Brahmin woman.

     “வடமொழி யாட்டி மறைமுறை யெய்தி” (மணிமே.13, 73);.

     [வடமொழி + ஆட்டி. ஆட்டி = பெண்பாலீறு.]

ஈங்கு வடமொழியாட்டி, என்னுஞ்சொல் ஆரியப் பார்ப்பனியைக் குறித்து மணிமேகலையில் வழங்குஞ் சொல்லாகும்.

வடமொழியாளன்

வடமொழியாளன் vaḍamoḻiyāḷaṉ, பெ. (n.)

   பார்ப்பான்; brahmin.

     “வடமொழி யாளரோடு வருவோன் கண்டு” (மணிமே. 5, 40);.

     [வடமொழி + ஆள் → ஆளன். ஆளன் = ஓர் ஆண்பாற் பெயரீறு.]

ஆரியப்பார்ப்பான், கி.பி. 3ஆம் நூற்றாண்டி லெழுந்த மணிமேகலையில் வடமொழியாளன், என்று குறிக்கப்பட்டுள்ளான் (வ.வ.2-21);.

வடமோடி

 வடமோடி vaḍamōḍi, பெ. (n.)

   இலங்கையிலுள்ள தெருக்கூத்து வகையு ளொன்று; a street play normally performed in Srilanka.

     [வட → வடமோடி.]

வடமோதங்கிழார்

வடமோதங்கிழார் vaḍamōtaṅgiḻār, பெ. (n.)

   கழகப்புலவர்; an ancient sangam poet.

புறநானூற்றில் 260-ஆம் பாடலை இயற்றியவர். நிரை மீட்டுவந்த வீரனொருவன் தன் உயிர்விட்ட மாண்பினை சிறப்பித்துக் கூறியுள்ளமையால் இவர்தம் புலமை நன்கு விளங்கும். அகநானூற்றில் 317-ஆம் பாடல் இவர் இயற்றிய பாடலாகும். கொங்குமலரில் குரவ மலருதிர்வது பொன் தராகத் தட்டில் வெள்ளித் துண்டு சொரிவது போலுமென்று இவர் வண்ணித்துள்ளமை இவர்தம் புலமைக்கு சான்றாம்.

     “மாசு விசும்பின் மழைதொழில் உலந்தெனப்

பாக யன்ன பகலிருள் பரப்பிப்

புகைநிற வுருவின் அற்சிரம் நீங்கக்

குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்று

நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும்

முதிராப் பல்லிதழ் உதரப் பாய்ந்தடன்

மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்

பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி

நுண்கோல் அறைகுறைந் துதிர்வன போல

அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து

ஒங்குசினை நறுவீ கோங்கல ருறைப்பத்

துவைத்தெழு தும்பித் தவிரிசை விளரி

புதைத்துவிடு நரம்நன் இம்மென இமிரும்

ஆனே முற்ற காமர் வேனில்

வெயிலவிர் புரையும் வீததை மராஅத்துக்

குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப

வருவேம் என்ற பருவம் ஆண்டை

இல்லை கொல்லென மெல்ல நோக்கி

நினைந்தன மிருந்தன மாசு நயந்தாங்கு

உள்ளிய மருங்கின் உள்ளம் போல

வந்துநின்றனரே காதலர் நந்துறந்து

என்னுழி யதுகொல் தானே பன்னாள்

அன்னையும் அறிவுற வணங்கி

நன்னுதற் பாஅய பசலை நோயே” (அகநா. 317);.

வடம்

வடம்1 vaḍam, பெ. (n.)

   1. பருங் கயிறு; a thick rope.

   2. தேரினை யிழுக்கப் பயன்படும் நீண்டகயிறு; cable, large rope, as for drawing a temple-car.

     “வடமற்றது” (நன்.219. மயிலை.);.

   3. தாம்பு (சூடா.);; cord.

   4. தென்னை, பனை மரமேறவுதவுங் கயிறு (இ.வ..);; a loop of coir rope, used for climbing palm-trees.

   5. மணிவடம் (சூடா.);; string of jewels.

     “வடங்கள் அசையும்படி உடுத்து” (திருமுரு204, உரை);.

   6. வில்லின் நாண் (பிங்.);; bowstring.

   7. சரம், சரப்பளி; strands of a garland, chains of a necklace,

     “இடை மங்கைகொங்கை வடமலைய” (அஷ்டப். திருவேங்கடத்.தந்.39);.

   8. ஒழுங்கு; arrangement in order.

     “தொடங்கற்காலை வடம்பட விளங்கும்” (ஞானா.14,41);

   9. வட்டமாகப் பரவும் ஆலமரம் (சூடா.);; banyan.

     “வடநிழற்கண் ணூடிருந்த குருவே” (தாயு. கருணா.41);.

     [வட்டம் → வடம்.]

த. வடம் → Skt. vata.

நாவலந் (இந்து); தேயத்தின் வடபாகத்தில் வட(ஆல); மரம் மிகுதியாய் வளர்தலின் அத்திசை வடம் எனப்பட்டது.

 vatam (perhaps prākrit for vrita, surrounded covered

என்று மா.வி.அ. குறித்திருத்தல் காண்க.

வடம் = வட்டமாகப் பரவும் ஆலமரம். உருண்டு திரண்ட கயிறு. கமலை (கம்மாலை); உருண்டு திரண்ட பொற்கொடி அல்லது மணிக்கோவை.

வடம் என்னும் தூய தென் சொல்லை வடமொழிச்சொல்லென்று சென்னைப் பல்கலைக் கழக தமிழ் அகரமுதலி குறித்துள்ளது. முற்றிலும் பொருந்தாது. அடிப்படைப் பொருண்மையாகிய வட்டம் என்ற சொல்லினின்று வடம் தோன்றியதறிக. உருண்டு, திரண்ட வட்டப் பொருள் குறித்த சொற்கள், இலக்கியத்திலும், மக்கள் வழக்கிலும், இன்றும் மிகுதியாக வழக்கூன்றியுள்ளன.

மேற்குறித்த கரணியங்களைக் கருத்திற் கொண்டே மொழிஞாயிறு, தமது நூலில் (வ.வ.248-249); வடம் தென்சொல்லென்று நிறுவியுள்ளார்.

 வடம்2 vaḍam, பெ. (n.)

   1. மண்டலம் (அக.நி.); (தொல்.சொல். 402, உரை);; circle, circular form, ring-like shape.

   2. பலகை; plank of wood. பக்கவடம்;

கதவு வடம் (நாஞ்.);.

 வடம்3 vaḍam, பெ. (n.)

   1. கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தும் பருத்த முறுக்குக் கயிறு; thick twisted rope, to haul a heavy object like a temple car.

   2. கழுத்துச் சங்கிலியின் தடித்த சரடு; a string of a gold chain.

இரட்டை வடச் சங்கிலி.

வடம்பி

 வடம்பி vaḍambi, பெ. (n.)

   தான்றிக்காய்; a tree-Terminalia bellerica (சா.அக.);.

வடம்பிடி-த்தல்

வடம்பிடி-த்தல் vaḍambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   வடத்தைப் பிடித்துத் தேரிழுத்தல்; to pull or draw a temple-car by seizing it by its cables or thick ropes.

     [வடம் + பிடி.]

வடம்புலி

 வடம்புலி vaḍambuli, பெ. (n.)

   ஆல்; banyan tree-Ficus bengalensis (சா.அக.);.

வடம்போக்கி

 வடம்போக்கி vaḍambōkki, பெ. (n.)

   வடத்தை இழுத்துச் செல்வதற்குரிய இடம்; a specific location for pulling the thick rope the Temple care.

     [வடம் + போகு → போக்கி.]

வடம்போக்கித்தெரு

 வடம்போக்கித்தெரு vaḍambōkkitteru, பெ. (n.)

   தேர் திரும்புவதற்கு முன், முதற்கண் வடத்தை இழுத்துச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்த தெரு; a street located for conveniently turning the temple car.

     [வடம்போக்கி + தெரு.]

வடயம்

 வடயம் vaḍayam, பெ. (n.)

   நெல்லிக் கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை; cake, as of nelli fruits.

     [வடை → வடையம் → வடயம்.]

வடரம்

வடரம் vaḍaram, பெ. (n.)

   1. தலைச்சீலை; head-dress, turban.

   2. பாய்; mat.

வடராசி

 வடராசி vaḍarāci, பெ. (n.)

   மரவகை; variegated mountain ebony.

வடலி

வடலி vaḍali, பெ. (n.)

   இதரயிட்டம் பனை ஐந்தனுளொன்றான இளம்பனை (G.Tn. D.1.307);; young or immature palmyra tree, one of five idarayittam-panai.

     [மடல் → வடல் → வடலி.]

வடலுறுசிற்றம்பலம்

வடலுறுசிற்றம்பலம் vaḍaluṟusiṟṟambalam, பெ. (n.)

வடலூர் பார்க்க;see vadalur.

     “வடலுறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே.” (அருட்பா.3802);.

     [வடலுறு + சிற்றம்பலம்.]

செ → செத்து → சித்து = கருத்து அறிவு, கருதியதை அடையும் திறம்.

அம்புதல் = குவிதல், கூடுதல்.

அம்பு → அம்பல் → அம்பலம் = கூடும் அவை, அவைக்களம்.

அருட்பேரொளி ஆண்டவரின் திருவருட் செல்வர்கள் கூடுமிடம் இறையருள் ஒருமுகப்பட்டு, அனைவருக்கும் அருளை வாரிவழங்குமிடமே, வடலுறு சிற்றம்பலம் எனலாம்.

வடலூரார்

 வடலூரார் vaḍalūrār, பெ. (n.)

வள்ளலார் பார்க்க;see vallalar.

கொலைபுலை தவிர்த்தலே வடலூரார் நெறி (இ.வ.); இறவாப் (மரணமிலா); பெருவாழ்வு நெறியை வடலூரார் இம்மன்பதையில் நிலைநிறுத்தினார் (இ.வ.);.

மறுவ. சிதம்பரம் இராமலிங்கம்

     [வடல் + ஊர் + ஆர் – வடலூரார்.

     ‘ஆர்’ பெருமைப் பொருட் பெயரீறு.]

வடலூர்

வடலூர் vaḍalūr, பெ. (n.)

கி.பி.1865இல், வள்ளலாரால் பாடல் பெற்றதும், அனைத்து நெறிக்கழகம் (சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞான சங்கம்); அமைக்கப்பெற்றதுமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்: Vadalor. a fabulous historical place, canonized by va/a/ar, the found of aniattu-neri-k-kalagam Samarasa-Sutta-Sapmārga-Sattiyañāna Sangam); located in Kadalor dt.

     “வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே” (அருட்பா.4482); வடலூரில் தருமச்சாலையை 23.05.1867-இல் வள்ளலார் நிறுவினார் (இ.வ.);.

மறுவ. வடல்வாய், வடலுறு சிற்றம்பலம்.

     [வடல் + ஊர்.]

வடலூர், அருட்பேரொளி ஆண்டவரின் திருவருளின்பத்தை, மன்பதைக்கு எஞ்ஞான்றும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும், வள்ளலார்தம் அருட்பாக்களில் பார்வதிபுரம், வடல், வடல்வாய், சித்திபுரம், ஞானசித்திபுரம், உத்தரஞானசித்திபுரம், உத்தரஞான சிதம்பரம் முதலான பெயர்களில் அழைக்கப்படும் பாடல் எண்கள் வருமாறு:- 3790, 3802, 4239, 4242, 4482, 3690, 3585, 3796, 4636, 3981, 4046-4056.

அற்றார் அழிபசி தீர்த்தலும்- அறவுணவுச் சாலையும் (சத்திய தருமச்சாலை); :-

அற்றார் அழிபசி தீர்த்தலே குமுகாயத்தில் உயர் பேரறமென்பது, வள்ளலார்தம் பேரருட்கொள்கை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், பசியினால் இளைத்த ஏழைகளைக் கண்டுளம் பதைத்து அவர்தம் முக வாட்டத்தைப் போக்கிடவும், இறையருள் நாட்டத்தை ஊட்டுதற்பொருட்டும், 1867 விடை (வைகாசி);த் திங்கள் 11-ஆம் நாள் அறவுணவுச்சாலையை (சத்திய தருமச்சாலை); நிறுவினார். வடலூரின்கண் அமைந்துள்ள அறவுணவுச் சாலையில், 23.05.1867-இல் மூட்டிய தீ, ஏதுமற்ற எதிலிகளின் வயிற்றுப் பசியை, இன்றுவரை, போக்கிய வண்ணம் உள்ளது.

மனிதர்களின் சிற்றம்பலமாம், நெற்றிப் பொட்டில் (புருவமய்யத்தில்);. அருளொளிப் பிழம்பாக இறைவன் இலங்குவதால், எவரும் பசியோ டிருத்தலாகாது என்னும் பொதுநோக்கில், வடலூரில் வள்ளலாரால் அறவுணவுச் சாலை நிறுவப்பட்டது. இவ்வறவுணவுச்சாலையிலேயே வள்ளலார் 1867-1870 வரை வீற்றிருந்தார். மெய்யறிவுப் பேரவை (சத்தியஞான சபை); 25.01.1872-இல் எல்லாம் வல்ல இறைவனைப் பேரொளிப் பிழம்பாக கண்ட வள்ளலார், ஒளி (அருட்பெருஞ்சோதி); வழிபாட்டிற்கென, மெய்யறிவுப் பேரவையை (சத்தியஞானசபை);1872-ஆம் ஆண்டு சுறவத் திங்கள் 13-ஆம் நன்னாளில், (பூசம்); அருட்பேராளி வழிபாட்டினை, வடலூரில் முதன்முதலாகத் தொடங்கி அருட்பேரொளிக் காட்சியினை, அனைவரும் கண்டு களிக்குமாறு செய்தார்.

இயற்கையின் விளக்கமே, வடலூரிலுள்ள மெய்யறிவுப் பேரவை (சத்தியஞானசபை); என்பது வள்ளலார்தம் அருள் விளக்கமாகும். அனைத்து மனிதரிடத்தும் அகத்தே ஒளிரும் இறையொளிக் காட்சியின் புறவெளிப்பாடே, மெய்யறிவுப் பேரவை (சத்தியஞானசபை); எனின், மிகையன்று.

ஆதனுள் ஒளிரும் அருட்பேரொளியை மறைத்துக்கொண்டிருப்பது, ஆணவக்கூறுகளாம் வெவ்வேறு நிறமுள்ள எழுதிரைகளான படலங்களே என்பது வள்ளலார்தம் கருத்தாகும்.

மாந்தரிடமுள்ள, அறியாமையாகிய திரைகளை அகற்றுவதே. இப்பிறவியின் நோக்கம். இதற்காகவே இப்பிறவியை இறைவன் நமக்களித்துள்ளான் என்பது வள்ளலார்தம் கொள்கையாகும். அறிவின்மைத் திரையை நாம் இப்பிறவியில் அகற்றிவிட்டால், ஆதனுள்ளத்தே அமைந்த மெய்யறிவுத் திரையில், அருட் பேரொளி

ஆண்டவன் விளங்கித் தோன்றுவதை, அனைவருக்கும் குறிப்பால் உணர்த்துவதை வெளிப்படையாக, விளக்கும் பொருட்டே மெய்யறிவுப் பேரவை (சத்தியஞான சபை);யை, வடலூரில் வள்ளலார் தோற்றுவித்தார். என்பதே சாலப் பொருந்தும். வள்ளலார் தமது அகத்தே பெற்ற அருட்பேரொளிக் காட்சினை, புறத்தே, வடலூரில் மெய்யறிவுப் பேரவையின் வாயிலாக, இன்றும் காட்டிய வண்ணம் உள்ளார்.

     “திருந்தும் என் உள்ளத் திருக்கோயில் கண்டேன்” (அருட்பா. 3796);.

     “சத்திய ஞானசபை என்னுள் கண்டனன், சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்” (அருட்பா.4909); முதலான வள்ளலாரின் அருண்மொழிகள், மெய்யறிவுப் பேரவையின் அருளொளிக் காட்சியினை விளக்கும் வண்ணம் உள்ளது.

வடல்

 வடல் vaḍal, பெ. (n.)

   ஆலமரம் (மலை);; banyan tree.

     [வடம் → வடல்.]

வடவனம்

வடவனம் vaḍavaṉam, பெ. (n.)

   மரவகை; a species of tree.

     “வடவனம் வாகை” (குறிஞ்சிப். 67);.

வடவனலம்

வடவனலம் vaḍavaṉalam, பெ. (n.)

வடந்தைத்தீ பார்க்க;see vadandai-t-ti

     “கடுகிய வடவன லத்தினை வைத்தது” (கலிங். 402);.

     [வடக்கு + அனல் + அம். அம் = பெருமைப் பொருட் பின்னொட்டு.]

வடவனல்

வடவனல் vaḍavaṉal, பெ. (n.)

வடந்தைத்தீ பார்க்க;see Vagandai-t-ti.

     “வெள்ளத்திடை வாழ் வடவனலை” (கம்பரா. தைலமா.86);.

     “அக்கடலின்மீது வடவனல் நிற்கவில்லையோ” (தாயு.பரிபூர.9);.

     [வட + அனல். அனல் = தீ. உல் → உல → .உலை. உல் → அல் → அன் → அனல். வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் வடதிசை நெருப்பு.]

வடவரை

வடவரை vaḍavarai, பெ. (n.)

   1. மாமேரு; big Mt. meru.

     “வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த” (உத்தரரா. தோத்திர. 15);.

   2. மந்தர மலை; Mt. Mandara.

     “வடவரை மத்தாக” (சிலப்.17, முன்னிலைப்பரவல்,1);.

     [வட + வரை.]

வடவர்

வடவர்1 vaḍavar, பெ. (n.)

   வடபுலத்தார்; northerners.

     “வடவர் வாடக் குடவர் கூம்ப” (பட்டினப் 276);.

     [வடல் → வடலர் → வடவர்.]

 வடவர்2 vaḍavar, பெ. (n.)

   வடதிசையைச் சார்ந்த குழுக்கள்; committees of northern directions.

     ‘வடவர் வாடக் குடவர் கூம்பத்தென்னவன் திறல் கெட’ என்று பட்டினப்பாலையிற் குறிப்பிடப்பெறும். இவர்கள் அருவா நாட்டிற்கு வடக்கே வாழ்ந்த வீரக் குடி மக்களாவர்.

     [வடலர் → வடவர்.]

வடவர்மகன்

 வடவர்மகன் vaḍavarmagaṉ, பெ. (n.)

   வடவர்களின் வழி வந்தவன்; descendant of northerners.

     ‘வடவர் மகன்’என்பதன் மரூஉ

     ‘வடமன்’ என்பதாகும். பார்ப்பனர்களில் ஒரு கிளைக்குடியினர்

     ‘வடவர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

வடவர்மரம்

 வடவர்மரம் vaḍavarmaram, பெ. (n.)

   மரத்தின் உச்சிப்பாகம்; main royal mast.

வடவளம்

வடவளம் vaḍavaḷam, பெ. (n.)

   வடநாட்டில் விளைந்த பண்டம்; produce of the northern country.

     “வடவளந் தரூஉ நாவாய்” (பெரும்பாண். 320);.

     [வட + வள் + அம் → வடவளம்.]

வடவாக்கினிப்பால்

 வடவாக்கினிப்பால் vaḍavākkiṉippāl, பெ. (n.)

   ஒருவகை மருந்து; a kind of medicine (சா.அக.);.

வடவாசுதர்

 வடவாசுதர் vaḍavācudar, பெ. (n.)

   அசுவினி தேவர் (யாழ்.அக.);; the Asvins.

வடவானசாறு

 வடவானசாறு vaḍavāṉacāṟu, பெ. (n.)

   இரும்பின் ஊறலைப் போக்கும் ஒர் மூலிகைச்சாறு; the juice of a herb that remove rust from iron.

     [வடிவான + சாறு.]

தெள் → தெறு → தெற்று = தெளிவு.

தெற்று → தெறு → தேறு → தேறல் = தெளிந்த சாறு, கள், தேன், காய், கனி போன்றவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட தெளிநீர்.

தேறு → சாறு = வடிகட்டிய நீர்.

இரும்பின்மேல் படர்ந்துள்ள அழுக்கு, துரு போன்றவற்றைப் போக்கும் மூலிகைச் சாறே, வடவான சாறு என்றழைக்கப்பட்டது.

வடவானலம்

வடவானலம் vaḍavāṉalam, பெ. (n.)

வடந்தைத்தீ பார்க்க;see vadandai-t-ti.

     “மண்ணுமின்றி வடவானலமு மின்றி.” (தக்கயாகப்.408);.

     [வடவை + அனல் + அம்.]

வடவாமுகம்

வடவாமுகம் vaḍavāmugam, பெ. (n.)

   1. வடந்தைத்தீ பார்க்க;see vadandai-tti.

     “வடவாமுகத் தழலொடே” (பிரபோத. 19.1);.

   2. நிரயம் (உரி.நி.);; the nether region.

வடவாயிற்செல்வி

 வடவாயிற்செல்வி vaḍavāyiṟcelvi, பெ. (n.)

வடக்குவாசற்செல்வி (நாஞ்); பார்க்க;see Vadakku-väsar-celvi.

     [வடக்குவாசல் → வடவாயில் + செல்வி.]

     ‘வடக்குவாச்சி’ (கொ.வ.);.

வடவிருக்கம்

 வடவிருக்கம் vaḍavirukkam, பெ. (n.)

   ஆல மரம்; banyan tree-Ficus bengalensis (சா.அக.);.

வடவீதி

 வடவீதி vaḍavīti, பெ. (n.)

   வடபாதி (நாஞ்.);; the northern half.

வடவு

வடவு vaḍavu, பெ. (n.)

   மெலிவு; fatigue, weak.

     “ஆறாத வடவாற” (தக்கயாகப். 557);.

வடவெளிச்சத்தூலக்கட்டு

 வடவெளிச்சத்தூலக்கட்டு vaḍaveḷiccattūlakkaḍḍu, பெ. (n.)

   கூரை அமைப்பில் முக்கோணச் சாய்வாயமைந்த ஒருவகை அமைப்பு; triangle-shaped roof.

வடவேங்கடம்

 வடவேங்கடம் vaḍavēṅgaḍam, பெ. (n.)

   திருப்பதி மலை; the Tirupadi hills, as in the northern part of the Tamil country.

     “வடவேங்கடந் தென்குமரி யாயிடை” (தொல். பாயி.);.

     [வடக்கு + வேங்கடம்.]

தமிழ் கூறும் நல்லுலகம், வடவேங்கடம் வரை பரவியிருந்த பான்மையைத் தொல்காப்பியப் பாயிரம் புலப்படுத்துகிறது.

வடவேர்

 வடவேர் vaḍavēr, பெ. (n.)

   வடக்கே ஒடும் வேர்; root running towards north.

     [வட + வேர்.]

வடவை

வடவை vaḍavai, பெ. (n.)

   1. பெண் குதிரை (பிங்.);; mare.

   2. மகளிர்சாதி மூன்றனுள், குதிரையினத்துப்பெண் (கொக்கோ.3,6);.

   3. வடந்தைத்தீ (பிங்.); பார்க்க;see vadandai-t-ti.

   4. அடிமைப்பெண் (யாழ்.அக.);; slave-girl.

   5. எருமை (பிங்.);; buffalo.

   6. பெண்யானை (பிங்.);; female elephant.

     [வடம் → வடவை = வடதிசை நெருப்பு (Auroro borealis);.]

வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் ஊழித்தீ.

     “வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து” (தனிப்பா);.

வடவனல் = வடவை.

     “அக் கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ” (தாயு.பரிபூர.9);. வடவனலம் = வடவை.

     “கடுகிய வடவன லத்திடை வைத்தது” (கலிங்.402);.

வடந்தை = வடக்கிலுள்ளது. வடந்தைத்தீ = வடவை.

     “சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்” (காஞ்சிப்பு. இருபத்.384);.

உத்தர மடங்கல் = வடவை (திவா.); உத்தரம் = வடக்கு.

மடங்கல் = ஊழித்தீ.

உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ (பி.);

பண்டைத் தமிழர் சுற்றுக் கடலோடிகளா (circumnavigators);யிருந்தமையால், வடமுனையில் ஒரோவொருகால் தோன்றும் மின்னொளியைக் கண்டு அதற்கு வடவை அல்லது வடவனல் எனப் பெயரிட்டிருந்தனர். குமரிக்கண்டத்திற் பல பேரழிவுகள் நேர்ந்ததினால், ஊழியிறுதியழிவிற்கு அவ் வடவையே காரணமென்றுங் கருதினர்.

தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்றுமேனும், பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது.

     “Aurora, n.Luminous atmospheric (prob.electrical); phenomenon radiating from earth’s northern (borealis); or southern (australis); magnetic pole” என்று COD கூறுதல் காண்க.

வடவர் வடவை என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, வடபா என்னும் அதன் வடமொழி வடிவிற்குப் பெண்குதிரை என்று பொருளிருத்தலால், அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி வடபாக்னி என்றும் வடபா முகாக்னி என்றும் பெயரிட்டு, பெண்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று பொருளும் விரித்துவிட்டனர். அக்கதை வருமாறு:

கிருதவீரியன் மக்கள், பிருகு முனிவர் ஈட்டிவைத்த பெருஞ்செல்வத்தைக் கவரவேண்டி அம் முனிவரின் மக்களையும் பேரப் பிள்ளைகளையுங் கருநிலையிலுங் கொன்றதினால், அக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு பெண் தன் கருவைத் தன் தொடையில் மறைத்து வைத்திருந்து, அது பிறந்தபின் ஒளர்வ எனப் பெயரிட்டாள். (ஊரு + தொடை. ஒளர்வ = தொடையிற் பிறந்தவன்);. அவ் வாண்பிள்ளை பெரியவனான பின், தன் தந்தைமாரைக்

கொன்றவரைப் பழிவாங்கும் பொருட்டுத் தவஞ்செய்ய, அத்தவத்தினின்று உலகையே அழித்துவிடத்தக்க ஒரு பெருந்தீ கிளர்ந்தெழுந்தது. அதைக் கண்டு அவன் முன்னோர் அஞ்சி அதைக் கடலில் இட்டுவிடுமாறு கட்டளையிட, அவனும் அதற்கிணங்கி அங்ஙனமே இட்டு விட்டான். அது ஒரு பெண்குதிரைமுக வடிவு கொண்டு அங்கு தங்கிற்று.

மா.வி.அ. இக் கதையையும் வரைந்து, வடபாக்னி என்னுஞ் சொற்கு,

     “mare’s fire, ‘submarine fire or the fire of the lower regions (fabled to emerge from a cavity called the “mare’s mouth’ under the sea at the South Pole”);

என்று விளக்கமுங் கூறியுள்ளது.

மேலையர் தமிழைக் கல்லாமையால் விளையும் தீங்கு இதனால் வெளியாகின்றது.

வடவைத்தீ

வடவைத்தீ vaḍavaittī, பெ. (n.)

வடந்தைத் தீ பார்க்க;see vadandai-t-ti.

     “வடவைக் கனன்மாவும்” (தக்கயாகப். 694);.

     [வடவை + கனல். குல் → குன் → கன் → கனல்.]

வடதிசையிலுள்ள ஊழித்தீ.

 வடவைத்தீ vaḍavaittī, பெ. (n.)

வடந்தைத் தீ பார்க்க;see vadandai-t-ti.

     “சுடர்ந்தெரி வடந்தைத்தீயும்” (காஞ்சிப்பு. இருபத்.384);.

மறுவ. ஊழித்தீ

     [வடவை + தீ.]

வடாகரம்

 வடாகரம் vaṭākaram, பெ. (n.)

   கயிறு (யாழ்.அக.);; rope.

வடாது

வடாது vaṭātu, பெ. (n.)

   1. வடக்குள்ளது; that which is in the north.

     “வடாஅது பனிபடு நெடுவரை” (புறநா.5);.

   2. வடக்கு; north.

     “வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி” (பாரத.பதின்மூன்று. 80);.

     [வட → வடாது.]

வடாம்

வடாம் vaṭām, பெ. (n.)

வடகம்1 பார்க்க;see vadagam.

வடாரகம்

 வடாரகம் vaṭāragam, பெ. (n.)

   கயிறு (இலக்.அக.);; string, rope.

வடி

வடி1 vaḍidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒழுகுதல்; to drip, trickle, as water.

சீழ் வடிகின்றது.

   2. நீர் முதலியன வற்றுதல்; to be diminished, as water in a river, to flow back, ebb, as tide. =வடியாத பவக்கடலும் வடிந்து” (அஷ்டப். திருவரங். கலம், 93);.

   3. திருந்துதல்; to be perfected, as pronunciation.

     “வடியா நாவின்” (புறநா.47);.

   4. தெளிதல்; to be clear, as sound.

     “வடிமணி நின்றியம்ப” (பு.வெ.10, 14 பக்.116);.

   5. அழகு பெறுதல்; to become handsome.

     “வடுவின்று வடிந்த யாக்கையன்” (புறநா. 180);.

   6. நீளுதல் (சூடா.);; become long.

     “குழைவிரவு வடிகாதா” (தேவா.1091,1);.

     [வழி → வடி – ழ → ட மெய்த் திரிபு (ஒ.நோ.); குழல் → குடல். புழல் → புடல்.]

 வடி2 vaḍidal,    4 செ.கு.வி. (v.i.)

   வீக்கம் வாங்கல்; diminishing of swelling pus etc.

 வடி3 vaḍittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. வடியச் செய்தல்; to cause to flow out;

 to shed, as tears;

 to drain.

     “கட்புனல் வடித்து”‘(தனிப்பா. 351,73);.

   2. வடிகட்டுதல்; to strain, as conjee from cooked rice, to filter.

     “மற்றுமொருகால் வடித்தெடுத்து” (தனிப்பா.i 182,5);.

   3. பிழிதல்; to squeeze out.

     “பன்றிக் கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால்” (நாலடி, 257);.

   4. தயில மிறக்குதல்; to distil, as oil.

     “கடத்துற வடி” (தைலவ.தைல.116);.

   5. திருத்தமாகச் செய்தல்; to refine, polish, to perfect.

     “வானுட்கும் வடிநீண் மதில்” (புறநா. 18);,

   6. சாரமான சொல்லா லமைதல்; to express in choice language.

     “வாயினால் வடித்த நுண்ணூல்” (சிவக.271);.

   7. வயமாக்குதல் (சூடா.);; to win over, to bring under control, to influence.

   8. பழக்குதல்; to tame, train as wild elephants.

     “கதிக்குற வடிப்போர் கவின் பெறுவீதியும்” (மணிமே. 28, 61,

   9. பயிலுதல்; to practice.

     “வார்சிலை வடிப்ப வீங்கி” (சீவக. 1450);

   10. சோறு சமைத்தல் (கொ.வ.);; to cook, as rice.

   11. கூராக்குதல் (சங்.அக.);; to sharpen.

     “வடித்தாரை வெள்வேல்” (சீவக. 2320);.

   12. வாரிமுடித்தல் (நற்.23);; to comb and fasten, as hair.

   13. தகடாக்குதல்; to flatten out.

     “இரும்பு வடித்தன்ன மடியா மென்றோல்” (பெரும்பாண்.222);.

   14. நீளமாக்குதல்; to lengthen, to elongate.

   15. யாழ் நரம்பை உருவுதல்; to stroke with the fingers over, as the string of a lute in playing.

     “வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்” (பொருந.23);.

   16. அழகுபடுத்தல், அணி செய்தல்; to equip, as a horse, to decorate.

     “வடித்த போத்தொடு” (சீவக. 1773);

   17. ஆராய்தல்; to investigate, examine, to research.

     “வடித்த நூற்கேள்வியார்” (சீவக. 1846);.

   18. ஆராய்ந்தெடுத்தல்; to select, choose.

     “மாரனிக்கு வில் வளைத் தலர்க்கணை வடித்து” (பிரபோத. 30, 59);.

   19. கிள்ளியெடுத்தல்; to pluck, nip.

     “கிளிபோல் காய

கிளைத்துணர் வடித்து” (அகநா. 37);.

     [வழி → வடி – ழ → ட மெய்த் திரிபு (ஒ.நோ.); குழல் → குடல். புழல் → புடல்.]

 வடி4 vaḍittal,    11 செ.கு.வி. (v.i.)

வடிக்கு –, பார்க்க;see vadikku.

 வடி5 vaḍi, பெ. (n.)

   1. தேன்; honey.

     “வடிமலர் வள்ளம்” (சூளா. இரத. 45);.

     “வடிகொள் பொழிலின்” (தேவா. 116, 3);.

   2. கள் (பிங்.);; toddy.

   3. நீளுகை (அரு.நி.);; lengthening, elongation.

     [வழி → வடி.]

 வடி6 vaḍi, பெ. (n.)

   1. வடித்தெடுக்கை; filtration, distillation.

     “வடியுறு தீந்தேறல்” (பு.வெ.1,19);.

   2. கூர்மை (நாமதீப.);; sharpness.

     “வடியாரு மூவிலைவேல்” (தேவா.8306);

   3. வாரி முடிக்கை; combing and fastening, as of the hair.

     “வடிக்கொள் கூழை யாயமொடு” (நற்.23);.

   4. ஆராய்ச்சி, துப்பறிகை; research, scrutiny, investigation.

     “வடியமை” (சீவக. 1685, உரை);.

   5. வடிகயிறு (யாழ்.அக.); பார்க்க;see vadi-kayiru.

   6. கயிறு (யாழ்.அக.);; rope.

   7. நாய் (சது.);; dog.

     [வழி → வடி (மு.தா.பக்.109.);.]

 வடி7 vaḍi, பெ. (n.)

   1. மாம்பிஞ்சு; tender, green mango.

     “நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த” (பெரும்பாண்.309);.

   2. பிளவுபட்ட மாம்பிஞ்சு; piece of green mango, cut longitudinally in two.

     “வடியன்ன வுண்கட்கு” (கலித். 64);.

     [வடு → வடி.]

 வடி8 vaḍi, பெ. (n.)

   காற்று; wind.

     “வடிபட வியங்கும் வண்ணக் கதலிகை” (பெருங். மகத. 3, 36);.

     [வளி → வடி.. வளி = வளைந்துவீசுங் காற்று.]

 வடி9 vaḍi, பெ. (n.)

   வடிவம்; form, shape.

     “கரியது வடிகொடு” (தேவா. 815, 5);.

     [வடிவு → வடி.]

 வடி1 vaḍi, பெ. (n.)

   சிறுதடி (நாஞ்.);; small cane or stick.

   தெ. படித;   க. படி;ம. வடி.

வடி-த்தல்

 வடி-த்தல் vaḍittal, செ.கு.வி. (v.i.)

   இரும்புச் கருவிகளைக் கூர்படுத்துதல்; to make the weapons sharp by filing.

கத்தியை வடித்துக்கொடு (இ.வ.);.

     [வள்-வளி-வடி]

வடிகஞ்சி

வடிகஞ்சி vaḍigañji, பெ. (n.)

   வடித்த கஞ்சி (பதார்த்த.1389);; conjee, rice water strained in cooking.

     [வடி + கஞ்சி.]

வடிகட்டி

 வடிகட்டி vaḍigaḍḍi, பெ. (n.)

   நீர்ம மட்டுமே பெறுதற்கேற்ற சல்லடை; strainer.

     [வடிகட்டு → வடிகட்டி.]

மண்டி மகுளி தூசுதுப்பட்டையை நீக்கி நீர்ம மொன்றை மட்டும் பெறுதற்குரியது வடிகட்டி.

வடிகட்டின

 வடிகட்டின vaḍigaḍḍiṉa, பெ.அ. (adj.)

   சுத்தமான, முழுமையான; down right.

     ‘இது வடிகட்டின பொய்’.

வடிகட்டு

வடிகட்டு1 vaḍigaḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வடித்தல்; to strain; to filter.

     “நீரை வடிகட்டி யெடு”.

   2. சாரத்தைத் திரட்டுதல்; to epitomise;

 to give the purport of.

     [வடி + கட்டு.]

ஒரு கலத்திலுள்ள நீரை ஊற்றும்போது அதிலுள்ள மண்டியைத் தடுத்தற்குக் கலத்தின் வாயில் துணிகட்டுதலாம்.

 வடிகட்டு2 vaḍigaḍḍudal, பெ. (n.)

__,

   5 செ.கு.வி. (v.i.);

   கஞ்சியை வடிகட்டுதல்; filtering of gruel.

     [வடி + கட்டு.]

வடிகம்

 வடிகம் vaḍigam, பெ. (n.)

   குளிகை (மாத்திரை);; pill, it is usually prepared by reducing the required drugs in the fine powder, and then grinding them with the juice or decoction, as the case may be, into a paste of wax consistency, then pills are made with hand.

வடிகயிறு

வடிகயிறு vaḍigayiṟu, பெ. (n.)

   குதிரையின் வாய்க்கயிறு; rein.

     “வடிகயிறாய்ந்து” (சீவக. 794);.

     [வடி + கயிறு.]

வடிகலசம்

 வடிகலசம் vaḍigalasam, பெ. (n.)

   வடிகட்ட பயன்படும் பாத்திரம்; vessel used to collect the filtered substance.

     [வடி + கலசம், கலசம் = குடம்.]

வடிகாது

வடிகாது vaḍikātu, பெ. (n.)

   தொங்குந் துளைச்செவி; perforated ear lengthened by weighting the earlobes.

     “குழைவிரவு வடிகாதா” (தேவா. 1091,1);.

     [வடி + காது.]

பாண்டி நாட்டுப் பழநாகரிக மகளிர்போல் கற்றைகள் தமிழப் பெண்டிரும் காது வளர்த்துள்ளனர்.

 வடிகாது vaḍikātu, பெ. (n.)

   துளை பெரிதாக்கப்பட்ட கீழ்க்காது; round holed earlobe.

மறுவ துளைக்காது, தொள்ளைக்காது

     [வடி+காது]

காது வளர்த்து தண்டட்டி அணிந்து கொள்வது தமிழரின் தொன்முது வழக்கம். புத்தர், மகாவீர மட்டுமன்றி எகுபதியரும் துளைக்காது கொண்ட வராக இருந்தனர்.

வடிகால்

 வடிகால் vaḍikāl, பெ. (n.)

   நீரை வடியவிடுங் கால்வாய்; outlet, a channel to drain water.

     [வடி + கால். கால் = நீண்டுசெல்லும் நீர்க்கால்.]

வடிகால்குழாய்

 வடிகால்குழாய் vaḍikālkuḻāy, பெ. (n.)

   சுதைமா வினால் கட்டப்பட்ட குழாய், இது தண்ணீரை வெளியேற்றவும், உள் கொணரவும் பயன்படும்; a pipe used for conveying and draining of water.

     [வடிகால் + குழாய்.]

வடிகால்நிலம்

 வடிகால்நிலம் vaḍikālnilam, பெ. (n.)

   வெள்ளப் பெருக்கை வெளியேற்றுதற்குரிய நிலம்-நிலப்பரப்பு; outlet land.

     [வடிகால் + நிலம்.]

வடிகால்வாய்

 வடிகால்வாய் vaḍikālvāy, பெ. (n.)

வடிகால் பார்க்க;see Vadi-kāl.

வடிகொண்டசூரணம்

 வடிகொண்டசூரணம் vaḍigoṇḍacūraṇam, பெ. (n.)

   வடிகட்டிய சூரணம்; filtered or sieved powder.

வடிக்கதிர்

 வடிக்கதிர் vaḍikkadir, பெ. (n.)

   நூல் முறுக்குங் கருவி (யாழ்.அக.);; spindle, instrument for twisting threads.

     [வடி + கதிர். குதிர் → கதிர். வடிகதிர் = நூல் நூற்கும் கருவி.]

வடிக்கயிறு

வடிக்கயிறு vaḍikkayiṟu, பெ. (n.)

வடிகயிறு பார்க்க;see vadi-kayiru.

     “வடிக்கயிறு முட்கோல் பற்றிய தடக்கையுள பாகு” (கந்தபு. சூரபன். வதை. 218);.

     [வடி + கயிறு.]

வடிக்கருவி

 வடிக்கருவி vaḍikkaruvi, பெ. (n.)

   வடிக் கதிர் (யாழ்.அக.); பார்க்க; vadi-k-kadir.

     [வடி + கருவி.]

வடிக்கு-தல்

வடிக்கு-தல் vaḍikkudal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வடியச் செய்தல்; to filter.

   2. களங்க மறுத்தல்; to strain out.

   3. காய்ச்சி இறக்குதல்; to distil.

     [வடி → வடிக்கு.]

வடிசாந்து

வடிசாந்து vaḍicāndu, பெ. (n.)

   நற்சாந்து (யாழ்.அக.);; superior fragrant unguent.

     [வடி2 + சாந்து.]

வடிதங்கம்

வடிதங்கம் vaḍidaṅgam, பெ. (n.)

   தூய்மை யாக்கிய பொன் (யாழ்.அக.);; pure gold.

     [வடி2 + தங்கம்.]

ஒருகா. பசும்பொன்.

வடிதங்கொடி

 வடிதங்கொடி vaḍidaṅgoḍi, பெ. (n.)

   கொடி மாதுளை; creeper-pomegranate.

வடிதட்டு

வடிதட்டு1 vaḍidaḍḍu, பெ. (n.)

   சோற்றிலிருந்து கஞ்சியை வடித்தெடுக்க உதவும் வகையில், செம்பாதிப் பரப்பில் மட்டும் துளைகளை கொண்ட தட்டு; a shallow metal round plate with partial perforation used to strain cooked rice.

     [வடி + தட்டு.]

     [P]

 வடிதட்டு2 vaḍidaḍḍu, பெ. (n.)

   சிப்பற்றட்டு வகை (இ.வ.);, அரிகலம்; a kind of colander.

 வடிதட்டு vaḍidaḍḍu, பெ. (n.)

   கஞ்சி வடிக்கட்ட பயன்படும் தட்டு; perforated plate use to strain the gruel from the cooked rice.

மறுவ: சிப்புல்தட்டு

     [வடி+தட்டு]

வடிதமிழ்

 வடிதமிழ் vaḍidamiḻ, பெ. (n.)

   தெளி தமிழ் (யாழ்.அக.);; choice Tamil.

வடிதயிர்

வடிதயிர் vaḍidayir, பெ. (n.)

   கட்டித்தயிர்; thick mass of curds.

     “வைத்த நெய்யுங் காய்ந்த பாலும் வடிதயிரு நறுவெண்ணெயும்” (திவ்.பெரியாழ். 2, 2 2);.

     [வடி + தயிர்.]

முதற்பொருளாம் வடிவைக் குறிக்காது காலப்போக்கில் வடிவின் அமைதியாய்த் திகழும் அழகைக் குறிக்கலாயிற்று. சிலர் பெயரே வடிவென வழங்குதலறிக.

     “வடிவான் மருட்டுதல்” என்பது வடிவழகால் மயக்குதல் என்பதாம்.

வடிக்கப்பட்டவேல் அழகாக விளங்குவதுடன், கூர்மையும் கொண்டிருத்தலால், அதற்குக் கூர்மைப் பொருளும் உண்டாயிற்று.

வடித்தண்ணீர்

 வடித்தண்ணீர் vaḍittaṇṇīr, பெ. (n.)

   நாற்றங் காலில் நீர் கட்டி பின் வடிக்கப்பட்ட தண்ணீர்; drained water from seed-bed after properly irrigating for a while.

வடித்தநீர்

 வடித்தநீர் vaḍittanīr, பெ. (n.)

   வடிநீர்; distilled water-Aque distilata.

வடித்திறு-த்தல்

வடித்திறு-த்தல் vaḍittiṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   தெளியவைத்து இறுத்தல்; to decant.

     [வடி → வடித்து + இறு.]

வடித்துக்கொட்டு-தல்

வடித்துக்கொட்டு-தல் vaḍiddukkoḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சமைத்துப் படைத்தல்; to cook and serve.

     [வடி → வடித்து + கொட்டு.]

வடித்துக்கொள்ளல்

 வடித்துக்கொள்ளல் vaḍittukkoḷḷal, தொ.பெ. (vbl.n.)

   கருக்கு நீர் எட்டில் ஒன்றாய் உருவாக்குதல்; preparing decoction by boiling it down to one eight.

     [வடித்து + கொள்ளல்.]

வடித்தெடு-த்தல்

வடித்தெடு-த்தல் vaḍitteḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

வடித்திறுத்தல் பார்க்க;see vadi-t-tiru.

     [வடி → வடித்து + எடு.]

கல், மண், தூசு துப்பட்டை, ஈயெறும்பு முதலிய பொருள்களோடு கலக்க நேர்ந்த உண்டற்குரிய நீரையும் நீர்ப்பொருளையும், அவற்றை நீக்கும் பொருட்டு துணிகட்டி வடித்தெடுப்பதும் பனஞ்சாறு அல்லது பனை நீரை, இங்ஙனம் வடித்தெடுத்து பருகுவதும் இன்றும் கண்கூடு.

வடிபலகை

 வடிபலகை vaḍibalagai, பெ. (n.)

   சோறு வடிக்கப் பயன்படும் சிறு மரப்பலகை (நெல்லை.);; a small flat piece of wood, used as a strainer in cooked rice.

     [வடி + பலகை.]

வடிபாத்திரம்

 வடிபாத்திரம் vaḍipāttiram, பெ. (n.)

   மருந்தெண்ணெய் வடிப்பதற்கு வேண்டி பயன்படுத்தும், வாயகன்ற மட்பாண்டம் அல்லது சட்டி; wide mouthed eartheren ware to hold or collect the medicated oil to be filtered.

வடிபானை

வடிபானை vaḍipāṉai, பெ. (n.)

   1. சோறாக்குதற்கான மட்கலம்; vessel for cooking rice.

   2. காய்ச்சுஞ் சரக்கின் ஆவியைக் குளிரச்செய்து நீர்மநிலையில் வடிக்கும் பானை (வின்.);; condenser in a distilling apparatus;pot which receives the distilled liquid.

     [வடி + பானை.]

வடிப்பான்

 வடிப்பான் vaḍippāṉ, பெ. (n.)

   நீர்மங்களிலிருந்து கசடுகளை வடித் தெடுக்குங் கருவி; filter.

வடிப்பு

வடிப்பு1 vaḍippu, பெ. (n.)

   1. வடிக்கை (யாழ்.அக.);; straining filtering.

   2. தெரிந்தெடுக்கை; selecting, choosing.

   3. இருப்புக் கம்பி (யாழ்.அக.);; iron rod.

 வடிப்பு2 vaḍippu, பெ. (n.)

   காய்ச்சியிறக்குதல்; distillation.

 வடிப்பு3 vaḍippu, பெ. (n.)

வடஇந்தியா (வின்.);

 northern india.

வடிப்போர்

வடிப்போர் vaḍippōr, பெ. (n.)

   யானை முதலியன பயிற்றுவோர்; tamers, trainers, as of elephants.

     “புதுக்கோள் யானையும்… பொற்றார்ப் புரவியுங் கதிக்குற வடிப்போர்” (மணிமே. 28, 61);.

வடிமணி

வடிமணி vaḍimaṇi, பெ. (n.)

   தெளிந்த ஓசையுள்ள மணி; clear sounding bell.

     “வடிமணி நின்றியம்ப” (பு.வெ.10, 14 பக். 116);.

வடிமருந்து

 வடிமருந்து vaḍimarundu, பெ. (n.)

   கள்; arrack, intoxicating liquor (சா.அக.);.

பட்டைச் (சாராயம்); வெறியம். தென்னை, பனை, அரிசி, வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புளிப்பேறிய மதுவகை.

மருந்து = வெறியம் (சாராயம்);. மருத்துவக் குணமுடையது. வயிற்று வலிக்கும் உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் ஊட்டமாகப் பயன்படுவது.

வடிமார்

 வடிமார் vaḍimār, பெ. (n.)

   கூரைவேயப் பயன்படும் புல்வகை; a species of sedge used for roofing thatched shed.

வடிமாறு

 வடிமாறு vaḍimāṟu, பெ. (n.)

பிரம்புவகையால்

   பின்னப்பட்ட வடிதட்டு; plaited ratten screen used as a strainer in cooking rice.

     [வடி+மாறு]

வடிமாலை

 வடிமாலை vaḍimālai, பெ. (n.)

   கடுகு ரோகணி; a purgative drug-Helleborus niger (சா.அக.);.

வடிம்பலம்நின்றபாண்டியன்

 வடிம்பலம்நின்றபாண்டியன் vaḍimbalamniṉṟapāṇḍiyaṉ, பெ. (n.)

   பண்டைய பாண்டிய மன்னர்களுளொருவன்; an ancient Pändiyan king.

     “ஆழிவடிம்பலம்ப நின்றானென” (நளவெண்பா.);.

     “இவன் பஃறுளியாற்றை உண்டாக்கிக் கடற் றெய்வத்திற்கு விழாச் செய்த பாண்டியன்” (புறநா.);.

மறுவ. உக்கிரவருமன்.

அடியார்க்கு நல்லார் (சிலம்பு.); உரையில் இவனைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இவன் கடல் சுவற வேலெறிய, கடல் வற்றி, இவன் கால்விளிம்பு மட்டாகக் கழுவியது. அதனால், வடிம்பலம்ப நின்றானெனப் பெயராயிற்று.

நளவெண்பாவிலும் இவனைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

வடிம்பிடு-தல்

வடிம்பிடு-தல் vaḍimbiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டாயப் படுத்துதல்; to compel.

     “வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக” (ஈடு.10.1, 4);.

   2. கோயில் தேரினைத் தணிபோட்டுக் கிளப்புதல் (ஈடு, 7, 2, 5, அரும்.);; to rise and start with a lever, as a temple-car.

   3. தூண்டுதல், நகருதல்; to urge, move.

     “நெஞ்சிலே வடிம்பிட்டு…

ஸ்தோத்ரம் பண்ணா நின்றாள்” (ஈடு. 7, 2, 5);.

   4. குறை கூறுதல், பழி கூறுதல்; to slander, blame.

     “தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று” (திவ்.திருநெடுந். 21, வ்யா. பக். 170);.

     [வடிம்பு + இடு.]

வடிம்பு

வடிம்பு vaḍimbu, பெ. (n.)

   1. துணி, கத்தி முதலியவற்றின் விளிம்பு அல்லது நுனி; border, edge as of garment, blade, as of a knife.

     “பொன் வடிம்பிழைத்த வான்பகழி” (கம்பரா. கிளை. 38);.

   2. கால் முதலியவற்றின் விளிம்பு; extremity, as of the foot.

     “ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு” (கலித். 103);.

   3. கூரைச் சாய்வு (வின்.);; eaves, edge of a standing roof.

   4. தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம்; lever.

     “ரதத்தோ பாதி வடிம்பாலே தாக்கி” (ஈடு.1. 4, 6);.

   5. வடிம்புக் கம்பி (இ.வ.); பார்க்க;see vadimbu-k-kambi.

   6. தழும்பு, வடு (நெல்லை);; mark, scar, smudge.

   7. பழி; reproach, blame.

     “தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று” (திவ். திருநெடுந் 21, வ்யா, பக். 170);.

     [விளி → (விளிம்பு); → வடிம்பு (மு.தா.1, பக்.103.);

வடிம்புக்கம்பி

 வடிம்புக்கம்பி vaḍimbukkambi, பெ. (n.)

   தாங்குமரம் (இ.வ.);; spar.

     [வடிம்பு +கம்பி.]

வடிம்புக்கழி

 வடிம்புக்கழி vaḍimbukkaḻi, பெ. (n.)

   குறுக்கு விட்டம் (யாழ்.அக.);; transverse piece in roofing.

     [வடிம்பு + கழி.]

வடிம்புபிடி-த்தல்

வடிம்புபிடி-த்தல் vaḍimbubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   குறுக்கு விட்டந் தொடுத்தல் (வின்.);; to tie cross timbers of a roof.

     [வடிம்பு + பிடி.]

வடியல்

வடியல் vaḍiyal, பெ. (n.)

   1. வடிசல்2, 1 பார்க்க;see vadisal.

   2. வடித்த நீர் முதலியன (யாழ்.அக.);; strained or filtered liquid.

   3. சமைக்கப்பட்டது; that which is cooked.

நான்கு படியரிசி வடியல்.

     [வடி → வடியல்.]

வடியவெடுத்தல்

 வடியவெடுத்தல் vaḍiyaveḍuttal, தொ.பெ. (vbl.n)

   வடிகால்வாய் வழியாக நீர் வடிக்கச் வடிக்கச் சொல்லல்; draining of water through an outlet or canal.

     [வடிய + எடுத்தல்.]

வடியிடு-தல்

வடியிடு-தல் vaḍiyiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   வடித்தெடுத்தல்; to be filtered.

     “தெள்ளிமறை வடியிட்ட வமுதப்பிழம்பே” (தாயு.கருணா.8);.

     [வடி + இடு – இல் → இள் → இடு-தல்.]

வடியுப்பு

 வடியுப்பு vaḍiyuppu, பெ. (n.)

   வடித்தவுப்பு; filtered salt.

     [வடி + உப்பு.]

வடியெண்ணெய்

 வடியெண்ணெய் vaḍiyeṇīey, பெ. (n.)

   வடித்தெடுத்த மருந்தெண்ணெய் (வின்.);; clarified medicinal oil.

     [வடி + எண்ணெய்.]

வடிரசி

 வடிரசி vaḍirasi, பெ. (n.)

   ஒர் பாலை; alstonia scholaris.

வடிவகணிதம்

 வடிவகணிதம் vaḍivagaṇidam, பெ. (n.)

   வடிவங்களையும், உருவங்களையும், உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவு; geometry.

     [வடிவம் + கணிதம்.]

வடிவடைப்புவேலை

 வடிவடைப்புவேலை vaḍivaḍaippuvēlai, பெ. (n.)

   தூண் அல்லது வேண்டிய வடிவத்தில் அமைக்கப்பட்டு, அதில் கற்காரையிட்டுச் செய்யப்படும் வேலை; decorative work in pillar or any structure with polished coloured marbles or tiles.

     [வடிவம் + அடைப்புவேலை.]

வடிவணங்கு

வடிவணங்கு vaḍivaṇaṅgu, பெ. (n.)

   அழகிய பெண்; beautiful lady, as fair complexiomed.

     “ஆதிமா மரபின்வரு வடிவணங்கை” (திருவாலவா. 113);.

     [வடிவு + அணங்கு.]

வடிவமாதிரிகள்

 வடிவமாதிரிகள் vaḍivamātirigaḷ, பெ. (n.)

கை வினைஞன் செய்யப்புகும் கலைப் பொருள் களுக்கான நோக்குரு (முன் மாதிரி);:

 sample of a handicraft by an artisan.

மறுவ வடிவ நோக்குரு

     [வடிவம்+மாதிரி]

வடிவமை-த்தல்

வடிவமை-த்தல் vaḍivamaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வடிவம் கிடைக்கும் படி செய்தல்; to design, shape.

   2. உருவாக்குதல்; to architect..

இந்தத் திரையரங்கத்தை வடிவமைத்தவர் யார்?

     [வடிவம் + அமை.]

வடிவமைப்பு

 வடிவமைப்பு vaḍivamaippu, பெ. (n.)

   உருவாக்கப்பட்ட தோற்றம்; design.

     ‘அந்தக்

கொதிகலன்கள் கோபுரம் போன்ற வடிவமைப்புக் கொண்டவை.

     [வடிவம் + அமைப்பு.]

வடிவம்

வடிவம்1 vaḍivam, பெ. (n.)

   உள்ளடக்கத்துக்குத் தகுந்த புற அமைப்பு; appearance or form that is reflective of the inner content.

     [படிவம் → வடிவம்.]

 வடிவம்2 vaḍivam, பெ. (n.)

   1. உருவம் (பிங்.);; form, shape, figure.

     “சங்கம வடிவம் ….. தாபரவடிவம்” (திருவாலவா. 61,14);.

   2. உடல் (யாழ்.அக.);; body.

   3. அழகு, செம்மை, நேர்த்தி; beauty, charm, comeliness.

     “வடிவமங்கைதனைச் சுருதி விதியின் மனம் புணர்ந்தான்” (திருவாலவா. 3 3);.

   4. நிறம், உடல் வண்ணம் (அ.க.நி.);; colour, good physigue,

   5. பளபளப்பு, ஒளிர்வு; glassiness, lustre, glittering.

   6. மெய்ச்சொல் (அக.நி.);; true word, truth.

     [படி → வடி → வடிவு → வடிவம்.]

 வடிவம்3 vaḍivam, பெ. (n.)

   1. உருப்படிவம்; model.

   2. கலைஞர்களுக்கு உருப்படிவமாக (மாதிரியாக); அமைபவர்;

வடிவழகி

 வடிவழகி vaḍivaḻki, பெ. (n.)

   வெற்றிலை; betel leaf-Piper beter (சா.அக.);.

வடிவவுவமம்

 வடிவவுவமம் vaḍivavuvamam, பெ. (n.)

   உருவத்தை ஒப்பித்துக் கூறும் உவமை (யாழ்.அக.);; simile in which the comparison is in respect of shape or form.

     [வடிவம் + உவமம்.]

வடிவாக

 வடிவாக vaḍivāka,    கு.வி.எ. (adv.) முற்றும் (நெல்லை); completely, fully, entirely.

     [வடிவு + ஆக.]

வடிவானவைத்தன்

 வடிவானவைத்தன் vaḍivāṉavaittaṉ, பெ. (n.)

   சாரைப்பாம்பு; the male of cobra- the rat snake.

வடிவாளன்

 வடிவாளன் vaḍivāḷaṉ, பெ. (n.)

   அழகன் (இ.வ..);; handsome man.

     [வடிவு + ஆள் + ஆளன்.]

வடிவிக்குமருந்து

 வடிவிக்குமருந்து vaḍivikkumarundu, பெ. (n.)

   உடம்பு அல்லது வீக்கத்தை வற்றச் செய்யும் மருந்து; drugs or medicines capable of reducing the swelling of the body.

வடிவியல்

 வடிவியல் vaḍiviyal, பெ. (n.)

வடிவகணிதம் பார்க்க;see Vadiva-kanidam.

வடிவிலாக்கூற்று

வடிவிலாக்கூற்று vaḍivilākāṟṟu, பெ. (n.)

   வான்வெளி வாக்கு; voice from an invisible speaker, voice from heaven.

     “பிறந்திட்டதோர் வடிவிலாக்கூற்று” (சேதுபு. பராவு. 42);.

     [வடிவு + இல் + ஆ + கூற்று.]

வடிவு

வடிவு1 vaḍivu, பெ. (n.)

   அல்குல் (பிங்.);; vagina, mons veneris.

 வடிவு2 vaḍivu, பெ. (n.)

   1. உருவம், அமைப்பு; form, shape.

     “வண்ணந்தானது காட்டி வடிவு காட்டி” (திருவாக. 5, 25);.

   2. உடல் (சூடா.);; body.

   3. அழகு; beauty.

     “வடிவுடை மலைமகள்” (தேவா. 618, 7);.

     “வடிவார் வயற்றில்லை” (திருக்கோ. 139);.

   5. நன்னிறம்; fair complexion.

   6. பளபளப்பு, ஒளிர்வு, பிறங்கொளி, அழகொளி; brightness, lustre.

     “வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும்” (திவ்.திருப்பல்.2);.

   7. உண்மை, மெய்ச்சொல் (அரு.நி.);; truth, true word.

   தெ. வடுவு;ம. வடிவு.

     [வடி → வடிவு.]

 வடிவு3 vaḍivu, பெ. (n.)

   1. வடித்தது (இ.வ.);; that which is strained or filtered.

   2. மிகுதியாக வடிந்த நீர்; overflow, surplus Water.

வடிவுப்பானை

 வடிவுப்பானை vaḍivuppāṉai, பெ. (n.)

வடிபானை (வின்.); பார்க்க;see vadipanai.

     [வடி → வடிவு + பானை.]

வடிவுவமை

 வடிவுவமை vaḍivuvamai, பெ. (n.)

வடிவ வுவமம் (சங்.அக.); பார்க்க;see vadiva-v-uvamam.

     [வடிவு + உவமை.]

வடிவெண்ணெய்

 வடிவெண்ணெய் vaḍiveṇīey, பெ. (n.)

   குருதிக்கேட்டாலுண்டான நோய்களுக்குக் கொடுக்கும் எண்ணெய்; medicated oil for diseases caused by vitiation of blood (சா.அக.);.

வடிவெலும்பு

 வடிவெலும்பு vaḍivelumbu, பெ. (n.)

   மாரெலும்பு; rib, breast bone – Sternum.

வடிவெழுத்து

வடிவெழுத்து vaḍiveḻuttu, பெ. (n.)

   ஒலியின் குறியாக, எழுதப்படும் எழுத்து (நன்.256, மயிலை); (பிங்.);; a letter, written symbol of an uttered sound, dist. fr. Oli-y-eluttu.

   2. திருந்திய கையெழுத்து (இ.வ.);; legible or fine hand writing.

     [வடி → வடிவு + எழுத்து.]

வடிவேல்

வடிவேல்1 vaḍivēl, பெ. (n.)

நூற்றாண்டில்

     “சுப்பிரமணியர் துதிக் கோவை” என்னும் நூலை இயற்றிய புலவர்;

 a poet who composed a work titled subramaniar Tudikköval in 19C.

 வடிவேல்2 vaḍivēl, பெ. (n.)

   1. கூரிய வேல்; sharp lance.

     “வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே” (கந்தரலங். 70);.

   2. முருகக்கடவுள் (இ.வ.);; Kanda, as wielding the lance.

     [வடி + வேல்.]

வடு

வடு1 vaḍu, பெ. (n.)

   1. மாம்பிஞ்சு; unripe fruit, especially very green tender mango.

     “மாவின் வடுவகிரன்ன கண்ணீர்” (திருவாச. 9, 2);.

   2. உடல் மச்சம் (வின்.);; wart, mole.

   3. தழும்பு; scar, smudge, cicatrice, wale.

     “சாபநோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்” (புறநா. 14);.

 வடு2 vaḍu, பெ. (n.)

   1. உளியாற் செதுக்கின உரு; chiselled figure.

     “கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு” (சிறுபாண். 252);.

   2. புண்வாய்; mouth affected by an ulcer or wound.

     “தாழ் வடுப் புண்” (பு.வெ.10. சிறப்பிற்.11);.

 வடு3 vaḍu, பெ. (n.)

   1. குற்றம்; fault, defect.

     “வடுவில் வாய்வாள்” (சிறுபாண்.121);.

   2. பழி; reproach, blemish.

     “வடுவன்று வேந்தன் றொழில்” (குறள், 549);.

   3. கேடு; injury, calamity, catastrophe.

     “நாயகன் மேனிக் கில்லை வடுவென” (கம்பரா.மருத்து. 5);.

 வடு4 vaḍu, பெ. (n.)

   1. நுண்ணிய கருமணல்; fine, black sand.

     “வடுவா ழெக்கர் மணலினும் பலரே” (மலைபடு. 556);.

   2. செம்பு (பிங்.);; copper.

   3. வாள் (யாழ்.அக.);; sword.

   4. வண்டு (பிங்.);; beetle.

 வடு5 vaḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பிஞ்சு விடுதல் (வின்.);; to bear fruit.

 வடு6 vaḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வெளிப்படுத்துதல்; to manifest.

   2. பார்வைக்கு காட்சியாக வைத்தல்; to exhibit.

     “வடுத்தெழு கொலை” (கல்லா.5);.

 வடு7 vaḍu, பெ. (n.)

   1. மாணி (இ.வ.);; celibate student.

   2. இளைஞன் (யாழ்.அக.);; youth.

   3. திறமையானவன் (இ.வ.);; clever boy, talented youngster.

வடுகக்கடவுள்

 வடுகக்கடவுள் vaḍugaggaḍavuḷ, பெ. (n.)

   சிவபெருமானின் வயிரவ வடிவம் (திவா.);; Bhairavan a form of Sivan

வடுகக்காது

 வடுகக்காது vaḍugaggātu, பெ. (n.)

வடிகாது (வின்.); பார்க்க;see vadi-kadu.

வடுகச்சி

 வடுகச்சி vaḍugacci, பெ. (n.)

   வடுகப்பெண் (வின்.);; a woman of vaduga caste.

     [வடுகர் + அச்சி. அச்சன் (ஆ.பா.); → அச்சி (பெ.பா.);.]

வடுகச்செட்டி

 வடுகச்செட்டி vaḍugacceḍḍi, பெ. (n.)

   செட்டியாருள் ஒரினத்தவர் (வின்.);; a division of cettiyar caste.

வடுகடுக்காய்

 வடுகடுக்காய் vaḍugaḍuggāy, பெ. (n.)

   கடுக்காய்ப் பிஞ்சு; an unriped chebulic myrobalan (சா.அக.);.

வடுகநம்பி

 வடுகநம்பி vaḍuganambi, பெ. (n.)

   இராமாநுசரின் வழித்தொண்டர் (குருபரம்.);; a disciple of Rāmānujar.

வடுகநாததேசிகர்

வடுகநாததேசிகர்1 vaḍuganātatēcigar, பெ. (n.)

   17-ஆம் நூற்றாண்டில்

     “திருமுல்லை வாயிற் புராணம்” என்னும் நூலை இயற்றிய புலவர்;

 a poet who composed a work titled

     ‘Tirumullai-vayir-puranam’ in 17C.

 வடுகநாததேசிகர்2 vaḍuganātatēcigar, பெ. (n.)

   19, 20ஆம் நூற்றாண்டில் காத்திருப்பு என்னும் ஊரைச் சேர்ந்த, புள்ளிருக்க வேளூர்ப்புராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet who composed a work titled ‘pullirukka-velur-p-puranam’ in 19-20 C. He hails from Kättiruppu village.

வடுகநாதன்

 வடுகநாதன் vaḍuganātaṉ, பெ. (n.)

வடுகக்கடவுள் பார்க்க;see vaduga-kada vul.

வடுகன்

வடுகன்1 vaḍugaṉ, பெ. (n.)

   1. வயிரவன் (பிங்.);; Bhairava.

   2. மாணி; celibate student.

   3. இளைஞன் (யாழ்.அக.);; youth.

   4. மூடன் (யாழ்.அக.);; fool, stupid.

 வடுகன்2 vaḍugaṉ, பெ. (n.)

   தெலுங்க நாட்டான்; man from the Telugu country.

     [வடுகு + அன்.]

வடுகன்றாய்

 வடுகன்றாய் vaḍugaṉṟāy, பெ. (n.)

   காளி (திவா.);; Kali, the mother of Bhairava.

     [வடுகன் + தாய்.]

வடுகப்பறையன்

 வடுகப்பறையன் vaḍugappaṟaiyaṉ, பெ. (n.)

   மாலிய சமயத்தைச் சார்ந்த தெலுங்க நாட்டுப் பஞ்சம வகையான் (இ.வ.);; a vaisnava paraiya of the Telugu country.

     [வடுகன் + பறையன்.]

வடுகம்

வடுகம் vaḍugam, பெ. (n.)

வடுகு பார்க்க;see vadugu.

     [வடம் → வடகு → வடுகு → வடுகம் (வ.வ.பக்.26);.]

வடகு என்னும் சொல்லிடையுள்ள டகரம், அதையடுத்து ஈற்றிலுள்ள குகரச் சார்பால், டுகரமாயிற்று. (ஒ.நோ.); கேடகம்→கிடுகு.

இங்ஙனம் அகரம் உகரமாய்த் திரிந்தது உயிரிசைவு மாற்றம் (harmonic sequence of Vowels); என்னும் நெறிமுறையாகும்.

வடுகரணம்

 வடுகரணம் vaḍugaraṇam, பெ. (n.)

   பூணூல் போடும் விழா (யாழ்.அக.);; investiture with the sacred thread.

வடுகர்

வடுகர்1 vaḍugar, பெ. (n.)

   தமிழகத்தின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த குடியினர்; inhabitant lived in northern region of T.N.

     ‘வடுகர்’ என்பது ஒரு குடியின் பெயராகும்.

     ‘வடுகு’ என்பவற்றோடு

     ‘அர்’ விகுதி சேர்ந்தமையால்

     ‘வடுகர்’ என்றாயிற்று. வடுகர் தமிழகத்தின் வட வெல்லையில் மட்டுமின்றி. நாலாபுறமும் பரவி வாழ்ந்தனர். வடக்கே வாழ்ந்த வடுகரைத் தமிழர்

     ‘வட வடுகர்’ என்றழைத்தனர்.

     ‘கதநாய் வடுகர்’ (அகம்.381, 7);

     ‘வம்ப வடுகர்’ என்னும் சொல்லாளப் படுவதால், புதியவர்கள், நிலையற்றவர்கள், அயலார்கள் எனவும் அழைக்கலாம்.

     ‘கடுங்குரற் பம்பை கதநாய்

வடுகர்’ (நற்.212, 5);.

     ‘கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம்.107, 11);.

     ‘கதநாய் வடுகர்’ (அகம்.375, 14); என வடுகரைக் குறித்த பாடல்கள் கழகக்கால இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.

 வடுகர்1 vaḍugar, பெ. (n.)

   1. தெலுங்கர்; people of the Telugu country.

     “கதநாய் வடுகர்” (நற். 212);.

   2. கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகர நாட்டினின்று, தமிழ் நாட்டிற் குடியேறிய தெலுங்கர்; a caste of Telugu immigrants, from the kingdom of vijayanagar into the Tamil country in the 16th century.

     [வடுகு → வடுகர்.]

 வடுகர் vaḍugar, பெ. (n.)

   கலிங்கர்; the people of kasinga (Orissa);.

     [உடியர்-வடியர்-வடுவர்-வடுகர்]

வடுகர் என்போர் கலிங்கர்.வடுகர் என்னும் சொல் தெலுங்கரைக் குறிப்பதாக இதுவரை கருதப் பட்டு வந்தது. தெலுங்கு அறிஞர்களும் சங்க இலக் கியங்களில் வடுகர் பெயர் இடம்பெற்றிருப்பதால் தெலுங்கு மிகவும் தொன்மையான மொழி எனவும் தவறாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் இச் சொல் கலிங்க நாட்டாரைக் குறித்த சொல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார்.

     “மழலைத்தரு மொழியில் சில வடுகும் சில தமிழும் குழறித்தரு கருநாடியர்குறுகிக் கடைதிறமின் எனப் பாடியுள்ளார். இதில் வடுகு என்பது நாள டைவில் தெலுங்கைக் குறித்த சொல்லாக ஆளப்பட் டுள்ளது. கலிங்கப் போர் நடந்த குலோத்துங்க சோழன் காலத்தில் தெலுங்கு கன்னடம் ஒரியா ஆகிய மூன்று மொழிகளும் பேச்சு மொழிகளாக வளர்ந் திருந்தன. இருப்பினும் தெலுங்கர் எக்காலத்திலும் தம்மை வடுகர் என அடையாளப்படுத்திக் கொள்ள

வில்லை.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடைக்கழக இலக்கியக் காலத்தில் தெலுங்கு போன்ற மொழிகள் தோன்றவில்லை. ஆந்திர சாதவாகன மன்னரின் பேச்சு மொழி பிராகிருத மாக இருந்தது. ஒரிசா எனப்படும் கலிங்கரின் பாலியும் பேசப்பட்ட நிலப்பகுதிகளே மொழி பெயர்த்தேயம்” எனப் பண்டைத் தமிழிலக்கியங்களில் குறிக்கப்பட்டன. ஆந்திர கருநாடகப்பகுதிகள்.அக்காலத்தில் கொடுந் தமிழ்நாடுகளாக இருந்தன.

ஒரிசா எனும் கலிங்கத்திலிருந்து ஆந்திரத்தில் குடியேறிய வடுகர் கல்லுடைக்கும் தொழிலினர். இவர்கள் பேகம் தெலுங்கு நீட்டி முழுக்கும் அடித் தொண்டைப் பேரொலி கொண்டதாக இருப்பதை இன்றும் காணலாம். இவர்களின் முன்னோர் பேசிய கலிங்கத்துப் பாலி மொழியும் இத்தகையதே. அதனால் இவர்கள் கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் எனப்பட்டனர். ”ഖ -ப. (ba); ஆவது பாலி மொழியி இயல்பு வான் எனும் தமிழ்ச் சொல்லைப் பாவி (bawi); எனத் திரித்துப் பேசியவர்களும் இவர்களே.

புல்லி என்னும் குறுநில மன்னன் ஆட்சி புரிந்த வேங்கடமலைக்கு வடக்கேயிருந்த ஆந்திரப் பகுதியில் கோதாவரி வரை தமிழ் பேசப்பட்டது.

மேற்கு கோதாவரிப்பகுதியிலும் கலிங்கப்பகுதியிலும பிராகிருத பாலி மொழிகள் பேசப்பட்டன. வேங்கட மலை வெகுதொலைவில் மொழி பெயர் தேயங்கள் இருந்தன என்னும் குறிப்பை அகநானூற்றில் மாமூலனார் வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கட மலைக்கு அப்பால் பல்லான் கோவலர், ஆடுமாடு களை மேய்ப்பவராகவும், நல்லவர்களாகவும் இருந் திருக்கின்றனர்.

     “—————மாதிரம் வெம்ப

வருவழி வம்பலர் பேணிக் கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி

செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்

புல்லி நன்னாட்டு உம்பர்ச் செல்லருஞ்

கரம் இறந்து ஏகினும் நீடலர்” (அகம்.31);

என்னும் வரிகளில் மாமூலனார் குறிப்பிடுகிறார். மூங்கில் குழாய்களில் கொணர்ந்த கூழை வழிப் போக்கர்க்குத்தந்துகளைப்பைப்போக்கிய செய்தியும் கூறப்படுகிறது.

புல்லியின் வேங்கடக் குன்றத்துக்கு வெகு தொலைவுக்கு அப்பால் கலிங்க நாட்டுக்குச் செல்லும் போது வழிப்பறிக் கள்வராகிய வடுகர் இருந்தனர். ‘-“……….புல்லி குன்றத்து

நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்

தொடையமை பகழித் துவன்று நிலை வடுகர்

பிழியார் மகிழர் கலிசிறந்தார்க்கும்

மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்” (அகம்:295);

என மாமூலனார் குறிப்பிட்டுள்ளார்.

கங்கை வரை பண்டங்களை ஏற்றிச் செல்லும் சாத்து வணிகர் கூட்டத்தோடு, அல்லது படைத் துணை மறவரோடு வடதிசை நோக்கிச் சென்ற தலைவனைக் குறித்துத் தலைவி வருந்தும் பாலைப் பாடல்களில் மிக நீண்ட தொலைவு பறக்கும் கழுகு போல் நெடுங்தொலைவு கடந்த செய்தி கூறப்படு கிறது. பல மலைகளைக் கடந்த பின்னரே வேற்று மொழி பேசும் நிலப்பகுதி இருந்தது எனவும் மொழி பெயர் தேயங்களாகிய அப்பகுதிகள் இருந்தன எனவும் மொழி பெயர் தேயங்களாகிய அப்பகுதிகள் மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

     ‘கண்உமிழ் கழுகின் கானம் நீந்தி

…………………………

தமிழ் கெழு மூவர் காக்கும்

மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே” (அகம்.31);

வடபுலத்திலும் மூவேந்தரின் அரசிளங் குமரர்கள் ஆட்சி புரிந்ததைப் பாரத இராமாயணங் களும் குறிப்பிடுகின்றன. கி.மு. ஏழாம் நூற்றாண்டு வரை வடநாட்டில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நில வியதை உதயணன் பெருங்கதையாலும் அறியலாம்.

வடபுலத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் ஆட்சி புரிந்த மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்தனர். அப்போது கலிங்க நாட்டிலிருந்த விற்போர் மறவர்களாகிய வடுகரைத் துணைக்கு அழைத்து வந்தனர் என்பதை மாமூலனார்

     ‘முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்

தென்திசைமாதிரம் முன்னிய வரவிற்கு” (புறம்.281);

     ‘எனத் தெளிவுறப் பாடியுள்ளார். மோரியர் பாடலிபுத்திரத்தில் இருந்து புறப்பட்டு கலிங்கத்தில் வடுகர் துணை பெற்றனர். ஆந்திரத்து சாதவாகனர் எப்பொழுதும் தமிழர்க்கு நண்பர்களாகவும் உறவினர் களாகவும் இருந்தனர். எக்காலத்திலும் சாதவாக னர்கள் தமிழரைப் பகைத்ததில்லை. எனவே வடுகர் என்னும் சொல் ஆந்திரரைக் குறிக்கவில்லை. வடுகரைக் கல்லா நீள் மொழிக் கதநாய் வடுகர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஆறலைக் கள்வ ராக விந்திய மலைச்சாரல் பகுதிகளில் வாழ்ந்த வர்கள். வடுகர்களைக் குறித்து தாயங்கண்ணனார், சேந்தங் கொற்றனார், இளம் கெளசிகனார் ஆகிய புலவர்களும் பாடியுள்ளனர்.

தெலுங்கர் தம்மை ஆந்திரர் எனக் குறிப்ப தன்றி வடுகர் என எக்காலத்திலும் கூறியதில்லை. தெலுங்கு அகராதிகளிலும் வடுகர் என்னும் சொல் தெலுங்கரைக் குறிக்கவில்லை. கலிங்க நாட்டைத் தமிழில்

     “ஒட்டாநாடு” என்பர்.

கலிங்கர் தம் மொழியை ஒடியா” மொழி என்கிறார்கள். இச்சொல் ஆந்திர நாட்டில் வட்டெ (vadde); என வழங்கும். கிணறு வெட்டுதல், கல்லுடைத்துக்கட்டடம்கட்டுதல் ஆகிய பணிகளுக்கு இவர்கள்ஆந்திர நிலத்தில் குடியேற்றப்பட்டனர். இவர்கள் மொழியும் தெலுங்காக மாறியது.

கலிங்கத்துக் கல்லுடைக்கும் தொழிலாளர் சிறந்த வில்லாளிகளாக இருந்த ஆறலைக் கள்வரின் வழி வந்தவர்கள் என்பதால் வடிகாடு என்னும் சொல் நாளடைவில் மிகுந்த துணிச்சல் உள்ள போர் மறவனைக் குறித்த சொல்லாயிற்று.

வடிகாடு என்னும் சொல் வடுகுடு எனத் தெலுங்கில் திரிபுற்றது. வடிகண்டு – வலிமை சான்ற இளைஞன், வடுக்கு-முறுக்கு வடிகலத்தன்மை வட்டெகாடு ஒரியா மொழி பேசுபவன். வட்டெமு -ஒரியா மொழி.

கன்னடத்திலும் வட்டெ (vadde); எனும் சொல் கல்லுடைக்கும் தொழிலாளியைக் குறித்தது.

கலிங்கத்து மொழியில் ஒடியா என்றே இம்மக்கள் அறியப்பட்டனர்.

தமிழில் ஒட்டர் என இக்காலத்தில் வழங்கினும் பழங்காலத்தில் கலிங்கர் உடியர்’ என்றே அறியப் பட்டனர். அதனால் கடைக் கழகக் காலத்தில் இவர் களுக்கு உடியர்-வடியர்-வடுவர்-வடுகர்- எனத் தமிழ்ப் பெயரிட்டனர்.

உடை-உடி எனும்சொற்கள் உடைத் தலையும், தாக்குதலையும் குறிக்கும். உளிதல் என்னும் சொல்லும் வெட்டுதலைக் குறிக்கும், உளி-உடி-வடி எனத் திரியும். வடித்தல் – கல்லைச் செதுக்கி வடிவ மைத்தல் எனப் பொருள்தரும்.

கடிப்பு என்பது ஒரு காதணி. இது கடுக்கன் எனத் திரிந்ததைப் போன்று வடிகன்_வடுகன் எனத் திரிபுற்றது.

வடக்கிலிருந்து வந்தவன் வடுகன் என்பதும் பொருந்தாது. வடக்கு – வடுக்கு எனத் திரியாது. குடக்கு-குடுக்கு எனத் திரியவில்லை. சொற்களின் ஒலிப்புத் திரிபுகள் குறிப்பிட்ட ஒழுங்கைப் பின்பற்று கின்றன. ஒரு சொல் எப்படியெல்லாம் திரியும் எப்படி யெல்லாம் திரியாது என்னும் சொற்பிறப்பு நெறி முறைகளை ஊன்றிக் கவனித்தால் சொல்திரிபுகளும் பொருள் திரிபுகளும் திசைமாறிப்போகாமல் உண்மை யான பொருளை உணர்த்தும்.

மெல்_மெழு_மெழுகு என மென்மைப் பொருளில் திரிந்தது போன்று வல்-வழு -வழுதி எனும் சொல்வன்மை வாய்ந்த பாண்டிய மன்னர்க்குப் பெயராயிற்று. வல்-வழு-வடு என்னும் சொல் போர்மறவனுக்கும் இளைஞனுக்கும் பெயராகி வடமொழியில் வட (vata); என்றும் ஒரியாவின் மூலமொழியாகிய பாலியில் உடி-வடி என்றும்

திரிந்தது.

வடுகவழிபன்னீராயிரம்

வடுகவழிபன்னீராயிரம் vaḍugavaḻibaṉṉīrāyiram, பெ. (n.)

   நெல்லூர், குண்டூர், கடப்பை முதலாய நிலப்பரப்பை யுள்ளடக்கிய வடுகர் வாழ் தேயம்; vanargal country comprising of Nellur. Gundar Kadappai etc.

     ‘பன்னீராயிரம் என்பது பூமியின் பரப்பைக் குறிப்பதாமென்பர். பன்னீராயிரம் ஊர்களை கொண்ட பரப்பிடம் என்பதனை, முடியலூர் சாசனம் உணர்த்துகின்றது.’

     “நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும் வால் நினப்புகலின் வடுகர் தேயத்து” (அகம்.213:7-8);.

     [வடுகவழி → வடுகநாடு.]

வடுகவாளி

வடுகவாளி vaḍugavāḷi, பெ. (n.)

   வடுக நாட்டு மகளிர் காதில் அணியும் காதணி வகை; a kind of ear-ring worn by vaduga community women.

     “வடுகவாளி ஒன்றில் கோத்தமுத்து ஒன்பது” (தெ.இ.கல்.தொ.2:2, கல்.51);.

     [வடுகர் + வாளி. வாளி = ஒரு வகைக் காதணி.]

வடுகி

 வடுகி vaḍugi, பெ. (n.)

வடுகன்றாய் (பிங்.); பார்க்க;see vadugan-ray.

வடுகு

வடுகு1 vaḍugu, பெ. (n.)

   1. தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு; the region situated in the north of the Tamil country.

     “வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக” (தொல்.பொருள்.650. உரை);.

   2. ஆந்திரநாடு; the Telugu country.

   3. தெலுங்கு மொழி; the Telugu language.

     “வடகலை தென்கலை வடுகு கன்னடம்” (கம்பரா. தனி.);.

   4. தெலுங்கின் கிளைமொழி; a dialect of Telugu.

     “கன்னடம் வடுகு கலிங்கந் தெலுங்கம்” (நன்.272 மயிலை); (தொல்.சொல்.400, உரை);.

   5. தெலுங்கு பேசுவோரிடையே உள்ள தொரு பிரிவு (பிங்.);; a division of Telugu-speaking people.

க. படகு.

     [வடம் → வடகு → வடுகு. ஒருகா. கொடுந்தமிழ்.]

முதன்முதல் வடதிசையாற் பெயர் பெற்ற மொழி வடுகு என்னும் தெலுங்கே, அது வேதக் காலத்திலேயே தமிழினின்று திரிந்திருந்தது.

வடம் → வடகு → வடுகு → வடுகம்.

வடகு என்னும் சொல்லிடையுள்ள டகரம், அதையடுத்து ஈற்றிலுள்ள குகரச் சார்பால், டுகரமாயிற்று. இங்ஙனம் அகரம் உகரமாய்த் திரிந்தது உயிரிசைவு மாற்றம் (Harmonic Sequence of Vowels); என்னும் நெறிமுறையாகும்.

ஒ.நோ. : கேடகம் – கிடுகு.

எடுப்பொலி (எ-டு); : குடி – gudi (கோவில்);, கூன் – guvu. சடை – ஜட.

வலிப்பொலி (எ-டு);: செய் – cey, போடு – பெட்டு.

இங்க்கா – இன்னும், கொஞ்ச்செமு = கொஞ்சம்,

அண்ட்டாரு = என்றார், எந்த்த = எவ்வளவு,

கும்ப்பு = கும்பு.

இங்ஙனம் ஆரியத்தன்மையடைந்த ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப என்னும் வல்மெலிவலி யிணைகள் முதன்முதல் வடுகிலேயே தோன்றுகின்றன. தமிழில் இத்தகைய வொலிகள் மருந்திற்குங் காணக்கிடையா. அதிலுள்ளவை யெல்லாம் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய மென்மெலிவலி யினைகளே.

 வடுகு2 vaḍugu, பெ. (n.)

   1. மருத யாழ்த்திறத் தொன்று (பிங்.);; a secondary melody-type of the marudam class, one of four maruda-yal-t-tiram.

   2. இந்தளம் (பிங்.);; a melody-type.

   3. மெய்க் கூத்து வகை (சிலப். 3, 12, உரை);; a physical dance.

     [வடக்கு → வடுகு.]

 வடுகு3 vaḍugu, பெ. (n.)

   மணியிலமைந்த குற்றம் (C.G.);; a flaw imperfection in a gem.

     [வடு → வடுகு.]

 வடுகு4 vaḍugu, பெ. (n.)

   பூணூலணியும் விழா; investiture with the sacred thread.

     “ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல்……. ஒதியே” (நல்.பாரத.துட்டிய.60);.

 வடுகு vaḍugu, பெ. (n.)

   மருத நிலத்தின் திறப்பண்; melody type belonging to agricultural tract.

     [வடு-வடுகு]

வடுகுந்தமிழுங்குணம்

 வடுகுந்தமிழுங்குணம் vaḍugundamiḻuṅguṇam, பெ. (n.)

   வயிற்றுக் கடுப்பு; pain in abdomen.

வடுக்கு-தல்

 வடுக்கு-தல் vaḍukkudal, செ.கு.வி. (v.i.)

   நூற்பாவில், வண்ணமேற்றாத முரட்டு நூலை ஏற்றுதல்; to thrust undyed coarse thread into spinning mill.

     [வடு → வடுகு.]

வடுக்கொள்(ளு)-தல்

வடுக்கொள்(ளு)-தல் vaḍukkoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   1. தழும்பு படுதல்; to bear mark, smudge, sear.

     “நல்லகம் வடுக்கொள முயங்கி” (அகநா. 100);.

   2. புண் முதலியன ஆறத் தொடங்குதல் (இ.வ.);; to begin to heal, as a sore etc.

     [வடு + கொள்.]

வடுச்சொல்

 வடுச்சொல் vaḍuccol, பெ. (n.)

   பழிமொழி; reproach.

     [வடு + சொல்.]

வடுத்தலைக்கலவாய்

 வடுத்தலைக்கலவாய் vaḍuttalaikkalavāy, பெ. (n.)

   மஞ்சள் நிறமானதும் நெடிதாய் வளர்வதுமான கடல் மீன்; sea-fish attaining a large size.

     [வடு + தலை + கலவாய்.]

ஒருகா. பன்றிமீன்.

     [P]

வடுபடுத்து-தல்

வடுபடுத்து-தல் vaḍubaḍuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   வெட்டு, குத்து முதலியவற்றால் காயப்படுத்துகை; wounding.

வடுபட்டவள்

 வடுபட்டவள் vaḍubaḍḍavaḷ, பெ. (n.)

   ஆணுடன் தொடர்புடையவள்; a reduced woman.

வடுப்படல்

 வடுப்படல் vaḍuppaḍal, பெ. (n.)

   மீன் வேட்டையில் உண்டாகும் காயம்; a wound caused due to forecially fish catching.

வடுப்பிஞ்சு

 வடுப்பிஞ்சு vaḍuppiñju, பெ. (n.)

   இளம்பிஞ்சு; tender, unriped fruit.

     [வடு + பிஞ்சு.]

வடுமாங்காய்

 வடுமாங்காய் vaḍumāṅgāy, பெ. (n.)

   மாவடு வூறுகாய் (கொ.வ);; a pickled preparation of green tender mangoes.

     [வடி → வடு + மாங்காய்.]

வடும்பு

வடும்பு1 vaḍumbu, பெ. (n.)

   மூங்கிற் கழி, கெடை; a long bamboo post.

 வடும்பு2 vaḍumbu, பெ. (n.)

   சாத்து மரங்களின் குறுக்கே போடுங்கழி; tie beam.

வடுவக்கூடை

 வடுவக்கூடை vaḍuvakāḍai, பெ. (n.)

   கூடைவகை (வின்.);; a kind of basket.

     [வடுகன் → வடுவன் + கூடை.]

வடுவன்

 வடுவன் vaḍuvaṉ, பெ. (n.)

   தெலுங்கு நாட்டான்; man from the Telugu country.

     [வடுகு → வடுகன் → வடுவன்.]

வடுவரி

வடுவரி vaḍuvari, பெ. (n.)

   1. வண்டு (சது.);, தேனீ; beetle, bee.

   2. சிற்றுயிரி; insect.

     [வடு + வரி.]

வடுவறவேதல்

 வடுவறவேதல் vaḍuvaṟavētal, தொ.பெ. (vbl.n.)

   முழுவதுமாக வேதல்; cooking well.

     [வடு + அற + வே.]

வடுவும்புள்ளியும்

 வடுவும்புள்ளியும் vaḍuvumbuḷḷiyum, பெ. (n.)

   அம்மையிறங்கி உதிர்தல்; to be full of warts and spots as after small pox.

வடுவை

 வடுவை vaḍuvai, பெ. (n.)

   செம்பு; copper.

வடை

வடை vaḍai, பெ. (n.)

   தேர்ச்சக்கர வடிவாகச் செய்யப்படும் உழுத்தம் பலகாரம்; a cake made of black grum, fried in ghee or oil.

 Skt. வடா.

     [வட்டை + வடை.]

ஒ.நோ. பெட்டை பெடை.

வட்டக் கருத்துச் சொற்களுள் வட்டு, வட்டை என்னும் வடிவுகள் வடமொழியில் இல்லை (வே.க.4.பக்.104);.

வடைகறி

 வடைகறி vaḍaigaṟi, பெ. (n.)

   வடைக்குரிய கடலை மாவுடன் கறிமசாலை சேர்த்துத் தாளித்து, ஆவியில் வைத்தெடுக்கும் ஒருவகைத் தொடுகறி; a kind of side dish. using chickpea flour paste as in the preparation of vadai.

     [வடை + கறி.]

வடைக்குத்தி

 வடைக்குத்தி vaḍaikkutti, பெ. (n.)

   பண்ணிகாரம் குத்தியெடுக்குங் குத்தூசி வகை; a picker, used in frying cakes.

     [வடை + குத்தி.]

வடைப்பருப்பு

 வடைப்பருப்பு vaḍaipparuppu, பெ. (n.)

   பயற்றம் பருப்புடன் எலுமிச்சம்பழச்சாறு முதலியன சேர்த்துச் செய்யப்படுஞ் சிற்றுண்டி வகை; a salad of green gram split and soaked in lime water and seasoned with condiments.

தெ. வடபப்பு

     [வடை + பருப்பு.]

வடைமாலை

 வடைமாலை vaḍaimālai, பெ. (n.)

   வேண்டுதலின் பொருட்டு வடைகளைக் கோத்து மாகாளர், குரக்கினத் தலைவன் (அனுமன்); முதலிய தெய்வங்கட்கு இடும் மாலை; garland of vadai offered in vow to deities, such as Mākāsar Hanumār, etc.

     [வடை + மாலை.]

வடையம்

வடையம் vaḍaiyam, பெ. (n.)

   1. நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை; cake, as of nelli fruits.

   2. பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு (தஞ்.);; folded packet of betel leaves and areca-nut.

வடையற்றது

 வடையற்றது vaḍaiyaṟṟadu, பெ. (n.)

   வீணானது (யாழ்.அக.);; that which is useless, wasteful material.

வடைவாரி

 வடைவாரி vaḍaivāri, பெ. (n.)

   துளைகள் கொண்ட வாரியெடுக்கும் கரண்டி; perforated ladle to take out vadai-cakes.

     [வடை + வாரி.]

     [P]

வட்கர்

வட்கர்1 vaṭkar, பெ. (n.)

   1. குற்றம் (புறநா. 100, உரை);; fault.

   2. இடைமுரிவு (சிலப்.25, 146. அரும்.);; cut or injury in the middle, as on a palmyra stem.

     “வட்கர்” off குற்றமெனினும் அமையும்” (பழைய.புறநா.100);.

     [வள் → வட்கு → வட்கர்.]

 வட்கர்2 vaṭkar, பெ. (n.)

வட்கார் பார்க்க;see vatkar.

     “வட்கர் போகிய வளரிளம் போந்தை” (புறநா.100);.

     [வட்கார் → வட்கர்.]

வட்காரம்

 வட்காரம் vaṭkāram, பெ. (n.)

   வெடிகாரம் (சங்.அக.);; kind of salt.

வட்கார்

வட்கார் vaṭkār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “வட்கார் நிரையன் றழலெழ வெய்து நின்றோன்” (திருக்கோ.152);.

     “வட்கார் மேற்செல்லுவது வஞ்சியாம்” (பு.வெ.மா.);.

வட்கிலான்

 வட்கிலான் vaṭkilāṉ, பெ. (n.)

   பகைவன் (இலக்.அக.);; enemy, foe.

வட்கு

வட்கு1 vaṭkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வெட்குதல்; to be ashamed.

     “வட்கின வெனப் பெரி தடைத்தகுயில் வாய்கள்” (பாகவத.10. வேய்ங்குழ.6);. 2. கூசுதல்;

 to be shy bashful.

     “அரன்குன்றென்றே வட்கி” (திருக்கோ.116);.

   3. கெடுதல்; to be destroyed.

     “அதகங்கண்ட பையணனாகம் போல வட்க” (சீவக.403);.

   4. தாழ்தல்; to humble, to lower oneself.

     “வாடிய காலத்தும் வட்குபவோ” (பழமொ. 204);.

   5. ஒளி மழுங்குதல் (சூடா);; to be dim, to be lit faintly.

     [வெட்கு → வட்கு.]

 வட்கு2 vaṭkudal,    5 செ.கு.வி. (v.i.)

   வளம் பெறுதல், பகட்டாயிருத்தல்; to thrive well, prosper, to flourish, to be luxuriant, as a plant.

     “முட்கொணச்சுமரம்…. வட்சி நீண்டதற் பின் மழுவுந் தெறும்” (சூளா. சீய.72.);.

 வட்கு3 vaṭku, பெ. (n.)

   1. வெட்கம்; shame.

   2. நாணம்; bashfulness, shyness, modesty.

     “‘வட்கில ளிறையும்’ (திவ். திருவாய். 7, 2 3);.

   3. கேடு; injury, ruin.

     “வட்கிலானைக் கவான்மிசை வைத்து” (காஞ்சிப்பு.நாரசிங்.6);.

     [வள்கு → வட்கு.]

இஃதும் வளைதற் கருத்து மூலமாகும். வெட்கத்தினால் தலை சாய்கை.

 வட்கு4 vaṭkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வணங்குதல், வழிபடுதல்; to worship.

   2. வளைதல்; to bend.

     [வள் → வள்கு → வட்கு.]

வட்கார், வணங்கார். வளைதற்கருத்து வேரடியினின்று கிளைத்த சொல். வட்கு என்னும் வடிவம், வடமொழியில் இல்லை (வ.வ.2 : 76);.

வட்சத்தலம்

 வட்சத்தலம் vaṭcattalam, பெ. (n.)

   மார்பு; chest (சா.அக.);.

வட்சாத்திரி

 வட்சாத்திரி vaṭcāttiri, பெ. (n.)

   நெஞ்செலும்பு; sternum (சா.அக.);.

வட்ட குத்தாட்டு திரும்பல் அடவு

 வட்ட குத்தாட்டு திரும்பல் அடவு vaḍḍaguddāḍḍudirumbalaḍavu, பெ. (n.)

ஒயில் கும்மியாட்ட வல்லுநர்கள் கையாளும் அடவு முறை:

 a stepping method in kummidance.

     [வட்டம்+குத்தாட்டு+திரும்பல்+அடவு]

வட்ட வாசிகை

 வட்ட வாசிகை vaṭṭavācigai, பெ. (n.)

   சிவனின் திருவுருவில் இடம்பெறும் ஒருவகையான சிற்ப வேலைப்பாடு; a kind of ornament carved in siva’s sculpture.

     [வட்டம்+வாசிகை]

வட்டகன்னி

 வட்டகன்னி vaṭṭagaṉṉi, பெ. (n.)

வட்டத்துத்தி பார்க்க;see vatta-t-tutti (சா.அக.);.

வட்டகம்

 வட்டகம் vaṭṭagam, பெ. (n.)

   வயிற்றுளைச்சலைப் போக்கும் மருந்து; hollarrhena antidysenterica.

வட்டகை

வட்டகை vaṭṭagai, பெ. (n.)

   1. பரப்பெல்லை; area, extent.

   2. நிலப்பகுதி; region.

     “ஊர்நாற்காத வட்டகை” (சிலம்.5, 133, உரை);.

   3. வட்டம்1 9, 10 பார்க்க;see vattam

   4. வட்டகை நிலம் (வின்.); பார்க்க;see vattagai-nillam.

   5. சிறுகிண்ணம்; small bowl.

     “கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப” (சீவக.938);.

   6. வட்டில்; metal cup.

     “செம்பொற்றூமணி வட்டகையோடு” (காஞ்சிப்பு. தழுவக்.333);.

     [வட்டம்1 → வட்டகை + சிறிய நாட்டுப் பகுதி (தேவ.13, பக்.5);.

     ‘வட்டகை’ யென்னும் வடிவம் வடமொழியி லில்லை.]

வட்டகைநிலம்

வட்டகைநிலம் vaṭṭagainilam, பெ. (n.)

   அடைப்புக்கட்டிய நிலம்; enclosed field, fenced land.

     [வட்டம்1 → வட்டகை + நிலம்.]

வட்டகைமணியம்

 வட்டகைமணியம் vaṭṭagaimaṇiyam, பெ. (n.)

வட்டமணியம் (வின்.); பார்க்க;see vattamaniyam.

     [வட்டம் → வட்டகை + மணியம். மணியம் = ஊர். ஊரிலுள்ள கோயில் மற்றுமுள்ளவற்றை மேற்பார்வை செய்கை.]

வட்டக்கச்சைக்கட்டில்

 வட்டக்கச்சைக்கட்டில் vaṭṭakkaccaikkaṭṭil, பெ. (n.)

   வட்ட வடிவாயமைந்த கட்டில் வகை; a kind of round shaped cot.

     [வட்டக்கச்சை + கட்டில்.]

வளமனைகளிலும், அரசர் மாளிகைகளிலும் உள்ள கட்டில்.

வட்டக்கட்டில்

வட்டக்கட்டில் vaṭṭakkaṭṭil, பெ. (n.)

   வட்ட வடிவில் செய்த சுழற் கட்டில் வகை; a circular revolving cot.

     “மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில்” (நெடுநல்.123, உரை);.

     [வல் → வள் → வட்டு → வட்டம். வட்டம் + கட்டில். கட்டு + இல் + கட்டில்.

     “இல்” சொல்லாக்க ஈறு. சுற்றி வருந்தன்மையில் வட்ட வடிவிற் செய்த கட்டில்.]

வட்டக்கணக்கன்

 வட்டக்கணக்கன் vaṭṭakkaṇakkaṉ, பெ. (n.)

   ஒரு வட்டத்தைச் சேர்ந்த பலவூர்களுக்குரிய கணக்கன் (இ.வ.);; accountant of a circle (vattam); or group of villages.

     [வட்டம் + கணக்கன். வட்டம் = நிலப்பரப்பு, சிலவூர்களைக் கொண்ட நாட்டுப்பகுதி. (கணக்கன் + ஊர்க்கணக்கெழுதுவோன்);.]

வட்டக்கண்ணி

 வட்டக்கண்ணி vaṭṭakkaṇṇi, பெ. (n.)

வட்டிக்கண்ணி (இ.வ.); பார்க்க;see vatti-k-kanni.

     [வட்டம் + கண்ணி. கள் → கண் → கண்ணி. வட்டமாக முளைத்த செடி அல்லது மரம்.]

வட்டக்கப்பல்

 வட்டக்கப்பல் vaṭṭakkappal, பெ. (n.)

   புகையிலை வகை (இ.வ.);; a variety of tobacco.

வட்டக்கருக்கு

 வட்டக்கருக்கு vaṭṭakkarukku, பெ. (n.)

   ஒரு வட்டத்தினுள் இலை, கொடி ஆகியவை செறிந்த கருக்கு; an artful work with thick leave, creeper in a circle.

     [வள் → வட்டு → வட்டம் + கருக்கு. கருக்கு + சிற்பவேலை.]

மேலே சொல்லப்பட்ட கருக்கு வேலைகள் பரிமா, அரிமா ஆகியவற்றின் தொடைகளிலும், கோயிற் தூண்களிலும் வரையப்படும்.

வட்டக்காய்

 வட்டக்காய் vaṭṭakkāy, பெ. (n.)

   அண்ட விதை (கொ.வ.);; testicle.

தெ. வட்டகாய

     [வட்டம் + காய்.]

வட்டக்காரன்

வட்டக்காரன் vaṭṭakkāraṉ, பெ. (n.)

வட்டத்துக்குப் பணமாற்றுவோன் (C.G.);,

 money ex-changer.

     [வட்டம்2 + காரன். வட்டம் = நாணயமாற்றின் வட்டம்.]

வட்டக்காரர்

வட்டக்காரர் vaṭṭakkārar, பெ. (n.)

   சம்மாட்டியார் மூலமாக மீன்பிடி தொழிலில் பண முதலீடு செய்பவர்; a person who invest money in fishing through a middle man called Šammāţțiyār.

     [வட்டம் + காரர்.]

சம்மாட்டியார் அன்றாடம் கிடைக்கும் மீன்பாட்டினை ஏலம் விட்டு அத்தொகையில் நூற்றுக்கு ஒரு வட்டம் வீதம் (விழுக்காடு); கொடுப்பார். வட்டக்காரர் தமது முதலுக்கு வட்டத் தொகையை வட்டிப் போலப் பெற்றுக் கொள்கிறார்.

   1 வட்டம் – ரூ-6-25.

வட்டக்கிணறு

 வட்டக்கிணறு vaṭṭakkiṇaṟu, பெ. (n.)

   வட்ட வடிவமாக அமைந்த சிறுகிணறு; small, circular shallow well.

     [வட்டம + கிணறு.]

வட்டக்கிருமி

 வட்டக்கிருமி vaṭṭakkirumi, பெ. (n.)

   ஒரு வகை குடற் பூச்சி; a variety of intestinal parasite-Ascaris (சா.அக.);.

     [வட்டம் + Skt. கிருமி.]

வட்டக்கிலுகிலுப்பை

வட்டக்கிலுகிலுப்பை vaṭṭaggilugiluppai, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த.253);; rattle-wort, blue-flowered.

     [வட்டம் + கிலுகிலுப்பை.]

வட்டத்தோற்றத்தினைக் குறிக்கும் இருபதிற்கு மேற்பட்ட காட்சிப் பொருளைக் குறிக்கும் இச்சொல் தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவரும் நூற்றுக்கணக்கான நிலைத்திணைப் பெயர்களுளொன்றாம்.

வட்டக்கிளா

 வட்டக்கிளா vaṭṭakkiḷā, பெ. (n.)

   களா; a plant-Carandus spinaram (சா.அக.);.

வட்டக்குடில்

 வட்டக்குடில் vaḍḍakkuḍil, பெ. (n.)

   பெருங் குடிசை (யாழ்.அக.);; big hut.

     [வட்டம் + குடி → குடில்.]

வட்டக்குடை

வட்டக்குடை vaḍḍakkuḍai, பெ. (n.)

   அரசர்க்குரிய குடை (சீவக.860, உரை.);; state umbrella.

     [வட்டம் + குடை.]

வட்டக்குளம்படி

 வட்டக்குளம்படி vaḍḍakkuḷambaḍi, பெ. (n.)

   கழுதைக் குளம்படி; plant known as ass’s hoof (சா.அக.);.

வட்டக்குளிகம்

 வட்டக்குளிகம் vaṭṭagguḷigam, பெ. (n.)

   மேக நிறச் செவ்வந்தி; chrysanithemum flower of cloud colour (சா.அக.);.

வட்டக்குழிபிடி-த்தல்

வட்டக்குழிபிடி-த்தல் vaḍḍakkuḻibiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வில்லைப் போலிருக்க வேண்டி, உருக்கினதை, உருக்கிச் சாய்க்க வட்டமாகச் செய்த ஓர் குழி; a bow shaped pit (to pour the melted matal into it); for casting (சா.அக.);.

வட்டக்கெண்ணை

 வட்டக்கெண்ணை vaṭṭakkeṇṇai, பெ. (n.)

   கண்டுபாரங்கி; Indian lotus Croton.

வட்டக்கைச்சில்

வட்டக்கைச்சில் vaṭṭakkaiccil, பெ. (n.)

   கொட்டாங்கச்சியின் அடிப்பாதியோடு (யாழ்.அக.);; the lower half of a coconut-shell.

     [வட்டம்1 + கச்சி → கச்சில் → கைச்சில்.]

வட்டக்கொடை

 வட்டக்கொடை vaḍḍakkoḍai, பெ. (n.)

   காட்டெருமை; wild buffalo (சா.அக.);.

வட்டக்கொட்டை

 வட்டக்கொட்டை vaṭṭakkoṭṭai, பெ. (n.)

   வட்டமான தலையணை; round pillow.

     [வட்டம் + கொட்டை.]

வட்டக்கோட்டை

 வட்டக்கோட்டை vaṭṭakāṭṭai, பெ. (n.)

   வட்டமாகவோ, சதுரமாகவோ அமைந்த கோட்டை; a fort in the shape of circle or square.

     [வட்டம் + கோட்டை.]

வட்டக்கோரை

வட்டக்கோரை vaṭṭakārai, பெ. (n.)

   புல்வகையுளொன்று (நாநார்த்த.128);; a kind of sedge or grass.

வட்டக்கோல்

 வட்டக்கோல் vaṭṭakāl, பெ. (n.)

   வட்ட வடிவு; circular or round shape or form.

     [வட்டம் + கோல்.]

வட்டக்கோள்

வட்டக்கோள் vaṭṭakāḷ, பெ. (n.)

வட்டம்1, 2 (சிலப்.10,102, உரை); பார்க்க;see vattam.

மறுவ. கரந்துறைகோள்.

     [வட்டம்1 + கோள்2.]

வட்டக்கோவை

வட்டக்கோவை vaṭṭakāvai, பெ. (n.)

   கொடி வகை; a common creeper of the hedges-Coccinia indica.

     “கோவையங் கனிநே றென்ன” (திருச்செந். பு.8, 56);

வட்டங்கண்கூலி

 வட்டங்கண்கூலி vaṭṭaṅgaṇāli, பெ. (n.)

   நாணயமாற்றம் செய்யும் வணிகத் துறை இடையீட்டாளர் பெறும் கூலி; money broker’s commission.

     [வட்டம் + கண்கூலி.]

வட்டங்கி

 வட்டங்கி vaṭṭaṅgi, பெ. (n.)

   வெள்வங்கம்; white lead, tin.

வட்டங்கூட்டு-தல்

வட்டங்கூட்டு-தல் vaṭṭaṅāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அணியமாதல் (நெல்லை);; to prepare, to be neadied.

     [வட்டம்1 + கூட்டு-தல்.]

இது வழக்கியன் மரபுச் சொற்களு ளொன்று.

வட்டச் சடங்குகள்

 வட்டச் சடங்குகள் vaḍḍaccaḍaṅgugaḷ, பெ. (n.)

   பிறப்பு, திருமணம், இறப்புத் தொடர்பான சடங்குகள்; rites performed during birth marriage and death.

     [வட்டம்+சடங்கு]

வட்டச்சக்கரம்

வட்டச்சக்கரம் vaṭṭaccakkaram, பெ. (n.)

   சித்திர பா வகை (யாப்.வி.பக். 497);; a kind of metrical composition.

வட்டச்சாரணை

வட்டச்சாரணை vaṭṭaccāraṇai, பெ. (n.)

   1. வெள்ளை வட்டச் சாரணை; trianthema pentandra.

   2. இதன் இலைகள் கண்நோய்க்குப் பயன்படுவதாலிப் பெயர்; rounded mucronate leved train thema-Orgia trianthemoides. It is so called because of its usefulness in ophthalmia and other diseases of the eye (சா.அக.);.

வட்டச்சில்லி

 வட்டச்சில்லி vaṭṭaccilli, பெ. (n.)

   பழந்தமிழர் விளையாட்டுகளுளொன்று; one of the games of the ancient Tamils.

     [வல் → வள் → வட்டம் + சில் → சில்லி.]

வட்டமான அரங்கு கீறி ஆடும் இவ்விளையாட்டுக் குறித்து, மொழிஞாயிறு கூறுவது :

ஆடுகருவி :- சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதற்கான ஆடு கருவியாம்.

சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத் தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத் தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும்.

ஆடுமுறை: முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து மேன்மேலுயர்ந்த தொகையுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த சில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டு மேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல் கூடாது. ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆட வேண்டும். குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர் (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்);, கெலித்தவராவர். கெலிப்பதற்குப் ‘பழம்’ என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும்.

வட்டணம்

வட்டணம் vaṭṭaṇam, பெ. (n.)

   1. வட்டமான கேடகம்; shield.

     “இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்” (கலிங்.413);.

   2. நெடுங் கேடக வகை (யாழ்.அக.);; a kind of big shield.

மறுவ. பரிசை

த. வட்டணம் → Skt. அட்டன.

     [வட்டம் → வட்டணம் = வட்டமான கேடகம் (முதா.2 பக்.85);.]

வட்டணி

வட்டணி1 vaṭṭaṇittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வட்டமாக்குதல்; to make round or circular, to encircle.

     [வட்டணம் → வட்டணி.]

வட்டமாதல், வட்டமாக்குதல் (மு.தா. 2. பக்.55);

     ‘வட்டணி’ என்னும் வினைவடிவம். வடமொழியிலில்லை.

 வட்டணி2 vaṭṭaṇittal,    4 செ.கு.வி. (v.i.)

   வட்டமாதல்; to encircle to become round or circular.

     [வட்டணம் → வட்டணி.]

வட்டணி என்னும் வினைவடிவம் வடமொழியி லில்லை.

வட்டணிப்பு

வட்டணிப்பு vaṭṭaṇippu, பெ. (n.)

   வட்டமா யிருக்கை, வட்டவடிவமான தன்மை; roundness, circularity, rotundity.

     “குண்டலமென்று வட்டணிப்பைச் சொல்லவுமாம்” (திருவிருத்.57 வ்யா.பக்.318);.

     [வட்டணம் → வட்டணி → வட்டணிப்பு.]

வட்டணை

வட்டணை1 vaṭṭaṇai, பெ. (n.)

   1. பொருள் பொதிந்த, அறிவார்ந்த பேச்சு; flowery meaningful speech, learned jargon.

   2. வண்ணனை; flowery or rhetorical speech or statement.

     “வட்டணை பேசுவர்” (பதினொ, கோபப்பிர.85);.

 வட்டணை2 vaṭṭaṇai, பெ. (n.)

   1. வட்டம்1, 1 (பிங்.); பார்க்க;see vattam.

     “வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி” (தேவா. 507.2);.

   2. உருண்டை; globe, ball.

   3. வட்டமான செலவு; circular course, as of a horse.

     “மாப்புண்டர வாசியின் வட்டணைமேல்” (கம்பரா.படைத்.97);

   4. இட வலமாகச் சுற்றுகை; moving left and right, as in pugilistic performance.

     “சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து” (பெரியபு. ஏனாதி. 29);.

த. வட்டணம் → Skt. வர்த்தன.

     [வட்டணம் → வட்டணை = இருமுனையும் வளைந்து தொடுமாறு முழுமையாக வளைவாக அமைக்கப்பட்ட வட்டணை.]

 வட்டணை3 vaṭṭaṇai, பெ. (n.)

   1. தொழுதற்கு அறிகுறியாகத் தாமரை மொட்டுப் போலக் கைகளைக் குவிக்கை (பரிபா.16, 11, உரை);; a gesture with both hands signifying obcisance, consisting in folding one’s hands so as to resemble a lotus bud.

     “வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி” (மணிமே.7, 4, 3);.

   2. தாளக் கருவி; cymbals.

     “கொம்மைக் குயவட்டணை கொண்டிலனோ” (கம்பரா. அதிகாயன்.9);.

   3. தாளம் போடுகை (பிங்.);; beating time.

   4. அடிக்கை (அரு.நி.);; beating.

   5. மொத்துகை (அரு.நி.);; dashing against.

 வட்டணை4 vaṭṭaṇai, பெ. (n.)

   கிடுகு, கேடகம்; shield.

     “மன்னவர்காண வட்டணை வாளெடுத்து” (கல்லா.48, 8);.

     [வட்டணம் → வட்டணை = வட்டமான கேடகம் (மு.தா.2 பக்.85.]

 வட்டணை5 vaṭṭaṇai, பெ. (n.)

   வட்டமான அணை, வட்டவடிவிலமைந்த படுக்கை; circular bed or cushion.

     “வட்டணை…….. இரீஇயினாரே” (சீவக..2433);.

     [வட்டம் + அணை.]

வட்டணையுறுத்து-தல்

வட்டணையுறுத்து-தல் vaṭṭaṇaiyuṟuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   தாளம்போடுதல் (வின்.);; to beat time, to struggle.

     [வட்டணை + உறு → உறுத்து.]

வட்டதரி

வட்டதரி vaṭṭadari, பெ. (n.)

   முண் மரவகை (பதார்த்த.245);; ashy babool.

வட்டதாக்கல்

 வட்டதாக்கல் vaṭṭatākkal, பெ. (n.)

   வட்டமாகச் செய்தல்; to make round shape.

வட்டதிட்டம்

 வட்டதிட்டம் vaṭṭadiṭṭam, பெ. (n.)

   நேர்மையான ஏற்பாடு; proper course.

     “வட்டதிட்டந் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்” (இ.வ.);.

வட்டத்தகரை

 வட்டத்தகரை vaṭṭattagarai, பெ. (n.)

   வண்டுக் கடிகளைப் போக்கும் ஒருவகைத் தகரைச்செடி; a species of cassia which has round leaves and is capable of curing beetle sting (சா.அக.);.

     [வட்டம் + தகரை.]

வட்டத்தறிமுறையன்

 வட்டத்தறிமுறையன் vaṭṭattaṟimuṟaiyaṉ, பெ. (n.)

   பெருமருந்து; a twiner-Aristolochia indica.

வட்டத்தலைப்பா

 வட்டத்தலைப்பா vaṭṭattalaippā, பெ. (n.)

   தலைப்பாகை வகையுளொன்று (யாழ்.அக.);; a kind of head-dress, round turban.

     [வட்டம் + தலைப்பா.]

வட்டத்தாமரை

வட்டத்தாமரை vaṭṭattāmarai, பெ. (n.)

   1. மரவகை; Indian lotus croton.

   2. ஒரு வகைச் சிறு செடி (M.M.588);; marrow woolly-stipuled lotus croton.

     [வட்டம் + தாமரை.]

வட்டத்தாமரை, வட்டக்கிலுகிலுப்பை என்பனவும் பிறவும் தொன்றுதொட்டு வழங்கி வரும் நிலைத்திணைப் பெயர்களாகும். இது கோளப் பகுதியிற் காணக்கூடும்.

வட்டத்தாளி

வட்டத்தாளி vaṭṭattāḷi, பெ. (n.)

   செடி வகை (M.M.938.);; a shrub.

     [வட்டம் + தாளி.]

வட்டத்திப்பிலி

வட்டத்திப்பிலி vaṭṭattippili, பெ. (n.)

   மருந்துக் கொடி வகை (பதார்த்த. 954);; long pepper-m.ci., piper longum.

வட்டத்திரி

வட்டத்திரி vaṭṭattiri, பெ. (n.)

   1. துமுக்கி (துப்பாக்கி);க்கு நெருப்பு வைக்குந் திரி (வின்.);; match of a gun.

   2. காதிடு திரி; small roll of cloth put into the pierced lobe of the ear for widening the aperture.

     [வட்டம் + திரி.]

வட்டத்திருகாணி

 வட்டத்திருகாணி vaṭṭattirukāṇi, பெ. (n.)

   மேற்பகுதி வட்டமாக அமைந்த திருகாணி; tirukani with round brim.

     [வட்டம் + திருகாணி.]

வட்டத்திருப்பி

வட்டத்திருப்பி1 vaṭṭattiruppi, பெ. (n.)

   1. பொன் முசுட்டை வேர்; root of cissampelos pareira.

   2. கொழுப்பு தசையை வளர்க்கும் உடம்பு; it increases flesh ingient in the body (சா.அக.);.

 வட்டத்திருப்பி2 vaṭṭattiruppi, பெ. (n.)

   1. கொடிவகை; velvet leaf, kidney-leaved bracteate moonseed.

   2. அரிவாண் மணைப்பூண்டு (L.);; sickle-leaf shrub.

   3. ஆடு தின்னாப்பாளை; an ash coloured bitter prostate medicinal plant, worm-killer-Aristolochia bracteata.

வட்டத்துத்தி

வட்டத்துத்தி1 vaṭṭattutti, பெ. (n.)

   ஓர் வகைச் சிறுதுத்தி; a shrub-Macaranga Roxburghi.

 வட்டத்துத்தி2 vaṭṭattutti, பெ. (n.)

வட்டத் தாமரை,

   2. பார்க்க;see vațta-t-tamarai.

வட்டத்தொப்பி

 வட்டத்தொப்பி vaṭṭattoppi, பெ. (n.)

   தொப்பி வகை (யாழ்.அக.);; a kind of round hat.

     [வட்டம் + தொப்பி.]

     [P]

வட்டத்தோல்

வட்டத்தோல் vaṭṭattōl, பெ. (n.)

   கிடுகு, கேடகம்; shield.

     “வட்டத்தோல் வரிபுறங் கிடந்தசைய” (திருவிளை. நரிபரி.30);.

     [வட்டம் + தோல்.]

வட்டநரிமருட்டி

 வட்டநரிமருட்டி vaṭṭanarimaruṭṭi, பெ. (n.)

   வட்டக்கிலுகிலுப்பை (மூ.அ.); பார்க்க; vatta-k-kilukiluppai.

     [வட்டம் + நரிமருட்டி.]

வட்டன்

வட்டன்1 vaṭṭaṉ, பெ. (n.)

   வட்டுப்போல் உருண்டு திரண்டவன்; round person.

     “குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு” (கலித்.94, 27);.

     [வட்டு → வட்டன் (வ.வ.2 பக்.77);.]

இருபதிற்கு மேற்பட்ட காட்சிப் பொருள்களினின்று கிளைத்த சொல். வட்டன் என்னுஞ்சொல். தோற்றத்தில் உருண்டு திரண்ட காட்சியைக் குறித்தது (தேவ. 12, பக்.4);.

 வட்டன்2 vaṭṭaṉ, இடை. (part.)

   ஒவ்வொரு, ஒவ்வொன்றும்; each and every.

     “ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக” (S.I.I.ii,69, 3);.

     [வட்டம் → வட்டன்.]

வட்டப்பக்கா

 வட்டப்பக்கா vaṭṭappakkā, பெ. (n.)

   அகன்ற வட்டவடிவாயமைந்த பக்காப் படிவகை; Madras measure, when made with a wide circular mouth.

     [வட்டம் + பக்காப்படி → பக்கா. பக்காப்படி = பெரியபடியி னளவு.]

வட்டப்பண்டிகை

 வட்டப்பண்டிகை vaṭṭappaṇṭigai, பெ. (n.)

   கோயில் விமானத்தில் வட்ட வடிவமாக அமைந்த பண்டிகை; an arnament on the top of temple tower.

வட்டப்பாறை

வட்டப்பாறை vaṭṭappāṟai, பெ. (n.)

   1. வட்டமான பாறை; round, flat stone or rock.

வட்டப்பாறை நாச்சியார் (வின்.);.

   2. விளைவற்ற கற்பாங்கான பகுதி (வின்.);; rockey, barren surface, uncultivable rocky area.

   3. சந்தனக்கல்; round, flat stone used for triturating sandal wood.

     “வட்டப்பாறையின் முழங்கையை மணங்கொள் சந்தனமா. . . தேய்க்குமுன் (திருவாலவா.51, 6);.

     [வட்டம் + பாறை.]

வட்டப்பாலை

வட்டப்பாலை1 vaṭṭappālai, பெ. (n.)

   தமிழிசையின் அடிப்படையான பகுப்பு நான்கனுளொன்று (சிலப்.17, உரை, பக்.453);; one of the four base of the ancient Tamil music.

     [வட்டம் + பாலை.]

குமரிக்கண்டத் தமிழர் நுண்மாண் நுழைபுலத்தராயும் தலைசிறந்த நாகரிகராயும் எஃகுச் செவியராயு மிருந்ததினால் எழுபேரிசையும் ஐந்து சிற்றிசையுமாகிய பன்னீரிசையை (கரத்தை);யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில், எழுபாலைப் பண்களைத் திரித்ததுமன்றி, அப்பன்னீரிசையையும் வட்டப்பாலை என்னும் முறையில், 24 ஆகவும்……… நுட்பமாய்ப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருக்கின்றனர் (பண்.தமி.நா.பண்.பக்.112);.

 வட்டப்பாலை2 vaṭṭappālai, பெ. (n.)

   நிலைத் திணை வகையுளொன்று; a class of thing that immovable.

     [வட்டம் + பாலை.]

 வட்டப்பாலை vaṭṭappālai, பெ. (n.)

   முழுமை யான வட்டத்தில் பன்னிரண்டு கோணஞ் செய்து, அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்படுவது; a musical method.

     [வட்டம்+பாலை]

வட்டப்புல்

 வட்டப்புல் vaṭṭappul, பெ. (n.)

   காவட்டம் புல் (மூ.அ.);; Citronella-grass.

மறுவ. காமாட்சிப்புல்

     [காவட்டம்புல் → வட்டம்புல் → வட்டப்புல்.]

வட்டப்பூ

வட்டப்பூ vaṭṭappū, பெ. (n.)

   கால்விரலணி வகை (சிலப்.6, 97. அரும்.);; a toe-ring.

மறுவ. மெட்டி

     [வட்டம் + பொல் → பூல் → பூ.]

வட்டப்பூடு

 வட்டப்பூடு vaṭṭappūṭu, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; a species of small milkwort-Polygalaglabra.

     [வட்டம் + பூடு.]

வட்டப்பேந்தா

 வட்டப்பேந்தா vaṭṭappēndā, பெ. (n.)

   பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று; one of the games of ancient Tami’s

     [வல் → வள் → வட்டு → வட்டம் + பேந்தா.]

வட்டமான வளையமிட்டு ஆடும் இக்கோலி விளையாட்டுப் பற்றி பாவாணர் கூறுவது :

ஆட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு வகை வட்டப் பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.

ஆடுவார் தொகை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின்மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.

ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொருவ னிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவாவது இருத்தல் வேண்டும்.

ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுவில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால்வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும்.

கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில், உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (TOP); என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

ஆடுகளம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.

   ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தத்தம் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி); நிற்கின்றதோ, அவன் முன்னும்;   அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்;   அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக;இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.

   ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்ட பின், முந்தி யாடுகிறவனிடம் எனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்துவிடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்); முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது;அடிப்பின்,

     ‘பச்சா’வாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான்.

உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங் கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின்

     ‘பச்சா’ என்னும் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.

உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.

முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்டத்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற் போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்துவிடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விரு காய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை

   அடிக்கும்போது, குழிக்காயையும், அடிக்கலாம்;வெளிக்காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான்.

குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல் போனவன். தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.

   அடித்தகாயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தை விட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டு விடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப் பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்;கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப் பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டமும் முடியும் வரை, அவை ஒரு முதல் போல் இருந்து கொண்டே யிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.

   ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக் கொள்ளலாம்;அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.

எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும்.

ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப் பயனாக முற்கூறப்பட்டவற்றொடு, பெருந் தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக் கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் வாட்டின் பயனாம்.

வட்டப்பேய்மருட்டி

 வட்டப்பேய்மருட்டி vaṭṭappēymaruṭṭi, பெ. (n.)

   ஒரு பேய் மருட்டி; a kind of plant-Anisomeles ovata.

வட்டப்போதிகை

 வட்டப்போதிகை vaṭṭappōtigai, பெ. (n.)

   போதிகையின்கீழ் அமைத்த வட்ட வடிவான தாங்கல் வகை (வின்.);; a circular supporting piece placed under the capital of a pillar.

     [வட்டு → வட்டம் + போதிகை.]

வட்டமடக்கி

 வட்டமடக்கி vaḍḍamaḍakki, பெ. (n.)

வட்டத் திருப்பி (சங்.அக.); பார்க்க;see vatta-t-tiruppi.

வட்டமணியக்காரன்

 வட்டமணியக்காரன் vaṭṭamaṇiyakkāraṉ, பெ. (n.)

   நாட்டாண்மைக்காரன்; headman of a village or group of villages.

     [வட்டமணியம் + காரன்.]

வட்டமணியம்

வட்டமணியம்1 vaṭṭamaṇiyam, பெ. (n.)

   சுற்றியிருக்கும் ஊர்களில் வரிதண்டும் வேலை; the office of revenue collection in a division.

 வட்டமணியம்2 vaṭṭamaṇiyam, பெ. (n.)

   1. நாட்டாண்மை; office of headman of a circle or group of villages.

   2. நாட்டாண்மைகாரன்; village headman.

     [வட்டம் + மணியம்.]

வட்டமணை

வட்டமணை vaṭṭamaṇai, பெ. (n.)

   1. திருக் கோயில் திருமேனியை வைப்பதற்குரிய வட்டமான பீடம்; circular platform for idols, in a temple.

   2. மதிப்புறவாக இடும் இருக்கை; seat offered as a mark of respect.

     [வட்டம் + மணை.]

வட்டமணைவேதியை

 வட்டமணைவேதியை vaṭṭamaṇaivētiyai, பெ. (n.)

வட்டமணை (இ.வ.); பார்க்க;see иatta-manai.

வட்டமயிர்க்கத்தி

வட்டமயிர்க்கத்தி vaṭṭamayirkkatti, பெ. (n.)

   சத்திரக் கருவி 26-ல் ஒன்று; one of the 26 surgical instruments described in the Tamil medical science.

வட்டமரம்

வட்டமரம் vaṭṭamaram, பெ. (n.)

   1. செக்கின் ஆட்டு மரம்; turning pole of an oil-press.

   2. காட்டு மரவகை (வின்.);; a jungle tree.

வட்டமறுதி

 வட்டமறுதி vaṭṭamaṟudi, பெ. (n.)

   சீட்டு முதலியவற்றின் முடிவு (கொ.வ.);; conclusion, close, as of a chit fund etc.

     [வட்டம் + அறு → அறுதி.]

வட்டமிடு

வட்டமிடு1 vaḍḍamiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

.

   1. பறவை முதலியன சுற்றி வருதல்; to hover about, as a hawk;

 to gyrate.

   2. உருண்டையாதல்; to be round or globular.

     “வட்டமிட் டடியிட்டு” (தனிப்பா.1 322,16);.

     [வட்டம் + இடு.]

 வட்டமிடு2 vaḍḍamiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   நோக்கங்கொண்டு சுற்றுதல்; to hang about in order to gain an object, to round about with a view to gain something.

கலுழன் இரையைத் தேடி வானத்தில் வட்டமிட்டுத் திரிகிறது.

     [வட்டம் + இடு.]

வட்டமுத்து

 வட்டமுத்து vaṭṭamuttu, பெ. (n.)

   வட்ட வடிவில் அமைந்த முத்து; round pearl.

     ‘பிறப்பிலேயே தட்டையான வடிவில் வட்டமாக அமைந்த முத்து’.

     [வட்டம் + முத்து.]

ஒருகா. முத்துவட்டம்

வட்டமுலையாள்

 வட்டமுலையாள் vaṭṭamulaiyāḷ, பெ. (n.)

   ஓர் வகைப்பூடு; a kind of shrub (plant);.

வட்டமூக்குகோலா

வட்டமூக்குகோலா vaṭṭamūkkuālā, பெ. (n.)

   கடல் மீன்வகை; a kind of sea fish, anacanthus barbatus, body strongly compressed dull brown or grey fish with yellow fins 10 inches long.

     [P]

வட்டமேசைமாநாடு

 வட்டமேசைமாநாடு vaṭṭamēcaimānāṭu, பெ. (n.)

   தனிப்படக்கூட்டிய ஆய்வுக் கூட்டம் (தற்கா.);; round table conference, as of persons sitting in conference round a circular table, conkened for specific purpose.

வட்டம்

வட்டம்1 vaṭṭam, பெ. (n.)

   1. பணம், வராகன் போன்ற பெயர்; money named like ‘varagan’.

   2. வட்டக்காரர் பார்க்க;see vatta-k-kārar.

 வட்டம்2 vaṭṭam, பெ. (n.)

   1. மண்டலம், வட்ட வடிவு (தொல்.சொல்.402, உரை);; circle, circular form, ring-like shape. 2. பரிவேடம் (சிலப்.10, 102. உரை.);;

 halo round the sun or moon, a karandurai-kól.

   3. குயவன் திரிகை (பிங்.);; potter’s wheel.

   4. வண்டிச்சக்கரம் (யாழ்.அக.); wheel of a cart.

   5. உண்கலமாய்த் தைக்கும் இலையின் நடுப்பகுதி (இ.வ.);; the central portion of a leaf-plate stitched for taking food.

   6. தடவை, முறை; turn, course, as of a mantra.

     “விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ்செய்து” (விநாயகபு.74, 214);.

   7. சுற்று (வின்.);; revolution, cycle.

   8. ஒரு கோள் வானமண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம்; cycle of a planet.

அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று.

   9. சுற்றியுள்ள நிலப்பகுதி; circuit, surrounding area or region.

     “கோயில் வட்டமெல்லாம்” (சீவக.949);.

   10. சில ஊர்களைக் கொண்ட நிலப்பகுதி; a revenue unit comprising of a few villages, called taluk.

   11. வட்டணை2, 3 பார்க்க;see vattanai.

     “தார்பொலி புரவிவட்டத் தான்புகக் காட்டுகின்றாற்கு” (சீவக.442);.

   12. விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த தொடுகறிவகைகள் (நாஞ்.);; items or course of side dishes of a meal for a feast etc.

   13. அப்பவகை; a kind of pastry.

     “பாகொடு பிடித்த விழைகும் வட்டம்” (பெரும்பாண்.378);.

   14. வட்டப்பாறை, 3 பார்க்க;see vatta-p-parai.

     “வடவர்.தந்த வான்கேழ் வட்டம்” (நெடுநல்..51);.

   15. ஆலவட்டம்; circular ornamental fan.

     “செங்கேழ் வட்டஞ் சுருக்கி” (நெடுநல்.58);.

   16. வாகுவலயம் (பிங்.);; bracelet worn on the upper arm.

   17. தராசுத்தட்டு; scale-pan, round plate for balance.

     “வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே” (திருமந்.1781);.

   18. கைம்மணி (பிங்.);; hand bell.

   19. கிடுகு, கேடகம் (பிங்.);; shield.

     “ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப” (திருமுரு.111);.

   20. முத்து வகை (பிங்.);; a kind of pearl.

     “முத்து வட்டமும் அனுவட்டமும்” (S.S.1.1.ii, 22);.

   21. பீடம், இருக்கை (யாழ்.அக.);; seat, chair.

   22. குளம் (பிங்.);; pond, tank.

   23. கொள்கலம் (யாழ்.அக.);; receptacle.

   24. நீர்ச்சால் (பிங்.);; large water pot.

   25. நீரெறிகருவி; a kind of water squirt.

     “பூநீர் பெய் வட்டமெறிய” (பரிபா.21, 42);.

   26. வளைவு; curve, bend.

     “வில்லை வட்டப்பட வாங்கி” (தேவா.5, 9);.

   27. பாரா வளை; a kind of boomerang.

     “புகரினர் சூழ் வட்டத்தவை” (பரிபா.15, 6); (பிங்.);.

   28. ஆடை; dress, cloth.

     “வாலிழை வட்டமும்” (பெருங்.உஞ்சைக்.42, 208);.

   29. எல்லை (சூடா.);; boarder, boundary, limit.

     “தொழுவல்வினை யொல்லை வட்டங் கடந் தோடுத லுண்மை” (தேவா.5, 9);.

   30. திருத்தம், செம்மை; polish, refinement.

வட்டமாய்ப் பேசினான் (இ.வ.);.

   31. ஐந்நூறு சால் கொண்ட நீரளவு; a unit for measuring the quantity of water = 500 average potfuls, as the quantity necessary for a pangu for one week.

   32. மக்கட் பிரிவு (இ.வ..);; sect, tribe.

   33. யானையின் நடுச்செவி (பிங்.);; the middle ear of an elephant.

   34. தாழ்வு (அக.நி.); ஆழமான பள்ளத்தாக்கு; lowness, depth, as of a valley.

   35. களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர் (நாஞ்.);; sheaves of paddy spread on a threshing floor for being threshed.

   36. வட்டமரம்2 பார்க்க (வின்.);;see vatta-maram.

த. வட்டம் → Pkt. Vatta → Skt. வ்ருத்த.

ஒ.நோ. நட்டம் → நடம் Skt. ந்ருத்த → verto (to turn);

     [முள் → வள் → வட்டு + அம் வட்டம் + சுற்று. ஒருகா. வள் + தம் என்றுமாம்.]

     ‘வள்’ என்னும் வழிவேர் தமிழிற் பல்வேறு வடிவங்கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைப் பிறப்பிக்கும். வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் என்று திரியவில்லை. வட்டம் என்னும் சொல்லே வருத்த என்று திரிந்தது. வளை, வள்ளம், வட்டு, வட்டி முதலிய பல சொற்கட்கும் வள் என்பதே வேர். இச்சொற்கட்கெல்லாம் இனமானவை வடமொழியிலில்லை.

ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வருங்காலம் (மு.தா.2 : 89);.

வளைந்த பொருளில் இரு முனையும் தொடுமாறு முழு வளைவானதே வட்டம் (மு.தா. 2 : 89);.

     ‘வளைவு முற்றியதே வட்டமாம்’ (மொழியா. கட்.பக்.52); என்றும் வட்டத்துக்குப் பொருள் வரையறை செய்வார் பாவாணர்.

 வட்டம்3 vaṭṭam, இடை. (part.)

   தோறும்; each, every.

     “ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு …. பலிசை” (S.I.I.ii.122, 27);.

     [வள் → வட்டு → வட்டம்.]

 வட்டம்4 vaṭṭam, பெ. (n.)

   1. நாணய மாற்றின் வட்டம்; rate of exchange.

   2. நாணயம் மாற்றுவோரின் பிடித்தத் தொகை; money-changer’s Commission.

     “நாணயத்தின் வட்டமென்றும்” (பணவிடு. 179);.

   3. ஒட்டு மொத்த வாணிகத்திற் கொடுக்கும் தள்ளுபடி (இ.வ..);; wholesale trade discount.

   4. ஊதியம்; profit.

     ‘அந்த வணிகத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை’.

     [வட்டு → வட்டம்.]

 வட்டம்5 vaṭṭam, பெ. (n.)

   முதலாம் பராந்தகன் ஆட்சியில், நாட்டுப்பிரிவுகளுக்கு வழங்கிய பெயர்; a word used to indicate as one of the regions of Parāndaga Cola kingdom.

     “இடையாற்று நாட்டு வடகரையூர் நாட்டு சிற்றாயல் வட்டத்து சிற்றுவக்குடி” (தெ.கல். தொ.7.கல்.515);.

வட்டமாக அமைந்த ஊர் அல்லது நாட்டுப் பகுதி. பல ஊர்களடங்கிய சூழலே வட்டமாக, கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தில் ஒரூரின் உட்பிரிவுகளாகக் குறிக்கின்றனர். இச் சொல்

ஊதியம், வருவாய் ஆகியவற்றிற்கமைந்த காலவரையறையினைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகவும் பயின்று வருகிறது. திருமறைக் காடுடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவபிராமணர்”.

     [வட்டு → வட்டம்.]

 வட்டம் vaṭṭam, பெ. (n.)

   ஏழிசையின் பகுப்பு களில் ஈறாக வைத்துஎண்ணத்தக்கது; the last in the seven notes of the diatonic scale. (t20);.

     [வள்-வட்டு-வட்டம்]

வட்டம்கூறு-தல்

வட்டம்கூறு-தல் vaṭṭamāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   போட்டியில் பலர்முன் ஏற்றி விலை கூறுதல்; to be auctionning by voice, oral auction.

     [வட்டம் + குல் → கூல் → கூறு-. குல் = பொருத்து. வட்டம் கூறுதல் = பொருத்தமாக ஏலம் கூறுதல்.]

வட்டம்பண்ணு-தல்

வட்டம்பண்ணு-தல் vaṭṭambaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மந்திரம் முதலியவற்றை நாள்தோறும் மனனஞ் செய்தல் அல்லது உருப்போடுதல் (யாழ்ப்.);; to mug or recite daily mantras, etc.

     [வட்டம் + பண்ணு.]

வட்டம்பிரிதல்

 வட்டம்பிரிதல் vaṭṭambiridal, பெ. (n.)

   நாணயமாற்றம் முதலியவற்றில் ஊதியம் பெறுகை (வின்.);; profit or gain in exchange etc.

     [வட்டம் + பிரிதல், வட்டம் = நாணயமாற்றின் வட்டம்.]

வட்டம்போடு

வட்டம்போடு1 vaṭṭambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

வட்டமிடு- (வின்.); பார்க்க;see vattam-idu.

     [வட்டம் + போடு.]

 வட்டம்போடு2 vaṭṭambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   சூடடிக்க நெற்கதிர்களை நிலததிற் பரப்புதல்; to spread sheaves of paddy on the threshing floor for being threshed.

     [வட்டம் + போடு.]

 வட்டம்போடு3 vaṭṭambōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

வட்டமிடு பார்க்க;see vattm-idu.

     [வட்டம் + போடு.]

வட்டம்போர்

வட்டம்போர் vaṭṭambōr, பெ. (n.)

   சூதாட்டம் (தொல்.எழுத்து.418, இளம்.);; dice-play, gambling.

     [வள் → வட்டு → வட்டம் + போர். ஒ.நோ. சொற்போர்.]

வட்டரவு

 வட்டரவு vaṭṭaravu, பெ. (n.)

   வட்டவடிவு (யாழ்ப்.);; circularity.

     [வட்டம் → வட்டரவு.]

வட்டராயசம்

வட்டராயசம் vaṭṭarāyasam, பெ. (n.)

   வருவாய்த்துறை ஆய்வாளரின்கீழ் பணியாற்றும் எழுத்தன் (G.T.p.D.L. 241);; revenue inspector’s clerk.

வட்டறவு

 வட்டறவு vaṭṭaṟavu, பெ. (n.)

   முடிவாக அறுதியிடுகை (யாழ்.அக.);; final determination, finality.

     [வட்டு → வட்டறவு.]

வட்டவங்கரம்

 வட்டவங்கரம் vaṭṭavaṅgaram, பெ. (n.)

   காஞ்சூரை; strych nine tree-Strychnes nux vomica dried bottle gourd fakeer’s bottle.

வட்டவர்சேர்

 வட்டவர்சேர் vaṭṭavarcēr, பெ. (n.)

   வடவர் மரத்தில் கட்டப்படும் பாய்; main royal sail.

வட்டவழுக்கை

 வட்டவழுக்கை vaṭṭavaḻukkai, பெ. (n.)

வழுக்கை பார்க்க;see valukkai.

வட்டவாய்த் தொண்டகம்

 வட்டவாய்த் தொண்டகம் vaṭṭavāyttoṇṭagam, பெ. (n.)

   தொண்டகத்தின் ஒரு வகை; a kind of tondagam.

     [வட்டம்+வாய்+தொண்டகம்]

வட்டவாழி

 வட்டவாழி vaṭṭavāḻi, பெ. (n.)

   நன்னாரி; Indian sarsaperilla-llemidesmus indica.

வட்டவிருக்கம்

 வட்டவிருக்கம் vaṭṭavirukkam, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree-Ficus bengalensis.

மறுவ. தொன்மரம், ஆல்.

     [வட்டம் + விருட்சம் → விருக்கம்.]

வட்டவோடு

 வட்டவோடு vaṭṭavōṭu, பெ. (n.)

   அகல்; a small earthen pot (dish);.

     [வட்டம் + ஒடு.]

வட்டா

வட்டா1 vaṭṭā, பெ. (n.)

   மேற்புறம் அகன்று, வட்டமான பரப்புக் கொண்டதும், கீழ்ப்புறம் நிற்க வைப்பதற்கு ஏற்ப வடிவம் கொண்டதுமான பாத்திரம்; a small tray-like case to keep saucer-like vessel.

மறுவ. கோப்பை

     [வட்டு → வட்டா.]

 வட்டா2 vaṭṭā, பெ. (n.)

   வட்டில், மல்லை; porringer.

 வட்டா3 vaṭṭā, பெ. (n.)

   வாயகன்ற கலவகை; plate, porringer, bowl.

     “வட்டாவுந் தாம்பூலமுந் துகிலுந் தாங்கிநிற்ப” (சீதக்.);.

     [வட்டு → வட்டா.]

 வட்டா4 vaṭṭā, பெ. (n.)

   திறமை, சமர்த்து (திருவிருத்.71, அரும்பக்.371);; ability, cleverness.

     [வட்டம் → வட்டா.]

வட்டாகிருதி

வட்டாகிருதி vaṭṭākirudi, பெ. (n.)

   1. வட்ட வடிவு; circular shape or form, ellipse or other curvilinear figure.

   2. வட்ட வடிவுள்ளவற்றின் சுற்றளவு; periphery of a curvilinear figure.

     [வட்டு + Skt. ākrti→ த. ஆகிருதி.]

வட்டாசிதுத்தி

 வட்டாசிதுத்தி vaṭṭāciduddi, பெ. (n.)

   ஒரு வகைச் செடி; a kind of plant.

வட்டாடு-தல்

வட்டாடு-தல் vaṭṭāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வட்டையுருட்டிச் சூதாடுதல்; to play with draughts or dice.

     “அரங்கின்றி வட்டாடி யற்றே” (குறள், 40);.

மறுவ. கவறாடுதல்.

     [வள் → வட்டு + ஆட்டு → ஆடு- வட்டு = வட்டமான சூதாட்டுக் கருவி.]

     [P]

வட்டாட்சியர்

 வட்டாட்சியர் vaṭṭāṭciyar, பெ. (n.)

   சிறு நாட்டுப் பகுதியின் ஆட்சியாளர்; tasildar.

இன்று வட்டாட்சியர் அலுவலகம் சென்று வந்தேன்.

     [வட்டம் + ஆட்சியர்.]

 வட்டாட்சியர் vaṭṭāṭciyar, பெ.(n.)

   மாவட்ட ஆட்சியருக்குக் கீழ் வட்டத்தில் அரசிறை தண்டும் அதிகாரி (தாசில்தார்);;     (tahsidar); arevenue officer in charge of atalukunder the district Collector.

     [வட்டம்+ஆட்சியர்]

வட்டாட்டம்

 வட்டாட்டம் vaṭṭāṭṭam, பெ. (n.)

வட்டாட்டு பார்க்க;see vattattu.

     [வட்டம் + ஆட்டம்.]

வட்டாட்டு

வட்டாட்டு vaṭṭāṭṭu, பெ. (n.)

   வட்டுக் கொண்டு ஆடும் சூதாட்டம்; game of dice, gambling.

     “வட்டாட்டாடிடம் பலவுங் கண்டார்” (கம்பரா. மிதிலைக்.17);.

     [வட்டாடு → வட்டாட்டு.]

வட்டாட்டு, வல்லாட்டு, வேட்டையாடலுமின்ன பிறவும் அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் வழிகளாம்.

வட்டாணி

வட்டாணி vaṭṭāṇi, பெ. (n.)

   1. திறமை; ability, capacity.

   2. வாய்வட்டமாகப் பேசுகை (திருவிருத். 71, அரும்.பக்.371);; cleverness or talent, expertness in talking as in speech.

தெ. வடாரி.

     [வட்டம் + ஆணி.]

வட்டாத்தி

 வட்டாத்தி vaṭṭātti, பெ. (n.)

   ஒருவகை மரம்; a kind of tree- Bauhinia malabarica.

வட்டாப்பத்து

 வட்டாப்பத்து vaṭṭāppattu, பெ. (n.)

   ஒற்றை ஒலையாற் செய்த விசிறி (யாழ்ப்.);; fan made of a single talipot leaf.

வட்டார வழக்கு

 வட்டார வழக்கு vaṭṭāravaḻkku, பெ. (n.)

   தாய் மொழியிலிருந்து கிளைக்கும் சேய்மொழிதனி மொழியாக உருவாவதற்கு முன்பு வட்டாரக் கிளை மொழியாக அரும்பும் நிலையில் எய்தும் சொற்றிரிபு பொருள் திரிபுகள் கொண்ட சொற்றிரிபு பொருள் ; rural dialect usages.

     [வட்டாரம்+வழக்கு]

வட்டாரமொழி

 வட்டாரமொழி vaṭṭāramoḻi, பெ. (n.)

   பொதுமொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும், சொற்களாலும், இலக்கண அமைப்பாலும், சற்றே வேறுபாடுடையதும், குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுகின்ற மொழி; language variety, spoken by the people of a region of a country or by a class of its people dialect with slight difference of popular language local variety of a localised language.

மறுவ. நடைமொழி, வட்டார வழக்கு.

     [வட்டாரம் + மொழி.]

வட்டாரம்

வட்டாரம்1 vaṭṭāram, பெ. (n.)

   தூக்கு குண்டு, சுவரொழுங்கினைச் சரிபார்ப்பதற்குப் பயன்படும் கருவி; an iron round used to verify the vertical level of a wall or a door frame etc.

 வட்டாரம்2 vaṭṭāram, பெ. (n.)

   1. சூழக்கிடந்த நிலப்பகுதி (வின்.);; circuit, surrounding area or region.

     “கோயில் வட்டமெல்லாம்” (சீவக.949);.

   2. வீட்டின் சுற்றுப்புறம்; compound round a house.

   3. வீடு (வின்.);; house.

   4. தவசக் களஞ்சியம்; granary.

   தெ. வட்டாரமு: க. வடா;து. வட்டார.

     [வள் → வட்டு → வட்டம் → வட்டாரம் = சுற்றுப்புற நாட்டுப்பகுதி (வ.வ.2 பக்.77);.]

     ‘வட்டாரம்’ என்னுமிவ் வடிவம் வடமொழியி லில்லை.

 வட்டாரம்3 vaṭṭāram, பெ. (n.)

   குறிப்பிட்ட இடமும், அதனைச் சூழக்கிடக்குஞ் சுற்றுப் பகுதியும்; particular region.

     ‘தஞ்சை வட்டாரத்தில் கோயில்கள் அதிகம்’.

   2. வட்டம்; ward, division.

     [வள் → வட்டு + ஆரம் + ஓரீறு.]

வட்டாரவழக்கு

 வட்டாரவழக்கு vaṭṭāravaḻkku, பெ. (n.)

   வட்டாரமொழியில் உள்ள சொல் வழக்கு; usage in a language variety or dialect local usage register.

மறுவ. இடவழக்கு. உலக வழக்கு.

கிளைமொழி

     [வட்டாரம் + வழக்கு.]

பூனையைப்

     ‘பூசு’ என்றழைப்பது நெல்லை வட்டார வழக்கு. யானையை

     ‘ஏனை’ யென்பது தென்னாட்டுக் குடியானவர் வழக்கு.

வட்டி

வட்டி1 vaṭṭittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வட்டமாதல் (யாழ்.அக.);; to be round in shape.

   2. சுழலுதல், கற்றிச் சுற்றி வருதல்; to revolve, to move round and round, to gyrate.

     “வட்டித்துப் புயலே நுரை இய வியலிரு ணடுநாள்” (அக.நா.28);.

   3. வஞ்சினமுரைத்தல், சூளுரைத்தல்; to swear, to take an oath.

     “வட்டித்து விட்டா ளெறிந்தாள் (சிலப்.21:45);.

   4. தாள வொற்றறுத்தல் (இசை.);; to beat time, to deviate from rhyme of cymbals.

க. பட்டிசு.

 வட்டி2 vaṭṭittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தோள் புடைத்தல், வஞ்சினமுரைத்தலால் தோள் விம்மிப் புடைத்தல்; to slap one’s own shoulders, in defiance or challenge.

     “செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார்” (பழமொ.325);.

   2. சுழற்றுதல்; to whirl, to swing round.

     ‘மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து” (புறநா.42);.

   3. உருட்டுதல்,

   சுற்றுதல், சுழற்றி எறிதல்; rolling or throwing as of dice.

     “கழகத்துத் தவிராது வட்டிப்ப” (கலித்.136);.

   4. உணவு பரிமாறுதல் (வின்.);; to serve, as a meal.

   5. கட்டுதல்; to tie.

     “அலகில் மாலையார்ப்ப வட்டித்து” (புறநா. 394);.

   6. எழுதுதல் (சிலப்.21, 46, அரும்.);; to write.

   7. வளைத்தல் (இலக்.அக.);; to bend.

   8. கடிதல்; to reprove, reprimand, censure.

அவன் என்னை வட்டித்தான் (வின்.);.

 வட்டி3 vaṭṭi, பெ. (n.)

   1. கடகப்பெட்டி; basket made of palm stem fibre.

     “வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும்” (புறநா.33);.

   2. கூடை; basket.

     “பல்கல வட்டியர்” (அகநா. 391);.

   3. படியளவு கொண்ட முகத்தலளவை (தொல்.எழுத்து.170); (பிங்..);; a measure of capacity = 1 nāli = 1 padi.

   4. பலகறை; cowry.

     “வட்டி மாலை கண் மானு மெயிற்றினர்” (கந்தபு.வீரபத்.38); (வின்.);.

   5. வழி, பாதை (அக.நி.);; path, way, track.

   6. கிண்ணம் (அக.நி.);; porringer.

   7. சூலுற்ற பெண்களுக்கு உண்டாகும் மயக்கம் (வின்.);; giddiness during pregnancy.

   8. வட்டில், 7 (தேவா.692, 7); பார்க்க;see Vattil.

 வட்டி4 vaṭṭi, பெ. (n.)

   1. பணத்தைப் பிறன் பயன்பாட்டிற்காக கொடுத்து உடையவன் பெறும் ஊதியம்; interest on money, loaned for others.

     “வட்டியை யறவாங்குநர்” (கடம்ப.பு. இலீலா.147);.

   2. வருவாய்ப் பெருக்கம் (நாமதீப.645.);; profit gain.

த. வட்டி → Skt. வர்த்தி.

     [வட்டு → வட்டி.]

முதல் தொகையை சுழற்சி முறையில் கொடுத்துப்பெறும்பொழுது, கிடைக்கும் வருவாய் பெருக்கம்.

வட்டித்தல் = வட்டமாதல், சுழலுதல், சுழற்றுதல், சுழற்சிக் கருத்தினின்று தோன்றிய சொல்.

 வட்டி5 vaṭṭi, பெ. (n.)

   கடன் தொகைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விதத்தில் கூடுதலாகப் பெறப்படும் தொகை; fixed interest on a loan for a specified period.

வட்டிகை

வட்டிகை1 vaṭṭigai, பெ. (n.)

   1. வளைத்தெழுதுங் கோல்; painter’s brush, drawing pencil.

     “வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்” (மணிமே.4, 57);.

   2. ஒவியம், படம், சித்திரம் (சூடா.);; portrait picture.

     “வட்டிகைப் பாவை நோக்கி” (சீவக. 2085); (சூடா.);.

த. வட்டிகை → Skt. வர்த்திகா.

     [வட்டி → வட்டிகை.]

எழுத்தும் உருவெழில் ஒவியமும் பெரும்பாலும் வளைத்தெழுதவும் வரையவுங் காணலாம்.

 வட்டிகை2 vaṭṭigai, பெ. (n.)

   1. சுற்றளவு, நகரத்தின் சுற்றளவு; circumference, as of a town.

   2. வட்டம் (யாழ்.அக.);; circle.

   3. கைம்மணி (யாழ்.அக.);; hand bell.

 வட்டிகை3 vaṭṭigai, பெ. (n.)

   கூடை (பிங்.);; basket.

     [வட்டு → வட்டி → வட்டிகை.]

 வட்டிகை4 vaṭṭigai, பெ. (n.)

   1. சிறப்புப் பட்டம், விருது வகையுளொன்று; special title an item of paraphernalia.

     “அலகில் வட்டிகை தழல் விழித்தலால்” (கலிங்.333);.

   2. ஓடவகை; coracle, wicker-boat.

     “துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ” (பெருங்.உஞ்சைக் 40, 46);.

     [வட்டி → வட்டிகை.]

 வட்டிகை5 vaṭṭigai, பெ. (n.)

   நால்வகைச் சாந்துள் ஒன்று (பிங்.);; an unguent, one of nal-vagai-c-candu.

     “சீதவட்டிகை வாரி வாரி . . . . . . . இறைப்ப” (இரகு.வாகு.44); (பிங்.);.

வட்டிகைச் செய்தி

 வட்டிகைச் செய்தி vaṭṭigaicceyti, பெ. (n.)

   ஒவியத்தைக் குறிக்குஞ் சொல்; a word that denotes art.

     [வட்டிகை+செய்தி]

வட்டிகைப்பலகை

வட்டிகைப்பலகை vaṭṭigaippalagai, பெ. (n.)

   சித்திரமெழுதும் பலகை; plank or tablet for painting.

     “எழுதுகோலையும் வட்டிகைப் பலகையிலே போகட்டு” (சீவக.1107);.

     [வட்டிகை + பலகை.]

வட்டிகைப்பள்ளம்

வட்டிகைப்பள்ளம் vaṭṭigaippaḷḷam, பெ. (n.)

   நெஞ்சாங்குலையின் வலது புறத்திலமைந்த குழி (வின்.);; fossa ovalis, a depression on the left wall of the right article of the heart.

     [வட்டிகை2 + பள்ளம்.]

வட்டிகைப்பாவை

வட்டிகைப்பாவை vaṭṭigaippāvai, பெ. (n.)

   உருவெழிலோவியம்; drawing, picture or portrait.

     “வட்டிகைப் பாவை நோக்கி” (சீவக.2085);.

மறுவ. சித்திரப்பாவை

     [வட்டிகை1 + பாவை.]

வட்டிக்கண்ணி

வட்டிக்கண்ணி vaṭṭikkaṇṇi, பெ. (n.)

   சிறு செடி வகை (M.M. 588);; marrow woolly stipulated lotus croton.

     [வள் → வட்டு → வட்டி. வட்டித்தல் = வட்டமாதல், வட்டி + கண்ணி = வட்டமாகச் சுற்றி முளைத்த சிறுசெடி அல்லது மரம்.]

வட்டிக்கருப்பட்டி

 வட்டிக்கருப்பட்டி vaṭṭikkaruppaṭṭi, பெ. (n.)

வட்டுக்கருப்பட்டி (இ.வ.); பார்க்க;see Vattu-k-karuppatti.

     [வட்டுக்கருப்பட்டி → வட்டிக்கருப்பட்டி. வட்டு → வட்டி + கரும்புல் + அட்டி – கரும்புல்லட்டி → கரும்பட்டி → கருப்பட்டி (கரும்புல் + பனைமரம்);.]

வட்டிக்குவட்டி

வட்டிக்குவட்டி vaṭṭikkuvaṭṭi, பெ. (n.)

   1. வட்டித் தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி; interest on interest.

   2. வட்டியை முதலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி; compound interest, interest on cumulative deposit.

     [வட்டி + கு + வட்டி.]

வட்டிச்சிட்டை

 வட்டிச்சிட்டை vaṭṭicciṭṭai, பெ. (n.)

   வட்டிக் கணக்கு எழுதும் புத்தகம்; account book showing interest calculated up-to-date.

     [வட்டி + சில் → சிட்டு → சிட்டை.]

வட்டிடல்

 வட்டிடல் vaḍḍiḍal, பெ. (n.)

   வட்டிலில் வைத்தல்; to keep in porringer.

வட்டிநாழி

வட்டிநாழி1 vaṭṭināḻi, பெ. (n.)

   வட்டித் தொகை பெறுதற்குரியதாகப் பெறப்படும் பழைய வரி; a kind of ancient tax, accruing interest. It is also considered as a tax to be collected in kind of paddy.

     [வட்டி + நாழி.]

இதனை நெல்லாகப் பெறும் வரியென்றும் கொள்வர்.

 வட்டிநாழி2 vaṭṭināḻi, பெ. (n.)

   பழையவரி வகை (S.I.I.ii. 521.);; an ancient tax.

வட்டினி

வட்டினி vaṭṭiṉi, பெ. (n.)

   போட்டியில் வைக்கும் பொருள்; wager stake in a game.

     “வட்டினி கொடுத்து…. வட்டாட்டாடிடம்” (கம்பரா. மிதிலை.17);.

வட்டிப்பு

வட்டிப்பு vaṭṭippu, பெ. (n.)

   1. சூள் (நாமதீப. 667);; vow, determined effort.

   2. வட்டம் (யாழ்.அக.);; circle.

வட்டிமேல்வட்டி

வட்டிமேல்வட்டி vaṭṭimēlvaṭṭi, பெ. (n.)

வட்டிக்குவட்டி (வின்.); பார்க்க;see Vattikku-vatti.

   2. காலந்தாழ்த்திய வட்டித் தொகைக்குப் பெறப்படும் சிறுவட்டி; penal interest for delayed payment of interest.

     [வட்டி3 + மேல்வட்டி.]

வட்டியில்லாக்கடன்

வட்டியில்லாக்கடன் vaḍḍiyillākkaḍaṉ, பெ. (n.)

   1. வட்டியின்றிக் கொடுக்குங் கடன் தொகை; interest free loan debt not carrying interest.

   2. திரும்பச் செய்தலை எதிர்நோக்கிக் கொடுக்கும் நன்கொடை (இ.வ.);; present made in expectation of a similar return thereof.

     [வட்டி + இல் + ஆ (எ.ம.இ.நி); + கடன்.]

வட்டிரோகம்

 வட்டிரோகம் vaṭṭirōkam, பெ. (n.)

   மகப்பேறு நடந்தேறிய பெண்களின் உடம்பில் உண்டாகும் அரத்தப் போக்கு; a disease marked by flow of blood through vagina during post delivery.

வட்டிற்பூ

 வட்டிற்பூ vaṭṭiṟpū, பெ. (n.)

   தாமரைப்பூ (சங்.அக.);; lotus.

     [வட்டில் + பூ.]

வட்டிலை

வட்டிலை vaṭṭilai, பெ. (n.)

   முட்செடிவகை (M.M.293.);; caricature plant, a thorny plant.

     [வடு → வட்டு + இலை.]

வட்டில்

வட்டில்1 vaṭṭil, பெ. (n.)

   மாழையாற் செய்த படையல் தட்டு; a puja metal plate.

     “வட்டில் பஞ்சவன் மாதேவி என்னும் திருநாமத்தால் விளங்கிற்று ஒன்று” (தெ.கல்.தொ.2:2, கல்.51);.

 வட்டில்2 vaṭṭil, பெ. (n.)

   1. கிண்ணம், தட்டு, குவளை; porringer, platter, plate, cup.

     “பொன்வட்டில் பிடித்து” (திவ். பெருமாள்.4, 3);.

   2. வட்டி2 3 (தொல்.எழுத்.170. இளம்.); பார்க்க;see vatti.

   3. நாழிகை வட்டில்; clepsydra, a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a naligai being a contrivance for determining time.

   4. அம்புச்கூடு; quiver for arrows.

     “வாளிவட்டில் புறம் வைத்து” (கம்பரா. தேரேறு.39);.

   5. கூடை (அ.க.நி.);; basket.

   6. வழி, பாதை (அக.நி.);; path, way.

   7. பட்டம், விருதுவகையுளொன்று; a degree, an award, an item of paraphernalia.

     “ஏறுமால் யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில்” (தேவா.692, 7);.

   8. சொக்கட்டான் அறை (வின்.);; draught-board.

   9. அப்பளஞ் செய்யுமாறு உருட்டி வைக்கும் மாவுண்டை (இ.வ.);; ball of dough, for preparing appalam.

     [வட்டு → வட்டி → வட்டில் = வட்டமான கலம் (மு.தா.2 பக்.85);.]

ஒருகா. வள் + தி → வட்டி + இல் என்றுமாம்.

வட்டிவாசி

வட்டிவாசி vaṭṭivāci, பெ. (n.)

   1. வட்டி வீதம்; rate of interest.

   2. வட்டி; Interest.

     [வட்டி3 + வாசி. வாசி = வீதம், விழுக்காடு.]

வட்டிவாணிகம்

வட்டிவாணிகம் vaṭṭivāṇigam, பெ. (n.)

   பொருளை முதலாக வைத்து, கடனாகக் கொடுத்து, கடன் தொகைக்குரிய வட்டிக் காசினைக் கால அளவு மற்றும் ஒழுங்கு முறைப்படி பெற்று வரும் வாணிகம்; a kind of trade for investment and loaning for earning interest accrued thereto with a time frame.

     “புறவரவா வந்து வட்டி வாணியஞ் செய்வாரையும் உள்ளூரிலிருந்து வட்டி வாணியஞ் செய்வாரையும் வட்டியால் நாழி நெல்லாகக் கொண்டும்” (தெ.கல்.தொ. 17.கல்.235);.

     [வட்டி + வாணிகம்.]

வட்டு

வட்டு1 vaṭṭu, பெ. (n.)

   1. சூதாட்டத்திற்குரிய வட்டுக்கருவி; small spheroidal pawn, dice, draught.

     “கையாடு வட்டிற் றோன்றும்” (அகநா.108);.

   2. திரட்சி (சூடா);; roundness.

   3. திரண்டபொருள்; anything round.

     “முட்டி வட்டனைய கோல முத்துலாய்” (சீவக. 2950);.

   4. நீரெறி கருவி வகை; a water-squirt.

     “வண்ணநீர் கரந்த வட்டுவிட்டெறிவோரும்” (பரிபா.155);.

   5. பாண்டி விளையாட்டுக்குரிய சில் (இ.வ..);; a circular piece used in pandi game.

   6. விளையாட்டுக் கருவி வகை; a game-piece.

     “கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும்” (நற்.3);.

     “குன்ற மணிவட்டினுருட்டு மாற்றல்” (சீவக.61);.

   7. வட்டில், 9 (இ.வ.); பார்க்க;see vattil.

   8. குடையிற் கம்பிகள் கூடும் இடம் (இ.வ.);; the circular piece to which the ribs of an umbrella are joined.

   9. சிறு துணி (தஞ்சை.);; small piece of cloth.

   10. வட்ட (பனைவெல்ல);க் கருப்பட்டி; a large round shaped cake of jagger.

     [வள் + து → வட்டு = வட்டமான கருப்புக் கட்டி, வட்டமான ஒடு (மு.தா.2 பக்.85);.]

 வட்டு2 vaṭṭu, பெ. (n.)

   1. கண்ட சருக்கரை (இலக்.அக.);; candied sugar.

   2. கத்தரி வகை; Indian nightshade.

     “முள்ளுச் செழுமலரோன்” (திவ். இயற்.சிறிய.ம.தனியன்);.

     [வள் + து – வட்டு.]

வட்டுக் கருப்புக் கட்டி

 வட்டுக் கருப்புக் கட்டி vaṭṭukkaruppukkaṭṭi, பெ. (n.)

வட்டுக்கருப்பட்டி (வின்.); பார்க்க;see Vattu-k-karuppatti.

     [வட்டு + கருப்புக்கட்டி.]

வட்டுக்கத்தரி

 வட்டுக்கத்தரி vaṭṭukkattari, பெ. (n.)

   கத்தரி வகை; a variety of round brinjal.

     [வட்டு + கத்தரி.]

வட்டுக்கருப்பட்டி

 வட்டுக்கருப்பட்டி vaṭṭukkaruppaṭṭi, பெ. (n.)

   பனாட்டுக் கட்டி; large ball of jaggery.

மறுவ. பனங்கருப்பட்டி

     [வள் → வட்டு + கருப்பட்டி.]

   கரும்புல்+அட்டு→ அட்டி = கரும்புல்லட்டி கரும்பட்டி. கரும்பட்டி → கருப்பட்டி. கரும்புல் = பனை மரம். அட்டு → அட்டி = அடப்பட்டது;காய்ச்சப்பட்டது.

ஒருகா. வட்டக்கருப்புக்கட்டி → வட்டுக் கருப்பட்டி.

வட்டுக்காய்

வட்டுக்காய்1 vaṭṭukkāy, பெ. (n.)

   பத்தியவுணவு; a restricted or prescribed diet.

மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட உணவினை ஏற்றலும் விலக்கியன ஒழிதலும் வட்டுக்காயாகலாம்.

 வட்டுக்காய்2 vaṭṭukkāy, பெ. (n.)

   சூதாடு கருவி; dice.

     [வட்டு + காய்.]

வட்டுக்குத்தி

 வட்டுக்குத்தி vaṭṭukkutti, பெ. (n.)

   பனைக் குருத்தினடி (வின்.);; the part just below the top of a fresh palm leaf.

     [வள் → வட்டு + குத்தி.]

வட்டுக்கொல்லி

வட்டுக்கொல்லி vaṭṭukkolli, பெ. (n.)

   1. தேவதாரு; a fragrant wood.

   2. சம்ப்ங்கி; a fragrant flower, champaca.

வட்டுச்செடி

 வட்டுச்செடி vaḍḍucceḍi, பெ. (n.)

வட்டு பார்க்க;see vattu.

வட்டுடை

வட்டுடை vaḍḍuḍai, பெ. (n.)

   1. முழந் தாளளவாக உடுக்கும் உடை; cloth tied round the waist and reaching down the knee.

     “அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை” (மணிமே.3, 122);.

   2. ஆடை (பிங்.);; garment.

   3. அரைக்காற் சட்டை; drawers.

     [வட்டு → வட்டுடை = முழந்தாளளவாக வீரர் உடுக்கும் உடைச்சிறப்பு (விசேடம்); (சீவக.468, நச்);.]

வட்டுப்பருப்பு

 வட்டுப்பருப்பு vaṭṭupparuppu, பெ. (n.)

   பருப்பு வகையுளொன்று; a kind of dhal – Lathyrus Sativus.

மறுவ. கேசரிப் பருப்பு.

     [வட்டு + பருப்பு.]

இப்பருப்பு நாவலந்தேயத்தில் (இந்தியாவில்); வங்காளம், அசாம், நடுவண் பைதிரம் (மத்தியப்பிரதேசம்); முதலான இடங்களில் பயிராகின்றது. வங்கத்தின் காட்டுப் பகுதிகளிலும், (களி கலந்த வண்டல் மண்ணில்);, ஏனைய பகுதிகளிலும் விளைகின்றது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் விதைத்து, ஆறு திங்களில் அறுவடை செய்வர். இது மற்றப் பயிர்களிடையே, களை போன்று விளையும் தன்மைத்து. வட்டுப் பருப்புத் தவசத்தின் வடிவம் ஒழுங்காக இராது: ஆப்பு வடிவில் இருக்கும். பழுப்பு நிறத்தில், கறுப்பு வரிகளுடன் காணப்படும்.

இப் பருப்பினைக் கடலைப் பருப்பு, துவரப் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பர்.

வட்டுப்பருப்புநோய்

 வட்டுப்பருப்புநோய் vaṭṭupparuppunōy, பெ. (n.)

   வட்டுப்பருப்பு உண்பதா லுண்டாகும் ஒருபக்க ஊதை (பாரிசவளிம); நோய்; lathyrism.

     [வட்டுப்பருப்பு + நோய்.]

வட்டுப்பழம்

 வட்டுப்பழம் vaṭṭuppaḻm, பெ. (n.)

   ஒருவகைக் கொட்டை; a kind of nut.

இதன் கொட்டையாலான பொடியினால் பற்றூய்மை செய்தால் பற்புழு போம்.

வட்டுப்போர்

வட்டுப்போர் vaṭṭuppōr, பெ. (n.)

   சூதாட்டம்; gambling.

     “வட்டுப்போர்கள் பொருதல் அரியவாமாறுபோல” (பழ.176, உரை);.

     [வட்டு + போர்.]

வட்டுமுள்ளி

 வட்டுமுள்ளி vaṭṭumuḷḷi, பெ. (n.)

   கழி முள்ளி; Indian nightshade.

வட்டுறுப்பு

 வட்டுறுப்பு vaṭṭuṟuppu, பெ. (n.)

   திருத்தம், செம்மை (யாழ்.அக.);; exactness, precision, correctness.

வட்டுவப்பை

 வட்டுவப்பை vaṭṭuvappai, பெ. (n.)

வட்டுவம் (வின்.); பார்க்க;see vattuvam.

     [வட்டுவம் + பை.]

வட்டுவம்

வட்டுவம் vaṭṭuvam, பெ. (n.)

   1. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியன வைக்கும் பை (வின்.);; pouch in which betel leaves, nuts, chunnam, tobacco, etc. are kept.

   2. மருந்துப்பை; medicine pouch.

     “வட்டுவத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்களே” (பிரதாப விலா.121);.

   3. பையின் உட்பை (வின்.);; pocket inside a pouch or purse.

தெ. வட்டுவமு.

     [வள் + து – வட்டு + அகம் – வட்டகம் → (வட்டுகம்); → வட்டுவம்.]

வட்டெலி

 வட்டெலி vaṭṭeli, பெ. (n.)

   மரவெலி (வின்.);; a species of rat.

     [வட்டு + எலி.]

வட்டெழுத்து

வட்டெழுத்து1 vaṭṭeḻuttu, பெ. (n.)

   1. கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை, தமிழ் மொழியில் வழங்கிவந்த வட்ட வடிவில் அமைந்த வரி வடிவம்; a script slightly circular in form which was used till 12th century A.D. in famil language.

   2. பழைய தமிழெழுத்து வகையுளொன்று;மறுவ. பட்டயவெழுத்து, வட்டம், தெக்கன் மலையாளம், நானா மோனம்.

     [வட்டு + எழுத்து. வளைந்த தமிழெழுத்து வகை (வே.க.4 பக்.102);.);

ஒருகா. வெட்டெழுத்து → வட்டெழுத்து என்றுமாம்.

வள் → வட்டு → வட்டம் + எழுத்து.

வட்டம் = வளைவு.

     ‘வள்’ எனும் வளைவுக் கருத்து வேரிலிருந்து கிளைத்த சொல். வட்டெழுத்து என்பது வளைந்த தமிழெழுத்து வகை எனப் பொருள்படும். தெக்கன மலையாளம் பட்டயவெழுத்து.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை, தமிழகத்தில் தமிழ் மொழியை எழுதுவதற்கு வழங்கிய, வட்ட வடிவமான எழுத்து. கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டில் இவ்வெழுத்து

     “வட்டம்” என்று குறிக்கப்பெற்றுள்ளது. (எ-டு);

     “திருமலை ஜூர்ணிக்கையால்

உத்தாரணம் பண்ணினவிடத்து

திருமலையில் கல்வெட்டு வட்டம்

ஆகையால், தமிழாகப்படியெடுத்து” என்று கல்வெட்டு கூறுகிறது. திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து, புரிந்து கொள்ளவியலாத வட்டம் நீங்கலாக ஏனைய கல்வெட்டுகள் அனைத்தும், மீண்டும் சுவரில் பொறிக்கப்பட்டனவென்று அறிகிறோம்.

இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுகளை அனைவராலும் படிக்கவியலவில்லை. ஒருசிலரே, இக் கல்வெட்டுகளைப் படித்தனர் என்று திருக்குற்றாலத்திலுள்ள குறும்பலா ஈசர் கல்வெட்டு தெளிவுறுத்துகிறது.

வட்டெழுத்தின் தோற்றம் : திரு.டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள்,

   1. தமிழகத்தில் குகைகளில் காணப்படும் தமிழி எழுத்துகளிலிருந்தே, வட்டெழுத்து வளர்ச்சி அடைந்தது என்று கூறியுள்ளார்.

   2. பெரும்பேராசிரியர் (மகாமகோபாத்யாய); அரிபிரசாத் சாத்திரி என்பார்,

     “கரோஷ்டி எழுத்துகளிலிருந்தே வட்டெழுத்து தோன்றியது” என்று குறித்துள்ளார்.

   3. முனைவர் பர்னல் அவர்கள் வட்டெழுத்து ஃபினிசியன் எழுத்திலிருந்து தோன்றியது என்றும், அசோகன் பிராம்மியிலிருந்து வேறுபட்டது என்றும் கூறியுள்ளார். இவர் மேலும் கூறுங்கால்,

வடமொழி தமிழகத்தில் பரவுதற்கு முன்னரே தமிழகத்தில் வழக்கிலிருந்து, அசோகன் பிராமியிலிருந்து வளர்ந்தது என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

   4. முனைவர் பூலர் கூறுவது : வட்டெழுத்து தமிழின் மாறுபட்ட வடிவம். மராட்டியர், மோடி எழுத்தைப் பயன்படுத்தியது போன்று தமிழக வணிகர் பயன்படுத்திய எழுத்தே, வட்டெழுத்தாகும்.

தமிழி எழுத்தே வட்டெழுத்திற்கு மூலமாகும்.

இக்கருத்து தமிழ் எழுத்தின் வரிவடிவ வளர்ச்சியினின்று வட்டெழுத்தின் வரிவடிவ வளர்ச்சியினை ஒப்பிட்டு நோக்கி அறியப்பட்ட உண்மையாகும்.

அண்மையில் வட ஆற்காடு மாவட்டத்தில் தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை பல நடுகற்களைப் படி எடுத்தது. இவை கி.பி.6ஆம் நூற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தைச் சார்ந்தவை. இவற்றில் பெரும்பாலானவை வட்டெழுத்தில் உள்ளன. கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் காணப்படும் இரு நடுகற்கள் தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. இவையும் வட்டெழுத்தில் உள்ளன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள்

     ‘பண்டையத் தமிழி எழுத்தில் இருந்துதான் வட்டெழுத்து வளர்ந்தது’ என்று தெளிவாகக் குறிக்கின்றன. ஆதலின் வட்டெழுததின் வளர்ச்சியைக் குறித்து இனி ஐயப்பாட்டுக்கே இடமில்லை. தமிழி எழுத்துக்கள் படிப்படியாக வட்டெழுத்தாக மலர்வதை ஒவ்வொரு எழுத்திலும் காட்டலாம்.

   இதுகாறும் வட்டெழுத்தில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்பட்டது செஞ்சியின் அருகில் திருநாதர்குன்று என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டாகும். இது கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இதைக் காட்டிலும் தொன்மையானவை. இவற்றில் பலவற்றைக் கவனித்தால் இவை தனி வட்டெழுத்தில் எழுதப்படவில்லை;   வட்டெழுத்தும் தமிழும் கலந்தே எழுதப்பட்டுள்ளன;ஆதலின் தொடக்கத்தில் வட்டெழுத்தும் தமிழும் கலந்தே எழுதப்பட்டன என்பது தெளிவாகியது. இதன் அடிப்படையில் காணும் போது அரச்சலூரில் உள்ள கல்வெட்டு இரு எழுத்துகளின் தொடக்கத்தையும்

காட்டுகிறது. இரண்டு ஒரே கல்வெட்டில் கலந்தே எழுதப்பட்டுள்ளதையும் இங்குக் காண்கிறோம். ஆதலின் வட்டெழுத்து கி.பி.3-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வழக்கில் வந்தது என்று கூறலாம்.

வட்டெழுத்து பாண்டி நாட்டில் சிறப்பாக வழங்கியது என்றும், மலையாளப் பகுதிகளில் அண்மைக்காலம் வரை சிறப்புற்றிருந்தது. ஆதலின் தமிழகத்தின் தென் பகுதியில் தோன்றியிருக்க வேண்டும் என்றும் அங்குத் தான் வழக்கிலிருந்தது என்றும் கருத்து நிலவியது. ஆனால் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளிலிருந்து தமிழகத்தின் வடபகுதியில் வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, தருமபுரி, கோவை முதலிய மாவட்டங்களில் (அதாவது பண்டைய கொங்கு நாடு, கங்கபாடி, பெரும்பாணப்பாடி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில்); பரவலாக இவ்வெழுத்து வழக்கிலிருந்தது என்று அறிகிறோம். காலத்தால் தொன்மையான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழகத்தில் வடபகுதியில் தான் கிடைத்துள்ளன.

பல்லவர்களின் கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும், வட்டெழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்த எழுத்திலும் உள்ளன என்று கண்டோம். ஆக இருவகை எழுத்துகள் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இரண்டும் தமிழ் மொழியை எழுதப் பயன்பட்டவைதான்.

கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் பல கல்வெட்டுகள் வட்டெழுத்தில் கிடைத்துள்ளன. பாண்டி நாட்டில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. 8, 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர்களது செப்பேடுகள் அனைத்தும் வட்டெழுத்தில் உள்ளன. செப்பேடுகள் அரசனால் அளிக்கப்பட்டவை. ஆதலின் வட்டெழுத்து பாண்டியர் அவையில்

சிறப்புற்றிருந்தது என்பது தெளிவு. பல்லவர்களது பகுதிகளில் வட்டெழுத்து வழக்கிலிருந்த போதிலும் செப்பேடுகளில் அது காணப்படவில்லை. சோழ மண்டலத்தில் வட்டெழுத்துச் சாய்கால் பெறவில்லை. சோழர்கள் தமிழையே பயன்படுத்தினர். ஆனால் பாண்டி நாட்டைக் கைப்பற்றிய போது அவர்கள் அப்பகுதிகளில் வட்டெழுத்தையே வழங்கினர். விரைவில் வட்டெழுத்தை விட்டு அங்கும் தமிழிலேயே எழுதத் தலைப்பட்டனர். கொங்கு நாட்டில் கொங்குச் சோழர் என்ற குலத்தோர் வட்டெழுத்தைப் பரவலாகப் பயன்படுத்தினர். தொண்டை மண்டலத்தில் கங்கர், பாணர் பகுதிகளிலும் வட்டெழுத்து 8-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வழக்கற்றுப் போயிற்று. கொங்கு நாட்டிலும், பாண்டியர் பகுதிகளிலும் கி.பி.12-ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து வழங்கி பின்னர் அங்கும் மறைந்தது. கேரளத்தில் அது வளர்ந்து, கிரந்தமும் வட்டெழுத்தும் இணைந்து இன்றைய மலையாள எழுத்தாக மலர்ந்துள்ளது.

வட்டை

வட்டை1 vaṭṭai, பெ. (n.)

   1. வயல்; crop field.

   2. பெருங்காடு; large tract of big forest.

   3. திக்கு; direction.

     ‘எட்டு வட்டையிலும் வந்தார்கள்’.

 வட்டை2 vaṭṭai, பெ. (n.)

   வழி (சூடா);; way.

     “வல்லுயிர்தாங்கும் வட்டை வந்தனை” (கல்லா.40, 13);.

 வட்டை2 vaṭṭai, பெ. (n.)

   1. சக்கரத்தின் மேல் வளைமரம்; felloe, rim of a wheel.

     “உருள்கின்ற மணிவட்டை” (சிலப்.29, உரைப்பாட்டு. மடை);.

   2. தேர் (யாழ்.அக.);; car, chariot.

   3. புலியினுடல்வரி (வின்.);; stripes on a tiger’s body.

   4. பரப்பெல்லை, நிலப்பகுதி; area, region.

   5. மரவட்டை; mountain tamana oil tree.

   6. மரவட்டை வகை; marote.

   7. வட்டப்பக்கா (நாஞ்.); பார்க்க;see Vatta-p-pakka.

 வட்டை vaṭṭai, பெ. (n.)

   1.வண்டிச் சக்கரத்தின் சுற்றுவட்ட மரச்சட்டப் பிணைப்புகளில் உள்ள துண்டுப் பிணைப்பு; outer wooden arc in a cart wheel,

   2. எந்திர இயங்கிகளின் சக்கரத்தில் தேய்வை (ரப்பர்); வெளி உருட்டு; tyre of the wheel.

     [வள்-வட்டு-வட்டை]

வட்டோடு

 வட்டோடு vaṭṭōṭu, பெ. (n.)

   தட்டாருடைய தீச்சட்டி; goldsmith’s pot for live-coals.

வட்பத்திரம்

 வட்பத்திரம் vaṭpattiram, பெ. (n.)

   ஆல்; banyan tree-Ficus bengalensis.

வட்புலி

 வட்புலி vaṭpuli, பெ. (n.)

   அரிமா (சங்.அக.);; lion.

வணங்காமுடிமன்னன்

 வணங்காமுடிமன்னன் vaṇaṅgāmuḍimaṉṉaṉ, பெ. (n.)

வணங்காமுடியோன் பார்க்க;see vananga-mudīyān.

     [வணங்கு + ஆ (எ.ம.இ.நி); + முடிமன்னன்.]

வணங்காமுடியோன்

வணங்காமுடியோன் vaṇaṅgāmuḍiyōṉ, பெ. (n.)

   1. பிறர்க்கு அடிபணியாத அரசன்; independent monarch, as bowing his head to no one.

   2. துரியோதனன் (சூடா.););; Duriyadarlar

   3. ஒருவருக்கும் பணியாதவன்; man of sturdy independence.

     [வணங்கு + ஆ (எ.ம.இ.நி.); + முடி.]

வணங்காலவணம்

 வணங்காலவணம் vaṇaṅgālavaṇam, பெ. (n.)

   பிடாலவணம்; a variety of salt.

வணங்கு

வணங்கு1 vaṇaṅgu,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கைகூப்புதல்; to greet.

   2. வளைதல்; to bend one’s body when doing work, to involve fully in ones work.

     ‘வணங்கி வேலை செய்’.

க. baggu.

     [குள் → மள் → வள்(வண்); → வணங்கு-, (மு.தா.பக்.71);.]

 வணங்கு2 vaṇaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நுடங்குதல்; to bend, to yield, as a freed in a flood.

     “வணங்கிடை” (பு.வெ.7, 27);.

   2. அடங்குதல்; to be submissive, gentle, modest.

     “வணங்கிய வாயினர்.” (குறள். 419);.

   3. ஏவற்றொழில் செய்தல்; to perform menial service.

     “நம்மில் வந்து வணங்கியும்” (கலித். 76);.

க. பக்கு.

     [வள் → வண் → வண → வணங்கு- (வே.க.4, பக்.98);.]

 வணங்கு3 vaṇaṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வழிபடுதல், தொழுதல்; to worship, adore, revere, salute, pray respectfully.

     “எண்குணத்தான் றாளை வணங்காத் தலை” (குறள், 9);.

   2. சூழ்ந்து கொள்ளுதல்; to surround, encompass.

     “வணங்குமிப் பிறப்பிவை நினையாது” (திருவாச. 41, 6);.

     [வள் → வண் → வண → வணங்கு- (வே.க..4, பக்.98);.]

வணங்குஞ்சூரி

 வணங்குஞ்சூரி vaṇaṅguñjūri, பெ. (n.)

   செடி வகை; a kind of plant.

வணர்

வணர்1 vaṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல்; to bend.

     “வணர்ந்தேந்து மருப்பின்” (மலைபடு. 37);.

   2. மயிர் குழன்றிருத்தல்; to curl, as the hair.

     “வெறிகமழ் வணரைம்பால்” (கலித். 57);.

     [வள் → வண் → வணர்- (வ.வ.81);.]

     ‘வள்’ என்னும் வளைவுக் கருத்தினைக் குறிக்கும் அடிப்படை வேரடியினின்று கிளைத்த சொல் (ஒ.நோ.); திள் → திண்.

 வணர்2 vaṇar, பெ. (n.)

   கட்டட வேலை வளைவு (வின்.);; vault, arched roof.

     [வள் → வண் → வணர்.]

     ‘வள்’ என்னும் வளைவுக் கருத்தினைக் குறிக்கும் அடிப்டை மூலத்தினின்று முகிழ்த்த சொல்லாகும்.

 வணர்3 vaṇar, பெ. (n.)

   யாழ்க் கோட்டின் வளைந்த உறுப்பு; the curving part of the lute.

     [வள் → வண் → வணர்.]

 வணர் vaṇar, பெ. (n.)

யாழின் ஓர் உறுப்பு.

 a componant of a lute.

     [வள்-வண்-வணர்]l

வணிகக்காய்கறிப்பூடு

 வணிகக்காய்கறிப்பூடு vaṇigaggāygaṟippūṭu, பெ. (n.)

   வழுதலை; brinjal.

     [பணிகம் → வணிகம் + காய்கறி + பூடு. விளைவித்து உருவாக்கும் வழுதலை.]

வணிகசூரியர்

வணிகசூரியர் vaṇigacūriyar, பெ. (n.)

   வணிகரில் முதன்மை பெற்றோர்; chief or leading or prominent merchants, merchant princes.

     “வணிக சூரியரே வாரீர்” (திருவாலவா. 41. 18);.

     [வணிகம் + சூரியர்.]

வணிகநோக்கு

 வணிகநோக்கு vaṇiganōggu, பெ. (n.)

   ஊதியத்தை எதிர்பார்க்கும் போக்கு; commercialism, profitable approach.

     ‘கல்வி வணிக நோக்கில் நடைபெறுகின்றது’.

     [வணிகம் + நோக்கு.]

வணிகன்

வணிகன் vaṇigaṉ, பெ. (n.)

   1. வணிகவினத்தான் (பிங்.);; person belonging to the vaisyá caste, trader community.

   2. பண்ட விற்பனையாளன்; merchant, trader.

   3. துலாவோரை (யாழ்.அக.);; libra of the zodiac.

மறுவ. விலைஞன், விற்பவன், செட்டி.

த. வணிகன் → Skt. vanija.

     [பண்ணியன் → பண்ணிகன் → பணிகன் → வணிகன்.]

ஒருகா. வள் → வணிகம் என்றுமாம்.

வளைவுப் பொருள் வளர்ச்சியைக் குறிக்கும். தனித்தமிழ்ப் பகுப்பான நால்வகை மக்கட்பிரிவில் விற்பனையாளன்

     ‘வணிகன்’ என்னுஞ்

சொல்லாலேயே தொன்றுதொட்டுக் குறிக்கப்படுகின்றனர்.

     “வணிகன்” என்னும் சொல், வணிஜ் என்ற வடசொல்லின் திரியென்று மா.வி. அகரமுதலி குறிப்பிட்டுள்ளது. பண்டமாற்றுப் பொருளினின்று இச்சொல் தோன்றியது என்று வடமொழியாளர் கருதுவது, முற்றிலுங் கற்பனை என்பார் மொழிஞாயிறு.

பண்ணுதல் என்னும் சொல் செய்தல், உண்டாக்குதல், உருவாக்குதல், விளைவித்தல் என்னும் பொருண்மைகளை உள்ளடக்கியது.

இச்சொல்பற்றி மொழிஞாயிறு, வடமொழி வரலாறு-2, பக்கம் 82-83இல் பகர்வது வருமாறு:-

வணிகன் – வணிஜ் (இ.வே.); வணிஜ.

பண்ணுதல் = செய்தல், உண்டாக்குதல், விளைவித்தல், உருவாக்குதல். இச் சொற்கு வடவர் கூறும் பண்டமாற்றுப் பொருள் கற்பனையே.

பண்ணியம் =

   1. பண்ணப்பட்ட பொருள், பண்டம்.

     “பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்” (மதுரைக்.405);.

     “காம ருருவிற் றாம்வேண்டும் பண்ணியம்” (மதுரைக்.422);.

     “சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்” (மதுரைக்.506);.

   2. விற்கப்படும் வணிகப் பொருள் :-

     “கொடுப்போர் கடை தொறும் பண்ணியம் பரந்தெழ” (மணிமே.7:24);.

பண்ணிய விலைஞர் = பண்டவாணிகர்.

     “பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர்” (பதிற்.76:5);.

பண்ணியாரம் → பண்ணிகாரம் = பலபண்டம் (திவா.); தெ. பண்யாரமு.

பண்ணியன் → (பண்ணிகன்); → வணிகன்.

ஒ.நோ. பண்ணியாரம் → பண்ணிகாரம். பண்ணியாரம் → பணியாரம். பகு → வகு.

வணிகன் → வணிகம். வணிகன் → வாணிகன் → வாணிகம். வாணிகன் → வாணியன்.

     “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (தொல்.1578);.

 Guj. wamiyo, baniya, A. banyan, Port. banian, E. banian, banyan.

குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு கழக இலக்கிய இறந்து பாட்டாலும், பலசொற்களின் வேர்களையும், இணைப்பு அண்டுகளையும் இன்று காட்ட இயலவில்லை.

வணிகன் → வணிகு (ஒ.நோ.); வேந்தன் (வேய்ந்தோன்); → வேந்து.

     “அதன்காண் வணிகொருவ வேந்துனுளன்” (மேருமந்.280);.

வணிகு → வணிஜ். இனி, பொருள் பண்ணுபவன் (ஈட்டுபவன்); பணிகன் என்றுமாம்.

     “Vanij.m. (also written banij); a merchant, trader RV &&” என்பது மா.வி.அ.

     [பண்ணியன் → பண்ணிகன் → பணிகன் → வணிகன் (வ.வ.பகுதி 2 82);.]

வணிகபதம்

 வணிகபதம் vaṇigabadam, பெ. (n.)

   விற்பனை (யாழ்.அக.);; trade.

     [வணிகம் + பதம்.]

வணிகம்

வணிகம் vaṇigam, பெ. (n.)

   பல பண்டம் கொள்வதும் கொடுப்பதுமான தொழில் (வின்.);; trade.

     [பணிகம் → வணிகம்.]

பண்ணுதல் = செய்தல், உண்டாக்குதல், விளைத்தல், உருவாக்குதல்.த. வணிகம் < skt. vanij. இச்சொற்கு வடவர் கூறும் பண்டமாற்றுப் பொருள் கற்பனையே. பண்ணியம் பண்ணப்பட்ட பொருள். பண்டம், விற்கப்படும் வணிகப் பொருள் என்னும் பொருண்மையில் கழகவிலக்கியங்களில் பயின்று வந்துள்ளமைக்கான சான்றுகள் வருமாறு :-    1. விளைவித்த அல்லது உருவாக்கிய பொருள் அல்லது பண்டம் என்னும் பொருளில் :-      "பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்" (மதுரைக்.405);.      "காம ருருவிற் றாம்வேண்டும் பண்ணியம்" (மதுரைக்.422);.    2. விற்பனை செய்யப்படும் வணிகப் பொருள் :-      "கொடுப்போர் கடை தொறும் பண்ணியம் பரந்தெழ" (மணிமே.7:24);.    3. பண்ணிய பொருளை வணிகம் செய்பவர் என்னும் பொருளில் :-      "பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய விலைஞர்"      [பண்ணியன் → பண்ணிகன் → பணிகன் → வணிகன் → வணிகம் (வ.வ.பகுதி 2. 82);.]  Guj. vaniyo, baniya, A. banyan, Port. banian, E. banian, banyan. குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு கழக இலக்கிய இறந்துபாட்டாலும், பலசொற்களின் வேர்களையும், இணைப்பு அண்டுகளையும், இன்று காட்ட இயலவில்லை. வணிகன் → வணிகு (ஒ.நோ.); வேந்தன் (வேய்ந்தோன்); → வேந்து.      "அதன்கண் வணிகனொருவ னுளன்" (மேருமந்.280);. வணிகம் → வணிகு → வணிஜ். இனி, பொருள் பண்ணுபவன் (ஈட்டுபவன்); பணிகன் என்றுமாம்.      "Vanij.m. (also written banij); a merchant, trader RV &&" என்பது மா.வி.அ. வணிகம் என்னும் சொல், வடவர் கூறுவது போன்று பண்டமாற்றுப் பொருண்மை பொதிந்த சொல்லன்று. செய்தல், விளைவித்தல், உருவாக்குதல் என்னும் பொருட்பொருத்தப்பாட்டிலிருந்து முகிழ்த்த சொல்லாகும். பண்ணியன் → பண்ணிகள் → பணிகன் → வணிகன், என்று ஏரணமுறையில் அமைந்த சொல்லாகும். உழவினால் விளைக்கப்படும் பொருள்களையும், கைத்தொழிலாற் செய்யப்படும் பொருள்களை வெளிநாட்டிலும், வெளிநாட்டுப் பொருள்களை உள்நாட்டிலும், பரப்பவும், பெரும் பொருளீட்டி நாட்டுச் செல்வத்தை பெருக்கவும், வணிகம் இன்றியமையாத தென்று கண்ட பண்டையவரசர், அதனை ஒல்லும் வாயெல்லாம் ஊக்கி வந்தனர். நகரந்தொறும், வணிகர் குழுமம் (Merchant Guild); இருந்தது. நாட்டுப்புற நகராட்சி பெரும்பாலும் நகர வணிகர் கையில் இருந்தது. நகரங்களையெல்லாம் அரசன் நேரடியாக மேற் பார்த்து வந்தனன். தலைமை வணிகனுக்கு எட்டிப் பட்டமும், எட்டிப்புரவும் அளிக்கப்பட்டது. வணிகர் குழுமங்கட்கு வலஞ்சை மணிக்கிராமம் அஞ்சுவண்ணம் முதலிய பட்டங்களும் அளிக்கப்பட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பே, தமிழர் வணிகத்திற் சிறந்து திகழ்ந்தனர். வணிகம் நிலவணிகம், நீர்வணிகம் என இருவகைப்படும். இருவகை வணிகமும் தமிழகத்தில் தழைத்தோங்கியது. நிலங்கடந்து செய்யும் நில வணிகம் காலிற்பிரிவு என்றும், நீர் கடந்து செய்யும் நீர் வணிகம், கலத்திற் பிரிவு என்றும் கழக இலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.      "முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை" என்னும் தொல்காப்பிய நூற்பா, நீர் வகித்திற்கு நற்சான்று நீர்வணிகத்தின் நிமித்தம் படைக்கின்றது. பண்டைத்தமிழர், கடல் கடந்து செல்லுங்கால், மகளிரை உடனழைத்தச் செல்லாமை யென்னும், பண்பாட்டையும் நிறுவுகின்றது. பத்துப்பாட்டுள், பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும், பண்டைத் தமிழர் நீர் வணிகத்திலும், நில வணிகத்திலும் ஈடுபட்டுச் செல்வ வளஞ் சிறந்து வாழ்ந்த வரலாற்றினைப் பேசுகின்றன எனலாம்.

வணிகரறுதொழில்

 வணிகரறுதொழில் vaṇigaraṟudoḻil, பெ. (n.)

வணிகர்தொழில் (திவா.); பார்க்க;see vanigar-tolil.

வணிகரெண்குணம்

 வணிகரெண்குணம் vaṇigareṇguṇam, பெ. (n.)

   தனிமையாற்றல், முனிவிலனாதல், இடனறிந்தொழுகல், பொழுதொடு புணர்தல், உறுவது தெரிதல், இறுவதஞ்சாமை, ஈட்டல், பகுத்தல் என்னும் வாணிகளின் எட்டுக் குணங்கள் (பிங்.);; virtues desirable in merchants, eight in number viz., tanimai-y-árra/, muqivi/an-äda/, jdamarindo/uցa po/udodu-pմրarda/ սրսvadս -terida/iruvadañjāma. Ittal, paguttal.

     [வணிகர் + எண்குணம்.]

வணிகர்

வணிகர் vaṇigar, பெ. (n.)

வணிகன் பார்க்க;see Vanigan.

     [பணிகர் → வணிகர்.]

இப்பர், கவிப்பர். பெருங்குடியரென்று மூன்று பாலார் (சீவக.1756, நச்.);.

வணிகர்குணம்

 வணிகர்குணம் vaṇigarguṇam, பெ. (n.)

வணிகரெண்குணம் (பிங்.); பார்க்க;see vanіgarengunam.

வணிகர்தொழில்

வணிகர்தொழில் vaṇigartoḻil, பெ. (n.)

   ஒதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்னும் வாணிகர்தம் அறுவகைத் தொழில் (தொல்.பொருள்.75, உரை);; occupations of the vaisyá’s, six in number, viz, 6da/, véttal, jdal, u/avu, nirai-y-õmba/, vānigam.

வணிகவியல்

 வணிகவியல் vaṇigaviyal, பெ. (n.)

   பொருட்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவற்றை நீக்குவதற்கான வழிகளைப் பற்றியும், நிருவாக வரவு, செலவு பற்றியும் மேற்கொள்ளும் படிப்பு; as a subject of study in commerce.

     [வணிகம் + இயல்.]

வணிகு

வணிகு vaṇigu, பெ. (n.)

வணிகன் 1, 2 பார்க்க;see vanigan.

     “அதன்கண் வணிகொருவனுளன்” (மேருமந். 230);.

     [வணிகன் → வணிகு.]

 a merchant, trader RV

என்பது மா.வி.அ.

வணிக்கிராமத்தார்

வணிக்கிராமத்தார் vaṇikkirāmattār, பெ. (n.)

   பண்டைக்காலத்துள்ள ஒரு வணிகர் குழு (தொல். சொல். 167, உரை);; an ancient guild of merchants.

     [பணிகன் → வணிகன் (ஒ.நோ.); பகு → வகு. பணி + Skt. grama → த. கிராமம் → கிராமத்தார்.]

வணிசம்

வணிசம் vaṇisam, பெ. (n.)

   1. வணிசை (யாழ்.அக.); பார்க்க;see vanisai

   2. எருது; ox.

வணிசை

வணிசை vaṇisai, பெ. (n.)

   கரணம் பதினொன்று ளொன்று (விதான, பஞ்சாங். 29, உரை);; a division of time, one of 11 karanam.

வணிச்சியம்

 வணிச்சியம் vaṇicciyam, பெ. (n.)

   வணிகம், விற்பனை (யாழ்.அக.);; commence, trade.

வணிதம்

வணிதம்1 vaṇidam, பெ. (n.)

   ஆளுகைக்குட்பட்ட திணைநிலப்பகுதி; locality, administrative region.

     “சோழங்க நல்லூர் வணிதத்திலே யிருக்கும்படி” (கோயிலொ.54);.

தெ. வணிதமு.

 வணிதம்2 vaṇidam, பெ. (n.)

   செப்பம் (யாழ்.அக.);; elegance, handsomeness.

வணை

வணை1 vaṇaidal,    2 செ.கு.வி. (v.i.)

   வளைதல் (திருநெல்.);; to bend.

 வணை2 vaṇaittal,    4 செ.கு.வி. (v.i.)

   வளைத்தல் (நெல்லை.);; to bend.

 வணை3 vaṇai, பெ. (n.)

   வயிற்றிலுண்டாம் மாட்டு நோய் வகை (Rd.M.24);; a cattle-disease affecting the bowels.

வணை-த்தல்

வணை-த்தல் vaṇaittal, .4 செ.குன்றாவி. (v.t.)

   தண்ணீர் ஊற்றுதல்; to pour, as water from a pot.

வண் களமர்

 வண் களமர் vaṇkaḷamar, பெ. (n.)

   வேளாளர் (திவா.);; velalas.

     [வள் → வண் + களமர்.]

வண்சிறை

 வண்சிறை vaṇciṟai, பெ. (n.)

   மதில் (சது.);; battlement.

     [வன்சிறை → வண்சிறை.]

வண்டகி

 வண்டகி vaṇṭagi, பெ. (n.)

   முந்திரிக் கொட்டை; cashew nut-Anacardium occidentale.

வண்டத்தனம்

வண்டத்தனம் vaṇṭattaṉam, பெ. (n.)

   1. குறும்பு (கொ.வ.);, கொடுமை; mischief. wickedness.

வண்டத்தனக்காரனுக்கு சண்டித்தனப் பெண்சாதி (உ.வ.);.

   2. நாணமின்மை; impudence.

   3. மதிப்பின்மை; impertinence.

   4. இழி செயல் (வின்.);; lewdness.

   தெ. பண்டதனமு;க. பண்டதன.

     [வண்டம் + தனம்.

     ‘தனம்’ சொல்லாக்க ஈறு. ஒ.நோ. குறும்புத் தனம், கஞ்சத்தனம்.]

வண்டனான்

வண்டனான் vaṇṭaṉāṉ, பெ. (n.)

   முனிவன் (சீவக. 1632, உரை);; austere age, as beelike in nature.

வண்டன்

வண்டன்1 vaṇṭaṉ, பெ. (n.)

   குள்ளன் (இலக்.அக.);; short, dwarfish person.

 வண்டன்2 vaṇṭaṉ, பெ. (n.)

   திண்ணியன் (பிங்.);; brave and resolute man.

     [வண்டு → வண்டன்.]

 வண்டன்3 vaṇṭaṉ, பெ. (n.)

   தீயோன்; wicked or evil person.

     “வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்” (தேவா. 755, 7);.

     [வண்டு → வண்டன்.]

 வண்டன்4 vaṇṭaṉ, பெ. (n.)

   சுன்னத்துப் பண்ணப்பட்டவன் (யாழ்.அக.);; circumcised man.

வண்டப்புரட்டன்

வண்டப்புரட்டன் vaṇṭappuraṭṭaṉ, பெ. (n.)

   ஏமாற்றுக்காரன்; consummate cheat.

வண்டப்புரட்டனுக்கு வாய்த்த சண்டி (இ.வ.);.

     “வண்டப் புரட்டர்தா முறிதந்து பொன்னடகு வைக்கினுங் கடனீந்திடார் (குமரே. சத. 4);. வண்டப் புரட்டனுக்கு உடம்பெல்லாம் வாய் (உ.வ.);.

     [வண்டம் + புரட்டு → புரட்டன்.]

வண்டப்பேச்சு

வண்டப்பேச்சு vaṇṭappēccu, பெ. (n.)

   1. குறும்புப் பேச்சு; imprudenttalk.

   2. இழிவான பேச்சு; lewd talk:.

   3. கண்மூடித்தனமான பேச்சு; rash talk.

மட்டுமரியாதையற்ற வண்டப்பேச்சு பகையை வளர்க்கும் (இ.வ.);.

     [வண்டம் + பேச்சு.]

அளவுக்கு மீறி, எல்லைக் கடந்து, மிகு சினத்தால் பேசும் பேச்சு.

வண்டமை

வண்டமை1 vaṇṭamai, பெ. (n.)

   கருஞ்சங்கு (சா.அக.);; black conch.

 வண்டமை2 vaṇṭamai, பெ. (n.)

   கடல்மீன் வகை (சங்.அக.);; shell fish.

வண்டம்

 வண்டம் vaṇṭam, பெ. (n.)

   குந்தம் (சங்.அக.);; a weapon.

வண்டயக்கட்டை

 வண்டயக்கட்டை vaṇṭayakkaṭṭai, பெ. (n.)

   மரத்தூணின் உருண்டை வடிவப் பகுதி; a round plank attached to wooden pillar to act, as a connector.

வண்டயம்

வண்டயம்1 vaṇṭayam, பெ. (n.)

   கழல்; anklet.

     “வீரவண்டயம் அணிந்த திருவடிகள்” (திவ்.திருப்பா. 17, அரும். பக். 162);.

   தெ. பெண்டியமு;க. பெண்டெய.

     [வண்டு → வண்டயம். (ஒ.நோ.); தண்டு → தண்டயம்.]

வண்டயம் = உருட்டிய துணிப்பந்தம்.

 வண்டயம்2 vaṇṭayam, பெ. (n.)

வண்டவாளம் பார்க்க;see vandavālam.

     ‘அவன் வண்டயமெல்லாம் வெளிவந்து விட்டது.’

வண்டரன்

வண்டரன் vaṇṭaraṉ, பெ. (n.)

   1. அலி (யாழ்.அக.);; eunuch.

   2. இவறன் (கஞ்சன்);; miser.

     [வண்டரன் = முற்கால அரசவைகளில் விதையகற்றப்பட்டு அமர்த்தப்பட்ட பணியாள்.]

வண்டரம்

வண்டரம் vaṇṭaram, பெ. (n.)

   1. நாயின் வால் (யாழ்.அக.);; dog’s tail.

   2. நாய்; dog.

   3. முகில்; cloud.

   4. மார்பு; breast, chest.

வண்டரிசி

வண்டரிசி1 vaṇṭarisi, பெ. (n.)

   உளுத்த அரிசி, குருவண்டுக்குள்ளிருக்கும் அரிசி (rhmf,);; pest eaten rice.

     “பேருகேள் வண்டினது அரிசிபட்டால் பேரண்டம் நீறியது பிளக்குந்தானே” (கொங்கணவர்);.

 வண்டரிசி2 vaṇṭarisi, பெ. (n.)

   கழுதை வண்டின் முதுகில் சுண்ட அரிசியைப் போல் விழும் முட்டை;   இது கையில் பட வெந்து போகும் தன்மைத்து;   இதில் இளங்கூட்டி அரைத்துப் பூச துரிசு நீறும், பேரண்டம் நீறிப் பிண்டிக்கும், சரக்கெல்லாம் நீறுக்கும்; the egg of a kind of beetle calcifies copper sulphate, skull bone and other drugs.

வண்டர்

வண்டர் vaṇṭar, பெ. (n.)

   1. அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார்; panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours.

     “வண்டரு மோவரும் பாட” (சீவக. 1844);.

   2. மங்கலம் பாடுவோர் (வின்.);; panegyrists, bards.

   3. வீரர் (நாமதீப.);; warriors.

வண்டற்கல்

 வண்டற்கல் vaṇṭaṟkal, பெ. (n.)

   வெள்ளி நிமிளை; antimony.

வண்டற்படுகை

 வண்டற்படுகை vaṇḍaṟpaḍugai, பெ. (n.)

   வண்டலிட்ட ஆற்றங்கரை (வின்.);; muddy bank of a river.

     [வண்டல் + படு → படுகை.]

வண்டற்பாவை

வண்டற்பாவை vaṇṭaṟpāvai, பெ. (n.)

   வண்டலாற் செய்த விளையாட்டுப் பாவை; toy made of mud.

     “வண்டற்பாவை வெளவலின் நுண்பொடி யளைஇக் கடறூர்ப் போளே” (ஐங்குறு. 124);.

     [வண்டல் + பாவை.]

வண்டலடி-த்தல்

வண்டலடி-த்தல் vaṇḍalaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல் (C.G);; to spread, alluvial deposit in fields, as manure.

   2. வயல் மண்மேடிடுதல்; to become silted up, as a field.

     [வண்டல் + அடி.]

வண்டலம்

 வண்டலம் vaṇṭalam, பெ. (n.)

   சேறு (யாழ்.அக.);; slush.

     [வண்டல் → வண்டலம்.]

வண்டலவர்

வண்டலவர் vaṇṭalavar, பெ. (n.)

   விளையாட்டு மகளிர்i; playful girls.

     “இரிவுற்றார் வண்டிற்கு வண்டலவர்” (கலித்.92);.

     [வண்டு → வண்டலவர்.]

வண்டலாயம்

வண்டலாயம் vaṇṭalāyam, பெ. (n.)

   விளையாடும் தோழியர் கூட்டம்; a company of girl-playmates.

     “வண்டலாயமொ டுண்டுறைத் தலைஇ” (பெரும்பாண்.311.);.

     [வண்டல் + ஆயம்.]

வண்டலிழை-த்தல்

வண்டலிழை-த்தல் vaṇṭaliḻaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. மணலாற் சிற்றிலிழைத்து விளையாடுதல் (பொருந.187, 2, உரை);; to make a toy-house out of sand.

   2. பருவமகளிர் விளையாட்டுகளுள் ஒன்று; a play of virgins.

மறுவ. கூடலிழைத்தல்.

     [வண்டல் + இழை.]

பருவப் பெண்டிர், தத்தம் மனங்கவர் மணாளன் வாய்ப்பது குறித்து, மணலில் வட்டங்கீறிக் கணித்தறியும் விளையாட்டு.

வண்டல்

வண்டல்1 vaṇṭal, பெ. (n.)

   வெள்ளப்பெருக்கு முதலியவற்றால் அடித்தொதுங்கிய வளமான மண்; silt, alluvium.

     ‘அழிக்கும் வெள்ளமே வளம்தரும் வண்டலையும் கொண்டு வருகிறது.’ நன்செய் தொளி நடவில் குளத்து வண்டல் தூவினால் விளைச்சல் மிகுதியாகும் (இ.வ.);.

     [வண்டு → வண்டல்.]

 வண்டல்2 vaṇṭal, பெ. (n.)

   1. மகளிர் விளையாட்டு வகை (திவா.);; a girl’s game of making toy houses.

     “தண்முத்தம் பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்” (ஐந். ஐம். 46);.

   2. மகளிர் கூட்டம் (அரு.நி.);; bevy of ladies.

   3. விளையாட்டாக இழைத்த சிற்றில்; toy house.

     “தண்புனல் வண்டலுய்த் தென” (ஐங்குறு.69);,

   4. நீர் முதலியவற்றினடியில் மண்டிய பொடி மண் முதலியன; dregs, lees, sediment, mud,

 mire, slush.

     “வண்டல் பாய் பொன்னி நாடனை” (கலிங். 135);.

     “வியனதி வண்டலாக” (பாரத. பதினாறாம். 73);.

   5. நீரொதுக்கி விட்டமண்; earth or sand washed ashore by a river, lake etc.

     “வண்டலுண் மணல் தெள்ளி” (திவ்.நாய்ச்.2, 3);.

   6. செம்மண்டரை (இ.வ.);; alluvial soil, capable of retaining moisture and of a light red colour.

   7. சேறு முதலியன உலரும் போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; flake, skin, thin layer that peels off, scale.

     “பூசுகந்தம் தனத்திற் பொரிந்தது….. பொருக்கெழும்பி” (தனிப்பா.1, 381, 27);.

   8. பருக்கைக்கல் (யாழ்.அக.);; pebble.

   9. நீர்ச்சுழி (யாழ்.அக.);; whirlpool.

     [மண்டு → வண்டு → வண்டல்.]

வண்டல்கீரை

 வண்டல்கீரை vaṇṭalārai, பெ. (n.)

வள்ளைக்கீரை பார்க்க;see valai-kkirai.

வண்டல்நீர்

 வண்டல்நீர் vaṇṭalnīr, பெ. (n.)

   வண்டற் படிவு கலந்த நீர்; water with sediments.

     [வண்டல் + நீர்.]

வண்டவாளம்

வண்டவாளம்1 vaṇṭavāḷam, பெ. (n.)

   மானக் கேடான நிகழ்வுகள்; unpleasant, discreditable facts.

அவருடைய வண்டவாளங்களெல்லாம் எங்களுக்குத் தெரியும் (உ.வ.);. உன் வண்டவாளத்தையெல்லாம், தண்டவாளத்தில் ஏற்றலாமா? (பழ.);.

     [வண் → வண்ட + வாலம் → வாளம். வாளம் + நெடுமை.]

வண்டவாளம் = தகுதிக் குறைவான, முறையற்ற செயல்கள்.

     “உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுகிறேனா, இல்லையா பார்!” என்பது” எரிச்சலுணர்வின் வெளிப்பாடைக் காட்டும் வழக்குத் தொடராகும். தண்டவாளத்தில் ஏற்றல் என்பது ஊரறியப் பரப்புதல், தண்டவாளத்தில் என்பது, தொடர்வண்டியில் செய்தித்தாள் அனுப்புவது போல, அனுப்புவதாம்.

 வண்டவாளம்2 vaṇṭavāḷam, பெ. (n.)

   1. நிலைமை, தன்மை; state, condition, used in contempt.

   2. முதல்; capital, funds.

   தெ. பண்டவாலமு;க., து. பண்டவால.

வண்டானம்

வண்டானம் vaṇṭāṉam, பெ. (n.)

   நாரைவகை; pelican ibis.

     “நாரைவண்டான மெதிர்த்த தண்புனல்” (சீவக. 208);.

     [P]

வண்டானவண்டு

வண்டானவண்டு vaṇṭāṉavaṇṭu, பெ. (n.)

   1. ஓர் வகை யுப்பு; a secret salt.

   2. கருப்பிண்டத்திலிருந்து தயாரிக்கும் ஒர் உப்பு; a salt extracted by a secret process from the foetus (சா.அக.);.

வண்டாலம்

வண்டாலம் vaṇṭālam, பெ. (n.)

   1. குந்தாலி; pick-axe.

   2. மழு (பு.வெ.9, 38, உரை);; battle-axe.

மறுவ. கணிச்சி.

வண்டாளம்

வண்டாளம் vaṇṭāḷam, பெ. (n.)

வண்ட வாளம், 1 (இ.வ.); பார்க்க;see vandaválam.

வண்டாளை

வண்டாளை vaṇṭāḷai, பெ. (n.)

   நெல்வகை (குருகூர்ப்.58);; a kind of paddy.

வண்டாழ்ங்குருகு

வண்டாழ்ங்குருகு vaṇṭāḻṅgurugu, பெ. (n.)

   குருகு வகையுளொன்று; a kind of heron.

     “வண்டாழ்ங் குருகினுடைய சேவல்களோடே” (மதுரைக். 674, உரை);.

வண்டாழ்வான்

 வண்டாழ்வான் vaṇṭāḻvāṉ, பெ. (n.)

   ஒரு வகை பறவை; a bird which (is a); terrorises the beetles.

வண்டி

வண்டி1 vaṇṭi, பெ. (n.)

   1. சகடம்; cart, carriage, bandy.

     “வண்டியை யேறினாள்” (சீவக. 2054, உரை);.

     “வண்டியில் ஒடமும் ஏறும்;

ஒடம் வண்டியில் ஏறும்” (பழ.);.

   2. வண்டிப்பாரம் பார்க்க;see vani-p-param.

   3. சக்கரம்;   உருளை (சூடா.);; wheel, as of a cart car.

   தெ., க., பண்டி;ம. வண்டி.

     [வள் → வண் → வண்டு → வண்டி (வே.க.4:101);.]

ஒருகா. வள் + தி – வண்டி. இச்சொல்லும் வளைவுக் கருத்தினடிப்படையில் தோன்றியதாகும்.

     ‘வண்டியென்பது முதலிற் சக்கரத்தையும் பின்பு உறுப்பாகுபெயராய்ச் சகடத்தையும் குறிக்கும்.

சகடம் என்னும் பொருளில், வண்டி என்னுஞ்சொல், பண்டி என்பதன் திரிபாகத் தெரிகின்றது. ஏனெனின், பண்டி என்னும் வடிவே, சீவகசிந்தாமணி மூலத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், பாண்டி, பாண்டில் என்பவற்றை யொத்த வகர முதற் சொற்கள், இருவகை வழக்கிலுமில்லை.

ஒருகால், வண்டியென்னும் வடிவே, தொன்றுதொட்டு உலகவழக்காயிருந்திருக்கலாம். வண்டியென்னும் வடுக கன்னட வடிவம், வகர பகரத் திரிபின் விளைவாம் (வே.க.4:101);.

 வண்டி2 vaṇṭi, பெ. (n.)

   வயிறு (யாழ்.அக.);; belly, stomach.

 வண்டி3 vaṇṭi, பெ. (n.)

   1. அடிமண்டி; sediment, dregs.

   2. கழிவுப்பொருள்; lees.

தெ., க. பண்டு.

     [மண்டி → வண்டி.]

 வண்டி4 vaṇṭi, பெ. (n.)

   ஆனேற்றாலோ, பரியாலோ (குதிரை); இழுக்கப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய ஊர்தி; generally vehicle, especially bullock-cart. horse-drawncart.

     [வள் → வண் → வண்டு → வண்டி (வே.க.4:101);.]

     [P]

வண்டிகட்டு-தல்

வண்டிகட்டு-தல் vaṇṭigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மாட்டை வண்டியின் நுகத்தடியிற் பூட்டுதல்; to yoke the bullocks to a bandy, as for a journey.

   2. சுற்றுப் பயணம் முதலியன தொடங்குதல் (இ.வ.);; to start as on a journey.

     [வண்டி + கட்டு. கள் → கட்டு = இணைத்தல், பிணைத்தல்.]

மாட்டை வண்டி நுகத்தடியில் இணைத்துச் சேர்த்தலே, வண்டி கட்டுதலாகும்.

வண்டிக்கடுக்கன்

 வண்டிக்கடுக்கன் vaṇḍikkaḍukkaṉ, பெ. (n.)

   பொன்னாலியன்ற பெரிய வட்ட வடிவான கடுக்கன் வகை (இ.வ.);; a large circular, gold ear-ring of men.

     [வண்டி + கடுக்கன். கடி → கடு → கடுக்கன். கடித்தல் பொருத்துதல், பிடிப்பாக இருத்தல். வண்டிக்கடுக்கன் வண்டிச்சக்கர வடிவிலமைந்த ஆடவர் காதணி.]

வண்டிக்கட்டு

வண்டிக்கட்டு vaṇṭikkaṭṭu, பெ. (n.)

   1. வண்டிப்பட்டா (வின்.); பார்க்க;see Vandi-p-patta.

   2. மகளிர் முடிந்து கொள்ளும் தலைமுடி வகை (இ.வ.);; a mode of tying a woman’s braided hair.

     [வண்டி + கட்டு. கள் → கடு → கட்டு.]

கட்டு இணைப்பு, சேர்ப்பு, முடிப்பு. வட்ட வடிவில் முடிந்து கொள்ளும் மகளிர்தம் தலைமுடிப்பு.

வண்டிக்காரன்

வண்டிக்காரன் vaṇṭikkāraṉ, பெ. (n.)

   1. வண்டியோட்டுபவன்; cart driver.

   2. ஒட்டுநர்; driver.

   3. வண்டிக்கு உரியவன்; owner of a cart or carriage.

     [வண்டி + காரன். காரன் = வினைமுதல். உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற் பெயரீறு (விகுதி);.]

வடமொழியாளர் இப்பெயரீற்றைக் ‘க்ரு’ (செய்); என்னும் முதனிலையினின்று திரித்துப் பொருளுரைப்பது பொருந்தாது. காரன் என்னும் ஆண்பாற் பெயரீறு, செந்தமிழுக்கேயுரியது.

ஆட்டுக்காரன். மாட்டுக்காரன், வீட்டுக்காரன், வேலைக்காரன், கோழிக்காரன், வெள்ளைக்காரன் போன்ற எண்ணிலடங்கா வினைமுதற் பெயரிறுகள் தமிழில் வழக்கூன்றியுள்ளமை காண்க.

வண்டிக்கால்

 வண்டிக்கால் vaṇṭikkāl, பெ. (n.)

   வண்டிச் சக்கரம் (வின்.);; cart-wheel.

     [வண்டி + கால்.]

வண்டிக்கீல்

 வண்டிக்கீல் vaṇṭikāl, பெ. (n.)

வண்டிமசகு (இ.வ.); பார்க்க;see vandi-masagu.

     [வண்டி + கீல். இல் → கில் → கீல்.]

வண்டிக்கூடு

 வண்டிக்கூடு vaṇṭikāṭu, பெ. (n.)

   வண்டியின் மேற்கூண்டு; dome-like top or cover of a cart.

     [வண்டி + கூடு. குல் → குள் → கூடு.]

     [P]

வண்டிக்கொட்டகை

 வண்டிக்கொட்டகை vaṇṭiggoṭṭagai, பெ. (n.)

வண்டிப்பேட்டை (கட்டட. நாமா.); பார்க்க;see vandī-p-pettai.

வண்டிக்கொழுப்பு

 வண்டிக்கொழுப்பு vaṇṭikkoḻuppu, பெ. (n.)

வண்டிமசகு (வின்.); பார்க்க;see vandi-masagu.

     [வண்டி + கொழுப்பு.]

வண்டிசண்டி

 வண்டிசண்டி vaṇṭisaṇṭi, பெ. (n.)

   திறமையுள்ளவன் (இ.வ.);; clever person.

வண்டிச்சத்தம்

 வண்டிச்சத்தம் vaṇṭiccattam, பெ. (n.)

   வண்டிக்கூலி, வண்டி வாடகை; carriage, hire, fare, hire charges.

மறுவ. சகடக்கூலி

     [வண்டி + சத்தம்.]

சாத்து = பண்டங்களைக் கொண்டு விற்கும் வணிகர் கூட்டம். சாத்தம் → சத்தம் = வண்டிக்குக் கொடுக்கும் கூலி. வண்டிச் சத்தம் என்பது வண்டியிற் பண்டங்களை ஏற்றிச் செல்லுவதற்கான கூலி அல்லது வாடகை.

 வண்டிச்சத்தம் vaṇṭiccattam, பெ.. (n.)

   வண்டிக் கூலி; wage for the load to be carried by cart.

     [வண்டி+(சாத்தம்);சத்தம்]

சாத்து வாணிகர் பெறும் கட்டணம்.

வண்டிச்சவடு

வண்டிச்சவடு vaṇḍiccavaḍu, பெ. (n.)

வண்டித்தடம் பார்க்க;see vandi-t-tadam.

     “ஆன்குடிக்குப் போகிற வண்டிச்சவட்டுக்கு வடக்கும்” (புதுக்கல். 420);.

     [வண்டி + சுவடு → சவடு. உகரமுதற்சொல் அகரமுதலவாதல் தமிழில் இயல்பாம்.]

வண்டிச்செடிலாடல்

 வண்டிச்செடிலாடல் vaṇḍicceḍilāḍal, பெ. (n.)

   வண்டியில் வைத்துள்ள செடிலில் ஆடுகை (வின்.);; swinging from hook in a machine mounted on a cart and rotated.

வண்டித்தடம்

 வண்டித்தடம் vaṇḍittaḍam, பெ. (n.)

   வண்டிச் சக்கரம் சென்று தேய்ந்த தடம்; cart-track.

வண்டிதட, வண்டி தடை (பே.வ.);.

     [வண்டி + தடம்.]

வண்டினரி

வண்டினரி vaṇṭiṉari, பெ. (n.)

   1. வண்டரிசி பார்க்க;see vandarisi.

   2. ஆறு புள்ளி வண்டு கொளுஞ்சி, செடிவண்டு, குருவண்டு, குழிவண்டு, நீருக்குள் சுழல் வண்டு, எரிவண்டு, கழுதை வண்டு இவையெல்லாம் குருமுறைக்கு எடுத்தவை; all the above kinds of beetles are useful in alchemy.

வண்டிபுட்பம்

 வண்டிபுட்பம் vaṇṭibuṭbam, பெ. (n.)

   அசோகு; a kind of tree-Saraca indica.

வண்டிப் பந்தயம்

 வண்டிப் பந்தயம் vaṇṭippandayam, பெ. (n.)

   ஒன்பான் இரா (நவராத்திரிபூசையெடுப்பு); நாளில் வீரவுணர்வின் அடிப்படையாக நிகழும் விளையாட்டு; cart race.

     [வண்டி+பந்தயம்]

வண்டிப்பட்டா

 வண்டிப்பட்டா vaṇṭippaṭṭā, பெ. (n.)

   வண்டிச் சக்கரத்தின் மேல் தைத்த இருப்புச் சட்டம்; iron frame of cart-wheel.

     [வண்டி + பட்டை → பட்டா.]

வண்டிப்பட்டை

 வண்டிப்பட்டை vaṇṭippaṭṭai, பெ. (n.)

வண்டிப் பட்டா (இ.வ.); பார்க்க;see Vandi-p-patta.

     [வண்டி + பட்டை.]

வண்டிப்பாதை

 வண்டிப்பாதை vaṇṭippātai, பெ. (n.)

வண்டித் தடம் பார்க்க;see vandi-t-tadam.

வண்டிபாட்ட (பே.வ.);.

     [வண்டி + பாதை.]

வண்டிப்பாரம்

வண்டிப்பாரம் vaṇṭippāram, பெ. (n.)

   1. வண்டியிலேற்றும் சுமை; cart-load.

     “வண்டிப்பாரம் நிலத்திலே” (பழ.);.

   2. பட்டணம் படி 480 முதல் 500 வரை கொள்ளும் தவச அளவுவகை; a unit of dry measure, varying from 480 to 500 (Chennai); city measures.

வண்டிப்பேட்டை

வண்டிப்பேட்டை vaṇṭippēṭṭai, பெ. (n.)

   1. சுற்றுலா வண்டிகள் தங்கும் இடம்; caravansari, enclosed halting place for travelling carts.

வண்டிப்பேட்டைச் சண்டிக்காளை வச்சசுமையை இழுக்காது (உ.வ.);.

   2. வண்டிமேடு பார்க்க;see vandi-medu.

     [வண்டி + பேட்டை = பயண வண்டி முதலியன தங்குமிடம்.]

வண்டிப்பைதா

 வண்டிப்பைதா vaṇṭippaitā, பெ. (n.)

   வண்டிச் சக்கரம்; cart-wheel.

வண்டிப்பொறை

வண்டிப்பொறை vaṇṭippoṟai, பெ. (n.)

வண்டிப்பாரம், 1 பார்க்க;see Vandi-p-param.

     [வண்டு → வண்டி + பொறை. பொறை = பாரம்.]

வண்டிமசகு

 வண்டிமசகு vaṇṭimasagu, பெ. (n.)

   வண்டிச் சக்கரத் துளையிலிடும் மை (இ.வ.);; wheel grease.

     [வண்டி + மதி → மசி → மசகு.]

மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து மசித்த (குழைத்த); வண்டிமை.

வண்டிமசி

 வண்டிமசி vaṇṭimasi, பெ. (n.)

வண்டிமசகு (இ.வ.); பார்க்க;see vandi-masagu.

     [வண்டி + மதி → மசி.]

வண்டிமலைச்சி

 வண்டிமலைச்சி vaṇṭimalaicci, பெ. (n.)

   சிற்றூர்ப் பெண்தெய்வம்; a village goddess.

வண்டிமலையன்

 வண்டிமலையன் vaṇṭimalaiyaṉ, பெ. (n.)

   தென்னார்க்காடு மாவட்டத்தில் வணங்கப் படுகின்ற தெய்வம்; male deity worshiped in South Arcot district.

வண்டிமேடு

 வண்டிமேடு vaṇṭimēṭu, பெ. (n.)

   வண்டி நிற்குமிடம் (கொ.வ.);; cart-stand.

வண்டிமை

 வண்டிமை vaṇṭimai, பெ. (n.)

வண்டிமசகு பார்க்க;see vandi-masagu.

     [வண்டி + மசி → மயி → மை = வண்டிமசகு.]

வண்டியகவாய்

 வண்டியகவாய் vaṇṭiyagavāy, பெ. (n.)

   வண்டிச் சக்கரத் துளை (வின்.);; axle-tree hole.

     [வண்டி + அகவாய் = உள்ளிடம்.]

வண்டியம்

 வண்டியம் vaṇṭiyam, பெ. (n.)

   செடிவகை (மலை.);; pink-tinged white sticky mallow.

வண்டியிலை

வண்டியிலை vaṇṭiyilai, பெ. (n.)

   சக்கரத்தின் வட்டையையும், குடத்தையும் ஒன்றிணைக்கும் பன்னிரண்டு மரக்கட்டைகள்;   12 wood pieces connecting the wheel rim and kudam. வண்டி எல (பே.வ.);.

மறுவ. ஆரக்கால்.

     [வண்டி + இலை. இலை = வண்டிச்சக்கரத்தின் ஆரக்கால்.]

வண்டியேர்க்கால்

 வண்டியேர்க்கால் vaṇṭiyērkkāl, பெ. (n.)

   வண்டியின் மத்தியில் மையக் கட்டையின் மேல் நுகத்தடியுடன் பொருத்தப்பட்ட நீண்ட வலுவான மரக்கட்டை; a long sturdy plank centrally fixed in the bullock easy longitudinally.

வண்டி ஏர்க்காலு (பே.வ.);.

வண்டிரம்

 வண்டிரம் vaṇṭiram, பெ. (n.)

   வாகை மேற் புல்லுருவி; a parasite plant on the tree vagai.

வண்டில்

வண்டில்1 vaṇṭil, பெ. (n.)

   வெங்காரம்; borax.

 வண்டில்2 vaṇṭil, பெ. (n.)

   1. வண்டி1, 1 (வின்.); பார்க்க;see vandi.

   2. சக்கரம் (நாமதீப. 461);; wheel.

     [வண்டு → வண்டி → வண்டில்.]

வண்டிவட்டை

 வண்டிவட்டை vaṇṭivaṭṭai, பெ. (n.)

   வண்டிச் சக்கரம் உருப்பெறுதற்குரிய ஆறு வளைவான மரச்சட்டங்கள்; six rims of wheel. வண்டி வட்(டை); (பே.வ.);.

     [வண்டி + வட்டு → வட்டை.]

வண்டு

வண்டு1 vaṇṭu, பெ. (n.)

   1. வண்டு, சுரும்பு, தேன், ஞிமிறு என நால்வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை; chafer, bee of four kinds, viz., vandu, surumbu, ten, nimiru.

     “யாழிசை கொண்ட வினவண்டிமிர்ந்தார்ப்ப” (கலித். 131);, வண்டு மொய்க்காத அரும்பும், வண்ணான்துவைக்காத துணியும் சிறக்காது (உ.வ.);.

   2. நறுமணத்தை நாடிப் பறக்கும் அறுகாற் சிறு பறவை வகை; a kind of bee.

     “வண்டு கண்மகிழ்தே னினங்காள்” (சீவக.892);. வண்டு ஏறாத மரமில்லை (பழ); வண்டு தூரத்திலேயே வாசனை அறியும் (இ.வ.);.

     [வள் → வண் → வண்டு (வே.க.4 பக்.100);.]

 வண்டு2 vaṇṭu, பெ. (n.)

   1. மறவருள் ஒரு உட்பிரிவைச் சார்ந்தவர் (புறநா. 263, உரை);; a sub-sect of Marava caste.

   2. அம்பு (பிங்.);; arrow.

     “ஒழிகில வேள்கர வண்டே” (வெங்கைக்க. 18);.

   3. குற்றம் (பிங்.);; fault.

   4. கைவளை (பிங்.);; bracelet.

     “கைவண்டுங் கண்வண்டு மோடக் கலையோட” (ஆதி. உலா. 98);.

   5. சங்கு (பிங்.);; conch.

   6. நூல் (பிங்.);; thread.

   7. எட்டாம் நாண் மீனான கொடிறு (பூசம்); (பிங்.);; the eighth naksatra.

   8. சிற்றொழுக்கம் (நாமதீப. 650);; lowly or mean conduct.

   9. செம்மரம்; coromandel redwood.

     [வண் → வண்டு.]

 வண்டு3 vaṇṭu, பெ. (n.)

   1. பெருவிரலும் அணிவிரலும் வளைந்து, நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து, கட்டு விரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப். 3, 18, உரை);; a gesture with one hand in which the tips of the thumb and the ring-finger are joined and the little finger is held erect, while the fore finger and the middle finger are bent and held loosely together, one of 33 inaiyā-vinai-k-kai

   2. நாட்டிய முத்திரைக்குரிய அலிக்கை வகை (சிலப்.3, 18, உரை, பக்.92, கீழ்க்குறிப்பு);; a hand-pose.

     [வண் → வண்டு.]

பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றில் சிறுவிரல் நிமிர்ந்து, கட்டு விரலும, அணிவிரலும் நெகிழ வளைந்து நிற்பது (சிலம்பு. 3:18 அடியார்க்கு);.

 வண்டு4 vaṇṭu, பெ. (n.)

   1. தவசத்தை அளக்கும் பொழுது கீழே விழுவனவற்றைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற் கூடு; small coil of twisted straw used to catch what drops out while measuring grain.

   2. சுற்றுப் பயணத்தில் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற் பழுதை; twist or bundle of straw thrown over the cover of a bullock cart, as fodder for bullocks during the journey.

     [வண் → வண்டு.]

வண்டுகடி

வண்டுகடி vaṇḍugaḍi, பெ. (n.)

   1. வண்டு கொட்டுகை; sting of wasp or beetle.

   2. தோல் மேலுண்டாகும் சொறி வகை (இ.வ);; ring worm.

   3. வண்டுகொல்லி, 2 (இ.வ.); பார்க்க;see vandu-kolli.

     [வண்டு + கடி.]

வண்டுகடியிலை

வண்டுகடியிலை vaṇḍugaḍiyilai, பெ. (n.)

வண்டுகொல்லி, 2 (கொ.வ.); பார்க்க;see Vandu-kolli.

வண்டுகட்டல்

 வண்டுகட்டல் vaṇṭugaṭṭal, பெ. (n.)

   வேடு கட்டுதல்; the film that is formed on boiling milk and other substances.

வண்டுகட்டு-தல்

வண்டுகட்டு-தல் vaṇṭugaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பானையின் வாயைச் சீலையால் மூடிக் கட்டுதல்; to cover and tie up the mouth of a pot with cloth, in preserving things.

     ‘நலமதாய்க் கவசம் தன்னில் நயமதாய் வண்டுகட்டி’.

     [வண்டு + கட்டு.]

வண்டுகாயப்போடு-தல்

வண்டுகாயப்போடு-தல் vaṇṭukāyappōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   உப்பளப் பாத்தியிலிருந்து வாரியெடுக்கும் உப்பை, அப்பாத்தியின் வரப்பிலேயே குவித்து, ஒருநாள் முழுவதும் வெயிற் காய்ச்சலிடுகை; drying proeers on the ridges of beds in salt pans by heaping.

வண்டுகுத்தி

 வண்டுகுத்தி vaṇṭugutti, பெ. (n.)

   குருவி வகை (சங்.அக.);; a small bird.

     [வண்டு + குத்தி.]

ஒருகா. வண்டுகொத்தி → வண்டுகுத்தி.

     [P]

வண்டுகூட்டு-தல்

வண்டுகூட்டு-தல் vaṇṭuāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பாத்தியிலிருந்து உப்பை அவ்வரப்பிலேயே வாரிக் குவித்தல்; to heap salt on the ridge itself after collecting from salt beds.

     [வண்டு + கூட்டு.]

வண்டுகொல்லி

வண்டுகொல்லி1 vaṇṭugolli, பெ. (n.)

   1. சீமையகத்தி; large-leafleted-eglandular senna.

   2. தோல் நோய்தீர்க்கும் மருந்துச் செடிவகை; ring worm shrub.

   3. மரவகை (மலை.);;  deodar cedar.

   4. சண்பகம் (மூ.அ.);; champak.

 வண்டுகொல்லி2 vaṇṭugolli, பெ. (n.)

   1. ஆடு தின்னாப் பாளை; a creeper, which is very bitter and ash coloured-Aristo lochia bracteata.

   2. தேவதாரம்; a kind of fragrant wood-Eagle wood.

வண்டுக்காய்

 வண்டுக்காய் vaṇṭukkāy, பெ. (n.)

   வெண்டைக்காய்; ladies finger-Hibiscus esculentus.

வண்டுக்குள்ளரிசி

 வண்டுக்குள்ளரிசி vaṇṭukkuḷḷarisi, பெ. (n.)

வண்டரிசி பார்க்க;see vandarisi.

வண்டுசுற்று-தல்

வண்டுசுற்று-தல் vaṇṭusuṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   வைக்கோல் முதலியவற்றைப் புரியாக நெருங்கச் சுற்றிக் கட்டுதல்; to make twists of straw and pack them.

     [வண்டு + சுற்று.]

வண்டுச்சிலந்தி

வண்டுச்சிலந்தி vaṇṭuccilandi, பெ. (n.)

   ஒருவகைப் புண் (சீவரட்.354);; a burning blister.

வண்டுச்சொறி

 வண்டுச்சொறி vaṇṭuccoṟi, பெ. (n.)

   வண்டு கடிப்பதினால் உண்டான சொறி; urticaria caused by sting of beetles.

வண்டுணாமலர்மரம்

வண்டுணாமலர்மரம் vaṇṭuṇāmalarmaram, பெ. (n.)

   1. செண்பகம்; champak.

   2. வேங்கைமரம்; East |ndian kino.

     [வண்டு + உண் + ஆ (எ.ம.இ.நி); + மலர் மரம்.]

வண்டுணி

 வண்டுணி vaṇṭuṇi, பெ. (n.)

   தாமரை (சா.அக.);; lotus.

வண்டுநாணான்

வண்டுநாணான் vaṇṭunāṇāṉ, பெ. (n.)

வண்டுகளை வில்லின் நாணாகவுடைய காமன் (நாமதீப. 59);,

 kama,as having a row of beetles for the string of His bow.

     [வண்டு + நாண் + ஆன்.]

வண்டுநெல்லி

 வண்டுநெல்லி vaṇṭunelli, பெ. (n.)

வண்டு கொல்லி (இங்.வை.); பார்க்க;see vandu-kolli.

வண்டுமரம்

 வண்டுமரம் vaṇṭumaram, பெ. (n.)

   ஒர் வகை கொடி; beetle tree.

வண்டுமூலி

வண்டுமூலி1 vaṇṭumūli, பெ. (n.)

   உப்பு; the three salts obtained from the effloresence grown on the soil of fuller’s earth.

 வண்டுமூலி2 vaṇṭumūli, பெ. (n.)

   வெள்ளெருக்கு; madar shrub with white flowers-Calotrops gigantea.

வண்டுருவன்

வண்டுருவன் vaṇṭuruvaṉ, பெ. (n.)

   திருமால் (நாமதீப. 50);; Visnu.

வண்டுறுக்கு-தல்

வண்டுறுக்கு-தல் vaṇṭuṟukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   உதட்டை மடக்கிக் கடித்தல் (திருநெல்);; to curl and bite one’s lips.

     [வண்டு + உறுக்கு – உறுக்குதல் = சினத்தல்.]

வண்டுறை

 வண்டுறை vaṇṭuṟai, பெ. (n.)

   எழுத்தில்லா வோசை (சது.);; inarticulate sound.

வண்டுளம்

 வண்டுளம் vaṇṭuḷam, பெ. (n.)

   நந்தியா வட்டம்; white flower of a plant which yields milky juice when wounded – East India rosebay.

வண்டுவிடு-தல்

வண்டுவிடு-தல் vaṇḍuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   வைக்கோல் முதலியவற்றைப் புரியாகத் திரித்தல்; to twist straw.

     [வண்டு + விடு.]

வண்டெச்சில்

வண்டெச்சில் vaṇṭeccil, பெ. (n.)

   தேன்; honey.

     “இளநீர் வண்டெச்சில் பயறப்பவகை” (திருப்பு. விநாயகர். 3);.

     [வண்டு + எச்சில்.]

வண்டேறாமலர்

 வண்டேறாமலர் vaṇṭēṟāmalar, பெ. (n.)

   அப்பொழுதலர்ந்த மலர் (வின்.);; flower just blown, as not visited by the bee.

     [வண்டு + ஏறு + ஆ (எ.ம.இ.நி); மலர்.]

வண்டை

வண்டை1 vaṇṭai, பெ. (n.)

   வெண்டை (சங்.அக.);; a plant, yielding ladies-finger-Hibiscus esculentus.

க. பெண்டெ.

     [முள் → (மள); → வள் → வண்டை.]

 வண்டை vaṇṭai, பெ. (n.)

   கொச்சையானது; which is corrupt or vulgar.

     ‘வண்டைப் பேச்சு’ (இ.வ.);.

     [வண்டு → வண்டை.]

வண்டையிழைப்புளி

 வண்டையிழைப்புளி vaṇṭaiyiḻaippuḷi, பெ. (n.)

   தச்சுக் கருவி வகை (இ.வ.);; beading plane.

     [வண்டு → வண்டை + இழைப்பு + உளி.]

     [P]

வண்டோதரி

வண்டோதரி vaṇṭōtari, பெ. (n.)

   இராவணனுடைய மனைவி; the wife of Rāvanān.

     “அழகமர் வண்டோதரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானை” (திருவாச.18:2);.

     [மண்டோதரி → வண்டோதரி.]

வண்டோதரிவேர்

 வண்டோதரிவேர் vaṇṭōtarivēr, பெ. (n.)

   ஒருவகை மூலி; a kind of medicine.

வண்டோலம்

வண்டோலம் vaṇṭōlam, பெ. (n.)

   1. வண்ட வாளம் 1, 2 பார்க்க;see vanda-valam.

   2. ஒருவனது முந்தைய வரலாறு; one’s antecedents.

     ‘உன் வண்டோல மெல்லாம் நன்றாய் அறிவேன்’ (திருநெல்.);.

வண்ண ஆவாரம்

 வண்ண ஆவாரம் vaṇṇaāvāram, பெ. (n.)

   தகரை; ring worm plant, cassia tora.

வண்ணகம்

வண்ணகம் vaṇṇagam, பெ. (n.)

   1. விளக்கமுற வண்ணித்துப் புகழ்கை (தொல்.பொருள்.452, உரை);; elaborate eulogy.

   2. கலிப்பாவினுறுப்புளொன்று (வீரசோ. யாப். 11, உரை);; a component of kali verse.

   3. சந்தனம் (யாழ்.அக.);; sandal wood.

   4. நறுமணம் (யாழ்.அக.);; fragrance.

வண்ணித்து வருதலின் வண்ணகம் எனப்படும் (யாப்.84);.

 Skt. வர்ணக.

     [வள் → வண் → வண்ணம் → வண்ணகம் (வே.க. 4:97);.]

ஒ.நோ. திண்ணம் → திண்ணகம். வண்ணகம் அராகம் என்னும் வண்ணவுறுப்பு (மு.தா.2, பக்.78); வண்ணித்துப் புகழ்தலான் வண்ணகம் எனப்படும் (தொல்.பொருள்.452, பேரா.);.

வண்ணகவொத்தாழிசை

வண்ணகவொத்தாழிசை vaṇṇagavottāḻisai, பெ. (n.)

   1. அராகம், தாழிசை, எண், வாரம் என்னும் உறுப்புக்களைச் சிறப்பாகக் கொண்டு வரும் கலிப்பாவகை (தொல்.பொருள். 452);; a variety of kali verse in which arāgam, tàssa, en and vāram are the main features.

   2. வண்ணகவொத் தாழிசைக்கலிப்பா;see vannaga-v-ottalisai-k-kalippa.

     [வண்ணகம் + ஒத்தாழிசை.]

ஆறுறுப்பமைந்த வண்ணக வொத்தாழிசைக் கலி தொன்றுதொட்டு வழங்கும் தமிழ்ச்செய்யுள் வகை: ஒருவன் தன் காதலை வெளிப்படுத்தற்கும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கடவுளை வழுத்தற்கும், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாபோல், மிகப் பொருத்தமான செய்யுள் வகையை வேறெம் மொழியிலுங் காணவியலாது (வே.க.4: பக்.97);.

வண்ணக வொத்தாழிசைக்கலி என்னும் செய்யுள் வகை, தொல்காப்பியர் முந்து நூலிற்கண்ட இலக்கணக் குறியீடாதலின், தலைக்கழகக் காலத்தது என்று அறிதல் வேண்டும்.

வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா

 வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா vaṇṇagavottāḻisaiggalippā, பெ. (n.)

வண்ணகவொத்தாழிசை பார்க்க;see vannaga-v-ottalisai.

     [வண்ணகம் + ஒத்தாழிசை → வண்ணகவொத் தாழிசை கலிப்பா.]

அசையடி முன்னர், அராகம் வந்து, அனைத்துறுப்புகளும் அமையும் வண்ணம் இயற்றப்படும் பா, வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா எனப்படும். வண்ணகவொத்தாழிசைக் கலி என்னும் செய்யுள்வகை. தொல்காப்பியர் முந்து நூலிற் கண்ட இலக்கணக் குறியீடாதலின், தலைக்கழகக் காலத்தது என்பது வெள்ளிடை மலை.

வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா செய்யுளிற் பயின்றுவரும் பான்மைபற்றி, அமிதசாகரனார், யாப்பருங்கலக் காரிகையுள்

உரைப்பது வருமாறு:-

     “அம்போதாங்க உறுப்பிற்குந் தாழிசைக்கும் நடுவே அராக உறுப்புப் பெற்று தரவு, தாழிசை, அராகம், அம்போதாங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்பினையும் உடைத்தாய் வருமெனின், அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்:-

வண்ணகவொத்தாழிசையின் அடிவரை யறையாவது:- சிறுமை நான்கடி, பெருமை எட்டடி, இடை ஐந்தடியானும், ஆறடியானும், ஏழடியானும் வரப்பெறும் எனக்கொள்க.

என்னை,

     “அளவடி முதலா வனைத்தினு நான்கடி முதலா யிரட்டிய முடுகியு னடக்கும்”.

வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா பாடல் வருமாறு:-

இன்னே எழுக செயல்முனைப் புற்றே!

தரவு நிறைபுலத்துப் பெருவளஞ்சேர் நெடியபுகழ் நிலைகொண்ட மறைமலையின் மனத்தரங்கில்

மலர்ந்தெழுந்த ஒளிப்பிழம்பு மொழிஞாயி றெனவுலகந் தொழுதேத்தும் பாவாணர் ஒழிவின்றிப் பலதுறையும் விழிவைத்துப் பெரிதாய்ந்தே உலகமுதன் மொழியீதென் றுறுதியுற நிறுவியசீர் இலகுவள மிகுதமிழுக் கியல்புரிமை யுடையோய் கோள்! தாழிசை

நீணிலத்தின் உடன்றோன்றி நிலைசிறந்த குடிமரபின் மானுயர்ந்த ஒருமூவர் வழிவந்தோய் நிலவரையில் பெரியதமிழ் நலமறியார் அறிவாரைப் பேணுகிலார்

அரியணைக்கே குறிவைப்பார் அவர்க்கோல் செய்தனையே! தென்கடல் நெடும்பரப்புத் திகழ்ந்தபெருங் குமரியினைத் தன்வயிற்றுளதாக்கிக் காண்டதன்றி நின்மடியால்

வழிமொழிகள் வலக்காரம் வரம்பிகந்து மிகநீளக்

கொழிதமிழ் வழங்குநிலம் மேன்மேலுங் குறுகியதே!

நீள்தமிழுக் கயலவர்கள் நின்னாட்டிற் காலூன்றி

ஆள்கின்ற நிலையும்பெற் றார்க்கின்றார் நின்னவரோ

பலநாடுஞ் சென்றவற்றைப் பசுமையுறச் செய்தாலுஞ்

சிலவேனும் உரிமையின்றிச் சீரழியும் நிலையென்னே!

அராகம்

மாட்சியின் உயர்தமிழ் வழிபடு மொழியிலை

எனமிக இழிவுசெய் மதம்!

ஆட்சியின் அலுவலில் தமிழிடம் பெறுவதில்

தடையுறும் அரசியல் நெறி!

காட்சியின் இனியநல் மழலையர் முதலனை

வரும்பயில் வதுபிற மொழி!

மீட்சியும் தமிழ்க்கினி யுளதுகொல் எனமிக

உளைவது பெரியவர் மனம்!

நாற்சீர் ஈரடி நான்கு அம்போதரங்கம்

புறம்போக்கு மொழிச்சொற்கள் இடையிடையே புக்கதனால் திறம்பட்ட செந்தமிழின் சீர்குலைவை யறிகிலையால்! துறைதொறுந் தமிழ்வளமை புதுக்குவதற் கிடையூறாய்த் திறைகொள்வார் தங்கொள்கை செயற்படுதல் உணர்கிலையான்!

நாற்சீர் ஒரடி நான்கு அம்போதரங்கம்

தாய்மொழியிற் கையொப்பம் இடுவதில்லை தமிழன் கை! தாய்மொழியைப் பலுக்குதற்குப் புரள்வதில்லை தமிழன் நா! தமிழிசையைக் கேட்கிலவால் தமிழன்றன் செவியிணையே! தமிழ்வரியைக் காண்கிலவால் தமிழன்றன் கண்ணிணையே! முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்

கலப்படத்தால் திரிந்தது மொழி!

கயவர்களால் இழிந்தது கலை!

மறைகளினால் மறைந்தது மதி!

மனுவினரால் பிறழ்ந்தது முறை!

சடங்குகளால் புதைந்தது மதம்!

சாதிகளாய்ச் சிதைந்தது குடி!

வீறாப்பாய் இழிந்தது மறம்!

வெறுந்தரகால் ஒழிந்தது பொருள்!

இருசீர் ஒரடிப் பதினாறு அம்போதரங்கம்

வரலாற்றுத் திரிப்பொருபால்!

வழிபாட்டுக் கெடுப்பொருபால்!

அரசியலில் புரட்டொருபால்!

அலுவலர்செய் அலைப்பொருபால்!

கட்சிகளின் பிணக்கொருபால்!

கல்வியகப் பறிப்பொருபால்!

திரைப்படத்துத் தீங்கொருபால்!

உரைப்பாட்டுக் கரைப்பொருபால்!

சாதிகளின் தழைப்பொருபால்!

தாளிகைகள் கதைப்பொருபால்!

காட்சியொலி அழிம்பொருபால்!

ஆட்டத்தின் அலைப்பொருபால்!

பணியில்லாப் பிணியொருபால்!

பரிசுச்சீட் டீர்ப்பொருபால்!

நடிப்பவரைச் சுவைப்பொருபால்!

நாடேகுஞ் செலவொருபால்!

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

மொழியும் மொழிகொள் மக்களும் நிலனும்

இழிவுறக் கிடந்த பழிபடு நிலைமை

போய்மடிந் தொழியத் தாய்மொழி போற்றி

ஆய்வின் அறிவின் துறையல கண்டு

தன்னுரிமை வாழ்க்கை நலம்பெற

இன்னே எழுக செயல்முனைப் புற்றே!

குமரிக்கண்டத் தமிழர் செய்யுட் கலையின் கொடுமுடியேறி நாலும் ஐந்தும் ஆறுமான உறுப்புகளையுடைய நால்வகைக் கலிப்பாக்களையும் யாத்திருந்தனர்.

வண்ணகூபிகை

 வண்ணகூபிகை vaṇṇaāpigai, பெ. (n.)

   மைக்கூடு (யாழ்.அக.);;  ink-bottle.

வண்ணக் கோடாங்கி ஆட்டம்

 வண்ணக் கோடாங்கி ஆட்டம் vaṇṇakāṭāṅgiāṭṭam, பெ. (n.)

   இருவர் அல்லது மூவர் வழிபாட்டுப் பாடல்களைப் பாடி ஆடுகின்ற ஆட்டம்; dance performed bytwoor three while singing hymns.

     [வண்ணம்:கோடாங்கி+ஆட்டம்]

வண்ணக்கச்சோலம்

வண்ணக்கச்சோலம் vaṇṇakkaccōlam, பெ. (n.)

   ஒமாலிகை முப்பத்திரண்டனுளொன்று (சிலப். 6:77, உரை);; one of 32 omaligai.

     [வண்ணம் + கச்சோலம். கச்சோலம் = ஒருவகை நறுமணப் பொருள்.]

வண்ணக்கச்சோல முள்ளிட்ட முப்பத்திரு வகை ஓமாலிகையும் ஊறவைத்த நன்னீரில் அரச மகளிரும் செல்வப் பெண்டிரும் குளித்து வந்தனர்.

வண்ணக்கஞ்சாத்தனார்

வண்ணக்கஞ்சாத்தனார் vaṇṇakkañjāttaṉār, பெ. (n.)

   கழகக் காலப் புலவர்களுள் ஒருவர்; an ancient Sangam, poet.

இவர்தம் பாடலொன்று திருவள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளது. வண்ணக்கஞ்சாத்தனார் திருக்குறளை வேதத்திற்கு ஒப்பாகக் கூறியுள்ள பாடல், வருமாறு :-

     “ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது சீரியது என்று ஒன்றைச் செப்பரிதால் – ஆரியம் வேதம் உடைத்து;

தமிழ்திரு வள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து” (திருவள்ளுவமா.43);,

     [வண்ணம் → வண்ணகம். வண்ணக்கம் + சாத்தன் → சாத்தனார்.]

பண்டைக் காலத்தில் பெரும்பாலும் வணிகரே சாத்தன் என்னும் பெயர் தாங்கியிருக்கவும் இப்புலவர் பெருந்தகை போலும் கூலவாணிகன் சித்தலை சாத்தனார் மற்றும் இன்னபிற பெயர் பெற்றாரையும் எண்ணிப் பார்க்க.

வண்ணக்கட்சி

வண்ணக்கட்சி vaṇṇakkaṭci, பெ. (n.)

வண்ணக்களஞ்சியம் பார்க்க;see vanna-k-kalanjiyam.

     “என்பேர் வண்ணக்கட்சி” (தமிழ்நா. 242);.

     [வண்ணம் + கட்சி.]

வண்ணக்கன்

வண்ணக்கன்1 vaṇṇakkaṉ, பெ. (n.)

   1. மாசுண்ட துணிவெளுக்கும் தொழிலாளி; washerman.

   2. வண்ணச் சித்திரங்கள் எழுதுபவன்; artist.

     ‘சனநாதத் தெரிந்த வலங்கை வேளைக் காறரில் வண்ணக்கன் ஐயாறனாகிய சித்திரயாளி” (தெ.கல்.தொ.17 கல்.238);. முதல் இராசராசன் கி.பி. 1007 முதல் இராசராசன் திருநெய்த்தானம் கல்வெட்டு.

     [வண்ணம் → வண்ணக்கன்.]

 வண்ணக்கன்2 vaṇṇakkaṉ, பெ. (n.)

   கட்டி பொற்காக, பொற் கட்டிகளை (நிறுத்தும் உரைத்தும்); நோட்டஞ் செய்பவன்; tester of coins.

     “வண்ணக்கன் சாத்தனார்” (நற்.);.

     “வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும்” (தொல். சொல். 16. சேனா);.

மறுவ. காசுநோட்டகன்.

     [வண்ணம் → வண்ணகன் → வண்ணக்கன்.]

பொற்காசை அல்லது பொற்கட்டியை உரைத்துப் பார்த்து, அதன்மாற்று வண்ணத்தால் (நிறத்தால்); காசின் அல்லது பொற் கட்டியின் இயல்பறியும், நோட்டகன். சரியானவற்றின்மேல் முத்திரையிடுவதும் இவ்வலுவலர்தம் பொறுப்பாம். கழகக்காலப் புலவராகிய வடம வண்ணக்கன் தாமோதரனார் (புறம்.172);, காசுநோட்டக மரபினர் என்பர்.

 வண்ணக்கன்3 vaṇṇakkaṉ, பெ. (n.)

   1. செயலலுவலர்; executive.

   2. மேலாளர்; manager.

வண்ணக்கன் தத்தனார்

 வண்ணக்கன் தத்தனார் vaṇṇakkaṉtattaṉār, பெ. (n.)

   கழகக் காலப் புலவர்களுள் ஒருவர்; an ancient Sangam poet.

கழகக் காலத்தில் தத்தனார் என்னும் பெயரில் குடில் தத்தனார், நெய்தல் தத்தனார், கணக்காயன் தத்தனார். நெடுந்தத்தனார் என புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.

     [வண்ணக்கன் + தத்தன் → தத்தனார்.]

வண்ணக்கன்சொருமருங்குமரனார்

வண்ணக்கன்சொருமருங்குமரனார் vaṇṇakkaṉcorumaruṅgumaraṉār, பெ. (n.)

   கழகக் காலப் புலவர்களுளொருவர்; an ancient Sangam poet.

இவர் நாணய நோட்டகராக இருந்தவர், குறிஞ்சித் திணையை சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடலில் தலைமகன் இரவில் வருநெறியினை கூறியது சிறப்புடையது. நற்றினையில் ஒரு செய்யுளை பாடியதாக கூறுவர். அப்பாடல் வருமாறு:-

     “விளிவில் அரவமொடு தனிசிறந் துரைஇ

மழையெழுந் திறுத்த நளிர்தூங்கு சிலம்பிற்

கழையமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு

இலங்குவெள் ளருவி லியன்மலைக் கவாஅன்

அரும்புவா யவிழ்ந்த கருங்கால் வேங்கைப்

பொன்மருள் நறுவீ கன்மிசைத் தாஅம்

நன்மலை நாட நயந்தனை யருளாய்

இயங்குநர் மடிந்த அயந்திகழ் சிறுநெறிக்

கடுமா வழங்குதல் அறிந்தும்

நடுநாள் வருதி நோகோ யானே” (நற்: 257);.

வண்ணக்கம்மர்

வண்ணக்கம்மர் vaṇṇakkammar, பெ. (n.)

   வண்ண வேலை செய்வோர்; painters.

     “வத்தநாட்டு வண்ணக்கம்மரும்” (பெருங்.உஞ்சைக். 58, 44);.

     [வரணம் → வண்ணம் + கருமம் → கம்மம் → கம்மர்.]

 வண்ணக்கம்மர் vaṇṇakkammar, பெ. (n.)

   வண்ண ஒவியங்களைத் தீட்டுபவர்; one who does painting work.

     [வண்ணம்+கம்மர்]

வண்ணக்கலிவிருத்தம்

 வண்ணக்கலிவிருத்தம் vaṇṇakkaliviruttam, பெ. (n.)

   சந்தம் அமைந்த கலி மண்டிலப்பா; rhythmic stanza of “Kalimandila-p-pa” kind.

     [வரணம் → வண்ணம் + கலிவிருத்தம். (கலி விருத்தம் = நாற்சீரடி நான்காய் வரும் கலிப்பாவின் இனம்);.]

சந்தம் அமைந்த வண்ணக்கலி விருத்தப் பாடல் வருமாறு :-

     “மால்ஏந்திய குழலார்தரு மயல்போம் இடர் அயல்போம் கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும்

மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ் வேல்ஏந்திய முருகாஎன வெண்ணிறணிந்திடிலே” (அருட்பா);.

வண்ணக்களஞ்சியப்புலவர்

வண்ணக்களஞ்சியப்புலவர் vaṇṇakkaḷañjiyappulavar, பெ. (n.)

   18-ஆம் நூற்றாண்டில் “முகைதீன் புராணம்” என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet, who composed the work titled Mugaidin purānam in 18C.

இவர் மதுரைக்கு அண்மையிலுள்ள’மீசல்’ என்னுமூரிற் பிறந்தவர். ‘வண்ணம்’ பாடுவதிற் சிறந்த பாவலராவார். இவர் பாடிர் அல்தின் புலவர் எனவும் அழைக்கப்படுகிறார்.

     [வண்ணக்களஞ்சியம் + புலவர்.]

வண்ணக்களஞ்சியம்

 வண்ணக்களஞ்சியம் vaṇṇakkaḷañjiyam, பெ. (n.)

   வண்ணம் (சந்தப் பாடல்); பாடுவதிற் சிறந்த பாவலன்; poet specially skilled in composing vannam verses.

     ‘வண்ணக் களஞ்சியப் புலவர்’ (இ.வ.);.

     [வரணம் → வண்ணம் + களஞ்சியம்.]

வண்ணக்கவுதாரி

வண்ணக்கவுதாரி vaṇṇakkavutāri, பெ. (n.)

   கவுதாரி வகையுளொன்று; painted trancolin-Francolinus-pictus.

மறுவ. கதுவாலி.

     [வண்ணம் + கதுவாலி → கவுதாரி.]

தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிற் காணப்படும் இக்கவுதாரி, 31 விரலம் உயரம் வரை வளரும் தன்மைத்து. கரும் புள்ளிகளுடன், கோடுகளும், வெள்ளைப் பட்டைகளும் கொண்ட பழுப்பு நிற உடலைக் கொண்டது. தவசங்கள், புல் விதைகள், சிறு பழங்கள், கரையான் ஆகியவற்றை இரையாகக் கொள்ளும் இவை, 4 முதல் 8 வரையிலான

எண்ணிக்கையில் முட்டையிடும்.

     [P]

வண்ணக்குங்குலு

 வண்ணக்குங்குலு vaṇṇakkuṅgulu, பெ. (n.)

   மருந்திலை வகையுளொன்று; a kind of medicinal leaves.

வண்ணக்குதிரை

 வண்ணக்குதிரை vaṇṇakkudirai, பெ. (n.)

   வரிக்குதிரை; piebald horse.

வண்ணக் குதிரை மண்ணைத் தின்னும்போது, தட்டுவாணிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறதாம் (பழ);.

     [வரி + அணம் → வரணம் → வண்ணம் + குதிரை (வரி + நிறம், வரைவு);.]

பல நிறக் கோடுள்ள குதிரை.

     [P]

வண்ணக்குனிப்பு

 வண்ணக்குனிப்பு vaṇṇakkuṉippu, பெ. (n.)

வண்ணக்குழிப்பு (வின்.); பார்க்க;see vanna-k-kulippu.

     [வண்ணம் + குனிப்பு.]

வண்ணக்குழிப்பு

 வண்ணக்குழிப்பு vaṇṇakkuḻippu, பெ. (n.)

   வண்ணச் செய்யுளின் சந்தவாய்பாடு (வின்.);; a set or formal harmonic rhythm for vannam compositions.

     [வரணம் → வண்ணம் + குழி → குழிப்பு.]

வண்ணச்சுவையமுதம்

வண்ணச்சுவையமுதம் vaṇṇaccuvaiyamudam, பெ. (n.)

வண்ணவமுதம் பார்க்க;see vanna-v-amudam.

     “வண்ணச் சுவையமுதம் வைக” (சீவக. 2604);.

     [வண்ணச் + சுவை + அமுதம்.]

வண்ணஞ்சேர்ந்தோன்

வண்ணஞ்சேர்ந்தோன் vaṇṇañjērndōṉ, பெ. (n.)

   வீரபாகுதேவர் (நாமதீப.37);; virabâhu-tevar.

வண்ணடை

வண்ணடை vaṇṇaḍai, பெ. (n.)

   துகில் வகையு ளொன்று (சிலப்.14, 108, உரை);; a fine cloth.

     [வண்ணம் + ஆடை → அடை.]

பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டதாக அடியார்க்கு நல்லாராற் குறிக்கப்பெற்ற 36 ஆடை வகைகளுளொன்று.

வண்ணதூதன்

 வண்ணதூதன் vaṇṇatūtaṉ, பெ. (n.)

   திருமுகங் கொண்டு செல்வோன் (யாழ்.அக.);; messenger carrying letters.

     [வண்ணம் + தூது → தூதன்.]

ஒருகா. அஞ்சலாள்.

வண்ணத்தரு

 வண்ணத்தரு vaṇṇattaru, பெ. (n.)

   பாடல் வகையுளொன்று (யாழ்.அக.);; a kind of poetic composition.

     [வண்ணம் + தரு.]

வண்ணத்தான்

வண்ணத்தான் vaṇṇattāṉ, பெ. (n.)

   ஆடைக்கு நிறமூட்டுபவன்; dhobi.

     “ஶ்ரீ வைஷ்ணவ வண்ணத்தான் திருப்பரி வட்டங்களை அழகிதாக வாட்டி” (ஈடு. 5, 10, 6);.

மறுவ. வண்ணான்

ம. வண்ணத்தாந.

     [வண்ணம் → வண்ணத்தான்.]

வண்ணத்தி

 வண்ணத்தி vaṇṇatti, பெ. (n.)

   சொறி, தேமலைப் போக்கும் ஒர் பூடு; a shrub used to cure skin disease.

வண்ணத்தியல்

 வண்ணத்தியல் vaṇṇattiyal, பெ. (n.)

   எண் வகைச் சந்தங்களைக் கூறுகின்ற நூல்; a treatise which says the eight kinds of rhythemic movement of verse.

     [வண்ணம்+அத்து+இயல்]

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி vaṇṇattuppūcci, பெ. (n.)

வண்ணாத்திப்பூச்சி பார்க்க;see vannatip-pucci.

     “மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப் பூச்சி பரிணமித்தாலென்ன” (ஈச்சுரநிச்சயம், 167);.

     [வண்ணம் + அத்து + பூச்சி.]

     [P]

வண்ணநங்கைவித்து

 வண்ணநங்கைவித்து vaṇṇanaṅgaivittu, பெ. (n.)

   அழிஞ்சில் விதை, நாட்பட்ட சீலக்கழிச்சலுக்குப் பயன்படுத்தப்படும் கூட்டுச் சரக்குகளு ளொன்று (சா.அக.);; a compound medicine of chronic dysentery.

வண்ணநீர்

வண்ணநீர் vaṇṇanīr, பெ. (n.)

   அரக்கு நீர்; vermilion water sprinkled on festive occasions.

     “வண்ணநீர் கரந்த வட்டு” (பரிபா. 1155);.

     [வண்ணம் + நீர்.]

வண்ணனை

வண்ணனை1 vaṇṇaṉai, பெ. (n.)

   வண்ணித்துப் புகழ்கை; description, delineation.

     [வண்ணம் → வண்ணி → வண்ணனை.]

 வண்ணனை2 vaṇṇaṉai, பெ. (n.)

   1. புனைவுரை (தண்டி. பொது.7);; desrciption, interpre -tation, delineation.

   2. புகழ்ந் தேத்துகை, முகமன் மொழிகை (யாழ்.அக.);; praise, flattery.

வண்ணனைமொழி

 வண்ணனைமொழி vaṇṇaṉaimoḻi, பெ. (n.)

   காட்சி, கருத்து என்னும் இருவகைப் பொருள்களையும் வண்ணத்தால் வரைதல் அல்லது சொல்லாற் புகழ்ந்து விரித்துக் கூறுதல்; expressing the two different matters of depiction and description by means painting or by narration of words.

     [வண்ணம் → வண்ணி → வண்ணனை + மொழி.]

வண்ணனைமொழிநூல்

வண்ணனைமொழிநூல் vaṇṇaṉaimoḻinūl, பெ. (n.)

   விளக்கமொழியியல்; descriptive linguistics.

     ‘வண்ணனை மொழிநூல் உண்மைக்கு மாறானது’ (மொழி ஞாயிறு);.

     [வண்ணனை + மொழிநூல்.]

மொழி நூல் மூவகைப்படும். அவையாவன:-

   1. வண்ணனை மொழிநூல் (Descriptive linguistics);.

   2. வரலாற்று மொழிநூல் (Historical linguistics);.

   3. ஒப்பியன் மொழிநூல் (Comparative linguistics);.

கி.பி.18-ஆம் நூற்றாண்டுமுதல், அமெரிக்காவில், வண்ணனை மொழிநூல் தனிக்கலையாக, வழங்கியும், வளர்ந்தும் வருகிறது.

முதன்முதலாக தொல்காப்பியரே, மொழி நூற்கலைக்கு, கி.மு.7-ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டுள்ளார் என்பதனைக் கீழ்க்காணும் சொல்லதிகார நூற்பாக்களால் அறியலாம்.

     “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” (தொல். 640);.

     “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (தொல்,877);.

     “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” (தொல்,880);,

     “வடசொற் கிளவி, வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (தொல்,884);.

அமெரிக்கர் வளர்த்து வரும் வண்ணனை மொழிநூலுள், பலகுறைகள், உண்மைக்கு மாறாகவும், தமிழுககுக் கேடாகவும் மலிந்துள்ள பாங்கினை மொழிஞாயிறு, வண்ணனை மொழிநூலின் வழுவியல் என்னும் நூலுள் விளக்கமாக உரைத்துள்ளார்.

மேனாடுகளில் கடந்த முந் நூற்றாண்டுகளாக வளர்க்கப்பெற்று வரும் மொழிநூல், தொடக்கத்தில் ஆங்கிலத்தில், (Science of speech, Science of Language, Linguistic Science, Linguistics, Glottology, Philology); எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் (Linguistics, Philology);

என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன. மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு தழுவியதாகவும் ஒப்பு நோக்கியதாகவும் பல கூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசு முல்லர் (Max Muller);, விற்றினி (Whitney);, செசுப் பெர்சென் (Jespersen); முதலிய மொழி நூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர். ஆயின், அண்மையில், சில மேலை மொழி நூலறிஞர்,

வண்ணப் பரிமளம்

 வண்ணப் பரிமளம் vaṇṇapparimaḷam, பெ. (n.)

   முகமதியர் பாவியத்தின் ஆசிரியர்; author of epic titled”Mugamadiyar’.

வண்ணப்படம்

 வண்ணப்படம் vaṇṇappaḍam, பெ. (n.)

   வரணந்தீட்டி வரைந்தெழுதிய படம்; colourful picture.

     [வண்ணம் + படம்.]

வண்ணப்புறக்கந்தரத்தனார்

வண்ணப்புறக்கந்தரத்தனார் vaṇṇappuṟakkandarattaṉār, பெ. (n.)

   கழகப் புலவர்; an ancient sangam poet.

இவருடைய இயற்பெயர் கந்தரத்தன். பாலைத் திணைப்பாடலிற் பயின்றுவரும்

     ‘வண்ணப்புறவு’ என்ற சொற்சிறப்பு நோக்கி, அச்சொல்லே இவர்க்கு அடைமொழியாக அமைந்தது. நற்றிணையில் ஒரு பாடலும், அகநானூற்றில் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது. வண்ணப் புறக் கல்லாடனார் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றார். இவர் பாடியவை அகம் : 49-ஆம் பாடலும் நற்றிணையில் 71-ஆம் பாடலுமாகும்.

     “மன்னாப் பொருட்பிணி முன்னி இன்னதை

வளையணி முன்கைநின் இகுளைக் குணர்த்தெனப்

பன்மாண் இரத்தி ராயிற் சென்மென

விடுநா ளாதலு முரியள் விடினே

கண்ணும் நுதலும் நீவி முன்னின்று

பிரிதல் வல்லிரோ ஜய செல்வர்

வகையமர் நல்லில் அகவிறை யுறையும்

வண்ணப் புறவின் செங்காற் சேவல்

வீழ்துணைப் பயிருங் கையறு முரல்குரல்

நும்மிலள் புலம்பக் கேட்டொறும்

பொம்ம லோதி பெருவிதிப் புறவே” (நற்:7);

வண்ணமகள்

வண்ணமகள் vaṇṇamagaḷ, பெ. (n.)

   கோலஞ் செய்வாள்; lady’s maid.

     “வண்ன மகளி ரிடத்தொடு தம்மிடம்…… கொள்ளார்” (ஆசாரக் 83);.

     [வண்ணம் + மகள்.]

வண்ணமாதிரு

வண்ணமாதிரு vaṇṇamātiru, பெ. (n.)

   1. தூவல், கரிமுனை; pen, pencil.

   2. தூதி; female messenger or ambassador.

வண்ணமாதிருகை

 வண்ணமாதிருகை vaṇṇamātirugai, பெ. (n.)

   கலைமகள் (யாழ்.அக.);; kalaimagal the Goddess of learning.

வண்ணமாயிரு-த்தல்

வண்ணமாயிரு-த்தல் vaṇṇamāyiruttal,    4 செ.கு.வி. (v.i.)

   தடிமன் அல்லது பருமனாக இருத்தல்; to be stout or bulky, to be far.

வண்ணமாலை

 வண்ணமாலை vaṇṇamālai, பெ. (n.)

   நெடுங் கணக்கு (சங்.அக.);; the alphabet.

     [வரணம் → வண்ணம் + மாலை.]

வண்ணம்

வண்ணம்1 vaṇṇam, பெ. (n.)

   1. அளவு; level.

   2. ஒப்பீடு; comparison.

   3. வீதம்; ratio.

   4. முறைமை; arrangement, order.

     “நாழிக்கு நெல்லு தூணிவண்ணமாக ஒராட்டை நாளைக்கு நெல்லு 120 கலமும்” (தெ. கல். தொ. 14. கல். 210);. நெல்லு குறுவாள் கூலி ஏற்றி அஞ்சிரண்டு வண்ணத்தால் அறுநாழி உழக்கும்” (தெ. கல். தொ. 19 கல் 210);.

 வண்ணம்2 vaṇṇam, பெ. (n.)

   1. நிறம்; colour.

     “வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்” (குறள், 714);.

   2. ஒவியம் வரைதற்குரிய வண்ணக் கலவை; paint drawing paste.

     “பலகை வண்ண நுண் டுகிலிகை” (சீவக. 1107);.

   3. சாந்துப் பொது (யாழ்.அக.);; unguent, pigment.

வண்ணத்துக்குக் கிண்ணம் போடுகிறான் (இ.வ.);.

     [வரணம் → வண்ணம்.]

குமரிக் கண்டத் தமிழர் எஃகுச் செவியும், கூர்ங்கண்ணும் நுண்மதியும் உடையராதலின், வண்ணங்களை யெல்லாம் நுட்பமாய் வகுத்து அவற்றிற்கு வெள்ளை, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு, கத்தரி (Violet); யென வெவ்வேறு பெயரிட்டிருந்தனர். பண்டை யிலக்கிய மெல்லாம்

செய்யுள் வடிவிலேயே இருந்ததினாலும், அவையும் அடியோடு இறந்துபட்டமையாலும், பல வண்ணப் பெயர்களும் இறந்தொழிந்தன. இன்றும் மீன்பெயர்களில் வெண்ணிற வகைகளைக் குறிக்க வெள்ளி, வெள்ளை, வெளிச்சி, வெண்ணெய், வெளுவை முதலிய சொற்கள் ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

 வண்ணம்3 vaṇṇam, பெ. (n.)

   1. அழகு; beauty, handsome.

     “பிறைநுதல் வண்ண மாகின்று” (புறநா. 1);.

   2. இயற்கையழகு; unadorned, natural beauty.

     “வண்ணமுந் தேசு மொளியுந் திகழ” (பரிபா. 12, 20);.

   3. ஒப்பனை (அக.நி.);; adorning, decoration.

   4. குணம்; nature;

 character, quality.

     ‘நிரலுடைமையும் வண்ணமுந் துணையும்’ (குறிஞ்சிப். 31);.

   5. நன்மை (யாழ்.அக.);; good.

   6. சிறப்பு; merit. virtue.

     “கைவண்ண மிங்குக் கண்டேன்” (கம்பரா. அகலிகை.82);.

   7. மாலை (நாஞ்.);; garland.

   8. செயல் (இலக்.அக.);; action.

   9. இத்தனை மடங்கு என்பதைக் குறிக்கும் எண் (வின்.);; co-efficient.

 வண்ணம்4 vaṇṇam, பெ. (n.)

   1. கனம்; thickness.

     “யானைக் கையினளவு வண்ணமும் நீளமும் உள்ளது யாளியின் தும்பிக்கை”.

   2. வடிவு (பிங்.);, அமைப்பு; form, figure.

   3. சாதி (தொல். பொருள்.82 உரை);; caste.

   4. இனம், பிரிவு; species;

 class.

     “வண்ண வண்ணத்த மலர்” (குறிஞ்சிப். 114);.

   5. வகை, வடிவம், ஒழுங்கு; way, manner, method.

     “தலைச்செல்லா வண்ணத்தால்” (குறள், 561);.

     [வள் → வண் → வண்ணம்.]

வண்ணம் என்னும் சொல், வகை என்னும் பொருளில், அவ்வண்ணம், இவ்வண்ணம்,

எவ்வண்ணம் என, இருவகை வழக்கிலும், பெருவழக்காய் வழங்குதலையும் நோக்குக (மு.தா.2, பக்.79);.

 வண்ணம்5 vaṇṇam, பெ. (n.)

   1. பாவின்க ணிகழும் ஒசை வேறுபாடு (தொல். பொருள். 313);; verse rhythm.

   2. சந்தப்பாட்டு; rhythmic verse with regular beats.

வண்ணத்திரட்டு.

   3. முடுகியல் வண்ணம் (பிங்.);; a part of kali verse.

   4. பண் (சது.);; melody.

   5. இசைப்பாட்டு; song.

     “கோதை தானே யிட்டதோர் வண்ணந்தன்னை” (சீவக. 1696);.

     [வள் → வண் → வண்ணம்.]

ஒருகா. பண் → பண்ணம் → வண்ணம் என்றுமாம் (தென்.கட்பக்.9);.

குறிலும் நெடிலும் அளபெடையிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம் (தொல்.பொருள்.314, பேரா.);. ஒரு பாவின்க ணரிகழும் ஒசை (விகற்பம்); வேறுபாடு (தொல்.செய்யுள்.1, நச்.);.

எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், வகை, செய்யுள், ஓசை வகை முதலான பொருண்மைகளில் இச்சொல் பயின்று வரும் (மு.தா.2, பக்.78);.

அருணமலை (கிரி);யார் பாடிய திருப்புகழ் வண்ணங்களும் பட்டினத்தார் பாடிய உடற்கூற்று வண்ணமும், அகப்பொருட் செய்யுள்களில் வரும் உள்ளுரையுவமையும் போன்ற அருஞ்சுவை யின்பக்கூறுகள் வேறெம்மொழி யிலக்கியத்திலும் காணக்கிடையா.

வண்ணம் பற்றி மொழிஞாயிறு கூறுவது வருமாறு:

செய்யுள் ஒலிப்புமுறை, ஓசை, சந்தம், வண்ணம் என மூவகைப்படும். அவற்றுள் வண்ணம்

என்பது, எல்லா அடியும் மாத்திரையும் எழுத்தினமும் சீரும் ஒத்துவரப் பாடுவது. அதை, நூற்றுக்கணக்கான வகையில், பல்லாயிரமாகப் பாடுவது இறைவன் திருவருள் பெற்றவர்க்கே இயலும் (த.இ.வ.48);.

     “சந்தவேறுபாடு” (தொல்.பொருள்:525 பேரா.);

     “குணம்” (நச்.குறிஞ்.31);. சந்தம் (தொல். செய்யுள்.234. நச்);.

வண்ணம்பூசு-தல்

வண்ணம்பூசு-தல் vaṇṇambūcudal,    5 செ.கு.வி. (v.i.)

   வண்ணக் கலவையை சுவற்றில் பூசுதல்; to rub the colour or paint.

     [வரணம் → வண்ணம் → பூசு.]

வண்ணவமுதம்

வண்ணவமுதம் vaṇṇavamudam, பெ. (n.)

   பருப்புச்சோறு (சீவக.2604, உரை);; cooked rice mixed with dholl.

     [வண்ணம் + அமுதம்.]

வண்ணவிருத்தம்

 வண்ணவிருத்தம் vaṇṇaviruttam, பெ. (n.)

   சந்தம் அமைந்த ஆசிரிய மண்டிலப்பா; rhythmic stanza of asiriya-mandila-pра.

     [வரணம் → வண்ணம் + விருத்தம்.]

வண்ணவிருத்தத்தில் அமைந்த ஆசிரிய மண்டிலப்பா வருமாறு:-

     “திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஒர்

செவ்விய வேலோனே

குருமாமணியே குணமணியே கரர்கோவே மேலோனே கருமா மலம்.அறு வண்ணம் தண்ணளி

கண்டே கொண்டேனே

கதியே பதியே கனநிதியே கற்கண்டே தேண்தேனே

அருமா தவம்உயர் நெஞ்சம் விஞ்சிய

அண்ணா விண்ணவனே

அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே உருவாகிய பவபந்தம் சிந்திட ஒதிய வேதியனே

ஒளியே வெளியே உலமெலாம் உடையோனே

வானவனே” (அருட்பா);.

வண்ணவுவமம்

வண்ணவுவமம் vaṇṇavuvamam, பெ. (n.)

   நிறம்பற்றிக் கூறும் உவமை (தொல். பொருள். 276);; a simile in which the subject of comparison is colour.

     [வரணம் → வண்ணம் + உவ → உவமம்.]

வண்ணவொழுங்கு

வண்ணவொழுங்கு vaṇṇavoḻuṅgu, பெ. (n.)

   1. அகரமுதலி வரிசை; alphabetical order.

   2. சாதியொழுங்கு; caste-code.

     [வண்ணம் + ஒழுகு → ஒழுங்கு.]

வண்ணவோதனம்

வண்ணவோதனம் vaṇṇavōtaṉam, பெ. (n.)

   புளி, எள், சருக்கரை முதலான சுவையூட்டும் பொருட்கள் கலந்தட்ட சோறு (விதான. யாத்திரை.8);; a preparation of cooked rice mixed with condiments.

     [வண்ணம் + ஒதம் → ஒதனம்.]

வண்ணாங்குன்னை

 வண்ணாங்குன்னை vaṇṇāṅguṉṉai, பெ. (n.)

   மீன் வகையுளொன்று; a kind of fish.

வண்ணாத்தான்

வண்ணாத்தான் vaṇṇāttāṉ, பெ. (n.)

   வண்ணான் (ஈடு. 4, 3, 5);; washerman, dhobi.

     [வண்ணத்தான் → வண்ணாத்தான்.]

வண்ணாத்தி

வண்ணாத்தி1 vaṇṇātti, பெ. (n.)

   வண்ணாரப் பெண்; washer-woman, dhobi.

     “வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை” (பழ);.

     [வண்ணான்(ஆ.பா.); → வண்ணாத்தி (பெ.பா.);]

 வண்ணாத்தி2 vaṇṇātti, பெ. (n.)

   1. வண்ணாத்திக் குருவி; washer woman robin.

   2. வெண்ணிறமும் நான்கு அங்குல வளர்ச்சியுமுடைய ஆற்று மீன்; fresh-water fish, silvery, attaining 4 in. in length.

   3. பூநீறு (யாழ்.அக.);; a medicinal powder.

   4. வண்ணாத்திப்பூச்சி (வின்.);; butterfly.

 வண்ணாத்தி3 vaṇṇātti, பெ. (n.)

   நாகண வாய்ப்புள்; myna.

 வண்ணாத்தி4 vaṇṇātti, பெ. (n.)

   1. ஒருவகை வெள்ளை உவர்மண் (வின்.);; light white coloured earthy matter containing a great proportion of carbonate soda.

   2. ஒருவகை மருந்துப்பொடி (யாழ்.அக.);; a medicinal powder.

வண்ணாத்திகதிர்

 வண்ணாத்திகதிர் vaṇṇāddigadir, பெ. (n.)

வழலை effloresence grown on the soil of fuller’s earth.

     [வண்ணாத்தி + கதிர்.]

வண்ணாத்திக்கிழங்கு

 வண்ணாத்திக்கிழங்கு vaṇṇāttikkiḻṅgu, பெ. (n.)

   பல பிள்ளைக் கிழங்கு; a tuber.

     [வண்ணாத்தி + கிழங்கு.]

வண்ணாத்திக்குருவி

வண்ணாத்திக்குருவி vaṇṇāttikkuruvi, பெ. (n.)

   1. பறவை வகையுளொன்று; washer woman robin.

   2. விசிறிக் குருவி; white browed fantail.

     [வண்ணாத்தி + குருவி.]

     [P]

வண்ணாத்திப்பூச்சி

 வண்ணாத்திப்பூச்சி vaṇṇāttippūcci, பெ. (n.)

   பலவண்ணத்துப் பூச்சி (இ.வ.);; butterfly,

     [வண்ணத்துப்பூச்சி → வண்ணாத்திப்பூச்சி.]

பலநிறம் அல்லது கோலமுள்ள பூச்சி.

வண்ணாத்திமீன்

 வண்ணாத்திமீன் vaṇṇāttimīṉ, பெ. (n.)

   கருப்பு வெள்ளை வரிகளும், மஞ்சள் நிறமான துடுப்புமுடைய ஒர் அழகான கடல் மீன்; butterfly fish.

     [வண்ணத்துமீன் → வண்ணாத்திமீன்.]

வண்ணானழுக்கு

வண்ணானழுக்கு1 vaṇṇāṉaḻukku, பெ. (n.)

   சூதகம்; menses.

 வண்ணானழுக்கு2 vaṇṇāṉaḻukku, பெ. (n.)

   வண்ணானிடம் வெளுக்கப்போடும் அழுக்காடை (அறப். சத. 64);; soiled or dirty clothes for washing.

     [வண்ணான் + அழுக்கு.]

உடுத்திக் களைந்ததும் மாசு படிந்ததுமான, சட்டை, வேட்டி, துண்டு முதலியன வண்ணானழுக்கெனக் கொள்ளவுஞ் சொல்லவும் பெறும் நாட்டுப்புற மக்களின் நல்லதமிழ்ச் சொற்களு ளொன்று.

வண்ணானவுரி

வண்ணானவுரி1 vaṇṇāṉavuri, பெ. (n.)

   நீலவுரி; indigo-a plant that yields indigo.

 வண்ணானவுரி2 vaṇṇāṉavuri, பெ. (n.)

   செடி வகை (பெ.மாட்);; a plant.

வண்ணானிடத்தி

 வண்ணானிடத்தி vaṇṇāṉiḍatti, பெ. (n.)

   கழுதை; ass.

வண்ணானுக்குவாலை

 வண்ணானுக்குவாலை vaṇṇāṉukkuvālai, பெ. (n.)

   அண்டச் சுண்ணம்; calcified powder of egg.

வண்ணானைக்கும்பிட்டார்

வண்ணானைக்கும்பிட்டார்1 vaṇṇāṉaikkumbiṭṭār, பெ. (n.)

   முதல் குலோத்துங்கன் ஆட்சியில், தகடூர் நாட்டைக் காத்திருந்த அதிகாரியின் பெயர்; an official who protected the Tagador country during kulatungar.

     “திருக்காளத்தியினின்றும் ஆண்டார் வண்ணானைக் கும்பிட்டா ரெழுந்தருளி” (தெ.கல்.தொ.7, கல். 533);.

 வண்ணானைக்கும்பிட்டார்2 vaṇṇāṉaikkumbiṭṭār, பெ. (n.)

   சேரமான் பெருமாணாயனார்; ceramanperumanayanar.

வண்ணான்

வண்ணான்1 vaṇṇāṉ, பெ. (n.)

   1. வழலை பார்க்க;see valalai.

   2. சவர்க்காரம், மருந்துகளின் அழுக்காகிய குற்றங்களைப் போக்கும் குரு; one that removes flaws in the medicine.

     [வள் → வண் → வண்ணம் + ஆன் – வண்ணான்.]

மண்ணுதல் = கழுவுதல், தூய்மையாக்குதல். ஒருகா மண் → மண்ணான் → வண்ணான். மண் = உவர்மண். மண்ணான் = உவர்மண்ணினால், ஆடையின் அழுக்ககற்றுபவன்.

 வண்ணான்2 vaṇṇāṉ, பெ. (n.)

   குடிமக்கள் பதினெண்மருள் ஆடைவெளுக்கும் இனத்தான் (பிங்.);; washerman, a person belonging to the washerman caste, dhobi one among 18 in number,

வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.

     [மண்ணான்- → வண்ணான்.]

வண்ணான்காரம்

 வண்ணான்காரம் vaṇṇāṉkāram, பெ. (n.)

   உவர்மண்; fuller’s earth.

மறுவ. களர்நிலம், ஆடைமண்.

     [வண்ணான் + காரம்.]

வண்ணான்குறி

 வண்ணான்குறி vaṇṇāṉkuṟi, பெ. (n.)

   சேங்கொட்டை; marking nut, dhoby’s nut Semi carpus anacardium.

வண்ணான்தாழி

 வண்ணான்தாழி vaṇṇāṉtāḻi, பெ. (n.)

   பழந்தமிழர் விளையாட்டுகளுள் ஒன்று; one of the games of the ancient Tamilis.

     [வண்ணான் + தாழி.]

இவ்விளையாட்டின் பெயர் : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளையும் சேர்ந்த சிறுவர், வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு வண்ணான் தாழி. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பானை.

ஆடுவார் தொகை : பொதுவாக, நால்வர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங் கருவியாம்.

ஆடுகளம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.

ஆடுமுறை : ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணிபோட வேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் வைத்துக்கொண்டு, மருள்கொண்ட தேவராளன்போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்ணை மூடிக்கொண்டு எறிவான். அது யார்மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து

இருகையாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு,

     “கூழ் குடிக்கப் போகிறேன்”, என்று சொல்லிச் சற்றுத் தொலைவுபோய் மீள்வான். அதற்குள் எனையோரெல்லாம் அம் மூட்டையில் தொப்புத் தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொடமுயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஒடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின், அத் தொடுகை கணக்கில்லை. இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத் தொட்டுவிடின் தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல் வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரொடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான்.

இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும், தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடு பவனாகவும், மாறிக்கொண்டே வருவர்.

புதிதாய்த் தொடு பவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடி யடித்துவிட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும் மரபாம்.

மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்க இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன். பின்பு தன் வினைவிளைவை மிகுதியாய் அறுக்கநேரும்.

விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான்.

ஆட்டைத் தோற்ற விளக்கம் : வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டு மன்றி இழப்பு முண்டு பண்ணும். பழங்காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் வண்ணாரப் பாட்டம் அல்லது வண்ணாரப் பாறை என்னும் தொழில்வரி செலுத்த வேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, வரும்போது, அவர் ஒடியிருப்பர். அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பான், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான்.

இச் செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஒடித்தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும்.

ஆட்டின் பயன் : ஒடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடிபடாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ் விளையாட்டின் பயனாம்.

வண்ணான்பூமி

 வண்ணான்பூமி vaṇṇāṉpūmi, பெ. (n.)

வண்ணான்காரம் பார்க்க;see vannankāram.

     [வண்ணான் + பூமி.]

வண்ணான்றுறை

வண்ணான்றுறை vaṇṇāṉṟuṟai, பெ. (n.)

   வண்ணான் ஆடை வெளுக்கும் நீர்த்துறை (சினேந். 174);; washerman’s ghat in a river or tank.

வண்ணான் துறைக்கல்லிலே வந்தபேரெல்லாம் தோய்க்கலாம் (பழ.);.

     [வண்ணான் + துறை.]

வண்ணாப்பண்டி

 வண்ணாப்பண்டி vaṇṇāppaṇṭi, பெ. (n.)

   வண்ணார் துணிகளை யேற்றும் வண்டி (யாழ்.அக.);; washerman’s cloth loading Cart.

வண்ணாரத்துறை

 வண்ணாரத்துறை vaṇṇārattuṟai, பெ. (n.)

வண்ணான்றுறை (வின்.); பார்க்க;see vannanrurai.

     [வண்ணார் → வண்ணார + துறை.]

வண்ணாரப்பாறை

வண்ணாரப்பாறை vaṇṇārappāṟai, பெ. (n.)

   வரிவகை (புதுக்.கல். 90);; a petty cess.

மறுவ. வண்ணாரப்பாட்டம்.

வண்ணாரமாடன்

 வண்ணாரமாடன் vaṇṇāramāṭaṉ, பெ. (n.)

   உடம்பு கொதித்தல், இரத்தம் கக்குதல் முதலிய குணத்தைக் காட்டும் ஓர் பைசாசம்; a develish disease causing vomiting of blood etc.

வண்ணாரம்

வண்ணாரம் vaṇṇāram, பெ. (n.)

   உடுத்துக் களைந்த துணியைத் தூய்மை செய்யும் தொழில்; profession of a dhoby or washerman.

     ‘வண்ணாரந் துன்னார மச்சிகமே’ (நீலகேசி. 280);.

வண்ணார்கற்காசு

 வண்ணார்கற்காசு vaṇṇārkaṟkācu, பெ. (n.)

   ஆடைகளின் அழுக்கெடுக்கும் தொழிலாளிகள், அழுக்ககற்றுவதற்கும், உலர்த்துவதற்கும், நீர்நிலைகளில் கற்கள் பரப்பின இடத்துக்கு கொடுக்கும் வரி; a kind of tax or cess paid by washermen in lieu of washing and drying activities on a place of stony surface.

     [வண்ணார் + கற்காசு.]

வண்ணார்பந்தம்

 வண்ணார்பந்தம் vaṇṇārpandam, பெ. (n.)

   துணிப்பந்தம்; torch made of rags.

     [வண்ணார் + பந்தம்.]

வண்ணார்பாட்டம்

 வண்ணார்பாட்டம் vaṇṇārpāṭṭam, பெ. (n.)

வண்ணார்கற்காசு பார்க்க;see vannarkar-kāsu.

     [(வண்ணார் + பாட்டம்.]

வண்ணார்வரி

வண்ணார்வரி vaṇṇārvari, பெ. (n.)

   வண்ணாரிடமிருந்து அரசு பெற்ற பழையவரி (S.I.I.i.81);; tax collected from washer man.

     [வண்ணார் + வரி.]

வண்ணாற்பற்று

 வண்ணாற்பற்று vaṇṇāṟpaṟṟu, பெ. (n.)

   அரையில் வரும் மேகப்படை வகை; dhobi’s itch.

வண்ணி-த்தல்

வண்ணி-த்தல் vaṇṇittal,    4 செ.குன்றாவி (v.t)

   1. புனைந்துரைத்தல்; to depict, describe.

     “வண்ணித்தலா வதில்லா” (சீவக.2458);.

   2. போற்றி வணங்கிக் கூறுதல்; to praise, submissively.

   3. மிகைபடக்கூறுதல் (வின்.);; to exaggerate.

   4. உவமித்தல் (வின்.);; to illustrate by anology.

   5. விரித்தல்; to expatiate, to write copiously.

     [வண்ணம் → வண்ணி.]

   பல வகையில் அல்லது பல்வேறு ஒசைபடப் புகழ்ந்து பாடுதல். ஓர் ஓவியத்தைப் பல்வேறு நிறங்களாலும், நுண்வினைகளாலுஞ் சிறப்பிப்பதும், ஒர் அணிகத்தைப் (வாகனத்தை); பன்னிற அழகிய பொருள்களாற் சுவடிப்பதும், ஓர் உடம்பைப் பன்னிற ஆடையணிகளால் அழகுபடுத்துவதும் போன்று, இறைவனை அல்லது ஒரு தலைவனைப் பல்வேறு கருத்துகளாலும், பல்வகைச் செய்யுள் உறுப்புகளாலும், சிறப்பித்துப் புகழ்தல்;அல்லது பொருளிடங் காலங்களுள் ஒன்றன் இயல் செயலுறுப்புக ளெல்லாவற்றையும் விளத்தமாக (விவரமாக); எடுத்துக் கூறுதல் (வே.க.4, பக்.97);.

வண்ணிகன்

 வண்ணிகன் vaṇṇigaṉ, பெ. (n.)

   எழுத்தாளன் (சது.);; writer.

 Skt. வர்ணிக.

     [வண்ணி → வண்ணிகன்.]

வண்ணிகை

வண்ணிகை vaṇṇigai, பெ. (n.)

   மருந்துச் சரக்கு வகை; a drug.

     “வண்ணிகை வங்கப் பாவையோடு” (பெருங்மகத. 17, 150);.

வண்ணிகைத்திருக்கொற்றக்குடை

வண்ணிகைத்திருக்கொற்றக்குடை vaṇṇigaittiruggoṟṟagguḍai, பெ. (n.)

   ஒப்பனை செய்யப்பட்ட கொற்றக் குடை; decked or adomed king’s count.

     “வண்ணிகைத் திருக்கொற்றக்குடை மகுடம் அடுத்து விளக்கின பறளை உள்பட ஒன்று” (தெ.கல்.தொ.2. கல்.1);.

வண்னவான்வெடி

 வண்னவான்வெடி vaṇṉavāṉveḍi, பெ.(n.)

   சீனவெடி (கொ.வ.); (டப்பாசு);; a kind of fire crackers.

     [வண்ண+வான்+வெடி]

வண்பயன்

வண்பயன் vaṇpayaṉ, பெ. (n.)

   முழுமையான விளைச்சல்; abundant yield.

     “வசையிலா வண்பயன் குன்றும்” (குறள், 239);.

     [வண் + பயன்.]

மல் → வல் → வள் → வண் + பயன். பயன் விளைச்சல்.

     ‘மல்’ என்னும் வேரடி வளமைப் பொருள் பயப்பது.

     “மல்லல் வளனே” என்று தொல்காப்பியர் உரியியலில் உரைப்பது காண்க. வண்பயன் என்பது முழுமையான வளமிக்க நல்விளைச்சலைக் குறித்தது.

வண்புகழ்

வண்புகழ் vaṇpugaḻ, பெ. (n.)

   கொடையால் வருஞ்சிறப்பு; reputation for liberality.

     “வண் புகழ் மூவர்” (தொல். பொருள். 391);.

     [வண்-மை + புகழ்.]

வண்மை

வண்மை vaṇmai, பெ. (n.)

   1. ஈகை; bounty, liberality.

     “வண்மையு மன்ன தகைத்து” (நாலடி, 269);.

   2. தன்மை, இயல்பு, சிறப்பு, வளமை, குணம் (பிங்.);; quality, property, nature, speciality.

     “ஈது….. கருமஞ் செய்வார் வண்மை” (திருவாத. பு. திருப்பெருந், 93);.

   3. அழகு (யாழ்.அக.);; beauty.

   4. வாய்மை (பிங்.);; truth.

     “வாரா தொழியா னெனும் வண்மையினால்” (கம்பரா.உருக்காட்.6);.

   5. வளப்பம் (திவா.);. (குறள், 239);; fruitfulness, fertility, abundance.

   6. வலிமை (பிங்.);; strength.

   7. புகழ் (சூடா);; praise, reputation.

   8. வாகைமரம் (சங்.அக.);; sirissa.

     [வள் → வண்மை. வண்மை = வளம், வளத்தாலாகும் ஈகை.]

வதகனாப்பூ

 வதகனாப்பூ vadagaṉāppū, பெ. (n.)

வாடா மல்லிகை பார்க்க;see vādā-maligai.

வதக்கம்

வதக்கம் vadakkam, பெ. (n.)

   1. வாடுகை; fading, withering. மரத்தில் இலை

வதக்கமாயிருக்கிறது (இ.வ.);.

   2. இளைப்பு, களைப்பு; fatigue, lassitude, tiredness.

     [வதங்கு → வதக்கு → வதக்கம்.]

வதக்கல்

 வதக்கல் vadakkal, பெ. (n.)

   வாட்டல்; searching (drying for the removal of the structural of constitutional matter from a substance – are faction);, drying and withering of a substance as a result of extreme heat.

     [வதங்கல் → வதக்கல்.]

வதக்கிக்கட்டல்

 வதக்கிக்கட்டல் vadakkikkaṭṭal, தொ.பெ. (vbl.n.)

   மருந்திலையை நெருப்பில் காட்டி, பிறகு புண் புரைக்குக் கட்டுகை; bandaging after applying scorched medicinal leaves to abscess, wounds etc.

     [வதக்கி + கட்டல்.]

வதக்கு-தல்

வதக்கு-தல் vadakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வாட்டுதல், பொரித்தல்; to roast, to dry.

     “பன்றி தன்னை யெரியினில் வதக்கி” (பெரியபு. கண்ணப்ப. 117);.

   2. வருத்துதல்; to harass, annoy.

     [வதங்கு → வதக்கு → வதக்கு-தல்.]

வதக்குவதக்கெனல்

வதக்குவதக்கெனல் vadakkuvadakkeṉal, பெ. (n.)

   1. பக்குவமாகாது ஈரப்பசை யோடிருத்தற் குறிப்பு; being under-boiled or under-fried as greens.

   2. மார்பு அடித்துக் கொள்ளுதற் குறிப்பு; palpitation of the heart.

     [வதக்கு + வதக்கு + எனல்.]

வதங்கல்

வதங்கல் vadaṅgal, பெ. (n.)

   1. வாடியது; that which is withered or dried.

   2. ஈரப்பசை நீங்காத உணவுப் பண்டம்; under-boiled or under-fried foodstuff.

   3. உடல்வலியற்ற-வன்-வள்-து; constitutionally weak person or animal.

     “ஆள் வதங்கல்” (உ.வ.);.

     [வதங்கு → வதங்கல்.]

வதங்கிப்போ-தல்

வதங்கிப்போ-தல் vadaṅgippōdal,    8 செ.கு.வி. (v.i.)

   வாடிப்போதல்; to dry up, to fade, wither.

வதங்கிப் போதல் (பே.வ.);.

வதங்கு-தல்

வதங்கு-தல் vadaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வாடுதல்; to wither, fade, to grow dry.

   2. சோர்தல்; to be discouraged or dispirited, to be fatigued.

வதந்தி

 வதந்தி vadandi, பெ. (n.)

   அலர், பொய்ப்பரப்பு; rumour.

     [Skt. vadanti → த. வதந்தி.]

வதனப்பூடு

 வதனப்பூடு vadaṉappūṭu, பெ. (n.)

   கரிசலாங் கண்ணி; a prostrate plant-Eclypta prostata.

வதனம்

 வதனம் vadaṉam, பெ. (n.)

   வெள்ளைக் காக்கணம்; a twiner bearing white flowers – Chitoria ternatea (albfloria);.

வதம்

 வதம் vadam, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree Ficus bengalensis.

     [வடம் → வதம்.]

வதரம்

 வதரம் vadaram, பெ. (n.)

   இலந்தை மரம் (யாழ்.அக.);; jujube tree.

வதரி

வதரி1 vadari, பெ. (n.)

   1. வதரம் பார்க்க;see vadaram.

   2. சங்கு; conch-shell.

 வதரி2 vadari, பெ. (n.)

   இலந்தை (சூடா.);; jujube-tree.

 வதரி3 vadari, பெ. (n.)

   திருமாலுக்குரிய சிறப்புமிகு தவத்தோர் வாழும் தலத்து ளொன்று; a hermitage sacred place to Vishnu.

     “வதரி வணங்குதுமே” (திவ். பெரியதி 1, 3);.

வதறு

வதறு1 vadaṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வாயாடுதல் (வின்.);; to chatter, prate;

 to be talkative.

   2. மழலை மொழியாதல்; to lisp, to babble.

தெ. வதறு: க. ஒதறு.

 வதறு2 vadaṟudal,    2 செ.குன்றாவி. (v.t.)

   திட்டுதல்; to abuse, scold.

     ”வாயாலே வதறுகிறவன்” (உ.வ.);.

வதற்றரு

 வதற்றரு vadaṟṟaru, பெ. (n.)

   கறிமுள்ளி; a plant – Solanum indicum.

வதலி

வதலி1 vadali, பெ. (n.)

   தடவை, முறை; time, turn.

     “அவன் ஒருவதலி வந்தான்” (நெல்லை.);

 வதலி2 vadali, பெ. (n.)

வடலி (G.Tn.D. I. 307); பார்க்க;see Vadali.

வதவடி

 வதவடி vadavaḍi, பெ. (n.)

வதுவடி பார்க்க;see Vadu-vadi.

வதவத

 வதவத vadavada, வி.அ. (adv.)

   ஒன்றை அடுத்து ஒன்றாக, நிறைந்த அளவில்; to an excessive or annoying degree or extent, one after the other consecutively.

வதவதவென்று

 வதவதவென்று vadavadaveṉṟu, பெ. (n.)

   நிறைந்து வழிகை; overflowing, surplusing in brim of a bowl or vessel or any Container.

வதவரிசி

வதவரிசி vadavarisi, பெ. (n.)

   1. அரைக் காய்ச்சலான புழுங்கல் (நெல்); அரிசி (வின்.);; rice husked from boiled paddy before it is fully dried.

   2. ஈரம் படிந்த அரிசி (இ.வ.);; rice affected by dampness.

     [வதங்கல் → வதவல் + அரிசி.]

வதவலரிசி

வதவலரிசி1 vadavalarisi, பெ. (n.)

   சரியாக காயாத அரிசி; partially dried rice.

     [வதவரிசி → வதவலரிசி.]

 வதவலரிசி1 vadavalarisi, பெ. (n.)

வதவரிசி பார்க்க;see Vada-V-arisi.

     [வதவல் + அரிசி.]

வதவல்

வதவல் vadaval, பெ. (n.)

   1. வாடியது (யாழ்.அக.);; that which has faded or dried.

   2. அரைக்காய்ச்சலானது; that which is partially parched.

   3. ஆடு முதலியவற்றின் குடலிலுள்ள செரிமானமாகாத தீனி (இ.வ.);; undigested feed in indestive or alimentary canal of sheep etc.

     [வதங்கல் → வதவல்.]

வதாலகம்

 வதாலகம் vatālagam, பெ. (n.)

   மீன்வகை (சங்.அக.);; a kind of fish.

வதாலம்

 வதாலம் vatālam, பெ. (n.)

வதாலகம் (சங்.அக.); பார்க்க;see Vadalagam.

வதி

வதி1 vadidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தங்குதல்; to dwell, abide;

 to sojourn, stay.

     “வதிமண வம்பலர் வாயவிழ்ந் தன்னார்” (பரிபா. 10, 20);.

   2. துயிலுதல்; to sleep.

     “ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால்” (கலித்.126);.

     [பதி → வதி.]

 வதி2 vadi, பெ. (n.)

   1. விலங்கு முதலியன தங்குமிடம்; lair, nest.

     “மாவதிசேர” (கலித்.119);.

   2. சேறு (பிங்.);; mire.

     “செங்கயல் வதிக்குதி கொளும் புனலது” (கலித்.126);.

 வதி3 vadi, பெ. (n.)

   1. வழி (பிங்.);; way.

     “தனிவதி யியக்கர் காட்ட” (பாரத.அருச்சுனன்றவ.27);.

   2. கால்வாய்; channel, head of a channel.

     “முக்கோலக்கலத்தால் வதியட்டிக் கீழ்க்கடை நீர் போவதாகவும்” (S.I.I.vi. 147);.

வதிகால்

 வதிகால் vadikāl, பெ. (n.)

சேற்று நீரோடை, stream

 running on clay bed.

     [வதி(சேறு);+கால்]

வதியழி-தல்

வதியழி-தல் vadiyaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தங்குதல்; to stay, abide, house.

   2. பெருகியிருத்தல்; to be a plenty, to be in abundant growth.

     ‘மாம்பழம் வதியழியுது’.

     [பதி → வதி + அழி.]

     “வள்ளிதாய் (முழுதும்);, வதியழி-தல் போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் தென்பாண்டி வழக்கிற்கு சிறப்பாகும். ஆதலால் தமிழைக் செவ்வையாய் அறிய வேண்டின் பாண்டி நாட்டுலக வழக்கை ஆராய்தல் வேண்டும் (த.வ.முன்னுரை);.

வதிவாய்க்கால்கள்

 வதிவாய்க்கால்கள் vadivāykkālkaḷ, பெ. (n.)

   நிலங்களுக்கு நீர் செல்லும் கால்வாய்கள்; head channel which takes water to field.

     [வதி+வாய்+கால்]

வது

வது vadu, பெ. (n.)

   1. மணமகள்; bride. வதுவரர்.

   2. மகனின் மனைவி (யாழ்.அக.);; daughter-in-law.

   3. மனைவி (யாழ்.அக.);; wife.

வதுகி

 வதுகி vadugi, பெ. (n.)

   வைக்கோல் (சங்.அக.);; straw.

     [வதகி → வதுகி.]

வதுகை

 வதுகை vadugai, பெ. (n.)

   மனைவி (யாழ்.அக.);; wife.

     [வது → வதுகை.]

வதுக்கு

வதுக்கு vadukku, பெ. (n.)

   1. மேம்பட்ட நிலை; improved condition, better position.

   2. நன்னிலை; good or favourable circumstances.

     ‘வதுக்குப் பெற்றிருக்கிறான்’ (வின்.);.

தெ., க. பதுகு.

வதுமரம்

வதுமரம்1 vadumaram, பெ. (n.)

   பழமுண்ணிப் பாலை; edible paulay-Mimusops kanki (சா.அக.);.

 வதுமரம்2 vadumaram, பெ. (n.)

   மரவகை (சங்.அக.);; a tree.

வதுவடி

 வதுவடி vaduvaḍi, பெ. (n.)

   உலக்கைப் பாலை (மலை.);; wedge-leaved ape-flower.

வதுவர்

 வதுவர் vaduvar, பெ. (n.)

   வாதுவர் (சூடா.);; horse grooms.

     [வாதுவர் → வதுவர்.]

வதுவை

வதுவை vaduvai, பெ. (n.)

   1. மணமகள்; bride.

     “வதுவை நாறும் வண்டுகம ழைம்பால்” (மலைபடு 30);.

   2. திருமணம்; wedding, marriage.

     “எம்மனை வதுவை நன்மணங்கழிகென” (ஐங்குறு.399);.

   3. மண மாலை; wedding garland.

     “வானர மகளிர்க்கு வதுவை சூட்ட” (திருமுரு.17);.

   4. நறுமணம் (பிங்.);; fragrance,

   5. புணர்ச்சி (அக.நி);.);; sexual union, inter course, copulation.

   6. வலுவந்தம் (யாழ்.அக.);; compulsion;

 force.

     [மருவு → (மவு); → மது → வது → வதுவை.]

வதுவைக்கணம்

 வதுவைக்கணம் vaduvaikkaṇam, பெ. (n.)

   மணமக்களின் ஒரைப் பொருத்தம் (வின்.);; correspondence or matching in respect of orai of the bride and bride-groom.

     [வதுவை + கணம்.]

வதுவைக்கண்ணி

 வதுவைக்கண்ணி vaduvaikkaṇṇi, பெ. (n.)

   பெரியாணங்கை; a kind of plant.

வதுவைக்கலியாணம்

வதுவைக்கலியாணம் vaduvaikkaliyāṇam, பெ. (n.)

   சடங்குகட்குட்பட்ட திருமணம்; marriage as in the form approved by the rituals.

     “தன்னகத்து வதுவைக் கலியாணஞ்

செய்வான்” (இறை.23. உரை பக். 127);.

     [வதுவை + கலியாணம்.]

வதுவைச்சூட்டணி

வதுவைச்சூட்டணி vaduvaiccūṭṭaṇi, பெ. (n.)

   மணமாலை; wedding garland.

     “வதுவைச் சூட்டணிவண்டுவாய் திறப்பவும்” (பெருங்.உஞ்சைக். 33, 75);.

     [வதுவை + சூடு → சூட்டு3 + அணி.]

திருமண நிகழ்வின்பொழுது மணமக்கள் சூடும் மணமாலை.

வதுவைத்திண்ணை

 வதுவைத்திண்ணை vaduvaiddiṇṇai, பெ. (n.)

   திருமண வேதிகை (பிங்.);; marriage-dais or platform.

மறுவ. மணமேடை

     [வதுவை + திண்ணை.]

வதுவைநாற்றம்

வதுவைநாற்றம் vaduvaināṟṟam, பெ. (n.)

   புதுமணம்; new fragrance.

     “வதுவை நாற்றம் புதுவது கஞல” (அகநா.25);.

     [|வதுவை + நாற்றம்.]

வதுவைமணம்

வதுவைமணம் vaduvaimaṇam, பெ. (n.)

வதுவைக்கலியாணம் பார்க்க;see vaduvaj-k-ka/iyānam.

     “நாளை வதுவைமண மென்று நாளிட்டு” (திவ். நாய்ச். 6, 2);.

     [வதுவை + மணம்.]

இருமனமுமொன்று கலந்த இம்மணம் கரணத்தோடு கூடிய திருமணமாம்.

வதுவைமுளை

 வதுவைமுளை vaduvaimuḷai, பெ. (n.)

   திருமணத்தில் ஒன்பது தவசங்கள் விதைக்கும் பாலிகை (பிங்.);; nine earthen pots in which onbadu-tavasam is sown and allowed to sprout during marriage.

     [வதுவை + முளை.]

வதூ

 வதூ vatū, பெ. (n.)

வது (யாழ்.அக.); பார்க்க;see Vadu.

     [வது → வதூ.]

வதூவரர்

 வதூவரர் vatūvarar, பெ. (n.)

   மணமகனும் மணமகளும்; bride and bridegroom.

வதை

 வதை vadai, பெ. (n.)

   தேன்கூடு (வின்.);; honey comb.

     [வது → வதை.]

வத்தகம்

 வத்தகம் vattagam, பெ. (n.)

   வெட்பாலை (மலை.);; conessi bark.

வத்தகி

வத்தகி vattagi, பெ. (n.)

   1. பெருமுள்ளி; large nail-dye.

   2. மரமல்லிகை; Indian-cork.

ஒருகா. காட்டுமுள்ளி.

வத்தகுதோதரம்

 வத்தகுதோதரம் vattagutōtaram, பெ. (n.)

   எருவாய்ச் சுருக்கத்தால் ஏற்படும் வயிற்றுப்பசம்; tympanitis caused by the constriction of the anus.

வத்தகை

வத்தகை1 vattagai, பெ. (n.)

   தருப்பூசணி; water melon.

 வத்தகை2 vattagai, பெ. (n.)

   சருக்கரைக் கொம்மட்டி (இ.வ.);; sweet water-melon.

வத்தகோபன்

 வத்தகோபன் vattaāpaṉ, பெ. (n.)

   சினங் காப்போன் (யாழ்.அக.);; one who has subdued his anger.

     [வத்தம் + கோபன்.]

வத்தங்கி

வத்தங்கி vattaṅgi, பெ. (n.)

   சப்பங்கி (M.M. 783);; sappan-wood.

     [வத்தம் + அங்கி.]

வத்தங்கிக்கட்டை

 வத்தங்கிக்கட்டை vattaṅgikkaṭṭai, பெ. (n.)

   சாயமரச்சக்கை; logwood.

வத்தப்பழம்

 வத்தப்பழம் vattappaḻm, பெ. (n.)

   உடலுக்குள்ளிருக்கும் பித்தம் நீக்கும் பழம்; a fruit which reduces bile.

வத்தமம்

 வத்தமம் vattamam, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; Castor plant.

     [வத்தம் → வத்தமம்.]

வத்தம்

வத்தம்1 vattam, பெ. (n.)

   1. வற்றம், உள் வாங்குதல்; drying up, evaporation.

   2. கடல்நீர் குறைதல்; reduction in volume of sea water.

 வத்தம்2 vattam, பெ. (n.)

   சோறு; boiled or cooked rice.

     “பறவைப் பெயர்படு வத்தம்” (பெரும்பாண். 305);.

வத்தராயன்

வத்தராயன் vattarāyaṉ, பெ. (n.)

   1. வற்ச நாட்டரசன்; king of the vatsa country.

   2. தலைவர் சிலர்க்கு வழங்குஞ் சிறப்புப் பெயர் (கல்);.);; title of certain chiefs or leaders.

வத்தரோதயப்பூடு

 வத்தரோதயப்பூடு vattarōtayappūṭu, பெ. (n.)

   பருத்தி; cotton.

வத்தர்

 வத்தர் vattar, பெ. (n.)

   நுவல்வோன், நூலாசிரியன்; teller, speaker, author of a work.

வத்தற்கில்லி

 வத்தற்கில்லி vattaṟkilli, பெ. (n.)

   மஞ்சள் நிறக் குருந்தம் (புட்பராகம்);; one of the nine gems-topaz.

வத்தலும்தொத்தலுமாக

 வத்தலும்தொத்தலுமாக vattalumtottalumāka, வி.அ. (adv.)

   உடல் நலிந்து மெலிந்துமாக; in a thin and emaciated condition, being mere skin and bones.

     ‘வத்தலும் தொத்தலுமாக நாலைந்து சிறுவர்கள்’.

     [வத்தலும் + தொத்தலும் + ஆக.]

வத்தல்

வத்தல்1 vattal, பெ. (n.)

   பெரிய தோணி; big boat.

ஒருகா. வள்ளம்.

 வத்தல்2 vattal, பெ. (n.)

   வற்றல்; dried vegetables or fruit thereof.

 வத்தல்3 vattal, பெ. (n.)

   1. வறண்டது; anything dried.

   2. உப்பிட்டுலர்த்தியதோர் உணவுப் பண்டம்; fish or vegetable, salted and dried, dried salty food stuff.

   3. ஒல்லியானது (கொ.வ.);; anything lean or slim.

     [வற்றல் → வத்தல்.]

 வத்தல்4 vattal, பெ. (n.)

   சிறிய ஒடம் (யாழ்.அக.);; small or tiny boat.

     [வத்தம் → வத்தல்.]

வத்தல்குழம்பு

 வத்தல்குழம்பு vattalkuḻmbu, பெ. (n.)

   புளிக்கரைசலில் உப்பிட்டுலர்த்திய வத்தலிட்டுச் செய்த குழம்பு; a sauce of thick tamarind solution with dried vegetable pieces.

     [வற்றல் → வத்தல் + குள் → குழ → குழம்பு.]

சுவையூட்டுவனவும் உடம்பை வலுப்படுத்து வனவும் நோய் வராது தடுப்பனவுமான மஞ்சள், மிளகு அல்லது மிளகாய் வற்றல், சீரகம், கொத்துமல்லி, தேங்காய் முதலியவற்றை மைபோல் அரைத்துக் கலந்தும் இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கருவாப்பட்டை, ஏலம், சோம்பு முதலிய மருந்துச் சரக்குகளை வேண்டுமளவு உசிலை (மசாலை);யாகச் சேர்த்தும் வெந்தபின் புளிக்கரைசலிட்டும் கடுகு, கறிவேப்பிலை முதலிய தூவி எண்ணெயில் தாளித்தும் செய்யப் பெறுவது, குழம்பு.

உப்பேறிய உவர்ப்புடன் கூடிய கசப்பும் வெப்பநாடாம் நம் நாட்டின் இயல்பிற்கேற்ற வளவிலான புளிப்பும் தமிழரின் சுவைமுதிர்ச்சி, நாகரிகம், மருத்துவ அறிவு, உடல்நல உணர்ச்சியை ஒருங்கெடுத்துக்காட்டுவனவாம்.

வத்தவன்

வத்தவன் vattavaṉ, பெ. (n.)

   வச்ச நாட்டரசன்; king of the vatsa country.

     “வடித்தேர்த்தானை வத்தவன்றன்னை” (மணிமே.15, 62);.

வத்தாகிலுகிலுப்பை

 வத்தாகிலுகிலுப்பை vattāgilugiluppai, பெ. (n.)

வட்டக்கிலுகிலுப்பை பார்க்க;see Vatta-k-ki/u-ki/uppai.

வத்தாக்கு

வத்தாக்கு1 vattākku, பெ. (n.)

   ஓர் கொடி; a creeper.

 வத்தாக்கு2 vattākku, பெ. (n.)

   1. கொம்மட்டி (வின்.);; water-melon.

   2. சருக்கரைக் கொம்மட்டி (M.M.372);; sweet watermelon.

வத்தாங்கி

 வத்தாங்கி vattāṅgi, பெ. (n.)

   வத்தேக்கு; caesalpinia sappan.

வத்தாம்பம்

 வத்தாம்பம் vattāmbam, பெ. (n.)

   இலைக் கள்ளி; leafy spurge-Euphorbia nerifolia.

வத்தாயி

 வத்தாயி vattāyi, பெ. (n.)

   கிச்சிலி வகை; batavian orange.

வத்தாலை

வத்தாலை vattālai, பெ. (n.)

   1. சருக்கரைக் கொம்மட்டி; sweet water-melon.

   2. கொம்மட்டி (சங்.அக.);; water-melon.

வத்தாலைக்கொடி

 வத்தாலைக்கொடி vattālaikkoḍi, பெ. (n.)

   சருக்கரை வள்ளி (மலை.);; sweet potato.

வத்தாளங்கிழங்கு

 வத்தாளங்கிழங்கு vattāḷaṅgiḻṅgu, பெ. (n.)

   சருக்கரைவள்ளிக் கிழங்கு (யாழ்ப்.);; sweet potato.

வத்தாவி

 வத்தாவி vattāvi, பெ. (n.)

   பட்டாவியாவிலிருந்து வரும் எலுமிச்சம் பழம்; Batavian lemon.

வத்தாவிப்பூசணி

 வத்தாவிப்பூசணி vattāvippūcaṇi, பெ. (n.)

   நீண்ட வெள்ளைப் பூசணி வகை; a kind of pumpkin, as originally from Batavia.

வத்தி

வத்தி1 vatti, பெ. (n.)

   கல் மூங்கில், இது நல்ல மலையில் விளையும்; rough stemmed shrubby bamboo-oxytenan thera thwaitesi. It is a hard bamboo grown in the Nallamalai hills and Western ghats.

 வத்தி2 vatti, பெ. (n.)

   1. திரி; wick.

   2. ஊதுவத்தி; joss-stick, incense-stick.

   3. மெழுகுவத்தி; candle,

   4. தீக்குச்சி (இக்.வழ.);; match stick.

   5. விளக்குத் தகழி (யாழ்.அக.);; oil-cup of a lamp.

   6. ஆடையின் அருகு (யாழ்.அக.);; unwoven end or fringe of a cloth.

   7. வரி (யாழ்.அக.);; line.

   8. மணியின் கீழ்ப்பதிக்கும் வண்ணத் தகடு (யாழ்.அக.);; foil.

     [பற்றி → பத்தி → வத்தி.]

 வத்தி4 vattittal,    4 செ.கு.வி. (v.i.)

   உளதாதல்; to exist.

     “பாருற வத்திக்குங் கொடியாள்” (உத்தரரா. அரக்க 5);.

வத்திகம்

 வத்திகம் vattigam, பெ. (n.)

   ஆரைக்கீரை; a kind of sweet greens grown in Marshy land-Manasilea qudrifolia.

வத்தினி

 வத்தினி vattiṉi, பெ. (n.)

   சிற்ப முத்திரைகளுள் ஒன்று; hand pose of a sculpture.

     [வத்து-வத்தினி]

வத்திப்பெட்டி

 வத்திப்பெட்டி vattippeṭṭi, பெ. (n.)

   தீப்பெட்டி (சென்னை.வழ.);; match-box.

     [வத்தி + பெட்டி.]

வத்தியம்

 வத்தியம் vattiyam, பெ. (n.)

   இறப்பு (யாழ்.அக.);; death.

வத்திரசுரம்

 வத்திரசுரம் vattirasuram, பெ. (n.)

   பேரா முட்டி; a plant-Pavonia odorata.

வத்திரசோதினி

 வத்திரசோதினி vattiracōtiṉi, பெ. (n.)

   எலுமிச்சை (யாழ்.அக.);; sour-lime.

வத்திரதாரு

வத்திரதாரு1 vattiratāru, பெ. (n.)

   தேவதாரு (சங்.அக.);; red cedar.

 வத்திரதாரு2 vattiratāru, பெ. (n.)

   செம்புளிச்சை (பச்.மூ.);; rosella.

வத்து

வத்து vattu, பெ. (n.)

   உவமை (நாமதீப. 675);; simile.

வத்துப்பு

வத்துப்பு vattuppu, பெ. (n.)

   கறியுப்பு (யாழ்.95.);; common salt.

     [வத்து + உப்பு.]

வத்துளம்

வத்துளம் vattuḷam, பெ. (n.)

   1. வட்டமானது; that which is circular in shape.

   2. சக்கரம் (நாமதீப.766);; wheel, as of a cart.

     [வட்டளம் → வட்டுளம் → வத்துளம்.]

வத்தூரம்

 வத்தூரம் vattūram, பெ. (n.)

   பொன்னாங்கண்ணி (சங்.அக.);; a kind of greens growing in damp fields and ridges thereto.

வத்தேக்கு

வத்தேக்கு1 vattēkku, பெ. (n.)

   1. சருக்கரைக் கொம்மட்டி; sweet water-melon.

   2. கொம்மட்டி (சங்.அக.);; a small watermelon.

     [வத்தாக்கு → வத்தேக்கு.]

 வத்தேக்கு2 vattēkku, பெ. (n.)

   சப்பங்கி மரவகை (வின்.);; sappan-wood.

வத்தேந்தி

 வத்தேந்தி vattēndi, பெ. (n.)

   கதவு நிலைமேல் வைக்குஞ் சுவர்தாங்கி (யாழ்.அக.);; lintel.

     [வை + ஏந்தி – வைத்தேந்தி → வத்தேந்தி.]

வத்தை

வத்தை1 vattai, பெ. (n.)

   உள்வயிரமற்றது (யாழ்.அக.);; pith, soft portion of wood.

     [வற்று → வத்து → வத்தை.]

 வத்தை2 vattai, பெ. (n.)

வத்தல்2 (இ.வ.); பார்க்க;see Vattal.

வந்தகணிசம்

 வந்தகணிசம் vandagaṇisam, பெ. (n.)

   நீர் குறையும் நேரம்; time frame to dry water.

     [மந்த → வந்த + கணிசம்.]

வந்தடை-தல்

வந்தடை-தல் vandaḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   இறைவனே வலிய வந்து ஆதனை (ஆன்மாவை); ஆட்கொள்ளுதல்; to unite God voluntarily, with soul.

     [வா . வந்து + அடை.]

வந்தட்டி

 வந்தட்டி vandaṭṭi, பெ. (n.)

வந்தேறி பார்க்க;see vanderi.

     ‘வந்தட்டி காக்கெ வரப்பிலெ கம்மாக் காக்கெ கரையிலெ’ யென்பது பாண்டி நாட்டு சொலவம்.

     [வா → வந்து + அண்டி – வந்தண்டி → வந்தட்டி.]

வந்தட்டிவரத்தட்டி

 வந்தட்டிவரத்தட்டி vandaṭṭivarattaṭṭi, பெ. (n.)

வந்தேறி (இ.வ.); பார்க்க;see vandêri.

     [வந்தட்டி + வரத்தட்டி.]

வந்தணை-தல்

வந்தணை-தல் vandaṇaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   வந்தடைதல்; to come near.

     “வந்தணைந்து நல்லூரின் மண்ணுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்….” (பெரியபு.);.

     [வந்து + அள் → அண் → அண → அணை.]

வந்ததுகொண்டுவாராததுணர்த்தல்

வந்ததுகொண்டுவாராததுணர்த்தல் vandadugoṇṭuvārādaduṇarddal, பெ. (n.)

   பின் ஒரு வழி வந்தது கொண்டு முன் வாராததொரு பொருளை அறியவைக்கும் தந்திரவுத்தி வகை (தொல்.பொருள்.666);; a literary device which consists in applying to an earlier statement an implication drawn from a later explicit statement.

வந்ததுவரட்டும்

 வந்ததுவரட்டும் vandaduvaraṭṭum, வி.மு. (in.v.)

   நேரிடுவது நேரிடட்டும்; come what may-voguelagalere.

     [வந்தது = இயல்பாய் வருவது. வந்தது + வரட்டும்.]

வந்தனி

வந்தனி vandaṉi, பெ. (n.)

   கோரோசனை (நாமதீப. 393);; bezoar of the cow.

வந்தமார்க்கம்

 வந்தமார்க்கம் vandamārkkam, பெ. (n.)

   நாயுருவி (மலை.);; a plant growing in hedges and thickets.

வந்தி

வந்தி vandi, பெ. (n.)

   1. கைவளை (வின்.);; bracelet.

   2. துன்பம், இடர்; difficulty. வந்தியான உழவு, வந்தியான வேலை.

   3. வன்முறை, கட்டாயம் (திவ்.நாய்ச் 9, 3, அரும்.);; compulsion.

   4. கட்டாயமாய் வந்தது (யாழ்.அக.);; that which comes through external compulsion.

   5. முரண்டு (வின்.);; perversity, pertinacity.

   6. சண்டை (திவ். நாய்ச். 9, 3, அரும்.);; quarrel.

   7. ஏணி (யாழ்.அக.);; ladder.

வந்திகட்டு-தல்

வந்திகட்டு-தல் vandigaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கட்டாயப்படுத்துதல், வற்புறுத்துதல் (யாழ்.அக.);; to compel, to force, pressurise.

     [வலிந்து → வலிந்தி → வந்தி + கட்டு-தல்.]

வந்திகை

வந்திகை vandigai, பெ. (n.)

   1. கைவளை; bracelet.

   2. கையில் தோளின் கீழ் அணியப்படும் அணிகலன், தோள்வளை; armlet.

     “பணைத்தோள்….. வயக்குறு வந்திகை” (மதுரைக். 415);.

   3. நுதலணி வகை (அக.நி);.);; an ornament worn on the forehead.

   4. அணிகலன் (அரு.நி.);; ornament.

     [வண்டு → வந்து → வந்திகை.]

வந்தித்தல்

வந்தித்தல்1 vandittal, பெ. (n.)

   ஆடுதின்னாப் பாலை (மாலை.);; worm-killer.

 வந்தித்தல்2 vandittal, பெ. (n.)

   பங்கம்பாளை; a bitter prostate plant-Aristolochia bractcata.

வந்திபற்று-தல்

வந்திபற்று-தல் vandibaṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வலிந்து எடுத்துக் கொள்ளுதல்; to obtain of take by force.

     “வரிவளையிற் புகுந்து வந்திபற்றும் வழக்குளதே” (திவ். நாய்ச். 9,3);.

     [வலிந்து → வந்து → வந்தி + பற்று.]

ஒரு செயல் அல்லது வினையின் வன்மை குறித்த வழக்காகும்.

வந்திபீசம்

 வந்திபீசம் vandipīcam, பெ. (n.)

   நேர்வாளம்; Croton seed.

வந்திபோடு-தல்

வந்திபோடு-தல் vandipōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

   கட்டாயமாய்ப் பொறுப்பேற்றுதல் (யாழ்.அக);; to force responsibility upon.

     [வலிந்து → வலிந்தி → வந்தி + போடு.]

வந்தியம்

வந்தியம்1 vandiyam, பெ. (n.)

   குத்துப்பிடாரி; a kind of plant.

 வந்தியம்2 vandiyam, பெ. (n.)

   மலட்டுத்தனம்; sterility.

வந்தியிறு-த்தல்

வந்தியிறு-த்தல் vandiyiṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கட்டாயமாக வற்புறுத்தலுக் குட்பட்டு வரி முதலியன செலுத்துதல் (யாழ்.அக.);; to pay tax, etc… under compulsion.

     [வலிந்து → வந்தி + இறு.]

வந்தியை

வந்தியை vandiyai, பெ. (n.)

வந்திகை1 பார்க்க;see vandigai1.

     [வந்திகை → வந்தியை.]

வந்திவாங்கு-தல்

வந்திவாங்கு-தல் vandivāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கட்டாயத்திற்குட்படுத்தி வரி முதலியன வாங்குதல் (யாழ்.அக.);; to collect tax, etc., using force or destraint.

     [வலிந்து → வலிந்தி → வந்தி + வாங்குதல்.]

வந்தீவு

 வந்தீவு vandīvu, பெ. (n.)

   தூத்துக்குடியில், சிறிய மீன்பிடி துறைமுகத்தில் இருக்கின்ற கலங்கரை விளக்கம்; a small island north of Tuticorin, on which there is small fishing beacon.

வந்து

வந்து1 vandu, பெ. (n.)

   காற்று; wind.

     “வந்தெனக் கந்தனூறு கணைதொடா” (கந்தபு. சூர. வதை. 188);.

     [வண்டு→ வந்து = வளைந்து வீசுங்காற்று (வேக.பக்.101);.]

 வந்து2 vandu, இடை. (part)

   1. ஓர் அசைச் சொல்; an expletive.

   2. பேச்சில் ஏற்படும் இடைவெளி தெரியாதவாறு இட்டு நிரப்பப் பயன்படுத்தும் ஒருசொல்; a filler in conversation.

     “ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்? என்று கேட்டதற்கு,

     ‘அது

     “வந்து” வீட்டிலிருந்து புறப்பட நேரமாகி விட்டது’ என்று இழுத்தாற்போல் பதில் சொன்னான்” (இக்.வ.);.

     [வா → வந்து.]

வந்துலோ

 வந்துலோ vandulō, பெ. (n.)

   காஞ்சிரை; a tree-Strychnos nuxvomica (சா.அக.);.

வந்துவம்

 வந்துவம் vanduvam, பெ. (n.)

   பங்கம்பாளை; an ash coloured bitter medicinal prostate plant-Aristolochia Bracteata (சா.அக.);.

வந்தூலமது

 வந்தூலமது vandūlamadu, பெ. (n.)

   வெள்ளூமத்தை; thorn-apple-Dhatura alba (சா.அக.);.

வந்தேறி

வந்தேறி vandēṟi, பெ. (n.)

   1. புதிதாகக் குடியேறியவன்; new-comer, immigrant, new settler.

     “வந்தேறிகளாய்த் திருநாள் சேவித்துப் போவாரைப் போலே” (திவ். நாய்ச். 8, 9, வ்யா.);.

   2. இடையில் வந்து குடியேறியவர்; that which is introduced from outside;exotic.

     “இது வந்தேறி என்று தோற்றா நின்றதிறே” (ஈடு. 5, 1, 5);. ஒரு சிலர் தங்களை மண்ணின் மைந்தர்கள் என்றும், பிறரை வந்தேறிகள் என்றும் அழைப்பது வழக்கமாகி விட்டது (இ.வ.);.

     [வா → வந்து + ஏறி.]

வந்து ஏறுபவர் வந்தேறி எனப்படுவர். வருதல் நாடு தாண்டி நாடு வருதல். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டிற்கு உரிமை பெறாமல் வருவதும், வந்து நிலைமக்களாகத் தங்கி விடுவதும்

     ‘வந்தேறி’ எனப்படுகின்றதாம். நிலை மக்களாக இருப்பவரையும் வந்தேறிகளாக அலை மக்கள் ஆக்கி விடுவர் என்பதற்கு ஈழநாட்டு நிலை எடுத்துக்காட்டாம். வந்தேறிகள் நிலை மக்களாவதற்கு அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆத்திரேலிய நாட்டு ஆட்சியுடையாளர் சான்றாவர். வருதல், இருத்தல் ஆகியது, வந்தேறுதல் எனப்படுவது குடியேறுதல், குடியேற்றம் போன்ற வழக்காம்.

 வந்தேறி vandēṟi, பெ. (n.)

   அயலிடத்திலிருந்து வந்து குடியேறியவன்; immigrant,

     [வந்து+ஏறி]

வந்தேறு-தல்

வந்தேறு-தல் vandēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   புதிதாக வந்து குடிபுகுதல்; to come and

 settle permanently, new settler, to immigrate.

     “இருவினைகள் வந்தேற வழியுமில்லை” (தாயு. ஆனந்த. 10);.

     ‘வந்தேறிகள் வஞ்சகர் தமிழால் பிழைத்தார். வளர்ந்தபின் அவரே தமிழை அழித்தார்’ என்பது பாவாணரின் பொன்மொழி.

     [வா + ஏறி = வந்தேறி → வந்தேறு.]

வந்தேறுங்குடி

 வந்தேறுங்குடி vandēṟuṅguḍi, பெ. (n.)

   ஒருரில் புதிதாக வந்து வேளாண்மை செய்யுங் குடியானவன்; immigrant cultivator.

     [வந்தேறு + குடி.]

வந்தை

வந்தை1 vandai, பெ. (n.)

   பெருமை (யாழ்.அக.);; greatness, honour, esteem.

     [வா → வந்தை.]

 வந்தை2 vandai, பெ. (n.)

   புல்லுருவி; honeysuckle mistletoe.

 வந்தை3 vandai, பெ. (n.)

வந்திகை பார்க்க;see Vandigai.

     “வந்தைக்கும்….. இரண்டிலை பதியின்றேல்” (சேதுபு.துத்தம.9);.

வனசிருங்காடம்

 வனசிருங்காடம் vaṉasiruṅgāṭam, பெ. (n.)

   பெருநெருஞ்சி (மூ.அ.);; a stout-stemmed herb with spiny fruits and slimy leaves.

மறுவ. யானை நெருஞ்சில்

வனதாரி

 வனதாரி vaṉatāri, பெ. (n.)

   மூக்கத்தாரி என்னும் மூலிகை செடி வகை; a medicinal plant.

     [வனம் + தாரி.]

வனதித்தம்

வனதித்தம்1 vaṉadiddam, பெ. (n.)

   குடசபாலை; a tree-Hollarrhera Antidysenterica.

     [வனம் + தித்தம்.]

 வனதித்தம்2 vaṉadiddam, பெ. (n.)

   கொடிப் பாலை (மலை.);; green wax – flower.

     [வனம் + தித்தம்.]

வனதித்தா

 வனதித்தா vaṉadiddā, பெ. (n.)

   வட்டத்திருப்பி; a twiner-Cissampelos pareira.

     [வனம் + தித்தா.]

வனதீபம்

 வனதீபம் vaṉatīpam, பெ. (n.)

   சண்பகம்; a flower, champaca.

     [வனம் + தீபம்.]

வனதுர்க்கம்

வனதுர்க்கம் vaṉadurkkam, பெ. (n.)

   காட்டரண்; forest, as a defence.

     “வனதுர்க்கம், கிரிதுர்க்கம், சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரண்களையும்” (தக்கயாகப்.54, உரை);.

வனதுர்க்கி

 வனதுர்க்கி vaṉadurkki, பெ. (n.)

   கடுக்காய்; chembulic myrobalan.

     [வனம் + துர்க்கி.]

வனதுர்க்கிசேய்

 வனதுர்க்கிசேய் vaṉadurkkicēy, பெ. (n.)

   கடுக்காய் பிஞ்சு; tender Indian gall nut.

     [வனம் + துர்க்கி + சேய்.]

வனதுர்க்கை

வனதுர்க்கை vaṉadurkkai, பெ. (n.)

   கொற்றவை; korravai (Durgai);.

     “வன துர்கையினுடைய புதல்வ” (திருமுரு.258, உரை);.

     [வனம் + Skt. durgā → துர்க்கை.]

வனதேவிச்செடி

 வனதேவிச்செடி vaṉatēvicceḍi, பெ. (n.)

   குத்துப்பிடாரி; an unknown plant (சா.அக.);.

     [வனதேவி + செடி.]

வனத்தவசி

 வனத்தவசி vaṉattavasi, பெ. (n.)

   முருங்கை, குருகத்திப்பூடு; a plant.

     [வனம் + தவசி.]

வனத்தி

 வனத்தி vaṉatti, பெ. (n.)

   தூதுவளை; a thorny creeper (shrub); – Solanum Trilobatum.

வனத்துக்குடோரி

 வனத்துக்குடோரி vaṉattukkuṭōri, பெ. (n.)

வனதுர்க்கி பார்க்க;see Vana-turkki.

     [வனத்து + குடோரி.]

வனத்தேரி

 வனத்தேரி vaṉattēri, பெ. (n.)

   ஆவரஞ் செடி; a shrub-Cassia auriculata.

     [வனம் + தேரி.]

     [P]

வனபலம்

 வனபலம் vaṉabalam, பெ. (n.)

   ஆனைத் திப்பிலி (சங்.அக.);; elephant pepper.

     [வனம் + பலம்.]

வனபிப்பிலி

 வனபிப்பிலி vaṉabibbili, பெ. (n.)

   காட்டுத் திப்பிலி (சங்.அக.);; long pepper.

மறுவ. பெருந்திப்பிலி

     [வனம் + பிப்பிலி.]

வனப்பகையப்பன்

வனப்பகையப்பன் vaṉappagaiyappaṉ, பெ. (n.)

   1. நம்பியாரூரர்; sundara-mūrttinayanar, one of four saiva saints.

   2. வனப்பகை என்ற பெண்ணைப் புதல்வியாகக் கொண்டவர்; one who was the father of the girl vanappagai.

     “வனப்பகையப்பன் வன்றொண்டன்” (தேவா. 924.10);.

     [வனப்பகை + அப்பன்.]

வனப்பகையார்

 வனப்பகையார் vaṉappagaiyār, பெ. (n.)

   கோட்புலி நாயனாரின் மகள்; daughter of kot-puli-nayagar.

நம்பியாரூரர் பதிகத்தில் வைத்துப் பாடப்பெறும் பெருமைப் பெற்றவள்.

வனப்பருத்தி

 வனப்பருத்தி vaṉapparutti, பெ. (n.)

   கோங்கிலவு; false tragacanth.

     [வனம் + பருத்தி.]

வனப்பியல்

வனப்பியல் vaṉappiyal, பெ. (n.)

வனப்பு பார்க்க;see vanappu.

     “வனப்பியல் தானே வகுக்குங் காலை” (தொல்.செய்யுள்.149);.

     [வனப்பு + இயல்.]

எண்வகை வனப்புகளையும் உள்ளடக்கிக் கூறுவதே வனப்பியல். அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகைச் செய்யுளுறுப்புகள், திரண்டவழிப் பெறுவதோர் அழகே வனப்பியல் எனப்படும்.

   1. அம்மை என்பது சில எழுத்துகளால் ஆகிய மெல்லிய சொல்லோடும் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் கூறுந் தொடர்நிலைச் செய்யுட்கள். இவை சில இடங்களில் இவற்றை விட்டு விலகியுஞ் செல்லும் என்றும், அம்மைக்கு இலக்கியமாவன பதினெண் கீழ்க்கணக்குச் செய்யுட்களென்றும் பேராசிரியர் கூறுவர். அம்மை வனப்புறு தொடர்நிலைச் செய்யுட்கள் ஐந்தடியின் மிகாமல் வரும். அம்மை என்பது அமைதிப்பட்டு நிற்பது.

     “சின்மென் மொழியாற் சீரிது நுவலின்

அம்மை தானே அடிநிமிர் வின்றே”

என்று, யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் பாடங்கொள்வர்.

காரிகையுரையாசிரியரும், இளம்பூரணரும் நூற்பா முதலடியின் இறுதி இரு சீர்களில், சீர் புனைந்தி யாப்பின் எனப் பாட வேறுபாடு கொள்வர். இதனால் சீர் புனைதல் அம்மையின் புனைவு முறையாக அமைகின்றது.

விருத்தியுரையாசிரியரும், காரிகையாசிரியரும்

     “ஒள்ளிய வாய பொருள்” என்ற உரை விகற்பம் கொள்வர். பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்,

     “தாயபனுபவல்” என்று நூற்பா இறுதியடி இருசீர்களில் பாட விகற்பமும்,

     “இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும்” என்று உரை விகற்பமும்,

கொள்வர். இதனால் ஒள்ளியவாய பொருள், அறம் பொருளின்பமென்னும் மூன்றும், இடையிட்டு இலக்கணமாகவும், இலக்கியமாகவும், வரும் என்பதும், அம்மையின் பொருண்மை வளர்ச்சியாக அமைகின்றன.

     “அடிநிமிர் வின்மை” என்பதற்கு ஐந்தடியின் ஏறாமை என்று பேராசிரியரும், ஆறடியின் ஏறாமை என்று நச்சினார்க்கினியரும் கூறுவர். இவை அம்மையின் அடிவளர்ச்சியாகும்.

இவ் வனப்பிற்கு காட்டாக அனைவரும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் கூறுவர்.

இதனால், சீர்புனைதல் ஒள்ளியவாய பொருள், அறம், பொருளின்ப மென்னும் மூன்றும் இடையிட்டு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் வரல், ஆறடியின் ஏறாமை என்ற அடி வளர்ச்சி ஆகியன அம்மையின் இயல்புகளாக அமைந்து, அறநூல்களை குறிப்பதாயிற்று.

அவ்வாறு அம்மையின் வளர்ச்சி, உரையாசிரியர்கள் அளவில் அமைகின்றது.

   2. அழகு என்பது செய்யுளுக்குரிய சொற்களால் சீர்பெறப் புனைந்து யாக்கப்படுவது. அழகெனப்படும் நூல்கள் வேறு வேறு வந்து தொகுக்கப்பட்டன என்றும், எட்டுத் தொகை நூல்கள் அழகு என்னும் வனப்பின் பாற்படுவன என்றும் பேராசிரியர் கூறுவர்.

     “செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்

அவ்வகை தானே அழகெனப் படுமே”

என்பது செய்யுளியல் நூற்பா. இந் நூற்பாவிற்கு பாட வேறுபாடில்லை.

யாப்பருங்கல, காரிகை உரையாசிரியர்கள் செய்யுள் மொழி என்பதற்குச்

     “செய்யுட் சொல்லாகிய திரிசொல்” என விளக்குவர். இளம்பூரணர்

     “செய்யுட்குரிய சொல்” என்று,

என்பது பலரும் கொண்ட செய்யுளியல் நூற்பாவாகும். இளம்பூரணர் மட்டும், முதலடியின் இரண்டாம் சீராகச் சொல்லுங்காலை என்பதைச் சேர்த்துப் பாடங் கூறுவர். இவ்வாறு பாடங் கூறினும், இளம்பூரணர் பொருள் மாறுபாடாய் ஏதும் கூறிற்றிலர்.

தொன்மையின் முதல் இயல்பாகிய உரையொடு புணர்தல் என்பதற்கு,

     ‘உரைக்கப்படுவனவற்றின் மேற்று’ என்று விருத்தியுரையாசிரியரும்,

     ‘உரையொடு பொருந்திப் போந்த’ என்று இளம்பூரணரும்,

     ‘உரைவிராய்’ என்று பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் கூறுவர். க. வெள்ளைவாரணர்

     “நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல்” என்பர். இலக்குவனார்.

     “உரைநடையால் இயற்றப்பட்டன” என்பர். இராம. பெரியகருப்பன்

     “நெடுங்காலம் உரைக்கப்பட்டு வந்தன” என்பர். காராசன்

     “உரைத்தலோடு பொருந்திய கூற்றுவகை” என்பர். வை.கா.சிவப்பிரகாசம்

     “பாட்டிடை வைத்த குறிப்பு தொன்மைக்குரியது” என்று கூறுவர். இவ்வாறு

     ‘உரையொடு புணர்தல்’ என்பதற்கு உரைவிகற்பம் கொள்வர். இவற்றிலிருந்து உரையொடு புணர்தல் என்பது உரையிடையிட்டு வரல், உரைநடையால் வரல், கூற்றுவகையாக வரல் என மூன்று நிலைகள் கொண்டுள்ளதை அறியலாம்.

தொன்மையின் இரண்டாவது இயல்பான,

     ‘பழைமை மேற்று’ என்பதற்குப்

     ‘பழைமைத்தாய் நிகழ்ந்த பெற்றி’ என்று விருத்தியுரையாசிரியரும்,

     ‘பழைமையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது’ என்று பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் கூறுவர். பழைமையான வரலாறுகள் என்று இலக்குவனாரும்,

     ‘புராணம்’ என்று. இராம. பெரியகருப்பனும் கூறுவர். இவ்வாறு

     ‘பழைமை மேற்றே’ என்பதற்கு உரை விகற்பம் கொள்வர். இதனால் பழங்கதைகள் வரலாறுகள், புராணங்கள், இவ் வகை இலக்கியங்களாகின்றன.

இவ்வனப்பிற்குக் காட்டாக விருத்தியுரை யாசிரியர்,

     “செறிதொடி உவகை கேளாய் செஞ்சுடர்த்

தெறு கதிர்ச் செல்வன்”

என்பது போல்வனவும், பாரதமும், இராமாயணமும் என்பர்.

     ‘காந்தம்’ என்ற நூலைக் காரிகையுரை யாசிரியரும், தகடூர் யாத்திரையை பேராசிரியரும், சிலப்பதிகாரத்தை நச்சினார்க்கினியரும், எடுத்துக் காட்டாகக் கூறுவர், கி.வா.சகந்நாதன் பாரத வெண்பா இவ் வகைப்படும் என்பர். சங்கச் செய்யுட்களில் உவமையாக, உத்தியாக இடம் பெற்றுள்ள இராமாயண பாரதக் கதைகள், அகலிகை கதை, இரதிகாமன் கதை, கசரர் கதை, இந்திரன், சிபி, சிவன், திருமால் பலராமன் கதைகள், வடமொழிக்கே உரியன என்றும், முருகன் கதை, நிலவழித் தெய்வங்களின் செயல்கள், திருமாவுண்ணிக் கதை, கொல்லிப்பாவை, கண்ணகி கதை, தமிழுக்குரியன என்றும், இராம.பெரிய கருப்பன் பிரித்து வரிசைப்படுத்திக் காட்டுவர்.

இதனால் உரையிடையிட்டும், உரை நடையிலும், கூற்று வகையாகவும், அமையும் பழங்கதைகள், வரலாறுகள், புராணங்கள் ஆகியன தொன்மை வனப்பாகின்றன.

   4. தோல் என்பது கொச்சகக் கலி போன்ற இழுமெனும் ஒசையையுடைய மெல்லிய சொற்களால், அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள்களைச் சொல்வதும், ஆசிரியப் பாப்போன்ற (பாந்த மொழியின் அமையப் பெறும்); பாட்டினால் ஒரு பழங்கதை மேல் தொடுக்கப்படுவதும் என இருவகைப்படும். முதல் வகைக்குப் பேராசிரியர்,

     “சான்று கண்டிலம்” என்றார். நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணியைக் காட்டுகின்றார்.

     “இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்

பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்

தோலென மொழிய தொன்மொழிப் புலவர்” என யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும், பேராசிரியரும் பாடங்கொள்வர். காரிகை யுரையாசிரியரும், இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும், ஈற்றடியின் இறுதி இரு சீர்களில் மட்டும்

     ‘தொன்னெறிப் புலவர்’ என்று பாட வேறுபாடு கொள்வர்.

     ‘தொன்மொழிப் புலவர்’ என்பதற்குப் பேராசிரியர்,

     “பழைய கதையைச் செய்தல் பற்றி, இது முன்வரும் சூத்திரத்தாலும் பெறுதும்” என்பர். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், எவ்விதப் பொருளும் கூறிலர். தொன்னெறி என்பதற்குப் பழநெறியையறிந்த புலவர் என நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். காரிகையுரையாசிரியரும், இளம்பூரணரும், எவ்விதப் பொருளும் கூறிலர்.

     ‘இழுமென்மொழியால் விழுமியது நுவல்தல்’ என்பது தோலின் முதல் வகையாகக் கூறப்படுகின்றது. இம் முதல்வகை இழுமென்மொழி, விழுமியது நுவல்தல் என இரண்டு இயல்புகளைக் கொண்டுள்ளது.

     ‘இழுமென்மொழி’யை இழுமென்னும் மெல்லியவாய சொற்கள் என விருத்தியுரை யாசிரியரும், காரிகையாசிரியரும், இளம்பூரணரும்,

     ‘இனிய ஓசையுடைய சொற்கள்’ என மு.வரதராசனாரும்,

     ‘மென்மை மிக்க இனிய சொற்கள்’ என சி. இலக்குவனாரும், விளக்குவர்.

     ‘விழுமியது நுவலல்’ என்பதை விழுமிய வாய்க் கிடப்பன என விருத்தியுரையாசிரியரும், காரிகையாசிரியரும், இளம்பூரணரும், விளக்குவர். பேராசிரியர் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச் செய்வன என்றும், மு.வரதராசன் சிறந்த பொருள்பற்றி அமைவன என்றும், சி.இலக்குவனார் வாழ்வுக்குச் சிறப்புத்

தரும் பொருள்கள் பற்றி இயற்றப்படுவன என்றும் விளக்குவர்.

இவ்வாறு இழுமென் மொழியும், விழுமியது நுவல்தலும் உரை விகற்பமின்றிப் பொது நிலையிலேயே, விளக்கப்படுகின்றன.

இந்த வகைக்குக் காட்டாக விருத்தியுரை யாசிரியரும், காரிகையுரையாசிரியரும், இளம் பூரணரும்,

     ‘பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின்’ என்று தொடங்கும் மார்க்கண்டேயனார் காஞ்சிப் பாட்டைக் கூறுவர். பேராசிரியர்

     “அவை செய்த காலத்துள்ளன கண்டிலம், பிற்காலத்து வந்தன கண்டு கொள்க” என்பர். இரா.இளங்குமரன்

     “காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி” என்று தொடங்கும் தனிப்பாடல் திரட்டுப் பாடலொன்றைக் காட்டுவர்.

இதனால், தோலின் முதல்வகை இழுமென்னும் இனிய ஓசையுடைய மெல்லியவாய சொற்களால், அறம் பொருளின்பம் வீடென்றும் வாழ்வுக்குச் சிறப்புத் தரும் பொருள்கள் பற்றி இயற்றப்படுவதாகும்.

     ‘பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகல்’ என்பது தோலின் இரண்டாவது வகையாகும். பரந்த மொழியும், அடிநிமிர்வும் இதன் இயல்புகளாகும்.

     ‘பரந்தமொழி’ என்பதை எல்லாச் சொற்களும் என விருத்தியுரையாசிரியரும், காரிகையுரை யாசிரியரும் விளக்குவர். மு.வரதராசனாரும், இரா.இளங்குமரனும், பரந்தசொற்கள் என்றும் கூறுவர்.

     ‘அடிநிமிர்வு’ என்பதைப்

     “பல அடியை உடையவாய்க் கிடப்பன” என விருத்தியுரை யாசிரியரும், காரிகையுரையாசிரியரும், இளம்பூரணரும், விளக்குவர்.

இவ்வாறு பரந்த மொழியும், அடிநிமிர்வும், உரை விகற்பமின்றிப் பொதுநிலையதிலேயே விளக்கப்படுகின்றன.

இதற்குக் காட்டாக விருத்தியுரையாசியரும், காரிகையுரையாசிரியரும், இளம்பூரணரும் பத்துப்பாட்டைக் கூறுவர். பொருட்டொடர் நிலை எனப் பேராசிரியரும், சிந்தாமணி, தேசிகப்பா என நச்சினார்க்கினியரும், காட்டாகக் கூறுவர்.

பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்,

     “ஒரு கதைமேல் தொடுக்கப்பட்டன.” என்பர். சி.இலக்குவனார் கதைதான் கூற வேண்டுமென்ற குறிப்பு, நூற்பாவில் இல்லை என்பர்.

இதனால் தோலின் இரண்டாவது வகையின் எல்லாச் சொற்களோடும் கூடிய கதைப் பொருளன்றியும், கதைப்பொருளாகவும், பல அடிகளால் இயற்றப்படுவனவாகும்.

   5. விருந்து என்பது புதியதாகத் தொகுக்கப்படுந் தொடர்நிலை மேலது. பழைய கதையைப் புதியதாகச் சொல்வது தோல் ஆகும் என்றும், விருந்து புதியதாகத் தான் வேண்டியவற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வதென்றும், பேராசிரியர் கூறுவர்.

விருந்துக்குச் சான்றாக முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலியோர் செய்த அந்தாதிச் செய்யுளும் அமையும் என்றும், கலம்பகம் முதலாயினவற்றையும் சான்றாகச் சொல்வர் என்றும் பேராசிரியர் கூறுவர்.

     “விருந்தே தானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” என்று விருத்தியுரையாசிரியரும், இளம்பூரணரும் பாடல் கொள்வர், இரண்டாவது அடியின் முதல் இரு சீர்களில் மட்டும் புதுவது கிளந்த என்று காரிகையுரையாசிரியரும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாட வேறுபாடு கொள்வர், இவ்வாறு பாடல் வேறுபட்டுக் கூறினும், புதுவது கிளந்த என்பதற்கு விளக்கம் கூறிற்றிலர், புதுவது புனைந்த என்பதால், வடிவச் சிறப்புப்

புலப்படுத்தப்படுகிறது. ஆதலின் புதுவது புனைந்த என்று பாடங்கொள்வதே, ஏற்புடையதாகும்.

விருத்தியுரையாசிரியரும், காரிகையுரை யாசிரியரும்,

     “விருந்து என்பது புதியவாயினவற்றின் மேற்று, அவை இப்பொழுது உள்ளாரைப் பாடும் பாட்டு” என்பர். இளம்பூரணர் விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிப் போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது. புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல் வழியின்றித் தானே தோற்றுவித்தல் என்பார், பாவாணர்,

     ‘விருந்து என்பது அவ்வப்போது, புதிது புதிதாகத் தோன்றும் பலவகைப் பனுவல்கட்கும் பொதுப்பெயர் என்பர். கி.வா.சகந்நாதன் அவ்வக் காப்பியத் தலைவர்கள் காலத்தே பாடப் பெற்றமையாதலின், அவை விருந்தாகும் என்பர். இரா.இளங்குமரன்

     ‘இப்பொழுதுள்ளாரைப் பாடுவதும், இப்பொழுது காணப்பெறும் விந்தையினையும் நிகழ்ச்சியினையும் பாடுவதுமாம்’ என்பர். இரா.காசிராசன் காப்பிய ஆசிரியர்கள் தாமே கதையைப் புனைந்து கொள்வது விருந்துவகை இலக்கியமெனலாம்’ என்பர். கை.கா.சிவப்பிரகாசம் பொருள், உருவ அமைப்பு, நுவல்திறன், இவற்றின் புதுமையழகு சான்ற இலக்கியங்கள் என்பர். இவ்வாறு உரை விகற்பம் கொள்வர்.

இதற்குக் காட்டாக விருத்தியுரையாசிரியரும், காரிகையுரையாசிரியரும்,

     ‘அவை வழிப்பட்டு அறிந்து கொள்க’ என்பர், பேராசிரியர்.

     ‘முத்தொள்ளாயிரம், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப’ என்பர், தேவநேயப் பாவாணர், குழவி மருங்கினும் கிழவ தாகும் (தொல்.புறத்26); என்பது பிள்ளைத்தமிழ் என்னும் பனுவலையும், ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிய (தொல்.புறத்,30); என்பது உலா அல்லது ஊரின்னிசையையும் குறிக்கலாம் என்பர். கி.வா. சகந்நாதன்

     ‘இராசராச விசயம், வீரணுக்க

விசயம், குலோத்துங்க சோழ சரிதை’ ஆகியவற்றைக் கூறுவர். வை.கா.சிவப்பிரகாசம்

     ‘தொண்ணூற்றாறு வகைச் சிறு பிரபந்தங்கள், இக் காலச் சிறுகதை, நெடுங்கதை தன்வரலாறு’ ஆகியவற்றையும் கூறுவர்.

இதனால் விருந்து வனப்பு இயல்புகள் முன்புள்ளார் சொன்ன நெறிப்போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பு, இருவன் சொன்ன நிழல் வழியன்றித் தானே தோற்றுவித்ததில், இப்பொழுது உள்ளாரையும், இப்பொழுது காணப்பெறும் விந்தையினையும், நிகழ்ச்சியினையும் பாடுவது, பொருளாலும், வடிவத்தாலும் புதுமையாய் அமைவன. செய்யுளாலும், உரைநடையாலும் இயற்றப்பட்டன.

   6. இயைபு என்பது ஞணநமன யரலவழள என்னும் பதினொரு மெய்யெழுத்துகளில், ஒன்றனையிறாகக் கொண்டு, செய்யுஞ் செய்யுளைப் பொருள் தொடராகவும், சொல் தொடராகவும் செய்வது. பொருளுஞ் சொல்லும் இயைந்து வரும். மணிமேகலையும், பெருங்கதையும் இதற்குச் சான்றென்பர் பேராசிரியர்.

     “ஞகார முதலா னகார ஈற்றுப்

புள்ளி யிறுதி இயைபெனப்படுமே” (தொல். செய்யுள்.1496);.

   7. புலன் என்பது சேரி மொழிகளால் (பேச்சு வழக்குச் சொல்); எளிதிற் பொருள் உணரும்படி கூறும் கதைகள். இதற்குச் சான்றாக பேராசிரியர் கூறும்

     ‘விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன’ என்று கூறும் நூல்கள் இக் காலத்தில்லை.

     “தெரிந்த மொழியாற் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோற்றின்

புலன்என மொழிய புலன் உணர்ந் தோரே”

   8. இழைபு என்பது வல்லின மெய் கலந்த வல்லெழுத்துப் பயிலாமல், இருசீரடி முதலாக, எழுசீரடி அளவுள்ள கட்டளையடி ஐந்தினையும் கொண்டு, நெட்டெழுத்தும், அந் நெட்டெழுத்துப் போல் ஒலி தரும் மெல்லெழுத்தும், லகரளகரங்களும் உடைய சேரிச் சொற்களான். இயைந்து நடப்பது.

     “ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது

குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்ஙனம் ஒழுகின்

இழையின் இலக்கணம் இயைந்த தாகும்” (தொல்.1498);

கலியும் பரிபாடலும் போல்வன சான்றென்பார் பேராசிரியர்.

வனப்பிரமி

வனப்பிரமி vaṉappirami, பெ. (n.)

   சதுர கிரியில் விளையும் ஒர் மூலிகைச் செடி. கொடியாய் படர்ந்து நெல்லி இலையைப் போல் தடிமனாக இருக்கும். ஒர் மருந்தாகவும் பயன்படுத்துவர்; a herb growing in saturagiri hills, it is a creeper, it must be collected on auspicious day, if taken for 30 days the body becomes rejuvenated.

     [வனம் + பிரமி.]

வனப்பிரமை

 வனப்பிரமை vaṉappiramai, பெ. (n.)

   ஒர் கற்பக மூலிகை; a rejuvenating plant.

     [வனம் + பிரமை.]

வனப்பு

வனப்பு1 vaṉappu, பெ. (n.)

   இசை வகை; a tune.

     “பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ண விசை” (பெரியபு. ஆனாய. 28);.

     “மம்மர் செய்த வனப்பியாங் கொளிந்தன” (மணிமே.22, 128);.

     [வள் → வன் + அம் – வனம் → வனப்பு.]

 வனப்பு2 vaṉappu, பெ. (n.)

   1. அழகு; beauty. grace, charm, loveliness, pultiness.

     “செவ்வானத்து வனப்பு” (புறநா. 4);.

   2. இளமைநிறம் (திருமுரு. 17, வேறுரை);; fresh colour of youth.

   3. பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் செய்யுளழகு (தொல்.பொருள். 548);; elegance of a literary work resulting from the perfection of its parts.

   4. பெருந் தோற்றம்; largeness of size, gigantic appearance.

     “வனப் பஞ்சான்” (ஏலா. 22);.

தெ. கொள் → கொன் → கொனு → கொனி = கொண்டு.

     [வள் → வன் + அம் – வனம் → வனப்பு. வனப்பு = அழகு.]

     ‘ள’ கரமெய் தமிழிலும் திரவிடத்திலும்,

     ‘ன’கர மெய்யாகத் திரியும்.

எ.டு.:- தெள் → தென் → தேன். தெளிவு. தேறல் என்னும் சொற்களை நோக்குக.

     “பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு” (அடி.சிலம்பு. உரைப்பாயிரம். பேரா.தொல்.பொருள்.547);.

தொல்காப்பியர் காலத்தில், செய்யுள் எழுவதற்குரிய நிலைக் களங்கள் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழு வகையாய் வகுக்கப்பெற்றிருந்தன.

     “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை யகத்தவர் வழங்கும்

யாப்பின் வழிய தென்மனார் புலவர்” (தொல்.1336); என்பது தொல்காப்பிய நூற்பா.

அவ் வெழுவகை நிலைக்களத்துள், பாட்டு என்பது அம்மை (1491. அழகு (1492);, தொன்மை (1493);, தோல் (1494);, விருந்து (1495);, இயைபு

வனப்பு என்னும் தூய தீந்தமிழ்ச் சொல் இருக்கவும், அதற்குப் பகரமாகக் காவியம் என்னும் வடசொல்லைக் காப்பியம் என்று திரித்து,

     “நாடகக் காப்பிய நன்னூல் நுணிப்போர்” (மணிமே, 19:80); என்று, முதன்முதலாக காப்பியச்சொல் ஆண்டவன், சீத்தலைச் சாத்தன்.

தொல்காப்பியத்தில் இலக்கணம் கூறப்பெற்ற எண் வகை வனப்பிற்கும், இலக்கியமாயிருந்த பனுவல்களெல்லாம், அறவே இறந்துவிட்டன. ஆதலால், கி.பி.3ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பத்து வனப்புகளும், ஐம்பெருங் காப்பியமென்றும், ஐஞ்சிறு காப்பியமென்றும், அக் காலத்திறுதியில் இரு கூறாக வகுக்கப்பட்டன.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் பெருவனப்பு: நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், பெருங்கதை, நாககுமார காவியம் என்னும் ஐந்தும் சிறுவனப்பு ஆகும். பெருவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட இரண்டும், சிறுவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட ஒன்றும், இன்றில்லை.

வனப்பைப் பிற்காலத்திலக்கணியர், தொடர் நிலைச் செய்யுள், தனிநிலைச் செய்யுள் என்று இருவகையாகவுங் குறிப்பாராயினர்.

ஒப்புயர்வற்ற ஒருவனைத் தலைவனாகக் கொண்ட நீண்ட கதை தழுவி, காண்டம், படலம் முதலிய பெரும் பகுப்புகளைக் கொண்டு, பல்வேறு வகைப்பட்ட காலம், இடம், நிகழ்ச்சி, மக்கள் வாழ்க்கைமுறை, தொழில், பழக்கவழக்கம்,

அரசியல், ஊனுடையுறையுள், நிலைத்திணையும் இயங்குதிணையுமாகிய மற்ற வுயிரினங்கள் முதலிய பொருள்களைப் பற்றிய வண்ணனைகளை யுடையதாய், விரிவாய் வரும் வனப்பிலன்றி, வேறெவ் வகைப் பனுவலிலும், சொல்வளத்தைப் பேரளவாகக் காண முடியாது. அவ் வனப்புச் சொல்வளமும், வனப்பாசிரியனின் புலமைத் திறத்தைப் பெரிதும் பொறுத்ததாகும். ஐம்பெரு வனப்புகளுள் சிலப்பதிகாரமும், சிந்தாமணியும். ஐஞ்சிறு வனப்புகளுள் பெருங்கதையுமே, சொல் வளமுடையன. இம் மூன்றும் முறையே தலையிடை கடையாம்.

வனப்புள்

வனப்புள் vaṉappuḷ, பெ. (n.)

   பயிற்சி கொடுக்கப்பட்ட பறவை (வள்ள சத்திய ஞான.25);; shepherd koel.

     [வனம் + புள்.]

     [P]

வனப்புவண்ணம்

வனப்புவண்ணம் vaṉappuvaṇṇam, பெ. (n.)

   இசைவகை (பெரியபு. ஆனாய.28);; a variety of melody.

     [வனப்பு + வண்ணம்.]

வனப்பூ

 வனப்பூ vaṉappū, பெ. (n.)

   காளான்; mushroom.

க. அனபெ, ஆத்.wanabe

வனப்பேச்சி

 வனப்பேச்சி vaṉappēcci, பெ. (n.)

   நாட்டுப் புறங்களில், நீர்நிலைகளைக் காக்கும் சிறு தெய்வம்; a deity which guards water Sources.

     [வனம்+(பேய்ச்சி);பேச்சி]

வனமாலைப்பூடு

 வனமாலைப்பூடு vaṉamālaippūṭu, பெ. (n.)

   மருளூமத்தை; a variety of dhatura.

     [வனமாலை + பூடு.]

வனமிகுத்திரி

 வனமிகுத்திரி vaṉamiguttiri, பெ. (n.)

   காயாங்குலை; a plant.

     [வனம் + மிகு = திரி.]

வனமிரட்டி

 வனமிரட்டி vaṉamiraṭṭi, பெ. (n.)

   ஓர் கொடி; a climber (சா.அக.);.

     [வனம் + மிரட்டி.]

வனமீகம்

 வனமீகம் vaṉamīkam, பெ. (n.)

   புற்றுமண்; the earth or mud of the white ant-hill.

     [வனம் + மீகம்.]

வனமீன்

 வனமீன் vaṉamīṉ, பெ. (n.)

   முதலை; crocodile.

     [வனம் + மீன்.]

     [P]

வனமுதம்

 வனமுதம் vaṉamudam, பெ. (n.)

   கார்முகில் (யாழ்.அக.);; cloud.

     [வானமுதம் → வனமுதம்.]

வனமுரை

 வனமுரை vaṉamurai, பெ. (n.)

   முதிரை (சங்.அக.);; pigeon-pea, dholl.

     [வனம் + முதிரை → முரை.]

வனமுள்ளாலி

 வனமுள்ளாலி vaṉamuḷḷāli, பெ. (n.)

   நறுங்குறிஞ்சா; swallow wort-Ascleepias vormitoria (சா.அக.);.

     [வனம் + முள்ளாலி.]

வனமைத்தாங்கி

 வனமைத்தாங்கி vaṉamaittāṅgi, பெ. (n.)

   கருடன்; skyroot;a creeper – Bryonia chigaea.

வனம்

வனம் vaṉam, பெ. (n.)

   1. காடு (சூடா.);; forest.

     “வனமே மேவி …. எவ்வாறு நடந்தனை” (திவ். பெருமாள் தி. 9,2);

   2. ஊர்சூழ்சோலை (சூடா.);; pleasure grove, grotto about a town.

   3. சுடுகாடு; cremation ground.

   4. நீர் (திவா.);; water.

   5. மலையருவி (யாழ். அக.);; water fall.

   6. உறைவிடம்; abode residence.

     “வாவியுமலருமாகத் துஞ்சுவ வனங்களெல்லாம்” (இரகு. நகர. 38);.

   7. வழி;(பிங்.);

 way.

   8. துளசி (சூடா.);; holybasil.

   9. புற்று (சங். அக.);; ant hill.

     [Skt. vana → த. வனம்]

வனயீட்டி

 வனயீட்டி vaṉayīṭṭi, பெ. (n.)

   கிடைத்தற்கரிய மூலிகை; a rare drug capable of consolidating salammoniace and used for transmuting and metal into gold.

இது சாரத்தை கட்டி, பொன்னாக்கும்.

வனராசபூண்டு

 வனராசபூண்டு vaṉarācapūṇṭu, பெ. (n.)

   சிறுதும்பை; a small variety of dead nettle or leucas.

வனவாசனம்

வனவாசனம்1 vaṉavācaṉam, பெ. (n.)

   நாவி; a poisonous root-Aconite.

 வனவாசனம்2 vaṉavācaṉam, பெ. (n.)

   புனுகுப்பூனை (யாழ்.அக.);; civet cat.

     [வனம் + வாசனம்.]

வனவாசம்

 வனவாசம் vaṉavācam, பெ. (n.)

   காட்டில் வாழ்க்கை; dwelling or residing in a forest.

     “பஞ்சபாண்டவர் வனவாசம்”

த.வ. காடுறைவு

     [Skt. vana-{} → த. வனவாசம்]

வனி

வனி1 vaṉi, பெ. (n.)

   செஞ்சித்திரமூலம்; a plant-plumbago rosea.

 வனி2 vaṉi, பெ. (n.)

   சுரம் (இராசவைத். 149);; fever.

ம. பனி

     [வல் → வள் → வனி.]

ஒ.நோ. கல் → கன் → கன்னி.

வனிக்கொடி

 வனிக்கொடி vaṉikkoḍi, பெ. (n.)

   ஒரு வகைக்கொடி;     [வனி + கொடி.]

வனீரம்

 வனீரம் vaṉīram, பெ. (n.)

   பெரிய திப்பிலி (மூ.அ.);; long pepper.

மறுவ. காட்டுத்திப்பிலி

வனுக்கு

 வனுக்கு vaṉukku, பெ. (n.)

   துருசு; blue vitriol-copper sulphate.

வனை கோல்

வனை கோல் vaṉaiāl, பெ. (n.)

   படந்தீட்டுந் தூரிகை; painter’s brush.

     “செம்பொற் படாமும் வனைகோலும் வாங்கினாள் நம்பி வடிவெழுத” (அழகிய நம்பியுலா. 47);.

மறுவ. வட்டிகை

     [வள் → வன் → வனை + கோல். ள → ன = திரிபு.]

வனை-தல்

வனை-தல் vaṉaidal, செ.கு.வி. (v.i.)

   1. உருவமையச் செய்தல் (பிங்.);; to form, fashion, shape.

     “வனை கலத்திகிரியும்” (சீவக. 1839);.

   2. அழகுபடுத்துதல் (சூடா);; to adorn.

   3. சித்திரமெழுதுதல்; to draw, paint, engrave.

     “வனையலாம் படித்தலா வடிவிற்கு” (சீவக. 709);.

     [வல் → வள் → வள → வளை → வனை-, சக்கரத்தைச் சுற்றி மட்கலம் அமைத்தல் (வே.க.4, பக்.96);.]

வன்கட்பிணாக்கள்

 வன்கட்பிணாக்கள் vaṉkaṭpiṇākkaḷ, பெ. (n.)

   பாலை நிலமகளிர் (திவா.);; women of desert tracts.

     [வன்கண் + பிணா → பிணாக்கள்.]

வன்கணம்

 வன்கணம் vaṉkaṇam, பெ. (n.)

   வல்லினம்; the group of hard consonants.

     [வன் + கணம். கள் → களம் → கணம். த. கணம் → Skt. gana.]

வன்கணவர்

வன்கணவர் vaṉkaṇavar, பெ. (n.)

   கன்னெஞ்சர்; hard hearted регson.

     “தாமுடைமை வைத்திழக்கும் வன் கணவர்” (குறள்.228);.

வன்கணாளன்

வன்கணாளன் vaṉkaṇāḷaṉ, பெ. (n.)

வன் கண்ணன் பார்க்க;see van-kannan.

     “வன்கணாளனேன்” (பெருங். மகத. 9, 159);.

     [வன்கண் + ஆள் + அன்.]

வன்கணை

வன்கணை vaṉkaṇai, பெ. (n.)

   மரவகை; a tree.

     “இவ்வெல்லையில் நின்ற வன்கணை யென்னு மரமேயுற்று” (S.I.I. iii 408);.

     [வல் → வன் + கணை. கண் → கணை = திரண்டு பருத்த பகுதி. திரண்ட மரம்.]

வன்கண்

வன்கண் vaṉkaṇ, பெ. (n.)

   1. மனக் கொடுமை; cruelty, hardness of heart, iron-heartedness, pitilessness, torture.

     “தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்” (குறள், 228);.

   2. வீரத்தன்மை; bravery, fortitude, resoluteness, cool determination.

     “வழிவந்த வன்கணதுவே படை” (குறள். 764);.

   3. பகைமை (வின்.);; enmity.

     “உலைவிடத் தூறஞ்சா வன்கண்” (குறள். 762);.

   4. பொறாமை (வின்.);; jealousy, envy.

   5. கொடும் பார்வை (வின்.);; evil or cruel look.

மறுவ. உளவலிமை.

     [வல் → வன் + கண்.]

வன்கண்ணன்

வன்கண்ணன் vaṉkaṇṇaṉ, பெ. (n.)

   1. கொடுமையுள்ளவன் ; heartless person.

     “தார்விடலை வன்கண்ண னல்கான்” (பு.வெ.11, பெண்பாற். 7);.

   2. வீரமுள்ளவன்; man offortitude, brave and resolute man.

மறுவ. அருளற்றவன்.

     [வன்கண் → வன்கண்ணன்.]

வன்கண்மை

வன்கண்மை vaṉkaṇmai, பெ. (n.)

   1. கொடுமை; hardship, stone-heartedness, cruelty.

     “வன் கண்மை புரிந்தனமென் றொல்கிய சிந்தையராகி” (உபதேசகா. உருத்திராக். 3);.

   2. வீரம்; bravery, valour, fortitude.

     “வன்க ணாடவர்” (புறநா. 3);.

     [வன்கண் → வண்கண்மை.]

வன்கனத்தம்

 வன்கனத்தம் vaṉkaṉattam, பெ. (n.)

   தவசு முருங்கை (சங்.அக.);; a kind of drum-stick-Tranquebar gendarussa.

     [வன் + கனத்தம்.]

வன்கனி

வன்கனி vaṉkaṉi, பெ. (n.)

   செங்காய்; hard, unripe fruit.

     “வாயா வன்கனிக் குலமரு வோரே” (புறநா. 207);.

மறுவ. பழக்காய்.

     [வன் + கனி. குல் → கல் → கன் → கன்னி → கனி = முதிர்ந்தது, பழுத்தது.]

வன்காந்தம்

 வன்காந்தம் vaṉkāndam, பெ. (n.)

   நிலைக் காந்தம்; hard magnetic.

     [வன்மை + காந்தம்.]

வன்காய்

வன்காய் vaṉkāy, பெ. (n.)

   1. முற்றிய காய் (வின்.);; hard, woody fruit.

   2. கடுக்காய் (சங்.அக.);; chebulic myrobalan.

     [வல் வன் + காய்.]

நன்கு முற்றிய விதைக்குப் பயன்படும் காய்.

வன்காரம்

வன்காரம்1 vaṉkāram, பெ. (n.)

   வெண்காரம் (வின்.);; borаx.

     [வன் + காரம்.]

 வன்காரம்2 vaṉkāram, பெ. (n.)

   வலுக்கட்டாயம் (யாழ்.அக.);; force, compulsion.

     [வல் → வன் + காரம்.]

வன்காற்று

 வன்காற்று vaṉkāṟṟu, பெ. (n.)

   மேற்கினின்று வீசும் வெப்பமான காற்று; gust.

மறுவ. அனற்காற்று

     [வல் → வன் + காற்று.]

வலிமையாக வீசும் வெப்பக் காற்று.

வன்கிடை

வன்கிடை vaṉkiḍai, பெ. (n.)

   1. நோயாற் படுக்கையில் நீண்டகாலம் கிடக்கை (சங்.அக.);; laid down for a longtime, being bed-ridden.

   2. பதுங்கி இருத்தல் (இ.வ.);; lying-in-wait.

     [வன் + கிடை. கிடை = கிடக்கை.]

வன்கிழம்

வன்கிழம் vaṉkiḻm, பெ. (n.)

   1. வலு கிழமான —வன், வள்-து; etremely or kery old person or animal.

   2. தொண்டு படு கிழம்; extreme old age.

   3. இளந்தைப் பருவத்தில் உண்டாம் அறிவு முதிர்ச்சி (வின்.);; extreme precocity.

     [வன் + கீழ் → கிழம், கிழம் = முதுமை.]

வன்குருசு

 வன்குருசு vaṉkurusu, பெ. (n.)

   கொடிய குறுக்கு (கிருத்.);; the cruel cross.

     [வள் + குருசு.]

 E. Cross → த. குருசு.

வன்கை

வன்கை vaṉkai, பெ. (n.)

   1. வலியகை; strong, sturdy hand, as of a labourer.

     “வன்கை வினைநர்” (பதிற்றுப். 62. 76);. 2. தோற்கருவி வகை;

 a kind of drum.

     “மத்தளங் கரடிகை வன்கை” (பதினொ.திருவாலங். மூத்த. 1, 9);.

     [வல் → வன் + கை. குல் → குய் → கய் → கெய் → கை.]

வன்கைவாரம்

 வன்கைவாரம் vaṉkaivāram, பெ. (n.)

   கொடும் பழி (யாழ்.அக.);; cruel crime.

     [வன்கை + வாரம்.]

வன்கொடியன்

வன்கொடியன் vaṉkoḍiyaṉ, பெ. (n.)

   1. மிக்க கண்டிப்புள்ளவன்; very strict and harsh man.

   2. கொடியவன்; wicked and cruel man.

     [வன் + கொடியன். கொடுமை → கொடியன்.]

வன்கொடுமை

 வன்கொடுமை vaṉkoḍumai, பெ. (n.)

   கொடுங்கோன்மைச் செயல்; tyranny.

     [வன் + கொடுமை. கொடு → கொடுமை.]

 வன்கொடுமை vaṉkoḍumai, பெ. (n.)

   மிகக் கடுமையான வன்முறை, பயங்கரவாதம்; violence.

வன்கொலை

 வன்கொலை vaṉkolai, பெ. (n.)

   கடுங் கொலை (வின்.);; cruel murder.

     [வன் + கொலை. குல் → கொல் → கொலை.]

வன்சா

வன்சா1 vaṉcā, பெ. (n.)

வன்சாவு (வின்.); பார்க்க;see Van-Sāvu.

 வன்சா2 vaṉcā, பெ. (n.)

வன்சாவி (வின்.); பார்க்க;see Van-savi.

     [வல் → வன் + சாவி → சா.]

வன்சாவி

 வன்சாவி vaṉcāvi, பெ. (n.)

   மழையின்மை யாலாவது, பூச்சி வெட்டாலாவாது உண்டாம் பயிர்க்கேடு; crop failure due to dought or pest-sticken reasons.

மறுவ. பதர்

     [வன் + சாவி. சாவி = மணி பிடியாமற் பதராய்ப் போனது.]

வன்சாவு

வன்சாவு vaṉcāvu, பெ. (n.)

   1. கடுஞ்சாவு; cruel death.

   2. காலமல்லா காலத்துண்டாம் சாக்காடு; premature or untimely death.

     [வல் → வன் + சாவு.]

வன்சிரமுள்ளி

 வன்சிரமுள்ளி vaṉciramuḷḷi, பெ. (n.)

   தூண்டில் வகை (இ.வ.);; a kind of fish-hook.

     [வன் + சிரம் + முள் → முள்ளி.]

வன்சிரம்

 வன்சிரம் vaṉciram, பெ. (n.)

வஞ்சிரம் பார்க்க;see vanjiram.

     [வல்சிரம் → வன்சிரம்.]

வன்சிறை

வன்சிறை vaṉciṟai, பெ. (n.)

   1. கடுங் காவல்; strict-confinement, rigorous imprisonment.

     “வன்சிறையி லவன் வைக்கில்” (திவ். திருவாய். 1, 4, 1);.

   2. மதில் (திவா.);; fortress.

   3. கொடுமைக்கு உள்ளாக்கும் அடிமைத்தனம் (வின்.);; cruel slavery.

     [வல் → வன் + சிறை. இறு → சிறு → சிறை.]

வன்சுரம்

 வன்சுரம் vaṉcuram, பெ. (n.)

   கடுமையான சுரம்; severe fever.

     [வன் + கள் → சுர → சுரம்.]

வன்செலல்

வன்செலல் vaṉcelal, பெ. (n.)

   விரைந்து செல்லுகை; rapid movement, forced march.

     “வன்செல லத்திரி” (சீவக. 1773);.

     [வன் + செலல்.]

வன்சொல்

வன்சொல் vaṉcol, பெ. (n.)

   1. கடுஞ்சொல்; rude or harsh, word, opp. to in-sol.

   2. அறிவில்லாதவனின் மொழி; barbarious tongue:

     “வன்சொல் யவனர்” (சிலப். 28,141);.

     “எவன்கொலோ வன்சொல் வழங்கு வது” (குறள், 99);.

மறுவ. வன்மொழி

     [வன் + சொல்.]

பேராசிரியர், தமது தொல்காப்பியப் பொருளதிகார வுரையில், கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொல் (தொல்.பொருள்.273, பேரா.);.

வன்சொல் என்று. குறித்துள்ளார்.

வன்சொல் விலக்கு-தல்

வன்சொல் விலக்கு-தல் vaṉcolvilakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பேசுங்கால் கொடிய சொற்களை நீக்கிப் பேசுதல்; to abstain harsh words, while talking.

   2. பிறருக்குத் தீமை பயக்கும் சொற்களைப் பேசாதிருத்தல்; to abstrain hurting words.

     [வன்சொல் + விலக்கு.]

தண்டியலங்காரப் பழையவுரைகாரர் வன்சொல் விலக்கு பற்றிக் கூறுவது :-

     “வன்சொல் சொல்லி, விலக்குவது” (பழை.தண்டிபொரு.12);.

முதற்கண் கொடிய சொற்களைக் கூறி, அது தீமை பயத்தலால், பின்பு கூறாதொழிதலே வன்சொல் விலக்குதலாகும்.

வன்துருக்கி

 வன்துருக்கி vaṉturukki, பெ. (n.)

   கடுக்காய்; Indian or black myrobalana.

     [வன் + துருக்கி.]

வன்நெஞ்சம்

 வன்நெஞ்சம் vaṉneñjam, பெ. (n.)

   கல் போல் இறுகிய நெஞ்சம்; hard-heart.

     [வல் → வன் + நெஞ்சம்.]

வன்னக்கல்

 வன்னக்கல் vaṉṉakkal, பெ. (n.)

   மருத்துவத்துக்குப் பயன்படும் ஒரு வகைக் கல் (சங்.அக.);; a medicinal stone.

     [வன்னம் + கல்.]

வன்னக்கூர்மை

 வன்னக்கூர்மை vaṉṉakārmai, பெ. (n.)

   கல்லுப்பு; rock salt.

     [வன்னம் + கூர்மை.]

வன்னசரம்

வன்னசரம் vaṉṉasaram, பெ. (n.)

   பலவகை மணிகளால் செய்யப்பட்ட கழுத்தணி வகை; a neck ornament or a neclace, studded with various precious stones.

     “மண்மகடன் மார்பினணி வன்னசர மென்ன” (கம்பரா. வரைக்காட்சி. 13);.

     [வன்னம் + சரம்.]

வன்னசை

 வன்னசை vaṉṉasai, பெ. (n.)

   தசை நாரின் தலைப்பிலே தொடுத்திருக்கும் வயிரமுள்ள நார் போன்ற வெண்பொருள்; a hard insensible bundle of fibres by which a muscle is attached to a bone.

     [வல் → வன் → வன்னசை.]

வன்னசைநார்

 வன்னசைநார் vaṉṉasainār, பெ. (n.)

   ஒருவகைத் தசைநார்;   கபாடங்களின் அடிப்பாகங்கள் (சடர); தசைச் சுவர்களோடு இணைத்துக் கட்டுமோர் நட்பமான தசை நார்; the tenderstrings which connect the colomane carnae of the heart-Ventricles with the ventricular valves.

     [வன்னசை + நார்.]

வன்னதூலிகை

 வன்னதூலிகை vaṉṉatūligai, பெ. (n.)

   வண்ணக்கோல்; painter’s brush.

மறுவ. வட்டிகை

     [வண்ணம் → வன்னம் + தூரிகை → தூலிகை.]

வன்னத்துடரி

 வன்னத்துடரி vaṉṉattuḍari, பெ. (n.)

   ஓர் செடி; a prickly shrub as opposed to

பின்தொடரி (சா.அக.);.

     [வன்னம் + துடரி.]

வன்னப்புறா

வன்னப்புறா vaṉṉappuṟā, பெ. (n.)

   புறா வகை (பதார்த்த.909);; a kind of dove.

     [வண்ணம் → வன்னம் + புறா.]

புறவின் தசை ஈளை நோயைக் களையவல்லது என சா.அக எடுத்தியம்பும்.

     [P]

வன்னமதை

 வன்னமதை vaṉṉamadai, பெ. (n.)

   கோரோசனை; bezoar found in cattle.

வன்னம்

வன்னம்1 vaṉṉam, பெ. (n.)

   1. வண்ணம்; colour pigment.

     “அவைதாம் பளிங்கிலிட்ட வன்னம் போற் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்” (சி.போ. பா. 8, 3);.

   2. எழுத்து; letter, character.

     “மொழிகளுள் வன்னமும்” (திருக்காளத். பு. 28, 9);.

     [வண்ணம் → வன்னம்.]

 வன்னம்2 vaṉṉam, பெ. (n.)

   தங்கம் (சங்.அக.);; gold.

     [வண்ணம் → வன்னம்.]

வன்னி

வன்னி2 vaṉṉi, பெ. (n.)

   1. மாணி (பிரமசாரி); (பிங்.);; bachelor-student.

     “வன்னி நிலை முயலாதான்” (சேதுபு. பலதீ.3);.

   2. கிளி (பிங்);; parrot.

     “வன்னியுங் காற்றுங் கலந்தேறிய வெம்மதனை” (வெங்கைக் கோ.41);.

     [வண்ணம் → வண்ணி → வன்னி.]

 வன்னி vaṉṉi, பெ. (n.)

   கரகாட்டத்தை முதலில் ஆடிய இனத்தினர்; a class of people who first performed in folk dance karakattam.

     [வல்-வன்-வன்னி]

வன்னி-த்தல்

வன்னி-த்தல் vaṉṉittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வண்ணம் வைத்தல்; to paint.

   2. வருணித்தல்; to describe.

     [வண்ணி → வன்னி.]

வன்னிகருப்பம்

வன்னிகருப்பம் vaṉṉigaruppam, பெ. (n.)

   1. மூங்கில் (மலை.);; spiny bamboo.

   2. நஞ்சு (சங்.அக.);; a mineral poison.

     [வன்னி + கருப்பம்.]

வன்னிகர்

 வன்னிகர் vaṉṉigar, பெ. (n.)

வன்னிகா (சங்.அக.); பார்க்க;see vanniga.

வன்னிகர்ப்பன்

 வன்னிகர்ப்பன் vaṉṉigarppaṉ, பெ. (n.)

   முருகக்கடவுள் (வின்.);; Lord Murugan.

     [வன்னி + கர்ப்பன்.]

வன்னிகற்பம்

வன்னிகற்பம் vaṉṉigaṟpam, பெ. (n.)

   1. ஒரு வகை நஞ்சு; a kind of arsenic

   2. இதளியக்கட்டு (இலிங்கக் கட்டு);; consolidated cinna bar.

   3. உலாந்த இதளியம் (லிங்கம்);; cinnabar of Holland.

   4. சடைக்கஞ்சா; Kanja.

     [வன்னி + கற்பம்.]

வன்னிகா

வன்னிகா vaṉṉikā, பெ. (n.)

   1. பூடு வகை; wild long pepper

   2. பொடுதலை (மூ.அ.);; a prostate plant – Lippia modiflora.

     [வன்னி → வன்னிகா.]

வன்னிகுன்மம்

 வன்னிகுன்மம் vaṉṉiguṉmam, பெ. (n.)

   வயிற்று நோய்; a variety of gunma disease – Dyspepsia.

     [வன்னி + குன்மம். குன்மம் = செரிமான மின்மை, வயிற்றுவலி முதலியன காணும் வயிற்று நோய்.]

வன்னிகுருத்துவேலன்

 வன்னிகுருத்துவேலன் vaṉṉiguruttuvēlaṉ, பெ. (n.)

   சீமை முள்வேல்; a tree Acacia ferruginca.

     [வன்னி + குருத்துவேலன். குருத்துவேலன் =

வன்னிகெற்பம்

 வன்னிகெற்பம் vaṉṉigeṟpam, பெ. (n.)

   இலிங்கக்கட்டு; consolidated cinnabar.

     [வன்னிகற்பம் → வன்னிகெற்பம்.]

வன்னிகை

வன்னிகை1 vaṉṉigai, பெ. (n.)

   பொடுதலை; a prostate plant-Lippia Nodiflora.

 வன்னிகை2 vaṉṉigai, பெ. (n.)

   எழுதுகோல்; pen, pencil.

     “புத்தகமு. ஞானத்து முத்திரையும்…….. வன்னிகையும்” (பாரத வெண்.துதி);.

வன்னிக்காசிகம்

 வன்னிக்காசிகம் vaṉṉiggācigam, பெ. (n.)

   முள்ளுக்கத்தரி; a thorny brinjal.

வன்னிக்காய்

 வன்னிக்காய் vaṉṉikkāy, பெ. (n.)

   கடுக்காய்; chebulic myrobalan.

     [வன்னி + காய். கா → காய்.]

வன்னிக்காரம்

வன்னிக்காரம் vaṉṉikkāram, பெ. (n.)

   அக்கிரா காரம்; a flowering tree of North Africa-Anacyclus Pyrethrum.

     [வன்னி + காரம்.]

குல் = முளைத்தல், தோன்றுதல்.

குல் → கில் → கீல் → கீர் → கீரை.

   48 வகைக் கீரை வகைகளுள் ஒன்று.

வன்னிக்கீரை

 வன்னிக்கீரை vaṉṉikārai, பெ. (n.)

   முள்ளிக் கீரை; a vegetable greens.

     [வன்னி + கீரை.]

வன்னிக்குத்தி

 வன்னிக்குத்தி vaṉṉikkutti, பெ. (n.)

வன்னிக்குத்திமறவன் பார்க்க;see vanni-k-kutti-maravan.

     [வன்னி + குத்தி.]

வன்னிக்குத்திமறவன்

வன்னிக்குத்திமறவன் vaṉṉikkuttimaṟavaṉ, பெ. (n.)

   மறவருள் ஒரு பிரிவு (E.T.V.32);; a sub-sect of Maravas.

     [வன்னிக்குத்தி + மறவன்.]

வன்னிசகாயன்

வன்னிசகாயன் vaṉṉisakāyaṉ, பெ. (n.)

   காற்று கடவுள்; wind-god.

     “வன்னி சகாய நின்மைந்தன்” (உத்தரரா. அனுமப். 40);.

     [வன்னி + Skt. சகாயன்.]

வன்னிசிகரம்

 வன்னிசிகரம் vaṉṉisigaram, பெ. (n.)

   சேவற்சூடு; cock’s comb.

     [வன்னி + Skt. சிகரம்.]

வன்னிசுரம்

 வன்னிசுரம் vaṉṉisuram, பெ. (n.)

   நெருப்பன்ன சுரம், கொடிய சுரம்; virulent or severe fever.

     [வன்னி + சுரம்.]

வன்னித்தீ

 வன்னித்தீ vaṉṉittī, பெ. (n.)

   நவச்சாரம் (சங்.அக.);; sal ammoniac.

வன்னிமை

 வன்னிமை vaṉṉimai, பெ. (n.)

   குறும் பரசாட்சி (வின்.);; petty chieftainship, as of one belonging to the vampiya caste.

     [வல் → வன் → வன்னி → வன்னிமை.]

வன்னியடுப்பேற்றல்

 வன்னியடுப்பேற்றல் vaṉṉiyaḍuppēṟṟal, தொ.பெ. (vbl.n.)

   தீ மூட்டல்; setting fire.

     [வன்னி + அடுப்பேற்றல்.]

வன்னியன்

வன்னியன் vaṉṉiyaṉ, பெ. (n.)

   1. ஓர் இனம் (G.Tp.D.I.110);; a caste.

   2. சாமந்தன்; feudtory prince, commander.

   3. கள்ளர், வலையர் முதலிய சில இனத்தாரின் பட்டப் பெயர் (E.T.vii, 321);; caste title among certain castes, as the kallar, Valaiyar etc.

     [வல் → வன் → வன்னி → வன்னியன்.]

சோழர் காலப் படையில், வலங்கைப் படைப் பிரிவிலிருந்து இடங்கைப் படையினருக்கு இன்னல் தந்தவரென்று (கல்வெட்டறிக்கை எண்.1913-34வது அறிக்கை); கல்வெட்டறிக்கை கூறுகிறது.

வன்னியமறு-த்தல்

வன்னியமறு-த்தல் vaṉṉiyamaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சிற்றரசரை அழித்தல்; to destroy or subdue petty chieftains.

     “வன்னிய மறுத்திருப்பதொரு குடி” (ஈடு. 5. 10. பிர);.

     [வன்னியம் + அறு-, அறுதல் (த.வி.); → அறுத்தல் (பி.வி);.]

வன்னியம்

வன்னியம்1 vaṉṉiyam, பெ. (n.)

   வரணிக்கப்பட்டது (சங்.அக.);; that which is described.

     [வண்ணியம் → வன்னியம்.]

 வன்னியம்2 vaṉṉiyam, பெ. (n.)

   1. குறும்பரசரின் தன்மை; nature or characteristics of a petty chieftain.

   2. உரிமை; liberty, freedom.

     “இரண்டுக்குஞ் சேர வன்னிய மில்லை யிறே” (ஈடு. 7, 7, 3.);. பகைமை (ஈடு.7.3. ஜீ);;

 enmity.

     [வல் → வன் → வன்னி + இயம்.]

வன்னியராயன்

வன்னியராயன் vaṉṉiyarāyaṉ, பெ. (n.)

   ஊரகத் தெய்வம்; a village deity.

     “வன்னியராயா….. வரும் பன்றிமாடா” (ஈடு. 5, 10 பிர);.

     [வன்னியம் + அரையன் → ராயன்.]

ஒ.நோ. அரைசன் → ராசன்

வன்னியவலையன்

வன்னியவலையன் vaṉṉiyavalaiyaṉ, பெ. (n.)

   வலையர் இனத்துள் ஒரு பிரிவு (G.Tp. D.I.114);; a sub-sect of the valaiya caste.

     [வன்னியம் + வலையன்.]

வன்னியா

 வன்னியா vaṉṉiyā, பெ. (n.)

இரும்பிலி:

 a small tree-Maba buxifolia.

வன்னியிடல்

 வன்னியிடல் vaṉṉiyiḍal, பெ. (n.)

   தீயிடல்; to set fire.

     [வன்னி + இடல்.]

வன்னியின் கெற்பம்

 வன்னியின் கெற்பம் vaṉṉiyiṉkeṟpam, பெ. (n.)

   ஒருவகை நஞ்சு; a kind of arsenic.

     [வன்னியின் + கெற்பம்.]

வன்னிரேதா

வன்னிரேதா vaṉṉirētā, பெ. (n.)

   சிவ பெருமான்; Siva.

     “ஈசானன் வன்னிரேதா நற்சத்தியன்” (காஞ்சிப்பு. சனற். 22);.

வன்னிலம்

 வன்னிலம் vaṉṉilam, பெ. (n.)

   முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி நிலம்; hard, rocky soil.

மறுவ. கல்லாங்குத்து, கன்னிலம், வன்பார்.

     [வல் → வன் + நிலம்.]

வன்னிலோகம்

 வன்னிலோகம் vaṉṉilōkam, பெ. (n.)

   செம்பு (யாழ்.அக.);; copper.

     [வன்னி + Skt loha → த. உலோகம்.]

வன்னிவகன்

வன்னிவகன் vaṉṉivagaṉ, பெ. (n.)

   காற்று; wind, as the vehicle of fire.

     “தென்றலே……. வன்னி வகனாயினை” (சரபேந்தி ரகுறவஞ்சி. 27, 7);.

வன்னிவண்ணம்

வன்னிவண்ணம் vaṉṉivaṇṇam, பெ. (n.)

   1. செந்தாமரை (மலை.);; red lotus.

   2. செவ்வாம்பல் (யாழ்.அக.);; re Indian water-lily.

     [வன்னி + வண்ணம்.]

வன்னிவாகை

 வன்னிவாகை vaṉṉivākai, பெ. (n.)

   கருவாகை; fragrant acacia tree-Abizzia Odoratissium.

     [வன்னி + வாகை.]

வன்னிவீசம்

 வன்னிவீசம் vaṉṉivīcam, பெ. (n.)

   பொன் (யாழ்.அக.);; gold.

     [வன்னி + வீசம்.]

வன்னிவெள்ளம்

 வன்னிவெள்ளம் vaṉṉiveḷḷam, பெ. (n.)

   வடதிசையிலிருந்து, தென் கிழக்குத் திசைநோக்கிய கடல் நீரோட்டம்; the oceanic stream running from north to south east direction under the sea.

     [வன்னி + வெள்ளம்.]

வன்னீர்

 வன்னீர் vaṉṉīr, பெ. (n.)

   உவர் நீர்; breach water.

     [உவர்நீர் → உவநீர் → வந்நீர் → வன்னீர்.]

வன்னெஞ்சு

 வன்னெஞ்சு vaṉṉeñju, பெ. (n.)

   கடுமையான மனம் (வின்.);; hard heart, iron-hearted man.

     [வல் → வன் + நெஞ்சு.]

வன்னெத்து

 வன்னெத்து vaṉṉettu, பெ. (n.)

   நத்தைச் சுண்டி; bristly button weed, shaggy button weed – Spermacoce hispida (சா.அக.);.

வன்னெற்று

 வன்னெற்று vaṉṉeṟṟu, பெ. (n.)

   நத்தைச்சூரி (மலை.);; bristly button weed.

     [வல் → வன் + நெற்று – வன்னெற்று.]

வன்னெல்

 வன்னெல் vaṉṉel, பெ. (n.)

   நென்மணி (யாழ்.அக.);; fully grown or ripe paddy.

மறுவ. காய்நெல்

     [வன் + நெல்.]

வன்பகை

 வன்பகை vaṉpagai, பெ. (n.)

   கடுமையான பகை (வின்.);; deep enmity, implacable hatred.

     [வன் + பகை.]

வன்பரணர்

வன்பரணர் vaṉparaṇar, பெ. (n.)

   கழகக் காலப்புலவர்; an ancient sangam poet.

     [வன் + பரணர்.]

பரணர், நெடுங்கழுத்துப் பரணர் என்று இரு புலவர்கள் உள்ளமையால்,

     ‘வன்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கண்டீரக் கோப்பெருநள்ளி, வல்வில் ஓரி போன்றோரைக் குறித்துப் பாடியுள்ளார். புறநானூற்றில் 148, 149, 150, 152 மற்றும் 153 ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றியதாக நற்றிணையில் 374-ஆம் பாடலை கூறுவர்.

வன்பரணர் பாடிய புறநானூற்றிலுள்ள 149ஆம் பாடல் வருமாறு :-

     “நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி

வரவெமர் மறந்தனர். அதுநீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யானே” (புறநா.149);.

நள்ளியைப் பாடும்போது,

     “நீ வேண்டியவற்றை யெல்லாம் எனக் களித்துவிட்டதனால், இனி என்னுடைய நா, பிற அரசர்களைப் போற்றிப் பாடாது” (புறம்.148); என்கிறார்.

     “பெருஞ் செல்வம் நீ யளிக்கப் பெற்றனராதலால், எம்மவராகிய பாணர் மாலை மருதம் பண்ணியும், காலைச் செவ்வழி பண்ணியும் பாடும் முறையையும் மறந்தனர்” (புறம்.149, 153); என்கின்றார்.

நள்ளி தன்னை யாரென்று புலப்படுத்தாமலே, உணவும் அணிகலனும் அளித்துச் சென்ற சிறப்பை, இவர் கூறும் அழகு, தனிச் சிறப்புடையது (புறம்.150);. வல்வில் ஒரியின் வில்லாண்மையை இவர் பாராட்டியிருப்பது, இராமன் மராமரம் ஏழினையும் ஒரம்பினால் துளைத்ததை நினைவூட்டுகிறது (புறம்.152);. இவர் பாடிய வேறு செய்யுள் : புறம் 255.

பரணர் பாடியனவோ, இவர் பாடியனவோ என ஐயுறும்படி வேறுபாடுடைய செய்யுட்கள் புறம்.144, 145, நற்.374.

வன்பா-தல்

வன்பா-தல் vaṉpātal,    6 செ.கு.வி. (v.i.)

   கடினமாதல்; to become hard.

     “வன்பாயிருப்பது பிறிதில்லை” (குறள். 1063, மணக்);.

     [வல் → வன் → வன்பு + ஆ-, வல் = கடினத் தன்மை குறித்த முதனிலை.]

வன்பாடு

வன்பாடு vaṉpāṭu, பெ. (n.)

   1. வலிய தன்மை; strength, hardness.

   2. முருட்டுத் தன்மை; rudeness, effrontery.

     “இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்” (குறள், 1063);.

     [வன் + பாடு.]

வன்பாடு குறித்துப் பரிமேலழகர் வரையறுத்துள்ளது வருமாறு :-

     “முருட்டுத்தன்மை;

அஃதாவது ஓராது செய்து நிற்றல்” (குறள், 1063);.

வன்பாட்டம்

வன்பாட்டம் vaṉpāṭṭam, பெ. (n.)

   தீய்வு, கரிவு காலத்திலும் குறையாமல் அளக்க வேண்டிய குத்தகை நெல்; fixed rent in kind of paddy due under a lease-deed which does not provide for any relief or remission against unforeseen loss due to drought.

     “பதினறு கலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும்” (S.I.I.V.90);.

     [வன் + பாட்டம்.]

வன்பார்

வன்பார் vaṉpār, பெ. (n.)

   இறுகிய பாறை நிலம் (குறள், 78. உரை);; hard, rocky soil.

     [வல் → வன் + பார்.]

வன்புறு-த்தல்

வன்புறு-த்தல் vaṉpuṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல்; to assure, comfort, as the lover to his beloved.

     “கிழவன், வன்புறுத் தல்லது சேற வில்லை” (தொல். பொருள். 184);.

     [வன்பு + உறு-, உல் → உறு-.]

வன்புறை

வன்புறை vaṉpuṟai, பெ. (n.)

   1. தலைவன், தலைவியை ஆற்றி வற்புறுத்துகை; assurance, comfort, given by a lover to his beloved.

     “வன்புறை குறித்தல்” (தொல். பொருள். 185);.

   2. தலைவன் பிரிவின் கண், வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை (இறை. 53);; theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero.

   3. வற்புறுத்திச் சொல்பவன்; assures, comforter.

     “வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த” (பெருங். வத்தவ. 6, 10);.

     [வன்புறு → வன்புறை.]

     “வன்புறையென்பது வற்புறுத்துவது” (இறை.2); என்று, இறையனார் களவியலுரை இயம்பும்.

வன்புறையெதிரழிதல்

வன்புறையெதிரழிதல் vaṉpuṟaiyediraḻidal, பெ. (n.)

   தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின், தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை; theme describing the woes of a heroine in her loneliness after her loves has consoled and left her.

     “வன்புறை யெதிரழிந்தாட்குத் தோழி….. கூறியது” (கலித். 28, துறை);.

     [வன்புறை + எதிரழிதல்.]

வன்புற்று

வன்புற்று vaṉpuṟṟu, பெ. (n.)

   அரைநெறி வீங்கி, அரையாப்புக் கட்டியைபோற் காணப்படும் ஓர் வகைப் பிளவை; a hard tumour usually proceeding from the induration of a gland often terminating in a cancer – Scirrhous.

     [வள் + புற்று.]

புல் → புற்று (வே.க.107);.

வன்புற்று = உட்டுளையுள்ள புண்.

வன்பொறை

 வன்பொறை vaṉpoṟai, பெ. (n.)

   பெரும்பாரம் (வின்.);; heavy burden, ponderous weight.

     [வல் → வன் + பொறை.]

வன்மத்தானம்

வன்மத்தானம் vaṉmattāṉam, பெ. (n.)

வன்மம்2 (வின்); பார்க்க;see vanmam.

     [வன்மம்2 + skt. sthana → த. தானம்.]

வன்மனம்

 வன்மனம் vaṉmaṉam, பெ. (n.)

   கன்னெஞ்சு (வின்.);; hard heart, iron-hearted conscience.

     [வல் → வன் + முன்னம் → முனம் → மனம்.]

வன்மம்

வன்மம்1 vaṉmam, பெ. (n.)

   1. தீராப்பகை; malice, grudge, spite.

     “வன்மக்களி யானை மன்” (நள. கலிநீங்கு. 58);.

   2. வலி; force.

     “மார்பின்…. கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு” (கம்பரா. அதிகா. 228);.

   3. உறுதிமொழி; vow, assurance.

     [வல் → வன் → வன்-மை → வன்மம்.]

 வன்மம்2 vaṉmam, பெ. (n.)

   1. மறைவான உறுப்பு (வின்.);; vital part of the body.

   2. பலரறியச் சொல்லக்கூடாத, கமுக்கமான சொல்; confidential words that should not be ultered in the presence of all, words that must be spoken in secret atmosphere.

     “வன்மமே சொல்லி யெம்மை நீ விளையாடுதி” (திவ்.திருவாய். 6,2,7);.

     [மருமம் → வருமம் → வன்மம்.]

வன்மரம்

வன்மரம் vaṉmaram, பெ. (n.)

   1. அகக் காழுள்ள மரம் (திவா.);; exogenous plant.

   2. புரசு மரம் (வின்.);; East Indian satinwood.

     [வல் → வன் + மரம்.]

வன்மரை

வன்மரை vaṉmarai, பெ. (n.)

   புரசு மரம் (வின்.);; East Indian satin-wood.

     “வன்மரை யென்னு மரமேயுற்று” (S.I.I.iii, 408);.

     [வன்மரம் → வன்மரை.]

வன்மலைத்தங்கம்

 வன்மலைத்தங்கம் vaṉmalaittaṅgam, பெ. (n.)

   ஒரு வகைக் கல்;   திருமால் உருவமாகக் கொண்டு வழிபடுதற்குரியதும் கண்டகியாற்றில் எடுக்கப்படுவதுமான கல்; a species of ammonite yellow in colour commonly found in the Gandagi river.

     [வன்மலை + தங்கம்.]

வன்மா

வன்மா vaṉmā, பெ. (n.)

   1. வன்மான் பார்க்க;see van-man.

   2. பரி (குதிரை; horse.

     “தாமரையை வன்மா வெனக் கொண்ட” (திருநூற். 35);.

     [வல் → வன் + மா.]

வன்மான்

வன்மான் vaṉmāṉ, பெ. (n.)

   அரிமா (சிங்கம்);; lion.

     “வன் மானுகைத்த கொடி” (தக்கயாகப். 75);.

     [வல் → வன் + மான்.]

வன்மி

வன்மி1 vaṉmittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. கன்னெஞ்சு படைத்தல்; to be hardhearted.

   2. தீராப்பகை காட்டுதல்; to bear malice.

   3. ஆணைசெய்தல்; to make a vow or promise.

   4. மரம் காழ் கொள்ளுதல்; to be indurated, as trees.

     [வன்மம் → வன்மி.]

 வன்மி2 vaṉmi, பெ. (n.)

   தீய எண்ணம் கொண்டவன்; spiteful person, evil-minded man.

     “காயிபாசெனுமோர் வன்மி” (இரக்ஷணி.பக்.51);.

வன்மீகரோகம்

 வன்மீகரோகம் vaṉmīkarōkam, பெ. (n.)

   ஒருவகை உடல் வீக்க நோய் (இ.வ.);; swelling in the neck, chest or other part of the body;elephantias’s or filariasis.

     [வன்மீகம் + ரோகம்.]

 Skt. rõga → த. ரோகம்.

வன்மீனம்

வன்மீனம் vaṉmīṉam, பெ. (n.)

வன்மீன் பார்க்க;see van-min.

     “ஒரு வன்மீன நீரிடைநின்று” (காஞ்சிப்பு. புண்ணிய. 11);.

     [வல் → வன் + மீனம்.]

வன்மீன்

வன்மீன் vaṉmīṉ, பெ. (n.)

   முதலை (பிங்.);; crocodile.

     “மிடைந்து வன்மீனுயிர் கவர” (பிரமோத். 6, 35);.

     [வல் → வன் + மீன்.]

     [P]

வன்முறை

 வன்முறை vaṉmuṟai, பெ. (n.)

   உயிருக்கும் உடைமைக்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் முறை; violence.

     ‘மாணவர்களை வன்முறைக்குத் துண்டுபவர்களை தண்டிக்க வேண்டும்’.

மறுவ. வலாற்காரம்

     [வல் → வன் + முறை.]

 வன்முறை vaṉmuṟai, பெ. (n.)

   வல்லந்தமான கொடுமை, தீவிரவாதம்; terrorism.

வன்மை

வன்மை vaṉmai, பெ. (n.)

   1. வலிமை; strength.

     “வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” (குறள், 153);.

   2. கடினம் (வின்.);; hardness.

   3. வன்சொல் பார்க்க;see van-sol.

     “மற்று நீ வன்மை பேசி” (பெரியபு. தடுத்தாட். 70);.

   4. ஆற்றல் (வின்.);; adopt, skill, ability.

   5. வலாற்காரம் (வின்.);; force, violence.

   6. சொல்லழுத்தம் (வின்.);; accent, emphasis, stress.

   7. சினம்; anger, fury.

     “வாங்கினன் சீதையை யென்னும் வன்மையால்” (கம்பரா. முதற்போ. 108);.

   8. கருத்து (திவா.);; opinion, thought, attention.

   9. வல்லெழுத்து; hard consonant.

     “உரம் பெறும் வன்மை” (நன்.75);.

     [வல் → வன் → வன்-மை.]

வன்மொழி

வன்மொழி vaṉmoḻi, பெ. (n.)

வன்சொல்1 (வின்.); பார்க்க;see van-sol1.

மறுவ. கடுஞ்சொல்

     [வன்-மை + மொழி.]

வன்றி

வன்றி vaṉṟi, பெ. (n.)

   பன்றி; swine, hog, pig.

     “வன்றி படர்ந்த வழி” (தொல். பொருள். 102. உரை);.

க. கன்டி

     [வல் → வன் → வன்றி.]

வன்றிசை

வன்றிசை vaṉṟisai, பெ. (n.)

   வடதிசை; north, direction.

     “வன்றிசைக் காளிதாசன் வடமொழி” (இரகுபாயிர.8);.

     [வன் + திசை.]

வன்றொடர்க்குற்றியலுகரம்

வன்றொடர்க்குற்றியலுகரம் vaṉṟoḍargguṟṟiyalugaram, பெ. (n.)

   வல்லெழுத் தடுத்துத் தொடரப்பெற்ற குற்றியலுகரம் (நன். 94);; the shortened vowel u of a vowel consonant following a hard consonant.

     [வன்தொடர் + குற்றியலுகரம்.]

வன்றொண்டன்

வன்றொண்டன் vaṉṟoṇṭaṉ, பெ. (n.)

   எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவரும், தேவார ஆசிரியர் மூவருள் ஒருவரும், நாயன்மார் அறுபத்து மூவருள் சிவப்பிராமணருமான சிவனடியார்; a canonized adi-Saiva saint, probably of the 8th C. one of three Téváram hymnists, one of 63.

     “நாவலூராளி நம்பி வன்றொண்டன்” (தேவா. 942, 10);.

மறுவ. சடையன், தம்பிரான்தோழர், நாவலர் கோன்.

     [வன் + தொண்டன்.]

இறைவனுடன் பூண்ட தோழமை நெறியைத் தமது வாழ்விலும் இணைத்து ஒழுகிய கரணியத்தால் நம்பியாரூர் வன்தொண்டர் என்று வழங்கப் பெற்றார்.

வபபவனம்

 வபபவனம் vababavaṉam, பெ. (n.)

   தொட்டி நஞ்சு; a kind of arsenic.

வப்புகாரம்

 வப்புகாரம் vappukāram, பெ. (n.)

   ஒரு மருந்து வகை; a kind of medicine.

வப்புக்கல்

 வப்புக்கல் vappukkal, பெ. (n.)

   செம்பாறைக் கல்; gravel stone.

வமனி

வமனி vamaṉi, பெ. (n.)

   1. அட்டை (சங்.அக.);; leech.

   2. பருத்திச்செடி; cotton plant.

வமிசம்

வமிசம் vamisam, பெ. (n.)

   1. குலம்; race, imeage, descent, family.

   2. மூங்கில்; bamboo.

   3. வேய்ங்குழல்; flute pipe.

     [Skt. {} → த. வமிசம்]

வமிசரோசனை

 வமிசரோசனை vamisarōsaṉai, பெ. (n.)

   மூங்கிலுப்பு; bamboo-salt.

     [வமிசம் + ரோசனை.]

வமிசாவளி

 வமிசாவளி vamicāvaḷi, பெ. (n.)

   கொடி வழி உறவின் முறையைத் தெரிவிக்கும் அட்டவணை; genealogical tree.

     [Skt. {} → த. வமிசாவளி]

வமைச்சு

 வமைச்சு vamaiccu, பெ. (n.)

   இளமை (அக.நி.);; youth.

வம்பக்கோட்டி

வம்பக்கோட்டி vambakāṭṭi, பெ. (n.)

   பயனிற் சொல் பாராட்டுங் கூட்டம்; assembly of men indulging in vain or idle and aimless talk, blabbering crowd.

     “வட்டுஞ் சூதும் வம்பக் கோட்டியும்” (மணிமே.14, 63);.

     [வம்பு1 + கோட்டி2.]

வம்படி

வம்படி1 vambaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வீண்சொல் பேசுதல்; indulge in idle talk or unnecessary talk.

   2. இன்பமொழி பேசுதல்; to indulge in wanton talk.

   3. தீதுரைத்தல்; to speak evil.

   4. பழித்துப் பேசுதல்; to talk disparagingly.

     [வம்பு + அடி.]

 வம்படி2 vambaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. இழித்துப் பழிதூற்றுதல் (கொ.வ.);; to slander, to throw mud with evil words.

   2. தீங்கு செய்தல்; to do harm.

     [வம்பு + அடி.]

வம்பன்

வம்பன் vambaṉ, பெ. (n.)

   1. பயனற்றவன்; worthless person.

     “வம்பனாய்த் திரிவேனை” (திருவாச. 42, 9);.

   2. வம்பளப்போன்; gossipmonger.

   3. தீய நடத்தையாளன் (யாழ்.அக.);; mischievous, wanton person, bad fellow.

   4. முறை கேடாகப் பிறந்தவன் (யாழ்.அக.);; illegitimate son.

தெ. வம்பு

     [வன்பு → வம்பு1 → வம்பன்.]

வம்பப்பரத்தர்

வம்பப்பரத்தர் vambapparattar, பெ. (n.)

   பெண்கள் பலரின், சிற்றின்ப புதிய நுகர்ச்சியை விரும்புங் காமுகன்; lascivious men who are ever after fresh victims for their lust.

     “வறுமொழியாளரொடு வம்பப்பரத்தரொடு” (சிலப். 16, 63);.

வம்பப்பரத்தை

வம்பப்பரத்தை vambapparattai, பெ. (n.)

   கழிகாமத்தையுடைய விலைமகள்; lustful mistress or prostitute or harlot.

     “வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு….. குறுகினர்” (சிலம். 10, 219);.

     [வம்பு + பரத்தை. பரத்தர் (ஆ.பா); → பரத்தை (பெ.பா.);.]

வம்பமாக்கள்

வம்பமாக்கள் vambamākkaḷ, பெ. (n.)

   புதியோர், வெளிநாட்டவர்; immigrants, newcomers, strangers, foreigners.

     “வம்பமாக்கள்…… கட்போருளரெனில்” (சிலப். 5, 111);.

     [வம்பு1 + மாக்கள்.]

வம்பமாந்தர்

வம்பமாந்தர் vambamāndar, பெ. (n.)

   1. வம்பமாக்கள் பார்க்க;see vambamakkal.

   2. ஒரு கூட்டத்திலுஞ் சேராத மக்கள் (சிலப். 16, 63, அரும்.);; nondescript persons.

     [வம்பு1 + மாந்தர்.]

வம்பமாரி

வம்பமாரி vambamāri, பெ. (n.)

   காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை; unseasonal rains.

     “வம்பமாரியைக் காரென மதித்தே” (குறுந். 66);.

     [வம்பு1 + மாரி.]

வம்பம்

 வம்பம் vambam, பெ. (n.)

   சாலங்க வைப்பு நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

வம்பரத்தை

 வம்பரத்தை vambarattai, பெ. (n.)

   பருத்தி; cotton – Gossypium herbaceum.

வம்பலன்

வம்பலன் vambalaṉ, பெ. (n.)

   1. புதியோன்; new comer, stranger, unknown person.

     “வம்பலர் துள்ளுநர்க் காண்மார்” (கலித். 3);.

   2. வழிப்போக்கன்; wayfarer, a gypsy or traveler.

     “வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்” (புறநா. 230);.

   3. அயலான்; neighbour, alien.

     “வம்பலன் றன்னொடு வைகிரு ளொழியாள்” (மணிமே. 20 88);.

     [வம்பு1 → வம்பலன்.]

வம்பலாட்டம்

 வம்பலாட்டம் vambalāṭṭam, பெ. (n.)

   குழப்பம் (இ.வ.);; confusion, complication, perplexity, puzzlement.

     [வன்பு → வம்பு → வம்பல் + ஆட்டம்.]

வம்பல்

 வம்பல் vambal, பெ. (n.)

   திசை (பிங்.);; region, point of the compass.

தெ. வம்பு.

வம்பள

வம்பள1 vambaḷattal,    3 செ.கு.வி. (v.i.)

வம்படி-, 1, 2, 3, 4 பார்க்க;see vambadi.

     [வன்பு → வம்பு1 + அள.]

 வம்பள2 vambaḷattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   பொல்லாங்குரைத்தல்; to slander, to talk evil.

     “அன்னை மாரென்னை வாய் வம்பளக்கின்றதே” (அஷ்டப்.அழகரந். 70);.

     [வம்பு1 + அள.]

வம்பாடு

 வம்பாடு vambāṭu, பெ. (n.)

   கடின உழைப்பு; hard tireless effort.

மறுவ. அரும்பாடு

     [வன்பாடு → வம்பாடு.]

வம்பாநிலம்

 வம்பாநிலம் vambānilam, பெ. (n.)

   கடற்கரையை யடுத்த நன்செய்நிலம் (C.G.);; arable wet land adjacent to the sea.

வம்பி

வம்பி1 vambi, பெ. (n.)

   1. பயனற்றவள்; worthless or useless woman.

   2. வம்பளப்பவள்; gossip-monger.

   3. கெட்ட நடத்தையுள்ளவள்; mischievous, wanton woman.

   4. முறைகேடாகப் பிறந்தவள்; illegitimate daughter.

     [வம்பன் → வம்பி.]

 வம்பி2 vambi, பெ. (n.)

   கருவண்டு (யாழ்.அக.);; black bee.

வம்பு

வம்பு1 vambu, பெ. (n.)

   1. புதுமை (பிங்.);; newness, novelty.

     “வம்பப் பதுக்கை” (புறநா.3);.

   2. நிலையின்மை; instability.

     “வம்புநிலை யின்மை” (தொல்.சொல். 327);.

   3. பயனிலாமை, மதிப்பின்மை; uselessness;

 worthlessness, dishonour.

     “வம்பு பழுத்து” (திருவாச. 40, 6);.

   4. வீண் பேச்சு (கொ.வ.);; idle-talk;

 gossip.

   5. பழிமொழி; scandal.

     “ஊரார் புகல் வம்பே” (வெங்கைக்க.18);,

   6. தீச்சொல்; evil word.

     “வெறிதே வம்புரைத்தனை” (கந்தபு. சூரன்வதை. 157);.

   7. படிறு (பிங்.);; falsity, untruthfulness.

   8. சிற்றொழுக்கம் (நாமதீப.650);; base conduct.

   9. இழிச்சொல் (யாழ்.அக.);; indecent language.

   10. வஞ்சனை (பிங்.);; deceit, slyness.

   11. காமக் களியாட்டம்; wanton act;

 dalliance.

     “அவளொடு வம்பு பண்ணினான்”.

   12. சண்டை; quarrel.

     “அவன் ஒருவரோடும் வம்புக்குப் போகிறதில்லை”.

   13. வம்பமாரி பார்க்க;see vamba-māri.

     “வம்பார் சிலம்பா” (திருக்கோ.159);.

   14. வம்புக்காய் பார்க்க;see vambu-k-kāy.

   15. வம்புப் பிள்ளை (யாழ்ப்.); பார்க்க;see vambu-ppillai.

   16. உவமை; comparison, similitude.

     “வம்பிறு சிவனிடத்து” (ஞானா. 68, 12);.

   17. அரைக் கச்சு; girdle, belt for the waist.

     “வம்புடை யொள்வாண் மறவர்” (பு.வெ.6, 24);.

   18. யானைக்கச்சு; girth of an elephant.

     “வம்பணி யானை” (புறநா. 37);.

   19. முலைக் கச்சு (பிங்.);; stays for woman’s breast.

     “வம்புடைக் கண்ணுருத் தெழுதரு முலை” (அகநா.150);.

   20. கையுறை; glove.

     “வம்புகளை வறியாச் சுற்றம்” (பதிற்றும்.19.9);.

   21. மேற்போர்வை (அரு.நி.);; upper garment.

   22. மிடா (யாழ்.அக.);; a big earthen vessel.

     “வம்பைச் சமைத்து வடிவுகண்டு” (கூளப்ப. 193);.

 வம்பு2 vambu, பெ. (n.)

   நறுமணம்; smell, fragrance.

     “வம்பறா வரிவண்டு” (தேவா. 737:5);.

 வம்பு3 vambu, பெ. (n.)

   1. பல்லக்கின் வளை கொம்பு (இ.வ.);; curved bamboo-pole of a Palanquin.

   2. புரசமரம்; satin wood.

   3. கலப்பை, வண்டியிவற்றின் நுகங்கொளுவும் உறுப்பு; shaft, as of a plough or of a carriage; thill.

   தெ. வம்பு;க. பம்பு.

     [வள் → வட்கு → வக்கு → வங்கு → வம்பு. வம்பு = வளைவு (ஒ.நோ.); தீங்கு → தீம்பு.]

வம்புக்கச்சேரி

 வம்புக்கச்சேரி vambukkaccēri, பெ. (n.)

   வம்பளந்து, வீண்பேச்சுப் பேசிப் பொழுது போக்கும் கூட்டம்; gossiping crowd, company gathered for idle talk, blabbers.

     [வம்பு + U. kacceri → த. கச்சேரி.]

வம்புக்காய்

 வம்புக்காய் vambukkāy, பெ. (n.)

   பருவந் தப்பிக் காய்க்குங் காய் (யாழ்.அக.);; fruit growing out of season.

     [வம்பு + காய்.]

வம்புச்சண்டை

 வம்புச்சண்டை vambuccaṇṭai, பெ. (n.)

   வலியச் சென்று ஏற்படுத்தும் சண்டை; quarrel which one picks up wontonly.

வம்புச் சண்டைக்குப் போகாதே வந்த சண்டையை விடாதே (பழ.);.

     [வன்பு → வம்பு + சண்டை.]

வம்புதும்பு

வம்புதும்பு1 vambudumbu, பெ. (n.)

   வீண் வம்பு; unnecessary interference.

     ‘அவன் யாருடைய வம்புதும்புக்கும் போக மாட்டான்” (மரபிணைமொழி);.

 வம்புதும்பு2 vambudumbu, பெ. (n.)

   1. வீண் பழிச்சொல்; scandal and gossip.

   2. மதிப்புரவற்ற சொல் (வின்.);; ribaldry.

   3. குறும்புத்தனம் (இ.வ.);; mischief.

     [வம்பு1 + தும்பு1.]

வம்புத்தனம்

வம்புத்தனம் vambuttaṉam, பெ. (n.)

   1. குறும்பு (சங்.அக.);; mischief.

   2. வீண் பேச்சு; gossip.

   3. வஞ்சகம் (யாழ்.அக.);; fraud, deceit, slyness, craftiness.

     [வம்பு1 + தனம்

   1. தனம் = பண்புணர்த்தற் பொருட்டு வந்த சொல்லாக்க ஈறு.]

வம்புப்பாளை

வம்புப்பாளை vambuppāḷai, பெ. (n.)

   பருவந் தப்பிய பாளை (யாழ்.அக.);; spathe opening out of season.

     [வம்பு + பாளை1.]

வம்புப்பிறப்பு

 வம்புப்பிறப்பு vambuppiṟappu, பெ. (n.)

   ஒழுக்கங்கெட்டவளிடம் பிறக்கை (யாழ்.அக.);; birth out of wedlock, illegitimate birth.

     [வம்பு + பிறப்பு.]

வம்புப்பிள்ளை

 வம்புப்பிள்ளை vambuppiḷḷai, பெ. (n.)

   முறைகேடாகப் பிறந்த குழந்தை (வின்.);; bastard, illegitimate child.

     [வம்பு + பிள்ளை.]

வம்புப்பேச்சு

 வம்புப்பேச்சு vambuppēccu, பெ. (n.)

   வீண் பேச்சு (யாழ்.அக.);; idle talk, gossip, empty chat.

     [வம்பு + பேச்சு.]

வம்புமரம்

வம்புமரம் vambumaram, பெ. (n.)

   குற்றவாளிகளைக் கட்டி வைத்தடிக்கும் குறுக்கு மரவகை (வின்.);; a kind of slant-tree to which criminals are tied when whipped.

     [வன்பு → வம்பு1 + மரம்.]

வம்புறு மரபு

 வம்புறு மரபு vambuṟumarabu, பெ. (n.)

   பாலைப்பண்ணின் இடமுறைத் திரிபு; a melody type.

     [வம்புறு+மரபு]

வம்புவளர்-த்தல்

வம்புவளர்-த்தல் vambuvaḷarttal,    4 செ.கு.வி. (v.i.)

வம்பள-த்தல் பார்க்க;see vambala.

     [வம்பு1 + வளர்.]

வம்மரம்

 வம்மரம் vammaram, பெ. (n.)

வன்மரம் (வின்.); பார்க்க;see van-maram.

     [வன்மை + மரம் = வம்மரம்.]

வம்மரை

 வம்மரை vammarai, பெ. (n.)

வம்மரம் (L.); வம்மரம்;see Vammaram.

     [வம்மரம் → வம்மரை.]

வம்மி

 வம்மி vammi, பெ. (n.)

   மரவகை; guinea peach.

வம்மை

 வம்மை vammai, பெ. (n.)

   பெற்றோர் மண மகட்குக் கொடுக்குஞ் சீர்; presents given to a bride by her parents on the occasion of wedding.

     “வம்மை வரிசை” (இ.வ.);.

     [வண்மை → வம்மை.]

வய

வய1 vayattal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விரும்புதல்; to wish for, to desire.

     “வயந்தே யுமக்காட் செய்து” (தேவா. 946, 7);.

 வய2 vaya, பெ. (n.)

   1. ஆற்றல், வலி; strength, power.

     “வயத்தணிந் தேகு” (பரிபா.1140);.

     “வய வலியாகும்” (தொல்.849);.

   2. மிகுதி; increase, abundance, surplus.

வயக்கம்

வயக்கம் vayakkam, பெ. (n.)

   1. ஒளி, வெளிச்சம்:

 brightness, light.

     “வெண்ணிற வயக்க மாண்டது” (தணிகைப்பு. திருநாட்.15);.

   2. ஒளிவட்டம் (யாழ்.அக.);; halo.

     [வயங்கு → வயக்கு → வயக்கம்.]

வயக்கல்

வயக்கல்1 vayakkal, பெ. (n.)

   பண்படுத்தம் பெறா நிலத்தை திருத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தல்; convert the waste land, fit for cultivation.

     “திடல் வயக்கிய நிலம்” (தெ. கல். தொ. 8 கல். 660);, கல்லி வயக்கின நிலம்'(தெ. கல். தொ. 8, 655, 681);.

     [வசக்கு → வசக்கல் → வயக்கல்.]

 வயக்கல்2 vayakkal, பெ. (n.)

   வயல் (இ.வ.);, கழனி; paddy field, agricultural tract, cultural land.

     [வயக்கு → வயக்கல்.]

வயக்கு

வயக்கு1 vayakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விளங்கச் செய்தல்; to cause to shine.

   2. திருத்துதல் (கல்.);; to improve, reclaim as land.

     [வயங்கு → வயக்கு → வயக்கு.]

 வயக்கு2 vayakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பழக்குதல் (யாழ்.அக.);; to tame, break in.

 Ma. vayakkuga, Kol. vay;

 Nāk. vay.

     [வசக்கு1 → வயக்கு-தல்.]

 வயக்கு3 vayakku, பெ. (n.)

   ஒளி, வெளிச்சம்; brightness, splendour, light.

     “வயக்குறு மண்டிலம்” (கலித். 25);.

     [வயங்கு → வயக்கு.]

வயசு

வயசு vayasu, பெ. (n.)

   1. பருவம் (பிராயம்);; period of lifetime from birth.

   2. இளமை (யௌவனம்);; yourth, juvenility.

வயஞானம்

வயஞானம் vayañāṉam, பெ. (n.)

   உண்மை யறிவு; real knowledge.

     “வயஞானம் வல்லார் மருகற் பெருமான்….. அடியுள்குதலால்” (தேவா. 662 11);.

     [வய + ஞானம். Skt. nana → த. ஞானம்.]

வயணம்

வயணம் vayaṇam, பெ. (n.)

   1. வழி, வகை, பான்மை (வின்.);; manner, method, way.

   2. நிலைமை (வின்.);; circumstance, condition.

     ‘அதன் வயணமென்ன’?

   3. தெளிவான விளக்கம்; clear details, particulars.

     “வயணமாய்ப் பேசினான்.”

   4. உணவு முதலியவற்றின் வளம்; sumptuousness.

     ‘வயணமாய்ச்சாப்பிடுகிறவன்’.

   5. நல்லமைப்பு; good, agreeable condition.

     ‘குழம்பு வயணமாயிருக்கிறது’ (வின்.);.

   6. சீர்மை (வின்.);; neatness.

   7. ஏற்றது; favourableness, suitability.

     ‘காற்று வயணமாயிருக்கிறது’.

   8. கரணியம்; reason, cause.

     ‘அப்படிச் செய்ததின் வயணம் என்ன’ (இ.வ.);.

 Ka. vaina;

 Tu.vayana;

 Te. Nayinamu.

     [வசம் → வயம் → வயன் → வயனம் → வயணம்.]

வயதரம்

 வயதரம் vayadaram, பெ. (n.)

   கடுக்காய் (மலை.);; chebulic myrobalan.

     [வய + தரம்.]

வயதெற்றி

 வயதெற்றி vayadeṟṟi, பெ. (n.)

   திப்பிலி (சங்.அக.);; long-pepper.

     [வயவெற்றி + வயதெற்றி.]

வயதேகி

 வயதேகி vayatēki, பெ. (n.)

வயதெற்றி பார்க்க;see vayaterri.

வயத்தன்

 வயத்தன் vayattaṉ, பெ. (n.)

   வசப்பட்டிருப்பவன் (யாழ்.அக.);; one brought to a state of subjection.

     [வசம் → வயம் → வயத்தன்.]

வயத்தம்பம்

வயத்தம்பம் vayattambam, பெ. (n.)

   இளமை மாறாமல் நிறுத்தும் வித்தை; art of arresting the influence of advancing age in a person.

     “இகலிலா வயத்தம்ப மென் றின்னவை செய்தும்” (திருவிளை. எல்லாம். 17);.

     [வயம் + தம்பம். Skt. stamlbha → த. தம்பம்.]

வயநாட்டுச்சிரிப்பான்

வயநாட்டுச்சிரிப்பான் vayanāṭṭuccirippāṉ, பெ. (n.)

   பறவை வகையு ளொன்று; wayanad laughing thrush-Garrulax delessert.

இப்பறவை நீலமலை, கொடைக்கானல் சார்ந்த மலைப் பகுதிகளிற் காணப்படும். 23 விரலம் உயரம் வரை வளரும் தன்மைத்து. உடலின் மேற்பகுதி செம்பழுப்பு நிறமும், கீழ்ப்பகுதி சாம்பலும், பழுப்பு நிறமுங் கலந்து காணப்படும். புழு, பூச்சிகளை உட்கொண்டு, 2 முதல் 3 முட்டைகளிட்டு, தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.

வயநிமிளை

 வயநிமிளை vayanimiḷai, பெ. (n.)

   அஞ்சனக்கல்; sulphurate of antimony.

வயனண்டு

 வயனண்டு vayaṉaṇṭu, பெ. (n.)

   கழனி நண்டு (வின்.);; field crab.

     [வயல் + நண்டு.]

மருத நிலக் கழனியில், நன்செய் மண் வளத்தை, மென்மேலும் வளஞ்செறியச் செய்யும் நண்டு.

     [P]

வயனம்

வயனம்1 vayaṉam, பெ. (n.)

   1. பேச்சு, சொல்; word, speech.

     “சரபோசி…. தனக்கேற்ற வயனத்தான்” (சரபேந்திர குறவஞ்சி 11, 8);.

   2. மறைநூல்; the Vedas.

     “நால்வயனத்தவ” (திருவிளை. கான்மாறி. 27);.

   3. பழிமொழி; reproach, aspersion.

     “வயனங்கள் மாயா வடுச் செய்தான்” (திருவாச. 12.4);.

 வயனம்2 vayaṉam, பெ. (n.)

   பான்மை வழி, தன்மை, வகை (வின்.);; manner, way, quality.

     “வயனங்களா லென்றும் வந்து நின்றானே” (திருமந். 1836);.

வயனர்

வயனர் vayaṉar, பெ. (n.)

   பறவை வடிவினர்; beings in the shape of birds.

     “வயனார் சூழு காவிரியும்” (திருப்பு. 733);.

     [வயம் → வயனர்.]

வயன்

வயன் vayaṉ, பெ. (n.)

   வழி, நிலைமை; way, condition.

     “நந்திதமராம் வயன்பெறுவீர்” (திருமந். 55);.

     [வயனம் → வயன்.]

வயன்கட்டு

 வயன்கட்டு vayaṉkaṭṭu, பெ. (n.)

   எல்லை வரம்பு (யாழ்.அக.);; boundary.

     [வசன் → வயன் + கட்டு.]

வயப்படு-தல்

வயப்படு-தல் vayappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   வசமாதல்; to be brought under another’s influence;

 to be subjugated.

     “தீமையுடையார் வருந்தினா ரென்றே வயப்படுவதுண்டோ” (பழமொ. 110);.

     [வசம் → வயம் + படு.]

வயப்பயறு

வயப்பயறு vayappayaṟu, பெ. (n.)

   1. நளிப்பச்சைப் பயறு; jackal green gram – Rothia trifoliata (சா.அக.);.

   2. எலிப்பயறு; rat gram.

   3. கொல்லைப்பயறு; garden pulse.

   4. பனிப்பயறு; dew pulse.

     [வயல் + பயறு.]

வயப்புலி

வயப்புலி vayappuli, பெ. (n.)

   அரிமா (திவா.);; lion.

     “வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே” (பாரத. சூதுபோர். 265);.

     [வய + புலி. வய = வலிமை, ஆற்றல் புலி + அரிமா (அக.நி.);.]

     [P]

வயப்போத்து

 வயப்போத்து vayappōttu, பெ. (n.)

   அரிமா (பிங்.);; lion.

     [வய + போத்து.]

வயமது

 வயமது vayamadu, பெ. (n.)

   சீந்தில் (சங்.அக.);; gulancha.

வயமம்

 வயமம் vayamam, பெ. (n.)

   அத்தி (சங்.அக.);; country fig.

வயமா

வயமா vayamā, பெ. (n.)

   1. அரிமா (பிங்.);; lion.

     “ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங் குன்று” (ஐங்குறு.307);.

   2. மடங்கல் மாதம்; the month of āvani.

     “வயமா கனிக்குங் கோற்றேட்கு நன்னான்கு” (தைலவ. பாயி. 55);

   3. புலி (பிங்.);; tiger.

     “குன்றில் வயமாமுழங்க” (சீவக. 2778);.

   4. யானை; elephant.

     “வயமாத் தானவாரியும்” (கம்பரா. ஊர்தேடு. 17);.

   5. குதிரை; horse.

     “பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து” (ஐங்குறு. 449);.

     [வய + மா. வய = வலிமை, ஆற்றல்.]

வயமான்

வயமான் vayamāṉ, பெ. (n.)

வயமா, 1 பார்க்க;see vaya-ma.

     “அரும்பொறி வயமா னனையை” (பதிற்றுப். 752);.

   2. வயமா, 3 பார்க்க;see vaya-ma.

     “முணங்கு நிமிர் வயமான் முழுவலியொருத்தல்” (புறநா. 52);.

     [வய + மான்.]

வயமீன்

 வயமீன் vayamīṉ, பெ. (n.)

   சகடெனும் (உரோகணி); நாண்மீன்; the fourth naksatra.

     [வய + மீன்.]

வயம்

வயம்1 vayam, பெ. (n.)

   1. வலி (நாமதீப. 793);; power, might.

   2. வெற்றி; victory, conquest.

     “வலம்புரி வயநேமியவை” (பரிபா. 15, 59);.

     [வய → வயம். வலம் → வயம் (சு.வி.16);.]

 வயம்2 vayam, பெ. (n.)

   நிலம்; earth.

     “வயமுண்ட மாலும்” (தேவா. 69, 9);.

     [வையம் → வயம்.]

 வயம்3 vayam, பெ. (n.)

   வேட்கை; desire.

     “வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார்” (திருக்கோ. 383);.

 Ka. bayake, bay(i);ke, bavake;

 Tu, bayakini;

 Te, vācu: Go. wassāvā.

     [வயா → வயம்.]

 வயம்4 vayam, பெ. (n.)

   பறவை (பிங்.);; bird.

 வயம்5 vayam, பெ. (n.)

   1. வசம்; state of subjugation.

     “வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்” (தேவா. 1133. 2);.

   2. மூலம்; means, agency.

     “வையை வயமாக வை” (பரிபா. 6, 78);.

   3. தொடர்பு (அரு.நி.);; connection.

   4. ஏற்றது, பொருத்தமானது; suitability.

     “காற்று வயமா யிருக்கிறது” (உ.வ.);.

     [வசம் → வயம்.]

 வயம்6 vayam, பெ. (n.)

   நீர் (பிங்.);; water.

     [பயம் → வயம்.]

 வயம்7 vayam, பெ. (n.)

   குதிரை (யாழ்.அக.);; horse.

     [அயம் → வயம்.]

 வயம்8 vayam, பெ. (n.)

   1. முயல் (பிங்.);; hare.

   2. கராம்பூ (சங்.அக.);; clove.

வயறு

வயறு1 vayaṟu, பெ. (n.)

வயிறு பார்க்க;see Vayiru.

 வயறு2 vayaṟu, பெ. (n.)

   1. கொக்கி; hook.

   2. கயிறு; rope.

வயற்கடை தூரம்

வயற்கடை தூரம் vayaṟkaḍaitūram, பெ. (n.)

   வயலளவுள்ள தூரம் (G.Tj.D.I. 344);; a field’s length or distance, considered a unit to indicate distance.

     [வயல் + கடை + தூரம்.]

வயற்கரந்தை

 வயற்கரந்தை vayaṟkarandai, பெ. (n.)

   திரு நீற்றுப் பச்சை (வின்.);; a kind of basil.

     [வயல் + கரந்தை.]

வயற்கரை

வயற்கரை vayaṟkarai, பெ. (n.)

   1. வயலுள்ள பகுதி; tract of wet lands.

   2. வயல் (வின்.);; paddy field.

     [வயல் + கரை, கரை = நஞ்சைநிலம், செய்வரம்பு.]

வயற்கல்

 வயற்கல் vayaṟkal, பெ. (n.)

   வெள்ளைச் சுக்கான் கல்வகை (மூ.அ.);; a kind of white gravel.

     [வயல் + கல்.]

வயற்கள்ளி

 வயற்கள்ளி vayaṟkaḷḷi, பெ. (n.)

   பொரிப் பூண்டு (சங்.அக.);;  water-thorn.

     [வயல் + கள்ளி.]

வயற்காடு

 வயற்காடு vayaṟkāṭu, பெ. (n.)

வயற்கரை பார்க்க;see Vayar-karai.

மறுவ. வயற்சார்பு

     [வயல் + காடு.]

வயலும் வயல் சார்ந்த நிலப்பரப்பு

     ‘வயற்கரை’ யெனவும்

     ‘வயற்காடெனவும்’ சொல்லப்பெறும்.

வயற்கொடுக்கி

 வயற்கொடுக்கி vayaṟkoḍukki, பெ. (n.)

   ஒரு வகைச் செடி; a herbaceous plant.

     [வயல் + கொடுக்கி.]

வயற்கோலியன்

 வயற்கோலியன் vayaṟāliyaṉ, பெ. (n.)

   பாம்பு வகை (யாழ்.அக.);; a kind of snake.

     [வயல்+ கோல் = வயற்கோல் → வயற்கோலியன்.]

வயற்கோவி

 வயற்கோவி vayaṟāvi, பெ. (n.)

   வெண் தேக்கு; a tree, white teak (சா.அக.);.

வயற்சார்பு

 வயற்சார்பு vayaṟcārpu, பெ. (n.)

   மருத நிலம் (வின்.);; agricultural tract.

     [வயல் + சார்பு.]

வயற்சுள்ளி

 வயற்சுள்ளி vayaṟcuḷḷi, பெ. (n.)

   பொரிப் பூண்டு (யாழ்.அக.);; water-thorn -Lepidagathes cristata.

     [வயல் + சுள்ளி.]

வயற்சூலம்

 வயற்சூலம் vayaṟcūlam, பெ. (n.)

   உழவுக்காகாத விண்மீன்கள்; which are in auspicious for tilling.

வயற்செம்பை

வயற்செம்பை vayaṟcembai, பெ. (n.)

   1. செடி வகை (யாழ்.அக.);; a plant.

   2. செம்பைச் செடி; a kind of medicinal plant (சா.அக.);.

     [வயல் + செம்பை.]

வயற்சேம்பு

வயற்சேம்பு vayaṟcēmbu, பெ. (n.)

   மழைக் காலத்தில் வரப்புக்களிலுண்டாம் சேம்புவகை (M.M.402);; a variety of Indian hales.

     [வயல் + சேம்பு.]

வயற்பயறு

வயற்பயறு vayaṟpayaṟu, பெ. (n.)

   1. சிறு பயறு; field gram.

   2. பச்சைப்பயறு, பாசிப் பயறு; green gram.

     [வயல் + பயறு.]

வயற்புல்

 வயற்புல் vayaṟpul, பெ. (n.)

   நன்செய்ப் பயிர்களிடையே முளைக்கும் களை; the grass or weed grown between crops in wet-land.

     [வயல் + புல்.]

நன்செய்ப் பயிர்களின் விளைச்சலைக் கெடுக்கும் புல்.

வயற்றுத்தி

 வயற்றுத்தி vayaṟṟutti, பெ. (n.)

   துத்திவகை (மூ.அ.);; a species of evening mallow.

     [வயல் + துத்தி.]

வயலம்மான்பச்சரிசி

வயலம்மான்பச்சரிசி vayalammāṉpassarisi, பெ. (n.)

   1. சிற்றம்மான் பச்சரிசி (வின்.);; thyme-leaved spurge.

   2. வட இந்தியா (வின்.);; northern India.

     [வயல் + அம்மான் + பச்சரிசி.]

வயலுக்குள்ளழகானவல்லி

 வயலுக்குள்ளழகானவல்லி vayalukkuḷḷaḻkāṉavalli, பெ. (n.)

   வல்லாரை; Indian penny wort-Hydrocotyle asiatica.

வயலுப்பு

 வயலுப்பு vayaluppu, பெ. (n.)

வளையலுப்பு பார்க்க;see Valaiyal-uppu.

வயலெலி

 வயலெலி vayaleli, பெ. (n.)

   வயலில் வாழும் எலி; field rat.

     [வயல் + எலி.]

கதிர்களையும், குருத்தையும் தின்றழித்து வயலில் வாழும் எலி.

     [P]

வயலை

வயலை1 vayalai, பெ. (n.)

   பசலைக்கொடி; purslane,

     “மனை நடு வயலை வேழஞ் சுற்றும்” (ஐங்குறு. 11);.

   தெ. பட்டலி;க. பயலு.

     [பசலை → வயலை.]

 வயலை2 vayalai, பெ. (n.)

   வெளி (தஞ்சைவா. 333, உரை);; open space;

 plain.

   தெ. பைலு;க. பயலு.

     [வயல் → வயலை.]

வயல்

வயல் vayal, பெ. (n.)

   1. கழனி; paddy field.

     “வளவய லூர” (நாலடி. 367);.

   2. மருத நிலம் (சூடா.);; agricultural tract.

   3. வெளி (பிங்.);; open space;

 plain.

மறுவ. பற்று

   தெ., க., து. பயல்;ம. வயல்.

 Kol. ve-gad;

 Kod. bell.

     [வயம் → வயல்.]

வயல்கதிர்க்குருவி

வயல்கதிர்க்குருவி vayalkadirkkuruvi, பெ. (n.)

   குருவி வகையுளொன்று; paddy field warbler – Acrocephalus agricola.

     [வயல் + கதிர்க்குருவி.]

நீர்வளம் கொண்ட நெல்வயல், புதர், கருப்பங்காடு ஆகியப் பகுதிகளிற் காணப்படும்

இவை எறும்புகள், சிறு வண்டுகள் முதலியவற்றை உணவாகக் கொண்டு வாழும் தன்மைத்து. 13 விரலம் உயரம் வரை வளரும். தமிழகத்தில் இனப்பெருக்கம் மேற்கொள்வதில்லை.

வயல்சுற்றித்திரிவான்

 வயல்சுற்றித்திரிவான் vayalcuṟṟittirivāṉ, பெ. (n.)

   கொக்கு; a paddy bird-stork.

     [வயல் + சுற்றி + திரிவான்.]

வயல்சூழ்சோலை

 வயல்சூழ்சோலை vayalcūḻcōlai, பெ. (n.)

   இளமரக்கா (பிங்.);; grove.

     [வயல் + சூழ் + சோலை.]

வயல்நண்டு

 வயல்நண்டு vayalnaṇṭu, பெ. (n.)

   கழனியில் வாழும் நண்டு; field crab.

     [வயல் + நண்டு.]

வயல்நரி

 வயல்நரி vayalnari, பெ. (n.)

   நரிவகையு ளொன்று; a kind of field jackal.

மறுவ. வளைநரி, குள்ளநரி.

     [வயல் + நரி.]

வயற்புறத்தே வாழும் நரி, இந்நரி வயல்களில் விளையும் காய்கறி, கிழங்குகளையும், பிற உயிரிகளையும் உண்டு வாழுந் தன்மைத்து. சாம்பசிவ மருத்துவ அகரமுதலியில், இந்நரியின் பெயர், வளைநரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

     [P]

வயல்நீர்

 வயல்நீர் vayalnīr, பெ. (n.)

   நெற் கழனி யிலிருக்கும் தண்ணீர், இதனால், வெள்ளை, மூர்ச்சை, சுரம் இவை நீங்கும்; water in the paddy field.

     [வயல் + நீர்.]

வயல்நெட்டி

வயல்நெட்டி1 vayalneṭṭi, பெ. (n.)

   கழனி யோரத்தில் வளரும் நீர்நெட்டி; pith growing near fields.

     [வயல் + நெட்டி. நெட்டி = கோரை.]

 வயல்நெட்டி2 vayalneṭṭi, பெ. (n.)

   நெட்டி வகை (மூ.அ.);; a species of sola pith.

     [வயல் + நெட்டி.]

வயல்பாய்ச்சல்

 வயல்பாய்ச்சல் vayalpāyccal, பெ. (n.)

   வயல் முகமாக அமைந்த வீடு; paddy field view house.

     [வயல் + பாய் → பாய்ச்சல்.]

வயல்மாதுளை

 வயல்மாதுளை vayalmātuḷai, பெ. (n.)

   மாதுளை வகை (மூ.அ);; a species of pomegranate.

     [வயல் + மாதுளை.]

வயல்முருங்கை

 வயல்முருங்கை vayalmuruṅgai, பெ. (n.)

   செடிவகை (நாஞ்.);; a plant.

     [வயல் + முருங்கை.]

வயல்மெருகு

வயல்மெருகு1 vayalmerugu, பெ. (n.)

   ஒரு வகை மெருகன் கிழங்கு; a kind of bulbous root.

     [வயல் + மெருகு.]

 வயல்மெருகு2 vayalmerugu, பெ. (n.)

   மெருகஞ் செடிவகை (மூ.அ.);; a species of arum.

     [வயல் + மெருகு.]

வயல்மேடு

 வயல்மேடு vayalmēṭu, பெ. (n.)

   வயலை விடச் சற்று உயரமான இடம்; threshing ground (a little elevated from the ground);.

மறுவ. களத்துமேடு, திடல்.

     [வயல் + மேடு.]

வயற் பகுதிகளில் நெற்கதிர்களை அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் மேட்டுப் பகுதி.

வயல்வெளி

 வயல்வெளி vayalveḷi, பெ. (n.)

   வயலும், வயல் சார்ந்த இடம்; agricultural tract.

மறுவ. மருதநிலம்.

     [வயல் + வெளி.]

வயலும், வயலையொட்டி நெற்கதிரடித்தற் கென்று அமைந்த மேட்டு நிலப்பகுதியுமாம்.

வயல்வேளை

 வயல்வேளை vayalvēḷai, பெ. (n.)

வயலி பார்க்க;see vayali.

     [வயல் + வேளை.]

வயளை

 வயளை vayaḷai, பெ. (n.)

   பசளை; a kind of greens-Spinach-Spinacia deracea.

     [வயலை → வயளை.]

வயவன்

வயவன்1 vayavaṉ, பெ. (n.)

   கருமை நிறமும் பிளந்த வாலுமுடைய கரிக்குருவி; a small black bird.

 வயவன்2 vayavaṉ, பெ. (n.)

   1. வீரன், வலிமிக்கவன்; strong man, valiant man.

     “வயவர்வேந்தே” (பதிற்றுப்.15, 21);.

   2. திண்ணியன் (சூடா.);; man of robust build.

   3. படைத்தலைவன்; commander.

     “வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு” (சிறுபாண்.249);.

   4. கணவன் (சூடா.);; husband.

   5. காரிப் பிள்ளை (பிங்.);; king-crow.

     [வய → வயவன். வய = வலிமை, ஆற்றல்.]

வயவரி

 வயவரி vayavari, பெ. (n.)

   புலி (திவா.);; tiger.

     [வய + வரி.]

வயவாசம்

 வயவாசம் vayavācam, பெ. (n.)

   கொழுஞ்சி; a plant-zanzibar indigo-Tephrosia purpurea.

வயவு

வயவு1 vayavu, பெ. (n.)

   கருப்பம்; womb.

     [வயா → வயவு.]

 வயவு2 vayavu, பெ. (n.)

   வலிமை; strength.

     “தாவா தாகு மலிபெறு வயவே” (பதிற்றுப். 36, 2);.

தெ. வலபு.

     [வய → வயவு.]

 வயவு3 vayavu, பெ. (n.)

   1. கருப்பகாலத் துண்டாம் மசக்கை முதலியன; morning sickness and morbid longings of a pregnant woman.

     “வயவுறு அன்பு” (புறநா. 20);.

   2. விருப்பம், ஆசை, அன்பு; desire, love, affection.

     “வயவேற நனிபுணர்மார்” (பரிபா.11, 67);.

     [வயா → வயவு.]

வயவு-தல்

 வயவு-தல் vayavudal, செ.குன்றாவி, (v.t.)

 soloshuo, gosmasuso, to like, to desire, to aspire.

க.பயக

     [வய-வயவு]

வயா – வேட்கை ஆசை.

வயவுநோய்

வயவுநோய் vayavunōy, பெ. (n.)

வயா நடுக்கம் பார்க்க;see vayā-nadukkam.

     “வயவுநோய் நலிதலின்” (கலித். 29);.

     [வயவு + நோய்.]

வயவுறி

 வயவுறி vayavuṟi, பெ. (n.)

   கருவுற்றவள், கருவத்தி; pregnant woman.

வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் நண்ணார் நின் அருமண்ணினையே.(புறம்);.

க. பகறி

     [வயவு(விருப்பம்);-வயவுறி]

கருவுற்ற காலத்தில் விரும்பும் உணவு வகைகளை உண்ண ஆசைப்படுபவள்.

வயவெற்றி

 வயவெற்றி vayaveṟṟi, பெ. (n.)

   திப்பிலி (மலை.);; long-pepper.

வயவை

 வயவை vayavai, பெ. (n.)

   வழி, பாதை (திவா.);; way, path, track.

     [வயம் → வயவை.]

வயா

வயா1 vayā, பெ. (n.)

   ஆசை; desire (சா.அக.);.

 வயா2 vayā, பெ. (n.)

   1. வேட்கைப் பெருக்கம் (திவா.);; great desire.

     “வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்” (தொல்.854);.

   2. வயா நடுக்கம் (தொல். சொல். 371); பார்க்க;see vaya-nadukkam,

   3. கருக்கொள் கால மயற்கை நோய் (சூடா.);; lanquor or lassitude during pregnancy.

   4. கருப்பம் (பிங்.);; foetus.

   5. கருப்பை (வின்.);; womb.

   6. மகப்பேற்றிற்குரிய வலி (வின்.);; pains of child-birth, labour pains.

   7. வலி, வருத்தம் (பிங்.);; pain, guib, sorrow.

   8. நோய் (அக.நி.);; disease.

வயா நடுக்கம்

 வயா நடுக்கம் vayānaḍukkam, பெ. (n.)

வயாநோய் பார்க்க;see vaya-noy.

     [வயா + நடுக்கம்.]

வயாக்கோட்டி

 வயாக்கோட்டி vayākāṭṭi, பெ. (n.)

வயா நடுக்கம் பார்க்க;see vayā-nadukkam.

     [வயா + கோட்டி.]

ஒருகா. வசாக்கோட்டி → வயாக்கோட்டி.

வயாநோய்

வயாநோய் vayānōy, பெ. (n.)

   கருப்பக் காலத்து ஏற்படும் மசக்கை நோய் (சூடா.);; morning sickness and morbid longings of a pregnant woman.

     “புளிக்காய் வேட்கைத் தன்று நின் மலர்ந்த மார்பிவள் வயா அ நோய்க்கே” (ஐங்குறு. 51);

     [வயா + நோய்.]

வயானன்

 வயானன் vayāṉaṉ, பெ. (n.)

வயான் (யாழ்.அக.); பார்க்க;see vayan.

     [வயான் → வயானன்.]

வயானம்

வயானம்1 vayāṉam, பெ. (n.)

   பறவை (சூடா);; bird.

     [வயா → வயானம்.]

 வயானம்2 vayāṉam, பெ. (n.)

   சுடுகாடு; cremation ground.

     “சவத்துக்கு முன்னே வயானத்துக்குக் கூட்டிப் போகிறதும்” (புதுக். கல்.847);.

     [மயானம் → வயானம்.]

வயான்

 வயான் vayāṉ, பெ. (n.)

   கருப்பு நிறமும் பிளந்த வாலுமுடைய பறவை (பிங்.);; king-crow.

மறுவ. காரிப்புள்

     [வயவன் → வயான்.]

வயாப்பண்டம்

 வயாப்பண்டம் vayāppaṇṭam, பெ. (n.)

   கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம் (யாழ்.அக.);; eatables longed for by pregnant women.

     [வயா + பண்டம்.]

வயாமது

 வயாமது vayāmadu, பெ. (n.)

   சீந்தில் (மூ.அ);; gulancha.

     [வயமது → வயாமது.]

வயாலெடு-த்தல்

வயாலெடு-த்தல் vayāleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   கக்கல்; to vomit (சா.அக.);.

மறுவ. கக்குதல்

     [வாயாலெடு-த்தல் → வயாலெடு-த்தல்.]

வயாவிதனம்

 வயாவிதனம் vayāvidaṉam, பெ. (n.)

   வலி; pain (சா.அக.);.

     [வயா + விதனம். Skt. visava → த. விதனம்.]

வயாவு

வயாவு1 vayāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விரும்புதல்; to desire, wish.

     “காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்” (மலைபடு. 476);.

     [வயா → வயாவு.]

 வயாவு2 vayāvu, பெ. (n.)

வயா (பிங்.); பார்க்க;see vayå.

     [வயா → வயாவு.]

வயாவுயிர்-த்தல்

வயாவுயிர்-த்தல் vayāvuyirttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மகப்பெறுதல் (யாழ்.அக.);; to yean, to give birth to be delivered of.

   2. வருத்தந்தீர்தல்; to be relieved of pain.

     [வயா + உயிர்-த்தல்.]

வயிகா

 வயிகா vayikā, பெ. (n.)

   விளாம்பிசின்; gum of wood-apple tree – gum of Feronia elephantum (சா.அக.);.

வயிக்கிராந்தகம்

 வயிக்கிராந்தகம் vayiggirāndagam, பெ. (n.)

   வைப்புநஞ்சுவகை (மூ.அ.);; a mineral poison.

வயித்தியக்கும்மி

 வயித்தியக்கும்மி vayittiyakkummi, பெ. (n.)

   மருத்துவ முறைகளைப் பகர்கின்ற கும்மிப் பாடல்; a dance performed by clapping hands and describing medical treatment.

     [வயித்தியம்+கும்மி]

வயித்தியன்

 வயித்தியன் vayittiyaṉ, பெ. (n.)

   மருத்துவன் (வின்.);; medical practioner, doctor, medical professionalist.

வயித்தியலிங்கம்

 வயித்தியலிங்கம் vayittiyaliṅgam, பெ. (n.)

   சிந்தாமணி நிகண்டின் ஆசிரியர்; author of cindåmaninigangu.

யாழ்ப்பாணத்திற் பிறந்த இவர் பரதவ குலத்தைச் சார்ந்தவர். வடமொழி, தென்மொழியிற் புலமை மிக்கவர். இவர் இயற்றிய நூல்களாவன செல்வச்சந்நிதிமுறை, வல்வை வைத்தியேசர் பதிகம், முதலியவைகளாகும்.

வயினதேயன்

வயினதேயன் vayiṉatēyaṉ, பெ. (n.)

   கருடன்; garudan, eagle.

     “வெற்றிசேர் வயினதேயன்” (உத்தரரா. இலங்கையழி. 14);.

     [வயினதேயம் → வயினதேயன்.]

வயினனாசயம்

வயினனாசயம் vayiṉaṉācayam, பெ. (n.)

   வயிறு; stomach.

     “வயினனாசயத்தின் வைகி…. பக்குவாசயமும் பற்றும்” (சிவதரு. சனன. 6);.

     [வயின் + ஆமாசயம் + ஆனாசயம்.]

வயினன்

வயினன் vayiṉaṉ, பெ. (n.)

   கலுழன்; garudan, eagle.

     “வெஞ்சிறை வயினன்” (அரிசமய. பரகா. 123);.

     [வயின் → வயினன்.]

வயினம்

 வயினம் vayiṉam, பெ. (n.)

   பறவை (யாழ்.அக.);; bird.

     [வயனம் → வயினம்.]

வயினாருடதயம்

 வயினாருடதயம் vayiṉāruḍadayam, பெ. (n.)

   ஒர் வகை மருந்து வேர்; a medicinal root- arbian costus-Costus arabicus (சா.அக.);.

வயின்

வயின்1 vayiṉ, பெ. (n.)

   1. இடம் (பிங்.);; place.

     “யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்கு பாடல்” (கம்பரா. நாட்டுப். 8);.

   2. பக்கம்; side.

     “புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ” (நெடுநல். 181);.

   3. வீடு (சூடா.);; house.

   4. வயிறு; belly, stomach.

     “வயின் கட்டோற்று மகவு” (இரகு.தேனுவ.46);.

   5. பக்குவம்; proper stage, as in boiling rice.

     “மகடூஉ வயினறிந் தட்ட” (பெரும்பாண். 304);.

   6. முறை; order.

     “வயின் வயி னுடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை” (புறநா. 77);.

   7. எல்லை (அரு.நி.);; boundary, limitation.

   8. பிணை (அரு.நி.);; security.

 வயின்2 vayiṉ, இடை. (part)

   1. ஏழாம் வேற்றுமையின் சொல்லுருபு; sign of the locative.

     “தம்வயிற் குற்றம்” (குறள், 846);.

   2. ஒர் அசைச்சொல் (பெருங். அரும்.);; an expletive.

வயிரகத்தி

 வயிரகத்தி vayiragatti, பெ. (n.)

   வயிரத்தை சுத்தப்படுத்துகை; purification of diamond.

     [வயிரம் + சுத்தி.]

வயிரகரணி

 வயிரகரணி vayiragaraṇi, பெ. (n.)

   பெரு நெருஞ்சி (மலை.);; a stout-stemmed herb.

வயிரக்கட்டை

வயிரக்கட்டை vayirakkaṭṭai, பெ. (n.)

   விளைந்த – வயிரம் பாய்ந்த கட்டை; a hard log (சா.அக);.

     [வல் → வள் → வய் → வயிர் → வயிரம் + கட்டை = திண்ணிய கொம்பு (வ.வ.2 பக்.83);.]

     “திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு” (நச்.);

உரையில் வருவது காண்க. வயிரக்கட்டையினைப் பிங்கலந்தை மரவயிரம் என்று குறித்துள்ளது.

வயிரக்கனிந்தன்

 வயிரக்கனிந்தன் vayirakkaṉindaṉ, பெ. (n.)

   பெருச்சாளி; an animal, bandicoot (சா.அக.);.

     [வயிரம் + கனிந்தன்.]

வயிரக்கல்

 வயிரக்கல் vayirakkal, பெ. (n.)

   வயிரமணி; diamond.

     [வயிர் → வயிரம் + கல்.]

தொண்(நவ); மணியுளொன்று.

வயிரக்காணி

வயிரக்காணி1 vayirakkāṇi, பெ. (n.)

வயிர கரணி பார்க்க;see Vayira-karaní.

     [வயிரம் + காணி.]

 வயிரக்காணி2 vayirakkāṇi, பெ. (n.)

   நெல் வயல்; paddy field. நெல்விளையும் வளஞ்செறிந்த நன்செய் நிலம்.

     [வள் → வய் → வயிர் → வயிரம் + காணி.]

காண் → காணி (220′ x 220′); 20 பெருங்கோல் சதுரம் 1/80.

வயிரக்குணங்கள்

வயிரக்குணங்கள் vayirakkuṇaṅgaḷ, பெ. (n.)

   எட்டுவகைப் பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம் என வயிரத்திற் காணப்படும் ஐந்து வகை நற்குணங்கள் (சிலப். 14, 180, உரை);; good qualities found in diamonds, five number, viz., eight kinds of palagai, six hinds of könam, tāraj šutti tarāŠam.

     [வயிர் → வயிரம் + குள் → குணம்.]

வயிரக்குப்பாயம்

 வயிரக்குப்பாயம் vayirakkuppāyam, பெ. (n.)

   ஊடுருவிச் செல்லவியலாதவாறும், துளைக்க முடியாதவாறமைந்த உறுதியான கவசம்; impenetrable coat of armour.

     “எடுத்தென்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக்குப்பாயம்”.

மறுவ. மெய்ச்சட்டை.

     [வல் → வள் → வய் → வயிர் → வயிரம் + குப்பாயம்.]

குள் → குல் → குப்பு → குப்பாயம்.

வலிமைக் கருத்தினின்று கிளைத்த சொல். உடலைக் கவ்வும் பான்மையில், வலிமையாக அமைந்த உறுதியான மெய்க்கவசம்.

வயிரக்குற்றம்

வயிரக்குற்றம்1 vayirakkuṟṟam, பெ. (n.)

   சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுறிந்தன, தாரை மழுங்கல் என வயிரத்திற் காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள் (சிலப். 14, 180, உரை);;   12 flaws in diamonds viz., Šaraimalam, kirru, cappagi pilattal tulaj kari vindu, kāga-pādam, iruttu.

 kõgi-y-i//ana, kõgi-murindana, tāraima/ungal.

     [வயிர் → வயிரம் + குல் → குறு → குற்றம். குற்றம்.]

 வயிரக்குற்றம்2 vayirakkuṟṟam, பெ. (n.)

   வயிரங்களிலமைந்த குற்றம்; defects in diamond.

     [வயிரம் + குற்றம்.]

வயிரங்களில் காணப்படுகின்ற குற்றங்களாக கல்வெட்டு பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றது.

   1. பொறிவு,

   2. முறிவு,

   3. அரத்தவிந்து,

   4. காசு விந்து,

   5. வெந்தன,

   6. மட்டதாரை,

   7. மட்டசப்படி.

வயிரங்கொள்(ளு)-தல்

வயிரங்கொள்(ளு)-தல் vayiraṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   முதிர்தல்; to have the qualities of age.

வயிரங்கொண்ட வேப்பமரப் பலகை எடுக்கவிருக்கும் வீட்டின் கதவுநிலை, பலகணிகட்டு பயன்பாடுடைய தாகலாம்.

வயிரச்சங்கிலி

 வயிரச்சங்கிலி vayiraccaṅgili, பெ. (n.)

   சரப்பணியென்னும் அணி (பிங்.);; a kind of necklace.

     [வயிர் → வயிரம் + சங்கிலி.]

அங்கு → சங்கு = வளைந்தது. சங்கு → சங்கிலி = வளைந்து ஒன்றுடனொன்று கோத்திருப்பது.

வயிரச்சன்னம்

 வயிரச்சன்னம் vayiraccaṉṉam, பெ. (n.)

   சிறுவயிரம் (இ.வ.);; small-sized diamond.

     [வயிரம் + சன்னம் = நுண்மையான வலிமைவாய்ந்த சிறுவயிரம். சுல் → சல் → சன்னம். சன்னம் = நுண்மை.]

வயிரச்சிராய்

 வயிரச்சிராய் vayiraccirāy, பெ. (n.)

   வயிரத்துகள்; diamond dust (சா.அக.);.

     [வயிரம் + சிராய்.]

கல் → சல் → சில் → (சிர்); → சிராய் = சிறிய துகள்

வயிரஞ்சாதி-த்தல்

வயிரஞ்சாதி-த்தல் vayirañjātittal,    4 செ.கு.வி. (v.i.)

   பகை மிகுதல் (யாழ்.அக.);; to wreak vengeance, to fulfil one’s hatred.

     [வயிரம்2 + சாதி1.]

 Skt. Sådh → த. சாதி

வயிரத்தனம்

 வயிரத்தனம் vayirattaṉam, பெ. (n.)

   வன்குணம் (யாழ்.அக.);; hardness, toughness.

     [வயிர் → வயிரம் + தம் → தன் + அம்-தனம் = தமக்கேயுரிய வலிமைக் குணம்.]

வயிரத்தளம்

 வயிரத்தளம் vayirattaḷam, பெ. (n.)

   தட்டையான வயிரம் (வின்.);; flat diamond.

     [வயிரம் + தல் → தள் → தளம்.]

பெரிய வயிரத்தின் தட்டையான அடிப்பரப்பு.

வயிரத்தாரணை

வயிரத்தாரணை vayirattāraṇai, பெ. (n.)

   ஆணவத்தை முற்றாயொழித்து, எஞ்ஞான்றும் ஆன்மா இரண்டறக் கலந்து இறையுடன் ஒகத்தில் ஆழ்கை (யாழ்.அக.);; contemplation of the divine, always converging the facultis of the mind to one point, renouncing, egoism, one of navatāraṇai

     [வயிர் → வயிரம்1 + தாரணை1.]

தார் + அணை – எஞ்ஞான்றும் ஆதனுக்கு நலமே நல்கும் இறையருள் ஒகநிலையில், ஆதனின் உள்ளத்தில் அணைவதால் (ஒன்றுவதால்); உள்ளம் ஒருமுகப்படுகை அல்லது வலிமையுறுகை.

வயிரத்துாள்

 வயிரத்துாள் vayiratḷ, பெ. (n.)

   வயிரத்தை தீயிலிட்டு புடமிடுகை; the purified diamond should be burnt in a fire and dipped in the decoction mixed with eyafoetida samuda salts and the seeds dolichos biflones.

     [வயிரம் + தூள்.]

வயிரப்பசை

 வயிரப்பசை vayirappasai, பெ. (n.)

   திண்ணிய வலிமை வாய்ந்த பசை; glue.

     [வயிரம் + பசை.]

வயிரப்படை

வயிரப்படை vayirappaḍai, பெ. (n.)

   வலிமை மிக்க படை (வச்சிராயுதம்); (பிங்.);; thunderbolt.

     [வயிரம்1 + படு → படை.]

வயிரப்படையோன்

வயிரப்படையோன் vayirappaḍaiyōṉ, பெ. (n.)

   வானவர் தலைவன் (இந்திரன்);; Indra, as the wielder of thunderbolt.

     ‘வயிரப்படையோன் முதலமரர்’ (காசிக. தேவர்கள் அகப் 10);.

     [வயிரம் + படை → படையோன்.]

வயிரப்பன்னாடை

 வயிரப்பன்னாடை vayirappaṉṉāṭai, பெ. (n.)

   பனைமரத்துப் பன்னாடை; webbed sheath found in the palymra tree.

     [வயிரம் + பனை + ஆடை – பனையாடை → பன்னாடை.] வயிரம் = உறுதி.

உறுதியுள்ள பனைநாரினாலாகிய பன்னாடை.

வயிரப்பற்பம்

 வயிரப்பற்பம் vayirappaṟpam, பெ. (n.)

   கருப்பத்தால் வந்த சூலையை நீக்குமோர் மருந்து. நெஞ்சாங்குலை குளிர்ச்சி யுண்டாகி, சில்லிட்டுபோன போது, அக்குளிர்ச்சியை நீக்கி, இயல்பு நிலைக்குக் கொணரும். மேலும் இறக்குந்தறுவாயில் இருப்பவரை ஒரு மணி நேரத்தில் பேசும்படி செய்யும் தன்மைத்து; calcined diamond, it is prescribed for heart disease. it is said to stimulate the heart, which has been chilled to inaction.

     [வயிரம் + பற்பம்.]

 Skt. bhasman → த. பற்பம்

வயிரப்பொடி

 வயிரப்பொடி vayirappoḍi, பெ. (n.)

   சிறு வயிரம் (இ.வ.);; small sized or tiny diamond.

     [வயிரம் + பொடி.]

வயிரப்பொலி

 வயிரப்பொலி vayirappoli, பெ. (n.)

   முற்றிய தவசமணி (இ.வ.);; mature or ripe grain of corn.

     [வயிரம் + பொல் → பொலி.]

நன்கு திரண்ட உறுதிமிக்க தவசம்.

வயிரமணி

வயிரமணி vayiramaṇi, பெ. (n.)

   1. வயிரம்1, 2 பார்க்க;see vayiram.

   2. பொன்னாலாகிய மணிவகை (யாழ்.அக.);; bead of gold.

     [வயிரம்1 + மணி.]

வயிரமுடி

வயிரமுடி vayiramuḍi, பெ. (n.)

   1. வயிரம் இழைத்த மணிமுடி; crown studded with diamonds.

   2. வயிரம் முதலிய மணிகள் வைத்து இழைத்துச் செப்புத் திருமேனியிற் சூட்டப்பெறுந் தொப்பாரம்; head-ornament of an idol, set with diamonds and other precious stones.

     [வயிரம்1 + முடி.]

வயிரமுத்து

 வயிரமுத்து vayiramuttu, பெ. (n.)

   ஆணி முத்து (வின்.);; pearl of the best quality.

     [வயிர் → வயிரம் + முள் → முட்டு → முத்து. வயிரம் + முத்து.]

குற்றமற்ற உயர்ந்த கட்டாணிமுத்து. வன்மையானதும், திண்ணியதுமான, விலையுயர்ந்த நன்முத்து.

வயிரமேகவிருத்தி

வயிரமேகவிருத்தி vayiramēkavirutti, பெ. (n.)

   இலக்கண நூல்களுளொன்று (தக்கயாகப். 16, உரை);; one of treatise on grammar.

     [வயிரமேகம் + விருத்தி.]

வயிரம்

வயிரம்1 vayiram, பெ. (n.)

   1. வயிரப்படை (பிங்.);; thunderbolt.

   2. தொண்மணி யுளொன்று; diamond, one of nava-mani.

     “வயிரப் பொற்றோடு” (சிலப் 29, செங்குட்டுவன் கூற்று);.

   3. மர வயிரம் (பிங்.);; core of a tree, as the hardest part.

   4. திண்மை; robustness, firmness.

     “உலந்தரு வயிரத் திண்டோள்” (கம்பரா. பூக்கொ.10);.

   5. வலிமை; strength.

     “தோள் வயிரந் தோன்ற” (சீவக. 645);.

   6. கூர்மை (பிங்);; sharpness, pointed ness.

     “கொலைபுரி

வயிரவேலான்” (தணிகைப்பு. சீபரி. 32);.

   7. கிம்புரி; ornamental knob, as on a tusk or horn.

     “கோட்டை வயிரஞ் செறிப்பினும்….. பன்றி செயிர்வேழ மாகுதலின்று” (நாலடி. 358);.

   8. தண்டாயுதம் (பிங்.);; club.

   9. முக்கோல் (திருவோணம்); (திவா.);; the 22nd naksatra.

   10. வாளியென்னும் அணிகலனின் தகடு (யாழ்.அக.);; the flat metal piece of a kind of ear-ring.

த. வயிரம் → Skt. vajra

     [வல் → வள் = வலிமை (பிங்.);. வள் → வய் → வை → வயிர் – திண்ணிய கொம்பு, வயிர் → வயிரம் = திண்மை (வ.வ.பகுதி.2-83);.]

வயிரம் என்னுஞ் சொல், தூய தென்சொல். வட மொழியில் இதற்கு மூலமில்லை. தமிழில் இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும், மிகுதியாக வழக்கூன்றியுள்ளது. பத்துப்பாட்டுளொன்றான திருமுருகாற்றுப் படையிலும், சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலான இலக்கியங்களிலும், நிகண்டுகளிலும், வலிமை, திண்மை என்னும் பொருளில் இடம் பெற்றுள்ளது.

வயிரம் என்னும் செந்தமிழ்ச்சொல்லே, வடமொழியில் வஜ்ர என்று திரிக்கப்பட்டுள்ளது. திண்மையுடையதாயிருத்தல், கடினமாயிருத்தல் வலிமையாயிருத்தல் என்னும் பொருண்மையில், மக்களிடைய வழங்கும்,

     “வயிரம் பாய்ந்த கட்டை”,

     “வயிரம் பாய்ந்த உடம்பு” போன்ற வழக்குகளை நோக்குக. இச் சொல்லின் வரலாற்றைக் கீழ்க்கண்டவாறு, மொழிஞாயிறு வடமொழி வரலாறு-இரண்டாம் பகுதி, மொழியதிகாரத்தில், பொருட் பொருத்தப் பாட்டுடன் விளக்கும் பாங்கு வருமாறு:-

வல் → வள் → வலிமை (பிங்.);

     “வள்வார் முரசு” (பு.வெ.3:2, கொளு);.

வள் → (வய்); → வை → வயிர் = திண்ணிய கொம்பு.

     “திண்காழ் வயிரெழுந் திசைப்ப” (திருமுருகு. 120);.

இதன் உரை :

     “திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்ப” – நச்.

வயிர்த்தல் =

   1. வயிரங்கொள்ளுதல்.

     “வயிர்த்தன ணிலத்தினுயர் வானமினி தென்பாள்” (பாரத.சம்பவ.102);.

வயிர் → வயிரம் =

   1. திண்மை.

     “உலந்தரு வயிரத் திண்டோள்” (கம்பரா. பூக்கொ.10);.

   2. வலிமை.

     “தோள்வயிரந் தோன்ற”

   3. மரவயிரம் (பிங்.);.

   4. தொண்மணியுள் ஒன்று.

     “வயிரப் பொற்றோடு” (சிலப்.29, செங்குட்டுவன் கூற்று);.

   5. மணவயிரமாகிய செற்றம்.

வடமொழியில் இதற்கு மூலமில்லை.

     “Another vujor uj, to be hard or strong may be inferred from ugra, ojas, vājra, vāja, (qq.vv.); the last of which gave rise to the Nom. vajaya”

என்று மா.வி.அ. குறித்திருப்பதை நோக்குக.

 வயிரம்2 vayiram, பெ. (n.)

   செற்றம்; anger, animosity.

     “வாள் வயிரம் விற்கு மடநோக்கி” (சீவக. 645);.

 வயிரம்3 vayiram, பெ. (n.)

   மயிர்ப்படாம் (நாமதீப. 55);; woollen cloth.

     [வயிரியம் → வயிரம்.]

 வயிரம்4 vayiram, பெ. (n.)

   1. ஒரு கல்; one of the nine gems, a very hard gem.

   2. இது ஆறுவகைப்படும் (தேவபிரம சத்திரிய, வைசிய, சூத்திர சங்கரக் கற்கள் தங்கியிருக்கும்; the matrix of the gem is sand stone breccia lying under the compact sand stone of which the hills near kurnool are composed.

 வயிரம்5 vayiram, பெ. (n.)

   தொன்மணிகளுள் உறுதி மிக்கதும், விலை மதிப்பு மிக்கதுமான கல்; diamond.

   உயர்ந்த வயிரங்களில் அமைந்த குணங்கள் ஆறு என்று இரத்தினநூல் இயம்புகிறது. அவை;    1. கோணமாயிருத்தல்.

   2. இலகுவாயிருத்தல்.

   3. சமமான எட்டுத் தளங்களுடன் அமைதல்.

   4. கூரிய முனைகளுடைமை.

   5. ஒளித் தெளிவுடைமை.

   6. நான்கு பட்டைச் சதுரகமாக இருத்தல் என்பவைகளாகும். கல்வெட்டுகளில் சிறந்த வயிரம் என்பது

     ‘இராசவர்த்தனம்’ என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றது. வயிர வகைகளாகப் பின்வருவன குறிக்கப்பட்டுள்ளன. 1. பளிங்கு – உள்ளொளித் தெளிவுடனமைந்தது. 2. பொத்தி – கீழ்க்குழிவும் மேற்புடைப்புமுள்ளது. 3. தாளிம்பம் – பனையோலை கீற்றுப் போன்ற வடிவுடையது. 4. பளிக்கு வயிரம் – தூய ஒளியுடன் கூடியது.

   5. சப்படி – சப்பையாகப் பிறப்பிலேயே இருப்பது.

   6. கோமளம் – மென்மையும் வெளிறிய ஒளியும் பொருந்தியது.

   7 உருளை – திரட்சியாக இருப்பது.

   8. பந்தசாரம் – ஒன்றன் மேலொன்றாகப் படிந்த விளைவுடனிருத்தல். (தெ.கல்.தொ. 2:1, 2:2); (முதல். இராச.);.

வயிரம்கோத்தபட்டைக்காறை

 வயிரம்கோத்தபட்டைக்காறை vayiramāttabaṭṭaikkāṟai, பெ. (n.)

   வயிரங்கள் வைத்து இழைக்கப்பட்ட கழுத்தணி; diamond studded necklace.

     [வயிரம் + கோத்த + பட்டைக்காறை.]

வயிரம்பாய்-தல்

வயிரம்பாய்-தல் vayirambāytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வலிமை அல்லது உரமிகுதல்; to get strength.

வயிரம் பாய்ந்த தேக்குமரம் வாசற்காலுக்கு ஏற்றது (உ.வ.);. வயிரம் பாய்ந்த உடலுக்கு மருத்துவம் இல்லை (இ.வ.);.

     [வயிரம் + பாய்.]

வயிரம்போடல்

 வயிரம்போடல் vayirambōṭal, தொ.பெ. (vbl.n.)

வயிரத்தூள் பார்க்க;see vayirat-tul.

     [வயிரம் + போடல்.]

வயிரவசாந்தி

 வயிரவசாந்தி vayiravacāndi, பெ. (n.)

   இயற்கைக்கு மாறாக இறந்தவர்கட்கு பகர நேர்வாக வயிரவக் கடவுளுக்குச் செய்யும் வழிபாடு (வின்.);; ceremony of appeasing Bhairava by making offerings in the sacrificial fire at the funeral ceremonies ofa persor, who dies an unnatural death.

     [வைரவம் → வயிரவம் + சாந்தி.]

வயிரவன்பூசை

 வயிரவன்பூசை vayiravaṉpūcai, பெ. (n.)

   பரதவருடன் தொடர்புடைய ஒரு பூசை; a prayer pertaining to fishermen tribe.

     [வயிரவன் + பூசை.]

     “அண்டு ராவைக்கு ஏலேலோ

வயிரவன் பூசையாம் ஏலேலோ

தாவறு மடமாம ஏலேலோ

மடத்தம்மா ஐயா ஏலேலோ” (நாட்டார் பாடல்);

வயிரவன்மடை

 வயிரவன்மடை vayiravaṉmaḍai, பெ. (n.)

   வயிரவர்க்கிடும் திருப்படையல் (வின்.);; oblations offered to Bhairava.

     [வயிரவன் + மடை.]

வயிரவன்வாகனம்

வயிரவன்வாகனம் vayiravaṉvākaṉam, பெ. (n.)

   நாய்; dog, as the vehicle of vayiravan.

     “சீராடையற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து” (தனிப்பா. i,186, 14);.

     [வயிரவன் + வாகனம்.]

வயிரவபூசை

 வயிரவபூசை vayiravapūcai, பெ. (n.)

திருத்தலங்களுக்குச் சென்று திரும்பி வந்தவுடன், வயிரவக்கடவுளுக்குச் செய்யும் பூசை (நாஞ்.);

 worship of Bhairava performed on return from a pilgrimage of holy places.

     [பயிரவம் → வயிரவம் + பூசை.]

வயிரவம்

வயிரவம் vayiravam, பெ. (n.)

   1. அகப்புறச் சமயம்; the Bhairava sect.

     “சிலர் கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார்” (திருக்காளத். பு. 30, 26);.

   2. நடுக்கம், அச்சம் (வின்.);; terror, horror

   3. கலக்கம், கவலை; fear.

     [வைரவம் → வயிரவம்.]

வயிரவராதி

வயிரவராதி vayiravarāti, பெ. (n.)

   1. வலம்புரிச் சங்கு; conch whose spirals turn to the right.

   2. நந்தியாவட்டம்; East Indian rosebay.

வயிரவர்

 வயிரவர் vayiravar, பெ. (n.)

   வயிரவக்கடவுள்; a God.

வயிரவல்லி

 வயிரவல்லி vayiravalli, பெ. (n.)

   பிரண்டை (மூ.அ.);; square stalked vine.

வயிரவளை

வயிரவளை1 vayiravaḷai, பெ. (n.)

   சிறுபயறு (மலை.);; field-gram.

     [வயிரம்1 + வளை.]

 வயிரவளை2 vayiravaḷai, பெ. (n.)

   நரிப்பயறு; dew gram-Phaseolus aconitifolius.

வயிரவாரினி

வயிரவாரினி vayiravāriṉi, பெ. (n.)

   1. கீரைத் தண்டு வகை; a species of amarnath.

   2. கீரை வகை (யாழ்.அக.);; a pot-herb.

வயிரவாளி

வயிரவாளி vayiravāḷi, பெ. (n.)

   1. வயிர வுறுதியுள்ள அம்பு (வின்.);; adamantine arrow.

   2. மாதர் காதணிவகை (யாழ்ப்.);; a woman’s ear-ornament.

     [வயிரம் + வாளி.]

வயிரவாள்

வயிரவாள் vayiravāḷ, பெ. (n.)

   வச்சிரப்படை (பிங்.);; thunderbolt.

     [வயிரம்1 + வாள்.]

வயிரவி

வயிரவி1 vayiravi, பெ. (n.)

   1. கொற்றவை; Bhairawi.

   2. பைரவிப் பண் (இசை.);; a musical mode.

     [வைரவி → வயிரவி.]

 வயிரவி2 vayiravi, பெ. (n.)

   1. சாரணை; a prostate plant.

   2. சத்தி சாரணை; a boerhaavia rependa.

வயிரவிழா

வயிரவிழா vayiraviḻā, பெ. (n.)

   அறுபதா மாண்டு நிறைவுக் கொண்டாட்டம் (தற்கா.);; diamond jubilee.

     [வயிரம்1 + விழு → விழா.]

வயிரவுருக்கு

வயிரவுருக்கு vayiravurukku, பெ. (n.)

   வயிரத்தை உருக்கக்கூடிய பொருள்; a thing that melts or dissolves diamond.

     ‘வயிரவுருக்கானது அரக்கையுருக்கச் சொல்லவேணுமோ’ (திவ். திருநெடுந் 22 வியா. பக். 205);.

     [வயிரம் + உருகு → உருக்கு.]

வன்மையுந் திண்மைமிக்கதுமான, உறுதி வாய்ந்த உருக்கினையும் உருகச் செய்யும் பொருள்.

வயிரவூசி

வயிரவூசி vayiravūci, பெ. (n.)

   1. கண்ணாடி யறுக்குங் கூரிய வயிரம்; glazier’s diamond for cutting glass.

     “வயிரவூசியு மயன் வினையிரும்பும்” (நன். 265. சங்கர.);.

   2. முத்துத்துளைக்கும் ஊசி (யாழ்.அக.);; diamond-drill, needle for boring pearls.

     [வயிரம்1 + ஊசி1.]

வயிரவேர்

வயிரவேர் vayiravēr, பெ. (n.)

   சாயவேர் (மலை.);; Indian madder.

     [வயிரம்1 + வேர்.]

வயிராகம்

வயிராகம் vayirākam, பெ. (n.)

   1 பற்றின்மை; absence of wordly passions.

     “ஊன்று ஞானமோ டுயர் வயிராக நல்லொழுக்கம்” (பிரபுலிங். கைலாச. 43);.

   2. ஊக்கம் (வின்.);; zeal, enthusiasm, energy.

   3. இணங்காமை (வின்.);; obstinacy, pertinacity, adamancy.

வயிராகரம்

 வயிராகரம் vayirākaram, பெ. (n.)

   மத்திய மாகாணத்திலுள்ள பெருநகரம்; a metropolitan city in Madhya pradesh.

     “மதவரையிட்டம் வயிராகரத்து வாரி”.

வயிராகி

 வயிராகி vayirāki, பெ. (n.)

   பற்றற்றவன் (வின்.);; one who is free from wordly desires, or who conquered five senses, one who establishes desirelessness.

வயிராக்கியன்

வயிராக்கியன் vayirākkiyaṉ, பெ. (n.)

   1. பற்றற்றவன்; one who is free from wordly desires and attachments, sage.

   2. தன்முனைப்புள்ளவன்; obstinate, pertinacious or adamant person.

   3. பற்றார்வலர் (வின்.);; zealot, enthusiast.

     [வைராக்கியம் → வயிராக்கியம் → வயிராக்கியன்.]

வயிராக்கியம்

வயிராக்கியம் vayirākkiyam, பெ. (n.)

   உலகப் பற்றின்மை; desireless altitude towards wordly objects, oath to conquer all worldly attachment.

     ”வேண்டும் வயிராக்கியத்துக்குற்ற வனிதாதி” (வேதா. கு. 143);.

மறுவ. தன்னொறுப்பு

     [வைராக்கியம் → வயிராக்கியம்.]

வயிராவி

 வயிராவி vayirāvi, பெ. (n.)

வயிராகி (யாழ்.அக.); பார்க்க;see Vayiragi.

     [வயிராகி → வயிராவி.]

வயிரி

வயிரி1 vayirittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. மனம் முதலியன இறுகுதல்; to be hardened, as in feeling.

   2. இணங்காதிருத்தல்; to be obstinate, adamant.

     [வயிர் → வயிரி.]

மனம் வன்மையாகவும், திண்மையாகவும் கடிடன்படுதல் அல்லது உறுதியுடைத்தாதல். இணங்காதிருந்து செற்றங் கொள்ளுதலும் வயிரித்தலே யென்க.

 வயிரி2 vayiri, பெ. (n.)

   பகைவன்; enemy, foe.

     “அவ்வயிரி செய்த” (திருநூற். 34);.

     [வயிர் → வயிரி = பகை, பகைவன் (மு.தா.2 பக்.65);.]

 வயிரி3 vayiri, பெ. (n.)

   கன்னெஞ்சன் (யாழ்.அக.);; iron or stone or hard hearted man.

     [வயிரம் → வயிரி.]

 வயிரி4 vayiri, பெ. (n.)

   வல்லூறு (வின்.);; royal falcon.

வயிரிப்பு

வயிரிப்பு1 vayirippu, பெ. (n.)

   1. இறுகுகை, கடினமாகை (வின்.);; hardening, mental stress.

   2. இணங்காமை; obstinacy, adamancy.

     [வள் → வய் → வயிர் → வயிரி → வயிரிப்பு = வலியது;

கடினமானது.]

மனம் வயிரம்போல், வன்மையாயும், கடினமாயும் மாறுங்கால் எளிதில் அடங்காத் தன்மையேற்பட்டுத் தன்முரண் பிடித்தலே வயிரிப்பாகும்.

 வயிரிப்பு2 vayirippu, பெ. (n.)

   1. வயிரம் பார்க்க;see vayiram.

   2. வலிப்பு; convulsion.

வயிரியமாக்கள்

வயிரியமாக்கள் vayiriyamākkaḷ, பெ. (n.)

   1. வயிரியர்; professional dancers, actors, musicians.

   2. பாடகர்; professional musicians.

     “வயிரியமாக்கள் பண்ணமைத் தெழீஇ” (பதிற்றுப். 29);.

     [வயிரியர் + மாக்கள்.]

வயிரியம்

 வயிரியம் vayiriyam, பெ. (n.)

   மயிர்ச்சீலை (பிங்.);; wollen cloth.

     [வயிர் → வயிரி → வயிரம் → வயிரியம்.]

வன்மையாயும், திண்மையாயும், உருவாக்கப்பட்டுள்ள மயிர்ச்சீலை.

வயிரியர்

வயிரியர் vayiriyar, பெ. (n.)

   1. கூத்தர், பாணர், விறலியர்; professional dancers, actors or actresses.

     “விழவினாடும் வயிரியர் மடிய” (மதுரைக். 628);.

   2. பாடகர்; professional musicians, songster or songstress.

     [வயிர் → வயிரியர்.]

 வயிரியர் vayiriyar, பெ. (n.)

   ஊதுகொம்பு ஊதுபவர்; trumpeters.

     [வயிர்(ஊதுகொம்பு);+இயர்]

வயிரோசனன்

வயிரோசனன் vayirōcaṉaṉ, பெ. (n.)

   விரோசனன் மகன் மாவலி; Mahabal son of viresapar.

     “வயிரோசனனுக்குல கீந்தவர்” (வெங்கைக்கோ. 162);.

வயிரோசனி

 வயிரோசனி vayirōcaṉi, பெ. (n.)

   சிவதை யென்னுங் கொடிவகை (சங்.அக.);; Indian jalap.

வயிர்

வயிர்1 vayirttal,    4 செ.கு.வி. (v.i.)

   வயிரங் கொள்ளுதல்; to be solid, to harden.

     “வயிர்த்தன ணிலத்தினுயர் வானமினி தென்பாள்” (பாரத. சம்பவ. 102.);.

     [வல் → வள் → வய் → வயிர்.]

வலிமை கொள்ளுதல், திண்மையுடன் இருத்தல் (த.வ.பக்.111);.

 வயிர்2 vayirttal,    4 செ.கு.வி. (v.i.)

   செற்றங் கொள்ளுதல்; to be angry, to bear grudge.

     [வயிரம் → வயிர்.]

 வயிர்3 vayir, பெ. (n.)

   கூர்மை (அரு.நி.);; sharpness.

     “வச்சிரவயிர்வாயால்….. கொய்திட்டான்” (சேதுபு. துத். 19);.

     [வள் → வய் → வயிர் (வள் = கூர்மை); (வய்); → வை = கூர்மை.]

ள → ய = மெய்த்திரிபு. ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது பெருவழக்கு (த.வ.l, பக்.11);.

 வயிர்4 vayir, பெ. (n.)

   1. மூங்கில்; bamboo.

     “முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி” (ஐங்குறு. 395);.

   2. ஊதுகொம்பு; large trumpet, horn, bugle.

     “திண்காழ் வயிரெழுந் திசைப்ப” (திருமுரு. 120);.

     “வயிரிடைப்பட்ட தெள்விளி யியம்ப” (அகநா. 269:18);.

     [வெதிர் → வயிர்.]

 வயிர் vayir, பெ. (n.)

   ஒரு வகையான இசைக் கருவி; a kind of musical instrument.

பட பு:கிரி

     [வை-வய்-வயிர்]

வயிறடி-த்தல்

வயிறடி-த்தல் vayiṟaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   துயரக்குறியாக வயிற்றிலடித்துக் கொள்ளுதல்; to beat one’s stomach with one’s hands, as in grief.

     “வைத்தது காணாள் வயிறடித்து” (திவ். இயற். சிறிய. ம. 34);.

     [வயிறு + அடு → அடி.]

வயிறடைத்தல்

வயிறடைத்தல் vayiṟaḍaittal, தொ.பெ. (vbl.n.)

   1. உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை; loathing of food not fond of food.

   2. மலடாயிருக்கை; being barren, sterile.

   3. பூப்பு நின்றுபோகை; being past menopause.

   4. கருத்தரிக்குந்தன்மையற்றுப் போகை; ceasing to bear children, infertility.

     [வயிறு + அடைத்தல்.]

வயிறதுக்கு-தல்

வயிறதுக்கு-தல் vayiṟadukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வயிறுபிடி-த்தல் பார்க்க;see vayiru-pidi-.

   2. வயிறலை-த்தல் பார்க்க;see vayiralai-.

     “அரிவைய ரவ்வயிறதுக்கினார்” (சீவக. 1104);.

     [வயிறு + அதுங்கு(த.வி); → அதுக்கு.]

வயிறலை-த்தல்

வயிறலை-த்தல் vayiṟalaittal,    4 செ.கு.வி. (v.i.)

வயிறடி-த்தல் பார்க்க;see vayiradi.

     “வந்தானை யிடைநோக்கி வயிறலைத்து” (கம்பரா. சூர்ப்ப. 115);.

     [வயிறு + அல் → அலை. அலைதல் (த.வி.); → அலைத்தல் (பி.வி);.]

வயிறழி-ல்

வயிறழி-ல் vayiṟaḻil,    2 செ.கு.வி. (v.i.)

   1. கருக்குலைதல்; to abort.

   2. வெளிவிடுதல்; to be delivered.

     “மஞ்சு தம்வயிறுழிந்து” (சீவக.570);.

     [வயிறு + ஒழி → அழி.]

வயிறழிதல்

 வயிறழிதல் vayiṟaḻidal, பெ. (n.)

வயிறுகழிதல் (இ.வ.); பார்க்க;see Vayirukalidal.

     [வயிறு + இழி-தல்.]

வயிறார

வயிறார vayiṟāra, கு.வி.எ. (adv.)

   வயிறுநிரம்ப; to one’s bellyful.

   2. உணவு சுவையாய் இருந்ததால், வயிறார உண்டான் (இக்.வ.);.

     [வயிறு + ஆர் → ஆர. ஆர = மிக, நிறைய.]

வயிறிரைதல்

 வயிறிரைதல் vayiṟiraidal, பெ. (n.)

வயிறழுதல் பார்க்க;see Vayiraludal.

     [வயிற + இரைதல்.]

வயிறு

வயிறு vayiṟu, பெ. (n.)

   1. உதரம்; belly, stomach, paunch.

     “உணவு….. சிறிது வயிற்றுக்கு மீயப் படும்” (குறள், 412);.

     “அவ்வயிறு அலைத்த என்செய்வினைக் குறுமகள்” (நற்.179:3);.

     “தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே” (அகநா. 1.06.93);

     “ஈன்ற வயிறோ விதுவே” (புறநா. 86:5);.

   2. கருப்பப்பை; womb.

     “பத்து மாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை” (வின்);.

   3. நடுவிடம்; centre, heart, as of a tree.

     “கடல்வயிறு கலக்கினையே” (சிலப். 17, முன்னிலைப் பரவல். 1);.

   4. உள்ளிடம்; interior, inner space.

     “வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும்” (திவ். திருவாய். 8, 7 9);.

   5. மனம் (திவ். திருவாய். 8, 7, 9);; mind.

க. பசிறு.

 Ma, vayaru;

 Ko. vi-r. Kui vahi;

 Ka. basar(u);;

 Tu, bañji.

     [வயின் → வயிறு.]

வயிறுகடி

வயிறுகடி vayiṟugaḍi, பெ. (n.)

   1. பசி நோவு (இ.வ.);.);; pinch of hunger.

   2. வயிற்று வலி; stomach-ache.

   3. பொறாமை; jealousy, envy.

     [வயிறு + கடி.]

வயிறுகடித்தல்

 வயிறுகடித்தல் vayiṟugaḍittal, தொ.பெ. (vbl.n.)

வயிறுகடி பார்க்க;see Vayiru-kadi.

     [வயிறு + கடித்தல். கடித்தல் = வலித்தல்.]

வயிறுகடு-த்தல்

வயிறுகடு-த்தல் vayiṟugaḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வயிறு வலித்தல்; stomach-ache.

     [வயிறு + கடு.]

வயிறுகடுப்பு

 வயிறுகடுப்பு vayiṟugaḍuppu, பெ. (n.)

   வயிற்றினழற்சி; inflammation of the stomach-gastritis.

     [வயிறு + கடுப்பு.]

வயிறுகடுப்பெடு-த்தல்

வயிறுகடுப்பெடு-த்தல் vayiṟugaḍuppeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

வயிறு கடு-த்தல் பார்க்க;see Vayiru-kadu-.

     [வயிறு + கடுப்பு + எடு.]

வயிறுகட்டல்

வயிறுகட்டல்1 vayiṟugaṭṭal, பெ. (n.)

   1. மகப்பேறு நிகழ்ந்த பெண்களுக்கு அடிவயிற்றில் கட்டும் கட்டு; obsteric binder, bandage applied to the abdomen after delivery.

   2. நோயாளி, கருவுற்றவள் உணவுக் கட்டுப்பாட்டிலிருத்தல்; patient and pregnant woman to be on diet (சா.அக.);.

     [வயிறு + கள் → கட்டு + அல்.]

 வயிறுகட்டல்2 vayiṟugaṭṭal, பெ. (n.)

   தேவையற்ற உணவினை தவிர்த்தல்; avoidance of unnecessary food.

     [வயிறு + கட்டல்.]

வயிறுகண்டிப்பு

 வயிறுகண்டிப்பு vayiṟugaṇṭippu, பெ. (n.)

   அடிவயிற்று வீக்கம்; swelling abdomen (சா.அக.);.

     [வயிறு + கண்டு → கண்டி → கண்டிப்பு.]

வயிறுகனத்தல்

 வயிறுகனத்தல் vayiṟugaṉattal, பெ. (n.)

வயிறுகடுத்தல் பார்க்க;see vayiru-kaduttal.

     [வயிறு + கனத்தல்.]

வயிறுகலக்கல்

 வயிறுகலக்கல் vayiṟugalaggal, பெ. (n.)

வயிறுகடுப்பு பார்க்க;see vayiru-kaduppu.

     [வயிறு + கலக்கல்.]

வயிறுகளை

 வயிறுகளை vayiṟugaḷai, பெ. (n.)

குடல் துப்புர வுக்காக நாட்டு மருத்துவர் தரும் வயிற்றுப்

   போக்கு இளகியம் (பேதி மருந்து);; a Tamil medicinal fluid substance “ilagiyum” given by native Siddha doctors for cleansing the bowels.

     [வயிறு+களை]

எழுவாய்த் தொடராதலின் குற்றுகரம் இரட்டாதாயிற்று.

வயிறுகழிதல்

 வயிறுகழிதல் vayiṟugaḻidal, தொ.பெ. (vbl.n.)

   இளகிய நிலையில் கழிமாசு (மலம்); போன்றவை இழிதல் (இ.வ.);; having loose motions.

     [வயிறு + கழிதல்.]

வயிறுகழுவு-தல்

வயிறுகழுவு-தல் vayiṟugaḻuvudal,    5 செ.கு.வி. (v.i.)

   அரும்பாடுபட்டு, உணவு தேடிப் பிழைத்தல்; to manage with great difficulty to get food and live, to eke one’s livelihood.

வயிறுகழுவ வழியில்லாதவள் வானூர்தி ஏற நினைக்கலாமா? (பழ);.

     [வயிறு + கழுவு.]

வயிறுகாந்தல்

வயிறுகாந்தல்1 vayiṟukāndal, பெ. (n.)

வயிற்றுப்புகைச்சல் (வின்.); பார்க்க;see Vayirru-p-pugaiccal.

     [வயிறு + காந்தல்.]

 வயிறுகாந்தல்2 vayiṟukāndal, பெ. (n.)

   வயிறு காந்துகை; to be pinched with hunger (சா.அக.);.

     [வயிறு + காந்தல்.]

வயிறுகாந்துதல்

வயிறுகாந்துதல் vayiṟukāndudal, பெ. (n.)

வயிறுகாய்தல் (வின்.); பார்க்க;see vayiru-kaydal.

     [வயிறு + காய் → காய்ந்து → காந்து → காந்துதல் = எரிவெடுத்தல் (வே.க.185);.]

வயிறுகாய்தல்

வயிறுகாய்தல் vayiṟukāytal, பெ. (n.)

   பட்டினியாயிருக்கை, நீருஞ் சோறுமாகிய இருமருந்துளொன்றேனு முண்ணாமை; abstinency, starvation, being pinched with hunger, fasting.

     “வயிறுகாய் பெரும்பசி” (மணிமே. 14, 6);.

     [வயிறு + காய் + தல் = தொ. பெ. ஈறு.]

வயிறுகிடமுடெனல்

 வயிறுகிடமுடெனல் vayiṟugiḍamuḍeṉal, தொ.பெ. (vbl.n.)

   வயிற்றில் உண்டாகும் பேரிரைச்சல்; warble.

     [வயிறு + கிடமுடெனல்.]

கிடமுடெனல் = ஒலிக்குறிப்புச் சொல்.

வயிறுகிண்டுதல்

 வயிறுகிண்டுதல் vayiṟugiṇṭudal, பெ. (n.)

வயிறுகாய்தல் (இ.வ.); பார்க்க;see vayiru-kaydal.

     [வயிறு + கிள் → கிண்டு → கிண்டுதல்.]

வயிறுகிள்ளுதல்

 வயிறுகிள்ளுதல் vayiṟugiḷḷudal, பெ. (n.)

வயிறுகாய்தல் பார்க்க;see vayiru-kaydal.

     [வயிறு + கிள்ளுதல்.]

வயிறுகிள்ளும்பசி

 வயிறுகிள்ளும்பசி vayiṟugiḷḷumbasi, பெ. (n.)

   அழி பசி; gnawing hunger.

மறுவ. கொடும்பசி.

     [வயிறு + கிள்ளும் + பசி.]

வறியவரது கொடிய பசியே, வயிறு கிள்ளும் பசியெனவாம். இக்கொடிய பசியினைப் போக்குபவனே, அனைத்து நன்மைகளும், பெற்றவனாவன்.

வயிறுகுத்துதல்

வயிறுகுத்துதல் vayiṟuguddudal, பெ. (n.)

   வயிற்றில் வலியுண்டாகை (தொல். சொல்.15, உரை);; having stabbing pain in the stomach.

     [வயிறு + குத்துதல்.]

வயிறுகுமுறல்

 வயிறுகுமுறல் vayiṟugumuṟal, பெ. (n.)

   வயிற்றுளெழும் அதிரொலி; quavering or trembling sound.

     [வயிறு + குமுறல்.]

வயிறுகுளிர்-தல்

வயிறுகுளிர்-தல் vayiṟuguḷirtal,    2 செ.கு.வி. (v.i.)

   பொந்திகையடைதல்; to be refreshed, as by food, to be satisfied.

     ‘அவள் வயிறு குளிர்ந்தான்’ (வின்.);.

     [வயிறு + குளிர்.]

வயிறுகூப்பிடுதல்

 வயிறுகூப்பிடுதல் vayiṟuāppiḍudal, பெ. (n.)

வயிறழுதல் (இ.வ.); பார்க்க;see Vayiraludal.

     [வயிறு + கூப்பிடுதல்.]

வயிறுகெல்லல்

 வயிறுகெல்லல் vayiṟugellal, பெ. (n.)

   வயிற்றளைச்சல்; irritation of the stomach (சா.அக.);.

     [வயிறு + கெல்லல்.]

வயிறுகொட்டல்

 வயிறுகொட்டல் vayiṟugoṭṭal, பெ. (n.)

   குருதிகொட்ட கழிமாசு (மலம்); கழிக்கை (M.L.);; dysentery.

     [வயிறு + கொட்டு + அல்.]

வயிறுகோளாறு

 வயிறுகோளாறு vayiṟuāḷāṟu, பெ. (n.)

   அற்றதறிந் துண்ணாமையானேற்படும் இடர், உடல் ஊறுபாடு; complication in the stomach due to indigestion and other cause.

     [வயிறு + கோளாறு.]

வயிறுசுருட்டிபிடி-த்தல்

வயிறுசுருட்டிபிடி-த்தல் vayiṟusuruḍḍibiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

வயிறுகெல்லல் பார்க்க;see vayiru-kellail.

     [வயிறு + சுருட்டி + பிடி.]

வயிறுதம-த்தல்

வயிறுதம-த்தல் vayiṟudamaddal,    4 செ.குன்றாவி. (v.t.)

வயிறுதமத்தது பார்க்க;see vayiru-tamattadu.

     [வயிறு + தம.]

வயிறுதமத்தது

 வயிறுதமத்தது vayiṟudamaddadu, பெ. (n.)

   பசியாறுகை ; appeasement or satiation of hunger.

     [வயிறு + தமத்தது.]

வயிறுதளர்ச்சி

 வயிறுதளர்ச்சி vayiṟudaḷarcci, பெ. (n.)

   வயிற்றிளக்கம்; laxity of stomach.

     [வயிறு + தள் → தளர் → தளர்ச்சி.]

வயிறு தளர்ந்து சுருங்குகை.

வயிறுதள்ளல்

வயிறுதள்ளல் vayiṟudaḷḷal, தொ.பெ. (vbl.n.)

   1. தொந்தி விழுகை; being pot-bellied or large belly.

   2. கருப்பமாகை; conceivability, becoming pregnant (சா.அக.);.

     [வயிறு + தள்ளல்.]

வயிறுதள்ளு-தல்

வயிறுதள்ளு-தல் vayiṟudaḷḷudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வயிறு பருத்தல்; to be in enlarged or bulging stomach.

     [வயிறு + துள் → தள் → தள்ளு.]

வயிறுதாரி

வயிறுதாரி vayiṟutāri, பெ. (n.)

   1. பரு வயிறோன்; person with a big belly, pot-bellied person.

     “கணபதியேல் வயிறுதாரி” (தேவா.1053.2);.

   2. கழிபேரிரையான் (வின்.);; glutton.

   3. தன்னலம் ஒன்றையே கருதபவன்; extremely selfish person.

     [வயிறு + தாரி.]

வயிறுதிறத்தல்

வயிறுதிறத்தல் vayiṟudiṟaddal, தொ.பெ. (vbl.n.)

   1. மகப்பெறுகை (இ.வ.);; giving birth to children.

   2. கழிபே ரிரையானாகை; being gluttonous.

     [வயிறு + திறத்தல்.]

வயிறுதூர்-தல்

வயிறுதூர்-தல் vayiṟutūrtal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. பசிவேட்கையில்லாதிருத்தல்; to have loss of appetite.

   2. மலடியாகுகை; to become barren or infertile (சா.அக.);.

     [வயிறு + தூர்.]

வயிறுநிமிர உண்ணல்

 வயிறுநிமிர உண்ணல் vayiṟunimirauṇṇal, பெ. (n.)

   வயிறு நிரம்ப உண்ணல்; full consumption of food (சா.அக.);.

மறுவ. வயிறார உண்ணல்.

     [வயிறு + நிமிர + உண்ணல்.]

வயிறுநீரோடல்

 வயிறுநீரோடல் vayiṟunīrōṭal, பெ. (n.)

   நீராய் கழிமாசு (மலம்); கழிதல்; dilute motions.

     [வயிறு + நீரோடல்.]

வயிறுநோ-தல்

வயிறுநோ-தல் vayiṟunōtal,    17 செ.கு.வி. (v.i.)

   மகப்பேற்று வலியுண்டாதல்; to have labour-pains.

     [வயிறு + நோ.]

வயிறுபழு-த்தல்

வயிறுபழு-த்தல் vayiṟubaḻuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மகப்பெறுதலின் பிறகு பெண்களுக் குண்டாகும் ஒருவகை நோய்; a post delivery disease of the stomach attacking woman (சா.அக.);.

     [வயிறு + பழு.]

வயிறுபிடி-த்தல்

வயிறுபிடி-த்தல் vayiṟubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   துயரக்குறியாக வயிற்றைப் பிசைதல்; to press one’s stomach with one’s hands, as in grief or distress.

     “ஏத்தாத நாளைக்கும் வயிறுபிடிக்க வேண்டும்படியான விஷயம்” (ஈடு. 10, 1, 2);.

     [வயிறு + பிடி.]

வயிறுபுடை-த்தல்

வயிறுபுடை-த்தல் vayiṟubuḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வயிறு பெரிதாகுகை; distension of the abdomen (சா.அக.);.

     [வயிறு + புடை.]

வயிறுபுரட்டல்

 வயிறுபுரட்டல் vayiṟuburaṭṭal, தொ.பெ. (vbl.n.)

   குமட்டல்; nausea.

     [வயிறு + புரட்டல்.]

வயிறுபுழு-த்தல்

வயிறுபுழு-த்தல் vayiṟubuḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   கருக்கொள்ளுதல்; to conceive.

அவள் அடிக்கடி வயிறுபுழுத்த வண்ணம் இருக்கிறாள்.

     [வயிறு + புழு.]

வயிறுபேதித்தல்

 வயிறுபேதித்தல் vayiṟupētittal, தொ.பெ. (vbl.n.)

வயிறுகழிதல் (யாழ்.அக.); பார்க்க;see vayiru-kalidal.

     [வயிறு + பேதித்தல்.]

வயிறுபொருமுதல்

வயிறுபொருமுதல் vayiṟuborumudal, தொ.பெ. (vbl.n.)

   1. வயிறுப்பசம் பார்க்க;see vayiruppasam.

   2. வயிற்றெரிச்சல், 2 பார்க்க;see vayirrericcal.

     [வயிறு + பொருமுதல்.]

வயிறுபோ-தல்

வயிறுபோ-தல் vayiṟupōtal,    8 செ.கு.வி. (v.i.)

வயிறுபோக்கு பார்க்க;see vayiru-pokku.

     [வயிறு + போ.]

வயிறுபோக்கு

 வயிறுபோக்கு vayiṟupōkku, பெ. (n.)

வயிற்றுப் போக்கு பார்க்க;see vayirru-p-põkku.

     [வயிறு + போக்கு.]

வயிறுபோதல்

 வயிறுபோதல் vayiṟupōtal, தொ.பெ. (vbl.n.)

வயிறுநீரோடல் பார்க்க;see vayiru-nirodal.

     [வயிறு + போதல்.]

வயிறுப்பசம்

 வயிறுப்பசம் vayiṟuppasam, பெ. (n.)

   குடலில் தங்கும் வளிமிகுதியால் ஏற்படும் வயிற்றூத்தம்; distension of the abdomen from a morbid collection of air in the instentines and stomach.

வயிறுப்பல்

 வயிறுப்பல் vayiṟuppal, பெ. (n.)

   வயிறு பருத்தல்; distension of the abdomen (சா.அக.);.

     [வயிறு + உப்பல்.]

வயிறுப்பு-தல்

வயிறுப்பு-தல் vayiṟuppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வயிறுப்பல் பார்க்க;see vayiruppal.

வயிறுப்புசம்

 வயிறுப்புசம் vayiṟuppusam, பெ. (n.)

   உண்டது செரியாமல் வயிறு பெருக்கை (இ.வ.);; tympanites.

     [வயிறு + உப்பசம்.]

வயிறுமுட்ட

 வயிறுமுட்ட vayiṟumuṭṭa, கு.வி.எ. (adv.)

வயிறார பார்க்க;see vayirāra.

     [வயிறு + முட்ட.]

வயிறுளை-த்தல்

வயிறுளை-த்தல் vayiṟuḷaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வயிற்றைத் துளைத்தல் போன்ற நோய்; a disease with boring pain in the abdomen.

     [வயிறு + உளை-த்தல்.]

வயிறுளைவு

 வயிறுளைவு vayiṟuḷaivu, பெ. (n.)

வயிறுளை-த்தல் பார்க்க;see vayirulai.

     [வயிறு + உளைவு.]

     [உளைவு = குடைச்சனோவு.]

வயிறுழுதல்

 வயிறுழுதல் vayiṟuḻudal, தொ.பெ. (vbl.n.)

   வயிற்றில் இரைச்சலுண்டாகை (வின்.);; flatulency, rumbling of the bowels.

     [வயிறு + அழிதல் → அழுதல்.]

வயிறுவளர்-த்தல்

வயிறுவளர்-த்தல் vayiṟuvaḷarttal,    4 செ.கு.வி. (v.i.)

வயிறுகழுவு-, (யாழ்.அக.); பார்க்க;see vayiru-kaluvu.

     [வயிறு + வளர்.]

வயிறுவானமா-தல்

வயிறுவானமா-தல் vayiṟuvāṉamātal,    6 செ.குன்றாவி. (v.t.)

   வயிறுப்புதல்; bloating of the abdomen.

     [வயிறு + வானம் + ஆ.]

வயிறுவாய்

வயிறுவாய்1 vayiṟuvāyttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மகப்பெறுதல்; to give birth a child.

     “திதி யென்பாள்….. அசுரர்தமை வயிறு வாய்த்தாள்” (கம்பரா.சடாயுகாண். 25);.

     [வயிறு + வாய்.]

 வயிறுவாய்2 vayiṟuvāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   கருப்பத்திற்றங்குதல்; to remain in the womb as foetus.

     “கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” (திவ். பெருமாள். 8, 1);.

     [வயிறு + வாய்.]

வயிறுவாழ்-தல்

வயிறுவாழ்-தல் vayiṟuvāḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   தேவையான உணவு பெற்றிருத்தல்; to have enough or sufficient food.

   2. உயிர்வாழ்தல்; to be alive.

     ‘வயிறு வாழாமல் செய்கிறானன்றே’ (திவ். பெரியாழ். 2 9, 3 வ்யா. பக். 457);.

     [வயிறு + வாழ்.]

வயிறுவிடுதல்

 வயிறுவிடுதல் vayiṟuviḍudal, பெ. (n.)

வயிறு கழிதல் (யாழ்.அக.); பார்க்க;see vayiru-kalidal.

     [வயிறு + விடுதல்.]

வயிறுவிம்மல்

வயிறுவிம்மல்1 vayiṟuvimmal, பெ. (n.)

வயிறூதல் பார்க்க;see vayirudal.

     “கோதுற்ற வயிறுவிம்மி குடல்தான் புரட்டுந்தானே”.

     [வயிறு + விம்மல்.]

 வயிறுவிம்மல்2 vayiṟuvimmal, பெ. (n.)

   வயிற்றுப்பசம்; distension of the abdomen (சா.அக.);.

     [வயிறு + விம்மல்.]

வயிறுவீக்கம்

 வயிறுவீக்கம் vayiṟuvīkkam, பெ. (n.)

   வயிறு வீங்குகை; swelling of the abdomen.

     [வயிறு + வீக்கம்.]

வயிறுவெடித்தல்

 வயிறுவெடித்தல் vayiṟuveḍittal, பெ. (n.)

   பேருண்டி, பெருஞ்சிரிப்பு முதலியவற்றால் வயிறு வெடிப்பது போலாகை (கொ.வ.);; bursting, as with excessive food, long laughter.

     [வயிறு + வெடித்தல்.]

வயிறுவே-தல்

 வயிறுவே-தல் vayiṟuvētal, செ.கு.வி. (v.i.)

வயிறெரி-, பார்க்க;see vayireri.

     [வயிறு + வே-, → வேகு-தல்.]

வயிறுவை-த்தல்

வயிறுவை-த்தல் vayiṟuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வயிறு பருத்துத் தொந்தி வைத்தல்; to become pot belly.

அளவறியா துணவு கொள் பழக்கத்தால் அவனுக்கு வயிறு வைத்துவிட்டது (உ.வ.);.

     [வயிறு + வை-த்தல்.]

அளவிற்கதிகமாக, நேரங்கெட்ட நேரத்தில் உணவுண்பதாலும், அலுவலகத்தில், அமர்ந்த வண்ணமே, பணிசெய்வதாலும், போதிய உடலுழைப்பு, உடற்பயிற்சி இன்மையாலும், நகரத்தில் வாழ்நர் வயிறு வைத்த நிலையில் துன்புறுகின்றனர்.

வயிறு வைத்தலைத் தவிர்க்க வேண்டுமெனின் கொழுப்புணவினை, உடலுழைப்பிற்கு ஏற்றவண்ணம் உண்ண வேண்டும். நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுப்பொருளினை உரிய நேரத்திலுண்டு, மருத்துவரின் அறிவுரையின்படி, கொழுப்பு கரையுமளவு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்யவியலாதவர்களுக்கு, நடைப்பயிற்சியே வயிறு வைத்தலைத் தவிர்த்தலுக் குரிய நல்வழியாகும்.

வயிறூதல்

வயிறூதல்1 vayiṟūtal, பெ. (n.)

வயிறு விம்மல் பார்க்க;see vayiru-vimmal (சா.அக.);.

 வயிறூதல்2 vayiṟūtal, பெ. (n.)

   வயிற்றில் ஊதை தங்குவதால் உண்டாகும் வயிற்றூத்தம்; distension of the abdomen due to collection of air or flatus (சா.அக.);.

வயிறூதுகை

 வயிறூதுகை vayiṟūtugai, பெ. (n.)

வயிறு பொருமுதல் (வின்.); பார்க்க;see vayiru-porumudal.

     [வயிறு + ஊதுகை.]

வயிறெடுத்தல்

 வயிறெடுத்தல் vayiṟeḍuttal, பெ. (n.)

வயிறு கழிதல் பார்க்க;see vayiru-kalidal.

     [வயிறு + எடு.]

வயிறெரி-தல்

வயிறெரி-தல் vayiṟeridal,    2 செ.கு.வி. (v.i.)

   1. பொறாமை கொள்ளுதல்; to be envious.

அவள் வளமனையில் வாழ்க்கைப்பட்டதைக் கண்டு வயிறெரிகிறாள்.

   2. மிகுதுயரமுறுதல் (பிரபுலிங்.சித்தரா.48);; to be greatly moved by sorrow, to mentally upset.

     [வயிறு + எரி.]

வயிறெரித்தல்

வயிறெரித்தல் vayiṟerittal, பெ. (n.)

வயிற்றெரிச்சல் பார்க்க;see vayir-r-ericcal.

     “மிகவும் வயிற்றெரித்தலுக்கு உடலாயிருக்குமிறே” (ஈடு. 434);.

     [வயிறு + எரி – வயிறெரி → வயிறெரித்தல்.]

வயிறெரிவு

 வயிறெரிவு vayiṟerivu, பெ. (n.)

வயிற்றெரிச்சல் (வின்.); பார்க்க;see vayirrericcal.

     [வயிறு + எரிவு.]

வயிறெற்று-தல்

வயிறெற்று-தல் vayiṟeṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வயிறடி-, பார்க்க;see vayiradi.

     “வயிறெற்றி பெற்றி” (கம்பரா. கைகேசி சூழ். 47);.

     [வயிறு + எற்று.]

வயிற்றகச்சவ்வு

 வயிற்றகச்சவ்வு vayiṟṟagaccavvu, பெ. (n.)

வயிற்றினுட்சவ்வு பார்க்க;see vayirrinut-savvu.

வயிற்றகமுடையான்

வயிற்றகமுடையான் vayiṟṟagamuḍaiyāṉ, பெ. (n.)

 son, as born of one’s womb.

     [வயிற்றகம்1 + உடையான்.]

வயிற்றக்கமயூரம்

 வயிற்றக்கமயூரம் vayiṟṟakkamayūram, பெ. (n.)

   வெள்ளூமத்தை; dhatura plant bearing white flowers – Dhatura alba.

வயிற்றரை

 வயிற்றரை vayiṟṟarai, பெ. (n.)

   வயிற்றிலுள்ள வெற்றிடம்; abdominal cavity.

வயிற்றளைச்சல்

 வயிற்றளைச்சல் vayiṟṟaḷaiccal, பெ. (n.)

   வயிற்றுநோய் வகை; dysentery.

     [வயிறு + அளைச்சல்.]

வயிற்றழுக்கு

 வயிற்றழுக்கு vayiṟṟaḻukku, பெ. (n.)

   சூதக வழுக்கு; menstrual blood.

வயிற்றாசாரம்

 வயிற்றாசாரம் vayiṟṟācāram, பெ. (n.)

   வயிற்றுக் கொடுமைக்காக நடந்து கொள்ளும் நடத்தை (இ.வ.);; conduct dictated by necessitous circumstances.

     [வயிறு + ஆசாரம்.]

வயிற்றாத்திரம்

 வயிற்றாத்திரம் vayiṟṟāttiram, பெ. (n.)

   பசி (இ.வ.);; hunger.

     [வயிறு + ஆத்திரம்.]

வயிற்றான்

 வயிற்றான் vayiṟṟāṉ, பெ. (n.)

   பெரு வயிறோன் (இ.வ.);; big-bellied man.

     [வயிறு + ஆன். ஆன் = ஆண்பாலீறு.]

வயிற்றாலெடு-த்தல்

வயிற்றாலெடு-த்தல் vayiṟṟāleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

வயிற்றாலேபோ-, (கொ.வ.); பார்க்க;see vayirrala-po.

     [வயிறு + எடு.]

வயிற்றாலேபோ-தல்

வயிற்றாலேபோ-தல் vayiṟṟālēpōtal,    8 செ.கு.வி. (v.i.)

   வயிற்றுப் போக்காதல் (உ.வ.);; to have diarrhoea or loose motions.

     [வயிறு + போ.]

வயிற்றாளி

 வயிற்றாளி vayiṟṟāḷi, பெ. (n.)

   அளவின்றி வயிறு நிரைப்போன் (இ.வ.);; belly-slave, glutton.

மறுவ. கழிபே ரிரையான்.

     [வயிறு + ஆள் → ஆளி = வயிற்றாளி.]

     ‘இ’ உடைமைப் பொருளீறு.

வயிற்றாள்

 வயிற்றாள் vayiṟṟāḷ, பெ. (n.)

   பெரு வயிறுடையவள்; big bellied woman (சா.அக.);.

     [வயிறாள் → வயிற்றாள்.]

வயிற்றிசிவு

வயிற்றிசிவு1 vayiṟṟisivu, பெ. (n.)

   1. வயிற்று வலி (வின்.);; stomach-ache.

   2. வயிற்றிலேற்படும் மகப்பேற்று வலி; labour-pains.

     [வயிறு + இழுப்பு → இசிப்பு → இசிவு. இசிவு = வயிற்றுவலி, மகப்பேற்றுவலி.]

 வயிற்றிசிவு2 vayiṟṟisivu, பெ. (n.)

   வயிற்றிலேற்படும் தசைபிடிப்பு; cramp of the abdominal muscles (சா.அக.);.

     [வயிறு + இழுப்பு → இசிப்பு → இசிவு.]

வயிற்றின்கொடுமை

 வயிற்றின்கொடுமை vayiṟṟiṉkoḍumai, பெ. (n.)

   வயிற்றுப்பசி; want of food, starvation (சா.அக.);.

     [வயிற்றின் + கொடுமை.]

வயிற்றிரைச்சல்

வயிற்றிரைச்சல்1 vayiṟṟiraiccal, பெ. (n.)

   வயிற்றிலுண்டாகும் இரைச்சல்; gargling or gurgling sound in the abdomen (சா.அக.);.

 வயிற்றிரைச்சல்2 vayiṟṟiraiccal, பெ. (n.)

   ஊதை மிகுதியான் வயிற்றிலுண்டாகும் இரைச்சல் (இ.வ.);; rumbling of the bowels.

     [வயிறு + இரை → இரைச்சல்.]

வயிற்றிற்கிருமி

 வயிற்றிற்கிருமி vayiṟṟiṟkirumi, பெ. (n.)

வயிற்றுக்கிருமி (வின்.); பார்க்க;see vayirru-k-kirumi.

     [வயிறு + Skt. krmi → த. கிருமி.]

வயிற்றிற்கொள்(ளு)-தல்

வயிற்றிற்கொள்(ளு)-தல் vayiṟṟiṟkoḷḷudal, செ.குன்றாவி. (v.t.)

   1. உண்ணுதல்; to eat.

     “தம் வயிற்றிற் கொண்டு” (திவ். திருவாய் 8, 7, 9);.

   2. பாதுகாத்தல்; to protect.

     “வயிற்றிற் கொண்டு நின் றொழிந்தார்” (திவ். திருவாய் 8, 7, 9);.

   3. மனத்திற் கொள்ளுதல்; to retain in memory, to absorb in mind.

     “வயிற்றிற் கொண்டு மன்னவைத்தேன்” (திவ். திருவாய். 8, 7, 9);.

     [வயிறு + கொள்.]

வயிற்றிலடசல்

 வயிற்றிலடசல் vayiṟṟilaḍasal, பெ. (n.)

   வருமகுற்றம் (தோஷம்);; industrinal fault or disorder (சா.அக.);.

வயிற்றிலடி-த்தல்

வயிற்றிலடி-த்தல் vayiṟṟilaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பிழைப்பைக் கெடுத்தல் (இ.வ..);; to deprive a person of his food or doing harm to the means of livelihood, as striking at the stomach.

     “தொழிலாளர் வயிற்றிலடித்துப் பணம் சேர்ப்பது, முதலாளிகளுக்குக் கைவந்த கலையாகும்” (உ.வ.);.

     [வயிறு + அடு → அடி.]

வயிற்றிலிட்டுக்கொள்(ளு)-தல்

வயிற்றிலிட்டுக்கொள்(ளு)-தல் vayiṟṟiliṭṭukkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. வயிற்றுப் போக்காதல் (இ.வ.);; to have diarrhoea or loose motions.

   2. இடுக்கண் முதலியவற்றால் உடம்பு இன்னலுறுதல் (இ.வ..);; to be affected physically, as by a calamity, etc.

     [வயிறு + இடு + கொள்.]

வயிற்றில்களிம்புகட்டல்

வயிற்றில்களிம்புகட்டல் vayiṟṟilgaḷimbugaṭṭal, பெ. (n.)

   1. உப்புசம்; tympanitis.

   2. வளி வெளிநோக்கல்; any abnormal escape air as by belching yawning etc Нerifieaus (சா.அக.);.

     [வயிற்றில் + களிம்பு + கட்டல்.]

வயிற்றில்வாயுபொருமல்

 வயிற்றில்வாயுபொருமல் vayiṟṟilvāyuborumal, பெ. (n.)

   ஊதையால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம்; tympanitis (சா.அக.);.

வயிற்றிளக்கம்

 வயிற்றிளக்கம் vayiṟṟiḷakkam, பெ. (n.)

   வயிற்றின் சுருக்கம்; relaxation of the bowels by cathartics or by discharges (சா.அக.);.

     [வயிறு + இள் → இள → இளகு → இளக்கு → இளக்கம்.]

வயிற்றிளைச்சல்

 வயிற்றிளைச்சல் vayiṟṟiḷaiccal, பெ. (n.)

வயிறுளை-த்தல் பார்க்க;see vayirulai (சா.அக.);.

     [வயிறு + இள் → இளை → இளைச்சல்.]

வயிற்றிழைச்சல்

 வயிற்றிழைச்சல் vayiṟṟiḻaiccal, பெ. (n.)

வயிறுளை-த்தல் பார்க்க;see vayirulai.

     [வயிறு + இள் → இழை → இழைச்சல்.]

வயிற்றுக்கடுப்பு

வயிற்றுக்கடுப்பு vayiṟṟukkaḍuppu, பெ. (n.)

   1. வயிற்றினழற்சியால் உண்டாகும் ஓர் நோய்; a disease causing throbbing pain or irritation in some parts of the abdomen.

   2. மூலக்கடுப்பு; as in dysentery.

   3. வயிறுகடுப்பு பார்க்க;see vayiru-kaduppu (சா.அக.);.

     [வயிறு + கடு → கடுப்பு.]

வயிற்றின் அழற்சியால், கடுமையான வலி யுண்டாக்கும் வயிற்றுநோய்.

 வயிற்றுக்கடுப்பு2 vayiṟṟukkaḍuppu, பெ. (n.)

   1. வயிற்றுப் போக்கால் ஏற்படும் வலி; grips.

   2. அரத்தக் கழிச்சல்; dysentery.

   3. வயிற்றில் உண்டாம் நோவுவகை; stomachache, colic, cramp, stabbing pain in the stomach.

     [வயிறு + கடு → கடுப்பு.]

வயிற்றில் மிகு வலியினையும், குத்தலையும் உண்டாக்கும் வயிற்று நோய்.

வயிற்றுக்கட்டி

வயிற்றுக்கட்டி vayiṟṟukkaṭṭi, பெ. (n.)

   1. வயிற்றுப் புண்கட்டி (வின்.);; abdominal abscess.

   2. ஈரல் முதலியவற்றின் வீக்கம் (உ.வ.);; enlargement of the liver or the spleen.

மறுவ. ஆமைக்கட்டி, காய்ச்சற்கட்டி

     [வயிறு + கள் → கட்டு → கட்டி.]

கள் = திரளல், பெருகுதல், உருண்டு கட்டியாதல். வயிற்றிலுள்ள உருண்டு திரண்ட கட்டி.

மலையும் மலைசார்ந்த குறிஞ்சிநிலத்துவாழ் மக்களுக்கு மண்ணீரல் சுரந்து கட்டியைப்போலத் தோற்றுவிக்கும் ஒரு வகை வீக்கமாகலாம்.

வயிற்றுக்கட்டு

வயிற்றுக்கட்டு vayiṟṟukkaṭṭu, பெ. (n.)

   1. அடிவயிற்றிலிருந்து குறிவரைக்கும் துணியால் இறுகக்கட்டும் கட்டு; abdominal compress, a form of local pack, made by forming folds of a coarse linen towel of sufficient breadth to reach upto the penis.

   2. ஈன்று புறந்தந்தவுடன் அடி வயிற்றிற் கட்டும் கட்டு; an abdominal bandage or belt for woman immediately after delivery (சா.அக.);.

     [வயிறு → வயிற்று + கள் → கடு → கட்டு. கட்டு – இணைத்தல், சேர்த்தல். வயிற்றை இடுப்போடிணைத்துப் பிணைத்துக் கட்டும் கட்டு.]

வயிற்றுக்கண்டரை

 வயிற்றுக்கண்டரை vayiṟṟukkaṇṭarai, பெ. (n.)

   அடிவயிற்றிலோடும் அரத்தக்குழாய்; abdominal aorta.

     [வயிறு + கண்டு → கண்டரை.]

கண்டரை = நெஞ்சாங்குலையின் மேற்புறம் உள்ள இடப்பெருந் தமனி, ஆதார நாடி.

வயிற்றுக்கனப்பு

வயிற்றுக்கனப்பு vayiṟṟukkaṉappu, பெ. (n.)

   1. செரிமான ஆற்றலறியாமல் உண்பதால் வயிறு விம்முகை (வின்.);; heaviness of stomach as from overeating or excessive eating.

   2. ஊதை மிகுதியான் அடி வயிறு விம்முகை (கொ.வ.);; tympanites.

மறுவ. வயிற்றுத் தீ

     [வயிறு + கனப்பு.]

கல் → கனல் = நெருப்பு அல்லது வயிற்றிலேற்படும் வெப்பம். மிகு செரிமானத்தால் ஏற்படும் வயிற்றுத் தீ.

வயிற்றுக்கலக்கல்

 வயிற்றுக்கலக்கல் vayiṟṟukkalakkal, பெ. (n.)

   வயிறு கலங்கி மலங்கழிகை; stirring sensation in the abdomen causing an inclination to go to stools (சா.அக.);.

     [வயிறு + கல → கலக்கல்.]

வயிற்றுக்கழிச்சல்

வயிற்றுக்கழிச்சல்1 vayiṟṟukkaḻiccal, பெ. (n.)

   அதிசாரம்; flux purging (சா.அக.);.

 வயிற்றுக்கழிச்சல்2 vayiṟṟukkaḻiccal, பெ. (n.)

வயிற்றுப்போக்கு (இ.வ.); பார்க்க;see Vayirru-p-pôkku.

     [வயிறு + கழி → கழிச்சல்.]

கடுமையான வயிற்றுப்போக்கினாலுண்டாகும் நீர் நெருடலான கழிச்சல்.

வயிற்றுக்காந்தல்

வயிற்றுக்காந்தல்1 vayiṟṟukkāndal, பெ. (n.)

   கடும் பசியால் வயிறு காந்துகை; pricking in the stomach due to hunger (சா.அக.);.

 வயிற்றுக்காந்தல்2 vayiṟṟukkāndal, பெ. (n.)

வயிற்றுக்காய்ச்சல் (கொ.வ.); பார்க்க;see vayirru-k-kāyccal.

     [வயிறு + காந்து → காந்தல் = அல் = தொ.பெ.ஈறு.]

வயிற்றுப் பசியின் வெப்பமிகுதியாலேற்படும் எரிச்சல்.

வயிற்றுக்காய்ச்சல்

வயிற்றுக்காய்ச்சல்3 vayiṟṟukkāyccal, பெ. (n.)

   வயிற்றுப் பசி (யாழ்.அக.);; hunger, Starvation.

     [வயிறு + காய் → காய்ச்சல்.

     ‘அல்’ தொழிற் பெயர் ஈறு.]

ஒருகா. வயிற்றுத் தீ.

கடும் பசியினால் வயிற்றிலுண்டாகும் காய்ச்சல்.

வயிற்றுக்கிராந்தம்

வயிற்றுக்கிராந்தம்1 vayiṟṟukkirāndam, பெ. (n.)

   1. குமுத நஞ்சு; a kind of poision.

   2. வயிரக்கிராந்தம் பார்க்க;see vayira-kkirāndam (சா.அக.);.

     [வயிறு + Skt. கிராந்தம்.]

 Skt. krånta → த. கிராந்தம்

 வயிற்றுக்கிராந்தம்2 vayiṟṟukkirāndam, பெ. (n.)

   செய்நஞ்சு வகையு ளொன்று (சங்.அக.);; a kind of mineral poison.

     [வயிறு + கிராந்தம்.]

வயிற்றுக்கிருமி

 வயிற்றுக்கிருமி vayiṟṟukkirumi, பெ. (n.)

   வயிற்றிலுண்டாம் கொக்கிப்புழு, நாடாப்புழு (யாழ்.அக.);; round-worm, ring-worm, tape-worm.

     [வயிறு + கிருமி.]

 Skt. krmi → த. கிருமி.

நுண்ணிய நச்சுயிரிகளின் விளைவாக, வயிற்றிலுருவாகும் இப்புழு, மனிதனுடைய குடலில் ஒட்டிக் கொண்டு, தனக்குத் தேவையான உணவை உறிஞ்சி உயிர் வாழும் இயல்பினது.

     [P]

வயிற்றுக்குத்து

 வயிற்றுக்குத்து vayiṟṟukkuttu, பெ. (n.)

   வயிற்றிலேற்படும் நோவு (வின்.);; stomachache, stabbing pain in stomach.

மறுவ. வயிற்றுவலி

     [வயிறு + குல் → குத்து.]

வயிறு குத்திக் குத்தி வலிப்பதாலுண்டாகும் நோவு.

வயிற்றுக்குத்துவாதம்

 வயிற்றுக்குத்துவாதம் vayiṟṟukkuttuvātam, பெ. (n.)

வயிற்றுக்குத்து பார்க்க;see vayirru-k-kuttu.

     [வயிற்றுக்குத்து + Skt. வாதம்.]

மிகும் வளித்தொல்லையினால், வயிற்றி லேற்படும் வலி. இவ்வயிற்று வலியானது, வயிற்றின் ஏதேனும் ஒருபுறத்தே தாக்கும்;சிறிது நேரத்திற்கு ஒருமுறை குத்திக் குத்தி வலிக்குந் தன்மைத்து.

வயிற்றுக்கேடு

 வயிற்றுக்கேடு vayiṟṟukāṭu, பெ. (n.)

   வயிற்றுப்போக்கு; disorder of stomach (சா.அக.);.

     [வயிறு + கெடு → கேடு.]

வயிற்றுக்கொடுமை

 வயிற்றுக்கொடுமை vayiṟṟukkoḍumai, பெ. (n.)

வயிற்றுப் பசி (கொ.வ.);

 hunger, starvation.

     [வயிறு + கொடு → கொடுமை.]

வயிற்றுக்கொட்டல்

 வயிற்றுக்கொட்டல் vayiṟṟukkoṭṭal, பெ. (n.)

   சிறுக சிறுக சீதமும், கழிமாசுக்கட்டும் இழிதல்; dysentery (சா.அக.);.

     [வயிறு + கொள் →கொட்டு + அல்.]

வயிற்றுக்கொதி

வயிற்றுக்கொதி vayiṟṟukkodi, பெ. (n.)

   1. பசி; hunger.

   2. வயிற்றுப்போக்கு; diarrhoea.

     [வயிறு + குல் → குதி → கொதி.]

வயிற்றுக்கோளாறு

 வயிற்றுக்கோளாறு vayiṟṟukāḷāṟu, பெ. (n.)

   வயிற்றில் ஏற்படும் பலவித ஊறுபாடு; disorder of stomach due to indigestion (சா.அக.);.

     [வயிறு + குளறு → குளாறு → கோளாறு.]

வயிற்றுச் சிறுநோய்

 வயிற்றுச் சிறுநோய் vayiṟṟucciṟunōy, பெ. (n.)

   அடிவயிற்றிலேற்படும் சிறுவலி; slight pain in the abdomen (சா.அக.);.

     [வயிறு + சில் → சிறு + நோய்.]

வயிற்றில் உண்டாகும் சிறிய குத்தல் வலி.

வயிற்றுச்சங்கடம்

 வயிற்றுச்சங்கடம் vayiṟṟuccaṅgaḍam, பெ. (n.)

   வயிற்றுத் தொந்தரவு; trouble in the stomach (சா.அக.);.

த. சங்கடம் → Skt. Sankata.

     [வயிறு + சாங்கடை → சங்கடை → சங்கடம் = வருத்தம், ஒடுக்கவழி.]

வயிற்றுச்சுரப்பு

 வயிற்றுச்சுரப்பு vayiṟṟuccurappu, பெ. (n.)

வயிற்றுக்கனப்பு பார்க்க;see vayiru-k-kanappu.

     [வயிறு + சுள் → சுர் → கர → சுரப்பு.]

வயிற்றுச்சூலை

வயிற்றுச்சூலை vayiṟṟuccūlai, பெ. (n.)

   1. ஒர்வகைச்சூலை, அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு; Colic pain in the abdomen.

   2. வயிற்றுக்குத்தல் பார்க்க;see vayirru-k-kuttal (சா.அக.);.

     [வயிறு + குல் → குலை.]

வயிற்றுத்தீ

வயிற்றுத்தீ vayiṟṟuttī, பெ. (n.)

   1. முற் பொழுதுண்ட உணவைச் செரிக்கச் செய்யும் வயிற்றுத்தீ; digesting agency, considered a fire or heat abiding in the stomach.

     “வயிற்றுத்தீத் தணிய” (புறநா. 74);.

   2. பெரும்பசிப்பிணி வகை; a disease that causes insatiable hunger.

     “வயிற்றுத் தீயார்க்கு” (ஏலாதி. 57);.

மறுவ. கடும்பசி

 Skt. உதராக்கினி

     [வயிறு + தீ.]

வயிற்றுத்தொந்தி

 வயிற்றுத்தொந்தி vayiṟṟuttondi, பெ. (n.)

   வயிற்றின் தசை மடிப்பு; collop (சா.அக.);.

     [வயிறு + தொந்தி.]

வயிற்றுநாளம்

 வயிற்றுநாளம் vayiṟṟunāḷam, பெ. (n.)

   அரத்தம், தசைநீர், கொழுப்புநீர் முதலானவற்றை உடலின் பல பகுதிகட்கும், எடுத்துச் செல்லும் அடிவயிற்று நரம்பு; gastric vein (சா.அக.);.

     [வயிறு + நாளம். நள் → நாள் → நாளம்.]

உட்டுளை, உட்டுளை நரம்பு.

வயிற்றுநீராம்பல்

 வயிற்றுநீராம்பல் vayiṟṟunīrāmbal, பெ. (n.)

   அடி வயிற்று நோய்; a disease of the abdomen.

     [வயிறு + நீராம்பல்.]

வயிற்றுநோக்காடு

 வயிற்றுநோக்காடு vayiṟṟunōkkāṭu, பெ. (n.)

வயிற்றுநோவு பார்க்க;see vayirru-novu.

     [வயிறு + நோய் + காடு. காடு = சொல்லாக்க ஈறு.]

ஒ.நோ. பூ + காடு

வயிற்றுநோய்

 வயிற்றுநோய் vayiṟṟunōy, பெ. (n.)

   வயிற்று வலி (வின்.);; stomach-ache.

     [வயிறு + நோய்.]

வயிற்றுநோவு

வயிற்றுநோவு vayiṟṟunōvu, பெ. (n.)

   1. வயிற்று வலி (வின்.);; stomach-ache.

   2. மகப்பேற்று வலி; labour-pains, a pre-delivery symptom.

     [வயிறு + நோ → நோவு.]

வயிற்றுப்பசம்

 வயிற்றுப்பசம் vayiṟṟuppasam, பெ. (n.)

வயிறுப்பசம் (M.L); பார்க்க;see Vayiruppašam.

     [வயிறு + உப்பசம். உப்பசம் = வீக்கம்.]

வயிற்றுப்பசையெடுப்பான்

வயிற்றுப்பசையெடுப்பான் vayiṟṟuppasaiyeḍuppāṉ, பெ. (n.)

   பறவை வகையு ளொன்று; chestnut bellied nuthatch-Sitta Castanea.

     [வயிறு + பசை + எடுப்பான்.]

இப்பறவையினம் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், இலையுதிர்க் காடுகள், மரங்கள் நிறைந்த ஊர்ப்புறத் தோப்புகளிலும் காணப்படும். இப்பறவை

யினமானது, 12 விரலம் உயரம் வரை வளரும். உடலின் மேற்பகுதி நீலம் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறமாகவும், கண், அலகு முதலியவற்றில் கருப்புக்கோடும் காணப்படும். புழு, பூச்சி, சிறு விதைகள் ஆகியன இவற்றின் உணவாகும். 4 அல்லது 5 முட்டைகள் இட்டு தன் இனத்தை பெருக்கும்.

     [P]

வயிற்றுப்பறதி

 வயிற்றுப்பறதி vayiṟṟuppaṟadi, பெ. (n.)

வயிற்றுப்பறப்பு (வின்.); பார்க்க;see vayirru-p-parappu.

     [வயிறு + பறதி.]

வயிற்றுப்பறப்பு

வயிற்றுப்பறப்பு vayiṟṟuppaṟappu, பெ. (n.)

   1. பசித்தாருக்கு ஏற்படும் உணவு வேட்கை (வின்.);; voracity.

   2. வாழ்க்கைத் துன்பம்; straitened means of livelihood, inadequate means of living, poverty sticken living.

     [வயிறு + பற → பறப்பு.]

பசியால் வருந்துவோர் உண்பன கிடைத்தவிடத்து வயிறு நிரைத்தற் பொருட்டுளதாகும் உணவு வேட்கை.

வயிற்றுப்பாடு

 வயிற்றுப்பாடு vayiṟṟuppāṭu, பெ. (n.)

வயிற்றுப்பிழைப்பு (வின்.); பார்க்க;see Vayirru-p-pilaippu.

     [வயிறு + படு → பாடு.]

வயிற்றுப்பிசம்

வயிற்றுப்பிசம் vayiṟṟuppisam, பெ. (n.)

வயிறுப்பசம் பார்க்க;see vayiruppasam.

     [வயிறு + உப்பிசம்.]

 வயிற்றுப்பிசம்2 vayiṟṟuppisam, பெ. (n.)

   வயிறூதல், வயிற்றுப் பொருமல்; a distension of the abdomen attended with incarceration of flatus, and an intense pain and rumbling inside-tympanitis, it arrests the emission of flatus (சா.அக.);.

     [வயிறு + உப்பசம் → உப்பிசம்.])

உப்பிசம் (கொ.வ.);

சீரகமும் வெல்லமும் உரியமுறையில் கலந்துண்ண வயிற்றுப்பசம் நீங்கும்.

வயிற்றுப்பிடுங்கல்

 வயிற்றுப்பிடுங்கல் vayiṟṟuppiḍuṅgal, பெ. (n.)

   வயிற்றுநோய்; gnawing pain in the abdomen (சா.அக.);.

     [வயிறு + பிடுங்கல்.]

வயிற்றுப்பிள்ளை

 வயிற்றுப்பிள்ளை vayiṟṟuppiḷḷai, பெ. (n.)

   கருப்பத்தில் இருக்கின்ற பிள்ளை; child in the womb (சா.அக.);.

     [வயிறு + பிள்ளை.]

வயிற்றுப்பிள்ளைக்காரி

 வயிற்றுப்பிள்ளைக்காரி vayiṟṟuppiḷḷaikkāri, பெ. (n.)

   கருவுற்றவள்; pregnant woman.

மறுவ. சூலி, உண்டானவள், முழுகாதவள். பிள்ளைத்தாய்ச்சி.

     [வயிறு + பிள்ளைக்காரி.]

வயிற்றுப்பிழைப்பு

 வயிற்றுப்பிழைப்பு vayiṟṟuppiḻaippu, பெ. (n.)

   வாழ்விற்குரிய தொழில், பிழைப்பிற்குரிய தொழில்; liveli-hood, profession, occupation, as a means of living.

     [வயிறு + பிழைப்பு.]

வயிற்றுப்புகைச்சல்

 வயிற்றுப்புகைச்சல் vayiṟṟuppugaiccal, பெ. (n.)

   வயிற்றுட் கொதிப்புண்டாகை (யாழ்.அக.);; excessive heat in the stomach due to empty stomach.

     [வயிறு + புகை → புகைச்சல்.]

வயிற்றுப்புண்

 வயிற்றுப்புண் vayiṟṟuppuṇ, பெ. (n.)

   வயிறு அழளுகை; ulceration of the stomach, stomach ulcer (சா.அக.);.

     [வயிறு + புண்.]

வயிற்றுப்புரட்டல்

 வயிற்றுப்புரட்டல் vayiṟṟuppuraṭṭal, பெ. (n.)

   வாந்தி யெடுப்பதற்கு முன் வயிற்றில் உண்டாகும் வாய்க்குமட்டலுணர்வு; changes in the stomach or the sensation in the stomach before vomitting (சா.அக.);.

     [வயிறு + புரட்டல்.]

வாயாலெடுக்கு முன் ஏற்படும் குமட்டலுணர்வு.

வயிற்றுப்புற்று

 வயிற்றுப்புற்று vayiṟṟuppuṟṟu, பெ. (n.)

   வயிற்றுப்பரப்பிலேற்படும் புற்றுநோய் வகை; stomach cancer (சா.அக.);.

     [வயிறு + புற்று.]

வயிற்றுப்புளிப்பு

 வயிற்றுப்புளிப்பு vayiṟṟuppuḷippu, பெ. (n.)

   முன்னுண்ட உணவு அறாமையான் இரைப்பையிற் புளிப்புச்சத்து மிகுதியாருக்கை (M.L.);; acidity of the stomach.

     [வயிறு + புளிப்பு.]

வயிற்றுப்பூச்சி

 வயிற்றுப்பூச்சி vayiṟṟuppūcci, பெ. (n.)

   வயிற்றில் உண்டாகும் புழு (யாழ்.அக.);; round-worm, ring-worm, tape-worm. in stomach.

     [வயிறு + பூச்சி.]

வேப்பிலைக் கொழுந்துடன், சிறிது வெல்லம் கலந்துண்ண வயிற்றுப்பூச்சி மடியும். துளசியையும், மிளகையும் உரியமுறையிற் கலந்து, கருக்குநீரிட்டுக் குடித்துவர, வயிற்றுப்பூச்சி மடியும்.

வயிற்றுப்பொருமல்

வயிற்றுப்பொருமல் vayiṟṟupporumal, பெ. (n.)

   1. வயிறுப்பசம் (வின்.); பார்க்க;see vayiruppasam.

   2. பொறாமை (யாழ்.அக.);; envy, jealousy.

மறுவ. வயிற்றுமந்தம்

     [வயிறு + பொருமல்.]

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு vayiṟṟuppōkku, பெ. (n.)

   1. வயிற்றோட்டம், செரியாமல் மலங் கழிகை (யாழ்ப்.);; diarrhoea.

   2. நச்சுக் கழிச்சல் (யாழ்.அக.);; cholera.

     [வயிறு + போக்கு.]

மாதுளம் பிஞ்சு, தென்னங்குரும்பை, மாவிலைக் கொழுந்து இம்மூன்றையும் அரைத்துக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு அகலும். சுட்ட வாழைப்பழத்தில், சிறிது தேன் கலந்து கொடுத்தாலும் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வயிற்றுமந்தம்

 வயிற்றுமந்தம் vayiṟṟumandam, பெ. (n.)

   பசிவேட்கையின்மை; loss of appetite (சா.அக.);.

     [வயிறு + மந்தம்.]

வயிற்றுமாரி

 வயிற்றுமாரி vayiṟṟumāri, பெ. (n.)

   கழியே ரிரையான் (வின்.);; glutton.

மறுவ. மிடாவிழுங்கி

     [வயிறு + மாரி.]

வயிற்றுளைச்சல்

 வயிற்றுளைச்சல் vayiṟṟuḷaiccal, பெ. (n.)

வயிற்றுப்போக்கு (M.L.); பார்க்க;see vayirru-p-pokku.

     [வயிறு + உளை → உளைச்சல்.]

வெற்றிலையுடன், உப்பையும் சேர்த்துக் கொடுக்க வயிற்றுளைச்சல் விட்டுப்போகும்.

வயிற்றுளைவு

வயிற்றுளைவு1 vayiṟṟuḷaivu, பெ. (n.)

   அடி வயிற்றில் குடைதல் போன்ற நோய்; boring pain in abdomen (சா.அக.);.

     [வயிறு + உளை → உளைவு.]

 வயிற்றுளைவு2 vayiṟṟuḷaivu, பெ. (n.)

   1. வயிற்றுப்போக்கு (யாழ்.அக.); பார்க்க;see vayiru-p-pokku.

   2. வயிற்றுவலி, 1 (வின்.); பார்க்க;see vayirru-vali.

     [வயிறு + உளை → உளைவு.]

வயிற்றுவலி

வயிற்றுவலி vayiṟṟuvali, பெ. (n.)

   1. வயிற்றில் உண்டாகும் நோவு வகை; stomach-ache, colic gripe;

 cramp in the stomach.

   2. செரியாமையாலேற்படும் நோவு; dyspepsia, gastritis, pain due to indegestion.

மறுவ. குடல்முறுக்குநோய்

     [வயிறு + வல் → வலி.]

வயிற்றுவால்காக்கை

வயிற்றுவால்காக்கை vayiṟṟuvālkākkai, பெ. (n.)

   காக்கை வகையினுள் ஒன்று; bellied treepie-Dendrocitha leucogastra (சா.அக.);.

     [வயிற்றுவால் + காக்கை.]

நீலமலை, ஆனைமலை போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்ற, இந்த காக்கைக் கூட்டம் ஓணான், எலி, பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும். 50 விரலம் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. நெற்றி, தலை, மார்பு, தொண்டை போன்றவை கருப்பு நிறமாகவும், இறக்கை கருமையும் வெண்மையுங் கலந்த வண்ணத்தில் காணப்படும். இதன் வாலானது 30 விரலம் நீளம் வரை வளர்ந்திருக்கும். 3 முதல் 4 முட்டைகளிட்டு தன் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் தன்மைத்து.

வயிற்றுவிம்மல்

 வயிற்றுவிம்மல் vayiṟṟuvimmal, பெ. (n.)

   அன்னாசயத்திலும், குடலிலும் காற்று சேருவதினால் உண்டாகும் நோய்; tympanites (சா.அக.);.

     [வயிறு + விம்மல்.]

வயிற்றுவிரணம்

 வயிற்றுவிரணம் vayiṟṟuviraṇam, பெ. (n.)

   வயிற்றிலுண்டாகும் புண்; peptic or duodenal ulcer.

     [வயிறு + விரணம்.]

 Skt. Vrana.

வயிற்றெடுப்பு

வயிற்றெடுப்பு vayiṟṟeḍuppu, பெ. (n.)

   1. ஆட்டு நோய் வகை (M.Cm.D. 1, 249);; a disease of sheep.

   2. வயிற்றுப்போக்கு பார்க்க;see Vayirru-p-pôkku.

     [வயிறு + எடுப்பு.]

வயிற்றெரி

வயிற்றெரி vayiṟṟeri, பெ. (n.)

   வயிற்றுத் தீ; digestive heat.

     “பூதம் வயிற்றெரி மூண்டவே” (தக்கயாகப். 568);.

மறுவ. கடும்பசி, அழிபசி, யானைப்பசி.

     [வயிறு + எரி.]

வயிற்றெரிச்சற்படு-தல்

வயிற்றெரிச்சற்படு-தல் vayiṟṟericcaṟpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. பொறாமைப் படுதல்; to envy, to feel envy.

எதிர் வீட்டுக்காரர் மாடமாளிகை கட்டியதற்காக நீ ஏன் வயிற்றெரிச்சற் படுகிறாய்? அவனுக்கு நல்ல வேலை கிடைத்தற்காக நீ ஏன் வயிற்றெரிச்சல் படுகிறாய்? (உவ);.

   2. மன வருத்தமடைதல்; to feel vexation.

     [வயிறு + எரிச்சல் + படு.]

வயிற்றெரிச்சல்

வயிற்றெரிச்சல் vayiṟṟericcal, பெ. (n.)

   1. வயிற்றிற்காணும் எரிவு; burning sensation in the stomach.

   2. பொறாமை (யாழ்.அக.);; envy, jealousy.

   3. மன வருத்தம் (வின்.);; sorrow, grief, unhappiness.

   4. இரக்கம் (வின்.);; compassion, pity.

     [வயிறு + எரிச்சல்.]

வயிற்றெரிச்சல்கொள்ளல்

வயிற்றெரிச்சல்கொள்ளல் vayiṟṟericcalkoḷḷal, பெ. (n.)

   1. இழப்பு, ஏமாற்றம் போன்றவற்றால் மனக்கொதிப் படைதல்; frustration.

   2. பொறாமைப்படல்; heart burning, jealousy.

பிறர் ஆக்கம் கண்டு, வயிற்றெரிச்சல் கொள்ளல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

     [வயிறு + எரிச்சல் + கொள்ளல்.]

வயிற்றெரிவு

 வயிற்றெரிவு vayiṟṟerivu, பெ. (n.)

வயிற் றெரிச்சல் (வின்.); பார்க்க;see vayirrericcal.

     [வயிறு + எரி → எரிவு.]

வயிற்றை வளர்-த்தல்

வயிற்றை வளர்-த்தல் vayiṟṟaivaḷarttal,    4 செ.கு.வி. (v.i.)

வயிறுகழுவு-, (இ.வ.); பார்க்க;see Vayiru-kaluvu.

     [வயிறு + வளர்.]

வயிற்றைக் குறை-த்தல்

வயிற்றைக் குறை-த்தல் vayiṟṟaikkuṟaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வயிற்றுக்கு ஈயப்படும் உணவளவைக் குறைத்துக் கொள்ளுதல்; to reduce quantity of diet.

     [வயிற்றை + குறை.]

வயிற்றைக்கட்டு

வயிற்றைக்கட்டு1 vayiṟṟaikkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அளவிட்டிதாய் உண்ணுதல்; to eat moderately.

   2. வயிற்றுப் போக்கை நிறுத்துதல்; to bind the bowels, to check diarrhea.

     ‘இந்த மருந்து வயிற்றைக் கட்டும்’ (உ.வ.);.

     [வயிறு + கட்டு.]

 வயிற்றைக்கட்டு2 vayiṟṟaikkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அளவறிந்து செலவு செய்தல்; to be thrifty.

அருமந்த ஒருமகனை பெற்று ஆளாக்கினாள்

     ‘வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி’ வளர்த்தெடுத்த பெருமை குறித்தவாம்.

இவைபோன்ற நூற்றுக் கணக்கான சொற்களும் பாண்டி நாட்டுலக வழக்கிற்குச் சிறப்பாம்.

   2. கஞ்சத்தனமா யிருத்தல்; to be niggard.

வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி வாழ்ந்தாலும் மிஞ்சும் பணமே மிஞ்சும் (இ.வ.);.

     [வயிறு + கட்டு.]

வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டிக் காசு பணம் சேர்த்தல் என்னும் வழக்கு சிக்கனமாயிருத்தல் என்னும் பொருண்மை பொதிந்த மரபினை மொழியாகும். இவ்வழக்கு தென்மாவட்டங்களில் வாழும் கல்லாதார் நாவில், மிகுதியாக வழக்கூன்றியுள்ளது, குறிக்கத்தக்கது. வயிற்றைக் கட்டுதல் என்னும் வழக்குத் தொடர், வாழ்வியலில், சிக்கனமாயிருத்தலையும், வயிற்றைக்கட்டி வாழ்தல் நோய் நொடியின்றி வாழ்தற்குரிய வழிமுறையையும் குறித்ததெனலாம்.

வயிற்றைக்கலக்கு-தல்

வயிற்றைக்கலக்கு-தல் vayiṟṟaikkalakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நீருஞ் சேறுமாக கழிமாசு மலம் வெளிப்பட வேண்டி வயிற்றில் குழப்பம் உண்டாதல் (கொ.வ);; to feel uncomfortable due to rumbling of the bowels.

   2. பேரச்சங்கொள்ளுதல்; to be terrified alarmed, horrified, shocked.

     [வயிறு + கலக்கு.]

வயிற்றைக்கழுவு-தல்

வயிற்றைக்கழுவு-தல் vayiṟṟaikkaḻuvudal,    5 செ.கு.வி. (v.i.)

வயிறுகழுவு-, (இ.வ.); பார்க்க;see vayiru-kaluvu-,

நாலைந்து வீடுகளில் ஏவிய வேலை செய்து கிடைக்கும் அளவிட்டிதாம் பணத்தில் வயிற்றைக் கழுவுகிறாள் (உ.வ.);.

     [வயிறு + கழுவு.]

வயிற்றைத்திற-த்தல்

வயிற்றைத்திற-த்தல் vayiṟṟaittiṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   கருக்கொள்ளுமாறு அருளுதல்; to bless a woman to give birth a child, to bless for motherhood.

     “தெய்வம் இன்னும் அவள் வயிற்றைத் திறக்கவில்லை” (கொ.வ);.

     [வயிறு + திற.]

வயிற்றைப்பீறல்

 வயிற்றைப்பீறல் vayiṟṟaippīṟal, பெ. (n.)

   வயிற்றைக்கிழித்து குழந்தையை வெளியே எடுத்தல்; incision of the uterus through the abdominal wall and the extrication of the foetus there from caesarean section (சா.அக.);.

     [வயிறு + பீறல்.]

வயிற்றைப்பெருக்கு-தல்

வயிற்றைப்பெருக்கு-தல் vayiṟṟaipperukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உண்ணும் அளவைக் கூட்டுதல்; to increase one’s appetite.

     “ஸ்வயம் பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே” (ஶ்ரீவசன. 84);.

   2. நிறைவாக உண்ணுதல் (இ.வ.);; to be gluttonous, to take full meal.

     [வயிறு + பெருக்கு.]

வயிற்றையொடுக்கு-தல்

வயிற்றையொடுக்கு-தல் vayiṟṟaiyoḍukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல் (வின்.);; to restrain one’s appetite, to reduce the quantity of food.

     [வயிறு + ஒடுக்கு.]

வயிற்றையொறு-த்தல்

வயிற்றையொறு-த்தல் vayiṟṟaiyoṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

வயிற்றையொடுக்கு-, (வின்.); பார்க்க;see Vayirra-y-odukku.

     [வயிறு + ஒறு.]

வயிற்றைவலி-த்தல்

வயிற்றைவலி-த்தல் vayiṟṟaivalittal,    4.செ.குன்றாவி. (v.t.)

   குடலில் வலி ஏற்படுகை; colic (சா.அக.);.

வயிற்றோட்டம்

வயிற்றோட்டம் vayiṟṟōṭṭam, பெ. (n.)

வயிற்றுப்போக்கு, 1 (M.L.); பார்க்க;see vayirru-p-pôkku.

     [வயிறு + ஒட்டம்.]

வயிலத்தி

 வயிலத்தி vayilatti, பெ. (n.)

   உள்ளங்கால் (சங்.அக.);; sole of foot.

வயிலத்திருகு

 வயிலத்திருகு vayilattirugu, பெ. (n.)

   உள்ளங்கை (சா.அக.);; palm of the hand.

வயில்

வயில் vayil, பெ. (n.)

   1. கூரை வேயப் பயன் கொள்ளும் ஒருவகைப்புல்; a kind of grass used for thatched roofing.

   2. விழற்புல்; a kind of grass.

தீயபார்வையால் குழந்தைகட்கு ஏற்படும் கேட்டினைப் போக்குவதாகக் கருதப்படும் புல்.

வயில்வீடு

 வயில்வீடு vayilvīṭu, பெ. (n.)

   விழலெனுங் கோரையால் வேய்ந்த கூரை வீடு; thatched roofing house.

     [வயில் + வீடு.]

     [P]

வயேகடம்

 வயேகடம் vayēkaḍam, பெ. (n.)

   மரமஞ்சள் (மலை.);; tree turmeric.

வயோதிகன்

 வயோதிகன் vayōtigaṉ, பெ. (n.)

   கிழவன்; old man.

     [வயோதிகம் → வயோதிகன்.]

 வயோதிகன் vayōtigaṉ, பெ. (n.)

   கிழவன்; old man.

     [Skt. {} → த. வயோதிகன்]

வயோதிகம்

 வயோதிகம் vayōtigam, பெ. (n.)

   முதுமை; old age.

     [வயோதிகன் → வயோதிகம் = கிழம்.]

 Skt. வயோதிக

 வயோதிகம் vayōtigam, பெ. (n.)

   முதுமை; old age.

     [Skt. {} → த. வயோதிகம்]

வயோதிபம்

 வயோதிபம் vayōtibam, பெ. (n.)

வயோதிகம் (யாழ்.அக); பார்க்க;see vayodigam.

வயோவகவம்

 வயோவகவம் vayōvagavam, பெ. (n.)

   ஈயம் (சங்.அக.);; lead.

வர

வர1 vara, இடை. (part.)

   அசைச்சொல்; an expletive.

     “தழங்கு மருவி என்னும் பாட்டுத்தொட்டு இதன்காறும் வர இப்பாட் டொன்பதும்” (திருக்கோ.135. உரை);.

     “அஞ்சிறை மடநாரைக்குப்பின்பு இவ்வளவும் வர” (ஈடு. 2, 1, ப்ர.);.

     [வா → வர.]

 வர2 vara,    இடை. (part) வரை; till, until.

     “பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர” (ஈடு. 3, 6 ப்ர.);.

     [வா → வர.]

வர நதி

வர நதி varanadi, பெ. (n.)

   கங்கை; the Ganges.

     ‘மன்னவன். வரநதிக் கரையிலுற்றான்’ (பாகவ. 1. தன்மபுத்திரன். 8);.

     [வர + நதி.]

 skt. nadi → த. நதி.

வர வாயு

 வர வாயு varavāyu, பெ. (n.)

வரள்வாயு பார்க்க;see Varal-vāyu.

     [வரள் + வாயு → வரவாயு.]

 Skt. வாயு

வரகதி

வரகதி varagadi, பெ. (n.)

   1. மேலான நிலை; salvation, as the most exalted state, emancipation or attainment.

   2. துறக்கநிலை; heaven.

     “வாட்டியவுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னில்” (சீவக. 1431);.

     [பரகதி → வரகதி.]

 Skt. gati → த. கதி.

வரகமொத்தான்கொடி

 வரகமொத்தான்கொடி varagamottāṉgoḍi, பெ. (n.)

   ஓர் கொடி வகை; a creeper Citrullus colexynthes (சா.அக.);.

வரகம்மை

 வரகம்மை varagammai, பெ. (n.)

   ஒர் வகை அம்மை; a kind of pox (சா.அக.);.

     [வரகு + அம்மை.]

வரகுத் தவசம் போல் தோன்றும் மணல்வாரி அம்மை.

வரகரிசி

வரகரிசி varagarisi, பெ. (n.)

   வரகினரிசி; husked grain of common millet.

     “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்” (தமிழ்நா. 22);.

     [வறகு → வரகு + அரிசி.]

வரகவி

வரகவி varagavi, பெ. (n.)

   1. அருட்கவி (யாழ்.அக.);; gifted, soul inspired poet.

   2. சிறந்த செய்யுள்; poem of great merit, poem of outstanding nature.

     “வீரராகவன் வரகவி மாலையை” (திருவேங்கடக்கலம், தனியன்);.

     [பரம் → வரம் + கவி.]

 Skt. kavi → த. கவி.

வரகு

வரகு varagu, பெ. (n.)

   1. சிறுதவசம்; common millet.

     “புறவுக் கருவன்ன புன்புல வரகின்” (புறநா.34);.

     “வாலிதின் விளைந்த புதுவர கரிய” (புறநா.120:9);.

   2. சாமை; poor man’s millet.

த. வரகு → Skt. varuka.

   தெ. வரிகி;   ம. வரகு;க. பரகு.

     [வறகு → வரகு.]

புன்செய் நிலத்திற் பயிராகும் சிறந்த தவசம். ஊட்டச்சத்து நிறைந்தது.

வரகுக்கோழி

வரகுக்கோழி1 varagugāḻi, பெ. (n.)

   கோழி வகையுளொன்று; lesser florican-Sypheotides indica (சா.அக.);.

     [வரகு + கோழி.]

தமிழகத்தின் புன்செய் நிலப்பரப்பில் காணப்படும் இவ்வினம், தற்போது அழியும் நிலை உருவாகியுள்ளது. இலை, தழை, கொழுந்து, விதைகள், சிறுபழங்கள் ஆகியவற்றோடு, தத்துக்கிளி, வெட்டுக்கிளி, எறும்பு முதலியவற்றை உட்கொள்ளும் இவை 46 விரலம் உயரம் வரை வளரும் தன்மைத்து. பழுப்பு நிற உடலில், அம்புமுனையைப் போன்ற கருப்புத்திட்டுகள் கொண்ட உடலையும், செம்பழுப்பு நிற மார்பையும், வயிற்றையும் கொண்டது. இவை நான்கு அல்லது ஐந்து முட்டைகளை இட்டு, இனப்பெருக்கம் மேற்கொள்ளும்.

     [P]

 வரகுக்கோழி2 varagugāḻi, பெ. (n.)

   சீவல் வகை (M.M.);; florican.

     [வரகு + கோழி.]

வரகுசுட்டசாம்பல்

 வரகுசுட்டசாம்பல் varagusuṭṭasāmbal, பெ. (n.)

   கருவுற்ற மகளிரின் அரத்தப் போக்கினை அகற்றும், எரிபட்ட நீறு; the ashes of burnt kodo millet, it is prescribed for flow of blood in pregnant woman (சா.அக.);.

     [வரகு + சுட்டசாம்பல்.]

வரகுச்சம்பா

வரகுச்சம்பா varaguccambā, பெ. (n.)

   ஆடவை, கடகம், மடங்கல் (ஆனி, ஆடி, ஆவணி); மாதங்களில் விதைத்து, ஆறு மாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை (Rd.M.44);; a variety of paddy, sown in the months of ani, adi, avani and maturing in six months.

     [வரகு + சம்பா.]

வரகுச்சிறுகுறுவை

வரகுச்சிறுகுறுவை varagucciṟuguṟuvai, பெ. (n.)

   மடங்கல் (ஆவணி); முதல், நளி (கார்த்திகை); வரையிலுள்ள காலத்தில் விதைத்து, நான்கு மாதத்திற் பயிராகும் நெல்வகை (Rd.M.45);; a variety of paddy, sown in the season from avani to karttigai and maturing in four months.

     [வரகு + சிறுகுறுவை.]

வரகுணதேவர்

வரகுணதேவர் varaguṇatēvar, பெ. (n.)

வரகுணன், 2 பார்க்க;see varagunan. 2.

     “பெரியவன்பின் வரகுண தேவரும்” (பதினொ. திருவிடை. மும். 21);.

     [வரகுணன் + தேவர்.]

வரகுணன்

வரகுணன் varaguṇaṉ, பெ. (n.)

   மாணிக்க வாசகர் காலத்திருந்த பாண்டிய மன்னன்; a Pandiya king, contemporary of Saint Mānikkavāšagar

     “வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத்தான்” (திருக்கோ. 306);.

மறுவ. கடவுட் குணம்

     [வரகுணம் → வரகுணன்.]

ஒருகா. பரகுணம் → வரகுணம் → வரகுணன் = மேலான இறைத்தன்மை.

வரகுணமங்கை

 வரகுணமங்கை varaguṇamaṅgai, பெ. (n.)

   பாண்டிவள நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளில் ஒன்று; one of the Tirumal tiruppati in flourishing Pandyan region.

வரகுணம்

 வரகுணம் varaguṇam, பெ. (n.)

   உயர்ந்த குணம்; excellent disposition or the best quality.

     “மாதைய ரதிபதி வரகுண மேரு” (இலக். வி. சிறப்பு);.

     [வரம் + குணம். பரம் → வரம் = உயர்வு, மேன்மை.]

வரகுதிரி

 வரகுதிரி varagudiri, பெ. (n.)

   அம்மைவகை (வின்.);; an acute contagious viral disease, as of small pox.

     [வரகு + உதிரி = வரகுபோற் சிறியவளவினதாய், சில நாட்களில் உதிரும் தன்மையுள்ள அம்மை வகை.]

வரகுதிரிகை

வரகுதிரிகை varagudirigai, பெ. (n.)

   வரகு திரிக்கும் பொறி; mill for grinding common millet.

     “யானையினது காலையொக்கும் வரகுதிரிகை” (பெரும்பாண். 187, உரை);.

     [வரகு + திரிகை.]

வரகுழுமநியாயம்

வரகுழுமநியாயம் varaguḻumaniyāyam, பெ. (n.)

   ஒரு குழுமத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை, மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல் போலும் நெறி (சி.சி.3, 4, சிவாக்.);; the principle by which a member of an organisation or a body gains knowledge with the help of other members.

 Skt. nyåya → த. நியாயம்.

     [வரகுழுமம் + நியாயம்.]

வரக்கழலை

 வரக்கழலை varakkaḻlai, பெ. (n.)

   தோற் பகுதியில் தோன்றும் கட்டி நோய்; a skin disease dermatitis (சா.அக.);.

வரக்காட்டு-தல்

வரக்காட்டு-தல் varakkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அனுப்புதல் (யாழ்.அக.);; to send, as by post, courier or messenger.

     [வர + காட்டு.]

வரக்கூலி

வரக்கூலி varakāli, பெ. (n.)

   நெல் முதலியவற்றை எடுத்து வருவதற்குள்ள வண்டிக் கட்டணம் (S.1.1.VIll, 5);; vehicle hire charge or rent for carrying paddy, etc.

     [வரல் + கூலி.]

வரங்கிட-த்தல்

வரங்கிட-த்தல் varaṅgiḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   வரம்பெறுதற்காகக் கோயில், கருவறை (கருப்பக்கிருகம்); முன் படுத்துக் கிடத்தல்; to lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon.

     “வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மாயவனே” (திருக்கோ. 86);.

     [புரம் → பரம் → வரம் + கிட-, பரம் → புரம் = உயர்ச்சி, உயரமான கட்டடம், கோபுரம், கோபுரமுள்ள கோயில், நகர்.]

வரங்கு

 வரங்கு varaṅgu, பெ. (n.)

   மரவகை; malabar wood-oil tree.

வரசளுப்பு

 வரசளுப்பு varasaḷuppu, பெ. (n.)

   மருந்துப்பு வகையுளொன்று; a kind of medicinal salt.

வரசவிருக்கம்

 வரசவிருக்கம் varasavirukkam, பெ. (n.)

   அரசமரம் (சா.அக.);; a sacred tree peepral tree – ficus neligiosa.

வரச்சந்தனம்

 வரச்சந்தனம் varaccandaṉam, பெ. (n.)

   சந்தன மரவகை (யாழ்.அக.);; a species of sandal wood tree.

     [வரம் + சந்தனம்.]

வரச்சிக்கரப்பன்

 வரச்சிக்கரப்பன் varaccikkarappaṉ, பெ. (n.)

   வறண்ட தோல் தடிப்புநோய் வகை; dry eczema.

வரச்சூலை

 வரச்சூலை varaccūlai, பெ. (n.)

வறட்சூலை (இ.வ.); பார்க்க;see Varat-culai.

     [வாள் + சூலை.]

வரடம்

வரடம் varaḍam, பெ. (n.)

   1. எகினம் (அன்னம்); (சங்.அக.);; swan, gander.

   2. முல்லை; arabian jasmine.

வரடை

 வரடை varaḍai, பெ. (n.)

   தோல்வார்; leather strap or string.

     [வார் → வரு → வருடை → வரடை.]

வரட்கணம்

வரட்கணம் varaṭkaṇam, பெ. (n.)

   1. குழந்தைகளுக்கு உடல் சிவந்து, நெஞ்சு துடித்தலுடன், நாவில் கருத்த முள்ளுண்டாகி மஞ்சள் பூத்திருக்கும் ஒரு நோய்; a disease in children caused by congenital heat and marked by palpitation of the heart, parched tongue with thorny eruptions and yellow coloured face.

   2. உடல் வறண்டு, விழிவெளுத்து, வலுக்குறைந்து, கை கால்களில் வலி தோன்றுகை; the above symptoms are also found in Varat-kanam (சா.அக.);.

வரட்கழலை

 வரட்கழலை varaṭkaḻlai, பெ. (n.)

   ஒருவகைக் கழலை; tumour (சா.அக.);.

     [வரள் + கழலை.]

வரட்கழிச்சல்

 வரட்கழிச்சல் varaṭkaḻiccal, பெ. (n.)

   வயிற்றுப்போக்கு வகையுள் ஒன்று; a kind of loose motion like that of diarrhoea (சா.அக.);.

வரட்காமாலை

 வரட்காமாலை varaṭkāmālai, பெ. (n.)

   குழந்தைகளுக்கு கண் பசந்து, கால் ஒய்ந்து உடம்பு உலர்ந்து காணும் ஒரு வகை நோய்; a disease in children due to fatigue, weakness and yellow eye (சா.அக.);.

     [வரள் + காமாலை.]

வரட்சி

 வரட்சி varaṭci, பெ. (n.)

வறட்சி பார்க்க;see varatci.

     [வரள் → வரட்சி.]

ஒ.நோ. திரள் → திரட்சி, மருள் → மருட்சி.

வரட்சிகாசம்

 வரட்சிகாசம் varaṭcikācam, பெ. (n.)

   வரட்டிருமல்; dry cough (சா.அக.);.

 Skt. lasa → த. காசம்.

     [வரட்சி + காசம்.]

வரட்சித்திமிரம்

 வரட்சித்திமிரம் varaṭcittimiram, பெ. (n.)

   கருவிழியில் மந்தமும், நடுநரம்பில் குத்தலும், பீளையும், நீரும் பெருகச் செய்யும், மூளையைப் பித்தம் வறட்டும் போது பிறக்கும் நோய்; a disease of the block of eye that occurs when bile affects brain.

வரட்சிப்பிரமேகம்

 வரட்சிப்பிரமேகம் varaṭcippiramēkam, பெ. (n.)

    நீரழியும் போது கடுப்பு, எரிச்சல், நீர்த்தாரைவீக்கம், அதன் வாயுதட்டிலும் வீக்கம் ஆகியவற்றை உண்டாக்கி, வெட்டை நீர் கொஞ்சமேனும் வாராதிருக்கின்ற ஒரு நோய் வகை; a disease of urethra marked by burning sensation during micturation, swelling of urethra etc.

வரட்சிவாதக்கரப்பான்

 வரட்சிவாதக்கரப்பான் varaṭcivātakkarappāṉ, பெ. (n.)

   தோலில் தோன்றும் அரிப்பு நோய்; a kind of dry ecsema.

வரட்சிவாதம்

 வரட்சிவாதம் varaṭcivātam, பெ. (n.)

   தோல் வறண்டு காணப்படும் நோய் வகையு ளொன்று; a kind of skin disease.

     [வரட்சி + வாதம்.]

 Skt. Våta → த. வாதம்.

வரட்சுண்டி

 வரட்சுண்டி varaṭcuṇṭi, பெ. (n.)

வறட்சுண்டி (யாழ்.அக.); பார்க்க;see varat-cundi.

     [வரள் + கண்டு → சுண்டி.]

வரட்சூலை

 வரட்சூலை varaṭcūlai, பெ. (n.)

   குடலைச் சுருட்டிப் பிடிக்கும் நோய்வகை (இங்.வை);; pain in the ascending colon, a form of appendicitis.

     [வரள் + சூல் → சூலை.]

வரட்சொரி

வரட்சொரி varaṭcori, பெ. (n.)

   சொரி வகையு ளொன்று (இராசவைத்.105);; a kind of itch.

     [வரள் + சொரி.]

வரட்டடைப்பான்

 வரட்டடைப்பான் varaḍḍaḍaippāṉ, பெ. (n.)

   மாட்டு நோய்வகையுளொன்று (பெ.மாட்.);; a kind of cattle disease.

     [வரட்டு + அடைப்பான்.]

கால்நடைகளுக்குத் தொண்டையிலேற்படும் ஒரு வெக்கை நோய்.

வரட்டவரே

 வரட்டவரே varaṭṭavarē, பெ. (n.)

     ‘வேகமாய் வா’ என்பதைக் குறிக்கும் சொல்;

 a word to indicate quickly coming or arrival.

வரட்டி

 வரட்டி varaṭṭi, பெ. (n.)

வறட்டி பார்க்க;see varatti.

     “வரட்டியுங் கேழ்வரகு ரொட்டியும் போலவே” (தனிப்பா.);.

   தெ. வரட;க. பரடி: ம. வரடி.

     [வரட்டு → வரட்டி.]

வரட்டிருமல்

வரட்டிருமல் varaṭṭirumal, பெ. (n.)

   1. கோழையுடன் கூடிய இருமல், இதற்கு நரிவெங்காயம், சுக்குத்தூள் சித்தரத்தை அரைத்துச் செய்த மாத்திரை; wild onion, dry ginger, lesser galangal are ground and made into pills and prescribed for this disease.

   2. வரட்சி காசம் பார்க்க;see varatci-kasam (சா.அக.);.

     [வரட்டு + இருமல்.]

வரட்டு

வரட்டு1 varaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வறட்டு பார்க்க;see varattu.

     [வரள் → வரட்டு.]

 வரட்டு2 varaṭṭu, பெ. (n.)

வறட்டு பார்க்க;see varattu.

வரட்டுச்சொறி

 வரட்டுச்சொறி varaṭṭuccoṟi, பெ. (n.)

   மிகுதியான தினவுண்டாவதால், மிகு அரிப்புண்டாக்கும் ஒருவகைச் சொறி; a kind of itch causing great scarching sensation (சா.அக.);.

     [வரட்டு + சுல் → சுர் → சுறு → சொறி.]

கரடுமுரடான, புறத்தோலின் மீது சிரங்குப் புண்ணேற்படும். இச் சிரங்குப் புண்ணின் விளைவாக உடம்பிலேற்படும் தினவு, வாட்டுச் சொறியெனப்படும்.

வரட்டுச்சோகை

 வரட்டுச்சோகை varaṭṭuccōkai, பெ. (n.)

   அரத்தக்குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை; anaemia, a disease characterised by pale and bloated face.

     [வரட்டு + சோ → சோகை.]

அரத்தக் குறைவால், உடம்பில் வறட்சியேற்பட்டு, சுறுசுறுப்புத் தன்மை குறையும். சோ என்றால் மடி அல்லது சோம்பல். இந் நோயுற்ற மாந்தனும் சோகையினால், சோம்பித் திகழ்வான் எனலாம்.

வரட்டுப்பசு

 வரட்டுப்பசு varaṭṭuppasu, பெ. (n.)

வறட்டுப் பசு பார்க்க;see varattu-p-pasu.

 Skt. Pašu → த. பசு.

     [வரட்டு + பசு.]

வரட்டுமாடு

 வரட்டுமாடு varaṭṭumāṭu, பெ. (n.)

   கன்று ஈனாத, பால் கறவாத மாடு; barren cow, infertile dry cow.

     [வரட்டு + மாடு.]

வரட்பூலா

 வரட்பூலா varaṭpūlā, பெ. (n.)

   பெருஞ் செடி வகை; Indian snowberry (சா.அக.);.

வரணகச்சுழி

 வரணகச்சுழி varaṇagaccuḻi, பெ. (n.)

   செந்நிறமுள்ள கடல் மீன் வகை; sea-fish, reddish.

     [வரணகம் → சுழி.]

வரணகம்

வரணகம் varaṇagam, பெ. (n.)

   1. எழுத்து; letter.

   2. பூசுவண்ணம்; paint.

   3. சந்தனமரம்; sandle wood tree.

   4. மஞ்சாடி மரம் (சங்.அக.);; redwood.

     [வரணம் → வரணகம்.]

வரணக்காடை

வரணக்காடை varaṇakkāṭai, பெ. (n.)

   காடை வகையுளொன்று; painted bush-quail-Perdicula erythrorhyncha.

     [வரணம் + காடை.]

இக் காடை வகையானது, நீர் வளம் மிகுந்த மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், மலைவாழ் மக்கள் பயிரிடும் நிலங்களிலும், அதிகம் காணப்படும். புல் விதைகள், நிலைத்திணைகள் (தாவரங்கள்); தளிர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். பழுப்பு நிற வெண்கோடுகளுடனும், கருப்புக் கறைகளுடனும் காணப்படும். இவை 18 விரலம் உயரம் வரை வளரும் தன்மையவை. 5 முதல் 8 வரையிலான எண்ணிக்கையில் முட்டை இடும். ஆண் வரணக்காடை சிறிது வேறுபட்டுத் தோன்றும்.

     [P]

வரணக்கினி

 வரணக்கினி varaṇakkiṉi, பெ. (n.)

   நிறத்தை மாற்றும் தன்மை கொண்டது; decolourising matter.

     [வரணம் + அக்கினி.]

வரணக்கெளதாரி

வரணக்கெளதாரி varaṇakkeḷatāri, பெ. (n.)

   கெளதாரி வகையுளொன்று; painted sandgrouse- pterocles indicus.

     [வரணம் + கெளதாரி.]

தமிழகத்தின் வடக்கு, மேற்கு மாவட்டங்களின், மலைப் பகுதிகளில் காணப்படுகின்றதும், 28 விரலம் உயரம் வளர்வதும், சிறுகீற்றுகளை உடலில் கொண்டதுமாகிய இக்கெளதாரி, சிறுவிதைகள், களைச் செடிகள், சிறு பழங்கள் ஆகியவற்றை உண்ணும். 4 அல்லது 3 முட்டைகள் இட்டு, தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.

வரணக்கோடாங்கியாட்டம்

 வரணக்கோடாங்கியாட்டம் varaṇakāṭāṅgiyāṭṭam, பெ. (n.)

   சிற்றூர்களில் வண்ண ஆடைகள் அணிந்து, கோடாங்கி அடித்து ஆடியும், பாடியும் குறிசொல்லும் ஒருவகை ஆட்டம்; a variety of dance of soothsaying, performed in villages, by wearing colourful clothes and beating a small (Udukku); hand drum.

     [வள் → வர் → வரி + அணம் – வரணம் + கோடாங்கி + ஆட்டம்.]

கோடாங்கம் என்னும் மரத்தால் செய்த உடுக்கை, அதனையடித்துக் குறிசொல்லும் வரணக் கோடாங்கியையும் குறித்தது.

வரணசங்கரம்

 வரணசங்கரம் varaṇasaṅgaram, பெ. (n.)

 confusion or mixing of castes due to inter marriage.

     [வரணம் + சங்கரம்.]

வரணசபம்

 வரணசபம் varaṇasabam, பெ. (n.)

   மழை வேண்டி ஒதப்படும் மறைமொழி; vedic prayer for rain, addressed to Varunan.

     [வரணம் + சபம்.]

வரணசரம்

 வரணசரம் varaṇasaram, பெ. (n.)

   செம் மணிகளாற் செய்த கழுத்தணி; necklace of rubies or red gems.

     [வரணம் + சரம் = கழுத்தையொட்டி அணியும் அணி.]

வரணசூக்கம்

 வரணசூக்கம் varaṇacūkkam, பெ. (n.)

   மழைக் கடவுள் பற்றிய பாடல்; a vedic hymn in praise of varaman.

     [வரணம் + சூக்கம்.]

வரணச்சுண்டாங்கோழி

வரணச்சுண்டாங்கோழி varaṇaccuṇṭāṅāḻi, பெ. (n.)

சுண்டாங்கோழி

 painted spurfowlGalloperdix lunulata.

     [வரணம் + சுண்டாங்கோழி.]

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள வறண்ட காடுகளிலும் காணப்படும். இவை, 32 விரலம் உயரம் வரை வளரும். செம்பழுப்பான உடலில், கருப்பு வளையங்களுக்கிடையே, வெண் திட்டுக்களைப் பெற்றிருக்கும். விதைகள், முளைகள், இலந்தை முதலியன, இவற்றின் உணவு. 3 முதல் 5 வரையிலான முட்டைகளையிட்டு, இனப்பெருக்கம் செய்யும்.

வரணடாறு

 வரணடாறு varaṇaṭāṟu, பெ. (n.)

   ஆமணக்கு; castor plant-ricinus communis (சா.அக.);.

வரணதாபம்

 வரணதாபம் varaṇatāpam, பெ. (n.)

   தலையில் மூளையின் சவ்வுக்கு ஏற்படும் அழற்சி; inflammation of the membranes of brain-meningitis (சா.அக.);.

     [வரணம் + தாபம்.]

 Skt. daba → த. தாபம்.

வரணதிசை

 வரணதிசை varaṇadisai, பெ. (n.)

   மேற்கு (திவா.);; the west.

     [வரணம் + திசை.]

வரணதேவம்

வரணதேவம் varaṇatēvam, பெ. (n.)

   குன்று (சதய); நாள்; the 24th naksatra.

     [வரணம் + தேவம்.]

வரணத்தகடு

 வரணத்தகடு varaṇattagaḍu, பெ. (n.)

   மணிகளைப் பதிக்கும் போது அவற்றினடியில் வைக்கப்படும் வண்ணம் பூசப்பட்ட தகடு(இ.வ.);; foil used in setting precious stones.

     [வரணம் + தகடு.]

வரணத்தடுக்கு

 வரணத்தடுக்கு varaṇattaḍukku, பெ. (n.)

   அழகுப்படுத்தி, வண்ணம் பூசிய பாய்; decorated mat.

     “வாழ்ந்த மகள் வந்தாள் வரணத்தடுக்கு போடு” (உ.வ.);.

     [வண்ணம் → வரணம் + அடுக்கு = அழகுபடுத்து.]

வரணநாள்

 வரணநாள் varaṇanāḷ, பெ. (n.)

வரணனாள் பார்க்க;see Varananal.

     [வரணம் + நாள்.]

வரணனாள்

வரணனாள் varaṇaṉāḷ, பெ. (n.)

   குன்று (சதய); நாள் (பிங்.);; the 24th naksatra.

     [வரணன் + நாள்.]

வரணனை

வரணனை varaṇaṉai, பெ. (n.)

   1. வண்ணனை; description.

   2. புனைவுரை (தண்டி.பொது.7);:

 delineation.

   3. புகழ்ச்சி, பாராட்டு; praise.

த. வரணனை → skt. varana.

     [வள் → வர் → வரி →. வரணம் → வரணி → வரணை.]

     (ஒ.நோ.); திள் → திர் → திரள் → திரளை → திரணை.

     “வள்” என்னும் அடிப்படை மூலத்திலிருந்து, கிளைத்த சொல். இம் மூலத்திரிபு, வடமொழியில் இல்லை.

     ‘வர்’ என்னும் மேற்படை மூலத்திலிருந்து தோன்றிய வர்ண என்னும் சொல்லே வடமொழியில் வழக்கிலுள்ளது. வர்ண என்று வடவர் காட்டும் மூலம் செயற்கையே.

     “varn (rather Nom. fr. varna);” என்று மா.வி. குறித்திருத்தல் காண்க..

இஃதும், வடவர் வலிந்து திரித்துக் கொண்ட பொருட் பொருத்தப்பாடற்ற மூலம் என்பது, தேவநேயர்தம் கொண்முடிபு (வ.வ.பக்.82);.

வரணி என்பது தூய தென்சொல்லாகும். வரணனை, வரணி, வரணிப்பு போன்ற சொற்கள் தென்பாண்டி நாட்டில், கல்லாதார் நாவில், இன்றளவும், வழக்கூன்றியுள்ள நல்ல தமிழ்ச் சொற்களாகும்.

அழகர் வரணனை.

வண்ணணை, வரணனை போன்ற செந்தமிழ் வடிவங்கள், வடசொல் வடிவைப் பின்பற்றி, வருண, வருணனை என்று தமிழில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியில் வழுப்பட எழுதப்பட்டுள்ளன.

மதுரையம்பதியில், கள்ளழகர் வையையாற்றில் எழுந்தருளுங்கால், அழகர் வரணனை, மாலிருஞ்சோலை வரணிப்பு போன்ற வரணிப்புப் பாக்கள், இன்றும் படிப்பறிவற்ற பாமரர்களால் இசைக்கப்படுகின்றன. தங்கக்குதிரையில், மாலிருஞ்சோலை அழகன், இவர்ந்துவரும் எழிற்கோலத்தைத் திறம்பட இசை நயத்துடன் வண்ணிப்பதே வரணிப்பு எனும் வரணனை யாகும்.

வரணம், வரணனை, வரணிப்பு, வரணித்தல் போன்ற சொற்களில் உள்ள

     “வள்” என்னும் வளைவுக்கருத்தே மூலமாகும். வனைந்து, வனைந்து புகழ்ந்துரைத்தலே வரணனையாகும்.

வரணனைப் பாக்கள் அனைத்தும் ஒருவர்.அல்லது ஒன்றன் அழகினை, மற்றும் புகழ் அல்லது செயற்பாட்டினை, விதந்தோதுதலாகும்.

வரணபகவான்

வரணபகவான் varaṇabagavāṉ, பெ. (n.)

வருணன், 1 (உரி.நி.); பார்க்க;see varunan 1.

வரணப்பாட்டு

 வரணப்பாட்டு varaṇappāṭṭu, பெ. (n.)

   பண்முறையை விளக்கிப் பாடும் பாட்டு; improvised introduction to a melody.

     [வரணம் + பாட்டு.]

வரணப்பிரியை

வரணப்பிரியை varaṇappiriyai, பெ. (n.)

   இராக வகை (பரத.ராக.பக்.104);; a specific melody-type.

     [வரணம் + பிரியை.]

வரணப்பூதர்

 வரணப்பூதர் varaṇappūtar, பெ. (n.)

   நால்வகை வரணங்களையும் காக்கும் நான்கு பூதங்கள்; the four goblins protecting, respectively, the four castes.

     [வரணம் + பூதம் → பூதர்.]

வரணப்பொருத்தம்

வரணப்பொருத்தம் varaṇapporuttam, பெ. (n.)

   பன்னீருயிரும் க, ங, ச, ஞ, ட, ண என்ற மெய்யாறும், பார்ப்பனச் சாதியும், த, ந, ப, ம, ய, ர என்ற ஆறும், மன்னர் சாதியும், ல, வ, ற, ன என்ற நான்கும் வணிகர் சாதியும், ழ, ள இரண்டும் சூத்திர சாதியுமாகக் கொண்டு, உரியவாறு செய்யுண் முதன் மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை (வெண்பாப். முதன், 9, 10);; ta, na, pa, ma, ya, ra being ksattriya;

 la,va, ra, na being vaišya;

 la, la being śūdra) one of ten ceyyup-mudan-moli-pporuttam.

     [வரணம் + பொருத்தம்.]

வரணமாலை

 வரணமாலை varaṇamālai, பெ. (n.)

   நெடுங் கணக்கு; the alphabet.

     [வரணம் + மாலை.]

வரணமெட்டு

 வரணமெட்டு varaṇameṭṭu, பெ. (n.)

   பாட்டிசை;   இசைப்பாட்டு; song, musical composition.

     [வரணம் + மெட்டு.]

வரணமேறல்

வரணமேறல் varaṇamēṟal, பெ. (n.)

   1. பொன் மாற்றுயர்கை; increase of fineness or purity of gold.

   2. மஞ்சளாகுகை; turning yellow.

   3. குறைந்து காணும் வண்ணம் ஒளிர்தல்; dull colour becoming bright and shiny.

வரணம்

வரணம்1 varaṇam, பெ. (n.)

   1. நிறம் (பிங்.);; colour.

   2. எழுத்து; letter.

   3. அழகு (பிங்.);; beauty.

   4. ஒளிப்படலம்; brightness.

   5. மஞ்சள் (யாழ்.அக.);; turmeric.

   6. பொன்னுரை (யாழ்.அக.);; streak of gold on the touchstone.

   7. பொன் (யாழ்.அக.);; gold.

   8. புகழ் (யாழ்.அக.);; fame.

   9. முகமன்; praise, flattery.

   10. நறுமணம் (யாழ்.அக.);; fragrance.

   11. குணம் (இலக்.அக.); character.

   12. தன்மை; quality.

   13. பூச்சு; ointment.

   14. பூச்சுக் களிம்பு; ointment.

   15. புனைவு (யாழ்.அக.);; disguise.

   16. வகை (யாழ்.அக.);; manner.

   17. மாதிரி (யாழ்.அக.);; style, example.

   18. யானை (யாழ்.அக.);; elephant.

   க. பரெ;   தெ. வரி;ம. வரெ.

த. வரணம் → Skt. Varna.

     [வள் → வர் → வரி + அணம் = வரணம், எழுத்து, பூச்சு, நிறம், வகை, அழகு, நிறம்பற்றிய குலம் (வ.வ.பகுதி.2 பக்.81);.

     (ஒ.நோ.); திள் → திர் → திரள் → திரளை → திரணை.

     ‘வள்’ என்னும் வளைவுக்கருத்து மூலத்தினின்று தோன்றிய சொல்.

வள் → வர் → வரி → வரணம்.

வள் → வர் → வரி → வரிதல் =

   1. எழுதுதல் (பிங்.);,

   2. சித்திரமெழுதுதல், பூசுதல்.

     “வரிவனப்புற்றவல்லிப் பாவை” (புறம்.33);. வரித்தல் =

   1. எழுதுதல்.

     “வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை” (சீவக.2532);.

   2. சித்திரமெழுதுதல், பூசுதல்.

   3. கோலஞ் செய்தல்.

     “அணிமலர் துறைதொறும் வரிக்கும்” (ஐங்குறு.1.17);.

     “வள்” என்னும் அடிப்படை வளைவுக்கருத்து மூலத்தினின்று

     “வரி” என்னும் சொல் தோன்றும்.

     “வரி” என்னும் சொல்லினின்று எழுத்து, பூச்சு, நிறம், வகை, அழகு, நிறம்பற்றிய குலத்தைக் குறிக்கும் பொருண்மை பொதிந்த வரணம் என்னும் சொல் கிளைத்தது. வரணம் என்னும் சொல் தூயதென் சொல்.

வடவர்காட்டும்

     “வர்ண” (varn); என்னும் மூலம், பொருட் பொருத்தமற்றது. வடவர் திரித்துக் கொண்ட செயற்கைத் தன்மையுடையது, என்பார் பாவாணர்.

வரண அல்லது வர்ண என்னும் வடசொல்லே, தமிழில் வண்ணம் என்று திரிந்து வழங்குவதாகத் தமிழ்ப் பேராசிரியர் உட்படப் பலருங் கருதிக் கொண்டிருக்கின்றனர். வரணம், வண்ணம் என்னும் இரு சொல்லும் ஒரு சிறிது வடிவு வேறுபட்டனவேனும், ஒரே வேரினின்று முறையே, கீழ்ப்படையினுமேற்படையினுமாகத் தோன்றினவென் றறிதல் வேண்டும்.

தில்லுமுல்லு → திண்டுமுண்டு.

தில் → தெல் → தெள் → தெறு- தெற்று → தெற்றி → திண்ணை.

தில் → திள் → திண் → திண்ண = திரண்ட மேடை.

தி → திண்டு → திள் → திட்டு → திட்டை.

தில் → திர் → திரள் → திரளை → திரணை. திண்ணை.

திண்ணை, திரணை என்னும் இரு சொல்லும், கீழ்ப்படையிலும், மேற்படையிலுமாக ஒரே வேரினின்று தோன்றி, ஒரே பொருளை யுணர்த்துதல் காண்க.

இங்ஙனமே, வரணம், வண்ணம் என்னும் சொல்லுமெனக் கண்டு தெளிக,

     “திண்ணை”

     “திரணை”யின் திரிபன்று.

அங்ஙனமே,

     “வண்ணம்” வரணத்தின் திரிபன்று.

     ‘வண்ணகவொத்தாழிசை’ வரணகவொத் தாழிசையென்று வழங்காமையும் நோக்குக (தேவ.13-பக்.40);.

 வரணம்2 varaṇam, பெ. (n.)

   மூளையைக் கவர்ந்துள்ள மூன்று புரையான சவ்வுகள்; the three membrance that envelope the brain (சா.அக.);.

 வரணம்3 varaṇam, பெ. (n.)

   மாற்று; degree of fineness, as of gold.

 வரணம்4 varaṇam, பெ. (n.)

   1. தெரிந்தெடுக்கை; choice, selection.

     “ஆசார்ய வரணம் பண்ணுதல்”.

   2. அமர்த்துகை (யாழ்.அக.);; appointing, nominating.

   3. சூழ்கை (யாழ்.அக.);; surrounding or incircling.

   4. மதில் (இலக்.அக.);; rampart, surrounding wall.

   5. மறைக்கை (இலக்.அக.);; covering, screening.

   6. சட்டை (நாமதீப.454);; coat.

   7. மாவிலிங்கம் (தைலவ.);; round-berried cuspidate-leaved lingam tree.

   8. ஒட்டகம் (யாழ்.அக.);; camel.

   9. பால் (யாழ்.அக.);; milk.

     [வரி + அணம் – வரணம்.]

மறைத்தற் கருத்தும், எழுதுதற் கருத்தும், வரணித்தற் கருத்தும், வளைதற் கருத்தோடு தொடர்புள்ளவையே. ஆதலால், சூழ்தலும், மறைத்தலும் பற்றிய சொல்லை வேறாகவும், நிறமும், வண்ணனை பற்றிய சொல்லை வேறாகவும், தமிழில் பிரித்தல் கூடாது (தேவ.13, பக்.40);.

வரணம் வை-த்தல்

வரணம் வை-த்தல் varaṇamvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நிறமூட்டுதல், வண்ணம் பூசுதல்; to give colour, to paint, to colour with dye.

   2. வரணம்பூசு-தல் பார்க்க;see varanam-pusu.

     [வள் → வர் → வரி → வரணம் + வை.]

வரித்தல் = கோலஞ்செய்தல், சித்திரம் எழுதுதல், பூசுதல் என்னும் பொருண்மையில், சீவகசிந்தாமணி ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

     “வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை” (சீவக.2532);.

     “அணிமலர் துறைதொறும் வரிக்கும்” (ஐங்குறு.17);.

     “வள்” என்னும் அடிப்படை மூலத்தினின்று கிளைத்த வரி என்னும் சொல்லினின்று, வரணம் என்னும் சொல் தோன்றியது.

   வண்ணமெழுதுதல், வண்ணம் பூசுதல் என்னும் பொருட்பொருத்தப்பாட்டில், வரணம் வைத்தல் தென்பாண்டி நாட்டில் பரவலாக வழக்கூன்றியுள்ளது என்பார் மொழிஞாயிறு. வரி = வளைகோடு;எழுத்து.

எழுத்திலும், ஒவியத்திலும் வளைகோடும், வண்ணப்பூச்சும் நிரம்பி யிருப்பதால், வளைத்தற் கருத்தில், எழுத்துக்கருத்து தோன்றிற்று (வ.வ.பகுதி. 2, பக். 80);.

வரணம்பூசு-தல்

வரணம்பூசு-தல் varaṇambūcudal, பெ. (n.)

   1. வண்ணம்பூசு-தல் பார்க்க;see vannam-pusu.

   2. வரணம்வை-த்தல் பார்க்க;see varanam-vai.

     [வரணம் + பூசு.]

ஒவியம், சுவர் போன்றவற்றில், வண்ணங் குறைந்த காலத்தே கோடிட்டு வரித்தல் அல்லது பூசுதல்.

வரணலோகம்

வரணலோகம் varaṇalōkam, பெ. (n.)

   1. வரண மண்டலம்; region of varanan.

   2. நீர்; water.

     [வரணம் + உலகம் → லோகம்.]

த. உலகம் → Skt. loka.

வரணவிந்து

 வரணவிந்து varaṇavindu, பெ. (n.)

   முத்துச் சிப்பி (யாழ்.அக.);; mother of pearl.

     [வரணம் + விந்து.]

வரணவிபாசகம்

 வரணவிபாசகம் varaṇavipācagam, பெ. (n.)

   ஒரு வகை நிறத்தைக் காட்டும் ஒர் முப்பட்டைக் கண்ணாடி; spectroscope.

வரணவில்

 வரணவில் varaṇavil, பெ. (n.)

   வானவில்லை அடுத்துத் தோன்றும் வில் வடிவு (வின்.);; secondary rainbow.

     [வரணம் + வில்.]

வரணவுலிமிடி

 வரணவுலிமிடி varaṇavulimiḍi, பெ. (n.)

   கருப்பு உப்பிலாங் கொடி; a twiner black variety of vupplian-kodi.

வரணவேலை

 வரணவேலை varaṇavēlai, பெ. (n.)

   சித்திரம் எழுதுதல்; art of painting.

     [வரணம் + வேலை.]

வரணாசாரம்

 வரணாசாரம் varaṇācāram, பெ. (n.)

   சாதியொழுக்கம் (யாழ்.அக.);; customs and manners pertaining to each of the four Castes.

     [வரணம் + ஆசாரம்.]

வரணாசிரா

 வரணாசிரா varaṇācirā, பெ. (n.)

   சிவதை; purgative root-turbith root.

வரணாச்சிரமதருமம்

 வரணாச்சிரமதருமம் varaṇācciramadarumam, பெ. (n.)

   நால்வகைச் சாதிக்கும் நால்வகை நிலைக்கும் உரிய ஒழுக்கம்; duties pertaining to the four classifications of castes and to the four stages of life.

     [வரணம் + ஆச்சிரமம் + தருமம்.]

வரணாத்திரம்

 வரணாத்திரம் varaṇāttiram, பெ. (n.)

   வரணனை இறைவனாகக் கொண்ட படைக்கலன் (வின்.);; the mystic arrow whose presiding deity is varanan.

     [வரணம் + Skt. astra → த. அத்திரம்.]

வரணாத்து

 வரணாத்து varaṇāttu, பெ. (n.)

   புழுதிநாற்று; paddy seedling grown on dry seed-bed.

     [வரள் + நாற்று → நாத்து.]

வரணாத்துவா

வரணாத்துவா varaṇāttuvā, பெ. (n.)

   துறக்க நிலையை விளக்குவதும், அக்கர வடிவில் அமைந்ததுமான ஆறத்துவாக்களுள் ஒன்று (சி.சி.8, 6, மறைஞா.);; a path to salvation or renunciation in the form of varnās, one of six àrattuva.

     [வரண + அத்துவா.]

வரணாலயம்

 வரணாலயம் varaṇālayam, பெ. (n.)

   கடல்; the ocean or see.

     [வரணன் + ஆலயம்.]

வரணி

வரணி1 varaṇittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. புனைந்துரைத்தல்; to depict, describe.

   2. புகழ்ந்தேத்துதல், பலவாறு கூறிப் பாராட்டுதல்; to praise.

   3. உவமித்தல்; to illustrate by anology.

   4. மிகைபடக் கூறுதல்; to exaggerate.

   5. எழுதுதல்; to write.

   6. வண்ணி-த்தல் பார்க்க;see vanni.

த. வரணம் → வரணி → Skt.. varn (இ.வே.);.

     [வள் → வர் → வரி → வரணம் → வரணி = புனைந்துரைத்தல் (வ.வ.பகுதி.2, பக்.81);.]

வரணம், வரணி என்னும் இரு சொல்லும், வடசொல் வடிவைப் பின்பற்றி வருண, வருணி எனத் தமிழில் வழுப்பட எழுதப்பட்டுள்ளன. பாண்டி நாட்டிற். குலம் வினவும்போது,

     “என்ன வரணம்” என்றே, இன்றும் ரகர வடிவில் நாட்டுப்புறத்தில் வழங்குதல் காண்க.

வண்ணம், வரணம் என்னும் இருசொல்லும், ஒரே மூலத்தினின்று தோன்றியவையே. ஆயின், முன்னது அடிப்படை மூலமாகிய

     ‘வள்’ என்பதினின்றும், பின்னது மேற்படை மூலமாகிய

     ‘வரி’ என்பதினின்றும், திரிந்தவையாகும்.

வள் → வண் → வண்ணம் → வண்ணி → வண்ணணை (அடிப்படை மூலம்);.

வள் → வர் → வரி → வரணம் → வரணி (மேற்படை மூலம்);.

திள் → திர் → திரள் → திரளை திரணை (மேற்படை மூலம்);.

வரணித்தல் என்பதன் செந்தமிழ்ச் சொல்

வடிவம் வண்ணித்தல் என்பதாகும்.

திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே, மூலத்தனின்று தோன்றிய ஒரு பொருட் சொற்களே. இவையிரண்டும், இன்றும் நெல்லை நாட்டு உலக வழக்காம்.

இங்ஙனமே, வண்ணம், வரணம் என்பனவும்.

வண்ணம் என்னும் அடிப்படை மூலத்திரிபு, வடமொழியிலின்மையும், வரணம் (வர்ண); என்னும் மேற்படை மூலத்திரிபே, அதிலுண்மையும், கவனிக்கத்தக்கன (வ.வ.பகுதி, 2, பக்.82);.

பல நிறங்களைக் கொண்டு ஓர் ஓவியத்தைச் சிறப்பித்தாற்போன்று, பல சொற்களையும், அணிகளையுங் கொண்டு புனைந்துரைத்தலே, வரணித்தலாகும்.

 வரணி2 varaṇi, பெ. (n.)

   மாவிலிங்கம் (நாமதீப. 327);; round-berried cuspidate-leaved lingam tree.

     [வரணம் → வரணி.]

வரணிக்கை

 வரணிக்கை varaṇikkai, பெ. (n.)

   பாராட்டுகை, புகழ்கை, புனைந்துரைக்கை; praise;

 delineation.

     [வரணி → வரணிக்கை.]

வரண்டகம்

வரண்டகம்1 varaṇṭagam, பெ. (n.)

   1. உண்டை; ball, mass.

   2. சுவர்; wall.

   3. முகப்பரு; pimple on the face.

   4. யானை மேற்றவிசு; seat on an elephant, howdah.

     [சுரண்டகம் → (மரண்டகம்); . வரண்டகம்.]

 வரண்டகம்2 varaṇṭagam, பெ. (n.)

வரண்டகை பார்க்க;see varandagai.

     “பொன் வரண்டகத்தின் மேல்” (மேருமந். 1134);.

     [சுரண்டகம் → (மரண்டகம்); → வரண்டகம்.]

 வரண்டகம்3 varaṇṭagam, பெ. (n.)

   முகப்பரு; pimple on the face.

     [சுரண்டகம் → வரண்டகம்.]

வரண்டகை

வரண்டகை varaṇṭagai, பெ. (n.)

   நாகணவாய்ப் புள்; myna.

     “வரண்டகைக் கொடி நிரைத்த” (மேருமந்.1104);.

     [வரண்டம் → வரண்டகை.]

வரண்டம்

வரண்டம்1 varaṇṭam, பெ. (n.)

வரண்டகம் பார்க்க;see Varandagam.

     [சுரண்டம் → வரண்டம்.]

 வரண்டம்2 varaṇṭam, பெ. (n.)

   1. சாலைவழி; pathway.

   2. தூண்டிற்கயிறு; fishing thread or twine or string.

   3. புற்குவியல்; heap of grass.

   4. முகப்பரு; pimple of the face.

     [சுரண்டம் → வரண்டம்.]

வரண்டாலு

 வரண்டாலு varaṇṭālu, பெ. (n.)

   ஆமணக்கு (மூ.அ.);; Castor plant.

வரண்டியம்

 வரண்டியம் varaṇṭiyam, பெ. (n.)

   பேராமுட்டி (மூ.அ.);; pink-tinged white sticky mallow.

வரண்மாடு

 வரண்மாடு varaṇmāṭu, பெ. (n.)

   கடாமாடு (யாழ்.அக.);; bull.

     [வரள் + மாடு.]

வரதஅத்தம்

 வரதஅத்தம் varadaaddam, பெ. (n.)

   இறை வடிவ சிற்பங்களில் அமைக்கப்பெறும் ஒரு வகையான கைப்பாங்கு; hand sculptured in god’s idol.

     [வரத+அத்தம்]

வரதகரம்

 வரதகரம் varadagaram, பெ. (n.)

   இறைவன் கை இலக்கணங்களில் ஒன்று; formula followed while sculpturing hand in god’s idol.

     [வரதன்+கரம்]

வரதஞ்சி

 வரதஞ்சி varadañji, பெ. (n.)

   ஒரு செடி வகை; a kind of plant-caesapinia sappan (சா.அக.);.

வரதடியன்

 வரதடியன் varadaḍiyaṉ, பெ. (n.)

   மடிமிகுமட்டி (இ.வ.);; dull, idle fellow, blockhead, a very stupid person.

மறுவ. முழுச்சோம்பேறி

வரதட்சணை

 வரதட்சணை varadaṭcaṇai, பெ. (n.)

   மாப்பிள்ளைக் கட்டணம்; dowery.

     [Skt. vara-{} → த. வரதட்சனை.]

வரதட்சி

 வரதட்சி varadaṭci, பெ. (n.)

   சத்திசாரம்; a kind of salt (சா.அக.);.

வரதலன்

 வரதலன் varadalaṉ, பெ. (n.)

வடதரன் பார்க்க;see vadataran (சா.அக.);.

வரதாரு

 வரதாரு varatāru, பெ. (n.)

   தேக்குமரம் (மூ.அ.);; teak tree.

வரதுங்கராமபாண்டியன்

வரதுங்கராமபாண்டியன் varaduṅgarāmapāṇṭiyaṉ, பெ. (n.)

   16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a poet, lived in 16-17 C.

இவர் திருக்கருவை அந்தாதி, சிவகவசம், பிரமோத்தர காண்டம், கொக்கோகம், கூர்ம புராணம் முதலியவற்றை இயற்றியவர். இவர் அதிவீரராம பாண்டியனுடைய பெரிய தந்தையின் மகன். கூர்ம புராணம், அதிவீரராம பாண்டியன் செய்ததாகவும் கூறுவர்.

வரத்தாடு

 வரத்தாடு varattāṭu, பெ. (n.)

   வெளியூரிலிருந்து கொண்டு வரப்படுகின்ற ஆடு; sheep or goat brought from other places, alien sheep.

செம்மறியாடுகளின் மந்தையைக் கிடை என்பர். ஊர் ஊராகச் சென்று பகலில் மேய்ச்சலுக்கு விட்டு, இரவில் நிலத்துக்குரியவரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு உரத்திற்காக கிடையமர்த்துவர். இந்த ஆடுகள் வெளியூரிலிருந்து கொண்டுவரப்படுவதால் வரத்தாடுகள் என்றும், இவற்றை மேய்ப்பவர்களை வரத்தாட்டுக்காரர்கள் என்றும் அழைக்கப்படுவர்.

வரத்தாறு

 வரத்தாறு varattāṟu, பெ. (n.)

   கிளையாறு (வின்.);; tributary stream.

     [வரத்து + ஆறு.]

வரத்து

வரத்து1 varattu, பெ. (n.)

   1. தலைமுறை; genealogy, lineage, progeny.

     ‘ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச் சொல்லியிறே கவிபாடுவது’ (திவ். அமலனாதி. 1. வ்யா. பக். 24);.

   2. விருந்தினர் வரவைக் குறிக்கும் பல்லிச் சொல்; chirping of lizard indicating the arrival of guests.

   3. கட்டளை; order, command.

     [வா → வரு → வரத்து.]

 வரத்து2 varattu, பெ. (n.)

   1. வருகை; advent, coming in.

     “நம் கோவலன் வருகின்ற வரத்து” (சிலப்.9, 64-9, உரை);.

   2. நீர் வரும் வழி’; inlet or feeding channel or source of water supply, as to a tank.

     “இந்தக் குளத்துக்கு வரத்து எங்கே?” (உ.வ.);.

   3. வரும்படி; income, receipts, perquisite.

     “ஒருவரத்துமின்றிச் செலவு செய்வோர்” (அறப். சத. 56);.

   4. கணக்கில் வரவுதொகை காட்டும் பாங்கு; the process of crediting in an account.

   5. பெருக்கு; increase or enhancement.

     “வெள்ளம் வரத்தா வற்றா?”.

   6. எல்லை; limit, boundary.

     “இந்நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடிமக்களை” (புதுக்கோ.கல்வெ. 176);.

     [வா → வரு → வரத்து.]

வரத்துப்பல்லி

வரத்துப்பல்லி varattuppalli, பெ. (n.)

   1. விருந்தின் வருகையைத் தெரிவிக்கும்படி ஒலிசெய்யும் பல்லி; lizard which indicates by its chirping the advent of guests.

   2. தீயதன் தீநிமித்தமாக ஒலி செய்யும் பல்லி (வின்.);; lizard which indicates ill omen by its chirping.

     [வரத்து + பல்லி.]

வரத்துப்போக்கு

வரத்துப்போக்கு1 varattuppōkku, பெ. (n.)

   வழக்கமான பெண் புணர்ச்சி; habitual intercourse (சா.அக.);.

 வரத்துப்போக்கு2 varattuppōkku, பெ. (n.)

   1. உள்ளே புகுகையும் வெளியே போகையும்; entrance and exit.

   2. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றுவரும் பழக்கம்; visiting terms, terms of cordiality.

     “அந்த வீட்டுக்கு வரத்துப் போக்குண்டா?” (இ.வ.);.

   3. வரவும் செலவும்; income and expenditure.

     [வரத்து + போக்கு.]

வரத்துவாரி

 வரத்துவாரி varattuvāri, பெ. (n.)

   குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால் (இ.வ.);; supply channel, feeding channel of a tank.

மறுவ. குளக்கால்

     [வரத்து + வாரி.]

வரநிச்சயம்

 வரநிச்சயம் varaniccayam, பெ. (n.)

   மணமகனை இன்னானென்று உறுதிசெய்து கொள்ளுகை; selecting the bridegroom for a particular bride.

     [வரன் + நிச்சம் → நிச்சயம் – வரநிச்சயம்.]

 Skt. nis-caya → த. நிச்சயம்.

வரந்தருவார்

வரந்தருவார் varandaruvār, பெ. (n.)

   வில்லி புத்தூராழ்வாரின் புதல்வராகிய ஒரு புலவர் (பாரத. சிறப்புப் 23, தலைப்பு);; a poetson of visi-puttår-āsvär.

இவர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்திற்கு பாயிரம் பாடியவர்.

வரன்

வரன் varaṉ, பெ. (n.)

   1. சிறந்தவன்; superior, great person.

     “தமிழ் முனிவரன்” (தக்கயாகப். 40);.

   2. கடவுள்; God.

   3. நான்முகன்; Brahman.

   4. சீவன்முத்தருள் நான்முகன் எனப்படும் வகையினன்; person

 belonging to the birama-varar class of jivar-muttar.

     “தேகசஞ்சார நிமித்தந்தானா வுன்னுவோன் வரன்” (கைவல்ய. தத்துவ. 99);.

   5. தமையன் (நிகண்டு, 218);; elder brother.

   6. மணமகன்; bridegroom.

     “தன் மகளுக்கொத்த வரனைத் தேடுவான்” (உத்தரா. இரவாணன் பிற.2);.

   7. கணவன் (சூடா.);; husband.

     [பரம் → வரம் → வரன். ம → ன = போலி.]

வரன் = மேலானவன், சிறந்தவன், மேலான வீட்டுலகம். பரநிலையை ஆதனுக்கு வழங்கும் அருள் வடிவான இறைவன்.

வரன்முறை

வரன்முறை varaṉmuṟai, பெ. (n.)

   1. மரபின் வந்த முறை; tradition.

     “பாடினை யருமறை வரன்முறையால்” (தேவா. 80, 3);.

   2. வரலாறு; history.

   3. மூலம்; origin, source.

     “அதன் வரன்முறை சொன்னான்” (பிரமோத். 18,1);.

   4. ஊழ் (யாழ்.அக.);; fate, destiny.

   5. பெரியோரிடங் காட்டும் மதிப்புறவு அல்லது பணிவு; courtesy, respect or regard to superiors.

     “வரன்முறை செய்திட” (கம்பரா. திருவவ. 64);.

     [வா → வரன் + முறை – வரன்முறை.]

வரன்று-தல்

வரன்று-தல் varaṉṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வரடுதல்; to scrape, to gather up, to collect.

     “மணிவரன்றி வீழுமருவி” (நாலடி. 369);.

 M. varanțuka.

வரபட்சம்

 வரபட்சம் varabaṭcam, பெ. (n.)

   மண மகனைச் சார்ந்தவர் (யாழ்.அக.);; the bridegroom’s party.

     [வரன் + பக்கம் → பட்சம்.]

த. பக்கம் → Skt. பட்சம் (paksa);.

வரபதி

 வரபதி varabadi, பெ. (n.)

   மூலிகை வகையு ளொன்று; a kind of herbal medicine (சா.அக.);.

வரபலம்

 வரபலம் varabalam, பெ. (n.)

   தென்னை மரம்; cocoanut tree – Cocos nucifera (சா.அக.);.

வரப்படி

 வரப்படி varappaḍi, பெ. (n.)

   வரப்பின் அருகிலுள்ள வயற்பகுதி; portion of a field, adjoining to the ridges.

     [வரப்பு + அண்டி → அடி.]

வரப்பினை யொட்டியுள்ள இடப்பகுதி அல்லது வரப்பின் கீழிடம்.

வரப்படுத்து-தல்

வரப்படுத்து-தல் varappaḍuddudal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. நெட்டுருப்பண்ணுதல்; to cram or mug up as a lesson.

பாடத்தை வரப்படுத்துகிறான்.

   2. வந்ததைப் பெற்றுக் கொள்ளுதல்; to credit;

 to appropriate, to accept whatever is offered.

வந்ததை வரப்படுத்தடா வல்லக்காட்டு, இராமா (இ.வ.);.

     [வா → வர + படு . படுத்து.]

வரப்பண்ணு-தல்

வரப்பண்ணு-தல் varappaṇṇudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. வரவழைத்தல்; to cause to come;

 to bring;

 to produce.

   2. நெட்டுருச் செய்தல்; to mug up, to cram, as a lesson.

     [வா → வர + பண் → பண்ணு.]

வரப்பற்று-தல்

வரப்பற்று-தல் varappaṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. தன்வயமாக்குதல்; to get into one’s possession, to take hold of, to clutch eagerly

   2. வந்ததைப் பெற்றுக் கொள்ளுதல்(இ.வ.);; to credit, to appropriate, to accept whatever is offered.

     [வா → வர + பற்று.]

வரப்பார்

வரப்பார்1 varappārttal,    4 செ.கு.வி. (v.i.)

   பிறர் வரவுக்காகக் காத்திருத்தல் (யாழ்.அக.);; to await, to wait for some one’s arrival.

     [வா → வர + பார்.]

 வரப்பார்2 varappārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வருமாறு செய்தல்; to cause or arrange to come.

     [வா → வர + பார்.]

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம் varappiracātam, பெ. (n.)

   கடவுளரின் அருட்கொடை; Grace of Gods.

     “தெய்வச்செயல் வரப்பிரசாதம்” (தனிச்.சிந். 231. 18);.

     [வரம் + பிரசாதம்.]

 Skt. pra-sådi → த. பிரசாதி

வரப்பிரசாதி

 வரப்பிரசாதி varappiracāti, பெ. (n.)

   வரமருள்வார்; bestower of boons.

     “பழனியாண்டவர் நல்ல வரப்பிரசாதி”

     [வரம் + பிரசாதி.]

 Skt. pra-sādi → த. பிரசாதி.

வரப்பிரதானம்

வரப்பிரதானம் varappiratāṉam, பெ. (n.)

   1. வரந்தருகை; the granting of a boon, blessing.

   2. நன்கொடை (யாழ்.அக.);; excellent gift, donation.

     [வரம் + பிரதானம்.]

 Skt. pradhåna → த. பிரதானம்

வரப்பிரதை

வரப்பிரதை varappiradai, பெ. (n.)

   1. வரமளிக்கும் தேவதை; benevolent goddess.

   2. அகத்திய முனிவரின் மனைவியாகிய உலோபமுத்திரை (யாழ்.அக.);; Löbamudra, the wife of Agattiyar.

     [வரம் + பிரதை.]

 Skt. pratha → த. பிரதை

வரப்பு

வரப்பு varappu, பெ. (n.)

   1. வயல்வரம்பு; ridge of a field.

   வரப்பு உயர நீர் உயரும் குடி உயரக் கோன் உயரும் (உ.வ.);. வரப்போ தலையணை;வாய்க்காலோ பஞ்சுமெத்தை (பழ.);.

   2. வரம்பு; limit.

   3. எல்லை (சது.);; boundary.

     [வரம்பு → வரப்பு. வளைதற் கருத்தினின்று கிளைத்த சொல்.]

ஒருவர் நிலத்தினின்று, மற்றொருவர் இடத்தை வளைத்து வரம்பிடுவதால் வரப்பு எனப் பெயர் பெற்றது. வயலின், எல்லையினை, அல்லது வயலோரத்தை வகுக்கும், வயல்வரம்பான திட்டு.

வரப்புகழி-த்தல்

வரப்புகழி-த்தல் varappugaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வரப்பினைச் சரி செய்தல்; shaping or reclaiming the ridges of paddy field.

     [வரப்பு + கழி.]

ஒருகா. அண்டைவெட்டுதல்.

வரப்புக்கடா

 வரப்புக்கடா varappukkaṭā, பெ. (n.)

வரப்புநண்டு பார்க்க;see varappu-nandu.

     [வரப்பு + கடா.]

வரப்புச்சுண்டெலி

 வரப்புச்சுண்டெலி varappuccuṇṭeli, பெ. (n.)

   எலிவகை; field-mouse.

     [வரப்பு + சுண்டு + எலி.]

வயலோர வரப்புக்குழியில் வாழும், சிற்றெலி வகையுளொன்று.

வரப்புநண்டு

 வரப்புநண்டு varappunaṇṭu, பெ. (n.)

   வயல் நண்டு; field crab.

     [வரம்பு → வரப்பு + நொண்டு → நண்டு.]

நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல்.

வரப்பு நண்டு வரப்புப் பொந்திலுள்ள வண்டலை வெளிக் கொணர்ந்து தரும் தன்மைத்து: வண்டலிலும் மணலிலும் கிண்டினாற்போற் செல்லும் நீருயிரி.

     [P]

வரப்புமேடு

 வரப்புமேடு varappumēṭu, பெ. (n.)

   மேடான வரப்பு; mound boundary, raised ridge of a field.

வரப்புமோடு (பே.வ.);.

     [வரப்பு + மேடு.]

வரப்புள்

 வரப்புள் varappuḷ, பெ. (n.)

   வயல் (பிங்.);; cultivable field.

     [வரப்பு + உல் → உள்.]

வரப்பினுட் பகுதியிலுள்ளதும், நன்கு பண்படுத்தப்பட்டதுமான நன்செய்.

வரப்பூலா

வரப்பூலா varappūlā, பெ. (n.)

   1. வறட்பூலா பார்க்க;see varat-pula.

   2. பூலா; fleggea lencophyrus (சா.அக.);.

வரப்பெலி

 வரப்பெலி varappeli, பெ. (n.)

   எலி வகை; field-rat (சா.அக.);.

     [வரப்பு + எலி. இல் → இலி → எலி. இல் = குத்துதல், குடைதல்.]

நன்செய் வரப்புப் பொந்துகளில் வாழும் எலி.

வரப்போ-தல்

வரப்போ-தல் varappōtal,    8 செ.கு.வி. (v.i.)

   நிகழக்கூடியதாதல்; to be about to come;

 to come in the future, to be positive or optamistic.

     “உனக்கு நல்லகாலம் வரப்போகிறது” (உ.வ.);.

     [வா → வர + போ.]

 வரப்போ-தல் varappōtal, செ.கு.வி. (v.i.)

   போய் வருதல்; to come back, a term used in Srilanka with a literal meaning of saying goodbye.

     [வா+போ]

போய் வருகிறேன் என்பதை வரப்போகிறேன் என்பது ஈழநாட்டுத் தமிழ் வழக்கு.

வரமாலை

 வரமாலை varamālai, பெ. (n.)

   மணமகனுக்கு மணமகள் சூட்டும் மணமாலை; the garland put by the bride round the neck of the bride-groom, at a marriage.

     [வரன் + மாலை.]

வரமுள்ளி

 வரமுள்ளி varamuḷḷi, பெ. (n.)

   ஓர் வகை முள்ளி; barleria brionita (சா.அக.);.

வரமூலி

 வரமூலி varamūli, பெ. (n.)

   ஒர் பூடு; barleria prionties (சா.அக.);.

வரம்

வரம்1 varam, பெ. (n.)

   1. தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு; boom, gift, blessing by a deity or a great person.

     “காதலி னுவந்து வரங் கொடுத் தன்றே” (திருமுரு.94);.

     “இமையா நாட்டத் தொருவரங் கொண்டு” (பரிபா. 530);.

     “வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்” (பரிபா. 8:105);.

     ‘வரங்கொடுத்த தெய்வத்திற்கு, மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டான்’ (உ.வ.);.

   2. அருள் (வின்..);,

   உதவி நன்மை; grace, favour, help.

   3. வாழ்த்து (யாழ்.அக.);; blessing, well wish.

   4. வேண்டுகோள்; supplication, solicitation, entreaty, request, as made to a deity ora great person.

வசையிலாள் வரத்தின் வந்தாள்” (சீவக. 201);.

   5. விருப்பம் (பொருட்.நி.);; desire.

   6. மேன்மை; esteem, excellence, eminence.

   7. ஒரு பொற்குவை (யாழ்.அக.);; a treasure or fund.

   8. சூழல் (யாழ்.அக.);; enclosed or encircled space.

   9. அடைக்கலாங்குருவி (யாழ்.அக.);; sparrow.

   10. எறும்பு (யாழ்.அக.);; ant.

     [பரம் → வரம் = மேன்மை (தி.ம.49.);.]

புரம் = மேல், மேன்மாடம். உயர்ச்சி, உயரமான கட்டிடம். புரம் → பரம் = மேல், மேலிடம், மேலுலகம்.

     “புரையுயர் பாகும்” (தொல்);.

வரம் குறித்து நச்சினார்க்கினியர், சீவகசிந்தாமணி உரையில் கூறுவது :-

     “வேண்டுவ கோடல்” (நச்.சீவ.661);.

 வரம்2 varam, பெ. (n.)

   மஞ்சள் (மலை.);; turmeric (சா.அக.);.

     [வர → வரம்.]

 வரம் varam, பெ. (n.)

   1. தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு; boon gift blessing by a deity or a great person.

     “காதலி னுவந்து வரங் கொடுத்தன்றே (திருமுரு. 94);

   2. உதவி (அனுக்கிரகம்);; grace, favour, help.

   3. அருள் (ஆசீர்வாதம்); (யாழ். அக.);; blessing.

   4. வேண்டுகோள்; supplication, solicitation, entreaty, request.

     “வசையிலாள் வரத்தின் வந்தாள்” (சீவக. 201.);

   5. விருப்பம்; desire.

   6. மேன்மை; excellence, eminence.

   7. ஒரு நிதி; a treasure.

   8. சூழல் (யாழ். அக.);; enclosed space.

   9. எறும்பு; ant.

     [Skt. vara → த. வரம்]

வரம்படங்கல்பாட்டம்

 வரம்படங்கல்பாட்டம் varambaḍaṅgalpāḍḍam, பெ. (n.)

   தண்ணீர்த்தட்டு முதலியவற்றால் வயல்விளைவு குறைந்தாலும், தள்ளுபடி யில்லாத கட்டுக்குத்தகை வகை (நாஞ்.);; a stringout lease of paddy-fields in which no remission is made in rent in the event of unforeseen drought, etc.

     [வரம்பு + அடங்கல் + பாட்டம். பாட்டம் + குத்தகை வகை.]

வரம்பறு-த்தல்

வரம்பறு-த்தல் varambaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

வரம்பறுத்தவிளைநிலம் பார்க்க;see varambarutta-vilai-nilam.

     [வரம்பு + அறு.]

வரம்பறுத்தவிளைநிலம்

வரம்பறுத்தவிளைநிலம் varambaṟuttaviḷainilam, பெ. (n.)

   அளந்து, எல்லை யிட்டுப் பிரித்த நன்செய்நிலம்; measured cultivable, wet land.

     ‘எம்மூர் வரம்பறுத்த விளைநிலமாயின வயல் நிலம்’ (S.I.I.Vol.XII- 102);.

     [வரம்பறு + விளைநிலம்.]

வரம்பழி-தல்

வரம்பழி-தல் varambaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

வரம்பிக-த்தல் பார்க்க;see varambiga-,

     “வரம்பழியாது வாழ்ந்தேம்” (கம்பரா. மாயாசீதை.70);.

     [வரம்பு + அழி-, ஒழி → அழி.]

வரம்பழிதரிசு

 வரம்பழிதரிசு varambaḻidarisu, பெ. (n.)

   பாழ்நிலம்; waste land.

     [வரப்பு → வரம்பு + அழி + தரிசு.]

ஒருகா. வறுநிலம்.

வரம்பிக-த்தல்

வரம்பிக-த்தல் varambigattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அளவிலதாதல்; to be boundless.

     “வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு” (கம்பரா. அயோத். மந்திரப்.1);.

   2. அளவு கடத்தல்; to exceed limits.

     [வரம்பு + இக-.]

வரம்பிகந்தோடு-தல்

வரம்பிகந்தோடு-தல் varambigandōṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அளவு கடத்தல்; to exceed limits.

     “வரம்பிகந்தோடி” (கம்பரா. நாட்.9);.

     [வரம்பிகந்து + ஒடு-.]

வரம்பிற-த்தல்

வரம்பிற-த்தல் varambiṟattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அளவிலதாதல்; to be boundless.

     “வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு” (கம்பரா. அயோத். மந்திரப். 1);.

   2. அளவு கடத்தல்; to exceed limits.

     [வரம்பு + இள் → இறு → இற.]

வரம்பிலறிவன்

வரம்பிலறிவன் varambilaṟivaṉ, பெ. (n.)

   கடவுள் (நன். பாயி. 54, மயிலை.);; God, as the omniscient or all pervading divine.

மறுவ. முற்றறிவன்.

     [வரம்பு + இல் + அறிவன்.]

வரம்பிலாற்றல்

வரம்பிலாற்றல் varambilāṟṟal, பெ. (n.)

   வரம்பில் வல்லமை; infinite power.

     “வைத்து மீடியால் வரம்பிலாற்றலாய்” (கம்பரா. மருத்து. 116);.

     [வரம்பு + இல் + ஆற்றல்.]

வரம்பிலி

 வரம்பிலி varambili, பெ. (n.)

   கடவுள்; god as immeasurable.

     [வரம்பு+இலி]

வரம்பிலின்பமுடைமை

வரம்பிலின்பமுடைமை varambiliṉpamuḍaimai, பெ. (n.)

   சிவனெண் குணத் தொன்றான அளவிலின்ப (பேரின்ப); முடைமை (குறள், 9, உரை);; being in enjoyment of boundless bliss, one of Sivan-en-kunam or eight qualitis.

     [வரம்பிலின்பம் + உடைமை. உடு → உடை → .உடைமை.]

வரம்பிலின்பம்

 வரம்பிலின்பம் varambiliṉpam, பெ. (n.)

   பேரின்பம், அளவிலா மகிழ்ச்சி; divine infinite happiness.

     [வரம்பு + இல் + இன்பம். இல் → இன் → இன்பு → இன்பம் = மட்டற்ற மகிழ்ச்சி.]

வரம்பில்காட்சி

வரம்பில்காட்சி varambilkāṭci, பெ. (n.)

   முழுதுணரும் அறிவு (சீவக. 2846, உரை.);; omniscience, infinite wisdom.

மறுவ. முற்றறிவு.

     [வரம்பு + இல் + காட்சி.]

வரம்பில்ஞானம்

 வரம்பில்ஞானம் varambilñāṉam, பெ. (n.)

வரம்பில்காட்சி (வின்.); பார்க்க;see varambil-kāfci.

     [வரம்பு + இல் + ஞானம்.]

வரம்பு

வரம்பு varambu, பெ. (n.)

   1. எல்லை; boundary, border, limit, extent.

     “வரம்பி றானை பரவா வூங்கே” (பதிற்றுப். 29, 15);.

     “தலைவரம் பறியாது வருந்துமென்னெஞ்சே” (குறுந்.172:7);.

     “புலங்கெட விறுக்கும் வரம்பி றானை” (புறநா. 16:9);.

     “எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கை” (அகநா. 109:8);.

   2. வரப்பு; ridge of a field.

     “செறுவின் வரம்பணையாத் துயல்வர” (அகநா.13);.

   3. அணை; causeway, dam.

     “வேலை வகுத்தன வரம்பு” (கம்பரா. மாயாச.27);.

   4. வழி (யாழ்.அக.);; way.

   5. விளிம்பு (இ.வ);; brim.

   6. ஒழுங்கு; rule of conduct, principle.

     “வகைதொகை யறியாதவனே வரம்பு மீறிப் பேசுவான்”.

   7. வட்டி (அ.க.நி.);; interest.

   8. மனை (அக.நி.);; house-site.

   Ка. bara, bare vari vare, Те. varuju, Tu, barabu, barańgayi, barē, Ma. varambu, vara. varu, varē; Ko. var.

     [வரி → வரம்பு = எல்லை;

வயல் வரம்பான திட்டு (வே.க.4 பக்.107);.]

வரம்புகட-த்தல்

வரம்புகட-த்தல் varambugaḍattal,    4 செ.கு.வி. (v.i.)

வரம்பிற-த்தல் பார்க்க;see varambira-,

     [வரம்பு + கட-.]

வரம்புகட்டு

வரம்புகட்டு1 varambugaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அணைகட்டுதல் (யாழ்.அக.);; to dam up.

   2. எல்லைக் கட்டுதல்; to limit.

     ‘கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான்’ (உ.வ);.

   3. முடித்தல்; to finish, to put an end to.

     [வரம்பு + குள் → குட்டு → கட்டு.]

 வரம்புகட்டு2 varambugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கடிப்புண் வட்டமாகத் தடித்தல்; to form rings, as in ringworm or spreading sores.

     [வரம்பு + கட்டு.]

வரம்புதிரட்டு-தல்

வரம்புதிரட்டு-தல் varambudiraṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

& செ.குன்றாவி. (v.t.);

வரம்புகட்டு-தல் பார்க்க;see varambu-kattu-.

     [வரம்பு + திரட்டு.]

வரம்புபண்ணு

வரம்புபண்ணு1 varambubaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

வரம்புகட்டு-தல்-,1, 2 பார்க்க;see varambu-kattu.

     [வரம்பு + பண் → பண்ணு.]

 வரம்புபண்ணு2 varambubaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சரிப்படுத்துதல் (யாழ்.அக.);; to adjust, to set right, to rectify.

     [வரம்பு + பண்ணு.]

வரயாத்திரை

 வரயாத்திரை varayāttirai, பெ. (n.)

   மண மகன் மணமகள் வீட்டை நோக்கி திருத்தலத்திற்கு வருவது போன்று ஊர்வலம் வருகை; setting out of the bridegroom in procession towards the house of the bride, at a marriage.

     [வர + ஏ → யா + திரை → யாத்திரை.]

வரயோகம்

வரயோகம் varayōkam, பெ. (n.)

   நந்தையுடன் செக்கு (சதயம்);, ஆரல் (கார்த்திகை);, மூதிரை (திருவாதிரை);, அறுவை (சித்திரை); என்பவற்றுளொன்று கூடுதலாலுண்டாம் ஒக வகை (விதான. குணாகுண.10);; combination of nandai with one of the naksatras, Sadayam, kārttiga;tiruvadirafand cittira.

     [வர + யோகம்.]

 Skt. yöga → த. யோகம்

வரராசையுலா

வரராசையுலா vararācaiyulā, பெ. (n.)

   17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்; a work composed in 17C,

இந்நூலின் ஆசிரியர் இன்னாரென்று அறியப்படவில்லை. நூலின் பெயராலே ஆசிரியர் அழைக்கப்படுகின்றார். வரராசை என்பது சங்கர நயினார் கோயில். வடமலையப்ப பிள்ளையன் செய்த திருப்பணி நன்கு விளக்கப்பட்டுள்ளது.

வரராமயோகி

வரராமயோகி vararāmayōki, பெ. (n.)

   12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a poet, lived 12 C.

இவர் திருந்செந்தூர்ச் சண்முக சதகம், திருக்குறுங்குடி நம்பி சதகம், என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

வரருசி

 வரருசி vararusi, பெ. (n.)

   பாணினி (வியாகரணத்துக்கு); இலக்கணத்திற்கு உரை செய்த முனிவர் (சங்.அக.);; the sage who wrote the vartigam supplementing pāninis grammar.

வரருடவாலி

 வரருடவாலி vararuḍavāli, பெ. (n.)

   கருநாகம்; black cobra (சா.அக.);.

வரர்

வரர் varar, பெ. (n.)

   1. சிறந்தோர்; saint, sages, great or enlightened persons.

     “வரரழக் கண்டதுண்டோ?” (திருவாலவா. 29, 9);.

   2. வானோர் (பிங்.);; celestials.

     [பரர் → வரர் = மேலானோர்.]

வரற்கியம்

வரற்கியம்1 varaṟkiyam, பெ. (n.)

   சிற்றரத்தை (சங்.அக.);; lesser galangal.

 வரற்கியம்2 varaṟkiyam, பெ. (n.)

   கோரைக் கிழங்கு; fragrant root tuber of a grass Cyperus pertenuis (சா.அக.);.

வரற்சுண்டி

 வரற்சுண்டி varaṟcuṇṭi, பெ. (n.)

   நெட்டிக் கொடி; a kind of medicinal creeper.

     [வரள் + சுண்டி.]

வரற்சூரி

 வரற்சூரி varaṟcūri, பெ. (n.)

   நத்தைச்சூரி; a kind of herbal plant.

     [வரள் + சூரி.]

வரற்பூலா

 வரற்பூலா varaṟpūlā, பெ. (n.)

   நீர்ப்பூலா; black honey shrub-Phyllanthus multiflora.

வரற்பூலிகா

 வரற்பூலிகா varaṟpūlikā, பெ. (n.)

   முள்ளி; a kind of plant (சா.அக.);.

வரற்றியம்

 வரற்றியம் varaṟṟiyam, பெ. (n.)

   கோரைக் கிழங்கு; fragrant root tuber of a grass Cyperus pertenuis (சா.அக.);.

வரலாறு

வரலாறு varalāṟu, பெ. (n.)

   1. நிகழ்ச்சி முறை; order of events.

   2. இனவளர்ச்சி மற்றும் வாழ்வுமுறைத் தொடர்ப் பதிவேடு; history.

     “ஈதிவன்றன் வரலாறுங் குலவரவும்” (கம்பரா. குலமுறை. 29);.

   3. தொன்மநிகழ்வு; antecedents.

   4. சூழல்; circumstances.

   5. விளத்தம்; details.

   6. வழிமுறை; means, device.

     “ஆவிதாங்கும் வரலாறு கேளும்” (அழகர்கல்.86);.

   7. எடுத்துக்காட்டு; example, instance, illustration.

     [வா → வர் → வரு → வரல் + ஆறு.]

கலைகளும் (Arts);, அறிவியங்களும் (Sciences);

   1. தற்சார்புள்ளது (independent);,

   2. மற்சார்புள்ளது (dependent); என இருதிறப்படும். தற்சார்பறிவியங்களுள் ஒன்றான வரலாறு, ஏனையறிவியங்கட்கெல்லாம் அடிமணையாயும், முதுகந்தண்டாயும் இருப்பதாகும்.

காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு பொருட்கும் வரலாறிருப்பினும், ஒரு நாடு, அதன் மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம், ஆட்சி ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக வரலாறெனப்படும்.

ஒருநாட்டு வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களை (Aborigines);யும், வந்தேறி (immigrants); களையும், பிரித்துக் காட்டுவதால், ஒரு வீட்டுக்காரனுக்கு, அவ்வீட்டு ஆவணம் ஏமக்காப்பாவது போல், ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும், அந்நாட்டு வரலாறு, சிலவுரிமை வகையில் ஏமக்காப்பாம்.

இனி வரலாறின்றி ஒரு மொழியின் உண்மையான இயல்பை அறிவதும் அரிதாம் (தேவ. பக்.24);. ஒரு நாட்டின் வரலாற்றை அறிவதற்கு, அந்நாட்டு மொழியும், சொற்களும் உறுதுணை புரிவன எனலாம்.

வரலாறுகாணாத

 வரலாறுகாணாத varalāṟukāṇāta, பெ.அ. (adj.)

   இதற்குமுன் இதுபோல் இருந்திராத, முன்பு ஒருமுறைகூட நடந்திராத; unprecedented, uneventful.

     ‘வரலாறு காணாத கூட்டம்’.

     [வரலாறு + காண் + ஆ (எ.ம.இ.நி.); → காணாத.]

வரலாற்றுக்களஞ்சியம்

 வரலாற்றுக்களஞ்சியம் varalāṟṟukkaḷañjiyam, பெ. (n.)

   வரலாற்றுச் செய்திகளை நிரல்படத் தொகுத்த நூல்; a historical encyclopedia.

     [வரலாறு + களஞ்சியம்.]

சிறப்பு மிக்க உலக வரலாற்று நிகழ்வுகளை ஏரண முறைப்படி படவிளத்தங்களுடன் எடுத்தியம்பும் கலைக்களஞ்சியம்.

வரலாற்றுமுறைமை

வரலாற்றுமுறைமை varalāṟṟumuṟaimai, பெ. (n.)

   குடிவழியாகக் கையாளப்படும் இடையறவுபடாத வழக்கு; ancient and unbroken tradition or usage, hereditary custom.

     “மரபு வழுவாவது வரலாற்று முறைமையின் மயங்கச் சொல்லுவது” (நன். 374, மயிலை);.

     [வரலாறு + முறைமை.]

தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது.

வரலாற்றுவஞ்சி

வரலாற்றுவஞ்சி1 varalāṟṟuvañji, பெ. (n.)

   சிற்றிலக்கியம் தொண்ணூற்றாறனுள் தலைவனது குலப்பிறப்பு முதலிய பல சிறப்பையும், புகழையும் வஞ்சிப்பாவாற் கூறும் பாடல்வகை; a panegyric in varj-p-päon the noble birth, greatness and fame of a hero, one of the 96 cirrilakkiyam.

     [வரலாறு + வஞ்சி.]

 வரலாற்றுவஞ்சி2 varalāṟṟuvañji, பெ. (n.)

   போர்க்களத்துச் செல்லும் படை யெழுச்சியைக் கூறும் சிற்றிலக்கியம் (இலக். வி. 869);; a poem describing the majestic march of an army to the battle-field.

     [வரலாறு + வஞ்சி.]

வரல்

வரல் varal, பெ. (n.)

   வளருகை; growing.

     “வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்து புறஞ்சுற்ற” (அகம்.58:7-8);.

     [வா . வர் → வரு → வரல்.]

வரல்வாறு

 வரல்வாறு varalvāṟu, பெ. (n.)

வரலாறு (யாழ்.அக.); பார்க்க;see varaläru.

     [வா → வர் → வரு → வரல் + வாறு.]

வரளம்

 வரளம் varaḷam, பெ. (n.)

   பிரமி; a prostate plant- Grabiola moniera (சா.அக.);.

வரளாரை

 வரளாரை varaḷārai, பெ. (n.)

   ஆரைவகை (யாழ்.அக.);; a species of aquatic cryptogamous plant (சா.அக.);.

     [வரள் + ஆரை.]

வரளி

 வரளி varaḷi, பெ. (n.)

   விறட்டி; dung cakes (சா.அக.);.

வரள்(ளு)-தல்

வரள்(ளு)-தல் varaḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. வற்றுதல் (பிங்.);; to dry up, to evaporate.

   2. உடம்பு மெலிதல் (வின்.);; to become lean or emaciated.

     [வறள் → வரள்.]

வரள்வாயு

 வரள்வாயு varaḷvāyu, பெ. (n.)

   குடலைச் சுருட்டிக் கொள்ளும் நோய்வகை (இ.வ.);; a disease of the colon.

     [வரள் + வாயு.]

வரவண்ணினி

வரவண்ணினி varavaṇṇiṉi, பெ. (n.)

   1. திருமகள் (இலக்குமி); (யாழ்.அக.);; Tirumagal

   2. மலைமகள்; Malaimagal.

   3. கலைமகள்; Kalaimagal.

   4. கற்புடையாள்; contiment or chaste woman.

   5. பெண்; woman.

   6. மஞ்சள்; turmeric.

   7. ஓர் நிறம்; a colour.

     [வரவர்ணினி → வரவண்ணினி.]

வரவர

வரவர varavara, வி.அ. (adv.)

   1. படிப் படியாய்; step by step, gradually.

வரவர அறிவு பெருகும்.

   2. மேன்மேலும்; further and further.

அடிக்கடி நடந்த வற்கட (பஞ்ச);த்தாலும் வெள்ளத்தாலும் வரிக் கொடுமையாலும் பொதுமக்கள் நிலைமை வரவரச் சீர்கெட்டு வந்தது.

     [வா → வர் → வரு → வர + வர.]

வரவரமுனி

 வரவரமுனி varavaramuṉi, பெ. (n.)

   மணவாள மாமுனி; a vaisnava-âcârya.

வரவழை-த்தல்

வரவழை-த்தல் varavaḻaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வருவித்தல், அழைத்தல்; to cause, to come, invite.

     “மாதை யீங்கு வரவழைத்தே” (வெங்கைக்கோ. 336);.

     [வா → வர் → வர + அழை.]

வரவழைப்புப் பாட்டு

 வரவழைப்புப் பாட்டு varavaḻaippuppāṭṭu, பெ. (n.)

   தெய்வங்களை வரவழைத்து, அருள் பெறுவதற்காகப் பாடப்படுகின்ற பாடல்; a song sung for inviting deities.

மறுவ வர்ணிப்புப்பாடல்

     [வர+அழைப்பு+பாட்டு]

வரவழைப்புப்பாட்டு

 வரவழைப்புப்பாட்டு varavaḻaippuppāṭṭu, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் என்னுமிடத்தில் ஒருவர் மீது தெய்வத்தை வரவழைப்பதற்காக உருமியடிப் போர் பாடும் பாட்டு; a song used by drummer to invoke god is once person normally practical is sholingar a town is Vellor district.

     [வரவழைப்பு + பாட்டு.]

வரவிடு-தல்

வரவிடு-தல் varaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   அனுப்புதல்; to send,

     “இவையெல்லாம் வரவிடுதற்கு முன்னேயும்” (திவ். பெரியாழ். 1 3, 2, வியா.);

     [வா → வர் → வர + விடு.]

வரவினம்

 வரவினம் varaviṉam, பெ. (n.)

ஒருவருக்குப் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பண வரவு:

 heads of receipts.

இந்த வாரம் வரவினங்கள் அதிகமாக இருக்கும் (இ.வ.);. வரவினம் அதிகமானால் உறவினம் ஒடிவரும் (உ.வ.);.

     [வரவு + இனம்.]

வரவிருத்தன்

 வரவிருத்தன் varaviruttaṉ, பெ. (n.)

   உயிர்களுக்கு மேலான பரவாழ்வளிக்கும் சிவபிரான் (யாழ்.அக.);;Šivan.

வரவு

வரவு1 varavu, பெ. (n.)

   1. ஒளி நீர்; semen.

   2. வரகு; koda millet-paspalum scrobiculatum (சா.அக.);.

 வரவு2 varavu, பெ. (n.)

   1. வருகை; coming, advent.

     “செலவினும் வரவினும்” (தொல். சொல். 28);.

     “யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே” (குறுந்.75:5);. நும்மொடு வரவுதான் அயரவும்” (நற்.12:9);.

     “படிகாரிரெம் வரவு சொல்லுதிர்” (கம்பரா.பள்ளிபடை.1);.

   2. வருவாய்; income, receipts, revenue.

     “வரவு காணாத செலவு” (குமரே. சத. 29);. வரவுக்குத்தகுந்த செலவு;

மாப்பிள்ளைக்குத் தகுந்த மஞ்சம் (பழ.);.

வரவுக்கு மீறிய செலவு, வறுமைக்கு வழிவகுக்கும் (இ.வ.);.

   3. வரலாறு; history.

     “இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைப்ப” (மணிமே. 6, 205);.

     ‘வரவெமர் மறந்தன ரதுநீ” (புறநா. 149:4);.

   4. தோற்றம்; origin.

     “போக்கொடு வரவுமின்றி” (காசிக. மணிக. 2);.

   5. பாதை, வழி; path, way, track.

     “குன்றத்தாற் கூடல் வரவு” (பரிபா. 8, 28);.

   6. வணங்குகை; worship.

     “புரையின்று மாற்றாளை மாற்றாள் வரவு” (பரிபா. 20.73);.

க.பரவு

     [வா → வர் → வரு → வரவு.]

 வரவு3 varavu, பெ. (n.)

     ‘வா’ என்னும் வினைப்பொருண்மை குறித்த பெயர்ச்சொல்;

 a verbal noun of the verb va.

     [வா → வர் → வரு → வரவு.]

வரவுசெலவு

வரவுசெலவு varavuselavu, பெ. (n.)

   1. வருவாயும் செலவும்; income and expenditure.

   2. பேரேட்டிற் செய்யும் பதிவு; ledger entry.

ஒவ்வொரு தொழிற்சாலையும் வரவுசெலவை நாள்தோறும் பேரேட்டிற் பதிவு செய்ய வேண்டும் (இ.வ.);.

     [வரவு + செலவு.]

வரவுசெலவு அறிக்கை

 வரவுசெலவு அறிக்கை varavuselavuaṟikkai, பெ. (n.)

   வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கை; budget report.

பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் இவ் வாண்டிற்கான வரவு செலவு அறிக்கையைப் படித்தார். (இக்.வ.);.

     [வரவு + செலவு + அறிக்கை.]

வரவுசெலவுக்கணக்கு

 வரவுசெலவுக்கணக்கு varavuselavukkaṇakku, பெ. (n.)

   குடும்பச் செலவு குறித்த கணக்கு; family budget.

வீட்டின் வரவு செலவுக் கணக்கை ஒழுங்காக எழுதி வைத்தால், குடும்பத்தை முன்னேற்ற முடியும் (இ.வ.);.

     [வரவு + செலவு + கணக்கு.]

வரவுசெலவுத்திட்டம்

 வரவுசெலவுத்திட்டம் varavuselavuttiṭṭam, பெ. (n.)

   நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு எதிர்வரும் ஆண்டிற் கிடைக்கும் வருமானம், வருமானத்திற்கான வழிகள், செலவுகள், செலவுக்கான ஒதுக்கீடு முதலியவை குறிக்கப்பட்ட திட்டம்; budget.

திறமையான வரவுசெலவுத் திட்டமே, நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் (இக்.வ.);.

     [வரவு + செலவு + திட்டம்.]

வரவுதாழ்-த்தல்

வரவுதாழ்-த்தல் varavutāḻttal,    4 செ.கு.வி. (v.i.)

   காலந்தாழ்த்தி வருதல், நேரங்கடந்து வருதல்; to arrive belatedly, to be delayed.

     “உணவு வரவு தாழ்த்தது” (கம்பரா. பிரமாத்திர.88);.

     [வரவு + தாழ்.]

வரவுமுறை

 வரவுமுறை varavumuṟai, பெ. (n.)

   வருவாய் (இ.வ.);; source of income.

மறுவ. ஆகாறு.

     [வரவு + முறை.]

வரவுவை-த்தல்

வரவுவை-த்தல் varavuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செலுத்திய தொகை குறித்து எழுதி வைத்தல்; to credit in account, to enter the receipt of money, as on a pro-note or document.

நான் கொடுத்த பணத்தை வரவுவைத்துக்கொண்டு மீதம் எவ்வளவுபணம் தரவேண்டுமென்று சொல்லுங்கள் (உவ.);.

     [வரவு + வை.]

வரவெக்கை

 வரவெக்கை varavekkai, பெ. (n.)

   அடைப்பான் எனும் கால்நடை நோய்; anthrax, a cattle-disease.

     [வரள் + வெக்கை.]

வரவெதிர்-தல்

வரவெதிர்-தல் varavedirdal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. வரவு எதிர்நோக்கி யிருத்தல்; to wait for, to wait the arrival of.

   2. எதிர்கொண்டு அழைத்தல்; to welcome in person.

     [வரவு + எதிர்.]

வரவெதிர்ந்திருத்தல்

 வரவெதிர்ந்திருத்தல் varavedirndiruddal, பெ. (n.)

   தலைவி தன் னிருப்பிடத்துத் தலைவன் வருகையை எதிர்பார்த் திருத்தலைக் கூறும் புறத்துறை (சங்.அக.);; a theme in which the heroine is described as awaiting the arrival of the hero at her abode.

     [வரவெதிர் + இரு.]

வரவேற்பறை

 வரவேற்பறை varavēṟpaṟai, பெ. (n.)

   விருந்தினர் அமர்வதற்கான அறை; reception room.

அந்த வீட்டின் வரவேற்பறை மிகவும் எளிமையாக இருந்தது. அமைச்சரின் வரவேற்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன்.

வரவேற்பவை

 வரவேற்பவை varavēṟpavai, பெ. (n.)

வரவேற்புக்கழகம் (தற்கா.); பார்க்க;see varavérpu-k-kalagam.

     [வரவேற்பு + அவை. அமை → அவை.]

வரவேற்பு

 வரவேற்பு varavēṟpu, பெ. (n.)

   எதிர் கொண்டழைக்கை (தற்கா.);; reception, welcome, to receive in person.

     [வரவு + ஏல் → ஏற்பு.]

வரவேற்புக்கழகம்

 வரவேற்புக்கழகம் varavēṟpukkaḻkam, பெ. (n.)

   பெரியவரை உசாவி அழைப்பதற்காக அமைக்கப்பட்ட அவை (தற்கா.);; reception committee for V.I.Ps, or great personality.

     [வரவேற்பு + கல் + அகம் – கல்லகம் → கழகம்.]

வரவேற்புச்சபை

 வரவேற்புச்சபை varavēṟbuccabai, பெ. (n.)

வரவேற்பவை பார்க்க;see varavērpavai.

     [வரவேற்பு + சபை.]

த. அவை → Skt. sabha

வரவேற்புப்பத்திரம்

 வரவேற்புப்பத்திரம் varavēṟpuppattiram, பெ. (n.)

வரவேற்புமடல் பார்க்க;see varavérpu-madal.

     [வரவேற்பு + பத்திரம்.]

வரவேற்புமடல்

வரவேற்புமடல்1 varavēṟpumaḍal, பெ. (n.)

   பெரியோரை இனிது மொழிந்து உசாவியெதிர்கொண்டழைக்கும் அழைப்பிதழ்; welcome address in written form.

விழாவிற்கு வருகைபுரிந்த அமைச்சருக்குக் கட்சியினர் வரவேற்புமடல் படித்து வழங்கினர் (இ.வ.);

     [வரவேற்பு + மடல்.]

 வரவேற்புமடல்2 varavēṟpumaḍal, பெ. (n.)

   விழாவிற்கு வருகை செய்துள்ள விருந்தினர்தம் சிறப்பியல்பைப் புகழ்ந்து கூறும் இன்தீங்கிளவியம் பொதிந்த தாள்; scripted welcome address to be read out.

விழாவிற்கு வந்திருந்த தொழிலதிபருக்குத் தொழிலாளர்களால் வரவேற்பு மடல் அளிக்கப்பட்டது (உ.வ.);.

     [வரவேற்பு + மடல்.]

வரவேற்புரை

 வரவேற்புரை varavēṟpurai, பெ. (n.)

   விழாவிற்கு வந்துள்ளோரை வரவேற்று நிகழ்த்தும் உரை; welcome address.

     [வரவேற்பு + உரை.]

வரவேல்

வரவேல்1 varavēltalvaravēṟṟal,    9 செ.குன்றாவி. (v.t.)

   எதிர்கொண்டழைத்தல்; to welcome in person.

புகழ்மிக்க தலைவர்களை எதிர் கொண்டழைப்பதும் விருந்தினரை வரவேற்பதும் மதிப்புரவுக்குரியது.

     [வரவு → வரவேல்.]

 வரவேல்2 varavēltalvaravēṟṟal,    9 செ.குன்றாவி. (v.t.)

   1. இன்முகத்தானு மின்சொலானும் வருக வருக வென்றழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்; to welcome the invitees.

பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும், தலைமையாசிரியர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார் (உ.வ.);.

   2. திட்டம், ஒப்பந்தம் முதலியவற்றை ஆதரவு தந்து ஏற்றல்; to accept.

அரசின் நலத் திட்டத்தை எங்கள் கன்னை (கட்சி); முழுமனதுடன் வரவேற்கிறது (இக்.வ.);. அமைதி உடன்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் வரவேற்கும் என்று நம்புகிறோம் (உ.வ.);.

   3. ஒப்பந்தப்புள்ளி முதலியவற்றை அனுப்புமாறு வேண்டுதல்; to be invited, in tender notice etc.

எங்கள் நிறுவனத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் வழங்க ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன (இ.வ., உ.வ.);.

     [வா → வர் → வரு → வரவு + ஏல்.]

வரவை

வரவை varavai, பெ. (n.)

   1. வயற்றாக்கு (வின்.);; plot of paddy-field, compartment in a paddy-field bounded by ridges.

   2. வரி; tax.

     “இவ்வூரிற் பலவரவை யோடுங் கூட்டவும்” (தெ.இ.கல். தொ. 3, 211);.

     [வரவு → வரவை.]

வரவோலை

 வரவோலை varavōlai, பெ. (n.)

   அழைப்புக் கடிதம்; letter of invitation.

     “வரவேண்டு மென்று வரவோலை அனுப்புவித்தார்”

     [வரவு + ஒலை.]

வராககர்ணி

வராககர்ணி1 varāgagarṇi, பெ. (n.)

   அகவ கந்தி; a plant, horse root-withania somneifera (சா.அக.);.

 வராககர்ணி2 varāgagarṇi, பெ. (n.)

   அமுக்கிராச் செடி; Indian winter cherry.

வராககற்பம்

 வராககற்பம் varāgagaṟpam, பெ. (n.)

   ஓர் வகை கற்பம்; a kind of medicinal preparation taken in for longevity (சா.அக.);.

வராகக்கிரந்தி

 வராகக்கிரந்தி varākakkirandi, பெ. (n.)

   தொட்டால் வாடி; a sensitive plant.

     [வராகம் + கிரந்தி.]

வராகனாட்டம்

 வராகனாட்டம் varākaṉāṭṭam, பெ. (n.)

   சீட்டாட்டத்தில் ஒரு வகை; a kind of card-playing.

     [வராகன் + ஆட்டம்.]

வராகன்

வராகன் varākaṉ, பெ. (n.)

   1. பன்றி வடிவங் கொண்ட திருமால் (பிங்.);; Tirumål in His boar-incarnation.

   2. மூன்றரை உருபா மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணயம் (அரு.நி.);; pagoda- a gold coin = 3 1/2 rupees, as bearing the image of a boar.

   3. மூக்குத்திக் கொடி (சங்.அக.);; pointed leaved hogweed.

     [வராகம் → வராகன்.]

வராகன்பூடு

வராகன்பூடு varākaṉpūṭu, பெ. (n.)

   மூக்குத்திக் கொடி (மலை.);; pointed-leaved hogweed.

     [வராகன்1 + பூடு.]

வராகன்பூண்டு

வராகன்பூண்டு1 varākaṉpūṇṭu, பெ. (n.)

   கூத்தன்குதம்பை; pointed – leaved hog weed.

     [வராகன் + பூண்டு.]

ஒருகா. மூக்கொற்றி

 வராகன்பூண்டு2 varākaṉpūṇṭu, பெ. (n.)

வராகன்பூடு (மலை.); பார்க்க;see varagan-pudu.

     [வராகன்1 + பூண்டு.]

வராகபணம்

 வராகபணம் varākabaṇam, பெ. (n.)

   நாணய வகை; a coin.

     [வராகம் + பணம்.]

வராகபுடம்

வராகபுடம் varākabuḍam, பெ. (n.)

   பன்றியின் உயரமளவுபோடும் புடம், 1 முழ சதுரமும், 1 முழ ஆழமுமான பள்ளத்தில் காட்டு முட்டையை மேலும், கீழுமாக நிரப்பி மருந்திட்டுப் போடும் புடம்; process of calcination by burning the medicine, in a heap of cow dung cakes as high as a big (about 50 dung cakes); when plastered crucible is roasted in a pit the dimension of which are one cubit in every side (சா.அக.);.

     [வராகம் + புடம்.]

வராகப்பூடு

 வராகப்பூடு varākappūṭu, பெ. (n.)

   மூக்குத்திப் பூடு; Indian lantina.

     [வராகம் + பூடு.]

வராகமிகிரர்

வராகமிகிரர் varāgamigirar, பெ. (n.)

   ஆறாம் நூற்றாண்டிலிருந்தவரும் கணித நூலில் வல்லவரும் வானசாத்திர நூல்கள் பல இயற்றியவருமான ஆசிரியர்; an ancient astronomer and mathematician of many treatises, 6th cent.

வராகம்

 வராகம் varākam, பெ. (n.)

   நிலப்பனை; ground palm-curculigo orchioides (சா.அக.);.

 வராகம் varākam, பெ. (n.)

   பன்றி; pig.

     [Skt. {} → த. வராகம்.]

வராகி

வராகி varāki, பெ. (n.)

   1. வாராகி (சூடா.);; varagi a divine energy.

   2. சிறு குறட்டை (மலை.);; a slight snoring.

   3. சிற்றரத்தை (மலை.);; lesser galangal.

   4. நிலப்பனை (தைலவ.);; moosly or weevil root.

   5. கோரை (நாமதீப. 348);; sedge.

   6. சிறுகுறிஞ்சா (சங்.அக.);; a climber.

   7. வராகபுடம், 20 அல்லது 50 எருவிட்டுப் போடப்படும் புடம் (மூ.அ.);; calcining metals with 20 or 50 cakes of cowdung.

     “வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன்” (கந்தபு. மார்க். 135);.

     [வராகம் → வராகி.]

வராகிக்கிழங்கு

 வராகிக்கிழங்கு varākikkiḻṅgu, பெ. (n.)

   பன்றி மோத்தைக் கிழங்கு; root of trapa bispinosa (சா.அக.);.

வராகிசாரணை

 வராகிசாரணை varākicāraṇai, பெ. (n.)

   சத்திசாரணை; a prostate plant, Trianthema decandra (சா.அக.);.

வராகிப்புகை

 வராகிப்புகை varāgippugai, பெ. (n.)

   மருந்துப்புகை வகை (யாழ்.அக.);; a medicinal fumigation.

     [வராகி + புகை.]

வராகிமூலம்

 வராகிமூலம் varākimūlam, பெ. (n.)

   நிலப் பனங்கிழங்கு; ground palm, curculigo orchioides (சா.அக);.

வராகியரத்தை

 வராகியரத்தை varākiyarattai, பெ. (n.)

   சிற்றரத்தை; lesser galandal-Alpinia galangal (minor); (சா.அக.);.

வராகிவேய்

 வராகிவேய் varākivēy, பெ. (n.)

வராகி வேல் (சங்.அக.);;see Varagi-Vél.

     [வராகம் + வேய்.]

வராகிவேல்

 வராகிவேல் varākivēl, பெ. (n.)

   பன்றியின் முள் (யாழ்.அக.);; quill of porcupine (சா.அக.);.

     [வராகம் + வேல.]

வராகு

 வராகு varāku, பெ. (n.)

வராகன் பார்க்க;see varăgan (சா.அக.);.

வராக்கடன்

 வராக்கடன் varākkaḍaṉ, பெ. (n.)

   செலவெழுத வேண்டிய கடன் (கொ.வ.);; bad debt.

     [வா + ஆ + கடன்.]

வராக்கு

 வராக்கு varākku, பெ. (n.)

   கொம்மட்டி (சங்.அக.);; a small water-melon (சா.அக.);.

வராங்கனை

வராங்கனை varāṅgaṉai, பெ. (n.)

   1. மிகச் சிறந்தவள் (சங்.அக.);; excellent woman.

   2. கூந்தற் பனை; talipot palm.

வராங்கம்

வராங்கம்1 varāṅgam, பெ. (n.)

   வானவரின் உடல்; the body of a celestial being.

 வராங்கம்2 varāṅgam, பெ. (n.)

   இலவங்கப் பட்டை (மூ.அ.);; cinnamon bark.

 வராங்கம்3 varāṅgam, பெ. (n.)

   1. தலை (இலக்.அக.);; head.

   2. அழகியவுருவம்; elegant form.

   3. உடல் (யாழ்.அக.);; body.

   4. யானை (யாழ்.அக.);; elephant.

   5. இலவங்கம் (நாமதீப.283);; clove.

வராங்கி

வராங்கி1 varāṅgi, பெ. (n.)

   1. அழகுள்ளவள்; beautiful woman.

   2. மஞ்சள் (மூ.அ.);; turmeric..

 வராங்கி2 varāṅgi, பெ. (n.)

   பெருங்குமிழ்;  flowering tree- Gmellina arbonea (சா.அக.);.

வராசனன்

வராசனன் varācaṉaṉ, பெ. (n.)

   1. வாயிற் காப்போன்; door-keeper, watchman.

   2. கள்ளக்காதலன்; paramour.

வராசனம்

வராசனம் varācaṉam, பெ. (n.)

   1. முட் செவ்வந்தி வகை (சங்.அக.);; china rose.

   2. நீர் முதலியன வைக்கும் பாத்திரம் (யாழ்.அக.);; vessel or container for keeping water etc.

வராசான்

வராசான் varācāṉ, பெ. (n.)

   கருப்பூரவகை (சிலப்.14, 109, உரை);; a kind of camphor.

வராடகம்

வராடகம் varāṭagam, பெ. (n.)

   1. தாமரையின் காய் (சூடா.);; seed-pod of the lotus.

   2. பலகறை (சூடா);; cowry.

   3. கயிறு (யாழ்.அக.);; rope.

வராடபேதி

 வராடபேதி varāṭapēti, பெ. (n.)

   எருவாய்க் கழிவு; discharge of foeces from the anus.

வராடம்

வராடம் varāṭam, பெ. (n.)

வராடி1 (வின்.); பார்க்க;see varadi.

வராடி

வராடி1 varāṭi, பெ. (n.)

   பலகறை (சூடா.);; cowry.

 வராடி2 varāṭi, பெ. (n.)

   பாலையாழ்த் திறத்தொன்று (பிங்.);; a melody-type of the palai tracts.

 வராடி3 varāṭi, பெ. (n.)

   முரட்டுநூற் சீலை (வின்.);; saree of coarse yarn.

     [வராசி → வராடி.]

 வராடி varāṭi, பெ. (n.)

அராகங்களில் ஒன்று

 a musical note.

     [வராளி-வாடி]

வராடிகம்

 வராடிகம் varāṭigam, பெ. (n.)

   வெண் மிளகாய்; white chilly (சா.அக.);.

வராடிகை

வராடிகை varāṭigai, பெ. (n.)

   பலகறை (சூடா.);; cowry.

     “வராடிகைத் திரள் பரப்பி” (பிரபோத.15, 61);.

     [வராடிகம் → வராடிகை.]

வராட்டி

 வராட்டி varāṭṭi, பெ. (n.)

   வறட்டி (சங்.அக.);; cake of dried cowdung.

     [வாள் → வராட்டி.]

வராணசி

 வராணசி varāṇasi, பெ. (n.)

   காசி (யாழ்.அக.);; Benares.

வராணி

 வராணி varāṇi, பெ. (n.)

   பாலை; a tree-Mimusops hexandrus (சா.அக.);.

வராண்டம்

 வராண்டம் varāṇṭam, பெ. (n.)

   தாமரையின் காய் (பிங்.);; seed-pod of the lotus.

வராத்தம்

வராத்தம் varāttam, பெ. (n.)

   1. கட்டளை (யாழ்.அக.);; order, commandment.

   2. வரிவாங்குகை (யாழ்.அக.);; levying taxes.

   3. கொடுக்கல் வாங்கல்; money dealings.

வரானி

வரானி1 varāṉi, பெ. (n.)

   1. பாலை; wedge-leaved ape flower.

   2. வராணி பார்க்க;see varani (சா.அக.);.

 வரானி2 varāṉi, பெ. (n.)

   செடிவகை யுளொன்று (மலை.);; a kind of plant.

வரானிகம்

 வரானிகம் varāṉigam, பெ. (n.)

   பனை மரம்; palmyra tree (சா.அக.);.

வராமுள்ளி

 வராமுள்ளி varāmuḷḷi, பெ. (n.)

   மஞ்சள் நிற பூவையுடைய ஓர் பூடு; a throny plant with yellow flowers (சா.அக.);.

வராரோகன்

 வராரோகன் varārōkaṉ, பெ. (n.)

   யானைப் பாகன் (யாழ்.அக.);; elephant-driver.

     [வராரோகம் → வராரோகன்.]

வராற்பகடு

வராற்பகடு varāṟpagaḍu, பெ. (n.)

   ஆண் வரால்; male murrel.

     “அரில் வலை கீண்டு நிமிர்ந்தெழுவன வராற்பகடு” (திருக்காளத். பு. 2 16);.

     [வரால் + பகடு.]

வராற்போத்து

வராற்போத்து varāṟpōttu, பெ. (n.)

   இளவரால்; young murrel.

     “பகுவாய் வராஅற்….. போத்து” (அகநா.36);.

     [வரால் + போத்து.]

வராலகம்

வராலகம்1 varālagam, பெ. (n.)

   பாம்பு; snake (சா.அக.);.

 வராலகம்2 varālagam, பெ. (n.)

   இலவங்கம் (தைலவ.);; clove.

வராலடிப்பான்

 வராலடிப்பான் varālaḍippāṉ, பெ. (n.)

   ஒரு வகைப் பறவை; ospery.

     [வரால் + அடிப்பான்.]

     [P]

வராலம்

வராலம் varālam, பெ. (n.)

   கிராம்பு (நாமதீப. 319);; clove.

     [வரால் → வராலம்.]

வராலி

 வராலி varāli, பெ. (n.)

   பிரமி யெனும் பூடு (மலை.);; pirami, a kind of prostrate herb.

     [விராலி → வராலி.]

வராலிகம்

 வராலிகம் varāligam, பெ. (n.)

   ஈரல்; liver (சா.அக.);.

     [வராலி → வராலிகம்.]

வராலுகம்

 வராலுகம் varālugam, பெ. (n.)

   சங்கங்குப்பி; smooth volkameria – Cledendron in сreme (சா.அக.);.

     [வராலிகம் → வராலுகம்.]

வரால்

வரால் varāl, பெ. (n.)

   1. சாம்பற் பச்சை நிறமும் நான்கடிவரை வளர்ச்சியுமுடைய மீன்வகை; murrel, a fish, greyish green, attaining 4 feet in length.

     “நுண்ணாரற் பருவரால்” (புறநா. 18:9);.

     “கடுங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வையொடு” (நற்.60-4);.

   2. வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை; black-murrel, a fish, dark greyish or blackish, attaining 3 ft. in length.

     “மோட்டிரு வராஅற்”.

   3. நன்னீர் மீன் வகை (யாழ்.அக.);; a fresh water fish.

த. வரால் – Skt. murala E. murrel.

 Ma. varăl, virăl, vrăl;

 lod.baremi-ni.

     [வரி → வரால்.]

ஏரி, குளங்களிற் காணப்படும் மீன் வகைகளுள் ஒன்று. சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி, வரால் என்னும் சொற்கு, கெண்டையென்று பொருள் குறித்துள்ளதை பாவாணர் தவறென்று சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியின் சீர்கேடு என்னும் நூலுள் (பக்.19); குறித்துள்ளது காண்க. கெண்டை வேறு, வரால் வேறு.

வரால் நன்னீர்ப் பகுதியிற் காணப்படும் மீன். வரி = நீளம். வரால் = குறவையினும் நீண்டிருப்பது. முர் (சூழ், பின்னு, பிணை); என்பது மூலாமாயிருக்கலாமென்று கருதுவது சரியன்று (மா.வி.அ.);.

     [P]

வரால்வலை

 வரால்வலை varālvalai, பெ. (n.)

   வரால் மீனை வலைத்துப் பிடிக்க உதவும் வலை (நாஞ்.);; a fresh water fishing net to catch varăl.

     [வரால் + வலை.]

வராளம்

 வராளம் varāḷam, பெ. (n.)

   பாம்பு (யாழ்.அக.);; snake, serpent.

வராளி

வராளி1 varāḷi, பெ. (n.)

   1. நிலவன் (சந்திரன்); (யாழ்.அக.);; moon.

   2. பண் வகையுளொன்று (இசை.);; a specific melody-type.

   3. யாழ் வகை (பரத. ஒழிபி.15);; a kind of lute.

     [வராலி → வராளி.]

 வராளி2 varāḷi, பெ. (n.)

   மண்ணீரல் (சங்.அக.);; spleen.

வராளிகை

 வராளிகை varāḷigai, பெ. (n.)

   கொற்றவை (யாழ்.அக.);; Durgai.

     [வராளம் → வராளி → வராளிகை.]

வராவி

 வராவி varāvi, பெ. (n.)

வராலி பார்க்க;see varali (சா.அக.);.

வரி

வரி1 vari, பெ. (n.)

   1. கோடு; line, as on shells, streaks, as in timber, stripe.

     “நுண்ணிய வரியொடு திரண்டு…. கண்” (சீவக. 1702);.

     “கொடுவரி யிரும்புலி தயங்க நெடுவரை” (அகநா.27:1);.

வரிவிழுந்த புலியைப் பார்த்து நரியும் கொள்ளிக் கட்டையை எடுத்துச் சுட்டுக் கொண்டதாம் (பழ.);.

   2. தொய்யில் முதலிய வரைவு; ornamental marks on the breast.

     “மணிவரி தைஇயும்” (கலித்.76);.

   3. கை, வரைவு (பிங்.);; lines at the joint of fingers or on the palm of hand.

   4. ஒழுங்கு நிரை; course, as of bricks, line, as of writing; series, as of letters, orderly line, as of ducks in flight; row.

     “குருகி னெடு வரி பொற்ப” (பதிற்றுப்.33, 2);.

   5. எழுத்து (நாமதீப.673);; letter.

   6. புள்ளி; dot.

     “வரிநுதற் பொருதொழி நாகம்” (நெடுநல். 117);.

     “வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை” (நற். 7:7);.

   7. தேமல்; spreading spots on the skin.

     “பொன்னவி ரேய்க்கு மவ்வரி” (கலித்.22);.

   8. வண்டு (திவா.);; beetle.

   9. கடல் (பிங்.);; sea.

   10. கட்டு; tie, bandage.

     “வரிச்சிலையாற் றந்த வளம்” (பு.வெ.116);.

   11. பல தெருக்கூடுமிடம் (பிங்.);; junction of streets.

   12. வழி (உரி.நி.);; way, path.

   13. கடைக்கழக நூல்களுள் ஒன்று (இறை.1, பக். 5);; a poem of the last sañgam.

   14. உயர்ச்சி (பிங்.);; loftiness, laudability, praise.

   15. நீளம் (சூடா.);; length.

 Ma, vara, varaccal, varekka, varayuka, variyuka, Ka, bare, bari, barepa, barapa, braha, bară;

 Kod. bare;

 Ko. varv;

 To. parē: Kui. vrisa;

 Pa. vare;

 Tu. baripuri, bare, bareta.

     [வள் → வர் → வரி.]

 வரி2 vari, பெ. (n.)

   1. இசை (நாமதீப. 678);; music.

   2. இசைப்பாட்டு, வரிப்பாட்டு; tune, melody.

     “வரிநவில் கொள்கை” (சிலப்.13:38);.

   3. வரிக்கூத்து (சிலப்.3:14);; a kind of masquerade dance.

     [வள் → வர் → வரி.]

வரி = வளைந்த கோடு, எழுத்து (தேவ.13, பக்.38);.

வரி பற்றியும், வரிப்பாட்டுக் குறித்தும் சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் கூறுவது வருமாறு:-

     “வரியாவது, முகமுடைவரி, முகமில்வரி, படைப்புவரியென மூன்று வகைப்படும். வரிப் பாட்டுக்கு முகமாக நிற்றலின் முகமெனப்படும். முகமில்வரியாவது முகமொழிந்து ஏனைய உறுப்புக்களான் வருவது. படைப்பு வரியாவது, எல்லாவுறுப்பும் ஒன்றானும், பலவானும், வெள்ளையானும், ஆசிரியத்தானும், கொச்சகம் பெற்றும், பெறாதும், வேறு வேறாகி வருவது” (சிலம்பு.7:19, அரும்.);.

அடியார்க்கு நல்லார் கூறுவது :-

அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல்”. அவ்வரி எட்டு வகைப்படும்.

   1. கண்கூடு வரி,

   2. காண்வரி,

   3. உள்வரி;   4. புறவரி;   5. கிளர்வரி;   6. தேர்ச்சிவரி;   7. காட்சிவரி;   8. எழுத்துக்கோள் வரி (அடி.சிலம்பு.3:13);.

 வரி3 varidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. எழுதுதல் (பிங்.);; to write, pen.

   2. சித்திர மெழுதுதல்; to paint, to draw.

     “வல்லோன் றைஇய வரிவனப்புற்ற வல்லிப்பாவை” (புறநா. 33);.

   3. பூசுதல்; to smear, daub.

   4. மூடுதல்; to cover, close.

     “புண்ணை மறைய வரிந்து” (திவ். திருவாய் 5, 1,5);.

   5. கட்டுதல்; to bind, tie, fasten.

     “வரிந்த கச்சையன்” (சூளா. சீய. 11);.

   க., தெ. வ்ராயு. (vrāyu); vrāyincu, rāyu, rāsu; Ma. variyuka.

     [வள் → வர் → வரி. எழுதுதல், பூசுதல், ஒவிய மெழுதுதல் (வ.வ.2 பக்.80);.]

வரிதல், எழுதுதல், கட்டுதல் : வரி என்பது கோடு. வரிதல் என்பது எழுதுதல் பொருளது.

     “என்ன வரிகிறாய்?”

     ‘வரிந்து தள்ளுகிறாயே எதை?’ என்பவற்றில் வரிதல் எழுதுதல் பொருளாதல் அறிக. வரிந்து கட்டு, வரி என்றால் இறுக்கிக் கட்டுதல் என்னும் பொருளதே. கட்டாயம் என்பது கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய வரி என்பதே. அதில் இருந்தே, தீரா நிலையில் நிறைவேற்றியாக வேண்டிய செயல்,

     ‘கட்டாயம்’ எனப்பட்டதாம். அரசிறை எனப்படும், வரியைத் தவிர்த்தலாகாது என்பதை விளக்குவது கட்டாயச் சொல்லாம் (வ.சொ.அகராதி);.

 வரி4 varittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. எழுதுதல்; to write, pen.

     “வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை” (சீவக. 2532);.

   2. சித்திரமெழுதல்; to draw, to paint.

   3. பூசுதல் (சூடா.);; to smear, daub.

   4. கட்டுதல்; to bind, tie, fasten, to fix, as the reepers of a tiled roof.

     “வரிக்குங் காட்சியிலா வறிவே” (ஞானவா. மாவலி.48);.

   5. மொய்த்தல் (யாழ்.அக.);; to swarm round.

   6. கோலஞ்செய்தல்; to adorn, decorate, decks.

     “புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும்” (ஐங்குறு. 17);.

     [வள் → வர் → வரி.]

வரி = எழுதுதல், சித்திரமெழுதுதல், பூசுதல், கோலஞ் செய்தல் முதலான பொருண்மைகளை யுள்ளடக்கிய

     ‘வள்’ என்னும், வளைவுக்கருத்து மூலவேரினின்று முகிழ்த்த சொல்லாகும்.

 வரி5 varittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒடுதல்; to run;

 to flow.

     “தலைவா யோவிறந்து வரிக்கும்” (மலைபடு. 475);.

     [வர் → வரி.]

 வரி6 varittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தெரிவு செய்தல், தேர்ந்து கொள்ளுதல்; to choose, select.

   2. அமர்த்துதல், பங்கீடு செய்தல்; to appoint, assign, allocate.

     “கடவுள் வேதியர்களை வரித்து” (திருவிளை. இந்திரன்முடி. 26);,

   3. அழைத்தல்; to invite.

     “உலோபா முத்திரை தன்னொடும் வரித்து” (திருவிளை. அருச். 2);.

     [வர் → வரு → வரி.]

 வரி7 vari, பெ. (n.)

   குடிமக்கள் செலுத்தும் திறை (பிங்.);, அங்கம், திறை; impost, tax, toll, duty, contribution.

மறுவ. ஆயம், இறை, கடன், கடமை, கறை, காணிக்கை, தீர்வை, பகுதி, பாட்டம், பூட்சி, பேறு, மகமை, மகன்மை.

Те., Ма., vari; Ko. vary.

அரசு மக்களின் பொதுநலன் குறித்துச் செய்யும் செலவை ஈடுகட்டுதற் பொருட்டுப் பெறும் கட்டணம்.

வரி → வரிதல்.

   வரி = கட்டு;   வரிதல் = கட்டுதல்;வரித்தல் = இழுத்துக் கட்டுதல். வரி → வரிச்சு = கோடுபோல் நீண்ட கட்டு வரிச்சல். வரிச்சல் = கட்டல். வரி, வரிச்சு, வரிச்சல், வரிதல், வரித்தல் முதலான சொற்கள், கட்டு, கட்டல், கட்டுதல் பொருளில், இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும், பண்டைக்காலந்தொட்டே வழக்கூன்றியுள்ளன. எடுத்துக்காட்டுகள் வருமாறு :-

   1.

     “வரிச்சிலையாற் றந்த வளம்” (பு.வெ. 1, 16);. 2.

     “வரிக்குங் காட்சியிலா வறிவே” (ஞானவா. மாவலி.);;

   3.

     “வரிந்த கச்சையன்”. 4.

     “வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே” (கம்பரா. சித்திர.46);.

பண்டைக்காலத்தில் அரசுக்குக் குடிமக்கள் செலுத்த வேண்டிய ஆயத்தைத் தவசமாகக் கட்டிவைத்தல்.

இன்றும் வரிகட்டுதல், பணங்கட்டுதல், தண்டங்கட்டுதல், போன்ற சொல்லாட்சிகள் பண்டைய நிலையை, எடுத்துக்காட்டும் பாங்கில் அமைந்துள்ளமை அறிக.

 வரி8 vari, பெ. (n.)

   1. தீ (அக.நி.);; fire.

   2. நிறம்; colour.

     “வரியணிசுடர் வான்பொய்கை” (பட்டினப். 38);.

   3. அழகு; beauty.

     “வரிவளை” (பு.வெ. 112);.

   4. வடிவு, அமைவு (அக.நி.);; form, shape.

     [அரி7 → வரி.]

 வரி9 vari, பெ. (n.)

   1. நெல் (பிங்.);; paddy.

     “எடுத்துவரி முறத்தினிலிட்டு” (தனிப்பா. i. 354, 41);.

   2. அதிமதுரம்; licorice.

   3. கருவிழியில் ஏற்படும் ஒரு நோய்; a disease of the black of the eye.

   4. தேமல்; a kind of skin diseases.

   5. நெல்லரிசி; paddy rice (சா.அக.);.

 Te., Ma. vari;

 E., Pa. verci;

 Go, wanji.

     [வல் → வள் → வர் → வரி.]

த. வரி → Skt. vriri.

வரி = வரிச்சம்பா, வரியுள்ள நெல், நெல் (பிங்.); மா.வி.அ.

     “of doubtful derivation”

என்று குறித்தலால், வடமொழியில் மூலமில்லை என்பதறிக (வ.வ.2,பக்.84);.

 வரி vari, பெ. (n.)

   ஓர்இசை நூல்; a treatise on music.

     [வள்-வர்-வரி]

வரிகயிறு

 வரிகயிறு varigayiṟu, பெ. (n.)

   வண்டியிலேற்றப் பெற்ற பொதி மூட்டையைப் பிணைத்துக் கட்டுங் கயிறு (வின்.);; rope used for fastening or tightening the load in a cart.

     [வரி + கயிறு.]

கள் → கய் → கயில் → கயிறு = கட்டுதல், பிணைத்தல். கயிறு மூட்டையைப் பிணைத்துக் கட்டப் பயன்படும் கட்டுக்கயிறு.

த. கயிறு → E. Coir.

வரிகரணத்தந்திரம்

 வரிகரணத்தந்திரம் varigaraṇattandiram, பெ. (n.)

   மக்களிடையே உண்டாக்கும் நோய்களைக் குறிக்கும் ஒர் நூல்; a science on treating of disease of the sexual organs.

வரிகரப்பன்

 வரிகரப்பன் varigarappaṉ, பெ. (n.)

   குழந்தைகளின் உடம்பிற் காணும் சொறிபுண் வகை; a children’s ecazema marked by stripes or long fissures (சா.அக.);.

     [வரி + கரப்பு → கரப்பன்.]

கரப்பு – சொறி, கரகரப்பு. மூன்று அல்லது நான்கு திங்கள் முதல், மூன்றகவை வரையுள்ள குழந்தைகட்கு ஏற்படும் இருபத்தொன்பது வகைக் கரப்பான், சொறி புண்வகைகளுள் ஒன்று.

வரிகற்றாழை

 வரிகற்றாழை varigaṟṟāḻai, பெ. (n.)

   கோடு விழுந்த கற்றாழை, இவை ஒர் கற்பக மூலி; a kind of aloe with strips, it is a rejuvenation drug (சா.அக.);.

மறுவ. குருவரிக்கற்றாழை

     [வரி + கற்றாழை.]

பதினேழு வகைக் கற்றாழைகளும் இஃதும் ஒன்று. இவ்வரிக் கற்றாழையின் மடல்கள் வெளிர் பச்சை வண்ணத்தன; இம்மடல்களின் நுனியில் கருஞ்சிவப்பு முட்கள் காணப்படும்.

வரிகாரம்

வரிகாரம் varikāram, பெ. (n.)

   1. வெங்காரம் (சங்.அக.);; borax.

   2. படிக்காரம்; alum.

   3. பொரிகாரம்; borax.

     [வரி + கரி → கார் → காரம்.]

காரம் = வெண்காரம், சீனிக்காரம்.

   கரி என்னும் வினையடியால் பிறந்த தொழிற்பெயர். கரி + அம் – காரம். முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர். (ஒ.நோ.); படி + அம் – பாடம். தவி + அம் – தாவம். கரித்தல் = மிகுதல், காரம் = மிகுதி. கரி என்பது கடி என்னும் உரிச்சொல்லின் திரிபு. ட → ர = போலி. படவர் → பரவர்;முகடி → முகரி. உப்புக்கரிக்கும், உப்புக் கடுக்கும் என்பன ஒரு பொருள்பற்றிய உலக வழக்கு.

காரம் என்னும் சொல், முதற்கண் மிகுதியை உணர்த்திப்பின்பு உறைப்பு மிகுதியாயுள்ள வரிகாரப் பொருட்களான வெங்காரம் படிக்காரம் போன்றவற்றைக் குறித்ததென்க.

வரிகோணியல்

 வரிகோணியல் variāṇiyal, பெ. (n.)

   பொதி மாட்டின் இரு பக்கமும் சுமை யேற்றுவதற் கேதுவாகச் சேர்த்துத் தைத்த கோணி; double-bag, a pair of bags, with their mouths joined together, used in loading a pack-ox on either side.

     [வரி + கோணியல்.]

வரிகோலம்

வரிகோலம் variālam, பெ. (n.)

   தொய்யிலின் பத்திக்கீற்று (சிலப்.5, 226, அரும்);; ornamental figures or lines drawn on the breast.

     “அவரெழுது வரிகோலம்” (சிலம். 5, 226);.

     [வள் → வர்- →வரி + கோலம். குல் → கொல் (புதியது. அழகியது); கோல் + அம்.]

வரிக்கடுக்காய்

வரிக்கடுக்காய் varikkaḍukkāy, பெ. (n.)

   கடுக்காய் வகை (பதார்த்த. 973);; species of chebulic myrobalan.

     [வரி + கடுக்காய்.]

கடு + காய் = கடுக்காய். கடுக்காய் = கசப்பு, கார்ப்புச் சுவையுள்ள காய்.

ஒருகா. வரிக்காய்

தமிழ் மருத்துவரால் திரிபலை என்றழைக்கப்பட்ட நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய முக்காய்களுள் ஒன்று. வரிக்கடுக்காயின் வடிநீர் (கருக்குநீர்); ஊட்டச்சத்து நிறைந்தது. எழில் குன்றா இளமைக்கு எஞ்ஞான்றும் உறுதுணை புரிவது.

வரிக்கடை

வரிக்கடை1 varikkaḍai, பெ. (n.)

   நெல்; paddy (சா.அக.);.

     [வரி + கடை.]

குல் → குள் → குடு → கடு → கடை = ஒன்று இன்னொன்றை முட்டும் முனையுள்ள நெல் பக்கம் நோக்கிய முனையுள்ள வரி நெல். கடை இருவகை:

   1. பக்கம் நோக்கியது,

   2. மேனோக்கியது.

 வரிக்கடை2 varikkaḍai, பெ. (n.)

   வண்டு (திவா.);; beetle.

     [வரி1 + கடை.]

வரிக்கண்ணி

 வரிக்கண்ணி varikkaṇṇi, பெ. (n.)

   பொன்னாங் கண்ணி; a prostate plant good for eye disease-Illecebrum sessile (சா.அக.);.

     [வரி + கண்ணி.]

கண் + இ – கண்ணி.

ஒருகா. கள் (இளமை); → கண் → கண்ணி.

பொன்னாங்கண்ணி அரும்பிக் கொழுந்தாகத் தளிர்த்தலாற் பெற்ற பெயர்க் கண்ணி என முடியும். செடிகளும், மரங்களும், சொற்கருத்தால் கண்ணி என்றே குறிக்கப்பட்டுள்ளன.

வரிக்கண்ணோரா

 வரிக்கண்ணோரா varikkaṇṇōrā, பெ. (n.)

   செஞ்சாம்பனிறமும் மஞ்சட் புள்ளிகளுமுடைய கடல்மீன்வகை; a sea fish, dark greyish-brown, covered with light orange spots.

     [வரிக்கண் + ஒரா.]

     [P]

வரிக்கத்தலை

வரிக்கத்தலை1 varikkattalai, பெ. (n.)

   குருங்கத்தலை; a sea, fish foot long with broad black strips upper jaw overlapping the lower not good for eating-seiaena maculata (சா.அக.);.

     [வரி + கத்தலை.]

 வரிக்கத்தலை2 varikkattalai, பெ. (n.)

வரிக்கற்றலை பார்க்க;see vari-k-karralai.

     [வரி + கற்றளை → கத்தலை.]

வரிக்கத்து

 வரிக்கத்து varikkattu, பெ. (n.)

வருக்கத்து பார்க்க;see varu-k-kattu.

     [வரி + கத்து.]

வரிக்கயிறு

வரிக்கயிறு1 varikkayiṟu, பெ. (n.)

வலிக்கயிறு பார்க்க;see vali-k-kayiru.

     [வரி + கயிறு.]

கள் = கட்டுதல், பிணைத்தல். கள் → கய் → கயில் → கயிறு.

 வரிக்கயிறு2 varikkayiṟu, பெ. (n.)

   வடக் கயிறு (இ.வ.);; cable, long and thick rope.

     [வரி + கயிறு.]

நன்கு முறுக்கேற்றிய திரட்சியான உருண்ட கயிறு.

வரிக்கரப்பான்

 வரிக்கரப்பான் varikkarappāṉ, பெ. (n.)

   வரிவரியாகத் தோன்றும் கரப்பான் வகை (சீவரட்.);; a kind of eruption, a cutaneous disease.

     [வரி + கரப்பான்.]

கரப்பு → கரப்பான். கரப்பு = சொறி, கரகரப்பு.

குழந்தைகளுக்கு உண்டாகும் இருபத்தொன்பது கரப்பான் (சொறிநோய்);. நோயுளொன்று.

வரிக்கருடன்சம்பா

 வரிக்கருடன்சம்பா varikkaruḍaṉcambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை; a kind of camba paddy.

     [வரி + கருடன்சம்பா.]

வரிக்கற்றலை

வரிக்கற்றலை varikkaṟṟalai, பெ. (n.)

   1. செந்நிறங்கொண்ட கடல்மீன் வகை; a kind of reddish sea-fish.

   2. பளபளத்த சாம்பல் நிறமும், ஒரடி வளர்ச்சியுமுள்ள கடல் மீன்வகை; a sea-fish, silvery grey, attaining one feet in length.

     [வரி + கற்றலை.]

கல் + தலை = கற்றலை. கற்றலை மீன் வகையு ளொன்று.

     [P]

வரிக்கற்றாழை

 வரிக்கற்றாழை varikkaṟṟāḻai, பெ. (n.)

   கற்றாழை வகையுளொன்று; a kind of aloe.

     [வரி + கற்றாழை.]

கல் + தாழை → கற்றாழை.

பதினேழுவகைக் கற்றாழையுளொன்று.

வரிக்கற்றை

வரிக்கற்றை varikkaṟṟai, பெ. (n.)

   கூரை வேய்தற்குதவும் புற்கற்றை முதலியன; bundle of straw etc, suitable for roofing.

     “வரிக்கற்றை இடுமடத்து” (S.I.I.VI, 29);.

     [வரி + கற்றை.]

குல் = திரட்சிக் கருத்துவேர். குல் → கல் → கற்றை. கூரைவேய்தற் பொருட்டுத் திரட்சியாகக் கட்டப் பெற்ற புற்கற்றை.

வரிக்கலவாய்

 வரிக்கலவாய் varikkalavāy, பெ. (n.)

   மஞ்சட்கபில நிறங்கொண்ட கடல்மீன் வகை; a sea-fish, yellowish brown.

     [வரி + கலவாய்.]

ஆறுவகைக் கலவாய் மீன்வகையுளொன்று.

வரிக்கல்

 வரிக்கல் varikkal, பெ. (n.)

   நீளமாக அடித்துத் திருத்திய கல்; long piece of stone chiselled into required shape.

கோயில் மண்டபத்துக்கு வரிக்கல் கொண்டு வருகிறார்கள்.

     [வரி + கல். குல் → கல்.]

வரிக்கல் = உளியால் அடித்துத் திருத்தி வடிவமைத்த செப்பமான கல்.

வரிக்காம்பு

 வரிக்காம்பு varikkāmbu, பெ. (n.)

   அறுத்த புகையிலைச் செடியின் அடுக்கு; pile of harvested tobacco plants.

மறுவ. அடிக்கட்டை

     [வரி + காம்பு.]

கம்பு → காம்பு. அறுத்த புகையிலைச் செடியின் அடித்தூர்ப் பகுதி.

வரிக்காய்

 வரிக்காய் varikkāy, பெ. (n.)

   கடுக்காய் வகையுளொன்று; a species of chebulic myrobalan.

     [வரி + காய்.]

கள் → காள் → காழ் → காய் = முதிர்ந்ததும், பழுக்காத நிலையிலுள்ளதுமான வரிக்கடுக்காய். இவ்வரிக் கடுக்காயின் கருக்கு நீரினை (வடிநீரினை); நாள்தோறும், மாலை வேளையிற் பருகினால், கோலூன்றி நடக்கும் கிழவனும், இளமைப் பொலிவை அடைவான் என்று தமிழ் மருத்துவர் கூறுவர்.

வரிக்காரன்

வரிக்காரன்1 varikkāraṉ, பெ. (n.)

   தேர் முதலியவற்றை இழுக்கும் வடக்கயிறு திரிப்போன்; cable-twister, rope-maker.

     [வரி + காரன்.]

 வரிக்காரன்2 varikkāraṉ, பெ. (n.)

   1. வரி வாங்குபவன்; tax- collector.

   2. வரி கொடுப்பவன் (இ.வ.);; one who pays tax, contribution etc.

     [வரி + காரன். காரன் = வினைமுதற் பொருளில் வந்த ஆண்பாற் பெயரீறு.]

வரிக்காரம்

 வரிக்காரம் varikkāram, பெ. (n.)

வரிகாரம் பார்க்க;see vari-kāram.

     [வரி + காரம்.]

வரிக்காரல்

வரிக்காரல் varikkāral, பெ. (n.)

   வெண்மை நிறமும் எட்டு விரலம் (அங்குல); வளர்ச்சியுமுடைய கடல்மீன் வகை; a sea-fish, silvery, attaining 8 inch in length.

     [வரி + காரல்.]

காரல் மீன் வகையு ளொன்று.

     [P]

வரிக்காரை

வரிக்காரை1 varikkārai, பெ. (n.)

   மீன் வகையுளொன்று; a kind of fish-Atropus.

     [வரி + காரை. கால் → கார் → காரை = நீண்ட முள் கொண்ட காறல் மீன்.]

 வரிக்காரை2 varikkārai, பெ. (n.)

   மல்லிகை வகை; devine jasmine – Randia uligionsa (சா.அக.);.

     [வரி + காரை.]

வரிக்காளான்

 வரிக்காளான் varikkāḷāṉ, பெ. (n.)

   காளான் வகையுளொன்று; a kind of mushroom (சா.அக.);.

     [வரி + காள் → காளான்.]

சதுப்பு நிலங்களில் மழைக்குப்பின் தோன்றும் பச்சையமில்லாத செடிவகை. முதற்கண் கரிய நிறத்தைக் குறித்த காள் என்னும் வேரடி, கால்ப்போக்கில் அனைத்துக் காளான் இனத்தையும் குறிக்கலாயிற்று.

வரிக்கிரந்தி

 வரிக்கிரந்தி varikkirandi, பெ. (n.)

   சதையைப் பற்றிய புண்கட்டி; a kind of tumour of the muscles (சா.அக.);.

     [வரி + கிரந்தி.]

 Skt. granthi → த. கிரந்தி.

வரிக்கீச்சான்

வரிக்கீச்சான் varikāccāṉ, பெ. (n.)

   மஞ்சட் பழுப்பு வண்ணத்ததும், பத்து விரலம் (அங்குல); வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை; a sea-fish, yellowish brown, attaining 10 in length.

     [வரி + கீச்சு → கீச்சான்.]

வரிக்குக்கூறுசெய்வார்

வரிக்குக்கூறுசெய்வார் varikkukāṟuseyvār, பெ. (n.)

வரிக்கூறுசெய்வார் (தெ.இ.கல்.தொ..3, 211); பார்க்க;see vari-k-kürušeyvār.

     [வரி + கூறுசெய்.]

வரிக்குதிரை

வரிக்குதிரை1 varikkudirai, பெ. (n.)

   1. பல வண்ணக் வரி நிறை குதிரை (வின்.);; piebald horse.

   2. சேணம் வேண்டாக் குதிரை (வின்.);; horse not requiring a saddle.

     [வரி + குதி → குதிரை.]

 வரிக்குதிரை2 varikkudirai, பெ. (n.)

   கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சார்ந்த விலங்கு; zebra.

     [வரி + குதிரை.]

     [P]

வரிக்குப்பச்சை

 வரிக்குப்பச்சை varikkuppaccai, பெ. (n.)

   பச்சைக்கல் வகை (யாழ்.அக.);; a variety of green stone.

     [வரி → வரிசைக்கு + பச்சை → வரிசைக்குப் பச்சை → வரிக்குப்பச்சை.]

வரிக்குமரி

 வரிக்குமரி varikkumari, பெ. (n.)

வரிக் கற்றாழை பார்க்க;see vari-k-karrālai (சா.அக.);.

மறுவ. குருவரிக்கற்றாழை

     [வரி + குமரி. குமரி = கற்றாழை.]

வரிக்குமரியன்மை

 வரிக்குமரியன்மை varikkumariyaṉmai, பெ. (n.)

   வரிக்கறாழஞ்; the pulp of striped aloe (சா.அக.);.

வரிக்கும்மட்டி

வரிக்கும்மட்டி1 varikkummaṭṭi, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி (பதார்த்த 576);; colocynth (சா.அக.);.

     [வரி + கொம்மட்டி → கும்மட்டி.]

 வரிக்கும்மட்டி2 varikkummaṭṭi, பெ. (n.)

   ஆற்றுத்தும்மட்டி; a creeper-Cucumis Colocynthis (சா.அக.);.

மறுவ. பேய்த்தும்மட்டி, ஆற்றுக்கொடி.

ஆற்றுப்படுகைகளில் – மணற்பாங்கிற் காணக்கூடும் இச்செடிப் பகுதிகளனைத்தும் (சமூலம்); கசப்பானது.

வரிக்குயில்

 வரிக்குயில் varikkuyil, பெ. (n.)

   குயில் வகை (வின்.);; banded koel.

     [வரி + குயில்.]

குயில், குக்கூவெனக் கூவுவதும், துயிலெழுப்பது மிதனியல்புபோலும்!

     [P]

வரிக்குறவான்

 வரிக்குறவான் varikkuṟavāṉ, பெ. (n.)

   முதுகுத் துடுப்பில் அரம் போன்ற முட்களமையப் பெற்றதும், கருப்பு, மஞ்சள் வரிகளுடையதுமான கடல் மீன். இது நச்சுத் தன்மையுடையதாகையால், உண்ணுவதற்குப் பயன்படாது; a kind of sea fish with yellow and black strips and sharp fins on the back; poisonous not fit for consumption (சா.அக.);.

     [வரி + குறவான். வரி = கோடு. குறவான் = மீன்.]

வரிக்குறைப்பு

 வரிக்குறைப்பு varikkuṟaippu, பெ. (n.)

   வரியைத் தளர்த்துகை; tax-relaxation.

ஆடம்பரப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெறவில்லை (உ.வ.);.

     [வரி + குறைப்பு.]

வரிக்கூத்து

 வரிக்கூத்து varikāttu, பெ. (n.)

   கூத்து வகை (வின்.);; a kind of masquerade dance.

     [வரி + குல் → குத்து → கூத்து.]

பலவகைகளில் கால் குத்திட்டு பொய்த் தோற்றங்காட்டி, ஆடும் கூத்து.

எண்வகை வரிக்கூத்து சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டுள்ளது.

வரிக்கூறிடுவார்

 வரிக்கூறிடுவார் varikāṟiḍuvār, பெ. (n.)

வரிக்கூறுசெய்வார் (கல்.); பார்க்க;see vari-k-küru-ceyvär.

     [வரி + குல் → கூல் → கூறு + இடுவார்.]

பதிவு செய்த வரித்தொகைகளைப் பங்கிடுபவர் அல்லது பாகுபாடு செய்பவர்.

வரிக்கூறுசெய்-தல்

வரிக்கூறுசெய்-தல் varikāṟuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வரித் தொகையில், இன்னின்ன செலவிற்கு இவ்வள விவ்வளவென்று கூறுபடுத்தி ஒதுக்குதல்; to divide and allot tax for various expenditure (of departments);.

     [வரிக்கூறு + செய்.]

வரிக்கூறுசெய்வார்

 வரிக்கூறுசெய்வார் varikāṟuseyvār, பெ. (n.)

   அரசிறை அதிகாரிகள் (கல்.);; revenue officers in ancient times.

     [வரி + கூறுசெய்.]

தத்தமக்குரிய ஊர்களில் அரசிறை தண்டுபவர். வரவு செலவு வரிப் பொத்தகத்திலுள்ள கணக்குப்படி ஆய்வுசெய்து, மொத்தப் பணத்தை, ஒவ்வொரு வாரியத்திற்கும் ஒதுக்கீடு (Budget); செய்வார்.

வரிக்கை

வரிக்கை varikkai, பெ. (n.)

   பலாவகை (நாமதீப. 294);; a species of jack-tree.

     [வருக்கை → வரிக்கை.]

வரிக்கொன்றை

 வரிக்கொன்றை varikkoṉṟai, பெ. (n.)

   சிவப்புகொன்றை வகை (இலத்.);; Red Indian laburnum.

மறுவ. வரிக்கொன்னை.

     [வரி + கொல் → கொன்று → கொன்றை (கொத்து);.]

முப்பத்திரண்டு கொன்றையுள் செங் கொன்றை வகையைச் சார்ந்தது.

வரிக்கொம்மட்டி

வரிக்கொம்மட்டி varikkommaṭṭi, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி (M.M.372);; colocynth.

மறுவ பேய்த்தும்மட்டி

     [வரி + கும்மட்டி → கொம்மட்டி.]

ஆற்றுப்படுகைகளில் விளையும் இப் பூண்டின் செடிப் பகுதிகளனைத்தும் (சமூலம்);, கசப்பாக விருக்கும். இதன் தூள் கண்ணிலும் மூக்கிலும் படநேரின், நெடியேறும்.

வரிக்கோரை

 வரிக்கோரை varikārai, பெ. (n.)

   கோரை வகையுளொன்று; striped sedge.

     [வரி + கோல் → கோர் → கோரை.]

வரிக்கோலம்

வரிக்கோலம் varikālam, பெ. (n.)

   தொய்யிலின் பத்திக்கீற்று (சிலப். 5, 226, அரும்.);; ornamental figures or lines drawn on the breast.

     [வள் → வர் → வரி + கோலம்.]

குல் → கொல் (புதியது, அழகியது); → கோல் + அம்.

   மகளிர், தோள், மார்பகங்களில் வரிக்கோலம் எழுதும் சந்தனக் குழம்பு;மகளிர் மார்பகங்களில் சந்தனக் குழம்பால் எழுதுங் கோலம், வரிக்கோலமாகும்.

வரிக்கோலா

வரிக்கோலா varikālā, பெ. (n.)

   கருநீலப் பச்சை நிறமுடையதும் 18 விரல வளர்ச்சி யுடையதுமான கடல் மீன்வகை; a species of sea fish, violet green, attaining 18 in. in length.

     [வரி + கோலன் → கோலா.]

வரிக்கோலா நீண்டும், ஒல்லியாயும், தலை கூர்மையாகவும், எலும்பு பச்சை நிறமாயும் இருக்கும்.

     [P]

வரிக்கோழிமீன்

வரிக்கோழிமீன் varikāḻimīṉ, பெ. (n.)

   கடலிலிருக்கும், வரியையுடைய ஒர் வகைக் கோழி மீன்; a kind of sea fish (சா.அக.);.

     [வரி + கோழி + மீன்.]

   ஆழ்கடலுள் வாழும், இம்மீன் 18 விரலம் (அங்குல); நீளமுள்ளது. கருநீல வண்ணமுடையது;கடலடிக் கல்லில் உள்ள சிறிய மீன்களை இரையாகக் கொள்ளும்.

     [P]

வரிக்கோவை

 வரிக்கோவை varikāvai, பெ. (n.)

   கண்டிதாத்திரிக்கொடி. இக் கீரை நோய் செய்யுங் கோழையை வேரறுக்கும்; striped caper;the leaves of which is good for curing phlegm humour (சா.அக.);.

     [வரி + கோவை.]

வரிசந்தி

 வரிசந்தி varisandi, பெ. (n.)

வரிச்சந்தி (யாழ்.அக.); பார்க்க;see vari-c-candi.

     [வரி + சந்தி.]

வரிசிறையாய்கிட-த்தல்

 வரிசிறையாய்கிட-த்தல் varisiṟaiyāykiḍattal, செ.கு.வி. (v.i.)

   வரி பெறுவதற் கியலாமல் போதல்; tax to be uncollectable.

     [வரி + சிறை + ஆய் + கிட.]

வரிசிறையாய்கிடந்தபூமி

வரிசிறையாய்கிடந்தபூமி varisiṟaiyāykiḍandapūmi, பெ. (n.)

   வரி பெறுவதற்கின்றி பயிரிடப் பெறாமல் கிடந்த நிலம்; unassessed cultivable waste land.

     “ஊர்மஞ்சிக்கமாய் வரிசிறையாக் கிடந்த பூமி” (S.I.1. Vol. III. 156);

     [வரி + சிறையாய் + கிடந்த + பூமி.]

வரிசிலத்துக்கிடந்தபூமி

வரிசிலத்துக்கிடந்தபூமி varisilattukkiḍandapūmi, பெ. (n.)

   வரி, சில்லாயம் முதலியன இல்லாமல் பயனின்றிக் கிடந்த பூமி; unassessed waste land.

     “ஊர் மஞ்சிக்கமாய் வரிசிலத்துக் கிடந்த பூமி” (S.I.I. Vol.III.156);.

     [வரி + சிலத்து + கிடந்த + பூமி.]

வரிசெலுத்து-தல்

வரிசெலுத்து-தல் variseluddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வரிக்கட்டுதல்; to remit tax.

ஒழுங்காக வரிசெலுத்துபவர், நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியவராவர் (இ.வ.);.

     [வரி + செலுத்து.]

வரிசை

வரிசை1 varisai, பெ. (n.)

   விளைச்சலில் உழவனுக்குரிய பங்கு; cultivator’s, share of produce.

     ‘வரிசைக்கு உழும்’ (நேமிநா. சொல். 17, உரை);.

வரிசையும் இல்லை அரிசியும் இல்லை (பழ.);.

     [வள் → வரி → வரிசை.]

வரிசை = நிலத்தில் உழுது பயிரிடுபவனுக்கு, நிலவுடைமையாளன் தரும் பங்கு.

 வரிசை2 varisai, பெ. (n.)

   1. ஒழுங்கு, முறை (சூடா.);; order, regularity.

   2. ஒருவருக்குப் பின் ஒருவராக, அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக, அமையும் பாங்கு; line, row series.

வழிபாடு முடிந்ததும் மாணவர்கள் வரிசையாக நடந்து வகுப்புகளுக்குச் சென்றனர் (உ.வ.);.

   3. நிரையொழுங்கு, வரை, ஒழுங்கு; line, row series.

சாலை ஒரத்தில் வரிசை வரிசையாக மரங்கள் (இக்.வ.);.

   4. வேலைமுறை (வின்.);; turn in duty or work.

   5. அரசர் முதலியோரால் பெறுஞ் சிறப்பு; distinctive mark of honour or privilege granted by a royal or other authority.

     “பொற்பட்ட முன்னா வரிசைகள்” (திருவாலவா. 28, 93);.

     “வரிசை யறிதலோ வரிதே பெரிதும்” (புறநா. 121: 3);.

   6. அரச சிறப்புச் சின்னம் (முத்திரை);; insignia of royalty.

     “சாமரை யக்க மாதியாம் வரிசையிற் கமைந்த…. தாங்கி” (கம்பரா. நிந்தனை);.

   7. மதிப்புரவு; honour, esteem.

     “பொற்புற வரிசை செய்வான்” (திருவிளை. இந்திரன் (முடி. 37);.

   8. மேம்பாடு; excellence, eminence.

     “ஆடுகொள் வரிசைக்கொப்பப் பாடுவல்” (புறநா. 53);.

   9. தகுதி; merit, fitness.

   10. மதிப்பு; worth.

     “வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண். 217);.

   11. பாராட்டு; regard, facilitate.

வரிசைப் பெரும்பாட் டெல்லாம்” (கலித். 85);.

   12. நல்லொழுக்கம்; good conduct.

அவன் வரிசையாய் நடந்து கொள்கிறான் (உ.வ.);.

   13. நன்னிலை (வின்.);; good circumstances.

   14. சீராகச் செய்யும் நன்கொடை; present, especially to a daughter on marriage or other occasion.

     “மாமி வரவிட்ட வரிசையென்று” (விறலிவிடு. 533);.

   15. வீதம்; rate;

 proportion, apportionment.

 Ka. varase, varise;

 Te. varusa.

     [வரி → வரிசை + சீர் வகையிற் செய்யும் நன்கொடை.]

வரிசை-ஒழுக்கம் :

     ‘எறும்பு வரிசை’ ஓர் ஒழுங்கு முறையாக உலகமெல்லாம் பரவியிருத்தல் அறியக் கூடியது;

ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் எறும்பு வரிசை, எறும்பின் ஒழுக்கு எனச் சங்க நாளிலேயே சொல்லப்பட்டது. ஆயினும் பொருள் தட்டுப்பாடு, போக்குவரவு நெருக்கடி, காட்சிச் சாலை ஆகியவற்றால் அண்மைக் காலத்தே தான் வழக்கில் கொணரப்பட்டதாம். வரிகை (கியூ); முறை (Q System); என்பது எறும்புச்சாரி முறையே. நீரொழுக்கு, எறும்பொழுக்கு, ஒழுக்கம் என்பவை யெல்லாம் ஒழுங்கு முறைப்பட்டதாம்.

     ‘உன் வரிசை தெரியுமே’ என்பதில் வரிசை ஒழுக்கமாதல் அறிக. வரிசை கெட்டவன் ஒழுக்கமற்றவன் என்பதாம் (வழக்குச் சொல்.அகராதி);.

 வரிசை2 varisai, பெ. (n.)

   சிற்றூர் வரிவகை; village dues or rent.

     “இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது” (புதுக். கல். 613); (1.М.Р.Тр.293);.

     [வள் → வரி + சை.]

 வரிசை4 varisai, பெ. (n.)

   திருமணத்தின் பொழுதோ அல்லது சிறப்புப் பண்டிகை நாட்களிலோ, மகளுக்கு பிறந்த வீட்டில் கொடுக்கும் பொருள்; gifts, dowry.

அவர்களுக்கு ஒரே பெண் என்பதால், ஏராளமான வரிசை வைத்திருக்கிறார்கள் (உ.வ.);.

     [வள் → வர் → வரி → வரிசை.]

 வரிசை5 varisai, பெ. (n.)

   உருபா நோட்டுக் குறியீடுகளோடு ஒன்றையடுத்து ஒன்றாக வரும் எண்களைக் கொண்டவற்றின் தொகுப்பு; series of currency notes, etc.

புதிதாகச் செலாவணிக்கு வரும் ஐந்து உருபா நோட்டுகள் இரு வரிசை கொண்டவை.

     [வர் → வரி → வரிசை.]

 வரிசை varisai, பெ. (n.)

   1 மணந்துகொள்ள இடந் தரும் உறவு முறை

 relationship in families to allow youngsters to marry.

அத்தை மகள் இவனுக்கு வரிசை ஆகிறாள் (உவ);.

   2. மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் சீர் வரிசை; gifts offered to the bride in папаge.

     [வரித்தல்-மனத்தல் வரைவு திருமணம் வரி-வரிசை]

வரிசைக்காரன்

வரிசைக்காரன் varisaikkāraṉ, பெ. (n.)

   1. நன்னடத்தையுள்ளவன் (வின்.);; well behaved man.

   2. முறைக்காரன்; one whose turn of duty occurs.

     [வரிசை + காரன். காரன் = வினைமுதற் பொருளில் வந்த ஆண்பாற் பெயரீறு.]

வரிசைக்கிரமம்

 வரிசைக்கிரமம் varisaikkiramam, பெ. (n.)

   ஒழுங்கு முறை; proper or regular order.

     [வரிசை + கிரமம்.]

 Skt. krama → த. கிரமம்.

வரிசைக்குப்பச்சை

 வரிசைக்குப்பச்சை varisaikkuppassai, பெ. (n.)

   நாகப்பச்சை (யாழ்.அக.);; a variety of green stone.

     [வரிக்குப்பச்சை → வரிசைக்குப்பச்சை.]

வரிசைக்குற்றி

 வரிசைக்குற்றி varisaikkuṟṟi, பெ. (n.)

   செங்கற்சூளையில் வரிசையாக அடுக்கும் விறகுக்கட்டை (நாஞ்.);; stumps of wood set in a row in a brick-kiln.

     [வரிசை + குறு → குற்றி. குற்றி = மரக்கட்டை.]

வரிசைக்கெட்டவன்

வரிசைக்கெட்டவன் varisaikkeṭṭavaṉ, பெ. (n.)

   1. ஒழுக்கமில்லாதவன்; a man lacking discipline.

வரிசை கெட்டவனுக்குத்தான் வாய்க்கொழுப்பு அதிகம் (இ.வ.);

   2. மதிப்பற்றவன்; un-worthy person.

   3. தகுதியற்றவன்; de-merit person.

     [வரிசை + கெட்டவன்.]

வரிசைசெய்-தல்

வரிசைசெய்-தல் varisaiseytal,    1 செ.கு.வி. (v.i.)

   1. சீர், சிறப்பு, மதிப்பு (மரியாதை);ச் செய்தல் (வின்.);; to salute or render civility or courtesy.

   2. வரிசையெடு-, பார்க்க;see Varisai-y-edu-,

     [வரிசை1 + செய்-.]

வரிசைச்சுரம்

வரிசைச்சுரம் varisaissuram, பெ. (n.)

   இடைவிட்டு முறையாக வரும் காய்ச்சல்; intermittent fever.

மறுவ. முறைக்காய்ச்சல்.

     [வரிசை1 + சுரம்1.]

வரிசைபார்-த்தல்

வரிசைபார்-த்தல் varisaipārttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒழுங்குமுறையை நுட்பமாய்க் கவனித்தல் (வின்.);; to be punctilious, formal or ceremonious.

     [வரிசை1 + பார்-.]

வரிசைப்படி இறு-த்தல்

வரிசைப்படி இறு-த்தல் varisaippaḍiiṟuttal,    3 செ.கு.வி. (v.i.)

   தண்டுவதாய நில வரியினை முறையாகச் செலுத்துதல்; to pay regularly the land revenue, levied by Govt.

மறுவ. வரியிறுத்தல், வரிசெலுத்தல்.

     [வரிசைப்படி + இறுத்தல்.]

வரிசைப்பெயர்

 வரிசைப்பெயர் varisaippeyar, பெ. (n.)

   அரசனின் கொடிவழியைக் குறிக்கும் பெயர்; genealogical name of the king.

     [வரிசை + பெயர்.]

வேள், மன்னன், கோவன் (கோன், கோ);, வேந்தன் என்பன வரிசைப் பெயராம். அரசர் போன்றே அரசனுடைய பட்டத்தரசிக்குக் கோப்பெருந்தேவி அல்லது, பெருங்கோப்பெண்டு என்பது, வரிசைப்பெயராக வழங்கப் பெற்றும், பெருமை குறிக்கப்பெற்றும், வந்துள்ளமை காண்க.

வரிசைமகளிர்

வரிசைமகளிர் varisaimagaḷir, பெ. (n.)

   விறலியர்; a class of female songesters.

     “அடுப்புத் தொழிற் குரியரல்லாத வரிசை மகளிரும்” (பதிற்றும். 18, 6, உரை);.

     [வரிசை1 + மகளிர்.]

வரிசைமாதர்

வரிசைமாதர் varisaimātar, பெ. (n.)

வரிசைமகளிர் பார்க்க;see varisai-magalir.

     “வரிசை மாதர் சிலம்போசை” (திருவாலவா. திருநகரச். 6);.

     [வரிசை1 + மாதர்.]

வரிசையறி-தல்

வரிசையறி-தல் varisaiyaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   ஒருவர்தம் தரம் அறிந்து சிறப்பித்தல்; to assertain one’s ability or speciality.

     “வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண்.217);.

     [வரிசை + அறி.]

   ஒருவர் தம் புலமை அல்லது ஆற்றலறிந்து பரிசு நல்குதலே, வரிசையறிதலாம். அரசன் அல்லது ஆட்சித் தலைவன், கலைஞர், புலவர், பாவலர், அறிஞர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பணித் திறவோர் முதலியோர்க்குப் பரிசளிக்கும் போதும் பட்டம் வழங்கும் போதும், இன்னபிற சிறப்புச் செய்யும் போதும், அவரவர் தகுதியும் தரமுதலாகிய வரிசையறிந்து செய்தல் வேண்டும். பரிசளித்தல் எளிது;வரிசையறிந்தளித்தல் அரிது.

வரிசையறிதல் பற்றிக் கபிலர் மலையமான் திருமுடிக்காரியை நோக்கிப் பாடிய பாடல் வருமாறு:-

     “ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்

பலரும் வருவர் பரிசின் மாக்கள்

ஈதல் எளிதே மாவன் டோன்றல்

அதுநற் கறிந்தனை யாயின்

பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.”

     “புலவர் பெருமக்களின் புலமைத் திறத்தைப் பகுத்தறிந்து பரிசு நல்குதலே, வரிசையறிதல்” என்பார், மொழிஞாயிறு.

பண்டைப் பாவலர் அனைவரும், தமது நுண்மாண் நுழைபுலங்கெழுமிய, சீர்த்த மதியினால், மன்னர்தம் வாழ்வியல் நிகழ்வுகளை, இயற்கை நிகழ்வுடன் இணைத்துப் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். கடையெழு வள்ளல்களும், கழகக்கால வேந்தர்களும் புலவர், பாணர், விறலியர், போன்றோரைப் பாதுகாக்கும் அரண்களாகத் திகழ்ந்தனர்.

இத்தகு வள்ளல்களுள், மலையமான் திருமுடிக்காரி போன்றோர் பரிசிலாளர்க்கு என்னதேவை என்பதறியாது, கொடைமடம்பட்டு, அனைவருக்கும் சமமாகப் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினர்.

பண்டைக்காலப் புலவர் பெருமக்கள், ஐந்நூறு ஊர் முற்றூட்டும், நாற்பது நூறாயிரம் பொன்னும், ஒருநாட்டு முழுவருவாயும், நூறாயிரம் பொற்காசொடு, ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசொடு ஒருநாடும், இன்னோரன்ன பிறவும், அரசர்களிடையே பரிசாகப் பெற்ற பான்மையினை பண்டைத்தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இவ்வாறு, பரிசிலாளரால் வைத்துப் பாதுகாக்கவியலாத வண்ணம் கொடைமடம்பட்டுப் பரிசு நல்குதல்

வரிசையறியாது கொடுத்த பரிசின் பாற்படும் என்று இலக்கியத் திறனாய்வாளர் இயம்புவர்.

மலையமான் திருமுடிக்காரி, தம்மைப் பாடிய புலவர்க்கு, வரிசையறியாது, கொடைமடம்பட்டுப் பரிசளித்த பாங்கினைக் கபிலரும், புறநானூறு 121ஆம் பாடலுள் குறித்துள்ளது காண்க.

வரிசையறிதல் குறித்து (1980); செந்தமிழ்ச் செல்வி மேத் திங்களிதழில், பண்டைத்தமிழ் மன்னர் வரிசையறியாது பரிசுகள் வழங்கிய செய்தியினைக் குறித்துள்ளது வருமாறு :-

பண்டைப் புலவரெல்லாரும் பாவலராகவே யிருந்தனர். அவர்க்குப் புலமையும் பாவன்மையும் ஒருங்கே யமைந்திருந்தன. இக் காலத்தில் ஒரு சிலரே பாவலர். அவருட் பெரும்பாலோர் புலவரல்லர். உணர்ச்சியேயூட்டும் பாவன்மையினும் அறிவு புகட்டும் புலமையே சாலச் சிறந்தது.

   புலவர் புலத்துறைபற்றிப் பலவகையர்;   ஆற்றல்பற்றிப் பல திறத்தர். இயலர், இசையர், நாடகர், கணியர், மருத்துவர் முதலியோர் பலவகையர்;நாவலர், பாவலர், விளக்கியர், தருக்கியர், நூல்வலர், உரைவலர், ஆய்வலர், கதைவலர், கட்டுரைவலர் முதலியோர் பலதிறத்தர். இவ் விரு சாராரும், மீண்டும், தலையர், இடையர், கடையர் என முந்நிலையர்.

     “புலவர்தம், திறமும் நிலையும் அறிந்தே அவரவர்க்குத் தக்கவாறு பரிசளித்தல் வேண்டும். இங்ஙனம் பகுத்தறிதலையே வரிசையறிதல் என்றனர்” முன்னோர். வரிசையறிதல் பற்றிப் புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் சான்றுகள் வருமாறு:-

     “பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி” (புறம்.6);.

     “வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை” (ஷெ. 47);.

     “ஒருதிசை யொருவனை யள்ளி நாற்றிசைப்

பலரும் வருவர் பரிசின் மாக்கள்

வரிசை யறிதலோ அரிதே பெரிதும்

ஈதல் எளிதே மாவண் டோன்றல்

அதுநற் கறிந்தனை யாயின்

பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (ஷெ.121);.

     “வரிசை யறிதலின் தன்னுந் தூக்கி

இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்

பெருங்களிறு நல்கி யோனே” (ஷெ.140);.

     “வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க் கடையா வாயி லோயே” (ஷெ.20);

என்பன புலவரின் வரிசையறிதலைக் குறிப்பனவாகும்.

வரிசையளி-த்தல்

வரிசையளி-த்தல் varisaiyaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

வரிசைசெய்-தல் பார்க்க;see varisai-sey.

     [வரிசை + அளி.]

     “வையமுஞ் சிவிகையு மணிக்கா லமளியும்

உய்யா னத்தி னுறுதுணை மகிழ்ச்சியுஞ்

சாமரைக் கவரியுந் தமனிய வடைப்பையுங்

கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்

பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்

பொற்றொடி மடந்தையர்”

என்னும் சிலப்பதிகாரப் பகுதியால், அரசன் பரத்தையரொடு, உலாப்போதலும், அவர்க்கு அவன் பற்பல வரிசையளித்தலும், உண்டென்பது பெறப்படும்.

வரிசையார்

 வரிசையார் varisaiyār, பெ. (n.)

   அண்ணன் மனைவி; elder brother’s wife.

     [வரிசை + வரிசையார்.]

வரிசையாளர்

வரிசையாளர் varisaiyāḷar, பெ. (n.)

   நிலத்தைப் பயிரிடுங்குடிகள்; cultivating tenants.

     “தம் கீழ்க்குடிகளாகிய வரிசை யாளரை” (பதிற்றுப். 13, 24, உரை);.

மறுவ. பயிரிடுங்குடி, உழைப்பாளர்.

     [வரிசை2 + ஆள் → ஆளர். ஆள் = உயர்திணை இருபாற் பொதுச்சொல்.]

வரிசையெடு-த்தல்

வரிசையெடு-த்தல் varisaiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பலருமறியச் சீரெடுத்தல் (இ.வ.);; to fetch presents ceremonially on marriage or other occasions, in the presence of relatives etc.

     [வரிசை1 + எடு.]

வரிசைவாரம்

வரிசைவாரம் varisaivāram, பெ. (n.)

   விளைச்சலுக்கு ஏற்றபடி திட்டப்படுத்திய மேல்வாரம்; fixed rent calculated on the ascertained average yield of the land cultivated.

     [வரிசை3 + வாரம்.]

வாரம் = நிலத்தைப் பயிரிடும் வேளாண் குடிகள், நிலவுடைமையாளருக்குச் செலுத்தும் பங்கு.

வரிசோறு

வரிசோறு varicōṟu, பெ. (n.)

   வரிவகை (I.M.P.Sm.2);; a tax.

     [வரி + சோறு.]

வரிச்சங்கு

 வரிச்சங்கு variccaṅgu, பெ. (n.)

   எலும்பு; bone (சா.அக.);.

     [வரி + சக்கு → சங்கு.]

சங்கு போல், உள் வளைவுள்ள எலும்பு. சங்கு போன்ற ஊட்டி என்னும் மிடற்றுறுப்பு.

வரிச்சந்தி

 வரிச்சந்தி variccandi, பெ. (n.)

   பல தெருக்கள் கூடுமிடம் (பிங்.);; place where streets meet, cross-roads, a junction.

     [வரி + அந்து → சந்து → சந்தி.]

அந்துதல் = கூடுதல். அந்து → அந்தி = கூடியது. கூடிய நேரம் அல்லது இடம். அந்து → சந்து = முதனிலைத் தொழிற்பெயர்.

வரி + சந்து = பல தெரு அல்லது பலவழி, கூடுமிடம்.

வரிச்சம்பா

வரிச்சம்பா variccambā, பெ. (n.)

   சித்திரை மாதத்தில் விதைத்து, ஐந்து மாதங்களிற் பயிராவதும், நெல் மணிகளின் மீது வரியுடையதுமான சம்பா நெல்வகை; a kind of striped paddy, sown in cittirai and maturing in five months.

     [வரி + சம்பா.]

   சம் → சம்பா = இங்கு குறித்துள்ள சம்பா, கோடைக் காலத்தே பயிராகும் நெல் வகையைச் சார்ந்தது;அறுபது சம்பா வகையுள், வரிச்சம்பாவும் ஒன்று. இச்சம்பா நெல் வகைகள், தமிழ் நாட்டின் விளைபொருள் வளத்திற்கு ஏற்றதொரு

   எடுத்துக்காட்டாய்த் திகழ்வன எனலாம். தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை;தமிழ் நாட்டுள்ளும், தென்னாட்டிலேயே வரிச்சம்பா, ஆவாரம்பூச் சம்பா, சீரகச் சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறு மணிச்சம்பா முதலான நெல் வகைகள் பயிராகின்றன. பழங்காலத்திற் பயிராகி வந்த பல்வகை நென்மணிகளும், பொன்னும் மணியும், பவழமும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருவது கண்கூடு (சொல்.க.பக்.59, 70);.

வரிச்சலாணி

 வரிச்சலாணி variccalāṇi, பெ. (n.)

   வரிச்சலிற் பதிக்கும் ஆணி (வின்.);; nails for fastening reepers.

     [வரிச்சல் + ஆழ் → ஆழி → ஆணி.]

ஒரு பொருளில் அல்லது வரிச்சற்கட்டையில் பதிக்குங்கால், ஆழ்ந்து பதியுந் தன்மை ஆணிக்கே யுரியது.

வரிச்சலுகை

வரிச்சலுகை variccalugai, பெ. (n.)

   1. வரி அல்லது தீர்வையைக் குறைக்கை; tax-concession or relief.

உடல் ஊனமுற்றவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கியுள்ளது.

   2. வரிக்குறைப்பு பார்க்க;see vari-k-kuraippu.

     [வரி + சலுகை. சலிகை → சலுகை குறைக்கை, தளர்த்துகை.]

வரிச்சல்

 வரிச்சல் variccal, பெ. (n.)

வரிச்சு (வின்.); பார்க்க;see variccu.

     [வரி → வரிச்சு → வரிச்சல் = கோடுபோல் நிண்ட கட்டுவரிச்சல்.]

வரிச்சல்பட்டை

 வரிச்சல்பட்டை variccalpaṭṭai, பெ. (n.)

   நீண்ட மரப்பட்டை; a kind of lengthy wooden roof.

     [வரிச்சல் + பட்டை.]

வரிச்சாணி

 வரிச்சாணி variccāṇi, பெ. (n.)

வரிச்சலாணி (வின்.); பார்க்க;see variccal-äni.

     [வடி → வரி → வரிச்சு + ஆணி.]

வரிச்சி

 வரிச்சி varicci, பெ. (n.)

   நீண்டிருக்கும் குச்சு; lengthy stick.

     [வரி → வரிச்சு → வரிச்சி.]

வரிச்சு

வரிச்சு variccu, பெ. (n.)

   கோடு போல் நீண்ட கட்டுவரிச்சல்; reeper of a roof;transverse lath.

     “வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே” (கம்பரா. சித்திர. 46);.

     [வரி3 → வரிச்சு.]

கோடுபோல் நீண்ட வடிவிலமைந்ததும், கட்டுவதற்குப் பயன்படுவதுமான நெடுங்குச்சு. நீளுதற் பொருண்மையில், அஃதாவது நீட்சிக் கருத்திற் கிளைத்த சொல்.

வரிச்சுமை

 வரிச்சுமை variccumai, பெ. (n.)

   வரிப் பளு; tax-burden.

     [வரி + சுமை.]

அளவிற்கதிகமான வரிவிதிப்பினால் ஏற்படும் துயர்.

வரிச்சுருள்

வரிச்சுருள் variccuruḷ, பெ. (n.)

   செவ்வட்டை (சங்.அக.);; a kind of leech.

     [வரி1 + சுருள். சுள் → கரு → சுருள்.]

     [P]

வரிச்சோறு

 வரிச்சோறு variccōṟu, பெ. (n.)

   மாடசாமி கோவில் கொடைவிழாவில் அளிக்கப் பெறும் சோறு; rice meal given during Madasamy charity festival.

     [வளி+சோறு]

வரிஞ்சையூர்

 வரிஞ்சையூர் variñjaiyūr, பெ. (n.)

   சோழ நாட்டின் திருக்கீழ்வேளுர்க்கு தெற்கில் அமைந்த ஓருர்; a village situated south of Tiruk-kil-velor in Chö/a country.

இவ்வூரில் முன்னொரு நாளில் சிவனடியார்களை இகழ்ந்து பேசியவர்களுடைய நாவினையரிந்த சத்தி நாயனார் என்பவர் வாழ்ந்திருந்தார் என்று பெரியபுராணம் புகலும்,

வரிட்டன்

வரிட்டன் variṭṭaṉ, பெ. (n.)

   1. மேலானவன்; esteemed or distinguished, pre-eminent man,

   2. (ஆதன்); சீவன் முத்தருள் பிரமவரிட்டர் வகையினன்; person belonging to pirama-variffar class of civan-muttar or attained or enlightened saint.

     “சீவன் முத்தர் நால்வகையாவர்…. பிரமவித்து வரன் வரியான் வரிட்டன்” (கைவல். தத். 94);.

     [பரம் → வரம் → வரிட்டன். பரம் = மேலானது, சிறந்தது.]

வரிட்டம்

வரிட்டம் variṭṭam, பெ. (n.)

   மிகச்சிறந்தது; that which is pre-eminent, excellence.

     “வரிட்ட மங்கலம்” (தக்கயாகப். 74, உரை);.

     [பரிட்டம் → வரிட்டம்.]

வரிதகம்

வரிதகம் varidagam, பெ. (n.)

   முப்பத் திரண்டடியான் வரும் இசைப்பாட்டு (சிலப். 3, 3, உரை, பக். 88);; a kind of song of 32 lines.

     [வரி2 → வரிதகம்.]

வரிதள்ளுபடி

 வரிதள்ளுபடி varidaḷḷubaḍi, பெ. (n.)

   வரி நீக்குகை; tax deduction.

அரிசி, கோதுமைக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டது (உ.வ.);.

     [வரி + தள்ளுபடி.]

வரிதாளி

வரிதாளி varitāḷi, பெ. (n.)

   தாளிப்பனை; a kind of palm – Talipot palm (சா.அக.);.

     [வரி1 + தாளி.]

வரித்தணிக்கை

 வரித்தணிக்கை varittaṇikkai, பெ. (n.)

வருவாய்த்துறையினர் வட்டந்தோறும் நடத்தும் வரித்தணிக்கைக் கூட்டம் (சமாபந்தி);:

 Jama Bandi.

     [வரி+தணிக்கை]

வரித்தண்டல்

 வரித்தண்டல் varittaṇṭal, தொ.பெ. (vbl.n.)

   இறை வாங்குதல்; collection of revenue.

இப்பொழுது மாநகராட்சியில் வரி தண்டற் பணி விரைவாக நடக்கிறது (உ.வ.);.

     [வரி + தண்டல். தண்டு → தண்டல், தண்டல் = வாங்குதல்.]

வரித்தா

 வரித்தா varittā, பெ. (n.)

   கருக்காய்; indian gallnut, chebulic myrobalan (சா.அக.);.

வரித்தும்மட்டி

வரித்தும்மட்டி1 varittummaṭṭi, பெ. (n.)

வரிக்கும்மட்டி பார்க்க;see vari-k-kummatti.

     [வரி1 + தும்மட்டி.]

 வரித்தும்மட்டி2 varittummaṭṭi, பெ. (n.)

   பேய்க்கொம்மட்டி; colocynth.

     [வரி1 + தும்மட்டி.]

வரித்துலா

 வரித்துலா varittulā, பெ. (n.)

   விடத்தேர் (L.);; ashy, babool.

வரித்தோல்

வரித்தோல்1 varittōl, பெ. (n.)

வரித்துலா பார்க்க;see vari-t-tula (சா.அக.);.

     [வரி1 + தோல்.]

 வரித்தோல்2 varittōl, பெ. (n.)

   காக்காய்ப் பாலை (L.);; cluster-flowered croton.

     [வரி1 + தோல்3.]

வரிநகக்கொன்னை

 வரிநகக்கொன்னை varinagaggoṉṉai, பெ. (n.)

   புலி உகிரி (நக);க் கொன்னைச் செடி வகையுளொன்று; cassia with re-curved prickles- Caesalpinia ligulata – climber (சா.அக.);.

வரிநண்டு

 வரிநண்டு varinaṇṭu, பெ. (n.)

   நண்டு வகை; a kind of crab, neptunus pelagicus.

     [வரி + நண்டு.]

     [P]

வரிநிழல்

வரிநிழல் variniḻl, பெ. (n.)

   செறியாத நிழல்; shade interspersed with light.

     “மராஅத்த வரிநிழ லசைஇ” (சிறுபாண். 12);.

மறுவ. கோட்டு நிழல்.

     [வரி1 + நிழல்.]

வரிநுணல்

வரிநுணல் varinuṇal, பெ. (n.)

   வரிக் கோடுகளையுடைய தவளை; striped frog.

     “உடும்பு கொரீஇ வரிநுணல் அகழ்ந்து” (நற் –59.1);.

     [வரி1 + நுணல்.]

வரிநுதல்யானை

வரிநுதல்யானை varinudalyāṉai, பெ. (n.)

   அழகிய புள்ளிகள் பொருந்திய நெற்றியை யுடைய யானைr; elephant, which has beautiful spotted fore-head.

     “வெண்ணெல் அருந்திய வரிநுதல்யானை தண்ணறும் சிலம்பில் துஞ்சும்” (நற்.7-7-8);.

     [வரி1 + நுதல் + யானை.]

வரிநெல்லி

 வரிநெல்லி varinelli, பெ. (n.)

   அரிநெல்லி; a small tree – phyllanthus distichus (சா.அக.);.

     [வரி + நெல்லி.]

வரிக்கோடுகளையுடைய சிறு நெல்லி. பித்த நோய்க்கு உகந்தது. ஊட்டச் சத்துடையது.

வரிந்துகட்டிக்கொண்டு

 வரிந்துகட்டிக்கொண்டு varindugaṭṭiggoṇṭu, கு.வி.எ. (adv.)

   விரைவாக, சண்டை, கலகத்தில் ஈடுபட; girding up one’s loins.

என்ன சொல்லி விட்டேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறாய் (இக்.வ.);

தேர்தலுக்குக் கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன (இ.வ.);.

நண்பர் திருமணத்தில் வேலைகளை வரிந்துகட்டிக் கொண்டு செய்தார் (உ.வ.);.

     [வரிந்து + கட்டிக்கொண்டு.]

வரிந்துகட்டு

வரிந்துகட்டு1 varindugaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இறுக்கிக்கட்டுதல்; to bind tightly.

   2. தீவிரத் தன்மை காட்டுதல்; to girde up one’s loins voluntarily.

     [வரி → வரிந்து + கட்டு.]

கள் → கட்டு. வரிந்து கட்டுதல் என்பது ஒன்றோடொன்றை இறுக்கிப் பிணைத்துக் கட்டுதலாகும்.

 வரிந்துகட்டு2 varindugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வேலைக்கு ஆயத்தமாதல் (இ.வ.);; to prepare for work, as by tying one’s loin-cloth.

     [வரி → வரிந்து + கட்டு.]

வரிந்துவரிந்து

 வரிந்துவரிந்து varinduvarindu, வி.அ. (adj.)

   விடாது;   தொடர்ந்து வருதல்; un interrupted continuous.

காலையிலிருந்து வரிந்துவரிந்து என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்? (உ.வ.);.

     [வரிந்து + வரிந்து.]

வரிபரந்தமணல்

வரிபரந்தமணல் varibarandamaṇal, பெ. (n.)

   கருமணல்; black sand (சா.அக.);.

     [வரி1 + பரந்த + மணல்.]

வரிபாதி

 வரிபாதி varipāti, பெ. (n.)

வரிக் கொன்றை பார்க்க;see vari-k-korai (சா.அக.);.

வரிபுனைபந்து

வரிபுனைபந்து varibuṉaibandu, பெ. (n.)

   வரிகள் நிறைந்த பந்து; striped ball.

     “வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்” (நற்-12-6);.

     [வரிபுனை + பந்து.]

கோடுகள் நிறைந்த பந்து.

வரிபோடு-தல்

வரிபோடு-தல் varipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   குடியிறை விதித்தல் (வின்.);; to impose or levy a tax.

     [வரி + போடு.]

வரிப்படலம்

வரிப்படலம் varippaḍalam, பெ. (n.)

   கரு விழியின் மீது கயிறு போல் செவ்வரிகளுடன், குத்தல், புகைச்சல், இவைகளை உண்டாக்கும் ஓர் கண்ணோய்; an eye disease affecting the black of the eye (சா.அக.);.

     [வரி1 + படலம்.]

வரிப்படாத்தி

வரிப்படாத்தி varippaṭātti, பெ. (n.)

   வெள் விழியில் வலைக் கண்களைப் போல் சதை வளரும் ஒர் வகைக் கண்ணோய்; an eye disease developing a network of morbid growth in the pupil of the eye (சா.அக.);.

     [வரி1 + படாத்தி.]

வரிப்படிரம்

வரிப்படிரம் varippaḍiram, பெ. (n.)

   சந்தனம்; Sandal (சா.அக.);.

     [வ1ரி + படீரம் → படிரம்.]

வரிப்பணம்

 வரிப்பணம் varippaṇam, பெ. (n.)

குடிகள் செலுத்தும் வரி (வின்.);:

 money-tax.

மறுவ. குடியிறை

     [வரி + பணம்.]

வரி வகையுளொன்று.

வரிப்பளு

 வரிப்பளு varippaḷu, பெ. (n.)

வரிச்சுமை பார்க்க;see vari-c-cumai.

சில்லறை வணிகர், வரிப்பளுவினால் தொல்லை யுறுகின்றனர் (உ.வ.);.

     [வரி + பளு → பளுவு.]

அளவிற்கு அதிகமான வரிச்சுமையினால் மக்கள்படும் தொல்லையே வரிப்பளு.

வரிப்பாகுபாடு

 வரிப்பாகுபாடு varippākupāṭu, பெ. (n.)

   பண்டைக்காலத்தே வழக்கிலிருந்த வரிப் பகுப்பு முறை; classification of tax in ancient days.

     [வரி + பாகுபாடு.]

பகு → பாகு.

ஒ.நோ. வகு → வாகு, படு → பாடு.

கீழிறைப் பாட்டம் (சிறுவரி);, மேலிறைப் பாட்டம் என இரு பாலாய்ப் பகுக்கப்பட்டிருந்தன. ஊர்க்கழஞ்சு, குமரக்க சாணம், வண்ணாரப் பாறை தட்டாரப் பாட்டம் முதலியன கீழிறைப் பாட்டமும், வேலிக்காக, திங்கள் மேராமு, முத்தாவணம், தறிப்புடவை முதலியன மேலிறைப் பாட்டமும் ஆகும்.

நிலவரி : வரிகளுட் சிறந்தது நிலவரி. அதனால் அது சிறப்பாக இறை அல்லது அரசிறை எனப்படும். அதற்குச் செய்க்கடன், காணிக்கடன் என்னும் பெயர்கள் வழங்கின.

அரசனால் விதிக்கப்பட்டவும், ஊரவையாரால் விதிக்கப்பட்டவும், அறமன்றத்தாரால் விதிக்கப்பட்டவும் கோயிலதிகாரிகளால் விதிக்கப்பட்டவும், சிற்றூர்த் தலைவனால் விதிக்கப்பட்டவும் ஆக ஐவேறு தொகுதிப்பட்டிருந்தன. அக்காலத்து வரிகள், அரசனுக்குச் செலுத்த வேண்டியவை அரசிறையெனப்பட்டன.

சில வரிகள் காசாகவும், சில வரிகள் கூல (தானிய);மாகவும், சில வரிகள் அவ்விரண்டி லொன்றாகவும் செலுத்தப்பட்டன. காசாகச் செலுத்தப்பட்டவை காசாயம் (காசு கடமை); என்றும், அந்தராயப் பாட்டம் என்றும், கூலமாகச் செலுத்தப்பட்டவை மேலடியென்றும், பெயர் பெற்றன. காசு, பணம், பொன், காணம் என இறும் பெயர்களெல்லாம் முன்வகையையும், அரிசி, நெல், நாழி, குறுணி, பதக்கு என இறும் பெயர்களெல்லாம் பின் வகையையும் குறிக்கும். பெரும்பாலும் தொழில் வரிகள் பணமாகவும், நிலவரி இனமாகவும் செலுத்தப்பட்டன. செக்கிறை, தறியிறை, கடைவரி முதலியன ஆண்டுக்கு ஆறு பணமாகும்.

சந்தை, அங்காடி, தெரு, திருவிழா, முதலியவற்றில் பல வகைப் பொருள்கள் விற்கும் சில்லறைக் கடைகட்கு நாள் வரி வாங்கப்பட்டது.

வரிப்பாடல்

வரிப்பாடல் varippāṭal, பெ. (n.)

   1. வரிப் பாட்டு பார்க்க;see vari-p-pättu.

   2. இசையோடியைந்த பாக்களிலொரு வகை (சிலப்.6, 35, உரை);; one of two classes of musical composition, the other class being known as isaiy-alavu-pa.

     [வரி + பாடல். பாடு → பாடல்.]

வரிப்பாடல், சிலப்பதிகார அரும்பத உரைகாரர் உரைப்பது:-

     “வரிப்பாடலாவது, பண்ணும், திறமும், செயலும் பாணியும், ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட, எட்டனியல்பும், ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும், இறுதியும் கெட்டு, இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும், பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ்சுட்டியும், மக்களைப் பழிச்சியும் வரும்” (அரும்.சிலம்பு.7:19);.

வரிப்பாட்டு

 வரிப்பாட்டு varippāṭṭu, பெ. (n.)

   இசைப் பாட்டு; tune, melody.

     [வரி + பாட்டு.]

மூவகை வரிப்பாட்டும்…. இன்ன பிறவுமாகிய நாடகத்தமிழ் பகுதிகளும், சிலப்பதிகாரத்திற் சிறப்பாக அமைந்துள்ளது.

வரிப்பாரை

வரிப்பாரை varippārai, பெ. (n.)

   செம்பாரை; horse-mackerel.

     [வரி1 + பாரை.]

வரிப்பிடித்தம்

 வரிப்பிடித்தம் varippiḍittam, பெ. (n.)

   அரசு குறித்த வருமானத்திற்கு அதிகமான வருவாயிலிருந்து கழிக்கும் தொகை; tax deduction at the source or income.

     [வரி + பிடித்தம். பிடி → பிடித்தம் = கழிவு.]

வரிப்பிரோதிகம்

வரிப்பிரோதிகம் varippirōtigam, பெ. (n.)

வரிப்பிரோத்தம் பார்க்க;see vari-p-pirõttam (சா.அக.);.

     [வரி1 + பிரோதிகம்.]

வரிப்பிரோத்தம்

 வரிப்பிரோத்தம் varippirōttam, பெ. (n.)

   சதகுப்பை (மலை.);; dill seed (சா.அக.);.

வரிப்பிளந்தெழுது-தல்

வரிப்பிளந்தெழுது-தல் varippiḷandeḻududal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கையெழுத்து வரியில் இடைச்செருகி எழுதுதல்; to inter line, to insert in a line.

     [வரி1 + பிளந்து + எழுது.]

வரிப்பிளப்பு

வரிப்பிளப்பு varippiḷappu, பெ. (n.)

   ஆவணங்களில் இடைச்செருகி எழுதுவது; interlineation, an addition in between in a sentence, in deeds.

     [வரி1 + பிள → பிளப்பு.]

வரிப்பிளவை

 வரிப்பிளவை varippiḷavai, பெ. (n.)

வரிப் பிளப்பு பார்க்க;see vari-p-plappu.

     [வரி + பிள → பிளவை.]

வரிப்பீகி

 வரிப்பீகி varippīki, பெ. (n.)

   பேய்க் கும்மட்டி; a creeper, citnillus colocynthis (சா.அக.);.

வரிப்பீர்க்கு

வரிப்பீர்க்கு varippīrkku, பெ. (n.)

   வரியுள்ள பீர்க்கங்காய்; ribbed sponge gourd, used as vegetable-Luffa acutangula.

     [வரி1 + பீர்க்கு.]

வரிப்புறம்

வரிப்புறம் varippuṟam, பெ. (n.)

   அணில் வகை (பிங்.);; striped squirrel.

     [வரி1 + புறம்2 வரி = கோடு.]

வரிப்புறா

வரிப்புறா varippuṟā, பெ. (n.)

   ஒரு வகைப் புறா; a kind of dove (சா.அக.);.

     [வரி1 + புறா.]

வரிப்புலி

வரிப்புலி varippuli, பெ. (n.)

   வேங்கைப்புலி (வின்.);; bengal tiger.

     [வரி1 + புலி. வரி = கோடு.]

     [P]

வரிப்பூச்சு

வரிப்பூச்சு varippūccu, பெ. (n.)

   செங்கல் வரிசைகளுக்கிடையே பூசப்படும் சாந்துப் பூச்சு; paste of lime or cement, sand water, mortar.

     [வரி1 + பூச்சு.]

செங்கல் வரியினை மறைக்கும் பூச்சு.

வரிப்பூனை

வரிப்பூனை varippūṉai, பெ. (n.)

   காட்டுப் பூனை வகை; rusty-spotted cat.

     [வரி1 + பூனை.]

காட்டுப்பூனை. இராக்காலங்களில் கோழிகளைத் தெரியாமல் தூக்கிப் போகும், பூனை வகையே வரிப்பூனையாகும்.

வரிப்பொத்தகக்கணக்கு

வரிப்பொத்தகக்கணக்கு varippottagaggaṇaggu, பெ. (n.)

   1. வரிப் பொத்தகத்தில் வரவு – தரவு முதலான விளத்தங்களை யெழுதும் அதிகாரி; revenue officers in ancient times.

   2. வரிப் பொத்தகம்;see varip-pottagam.

     [வரி + பொத்தகம் + கணக்கு.]

வரிப்பொத்தகம்

வரிப்பொத்தகம்1 varippottagam, பெ. (n.)

   அரசுக்குரிய வரி முதலானவற்றிற்குரிய கணக்குப் புத்தகம்; a denegab or a register, a kind of village account indicating Good tax or cess, patta, survey no etc.

இப்புத்தகத்தில் வரவு, தரவு விளத்த(விவர);ங்களை எழுதும் அதிகாரி,

     ‘வரிப் பொத்தகக் கணக்கர்’ என்று பெயர் பெறுவர்.

     “வரிப்பொத்தகம் சாத்தனூருடையான் குமரனரங்கனும், பருத்தியூர்க் கிழவன் சிங்கன் வெண்காடனும் இருந்து, வரியிலிட்டுக் கொடுத்த ஆனைமங்கலம்” (பெரிய லெய்டன் செப்பேடுகள்);.

     “இவ்வூர் ஆயமும் அந்தராயத்தால் காசு நெல் உள்பட தேவதானமாகக் கொடுத்தோமென்று வரியிலார்க்கும், வரிப்பொத்தகஞ் செய்வார் கட்கும் சொன்னோம்” (S.I.I.Vol.VIl-538);.

     “வரிநெடும் பொத்தகத்து” (கோயில் நான்மணிமாலை);.

   த. பொத்தகம்; Skt. புஸ்தக;

இந்தி. புஸ்தக்.

     [வரி1 + பொத்தகம்.]

 வரிப்பொத்தகம்2 varippottagam, பெ. (n.)

   1. அரசிறைக் கணக்குக்குறிப்பு (கல்.);; tax register.

   2. ஒரு பழைய அலுவல் (உத்தியோகம்); (T.A.S., i, 166);; an ancient office.

     [வரி + பொத்தகம்.]

ஒருகா. நிலவரிக்கணக்கன்

வரிமணல்

வரிமணல் varimaṇal, பெ. (n.)

   அறலினை யுடைய மணல்; sands on the shore, with streakes formed thereon by the action or movements of waves.

 assfluor லகன்றிட்டை”(பட்டினம் 60);.

மறுவ. அரிமணல்.

     [வரி + மணல்.]

வரிமணி

 வரிமணி varimaṇi, பெ. (n.)

   பரவமகளிர் அணியுங் கழுத்தணி வகை; woman a necklace or neck-ornament, worn by parava.

     [வரி + மணி.]

வரிமனை

வரிமனை varimaṉai, பெ. (n.)

   மணல் வீடு; sand house.

     “வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும் மறுமொழி பெறா அன் பெயர்ந்தனன்’ (அகம்-250-8-9);.

     [வரி + மனை.]

வரிமப்பு

 வரிமப்பு varimappu, பெ. (n.)

   வரிவரியாகத் தோன்றும் மேகம், இது கடுமையான காற்று வீசப்போவதற்கு அறிகுறி; scattered cloud being symptoms for storm or tempest or strong winds.

மறுவ. வரிமுகில்

     [வரி + மப்பு.]

வரியங்கம்

வரியங்கம்1 variyaṅgam, பெ. (n.)

   வெள் ; dalbergia paniculata (GIT. 95.);.

 வரியங்கம்2 variyaṅgam, பெ. (n.)

   பன்றி 5ust 608, (L.);; tube-in-tube wood.

     [வரி + அங்கம்.]

வரியச்சு

 வரியச்சு variyaccu, பெ. (n.)

   எழுதுங் தாளி (காகிதத்தி);ண்டியில் வைத்துக்கொள்ளும் கறுப்புக் கோடிட்ட தாள் (வின்.);; black-lined sheet placed under the writing paper to lime writing.

     [வரி + அச்சு. அட்டு → அச்சு.]

வரியணி

வரியணி variyaṇi, பெ. (n.)

   கோடுகள் பொருந்திய அணிகலன்; striped jewells.

     “குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள் வரியணி சிறகின் வண்டுண மலரும்” (நற்-399-2-3);.

     [வரி + அண் → அணி.]

வரியதிகாரி

 வரியதிகாரி variyadikāri, பெ. (n.)

   வரி மதிப்பீடு செய்யும் அரசு அதிகாரி; tax officer.

     [வரி + அதிகாரி. அதிகாரம் → அதிகாரி = வலிமை ஆட்சி.]

வரியம்

 வரியம் variyam, பெ. (n.)

   பெருஞ்சூலி; a tree (சா.அக.);.

வரியரிசி

வரியரிசி variyarisi, பெ. (n.)

   சீரகம் (மலை.);; cumin.

     [வரி1 + அரிசி.]

வரியாடல்

 வரியாடல் variyāṭal, பெ. (n.)

   எழுதுகை (அக.நி.);; writing, penning.

     [வள் → வரி + ஆடல்.]

வரியாட்டு

வரியாட்டு variyāṭṭu, பெ. (n.)

   வரியாத்து, இரேவல் சின்னி; rhubarb root-Rheum emodi (சா.அக.);.

     [வரி1 + ஆட்டு.]

வரியாத்து

 வரியாத்து variyāttu, பெ. (n.)

வரியாத்துக் கிழங்கு பார்க்க;see variyāttu-k-kilargu (சா.அக.);.

வரியாத்துக்கிழங்கு

 வரியாத்துக்கிழங்கு variyāttukkiḻṅgu, பெ. (n.)

   இரேவற்சின்னி (யாழ்.அக.);; rhubarb.

     [வரியாத்து + கிழங்கு.]

வரியான்

வரியான் variyāṉ, பெ. (n.)

   1. ஆதன் (சீவன்); முத்தருள் பிரமவரியார் வகையினன் (கைவல். 55.94);; person belonging to the pirama variyārclass of civan-mutteror attained saints.

   2. ஒகம் இருபத்தேழனு ளொன்று (பஞ்.);; a division of time, one of 27 Ögam.

வரியாரோத்தம்

 வரியாரோத்தம் variyārōttam, பெ. (n.)

வரிப்பிரோத்தம் பார்க்க;see vari-p-pirõttam (சா.அக.);.

மறுவ. சதகுப்பை

வரியிலந்தை

வரியிலந்தை variyilandai, பெ. (n.)

   இலைச் சாற்றில் வெங்கார வகை; a kind of jujub. It’s leaves juice is said to consolidate borax (சா.அக.);.

     [வரி1 + இலந்தை.]

வரியிலார்

வரியிலார் variyilār, பெ. (n.)

   அரசிறை அலுவலர் (கல்.);; revenue officers in ancient times.

     “நம் வரியிலார் வரியிலேயிட்டு” (S.I.I.iii, 36);.

இவ்வூர் ஆயமும், அந்தராயத்தால் காசு, நெல் உள்பட தேவதானமாகக் கொடுத்தோ மென்று வரியிலார்க்கும் வரிப்பொத்தகம் செய்வார்க்கும் சொன்னோம்” (S.1.1. VII.538);.

     [வரி + இல் இடைச்சொல்) + ஆர்.]

வரிவிதிப்பவர் என்பார் திரு.சி.கோவிந்த ராசனார். ஆனால் மொழிஞாயிறு தமது பழந்தமிழாட்சி என்னும் நூலில், தலைநகரிலும், ஊர்களிலும் தண்டப்பட்டு வந்த வரித் தொகைகளைக் கணக்கிற் பதிவு செய்வோர் என்பார்.

இறை, கடமை, ஆயம் உள்ளிட்ட வரிகளை நேரிற்கண்டு, கணக்கிடும் அதிகாரி.

வரியிலிடு

வரியிலிடு1 variyiliḍudal,    20 செ.குன்றாவி. (v.t.)

   சிற்றூரில் (கிராமத்தில்); உள்ள நில அடங்கலிற் புதிய நிலவரிகளைப் பதிவு செய்தல்; to register new taxes in the village land revenue records or accounts.

     “இவ்வூர் சபையார்க்குக் காசு கொடுத்து விலைக்கு கொண்டு சில சரணசேகரநல்லூர் என்னுந் திருநாமத்தால் வரியிலிட்டு இந்நிலம் ஐவேலிக்கும்” (திருவாலீசுவரம் கல்வெட்டு);.

     [வரி + இல் + இடு.]

 வரியிலிடு2 variyiliḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   வரிப்பொத்தகத்திற் பதிதல் (S.I.I.Vol. III, 115);; to enter in the revenue register.

     [வரி + இல் + இடு.]

வரியிலீடு

வரியிலீடு1 variyilīṭu, பெ. (n.)

   1. வரிப் புத்தகம்; tax register.

   2. புதிய வரிகளை நிலவரி கணக்கில் சேர்க்கும் அதிகாரி; a revenue officer responsible to add-new taxes in law revenue accounts.

     “வரியிலீடு உறுவூருடையான் தாழி வீரசோழன்” (பெரிய லெய்டன் செப்பேடுகள்);.

     [வரி + இல் + ஈடு.]

 வரியிலீடு2 variyilīṭu, பெ. (n.)

   1. வரிப் பொத்தகத்திற் பதியும் பதிவு; entry in the revenue register.

   2. வுரிப் பொத்தகத்திற் பதியும் பழைய பதவி; office of keeping the revenue register.

     “வரியிலீடு பாவையுடையானும்” (S. I. I. Vol.i, 16);.

     [வரியிலிடு → வரியிலீடு.]

வரியுரிமைசெய்-தல்

வரியுரிமைசெய்-தல் variyurimaiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   ஊரவை வழிபெறும் வரிமகமைகளை அவ்வூர்க் கோவில் திருப்பணிக்கு உரிமை செய்யும் அரசு ஆணை; a Government order conforming rights to village temples from tax collected by village committee.

பொத்தப்பிச் சோழன் ஆட்சியில் மணிமங்கலம் கோயில் திருப்பணிக்கு விடப்பட்டுள்ளது.

     “அனைத்து ஆயங்களும் திருப்பணிக்கு உடலாகவிட்டோம். இன்னாள் முதல் இன்னிலத்தால் வந்த அளைத்தாயங்களும் ஊருடன் கூட்டாதொழிவதாகச் சொன்னோம்” (S.1.1. Vol. VI. 256);.

     [வரிகளை + திருப்பணிக்கு + உரிமை + செய்தல்.]

வரியூமத்தை

 வரியூமத்தை variyūmattai, பெ. (n.)

   ஊமத்தஞ் செடிவகையுளொன்று; a kind of dhatura, a devil’s apple variety (சா.அக.);.

     [வரி + உன்மத்தம் → ஊமத்தை.]

வரியெழுச்சிரோகம்

 வரியெழுச்சிரோகம் variyeḻuccirōkam, பெ. (n.)

   வெள் விழியில் தேமலைப் போல் வட்டமாகத் தசையைப் பரவச் செய்யும் ஓர்வகைக் கண்ணோய்; an eye disease affecting the white part of eye ball marked by morbid growth of flesh on the white coat of the eye (சா.அக.);.

     [வரியெழுச்சி + Skt. raga → த. ரோகம். வரியெழுச்சி = வெள்விழியில் வரிவரியாக வளரும் தசை வளர்ச்சி.]

வரியேய்ப்பு

 வரியேய்ப்பு variyēyppu, பெ. (n.)

   சட்டப்படி அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுதல்; tax evasion.

வரியேய்ப்பு செய்பவர், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர் ஆவர் (இ.வ.);.

     [வரி + ஏய்ப்பு.]

வரியொட்டி

வரியொட்டி variyoṭṭi, பெ. (n.)

   மீன் வகை (வின்.);; a kind of fish.

     [வரி1 + ஒட்டி.]

ஒட்டி = ஒட்டு மீன் வகையைச் சார்ந்தது.

வரியோரா

 வரியோரா variyōrā, பெ. (n.)

   கரு வெண்மை கலந்த கபிலநிறமும், செந்நிறப் புள்ளிகளுமுடைய கடல்மீன் வகை (யாழ்.அக.);; sea fish, dark greyish-brown covered with light orange spots.

     [வரி + ஒரா.’ஒரா’ வெண்ணுங் கடல் மீன்வகையு ளொன்று.]

     [P]

வரியோலை

 வரியோலை variyōlai, பெ. (n.)

   உடன்படிக்கை ஆவணம்; deed of agreement.

     “வரியோலை யெழுதி வைத்தபடி” (பெரிய லெய்டன் செப்பேடுகள்);.

     [வரி + ஒலை.]

வரிவகைகள்

 வரிவகைகள் varivagaigaḷ, பெ. (n.)

   பழங்காலத்தில் குடிகள் செலுத்திய வரி வகைகள்; the various kinds of tax in ancient period.

     [வரி + வகைகள்.]

கழகக்காலத்தில், குடிகள் செலுத்திய

   அக்காலத்துக் குடிகளிடத்தில் வாங்கப்பட்ட வரிகளாகத் தேவநேயர் பழந்தமிழாட்சி என்னும் பனுவலுள் பகர்ந்துள்ளது;அங்காடிப் பாட்டம் (அங்காடிக்கூலி);, அச்சுவரி, அட்டுக்கிறை, அடிகாசு, அடிமைக் காசு, அணியிடுவான் வரி, அதிகரணத்தண்டம், அதிகாரப்பேறு (அதிகாரப் பொன்);, அரிகொழி, அரிநட்டி, அரிவாட்பதக்கு, அருந்தோடு, அரைக்கால்வாசி, அழகெருது, அழகெருது காட்சிக் காசு (காட்சியெருதுகாசு);, அழுகற்சாக்கு, அள்ளுக்காக, அளியிடுவான் வரி, அனுப்பு, ஆசுகவிகள் காசு (ஆசீவக் காசு);, ஆசவக் கடமை, ஆட்டைச் சம்மாதம் (ஆட்டைக் காணிக்கை);, ஆண்டெழுத்துத் தேவை, ஆத்திறைப் பாட்டம், ஆதிரைப் பிள்ளையார் நோன்பு, ஆள்நெல், ஆற்றுக்குலை, ஆற்றுப்பாட்டம், இடைப்பாட்டம் (இடைப்பூட்சி, இடைவரி);, இராசாசுரங் காணிக்கை, இருபதக் கட்டி, இலாஞ்சினைப் பேறு, இறைகாவல், இறைச்சோறு, இனவரி (இனக்காசு);, ஈழப்புன்செய் (ஈழம்பூட்சி);, ஈழற்கடி வரி, உகப்பார் பொன் (உகவைப் பொன்);, உப்பாயம் (உப்புக்காக, உப்புகோச்செய்கை);, உபயம் (உபய மார்க்கம்);, உரல்வரி, உல்லியக் கூலி, உலாவு காட்சி, உவச்சவரி, உழுதான் குடி, உள்வரி, உறுபாதை, உறுவுகோல், நிலன்காசு, ஊசிவாசி, ஊத்தைப் பாட்டம், ஊர்க்கணக்கர் சீவிதம் (ஊர்க்கலனை, ஊர்க்கழஞ்சி); ஊர்ச்சரிகை, ஊராட்சி, ஊரிடு வரிப்பாடு, ஊரெட்டு, எட்கடமை (எக்கடமை);, எடுத்துக்கொட்டி, எடைவரி, எருமைப் பொன், எழுவை, ஏணிக்காணம், ஏர்க்காடி, (ஏர்ப்பொன், ஏர்க்காணிக்கை);, ஏரியாயம், ஏல்வை, ஒட்டிதற் கடமை, ஒட்டச்சு, ஒடக்கூலி, கடையடைக்காய், கடையிறை, கண்காணி, கண்காணி கணக்கர் முதல், கண்கூலி, கண்ணாலக் காணம் (கலியாணக் கானம்);, கண்ணிட்டுக் காணம் (கண்ணேட்டுக் காணம்);, கணக்கப்பேறு (கணக்கிலக்கை);,

கதிர்க்காணம், கருவூல வரி, காட்டாள் காசு, காண வட்டம், காணி வெட்டி, காரியவாராய்ச்சி, காலத்தேவை, காவல் பரப்பு (காவற் பேறு);, கீழ்வாரப் பச்சை, குசக்காணம், குடநாழிக் குடிமை (குடிக்காக, குடிக்காணம், குடியிறை);, குதிரை வரி, குதிரை விலாடம், குமாரக்கச்சாணம், குலை வெட்டி, கூலம், கூற்று நெல், கெடுபாதை, கேள்விமகமை, கைக் கணக்கு முதல், கையேற்பு, கொடிக் கடமை, கொட்டைக் கூலி, கோள்நிறை கூலி, சண்டாளப் பேறு, சந்திவிக்கிரகப் பேறு, சாட்டு வரி, சிறுபாடி காவல், சூலவரி (சூலவரிப் பொன்);, செக்கிறை, செக்கு மன்றாடி, செங்கொடிக் காணம், சென்னீர் வெட்டி, சென்னீரமஞ்சி, சேவகக் காசு, சோறுமாடு, தசவந்தம் தட்டடுவு, தட்டாரப்பாட்டம் (தட்டுக்காயம், தட்டொலி); தடிப்பதக்கு தண்டல்மேனி (தண்டலிற் கடமை, தண்டவிலக்கை, தண்டற் கடமை);, தண்ட நாயகர் மகமை, தண்டாளர் முதல், தரகு (தாகு பாட்டம்);, தலையாரிக்கம், தலைவிலை, தறியிறை (தறிப் புடைவை);, தனப்பணம், தாட்பிடியரிசி (தாப்படியரிசி);, தானமானியம், திருமுன் காட்சி, திருமுகக் காணம், திங்கள் மேராமு, திங்கட் சோறு, திங்கள் நெய், திங்கள் மோகம், திரைக்காக, துலாக் கூலி, துலாபார வரி, தேவ குடிமை, தோணிக் கடமை, தோரணக் காணிக்கை, தோலொட்டு, நத்த வரி, நல்லா (நற்பசு);, நல்லாடு, நல்லெருது, நல்லெருமை, நற்கிடா, நாட்டுக் காணிக்கை (நாட்டு வரி, நாட்டு வினியோகம்);, நாட்டு பாதி, நாடு காவல், நாடு தல வாரிக்கை, நிலக்காணிக்கை, நீர்க்கூலி, நீர்நிலக் காசு, நெட்டாள், நெய்விலை, பச்சைப் பணம், பஞ்சுப்பீலி, பட்டடை வரி, பட்டிக்காடி, பட்டிக்கால், பட்டிகைக் காணம், பட்டித் தண்டம் (பட்டிப் பொன்);, பட்டோலைக் காசு, படாங்கழி, படைப்பணம் (படையிலார் முறைமை);, பண்குறுணி, பண்டவெட்டி, பண்ணிக் கூலி, பணவாசி, பணிக்கொத்து, பதுவாரம், பறைத்தறி, பறையிறை, பன்மை, பாசிப்பாட்டம், பாடி காவல், புத்தகம், புதாநாழி, புட்டக விலை, புரவுநெல், புலவரி, புழுகு

     [வரி + Skt. vasita → த. வசிதம்.]

வரிவடிவம்

 வரிவடிவம் varivaḍivam, பெ. (n.)

வரிவடிவு பார்க்க;see vari-Vadivu.

     [வரி + வடிவு → வடிவம். மொழியில் உள்ள ஒலிகளை எழுதுவதற்கான வடிவம்.]

வரிவடிவு

வரிவடிவு varivaḍivu, பெ. (n.)

   ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்று வடிவு (நன்.97. மயிலை.);; written character, written symbol of an articulate sound, dist. fr. oli-Vadivu.

     [வரி + வடிவு.]

செவிப்புலனான, ஒலியைக் கட்புலனாக்கும் குறியே, வரிவடி வென்க.

வரிவனம்

வரிவனம் varivaṉam, பெ. (n.)

   தில்லைமரம் (மலை.);; blinding tree.

     [வரி1 + வனம்.]

வரிவம்

 வரிவம் varivam, பெ. (n.)

   தண்ணீர் விட்டான்; a prickly climber, water root-Asparagus гаcemosus (சா.அக.);.

வரிவம்மமெளலி

 வரிவம்மமெளலி varivammameḷali, பெ. (n.)

   கற்றாழை; aloe (சா.அக.);.

வரிவயம்

வரிவயம் varivayam, பெ. (n.)

   புலி; tiger, as stripped.

     “வரிவயம் பொருத வயக்களிறு போல” (புறநா. 100);.

     [வரி1 + வயம்.]

ஒ.நோ. வயமா.

வரிவரி

 வரிவரி varivari, பெ. (n.)

   தண்ணீர் விட்டான் (தைலவ.); கொடி; climbing asparagus.

வரிவரிசு

 வரிவரிசு varivarisu, பெ. (n.)

   சீரகம்; cumin seed – Cuminum cyminum (சா.அக.);.

வரிவரிமணலி

வரிவரிமணலி varivarimaṇali, பெ. (n.)

   கற்றாழை (சங்.அக.);; aloe.

     [வரி1 + வரி1 + மணலி.]

வரிவலை

வரிவலை varivalai, பெ. (n.)

   வலை வகையு ளொன்று (நற்றிணை. 111);; a kind of net.

     [வாரிவலை → வரிவலை.]

வரிவளி

வரிவளி varivaḷi, பெ. (n.)

வரிவம்மமெளலி பார்க்க;see vari-vamma-mouli (சா.அக.);.

மறுவ. கற்றாழை

     [வரி1 + வளி.]

வரிவளை

வரிவளை varivaḷai, பெ. (n.)

   வளையல் வகையுளொன்று; a kind of bangles.

     “கோல்வளை கழல்வளை வரிவளை யென்னுமா போலே” (திவ். பெரியாழ், 3, 4, 8 வியா. பக். 618);.

     [வரி1 + வள் → வளை.]

வரிவள்ளி

வரிவள்ளி varivaḷḷi, பெ. (n.)

   வெற்றிலை வள்ளிக் கொடி; a climber (சா.அக.);.

     [வரி1 + வள்ளி.]

வரிவழி

வரிவழி varivaḻi, பெ. (n.)

வரிவம் பார்க்க;see varivam (சா.அக.);.

மறுவ. தண்ணீர்விட்டான்

     [வரி1 + வழி.]

வரிவழுக்கை

வரிவழுக்கை varivaḻukkai, பெ. (n.)

   ஓர் வகை வழுக்கை; a baldness (சா.அக.);.

     [வரி1 + வழுக்கை.]

வரிவாளம்

வரிவாளம் varivāḷam, பெ. (n.)

   சுவர் மற்றும் இணைப்புகளிற் பூசப்படும் பூச்சு வேலை; plastering of walls and joints.

     [வரி1 + வாளம்.]

வரிவிதி-த்தல்

வரிவிதி-த்தல் varivididdal,    4 செ.குன்றாவி. (v.t.)

வரிபோடு-தல் பார்க்க;see vari-podu.

     [வரி + விதி.]

 Skt. vidhi → த. விதி.

வரிவிதிப்பு

 வரிவிதிப்பு varividippu, பெ. (n.)

   வரி போடுகை; levy.

சென்ற ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் இன்றியமையாத உணவுப் பொருள்களுக்கு வரிவிதிப்பு தளர்த்தப்பட்டது (உ.வ.);.

     [வரி + விதிப்பு.]

வரிவிலக்கு

வரிவிலக்கு varivilakku, பெ. (n.)

   தண்டுவதான அரசிறை ஒதுக்கம்; tax exemption.

     [வரி1 + விலக்கு.]

வரிவிளம்பரம்

 வரிவிளம்பரம் variviḷambaram, பெ. (n.)

   செய்தித் தாளில் வகைப்படுத்தப்பட்டு, வெளியாகும், இரண்டொரு வரிகளிலான சிறிய விளம்பரம்; brief classified advertisement with a few lines.

வரி விளம்பரப் பகுதிகள் செய்தித்தாள் உரிமையாளருக்கு, அதிகமான வருவாய் ஈட்டித் தருகின்றன (இ.வ.);.

     [வரி + விளம்பரம்.]

வரிவேர்

வரிவேர் varivēr, பெ. (n.)

   அதிமதுரவேர்; liquorice root (சா.அக.);.

     [வரி1 + வேர்.]

வரிவை

வரிவை1 varivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குடியிறை விதித்தல் (வின்.);; to impose or levy a tax.

   2. பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாச்சாரத் தொகை குறிப்பிடுதல் (இ.வ.);; to apportion and levy contributions, as for a common fund.

     [வரி + வை.]

 வரிவை2 varivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   வரிசையாகக் கட்டுதல் (வின்.);; to set in a row, as in brick-laying.

     [வரி1 → வை.]

வரீக்கு

 வரீக்கு varīkku, பெ. (n.)

   இசைக் கமக வகை (பூர்.சங்.எ.);; a kind of grace in music.

வருகம்

வருகம்1 varugam, பெ. (n.)

   1. மயிற்றோகை (யாழ்.அக.);; peacock’s feather.

   2. இலை; leaf.

     [பருகம் → வருகம்.]

 வருகம்2 varugam, பெ. (n.)

   பரிவாரம் (யாழ்.அக.);; train or chain of attendants.

     [அருகம் → வருகம்.]

 வருகம்3 varugam, பெ. (n.)

   வருகை; come in.

     “உலமந்து வருகம் சென்மோ தோழி” (அகநா.106 : 9);.

     “உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரை” (நற்.88:3);.

     ‘கண்டனம் வருகஞ் சென்மோ தோழி’ (குறுந். 275:2);.

     [வா → வரு → வருகம்.]

வருகாலம்

வருகாலம் varukālam, பெ. (n.)

   வருங்காலம்; future.

     “வருகாலஞ் செல்கால மாயினானை” (தேவா. 716, 3);.

மறுவ. எதிர்காலம்.

     [வா → வரு → வரும் + காலம்.]

வருகூடம்

 வருகூடம் varuāṭam, பெ. (n.)

   பித்தளை; brass (சா.அக.);.

வருகை

வருகை varugai, பெ. (n.)

   வந்தடைகை, வரவு (இ.வ.);; advent.

     [வள் → வர் → வார் → வரு → வருகை.]

வருகை என்பது வினைப் பெயராகும். இவ்வருகைக் கருத்து தோன்றிய பாங்கினைத் தேவநேயர் வரையறுப்பது வருமாறு:-

     “ஒருவன் தன் உறைவிடத்தினின்று அல்லது இருப்பிடத்தினின்று, ஒரிடத்திற்குப் போனபின், அங்கிருந்து உறைவிடத்திற்கு வருவது, முன் பின்னாகத் திரும்பியே யாதலால், திரும்பற் கருத்தினின்றே வருகைக் கருத்துப் பிறந்தது. அதனால் திரும்பற் பொருட் சொல்லினின்றே, வருகைப் பொருட்சொல் தோன்றிற்று” (தேவ.13, பக்.59);.

வருகைதரு பேராசிரியர்

 வருகைதரு பேராசிரியர் varugaidarupērāciriyar, பெ. (n.)

   பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், பணிமேற்கொள்ள வருகை தரும் பேராசிரியர்; visiting professor, guest faculty.

     [வரு → வருகை + தா → தரு + பேராசிரியர்.]

வருகைதா(வருகைதரு-தல்)

வருகைதா(வருகைதரு-தல்) varugaidāvarugaidarudal,    18 செ.கு.வி. (v.i.)

   வருதல்; to come, to attend.

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறோம்.

     [வருகை + தா.]

வருகைப்பதிவு

 வருகைப்பதிவு varugaippadivu, பெ. (n.)

   மாணவர், ஊழியர் முதலானோர் தங்களின் வருகையைப் பதிவு செய்தல்; marking attendance by students, workers, etc

     [வருகை + பதிவு.]

வருகைப்பதிவேடு

 வருகைப்பதிவேடு varugaippadivēṭu, பெ. (n.)

   பணியாளர் தத்தம் வருகையைப் பதிவு செய்வதற்காக உள்ள ஏடு; attendance register.

     ‘அலுவலர்கள் காலையில் வந்தவுடன் வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட வேண்டும்’ (உவ);.

     [வருகை + பதிவு + ஏடு.]

வருக்கம்

வருக்கம்1 varukkam, பெ. (n.)

   ஒரு வகை நோய்; a kind of disease (சா.அக.);.

வருக்கரை

 வருக்கரை varukkarai, பெ. (n.)

   பலா; jack tree – Hiterophyllus (சா.அக.);.

வருக்காந்தம்

 வருக்காந்தம் varukkāndam, பெ. (n.)

   நிலாக்கல்; moon stone (சா.அக.);.

வருக்கிலங்கெட்டவன்

 வருக்கிலங்கெட்டவன் varukkilaṅgeṭṭavaṉ, பெ. (n.)

   பயனில்லாதவன் (நெல்லை.);; useless fellow, used in contempt.

     [வரிக்கத்து → வருக்கத்து + கெடு.]

ஒ.நோ. வாய்க்கிலை கெட்டவன்.

வருக்கு

 வருக்கு varukku, பெ. (n.)

   கஞ்சி (யாழ்.அக.);; gruel.

     [வர்க்கு → வருக்கு.]

வருக்கை

வருக்கை1 varukkai, பெ. (n.)

வருக்கைப்பலா பார்க்க;see Varukkai-p-palā.

     “மதுவிம்மு வருக்கையின் சுளையும்” (தேவா. 628, 9);.

ம. வரிக்க.

 வருக்கை2 varukkai, பெ. (n.)

   1. இனம், பிரிவு, வகை; class, division, group.

   2. உயிர், மெய் முதலிய எழுத்துகளின் இனம் (இலக்.);; class of letters of the alphabet, as vowels kindred consonants etc.

     [வருக்கம் → வருக்கை.]

 வருக்கை3 varukkai, பெ. (n.)

   மீன் வகை; a kind of fish.

     “திருக்கை வருக்கை” (குருகூர்ப்.7);.

     [P]

வருக்கைக்கனி

 வருக்கைக்கனி varukkaikkaṉi, பெ. (n.)

   பலாப்பழம்; jack fruit of Artocarpus integrifolia.

     [வருக்கை + கனி. கன் → கன்னு → கன்னி → கனி = பழுத்தல். நன்கு பழுத்துக் கனிந்த பலா.]

வருக்கைப்பலா

வருக்கைப்பலா varukkaippalā, பெ. (n.)

   பலாவகையு ளொன்று (நாமதீப. 294);; a species of jack-tree.

     [வருக்கம் → வருக்கை + பலா வருக்கை = ஓரினம்.]

வருங்கலம்

வருங்கலம் varuṅgalam, பெ. (n.)

   உணவுப் பொருளற்ற ஏனம்; vessel without food, empty vessel.

     “பெருங்களந் தொகுத்த வுழவர்போல விரந்தோர் வருங்கல மல்க வீசி” (அகம்.30-8-9);.

     [வறுங்கலம் → வருங்கலம்.]

வருங்காலம்

வருங்காலம் varuṅgālam, பெ. (n.)

   1. எதிர் வருங்காலப் பகுதி; future.

     “வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய்” (திவ். திருவாய். 3, 1, 5);.

     “வருங்காலம் சொல்லும் பல்லி,

கழுநீர்ப்பானையில் வலியவந்து விழுந்தது போல” (பழ.);.

   2. எதிர்காலம் (இலக்.);; future tense.

மறுவ. எதிர்காலம்.

     [வா → வரு + காலம்.]

வருங்காலவைப்புநிதி

 வருங்காலவைப்புநிதி varuṅgālavaippunidi, பெ. (n.)

   ஊழியரின் மாத ஊதியத்திலிருந்து பிடித்திருக்கும் தொகையும், பணிக்கு அமர்த்திய நிறுவனம் தனது பங்காகச் செலுத்தும் தொகையும் கொண்டு ஏற்படுத்துவதும், பணியிலிருந்து ஒய்வுபெற்ற பின் அளிக்கப்படுவதுமான சேமிப்பு; fund created from out of the contributions of the employee and of the employer payable at retirement (in India);, provident fund.

மறுவ. எய்ப்பினில் வைப்பு.

     [வருங்காலம் + வை → வைப்பு + நிதி.]

 Skt. nidhi → த. நிதி.

வருங்குறுமாம்புல்

 வருங்குறுமாம்புல் varuṅguṟumāmbul, பெ. (n.)

   நெற்பயிரில் காணப்படும் களைப் பயிர்; weeds along with crops in paddy field.

     [வரும் + குறுமாம்புல்.]

வருசு

 வருசு varusu, பெ. (n.)

   அமுக்கிரா; a medicinal root-Withania somnifera (சா.அக.);.

வருஞ்சீவியம்

 வருஞ்சீவியம் varuñjīviyam, பெ. (n.)

   மறுப்பிறப்பு; the future lie-the future state of existence (சா.அக.);.

     [வரும் + சீவியம்.]

 Skt. jivya → த. சீவியம்.

வருடகம்

வருடகம் varuḍagam, பெ. (n.)

   1. முடக் கொற்றான் (மலை.);; balloon vine.

   2. பெரு செந்தொட்டி; a plant (சா.அக.);.

வருடகேதுச்சம்

 வருடகேதுச்சம் varuḍaātuccam, பெ. (n.)

   மூக்கிரட்டை; spreading hog-weed-boerhavia pnocumbens (சா.அக.);.

வருடபலன்

 வருடபலன் varuḍabalaṉ, பெ. (n.)

   ஐந்திரத்தின் (பஞ்சாங்கம்); படி அவ்வவ்வாண்டுக்குக் கோள் (கிரக); நிலையில் உண்டாகும் பலன்; the predictions for the year calculated from the position of the planets at the commencement of the new year.

வருடபுட்பம்

 வருடபுட்பம் varuḍabuḍbam, பெ. (n.)

   தாழை யெனுஞ் செடிவகை; fragrant screw-pine (சா.அக.);.

க. தாழெ.

வருடபுட்பி

 வருடபுட்பி varuḍabuḍbi, பெ. (n.)

   பேராமுட்டி; a kind of plant-pavonia odonata (சா.அக.);.

வருடப்பிறப்பு

வருடப்பிறப்பு varuḍappiṟappu, பெ. (n.)

   1. புது ஆண்டுத் தொடக்கம்; beginning or commencement of a new year.

   2. ஆண்டின் முதல் நாள்; new year day.

வருடம்

வருடம் varuḍam, பெ. (n.)

   1. ஆண்டு (பிங்.);; year.

   2. மழை (பிங்.);

 rain.

     “தேனென்னுங் கால வருடம் வருடிக்க வல்ல” (தக்கயாகப். 68. உரை.);

     [Skt. {} → த. வருடம்]

வருடாபூ

 வருடாபூ varuṭāpū, பெ. (n.)

   சாரணை; fragrant medicinal creeper-Tricanthema monogyna (சா.அக.);.

வருடு-தல்

வருடு-தல் varuḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தடவுதல்; to rub, to massage.

     “செம்புனல் வந்தங் கடிவருட” (தேவா. 112.5);.

மறுவ. தைவருதல், சொரிதல்.

     [வா → வரு → வருடு.]

வருடை

வருடை1 varuḍai, பெ. (n.)

   அரிமாவையுங் கொல்லும் வலிமையுள்ளதாகக் கருதப்பட்ட (சரபம் என்றழைக்கப்பட்ட); பறவை; fabulous bird capable of killing the lion.

மறுவ. எண்காற்புள்.

     [வரு → வருடை.]

 வருடை2 varuḍai, பெ. (n.)

   1. வரையாடு; mountain sheep.

     “வரையாடு வருடைத் தோற்றம் போல” (பட்டினப். 139);.

   2. ஆடு (திவா.);; sheep.

     “தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை” (பதிற்றுப். 6, பதி.);.

     “வேறுவே றினத்த வரைவாழ் வருடை” (அகநா.378:6);.

     “போருடை வருடையும் பாயா” (நற். 359:8);.

   3. மேழவோரை; aries of the zodiac.

வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5);.

   4. சரபம் (பிங்.);; a fabulous animal.

     [வரு → வருடை.]

 வருடை3 varuḍai, பெ. (n.)

   பொறாமை, மாற்சரியம்; envy, jealosy, malice.

     “காமச் செற்றக்குரோத லோபமத வருடை” (தேவா. 1054, 8);.

     [வா → வரு → வருடை.]

வருடைமான்

வருடைமான் varuḍaimāṉ, பெ. (n.)

   வரையாடு (சிலப். 25, 81, கீழ்க்குறிப்பு.);; mountain sheep.

     “செவ்வாரைச் சேக்கை

வருடைமான்மறி” குறுந். 187).

     ‘வருடைமான் குழவிய வளமலைநாடனை’ (கலித்.43:14);.

     [வருடை1 + மான் : மான் = சொல்லாக்க ஈறு.]

வருட்டம்

வருட்டம்1 varuṭṭam, பெ. (n.)

   வேம்பு (மலை.);; neem-Margosa.

     [அரிட்டம் → வருட்டம்.]

 வருட்டம்2 varuṭṭam, பெ. (n.)

   முட்டை (நாமதீப. 255);; egg.

வருட்டு-தல்

வருட்டு-தல் varuṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. தேற்றுதல்; to assure, convince.

     “பின்னும் பலகால் வருட்டி” (பாரத. சம்பவ. 64);. (சூடா.);.

   2. பார்வையாலேயே தப்பவியலாதபடி ஈர்த்துப் பிடித்தல் (கவர்ச்சித்தல்);; to charm, fascinate.

     “வயம்வர வருட்டல் வருவித்திடலகற்றல்” (திருக்காளத். பு.33, 23);.

     [முல் → மல் → மர் → மரு → மருட்டு → வருட்டு.]

வருணகம்

வருணகம்1 varuṇagam, பெ. (n.)

   திலகமரம்; sanders (சா.அக.);.

 வருணகம்2 varuṇagam, பெ. (n.)

   1. சந்தனம் (சங்.அக.);; sandalwood.

   2. மஞ்சாடிமரம்; red-wood.

வருணச்சேது

 வருணச்சேது varuṇaccētu, பெ. (n.)

   மாவிலிங்கம்; a sacred tree (சா.அக.);.

     [வருணம் + சேது.]

வருணனை

வருணனை varuṇaṉai, பெ. (n.)

வண்ணனை2 பார்க்க;see vannanai.

     [வருணா → வருணனை.]

வருணன்

வருணன் varuṇaṉ, பெ. (n.)

   1. வாரணன் பார்க்க;see varanan..

     “வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல். பொருள். 4);.

   2. ஆரியருடைய வருண வழிபாடும், தமிழருடைய வருண வழிபாடும் தம்முள் வேறுபாடுடையன. முதற்குடிமக்களாகிய தமிழர்களுடைய வருணன் என்னும் கடவுட் பெயரை, ஆரியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கினார்களென்பது மிகவும் பொருத்தமாகின்றது; The Aryan God, Varuna was probably the God of the Dravidian tribes being on the borders of the sea to whom the Aryan Rishis accorded a place in the pantheon (Dravidian India P.96);.

     [வாரணம் → வருணன் → வருணம் = கடல் தெய்வம்.]

வரி → வார் → வாரணம். நிலத்தைச் சூழ்ந்துள்ள கடல் வரிதல் = மூடுதல், சூழுதல், வளைதல்.

     “வாரணஞ் சூழ் புவி” (தனிப்பாடல்);

வாரணன் = கடல் தெய்வம், வருணன் = மழைத் தெய்வம்.

வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்); என்பதை மூலமாகக் காட்டி, அனைத்தையும் மூடும் வானம் (All-enveloping sky); என்று பொருள் கூறுவர். தொல்காப்பியர் வருணனைக் கடல் தெய்வமாகவே குறித்துள்ளார். ஆனால் வடவர் மழைத் தெய்வமாகக் குறிப்பர்.

வரிதல் என்னும் சொல்லின் உள்ள வரி என்னும் வேரடி வளைதல் பொருளிலும், மூடுதற் பொருளிலும், சூழ்தல் பொருளிலும், தமிழில் ஆளப்பட்டுள்ளது. (எ.கா.);

     “புண்ணை மறைய வரிந்து” (திவ்.திருவாய்.5:1:5);. தமிழர் வாரணனை என்றும் கடல் தெய்வமாகவே கொண்டனர்.

வரி என்னும் மூலத்திலிருந்தே, வாரணன் என்னும் சொல் தோன்றியுள்ளது. வாரணன் என்ற சொல்லிலிருந்தே வருணன் என்னுஞ்சொல் தோன்றியுள்ளது

     “வருணன் மேய பெரு மணலுலகமும்” (தொல்.951);.

வருணமண்டலம்

 வருணமண்டலம் varuṇamaṇṭalam, பெ. (n.)

   வருணனது உலகம்; region of Varuna.

     [வருணம் + மண்டலம்.]

வருணமுனி

 வருணமுனி varuṇamuṉi, பெ. (n.)

   தண்ணீர் மிட்டான்; a prickly climber-water root (சா.அக.);.

வருணமூலம்

 வருணமூலம் varuṇamūlam, பெ. (n.)

   உலிமடி வேர்; root of garlic pear tree-root of crataeva religiosa (சா.அக.);.

     [வருணம் + மூலம்.]

வருணம்

வருணம்1 varuṇam, பெ. (n.)

   1. நீர் (பிங்.);; water.

   2. சதயநாள் (பிங்.);; the 24th naksatra.

     [வருண → வருணம்.]

 வருணம்2 varuṇam, பெ. (n.)

   மாவிலிங்கம்; sacred tree – garlic pear tree – Cratacra religiosa (சா.அக.);.

வருணர்பாட்டியல்

வருணர்பாட்டியல் varuṇarpāṭṭiyal, பெ. (n.)

   பாட்டியல் நூல்களில் ஒன்று (இலக். வி. 886, உரை);; a work on poetics.

     [வருணர் + பாட்டியல்.]

வருணவதி

 வருணவதி varuṇavadi, பெ. (n.)

   மஞ்சள் (சங்.அக.);; turmeric.

     [வருண + வதி.]

வருணவுலிமிடி

 வருணவுலிமிடி varuṇavulimiḍi, பெ. (n.)

   கருப்பு உப்பிலாங் கொடி; a twiner black variety of உப்பிலாங் கொடி (சா.அக.);.

வருணாத்தமசை

 வருணாத்தமசை varuṇāttamasai, பெ. (n.)

   கள்; toddy (சா.அக.);.

வருணாவரிசி

 வருணாவரிசி varuṇāvarisi, பெ. (n.)

   வெட்பாலரிசி; a tree – Wrightinana tinctoria (சா.அக.);.

வருணி

வருணி1 varuṇi, பெ. (n.)

   கண்களுக்கு (விகற்பமான); மாறுபட்ட நிறங்களைக் கொடுக்கும் கருத்த விழிக்குள் வட்டித்த வடிவில் உற்பத்தி சவ்வு; a kind of coloured curtain in the anterior part of the eye perforated by the pupil for the transmission of light Iris (சா.அக.);.

     [வரு → வருணி.]

 வருணி2 varuṇi, பெ. (n.)

   பொன் (சங்.அக.);; gold.

     [வர்ணி → வருணி.]

வருணியின்மை

 வருணியின்மை varuṇiyiṉmai, பெ. (n.)

   கண்களில் நிறமின்மை; inderemia-absence (சா.அக.);.

     [வருணி + இன்மை.]

வருதல்

 வருதல் varudal, தொ.பெ. (vbl.n.)

   வரல்; coming.

 T. ra, Ka., Tu, bā, Ma. Vā

     [வள் → வர் → வா → வரு → வருதல்.]

வள் என்னும் முதனிலையினின்றே, வருதல், வருகை என்னும் சொற்கள் முகிழ்த்தன. வளைதல், வட்டமாய் வளைதல், வளைந்து, எழுந்து, நடந்து வருதலே, வருதல் என்னும் சொல்லின் பொருண்மையாகும். வளைதற் கருத்தினின்றே வருதற் கருத்து முகிழ்த்ததென்பார் மொழிஞாயிறு. தமிழின்கண் அமைந்த வினைச்சொற்களின் முதனிலை யனைத்தும், பெரும்பாலும் ஏவல் வொருமை வடிவிலேயே யுள்ளதால், வருதல் என்னும் தொழிற் பெயரின் முதனிலையும்,

     ‘வா’ என்னும் ஏவலொருமை யினின்று தோன்றியது, எனலாம்.

வருதி

வருதி1 varudi, பெ. (n.)

   1. ஆணை; order.

   2. அனுமதி; permission.

     “வாய்க் கேள்வியர்க்கு வருதி செய்தான்” (தனிப்பா.);.

     [வர் → வா → வரு → வருதி.]

 வருதி2 varudi, பெ. (n.)

   வருதல்; come in.

     “இரவுச் சிறுநெறி தமியை வருதி” (அகநா. 318:4);.

     “பகலும் வருதி பல்பூங் கானல்” (நற். 223 : 3);.

     “மாறி வருதி மலைமறைந் தொளித்தி” (புறநா. 8:8);.

     [வர் → வா → வரு → வருதி.]

வருத்தக்காரன்

 வருத்தக்காரன் varuttakkāraṉ, பெ. (n.)

   நோயாளி (இலங்கை);; patient, ailing or sick person.

     ‘வீட்டில் இரண்டு வருத்தக்காரர்கள்’.

மறுவ. பிணியாளி, நோவாளி.

     [வருந்து (த.வி.); → வருத்து (பி.வி); → வருத்தம் + காரன்.]

வருத்தம்

வருத்தம்1 varuttam, பெ. (n.)

   1. மனதிற்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளினால் உண்டாகும் துன்பம்; suffering, pain, grief.

     “படுகடுங்களிற்றின் வருத்தஞ் சொலிய” (அகநா.8);.

     “உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி” (புறநா. 150 : 4);.

     “உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது” (குறுந். 307:5);.

     “அலமரல் வருத்தம் தீர” (நற்.9:3);. வருத்தம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் (உ.வ.);. அவ்வாறு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் (இ.வ.);.

   2. கடுமை, இடுக்கண், முட்டுப்பாடு; difficulty, misfortune, bottleneck.

   3. மறைவுற்ற உறவினர் குறித்து ஏற்படும் மன உளைவு; regret. சித்தப்பாவின் எதிர்பாரா மறைவால், குடும்பமே வருத்தத்தில் மூழ்கியது.

   4. ஆற்றல், சுமை, நலிவு, முயற்சிக்கடுமை; stain, impediment.

     “மெய்வருத்தம் பாரார்” (நீதிநெறி. 53);.

   5. முயற்சி; effort.

     “ஆற்றின் வருந்தா வருத்தம்” குறள், 468),

   6. அரிதில் நிகழ்வது; that which has very little chance of occuring, very rare.

அவன் பிழைப்பது வருத்தம் (இ.வ.);.

   7. களைப்பு; exhaustion, weariness, fatigue.

     “அசைந்து கடைந்த வருத்தமோ” (திவ். இயற். 3, 64);.

   8. நோயாளியின் பாதுகாப்பற்ற நிலை; critical condition, as of a patient.

     “அவனுக்கு வருத்தமாயிருக்கிறது”

     “வலங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது” (நற். 47, 2);.

   9. ஒருவர்மேல், மற்றவருக்கு மனத்தாங்கல்; complaint, grievance.

கேட்டவுடன் பணம் தராததால், அவனுக்கு என்மேல் வருத்தம் (உ.வ.);.

     [வருந்து (த.வி.); → வருத்து → வருத்தம் (பி.வி.);.]

 வருத்தம்2 varuttam, பெ. (n.)

   1. நோய்;   உடல் நலிவு (யாழ்ப்.);; weakness.

   2. கோளாறு; malady.

குழந்தைக்கு என்ன வருத்தம்.

     [வர் → வரு → வருத்தம்.]

வருத்தவுப்பு

 வருத்தவுப்பு varuttavuppu, பெ. (n.)

   வறுத்தவுப்பு; fried salt useful for those on diet (சா.அக.);.

     [வறுத்தவுப்பு → வருத்தவுப்பு.]

வருத்தாடு

 வருத்தாடு varuttāṭu, பெ.(n.)

வெளியூர் ஆடு

 goats from other places. (கொ.வ.);

     [வரத்து(விற்பனைக்கு வந்த);+ஆடு-வரத்தாடு -வருத்தாடு (கொ.வ.);

வருத்தி

 வருத்தி varutti, பெ. (n.)

   மணியின் கீழ்ப் பதித்து வைக்கும் வண்ணத்தகடு (யாழ்.அக.);; foil.

வருத்தித்தல்

 வருத்தித்தல் varuttittal, பெ. (n.)

   துகிரி கையால் படிப்படியாக வண்ணஞ்சேர்க்கும் முறை; adding colour little bylittle by brush.

     [வருத்து-வருத்தித்தல்]

வருத்து

வருத்து1 varuddudal,    15 செ.குன்றாவி. (v.t.)

   1. வருவித்தல்; to cause to come, to fetch, to get, obtain.

   2. ஓவியமெழுதுதல்; to paint, sketch, portrait.

     “நினைப்பென்னுந் துகிலிகையால வருத்தித்து” (சீவக. 180);.

     “உமையிடத் துர்க்கையை வருத்தி” (உபதேசகா. சூராதி. 132);.

   3. மனப்பாடஞ் செய்தல் (இ.வ.);; to learn by heart, as a lesson, mug up.

     [வள் → வர் → வரு → வருத்து.]

 வருத்து2 varuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வருந்தச் செய்தல்; to cause, pain, to afflict vex.

     “வருத்துந் தெய்வங்களும்” (மதுரைக். 632);.

   2. பயில்வித்தல்; to train.

     “அன்னான் வருத்து வாளிளைஞர்” (திருவிளை. அங்கம். 6);.

   3. துயரங்கொள்ளச் செய்தல்;   துன்பப்பட வைத்தல்; to make one sad, to make one feel sorry.

அவரது பேச்சு அவளை மிகவும் வருத்தியது (உ.வ.);. அல்லும் பகலும் வருத்தும் சிக்கல் இது (இ.வ.);.

   4. ஒருவர், தம்மைக் கடும் முயற்சிக்கு உட்படுத்திக் கொண்டு உழைத்தல்; to strain oneself.

உங்களை இப்படி வருத்திக் கொண்டு இரவு பகலாக உழைக்க வேண்டுமா?

     [வருந்து – (த.வி.); → வருத்து (பி.வி);.]

 வருத்து3 varuttu, பெ. (n.)

   வருகை; advent, coming in, arrival.

     [வா → வரு → வருத்து.]

வருநர்

வருநர் varunar, பெ. (n.)

   1. புதியதாய் வருபவர்; new comers, stranger.

     “வருநர்க்கு வரையா வளநகர்” (குறிஞ்சிப்.202);.

   2. விருந்தினர்; guests.

     “வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை” (புறநா.10);.

     “உள்ளி வருந ருலைவு நனி தீர” (புறநா. 158:14);.

     [வா → வரு → வருநர்.]

வருநாள்

வருநாள் varunāḷ, பெ. (n.)

   எதிர்வருங் காலம்; future.

     “கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க” (திருக்கோ. 44);.

     [வா → வரு + நாள்.]

வருந்தி

 வருந்தி varundi, கு.வி.எ. (adv.)

   பணிந்து, மிகவும் வேண்டி; earnestly.

எவ்வளவோ வருந்திக் கூப்பிட்டும் திருமணத்திற்கு அவன் வரவில்லை (உ.வ.);.

     [வருந்து → வருந்தி.]

வருந்திக்கழி-த்தல்

வருந்திக்கழி-த்தல் varundikkaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   துன்பத்துடன் காலம் போக்குதல் (வின்.);; to pass one’s time in suffering or grief or agony.

     [வருந்து → வருந்தி + கழி.]

வருந்திக்கூப்பிடு-தல்

வருந்திக்கூப்பிடு-தல் varundikāppiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

வருந்தியழைத்தல் பார்க்க;see varundi-y-alai.

வருந்திக் கூப்பிட்டும் புதுமனை புகுவிழாவிற்கு நண்பர் வரவில்லை (உ.வ.);.

     [வருந்து → வருந்தி + கூப்பிடு.]

வருந்திக்கேட்டல்

 வருந்திக்கேட்டல் varundikāṭṭal, தொ.பெ. (vbl.n.)

வருந்திக்கேள்-தல் பார்க்க;see Varundi-k-kel.

     [வருந்து → வருந்தி + கேட்டல்.]

வருந்திக்கேள்-தல்

வருந்திக்கேள்-தல் varundikāḷtal,    11 செ.குன்றாவி. (v.t.)

   கெஞ்சுதல், இறைஞ்சுதல்; to beseech, to beg earnestly, to entreat, to solicit pressingly, to importune.

     [வருந்து → வருந்தி + கேள்.]

வருந்திப்பிழை-த்தல்

வருந்திப்பிழை-த்தல் varundippiḻaittal,    4 செ.கு.வி. (v.i.)

   வறுமையில் நாட்களைக் கடத்துதல்; to lead life under poverty.

     [வருந்து → வருந்தி + பிழை.]

வருந்தியழை-த்தல்

வருந்தியழை-த்தல் varundiyaḻaittal,    4 செ.கு.வி. (v.i.)

   மிகவும் வேண்டிக் கூப்பிடுதல்; to invite emphaticaly.

நண்பர் எவ்வளவோ வருந்தியழைத்தும், உடல் நலிவுற்றதால், அவரது மகன் திருமணத்திற்குச் செல்ல முடியாமற் போய்விட்டது (உ.வ.);.

     [வருந்தி + அழை.]

வருந்தியேங்கு-தல்

வருந்தியேங்கு-தல் varundiyēṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவர்தம் ஈடுசெய்யவியலா இழப்பினை யெண்ணியும், புலம்பியும் துன்பவுணர்வு கொள்ளுதல்; to feel sorry, to bemoan.

ஈடுசெய்யவியலாத நண்பனின் மறைவால், வருந்தியேங்கும் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றுவார் யார்?

     [வருந்தி + ஏங்கு-, ஏ → ஏங்கு = மனம் வாடுதல். ஈடு கட்ட வொண்ணா இழப்பினை யெண்ணிப் புலம்புதல்.]

வருந்து-தல்

வருந்து-தல் varundudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. துன்புறுதல்; to suffer, to be distressed, tortured or grieved.

     “காமமுழந்து வருந்தினார்க்கு” (குறள். 1131);

படிக்காமல் ஊர் சுற்றியதற்காக இப்போது வருந்திப் பயனில்லை (உ.வ.);.

உங்களுக்கு உதவ முடியாததற்காக வருந்துகிறேன் (இ.வ.);.

   2. உடல் மெலிதல்; to become emaciated.

     “வாணுதன் மேனி வருந்தா திருப்ப” (மணிமே. 23, 62);.

   3. மிக முயலுதல்; to take pains make great efforts.

     “ஆற்றின் வருந்தா வருத்தம்” (குறள். 468);.

   4. வருந்தி வேண்டிக் கொள்ளுதல்; to make a supplication.

     ‘கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது’.

   5. உடல் வலியினை யுணர்ந்து வருந்துதல்; to strain oneself.

உடல் வருந்த உழைக்கும் வேளாண் தொழிலால் அதிகப் பலன் இல்லை (இ.வ.);.

     [வறள் → வரல் → வரு → வருந்து.]

நெஞ்சம் காய்ந்து போதல். நெஞ்சம் குளிர்தலால், மட்டற்ற மகிழ்ச்சியேற்படுவது மாந்தர்தம் இயல்பேயாகும். உள்ளம் வறண்டுபோதலை, அதாவது நெஞ்சம் காய்ந்து வருந்தும் தன்மையை, ஒருவர்தம் முகம்

உணர்த்துவது அனைவரும் அறிந்ததே. வருந்துதல், வருத்துதல், போன்ற சொற்கள் எல்லாம் பண்பினை வெளிப்படுத்தும் வினைச் சொற்களாகும். அதனாற்றான், வள்ளுவரும்,

     “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்” – (குறள், 706);

என்று மொழிந்துள்ளார் எனலாம்.

வருந்துதல் என்னுஞ் சொல், நெஞ்சம் காய்தல், காய்ந்து வறண்டு போதல், துன்பத்தினால் முகம் சுருங்குதல் என்னும் பண்புத் பொருண்மைகளின் வெளிப்பாடு எனலாம்.

வருந்துரு

 வருந்துரு varunduru, பெ. (n.)

முள்ளிலவு மரம் (மலை.);

 red-rlowered silk-cotton tre.

வருந்தூரு

 வருந்தூரு varundūru, பெ. (n.)

வருந்துரு பார்க்க;see varunduru (சா.அக.);.

வருபிறப்பு

வருபிறப்பு varubiṟabbu, பெ. (n.)

   1. மறு பிறப்பு (நாமதீப. 690, உரை.);; next-birth, rebirth.

   2. மறுமை; life after death, reincarnation.

மறுவ. மறுபிறப்பு

     [வா → வரு + பிறப்பு.]

வருபுனல்

வருபுனல் varubuṉal, பெ. (n.)

   1. பெருகி வரும் நீர்; rising, swelling or overflowing water, flood or storm water.

     “வருபுனலும் வாய்ந்த மலையும்” (குறள். 737);.

   2. ஆறு (பிங்.);; river.

   3. ஆற்று நீரும் ஊற்று நீரு மல்லாத வேற்றுநீர் (யாழ்.அக.);; water other than river or spring water.

     [வரு + புனல்.]

வருபொருள்

வருபொருள் varuboruḷ, பெ. (n.)

   1. எதிர் கால நிகழ்ச்சி; future event.

     “மந்திரிக் கழகு வருபொருளுரைத்தல்” (நறுந்);.

   2. வருவதன் கருத்து; purpose or object of one’s coming.

     “மாமறையாளன் வருபொருளுரைப்போன்” (சிலம். 11:34);.

     [வரு + பொருள்.]

வருபோகம்

வருபோகம் varupōkam, பெ. (n.)

   மறுபோக விளைவு; future crop or next seasonal produce.

     “பெருங்கடன்கள்….. வருபோகத்துத் தருவல்” (திருவாலவா. 50.6);.

     [வரு + பூகம் → போகம்.]

வருமதனம்

 வருமதனம் varumadaṉam, பெ. (n.)

   கன்னல் சருக்கரை; cane sugar.

வருமதி

 வருமதி varumadi, பெ. (n.)

   வரும்படி, வருமானம், வரவு (யாழ்.அக.);; income, source of in income, receipt.

     ‘அவரிடமிருந்து எனக்கு ஆயிரம் ரூபாய் வருமதி இருக்கிறது’ (இ.வ.);.

     [வா → வரு + மதி. மதி = மதிப்புமிக்க வருவாய்.]

ஒ.நோ. வெகுமதி.

வருமன்

வருமன்1 varumaṉ, பெ. (n.)

   மன்னர் பூண்டு கொள்ளுஞ் சிறப்புப் பெயர்; title of the kings.

     “திண்டிறற் சித்திர வரும னென்பவே” (பிரமோத். 8, 11);.

     [வர்மன் → வருமன்.]

வருமம்

வருமம்1 varumam, பெ. (n.)

   தீராப்பகை; grudge, spite, malevolence.

     “என் பேரில் உனக்கு என்ன வருமம்?” (உ.வ.);.

வருமம் கொண்டவர்க்கு வன்பகைதான் மிஞ்சும் (இவ);.

     [வர்மம் → வருமம்.]

வருமானம்

வருமானம்1 varumāṉam, பெ. (n.)

   1. பணி, தொழில் முதலியவற்றால் கிடைக்கும் பணம்; professional or salaried income, source of income.

வணிகத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றுதான் கடையை ஆரம்பித்தேன் (உ.வ.); வீட்டு வாடகையைத் தவிர வேறு வருமானம் எனக்கு இல்லை (உ.வ.);.

அரசாங்கத்தில் பணிசெய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

   2. வரிகளின் வாயிலாக அரசிற்கு கிடைக்கும் பணம்; revenue.

வரி விதிப்பதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது.

     [வா → வரு + மானம்.]

மானம் அளவை குறித்த பெயரீறு.

 வருமானம்2 varumāṉam, பெ. (n.)

   வருவாய், வரவு, வரும்படி; income, source of income.

க. வரமான.

     [வரு + மானம்1 = மானம் = அளவை குறித்த பின்னொட்டு.]

ஓ.நோ. தேய்மானம்.

வருமானவரி

 வருமானவரி varumāṉavari, பெ. (n.)

   வரும்படியின் மேல் விதிக்கும் அரசிறை (தற்கா.);; income-tax.

     [வருமானம் + வரி.]

ஒருவருடைய ஆண்டு வருமானம், குறிப்பிட்ட அளவிற்கு மேற்படுமானால், அந்த வருமானத்தின் மீது அரசிற்கு செலுத்த வேண்டிய வரி.

வருமாறு

வருமாறு varumāṟu, பெ. (n.)

   1. வருந்தன்மை, வரும்விதம்; which is as follows.

   2. நிகழ்ச்சி; order of occurrence.

     [வா → வரு + ஆறு.]

வருமுலையாரித்தி

வருமுலையாரித்தி varumulaiyāritti, பெ. (n.)

   கழகக்கால பெண்பாற் புலவர்; an ancient Sargam poetess.

குறுந்தொகையில் 176-ம் பாடலை பாடியுள்ளார். நெஞ்சத்தின் கலக்கத்துக்கு மழைநீரின் கலக்கத்தை உவமையாக கூறியுள்ளார்.

     “மழைபொழியும் இயற்கை நிகழ்வினை, வாழ்வியல் நிகழ்வுடன் இனைத்துக் கூறியுள்ள” (குறுந்.176); பாடல் வருமாறு:-

     “ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்

பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்

நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை

வரைமுதிர் தேனிற் போகி-யோனே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ

வேறுபுல னன்னாட்டுப் பெய்த

ஏறுடை மழையிற் கலுழுமென் னெஞ்சே.” (குறுந்.176);

பற்பல நாளும் என்பால் வந்து, பணிவுடைய மொழிகளைக் கூறி, என்னெஞ்சை இளகச் செய்து, மலையின் முதிர்ந்த தேனிறாலைப் போன்று மனமழிந்து சென்றுவிட்டான். அவன் யாண்டுள னென்பதை யறியேன்.

வருமை

வருமை varumai, பெ. (n.)

   மறுபிறப்பு; next or future birth.

     “வருமையு மிம்மையு நம்மை யளிக்கும் பிராக்களே” (திவ்.திருவாய். 3,7,5);.

     [வா → வரு → வருமை.]

வருமொழி

வருமொழி varumoḻi, பெ. (n.)

   புணர்ந்த இணைச் சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல் (Gram.);; the following or succeeding word in a compound, dist. fr. nilai-moli.

     “நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே” (நன். 151);.

     [வா → வரு + மொழி.]

பணப்பை என்ற சொல்லில்

     ‘பை’ என்பது வருமொழி.

வரும்

வரும் varum, பெ.அ. (adj.)

   1. இனி வருவது; coming, next, successive or ensuring.

   2. எதிர்காலம் குறித்த சொல்; future tense.

     ‘வரும் ஆண்டிலாவது நல்ல மழைப் பெய்யட்டும்’ (உ.வ.);. வரும் அறிவன் கிழமையன்று (புதன்); நாங்கள் ஊருக்குப் போகிறோம். வரும் செல்வம் எல்லாம் நம்மதன்று (பழ.);, வரும்வினை வழியில் நில்லாது (பழ);.

     [வா → வர் → வரு → வரும்.]

வரும்காலம்

வரும்காலம் varumkālam, பெ. (n.)

   1. நிகழ்காலத்தைத் தொடர்ந்து இனிவரும் எதிர்காலம்; future.

   2. வருங்காலம் பார்க்க;see varungalam.

வருங்காலம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்தது போல (உ.வ.);

   3. எதிர்காலத்தைக் குறிப்பது; future-tense.

     ‘ஒடுவான்’ என்ற வினைமுற்றில்,

     ‘வ்’ வரும் காலத்தைச் சுட்டும் இடைநிலை.

     [வருங்காலம் → வரும்காலம்.]

வரும்படி

 வரும்படி varumbaḍi, பெ. (n.)

   வருவாய், வருமானத்திற்கான ஆதாரம்; income, source of income.

போதிய வரும்படி இல்லாததால் கடையை மூடிவிட்டார் (உ.வ.);. வரும்படிக்கு மீறிய செலவால் வறுமையே மிஞ்சும் (இ.வ.);.

     [வரு + படி.]

வரும்விதி

வரும்விதி varumvidi, பெ. (n.)

   1. எதிர் காலத்தில் நிகழ்வதன் பொருட்டு உறுதி செய்யப்பட்ட ஊழ்; befalling destiny.

வரும்விதி நன்மை செய்யுமென்றெண்ணி வீணே இருக்கலாமா? (உ.வ.); அவள் வாழ்வில் வரும் விதியை யார் அறிவார்? (இ.வ.);.

   2. எதிர்கால நிகழ்விலுள்ள இயற்கை யொழுங்கு; befalling law of nature.

வரும் விதி வந்தால் படும் விதிபட வேண்டும் (பழ.);.

     [வா → வர் → வரு + விதி.]

 Skt. vidhi → த. விதி.

வரும்வினை

 வரும்வினை varumviṉai, பெ. (n.)

   எதிர் காலத்தில் நிகழ்வதன் பொருட்டு முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்யும் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு வரும் வினை; future deeds occurring according to the activities of previous birth and present’s birth.

முற்பிறவியின் நற்செயல்களே, எதிர்கால வரும்வினையை உறுதி செய்யும் (இ.வ.);.

     [வருவினை → வரும்வினை.]

வருவதுபோவது

 வருவதுபோவது varuvadupōvadu, பெ. (n.)

   மூச்சு, உயிர்ப்பு (வாசி);; respiration, breathing, inhalation and expiration (சா.அக.);.

     [வருவது + போவது.]

வருவாணிதம்

 வருவாணிதம் varuvāṇidam, பெ. (n.)

   இலவங்கப்பூ; clove, eugenia caryopHyllata (சா.அக.);.

வருவாய்

வருவாய் varuvāy, பெ. (n.)

   1. வரும்படி, வருமானம் (யாழ்.அக.);; income, source of income.

     “வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” (திரிகடு.21);.

   2. தோன்றும் இடம்; origin, source, avenues, means.

     “ஆய்தத்திற்குப் பிறப்பதிகாரத்துள் வருவாய் கூறியவழி” ((நன். 121. உரை);.

வருவாய்த்துறைச் செயலாளர் (இ.வ.);. வருவாய் இல்லாத திருக்கோயில்கள் தமிழகத்தில் மிகுதியாக உள்ளன (உ.வ.);.

     [வா → வரு → வருவாய்.]

வருவாய்மதிப்புஈடு

 வருவாய்மதிப்புஈடு varuvāymadippuīṭu, பெ.(n.)

   வட்டாரம் அல்லது பண்ணையிலிருந்து கிடைக்கக் கூடிய தண்டலின் குத்து மதிப்பு (டவுல்);; estimate valuation, estimate of the amount of revenue which a district or estate may be expected to yield.

     [வருவாய்+மதிப்பு+ஈடு]

வருவாளுண்டிமூலி

 வருவாளுண்டிமூலி varuvāḷuṇṭimūli, பெ. (n.)

   இலந்தை; jujube-a thorny plant Zizyphus jujuba (சா.அக.);.

வருவாழ்வு

 வருவாழ்வு varuvāḻvu, பெ. (n.)

   மறுவாழ்வு; the future span of life rebirth.

     [வா → வரு + வாழ்வு.]

வருவி-த்தல்

வருவி-த்தல் varuvittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வரச்செய்தல்; to cause to come, to fetch, to bring, to get, obtain.

   2. பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்து கொள்ளுதல் (இலக்.);; to supply an ellipsis to complete the sense.

     “நுவலும் என்றதற்கு உலகம் நுவலும் என வருவிக்க” (பதிற்றுப். 61, உரை);.

   3. கொண்டு வருமாறு செய்தல்; to bring from somewhere.

இந்த மருந்து அயல்நாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது (இ.வ.);.

   4. வேண்டாததை ஏற்படுத்துதல்;   இயல்பாக இல்லாததை உண்டாக்குதல்; to invite trouble, etc.;

 to put on a smile.

இயற்கையோடியைந்து வாழும் வகை தெரியார் தங்களுக்குத் தாங்களே அழிவை வருவித்துக் கொள்கின்றனர் (இ.வ.);

அவள் முகத்தில் பொய்யான சிரிப்பை வருவிக்க முயன்றான்.

     [வா → வரு → வருவி.]

வருவிக்குடை

 வருவிக்குடை varuvikkuḍai, பெ. (n.)

   முழங்காற்சிப்பி (கரு.அக.);; knee-cap.

     [வருவியம் + குடை.]

வருவியம்

 வருவியம் varuviyam, பெ. (n.)

   முழங்கால் (சங்.அக.);; knee.

வருவிளி

 வருவிளி varuviḷi, பெ. (n.)

   தப்பிச்சி மரம்; a kind of tree (un-identified); (சா.அக.);.

மறுவ. ஆவிமரம்

வருவு-தல்

வருவு-தல் varuvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   திறத்தல்; to open, as one’s mouth.

     ‘கப்பியமே யென்று வாய் வருவுதலின்’ (நீலகேசி. 375, உரை);.

     [வரு → வருவு.]

 வருவு-தல் varuvudal, செ.குன்றாவி (v.t.)

   தச்சர் பலகையில் குறியிடுவதற்குக் கீறுதல்; to scribe on wooden plank by carpenter.

வருவுமுள்

 வருவுமுள் varuvumuḷ, பெ. (n.)

   மாழையின் மேல் (உலோகம்); கோடுவரையும் உருக்குமுள்; engineer’s scriber for marking gange.

     [வரைவு → வருவு + முள்.]

வரை

வரை1 varaidal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கோடிழுத்தல்;   எழுதுதல் (சூடா.);; to write, inscribe, to draw a line.

வருகை தந்தமை குறித்து மடலொன்று வரைந்தான் (உ.வ.);.

   2. ஓவியமெழுதுதல்; to draw with paint. அது யார் வரைந்த படம் (இ.வ.);

   3. உறுதி செய்தல், நிலைநிறுத்துதல்; to fix, appoint, to ensure, to instal.

     “புகழொடுங் கழிக நம் வரைந்த நாளென” (மலைபடு.557);.

   4. அளவுபடுத்துதல்; to limit.

     “வரையாப் பூச லொண்ணுதன் மகளிர்” (புறநா. 25);.

   5. அடக்குதல்; to restrain.

     “வரைகிலேன் புலன்க ளைந்தும்” (தேவா. 631, 1);.

   6. விலக்குதல்; to exclude.

     “உருவுகொளல் வரையார்” (தொல். எழுத்து. 41);.

   7. கை விடுதல்; to leave, abandon.

     “கொள்கலம் வரைதலின்” (கலித்.133);.

   8. ஏற்றத்தாழ்வு படுத்துதல், வேறுபடுத்துதல்; to differentiate or draw distinctions, to make nice discriminations.

     “கொடைமட மென்பதம்ம வரையாது கொடுத்த லாமே” (சூடா. 9, 10);.

   9. நேர்மையான வழியில் பொருளீட்டுதல்; to acquire or earn by legitimate or honest means

     “வரைபொருள் வேட்கையேன்” (சிலப். 10, 51);.

   10. தனக்குரியதாக்குதல்; to make one’s own;

 to appropriate.

     “அறன் வரையான்” (குறள். 150);. 11 மணஞ்செய்தல்;

 to marry.

     “வெளிப்பட வரைதல் படாமை வரைதல்” (தொல். பொருள். 140);.

   12. புதிய திட்டம் (நெறிமுறைகள்); செயற்பாடுகளை உருவாக்குதல்; to draft a rule, resolution, etc.

அமைச்சரவை விரைவில் புதிய கல்வித்திட்டத்தினை வரையவிருக்கிறது (இ.வ.);.

தெ. வ்ராயு.

     [வரி → வரை.]

 வரை2 varai, பெ. (n.)

   1. கோடு; line.

   2. கைவரி (இரேகை); (சூடா.);; line, as in palm of hand or on the fingers; wrinkle, as on the body.

   3. எழுத்து (பிங்.);; letter.

   4. முத்துக் குற்றத்தொன்று (S.I.I.Vol.ll.78);; a defect in pearls.

   5. மூங்கில்; bamboo.

     “மால்வரை நிவந்த வெற்பின்” (திருமுரு.12);.

   6. மலை; mountain.

     “பனிபடு நெடுவரை” (புறநா.6);

     “மால்வரை மிளிர்க்கும் வருமினும் கொடிதே” (நற். 2:10);.

     “வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅற்” (அகநா.3:6);.

   7. மலைமுகடு, மலையுச்சி; mountain top, peak.

     “மந்திவரை வரை பாய” (பரிபா.15, 39);.

   8. பக்கமலை; side-hill, slope of a hill.

     “வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந” (மதுரைக். 42);

   9. கல்; stone.

     “வரையம்பு காயெரி மாரிகளாய்” (திருநூற். 34);.

   10. சிறுவரம்பு (வின்.);; small ridge as of a paddy field.

   11. நீர்க்கரை (சூடா.);; bank, shore.

   12. வரையறை, எல்லை; limit, boundary.

     “வளவரை” (குறள், 480);.

   13. அளவு; measure, extent.

     “உளவரை” (குறள், 480);

   14. விரலிறையளவு (இ.வ.);; the measure of the distance between the joints of the forefinger.

   15. காலம்; time.

     “சிறுவரை” (பு.வெ. 12 பெண்பாற். 17);.

   16. இடம்; place, location.

     “மலைவரை மாலை” (பரிபா. 10, 1);.

   17. ஏற்றத்தாழ்வு நோக்குகை (வின்.);; discrimination, paying attention to differences.

     “அவன் வரைவின்றிக் கொடுப்பான்”.

   தெ. வர;   ம. வரு;க. பரெ.

     [வரி → வரை (கோடு);.]

 வரை3 varai, வி.எ. (adj.)

   வரைக்கும்; as far as, upto, till, until.

 வரை4 varai, பெ. (n.)

   1. திரை; wrinkles in the face.

   2. மாசி பத்திரி; a plant.

   3. கற்பாசி; rock mass (சா.அக.);.

 வரை5 varai, இடை. (part)

   இடம், காலம், அளவு ஆகியவற்றில் குறிப்பிடப்படுவதே, எல்லையாக, இறுதியாக, மேல்வரம்பாக உடையது என்பதைத் தெரிவிப்பது; upto, till.

     “சாலைவரை சென்று திரும்பினான்” (இ.வ.);.

ஏழுமணி வரை காத்திருந்தான் (உ.வ.);.

நீ செய்ததுவரை போதும் (இ.வ.);.

     [வரு → வரை.]

 வரை varai, பெ. (n.)

விதை;seed.

வரைகம்பு

 வரைகம்பு varaigambu, பெ. (n.)

   கம்மாளர் கருவியுள் ஒன்று (யாழ்.அக.);; an instrument used by blacksmiths or metal-workers.

     [வரை + கம்பு.]

வரைக்கடந்தாதி

 வரைக்கடந்தாதி varaikkaḍandāti, பெ. (n.)

   கொசு; mosquito (சா.அக.);.

வரைக்கட்டிடம்

வரைக்கட்டிடம் varaikkaḍḍiḍam, பெ. (n.)

   கட்டிடம் கட்டுவதற்கென்று தெரிவு செய்து சமப்படுத்திய இடம்; levelled plot or land.

     [வரை + கட்டிடம். கட்டு + இடம் = கட்டிடம் கட்டுகின்ற இடம்.]

வரை = இடம், எல்லை. வரை என்னும் சொல் இடம் என்னும் பொருளில் கழகவிலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளது.(எ.கா.);

     “மலைவரை” (பரிபா.10, 1);.

கரடுமுரடாகவிருந்த இடத்தைக் கட்டிடங்கள் கட்டுவதன் பொருட்டுச் செம்மைப்படுத்திய இடம் வரைக்கட்டிடமாகும்.

வரைக்கட்டு

 வரைக்கட்டு varaikkaṭṭu, பெ. (n.)

   மலைப்பக்கத்தில் திருத்திச் சமன்செய்த விளைநிலம் (நாஞ்.);; a levelled arable land adjacent to hill or mountain.

     “வரைக்கட்டுக் கோணம்” (நாஞ். வழ.);.

     [வரை + கட்டு. கள் → கட்டு = அமைத்தல், தோற்றுவித்தல்.]

வரைக்காய்ச்சல்

 வரைக்காய்ச்சல் varaikkāyccal, பெ. (n.)

   சுரத்தின் வகையுளொன்று; mountain fever (சா.அக.);.

     [வரை + காய்ச்சல். காய் → காய்ச்சல் = சுரநோய்.]

வரைக்குடிலம்

 வரைக்குடிலம் varaikkuḍilam, பெ. (n.)

   வங்கக்கல் (யாழ்.அக.);; lead ore.

     [வரை + குடிலம்.]

வரைக்கும்

வரைக்கும்1 varaikkum,    வி.எ. (adv.) எல்லை வரை முடிய; as far as, upto, till, until.

தெ. வரகு

     [வரை → வரைக்கும்.]

 வரைக்கும்2 varaikkum, இடை. (part.)

   பெயரெச்சத்துக்குப் பின் சொற்றொடரில் குறிப்பிடும் செயலுக்குத் தடையாக இருப்பதைக் கூறுவது; after relative participle until, as long as.

அவனாகக் கேட்கும் வரை நீ பணம் தராதே (உ.வ.);.

நீ இந்தப்பணியை முடிக்காத வரை இங்கிருந்து போக முடியாது (இ.வ.);.

தெ. வரகு

     [வரை → வரைக்கும்.]

வரைக்கெண்டை

 வரைக்கெண்டை varaikkeṇṭai, பெ. (n.)

   கெண்டை மீன்வகை; carp.

     [வரை + கெண்டை.]

வரைச்சிறகரிந்தோன்

 வரைச்சிறகரிந்தோன் varaicciṟagarindōṉ, பெ. (n.)

   மலைகளின் சிறகுகளை வெட்டிய இந்திரன் (பிங்.);; Indiran, as one who clipped the wings of the mountains.

     [வரை + சிறகு + அரிந்தோன். சில் → சிற → சிறகு.]

சிறகு = உறுப்பு, வலிமை, பிரிவு. அர் → அரி. அரித்தல் = அறுத்தல், அழித்தல், நீக்குதல். வரிச்சிற்கரிந்தோன் என்னும் சொல், ஈங்கு, மலைகளின் சிறகுகளை அல்லது மலைப் பகுதிகளை வெட்டியழித்த இந்திரன் என்னும் பொருள் பற்றியது.

வரைச்சிலம்பு

வரைச்சிலம்பு varaiccilambu, பெ. (n.)

   மலைச்சாரல்; mountain slope.

     “வரைச் சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு” (பரிபா. 11. 32);.

     [வரை + சிலம்பு. சில் → சிலம்பு. சில் = ஒலிக்குறிப்பு.]

வரைச்சுண்டி

 வரைச்சுண்டி varaiccuṇṭi, பெ. (n.)

   செடி வகையுளொன்று; a kind of plant (சா.அக.);.

     [வரை + சுண்டி.]

வரைத்தாள்

வரைத்தாள் varaittāḷ, பெ. (n.)

   மலையடிவாரம்; foot of a mountain.

     “வரைத்தாள் வாழ்வேன்” (சிலப். 11, 15);.

     [வரை + தாள்.]

வரைநீர்

வரைநீர் varainīr, பெ. (n.)

   மலையருவி (நாமதீப.81);; mountain torrent.

     [வரை + நீர்.]

வரைநெல்

 வரைநெல் varainel, பெ. (n.)

   மலைப்பாங்கான நிலத்தில் விளையும் நெல்வகை (நாஞ்.);; a species of paddy raised in hilly tracts or areas.

     [வரை + நெல்.]

வரைநேமி

வரைநேமி varainēmi, பெ. (n.)

   உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங் கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை; a mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness.

     “வரைநேமியளவுஞ் சென்றகன்றன” (தக்கயாகப். 85);.

     [வரை + Skt. நேமி]

 Skt. nëma → த. நேமி.

வரைந்தநாள்

வரைந்தநாள் varaindanāḷ, பெ. (n.)

   1. வரையறைக்குட்பட்ட நாள்; enclosed days.

   2. வாணாள்; duration of life time.

     [வரைந்த + நாள்.]

வரைபடம்

 வரைபடம் varaibaḍam, பெ. (n.)

   தோற்றம், அமைப்பு, முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்; map, plan, diagram, graph.

     ‘இந்திய வரைபடத்தில் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் பெயர்களை எழுது’ (இ.வ.);.

கட்டடம் வரைபடத்தில் உள்ளபடிதான் கட்டப்படுகிறது (இ.வ.);.

     [வரை + படம்.]

வரைபாய்தல்

வரைபாய்தல் varaipāytal, பெ. (n.)

   மலை யுச்சியிலிருந்து கீழே விழுகை; falling oneself down from the top of a hill, a mode of committing suicide.

     “வாழ்வின் வரையாய்தல் நன்று” (நாலடி. 369);.

     [வரை + பாய்தல்.]

வரைபொருட்பிரிதல்

 வரைபொருட்பிரிதல் varaiboruṭbiridal, பெ. (n.)

   வரைவிடத்துப் பொருள் வயிற்பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி (அகப்.); (திருக்கோ.);; theme treating of the departure of a lover to earn money for his marriage.

     [வரை + பொருள் + பிரிதல்.]

வரைப்பகை

வரைப்பகை varaippagai, பெ. (n.)

   இந்திரன்; Indiran.

     “நான்கெயிற் றொருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை” (கல்லா. 30, 8);.

     [வரை + பகை.]

வரைப்பத்திம்

 வரைப்பத்திம் varaippattim, பெ. (n.)

   மாசிப்பத்திரி; a plant (சா.அக.);.

வரைப்பாசி

 வரைப்பாசி varaippāci, பெ. (n.)

   கற்பாசி; lichen (சா.அக.);.

     [வரை + பாசி.]

வரைப்பாலை

 வரைப்பாலை varaippālai, பெ. (n.)

   மலைப் பகுதியில் விளையும் பாலை; atree growing in mountainous region (சா.அக.);.

     [வரை + பாலை.]

வரைப்பு

வரைப்பு varaippu, பெ. (n.)

   1. எழுதுகை; writing.

     “வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்” (பெருங். உஞ்சைக். 34, 168);

   2. எல்லைu; limit, boundary.

     “இடைநில வரைப்பின்” (மணிமே. 28, 24);.

தண்டமிழ் வரைப்பகங் கொண்டியாக” (புறநா. 198:12);

     “வெம்பா தாக வியனில் வரைப்பென” (பரிபா. 11:80);.

   3. மதில்; wall of a fort or temple.

     “அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழிய” (பட்டினப். 269);.

   4. சுவர் சூழ்ந்த இடம் (சீவக. 949, உரை);; enclosed space, courtyard.

   5. வரைந்து கொள்ளப்பட்ட இடம்; enclosed place.

     “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” (தொல்.செய்யுள்.78);,

   6. மாளிகை; mansion.

     “துணையொடு திளைக்குங் காப்புடை வரைப்பின்”.

   7. உலகம்; world.

     “தண்கடல் வரைப்பில்” (பெரும்பாண். 18);.

     “திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு” (அகநா.63 : 2);.

   8. குளம்; tank.

     “புனல் வரைப்பகம் புகுந்தோறும்” (பொருந. 240);.

     [வரை → வரைப்பு.]

வரைமா

 வரைமா varaimā, பெ. (n.)

   மலைமா; mountain mango (சா.அக.);.

     [வரை + மா.]

வரைமுறை

வரைமுறை varaimuṟai, பெ. (n.)

   இப்படி அல்லது இவ்வளவு என்ற அளவில் நடவடிக்கையைத் திட்டமிடும் கட்டுப்பாடு; restriction.

யாரிடம் என்ன பேசுவது என்ற வரைமுறையே உனக்கு இல்லையா? (இ.வ.);.

   2. எல்லை; delimitation, boundary.

எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.

   3. வகுக்கப்பட்ட செயல்முறை; constraint.

மறுவ. தடைவரம்பு.

     [வரை + முறை.]

ஒரு செயலைச் செயல்படுத்தும் வரையறுத்த திட்டஅமைப்பு அல்லது வகுக்கப்பட்ட முறையே வரைமுறையாகும்.

வரையடுக்கம்

வரையடுக்கம் varaiyaḍukkam, பெ. (n.)

   மலைகளின் தொடர்ச்சி; contiguous mountain range.

     “குருதி ஓண்பூ உருகெழுக் கட்டிப் பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்” (நற்.34:3-4);.

     [வரை + அடுக்கம். அடு அடுக்கு + அம் = பன்மலை வரிசை.]

வரையமிர்து

வரையமிர்து varaiyamirtu, பெ. (n.)

   மலைபடு செல்வம் (சீவக.2110, உரை.);; hilly or mountaneous produce.

     [வரை + அமிர்து. அமிழ்து → அமிர்து.]

வரையரமகளிர்

வரையரமகளிர் varaiyaramagaḷir, பெ. (n.)

   மலைவாழ் தெய்வப் பெண்டிர்; mountain-nymphs.

     “வரையர மகளிரிற் சாஅய்” (குறிஞ்சிப். 195);.

     [வரை + அரமகள் → அரமகளிர் = துன்புறுத்தும் தெய்வப் பெண்.]

வரையரையன்

வரையரையன் varaiyaraiyaṉ, பெ. (n.)

   மலையரசன் (இமவான்);; the Himalayas personified, as the king of the mountains.

     “வரையரையன் மடப்பாவை” (சேதுபு. சருவ. 39);.

     [வரை + அரசன் → அரைசன் → அரையன்.]

வரையறவு

வரையறவு varaiyaṟavu, பெ. (n.)

   1. எல்லை;   வரையறை (யாழ்.அக.);; limit.

   2. அளவு (சங்.அக.);; measuring.

     [வரையறு → வரையறவு.]

வரையறு-த்தல்

வரையறு-த்தல் varaiyaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தீர்மானித்தல், அறுதியிடல், உறுதிசெய்தல்; to settle, decide, determine, ascertain.

இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு ஒழுக்கம் என்பது வேறுபடுவதால், அதை வரையறுத்தல் கடினம் (உ.வ.);.

நீங்கள் தயாரித்த பொருள்கள் நாங்கள் வரையறுத்த தரத்தில் இல்லை (இ.வ.);.

     “மறைகளெல்லா முடிய வரையறுத் துணர்ந்து புகலினும்” (வெங்கைக்க. 89);.

   2. மதிப்பிடுதல் (பிங்.);; to estimate.

   3. எல்லைப்படுத்துதல் (சங்.அக.);; delimit.

   4. வளைத்தல் (யாழ்.அக.);; surround, encircle.

     [வரை + அறு.]

வரையறுக்க

 வரையறுக்க varaiyaṟukka, பெ.எ. (adj.)

   அறுதியிட;உறுதி செய்ய, வகுக்க,

 define, prescribe.

இந்தக் காசுகள் கிடைத்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு. இந்த அரசனின் நாட்டு எல்லையை ஒருவாறு வரையறுக்கலாம் (உ.வ.);.

     [வரையறை → வரையறுக்க. அறு → அறுக்க.]

வரையறுத்தபாட்டியல்

 வரையறுத்தபாட்டியல் varaiyaṟuttapāṭṭiyal, பெ. (n.)

   பாட்டியல்பற்றிய ஒரு நூல்; a treatise on poetics by sambanda munïvar.

     [வரையறு + பாட்டியல்.]

இதனைச் சம்பந்தப்பாட்டியல் என்றும் கூறுவர். இது சீர் முதலான மங்கலங்களை வரையறுத்துக் கூறினமையால், இப் பெயர் பெற்றதெனலாம். இந்

நூலையியற்றிவர் இன்னாரென அறியமுடியவில்லை. சம்பந்த முனிவரின் மாணவர் ஒருவர் இயற்றினார் என்று கருதுகின்றனர்.

வரையறுத்தான்

 வரையறுத்தான் varaiyaṟuttāṉ, பெ. (n.)

   பேய்த்தம் பட்டை அவரை; a creeper belonging to field or garden bean family (சா.அக.);.

தம்பட்டையவரை வகையு ளொன்று. படர்கொடி வகையைச் சார்ந்தது. கறி சமைத்துண்பதற்கு உகந்தது. மருத்துவக் குணமிக்கது என்று சா.அ.க. கூறும்.

வரையறை

வரையறை1 varaiyaṟai, பெ. (n.)

   1. பொருள் வரையறை அல்லது சொற்பொருள் விளக்கம்; definition.

இலக்கியம் என்பது, பொருள் வரையறைக்கு அப்பாற்பட்டது (உ.வ.);. கற்பனைக்கு என்ன வரையறை வகுக்க முடியும்? (இ.வ.);.

   2. வரம்பிடுகை; delimitation.

கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது (இ.வ.);.

     [வரையறு → வரையறை.]

 வரையறை2 varaiyaṟai, பெ. (n.)

   1. எல்லை; limit, boundary.

     “நாள் வரையறை நோக்கும்” (திருவானைக். நாட். 33);.

   2. அளவு (சங்.அக.);; measurement.

   3. அடக்கவொடுக்கம் (இ.வ.);; restraint in manners or behaviour.

   4. கண்டிப்பு (இ.வ.);; strictness.

   5. திட்டம் (இ.வ.);; accuracy, exactness, precision.

   6. முடிபு (இ.வ.);; termination,

   7. வரைமுறை பார்க்க;see varai-murai.

     [வரையறு → வரையறை.]

 வரையறை3 varaiyaṟai, பெ. (n.)

   தான் குறிக்கக்கூடிய பலபொருள்களும் ஒன்றற்கே அல்லது அதன் ஒரு கூற்றிற்கே, சிறப்பாக ஆளப்பெறுதல்; restriction.

     [வரையறு → வரையறை.]

குறிப்பிடப்பட்ட ஒன்றை, இத் தன்மைத்து அல்லது இவ்வளவு என்று, வரையறுத்துக் காட்டுவதே வரையறை.

சொல் குறிக்கும் வரையறைப் பொருள் பொருள்மனை வீடு, மனைவி வீட்டு நிலம் யாம் இருவகைத் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை தன்மைப்பன்மை மணம், குணம், ஒழுக்கம் என்னும் பொதுச் சொற்களை நல்வகைக்கும், நாற்றம், வீச்சம் என்னும் பொதுச் சொற்களைத் தீயவகைக்கும், வழங்குவதும் வரையறையே (தவ.l, பக்.104);.

 வரையறை varaiyaṟai, பெ. (n.)

   ஆளத்தி பாடப்படும் முறை; way to improvise while introducing melody.

     [வரை+அறை]

வரையறைகூறு-தல்

வரையறைகூறு-தல் varaiyaṟaiāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றன் பண்பை வரையறுத்துக் கூறுதல்; to define or prescribe one’s character.

     [வரையறு → வரையறை + கூறு.]

குல் → கூல் → கூறு-. குல் = பொருத்து, பொருத்தமாய்ச் சொல். வரையறை கூறுதல் ஒன்றன் பண்பை, அப் பொருளின் தன்மையையொட்டிப் பொருத்தமாக வரையறுத்து மொழிதல். இச்சொல் குறித்து இளம்பூரணர் இயம்பும், சிறப்பு விளத்தம் வருமாறு :-

     “வரையறை கூறுதலாவது ஒன்றன் பண்பை வரையறுத்தாற் போலக் கூறுவதாகும். விளக்கிக் கூறுகின்ற தன்மையையும் இதனுள் அடக்கலாம்”.

     ‘பரத்தையர் என்ற சொல்லுக்கு இளம்பூரணர் கூறுகின்ற விளக்கம் அவர்க்குரிய பண்பைச் சுருங்கிய சொற்களால் தெளிவாக விளக்குகின்றது.

     “ஆடலும் பாடலும் வல்லாராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகிற ஒருவர் மாட்டும் தாங்காதார்” (இளம்.தொல்.பொருள்.149); என்ற அவ்விளக்கம், அதற்குரியாரை ஓவியமாக்கிக் காட்டுகின்றது. இதனால் அவர்களது தோற்றப் பொலிவும், கலைத் திறமையும், காமத்திளைப்பும், உண்மைப் பண்பும் ஒருசேரக் காட்டப் பெறுகின்றன.

வரையா வீகை

வரையா வீகை varaiyāvīkai, பெ. (n.)

   பெருங்கொடை; unstinted liberality, as making no distinction among the recepients.

     “வரையாவீகைக் குடவர் கோவே” (புறநா. 17);.

     [வரை + ஆ + ஈகை.]

வரையாடு

வரையாடு varaiyāṭu, பெ. (n.)

   1. மான் வகை (M.M.775);; ibex.

   2. காட்டாடு; jungle sheep.

     “ஒங்குமால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன்” (சீவக. 1559);.

     “வரையாடு வருடைத் தோற்றம் போல” (பட்டினம்.139);.

மறுவ. வருடை.

     [வரை + ஆடு.]

வரை = மலை. மலைகளில் மேய்ந்து திரியும் ஆடு. மூலிகைகளை மேய்ந்து வளர்வதால், இதன் கறி மருத்துவக் குணமிக்கது (சா.அக.);.

     [P]

 வரையாடு varaiyāṭu, பெ.(n.)

   மலையாடு; mountain sheep.

த.வ. செம்மறியாடு

     [வரை+ஆடு]

வரையாட்டுக்கொம்பு

 வரையாட்டுக்கொம்பு varaiyāṭṭukkombu, பெ. (n.)

   கம்பளியாட்டுக் கொம்பு; horn of fleec sheep (சா.அக.);.

     [வரையாடு + கொம்பு.]

வரையாத்தி

வரையாத்தி varaiyātti, பெ. (n.)

   மலையாத்தி மரம்; variegated mountain ebony.

     “வரையாத்தி நீழல்” (குற்றா. தல. பராசக்தி. 10);.

     [வரை + ஆத்தி.]

வரையாநுகர்ச்சி

வரையாநுகர்ச்சி varaiyānugarcci, பெ. (n.)

   களவுப்புணர்ச்சி; secret union of lowers.

     “வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி” (பரிபா. 8, 41);.

     [வரை + ஆ + நுகர்ச்சி.

     ‘ஆ’ எதிர்மறை இடை நிலை.]

வரையாப்படங்கு

 வரையாப்படங்கு varaiyāppaḍaṅgu, பெ. (n.)

   ஒரு வகை மருந்துச் செடி; a kind of medicinal herb (சா.அக.);.

வரையாலிகம்

 வரையாலிகம் varaiyāligam, பெ. (n.)

   முல்லை; plant, a species of Jasmine family (சா.அக.);.

வரையால்

 வரையால் varaiyāl, பெ. (n.)

   கல்லால மரம்; a variety of banyan, Ficus infectoria (சா.அக.);.

வரையாழி

வரையாழி varaiyāḻi, பெ. (n.)

   1. சக்கரவாள மலை; a mythical mountain range.

     “கடலாழி வரையாழி தரையாழி” (தக்கயாகப். 6);.

   2. மலை (தக்கயாகப். 6, உரை);; mountain.

     [வரை + ஆழி, ஆல் → ஆள் → ஆழ் → ஆழி = ஞாலத்தைச் சுற்றியமைந்த மலைத் தொடர்.]

வரையில்

 வரையில் varaiyil, இடை. (part.)

வரைமுறை பார்க்க;see varai-murai.

     [வரை → வரையில்.]

வரையுடகம்

 வரையுடகம் varaiyuḍagam, பெ. (n.)

   நல்ல மாதுளை; a species of pomegranate (சா.அக.);.

வயிற்று நோவினைப் போக்கும். இதன் பழச்சாறு, உடலுக்கு மினுமினுப்பைத் தரும். வயிற்றுக் கழிச்சலைப் போக்கும். வயிற்றுக் கடுப்பினைப் போக்கிச் செரிமானமும், பசியையும்

அதிகரிக்கச் செய்யும் என்று சா.அ.க. கூறும்.

வரையும்

 வரையும் varaiyum,    வி.எ. (adv) வரை, எல்லை, முடிய; as far as, upto, till.

     [வரை → வரையும்.]

வரையுறுத்து-தல்

வரையுறுத்து-தல் varaiyuṟuddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

வரையறு-த்தல் பார்க்க;see Varai-y-aru-,

     [வரை + உறுத்து.]

வரையெருக்கு

 வரையெருக்கு varaiyerukku, பெ. (n.)

   மலை எருக்கு; mountain madder shrub

வரையோடு

 வரையோடு varaiyōṭu, பெ. (n.)

   உரலின் வாயோடு (யாழ்ப்.);; ring-shaped stone piece placed over a mortar to prevent the grain from scattering while husking.

     [வரை + ஒடு.]

வரைவாளர்

 வரைவாளர் varaivāḷar, பெ. (n.)

   வரைபடம் வரைபவர்; draftsman, draughtsman.

     [வரை → வரைவு + ஆளர்.]

வரைவாழை

வரைவாழை varaivāḻai, பெ. (n.)

மலைவாழை (சிலப்.11, 83, உரை);:

 a kind of plantain grown in mountain regions.

     [வரை + வாழை.]

வரைவின்மகளிர்

வரைவின்மகளிர் varaiviṉmagaḷir, பெ. (n.)

   பொது மகளிர் (குறள்.);; prostitutes, harlots.

மறுவ. இருமனப்பெண்டிர், கணிகையர், பரத்தையர், விலைமாது, விலைமகள்.

     [வரைவு + இல் → இன் + மகளிர்.]

வரைவின் மகளிர் பற்றி மொழிஞாயிறு கூறுவது :- இல்லறம் புகாதும், கற்பைக் காவாதும், அழகு, துப்புரவு, புனைவு, முத்தமிழ்க்கலை முதலியவற்றால், ஆடவரை மயக்கி, வெளிப்படையான கொடிய நோயும், துப்புரவில்லாது தீ நாற்றம் வீசும் அருவருப்பான தோற்றமுமற்ற ஆடவர்க்கெல்லாம், குலம், மதம், பருவம், நிலைமை முதலான வேறுபாடின்றித் தம் நலத்தைப் பொருட்கு விற்கும் பொதுமகளிர், பலரொடும் வரையாது கூடுதலால் வரைவின் மகளிர் எனப்பட்டனர். (திருக். தமிழ்மரபுரை. பக். 149);.

அழியும் பொருள் மேல் அவாவுறும் மகளிர், ஆரா அன்பினை அறியாத பெண்டிர். ஒருவரிடத்துள்ள பொருளின் அளவிற்கேற்ற வண்ணம், அன்பு செலுத்தும் பண்பில் மகளிரே இருமனப்பெண்டிர். இம்மாய மகளிரைப் பேரறிவாளர், ஒருபோதும் நாடார். கள்ளநெஞ்சங் கொண்ட இவ் வரைவின் மகளிர், குமுகாய மாந்தர்தம் உள்ளத்தை உற்றுநோக்கார். உடம்பை விற்றுப் பொருள் தேடுவதையே தம் வாழ்வின் முடிந்த முடிபாகக் கொள்வர். மன்பதையில் மாய்ந்தொழியும் பகட்டாரவாரப் பொருளினையே, வாழ்பொருளாக நினைந்து, சுவரினை விற்றுச் சித்திரம் வாங்குவது போல், தம்பேரெழில் தொலைத்துப் பெரும்பொருளீட்டி, வாணா ளிறுதியில், அப் பொருளினைத் துய்க்காது, வறிதே மாய்வர். இத்தகைய இழிகுண மங்கையரையே வள்ளுவப் பேராசான் பொருட்பெண்டிர் என்றும், இருமனப் பெண்டிர் என்றும் இடித்துரைக்கின்றார். இத்தகையோரைக் கூடி மகிழ்வோர், பிணத்தைக் கூடும் பேதைமையாளர் எனில் மிகையன்று. இப் பொருண்மை பொதிந்த பொதுமறைப் பாடல்

வருமாறு:-

     “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க

மிருட்டறையி லேதில் பிணந்தழீ இயற்று” (குறள், 914);.

வரைவின் மகளிர் பற்றிப் பரிமேலழகர் கூறுவது:-

     “தம் நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது, அதற்கு ஆவார், ஆகாதார் என்னும் வரைவு இல்லாத மகளிர்”.

மணக்குடவர் கூறுவது :-

     “முயக்கத்தில் வரைவின்மையால், வரைவின் மகளிர் என்று கூறப்பட்டது”.

வரைவின்மாதர்

 வரைவின்மாதர் varaiviṉmātar, பெ. (n.)

வரைவின்மகளிர் பார்க்க;see varavin-magalir.

     [வரைவு + இல் → இன் + மாதர்.]

வரைவிலக்கணம்

 வரைவிலக்கணம் varaivilakkaṇam, பெ. (n.)

   வரையறை; definition.

     “கலைக்கு வரைவிலக்கணம் கூறமுடியுமா?” (உ.வ.);.

     [வரைவு + இலக்கணம்.]

வரைவில்லி

வரைவில்லி varaivilli, பெ. (n.)

   பொதுமகள் (நாமதீப. 5);; prostitute, harlot.

     [வரைவு + இல் + இ

     ‘இ’ உடைமைப் பொருளீறு.]

வரைவு

வரைவு1 varaivu, பெ. (n.)

   1. எழுதுகை (திவா.);; writing.

   2. ஓவியமெழுதுகை; painting.

   3. எல்லை; limit.

     “வரைவின்றிச் செறும் பொழுதின்” (கலித், 8);.

   4. அளவு (வின்.);; measurement.

   5. ஏற்றத்தாழ்வு நோக்குகை; discrimination, paying attention to differences.

     “வரைவறக் கொடுப்போன்” (சூடா. 2, 48);.

   6. திருமணம்; marriage.

     ‘வரைவுநன் றென்னா தகலினும் அவர் வந்து’ (அகநா. 119 : 4);.

     “உரைசா னன்கலம் வரைவில வீசி” (பதிற்று. 54:8);.

   7. ஒழுக்கநெறி; the path of good conduct.

   8. நீக்கம் (திவா.);; rejection, exclusion, deletion.

   9. பிரிவு (வின்.);; separation.

     [வரை → வரைவு.]

வரைவு பற்றி இளம்பூரணர் பொருளதிகாரத்தில் புகல்வது :-

     “வரைவு என்பது செய்யத்தகுவனவும், தவிரத் தகுவனவும், வரைந்து ஒழுகும் ஒழுக்கம்” (இளம்.தொல். பொருள்.256);.

 வரைவு2 varaivu, பெ. (n.)

   திட்டம், சட்டம் முதலியவற்றின் திருத்தத்துக்கு உள்ளாகக் கூறியபடி;   முதற்படி; draft of a plan, etc.; proposal.

அடுத்த ஐந்தாண்டுத் திட்ட வரைவு ஒன்று வகுக்கப்பட்டு வருகிறது (உ.வ.);.

     [வரை → வரைவு.]

வரைவுகடாதல்

வரைவுகடாதல் varaivugaṭātal, பெ. (n.)

   தலைவியை மணம் புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை (அகம்.); (திருக்கோ. 130);; theme of the female companion of the heroine urging the hero to marry her mistress.

     [வரைவு + கடாவுதல் → கடாதல்.]

வரைவுடன்படுதல்

வரைவுடன்படுதல் varaivuḍaṉpaḍudal, பெ. (n.)

   தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்க உடன்படும் அகத்துறை (அகம்.); (கலித்.107, துறைக் குறிப்பு);; theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero.

     [வரைவு + உடன்படுதல்.]

வரைவுமலி-தல்

வரைவுமலி-தல் varaivumalidal,    2 செ.கு.வி. (v.i.)

   மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல்; to feel happy at the prospect of marriage.

     “அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது” (கலித். 37. துறைக்குறிப்பு);.

     [வரைவு + மலி.]

வரைவெழுத்து

 வரைவெழுத்து varaiveḻuttu, பெ. (n.)

   எழுத்தாணி கொண்டு ஏட்டிலெழுதப் பெறும் எழுத்து; stylus for writing on edu (palmra leaf);.

     [வரைவு + எழுத்து.]

வரைவெழுத்தும் வெட்டெழுத்தாகிய வட்டெழுத்தும், எழுதப்படும் கருவிக்கேற்ப வெவ்வேறு சொல்லாற் குறிக்கப் பெறும் கையினால் மணலிலும், மையினால் துணியிலும், சுவரிலும்,

எழுத்தாணியால் ஒலையிலும் வரையும் ஒவ்வொரு வரிவடிவும், ஒரே தொடர்ச்சியாக, கோடிழுத்து வரையும் எழுத்தென்க.

வரைவோலை

 வரைவோலை varaivōlai, பெ.(n.)

   ஒருவருக்குப் பணம் வழங்குமாறு வைப்பகத்திற்குத் தரப்படும் எழுத்து வடிவிலான ஆணை; demand draft.

     [வரைவு+ஒலை]

வர்க்கபுட்பம்

 வர்க்கபுட்பம் varkkabuṭbam, பெ. (n.)

   திருநாமப்பாலை; a plant-Similax macrophlla (சா.அக.);.

     [வர்க்கம் + புட்பம்.]

வர்க்கம்

 வர்க்கம் varkkam, பெ. (n.)

   எருக்கம்பால் (சங்.அக.);; sap or milky exudation of the indian madder shrub.

வர்க்கம்பால்

 வர்க்கம்பால் varkkambāl, பெ. (n.)

   எருக்கம் பால்; milky exudation of Indian madder shrub calotropis gigantia.

வர்ணகெந்தி

 வர்ணகெந்தி varṇagendi, பெ. (n.)

   கெந்தகம்;  sulphur (சா.அக..

வர்ணசுக்கில்

 வர்ணசுக்கில் varṇasukkil, பெ. (n.)

   ஒர் வகைக் கண்ணோய்; a kind of eye disease (சா.அக.);.

வர்ணசுரம்

 வர்ணசுரம் varṇasuram, பெ. (n.)

   சுரவகை; a kind of fever (சா.அக.);.

வர்ணம்

 வர்ணம் varṇam, பெ. (n.)

   பரதநாட்டியத்தில், உச்சகட்டமாகவும், முடிவாகவும் அமைவது; musical notes in a tune which ends the Bharatha natyam and also take it to the high level.

     [வண்ணம்-வர்ணம்]

வர்ணி

வர்ணி varṇi, பெ. (n.)

   1. சாதிலிங்கம்; cinnabar.

   2. மாஞ்ச ரோகணி; a plant pimpernal (சா.அக.);.

வர்த்தங்கி

வர்த்தங்கி varttaṅgi, பெ. (n.)

   1. சப்பங்கி மரம்; sappan-wood tree.

   2. சந்தனமரம் வகை; malay sandal tree.

வர்த்தமானபிப்பிலி

வர்த்தமானபிப்பிலி varttamāṉabibbili, பெ. (n.)

   திப்பிலிகளை 3, 5, 7, 10 என்று இவ்விதமாக நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டு சாப்பிடும் திப்பிலி சூரணம், இது காசம், கோழை நீக்கும் தன்மைத்து; taking in the powder of long peppe increased doses as mentioned above. It is said to cure asthma consumption etc (சா.அக.);.

வர்த்தமானம்

 வர்த்தமானம் varttamāṉam, பெ. (n.)

ஆமணக்கு (தைலவ.தைல.);

 castor-plant.

     [வர்தன → வர்த்தமானம்.]

வர்த்திப்பிரயோகம்

 வர்த்திப்பிரயோகம் varttippirayōkam, பெ. (n.)

   மருக்காரை முதலியவற்றால் செய்து, எருவாயினுள் செலுத்துமோர் வகை நீண்ட குளிகைகள்; long medicated , Ils made of the lant randia dumetorum for insertion into the rectum (சா.அக.);.

     [வர்த்தி + பிரயோகம்.]

வற-த்தல்

வற-த்தல் vaṟattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. காய்தல் (பிங்.);; to dry up.

   2. வறங்கூர், 1 பார்க்க;see varankur.

     “வானம் வறக்குமேல்” (குறள், 18);.

   3. குறைந்து மெலிதல் (வின்.);; to grow lean, to shrink.

   க.பறு, பரி;   ம.வரு;து.வரெ.

     [வல் → வர் → வர → வற.]

வறகண்டி

 வறகண்டி vaṟagaṇṭi, பெ. (n.)

   செங் கருங்காலி; catechu or cutch tree-Acacia catechusundra.

வறகாலி

 வறகாலி vaṟakāli, பெ. (n.)

   வெள்ளாடு; goat.

வறகுசா

 வறகுசா vaṟagucā, பெ. (n.)

காபோகவரிசி;seeds psoralea corylifolia.

வறகுலி

 வறகுலி vaṟaguli, பெ. (n.)

வறகுசா பார்க்க: see Vara-gusá.

வறக்கடை

வறக்கடை vaṟakkaḍai, பெ. (n.)

   தீ முதலியவற்றால் உண்டாகும் வறட்சி; dryness due to heat, fire, etc..

     “விடத்தை யிறையவன் பருகக் காட்டிய வறக்கடை தணப்ப” (காஞ்சிப்பு. பதி. 4);.

     [வறம் + கடு → கடை.]

ஒன்று இன்னொன்றை முட்டும் முனை அதன் கடையாதலால், முட்டற் கருத்திற் கடைமைக் கருத்துத் தோன்றிற்று. பக்கம் நோக்கியதும் மேனோக்கியதும் எனக் கடை இருவகை. பக்கம் நோக்கியது முனை அல்லது கடை மேனோக்கியது உச்சி. தலை என்பது இவ்விரண்டிற்கும் பொது (மு.தா.பக்.100);.

வறக்கணம்

 வறக்கணம் vaṟakkaṇam, பெ. (n.)

வரட்கணம் பார்க்க;see varat-kanam.

வறக்கனி

 வறக்கனி vaṟakkaṉi, பெ. (n.)

   பசளை; spinach-Spinach oleracea.

வறக்காலன்

 வறக்காலன் vaṟakkālaṉ, பெ. (n.)

   தன் குடும்பத்திற்கு போகூழ் ஏற்படும் வகையில் வந்தவன் (வின்.);; one who brings adversity to his family.

     [வறம் + காலன். காலன் = காலமறிந்து உயிர்களைக் கவர்வோன்.]

வறக்காலி

 வறக்காலி vaṟakkāli, பெ. (n.)

   தன் குடும்பத்திற்குத் தீங்கு உண்டாக வந்தவள் (வின்.);; one who brings adversity to her family.

வறக்கு-தல்

வறக்கு-தல் vaṟakkudal,    5 செ.குன்றாவி (v.t.)

வறங்கூர்-தல் பார்க்க;see varankur.

     “வானம் வறக்குமேல்” (குறள், 18);.

     [வற → வறக்கு.]

ஒ.நோ. இல → இலக்கு.

கல → கலக்கு.

வறங்கூர்-தல்

வறங்கூர்-தல் vaṟaṅārtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மழை பெய்யாது போதல்; to fail, as the rain, failure of monsoon.

     “மாரி வறங்கூரின் மன்னுயி ரில்லை” (மணிமே.7, 10);.

   2. வறட்சி மிகுதல்; to become famine-stricken.

     “நாடுவறங்கூரினுமிவ் வோடுவறங் கூராது” (மணிமே. 14, 13);.

     “கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்” (மணிமே.7 9);.

   3. வறுமை மிகுதல்; to become utter poverty.

     [வறம் + கூர்.]

வறசமம்

 வறசமம் vaṟasamam, பெ. (n.)

   குடசப் பாலை; a tree – Nerium antidysentricum.

     [P]

வறடன்

வறடன் vaṟaḍaṉ, பெ. (n.)

   1. உடல் மெலிந்தவன்; lean man.

   2. வலுவிலி; impotent man.

   தெ.வரடு;   க.பரட;ம. வரடெ.

     [வறள் → வறடு → வறடன்.]

ஒருகா. வறட்டன் → வறடன்.

ஆற்றலற்றவன். உடலால் மெலிந்தும் மனவலிமையற்றும் இருப்பவன்.

வறடி

வறடி vaṟaḍi, பெ. (n.)

   1. உடல் மெலிந்தவள்; lean woman. 2 மலடி;

 barren or infertile woman.

     [வறடன் (ஆ.பா.); → வறடி (பெ.பா.);.]

வறடு

வறடு vaṟaḍu, பெ. (n.)

   1. வறட்சி; dryness, meagreness.

   2. கன்றீனா ஆமா முதலியன; barren or infertile animal, as cow etc.

     “வறட்டைக் குனிந்து குளகிட்டும் பாலைக்கறந்து” (திருமந். 505);.

க. பறடு.

     [வறள் → வறடு.]

வறட்கஞ்சா

 வறட்கஞ்சா vaṟaṭkañjā, பெ. (n.)

   ஆரணிக் கஞ்சா; a variety of Kañja.

இதைப் பிடிப்பவர் நலக்கேடுறுவர்.

வறட்கணம்

வறட்கணம்1 vaṟaṭkaṇam, பெ. (n.)

   கணை நோய் வகை; a kind of wasting disease.

 வறட்கணம்2 vaṟaṭkaṇam, பெ. (n.)

   குழந்தைகளுக்கு உடம்பு வறண்டு, நிறம் மாறி, வயிறிரைந்து, இருமல் ஏற்படுகின்ற கணைச்சூடு; a disease among children, caused by congenital heat and market, by dryness of the body, varying complexion, cough, gurgling in the abdomen etc.

     [வறள் + கணம். கணம் = குழந்தை நோய் வகை.]

வறட்கணரோகம்

 வறட்கணரோகம் vaṟaṭkaṇarōkam, பெ. (n.)

வறட்கணம் பார்க்க;see varat-kanam.

     [வறட்கணம் + ரோகம்.]

 Skt. rõga → த. ரோகம்.

வறட்கண்டி

 வறட்கண்டி vaṟaṭkaṇṭi, பெ. (n.)

   ஆடு தின்னாப்பாளை; a bitter plant – Aristolochia bracteata.

வறட்காசம்

 வறட்காசம் vaṟaṭkācam, பெ. (n.)

   வறட்சியினால் ஏற்படும் ஈளை நோய் வகையில் ஒன்று; a kind of consumption or asthma due to dryness.

     [வறள் + காசம். காசம் = நுரையீரலைத் தாக்கி உடலை இளைக்கச் செய்யும் ஈளை நோய்.]

 Skt. kåsa → த. காசம்.

வறட்காமாலை

வறட்காமாலை vaṟaṭkāmālai, பெ. (n.)

   1. உடம்பு, சிறுநீர் மஞ்சள் நிறமாகி, கை, கால் வறட்சி காணுகின்ற ஒரு வகைக் காமாலை நோய்; a variety of jaundice marked by dry swollen body with other symptoms of jaundice.

   2. பித்தம் அதிகமாவதால் ஏற்படும் காமாலை வகை (சீவரட். 135);; a kind of jaundice.

     [வறள் + கமம் → காமம் + ஆலை = காமாலை. காமாலை = பித்தம், மிகுவதா லேற்படும் ஒருவகை நோய்.]

வறட்காய்ச்சல்

வறட்காய்ச்சல்1 vaṟaṭkāyccal, பெ. (n.)

   கடுங் காய்ச்சல்; burning fever with thirst.

     [வறள் + காய்- → காய்ச்சல். காய்ச்சல் = காய்ச்சல் நோய்.]

 வறட்காய்ச்சல்2 vaṟaṭkāyccal, பெ. (n.)

   வறட்சியுண்டாக்கும் சுர நோய் வகை (வின்.);; a kind of emaciating fever.

மறுவ. கடுங்காய்ச்சல்.

     [வறள் + காய்ச்சல்.]

வறட்காற்று

 வறட்காற்று vaṟaṭkāṟṟu, பெ. (n.)

   ஈரப் பசையற்ற காற்று; dry wind.

மறுவ. மேல்கால், மேல்காற்று, கோடைக் காற்று.

     [வரள் + வறள் + காற்று.]

வறட்காலம்

வறட்காலம் vaṟaṭkālam, பெ. (n.)

   1. மழை யில்லாக்காலம்; drought period.

   2. வறட்சிக் காலம்; period of famine.

     [வறள் + காலம்.]

ஒருகா. வறண்ட காலம் → வறட்காலம்.

வறட்கேடு

வறட்கேடு vaṟaṭāṭu, பெ. (n.)

   மழையின்மை யாலுண்டாகுந் துன்பம்; distress due to failure of monsoon or from want of rain.

     “வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே” (திவ். திருப்பா. 3 வ்யா. பக்.56);.

     [வறல் → வறள் + கேடு.]

வறட்கோதம்

 வறட்கோதம் vaṟaṭātam, பெ. (n.)

   மரத்துப் போதல்; dry gangrene.

     [வரள் + கோதம்.]

வறட்சாவி

வறட்சாவி vaṟaṭcāvi, பெ. (n.)

   மழை யின்மையாலான பயிர்ச்சாவி; ithered or blighted crop (புதுக்.கல்.323);.

     [வறள் + சாவி.]

வறட்சி

வறட்சி vaṟaṭci, பெ. (n.)

   1. நீர்ப்பசை யறுகை; drought, dryness. நா வறட்சி (இ.வ.);;

   2. உடலனல்; low temperature of the body.

   3. உடலை மெலியச் செய்யும் நோய் (வின்.);; a wasting disease.

   4. சொறி (வின்.);; eruption on the skin, enzema.

     [வறள் → வறட்சி.]

வறட்சிகரப்பான்

 வறட்சிகரப்பான் vaṟaṭcigarappāṉ, பெ. (n.)

   குழந்தைகளுக்கு உடம்பு முழுவதும் சொறி, சிரங்கு உண்டாகி வெடிக்கின்ற ஓர் கரப்பான் நோய்; a kind of disease with symptoms of enzeme among children.

     [வறட்சி + கரப்பான். கரப்பான் = குழந்தைகட்குண்டாகும் சொறிபுண் வகை.]

வறட்சித்திமிரம்

வறட்சித்திமிரம் vaṟaṭcittimiram, பெ. (n.)

   கண்ணோய் வகை (சீவரட். 264);; a kind of eye disease.

     [வறட்சி + திமிரம்.]

வறட்சிமேகம்

 வறட்சிமேகம் vaṟaṭcimēkam, பெ. (n.)

   சிறுநீரக நோய்; a kind of venereal urinary affection.

     [வறட்சி + மேகம்.]

 Skt. mëga → த. மேகம்.

வறட்சியிருமல்

 வறட்சியிருமல் vaṟaṭciyirumal, பெ. (n.)

வறட்டிருமல் பார்க்க;see vara-t-irumal.

     [வறட்சி + இருமு → இருமல்.]

வறட்சிவாதக்கரப்பான்

 வறட்சிவாதக்கரப்பான் vaṟaṭcivātakkarappāṉ, பெ. (n.)

   இசிவுக்கரப்பான் வகை; a kind of dry exzema.

     [வறட்சி + வாதம் + கரப்பான்.]

 skt vada → த. வாதம்.

வறட்சிவாதம்

 வறட்சிவாதம் vaṟaṭcivātam, பெ. (n.)

   உடம்புகடுத்து சதை துடித்து, எலும்பு நொந்து நாடி விழுந்து காணும் ஒர் ஊதை நோய்; a kind of rheumatic disease marked by weak pulse, twitching of the muscles, pain in the bones, etc.

     [வறட்சி + வாதம்.]

 Skt. våda → த. வாதம்.

வறட்சுண்டி

வறட்சுண்டி vaṟaṭcuṇṭi, பெ. (n.)

   1. ஆடு தின்னாப் பாளை (மலை.);; worm-killer.

   2. சுண்டிவகை (வின்.);; floating sensitive-plant.

     [வறள் + சுண்டி.]

வறட்சூலை

 வறட்சூலை vaṟaṭcūlai, பெ. (n.)

   குடலைச் சுருட்டிப் பிடிக்கும் நோய் வகை (இ.வ.);; a disease causing shooting or stabing pain in the intestines.

     [வறள் + சூலை.]

வறட்சேதம்

 வறட்சேதம் vaṟaṭcētam, பெ. (n.)

   மழை யின்மையால் பயிர் விளையாமை; crops failure due to drought.

     [வறள் + சேதம்.]

வறட்சேம்பு

 வறட்சேம்பு vaṟaṭcēmbu, பெ. (n.)

   சேம்பு வகை (வின்.);; a garden plant, a kind of india kales.

     [வறள் + சேம்பு.]

வறட்சை

 வறட்சை vaṟaṭcai, பெ. (n.)

வறட்சி பார்க்க;see varatci.

வறட்சொறி

வறட்சொறி vaṟaṭcoṟi, பெ. (n.)

   சொறி வகை (இராசவைத். 105);; a kind of itch, enzema.

     [வறள் + சொறி.]

வறட்சோகை

 வறட்சோகை vaṟaṭcōkai, பெ. (n.)

   உடல் வறண்டுபோகச் செய்யுமோர் நோய்; anaemia, with swelling and dryness of the body.

     [வறள் + சோகை.]

வறட்டடை

 வறட்டடை vaṟaḍḍaḍai, பெ. (n.)

   இரும்புச் சட்டியில் சுடப்படும் ஒருவகை அடை; a kind of rice-cake or ragi-cake baked in iron pan.

     [வறடு → வறட்டு + அடு → அடை. அடை = அப்பவகை.]

வறட்டடைப்பான்

 வறட்டடைப்பான் vaṟaḍḍaḍaippāṉ, பெ. (n.)

   மாட்டு நோய் வகை (பெ.மாட்);; a cattle disease.

     [வறடு → வறட்டு + அடைப்பான். அடைப்பான் = கால்நடை நோய் வகை.]

வறட்டல்

 வறட்டல் vaṟaṭṭal, பெ. (n.)

   உலரச் செய்கை; drying, withering.

     [வறடு → வறட்டு → வறட்டல்.]

வறட்டவளை

வறட்டவளை1 vaṟaṭṭavaḷai, பெ. (n.)

   தவளை ஏற்படுத்தும் ஒலி; a frog’s harsh noise or squawking.

     [வறள் + தவளை.]

 வறட்டவளை2 vaṟaṭṭavaḷai, பெ. (n.)

   நீர் நிலைகளில் வாழாமல் நிலப்பரப்பில் வாழும் தவளை; a frog which is lived in landpart.

     [வறள் + தவளை.]

வறட்டாடு

 வறட்டாடு vaṟaṭṭāṭu, பெ. (n.)

   பால் கறவாத ஆடு (இ.வ.);; dry or barren sheep.

மறுவ. மலட்டாடு.

     [வறள் → வறட்டு + ஆடு.]

ஒ.நோ. வறட்டை

வறட்டாமரை

 வறட்டாமரை vaṟaṭṭāmarai, பெ. (n.)

   பாறைப் பகுதிகளில் வளர்ந்த தாமரை; lotus growing in the crevices of rocks.

     [வறள் + தாமரை.]

வறட்டி

 வறட்டி vaṟaṭṭi, பெ. (n.)

   அடைபோல் தட்டிக் காய வைத்த ஆப்பி; bratty, dried cow-dung cake.

   தெ.வரட, வரடி;   க.பறடி, ம.வரதி;து.வரடி.

     [வறள் → வறட்டு → வறட்டி.]

வறட்டிருமல்

வறட்டிருமல் vaṟaṭṭirumal, பெ. (n.)

   தொண்டையை வறளச் செய்யும் இருமல் வகை (சீவரட்.18);; dry-cough.

     [வறடு → வறட்டு + இருமல்.]

வறட்டு-தல்

வறட்டு-தல் vaṟaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வற்றச் செய்தல்; to cause to dry up, to wither.

   2. காயச் செய்தல்; to parch, scorch.

   3. வறுத்தல்; to fry, roast.

     [வறள் → வறடு → வறட்டு.]

வறட்டுஅடை

 வறட்டுஅடை vaṟaḍḍuaḍai, பெ.(n.)

   எண்ணெய் தடவாமல் நெருப்பில் வாட்டி எடுக்கப்படும் அடைபோன்ற உணவு(சுக்கா ரொட்டி);; a kind of adai roasted without using oil.

     [வறட்டு+அடை]

வறட்டுச்சாணை

 வறட்டுச்சாணை vaṟaṭṭuccāṇai, பெ. (n.)

   ஒரு வகைச் சாணைக் கல்; grindstone of black sand and gum lac.

     [வறடு + சாணை.]

வறட்டுச்சொறி

 வறட்டுச்சொறி vaṟaṭṭuccoṟi, பெ. (n.)

   ஒர் வகைச் சொறி; a kind of itch

     [வறட்டு + சொறி.]

வறட்டுச்சோகை

 வறட்டுச்சோகை vaṟaṭṭuccōkai, பெ. (n.)

   சோகை நோய் வகை;     [வறள் → வறட்டு + சோகை.]

வறட்டுப்பசு

வறட்டுப்பசு vaṟaṭṭuppasu, பெ. (n.)

   பால் கறவாத ஆமா (பசு);; dry or barren cow.

     “வறட்டுப் பசுக்க ளென்றுந் தீபற” (திருவுந்தி. 43);.

மறுவ. வறட்டை.

     [வறள் → வறடு → வறட்டு + பசு.]

 Skt. pašu → த. பசு.

     [P]

வறட்டுப்பாக்கு

 வறட்டுப்பாக்கு vaṟaṭṭuppākku, பெ. (n.)

   வெட்டி, அவித்துலர்த்திய முற்றாத பாக்கு; tender arecanut cut, boiled and dried.

     [வறட்டு + பாக்கு.]

வறட்டுப்பிரசவம்

 வறட்டுப்பிரசவம் vaṟaṭṭuppirasavam, பெ. (n.)

   மிகக் கடினமான பிள்ளைப்பேறு; dry labour.

     [வறட்டு + பிரசவம்.]

 Skt. pra-sava → த. பிரசவம்.

வறட்டுப்புழுக்கை

 வறட்டுப்புழுக்கை vaṟaṭṭuppuḻukkai, பெ. (n.)

   தீய்ந்து வெளிப்படும் பிழுக்கை; over dried faeces.

     [வறள் → வறட்டு + புழுக்கை.]

வறட்டுமஞ்சள்

 வறட்டுமஞ்சள் vaṟaṭṭumañjaḷ, பெ. (n.)

வறளிமஞ்சள் பார்க்க (நாஞ்.);;see varali-manjal.

     [வறட்டு + மஞ்சள்.]

வறட்டை

வறட்டை vaṟaṭṭai, பெ. (n.)

வறடு, 2 பார்க்க;see varadu 2.

     “கோல வறட்டை” (திருமந், 505);.

     [வறள் → வறடு → வறட்டு → வறட்டை.]

வறட்பசிரி

 வறட்பசிரி vaṟaṭpasiri, பெ. (n.)

   பசளை வகை (மூ.அ.);; a species of purslane.

     [வறள் + பசிரி.]

வறட்பனி

 வறட்பனி vaṟaṭpaṉi, பெ. (n.)

   ஈரமில்லாப் பனி; less moist fog.

     [வறள் + பனி.]

வறட்பால்

வறட்பால் vaṟaṭpāl, பெ. (n.)

   காய்ந்து கட்டியான பால்; milk boiled into a mass.

     “மேதி…. கல்லறைப் பொழிந்த வறட்பால்” (கல்லா. 95, 22);.

     [வறள் + பால்.]

வறட்புள்தோடம்

வறட்புள்தோடம் vaṟaṭpuḷtōṭam, பெ. (n.)

   குழந்தை நோய் வகை (பாலவா. 69);; a children’s disease.

     [வறள் + புள் + தோடம்.]

 Skt. dõsa → த. தோடம்.

வறட்பூலா

வறட்பூலா vaṟaṭpūlā, பெ. (n.)

   1. வெள்ளைப் பூலா வகை; Indian snowberry.

   2. புல்லாந்தி; a plant flueggia.

     [வறள் + பூலா.]

வறட்பூல்

 வறட்பூல் vaṟaṭpūl, பெ. (n.)

வறட்பூலா (வின்.); பார்க்க;see Varat-pula. [வறள் + பூல்.]

வறட்போக்கிரி

 வறட்போக்கிரி vaṟaṭpōkkiri, பெ. (n.)

   வெட்கங் கெட்டவன் (இ.வ.);; impudent or impertinent rogue, immodest person.

     [வறள் + போக்கிலி → போக்கிரி.]

வறண்டல்

 வறண்டல் vaṟaṇṭal, பெ. (n.)

   உலர்த்துகை; hot and dry or wither.

வறண்டி

வறண்டி vaṟaṇṭi, பெ. (n.)

   1. குப்பை வாருங் கருவி; rake, harrow.

   2. வழிக்குங் கருவி; a kind of spatula.

     [பறண்டு → வறண்டு → வறண்டி.]

     [P]

வறண்டு-தல்

வறண்டு-தல் vaṟaṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. தெள்ளுதல் (பிங்.);; to sift by means of winnowing fan, to winnow by tapping the fan.

   2. பிறாண்டுதல் (வின்.);; to scratch, as with finger-nails, claws, or spikes.

   3. திருடுதல்; to rob, steal.

   தெ.பருகு;   க.பர்கட;ம.வாண்டுக.

     [பறண்டு → வறண்டு.]

வறண்முள்ளி

 வறண்முள்ளி vaṟaṇmuḷḷi, பெ. (n.)

   செம்முள்ளி; a thorny plant.

     [வறள் + முள்ளி.]

     [P]

வறதாரு

வறதாரு1 vaṟatāru, பெ. (n.)

   முள்ளிக்கீரை; thorny spinach – Amaranthus spinosis (சா.அக.);.

 வறதாரு2 vaṟatāru, பெ. (n.)

   முள்ளி (மலை.);; Indian nightshade.

   2. முள்ளி1, 2 பார்கக;see mulli

வறந்தலை

வறந்தலை vaṟandalai, பெ. (n.)

   வறுமை; poverty, indigence.

     “வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்க” (மணிமே.10-9);.

வறனுழ-த்தல்

வறனுழ-த்தல் vaṟaṉuḻttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நீரின்றி வருந்துதல்; to suffer by drought;

 to wither due to deficient rain, as crops.

     “வறனுழக்கும் பைங்கூழ்க்கு” (இனி. நாற். 16);.

   2. வறுமையுறுதல்; to be poverty stricken.

     [வறம் → வறன் + உழ-, உழ-த்தல் = வருந்துதல்.]

வறன்

வறன் vaṟaṉ, பெ. (n.)

வறம் பார்க்க;see varam.

     “வறறுண் டாயினு மறஞ்சா லியரோ” (ஐங்குறு.312);,

     “வறனோ டுலகின் மழைவளந் தரூஉம்”.

     [வறம் → வறன்.]

வறன்மூலம்

 வறன்மூலம் vaṟaṉmūlam, பெ. (n.)

   மலம் தீய்ந்து வெளிவரும் ஓர் மூலம்; a variety of visible piles, marked by very hard stools.

     [வறம் → வறன் + மூலம்.]

வறப்பீகம்

வறப்பீகம் vaṟappīkam, பெ. (n.)

   1. மிளகாய் வகையுளொன்று; a species of chilly.

   2. காய்ந்த மிளகு; dry pepper.

வறப்பு

 வறப்பு vaṟappu, பெ. (n.)

   குறைவு; deficiency, shortage, a lack.

வறப்போக்கி

 வறப்போக்கி vaṟappōkki, பெ. (n.)

   இவறன்; stingy person, miser.

     [வறள் + போக்கு → போக்கி.]

ஒருகா. ஈயாயத்தன்

வறமுள்ளி

வறமுள்ளி1 vaṟamuḷḷi, பெ. (n.)

வறண் முள்ளி பார்க்க;see varan-mulli.

     [வறம் + முள்ளி.]

 வறமுள்ளி2 vaṟamuḷḷi, பெ. (n.)

   செம்முள்ளி (வின்.);; a thorny plant.

     [வறம் + முள்ளி.]

வறம்

வறம் vaṟam, பெ. (n.)

   1. வற்றுகை; drying up, withering.

     “நாடு வறங் கூரினுமிவ் வோடு வறங்கூராது” (மணிமே.14, 13);,

     “பெருவறங் கூர்ந்த கானம்” (பெரும்பாண். 23);.

   2. நீரில்லாமை; drought.

     “கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும்” (புறநா. 137);.

   3. கோடைக்காலம்; summer or hot season.

     “வறந்தெற மாற்றிய வானம்” (கலித். 146);.

   4. பஞ்சம்; famine.

   5. வறுமை; poverty, barrenness.

     “மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து” (குறள். 1010);.

   6. வறண்ட நிலம்; parched land, dry soil.

     “வறனுழு நாஞ்சில்” (கலித். 8);.

   தெ.வரது;   க.பர. வரே, வர, வரடு;   ம. வரடி;து.வரடெ.

     [வரம் → வறம்.]

வறற்காலை

வறற்காலை vaṟaṟkālai, பெ. (n.)

   நீரில்லாத காலம்; drought season.

     “அருவியற்ற பெருவறற் காலையும்” (பதிற்றுப். 43, 14);.

     [வறள் + கால் → காலை.]

வறலாரை

 வறலாரை vaṟalārai, பெ. (n.)

வறளாரை (சங்.அக.); பார்க்க;see varal-ārai.

     [வறல் + ஆரை. ஆரை = புன்செய் நிலத்தில் முளைக்கும் கீரை.]

வறல்

வறல் vaṟal, பெ. (n.)

   1. உலர்கை; drying up.

     “வறற்குழற் சூட்டின்” (சிறுபாண். 163);.

   2. வறட்சியான நிலம்; dry soil ground.

     “கரிவறல் வாய்புகுவ” (கலித். 13);.

   3. சுள்ளி; dried twig.

     “வெண்கிடை யென்றூழ்வாடு வறல் போல” (புறநா. 75);.

   4. நீரில்லாமை; drought.

     “அருவியற்ற பெருவறற் காலையும்” (பதிற்றுப். 43. 14);.

   5. வறுக்கை (பதார்த்த. 1369);; frying, roast.

   6. வற்றல் 4 (வின்.); பார்க்க;see varral.

 Ma. varam, varavu, varatu;

 Te. varapu, varatu;

 Tu. barantuni.

     [வரல் → வறல்.]

வறள்

வறள்1 vaṟaḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. வற்றுதல் (பிங்.);; to dry up, to become dry.

   2. உடம்பு மெலிதல் (வின்.);; to become slim, lean or emaciated.

     [வறல் → வறள் → வறளு.]

 வறள்2 vaṟaḷ, பெ. (n.)

   1. வறல் 1, 2 பார்க்க;see varal, 1, 2.

     “வாவியடங்கலும் வறளாக” (சேதுபு. தேவி. 62);.

   2. வெறுமையாகை; emptiness, vacuum.

     “வற்றிய வேலையென்ன விலங்கையூர் வறளிற்றாக” (கம்பரா. தேரேறு. 2);.

   3. மணற்பாங்கு; sandy soil.

     “வறளடும்பின் மலர்மலைந்தும்” (பட்டினப்.64);.

     [வரல் → வறல் → வறள் = வறளுகை;

ஒன்றுமில்லாமற் போகை.]

வறள்மாந்தம்

 வறள்மாந்தம் vaṟaḷmāndam, பெ. (n.)

   குழந்தைகளுக்கு முன்னுண்டது அறாமையா னேற்படும் ஓர் நோய்; a disease caused by indigestion among children.

     [வறள் + மந்தம் → மாந்தம்.]

வறள்முள்ளி

 வறள்முள்ளி vaṟaḷmuḷḷi, பெ. (n.)

   செம்முள்ளி; a thorny plant.

     [வறள் + முள்ளி.]

வறள்வலிப்பு

 வறள்வலிப்பு vaṟaḷvalippu, பெ. (n.)

   வயிற்று வலி வகை; colic.

     [வறள் + வலிப்பு.]

வறள்வாயு

 வறள்வாயு vaṟaḷvāyu, பெ. (n.)

   வயிற்றி லுண்டாகும் ஊதை நோய் வகை; a disease of the stomach due to wind mostly in indestinal region.

     [வறள் + Skt. வாயு.]

 Skt. vayu → த. வாயு.

வறவறப்பு

 வறவறப்பு vaṟavaṟappu, பெ. (n.)

   பனித் திவலைப்போல் தோலில் ஏற்படும் மாற்றம்; state of skin in dew season.

     [வறவற → வறவறப்பு.]

வறவறெனல்

 வறவறெனல் vaṟavaṟeṉal, பெ. (n.)

   உலர்ந்து கடினமாதற்குறிப்பு; onom expr of becoming dry and hard.

     “பூசிய மருந்துப் பற்று வறவறென்றிருக்கிறது”.

     “எண்ணெய் தேய்க்காமல் தோல் வறவறவென்றிருக்கிறது” (பே.வ);.

     [வறவற + எனல்.]

வறவாரை

வறவாரை vaṟavārai, பெ. (n.)

வறளாரை (வின்.); பார்க்க;see viral-arai.

     [வறல் + ஆரை1]

வறவு

 வறவு vaṟavu, பெ. (n.)

   கஞ்சி (சங்.அக.);; gruel.

வறவொட்டி

 வறவொட்டி vaṟavoṭṭi, பெ. (n.)

   பூடுவகை (வின்.);; a kind of pot-herb.

     [வறல் + ஒட்டு → ஒட்டி.]

வறவோட்டுச்சட்டி

வறவோட்டுச்சட்டி vaṟavōṭṭuccaṭṭi, பெ. (n.)

வரையோடு, 1 பார்க்க;see varai-y-odu.

     [வறு → வற + ஒடு → ஒட்டு + சட்டி.]

வறிஞன்

வறிஞன் vaṟiñaṉ, பெ. (n.)

   நல்குரவாளன்;   வறியவன்; poor man, destitute or poverty sticken person.

     “வறிஞராய்ச் சென்றிரப்பர்” (நாலடி. 1);.

     [வறு → வறி → வறியன் → வறிஞன்.]

ஏதுமற்ற ஏதிலி, வெறுமையாளன்.

வறிது

வறிது vaṟidu, பெ. (n.)

   1. சிறிது (தொல். சொல். 336);; that which is little, small or insignificant.

     “வறிது சிறிதாகும்” (தொல். 879);.

   2. பயனின்மை; worthlessness;

 purposelessness.

   3. அறியாமை (பிங்.);; ignorance.

   4. குறைவு (பிங்.);; defect.

 deficiency.

   5. வறுமை; poverty, indigence, destitution.

     “எம்பிரா னிரங்கி வறிது நீத்தனன்” (உபதேசகா. சிவபுண். 316);.

   6. உள்ளீடற்று வெறுவிதாகை; emptiness, hollowness, vacuum.

     “வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே” (ஐங்குறு.17);.

   7. இயலாமை (பிங்.);; impossibility, inability.

   க.பறிது, பறெ;   ம.வரு;து.பரெ.

     [வெள் → வெறு → வறு → வறிது (மு.தா.153);.]

வறியன்

 வறியன் vaṟiyaṉ, பெ. (n.)

வறிஞன் (சூடா.); பார்க்க;see varinan.

     [வெறு → வறி → வறியன்.]

வறியான்

வறியான் vaṟiyāṉ, பெ. (n.)

   1. வறிஞன்; destitute person.

     “வறியார்க் கொன்றீவதே யீகை” (குறள். 22);.

   2. வறியோன் 2 பார்க்க;see variyon.

     [வறியன் → வறியான்.]

வறியோன்

வறியோன் vaṟiyōṉ, பெ. (n.)

   1. வறிஞன் பார்க்க;see varinan.

   2. அறிவிலான்; man devoid of sense, idiot, muff, fool, stupid.

     “வறியோ னொருவன்” (சிலப். 15, 77);.

     [வறியன் → வறியான் → வறியோன்.]

வறு

வறு1 vaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பொரியச் செய்தல்; to dry, grill, fry, parch, toast.

     “வெயில் வறுத்த வெம்பரன்மேல்” (திவ். இயற். பெரிய. ம. 50);.

   2. தொந்தரவுபடுத்துதல்; to annoy, distress, disturb.

     “இரவு முழுவதும் அவனுக்குள் சுரம் வறுத்தெடுத்து விட்டது” (பே.வ.);.

 Te, nandu, Ma, vara, varavu, varal, varukka, varattuka, varaluga;

 To. parf(part);, lod, bare, bara;

 Pa, vedp;

 Kui, vaja;

 Kuwi, vwajali.

     [வரல் → வறள் → வற → வறு.]

 வறு2 vaṟudal,    4 செ.கு.வி. (v.i.)

   வறுபடுதல் (வின்.);; to be fried, parched or grilled, roasted.

வறுகடலை

வறுகடலை vaṟugaḍalai, பெ. (n.)

   வறுத்த கடலை; fried pulse or gram.

மறுவ. பொரிகடலை.

     [வறு1 + கடலை.]

வறுகறி

வறுகறி vaṟugaṟi, பெ. (n.)

   வறுத்தகறி (நாமதீப. 403);; fried curry, roasted meat.

மறுவ. வறுவல், உப்புக்கறி.

     [வறு + கறி.]

வறுகிப்பிடி-த்தல்

வறுகிப்பிடி-த்தல் vaṟugippiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இறுகப் பற்றுதல் (வின்.);; to clasp, to hold fast and firm.

     [வறுகு + பிடி.]

வறுகு-தல்

வறுகு-தல் vaṟugudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இறுகப் பிடித்தல்; to cling to claspfirmly.

   2. பிறாண்டுதல்; to scratch, paw.

தெ.பறுகு.

     [வறுகி → வறுகு.]

வறுகுமுள்

 வறுகுமுள் vaṟugumuḷ, பெ. (n.)

   மரத்தில் கோடு கிழிக்கும் தச்சுக் கருவி வகை; carpenter’s instrument for nailing lines in wood.

     [வரைவு → வருவு → வருகு → வறுகு + முள்.]

வறுங்காலம்

வறுங்காலம் vaṟuṅgālam, பெ. (n.)

   1. வறுமைக் காலம்; period of destitution.

   2. நீரில்லாக் காலம்; drought season.

   3. வறட்சிக்காலம் (வின்.);; times of scarcity or famine, drought season.

     [வறுமை + காலம்.]

வறுங்கோடை

வறுங்கோடை vaṟuṅāṭai, பெ. (n.)

   1. வறுங் காலம் பார்க்க;see varun-kalam.

   2. முதுவேனிற்பருவம்-கடுங்கோடை (வின்.);; very dry season, severe or acut summer.

     [வறு → வறுமை + கோடை. கொடு → கோடு → காடை.]

வறுங்கோட்டி

வறுங்கோட்டி vaṟuṅāṭṭi, பெ. (n.)

   அறிவிலார் கூட்டம்; ignorant assembly, foolish crowd.

     “புல்லா வெழுத்தாற் பொருளில் வறுங்கோட்டி” (நாலடி. 155);.

     [வெறு → வறு → வறுமை + கோட்டி.. கோள் → கோட்டி.]

வறுத்தவுப்பு

 வறுத்தவுப்பு vaṟuttavuppu, பெ. (n.)

   மருந்து செய்ய பயன்படுத்தும்படி, வறுக்கும் உப்பு; fried salt used when on diet, fried salt used to manufacture medicine.

     [வறுத்த + உப்பு. உ → உப்பு.]

வறுத்திடி-த்தல்

வறுத்திடி-த்தல் vaṟuttiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   உணவிற்காகச் சில தவசங்களை, வறுத்து இடித்தல்; to fry and pound.

கருஞ்சோளம், கம்பு, ஊற வைத்த விதை நெல் போன்றவற்றை சிற்றூர்களில் வாழுநர் வறுத்து இடித்து உணவாகப் பயன்படுத்துவர். வறுத்திடித்துச் செய்யும் திண்பண்டத்தின் மணமுஞ் சுவையும் சொல்லி மாளாது. துவரப் பசித்துண்டார் ஒராங் கெய்துவர்.

     [வறுத்து + இடி-, இல் → இள் → இடு → இடி.]

வறுத்துப்பேரி

 வறுத்துப்பேரி vaṟuttuppēri, பெ. (n.)

   கறிவகை; a kind of curry or side dish.

     [வறு + உப்பேரி. உப்பு + கறி = உப்புக்கறி → உப்பேறி, உப்பேறி = உப்புடன் உசிலையிட்டுப் பொரித்த கிழங்கு அல்லது பழ உணங்கல் கறி.]

வறுத்துறுப்பு

 வறுத்துறுப்பு vaṟuttuṟuppu, பெ. (n.)

வருத்துறுப்பு (யாழ்.அக.); பார்க்க;see Varutturuppu.

வறுநகை

 வறுநகை vaṟunagai, பெ. (n.)

   புன்சிரிப்பு (வின்.);; smile.

மறுவ. இளமுறுவல்

     [வள் → வர் → வரு → வறு + நகு → நகை.]

வறுநிலம்

வறுநிலம் vaṟunilam, பெ. (n.)

   பாழ்நிலம்; waste land.

     “கடிமலரி னன்னறு வாசம்…. வறுநிலத்து வாளாங் குகுத்தது போல்” (திவ். இயற். பெரிய. 6, 89);.

     [வெறு → வறு + நிலம்.]

வறுநுகர்வு

வறுநுகர்வு vaṟunugarvu, பெ. (n.)

   நுகர்ச்சி யின்மை; inexperience.

     “பிராரத்த வறுநுகர் வுண்டாம்” (வேதா. சூ. 159);.

     [வெறு → வறு + நுகர் → நுகர்வு.]

வறுபடு-தல்

வறுபடு-தல் vaṟubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   தீயாற் பொரிதல்; to be fried, parched or grilled.

     [வெறு → வறு + படு.]

வறுபயறு

 வறுபயறு vaṟubayaṟu, பெ. (n.)

   வறுத்தபயறு வகைகள்; chow-chow of various fried pulses.

     [வறு + பயறு.]

வறுமை

வறுமை vaṟumai, பெ. (n.)

   1. நல்குரவு ஏழைமை; poverty, indigence.

     “நல்லார்கட் பட்ட வறுமையின்” (குறள். 408);.

   2. துன்பம் (சூடா);; difficulty, trouble, agony.

   3. வெறுமை (வின்.);; emptiness, vacuum.

   4. திக்கற்ற தனிமை; helpless, loneliness.

     “பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கி” (கம்பரா. முதற்போர். 216);.

மறுவ. நல்குரவு.

     [வெறு → வறு → வறுமை = பொருளில்லா வெறுமை, பொருளின்மை.]

வறுமொழி

வறுமொழி vaṟumoḻi, பெ. (n.)

   பயனிற் சொல்; useless or idle word.

     “வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு” (சிலப்.16, 63);.

மறுவ. சப்பைவாக்கு, வெறும்பேச்சு.

     [வறுமை + மொழி. வறுமை = பொருளின்மை.]

வறும்புனம்

வறும்புனம் vaṟumbuṉam, பெ. (n.)

   1. அறுவடையானபின் வெற்றெனக் கிடக்கும் புன்செய் நிலம்; dry land lying fallow after harvest.

     “வறும்புனங் கண்டு வருந்தல்” (திருக்கோ.146);.

   2. பாலைநிலம் (சங்.அக.);; desert.

     [வெறுமை → வறுமை + புலம் → புனம்.]

வறுவல்

வறுவல் vaṟuval, பெ. (n.)

   எண்ணெய் அல்லது நெய்யிற் பொரித்த கறி (நாமதீப. 403);; curry fried in ghee or oil.

     [வறு → வறுவல்.]

வறுவிது

வறுவிது vaṟuvidu, பெ. (n.)

   குறையாக இருப்பது; that which is deficient or absent.

     “அடக்கமு நாணொடு வறுவிதாக” (கலித்.138, 4);.

     [வறு + விது.]

வறுவிதை

வறுவிதை vaṟuvidai, பெ. (n.)

   வறுத்த வித்து; fried seed.

     “வறுவிதை நுகர்ச்சிக் கன்றியே முளைக்கு மற்றதுதான் காரணமன்று” (வேதா.சூ.163);.

     [வறு + விதை.]

வறுவியோர்

வறுவியோர் vaṟuviyōr, பெ. (n.)

   வறியர்; the poor.

     “வந்த நாவலர் சுற்றத்தார் வறுவியோர் வாழ” (திருவாலவா. 55, 33);.

     [வறியர் → வறுவியர் → வறுவியோர்.]

வறுவூசி

 வறுவூசி vaṟuvūci, பெ. (n.)

   சட்டங்களின் ஓரங்களை அளவாக பள்ளமிட அளவுபடுத்தி கோடிடும் ஊசி; a needle to make scrach the frame levely.

     [வறுவு-ஊசி]

வறை

வறை vaṟai, பெ. (n.)

   பொரிக்கறி; fried curry or meat.

     “நெய் கனிந்து வறையார்ப்ப” (மதுரைக். 756);.

     [வறு → வறை.]

வறைக்காய்ச்சல்

 வறைக்காய்ச்சல் vaṟaikkāyccal, பெ. (n.)

வறட்காய்ச்சல் பார்க்க;see varat-kayccal.

     [வறன் → வறை + காய்ச்சல்.]

உடலனல் அளவிற்கதிகமான வெப்பத்தினா லேற்படும், உடற்காய்வு.

வறைநாற்றம்

வறைநாற்றம் vaṟaināṟṟam, பெ. (n.)

   தீய நாற்றம்; bad odour, stink.

     “வறை நாற்றத்தைக் காட்டிப்பிடிக்குமா போல” (ஈடு. 2, 8, 4);.

மறுவ. முடைநாற்றம்.

     [வறை + நாற்றம்.]

வறைமாதளர்ச்சி

 வறைமாதளர்ச்சி vaṟaimātaḷarcci, பெ. (n.)

   நல்ல மாதுளை; a kind of pomegranate.

வறைமுறுகல்

வறைமுறுகல் vaṟaimuṟugal, பெ. (n.)

   1. கருகிப் போனது (ஈடு. 6, 5, 10, ஜூ);; dried excessively.

   2. பயனற்றது; useless thing.

     “அது வறைமுறுகலாகையிறே பின்பு தவிர்ந்தது” (ஈடு. 6, 5, 10ஜீ.);.

   3. கரடு முரடானது; that which is difficult to understand, rugged, rough thing.

     “ஶ்ரீகீதையோபாதி வறைமுறுகலாய்ப் போமிறே” (ஈடு. 7, 9, 2);.

     [வறு → வறை + முறுகல்.]

வறையல்

வறையல் vaṟaiyal, பெ. (n.)

   1. வறை (பிங்.); பார்க்க;see varai.

     “மூரல்பால் வறையல்” (திருவிளை.குண்டோ. 14);.

   2. பிண்ணாக்கு (வின்.);; cake of crushed or pressed oil seed.

     [வறு → வறை → வறையல்.]

வறையாடு

வறையாடு vaṟaiyāṭu, பெ. (n.)

   1. குறும்பாடு, மலையாடு; mountain sheep.

   2. வரையாடு பார்க்க;see Varai-y-adu.

மறுவ. வற்காலி.

     [வரை → வறை + ஆடு.]

காட்டு மூலிகைகளை உண்ணும். இவைகளின் இறைச்சி, நோய்களைப் போக்கும். மாந்தர்தம் ஆற்றலை அதிகரிக்கச் செய்யுந் தன்மைத்து.

மலைச்சாரலில், இயற்கையாக முளைத்துள்ள மூலிகைகளை உண்டு வளர்வதால், வறையாட்டின் இறைச்சி, மருத்துவக்குணம் மிக்கதாய்த் திகழ்கின்றதெனலாம்.

     [P]

வறையோடு

வறையோடு vaṟaiyōṭu, பெ. (n.)

   1. பொரிக்குஞ் சட்டியோடு; earth-pan used for parching.

   2. பயனற்ற(வள்); (வன்); (து);; good for nothing person or thing.

     [வறு → வறை + ஒடு.]

வறோதிநங்கை

 வறோதிநங்கை vaṟōtinaṅgai, பெ. (n.)

   மாதர்தம் நால்வகைப் பிரிவினுள் ஒரு வகையினள்; one of the four classes of woman.

     [வறோதி + நங்கை.]

வற்கசஞ்சீவி

 வற்கசஞ்சீவி vaṟkasañsīvi, பெ. (n.)

   கருங்குன்றி; black jeweller’s bead.

வற்கலை

வற்கலை vaṟkalai, பெ. (n.)

   மரவுரி; garment made of bark.

     “திருவரை யெய்தி யேமுற வற்கலை நோற்றன” (கம்பரா. சூர்ப்ப.22);.

வற்காலம்

வற்காலம் vaṟkālam, பெ. (n.)

வறட்காலம் பார்க்க;see varat-kālam.

     “சில நாளில் வற்கால முற்றலும்” (பெரியபு. கோட்புலி. 5);.

க. பற்கால.

     [வல் → வன் + காலம்.]

வற்காலி

வற்காலி vaṟkāli, பெ. (n.)

   1. வெள்ளாடு; goat.

   2. ஆடு; sheep.

     [P]

வற்கிதம்

வற்கிதம் vaṟkidam, பெ. (n.)

   ஐந்து பரியினுள் ஒன்று (பு.வெ.ஒழிபு.13, உரை);; bound or leap. of a horse, one of five asuva-kadi.

வற்கு

வற்கு vaṟku, பெ. (n.)

   1. ஆடு; sheep.

   2. கஞ்சி; gruel, rice conjee.

   3. அழகு; beauty, charm..

வற்குசா

 வற்குசா vaṟkucā, பெ. (n.)

   கார்போகி (மலை.);; scurvy pea.

வற்குணம்

வற்குணம் vaṟkuṇam, பெ. (n.)

   கொடுமை; hardness or callousness of heart, stone or iron-heartedness.

     “வற்குண வலிய தண்டும்” (பிரபோத. 30, 4);.

     [வல் + வன் + குணம்.]

வற்குலிகம்

 வற்குலிகம் vaṟguligam, பெ. (n.)

   கரிக் குருவி (மூ.அ.);; king-crow.

     [P]

வற்கெனல்

வற்கெனல் vaṟkeṉal, பெ. (n.)

   வலிதாதற் குறிப்பு; signifying, becoming hard, hardening.

     “வற்கென்ற நெஞ்சம் வணங்காய்” (பு.வெ. 12, பெண்பாற். 17);,

     “வற்கென்ற செய்கை” (பழ.222);.

     [வன்கு → வற்கு + எனல்.]

வற்கெனவு

வற்கெனவு vaṟkeṉavu, பெ. (n.)

   அழகு; beauty, handsome, excellence.

     ‘வற்கெனவும் வசஞ் செய்தலு முதலாயின’ (நீலகேசி. 380, உரை);.

வற்சகம்

வற்சகம் vaṟcagam, பெ. (n.)

   1. பிள்ளை; child.

   2. பசுங்கன்று; calf (சா.அக.);.

வற்சநாவி

 வற்சநாவி vaṟcanāvi, பெ. (n.)

வச்சநாபி பார்க்க (வின்.);;see vacca-nabi.

வற்சமம்

வற்சமம்1 vaṟcamam, பெ. (n.)

   குடசபாலை; a tree-Hollarrhena antidysenterica.

 வற்சமம்2 vaṟcamam, பெ. (n.)

வற்சம் பார்க்க (மூ.அ.);;see varšam.

வற்சம்

 வற்சம் vaṟcam, பெ. (n.)

   குடசப்பாலை (மலை.);; conessi-bark.

வற்சலமணி

 வற்சலமணி vaṟcalamaṇi, பெ. (n.)

   கோரோசனை; bezoar concretion found in cow or ox.

வற்பனை

 வற்பனை vaṟpaṉai, பெ. (n.)

   கேழ்வரகு வகை; a species of ragi.

வற்பம்

வற்பம் vaṟpam, பெ. (n.)

   1. வன்மை; hardness, as of the earth.

     “வற்பமாகி யுறுநிலம்” (மணிமே. 27, 120);.

   2. வறட்சி; drought.

     “வற்பத்தால்….. புல் மேயாதாகும் புலி” (பழ. 119);.

     [வன் → வற்பு → வற்பம்.]

வற்பு

வற்பு vaṟpu, பெ. (n.)

   1. உறுதிப்பாடு; firmness, hardness.

   2. வலிமை; strength.

     “அரக்கர் தலைவன் றன் வற்பார் திரடோள்” (திவ். பெரியதி. 5, 1, 4);.

க. பல்பு

     [வல்பு → வன்பு → வற்பு.]

வற்புறு-தல்

வற்புறு-தல் vaṟpuṟudal,    1 செ.கு.வி. (v.i.)

   1. வலிமையடைதல்; to become strong.

   2. திடப்படுதல்; to be courageous or firm.

   3. ஆறுதல் அடைதல்; to console, to take heart.

     “சொல்லமிர்தினால் வற்புற்றானே” (சீவக.1122);.

     [வன்பு → வற்பு + உறு.]

வற்புறுத்து-தல்

வற்புறுத்து-தல் vaṟpuṟuddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. உறுதிப்படுத்திச் சொல்லுதல் (திவா.);; to asseverate, affirm, assure.

   2. வலிமைப்படுத்துதல் (வின்.);; to strengthen, fortify.

     [வற்புறு → வற்புறுத்து.]

வற்புலம்

வற்புலம் vaṟpulam, பெ. (n.)

   மேட்டு நிலம்; plateau, high ground.

     “வற்புலஞ் சேருஞ் சிறுநுண் ணெறும்பின்” (புறநா. 173);.

     [வன்புலம் → வற்புலம்.]

வற்மம்

 வற்மம் vaṟmam, பெ. (n.)

வன்மம் பார்க்க;see vanmam.

வற்றக்காய்ச்சல்

 வற்றக்காய்ச்சல் vaṟṟakkāyccal, பெ. (n.)

   மெலிந்தவன்; emaciated man.

     [வற்றல் + காய்ச்சல்.]

வற்றனோய்

வற்றனோய் vaṟṟaṉōy, பெ. (n.)

   குருதி அளவிற் குன்றி உடலை மெலிவிக்கும் நோய்; anaemia.

     “அத்திமயமாக்கும் வற்றனோயர்” (கடம்ப.பு. இலீலா. 97);.

     [வற்றல் + நோய்.]

வற்றம்

வற்றம் vaṟṟam, பெ. (n.)

   1. வற்றல், 1 பார்க்க;see varral.

   2. கடலின் நீர் வடிகை; ebb of tide.

     ‘ஏற்றம் வற்றம்’ (வின்.);.

   3. வறட்சி (வின்.);; dryness.

     [வற்று → வற்றம்.]

வற்றற்சூடு

 வற்றற்சூடு vaṟṟaṟcūṭu, பெ. (n.)

   நலம் வற்ற சுடுகின்ற சூடு; extreme heat, scorching charring.

     [வற்றல் + சூடு.]

வற்றலோகம்

 வற்றலோகம் vaṟṟalōkam, பெ. (n.)

   உருக்கு; steel.

     [வற்றல் + உலோகம்.]

 Skt. Iðka → த. உலோகம்.

வற்றல்

வற்றல்1 vaṟṟal, பெ. (n.)

   1. வடிகை; subsiding.

   2. வறளுகை; drying up.

   3. உலர்ந்தது; that which is withered, shrunk or dried up.

     “வற்றன் மரந்தளிர்த் தற்று” (குறள். 78);.

   4. உலர வைத்த காய், இறைச்சி முதலியப் பொருள்; dried vegetables, flesh, etc.

     [வற்று → வற்றல்.]

 வற்றல்2 vaṟṟal, பெ. (n.)

   1. அடைக்காய்; dried vegetable.

   2. மெலிதல்; becoming lean.

   3. உலறல்; drying.

வற்றல் வகைபற்றிச் சா.அ.க. கூறுவது வருமாறு:- 1. நெல்லி வற்றல்,

   2. சுண்டை வற்றல்,

   3. கத்தரி வற்றல்,

   4. மணித்தக்காளி வற்றல்.

வற்றாதமேனி

 வற்றாதமேனி vaṟṟātamēṉi, பெ. (n.)

   துருசு; copper sulphate.

வற்றாலை

 வற்றாலை vaṟṟālai, பெ. (n.)

   ஒர் கிழங்கு; a kind of root.

வற்று

வற்று1 vaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

     ‘. சுவறுதல்;

 to grow dry, to dry up, as water, to evaporate.

     “காமர் பூம்பொய்கை வற்ற” (சீவக. 2075);.

   2. கடல் நீர் முதலியன வடிதல் (வின்.);; to subside, to ebb, as the tide.

   3. புண் முதலியன உலர்தல்; to become absorbed, as matter in an ulcer.

   4. வாடுதல்; to wither, become dry and shrivelled, as the body.

     “வற்றிய வோலை கலகலக்கும்” (நாலடி. 256);

   5. மெலிதல்; to become emaciated, as the body.

     “வற்றிமற் றாற்றப் பசிப்பினும்” (நாலடி. 78);.

   6. பயனற்றுப் போதல்; to become worthless or purposeless.

     “அது நின்று வற்றுமெனின்” (நன். 375, மயிலை);.

   க.பத்து;   ம.வரலி;து.வரு.

     [வல் + து → வற்று.]

 வற்று2 vaṟṟu, பெ. (n.)

வற்றம், 2 (வின்.); பார்க்க;see Varram, 2.

 வற்று3 vaṟṟu, பெ. (n.)

   கூடியது; that which is possible or able.

     “நேருரைத்தாக வற்றே” (கம்பரா. மாரீச. 74);.

     [வல் + து → வற்று.]

 வற்று4 vaṟṟu,    இடை. (part.) ஒரு சாரியை (பிங்.); an expletive.

வற்று-தல்

வற்று-தல் vaṟṟudal,    6. செ.குன்றாவி, (v.t.)

   சுரக்கச் செய்தல்; to cause to swell up, to flow.

     “ஒண்செங் l குருதி யுவற்றியுண் டருந்துபு” (அகநா. 3);.

     [உவறு → உவற்று → உவற்று-தல்.]

வற்றுபதம்

 வற்றுபதம் vaṟṟubadam, பெ. (n.)

   சரியான பதம் தோன்றும் நிலை; a state of dryness, for hulling as of boiled paddy.

     [வற்று + பதம்.]

வற்றுப்பாடு

 வற்றுப்பாடு vaṟṟuppāṭu, பெ. (n.)

   வற்றுகை; ebbing, decreasing, draining.

     “அந்த வயலுக்கு நீர் வற்றுப் பாடில்லை” (நாஞ்);.

     [வற்று + படு → பாடு.]

வல

வல1 valattal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சுற்றுதல்; to encircle, surround.

     “புலவுநாறு நெடுங்கொடி….. வாங்குசினை வலக்கும்” (புறநா. 52);.

   2. பின்னுதல்; to spin, as a spider its thread;

 to plait;

 to weave or knit.

     “இழைவலந்த பஃறுன்னத்து” (புறநா. 136);.

   3. தொடுத்தல்; to string in a series.

     “உரைத்தேம்…. வலந்து” (பரிபா. 3. 10-11);.

   4. பிணித்தல், கட்டுதல்; to tie, bind.

     “குடர்வலந்த வேற்றின்முன்” (கலித். 103);.

   5. வளைத்தல் (வின்.);; to bend.

     [மல் → வல் → வல → வலம் = சுற்று, வல → வலத்தல், வலத்தல் = வளைத்தல், சூழ்தல், சுற்றுதல்.]

 வல2 valattal,    4 செ.கு.வி. (v.i.)

   கொழுத்தல் (திவா.);; to grow fat, to become bulky.

     [பல → வல.]

 வல3 valattal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கேட்போர் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல், உரைத்தல்; to say, tell;

 to narrate or converse.

     “மருமகன் வலந்ததும்” (சீவக. 187);.

வலகுடியஞ்சாலி

 வலகுடியஞ்சாலி valaguḍiyañjāli, பெ. (n.)

   வரிவகை (நாஞ்.);; a petty cess.

     [வலகுடி + அஞ்சாலி. (அஞ்சாலி – பழைய வரிவகை);.]

வலக் கைகொடு-த்தல்

வலக் கைகொடு-த்தல் valaggaigoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உதவியளித்தல்; to help or support, as by extending the right hand.

   2. உறுதி கூறுதல் (இ.வ.);; to make a solemn affirmation, as by striking hands.

     [வலக்கை + கொடு.]

வலக்கச்சம்

 வலக்கச்சம் valakkaccam, பெ. (n.)

   குமிழ்; a tree-Gmelina arborca (சா.அக.);.

வலக்கட்டாயம்

 வலக்கட்டாயம் valakkaṭṭāyam, பெ. (n.)

   வலக்காரம்; compulsion, force, coercion.

தெ. பலகட்டாயமு

     [வலம் + கட்டாயம்.]

வலக்கணி

 வலக்கணி valakkaṇi, பெ. (n.)

   ஒர் வகை நாடி; a kind of pulse (சா.அக.);.

வலக்கம்

 வலக்கம் valakkam, பெ. (n.)

   மூக்கறா; a medicinal root (சா.அக.);.

வலக்காய்

 வலக்காய் valakkāy, பெ. (n.)

வலம்புரிக்காய் பார்க்க;see valam-purikkāi.

வலக்காரம்

வலக்காரம்1 valakkāram, பெ. (n.)

   1. கட்டாயம்; force, compulsion, coercion.

   2. அதிகாரம், வலிமை; authority, power, might.

     “வலக்காரம் பேசுகிறான்” (வின்.);.

   3. வெற்றி; success, victory, triumph.

     “வலக்கார முற்றாய்” (திருப்பு. 386);.

     [பலக்காரம் → வலக்காரம்.]

 வலக்காரம்2 valakkāram, பெ. (n.)

   1. சூழ்ச்சி; wile, trick.

     “சிறுவலக்காரங்கள் செய்த வெல்லாம்” (திருக்கோ. 227);.

   2. பொய் (சூடா.);; falsehood, lie, untruth.

     [வல1 + காரம்2.]

 வலக்காரம்2 valakkāram, பெ. (n.)

   இறக்கியம் (சர்வ திராவகம்);; a kind of acid (சா.அக.);.

 வலக்காரம் valakkāram, பெ.(n.)

   அடாவடித் தனம், சுரவடம் (சாணக்கியம்);; artstratagem.

மறுவ, நுண்சூழ்ச்சித் திறம்

     [வலம்-வலக்காரம்]

வலக்கால்வாத்துவாதனம்

வலக்கால்வாத்துவாதனம் valakkālvāttuvātaṉam, பெ. (n.)

   வலக்காலை மாத்திரம் நீட்டி நெஞ்சம் நிலத்திலே தோயக் கிடக்கும் இருக்கை வகை (தத்துவப். 108, உரை);; a posture in which the right leg is stretched out and the chest is made to touch the ground.

     [வலம் + கால் + வாத்து + ஆதனம். (ஆதனம் = இருக்கை); வாத்துவாதனம்.]

 Skt. åsana த. ஆசனம்.

வலக்கை

வலக்கை valakkai, பெ. (n.)

   1. வலது கை; right hand.

     “வலக்கையின் மலைந்தான்” (கம்பரா. சம்புமா. 25);.

   2. வலப்பக்கம்; right side.

     “அது வலக்கையிலுள்ளது”.

     [வலம்1 + கை. குல் → குய் → கய் → கெய் → செய் → கெய் → கை → கய் (செய்தல்); → கெய் → கை.]

ஒ.நோ. வலங்கை → வலக்கை என்றுமாம்.

கை யென்னும் பெயர், செய் என்னும் வடிவில் குமரி நாட்டில் வழங்கியிருத்தல் வேண்டும் . (செல்வி.435/1974);.

தமிழில் உள்ள

     ‘செய்’ எனும் வடிவமே, கன்னடம், குடகு, துளு, கோத்தம், துடவம், படகு, கொலாமி, கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவி, பிராகுவி ஆகிய மொழிகளில் கை, கெய், gey, biy, கீ எனும் வடிவங்களில் ஆட்சி பெற்றுள்ளது.

மாந்தக்கை போன்றிருக்கும் தும்பிக்கையும் கை எனப்பட்டது. ஒளிக்கற்றையைக் கதிரவனின் கையாக உருவகப்படுத்தியுரைப்பதால், அதுவும் கை எனலாயிற்று.

வலக்கைச்சி

 வலக்கைச்சி valakkaicci, பெ. (n.)

வலக்கணி பார்க்க;see vala-k-kani.

வலக்கைதா-தல்

வலக்கைதா-தல் valakkaitātal,    18 செ.கு.வி. (v.i.)

வலக்கைகொடு-, பார்க்க;see valakkai-kodu-.

     “வலக்கை தந்து நிலத்தில் வந்தவதரித்த” (இராமநா. உயுத், 3);.

     [வலக்கை + தா.]

தள் → தர் → தரு → தா = ஒத்தோனுக்குக் கொடுத்தல்.

     ‘தா’ என்பதை வடமொழியாளர், வடசொல் என்பர்.

     “தா என்கிளவி ஒப்போன் கூற்றே” (தொல்.சொல்.929);. இலவயமாகக் கொடுத்தல் என்பதே வடமொழிப் பொருளாகும். ஆனால் மொழிஞாயிறு,

     “தன்னிலையில் ஒத்த தன்மையனுக்குத் தருதல் என்னுஞ் சிறப்புப் பொருளினையே, பழந்தமிழ் வடிவமான

     ‘தா’ குறிக்கும். தமிழின் தலைமைத் தன்மையை, நிலைநிறுத்தும் சொற்களுள்

     ‘தா’வும் ஒன்று” என்று கூறியுள்ளார்.

புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும்

     ‘வெள்ளம்’ என்னும் சொல், தன் சிறப்புப் பொருளையிழந்து

     ‘நீர்’ என்னும் பொதுப்பொருளில் மலையாளத்தில் வழங்குவது போன்று, ஒத்தோனுக்குக் கொடுத்தல் என்னும் சிறப்புப் பொருளை இழந்து,

     ‘தா’ என்னும் சொல்,

     ‘கொடுத்தல்’ என்னும் பொதுப்பொருளில் ஆரிய மொழிகளில் வழங்குகிறது.

வலக்கையடி-த்தல்

வலக்கையடி-த்தல் valakkaiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   உறுதி கூறுதல் (இ.வ.);; to make a solemn affirmation, as by striking hands, asseveration, euphatic assurance.

     [வலக்கை + அடி-, அடு → அடி.]

வலக்கொன்னை

 வலக்கொன்னை valakkoṉṉai, பெ. (n.)

   குப்பையில் வளரும் ஒருவகைக் கீரை; Indian acalypha. It is a vermifuge (சா.அக.);.

     [P]

மறுவ. குப்பைமேனி.

வலங்கமத்தார்

 வலங்கமத்தார் valaṅgamattār, பெ. (n.)

   பறையர்தம் சிறப்புப் பெயர் (வின்.);; title of the right-hand section of the paraiya caste.

     [வலங்கை → வலங்கமத்தார்.]

ஒருகா. வலங்குலத்தார் → வலங்கமத்தார்.

வலங்கமர்

 வலங்கமர் valaṅgamar, பெ. (n.)

வலங்கமத்தார் (யாழ்.அக.); பார்க்க;see valangamattār.

     [வலம் + அமர். உம் → அம் → அமல் → அமர்.]

அமர்தல் = பொருந்துதல். பொருந்துதல் என்பது கூடுதல். போர்க்களத்தில் இருபகைப் படைகள் கலத்தல் அல்லது கூடுதல். இங்கு வலங்கமர் என்பது, அமர்க்களத்தில் அரசனுக்கு வலப்புறம் இருந்து போர் செய்தோரைக் குறித்ததென்க.

வலங்கம்

 வலங்கம் valaṅgam, பெ. (n.)

   பெருங்குடும்பம்; large or big family.

வலங்க முடையான் (வின்.);.

   தெ. பலங்கமு;க., து. பலக.

வலங்காரம்

 வலங்காரம் valaṅgāram, பெ. (n.)

   மத்தளத்தின் மார்ச்சனை பூசிய பக்கம் (யாழ்.அக.);; that side of a mirudańgam, to which márcoanafis applied.

     [வலம் + காரம்.]

வலங்குலத்தார்

 வலங்குலத்தார் valaṅgulattār, பெ. (n.)

   தமிழ்நாட்டு வலங்கை இனத்தாருள் ஒருசார் கூட்டத்தினர்; a segment among the right-hand castes in Tamil country.

     [வலங்குலம் → வலங்குலத்தார்.]

குல் → குலம். குல் – வளைவு, சூழ்தல். மன்னனின் வலப்பக்கம் அமர்ந்து பணியாற்றும், ஆற்றல் மிக்கவர்.

வலங்குலம்

வலங்குலம் valaṅgulam, பெ. (n.)

   வலங்கை இனத்தார் (யாழ்.அக.);; the right hand castes among the Tamils.

     [வலம் + குலம்.]

குல் → குலம். குலம் = வளைவு, சூழ்தல். வலங்குலத்தார். வலங்குலம் போன்ற அமைப்புகள் சோழராட்சிக் காலத்தே தோன்றியவை. சோழராட்சியில் மன்னருக்குப் போர்க்களத்திலும், அவைக்களத்திலும் (அரண்மனையிலும்); வலதுபுறம் இருந்து செயலாற்றும் திறன் மிக்க குலம்.

வீரராசேந்திரம் (கி.பி.1063-1069); ஆட்சிக் காலத்தில், வலங்கை இனத்தார் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. வலங் குலத்தில் இடம்பெற்ற இனத்தார் வருமமாறு:-

   1. வேளாளன்;   2 அகம்படியான்;   3. இடையன்;   4. சாலியன்;   5. பட்டணவன்;   6. சான்றான்;   7. குறவன்;   8. குறும்பன்;   9. வள்ளுவன்;   10. பறையன்.

வலங்கை

வலங்கை valaṅgai, பெ. (n.)

   1. வலப் பக்கத்துக் கை; right hand.

   2. தமிழ் நாட்டு வலங்கையினத்தாருள் ஒரு பிரிவினம்; a sect among the right hand castes in Tamil country.

     “படை வீட்டு ராஜ்யம் நாட்டவர் வலங்கையும் இடங்கையும் மஹா ஜனமும்” (தெ. இ. கல். தொ. i III);.

     [வலம்1 + கை.]

வலங்கை இடங்கைப்படைகள்

வலங்கை இடங்கைப்படைகள் valaṅgaiiḍaṅgaippaḍaigaḷ, பெ. (n.)

   பகைவரின் அரணை வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் வளைத்துச் சென்று போரிடும் வெட்சி வீரர்கள்; warriors who combat enemies fort surrounding on both right and left directions.

     [வலங்கை + இடங்கை + படைகள்.]

முதலாம் இராசராசன் காலத்தில் இப்படைகள் சிறந்த வளர்ச்சி அடைந்திருந்தன. சோழர் படையில் வளர்ச்சியடைந்திருந்த இப்படைகள், முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில், கஞ்சனூரில் படைவீடிருந்து, ஆட்சிக்குப் பகையாயிருந்த குறும்பொன்றை அழித்து, ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமையை, திட்டைக்குடிக் கல்வெட்டு புலப்படுத்துகிறது. குறும்பெறிந்து ஆநிரை கவர்தலை வெட்சி திணையின் செயலாக

     “வேந்து வீடு முனைஞர் வேற்றுபுலக்களவின் ஆதந்து ஒம்பல் மேவற் றாகும்.” என்று கூறும் தொல்காப்பிய இலக்கண மரபுடன் வெட்சியாரின் செயல்களாகக் கூறப் பெறும்.

     ‘தந்து நிறை’ பாதீடு ஆகிய துறைகட்கமைந்த நிகழ்ச்சிகள், சோழர் காலத்தில் கி.பி.11-ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருப்பதனை கல்வெட்டொன்று புலப்படுத்துகின்றது. இத் தேவர்க்கு மூன்றாவது நாளிலே, சோழ மண்டலம் இடங்கை வலங்கையாய் இன்னாயனார்க்குக் குறும்பெரிய காவேரிக்கு வடகரையில் கஞ்சனூரகத்திலே விட்டுக் கொடு இருந்து, குறும்பெறிந்து, நிறைகொண்ட ஆடும், மாடும், கிடாவும், எருமையும் இன்னாயனார் விளக்குக்கு குடுத்த உருக்களில் திருதுன்தா விளக்கு இரண்டுக்கு உடலாக நீக்கின பசு நாற்பதும் நீக்கி, ஆடும், மாடும், எருமையும், முதலான காசு கள அய” (தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை 1903);. கி.பி. 1070ல் சோழ

நாட்டில் அரசுக்கு வாரிசு இல்லாமையால் ஏற்பட்ட குழப்பத்தைக் கீழைச் சாளுக்கிய மரபினனாகிய குலோத்துங்கன் அறிந்து, சோழர் பெண் கொடுத்த தன் தாய் வழி முறையால் விரைந்து வந்து அரசேற்றான். ஆட்சியேற்ற மூன்றாவது நாளிலேயே இந் நிகழ்ச்சி நிகழ்ந்திருப்பது இச் செய்திக்கு உறுதுணையாகும். இச் செயலை விரும்பாத நிலையில், சோழநாட்டில் பகைவர்கள் அமைந்திருந்ததையே, இக் கல்வெட்டு தரும் குறும் பெறிந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது.

     “ஶ்ரீ ராஜ ராஜ தேவர் வலங்கைப் பழம்படை” (தெ.கல். தொ. 2: 2 கல். 35);.

வலங்கை இடங்கைமகன்மை

வலங்கை இடங்கைமகன்மை valaṅgaiiḍaṅgaimagaṉmai, பெ. (n.)

   வலங்கை, இடங்கை படைகளுக்கு மக்கள் விருப்புடன் அளிக்கும் வரி; a tax paid oy people voluntarily for warriors of valour called right and left armies.

     “வலங்கை இடங்கை மகன் உள்ளிட்ட அந்தராயத்துக்கு” (தெ. கல். தொ.8 கல்.4);.

     [வலங்கை + இடங்கை + மகமை → மகன்மை = வரிவகையுளொன்று.]

வலங்கைஇடங்கைவழக்காரம்

வலங்கைஇடங்கைவழக்காரம் valaṅgaiiḍaṅgaivaḻkkāram, பெ. (n.)

   வலங்கை இடங்கைப் பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட வழக்கு; a dispute between Vasargai (right); and idarigai (left); sects.

     [வலங்கை → வலங்கையார்.]

கரிகாலன் என்னும் பெயர்கொண்ட வீர ராசேந்திரச் சோழன் காலத்தே (கி.பி.1063-1069);, வலங்கைக் குலத்தார்க்கும், இடங்கைக் குலத்தார்க்கும் இடையே ஏற்பட்ட வழக்கினையும், அப் பிணக்கினைத் தீர்த்து, ஒவ்வொரு குலத்தார்க்கும் உரிய முறைமையினை வரையறை

செய்த, வாழ்வியல் செய்தியினைப் பற்றி, பாவாணர் தமிழர் வரலாறு (பக்.310-311); என்னும் நூலில் நுவல்வது :-

குலப் பட்டம், குடை கொடி பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்ல வாட்டு, செருப்பு ஆகியவை பற்றிக் குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர் கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-1069); அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

     “காவிய மாகிய காமீகங் கண்டுகங் காகுலத்தோர்

ஒவிய பாத்திர ராக விருபத்து நான்குயர்ந்த

மேவிய கோட்டத் திலுங்கரி கால வளவன்மிக்க

வாவிய மேன்மை கொடுத்தளித் தான்றொண்டை மண்டலமே”

என்பது, கஎ-ஆம் கஅ-ஆம் நூற்றாண்டிலிருந்த படிக்காசுப் புலவர் பாடியது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும், பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது.

இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும் இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருத இடமுண்டு.

சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக்

வலங்கைப்பழம்படை

 வலங்கைப்பழம்படை valaṅgaippaḻmbaḍai, பெ. (n.)

   முதலாம் இராசராசன் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த படைகளுள் பழமையாக வரும் வலங்கைப் படை. வலங்கை, இடங்கை என்பது படைகளின் பாகுபாட்டிற்கமைந்த குறிப்புப் பெயராகும்; a right wing of army formed during Raja Raja cola-region. Right, left are two classifications of said army.

வலங்கைமத்தர்

வலங்கைமத்தர் valaṅgaimattar, பெ. (n.)

வலங்கமத்தார் (சினேந்.140); பார்க்க;see valanga-mattar.

     [வலங்கமத்தார் → வலங்கைமத்தர்.]

வலங்கைமீகாமன்

வலங்கைமீகாமன் valaṅgaimīkāmaṉ, பெ. (n.)

   18-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த இவர், கும்பகோணத்துக்கு அருகில் வலங்கைமானில் வாழ்ந்தவர்; he lived before 18C, and a native of valangaiman near Kumbakönam.

இவர் ‘அறிவானந்தர்’ எனவும் அழைக்கப்படுகின்றார். அறிவானந்த சித்தியார் என்னும் நூலினை இயற்றியவர்.

வலங்கையார்

வலங்கையார் valaṅgaiyār, பெ. (n.)

   1. வலங்கை யினத்தார் (வின்.);; the right-hand castes among the Tamils.

   2. வலங்குலம் பார்க்க;see valangulam.

     [வலங்கை → வலங்கையார்.]

வலங்கையிடங்கைமகன்மை

 வலங்கையிடங்கைமகன்மை valaṅgaiyiḍaṅgaimagaṉmai, பெ. (n.)

   பழைய வரி வகை; an ancient tax or levy.

     [வலங்கை + இடங்கை + மகன்மை = வரி, ஆயம்.]

வலங்கையுயர்வுகொண்டார்

 வலங்கையுயர்வுகொண்டார் valaṅgaiyuyarvugoṇṭār, பெ. (n.)

சாணார்தம்

   சிறப்புப் பட்டப்பெயர் (நாஞ்.);; a title assumed by a section of canãr caste.

     [வலங்கை + உயர்வு + கொண்டார்.]

வலங்கையுற்றார்

 வலங்கையுற்றார் valaṅgaiyuṟṟār, பெ. (n.)

வலங்கையார் (வின்.); பார்க்க;see Valangaiyar.

     [வலங்கை + உறு- (உற்று); → உற்றார்.]

வலங்கொள்

வலங்கொள்1 valaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   வெற்றியடைதல்; to be victorious, triumphant.

     “வலங்கொள் புகழ்பேணி” (தேவா. 668, 8);.

     [வலம் + கொள்-, வல → வலம் = வெற்றி.]

 வலங்கொள்2 valaṅgoḷñadal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. இடவலமாக வருதல்; circumambulation from left to right.

கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்கொளீஇ (கலித்.84);.

   2. வெல்லுதல்; to conquer.

     [வலம்1 + கொள்.]

வலசத்து

 வலசத்து valasattu, பெ. (n.)

   சிலாசத்து; bitumen (சா.அக.);.

வலசல்

வலசல் valasal, பெ. (n.)

வலசை4, 1 பார்க்க;see valasai.

வலசாரி

வலசாரி1 valacāri, பெ. (n.)

   கிளிஞ்சில்; bivalve-shell (சா.அக.);.

 வலசாரி2 valacāri, பெ. (n.)

   கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றி வருகை (யாழ்.அக.);; turning or wheeling to the right as in dancing.

     [வலம்1 + சாரி1.]

வலசி

 வலசி valasi, பெ. (n.)

   சோறு; cooked rice (சா.அக.);.

     [வல்சி → வலசி.]

வலசு

வலசு valasu, பெ. (n.)

வலசை1, 2 (யாழ்.அக.); பார்க்க;see valasai.

வலசுத்தி

 வலசுத்தி valasutti, பெ. (n.)

   கழிமாசுக் (மல); கட்டை வெளியேற்றுதல்; to evacuate/voids as excreta.

வலசெழுமை

 வலசெழுமை valaseḻumai, பெ. (n.)

   கொம்பு; one of the nine gems-ruby (சா.அக.);.

வலசை

வலசை1 valasai, பெ. (n.)

உட்கிடைச் சிற்றூர்: hamlet.

மறுவ. தொட்டி.

 வலசை2 valasai, பெ. (n.)

   வரிச்சல்; lath.

     “மூங்கில் வலசைகள் 25 விழுக்காடு சுமை கட்டி” (மதி. க. ii, 173);.

 வலசை3 valasai, பெ. (n.)

   பறவைகள், விலங்குகள் தக்க சூழலைத் தேடி இடம் பெயர்தல்; migration of birds, beasts etc. for better environment.

 வலசை4 valasai, பெ. (n.)

   1. வேற்று நாட்டுக்குக் குடியோடுகை; emigration flight from home to alien country.

     “திவ்யதேசத் தெம்பெருமான்களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள” (யதீந்த்ரப். 12);.

   2. கூட்டம் (யாழ்.அக.);; crowd.

   தெ. வலச;க. வலசெ.

குடிகள் வலசை போராதினால் சில ஊர்கள் குடிப்பாழாயின.

 வலசை5 valasai, பெ. (n.)

   வடுக வினத்தாருள் ஒரு பிரிவினர் (இ.வ.);; the Balija segment in vaduga caste.

தெ. பலிசெ.

வலசைவாங்கு-தல்

வலசைவாங்கு-தல் valasaivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   வேற்றூர்க்குக் குடியோடுதல் (வின்.);; to emigrate, to fly from home to alien region or village.

மறுவ. புலம்பெயர்-தல்

     [வலசை + வாங்கு.]

வலசோர்

 வலசோர் valacōr, பெ. (n.)

   நகரம்; town.

வலஞ்கைமணிக்கிராமம்

 வலஞ்கைமணிக்கிராமம் valañkaimaṇikkirāmam, பெ. (n.)

   ஒருசார் வணிகர் குழுமம்; a merchant guild.

வலஞ்சக்கியன்

 வலஞ்சக்கியன் valañjakkiyaṉ, பெ. (n.)

   நாகமணல்; zinc ore (சா.அக.);.

வலஞ்சால்ஒட்டு-தல்

வலஞ்சால்ஒட்டு-தல் valañjāloṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஏர் கொண்டு உழவு செய்தலில் ஒருமுறை நீள் வட்டமாக வருதல்; ploughing lands lengthwise or longitudinally.

     [வலம்சால் + ஒட்டு.]

வலஞ்சியர்

 வலஞ்சியர் valañjiyar, பெ. (n.)

   வணிகர்; the vaisya or trade community.

வலஞ்சுரி-தல்

வலஞ்சுரி-தல் valañjuridal,    2 செ.கு.வி. (v.i.)

   இடமிருந்து வலமாகச் சுற்றுதல்; to whirl to the right.

     “வலஞ்சுரி மராஅம் வேய்ந்து” (ஐங்குறு. 348);.

     [வலம்1 + கரி.]

வலஞ்சுழி

வலஞ்சுழி1 valañjuḻittal,    4 செ.குன்றாவி. (v.t)

   1. வலமாகச் சுற்றச் செய்தல்; to cause to whirl to the right.

   2. வலப்புறமாகச் சுழியும்படிக் கீறுதல்; to draw to the right, as a circle.

     [வலம் + சுழி.]

 வலஞ்சுழி2 valañjuḻittal,    4 செ.கு.வி. (v.i.)

வலஞ்சுழி1-தல் பார்க்க;see valanculi.

     “வலஞ்சுழித் தெழுந்து வந்து” (கம்பரா. பிரமாத். 166);.

     [வலம்1 + சுழி.]

 வலஞ்சுழி3 valañjuḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வலமாகச் சுழலுதல்; to whirl to the right.

   2. வலப்புறமாகச் சுழிந்திருத்தல்; to curl to the right.

     [வலம் + சுழி.]

 வலஞ்சுழி4 valañjuḻi, பெ. (n.)

   1. வலமாகச் சுழலுகை (யாழ்.அக.);; to curling or whirling to the right.

   2. வலப் புறமாகச் சுழியுஞ் சுழி; curl winding to the right.

   3. குதிரையின் நற்சுழி வகை (வின்.);

 right-hand curl on a horse’s forehead, considered to be a good mark.

   4. தஞ்சை மாவட்டத்திலுள்ள பாடல்பெற்ற சிவத்தலம் (தேவா.);; a siva shrine in the Tañjore district.

     [வலம் + சுழி.]

வலஞ்செய்-தல்

வலஞ்செய்-தல் valañjeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   இடவலமாகச் சுற்றி வருதல்; to go round from left to right.

     “மும்முறை மலைவலஞ் செய்தால்” (சிலப். 11, 107);.

     [வலம் + செய்.]

வலட்டி

 வலட்டி valaṭṭi, பெ. (n.)

   வல்லமையுள்ளது (யாழ்.அக.);; that which is dominant or powerful.

     [வலாட்டியம் → வலட்டி.]

வலதம்

 வலதம் valadam, பெ. (n.)

   சுக்கு; dried ginger (சா.அக.);.

வலது

வலது valadu, பெ. (n.)

   1. வலப்பக்கம்; right side.

   2. வெற்றி; victory, triumph.

     “மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன்” (அருட்பா, vi, தலைவிவருந். 12);.

   3. திறமை; efficiency, skill, talent.

     “வாயுள்ளார் பேசவும் வலதுள்ளார் கொழிக்கவும்”.

   4. ஒருவன் வலதுக்குள்டளங்கியது; that which is within one’s power or ability.

     “அது என் வலதல்ல.” (வின்.);.

   5. யாதொரு குறைவுமின்றி வாழும் வாழ்க்கை; life of ease and comfort.

   6. செயல் (யாழ்.அக.);; deed.

     [வல → வலம் → வலது.]

வலதுகுண்டை

 வலதுகுண்டை valaduguṇṭai, பெ. (n.)

   நுகத்தின் வலப்பக்கத்து எருது (வின்.);; bull yoked on the right.

     [வலது + குள் → குண்டு → குண்டை = எருது.]

வலதுகுறைந்தோர்

 வலதுகுறைந்தோர் valaduguṟaindōr, பெ. (n.)

   உடல் உறுப்பு குறைந்தோர்; physically handicapped people.

வலது குறைந்தோருக்கான நிலையம் ஒன்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

மறுவ. ஊனமுற்றோர்.

     [வலது + குறைந்தோர்.]

வலதுகை

வலதுகை1 valadugai, பெ. (n.)

   ஆலோசனை வழங்குதல், மந்தணம் (இரகசியம்); காத்தல், குறிப்பறிந்து நம்பிக்கையாக நிறைவேற்றுதல், முதலானவற்றில் ஒருவருக்கு உறுதுணையாக; one’s right hand, a confident who supports one in all respects.

சிறப்புச் செயலர்தான் முதலமைச்சரின் வலது கை.

 வலதுகை2 valadugai, பெ. (n.)

வலக்கை பார்க்க;see Vala-k-kai.

     [வலது + கை.]

வலதுசடரம்

 வலதுசடரம் valadusaḍaram, பெ. (n.)

   இதமனியிலிருக்கும் நான்கு அறைகளுள் வலது பக்கத்தில் உள்ள காரி யரத்தப் பகுதி; one of the four chambers of the heart situated on the right bottom-right ventricle (சா.அக.);.

     [வலது + சடரம்.]

வலதுசாரி

 வலதுசாரி valaducāri, பெ. (n.)

   முதலாளித்துவத்தை ஆதரிக்கும் இயக்கம்; rightist.

தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி.

     [வலது + சார் → சாரி.]

வலதுபுப்புசம்

 வலதுபுப்புசம் valadububbusam, பெ. (n.)

   வலது பக்கத்திலுள்ள நுரையீரல்; the right lung (சா.அக.);.

     [வலது + புப்புசம்.]

வலத்தபாடுவோர்

 வலத்தபாடுவோர் valattapāṭuvōr, பெ. (n.)

   வில்லுப்பாட்டுப் பாடுவோரின் வலப்புறம் அமர்ந்து பாடுவோர்; a singer sitting the right side on visu-p-pattusinger.

வில்லுப்பாட்டு இசைப்பவருடன் ஒத்திசைந்து பாடுவோர்.

     [வலத்த + பாடுவோர் – புகழ், வீரம், வெற்றிச் சிறப்புகளைப் பாடுவோர்.]

வலத்திடு-தல்

வலத்திடு-தல் valaddiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   சொல்லுதல்; to speak.

     [வலத்து + இடு.]

வலத்தை

வலத்தை valattai, பெ. (n.)

   நுகத்தின் வலப் பக்கத்து எருது (இ.வ.);; bull yoked on the right.

     [வலம்1 → வலத்தை.]

வலநாடு

 வலநாடு valanāṭu, பெ. (n.)

   ஒர் ஊர்; a Country.

     [வல + நாடு. (நாடு = மருத நிலம்);.]

வலநாள்

வலநாள் valanāḷ, பெ. (n.)

வலவோட்டு நாள் (விதான. கால. 2); பார்க்க;see vala-v-ottu-nal.

     [வலம் + நாள்.]

வலந்தம்

வலந்தம்1 valandam, பெ. (n.)

   வளைவு (யாழ்.அக.);; curve, bend, arch.

     [வல1 → வலந்தம்.]

 வலந்தம்2 valandam, பெ. (n.)

   சொல் (யாழ்.அக.);; word.

     [வல → வலந்தம்.]

வலந்தரை

 வலந்தரை valandarai, பெ. (n.)

வலங்காரம் (இ.வ.); பார்க்க;see valangaram.

     [வலம் + தரை.]

வலந்தழைத்தமூலி

 வலந்தழைத்தமூலி valandaḻaittamūli, பெ. (n.)

   பிரண்டை; a climber square-stalked vine-vitis quadrangularis (சா.அக.);.

வலந்தானை

வலந்தானை valandāṉai, பெ. (n.)

   ஆடவர் வட்டமாகச் சுற்றிவந்து கோல் அடித்தாடும் ஆட்டவகை (G.Tp,D.I.86);; a dance in which men move in a circle beating sticks together.

     [வலம் + தானை.]

வலந்திரி

 வலந்திரி valandiri, பெ. (n.)

   வலப் பக்கமாய்ச் சுற்றியேறுங் கொடிவகை (யாழ்.அக.);; a creeper which winds to the right.

     [வலம் + திரி.]

வலனா-தல்

வலனா-தல் valaṉātal,    6 செ.கு.வி. (v.i.)

   இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல்; to pass across one’s path from left to right.

     [வலன்1 + ஆ-,]

 வலனா-தல் valaṉātal,    6 செ.கு.வி. (v.i.)

   இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல்; to pass across one’s path from left to right.

     [வலன்1’+ ஆ.]

வலனேர்பு

வலனேர்பு valaṉērpu, பெ. (n.)

   வலது பக்கம்; right side.

     “அணங்கடை அருந்தலை உடலி வலனேர்பு” (நற்-37, 9);,

     “உலகமுவப்ப வலனேர்பு திரிதரு” (திருமுருகா.);.

     [வலன் → வலனேர்பு.]

 வலனேர்பு valaṉērpu, பெ. (n.)

   வலது பக்கம்; right side.

     “அணங்கடை அருந்தலை உடலி வலனேர்பு” (நற்-37, 9);.

     “உலகமுவப்ப வலனேர்பு திரிதரு” (திருமுருகா.);.

     [வலன் → வலனேர்பு.]

வலன்

வலன்1 valaṉ, பெ. (n.)

   1. வெற்றி; victory, triumph.

     “வலனாக வினையென்று” (கலித். 35);.

   2. வலப்பக்கம்; right side.

     “மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும்” (சிலப். 14, 9);.

     “சுடர் நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி” (அகநா. 43:2);.

   3. மேலிடம் (திவா.);; high place or locality, higher authority.

   4. வலம்1 1, 2, 4, 6, 7, 9 பார்க்க;see valam.

     [வலம்1 → வலன்.]

 வலன்2 valaṉ, பெ. (n.)

   1. வலப்பக்கத்திலிருப்பவன்; man on the right.

     “இடவல” (பரிபா. 3, 83);.

   2. வெற்றியாளன் (சூடா.);; conqueror, winner.

     [வலம்1 → அன்.]

 வலன்3 valaṉ, பெ. (n.)

   இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கன் (திருவிளை. மாணிக்கம். 19);; an Asuraslain by Indiran.

     [வலம் → வலன்.]

வலப்பம்

வலப்பம் valappam, பெ. (n.)

   1. மரப்பலகையில் எழுதும் ஒருவகைக் கல் (வின்.);; a kind of soft stone, used to write on wooden boards.

   2. கரும்பலகையில் எழுதும் பலப்பக்குச்சி; slate pencil.

மறுவ. பலப்பம், மாக்குச்சி.

     [பலப்பம் → வலப்பம்.]

வலப்பாசிசம்

 வலப்பாசிசம் valappāsisam, பெ. (n.)

வலது பார்க்க;see valladu.

வலப்பாரிசம்

வலப்பாரிசம் valappārisam, பெ. (n.)

   வலப்பக்கம் (யாழ்.அக.);; right side.

     [வலம்1 + பாரிசம்.]

வலமன்

வலமன்1 valamaṉ, பெ. (n.)

   நந்தியாவட்டம்; a flower plant, wax flower, crape jasmine, East Indian rosebay.

 வலமன்2 valamaṉ, பெ. (n.)

   வலப்பக்கம் (யாழ்.அக.);; right side.

     [வலம் → வலமன்.]

வலமா-தல்

வலமா-தல் valamātal,    8 செ.கு.வி. (v.i.)

வலம் படு-தல் 2 (இ.வ.); பார்க்க;see valam-padu-2-.

     [வலம்1 + ஆ-6.]

வலமாய்வாங்கு-தல்

வலமாய்வாங்கு-தல் valamāyvāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வயல் வரப்பின் அருகில் உழுவதற்கேற்ப மண்வெட்டியால் வெட்டி யெடுத்து, உழவுக்கு ஏற்ற வாறாக்குதல்; to dredge with spade that portion of the field near its ridge as ploughing is not feasible.

     [வலமாய் + வாங்கு.]

வலமுறை

 வலமுறை valamuṟai, பெ. (n.)

   வட்டப்பாலையில் ஏழு பாலைகள் பிறக்கின்ற முறைகளில் ஒரு வகை; a type of diatonic notes,

     [வலம்+முறை]

வலமுறைத்திரிவுக்குறி

 வலமுறைத்திரிவுக்குறி valamuṟaittirivukkuṟi, பெ. (n.)

   சொல்லின் வலப்புறம் ஏற்படும் மாற்றத்தைச் சுட்டும் அடையாளம்; a symbol representing a change in the right side of a word (→);.

     [வலமுறை + திரிவுக்குறி.]

வலம்

வலம்1 valam, பெ. (n.)

   1. சேனை, படை (வின்.);; army.

   2. வலி, வலிமை; strength, energy.

     “வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த” (புறநா. 24);.

   3. வெற்றி; victory, triumph.

     “வலந்தரிய வேந்திய வாள்” (பு.வெ.9, 35);.

   4. ஆணை; command, authority.

     “நின் வலத்தினதே” (பரிபா. 5, 21);.

   5. வலப்பக்கம்; right side.

     “இடம் வல மேழ்பூண்ட விரவித்தேர்” (திவ்.இயற்.373);.

     “துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி” (அகநா. 3:7);.

   6. இடவலமாக வருகை; circumambulation from left to right.

     “மாலிருஞ் சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே” (திவ். திருவாய் 2, 10, 8);.

   7. சுமை, பாரம், கனம் (அக.நி.);; luggage, weight.

   8. மேலிடம் (திவா.);; high place or locality.

   9. இடம் (மலைபடு. 549, உரை); (சூடா.);; locality.

     [வல் → வல → வலம்.]

 வலம்2 valam,    இடை. (part.) ஏழனுருபு; sign of the locative

     “கைவலத்தியாழ்வரை நின்றது” (நன். 302, உரை);.

     [பலம் → வலம்.]

 வலம்3 valam, பெ. (n.)

   கழிமாசுக்கட்டு; faeces.

     [மலம் → வலம்.]

 வலம்4 valam, பெ. (n.)

   நேர்த்தியானவை; that which is excellent or matured.

     [வல → வலம்.]

வலம்நோக்கிநிலை-த்தல்

வலம்நோக்கிநிலை-த்தல் valamnōkkinilaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மூச்சை வலது மூக்குத் துளை வழியாக விடல்; exhaling or breathing through the right nostril.

     [வலம் + நோக்கி + நிலை.]

வலம்படு-தல்

வலம்படு-தல் valambaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வெற்றியுண்டாதல்; to be victorious or triumphant.

     “வலம்படு முரசின்” (பதிற்றுப். 78, 1);.

   2. இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல்; to pass across one’s path from left to right.

     “கரிக்குருவி வலம்பட்டது” (உ.வ.);. [வல → வலம்1 + படு.]

வலம்பம்

 வலம்பம் valambam, பெ. (n.)

   நேர்கோடு (யாழ்.அக.);; straight line.

     [வலம்பை → வலம்பம்.]

வலம்பாடிகள்

 வலம்பாடிகள் valambāṭigaḷ, பெ. (n.)

   வில்லுப் பாட்டு பாடும் ஒரு குழுவினர்; group of singers who sing with a accompaniment of avil,

     [வலம்(வலப்பக்கம்);+பாடிகள்]

வலம்பாய்-தல்

வலம்பாய்-தல் valambāytal,    2 செ.கு.வி. (v.i.)

வலம்படு-தல் 2 பார்க்க;see valampadu.

     [வலம் + பாய்.]

வலம்பு

 வலம்பு valambu, பெ. (n.)

   செக்கின் உறுப்புகளில் ஒன்று; a part of oil-press,

     [வல-வலம்பு]

வலம்புரநாதர்

 வலம்புரநாதர் valamburanātar, பெ. (n.)

   திருவலம்புரத்திலே கோயில் கொண்டிருக்கும் இறைவன்; the God enshrined at Tiruvalampuram.

வலம்புரி

வலம்புரி1 valamburi, பெ. (n.)

   1. வலமாகச் சுழிந்திருப்பது; that which curls to the right.

     “வலம்புரி யாழியனை” (திவ். பெரியதி. 9, 9, 9);.

   2. வலம்புரிச்சங்கு; conch whose spirals always turn to the right.

     “திருமுத் தீன்ற வலம்புரிபோல்” (சீவக. 2702);.

     “அவிர்கதிர் முத்தமொடு வலம்புரிசொரிந்து” (அகநா.201:5);.

     “துணை புணர்ந் தெழுதரும் தூநிற வலம்புரி” (கலித்.135:1);.

     “ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி” (புறநா. 225:12);.

     “இரங்குகுரல் முரசமொடு வலம்புரி யார்ப்ப” (புறநா. 397);.

   3. வலம்புரிச் சங்கு போன்று கைவரி (இரேகை);; lines in the palm of the hand resembling Valamburi-c-cangu, considered auspicious.

     “வலம்புரி பொறித்த வண்கை மதவலி” (சீவக. 204);.

   4. வலம்புரிச் சங்கின் வடிவமைந்த தலைக் கோலவகை; a head-ornament, shaped like valampuri-c-cangu.

     “உத்தியொடு…. வலம்புரி வயின் வைத்து” (திருமுரு.23);.

   5. இடவலமாகத் திருக்கோயிலைச் சுற்றுகை (வின்.);; circumambulation from left to right, as of a temple.

   தெ. வலமுரி;ம. வலம்பிரி.

     [வலம் + புரி.]

 வலம்புரி2 valamburi, பெ. (n.)

   1. நந்தியா வட்டச்செடி (பிங்.);; East Indian rose bay, wax-flower crape Jasmine.

     “பாரிசாத மென் கொழுந்தொடு வலம்புரி பலவும்”.

   2. நீண்ட செடிவகை (சூடா.);; Indian screw-tree.

     [வலம்1 + புரி.]

 வலம்புரி3 valamburi, பெ. (n.)

   சிறு விரலும் பெருவிரலும் நிமிர்ந்து, கட்டுவிரலின் அகம் வளைந்து, ஒழிந்த இரண்டு விரலும் நிமிர்ந்து இறைஞ்சி நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப். 3, 18, உரை);; a gesture with one hand in which the little finger and the thumb are held upright while the forefinger is folded and the other two fingers are held up slightly bent, one of 33 inaiyā-v-inaikkai

   2. இட வலமாகத் திருக்கோயிலைச் சுற்றி வருதல்; circumambulation from left to right, as of a temple.

     [வலம் + புரி.]

வலம்புரிக்காய்

வலம்புரிக்காய் valamburikkāy, பெ. (n.)

   வலம்புரிச் செடியின் காய் (இங்.வை. 52);; cone of the Indian screw-tree, used medicinally.

     [வலம்புரி + காய்.]

வலம்புரிக்கொடி

 வலம்புரிக்கொடி valamburikkoḍi, பெ. (n.)

   கொடிவகை (மலை.);; a climber.

     [வலம்புரி + கொடி.]

வலம்புரிச்சங்கம்

வலம்புரிச்சங்கம் valamburiccaṅgam, பெ. (n.)

வலம்புரிச்சங்கு பார்க்க;see valamburi-c-cargu.

     “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பம்” (மணிமே. 7:113);.

     [வலம்புரி + சங்கம்.]

வலம்புரிச்சங்கு

 வலம்புரிச்சங்கு valamburiccaṅgu, பெ. (n.)

   இடமிருந்து வலமாக உள் வளைந்த சங்கு; conch whose spirals always turn to the right.

     [வலம்புரி + சங்கு.]

     [P]

வலம்புரிப்புல்

வலம்புரிப்புல் valamburippul, பெ. (n.)

   புல்வகை (M.M.853, 934);; spear-grass.

     [வலம்புரி2 + புல்.]

வலம்பை

 வலம்பை valambai, பெ. (n.)

   கம்பு, கழி (இ.வ.);; pole, stick, rafter.

     [வல் → வல → வலம்பை.]

வலம்வருவாண்டி

 வலம்வருவாண்டி valamvaruvāṇṭi, பெ. (n.)

   விச்சுளி; a swift little bird (சா.அக.);.

வலம்வா-தல்

வலம்வா-தல் valamvātal,    15 செ.குன்றாவி. (v.t.)

   இடவலமாகத் திருக்கோயிலைச் சுற்றி வருதல்; to go round from left to right, as of a temple.

     “திருமலையே வலம்வந்தனள்” (தக்கயாகப். 321);.

     [வலம்1 + வா.]

வலயக் கிரகணம்

 வலயக் கிரகணம் valayaggiragaṇam, பெ. (n.)

   வலயம் போலத் தோன்றும் சூரிய கிரகணம் (வின்.);; annular eclipse of the sun.

     [வலயம் + கிரகணம்.]

 Skt. grahana → த. கிரகணம்.

     [P]

வலயம்

வலயம் valayam, பெ. (n.)

   1. வளையம், வட்டம் (பிங்.);; circle, round.

   2. சக்கரப்படை (சூடா.);; discus.

   3. கடல் (பிங்.);; sea.

   4. பூகோளத்தின் மண்டலாகாரமான பகுதி; zone of earth.

   5. கைவளையம்; bracelet, armlet.

     “நிரைநில முழ வலயங்களினலைய”(பெரியபு. திருநாவுக். 6);.

   6. தாமரையின் சுருள்; involute petal of a lotus.

   7. சுற்றிடம்; surrounding region.

     “கடல்வலயத் தயலறிய” (கம்பரா. சடாயுகாண். 23);.

   8. நீர்நிலை (பிங்.);, குளம்; tank, pool.

   9. பாத்தி; plot, division in a field.

   10. தோட்டப்பாத்தி; garden plot.

     “மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து” (சிலம்.10, 74);.

   11. தோட்டம் (சிலப்.10, 74, அரும்.);; garden.

   12. எல்லை (யாழ்.அக.);; limit, ambit.

     [வளையம் → வலயம்.]

வலரி

 வலரி valari, பெ. (n.)

   அலரி; a small tree – Nerium odorum (சா.அக.);.

வலர்வடிமாரன்

 வலர்வடிமாரன் valarvaḍimāraṉ, பெ. (n.)

   எருமை முன்னை; a kind of tree (சா.அக.);.

வலற்காரம்

வலற்காரம் valaṟkāram, பெ. (n.)

   பொய் (நாமதீப.655);; falsehood, lie.

     [வலக்காரம் → வலற்காரம்.]

வலவந்தன்

 வலவந்தன் valavandaṉ, பெ. (n.)

   வன்கண்மையன் (பலவந்தன்); (வின்.);; forceful or coercive man.

மறுவ. முரடன்.

     [வலவந்தம் → வலவந்தன்.]

வலவந்தம்

 வலவந்தம் valavandam, பெ. (n.)

   கட்டாயம்; Compulsion, force, coercion.

     [வல → வலவந்தம்.]

வலவந்தரம்

 வலவந்தரம் valavandaram, பெ. (n.)

   கட்டாயம், வலவந்தம் (வின்.);; compulsion, force, coercion.

     [வலவந்தம் → வலவந்தரம்.]

வலவன்

வலவன்1 valavaṉ, பெ. (n.)

   1. திறமையாளன் (வின்.);, சமர்த்தன்; capable man, expert.

   2. வெற்றியாளன் (சூடா.);; conqueror.

   3. நுகத்தின் வலப்பக்கத்து எருது (இ.வ.);; bull yoked on the right.

     [வலம் = வெற்றி, வலம்1 + அன்.]

 வலவன்2 valavaṉ, பெ. (n.)

   1. தேர்ப்பாகன்; charioteer.

     “விசும்பின் வலவ னேவா வானவூர்தி” (புறநா. 27);.

     “வலவ னாய்ந்த வண்பரி” (அகநா. 20:15);,

     “புலவு நா றகன்றுறை வலவன் தாங்கவும்” (குறுந். 311:2);.

   2. திருமால் (பிங்.);; vishnu.

     [வல்லபன் → வலபன் → வலவன்.]

 வலவன்3 valavaṉ, பெ. (n.)

   இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கன் (திருவிளை.மாணிக்கம் 19);; an Asuran slain by indiran

     “வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை” (திருவாலவா.259);.

     [வல → வலவன்.]

 வலவன்4 valavaṉ, பெ. (n.)

   வலப்பக்கத்துள்ளவன்; person on the right side, a helpful person.

     [வலம் → வலவன்.]

வலவன்பாடி

வலவன்பாடி valavaṉpāṭi, பெ. (n.)

   1. வில்லுப் பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப் பக்கத்திலிருந்து பாடுவோன்; one who accompanies the singer playing the vil in visu-p-pattu, sitting on his right side.

   2. ஒத்துப் பாடுவோன்; sycophant.

     [வலவன் + பாடி.]

வலவலத்ததுணி

 வலவலத்ததுணி valavaladdaduṇi, பெ. (n.)

   சல்லடைத் துணி; gause-a thin slight transparent-linen, a cloth woven loosely.

     [வலவலத்த + துணி.]

வலவாய்

வலவாய் valavāy, பெ. (n.)

   வலப்பக்கம்; right side.

     “அஃது இடவாய் வலவாய் பெயரும்படி” (கலித். 140, உரை);.

     [வலம்1 + வாய்.]

வலவு

 வலவு valavu, பெ. (n.)

   கைத்தறி நெசவில்பாவு தோய்வதற்குப் பயன்படுத்தப்படும் வழவழப்பான மூங்கிற்கழி; an implement in handloom weaving.

     [வல்-வல-வலவு]

வலவை

வலவை1 valavai, பெ. (n.)

   ஆனை முகத்தோன் தேவி; consort of Ganāšan

     “வலவை கேள்வனும்” (உபதேசகா. சிவவிரத. 192);.

     [வல்லபை → வல்லவை → வலவை.]

 வலவை2 valavai, பெ. (n.)

   1. திறமை, ஆற்றல், வல்லபம் (சிலப். 5, 74, உரை);; ability, skill, expertise.

   2. திறமையாளன், வல்லவன்-ள் (பிங்.);; powerful capable person, energetic man.

     “வலவைப் பார்ப்பான்” (சிலப். 23, 61);.

   3. காளி (பிங்.);; kali.

   4. காளியின் ஏவலாளியான இடாகினி (பிங்.);; a female attendant on kali.

     [வல்1 → வல → வலவை.]

 வலவை3 valavai, பெ. (n.)

   1. நாணிலாதவ-ன்-ள்; shameless.

     “வலவைக ளல்லாதார்” (நாலடி. 268);.

     “மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்” (சிலப். 5, 74);.

   2. வஞ்சப்பெண் (பிங்.);; deceitful woman, grileful lady.

     [வல1 → வலவை.]

 வலவை4 valavai, பெ. (n.)

   பிறர் ஏற்றுக் கொள்ளும் படி பேசுபவன்; uncontraversel person, infalliable man.

     [வல → வலவை.]

வலவோட்டம்

வலவோட்டம் valavōṭṭam, பெ. (n.)

வல வோட்டுநாள் பார்க்க;see vala-ottu-nal.

     [வலம்1 + ஒடு → ஒட்டம்.]

வலவோட்டுநாள்

வலவோட்டுநாள் valavōṭṭunāḷ, பெ. (n.)

   இரலை, தாழி, ஆரல், கழை, கொடிறு, கவ்வை, கைம்மீன், நெய்ம்மீன், விளக்கு, குருகு, முற்குளம், கடைக்குளம், முற்கொழுங்கல், பிற்கொழுங்கல், தொழுபஃறி ஆகிய நாண்மீன்கள் (சோதிட சிந்.155);; alternate group of three nanmingal, commencing with the group irala;

 tāsīāra/kasa, kogiru, kavvai kaimmin, neyimmin, vilakku, kurugu, murku/am, kagaikkulam, murko/uriga/pirko/uriga/to/upakri dist. fr. iga-v-õttu-nā/

     [வலம் + ஒடு + நாள்.]

வலாகம்

வலாகம்1 valākam, பெ. (n.)

   கொக்கு (பிங்.);; common crane, field bird.

     [பலாகம் → வலாகம்.]

 வலாகம்2 valākam, பெ. (n.)

   நீர் (யாழ்.அக.);; water.

     [வளாகம் → வலாகம்.]

வலாகு

வலாகு valāku, பெ. (n.)

வலாகம்1 (யாழ்.அக.); பார்க்க;see valagam1.

     “வாரி யோட்டில் வலாகரித் திட்டபோல்” (மேருமந். 652);.

     [வலாகம் → வலாகு.]

 வலாகு valāku, பெ. (n.)

வலாகம் (யாழ்.அக.); பார்க்க;see valagam.

     “வாரி போட்டில் வலாகரித் திட்டபோல்” (மேருமந். 652);.

     [வலாகம் → வலாகு.]

வலாகை

 வலாகை valākai, பெ. (n.)

   கொக்கு (யாழ்.அக.);; Crane.

     [வலாகு → வலாகை.]

     [P]

வலாசகம்

வலாசகம் valācagam, பெ. (n.)

   1. குயில் (யாழ்.அக.);; koel.

   2. தவளை; frog.

வலாட்டிகன்

 வலாட்டிகன் valāṭṭigaṉ, பெ. (n.)

   திண்ணியோன், வலுமிக்கவன்; strong man, valiant man.

     [வலாட்டியன் → வலாட்டிகன்.]

வலாட்டியன்

 வலாட்டியன் valāṭṭiyaṉ, பெ. (n.)

   வலிமிக்கோன், திண்ணியோன்; strong man, man of valour.

     [வலாட்டிகன் → வலாட்டியன்.]

வலாட்டியம்

 வலாட்டியம் valāṭṭiyam, பெ. (n.)

   பலம், வலிமை; strength.

     [வலாட்டியன் → வலாட்டியம்.]

வலாரி

வலாரி valāri, பெ. (n.)

   இந்திரன் (வலன் என்னுமசுரனின் பகைவன்);; Indra, as the enemy of the Asura Valad

     “வலாரி யாதி விண்ணோர்” (தணிகைப்பு.சீபரி.20);.

வலார்

வலார் valār, பெ. (n.)

   வளார்; twig, switch.

     “வலாஅர் வல்விற் குலாவரக் கோலி” (புறநா.324);.

     [மலார் → வலார்.]

வலாற்காரம்

 வலாற்காரம் valāṟkāram, பெ. (n.)

வலக்கட்டாயம் (யாழ்.அக.); பார்க்க;see Vala-k-kattayam.

வலி

வலி1 valittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டாயப்படுத்துதல்; to force, compel.

     “வலித்தாண்டு கொண்ட” (திருவாக. 17);.

   2. பற்றிக்கொள்ளுதல்; to seize.

     “கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே” (அகநா. 76);.

   3. இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல் (வின்.);; to understand with great difficulty, to strain, as an interpretation.

   4. மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல்

 வலி4 valittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. துடுப்பு, கயிறு முதலியவற்றை இழுத்தல்; to draw, pull;

 to attract.

     “புலித்தோல் வலித்து வீக்கி” (தேவா. 910, 3);.

     “சார்ங்கம் வளைய வலிக்கும்” (திவ். நாய்ச். 5, 8);.

படகுத் துடுப்பு வலிப்பதற்குப் பழக்கம் இருந்தால்தான் முடியும் (உ.வ.);.

கயிற்றை இடது பக்கமாக வலித்துவிடுங்கள் (இ.வ.);.

   2. வளைத்தல் (சூடா.);; to bend, curve.

   3. அழகு காட்டுதல் (திருநெல்.);; to mimic;

 to make a face at தம்பி என்னைப்பார்த்து வலிக்கிறான் (இ.வ.);.

   4. தண்டாற் படகு தள்ளுதல்; to row tug.

   5. கப்பற்பாய் தூக்குதல்; to hoist, as the sails of a vessel or ship.

   6. புகை குடித்தல் (இ.வ.);; to smoke, as tobacco.

     [வல் → வலி.]

 வலி5 valittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இசிவு காணுதல்; to have contortions or convulsions.

   2. ஏங்குதல் (வின்.);; to pine, droop, languish, to yearn, crave, desire.

   3. உடம்பில் துன்பம் தரும் உணர்வு உண்டாதல்; to pain to hurt.

மருத்துவர் ஊசி குத்தும்போது எறும்பு கடிப்பது போலத்தான் வலிக்கும் (உ.வ.);.

பல்கூசுகிறதா? வலிக்கிறதா? (இ.வ.);

பேருந்து நிறுத்தத்தில், கால் வலிக்க நிற்க வேண்டியிருந்தது (இக்.வ.);.

     [வல் → வலி.]

 வலி6 validal,    2 செ.குன்றரவி. (v.t..)

   கட்டாயப்படுத்துதல்; to behave with emel and rough manner, to coerce, to force cruelly, compel.

     “வலிந்து பற்றினான்” (உ.வ.);.

   2. மீறுதல்; to transgress, transcend, surpass.

     “அருளினை வலிய மாட்டாமை” (பெரியபு.திருநீலக். 34);.

     [வன் → வலி1 → வலி.]

 வலி7 validal,    2 செ.குன்றாவி. (v.t.)

   இழுத்தல்; to draw, pull, to attract, to influence.

     “காந்தம் வலியு மிரும்பு போல்” (பிரபுலிங். மாயையினுற். 45);.

     [வல் → வலி.]

 வலி8 validal, பெ. (n.)

   1. வன்மை; strength, power.

     “வலியி னிலைமையான்” (குறள், 273);.

   2. வலாற்காரம் பார்க்க;see valar-karam.

     “வலிசெயா தாணையை நினைந்து” (திருவாலவா.57, 5);.

   3. தன் முனைப்பு (அகங்காரம்);; arrogance.

     “கேள்வி யனைத்தினும் வலியினும் மனத்தினு முணர்வினும்” (பரிபா.3, 49);.

   4. வல்லெழுத்து; hard consonant.

     “ஈற்று மெய் வலிவரி னியல்பாம்” (நன்.159);.

   5. தொகை நிலைத் தொடர் மிக்கு வருஞ் செய்யுட் குணம் (தண்டி.24);; vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poetic composition.

   6. பற்றுக்கோடு; Prop. Support.

     “தண்ட வலியாக நனி தாழ்ந்து” (சீவக.2012);.

   7. பற்றிரும்பு (பிங்.);; cramp-iron, pincers.

   8. துன்பம்; trouble, difficulty.

     “அதைச் செய்வதில் உனக்கென்ன வலி”.

   9. நோவு; pain, ache.

     “யான்பட்ட வலிகாண வாராயோ” (கம்பரா.சூர்ப்ப.102);.

     [வல் → வலி.]

 வலி9 vali, பெ. (n.)

   1. ஒலி (பிங்.);; sound.

   2. சூளுரை, வஞ்சினம்; vow oath.

     “போக்கரும் வலிபுகன்று போய் வரு மாயை” (பிரபுலிங். வசவண். 31);.

   3. வஞ்சம் (பிங்.);, ஏமாற்று; deceit, fraud, guile, cheat, craftiness.

     [வல் → வலி7.]

 வலி10 vali, பெ. (n.)

   1. இழுக்கை; pulling, dragging;

 attracting.

   2. அமரகண்டம், குமரகண்டம், பிரமகண்டம், காக்கை வலி, முயல்வலி என்று ஐவகைப்பட்ட இசிவு நோய் (தைலவ. தைல. 75);; cramp, spasm, convulsion, fit, of five kinds, viz., amarakandam, kumara-kandam, piramakandam, käkkai-vali, muyal-vali.

   3. கப்பற்காரர்க்குக் கொடுக்கும் முத்துக் குவியலில், எட்டிலொரு பகுதி (வின்.);; remuneration to the owners of the boats used in pearl-fishery being one day’s gathering in one eighth share.

     [வல் → வலி.]

 வலி11 vali, பெ. (n.)

   வலியன், ஆற்றலுடையவன்; strong, powerful man, with stamine.

     “காய மனவசி வலிகள்” (மேருமந், 1097);. வலிபடைத்த தோள் (உ.வ.);.

     [வன் → வல் → வலி.]

 வலி12 vali, பெ. (n.)

   அடையாளம், குறி (யாழ்.அக.);; mark, trace, fold, crease.

     [வரி → வலி.]

 வலி13 vali, பெ. (n.)

   குரங்கு (யாழ்.அக.);; monkey.

 வலி14 vali, பெ. (n.)

   நறுவிலி (மலை.);; sebesten.

     [விலி → வலி.]

வலிகுன்மம்

வலிகுன்மம்1 valiguṉmam, பெ. (n.)

   1. செரிமானமின்மையால் உண்டாகும் ஒர் நோய்; a disease due to indigestion gastragia.

   2. பித்தம் மிகுதியாகி செரியாமையினால் ஏப்பத்தோடு வலியை உண்டாக்கும் ஒரு நோய்; dyspepsia arising from chronic enlargement of the spleen.

   3. வயிறு பலவிதமாய் வலித்து, உணவினை ஏற்க மறுத்து, தேகத்தை வற்றச் செய்யும் ஓர் நோய்; a disease marked by burning in the chest, vomitting nauses with pains in the abdomen, causing emaciation.

 வலிகுன்மம்2 valiguṉmam, பெ. (n.)

   வலிப்பு முதலியவற்றோடு கூடிய வெப்பு நோய் (சீவரட். 108);; a kind of fever, attended with convulsion and pains all over the body.

     [வலி1 + குன்மம்.]

வலிகுன்மவாயு

 வலிகுன்மவாயு valiguṉmavāyu, பெ. (n.)

வலிகுன்மம் பார்க்க;see vali-kunmam.

     [வலி + குன்மவாயு.]

 Skt. våyu த. வாயு.

வலிக்கட்டாயம்

 வலிக்கட்டாயம் valikkaṭṭāyam, பெ. (n.)

வலுக்கட்டாயம் பார்க்க;see valu-k-kattàyam.

     [வலி + கட்டாயம்.]

வலிக்கட்டு

 வலிக்கட்டு valikkaṭṭu, பெ. (n.)

   யாழ் நரம்பின் வலிந்த கட்டு (பிங்.);; tight fastening of the strings of a lute.

     [வலி + கட்டு.]

வலிக்கயிறு

வலிக்கயிறு valikkayiṟu, பெ. (n.)

   வண்டியில் வைக்கோல், இன்னபிற ஏற்றிச் செல்லும் பொழுது அவை கீழே விழாமல் இழுத்துக் கட்ட உதவும் கயிறு; a long thick rope used to tighter straw heap or gumy sock’s loads.

வல்லி கவுறு, வலிகவுறு (பே.வ.);.

     [வலி10 + கயிறு. வலித்தல் = இழுத்தல், கட்டுதல்.]

வலிக்கெனல்

 வலிக்கெனல் valikkeṉal, பெ. (n.)

   தெளிவாயிருத்தற் குறிப்பு (யாழ்.அக.);; expr. signifying clearness.

வலிங்கம்

வலிங்கம் valiṅgam, பெ. (n.)

   வலாற்காரம் (யாழ்ப்.);; compulsion, coercion, force.

     [வலி3 → வலிங்கம்.]

ஒருகா. வலுவந்தம் → வலிங்கம்.

வலிசன்னி

 வலிசன்னி valisaṉṉi, பெ. (n.)

   நரம்பிழுப்பு; convulsions.

     [வலி + சன்னி.]

 Skt. sanni → த. சன்னி.

வலிசம்

 வலிசம் valisam, பெ. (n.)

   தூண்டில் (யாழ்.அக.);; fish-hook.

வலிசெய்-தல்

வலிசெய்-தல் valiseytal,    1 செ.கு.வி. (v.i.)

   1. மிறுக்குச் செய்தல்; to be stiff in manners.

     “அடிமைக் கணவன் வலிசெய்ய” (திவ். நாய்ச். 5, 10);.

   2. வல்வழக்குரைத்தல்; to make an unjust or oppressive claim.

     “தாரான் வலி செய்கின்றான்” (பெரியபு. திருநீலகண்ட. 32);.

     [வலி + செய்.]

வலிச்சம்

வலிச்சம்1 valiccam, பெ. (n.)

   வலிப்புக் காட்டுகை; grimace.

     [வலிச்சு → வலிச்சம்.]

 வலிச்சம்2 valiccam, பெ. (n.)

   முகச்சைகை; grimace.

     [வலிச்சு → வலிச்சம்.]

முதற்கால குமரிநாட்டு மாந்தனின் உடற்சைகை உறுப்புச் சைகையென்ற இருதிறத்த சைகைமொழியுள், முகச்சைகையாகிய வலிச்சமும் சைகையு ளடங்கும்.

வலிச்சற்கொடி

 வலிச்சற்கொடி valiccaṟkoḍi, பெ. (n.)

   கொடிவகை (யாழ்.அக.);; a kind of creeper.

வலிச்சலன்

வலிச்சலன் valiccalaṉ, பெ. (n.)

   1. மிகவும் மெலிந்தவன்; extremely emaciated man.

   2. பிடிவாதக்காரன்; obstinate or adamant man.

     [வலிச்சல் → வலிச்சலன்.]

குச்சி போன்று, மெல்லிய உருவினன்.

வலிச்சலாணி

வலிச்சலாணி valiccalāṇi, பெ. (n.)

   வரிச்சலாணி; nail for fastening creepers with rafter.

     [வலிச்சல் + ஆணி1.]

வலிச்சல்

வலிச்சல் valiccal, பெ. (n.)

   1. கட்டு வரிச்சல் (வின்.);; reeper of a roof, transverse lath.

   2. பனையின் கடுங்காய் (யாழ்ப்.);; palmyra fruit not fully ripe.

   3. தசை முதலியவற்றின் கடினத் தன்மை (இ.வ.);; toughness, as of flesh che.

   4. காய்ந்தது (யாழ்.அக.);; anything dried.

     [வலி4 → வலிச்சல்.]

வலிச்சை

 வலிச்சை valiccai, பெ. (n.)

கட்டுவரிச்சல், reeper.

     [வலிச்சல் → வலிச்சை.]

வலிதம்

வலிதம் validam, பெ. (n.)

   1. சுற்றுவட்டம் (யாழ்.அக.);; environment, surroundings.

   2. அசைவு; shaking, movement.

     [வலி3 → வலிதம்.]

வலிதாங்காமை

 வலிதாங்காமை valitāṅgāmai, பெ. (n.)

   வலி பொறுக்காமை; unbearable pain.

     [வலி + தாங்காமை.]

வலிதின்

வலிதின் validiṉ,    வி.எ. (adv.) விரைவாக; by force, forcibly.

     “கையாலே வலிதிற் பிடித்துக் கொள்ளும்” (கலித். 62, உரை);.

     [வல்லிதின் → வலிதின்.]

வலிதீர்க்குமருந்து

 வலிதீர்க்குமருந்து valitīrkkumarundu, பெ. (n.)

வலிநீக்குமருந்து பார்க்க;see vali nikku-marundu.

வலிது

வலிது validu, பெ. (n.)

   வலிமையுள்ளது; that which is strong and sturdy.

     “நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே” (அகநா. 265: 23);.

   2. வலவந்தம்; force, compulsion, coercion.

     [வல்1 → வலி → வலிது.]

வலிதை

வலிதை validai, பெ. (n.)

   நாட்டிய விணைக்கை வகை (சிலப்.3,12, உரை, பக். 81 கீழ்க்குறிப்பு);; a kind of hand-pose.

வலித்தல்

வலித்தல் valittal, பெ. (n.)

   செய்யுட்டிரிபு ஆறனுள் மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுகை (நன். 155);; a poetic licence which consists in the change of a soft consonant into a hard one, one of six ceyyul-Vigáram.

     [வல் → வலி3 → வலித்தல்.]

வலித்திரும்பு

 வலித்திரும்பு valittirumbu, பெ. (n.)

   காந்தம் (வின்.);; loadstone, magnet.

மறுவ. பற்றிரும்பு.

     [வலி + இரும்பு.]

பற்றியிழுக்கும் ஈர்ப்பு ஆற்றலுள்ள இரும்பு.

வலித்துக்கட்டு-தல்

வலித்துக்கட்டு-தல் validdukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கயிற்றை இழுத்துக் கட்டுதல்; to tie after tightening the rope.

வலிச்சி கட்டுதல் (உ.வ.);.

     [வல் → வலி → வலித்து + கட்டு.]

வலித்துக்காட்டு-தல்

வலித்துக்காட்டு-தல் validdukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பிறரை நக்கல் செய்யும் வகையில் விரலை ஆட்டுதல்;   வாயைக் கோணிப் பேசுதல்; to make faces at someone.

     [வலித்து + காட்டி (த.வி.); → காட்டு (பி.வி.);.]

பிறரை வேண்டுமென்றே சினமூட்டு முகத்தாயினும், நக்கல் பேச்சுப் பேசும் பான்மையிலும் வக்காணித்தும், அழகுக்காட்டியும் பேசுதல் வலித்துக்காட்டுதல் எனலாம்.

வலிநகம்

 வலிநகம் valinagam, பெ. (n.)

   தாழை (அரு.அக.);; fragrant screw-pine – Aloe.

வலிநிறம்

 வலிநிறம் valiniṟam, பெ. (n.)

   மாந்துளிர்க் கல்; a kind of stone coloured like the tender leaf of mango tree.

வலிநீக்குமருந்து

 வலிநீக்குமருந்து valinīkkumarundu, பெ. (n.)

   உறக்கத்தை உண்டாக்கி, அதன் வாயிலாக வலியை நீக்கும் மருந்து; a pain killer drug that gives relief from pain anodyne.

     [வலி + நீக்கு + மருந்து.]

வலிநோய்

வலிநோய்1 valinōy, பெ. (n.)

   இவை 46 வகை கொண்டது; convulsions, they are of 46 kinds.

     [வலி + நோய்.]

 வலிநோய்2 valinōy, பெ. (n.)

   காக்கைவலி; epilepsy.

     “வலி நோயொடு முடைநாற்ற நோயாளர்” (கடம்ப. பு. இலீலா. 107);.

     [வலி7 + நோய்.]

வலிந்தரசம்

 வலிந்தரசம் valindarasam, பெ. (n.)

   கட்டியரசம்; consolidated mercury.

வலிந்து

வலிந்து valindu, வி.அ. (adv.)

   1. வலுக் கட்டாயமாக, வேண்டுமென்றே செய்தல்; to do forceably and wontonly, deliberately.

     “ஒரு மொழியில் பிற மொழிச் சொற்களை வலிந்து புகுத்துவது தவறு”.

எதிலாவது வலிந்து ஈடுபட்டால், கவலைதானே மறையும் (இ.வ.);.

   2. வலிய; without being invited or asked.

அவன் வலிந்து வலிந்து பேசினும், நான் அவனோடு பேசமாட்டேன் (உ.வ.);.

     [வலி → வலிந்து.]

வலிந்துகொள்(ளு)-தல்

வலிந்துகொள்(ளு)-தல் valindugoḷḷudal,    16 செ.குன்றாவி. (v.t.)

   1. வலு கட்டாயமாய்க் கைப்பற்றுதல்; to annex by force.

   2. இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல்; to strain, as in interpretation, to understand with great difficulty.

     [வலி2 + கொள்.]

வலிந்துவந்துபேசு-தல்

வலிந்துவந்துபேசு-தல் valinduvandupēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   பிறர் வேண்டு தலின்றித் தானாகவே முன்வந்து பேசுதல்; to speak, voluntarily to a person who is not willing to talk.

நன்றி மறந்த நண்பர், வலிந்து வந்து பேசியவுடன், எல்லாவற்றையும் மறந்து இன்முகத்துடன் பேசினார்.

     [வலிந்துவந்து + பேசு.]

வலிந்துவலிந்துபேசு-தல்

வலிந்துவலிந்துபேசு-தல் valinduvalindupēcudal,    5 செ.கு.வி. (v.i.)

ஒரு திட்டத்தை

   அல்லது கருத்தை வற்புறுத்திப் பேசுதல்; to talk a subject or plan emphaticaly.

மகளிர்க்கான இட ஒதுக்கீட்டைப் பாராளுமன்றத்தில் அமைச்சர் வலிந்து வலிந்து பேசினார் (இ.வ.);.

     [வலிந்துவலிந்து + பேசு.]

வலினம்

 வலினம் valiṉam, பெ. (n.)

   பொறித்தேற்றா; a tree.

வலிபடு

வலிபடு1 valibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வலிமையுறுதல்; to become strong, firm.

   2. மாறுபடுதல்; to compete, rival, to match, to differentiate.

     “செங் குவளைகளே யிவை… .நின்…நயனங்களின் வலிபட்டன” (தக்கயாகப். 317);.

     [வலி1 + படு-,]

 வலிபடு2 valibaḍudal, செ.கு.வி. (v.i.)

   பற்றியிழுக்கப்படுதல்; to be drawn, dragged, to be attracted, influenced.

     “நீடு முதலையின் வாயில் வலிபடு நீல கிரியை” (பாரத. ஆறாம். 25);.

     [வலி7 → படு.]

வலிபதம்

வலிபதம் valibadam, பெ. (n.)

   பாகு முதலியன கட்டியாகும் நிலை; state of a liquid hardening into a solid mass.

     [வலி2 + பதம்.]

வலிபற்றிரும்பு

வலிபற்றிரும்பு valibaṟṟirumbu, பெ. (n.)

   பற்றுக்குறடு (பிங்.);; smith’s tongs.

     [வலிபற்று + இரும்பு.]

இர் → இரு → இரும்பு (மு.தா.197);.

நழுவும் வழுவும் பொருளைப் பொதுவாகப் பற்றிப் பிடித்து எடுப்பதற்குப் பயன்படுத்தும் இரும்பினாலாகிய, கம்மாளர் கருவி.

வலிபொறுக்கமுடியாமை

 வலிபொறுக்கமுடியாமை valiboṟukkamuḍiyāmai, பெ. (n.)

வலிபொறுக்காமை பார்க்க;see Vali-porukkāmai.

     [வலி + பொறுக்கமுடியாமை.]

வலிபொறுக்காமை

 வலிபொறுக்காமை valiboṟukkāmai, பெ. (n.)

   வலிதாங்காமை; excessive sensitiveness to pain, hyperalgesia.

     [வலி + பொறுக்காமை.]

வலிப்படு-தல்

வலிப்படு-தல் valippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   வன்முறைக்கு ஆட்படுதல்; to undergo for violence or coercion.

     [வலி + படு.]

வலிப்பற்று

 வலிப்பற்று valippaṟṟu, பெ. (n.)

   பற்றுக் குறடு (பிங்.);; smith’s tongs.

     [வலி + பற்று.]

நழுவுந் தன்மை வாய்ந்த பொருளையோ அல்லது ஏனைய வத்தன்மையவற்றை பிடித்துக் கவ்வி எடுப்பதற்குக் கம்மப் பணியாளர் பயன்படுத்துவது. பொருளைப் பிடித்து எடுக்கப் பயன்படும் இடுக்கி அல்லது இடுக்கி போன்ற கருவி.

     [P]

வலிப்பிடிப்பு

 வலிப்பிடிப்பு valippiḍippu, பெ. (n.)

   ஒரு வகை நோய்; a kind of disease, stiffness of limbs with pain.

     [வலி + பிடிப்பு.]

வலிப்பித்தம்

வலிப்பித்தம் valippittam, பெ. (n.)

   அடி வயிற்று இசிவு, மூட்டுவலி, மாரடைத்தல், உடலம் துடித்தல் முதலிய குணங்களைக் காட்டும் நோய்l; a disease marked by pain joints, pulling pain in the lower abdomen, choaking of the chest, tumour of the body etc.

     [வலி + பித்தம்.]

பே → பேத்து → பீத்து → பித்து → பித்தம்.

வலிப்பித்தம் என்பது பித்த நீரின் மிகுதியால் உண்டாகும், மிகுபித்தம். இதுவே பல்வகை வலிகளுக்கு மூலமாகும். உடம்பில் பித்த நீர் மிகுதியாகச் சுரப்பதால், அடிவயிற்று வலி, மூட்டுவலி, மார்வலி போன்ற நோய்கள் உண்டாகின்றன என்று சா.அ.க. கூறும்.

பித்து = மயக்கம், மதிமயக்கம்.

வலிப்பித்து = மிகு பித்த நீரினால், உடம்பிலுண்டாகும் வலி.

பித்து = தலைச் சுற்றை யேற்படுத்தும் நீர் (bile);.

மா.வி. அகரமுதலி பித்தம் என்ற சொல்லிற்கு etm unknown என்று கூறுதல் காண்க.

வடவர் பித்த என்னுஞ் சொல்லினின்று,

     “பைத்ய” என்னுஞ் சொல்லைத் திரித்துள்ளனர் (வ.வ.2:37);.

பித்து → பித்தம் = பித்தநீர், பித்தநாடி.

வலிப்பித்தம் என்பது யாதெனின், பித்த நீர் சுரக்கும் உறுப்பில், மிகுபித்தம் கரந்து, அச்சுரப்பின் விளைவாலேற்படும் அடிவயிற்று வலி, மார்வலி முதலானவை எனலாம்.

வலிப்பிரமை

 வலிப்பிரமை valippiramai, பெ. (n.)

   நரம்பு வலியேற்படுவது போன்ற மருட்சி; hallucinatory neuralgia.

     [வலி + பிரமை.]

 Skt. bhrama → த. பிரமை.

வலிப்பீனிசம்

 வலிப்பீனிசம் valippīṉisam, பெ. (n.)

   மூக்கினில் உண்டாகுமோர் நோய்; a disease of the nose.

     [வலி Skt. பீனிசம்.]

 Skt. pinasa → த. பீனிசம்.

வலிப்பு

வலிப்பு1 valippu, பெ. (n.)

   1. நிலைபேறு; firmness;

 permanence, stability.

     “வல்லே வலிப்புறீஇ” (சீவக. 1143);.

   2. மெல்லொற்று வல்லொற்றாகை (இலக்.);; change of a soft consonant into a hard one.

     “மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்” (தொல். எழுத்து. 157);.

   3. நோவு, வலி; pain, aching.

     “மலட்டாவைப் பற்றிக் கறவாக் கிடப்பர்…. தங்கள் கைவலிப்பே” (சடகோபரந்.37);.

   4. வருத்தம், துன்பம்; trouble, difficulty.

அதைச் செய்ய என்ன வலிப்பு?

     [வலி → வலிப்பு.]

 வலிப்பு2 valippu, பெ. (n.)

   1. இசிவு; convulsion, fit.

   2. இழுக்கை (யாழ்.அக.);; pulling, dragging, attracting.

   3. தண்டு வலிக்கை; rowing.

   4. அழகு காட்டுகை (திருநெல்.);; making faces at a person.

     [வலி → வலிப்பு.]

நோயின் காரணமாகத் திடீரென்று, கட்டுப்படுத்த இயலாதவாறு வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய நரம்பிழுப்பு.

வலிப்புறு-த்தல்

வலிப்புறு-த்தல் valippuṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தோற்றுவித்தல், நிலை பெறுத்துதல், நிறுவுதல்; to establish, make firm, to demonstrate, prove, to install.

     “வலிப்புறீஇ” (சீவக. 1143);.

   2. வற்புறுத்துதல்; to assure, make sure of, to compel.

     “நங்களன்பென நாட்டி வலிப்புறீஇ” (சீவக. 1334);.

     [வலிப்பு1 + உறு -, உல் → உறு-,]

வலிப்புறுத்துதல் என்பது, ஒரு கொள்கையையோ, நிறுவனத்தையோ தோற்றுவித்து நிலைநிறுத்துதல்.

வலிப்புவகைகள்

வலிப்புவகைகள் valippuvagaigaḷ, பெ. (n.)

   இசிவுநோய் வகைகள்; some varieties of convulsions.

சாம்பசிவ மருத்துவ அகரமுதலி வரையறுக்கும் வலிப்பு வகைகள் வருமாறு:

   1. குமரகண்டம்,

   2.காக்கைவலிசன்னி,

   3. முகவலிப்பு,

   4. முகசன்னி,

   5. முயல் வலிப்பு,

   6. மாந்த வலிப்பு,

   7. காக்கை வலிப்பு,

   8. அள்ளு வலிப்பு,

   9. புற இசிவு,

   10. வளிபரி வலிப்பு முதலியனவாகும்.

வலிப்புவாங்கு-தல்

வலிப்புவாங்கு-தல் valippuvāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   இசிவு நோயினை நீக்குதல்; to cure convulsion.

     [வலிப்பு + வாங்கு.]

வலிமருந்து

 வலிமருந்து valimarundu, பெ. (n.)

   வலிமை யூட்டுகிற மருந்து; a medicine with invigorating effect, tonic.

     [வலி + மருந்து.]

வலிமாகுன்மம்

 வலிமாகுன்மம் valimākuṉmam, பெ. (n.)

   வயிற்றுப்பகுதியில் ஏற்படும் வலி; a disease of the stomach with unbearable stabbing pain.

     [வலி + மா + குன்பம். குல் → குல்மு → குன்மம்.]

வலிமாந்தம்

வலிமாந்தம் valimāndam, பெ. (n.)

   எண் வகை மாந்தத்துளொன்று (யாழ்.அக.);; convulsions, one of en-vagai-mândam.

     [வலி7 + மாந்தம். மந்தம் → மாந்தம்.]

வலிமாந்தம் என்பது குழவி நோய் வகையைச் சார்ந்தது. செரியாமையின் விளைவாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் இசிவு நோய் என்று சா.அ.க. கூறும்.

வலிமுகம்

 வலிமுகம் valimugam, பெ. (n.)

   குரங்கு (பிங்.);; monkey.

     [வாலி → வலி + முகம்.]

வலிமுன்பு

வலிமுன்பு valimuṉpu, பெ. (n.)

   மிக்கவலி; great strength.

     “வலிமுன்பின் வல்லென்ற யாக்கை” (கலித். 4, 1);.

     [வல் → வலி1 + முன் → முன்பு.]

வலிமை

வலிமை valimai, பெ. (n.)

   1. ஆற்றல், வன்மை (வின்.);; strength, power. அவன் வலிமையும் திறமையும் உள்ளவன் (உ.வ.);.

நாம் வலிமை மிக்க நாடுகளோடு, பல துறைகளில் போட்டிபோட வேண்டி யிருக்கிறது (இக்.வ.);.

   2. திறமை, கெட்டிக்காரத்தனம்; skill, expertise, cleverness.

     “வலிமை பாராட்டல்” (யாழ்.அக.);. வலிமையுடன் போராடுபவரே, வாழ்வில் வளம் பெறுவர் (இ.வ.); படைவலிமை பெருக்குவது அமைதிக்கு ஊறு பயக்கும் (இ.வ.);.

   3. திண்மை (வின்.);; hardness, thickness.

   4. வலவந்தம் (யாழ்.அக.);; force, compulsion.

   5. ஒன்றின் அமைப்பில் அல்லது நிலைப்பாட்டில் உள்ள உறுதி; firmness.

இந்தப் பற்பசை பற்களுக்கு ஒளியும் வலியும் தரும் (இ.வ.);.

     [வலி → வலிமை.]

அகக்கரண வாற்றலாகிய உளவலி, புறக்கரண வாற்றலாகிய உடல்வலி ஆகிய இரண்டனுள், முதலில் தோன்றியது உடல்வலியே. பொதுவாக உடற்பருமனே உடல் வலிக்குக் காரணமாகும். உடல்வலியால் ஒருவன் ஒரு பொருளைக் கைப்பற்றி யாளலாம். அவ் ஆட்சியே அவனுக்கு அப்பொருள்மேல் அதிகாரத்தைக் காட்டும். அவ் அதிகாரமே உரிமையாம். ஒருவன் தன் வலிமை மிகுதியால், இன்னொருவன் பொருளிற்குக் கூட அதிகாரியாகலாம்.

     ‘வலிமைக்கு வழக்கில்லை’ என்பது இன்றும் உண்மையான பழமொழியாகும்.

வலிமைசெய்-தல்

வலிமைசெய்-தல் valimaiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வலவந்தப்படுத்துதல் (வின்.);, கட்டாயப்படுத்துதல்; to force, compel.

     [வலி → வலிமை + செய்.]

ஒரு திட்டத்தினை அல்லது பணியினைத் தமது அளப்பரிய ஆற்றல் அல்லது அதிகாரத்தின் வாயிலாக வல்லந்தமாகச் செயற்படுத்துதலே, வலிமை செய்தலாம்.

வலிய

வலிய1 valiya, பெ.எ. (adj.)

   வலிமையுள்ள; strong.

     “வலிய வாகுநின் றாடோய் தடகை” (புறநா.14:11);.

     “வலிய கூறவும் வல்லையோ மற்றே” (அகநா.191:17);,

     “எருத்து வலிய எறுழ்நோக் கிரலை” (கலித்.15:5);.

     [வலி → வலிய.]

 வலிய2 valiya, வி.எ. (adv.)

   1. வலவந்தமாக, கட்டாயமாக; forcibly, coercibly.

     “அரும்பை வலிய அலர்த்திக் கட்டின கழுநீர் மாலை” (சீவக. 1466, உரை);.

மனத்திட்பத்தை வலிய வரவழைத்துக் கொண்டான் (உ.வ.);. வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்பு (இ.வ.);.

   2. பெரிய; big.

     [வலி2 → வலிய.]

 வலிய3 valiya, வி.எ. (adv.)

   பிறர்தம் வேண்டுகோளின்றித் தானாகவே (பெரியபு. தடுத்தாட்.68);; voluntarily, freely, spontaneously, gratuitously, volitionally.

அவர் வலிய வந்து பேசினார் (உ.வ.);.

     [வலி2 → வலிய.]

வலிய கூரக்கு

 வலிய கூரக்கு valiyaārakku, பெ. (n.)

மன்னான் இனத்தலைவரின் வீடு

 house of Mannan chieftain.

     [வலிய+கூரை]

வலியகொடிவேலி

 வலியகொடிவேலி valiyagoḍivēli, பெ. (n.)

   பெருங்கொடி வேலி; a large plumbago-Pupalia atorpurpurea.

வலியசர்ப்பம்

வலியசர்ப்பம் valiyasarppam, பெ. (n.)

   பெரும்பாம்பு (வின்.);; dragon.

     [வலிய1 Skt. சர்ப்பம்.]

 Skt. sarpa → த. சர்ப்பம்.

வலியச்சென்றுபேசு-தல்

வலியச்சென்றுபேசு-தல் valiyacceṉṟupēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவர் பேசாத சூழலிலும் தானாகச் சென்று பேசுதல்; to speak voluntarily to a person, who is not willing to talk.

இயக்குநரிடம் மேலாளர் வலியச்சென்று பேசினால்தான் இயக்ககத்தின் பணிகள் இனிது முடியும் (இ.வ.);.

     [வலிய + சென்று + பேசு.]

வலியச்செய்-தல்

வலியச்செய்-தல் valiyacceytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒரு செயலை வலுக்கட்டாயமாகச் செய்தல்; to do an action forcefully

   2. வலிமைசெய்-தல் பார்க்க;see valimai-sey.

     [வலிய + செய்.]

வலியநஞ்சு

வலியநஞ்சு valiyanañju, பெ. (n.)

   அச்சந் தரும் கொடிய நஞ்சு; dreadful poison.

     [வலிய + நஞ்சு.]

நை → நைஞ்சு → நஞ்சு = உயிர்க்கொல்லி. உண்டவுடன் உயிரைக் கொல்லும் ஆற்றல் பொருந்தியது. உடலை வருத்தி, உயிரைப் போக்குந் தன்மையது.

 who is in good health, hale and healthy man.

     “வலியனென் றவர்கூற மகிழ்ந்தனன்” (கம்பரா. பள்ளி. 3);.

   4. வலியான், 4, 5 (திவா.); பார்க்க;see Valiyān.

   5. வலிபதமானது (யாழ்.அக.);; that which has been hardened into a mass.

     [வலி → வலியன்.]

வலியாடு-தல்

வலியாடு-தல் valiyāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   துன்பப்படுத்துதல்; to torment, afflict, to be in missery to torture.

     “மயிலே யெனைநீ வலியாடுதியோ” (கம்பரா. கார்கா. 55);.

     [வலி + ஆடு.]

ஆல் → ஆள் → ஆளு → ஆடு → ஆடு-தல் = செயற்படல், அசைதல். வலியாடுதல் = பிறரைத் துன்பப் படுத்துதல். ஆள் = முதனிலைத் தொழிற்பெயர்.

     [வலி1 + ஆடு.]

வலியான்

வலியான் valiyāṉ, பெ. (n.)

   1. வலிமையுள்ளோன்; sturdy, strong, powerful man.

     “வலியார்முற் றன்னை நினைக்க” (குறள், 250);.

   2. வலியன் 2, 3 பார்க்க;see valiyan.

   3. கலுழன் (பருந்து); (யாழ்.அக.);; kite.

   4. கரிக்குருவி; king-crow, raven.

     “வல்லூறாந்தை வலியான் குருகே” (பன்னிருபா. 80);.

   5. கரிக்குருவி வகை; red wagtail.

     [வலியன் → வலியான்.]

வலியின்மை

 வலியின்மை valiyiṉmai, பெ. (n.)

   வலி இல்லாமை; painlessness, anodynia.

     [வலி + இன்மை.]

இல் → இன்மை = இல்லாமை. வலியின்மை. நோயினாலுண்டாகும் வலியில்லாமையைக் குறித்து நின்றது.

வலியில்லாக்காலம்

 வலியில்லாக்காலம் valiyillākkālam, பெ. (n.)

   உடல் வலி போன்றவற்றில் உணரும் இடைப்பட்ட நோவில்லா நேரம்; in between attacks.

     [வலியில்லா + காலம்.]

வலியுங்காசம்

 வலியுங்காசம் valiyuṅgācam, பெ. (n.)

   குமரிகாசம், நோவினை உண்டாக்கும் காசம்; cataract of the eyes.

மறுவ. கண்காசம்

     [வலி → வலியுங்காசம்.]

கால் → கார் → காய் → காசம் (வெளிவருவது);. வலி = நோவு, நோய்.

கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி. வலியுங்காச மென்பது, கண் பார்வையைப் போக்கும் தன்மைத்து. இந் நோயினால் முதற்கண் கண்கள் கலங்கும். மிகுவலியுடன் கூடிய குத்தலின் விளைவால், கண்களில் நீர் வடியும்.

இக் காச நோயுற்றோர் தம் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சியால், கருமணிப்படலம் மறைந்து பார்வை மங்கும் அல்லது முற்றிலும் ஒழியும்.

சில நேரங்களில் கண்மணி பெருத்து, நீர்க்கோத்துக் காணப்படுவதுடன், அளவிற்கு அதிகமான நோவினையும் ஏற்படுத்துமென்று சா.அ.க. கூறும்.

வலியுணர்ச்சி

 வலியுணர்ச்சி valiyuṇarcci, பெ. (n.)

   வலி மிகுதியான் உடலிலேற்படும் நோவுக்குறி அல்லது வலியுணர்வு; bodily sensation of pain – Hyperalgesia.

     [வலி + உணர்ச்சி. உணர் → உணர்ச்சி = உணர்கை.]

வலியுறுத்து-தல்

வலியுறுத்து-தல் valiyuṟuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கருத்து, எண்ணம் முதலியவற்றை உறுதிப்படுத்துதல்; to strengthen, to emphasize or stress.

தன் கருத்தை வலியுறுத்த பல எடுத்துக் காட்டுகளைக் கூறினார் (உ.வ);.

முதல் மூன்று பத்திகளும் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன (உ.வ.);.

     “நெஞ்சை வலியுறீஇ” (கலித். 142);.

   2. உறுதி கூறுதல்; to affirm, assure.

   3. கோரிக்கையை வற்புறுத்துதல்; to emphasise insist on, force.

தொழிலாளர் கூட்டமைப்பு பத்துக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது (இ.வ.);

   4. கஞ்சத்தனஞ் செய்தல்; to be close fisted, to be miserly.

     “வளன் வலியுறுக்கு முளமிலாளரொடு”( புறநா. 190);.

     [வலி + உறுத்து. உல் → உறு → உறுத்துதல்.]

ஒருவர் தம், கருத்து, செயற்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்துதல் அல்லது வற்புறுத்துதல்.

வலியுற்றவிருமல்

 வலியுற்றவிருமல் valiyuṟṟavirumal, பெ. (n.)

   இடை விட்டு நிகழ்கிற வலியுடன் கூடிய இருமல்; spasmodic cough, cough occurring intermittently.

     [வலி + உறு → உற்ற – வலியுற்ற + இருமு → இருமல்.]

வலியுளைவு

 வலியுளைவு valiyuḷaivu, பெ. (n.)

   வலியுணர்கை அல்லது நோவில் அழுந்துகை; painful experience.

     [வலி + உளைவு. உள் → உளை → உளைவு.]

வலிவடிவு

 வலிவடிவு valivaḍivu, பெ. (n.)

   வலிமை சேர்த்தல்; form of energy.

     [வலி + வடிவு.]

வலிவலை

வலிவலை valivalai, பெ. (n.)

   1. வலை வகையுளொன்று; driftnut.

   2. வலைவகை பார்க்க;see valai-vagai.

     [வலி + வலை.]

வல் → வல → வலை = மீன் அல்லது விலங்குகளை அகப்படுத்துங்கருவி. பெரிய மீன்களை அகப்படுத்தும் வலை.

வலிவாதகுன்மம்

வலிவாதகுன்மம்1 valivātaguṉmam, பெ. (n.)

   வயிற்றுப்பகுதியில் வலியை யுண்டாக்கும் கட்டி; a tumour like growth in the stomach, causing with stabbing pain.

     [வலி + வாதம் + குன்மம்.]

 Skt. vata → த. வாதம்.

குல் → குல்மு → குன்மு → குன்மம்.

அடிவயிற்றின் உட்பகுதியில் உண்டாகும் உள் கட்டி அல்லது வயிற்றுக் கட்டி.

 வலிவாதகுன்மம்2 valivātaguṉmam, பெ. (n.)

   பித்தம் அதிகரித்துச் செரியாமையினால், ஏப்பத்தோடு வலியை உண்டாக்கும் நோய்; dyspepsia arising from chronic enlargement of the spleen.

     [வலி + வாதம் + குன்மம்.]

 Skt. vata → த. வாதம்.

குல் → (குத்தல், வலி); → குன்மம்.

எட்டு வகை குன்ம நோய்களுள் வலி வாத குன்மமும் ஒன்று.

வலிவாதம்

 வலிவாதம் valivātam, பெ. (n.)

   இசிவுடன் கூடிய ஓர் வகை ஊதை (வாத); நோய்; a kind of rheumatism accompanied by fits.

     [வலி + Skt. வாதம்.]

 Skt. vata → த. வாதம்.

வலிவாயு

 வலிவாயு valivāyu, பெ. (n.)

   இரைப்பை அழற்சி; gastritis.

     [வலி + வாயு.]

 Skt. våyu → த. வாயு.

இரைப்பையில் வளியினை யுண்டாக்கும் உணவுகளை உண்பதாலுண்டாகும், அழற்சி.

வலிவின்

 வலிவின் valiviṉ, பெ. (n.)

   கடுகு; mustard seeds, brassica juncea.

வலிவு

வலிவு valivu, பெ. (n.)

   1. வன்மை, ஆற்றல்; strength.

அவனுடைய கால்கள் வலிவிழந்து தளர்ந்தன (இ.வ.);.

   2. உடல் உறுதி; vigour.

   3. உச்சவிசை (இசை);; high pitch.

     “வலிவும் மெலிவும் சமனுமாக” (பொருந. 55, உரை);.

     [வலி2 → வலிவு.]

 வலிவு valivu, பெ. (n.)

வரைமுறை பார்க்க;see varaimurai.

     [வலி-வலிவு]

வலிவு மண்டிலம்

 வலிவு மண்டிலம் valivumaṇṭilam, பெ. (n.)

   மண்டில வகைகளில் ஒன்று; one of mandilam variety

     [வலிவு+மண்டிலம்]

வலிவுகொடு

வலிவுகொடு1 valivugoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வலிமை உண்டு பண்ணுதல்; to give tone or vigour to the system.

     [வலிவு + கொடு-, கொள் → கொடு.]

உள்ளத்திலும், உடலிலும் இழந்த ஆற்றலை உருவாக்குதல்.

 வலிவுகொடு2 valivugoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   நோயினால் உடல் வலிமை குன்றியபொழுது ஆற்றலூட்டும் சொற்களைக் கூறுதல்; to speak gentle and warm words to reoccupate one’s illness.

     [வலிவு + கொடு.]

வலிவுதருமருந்து

 வலிவுதருமருந்து valivudarumarundu, பெ. (n.)

   ஆற்றல் அல்லது வலுவுண்டாக்கும் மருந்து; a tonic, invigorating medicine.

     [வலிவு + தரு + மருந்து.]

வலிவூட்டு-தல்

வலிவூட்டு-தல் valivūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவர் தம் கருத்து, செயற்பாடு, கொள்கை முதலானவற்றை உறுதிப்படுத்தி உரைத்தல் அல்லது வலியுறுத்திக் கூறுதல்; to reiterate strongly in one’s policy, views, opinion and action etc.

என் கருத்துகள் அல்லது செயற்பாடுகளுக்கு வலிவூட்டும் வகையில் தரவுகள் கிடைத்துள்ளன (உ.வ.);.

     [வலிவு + ஊட்டு.]

ஊடு (பி.வி.); → ஊட்டு (செயப்.வி.);

ஒ.நோ. வாடு → வாட்டு

கூடு → கூட்டு.

வலீபலிதம்

 வலீபலிதம் valīpalidam, பெ. (n.)

   முகத்திற் காணும் ஓர் தோல் நோய்; a skin disease affecting the face.

வலீமுகம்

வலீமுகம் valīmugam, பெ. (n.)

   திரைந்த முகமுள்ள குரங்கு; monkey, as having a wrinkled face.

     “ஒரு திறத்த வலீமுகங்கள்” (பாரத. பதின்மூ. 37);.

     [வலி → வலி + முகம்.]

வலு

வலு1 valuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வன்மையாதல்; to be strong or hard.

   2. திரப்படுதல் (யாழ்.அக.);; to be firm or sustained.

   3. அதிகரித்தல்; to become heavy.

மழை வலுத்துவிட்டது (உவ);.

     [வலு1 → வலு.]

 வலு2 valu, பெ. (n.)

   1. வலிமை (வின்);, ஆற்றல்; strength, sturdiness.

   2. திறமை; expertise, skill, ability.

   3. கனம் (யாழ்.அக.);; weight.

   4. எடைக்கு மேற்பட்டுள்ள காசு (வின்.);; coin above standard weight, opp. to melu.

   5. பெருங் கொசுகு வகை (வின்.);; a species of big mosquito.

   6. எட்டென்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி (வின்.);; a cant term for eight.

   7. பற்று (யாழ்.அக.);; prop.

   8. ஒரு வகைப் பசை மருந்து (யாழ்.அக.);; a medicinal paste.

க. பலு.

     [வல் → வலு.]

 வலு3 valu, இடை. (part)

   படு, மிகவும் (யாழ்ப்.);; very.

     “அவன் வலுவேகமாக மிதிவண்டி ஒட்டுகிறான். அவன் வலு கெட்டிக்காரன் (இலங்கைவழக்கு);.

     [வல் → வலு.]

 வலு4 valu, பெ.அ. (adj.)

   1. வலமான; strong.

   2. அளவு கடந்த, அதிகமான, பெரிய; great, much, more, surplus.

வலுகடினம்.

     [வல்1 → வலு.]

வலுகாரி

 வலுகாரி valukāri, பெ. (n.)

வலுக்காரி பார்க்க;see valu-k-kāri.

     [வலு + காரி.]

கரு → கருத்தல். கருத்தல் = செய்தல். கரு → கார் + இ = காரி. இங்கு வலுகாரி என்பது, வேலைக்காரி, பணக்காரி என்பவற்றிற் போல, வலுவுடைமைப் பொருளில் வரும், ஒரு பெண்பாற் பெயரீறு.

வலுகிழம்

வலுகிழம்1 valugiḻm, பெ. (n.)

   மிகக்கிழம்; very old person.

மறுவ. படுகிழம்

     [வலு + கிழம்.]

 வலுகிழம்2 valugiḻm, பெ. (n.)

   1. வலமிகு கிழம், ஆற்றல் வாய்ந்த கிழம்; strong, old person or animal, energetic aged being.

   2. மிக்க கிழத்தனமுள்ள-வன்-வள்-து (வின்.);; decrepit, old person or animal, very old infirm being.

     [வலு + கிழம்.]

கீழ் → கிழம் = முதுமை, முதியோர், முதுமையடைந்தது. வலுகிழம் என்பது, ஈங்கு ஆற்றலும், வலிமையும் வாய்ந்த, முதுமைப் பருவத்தைக் குறித்தது.

வலுக்கட்டாயம்

வலுக்கட்டாயம் valukkaṭṭāyam, பெ. (n.)

   1. வலவந்தம்; force, coercion.

சாப்பிடுவதற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார் (உ.வ.);.

   2. வல்லந்தம்; compulsion.

     [வலு + கட்டாயம். கட்டு → கட்டாயம் (வே.க.136);.]

ஒன்றைச் செய்வதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், தவிர்க்கவியலாத சூழலில், மற்றொருவரால் வற்புறுத்தப்பட்டுச் செயல்புரிவதே வலுக்கட்டாயம்.

வலுக்காரி

வலுக்காரி valukkāri, பெ. (n.)

   திறமையுள்ளவள் (வின்.);; skillful woman.

     “தெண்டிக்கு மன்னவனைச் சேர்ந்த வலுக்காரியை” (கூளப்ப. 356);.

     [வலு1 + காரி.]

வலுக்கிடு-தல்

வலுக்கிடு-தல் valukkiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   விறைத்தல் (இ.வ.);; to become stiff.

     [வலு → வலுக்கு + இடு – இல் → இள் → இடு-,]

வலுக்குவலுக்கெனல்

 வலுக்குவலுக்கெனல் valukkuvalukkeṉal, பெ. (n.)

   எளிதில் அறாதபடி வலுத்திருத்தற் குறிப்பு (இ.வ.);; onom. expr. of toughness.

     [வலு → வலுக்கு + வலுக்கு + எனல்.]

வலுக்கொள்ளு-தல்

வலுக்கொள்ளு-தல் valukkoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளுதல்; to take forcibly.

     ‘நிலத்தை வலுக்கொண்டு’ (சரவண. பணவிடு. 184);.

     [வலு + கொள்ளு-, குல் → குள் → கொள்ளு.]

வலுக்கொள்ளுதல் என்பது, தமது ஆற்றலாலும், வலிமையாலும் வலக்காரத்தாலும், முடியாது என்று யார் எவ்வளவு மறுத்துக் கூறினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, ஒன்றை தன்னகப்படுத்துதல்.

வலுசர்ப்பம்

வலுசர்ப்பம் valusarppam, பெ. (n.)

   1. பெரும்பாம்பு; dragon.

   2. கொடும்பாம்பு வடிவமான பிசாசு (கிறித்.);; satan, the infernal serpent.

     [வலு + சர்ப்பம்.]

த. சருப்பம் → Skt. sarpa.

அழகு, செல்வம் போன்றவற்றாலுண்டாகும் தன்முனைப்பு அல்லது செருக்கு மற்றும் உடல் வலிமையுமாம்.

வலுச்சண்டை

 வலுச்சண்டை valuccaṇṭai, பெ. (n.)

   குறிப்பிட்டுச் சொல்லுதற்குரிய கரணியமேது மின்றி வலியத் தொடங்குஞ் சண்டை; voluntarily picked up quarrel.

வலுச்சண்டைக்குப் போகாதே, வந்த சண்டையை விடாதே.

     [வலு + சண்டை. சள் → சண்டு → சண்டை = பூசல், போர்.]

தமது வலிமையை அல்லது ஆற்றலைக் காட்டுமுகத்தான் உருவாகும் சண்டை வலுவுள்ள பேரரசன், வலிமையற்ற குறுநில மன்னன் மீது தொடுக்குஞ் சண்டையும் வலுச்சண்டையெனலாம்.

வலுத்தவன்

வலுத்தவன் valuttavaṉ, பெ. (n.)

   செல்வாக்கு, உடல்வலிமை போன்றவற்றில் மிக்கூர்ந்தவன்; mighty man such as an eminent and physical valour etc.

வலுத்தவன் சொல்வதெல்லாம் சட்டமாகுமா? (உ.வ.);.

வலுத்தவன் செயலுக்குத்தான் மதிப்பு அதிகம்.

     [வல் → வலி → வலிமை = ஆற்றல், திறன். வல் → வலு → வலுத்தல் = வலிமையுடைத்தாதல்;

திறனுடைத்தாதல். வலு → வலுத்தவன் = செல்வாக்கிலும், சொல் வாக்கிலும் சிறந்தவன், ஆற்றலுடையவன்.]

வலுத்தவன் என்னும் இச்சொல், குமுகாயத்தில் மூவகைப் பொருண்மையில் வழக்கூன்றியுள்ளது.

   1. உடல் ஆற்றலில் வலுத்தவன்

   2. பணச்செழிப்பில் கொழுத்து, வன்முறையில் வலுத்தவன்.

   3. பெரும் பதவி வகிப்பதால், வலிமை பெற்றவனும், வலுத்தவனே யாவான்.

வலுத்துப்போ-தல்

வலுத்துப்போ-தல் valuttuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   கெட்டியாகுதல்; to grow strong solid.

வழுவழாக இருந்த பொரிவிளங்காய் உருண்டை (இனிப்பு);, வெல்லப்பாகு பதங் கூடியதால், மேலும் வலுத்துப் போனது (உ.வ.);

     [வலுத்து + போ.]

வழுவலாகவும், நழுவலாகவும் இருந்த பொருள் வலுத்துக் கெட்டித் தன்மையுடைத்தாதல்.

வலுப்பு

வலுப்பு valuppu, பெ. (n.)

   1. நிலைபேறு (யாழ்.அக.);; firmness, permanence.

   2. ஆற்றல்; strength.

     [வலு → வலுப்பு.]

வலுமை

வலுமை valumai, பெ. (n.)

   1. வலம், ஆற்றல், திறன், வலிமை; strength, power, energy.

     “வலுமைக்கு வழக்கில்லை (வின்.);.

   2. வன்முறை, வலாற்காரம் (தொல்.எழுத்து. 154, இளம்பூ.);; force, violence.

     “மன்னவனே யிந்த வலுமை செய்தா லார்க்குரைப்போம்” (கூளப்ப. 353);.

     [வலிமை → வலுமை.]

வரையிறந்த உடல்வலிமையின் காரணமாக, அனைவரையும், அடக்கி வைத்தலும், வன்முறையில் ஈடுபடுதலும், வலுமை யெனலாம்.

வலுமோசம்

 வலுமோசம் valumōcam, பெ. (n.)

   பெருங் கேடு (வின்.);; great deception, big cheating.

     [வலு + மோசம்.]

வலுவடை-தல்

வலுவடை-தல் valuvaḍaidal,    2 செ.கு.வி. (v.i.)

   வலிமை கூடுதல் அல்லது ஆற்றலுடைத்தாதல்; to get strength or vigour.

புயல்சின்னம் வலுவடைந்ததால், அதிகமழை பெய்து, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின (இ.வ.);.

     [வலுவு + அடை-, அடு → அடை.]

வலுவந்தன்

 வலுவந்தன் valuvandaṉ, பெ. (n.)

   உப்பு; salt.

வலுவந்தம்

வலுவந்தம்1 valuvandam, பெ. (n.)

   1. வலாற்காரம்; compulsion, coercion.

   2. வன்மை; might, power.

     [வலு → வலுவந்தம்.]

 வலுவந்தம்2 valuvandam, பெ. (n.)

வலுக்கட்டாயம் பார்க்க;see valu-k-kattayam.

     [ஒருகா. வலவந்தம் → வலுவந்தம்.]

வலுவந்தரம்

 வலுவந்தரம் valuvandaram, பெ. (n.)

வலுவந்தம் (யாழ்.அக.); பார்க்க;see valuvandam.

     [வலுவந்தம் → வலுவந்தரம்.]

வலுவன்

வலுவன் valuvaṉ, பெ. (n.)

   வலுவுள்ளவன், ஆற்றல் வாய்ந்தவன்; powerful person, strong and verile person.

     “வலுவர் கருணீகர் மிகு பாகஞ் செய் தன்னமிடு மடையர்” (அறப். சத. 92);.

     [வலு → வலுவன்.]

வலுவாயன்

வலுவாயன் valuvāyaṉ, பெ. (n.)

   1. நா வன்மையுள்ளவன் (வின்.);; one who is tongue-doughty, eloquent man, an adept in speaking.

   2. நாவலர்; a good orator.

     [வல் → வலு + வாய் + அன்.]

வலுவாய்ச்செய்-தல்

வலுவாய்ச்செய்-தல் valuvāycceytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   காற்று புகாதபடி கெட்டியாய் மண்சீலை செய்தல்; to lute well so that no air can enter, to make air proof solid statue.

     [வலுவாய் + செய்.]

வலுவிழ-த்தல்

வலுவிழ-த்தல் valuviḻttal,    3 செ.கு.வி. (v.i.)

   வலிமை குறைதல் அல்லது செயலிழத்தல்; to loose the strengthen or vigour.

காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுவிழந்தது (இ.வ.);.

     [வலிவு → வலுவு + இழ-, இழி → இழ.]

வலுவு

 வலுவு valuvu, பெ. (n.)

வலு பார்க்க;see valu.

     [வலு → வலுவு.]

வலுவுயரம்

 வலுவுயரம் valuvuyaram, பெ. (n.)

   மிக்க உயரம் (வின்.);; great or very height, zenith, peak.

     [வலு + உயரம்.]

வலு =

     “மிகுதி”ப் பொருள் குறித்தது.

வலுவூட்டு-தல்

வலுவூட்டு-தல் valuvūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வலிவூட்டு;see vali-v-ottu-

   2. நோயினால் வலுவிழந்த அல்லது ஆற்றல் குன்றிய உடலுக்கு வலிவூட்டும் ஊக்க மருந்தினைக் கொடுத்தல்; to offer tonic, to energize physical condition.

     [வலு + ஊட்டு.]

ஆற்றலூட்டும் மருந்துகளை உட்கொளச் செய்தல்.

உண் → ஊண் → ஊடு (தவி.); → ஊட்டு (பி.வி.); (செயப்.வி.);. (ஒ.நோ.); வாடு → வாட்டு. கூடு → கூட்டு. தொடு → தோண்டு.

வலூகம்

 வலூகம் valūkam, பெ. (n.)

   தாமரைக் கிழங்கு (யாழ்.அக.);; the root or tuber of the lotus plant.

வலை

வலை valai, பெ. (n.)

   1. உயிரிகளை யகப்படுக்குங் கருவி; net, trammel.

இரும்புவலை வைத்து அடிக்கப்பட்ட பலகணி (உ.வ.);.

மீன் பிடிக்கும் வலை (இ.வ.);. மேலிருந்து விழுந்தாலும் அடிபடாதபடி கீழே வலை கட்டப்பட்டிருந்தது (இ.வ.);.

     “புலிகொண்மார் நிறுத்த வலையுள்” (கலித். 65);.

   2. சூழ்ச்சி; trick, fraud.

     “அகப்பட்டேன்… வாசுதேவன் வலையுளே” (திவ். திருவாய். 5, 3, 6);.

   3. வேள்வித் தலைவியர் நெற்றியி லணிந்து கொள்ளும் அணிவகை; ornament worn on the forehead by the wife of the chief sacrificer.

     “அறம் புகழ்ந்த வலை சூடி…. நிலைக் கோத்த நின்றுணைத் துணைவியர்” (புறநா. 166);.

   தெ., ம. வல;க. பலெ.

     [வல் → வல → வலை.]

விலங்குகள், மீன்கள் முதலானவற்றை அகப்படுத்தற் பொருட்டுக் கயிறு, இழை போன்றவற்றால், ஒரே அளவிலான வலைக்கண்ணிட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு செய்யப்பட்ட கருவி.

வலை கொள்(ளு)-தல்

வலை கொள்(ளு)-தல் valaigoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   சூழ்தல்; to surround, to encircle.

     “வலைகொண்ட மானம் வேறென்” (இரகு. இரகுவு. 50);.

     [வலை + கொள்-, குல் → குள் → கொள்ளு)-.]

வட்டவடிவமாகச் சுற்றி வளைத்து, வளை வீசுதலே, வலை கொள்ளுதலாகும்.

வலைகட்டபத்தல்

 வலைகட்டபத்தல் valaigaṭṭabattal, தொ.பெ. (vbl.n)

   வலையை வீசுவதற்கு அணியமாக வைத்தல்; to keep ready the net.

     [வலைகட்ட + பற்றல் → பத்தல்.]

வலைகட்டல்

வலைகட்டல் valaigaṭṭal, தொ.பெ. (vbl.n.)

   1. வலை பின்னுதல்; to knit or manufacture net.

   2. பழுதான வலைகளைச்சரிபடுத்துதல்; felling of net.

     [வலை + கட்டல். கள் → கட்டு + அல் – கட்டல்.]

வலைகப்பி

 வலைகப்பி valaigappi, பெ. (n.)

   வலையைக் கடலில் இறக்கவும், மீன்பிடி கலத்தினில் ஏற்றவும் பயன்படுத்தும் உருளை; gallows.

     [வலை + கப்பி. கழி → கழிப்பு → கழிப்பி → கப்பி.]

கப்பி = மீன்பிடி வலைஞர் பயன்படுத்தும் உருளை.

வலைகாயவை-த்தல்

வலைகாயவை-த்தல் valaikāyavaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அழுக்கடைந்த ஈர்ங்கண் வலையை தூய்மை செய்து வெயிலிற் காய வைத்தல்; to wash dirty nets and dry up.

     [வலை + காயவை.]

வலைகாரன்

 வலைகாரன் valaikāraṉ, பெ. (n.)

   மீன் பிடிப்போன் (வின்.);; fisherman.

மறுவ. வலைஞன்

     [வலை + காரன். கரு → காரன்.]

உடைமையையும், உரிமையையும் ஒருங்குணர்த்தும், ஆண்பாற் பெயரீறு.

வலைகாரம்

 வலைகாரம் valaikāram, பெ. (n.)

   வெடிகாரம் (மூ.அ.);; a kind of salt.

மறுவ. வெடியுப்பு

     [வலை + காரம். கரி → கார் → காரம்.]

ஒருகா. கரி + அம் – காரம். கரி என்னும் வினையடியால் பிறந்த தொழிற்பெயரே காரம். முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர். வெடிகாரம் என்பது வெடிமருந்து செய்வதற்குப் பயன்படும் உப்பு என்றுங் கூறுவர். வெடிமருந்தின் வேகத்தையும் உறைப்பையும், வலைகாரம், ஒருங்கே உணர்த்திற்று எனலாம்.

வலைகாவு-தல்

வலைகாவு-தல் valaikāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வலையைத் தோளிலிட்டுத் தூக்கிச் செல்லுகை; to carry the net with one’s shoulder.

     [வலை + காவு-, கா → காவு. கா = சுமத்தல், காத்தல்.]

வலைகிளப்பு-தல்

வலைகிளப்பு-தல் valaigiḷappudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வலையைப் பற்றி மேலிழுத்தல்; to drag the net a top.

     [வலை + கிளப்பு-. கிளம்பு → கிளப்பு = எழுப்புதல்.]

வலைக்கண்

வலைக்கண்1 valaikkaṇ, பெ. (n.)

   வலையில் காணப்படும் இடைவெளி; net hole.

     [வலை + கண்.]

 வலைக்கண்2 valaikkaṇ, பெ. (n.)

   வலையின் சிறுதுளை (வின்.);; mesh of a net.

     [வலை + கண். குல் → குள் → கள் → கண் = துளை, சிறுதுளை.]

வலைக்கண்கட்டி

வலைக்கண்கட்டி valaikkaṇkaṭṭi, பெ. (n.)

   சிறு கட்டி எழும்பி, மரத்தின் வேரினைப் போலப் பரவி, அரத்தமும், சீழும் வடியும் ஒரு கட்டி வகை; an abscess studded with slender vegetations of flesh and attended with intolerable burning sensation, it has many small openings.

     [வலை + கண் + கட்டி.]

குள் → கள் → கட்டு → கட்டி (மு.தா.244);. கள் = திரளல், பெருகுதல், உருண்டையாதல், உருண்டு கட்டியாதல்.

வலைக்கத்தி

 வலைக்கத்தி valaikkatti, பெ. (n.)

   வலை பின்னும்போதும், பழுதுபார்க்கும் போதும், வலை நூல் அறுக்கவும், இன்னபிற தேவைக்கும் வலைஞர் பயன்படுத்தும் கத்தி; a knife used for cutting loops of yarn, thread etc., while knitting or felling of net.

     [வலை + கத்தி. கள் → கட்டு → கத்து → கத்தி.]

கத்தி = வெட்டுதல், அறுத்தல்.

     [P]

வலைக்கம்பி

 வலைக்கம்பி valaikkambi, பெ. (n.)

   வலை போன்று அமைந்த கம்பி; welded mesh.

     [வலை + கம்பி.]

கொம்பு → கம்பு → கம்பி = மரக்கிளையின் சிறு வளார் போன்று மெலிந்து நீண்டது.

வலைக்கயிறு

வலைக்கயிறு valaikkayiṟu, பெ. (n.)

   விலங்குகளை யகப்படுக்குங் கருவி; net, trammel.

     “புலிகொண்மார் நிறுத்த வலையுள்” (கலித்-65);.

     [வலை + கயிறுகள் → கய் → கயில் → கயிறு.]

கள் = கட்டுதல், பிணைத்தல்.

வலைக்காசு

 வலைக்காசு valaikkācu, பெ. (n.)

   செம்படவர் கொடுக்கும் கோயில் மகமைப் பணம் (இ.வ.);; net-money, a contribution paid by fishermen to a temple.

     [வலை + காணி. காண் → காணி.]

செம்படவர் பயன்கொண்ட நிலத்தையும், அந் நிலத்திற்குச் செலுத்தப்பட்ட வரியின் பெயரும் வலைக்காணியே ஆகும்.

வலைக்காரன்

வலைக்காரன் valaikkāraṉ, பெ. (n.)

   வலைத் தொழில் செய்பவன்; net manufacturer.

     [வலை + காரன். கரு → காரன்.]

வலைக்குரியவனையும் வலையைச் செய்பவனையும் குறிக்கும். ஆண்பால் உடைமைப் பெயரீறு. வலைக்காரன் என்னுமிச்சொல்லில் பயின்று வரும் இப் பெயரீறு வேலைக்காரன், பணக்காரன், மாட்டுக்காரன், தோட்டக்காரன், வண்டிக்காரன் போன்ற சொற்களில் வருவது போன்று உடைமைப் பொருளிலும், உரியவனைக் குறிக்காவிடத்துப் பொறுப்புரிமைக் காரனைக் குறிக்கும்.

உரியவன் = சொந்தக்காரன்.

காரன், காரியீற்றுப் பெயர்கள் உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் நூற்றுக் கணக்கில் வழக்கூன்றியுள்ளன.

த. காரன் → வ. கார.

வடமொழியாளர், இப் பெயரீற்றை வட சொல்லாக்குதற் பொருட்டுக் கரு (செய்); என்னும் முதனிலையினின்று திரித்துச் செய்பவன் என்று பொருள் கூறுவர். இது பொருந்தப் பொய்த்தலின்பாற்பட்டது. செய்வானைக் குறிக்கும் வடமொழியீறுகள் கார, காரு, காரி, காரன் (செய்பவன்);, காரி (செய்பவள்); எனப்படும் வடிவில் நிற்கும் (வே.க.189);.

வலைக்கால்

 வலைக்கால் valaikkāl, பெ. (n.)

   கடலில் வீசிய வலையினை, வலைத்திழுக்கும் போது வெளித்தோன்றும் வலையின் அடிப்பாகம்; an adjoining net, while pulling the net spread in the sea already.

     “வலைக்காலில ஏலேலோ ஒரு கடி கடிச்ச மாதிரி கிடக்கு ஏலேலோ” (நாட்டுப்புறப்பாடல்);.

     [வலை + கால். குல் → கல் → கால் = வலையின் ஒரு கூறு வலையின் அடிப்பாகம்.]

குல் = தோன்றல் கருத்து வேர்.

வலைக்காளான்

 வலைக்காளான் valaikkāḷāṉ, பெ. (n.)

   வலைக்கண்ணுருவமாயுள்ள மஞ்சள் நிற காளான்; an edible yellow mushroom.

     [வலை + காளான். காள் → காளான்.]

காளான் வகை இருபத்தொன்றில், வலைக்காளானும் ஒன்று. இன்சுவை மிக்கது. சமையலுக்கு உகந்தது என்று சா.அ.க. கூறும்.

வலைக்குணுக்கு

 வலைக்குணுக்கு valaikkuṇukku, பெ. (n.)

   வலையை நீருள் தாழச்செய்யும் மாழை (உலோகம்); யுருண்டை (வின்.);; metal weight attached to a net.

     [வலை + குணுக்கு. குள் → குணுக்கு.]

வலைக்குணுக்கு என்பது, மீன் வலையை நீருள், அமிழ்த்தும் மாழையிற் செய்த ஈயக்குண்டு.

வலைக்கூண்டு

 வலைக்கூண்டு valaikāṇṭu, பெ. (n.)

   கடற்கரையில் வலைகளை வைக்கும் பாதுகாப்பு சிறுகுடில்; a small nest to store nets.

     [வலை + கூண்டு. குள் → குண்டு → கூண்டு.]

கடற்கரையில் வலைகளைப் பாதுகாத்து வைப்பதற்குப் பயன்படும் கூண்டு போன்ற அமைப்புடைய சிறுகுடில்.

வலைசவ்வு

 வலைசவ்வு valaisavvu, பெ. (n.)

   சன்னல் பின்னலான சவ்வு; cellular tissue or texture.

     [வலை + சவ்வு. சவ் → சவ்வு.]

மெல்லிய வலைபின்னுதற்குப் பயன்படும் இழைமம்.

வலைசிகா

 வலைசிகா valaisikā, பெ. (n.)

   செந்தினை; red italian millet-Setaria italica.

வலைசுத்து-தல்

வலைசுத்து-தல் valaisuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மீன்பிடித்து முடித்த உடன் வலையை சுற்றுகை; to roll up the net immediately after fishing operation.

     [வலைசுற்றுதல் → வலைசுத்துதல் (பே.வ.);.]

வலைச்சாளரம்

 வலைச்சாளரம் valaiccāḷaram, பெ. (n.)

   பலகணி; latticed window.

     [வலை + சாளரம்.]

கம்பி வலையிட்ட பலகணி.

வலைச்சி

வலைச்சி valaicci, பெ. (n.)

   1. செம்படவப் பெண்; fisher woman.

   2. நெய்தனிலப் பெண் (யாழ்.அக.);; woman of the maritime tract or coastal areas woman who lives in sea shore.

     [வலையன் (ஆ.பா.); → வலைச்சி (பெ.பா.);]

ஒ.நோ. = புலையன் → புலைச்சி.

வலைச்சியார்

வலைச்சியார் valaicciyār, பெ. (n.)

   கலம்பக வுறுப்பினுள் தலைவன் ஒரு வலைச்சியிடம் காமக்குறிப்புப்படக் கூறும் பகுதி (குமர. பிர. மதுரைக்கலம். 66);; a section in kalambagam, which describes the hero as making love fisher woman.

     [வலைச்சி → வலைச்சியார்.]

வலைச்சேரி

 வலைச்சேரி valaiccēri, பெ. (n.)

   வலைஞர் வாழிடம்; fishermen’s Quarters.

     [வலை + சேரி. சேர் → சேரி.]

வலைஞர் சேர்ந்து வாழுமிடம் வலைச்சேரி என்றழைக்கப்பட்டது.

வலைஞன்

வலைஞன் valaiñaṉ, பெ. (n.)

   மீன் பிடிப்போன்; fisherman.

     “கொடிமுடி வலைஞர்” (மதுரைக். 256);.

     [வலை + அன் → வலையன் → வலைஞன்.]

தொன்முது தமிழில் ஞ், ந் என்பன உடம்படு மெய்களாக இருந்திருக்கின்றன. வலைஞர், வினைஞர் முதலாய சங்ககாலச் சொற்கள் இவ்வுடம்படுமெய்யினைப் பெற்றுவருதல் காண்க.

வலைதடு-த்தல்

 வலைதடு-த்தல் valaidaḍuddal, செ.குன்றாவி. (v.t.)

   பகைமை நிமித்தம் மந்திரம் செய்து, மீன்கள் வலையில் அகப்படாமலிருக்கச் செய்தல்; to make no harvesting of fish due to specific magic or enchantment by foes.

     [வலை + தடு-, துல் → தல் → தள் → தடு-த்தல் = தடைசெய்தல்.]

மந்திரத்தின் மூலமாக, மீன்கள் வலைப்படாதவாறு, தடைசெய்தலே வலை தடுத்தலாகும்.

வலைதட்டல்

 வலைதட்டல் valaidaṭṭal,    தொ.பெ. (vbl.n.) கடற்பரப்பில் வீசிய வலையைக் கொணர்ந்து, கையால் தட்டுதல்; to bring and landing the net spreads.

     [வலை + தட்டல். தட்டு → தட்டல்.]

தட்டல் = கையாலும், கருவியாலும் தட்டல். தட்டல் கருத்து முட்டல் கருத்தினின்று முகிழ்த்தது.

வலைதப்பல்

 வலைதப்பல் valaidappal, தொ.பெ. (vbl.n.)

   அழுக்கடைந்த நிலையில் இருந்த வலையினைத் தூய்மை செய்து உலர வைத்தல்; to dry the net after removing the dust.

வலையைத் தப்புத்தப்பென்றுதப்பி உலர வைத்தல்.

     [வலை + தப்பு → தப்பல்.]

மீன்பிடித்து, அழுக்குடன், முடைநாற்றம் வீகம் வலையைத் தண்ணீரில் தப்புத்தப்பென்று தப்பி அலசுதலே, வலைதப்பல் என்க.

வலைதப்பு-தல்

வலைதப்பு-தல் valaidappudal,    5 செ.கு.வி. (v.i.)

   கடலில் இளக்கிய மீன்பிடிவலை அறுபட்டோ அல்லது காணாமலோ போயொழிதல்; to lose fishing net, at fishing – spot.

     [வலை + தப்பு.]

வலைதள்ளு-தல்

வலைதள்ளு-தல் valaidaḷḷudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கலத்திலிருக்கும் வலையை, மீன் மற்றும் கடல்வாழ் உயிரிகளை வலைக்குமாறு கடலில் தள்ளுதல்; to throw the net in the sea, placed in the boat or Catamaram.

     [வலை + துள் → தள் → தள்ளு.]

வலைத்துணி

வலைத்துணி valaittuṇi, பெ. (n.)

   1. மருந்து வடிகட்டும் கொசுவலையைப் போன்ற சீலைத் துணி; filter cloth.

   2. சல்லடைத்துணி; sieve – cloth.

     [வலை + துணி.]

வலைநாற்றம்

 வலைநாற்றம் valaināṟṟam, பெ. (n.)

   முடை நாற்றம்; foul stench, very unpleasant smel.,

     “துணி வலை நாற்றம் நாறுகிறது” (மீனவழ);.

மறுவ. கவுச்சுவலை.

     [வலை + நாற்றம். நாறு → நாற்று → நாற்றம்.]

நாற்றம் = முடை நாற்றம் அல்லது மீன் வலைக்கும் மீன்பிடி வலையின் நாற்றம். நாறுதல் = தோன்றுதல், தோன்றி மணம் பரப்புதல்.

உலக வழக்கில் நாற்றம் என்னுஞ் சொல், முடைநாற்றத்தையே குறிக்கும். இலக்கிய வழக்கில் நல்லது, தீயது ஆகி இரண்டிற்கும் பொதுவாம் முதற்கண் நறுநாற்றத்தை மட்டும் குறித்த இச் சொல், காலப்போக்கில் வேறுபட்ட அல்லது மாறுபட்ட மணத்தையும் குறிக்கலாயிற்று.

வலைநாற்றம் என்னும் சொல், மீனவரிடையே, கவுச்சு நாற்றம் அல்லது முடைநாற்றம் என்னும் பொருண்மையில், வழக்கூன்றியுள்ளது. அடிக்கடி மீன் வலைத்தலால் உண்டாகும் முடைநாற்றமே, வலைநாற்றம் எனலாம்.

வலைநாள்செய்-தல்

வலைநாள்செய்-தல் valaināḷceytal,    1.செ.கு.வி. (v.i.)

   புதிய வலை வாங்கியவுடன், அதனை கடலுக்குக் கொண்டு செல்லாமல், உரிய சடங்குகளைச் செய்த பின்னரே கடற்றொழிலுக்கு வலையை எடுத்துச் செல்வர். பழைய வலையை வைத்துக் கடலை, அரிசி, வெல்லம் ஆகியன படைத்து, தெய்வங்களைத் தங்களின் வலைகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் என்று வேண்டுவர். அதன் பின்னரே கடலுக்குக் கொண்டுச் செல்வர்; to be the day of performance of rites after purchasing new net and before going for fishing, prayig deitis to be with fishermen.

     [வலை + நாள் + செய்.]

வலைபற்றல்

 வலைபற்றல் valaibaṟṟal, பெ. (n.)

   வலையைப் பற்றி எடுத்தல்; to pick up net.

     [வலை + பற்றல்.]

வலைபொத்து-தல்

வலைபொத்து-தல் valaiboddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அறுந்த வலையினைத் தைத்தல்; to stitch or repair the damaged net.

     [வலை + பொத்து.]

வலைப்படு-தல்

வலைப்படு-தல் valaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வலையில் மீன் மற்றும் கடல்வாழ் உயிரிகள் அகப்படுதல்; to be caught in a net.

   2. சூழ்ச்சிக்குட்படுதல்; to be cheated by a trick, to subject to cheat.

     “பரமன் வலைப்பட்டிருந்தேனே” (திவ். நாய்ச். 13, 2);.

     [வலை + படு.]

வலைப்பரதவர்

வலைப்பரதவர் valaipparadavar, பெ. (n.)

   மீன் பிடி தொழில் செய்வோர்; fishermen.

     “உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்” (நற். 63-1);.

     [வலை + படவர் → பரவர் → பரதவர். பரதவர் = மீன்பிடி தொழில் செய்வாருள் ஒரு வகுப்பினர்.]

வலைப்பாடு

 வலைப்பாடு valaippāṭu, பெ. (n.)

   வலையால் மீன் பிடிக்கை (யாழ்.அக.);; fishing with nets.

     [வலைப்படு → வலைப்பாடு.]

வலைப்பூச்சி

 வலைப்பூச்சி valaippūcci, பெ. (n.)

   சிலந்தி (வின்.);; spider.

     [வலை + பூச்சி. புல் → பூள் → பூய் → பூய்ச்சி → பூச்சி = சிற்றுயிரி (செந்து);.]

வலைப்பூச்சி = உட்டுளையுள்ள சிலந்திப் பூச்சி.

புல் → புர் → புரை = உட்டுளை, உட்டுளைப் பொருள்.

     [P]

வலைப்பை

 வலைப்பை valaippai, பெ. (n.)

   வலைபோற் கண்களுள்ள பை; netting, net-bag.

     [வலை + பை.]

வலைப்பொத்தல்

 வலைப்பொத்தல் valaippottal, பெ. (n.)

   அறுந்த வலையை, வலைப்பகுதியை, (கடல்வாழ் மீன் மற்றும் பிற உயிரிகளை அகப்படுத்துமாறு); மூடுகை; tearing of net with holes.

     [வலை + பொத்தல், பொத்தல் = மூடுகை.]

வலைமண்டலி

 வலைமண்டலி valaimaṇṭali, பெ. (n.)

   கரு நொச்சி; a plant justica gendarussa.

வலைமாலடி

 வலைமாலடி valaimālaḍi, பெ. (n.)

   வலையின் கீழ்ப்புற விளிம்பு; the lower edge of net.

     [வலைமால் + அடி.]

வலைமாலிணை

 வலைமாலிணை valaimāliṇai, பெ. (n.)

   வலைகளை ஒன்று சேர்த்தல்; mounting or fixing of nets.

     [வலைமால் + இணை.]

வலைமால்

 வலைமால் valaimāl, பெ. (n.)

   வலைகளின் இணைப்பு; jointing together of nets.

     [வலை + மால்.]

வலைமுடி-தல்

வலைமுடி-தல் valaimuḍidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   வலை கட்டுகை; braiding.

     [வலை + முடி.]

வலையகட்டு-தல்

வலையகட்டு-தல் valaiyagaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சுற்றிக்கட்டுதல்; to coil up, as a rope.

     [வலைய + கட்டு.]

வலையசேரி

வலையசேரி valaiyacēri, பெ. (n.)

   1. நெய்தல் நிலம் (யாழ்.அக.);; maritime tract.

   2. செம்படவர் வாழிடம்; fishermen’s quarters or colony, habitats.

     [வளையர் + சேரி. சேர் → சேரி.]

வலையர் சேரி வலையசேரி என்றானது. இங்கு. மீன்பிடிதொழில் புரியும் செம்படவர் சேர்ந்து வாழிடம் என்னும் பொருள் வந்துள்ளது.

வலையடி-த்தல்

வலையடி-த்தல் valaiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பலகணி முதலானவற்றில் வலையினைப் பொறுத்துதல்; to fix net in windows, doors, etc.

     [வலை + அடி.]

வலையன்

வலையன் valaiyaṉ, பெ. (n.)

   1. நெய்தனிலத்தான் (பிங்.);; inhabitant of maritime tracts.

   2. குடிமக்கள் பதினெண்மருள் மீன், புள் முதலியன பிடித்து வாழும் இனத்தாருள் ஒரு பிரிவினன்; fisherman, person of a caste which lives by netting fish, birds and beasts, one of 18 kudi-makkal.

   3. சாமை வகை (யாழ்.அக.);; a species of poor man’s millet.

     [வலை → வலையன்.]

வலையன்சாமை

 வலையன்சாமை valaiyaṉcāmai, பெ. (n.)

   சாமைவகை (வின்.);; a species of poor man’s millet.

     [வலையன் + சாமை. சமை → சாமை.]

வலையப்பறையன்

 வலையப்பறையன் valaiyappaṟaiyaṉ, பெ. (n.)

   வலைகளாற் பறவைகளைப் பிடிக்கும் பறையர் இனத்தினன்; a sect of paralyas who live by netting birds.

     [வலையன் + பறையன்.]

வலையம்

வலையம்1 valaiyam, பெ. (n.)

   படிக்கல்; quartz, crystal pebble.

     [வளையம் → வலையம்.]

 வலையம்2 valaiyam, பெ. (n.)

   வலயம் (வின்.);, கை வளையம், வாகுவலயம் (வின்.);; bracelet, armlet.

     “நிரைநில முழவலயங்களினலைய” (பெரியபு.திருநாவுக்.6);.

     [வளையம் → வலையம்.]

வலையரோகம்

 வலையரோகம் valaiyarōkam, பெ. (n.)

   கண்டத்திற்கு உள்ளும், வெளியிலும் நீளமாக உயர்ந்து, அதிக நோயில்லாமலும், கழுத்தைச் சுற்றிலும் வீங்கும் ஓர் நோய்; a measles like disease causing swelling around neck and a projection in front portion.

     [வளை → வலை → வலையம் + Skt. ரோகம்.]

வலையர்

வலையர் valaiyar, பெ. (n.)

   1. மீன் பிடிக்கும் தொழில் செய்வோர்; fisherman or women.

   2. நாட்டின் பூர்வீகக் குடிமக்கள்; ancient inhabitants of a nation or country or region.

     [வலை → வலையர்.]

வலையிடையர்

 வலையிடையர் valaiyiḍaiyar, பெ. (n.)

   பரதவருள் ஒரு பிரிவினர்; a sect of fishing tribes.

     [வலை + இடையர். இடை + அர் – இடையர்.]

கடல் வளத்தையையே, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட பரதவருள் ஒரு பிரிவினர்.

வலையிள-த்தல்

வலையிள-த்தல் valaiyiḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   கட்டுமரம் கலத்திலிருந்து வலையைக் கடலிற் விரித்து நழுவவிட்டு இறக்குதல்; to spread net from catamaram and go for fishing.

     [வலை + இள-. இல் → இள் → இள.]

வலையிளக்கு-தல்

வலையிளக்கு-தல் valaiyiḷakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வலையைப் பிரித்துக் கடலுள் நழுவவிட்டு இறக்குதல்; to put into the sea after unfolding the net.

     [வலை + இளக்கு. இளகு → இளக்கு.]

வலையைப் பிரித்து, நெகிழும் வண்ணம் அசைத்தல் வலையிளக்குதலெனப்படும்.

வலையிழுப்புப்பாடல்

 வலையிழுப்புப்பாடல் valaiyiḻuppuppāṭal, பெ. (n.)

   மீன் பிடிப்போர் வலை இழுக்கும் போது பாடும் பாடல்கள்; a song sung by fishermen while pulling net.

     [வலையிழுப்பு + பாடல்.]

வலையிழுப்புப் பாடல்கள் மீனவர்தம் வாழ்வியல் துன்பத்தை விளக்குவனவாகும். மீனவர்கள் மீன்வலைக்குங்கால், படும் இன்னலையும், அம் மீனை விற்குங்கால், பெறும் இழப்புகளையும், எடுத்தியம்புவன. அவர்தம் அகவாழ்வினைக் காமச்சுவை மிளிரும் பாங்கினில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன எனலாம்.

வலையூசி

 வலையூசி valaiyūci, பெ. (n.)

   பின்னுவதற்குப் பயன்படும் ஊசி; a needle used of knitting nets.

     [வலை + ஊசி. உள் → உசி → ஊசி.]

வலையின் தூவதற்குப் பயன்படும் மெல்லிய ஊசி.

     [P]

வலையேறு-தல்

வலையேறு-தல் valaiyēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பெருவலையைப் படகில் அல்லது கலத்தில் ஏற்றுகை; to load fishing boat or catamaram with big laughty net.

     [வலை + ஏறு-. ஏ → ஏல் → ஏறு-.]

வலைவகை

வலைவகை valaivagai, பெ. (n.)

   வலைகளின் பருப்பு; classifications of nets.

     [வலை + வகை.]

வலை வகைகள் :

   1) களவலை,

   2) கரைவலை,

   3) கைவலை,

   4) வடுவலை,

   5) வீச்சுவலை,

   6) பாச்சுவலை,

   7) தெவ்வலை,

   8) வரிவலை,

   9) கொண்டைவலை,

   10) மணி வலை.

   11) சிக்குவலை,

   12) வீச்சுவலை,

   13) மடிவலை,

   14) கரைவலை,

    15) இழுவலை,

    16) பொடிவலை,

    17) பருவலை,

    18) துரிவலை,

    19) சாளவலை எனப் பரதவர் பல்வேறாகப் பகுக்கின்றனர்.

வலைவடம்

வலைவடம் valaivaḍam, பெ. (n.)

   மாசு, தூது (நாமதீப. 448);; dirt.

     [வலை + வடம்.]

வலைவன்

வலைவன் valaivaṉ, பெ. (n.)

வலையன், 1, 2 பார்க்க;see valaiyan 1, 2.

     “வலைவர்க் கமர்ந்த மடமான் போல” (கலித்.23);.

     [வலையன் → வலைவன்.]

வலைவரி

 வலைவரி valaivari, பெ. (n.)

   மீன் பிடிப்போர் செலுத்தும் வரி; a tax on fishing.

     [வலை + வரி.]

வலைவளம்

வலைவளம் valaivaḷam, பெ. (n.)

   அரியவும் விலைமதிப்பு மிக்கவுமாய வஞ்சிரம், இறால் மற்றும் இன்னபிற கடல்வாழ் உயிரிகள் வகைப்படுகை; costly and rare fishes, sea species caught with one net.

     “வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப” (நற். 38, 1);.

     [வலை + வளம்.]

வலைவளை

வலைவளை1 valaivaḷaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கிழிந்த வலைகளைச் சரிசெய்து, மீண்டும் கடலுக்கு கொண்டு செல்கை; to take to the sea after mending the torn nets.

     [வலை + வளை-.]

 வலைவளை2 valaivaḷaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வலையை உப்பங்கழியில் அரைவட்டம் போலிட்டு, மீன்கள் தப்பி ஒடிவிடாதவாறு வளைக்கும் தன்மை; an exercise to arrest fishes from escaping by putting the net in encircled fashion.

     [வலை + வளை-.]

வலைவளைப்பு

வலைவளைப்பு valaivaḷaippu, பெ. (n.)

   1. வலையை வீசுகை, போதிய அளவு மீன்பிடிபட வேண்டுமென்பதற்காக ஒருபாடு வளைப்பு, இருபாடு வளைப்பு, மூன்றுபாடு வளைப்பு என்று வளைப்பதுண்டு; encircling in three categories of one, two or three to get sufficient fish catch.

   2. வலை வளை-த்தல் பார்க்க;see valai-valai.

     [வலை + வளைப்பு.]

வலைவாங்கு-தல்

வலைவாங்கு-தல் valaivāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கடலில் வீசிய வலையை மீண்டும் கலத்திற்குள் இழுத்தல்; to withdraw net spread in the sea into boat or catamaraw.

     [வலை + வாங்கு-.]

வலைவாணன்

வலைவாணன் valaivāṇaṉ, பெ. (n.)

வலையன் 1, 2 பார்க்க;see valaiyan.

     “காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்” (திருவாச. 48, 3);.

     [வலை + வாணன்.]

வலைவாழ்நன்

வலைவாழ்நன் valaivāḻnaṉ, பெ. (n.)

வலையன் 1, 2 பார்க்க;see valaiyan 1, 2.

     “வலைவாழ்நர் சேரி” (சிலப். 7. கட்டுரை, 10);.

     [வலை + வாழ்நன்.]

வலைவிரி-த்தல்

வலைவிரி-த்தல் valaivirittal, ,4 செ.கு.வி. (v.i.)

   அகப்படும்படி தகுந்த ஏற்பாடு செய்தல்; to lay a snare;

 to trap somebody.

திருடர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டிருக்கிறது (உ.வ.);.

     [வலை + விரி.]

நேர்மையான வழியில் ஒன்றை அகப்படுத்தற் பொருட்டு, முறையாக அல்லது முன்னேற்பாடாக எடுத்துக் கொள்ளும் முயற்சியே வலை விரித்தலாகும்.

வலைவீசு-தல்

வலைவீசு-தல் valaivīcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மீன் முதலியன வலைக்க கடற்பரப்பில் வலையை யெறிதல்;   வலிமை சேர்த்தல்; form of energy to spread the net, as in fishing activitis.

     “வலைவீசின. படலம்” (திருவிளை.);.

   2. வயப்படுத்த முயலுதல்; to try to ensnare or influence a person.

     ‘நடிகை மறுமணம் செய்ய முத்தழகனுக்கு காம வலைவீசினாள்’ (உ.வ.);.

     [வலை + வீசு-.]

வலைவீசுதல்-அகப்படுத்துதல் :- வலை வீசுதல் என்பது மீன் பிடிப்பதற்காகச் செய்யப்படுவது. வலைவீசல், வலையோடல், தூண்டில் போடல் என்பனவும், மீனை அகப்படுத்துவதற்கு அல்லது சிக்கவைப்பதற்குச் செய்யும் செயலேயாகும். அதே போல் ஒருவர் தாம் விரும்பிய ஒருவரை அகப்படுத்துதற்குச் செய்யும் முயற்சி, சூழ்ச்சி, பேச்சு கண்ணோக்கு என்பவை, வலைவிரித்தலாக வழக்கில் சொல்லப்படும். வலை விரித்தல் என்பதும் அகப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சியையே குறிக்கும். நேரிய வழியால் அகப்படுத்துதலை வலைவீசுதல் என்னும் வழக்கம் இல்லை (வழக்குச்சொல் அகரமுதலி);.

வலைவை-த்தல்

வலைவை-த்தல் valaivaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கடலில் வலையை போடுகை; to spread or throw net in sea.

     [வலை + வை-.]

வல்

வல்1 val, பெ. (n.)

   கட்டுக்கொடி; coagulating creeper, cocculus villosus (சா.அக.);.

 வல்2 val, பெ. (n.)

   1. வலிமை (சூடா);; strength, power.

     “ஒலிவல் ஈந்தின் உலவை அம் காட்டு” (நற்.2:2);.

     “வல்லசுரர் ஆகி” (திருவாசகம். சிவபுராணம்);.

   2. திறமை; ability, capacity, talent, skill.

   3. மேடு (உரி.நி.);; hillock.

   4. சூதாடுங்கருவி (தொல். எழுத்து. 373);; dice.

   5. முலைக்கச்சு (யாழ்.அக.);; bodice.

 வல்3 val, பெ. (n.)

   விரைவு (சூடா.);; quickness, hurriedness, speed, haste.

     “எம்மினும் விரைந்துவல் லெய்திப்பன்மா” (அகநா.9:17);.

     “வழிபடுவோரை வல்லறி தியே” (புறநா.10:1);.

வல்கம்

 வல்கம் valkam, பெ. (n.)

   மரப்பட்டை (தைலவ.);; bark of tree (சா.அக.);.

வல்கலம்

வல்கலம் valkalam, பெ. (n.)

   1. மரப்பட்டை (தைலவ.);; bark of tree.

   2. சில உடலுறுப்புகளை மூடியிருக்கும் சவ்வு; cortex.

     [வல்+கலம். குல் → கல் → கலம் = மரத்தில் அல்லது உடலில் இயற்கையாய் பொருந்தியது.]

வல்கி

 வல்கி valki, பெ. (n.)

   யாழ் (திவா.);; lute.

வல்கிதம்

 வல்கிதம் valkidam, பெ. (n.)

   வற்சிதம் (யாழ்.அக.);; gallop, a pace of horse.

     [வல் + கிதம்.]

 Skt. kita → த. கிதம்.

வல்சி

வல்சி valci, பெ. (n.)

   1. உணவு; food.

     “வளைகதிர் வல்சிகொண் டளைமல்க வைக்கும்” (புறநா. 190);.

     “குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை” (அகநா. 8:2);

     “எறிமட மாற்கு வல்சி ஆகும்” (நற். 6:8);.

   2. சோறு (பிங்.);; boiled or cooked rice.

     “கொழுவல்சி” (மதுரைக். 141);.

   3. அரிசி (சா.அக.);; rice.

     “வல்சி காய்களின் வருக்கமும்” (திருவிளை. குண்டோ. 175);.

   4. நெல்; paddy.

     “வினைஞர் வல்சி நல்க” (மலைபடு. 462);.

     [உல் → வல் → வல்சி.]

வல்மீகம்

வல்மீகம் valmīkam, பெ. (n.)

   1. கறையான் புற்று; ant-hill.

   2. ஆனைக்கால்; elephantiasis (சா.அக.);.

     [வல்மீக → வல்மீகம்.]

     [P}

வல்ல

வல்ல valla, பெ.அ. (adj.)

   1. ஆற்றல் மிக்க வலிமையுள்ள; powerful.

குறிப்பிடப் படுவதை நிகழ்த்தக்கூடிய.

   2. திறமையுள்ள; skilful, capable, talented, efficient.

குளிர் காய்ச்சலை உடனடியாகக் குறைக்கவல்ல மருந்து.

தெ. வல்ல.

     [வல் → வல்ல.]

வல்லகி

 வல்லகி vallagi, பெ. (n.)

வல்கி பார்க்க;see valgi.

     [வல்ல → வல்லகி.]

வல்லகை

 வல்லகை vallagai, பெ. (n.)

   வாழை; plantain (சா.அக.);.

வல்லக்கட்டி

 வல்லக்கட்டி vallakkaṭṭi, பெ. (n.)

   வல்லைக் கட்டி; enlargement of spleen.

     [வல்ல + கட்டி.]

குள் → கள் → கட்டு → கட்டி. கள் = திரளல், பெருகுதல், உருண்டையாதல், உருண்டு கட்டியாதல், வல்லக்கட்டி என்பது திரண்டு பெருகுதலால் ஏற்படும் தோற்றம்.

வல்லக்காடு

 வல்லக்காடு vallakkāṭu, பெ. (n.)

   சுடுகாடு; cremating ground, burial ground.

     “வயசோ வல்லக் காடோ?” (இ.வ.);.

தெ. வல்லகாடு

     [வல்ல + காடு.]

கடு = மிகுதி, செறிவு, அடர்த்தி. மரங்களின் செறிவு மிக்க இடம். இங்கே காடு என்னும் சொல் காடுவெட்டி நிலந்திருத்தியபோது, விளைநிலம் என்னும் பொருண்மையிலும், அடுத்து விளைநிலத்தையடுத்த ஊர் எல்லை யென்னும் பொருளிலும், இறுதியாக ஊரெல்லையின் கண்ணே அமைந்த சுடுகாடு என்னும் பொருள்களில் புடைபெயர்ந்துள்ளது.

வல்லக்கோட்டை

 வல்லக்கோட்டை vallakāṭṭai, பெ. (n.)

   புகழ்பெற்ற முருகன் கோவிலமைந்த ஊர்; a fabulous Lord Murugan temple located in Käncipuram Dist.

வல்லங்கை

 வல்லங்கை vallaṅgai, பெ. (n.)

   வலதுகை; right hand.

     [வலக்கை → வல்லக்கை → வல்லங்கை.]

குல் = கூடுதல் கருத்து வேர். குல் → குய் → கய் (செய்தல்); → கெய் → செய். செய் → கெய் → கை.

வல்லசம்

 வல்லசம் vallasam, பெ. (n.)

   மிளகு; pepper-Piper nigrum (சா.அக.);.

வல்லடி

வல்லடி vallaḍi, பெ. (n.)

   1. வல்லபம்2 (யாழ்.அக.); பார்க்க;see vallabam.

   2. வலுக்கட்டாயம் (சங்.அக.);; force, compulsion.

   3. கட்டாயம், வலிமை; compulsion.

   4. கொடுமை; oppression, cruelty.

   5. நோயின்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் இறப்பு; unnatural death.

     “வல்லடி வாரிக்கொண்டு போக” (உ.வ.);.

தெ. வல்லடி.

     [வல்1 + அடி

   2. அடு → அடி.]

வல்லடிக்காரன்

வல்லடிக்காரன் vallaḍikkāraṉ, பெ. (n.)

   1. வன்முறையால் வினை முடிப்போன்; bully, one who achieves or attains his object forceably.

     “வல்லடிககாரர்க்கு விளக்கேற்றிக் காட்டுமா போலே” (ஈடு. 9, 5, 3);.

   2. கொள்ளைக்காரன்; plunderer, robber.

     [வல்லடி + காரன்.]

கரு → காரன் = வினைமுதல் உடைமைப் பொருளிற் பயின்றுவரும், ஆண்பாற் பெயரீறு. வல்லடிக்காரன் என்னுமிச் சொல்லில், வலிமை

அல்லது ஆற்றலைக் கொண்டு, வன்முறையால் வினைமுடிப்போனைக் குறித்து வழங்கிற்று எனலாம். காரி (பெ.பா.);. வீட்டுக்காரன் என்பது உரிமையும், பணக்காரன் என்பது உடைமையும், காவற்காரன் என்பது வினையுடைமையும் (குலப் பெயராயின் வினையுரிமையும்);, அண்ணன் காரன் என்பது உறவுரிமை உணர்த்தும் பெயர்களாகும். தோட்டக்காரன், வண்டிக்காரன், மாட்டுக்காரன் என்பன உரியவனைக் குறிக்காவிடத்துப் பொறுப்புரிமைக்காரனைக் குறிக்கும். உரியவன் சொந்தக்காரன்.

காரன் காரியீற்றுப் பெயர்கள் நூற்றுக் கணக்கின.

காரன் (kara); → வ. கார.

வடமொழியாளர் இவ்வீற்றை வட சொல்லாக்குவதற்கு

     ‘க்ரு’ (செய்); என்னும் முதனிலையினின்று திரித்துச் செய்பவன் என்று பொருள் கூறுவர். ஆட்டுக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தண்ணீர்க்காரன், நாழிமணிக்காரன், புள்ளிக்காரன், முட்டைக்காரன், வெள்ளைக்காரன் முதலிய பெயர்கட்குச் செய்பவன் என்னும் பொருள், பொருந்தாமை காண்க. வேலைக்காரன், கூலிக்காரன் என்பனவும் வினையுடைமையே குறிக்கும்.

வல்லடியடி

வல்லடியடி1 vallaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.t.)

   வலுக்கட்டாயஞ் செய்தல்; to compel, force.

     [வல்லடி + அடி-. அடு → அடி.]

 வல்லடியடி2 vallaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொடுமை யிழைத்தல்; to cause oppression, to enforce cruelty.

     [வல்லடி + அடி-. அடு → அடி.]

வல்லடிவம்பன்

வல்லடிவம்பன் vallaḍivambaṉ, பெ. (n.)

   வலக்கட்டாயத்தால் செயலை முடித்துக் கொள்வோன்; bully, one who achieves his object by using force.

     “வடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடிவம்பர்களும்” (ஆதி யூரவதானி. 23);.

     [வல்லடி + வம்பன.]

வல்லடிவழக்கு

வல்லடிவழக்கு vallaḍivaḻkku, பெ. (n.)

   1. அழிவழக்கு (இ.வ.);; unreasonable insistence, unjust or oppressive claim.

   2. நெறிமுறையின்றி வல்லுரத்தைப் பயன்படுத்துகை (வின்.);; unjustifiable or unreasonable use of force.

     [வல்லடி + வழக்கு. வழங்கு → வழக்கு.]

வல்லடை

 வல்லடை vallaḍai, பெ. (n.)

   கூரை வீட்டில் கூரையின் அடிப்பகுதியில் அமைந்த புல் அல்லது தட்டையாலாகிய கட்டு; a kind of grass or sedge used underneath the thatched roof of a house.

     [வல் + அடை. அடு → அடை.]

வல்லணங்கு

 வல்லணங்கு vallaṇaṅgu, பெ. (n.)

   காளி (பிங்.);; kāli, as powerful.

     [வல் + அணங்கு. உணங்கு → அணங்கு.]

உணங்கு = வருந்து, வருத்து.

உண்மைக்குப் புறம்பானவரை பிறருக்கு இன்னல் விளைவிப்போரை, வருத்தும் பெண் தெய்வமென்று, ஊரகத்தார் நம்பினர். பிறரை வருத்துவோருக்கு இன்னல் தருபவள் என்றும், கடுந்துயரங்களைந்து எத்தகு வலிமை வாய்ந்த இன்னல் களைபவளே காளி.

வல்லதம்

வல்லதம் valladam, பெ. (n.)

   1. கொலை (யாழ்.அக.);; murder.

   2. மூடுகை; covering.

     [வல் → வல்ல → வல்லதம்.]

ஒருகா. வல் + அதம் = ஒரீறு என்றுமாம்.

வல்லத்துக்கல்

வல்லத்துக்கல் vallattukkal, பெ. (n.)

வல்லத்துவில்லை பார்க்க;see vallattu-villai.

மறுவ. பளிங்கு

     [வல்லம்3 + அத்து + கல்.]

வல்லத்துக்கிட்டம்

 வல்லத்துக்கிட்டம் vallattukkiṭṭam, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்தின் அருகிலுள்ள வல்லம் என்னும் ஊரில் எடுக்கும் சிறந்த கிட்டம்; over burnt brick found at vallam near Tañjore District (சா.அக.);.

     [வல்லம் + அத்து + கிட்டம்.]

வல்லத்துப் பட்டாரிகை

 வல்லத்துப் பட்டாரிகை vallattuppaṭṭārigai, பெ. (n.)

கெளரியம்மனுக்கு வழங்கும் வேறு பெயர்:

 a alternantfor Amman’s name,

     [வல்லம்+அத்து+பட்டாரிகை]

வல்லத்துவில்லை

வல்லத்துவில்லை vallattuvillai, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் என்னும் ஊரிற்கிடைக்கும் பளிங்குக் கல்; crystals for spectacles, as obtained from Vallam area in Tañjore District.

     [வல்லம்3 + அத்து + வில்லை.]

வல்லநாய்

வல்லநாய் vallanāy, பெ. (n.)

   சூதாடு கருவியாகிய நாய் (தொல். எழுத்து. 384, உரை);; a piece in gambling.

     [வல் → வல்ல + நாய்.]

வல்லந்தம்

வல்லந்தம் vallandam, பெ. (n.)

   1. வலுக்கட்டாயம், வலாற்காரம்; compulsion.

   2. வன்மை, வலு; might, strength.

   3. உரம், வலிமை; power, energy.

     [வல்ல = வலிமையுள்ள, வல்ல → வல்லந்தம்.]

வல்லபசத்தி

வல்லபசத்தி vallabasatti, பெ. (n.)

வல்லவ சத்தி பார்க்க ;see vallava-satti.

     [வல்லபம்2 + சத்தி4.]

வல்லபடி

வல்லபடி vallabaḍi,    வி.எ. (adv.) முடிந்தபடி; to the best of one’s ability.

     “தாம் வல்லபடி பாடி” (புறநா. 47. உரை);.

     [வல்ல + படி3.]

வல்லபன்

வல்லபன்1 vallabaṉ, பெ. (n.)

வல்லவன்2 பார்க்க;see vallavan2.

     [வல்லபம்2 → வல்லபன்.]

 வல்லபன்2 vallabaṉ, பெ. (n.)

வல்லவன்3 பார்க்க;see vallavan3.

     [வல்லபம்3 + வல்லபன்.]

வல்லபம்

வல்லபம்1 vallabam, பெ. (n.)

வல்லவம்1 பார்க்க;see vallavam1.

 வல்லபம்2 vallabam, பெ. (n.)

   குங்கிலியம்; resin (சா.அக.);.

   வல்லபம் என்பது வெள்ளைக் குங்கிலியம், கருங்குங்கிலியம் என்னும் இருவகை மரப்பிசினையும் குறிக்கும். இப்பிசின் நீரில் கரையாது;இம் மரப்பிசின் பொருள்களை நன்கு இறுக ஒட்டுந் தன்மை மிக்கது.

வல்லபேதம்

 வல்லபேதம் vallapētam, பெ. (n.)

   ஞாழல்; european saffron.

வல்லப்பலகை

வல்லப்பலகை vallappalagai, பெ. (n.)

   சூதாடுதற்குரிய பலகை (தொல். எழுத்து. 384, உரை);; gambling board.

     [வல்1 → வல்ல + பலகை.]

வல்லமை

வல்லமை vallamai, பெ. (n.)

   1. பெரும் வலிமை; might, power, prowess.

     “காதுசிலை வல்லமைகள்” (திருக்கலம். 72);.

இந்தியா வல்லமை பொருந்திய நாடாக வளர்ந்து வருகிறது (உ.வ.);.

   2. திறன்; ability skill, expertness.

முத்துக் குளிப்பவர்கள் நீண்ட நேரம் நீருக்குள் மூழ்கியிருக்கும் வல்லமை படைத்தவர்கள் (இ.வ.);.

     [வல் → வல்ல → வல்லமை.]

 வல்லமை vallamai, பெ.(n.)

   திறனாற்றல் (சாதுரியம்);; cleverness.

     [வல்-வல்லமை]

வல்லம்

வல்லம்1 vallam, பெ. (n.)

   ஆற்றல்; power, strength, energetic capacity.

     “வல்லம்பேசி வலிசெய் மூன்றூரினை….. நூறினான்” (தேவா. 380, 6);.

     [வன்-மை → வல்லமை → வல்லம்.]

ஒருகா. வல் → வல்லம்.

 வல்லம்2 vallam, பெ. (n.)

வல்லவை, 1 (அக.நி.); பார்க்க;see Vallavai.

 வல்லம்3 vallam, பெ. (n.)

   1. வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம்; a siva shrine located in Vellore District.

   2. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்; a town situated in the Tañjore district.

     “வல்ல மெறிந் தானேந்து வாள்” (பெருந்தொ. 961);.

     “நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்” (அகநா. 356 – 13);.

   3. வல்லத்துவில்லை பார்க்க;see vallattu-villai.

   4. வாழை (மலை.);; plantain.

   5. இரண்டு மஞ்சாடி நிறை (நாமதீப. 804);; a quality weight 2 manjiädi.

 வல்லம்4 vallam, பெ. (n.)

   வட்டமான ஒலைக் கூடை; round shaped Öla basket.

     [முல் → மல் → வல் → வல்லம்.]

வல்லம் = வட்டவடிவமாக மிடைந்து பின்னப்பட்ட ஒலைக்கூடை.

 வல்லம்5 vallam, பெ. (n.)

   1. வைப்புநஞ்சு வகையுளொன்று; a kind of arsenic.

   2. பருப்பு வகையுளொன்று; a kind of pulse (சா.அக.);.

 வல்லம்6 vallam, பெ. (n.)

வள்ளம் பார்க்க;see vallam.

வல்லம் கிட்டம்

 வல்லம் கிட்டம் vallamkiṭṭam, பெ. (n.)

   இரும்பு முதலியவற்றின் மாழைக்கட்டி; ore lump of metal.

     [வல்லம் + கிட்டம். குள் → கிள் → கிட்டம் = திரட்சி, கட்டி.]

இந்தக் கிட்டம் தஞ்சைக்கு அருகேயுள்ள வல்லத்தில் மிகுதியாகக் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் கிட்டம் ஏனைய பகுதிகளில் கிடைக்கும் கிட்டத்தைவிட மிகச் சிறந்தது. இதன் சிறப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, வல்லம்கிட்டம் என்று பெயர்பெற்றது.

வல்லம்பன்

 வல்லம்பன் vallambaṉ, பெ. (n.)

   தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம் மாவட்டங்களில், வேளாண் தொழில் செய்து வாழும் ஒர் இனம்; a cultivating caste in Tanjāvūr, Tiruchirāppalli and Rāmanādapuram Districts.

     [வல் + அம்பு → அம்பன் = வல்லம்பன்.]

வல்லயம்

வல்லயம் vallayam, பெ. (n.)

   ஈட்டிவகை; a kind of spear.

     “வல்லயத் தனிலுடைவாளில்” (கந்தபு. தருமகோ. 24);.

   தெ. பல்லமு;க. பல்லக.

     [வல் + அயம் – வல்லயம் = வலிமை பொருந்திய ஈட்டி வகை.]

     [P]

வல்லரசு

 வல்லரசு vallarasu, பெ. (n.)

   பொருளாதாரத்தில் அல்லது வலிமைசான்ற படைத்திறன் மிக்க நாடு; country of predominance in economy or in military;super power country.

வல்லரசுகள் படைக்குறைப்புச் செய்ய முன்வந்தால், மக்கள் அமைதியாக

வாழ்வர் (உ.வ.);.

     [வல் + அரசு. அரசன் → அரசு (ஈறுகெட்டது);. (ஒ.நோ.); வேந்தன் → வேந்து.]

வல்லரட்டன்

வல்லரட்டன் vallaraṭṭaṉ, பெ. (n.)

   1. பெரும் வலிமையாளன்; brave and resolute man.

   2. இறுமாப்புடையவன்; man of arrogancy.

மறுவ. மிடுக்கன்.

     [வல் + அரட்டன்.]

அாள் → அரட்டு → அரட்டன். எவரையும் வெல்லும் திறன் வாய்ந்தவன். அளப்பரும் ஆற்றல் மிக்கவனே வல்லரட்டன்.

வல்லரி

வல்லரி vallari, பெ. (n.)

   1. தளிர் (சூடா.);; budding tender shoot.

   2. பசுங்காய் (சூடா.);; green fruit.

   3. காய்க்குலை (உரி.நி.);; cluster of fruit.

   4. பூங்கொத்து (திவா.);; bunch of flowers.

   5. கொடி (சங்.அக.);; creeper.

வல்லவசத்தி

 வல்லவசத்தி vallavasatti, பெ. (n.)

   மிகுவலி; strong and kerile strength.

வல்லவட்டு

வல்லவட்டு1 vallavaṭṭu, பெ. (n.)

   வல்லவன் போடும் மேல் துண்டு; a towel worn by abled capable man.

     [வல்ல + வட்டு.]

மேல் துண்டைக் கழுத்தைச் சுற்றிப் போடுவதும், இடையில் கட்டிக்கொள்வதும் பணிவைக் காட்டும். ஒரே தோளில் தொங்க விடுவது தான் யாருக்கும் பணியேன் என்பதை குறிக்கும். அதைத் தான் வல்லவட்டு என்பர்.

 வல்லவட்டு2 vallavaṭṭu, பெ. (n.)

வல்ல வாட்டு (வின்.); பார்க்க;see vallavattu.

வல்லவன்

வல்லவன்1 vallavaṉ, பெ. (n.)

   மேலைச் சாளுக்கிய மன்னன்; the western calukya king.

 வல்லவன்2 vallavaṉ, பெ. (n.)

   1. கணவன்; husband.

     “மலைமாது வல்லவன் வாணன்” (பிங்.); (தஞ்சைவா.164);.

   2. இடையன் (வின்.);; shepherd, cowherd.

   3. இடையர் தலைவன் (யாழ்.அக.);; chief herdsman.

   4. அன்பிற்குரியவன்; one who is beloved.

   5. குதிரைகளை மேற்பார்ப்போன் (யாழ்.அக.);; supervisor of horses.

     [வல்லபன் → வல்லவன்.]

 வல்லவன்3 vallavaṉ, பெ. (n.)

   1. வலிமையுள்ளவன்; strong or heroic man.

   2. திறமைசாலி, ஆற்றலுள்ளவன், பொருத்தமானவன்; capable man, suitable man, man of ability.

     “வல்லவன் றைஇய பாவைகொல்” (கலித். 56, 7);.

வல்லலவன் வகுத்ததே வாய்க்கால் (பழ);. வல்லவனுக்கும் வல்லவன் வையத்திலுண்டு (உவ);

     ‘வல்லவன் ஆட்டும் பம்பரம் மணலிலும் ஆடும்’ (பழ.);.

     [வல்1 → வல்லவன்.]

 வல்லவன்4 vallavaṉ, பெ. (n.)

   1. சமைப்பவன் (வின்.);; cook.

   2. விராடனகரில் வீமன் கரந்துறைந்த போது, பூண்ட பெயர்; name assumed by Bhiman when he lived incognito in viräda.

     [வல்1 → வல்லவ → வல்லவன்.]

வல்லவம்

வல்லவம்1 vallavam, பெ. (n.)

   1. அன்பு, காதல் (யாழ்.அக.);; love.

   2. உயர் சாதிக் குதிரை வகை (யாழ்.அக.);; a good breed of horse species.

     [வல் → வல்ல → வல்லவம்.]

 வல்லவம்2 vallavam, பெ. (n.)

   1. வலிமை, ஆற்றல்; vitality, strength, might, potentiality.

   2. திறமை; ability, capacity, talent.

   3. கொடுஞ்செயல்; cruel deed! harsh action.

   4. அருஞ்செயல்;   வீரதீரச் செயல்; heroic deed, difficult performance.

     [வல் → வல்ல → வல்லவம்.]

வல்லவரையர்வந்தியத்தேவர்

வல்லவரையர்வந்தியத்தேவர் vallavaraiyarvandiyattēvar, பெ. (n.)

   கீழைச் சாளுக்கிய மன்னன்; a king of kilai-c-calukkias.

     “ஶ்ரீராஜ ராஜதேவர் திருத்தமைக்கையார் வல்ல வரையர் வந்தியத் தேவர் மகாதேவியார்” (தெ.கல்.தொ. 2:1. கல்.7);.

இம்மன்னன் முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தி தேவியின் கணவன்.

     [வல் → வல்ல + அரையர் + வந்தியத்தேவர்.]

வல்லவர்கோன்

 வல்லவர்கோன் vallavarāṉ, பெ. (n.)

   சாளுக்கிய நாட்டவர் அரசன்; a king of Căsukkias country.

     “வல்லவர் கோனை வரவு காணாது”.

     [வல்லவர் + கோன்.]

வல்லவர்கோன் = சாளுக்கிய ஆகவமல்லன் (வீரராசேந்திரன் – மெய்கீர்த்தி.]

வல்லவலோட்டி

 வல்லவலோட்டி vallavalōṭṭi, பெ. (n.)

   முட்செடி வகையுளொன்று; a kind of thorny shrub (சா.அக.);.

வல்லவாட்டு

வல்லவாட்டு vallavāṭṭu, பெ. (n.)

   1. இடத் தோளின் மேலிருந்து அணியும் ஆடை; upper cloth worn loosely over the left shoulder and across the chest.

     “சந்திரகாவிச் சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி” (தனிப்பா. i, 260, 1);.

   2. கழுத்தைச் சுற்றித் தொங்க விடும் ஆடை (இ.வ.);; scarf gracefully hung round the neck.

தெ. வல்லெ வாடு.

     [வல்ல + வாட்டு → வல்லவாட்டு.]

வல்லவாறு

வல்லவாறு vallavāṟu,    வி.எ. (adv.) இயன்றவளவில்; to the best of one’s ability or power.

     “வல்லவாறு சிவாய நமவென்று…. நாதனடி தொழ” (தேவா. 470: 6);.

     [வல்ல + ஆறு1.]

வல்லவாழ்

 வல்லவாழ் vallavāḻ, பெ. (n.)

   நாலாயிரத் தெய்வப் பனுவலிற் பாடல் பெற்ற திருப்பதி; sacred Tiruppadi, a place of celebration in Nalayira-t-teyva-p-panuval.

வல்லவி

வல்லவி1 vallavi, பெ. (n.)

   1. வல்லவை1 (பிங்.); பார்க்க;see vallavai.

   2. மலைமகள் (பார்வதி); (நாமதீப.23);; malai-magal.

     [வல் → வல்ல → வல்லவி.]

 வல்லவி2 vallavi, பெ. (n.)

   1. வலிமை யுள்ளவன்-ள் (சங்.அக.);; strong and verile person, mighty man.

   2. திறமையுள்ளவன்-ள் (யாழ்.அக.);; skilful or capable person.

வல்லவை

வல்லவை vallavai, பெ. (n.)

   1. மனைவி (சூடா.);; wife.

   2. ஆனைமுகனாரின் துணைவி; wife of God Ganeśān.

     [வல்லவ → வல்லவை.]

வல்லவைமன்

வல்லவைமன் vallavaimaṉ, பெ. (n.)

   ஆனைமுகன் (நாமதீப. 28);; Ganesan, as the husband of vallavai.

     [வல்லவை + மன்.]

வல்லா

வல்லா vallā, பெ. (n.)

   முடியாதவை; impossibilities, in-capabilities.

     “வல்லா கூறினும்” (தொல். பொருள். 425);.

     “வல்லாகூறி யிருக்கு முள்ளிலை” (குறுந். 219:5);.

     “வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்” (அகநா.53:14);.

     [வல்லு + ஆ.

     ‘ஆ’ = எதிர்மறை ஈறு.]

வல்லாகினி

 வல்லாகினி vallākiṉi, பெ. (n.)

   கருங்கொடி; spring creeper – Hiptage madablota (சா.அக.);.

வல்லாங்கு

வல்லாங்கு vallāṅgu,    கு.வி.எ. (adv.) இயன்ற வளவில், முடிந்த வரையில், செய்தவளவில்; to the best of one’s ability or power, to the extent possible.

     “வல்லாங்குப் பாடி” (புறநா. 47);.

     “வல்லாங்கு வருது மென்னா தல்குவர” (அகநா.79:10);.

     “வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்” (புறநா. 163:6);.

     “வல்லாங்குச் செய்து” (மணிமே-23, 44);.

     [வல்ல + ஆங்கு.]

வல்லாசி

 வல்லாசி vallāci, பெ. (n.)

   நஞ்சினை நீக்கக் கொடுக்கும் பூடு. இப்பூடு மலையாளத்தில் விளையும்; a Malabar herb given as an antitode for poisons (சா.அக.);.

வல்லாட்சி

 வல்லாட்சி vallāṭci, பெ. (n.)

   கொடுங்கோலாட்சிl; despotism.

     [வல் + ஆட்சி.]

அடக்கியொடுக்கியும், வன்மையாகவும், தன்போக்கில் ஆட்சி செய்தலுமே, வல்லாட்சியாகும்.

வல்லாட்டு

வல்லாட்டு vallāṭṭu, பெ. (n.)

   குறும்பு; horseplay, rude-pranks, mischief.

     “ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை யடக்கும்” (திருவாச. 40, 8);.

     [வல்1 + ஆடு → ஆட்டு.]

வல்லாட்டு, வேட்டையாடல் போன்றன அரசன் இன்பமாக பொழுதுபோக்கும் வழிகளாம்.

வல்லாண்முல்லை

வல்லாண்முல்லை vallāṇmullai, பெ. (n.)

   ஒருவனது குடியையும் பிறப்பிடத்தையும் இயல்புகளையும் புகழ்ந்து, அவனது ஆண்மை பெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ.8, 23);; theme of appealing to and exciting the manly virtues of a person by praising his family, his native place, and his great qualities.

     [வல்லாண்-மை + முல்லை.]

வல்லாண்மை

வல்லாண்மை vallāṇmai, பெ. (n.)

   பேராற்றல்; manliness, great ability.

     “வல்லாண்மை செல்வமென் றிவ்வெல்லாம்” (திருக்கலம். 76);.

     [வல்1 + ஆண்-மை.]

வல்லாதகம்

 வல்லாதகம் vallātagam, பெ. (n.)

வல்லாதி பார்க்க;see valladi (சா.அக.);.

வல்லாததுக்கம்

வல்லாததுக்கம் vallādadukkam, பெ. (n.)

   1. முறைமையின்றி உண்டாகுந் துயரம் (யாழ்.அக.);; misery suffered unjustly.

   2. தாங்கொணாத் துயரம் (இ.வ.);; agony, grief, unbearable distress, woe.

     [வல்லு +

     ‘ஆ’ (எதிர்மறை இடைநிலை); + துக்கம்.]

வல்லாதா

வல்லாதா vallātā, பெ. (n.)

   சேமரத்தின் கொட்டை (பதார்த்த. 1066);; marking-nut.

மறுவ. சேங்கொட்டை

வல்லாதி

 வல்லாதி vallāti, பெ. (n.)

   சேங்கொட்டை; marking nut-Semi carpus anacardium (சா.அக.);.

வல்லாதிமூலி

 வல்லாதிமூலி vallātimūli, பெ. (n.)

   வழுதலை; brinjal (சா.அக.);.

வல்லாதோர்

வல்லாதோர் vallātōr, பெ. (n.)

   வலிமை யற்றோர்; weak or infirm person.

     “இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே” (நற்.84, 11-12);.

வல்லான்

வல்லான் vallāṉ, பெ. (n.)

   1. வலிமையுள்ளவன்; a stronger, mighty man.

     “வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு” (தாயு. சுகவாரி. 3);.

     “வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி” (பதிற்றுப். 56);.

   2. திறமையாளன்; capable man.

   3. கடவுள்; God, the almighty.

     “வல்லான் செயலென வுணர்ந்து தேறி” (திருவாலவா. 56, 6);.

   4. சூதாடுபவன்; gambler.

     “வல்லானாடிய மணிவட் டேய்ப்ப” (சீவக. 983);.

     [வல் → வல்லான்.]

வல்லான்வலியான்

 வல்லான்வலியான் vallāṉvaliyāṉ, பெ. (n.)

வல்லாளகண்டன் (இ.வ.); பார்க்க;see vallala-kandan.

     [வல்லான் + வலியான்.]

வல்லாமை

வல்லாமை vallāmai, பெ. (n.)

   1. இயலாமை; incapability, incapacity.

   2. தள்ளாமை (இ.வ.);; physical unfitness.

     [வல்லு + ஆ + மை.

     ‘ஆ’ = எதிர்மறை இடைநிலை, மை = பண்புப்பெயரீறு.]

ஒ.நோ. கொள்ளாமை, செய்யாமை.

வல்லாரல்

 வல்லாரல் vallāral, பெ. (n.)

   வல்லாரை; Indian penny wort (சா.அக.);.

வல்லாரி

 வல்லாரி vallāri, பெ. (n.)

   கொக்கு; stork (சா.அக.);.

வல்லாரை

வல்லாரை1 vallārai, பெ. (n.)

   1. கீரை வகை (பதார்த்த. 359);; Indian penny-wort.

   2. தழல் (கேட்டை); விண்மீன் (பிங்.);; the 18th naksatra.

     [வல் → வல்லாரை.]

உடலுக்கு வலிவைக் கொடுக்கும். இக் கீரையை ஒரு மண்டலம் உண்டுவந்தால், அரத்தக் கடுப்பு அகலும், வயிற்றுளைவு நிற்கும். அறிவு கூர்மை பெறும் என்று சா.அ.க. கூறும்.

 வல்லாரை2 vallārai, பெ. (n.)

   சூதாடுபவர்; gambler.

     “வல்லாரை வல்லார் செறுப்பவும்” (பரிபா. 9:74);.

     [வன் → வல் → வல்லால் → வல்லாரை.]

வல்லாரைக்கிருதம்

 வல்லாரைக்கிருதம் vallāraikkirudam, பெ. (n.)

   வல்லாரையும் நெய்யுஞ் சேர்த்துச் செய்த கூட்டு மருந்து (வின்.);; compound medicine made of pennywort and ghee (சா.அக.);.

 Skt. krta → த. கிருதம்.

     [வல்லாரை + கிருதம்.]

வல்லாரைக்கீரை

 வல்லாரைக்கீரை vallāraikārai, பெ. (n.)

   வல்லாரை; leaves of vallarai are edible and used as greens (சா.அக.);.

     [வல்லாரை + கீரை.]

     [P]

வல்லாரைக்கொடிமூலம்

 வல்லாரைக்கொடிமூலம் vallāraikkoḍimūlam, பெ. (n.)

   வல்லாரைக் கொடியின் வேர்; root hydrocotyle asiatica (penny wort); (சா.அக.);.

     [வல்லாரை + கொடிமூலம்.]

வல்லாரைக் கீரையின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. இதன் வேர்ப்பகுதியில் மருத்துவக் குணம் முழுமையாக உள்ளதால் தனியே குறிப்பிடப்பட்டுள்ளது.

வல்லாரைச்சூரணம்

 வல்லாரைச்சூரணம் vallāraiccūraṇam, பெ. (n.)

   தூள்; fine powder (சா.அக.);.

     [வல்லாரை + சூரணம். சுல் → சுர் → சூர் → சூரணம் = மருந்தினைச் சுட்டுக் கருக்கிய பொடி.]

வல்லாரையடிமூலம்

 வல்லாரையடிமூலம் vallāraiyaḍimūlam, பெ. (n.)

   வல்லாரை வேரினைச் சுட்டுக் கருக்கிய பொடி; fine powder of Indian penny-wort’s root (Vallarai-k-kirai); (சா.அக.);.

     [வல்லாரை + அடி + மூலம்.]

வல்லார்

வல்லார்1 vallār, பெ. (n.)

   1. வலிமையுடையவர்; mighty persons.

   2. திறமையுடையவர்; talented, clever, capable persons.

     “வடிநாவின் வல்லார் முற் சொல்வல்லேன்” (கலித். 141, 19);.

     [வல்1 + ஆர்.]

 வல்லார்2 vallār, பெ. (n.)

   1. வலுவிழந்தவர்; weak person.

   2. திறமையில்லாதவர்; incapable persons.

     “வல்லாராயினும் வல்லுநராயினும்” (புறநா.27);.

மறுவ. மாட்டாதவர்

     [வல்லு + ஆர்.]

வல்லார்கொள்ளை

வல்லார்கொள்ளை vallārkoḷḷai, பெ. (n.)

   பாதுகாப்பில்லாது யாவரும் கவர்ந்து கொள்ளக்கூடிய சொத்து; property left unprotected or uncared for, as object of easy plunder by others.

     “வல்லார் கொள்ளை வாழைப்பழமாகும்”.

     [வல்லார்2 + கொள்ளை.]

கொள் → கொள்ளை = அச்சுறுத்திச் சூறை கொள்ளும் வழிப்பறி.

வல்லாறு

வல்லாறு vallāṟu, வி.எ. (adj.)

   இயன்றவளவில், முடியும் வரையில்; to the best of one’s ability or power, to the extent possible.

     “தாயரென்னும் பெயரே வல்லாறெடுத்தேன்” (ஐங்குறு. 380);.

     [வல்ல + ஆறு. அறு → ஆறு.]

வல்லாளகண்டன்

வல்லாளகண்டன் vallāḷagaṇṭaṉ, பெ. (n.)

   1. பேராற்றலுள்ளவன்; the mightiest of the mighty.

     “வல்லாள கண்டா வடுகநாதா” (தனிப்பா. ii, 47, 112);.

   2. மிக்க துணிவுள்ளவன்; man of a venture some and unyielding spirit, very bold man, a man of stamina.

     [வல்லாளன் + கண்டன்.]

வல்லாளகண்டி

வல்லாளகண்டி vallāḷagaṇṭi, பெ. (n.)

   1. பேராற்றலுள்ளவன்; the mightiest of the mighty women.

   2. மிக்க துணிவுள்ளவன் (இ.வ.);; woman of a venturesome and unyielding spirit, very bold woman, a women of physical and mental strength.

     [வல்லாளகண்டன் → வல்லாளகண்டி.]

வல்லாளன்

வல்லாளன்1 vallāḷaṉ, பெ. (n.)

   1. வலிமை மிக்கவன்; mighty man, valiant hero.

     “நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள” (புறநா. 125);.

     “அரசுவரிற் றாங்கும் வல்லாளன்னே” (புறநா. 327:8);.

   2. திறமையாளன் (சமர்த்தன்); (வின்.);; talented or skilful man, expert, efficient man, an incisive person.

   3. விசய நகரத்து மன்னர்களிலொருவன்; a king of vijaya nagar.

     [வல்1 + ஆளன் : ஒரு ஆண்பாற் பெயரீறு.]

 வல்லாளன்2 vallāḷaṉ, பெ. (n.)

   1. அரச மரபினன்; king of the Bellalan dynasty.

   2. ஒரு வீரன்; a brave soldier.

     [வெள்ளாளன் → வல்லாளன் = வேளாண் குடியில் வந்த அரச மரபினன்.]

இவன் மதுரையில் குலோத்துங்க பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவன். பெரும் பொருளை திரட்டிச் சிற்றரசனைப் போற் சிறந்து விளங்கியவன். தன்னிடம் வருவோர்க்கு கொடையளித்து வள்ளலாக வாழ்ந்தவன்.

வல்லாளர்கண்டன்

 வல்லாளர்கண்டன் vallāḷarkaṇṭaṉ, பெ. (n.)

வல்லாளகண்டன் (யாழ்.அக.); பார்க்க;see va/a/a-kandan.

     [வல்லாளர் + கண்டன்.]

வல்லாவட்டு

வல்லாவட்டு vallāvaṭṭu, பெ. (n.)

   கழுத்தைச் சுற்றித் தொங்கவிடும் ஆடை (இ.வ.);; scarf or towel gracefully hung round the neck.

     [வல்1 → வல்லா + வட்டு. வட்டு = வட்டமாகத் தொங்கவிடும் ஆடை.]

வளமும் வல்லாண்மையு முடையவர்கள் தங்களின் தோற்றப் பொலிவு கருதியும், குமுகாயத்தில் தனித்தொரு நிலையை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் பொருட்டும் மூன்றினொருபகுதி முன்னு மிருபகுதி பின்னுமாக அணியப் பெறும் துண்டு என்றறிக.

வல்லி

வல்லி1 valli, பெ. (n.)

   சூதாடுபவன்; gambler.

     “வல்லினாற் பயன்கொள்வான் வல்லி” (வீரசோ. தத். 3);.

     [வல் → வல்லி.]

 வல்லி2 valli, பெ. (n.)

   1. கொடி (பிங்.);; creeper.

     “வல்லியனையாள்” (பு.வெ.12 பெண்பாற். 13, உரை);.

   2. படர் கொடிவகை; a creeper with bulbous, roots.

   3. மருந்துச் செடி (சூடா.);; medicinal plant.

   4. இளம்பெண்; young woman, lady.

     “மாதவி ஈன்றமணி மேகலை வல்லி” (மணிமே.18, 25);.

     “வல்லியை யுயிர்த்த நிலமங்கை” (கம்பரா. கோலங். 24);.

   5. முருகக் கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை (சூடா.);; a wife of God Murugan.

   6. கால் விலங்கு; fetters.

     “கானி மிர்த்தாற் கண்பரிய வல்லியோ” (பெருந்தொ.516);.

   7. அறிவம் (உபநிடதம்); (வின்.);; upanidadam, each of a series of hindu sacred trealise, written in sanskirit and expounding the vedas.

   8. பதாகை (உரி.நி.);; banner, standard.

   9. பலாசமரம்; battle-of-plassey tree.

   10. புன்முருக்கு மரம் (மலை.);; a plant.

   11. திருமணம் (யாழ்.அக.);; marriage.

     [த.வல்லி → வ. வல்லீ. முல் → மல் → வல் →

வல்லி, வளைதற்கருத்து வேரினின்று கிளைத்த சொல்.]

வல்லி = கொடி போன்று வளைந்ததும், நெளிவு, கழிவுகளுடன் கூடியதும், இயல்பாய் வளைக்குந் தன்மையுடன் திகழும் நிலைத்திணைப் பெயர்கள் எல்லாம் வளைவுக் கருத்தினின்று முகிழ்த்தவையே. வளைதற் கருத்துப் பற்றி மொழிஞாயிறு கூறுங்கால்:-

மொழி இருவகைப்படும்.

   1. முழைத்தல் மொழி (Natural language);.

   2. இழைத்தல் மொழி (Articulate-speech);.

இழைத்தல் மொழிபற்றிய சொற்கள் பெரும்பாலும் உகரச் கட்டடியினின்று முகிழ்த்தவையே. உகரமேறிச் சொன்முதலாகாத

     ‘வ’ கரமுதற் சொற்களெல்லாம்

     ‘புல்’ என்னும் பகர முதலடியினின்றோ,

     ‘முல்’ என்னும் மகர முதலடியினின்றோதான் பிறந்துள்ளன.

 வல்லி3 valli, பெ. (n.)

   இடைச்சேரி (பிங்.);; shepherds habilation or colony.

 வல்லி4 valli, பெ. (n.)

   1. விரைவு (சூடா.);; quickness, speed, haste, hurriedness.

   2. அளவு; a measure (சா.அக.);.

     [வல் → வல்லி.]

 வல்லி5 valli, பெ. (n.)

   பிரிகை (பிங்.);; removal, separation.

 வல்லி6 valli, பெ. (n.)

   அளவு வகை (வின்.);; a standard measure.

 வல்லி7 valli, பெ. (n.)

   1. முருக்கு; twisting.

   2. வள்ளிக்கொடி; the creeper of sweet

 potato.

   3. இலந்தை; jujube.

   4. தண்ணீரைக் கட்டும் ஓர் கொடி; coagulating creeper;Broom creeper-Coculus villosus (சா.அக.);.

   5. சீந்தில்; moon creeper.

   6. புனல் முருங்கை; a tree wild moringa (சா.அக.);.

     [வல் → வல்லி.]

 வல்லி3 valli, பெ. (n.)

   1. நன்னாரி; a twiner-Hemidesmus.

   2. அமுதவல்லி; Tinosphora cordifolia.

   3. அமிர்தவல்லி; tino shora cordifolia.

   4. சாம்பாரவல்லி; vitis indica.

   5. சீரக வல்லி; dioscorea aculeata.

   6. ஈருவல்லி; maba buxifolia (சா.அக.);.

வல்லிகம்

வல்லிகம்1 valligam, பெ. (n.)

   செவ்வல்லிக் கொடி; water Lilly (சா.அக.);.

     [P]

 வல்லிகம்2 valligam, பெ. (n.)

   கொடிவகை (யாழ்.அக.);; a kind of creeper.

 வல்லிகம்3 valligam, பெ. (n.)

   1. மிளகு (யாழ்.அக.);; pepper.

   2. மஞ்சள் (பச்.மூ.);; turmeric.

     [வல்லிசம் + வல்லிகம்.]

வல்லிகை

வல்லிகை1 valligai, பெ. (n.)

   1. குதிரைக் கழுத்தில் கட்டும் வடம்; halter of a horse.

     “நீலமணிக்கடிகை…. வல்லிகை” (கலித்.96);.

   2. காதணிவகை (பிங்.);; an ear-jewel.

     [வல்லி → வல்லிகை.]

 வல்லிகை2 valligai, பெ. (n.)

   யாழ் (அக.நி.);; lute.

     [வல்லகி → வல்லிகை.]

வல்லிக்கயிறு

வல்லிக்கயிறு vallikkayiṟu, பெ. (n.)

   உடை மேல் அணிந்து கொள்ளும் அரைஞாண் கயிறு; waist-cord worn over the cloth.

     “பட்டின் கண்ணே அழகுபடக் கிடந்த வல்லிக் கயிறு விளங்க” (சீவக. 2280. உரை);.

     [வல்லி2 + கயிறு.]

கள் → கய் → கயில் → கயிறு. கள் = கட்டுதல், பிணைத்தல்.

வல்லிக்காய்

 வல்லிக்காய் vallikkāy, பெ. (n.)

   மரவகை; holly-leaved berberry (சா.அக.);.

     [வல்லி + கா → காய்.]

வல்லிக்கொடி

வல்லிக்கொடி vallikkoḍi, பெ. (n.)

   பெரு மருந்துக் கொடி (பதார்த்த. 269);; Indian birthwort.

     [வல்லி + கொடி. கொடு → கொடி = வளைந்து படரும் நிலைத்தணை வகை (வேக. 167);.]

வல்லிக்கொடிசெயநீர்

 வல்லிக்கொடிசெயநீர் vallikkoḍiseyanīr, பெ. (n.)

நஞ்சுக் கொடியினின்று உப்பெடுத்து மற்ற சரக்குகளோடு சேர்த்து

   பனியில் வைத்து அதனால் கசிந்த நீர்; a strong pungent liquid obtained by exposing in the night’s dew, the slat extracted fromt he navel-string or the umbilical cord of a new born baby (or); foetus after mixing it with other ingredients (சா.அக.);.

வல்லிக்கோளகம்

 வல்லிக்கோளகம் valligāḷagam, பெ. (n.)

   பறங்கி வைப்பு நஞ்சு; a kind of arsenic (சா.அக.);.

     [வல்லி + கோளகம். கோள் → கோளகம்.]

வல்லிசம்

 வல்லிசம் vallisam, பெ. (n.)

மிளகு (தைலவ.);:

 black-pepper.

வல்லிசாதகம்

 வல்லிசாதகம் vallicātagam, பெ. (n.)

   கற்பகத்திற் படருங் கொடிவகை (சங்.அக.);; a karpagam-creeper (சா.அக.);.

 Skt. sadaga → த. சாதகம்

     [வல்லி + சாதகம்.]

வல்லிசாதம்

வல்லிசாதம் vallicātam, பெ. (n.)

வல்லி சாதகம் (திருமுரு.101. வேறுரை, பக். 47, கீழ்க்குறிப்பு); (வின்.); பார்க்க;see valli-sadagam.

     [வல்லி + Skt. såda → த. சாதம்.]

வல்லிசாதி

வல்லிசாதி vallicāti, பெ. (n.)

   தெய்வத் தன்மையுள்ள கொடி; divine creeper.

     “கற்பக வல்லிசாதி போல்வாள்” (தக்கயாகப். 77, உரை);.

     [வல்லி + சாதி.]

வல்லிசு

 வல்லிசு vallisu, பெ. (n.)

   முழுமை; that which is whole, full, complete.

     [வல்லி → வல்லிசு.]

வல்லிசுக்கிரன்

 வல்லிசுக்கிரன் vallisukkiraṉ, பெ. (n.)

   மூலிகை வகையுளொன்று; a kind of herbal medicine (சா.அக.);.

     [வல்லி + சுக்கிரன்.]

வல்லிசூரணை

 வல்லிசூரணை vallicūraṇai, பெ. (n.)

   புளி வசளை; a kind of greens.

     [வல்லி + சூரணை.]

வல்லிசூரனை

வல்லிசூரனை vallicūraṉai, பெ. (n.)

   கீரை வகை (சங்.அக.);; a kind of greens.

     [வல்லி2 + சூரனை.]

வல்லிசை

வல்லிசை1 vallisai, பெ. (n.)

   1. உச்சவிசை (பிங்.);; treble or high note or pitch.

   2. வல்லோசை (இலக்.);; sound of the hard consonants.

     [வல்1 + இசை.]

 வல்லிசை2 vallisai, பெ. (n.)

   பாம்பு (அக.நி.);; snake.

வல்லிசைவண்ணம்

வல்லிசைவண்ணம் vallisaivaṇṇam, பெ. (n.)

   வல்லெழுத்து மிக்கு பயின்றுவரும் இசைப்பாட்டு; a rhythm marked by frequent use of val-i-eluttu.

     “வல்லிசைவண்ணம் வல்லெழுத்துப் பயிலும்” (தொல். பொருள். 528);.

     [வல்லிசை + வண்ணம்.]

வல்லிதி

 வல்லிதி vallidi, பெ. (n.)

வல்லிசு பார்க்க;see vallisu.

வல்லிதின்

வல்லிதின்1 vallidiṉ, பெ. (n.)

வல்லாங்கு பார்க்க;see vallangu.

     “வல்லிதின் விருந்து புறந்தருதலும்” (தொல். பொருள். 152);.

     “வாழை ஈர்ந்தபடி வல்லிதின் வகைஇப்” (நற்.120:5);.

     [வல்1 + வல்லிதின்.]

 வல்லிதின்2 vallidiṉ,    வி.எ. (adv.) விரைவாக; rapidly, quickly.

     “வல்லிதி னாடி வலிப்பதே” (பழ.261);.

     “வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே” (நற். 68:6);

     [வல் → வல்லிதின்.]

வல்லின நடை

 வல்லின நடை valliṉanaḍai, பெ. (n.)

   வல்லெழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருமாறு பாடல் பாடுகை; composing a poem with hard consonants.

     [வல்லினம் + நடை.]

வல்லினம்

வல்லினம் valliṉam, பெ. (n.)

   க், ச், ட், த், ப், ற் என்ற வல்லோசையுள்ள மெய்யெழுத்துகள் (நன். 68);; the class of hard consonants, viz., k, c, t, t, p, r.

மறுவ. வல்லெழுத்து, வல்லொற்று.

வன்கணம், வலிவன்மை.

     [வல் + இனம். இல் → இலம் → இனம்.]

வல்லோசை யெழுத்துகளைச் சார்ந்த இனம். மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளில், இடையினத்தையும், மெல்லினத்தையும் விட, வன்மையாக ஒலிக்கப் பெறும் ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு. இவை வலிய உறுப்பாகிய மார்பிற் பிறக்கும். செவி கருவியாக உச்சரித்து வலிவன்மை அறியலாம்.

வல்லினமெய் தமிழ்ச்சொற்கு ஈறாவதில்லை.

இறுதியில் வல்லினமெய் வரக்கூடாதென்று விலக்கியது, பண்டைத் தமிழரின் மெல்லொலி வாயியல்பு பற்றியது மட்டுமன்று எதிர்காலத் தமிழரின் வாழ்நாள் நீடிக்குமாறு, இயன்றவரை மொழியொலிப்பு முயற்சியைக் குறைக்க வேண்டுமெனுங் குறிக்கோளுங் கொண்டதாம்.

வல்லினவெதுகை

வல்லினவெதுகை valliṉavedugai, பெ. (n.)

   எல்லாவடிகளின் முதற்சீர்க்கண்ணும் வல்லெழுத்து எதுகையாக ஒன்றிவரும் தொடை (உரை.);; rhyme in which the second letter of each line of a stanza is a hard consonant.

     “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” (குறள், 2);.

     “கார்க் கரும்பின் கமவாலை தீத்தெருவின் கவின் வாடி” (பட்டினப்பாலை.);.

     [வல்லினம் + எதுகை. எதிர்கை → எதுகை (த.வ.50);.]

திருக்குறளிலும், பட்டினப்பாலை வரிகளிலும் வல்லின வெழுத்துகள் எதுகையாக பயின்று வந்துள்ளமை காண்க.

வல்லிபஞ்சமூலம்

வல்லிபஞ்சமூலம் vallibañjamūlam, பெ. (n.)

வல்லி2 பார்க்க;see valli.

வல்லிமண்டபம்

வல்லிமண்டபம் vallimaṇṭabam, பெ. (n.)

   கொடிப்பந்தல்; bower, arbour.

     “ஒர் மாதவி வல்லிமண்டபத்தில்” (இறை. 2, பக்.28);.

     [வல்லி2 + மண்டபம்.]

வல்லிமரம்

வல்லிமரம் vallimaram, பெ. (n.)

   கப்பலின் தலைப் பாய்மரம் (Naut.);; main mast.

     [வல்லி3 + மரம்.]

வல்லிமொடி

 வல்லிமொடி vallimoḍi, பெ. (n.)

   பெருமருந்துக் கொடி (மலை.);; Indian birthwort.

     [வல்லிக்கொடி → வல்லிமொடி.]

வல்லியம்

வல்லியம்1 valliyam, பெ. (n.)

   1. புலி (பிங்.);; tiger.

     “பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய” (அகநா. 362);.

   2. கொல்லி மலை (பிங்.);; Mount kolli, a hill in the céra country.

     [வல்1 + வல்லியம்.]

 வல்லியம்2 valliyam, பெ. (n.)

   1. வல்லிக் கொடி (பிங்.);; creeper.

   2. செவ்வள்ளிக் கொடி (மலை.);; purple yam.

   3. மஞ்சள் (மலை.);; turmeric.

     [வல்லி2 + வல்லியம்.]

 வல்லியம்3 valliyam, பெ. (n.)

   இடைச்சேரி (பிங்.);; shepherds habitation.

     [வல்லி3 + வல்லியம்.]

வல்லியம்குருளை

வல்லியம்குருளை valliyamkuruḷai, பெ. (n.)

   புலிக்குட்டி; cub of tiger.

     “வல்லியம் பெருந்தலைக் குருளை” (நற்.2-5);.

     [வல்லியம் + குருளை. குல் → குரு → குருள் → குருளை.]

வல்லியம்பொருப்பு

 வல்லியம்பொருப்பு valliyamboruppu, பெ. (n.)

   கொல்லிமலை (பிங்.);; Mt kolli, a hill in the céra country.

     [வல்லியம் + பொருப்பு.]

வல்லியை

 வல்லியை valliyai, பெ. (n.)

அமுக்கிரா (தைலவ.);

 Indian winter cherry.

வல்லிராசன்

 வல்லிராசன் vallirācaṉ, பெ. (n.)

   பல்லி; lizard.

     [பல்லி → வல்லி + ராசன். அரசு → அரசன் → ராசன்.]

     [P]

வல்லிரு

 வல்லிரு valliru, பெ. (n.)

   முருக்கு; a tree-Butea frondosa.

வல்லிருள்

வல்லிருள் valliruḷ, பெ. (n.)

   கடும் இருள்; deep darkness.

     “மாரி நடுநாள் வல்லிருள் மயக்க” (மணிமே.14:3);.

     [வல் + இல் → இர் → இரு → இருள்.]

வல்லிலோமம்

 வல்லிலோமம் vallilōmam, பெ. (n.)

வலம் புரிக்காய் பார்க்க;see valampuri-k-kay.

வல்லிவனம்

வல்லிவனம் vallivaṉam, பெ. (n.)

   சமவசரணம் எனுஞ் சைனக் கோயிலின் மூன்றாந் திருச்சுற்று; the third court yard of Šamava-Šaranam Jain temple.

     “காதமகல் வல்லிவனத்தைச் சார்ந்தோர்” (மேருமந். 1057);.

     [வல்லி + வனம்.]

வல்லிவன்னி

வல்லிவன்னி1 vallivaṉṉi, பெ. (n.)

   கொடுவேலி (தைலவ.);; ceylon leadwort.

     [வல்லி + வன்னி.]

 வல்லிவன்னி2 vallivaṉṉi, பெ. (n.)

   சித்திரமூலம்; a plant – Plumbago zeylanicum (சா.அக.);.

     [வல்லி + வன்னி.]

வல்லீகம்

வல்லீகம் vallīkam, பெ. (n.)

   பெருங்காயம் (நாமதீப. 393);; asafetida.

வல்லீசம்

 வல்லீசம் vallīcam, பெ. (n.)

   மிளகு; black pepper.

வல்லீட்டுக்குற்றி

வல்லீட்டுக்குற்றி vallīṭṭukkuṟṟi, பெ. (n.)

   1. கொட்டாப்புளி (யாழ்ப்.);; mallet.

   2. தாங்கற் கட்டை (இ.வ.);; log placed under another as a support, supporter.

   3. பனை முதலியவற்றைப் பிளக்குங் குற்றி (யாழ்.அக.);; a wedge for splitting palmyra stem, etc.

     [வல் + இடு + குற்றி. குறு → குற்றி = மரக்கட்டை.]

வல்லீற்று

 வல்லீற்று vallīṟṟu, பெ. (n.)

   பலவாண்டிற்கு ஒருமுறை ஈனும் பெற்றம் (இ.வ.);; cow that calves once in several years, dist. fr. ățțirru.

     [வல் + ஈத்து → ஈற்று = வல்லீற்று. ஈன் → ஈற்று.]

வல்லு-தல்

வல்லு-தல் valludal,    5 செ.குன்றாவி. (v.t.)

   செய்யமாட்டுதல்; to be able, to be possible.

     “வல்லினும் வல்லேனாயினும்” (புறநா. 161);.

     [வல்1 → வல்லு.]

வல்லுடல்

 வல்லுடல் valluḍal, பெ. (n.)

   வலிமையான உடல்; strong and verile body, sturdy body.

     [வல் + உடல்.]

உழல் → உடல் = உடம்பு, உயிர்வாழிடம் (பிங்.);.

திண்மையும், உறுதியும் வாய்க்கப்பெற்ற கட்டுடல். உடம்பின் கூடு.

வல்லுதல்

 வல்லுதல் valludal, பெ. (n.)

   ஒழுங்கு (வின்.);; propriety, discipline.

வல்லுநர்

வல்லுநர் vallunar, பெ. (n.)

   வல்லோர்; experts, capable persons.

     “வல்லா ராயினும் வல்லுந ராயினும்” (புறநா. 27);.

     “வாழ்தல் வல்லுந ராயிற் காதலர்” (அகநா. 329:3);.

வன்கண் கொண்டு வலித்துவல்லுநரே” (குறுந்.395:3);. உளவியல் வல்லுநர் (இ.வ.);.

இக்கால இசை வல்லுநர், தமது குரல் வளத்தால் அனைவரையும் மெய்மறக்கச் செய்கின்றார் (இ.வ.);.

     [வல்லு → வல்லுநர்.]

ஒ.நோ. இயக்கு → இயக்குநர்.

குறிப்பிட்ட ஒரு துறையில், திண்ணிய திறமையும், தனித்த அறிவும், சிறப்பாற்றலும் வாய்க்கப் பெற்றவர். சட்ட வல்லுநர், இசைக் கலை வல்லுநர் போன்றவை இக்கால வழக்காகும்.

வல்லுப்பலகை

வல்லுப்பலகை valluppalagai, பெ. (n.)

   சூதாடுதற்குரிய பலகை (தொல். எழுத். 384, உரை);; a plank for gambling.

     “வல்லுப்பலகை யெடுத்து நிறுத்தன்ன” (கலித். 94);.

     [வல்1 + பலகை.]

     [P]

வல்லுயிர்

 வல்லுயிர் valluyir, பெ. (n.)

   எளிதிலிறவாத உயிர்கள் (யாழ்.அக.);; rarely dying person or animal, long living being.

     [வல் + உயிர். உய் → உயிர்.]

வல்லுரம்

வல்லுரம் valluram, பெ. (n.)

   1. காடு (யாழ்.அக.);; jungle, forest.

   2. அடவி, அடர்ந்த காடு; desert, thick forest.

   3. புற்றரை; grassy surface, lawn turf.

   4. வயல்; field.

   5. மணல்; sand.

   6. பூங்கொத்து; bunch of flowers, bouquet.

   7. காட்டுப் பன்றியின் இறைச்சி; flesh of the wild hog.

   8. தனிமை; loneliness, solitude.

     [வல்லி → வல்லு → வல்லுரம்.]

வல்லுருவம்

வல்லுருவம் valluruvam, பெ. (n.)

   மனத்தை யடக்கும் வலிமையற்ற உருவம்; big statured, man who lacks control of his sense.

     “வலி யினிலைமையான் வல்லுருவம்” (குறள், 273);.

     [வல் → வல்லு + உருவம். உரு → உருவு → உருவம்.]

வல்லுறை

 வல்லுறை valluṟai, பெ. (n.)

   வலுவூட்டு மருந்து; tonic (சா.அக.);.

     [வல் + உறை. உறு → உறை.]

உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் தரும் ஊட்டமருந்து.

வல்லுளி

வல்லுளி valluḷi, பெ. (n.)

   பன்றி (பிங்.);; boar, swine, pig.

     [வல்1 + உள்2 → உளி = வல்லுளி.]

வலிமை வாய்ந்த உளிகளைப் போன்றே, சிறிய கொம்புகளை உடையதாயிருந்தமை பற்றி ஏனம், வல் + உளி – வல்லுளி என்றும் சுட்டப் பெற்றது.

வல்லுவப்பை

வல்லுவப்பை valluvappai, பெ. (n.)

   1. வெற்றிலைப்பை (வின்.);; large betel pouch with several sections.

   2. அரையிற் கட்டும் பணப்பை (யாழ்.அக.);; purse of cloth tied round the waist.

     [வல்லுவம் + பை.]

ஒருகா. வட்டுவப்பை → வல்லுவப்பை.

     [P]

வல்லுவம்

வல்லுவம் valluvam, பெ. (n.)

வல்லுவப்பை (வின்.); பார்க்க;see Valluva-p-pai.

     “வல்லுவங் கொல்லோ மெல்லிய னாமென” (நற். 33:9);.

     [வட்டுவம் → வல்லுவம்.]

வல்லூகம்

வல்லூகம்1 vallūkam, பெ. (n.)

   1. கரடி (உரி.நி.);; bear.

   2. புலி (அக.நி.);; tiger.

     [வல் + ஊகம்.]

உகு → ஊகு → ஊகம். உகுத்தல் = அழித்தல், கொல்லுதல்.

வல்லூகம் என்பது, பிறரைத் தமது கூரிய உகிராற் கொன்றழிக்கும் தன்மை வாய்ந்த புலி அல்லது கரடி.

 வல்லூகம்2 vallūkam, பெ. (n.)

   1. ஆண் குரங்கு (வின்.);; male monkey.

   2. மூசு; large ape.

     [வல்1 + ஊகம். உகு → ஊரு → ஊகம்.]

ஒருகா. வல் + உலுமம் → உலுகம் → ஊகம். உலுமம் = கரிய மயிர். வல்லூகம் என்பது அடர்ந்த கரிய மயிர்களையுடைய ஆண் குரங்கு.

வல்லூரம்

வல்லூரம் vallūram, பெ. (n.)

   1. இறைச்சி (யாழ்.அக.);; flesh.

   2. அடவி, அடர்ந்தகாடு; desert, thick forest.

   3. பாழ் நிலம்; uncultivated field, barren land.

     [வல் + ஊரம்.]

ஊர் + அம் – ஊரம் = உயரமானது. வல்லூரம் என்பது உயரமான அடர்ந்த மரங்களுள்ள காடு.

வல்லூரி

 வல்லூரி vallūri, பெ. (n.)

   பன்றி; pig.

     [வல் + ஊர் → ஊரி.]

வல்லூறு

வல்லூறு1 vallūṟu, பெ. (n.)

   கழுகைவிடச் சிறியதும், கூர்மையான இறக்கை நுனியும், சாம்பல் நிறமுதுகுப் பகுதியும் கொண்ட பறவை; falcon.

     [வல் + உறு → ஊறு.]

 வல்லூறு2 vallūṟu, பெ. (n.)

   பெருந்தீனி கொள்ளும், கூரிய பார்வையுடைய கலுழன் வகையைச் சார்ந்த பறவை; shikar accipiter.

இப்பறவை 36 செ.மீ. உயரம் வரை வளரும் தன்மைத்து. கருஞ்சாம்பல் நிறத்தைக் கொண்டது. நீண்டவாலுடன் தெண்படும். 4 அல்லது 5 குறுக்குப் பட்டைகளைக் கொண்டது. மா, வேம்பு, புளி, தென்னை முதலிய மரங்களில் கூடமைத்து, 3 முதல் 4 வரையிலான முட்டைகள் இடும். தமிழகம் எங்கிலும் பரவலாக காணப்படும் இப்பறவையானது, சிட்டு, காடை, கெளதாரி, தத்துக்கிளி, ஈசல், அணில் முதலியவற்றை இரையாகக் கொண்டு வாழும் தன்மைத்து. சிறிய வல்லூறு என்னும் பறவையும், வல்லூறு இனத்ததே. சிறிய தோற்றத்தின் அடிப்படையில் அமைந்த பெயராகும்.

 வல்லூறு3 vallūṟu, பெ. (n.)

   இராசாளிக் கழுகு; royal falcon.

     “கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்து” (தனிப்பா. 171, 23);.

     [வல்1 + ஊறு1.]

     [P]

வல்லூற்று

வல்லூற்று vallūṟṟu, பெ. (n.)

   பாறையிடை யினின்று வரும் நீருற்று; mountain spring.

     “‘வல்லூற்றுவரில் கிணற்றின்கட் சென்றுவப்பர்” (நாலடி. 263);.

     [வல்1 + ஊற்று

   2. ஊறு → ஊற்று = சுரந்து வரும் ஊற்று நீர்.]

வல்லூற்றுக்குருவி

வல்லூற்றுக்குருவி vallūṟṟukkuruvi, பெ. (n.)

வல்லூறு1 (வின்.); பார்க்க;see valluru.

     [வல்லூறு + குருவி.]

வல்லெனல்

வல்லெனல்1 valleṉal, பெ. (n.)

   வன்மையாதற் குறிப்பு; expr. signifying hardness or severity.

     “வல்லென்ற நெஞ்சத்தவர்” (நான்மணி. 33);.

 வல்லெனல்2 valleṉal, பெ. (n.)

   விரைதற் குறிப்பு; expr. signifying speed.

வல்லெழுத்து

வல்லெழுத்து valleḻuttu, பெ. (n.)

   வல்லின மெய்யெழுத்துகள்; the class of hard consonants.

     “வல்லெழுத் தென்ப கசட தபற” (தொல். எழுத். 19);.

     [வல்1 + எழுத்து.]

ஒருகா. வல்லினம்.

இழு → எழு → எழுது → எழுத்து. எழுதப்படுவது: இழு = கோடிழுத்தல். வல்லின ஒலிகளைக் கோடிட்ட எழுத்துருவத்தாலுரைப்பது.

வல்லெழுத்துப் பற்றி இளம்பூரணர் இயம்புவது :-

     “வல்லென்று இசைத்தலானும்,

     ‘வல்’ என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது” (இளம்.தொல்.எழுத்து.19);.

வல்லெழுத்து பற்றி நச்சினார்க்கினியர் நவில்வது :-

     “வல்லென்றிசைத்தலானும் வல்லென்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயிற்று” (தொல்.எழுத்து.19, நச்.);.

வல்லே

வல்லே vallē, வி.எ. (adv.)

   விரைவாக; promptly, speedily.

     “ஒன்றின வொன்றின வல்லே செயிற் செய்க” (நாலடி. 4);.

     “செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே” (அகநா. 19:8);.

     “அடுபோர்ச் செழிய விகழாது வல்லே” (புறநா. 18:27);.

     [வல்1 → வல்லே.]

 வல்லே vallē, பெ.(n.)

   மிக நன்று என்னும் குறிப்பு (sums);; expr meaning excellence well done.

வல்லேன்

வல்லேன் vallēṉ, பெ. (n.)

   இணங்குகை, ஏற்கை; agreeing, yielding.

     “அறனி லாளன் புகழ்என் பெறினும் வல்லேன்மன் தோழி யானே” (நற்-275-8-9);.

வல்லேறு

வல்லேறு vallēṟu, பெ. (n.)

   இடி; thunderbolt.

     “விசும்பின் வல்லேறு சிலைப்பினும்” (பெரும்பாண். 135);.

     [வல்1 + ஏறு3.]

வல்லை

வல்லை1 vallai, பெ. (n.)

   1. வலிமை (சூடா.);; strength, power, energy.

     “அருள வல்லை யாகுமதி யருளிலர்” (புறநா. 27:17);.

     “வல்லை யாகுதல் ஒல்லுமோ நினக்கே” (நற். 162:12);.

   2. பெருங்காடு (பிங்.);; extensive thicket, big forest.

     “வல்லையுற்றவேய்.” (கம்பரா. வனம்புகு. 42);.

   3. மேடு (திவா.);; hillock, mound.

   4. கோட்டை (வின்.);; fort, fortress.

   5. வயிற்றுக்கட்டி (சீவரட்.);; ovarian tumour.

     [வல்1 → வல்லை.]

 வல்லை2 vallai, பெ. (n.)

வல்லே பார்க்க;see Valle.

     “வல்லைக் கெடும்” (குறள், 480);.

     [வல்2 → வல்லை.]

 வல்லை4 vallai, பெ. (n.)

   1. ஓர் நோய்; a disease.

   2. புன்முருக்கு; a wild species of Butea frondosa.

   3. முருக்கு; Erythrina indica (சா.அக.);.

 வல்லை4 vallai, பெ. (n.)

   1. புனமுருங்கை; battle of plassey tree.

   2. முருக்கு; palas-tree.

வல்லைக்கட்டி

வல்லைக்கட்டி vallaikkaṭṭi, பெ. (n.)

   வயிற்றுக் கட்டிவகை (சீவரட்.);; ovarian tumour.

     [வல்லை1 + கட்டி.]

வல்லையம்

வல்லையம் vallaiyam, பெ. (n.)

   ஈட்டி வகை; a kind of spear.

     “வல்லையப் போருக் கொதுங்கேன்” (கூளப்ப. 181);.

     [வல்லயம் → வல்லையம்.]

     [P]

வல்லைவாதம்

வல்லைவாதம் vallaivātam, பெ. (n.)

   வீங்கி காணப்படும் ஊதை நோய் வகையுளொன்று; enlargement of spleen.

     “வாளது குறுக்கே வளர்ந்து தான் கிடக்கும் போது நீளமாய் உழக்கோல் போலும் நேரதாய்க் கிடக்குங் கண்டீர். மாளவே அன்னந்தன்னை வாங்காது செறிந்திடாது நாளது கேளாய் வல்லை நவின்றிடும் வாதந்தானே” (யூகி. 1200);.

     [வல்லை + Skt. vāta → த.வாதம்.]

வல்லொட்டு

வல்லொட்டு valloṭṭu, பெ. (n.)

   1. போதும் போதாதென்றிருப்பது; that which is satiable or insatiable or barely sufficient.

   2. அருமையா யிருப்பது; rarity, that which is rare.

     [வல்1 + ஒட்டு.]

வல்லொற்று

வல்லொற்று valloṟṟu, பெ. (n.)

வல்லினம் (இலக்.); பார்க்க;see vali-i-inam.

     “வல்லொற்றுத் தொடர்மொழி” (தொல். எழுத். 409);.

     [வல்1 + ஒற்று. ஒற்று = மெய்யெழுத்து.]

வல்லோன்

வல்லோன் vallōṉ, பெ. (n.)

   வல்லான், வலிமையுள்ளவன் (பிங்.);; mighty-man, valiant man.

     “வல்லோன் கூருளிக் குயின்ற” (நெடுநல். 118);.

     “வல்லோன் றைஇய வரிவனப் புற்ற” (புறநா. 33:16);.

     “மெல்லவி ழஞ்சினை புலம்ப வல்லோன்” (அகநா. 21:10);.

     “ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன்” (நற். 77:8);.

     [வல்லான் → வல்லோன்.]

வல்வரவு

வல்வரவு valvaravu, பெ. (n.)

   மிகு வேகத்துடன் வருதல்; speedy return.

     “மற்றுநின் வல்வரவு வாழ்வார்கு உரை” (குறள், 1151);.

     [வல் + வரவு.]

     ‘வல்’ என்னும் வேரடி ஈங்கு விரைவுக் குறிப்பினையுணர்த்திற்று.

வல்வருத்தம்

வல்வருத்தம் valvaruttam, பெ. (n.)

   கடு வருத்தம் (யாழ்.அக.);; excessive pain.

     [வல்1 + வருத்தம்.]

வல்வழக்கு

வல்வழக்கு valvaḻkku, பெ. (n.)

   வல்லடி வழக்கு, அழிவழக்கு (கொ.வ.);; unreasonable insistence.

     [வல்1 + வழக்கு.]

வல்வாயசரணன்

வல்வாயசரணன் valvāyasaraṇaṉ, பெ. (n.)

   பாம்பு வகை (யாழ்.அக.);; a kind of snake.

     [வல்1 + வாய் + அசரணன். Skt. அசரண.]

வல்வாயன்

வல்வாயன் valvāyaṉ, பெ. (n.)

   வாக்கு வன்மையுள்ளவன் (வின்.);; one who is tongue-doughty, eloquent proficient man, orator.

மறுவ. சொல்வல்லன்.

     [வல்1 + வாயன்.]

வல்விடம்

வல்விடம் valviḍam, பெ. (n.)

   கடுநஞ்சு (யாழ்.அக.);; deadly poison.

     [வல்1 + விடம்.]

வல்வினை

வல்வினை valviṉai, பெ. (n.)

   1. வலியதாகிய ஊழ்; the law of karma, as irresistible mighty destiny.

     “தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்” (தேவா. 4, 4);.

   2. தீவினை; bad karma, evil-doing.

     “ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை” (சிலப். 10, 171);.

   3. கொடுஞ் செயல்; wicked deed.

     “வாளிற் றப்பிய வல்வினை யன்றே” (மணிமே. 21, 60);.

   4. வலிதாகிய தொழில்; mighty act or deed.

     “நீ வல்வினை வயக்குதல் வலித்திமன்” (கலித். 17);.

     [வல் + வினை.]

வல்வினை நோய்

 வல்வினை நோய் valviṉainōy, பெ. (n.)

   கொடிய நோய்; wicked disease.

     “வாராத வல்வினைநோய் வந்தாலும்” (திருவருட்பா.);.

     [வல்வினை + நோய்.]

வல்விரை-தல்

வல்விரை-தல் valviraidal,    2 செ.கு.வி. (v.i.)

   மிக வேகமாதல், விரைதல்; to hurry, speed up.

     “வள்ளலை வல்விரைந் தெய்த” வக.328).

     [வல் + விரை.]

வல்விலங்கு

 வல்விலங்கு valvilaṅgu, பெ. (n.)

   யானை (பிங்.);; elephant.

     [வல் + விலங்கு.]

வல்வில்

வல்வில் valvil, பெ. (n.)

   ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓரம்பை எய்யுந் திறமை; the skill of piercing many objects by a single arrow.

     “வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல் விலிராமன்” (திவ். பெரியதி. 5, 1, 4); (புறநா. 152, 6 அடிக்குறிப்பு);.

     [வல் + வில்.]

வல்வில்ஓரி

வல்வில்ஓரி valvilōri, பெ. (n.)

   கடை வள்ளல்களுள் ஒருவன் (புறநா.158,5);; name of a liberal chief, one of kadaivallalgal.

     [வல்வில் + ஓரி.]

கடைக்கழகக் காலத்தில் வள்ளலாகச் சிறந்து விளங்கிய குறுநில மன்னர் எழுவரு ளொருவன், ஒரி.

வல்வில்லி

வல்வில்லி valvilli, பெ. (n.)

   ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி, ஒரம்பை எய்யுந் திறனுடையவன் (புறநா. 150, அடிக்குறிப்பு);; skilful archer, able to pierce many objects at a time, by a single arrow.

மறுவ. வில்லாளன்.

     [வல்வில் → வல்வில்லி.]

வளகடா

 வளகடா vaḷagaṭā, பெ. (n.)

வளர்கிடாய் பார்க்க;see Valar-kiday.

     [வளர்கிடாய் → வளகடா. மக்களின் பேச்சுவழக்கில் வளர்கிடாய், என்பது வளகடா என்று வழக்கூன்றியுள்ளது. இவ் வழக்கு கொச்சை வழக்கென்றும் கூறுவர்.]

வளகம்

வளகம் vaḷagam, பெ. (n.)

   பவளம், தொண் மணியுள் ஒன்று; red coral, one of navamani.

     “பவளத்தன்ன மேனி” (குறுந். 1);.

வளகிலவணம்

 வளகிலவணம் vaḷagilavaṇam, பெ. (n.)

   வளையலுப்பு; a salt used in the manufacture of bangles.

வளகு

வளகு vaḷagu, பெ. (n.)

   நீண்ட மரவகை; woman sebesten.

     “வளகின் குளகமர்ந்துண்ட” (கலித். 43);.

வளக்காற்று

 வளக்காற்று vaḷakkāṟṟu, பெ. (n.)

   நேர் காற்று; a tree wind.

     [வள்ளை + காற்று.]

வளக்குவெல்லி

வளக்குவெல்லி vaḷakkuvelli, பெ. (n.)

   பூடு வகை (தெய்வச். விறலிவிடு. 405);; a plant.

வளங்காலவணம்

 வளங்காலவணம் vaḷaṅgālavaṇam, பெ. (n.)

   வளையலுப்பு; a kind of mineral salt capable of calcining zinc (சா.அக.);.

இதில் நாகம் நீறும். இதனால் நீரிழிவு அதிமூத்திரம் போம் என்று சா.அ.க. கூறும்.

வளங்கோலு-தல்

வளங்கோலு-தல் vaḷaṅāludal,    5 செ.கு.வி. (v.i.)

   காரிய முடிவிற்கு வழி தேடுதல்; to devise ways and means to achieve an object.

     [வளம் + கோலு.]

குல் → கொல் → கோல் → கோலு-.

ஒரு செயல் அல்லது வினை இனிதே நலமாய் முற்றுப் பெறுதற்கு, அனைவருடனும் கலந்தாய்வு செய்து வழிகோலுதலே, வளங்கோலுதாகும்.

வளச்சகட்டை

 வளச்சகட்டை vaḷaccagaṭṭai, பெ. (n.)

   வளைக்கப்பட்ட சிறிய இரும்புக்கம்பி; a little bendy iron rod.

     [வளைத்த → வளச்ச + கட்டை.]

வளச்சுக்கட்டு-தல்

வளச்சுக்கட்டு-தல் vaḷaccukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

வளைத்துக்கட்டுதல் பார்க்க;see valaitt-k-kattu.

வளஞ்சியத்தார்

 வளஞ்சியத்தார் vaḷañjiyattār, பெ. (n.)

   ஈழத்து வணிகர்; merchants of Srilanka.

     [வளஞ்சியம்-வளஞ்சியத்தார்]

அஞ்சுவண்ணத்தார்_முகமதிய வணிகர். நான்கு வருணப்பிரிவில் அடங்காதவர்.

வளஞ்சியர்

வளஞ்சியர்1 vaḷañjiyar, பெ. (n.)

   வாணிகத்தால் நாட்டின் செல்வ வளத்தினைப் பெருக்கியவர்கள்; a community classified as ‘vaisīyās’ to enrich the country by trade and commence.

இவர்கள் ‘நானாதேசி வளஞ்சியர்’ என்று கூறப்பெறும் வணிகக் குழுவினராவர். சித்திரமேழி பெரிய நாட்டுக் குழுவிலும், பதினெண்பூமி திறலாயிரத்தைந் நூற்றுவராய வாணிபக் குழுவிலும், இடம் பெற்றிருந்த வணிகராவர். ‘திருவேள்விக்குடி உடையார்க்கு திருக் கற்றளி எடுக்கின்ற வளஞ்சியரும் நானா தேசியத் திசையாயிரத்தைஞ் ஞூற்று வரும்” (S.I.I. Vol. ХІХ. 459);.

 வளஞ்சியர்2 vaḷañjiyar, பெ. (n.)

   ஒரு வகை இனத்தினர்; a sect.

சோழர் காலத்தில் வாழ்ந்த தோரினத்தவர் இவர்களைப் பற்றிய செய்திகள் விரிவாக இல்லை.

வளத்தக்காள்

வளத்தக்காள் vaḷattakkāḷ, பெ. (n.)

   வருவாய்க்கு ஏற்றவண்ணம் வாழ்க்கையை நடத்துபவள்; leading an economical life.

     “வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள். 51);.

     [வளம் + தகு → தக்கு → தக்காள்.]

கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவளே, வளத்தக்காள் என்பார் மொழிஞாயிறு.

     ‘வருவாய்க்குத் தக்க வாழ்க்கை யென்பது, முதலை அறிந்து, அதற்கு இயைய செலவு அழித்தல்’ என்பார் பரிமேலழகர்.

செலவழித்தலென்பது, இல்வாழ்வில் ஏற்படும் இன்றியமையாத அடிப்படைச் செலவுகள் எனலாம்.

வளநாடு

வளநாடு vaḷanāṭu, பெ. (n.)

   செழிப்புள்ள தேசம்; fertile tract or region.

     “நேராதார் வளநாட்டை” (பு.வெ. 3, 14 கொளு);.

     [வளம் + நாடு.]

இடையறவுபடாத வருவாயினை, அரசிற்கு அளிக்கும் செழிப்பான நாடு.

வளந்து

 வளந்து vaḷandu, பெ. (n.)

   பெரிய மிடா (யாழ்.அக.);; big pot or vessel.

வளன்

வளன் vaḷaṉ, பெ. (n.)

வளம் பார்க்க;see valam.

     “பெருவளனெய்தி” (பெரும்பாண். 26);.

வளபூதம்

 வளபூதம் vaḷapūtam, பெ. (n.)

   கெம்பு; ruby.

வளப்பக்கல்

 வளப்பக்கல் vaḷappakkal, பெ. (n.)

   மருந்துக் குப்பியை மூடுகின்ற மூடி; a stone, stopper or cork for closing bottle top.

வளப்பம்

வளப்பம்1 vaḷappam, பெ. (n.)

   வளம், செழுமை; fertility, productiveness.

     “வளமுடி நடுபவர்” (சீவக. 49);.

     [வள → வளப்பம்.]

 வளப்பம்2 vaḷappam, பெ. (n.)

   1. வழக்கம்; customs, peculiarties.

     “கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?” (வின்.);.

   2. வளம், 1 பார்க்க;see valam.

     [வழ → வள → வளப்பம்.]

வளப்பாடு

வளப்பாடு vaḷappāṭu, பெ. (n.)

   பெருக்கம்; profitable increase gain.

     “வளப்பாடு கொளலும்” (பரிபா.2);.

     [வளம் + பாடு.]

வளப்பிணி

 வளப்பிணி vaḷappiṇi, பெ. (n.)

   வளி (வாத); நோய்; disease caused by wind humour.

வளமடல்

வளமடல் vaḷamaḍal, பெ. (n.)

   சிற்றிலக்கியம் தொண்ணூற்றாறனுள் அறம், பொருள், வீடு ஆகியவற்றினும், காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பா வாற் பாடும் நூல்வகை (இலக். விl. 856);; a poem in kasi-venbå, praising kāmam as excelling aram, porul and vidu and mentioning in edugaithe name of the hero, one of 96 Širrilakkiyam.

     [வளம் + மடல்.]

வளமனமுடையோன்

 வளமனமுடையோன் vaḷamaṉamuḍaiyōṉ, பெ. (n.)

   துறவி; saint.

வளமனை

வளமனை vaḷamaṉai, பெ. (n.)

   அரண்மனை; royal palace.

     “வளமனை பாழாக வாரி” (புறம்.பொ.மா.வஞ்சிப்.15);.

     [வள் → வளம் + மனை.]

     “பெருஞ்செல்வர் வாழும் சிறந்த உறையுள்” எனப் பொருள் செய்வார், பாவாணர்.

வளமலைநாடன்

வளமலைநாடன் vaḷamalaināṭaṉ, பெ. (n.)

   குறிஞ்சி நிலத் தலைவன்; fertile, hilly ruler.

     “பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் வளமலை நாடன் நெருநல் நம்மொடு” (நற்.25-4-5);.

     [வளமலை + நாடன்.]

வளமுறுமொழியாள்

 வளமுறுமொழியாள் vaḷamuṟumoḻiyāḷ, பெ. (n.)

   சாயா மரம்; tree that does not cast its shadow.

வளமை

வளமை1 vaḷamai, பெ. (n.)

   கொழுப்பு; fatness, nutrition.

     [வழ → வள → வளமை.]

 வளமை2 vaḷamai, பெ. (n.)

   1. பொருள்; property, money.

     “வளமை கொணரும் வகையினான்” (திணைமாலை. 85);.

   2. உதவி, நலன், பயன் (அக.நி.);; benefit, kindness, help, favour.

   3. வளம்1, 6 பார்க்க;see valam1, 6.

     [வளம் → வளமை.]

 வளமை3 vaḷamai, பெ. (n.)

   1. வழக்கம்; customs.

   2. வளப்பம்2 பார்க்க;see valappam.

     [வழ → வழமை → வளமை.]

 வளமை vaḷamai, பெ. (n.)

   நாட்டுப்புறவழக்காறுகளில் பிள்ளைப்பேற்றினைக் குறிக்குஞ்சொல்; a word which denotes child birth in Countryside.

     [வளம்-வளமை]

வளமைகொழி-த்தல்

வளமைகொழி-த்தல் vaḷamaigoḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   தன் பெருமையைத் தானே கூறிக் கொள்ளுதல்; to blow one’s own trumpet, to brag.

     [வளமை + கொழி.]

ஒருகா. தற்பெருமை கொள்ளுதல்.

வளமைநீட்டு-தல்

வளமைநீட்டு-தல் vaḷamainīṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வளமை கொழி; to brag.

     [வளமை + நீட்டு.]

வளமையர்

வளமையர் vaḷamaiyar, பெ. (n.)

   1. வேளாளர் (பிங்.);; agriculturists.

   2. மண்டிய பொருள் வளமுள்ளவர்; wealthy, prosperous persons, rich man.

   3. மாட்சிமையுள்ளோர்; great or excellent persons, man of character.

     [வளம் → வளமை → வளமையர்.]

வளம்

வளம்1 vaḷam, பெ. (n.)

   வலிமை; strength.

     [வல் → வள → வளம்.]

 வளம்2 vaḷam, பெ. (n.)

   1. செழுமை, வளமை; fertility.

     “வளமுடி நடுபவர்” (சீவக. 49);.

   2. அளவிற்கு அதிகமாக உற்பத்தி செய்கை; luxuriance, excessive productiveness.

   3. மிகுதி; abundance, fullness.

     “தொழுதெழுவார் வினைவள நீறெழ” (திருக்கோ. 118);.

   4. பயன்; gain, profit, advantage.

     “பயன் றூக்கி” (குறள், 912);.

   5. செல்வம்; wealth, riches.

     “வளவரை வல்லைக் கெடும்” (குறள், 480);.

   6. வருவாய்; income.

     “தற்கொண்டான் வளத்தக்காள்” (குறள், 51);.

   7. நன்மை; goodness.

     “உலவா வளஞ் செய்தான்” (பு.வெ. 87);

   8. தகுதி (பிங்.);; suitability, fitness.

   9. மாட்சிமை; greatness, excellence.

   10. அழகு; beauty.

     “இளவளநாடுபுல்லி” (சீவக.75);.

   11. பதவி (சூடா.);; dignity, station.

   12. புனல்; water.

     “சுனைவளம் பாய்ந்து” (திருக்கோ. 118);.

   13. உணவு; food.

     “பல் வளம் பகர்பூட்டும்” (கலித். 20);.

   14. வணிகப் பண்டம்; article of merchandise.

     “முந்நீர்வளம் பெறினும்” (பு.வெ.8. 31);

   15. வலம் (மறுவ);.

   16. வெற்றி; victory, success.

     “வளந்தரும் வேலோய்” (பு.வெ.9.9);.

   17. வழி (வின்.);; path, track.

   18. பக்கம் (வின்.);; part, side.

   தெ. வளமு;ம. வளம்.

     [முல் →மல் → மல்லல் – வளம், பருமை, மிகுதி, செல்வம், வலிமை, மற்போர். மல் → வல் → வள் = அம் → வளம்.]

ஒ.நோ. நல் + அம் – நலம்.

முல்4 பொருந்துதற் கருத்து வேர் என்பார், மொழிஞாயிறு. இப் பொருந்து தற் கருத்து வேரிலிருந்து திரளுதல், பருத்தல், விரிதல், மிகுதல், செழித்தல், அழகாதல் முதலாய கருத்துகள் தோன்றும். வளமாகச் செழித்து வளர்ந்த பொருள் பருக்குந் தன்மைத்து. இப் பருத்தல் கருத்தினின்றே, மொத்தமாதல், வலுத்தல் முதலான கருத்துகள் முகிழ்க்கும். வலுத்தற் கருத்திலிருந்து பொருந்துதற் கருத்துப் பிறக்கும். இது குறித்துப் பாவாணர் கூறுவது வருமாறு :-

     “பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள், பொருந்துவதால் (ஒன்று சேர்வதால்); திரட்சி அல்லது பருமை உண்டாகும். (எ.கா.);

     “சேரே திரட்சி” (தொல்.உரி.65);, செல்வம் அல்லது நீர் மிகையால் வளமும், பருமையால் வலிமையும் உண்டாகும்.

வளம்பெறு-தல்

வளம்பெறு-தல் vaḷambeṟudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   செழிப்படைதல் (சா.அக.);; to become stronger and healthy to become prosperous.

     [வளம் + பெறு.]

வளயம்

 வளயம் vaḷayam, பெ. (n.)

வளையம் பார்க்க (வின்.);;see Valaiyam.

     [வலயம் → வளயம்.]

வளரறம்

 வளரறம் vaḷaraṟam, பெ. (n.)

   மிகுமறம் (வின்.);; increasing virtue.

     [வளர் + அறம்.]

வளரி

வளரி vaḷari, பெ. (n.)

   1. வளரித்தடி பார்க்க;see valari-t-tadi.

     “மறவன் கொடுப்பது வளரிப் பிரசாதம்”.

   2. வயலில் முளைக்குங் களை வகை (நாஞ்.);; a kind of weed, growing in the field.

     [வள → வளர் → வளரி + பிறைபோல் வளைந்த வளரித்தடி (வே.க.4. பக்.95);.]

வளரிக்கை

 வளரிக்கை vaḷarikkai, பெ. (n.)

   வளர்த்துப் பேசுகை; prolonging talkativeness.

     ‘வளரிக்கையாலே வம்பிலே போகுதென் வாணாள்’ (வள்ளி. கதை);.

மறுவ. வாயாடு.

     [வளர் → வளரி → வளர்க்கை.]

வளரித்தடி

வளரித்தடி vaḷarittaḍi, பெ. (n.)

   ஒரு புறம் கனமாகவும், மற்றொரு புறம் எடையற்றதாகவும், கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினாற் பிறை வடிவாகச் செய்த ஒரு வகை எறிகருவி; boomerang, short weapon of hard wood or iron, crescent-shaped, one end being heavier than the other and the outer edge sharpened.

     [வளரி + தண்டி → தடி = பிறைபோல் வளைந்த வளரித்தடி (வே.க.4 பக்.95);.]

வளருப்பு

 வளருப்பு vaḷaruppu, பெ. (n.)

   கோவானுர் உவர் மண்ணுப்பு; effiorescence gathered from the soil of fuller’s earth found in kövanür (சா.அக.);.

வளர்

வளர்1 vaḷartal,    8 செ.கு.வி. (v.i.)

   1. பெரிதாதல்; to grow.

     “வளர்வதன் பாத்தியுள்” (குறள். 718);.

   2. நீளுதல்; to lengthen, to be elongated.

   3. மிகுதியாதல்; to increase, to wax, as the moon.

     “துன்பம் வளர வரும்” (குறள், 1223);.

   4. களித்தல்; to rejoice.

     “வேனல் வளரா மயில்” (திணைமாலை. 111);.

   5. கண்டுயிலுதல்; to sleep.

     “ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்தது” (திவ். இயற். 1.69);.

   6. தங்குதல்; to dwell, rest.

     “வளர் தாமரை” (திருக்கோ.1);.

   க. மலெ;ம. வளருக.

     [முல் → மல் → வல் → வள் → வளர்.]

 வளர்2 vaḷarttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பெருக்குதல்; to cause to increase, to enhance.

   2. போற்றிவளர்த்தல்; to cherish, bring up, as a child, animal, plant etc.

   3. வளர்த்து-தல் பார்க்க;see valarttu.

     [வல் → வள் → வளர்.]

 வளர்3 vaḷarttal,    4 செ.கு.வி. (v.i.)

   வளரச் செய்தல்; to make grow.

     [வள் → வளர்.]

 வளர்4 vaḷar, பெ. (n.)

   1. ஒருவமச் சொல்; a particle of comparison.

     “இழை வளர்;

நுண்ணிடை” (தேவா. 991, 6);.

   2. வளார் பார்க்க;see valar.

வளர்கடா

 வளர்கடா vaḷarkaṭā, பெ. (n.)

வளர்கிடாய் (வின்.); பார்க்க;see valar-kidây.

     [வளர் + கடா.]

வளர்கிடாய்

 வளர்கிடாய் vaḷarkiṭāy, பெ. (n.)

   வீட்டில் வளர்த்த ஆட்டுக்கிடாய்; domestically reared ram.

     [வளர் + கடாய் → கிடாய்.]

     [P]

வளர்சடையோன்நாதவிந்து

 வளர்சடையோன்நாதவிந்து vaḷarcaḍaiyōṉnātavindu, பெ. (n.)

   கந்தகம்; sulphur.

வளர்ச்சி

வளர்ச்சி vaḷarcci, பெ. (n.)

   1. வளருகை; growth, increase, enrichment.

   2. உயரம்; stature, height.

     “அவன் வளர்ச்சியுள்ளவன்”.

   3. நீட்சி; elongation, lengthening.

   4. உறக்கம்; sleep.

     “வளர்ச்சியும்….. புணரார் பெரியா ரகத்து” (ஆசாரக். 71);.

     [வள் → வளர் → வளர்ச்சி.]

வளர்த்தகாடு

 வளர்த்தகாடு vaḷarttakāṭu, பெ. (n.)

   தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்கும் பணியாளர்களுக்கு நிலவுடைமையாளர் கொடுக்கும் கொடைப் பொருள்; remuneration or grant paid by a land lord to his tenants for maintaining properly trees of spontaneous natural growth.

     [வளர் → வளர்ந்த → வளர்த்த + காடு.]

வளர்த்தல்

 வளர்த்தல் vaḷarttal, தொ.பெ. (vbl.n)

   துகி லிகையால் படிப்படியாக வண்ணஞ் சேர்க்கும் முறை; adding hue little by little bybrush.

     [வளர்-வளர்த்தல்]

வளர்த்தாள்

வளர்த்தாள் vaḷarttāḷ, பெ. (n.)

   1. செவிலித் தாய்; foster-mother, wet nurse.

   2. கைத்தாய்; governess. செவிலித்தாய் என்பவள் (பண்டைய இலக்கியங்களில்); தலைவியின் வளர்ப்புத் தாய்.

     [வளர் → வளர்த்தாள்.]

வளர்த்தி

வளர்த்தி vaḷartti, பெ. (n.)

   வளர்ச்சி; growth, development.

     “உன் வளர்த்தி யூடே வளர்கின்றதால்” (திவ். பெருமாள். 6, 3);.

     [வளர் → வளர்த்தி.]

வளர்த்து

வளர்த்து1 vaḷarddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கிடத்துதல்; to stretch as a thing, on the ground.

     “தயிலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான்” (கம்பரா. யுத்த. இராவணன் சோகப். 61);.

     [வள் → வளர் → வளர்த்து.]

 வளர்த்து2 vaḷarddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வளரச் செய்தல்; to cause to grow.

   2. உறங்கச் செய்தல்; to put to sleep.

     “அன்னம்…. வளர்த்திய மழலைப் பிள்ளை” (கம்பரா. நாட்டுப். 13);.

   3. நீட்டுதல்; to lengthen, to prolong, as talk.

   4. பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல் (வின்.);; to beat into thin plates, as gold.

     [வளர் → வளர்த்து.]

வளர்ந்தெழுரோகம்

 வளர்ந்தெழுரோகம் vaḷarndeḻurōkam, பெ. (n.)

   கண்ணில் புண் தோன்றி, கண் சிவந்து, நீர் வடிதலோடு பார்வை குறைந்து காணப்படுமோர் கண்ணோய்; an eye disease marked by ulcerated fleshy growth in the corner of the eye and white coat, redness, watering, dimness of vision etc.

வளர்பிறை

வளர்பிறை vaḷarpiṟai, பெ. (n.)

   1. வளர்மதி; cresent moon, waxing moon.

     “மங்குல் விசும்பின் வளர்பிறை” (பெருங்,நரவாண.1. 67);.

   2. வளர் பக்கம்; the bright half of the lunar month.

     [வளர் + பிறை.]

வளர்ப்பாளன்

 வளர்ப்பாளன் vaḷarppāḷaṉ, பெ. (n.)

வளர்ப்புப் பிள்ளை பார்க்க;see valarppu-p-pillai.

     [வளர்ப்பு + ஆளன்.]

வளர்ப்பு

வளர்ப்பு1 vaḷarppu, பெ. (n.)

ஊண்l nutrition.

     [வளர் → வளர்ப்பு.]

 வளர்ப்பு2 vaḷarppu, பெ. (n.)

   1. வளர்க்கை; bringing up, fostering.

   2. நடனக்காரியின் மகவேற்பாக வந்த பெண்மகவு; girl adopted by a dancing-girl.

   3. பிறனைச் சார்ந்து வாழ்பவன்; dependant.

     “வளர்ப்பு வக்கணையறியாது” (வின்.);.

     [வளர் → வளர்ப்பு.]

வளர்ப்புணி

 வளர்ப்புணி vaḷarppuṇi, பெ. (n.)

வளர்ப்புப் பிள்ளை (யாழ்.அக.); பார்க்க;see valarppu-p-pillai.

     [வளர்ப்பு + உண் → உணி.]

வளர்ப்புத்தாய்

வளர்ப்புத்தாய் vaḷarpputtāy, பெ. (n.)

   1. செவிலித்தாய்; foster-mother.

   2. வளர்த்தாள் பார்க்க;see valarttal.

     [வளர்ப்பு + தாய்.]

வளர்ப்புப்பிள்ளை

வளர்ப்புப்பிள்ளை vaḷarppuppiḷḷai, பெ. (n.)

   1. மிகவும் விரும்பி வளர்க்கப்படும் பிள்ளை; foster-child.

   2. தத்துப்பிள்ளை; adopted child.

     [வளர்ப்பு + பிள்ளை.]

வளர்மயிர்

 வளர்மயிர் vaḷarmayir, பெ. (n.)

   மயிர்க் குழற்சி; tuft, knot of hair.

     [வளர் + மயிர்.]

வளர்முகநாடு

 வளர்முகநாடு vaḷarmuganāṭu, பெ. (n.)

   பொருளாதாரம் அல்லது தொழில் முறையில் வளர்ந்து வரும் நாடு; economically or industrially developing country.

     “இந்தியா ஒரு வளர்முக நாடு” (உ.வ.);.

     [வளர் + முகம் + நாடு.]

வளர்மேகம்

 வளர்மேகம் vaḷarmēkam, பெ. (n.)

   சிறுநீரக நோய்; increasing urinary venereal disease.

     [வளர் + மேகம்.]

வளர்வு

 வளர்வு vaḷarvu, பெ. (n.)

வளர்ச்சி (வின்.); பார்க்க;see valarcci.

     [வளர் → வளர்வு.]

வளவன்

வளவன்1 vaḷavaṉ, பெ. (n.)

   சோழர்களின் பட்டப் பெயர்களுள் ஒன்று; one of the titles of Colas.

     ‘வளவன் என்ற பெயர், சோழரின்

மரபில் வந்தோர்க்கு வழங்கும் பெயராகும்.

     ‘வள நாட்டின் தலைவன்’ என்பதே வளவன் என்பதின் பொருளாகும்.

     ‘மாவளத்தான்’ (புறம்-43-44);.

     ‘திருமாவளவன்’ (பட்டி-299);.

     ‘கரிகால் வளவன்’ (அகம்-55-10);.

     ‘கிள்ளிவளவன்’ (பிறம்-70, 10, 346, 22, 399, 13);.

 வளவன்2 vaḷavaṉ, பெ. (n.)

   1. சோழன்; Cola king.

     “இயறேர் வளவ” (புறநா. 7);.

   2. வேளாளன்; agriculturist.

     “அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள்” (திருப்போ. சந். திருப்பள்ளி.8);.

     [வளம் → வளவன்.]

வளவன்மாதேவி

 வளவன்மாதேவி vaḷavaṉmātēvi, பெ. (n.)

   பராந்தகச் சோழனின் மனைவி; wife of parāndaga-c-colan.

     [வளவன் + மாதேவி.]

இவளுடைய பெயரால் அமைந்த ஊர்

     ‘வளையமாதேவி’ என்பதாகும். இவ்வூர் தென்னாக்காடு மாவட்டத்தில் உள்ளது.

வளவள

வளவள2 vaḷavaḷattal,    4 செ.கு.வி. (v.i.)

வளுவளு (வின்.); பார்க்க;see valu-valu.

     [வழவழ → வளவள.]

வளவளத்

வளவளத்1 vaḷavaḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுருக்கமின்றி பயனற்றச் சொற்களைப் பேசுதல்; to be talkative, to be wondy, speaking of rain words, indulge in vain speaking.

   2. வீணே பிதற்றுதல் (வின்.);; to babble.

     [வள → வளவள.]

வளவளப்பு

வளவளப்பு1 vaḷavaḷappu, பெ. (n.)

   பிசுபிசுப்பு; musilaginous pasty and smooth,

 slipperу.

     [வழவழ → வளவள → வளவளப்பு.]

 வளவளப்பு2 vaḷavaḷappu, பெ. (n.)

   1. பயனற்றச் சொற்களை அதிகமாகக் கூறுதல்; talkativeness, wordiness, excessive talk of vain words.

   2. வீண் பிதற்று; vain talk, babbling.

     [வளவள → வளவளப்பு.]

வளவி

 வளவி vaḷavi, பெ. (n.)

   வீட்டிறப்பு (பிங்.);; sloping roof, caves.

     [வள → வளவி.]

வளவு

வளவு1 vaḷavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வளர்த்தல்; to bring up, rear.

     “வெட்டுணியுன் மகனை மெல்ல வள வாக்கால்” (ஆதியூரவதானி. 38);.

     [வளவி → வளவு.]

 வளவு2 vaḷavu, பெ. (n.)

   1. வீடு; house

     “வளவிற்கமைந்த வாயிற்றாகி” (பெருங். இலாவாண.6, 77);.

   2. வீட்டுப்புறம் (வின்.);; house hold premises.

தெ. வெளவு (velavu);.

     [வள் → வள → வளவு = வீட்டுச் சுற்றுப்பரப்பு, வீட்டுத்தொகுதி (வேக.4. பக்.95);.]

வளவுதடி

 வளவுதடி vaḷavudaḍi, பெ. (n.)

   ஆண்குறித் தண்டு; penis.

     [வளவு + தடி.]

வளா

வளா1 vaḷā, பெ. (n.)

   பரப்பு; circuit, area, spread, as a tank.

     “குளவளாக் கோடின்றி நீர்நிறைந்தற்று” (குறள், 523);.

     [வள் → வள → வளா = சுற்றுப்பரப்பு (வே.க.4. பக்.95);.]

 வளா2 vaḷā,    இடை. (int.) பளாபளா (வின்.); exclamation meaning

     ‘bravo’.

க. பளா.

வளாகச்சுவர்

 வளாகச்சுவர் vaḷākaccuvar, பெ. (n.)

   கட்டடத்தைச் சுற்றியமைந்த சுவர்; compound wall.

     [வளாகம் + சுவர்.]

வளாகம்

வளாகம் vaḷākam, பெ. (n.)

   1. இடம் (பிங்.);; place, complex, premises.

     “புலன்களைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலேன்” (தேவா. 1193:1);.

   2. வளைக்கை (சூடா.);; enclosing, surrounding, fencing.

   3. உலகம்; globe, earth.

     “முந்நீர் வளாக மெல்லாம்” (கலித். 146);.

   4. பூகண்டம்; continent.

     “ஏழ்பெரு வளாக வேந்தர்” (கம்பரா. திருமுடி.6);.

   5. நாடு; country.

     “வேறோர் வளாகம துற்றான்….. வணிகன்” (கந்தபு. மார்க். 142);.

   6. திணைப்புனம் (பிங்.);; millet-field.

     “குன்றும் யாறுங்குவடும் வளாகமும்”

   7. தோட்டம்; garden.

   8. வளா1 பார்க்க;see vala1.

     [வள் → வள → வளா → வளாகம்.]

வல்1 வளைவுக் கருத்தினின்று முகிழ்த்த சொல். வளைந்து சூழ்ந்த இடம், வளைந்து சூழ்ந்த கடல், வளைந்து சூழ்ந்த நிலப்பரப்பு வளைந்து சூழ்ந்த வளாகம் போன்ற பொருண்மை பொதிந்த சொற்கள், வளைவுக்கருத்தினின்று முகிழ்த்தன என்பார், மொழிஞாயிறு.

வளாஞ்சி

வளாஞ்சி vaḷāñji, பெ. (n.)

வளார் பார்க்க;see Valar.

     [வள் → வளா → வளாஞ்சி (இ.வ.); (வே.க.4, பக்.95);.]

வளாய்க்கொள்ளுதல்

 வளாய்க்கொள்ளுதல் vaḷāykkoḷḷudal, பெ. (n.)

   சூழ்ந்து கொள்ளுதல்; encircled fenced.

     [வளாய் + கொள்ளு.]

வளார்

வளார் vaḷār, பெ. (n.)

   இளம் கொம்பு; twing, tender branch.

     “புளியம் வளாரால் மோதுவிப்பாய்” (தேவா.1039,1);.

தெ.மளாரமு.

     [வல் → வலார் → வளார்.]

வளாறு

 வளாறு vaḷāṟu, பெ. (n.)

வளார் பார்க்க;see valar.

     [வளார் → வளாறு.]

வளாலை

 வளாலை vaḷālai, பெ. (n.)

   முட்டைக் காளான்; oval shaped mushroom.

     [வளால் → வளாலை.]

வளால்

வளால் vaḷāl, பெ. (n.)

   1. தரைக்கூறுவகை (செந். xiii, 172);; a kind of soil.

   2. வளா1 பார்க்க;see Vala1.

     [வளார் → வளால்.]

வளாவு

வளாவு1 vaḷāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சூழ்தல் (பிங்.);; to surround.

     “இளவெயில் வளாவ” (பரிபா. 15, 27);.

     ‘மகோததி வளாவும் பூதலம்” (கம்பரா. தேரேறு. 42);.

   2. மூடுதல்; to cover, jacket.

     “பைந்துகில்….. வெம்முலை மேல் வளாய்” (சீவக. 2634);.

     [வள → வளா → வளாவு.]

 வளாவு2 vaḷāvudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. கலத்தல்; to mix, as hot water with cold, to dilute.

     “தேன் வளாவியும்” (கம்பரா. ஆற்றுப். 8);,

     “கடல் வெதும்பின் வளாவு நீரில்லாது போலவும்” (இறை. 3. பக். 47);.

   2. அளவளாவுதல் (பிங்.);; to be sociable, intimate.

     [வளா → வளாவு.]

வளி

வளி1 vaḷi, பெ. (n.)

   1. ஓதம்; moisture.

   2. பிதுக்கம்; production.

   3. குடலிறக்கம் (அண்டவாதம்);; hernia.

   4. சூதம்; hydrocele.

   5. ஆசன வளையம்; rings in the rectum.

   6. வளிம (வாதம்);; wind humour.

     [வள் → வளி.]

 வளி2 vaḷi, பெ. (n.)

   1. காற்று; wind, air.

     “வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி” (குறள், 245);.

   2. சுழல்காற்று (பிங்.);; whirl wind.

   3. உடலிலுள்ள வாதக்கூறு; windy humour in the body.

     “வளி முதலா வெண்ணிய மூன்று” (குறள், 941);.

   4. அண்டவாத நோய்; rupture, hernia.

தெ., ம.வளி.

     [வல் → வள் → வளி.]

     “வளி = வளைந்து வீசுங் காற்று” (வேர்ச் சொல்.4, பக்.95);,

 வளி vaḷi, பெ. (n.)

   சிறிய காலவளவு வகை; a small duration of time.

     “கணம் வளி யுயிர்ப்புத் தோவம்” (மேருமந். 94);.

     [வள் → வளி.]

வளி நோய்

 வளி நோய் vaḷinōy, பெ.(n.)

   ஒரு வகை வாத(வளி); நோய்; a kind of gastric disease.

த.வ. அழல் வளி

     [வளி+நோய்]

வளிசம்

 வளிசம் vaḷisam, பெ. (n.)

   தூண்டில் (பிங்.);; fishing rod.

     [வள் → வளி → வளிசம் = வளைந்த தூண்டில்.]

     [P]

வளிச்செல்வன்

 வளிச்செல்வன் vaḷiccelvaṉ, பெ. (n.)

 the wind god.

     [வளி + செல்வன்.]

வளிதரும்செல்வன்

 வளிதரும்செல்வன் vaḷidarumcelvaṉ, பெ. (n.)

வளிச்செல்வன் பார்க்க;see vali-c-celvan.

     [வளிதரும் + செல்வன்.]

வளிதூக்கல்

வளிதூக்கல் vaḷitūkkal, தொ.பெ. (vbl.n.)

   வேகமாகக் காற்றடித்தல்; to speed wind.

     “கொடிறுபோல் காயவால் இணர்ப்பாலை செல்வளிதூக்கலின் இலைநீர் நெற்றம்” (நற்-107–3–4);.

     [வள் → வளி + தூக்கல்.]

வளிமம் மிகுதியாகச் சேர்ந்து, திரண்டு திகழும் ஆணின் விதைக்கொட்டை.

வளிநீர்

 வளிநீர் vaḷinīr, பெ.(n.)

இரைப்பை நீர்

 gastric juice.

     [வழி+நீர்]

வளிநோய்

 வளிநோய் vaḷinōy, பெ. (n.)

   வளிக்கோளா றினால் உண்டாகும் நோய்; defects arising from gastric disorder.

     [வளி+நோய்]

வளிமகன்

வளிமகன் vaḷimagaṉ, பெ. (n.)

   1. அனுமான்; hanuman.

   2. வீமன்; Viman.

     “அரக்கில்லை வளிமகனு டைத்து” (கலித். 25);.

     [வளி + மகன்.]

வளிமறை

வளிமறை vaḷimaṟai, பெ. (n.)

   1. வீடு; house.

     “என்னல் கூர்வளிமறை” (புறநா. 196);.

   2. கதவு; door.

     “வளிமறையு மின்றி வழக் கொழியா வாயில்” (பு.வெ.10, முல்லைப். 4);.

     [வளி + மறை.]

வளியன்

 வளியன் vaḷiyaṉ, பெ. (n.)

   பருத்த விதைகளை யுடையவன்; one afflicted with a big scrotum, one afflicated with rupture.

     [வளி + அன் – வளியன்.]

வளியிறங்கினவன்

 வளியிறங்கினவன் vaḷiyiṟaṅgiṉavaṉ, பெ. (n.)

வளியன் பார்க்க (வின்.);;see valiyan.

     [வளி + இறங்கினவன்.]

வளு

வளு1 vaḷu, பெ. (n.)

   கருப்பையிலிருந்து குழவி (பிண்டம்); வெளிவருமுன் வெளிப்படும் வழவழப்பான ஒரு பொருள்; a slight discharge of mucus with or without blood called ‘show’ indicating the delivery of the child, a discharge of blood and mucus from the rigina of the onset of labour.

 வளு2 vaḷu, பெ. (n.)

   1. இளமை; youth.

   2. இளைது; that which is tender or young.

வளுந்து-தல்

வளுந்து-தல் vaḷundudal,    5 செ.கு.வி. (v.i.)

வழுந்து (வின்.); பார்க்க;see valundu.

வளும்பு

வளும்பு vaḷumbu, பெ. (n.)

வழும்பு2 பார்க்க (யாழ்.அக.);;see valumbu.

மறுவ. கொழுப்பு.

     [வழும்பு → வளும்பு.]

வளுவளு-த்தல்

வளுவளு-த்தல் vaḷuvaḷuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வழுக்குத் தன்மையாதல்; to be slimy, slippery.

   2. பேச்சு முதலியவற்றில் தெளிவின்றியிருத்தல் (வின்.);; to be uncertain or indecisive as in speaking or language, unclear.

     [வளு + வளு.]

வளுவளெனல்

 வளுவளெனல் vaḷuvaḷeṉal, பெ. (n.)

   நொளு நொளுப்பு; plastic.

     [வளு + வளெனல்.]

வளுவாதியர்

வளுவாதியர் vaḷuvātiyar, பெ. (n.)

   புதுக்கோட்டைச் சீர்மையிலும், திருச்சி மாவட்டத்திலும் வாழ்கின்ற, வலையருள் ஒரு பிரிவினர் (E.T. vii, 311);; a subsect of the Vasaiyar caste in the erstwhile Puduköttai state now district and in the Trichy district.

வளை

வளை1 vaḷaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கோணுதல்; to bend, to become crooked.

   2. தாழ்தல்; to lower down.

     “முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து” (திவ். பெரியதி. 1, 3, 1);.

   3. தோற்றல்; to be defeated.

     “வளையா வயவரும்” (பு.வெ.7, 18);.

   4. திடமறுதல் (சீவக.1068, உரை);; to yield, give way, surrender.

   5. நேர்மையினின்று விலகுதல்; to deviate, as from rectitude.

     “வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல்” (சிலப்.19, 16);.

   6. வருந்துதல்; to suffer, regret.

     “வளையார்பசியின்” (பதினொ திருவிடை-மும்மணிக்.21);.

   7. சுற்றுதல்; to move or

 round about, as foetus in the womb.

     ‘குழந்தை வயிற்றில் வளைய வருகிறான்’ (உ.வ.);.

     [வள் → வள → வளை- (வே.க.4. பக்.95);.]

 வளை2 vaḷaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. சூழ்தல்; to surround, encompass, besiege.

     “வளைகடல் வலையிற் சூழ்ந்து” (சீவக. 1115);.

   2. சுற்றி வருதல்; to hover round, to walk around.

     “வையக முழுதுடன் வளைஇ” (புறநா. 69);,

     “செறிவளை நல்லார் சிலர் புறஞ் சூழ” (மணிமே.18-39);.

     [வள் → வள → வளை- (வே.க.4, பக்.95);.]

வளைதல் = பயன் கருதிச் சுற்றி வருதல். தனக்கு ஆக வேண்டிய ஒன்றைக் கருதிப்பன்முறை வந்து பார்த்தலும், பேசுதலும், வளைதல் என்றும், வளைய வருதல் என்றும் சொல்லப்படும்.

வீட்டைச் சுற்றுதலும், ஆளைச் சுற்றுதலும், வளைதல். அவ்வளைதலும் பல்கால் வருதல், தற்பயன் கருதியதேயன்றிப் பிறிதன்றாம். வாலைக் குழைக்கும் நாய் வளைய வரும். வாயைக் குழைக்கும், இவரும் வளைய வருவர். இத்தகையவரே, ‘சுடக்குப் போட்டால் வருவார்’ என்று சொல்லப்படும், இழிவு உடையவராம். அன்பால் தாய், சேயையும், சேய், தாயையும் வளைய வருதல் ஈதன்றாம்.

     “வளைய வருகிறானே, என்ன புதுநாடகம்” என்பது வளைய வருதலை விளக்கும்.

 வளை2 vaḷaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வளையச் செய்தல்; to bend, inflect.

   2. சூழ்தல்; to surround.

     “இடுமுட் புரிசை யேமுற வளைஇ” (முல்லைப். 27);.

   3. தடுத்தல்; to hinder, obstruct, prevent.

     “வள்ளனீங்கப் பெறாய் வளைத்தே னென” (சீவக. 889);.

   4. பற்றுதல்; to grasp, seize.

   5. கவர்தல்; to carry off, sweep away, to steal.

     ‘திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு விட்டார்கள்’ (இ.வ.);.

   6. பேச்சு முதலியவற்றை திருப்புதல்; to reiterate, to revert again and again.

     ‘வளைத்து வளைத்து பேசுகிறான்’ (இ.வ.);.

   7. எழுதுதல்; to paint, delineate.

     “உருவப்பல்பூ வொருகொடி வளைஇ” (நெடுநல். 113);.

   8. அணிதல்; to wear, put on.

     “சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தாணை” (தேவா. 871.1);.

     [வள் → வள → வளை- (வே.க.4 பக்.95);.]

 வளை4 vaḷai, பெ. (n.)

   வளையம்; ring, circle, circuit.

     “கோபுரகலச அமைப்பினால் இவ்விணைப்பினை அறியலாம்” (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு);,

     “கண்களி பெறூஉம் கவின்பெறு காலை எல்வளை ஞெகிழ்ந் தோற்கு அல்லல்” (நற்-56-3-4);.

     “ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே” (நற்-60-11);.

க. பளெ (b);

     [வள் → வள → வளை (வே.க.4, பக்.95);.]

பல பகுதிகளாக அமைக்கப் பெற்று, ஒன்றாக, ஒருருவாக அமைக்கப்படும் மாழையாலான பாத்திரங்கள், ஒன்றற் கொன்று அடுக்கிச் செருகி உருவாக்கும் கரையிடங்களே வளை என்று பெயர் பெறும்.

 வளை5 vaḷai, பெ. (n.)

   1. சுற்றிடம்; circle, circuit, surrounding region.

     “பரமேச்சுர மங்கலத்து ளகப்பட்ட வளையில்” (S.I.I.i, 151, 72);.

   2. சங்கு; conch.

     “வளையொடு புரையும் வாலியோற்கு” (பரிபா. 2, 20);.

   3. கைவளை; bangle, bracelet.

     “முன்கை யிறையிறவா நின்ற வளை” (குறள். 1157);.

   4. ஆழி, எறி வளையம்; discus.

     “தாங்கணைப் பணிலமும் வளையுந் தாங்கரா வீங்கணைப் பள்ளியான்” (கம்பரா. உருக்காட்டுப். 43);.

   5. துளை; hole.

   6. எலி

   முதலியவற்றின் பொந்து (இ.வ.);; rat-hole burrow.

   7. சிறிய உத்திரம் (வின்.);; small beam.

   8. நீண்ட மரத்துண்டு; long piece of wood.

க. பளெ (b.);.

     [வள் → வளை.]

 வளை6 vaḷai, பெ. (n.)

   தூதுவளை (சங்.அக.);; a thorny climbing brinjal.

     [P]

வளை மணிவடம்

வளை மணிவடம் vaḷaimaṇivaḍam, பெ. (n.)

   அக்குவடம்; a string of beads.

     ‘திருவரையிற் சாத்தின வளை மணிவடமானது’ (திவ். பெரியாழ். 1, 7, 8);.

     [வளை + மணி + வடம்.]

வளை வெளவல்

வளை வெளவல் vaḷaiveḷaval, பெ. (n.)

   வெள்ளிய வேலைப்பாடு அமைந்த ஒளியுடைய வளை; an arch with glittering architectural designs creating bright light.

     “வான்கோல் எல்வளை வெளவிய பூசல்” (நற்.100-5);.

     [வளை + வெளவல்.]

வளைகாப்பு

 வளைகாப்பு vaḷaikāppu, பெ. (n.)

   முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு, ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் வளையணியும் நிகழ்வு; bangle wearing ceremony in the fifth or seventh month of a married woman’s first pregnancy.

     [வளை + காப்பு. கா = காத்தல். கா → காப்பு.]

முதன்முதல் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாம் மாதத்தில் செய்யப்படும் நிகழ்வு.

கருவுற்ற மகளிரை, நோய்நொடியிலிருந்து காத்தற்பொருட்டு நிகழ்த்தப்பெருஞ் சடங்கு. பேயச்சத்திலிருந்தும், கண்ணேறுபடுதலிலிருந்தும் காப்பதற்காகப் போடப்படும் வளையே, வளைகாப்பென்று, ஊரகத்தார் நம்புகின்றனர்.

ஏழாம் மாதத்தில் செய்யவியலாதவர், ஒன்பதாம் மாதத்தில் செய்வர்.

தாயைக் காத்தற் பொருட்டு, முதற்கண், வேம்பின் ஈர்க்காலாகிய வளையை அணிவிப்பர். பின்பு அவரவர்தம் செல்வ வளமைக்குத் தக்கவாறு, தங்கவளையல், சங்கு வளையலை அணிவித்துத் தாயை மகிழ்விப்பர்.

வளைகாப்புபோடல்

 வளைகாப்புபோடல் vaḷaikāppupōṭal, பெ. (n.)

வளைகாப்பு பார்க்க;see valai-kappu.

     [வளைகாப்பு + போடல்.]

முதற்சூலுற்ற பெண்களுக்கு பெண்வீட்டார் நிகழ்த்தும் வளையணி விழாவே, வளைகாப்புப் போடலாகும்.

வளைகாப்புபோடல் – மகப்பேற்றுக்கு அழைப்பு விழா.

வளையலும் காப்பும் போடுதல் பிறந்த குழந்தைப் பருவந்தொட்டே நடக்கத் தொடங்குவது. அதனைக் குறியாமல்,

     “வளைகாப்புப்போடல்” – கருக்கொண்ட மகளை ஏழாம் மாதத்திலோ, ஒன்பதாம் மாதத்திலோ – தாய் வீட்டுக்கு, மகப்பேற்றுக்காக அழைக்கும் போது, விழாவாக நிகழ்த்தப்படுகின்றது.

வளைகாப்பு விழா அல்லது வளையணி விழா நாளில், பல்வகைச் சோறுகள், பண்டங்கள் ஆக்கிப்

படைத்தலும், அவ் விழாவுக்கு வந்த மங்கல மகளிர், கன்னியர், குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் வளையல் போடுதலும் வழக்காம். வளையல் அணிவிக்கும் நாளை, வளயணிவிழா நாளாக இன்றும், தமிழர் கொண்டாடுகின்றனர்.

வளையல் மகளிர் அணி. மணிக்கட்டை வளைத்து வளையல் போடுதல் போல் ஆதனை, அஃதாவது, கருவுற்ற மகளிரையுஞ் சேயினையும், இறைவன் வளைத்துக் காப்பதாகவும் சிவனியத்தார் பொருள் கூறுவர்.

கா → காப்பு. ஆடவர் அணியுமாகும். ஆனால் வளைகாப்பு, சேயையும், தாயையும் காக்கும் காப்பாகும்.

ஆனால் வளைகாப்பிலுள்ள காப்பு, அணி குறியாமல், காவல் பொருளையே கட்டுதலறிக.

     ‘காப்புக்கட்டல்’ என்னும் ஊர் வழக்கை நோக்குக.

வளைகுடா

 வளைகுடா vaḷaiguṭā, பெ. (n.)

   விரிகுடாவை விடக் குறைந்த பரப்பைக் கொண்ட கடல்பகுதி; gulf.

     “வளைகுடா நாடுகள்”.

     [வளை + குடா.]

வளைகூட்டு-தல்

வளைகூட்டு-தல் vaḷaiāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கூந்தலை உலர்த்தி அள்ளி முடிதல்; to dry and to make into a knot.

     “மா இருங் கூந்தல் மடந்தை ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே” (நற்-60-10-11);.

     [வளை + கூட்டு.]

வளைகொள்ளல்

 வளைகொள்ளல் vaḷaigoḷḷal, பெ. (n.)

   சங்கு எடுப்பதற்காகக் கடலில் முக்குளித்தல்; to swim into deep sea to cull out conch-shell.

     [வளை + கொள்ளல்.]

வளைக்கழுந்து

 வளைக்கழுந்து vaḷaikkaḻundu, பெ. (n.)

   சுவருட் செலுத்தும் உத்திரத்தின் பகுதி; tenon in the end of the lower beam in a building.

     [வளை + கழுந்து.]

வளைக்காச்சுமணி

 வளைக்காச்சுமணி vaḷaikkāccumaṇi, பெ. (n.)

   சங்குமணி; a kind of bead.

     [வளை + காச்சுமணி. காய்ச்சுமணி → காச்சுமணி.]

வளைசலுளி

 வளைசலுளி vaḷaisaluḷi, பெ. (n.)

   வளைவுப் பகுதிகளில் செதுக்கப் பயன்படும் உளி; chisel used to englave bend portion of wood.

     [வளைசல் + உள் → உளி = குறுகிய வளைவுப் பகுதிகளில் செதுக்கப் பயன்படுவது.]

     [P]

வளைசல்

வளைசல் vaḷaisal, பெ. (n.)

   1. வளைவு; Crookedness, curve, curvature, bend.

   2. வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம்; courtyard, compound, enclosure.

   3. வளையல் பார்க்க;see valaiyal.

     [வளை → வளைசல்.]

வளைச்சல்

 வளைச்சல் vaḷaiccal, பெ. (n.)

   கழித் துண்டுகளை இணைக்கும் மரச்சட்டம், வலிச்சல்; reeper

     [வரிச்சல் → வலிச்சல் → வலைச்சல் → வளைச்சல்.]

வளைச்செட்டி

 வளைச்செட்டி vaḷaicceṭṭi, பெ. (n.)

வளைவிச் செட்டி பார்க்க;see Valavi-c-cetti.

     [வளை + செட்டி.]

வளைதடி

 வளைதடி vaḷaidaḍi, பெ. (n.)

   குறுந்தடி வகை; a kind of curved cudgel, used as a weapon.

     [வளை + தடி = படைக்கலனாகப் பயன்படும் எறிதடி.]

வளைதடிச்சம்பா

 வளைதடிச்சம்பா vaḷaidaḍiccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை; a kind of cambá paddy.

     [வளைதடி + சம்பா.]

வளைதொளை

வளைதொளை vaḷaidoḷai, பெ. (n.)

   1. வளைந்த செலவு; winding hole.

   2. தொடர்பில்லாத வற்றிலே தலையிட்டு வினவுதலை யுணர்த்துங் குறிப்புச் சொல் (வின்.);; a term indicative of inquisitiveness.

     [வளை + தொளை. துளை → தொளை.]

வளைத்துப்போடு-தல்

வளைத்துப்போடு-தல் vaḷaidduppōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   தன் வயப்படுத்துதல்; win over, bring one’s control or influence, to entice.

     ‘ஊரில் வாய்மடையிலிருக்கும் நஞ்சை நிலத்தை யெல்லாம் வளைத்துப் போட்டு விட்டார்’ (இ.வ.);.

     [வளைத்து + போடு.]

வளைத்துவை

வளைத்துவை2 vaḷaittuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அப்பாற் போகவொட்டாது மடக்குதல்; to restrain one from going away or escaping.

     “வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன்” (திவ். பெரியாழ்.5.3.2);.

   2. சிறையகப் படுத்துதல்; to imprison, to intern.

     “சிறையறை வளைத்து வைத்தார்” (திருவாலவா. 29, 19);.

   3. இடையூறு செய்தல்; to obstacle.

     [வள் → வள → வளை → வளைத்து + வை.]

வளைத்துவைத்தல்

வளைத்துவைத்தல்1 vaḷaittuvaittal, பெ. (n.)

   1. தடையிடுகை; felter, restriction, obstruction.

   2. பிணித்து வைக்கை; binding.

     [வளைத்து + வைத்தல்.]

வளைநரல்

வளைநரல் vaḷainaral, பெ. (n.)

   சங்கொலி; conch sound.

     “வளைநரல் பௌவம் உடுக்கை ஆக” (நற்-க.வா.1-2.);.

     [வளை + நரல். வளை = உள்வளைந்துள்ள சங்கு, நரல் = ஒலி.]

வளைநரி

 வளைநரி vaḷainari, பெ. (n.)

   நரிவகை (வின்.);; a kind of fox.

     [வளை + நரி.]

அடர்ந்த காடு மற்றும் மண்டிக் கிடக்கும் புதர்களிற் காணப்படுவது, வளைநரி.

     [P]

வளைநீர்

வளைநீர் vaḷainīr, பெ. (n.)

   கடல்; sea, as surrounding the earth.

     “வளை நீரோசை தனின் மிகுமால்” (திருவாலவா. திருநகரச்.6);.

     “வளைநீர் மேய்ந்து கிளைமுதல் செலீஇ” (நற்-54-1);.

     [வளை + நீர்.]

பெரும்பாலான நிலப்பரப்பை வளைத்துச் சூழ்ந்த உவர்நீர்ப்பரப்புடையதே, வளைநீராகும்.

வளைந்தகால்

 வளைந்தகால் vaḷaindakāl, பெ. (n.)

   நெளிந்த கால்; bow leg.

     [வளைந்த + கால்.]

வளைந்தலகுச்சிலம்பன்

வளைந்தலகுச்சிலம்பன் vaḷaindalaguccilambaṉ, பெ. (n.)

   சிலம்பன் என்னும் பறவை வகையுள் ஒன்று; Indian scimitar babbler-Pomatorhinus horsfieldi.

     [வளைந்தலகு + சிலம்பன்.]

கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைச்சார்ந்த, ஏலத் தோட்டம், மூங்கில் காடு, பசுங்காடு, இலையுதிர்காடு முதலிய பகுதிகளில் காணப்படுவதும், 22 விரலம் உயரம் வளர்வதும், பசுமை தோய்ந்த கரும்பழுப்பு நிறமும், வெண்புருவம் கொண்டும், தொண்டை, மார்பு, வயிறு ஆகிய வெண்நிறமாயும் காணப்படும். இவை, பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டது. 2 அல்லது 3 முட்டைகளிட்டு தன் இனத்தைப் பெருக்கும்.

வளைந்துகொடுத்தல்

 வளைந்துகொடுத்தல் vaḷaindugoḍuttal, தொ.பெ. (vbl.n.)

   நடைமுறை வாழ்க்கையில் விடாப்பிடியின்றி, சற்று நெகிழ்வாயிருத்தல்; being fluctuous in a particular deed.

நாணல்போல் வளைந்து கொடுக்கப்பழகிடு வளமான வாழ்விற்கு ஏற்புடையதோடன்றி வரவேற்புடையதுமாகும் (உ.வ.);.

     [வளைந்து + கொடுத்தல்.]

வளைந்தெழுரோகம்

 வளைந்தெழுரோகம் vaḷaindeḻurōkam, பெ. (n.)

   புருவம், கீழிமை, கடைக்கண் போன்றவற்றில் சதை வளர்ந்து, மேல்நோக்கி பார்க்க முடியாமல் துன்புறுத்தும் ஓர் நோய்; an eye disease affecting the lower lid, corner of eyes and inability to look upwards due to fleshy growth.

     [வளைந்தெழு + Skt. raga → த. ரோகம்.]

வளைபோழுநர்

வளைபோழுநர் vaḷaipōḻunar, பெ. (n.)

   சங்கறுப்போர்; makers of conch-ornaments.

     “அணிவளை போழுநர்” (சிலப். 5:47);.

     [வளை + போழுநர்.]

வளைபோழ்நர்

வளைபோழ்நர் vaḷaipōḻnar, பெ. (n.)

வளைபோழுநர் பார்க்க;see valai-polunar.

     “விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு” (மணிமே.28, 44);.

     [வளை + போழ்நர்.]

வளைப்பு

வளைப்பு vaḷaippu, பெ. (n.)

   1. வளைக்கை; bending.

   2. வளைவு; bend, flexure, crookedness.

   3. சூழ்கை; encircling, surrounding, besieging.

     “வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்” (திவ்.

பெரியாழ்.5, 1, 5),

   4. முற்றுகையிடுகை; besieging.

     “சேனையை வளைப்புறப் போக்கி” (கம்பர.மீட்சி.139);.

   5. குடியிருப்பிடம்; house-premises, compound.

   6. சிறை; jail, prison, place of confinement.

     “வளைப்பினூடு நிற்கு நற்குணத்தினாரை” (திருவாத.பு. மண். 12);.

   7. காவல்; guard, protection, policing.

     “பெருவளைப்பிட்டுக் காத்த கற்பிது” (சீவக. 2077);. 8. .உழவுச்சால் (யாழ்.அக.);;

 round or turn of ploughing.

     [வளை → வளைப்பு.]

வளைப்புக்கிட-த்தல்

வளைப்புக்கிட-த்தல் vaḷaippukkiḍattal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வெளியிலே தப்ப விடாது, சூழ்ந்து கொள்ளுதல்; to besiege, to pester a person by surrounding him and not allowing him to escape.

   2. பழி கிடத்தல்; to lie down, vowing not to get up unless one’s request is granted, to sit dharna.

     [வளைப்பு + கிட.]

வளைமடி-த்தல்

 வளைமடி-த்தல் vaḷaimaḍittal, செகுன்றாவி. (v.t.)

   நெற்குவியல் மேலும் சரியாமல் பக்கத்திலும் சுற்றிலும் முறுக்கியசைக்கும் வைக்கோல் வளையம் வைத்தல்; to place twisted haystack arround paddy heap.

     [வளை+மடி]

வளைமணி

 வளைமணி vaḷaimaṇi, பெ. (n.)

   அக்குமணி (பிங்.);; bead made of conch-shell.

     [வளை + மணி.]

     [P]

வளைமுகப்புசாளரம்

 வளைமுகப்புசாளரம் vaḷaimugappucāḷaram, பெ. (n.)

   மூக்குத்துளை; nostril.

     [வளை + முகப்பு + சாளரம்.]

வளைமுகம்

 வளைமுகம் vaḷaimugam, பெ. (n.)

புல்லாங் குழலின் தொடக்கத்தில் உள்ள முனை,

 starting point of a flute.

     [வளை+முகம்]

வளைமுற்றம்

 வளைமுற்றம் vaḷaimuṟṟam, பெ. (n.)

   வீட்டின் முன் பகுதியில் நடப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பாதை; the path which is used to walk in front of the house.

மறுவ. நடை.

     [வளை + முற்றம்.]

வளையகம்

 வளையகம் vaḷaiyagam, பெ. (n.)

   சங்கு (அக.நி.);; conch, as curved.

     [வளையம் + அகம்.]

     [P]

வளையக்கொடி

 வளையக்கொடி vaḷaiyakkoḍi, பெ. (n.)

   அண்ணந்தாள்; a kind of torture.

     [வளையம் + கொடி.]

வளையக்கோலுகை

வளையக்கோலுகை vaḷaiyagālugai, பெ. (n.)

   1. சுற்றுகை; encompassing, surrounding.

   2. தனக்கு மட்டும் உரிமையாக்கிக் கொள்ளுகை (வின்.);; monopolizing.

     [வளையம் + கோலுகை.]

வளையணிதல்

 வளையணிதல் vaḷaiyaṇidal, தொ.பெ. (vbl.n.)

வளைகாப்புபோடல் பார்க்க;see valai-kappu-podal.

     [வளை + அணிதல்.]

வளையநோய்

 வளையநோய் vaḷaiyanōy, பெ. (n.)

   கண்டத்திற்கு உள்ளும், வெளியேயும், கழுத்தைச் சுற்றி வீங்கி, தொண்டை வரை அடைந்து துன்புறுத்துமோர் நோய்; a circular or ring shaped raised swelling obstructing or closing up the upper end of the oesophagus, it is incurable and hence should be given up.

     [வளையம் + நோய்.]

வளையமாடு-தல்

வளையமாடு-தல் vaḷaiyamāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கயிறு சுருட்டுதல் (வின்.);; to wind up a rope, coil a cable.

   2. வளையம் போடு-, 2, 3 பார்க்க;see Valaiyam-podu.

     [வளையம் + ஆடு-, ஆல் → ஆள் → ஆளு → ஆடு = வளைதல், சுற்றுதல், சுழலுதல்.]

கயிற்றை வளையமாகச் சுற்றுதல் அல்லது சுருட்டுதல்.

வளையமாலை

வளையமாலை vaḷaiyamālai, பெ. (n.)

   முடியில் வளைத்துச் சூடும் மாலை; garland worn round the head.

     “தேன் மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச் சூடி” (புறநா. 76, 7, உரை);.

     [வளையம் + மாலை.]

வளையமிடல்

 வளையமிடல் vaḷaiyamiḍal, பெ. (n.)

   கண்களைச் சுற்றி உண்டாகும் கருப்பு; searching eyes – looking all round.

     [வளையம் + இடல். இடு → இடல்.]

வளையமுடி-த்தல்

வளையமுடி-த்தல் vaḷaiyamuḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திரளக் கூட்டிமுடித்தல்; totie up, as the hair in a know.

     “மணிநூற்றன வைம்பால் வளைய முடித்து” (சீவக. 2693);.

     [வளையம் + முடி.]

வளையம்

வளையம்1 vaḷaiyam, பெ. (n.)

   1. சீதாங்க நஞ்சு; a kind of arsenic.

   2. சீனக்காரம்; alum.

   3. தவளை; frog.

   4. தாமரைச்சுருள்; coil of lotus stalk.

 வளையம்2 vaḷaiyam, பெ. (n.)

   1. தாமரைச் சுருள் (பிங்.);; the involuted petals of a lotus.

     “இப்போதாயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும்” (ஈடு. 2, 6, 11);.

   2. வட்டம்; ring.

 circle.

   3. கைவளை (வின்.);; bracelet.

   4. குளம் (வின்.);; tank.

   5. எல்லை (வின்.);; ambit.

   6. வளையமாலை பார்க்க;see valaiya-malai.

   7. வட்டம்1, 7, 8 பார்க்க;see vattam.

த. வளையம் → Skt. valaya.

     [வள் → வள → வளை → வளையம் (வே.க.4, பக்.96);.]

வளையம்போடு-தல்

வளையம்போடு-தல் vaḷaiyambōṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வட்டமிடுதல்; to draw a circle, to en circle.

   2. சூதாட்டத்தில் வளையமெறிதல்; to throw an iron ring, in gambling.

   3. கெட்ட நோக்கத்துடன் ஒருவனைச் சுற்றித் திரிதல்; to hower round a person with bad motives or degraded approach.

     [வளையம் + போடு.]

வளையற்காப்பு

 வளையற்காப்பு vaḷaiyaṟkāppu, பெ. (n.)

வளையல் பார்க்க;see valaiyal.

     [வளையல் + காப்பு.]

வளையற்காரன்

 வளையற்காரன் vaḷaiyaṟkāraṉ, பெ. (n.)

   வளையல் விற்பவன்; bangle seller.

     [வளையல் + காரன். காரன் = உடைமைப் பெயரீறு.]

வளையற்செட்டி

 வளையற்செட்டி vaḷaiyaṟceṭṭi, பெ. (n.)

வளைவிச்செட்டி பார்க்க;see valaivi-c-cetti.

     [வளையல் + செட்டி.]

வளையற்பச்சை

 வளையற்பச்சை vaḷaiyaṟpaccai, பெ. (n.)

   கண்ணாடியாற் செய்த போலிப் பச்சை மணிவகை; false or duplicate emerald, made of glass.

     [வளையல் + பச்சை.]

வளையற்பூச்சி

 வளையற்பூச்சி vaḷaiyaṟpūcci, பெ. (n.)

   கம்பளிப்பூச்சி வகை; a kind of caterpillar.

     [வளையல் + பூச்சி.]

விட்டில் பூச்சியினத்தைச் சார்ந்தது. வளையல் போன்று, சுருண்டு கொள்ளுந் தன்மையது.

     [P]

வளையலுப்பு

வளையலுப்பு1 vaḷaiyaluppu, பெ. (n.)

   1. வளையலுக்காக பயன்படுத்துவதும், உவர் மண்ணிலிருந்து எடுப்பதுமான ஓர் வகை உப்பு; a kind of salt extracted from fuller’s earth used in the manufacture of bangles.

இவ்வுப்பினால் (வாத); ஊதை வளி பித்தம், இரைப்பு, வயிற்றுவலி மூட்டுப்பிடிப்பு ஆகியவை நீங்கும்.

   2. ஆறுமுறை காய்ச்சி யெடுத்த வெடியுப்பு; nitre boiled and filtered 6 times (சா.அக.);.

     [வளையல் + உப்பு.]

 வளையலுப்பு2 vaḷaiyaluppu, பெ. (n.)

   ஒரு வகை மருந்துப்பு (பதார்த்த. 1095);; a kind of medicinal salt.

     [வளையல் + உப்பு.]

வளையல்

வளையல்1 vaḷaiyal, பெ. (n.)

   நஞ்சு; poison.

 வளையல்2 vaḷaiyal, பெ. (n.)

   1. மகளிரது கையணிவகை; bangle, bracelet.

     “வளையல் விற்ற படலம்”.

   2. கண்ணாடி (வின்.);; glass,

   3. வளைவுள்ளது (யாழ்.அக.);; that which is bent or curved.

     [வளை + அல் → வளையல்.]

     [P]

 வளையல்3 vaḷaiyal, பெ. (n.)

வங்கி பார்க்க;see vangi.

     [வள் → வள → வளை + அல் → வளையல்.]

 வளையல்4 vaḷaiyal, பெ. (n.)

   ஆலையில் இழைகள் அடுத்தடுத்து வரிசையாகச் செல்லப் பயன்படுத்தப்படும் சிறுவளையம்; a ring to regulate the thread in a row.

     [வளை + அல் → வளையல்.]

 வளையல்5 vaḷaiyal, பெ. (n.)

   கைவிலங்கு; fetters.

     [வளை + அல் → வளையல் = கைகளைச் சுற்றி வளைந்த பான்மையில் அமைந்த கைவிலங்கு.]

வளையல் சிந்து

 வளையல் சிந்து vaḷaiyalcindu, பெ. (n.)

கரகத்தின் துணைநிலை ஆட்டமான காவடி யாட்டத்திற்கு இசைக்கப்பெறும் இசை,

 melody played to assist when a dance with decorated pole of wood with “Karagam’ art is performed.

     [வளையல்+சிந்து]

வளையல்கொம்பு

வளையல்கொம்பு vaḷaiyalkombu, பெ. (n.)

   வளையல்கள் கட்டப்பட்ட நான்கு கொம்புகள்;   முதல் கொம்பில் 30 வளையல்களும், இரண்டாம் கொம்பில் 30 வளையல்களும், மூன்றாம் கொம்பில் 10 வளையல்களும், நான்காம் கொம்பில் 10 வளையல்களுமாக எண்பது வளையல்கள் கட்டப்பட்ட கொம்புகள்; four sticks tied with bangles, 30 each in first and second sticks and 10 each in third and fourth sticks.

     [வளையல் + கொம்பு.]

வளையல்மண்

 வளையல்மண் vaḷaiyalmaṇ, பெ. (n.)

   வளையல் செய்தற்குரிய மணல்; peral sand of which glass bangles are

     “de, bangle-earth.

     [வளையல் + மண்.]

வளையவளைய

 வளையவளைய vaḷaiyavaḷaiya, வி.எ. (v.part.)

   திரும்பத் திரும்ப; again and again.

ஆவின்மடியில் பால் குடிக்கக் கன்றுவளைய வளைய வந்தது (உ.வ.);.

     [வளைய + வளைய.]

வளையவா

வளையவா vaḷaiyavā,    18 செ.கு.வி. (v.i.)

   1. வளைந்து திரும்புதல்; to bend and move about, circle.

     ‘வயிற்றில் குழந்தை வளைய வருவதை அவளால் உணர முடிந்தது’.

   2. சுற்றி வருதல்; to go around.

     ‘புது மனைவியை வளைய வந்து கொண்டிருந்தான்’ (உவ.);.

     [வளை → வளைய + வா.]

வளையாகாரம்

 வளையாகாரம் vaḷaiyākāram, பெ. (n.)

   சுற்றோலை; circular.

வளையாபதி

வளையாபதி1 vaḷaiyāpadi, பெ. (n.)

   சிந்தாமணிக்கு முற்பட்ட நூல்; a work or epic belonging to period before cindamani.

இந்நூலின் ஆசிரியர் இன்னாரென்று அறியப்படவில்லை. ஆனால் இவர் சமணராக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இவர் 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு.

 வளையாபதி2 vaḷaiyāpadi, பெ. (n.)

   ஐவகை காப்பியங்களுள் ஒன்று. சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது (குறள், 107, உரை);; an ancient epic poem, of which only a few stray stanzas are extant, one of pañja-kaviyam, (q.v.);.

வளையாமாலி

 வளையாமாலி vaḷaiyāmāli, பெ. (n.)

   மருதாணி; a tree-nail dye-Lawsonia alba.

வளையிற்சுற்று

 வளையிற்சுற்று vaḷaiyiṟcuṟṟu, பெ. (n.)

   ஊரைச் சூழ்ந்த பகுதிகள்; surrounding region.

     ‘ஊரைச் சுற்றி வளைந்ததாக அமைந்த நிலபுலங்கள்’ (உ.வ.);.

     [வளையில் + சுற்று.]

வளையில்

 வளையில் vaḷaiyil, பெ. (n.)

வளையல் (வின்.); பார்க்க;see valaial.

     [வளை → வளையில்.]

வளையோர்

வளையோர் vaḷaiyōr, பெ. (n.)

   வளையல் அணிந்தவர்; to wear ornament of bangle.

     “நகர நம்பியர் வளையோர் தம்முடன்” (மணிமே.19:24);.

     [வளை → வளையோர்.]

வளைவணன்

வளைவணன் vaḷaivaṇaṉ, பெ. (n.)

   திருமாலின் தோற்றத்துளொருவனான பலராமன்; Bala raman, one of incarnates of Tirumãl.

     “மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன்” (திவ். பெரியதி.8:5:2);.

வளைவண்ணத்தன்

 வளைவண்ணத்தன் vaḷaivaṇṇattaṉ, பெ. (n.)

   சங்குபோன்று வெண்மை நிறத்தன்; a man with conch- shell whiteness.

     [வளை + வண்ணத்தன்.]

வளைவள-த்தல்

வளைவள-த்தல் vaḷaivaḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   நிலத்தை அளவிடுதல் (வின்.);; to measure or survey a field.

     [வளைவு + அள.]

குறிப்பிட்ட நிலம் மற்றும் நிலஞ்சூழ்ந்த பகுதியை அளத்தலும், அளந்து வரம்பு, எல்லை, செய்தலுமாம்.

வளைவாணன்

வளைவாணன்1 vaḷaivāṇaṉ, பெ. (n.)

   நாக நாட்டின் மன்னன்; asking of the Naga-nādu.

மணிமேகலையில் 24, 25, 29 ஆகிய காதைகளில், நாகநாட்டு மன்னன் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது.

வளைவிற்பொறி

வளைவிற்பொறி vaḷaiviṟpoṟi, பெ. (n.)

   தானே அம்பு எய்யும் எந்திர வில்; engine device for shooting arrows automatically.

     “வளைவிற் பொறியுங் கருவிர லூகமும்” (சிலப். 15, 207);.

     [வளை + வில் + பொறி.]

வளைவில்லாமரம்

 வளைவில்லாமரம் vaḷaivillāmaram, பெ. (n.)

   பாக்குமரம்; arecanut tree.

     [வளைவில்லா + மரம்.]

வளைவு

வளைவு vaḷaivu, பெ. (n.)

   1. சுற்று; circumference.

   2. வட்டம்; circle.

   3. கோணல்; crookedness, bend.

   4. கட்டடத்தில் அமைக்கும் வில் வடிவு (C.E.M.);; arch in a building.

   5. வீட்டுப்புறம் (வின்.);; house-premises.

   6. பணிவு (யாழ்.அக.);; reverence, humility, modesty.

     [வளை → வளைவு (வே.க.4 பக். 96);.]

வளைவுஅழுத்தம்

 வளைவுஅழுத்தம் vaḷaivuaḻuttam, பெ. (n.)

   செங்கல் சுவர்களில் ஏற்படும் விரிசல்; crack in brick wall.

     [வளைவு + அழுத்தம்.]

வளைவுஇழைப்புளி

 வளைவுஇழைப்புளி vaḷaivuiḻaippuḷi, பெ. (n.)

வளைசல்உளி பார்க்க;see Valaisal-vuli.

     [வளைவு + இழைப்புளி.]

கலை நுணுக்கப் பணிகட்குப் பயன்கொள்ளும் சிறிய இழைப்புளி.

வளைவுக்கல்

 வளைவுக்கல் vaḷaivukkal, பெ. (n.)

   கட்டட வில்வடிவுக்கு இடும் கல்; arch brick. (C.E.M.);

     [வளைவு + கல்.]

வளைவுக்கூரை

 வளைவுக்கூரை vaḷaivukārai, பெ. (n.)

   வளைவாக அமைத்த மேற்கூரை; arched roof, vaulted roof.

     [வளைவு + கூரை.]

வளைவுச்செருகுகல்

 வளைவுச்செருகுகல் vaḷaivuccerugugal, பெ. (n.)

   வளைவில் சாய்வாகவும், ஆப்புப் போலவும் அமைக்கப்படும் கல்; a curved stoping stone, shaped-like peg.

     [வளைவு + செருகு + கல்.]

வளைவுதடி

 வளைவுதடி vaḷaivudaḍi, பெ. (n.)

வளவுதடி பார்க்க;see valavu-tadi.

     [வளைவு + தடி.]

வளைவெடு

வளைவெடு1 vaḷaiveḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வளைவை நிமிர்த்துதல் (வின்.);; to straighten the bend.

     [வளைவு + எடு.]

 வளைவெடு2 vaḷaiveḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   வளைவு கட்டுதல்; to form or construct an arch.

     [வளைவு + எடு.]

வளைவெழுதகம்

 வளைவெழுதகம் vaḷaiveḻudagam, பெ. (n.)

   எழுத்து வகை; spiral moulding, a letter or character in writing (C.E.M.);.

     [வளைவு + எழுது → எழுதகம்.]

வள்

வள்1 vaḷ, பெ. (n.)

   1. வளம்; fertility, abundance, profitable, increase.

     “வள்ளிதழ் மாலை” (சீவக. 2732);.

   2. பெருமை; largeness, nobility.

   3. மேன்மை; greatness.

   4. நெருக்கம் (வின்.);; narrowness, little-mindedness.

     [முல் → மல் → வல் → வள்.]

 வள்2 vaḷ, பெ. (n.)

   1. கூர்மை (பிங்.);; sharpness, pointedness.

     “வள்வாயமதி” (தேவா.209,1);.

   2. வாள் (பிங்.);; sword.

   3. வார் (சூடா);; thong, lash.

   4. வாளுரை (அக.நி.);; sheath.

   5. கடிவாளம்; bridle.

     “புரவி…. வாங்குவள் பரிய” (அகநா. 4);.

   6. காது (பிங்.);; ear.

   7. படுக்கை; bed.

     “வள்ளே துணியே யிவற் றொடு” (ஏலாதி. 50);.

     [வல் → வள்.]

 வள்3 vaḷ, பெ. (n.)

   1. வலிமை (பிங்.);; strength, being strong, physically powerful.

     “வள்வார் முரசு” (பு.வெ.3, 2 கொளு.);.

   2. வலிப்பற்றிரும்பு (பிங்.);; cramp-iron, iron-band.

     [வல் → வள். வல் = வன்மை, வலிமை, வலிமையுடன் வலித்துக் கொள்ளும் பற்றிரும்பு.]

வள்பு

வள்பு vaḷpu, பெ. (n.)

வள்2, 3 பார்க்க;see val2, 3

     “மாசற விசித்த வார்புறு வள்பின்” (புறநா. 50);.

     “வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்-11.8);.

     “வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்பு” (நற்-82,9);

     [வல் → வள் → வள்பு.]

வள்ளக்கடவு

 வள்ளக்கடவு vaḷḷakkaḍavu, பெ. (n.)

   தோணியில் ஏறியிறங்கும் துறை (நாஞ்);; jetty.

     [வள்ளம் + கட → கடவு.]

வள்ளக்களி

 வள்ளக்களி vaḷḷakkaḷi, பெ. (n.)

   தோணி செலுத்தும் போட்டி (நாஞ்);; boat-race.

     [வள்ளம் + களி.]

வள்ளக்கால்

வள்ளக்கால் vaḷḷakkāl, பெ. (n.)

   1. வளைந்த கால் (இ.வ.);; bow-leg.

   2. பரம்புப் பலகையை நுகத்தோடு சேர்ப்பதற்குரிய மூங்கில் பிளவு (நாஞ்.);; the bamboo lath connecting the levelling wood plant and the yoke of a field-leveller.

     [வள்ளம் + கால்.]

வள்ளங்குதி-த்தல்

வள்ளங்குதி-த்தல் vaḷḷaṅgudiddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வள்ளம், கடல் அலைகளில் முன்னேறும் போது குதித்துத் தாவுகை; jumping by a leap while canoe is progressing among tides.

     [வள்ளம் + குதி.]

வள்ளச்சி

 வள்ளச்சி vaḷḷacci, பெ. (n.)

   உருள்கடலை (பட்டாணி);; pea pulse.

வள்ளடி

வள்ளடி vaḷḷaḍi, பெ. (n.)

   காதினடி (தைலவ.);; lobe of ear.

     [வள்2 + அடி.]

வள்ளன்மை

வள்ளன்மை vaḷḷaṉmai, பெ. (n.)

   1. கொடை யுடைமை; liberality.

   2. வாரி வழங்குந் தன்மை; munificence.

     “வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்” (நாலடி. 386);.

     [வள்ளல் + மை.

     ‘மை’ பண்புப் பெயரீறு.]

வள்ளப்போட்டி

 வள்ளப்போட்டி vaḷḷappōṭṭi, பெ. (n.)

   கடலில் வள்ளங்களை போட்டி போட்டுக் கொண்டு செலுத்துகை; to canol in sea competiting a water sports.

     [வள்ளம் + போட்டி.]

வள்ளமாட்டம்

 வள்ளமாட்டம் vaḷḷamāṭṭam, பெ. (n.)

   கடல் அலை பேரளவில் எழும்போது வள்ளம் தத்தளிப்பது; shaking of canoe due to floating waves.

     [வள்ளம் + ஆட்டம்.]

வள்ளம்

வள்ளம்1 vaḷḷam, பெ. (n.)

   1. உண்ணுங் கலமாக உதவும் வட்டில் வகை (பிங்.);; a dish for use in eating or drinking.

     “வள்ளத் தவனேந்த —— மதுமகிழ்ந்தார்” (சீவக. 2700);.

   2. நாழிகை வட்டில் (சூடா.);; hour-glass, clepsydra.

   3. மரக்கால் (பிங்.); பார்க்க;see marakkal.

   4. நான்கு மரக்கால் கொண்ட அளவு (வின்.);; a measure of grain = 4 marakkâl.

   5. இரண்டு அல்லது நான்கு படிகொண்ட அளவு (G.Sm.D.I.i.286); (G.Tp.D.I.178);; a measure of capacity = 2 or 4 padi.

   க. பள்ள;ம. வள்ளம்.

     [வல் → வள் → வள்ளம்.]

 வள்ளம்2 vaḷḷam, பெ. (n.)

   1. சிறுதோணி; boat made trunk of a tree.

   2. துடுப்பு வட்டின் உதவியால் செலுத்தப்படும் தோணி அல்லது சிறு படகு; canoe, catamaram.

     [மல் → வல் → வல்லம் → வள்ளம். வட்ட வடிவுடன் அமைக்கப்பட்டதும், துடுப்பு வட்டின் உதவியால் செலுத்தப்படுவதுமான தோணி வகை.]

வள்ளற்றனம்

வள்ளற்றனம் vaḷḷaṟṟaṉam, பெ. (n.)

வள்ளன்மை பார்க்க;see vallanmai.

     “வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி” (பெருங். நரவாண. 8, 6);.

     [வள்ளல் + தனம். தனம் = சொல்லாக்க ஈறு.]

வள்ளலார்

வள்ளலார்1 vaḷḷalār, பெ. (n.)

   திருவருட்பா முதலான அருளியல் நூல்களை இயற்றியவர்; a modern sage author of the Tiruvarutpā and some other pious works both prose and poetry.

மறுவ. இராமலிங்கர், இராமலிங்க அடிகள்.

     [வள் → வள்ளல் + ஆர்-வள்ளலார்.

     ‘ஆர்’ சிறப்புப் பெயரீறு.]

உயிர்கள்மாட்டு எல்லையில்லாப் பேரருள் பூண்டவர். அருட்பேரொளி ஆண்டவனை அனைவரிடத்தும் கண்டவர். எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். மன்பதையின் பசிப்பிணி போக்கும், மருத்துவனாகப் பிறந்தார். மனிதநேய ஒருமைப்பாடு மண்ணுலகில் நிலைபெற்று ஓங்குவதற்காக, 05.10.1823 (புரட்டாசி); கன்னி, 21, ஞாயிறு); ஆம் நாளன்று, கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூரிலிருந்து 7 கல் தொலைவிலமைந்துள்ள மருதூரில், இராமையா-சின்னம்மை இணையருக்கு, அருட்பேரொளி ஆண்டவர்தம் அருளின் திருவுருவாகத் தோன்றினார்.

தை மாதம் 19-ஆம் நாள், வெள்ளிக்கிழமை (30.01.1874); அருட்பேரொளி ஆண்டவருடன் இணைந்தார்.

இயற்பெயர் : இராமலிங்கம்

சிறப்புப் பெயர் : திருவருட் பிரகாச வள்ளலார்.

உறைந்த இடங்கள் : சென்னை (1825-1858);

கருங்குழி 1858-1867

வடலூர் 1867-1870

மேட்டுக்குப்பம் 1870-1874

இயற்றிய நூல்கள் :

   1. மனுமுறை கண்ட வாசகம்

   2. சீவகாருணிய ஒழுக்கம்

பதிப்பித்த நூல்கள் :

   1. ஒழிவிலொடுக்கம்-1851

   2. தொண்டைமண்டல சதகம்

   1855

   3. சின்மய தீபிகை-1857

அருளிய பாடல்கள் : திருவருட்டா ஆறு

திருமுறைகள்

பாடல்களின் எண்ணிக்கை : 5818 மற்றும் ஆறு திருமுறைகளிலும் சேராத உரைநடைப் பகுதி. இதில் வாழ்விற்குத் தேவையான நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. குமுகாயத்திற்கு இன்றியமையாது வேண்டப்படும் உணவு, மருத்துவம், தவம் முதலான செய்திகள் செறிந்துள்ளன.

நிறுவிய நிலையங்கள் :

   1. மெய்ந்நெறி பொதுநிலைக் கழகம்-1865 (சமரச சன்மார்க்க சத்திய சங்கம்);

   2. அறவுணவுச்சாலை (தருமச்சாலை); – 1867

   3. மெய்யறிவுப் பேரவை (சத்திய அருள் ஞான அவை); – 1872

   4. சித்தி வளாகம் -1870

அன்பே அனைத்தையும் அளிக்கும் : இறைவன் அன்பெனும் பிடியுள் அகப்படும் அருளாளன். அனைத்துயிர்களிடத்தும் அருளறம் பூண்டு, ஏழை எளியவர்தம் இன்னலகற்றி, இன்சொல் பயிற்றிப் பசிப்பிணி களைபவர்தம் அருட்செயலில் அருட்பேரொளி ஆண்டவன் ஒளிர்கின்றான் என்பது, வள்ளலார்தம் பேரருட் கொள்கையாகும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேகம் பேதையரே, அகத்தே கறுத்தவராவார். கள்ளமனக் குரங்கின் வயப்பட்டு, தஞ்சமடைந்தவர்க்கு வஞ்சமிழைக்கும் வன்பு நெஞ்சத்தாரையும் வாழ்விக்கும் அளப்பெரும் அருளாளளின் அன்பின் மாட்சிமையை விளக்கும் வள்ளலார் பாடல் :

     “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

அன்புரு வாம்பர சிவமே”

வள்ளலார் வருத்த மெய்ம்மை நெறி (சன்மார்க்கம்); : வள்ளலார், இவ்வையம் உய்யும் பொருட்டு, இறவாப் பெருநெறியாம், அனைத்துயிர்கள் மாட்டும் அன்பு செலுத்தும் அருள் நெறியை (ஜீவகாருண்யம்); உரைத்த பேரருளாளர். அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த மன்பதையர் (மக்கள்);தம் நெற்றிப் பொட்டில் (புருவமத்தியில்); அனைவருக்கும் அருள் வழங்கும் ஆண்டவன், அருட்பேரொளிப் பிழம்பாய் மிளிர்கின்றான் என்னும் மெய்யுணர்வை, உலகத்தவர்க்கு உணர்த்தியவர், வள்ளலார் ஒருவரேயெனலாம்.

ஞால மக்கள் அனைவருள்ளும், அருட்பேரொளி ஆட்சி செலுத்தும், மாட்சியை வள்ளலாரின் திருநெறிய திருவருட்பாக்கள் தெளிவுறுத்துகின்றன.

     “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் திருமூலரின் தீந்தமிழ்க் கொள்கையைச் செயற்படுத்தியவர் நம் வள்ளற் பெருமான். தெய்வம் ஒன்று என்னும் ஞாலந்தழீஇய நற் கொள்கைக்கு வித்திட்டவர், வள்ளலார். எங்கும்

நிறைந்து ஒளிரும் அருட்பேரொளி ஆண்டவன், அனைவர் உள்ளத்திலும் மிளிர்கின்றான். மன்பதை மக்கள் அனைவரையும், அருட்பேரொளி இறைவனின் மறுபதிப்பாய்க் காணும் பாடல்கள் :

     “மாயையால் கலங்கி வருந்திய போதும்

வள்ளல் உன்தன்னையே மதித்து உன்

சாயையாய்ப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவ! வேறு எண்ணியது உண்டோ?”

கொலை-புலால்-தவிர்த்தலே வாழ்வியல் அருளறம்: ஞாலத்துவாழ் மக்களனைவரும் தொழத்தக்க நிலையில், வள்ளுவத்தின் வழிநின்று, தாமும் ஒழுகி, பிறரையும் வழிநடாத்தி வாழ்வில் ஓங்கச் செய்த பெருமை வள்ளலாரையே சாரும்.

     “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்” (குறள். 260);.

உற்ற நோய் நோன்றலையும், அஃதாவது தன் துயர் பொறுத்துப் பிறருக்குப் பேரருள் புரிவதையுமே வள்ளலார் வாழ்வாகக் கொண்டார். பசியினால் இளைத்து, வீடு தோறும் இரந்துண்டு இன்னலுறுவோரைக்கண்டு வருந்தும் வள்ளலார் சிறுதெய்வ வழிபாட்டில், ஆடு, பன்றி வெட்டியுண்ணும், இழிதகையர் தமைக்கண்டு நெஞ்சு நடுக்குற்றுக் கூறுவது:

     “நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடுபன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி

நொந்து உளநடுக்குற்றேன்” (அருட்பா.3471);.

     “துண்னெனக் கொடியோர் பிறவுயிர் சொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக் கண்ட

காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம்

எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுள்ளம் அறியும்” (அருட்பா.3473);.

என்னும் அருட்பாக்கள் வாயிலாக உயிர்க்கொலை புரியுங்கால், அவருள்ளம் பதைத்த பாங்கினைத் தெள்ளிதில் அறியலாம். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் கொல்லாமை என்னும் அருளறத்தின் வழிநின்று, அனைத்துயிர்கள் மாட்டும் அன்பு செயின், மன்பதை வாழ் மக்களுள் தெய்வமாக மதிக்கப்படுவான் என்பதற்கு வள்ளலாரே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். அங்கிங்கு என்றில்லாது எவ்வுயிரிடத்தும் நீக்கமற நின்றொளிரும், இறைவனைக் காண வேண்டுமானால், எல்லோரிடத்தும் ஆரா அன்பு பூண்டொழுக வேண்டும் என்பதே வள்ளலாரின் வாழ்வியற் கொள்கையாகும்.

திருநெறிய தீந்தமிழின் செழுமையைப் பாடும் பாங்கு :

திருநெறிய தீந்தமிழின் அருளியற் சிறப்பை வள்ளலார், பாடியுள்ள பாங்கு, அனைவருக்கும் அருளை வாரி வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

     “மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே

மைவடித் தெடுக்குநர் போல

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க

நொந்தனன் நொந்ததும் அல்லால்

படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன்

பாவியேன் தனக்கருள் புரியாய்

வழக்குறும் தமிழ் கொண்டன்பருக்கு

அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே” (அருட்பா. 875);.

     “எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே

வைத்தருளிச் செந்தமிழின்

வளர்க்கின்றாய்” (அருட்பா. 4802);

     “தண்டமிழ்க் கவிதைபோல் சாந்தமிக்கது.”

இறவாப் பெருநெறி-எல்லாம்வல்ல அருட்பேரொளி : இறைவனின் இன்னருளால் மனிதப் பிறவியை அடைந்த ஆதன் (ஆன்மா); ஆண்டவர் ஒருவரே என்றுணர வேண்டும். அவன் அருட்பேரொளிப் பிழம்பாய் அனைவரிடத்தும் ஒளிர்கின்றான். அருட்பெருங்கடவுளின் தண்ணருட் பெருங் கொள்கையினைத் தன்னுள்ளே கொண்டொழுக வேண்டும். அனைத்துயிர் களிடத்தும் அன்புபூண்டு, அருள் வளர்க்க வேண்டும். இரக்கம் காட்ட வேண்டும்.

இறவாப்பெருநெறி :

     “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்னும் திருமூலரின் திருப்பாட்டினை மெய்ப்பித்துக் காட்டிய பெருமை வள்ளலாரையே சாரும்.

     “அரிதரிது மானுடராய்ப் பிறத்தலரிது” என்பது அவ்வையின் அருள்வாக்கு.

     “வாய்த்தது இப்பிறவி மதித்திடுமின்” என்பது நாவரசரின் நல்வாக்கு வாய்த்தற்கரிய இம் மனிதப் பிறவியிலேயே, தம்முள் ஒளிரும், அருட்பேரொளி ஆண்டவரின் இன்னருளைப் பெற்று, இறவாப் பெருநெறியில் திளைத்தவர் வள்ளலார்.

எல்லாம்வல்ல இறைவனின் இன்னருள் இருந்தால்தான், தம்முள்ளே நெற்றியின் நடுவே, நின்றொளிரும் அருட்பேரொளி ஆண்டவனை அறியலாம். இறவாப் பெருநெறியினை ஈந்து

புரக்குந் தன்மையாளனாகிய, இவனே, வள்ளுவர் காட்டும் வாலறிவன். மாகமருவற்றவன். பேரருட் பிழம்பினன். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு. வல்லார்க்கும், மாட்டார்க்கும் வரமளிக்கும் வரம். நல்லார்க்கும் பொல்லார்க்கும் இடையே நடுநின்றொளிரும் அருட்பிழம்பாம், முழுமுதற் கடவுள். இவ்வாறு அருட் பேரொளி இறைவன் எல்லோரிடத்தும் இலங்குவதால், அனைவரும் அனைத்துயிர் மாட்டும், அன்புபூண்டு அருள் நலம் பரவ வேண்டுமென்று இறைஞ்சுகின்றார் வள்ளலார். மேலும் பசியால் வாடும் வயிற்றிற்குச் சோறிட வேண்டும். வாடும் மாந்தர்தம் வாட்டத்தை யகற்றுபவனே, மன்பதையில் அனைவர்தம் உள்ளத்தேயும் உறைபவன் ஆவான். இறவா வாழ்வினை எளிதில் அடைவான். உறுபசி களைதலே, உயர்பேரறமாகும். அருட்பெருங் கடவுள் தமக்கு, இறவா நிலையளித்த செய்தியினை,

     “இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்

றிருக்க எனை வைத்த குருவே” (அருட்பா. 3673);

அருட்பேரொளி (சோதி);க் கடவுள் என்னுள் ஒளிர்கையில், எமன் என்னை அணுகவே மாட்டான் என்று கூறும் பாடல் (அருட்பா. 3702); எல்லோர் நெஞ்சிலும் எஞ்ஞான்றும் நின்று நிலவும். (எ.கா.);

     “எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே

எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே”

     “ஈனமறுத்தென்றும் இறவாமைநல்கும் என்றே

ஞானமணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே” (திருவருட்பா.2950);.

மேற்குறித்த கண்ணியின் கண்ணே எஞ்ஞான்றும் இறவாப் பெருநெறியினை அருட்பெருங் கடவுளிடம் வள்ளலார் வேண்டுவது

காண்க. கீழ்க்காணும் திருவருட்பா பாடல்களில், தண்ணளிமிக்க, அருட்பெருங்கடவுள், தமக்கு என்றும் இறவாப் பெருவாழ்வு தந்தமையைக் கூறியுள்ளார்.

திருவருட்பாப் பாடல் எண்கள் :- 126, 157, 1105, 3673, 3630, 3692, 3702, 3703, 3708, 4333, 4615, 4638, 4907, 4953. 4954, 5278, 5.412, 5486, 5806.

சாகாவரம் பெற்றமையைக் குறிக்கும் திருவருட்பாப் பாடல் எண்கள் : 30308, 3208, 3709, 3848, 3893, 3910, 4328, 4464, 4543, 4583, 4615, 209, 1568, 4627, 4631, 4534, 4635, 4694, 4707, 4731, 4754, 4791, 4796, 4815, 4817, 4828, 4903, 4956, 5417, 5510, 5624.

     “உள்ளம் தளிர்த்திடச் சாகாவரங் கொடுத்து” (திருவருட். 3848); என்றும் மேற்குறித்த அருட்பா வரியில், அருட்பேரொளி ஆண்டவன், வள்ளலாருக்குச் சாகாவரம் தந்ததினால், அவர்தம் உள்ளம் தளிர்த்தோங்கிச் சிறந்தென்று குறித்துள்ளமை காண்க

மரணமில்லாப் பெருவாழ்வு : அருட்பெருங் கடவுளான அருட்பேரொளி ஆண்டவர். மரணமில்லாப் பெருவாழ்வில், வாழச்செய்த திறத்தினை, 3074, 4952, 4957, 5295, 5576, 5598 முதலான திருவருட்பாப் பாடல்களில் பாடியுள்ளார். ஒன்றிரண்டு எடுத்துக்காட்டு :

     “மாணமற்று வாழ்கவெனத் திருவார்த்தை அளித்தாய்”- 3074.

     “மரணத்தை விடுவித்துவிட்டேன்”-4957.

     “வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில்

வாழ்ந்திடலாம் கண்டீர்”-5576.

தாம் வாழ்ந்த மரணமில்லாப் பெருவாழ்வை மன்பதை மக்களனைவரும் பெற்றுய்யும் பொருட்டு

ஆண்டவரை அழைக்கும், வள்ளலாரின் அருள் பண்பை எடுத்துரைப்பார் எவருமில்லை.

     “இறைவனின் அருளே உலகை ஆள்வது” என்னும் வாழ்வியல் கொள்கை வகுத்தவரன்றோ? வள்ளலார்.

வள்ளலாரும் – வள்ளுவரும் :

அற்றார் அழிபசி தீர்த்தலிலும் (குறள், 226);, கொல்லா நோன்பிலும், தன்னூன் பெருக்கத்துப் பிறவுயிர்களின் ஊனினை உட்கொள்ளும் மாந்தர்தமைக் கண்டு வெகுளும் வேகத்திலும் – வள்ளலாரும் வள்ளுவரும் ஒத்த கருத்துடையவராகத் திகழ்கின்றனர் எனலாம். பிறவுயிர்கள் மாட்டு போன்பு செலுத்தும், பெருநெறிக் கொள்கையில், வள்ளுவமும் வள்ளலாரும், இணைந்தே செல்வதைக் காட்டும் பாடல்கள்:

     “அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்” (குறள். 71);

     “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து” (அருட்பா. 5576);

     “தன்னூன் பெருக்கத்திற்குத்தான் பிறிதுஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்”

கொல்லா நோன்பினையும், புலால் மறுத்தலையும் மாந்தர் கொண்டொழுக வேண்டிய தலையாய வாழ்வியற் கொள்கையாக – அருட்பா முழுவதிலும் பாடியுருகியுள்ளமை கண்டு தெளிக.

வள்ளலாரும் – திருமூலரும் :

திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உரைத்தது போன்று, வள்ளலாரும், தம் வாணாள் இறுதியில் அருட்பேரொளிக் கடவுளை,

முழுமுதற் கடவுளாகக் கொண்டார். தமது ஆறாம் திருமுறையில் அருட்பேரொளி ஆண்டவரையே முழுமுதற் கடவுளாக ஏற்றுப் பாடிய பாடல்கள், ஏராளமாகவுள்ளன. அருட்பேரொளி யகவலில் (அருட்பெருஞ்சோதி அகவல்); அருட்பெருங்கடவுள், வள்ளலாருக்கு அனைத்து ஆற்றலையும் தந்து, மகனே என்று மாறாக்காதலுடன் அழைத்துச் செங்கோலும், கணையாழியும் அளித்து, மணிமுடிசூட்டி, அருளாட்சி செய்யப் பணித்த பான்மையினைத் திருவருட்பாப் (4139, 4521, 5447, 3672, 4615, 4177, 4589, 4150-4153, 4156); பாடல்களில் தெளிவுறுத்தியுள்ளார்.

படமாடக் கோயிலிலுள்ள இறைவனுக்குப் பூசை செய்வதைவிட, நடமாடுங் கோயிலாக, நாட்டினில் உலாவரும், ஏழை எளியவர்க்கு உதவுவதும், அவர்தம் அழிபசி போக்குவதுமே, உயர்பேறமாக வள்ளலாரும் – திருமூலரும், ஏன் வள்ளுவப் பெருந்தகையும், வலியுறுத்துவது காண்க

     “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி” (குறள். 226);.

மன்பதையில் பொருளுள்ளவனின் கடமை, ஏதுமற்ற ஏழைகளின் வயிற்றுப் பசி தவிர்த்தலேயாகும்.

     “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம்”

என்னும் திருமூலர் வாக்கினுக்கு ஏற்ப, வள்ளலார் இலக்கியம் படைத்துள்ளார் எனலாம்.

ஐந்தொழில் ஆற்றும் ஆற்றல் பெற்றமை :

அருட் பெருங்கடவுள் வள்ளலாருக்கு ஐந்தொழில் புரியும் ஆற்றல் அளித்தமையை,

     “ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில் ஒர் ஐந்தினையும் தேக்கி அமுதொருநீ செய் என்றான்” (அருட்பா.4045);.

என்னும் பாடலிலும், (திருவருட்பாடல் எண்கள் 3948, 4045, 4139, 4150–4152, 4519, 4580, 4591, 4797-4807, 5034, 5383. 5509); ஆறாம் திருமுறை முழுவதிலும், விரிவாக விளக்கியுள்ளமை காண்க.

தன்னையறியு அறிவே தனிப்பெரும் அறிவு : ஒவ்வொருவரும் முதற்கண் வெந்ததைத் தின்று மடிவதையே, வாழ்வின் பொருளாகக் கொள்ளாது, தனது வளமையை, அறிவை, ஆற்றலை, விளக்கமறத் தெரிந்து தேர்ந்து தெளிய வேண்டும் என்பதே வள்ளலார் வாக்கு.

     “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே” (அருட்பா.2847); என்னும் இன்னிசைச் சிந்தில் இசைக்கின்றார்.

அறிவியல் உண்மை – அணு பற்றிய செய்தி :

     “தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை ஆய்வறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி” என்னும் அருட்பெருங்கடவுட் பாடல் வரிகளில், கருவாய் வயிற்று. இருட்டறையில் இருக்கும் பான்மையினையும், கருப்பையில் உள்ள குழவியைக் கண்ணுங் கருத்துமாய்க் காப்பது – அருட் பேரொளிக் கடவுளின் உள் ஒளியென்று உரைத்துள்ளமையுங் காண்க.

கருவாயினிலே இறைவன் இருந்து, கருவினைக் காக்கும் அறிவியலுண்மையை அப்பரடிகள்.

     “கருவாய்க்கிடந்து உன் கழலே நினையும் கருத்துடையேன்” என்று கூறியமை அறிக.

அருட்பெருங் கடவுள், நமதுடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் ஒளிர்கின்ற நிலையினை,

     “அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலாவே எங்கும் ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே”

என்று தெளிவுறுத்தியதறிக.

தமிழ் நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்குச் சென்ற தவத்திரு சச்சிதானந்த அடிகளார். மெய்ந்நெறிப் பொதுநிலைக் கழகத்தை வர்சீனியா நாட்டில் உருவாக்கியுள்ளார். இங்குள்ளவர்களுக்கு முதலில் ஊழ்கம் (தியானம்); கற்றுக் கொடுத்தார். வள்ளலார் கொள்கையாகிய, புலால் மறுத்தல் அமெரிக்காவெங்கும். நன்கு பரவியுள்ளது. அருட்பேரொளி ஆண்டவருக்கு, அமெரிக்காவில் அருட்பேரொளிக் கோவிலைக் கட்டி, அருட்பெருங் கடவுளின் அருட்கொள்கைகளைப் பரப்பி வருகிறார். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், மெய்ந்நெறிப் பொதுநிலைக் கழகத்தில் சேர்ந்து (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்); திருவருட்பா ஒதி பயன்பெற்று வருகின்றனர்.

மூட வழக்கங்களை ஒழித்த சீர்திருத்தச் செம்மல் :

அருட்பேரொளிக் கடவுளிடம் அவர் வேண்டுவதெல்லாம் அருட்பண்பையும், ஆண்டவரை அறியும் மெய்யறிவினையுமேயாகும். தொன்மத்தைத் தகர்க்கிறார். கலையுரைத்த கற்பனையால் புனையப்பட்ட, கட்டுக் கதைகளை உடைத்துத் துகள்துகளாக்குகிறார். நம்பவியலாக் கதைகளும், கற்பனைகளும் கலந்த தொன்மங்களை கண்மூடித்தனமாகக் குமுகாயத்தார் எற்றுக் கொள்ளலாகாது என்று தெளிவுறுத்துகின்றார்.

மன்பதையில் கூறுகின்ற சமயங்களும், மதங்களும், மக்களைக் கூறுபோடுந் தன்மையன. பிரித்தாளும் சூழ்ச்சியன. சமயக்கொள்கைகள் அனைத்தும் அருட்பேரொளி (சோதி); ஆண்டவரை உணர்த்துவனவல்ல. மெய்ந்நெறியுண்மைக் கழகம் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்); ஒன்றே, மக்களை நன்னெறியில் வாழ்விக்கும். தொன்மங்களும் (புராணங்களும்); மறவனப்புகளும் (இதிகாசங்களும்); சூது நிறைந்தவை.

உண்மையினை உள்ளபடி, உணர்த்தாதவை. அருட்பெரு நெறிச் (சன்மார்க்க); சமயமே அனைவருக்கும் உகந்தது என்று வள்ளலார் உணர்த்தும் பாடல்:

     “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக

மலைவறு சன்மார்க்கம் ஒன்றே

நிலைபெற மெய்யுலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள்

வழங்கினை என்தனக்கே” (அருட்பா. 3768);.

அருட்பேரொளி (சோதி);க் கடவுள் கண்மூடி வழக்கங்களை ஒழித்த முழுமுதற் கடவுள் என்று மேற்குறித்த பாடல்வரிகளில் குறித்துள்ளது, உணர்ந்து இன்புறத் தக்கது. மெய்யருட் பொதுநெறி ஒன்றே, இறைவன் வள்ளலாருக்கு உணர்த்திய உயர்நெறி. வையகம் வாழ்வதற்கும், அருள் பெற்று உய்வதற்கும், வள்ளலார் அருட்பெருங் (சோதிக்); கடவுளின் மறு அருள் வடிவமாகத் தோன்றி மக்களை வாழ்வித்தார் என்பது, மெய்ந்நெறிக் கழகத்தினர்தம் (சன்மார்க்கச் சங்கத்தினர்); கொண்முடியாகும்.

 வள்ளலார்2 vaḷḷalār, பெ. (n.)

   வள்ளலார் சாத்திரம் என்ற நூலியற்றிய ஆசிரியர்; a poet and philosopher, author of vassasār Sarittiram.

     [வள்ளல் → வள்ளலார்.]

 வள்ளலார்3 vaḷḷalār, பெ. (n.)

   ஒழிவி லொடுக்க நூலாசிரியர்; name of olivil-odukkam, a saivite, philosophical work of the 15th C.

     [வள்ளல் → வள்ளலார்.]

வள்ளல்

வள்ளல்1 vaḷḷal, பெ. (n.)

   வள்ளக்கீரை; a kind of greens.

 வள்ளல்2 vaḷḷal, பெ. (n.)

   1. வரையாது வாரி வழங்குபவன்; person of unbounded liberality, liberal donor.

   2. வண்மை, ஈகம், அருளியற்கொடையில் ஆர்வமுடைமை; benevolence.

     [வண் → வள் → வள்ளல்.]

 வள்ளல்3 vaḷḷal, பெ. (n.)

   1. திறமை, ஆற்றல், வல்லமை; ability, power.

   2. மந்தணத் தொழில், தனி நடவடிக்கைகள்; private or personal affairs.

     “அவன் வள்ளல் வெளிப்பட்டுவிட்டது” (வின்.);.

     [வல் → வள் → வள்ளல்.]

 வள்ளல்4 vaḷḷal, பெ. (n.)

   கஞ்சன் என்னும் எதிர்மறைப் பொருளில் வழங்கும் மக்கள் வழக்கு; a common peoples usage in negative meaning as miser.

   நீ பெரிய வள்ளல்;தெரியாதா? உன் வள்ளல் ஊர் அறியுமே? (இவறன் என்னும் எதிர்மறைப் பொருள் பயக்கும், வழக்குச் சொல்);.

     [வல் → வள் → வள்ளல்.]

வள்ளல் = கருமி. இல்லை என்று கூறாமல், எல்லை இன்றி வழங்குவது வள்ளன்மை எனப்படும். நீயே என் கொடைப் பொருள் என ஒரு கோடு போட்டால் அக் கோட்டைக் கடந்து வரமாட்டானாம் பாரி.

     “வாரேன் என்னான் அவர் வரையன்னே” என்பது புறப்பாடல். அத்தகைய வள்ளன்மையைக் குறியாமல் அதற்கு எதிரிடைப் பொருளையும் வள்ளல் என்பது தருதல் வழக்கில் உண்டு. நீ பெரிய வள்ளல்;

தெரியாதா? என்பதில் கருமி என்பது வள்ளற் பொருளாம், உன் வள்ளல் ஊரறியுமே என்பது எள்ளலென எளிதல் புரியுமே.

     ‘நீ பிறந்ததால் தானே பாரி செத்தான்’ என்பது இனிக் கொடையால் புகழ்பெற முடியாதென இறந்தான் என்பதைக் குறித்து, புகழ்வது போலப் பழிப்பதாம்.

 வள்ளல்5 vaḷḷal, பெ. (n.)

   தழுவு கொடிவகை; creeping bind-weed.

மறுவ. படர்கொடி

     [வல் → வள் → வள்ளல்.]

வள்ளல்கள்

வள்ளல்கள் vaḷḷalkaḷ, பெ. (n.)

   பழந்தமிழ்க் கொடையாளிகள்; benevalent doners among ancient Tamil.

     [வள்ளல்+கள். ‘கள்’பலர் பாலீறு]

பழந்தமிழகத்தில் முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

   1.முதல் ஏழு வள்ளல்கள்:1செம்பியன் 2. காரி (சகாரி); 3. விராடன்

   4. கடலன் (சகரன்);

   5. துந்து மாறன் (துந்துமாரி); நள்ளன் (நளன்);.

   7. மீனன்.

   2உஇடையெழு வள்ளல்கள்:

   1 அக்குரன்

   2. அந்தன் (சந்தன்);

   3. சேந்தன்

   4. இளங்குமரன் (சிசுபாலன்);

   5. சந்திரன்.

   6. கன்னள் (கர்ணன்);

மருப்பொசித்த மாறன் (தருதிவக்கின்);.

   3டகடையெழுடவள்ளல்கள்

   1 பாரி

   2. ஓரி

   3. நள்ளி

   4. மலையன் (காரி);

   5. ஆய்

   6. எழினி பேகன்.

வள்ளாங்கை

 வள்ளாங்கை vaḷḷāṅgai, பெ. (n.)

   இடக்கை; left hand.

     [வள் → வள்ளாம் + கை.]

வள்ளி

வள்ளி1 vaḷḷi, பெ. (n.)

   1. கொடி வகை; a kind of creeper.

     “வாடிய வள்ளி முதலரிந் தற்று” (குறள். 1304);.

   2. கொடி; a medicinal creeper, convolvulus balatas.

   3. நிலத்திற் படரும் பூசணி (M.M);; panicled bindweed.

   4. தண்டு; stalk, stem.

   5. கொடி போன்று தொடர்ந்திருப்பது; streak, line, row.

     “மேகவள்ளி” (தொல்.பொருள்.88, உரை);.

     [வல் → வல்லி → வள்ளி.]

 வள்ளி2 vaḷḷi, பெ. (n.)

   1. கைவளை; bracelet.

   2. காப்பு; armlet.

     “ஆம்பல் வள்ளித் தொடிக்கை” (புறநா.63);,

   3. தொய்யிற் கொடி; figures drawn on the breasts and arms of young women.

     “வண்டே யிழையே வள்ளி பூவே” (தொல். பொருள்.);.

   4. வள்ளித் தண்டை (வின்.);; rattan shield.

     [வல் → வல்லி → வள்ளி.]

 வள்ளி3 vaḷḷi, பெ. (n.)

   1. குறிஞ்சிநிலப் பெண்; woman of the hilly tracts.

     “வள்ளி மருங்குல்” (திருக்கோ. 128);.

   2. முருகக் கடவுளின் துணைவி; a wite of Lord Murugan.

     “குறவர் மடமகள்… வள்ளியொடு” (திருமுரு.101);.

   3. முருகக் கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ.9, 41);;   4. குறிஞ்சி மகளிர் கூத்து வகை (தொல். பொருள். 60, உரை);; a kind of dance of hill women.

     [வல் → வல்லி → வள்ளி = வளைந்த கொடி போன்ற பெண். குறிஞ்சிநிலப் பெண், முருகன் தேவி (தேவ.13. பக்.48);.]

கொடி → கொடிச்சி = குறிஞ்சி நிலப் பெண்.

     “முருகவேளைக் குறித்தது” (வீர.104);,

     “தண்கதிர் மண்டிலம்” (தொல்.பொருள்.88. நச்.); என்று உரையாசிரியர்கள், வள்ளி குறித்துக் கூறியதறிக.

வள்ளிகா

வள்ளிகா vaḷḷikā, பெ. (n.)

   1. சீந்திற் கொடி; moon creeper.

   2. வெண்திணை; Italian millet-Sectoria italica.

வள்ளிகாத்திணை

 வள்ளிகாத்திணை vaḷḷikāttiṇai, பெ. (n.)

   வெண்டினை; Italian millet-Setoria italica.

வள்ளிகேள்வன்

 வள்ளிகேள்வன் vaḷḷiāḷvaṉ, பெ. (n.)

   முருகக்கடவுள் (வள்ளிக்கணவன்);; lord Murugan.

மறுவ. குறிஞ்சிக் கடவுள்

     [வள்ளி + கேள்வன். கேள் → கேள்வன் = கணவன்.]

வள்ளிகொழுநன்

 வள்ளிகொழுநன் vaḷḷigoḻunaṉ, பெ. (n.)

வள்ளிகேள்வன் பார்க்க;see vvalli-lelvan.

     [வள்ளி + கொழுநன். கொள் → கொளுவு → கொழுவு → கொழுநன்.]

கொழுநன் = மணந்து கொள்பவன். கொழுவுதல் = அணைத்துக் கொள்ளல்.

வள்ளிக் கூத்து

வள்ளிக் கூத்து vaḷḷikāttu, பெ. (n.)

   குறிஞ்சி நிலத்து மக்களின் கூத்து வகை (பெரும்பாண். 370, உரை);; a masquerade dance among the people of the hilly tracts.

     [வள்ளி + குத்து → கூத்து.]

குறிஞ்சிநில மக்கள், முருகனின் வள்ளி திருமண நிகழ்வைத் தாளவொத்துக்கு இயையக் கூத்தாக, இன்றும் ஆடி வருகின்றனர்.

வள்ளிக்கண்டம்

வள்ளிக்கண்டம் vaḷḷikkaṇṭam, பெ. (n.)

   1. சீந்தில் (மலை.);; gulancha.

   2. வள்ளிகா பார்க்க;see valliga.

     [வள்ளி + கண்டம்.]

வள்ளிக்கிழங்கு

வள்ளிக்கிழங்கு vaḷḷikkiḻṅgu, பெ. (n.)

   வள்ளி; sweet potato.

     [வள்ளி + கிழங்கு.]

இதன் வகைகளாக, சாம்பசிவ அகராதி கூறுவன :-

   1. வள்ளிக்கிழங்கு; root tuber – Impomoea batatas.

   2. மரவள்ளிக்கிழங்கு; root tuber, topioca-manihot utilissima.

   3. சருக்கரை வள்ளிக் கிழங்கு; tuber, Impomoea batatas.

   4. சீனவள்ளி,

   5. சிவப்பு வள்ளி; red in colour.

   6. மஞ்சள் மரவள்ளி; yellow indian, shot-canna flacida.

   7. சீமை மரவள்ளி; mendoza arrow root.

வள்ளிக்கொடி

 வள்ளிக்கொடி vaḷḷikkoḍi, பெ. (n.)

   காட்டு வள்ளி; five leaved yam.

     [வள்ளி + கொடி.]

வள்ளிசாக

வள்ளிசாக vaḷḷicāka, வி.அ. (adv.)

   1. முழுமையாக; fully, round sum.

   2. கூடுதலாக; even a little bit.

     “வீட்டில் வள்ளிசாகத் தண்ணீர் இல்லை”.

     [வள்ளிசு → வள்ளிசாக.]

வள்ளிசாய்

வள்ளிசாய் vaḷḷicāy, கு.வி.எ. (adv.)

   1. முழுவதும்; entirely, completely, fully.

   2. நேர்த்தியாய்; neatly.

   3. சரியாய்; exactly, correctly, precisely.

     [வள்ளிசு → வள்ளிசாய்.]

வள்ளிசு

வள்ளிசு1 vaḷḷisu, பெ. (n.)

   நெற்றி; forehead.

 வள்ளிசு2 vaḷḷisu, பெ. (n.)

   1. நேர்த்தி; neatness, beauty.

   2. துல்லியம்; correctness, exactness, preciseness, accuracy.

     [வல் → வள் + இது – வள்ளிது → வள்ளிசு.]

வள்ளிதிருமணக்கதை

 வள்ளிதிருமணக்கதை vaḷḷidirumaṇakkadai, பெ. (n.)

வள்ளிநாடகம் பார்க்க;see valli-nādagam.

     [வள்ளி + திருமணம் + கதை.]

வள் → வள்ளி = வளைந்த கொடி போன்ற பெண், குறிஞ்சிநிலப் பெண், முருகன் தேவி. கழல் → கழறு → கதல் → கதை. கதை = சிறப்பித்துச் சொல்லுதல். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகன், வள்ளி திருமண நிகழ்வைச் சிறப்பித்துச் சொல்லும் கதையே வள்ளிதிருமணக் கதை.

வள்ளிது

 வள்ளிது vaḷḷidu, பெ. (n.)

   முழுமை; whole.

     [வள் + இது.]

ஒ.நோ. E. round = whole.

இச் சொல் வட்டம் என்னும் சொல்போல

     ‘வள்’ என்னும் பகுதியினின்று பிறந்ததாகும். உலக வழக்கில் இச் சொல் முழுமைப் பொருளில் வழங்கி வருகிறது. வள்ளிதாய்ச் செலாயிற்றென்றால், முழுதும் செலவாயிற்றென்பது பொருள்.

     ‘வள்ளிசாய்’ என்பது கொச்சைப்போலி.

இதுபோன்ற பல சொற்கள், நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும். ஆதலால் தமிழை செவ்வையாய் அறிய வேண்டின், பாண்டி நாட்டுலக வழக்கை முழுமையாய் ஆராயவேண்டும்.

வள்ளித்தண்டு

 வள்ளித்தண்டு vaḷḷittaṇṭu, பெ. (n.)

வள்ளித் தண்டை (சங்.அக.); பார்க்க;see valli-t-tandai.

     [வள்ளி + தண்டு.]

வள்ளித்தண்டை

வள்ளித்தண்டை vaḷḷittaṇṭai, பெ. (n.)

   பிரப்பங் கேடகம்; rattan shield.

     “வார்மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையும்” (சீவக. 22, 18);.

     [வள்ளி + தண்டை.]

வள்ளிநாடகம்

 வள்ளிநாடகம் vaḷḷināṭagam, பெ. (n.)

   குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன் வள்ளி திருமண நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டுகை; drama of valli (story);.

     [வள்ளி + நடி + அகம் → நாடகம்.]

நடம் (பிங்.); கதை தழுவி வரும் கூத்து. வள்ளி திருமணக் கதையே, வள்ளி நாடகமாகவும், வள்ளிக் கூத்தாகவும், பன்னெடுங்காலமாக நடிக்கப்பட்டு வருகிறது.

வள்ளிநாயகம்பிள்ளை

வள்ளிநாயகம்பிள்ளை vaḷḷināyagambiḷḷai, பெ. (n.)

   20-ஆம் நூற்றாண்டில் தில்லைப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலை, இயற்றிய புலவர்; a poet, who composed a work titled tillai-patirru-ppathandādī’ in 20C.

வள்ளிநாயகி

வள்ளிநாயகி vaḷḷināyagi, பெ. (n.)

   வள்ளியம்மை; a consort of lord Murugan.

     “முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் உருவுகண் எறிப்ப நோக்கல் ஆற்றலனே” (நற்.82, 4-5);.

     [வள்ளி + நாயகி.]

வள்ளிநாய்ச்சியார்

வள்ளிநாய்ச்சியார் vaḷḷināycciyār, பெ. (n.)

   வள்ளியம்மை (திருமுரு.பக்.47, கீழ்க்குறிப்பு);; consort of lord murugan.

     [வள்ளி + நாய்ச்சியார்.]

வள்ளிபங்கன்

 வள்ளிபங்கன் vaḷḷibaṅgaṉ, பெ. (n.)

   முருகக் கடவுள்; lord Murugan.

     [வள்ளி + பங்கன்.]

வள்ளிப்புரி

 வள்ளிப்புரி vaḷḷippuri, பெ. (n.)

   நெல்லைச் சேர்கட்டும்போது சுற்றிப்பிடித்துக் கொள்ள அமைக்கும் வைக்கோற்புரி; straw ropes used in the collection of paddy.

     [வள்ளி + புரி. புல் → புர் → புரி.]

வள்ளிமணவாளன்

 வள்ளிமணவாளன் vaḷḷimaṇavāḷaṉ, பெ. (n.)

   வள்ளியின் கணவன்; as the consort or husband of valli.

     [வள்ளி + மணவாளன்.]

வள்ளிமணாளன்

 வள்ளிமணாளன் vaḷḷimaṇāḷaṉ, பெ. (n.)

வள்ளிமணவாளன் பார்க்க;see valli manavâlan.

     [வள்ளி + மணாளன்.]

வள்ளிமலை

 வள்ளிமலை vaḷḷimalai, பெ. (n.)

   ஒரு மலை; a mountain, hill.

     [வள்ளி + மலை.]

வள்ளிமாதரை

 வள்ளிமாதரை vaḷḷimātarai, பெ. (n.)

   வெங்காயம்; onion-Allium cepa.

     [வள்ளி + மாதரை.]

ஒரு.கா. ஈருள்ளி

வள்ளியன்

வள்ளியன் vaḷḷiyaṉ, பெ. (n.)

   வள்ளியோன்; liberal generous person, munificent, donor.

     “வள்ளிய ராக வழங்குவ தல்லலால்” (கம்பரா.வேள்விப். 29);.

     [வள் → வள்ளி → வள்ளியன்.]

வள்ளியம்

வள்ளியம்1 vaḷḷiyam, பெ. (n.)

   மிளகு (மலை.);; black pepper.

     [வல் → வல்லி → வள்ளி → வள்ளியம்.]

 வள்ளியம்2 vaḷḷiyam, பெ. (n.)

   1. மரக்கலம் (சது.);; ship, catamaran.

   2. ஊது குழல்; musical pipe.

   3. மெழுகு; wax.

     [வள்ளி → வள்ளியம் (வே.க.4. பக்.95);.]

வள்ளியம்மை

 வள்ளியம்மை vaḷḷiyammai, பெ. (n.)

   முருகக் கடவுளின் தேவி; a consort of lord Murugan.

     [வள்ளி + அம்மை.]

வள்ளியம்மைசுடட்டம்

 வள்ளியம்மைசுடட்டம் vaḷḷiyammaisuḍaḍḍam, பெ. (n.)

   குறவர் இனம்; the kurava Caste.

மறுவ. குறக்கூட்டம்

     [வள்ளியம்மை + கூட்டம்.]

வள்ளியோன்

வள்ளியோன் vaḷḷiyōṉ, பெ. (n.)

வள்ளியோர் பார்க்க;see valliyor.

     “வள்ளியோர்ப் படர்ந்து” (புறநா. 47);.

     [வள் → வள்ளியோன்.]

வள்ளியோர்

வள்ளியோர் vaḷḷiyōr, பெ. (n.)

   வண்மை யுடையோர்; generous, liberal person.

     “வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகிநெடிய என்னாது சுரம் பல கடந்து” (புறம். 47-1-2);.

     [வல் → வள்ளி → வள்ளியோர்.]

வள்ளுகிர்

வள்ளுகிர் vaḷḷugir, பெ. (n.)

   கூரிய உகிர்; sharpened nail.

     “வள் உகிர வயல் ஆமை வெள் அகடு கண்டன்ன” (புறம்-387-1-2);.

     [வல் → வள் + உகிர்.]

வள்ளுயிர்

 வள்ளுயிர் vaḷḷuyir, பெ. (n.)

   பேரொலி; noise, shout.

     [வள் + உயிர்.]

வள்ளுரம்

வள்ளுரம் vaḷḷuram, பெ. (n.)

   1. ஆட்டிறைச்சி; mutton, meat.

   2. சூட்டிறைச்சி; roasted meat.

   3. மாட்டிறைச்சி; beaf.

   4. புலால்; flesh-meat.

     “முழுஉ வள்ளுர முணக்கு மள்ள” (புறநா. 219);.

     “ஆயிடை யறிந்தும் வள்ளுர மருந்தலால்” (பிரமோத். 3,34);.

     [வள் + உரம். வள் = திண்மை.]

வள்ளுவசாத்திரம்

 வள்ளுவசாத்திரம் vaḷḷuvacāttiram, பெ. (n.)

   கணியம் (சோதிடம்); (வின்.);; the art of foretelling, as practised by the valluvan caste.

     [வள்ளுவன் + Skt. சாத்திரம்.]

 Skt. Sastra → த. சாத்திரம்.

வள்ளுவநாடு

 வள்ளுவநாடு vaḷḷuvanāṭu, பெ. (n.)

   திருவிதாங்கூர்ச்சீமையைச் சார்ந்த ஒரு நாடு; a region in the then travancore state.

     [வள்ளுவம் + நாடு.]

வள்ளுவன்

வள்ளுவன் vaḷḷuvaṉ, பெ. (n.)

   1. அரசன் ஆணையைத் தெரிவிப்பவன், ஒரு சாதியான்; Royal drummers.

   2. வருவதுரைப்போன் (நிமித்திகன்);; one who foretells events by omens.

     “வள்ளுவன் சொனான்” (சீவக. 419);.

   3. அரசர்க்கு உள்படு கருமத் தலைவன் (பிங்.);; an officer who proclaims the king’s commands.

   4. திருவள்ளுவர்; the author of the Tiru-k-kural.

     “வள்ளுவன் வாயதென் வாக்கு” (வள்ளுவமா.2);.

     [வள் + உ + அன் → வள்ளுவன். உ = சாரியை, அன் = ஆண்பாற் பெயரீறு.]

அரச கட்டளையை முரசறைந்து அறிவிப்பவன் (தி.ம.5);.

     “வள்” என்னும் வேர்ச்சொல்லினின்று தோன்றிய சொல்.

     “வள்” என்னும் அடிச்சொற்கு கூர்மை, வலிமை, வண்மை என்னும்

பொருள்களுண்டு.

வள்ளுவன் = கூர்மதியன், வல்லவன், வள்ளியோன்.

வள்ளுவன் என்னும் பெயரின் வரலாறு குறித்துப் பாவாணர் கூறுவது வருமாறு:- வள்ளுவன் அரசன் ஆணையை, அவரது நகர மக்கட்கு யானை மீதேறிப் பெரும்பறை (பேரிகை);யறைந்தறிவிக்கும் விளம்பரத்

பண்டை நூல்களில் வள்ளுவன் தொழில், அரசராணையைப் பறையறைந் தறிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது.

     “வள்ளுவார் முரசமூதூர ரறைகென வருளினானே” என்றார் சீவகசிந்தாமணி யாசிரியர் திருத்தக்கதேவர் (செய்.2149);. இதில் வள்ளுவன் என்பது இசைப் பற்றி வள்ளுவார் என நீண்டது. இனி வள்ளுவன் என்னும் பெயரின் மூலத்தை ஆராயினும், அது பறையறையும் தொழிலுக்கு ஏற்ற பொருளையே தராநிற்கும்.

வள்ளுவன் எனும் சொல்,

     ‘வள்’ என்னும் மூலத்தினின்றும் பிறந்தது.

     ‘வள்’ என்பது பறைக்கு வேண்டிய தோலையும் வாரையும் அவற்றாற் செய்யப்படும் பல பொருள்களையுங் குறிப்பதாகும்.

வள் = வார் (சூடா.நி.க.);.

வள் = வாளுறை (அக.நிக.);.

வள் = கடிவாளம் (அகநா.4);.

     ‘வள்’ என்னும் மூலம் புவ்வீறு பெற்றும், இப் பொருள்களை உணர்த்தும்.

வள்பு தெரிந்தூர் மதிவலவநின்

     “புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே” (486); என ஐங்குறு நூற்றில் கடிவாளத்தையும்,

     “மாசற விசித்த வார்புற வள்பின்…. உருகெழு முரசம்” (50); எனப் புறநானூற்றில் வாரையும்,

     “வள்பு” என்னும் சொல் குறித்தது.

     ‘வள்’ என்னும் மூலத்தினின்றும், பிறந்த வள்ளுரம் என்னுஞ் சொல், தோலின் இனப் பொருளான ஊனை (மாமிசத்தை);க் குறிக்கும்.

     ‘வள்’ என்னுஞ்சொல் உகரச்சாரியையும், அன் ஈறும் பெற்று வள்ளுவன் என்றாயது.

வள்ளுவன், அரச சம்பந்தமான தொழிலைச் செய்பவனாதலின், பிங்கல நிகண்டில்.

வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் அரசர்க் குள்படு கருமத் தலைவர்க் கொன்றும். என்று கூறப்பட்டுள்ளது. இதில்

     ‘வள்ளுவன்’ என்பதற்கு எதுகையாயும், சம்பந்தப்பட்ட என்னும் பொருளிலும் வந்த

     ‘உள்படு’ என்னும் சாமானியத் தொடரை, மிகச்சிறந்த பொருளதாகக் கொண்டு

     ‘அரசர்க் குள்படு கருமம்’ என்பது ஆங்கில நாட்டுச் சேம்பர்லேன் (Chamberlain); போன்ற ஓர் அதிகாரத்தைக் குறிக்குமென்பர். இது எமக்கு உடன்பாடன்று.

இனிச் சார்பினாலும் வள்ளுவன் தொழில் யாங் கூறியதே என்பது போதரும், மேற்கூறிய சூத்திரத்தில்,

     ‘வள்ளுவன்’ என்பதை அடுத்து நிற்கும்

     ‘சாக்கை’ யெனும் பெயர், வெற்றிக் காலத்தும், அமைதிக்காலத்தும், அரசர்க்குக் கூத்தாடி மகிழ்ச்சியை யுண்டுபண்ணும் வேத்தியற் கூத்தரைக் குறிக்கும். வள்ளுவரும் சாக்கையரும் தமக்குக் கீழ்ப்பட்ட பல துணைவரையும், தத்தம் தொழிற்கு முழுப்பொறுப்பு முடைமையான், கருமத் தலைவரெனப்பட்டார்.

   10-ஆம் நூற்றாண்டி லியற்றப்பட்ட சீவகசிந்தாமணியில், வள்ளுவன் அரசாணையைப்

பறையறைந்து விளம்பரஞ் செய்பவனாகக் கூறப்படுவதலால், அதற்கு இரண்டொரு நூற்றாண்டிற்கு முந்திய பிங்கலத்திலும் அதுவேயாதல் வேண்டும்.

பண்டைக்காலத்திற் பாணர்க்கு, இசைத் தொழிலே குலத் தொழிலாயினும், அவருட் பலர் அதில் பிழைப்பின்மைபற்றிப் பிற தொழிலை மேற்கொண்டது போல், வள்ளுவரும் அரச வினையில்லாரெல்லாம் கணி (சோதிட);த் தொழில் புரிந்து வந்தனர். சாதகங் கணித்தலும் குறி சொல்லுதலும், இக் காலத்தும் வள்ளுவர்க்குரிய.

பண்டைக்காலத்திலேயே வள்ளுவர் நிமித்திகத் தொழிலுஞ் செய்துவந்தமையின், வள்ளுவர் எனும் பெயர் நிமித்திகன் எனும் பொருளையுந் தழுவியது (சிந்தாமணி 419);. நிமித்திகன் நிமித்தம் (சகுனம்); கூறுபவன். வள்ளுவன் குறி சொல்லுவதனால், அத் தொழிற்கு வள்ளுவ சாத்திரமென்றும், அவனுக்கு வள்ளுவப் பண்டாரமென்றும் பெயர் உண்டு. பண்டாரமென்பது முற்காலத்தில் நூலகங்கட்கும், பல நூல் பயின்ற புலவர்க்கு அல்லது ஞானிகட்கும் வழங்கிய பெயர். அது பின்பு முறையே துறவு பூண்ட அறிஞர்க்கும், போலித் துறவிகளுக்கும், பெயராயிற்று.

புறநானூற்றில் சில பாடல்களில் நாஞ்சில் என்னும் மலைக்குத் தலைவனான ஒருவன், வள்ளுவன் என்னும் பெயராற் கூறப்படுகிறான். அவன் ஒருகாற் சேரனுக்கும், பின்பு பாண்டியனுக்கும், படைத்தலைவனாயிருந்ததாகத் தெரிகின்றது. அவன் 137, 140, 380-ஆம் புறப்பாட்டுகளில் பொருநன் என்று விளிக்கப்படுகின்றான். பொருநன் என்னும் பெயர் ஏர்க்களம் பாடுவோன், போர்க்களம் பாடுவோன்,

பரணி பாடுவோன் என்னும் மூவகைப் புலவருள்

யென்னும் பொருளில் வாராதென்றும், அறிந்து கொள்க (The Putturian, Feb. 1939);.

வள்ளுவன்வாய்ச்சொல்

 வள்ளுவன்வாய்ச்சொல் vaḷḷuvaṉvāyccol, பெ. (n.)

வள்ளுவர் பார்க்க;see Valluvar.

     “மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்” (திருவள்ளுவமாலை-இறையனார்);.

     [வள்ளுவன் + வாய்ச்சொல்.]

வள்ளுவப்பண்டாரம்

 வள்ளுவப்பண்டாரம் vaḷḷuvappaṇṭāram, பெ. (n.)

   வள்ளுவ இனத்திற் குறிசொல்வோன்; a soothsayer of the va/uva caste.

     [வள்ளுவம் + பண்டாரம்.]

வள்ளுவப்பயன்

வள்ளுவப்பயன் vaḷḷuvappayaṉ, பெ. (n.)

   திருக்குறள் (நன். 274, மயிலை.);; tiru-k-kural.

     [வள்ளுவம் + பயன்.]

வள்ளுவப்பை

வள்ளுவப்பை vaḷḷuvappai, பெ. (n.)

   நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள், மணமகன் தோள் மேல் இட்டுச் செல்லும் பட்டுப்பை; long silk purse or red cloth carried on the shoulders by a nãttu-k-köffal cheft;

 bridegroom to receive betel and other gifts (E.T.V. 268);.

     [வள்ளுவம் + பை.]

வள்ளுவம்

வள்ளுவம் vaḷḷuvam, பெ. (n.)

   வள்ளுவ ரியற்றிய திருக்குறள் தெளிவுறுத்தும் வாழ்வியல் நெறிமுறைகள் அல்லது கோட்பாடுகள் (தத்துவம்);; principles or philosophy of life, written by Valluvar, the author of Tirukkural

   மறுவ. அறம்;   தமிழ்மறை;   முப்பால்;உலகப் பொதுமறை.

     [வள் → வள்ளுவன் → வள்ளுவர் → வள்ளுவம்.]

வள்ளுவம் என்பது ஆசிரியனை நோக்கி அமைத்துக்கொண்ட பெயராகும்.

வள் → வள்ளுவன் = மதிக்கூர்மையன்..

மதிக்கூர்மை மிக்க சீரிய செஞ்சொற்கள் வாயிலாக, எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் ஏற்றவண்ணம், 2000 ஆண்டுகட்கு முன்னரே, தெள்ளிய மனமும், ஒள்ளிய அறிவும், திண்ணிய நெஞ்சும், நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் இயற்றிய நூலே திருக்குறளாகும். இந்நூலுள் பொதிந்துள்ள ஞாலந்தழீஇய வாழ்வியற் கருத்துகளே வள்ளுவமாகும்.

ஞால மாந்தர் அனைவரும் குமுகாயத் துறையிலும், சமயத்துறையிலும், வாழ்வியல் துறைகள் அனைத்திலும், துன்பமின்றி, தொல்லைகளின்றி, நன்னெறிபூண்டு, பொந்திகை யடைந்து நலத்துடனும், வளத்துடனும் வாழ வழிகாட்டும் திருக்குறளே வள்ளுவ மென்றறிக.

வள்ளுவனாரின் வாழ்வியற் கோட்பாடுகளே வள்ளுவம் ஆகும். உலகத்திலுள்ள அனைத்து மறைகளின் கருத்துகளும், பொதிந்துள்ளதால், உலகப் பொதுமறையாயிற்று. உலக முழுமைக்கும் ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்ட நூலாகவும் வள்ளுவம் திகழ்கிறது.

மக்கள்-மாக்கள்-பகுப்பு :- ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு அல்லது பண்பாடு நிறைந்தவரை மக்கள் என்றும், அஃதற்றவரை மாக்கள் என்றும், மாந்தரை இருவகுப்பினராகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.

     “மாவும் மாக்களும் ஜயறிவினவே” (தொல்.1531);.

     “மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல். 1532);.

வள்ளுவரும், பண்பட்ட மாந்தரை மக்கள் என்று கீழ்க்கண்ட குறட்பாக்களிற் குறித்துள்ளது காண்க.

   1.”விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனை யவர்” (குறள், 410);.

   2.”மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்” (குறள், 997);.

   3.”மக்களே போல்வர் கயவர்” (குறள், 1071);.

பண்படா மாந்தரை மாக்கள் என்று வள்ளுவம் வரையறுத்ததற்கான சான்றுகள் :-

     “கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து” (குறள், 329);.

     “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென்” (குறள், 420);.

     “கொலை வினையர் மக்கட் பண்பில்லாதவரென்று கருதி” அவர்களை மாக்கள் என்று தொல்காப்பியர் கூறுவது போல், வள்ளுவர் குறித்துள்ளமையால், வள்ளுவத்தின் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டிற்கும், கடைக்கழக முடிவாகிய கி.பி.3-ஆம் நூற்றாண்டிற்கும், இடைப்பட்டது. கிறித்துவிற்கு முந்தியதென்பார் மொழிஞாயிறு (தமிழியற் கட்டுரைகள் பக்.148);.

மறைமொழி – மந்திரம் – வள்ளுவத்தின் – தனிச்சிறப்பு :-

தொல்காப்பியர் கூறும் மக்கட் பகுப்பானது – வள்ளுவர் வகுத்தளித்த திருக்குறளாம். வள்ளுவத்தின், உலகளாவிய உயர்கொள்கைக்கு, எடுத்துக்காட்டு என்பார் பாவாணர். திருவள்ளுவர்,

     “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல்.1434); என்னுந் தொல்காப்பிய நூற்பாவை,

     “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்” (குறள், 28);

என்னுங் குறளிற் கூறியுள்ளது. உயத்துணரத்தக்கது. வாழ்வியலுக்கு ஏற்ற வண்ணம் அமைந்த வள்ளுவத்தின் சிறப்பினை வரையறுப்பது அரிது. பிறமதத்தினரின் மறைமொழி, மறை (வேத);த்

தன்மையது. வள்ளுவம் கூறும் மறைமொழி, மனத் திண்மைக்குச் சான்றாகத் திகழ்வது. கருதியதைச் செயலாக்கும் அல்லது நிறைவேற்றும் ஆற்றல் மிக்கது.

மந்திரம் பற்றி மொழிஞாயிறு:-

     “மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்புமென இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், வாய்மொழி போல்வன. கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச்சோலை யொன்றில், வம்பப் பரத்தையையும், வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு” (திருக்குறள் தமிழ்மரபுரை, பக்.56);.

ஆனால் வள்ளுவம் கூறும் மறைமொழி ஆற்றல் மிக்கது. திண்ணிய தன்மையது. எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் திறம் வாய்ந்தது.

   முன் → மன் + திரம் = மந்திரம்;திரம் → திறம்.

முன்னுதல் = எண்ணுதல், கருதுதல்.

முரி → முறி.

அன்பற்றவர் – என்பற்ற புழு,பூச்சிகளை யொப்பர்:- பிறர்மாட்டு அன்புசெலுத்தாதவர்களை – எலும்பற்ற புழு,பூச்சிகளுக்கு ஒப்பான ஓரறிவுயிர்கள், என்று இகழ்கிறது வள்ளுவம். இக் கோட்பாடு, வள்ளுவத்தின் வையந்தழுவிய வாழ்க்கைக் கோட்பாடு எனலாம். அன்பற்ற மாக்களை, அறத்தெய்வம் எரித்துக் கொல்லும் என்பதை,

     “என்பிலதனை வெயில் போலக் காயுமே

அன்பி லதனை அறம்” (குறள், 77); என்று குறித்துள்ளமை காண்க. வெயில் வந்த ஞான்று, எலும்பில்லா உடம்பு இன்னலுறுவது போல், தீவினைக் காலத்தே பிறர்க்குத் தீமை செய்பவர் தீராத் துயருள் ஆழ்வர்.

வள்ளுவம் காட்டும் நாற்பொருள் பாகுபாடு :

அறம், பொருள், இன்பம், வீடென்னும், நான்மை நன்னெறியினை, நானிலத்தாரின், வாழ்க்கையில், இணைத்து இயம்பிய பெருமை, வள்ளுவத்திற்கே உரிய சிறப்பாகும்.

அறம் : ஆரியர் சிந்து வெளியில் தங்கியிருந்தபோது, இயற்கைத் தோற்றங்களையும், ஐம்பூதங்களையும், உணவுப் பொருள்களையுமே, தெய்வங்களாக வணங்கினர். சோமம் என்னும் ஒருகொடிச் சாற்றுமதுவும் தெய்வமாக வணங்கப்பட்டது. விடியற்கால ஒளி முதல் அந்திமாலைக் கதிரவனின் சுடர் வரை, சூரியனின் ஒரே சுடரை, அறு நிலைகளில் தெய்வமாக வணங்கியது, அவரின் மதியில்லா வளர்ச்சி நிலையைக் காட்டும் என்பார் பாவாணர்.

   வடவருக்குக் கோயிலுமில்லை;குளமுமில்லை. விலங்கை காவு கொடுக்கும் வேள்வித்துனே கோயில். இறந்தபின் உயிர்கள் பல்வேறு உலகில் வதியும் என்பது வடவர் கொள்கை,

   முழுமுதற் கடவுட் கொள்கையும், வீடுபேற்றுக் கொள்கையும் வள்ளுவத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இதுவே தமிழர் கொள்கை;வள்ளுவம் காட்டும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் தலையாயது அறம். உள்ளத்தில் கள்ளத்தைக் களைதலே உயர்போறம். அறந்தொடர்பான முயற்சிகள் அனைத்தும் மனத்தைப் பக்குவப் படுத்தும் திறத்தன. அதனால்தான் வள்ளுவம்,

     “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற” (குறள், 34); என்றழைக்கிறது.

     “வறியார்க்கொன்று ஈவதே, ஈகை”

வள்ளுவம்.

வள்ளுவ மென்றழைக்கப்படும் திருக்குறளின், சிறப்புமிகு வாழ்வியல் கோட்பாடாகக்

குறிக்கப்படுவது யாதெனின், ஏதுமற்ற ஏதிலிகட்கும், திருப்பிச் செய்யுந் திறனற்ற ஏழையர்க்கும். அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பதே, ஈகையென்று குறித்துள்ளமையாகும்.

இத்தகைய ஈடினையில்லாப் பேரறத்தை, வள்ளுவம் கூறுவதாலேயே – திருக்குறள், அறம் என்றழைக்கப்பட்ட தென்க. வள்ளுவம் கூறும் வாழ்வியலறப் பாடல் வருமாறு:-

     “வறியார்க்கொன் றீவதே ஈகை மற்றெல்லாங்

குறியெதிர்ப்பை நீர் துடைத்து” (குறள் 22);.

பொருள்: பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பதனைவரும், அறிந்ததே. இல்லறத்திலிருந்து, இயல்புடைய மூவரைக் காத்து, நன்மக்களைப் பெற்று, கற்றோர் போற்றும் அவையில் அவர்தமை முந்தியிருக்கச் செய்வதற்கு இன்றியமையாதது, பொருளேயாகும். உலகியல் வாழ்விற்கு உறுதுணையாயிருக்கும், இப் பொருளைக் கொண்டுதான், வேந்தன்,

     “படைகுடிகூழ் அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு” (குறள், 381);

முதலான, ஆறு உறுப்புகளின் வாயிலாக, மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையைத் தரவியலும், இங்கு

     “கூழ்” என்பது குடிகள் அல்லது நாட்டிலிருந்து பெறும் பொருளைக் குறித்தது.

இன்பம்: இன்பத்துப் பாலென்பது வெளிப்படையாகச் சிற்றின்பத்தையும், குறிப்பாகப் பேரின்பப் பொருளையும் குறிக்கும் என்பது ஆன்றோர் கொள்கை.

மனைத்தக்க மாண்புடையவளாகிய மனைவியிடம், இல்வாழ்க்கை நடாத்தி, அறத்தின்வழி ஈட்டிய பொருளை, தாமும் உண்டு, பிறர்க்கும் கொடுத்துப் பல்லுயிரோம்புங்கால் பெறும்

இன்பமே, பெருமைக்குரிய பேரின்பமாகும். துறக்கவுலகாம் வீட்டின்பத்தைவிடச் சிறந்த இன்பமாகும். இவ்வின்பத்தை

     “இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கவின்பம்” என்பார் பரிமேலழகர். இத்தகைய பொருள்பொதிந்த குறள் வருமாறு:-

     “தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள், 107);.

     “சிற்றின்பமே, பேரின் பத்தின் திறவுகோல்” என்னும் கோட்பாட்டினை, இக் குறளின் வழியாக, வள்ளுவர் குறித்துள்ளார். இது பற்றிய திருச்சிற்றம்பலக் கோவை,

     “பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் ஆங்கே

உற்றபரிசென்று உந்தீபற” என்று கூறியுள்ளதறிக.

   4. வீடு:

     “ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்” என்பது தமிழர்தம் வாழ்வியற் கோட்பாடாகும். ஆசையை யொழித்தலே, வீடுபேறடைவதற்குரிய எளிய வழி;

இது குறித்து, வள்ளுவம் வகுத்துள்ளது வருமாறு: இவ்வுலக வாழ்க்கையிலேயே ஆசையை அறுத்து, உயர்ந்த வீட்டின்பத்தை அனைவரும் அடையலாம், என்பதே வள்ளுவம் காட்டும் வழியாகும்.

     “ஆராவியற்கை அவா நீப்பின் அந்நிலையே

பேராவி யற்கை தரும்” (குறள், 370);.

ஆசைக்கோர் அளவில்லையென்பார் தாயுமானவர், ஆசையும் அன்பும் அறுத்த வாழ்வே, ஈசனை அடையும் எளிய வாழ்வென்று, திருமூலர் (2613); கூறியுள்ளது. இங்கு உற்றுநோக்கற்குரியது. எஞ்ஞான்றும், பொந்திகை (போதுமென்ற மனம்);யடையாத பேராசை இயல்பினை, வள்ளுவம் ஆராவியற்கை யென்று கூறுவதறிக.

எள்ளளவுந் துன்பங் கலவாததாய், எல்லையில்லா இன்பத்தை எஞ்ஞான்றும் வாரிவழங்குவதாய் அமைந்த வீட்டின்பமே

     “பேராவியற்கை” யென்னும் பேரின்பமாகும்.

எடுத்தயிப் பிறவியிலேயே, ஆசையை யொழித்துப் பெறும் பேரின்பமே.

     “உடலோ டிருந்த வீடு” (சீவன் முத்தி); என்றும் இறந்தபின் பெறுவது உடலிறந்த வீடு (விதேகமுத்தி); என்றும், சொல்லப்பெறும்.

வள்ளுவத்தில் கூட்டுடைமையாட்சி : தெய்வப் புலவரியற்றிய வள்ளுவத்தில் மக்கள் தொகை மிக்க இன்றையக் குமுகாயத்திற்கு மிகவும் இன்றியமையாததும், எக் காலத்தும் நிலைத்து நிற்பதுமான, கூட்டுடைமையாட்சியின் கருத்துப் பதிவுகள், கீழ்க்கண்ட குறள்களில் மிளிர்கின்றன.

     “பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்” (குறள், 44);.

     “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள், 322); என்னுங் குறட்பாக்களிலும், மேலும், 227.1107, 1062 போன்ற பாக்களும் கூட்டுடைமை குறித்தனவே. இனி,

     “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு” (குறள், 633); என்னும் குறள், எக் காலத்திற்கும் ஏற்றவண்ணம் அமைந்துள்ளது. வள்ளுவமும் – மனுதருமமும்

உழு தொழிலையும், உழவரையும் மனு தருமம் இழிவாகக் குறித்துள்ளது (எ.கா. மனுதருமசாத்திரம் 10:84ஆம் பக்கம் காண்க);.

ஆனால் வள்ளுவம்

     “சுழன்றும் ஏர்பின்னது உலகம்” (1031); என்றும்,

     “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” (குறள். 1032); என்றும்,

     “உழுதுண்டு

வாழ்வாரே வாழ்வார்” (குறள். 1033);.

     “உழவினார் கைம்மடங்கின் இல்லை” (குறள், 1036); என்றும், உழுதொழிலின் இன்றியமையாமையும், வேளாண் தொழிலாளர்தம் சிறப்புக்களையும் குறிக்கு முகத்தான், உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது.

ஓய்வின்றி உழைத்தால் ஊழையும் வெல்லலாம் வள்ளுவம்:

ஊழ்வினைக் கொள்கையை ஓயாது உழைப்பதன் வாயிலாக ஒழித்துக் கட்டுகிறார் வள்ளுவர் (குறள், 620);. மடியின்றி உழைத்தால் குடி உயரும் (குறள், 602);.

     “தெய்வத்தால் முடியாத செயலையும், முயற்சியுடன் அயராது உழைத்தால், இனிது முடிக்கலாம்”. வாழ்வில் வளங்காணலாம், என்பதே வள்ளுவத்தின் உயரிய வாழ்வியற் கொள்கையாகும்”.

     “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்” (குறள், 619);.

வள்ளுவம் – வாழ்க்கை வழிகாட்டி :

கீழே குறிக்கப்பட்டுள்ள குறட்பாக்கள், வள்ளுவம் எங்ஙனம் வாழ்விற்கு வழிகாட்டுகின்றது. என்பதனைத் தெளிவுறுத்தும், கலங்கரை விளக்கமாக இலங்குகின்றன.

     “கோளில் பொறியில் குணமிலவே யெண்குணத்தான்

தாளை வணங்காத் தலை” (குறள், 9);.

     “எண்ணென்ப வேனை யெழுத்தென்ய விவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392);.

     “கற்றிலனாயினும் கேட்க” (குறள், 414);.

     “எண்ணித் துணிக கருமம்” (குறள், 467);.

     “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது” (குறள், 101); போன்றனவும், ஒருவன் செம்மையாகவும்,

சிறப்பாகவும், இன்பமாகவும் வாழச் சிறந்த வழிகாட்டுவனவாகக் கீழ்க்கண்ட குறளெண்க ளுள்ள பாக்களைக் குறிக்கலாம். குறள், 27, 30, 251, 1062, 60, 904, 920, 146, 67, 70, 760, 616, 675, 467, 625, 33, 642, 293, 282, 314, 101, 460, 792, 523, 443, 942, 236.

     ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்” (குறள், 314);

என்னுங் குறட்பாவின் வழியொழுகினால், எல்லோர்க்கும் வாழ்வில் எஞ்ஞான்றும் இன்பமே, துன்பமில்லை யென்று துணியலாம்.

வள்ளுவம் – இறைப்பொதுமை – சமயப்பொதுமை :-

வள்ளுவம் எந்தவொரு இறைவனையும் பெயர்சுட்டி அழைக்கவில்லை. இறைவனின் தன்மைகளைப் பொதுவாகவே, வரையறுத்துள்ள பாங்கு போற்றி வணங்கத் தக்கது.

இறைவனை

     “ஆதி பகவன்” (குறள். 1); என்றும்,

     “வாலறிவன்” (குறள், 2); என்றும்,

     “மலர்மிசை யேகினான்” என்றும்,

     “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்றும்,

     “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும்,

     “தனக்குவமை யில்லாதான்” என்றும்,

     “அறவாழியந்தணன்” என்றும், குறிப்பிட்டு, ஒரு பெயர், ஒர் உருவம், இல்லாத இறைவனுக்கு, வள்ளுவம் அருட்பெயர் பலவற்றைச் சூட்டுவதன் வாயிலாக, இறைவனை ஞாலப் பொதுமைப் பொருளாக அமைத்துக் காட்டியமையால், நானிலத்தில் நிலைத்தவிடத்தைப் பெற்றுள்ளது.

வள்ளுவர்

வள்ளுவர் vaḷḷuvar, பெ. (n.)

   1. கீழ்க்கணக்கு நூல்களிலொன்றாகிய திருக்குறள் செய்தவர், காலம் கி.மு.1-ம் நூற்றாண்டு என்ற கருத்தும் உண்டு; a saintly poet who composed tiru-k-kural one of kil-k-kanakku works, I.B.C.

   2. உலகப்பொது மறையாம் திருக்குறளை இயற்றியவர்; the world renowned patron Saint and the eminent poet Valluvar, who wrote Tirukkural.

     “வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்.” (மனோன்மணிய ஆசிரியர்);.

     “வாய்மொழி வள்ளுவர் முப்பால்” (திருவள்ளுவமாலை);.

     [வள் → வள்ளுவன் → வள்ளுவர். வள் = கூர்மை, வள்ளுவர் = கூர்மதியர், வல்லவர் வண்மைாளர்.]

வரணப் பாகுபாட்டைக் கடிந்த தமிழர் மீட்பர் :- நால்வரணக் கூண்டிலடைபட்டிருந்த தமிழரை மீட்டவர் வள்ளுவரென்பார். பாவாணர்.

     “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்” (புறம்.183);.

     “பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்” (சிலப்.22:109); என்று கழக இலக்கியமும் அந்தணர். அரசர், வணிகர், சூத்திரரென்று காப்பிய இலக்கியமும் பேசிய நால்வரணப் பகுப்பிலிருந்து, நந்தமிழரை விடுவித்த தமிழர் மீட்பராக வள்ளுவர் விளங்குவதைக் காட்டும் குறட்பாக்களும், பாடல் எண்களும் (972, 973, 978, 133, 134, 1033, 1035); வருமாறு :-

     “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (குறள், 972);.

     “மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்

கீழல்லார் கீழல் லவர்” (குறள், 973);.

     “ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்” (குறள். 133);.

     “மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” (குறள், 134);.

நல்லொழுக்கமுடைமையே உயர்ந்த குலத் தன்மையாகும். ஒருவர் உயர்ந்த இனத்தில் பிறந்து, தீயொழுக்கம் புரிந்தால், தாழ்ந்த குலத்தவராகவே, அவர் மதிக்கப்படுவாரென்பது, வள்ளுவரின் வாய்மொழியாகும்.

அறத்திலும், கடமையிலும் பிறழாதவர் எச் சாதியினராயினும், உயர்ந்தவரென்பது வள்ளுவர் வாக்காகும்.

குடி என்னும் சொல், தலைக்கட்டு, குடும்பம், சாவடி (கோத்திரம்);, குலம், குடிகள் (நாட்டினம்); என்னும், ஐவகை மக்கட் கூட்டத்தையுங் குறிக்கும். இங்குக் குடியென்றது குலத்தை குலமாவது ஒரே தொழில் செய்யும் மக்கள் வகுப்பு. வரணம் என்பது, நிறம் குறித்தும், பிறப்புக் குறித்தும் ஏற்படுத்தப்பட்ட ஆரியப் பகுப்பென்பார் பாவாணர் (திருக்குறள், தமிழ் மரபுரை, 109);.

துறவென்பது, இவ்வுலகில் வாழும் அனைத்து மாந்தருக்கும் பொதுவானது. அனைவரிடத்தும், தண்ணளிபூண்டு, செந்தண்மையுடன் அன்பு செலுத்துவதே துறவு. எந்தவொரு குறிப்பிட்ட இனத்தவரும், உரிமை கொண்டாட முடியாதது. எல்லாவுயிரிடத்தும் அன்பு செலுத்துவதே, தமிழர்தம் வாழ்வியலறமென்று பாடி, தமிழரை மீட்டவர் வள்ளுவர்.

     “அந்தண ரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொ முகலான்” (குறள், 30);.

   2. இல்வாழ்க்கையிலும் வீடுபேறு பெறலாம் :-

துறவறத்தால் மட்டும் வீடுபெறலாம் என்பர் சிலர். அனைத்துலகியற் பற்றைவிட்டொழித்து, அமைதியாய் இருந்து, பிறர்பழி தூற்றாவாறு இல்வாழ்க்கை நடாத்துதலே, நல்லறமாகும். உயர்ந்த வீடுபேறும், இஃதேயென்றுரைத்த வாழ்க்கை வழிகாட்டியே, வள்ளுவர், இல்வாழ்வே பேரறமாகும்.

அஃதும், மாற்றார் பழிப்பிற்கிடமின்றி இருந்துவிட்டால், உயர்பேரறம் என்பதை,

     “அறத்தாற்றினில் வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்” (குறள், 46);.

     “அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்

பிறன்பழிப்ப தில்லாயி னன்று” (குறள், 49);

போன்ற குறட்பாக்கள் வாயிலாகவும், குறள், 1032, 41, 42, 545, 559-ஆம் எண்ணுள்ள பாக்களின் வாயிலாகவும், தமிழர்தம் வாழ்வியல் நெறிமுறைகளைப் பாடித் தமிழரையும், தமிழர் பண்பாட்டையும் வள்ளுவர் மன்பதையில் நிலைநிறுத்தினாரெனலாம்.

   3. வாழ்க்கை வழிகாட்டியார் – வள்ளுவர்:-

ஒருவன் உலகில் செம்மையாகவும், சிறப்பாகவும், இன்பமாகவும் வாழச் சிறந்த வழிகாட்டும் குறட்பாக்களும், பாடல் எண்களும் வருமாறு:-

     “கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்

தாளை வணங்காத் தலை” (குறள், 9);.

     “மங்கல மென்ப மனைமாட்சி மற்றத

னன்கல நன்மக்கட் பேறு” (குறள், 60);.

     “முயற்சி திருவினையாக்கும்” (குறள், 616);.

     “எண்ணித் துணிக கருமம்” (குறள், 467);.

     “தன்னெஞ்சு அறிவது பொய்யற்க” (குறள், 293);,

     “உள்ளத்தா லுள்ளலுந் திதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்” (குறள், 282);.

     “மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது

அற்றது போற்றி உணின்” (குறள், 942);.

பாடல் எண்கள் :- 392, 414, 904, 920, 146, 760, 616, 675, 467, 625, 67, 70, 33, 642, 293, 282, 314, 101, 460, 792, 523, 443, 942, 236 போன்ற குறட்பாக்களின் வழியாக, வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிமுறைகளை, வாழ்வியலில் இணைத்துக் கூறியவர், வள்ளுவர்,

     “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள், 236);.

அறத்துப்பாவில் இல்லறவியலில் அமைந்துள்ள இக் குறட்பாவில் (236);, வாழ்க்கை வழிகாட்டியான வள்ளுவர் வாய்மொழியாகப் பாவாணர் கூறவது:-

     “பிறத்தலும், பிறவாமையும், இறைவன் ஏற்பாட்டின்படி, அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும், விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத்

     “தோன்றுக”,

     “தோன்றற்க” என்று கூறியதெல்லாம்.

     “புகழுக்கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும், அது செய்யாதானைப் பழித்ததுமேயன்றி, வேறல்ல என அறிக” புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.

   4. திருமுறை யாசிரியர்:- வள்ளுவர் தமது நூலின் வாயிலாக, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மை நன்னெறிகளை நவின்றதன் மூலம், உலகத் திருமுறையாசிரியர்களுள் ஒருவராக, ஒப்பாரும் மிக்காருமின்றி ஒப்பற்றவராகத் திகழ்கிறார். எல்லாம் வல்ல இறைவன் வழிபாட்டையும், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும், துறவு அதிகாரத்தில், துறந்தாருக்குரிய அறவொழுக்கங்களையும், திருக்குறளுள் முழுமையாகக் கூறியுள்ளமை காண்க.

வள்ளுவர். இன்பத்துப் பாலின் கண்ணே, மணிவாசகரின் திருக்கோவை போல், உவமை வாயிலாகப் பேரின்பத்தை யுணர்த்தும் திருமுறையாகத் திருக்குறளை அமைத்துள்ளார்.

திருமுறையாசிரியராகவும், தெய்வப் புலவராகவும் திகழும் வள்ளுவரின் திருவருட் சிறப்பினை மாமூலனார் பெயரிலுள்ள திருவள்ளுவ மாலைப் பாடல் பகர்வது வருமாறு:-

     “அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்

திறந்தெரிந்து செப்பியதேவை – மறந்தேயும்

வள்ளுவன் என்பானோர் பேதை அவன்

வாயச்சொற் கொள்ளாற் அறிவுடையார்”

இப்பாடலின்கண்ணே, அறம், பொருள், இன்பம், வீடெனும், தமிழர்தம் நான்மை நன்னெறியினைத் திருமுறையாசிரியரான தெய்வப் புலவர் வள்ளுவர், தமது உலகப் பொதுமறையில், உணர்த்தும் பாங்கினைத் தெளிவுறுத்துவதாகக் கொள்ளலாம்.

   5. உழவின் பெருமையும் வள்ளுவரும்:- வையகம் வளமுடனனும், நலமுடனும் வாழ்வாங்கு வாழ்தற்கு, இன்றியமையாது தேவைப்படுவது உணவு. இவ்வுணவை விளைவிக்கும் உழவனே தலைமைக் குடிமகன் என்பார் வள்ளுவர். இவனே அனைத்துத் தொழில் முனைவோரிலும் ஒப்பற்றவன் உயர்ந்தவன். நாடு பசியும் பிணியுமற்றுச் சிறந்தோங்கி வாழ்வதற்கு, கடுங்கோடையிலும், புயல்மாரியிலும், இரவென்றும் எண்ணாது. பகலும் பாராது, இன்னலை யேற்று, உடலை வருத்தி யுழைப்பவனே உழவன். இவனே, உலகமாகிய தேரைச் செம்மையாகச் செலுத்துபவன். இது பற்றியே, வள்ளுவர், தம் ஒப்புயர்வற்ற உலகப் பொதுமறையில், குடிசெயல் வகையின் பின் உழவதிகாரத்தை வைத்தார்.

     “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” (குறள். 1032); என்றுவியந்தோதுகிறார்.

பாருய்யப் பாடுபடும் பழுதற்ற தொழிலாளியே உழவன் என்பார், மொழிஞாயிறு.

   6. உழவன் இரப்போர் சுற்றத்தான்:- விருந்தோம்புதற் பொருட்டு வேளாண்மை செய்பவனே உழவன். வேளாண்மை செய்வதிற் சிறந்ததினாலேயே, உழவர் வேளாளர் எனப் பெயர் பெற்றனர். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்று, கழகப்புலவர் நல்லாதனார் நவின்றுள்ளார். இக் கருத்தினை வள்ளுவர்,

     “இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்” (குறள், 1035);

என்னுங் குறளில் கூறுவது காண்க.

   7. வேளாளன் புரப்போர் கொற்றத்தான்:- அரசன் நல்லாட்சி நல்குதற்கும், அனைத்துத் தொழிலாளரும், ஊக்கமுடன் உழைப்பதற்கும், நாட்டை வளத்துடன் வாழ்விப்பதற்கும், வேளாண் பெருமக்களே கரணியமென்பார் வள்ளுவர்.

     “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்” (குறள். 1034);

பார் போற்றும் பழுதற்ற முதற்றொலாளியே உழவன். பிற தொழிலாளர்போல் பிறர்முன் கைகட்டி வாழவேண்டிய கடப்பாடற்ற, தன்னுரிமையாளனே, வேளாளன் என்பார் வள்ளுவர்.

பண்டைநாளில், சிற்றூர்வாணனாயினும், பேரூர்வாசியாயினும், கொல்லன், தச்சன், கற்றச்சன், கன்னான், தட்டான், கொத்தன், குயவன், வண்ணான், மஞ்சிகன் (நாவிதன்);, வாணியன், பாணன், பறையன் முதலிய பதினெண் தொழிலாளரும், குடிமக்கள் எனப்பட்டு, உழவர்க்குப் பக்கத்துணையாயிருந்து, தத்தம் தொழிலைச் செய்து, கதிரடிக்களத்தில் அவ்வக் காலத்துக் கூலதைக் கூலியாகப் பெற்று வாழ்ந்ததால்தான், அக் காலக் கூட்டரவுக் குமுகாயத்தில் தலைமைக்

குடிவாசியாக உழவன் திகழ்ந்தான் என்பார் பாவாணர். இக்கருத்தினை,

     “சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை” (குறள் 1031);

என்னுங் குறட்பாவில் வள்ளுவர் கூறியுள்ளமை காண்க.

   8. மெய்ப்பொருளறிஞர்:- தன்வயத்தம், தூய்மை, இயற்கை, முற்றறிவு, இயல்பாகக் கட்டினமை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலின்பம், எங்குமுண்மை பகாமை என்னும் தொண்குணத்தனாய், தனக்குவமை யில்லாத முழுமுதற் கடவுள், எல்லாம் வல்லனாதலின், அவனை எழு கூறாகப் பகுக்கும் ஆரிய முறையை மறுத்து, ஐம்பூதமும், ஐம்பூதத் தன்மையும், அறிவுப்பொறியைந்தும், கருமப்பொறியைந்தும், அவற்றையறியும் ஆதனும் (புருடனும்); அவன் அறிதற் கருவியாகிய மதியுள்ள மன நானுணர்வுகளும் ஆகிய இருபத்தைந்தோடு, காலம், இறைவன் என்னும் இரண்டையுங் கூட்ட, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தேழேயெனும் கருத்துப்பட,

     “சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு” (குறள் 27);

திருவள்ளுவர் கூறியிருப்பது, அவர் ஒருவரே, உண்மையான தெளிந்த மெய்ப்பொருளறிஞர் என்பதைக் காட்டும்

ஊழ் என்பது வினையுள் அடங்கும்.

   9. செந்தண்மை அந்தணர்:- கீழ்க்காணும் குறட்பாக்கள், அனைத்துயிர்கள் மாட்டும் அன்பு பூண்டொழுகும் வள்ளுவர்தம் அருள் உள்ளத்தை உணர்த்துவனவாக உள்ளன.

     “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்” (குறள், 251);.

தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரின் உடம்பைக் கொன்று தின்பவனிடத்தில், அருள் வீற்றிருப்பதெங்ஙனம்?

உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத உணவு நிரம்பவிருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும், அது அழிந்து போவதாதலானும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்ற வுயிரிகளை, மேல்மேலுங் கொல்வது, கொடுமையினுங் கொடுமையாதலானும்

     “எங்ஙனம் ஆளும் அருள்?” என்றார்.

     “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழு கலான்” (குறள், 30);.

அந்தணர் என்னுஞ் சொல், அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்னும் பொருளது. வள்ளுவர். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரையுள்ள எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு ஒழுகியதால், அருளுடைமையை வாழ்வியலின் முதலறமாகக் குறித்தார்.

   10. முதற்பாவலர்:- வள்ளுவர் குறள்வெண்பா பாடியதுபோல், எவரும் பாடவில்லை. திருக்குறள் போல் குறள்வெண்பாவிற்குச் சிறந்தநூல் முன்னுமில்லை பின்னுமில்லை.

     “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” (குறள், 55);

     “மங்கல மென்ய மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள், 60); என்பன,

இன்னோசையுள்ளன.

     “கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்

ஒண்டொடி கண்ணே யுள” (குறள். 1101);.

கீழ்காணும் எண்ணுள்ள, குறட்பாக்களும்,

     “குறள், 385, 751, 1032, 1062, பொருட் சிறப்புள்ளன. வள்ளுவரின் முதற்பாவன்மையைச் சிறப்பாகக் காட்டும், பாடலாக பாவாணர் குறித்துள்ளது வருமாறு :

     “நத்தம் போற்கேடு முளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது” (குறள். 235);

இதனைக் கபிலர் பெயரிலுள்ள,

     “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வள்ளைக் குறட்பா விரி”

என்னும் வள்ளுவமாலைப் பாவுந் தெரிவிக்கும்.

   11. தமிழ்நாட்டுத் திருப்புரவலர் (Patron Saint);:- ஒவ்வொரு நாட்டிற்கும் திருப்புரவலர் அல்லது காவல்தூயர் ஒருவர் உளர். தமிழ்நாட்டுத் திருப்புரவலர் திருவள்ளுவரே. அவர் முக்கால அரசியல் அறிஞராதலால் மக்கள் தொகை மிக்க இக் காலத்திற்குப் பொதுவாக ஏற்ற கூட்டுடைமையாட்சியை, எக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகளாகக் கீழ்க்காணும், குறட்பாக்களில் விளக்கியுள்ளார்.

     “பகுத்துண்டு பல்துயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தளை” (குறள், 322);.

பாடல் எண்கள் :- (குறள், 44, 227, 322, 1107, 1062); மேற்குறித்தவை கூட்டுடைமைப் பொருண்மை பொதிந்தவை.

     “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு” (குறள். 633);

என்னும் குறள், எக் காலத்திற்கும் ஏற்றதெனலாம்.

 வள்ளுவர் vaḷḷuvar, பெ. (n.)

   பிறப்புச் சடங் கினை நடத்தும் நாட்டுப்புறப் பெரியவர்; a village head who conducts birth ceremony.

   2. கணியம் கூறுபவரில் ஒரு

 of solouri; as astrologer.

     [வள்+வள்ளுவர்]

வள்ளுவர்கோட்டம்

வள்ளுவர்கோட்டம் vaḷḷuvarāṭṭam, பெ. (n.)

   திருவள்ளுவர் 2000-ஆம் ஆண்டு நிறைவைக் குறிப்பதற்காகவும், திருக்குறளைச் சிறப்பிப்பதற்காகவும், சென்னையில் தமிழக அரசால் எழுப்பப்பெற்ற கோயில் போன்ற அமைப்புடைய கோட்டம்; on completion of 2000 years of Tiruvassuvarāndu, the government of Tamil Nadu constructed a magnificient monument called Vasuvar Köttam located in Chennai. சென்னையில் உள்ள கவின்மிகு சுற்றுலாத் தலங்களுள் வள்ளுவர் கோட்டமும் ஒன்றாகும் (இ.வ.);.

     [வள்ளுவர் + கோட்டம். கோண் → கோடு → கோட்டம்.]

ஒ.நோ. பாண் → பாடு.

கோட்டம் :- மதில் சூழ்ந்த கோயில். கோயில். மா.வி. அகரமுதலி கோஷ்ட்ட (koshta); என்ற சொல்லிலிருந்து, கோட்டம் என்ற சொல் வந்ததாகக் காட்டுவது தவறு, என்பார் மொழிஞாயிறு. கோயிலைக் குறிக்கும் கோட்டம் என்னும் சொல்

     ‘உல்’ என்னும் மூலவேரினின்றும்,

     ‘குல்’ என்ற அடிவேரினின்றும் கிளைத்த தூய தென்சொல் (மறுப்புரை. மாண்பு, பக்.163);. இச் சொல் சிலப்பதிகாரம், மணிமேகலையில் கோயில், கோட்டம், நகரம், குடிகை என்னும் பெயரிலும், வளைந்த மாளிகை என்னும் பெயரிலும்

ஆளப்பட்டுள்ளதறிக.

வள்ளுவர்வாய்மொழி

 வள்ளுவர்வாய்மொழி vaḷḷuvarvāymoḻi, பெ. (n.)

வள்ளுவர் பார்க்க;see valluvar.

     “உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம்

உருக்குமே வள்ளுவர் வாய்மொழி” (திருவள்ளுவமாலை. மாங்குடி மருதனார்);.

     [வள்ளுவர் + வாய்மொழி.]

வள்ளூரம்

வள்ளூரம் vaḷḷūram, பெ. (n.)

   1. வள்ளூரம், 1 பார்க்க;see valluram.

   2. சூட்டிறைச்சி (வின்.);; roasted flesh-meat.

     “கழுகுண்ண வள்ளூர மேகமந்து” (சீவக. 1552);.

     [வள்ளூரம் → வள்ளூரம்.]

வள்ளெனல்

 வள்ளெனல் vaḷḷeṉal, பெ. (n.)

   குரைக்கும் ஒலிக்குறிப்பு (வின்.);; Onom, expr of barking sound.

     [வல் → வள் + எனல்.]

வள்ளை

வள்ளை vaḷḷai, பெ. (n.)

   1. கொடிவகை; creeping bindweed. I pomaea aquatica.

     “மகளிர் வள்ளை கொய்யும்” (பதிற்றுப்.29.2);.

   2. மகளிர் நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு; song sung by women when husking or hulling grain in praise of a hero.

     “மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட” (வள்ளுவமா. 5);,

     “வள்ளைத் தாள்போல் வடிகாதிவைகாண்” (மணிமே.20-53);.

     [வல் → வள் → வள்ளை. வள்ளை = உரற்பாட்டு (தொல்.பொருள்.63, நச்.);.]

வள்ளைக்கீரை

வள்ளைக்கீரை vaḷḷaikārai, பெ. (n.)

   கொடி வகை (பதார்த்த.596);; swamp cabbage-Ipomoea aquatica.

     [வள்ளை + கீரை.]

     [P]

வள்ளைப்பாட்டு

வள்ளைப்பாட்டு vaḷḷaippāṭṭu, பெ. (n.)

   மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, (சிலப். 29);; song sung by women in praise of a hero when husking or hulling grain.

     [வள்ளை + பாட்டு.]

இயலுமிடமெல்லாம் மகளிர் தம் வினைகளை இசையொடு செய்து வந்தமையை வள்ளைப் பாட்டால், அறியலாம்.

 வள்ளைப்பாட்டு vaḷḷaippāṭṭu, பெ. (n.)

   பெண்டிர் பாடும் பாடல் வகை; song sung by Womem.

     [வள்ளை+பாட்டு]

வள்ளையுப்பு

 வள்ளையுப்பு vaḷḷaiyuppu, பெ. (n.)

   ஒர் வகை உப்பு; a kind of salt.

     [வள்ளை + உப்பு.]

வள்வாய்ஆழி

வள்வாய்ஆழி vaḷvāyāḻi, பெ. (n.)

   பெருமை வாய்ந்த தேருருள்; royal wheel.

     “வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா” (நற்.78:8-9);.

     [வள்வாய் + ஆழி.]

வள்வு

வள்வு vaḷvu, பெ. (n.)

வள்2, 3 பார்க்க;see val, 3.

     “வள்வாய்ந்து பண்ணுக” (பு.வெ.12. இருபால். 3);.

     [வள் → வள்வு.]

வழகம்

 வழகம் vaḻkam, பெ. (n.)

   பவளம் (சங்.அக.);; Coral.

     [வளகம் → வழகம்.]

வழகு

வழகு vaḻku, பெ. (n.)

   1. வழவழப்பு, பளபளப்பு; smoothness, brightness.

   2. மென்மை; softness gloss.

     “வழகிதழ்க் காந்தண்மேல் வண்டிருப்ப” (பதினொ. திருவீரந். 70);.

     [வழுவு = வழுக்குந்தன்மை. வழுவு → வழகு.]

வழக்கச்சொல்

 வழக்கச்சொல் vaḻkkaccol, பெ. (n.)

   உலக வாழ்க்கைப் பயன்பாட்டில், வழங்குஞ் சொல் (யாழ்.அக.);; word in popular or colloquial use.

மறுவ. வாழ்வியற்சொல்

     [வழங்கு → வழக்கம் + சொல்.]

பேச்சு வழக்கில், பொதுவாகப் பயன்படுத்துஞ் சொல்.

வழக்கடிப்பாடு

வழக்கடிப்பாடு vaḻkkaḍippāḍu, பெ. (n.)

   தொன்றுதொட்டு வரும் பயிற்சி; ancient usage.

     “தொழிற்படக் கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற் குரித்து” (நன். 399, மயிலை);.

     [வழங்கு → வழக்கு + அடிப்படு → அடிப்பாடு.]

வழக்கநிலை

 வழக்கநிலை vaḻkkanilai, பெ. (n.)

   உறுதித் தன்மை; confirmation.

     [வழக்கம் + நிலை.]

வழக்கன்

வழக்கன் vaḻkkaṉ, பெ. (n.)

   1. வழக்குத் தொடுத்தவன் (வின்.); (யாழ்.அக.);; plaintiff.

   2. செலவிடுதற்குரியது; that which is intended for free distribution.

     “வழக்கனாயிருக்கிற சந்தனத்தைக் கொடுத்தான்” (ஈடு. 4, 3, 1);.

மறுவ. வழக்காளி.

     [வழக்கு → வழக்கன் (வே.க.3-152);.]

இலவயமாகப் பகிர்ந்தளிக்கும் பொருள்.

வழக்கபழக்கம்

 வழக்கபழக்கம் vaḻkkabaḻkkam, பெ. (n.)

   வாழ்வின் செயல்பாடு; habits of life.

     ‘அது அவர்களின் வழக்கபழக்கம்’.

     [வழக்கம் + பழக்கம்.]

வழக்கப்பசி

 வழக்கப்பசி vaḻkkappasi, பெ. (n.)

   பசியார்வம் சற்றே குறைவாயிருந்தாலும் நேரப்படி உண்ணுகை; to eat in time regularly even when there is no appetite.

     [வழக்கம் + பசி.]

வழக்கப்படி

 வழக்கப்படி vaḻkkappaḍi, பெ. (n.)

   முறைப்படி; as usual, according to custom.

     [வழக்கம் + படி.]

வழக்கமான

 வழக்கமான vaḻkkamāṉa, கு.வி.எ. (adv.)

   குறிப்பிட்ட முறையில், பலமுறை தொடர்ந்து செய்வதால் பழக்கமாகிப் போவது; that which is usual, customary.

வழக்கமான பாதையிலேயே இன்றும் போவோம் (இ.வ.);.

     [வழக்கம் → ஆன.]

வழக்கமாய்

வழக்கமாய் vaḻkkamāy, கு.வி.எ.. (adv.)

   1. முன் வழக்கப்படி; usually, habitually, conventionally.

   2. பெரும்பாலும்; generally, mostly.

     [வழக்கம் + ஆய்.]

வழக்கமுறைமை

 வழக்கமுறைமை vaḻkkamuṟaimai, பெ. (n.)

   மருந்தைப் பயன்கொள்ளும் முறை; prescription.

     [வழக்கம் + முறைமை.]

வழக்கம்

வழக்கம்1 vaḻkkam, பெ. (n.)

   1. பழக்கம், நடைமுறை; usage, practise, habit.

அவர் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்குவது வழக்கம் (உ.வ.);.

   2. மரபு; custom.

     “முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை”(தொல்,பொருள்.34);.

   3. பொதுவானது (வின்.);; that which is ordinary or common.

   4. ஈகை; giving, gift, chanty.

திருக்கை வழக்கம்.

   5. பயன்படுத்துகை; use, employment, as of a weapon or missile.

   6. நாள்தொறும் செய்வது; routine work.

க. பழகெ (6);.

     [வழங்கு → வழக்கம் (வே.க.3-152);.]

 வழக்கம்2 vaḻkkam, பெ. (n.)

   1. கை, கால் முதலியவற்றின் இயக்கம் (யாழ்ப்.);; functioning.

அவருக்குக் கால் ஒன்று வழக்கம் இல்லை (இலங்.);.

   2. புழக்கம்; use.

எனக்கு இடதுகைதான் வழக்கம்.

     [புழங்கு → ழங்கு → வழக்கம்.]

வழக்கர்

வழக்கர் vaḻkkar, பெ. (n.)

   1. நீள் வழி (அரு.நி.);; long passage.

   2. வழக்கம்; habit, convention.

     [வழங்கு → வழக்கு → வழக்கர் (வே.க.3-152);.]

வழக்கறி-தல்

வழக்கறி-தல் vaḻkkaṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. பழக்க வழக்கங்களை யறிதல்; to have a knowledge of manners and customs.

   2. சட்டமறிதல்; to be versed with law or Statute.

     [வழக்கு + அறி-, அள் → அறு → அறிதல்.]

அள்ளுதல் = பொருந்தியறிதல், பொருந்துதல்.

வழக்கறிதல் என்பது, சட்ட நுணுக்கங்களை, வழக்கறிஞர் தமது மதியினாற் பொருத்தியறிதல்.

வழக்கறிஞர்

 வழக்கறிஞர் vaḻkkaṟiñar, பெ. (n.)

   முறை தவறாது வழக்குரைப்போன்; lawyer, barrister, advocate.

     [வழக்கு + அறிஞர்.]

அறு → அறிஞர் = கூர்த்த மதிநுட்பமுடையோர்.

     ‘அர்’ பலர்பாலீறு.

ஒருகா. அறி → அறிகின்றான் → அறிகுந்நான்.

அறிகுந்நான் → அறியுந்நான் → அறியுநன்

அறியுநன் → அறிநன் → அறிஞன்

அறிஞன் → அறிஞர்.

அனைத்துச் சட்ட நுணுக்கங்களையும், அறிந்து தாம் மேற்கொண்ட வழக்கிற் பொருத்தி, வழக்காடுபவரே வழக்கறிஞர் என்க.

முறைமன்றத்தில், ஒருவர் சார்பாக அல்லது ஒரு அமைப்பின் சார்பாக வழக்காடும் தகுதியும், அதற்கான அனுமதியும் பெற்றவர்.

வழக்கறு

வழக்கறு1 vaḻkkaṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   வழக்கத்தினின்று கிளவியம் மறைந்து போதல்; to become obsolute, as a word, to fall into desuetude.

     [வழக்கு + அறு-, அர் → அறு- (த.வி.);.]

ஒருசொல், உலகவழக்கினின்று, அழிந் தொழிதல்.

 வழக்கறு2 vaḻkkaṟuttal,    4 செ.குன்றாவி. (v.t), செ.கு.வி. (v.i.)

   1. போக்கைத் தடுத்தல்; to felter or hinder one’s movement.

     “வழி வழக்கறுக்கும்” (குறுந். 324);.

   2. வழக்கைத் தீர்த்து விடுதல் (வின்.);; to decide, as a case, to settle, as a dispute.

உன்னோடு வழக்காடிக் கொண்டிருந்தால், என்வேலை கெட்டுவிடும் (உ.வ.);.

     [வழக்கு + அறு-. அறு-தல் (த.வி.); → அறு-த்தல் (பி.வி.);.]

வழக்கறுப்பு

 வழக்கறுப்பு vaḻkkaṟuppu, பெ. (n.)

   மண விலக்கு (விவாகரத்து); என்பதற்கு மாற்றாக, பச்சைமலை மலையாளிகள் பயன்படுத்தும் சொல்; a word used by Paccaimalai Malaiyāli which meansdivorce

மறுவ. மணமுறிவு

     [வழக்கு+அறுப்பு]

வழக்கழிவு

வழக்கழிவு vaḻkkaḻivu, பெ. (n.)

   முறை (நீதி); தவறுகை; injustice.

     “வழக்கை வழக்கழிவு சொல்லின்” (தமிழ்நா. 35);.

மறுவ. அழிவழக்கு, இழிவழக்கு, நேர்மைக் கேடு.

     [வழக்கு + அழிவு.]

வழங்கு (த.வி.); → வழக்கு (தொ.பெ.); + அழிவு.

அழி → அழிவு (தொ.பெ.தொ.ஆ.கு.);

     ‘வு’ வழக்கழிவு என்பது வழக்காறு.

வழக்கு பற்றியசச்சரவு என்னும் பொருண்மைத்து.

வழக்காடி

வழக்காடி1 vaḻkkāṭi, பெ. (n.)

   விளக்குக் கூடு; light house.

மறுவ. வழிகாட்டு விளக்கு.

     [விளங்கு → வழங்கு → வழக்கு + ஆடி. ஆடு + இ – ஆடி.]

     [P]

 வழக்காடி2 vaḻkkāṭi, பெ. (n.)

   வழக்காளி (வின்.);; plaintiff.

     [வழக்கு → வழக்காடி

     ‘இ’ சொல்லர்க்க ஈறு.]

வழக்காடு-தல்

வழக்காடு-தல் vaḻkkāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சொற்போராடுதல்; to dispute, wrangle.

   2. நயன்மை (நீதி);க்காகப் போராடுதல்; to litigate.

உச்ச (நீதி); முறை மன்றத்திலும் வழக்காடிப் புகழ்பெற்றவர் (இ.வ);.

   3. ஊடுதல்; to sulk.

     “தோளினை யுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது.” (பு.வெ. 12 பெண்பாற். 15, கொளு, உரை);.

     [வழக்கு + ஆடு-, ஆல் → ஆள் → ஆளு → ஆடு-தல் – வினையாற்றுதல், செயற்படுதல்.]

வழக்கிற் போடுதல் (வே.க.3-153);.

வழக்காடுமன்றம்

 வழக்காடுமன்றம் vaḻkkāṭumaṉṟam, பெ. (n.)

   கொடுக்கப்பட்ட தலைப்புப்பொருளை ஆதரித்து, ஒருவரை எதிர்த்து மற்றொருவர், அற(நீதி); மன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சி; a debating forum with scholars, as of argument in court.

சிறப்பு விழா நாட்களில், வழக்காடு மன்றம் என்ற நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது (இ.வ.);.

     [வழக்காடு + மன்றம்.]

தகுதி சான்ற ஒருவரை நடுவராகக் கொண்டு, குறிப்பிட்டதொரு பொருள் குறித்து, ஒன்றை எடுத்து மொழிந்தும், எதிர்மறுத்தும் (ஒட்டியும் வெட்டியும்); இருவர் அல்லது இருவேறணியர் சொற்போரிடுதல்.

வழக்காட்டு

வழக்காட்டு vaḻkkāṭṭu, பெ. (n.)

   1. வன்மையாக வழக்காடுகை, சொற்போர் புரிகை; disputation, arguement, averment.

   2. ஊடல்; sulks, flown.

     “வழக்காடிய வழக்காட்டுப் போக” (பு.வெ.9, 51. உரை);.

மறுவ. சொல்லாட்டு.

     [வழக்காடு (த.வி.); → வழக்காட்டு (பி.வி.); = போராட்டு (வே.க.3-153);.]

வழக்காரம்

 வழக்காரம் vaḻkkāram, பெ. (n.)

   மறுப்புரை, சொற்போர்; dispute.

     “மணவாளப் பிள்ளையுடன் வழக்காரம் நன்றாச்சே” (வள்ளி கதை.);. அறமன்றத்தில் வழக்கின் வெற்றிக்கு வழக்காரம் இன்றியமையாதது (உ.வ.);.

     [வழக்கு + ஆரம் – வழக்காரம்.]

     ‘ஆரம்’ + ஓர் ஈறு.

வழக்காரை

 வழக்காரை vaḻkkārai, பெ. (n.)

   கக்கலைத் தடுக்கும் கொட்டைப் பருப்பு; grey emetic nut – Randia Uligirosa.

வழக்காறு

வழக்காறு1 vaḻkkāṟu, பெ. (n.)

   மக்களின் வாழ்க்கையில் காலம் காலமாக எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு, நடைமுறையில் வழங்கி வருபவை; custom and usage, lore (of the folk); from time to time.

சொற்களின் வழக்காறுகள் மாந்தர்தம் பண்பாட்டுச் சின்னங்களாகும் (உ.வ.);.

மறுவ. உலக வழக்கு. வழக்கியல்.

வழக்காறு பற்றி இளம்பூரணர், கல்லாடனார் போன்ற உரையாசிரியர் வரைந்துள்ளது வருமாறு:

இளம்பூரணார்:- வழக்காறு இரு வகைப்படும். இலக்கண வழக்கும், இலக்கணத்தோடு பொருந்தின மரூஉ வழக்கும் என.

     “இல் முன் என்பதனை முன்றில் என்று தலைதடுமாறச் சொல்லுதல், இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ வழக்கு.”

கல்லாடனார் :- இனிச் சோழணாடு என்பதனைச் சோணாடு என்பது மரூஉ வழக்கு (இளம்.தொல்.சொல்.17);. இலக்கணத்தொடு பொருந்தின மரூஉ வழக்கும், மரூஉ வழக்குமென இருவகைப்படும் (கல்.தொல்.சொல்.17);.

     “வழக்காறென்பது வழங்கற்பாடே மேற்கொண்டு, ஒரு காரணமும் நோக்காது, வாய்பாடு பகுத்துப் பயிலச்சொல்லி வருவது”.

     “வழக்காறு வழங்குதல் பற்றி வருவது” (கல்.தொல்.சொல்.7);.

 வழக்காறு2 vaḻkkāṟu, பெ. (n.)

   1. வழக்கு; usage.

   2. பழக்கவொழுக்கம்; customs, manners, ancient practice.

     “வாய்மையுடையார் வழக்கு” (திரிகடு. 37);.

மறுவ. நடைமொழி.

     [வழக்கு + ஆறு.]

வழக்காற்றுப்பாடல்

 வழக்காற்றுப்பாடல் vaḻkkāṟṟuppāṭal, பெ. (n.)

   ஒப்பாரி, தாலாட்டு எனும் வாய்மொழி இலக்கியங்களைச் சுட்டும் பெயர்; an oral literature which denotes a song of lamentation of a deceased person and a lullaby sung by a women who rock the Craddles.

     [வழக்கு+ஆறு+பாடல்]

வழக்காளி

வழக்காளி vaḻkkāḷi, பெ. (n.)

   1. வழக்குத் தொடுத்தவன்; plaintiff.

   2. சொற்போர் புரிவோன் (யாழ்.அக.);; disputant, wrangler, counsel.

   3. சட்ட நுணுக்கத்தையும், வழக்கின் தன்மையும் அறிந்தவன் (இ.வ.);; one who is well-versed in laws and case details (customs);.

     [வழக்கு + ஆளி.]

ஒ.நோ. கூட்டாளி = பாட்டாளி, முதலாளி = தொழிலாளி, போராளி.

     ‘ஆளி’ உடைமை குறித்த ஈறு.

வழக்கிடு-தல்

வழக்கிடு-தல் vaḻkkiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. சொற்போர் புரிதல், சொல்லாடுதல்; to dispute, to argue.

   2. வன்மையாய் வழக்குரைத்தல், பூசலிடுதல்; to wrangle, argue vehemently.

     [வழக்கு + இடு-.]

வழக்கியல்

வழக்கியல் vaḻkkiyal, பெ. (n.)

   1. வழக்காறு; usage.

     “எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்” (நன்.267);.

   2. உலக வழக்கிலுள்ள கொச்சை நடை (வின்.);; conventional colloquial style.

     [வழக்கு + இயல்.]

வழக்கிற-த்தல்

 வழக்கிற-த்தல் vaḻkkiṟattal, செ.கு.வி. (v.i.)

   நாட்டார் வழக்காறுகள் வழக்கத்தில் இருந்து படிப்படியாக மறைதல்; usage of customs not extant.

     [வழக்கு+இறத்தல்]

வழக்கீடு

 வழக்கீடு vaḻkāṭu, பெ.(n.)

   வழக்கு தொடுத்தல் (தகாதா);; law suit.

     [வழக்கு+ஈடு]

வழக்கு

வழக்கு1 vaḻkkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   போக்குதல்; to cause to go.

     “வழக்குமாறு கொண்டு” (கலித்.101);

     [வழங்கு (த.வி.); → வழக்கு-, (பி.வி.);.]

 வழக்கு2 vaḻkku, பெ. (n.)

   1. மாநகர் முறை மன்றம் ஊரக ஐவராயம் (ஊர்ப்பஞ்சாயத்து); போன்றவற்றில் தீர்வுக்காக முன் வைக்கப்படுவது; suit, case, கொலை வழக்கு (உ.வ.);. உங்கள் வழக்கு நாளை உசாவலுக்கு வருகிறது (விசாரணைக்கு வருகை); (இ.வ.);. பொய்வழக்குப் போடுவது தற்காலத்தில் வாடிக்கையாகிவிட்டது (உ.வ.);.

   2. இயங்குகை; moving, passing to and from.

     “வழக்கொழியா வாயில்” (பு.வெ.10, முல்லைப். 4);.

   3. உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இருவகை வழக்குகள்; usage, of two kinds, viz., ulaga-valakku, ceyyul-valakku.

     “வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே” (தொல்.பொருள்.647);.

   4. இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்ற இருவகை வழக்குகள் (நன். 266, மயிலை.);; usage in respect of words in lit. and in speech, of two classes, viz., iyalbu-valakku, tagudivalakku.

     “இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென்றாகும் மூவகை யியல்பும் இடக்கரடக்கல் மங்கலம் குழுஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்” (நன்.207);.

   5. பழக்கவொழுக்கம்; customs, manners, ancinet practise.

     “வாய்மையுடையார் வழக்கு” (திரிகடு. 37);.

   6. நெறி முறை, வழி; way, method.

     “அன்புற் றமர்ந்த வழக்கென்ப” (குறள். 75);.

   7. நயன்மை (நீதி);, முறைமை; justice.

     “வழக்கன்று கண்டாய்” (திவ். இயற். 2, 19);.

   8. அற மன்றத்தில் தொடுக்கப்பட்ட முறையான வழக்கு (தற்கா.);; litigation. கொலை வழக்கு (உ.வ.);. உங்கள் வழக்கு நாளை (விசாரனைக்கு); உசாவுதலுக்கு வருகிறது (இ.வ.);.

     ‘வழக்குத்தீர்ப்பதில் மரியாதைராமன்தான்’ (பழ.);

   9. முறை மன்ற வழக்கு; appeal.

   10. கருத்து வேறுபாடு, சொற்போர் புரிகை; controversy dispute.

   11. வண்மை; bounty, liberality.

     “உடையான் வழக்கினிது” (இனிய. நாற். 3);.

     [வழங்கு → வழக்கு.]

வழக்கு எனப்படுவது உலகவழக்காகிய மக்கள் வழக்கிலும், கற்றுத் துறைபோகிய பாவலர் இயற்றும் இலக்கிய வழக்கிலும், தொன்றுதொட்டுப் பயின்று வருவது. இது பற்றித் தொல்காப்பியர்,

     “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர்” (தொல். 999); என்று குறிப்பிட்டுள்ளது ஒர்ந்துணரத்தக்கது. அகரமுதலியில் வழக்கு என்னும் சொற்கு, செ.அ.க.குறிக்கப்பட்டுள்ள 7-ஆம் பொருள் (litigation); முறை (நீதி); மன்றத்தில் செய்யும் வியாச்சியம்” என்றுள்ளது. இஃது எங்ஙனம் இக்காலத்தது (mod); என்பது விளங்கவில்லை (வே.க.

   3. பக்.152).

ஆனால் ஒல்காப் புகழ் தொல்காப்பியர், தமது நூலுள், தொன்முது வழக்குகளையும், கல்லாதார் நாவில் பயிலும், உலகியல் வழக்குகளையும் கற்றறிந்தார் ஏத்தும் புலனெறி வழக்குகளையும், தமிழர்தம் வாழ்வியலுள் இணைத்துக் கூறியுள்ளார்.

கிறித்துவிற்கு முன்னரே, அனைத்து வழக்குகளையும், வாழ்வியலுடன் இணைத்துக் கூறியுள்ள நுண்மாண் நுழைபுலம் இன்றளவும் பொருட் பொருத்தப்பாடாயுள்ளது உய்த்துணரத்தக்கவொன்றாகும்.

சொற்கள் வழக்கு மிகுதி பற்றிப் பொருளறியப்படுவதும், வழக்கின்மை பற்றிப் பொருளறியப்படாமையுமுண்டு. வழக்கு காலந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும். தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய பூசை என்பது, இக் காலத்துப் பூனை என வழங்குகின்றது.

வழக்கு என்னுஞ் சொல்குறித்து உரையாசிரியர்களின் கருத்து வருமாறு :-

சேனாவரையர் செப்புவது :- வழக்கு என்பது காரணமின்றி வழங்கற்பாடே பற்றி வருவது (சேனா.தொல்.சொல்.17);.

பரிமேலழகர் பகர்வது :- ஒரு பொருளைத் தனித்தனியே எனது. எனதென்றிருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது கடன் கோடல் முதல் பதினெட்டு பதத்தது ஆம் (பரிமே.திருக்.உரைப்பா.);.

தெய்வச்சிலையார் மொழிந்தது :– ஒப்புமையின்றி உலகத்தார் பயில வழங்கப்படுவது (தெய்.தொல்.சொல்.17);.

சுப்பிரமணிய தீட்சதர் சொன்னது :- வழக்காவது உலக வழக்கு செய்யுள் வழக்கென இருவகைப்படும். அவற்றை வடநூலார் லெளகிகப் பிரகரியை, வைதிகப் பிரகரியை என்பர் (சுப்பி. பிரயோ.18);.

 வழக்கு3 vaḻkku, பெ. (n.)

   1. மொழி வழங்கிவரும் முறை; use of language, variety of style.

பேச்சுவழக்கு (உ.வ.);. எழுத்து வழக்கு (இக்.வ.);, வட்டார வழக்கு (இ.வ.);.

   2. மக்களால் பின்பற்றப்படுவதாகவும்

   பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது, புழக்கம்; that which is current in usage.

நீங்கள் குறிப்பிடும் பல சொற்கள் இப்போது வழக்கில் இல்லை (உ.வ.);.

வழக்கில் உள்ள நடைமுறை இதுதான் (இ.வ.);.

     [வழங்கு → வழக்கு.]

 வழக்கு4 vaḻkku, பெ. (n.)

   கணக்கு என்பதனோடு இணைத்து வரும் சொல்; a word which occurs in combination kanakku (கணக்கு);.

வழக்குக்கேட்டல்

 வழக்குக்கேட்டல் vaḻkkukāṭṭal, பெ. (n.)

வழக்குக்கேள்-தல் பார்க்க;see valakku-k-kel.

     [வழக்கு + கேட்டல்.]

வழக்குக்கேள்-தல்

வழக்குக்கேள்-தல் vaḻkkukāḷtal,    11 செ.குன்றாவி. (v.t.)

   உண்மை (நீதி); யறிதற் பொருட்டு வழக்கினை ஆய்வு செய்தல்; to hear or try a case to render justice.

     [வழக்கு + கேள்-.]

வழக்குச்செய்-தல்

வழக்குச்செய்-தல் vaḻkkucceytal,    1 செ.கு.வி. (v.i.)

வழக்காடு-தல் 1, 2 (யாழ்.அக.); பார்க்க;see valakkadu.

     [வழக்கு + செய்-.]

வழக்குச்சொல்

 வழக்குச்சொல் vaḻkkuccol, பெ. (n.)

வழக்கச்சொல் பார்க்க;see valakka-c-col.

     [வழக்கு + சொல்.]

வழக்குத்தீர்-த்தல்

வழக்குத்தீர்-த்தல் vaḻkkuttīrttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வழக்கினை ஆய்ந்து (நீதியினை); மெய்ம்மையை (நீதியினை); முடிவு செய்தல்; to decide, settle, as a law-suit or after or trial dispute.

     “வழக்குத் தீர்ப்பில் மரியாதைராமன் தான்” (பழ.);.

   2. நடு நிலையிலிருந்து சந்து செய்தல் (இ.வ.);; to arbitrate.

மறுவ. வழக்கறுத்தல், முறைசெய்தல்.

     [வழக்கு + தீர்-.]

வழக்குத்தொடர்-தல்

வழக்குத்தொடர்-தல் vaḻkkuttoḍartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அற (நீதி); மன்றத்திற்கு வழக்கினை எடுத்துச் செல்லுதல்; to avail court of law, to file a law suit in court.

   2. சொற்போரிடுதல்; to carry on a dispute, to aver or argue.

     [வழக்கு + தொடர்-.]

வழக்குத்தொடு-த்தல்

வழக்குத்தொடு-த்தல் vaḻkkuttoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

வழக்குத்தொடர், 1 பார்க்க;see valakku-t-todar.

     [வழக்கு + தொடு-.]

வழக்குத்தோற்றல்

 வழக்குத்தோற்றல் vaḻkkuttōṟṟal, பெ. (n.)

வழக்குத்தோல்-தல் பார்க்க;see valakku-t-tol.

     [வழக்கு + தோற்றல்.]

வழக்குத்தோல்-தல்

வழக்குத்தோல்-தல் vaḻkkuttōltal, செ.கு.வி. (v.i.)

   1. வழக்கில் தோல்வியுறுதல்; to lose a suit or ease.

   2. எதிர் வழக்குரைத்தலில் தோல்வியுறுதல்; lapse or deceat in counter argument.

     [வழக்கு + தோல்-.]

வழக்குப்பேசு-தல்

வழக்குப்பேசு-தல் vaḻkkuppēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வழக்குரைக்கும் போது முறைமையை (நீதியை); நிலை நாட்டுதல் (யாழ்.அக.);; to argue ethically in a case.

   2. சட்ட நுணுக்கங்களை யெடுத்துக் கூறி வழக்காடுதல்; to dispute, wrangle, aver with legal facts.

     [வழக்கு + பேசு-.]

வழக்குப்பொருள்

 வழக்குப்பொருள் vaḻkkupporuḷ, பெ. (n.)

   ஒரு சொற்குப் பேச்சுவழக்கிலுள்ள பொருள் (வின்.);; popular meaning of a word.

மறுவு. நடைமொழிப்பொருள்.

     [வழக்கு + பொருள்.]

வழக்குப் பொருள் காலந்தோறும் மாறிக்கொண்டேயிருப்பதை ‘நாற்றம்’ என்னும் சொல்லா லறிக.

வழக்குப்போடு-தல்

வழக்குப்போடு-தல் vaḻkkuppōṭudal,    19 செ.குன்றாவி. (v.t.)

வழக்குத்தொடர்-தல் பார்க்க;see Valakku-t-todar-,

     [வழக்கு + போடு-.]

வழக்குமுறி

 வழக்குமுறி vaḻkkumuṟi, பெ. (n.)

   முறையீடு (புகார்);; complaint.

வழக்குமொழி

 வழக்குமொழி vaḻkkumoḻi, பெ. (n.)

வழக்குச்சொல் பார்க்க;see valakku-c-col.

மறுவ. உலகவழக்கு.

     [வழங்கு → வழக்கு + மொழி.]

பொதுமக்கள் வழங்கும் சொற்கள், வழக்குச் சொற்கள் அல்லது வழக்குமொழிகள் எனப்படும்.

வழக்குரைஞர்

 வழக்குரைஞர் vaḻkkuraiñar, பெ. (n.)

வழக்கறிஞர் பார்க்க;see vala-k-karinar.

     [வழக்கு + உரைஞர்.]

வழங்கல்

 வழங்கல் vaḻṅgal, பெ. (n.)

   உண்டாக்குகை; to be productive, to supply.

     [வழங்கு → வழகல்.]

வழங்காதொழி-தல்

வழங்காதொழி-தல் vaḻṅgādoḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   மக்கள் பேச்சு வழக்கிலில்லாது போதல்; to out of usage as of words.

     [பழங்கு → வழங்கு → வழங்காது + ஒழி-.]

காலதர், சாளரம், பலகணி என முச்சொல் லிருக்கவும் சன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல்லை வேண்டாது வழங்கியதால் அம் முச்சொல்லே போல் எத்துணையெத்துணை அருந்தமிழ்ச் சொற்கள் வழங்காதொழிந்தன. அவை எண்ணத் தொலையா.

வழங்காத்தேர்

வழங்காத்தேர் vaḻṅgāttēr, பெ. (n.)

   பேய்த்தேர்; mirage.

     “களிறு…… வழங்காத்தேர் நீர்க்கவா அங்கானம்” (கலித்.7);.

     [வழங்காத்தேர் = வழக்கிலில்லாத் தேர். வழங்கு + ஆ (இ.நி.); + தேர்.]

வழங்காப்பொழுது

வழங்காப்பொழுது vaḻṅgāppoḻudu, பெ. (n.)

   உச்சி வேளை; midday, noon.

     “வழங்காப் பொழுது நீ கன்று மேய்ப் பாய்போல்” (கலித். 112);.

     [வழங்கு + ஆ (எ.ம.இ.நி.); + பொழுது.]

வழங்காவழி

 வழங்காவழி vaḻṅgāvaḻi, பெ. (n.)

   புதுவழி, மக்கள் செல்லா வழி; new track, unused passage.

மறுவ. காட்டுவழி

     [வழங்கு + ஆ (எ.ம.இநி.); + வழி.]

வழங்கி

வழங்கி vaḻṅgi, பெ. (n.)

   1. தன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பவன் (வின்.);; pimp, one who prostitutes one’s wife.

   2. விலைமாது; harlot, prostitute.

   க., து. வள;ம. வழநமிய.

     [வழங்கு → வழங்கி.]

வழங்கு

வழங்கு1 vaḻṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. இயங்குதல், நகர்தல்; to move, proceed, advance.

     “முந்நீர் வழங்கு நாவாய்” (புறநா. 13);.

   2. உலாவுதல்; to walk about.

     “சிலம்பில் வழங்க லானாப் புலி” (கலித். 52);.

   3. தொன்று தொட்டு நடைபெற்று வருதல்; to be in existence from the past.

   4. புழக்கத்திலிருத்தல்; to be in usage, as money, words, etc.

   5. அசைந்தாடுதல்; to swing one’s body backwards and forwards, as an elephant.

     “மழகளிறு கந்து சேர்பு…… வழங்க” (புறநா. 22);.

   6. கூத்தாடுதல்; to dance.

     “பேய் மகள் வழங்கும் பெரும்பாழாகும்” (பதிற்றுப். 22, 37);.

   7. நிலைபெறுதல்; to last, to be static, to endure, to stand established.

     “வானின் றுலகம் வழங்கி வருதலான்” (குறள். 11);.

   8. பயிற்சி பெறுதல் (வின்.);; to be accustomed, practised, to under go training.

   9. கொண்டாடப்படுதல்; to be esteemed, honoured, respected, celebrated.

     “வழங்கு தாரவன்” (சீவக. 2504);.

   10. பொருத்தமாதல், ஏற்றதாதல்,

   தகுதியுடையதாதல்; to be fit, suitable.

     “வாய்க்கு வழங்காத கறி” (வின்.);.

க. பழகு

     [பழங்கு → வழங்கு.]

 வழங்கு2 vaḻṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   மொழி, கதை முதலானவை மக்களது பயன்பாட்டில் அல்லது புழக்கத்திலிருத்தல்; to be current.

நல்லதங்காள் கதை இன்றும் மக்களிடையே வழங்குகிறது. அழகர்வரணிப்பு மதுரை மாவட்டத்தில் வழங்குகிறது (இ.வ.);.

   2. குறிப்பிடுதல்; to call.

நாவலந்தேயத்தை (இந்தியாவை); பாரதம் என்றும் வழங்குகிறோம் (இ.வ.);.

 வழங்கு3 vaḻṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பயன்படுத்துதல், கையாளுதல்; to use, practice.

தமிழ்ப்புலவர் தனித்தமிழ்ச் சொற்களையே வழங்குதல் வேண்டும் (உ.வ.);.

   2. கொடுத்தல், அளித்தல், வழங்குதல், பகிர்தல்; to give, supply, distribute.

     “வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி” (பெரும்பாண்.26);.

இந்தப் பகுதியில் அன்றாடம் குடிநீர் வழங்கப்படுகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் (இ.வ.);

   3. அனுப்புதல், உரிய காலத்தே, பொருத்தமானதைப் பயன்படுத்துதல்; to cause to move, to send, to discharge.

     “சாபநோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்” (புறநா. 14);.

   4. சொல்லுதல், முணுமுணுத்தல்; to tell, speak, utter, to murmur or whisper.

     “யானோ தேறேனவர் பொய் வழங்கலரே” (குறுந். 21);.

க. பழகு (g.);

     [புழங்கு → பழங்கு → வழங்கு.]

 வழங்கு4 vaḻṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   நடமாடுதல் (இ.வ.);; to frequent.

 வழங்கு5 vaḻṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நிகழ்ச்சி, படைப்பு முதலியவற்றை புதியதாக உருவாக்கி முன்வைத்தல்; to present entertainments.

   2. தொலைக்காட்சி, வானொலி முதலியவற்றில் ஒரு நிறுவனமோ, அல்லது நன்றறியவரப் பெற்றவரோ, நிகழ்ச்சியொன்றைத் தன் செலவில் நடத்த முன்வருதல்; to sponsor a programme on TV, radio etc.

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியவர்கள் பகட்டு (ஆடம்பர);ப் பொருட்கள் தயாரிப்பவர்கள்.

   3. கால், கை முதலியவை இயங்குதல் (இலங்.);; to function of limbs.

கால், கை வழங்காமல் போயிற்று (இலங்கை வழக்கு);.

     [புழங்கு → பழங்கு → வழங்கு.]

வழங்குநர்

வழங்குநர் vaḻṅgunar, பெ. (n.)

   கொடுக்குநர், தருபவர்; distributor, supplier, donor.

     “மான்ற மாலை வழங்குநர்ச் செறீஇய” (நற்-29.4);.

     [வழங்கு → வழங்குநர்.]

கொடையளிப்பவர், ஒன்றை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் பான்மையர்.

வழட்டல்

 வழட்டல் vaḻṭṭal, பெ. (n.)

   தோல் நழுவச் செய்கை; scratching the skin from the body.

     [வழுட்டல் → வழட்டல்.]

வழட்டு-தல்

வழட்டு-தல் vaḻṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வழற்றுதல் (வின்.);; to cause the skin to peel off.

மறுவ. வழற்றுதல்

     [வழல் → வழற்று → வழட்டு-,]

வழண்டு-தல்

வழண்டு-தல் vaḻṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கழலுதல், தோல் உரிதல் (இ.வ.);; to be abraded, to peel off.

     [வழட்டு → வழண்டு.]

வழப்பம்

வழப்பம் vaḻppam, பெ. (n.)

   1. பழக்கம், வழக்கம்; usage, practice, habit, custom.

   2. வழக்கம் (யாழ்.அக.); பார்க்க;see Valakkam.

வழமை

வழமை vaḻmai, பெ. (n.)

   1. வழக்கம்; habit, habitual act.

   2. இயல்பு நிலை; normalcy, actuality.

     “நகரம் வழமைக்குத் திரும்பி விட்டது”.

     [பழமை → வழமை.]

வழற்சிங்கி

 வழற்சிங்கி vaḻṟciṅgi, பெ. (n.)

   ஆறாத சீழ்ப் புண்ணோய்; a kind of ulcer disease.

வழற்று-தல்

வழற்று-தல் vaḻṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தோல் வழலச் செய்தல், கழலச் செய்தல்; to cause the skin to peel off.

     [வழல் → வழற்று (பி.வி);.]

ஒ.நோ. கழல் → கழற்று.

வழலகரம்

 வழலகரம் vaḻlagaram, பெ. (n.)

   நாய் வேளை, நாய்க் கடுகு; a plant-cleome niscosa.

வழலம்

 வழலம் vaḻlam, பெ. (n.)

   நாள்; day.

வழலிக்கை

 வழலிக்கை vaḻlikkai, பெ. (n.)

   இளைப்பு (வின்.);. களைப்பு; weariness, fatigue, tiredness.

   தெ. படலிக;க. பளகெ.

     [வழல் → வழலி → வழலிக்கை.]

வழலை

வழலை vaḻlai, பெ. (n.)

   1. பாம்பு வகையு ளொன்று (சீவரட். 344);; ground snake.

     “வேனில் ஒதிப் பாடுநடை வழலை” (நற்.922);.

   2. ஒருவகை முப்பு (மூ.அ.);; a kind of medicinal salt.

   3. சவர்க்காரம் (பதார்த்த.1106);; soap.

   4. புண்ணினின்று வடியும் ஊனீர்; exudation from a sore

     “புண் சலவையாக்கி அல்லது நீற்றிப் புகையையடக்கி பழுக்காத சரக்குகளையெல்லாம் பழுக்க வைக்கும்;

 calcified powder of three salts, universal salt, this aids to calcify various other drugs.

     [வழலை + கண்ணம். சுள் → சுண் → சுண்ணம்.]

கடைச்சரக்குகளை நீற்றித் தூய்மையாக்கும் முப்பூத்தூள். நாட்பட்ட எல்லா நோய்களையும் நீக்கும்.

வழலைச்சுத்தி

 வழலைச்சுத்தி vaḻlaiccutti, பெ. (n.)

   தொண்டையிலுள்ள கோழையை நீக்கல்; to remove the mucous or phlegm from the throat.

     [வழலை + சுத்தி.]

வழலைச்செய்நீர்

 வழலைச்செய்நீர் vaḻlaicceynīr, பெ. (n.)

   நளினம், உடம்பு நடுக்கம், தடுக்க உட்கொள்ளும் மருந்து, நச்சுயிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் நஞ்சுவிலிருந்து உருவாக்கப்படும் செய்நீர் (திராவகம்);; a liquid taken in during the practice of yoga to prevent tremor and other diseases, an acid obtained from the fluid emitted by poisonous creatures. When dropped on the skin vesicles are formed.

     [வழலை + செய்நீர்.]

வழலைதள்ளல்

 வழலைதள்ளல் vaḻlaidaḷḷal, தொ.பெ. (vbl.n.)

   கோழை வாயினின்று வெளி வருதல்; discharge of phlegm from mouth.

     [வழலை + தள்ளல்.]

வழலைதொட்டாடல்

 வழலைதொட்டாடல் vaḻlaidoṭṭāṭal, தொ.பெ. (vbl.n.)

   முப்பூவை முதன்மையாக வைத்துக் கொண்டு, மருந்துகளைக் கையாளுதல்; preparing medicine having universal salt on hand.

     [வழலை + தொட்டாடல்.]

வழலைத்திறவுகோல்

 வழலைத்திறவுகோல் vaḻlaittiṟavuāl, பெ. (n.)

   வெடியுப்புச் சுண்ணம்; calcified powder of potassium nitrate.

     [வழலை + திறவுகோல்.]

வழலைநீர்

வழலைநீர் vaḻlainīr, பெ. (n.)

   1. தலைப் பிண்டச் செயநீர்; a liquid extracted from the head of the first foetus of a woman.

   2. சவுக்காரநீர்; pungent liquid extracted from valalai.

   3. பனிக்குடத்து நீர்; liquor amni.

     [வழலை + நீர்.]

வழலைநோய்

 வழலைநோய் vaḻlainōy, பெ. (n.)

   கோழை; phylegmatic disease.

     [வழலை + நோய்.]

வழலைப்பச்சை

 வழலைப்பச்சை vaḻlaippaccai, பெ. (n.)

   வழுக்குப்பாசி; lichen or emerald.

     [வழலை + பச்சை.]

வழலைப்பாம்பு

 வழலைப்பாம்பு vaḻlaippāmbu, பெ. (n.)

   ஓர் வகைப் பாம்பு; a kind of ground snake.

     [வழலை + பாம்பு.]

வழலைமார்க்கம்

 வழலைமார்க்கம் vaḻlaimārkkam, பெ. (n.)

   முப்பு வடிக்கும் முறை; the process of making and using the universal three salt.

     [வழலை + மார்க்கம்.]

 Skt. marga → த. மார்க்கம்.

வழலைமுப்பு

 வழலைமுப்பு vaḻlaimuppu, பெ. (n.)

வழலை பார்க்க;see valalai.

     [வழலை + முப்பு.]

வழலையாதி

 வழலையாதி vaḻlaiyāti, பெ. (n.)

   முதிர்கரு; foetus.

வழலையுப்பு

வழலையுப்பு1 vaḻlaiyuppu, பெ. (n.)

   1. சவுக்கார உப்பு.; a salt extracted from dhoby’s earth-fuller’s earth.

   2. மூப்பு; universal salt.

     [வழலை + உப்பு.]

 வழலையுப்பு2 vaḻlaiyuppu, பெ. (n.)

வழலை, 2 (யாழ்.அக.); பார்க்க;see valalai, 2.

     [வழலை + உப்பு.]

வழலையுப்புசெயநீர்

 வழலையுப்புசெயநீர் vaḻlaiyuppuseyanīr, பெ. (n.)

   வாலையுப்பு செயநீர், மதிசெயநீர்; a pungent liquid preparation from salts (சா.அக.);.

வழலைரசம்

 வழலைரசம் vaḻlairasam, பெ. (n.)

   இதளியம் கலந்த மருந்துச்சாறு; a medicinal preparation of mercury.

     [வழலை + ரசம்.]

 Skt. rasa → த. இரசம்.

வழலைவங்கம்

 வழலைவங்கம் vaḻlaivaṅgam, பெ. (n.)

   வங்கக்கட்டு (கொங்கணவர்-வாத காவி யத்தில் சொல்லிய முறைப்படி செய்யப்படுவது);; consolidation of lead as told in końgaṇavarvātha kaviyam.

     [வழலை + வங்கம்.]

வழல்(லு)-தல்

வழல்(லு)-தல் vaḻlludal,    13 செ.கு.வி. (v.i.)

   தோல் உரிதல், கழலுதல்; to be abraded, to peel off.

     [வழி → வழல் → வழல்(லு);.]

வழவழ-த்தல்

வழவழ-த்தல் vaḻvaḻttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வழுக்குந் தன்மையதாதல்; to be slippery, as mire, a polished surface.

வழவழத்த உறவைக் காட்டிலும் வைரம் பாய்ந்த பகை நன்று (பழ.);.

   2. உறுதியற்றிருத்தல்; to be slack, loose or unsteady.

   3. மழமழத்தல்; to be smooth.

   4. தெளிவின்றிப் பேசுதல்; to babble, to wishy-washy in talk, to speak without clarity.

     [வழ + வழ.]

வழவழப்பு

வழவழப்பு vaḻvaḻppu, பெ. (n.)

   1. வழுக்குந் தன்மை (வின்.);; slipperiness.

   2. மழமழப்பு; smoothness.

   3. உறுதியின்மை; looseness, unsteadiness, negligence.

     [வழவழ → வழவழப்பு.]

வழவழவெனல்

வழவழவெனல் vaḻvaḻveṉal, பெ. (n.)

   1. வழுக்குதற் குறிப்பு; expr. signifying slipperiness.

   2. தெளிவின்றிப் பேசுதற் குறிப்பு; wishy-washy talk, speaking unclearly, infirmity in talking.

     [வழவழ + எனல்.]

வழாஅல்

வழாஅல் vaḻāal, பெ. (n.)

   1. தவறுகை; an act of turbling, failure.

   2. வழுக்கை; slipping.

     “வழுஉ மருங்குடைய வழாஅ லோம்பி” (மலைபடு. 215);.

     [வழு → வழால் → வழாஅல் மு.தா.பக்.12).]

வழாநிலை

வழாநிலை vaḻānilai, பெ. (n.)

   சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கண வரம்பினின்றும் விலகாது அமைகை (நன். 374);; grammatical correctness, as of a word or sentence, dist. fr. valūu-nilai.

     [வழுவு + ஆ (எ.ம.இ.நி.); + நிலை.]

சொற்கள் பொருட்டொடர்புபட்டுத் தொடர்ந்து நிற்கும்பொழுது, முடிக்கப்படுஞ் சொற்களோடு முடிக்குஞ் சொற்கள் திணை, பால், எண், இடம், காலம் முதலியவற்றில் ஒத்து, இலக்கணப்பிழை யில்லாதிருப்பின் வழாநிலையாம்.

வழாறு

 வழாறு vaḻāṟu, பெ. (n.)

   நீர் நிறைந்த ஆறு அல்லது குளம் (சூடா.);; surplusing water river or tank.

     [முழு-மை → வழு-மை + ஆறு.]

வழி

வழி1 vaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நிரம்பி வடிதல் (இ.வ.);; to overflow, to surplus.

     “வழிந்த கார்விடம்” (கம்பரா. சூர்ப்பண. 72);.

   2. வடிதல்; to flow, drain.

ம. வழியுக (valiyuka, valikka.);

     [வடி → வழி.]

 வழி2 vaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   தோல் வழலுதல் (நெல்லை.);; to be abraded.

     [வழல் → வழி.]

 வழி3 vaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வடித்தல்; to shed, let flow.

     “வழிக்குங் கண்ணீரமுவத்து” (கம்பரா. கடல்காண். 5);.

     [வடி → வழி.]

 வழி4 vaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அரைத்த மாவு சந்தன முதலியவற்றைத் திரட்டியெடுத்தல்; to wipe, scrape, to

 gather together, as a puply mass.

     “மூக்கை வழித்து” (தனிப்பா. II, 383);.

   2. பூசுதல்; to rub in with the hand, as an ointment, to smear, as sandal paste.

     “மார்பின் விரை வழித்து’ (சீவக. 699);.

   3. ஆடையைத் திரைத்தல்; to roll up, as one’s cloths.

ஆடையை வழித்துக் கொண்டு ஆற்றில் இறங்கினான்.

க., ம. பளி.

     [மல் → மழி → வழி.]

 வழி5 vaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மழித்தல் (இ.வ.);; to shave.

     [முல் → மல் → மழி → வழி.]

 வழி6 vaḻi, பெ. (n.)

   1. வழி, பாதை, சாலை; way, road, path.

     “வாழ்நாள் வழியடைக்குங்கல்” (குறள், 38);.

   2. மூலகாரணம், அடிப்படை (யாழ்.அக.);; origin, source.

   3. செயற்படுத்தும் வழி; means for implemenation.

     “அதற்கு ஒரு வழி சொல்லு” (உ.வ.);.

   4. தீமையைக் குறைக்கும் மாற்று வழி; remedy.

     “அந்தத் தப்புக்கு என்ன வழி செய்தான்” (உ.வ.);.

   5. வழிபாடு; homage.

     “வையங்காவலர் வழிமொழிந்தொழுக” (புறநா.8);.

   6. ஒழுக்கம் (பிங்.);; course of conduct or behaviour.

   7. முறைமை (பிங்.);, மாதிரி; manner, method, mode.

   8. வழித்தோன்றல்; posterity, descendants.

     “வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்” (குறள், 44);

   9. இனம், கொடிவழி, குடும்பம், மரபு (பிங்.);; family convention or heritage.

   10. மகன் (சூடா.);; son.

   11. சார்ந்த உறவு, சுற்றம்; relation, dependant.

     “மகனை முறைசெய்த மன்னன் வழியோர்” (மணிமே.22, 210);.

     “செற்றோரை வழிதபுத்தனன்” (புறநா.239);.

   12. தமையன்; brother.

   13. கொடிவழி, பரம்பரை; traditions, series, line, succession.

     “வழித் தொண்டர்” (பெரியபு.திருநாவுக். 333);.

   14. சிறப்புப்பாயிரம் பதினொன்றனுள் ஒன்றாகிய நூல் வந்த நெறி (நன்.46);; history or origin of a literary work, one of 11 sirappu-p-payiram.

   15. அடிச்சுவடு, பதிவு; impression, footprint, trace,

     “யானைக்கால் வழியன்ன” (புறநா. 368);.

   16. பின்னானது; that which is subsequent.

     “வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம்” (புறநா. 176);.

   17. வழக்கு (வின்.);; usage.

   18. பழைமை (வின்.);; antiquity.

   19. இடம்; place.

     “தலைநாளன்ன புகலொடு வழி சிறந்து” (மலைபடு. 565);.

   20. மலைப் பக்கம் (சீவக. அரும்.);; mountainous region.

   21. திரட்சி (பிங்.);; roundness.

   22. பேறு, கொடை, வரம்; boon, gift.

     “எவ்வழி நினக்கு வேண்டும்” (உபதேசகா. சிவத்துரோ. 115);.

   க. பளி (bali);;   ம. வழி (vari);;   து. பரி (bali);. (balika);;   கோத. bay po;தெ. valaňku (வழங்ங);.

     [மழி → வழி.]

 வழி7 vaḻi,    வி.எ. (adv.) பின்பு; afterwards.

     “வழிபயக்கு மூதியமும்” (குறள், 461);.

வழி8 __ இடை. (part);

   1. வினையெச்ச விகுதி (தொல்.சொல்.231);; an adverbial particle meaning in case, under certain circumstances.

   2. ஏழனுருபு (நன்.302);; sign of the locative.

வழிஅலகு

 வழிஅலகு vaḻialagu, பெ. (n.)

   நீளம், நிறை, காலம் என்னும் அலகுகளில் இருந்து பெறப்படும் பிற அலகு; derival unit.

     [வழி + அலகு.]

சுற்றளவு, கொள்ளளவு போன்றவை. வழி அலகிற்குச் சான்றாகும்.

வழிகட்டி

 வழிகட்டி vaḻigaṭṭi, பெ. (n.)

   வழி மறிப்பவன் (இ.வ.);; way-layer, foot-pad, a person who obstructs.

     [வழிகட்டு → வழிகட்டி.]

வழிகட்டு-தல்

வழிகட்டு-தல் vaḻigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வழி மறித்தல் (யாழ்.அக.);; to lie in wait, to obstruct.

   2. ஏற்பாடு செய்தல்; to prepare, arrange.

   3. வழிவகை கூறுதல்; to suggest suitable ways and means.

     [வழி + கட்டு.]

வழிகட்டுதல்

 வழிகட்டுதல் vaḻigaṭṭudal, தெ.பெ. (vbl.n.)

பள்ளரின இறப்புச் சடங்கு

 funeral rites of pallar caste.

     [வழி+கட்டுதல்]

வழிகாட்டி

வழிகாட்டி1 vaḻikāṭṭi, பெ. (n.)

   வாணிகஞ் செய்வார் பற்றியும், வாணிகத்தைப் பற்றியும் விளக்கும் நூல்; directory of traders and commerce or trade.

     [வழி + காட்டி.]

 வழிகாட்டி2 vaḻikāṭṭi, பெ. (n.)

   1. செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள் (வின்.);; guide, leader, one who shows the way.

வழிகாட்டிப் பறிப்பவன் திருடன் வரதன் ஏறுவது கழுலன் (பழ.);

   2. பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவ—ன்-ள்; one who sets an example, to emulate by others, exemplar.

என்கலையுலக வாழ்க்கையில் வழிகாட்டி என்று சொல்லத் தக்கவர் இவர் (இக்.வ.);.

ஆய்வுநூல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு, இந்த நூல் நல்ல வழிகாட்டி (இ.வ.);

   3. வழிகாட்டிமரம் (தற்கா.); பார்க்க;see valikatti-maram.

     [வழிகாட்டு → வழிகாட்டி.]

வழிகாட்டிமரம்

 வழிகாட்டிமரம் vaḻikāṭṭimaram, பெ. (n.)

   வழி பிரியுமிடங்களில் பிரிந்து செல்லும் பாதையை அறிவிக்கும் மரம் (வின்.);; guidepost, sign-post at cross roads, indicating direction.

மறுவ. கைகாட்டிமரம்

     [வழிகாட்டி + மரம்.]

சாலைகள் பிரியுமிடங்களில் அல்லது சேருமிடங்களில் அவ்வச்சாலை செல்லும் ஊர்ப்பெயர் அறிவிக்கும் (வழிகாட்டி); மரங்கள்.

     [P]

வழிகாட்டு-தல்

வழிகாட்டு-தல் vaḻikāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. செல்லும் நெறியை அறிவித்தல்; to show the way, to give guide line.

மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்கள் (உ.வ.);.

   2. நன்னெறி யுணர்த்துதல்; to direct one in the right path

 moral or religious, to teach ethics.

   3. உரிய பாதையைக் காட்டுதல்; to suggest right ways and means.

   4. உதவியாக இருத்தல்; to be of help.

ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள இந்த நூல் வழிகாட்டும் (இ.வ.);.

     [வழி + காட்டு.]

வழிகாட்டுமரம்

 வழிகாட்டுமரம் vaḻikāṭṭumaram, பெ. (n.)

வழிகாட்டிமரம் பார்க்க;see valikatti-maram.

     [வழிகாட்டு + மரம்.]

வழிகெடு-தல்

வழிகெடு-தல் vaḻigeḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அடிச்சுவடு தெரியாமல் அழிதல்; to erase impression of steps to leaving no trace behind.

     “வந்த குற்றம் வழிகெட வொழுகலும்” (தொல். பொருள். 146);.

     [வழி + கெடு.]

வழிகோலு-தல்

வழிகோலு-தல் vaḻiāludal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வழிவகுத்தல்; to pave the way, to find way out.

   2. மூலமாக; to be instrumental.

இவை அழிவிற்கு வழிகோலும். தேர்தலில் தான் வெற்றி பெற வழிகோலிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் (இக்.வ.);.

     [வழி + கோலு.]

வழிக் கொள் (ளு)-தல்

வழிக் கொள் (ளு)-தல் vaḻikkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. பின்பற்றிச் செல்லுதல்; to follow, go after.

     “மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வா யென” (கம்பரா. உருக்காட்டுப். 17);.

   2. பயணப்படுதல்; to start or travel on a journey.

     “இசைவலான்…. இருள்வழிக் கொண்டான்” (திருவிளை. விறகு. 48);.

     [வழி + கொள்ளு).]

வழிக்கண்ணார்

வழிக்கண்ணார் vaḻikkaṇṇār, பெ. (n.)

   வழித்தோன்றல், வழிமரபினர்; descendants, progeny.

     “இவரும் இவர் வழிக் கண்ணாரும்” (S.I.I. ii, 352);.

     [வழி + கண்ணார்.]

வழிக்கரை

 வழிக்கரை vaḻikkarai, பெ. (n.)

   வழிப் பக்கம் (யாழ்.அக.);; wayside.

     [வழி + கரை.]

வழிக்குக்கொண்டுவா

வழிக்குக்கொண்டுவா vaḻikkukkoṇṭuvā,    18 செ.கு.வி. (v.i.)

   உரிய முறையை அல்லது ஒழுங்கைப் பின்பற்றச் செய்தல்; to bring some one into line, to discipline some one.

     “சரியாகப் படிக்காத மகனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று சிந்தித்தார்” (இ.வ.);.

     [வழிக்கு + கொண்டு + வா-.]

வழிக்குவரு-தல்

வழிக்குவரு-தல் vaḻikkuvarudal,    18 செ.கு.வி. (v.i.)

வழிக்குவா-தல் பார்க்க;see valikku-va.

     [வழி + வரு-.]

வழிக்குவா-தல்

வழிக்குவா-தல் vaḻikkuvātal,    18 செ.கு.வி. (v.i.)

   1. இணங்குதல்; to submit, yield, to surrender.

அவன் எப்படியும் நம் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும் (இ.வ.);.

   2. நல்வழிப்படுதல்; to reform to revert to the right way.

     [வழி + வா-.]

வழிசீ-த்தல்

வழிசீ-த்தல் vaḻicīttal,    4 செ.கு.வி. (v.i.)

   செல்லும் வழியைச் செப்பனிடுதல்; to repair or clear the path or roadways.

     “வழி சீத்து” (ஏலா. 44);.

     [வழி + சீ.]

வழிசெய்

வழிசெய்1 vaḻiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வகை செய்தல்; to provide a way of disposal, to find a way out.

அனைவருக்கும் வீடு கிடைக்க வழிசெய்ய வேண்டும் (இ.வ.);.

     [வழி + செய்.]

நிகழ வேண்டிய செயற்பாட்டிற்கு வகை செய்தல்.

 வழிசெய்2 vaḻiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வழி வகுத்தல்; to devise a method or guideline.

வெள்ள (நிவாரண); உதவி உரியோருக்குச் சென்று சேர அரசு வழிவகை செய்ய வேண்டும்.

     [வழி + செய்.]

வழிச்சந்தி

வழிச்சந்தி vaḻiccandi, பெ. (n.)

   தெருக்கள் கூடுமிடம்; junction of roads.

     [வழி + அந்து → அந்தி → சந்தி.]

வழிச்சந்தி என்னும் சொல், ஈங்கு குறைந்தது. மூன்று தெருக்கள் கூடுமிடத்தைக் குறித்தது எனலாம்.

சந்தி என்னும் சொல் சொற்புணர்ச்சி யென்னும் பொருண்மையில், எவ்வகைத் தமிழ் வழக்கிலும், இதுகாறும் பயிலாது போயினும், தெருப்புணர்ச்சி என்னும் பொருளில், சந்திக்கிழுத்தல், சந்தி சிரித்தல், சந்தியில் நிற்றல், சந்தி மறித்தல், சந்தியில் விடுதல் என்று உலக வழக்கில், மக்களிடையே இன்றும் வழக்கூன்றியுள்ளது. சந்தி என்னுஞ் சொல் தூய தென்சொல்லென்று மொழிஞாயிறு வடமொழி வரலாறு என்னும் நூலில் (வ.வ.68-69); நிறுவியுள்ளார்.

பலதெரு அல்லது, முத்தெரு கூடுமிடம் என்னும் பொருண்மையில்,

     “சதுக்கமும் சந்தியும்” என்று திருமுருகாற்றுப்படையிலும், பலவழி கூடுமிடம் என்னும் பொருண்மையில்

     “சந்து நீவி” என்று மலைபடுகடாத்திலும், செய்யுள் வழக்காகப் பயின்று வந்துள்ளமை காண்க.

வழிச்சாரி

வழிச்சாரி vaḻiccāri, பெ. (n.)

   1. நடையுள்ள வழி; beaten road, foot path with trace.

   2. சுங்கஞ் செலுத்தாது, பொருள்களைக் கடத்துவோரைப்பிடிப்பதற்கான கள்ளப்பாதை (வின்.);; secret track of custom officers to apprehend the evaders of customs and hoarders.

மறுவ. சுருங்கைவழி

     [வழி + சார் → சாரி.]

வழிச்சாரியை

வழிச்சாரியை vaḻiccāriyai, பெ. (n.)

   வரி; a kind of tax.

     “நம் நாட்டில் வழிச்சாரியை கொள்ளும் துறைகளிலே, தலைச்சுமைக்கும் எருத்துப் பொதிக்கும் பேர் ஒன்றுக்கு இரண்டாக வந்த காசும்” (S.I.I. Vol.XVII. 141);.

     [வழி + சாரியை சார் → சாரியை.]

விற்பனைப் பொருள்களை மாட்டின் மீதும், தலைச் சுமையாகவும் கொண்டு, சாலைவழியே வேற்றிடம் செல்லும் வணிகர்களிடம் ஆள் கமைக்கு இவ்வளவு காசு என்று, அரசு பெறும் கட்டணம்.

வழிச்செலவு

வழிச்செலவு vaḻiccelavu, பெ. (n.)

   1. யாத்திரை (பிங்.);, சுற்றுலா; journey, tour.

   2. சுற்றுலாச் செலவு; journey or travelling expenses.

     “சுற்றுலாவில் வழிச்செலவு செய்வதற்குத் தந்தை மகனுக்கு நானூறு உருபா கொடுத்தான்” (இக்.வ.);.

     [வழி + செல் → செலவு.]

வழிச்செல்வோன்

 வழிச்செல்வோன் vaḻiccelvōṉ, பெ. (n.)

   சுற்றுலாச் செல்வோன் (பயணி); (பிங்.);; traveller, one who takes a journey.

வழி செல்வோன் வார்த்தை நீர்மேல் எழுத்தாகும் (இ.வ.);.

மறுவ. வழிநடையாளன்.

     [வழி + செல்.]

வழிச்செவ்வை

வழிச்செவ்வை vaḻiccevvai, பெ. (n.)

   சாலை; road.

     “போகிற வழிச் செவ்வைகளில்” (தெ.இ.கல்.தொ.5, 138);.

     [வழி + செவ்வை. செவ்வை = வழி முதலியவற்றின் செப்பம்.]

வழிச்சொல்லு-தல்

வழிச்சொல்லு-தல் vaḻiccolludal,    8 செ.குன்றாவி. (v.t.)

   வகை செய்தல்; to make arrangements, as for payment of debts.

     ‘கடனுக்கு வழி சொன்னாற் கைச்சாதமுண்பேன்’ (கோவ. க. 52);.

     [வழி + சொல்லு.]

வழிச்சோறு

வழிச்சோறு vaḻiccōṟu, பெ. (n.)

   1. கட்டுச் சோறு; boiled rice prepared and bundled up for a journey, viaticum.

   2. இறந்த பன்னிரண்டாநாள் இறந்தவர் செல்வழிக்கு உதவியாகக் கொடுக்கப்படும் பாதேயம்; the viaticum, offered for a deceased person on the 12th day of his death.

     [வழி + சோறு.]

வழிஞ்சி

 வழிஞ்சி vaḻiñji, பெ. (n.)

   இளமை (அக.நி.);; youth, adolescence.

வழிதட்டு-தல்

வழிதட்டு-தல் vaḻidaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   செல்வழி தெரியாது மயங்குதல்; to get puzzled or perplexed by losing one’s way or tract.

     [வழி + தட்டு-, துள் → தள் → துட்டு → தட்டு.]

வழிதவறு-தல்

வழிதவறு-தல் vaḻidavaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒழுக்கம் தவறி நடத்தல்; go astray.

வழிதவறியவர்களுக்கு வாழ வழிகாட்டும் அமைப்பு.

     [வழி + தவறு. தாவு → தவல் → தவறுதல் = பிழை செய்தல், நெறிதவறுதல்.]

வழிதவறுதல் என்பது வாழ்க்கைப் பாதையில் நெறி பிழைத்தலாகும். பிறன்மனை விழைதல், பிறர்பொருள் கவர்தலும், வழி தவறுதலாகும்.

வழிதிகை-த்தல்

வழிதிகை-த்தல் vaḻidigaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. செல்வழி தெரியாது மயங்குதல்; to get puzzled by losing one’s way.

   2. செய்வகை தெரியாது கலங்குதல்; to be confused in mind not knowing what to do.

     “வழிதிகைத் தலமர்கின்றேன்.” (திவ். திருவாய். 3, 2, 9);.

     [வழி + திக்கு → திகை.]

வழிதுறை

வழிதுறை vaḻiduṟai, பெ. (n.)

   1. வழியும் துறையும்; road and ford.

   2. வழிமுறை; methodology, way, expedient.

     “வழிதுறை யீதென்றறியாய்” (அருட்பா. vi, தான்பெற்ற 6, பக்.707);.

     ‘இயலா தென்பதில்லவே யில்லை வழிதுறை தெரியா தென்பதே உண்மை’.

   3. பக்கத்துணை (வின்.);; means to an end, auxiliary aid.

     [வழி + துறு → துறை.]

வழித்தடை

 வழித்தடை vaḻittaḍai, பெ. (n.)

   வழிநடையில் நிகழும் இடையூறு; hindrance or obstacle to a journey, as by an evil omen etc.

     [வழி + தடை. தள் → தடு → தடை.]

வழிச்செலவின் கண்ணே, எதிர்கொள்ளும் இன்னல்.

வழித்திண்ணை

வழித்திண்ணை vaḻittiṇṇai, பெ. (n.)

   வீடு கோபுரம் முதலியவற்றின் வெளித் திண்ணை (நாமதீப. 493);; outer pial, as of a house.

     [வழி + திண்ணை.]

வழித்திருடன்

 வழித்திருடன் vaḻittiruḍaṉ, பெ. (n.)

   வழிப்பறி செய்பவன்; high way robber.

மறுவ. ஆறலைக் கள்வன்.

     [வழி + திருடு → திருடன்.]

வழித்துணை

வழித்துணை vaḻittuṇai, பெ. (n.)

   1. வழி நடையில் உடன் வருவோன்; fellow, traveller, a companion on a journey.

   2. வழிக்குத் துணையாவோன்; guide, escort.

     “வழித்துணையா மழபாடி வயிரத் தூணே” (தேவா. 322, 7);.

   3. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து, உதவிவரும் குடும்பத்துணை (யாழ்.அக.);; a friend of the family who helps from generation to generation.

     [வழி + துணை.]

வழித்துணைநாதர்

 வழித்துணைநாதர் vaḻittuṇainātar, பெ. (n.)

   விரிஞ்சி புரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர்; a name of god is who have temple in viriñji puram.

     [வழித்துணை + Skt. natha → த.நாதர்.]

குடகு நாட்டிலிருந்து தொண்டைநாட்டுக்கு மிளகு விற்க வந்த சிவநேசன் என்னும் வணிகனுக்கு வழித்துணையாக வந்து வழிப்பறி செய்ய வந்த கள்ளர்களை விரட்டியடித்தமையால்

     “வழித் துணைநாதர்” என்னும் பெயர் பெற்றார்.

வழித்துணைமருந்து

வழித்துணைமருந்து vaḻittuṇaimarundu, பெ. (n.)

   1. வழிப்போக்காக நெடுந்தொலைவு செல்வோர் முதலுதவியின் பொருட்டுக் கொண்டு செல்லும் மருந்து; first aid box carried during journey.

   2. வாழ்க்கைப் பாதையை இனிது வழி நடத்திச் செல்லும் இறைவன்; God.

     [வழித்துணை + மருந்து.]

அற்றை நாளில் நெடுந்தொலைவு செல்வோர் வழித்துணை மருந்தாகச் சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றை உடன்கொண்டு சென்றனர். தலைவலி போக்கும் மருந்தாகவும், மிகுசளி. வளிப்பிடிப்பு நீக்கும் மருந்தாகவும், சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் போன்றவை அன்று பயன்பட்டது போன்று, ஆங்கில மருத்துவம் மிக்கு விளங்கும் இற்றை நாளிற் சுற்றுலா செல்வோர் முதலுதவிப் பெட்டியினை உடன் கொண்டு செல்கின்றனர்.

முதலுதவிப் பெட்டியில், தலைவலி, உடம்புவலி, வளித்தொல்லை (வாயுப்பிடிப்பு);, குளிர்சுரம் போக்கும் குளிகைகளும், வளிப்பிடிப்பு, சுளுக்கு போக்கும் மருந்துகளும், நெய்மங்களும் (தயிலங்களும்); கொண்டு செல்லாத கற்றுலாக் குழுமங்களே இல்லையெனலாம்.

அனைத்து மாந்தர்தம் வாழ்க்கைச் செலவினையும், எஞ்ஞான்றும் நலிவின்றி, நலத்துடனும், வளத்துடனும் நடத்திச் செல்பவன், எல்லாம்வல்ல இறைவனாகையால், திருஞான சம்பந்தப் பெருமான், திருவானைக்காப் பதிகத்தில் திருவருட் சிறப்பினை விளக்குமுகத்தான்,

     “வான நாடனே வழித்துணை மருந்தே” என்று பாடியருளிய பாங்கும் ஈங்கு கருதத்தக்கதாகும்.

வழித்தெய்வம்

வழித்தெய்வம் vaḻitteyvam, பெ. (n.)

   குல தெய்வம்; family deity, tutelary deity.

     “எங்கள் வழித்தெய்வம் போல்வான்” (சூடா. பாயி. 6);.

     [வழி + தெய்வம். வழி = வழிவழி.]

வழித்தொண்டு

வழித்தொண்டு vaḻittoṇṭu, பெ. (n.)

   வழிவழியடிமை; hereditary slavery or subservience especially to a deity.

     “வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட” (‘குற்றா. குற. 91,1);.

     [வழி + தொண்டு.]

மரபுவழித் தொடர்ந்து, தலைமுறைதோறும் தொண்டாற்றுகை. இறைவனுக்குத் தலைமுறை தோறும் தொடர்ந்து செய்யும் அடிமைத் தொண்டு.

வழித்தோன்றல்

 வழித்தோன்றல் vaḻittōṉṟal, பெ. (n.)

   கொடி வழியுதித்த பிள்ளை (பிங்.);; male descendant.

இவரும் இவரது வழித் தோன்றல்களும் வடக்கிலிருந்து வந்து தெற்கில் குடியேறினர் (உ.வ.);.

மறுவ. பிறங்கடை.

     [வழி + தோன்றல்.]

வழிநட-த்தல்

வழிநட-த்தல் vaḻinaḍattal,    3 செ.கு.வி. (v.i.)

   ஏவல் செய்தல்; to serve as a call boy, to carry-out orders.

     “செற்ற தெவ்வர் நின்வழிநடப்ப” (மதுரைக். 189);.

     [வழி + நெடு → நெட → நட.]

வழிநடத்து-தல்

வழிநடத்து-தல் vaḻinaḍaddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முன்னின்று நடத்துதல்; to lead.

   2. தலைமை தாங்கி நடத்துதல்; to guide, in forefront.

விடுதலைப் போரில் நம்மை வழிநடத்திச் சென்றவர்கள் இன்று இல்லை.

நம்மை வழிநடத்தும் பொறுப்பு தலைவருக்கே உரியது.

     [வழி + நட → நடத்து.]

வழிநடை

வழிநடை vaḻinaḍai, பெ. (n.)

   1. வழிச் செல்லுகை; journey, travel.

     “வழிநடைச் சேறல் வலித்திசின் யானே” (அகநா. 303);.

   2. நடைபாதை (இ.வ.);; foot path.

     [வழி + நடை.]

வழிநடைக்களைப்பு

 வழிநடைக்களைப்பு vaḻinaḍaikkaḷaippu, பெ. (n.)

வழிநடையிளைப்பு பார்க்க;see vali-nadai-y-ilaippu.

     [வழிநடை + களைப்பு.]

நீணெடுந்தூரம் நடந்து செல்வதால், ஏற்படும் உடற்களைப்பு மற்றும் மனச்சோர்வு.

வழிநடைக்கிடும்பணம்

 வழிநடைக்கிடும்பணம் vaḻinaḍaikkiḍumbaṇam, பெ. (n.)

   வரி வகை; road cess or levy.

நாட்டின் ஒரிடத்தினின்று, மற்றொரு பகுதிக்குச் செல்வோர் செலுத்திய நெடுஞ்சாலைத் தீர்வை.

     [வழிநடை + இடும்பணம்.]

வழிநடைச்சிந்து

 வழிநடைச்சிந்து vaḻinaḍaiccindu, பெ. (n.)

   சிந்து இசையின் ஒரு பிரிவு; a divisionin sindu melody.

     [வழி+நடை+சிந்து]

வழிநடைச்செலவு

வழிநடைச்செலவு vaḻinaḍaiccelavu, பெ. (n.)

   1. தரை வழிச்செலவு (பயணம் (வின்.);; journey.

   2. சுற்றுலா (பயண);ச் செலவு (இ.வ.);; expenses incured doing a journey, travel expenses.

     [வழிநடை + செலவு.]

வழிநடைச்சோர்வு

 வழிநடைச்சோர்வு vaḻinaḍaiccōrvu, பெ. (n.)

வழிநடையிளைப்பு பார்க்க;see valinadai-y-ilaippu.

     [வழிநடை + சோர்வு.]

வழிநடைப்பதம்

 வழிநடைப்பதம் vaḻinaḍaippadam, பெ. (n.)

   வழி நடக்கும்போது கண்ட காட்சியை வரணித்துப்பாடும் பாட்டு; song of a traveller, describing the scenery on the way.

     [வழிநடை + பதம்.]

வழிநடையிளைப்பு

 வழிநடையிளைப்பு vaḻinaḍaiyiḷaippu, பெ. (n.)

   வழி நடையால் ஏற்பட்ட சோர்வு; fatigue due to long journey by walk.

     [வழிநடை + இளைப்பு.]

வழிநடை = வழிச்செலவு. இளை → இளைப்பு = மெலிவு, சோர்வு.

நெடுந்தொலைவு நடப்பதனால் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு.

வழிநாள்

வழிநாள் vaḻināḷ, பெ. (n.)

   பின்னாள்; succeeding or next day.

     “வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம்” (புறநா. 76);.

     [வழி + நாள்.]

வழிநிலை

வழிநிலை vaḻinilai, பெ. (n.)

   1. பின்னின்றேவல் செய்கை; subservience, subservient attitude.

     “வழிநிலை பிழையாது” (தொல். பொருள். 114);.

   2. பின்னிகழ்வது; that which immediately succeeds or follows, subsequent happening.

வழிநிலைக்காட்சி.

   3. அணி வகை (பிங்.);; a figure of speech.

     [வழி + நிலை.]

வழிநிலைக்காட்சி

வழிநிலைக்காட்சி vaḻinilaikkāṭci, பெ. (n.)

   இயற்கைப் புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில், தலைவன் தலைவியைக் காணுங்காட்சி (தொல்.பொருள்.16, உரை);; subsequent meeting of lovers after their first meeting (Agap.);.

     [வழிநிலை + காட்சி.]

காண் + சி – காட்சி.

     ‘சி’ பண்புப்பெயரீறு.

எழுவகைக் காட்சியுளொன்று. தலைவனும் தலைவியும் தம்முள் முதன் முதலாகக் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறையென்று புறப்பொருள் வெண்பாமாலை புகலும் (பு.வெ.11 ஆண்பால்);.

இருவரும் தம்முள் முதற்கண் கண்ணுறும் முதற்காட்சியே வழிநிலைக் காட்சி. என்று இறையனார் இளவியலுரை இயம்பும்.

     “தலைமகளைத் தலைமகன் முதற்கண் கண்ணுற்று, இஃதொரு வியப்பென்றெனல்” என்றது பேராசிரியர் தம் விளக்கமாகும் (பேரா.திருக்.1:1);.

வழிநில்-தல் (வழிநிற்றல்)

வழிநில்-தல் (வழிநிற்றல்) vaḻiniltalvaḻiniṟṟal,    14 செ.கு.வி. (v.i.)

   ஏவல் செய்தல்; to act as a call boy, to carry-out or implement orders.

     “மருவிப் பிரிய மாட்டேனான் வழிநின் றொழிந்தேன்” (தேவா. 301,3);.

     [வழி + நில்.]

வழிநூல்

வழிநூல் vaḻinūl, பெ. (n.)

   நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல் (தொல். பொருள். 650);; secondary work, agreeing for the most part with its original or mudanūland deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nul.

     [வழி + நூல்.]

அகத்தியம் தொல்காப்பியம் வழிநூலாதலின் அதிலுள்ள தென்சொற்களெல்லாம் தலைக்கழக முதனுலைச் சேர்ந்தவையாம்.

முதலில் தோன்றிய நூலில் சொல்லப்பட்டவற்றை ஏற்றுத் தேவையான மாற்றங்களைச் செய்து எழுதப்படும் நூல்.

வழிநூல் பற்றி இறையனார் களவியலுரை இயம்புவது :- முதல் நூலோடு ஒத்த மரபிற்றாய் ஆசிரிய மத விகற்பம் படக்கிளப்பது (இறை.1);.

யாப்பருங்கல விருத்தி கூறுவது :- முதல் நூலோடு ஒத்த முடிவிற்றாய்த் தனது ஓர் விகற்பம் படக் கிளப்பது (யாப்பாயி.);.

வழிந்தோடு-தல்

வழிந்தோடு-தல் vaḻindōṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பெய்த மழைநீர் நிலத்தின் மீது புரண்டோடுதல்; to overflow on the surface as storm or rain water.

     [வழி + ஒடு.]

வழிபடு

வழிபடு1 vaḻibaḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. பின்பற்றுதல்; to follow, adhere to.

     “வழிபடுதல் வல்லுதலல்லால்” (நாலடி. 309);.

   2. வணங்குதல்; to reverence, worship.

     “வழிபடுவோரை வல்லறி தியே” (புறநா. 10);.

     “வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்கு” (நற்.92);.

     [வழி + படு-.]

வழிபடுதல் என்பது கடவுள் நெறியைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

     “பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்” என்று வள்ளுவர் கூறுவது காண்க. அது ஒவ்வொரு சமயத்தார்க்கும் வேறுபட்ட வழிமுறைகளையும், நெறிமுறைகளையும், கொண்டதாயினும், ஒவ்வொரு சமய நம்பிக்கைக் கூட்டத்தாரும், தமக்கென ஒரு தலைமை வழிபாட்டுநெறி வகுத்துக் கொண்டு, ஒன்றுபட்டு இயங்க வழிவகுத்தது.

காலப்போக்கில் முழுமுதற் கடவுளை வழிபடுதலே உயர்ந்தது. என்னும் எண்ணம், மாந்தர்தம் வாழ்வில் வழக்கூன்றியது. வாழ்வியலில் அச்சந்தரும் பொருட்களை வழிபடத் தொடங்கிய மாந்தன், நெறியின் வயப்பட்ட கடவுளை, வகுத்துக்கொண்டு, அதுவே முழுமுதல் இறைவழிபாடென்று எண்ணினான்.

நாள் செல்லச்செல்ல, தன்னுள்ளத்தே உறையும் மனச்சான்றாகிய உண்மையிறைவனை உணராது. இம்மைப் பயன் விளையுமென்றெண்ணி, வழிபடுதலை, பலநிலைகளில் மேற்கொண்டதனால், கடவுள் வழிபாட்டின் உயரிய நிலையை மறந்தான்.

இன்று கடவுள் வழிபாடு, தன்பொருள் இழந்து கடவுளைப் போற்றி வணங்குகின்ற கடவுள் வாழ்த்துப் பொருளில் மட்டும் ஆளப்படுகின்றது.

தேவாரக் காலத்தில், வழிபடுதலென்பது கூட்டுவழிபாட்டையே குறித்தது.

     “கூடிநின் அடியார்” என்னும் திருவாசகக் கருத்தை நோக்குக.

 வழிபடு2 vaḻibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

வழிப்படு’-, 1 (வின்.); பார்க்க;see vali-ppadu.

     [வழி + படு-.]

 வழிபடு3 vaḻibaḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

வழிப்படு2- (வின்.); பார்க்க;see Vali-p-padu-.

வழிபடுகடவுள்

 வழிபடுகடவுள் vaḻibaḍugaḍavuḷ, பெ. (n.)

   ஒருவன் தன் குலத்திற்கும், தமக்கு முரித்தாக வணங்கும் கடவுள்; tutelary deity, the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ērpugas-k-kagavul

     “வழிபடு கடவுளை யாதல்…… ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்” (குறள், அவ.);.

     [வழிபடு + கடவுள். கடவுதல் = செலுத்துதல். கடவு → கடவுள் = இயக்குபவன், செலுத்துபவன்.]

த. கடவுள் → E. God.

வழிபடுதவசி

 வழிபடுதவசி vaḻibaḍudavasi, பெ. (n.)

   காது வலிக்காக பயன்படுத்தும் ஒர் வகைக் கற்றாழை; a kind of aloes used in ear ache.

வழிபடுதெய்வம்

வழிபடுதெய்வம் vaḻibaḍudeyvam, பெ. (n.)

   1. வழிபடுகடவுள் பார்க்க;see valipadu-kadavul

     “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப” (தொல். பொருள்.422);.

     “அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடுதெய்வம் கட்கண்டாங்கு” (நற்.9-1-2);.

   2. நிலையாக எஞ்ஞான்றும் உள்ளத்திலிறுத்தி வணங்குந் தெய்வம்; favourite deity, chosen by him for worship from among all the deities.

     [வழிபடு + தெய்வம்.]

இம் மன்பதையில், மாந்தர் வணங்குந் தெய்வம், பற்பலவாயிருப்பினும், ஒருவன், தன் உள்ளத்தை குறிப்பிட்டதொரு தெய்வத்திடம் முழுமையாக ஒப்படைத்து, அத் தெய்வத்தையே நெஞ்சார நினைந்து வணங்குதல்.

வழிபண்ணு-தல்

வழிபண்ணு-தல் vaḻibaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   வகை செய்தல்; to provide a way of disposal, way out, sorting out.

     [வழி + பண்ணு.]

வழிபய-த்தல்

வழிபய-த்தல் vaḻibayattal,    3 செ.குன்றாவி. (v.t)

   1. பிற்பயத்தல் (தொல். பொருள்.424);; to result ultimately in.

   2. மறுக்காது கொடுத்தல் (வின்.);; to give without refusal.

     [வழி + பய.]

வழிபறி

வழிபறி1 vaḻibaṟittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இடைவழியிற் கொள்ளையிடுதல் (சூடா);; to waylay and rob.

     [வழி + பறி.]

 வழிபறி2 vaḻibaṟi, பெ. (n.)

   வழிப்பறி, வழிக் கொள்ளை (பிங்.);; highway robbery.

     “வழிபறியுண்ட விடத்தே தாய்முகங் காட்டி னாற்போலே” (ஈடு. 6, 1, 1);.

{வழி + பறி.]

வழிபாடு

வழிபாடு vaḻipāṭu, பெ. (n.)

   1. வழியிற் செல்லுகை; proceeding on the way.

   2. பின்பற்றுகை; following.

   3. ஒரு தெய்வத்தையேனும் முழுமுதற் கடவுளை யேனும் வணங்கும் வணக்கம்; reverence, adoration.

     “பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர்” (ஏகாம். உலா. 371);.

   4. பூசனை (பிங்.);; ritual, worship.

     “இத்தளி வழிபாடு செய்வார்க்கு” (S.I.I.Vol.i. 150);.

   5. வழக்கம், பயன்பாடு, மரபு (வின்.);; use, custom, habit.

   6. சமயக் கோட்பாடு (வின்.);; religious system.

     [வழிபடு → வழிபாடு.]

மொழிஞாயிறு, தமிழர்தம் கடவுள் வழிபாடு அறிவியல் தழுவியதென்பார். தொல்காப்பியர் அறிவியல் நோக்கில், இறைவழிபாட்டினை முதற்பொருளுள் அடக்கியுள்ளார். தொல்காப்பியர் முதற்பொருளென்று மொழிந்தது, எல்லாக் கருப் பொருள்களும் தோன்றுதற்கு நிலைக்களனாகிய காலமும் இடமுமேயாகும். இம் முதற்பொருளே, இறைவன் என்னும் உருவகச் சொல்லிற்குரிய இயல்வரையறையாகும். மணிவாசகரும்,

     “போற்றி என்வாழ் முதலாகிய பொருளே” என்று குறித்துள்ளது, இறைமறுப்பாளரும், இறைப் பற்றாளரும் ஏற்கும் வண்ணம் அமைந்துள்ளது. அறிவியல் அறிஞர் ஐன்சுடீனும், ஒருபொருளின்,

     (நீள, அகல, உயரம்); கனத்தோடு, காலத்தையும் இணைத்தே, கணக்கிட வேண்டும் என்றார்.

இம் முதற் பொருள் கருத்தினைத் தொல்காப்பியர்

     “காலமும் இடமும் முதற் பொருளென்ப” என்று கூறியுள்ளதால், தமிழர்தம் வழிபாட்டுக் கொள்கையும், சமயவழிபாடும் வாழ்வியலின் வழிப்பட்ட அறிவியல் சார்ந்தது என்பதில், யாதொரு ஐயமில்லையென்க.

வழிபாடுசெய்-தல்

வழிபாடுசெய்-தல் vaḻipāṭuseytal,    1 செ.கு.வி. (v.i.)

   கருத்தறிந்து அவர் ஏவாமல் அவர் விரும்பியன செய்தல் (திவ்.திருப்பள்ளி. 5, வ்யா, பக்.31);; to serve a great person, guessing his wishes.

     [வழிபாடு + செய்.]

வழிபார்

வழிபார்1 vaḻipārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   எதிர்பார்த்தல்; to expect, to look forward to.

     “நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன்” (அருட்பா. 5. வேட்கை. 3);.

     [வழி + பார்.]

 வழிபார்2 vaḻipārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வழிவகை தேடுதல்; to find a way out;

 to devise means.

   2. உரியகாலம் பார்த்தல் (வின்.);; to watch for an opportunity, to wait for an opportune time.

     [வழி + பார்-.]

 வழிபார்3 vaḻipārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   நோயாளிகள் வாசற்படியை நோக்கும், இறத்தற்குறி; staring at the gate way by a patient, it is a symptom of death.

     [வழி + பார்-.]

வழிபோ-தல்

வழிபோ-தல் vaḻipōtal,    8 செ.குன்றாவி. (v.t.)

& செ.கு.வி. (v.i.);

வழிப்போ- பார்க்க;see valip-po-,

     “வழிபோன வருத்தத்தை” (பொருந. 93);.

     [வழி + போ.]

வழிபோவார்

வழிபோவார் vaḻipōvār, பெ. (n.)

   வழிச் செல்வோன்; travellers, journeyers.

     “வழி போவார் தம்மொடும் வந்து” (தேவா. 916:2);.

மறுவ. வழிப்போக்கன்.

     [வழிபோ-, வழிபோவார்.]

வழிப்படு

வழிப்படு1 vaḻippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. பயணமாதல்; to travel, to go on one’s way.

   2. நேர்படுதல் (யாழ்.அக.);; to be reformed or mended.

   3. சந்தித்தல்; to meet.

     “அவன் எங்காவது வழிப்பட்டால் என்னிடம் வரச்சொல்லு” (உ.வ.);.

     [வழி + படு.]

 வழிப்படு2 vaḻippaḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

.

   1. வழிபடு1′, 2 பார்க்க;see valipadu.

     “அமரர் கோன் வழிப்பட்டால்” (திவ். திருவாய். 3, 1, 8);.

   2. வழிபடு1, 1 பார்க்க;see vali-padu.

     [வழி + படு.]

 வழிப்படு2 vaḻippaḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பயணப்படுத்துதல்; to send on a journey, to despatch.

     “மதிநுதலியை வழிப்படுத்து” (திருக்கோ. 214, கொளு);.

   2. நல்ல வழியிற் செலுத்துதல் (சூடா.);; to set on the right path.

   3. சீர்திருத்துதல்; to regulate, to reduce to order, to reform.

     “இருமொழியும் வழிப்படுத்தார்” (காஞ்சிப்பு. தழுவக். 249);.

   4. வயப்படுத்துதல் (யாழ்.அக.);; to bring under control, to entice.

   5. வணக்கஞ் செய்வித்தல் (வின்.);; to casue one to reverence, to cause to salute.

     [வழிப்படு → வழிப்படு.]

வழிப்பணி

 வழிப்பணி vaḻippaṇi, பெ. (n.)

   குற்றம் செய்தோர்க்குத் தண்டனையாக, பாதை செப்பனிடும் வேலை தருகை; laying and repairing roads being the labour of a personer sentenced to rigorous imprisonment, engaging convicts or prisoners for road improvement works as a measure of punishment.

     [வழி + பணி.]

வழிப்பயணம்

 வழிப்பயணம் vaḻippayaṇam, பெ. (n.)

   வழிச்செலவு (இ.வ.);; journey.

மறுவ. நடைச்செலவு

     [வழி + பயணம்.]

 Pkt. payana → த. பயணம்.

வழிப்பறி

வழிப்பறி1 vaḻippaṟittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   இடைவழியிற் கொள்ளை யிடுதல் (சூடா.);; to way lay and rob.

     [வழி + பறி.]

 வழிப்பறி2 vaḻippaṟi, பெ. (n.)

   வழிக் கொள்ளை (பிங்.);; highway robbery. இந்தப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது (உ.வ.);.

     [வழி + பறி.]

தோலில் எழும்பும் கட்டி. இங்கு வழிப்புண் என்பது, எருவாயிலிலோ அல்லது பெண்குறிவாயிலோ எழும்பியுள்ள புண்கட்டி. அல்குல் அல்லது ஆண்குறியில் தோன்றும் இணைவிழைச்சின் விளைவாகத் தோன்றும் புண்கட்டிகளும் வழிப்புண் வகையைச் சார்ந்தனவே.

வழிப்புப்புழுகு

 வழிப்புப்புழுகு vaḻippuppuḻugu, பெ. (n.)

   புனுகுப் பூனையின் பிருட்டப் பையினின்று வழித்தெடுத்த புழுக்கை (புனுகு); (வின்.);; civet taken out of the ventricle of the civet cat.

     [வழி + புழுகு.]

வழி = வாயில், புள் → புழு → புழுக்கை. பிள் → பீள் → பீளை → பூளை. புள் → புழு → புழுகு. புனுகுப் பூனையின் குறிவாயிலினின்று வெளிப்படும் நறுமணப் பொருளே, வழிப்புழுகு என்றறிக.

வழிப்புரை

வழிப்புரை vaḻippurai, பெ. (n.)

   வழிப் போக்கர் வழிநடைக் களைப்பாறத் தங்குமிடம் (ஏலாதி. 2);; rest-house; traveller’s bungalow.

     [வழி + புரை.]

புல் → புர் → புரை = வீடு, அறை, சாலை, இடம்.

வழிநடைச் செலவினை மேற்கொள்வோர் வழிநடை வருத்தம் திருதற் பொருட்டுத் தங்கி களைப்பாறிச் செல்லுமிடம்.

வழிப்பெருந்தேவி

வழிப்பெருந்தேவி vaḻipperundēvi, பெ. (n.)

   அரசிளங்குமரி; junior queen.

     “சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு” (பெருங். வத்தவ. 3, 110);.

     [வழி + பெருந்தேவி.]

வழிப்பொதி

வழிப்பொதி vaḻippodi, பெ. (n.)

வழிச்சோறு, 1 (இ.வ.); பார்க்க;see valli-c-coru.

     [வழி + பொதி.]

வழிப்போ

வழிப்போ1 vaḻippōtal,    8 செ.கு.வி. (v.i.)

வழிப்படு’- பார்க்க;see vali-p-padu.

     [வழி + போ-.]

 வழிப்போ2 vaḻippōtal,    8 செ.குன்றாவி. (v.t) வழிபடு-, 1 பார்க்க;see vali-padu.

     [வழி + போ-.]

வழிப்போக்கன்

வழிப்போக்கன் vaḻippōkkaṉ, பெ. (n.)

   வழிச்செல்வோன்; sum sit;

 wayfarer, traveller, journeyer.

     “வழிப்போக்கர் புகுந்தாடா நிற்பர்களே” (ஈடு. 4, 4, 6);.

     [வழிப்போக்கு → வழிப்போக்கன்.]

வழிப்போக்கர்வாழை

 வழிப்போக்கர்வாழை vaḻippōkkarvāḻai, பெ. (n.)

   நீர்வாழை (தற்கா.);; traveller’s palm.

     [வழிப்போக்கன் + வழு → வாழை. வாழை = வழுவழுப்பான மரம்.]

வழிப்போக்கு

வழிப்போக்கு vaḻippōkku, பெ. (n.)

   1. வழியிற் போகை; going along the path, proceeding on the way.

   2. பாதை, வழி; path, track.

     “வழிப்போக்கிலே அவனைக் காண்பாய்” (வின்.);.

   3. வயல்களிலுள்ள வழிப்பாதை; foot-path in the cultivable field.

   4. பாழ்நிலம் (இ.வ.);; waste land.

     [வழி + போ → போக்கு.]

வழிப்போவான்

 வழிப்போவான் vaḻippōvāṉ, பெ. (n.)

   வழிச்செல்வோன், யாத்திரையாளன்; wayfarer, traveller, journeyer.

     [வழி + போ → போவான்.]

ஒருகா. வழிச்செல்வோன்.

வழிமடக்கு

வழிமடக்கு1 vaḻimaḍakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வழிமறி-த்தல் பார்க்க;see vali-mari.

மேய்ச்சல்நிலங் கண்டறிந்த இடையன், ஆநிரைகளை வழி மடக்கினான் (உ.வ.);.

     [வழி + மடக்கு.]

 வழிமடக்கு2 vaḻimaḍakku, பெ. (n.)

   அணி வகை (பிங்.);; a figure of speech.

     [வழி + மடக்கு.]

வழிமரபு

 வழிமரபு vaḻimarabu, பெ. (n.)

   கால்வழி (பரம்பரை);; dynasty.

     [வழி+மரபு]

வழிமறி-த்தல்

வழிமறி-த்தல் vaḻimaṟittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செல்வதைத் தடுத்தல்; to stop, obstruct, hinder or prevent, as a person from going.

     [வழி + மறி.]

வழிமார்க்கம்

 வழிமார்க்கம் vaḻimārkkam, பெ. (n.)

   நல்லொழுக்கம்; good behaviour, civility, character, conduct.

     [வழி + மார்க்கம்.]

 Skt. mårga → த. மார்க்கம்.

வழிமுட்டு

வழிமுட்டு vaḻimuṭṭu, பெ. (n.)

   செல்ல முடியாத வழி; blind track or path, dead end.

     “வழி முட்டா யிருக்கும் இடங்களும்” (குறிஞ்சிப். 258, உரை);.

     [வழி + முட்டு.]

வழிமுட்டு-தல்

வழிமுட்டு-தல் vaḻimuṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t)

 to terminate or extinct of a line of heirs or successors.

     [வழி + முட்டு-.]

வழிமுதல்

வழிமுதல் vaḻimudal, பெ. (n.)

   1. குல முதல்வன்; progenitor, original head of a family or dynasty.

     “அனபாயன் றிருக்குலத்து வழிமுதலோர் (பெரியபு. புகழ்ச். 8);.

   2. வழிபடுகடவுள் பார்க்க;see vali-padu-kadavul.

     “வாழு நாள் கொடுத்தாய் வழிமுதலே” (தேவா. 485,5);.

     [வழி + முதல்.]

வழி = குடிவழி, மரபு. பிறங்கடை தோறும், வாழையடி வாழையென வந்த மரபுவழி, வணங்கும் இறை.

வழிமுரண்

வழிமுரண் vaḻimuraṇ, பெ. (n.)

   ஒரு செய்யுளில் முரண்டொடை மிகுதியாகப் பயில்வது (காரிகை ஒழிபி. 6, உரை, பக். 157);; to learn contradictory nature in a poem.

     [வழி + முரண்.]

வழிமுறை

வழிமுறை1 vaḻimuṟai, பெ. (n.)

   1. வழித் தோன்றல்; descendant, pedigree.

     “தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும்” (குறள், 508);.

   2.படித்தர வரிசை, படித்தர வரிசையொழுங்கு; gradation, graduated scale.

     “அன்பு வழிமுறையாற் சுருங்காது” (திருக்கோ. 275, உரை);.

     [வழி + முறை.]

 வழிமுறை3 vaḻimuṟai, வி.எ. (adv.)

   பின்பு; afterwards, subsequently.

     “வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான்” (கலித். 82);.

     “நாற்பத் தொன்பது வழிமுறை வந்த” (புறநா. 201: 11);.

     [வழி + முறை.]

வழிமுறைத்தாய்

வழிமுறைத்தாய் vaḻimuṟaittāy, பெ. (n.)

   தகப்பன் முதல் திருமணத்திற்குப் பின், மணந்துகொண்ட தாய்; step mother.

     “வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு” (கலித். 82);.

மறுவ. சிற்றன்னை.

     [வழிமுறை + தாய்.]

தா → தாய்.

ஒருகா. தம் + ஆய் → தாய். பிள்ளை நிலையில், புகுந்தகுடிக்கு, மகவினைக் கொடுக்காது போயினும், தமது கணவன் மணந்து கொண்டவளது குழந்தையை தாய் முறையில் வளர்த்துப் பாதுகாப்பவ ளென்றறிக. உறவு வழியில் தாயாகுந் தன்மையுடையவளே, வழிமுறைத்தாய்.

வழிமுறைத்தாரம்

வழிமுறைத்தாரம் vaḻimuṟaittāram, பெ. (n.)

   முதல் மணத்துக்குப் பின் மணந்து கொண்ட தாரம்; second wife, wife married after the death of the previous wife.

     “தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின்” (தொல். பொருள். 79, உரை, பக். 186);.

     [வழிமுறை + தாரம்.]

தள் → தரு → தார் → தாரம்.

தள் என்னும் வினை தருதற் பொருளில் தரு எனத் திரிந்தது. அதன்பின் எதிர்மறை வினையில் தார் அல்லது

     ‘தா’ என்றானது. தாரம் என்னும் சொல் தார் என்னும் திரிபடியாகப் பிறந்தது.

முதற்கண் ஆடவர்க்குத் தரப்பட்டவள் மனைவி. பிள்ளையைப் புகுந்தகுடிக்குத் தருவதற்பொருட்டு, வழிமுறையில் முதற்கண் கணவனுக்குத் தரப்பட்ட தாரமே வழிமுறைத்தாரம் எனலாம்.

வழிமொழி

வழிமொழி1 vaḻimoḻidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. வழிபாடு கூறுதல்; to praise.

     “வலியரென வழிமொழியலன்” (புறநா. 239, 7);.

   2. மொழிந்ததைத் திரும்பக் கூறுதல்; to reiterate, as a statement already made.

     [வழி + மொழி.]

வழிமொழிதல் பற்றிப் பேராசிரியர் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் புகல்வது.

     “தன் தன்மையென வேறின்றித் தன்கைப்படுத்தல்” (தொல். பொருள்.307 பேரா. உரை);.

 வழிமொழி2 vaḻimoḻi, பெ. (n.)

   இசைப் பாட்டு வகையுளொன்று; a kind of rhythmic verse.

     “தமிழ் விரகன் வழிமொழிகள்” (தேவா. 149:12);.

     [வழி + மொழி.]

 வழிமொழி3 vaḻimoḻi, பெ. (n.)

   அணிவகை (யாப். வி.பக்.511);; a figure of speech.

     [வழி + மொழி.]

வழிமோனை

வழிமோனை vaḻimōṉai, பெ. (n.)

   இன வெழுத்தால் வரும் மோனைத் தொடை (தொல். பொருள். செய். 94, பேரா. உரை);; vowel and consonantal assonance in metrical alliteration.

     [வழி + மோனை.]

வழியசை

வழியசை vaḻiyasai, பெ. (n.)

   கலிப்பாவில் வரும் ஒர் உறுப்பு (கலித். 90, உரை);; a member of kali verse.

     [வழி + அசை. அல் → அலை → அசை.]

வழியடியார்

வழியடியார் vaḻiyaḍiyār, பெ. (n.)

   வழிவழித் தொண்டர்; hereditary worshippers or devotees.

     “வழியடியோம் வாழ்ந்தோங்காண்” (திருவாச. 7, 11);.

     [வழி + அடியார்.]

வழியடை

வழியடை1 vaḻiyaḍaittal,    4 செ.குன்றாவி. (v.t)

   1. செல்லவொட்டாது வழித் தடை செய்தல்; to obstruct or hinder or present or wall the way.

     “வாழ்நாள் வழியடைக்குங்கல்” (குறள். 38);.

   2. தடுத்தல் (வின்.);; to raise obstacles in the way of to impede, to felter, to stop, prevent, hinder.

     [வழி + அடை.]

 வழியடை2 vaḻiyaḍai, பெ. (n.)

   இடையூறு, தடை; obstruction, obstacle, fester, hindrance.

     “அறந்தெரிதிகிரிக்கு வழியடை யாகும்” (பதிற்றுப். 22, 4);.

 வழியடை3 vaḻiyaḍai, பெ. (n.)

   தாயத்தின் பின்னுரிமை யுடையான்; presumptive heir.

     “தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும்” (பெருங், உஞ்சைக். 37.222);.

     [வழி + அடு → அடை.]

வழியட்டு-தல்

வழியட்டு-தல் vaḻiyaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வழி விடுதல்; to cause to overflow or overspread, to be brimmed.

     “நெருப்பை வழிபட்டினாற் போல்” (ஈடு.4, 6, 2);.

     [வழி + அட்டு.]

வழியனுப்பு-தல்

வழியனுப்பு-தல் vaḻiyaṉuppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. செலவு மேற்கொள்ள விடுதல்; to see one off, send some one to.

   2. சென்று வருதற்கு விடைகொடுத்து அனுப்புதல்; to bid farewell.

வெளிநாடு செல்லும் தலைவரை வழியனுப்பத் தொண்டர்கள் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் திரளாகக் கூடினர்.

     [வழி + அனுப்பு-, வழியனுப்புதல் = விடைகொடுத்தனுப்புதல், போகச் செய்தல்.]

வழியனுப்புதல் மக்களிடையே பரவலாக, இன்று வழக்கில் உள்ளது. வீட்டிற்கு வந்த விருந்தினரை வாசல்வரை சென்று வழியனுப்புவதும், நண்பரை அல்லது உறவினரை பணியின் பொருட்டோ அல்லது படிப்பிற்காகவோ, வெளிநாட்டிற்கு வழியனுப்புவதும், விழா முடிந்தவுடன் தலைவரை, அவர்தம் மகிழ்வுந்தில் ஏறும்வரை உடன்சென்று வழியனுப்புவதும், இன்று காணப்படும் நிகழ்வாகும்.

வழியனுப்புவிழா

 வழியனுப்புவிழா vaḻiyaṉuppuviḻā, பெ. (n.)

   விடைகோடல் விழா; farewell function.

     [வழியனுப்பு + விழா. விழு + ஆ (ஆ – தொழிற் பெயரீறு);.]

வழியன்

வழியன்1 vaḻiyaṉ, பெ. (n.)

   பெருநோயாளன் (யாழ்.அக.);; leper.

மறுவ. தொழுநோயாளன்.

     [அழியன் → வழியன்.]

இப் பெருநோயின் விளைவால் உடலுறுப்புகள் குறையும். கை, கால் விரல்கள் அழுகும். அருவருக்கத்தக்க நிலையினைத் தோற்றுவிக்கும்.

 வழியன்2 vaḻiyaṉ, பெ. (n.)

   அரியவன்; a man of incognito.

     “இன்று சென் றெய்தும் வழியனு மல்லன்” (புறநா. 389:7);.

வழியம்பலம்

 வழியம்பலம் vaḻiyambalam, பெ. (n.)

   வழிப்போக்கர் தங்குவதற்குரிய விடுதி (நாஞ்.);; wayside inn or rest house.

     [வழி + அம்பலம். அம்பு → அம்பல் → அம்பலம் = பலர் கூடுமிடம்.]

வழியலை-த்தல்

வழியலை-த்தல் vaḻiyalaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஆறலைத்தல் (பொருந. 21, உரை);; to rob on the highway.

மறுவ. வழிப்பறித்தல்.

     [வழி + அலை-த்தல், அலை-த்தல் = அடித்தும் துன்புறுத்தியும் பறித்தல்.]

அலைத்தல் = வருத்துதல். அல் → அலை. அலை-தல் (த.வி.); → அலை-த்தல் (பி.வி.);

வழிப்போக்கரைத் துன்புறுத்தி, அவர்தம் உடைமைகளைத் தன்வயப்படுத்தல். ஆறலைக் கள்வர்தம் வழியலைத்தல் தொழில், சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்றவற்றில் மிகுதியாகப் பேசப்படுகிறது.

வழியல்

வழியல்1 vaḻiyal, பெ. (n.)

   வழிந்தோடுவது (யாழ்.அக.);; that which overflows or drains off, surplusing.

     [வழி → வழியல்.]

 வழியல்2 vaḻiyal, பெ. (n.)

   வழித்தெடுக்கப் பட்டது (யாழ்.அக.);; that which is gathered together by wiping, scraping, etc.

     [வழி → வழியல்.]

வழியளவை

வழியளவை vaḻiyaḷavai, பெ. (n.)

   கருதலளவை; inference, as a mode of proof, derivation, deducing.

     “ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு, மூலவேதம்

உண்டென்று வழியளவையா லுணரப்படுதலின்” (சி.போ. பா.அவையடக். பக். 16);.

     [வழி + அளவை. அள் → அள → அளவை.]

காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்னும் நால்வகை ஏரண அறிவழி யளவைகளுள், வழியளவையும் ஒன்று.

வழியாக

வழியாக vaḻiyāka, இடை. .(part.)

   1. மூலம்; through, by.

   2. வேற்றுமை உருபு

     ‘இன்’ என்பதற்கு பின் வருகின்ற சொல்;

 after the case suffix.

பலகணியின் வழியாகத் தென்றல் வீசியது (உ.வ.);.

     [வழி → வழியாக.]

வழியாமணக்கு

 வழியாமணக்கு vaḻiyāmaṇakku, பெ. (n.)

   புல்லாமணக்கு; a eastor plant, Sebastiana Chamaelea.

     [வழி + ஆமணக்கு. அவிழ் → அவிழம் → அவிணம் → ஆவிணம் → ஆவணம் → ஆமணம் → ஆமணக்கு.]

அவிழ் = முளையவிழும், வித்து. எண்ணெய் வித்தாகப் பயன்படும் முதற்காரணம் கருதி ‘அவிழ்’ அடியாக இச்சொல் தோன்றியது. ஆமணக்கு வகை பதினேழுள் வழியாமணக்கும் ஒன்று. இஃது மிகுதியாக எண்ணெய் நல்கும் வித்தென்று, நிலைத்திணை இயல் வல்லுநர் கூறுவர்.

வழியாயம்

 வழியாயம் vaḻiyāyam, பெ. (n.)

   வரி (சுங்கம்); (கல்.);; toll, excise.

     [வழி + ஆயம்.]

வழியிரங்கு-தல்

வழியிரங்கு-தல் vaḻiyiraṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   பின்னிரங்குதல்; to repent.

     “கற்றொறுங் கல்லாதே னென்று வழியிரங்கி” (பழமொ. 2);.

     [வழி + இரங்கு.]

இரங்குதல் = மனமிரங்கிக் கூறுதல். இள → இர → இரங்கு.

நடந்து முடிந்த, செயலை நினைந்து மனமழுந்துதல் அல்லது உள்ளங் குமைதல் வழியிரங்குத லாகும்.

வழியிலார்

வழியிலார் vaḻiyilār, பெ. (n.)

   கொடி வழியினர்; descendants, pedigee.

     “சாத்தனும் இவன் வழியிலாரும் பெறக்கடவதாகவும்” (புதுக்.கல். 11);.

     [வழி → வழியிலார். வழி = தலைமுறை, வழியிலார் = வழித்தோன்றல் அல்லது மரபினர்.]

வழியீற்றுப்பசும்பால்

 வழியீற்றுப்பசும்பால் vaḻiyīṟṟuppasumbāl, பெ. (n.)

   தானீன்ற கன்றிற்குப் பலமுறை கொடுக்கும் பால் அல்லது, நெடுங்காலமாக ஈன்ற கன்றிற்குக் கொடுத்து வரும் பால்; milk of of the cow that has calfed many times or that has calfed a long time before.

     [வழி + ஈன் → ஈனு → ஈற்று + பசு + பால்.]

 Skt. pasu → த. பசு.

வழியுங்காந்தி

 வழியுங்காந்தி vaḻiyuṅgāndi, பெ. (n.)

   அப்பிரக நஞ்சு; a kind of arsenic.

வழியுணவு

வழியுணவு vaḻiyuṇavu, பெ. (n.)

வழிச்சோறு, 1 (பிங்.); பார்க்க;see vali-c-coru 1.

     [வழி + உணவு.]

வழியுரிமை

 வழியுரிமை vaḻiyurimai, பெ. (n.)

   பிறங்கடை, வாரிசு; next successor.

     [வழி+உரிமை]

வழியுரை-த்தல்

வழியுரை-த்தல் vaḻiyuraittal,    4 செ.கு.வி. (v.i.)

   தூது சொல்லுதல்; to speak as an ambassador.

     “வழியுரைப்பான் பண்பு” (குறள், 688);.

     [வழி + உல் → உர → உரை-.]

வழியுரைப்பான்

 வழியுரைப்பான் vaḻiyuraippāṉ, பெ. (n.)

   தூதன் (பிங்.);; ambassador.

     [வழி + உரைப்பான். உல் → உர → உரை → உரைப்பான்.]

ஒரு நாட்டின் சார்பாகச் செய்தி யறிவிப்பாளனாக அல்லது நிகராளியாக, மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்படும் உயரதிகாரி – நிலைத்தூதன்.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு தொடர்பான செய்திகள், மற்றொரு நாட்டிற்குத் தூதன்வழி யுரைக்கப்படுவதால், வழியுரைப்பான் என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றான்.

வழியெச்சமறு-தல்

வழியெச்சமறு-தல் vaḻiyeccamaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

வழியெஞ்சு-தல் பார்க்க;see vali-y-enju.

     “இத்தர்மம் அழிவு செய்வான் வழியெச்சமறுவான்” (S.I.I.Vol. V.83);.

     [வழி + எச்சம் + அறு-.]

அர் → அறு. ஒ.நோ. உர் → உறு.

வழியெஞ்சு-தல் _, 5 செ.கு.வி. (v.i.);

   கொடிவழியற்றுப் போதல்; to become extinct, as a family.

     “வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்” (குறள், 44);.

     [வழி + எஞ்சு.]

வழியெச்சம்

வழியெச்சம் vaḻiyeccam, பெ. (n.)

   குடும்ப வழி தொடர்தற்குரிய மகப்பேறும், சுற்றமும்; descendants, offspring and kith an kin.

     “இத்தர்மம் அழிவு செய்வான் வழியெச்ச மறுவான்” (S.I.I. Vol.V.224);.

மறுவ. வழிமரபு, உற்றார் உறவினர்.

     [வழி + எச்சம். எஞ்சு → எச்சு → எச்சம். வழியெச்சம் = வழித்தோன்றல், பிறங்டை.]

வழியெதுகை

வழியெதுகை vaḻiyedugai, பெ. (n.)

   ஒரு செய்யுளில் அடிதோறும் முதன்மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகை வகை (காரிகை, ஒழிபி. 6, உரை, பக். 158);; an agreement in rhyme of the first, the second and the third foot in every line of a stanza.

     [வழி + எதுகை. எதிர்க்கை → எதுகை.]

வழியொழுகு-தல்

வழியொழுகு-தல் vaḻiyoḻugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பின் செல்லுதல்; to follow, to repeat.

   2. நேர்வழியிற் செல்லுதல்; to go along the right path, to be upright.

     “வழியொழுகாச் சலதரன்” (காஞ்சிப்பு. கடவுள். 5);.

   3. ஏவலின்படி நடத்தல்; to obey, as a direction or command.

     “வாய்மையான் வழியொழுகின்று” (பு.வெ.8, 11, கொளு);.

     [வழி + ஒழுகு.]

வழியோன்

 வழியோன் vaḻiyōṉ, பெ. (n.)

வழித்தோன்றல் (பிங்.); பார்க்க;see vali-t-tooral.

     [வழி → வழியோன்.]

வழிவகு-த்தல்

வழிவகு-த்தல் vaḻivaguttal,    4 செ.கு.வி. (v.i.)

வழிகோலு பார்க்க;see valli-kolu.

     [வழி + வகு.]

வழிவகை

வழிவகை vaḻivagai, பெ. (n.)

   1. இடம் பொருளேவல்கள்; theatre or place, resources and conveniences.

வழி வகையுள்ளவன்.

   2. வழிமுறை, தகுமுறை; expedients, means.

   3. ஒரு செயல், நடைபெறுவதற்கான ஏற்பாடும், திட்டமும்; way or method.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர் முன்னேற அரசியல் சட்டத்தின் வாயிலாக வழிவகை செய்யப்பட்டது (உ.வ.);.

     [வழி + வகை.]

வழிவந்தான்

வழிவந்தான் vaḻivandāṉ, பெ. (n.)

   1. கொடி வழிப்பிறந்தவன்; descendant.

   2. பின்பற்றி யொழுகுவோன்; follower.

     “மறையின் வழிவந்தார்கண்ணே” (ஏலாதி.1);.

   3. நற் குடியிற் பிறந்தோன்; one born of a good family.

     “என்றும் வழி வந்தார்” (ஏலாதி. 1);.

     [வழிவா → வழிவந்தான்.]

வழிவரு-தல்

வழிவரு-தல் vaḻivarudal,    18 செ.கு.வி. (v.i.)

வழிவா-தல் பார்க்க;see vali-va.

     [வழி + வரு.]

வழிவருத்தம்

வழிவருத்தம் vaḻivaruttam, பெ. (n.)

   இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுவதால் ஏற்படும் வழிநடைக் களைப்பு; tiredness, fatigue or weariness from journey.

     “வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல” (சிறுபாண்.40, உரை);.

மறுவ. வழிநடைத்துன்பம்.

     [வழி + வருத்தம்.]

வழிநடைத்துணையின்றி தன்னந்தனியே நெடுந்தொலைவு செல்லுதலால், ஏற்படும் மெய் வருத்தம்.

வழிவலியுடையோன்

 வழிவலியுடையோன் vaḻivaliyuḍaiyōṉ, பெ. (n.)

   ஓணான்; a species of lizard family.

     ‘வேலிக்கு ஒணான் சான்று’ (பழ);.

     [P]

     [வழி + வேலி → வலி + உடையோன்.]

வழிவழி

வழிவழி vaḻivaḻi, பெ.அ. (adj.)

   தலைமுறை தலைமுறையாய்; from generation to generation.

     “பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து” (தொல்.பொருள்.422);.

     “அழிவி லுள்ளம் வழிவழிச் சிறப்ப” (அகநா. 47:1);.

     “வழிவழிச் சிறக்க எனவேட் டேமே” (ஐங்குறு. 2:6);.

மறுவ. சாவடி.

     [வழி + வழி = தொடரும் தலைமுறை.]

வழிவழி வந்ததும், நீண்ட தொடர்பினை யுடையதுமாய் அமைந்த, குழு அல்லது இனம்.

வழிவழிப்படு-தல்

வழிவழிப்படு-தல் vaḻivaḻippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   மரபுவழிப்படுதல்; to follow customs or norms.

     “புல் லிலை ஓமைய புலிவழங்கு அத்தம் சென்ற காதலர் வழிவழிபட்ட நெஞ்சே” (நற்.107:6-7);.

     [வழிவழி + படு.]

வழிவழியாக

 வழிவழியாக vaḻivaḻiyāka, கு.வி.எ. (adv.)

   மரபு; from generation to generation, conventionally.

இது வழிவழியாக இப்படித்தான் நடந்து வருகிறது (இ.வ.);. வழிவழியாகத் தொடரும் மரபினை மாற்றுவது கடினம் (உ.வ.);.

மறுவ. கொடிவழி, கொடிவழியாக.

     [வழிவழி + ஆக.]

தலைமுறை கடந்து நீண்ட நெடுந் தொடர்பினை வழிவழியாகக் கொண்டதோரினம். மரபு, செய்தி முதலியவை தொடர்வதைக் குறிக்கையில், முதல் தலைமுறைக்கு அடுத்தது. என்ற பொருண்மையைக் குறிக்கப் பயன்படுத்தும் கூட்டுச் சொல்லாகும்.

வழிவழியாய்ப்போ-தல்

வழிவழியாய்ப்போ-தல் vaḻivaḻiyāyppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   வெவ்வேறு வழியாகப் பிரிந்து போதல் (வின்.);; to disperse in different directions.

     [வழி + வழி + ஆ + போ.]

வழிவா-தல்

வழிவா-தல் vaḻivātal,    8 செ.கு.வி. (v.i.)

   1. மரபுவழி வருதல்; to be hereditary.

     “வழிவருகின்ற வடியரோர்க்கருளி” (திவ். திருவாய். 9, 2, 2);.

   2. தொன்று தொட்டு வருதல்; to be handed down from generation to generation.

     “வழிவந்த கேண்மையார்” (குறள், 809);

   3. நற்குடிப் பிறத்தல்; to hail from a good family.

   4. பின்பற்றியொழுகுதல்; to follow, to abide by

     “மறையின் வழிவந்தார்” (ஏலாதி. 1);.

   5. அறநூல்களிற் கூறியவாறு, பிறழாது நடத்தல்; to follow or adhere strictly the precepts of the sastras.

     “குடிகுடி வழிவந்தாட்செய்யுந் தொண்டரோர்க் கருளி” (திவ். திருவாய். 9,2,1);.

     [வழி + வரு → வா.]

வழிவிடு

வழிவிடு1 vaḻiviḍudal, செ.குன்றாவி. (v.t)

   1. புறப்பட்டுப்போகச் செய்தல், விடுதல்; to see one off.

     “நேச வெகுமானங்கள் செய்தெழுதல் வழிவிடுதல்” (திருவேங். சத.58);.

   2. பாதையிலிருந்து விலகுதல்; to make way for somebody.

தண்ணீர் கொண்டு வந்த பெண்கள், பெரியவர் எதிர்ப்பட்டதும் வழிவிட்டார்கள் (இ.வ.);. புகழ்பெற்ற ஆட்டக்காரர், தாம் இனிப் போட்டிகளிற் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், புதுவதாய்க் களமிறங்கவிருக்கும் இளம் வீரர்களுக்கு வழிவிட விரும்புவதாகவும், தொலைக்காட்சி நேர்கானலிற் கூறினார் (இ.வ.);. வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்பவர்களுக்குத் தடையாக இல்லாமல், விலகி வழிவிடுதல்.

     [வழி + விடு.]

 வழிவிடு2 vaḻiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. செல் வழி திறத்தல்; to make or open a way.

   2. நெறிதவறுதல் (வின்.);; to stay from the right ways co path.

   3. மாற்று வழியின் வாயிலாகச் செயல் முடிக்க ஏற்பாடு செய்தல்; to devise means, to find a way out, as from a difficult situation.

   4. இடையூறுகளைப் போக்குதல்; to mitigate or remove obstacles or obstructions.

   5. இறக்குந் தறுவாயில் கழுவாயாகச் (பிராயச்சித்தமாக); சடங்குகளைச் செய்தல் (இ.வ.);; to perform certain rituals when a person is at the point of death.

     [வழி + விடு.]

வழிவிடுதல்

வழிவிடுதல் vaḻiviḍudal, பெ. (n.)

   1 பள்ளர் இன இறப்புச்சடங்குகளில் ஒன்று; a funeral rites of Pallar caste.

   2. வழிகட்டுதல் பார்க்க;see Vasicuttuta! –

     [வழி+விடுதல்]

வழிவை-த்தல்

வழிவை-த்தல் vaḻivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுற்றுலா அல்லது புறப்பாடு தொடங்குதல் (யாழ்.அக.);; to start or commence a journey.

   2. முன் செய்து காட்டுதல்; to begin first, to set an example to be a model.

   3. கேடு சூழ்தல்; to plot one’s ruin.

அவனுக்கு வழி வைக்கிறான்.

     [வழி + வை-.]

வழு

வழு1 vaḻu, பெ. (n.)

   கன்று முதலியன பிறக்கும்போது காணப்படும் சவ்வு முதலியன; dirt or mucus, as on the body of a calf just yeaned.

     “வழு நுகர்ந்தா தரவொடு கன்றுகள்” (நூற்றெட்டு. திருப்பு. 67);.

     [வழ → வழு.]

 வழு2 vaḻu, பெ. (n.)

   1. தவறு, குற்றம் (தக்கயாகப். 7);; error, mistake, fault, flaw, lapse.

   2. இழப்பு, கேடு (சூடா.);; damage, loss.

   3. கரிசு (பாவம்);; sin.

     “வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள” (புறநா. 34);.

   4. பழிப்புரை; scandal, ill-repute.

     “வழுவெனும் பாரேன்” (சிலப். 16, 69);.

   5. திணை, பால் முதலியன தத்தம் இலக்கணநெறி மயங்கி வருவதாகிய குற்றம் (நன். 375);; solecism, impropriety in language;deviation from rule.

     “எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர்” (புறநா. 61:16);.

     “வழுவிலன் அம்ம தானே குழீஇ” (நற். 143:6);.

     [முழு → மழு → வழு.]

வழு என்னும் சொல்லின் பொருட் பொருத்தப்பாடு குறித்து, யாப்பருங்கல விருத்தி, இளம்பூரணர், சேனாவரையர் முதலானோர் கூறும், உரைக்குறிப்புகள் வருமாறு:-

   1. வழு என்பது குற்றம். அது நான்கு வகைப்படும். எழுத்து வழுவும், சொல் வழுவும், யாப்பு வழுவும் என (யாப்.95);.

   2. செய்ததன்கண் முடிய நில்லாது. தப்பி ஒழுகுதல் (தொல்.பொருள்.143, இளம்.);.

   3. சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகுதல் (தொல்.பொருள்.145. நச்.);.

   4. வழு எழுவகைப்படும் (தொல். சொல்.11. சேனா.);.

   5. எழுவகை வழுவாவன : திணை வழு, பால்வழு, இடவழு, காலவழு, செப்புவழு, வினாவழு, மரபு வழு என்பன (தொல்.சொல்.1, இளம்.);.

   6. வழு எழுவகைப்படும் (தொல்.சொல்.11. சேனா.);.

   7. சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகுதல் (தொல்.பொருள்.145 நச்.);.

வழுஉ

வழுஉ vaḻuu, பெ. (n.)

வழு பார்க்க;see valu.

     “வழுஉச் சொற் கோவலர்” (கலித். 106);.

     [வழு → வழுஉ.]

வழுஉச்சொற்புணர்த்தல்

வழுஉச்சொற்புணர்த்தல் vaḻuuccoṟpuṇarttal, பெ. (n.)

   நூற்குற்றம் பத்தனுள், பிழையுள்ள சொற்றொடர்களை அமைக்குங் குற்றம் (நன்.12);; employment of improper or inappropriate phrases or words and terms, one of ten nür-kurram.

     [வழுஉ + சொல் + புணர்த்தல்.]

வழுஉநிலை

 வழுஉநிலை vaḻuunilai, பெ. (n.)

வழுநிலை (வின்.); பார்க்க;see valunilai.

 Erroneous use of (gram.); words.

வழுக்கட்டை

வழுக்கட்டை vaḻukkaṭṭai, பெ. (n.)

   1. உருண்டு திரண்டிருக்கை; plumpness.

     “வழுக்கட்டை பயல்,

   2. மூடத்தனம் (வின்.);; stupidity.

   3. சிறுபிள்ளை (இ.வ.);; child, young person, an adolescent in comtempt.

     [மழுக்கு → மழுக்கட்டை → வழுக்கட்டை (மு.தா.3 பக்.105);.]

வழுக்கம்

வழுக்கம் vaḻukkam, பெ. (n.)

   1. தவறு; error, slip, flew, mistake.

     “வாய்மை வழுக்க முறுதலஞ்சி” (பெருந்தொ.994);.

   2. ஒழுக்கத் தவறு; lapse of conduct.

     “மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர்” (சிலப்.13.38);.

     [வழு → வழுக்கு → வழுக்கம்.]

வழுக்கல்

வழுக்கல் vaḻukkal, பெ. (n.)

   1. சறுக்குகை; slipperiness.

   2. சறுக்கலான தரை (திவா.);; slippery ground.

   3. தெங்கினிளங்காய்; tender coconut.

     [வழு → வழுக்கு → வழுக்கல் = வழுக்கைத் தேங்காய் (தேவநேயம்.12, 260);.]

வழுக்கையான இடமும் பொருளும் வழுக்கும் தன்மைத்து.

வழுக்கல் = வழுவழுப்பு, வழுக்கைத் தேங்காய்.

வழுக்கா-த்தல்

வழுக்கா-த்தல் vaḻukkāttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் கூறுதல்; to utter proper word to mention a partcular theme or thing.

   2. வழுவமை-த்தல் பார்க்க;see valu-u-amai.

     [வழு+ கல் → கள் →கவ்(வு); → கா-.]

கவ்வுதல் = பிடித்தல், காத்தல், தீங்கு வராமல் தடுத்தல், விலக்குதல், பேணிக்காத்தல் என்னும் பொருண்மைகளில், இலக்கியத்திலும், மக்களிடையேயும் வழக்கூன்றியுள்ளது.

     ‘கா’ என்னும் வினையடி, பாதுகாத்தல் என்னும் பொருள் தரும். வழுக்காத்தல் என்னுஞ்சொல், ஒரு பொருளின் தன்மையைப் பேணிக்காத்தல் என்னும் பொருள் பயத்தல் காண்க. இச் சொல் குறித்து, சேனாவரையரும், சுப்பிரமணிய தீட்சிதரும் கூறியுள்ளமை வருமாறு :-

     “வழுவற்க என்றலும் வழு அமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும்” (தொல். சொல். 11, சேனா.);

குறித்த பொருளை அதற்குரிய சொல் அன்று ஆயினும், ஒராற்றான் அப்பொருளை விளக்குதலின் அமைக என்றல், வழுக்காத்தலாம் (கப்பி. பிரயோ.44);.

வழுக்காய்

 வழுக்காய் vaḻukkāy, பெ. (n.)

   வழுக்கலுள்ள இளந்தேங்காய் (வின்.);; tender coconut in which the pulpy matter has just begun to form.

     [மழுக்கு → வழுக்கு + காய்.]

வழுக்குந்தன்மையுள்ளதும், இளம் பதத்திலுள்ளதுமான தெங்கினிளங்காய்.

வழுக்காறு

வழுக்காறு vaḻukkāṟu, பெ. (n.)

   தீய நெறி; evil way or method.

     “வழுக்காறனைத்து முறுவிக்கும்” (விநாயகபு. 2,32);.

     [வழு → வழுக்கு + ஆறு. அறு → ஆறு = வழி.]

வழு = குற்றம். வழுக்காறு = தீயவழி.

வழுக்கிவிழு-தல்

வழுக்கிவிழு-தல் vaḻukkiviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து போதல்; to astray.

     [வழு → வழுக்கு → வழுக்கி + வீழ் → விழு-.]

வழுக்கு

வழுக்கு1 vaḻukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சறுக்குதல்; to slip, to slide, as in slippery lands.

     “வழுக்கி வீழினுந் திருப்பெயரல்லான் மற்றியா னறியேன்” (தேவா. 1110, 1);.

வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தவன் வாழைப் பழத்தோலில் கால் வைத்ததால், வழுக்கி விழுந்தான் (இ.வ.);. வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழுந்தவர் மீள்வது கடினம் (உ.வ.);. பாசி படர்ந்த குளத்துப் படி வழுக்கும் (உ.வ.);.

   2. தவறு செய்தல்; to err, to commit a mistake or wrong.

     “கோள் வழுக்கி” (கலித். 104);.

   3. தப்புதல்; to escape.

     “வழுக்கிக் கழிதலே நன்று” (நாலடி. 71);.

   4. மறத்தல்; to be forgetful.

     “வழுக்கியும் வாயாற் சொலல்” (குறள். 139);.

   5. அசைதல் (வின்.);; to move back and forth, as the eyes.

ம. வழுக்குக.

     [மழு → வழு → வழுக்கு.]

ஒருகா. வழுவழுத்தல் என்றுமாம்.

ஈளை நிலப்பரப்பில் பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதலும், வாழ்க்கைப் பாதையில் பொருளாதாரச் சீர்குலைவுக்காளாகி நிலைகுலைதலும், பாசி படர்ந்த படிக்கட்டில் சறுக்கிச் சாய்தலும், வழுக்குதல் எனலாம்.

வழுக்கிவிழுதல் என்பதும் அது ‘வழுக்கி விழுந்தவள்’ எனப் பெண்ணைப் பழிக்கும் ஆணுலகம் – ஏன் பெண்ணுலகமும் கூட ஆணை வழுக்கி விழுந்தவனாகச் சொல்வது இல்லை. வழுக்கி விழுந்தவர்கள் கடைத்தேறவென்றே அரும்பாடு பட்டார் முத்துலக்குமி அம்மையார். காந்தியடிகள் தம் தொண்டில் ஒரு பகுதி வழுக்கி விழுந்தவர் கடைத்தேற்றத்திற்கு உரிமை கொண்டது. ஒருவர் வழுக்கினால், இன்னொருவரும் வழுக்குதலுக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டுமே! அவரைத் தப்பவிட்ட வழுக்குதலே வழுக்குதலாம். அவள் வழுக்கி விழுந்தவளாமே எனப் பார்வை பார்ப்பது பரிவாக இருந்தால் நலம்! எரிவாக இருந்தால்? எய்தவன் இருக்க அம்பை நோவதாம் பழியே. வழுக்கி விழுதல், வழிதவறல், கைவிடல் என்பனவும் இச் சார்புடையனவே (வழுக்குச்சொல். அகராதி. ப.14, 115);.

 வழுக்கு2 vaḻukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒழிதல்; to exempt, to keep out of account.

     “ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது” (குறள். 165);.

   2. அடித்தல்; to beat to thrash.

   3. மோதுதல் (வின்.);; to dash against.

     [வழுவு → வழுக்கு.]

 வழுக்கு3 vaḻukku, பெ. (n.)

   1. சறுக்குகை; slipping.

   2. தவறு; error, mistake.

   3. குற்றம்; fault.

   4. பிழை; mistake or wrongness.

   5. தோல்வி; failure.

   6. மறதி (பிங்.);; forgetfulness.

   7. பயன்படாது கழிவது; that which comes useless.

     “வழுக்கினுள் வைக்குந்தன் னாளை” (குறள், 776);.

   8. கொழுப்பு; grease.

   9. சளிச்சவ்வு, சளி, சளியால் மூடப்பட்ட நீர்ப்பொருள்:

 mucous, mucus.

     “நிணம் பொதி வழுக்கிற் றோன்றும்” (ஐங்குறு. 207);.

     [முல் → மல் → மழு → வழு → வழுக்கு.]

வழுக்குநிலம்

வழுக்குநிலம் vaḻukkunilam, பெ. (n.)

   சறுக்கலான தரை (திவா.);. (குறிஞ்சி. 288, உரை);; slippery ground.

மறுவ. ஈளைத்தரை

     [மழுக்கு → வழுக்கு + நிலம்.]

வழுக்குப்பாசி

 வழுக்குப்பாசி vaḻukkuppāci, பெ. (n.)

   நீர்ப்பாசி வகை (வின்.);; a kind of moss, Lichen.

     [வழுக்கு + பாசி.]

வழுக்குமரம்

 வழுக்குமரம் vaḻukkumaram, பெ. (n.)

   விளையாடற்குரிய சறுக்கு மரம்; greased pole to climb on, in sports.

     [வழு → வழுக்கு + மரம்.]

நுனிக்கொம்பிலிருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றுதற் பொருட்டுப், போட்டியிட்டு ஏறும் எண்ணெய் தடவப்பட்ட வழுவழுப்பான நீண்டுயர்ந்த கம்பமே, வழுக்கு மரமாகும். வழுக்குமர விளையாட்டுப் போட்டி ஊரகத்தே இன்றும் காணப்படுகிறது.

     [P]

வழுக்குவெண்டி

 வழுக்குவெண்டி vaḻukkuveṇṭi, பெ. (n.)

   வழவழப்பான வெண்டைக்காய்; okra, ladies finger which is viscous-Hibiscus esculentus.

     [வழு → வழுக்கு + வண்டை → வெண்டை → வெண்டி.]

வழுக்கெண்ணெய்

 வழுக்கெண்ணெய் vaḻukkeṇīey, பெ. (n.)

   கொழுப்பும், எண்ணெயுங்கலந்த கலவை வகை (யாழ்.அக.);; a mixture of grease and oil.

     [வழுக்கு + எண்ணெய்.]

எள் + நெய் = எண்ணெய்.

எண்ணெய் என்னுஞ்சொல் முதற்கண் நெய்ப் பொருள் எல்லாவற்றிற்கும் பொதுப்பெயராயிருந்து, காலப்போக்கில் சிறப்புப் பெயராயிற்று. முதன்முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னுஞ் சொல், மிகப்பெருவழக்காய் வழங்கியதால், நாளடைவில் தன்சிறப்புப் பொருளை யிழந்து, நெய்யல்லாத நெய்மப் பொருள்களின், பொதுப்பெயராயிற்று. வழுக்கும் இயல்புள்ள, கொழுப்பு மிகுதியாகக் கலந்த எண்ணெய் வழுக்கெண்ணெய் என்று மக்களிடையே வழக்கூன்றியது.

வழுக்கை

வழுக்கை1 vaḻukkai, பெ. (n.)

   1. இளவழுக்கை; the tender kernal or pulp inside-a tender cocoanut.

   2. மூன்று மாதத்திய பிண்டக்கரு; foetus of 3 months old.

   3. உகிர் உண்டாகும் பொருள்; proximal end of the nailbed.

   4. (பிரமி); வழுக்கைப்பூடு; a plant gratiola monera.

   5. மொட்டை; shaven head.

   6. வட்ட வழுக்கை; a tree.

   7. மயிர் முளையாமை; a skin disease which destroys the hair fex manges.

     [முல் → மொழு → மொழுக்கை → மழுக்கை → வழுக்கை = இளந் தேங்காய் (தேவநேயம்.12, பக்.260);.]

இளமை, புதுமைப் பொருளைக் குறிக்கும் முல் என்னும் முதனிலையினின்று முகிழ்த்த சொல். காலப்போக்கில் இச் சொல்லே முதிராத இளங்கருவினையும், மொழுமொழுவென்று, மழித்தாற் போலுள்ள வழுக்கைத் தலையினையும், குறிக்கலாயிற்று.

   வழுக்கும் இடமும், வழுக்கும் பொருளும் வழுக்கையாம். முன்னது வரப்பு வழுக்கல்;பின்னது இளநீரில் வழுக்கை. தலை வழுக்கை, வழுக்கையுமாம் மழுக்கையுமாம். முழுக்க வழிந்தது. மழுக்கை, மயிர் உதிர்ந்து முளைக்காதது வழுக்கை. வழுக்கைக் கல் போல, பொருள் போல அமைந்தது என உவமைப் பொருளதாம்.

இங்குக் காணும் வழுக்கை அப் பருப்பொருள் நீங்கிய நுண்பொருள் வழுக்கையாம். ஒன்றைச் சொன்னால்,

     ‘ஆம்’ என ஏற்காமல்,

     ‘அன்று’ எனவும் மறுக்காமல், வழுக்கிக் கொண்டு போய்விடலாம்.

     ‘அவனே வழுக்கை அவன் எப்படி எள்ளுக்காய் பிளந்தது போலத் தீர்த்து வைக்கப் போகிறான்’ என்னும் தெளிவு, வழுக்கைப் பொருள் விளக்கும் (வழக்குச் சொல் அகராதி.ப.114);.

 வழுக்கை2 vaḻukkai, பெ. (n.)

   1. வழுவழுப்பான இளந் தேங்காயின் உள்ளீடு; pulp of a tender coconut.

     “முதிரா வழுக்கை யிளநீர்” (குமரே. சத. 19);.

   2. தலைமயிர் உதிர்ந்து வளராத நிலை; baldness.

     [முல் → முழு → மொழு → மொழுக்கை → மழுக்கை → வழுக்கை.]

மொட்டையான பொருள்கள், சிறப்பாக மழித்த தலை, வழுக்கையாயிருப்பதால் மழுக்கைக் கருத்தினின்று. வழுக்கைக் கருத்துப் பிறந்தது.

வழுக்கைக்கெளிறு

வழுக்கைக்கெளிறு vaḻukkaikkeḷiṟu, பெ. (n.)

   1. நீலநிறமும் ஆறு அடி வளர்ச்சியுமுள்ள ஆற்று மீன் வகை; a fresh water fish, bluish, attaining 6 ft. or more in length.

   2. நீலநிறமும் நீண்ட முள்ளுமுள்ள ஆற்றுமீன்; a fresh-water fish with long maxillary barbels, bluish.

     [வழுக்கை + கெளிறு.]

குள் → கெள் → கெளிறு. கெளுத்திமீன் வகையு ளொன்று.

     [P]

வழுக்கைத் தேங்காய்

 வழுக்கைத் தேங்காய் vaḻukkaittēṅgāy, பெ. (n.)

   தெங்கினிளங்காய் (வின்.);; tender coconut.

     [வழுக்கை + தேங்காய்.]

வழுக்கைத்தலை

 வழுக்கைத்தலை vaḻukkaittalai, பெ. (n.)

   பொட்டலாயிருக்கும் தலை; bald head.

     [மழுக்கை → வழுக்கை + தலை.]

வழுக்கைப்பசலை

 வழுக்கைப்பசலை vaḻukkaippasalai, பெ. (n.)

   பசலை வகையுளொன்று; a kind of puslane.

மறுவ. வழுவற்றேங்காய்

     [வழுக்கை + பசலை.]

வழுக்கைப்பசளை

 வழுக்கைப்பசளை vaḻukkaippasaḷai, பெ. (n.)

   ஓர் வகைச் செடி; a prostate plant portulaca oleracea.

     [வழுக்கை + பசளை.]

வழுக்கைப்பயல்

வழுக்கைப்பயல் vaḻukkaippayal, பெ. (n.)

   சிறுவன்; young boy, an adolescent.

     [மழு → மழுக்கை → வழுக்கை + பயல் = சிறுபயல் (தேவநேயம்.12, பக்.260);.]

ம → வ – திரிபு

வழுக்கைப்பலா

 வழுக்கைப்பலா vaḻukkaippalā, பெ. (n.)

   சுவை குன்றிய பலாவகை (வின்.);; an inferior variety of jack tree.

     [வழுக்கை + பலா.]

வழுக்கைப்பள்ளம்

 வழுக்கைப்பள்ளம் vaḻukkaippaḷḷam, பெ. (n.)

   பல்லின் சவ்வுப் பள்ளம்; pulp cavity.

     [வழுக்கை + பள்ளம்.]

வழுக்கைப்புல்

 வழுக்கைப்புல் vaḻukkaippul, பெ. (n.)

   புல்வகையுளொன்று; a kind of grass Cyanotis axillaris.

     [வழுக்கை + புல். புல்லுதல் = துளைத்தல். உல் → புல்.]

பதினெண் வகைப் புல்வகையுளொன்று. புல்லுதல் என்னும் வினைச்சொல் வழக்கிறந்தது. புல் = உட்டுளையுள்ள நிலைத்திணை வகை.

பிடிக்குங்கால் சறுக்குந் தன்மையுள்ள புல்லே, வழுக்கைப்புல் எனலாம்.

வழுக்கைமரம்

 வழுக்கைமரம் vaḻukkaimaram, பெ. (n.)

   கட்டிடப் பணிகளுக்குப் பயன்படும் மர வகைகளுள் ஒன்று; a kind of tree intended to building works.

     [வழுக்கை + மரம்.]

வழுக்கைவிளநீர்

 வழுக்கைவிளநீர் vaḻukkaiviḷanīr, பெ. (n.)

   முதிராத் தன்மையதும், இளம் பதத்திலுள்ளதும், நீர்மிகுந்துள்ளதுமான தெங்கினிளங்காய்; tender cocoanut with pulp kernal.

     [மழுக்கை → வழுக்கை (வழுவழுப்பான இளம்பருப்புள்ளீடு); + இளநீர்.]

இளம் + நீர் = இளநீர். முதிராத வழுக்கைத் தெங்கிளிளநீர்.

வழுக்கோபிகம்

 வழுக்கோபிகம் vaḻugāpigam, பெ. (n.)

   முளைக்கீரை; a greens-Amaranthus gangeticus tender.

வழுங்கல்

 வழுங்கல் vaḻuṅgal, பெ. (n.)

   அறிவற்றவன்; insensate person, senseless idiot, stupid, fool.

அவன் சுத்த வழுங்கல், அவனோடு யார் பேசுவார்? (இ.வ.);.

     [மழுங்கல் → வழுங்கல்.]

வழுதலங்காய்

 வழுதலங்காய் vaḻudalaṅgāy, பெ. (n.)

   கத்தரிக்காய்; brinjal- Dischrostachys cineria.

இது கொடி வழுது துணைக்காய்.

வழுதலை

வழுதலை1 vaḻudalai, பெ. (n.)

   1. கத்தரிக்காய் (பிங்.);; brinjal;

 egg-plant-Solanum (சா.அக.);.

   2. கண்டங்கத்தரி வகை (மூ.அ.);; Indian night shade.

 வழுதலை2 vaḻudalai, பெ. (n.)

   1. புல்லுருவி (அக..நி.);; scarecrow made of straw.

   2. புனத்திடும் பொய்க்கழு (சது.);; dummy stake set up in corn fields as a warning to thieves.

வழுதலைக்கியாழம்

 வழுதலைக்கியாழம் vaḻudalaikkiyāḻm, பெ. (n.)

   கண்டங்கத்திரியுடன், மருந்துச் சரக்குகளைச் சேர்த்துக் காய்ச்சி வடித்த கருக்குநீர்; decoction of Solanum jacquini.

     [வழுதலை + கியாழம்.]

வழுதி

வழுதி1 vaḻudi, பெ. (n.)

   பாண்டிய மன்னர்களின் புனை பெயர்களுள் ஒன்று; one of the nick names of Pandiya kings.

     ‘வழுத்தத் தக்கவன் வழுதி எனப்பட்டான்’.

     [வழுத்தி → வழுதி. வழுத்து = புகழ்.]

 வழுதி2 vaḻudi, பெ. (n.)

   பாண்டியமன்னன் (பிங்);; Pandiyan king.

     “பெரும்பெயர் வழுதி” (புறநா. 3);.

வழுதி என்பதையே இயற்பெயராய்க் கொண்டவன்.

வழுதிநாடு

வழுதிநாடு vaḻudināṭu, பெ. (n.)

வழுதி வளநாடு (திவ். திருவாய். 3:6:11); பார்க்க;see Valudi-valanadu.

     [வழுதி + நாடு.]

வழுதியச்சுவருக்கம்

வழுதியச்சுவருக்கம் vaḻudiyaccuvarukkam, பெ. (n.)

   பாண்டியர் காசு வகை (S.I.I.V.90);; a Pandiyar coin.

     [வழுதி + அச்சு + Skt. வர்க்கம்.]

 Skt. varga → த. வருக்கம்.

வழுதியர்

 வழுதியர் vaḻudiyar, பெ. (n.)

   பாண்டிய மரபின் ஐந்து கிளைக் குடிகளுளொன்று; one of five classes of Pandiya ancestery.

     [வழுதி → வழுதியர்.

     ‘அர்’ பலர்பால் ஈறு.]

வழுதிவளநாடு

வழுதிவளநாடு1 vaḻudivaḷanāṭu, பெ. (n.)

   தென்பாண்டி நாட்டில் திருச்செந்தூர் மான வீரப்பட்டினம், வரகுணமங்கலம் முதலிய பகுதிகளடங்கிய நாடு; a region comprising Tiruchendür, mana-virap-pattinam in south Pândiya kingdom or country.

     [வழுதி + வளநாடு.]

 வழுதிவளநாடு2 vaḻudivaḷanāṭu, பெ. (n.)

   ஆழ்வார் திருநகரியைச் சூழ்ந்த நாடு; the region around alvar-tiru-nagari.

     “வண்டலம்புஞ்சோலை வழுதி வளநாடன்” (திவ். திருவாய். 2:8:11);.

     [வழுதி + வளநாடு.]

வழுது

வழுது1 vaḻudu, பெ. (n.)

   பொய் (பிங்.);; lie, falsehood.

     [வழு → வழுது.]

 வழுது2 vaḻudu, பெ. (n.)

   வைக்கோல் (பிங்.);; Straw.

     [வய் → வை → வைது → வழுது.]

ஒருகா. பழுது → வழுது.

வழுதுணங்காய்

வழுதுணங்காய் vaḻuduṇaṅgāy, பெ. (n.)

   கத்தரியின் காய் (மதுரைக். 529, உரை);; unripe fruit of brinjal.

     [வழுதுணை + காய்.]

வழுதுணை

வழுதுணை1 vaḻuduṇai, பெ. (n.)

   முள்ளுக் கத்திரி; brinjal with prickles.

 வழுதுணை2 vaḻuduṇai, பெ. (n.)

வழுதலை’, 1 பார்க்க;see valutalai.

     “வட்டும் வழுதுணையும் போல்வாரும்” (நாலடி. 264);.

வழுதுணைத்தழும்பன்

வழுதுணைத்தழும்பன் vaḻuduṇaiddaḻumbaṉ, பெ. (n.)

   தழும்புள்ளதால் ஒருவனுக்குண்டாகிய பெயர்; named after a smudge, causitive name after a smudge.

     “பிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர்த்தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர்” (அகநா. 227:17-18);.

     [வழுதுணை + தழும்பன்.]

வழுத்தரல்

வழுத்தரல் vaḻuttaral, பெ. (n.)

   இறந்து போகை;     “பின்னை வழுத்தரல் மரபிதென்றார்” (மேருமந். 567);.

     [வழுவு + தரு → தா.]

வழுத்தரவு

 வழுத்தரவு vaḻuttaravu, பெ. (n.)

   வழுவி வீழ்கை; declining fall.

     [வழு + தரவு.]

வழுத்து-தல்

வழுத்து-தல் vaḻuddudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. வாழ்த்துதல்; to bless, to grace.

     “வழுத்தினாள் தும்மினேனாக” (குறள். 1317);.

   2. வணங்குதல்; to praise.

     “வழுத்தியுங் காணாமலரடி” (திருவாச. 4, 9); (சூடா.);.

   3. மந்திரம் சொல்லுதல்; to mutter chant, as mantras.

     “மந்திர நாவிடை வழுத்துவராயினர்” (சிலம்பு.16:172);.

வழுத்தேமா

 வழுத்தேமா vaḻuttēmā, பெ. (n.)

   மலைமா; a kind of mango tree, grown in hilly areas.

வழுநிலை

வழுநிலை vaḻunilai, பெ. (n.)

   சொல் முதலியன இலக்கணத் தவறாக வருகை (நன், 374, மயிலை.);;     (Gram.); erroneous use, as of a word, dist. fr. Vala-nilai.

தமிழுக்கு எது வழுநிலையோ, அது பிற மொழிகட்கு வழாநிலையாம். தமிழுக்குச் செம்மை இன்றியமையாத பண்பாயிருத்தலினாலேயே, அது செந்தமிழ் எனப்பட்டது. பொதுமக்களோடு எத்துணைக் கொச்சையாகப் பேசினும் ஏடெடுத் தெழுதும் போதும், மேடையேறிப் பேசும்போதும், இலக்கண நடையைக் கையாள வேண்டுமென்பதே தமிழ்மரபு.

வழுநீர்

வழுநீர் vaḻunīr, பெ. (n.)

   கண்ணினின்று ஒழுகும் பீளை; rheum in the eye.

     “கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன” (மணிமே. 20:47);

     [வழு + நீர்.]

வழுந்தல்

வழுந்தல் vaḻundal, பெ. (n.)

   1. காய்ப்பேறல்; excoriation.

   2. வழுவுறல்; abrasion.

வழுந்து-தல்

வழுந்து-தல் vaḻundudal,    5 செ.கு.வி. (v.i.)

   தோலுரிதல் (வின்.);; to be excoriated, wear off, as the skin.

     [அழுந்து → வழுந்து.]

வழுப்பாசி

 வழுப்பாசி vaḻuppāci, பெ. (n.)

   பயிர்க்குக் கேடு புரியும் பாசிவகை (இ.வ.);; lichenwhich causes injury to crops.

     [வழு + பாசி.]

வழுமூட்டு

வழுமூட்டு1 vaḻumūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   தோலுரிதல் (வின்.);; to be excoriated, wear off, as the skin.

     [வழு + மூட்டு-.]

 வழுமூட்டு2 vaḻumūṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t)

   1. இணங்கச் செய்தல்; to reconcile.

   2. மென்மையாக்குதல்; to smoothen.

   3. வெளிவராமல் அடக்கி விடுதல்; to hush up, as an affair.

     [வழு + மூட்டு-]

வழுமெனல்

வழுமெனல் vaḻumeṉal, பெ. (n.)

   1. வழு வழுப்புக்குறிப்பு; smoothness.

   2. தெரிந்தும், தெரியாதவர் போல் அடக்கமாயிருப்பது; being silent and secretive.

     [வழும் + எனல். என் + அல் = எனல்.]

வழும்பு

வழும்பு1 vaḻumbu, பெ. (n.)

   1. குற்றம்; fault.

     “வழும்பில் சீர்நூல்” (நாலடி. 352);.

   2. தவறு, பிழைபாடு; error, mistake.

   3. தீங்கு; evil, harm.

     “வழும்பு கண்புதைத்த…… பாசி” (மலைபடு. 221);.

     [வழு → வழும்பு.]

 வழும்பு2 vaḻumbu, பெ. (n.)

   1. கொழுப்பு, நீர்மக்குழம்பு (பிங்.);; fat.

     “வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள்” (நாலடி. 46);.

     “அழுந்து விழுப்புண் வழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகெறிந் தாங்கு” (நற்-97-12);.

   2. நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழவழப்பான நீர்ப், பண்டம்; slimy substance, mucus, as on fat or on new – born calf.

     “வழும்பறுக்க கில்லாவாந் தேரை” (நாலடி. 352);.

   3. அழுக்கு (வின்.);; filth, impurity.

     [முழு → மழு → வழு → வழும்பு.]

வழும்பு வலி

 வழும்பு வலி vaḻumbuvali, பெ.(n.)

   வழும்புவலி (சீதக்கடுப்பு);; pain in the anus and lower abdomen due to dysentery.

     [வழும்+புவலி]

வழும்புக் காய்ச்சல்

 வழும்புக் காய்ச்சல் vaḻumbukkāyccal, பெ.(n.)

   வயிற்றளைச்சலில் காணும் காய்ச்சல் (சீதக் கட்டு சுரம்);; fever in dysentery.

     [வழும்பு+காய்ச்சல்]

வழுவநாதி

 வழுவநாதி vaḻuvanāti, பெ. (n.)

 a kind of trance.

வழுவன்

வழுவன் vaḻuvaṉ, பெ. (n.)

   1. மீன்வகை; a kind offish.

   2. தன் உடற்கொழுப்பைக் கடல் மேற்பரப்பில் மிதக்கவிட்டு, செத்தது போல் இருக்கின்ற மீன்; pretention of the fish as if dead.

     [வழுவு + வழுவன்.]

     [P]

பறவையின் கவனத்தைக் கவர கொழுப்பினை யுமிழ்ந்து நீரின் மீது பரப்பி, இறந்ததைப் போல் இருக்கும். பறவை அதன் மீதமர. உடனே வாரிச்சுருட்டி வாயிலிட்டு விழுங்குந் தன்மை கொண்ட மீன்.

வழுவன்சுறா

வழுவன்சுறா vaḻuvaṉcuṟā, பெ. (n.)

   கரு வெண்மை நிறமும், 12 அடி வளர்ச்சியுமுள்ள சுறாமீன் வகை (வின்.);; man eating shark, dark grey, attaining 12 ft. in length.

     [வழுவன் + சுறா.]

     [P]

வழுவமை-த்தல்

வழுவமை-த்தல் vaḻuvamaittal,    4 செ.குன்றாவி. (v.t)

   இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் (தொல். சொல். 31, சேனா.);;     [வழு + அமை.]

ஒரு பொருளின் தன்மையை முழுமையாக ஒரு சொல் விளக்காதமையினும், ஒருவாற்றான், அப் பொருளை விளக்கும் பாங்கினில் அமைத்துக் கொள்ளுதல். வழுவமைத்தல் குறித்துச் சுப்பிரமணிய தீட்சிதர், தமது பிரயோக விவேகத்தில்

விளக்குவது வருமாறு:-

     “குறித்த பொருட்கு உரிய சொல் அன்று ஆயினும், ஒராற்றான் அப்பொருளை விளக்குதலின் அமைக என்றல் வழுவமைத்தலாம்” (கப்பி.பிரயோக:44);.

வழுவமைதி

வழுவமைதி vaḻuvamaidi, பெ. (n.)

   இலக்கண வழுவாயினும் ஒரு பயன்நோக்கி ஆன்றோரால் அமைக வென்று கொள்ளுகை (தொல்.சொல்.41, சேனா.);;     [வழு + அமை → அமைதி.]

வழுவமைதி குறித்துச் சேனாவரையர் செப்புவது :- குறித்த பொருட்குரிய சொல்லன்றாயினும், ஒருவாற்றான் அப் பொருள் விளக்குதலின் அமைக வென்றல் (தொல். சொல்.11, சேனா.);.

வழுவமைதிவினை

வழுவமைதிவினை vaḻuvamaidiviṉai, பெ. (n.)

   வழுவாயினும் வழுவற்றது போல் இலக்கணியரால் அமைக்கப்பெற்ற வினை (த.வ.180);;     [வழுவமைதி + வினை.]

உண்டு என்னும் குறிப்பு வினைமுற்றுமுதற்கண் படர்க்கை ஒன்றன்பால் வினையாயிருந்து பின்பு ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினையாய் வழங்குகின்றது.

வழுவற்றேங்காய்

 வழுவற்றேங்காய் vaḻuvaṟṟēṅgāy, பெ. (n.)

   வழுக்கலுள்ள இளந்தேங்காய் (வின்.);; tender coconut in which the pulpy matter has just begun to form.

     [வழுவல் + தேங்காய்.]

வழுவல்

வழுவல் vaḻuval, பெ. (n.)

   1. நழுவுகை (வின்.);; sliding down, letting slip.

   2. வழு, 1, 2 பார்க்க;see valu.

   3. இளந்தேங்காயின் வழுக்கல் (யாழ்.அக.);; soft pulp in a tender coconut.

     [வழு → வழுவு → வழுவல்.]

வழுவழு-த்தல்

வழுவழு-த்தல் vaḻuvaḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வழுக்குதல்; to slip.

     “வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான்”.

   2. வழுவழுப்பாதல்; to be slippery, smooth or polished.

   3. உறுதியறுதல்; to be infirm or unsteady.

     “வழுவழுத்த வுறவதனின் வயிரம்பற் றியபகையே வன்மையாமே” (தண்டலை. 83);.

     [மழு → மழுமழு → வழுவழு → வழுவழு-.]

வழுவழுக்கு

 வழுவழுக்கு vaḻuvaḻukku, பெ. (n.)

வழு வழுப்பு பார்க்க;see valu-valuppu.

     [வழு → வழுக்கு.]

வழுவழுத்தபண்டம்

 வழுவழுத்தபண்டம் vaḻuvaḻuttabaṇṭam, பெ. (n.)

   வழவழப்பான பொருள்; mcous substana, unctuous.

     [வழுவழுத்த + பண்டம்.]

வழுவழுத்திறங்குகை

 வழுவழுத்திறங்குகை vaḻuvaḻuttiṟaṅgugai, பெ. (n.)

   அருவருப்பான பொருளைக் கண்டவிடத்துண்டாகும், குமட்டலுணர்வு; a feeling on facing unwanted or undesinable thing, as of exereta.

     [வழுவழுத்து + இறங்குகை. இறங்கு → இறங்குகை.

     ‘கை’ சொல்லாக்க ஈறு.]

வழுவழுப்பு

வழுவழுப்பு vaḻuvaḻuppu, பெ. (n.)

   1. கொழு கொழுப்பு; clamminess, sliminess.

குட்டியாடு கொழுத்தாலும், வழுவழுப்புத் தீராது (உ.வ.);.

   2. வழுக்குந் தன்மை; slipperiness.

     “நிலம் பாசி படர்ந்து வழுவழுப்பாயுடைமை” (வின்.);.

   3. உயவுத் தன்மை; lubricity, oiliness.

   4. மென்மை; smoothness.

   5. பளபளப்பு (இ.வ.);; gloss.

     [வழுவழு → வழுவழுப்பு (எண்ணெய்ப் பிசுக்கு);.]

வழுவழுப்புள்ளவை

 வழுவழுப்புள்ளவை vaḻuvaḻuppuḷḷavai, பெ. (n.)

   நெய்மக் குழை வுடையவை; unctuous substance.

     [வழுவழுப்பு + உள்ளவை.]

வழுவழுப்பு = எண்ணெய்ப் பிசுக்கு.

வழுவழெனல்

வழுவழெனல் vaḻuvaḻeṉal, பெ. (n.)

   1. மென்மைக் குறிப்பு; smoothness, soft-natured altitude.

   2. விரைவுக் குறிப்பு (நாமதீப.687);; swiftness, quickness, hurriedness.

     [வழுவழு + எனல்.]

வழுவாங்கி

 வழுவாங்கி vaḻuvāṅgi, பெ. (n.)

   மருந்திலை வகையுளொன்று; a kind of medicinal shrub.

வழுவாடி

வழுவாடி1 vaḻuvāṭi, பெ. (n.)

   வாழ்வுதருந் தொழிலை நழுவ விடுபவன் (சங்.அக.);; one who is careless or negligent in one’s affairs, indifferent person.

     [வழுவாளி → வழுவாடி.]

 வழுவாடி2 vaḻuvāṭi, பெ. (n.)

   பாலைத் தீவுக்கண்மையில், அதிகம் பிடிபடும் ஒருவகைத் திருக்கைமீன்; a kind of fish caught in sea bed of desert islands.

     [வழுவாளி → வழுவாடி.]

வழுவாதநாழி

வழுவாதநாழி vaḻuvātanāḻi, பெ. (n.)

   சரியான அளவுபடி; correct or accurate measure.

     “நாலு உழக்கு வழுவாத நாழியால்…. அட்டுவேனானேன்” (S.I.I.i. 115);.

     [வழுவாத + நாழி = குற்றமற்ற, சரியான நிறைநாழி.]

வழுவாமை

வழுவாமை vaḻuvāmai, பெ. (n.)

   1. நேர்மை (வின்.);, முழுமை, வாய்மை; integrity.

   2. நடுநிலை பிறழாமை; rectitude, uprightness of heart.

   3. பிழைபடாமை; absence of error, inerrancy.

     [வழுவு + ஆ = மை.]

நெறிபிறழாமையே வழுவாமையாம்.

     ‘ஆ’ எதிர்மறை இடைநிலை,

     ‘மை’ சொல்லாக்க ஈறு.

     [ஒ.நோ.[ நழுவாமை, கழுவாமை

வழுவாய்

வழுவாய் vaḻuvāy, பெ. (n.)

   1. தப்புகை; escape.

     “வழுவாயுண்டென மயங்குவோள்” (மணிமே. 11:130);.

   2. கரிசு (பாவம்.);; sin.

     “வழுவாய் மருங்கிற் கழுவாயு முண்டென” (புறநா. 34,4);.

     [வழுவு → வழுவாய்.]

வழுவி

 வழுவி vaḻuvi, பெ. (n.)

   அத்தி (சங்.அக.;: country fig.

வழுவிச்சம்

 வழுவிச்சம் vaḻuviccam, பெ. (n.)

   நத்தைச் சூரி; a kind of plant.

வழுவிலாஅடிமை

வழுவிலாஅடிமை vaḻuvilāaḍimai, பெ. (n.)

   1. குற்றம் இழைக்காத பணியாளன்; unflemished employee.

   2. குற்றமற்றவன்; white-hearted man, flawless person.

     [வழு → வழுவு + இல் + ஆ அடிமை

     ‘இல்’ எதிர்மறை இடைநிலை.

     ‘ஆ’ பெயரெச்ச ஈறு.]

வழுவு

வழுவு1 vaḻuvudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தவறுதல்; to err, to swerve from the right, to go astray.

     “தன்னியல் வழாஅது” (புறநா.25);.

   2. நழுவுதல்; to miss, as a step, to sway down, as a load, to be turned out of a course.

     “முகில் வழுவி வீழ்வன” (சூளா. அரசி. 386);.

   3. சறுக்குதல்; to slip.

     “வழுஉ மருங்குடைய வழாஅ லோம்பி” (மலைபடு. 215);.

   4. குறைவுடையதாதல்; to be inaccurate, to be deficient.

     “வழுவாத நாழி” (S.I.I.i. 115);.

     [வழு → வழுவு.]

 வழுவு2 vaḻuvu, பெ. (n.)

வழு பார்க்க;see Valu.

     [வழு → வழுவு.]

வழுவுடைக்காமம்

வழுவுடைக்காமம் vaḻuvuḍaikkāmam, பெ. (n.)

   அகத்திணை ஏழனுள் ஒன்றானதும் ஒத்த இனமல்லாதவளுடனாவது, இயற்கைக்கு (விதிக்கு); மாறாகவாவது, தன்னை விட அகவையில் முதிர்ந்தவ ளோடாவது மனம் ஒவ்வாதவ ளோடாவது கூடும் காதல் (அகப்.);; improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aga-t-tina.

     “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்” (தொல்.947);.

மறுவ. பெருந்திணை.

     [வழு → வழுவு + உடை + காமம். கமம் → காமம்.]

கமம் = நிறைவு, மகிழ்வு, விருப்பம்.

     “கமம் நிறைந் தியலும்” (தொல்.938);.

வடமொழியாளர்

     ‘காம்’ என்னும் சொல்லுக்கு

     ‘கம்’ என்பதை மூலமாகக் காட்டுவர். இஃது பொருட் பொருத்தப்பாடற்றது.

வடமொழியில்

     “கம்” இடைச் சொல்லாகவும், நான்காம் வேற்றுமையுருபாகவும், வழங்குகிறது. ஆம், நலம் என்னும் பொருண்மை பயப்பது.

ஆனால் தமிழின் கண்ணே நிறைவுப் பொருண்மையில் வழங்குவதாகத் தொல்காப்பியர் குறித்துள்ளது. பொருட்பொருத்தப்பாடுடையது.

வழுவுடைக்காமம் என்பது இங்கு குறைவுடைய நிறைவினைக் குறித்ததென்க.

தலைவன், தலைவியர் அகவை, இனம் போன்றவற்றுள், ஏதேனுமொன்று குறைவுள்ள தன்மையில் கூடுங்காலுண்டாகும் காமமே வழுவுடைக் காமமாகும்.

வழுவுண்டகாயம்

 வழுவுண்டகாயம் vaḻuvuṇṭakāyam, பெ. (n.)

   சுவர் முதலியவற்றில் உராய்வதாலோ அல்லது கயிற்றைக் கையில் அழுத்திப் பிடித்திழுப்பதனாலோ ஏற்பட்ட புண்; a wound caused by violent rubbing of friction as by rubbing against a wall or by a rope pulled through the hands-brush burn.

     [வழு + உண்ட + காயம். கள் → கய் → காய் → காயம்.]

வழுவுண்டபுண்

 வழுவுண்டபுண் vaḻuvuṇṭabuṇ, பெ. (n.)

   தேய்வுண்டபுண், உராய்ந்த புண்; abrasion.

     [வழு + உண்ட + புண்.]

வழுவுண்ணல்

 வழுவுண்ணல் vaḻuvuṇṇal, தொ.பெ. (vbl.n.)

   தேய்தல், குறைதல்; getting abrasion.

     [வழு → வழுவுண்ணல்.]

அழுத்த மிகுதியாலுண்டாகும், தேய்மானம் அல்லது குறைபாடு.

வழுவை

வழுவை1 vaḻuvai, பெ. (n.)

   1. மலையெருக்கு; mountain madar, calotropis gigantia.

   2. நாய்ப்பாகல்; a kind of bitter gourd.

 வழுவை2 vaḻuvai, பெ. (n.)

   யானை (சூடா);; elephant.

     [வழு → வழுவை.]

வழை

வழை vaḻai, பெ. (n.)

   1. சுரபுன்னை; long-leaved two-sepalled gamboges.

     “வழைவளர் சாரல்” (கலித். 50);. (தேவநேயம்.12, பக்.259);.

   2. வழைச்சு பார்க்க;see valaiccu.

     “பாகரிறை வழை மதுநுகர்பு” (பரிபா. 11:66);.

     [முல் → முள் → மள் → மழ → வழ) → வழை,]

இளமை, புதுமை போன்ற பொருண்மையைக் குறிக்கும்

     “மழ” என்னும் முதனிலையினின்று தோன்றிய சொல்.

வழைச்சு

வழைச்சு vaḻaiccu, பெ. (n.)

   புதுமை; freshness, as of palm juice, raw or unripe condition.

     “சாடியின் வழைச்சற விளைந்த…..நறும்பிழி” (பெரும்பாண். 280);.

     [முல் → முள் → மள் → மழ → (வழ); → வழை → வழைச்சு.]

ம → வ மெய்யினத் திரிபு.

ஒ.நோ. மிஞ்சு → விஞ்சு.

     “முல்” என்னுமுதனிலை, இளமை, சிறுமை, புதுமை போன்ற பொருண்மை பொதிந்த சொற்களை உருவாக்கும் வேர் மூலமாகும்.

வீரம் போன்ற பொருட்பொருத்தப்பாட்டில், இம் முதனிலை கழக இலக்கியத்துள் பயின்று வந்துள்ளது.

     “சாடியின் வழைச்சற விளைந்த” (பெரும்பாண்.280);.

முல் → முள் → மள் → மள்ளன் = இளைஞன்.

     “பொருவிறல் மள்ள” (திருமுருகு.262);. மள் → மழ → வழ = இளமை, புதுமை, புதியதாகத் தோன்றிய குழவி.

     “மழவும் குழவும் இளமைப் பொருள” (தொல்.796);.

மழ → மழலை + தேன் = மழலைத்தேன்.

மழலைத்தேன் = புதியதாகத் தோன்றிய தேன்.

முள் → (மள்); → மழ → வழ → வழை →வழைச்சு

புதுமை, சிறுமை, அழகு, இளமை போனற் பொருட்களைச் சுட்டும். முல் → மள → மழ என்னும் போன்ற பொருண்மைகளைக் குறிக்கும். ஏரணமுறை வளர்ச்சியில் வழை, வழைச்சு போன்ற சொற்கள் தோன்றின.

வழைமது

 வழைமது vaḻaimadu, பெ. (n.)

   புளிப்புச் சுவையற்ற இளமது; unfermented liquor.

     [வழை + மது. வழை = இளமை, புதிது.]

வவக்கானி

வவக்கானி vavakkāṉi, பெ. (n.)

   1. யானை மலம்; extreta of elephant.

   2. செம்படவர் கொடுக்குங் கோயில் மகமைப் பணம் (இ.வ.);; net-money, a contribution paid by fishermen to a temple.

வவா

 வவா vavā, பெ. (n.)

   தசைநீர்; lymph.

ஒருகா. உனீர்.

வவி

 வவி vavi, பெ. (n.)

வவ்வி (வின்.); பார்க்க;see vavvi.

வவுலம்

 வவுலம் vavulam, பெ. (n.)

   கருவேல் மரம்; Indian gum tree – arabica tree – Acacia arabica.

வவ்வடி

 வவ்வடி vavvaḍi, பெ. (n.)

   வழுக்குந்தன்மை மிகுதியாகவுள்ள சேற்றுமண் நிறைந்த பகுதி; slippery region.

வவ்வரிகொட்டு-தல்

வவ்வரிகொட்டு-தல் vavvarigoṭṭudal,    5 செ.கு.வி (v.i.)

வவ்வலிடு-தல் (வின்.); பார்க்க;see vavvai-idu.

     [வவ்வல் → வவ்வரி + கொட்டு-, கொள் → கொட்டு → கொட்டுதல்.]

கொட்டுதல் = அறைந்து கொள்ளுதல். குளிரினால் பற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளுதலே வவ்வரி கொட்டுதலாகும்.

வவ்வலிடு-தல்

வவ்வலிடு-தல் vavvaliḍudal, செ.கு.வி. (v.i.)

   குளிர்மிகுதியாற் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக் கொள்ளுதல்; to chatter with cold, as teeth.

     “அறவவ்வலிடுதல் வேர்த்தல் செய்யா திருக்கை” (திவ். பெரியதி. அவ. பக்.12);.

     [வவ்வல் + இடு-, இல் → இள் → இடுதல் = குத்துதல், பொருத்துதல்.]

பல் வரிசைகளிரண்டும் அளவிற்கதிகமான குளிரினால் ஒன்றோடொன்று பொருந்தியடித்துக் கொள்ளுதல்.

வவ்வலொட்டி

 வவ்வலொட்டி vavvaloṭṭi, பெ. (n.)

   வவ்வாலோட்டி எனும் நீண்ட செடி (யாழ்.அக.);; cockspur.

     [வவ்வாலோட்டி → வவ்வலொட்டி.]

உடம்பெங்கும் ஒட்டுந்தன்மையுள்ள முட்செடி வகை.

     [P]

வவ்வலோட்டி

 வவ்வலோட்டி vavvalōṭṭi, பெ. (n.)

   ஓர் முட்செடி; a thorny shrub.

வவ்வல்கொட்டு-தல்

வவ்வல்கொட்டு-தல் vavvalkoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

வவ்வலிடு-தல் (இ.வ.); பார்க்க;see vavvai-idu.

     [வவ்வல் + கொட்டு-, கொள் → கொட்டு → கொட்டுதல்.]

வவ்வாதிலொட்டி

 வவ்வாதிலொட்டி vavvātiloṭṭi, பெ. (n.)

வவ்வலோட்டி பார்க்க;see vavva-lotti.

வவ்வானாற்றி

 வவ்வானாற்றி vavvāṉāṟṟi, பெ. (n.)

   அடிப்படையற்றது, பிடிபாடில்லாதது (யாழ்.அக.);; that which is without basis or support.

வவ்வாற்குறடு

 வவ்வாற்குறடு vavvāṟkuṟaḍu, பெ. (n.)

   மரக்கட்டையிலான காலணிக் குறடு வகையு ளொன்று (யாழ்.அக.);; a kind of knob on wooden sandals.

     [வவ்வால் + குறடு.]

வவ்வாற்பந்தம்

வவ்வாற்பந்தம் vavvāṟpandam, பெ. (n.)

   1. தீவட்டி வகையுளொன்று (யாழ்ப்.);; rod supporting a row of pendent torches, carried in a procession.

   2. வவ்வால் விளக்கு (யாழ்.அக.);; a cluster of lamps, candelabrum.

     [வவ்வால் + பந்தம்.]

வவ்வாலெலும்பு

வவ்வாலெலும்பு vavvālelumbu, பெ. (n.)

   மண்டையோட்டிற்கு, அடிப்புறத்துள்ளதோர் எலும்பு (இங்.வை.6);; sphenoid bone, irregularly-shaped bone in front of the occipital in the base of the skull of the higher vertebrates.

     [வவ்வால் + எலும்பு = மண்டையோட்டின் அடிப்பகுதியிலமைந்த வெண்மையான எலும்பு. எல் → எலு → எலுமு → எலும்பு. எல் = வெண்மை.]

வவ்வாலொட்டி

 வவ்வாலொட்டி vavvāloṭṭi, பெ. (n.)

வவ்வாலோட்டி பார்க்க;see vavval-otti.

வவ்வாலோட்டி

 வவ்வாலோட்டி vavvālōṭṭi, பெ. (n.)

   நீண்ட செடிவகையுளொன்று (மலை.);; cockspur, a kind of long shrub.

     [வவ்வால் + ஒட்டி.]

வவ்வால்

வவ்வால் vavvāl, பெ. (n.)

   1. ஒருவகைப்பறவை; bat.

     “மரம்பழுத்தால் வவ்வாலை வாவென்று கூவி” (நல்வழி. 29);.

   2. கடல் மீன்வகை (யாழ்.அக.);; pomfret, sea-fish.

   க. பாவல்;   ம. வாவல்;து. பாவலி.

     [வாவல் → வவ்வால்.]

வவ்வால்நத்தி

 வவ்வால்நத்தி vavvālnatti, பெ. (n.)

   மண்டபக் கட்டடத்தின் முகட்டுவகை (இ.வ.);; quadrangular turret of a mandapam.

     [வவ்வால் + நத்து → நத்தி.]

வவ்வால்மீன்

வவ்வால்மீன் vavvālmīṉ, பெ. (n.)

வவ்வால், 2 (யாழ்.அக.); பார்க்க;see vavval 2.

     [வவ்வால் + மீன்.]

வவ்வால்விளக்கு

 வவ்வால்விளக்கு vavvālviḷakku, பெ. (n.)

   விளக்குக் கொத்து வகைகளு ளொன்று (யாழ்.அக.);; a cluster of lamps, candelabrum.

     [வவ்வால் + விளக்கு.]

வவ்வி

வவ்வி1 vavvi, பெ. (n.)

   சமயக்குறியிடாத வெறுமை (சூனிய); நெற்றியுடையவ-ன்-ள் (வின்.);; one wearing no sectarian marks on the forehead.

     [வெளவி → வெவ்வி → வவ்வி.]

 வவ்வி2 vavvi, பெ. (n.)

   கவர்கை; snatch, take hold of.

     “கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி” (அகநா. 346:23);.

     [வவ்வு → வவ்வி.]

வவ்வியம்

 வவ்வியம் vavviyam, பெ. (n.)

   மணிமுத்து வேங்கை; a species of East Indian kino, a tree.

வவ்வு

வவ்வு1 vavvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கவர்தல்; to snatch, take hold of, to take possession of.

     “அரசர் செறின் வவ்வார்” (நாலடி. 134);.

   2. பற்றிக் கொள்ளுதல்; to carry off.

     “வவ்வித் துழாயதன்மேற் சென்ற” (திவ்.பெரியதி.9, 4, 4);.

   3. வாருதல் (யாழ்.அக.);; to sweep away.

     [அவ் → அவ்வு → கவ்வு → வவ்வு.]

 வவ்வு2 vavvu, பெ. (n.)

   1. கவர்கை; snatching, taking hold of.

     “வவ்வு வல்லால்” (பரிபா.6, 80);.

   2. சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி; the space between the wall and the sloping roof on it.

     [கவ்வு → வவ்வு.]

வா

வா1 vā,    வகர மெய்யும் அகரத்தின் நெட்டுயிரும் சேர்ந்து பிறக்கும் உயிர்மெய்யெழுத்து; the compound of வ் and ஆ.

     [வ் + ஆ]

கீழுதடு மேல்வாய்ப் பல்லைத் தொட்டிறங்குவதாற் பிறப்பது. வா.

 வா2 vātal, செ.கு.வி. (v.i.)

   1. வருதல்; to come.

     “தருசொல் வருசொல் …. தன்மை முன்னிலை” (தொல்.சொல்.29);.

   2. நேர்தல்; to happen.

     “வருப வந்துறுங்க ளன்றே” (சீவக.509);.

   3. உண்டாதல்; to come into being.

     “நலம் வர நாடி” (பு.வெ.ஒழிபு.9);.

   4. பிறத்தல்; to be born.

     “அந்தநன் மரபினில்… சந்தனு… வந்தனன்” (பாரத. குருகுல.33);.

   5. மனத்துப் பதிதல்; to be known, understood, comprehended.

     “அந்தப் பாடம் உனக்கு வந்ததா?”.

   6. நன்கறியப்படுதல்; to become crystal clear, to be attained, as a language, a science.

     “அவனுக்கு இலக்கணம் வரும்”.

   7. முற்றுப்பெறுதல்; to be completed, finished.

     “ஸ்ரீமான் செய்ததெல்லாம் நன்றாய் வருங்காண்” (ஈடு.7, 9, 9);.

   8. இயலுதல்; to be able.

     “அது என்னாற் செய்ய வாராது”.

   9. மிகுதல்; to surplus, to abound, increase.

     “அணிவரு பூஞ்சிலம்பு” (பு.வெ.12, பெண்பாற்.17);.

   தெ. ரா;   க., து. பா;ம. வா.

     ‘வா’ என்னும் வினைச்சொல் வரலாறு:

வள் → வர் → வார் → வ. வர் → வரு.

சொல்லாக்கத்தில் ட, த, ல, ழ, ள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத்திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும் ஆகும்.

எ – டு:

ட – ர : கடு → கடி → கரி. படவர் → பாவர்.

த – ர : விதை → விரை. ல – ர : உலவு → உரவு, குலவை → குரவை, குதில் → குதிர், பந்தல்

→ பந்தர்.

ழ – ர : புழை → புரை.

ள – ர : அள் → அர் → அரு → அருகு, கள் → கர் → கரு, கள் → கர், தெளி → தெரி, நீள் → நீர், பிள் → பிர் → பிரி, முள் → முர் → முரு → முருகு (இளமை);, விள் → விர் → விரி.

முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு கூடியும் வழங்கி வருகின்றன.

எ – டு :

முதனிலை முற்காலப் இக்காலப்

புடைபெயர்ச்சி புடைபெயர்ச்சி

நகு நக்கான் நகைத்தான்

தள் தட்டான், தளைத்தான்,

தட்கின்றான், தளைக்கின்றான்

தட்பான், தளைப்பான்

கள் கட்டான், களவுசெய்தான்,

கட்கின்றான், களவு

செய்கின்றான்,

கட்பான் களவு செய்வான்.

   களவாண்டான். களவாள்கின்றான், களவாள்வான்;   களவாடினான், களவாடுகின்றான், களவாடுவான்;என்பனவும் தொழிற்பெயர் துணை வினை கூடி முதனிலையாகிப் புடை பெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணை வினைகள், களவுபன், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே.

இக்காலத்தில்

     ‘வளை’ என்று வழங்கிவரும் முதனிலை முற்காலத்தில்

     ‘வள்’ என்றே வழங்கிற்று.

வள்ளுதல் = வளைதல். வள்வு = வளைவு. வள்ளம் = வளைவு. வட்டம், வளைந்த அல்லது வட்டமான பொருள் (தொழிலாகு பெயர்);. வள்ளி = வளைந்த கொடி.

ஒருவன் தன் உறைவிடத்தினின்று அல்லது இருப்பிடத்தினின்று ஓரிடத்திற்குப் போனபின், அங்கிருந்து உறைவிடத்திற்கு வருவது முன் பின்னாகத் திரும்பியே யாதலால், திரும்பற் கருத்தினின்றே வருகைக் கருத்துப் பிறந்தது. அதனால், திரும்பற் பொருட் சொல்லினின்றே வருகைப் பொருட்சொல் தோன்றிற்று.

திரும்புதல் = வளைதல், திசைமாறி நோக்கி நிற்றல், மீளுதல்.

மீளுதல் = திரும்பி வருதல், காலையிற் சென்று மாலையில் திரும்பினான் என்றால், திரும்பினான் என்பது திரும்பி வந்ததைக் குறித்தல் காண்க.

வலமாகவோ இடமாகவோ திரும்புதலுங் கூடுமேனும், ஒருவன் தான் போன இடத்தினின்று புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வருவது முன்பின்னாகத் திரும்பியே யென்பது, சொல்லாமலே விளங்கும்.

திரும்பு என்னும் சொற்போன்றே, வளைதலைக் குறிக்கும் வேறுசில சொற்களும் மீளுதலைக் குறிக்கின்றன.

திரிதல் = வளைதல், மீளுதல். மடங்குதல் = வளைதல், மீளுதல். மறிதல் = வளைதல், மீளுதல்.

     “திரிதல் மீளுதல்” (பிங்.7, 202);.

     “மறிதர லென்பது மீளுத லாகும்” (திவா.9);

     “மறிதரல் திரிதரல் மடங்கல் மீளுதல்” (பிங்..7 : 444);

அளைமறிபாப்பு என்னும் பொருள்கோட் பெயரிலும், மறியென்னுஞ் சொல் வளைதலையும் திசைமாறித் திரும்புதலையுங் குறித்தல் காண்க.

ஆங்கிலத்தில் வளைதலை அல்லது திரும்புதலைக் குறிக்கும் turn என்னும் சொல், re என்னும் முன்னொட்டுப் பெற்றுத் திரும்பி வருதலைக் குறிக்கின்றது. He never turned up this side என்னும் தொடரியத்தில், அச்சொல் up என்னும் முன்னீட்டொடு கூடி, வருகைப் பொருளையும் உணர்த்துகின்றது.

இதுகாறுங் கூறியவற்றால்,

     ‘வா’ என்னும் வினைச்சொல் வளைதலைக் குறிக்கும்

     ‘வள்’ என்னும் முதனிலையினின்றே திரிந்துள்ளமை

பெறப்படும்.

இற்றை முதனிலையான வளையென்னுஞ் சொல்லும், வளைய வளைய என்னும் நிகழ்கால வினையெச்ச வடுக்கிலும், வளைத்து வளைத்து என்னும் இறந்தகால வினையெச்ச வடுக்கிலும், திரும்பத் திரும்ப என்னும் பொருள் தோற்றுவித்தலைக் காண்க.

இதனால், கீழ்ப்படை முதனிலையான வள் என்னுஞ் சொல்லும், முற்காலத்தில் இப் பொருளுணர்த்தினமை உய்த்துணரப்படும்.

வள் → வர் → வார் → வா → வ. வர் → வரு. இனி, வள் → வாள் → வார் என்றுமாம். வாள் → வாளம். வட்டம், வாள் → வாளி = வட்டமாயோடுகை.

வார் → வர் → வரு.

தமிழ் வினைச்சொற்களின் முதனிலை பெரும் பாலும் ஏவலொருமை வடிவிலேயே யுள்ளது. அவற்றுட் சிலவற்றில் மட்டும், ஏவலொருமை வடிவினின்று முதனிலை வேறுபட்டுள்ளது. அவ்வேறுபாடு மிக்க வினைகளுள் ஒன்று

     ‘வா’ என்பது, அதன் ஆட்சியிலும் புடைபெயர்ச்சியிலும், வா, வார், வர், வ, வரு என்னும் ஐவேறு வடிவுகள் காணப்படுகின்றன.

ஏவல் வடிவு, பொதுவாக முதனிலையளவில் ஒருமை பன்மையிரண்டிற்கும் பொதுவாகவே யிருக்கும். ஆயின் வருதல் வினையில் அவ்விரண்டும் வேறுபட்டுள.

ஒருமை பன்மை

வா வாரும் (வார்+உம்);

வாருங்கள் (வார்+உம்+கள்);

வம்மின் (வரு-வர்-வ + மின்);

பாரும் என்னும் பன்மை யேவலிற் பார் என்பது முதனிலையாயிருத்தல் போன்று, வாரும் என்பதில் வார் என்பதே முதனிலை யென்பது தேற்றம். ஆதலால், வார் என்னும் வடிவினின்றே ஏனை நால்வடிவுகளுந் திரிந்திருத்தல் வேண்டும். மேற்குறித்த ஐ வடிவுகளின் ஆட்சியும் வருமாறு.

   1. வார்

   வாரானை (வருகை); என்னும் வினைப்பெயர்;   வாராமை என்னும் எதிர்மறை வினைப்பெயர்;   வாரான், வாராதான் என்னும் எ.ம.வினையாலணையும் பெயர்கள்;   வாரான் என்னும் எ.ம.வினைமுற்று;   வாராய், வாரும், வாரீர் என்னும் உடன்பாட்டு ஏவல் வினைகள்;   வாரல், வாராதி, வாராதே, வாராதீர், வாராதிர், வாரன்மின் என்னும் எ.ம. ஏவல் வினைகள்;   வாரல், வாரற்க என்னும் எ.ம.வியங்கோள் வினைகள்;வாரா,

   வாராத என்னும் எ.ம.பெயரெச்சங்கள்;வாராது, வாராதே, வாராமை, வாராமல், வாராமே, வாராக்கால், வாராவிடின் என்னும் எ.ம. வினையெச்சங்கள் ஆகியவற்றில் வார் என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

   2. வா

வா என்னும் ஒருமையேவல் வினையில் மட்டும் வா என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

   3. வ

   வந்தான் என்னும் இறந்தகால வினைமுற்று;   வந்தவன், வந்தான் என்னும் இ.கா. வினையாலணையும் பெயர்கள்;   வந்த என்னும் இ.கா.பெயரெச்சம்;வந்து, வந்தால், வந்தக்கால், வந்தவிடத்து என்னும் வினையெச்சங்கள் ஆகியவற்றில் வ என்னும் வடிவம் நிலைத்துள்ளது. வம்மின், வம்மோ என்னும் பன்மை யேவல் வினைகள் வருமின், வருமோ என்பவற்றின் திரிபாயே யிருத்தல் வேண்டும்.

ஒருசில முதனிலைகளின் நெடின்முதல் இறந்தகால வினையிற் குறுகும்.

ஒ.நோ. தா-தந்தான்

சா – (சத்தான்); – செத்தான்

நோ – நொந்தான்

காண் – கண்டான்

   4. வர்

   வரவு, வரல், வரத்து என்னும் வினைப் பெயர்கள்;   வராமை என்னும் எ.ம.வினைப்பெயர்;   வராதவன், வராதான் என்னும் எ.ம. வினையாலணையும் பெயர்கள்;   வரல், வரேல், வராதி, வராதே, வராதிர், வராதீர், வரன்மின் என்னும் எ.ம.ஏவல் வினைகள்;   வால், வரற்க என்னும் எ.ம.வியங்கோள் வினைகள்;   வரா, வராத என்னும் எ.ம. பெயரெச்சங்கள்;   வர என்னும் நி.கா. பெயரெச்சம்;   வரின் என்னும் எ.கா. பெயரெச்சம்;வராது, வராமை, வராமல், வராமே, வராக்கால், வராவிடின் என்னும் எ.ம. வினையெச்சங்கள் ஆகியவற்றில் வர் என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

இதை வரு என்று கொள்ளவும் இடமுண்டு.

   5.வரு

   வருதல், வருகை என்னும் வினைப்பெயர்கள்;   வருமை (மறுபிறப்பு); என்னும் பண்புப்பெயர்;   வருகின்றவன், வருகின்றான், வருமவன் (வருபவன்);, வருவான் என்னும் வினையாலணையும் பெயர்கள்;வருகின்றான்,

   வருவான் என்னும் வினைமுற்றுகள்;   வருதி, வருதிர் என்னும் ஏவல் வினைகள்;   வருக, வருதல் என்னும் வியங்கோள் வினைகள்;   வருவி, வருத்து என்னும் பிறவினைகள்;   வருகின்ற, வரும் என்னும் பெயரெச்சங்கள்;வருவாய் என்னும் வினைத் தொகை ஆகியவற்றில் வரு என்னும் வடிவம் நிலைத்துள்ளது.

இற்றைத் தமிழில் வா என்று திரிந்துள்ள அல்லது ஈறு கெட்டுள்ள வார் என்னும் மூலத்தமிழ் முதனிலை அல்லது ஒருமை யேவல், பிற திரவிட மொழிகளிற் பின்வருமாறு திரிந்துள்ளது.

வா – கோத்தம், கோலாமி.

வா, வரி(க); – மலையாளம்

வா, வாமு, வ – குய் (kui);

வா, வர் – கடபா.

வரா, வரட் – கோண்டி (g);.

வர் – நாய்க்கீ.

வெர் – பர்சி (j);.

பா (b); – கன்னடம், குடகு.

ப, பர் (b); – பிராகுவி (Brahui);.

பர் (பினி);, பா (b); – துளு.

பர் (b); – மாலதோ

பர்னா (b); – குருக்கு (ஒராஒன்);.

ரா – தெலுங்கு.

ராவா – கொண்டா.

போ – துடவம் (Toda);.

   இத் திரிபுகளெல்லாம் மேற்காட்டிய தமிழ்த் திரிபுகளுள் அடங்கும்;அல்லது அவற்றால் விளக்கப்படும். இவற்றுள் முதன்மையானவை வா – பா (b);, வர் → வ்ரா → ரா. வா-போ என்னும் மூன்றே.

   1. கன்னடத்தில் வகரமுதற் சொற்கள் பெரும்பாலும் எடுப்பொலிப் பகரமுதலவாக (b); மாறிவிடுகின்றன.

எ-டு :

தமிழ் -கன்னடம் தமிழ் – கன்னடம்

வாங்கு பங்கு (nk); வழங்கு பழகு(g);

வட்டம் பட்ட வழலிக்கை பழல்கெ

வடுகு படகு (g); வழி பளி

வணங்கு பக்கு (gg); வன்னம் பள்ள

வயல் பயல் வளர் பனெ

வயலை பயலு வளா பளா(bհ);

வயிறு பசிறு வளை பளெ

வரை பரெ வற்று பத்து

வலம் பல வற பறு

வல்லாளன் பல்லாள வரகு பரகு

வலை பலெ வறிது பறிது

வாவல் பாவல் வறுகு பறுகு(g);

இங்ஙனமே சில ஏனைத் திரவிட மொழிகளிலும்.

   2. தெலுங்கிற் சில சொற்களின் முதலீரெழுத்துகள் முன்பின்னாக முறைமாறி விடுகின்றன. அன்று, முதலெழுத்தாகிய உயிர்க்குறில் நீண்டு விடுகின்றது.

எ- கா:

தமிழ் தெலுங்கு தமிழ் தெலுங்கு

அறை ராய் உகிர் கோரு(g);

இலது லேது உள் லோ

உரல் ரோலு எழு லேய்

வரை (எழுது); என்னுஞ்சொல் இம்முறையில் வராயு என்று திரிந்தபின், ராயு என்று முதன்மெய் கெட்டும் வழங்குகின்றது. இவ்வகையினதே வர்-வ்ரா-ரா (வா); என்னுந் திரியும்.

   3. துடவ மொழியில் பல சொற்களின் ஆகார முதல் ஓகார முதலாகத் திரிந்துள்ளது.

தமிழ் துடவம் தமிழ் துடவம்

ஆடு ஒட் நாய் நோய்

ஆறு ஒற் நாவு நோவ்

கா கோவ் நான்கு நோங்க்

காண் கோண் பாசி போதி

காய் கோய் பாம்பு போப்

கால் கோல் மார் (மார்பு); மோர்

தாய் தோய் மான் மோவ்

தான் தோன் வாய் போய்

வாழ் போத்க்

ஆ-ஒ திரியும், வ-ப திரியும் சேர்ந்து வாய்-போய் என்று திரிந்தது போன்றதே, வா-போ திரியும். குமரிநிலத் தமிழே திரவிட மொழிகட் கெல்லாந் தாயாதலின், இக்காலத் தமிழிலும் ஒருசில சொற்கள் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவத்தையும் ஆணிவேரையும் அறிந்துகொள்ள, போதிய சான்று அத் தமிழிலேயே உள்ளதென்று அறிதல் வேண்டும்.

     “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” (தொல்.பெய.1.);.

     “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லி னாகும் என்மனார் புலவர்.” (மேற்படி.2.);

     “தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்

இருபாற் றென்ய பொருண்மை நிலையே.” (மேற்படி.3.);

     “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (தொல்.96.);

     “பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்

தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்

எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.” (மேற்படி 1.);

     “முன்னும் பின்னும் வருபவை நாடி

ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல்

தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே.” (தொல்.பெய.91.);

இங்ஙனம் வேறெவ்வகை மொழியிலுங் கூறப்படவில்லை. கூறவும் இயலாது, பிறமொழிகள் திரிமொழிகளாதலான். அத்தகைத் தன்னே ரில்லாதது இயன்மொழியான தமிழே.

வா என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் போ என்பது. அது புகு என்பதன் திரிபு. புகுதல் உள்ளே செல்லுதல். வருதல் உள்ளிருந்து வெளியே திரும்பி வருதல். இவ் விழை இவ் வூசியின் காதிற்குள் போகுமா என்னும் வழக்கை நோக்குக. வணங்குதல் என்னுஞ் சொல், முதலில் உடம்பு வளைந்து அல்லது தலை குனிந்து கும்பிடுதலையே குறித்தது. இன்றோ, பொதுவாகக் கைகுவித்தலை மட்டுங் குறிக்கின்றது. இங்ஙனமே, முன்பு ஒன்றன் உட்புகுதலைக் குறித்த போ என்னுஞ் சொல், இன்று ஓரிடத்திற்குச் செல்லுதலை மட்டுங் குறிக்கின்றது. தொடக்கத்தில், ஒன்றைத் துளைத்து ஊடுருவிச் சென்றதைக் குறித்த துருவுதல் என்னும் சொல், இன்று

     ‘நாடு துருவுதல்’

     ‘வான் துருவுதல்’ என்று திறந்த வெளியிடத்தைக் கடந்து செல்லுதலையுங் குறித்தல் காண்க. இதுபோன்றே, ஓரிடத்தினின்று திரும்பி வருதல் என்று முதற்கண் பொருள்பட்ட வார்தல் அல்லது வருதல் என்னும் வினைச்சொல், இன்று வருதல் என்றுமட்டும் பொருள் படுகின்றது.

   இன்றும், தன் இடத்தினின்று புறப்படும் ஒருவன் தன்னையே நோக்கிச் செல்லின், போய் வருகிறேன் என்றுதான் சொல்வான். வந்து போகிறேன். எனின், அஃது அயன்மனையிற் சொல்வதாயிருத்தல் வேண்டும்;அல்லது தானே மீண்டும் தன்மனைக்கு வந்து போதலைக் குறித்ததாகல் வேண்டும்.

ஒருவனால், தன் இடத்தினின்று நீங்குவ தெல்லாம் செல்லுதல் வினையாலும் தன் இடத்தைச் சேர்வதெல்லாம் வருதல் வினையாலும் குறிக்கப்படுதலின், நீ வருக, அவன் வருக என்று, முன்னிலையானும் படர்க்கையானுமாகிய பிறர்

தன்னிடம் சேரும் வினையும் வருகை வினையாலேயே குறிக்கப்படும். அவ்வீரிடத்தாரும் அத்தன்மையானை முன்னிலைப்படுத்தின், நான் வருகிறேன், நான் வருகிறேன் என்று தனித்தனி சொல்லலாம். நான் செல்கிறேன். எனின், அது படர்க்கையானின் இடத்தை நோக்கியதாகவே யிருத்தல் கூடும்.

இனி, வார் அல்லது வா என்னும் வினைச்சொல் பல்வேறு வடிவில் திரவிட மொழிகளில் வழங்குவது மட்டுமன்றி, மேலை ஆரிய மொழியாகிய இலத்தீனிலும், சென்று மூலத்தை யொட்டி வழங்குவது வியக்கத் தக்கதாகும்.

ளகரமெய் தமிழிலும் திரவிடத்திலும் னகரமெய்யாகவுந் திரியும்.

எ-டு: தெள்-தென்-தேன், தெளிவு, தேறல் என்னும் சொற்களை நோக்குக.

கொள்-தெ. கொன், கொனு, தெ. கொனி = கொண்டு.

வள்-வன்-வென்-L. veni to come. Veni என்னும் மூலத்தினின்று, advent, avenue, circumvent, convene, event, intervene, invent, prevent, revenue, subvent, supervene, venue முதலிய சொற்கள் திரிந்துள்ளன. இவற்றுள் ஒவ்வொன்றினின்றும் சில பல சொற்கள் கிளைத்துள்ளன.

எ-டு: convene-convent, conventual, convention, conventional, conventionary, conventicle, convenient, convenience முதலியன.

கலிபோர்னியாப் பல்கலைக்கழகச் சமற்கிருத மொழிநூற் பேராசிரியர் எம்.பி. எமெனோ (M.B. Emeneau); திரவிட மொழிநூலும் இன நூலும் நாட்டுப்புறக் கதைகளும்பற்றி எழுதி, அண்ணாமலை பல்கலைக் கழகம் வெளியிட்ட கட்டுரைத் தொகுதியில் (Collected Papers); 6ஆம் கட்டுரை

     ‘வா’

     ‘தா’ என்னும் திராவிட வினைச்சொற்கள் (The Dravidian Verbs

     ‘come’ and give) என்பது.

அதில், அவர் தமக்குத் தமிழிற் சிறப்பறிவின்மையாலும் தமிழ்ப் பொத்தகங்கள் கிட்டாமையாலும் ஈ, தா, கொடுவென்னும் சொற்களின் நுண்பொருள் வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள முடியவில்லை யென்று எழுதியுள்ளதற் கொப்பவே,

     ‘வா’,

     ‘தா’ என்னும்

வினைச்சொற்கள் பற்றிய அவர் ஆராய்ச்சி முடிபுகளும் உள்ளன.

அவை வருமாறு:

   1. வ, த என்பன மூலத்திரவிட அடிகள் (Proto Dravidian stems);.

   2. அ, அர் என்பன அவ்வடிகள் தன்மை முன்னிலை வினைகளாகும் போது சேர்க்கப்படும் இடைமாற்ற ஈறுகள் (transition suffixes);.

   3. அ உடன்பாட்டு வடிவுகளிலும், அர் எதிர்மறை வடிவுகளிலும் ஆளப்பட்டன.

   4. அ+அ = ஆ என்பது சொல்லொலியன் மறுநிலை மாற்று (Morphonemic alternation);.

   5. வ, வந்த் என்பன வா என்னும் வினைக்கும், த, தந்த் என்பன தா என்னும் வினைக்கும், உரிய இணையடிகள்.

   6. பழந்தமிழில் வார் என்றிருந்த எதிர்மறையடி புதுத் தமிழில் வர் என்று குறுகிற்று.

   7. குய்மொழி திரவிட மொழியாராய்ச்சிக்குத் தமிழினும் மிகத் துணைபுரிவது.

இவற்றின் பொருந்தாமையை ஈண்டு விளக்கின் விரியும். அறிஞர் கண்டுகொள்க.

தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைத் தன்மைகளையும் வேர்ச்சொல் விளக்கத்தையும் தமிழரே அறியாதிருக்கும் போது, அயன்மொழி பேசும் வெளிநாட்டார் சமற்கிருத அடிப்படையில் திரவிட மூலமொழியின் அடிமுடி காண்பது, நால்வர் பாராதார் நால்வாய் கண்ட கதையே யொக்கும். (வேவ.க.4, பக்.110-118);.

 வா4 vā,    18 செ.கு.வி. (v.i.)

   1. பெயர்தல்; come towards the speaker or the place mentioned by the speaker.

     “அவர் என் அருகில் வந்து நின்றார்”.

   2. பெய்தல்; come down.

     “வானத்தைப் பார்த்தால் மழை வரும் போலிருக்கிறது”.

   3. பாய்தல் அல்லது ஓட்டம் உடையதாக இருத்தல்; come, be restored.

     “இரண்டு நாட்களாகக் குழாயில் தண்ணீர் வரவில்லை”.

   4. கிடைத்தல்; arrive, come get.

     “இன்று தான் எனக்கு ஊரிலிருந்து

பணம் வந்தது”.

   5. போடப்பட்டிருத்தல்; run.

     “மின்சாரக் கம்பி மொட்டை மாடியிலிருந்து வீட்டின் பின்பக்கமா வருகிறது”.

   6. ஏற்படுத்தப்படுதல்; come up.

     “அணுமின் நிலையம் வருவதை எதிர்த்துப் போராட்டம்”.

   7. உட்படுதல்; feature, appear.

     “ஏன் இந்தச் செலவு எந்தக் கணக்கிலும் வரவில்லை?”

   8. எழுதல், தோன்றுதல்; feel like.

     “அவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது”.

   9. உண்டாதல்; get the feeling of.

     “இதைச் செய்தால் ஏதாவது சிக்கல் வருமா?”

   10. இயலுதல்; be able to.

     “அவருக்கு ஆங்கிலம் பேச வரும்”.

 வா5 vā,    து.வி. (adv.) ஒரு செயல் கடந்த காலத்தில் அல்லது சற்று முன்பு தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லை வரை தொடர்வதையும் அல்லது இனியும் தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப் படும் துணை வினை; an auxiliary used to indicate the period during which the action is or has been going on.

     “நீங்கள் கொடுத்த பொத்தகத்தைப் படித்து வருகிறேன்”.

 வா6 vā, பெ. (n.)

   அத்தி; fig tree – Ficus glamerta.

வா.

வா.3 vā, பெ. (n.)

   தாவுகை; leaping, gallop- ing.

     “வாச்செல லிவுளியொடு” (புறநா. 197);.

     [வாவு → வா]

வாகசம்

 வாகசம் vākasam, பெ.(n.)

   பெரும்பாம்பு; a big snake.

வாகடநூல்

 வாகடநூல் vākaḍanūl, பெ.(n.)

   மருத்துவ நூல்; medical science.

     [வாகடம் + நூல்]

வாகடபாரி

 வாகடபாரி vākaḍapāri, பெ.(n.)

   பச்சோந்தி; green lizard-chameleon.

     [வாகடம் + பாரி]

வாகடமுறை

 வாகடமுறை vākaḍamuṟai, பெ.(n.)

   மருத்துவ நூலில் சொல்லிய முறை; according to medical science-officinal.

     [வாகடம் + முறை]

வாகடமுறையற்ற

 வாகடமுறையற்ற vākaḍamuṟaiyaṟṟa, பெ.(n.)

   நூல் முறை சாராத; unofficinal.

     [வாகடம் + முறையற்ற]

வாகடம்

வாகடம் vākaḍam, பெ.(n.)

   மருத்துவ நூல் (தக்கயாகப்.553, உரை);; medical science, medical treatise.

     [வாகு + அடம்]

 வாகடம் vākaḍam, பெ. (n.)

   மருத்துவ நூல் (தக்கயாகப்.553, உரை.);; medical science, medical treatise.

த.வ. மருத்துவநூல், (வழக்கு – மாட்டு வாகடம், குதிரை வாகடம்);

     [Skt. {} → த. வாகடம்]

வாகடர்

வாகடர் vākaḍar, பெ.(n.)

   மருத்துவர்; physicians,

     “வாகடர் தங்களை யிப்பிணி யகற்றுதி ரெனலோடும்” (பிரமோத்.10, 15);.

     [வாகடம் → வாகடர்]

வாகடவிதி

 வாகடவிதி vākaḍavidi, பெ.(n.)

   மருத்துவ நூலிலுள்ள நெறிமுறைகள்; rules of Pharmacopoeia.

     [வாகடம் + Skt. விதி]

வாகணை

 வாகணை vākaṇai, பெ.(n.)

   ஆற்றை அறுத்துச் செல்லும் நீரோட்டத்தைத் தடுக்கக் கட்டும் மூங்கில் முதலியவற்றாலான அணை (தஞ்.);; groyne, wooden break water.

     [வாகு + அணை]

வாகனப்பாலி

 வாகனப்பாலி vākaṉappāli, பெ.(n.)

   திருகு கள்ளி; milky spurge- Euphorbia tiruchalli.

வாகனம்

வாகனம் vākaṉam, பெ. (n.)

   1. ஊர்தி: vehicle, conveyance, animal to ride on, a horse, elephant, etc. carriage, wagon, van.

     “உயர்ந்த வாகனயானங்கள்”(பெரியபு. தடுத்தாட். 20.);

   2. சீலை (யாழ். அக.);; cloth.

   3. புடைவை முதலியவற்றை வைத்துக் கட்டும் முரட்டுத் துணி (யாழ். அக.);; rough cloth, used in packing.

   4. விடாமுயற்சி (யாழ்.அக.);; perseverance.

த.வ. ஊர்தி

     [Skt. {} → த. வாகனம்]

வாகனா

 வாகனா vākaṉā, பெ.(n.)

   பனிப்பயறு; dew gram – Phaseolus aconitifolius.

வாகன்

வாகன் vākaṉ, பெ.(n.)

   அழகன்; fair or handsome man.

     “வாகனைக்கண் டுருகுதையோ” (குற்றா.குற.25);.

ம., து. வாக.

     [வாகு → வாகன்]

 வாகன் vākaṉ, பெ. (n.)

   ஊர்தியுடையவன்; one who possesses a conveyance.

     “கொண்டல் வாகனும் குபேரனும்.” (பாரத. குருகுல. 29);.

     [Skt. {} → த. வாகன்]

வாகம்

வாகம்1 vākam, பெ.(n.)

   சக்கரவாகப் பறவை; cakra bird.

     “வாகப் புள்ளுடன் …. அளியுஞ் சூழுமே” (அரிசமய. 2,4);.

 வாகம்2 vākam, பெ.(n.)

   1. செங்கீரை; a red leaf plant.

   2. பலண்டுறுகவிடம்; a kind of arsenic.

   3. புயம்; shoulder.

   4. கோமேதகம்; one of nava-mani stone.

வாகரம்

 வாகரம் vākaram, பெ.(n.)

   கோணாய்; wolf.

வாகவி

 வாகவி vākavi, பெ.(n.)

   செங்கீரை; red leaf.

வாகி

 வாகி vāki, பெ.(n.)

   அழகி (வின்.);; fair, hand- some woman);.

     [வாகு → வாகி]

வாகிடி

 வாகிடி vākiḍi, பெ.(n.)

   பெருமீன்வகை (மூ.அ.);; porpoise.

மறுவ. கடற்பன்றி.

வாகினி

வாகினி vākiṉi, பெ.(n.)

   பாதிரிமரம் (மலை.);; yellow flowered fragrant trumpt-flower tree.

 வாகினி vākiṉi, பெ. (n.)

   1. படை (பிங்);; army, host.

   2. 81 யானைகளும் 81 தேர்களும் 243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் வகுப்பு; a division of an army consisting of 81 elephants, 81 chariots, 243 horse and 405 foot.

     “வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ” (ஆதியூரவதானி. 45.);

   4. ஒரு பேரெண். (பிங்.);; a great number.

     [Skt. {} → த. வாகினி1]

வாகினீபதி

வாகினீபதி vākiṉīpadi, பெ.(n)

   1. பெருங் கடல்; ocean.

   2. படைத்தலைவன்; commander of an army.

     [வாகினி →வாகினீ + பதி]

வாகியம்

வாகியம் vākiyam, பெ.(n.)

   1. புறம்; outer part, exterior.

     “ஆப்பியந்தரமே வாகியமென்ன” (பி.வி. 12);.

   2. வெளி (வின்.);; open, plain.

     [வாகு → வாகியம்]

வாகு

வாகு1 vāku, பெ.(n.)

   1. அழகு (சூடா.);; beauty.

     “வாகாரிப மினாள்” (திருப்பு.135);.

   2. ஒளி; light, brightness.

     “இந்து வாகை” (திருப்பு. 399);.

   3. ஒழுங்கு; niceness, fitness, orderliness, propriety.

     “வாகா நியாய வட்டி வாங்காமல்” (பணவிடு.238); (யாழ்.அக.);.

   4. திறமை; skill.

     “வாகு பெறு தேர்வலவனை” (கந்தபு.மூன்றாம்.யுத்.70);.

   5. தொட்டால்வாடி (அரு.அக.);; a sensitive plant.

மறுவ: தொட்டாற்சிணுங்கி.

   தெ. பாகு;ம., துளு. வாக.

     [வகு → வாகு]

 வாகு2 vāku, பெ.(n.)

   1. தோள் (பிங்.);; arm, shoulder.

     “வாகுப் பிறங்கல்” (இரகு. கடிம.64);.

   2. நேர்கோண முக்கோணத்தின் அடிக்கோடு (யாழ்.அக.);; the base of a right-angled triangle.

   3. பக்கம்; side, direction.

   4. கை; hand.

     ‘அவருடைய கைவாகே தனி” (உ.வ.);.

   ம. வாகு;   தெ. பாகு;து. வாகு (g);.

     [பாகு →வாகு]

வாகுசம்

வாகுசம் vākusam, பெ.(n.)

   1. எள்; seasamon seed.

   2. குப்பைக்கீரை; some rubbish greens.

   3. கிளி; parrot.

வாகுசி

 வாகுசி vākusi, பெ.(n.)

   கார்போகவரிசி; a fragrant seed-Psoralea corylifolia.

வாகுசிவிரை

 வாகுசிவிரை vākusivirai, பெ.(n.)

வாகுசி பார்க்க;see {}.

     [வாகுசி + விரை]

வாகுடையாள்

 வாகுடையாள் vākuḍaiyāḷ, பெ.(n.)

   வாலுளுவையரிசி; seeds of intellect plant – Celastrus paniculata.

     [வாகு + உடையாள்]

வாகுதம்

 வாகுதம் vākudam, பெ.(n.)

   ஒரு பறவை; a bird.

வாகுனி

வாகுனி vākuṉi, பெ.(n.)

   1. கீழ்க்காய் நெல்லி; a plant- phyll-anthus.

   2. பெருங்காரை பார்க்க;see {}.

வாகுபுரி

வாகுபுரி vākuburi, பெ.(n.)

   1. தோள்வளை; armlet.

     “வாகுபுரி வயங்க” (காளத்- உலா,151);.

   2. முப்புரி நூல் (வின்.);; sacred thread worn over the left shoulder.

     [வாகு + புரி] (செல்வி.

     ’75 ஆனி, 532)

வாகுமாலை

 வாகுமாலை vākumālai, பெ.(n.)

   பந்தரிற் கட்டும் அணியழகுத் தொங்கல் (யாழ்.அக.);; ornamental hanging in a pavilion.

     [வகு → வாகு + மாலை]

 வாகுமாலை vākumālai, பெ. (n.)

   சிற்பங்களில், இரு தோள்களிலிருந்து மார்பு வரை இடம் பெறும் ஓர் ஆரம்; garlandlike chain carved in the sculpture.

     [வாகுசி+மாலை]

வாகுமூலம்

வாகுமூலம்1 vākumūlam, பெ.(n.)

   கமுக்கட்டு (பிங்.);; arm-pit.

மறுவ. அக்குள், விலாக்குழி.

     [வாகு+மூலம்]

 வாகுமூலம்2 vākumūlam, பெ.(n.)

   1. தோள்மூலம்; shoulder.

   2. கைக்குழி; palm-curve.

     [வாகு + மூலம்]

வாகுயுத்தம்

 வாகுயுத்தம் vākuyuttam, பெ.(n.)

   மற்போர் (யாழ்.அக.);; fencing, the art of wrestling.

     [வாகு + Skt. யுத்தம்]

வாகுரம்

வாகுரம்1 vākuram, பெ.(n.)

   வலை (யாழ்.அக.);; net.

 வாகுரம்2 vākuram, பெ.(n.)

   வவ்வால் (நாமதீப.252);; bat.

வாகுருடம்

 வாகுருடம் vākuruḍam, பெ.(n.)

   எருக்கிலை; leaf of madar – Calotropis gigantia.

வாகுரை

 வாகுரை vākurai, பெ.(n.)

   பறவை பிடிக்கும் சுருக்குக் கயிறு (யாழ்.அக.);; noose, share.

மறுவ. கண்ணி.

வாகுலம்

 வாகுலம் vākulam, பெ.(n.)

   மகிழங்கனி (அரு.அக.);; the fruit of the tree – Mimusops elengi.

வாகுலிகன்

 வாகுலிகன் vāguligaṉ, பெ.(n.)

   வெள்ளிலை மடித்துக் கொடுக்கும் வேலைக்காரன் (யாழ்.அக);; attendant carrying bettle-

 pouch.

மறுவ. அடைப்பைக்காரன்.

வாகுலேயன்

 வாகுலேயன் vākulēyaṉ, பெ.(n.)

   முருகக்கடவுள் (வின்.);; Muruga-k-{}.

மறுவ. ஆறிரு கரத்தோன்.

     [வாகுலை → வாகுலேயன்]

வாகுலை

 வாகுலை vākulai, பெ.(n.)

   அறுமீனாகிய கார்த்திகைப் பெண்கள் (யாழ்.அக.);; the six presiding female deities of the Pleiades.

வாகுவம்

 வாகுவம் vākuvam, பெ.(n.)

   வஞ்சி; a creeping plant – Calamus rotang.

வாகுவலயம்

வாகுவலயம் vākuvalayam, பெ.(n.)

   தோளணி; armlet.

     “மேகலைகாஞ்சி வாகுவலயம்” (பரிபா.7,47);

     [வாகு + வளையம் → வாகுவலையம்]

 வாகுவலயம் vākuvalayam, பெ. (n.)

வாகு மாலை பார்க்க;see Vágumālai.

     [வாகு+(வளையம்);வலயம்]

வாகுவலையம்

வாகுவலையம் vākuvalaiyam, பெ.(n.)

   தோள்வளை; armlet.

மறுவ. தோளணி.

வ. பாகுவலய (b);.

     [வாகு + வளையம். (செல்வி. 75, ஆனி 532);]

வாகெடு-த்தல்

வாகெடு-த்தல் vākeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தலைமயிர் வகிர்தல்; to part the hair down the middle.

     [வாக்கு → வாகு + எடு-.]

வாகென்பு

 வாகென்பு vākeṉpu, பெ.(n.)

   தோள்பட்டை யெலும்பு; shoulder blade-Scapula.

     [வாகு + என்பு]

வாகை

வாகை vākai, பெ.(n.)

   1. மரவகை; sirissa, Albizzia.

   2. கருவாகை; fragrant-sirissa.

   3. அகத்தி; West Indian pea-tree.

     “புகழா வாகைப் பூவினென்ன வளை மருப்பேனம்” (பெரும்பாண்.109);.

   4. வெற்றியாளர் அணியும் மாலை (பிங்.);; chaplet of sirissa flowers worn by victors.

     “இலைபுனை வாகைசூடி” (பு.வெ. 8, 1, கொளு.);.

   5. வெற்றி; victory.

     “வாக்கும் வாகையும் வண்மையு மாறிலான்” (இரகு.யாகப். 38); (பிங்.);.

   6. பகையரசரைக் கொன்று வாகைப் பூச்சூடி வெற்றியால் ஆரவாரிப்பதைக் கூறும் புறத்துறை (பு.வெ. 8,1);; theme of a conquerer wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies (Purap.);.

   7. நான்கு வரணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத்தலைக் கூறும் புறத்திணை (தொல்.பொருள்.74);;   8. நல் லொழுக்கம் (வின்.);; good behaviour.

   9. ஈகை (வின்.);; gift.

   10. மிகுதி (வின்.);; plenty.

   11. பண்பு(வின்.);; nature.

   12. தவம் (வின்.);; penance.

   க. பாகெ;   ம. வாக; Tu. {}-mara.

வாகை வகைகள்:

   1. அடக்கு வாகை; Albizzia labbek.

   2. காட்டு வாகை; common sirissa.

   3. பெருவாகை; same as No.1.

   4. சிற்றிலை வாகை; fragrant sirissa – Albizza odoratissima.

   5. கருவாகை; Mimosa marginata.

   6. மலைவாகை; hill sirissa- Albizzia procero alias pilhecolobium coriaceum.

   7. கொண்டை வாகை; same as No.6.

   8. நல்ல வாகை; Albizza procera.

   9.சிலை வாகை; Albizza stipulata.

   10. பிலி வாகை, கல் துரிஞ்சில்; Albizza odoratissima.

   11. சாயல்வாகை; Albizzia amara.

   12. சீமை வாகை; Enterolobium saman.

   இவ்வாகை மரம் மிகவேகமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து கட்டட வேலைக்கும் விறகுக்கும் பயன்படுவதாக உள்ளது. கால் நடைகளின் உணவுப் பற்றாக்குறையை நீக்கவல்லது;   மண் அரிப்பைத் தடுக்கும்;   மணலிலும் வளரும்;இதன் இலை, பூ, பட்டை, பிசின் விதை அனைத்தும் மருத்துவப்பயன் உடையவை.-(வளம் தரும் மரங்கள் பக்.236);.

வாகைசூடு-தல்

வாகைசூடு-தல் vākaicūṭudal,    18 செ.குன்றா.வி. (v.t.)

   உரிய உயர்நிலையை அடைதல்; triumph, be crowned with success.

     “வெற்றி வாகை சூடினார்”.

     [வாகை + சூடு-,]

வாகைத்திணை

வாகைத்திணை vākaittiṇai, பெ.(n.)

   பகையரசரைக் கொன்று வாகைப் பூச்சூடி ஆரவாரிப்பதைக் கூறும் புறத்துறை; theme of conquerer wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies. (purap.);

வாகைத்தினையின் வகைகள்:

   1. வாகை –

     “இலைபுனை வாகை சூடி இகல்கலைந்து

அலைகடல் தானை அரசட்டார்த்தன்று”.

பகைவேற் றைக்கொன்று வாகைமாலை

சூடி ஆரவாரித்தது (பு.வெ.கொளு. 8-1);.

   2. வாகையரவம் –

     “வெண்கண்ணியும் கருங்கழலும்

செங்கச்சும் தகை புனைந்தன்று”.

போர் மறவர் பகைவென்று வாகைமாலை

சூடியது. (பு.வெ.கொளு.8-2);.

   3. அரசவாகை –

     “பகலன்ன வாய்மொழி

இகல்வேந்தன் இயல்புரைத்தன்று”,

செங்கோன்மை யுடைய அரசனது

இயல்பினைக் கூறியது. (பு.வெ.கொளு.8-3);

   4. முரசவாகை –

     “ஒலிகழலான் அகனகருட் பலிபெறு

முரசின் பண்புரைத் தன்று”(பு.வெ.கொளு.8-4);.

அரசனது வெற்றிமுரசின் தன்மையைக் கூறியது.

   5. மறக்களவழி –

     “முழுவுறழ் திணிதோளானை

உழவனாக உரைமலிந்தன்று”(பு.வெ.கொளு.8-5);.

செங்கோன் மன்னனை உழவனாக உருவகித்துப் பாராட்டியது மறக்களவழி என்னும் துறையாம்.

   6 களவேள்வி –

     “அடுதிறல் அணங்கார

விடுதிறலான் களம்வேட்டன்று”(பு.வெ.கொளு.8-6);.

வாகை சூடிய வேந்தன் களவேள்வி செய்தது.

   7. முன்தேர்க்குரவை –

     “வென்றேந்திய விறற்படையோன்

முன்தேர்க்கண் அணங்காடின்று”(பு.வெ.கொளு.8-7);.

   8. பின்தேர்க்குரவை –

     “பெய்கழலான் தேரின் பின்

மொய்வளை விறலியர் வயவரொ டாடின்று”

வென்ற மன்னனின் தேரின்பின் வீரரும் விறலியரும் கூத்தாடியது.

   9. பார்ப்பன வாகை –

     “கேள்வியாற் சிறப்பெய்தியானை

வேள்வியால் விறல்மிகுத்தன்று”

மறைகேட்டுச் சிறப்பெய்திய பார்ப்பனனுடைய வெற்றியைக் கூறுவது.

   10. வாணிக வாகை –

     “செறு தொழிலிற் சேணீங்கியான்

அறுதொழிலும் எடுத்துரைத்தன்று”(பு.வெ.கொளு.8-2);

வணிகர்க்குரிய அறுவகைத் தொழிற் சிறப்பையும் விதந்து கூறியது. உழவு, நிரையோம்பல், வாணிபம், ஓதல், வேட்டல், ஈதல்

என்னும் அறுவகைத் தொழிலினும் சிறந்தவன், வணி கருட் தலைசிறந்தவன் ஆவான்.

   11. வேளாண் வாகை –

     “மேல் மூவரும் மனம்புகல

வாய்மையான் வழியொழுகின்று”

அந்தணர் முதலிய மூவரும் விரும்பியபடி ஒழுகுதல் ஆயின் தொல்காப்பியர், வேளாளர்க்குரிய உழவு உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, ஒதுதல் என்னும் அறுவகைத் தொழிலினும் அவர் சிறப்புடையராதல் அவர்க்கு வாகையாம் என்பது தோன்ற,

     “இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என வகுத்தனர். பு.வெ. நூலாசிரியர் வழிபாடொன்றை மட்டுமே விதந்து ஓதுகிறார்.

   12. பொருந வாகை –

     “புகழொடு பெருமை நோக்கி யாரையும்

இகழ்தல் ஒம்பென எடுத்துரைத்தன்று”

தன்னொடு எதிர்நின்று பொர வல்லவர் யாருமில்லை என்று கருதி – அவர்களது ஒப்பின்மை காரணமாக யாரையும் இகழாதே கொள் என அறிஞர்கள் கூறுவதாம்.

   13. அறிவன் வாகை –

     “புகழ்நுவல முக்காலமும்

நிகழ் பறிபவன் இயல்புரைத்தன்று”,

இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் அறிவனுடைய தன்மையைச் சொல்லியது.

     “மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறிபின் ஆற்றிய அறிவன் தேயமும்” என ஆசிரியர் தொல்காப்பியர் கூறியதும் இது.

   14. தாபத வாகை –

     “தாபத முனிவர் தவத்தொடு முயங்கி

ஒவுதல் அறியா ஒழுக்குரைத் தன்று”(பு.வெ.கொளு-14);

தவ முனிவர்கள் தம் தவவொழுக்கத்தில் பிறழாது மேம்பட்டமை.

   15. கூதிர்ப்பாசறை –

     “கூற்றனையான் வியன்கட்டூர்க் கூதிர்வாள்

துளிவழங்க

ஆற்றாமை நனிபெருகவும் அயில்வேலோன்

அளிதுறந்தன்று”

காமம் வருத்தும் கூதிர்க் காலத்தும் மறமே நினைந்து மன்னன் பாசறையிடத்தே தங்கியது இது.

   16. வாடைப் பாசறை –

     “வெந்திறலான் வியன் பாசறை வேல்வயவர்

விதிர்ப் பெய்த

வந்துலாய்த் துயர் செய்யும் வாடையது

மலிபுரைத்தன்று”

வாடை நலியவும் மன்னன் காமம் துறந்து பாசறைக் கண் இருந்தது வாடைப் பாசறை என்பதாம்.

   17. அரசமுல்லை

     “செருமுனை உயற்றுஞ் செஞ்சுடர் நெடுவேல்

இருநிலங் காவலன் இயல்புரைத் தன்று”

மன்னனது இயல்பு மிகுதியைக் கூறியது.

   18. பார்ப்பன முல்லை

     “கான் மலியும் நறுந்தெரியல் கழல்வேந்தர் இகலவிக்கும்

நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை உரைத்தன்று”

வேந்தர்களின் மாறுபாட்டை விலக்கிச் சந்து செய்விக்கும் அந்தணனது செப்பத் தன்மையைச் சொல்லியதாம்.

   19. அவைய முல்லை

     “நவைநீங்க நடுவு கூறும்

அவை மாந்தர் இயல்புரைத்தன்று”

அறங்கூற வையத்துச் சான்றோர் இயல்பினைச் சொல்லியது. அவ்வியல்பினை யுடையார் அவையத்தில் வாகையுடையார் ஆவர்.

   20. கணிவன் முல்லை

     “துணிபுணரும் தொல்கேள்வி

கணிவனது புகழ் கிளந்தன்று”

காலக் கணிவனுடைய திறத்தைப் புகழ்ந்தது.

   21. மூதில் முல்லை

     “அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்

மடவரல் மகளிர்க்கு மறமிகுத்தன்று”

பழைய மறக்குடி மகளிரின் இயல்பு மிகுதியாகிய மறப்பண்பினைக் கூறியது இத்துறை.

   22. ஏறாண் முல்லை

     “மாறின்றி மறங்கனலும்

ஏறாண்குடி எடுத்துரைத்தன்று”

மறப்பண்பு மேலும் மேலும் வளரும் இயல்புடைய மறக்குடியின் ஒழுக்கத்தைக் கூறியது ஏராண்முல்லை.

   23. வல்லாண் முல்லை

     “இல்லும் பதியும் இயல்புங் கூறி

நல்லாண் மையை நலமிகுத் தன்று”

ஒரு மறவனுடைய குடி, ஊர், பண்பு முதலியவற்றைப் பாராட்டி அவனது ஆண்மையை விதந்து கூறியது இத்துறை.

   24. காவல்முல்லை – 1.

     “தவழ்திரை முழங்கும் தண்கடல் வேலிக்

கமழ்தார் மன்னவன் காவல் மிகுத்தன்று”

வேந்தனது உலகங் காக்கும் தொழிலைச் சிறப்பித்தது.

   25. காவல்முல்லை – 2.

     “தக்காங்கு பிறர் கூறினும்

அத்துறைக் குரித்தாகும்”

அரசனது காவலியல்பினைப் பிறர் பொருந்த எடுத்துக் கூறினும் முற்கூறப்பட்ட துறையேயாம் என்பது கருத்து.

   26. பேராண்முல்லை

     “உளம்புகல மறவேந்தன்

களங்கொண்ட சிறப்புரைத்தன்று”

மன்னன் போர்க்களத்தை வென்று கைப்பற்றிய சிறப்பைக் கூறுவது.

   27. மறமுல்லை

     “வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்

கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று”

மறவன், மன்னன் தனக்கு வழங்கும் பொருளிடத்தில் கருத்தின்றி பகைவெல்லலே குறிக்கோளாகக் கொண்டு சினக்கும் தன்மை.

   28. குடைமுல்லை

     “மொய்தாங்கிய முழுவலித் தோட்

கொய்தாரான் குடை புகழ்ந்தன்று”

மன்னன் குடையைப் புகழ்ந்தது இத்துறை.

   29. கண்படை நிலை

     “மண் கொண்ட மறவேந்தன்

கண்படை நிலை மலிந்தன்று”

வாகை கொண்ட மன்னனின் துயிலைப் பாராட்டியது இத்துறை.

   30. அவிப்பலி

     “வெள்வாள் அமருட் செஞ்சோ றல்லது

உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று”

போர்க்களத்தில் தம் அரசனுக்குச் செஞ்சோற்றுக் கடன் நினைந்து மறவர் தம் உயிரையே வழங்குதலைக் கூறுதல் இத்துறை.

   31. சால்புமுல்லை

     “வான்றோயும் மலையன்ன

சான்றோர்தம் சால்புரைத்தன்று”

சான்றோரின் இயல்பு மிகுதியைச் சொல்லியது

இத்துறை.

   32. கிணை நிலை

     “தண்பணை வயலுழவனைத்

தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று”

வேளாளனைக் கிணைப்பறை கொட்டுபவன் புகழ்ந்தது இத்துறை.

   33. பொருளொடு புகறல்

     “வையகத்து விழைவறுத்து

மெய்யாய பொருள் நயந்தன்று”(பு.வெ.8-33);

பொய்ப் பொருளின் கண் பற்றகற்றி மெய்ப்பொருளை விரும்பியது இத்துறை.

   34. அருளொடு நீங்கல்

     “ஒலிகடல் வையகத்து

நலிவுகண்டு நயப்பு அவிந்தன்று” (பு.வெ.கொளு.8-34);

இவ்வுலக வாழ்க்கையில் நிகழும் துன்பத்தை உணர்ந்து அதன்கண் பற்று நீங்கியது இத்துறை. அருட்பண்பே பற்றுக் கோடாக நீங்கலின் அருளொடு நீங்கல் என்று கூறினார். இதனையே

     “அருளொடு புணர்ந்த அகற்சி” என்றார் தொல்காப்பியர்.

வாகைமாலை

வாகைமாலை vākaimālai, பெ.(n.)

   1. போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை (பிங்.);; garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence.

   2. சிற்றிலக்கியம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் சிற்றிலக்கிய வகை; a poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa

 flowers, one of 96 pirabandam.

     [வாகை + மாலை]

வாகைமேற்புல்லுருவி

வாகைமேற்புல்லுருவி vākaimēṟpulluruvi, பெ.(n.)

   108 கற்ப மூலிகைகளில் ஒன்று; parasite of albizzia is one of the 108 rejuvenating drugs.

     [வாகை + மேல் + புல்லுருவி]

வாகையரவம்

வாகையரவம் vākaiyaravam, பெ.(n.)

   வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை (பு.வெ.8,2);; theme describing a warrior, as being decked with a wreath of white flowers and wearing a red girdle and anklets, in token of victory.

     [வாகை + அரவம்]

வாகைவனத்தாலாட்டு

வாகைவனத்தாலாட்டு vākaivaṉattālāṭṭu, பெ.(n.)

   கந்தப்பையரால் 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூல்; a book written by Kandappaiar in 18th century.

     [வாகைவனம் + தாலாட்டு]

வாகைவில்லான்

வாகைவில்லான் vākaivillāṉ, பெ.(n.)

காமன் (நாமதீப.59, உரை.);;{}.

     [வாகை + வல்லான்]

வாக்கத்தமூலி

 வாக்கத்தமூலி vākkattamūli, பெ.(n.)

   இலுப்பை; mohwa tree – Bassia tatifolia.

வாக்கன்

 வாக்கன் vākkaṉ, பெ.(n.)

வாக்குக் கண்ணன் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாக்கு = வளைவு, ஒழுங்கின்மை.]

வாக்கம்

வாக்கம்1 vākkam, பெ.(n.)

   சரக்கொன்றை; a tree with beautiful hanging yellow flowers – Cassia fistulla.

 வாக்கம்2 vākkam, பெ.(n.)

   நெய்தல் நிலத்தூர்; a place name of coastal re- gion.

கத்திவாக்கம், வில்லிவாக்கம்

     [பாக்கம் → வாக்கம். (செல்வி,75. ஆனி.534);]

வாக்கல்

வாக்கல் vākkal, பெ.(n.)

   வடிக்கப்பட்ட சோறு; boiled rice from which conjee has been strained.

     “கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்” (புறநா.215);.

   கொலா. வாக், தோட, பாக்ஸ்;   க. பாகு;   குட. பாக்;   தெ., க. வாஞ்சு;   கோண்ட். வாங்னா;   குய். வாங்க;குவி. (பெ.பா.); வ்வான்காலி.

     [ஒருகா: ஆக்கு → வாக்கு → வாக்கல்]

வாக்காட்டு-தல்

வாக்காட்டு-தல் vākkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஏய்த்தல் (யாழ்.அக.);; to disappoint, to deceive.

     [ஒருகா. அவா + காட்டு →வாக்காட்டு-,]

வாக்காமூலி

 வாக்காமூலி vākkāmūli, பெ.(n.)

   பொன்னூமத்தை; a variety of dhatura with yellow flowers.

     [வாக்கா + மூலி]

வாக்கி

 வாக்கி vākki, பெ.(n.)

   மாறுகண்ணுள்ளவள் (யாழ்.அக.);; squint-eyed woman.

     [வாக்கன் → வாக்கி (பெண்பால்);]

வாக்கியக்கட்டளை

வாக்கியக்கட்டளை vākkiyakkaṭṭaḷai, பெ. (n.)

   நன்கு யாத்த சொற்றொடர்; clause or sentence of literary finish.

     “எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கட்டக் கூறுபாடுகளும்” (சிலப். 3, 45 உரை. பக். 108.);

த. வ. தொடராக்கச் செப்பம்

     [Skt. vakya → த. வாக்கியக்கட்டளை]

வாக்கியம்

வாக்கியம் vākkiyam, பெ. (n.)

   1. சொல்; speech, saying, assertion, statement, command, words.

   பிதுர்வாக்கியம்;   2. எழுவாய் பயனிலை முதலியவற்றால் பொருள் நிரம்பிய சொற்றொடர்; sentence;proposition containing the subject, object and predicate.

     “வல்லோர் வகுத்த வாசனை வாக்கியம்” (பெருங். உஞ்சைக் 34, 27.);

   3. பழமொழி; aphorism, proverb.

   4. கதிரவக் கொண்முடிபினின்று வேறுபட்டதும் தென் இந்தியாவில் நடை பெறுவதுமான பிறப்பியக்கணக்கு முறை;   5. பிறப்பியக் கணித வாய்பாடுவகை; (வின்.);

 astronomical table.

   6. மேற்கோள்; authoritative quotation.

     “வாக்கியஞ் சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்” (தேவா. 999.10.);.

த.வ. முற்றுத்தொடர், கிளவியம்

     [Skt. {} → த. வாக்கியம்]

வாக்கியார்த்தம்

வாக்கியார்த்தம் vākkiyārttam, பெ. (n.)

   1. சொற்றொடர்ப் பொருள்; meaning of a passage.

   2. ஒரு பொருண்மேல் நேர்க்கூற்று அயற்கூற்றாக நிகழ்த்தும் உரை;த.வ. தொடர்ப்பொருண்மை

     [Skt. {} → த. வாக்கியார்த்தம்]

வாக்கியேசம்

 வாக்கியேசம் vākkiyēcam, பெ.(n.)

   சிறு நீலி என்னும் மூலிகை; a plant small variety of indigofera sumatrana.

வாக்கில்

வாக்கில் vākkil, இடை.(part)

   1. நிலையில்; in the course of doing.

     “நின்ற வாக்கில் பேசிவிட்டுப் போய் விட்டான்”.

   2. நேரத்தை அல்லது காலத்தை ஒட்டி; about around.

     “எப்போதும் ஐந்து மணிவாக்கில் வீடுதிரும்புவார்”.

வாக்கு

வாக்கு1 vākku, பெ.(n.)

   1. திருத்தம்; perfection, correctness.

     “வாக்கணங்கார், மணிவீணை” (சீவக.1473);.

   2. திருந்திய வடிவு; refined form, shape.

     “வாக்கமை கடுவிசைவில்” (கலித்.137);.

   தெ. பாக;ம., து. வாக.

     [வகு → வாகு → வாக்கு]

 வாக்கு2 vākku, பெ. (n.)

   1. வளைவு; bend.

     “கோட்டிய வில்வாக் கறிந்து” (நாலடி.395);.

   2. ஒழுங்கின்மை (வின்.);; irregularity.

     [வாங்கு → வாக்கு]

 வாக்கு3 vākku, இடை. (part.)

   ஒரு வினையெச்ச விகுதி; a participial suffix, signifying purpose.

     “கொள்வாக்கு வந்தான்” (தொல்.சொல்.231.உரை);.

 வாக்கு4 vākkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வார்த்தல்; to pour.

     “அடர் பொற்சிரகத்தால் வாக்கி” (கலித்.51);.

   தெ. வாக;   க. வாகு; Ko. va-k;

 To. Po-x;

 Kod. ba-k;

 Kol. va-ng;

 Ga. van(g);;

 Go. {}, Kui, {}, Kuwi. (f); {}.

 வாக்கு5 vākku, பெ. (n.)

   1. பக்கம்; side, direction.

     “இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப” (திருவிளை.தடாதகை.26);.

   2. இயங்குதிசை;     ‘காயப்போட்ட துணி காற்றுவாக்கில் பறந்துவிட்டது’ (உ.வ.); (செல்வி1.75,ஆனி 534);.

     [வகு → வக்கு → வாக்கு]

 வாக்கு6 vākku, பெ.(n.)

   வகை; manner, nature.

     “ஏன் இன்னும் ஒருவாக்கா யிருக்கிறாய்” (பிரதாப. விலா.105);.

 வாக்கு1 vākku, பெ. (n.)

   1. திருத்தம்; perfection, correctness.

     “வாக்கணங்கார் மணிவீனை” (சீவக. 1473);.

   2. திருந்திய வடிவு; refined form, shape.

     “வாக்கமை கடு விசைவில்” (கலித். 137.);

த.வ. செப்பம், செப்பமான வடிவம்

     [Skt. bhiga → த. வாக்கு]

 வாக்கு2 vākku, பெ. (n.)

   1. புலன்கள் ஐந்தனுள் பேசற் கருவியான வாய். (பிங்.);; mouth, the organ of speech, one of five {}, q.v.

   2. சொல். (திவா.);; word, speech.

     “வாக்கினாற்றெருட்டுவாரி ல்லை” (கம்பரா. பிரமா. 201.);

   3. காணாவொலி (அசரீரி);; voice from heaven.

   4. சொல்லாணை (வாக்குத்தத்தம்);; promise.

     “அவனுக்கு அப்படி வாக்குக் கொடாதே”

   5. புகழ்ச்சிச் சொல்; word of praise, encomium.

     “வாக்கமையுருவின் மிக்கான்” (சீவக. 1258);.

   6. எளிதிற் கவிபாடுந் திறம்; capacity to compose poems with felicity.

     “அந்த புலவர் வாக்குள்ளவர்”

   7. நூலின் நடை; style.

     “அந்த நூலின் வாக்குச் சிறந்தது.”

   8. சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நால் வகைப்பட்ட ஒலி; speech form, of four kinds, viz, {}, paicanti, mattimai, vaikari.

     “நிகழ்த்திடும் வாக்கு நான்கும்” (சி.சி. 1,24);.

   9. ஓரிடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுப்பது முதலியவற்றில் தன் எண்ணத்தைத் தெரிவிக்கும் உரிமை; right to vote.

     [Skt. {} → த. வாக்கு]

வாக்குக்கண்

 வாக்குக்கண் vākkukkaṇ, பெ.(n.)

   மாறுகண் (வின்.);; squint eye.

மறுவ. ஒன்றரைக் கண்.

     [வாக்கு + கண். வாக்கு = ஒழுங்கின்மை]

வாக்குக்கண்ணன்

 வாக்குக்கண்ணன் vākkukkaṇṇaṉ, பெ.(n.)

   மாறுகண்ணுள்ளவன் (வின்.);; squint- eyed person.

மறுவ. ஒன்றரைக் கண்ணன்

     [வாக்குக்கண் → வாக்குக்கண்ணன்]

வாக்குப்பசப்பி

 வாக்குப்பசப்பி vākkuppasappi, பெ.(n.)

   சதகுப்பை; the dill or sowa A. peucedanum graveloens.

     [வாக்கு + பசப்பி]

வாக்குமாலை

 வாக்குமாலை vākkumālai, பெ. (n.)

   தெருக் கூத்தில் பங்குபெறும் ஆடவர் அணிகின்ற ஓர் அணிகலன்; ornament worn by male while performing street dance.

     [வாக்கு+மாலை]

வாக்குரிமை

 வாக்குரிமை vākkurimai, பெ.(n.)

   பொதுச்சபையின் உறுப்பினராகப் பிறனைத் தேர்ந்தெடுத்தல் முதலியவற்றின் அனுமதியுரிமை (இக்.வ.);; franchise, right of voting.

த.வ. ஒட்டுரிமை

     [Skt. {} → த. வாக்கு]

வாக்குவடிவு

 வாக்குவடிவு vākkuvaḍivu, பெ.(n.)

   வடிவழகு; shapeliness.

     ‘வாக்கு வடிவுடைய பெண்’ (உ.வ.);.

     [வாகு → வாக்கு + வடிவு]

வாக்கெடு-த்தல்

வாக்கெடு-த்தல் vākkeḍuttal,    2 செ.கு.வி. (v.i.)

   தலைமயிர் வகிர்தல் (வின்.);; to part the hair down the middle.

     [வாகு → வாக்கு + எடு-,]

வாங்கம்

 வாங்கம் vāṅgam, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; sea.

     [வாங்கு → வாங்கம். வாங்கு = வளைவு]

வாங்கரிவாள்

 வாங்கரிவாள் vāṅgarivāḷ, பெ.(n.)

   வளைந்த அரிவாள் வகை (இ.வ.);; curved sickle.

     [வாங்கு + அரிவாள்]

வாங்கறுவாள்

 வாங்கறுவாள் vāṅgaṟuvāḷ, பெ. (n.)

   நீளமான கழியில் கட்டப்பட்டிருக்கும் அறுவாள்; a scimitar, a big cutting knife with long wooden pole.

வாங்கற்கழுத்து

 வாங்கற்கழுத்து vāṅgaṟkaḻuttu, பெ. (n.)

   கோணற்கழுத்து; wry-neck.

     [வாங்கல் + கழுத்து]

வாங்கற்காரன்

 வாங்கற்காரன் vāṅgaṟkāraṉ, பெ.(n.)

   கடன் கொடுப்போன்; creditor.

     “வாங்கற் காரருக்கு வகை சொன்னான்” (வின்.);.

     [வாங்கல் + காரன்]

வாங்கலோ

 வாங்கலோ vāṅgalō, பெ.(n.)

மருக்காரை பார்க்க;see {}.

வாங்கல்

வாங்கல் vāṅgal, பெ.(n.)

   1. பிறர் கொடுக்க ஏற்கை (சூடா);; receiving, admitting.

   2. கடன் வாங்குகை; borrowing.

     ‘கொடுக்கல் வாங்கல்’.

   3. விலைக்குக் கொள்கை; buying.

   4. வளைவு (சூடா.);; bending crookedness, curve, inclination.

     “மனை ஈசானிய வாங்கலா யிருக்கிறது (சூடா);”.

   5. மன வருத்தம்; displeasure, strained feeling.

   6. தூரம்; distance.

     “அவ்வூர் வாங்கலா யிருக்கிறது”.

   7. ஒரு சிற்றூரை அடுத்துள்ள பகுதி (இ.வ.);; outskirts of a village.

   8. ஆழம்; depth.

     “வாங்கலினாற் கடலி லிறங்கப் படாது” (வின்.);.

   9. குறைவு; want, unsuitability.

     “இத்தலையிலே வாங்கலா யிருக்கிறது (திவ். இயற்.திருவித்.86, வ்யா.பக். 420);.

   10. பொன், வெள்ளி முதலியன மாற்றுக் குறைவாயிருக்கை; Inferiority in quality of gold, silver,etc.

   11. வழுக்கல்; slipperiness.

     “இந்த நிலம் வாங்கலாயிருக்கிறது” (வின்.);.

ம. வாங்ஙுக.

     [வாங்கு → வாங்கல். (சு.வி.25);]

வாங்களை வெட்டு-தல்

 வாங்களை வெட்டு-தல் vāṅgaḷaiveṭṭudal, செ.குன்றாவி (v.t.)

   வயல் வரப்பில் வளர்ந்து வயலிலும் பரவத் தொடங்கும் புல் பூண்டு கொடிகளை வெட்டி நீக்குதல்; to remove the vegetation growth on the ridge of the paddyfield.

     [வாவும்தாவிப்படரும்)வாம்+களை+வெட்டு]

வாங்கா

வாங்கா1 vāṅgā, பெ.(n.)

   வளைந்த நாரை; crooked neck stork.

     [வாங்கு → வாங்கா] (சு.வி.25);

 வாங்கா2 vāṅgā, பெ.(n.)

   ஊதுகொம்பு வகை (இ.வ.);; a kind of trumpet horn.

மறுவ. தாரை.

     [வாங்கு → வாங்கா. (வ.மொ.வ. 2, பக்.75);]

 வாங்கா vāṅgā, பெ. (n.)

   துளையுள்ள இசைக் கருவி; a perforated musical instrument.

     [வங்கு-வாங்கா]

வாங்காணி

 வாங்காணி vāṅgāṇi, பெ.(n.)

   மரவாணி (இ.வ.);; wooden peg.

     [வாங்கு + ஆணி]

வாங்காவில்

 வாங்காவில் vāṅgāvil, பெ.(n.)

   போட்டி (யாழ்.அக.);; rivalry.

     [வாங்கு + ஆ.(எ.ம.); + வில்]

வாங்கி

வாங்கி1 vāṅgi, பெ.(n.)

   கூட்டிக்கொடுப்போன் (வின்.);; pimp.

     [வாங்கு → வாங்கி]

 வாங்கி2 vāṅgi, பெ.(n.)

   குழம்பு; sauce.

     “ரசவாங்கி” (இ.வ.);.

     [வாங்கு → வாங்கி]

வாங்கிக்கட்டு-தல்

வாங்கிக்கட்டு-தல் vāṅgikkaṭṭudal,    10 செ.கு.வி. (v.i.)

   அடி, திட்டு முதலிய வற்றைப் பெறுதல்; to receive beating, scolding etc.

     ‘பொய் சொல்லி என்னிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டான்’.

     [வாங்கி + கட்டு-,]

வாங்கிசநாசி

 வாங்கிசநாசி vāṅgisanāsi, பெ.(n.)

   உதிரிமாரி என்னும் பெரியம்மை வகை; a kind of small pox in which the scabs fall off. (சா.அக.);.

     [வாங்கிச + நாசி]

வாங்கியா

 வாங்கியா vāṅgiyā, பெ. (n.)

கடலில் ஆளை உள்ளிழுக்கும் பெரிய பள்ளம்

 a deep mire in the seabed.

     [வாங்கு(உள்வாங்குதல்);-வாங்கியாரம்]

வாங்கு

வாங்கு1 vāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வளைத்தல் (சூடா);; to bend.

     “கொடுமரம் வாங்கி” (கல்லா.4);.

   2. நாண்பூட்டுதல்; to string a bow.

     “நாண் வாங்கலாது விற்கொண்டு” (இரகு. திக்குவி.231);.

   3. இழுத்தல்; to carry away, as a flood, to draw, drag, pull.

     “மத்தமொலிப்ப வாங்கி” (பெரும்பாண்.156);.

   4. மூச்சு முதலியன உட்கொள்ளுதல்; to take in, as breath.

     “மூச்சு வாங்குகிறான்”.

   5. ஏற்றல்; to receive, take.

     “வருக வென்றென்னை நின்பால் வாங்கிட வேண்டும்” (திருவாச.5, 68);.

   6. விலைக்குக் கொள்ளுதல்; to buy.

     “மாதவி மாலை கோவலன் வாங்கி” (சிலப்.3.171);.

   7. பெறுதல்; to get, obtain.

     “எங்கு வாங்கிக் கொடுத்தாரிதழியே” (தேவா.456, 8);.

   8. வரைதல்; to inscribe, indite.

     “ககரத்துக்குக் கால் வாங்கினால் காவாகும்”.

   9. ஒதுக்குதல்; to move to one side.

     “இந்த வண்டி போம்படி அந்த வண்டியை வாங்கிக் கொள்”.

   10. மீட்டும் பெறுதல்; to get back, take back.

     “கொடுத்ததை வாங்கினார்”.

   11. செலுத்துதல்; to shoot, as an arrow;

 to Send forth.

     “வாங்கினார் மதிண் மேற்கணை” (தேவா.21, 2);.

   12. தப்பும்படி உய்வித்தல்; to rescue, deliver.

     “சமணர் பொய்யிற் புக்க ழுந்தி வீழாமே போத வாங்கி” (தேவா.658,7);.

   13. தழுவுதல்; to embrace.

     “வருமுலை பொதிர்ப்ப வாங்கி” (சீவக.584);.

   14. ஒத்தல்; to resemble.

     “தூணொடு பறம்பு வாங்கும் ….. தோளான்” (பாரத. நிவாத. 145);.

   15. அழைத்தல் (அக.நி.);; to call.

   16. நீக்குதல்; to remove, take away.

     “வாங்குமின் மனத்துயர்” (கம்பரா. மீட்சிப். 278);.

   17. பிரித் தெடுத்தல்; to seperate, eliminate.

     “தானே என்றார், புறத்தினை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின்” (தொல். பொருள். 56, உரை);.

   18. பெயர்த்தல்; to dig up, as the earth.

     “புற்றம்…வாங்கிக் குரும்பு கெண்டும்” (அகநா.72);.

   19. முறித்தல்; to break off.

     “வேழம்…கரும்பின் கழை வாங்கும்” (கலித்.40);.

   20. வெட்டுதல்; to cut off.

     ‘கை கால்களை வாங்கிவிடுவேன்’.

   21. அடித்தல்; to strike.

     ‘பிரம்பால் அவனை நாலு வாங்கு வாங்கினான்’.

   22. அழித்தல்; to destroy.

     “விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” (திருவாச.5, 96);.

   23. வைதல்; to abuse, reproach.

     ‘அவனை நல்ல வாங்கு வாங்கினான்’.

   தெ., ம. வங்கு;   க. பாகு;   து. பாகுணி. குட. பாங்;   கொலா. வாக் (g);; To. pa-g;

 Kod. {}

 g, Nk. {}, pa. {}, Kuwi. (f); vwangali;

 Kur. {}.

     [வங்கு → வாங்கு-, (வே.க.109);]

 வாங்கு2 vāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல்; to bend.

     “வாங்குகதிர் வரகின்” (முல்லைப். 98);.

   2. அலைதல்; to sway, wave.

     “வளி வாங்கு சினைய மாமரம்” (பரிபா.7,14);.

   3. குலைதல்; to scatter, disperse.

     “பகைவர் தண்டு வாங்கிப் போயிற்று”.

   4. மெலிதல்; to become lean.

     “உடம்பு வாங்கிப் போயிற்று”.

   5. குறைதல்; to be

 reduced.

     “வீக்கம் வாங்கியிருக்கிறது”.

   6. தாழ்தல்; to sink, subside.

   7. களைத்துப் போதல்; to be exhausted.

     “வாங்காமல் நீரை இறைத்துக் கொண்டிருந்தார்கள்” (வின்.);.

   8. நீங்குதல்; to cease.

நோவு வாங்கிப் போயிற்று.

   9. ஒரு பக்கமாக ஒதுங்குதல்; to move to one side.

   10. பின்வாங்குதல்; to withdraw, retreat.

     “விரைவின் வாங்கி…பிழைத்த சேனை பின்வர” (திருவாலவா. 49, 50);.

   11. திறந் திருத்தல்; to be opened.

     “அந்தக் கடையின் கதவு வாங்கியிருந்தது”

     [வணம் → வணங்கு → வாங்கு-, (வ.மொ.வ.245);]

 வாங்கு3 vāṅgu, பெ.(n.)

   1. வளைவு (நாமதீப. 768);; bending.

   2. அடி; blow.

     ‘பிரம்பால் நாலு

வாங்கு வாங்கினான்’.

   3. வசவு; abuse, rebuke.

     ‘அவன் வாங்கின வாங்கு

அவனுக்குப் போதும்’.

க. பாகு.

 வாங்கு4 vāṅgu, பெ.(n.)

   பிச்சுவா; dagger

வாங்கு – இ. (பாங்க்.); சு.வி.25.

     [வணம் → வணங்கு → வாங்கு] (சு.வி.25 வ.மொ.வ.245);.

 வாங்கு5 vāṅgu, பெ.(n.)

   .அரிவாள்; bill-hook.

     “கைகளில் வாங்கு பிடித்திருக்கின்றனர்” (எங்களுர்,32);.

மறுவ. வாங்கரிவாள்

வாங்குப்பலகை

 வாங்குப்பலகை vāṅguppalagai, பெ. (n.)

   கால்களுள்ள பலகையிருக்கை; bench, wooden seat.

     [வாங்கு + பலகை]

வாங்கைநாராயணன்

 வாங்கைநாராயணன் vāṅgainārāyaṇaṉ, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

வாசகசாலை

வாசகசாலை vācagacālai, பெ.(n.)

   1. படிப்பகம்; reading room.

   2. நூலகம்; library.

     [வாசகம் + சாலை]

வாசகசுரசம்

 வாசகசுரசம் vāsagasurasam, பெ.(n.)

   ஆடாதோடை; juice of adathoda vasica.

வாசகஞானம்

வாசகஞானம் vācagañāṉam, பெ. (n.)

   1. போலியான அறிவுப் பேச்சு (வின்.);; lip wisdom, profession of pious wisdom.

   2. பட்டறிவின்றி வாயாற் பேசும் அறிவு(வின்.);; speculative knowledge.

     [வாசகம் + Skt. ஞானம்]

வாசகஞ்செய்-தல்

வாசகஞ்செய்-தல் vācagañjeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   புகழ்ந்துரை செய்தல்; to praise, eulogise.

     “நீலகண்டனும் நான் முகனும்… வாசகஞ் செய்ய நின்ற திருமாலை” (திவ்.பெரியாழ். 4, 1,5);.

     [வாசகம் + செய்]

வாசகதாட்டி

வாசகதாட்டி vācagatāṭṭi, பெ.(n.)

   பேச்சுவன்மை; skill in speech.

     “செய்ய வாசகதாட்டி யவதானவக் கணை சிறக்குமவனே ராயசன்” (திருவேங். சமத. 8);.

     [வாசகம் + தாட்டி]

ஒருகா. நாவன்மை, சொல்வன்மை.

வாசகதீட்சை

வாசகதீட்சை vācagatīṭcai, பெ.(n.)

   குருவம் ஏழனுள் ஐந்தெழுத்தைப் பதினொரு மந்திரங்களுடன் பலுக்கும் முறையைக் குரு சீடனுக்கு அறிவுரை செய்யும் சடங்கு (சி.சி.8, 3, சிவாக்.);; a way of initiation, in which the guru teaches his disciple how to pronounce the {} mantra and its eleven accessories, one of seven {}.

     [வாசகம் + skt. {} → த.தீட்சை]

வாசகன்

வாசகன்1 vācagaṉ, பெ.(n.)

   1. பேசுவோன் (வின்.);; speaker, one who speaks.

   2. அரசர் திருமுன் கடிதம் முதலியன படிப்போன்; one who reads letters etc., in the presence of a king.

     “வாசகன் மற்றது வாசினை செய்த பின்” (சூளா. சீய. 90);.

   3. தூதன் (யாழ்.அக.);; messenger.

     [வாசகம் → வாசகன்]

 வாசகன்2 vācagaṉ, பெ.(n.)

   காகவிடம் என்னும் செய்ந்நஞ்சு வகை; a kind of arsenic.

வாசகபதம்

 வாசகபதம் vācagabadam, பெ.(n.)

   வழக்குச் சொல் (யாழ்.அக.);; colloquial word.

     [வாசகம் + பதம்]

 Skt. pada → த. பதம்

வாசகபுத்தகம்

 வாசகபுத்தகம் vācagabuttagam, பெ.(n.)

   உரைநடையில் பாடங்கள் அமைந்த நூல் (வின்.);; prose reader for learners.

     [வாசகம் + பொத்தகம் → புத்தகம்]

வாசகப்பா

வாசகப்பா1 vācagappā, பெ.(n.)

   நாடக இலக்கியம் (வின்.);; drama.

     [வாசகம் + பா]

 வாசகப்பா2 vācagappā, பெ.(n.)

   நகையூட்டு நாடகம் (புதுவை.);; comedy.

     [வாசகம் + பா]

வாசகப்பாங்கு

 வாசகப்பாங்கு vācagappāṅgu, பெ.(n.)

   நல்ல உரைநடை; good style.

     “திருத்தமான வாசகப் பாங்காயும்” (மாலுமிசா.முகவுரை);.

     [வாசகம் + பாங்கு]

வாசகம்

வாசகம்1 vācagam, பெ.(n.)

   1. பேச்சு; speech, word of mouth.

     “சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்”

   2. செய்தி; message.

     “மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங் கொண்டருளாயே” (திவ். திருவாய்.1, 4, 5);.

   3. சொற்றொடர்; sentence, composition.

     “வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு” (சிலப். 15, 58);.

   4. செய்யுள் (சிலப்.13,93, உரை);; poetical composition, verse.

   5. பிறர் கேட்க முணுமுணுக்கை (சைவச.பொது. 152, உரை);; audible muttering of a Mantra.

   6. உரைநடை (இக்.வ.);; prose.

   7. வாய்பாடு; form of speech, grammatical or otherwise.

     “மூராரிகள் என்பது பன்மை வாசகம்” (தக்கயாகப். 79, உரை);.

   8. கடிதம் (வின்.);; letter, epistle.

   9. புகழ்ந்துரை; words of praise.

     “வாசகஞ் செய்ய நின்ற திருமாலை” (திவ். பெரியாழ்.4,1, 5);.

   10. திருவாசகம்; the celebrated poem in praise of sivan by {}.

     “வள்ளுவர் சீரன்பர் மொழி வாசகம்” (தனிப்பாடல்);.

     [வாசி → வாசகம் (வ்.மொ.வ.104.);]

 வாசகம்2 vācagam, பெ.(n.)

   வாசிக்கும் அல்லது வாசித்தற்குரிய பகுதி;   வாசகப் பொத்தகம்; reader.

     [வாசி → வாசகம்]

   வடமொழியில் வாசக என்னும் சொற்குப் பேசுதல், சொல்லுதல், ஒப்பித்தல், வெளியிடுதல் என்னும் பொருள்களே;வாசித்தல் (reading); என்னும் பொருளில்லை. அதற்கு

     ‘வாச்’ என்பது மூலம்;

     ‘வச்’ என்பது அடிமூலம். அதனின்று வசனம் என்னும் சொல் தோன்றும்.

     ‘வாச்’ என்பது

     ‘வாக்’ என்று திரிந்து

     ‘வாக்ய’ என்னும் சொல்லைப் பிறப்பிக்கும்.

   வாசிப்பது வேறு;   சொல்வது வேறு. வடசொல் வேறுவகையில் தோன்றியிருத்தல் வேண்டும்;அல்லது தென்சொல்லினின்று ஒலியும் பொருளும் திரிந்திருத்தல் வேண்டும்.

– வ. மொ. வ. பக்.164.

 வாசகம்3 vācagam, பெ.(n.)

   ஆடாதோடை; a shrub – Adathoda vasica.

 வாசகம்1 vācagam, பெ. (n.)

   1. சொல்; speech, word of mouth.

     “சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்” (பெருங். வத்தவ. 13, 116.);

   2. செய்தி; message.

     “மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண்டருளாயே” (திவ். திருவாய். 1,4,5);.

   3. சொற்றொடர்; sentence, composition.

     “வடமொழி வாசகஞ்செய்த நல்லேடு” (சிலப். 15, 58);.

   4. செய்யுள்; (சிலப். 13,93 உரை);

 poetical composition, verse.

   5. பிறர் கேட்க உருச் செய்கை; audible muttering of a mantra.

   6. உரைநடை (இக்.வ.);; prose.

   7. வாய்ப்பாடு; form of speech, grammatical.

     “முராரிகள் என்பது பன்மை வாசகம்” (தக்கயாகப். 79, உரை.);.

   8. கடிதம் (வின்.);; letter, epistle.

   9. போற்றிப் பாடல்கள்; words of praise.

     “வாசகஞ்

வாசகி

 வாசகி vācagi, பெ.(n.)

   கொந்தான்; a twiggy plant – Cassyta filiformis.

வாசகை

 வாசகை vācagai, பெ.(n.)

   அரக்காம்பல்; an aquatic plant.

வாசதம்

 வாசதம் vācadam, பெ.(n.)

   கழுதை; an animal-ass.

வாசத்தலம்

 வாசத்தலம் vācattalam, பெ. (n.)

   வாழ்விடம், இருப்பிடம்; residence.

வாசந்தி

வாசந்தி1 vācandi, பெ.(n.)

   1. குருக்கத்தி; common delight of the woods.

   2. சண்பகம் (சூடா.);; champak.

   3. திப்பலி (சங்.அக.);; long pepper.

 வாசந்தி2 vācandi, பெ.(n.)

   ஆடாதோடை (யாழ்.அக.);; malabar nut.

வாசந்திகட்டியிழு-த்தல்

வாசந்திகட்டியிழு-த்தல் vācandigaṭṭiyiḻuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   துன்புறுத்துதல்; to torment, afflict (loc.);.

     [வாசந்தி + கட்டி + இழு-த்தல்.]

வாசந்திரம்

 வாசந்திரம் vācandiram, பெ.(n.)

   கொத்தமல்லி; coriander seed – Coriandrum sativum.

வாசனி

வாசனி vācaṉi, பெ.(n.)

   1. பாதிரி; a tree- Bignonia chelonoides.

   2. குங்குமச் செவ்வந்தி பார்க்க;see {}.

   3. பொற்றலைக் கையாந்தகரை; yellow flowering.

வாசனை

 வாசனை vācaṉai, பெ. (n.)

   நறுமணம்; frogrance.

     [Skt. {} → த. வாசனை]

வாசனைக்கன்னி

 வாசனைக்கன்னி vācaṉaikkaṉṉi, பெ.(n.)

   சாதிபத்திரி; mace.

     [வாசனை + கன்னி]

வாசனைக்கெந்தி

 வாசனைக்கெந்தி vācaṉaikkendi, பெ.(n.)

   புன்னை; a tree.

வாசபுட்பம்

 வாசபுட்பம் vācabuṭbam, பெ.(n.)

புங்கு பார்க்க;see {}.

     [வாசம் + புட்பம்]

வாசமாற்றம்

 வாசமாற்றம் vācamāṟṟam, பெ.(n.)

   புறநாட்டில் குடியேறுகை (புதுவை);; emigration.

     [வாசம் + மாற்றம்]

வாசமாலை

வாசமாலை1 vācamālai, பெ.(n.)

   வாயினிலையிற் சுற்றி அமைந்த வேலைப்பாடு (இ.வ.);; ornamental work on a door- frame.

     [வாசல்மாலை → வாசமாலை]

 வாசமாலை2 vācamālai, பெ.(n.)

   பந்தல் முதலியவற்றின் முகப்பிற் கட்டும் அணியழகுத் தொங்கல்; hangings in front of a pavilion or pandal.

     [வாசம் + மாலை]

வாசம்

வாசம் vācam, பெ.(n.)

   1. இறகு (பிங்.);; feather, wing.

   2. அம்பு (யாழ்.அக.);; arrow.

   3. நெய் (யாழ்.அக.);; Ghee.

   4. உணவு (யாழ்.அக.);; food.

   5. அரிசி (யாழ். அக.);; rice.

   6. நீர் (யாழ்.அக.);; water.

   7. மந்திர வகை (யாழ்.அக.);; a mantra.

   8. வேகம் (யாழ்.அக.);; speed.

   9. கை மரம் (தெ.வாசமு);; rafter.

வாசரம்

 வாசரம் vācaram, பெ.(n.)

   நாள் (பிங்.);; day.

வாசரி

வாசரி vācari, பெ.(n.)

   1. வாக்கால் கண்டிக்கை; rebuke.

     “வாசரி சொல்லி அவர் முத்திரையை நிறுத்திப் போட்டார்” (கோயிலொ.15);.

   2. அலப்பி வருத்துகை (நெல்லை);; troubling with unnecessary speech.

வாசற்கணக்கன்

 வாசற்கணக்கன் vācaṟkaṇakkaṉ, பெ.(n.)

   அரண்மனைக் கணக்கன்; accountant in a palace.

     [வாசல் + கணக்கு → கணக்கன்]

வாசற்கதவு

வாசற்கதவு vācaṟkadavu, பெ.(n.)

   வீட்டின் முகப்பு நிலைக் கதவு; front door, as of a house.

     “திறம்பிற்று… வானோர் கடி நகர வாசற் கதவு” (திவ். இயற். 2,88);.

     [வாசல் + கதவு]

வாசற்கால்

வாசற்கால் vācaṟkāl, பெ.(n.)

   1. வாயில் நிலை (இ.வ.);; door – frame.

   2. வாசல்; entrance.

     ‘நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாசற்கால் வைத்தார்கள்’ (உ.வ.);.

     [வாசல் + கால்]

வாசற்காவல்

 வாசற்காவல் vācaṟkāval, பெ.(n.)

   வாயில் காப்பு; guarding, watching.

     [வாசல் + காவல்]

வாசற்படி

வாசற்படி vācaṟpaḍi, பெ.(n.)

   1. வாயினிலையின் அடிப்பாகம்; door- sill, door – step.

   2. வாசல்; doorway.

   3. வாசனிலையின் மேற்பாகம்; lintel, shelf over the lintel.

     ‘திறவுகோலை வீட்டு வாசற்படியில் வைத்திருக்கிறேன்’,

     ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ (பழ.);.

     [வாசல் + படி]

வாசற்பீடம்

 வாசற்பீடம் vācaṟpīṭam, பெ.(n.)

   அல்குல்; genital organ of the female.

     [வாசல் + Skt. {} → த. பீடம்]

வாசல்

வாசல் vācal, பெ.(n.)

   1. கட்டடத்தின் முகப்பு வழி; gateway, portal, entrance.

     “நல்ல மனைவாசலில்” (கலித். 97, உரை);.

   2. வீட்டினுள் உள்ள முற்றம்; open courtyard within a house.

   3. அரசவை (வின்.);; King’s court.

     “சோழன் வாசலிலே தேவகானம் பாடுவாளொருத்தியும்” (குருபரம். பன்னீ. பக். 176);.

     “வாசலிது வாசலிது”

   தெ. வாகிலி;க. வாகில்.

வாசல்காரியம்

வாசல்காரியம் vācalkāriyam, பெ.(n.)

   அரசன் கட்டளையை நிறைவேற்றும் அலுவலர் (M.E.R.33 of 1928-9);; officer who carries out royal orders.

 Skt. கார்ய → த. காரியம்.

     [வாசல் + காரியம்]

வாசல்காவலாளன்

 வாசல்காவலாளன் vācalkāvalāḷaṉ, பெ.(n.)

   வீட்டு வாயிலிற் காவல் புரிபவன்; door keeper, sentry at the gate.

     [வாயில் → வாசல் + காவல் + ஆளன். ஆளன் = ஒர் ஆண்பாற் பெயரீறு.]

வாசல்தெளி-த்தல்

வாசல்தெளி-த்தல் vācalteḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   நீர் தெளித்து வாயிலைத் தூய்மை செய்தல்; sprinkle water on the floor of the courtyard as part of house work.

     [வாசல் + தெளி-,]

வாசல்நிருவாகம்

வாசல்நிருவாகம் vācalniruvākam, பெ.(n.)

வாசல்காரியம் பார்க்க;see {}.

     “திருநெல்வேலி வாசல் நிர்வாகம்… தொழிற்படுத்தி” (தெய்வச். விறலிவிடு. 77);.

     [வாசல் + நிருவாகம்]

 Skt. {} → த. நிருவாகம்.

வாசல்பணம்

வாசல்பணம் vācalpaṇam, பெ.(n.)

   பழைய வரி வகை; an ancient tax.

     “வாசல் பணம்

உள்பட்ட… கடமை” (S.I.I.i.93);.

     [வாசல் + பணம்]

வாசல்முதலி

வாசல்முதலி vācalmudali, பெ.(n.)

வாசல்காரியம் (M.E.R.293 of 1928-9.); பார்க்க;see {}.

     [வாசல் + முதலி]

வாசல்வரி

வாசல்வரி vācalvari, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax (S.I.I.ii,115);.

     [வாசல் + வரி]

வாசல்வித்துவான்

வாசல்வித்துவான் vācalvittuvāṉ, பெ.(n.)

   அரசவைப் புலவன்; court-poet, poet -laureate.

     “சேதுபதி….. வாசல்வித்துவான் யான் கண்டாய்” (பெருந்தொ.1788);.

     [வாசல் + Skt. {} → த. வித்துவான்]

வாசல்வினியோகம்

வாசல்வினியோகம் vācalviṉiyōkam, பெ.(n.)

   பழைய வரிவகை (S.I.I.ii.115);; an ancient tax.

     [வாசல் + Skt. {} → த. வினியோகம்]

வாசவம்

வாசவம் vācavam, பெ.(n.)

   பகல் பதினைந்து முழுத்தங்களுள் ஐந்தாவது (விதான. குணாகுணா.73, உரை);; the fifth of the 15 divisions of the day.

வாசவல்

வாசவல் vācaval, பெ.(n.)

   பாசவல்; fresh rice-flake.

     “தேனெய் வாசவற் குவலி” (சீவக.1562);.

     [பாசவல் → வாசவல்]

வாசவிலை

 வாசவிலை vācavilai, பெ.(n.)

   கிச்சிலி; citrus fruit, bitter orange.

     [வாசம் + விலை]

வாசவுப்பு

 வாசவுப்பு vācavuppu, பெ.(n.)

   கல்லுப்பு (சித்.அக.);; rock-salt.

     [வாசம் + உப்பு]

வாசா

 வாசா vācā, பெ.(n.)

   ஆடாதோடை; a shrub- adathoda vasica.

வாசாங்கம்

 வாசாங்கம் vācāṅgam, பெ.(n.)

   மூக்கரைச் சாரணை;а creeper.

வாசாங்கியம்

 வாசாங்கியம் vācāṅgiyam, பெ.(n.)

   மிளகு (மலை);; black-pepper.

வாசாணிமூலி

 வாசாணிமூலி vācāṇimūli, பெ.(n.)

   செவ்வா மணக்கு; red variety of castor- Ricinus communis.

     [வாசாணி + மூலி]

வாசாதி

 வாசாதி vācāti, பெ.(n.)

   ஆடாதோடை; a shrub – Adathoda vasica.

வாசாப்பு

வாசாப்பு1 vācāppu, பெ.(n.)

வாசகப்பா (புதுவை); பார்க்க;see {}.

 வாசாப்பு2 vācāppu, பெ.(n.)

   திட்டுதல்; scolding, a buse.

     ‘அவனிடம் வாசாப்பு வாங்காதே’.

     [வசவு → வாசாப்பு]

வாசாமம்

 வாசாமம் vācāmam, பெ.(n.)

பெருங் குறிஞ்சி பார்க்க;see {}.

வாசாலகன்

 வாசாலகன் vācālagaṉ, பெ.(n.)

   பேச்சுத்திறமையுள்ளோன்; persuasive speaker, man who is clever in speech.

     [வாய்ச்சாலகம் → வாசாலகன்]

ஒருகா. நாவலன்.

 Skt. {} → த. சால → சாலகன்.

வாசாலகம்

வாசாலகம் vācālagam, பெ. (n.)

   பேச்சு வல்லமை; skil in speech.

     “வாசாலகத்தி லுயர்மதியில்” (பிரபோத.11,94);.

மறுவ. சொல்வன்மை.

     [வாய் + சாலம் → வாசாலகம்]

 Skt. {} → த. சாலம்.

வாசாலை

 வாசாலை vācālai, பெ.(n.)

   பேச்சுத் திறமையுள்ளவள் (யாழ்.அக.);; woman who is clever in speech.

     [வாய்சாலவன் → வாசாலை. வாசாலன் (ஆ.பா.); → வாசாலை (பெ.பா.);]

 Skt. {} → த. சால → சாலை.

வாசி

வாசி1 vāci, பெ.(n.)

   1. வேறுபாடு; difference.

     “ஈசனிலைமைக்கு மேனையிமையோர் நிலைக்கும் வாசியுரை” (ஏகாம். உலா, 483);.

   2. இயல்பு; quality, nature;characteristic.

     “அரக்கனவன் குலத்துவாசி” (இராமநா. ஆரணி. 25);.

   3. தகுதி; fitness, propriety.

     “ஏறினா னவ்வாசியை வாசியாக” (திருவாலவா.28,45);.

   4. நல்ல நிலைமை; good, improved condition.

     “அவனுக்குடம்பு வாசிதான்”.

   5. நிமித்தம் (வின்.);; ground, cause.

     “நீ வாராத வாசி காரியங்கெட்டது”.

   6. வீதம்; rate, as of interest, proportion.

     “செலவளவு மாகாணிவாசியும் நாலுமா வாசியும் கழித்து” (S.I.I.iii. 123);.

   7. காசு வட்டம்; discount, in changing money.

     “வாசி தீரவே காசு நல்குவீர்” (தேவா.572,1);.

தெ., க. வாசி.

 வாசி2 vācittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. படித்தல்; to read.

     “ஒலையை….. வாசியென்றனன்” (கம்பரா.எழுச்.3);.

   2. கற்றல்; to learn.

     “வாசித்துங் கேட்டும்” (திவ்.இயற். நான்மு.63);.

   3. வீணை முதலியன

   இசைக்க ஒலிப்பித்தல்; to play on a musical instrument.

     “மாதவி தன் மனமகிழ வாசித்த றொடங்குமன்” (சிலப்.7, பக். 205);.

   4. புல்லாங்குழல் போன்ற துளைக்கருவியியக்குதல்; to play.

     [வாய் → வாயி → வாசி → வாசி-த்தல்.]

வாயாற்படித்தல், புல்லாங்குழல் போன்ற துளைக்கருவி இயக்குதல்.

வாசினை = வாசி → வாசினை = குழல் வாசிப்பு. வாசி → வாசகம் = வாசிக்கும் அல்லது வாசித்தற்குரிய பகுதி, வாசகப் பொத்தகம் (Reader);.

வடமொழியில் வாசக என்னும் சொற்குப் பேசுதல், சொல்லுதல், ஒப்பித்தல், வெளியிடுதல் என்னும் பொருள்களே உள்ளன. வாசித்தல் (reading); என்னும் பொருளில்லை. அதற்கு

     ‘வாச்’ என்பது மூலம். வச் என்பது அடிமூலம் அதினின்று வசனம் என்னும் சொல் தோன்றும். வாச் என்பது வாக் என்று திரிந்து

     ‘வாக்ய’ என்னும் சொல்லைப் பிறப்பிக்கும்.

   வாசிப்பது வேறு;   சொல்வது வேறு. வடசொல் வேறு வகையில் தோன்றியிருத்தல் வேண்டும்;அல்லது தென்சொல்லினின்று ஒலியும் பொருளும் திரிந்திருத்தல் வேண்டும் (வ.மொ.வ.164);.

 வாசி3 vāci, பெ.(n.)

   1. இசைக்குழல் (பிங்.);; musical pipe.

   2. இசைப்பாட்டு (யாழ்.அக.);; tune, musical song.

 வாசி4 vāci, பெ.(n.)

   1. குதிரை (பிங்.);; horse.

     “ஏறினானவ் வாசியை” (திருவாலவா.28, 45);.

   2. முதல் விண்மீன் (சூடா.);; the first naksartra.

   3. பறவை (யாழ்.அக.);; bird.

   4. அம்பு (யாழ்.அக.);; arrow.

   5. மூச்சு (யாழ்.அக.);; breath.

   6. நடுநிலை (யாழ்.அக.);; justice.

   7. அணிவளைவான திருவாசி; ornamental arch over the head of an idot;

     “மாணிக்கவாசி முந்து சிங்காதனம்” (திருவாலவா.37.75);.

     [வாளி → வாசி. (செல்வி.77. மார்கழி 237);]

 வாசி5 vāci, பெ. (n.)

   வசிப்பவன்; dweller, inhabitant.

     “காசிவாசி”.

     [வதி → வசி → வாசி. (செல்வி. 77. மார்கழி 237);]

 வாசி6 vāci, பெ.(n.)

   குறியீட்டுச் சொல்; expression.

     “சதம் என்பது அநந்த வாசி” (தக்கயாகப்.73,உரை);.

 வாசி7 vāci, பெ.(n.)

   இருப்பிடம் (யாழ்.அக.);; dwelling place.

 வாசி8 vāci, பெ.(n.)

   1. புல்லூரி; parasitic plant.

   2. உயிர்ப்பு; breath.

 வாசி3 vāci, பெ. (n.)

   வாழ்பவன் (வசிப்பவன்);; dwellor, inhabitant.

காசிவாசி

     [Skt. {} → த. வாசி3]

வாசிககாரகம்

 வாசிககாரகம் vācigagāragam, பெ.(n.)

   கடிதம் (யாழ்.அக.);; letter.

வாசிகட்டல்

 வாசிகட்டல் vācigaṭṭal, பெ.(n.)

   மூச்சினைக் கட்டுப்படுத்தல்; to control the breath.

     [வாசி + கட்டு → கட்டல்]

வாசிகந்தகம்

 வாசிகந்தகம் vācigandagam, பெ.(n.)

   ஓர் பூண்டு; a plant.

     [வாசி + கந்தகம்]

வாசிகன்

 வாசிகன் vācigaṉ, பெ.(n.)

   தூதன்; messenger.

     [வாசகன் → வாசிகன்]

வாசிகபத்திரம்

 வாசிகபத்திரம் vācigabattiram, பெ.(n.)

   கடிதம் (யாழ்.அக.);; letter.

     [வாசிகம் + Skt. Batra → த. பத்திரம்.]

வாசிகம்

வாசிகம் vācigam, பெ.(n.)

   வாக்காற் செய்யப்படுவது; that which is performed by the faculty of speech.

     “மானதமே வாசிகமேகாயிகமேயென…. தவமூன்றாம்” (திருவிளை.எழுகட 6);.

   2. வாய்ச் செய்தி (யாழ்.அக.);; word of mouth, message.

   3. செய்தி; news.

வாசிகரணசிகிச்சை

 வாசிகரணசிகிச்சை vāsigaraṇasigissai, பெ.(n.)

   வித்தமிழ்து (விந்து); வளரச் செய்து காமவிருப்பத்தை அதிகப்படுத்தும் உடல் வலிமை, ஆண்மை இவற்றைத் தருமருந்து; the art of increasing the secretion of semon to promote sexual desire- aphrodisiac treatment, one of the eight parts or tantrams describing the means of increasing the verite power by giving tone to the weakened organs of generation.

     [வாசி + கரணம் + Skt. சிகிச்சை]

வாசிகரணம்

வாசிகரணம் vācigaraṇam, பெ.(n.)

   1. விந்தினை வளர்ச்சி அடையச் செய்தல்; developing virility.

   2. அன்புடைக் காமம் (யாழ்.அக.);; genuine love, ardent passion.

வாசிகாண்(ணு)தல்

வாசிகாண்(ணு)தல் vācikāṇṇudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. மதிப்புக்கு மேலாக அளவு காணுதல்; to be in excess;

 to yield more than the estimated quantity.

   2. நல்ல நிலைமைக்கு வருதல்; to show improvement, as in health.

     [வாசி + காண்-,]

வாசிகை

வாசிகை vācigai, பெ. (n.)

   1. தலைமாலை (பிங்.);; wreath, as of flowers, pearls, etc. worn on the head.

   2. மாலை; garland.

     “வெண்முத்த வாசிகைத்தாய்” (திவ். இயற். திருவிருத். 50.);. (திவா.);;

   3. செறியக்கோத்த மாலை (பிங்.);; garland of flower strung thickly together.

     [Skt. {} → த. வாசிகை1]

வாசிக்கல்

 வாசிக்கல் vācikkal, பெ.(n.)

   காந்தம் உள்ள ஒருவகை இரும்புக்கட்டி (வின்.);; black load- stone.

வாசிக்கோவை

 வாசிக்கோவை vācikāvai, பெ.(n.)

   குதிரைக்கிங்கிணி மாலை (சூடா.);; a garland of small bells, round a horse’s neck.

     [வாசி + கோவை.]

வாசிட்டம்

வாசிட்டம் vāciṭṭam, பெ. (n.)

   1. அறநூல் பதினெட்டனுள் ஒன்று (பிங்.);; a Sanskrit text – book on Hindu law ascribed to {}, one of 18 tarama – {}, q.v.

     [Skt. {} → த. வாசிட்டம்]

வாசிட்டலைங்கம்

வாசிட்டலைங்கம் vāciṭṭalaiṅgam, பெ. (n.)

   1. துணைத்தொன்மங்கள் பதினெட்டனுள் ஒன்று (பிங்.);; a secondary {}, oneof 18 upa-{}. q.v.

     “வாசிட்டலைங்கத்தேதமின்றிய சிலதெரிந்து” (திருக்காளத். 4. நூல்வர.2); [Skt. {} → த. வாசிட்டலைங்கம்]

வாசிதம்

வாசிதம்1 vācidam, பெ.(n.)

புள்

   முதலியவற்றின் குரல் (யாழ்.அக.);; cry of birds, beasts etc.

 வாசிதம்2 vācidam, பெ.(n.)

   1. அறிவு; knowledge.

   2. குடியேற்றுகை; settling, peopling.

வாசினி

 வாசினி vāciṉi, பெ.(n.)

   பெண் குதிரை (யாழ்.அக.);; mare.

     [வாசி → வாசினி]

வாசினை

வாசினை vāciṉai, பெ.(n.)

   1. படிக்கை; reading.

     “வாசகன் மற்றது வாசினை செய்தபின்” (சூளா. சீய. 90);.

   2. யாழ் முதலியன இசைப்பிக்கை; playing on a musical instrument.

     “குழலவளுடைய யாழ் வாசினையை” (சீவக.603, உரை);.

     [வாசி → வாசினை, வாசினை = குழல் வாசிப்பு. (வ.மொ.வ.164);]

வாசிப்பு

வாசிப்பு vācippu, பெ.(n.)

   1. கல்வியறிவு; learning, knowledge.

     ‘அவனுக்கு நல்ல வாசிப்புண்டு’.

   2. படிப்பு; reading.

     ‘வாசிப்புச் சாலை’.

   3. தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்பு வகை (சிலப்.பக்.90, கீழ்க்குறிப்பு);; a kind of movement of the legs in {} dance.

     [வாய் → வாயி → வாசி → வாசிப்பு]

வாசியோகம்

வாசியோகம் vāciyōkam, பெ.(n.)

   ஓக வகை; a kind of {}.

     “மூலக்கனலை வாசியோகத்தா லெழுப்பி” (கோபால கிருஷ்ணபாரதி 95);.

     [வாசி + ஒகம்]

வாசிரம்

வாசிரம் vāciram, பெ.(n.)

   1. நாற்சந்தி; junction where four streets meet.

   2. வீடு; house.

   3. பகல்; day.

வாசிலிங்கரு

 வாசிலிங்கரு vāciliṅgaru, பெ.(n.)

   தண்டு (மூ.அ.);; stem of a plant.

வாசிவாரியன்

வாசிவாரியன் vācivāriyaṉ, பெ.(n.)

   குதிரையைப் பழக்குவதில் வல்லவன்; one skilled in training horses.

     “வாசிவாரியன் ஐந்து கதியையும் பதினெட்டுச் சாரியையும் பயிற்றுகையினாலே” (மதுரைக்.389, உரை);.

வாசுகன்மூச்சு

 வாசுகன்மூச்சு vācugaṉmūccu, பெ.(n.)

   கருமுகிற் செய்ந்நஞ்சு; a kind of arsenic.

     [வாசுகன் + மூச்சு]

வாசுகி

வாசுகி1 vācugi, பெ.(n.)

   வித்தமிழ்து (மூ.அ.);; seed.

 வாசுகி2 vācugi, பெ.(n.)

   1. உயிர்த்துளி; semen.

   2. ஆத்திமல்லிகை பார்க்க;see {}.

   4. நாகமலை; zinc-ore.

வாசுகிக்கொடி

 வாசுகிக்கொடி vācugiggoḍi, பெ.(n.)

   நாகநஞ்சு; a kind of arsenic.

     [வாசுகி + கொடி]

வாசுகிநாதன்

 வாசுகிநாதன் vācuginātaṉ, பெ.(n.)

   சூதநஞ்சு; a kind of arsenic.

வாசுகிந்தன்

 வாசுகிந்தன் vācugindaṉ, பெ.(n.)

   எருமை முன்னை; a tree – Premna latifolia.

வாசுடா

 வாசுடா vācuṭā, பெ.(n.)

   பலகறை; cowri.

வாசுதேவமூலிகை

 வாசுதேவமூலிகை vācutēvamūligai, பெ.(n.)

வெள்ளை நீர்முள்ளி,

 a thorny plant bearing white flowers.

     [வாசு + தேவ + மூலிகை]

வாசுபிகை

 வாசுபிகை vācubigai, பெ.(n.)

   ஓர் பூடு; a herb – Pimpinella – in volucrata.

     [வாசு + பிகை]

வாசுரை

வாசுரை vācurai, பெ.(n.)

   1. நிலம்; earth.

   2. இரவு; night.

   3. பெண்; woman.

   4. பெண் யானை (யாழ்.அக.);; female elephant.

வாசை

 வாசை vācai, பெ.(n.)

ஆடாதோடை பார்க்க;see {}.

வாச்சி

வாச்சி1 vācci, பெ.(n.)

   1. மரத்தைச் செதுக்கும் கருவி; adze.

   2. ஆடாதோடை (பரி.அக.); பார்க்க;see {}.

   தெ. வாடி;   ம. வாச்சி;   தோட. போடிசு;   க. பாசி;து. பாசி, பாஜி.

     [வாய் → வாய்ச்சி → வாச்சி]

 வாச்சி2 vācci, பெ.(n.)

   நூறு, ஆயிரம் உரூபாய்களைக் குறிப்பது; a term to denote the hundred and thousand rupees.

வாச்சிகேவுநெசுவு

 வாச்சிகேவுநெசுவு vāssiāvunesuvu, பெ.(n.)

   ஆயிரத்து நூற்று ஐம்பது உரூபாயைக் குறிப்பது; a term to denote thousand and hundred and fifty rupees.

வாச்சியமாராயன்

வாச்சியமாராயன் vācciyamārāyaṉ, பெ.(n.)

   கோயிலின் தலைமை வாச்சியக் காரன்; head musician of a temple or palace [I.M.P.Pd.146].

     [வாச்சியம் + மாராயன்]

வாச்சியம்

வாச்சியம்1 vācciyam, பெ.(n.)

   1. வாசகத்தின் பொருள்; meaning of a word, signification of a Term.

     “வாதவூரன்….வாசக முதற்கு வாச்சியம்” (சிவப். பிரபந். நால்வர்.);.

   2. வெளிப்படையானது (நன்.269, விருத்.);; that which is manifest or clear.

   3. சொல்லக் கூடியது; that which can be stated in words.

   4. பழி (வின்.);; blame, censure, reproach.

 வாச்சியம்2 vācciyam, பெ.(n.)

   வாத்தியம்; musical instrument.

     “கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக்

கூறுகளும்” (சிலப். 3, 14, உரை);.

வகைகள்: 1. தோற் கருவி,

   2. நரம்புக் கருவி,

   3. கஞ்சக் கருவி,

   4. துளைக் கருவி.

 வாச்சியம் vācciyam, பெ. (n.)

   1. சொல்லின் பொருள்; meaning of a word, signification of a term.

     “வாதவூரன்……வாசக முதற்கு வாச்சியம்” (சிவப். பிரபந். நால்வர்.);

   2. சொல்லக்கூடியது; that which can be stated in words.

   3. வெளிப்படையானது; that which is manifest or clear.

   4. நிந்தை (வின்.);; blame, censure, reproch.

   5. இசைக்கருவி வகை; musical instrument.

     “கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக் கூறுகளும்”(சிலப். 3,14, உரை.);

     [Skt. {} → த. வாச்சியம்]

வாச்சியார்த்தம்

வாச்சியார்த்தம் vācciyārttam, பெ.(n.)

   சொல்லுக்கு நேரே உரிய பொருள்; literal meaning, expressed meaning;

     “வாச்சியார்த்தம், முக்கியார்த்தம், அபிதார்த்தம்” (வேதா.சூ.118);.

     [வாச்சியம் + அருத்தம் → அர்த்தம்]

 Skt. {} → த. அருத்தம்.

வாச்சியீடன்

வாச்சியீடன் vācciyīṭaṉ, பெ.(n.)

   வாச்சியிட்டு வெட்டினாற் போலக் கண்டிப்பாகப் பேசுபவன்; one with sharp tongue, as an adze.

     “வாச்சியீடனாக நறுக்கறப் பேசவல்லேன்” (திவ். திருமாலை,26, வ்யா, பக்.89);.

     [வாய் → வாய்ச்சி → வாச்சி + ஈடன்]

வாச்சிவாச்சி

 வாச்சிவாச்சி vāccivācci, பெ.(n.)

   ஆயிரத்து நூறு உரூபாயைக் குறிப்பது; a term to denote the thousand and hundred rupees.

     [வாச்சி + வாச்சி]

வாச்தவம்

வாச்தவம் vāctavam, பெ. (n.)

   மெய்ம்மை; reality, truth.

     “தர்ப்பணத்திற் களிம்பு வாஸ்தவம்” (கைவல். சந். 69.);.

     [Skt. {} → த. வாசத்தவம்]

வாஞ்சிகம்

 வாஞ்சிகம் vāñjigam, பெ.(n.)

   மூங்கிலரிசி; seeds – Concretions of bamboo.

வாஞ்சிக்கொடி

 வாஞ்சிக்கொடி vāñjikkoḍi, பெ.(n.)

   முல்லை; a variety of Jasmine.

     [வாஞ்சி + கொடி]

வாஞ்சிமலை

 வாஞ்சிமலை vāñjimalai, பெ.(n.)

விடத்தாரி பார்க்க;see {}.

     [வாஞ்சி + மலை]

வாடகம்

 வாடகம் vāṭagam, பெ.(n.)

   வாடகை (இ.வ.);; rent.

     [வாழ் → வாழகை → வாடகை → வாடகம்]

வாடகை

வாடகை1 vāṭagai, பெ.(n.)

   கூலி; rent, hire.

     “வாடகைக் குதிரை” (திருவேங்.சத.85);.

     [வாழ் → (வாழகை); – வாடகை = வீட்டிற் குடியிருத்தற்குக் கட்டும் மாத அல்லது ஆட்டைக் கட்டணம். பின்பு இயங்குதிணைப் பொருள்களைப் பயன்படுதற்குக் கொடுக்கும் கட்டணமும் இப்பெயர் பெற்றது.]

வடவர் பட் (bhat); என்னுஞ் சொல்லை மூலமாகக்காட்டி, அதையும் ப்ருத்த (bhrta); என்பதன் திரிபாக்குவர். Bh{} = பொறு, bhrta = தாங்கப் பெற்றவன், கூலிக்கு அமர்த்தப் பெற்ற வேலைக்காரன் அல்லது உழைப்பாளி அல்லது படைஞன். இவ்வகையிலும் மூலம் தமிழ்ச் சொல்லே. பொறு = {}. (வ.மொ.வ. 2., பக். 85);.

 வாடகை2 vāṭagai, பெ.(n.)

   1. சுற்றுவட்டம்; region, district.

     “அரசூர்வாடகையில்” (S.I.I.iii.109);.

   2. தெரு (யாழ்.அக.);; street.

   3. கொல்லை (யாழ்.அக.);; garden.

   4. வாகன சாலை (யாழ்.அக.);; stable.

   5. மண்சுவர் (யாழ்.அக.);; mud wall.

வாடநாழி

 வாடநாழி vāṭanāḻi, பெ.(n.)

   பேய்ப்புடலை; a bitter wild snake gourd, good for fever – Tricosanthes lacmiosa.

வாடன்சம்பா

 வாடன்சம்பா vāṭaṉcambā, பெ.(n.)

   மட்டநெல்வகை; an inferior kind of paddy.

     [வாடன் + சம்பா]

வாடபதி

 வாடபதி vāṭabadi, பெ.(n.)

   உடம்பின் கொழுப்பு; fat of the body-adipose tissue.

வாடபூமாது

வாடபூமாது vāṭapūmātu, பெ.(n.)

   1. மூலி, கொட்டைப்பாசி; a kind of moss.

   2. ஒருவகை வளி; a gas.

வாடல்

வாடல் vāṭal, பெ.(n.)

   1. வாடுகை; withering;

 drying;

 becoming lean;

 fading.

   2. வாடின பொருள்; that which is faded, or withered, that which is stale or not fresh, as vegetables.

   3. உலர்ந்த பூ (பிங்.);; faded flower.

     [வாடு → வாடல்]

வாடவசி

 வாடவசி vāṭavasi, பெ.(n.)

   தொட்டிவிடம்; a kind of arsenic-red orpiment.

     [வாட + வசி]

வாடாக்கடமை

வாடாக்கடமை vāḍākkaḍamai, பெ.(n.)

   திட்டமான வரி; permanently fixed tax.

     “இவ்வாண்டு முதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து” (S.I.I.V.120);.

     [வாடா + கடமை]

வாடாக்குறிஞ்சி

 வாடாக்குறிஞ்சி vāṭākkuṟiñji, பெ.(n.)

   உலரும் நிலையினும் தன் இயற்கை நிறம் மாறாத பூ வகை (பிங்.);; a plant whose flowers do not lose colour in withering.

மறுவ. குரவகம்.

     [வாடா + குறிஞ்சி]

வாடாத்தம்

 வாடாத்தம் vāṭāttam, பெ.(n.)

   ஆல்; banyan tree – ficus bengalensis.

     [வடம் + அத்தம்]

வாடாத்தாமரை

வாடாத்தாமரை vāṭāttāmarai, பெ.(n.)

   பண்டைக்கால அரசர் பாணர்க்கு அளிக்கும் பொற்றாமரைப்பூ; lotus-shaped ornament of gold, presented to bards by ancient kings.

     “வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே” (புறநா.319);.

     [வாடு + ஆ + தாமரை]

வாடாப்பூ

 வாடாப்பூ vāṭāppū, பெ.(n.)

   வாடா மல்லிகை, தென்னம்பூ, பனம்பூ பறிக்காதபூ; unfaded and unplucked flowers.

     [வாடா + பூ]

வாடாமல்லி

 வாடாமல்லி vāṭāmalli, பெ.(n.)

வாடா மல்லிகை (இ.வ.); பார்க்க;see {}.

     [வாடு +

     ‘ஆ’ (எ.ம.இ.நி.); + மல்லி]

வாடாமல்லிகை

 வாடாமல்லிகை vāṭāmalligai, பெ.(n.)

   பூச்செடிவகை (வின்.);; bachelor’s buttons.

     [வாடு +’ஆ’ (எ.ம.இ.நி.); + மல்லிகை]

வாடாமாலை

வாடாமாலை vāṭāmālai, பெ.(n.)

   1. பொன்னரி மாலை; gold necklace, as not fading like the garland of flowers.

     “வாடாமாலை பாடினி யணிய” (புறநா.364);.

   2. கிழி கிடை முதலியவற்றால் செய்யப்படும் மாலை (சிலப்.5, 33, உரை);; garland made of rags, pith etc.,

     [வாடு + ஆ (எ.ம.); + மாலை]

வாடாமுட்செடி

 வாடாமுட்செடி vāḍāmuḍceḍi, பெ.(n.)

   மஞ்சட்பூவுள்ள ஓர் செடி; a thorny plant with yellow flowers-Furze.

     [வாடா + முள் + செடி]

வாடாவஞ்சி

வாடாவஞ்சி vāṭāvañji, பெ.(n.)

கருவூர் பார்க்க;see {}.

     “வாடாவஞ்சி வாட்டு நின்….. நோன்றான்” (புறநா.39);.

     [வாடு +’ஆ’ (எ.ம.இ.நி.); + வஞ்சி]

வாடாவள்ளி

வாடாவள்ளி vāṭāvaḷḷi, பெ.(n.)

   1. ஒரு வகைக் கூத்து; a kind of dance.

     “வாடா வள்ளியின் வளம்பல தரூஉ நாடு பல” (பெரும்பாண்.370);.

   2. ஒவியம் (அக.நி.);; painting, picture.

     [வாடு +’ஆ'(எ.ம.இ.நி.); + வள்ளி]

வாடாவிளக்கு

 வாடாவிளக்கு vāṭāviḷakku, பெ.(n.)

   நந்தாவிளக்கு (நெல்லை);; perpetually burning lamp.

     [வாடு + ஆ (எ.ம.இ.நி.); + விளக்கு]

வாடாவூட்டு

 வாடாவூட்டு vāṭāvūṭṭu,    பெ.(ո.) திட்டமான வரி; permanently fixed tax.

வாடி

வாடி1 vāṭi, பெ.(n.)

   தொட்டாற்சுருங்குஞ் செடி வகை; a sensitive plant.

 வாடி2 vāṭi, பெ.(n.)

   1. தோட்டம் (வின்.);; garden.

   2. மதில் (யாழ்.அக.);; wall.

   3. முற்றம் (யாழ்.அக.);; courtyard.

   4. வீடு (யாழ்.அக.);; house.

   5. மீனுலர்த்துமிடம் (இ.வ.);; fish- curing yard.

   6. பட்டி; village, hamlet.

   7. சாவடி (வாடிவீடு);; rest-house.

   8. காணிக்காரரின் புல் வேய்ந்த மூங்கிற் குடிசை; hut of bamboo and grass, of {} (G.TnD.1, 7);.

   9. அடைப்பிடம் (வின்.);; enlosure, fenced place.

   10. சூழ வேலி கோலிய விறகு, மரம் முதலியன விற்குமிடம் (விறகுவாடி, மரவாடி.);; yard, shed, where firewood is stored for sale.

     [பாடி → வாடி (செல்வி.75, ஆடி, 606);]

வாடிகம்

வாடிகம் vāṭigam, பெ.(n.)

பிரமி2 (நாமதீப. 340); பார்க்க;see pirami.

வாடிகை

வாடிகை vāṭigai, பெ.(n.)

   1. வாடகை2 2, 3, 4 பார்க்க;see {}.

வாடிக்கை

வாடிக்கை vāṭikkai, பெ.(n.)

   1. வழக்கம்; habit.

     “வேதங்களைக் கிளி வாடிக்கையாற் கற்று” (இராமநா. அயோத், 22);.

   2. வழக்கமாகப் பற்றுவரவு செய்கை; custom, as in dealing.

   3. முறை; usage.

     “உலக வாடிக்கை நிசமல்லவோ” (குமரே. சத.69);.

   4. வாடிக்கைக்காரன் பார்க்க;see {}.

   க., து. வாடிகெ;தெ. வாடு, வாடுக.

     [பாடு → வாடுக்கை → வாடிக்கை (மு.தா.304);]

வாடிக்கைக்காரன்

வாடிக்கைக்காரன் vāṭikkaikkāraṉ, பெ.(n.)

   1. வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன்; customer.

   2. பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்குக் கொடுத்து வருவோன்; customary supplier of goods.

     [வாடிக்கை + காரன்]

வாடிவாசல்

வாடிவாசல்1 vāṭivācal, பெ.(n.)

   அரண்மனைவாசல் (இ.வ.);; entrance hall of a palace or mansion.

     [பாடிவாசல் → வாடிவாசல் (செல்வி.75, ஆடி. 006.);]

 வாடிவாசல்2 vāṭivācal, பெ.(n.)

   1. முல்லை நில மாட்டுத் தொழுவ வாசல்; entrance of cowshed in mullai tract.

   2. இடையர் குடியிருப்புவாசல்; entrance of yadhava’s colony.

   3. சல்லிக்கட்டுக் காளைகளை அடைத்து வைத்திருக்கும் தொழுவ வாசல்; small entrance in the narrow passage between the ground and the place where the bulls are kept in the sport of{}.

   4. பாசறை வாசல்; entrance of encampment.

     [பாடிவாசல் → வாடிவாசல். (செல்வி.75, ஆடி. 006.);]

 வாடிவாசல் vāṭivācal, பெ. (n.)

   சல்லிக்கட்டு காளைகள் இருக்குமிடம்; place where bul bailing take place.

     [வாடி+வாசல்]

வாடிவிடு

 வாடிவிடு vāḍiviḍu, பெ. (n.)

ஓய்வு இல்லம் rest house (யாழப்.);.

     [பாடி-வாடி+விடு]

வாடிவீடு

வாடிவீடு vāṭivīṭu, பெ.(n.)

   1. பாசறை; war camp.

   2. அரசன் தங்கல்மனை; royal rest- house.

   3. சாவடி; choultry.

     [பாடிவீடு → வாடிவீடு]

வாடிவேலி

 வாடிவேலி vāṭivēli, பெ.(n.)

   சிற்றூரின் எல்லைக் குறி (கோவை.);; the boundary line of a village.

     [வாடி + வேலி]

வாடு

வாடு1 vāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உலர்தல்; to wither, fade, dry up.

     “பொதியொடு பீள்வாட” (நாலடி, 269);.

   2. மெலிதல்; to be emaciated, to become weak.

     “எந்தோள் வாட” (கலித்.68.);.

   3. மனமழிதல்; to pine away, grieve.

     “வாடினேன் வாடி வருந்தினேன்”

   4. பொலிவழிதல்; to turn pale.

     “குழலியென் வாடிப் புலம்புவதே” (திருக்கோ.14);.

   5. தோல்வியடைதல்; to be defeated.

     “வாடாவஞ்சி தலைமலைந்து” (பு.வெ.3, 1, கொளு);.

   6. கெடுதல்; to perish.

     “காரிகை பெற்றதன் கவின் வாட” (கலித்.124);.

   7. நீங்குதல்; to be removed.

     “சூலமும்… கரத்தினில் வாடா திருத்தி” (கல்லா.87, 29);.

   8. குறைதல்; to diminish, decrease.

     “வாட்டருஞ் சீர்க்கண்ணகி நல்லாளுக்கு” (சிலப்.9, 40);.

   9. நிறை குறைதல் (இ.வ.);; to fall short in weight.

   க. பாடு;   குட. பாட்;   து. பாடுனி;   தெ. வாடு;   பார்ஜி. வாட்;   குவி. வ்விராலி;   ம. வாடுக; Kod. ba-d;

 pa. {}.

 வாடு2 vāṭu, பெ. (n.)

   வாடற்பூ; faded flower.

     “ஈங்கைவா டுதிர்புக” (கலித்.31);.

     [வீ → வீடு → வாடு]

வாடுன்

 வாடுன் vāṭuṉ, பெ. (n.)

உலர்த்தப்பட்ட புலால் துண்டுகள், உப்புக்கண்டம்

 dryflesh.

து பாரு ஆத், வர்ரூ

வாடூன்

வாடூன் vāṭūṉ, பெ.(n.)

   உப்புக்கண்டம்; dried flesh.

     “வாராதட்ட வாடூன் புழுக்கல்” (பெரும் பாண்.100);.

     [வாடு + ஊன்]

வாடை

வாடை1 vāṭai, பெ.(n.)

   1. வடகாற்று (பிங்.);; northwind.

     “வாடை நலிய வடிக்கணா டோணைசை”(பு.வெ.8, 16);.

   2. குளிர் காற்று (கொ.வ.);; chill wind.

   3. காற்று (பிங்.);; wind.

     “வாடை யுயிர்ப்பின்” (கம்பரா. மிதிலைக். 66);.

   4. மணம்; fume, scent

     “சுகந்த வாடையின்” (திருப்பு.143);.

   5. வடவை பார்க்க;see {}.

     “வாடை யெரிகொள்வேலை” (திருப்பு.382);.

   ம. வாட;   தெ. வாட;குருக். பார்னா.

 வாடை2   1. தெருச்சிறகு (சூடா.); row of houses, as in a street.      “கீழைவாடை மேலைவாடை” (சூடா.).

   2. தெரு (பிங்.);; street.

   3. இடையர் அல்லது வேடர் வாழும் வீதி (வின்.);; street where herdsmen or hunters reside.

   4. குறுஞ் சிற்றூர்; village, hamlet.

   5. வழி; direction.

     ‘இதே வாடையாகப் போ’.

 வாடை3 vāṭai, பெ.(n.)

   மருந்து (பிங்.);; medicine.

 வாடை vāṭai, பெ. (n.)

வேட்டுவர் குடியிருப்பு

 hamlet of hunters.

     [வேட்டுவர்-வேடுவர்-வேடு-வாடு-வாடை]

ஒ.நோ. நத்தம்- பார்ப்பனர் அல்லாதார் ஊர். பேட்டை-சந்தை ஊர். பறந்தலை- பாலை நிலம்

வாடைக்கச்சான்

 வாடைக்கச்சான் vāṭaikkaccāṉ, பெ.(n.)

   வடமேல்காற்று (யாழ்.அக.);; north- west wind.

     [வாடை + கச்சான். கச்சான் = மேல்காற்று, கோடைக்காற்று.]

வாடைக்கொண்டல்

 வாடைக்கொண்டல் vāṭaikkoṇṭal, பெ.(n.)

   வடகீழ்க்காற்று (யாழ்.அக.);; north- east wind.

     [வாடை + கொண்டல்]

வாடைப்பாசறை

வாடைப்பாசறை vāṭaippācaṟai, பெ.(n.)

   பாசறைக்கண் வீரர் தம் காதன் மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை (பு.வெ.8,16.);; theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves.

     [வாடை + பாசறை]

வாடைப்பொடி

வாடைப்பொடி vāḍaippoḍi, பெ.(n.)

   1. நறுமணத்தூள் (இ.வ.);; aromatic or scented powder.

   2. வயப்படுத்தும் பொடி; medicated powder that charms a person and keeps him under, fascination.

     “வாடைப் பொடியிட்டான்” (விறலி விடு.823);.

     [வாடை + பொடி. வாடை = நறுமணம்.]

வாடையவலன்

 வாடையவலன் vāṭaiyavalaṉ, பெ.(n.)

   பேராமுட்டி; a plant – pavonia odorata.

     [வாடை .+ அவலன்]

வாடையிலோடு-தல்

வாடையிலோடு-தல் vāṭaiyilōṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய் விரித்துச் செல்லுதல் (வின்.);; to sail with the north wind.

     [வாடையில் + ஒடு-,]

வாடைவசியம்

 வாடைவசியம் vāṭaivasiyam, பெ.(n.)

     [வாடை + வசியம்]

வாட்காரன்

 வாட்காரன் vāṭkāraṉ, பெ.(n.)

   அரம்பத்தால் மரமறுப்பவன்; sawyer.

     [வாள் + காரன்]

வாட்குடி

வாட்குடி vāḍkuḍi, பெ.(n.)

   மறக்குடி; race of warriors.

     “வாட்குடி வன்கணவர்க்கு” (பு.வெ.4, 4);

     [வாள் + குடி]

வாட்கூத்து

வாட்கூத்து vāṭāttu, பெ.(n.)

   வாளைப் பிடித்து ஆடுங்கூத்து; sword dance.

     “உறையைக் கழித்து வாட்கூத்து ஆடிக் காட்டுவார்” (சீவக.783, உரை);.

     [வாள் + கூத்து]

வாட்கோரை

வாட்கோரை vāṭārai, பெ.(n.)

   ஒருவகைக் கோரை (பிங்.); (மதுரைக்.172, உரை);; a kind of sedge.

     [வாள் + கோரை]

வாட்சி

 வாட்சி vāṭci, பெ.(n.)

   மல்லிகை, இருவாட்சி; a variety of Jasmine.

     [வாள் → வாய் → வாய்ச்சி → வாட்சி]

வாட்சூலை

 வாட்சூலை vāṭcūlai, பெ.(n.)

   ஒரு வகைச் சூலை நோய்; a kind rheumatic pain.

வாட்டசாட்டம்

 வாட்டசாட்டம் vāṭṭacāṭṭam, பெ.(n.)

   தோற்றப் பொலிவு (கொ.வ.);; being stalwart and shapely.

     ‘ஆள் வாட்டசாட்டமாய் இருக்கிறான்’.

     [வாட்ட + சாட்டம்]

வாட்டப்பொலி

 வாட்டப்பொலி vāṭṭappoli, பெ.(n.)

   களத்தில் அடித்துப் போடப்பட்டிருக்கும் நீண்ட நெற்பொலி (இ.வ.);; long heap of paddy on the threshing-floor.

     [வாட்டம் + பொலி]

வாட்டம்

வாட்டம்1 vāṭṭam, பெ.(n.)

   1. வாடுகை; fading, withering.

   2. உலர்ச்சி; dryness.

   3. மெலிவு; leanness.

     “மானமங்கையர் வாட்டமும் பரிவும்…… தீர்ந்தொளி சிறந்தார்” (சீவக.2382);.

   4. வருத்தம்; trouble, distress.

     “வாட்டிய வாட்டஞ் சொல்லி” (அரிச்.பு.விவாக.32);.

     [வாடு → வாட்டம்]

 வாட்டம்2 vāṭṭam, பெ.(n.)

   1. ஒழுங்கான சாய்வு; slope, gradient.

     “நீர்வாட்டம்”.

   2. வடிவழகு; beauty of form.

     ‘ஆள் வாட்டமாயிருக்கிறான்’.

   3. மனக்களிப்பு; sumptuousness.

     ‘சோறு வாட்டமாய்க் கிடைத்தது’.

   4. தோற்றப் பொலிவு (கொ.வ.);; being stalwart and shapely.

   5. நீட்டம் (இ.வ.);; length.

   6. பயனுறுதல்; advantage, suitability.

     ‘காற்று வாட்டமாயடிக்கிறது’.

   ம. வாட்டம்;   க. வாட;தெ. வாடமு.

     [வாள் → வாடு → வாட்டம்]

அங்கணம் வாட்ட சாட்டமாயிருந்தால் தண்ணீர் சரட்டென்று போகும் என்னும் வழக்கை நோக்குக – (வ.மொ.வ.2., பக். 85);.

 வாட்டம்3 vāṭṭam, பெ.(n.)

   1.தோட்டம் (வின்.);; garden.

   2. தெரு (யாழ்.அக.);; street.

   3. வழி (சது.);; way, road.

     [வாள் → வாடு → வாட்டம்]

வாட்டரவு

வாட்டரவு vāṭṭaravu, பெ.(n.)

   1. சோர்வு (யாழ்.அக.);; weariness, fatigue.

   2. உலர்கை (வின்.);; withering, fading.

வாட்டலை

 வாட்டலை vāṭṭalai, பெ.(n.)

வாட்டாளை பார்க்க (யாழ்.அக.);;see {}.

வாட்டல்

 வாட்டல் vāṭṭal, பெ.(n.)

   வாட்டப்பட்ட பொருள்; roast, anything roasted.

     [வாடு → வாட்டு → வாட்டல்]

வாட்டாங்கொடி

 வாட்டாங்கொடி vāḍḍāṅgoḍi, பெ.(n.)

   சோமலதைக் கொடி; soma plant.

மறுவ. ஆட்டலாங்கொடி.

வாட்டானை

வாட்டானை vāṭṭāṉai, பெ.(n.)

   அறுவகைத் தானைகளுள் ஒன்றான வாட்படை; company of swordsmen in an army, one of {}.

     “பொய்யா வாட்டானை …. தென்னவன்” (கலித்.98); (திவா.);.

     [வாள் + தானை]

வாட்டாறு

வாட்டாறு vāṭṭāṟu, பெ.(n.)

   மலைநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று; a {} shrine in the Travancore state.

     “வளநீர் வாட்டாற்றெழினியாதன்” (புறநா.396);.

     “வாட்டாற்றா னடிவணங்கி” (திவ்.திருவாய்.10, 6, 2);.

     [வாட்டம் + ஆறு]

வாட்டாளை

 வாட்டாளை vāṭṭāḷai, பெ.(n.)

   மெலிந்தவன் (யாழ்.அக.);; emaciated man.

     [வாடு →வாட்டு →ஆள்]

வாட்டாழை

 வாட்டாழை vāṭṭāḻai, பெ.(n.)

   கடற்கரையில் உண்டாம் பழச்செடி வகை (மலை.);; a coastal plant yielding edible fruits.

மறுவ. கடற்றாழை.

     [வாள் + தாழை]

வாட்டி

வாட்டி1 vāṭṭi, பெ.(n.)

   தடவை; time, turn.

     “மூன்று வாட்டி வந்து போனான்”.

   தெ. மாடு;க. மாட்டு.

     [வள் → வாள் → வாட்டி (மு.தா.258);]

 வாட்டி2 vāṭṭi, பெ.(n.)

   களமடிக்கும் கடைசிப் பிணையல் மாடு (இ.வ.);; the bull at the farthest end from the pole in the centre of the threshing-floor in treading corn.

 வாட்டி3 vāṭṭi, பெ.(n.)

   பருத்தி; cotton.

 வாட்டி vāṭṭi, பெ. (n.)

   சிறு பெண் குழந்தை; a small baby.

வாட்டிப்பிடிப்பான்

 வாட்டிப்பிடிப்பான் vāḍḍippiḍippāṉ, பெ.(n.)

   தழுதாழை; a shrub – a hedge tree- clerodendron phlomoides {}.

     [வாட்டி + பிடிப்பான்]

வாட்டிப்பிழிதல்

 வாட்டிப்பிழிதல் vāṭṭippiḻidal, பெ.(n.)

   வெற்றிலையை அனலில் வாட்டிக் கசக்கிச் சாறு எடுக்கும் முறை; squeezing the juice after slight heating as in betel.

     [வாட்டி + பிழிதல்]

வாட்டியபுட்பம்

வாட்டியபுட்பம் vāṭṭiyabuṭbam, பெ.(n.)

   1. சந்தனம்; sandalwood.

   2. மஞ்சள்; turmeric.

வாட்டியம்

வாட்டியம் vāṭṭiyam, பெ.(n.)

   1. தோட்டம்; garden.

   2. வீடு (யாழ்.அக.);; house.

வாட்டியாயினி

 வாட்டியாயினி vāṭṭiyāyiṉi, பெ.(n.)

   அதிபலை; species of Hibiscus.

மறுவ. பேராமுட்டி.

வாட்டு

வாட்டு1 vāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. உலர்த்துதல்; to cause to wither or fade;

 to dry;

 to scorch.

   2. வதக்குதல்; to roast.

   3. வருத்துதல்; to vex, afflict, mortify.

     “எளியரை வலியர் வாட்டின் வலியரை… தெய்வம் வாட்டும்” (காஞ்சிப்பு.கடவுள் வா.7);.

   4. கெடுத்தல்; to injure;

 to destroy.

     “இனம் போக்கி நின்றாரிகல் வாட்டி” (பு.வெ.2, 5);.

   5. ஆடை வெளுத்தல்; to wash, as cloth.

     “ஸ்ரீவைஷ்ணவ வண்ணத்தான் திருப்பரி வட்டங்களை அழகிதாக வாட்டி” (ஈடு.5, 10, 6);.

   க. பாடு;   தெ. வாடு;   ம. வாடுக; Ko. vaa-{}.

     [வாடு → வாட்டு → வாட்டு-,]

 வாட்டு2 vāṭṭu, பெ.(n.)

   1. பொரியல்; roasted or fried flesh or vegetable.

     “மனைவாழளகின் வாட்டுடன் பெறுகுவிர்” (பெரும்பாண்.256);.

   2. இடர்; affliction.

     ‘அவனை நல்ல வாட்டு வாட்டினான்’.

க. பாடு.

     [வாடு → வாட்டு.]

 வாட்டு3 vāṭṭu, பெ.(n.)

   1. ஒழுங்கான சாய்வு; slope, gradient.

     “நீர்வாட்டுச் சரியா விருக்கிறது”

   2. அழகானது (இ.வ.);; that which is handsome.

   3. தகுதியானது (வின்.);; that which is suitable.

     ‘அந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை’.

   4. சார்பு; side, nearness.

     ‘என் பக்கவாட்டி லிராதே’.

   5. பழக்கமிகுதியா லேற்படும் பயிற்சி; facility from frequent use, as of the right or the left hand.

     ‘அவன் இடக்கை வாட்டுள்ளவன்’.

   6. மலிவு (வின்.);; cheapness.

     ‘அது எனக்கு வாட்டாய்க் கிடைத்தது’.

வாட்டுசோகை

 வாட்டுசோகை vāṭṭucōkai, பெ.(n.)

   சோகைநோயால் உண்டாகும் வீக்க வகை; bright’s disease.

வாட்படை

வாட்படை vāḍpaḍai, பெ.(n.)

   வாள்தாங்கிப் போர்செய்யும் வீரர்; army of soldiers armed with swords.

     “வாட்படையை யோட்டி” (பட்டினப்.226, உரை);.

     [வாள் + படை.]

வாட்படையாள்

 வாட்படையாள் vāḍpaḍaiyāḷ, பெ.(n.)

   கொற்றவை (பிங்.);; Durga, as armed with sword.

     [வாட்படை → வாட்படையாள்]

வாட்பல்

 வாட்பல் vāṭpal, பெ.(n.)

   அரம்பம் போன்ற பல்லமைப்பு; serrated tooth, toothed like a saw.

     [வாள் + [பல்]

வாட்பல்விலக்கி

வாட்பல்விலக்கி vāṭpalvilakki, பெ.(n.)

   1. சிறிய அரவகை (செங்கை);; tenon saw.

   2. அரத்தின் பற்களை நேராக்கும் கருவி; saw-set.

     [வாள் + பல் + விலக்கி.]

வாட்போக்கி

 வாட்போக்கி vāṭpōkki, பெ.(n.)

   திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளதும் அப்பரால் பாடப்பட்டதுமான ஒரு சிவத்தலம்; one of the saiva places having the distinction of being sung by saint Appar. It is in Tiruchi District.

வாட்போக்கிக்கலம்பகம்

வாட்போக்கிக்கலம்பகம் vāṭpōggiggalambagam, பெ.(n.)

   பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற நூல்; a book written by {} in 19th century.

     [வாட்போக்கி + கலம்பகம்]

வாட்போக்கிநாதர்உலா

வாட்போக்கிநாதர்உலா vāṭpōkkinātarulā, பெ.(n.)

   சேறை கவிராசப் பண்டிதர் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்; a book written by {} in 20th century.

     [வாட்போக்கி + நாதர் + உலா. நாதர் = skt.]

வாட்போர்

வாட்போர் vāṭpōr, பெ.(n.)

   வாளால் செய்யும் சண்டை; fight with the sword.

     “வாட்போரான் மிகுகின்ற… வீரருடைய” (மதுரைக்.53, உரை);.

     [வாள் + போர்]

வாணகந்தி

 வாணகந்தி vāṇagandi, பெ.(n.)

   அரசமரம்; a sacred tree – Ficus religiosa.

     [வாண + கத்தி]

வாணகந்தியுப்பு

 வாணகந்தியுப்பு vāṇagandiyuppu, பெ.(n.)

   வெடியுப்பு; salt petre.

     [வாணகந்தி + உப்பு]

வாணகன்

 வாணகன் vāṇagaṉ, பெ.(n.)

திருமால் (யாழ்.அக.);;{}.

     [ஒருகா. (வான் → வானகன் → வாணகன்);]

வாணகம்

வாணகம் vāṇagam, பெ.(n.)

   1. வாணம் 1, 20 பார்க்க;see {}.

   2. ஆவின் மடி; cow’s udder.

   3. வேய்ங்குழல்; flute.

   4. தனிமை; loneliness.

வாணகாந்திகம்

 வாணகாந்திகம் vāṇagāndigam, பெ.(n.)

சோதிப்புல்;{}.

     [வாண + காந்திகம்]

வாணகோப்பாடி

வாணகோப்பாடி vāṇaāppāṭi, பெ.(n.)

   வாணவரசர் ஆண்டதும், மைசூர் அரசவை, கர்நூல் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் ஆகியவற்றின் பாகங்கள் அடங்கியதுமான நாடு; the country of the {}, an ancient Kingdom comprising portions of the mysore state, and of the karnool and north arcot districts (S.I.I.ii, preface.27);.

     [வாண + கோப்பாடி]

வாணக்கந்தகம்

வாணக்கந்தகம் vāṇaggandagam, பெ.(n.)

   பொறிவாணம் முதலிய செய்தற்குரிய தனிம வகை (M.M.300.);; stick-sulphur, roll sulphur, as used in fireworks.

     [வாணம் + காந்து → காந்தகம் → கந்தகம்]

வாணக்கா

 வாணக்கா vāṇakkā, பெ.(n.)

   நெல்லிப் பருப்பு; kernel of the fruit-Emblica-Indian goose berry.

வாணக்காரன்

 வாணக்காரன் vāṇakkāraṉ, பெ.(n.)

   வாணவெடிகள் முதலியன செய்து விற்பவன்; one who manufactures and sells fireworks.

க. வாணகார.

     [வாணம் + காரன். காரன் = வினைமுதல் உடைமை முதலிய பொருளில் வரும் ஆண்பாற் பெயரீறு.]

வாணக்குழல்

 வாணக்குழல் vāṇakkuḻl, பெ.(n.)

   அதிர்வேட்டுக்காகப் பொறிவாண மருந்து அடைக்கும் வெடிகுழாய்; metallic tube fixed in a block of wood, used for loading fireworks with gun powder.

     [வாணம் + குழல்]

வாணதண்டம்

 வாணதண்டம் vāṇadaṇṭam, பெ.(n.)

   புடைவை நெய்யுங் கருவி வகை (யாழ்.அக.);; apparatus for weaving sarees.

     [வாண + தண்டம்]

வாணதீர்த்தம்

 வாணதீர்த்தம் vāṇatīrttam, பெ.(n.)

   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவி; a sacred waterfall in the Tirunelvelly District.

     [வாண + skt. {} → த. தீர்த்தம்]

வாணன்

வாணன்1 vāṇaṉ, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     “மலை முண்டன் வாணன்” (நெல்விடு. 186);.

 வாணன்2 vāṇaṉ, பெ.(n.)

   1. குடியிருப்பவன்; resident.

     “அண்ட வாண ரமுதுண

நஞ்சுண்டு” (தேவா.644,6);.

   2. ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன்; one who pursues a profession or calling.

     “பாவாணன்”.

   3. நல்வாழ்வுள்ளவன் (வின்.);; prosperous man.

     [வாழ் + ந் + அன் → வாணன்.

     ‘ந்’ பெயரிடை நிலை.]

 வாணன்3 vāṇaṉ, பெ.(n.)

   1. மாவலியின் மகனான ஓர் அரசன்; an asura, son of {}.

     “வாணன் பேரூர்” (மணிமே.3,123);.

   2. மாவலி தலைமுறையில் தோன்றிய அரசன்; King of a dynasty tracing its lineage from {}.

     “வாண வித்தியாதரரான வாணராயர் மகா தேவியார்” (S.I.I.iii,99);.

     “ஆறையர்கோன் வாணன்” (பெருந்தொ. 1185);.

   3. பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்ற நகரையாண்ட ஒரு தலைவன்; a chief of {}, a town in {} country.

   4. மூன்றாவது விண்மீன் (திவா.);; the third naksatra.

வாணன்கோவை

 வாணன்கோவை vāṇaṉāvai, பெ.(n.)

   தஞ்சைவாணன் மீது பொய்யா மொழிப் புலவரியற்றிய கோவைச் சிற்றிலக்கியம்; a {} trealise on {}.

வாணபுரம்

வாணபுரம் vāṇaburam, பெ.(n.)

   வாணாசுரனது தலைநகர்; the capital of {} Kingdom.

     “வாணபுரம்புக்கு” (திவ்.திருவாய்.7,10,7);.

     [வாண(ன்); + புரம்]

வாணம்

வாணம் vāṇam, பெ.(n.)

   1. அம்பு; arrow.

   2. தீ; fire.

     “பாயும் புகைவாணங் கொடு பாணம்” (இரகு.நகர.24);.

   3. வளைந்து செல்லும் வாணக்கட்டு முதலியன (யாழ்.அக);; rocket, fire works.

     [வாளம் → வாணம். வாணம் → வ. பாண. (க.வி. 28);]

 வாணம்1 vāṇam, பெ.(n.)

   1. கடைகால் (நெல்லை.);; excavation for laying foundation.

   2. வெடி; cracker.

     [வானம் → வாணம்]

 வாணம்2 vāṇam, பெ.(n.)

   1. அம்பு; arrow.

   2. தீ; fire.

     “பாயும் புகைவாணங் கொடு பாணம்” (இரகு. நகர. 24);.

   3. வாணவெடி முதலியன (யாழ்.அக.);; rocket fire works.

     [வாளம் → வாணம். வாணம் → வ.பாண.] (சு.வி.28);

வாணரம்

 வாணரம் vāṇaram, பெ.(n.)

   மூளையையும் முதுகந்தண்டங் கொடியையும் பற்றிய நோய்; inflammation of the brain and the spinal card-Meningitis.

வாணலி

 வாணலி vāṇali, பெ.(n.)

   வறுக்குஞ்சட்டி; frying pan.

தெ., க. பாணலி.

வாணலிங்கம்

வாணலிங்கம் vāṇaliṅgam, பெ.(n.)

   வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும், நருமதையில் அகப்படுவதுமான இலிங்க வகை; a form of {}, found in the {} as worshipped by the Asura {}.

     “வாணனெனுமசுர ணர்சித்தான்…. வாணலிங்கம்” (சைவச.பொது.85);.

     [வாண + லிங்கம் →இலங்கம்]

வாணவாதம்

 வாணவாதம் vāṇavātam, பெ.(n.)

   கால் கையை சுருக்க வாங்கி இழுத்துக் கடுத்து நோயை யுண்டாக்கும் ஒரு வகை ஊதை நோய்; a kind of rheumatism.

     [வாணம் + வாதம். Skt. வாதம்.]

வாணவுப்பு

 வாணவுப்பு vāṇavuppu, பெ.(n.)

   வெடியுப்பு; potassium nitrate.

     [வாணம் + உப்பு]

வாணவெடி

 வாணவெடி vāṇaveḍi, பெ.(n.)

   வெடிவகை; a kind of rocket fire.

     [வாணம் + வெடி]

வாணவேடிக்கை

 வாணவேடிக்கை vāṇavēṭikkai, பெ.(n.)

   வாணங்களை வெடித்து நிகழ்த்தும் கண்கவர் காட்சி; display of fireworks.

     [வாள் → வாளம் → வாணம் + வேடிக்கை]

வாணா

 வாணா vāṇā, பெ.(n.)

   வறுக்குஞ்சட்டி; frying pan.

     [வாணல் → வாணா]

வாணாட்கோள்

வாணாட்கோள் vāṇāṭāḷ, பெ.(n.)

   பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை (பு.வெ.6, 3);; theme of a King sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy.

     [வாழ் + நாள் + கோள்]

வாணாத்தடி

 வாணாத்தடி vāṇāttaḍi, பெ.(n.)

   சிலம்பக்கழி; zudgel used by Indian gymanasts in fencing.

வாணாய்

 வாணாய் vāṇāy, பெ.(n.)

வாணலி பார்க்க;see {}.

வாணாளளப்போன்

வாணாளளப்போன் vāṇāḷaḷappōṉ, பெ.(n.)

   ஞாயிறு (நாமதீப.94);; sun.

     [வாணாள் + அள → அளப்பு →அளப்போன்]

வாணாளைவாங்கு-தல்

வாணாளைவாங்கு-தல் vāṇāḷaivāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பெருந்தொந்தரவு பண்ணுதல்; to tease, worry to death.

     ‘ஏன் என்னுடைய வாணாளை வாங்குகிறாய்?’

     [வாணாள் + வாங்கு-,]

வாணாள்

வாணாள் vāṇāḷ, பெ.(n.)

   1. வாழுங்காலம்; life- time.

   2. உயிர்; life.

     “தெவ்வர்வாணாள் வீழ்ந்துக” (சீவக.3079);.

     [வாழ் + நாள்]

வாணி

வாணி1 vāṇi, பெ.(n.)

   1. சொல் (பிங்.);; word, language, speech.

     “நன்கல்ல வாணி கிளத்தலடக்கி” (பிரமோத். 22, 19);.

   2. கல்வி; learning.

     “துதி வாணி வீரம்” (பெருந்தொ. 418);.

   3. கலைமகள் (பிங்.);; Kalai-magal, as the Goddess of learning.

     “வாணியு மல்லிமென் மலரையனும்” (சீகாளத். பு. நான்மு. 147);.

   4. சரசுவதி நதி; the river Sarasvati.

     “கங்கை காளிந்தி வாணி காவிரி…. நதிகள்” (திரு.விளை.தல.11);.

   5. ஒலி தோன்றும் இடம்; source of vocal sounds.

     “நாபிக்கு நால்விரல் மேலே… வாணிக் கிருவிரலுள்ளே” (திருமந்.616);.

   6. கூத்துவகை (பிங்.);; a kind of dance.

 வாணி2 vāṇi, பெ.(n.)

   அம்பு (பிங்.);; arrow.

 வாணி3 vāṇi, பெ.(n.)

   அசமதாகம் (மலை.);; bishop’s weed.

 வாணி4 vāṇi, பெ.(n.)

   நீர் (வின்.);; water.

 வாணி5 vāṇittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   அமைத்தல்; to formmake.

     “மன்னுதிரு வெண்மணலை வாணித்து” (இலஞ்சி. முருகனுலா,37);.

 வாணி6 vāṇi, பெ.(n.)

   1. சாதிபத்திரி; mace.

   2. ஓமவகை; a variety of omum.

   3. வாணிகம் பார்க்க;see {}.

   4. மனோசிலை; red orpiment.

   5. கோழை நீர்; mucilage.

   6. இந்துப்பு; epsom salt.

   7. வாலுளுவையரிசி; seed of a plant-Celastrus paniculata.

   8. முடிமாமிசம்; flesh of the head.

வாணிகச்சம்

 வாணிகச்சம் vāṇigaccam, பெ.(n.)

   வறட்சுண்டி; a species of sensitive plant-Mimosa tripuctra.

வாணிகச்சாத்து

வாணிகச்சாத்து vāṇigaccāttu, பெ.(n.)

   வாணிகர்திரள்; caravan of traders.

     ‘வாணிகச் சாத்தோடு போந்து தனிமையால் யான் துயருழந்தேன்’ (சிலப்.11, 190, உரை);.

     [வாணிகம் + சார்த்து → சாத்து. (சாத்து = கூட்டம், வணிகக்கூட்டம்.);]

வாணிகச்சி

 வாணிகச்சி vāṇigacci, பெ. (n.)

   வணிக இனப் பெண்; woman of the trading caste.

     [வாணிகன் → வாணிகச்சி]

வாணிகன்

வாணிகன் vāṇigaṉ, பெ.(n.)

   1. பல பண்டங்களை விற்பவன்; merchant, trader.

     “அறவிலை வாணிகன்” (புறநா.134);.

   2. வணிகன்; man of the trading caste.

   3. துலாக்கோல் (பிங்.);; scales, balance.

   4. துலாவோரை (சூடா.);; libra of the zodiac.Or. {}. m. vanijar.

     [பண்ணியம் → பண்ணியன் → பண்ணிகன் → பணிகன் → வணிகன் → வாணிகன் (பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள், விற்பனைப் பண்டம்);. (த.வ.1., பக்.58);]

வாணிகம்

வாணிகம்1 vāṇigam, பெ.(n.)

   1. கொண்டு கொடுத்தற் தொழில்; trade.

     “வாணிகம் செய்வார்க்கு வாணிகம்” (குறள். 120);.

   2. ஊதியம்; gain, profit.

     “யானோர் வாணிகப் பரிசிலனல்லேன்” (புறநா.208);.

     [வணிகன் → வணிகம் → வாணிகம்]

நாகரிக மக்கள் வாழ்க்கைக்கு, உணவு போன்றே உடை, கலம், உறையுள், ஊர்தி முதலிய பொருள்களும், பொன் வெள்ளி முதலிய செல்வமும்

இன்றியமையாதிருப்பதால், பொருளாட்சித் துறையில், ஒரு நாட்டின் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது உழவுத் தொழிலென்றும் அதற்கடுத்தவை இயற்கையும் செயற்கையுமான விளை பொருள்களால் செய்யப்படும் பல்வேறு கைத்தொழில்களென்றும், அவற்றிற்கடுத்தது நிலவழியும் நீர்வழியும் நடத்தப் பெறும் வணிகமென்றும், பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால் மூவேந்தரும் இருவகை வணிகத்தையும் ஊக்குதற்குச் சாலைகளும் துறைமுகங்களும் அமைத்தும் அவற்றைப் பாதுகாத்தும் வந்தனர்.

வணிகம் என்பது

     ‘வணிஜ்’ என்றும் வாணிகம் என்பது

     ‘வாணிஜ்ய’ என்றும் வடமொழியும் திரியும்.

நாட்டிற்கு உள்ளிருந்து ஆட்சியைச் செவ்வையாய்ச் செய்தற்கு ஒரு மருதநிலத் தலைநகரும், நாட்டோரத்தில் கடற்கரையிலிருந்து நீர்வாணிகத்தை ஊக்குதற்கு ஒரு நெய்தல் தலைநகருமாக, இரு தலைநகரை மூவேந்தரும் தொன்றுதொட்டுக் கொண்டிருந்தனர்.

வேந்தன் – மருதத் – நெய்தல்

தலைநகர் தலைநகர்

பாண்டியன் – மதுரை – கொற்கை

சோழன் – உறையூர் – புகார்

சேரன் – கருவூர்(கரூர்); – வஞ்சி.

முதலிரு கழக நூல்களும் முற்றும் அழிந்து போனமையால், பாண்டியரின் இடைக்கழகக் கால மருதநிலத் தலைநகரும் தலைக்கழகக் கால நெய்தல்நிலத் தலைநகரும் அறியப்படவில்லை. சேரர் கொங்கு நாட்டை இழந்த பின்னர், வஞ்சிக்கே கருவூர்ப்பெயரை இட்டுக் கொண்டனர்.

கோநகர்களிலும் துறை நகர்களிலும் இருந்து, நில வணிகமும், நீர் வணிகமும் செய்து வந்த நகரத்தார் அல்லது நகரமாந்தர் என்னும் வகுப்பினரை, எண்பேராயங்களுள் ஓராயமாகக் கொண்டு, அவரை மன்னர்

     ‘பின்னோர்’ என்று சிறப்பித்தும் அவருள் தலைமையானவர்க்கு

     ‘எட்டிப்பட்டம்’ வழங்கியும், மூவேந்தரும் ஊக்கி வந்தனர்.

     ‘எட்டிப்பட்ட’ச் சின்னமாக ஒரு பொற்பூ அளிக்கப்பெறும்.

     “எட்டிப் பூப் பெற்று” (மணிமே.22:113);

எட்டிப்பட்டம், அதைப் பெற்றிட்ட வணிகனின்

மனைவிக்கும் அல்லது மகட்கும் மதிப்புரவுப் பட்டமாக (Title of courtesy); வழங்கி வந்ததாகப் பெருங்கதை கூறுகின்றது.

     “எட்டி காவிதிப் பட்டம் தாங்கிய

மயிலியன் மாதர்” (பெருங். இலாவா. 3:144);

எட்டிப் பட்டத்தார்க்கு, எட்டிப் புரவு என்னும் நிலமானியமும் அளிக்கப் பட்டதாக மயிலைநாதர் உரை குறிக்கும் (நன். 158);.

     “கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி”

என்னும் உலகவழக்குத் தொடர் மொழியால் கோடிப் பொன் தேடிய செல்வர்க்குக் கொடியும் ஒன்று கொடுக்கப் பெற்றதாகத் தெரிகின்றது.

எட்டுதல் = உயர்தல். எட்டம் = உயரம். எட்டி = உயர்ந்தோன். எட்டி = செட்டி. (முதன் மெய்ப்பேறு);

ஒநோ: ஏண் – சேண்.

ஏமம் – சேமம்.

செட்டியின் தன்மை செட்டு.

சிரேஷ்டி என்னும் வடசொல், திரு என்னும் தமிழ்ச் சொல்லின் திரியான ச்ரீ (ஸ்ரீ); என்பதன் உச்சத்தர (Superlative degree); வடிவினின்று திரிந்ததாகும்.

ஒப்புத்தரம் – உறழ்தரம் – உச்சத்தரம்

ச்ரீ (ஸ்ரீ); ச்ரேயஸ் ச்ரேஷ்ட

நிலவாணிகம்

நிலவாணிகர் வணிகப் பண்டங்களைக் குதிரைகள் மேலும் கோவேறு கழுதைகள் மேலும் ஏற்றிக் கொண்டு கூட்டம் கூட்டமாய்க் காட்டு வழியே தமிழகத்தை யடுத்த வடுக நாட்டிற்கும், நெடுந் தொலைவான வடநாட்டிற்கும் காவற் படையுடன் சென்று ஏராளமாய்ப் பொருளிட்டி வந்தனர். அவ்வணிகக் கூட்டங்களுக்குச் சாத்து என்று பெயர். சாத்து – கூட்டம். சார்த்து → சாத்து. சார்தல் – சேர்தல்.

சாத்து =

   1. கூட்டம்.

     “சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்”

   2. வணிகக் கூட்டம்.

     “சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்” (சிலப். 11:190);, சாத்து என்பது வடமொழியில் ஸார்த்த என்ற திரியும்.

வணிகச் சாத்துகளின் காவல் தெய்வமாகிய ஐயனார்க்கு சாத்தன் என்று பெயர். அதனால் வணிகர்க்குச் சாத்தன், சாத்துவன் என்னும் பெயர்கள் இயற்பெயராய் வழங்கின. ஐயனார் கோயிலில் வணிகச் சாத்தைக் குறித்தற்கு மண்குதிரை யுருவங்கள் செய்து வைத்திருத்தலைக் காண்க. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில்

     ‘சாஸ்தா’ எனத் திரியும்.

இனி, வணிகச் சாத்தின் தலைவனும் சாத்தன் எனப்படுவான். இப்பெயரும்

     ‘ஸார்த்த’ என்றே வடமொழியில் திரியும். இதனால் வடமொழியில் சாத்தைக் குறிக்கும் சொற்கும் சாத்தின் தலைவனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.

     “குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழி பெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே”

என்னும் குறுந்தொகைச் செய்யுள், வடுக நாட்டிற்கும்,

     “நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்

தங்கலர் வாழி தோழி !

……………………………………………………………..

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி யுருளிய குறைத்த

இலங்குவெள் எருவிய அறைவா யும்பர்

மாசில் வெண்கோட் டண்ணல் யானை

வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி

மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு

காப்பில வைகும் தேக்கமல் சோலை

நிரம்பா நீளிடைப் போகி

அரம்போழ் அவ்வளை நிலை நெகிழ்த் தோரே” (அகநா. 25);.

என்னும் நெடுந்தொகைச் செய்யுள், விந்திய மலைக்கப்பாற்பட்ட வடநாட்டிற்கும், வாணிகச் சாத்துகள் போய் வந்தமையைக் குறிப்பாற் றெரிவித்தல் காண்க.

நீர்வாணிகம்

     “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ” (அகம். 255 : 1-2);

என்பதால் கடலைப் பிளந்து செல்லும் மாபெரும்

கப்பல்கள் தமிழகத்திற் செய்யப்பட்டமை அறியப்படும்.

கப்பல்கள் தங்கும் துறைமுகத்தைச் சேர்ப்பு, கொண்கு என்பது இலக்கியவழக்கு.

கீழ்க் கடற்கரையில் கொற்கை, தொண்டி, புகார் (காவிரிப் பூம்பட்டினம்); என்னும் துறைநகர்களும், மேல் கடற்கரையில் வஞ்சி, முசிறி, தொண்டி என்னும் துறைநகர்களும் இருந்தன. இடைக் கழகக் காலத்தில் பாண்டியர் துறைநகர் குமரியாற்றின் கயவாயில் (estuary); அமைந்திருந்தது. அதன் தமிழ்ப்பெயர் (அலைவாயில்); மறைந்து அதன் மொழிபெயர்ப்பான கபாடபுரம் என்னும் வடசொல்லே இன்று இலக்கிய வழக்கிலிருக்கிறது.

இரவில் வழிதப்பிச் செல்லும் கலங்கட்கு வழிகாட்டுவற்கு, ஒவ்வொரு துறைநகரிலும் கலங்கரை விளக்கம் (light house); இருந்தது.

     “இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்” (சிலப். 6 : 141);.

     “வான மூன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத் தோடு கலங் கரையும்

துறை” (பெரும்பாண்.349-54);.

கடற்கரை, உள்நாட்டை நோக்க மிகத் தாழ்ந்த மட்டத்திலிருப்பதால், துறை நகர்கள் எல்லாம் பட்டினம் எனப்பட்டன.

பதிதல் = தாழ்ந்திருத்தல். பள்ளமான நிலத்தைப் பதிந்த நிலம் என்பர். பதி + அனம் = பதனம் =→ பத்தனம் → பட்டனம் → பட்டினம்.

தகரம் டகரமாவது வழக்கு.

ஓ.நோ. கொத்து மண்வெட்டி → கொட்டு மண்வெட்டி.

களைக் கொத்து → களைக் கொட்டு

பொத்து → பொட்டு, பொருத்து.

வீரத்தானம் (வ.); → வீரட்டானம் பதனம் – படனம் = நோயாளியைப் பாதுகாத்தல்.

இனி, பதனம் என்பது, கலங்கள் காற்றினாலும் கொள்ளைக்காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாய் இருக்குமிடம் என்றுமாம்.

பதனம் = பாதுகாப்பு

பட்டினம் என்பதைப் பட்டணம் என்பது உலக

வழக்கு. இக்காலத்திற் பட்டணம் என்பது சென்னையைச் சிறப்பாய்க் குறித்தல் போல, அக்காலத்தில் பட்டினம் என்பது புகாரைச் சிறப்பாய்க் குறித்தது. பட்டினப்பாலை, பட்டினத்துப் பிள்ளையார் என்னும் வழக்குகளை நோக்குக.

ஒரு திணைக்கும் சிறப்பாயுரியதன்றி நகரப் பொதுப் பெயராய் வழங்கும் பதி என்னும் சொல், மக்கள் பதிவாய் (நிலையாய்); இருக்கும் இடத்தைக் குறிக்கும். பதிதல் நிலையாய்க் குடியிருத்தல்.

கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும்போதும் அதைவிட்டுப் புறப்படும்போதும் முரசங்கள் முழக்கப்பட்டன.

     “இன்னிசை முரசமுழங்கப்

பொன் மலிந்த விழுப்பண்டம்

நாடார நன்கிழி தரும்

ஆடியற் பெருநாவாய்” (மதுரைக்.80-3);.

கப்பலில் வந்த பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளாற் கரை சேர்க்கப்பட்டன.

     “கலந்தந்த பொற்பரிசம்

கழித் தோணியாற் கரை சேர்க்குந்து” (புறநா. 343 : 5-6);.

அக்காலத்தில் காவிரியாறு அகன்றும் ஆழ்ந்தும் இருந்ததால் பெருங் கப்பல்களும் கடலில் நிற்காது நேரே ஆற்றுமுகத்திற் புகுந்தன.

     “……………………… கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறநா. 30 : 1௦ – 2);.

     “பாய் களையாது பரந்தோண்டா தென்பதனால் துறை நன்மை கூறியவாறாம்” என்று பழைய வுரை கூறுதல் காண்க.

கரிகால் வளவன் காவிரிக்குக் கரை கட்டியது இங்குக் கருதத்தக்கது.

நீர் வணிகம் நிரம்ப நடைபெற்றதால், துறைமுகத்தில் எந்நேரமும் கப்பல்கள் நிறைந்திருந்தன.

     “வெளி விளங்கும் களிறு போலத்

தீம்புகார்த் திரை முன்றுறைத்

தூங்கு நாவாய் துவன்றிருக்கை” (பட்டினப்.172-4);

ஏற்றுமதியும் இறக்குமதியும் ஏராளமாய் இருந்ததால் நாள்தோறும் ஆயத்துறைக் கணக்கர் மூடைகளை நிறுத்து உல்கு (சுங்கம்); வாங்கி, வேந்தன் முத்திரையைப் பொறித்துக் குன்றுபோற் குவித்து வைத்திருந்தனர். அவற்றிற்குக்

கடுமையான காவலிருந்தது.

     “வைகல் தொறும் அசைவின்றி

உல்குசெய் குறைபடாது

………………………………………………..

நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர் பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

அருங்கடிப் பெருங்காப்பின்

வலியுடை வல்லணங்கினோன்

புலி பொறித்துப் புறம்போக்கி

மதி நிறைந்த மலிபண்டம்

பொதி மூடைப் போரேறி

மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்

வரையாடு வருடைத் தோற்றம் போல”

பல நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பொருள்கள் காவிரிப்பூம்பட்டினக் கடை மறுகில்

மண்டிக் கிடந்தன.

     “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

நீர் வாணிகத்தின் பொருட்டு, பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு நாட்டு மக்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வந்து கலந்தினிது வாழ்ந்தனர்.

     “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (பட்டினப். 216-8);.

     “கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்

பயனற வறியா யவனர் இருக்கையும்

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்கு நீர் வரைப்பும்”

யவனர் = கிரேக்கர். பின்பு உரோமரும் யவனர் எனப்பட்டார்.

மேலையாரியக் கலப்பெயர்கள்

கலங்கள் முதன் முதல் தமிழகத்திலேயே செய்யப்பட்டன. அதனால், பல கடல்துறைச் சொற்களும் கலத்துறைச் சொற்களும், மேலையாரியத்திலும், கீழையாரியத்திலும் தமிழாயிருக்கின்றன.

வாரி = நீர், பெரிய நீர் நிலையான கடல். L. mare, skt. வாரி, வாரணம் = கடல். L. marinus. E. marina. Skt. varuna (வாருண); வார்தல் = நீள்தல். வார் – வாரி. ஒ.நோ. நீள் – நீர். வார் – வாரணம். பெரிய நீர்நிலை அல்லது வளைந்த நீர்நிலை. கரை = கடற்கரை.

     “நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப” (நாலடி. 224);

 E. shore = Land that skirts sea or large body of water. (C.O.D);.

 c(k);-sh = ஒ.நோ : L. curtus – E. short. படகு – LL. barca, GK. baris. E. short, ML. barga, variation of barca. E. barge ட- ர. ஒ.நோ. பட்டடை – பட்டரை, அடுப்பங்கடை – அடுப்பங்கரை, படவர் – பரவர்.

கொடுக்கு – ME. croc = ON krokr.

 E. Crook. குடகு – E. coorg.

நாவாய் – L. navis, GK. naus, skt. nau. E. navy (கப்பற்படை);

நாவுதல் – கொழித்தல். நாவாய் கடல்நீரைக் கொழித்துச் செல்வது.

     “வங்கம்………… நீரிடைப் போழ” (255 : 1-2); என்னும் அகப்பாட்டுப் பகுதியை நோக்குக.

கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகிலும் நிலவழியாய் ஆடுமாடுகளை ஒட்டிக் கொண்டு வந்தவருமாகிய இந்திய ஆரியர், நெள என்னும் (படகைக் குறிக்கும்); வடசொல்லினின்று நாவாய்ச் சொல் வந்ததென்பது

     ‘வாழைப்பழத் தொலியை நட்டால் வாழை முளைக்கும்’ என்பது போன்றதே.

கப்பல் – L. seapha, GK. skaphos, Ger. schiff, OHG – scif.os., ON., lce-Goth, skip. OE. Scip. F. esquif. sp., port, esquife. IT schifo. E. skiff ship.

கப்புகள் (கிளைகள்); போன்ற பல பாய்மரங்களை யுடையது கப்பல்.

 L. galea, Gk. galaia, E.galley, galleon முதலிய சொற்களும் கலம் என்னும் தென்சொல்லோடு ஒப்பு நோக்கத் தக்கன.

 OS., OE. segal. OHG. segal. ON. segl. E.sail என்னும் சொற்களும் சேலை என்பதை

ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது.

இங்ஙனம், கட்டுமரம் (E. catamaran); முதல் கப்பல் வரை, பலவகைக் கலப்பெயர்கள்

மேலையாரிய மொழிகளில் தமிழாயுள்ளன.

நங்கூரம் – L.ancora. Gk. angkyra. Fr. ancre. E. anchor. Pers. Langar.

கவடி — Е. cowry.

மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருட்பெயர்கள்

தோகை (மயில்); Heb.tuki

 Ar. tavus

 L. pavus, E. pea (cock, hen);

அரிசி – Gk., L. Oruza

 lt. riso, OF. ris, E. rice.

இஞ்சிவேர் – Gk – ziggiberis

 L. zingiber

 OE. gingiber

 E. ginger

 Skt. Srungavera

இஞ்சிவேர் என்பது தெளிவாயிருக்கவும், வடமொழியாளர் (ச்ருங்ககொம்பு, வேர-வடிவம்); மான்கொம்பு போன்றது என்று தமிழரை ஏமாற்றியதுமன்றி, மேலையரையும் மயக்கியிருப்பது வியக்கத்தக்கதே.

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல்

திப்பிலி – Gk. peperi. ON, pipar. OHG, pfeffar. L. piper. OE. piper. E. pepper. skt. pippali.

பன்னல் (பருத்தி); – L. punnus, cotton. It. panno, cloth.

கொட்டை (பஞ்சுச் சுருள்); – Ar qutun, lt, cotone. Fr. coton, E. cotton.

கொட்டை நூற்றல் என்பது பாண்டி நாட்டு வழக்கு.

நாரந்தம் (நாரத்தை); – Ar. pers. Naranj. Fr. lt, arancio, E. orange.

கட்டுமரம், கலிக்கோ (calico);, தேக்கு (teak); பச்சிலை (pac houli); வெற்றிலை (betel); முதலிய சொற்கள் கிழக்கிந்தியக் குழும்பார் காலத்திற் சென்றனவாகும்.

கோழிக்கோட்டிலிருந்து (calicut); ஏற்றுமதியான துணி கலிக்கோ எனப்பட்டது.

குமரிக்கண்டத் தமிழக் கலவரும் கடலோடிகளும் உலக முழுவதும் கலத்திற் சுற்றினமை வடவை (Aurora Borealis); என்னும் சொல்லாலும், தமிழர் கடல் வணிகத் தொன்மை,

     “முந்நீர் வழக்கம் மகடூஉ வோ டில்லை”

     (தொல்.980);

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அரபி நாட்டுக் குதிரையும் ஒட்டகமும் தொல்காப்பியத்திற் குறிக்கப்படுவதாலும், உணரப்படும்.

பேரா. நீலகண்ட சாத்திரியாரும் தாம் எழுதிய திருவிசய (Sri vijay); நாட்டு வரலாற்றுத் தோற்றுவாயில்,

     “The more we learn the further goes back the history of eastern navigation and so far as we know, the Indian Ocean was the first centre of the oceanaic activity of man” என்று தமிழர் முதன்முதல் இந்துமாவாரியிற் கலஞ் செலுத்தியதையும் அவர் கடல் வாணிகத் தொன்மையையும் கூறாமற் கூறியிருத்தல் காண்க.

     “யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

என்பது கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றதையும்,

     “விழுமிய நாவாய் பெருநீர் ஒச்சுநர்

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ

டனைத்தும்” (-மதுரைக். 321-23);

என்பது அரபியரும் பிறரும் குதிரை கொண்டு வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும் கூறும். -பாவாணர். (பண்டைத் தமிழர் நாக. பண். பக்.91-100);

மேலும்,

     “கொடுமேழி நசையுழவர்

நெடுநுகத்துப் பகல்போல

நடுவு நின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவும் ஒப்பநாடிக்

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறை கொடாது

பல் பண்டம் பகர்ந்து வீசும்” (பட்டினப். 205–21);.

வாணிகம் கொள்வனையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும் பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தராமையாலும்,

மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடு மில்லா நல்வாணிகமாம்”.

-பாவாணர். திருக் மரபு. பக்.103.

     “வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்பேணிப்

பிறவுந் தமபோற் செயின்” (திருக். 120);.

 pa. {};

 pk. {}. Ku. {}, or. Banija;

 Marathi. {}.

 வாணிகம்2 vāṇigam, பெ.(n.)

   ஓமவகை; carum roxburghiana.

வாணிகவென்றி

வாணிகவென்றி vāṇigaveṉṟi, பெ.(n.)

   வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக் கூறும் புறத்துறை (புற.வெ.12, ஒழிபு,2);; theme describing the selfless benefactions of a merchant who has risen to prominence by his success in business.

     [வாணிகம் +வென்றி]

வாணிகேள்வன்

 வாணிகேள்வன் vāṇiāḷvaṉ, பெ.(n.)

நான்முகன் (சூடா);;{}.

     [வாணி + கேள்வன்]

வாணிச்சி

வாணிச்சி vāṇicci, பெ.(n.)

   1. வாணிகச்சி பார்க்க;see {}.

     “மதுரையிற் பிட்டு வாணிச்சி மகற்கு” (தொல்.பொ.84, உரை); (நன்.144, மயிலை);.

   2. வாணியச்சி பார்க்க;see {}.

     [வாணியன் → வாணிச்சி]

வாணிச்சிமேனி

 வாணிச்சிமேனி vāṇiccimēṉi, பெ.(n.)

   மாணிக்கம் (யாழ்.அக.);; ruby.

     [வாணிச்சி + மேனி]

வாணிச்சியம்

 வாணிச்சியம் vāṇicciyam, பெ.(n.)

   வணிகம் (வின்.);; trade.

வாணிதம்

வாணிதம் vāṇidam, பெ.(n.)

   1. கள்; toddy.

   2. அகத்தி; a tree – Sesbania grandiflora alias coronilla grandiflora.

 வாணிதம்1 vāṇidam, பெ.(n.)

   மணல் போன்று நுண்ணிதாயிருக்குஞ் சருக்கரை (நாமதீப. 409);; fine sugar.

வாணிதி

வாணிதி1 vāṇidi, பெ.(n.)

வாணினி, 1,2 (யாழ்.அக.); பார்க்க;see {}.

 வாணிதி2 vāṇidi, பெ.(n.)

   1. மனோசிலை; red orpiment;

 red arsenic.

   2. மூங்கில்; bamboo.

வாணினி

வாணினி vāṇiṉi, பெ.(n)

   1. நாடகக்கணிகை (வின்.);; dancing woman.

   2. நாணமற்றவள் (வின்.);; immodest woman.

   3. நுண்ணறிவு உள்ளவள் (யாழ்.அக.);; clever woman.

வாணிபன்

வாணிபன் vāṇibaṉ, பெ.(n.)

வாணிகன், 1 பார்க்க;see {}.

     [வாணிகன் → வாணியன்]

வாணிமன்

வாணிமன் vāṇimaṉ, பெ.(n.)

நான்முகன்;{}.

     “பாணியாற் படைத்திலன் வாணிமன்’ (பாகவத.1, கண்ணபிரான் துவரை,25);.

     [வாணி + மன்]

வாணிமலர்

 வாணிமலர் vāṇimalar, பெ.(n.)

   வெண்டாமரை (மூ.அ.);; white lotus.

     [வாணி + மலர்]

வாணியச்சி

 வாணியச்சி vāṇiyacci, பெ. (n.)

   செக்கார் இனப்பெண்; woman of the oil-monger caste.

     [வாணியன் (ஆ.பா.); → வாணியச்சி (பெ.பா.);]

வாணியன்

வாணியன் vāṇiyaṉ, பெ.(n.)

   1. வாணிகன். 1, 2 பார்க்க;see {}.

   2. செக்கான்; oil-monger.

வாணியன்தாதன்

வாணியன்தாதன் vāṇiyaṉtātaṉ, பெ.(n.)

   கம்பர் காலத்தில் அவர்க்கு எதிரியா யிருந்தவராகவும் செக்கார் குலத்தவராகவும் சொல்லப்படும் ஒரு புலவர் (தமிழ் நா.83);; a poet said to be of oil monger caste and a contemporary critic of Kampar.

வாணியன்பொருவா

வாணியன்பொருவா vāṇiyaṉporuvā, பெ.(n.)

   1. வெண்மையில் பொன்வரியும் கருநீல வரியும் உள்ள கடல்மீன்; anchovy silvery, shot with gold and purple.

   2. வெளிறின மஞ்சணிறமுள்ள கடல் மீன் வகை; anchory, bronze.

     [வாணியன் + பொருவா]

வாணியம்

வாணியம் vāṇiyam, பெ.(n.)

   1. வாணிகம், 1 (வின்.); பார்க்க;see {}.

   2. வாணிகம், 2 பார்க்க;see {}.

     “சிறுகாலை நாமுறுவாணியம்” (தேவா.259,3);.

வாணிலை

வாணிலை vāṇilai, பெ.(n.)

   பகைமேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை (பு.வெ.3,4);; theme of sending in advance at an auspicious moment the sword of a King who intends to advance against his enemies.

     [வாள் + நிலை]

வாணில்

 வாணில் vāṇil, பெ.(n.)

   பலண்டுருக நஞ்சு; a kind of arsenic.

வாணீகம்

 வாணீகம் vāṇīkam, பெ.(n.)

   மாழை நீர்மம்; metalic liquid.

வாணீசன்

 வாணீசன் vāṇīcaṉ, பெ.(n.)

நான்முகன் (யாழ்.அக.);;{}.

     [வாணி + ஈசன்]

 Skt. {} → த. ஈசன்.

வாணுதல்

வாணுதல் vāṇudal, பெ.(n.)

   1. ஒளி பொருந்திய நெற்றி; bright forehead.

     “வாணுதல் விறலி” (புறநா.89);.

   2. ஒள்ளிய நெற்றியுள்ள பெண்; woman with a bright forehead.

     “வாணுதல் கணவ” (பதிற்றுப்.38,10);.

     [வள் → வாள் + நுதல்]

வாண்டகன்று

 வாண்டகன்று vāṇṭagaṉṟu, பெ. (n.)

   குட்டி போடாத செம்மறி ஆடு; a barren sheep.

     [வறண்ட-வாண்ட+கன்று]

வாண்டியம்

வாண்டியம்1 vāṇṭiyam, பெ.(n.)

   பேராமுட்டி; a plant – pavonia odorata.

 வாண்டியம்2 vāṇṭiyam, பெ.(n.)

   செடிவகை; pink-tinged white sticky mallow.

வாண்டு

 வாண்டு vāṇṭu, பெ.(n.)

   மிகவும் குறும்பு செய்கிற குழந்தை; mischievous child.

     ‘விடுமுறை விட்டால் இந்த வாண்டுகளைச் சமாளிக்க முடியாது’.

வாண்டைக்கன்று

 வாண்டைக்கன்று vāṇṭaikkaṉṟu, பெ.(n.)

   மூன்று மாத அகவைக்கு மேற்படாத பல் முளைக்காத ஆடு; the lamb which has three months old and not sprouting of teeth.

     [வாண்டை + கன்று]

வாண்டையான்

 வாண்டையான் vāṇṭaiyāṉ, பெ.(n.)

   கள்ளர் இனத்தவரின் பட்டப் பெயர்களுள் ஒன்று; a title of the {} caste.

வாண்மங்கலம்

வாண்மங்கலம் vāṇmaṅgalam, பெ.(n.)

   1. பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டு தலைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.68, உரை);; theme which describes the sword of a victorious king being placed in the hands of {} and given a ceremonial bath.

   2. வீரனது வாள் வென்றியாற்.பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றம் அவன் வாளினை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை (தொல். பொருள். 91.);; theme which describes a victor’s sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter.

     [வாள் + மங்கலம்]

வாண்மண்ணுநிலை

வாண்மண்ணுநிலை vāṇmaṇṇunilai, பெ.(n.)

   நன்னீராலே மஞ்சனமாட்டிய அரச வாளின் வீரத்தைக் கூறும் புறத்துறை (பு. வெ. 6, 27);; theme which describes the ceremonial bath given to a king’s sword and the heroic achievements of the king with that sword.

     [வாள் + மண்ணுநிலை]

வாண்முகம்

வாண்முகம் vāṇmugam, பெ.(n.)

   வாளின் வாய்; edge of sword.

     “வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்” (பதிற்றுப்.58,3);.

     [வாள் + முகம்]

வாண்முட்டி

வாண்முட்டி vāṇmuṭṭi, பெ.(n.)

   வாளின் பிடி; handle or hilt of a sword.

     ‘வாண்முட்டியை இடையறும்படி பிடித்த கையினர்’ (சீவக. 2217, உரை);.

     [வாள் + முட்டி]

வாதப்பிடிப்பு

 வாதப்பிடிப்பு vātappiḍippu, பெ. (n.)

   ஊதையினால் ஏற்படும் எலும்புப் பொருத்துப் பிடிப்பு; contraction due to rheumatism. (சா.அக.);

     [வாதம் +பிடிப்பு]

வாதம்

வாதம் vātam, பெ. (n.)

   யாழ் கூறும் ஒருவகை குற்றம்; a kind of defect in the lute.

     [வாது-வாதம்]

 வாதம்1 vātam, பெ. (n.)

   1. சொல்; utterance.

     “எஞ்சலின் மந்திரவாதமன்றி” (பெரியபு. திருஞான. 911);.

   2. வாதம் முதலியவற்றில் ஒரு பக்கத்தை யெடுத்துக் கூறுகை; argument.

   3. எதிர்வாதம் (சூடா.);; disputation, contention.

     “வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்” (பெரியபு. திருஞான. 924);.

   4. உரையாடல் (யாழ். அக.);; conversation.

   5. பொன்னாக்க வித்தை (இரசவாதவித்தை);; alchemy.

     “வகரமாதி மூன்றாகிய வசியமே வாதம்” (திருவிளை. எல்லாம் வல்ல. 17.);.

   6. உச்சி வாதம்;   7. எரிவாதம்;   8. தானாத்திரம் வாதம்;   9. ஈரல் வாதம்;   10. கடுப்பு வாதம்;   11. முடங்கினி வாதம்;   12. திமிர் வாதம்;   13. முழங்கால் வாதம்;   14. கழல் வாதம்;   15. தண்டு வாதம்;   16. சுரோணித வாதம்;   17. குடல் வாதம்;   18. கிளிகை வாதம்;   19. குளிச வாதம்;   20. சூசிகா வாதம் இதன்றியும் வாதம் மேலும் 80 வகையாம்

 vatha disease are 80, names of some are given above. (சா.அக.);.

     [Skt. {} → த. வாதம்]

 வாதம்2 vātam, பெ. (n.)

   1. காற்று (பிங்.);; wind, air.

மாவாதஞ் சாய்த்த மராமரமே போல்கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99);.

   2. உடலில் வளி மிகுதலாகிய பிணிக்கூறு (பிங்.);; windy humour of the body.

     “வாதபித்த கபமென ….. மூவரும் …… நலித்தனர்” (உத்தரரா. அரக்கர் பிறப். 31.);.

த.வ. வளி, ஊதை

     [Skt. {} → த. வாதம்2]

 வாதம்3 vātam, பெ. (n.)

வில்வம் (மலை);;பார்க்க;see bael.

     [Skt. {} → த. வாதம்3]

வாதவூரர்

வாதவூரர் vātavūrar, பெ.(n.)

மாணிக்க வாசகர் பார்க்க;see {}, a saiva saint as born in Tiru-{} in Madurai District.

     “வாதவூர ரடியிணை போற்றி” (திருவாலவா.கடவுள்.21);.

     [வாதவூர் → வாதவூரர்]

வாதவூரர்ஆனந்தக்களிப்பு

வாதவூரர்ஆனந்தக்களிப்பு vātavūrarāṉandakkaḷippu, பெ.(n.)

   சுந்தர முதலியாரால் இயற்றப்பட்ட 20ஆம் நூற்றாண்டு நூல்; a book written by Sundaramudaliar in 20th century.

     [வாதவூரர் + ஆனந்தம் + களிப்பு]

வாதவூர்

வாதவூர் vātavūr, பெ.(n.)

   மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளதும், மாணிக்க வாசகர் பிறந்தகமுமாகிய சிவத்தலம்; one of the saiva places having the distinction of being sung by saint {}, and birth place of Manikkavasagar. It is in Madurai District.

     “வாதவூரினிற் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” (திரு.கீர்த்.52-53);.

வாதாவி

வாதாவி1 vātāvi, பெ. (n.)

   1. வாதாபி1 பார்க்க;see {}.

     “இளவல் வாதாவி யென்போன்” (கந்தபு. வில். வாதா. வதைப். 2);.

   2. மேலைச்சாளுக்கியரின் தலைநகர்;{},

 the capital of the Western Calukyas.

     “வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக” (பெரியபு. சிறுத்தொண்.6.);.

     [Skt. {} → த. வாதாவி]

வாதி

வாதி1 vātittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. வருத்துதல்; to torment, afflict, trouble.

     “மாவலி வாதிக்க வாதிப்புண்டு” (திவ். திருவாய். 7,5,6);.

   2. தடுத்தல்; to hinder, obstruct.

     “தத்தங் குடிமையான் வாதிப்பட்டு” (நாலடி.66.);.

த.வ. நலிதல்

     [Skt. {} → த. வாதி1-த்தல்]

 வாதி2 vātittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   வாதாடுதல்; to argue, dispute, to asseverate.

த.வ. எதிராடல்

     [Skt. {}, → த. வாதித்தல்]

 வாதி3 vāti, பெ. (n.)

   1. எடுத்துப்பேசுபவன்; one who advocates.

     “சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணி செய்” (தேவா. 391,4);.

   2. சொற்போரிடுபவன்; disputant, debater.

     “வாதிகையன்ன கனவக்கதி ரிறைஞ்சி” (மலைபடு. 112.);

   3. வழக்குத் தொடுப்போன்; complainant, plaintiff;opp. to pirati-{}.

   4. புலமையோர் நால்வருள், வாதில் ஏதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டிப் பிறர்கோள் மறுத்துக் தன்கொள்கையை நிலைநிறுத்துவோன்;(யாப். வி. பக். 514.); (பிங்.);; scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four {}, q.v.

   5. பொன்னாக்கம் செய்பவன்; alchemist.

     “தோன்றினன் மனமருள் செய்வதோர் வாதி” (கந்தபு. பார்க். 116.);.

     [Skt. {} → த. வாதி1]

வாதினிலா

 வாதினிலா vātiṉilā, பெ.(n.)

சேவகனார் கிழங்கு பார்க்க;see {}.

வாது

வாது1 vādudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அறுத்தல்; to cut, tear open.

     “வாது வல்வயிறே வாதுவல் வயிறே” (தொல். பொருள். 79, உரை, பக்.292);.

 வாது2 vātu, பெ.(n.)

   மரக்கிளை (இ.வ.);; branch of a tree.

வாதுமை

வாதுமை vātumai, பெ. (n.)

   1. மரவகை; common almond, m, tr., prunus amygdalus.

   2. நீண்ட மரவகை; Indian almond, 1, tr., termin-alia ctappa.

     [Skt. {} → த. வாதுமை]

வாதுளம்

வாதுளம் vātuḷam, பெ. (n.)

   சிவத்தோன்றியங்கள் (சிவாகமம்); இருபத்தெட்டனுளொன்று; an ancient {} scripture in Sanskrit, one of 28 {}, q.v.

     “வாதுள முதலிய தந்திரத் தொகுதி” (கந்தபு. சூனமைச். 129);.

     [Skt. {} → த. வாதுளம்]

வாதுவன்

வாதுவன் vātuvaṉ, பெ. (n.)

   1. குதிரைப்பாகன்; groom.

     “காழோர் வாதுவர்” (சிலப். 22, 12);.

   2. யானைப்பாகன் (பிங்.);; mahout.

     [Skt. {} → த. வாதுவன்]

வாதை

வாதை vātai, பெ. (n.)

   1. துன்பம்; affliction, torment, distress.

     “வாதைப் படுகின்ற வானோர்” (தேவா. 570,2,);.

   2. துன்பம் (வேதனை); செய்யும் நோய். (பிங்.);; painful disease.

     [Skt. {} → த. வாதை]

வாத்தன்று

 வாத்தன்று vāttaṉṟu, பெ.(n.)

   எருக்கிலை; leaf of madar – calotrois gigantia.

வாத்தாடு

வாத்தாடு vāttāṭu, பெ.(n.)

   கூரையின் ஓரம் (கட்டட.நாமா.20);; eaves.

     [வாய்த்தடு → வாய்த்தாடு → வாத்தாடு]

வாத்தாட்டுப்பலகை

 வாத்தாட்டுப்பலகை vāttāṭṭuppalagai, பெ.(n.)

வாய்த்தட்டுப்பலகை பார்க்க;see {}.

     [வாய்த்தாடு → வாத்தாடு + பலகை]

வாத்தின்விந்து

 வாத்தின்விந்து vāttiṉvindu, பெ.(n.)

   கற்பூரச் சீலை; ammonia – Alum.

வாத்தியச்சுரை

 வாத்தியச்சுரை vāttiyaccurai, பெ.(n.)

   கின்னரிச் சுரை; bottle gourd used for making musical instruments.

     [வாச்சியம் → வாத்தியம் + சுரை]

வாத்தியபாண்டம்

வாத்தியபாண்டம் vāttiyapāṇṭam, பெ.(n.)

   1. இசைக்கருவி; musical instrument.

   2. வீணை; lute.

     [வாச்சியம் → வாத்தியம் + பண்டம் → பாண்டம்]

வாத்தியப்பெட்டி

வாத்தியப்பெட்டி vāttiyappeṭṭi, பெ.(n.)

   1. ஒத்தியப் பெட்டி; harmonium.

   2. இசை மீட்டும் வடிவான கருவி; music-box as piano etc.

     [வாச்சியம் → வாத்தியம் + பெட்டி]

வாத்தியம்

 வாத்தியம் vāttiyam, பெ.(n.)

   இசைக்கருவி; musical instrument.

     [வாச்சியம் → வாத்தியம்]

 வாத்தியம் vāttiyam, பெ. (n.)

   இன்னியம்; musical instrument.

     [Skt. {} → த. வாத்தியம்.]

வாத்தியம்பண்ணு-தல்

வாத்தியம்பண்ணு-தல் vāddiyambaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   நகராமுழக்குதல் (வின்.);; to beat the kettle drum.

     [வாத்தியம் + பண்ணு-,]

வாத்தியார்

 வாத்தியார் vāttiyār, பெ. (n.)

   ஆசிரியர்; teacher.

     [Skt. {} → த. வாத்தியார்.]

வாத்து

வாத்து1 vāddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வாழ்த்து-, பார்க்க;see {}.

   2. கண்ணேறு கழிக்க மணமக்கள் முன் மஞ்சள் நீரால் ஆலத்தி சுற்றுதல் (இ.வ.);; to wave saffron water before the bridel pair toward off the evil eye.

 வாத்து2 vāttu, பெ.(n.)

   1. தாரா (பதார்த்த. 873);; duck.

   2. பெருந்தாரா; goose.

க. பாது.

வகைகள் :-

   1. செண்டு வாத்து,

   2. கருவால் வாத்து,

   3. புள்ளிமூக்கு வாத்து,

   4. ஆண்டி வாத்து,

   5. குள்ள வாத்து,

   6. ஊசிவால் வாத்து.

 வாத்து3 vāttu, பெ.(n.)

   மரக்கொம்பு (வின்.);; branch of a tree.

வாத்துகா

 வாத்துகா vāttukā, பெ.(n.)

   மெழுகு பீர்க்கை; loofa-luffa aegyptiaca.

     [வாத்து + கா]

வாத்துக்கறி

 வாத்துக்கறி vāttukkaṟi, பெ.(n.)

   நோயை அதிகரிக்கும் வாத்தின் கறி; flesh of goose not good for health, brings on several diseases.

     [வாத்து + கறி]

வாத்துக்கொழுப்பு

 வாத்துக்கொழுப்பு vāttukkoḻuppu, பெ.(n.)

   பெருந்தாராக் கொழுப்பு; adeps amserensis.

     [வாத்து + கொழுப்பு]

வாத்துபோதம்

வாத்துபோதம் vāttupōtam, பெ.(n.)

   சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று (இரு சமய. உலக வழக்க.சிற்ப.3.);; a treatise on architecture, one of 32 {}.

     [வாத்து + போதம்]

வாத்துமாதனம்

 வாத்துமாதனம் vāttumātaṉam, பெ.(n.)

   இரு கால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கை யூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் இருக்கை வகை (யாழ்.அக.);; a kind of posture, in which the body is supported on an elbow, the two legs and one arm being stretched out and the head held erect.

வாத்துமுட்டை

 வாத்துமுட்டை vāttumuṭṭai, பெ.(n.)

   வாத்து இடும் முட்டை; egg of goose.

     [வாத்து + முட்டை]

வாந்தி

வாந்தி vāndi, பெ. (n.)

   கக்கல்;(நாமதீப. 600.);; vomiting, ejecting from the mouth.

த.வ. வாயாலெடுத்தல், உமித்தல்

     [Skt. {} → த. வாந்தி1]

வாந்திசுரதாகநாசனி

 வாந்திசுரதாகநாசனி vāndisuratākanāsaṉi, பெ.(n.)

   வெட்டிவேர்; Khus Khus vetiveria, zizanioides.

     [வாந்தி + சுரதாக (ம்); + நாசனி. Skt. நாசனி]

வாந்திசோதினி

 வாந்திசோதினி vāndicōtiṉi, பெ.(n.)

   கருஞ் சீரகம்; black cumin – Nigella sativa.

வாந்திபேதி

 வாந்திபேதி vāndipēti, பெ. (n.)

   நச்சுக் கழிச்சல் நோய் (இக்.வ.);; cholera, as attended with vomiting and purging.

த.வ. கக்கல் கழிச்சல்

     [Skt. {}+peti → த. வாந்திபேதி]

வாந்தியம்

 வாந்தியம் vāndiyam, பெ.(n.)

   தான்றி; a tree – Terminalia bellerica.

வாந்தியுப்பு

 வாந்தியுப்பு vāndiyuppu, பெ. (n.)

   கக்கலுண்டாக்கும் உப்பு. (இங். வை.);; tartar emetic, potassio tartras.

த.வ. கக்கல் உப்பு

     [Skt. vandi → த. வாந்தி]

வாந்தியெடு-த்தல்

வாந்தியெடு-த்தல் vāndiyeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கக்கல் செய்தல்; to vomit.

த.வ. கக்கு

     [Skt. {} → த. வாந்தியெடு-த்தல்]

வாந்துதம்

 வாந்துதம் vāndudam, பெ.(n.)

பெரு முத்தக்காசு பார்க்க;see {}.

வானகப்புதைச்சி

வானகப்புதைச்சி1 vāṉagappudaicci, பெ.(n.)

   கருவண்டு (யாழ்.அக.);; black beetle.

     [வானகம் + புதை → புதைச்சி]

 வானகப்புதைச்சி2 vāṉagappudaicci, பெ.(n.)

   கதண்டுக் கல்; a kind of mineral stone.

     [வானகம் + புதைச்சி]

வானகம்

வானகம் vāṉagam, பெ.(n.)

   1. வானம்; sky.

     “வானகத்தில் வளர் முகிலை” (தேவா. 1078, 2);.

   2. விண்ணுலகு; heaven.

     “இடமுடை வானகங் கையுறினும் வேண்டார்” (நாலடி, 300);.

   3. செம்மரம்; red-wood.

   4. மஞ்சாடி 1 (மலை.); பார்க்க;see {}.

     [வான் + அகம்]

வானகவிநாயகர்மாலை

வானகவிநாயகர்மாலை vāṉagavināyagarmālai, பெ.(n.)

   ஆறுமுகம் பிள்ளை என்பவரால் கி.பி.20ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} in 20th century.

     [வானகம் + விநாயகர் + மாலை]

வானகிநீர்

 வானகிநீர் vāṉaginīr, பெ.(n.)

   மோர்; butter milk.

     [வானகி + நீர்]

வானகுலாலி

 வானகுலாலி vāṉagulāli, பெ.(n.)

   கருங்கொள்; black horse gram, a creeper bearing black seeds-Dolichos biflorus- black variety.

     [வானம் + குலாலி]

வானக்கல்

வானக்கல்1 vāṉakkal, பெ.(n.)

   அடிமனைக் கல் (சங்.அக.);; foundation stone.

மறுவ. கடைக்கால்.

     [வானம் + கல்]

 வானக்கல்2 vāṉakkal, பெ.(n.)

   காகச்சிலை (யாழ்.அக.);; black loadstone.

     [வானம் + கல்]

வானக்குழலாள்

 வானக்குழலாள் vāṉakkuḻlāḷ, பெ.(n.)

   வெள்ளாடு; goat.

     [வானம் + குழலாள்]

வானக்கோளமண்டலம்

 வானக்கோளமண்டலம் vāṉakāḷamaṇṭalam, பெ.(n.)

   கோள உருண்டை (புதுவை.);; circle of a sphere.

     [வானம் + கோளம் + மண்டலம்]

வானசாத்திரம்

 வானசாத்திரம் vāṉacāttiram, பெ.(n.)

   வானூல்; astronomy.

     [வானம் + Skt. {} → த. சாத்திரம்]

வானசோதி

 வானசோதி vāṉacōti, பெ.(n.)

   கோள் முதலிய ஒளி மண்டலம் (யாழ். அக.);; heavenly body.

     [வானம் + Skt. jyoti → த. சோதி]

வானச்செடங்கி

 வானச்செடங்கி vāṉacceḍaṅgi, பெ.(n.)

   தேள் கொடுக்கியிலை; the leaf of a plant- Heletropium indicum.

     [வானம் + செடங்கி]

வானட்சத்திரம்

 வானட்சத்திரம் vāṉaṭcattiram, பெ.(n.)

   வால்வெள்ளி (யாழ்.அக.);; comet.

     [வானம் + Skt. naksatra → த. நட்சத்திரம்]

வானதி

 வானதி vāṉadi, பெ.(n.)

   கங்கை (பிங்.);; the Ganges, as celestial.

     [வான் + Skt. nathi → த. நதி]

வானத்தாசி

 வானத்தாசி vāṉattāci, பெ.(n.)

   கழுதை; an animal, Ass.

     [வானம் + தாசி]

வானத்தின்மீன்

 வானத்தின்மீன் vāṉattiṉmīṉ, பெ.(n.)

   சரிகை வெள்ளி; lace silver.

     [வானத்தின் + மீன்]

வானத்திமிரி

 வானத்திமிரி vāṉattimiri, பெ.(n.)

   தையிலம்; medicated oil.

     [வானம் + திமிரி]

வானத்தீ

 வானத்தீ vāṉattī, பெ.(n.)

   இடி (புதுவை.);; thunder.

     [வானம் + தீ]

வானநாடன்

வானநாடன் vāṉanāṭaṉ, பெ.(n.)

   1. வானுலகத்திற்குத் தலைவன்; lord of the celestial world.

     “வானநாடனே வழித்துணை மருந்தே” (தேவா. 486, 9);.

   2. வானுலகில் வாழ்வோர்; inhabitant of heaven.

     [வானம் + நாடன்]

வானநாடி

வானநாடி1 vāṉanāṭi, பெ.(n.)

   துறக்க உலகத்தவள்; she who resides in svarga.

     “மையறு சிறப்பின் வானநாடி” (சிலப். 11, 215);.

     [வானம் + நாடி]

 வானநாடி2 vāṉanāṭi, பெ.(n.)

   பொன்னாங் காணி (கரு.அக.);; a plant growing in damp places.

     [வானநாடு → வானநாடி]

வானநாடு

வானநாடு vāṉanāṭu, பெ.(n.)

   1. வானுலகம்; heaven.

   2. தேவருலகம்; celestial world.

     “வான நாடுடைய மன்னன்” (திருவிளை. இந்திரன்முடி. 38);.

   3. வானநாடி2 (தைலவ.);

பார்க்க;see {}.

     [வானம் + நாடு]

வானபத்தி

 வானபத்தி vāṉabatti, பெ.(n.)

   பூவாது காய்க்கும் மரம்; a tree yileding fruits without visible flowers or blossoming.

     [வானம் + பத்தி]

வானப்பத்தியம்

வானப்பத்தியம் vāṉappattiyam, பெ.(n.)

   பூத்தோன்றாது காய்க்கும் மரம் (நாமதீப. 372);; tree, bearing fruit without outwardly blossoming.

     [வானம் + பத்தியம்]

வானப்பாம்பு

 வானப்பாம்பு vāṉappāmbu, பெ.(n.)

   பாம்புவகை (M.M.);; rain snake.

     [வானம் + பாம்பு]

வானப்பிரச்தம்

வானப்பிரச்தம் vāṉappiractam, பெ. (n.)

   1. ஒழுகலாறு (ஆச்சிரமம்); நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவஞ் செய்யும் நிலை. (சி.சி. 8, 11, மறைஞா.);

 life of a {} one of four{}.

   2. காட்டிருப்பை. (மலை);; wild mahwa.

     [Skt. {} → த. வானப்பிரசதம்]

வானமடை

 வானமடை vāṉamaḍai, பெ.(n.)

   கவுரிச் செய்ந்நஞ்சு (யாழ்.அக.);; a prepared arsenic.

     [வானம் + மடை]

வானமண்டலம்

 வானமண்டலம் vāṉamaṇṭalam, பெ.(n.)

   ககோளம்; vault of the heavens.

     [வானம் + மண்டலம்]

வானமாமலை

வானமாமலை vāṉamāmalai, பெ. (n.)

   1. நாங்குநேரியில் கோயில் கொண்டுள்ள திருமால்; the {} shrine at {}.

     “வானமா மலையே யடியேன்றொழ வந்தருளே” (திவ். திருவாய். 5, 7, 6);.

   2. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி;{} in Tirunelvelly Dt.

     [வானம் + மா + மலை]

சிறந்த (வைணவ); மாலியத் திருப்பதி. தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து நாகர்கோயிலுக்குப் போகும் வழியில் 18 மைலில் இருக்கிறது. இது நான்குநேரி வட்டத்தின் தலைநகர். இதற்கு நாங்குநேரி என்ற பெயருண்டு. நம்மாழ்வார் பாடல்களில்

     ‘சிரீவர மங்கல நகர்’ என்று இவ்வூர் குறிப்பிடப் பெற்றுள்ளது.

கி.பி.1447 வரையில் நம்பூதிரிகள் வயமிருந்த இத்திருப்பதி பிறகு மாலியத் துறவிகள் கைக்கு வந்தது என்று ஒரு செப்பேடு கூறுகிறது.

வானமாமலை மடம் தென்கலை வைணவர் களுடையது. இதன் சீயர் தென் கலையாரின் ஆச்சாரியார். இது தோத்தாத்திரி மடம் என்றும் பெயர் பெற்றது. நாங்குநேரி ஏரிக்கரைக்குப் பின்னால் திருமால் கோயிலிருக்கிறது. கோயில் மிகப்பெரியது. வானமாமலை மடம் கோயில்

மதிலுக்குள் உள்ளது. இது வடமொழிப் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது. திருமால் திருமுன்னரைச் சுற்றியுள்ள மண்டபத்திற்குச் சிவிலி மண்டபம் என்று பெயர். திருமாலுக்குத் தெய்வநாயகன், தோத்தாத்திரி பெருமாள், வானமாமலைப் பெருமாள் என்று பெயர்கள் வழங்குகின்றன. இவர் கிழக்கு முகமாக வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். தாயார் சிரீவர மங்கை நாச்சியார். மூலவர் பெருமாளுக்கு நாள் தோறும் எண்ணெய் முழுக்குண்டு. இந்த எண்ணெய் திறந்த வெளியில் ஒரு காரைத் தொட்டியில் சேர்கிறது. இதற்கு மருந்தின் குணம் உண்டென்பர். விமானத்தின் பெயர் நந்தவர்த்தனம். கோயில் குளத்தின் பெயர் குணத்தின் இந்திர புட்கரணி, தேவேந்திரனுக்கும் பிரமனுக்கும் அருள் செய்ததாக வரலாறு. இத்திருப்பதி நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது.

வானமாமலைஅலங்காரக்கொம்மைப் பாடல்

வானமாமலைஅலங்காரக்கொம்மைப் பாடல் vāṉamāmalaialaṅgārakkommaippāṭal, பெ.(n.)

   தெய்வப் பெருமாள் நாயர் என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்; a book written by {} in 15th century.

     [வானமாமலை + அலங்காரம் + கொம்மை + பாடல். அலங்காரம் = Skt.]

வானமாமலைசதகம்

வானமாமலைசதகம் vāṉamāmalaisadagam, பெ.(n.)

   தெய்வநாயகப் பெருமாள் நாவலரால் கி.பி.19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்; a book written by {} in 19th century.

     [வானமாமலை + சதகம். சதகம் = Skt.]

வானமாமலைபஞ்சரத்தினம்

வானமாமலைபஞ்சரத்தினம் vāṉamāmalaibañjarattiṉam, பெ.(n.)

   அப்பு வையங்கார் என்பவரால் கி.பி.20ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} in 20th century.

     [வானமாமலை + பஞ்சரத்தினம்]

வானமால்

 வானமால் vāṉamāl, பெ.(n.)

   ஈ; fly.

     [வானம் + மால்]

வானமிருகம்

 வானமிருகம் vāṉamirugam, பெ.(n.)

   கத்தூரி யெலும்பு (யாழ்.அக.);; bone of the musk-rat.

     [வானம் + Skt. mirugha → த. மிருகம்]

வானமுட்டி

 வானமுட்டி vāṉamuṭṭi, பெ.(n.)

   நெட்டி லிங்கம்; a tree.

     [வானம் + முட்டி]

வானமெழுகு

 வானமெழுகு vāṉameḻugu, பெ.(n.)

   பக்க ஊதைக்கும் அழுகிராந்திக்கும் கொடுக்கும் ஒரு மருந்து; a siddha medicine given for paralysis, gangrene etc.

     [வானம் + மெழுகு]

வானம்

வானம்1 vāṉam, பெ.(n.)

   1. வானம்; firmament.

     “வானத் தரவின் வாய்க்கோட் பட்டு” (கலித். 105);.

   2. வானுலகம்; celestial world.

     “வான மூன்றிய மதலை போல” (பெரும்பாண். 346);.

   3. நெருப்பு (அரு.நி.);; fire.

   4. முகில்; cloud.

     “ஒல்லாது வானம் பெயல்” (குறள், 559);.

   5. மழை; rain.

     “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” (குறள், 18);,

     “தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்” (குறள், 19);,

     “வானம் வாய்க்க மண்வளம் பெருகுக” (மணிமே. 19, 149);.

   தெ. வான;க. பான (b);. என்றுமாம் (மு.தா.198);.

     [வால் → வான் → வானம் (சு.வி.பக்.18);]

     ‘வானத்தை வில்லாய், வளைப்பான்;

மணலைக் கயிறாய்த் திரிப்பான்’ (பழ.);.

     ‘வானம் சுரக்கத் தானம் சிறக்கும்’ (பழ.);.

ஞாலத்தைச் சுற்றிலும் வெகு தொலைவு வரையுமுள்ள வெற்றிடம். இது உண்மையில் மையிருட்டானது. ஆயினும் உலகைச் சுற்றிலும் காற்றுமண்டல மிருப்பதனால் நமக்கு வானம் ஒளி பெற்றுத் தோன்றுகிறது. கதிரவன் புவியை ஒளி பெறச் செய்வதுடன், காற்று மண்டலத்திலுள்ள மூலக்கூறுகளின் மீதும் தன் கதிர்களை வீசி ஒளிபெறச் செய்கின்றது. நாம் மேலே வானத்தை நோக்கும்பொழுது இவ்வாறு ஒளிரும் மூலக் கூறுகளையே பார்க்கின்றோம். இவை நீல நிறக் கதிர்களையே சிறப்பாகச் சிதறுகின்ற பண்புடையனவா யிருத்தலின் வானம் நமக்கு நீலநிறமாகப் புலனாகின்றது.

   காற்றில் தூசு அதிகமாயிருக்கும் பொழுது வானம் நமக்கு வெண்மையாகத் தெரிகின்றது. ஏனெனில் தூசுத் துகள்கள் எவ்வளவு நுண்மையானவையாக இருந்தபோதிலும், மூலக்கூறுகளைவிடப் பல மடங்கு பெரியவை;அதனால் இவை கதிரவனுடைய கதிரிலுள்ள நிறக்கதிர்களைச் சிதறச் செய்யாமல், கதிரவனுடைய வெண்மை ஒளியையே தோன்றச் செய்கின்றன. நாம் காற்று மண்டலத்திற்கு அப்பால் சென்று வானத்தை நோக்கின், அது மையிருட்டாகப் புலனாகும். பகலில் கூட வானில் விண்மீன்கள் புலனாகும். (கலைக்-9, பக்-251);

 வானம்2 vāṉam, பெ.(n.)

   1. உலர்ந்த மரம் (பிங்.);; dry tree, seasoned wood.

     “வானங் கொண்டு வளர்த்தல்” (பிரபுலிங். முனிவரர்.17);.

   2. மரக்கனி (பிங்.);; fruit of a tree.

   3. உலர்ந்த காய் (யாழ்.அக.);; dry fruit.

   4. உலர்ச்சி (யாழ்.அக.);

 withering.

   5. உயிரோடிருக்கை (யாழ்.அக.);; being alive.

   6. போகை (யாழ்.அக.);; going.

   7. நறுமணம் (யாழ்.அக.);; fragrance.

   8. நீர்த்திரை (யாழ்.அக.);; wave.

   9. புற்பாய் (யாழ்.அக.);; mat of straw.

   10. சுவரில் பண்டங்கள் வைப்பதற்காகக் கட்டப்பட்ட மாடம்(யாழ்.அக.);; cellar or shelf in the wall.

   11. அடிமனைக்குழி; excavation for laying foundations.

   12. கோபுரத்தின் ஒருறுப்பு (யாழ்ப்.);; one of the ornamental sections of a tower.

     [வான் → வானம்]

வானம்பறி-த்தல்

வானம்பறி-த்தல் vāṉambaṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   அடிமனைக் குழி தோண்டுதல்; to dig for laying foundation.

     [வானம் + பறி-,]

வானம்பாடி

வானம்பாடி vāṉambāṭi, பெ.(n.)

   1. புள் வகை; Indian skylark, Alauda, gulgula.

   2. சகோரப்புள் (திவா.);; shepherd koel.

     “வானம்பாடி… அழிதுளி தலைஇய புறவில்” (ஐங்குறு. 418);.

   3. வானம்பாடியாதனம் பார்க்க;see {}.

     “நமஸ்காரஞ் சானுவானம்பாடி நகழ்வே” (தத்துவப். 107);.

க. பானாடி.

இதன் பெயரே இதன் இயல்பை எடுத்துரைக்கிறது. வயல்களிலும் வெளிப் பாங்கான நிலங்களிலும் வாழும் இச்சிறு பறவைகள் கபில நிறமாகத் தரையுடன் ஒத்துக் கண்ணைக் கவராது மங்கியிருக்கும். ஆனால், வேனிற் காலத்திலும், பிறகு சிறிது காலமும், ஆண் வானம்பாடி பாடிக்கொண்டே சுற்றிச் சுழன்று வானத்தில் செங்குத்தாக எழும்பும். பறவை கண்ணுக்கெட்டாத உயரத்தை அடைந்த பின்னும் வானத்திலேயே மிதந்து, இனிய குரலில் சில நிமிடங்கள் பாடும். பறவை பார்வைக்குப் புலப்படாதிருந்தும் அதன் தெளிவான இசை நம்காதுக்கெட்டும். பிறகு, தன் இறக்கைகளை மடக்கி வானிலிருந்து கல்லைப் போல் கீழ் நோக்கிப் பாயும். சிறிது தூரம் வந்தபின் இறக்கையை

விரித்துத் தன் கீழ்ப் போக்கை நிறுத்தும். பின், மறுபடியும் இறக்கை மடித்து நிலம் நோக்கிப் பாயும். மறுபடியும் இறக்கை விரித்துத் தன் வீழ்ச்சியை நிறுத்தும். இப்படிப் படிப்படியாகக் கீழிறங்கி, முடிவில் வயலில் இருக்கும் தன் பெட்டையின் அருகில் வந்திறங்கும். வானம்பாடிகள் வயற் காடுகளில் பூச்சிகளை வேட்டையாடியும், தவசங்களைத் தின்றும் வாழும். வட இந்திய வானம்பாடிக்குக் கொண்டையுண்டு. (கலைக்.-9.பக்.-251);

வகைகள் :

   1. சிறந்த இறக்கை வானம்பாடி, 2. புதர் வானம்பாடி, 3. சாம்பல் தலை வானம்பாடி,

   4. சிகப்பு வால் வானம்பாடி,

   5. கொண்டை வானம்பாடி,

   6. சின்ன வானம்பாடி.

வானம்பாடியாதனம்

வானம்பாடியாதனம் vāṉambāṭiyātaṉam, பெ.(n.)

   நெஞ்சு நிலத்திற்படக் கையுங்காலு மடக்கித் தரையிற் படாமற் பறக்கத் தொடங்குவது போல இருக்கும் இருக்கை வகை (தத்துவப். 107, உரை);; a posture which consists in lying on the ground with face downwards and arms and legs bent as if about to fly.

     [வானம்பாடி + ஆதனம்]

வானம்பாரி

 வானம்பாரி vāṉambāri, பெ.(n.)

வானம் பார்த்தபூமி (இ.வ.); பார்க்க;see {}.

     [வானம் + பார் → பாரி]

வானம்பார்த்தகதிர்

 வானம்பார்த்தகதிர் vāṉambārddagadir, பெ.(n.)

   கொப்புத் தாழாத கதிர் (யாழ்.அக.);; ear of immature grain, standing erect.

     [வானம் + பார்த்த + கதிர்]

வானம்பார்த்தசீமை

 வானம்பார்த்தசீமை vāṉambārttacīmai, பெ.(n.)

   பாசன வசதியின்றிப் பருவ மழையையே நம்பியிருக்கும் நிலப்பரப்பு; rain- fed region, as depending for cultivation on seasonal rains and having no other source of irrigation.

மறுவ. புன்செய் நிலம்

     [வானம் + பார்த்த + சீமை. சேய்மை → சீமை]

வானம்பார்த்தபயிர்

 வானம்பார்த்தபயிர் vāṉambārttabayir, பெ.(n.)

   பாசன வசதியின்றிப் பருவ மழையினு தவியாற் புன்செய் நிலத்தில் விளையும் தவசம் (தஞ்சை.);; crops grown on dry lands with the help of seasonal rains and without any irrigational facilities.

     [வானம் + பார்த்த + பயிர்]

வானம்பார்த்தபிறவி

 வானம்பார்த்தபிறவி vāṉambārttabiṟavi, பெ.(n.)

   மரஞ்செடி கொடி முதலியன (யாழ்.அக.);; vegetable kingdom, as depending on rains.

     [வானம் + பார்த்த + பிறவி]

வானம்பார்த்தபூமி

 வானம்பார்த்தபூமி vāṉambārttapūmi, பெ.(n.)

   பாசன வசதியில்லாது மழையால் விளையும் நிலம்; rain-fed cultivable land.

மறுவ. புன்செய்நிலம்

     [வானம் + பார். + பூமி. பூமி = Skt.]

வானரகதி

 வானரகதி vāṉaragadi, பெ.(n.)

   குதிரை நடை ஐந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை (திவா.);; monkey-like pace of a horse, one of five {}. (Q.V.);

     [வானரம் + கதி = குதிரைநடை]

வானரக்கொடியோன்

 வானரக்கொடியோன் vāṉarakkoḍiyōṉ, பெ.(n.)

   அருச்சுனன் (குரங்குக் கொடியை யுடையவன்); (பிங்.);; Arjuna, as having a monkey banner.

     [வானரம் + கொடியோன்]

வானரநேயம்

 வானரநேயம் vāṉaranēyam, பெ.(n.)

   பழமுண்ணிப்பாலை (மலை.);; silvery-leaved ape-flower.

     [வானர + நேயம்]

வானரப்பகை

 வானரப்பகை vāṉarappagai, பெ.(n.)

   நண்டு (சங்.அக.);; crab.

     [வானர + பகை]

வானரமகள்

வானரமகள்1 vāṉaramagaḷ, பெ.(n.)

   பெண் குரங்கு; female monkey.

     “வானரமகளிரெல்லாம் வானவர் மகளிராய்

வந்து” (கம்பரா. திருமுடி.7);.

     [வானரம் + மகள்]

 வானரமகள்2 vāṉaramagaḷ, பெ.(n.)

   வானுலகத்துப் பெண்; celestial damsel.

     ‘வாணர மகள் கொல்லோ’ (இறை. 2, உரை, பக். 32);.

     [வான் + அரமகள் (அரமகள் = தெய்வப்பெண்);.]

வானரமங்கை

வானரமங்கை vāṉaramaṅgai, பெ.(n.)

வானரமகள்2 பார்க்க;see {}.

     “வானர மங்கையரென வந்தணுகு மவள்”(திருக்கோ. 371);.

     [வான் + அரமங்கை (அரமங்கை = தெய்வப்பெண்);.]

வானரமதுரைத்தலபுராணம்

வானரமதுரைத்தலபுராணம் vāṉaramaduraiddalaburāṇam, பெ.(n.)

   இளைய பெருமாள் பிள்ளை என்பவரால் கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} in 19th century.

     [வானர + மதுரை + தல + புராணம்]

வானரம்

வானரம் vāṉaram, பெ.(n.)

   குரங்கு; monkey.

     “வானர முகள” (சீவக. 1168.);.

வானரம் = வாலுள்ள மாந்தன் போன்ற விலங்காகிய குரங்கு. வடவர் வனர் (வனம்); என்னும் சொல்லை மூலமாகக் கொண்டு காட்டு விலங்கு என்றும், நரஏவ என்பதை மூலமாகக் கொண்டு மாந்தனைப் போன்றது என்றும், பொருள் கூறுவர். முன்னதற்குப் பொருட் பொருத்தமும் பின்னதற்குச் சொற்பொருத்தமும் இன்மை காண்க. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. நரம் அல்லது நரன் என்னும் சொல் நரல் என்பதினின்று திரிந்திருக்கலாம். நரலுதல் = ஒலித்தல். மாந்தனுக்கு மொழி சிறப்பான ஒலியமைப்பாய் இருத்தல் காண்க.

     [வால் + நரம் + வானரம். (வ.மொ.வ.280);]

வானரேந்திரன்

வானரேந்திரன் vāṉarēndiraṉ, பெ.(n.)

   1. அனுமன்;{}.

   2. சுக்கிரீவன்; sugiriva.

     [வாரை + இந்திரன்]

வானர்

வானர் vāṉar, பெ.(n.)

   தேவர்; celestials.

     “மான்முதல் வானர்க்கு” (திருக்கோ. 155);.

     [வான் → வானர்]

வானலம்

 வானலம் vāṉalam, பெ.(n.)

   துளசி; holy basil – ocimum sanctum.

 வானலம் vāṉalam, பெ.(n.)

   துளசி (யாழ்.அக.);; basil.

     [வான் + அலம்]

வானளாவி

 வானளாவி vāṉaḷāvi, பெ.(n.)

   வானுயர்ந்த கட்டடங்கள்; skyscrapers.

மற்றக் கட்டடங்களை விட மிகவும் உயர்ந்த மிகப் பல நிலைகளைக் கொண்ட கட்டடங்களுக்கு வானளாவி என்ற பெயர் அமெரிக்காவில் வழங்குகிறது. இக்காலத்தில் தொழிற்சாலையும் வாணிகமும் இணைந்து மிக விரைவாக முன்னேறியதால் அவற்றின் தேவைக்கேற்பப் புதுக் கட்டடச் சிற்பம் தோன்றியது. இதனால் பெரிய அலுவலகங்கள், பெரிய தொழிற்சாலைகள், பெரிய வைப்பகங்கள், பெரிய தொடர்வண்டி நிலையங்கள், பெரிய உணவு விடுதிகள் முதலியன பேரளவில் தோன்றின. இடஏந்துக் குறைவும், சிறிய நிலத்தில் பேரளவு பயன்பெறும் வாய்ப்பும், வாணிகத்தின் உயர்ந்த திறனும் வானளாவித் தோன்றக் காரணமாயின எனலாம்.

வானவன்

வானவன் vāṉavaṉ, பெ.(n.)

   1. தேவன்; celestial being.

     “நான்முகன் முதலா வானவர் தொழுதெழ” (திருவாச. 4, 1);.

   2. நான்முகன் (அக.நி.);;{}.

   3. இந்திரன் (பிங்.);; Indra.

   4. ஞாயிறு; sun.

     “வானவன் குலத்தொடர்” (கம்பரா. எழுச். 7);.

   5. சேரவரசன் (சிலப். 6, 73);;{} king.

     “சினமிகு தானை வானவன்” (புறநா. 126);.

     [வான் → வானவன்]

வானவன்மாதேவி பெரியம்மைபத்து

வானவன்மாதேவி பெரியம்மைபத்து vāṉavaṉmātēviberiyammaibattu, பெ.(n.)

   கனகசபை முதலியாரால் 19-20ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} in 19-20th century.

     [வானவன் + மாதேவி + பெரியம்மை + பத்து]

வானவன்மாதேவி வானசுந்தரர்பத்து

வானவன்மாதேவி வானசுந்தரர்பத்து vāṉavaṉmātēvivāṉasundararpattu, பெ.(n.)

   கனகசபை முதலியாரால் 19-20ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} in 19-20th century.

     [வானவன் + மாதேவி + வானசுந்தரர் + பத்து]

வானவன்விடுதூது

வானவன்விடுதூது1 vāṉavaṉviḍutūtu, பெ.(n.)

   ஞானப்பிரகாச முதலியார் என்பவரால் 20ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நூல்; a book written by {} in 20th century.

     [வானவன் + விடு + தூது]

 வானவன்விடுதூது2 vāṉavaṉviḍutūtu, பெ.(n.)

   யாகப்பப்பிள்ளை என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்; a book written by {} in 19th century.

     [வானவன் + விடு + தூது]

வானவரம்பன்

வானவரம்பன் vāṉavarambaṉ, பெ.(n.)

சேரன்;{}-King.

     “வானவரம்பனை நீயோ பெரும” (புறநா. 2);.

     [வானம் + வரம்பு]

வானவராயன்

 வானவராயன் vāṉavarāyaṉ, பெ. (n.)

   கொங்கு வேளாளரைச் சுட்டும் சிறப்பு பெயர்; specific name that denotes Kongu Vēlālar.

     [வாணன்+அரையன்]

வானவருறையுள்

 வானவருறையுள் vāṉavaruṟaiyuḷ, பெ.(n.)

   கோயில் (திவா.);; temple.

     [வானவர் + உறையுள்]

வானவர்கோன்

வானவர்கோன் vāṉavarāṉ, பெ.(n.)

   இந்திரன்; Indra, as king of the gods.

     “வானவர்கோன்…………. வணங்குந்

தொழிலானை” (திவ். இயற். 2, 17);.

     [வானவர் + கோன்]

வானவர்நாடி

வானவர்நாடி vāṉavarnāṭi, பெ.(n.)

வானரமகள்2 (திருமந். 1058); பார்க்க;see {}.

     [வானவர் + நாடி]

வானவர்முதல்வன்

 வானவர்முதல்வன் vāṉavarmudalvaṉ, பெ.(n.)

நான்முகன் (திவா.);;{},

 as the first among the gods.

     [வானவர் + முதல்வன்]

வானவர்முதுவன்

வானவர்முதுவன் vāṉavarmuduvaṉ, பெ.(n.)

   1. நான்முகன் (பிங்.);;{}.

   2. சேரன் (யாழ்.அக.);;{} king.

     [வானவர் + முதுவன்]

வானவல்லி

 வானவல்லி vāṉavalli, பெ.(n.)

   மின்னற் கொடி (சங்.அக.);; streak or flash of lightning.

     [வானம் + வல்லி]

வானவியல்

வானவியல்1 vāṉaviyal, பெ.(n.)

   வான்கோள்களைப் பற்றிய அறிவியல்; astrology.

 வானவியல்2 vāṉaviyal, பெ.(n.)

   விண்ணில் உள்ள விண்மீன்கள், கோள்கள், முதலியவற்றைப் பற்றி விவரிக்கும் துறைl; astronomy.

     [வானம் + இயல்]

இவ்வுலகம் மிகப்பெரிய ஐந்தாவது கோளாகும். அது கதிரவனிடமிருந்து 92,870,000 கல் தொலைவில் கதிரவனைச் சுற்றி வருகிறது. புவி கதிரவனை ஒரு தடவை சுற்றிவர ஏறக்குறைய 365 1/4 நாட்களாகின்றன. புவியின் அச்சு, துருவ விண்மீனை நோக்கி உள்ளது. புவி அந்த அச்சின் மீது தனக்குத் தானே சூழல்வதால் பகலும் இரவும் உண்டாகின்றன. புவி கதிரவனைச் சுற்றி வருவதால் வேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என நான்கு பருவங்கள் உண்டாகின்றன. இந்தப் பருவங்களில் ஞாலம் கதிரவனை நோக்கியுள்ள நிலையின் காரணமாகவே தட்பவெப்பநிலை உண்டாகின்றது.

இரவில் வானம் தெளிவாக உள்ளபோது கூட நாம் மூவாயிரம் விண்மீன்களுக்கு அதிகமாக வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் 200 விரல விட்டமுடைய கண்ணாடி வில்லை (lens); உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி வாயிலாகப் பார்த்தால் கதிரவனைப் போன்ற பல கோடி கோளங்களையும் அவை ஒவ்வொன்றையும் பல கோளங்கள் சுற்றி வருவதையும் காணலாம். நம்முடைய கதிரவன் பல விண்மீன்களை விட மிகச் சிறியது என்று தெரியும். அது பெரியதாகவும் ஒளி மிக்கதாகவும் நம்முடைய கண்களுக்குத் தெரிவதற்குக் காரணம் அது நமக்கு அண்மையில் இருப்பதேயாகும். பலவிதமான

கோளங்களையும் பற்றிய அறிவியலே வானவியல் என்பதாகும்.

வானவில்

வானவில் vāṉavil, பெ.(n.)

   1. இந்திரவில் எனப்படும் வானில் மழைக்காலத்தில் ஏற்படும் வில் போன்ற தோற்றம்; rain-bow.

     “மதிப்புறங் கவைஇய வானவிற் போல” (பெருங். இலாவாண. 19, 81);.

   2. சமவ சரணத்துள் தூளி சாலமென்னும் பெயருடையதும் இந்திர வில்லின் ஒளியுடையதும் முதலாவதுமான சமணக் கோயிலின் வெளிமதில்;     “வானவிற் கடந்து” (மேருமந். 60);.

     [வானம் + வில்]

நீர்த் துளிகளிற் புகும் கதிரொளி கோட்டமடைவதாலும், மீளுவதாலும் வானவில்கள் தோன்றுகின்றன.)

வானவீதியொளி

 வானவீதியொளி vāṉavītiyoḷi, பெ.(n.)

   வானில் வைகறையிலும் அந்தியிலும் தோன்றும் வெளிச்சம்; twilight in dawn and dusk.

கதிரவன் தோன்றுமுன் கிழக்கு வானிலும், கதிரவன் மறைவிற்குப் பின் மேற்கு வானிலும் தெரியும் ஒரு மங்கலான ஒளி. வான வெளியில் புலப்படுகின்ற இந்த ஒளியானது கதிரவனுக்கு அருகில் ஒளியதிகமாகவும் தொலைவில் செல்லச் செல்ல மங்கலாகவும் காணும். இது ஆப்பு வடிவில் தெரியும். இவ்வொளியைக் கார்முகில் இல்லாத நாட்களில் தான் காணக்கூடும். திங்கள் அண்மையிலிருப்பின் இது கண்ணுக்குப் புலப்படாது. வடகோளத்திலுள்ளோர், இதனைக் கும்ப, மீன மாதங்களில் தெளிவாகக் காணலாம். நில நடுக்கோட்டின் அருகிலுள்ளோர் ஆண்டு முழுவதிலும் இதைக் காணக்கூடும். கதிரவனுடைய ஒளி, மிதந்து கொண்டிருக்கும் மிகச்சிறிய துகள்களின் மீது பட்டு எதிரொளிப்பதுதான் இதற்குக் காரணமென்பர்.

     [வானம் + வீதியொளி]

வானவுப்பு

 வானவுப்பு vāṉavuppu, பெ.(n.)

   வெடியுப்பு; potassium nitrate.

     [வானம் + உப்பு]

வானவூர்தி

வானவூர்தி vāṉavūrti, பெ.(n.)

   வானூர்தி; aerial car.

     “வலவனேவா வானவூர்தி” (புறநா.27);.

     [வானம் + ஊர்தி]

வானவெளி

வானவெளி vāṉaveḷi, பெ.(n.)

   திறந்த வெளியாயிருக்கும் வீட்டின் உள்முற்றம் (இ.வ);; open quadrangle in a house.

     [வானம் + வெளி] (செல்வி. 77 ஆடி. 591);

வானாசி

 வானாசி vāṉāci, பெ.(n.)

   கார்போகரிசி (மலை.);; seed of scurfypea.

வானாசிப்பூ

 வானாசிப்பூ vāṉācippū, பெ.(n.)

   பனி மலர்ப்பூ; rose flower.

     [வானாசி + பூ]

வானாடு

வானாடு vāṉāṭu, பெ.(n.)

   1. துறக்கம்; svarga.

     “வானாடும் மண்ணாடும்” (திவ். பெரியதி. 4, 1,3);.

   2. வானுலகு; heaven.

     “கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்” (திவ். இயற் பெரிய திருவந். 68);.

     [வான் + நாடு]

வானி

வானி1 vāṉi, பெ.(n.)

   1. மேற்கட்டி (பிங்.);; canopy.

   2. துகிற்கொடி; large banner, flag.

     “வானிவியன் கை நாலாயிரமுள” (இரகு.நகர. 35);.

   3. கூடாரம் (யாழ்.அக.);; tent.

   4. ஆன்

   பொருநை (பிங்.);; the river {}.

   5. பவானி; the river {}.

     “வானி நீரினுந் தீந்தண் சாயலன்” (பதிற்றுப். 86);.

     “வட கொங்கில் வானியாற்றின்” (தேசிகப். பிர. பரமத.53);.

   6. மரவகை; a tree.

     “பயினி வானி பல்லிணர்க் குரவம்” (குறிஞ்சிப். 69);.

   7. காற்றாடிப்பட்டம்; paper kite.

     “வாணிக ளோச்சினர் வானில்” (கந்தபு. அசமுகி. நகர் காண். 9);.

   8. இடிக்கொடி; streak of lightning.

     “நெருப்பெழ வீழ்ந்த வானி” (இரகு. யாகப். 84.);

     [வான் → வானி]

 வானி2 vāṉi, பெ.(n.)

   படை (பிங்.);; army.

     “பாண்டவர் வானி குலைந்த வே” (சேதுபு. இராமதீ. 34);.

     [வான் → வானி]

 வானி3 vāṉi, பெ.(n.)

   1. ஓமம் பார்க்க;see {},

 Bishop’s weed.

     [வான் → வானி]

 வானி vāṉi, பெ. (n.)

   படை (பிங்.);; army.

     “பாண்டவர் வானி குலைந்தவே” (சேதுபு. இராமதீ. 34.);

     [Skt. {} → த. வானி1]

வானிதம்

வானிதம்2 vāṉidam, பெ.(n.)

   கள்; toddy.

வானிதி

 வானிதி vāṉidi, பெ.(n.)

   மனோசிலை (சங்.அக.);; realgar.

வானின்பூடு

 வானின்பூடு vāṉiṉpūṭu, பெ. (n.)

   சிறுபூளை; wooly caper – Achyranthe lanata.

     [ஊள் + இன் + பூடு.]

வானியம்

 வானியம் vāṉiyam, பெ.(n.)

   மரம் (யாழ்.அக.);; tree.

வானிரியம்

 வானிரியம் vāṉiriyam, பெ.(n.)

   பேராமுட்டி (சங்.அக.);; pink-tinged white sticky mallow.

வானிறை

வானிறை vāṉiṟai, பெ.(n.)

   நீர் நிறைந்த முகில்; rain-laden cloud.

     “சாய னினது வானிறை யென்னும்” (பரிபா.2, 56);.

மறுவ. கார்மேகம்.

     [வான் + நிறை]

வானிற்கெற்பத்தி

 வானிற்கெற்பத்தி vāṉiṟkeṟpatti, பெ.(n.)

   முத்துச்சிப்பி (யாழ்.அக.);; pearl oyster.

வானிலை

 வானிலை vāṉilai, பெ.(n.)

   காற்று, ஈரப்பதம், மழை போன்றவற்றால் அமையும் நிலை; weather.

     “வானிலை அறிவுப்பு”.

     [வான் + நிலை]

வானிலைஅறிவிப்பு

வானிலைஅறிவிப்பு vāṉilaiaṟivippu, பெ.(n.)

   கானாவொலி; voice from heaven.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வானிலை எவ்வாறிருக்கும் என்று முன் கூட்டி அறிவதற்கு மக்கள் வரலாற்று முன்கால முதல் முயன்று வந்துள்ளனர். பண்டைக்காலத்தில் மக்கள் காற்று, மழை முதலிய வானிலை நிகழ்ச்சிகள் எல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களால் உண்டாவன என்று எண்ணி, அந் நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவதற்கு முயலாதிருந்தனர். ஆயினும் உழவர்களும் கால் நடைகளை மேய்ப்பவர்களும் தத்தம் பகுதியில் ஏற்படும் வானிலை நிகழ்ச்சிகளைக் கவனித்து வந்தார்கள், மழை எந்தக் காலம் பெய்கின்றது, எந்தக் காலம் பெய்வது நிற்கின்றது என்பவற்றிற்கான அறிகுறிகளையும் கவனித்தார்கள். அவற்றை வைத்து வானிலை அறிவை வளர்த்து வந்தனர். இத்தகைய அறிவு பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலும், கேரளத்திலும், உத்தரப் பைதிரத்திலும் உண்டாகியிருந்ததாகத் தெரிகிறது. கீழ்கண்ட பழமொழிகள் அதன் உண்மையைக் கூறும். 1.

     “மாரி அடைக்கில் ஏரி உடைக்கும்” (பழ.);. 2.

     “மீனமும் கொம்பும் எதிர்த்து மின்னினால், குட்டியைத் தூக்கி மேட்டிற் போடு” (பழ.);.

வானிழல்

வானிழல் vāṉiḻl, பெ.(n.)

   காணாவொலி; voice from heaven.

     “வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி னாகும்” (பெரியபு. பாயி. 19);.

     [வான் + நிழல்]

வானீரம்

 வானீரம் vāṉīram, பெ.(n.)

   வஞ்சிக்கொடி (பிங்.);; common rattan of South India.

வானீர்

 வானீர் vāṉīr, பெ.(n.)

   நன்னீர்; pure water or liquor amni.

     [வான் + ஈரம்]

வானீளம்

வானீளம் vāṉīḷam, பெ.(n.)

   வால் வீச்சு; length of a house or house-site.

     “மனை வானீளத்துக்குக் கிழக்கும்” (S.I.I.iii.214);.

     [வால் + நீளம்]

வானுலகம்

வானுலகம் vāṉulagam, பெ.(n.)

வானுலகு பார்க்க;see {}.

     “போரிலிறந்தவர் வானுலகம் புகுவர்”- 26-ஆம் புறப்பாடல் இக்கருத்துப் பற்றியதே.

     [வான் + உலகம்]

வானுலகு

வானுலகு vāṉulagu, பெ.(n.)

   1. துறக்கம் (பிங்.);; celestial world, {}.

   2. உம்ப ருலகம்; heaven.

     “பாடாதார் வானுலகு நண்ணாரே” (சீவக. 1468);.

     [வான் + உலகு]

வானுலா

 வானுலா vāṉulā, பெ.(n.)

   வானத்தில் உலா வகை (ககன சாரிகை);; aerial travel.

     [வான்+உலா]

வானுலாவி

 வானுலாவி vāṉulāvi, பெ.(n.)

   வானத்தில் கற்றித் திரிபவன்-ள் (ககன சாரி);; one who travels through the air, aeronaut.

     [வான்+உலாவி]

வானூர்தி முனையம்

 வானூர்தி முனையம் vāṉūrtimuṉaiyam, பெ.(n.)

பல்வேறு நாட்டைச் சேர்ந்த வானூர்திகள் வந்துபோகுமிடம்:

 an airport.

வானூர்திப் பணிப்பெண்கள்

 வானூர்திப் பணிப்பெண்கள் vāṉūrtippaṇippeṇkaḷ, பெ.(n.)

   வானூர்தியில் பயணி களுக்குப் பணிவிடை செய்யும் பெண்கள்; air hostess.

வானேறு

வானேறு vāṉēṟu, பெ.(n.)

   இடியேறு; thunderbolt.

     “வானேறு புரையுநின்” (புறநா. 265);.

     [வான் + ஏறு]

வானைநிமிளை

 வானைநிமிளை vāṉainimiḷai, பெ.(n.)

   அஞ்சனக்கல்; sulphurate of antimony.

     [வானை + நிமிளை]

வானொலி

 வானொலி vāṉoli, பெ.(n.)

   ஒலிவாங்கிக் கருவி; radio.

     [வான் + ஒலி]

தற்கால நாகரிக வாழ்க்கையில் இன்றி யமையாத இடம் பெற்றுள்ளது. வேறு எந்தப் புத்தமைப்பையும் விட இது மக்களால் பெரிதும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை யாவரும் வானொலி மூலம் பாடல்களையும், நாடகங்களையும், அறிவுரை களையும், செய்திகளையும் மற்ற நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்கிறார்கள்.

வானோங்கி

 வானோங்கி vāṉōṅgi, பெ.(n.)

   ஆல்; banyan.

     [வான் + ஒங்கு → ஓங்கி]

வானோதயம்

 வானோதயம் vāṉōtayam, பெ.(n.)

   கொடி மாதளை; a kind of citrus fruit-citrus medica.

வானோர்

 வானோர் vāṉōr, பெ.(n.)

   தேவர்; celestials.

     [வான் → வானோர்]

வானோர்கிழவன்

வானோர்கிழவன் vāṉōrkiḻvaṉ, பெ.(n.)

வானோர்கோமான் பார்க்க;see {}.

     “வானோர் கிழவனின் வரம்பின்று பொலிய” (பெருங். நரவாண. 4, 55);.

     [வானோர் + கிழவன்]

வானோர்கோமான்

 வானோர்கோமான் vāṉōrāmāṉ, பெ.(n.)

   இந்திரன் (சூடா.);; Indra.

     [வானோர் + கோமான்]

வானோர்க்கிறை

 வானோர்க்கிறை vāṉōrkkiṟai, பெ.(n.)

வானோர்கோமான் (உரி.நி.); பார்க்க;see {}.

     [வானோர் + இறை]

வானோர்மாற்றலர்

வானோர்மாற்றலர் vāṉōrmāṟṟalar, பெ.(n.)

   1. அசுரர்;{}.

   2. இராக்கதர்;{}.

     [வானோர் + மாற்றவர்]

வானோர்முதல்வன்

வானோர்முதல்வன் vāṉōrmudalvaṉ, பெ.(n.)

   1. நான்முகன் (சூடா.);; brahma, as first among the celestials.

   2. வானோர் கோமான் பார்க்க;see {}.

     [வானோர் + முதல்வன்]

வானோர்முதுவன்

வானோர்முதுவன் vāṉōrmuduvaṉ, பெ.(n.)

   1. வானவர்முதுவன்1 (நாமதீப. 55); பார்க்க;see {}.

   2. சேரன் (யாழ்.அக.);;{}.

     [வானோர் + முதுவன்]

வான்

வான்1 vāṉ, பெ.(n.)

   1. வானம்; sky, the visible heavens.

     “வானுயர் தோற்றம்” (குறள், 272);.

   2. மூலமுதற்பொருள் பிரகிருதி; primordial matter.

     “வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின்” (கம்பரா. அயோத். மந்திர. 1);.

   3. மேகம்; cloud.

     “ஏறொடு வான் ஞெமிர்ந்து” (மதுரைக். 243);.

   4. மழை; rain.

     “வான்மடி பொழுதில்” (பெரும்பாண்.107);.

   5. தேவருலகு; celestial world.

     “வான்பொரு நெடுவரை” (சிறுபாண்.128);

   6. அமுதம்; ambrosia.

     “வான் சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி” (தேவா. 586, 1);.

   7. தேவருலகம்; heaven.

     “வானேற வழி தந்த” (திவ். திருவாய். 10, 6, 5);.

   8. நன்மை; goodness.

     “வரியணி சுடர்வான் பொய்கை” (பட்டினப். 38);.

   9. பெருமை (பிங்.);; greatness, largeness.

     “இருடூங்கு வான்முழை” (காசிக. காசியின் சிறப். 13);.

   10. அழகு; beauty.

     “வான்பொறி

பரந்த புள்ளி வெள்ளையும்” (கலித். 103);.

   11. வலிமை (பிங்.);; strength.

   12. நேர்மை; regularity.

     “வானிரை வெண்பல்” (கலித்.14);.

   13. மரவகை (பிங்.);; a kind of tree.

   தெ. வாந;   க. பாந; ma. {}, {};

 Ko. {}, To. po-n;

 Kol. va-na;

 N.k. {};

 pa. {}, Ga. vayin.

     [மால் → மான் → வான். (வே.க.38);]

     ‘வான் செய்த உதவிக்கு வையகம்

என்ன செய்யும்’ – (பழ.);

 வான்2 vāṉ, இடை(part.)

   ஒரு வினையெச்ச ஈறு (நன். 343);; an ending of verbal participle.

 வான்3 vāṉ, இடை(part.)

   உடைமைப் பொருள் காட்டும் ஒரு வடமொழி ஈறு; a sanskrit suffix meaning’possessor of’.

     “கிரியாவான்” (சி.சி.12,5);.

வான் செலவாற்றல்

 வான் செலவாற்றல் vāṉcelavāṟṟal, பெ.(n.)

   வான்வழி நினைத்தவிடம் செல்லும் ஆற்றல் (வின்);(கமன சித்தி);; supernatural power of freely traversing through space.

     [வான்+செலவு+ஆற்றல்]

வான்கண்

வான்கண் vāṉkaṇ, பெ.(n.)

   கதிரவன்; sun.

     “வான்கண் விழியா வைகறை யாமத்து” (சிலப். 10, 1, அரும்.);

வான்கல்லு

 வான்கல்லு vāṉkallu, பெ.(n.)

   வான் மீன்; meteorite.

     [வான் + கல்லு]

வான்கழி

வான்கழி vāṉkaḻi, பெ.(n.)

   துறக்கம் (திருக்கோ.85, உரை);; the highest heaven.

வான்கொடி

வான்கொடி1 vāṉkoḍi, பெ.(n.)

   மின்னற் கொடி; streak of lightning.

     “வான்கொடி யன்னாள்” (சிலப். 1, 24);.

     [வான் + கொடி]

 வான்கொடி2 vāṉkoḍi, பெ.(n.)

   ஆகாய வல்லி; a running plant.

     [வான் + கொடி]

வான்கோழி

வான்கோழி vāṉāḻi, பெ.(n.)

   கோழிவகை; turkey.

     “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி… ஆடினாற் போலுமே” (மூதுரை.14);.

     [வான் + கோழி]

வான்செலல் அறிவர்

 வான்செலல் அறிவர் vāṉcelalaṟivar, பெ.(n.)

   வான்வழியே நினைத்தவிடம் செல்ல வல்ல சித்தர்(கமன சித்தர்);; siddhar reputed to have the super natural power of freely traversing through space.

     [வான்+செலல்+அறிவர்]

வான்பதம்

வான்பதம் vāṉpadam, பெ.(n.)

   முத்தி; final emancipation.

     “எனக்கே வான் பதமளிக்க” (அருட்பா. Vi, அருட்பெருஞ். அ.1181);.

     [வான் + பதம்]

வான்பயிரம்பலம்

வான்பயிரம்பலம் vāṉpayirambalam, பெ.(n.)

   வான் பயிர்க்குரிய வரிதண்டும் அலுவல் (M.M.357);; office for the collection of assessment on garden lands.

     [வான்பயிர் + அம்பலம். அம்பலம் = அலுவல்]

வான்பயிர்

வான்பயிர் vāṉpayir, பெ.(n.)

   நன்செய், புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை, கரும்பு முதலிய தோட்டப் பயிர்; garden crops and fruit trees, especially valuable kinds of produce raised on wet land, as betel, plantains, sugarcane.

     “வான் பயிருக்கும் நஞ்சை புஞ்சைக்கும்… ஒன்று முக்கால் கொள்ளக் கடவோமாகவும்” (S.I.I.iv. 105);.

     [வான் + பயிர்]

வான்பிரயோசனம்

 வான்பிரயோசனம் vāṉpirayōcaṉam, பெ.(n.)

   மரக்கறி (யாழ்.அக.);; vegetable curry.

     [வான் + Skt. {} → த. பிரயோசனம்]

வான்புலம்

வான்புலம் vāṉpulam, பெ.(n.)

   உண்மை யறிவு (சீவக. 793, உரை.);; true knowledge.

     [வான் + புலம்]

வான்புலவு

 வான்புலவு vāṉpulavu, பெ.(n.)

   வான்கோழிப் புலவு (இக்.வ.);; pulau made of turkey.

     [வான்கோழி + புலவு → வான்புலவு]

வான்மகள்

வான்மகள் vāṉmagaḷ, பெ.(n.)

இந்திராணி;{}.

     “மண்மகளு நாமகளும் வான்மகளும்” (திருவாரூ.114);.

     [வான் + மகள்]

வான்மணி

வான்மணி vāṉmaṇi, பெ.(n.)

   ஞாயிறு; sun.

     “ஒராயிர மகல் வான்மணியொக்கும்” (பாரத. அருச்சுனன்றவ. 159);.

     [வான் + மணி]

வான்மியூர்

வான்மியூர் vāṉmiyūr, பெ.(n.)

   சென்னை மாவட்டத்தில் அலைவாயி லமைந்ததோரூர்;   திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்; one of the saiva sea shore places having the distinction of being sung by saint. Sampandar. It is in Chennai District.

     “கரையுலாங் கடலிற் பொலி சங்கம் வெள்ளிப்பிவள் திரையுலாங் கழி மீன் உகளுந்திரு வான்மியூர்” (140-1);

     [வான்மியூர் → திருவான்மியூர்]

வான்மிளகு

 வான்மிளகு vāṉmiḷagu, பெ. (n.)

   வால் மிளகு; cubeb.

     [வால் + மிளகு]

க. பாலமிணசு.

வான்மீகபலம்

 வான்மீகபலம் vāṉmīkabalam, பெ.(n.)

   எலுமிச்சை (சங்.அக.);; lime.

     [வான்மீகம் + Skt. pala → த. பலம்]

வான்மீகம்

வான்மீகம்1 vāṉmīkam, பெ.(n.)

   வால்மீகம்; the {}.

 வான்மீகம்2 vāṉmīkam, பெ.(n.)

   குங்குமப்பூ (தைலவ.);; saffron flower.

 வான்மீகம்3 vāṉmīkam, பெ.(n.)

   புற்றாஞ் சோறு; mother white ant.

வான்மீகி

வான்மீகி vāṉmīki, பெ. (n.)

வால்மீகி பார்க்க;see {}.

     “வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி யென்பான்” (கம்பரா. நாட்டுப். 1.);

     [Skt. {} → த. வான்மீகி]

வான்மீகியார்

 வான்மீகியார் vāṉmīkiyār, பெ. (n.)

   கடைக் கழகப் புலவர்; poet of sangam age.

     [வான்மீகி+ஆர்]

வான்மீன்

வான்மீன்1 vāṉmīṉ, பெ.(n.)

   விண்மீன் (புறநா. அரும்.);; star.

ஒருகா. விண்மீன்.

     [வான் + மீன்]

 வான்மீன்2 vāṉmīṉ, பெ.(n.)

வால்விண்மீன் (பிங்.); பார்க்க;see {}.

     [வால் → வான் + மீன்]

 வான்மீன் vāṉmīṉ,    பெ. (.n) விண்மீன்; stars:

     [வான்+மீன்]

வான்மெழுகு

 வான்மெழுகு vāṉmeḻugu, பெ.(n.)

   ஊதை நோய்களுக்காக கல்லாடத்தில் சொல்லிய ஒரு மருந்து; a medicine described in the Tamil medical book named Kalladam.

     [வான் + மெழுகு]

வான்மேனி

 வான்மேனி vāṉmēṉi, பெ.(n.)

   கொட்டான்; a tree.

     [வான் + மேனி]

வான்மை

வான்மை vāṉmai, பெ.(n.)

   1. தூய்மை; purity.

     “வான்மையின் மிக்கார் வழக்கு” (அறநெறி.2);.

   2. வெண்மை; whiteness.

     “வாசியிதனிலாங் கூலம் வான்மையதோ நீன்மையதோ” (சேதுபு. கத்துரு. 8);.

     [புல் → பல் → பால் → வால் → வான்மை]

வான்மைந்தன்

 வான்மைந்தன் vāṉmaindaṉ, பெ.(n.)

     [வான் + மைந்தன்]

வான்மொழி

வான்மொழி vāṉmoḻi, பெ.(n.)

   வானொலி; voice from the heavens.

     “வான்மொழி புகன்ற வாறும்” (பாரத. திரெள. 2);.

     [வான் + மொழி]

வான்றரு

வான்றரு vāṉṟaru, பெ. (n.)

   கற்பகமரம்; celestial tree.

     “வான்றரு மாரி வண்கை” (சீவக. 1091);.

     [வான் + தரு. தரு = skt.]

வான்றேர்ப்பாகன்

வான்றேர்ப்பாகன் vāṉṟērppākaṉ, பெ.(n.)

காமன் (வானத்திலுலவுந் தென்றலாகிய தேரைச் செலுத்துவோன்);;{},

 as riding on the south-wind through the sky.

     “வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனை” (மணிமே. 20, 91);.

     [வான் + தேர் + பாகன்]

வான்வளம்

வான்வளம் vāṉvaḷam, பெ.(n.)

   மழை; rain.

     “வான்வளஞ் சுரத்தலும்” (மாறனலங். 176, உதா. 402);

     [வான் + வளம்]

வான்விளக்கம்

வான்விளக்கம் vāṉviḷakkam, பெ.(n.)

   ஞாயிறு (நாமதீப. 93);; sun.

     [வான் + விளக்கம்]

வாபசுபெறு-தல்

வாபசுபெறு-தல் vābasubeṟudal,    4 செ.கு.வி.(v.i.)

   1. போட்டி முதலியவற்றிலிருந்து விலகுதல்;முறைப்படி அறிவித்த ஒன்றை திரும்பப்பெறுதல்; withdraw from a competition, etc. withdraw an application, a notice, etc.

கடைசி நேரத்தில் அந்த வீரர் இருநூறு மீட்டர் பந்தயத்திலிருந்து வாபசு பெற்றுக் கொண்டார்./ வேட்பு மனுக்களை வாபசு பெற நாளை தான் கடைசி நாள்/ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபசு பெற்றாலொழிய பேச்சுவார்த்தை இல்லை என்கிறார்கள்.

   2. பொருளையோ பணத்தையோ திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; take back.

அந்தக் கடையில் எந்த ஒரு பொருளையும் வாபசு பெற மாட்டார்கள்/ தைலம் வலியைப் போக்காவிட்டால் உங்கள் பணத்தை வாபசு பெற்றுக் கொள்ளலாம்.

   3. அனுப்பிய படைகளை திரும்ப வருமாறு செய்தல்; with draw, recall the army.

ஆக்கிரமித்த இடங்களிலிருந்து படைகளை அந்த நாடு வாபசு பெற வேண்டும்/ போர் முனையில் தன் நிலைகளை இழந்த படைகளை அதிக சேதம் இல்லாமல் வாபசு பெற்றுக் கொண்டது. (கிரியா.);.

வாப்பியம்

 வாப்பியம் vāppiyam, பெ.(n.)

   கோட்டம்; arabian costus – costus speciosus.

வாமடைவைக்கல்கட்டு

 வாமடைவைக்கல்கட்டு vāmaḍaivaikkalkaḍḍu, பெ.(n.)

   நில உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டிய வைக்கோற்கட்டு; straw bundle given to the land holder.

     [வாய்மடை → வாமடை + வைக்கல் + கட்டு. வைக்கல் = நெற்பயிரின் உலர்தாள்.]

வாமனக்கல்

 வாமனக்கல் vāmaṉakkal, பெ.(n.)

   இறையிலி நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் வாமனாவதாவுருவமைந்த கல் (insc);; boundary stone of lands granted for religious purpose, as carved with the figure of {}.

     [வாமனன் + கல்]

     [Skt. {} → த. வாமனன்]

வாமனன்

வாமனன் vāmaṉaṉ, பெ. (n.)

   பத்து தோற்றரவத்து (தசாவதாரத்து);ள் குறள் வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.);; Tirumal his dwarf incarnation, one of {}, q.v.

     “வாமனன் மண்ணிது வென்னும்” (திவ். திருவாய். 4,41.);

     [Skt. {} → த. வாமனன்]

வாமன்

வாமன் vāmaṉ, பெ. (n.)

   1. அருகன்; Arhat.

     “வார்தளிர்ப்பிண்டி வாம” (சீவக. 3018);.

   2. புத்தன்; Buddha.

     “காமற் கடந்த வாமன் பாதம்” (மணிமே.5,77);.

   3. சிவபிரான்;{}.

     “கங்கை சூடும் வாமனை” (தேவா. 1050,4);.

     [Skt. {} → த. வாமன்1]

வாமம்

வாமம் vāmam, பெ. (n.)

   1. அழகு. (பிங்.);; beauty.

     “வாமச் சொரூப முடையோய்” (இரகு. திக்குவி. 140.);

   2. ஒளி. (சூடா.);; light, brightness, splendour.

     “வாம மேகலை மங்கையோடு” (கம்பரா. கைகேசி. 49.);

   3. இடப்பக்கம்; left side.

     “வாமத்தாண் மேல் வர வலத்தாண் மேனின்று” (திருவாலவா. 32, 8);.

   4. நேர்மையின்மை; unrighteousness, injustice.

     “வாமப்போர் வயப்பிசாசனும்” (கம்பரா. படைத்தலை.49.);

   5. எதிரிடை (வின்.);; opposition.

   6. தீமை; evil, baseness.

     “வாமக்கள்ளைக் குடித்தவா போல” (குற்றா. குற. 105);.

   7. அகப் புறச்சமயம் ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம் (சி.போ.பா அவையடக். பக். 50.);;   8. பாம்பு வகை (வின்.);; a kind of snake.

   9. முலை (வின்.);; woman’s breast.

   10. செல்வம்(வின்.);; riches.

     [Skt. {} → த. வாமம்]

வாம்பல்

 வாம்பல் vāmbal, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

வாயகன்றகுப்பி

 வாயகன்றகுப்பி vāyagaṉṟaguppi, பெ.(n.)

   வாய் அகன்ற குடுவை; wide mouthed bottle.

     [வாய் + அகன்ற + குப்பி]

வாயகன்றபாண்டம்

 வாயகன்றபாண்டம் vāyagaṉṟapāṇṭam, பெ.(n.)

   வாய் விரிந்த பாண்டம்; a wide mouthed earthern ware, basin.

     [வாய் + அகன்ற + பாண்டம்]

வாயசம்

வாயசம் vāyasam, பெ.(n.)

   1. காக்கை; crow.

   2. காக்கை கொல்லி; a kind of medicinal herb.

வாயசாராதி

 வாயசாராதி vāyacārāti, பெ.(n.)

   ஆந்தை (யாழ்.அக.);; owl.

வாயசி

வாயசி vāyasi, பெ.(n.)

   1. பெண் காக்கை (இலக்.அக.);; hen-crow.

   2. செம்மணித் தக்காளி (தைலவ.);; a variety of Indian houndsberry.

 வாயசி vāyasi, பெ. (n.)

   பெண் காக்கை. (இலக்.அக.);; hen-crow.

     [Skt. {} → த. வாயசி]

வாயச்சரம்

 வாயச்சரம் vāyaccaram, பெ.(n.)

   வாயில் ஏற்படும் சிறுசிறு குழிப்புண்; sore in the month.

     [வாய் + அச்சரம்]

வாயடி

வாயடி1 vāyaḍi, பெ.(n.)

   வாயால் மருட்டுகை; over-bearing speech, brow beating by speech, bluff.

     ‘வாயடி கையடி யடிக்காதே” (உ.வ.);.

     [வாய் + அடி]

 வாயடி2 vāyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

வாயடியடி பார்க்க;see {}.

     “திருவாய்ப்பாடியிற் பெண் பிள்ளைகளை வாயடித்துத் தம் திருவடிகளிலே வந்து விழும்படி வசீகரித்து” (திவ். திருவாய். 4, 2, 2, ஆறா.);.

     [வாய் + அடி-த்தல்,]

 வாயடி3 vāyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வாயிலே யடித்துக் கொள்ளுதல்; to beat one’s mouth, as in a grief.

     “மண்புரண்டு வாயடிப்பவர்” (பிரபுலிங்.சித்த.49);.

   2. அலப்புதல்; to chatter.

வாயடியடி

வாயடியடி1 vāyaḍiyaḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல்; to over power one’s opponent by bluff.

     [வாயடி + அடி-,]

 வாயடியடி2 vāyaḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மருட்டிப் பேசுதல்; to bluff.

     [வாயடி + அடி-,]

வாயடை

வாயடை1 vāyaḍai, பெ.(n.)

   உணவு; food.

     “வாயடை யமிர்தம்” (பரிபா.2, 69);.

     [வாய் + அடு → அடை]

 வாயடை2 vāyaḍai, பெ.(n.)

தாட்கிட்டி சன்னி பார்க்க;see {}.

     [வாய் + அடை]

 வாயடை3 vāyaḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பேசவொட்டாதபடி செய்தல்; to silence, as an opponent by arguments.

     [வாய் + அடை-,]

வாயடைப்பு

வாயடைப்பு vāyaḍaippu, பெ.(n.)

   1. வாய்க் கட்டு; gag.

   2. உணவு; food.

   3. தூக்கம் நடை ஆகியவிக்குற்றங்களினாற் பிறந்து நரம்பு களில் சார்ந்து மூடிய வாயைத் திறக்க வொட்டாதபடி செய்யுமோர் ஊதை நோய்; a disease which prevents the opening of the mouth. This is generally caused by sleeping during the day which aggravates {}.

     [வாய் + அடைப்பு]

வாயனதானம்

 வாயனதானம் vāyaṉatāṉam, பெ.(n.)

   இறைவனுக்குப் படைக்கப்பட்ட படையல் பண்டங்களைக் கொடையாகப் பார்ப்பனர் களுக்கு வழங்குகை; presentation to Brahmins of the naivettiyam at the end of a {}.

     [வாயனம் + தானம்]

வாயனம்

வாயனம் vāyaṉam, பெ.(n.)

   1. ஒருவகை இனிப்பான தின்பண்டம்; a kind of sweet meat.

   2. வாயனதானம் பார்க்க;see {}.

வாயன்

வாயன் vāyaṉ, பெ.(n.)

   1. தூதன்; messenger.

   2 ஆயன்; shepherd.

     [வாய் → வாயன்]

வாயமுதம்

 வாயமுதம் vāyamudam, பெ.(n.)

   நன்னீர்; saliva.

     [வாய் + அமுதம்]

வாயம்

வாயம் vāyam, பெ.(n.)

   1. நீர் (யாழ்.அக.);; water.

   2. பெய்கை; pouring.

வாயறியாமல்தின்னல்

 வாயறியாமல்தின்னல் vāyaṟiyāmaltiṉṉal, பெ.(n.)

   மிதமிஞ்சி தின்னுதல்; eating excessively, glutlony.

     [வாய் + அறியாமல் + தின்னல்]

வாயலம்பு-தல்

வாயலம்பு-தல் vāyalambudal,    9 செ.கு.வி. (v.i.)

   உண்டபின் வாய் பூசுதல்; to wash or rinse one’s mouth, as after a meal.

     [வாய் + அலம்புதல். (அலம்புதல் = கழுவுதல்);]

வாயல்

வாயல் vāyal, பெ.(n.)

   1. வாசல் (சங்.அக.);; door, entrance.

   2. பக்கம் (வின்);; side.

     [வாசல் → வாயல்]

வாயல்முறுவல்

 வாயல்முறுவல் vāyalmuṟuval, பெ. (n.)

   பொய்யான புன்னகை; illusionary smile.

வாயல் முறுவற்கு உள்ளகம் வருந்த (சிலம்பு);.

     [வாய்+அல்+முறுவல்]

வாயழற்சி

 வாயழற்சி vāyaḻṟci, பெ.(n.)

   வாய் வேக்காடு; inflammation of mouth.

மறுவ. வாய்ப்புண்.

     [வாய் + அழற்சி]

வாயவன்

வாயவன் vāyavaṉ, பெ.(n.)

   தூதன்; ambassador.

     “சொல்லென வாயவன் விளம்பலும்” (புரூரவ.போர்புரி.5);.

     [வாய் → வாயவன்]

வாயவியல்

 வாயவியல் vāyaviyal, பெ.(n.)

   வாய் வெந்து புண்ணாதல்; canker oris.

     [வாய் + அவி → அவியல்]

வாயாகு-தல்

வாயாகு-தல் vāyākudal,    5 செ.கு.வி. (v.i.)

   உண்மையாதல்; to be come true.

     ‘யானறிந் தேனது வாயாகுதலே’ (தொல். பொருள். 261, உரை);.

     [வாய் + ஆகு-,]

வாயாடி

வாயாடி vāyāṭi, பெ.(n.)

   1. அலப்புவோன்; talkative, loquacious person;

 babbler;

 chatterbox.

   2. நாநலமுடையான் (ஈடு. 4, 8, 8);; eloquent or clever speaker.

     [வாயாடு → வாயாடி]

வாயாடு-தல்

வாயாடு-தல் vāyāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சொற்றிறமாய்ப் பேசுதல்; to speak cleverly or eloquently.

   2. வீண்பேச்சுப் பேசுதல்; to speak frivolously;

 to fabble.

     “நின்னுடனே வாயாடுவோர் பான் மருவி நில்லேன்” (அருட்பா.1, நெஞ்சறி.631);.

   3. ஓயாது மென்று கொண்டிருத்தல்; to be contineously munching.

     [வாய் + ஆடு-,]

வாயார

வாயார vāyāra, வி.எ.(adv.)

   1. முழுக் குரலோடு; with a full voice.

     “வாயார நாம் பாடி” (திருவாச.7, 15);.

   2. வாய் நிரம்ப; with a full mouth.

     “வாயார வுண்டபேர்” (தாயு. சச்சிதா. 8);.

     [வாய் + ஆர் → ஆர]

வாயாறுகை

 வாயாறுகை vāyāṟugai, பெ. (n.)

நாவறட்சி, நீர்வேட்கை:

 thirst.

க. பாயாரிகே

வாயாலெடு-த்தல்

வாயாலெடு-த்தல் vāyāleḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒக்காளித்தல் (நாமதீப.600);; to vomit.

     [வாய் → வாயால் + எடு-,]

வாயாலெரையுடன்

 வாயாலெரையுடன் vāyāleraiyuḍaṉ, பெ.(n.)

   தேவாங்கு; an animal, sloth.

வாயால்குதட்டுதல்

 வாயால்குதட்டுதல் vāyālkudaṭṭudal, பெ.(n.)

   வாயிலிட்டு அதக்குதல்; pressing softly after receiving into the mouth as done with penis or lips by a woman. (This is a kind of perverted sexual act);.

     [வாய் + ஆல் + குதட்டு-,]

வாயால்கெடல்

வாயால்கெடல் vāyālkeḍal, தொ.பெ.(vbl.n.)

   சொல்லக்கூடாததைச் சொல்லித் துன்பத்திற்குள்ளாதல்; inviting trouble by loose talk.

   2. தவளை கத்துதலின் வாயிலாகத் தன் இருப்பிடத்தை பகை உயிரிகளுக்குத் தெரிவித்து உயிரிழத்தல்; forg denoting its location toenemies by croaking.

     “நுணலும் தன் வாயாற் கெடும்(பழ.); தன் வாயாற் கெடும் (பழ.);.

     [வழி+நீர்]

தவளையைத் தின்ன நினைக்கும் வெளவால் தவளை கத்தும் வரை காத்திருக்கும். தவளை இனச்சேர்க்கையின்போது கத்துவது வழக்கம். உண்ணக்கூடாத நச்சுத் தவளையின் ஓசையையும் நல்ல தவளையின் ஓசையையும் வேறுபடுத்தி நுனித்தறிந்த பின் நல்ல தவளையை மட்டும் வெளவால் தின்னும். இதனால் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுனலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி தோன்றியது. மழைக்காலத்தில் கூட்டமாக சேர்ந்து கத்துவது இதனினும் வேறான நிகழ்வு.

வாயாவி

வாயாவி vāyāvi, பெ.(n.)

   1. கொட்டாவி (வின்.);; yawn.

   2. மூச்சு (யாழ்.அக.);; breath.

     [வாய் + ஆவி]

வாயாவிபோக்கு-தல்

வாயாவிபோக்கு-தல் vāyāvipōkkudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. கொட்டாவி விடுதல்; to yawn.

   2. வீணே பேசுதல் (வின்.);; to speak in vain, as wasting one’s breath.

     [வாயாவி + போக்கு]

வாயித்தல்

வாயித்தல் vāyittal,    4 செ.கு.வி. (v.i.)

   வாயாற் படித்தல்; to read in loudly.

ஓ.நோ. கண் → கணி. கடைக்கணித்தல் = கடைக்கண்ணாடி பார்த்தல். மலையாளத்தில் வாயித்தல் என்னும் வடிவம் வழங்குகின்றது. (வ.மொ.வ.163);.

வாயினிப்பு

 வாயினிப்பு vāyiṉippu, பெ.(n.)

   உமிழ் நீரால் வாயில் உணரப்படும் இனிப்புணர்வு; sweetness of the mouth.

     [வாய் + இனிப்பு]

வாயினிலை

வாயினிலை vāyiṉilai, பெ.(n.)

   அரசனிடத்துத் தன் வரவு கூறுமாறு வாயில் காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை (பு. வெ. 9, 2);; theme of a poet asking the gate- keeper at the palace to announce his arrival to the king.

     [வாயில் + நிலை]

வாயினேர்வித்தல்

வாயினேர்வித்தல் vāyiṉērvittal, பெ.(n.)

   தலைவியிடம் தூது செல்லுமாறு தலைவன் தூதுவரை உடன்படுத்துவதைக் கூறும் அகத்துறை (நம்பியகப். 96);; theme of a lover persuading his messenger to deliver his love-message to his beloved.

     [வாயில் + நேர்வு → நேர்வித்தல்]

வாயின்மறுத்தல்

வாயின்மறுத்தல் vāyiṉmaṟuttal, பெ.(n.)

   தூது வந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத் துறை (தொல். பொருள். 3, உரை);;     [வாயில் + மறு-,]

வாயின்மாடம்

வாயின்மாடம் vāyiṉmāṭam, பெ.(n.)

   கோபுரம்; tower over the entrance, as of a temple.

     “தியழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் வாயின் மாடத்து” (பெருங். மகத. 3, 31);.

     [வாயில் + மாடம்]

வாயிற்காட்சி

வாயிற்காட்சி vāyiṟkāṭci, பெ.(n.)

   ஐம்புலக் காட்சி (சி.சி.அளவை, 6, மறைஞா.);; apprehending faculty of senses.

     [வாயில் + காட்சி]

வாயிற்கூத்து

வாயிற்கூத்து vāyiṟāttu, பெ.(n.)

   கூத்துவகை; a kind of dancing or acting.

     “வாயிற் கூத்துஞ் சேரிப்பாடலும்” (பெருங். உஞ்சைக்.37, 88);.

     [வாயில் + கூத்து]

வாயிற்படி

வாயிற்படி vāyiṟpaḍi, பெ.(n.)

   வீட்டு வாசலின் படி; door-step threshold.

     ” மிருதி பதினெட்டு முயர் திருவாயிற் படியாக”(குற்றா. தல. திருமால். 132);.

     ‘வீட்டுக்குவீடு வாசற்படி’ (பழ.);

     [வாயில் + படி]

வாயிலடக்கல்

 வாயிலடக்கல் vāyilaḍakkal, பெ.(n.)

   வாயிலடக்குதல்; to keep in the mouth.

     [வாயில் + அடக்கல்]

வாயிலடித்தல்

வாயிலடித்தல் vāyilaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   முற்றுங்கெடுத்தல்; to ruin.

     [வாயில் + அடி-,]

வாயிலப்பு

வாயிலப்பு vāyilappu, பெ.(n.)

   1. வாய் நீரூறல், ஒரு நோய்; excessive salivation, a disease.

   2. வாய் நீர்; saliva.

   3. அகட்டு நீர்க்கோவை; ascites.

     [வாய் + இல் → வாயில் + அப்பு. (இல் = ஏழனுருபு);]

வாயிலாக

 வாயிலாக vāyilāka, வி.எ. (adv.)

மூலம்,

 through.

     ‘நாம் வருவதை முன்கூட்டியே தொலைபேசி வாயிலாகத் தெரிவித்து விடலாம்’.

     [வாய் → வாயில் + ஆக]

வாயிலாச்சீவன்

 வாயிலாச்சீவன் vāyilāccīvaṉ, பெ.(n.)

   விலங்கு; animal, dumb creature.

     [வாய் + இல்லா → இலா + சீவன்]

 Skt. {} → த. சீவன்.

வாயிலார்நாயனார்

வாயிலார்நாயனார் vāyilārnāyaṉār, பெ.(n.)

   நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு.);; a canonized {} Saint, one of 63.

வாயிலாளன்

 வாயிலாளன் vāyilāḷaṉ, பெ.(n.)

   வாயிற்காவலன் (பிங்.);; door-keeper.

     [வாயில் + ஆள் → ஆளன்]

வாயிலிற்கூட்டம்

வாயிலிற்கூட்டம் vāyiliṟāṭṭam, பெ.(n.)

   பாணன் முதலியோராற் கூடும் தலைவன் தலைவியரின் கூட்டம் (இலக்.வி.424.);; reconciliation of lovers through the help of mediators.

     [வாயில் + கூட்டம்]

வாயிலெடு-த்தல்

வாயிலெடு-த்தல் vāyileḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

வாயாலெடு-, பார்க்க;see {}.

     [வாய் + ஆல் (ஆல் = மூன்றனுருபு); + எடு-,]

வாயிலெடுக்கல்

 வாயிலெடுக்கல் vāyileḍukkal, பெ.(n.)

   கக்கல்; vomitting.

     [வாயில் + எடுக்கல்]

வாயிலெட்டு

 வாயிலெட்டு vāyileṭṭu, பெ.(n.)

   ஒரு ஊனானிப்பூடு; violaodorata a plant used in unani medicine.

     [வாயில் + எட்டு]

வாயிலேயோடு-தல்

வாயிலேயோடு-தல் vāyilēyōṭudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. பேச வொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடை செய்தல்; to interrupt as a person, while speaking.

     ‘எது பேசினாலும் அவளை வாயிலே போடுகிறான்’.

   2. பிறர் பொருளைக் கையாடுதல்; to misappropriate.

     ‘அவன் பிறர் பொருளை வாயிலே போட்டுக் கொள்ளுகிறவன்’.

     [வாயில் + போடு-,]

வாயிலைப்பு

 வாயிலைப்பு vāyilaippu, பெ.(n.)

   வாய் சுவையின்மை; bad taste in the mouth.

     [வாய் + இளைப்பு → இலைப்பு]

வாயிலோர்

வாயிலோர் vāyilōr, பெ.(n.)

   1. வாயில் காப்போர்; door-keepers.

     “வாயிலோயே வாயிலோயே” (சிலப். 20, 24);.

   2. தூதுவர் (சங்.அக.);; messengers, mediators.

   3. ஒரு சார் தமிழ்க் கூத்தர் (பிங்.);; a class of Tamizh dancers.

     [வாயில் → வாயிலார் → வாயிலோர்]

வாயில்

வாயில்1 vāyil, பெ.(n.)

   1. ஐம்பொறி; the five sense organs.

   2. ஒன்பான் துளை; the nine opening.

 வாயில்2 vāyil, பெ.(n.)

   1. கட்டடத்துள் நுழையும் வாசல்; gate, portal, doorway, entrance to a building.

     “அடையா வாயிலவ னருங்கடை” (சிறுபாண்.206);.

   2. ஐம்பொறி (பிங்.);; the five organs of sense, as avenues to the self.

   3. ஐம்புலன் (பொரு.நி.);; the five objects of sense.

   4. வழி; way.

     “புகழ்குறை படூஉம் வாயில்” (புறநா.196);.

   5. துவாரம்; opening.

     “வருந்து முயிரொன்பான் வாயிலுடம்பில்”(நன்னெறி. 12);.

   6. இடம்; place.

     “வாயில் கொள்ளா மைந்தினர்” (பதிற்றுப்.81, 9);.

   7. காரணம் (பிங்.);; cause.

     “வாயிலோய் வாயி லிசை” (பு.வெ.9,2);.

   8. வழிவகை; means.

     “திருநலஞ் சேரும் வாயிறான்” (சீவக.2008);.

   9. தீர்வு (ஞானா.34, 21);; remedy.

   10. அரசவை; King’s court.

     “பொன்னி நாடவன் வாயிலுள்ளா னொரு புலவன்” (திருவிளை. கான்மா.5);.

   11. வாயில் காப்பான் பார்க்க;see {}.

     “வாயில் விடாது கோயில் புக்கு”(புறநா. 67);.

   12. தூதன்; messenger.

     “வயந்தக குமரனை வாயிலாக” (பெருங். மகத. 18, 30);.

   13. தலைவனையும் தலைவியையும் இடை நின்று கூட்டுந் தூது; one who mediates between lovers.

     “வருந் தொழிற் கருமை வாயில் கூறினும்” (தொல். பொருள். 111);.

   14. திறம் (பிங்.);; ability.

   15. கதவு; door.

     “நீணெடு வாயி னெடுங்கடை கழிந்து” (சிலப்.10, 8);

   16. வரலாறு (இலக். அக.);; origin, history.

   ம. வாதில்;   கோட. வாய்ல்;   தோட.போஸ்;   க. பர்கில்;   து. பாகிலு;   தெ. வாகிலி;கொலா.

   வாகல், நாய்க், வாகல்;பார்ஜி. வால்.

வாயில்காப்பான்

வாயில்காப்பான் vāyilkāppāṉ, பெ.(n.)

   வாசலிற் காவல் செய்வோன்; door keeper.

     “வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்” (திவ். திருப்பா.16);.

ஒருகா. வாயிற்காவலன்

     [வாயில் + கா → காப்பான்]

வாயில்மண்போடு-தல்

வாயில்மண்போடு-தல் vāyilmaṇpōṭudal,    9 செ.கு.வி. (v.i.)

   கேடு விளைத்தல்; to cause ruin.

     “அவர்கடம் வாயில்… மண் போட்டான்” (தனிப்பா.1, 238, 8);.

     [வாய் → வாயில் + மண் + போடு-,]

வாயில்மண்விழுதல்

 வாயில்மண்விழுதல் vāyilmaṇviḻudal, பெ.(n.)

   முற்றுங் கேடுறுகை; being completely ruined.

     [வாய் → வாயில் + மண் + விழுதல்-,]

வாயில்லாப்பூச்சி

 வாயில்லாப்பூச்சி vāyillāppūcci, பெ.(n.)

   எதிர்த்துக் கேட்கும் திறன் இல்லாதவர்; people who would not speak up.

     ‘பாவம் வாயில்லாப் பூச்சிகள்;அவர்களால் நிலக்கிழார்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்?’

     [வாயில்லா + பூச்சி]

வாயில்விழைச்சு

வாயில்விழைச்சு vāyilviḻaiccu, பெ.(n.)

   உமிழ்நீர்; saliva, spittle.

     “வாயில் விழைச்சிவை யெச்சில்” (ஆசாரக்.8);.

     [வாய் → வாயில் + விழை → விழைச்சு. (விழைச்சு = இளமை);]

வாயில்வேண்டல்

வாயில்வேண்டல் vāyilvēṇṭal, பெ.(n.)

   தலைவனுக்கு முகங் கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக் கொள்வதைக் கூறும் அகப் பொருட்டுறை (நம்பியகப். 95);; theme describing the request of a mediator to a heroine to give audience to her lover.

     [வாயில் + வேண்டல்]

வாயிழு-த்தல்

வாயிழு-த்தல் vāyiḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சண்டை போடுதல் (Tp);; to pick a quarrel.

     [வாய் + இழு-,]

வாயீளை

 வாயீளை vāyīḷai, பெ.(n.)

   கோழையுடனாய வாயெச்சில்; saliva and mucus discharge from the mouth.

     [வாய் + ஈளை. ஈளை = கோழை.]

வாயு

வாயு vāyu, பெ. (n.)

   1. காற்று (பிங்.);; wind air.

   2. ஐம்பூதத்துள் ஒன்று; an element,

 one of {}.

     “அதன் கண் வாயு வெளிப்பட்டு” (மணிமே. 27, 209);.

   3. எண்டிசைத் தேவருள் வடமேற்கு மூலைக்குத் தலைவனான தேவன்;{},

 the wind-god, regent of the north- west, one of the {}-tikku-p-{}.

   4. வயிற்றுப் பொருமல்; flatulence.

த.வ. வளி

     [Skt. {} → த. வாயு]

வாயுதவி

 வாயுதவி vāyudavi, பெ.(n.)

   வாய்ச்சொல் அருளல்; help by words.

மறுவ. பரிந்துரை.

     [வாய் + உதவி]

வாயுமேனி

 வாயுமேனி vāyumēṉi, பெ.(n.)

   பச்சைக்கல்; green stone.

வாயும்வயிறுமாயிரு-த்தல்

வாயும்வயிறுமாயிரு-த்தல் vāyumvayiṟumāyiruttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   கருப்பமாக இருத்தல்; be in the state of pregnancy.

     ‘நீ வாயும் வயிறுமாக இருக்கிற போது ஊட்டமான உணவு சாப்பிட வேண்டும்’.

     [வாயும் + வயிறுமாய் + இரு-,]

வாயுருட்டு

 வாயுருட்டு vāyuruṭṭu, பெ.(n.)

   பேச்சால் மருட்டுகை (இ.வ.);; browbeating.

     [வாய் + உருட்டு]

வாயுறு

வாயுறு1 vāyuṟuttal,    5 செ.கு.வி. (v.i.)

   பேச்சினால் மெய்ம்மையை அறிவுறுத்தல்; to preach or expound the truth.

     “வாயுறை வாழ்த்தே… வாயுறுத்தற்றே” (தொல். பொருள். 424);.

     [வாய்மை → வாய் + உறு-,]

 வாயுறு2 vāyuṟuttal,    4 இசெ.குன்றாவி. (v.t.)

   வாயிலூட்டுதல்; to feed, to administer as medicine, by the mouth.

     “மருந்தாகச் சிலநாட்கொண்டு வாயுறுத்தி” (சீவக. 2703, உரை);.

     [வாய் + உறு-,]

வாயுறை

வாயுறை vāyuṟai, பெ.(n.)

   1. உண்கை; eating.

     “வடுத்தீர் பகல் வாயுறை” (சிறுபஞ்.69);.

   2. உணவு; food, fodder.

     “பசுவுக்கொரு வாயுறை” (திருமந். 252);.

   3. அறுகம்புல்; harialli grass.

   4. சோறூட்டுதல்; ceremony of giving boiled rice to an infant for the first time.

     “தாண்டு மதியிரு மூன்றில் வாயுறையின் சடங்கியற்றி” (குற்றா. தல. தரும. 37);.

   5. கவளம் (இலக்.அக.);; bolus of cooked rice.

   6. மருந்து; medicine.

     “வாயுறை யென்பது மருந்தாகலான்” (தொல். பொருள். 423, உரை);.

   7. வாயுறைமொழி (தொல். பொருள். 423, உரை); பார்க்க;see {}.

   8. தாளுருவி என்னும் மகளிர் காதணி; a kind of ear-ring, worn by women.

     “வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதின்” (நெடுநல். 140);.

     [வாய் + உறை]

வாயுறைமொழி

வாயுறைமொழி vāyuṟaimoḻi, பெ.(n.)

   கேட்கும் போது வெவ்வியதாய்ப் பின்பு உறுதி தருஞ் சொல் (சி.போ. பா. 2, 2, பக். 165);; harsh but salutary words of advice.

     [வாயுறை + மொழி]

வாயுறைவாழ்த்து

வாயுறைவாழ்த்து vāyuṟaivāḻttu, பெ.(n.)

   1. தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை (தொல். பொருள். 90);; theme of wise men giving salutary advice to a chief nolens volens.

   2. சிற்றிலக்கிய வகை தொண்ணூற்றாறனுள் ஒன்று; a variety of descriptive poetry, one of 96 {}.

     [வாயுறை + வாழ்த்து]

வாயுள்ளவன்

 வாயுள்ளவன் vāyuḷḷavaṉ, பெ.(n.)

   உசாவி அறிந்து கொள்ளக் கூடியவன்; man of inquiring sprit, pushful man.

     ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ (பழ.);.

     [வாய் + உள்ளவன்]

வாயூறச்செய்தல்

 வாயூறச்செய்தல் vāyūṟacceytal, பெ.(n.)

   மருந்தினால் வாயில் நீரூறும்படி செய்தல்; to produce an usual secretion and discharge of saliva in a person by using medicine.

     [வாயூறு → வாயூற + செய்தல்]

வாயூறல்

வாயூறல் vāyūṟal, பெ.(n.)

   1. வாயில் பித்த நீர் சுரத்தல்; secretion of fluid in the mouth.

   2. வாய் நீர்; saliva.

     [வாய் + ஊறல்]

வாயூறு

வாயூறு1 vāyūṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உணவை நினைந்து உமிழ்நீர் சுரத்தல்; secretion of idiva on seing food.

     “அமரர் குழாம் வாயூற” (அழகர்கல.1);.

     [வாய் + ஊறு-,]

 வாயூறு2 vāyūṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அவாவுதல்; to long for, as welth, fame, office, learning.

     [வாய் + ஊறு-,]

வாயூற்று

 வாயூற்று vāyūṟṟu, பெ.(n.)

   வாயில் உமிழ் நீர் சுரக்கை (யாழ்.அக.);; profuse secretion of saliva.

     [வாயூறு → வாயூற்று]

வாயெச்சில்

 வாயெச்சில் vāyeccil, பெ. (n.)

வாய்மருந்து பார்க்க;see {}.

     [வாய் + எஞ்சு → எச்சு → எச்சில். (எச்சில் = மீந்த உணவு, உமிழ்நீர்.]

வாயெடு-த்தல்

வாயெடு-த்தல் vāyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பேசத் தொடங்குதல்; to begin to speak.

   2. குரலெடுத்தல்; to speak aloud, to raise the voice.

     “நன்னாடு வாயெடுத் தழைக்கும்” (மணிமே. 25, 237);.

     [வாய் + எடு-,]

வாயெழு-தல்

வாயெழு-தல் vāyeḻudal,    5 செ.கு.வி. (v.i.)

வாயெடு (இ.வ.); பார்க்க;see {}.

     [வாய் + எழு-, (எழு-தல் = தொடங்குதல்);.]

வாயைக்கட்டு

வாயைக்கட்டு1 vāyaikkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உணவிற் கட்டுப்பாடாக இருத்தல்; to observe restrictions of diet.

   2. சிக்கனமாக உணவு கொள்ளுதல்; to stint oneself in the matter of food.

     “வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்த பொருள்”.

   3. வாய்க்கட்டு1, 2, 3 பார்க்க;see {}.

     [வாய் → வாயை + கட்டு-,]

 வாயைக்கட்டு2 vāyaikkaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

வாய்கட்டு-, 1, 2 பார்க்க;see {}.

     [வாய் → வாயை + கட்டு-,]

வாயைப்பிள-த்தல்

வாயைப்பிள-த்தல் vāyaippiḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வியப்பை வெளிப்படுத்தும் வகையில் வாயைத் திறத்தல்; gape at.

     ‘பெண் மிதிவண்டி ஒட்டினாலே வாயைப் பிளக்கும் ஊர் இது’.

   2. இறத்தல்; to die.

     ‘கிழவர் திடீரென்று வாயைப் பிளந்து விட்டார்’.

     [வாய் → வாயை + பிள-,]

வாயொடுங்கு-தல்

வாயொடுங்கு-தல் vāyoḍuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   பேச்சடங்குதல் (யாழ்.அக.);; to be tongue-tied;

 to be rendered speechless.

     [வாய் + ஒடுங்கு-,]

வாயொலி

வாயொலி vāyoli, பெ. (n.)

   பாடல்; poem.

     “கலியன் வாயொலிகள்” (திவ். பெரியதி. 4, 5, 10);.

     [வாய் + ஒலி]

வாயோடு

வாயோடு vāyōṭu, பெ.(n.)

   1. உடைந்த பானையின் வாய்ச் சில்லு (திவ். திருமாலை 5, வ்யா. பக். 29);; neck of a broken pot.

   2. குத்தும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக் கழுத்துப் போன்ற கருவி (கொ.வ.);; circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy to prevent the grain from scattering.

     [வாய் + ஒடு]

வாயோட்டல்

 வாயோட்டல் vāyōṭṭal,    பிளத்தல்; raving.

     [வாய் + ஒட்டல்]

வாயோலை

வாயோலை vāyōlai, பெ.(n.)

   1. தவச வளவைக் குறிப்பிட்டுக் குவியலில் வைக்கும் அதன் கணக்குக் குறிப்பு; ola memorandum of account of grain in a heap, usually kept stuck in the heap.

   2. ஒற்றி உரிமையை விலைசெய்வதைக் குறிக்கும் மூல ஆவணம் (நாஞ்.);; document conveying the sale or assignment of one’s mortgage right.

     [வாய் + ஓலை]

வாய்

வாய்1 vāytal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நிறை வேறுதல்; to succeed, to be gained.

     “கல்வி வாயுமே” (திவ்.திருவாய்.1,10,11);.

   2. உறுதியாக நிகழ்தல்; to happen with certainty, to come true.

     “வருதல் வாய்வது” (முல்லை.20);.

   3. ஏற்றதாதல்; to be fit or suitable.

     “வாய்ந்த மலையும்” (குறள் .737);.

   4. நிறைதல்; to be full.

     “வாய்ந்த புகழ் மறைவளருந் தோணிபுரம்” (தேவா.145,3);.

   5. சிறத்தல் (வின்.);; to excel, surpass.

   6. வாய்2,5,6,7 பார்க்க;see {}.

     [வய் → வயி → வாயி → வாய்-,]

 வாய்2 vāytal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. பெறுதல்; to obtain, realise, possess.

     “வாய்ந்த மேனியெரி வண்ணமே” (தேவா.582, 6);.

   2. மனநேர்தல்; to consent to, agree to.

     “கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளே” (பரிபா.6, 66);.

     [வய் → வயி → வாயி → வாய்-,]

 வாய்3 vāyttal,    11 செ.கு.வி. (v.i.)

   1. செழித்தல்; to flourish;

 to be luxuriant.

     “வாய்க்குங் கரும்பும்” (திவ்.திருவாய்.7, 10, 4);.

   2. மதர்த்தல்; to be over luxuriant in growth.

     ‘உரம் அதிகமாய் விட்டதினால் பயிர் வாய்த்துப் போய்விட்டது’ (உ.வ.);

   3. சேர்தல்; to join, unite.

     “வருடையைப் படிமகன் வாய்ப்ப” (பரிபா.11, 5);.

   4. திரட்டுதல்; to gather into a mass.

     “கஞ்சுகம் வாய்த்த கவளம்” (பு.வெ.ஒழிபு.8);.

     [வய் → வயி → வாயி → வாய்-,]

 வாய்4 vāy, பெ.(n.)

   1. உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு (பிங்.);; mouth;

 beak of birds.

     “கயவர்வா யின்னாச் சொல்” (நாலடி. 66);.

   2. ஏனம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம்; mouth, as of cup, bag, ulcer etc.

     “வாயில்லை நாமங்கள் செப்ப… முத்தி பெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே” (அஷ்டப். திருவரங். மாலை.53);.

     “புண்வாய் கிழித்தன” (பெருந்தொ.701);.

   3. வாய்கொண்ட வளவு; mouthful.

     ‘நாலுவாய் உண்டான்’.

   4. உதடு; lip.

     “வாய்மடித் துரறி” (புறநா.298); (நாமதீப. 587);.

   5. விளிம்பு; edge, rim.

     “பொன்னலங்கல்….. வாயருகு வந்தொசிந்து” (சீவக.595);.

   6. படைக்கலத்தின் முனை; edge, as of a knife.

     “கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து” (பொரு.242);.

   7. மொழி; word.

     “வணங்கிய வாயினராத லரிது” (குறள்.419);.

   8. சொல் (அக.நி.);; speech, utterance.

     “பண்டேயுன் வாயறிதும்” (திவ்.திருப்பா.15);.

   9. குரல்; voice, tone.

     “வாயுடை-மறையவர்” (திவ்.நாய்ச்.1, 7);.

   10. மெய்ம்மை; truth.

     “பொய்சேணீங்கிய வாய் நட்பினையே” (மதுரைக். 198);(பிங்.);.

   11. சிறப்பு; excellence.

     “முறியினும் வாயது” (குறுந். 62);.

   12. சிறப்புடைப் பொருள்; that which is excellent.

     “மடவோன் காட்சி வாயன்று” (ஞானா.10);.

   13. வாசல்; opening, gate.

     “நரகவாய் கீண்டாயும் நீ” (திவ்.இயற்.3, 47);.

   14. வழி; way, path.

     “பெரியார் நூல் காலற்கு வாய் காப்புக் கோடல் வனப்பு” (ஏலா. 23);.

   15. வழிமுறை; means.

     “அது தணிக்கும் வாய்நாடி” (குறள்,948);.

   16. மூலம்; agency, instrumentality.

     “தூதர் வாயிலிட்டு நீட்டுகையு மன்றிக்கே” (ஈடு, 10,10, ப்ர);.

   17. இடம்; place.

     “கொக்கின் மென்பறைத் தொழுதி… எவ்வாயுங்கவர” (நெடுநல்.17);.

   18. துலாக்கோலின் வரை (G.Sm.D.I.i,284);; graduated mark on a steelyard.

   19. தழும்பு; scar.

     “வாள்வாயுமின்றி வடிவெங்கணை வாயுமின்றி” (சீவக.454);.

   20. துளை (யாழ்.அக.);; hole, orifice.

   21. இசைக் குழல் (சூடா.);; flute, musical pipe.

   தெ. வாயி;   க. பாய்;   ம. வாய்; Kur. {};

 Br. {};

 pa. {};

 Ko. {}, To. poy;

 Kod. ba-y;

 Tu. {}.

     [வய் → வயி → வாயி → வாய்]

 வாய்5 vāy, இடை(part.)

   1. ஏழனுருபு (நன். 302.);; a sign of the locative case.

     “கங்குல் வாய்” (திவ். திருவாய், 5, 4, 7);.

   2. ஓர் உவம உருபு; a particle of comparison.

     “தீவாய் செக்கர்” (கல்லா. 42, 20);.

     [வய் → வயி → வாயி → வாய்]

வாய்கட்டல்

வாய்கட்டல் vāykaṭṭal, பெ.(n.)

   1. பத்தியங் காத்தல்; to be on diet.

     ‘வாய் கட்டினால் பிள்ளை’.

   2. இதளிய கற்பூரம் முதலிய மருந்தினால் வாய் வெந்து போதல்; inflammation of the mouth due to mercurial poisioning.

   3. வாய் திறந்து இறந்து போனவர்களுக்கு வாயைக் கட்டுதல்; if the mouth remains opened after death a bandage is applied over the mandible closing it.

   4. வாய் திறவாதபடி செய்தல்; by witchcraft the mouth is tied and cannot be opened (in magic);.

     [வாய் + கட்டல்]

வாய்கட்டு

வாய்கட்டு1 vāykaṭṭudal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. பேசாதிருக்கச் செய்தல்; to silence.

   2. மந்திரத்தால் நச்சுயிரிகளின் வாயைத் திறவாமற் பண்ணுதல்; to charm, as a snake or beast, so as to prevent its opening its mouth.

 வாய்கட்டு2 vāykaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வாயைக்கட்டு-, 1, 2 பார்க்க;see {}.

   2. மதிப்புரவுக் குறிப்பாக

   ஆடையால் வாயை மூடுதல் (யாழ்.அக.);; to cover one’s mouth with cloth, as a mark of respect.

   3. உடலத்தின் வாயை ஆடையாற்கட்டுதல் (யாழ்.அக.);; to bind the mouth and chin of a corpse with a piece of cloth.

     [வாய் + கட்டு-,]

வாய்கரை

வாய்கரை vāykarai, பெ.(n.)

   இறங்கு துறை; ghat, ford, landing place.

     ‘நீஞ்சப்புக்கு வாய்கரையிலே தெப்பமிழப்பாரைப் போலே’ (திவ்.திருக்குறுந். 10, வ்யா.);

     [வாய் + கரை]

வாய்கரையர்

வாய்கரையர் vāykaraiyar, பெ.(n.)

   ஆழ்ந்தறிய மாட்டாது மேலோட்டமான அறிவுள்ளவர்கள்; men with superficial knowledge.

     “ஈஸ்வரனரியனென்று ஜகத்தை வழியடித்துண்கிற வாய்கரை யரைப்போலன்றி” (திவ். இயற். 2, 60. அப்பிள்ளாருரை);.

வாய்காட்டு-தல்

வாய்காட்டு-தல் vāykāṭṭudal,    10 செ.கு.வி. (v.i.)

   1. அதிகப்படியாகப் பேசுதல் (யாழ்.அக.);; to wag one’s tongue.

   2. கெஞ்சுதல் (கொ.வ.);; to cringe.

     [வாய் + காட்டு-,]

வாய்காய்தல்

 வாய்காய்தல் vāykāytal, பெ.(n.)

   வாயுலர்தல்; drying or parching of the mouth.

     [வாய் + காய்தல்]

வாய்கிழிய

 வாய்கிழிய vāykiḻiya, வி.எ.(adv.)

   வீண் பேச்சு; loudly without meaning.

     ‘பெண்ணுரிமை பற்றி மணிக்கணக்கில் வாய்கிழியப் பேசினாலும் யாரும் மனம் மாறுவதாகக்

கானோம்’.

     [வாய் + கிழி → கிழிய]

வாய்குமட்டல்

 வாய்குமட்டல் vāykumaṭṭal, பெ.(n.)

   கக்கல் வரும்படியான நிகழ்வு; nausea.

     [வாய் + குமட்டல்]

வாய்குளிரப்பேசு-தல்

வாய்குளிரப்பேசு-தல் vāykuḷirappēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   மேலுக்கு இனிமையாகப் பேசுதல் (இ.வ.);; to be honey-tongue.

     [வாய் + குளர் → குளிர + பேசு -,]

வாய்குளிறு-தல்

வாய்குளிறு-தல் vāykuḷiṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கூச்சலிடுதல் (வின்.);; to bawl out.

   2. உறக்கத்தில் கனவு முதலியவற்றால் வாய் குழறுதல்; to cry out in sleep, as from fear.

     [வாய் + குளிறு-,]

வாய்குவிந்தகுப்பி

 வாய்குவிந்தகுப்பி vāyguvindaguppi, பெ.(n.)

   சிறு கழுத்துப் புட்டி; narrow necked bottle.

     [வாய் + குவிந்த + குப்பி]

வாய்கூசுதல்

 வாய்கூசுதல் vāyācudal, பெ.(n.)

   தீச் சொற்கள் பேசுவதில் அருவருப்புக் கொள்ளுகை (கொ.வ);; being ashamed to use indecent words.

     [வாய் + கூசுதல்]

வாய்கூப்பு-தல்

வாய்கூப்பு-தல் vāyāppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   போற்றுதல்; to praise.

     “மருதிடத்தா னென்றொருகால் வாய் கூப்ப” (பதினொ. திருவிடை.மும்மணி.29);.

     [வாய் + கூப்பு-,]

வாய்கூம்பு-தல்

வாய்கூம்பு-தல் vāyāmbudal,    5 செ.கு.வி. (v.i.)

   குவிதல்; to close, as petals of a flower.

     “ஆம்பல்வாய் கூம்பினகாண்” (திவ்.திருப்பா. 14);.

     [வாய் + கூம்பு-,]

வாய்கொடு-த்தல்

வாய்கொடு-த்தல்1 vāykoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   உறுதிமொழி கூறுதல்; to give word, promise.

   2. பேச்சுக் கொடுத்தல் (கொ.வ.);; to engage one in talk.

   3. வாய்ச்சண்டை வளர்த்தல் (வின்.);; to kindle a quarrel;

 to bandy words.

     [வாய் + கொடு-,]

 வாய்கொடு-த்தல்2 vāykoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் தானாகப் போய்ப் பேசுதல்; enter into a conversation voluntarily.

     ‘அந்த முரடனிடம் ஏன் வாய்கொடுத்தாய்?’

     [வாய் + கொடு-,]

வாய்க்கசப்பு

வாய்க்கசப்பு1 vāykkasappu, பெ.(n.)

   1. வாய் கசந்திருக்கை; bitterness in the mouth.

   2. மாட்டுக்கு வரும் கோமாரி நோய்; a cattle-disease.

     [வாய் + கசப்பு]

 வாய்க்கசப்பு2 vāykkasappu, பெ.(n.)

   பித்தத்தினால் வாயில் உண்டாகும் கசப்பு; bitterness of taste owing to biliousness, disorders, fever etc.

     [வாய் + கசப்பு]

வாய்க்கடைப்புகையிலை

 வாய்க்கடைப்புகையிலை vāyggaḍaippugaiyilai, பெ.(n.)

   வாயிலே மென்று அடக்கிக் கொள்ளும் புகையிலை யுருண்டை (புதுவை.);; quid.

     [வாய் + கடை + புகையிலை]

வாய்க்கட்டு

வாய்க்கட்டு vāykkaṭṭu, பெ.(n.)

   1. கண்டதைத் தின்னாமலிருக்கை; restraint in food;abstaining from eating except at meal-time and confining oneself to the regular courses.

   2. மந்திரத்தாற் பேச முடியாமலும் வாயைத் திறக்க முடியாமலுஞ் செய்கை; rendering one speechless; preventing by witchcraft, animals etc, from opening their mouths.

     [வாய் + கட்டு]

வாய்க்கட்டை

வாய்க்கட்டை vāykkaṭṭai, பெ.(n.)

   1. சிறுவர்க்குரிய தின்பண்டம் (இ.வ);; sweets for children.

   2. கையூட்டு (வின்.);; tribe, tip.

     [வாய் + கட்டை]

வாய்க்கணக்கு

வாய்க்கணக்கு vāykkaṇakku, பெ.(n.)

   1. மனக் கணக்கு; mental arithmetic, working out sums mentally.

   2. வாயால் சொல்லுங்கணக்கு; oral statement of account, not reduced to writting.

     [வாய் + கணக்கு]

வாய்க்கயிறு

வாய்க்கயிறு vāykkayiṟu, பெ.(n.)

   கடிவாளக் கயிறு; rein.

     “வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்து” (பெருங். இலாவாண. 18,17);.

     [வாய் + கயிறு]

வாய்க்கரிசி

வாய்க்கரிசி vāykkarisi, பெ.(n.)

   1. எரியூட்டு முன் உறவுமுறையோராற் பிணத்தின் வாயிலிடும் அரிசி; handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation.

     “உனக்கு வாய்க்கரிசி தந்தேனுண்டிரு” (அரிச்.பு. காசிகா.62);.

   2. கையூட்டு (கொ.வ.);; bribe, tip.

   3. மனமில்லாமற் கொடுப்பது (இ.வ.);; anything unwillingly parted with.

     [வாய் + கு = நான்கனுருபு → வாய்க்கு + அரிசி]

வாய்க்கருவி

வாய்க்கருவி1 vāykkaruvi, பெ.(n.)

   கடிவாளம்; bit of a bridle.

     “வாய்க்கருவியிற் கோத்து முடியுங் குசையிற்றலை” (நெடுநல். 178, உரை);.

     [வாய் + கருவி]

 வாய்க்கருவி2 vāykkaruvi, பெ.(n.)

   வாய்க்குருவி (சொல்.இலக்.);; a kind of bird.

     [வாய் + குருவி → கருவி]

வாய்க்கரை

வாய்க்கரை vāykkarai, பெ.(n.)

   1. கிணறு முதலியவற்றின் விளிம்பு; rim, brink or edge, as of a well.

   2. உதடு; lip.

     “வாய்க் கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு” (ஈடு, 6, 1,1);.

     [வாய் + கரை]

வாய்க்கரைப்பற்று

வாய்க்கரைப்பற்று vāykkaraippaṟṟu, பெ.(n.)

   1. உதடு (ஈடு.4, 8, 8, ஜீ);; lip.

   2. நீர்நிலைக் கருகிலுள்ள வயல்; field near the head of a channel.

     “வாய்க்கரைப் பற்றை அடுத்தூணாக வுடையவன்” (ஈடு.4,8,8);.

     [வாய்க்கரை + பற்று]

வாய்க்காசு

வாய்க்காசு vāykkācu, பெ.(n.)

   1. பிணத்தின் வாயில் வாய்க்கரிசியுடன் வைக்கும் பணம் (வின்.);; money placed on the mouth of a corpse with {} (w.);.

   2. கையூட்டு (கொ.வ);; bribe, tip.

     [வாய் + காசு]

வாய்க்காடிவார்-த்தல்

வாய்க்காடிவார்-த்தல் vāykkāṭivārttal,    4 செ.கு.வி. (v.i.)

   மிக்க துயரத்துடனிருத்தல்; to be very sorrowful.

     ‘அவன் வாய்க்காடி வார்த்துக் கொண்டிருக்கிறான்’ (வின்.);.

     [வாய் + காடி + வார்-,]

வாய்க்காரன்

வாய்க்காரன் vāykkāraṉ, பெ.(n.)

   1. பேச்சில் வல்லவன் (இ.வ.);; clever speaker, talkative man.

   2. செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன் (யாழ்.அக.);; man who is arrogant in speech.

   3. பிறரைத் திட்டும் இயல்புள்ளவன்; man given to scandal mongering.

   4. பள்ளருள் ஒரு வகை (G.Tj.D.I.90.);; a sub-division of {} caste.

மறுவ. வாயாடி.

     [வாய் + காரன்]

வாய்க்காரி

வாய்க்காரி vāykkāri, பெ.(n.)

   1. பேச்சில் வல்லவள் (இ.வ.);; clever speaker, talkative woman.

   2. செருக்கால் மிதமிஞ்சிப் பேசுபவள்; woman who is arrogant in speech.

   3. பிறரைத் திட்டும் இயல்புள்ளவள் (இ.வ.);; woman given to scandal- mongering.

மறுவ. வாயாடி.

     [வாய் + காரி]

வாய்க்காற்சடைச்சி

 வாய்க்காற்சடைச்சி vāykkāṟcaḍaicci, பெ.(n.)

   வெதுப்படக்கி என்னும் மூலிகை (சங்.அக.);; malabar catamint.

மறுவ. பேய்மருட்டி.

     [வாய்க்கால் + சடைச்சி]

இச்செடி, வாய்க்கால் வரப்பு முதலியவிடங்களில் முளைக்கும்.

வாய்க்காலுக்குப்போ-தல்

வாய்க்காலுக்குப்போ-தல் vāykkālukkuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   மலங்கழித்தல் (வின்.);; Lit, to go to a channel, to go to stool.

வாய்க்கால்

வாய்க்கால் vāykkāl, பெ.(n.)

   1. கால்வாய்; water-course, channel, canal.

     “செய் விளைக்கும் வாய்க்காலனையார் தொடர்பு” (நாலடி.218);.

   2. கொடு நுகம்; 10வது விண்மீன்; the 10th naksatra.

     [வாய் + கால்]

வாய்க்கிரந்தி

வாய்க்கிரந்தி vāykkirandi, பெ.(n.)

   வாய்ப்புண் (கடம்ப.பு. இலீலா.124);; thrush, a disease, Althae ulcer in the mouth.

     [வாய் + Skt. grandhi → த. கிரந்தி.]

வாய்க்கிறுது

வாய்க்கிறுது vāykkiṟudu, பெ.(n.)

   1. செருக்கான பேச்சு; arrogant speech.

     ‘அவன் வாய்க்கிறுது பேசுகிறான்’.

   2. பொருத்தமற்ற சொல் (யாழ்.அக.);; unsuitable, inappropriate word.

     [வாய் + கிறி + கிறிது]

வாய்க்கிலை

வாய்க்கிலை vāykkilai, பெ.(n.)

   வெற்றிலை (சரவண.பணவிடு.304);; betel – leaf.

     [வாய் → வாய்க்கு + இலை]

வாய்க்கிலைகெட்டவன்

வாய்க்கிலைகெட்டவன் vāyggilaigeṭṭavaṉ, பெ.(n.)

   1. வறிஞன்; very poor man, as being too poor to buy betal-leaf.

   2. பயனிலி; useless person.

     [வாய் → வாய்க்கு + இலை + கெட்டவன்]

வாய்க்குடுமி

 வாய்க்குடுமி vāykkuḍumi, பெ.(n.)

   தாடி (கொ.வ.);; beard.

     [வாய் + குடுமி]

வாய்க்குட்பேசு-தல்

வாய்க்குட்பேசு-தல் vāykkuṭpēcudal,    10 செ.கு.வி. (v.i.)

   முணுமுணுத்தல்; to mumble, mutter, murmur.

     [வாய்க்குள் + பேசு-,]

வாய்க்குருவி

 வாய்க்குருவி vāykkuruvi, பெ.(n.)

   விளையாட்டு ஊது குழல் (இ.வ.);; toy- whistle.

     [வாய்க்கருவி → வாய்க்குருவி]

 வாய்க்குருவி vāykkuruvi, பெ. (n.)

   சீழ்க்கை; whistle.

     [வாய்+குருவி]

வாய்க்குற்றம்

வாய்க்குற்றம் vāykkuṟṟam, பெ.(n.)

   1. தன்னையறியாமற் பேச்சில் நேரும் பிழை (வின்.);; slip of the tongue, lapsus linguae.

   2. பேச்சுக்குற்றம் (யாழ்.அக.);; error in speech.

மறுவ. சொற்குற்றம்.

     [வாய் + குற்றம்]

வாய்க்குளறல்

வாய்க்குளறல்1 vāykkuḷaṟal, பெ.(n.)

   நோயினால் உளறிப் பேசுகதல்; blabber, incoherancy of speech through to be checked.

     ‘வாதத்திற் பித்தமாகில் வாயது குளறிப் போகும்’.

     [வாய் + குளறல்]

 வாய்க்குளறல்2 vāykkuḷaṟal, பெ.(n.)

   பக்க ஊதையினாலாவது அண்ணத்தின் நோயினாலாவது ஏற்படும் பேச்சுக் குளறல்; impaired or lost articulation from paralysis of the part from local laryngeal disease.

   2. பேச்சுத் தடுமாறலாகிய ஒரு இறப்புக்குறி; a death symptom accompanied by confused speech.

     [வாய் + குளரல்]

வாய்க்குழிப்புண்

 வாய்க்குழிப்புண் vāykkuḻippuṇ, பெ.(n.)

   வாயின் உட்புறத்தே சிறு சிறு புள்ளி போன்று உண்டாகும் ஒருவகையான புண்; perforating, ulcer in mouth.

     [வாய் + குழிப்புண்]

வாய்க்குவந்தபடி

 வாய்க்குவந்தபடி vāykkuvandabaḍi, வி.எ.(adv.)

   வரன்முறை இல்லாமல் மனம் போனபடி பேசுதல்; speak without restraint.

     ‘கோபம் வந்து விட்டால் வாய்க்கு வந்தபடி திட்டுவார்’.

     [வாய்க்கு + வந்தபடி]

வாய்க்குவழங்காமை

வாய்க்குவழங்காமை vāykkuvaḻṅgāmai, பெ.(n.)

   1. சுவையற்றதாகை (வின்.);; unpalatability.

   2. இழிவாயிருக்கை; being unspeakably vulgar.

     [வாய்க்கு + வழங்காமை]

வாய்க்குவாய்

 வாய்க்குவாய் vāykkuvāy, வி.அ. (adv.)

   ஒரு செய்தியைப் பலமுறை பேசுவது; frequently.

     ‘அவள் தன் குழந்தையின் திறமையை வாய்க்கு வாய் சொல்லி மகிழ்வாள்’.

     [வாய்க்கு + வாய்]

வாய்க்கூடு

 வாய்க்கூடு vāykāṭu, பெ.(n.)

   விலங்கின் வாயின் மேலிடுங்கூடு (நெல்லை.);; small basket or other contrivance for muzzling an animal.

     [வாய் + கூடு]

 வாய்க்கூடு vāykāṭu, பெ. (n.)

   தவசப் பயிர் களை மேயாமல் இருக்கமாடுகளுக்குப்போடும் கூடு; a small basket worn on cattle’s mouth.

வாய்க்கூடை

 வாய்க்கூடை vāykāṭai, பெ.(n.)

வாய்க்கூடு (வின்.); பார்க்க;see {}.

     [வாய் + கூடை]

ஒருகா. வாய்க்கூடு → வாய்க்கூடை.

வாய்க்கூலி

 வாய்க்கூலி vāykāli, பெ.(n.)

   கையூட்டு (வின்.);; bribe, hush-money.

     [வாய் + கூலி]

வாய்க்கேட்பார்

வாய்க்கேட்பார் vāykāṭpār, பெ.(n.)

   அரசனின் வாய்மொழி ஏற்றுச் செயல்படும் அலுவலர்கள் (S.I.I.ii.353);; personal secretary, as to a King.

     [வாய் + கேட்பார்]

வாய்க்கேள்வி

வாய்க்கேள்வி vāykāḷvi, பெ.(n.)

   1. அரசனின் கட்டளை; royal command, proclamation.

     “நிவந்தஞ்செய்த நம்வாய்க் கேள்விப்படி” (S.I.I.ii.306);.

   2. பிறர் சொல்லக் கேட்டறிந்த செய்தி; hearsay.

     [வாய் + கேள்வி]

வாய்க்கேள்வியர்

 வாய்க்கேள்வியர் vāykāḷviyar, பெ.(n.)

   அரசக் கட்டளைகளை நிறைவேற்றுவோர்; those who execute royal commands.

     “மணிக்கையை வாங்கென்று வாய்க் கேள்வியர்க்கு வருதி செய்தான்” (தனிப்பா.);.

     [வாய்க்கேள்வி → வாய்க்கேள்வியர்]

வாய்க்கொப்பளித்தல்

 வாய்க்கொப்பளித்தல் vāykkoppaḷittal, பெ.(n.)

   வாயில் நீரூற்றிக் கொப்பளித்தல்; gargling with water or medicinal liquid.

     [வாய் + கொப்பளித்தல்]

வாய்க்கொள்ளாபேச்சு

 வாய்க்கொள்ளாபேச்சு vāykkoḷḷāpēccu, பெ.(n.)

   இழிவழக்கு (யாழ்.அக.);; unspeakably, vulgar talk.

     [வாய் + கொள் + ஆ + பேச்சு]

வாய்க்கொழுப்பு

 வாய்க்கொழுப்பு vāykkoḻuppu, பெ.(n.)

   மதியாது பேசுகை; arrogance in speech, insolence in language.

     [வாய் + கொழுப்பு]

வாய்க்கோணல்

வாய்க்கோணல் vāykāṇal, பெ.(n.)

   நோய்வகை (கடம்ப.பு,இலீலா.139);; a kind of disease.

     [வாய் + கோணல்]

வாய்க்கோமாரி

 வாய்க்கோமாரி vāykāmāri, பெ.(n.)

   மாட்டுக்கு வாயில் வரும் நோய்வகை (M.L.);; a mouth-disease, in cattle.

     [வாய் + கோமாரி]

கால்நடைகளுக்கு வெப்பக்காலத்தில் வாய்க்கு உள்ளும் புறமும் கொப்புளங்களைத் தோற்றுவிக்கும் நோய்

வாய்சலி-த்தல்

வாய்சலி-த்தல் vāycalittal,    4 செ.கு.வி. (v.i.)

   பேசி வாயயர்தல்; to be tired of speaking.

     “அவன் நெடுநேரம் பேசி வாய் சலித்தான்” (வின்.);.

     [வாய் + சலி-.]

வாய்சளப்பு-தல்

வாய்சளப்பு-தல் vāycaḷappudal,    10 செ.கு.வி. (v.i.)

   வீண்பேச்சுப் பேசுதல் (யாழ்.அக.);; to chatter;

 to indulge in idle talk.

வாய்சளி-த்தல்

வாய்சளி-த்தல் vāycaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

வாய்சவக்களி-த்தல் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாய்சலி-த்தல் → வாய்சளி-த்தல்]

வாய்சவக்களி – த்தல்

வாய்சவக்களி – த்தல் vāycavakkaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுவையற்றிருத்தல்; to be insipid.

   2. வெறுப்புத் தட்டுதல்; to be distasteful.

     [வாய் + சவக்களி]

வாய்சுருங்கல்

 வாய்சுருங்கல் vāycuruṅgal, பெ.(n.)

   உணவுக் குழல்வாய் சுருங்கிப் போதல்; contraction of the lumen of a cannel.

     [வாய் + சுருங்கல்]

வாய்சுருங்கியபாத்திரம்

 வாய்சுருங்கியபாத்திரம் vāycuruṅgiyapāttiram, பெ.(n.)

   வாய் சிறுத்த ஏனம்; a vessel with small mouth.

     [வாய் + சுருங்கிய + பாத்திரம்]

 Skt. {} → த. பாத்திரம்

வாய்சோர்-தல்

வாய்சோர்-தல் vāycōrtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. பிதற்றுதல்; to talk incoherently, as in delirium.

     “வாய் சோர்ந் தாற்றா” (பெருங். வத்தவ. 7,25);.

   2. வாய்தடுமாறு-, 2 (பெரிய பு.); பார்க்க;see {}.

   3. வாய்சலி (இ.வ); பார்க்க;see {}.

     [வாய் + சோர்-,]

வாய்ச்சன்னி

 வாய்ச்சன்னி vāyccaṉṉi, பெ.(n.)

   முகத்தைக் கோணச்செய்து தோற்ற வேறுபாடு செய்யும் ஒர் இசிவு நோய்வகை; paralysis of the face.

     [வாய் + Skt. sanni → த. சன்னி]

வாய்ச்சப்பை

வாய்ச்சப்பை vāyccappai, பெ.(n.)

   1. பேச்சுத் திறமற்றவ-ன்-ள் (இ.வ.);; one who is not clever in speaking.

   2. காற் சப்பை (Cm.M.247);; foot and mouth disease in cattle.

     [வாய் + சப்பை]

வாய்ச்சம்பிரதாயம்

வாய்ச்சம்பிரதாயம் vāyccambiratāyam, பெ.(n.)

   1. பேச்சுத்திறமை (யாழ்.அக.);; cleverness in talking.

   2. தொன்றுதொட்டு வரும் வழக்கம்; oral tradition.

     [வாய் + Skt. sampra-{} → த. சம்பிரதாயம்.]

வாய்ச்சான்பிழைச்சான்

 வாய்ச்சான்பிழைச்சான் vāyccāṉpiḻaiccāṉ, பெ.(n.)

   நிலையுறுதியற்றது; precarious affair, matter of neck or nothing.

     [வாய்ச்சான் + பிழைச்சான்]

வாய்ச்சாலகம்

 வாய்ச்சாலகம் vāyccālagam, பெ.(n.)

   சொல்வன்மை (வின்.);; skill in speech, eloquence, fluency in speech.

     [வாய் + U. {} → த. சாலக்கு → சாலகம்.]

வாய்ச்சாலக்கு

 வாய்ச்சாலக்கு vāyccālakku, பெ.(n.)

வாய்ச்சாலகம் பார்க்க;see {}{}.

     [வாய் + U. {} → த. சாலக்கு]

வாய்ச்சி

வாய்ச்சி vāycci, பெ.(n.)

   1. மரத்தைச் செதுக்கும் கருவி; adze.

     “வாய்ச்சி வாயுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும்” (சீவக.2825);.

   2. செங்கல் செதுக்குங் கருவி; instrument for cutting the surface of bricks.

     “வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்” (சீவக.2689);.

     [வாய் → வாய்சி → வாய்ச்சி]

 வாய்ச்சி vāycci, பெ. (n.)

   மரத்தைச் செதுக்க உதவும் கருவி; an implement of the сагрепteг.

     [வாய்-வாச்சி-வாசி-வாய்ச்சி(கொ.வ.);]

வாய்ச்சித்தலை

 வாய்ச்சித்தலை vāyccittalai, பெ.(n.)

   தட்டையான தலை (யாழ்.அக.);; flattened head.

     [வாய்ச்சி + தலை]

வாய்ச்சுத்தம்

 வாய்ச்சுத்தம் vāyccuttam, பெ.(n.)

   உண்மையுடைமை; truthfulness.

     [வாய் + Skt. {} → த. சுத்தம்]

வாய்ச்சூலை

 வாய்ச்சூலை vāyccūlai, பெ.(n.)

   இதளிய மருந்தினால் ஏற்பட்ட தசைபிடிப்பு, இதளிய வேக்காடு; inflammation of the mouth by mercurial poisoning.

     [வாய் + சூலை]

ஒருகா. வாய்ப்பிடிப்பு.

வாய்ச்செய்கையொலி

 வாய்ச்செய்கையொலி vāycceykaiyoli, பெ. (n.)

ஒன்றைக் கூற வேண்டி வாயினாற் செய்யும் சைகைகளுடன் கூடிய ஒலி,

 gesticulatory sound.

     [வாய்ச்செய்கை+ஒலி]

வாய்ச்செய்கையொலிச்சொற்கள்

வாய்ச்செய்கையொலிச்சொற்கள் vāycceykaiyoliccoṟkaḷ, பெ.(n.)

   மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும்; beckoning by mouth.

வாய்ச்செய்கை சில வாய்ச் செய்கைகளால் ஏற்படும் வாய் நிலைகளை, அச் செய்கைகளைக் குறிக்குஞ் சொற்கள் முற்றுமாயினும் ஒரு மருங்காயினும் அமைக்குமாயின், அவை வாய்ச்செய்கை யொலியடிப் பிறந்தவையாம்.

எ-டு:

செய்கை செய்கைக்கேற்கும் சொல்

ஒலி

வாய் திறத்தல் அ,ஆ அங்கா

வாய் (பெருமூச்சிற்கும்);

கொட்டாவிக்கும்) ஆ ஆவி

வாய்ப்பற்றுதல் அவ் அவ்வு-

வவ்வு-கவ்வு

பல்லைக்காட்டுதல் ஈ இளி

காற்றை வாய்வழி

முன்றள்ளல் ஊ ஊது

     ‘ஆ வென்று வாயைத் திறக்கிறான்’,’ஈ யென்று பல்லைக் காட்டுகிறான்’ என்னும் வழக்கையும் அவ் என்று சொல்லும் போது கவ்வுகிற வாய்நிலை யமைவதையும் காண்க.

   ஆவித்தல் = வாய்திறத்தல்;வாய்திறந்து பெருமூச்சு விடுதல், கொட்டாவி விடுதல்.

ஆவி = வாய்வழிவரும் காற்று, மூச்சு (உயிர்ப்பு);, உயிர் (ஆன்மா);, உயிர்போன்ற தோற்றம்.

அவ்வு-வவ்வு-கவ்வு. இவை முறையே, ஒளவு, வெளவு, கெளவு என்றும் வகைப்படும்.

அகரத் திம்பர் வகரப் புள்ளியும்

ஒள என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

அவ்வு (ஒளவு); தல் – வாயாற் பற்றுதல். கன்று புல்லை அவ்வி (ஒளவி);த் தின்கிறது என்பது வழக்கு.

அவ்-அவ-அவா = வாயினாற் பற்றுதல் போல் மனத்தினாற் பற்றும் ஆசை.

அவ-அவவு-அவாவு. அவாவுதல் – ஆசைப்படுதல். அவாவு-ஆவு. ஆவுதல் = ஆசைப்படுதல், ஆவு – ஆவல். ஆர்வத்தோடணைத்தலை ஆவிச்சேர்ந்து கட்டுதல் என்பர்.

வவ்வுதல் = வாய்ப்பற்றுதல் போற் கைப்பற்றுதல், பறித்தல், வவ்வு.

வாவு – வாவல் = பெருவிருப்பம்.

கவ்வுதல் = வாயாற் பற்றுதல்.

கவ்-கவ-கவர். கவர்தல் = பற்றுதல், விரும்புதல்.

கவர்வு விருப்பாகும் (தொல். உயிரியல், 65);

கவ-கா-காதல். கா-காம்-காமம்-காமர்.

காம் + உறு = காமுறு. காமம்-காமன்.

கவ்வுதல் = கல்வித்தின்னுதல், தின்னுதல்.

கவ்வு-கப்பு. கப்புதல் = கவளங்கவளமாக விழுங்குதல்.

கவ்வு-கவளம்-ஒருமுறை கவ்வும் அல்லது தின்னும் அளவான உணவு.

கவ்வு-கவியம்-கவிகம்-கறுழ் (bit);

கவ-கவவு = கவ்வுதல், கவ்வினாற்போல் அணைத்தல், அகப்படுத்தல், அகத்திடுதல்.

கவவகத் திடுதல் (தொல். உயிரியல். 59);.

கவவுக்கை = அணைத்த கை.

கவர்தல் = பற்றுதல், அகப்படுத்துதல், வசப்படுத்துதல்.

கவர்-கவர்ச்சி. கவ்வு-கப்பு = கவர்ச்சி.

கவர்தல் = பற்றுதல், பறித்தல், கவாஅன் = கவருங் கள்வன்.

கவர்-கவறு = கவறுஞ் சூதாட்டு, சூதாடு கருவி.

கவ்வு-கவுசனை-கவிசனை = அகத்திடும் உறை.

கவ்வு-கப்பு. கப்புதல் = அகத்திடுதல், மூடுதல்.

கவ-கவை. கவைத்தல்= அகத்திடுதல், இரு கையாலும் அணைத்தல்.

கவ்வு – (கவள்); – கவளி = கவ்வினாற் போல் மேலும் கீழும் சட்டம் வைத்துக்கட்டும் புத்ததகக்கட்டு, கட்டு, வெற்றிலைக்கட்டு. கவளி-கவளிகை.

கவ்வு-கவுள் = கவ்வும் அலகு, கன்னம், உள்வாய். மேல்வாய் கீழ்வாயலகுகள் கவ்வுங் குறடு போலிருத்தலால், அலகு கொடிறு எனப்படுதல் காண்க. (கொறு-குறடு);.

கவ-கவை = கவ்வும் அலகு போன்ற கவட்டை, கிளை.

கவ-கவவு= கவட்டை. கவர்தல் = கவ்வும் அலகு போற் பிரிதல்.

கவர்-பிரிவு. கவை,கிளை, கவராசம் = இரு கவருள்ள கருவி (Divider);. கவ்வு-கப்பு=கிளை.

கவண்-கவணை. கவண்-கவண்டு-கவண்டி.

கவணை கவண்டு கவண்டி என்னும் மூன்றும் கவண் என்பதன் மறுவடிவங்களே.

கவ-கவான்=தொடைச்சந்து, தொடை, தொடைச் சந்துபோல் இருமலைக்குவடுகள் பொருந்திருக்கும் இடம்.

கவ-கவல். கவலுதல் = பல கவர்படுதல். பலகவர் படுதல் போலப் பல நினைவுகொண்டு கலங்குதல். கவல் – கவலை = கவை, கிளை, கவர்த்த வழி, பல நினைவுக் கலக்கம், அக்கறை. கவல் – கவலி. கவலித்தல் = கவலைப்படுதல்.

கவ்-கவ்வை = கவலை, கவலைப்பட்டுச் செய்யுங்கருமம், கருமம், வேலை.

கவ்-கவை = காரியம். ஒரு கருமத்திற்கும் பயன் படாதவனைக் கவைக்குதவாதவன் என்பர். கவலி-கவனி. கவனித்தல் = கவலையோடு (கருத்தோடு); பார்த்தல். கவனி-கவனம். (மு.தா.);. வாய்ச்செய்கை யொலிச்சொற்கள்

மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற் கேற்ற வாய்வடிவை யமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் செயல்களைக் குறிக்கும் சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ்வொலிகள் வாய்ச் செய்கை யொலிகளாம்.

அவ்(வு);

ஒன்றைக் கவ்வுதலை யொத்த வாய்ச்செய்கைநிலை, அவ் என்னும் ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல் கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந்நிலை வகரமெய்யொலிப்பிற்கே ஏற்கும்.

பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும். (தொல்.98);

மேற்பல் விதழுற மேவிடும் வவ்வே. (நன்.85);

அவ்-கவ்-வவ்.

அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு.

முதற்காலத்தில் அவ் என்னும் வடிவே வாயினாலும் கையினாலும் மனத்தாலும் பற்றும் மூவகைப் பற்றையும் குறித்தது. பிற்காலத்தில் அவ்வுதல் என்னுஞ் சொல் மனத்தினாற் பற்றுதலுக்கும், கவ்வுதல் என்னுஞ் சொல் வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னுஞ் சொல் கையினாற் பற்றுதலுக்கும் வரையறுக்கப் பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல் என்பது உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும்.

எ- கா :

கன்று புல்லை அவ்வித் தின்கிறது.

அவ்-ஒள, கவ்-கெள, வ்-வெள.

அவ்வு-ஒளவு, கவ்வு-கெளவு, வவ்வு-வெளவு.

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (தொல். 56);

என்பதற் கொத்து,

அகரத் திம்பர் வகரப் புள்ளியும்

ஒளஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

என்றொரு நூற்பாவும் இருந்திருத்தல் வேண்டும்.

கன்று புல்லை ஒளவித் தின்கிறது.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் (நாலடி. 70);.

தெ. கவியு

வெளவிய வஞ்சி வலம்புனைய (பு.வெ.3 : 2);

வாய் ஒன்றைக் கெளவும் போது மேல்வாயும் கீழ்வாயும் குறட்டின் ஈரலகு போன்று பற்றுவதால், கவ்வுதல் (அல்லது கெளவுதல்); என்னும் சொற்குக் குறடுபோற் கவைத்திருத்தல் என்னும் கருத்துத் தோன்றிற்று. வாயின் கவைத் தன்மையை, மாந்தன் வாயினும் விலங்கு மூஞ்சியும், விலங்கு மூஞ்சியினும் பறவை மூக்கும் தெளிவாய்க் காட்டும்.

அவ் என்னும் சொல்லினின்று, வாயினாற் பற்றுதலையும் மனத்தினாற் பற்றுதலையுங் குறிக்கும் சில சொற்கள் தோன்றியுள்ளன. அவக்கு என்பது விரைந்து கெளவுதலையும், அவக்காசி என்பது விரைந்து கெளவும் ஆசையையும் உணர்த்தும்.

அவ் – அவா – அவவு.

அவவுக்கை விடுதலு முண்டு (கலித்.14);

அவவு – அவாவு. அவாவுதல் = விரும்புதல்.

அவாய்நிலை = ஒரு சொல் தன்னொடு பொருந்திப்

பொருள் முடிதற்குரிய இன்னொரு சொல்லை அவாவி (வேண்டி); நிற்றல்.

அவாவு – ஆவு. ஆவுதல் = விரும்புதல்.

செந்நெலங் கழனிச் செய்வேட் டாவிய

மறையோன். (உபதேசகா. சிவத்துரோ. 12);

ஆவிச் சேர்ந்து கட்டினான் என்பது உலக வழக்கு.

ஆவு – ஆவல். ம. ஆவல்.

கவ்வு என்னும் சொல்லினின்று, கெளவுதற் கருத்தை அடைப்படையாகக் கொண்ட சில சொற்களும், கவைத்தற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல சொற்களும், மனத்தால் அல்லது மனத்தைப் பற்றும் சில சொற்களும் தோன்றியுள்ளன.

கெளவுதல்

கல்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய். (நாலடி.322);.

கவுள் = கன்னம். கண்ணீர் கவுளலைப்ப. (சீவக. 2050);

கவளம் = கெளவும் அல்லது வாய்கொள்ளும் அளவான உணவுருண்டை.

கவளம் = கவழம்.

கவழ மறியான் கைபுனை வேழம் (கலித். 80);

கவ்வு – கப்பு.

கப்புதல் = கொள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல் அல்லது விழுங்குதல்.

அவல்பொரி கப்பிய கரிமுகன்(திருப்பு.விநாயகர்.1);

கவியம் = கடிவாளம் (பிங்.);. கவியம் – Pkt. kaviya.

கவிகம் = கடிவாள இரும்பு. கவிகம் – Skt. kavika.

கவைத்தல்

கவ் – கவல் – கவர். கவ்வு – கவட்டை.

கவர்தல் = பல காலாகப் பிரிதல்.

காவிரி வந்து கவர்பூட்ட. (புறம். 35 : 8);

கவர்த்தல் =

   1. வழிகள் பிரிதல்.

அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும். (சிலப்.11:73);

   ம., தெ. கவ;க. கவலு.

   2. கவர்படுதல்.

கவர் =

   1. நீர்க்காற் கிளை.

தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்கு (S.I.I.iii,45);

   3. பல்பிரிவு.

மகளிர் நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது. (சீவக. 1212);.

   4. மரக்கிளை.

   5. சூலக்கிளையலகு.

   ம., தெ., து. கவ;க. கவல்.

கவர்க்கால் (கவராயுள்ள முட்டுக்கட்டை, சுவையுள்ள மரம், கிளை வாய்க்கால்);, கவர்க் குளம்பு, கவர்ச்சுத்தியல், கவர்த்தடி, கவர்நெறி, கவராசம் (divider); முதலிய சொற்களை நோக்குக. கவர்படு

பொருண்மொழி = பல்வேறு பொருள்தரும் சொல் அல்லது சொற்றொடர்.

கவர்கோடல் = பலவாறாகக் கருதி ஐயுறல்.

கவர்கோடல் தோன்றாது. (மணிமே. 27 : 22);

கவடு =

   1. மரக்கிளை, கவருள்ள மரக்கிளை.

காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு. (சீவக.1389);

   2. தொடைச்சந்து.

கவடு நுழைந்த பயல் என்பது உலக வழக்கு.

கவட்டி = ஓர் எட்டு.

   3. பகுப்பு.

கவடுபடக் கவைஇய……. உந்தி. (மலைபடு.34);

தெ. கவட்ட

கவட்டடி = மரக்கிளைக் கவர், கவை.

   ம. கவ;க. கவத்த.

கவட்டை = கவை, கவண்.

கவண் = கவைபோல் இருபுறமும் கயிறு அல்லது வாருள்ள கல்லெறி கருவி.

கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல். (அகம். 292);

   ம. கவண்;க., து. கவணெ.

கவண் – கவணை.

கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும். (கலித்.23);

கவண் – கவண்டு – கவண்டி.

கவணம் = சீலைத்துணியை இரண்டாகக் கவர்படக் கிழித்துக் கட்டும் காயக்கட்டு.

கவணி = கவணத்திற்கு குதவும் மெல்லிய சீலை.

ம. கவணி.

கவணை = சுவைபோல் அமைக்கும் மாட்டுத்தொட்டி.

கவையணை – கவணை. தெ. கவணமு.

கவடு – கவடி = பிளவுபட்ட பலகறை.

   ம., க. கவடி;தெ. கவ்வ (gavva);.

கவடி – காடி = மாட்டுத்தொட்டி.

கவளி =

   1. கவண்போல் அமைத்துத் தூக்கும் பொத்தகக் கட்டு.

புத்தகக் கவளி யேந்தி. (பெரியபு. மெய்ப்.7);.

   2. புத்தகக் கட்டுப்போன்ற வெற்றிலைக் கட்டு.

கவளி – கவளிகை = சிறு கவளி.

புத்தகங் கட்டி யார்த்த கவளிகையே கொலோ. (சேதுபு. இராமதீர். 49);

கவளிகை – Skt. kavalika (கவலிக்கா);.

கவான் =

   1. கவைபோன்ற தொடைச்சந்து, தொடை.

கழுமிய வுவகையிற் கவாற்கொண்ட டிருந்து. (மணிமே. பதி. 27);

   2. தொடைச்சந்து போன்ற மலைப்பக்கம்.

மால்வரைக் கவான். (பட்டினப்.138);

கவை = பிளவு, பிரிவு, கவர், கிளை, கவட்டை.

கவைக்கால், கவைக்குளம்பு, கவைக்கொம்பு, கவைக்கோல், கவைத்தாம்பு, கவைத்தாளலவன் (பெரும்பாண். 208);. கவைநா, கவைமுட் கருவி, கவையடி முதலிய தொடர்ச்சொற்களை நோக்குக.

ம. கவ.

கவ்வு – கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு.

கப்புங் கவரும் என்பது உலக வழக்கு.

கப்பு – கப்பி. கப்பித்தல் = கவர்படுதல்.

கப்பித்த காலையுடைய ஞெண்டினது. (பெரும்பாண். 208, உரை);

கப்பு – கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால்.

கவ்வு – காவு. காவுதல் =

   1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல்.

காவினெங் கலனே. (புறம். 206);

   2. தோளிற் சுமத்தல், சுமத்தல்.

ஊனைக் காவி யுழிதர்வர் (தேவா. 338 ;1);

காவு + அடி = காவடி = 1. காவுதடி.

   2. முருகன் காவடி.

   3. சோற்றுக் காவடி.

   4. தண்ணீர்க் காவடி.

காவடி – காவட்டு = கள்ளுக் காவடி.

காவு – கா =

   1. காவடித் தண்டு.

காமமு நாணு முயிர்காவாத் தூங்கும். (குறள்.1163);

   2. காவடி போன்ற துலாக்கோல்.

   3. துலாம் போன்ற ஒரு நிறை.

காவென் நிறையும். (தொல். எழுத்து.169);

கப்பு = காவுந்தோள்.

கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த. (திவ். பெரியாழ்.3:1:5);

கவல் – கவலை =

   1. மரக்கிளை (பிங்.);

   2. கவர்த்த வழி, பல தெருக்கள் கூடுமிடம்.

மன்றமுங் கவலையும்……… திரிந்து. (சிலப்.14:24);.

கவலை முற்றம். (முல்லைப். 30);

   3. மனக்கவற்சி, மனவருத்தம் (கவர்த்த எண்ணம்);.

ம. கவல.

   4. அச்சத்தோடு கூடிய அக்கறை.

கவலுதல் = கவலாறாகக் கருதி வருந்துதல். க.கவலு. கவல் – கவலம், கவலை. கவல் – கவலி. கவலித்தல் = கவலுதல். கவை = கரிசனை, அக்கறை.

கவ்வை = கவலை.

கவ்வையாற் கலங்குமனம். (திருக்காளத். பு.18:27);

கைப்பற்று

கவ – கவவு =

   1. கையால் தழுவுதல்.

கண்ணு நுகலுங் கவுளுங் கவவியார்க்கு. (கலித்.83:17);

   2. முயங்குதல்

கவவிநாம் விடுத்தக்கால். (கலித்.35);

கவவொடு மயங்கிய காலை யான். (தொல்.பொருள்.173);.

இரு கையாலும் தழுவுதல் ஈரலகாற் கவ்வுதல் போலித்தல் காண்க.

   3. அகத்திடுதல்.

கவவகத் திடுதல். (தொல். சொல். 357);

செவ்வாய் கவவின வாணகை. (திருக்கோ.108);.

   4. உள்ளீடு.

கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக்.626);

கவவுக்கை = அணைத்த கை.

திங்கண் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய். (சிலப்.7:52);

கவர்தல் =

   1. முயங்குதல்.

கவர்கணைச் சாமனார் தம்முன் (கலித். 94:12);

   3. பறித்தல், பறித்துண்ணுதல்.

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள்.100);

   4. கொள்ளையடித்தல்

வீடறக் கவர்ந்த வினைமொழிந் தன்று (பு.வெ.3:15,கொளு);

   5. பெறுதல்.

வறியோர் கவர …….. எறிந்து (தஞ்சைவா. 20);

கவர்ந்ததூண் = அடித்துண்ணும் உணவு.

பசியெருவை கவர்ந்தூ னோதையும். (மணிமே.6:117);

கவைத்தல் =

   1. அணைத்தல்.

ஒவ்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ (குறிஞ்சிப். 185);

   2. அகத்திடுதல்.

ஆரங் கவைஇய மார்பே (புறம் 19:18);

கவறு =

   1. பிறர் பொருளைக் கவரும் சூதாட்டம். …………… கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள். 920);

   2. சூதாடு கருவி.

அரும்பொற் கவறங் குறள (சீவக.927);

மனப்பற்று

கவர்தல் = விரும்புதல்.

கவர்வுவிருப் பாகும்.(தொல். சொல். 362);.

கவவுதல் = விரும்புதல்.

கலிங்கம் ……… கவவிக் கிடந்த குறங்கினாள் (சீவக.1058);

கவர்ச்சி = விருப்பம். கவர்ச்சி = மனத்தை இழுக்கை. கப்பு = கவர்ச்சி.

கப்பின்றா மீசன் கழல் (சிவ. போ. 11, 5, வெண்.);

கவ – கா. காதல் = விரும்புதல், பேரன்பு கொள்ளுதல்.

கா – காவு. காவுதல் = நச்சுதல்.

தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள் (தேவா.338:1);

கா + அம் – காம் = விருப்பம், காதல்.

ஒ.நோ: ஏ + உம் = ஏம்-யாம் – நாம். காம் + உறு = காமுறு. காமுறுதல் =

   1. விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையர் (நாலடி. 60);.

   2. வேண்டுதல்.

கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித்.16);

காம் – காமு – காமம்.

ஒ.நோ: விழு – விழும் – விழுமு – விழுமம். குழு – குழும் – குழுமு – குழுமம், பரு – பரும் – பருமு – பருமன்.

காமு – காமுகம் – காமுகன் – Skt.kamuka(காமுக்க);. காம்+மரு – காமரு – காமர் = விரும்பத்தக்க, அழகிய, காமர் கடும்புனல் (கலித்.39);

காமர் கயல்புரள (நளவெ.);

காம் + அர் – காமர் = காமுகர்.

காம் + இ – காமி = காமுகன்.

களிமடி மானி காமி கள்வன் (நன். 38);.

காமி – Skt. kamin (காமின்);.

காமித்தல் =

   1. விரும்புதல். ஓ.நோ;காதல் – காதலி.

தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே(கம்பரா. நிந்த.54);

   2. காமங் கொள்ளுதல்.

காமம் = கள்வன் மனைவியரிடைப்பட்ட காதல், மணம், காமத்துப்பால் என்னும் திருக்குறட் பகுதிப் பெயரை நோக்குக. சிவகாமி = சிவனைக் காதலிக்கும் மலைமகள்.

ஒ.நோ: வேட்டல் = விரும்புதல், காதலித்தல், வேள் = திருமணம், காமம் – Gk. gamos (marriage);, Skt. kama. (காம);.

காமம் என்னும் சொல் முதற்காலத்திற் பொதுவான ஆசையையே குறித்தது.

காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்

நாமங் கெடக்கெடும் நோய். (குறள், 360);

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன். (குறள். 605);

என்னும் குறள்களை நோக்குக.

பிற்காலத்தில், அச்சொல் காதல் என்னும் சொற்போல் ஆடவரின் பெண்ணாசையையும் பெண்டிரின் ஆணாசையையும் சிறப்பாய்க் குறிக்கலாயிற்று. அப் பொருளிலும், உயரிய இருதலைக் காமத்தையும் ஒருமனை மணத்தையுமே குறிக்க அது திருவள்ளுவரால் ஆளப்பெற்றது. ஆயின், இன்று, அது இடங்கழியையும் இணைவிழைச்சு விருப்பத்தையுமே குறிக்குமளவு இழிபடைந்துள்ளது. காமம் – காமன் = மணக்காதல் உண்டாக்கும் தெய்வம். The Indian Cupid.

காமன் – Skt. kama (காம);. (-தேவநேயம் பக். 67-76);.

வாய்ச்சேதி

வாய்ச்சேதி vāyccēti, பெ.(n.)

   1. பேச்சுவாக்கு; casual mention.

     “நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க வாயெடுக்க முந்தி” (பஞ்ச.திருமுக. 1198);.

   2. ஆள்வழிச் சொல்லியனுப்புஞ் செய்தி; oral communication.

     [வாய் + செய்தி → சேதி]

வாய்ச்சொலவு

வாய்ச்சொலவு vāyccolavu, பெ.(n.)

   1. குறி சொல்லுகை; prediction, augury.

   2. பின் விளையுங் கேட்டினை முன்னெடுத்துக் கூறுகை; ominous utterance.

     [வாய் + சொல் → சொலவு]

வாய்ச்சொல்

வாய்ச்சொல் vāyccol, பெ.(n.)

   1. பேச்சு; utterance, speech, word of mouth.

     “வாய்ச் சொற்க னென்ன பயனு மில” (குறள்.1100);.

   2. காணாவொலி; utterance of an invisible speaker, considered as an omen.

     “வாய்ச்சொல் வாவாவென் றிடல்” (அறப். சத. 63);.

   3. வாய்ப்பேச்சு, 2 பார்க்க;see {}.

     “வாய்ச் சொல்லில் வீரரடீ” (பாரதி. தேசிய. நடிப்பு.1);.

     [வாய் + சொல்]

வாய்ஞானம்பேசல்

 வாய்ஞானம்பேசல் vāyñāṉambēcal, பெ.(n.)

   முற்பழக்கமில்லா மூதுணர்வுப் பேச்சு; tall talk without experience.

     [வாய்ஞானம் + பேசல்]

 Pkt. {} → த. ஞானம்.

வாய்தடுமாறு-தல்

வாய்தடுமாறு-தல் vāydaḍumāṟudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. வாய் பதறுதல் (யாழ்.அக.);; to stutter.

   2. பேசுவதிற் பிழைபடுதல் (வின்.);; to make a verbal mistake.

     [வாய் + தடுமாறு-,]

வாய்தற்கூடு

 வாய்தற்கூடு vāytaṟāṭu, பெ.(n.)

   கதவினிலை (யாழ்.அக.);; door-frame.

மறுவ. வாசற்கால்.

     [வாய் → வாய்தல் + கூடு]

வாய்தற்படி

 வாய்தற்படி vāytaṟpaḍi, பெ.(n.)

   வாயிற்படி (யாழ்.அக.);; door-step.

     [வாய் → வாய்தல் + படி]

வாய்தல்

வாய்தல்1 vāytal, பெ.(n.)

   வாயில்; doorway, entrance.

     “ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும்” (தேவா.338,7);.

     [வாய் → வாய்தல்]

 வாய்தல்2 vāytal, பெ.(n.)

   நுணுக்கம் (அக.நி.);; minuteness.

     [வாய் → வாய்தல்]

வாய்தித்திப்பு

 வாய்தித்திப்பு vāytittippu, பெ.(n.)

   கோழையினால் வாய் நீரூறலில் ஏற்படும் இனிப்புச் சுவை; sweetness of the mouth caused by phlegm humour.

     [வாய் + தித்திப்பு]

வாய்திற

வாய்திற1 vāytiṟattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. வாயை யகல விரித்தல்; to open one’s mouth.

     ‘பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்’.

   2. மலர்தல்; to blossom;

 to open, as a flower.

     “நறுமென்குவளை வாய் திறந்த” (பிரபுலிங். பிரபு தே.54);.

   3. புண் கட்டி உடைதல்; to break, as a boil.

   4. வெள்ளம் கரையை உடைத்தல்; to make a breach, as a flood.

     “பெரும்புனல் வாய்

திறந்த பின்னும்” (பு.வெ.3,21);.

     [வாய் + திற-,]

=

 வாய்திற2 vāytiṟattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. மலர்த்துதல்; to cause to open, as the petals of a flower.

     “வண்டு வாய் திறப்ப… மல்லிகை” (சிலப்.2,32);.

   2. பேசுதல்; to speak.

     “வாளா கிடந்துறங்கும் வாய்திறவான்” (திவ்.இயற்.நான்மு.35);.

     [வாய் + திற-,]

வாய்திறந்தகாயம்

 வாய்திறந்தகாயம் vāytiṟandakāyam, பெ.(n.)

   நாட்படு பெரும்புண்; open wound.

     [வாய்திற → வாய்திறந்த + காயம்]

வாய்திறப்பு

 வாய்திறப்பு vāytiṟappu, பெ.(n.)

   உணவு, நடை, தூக்கம் ஆகிய இக்குற்றத்தினால் நரம்புகளை ஏற்றிசைந்து (அனுசரித்து); வாயை மூடாமல் திறந்தபடியே இருக்கச் செய்யுமோர் வளிநோய்; a vatha disease marked by wide mouth which cannot be closed.

     [வாய் + திறப்பு]

வாய்தீட்டு-தல்

வாய்தீட்டு-தல் vāydīṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   படைக்கல முதலியவற்றின் முனை தீட்டுதல்; to sharpen the edge as of a weapon.

     “கன்மிசை யறிந்து வாய் தீட்டி” (பெருங்.இலாவாண.4,168);.

     [வாய் + தீட்டு-,]

வாய்த்தட்டுப்பலகை

 வாய்த்தட்டுப்பலகை vāyttaṭṭuppalagai, பெ.(n.)

   கூரையின் முகப்பில் தைக்கும் பலகை (இ.வ.);; eave-board, barge-board.

     [வாய் + தட்டு + பலகை]

வாய்த்தலை

வாய்த்தலை vāyttalai, பெ.(n.)

   1. வாய்க் காலின் தலைப்பு மதகு; head-sluice of a channel.

     “சுதை செய் வாய்த்தலை” (சீவக.40);.

   2. தொடங்கும் இடம்; source.

     “நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே” (திவ். திருமாலை, 34, வ்யா. பக்.112);.

     [வாய் + தலை]

வாய்த்தல்

வாய்த்தல் vāyttal, பெ.(n.)

வாய்தல்2 (அரு.நி.); பார்க்க;see {}.

வாய்த்தாரை

வாய்த்தாரை vāyttārai, பெ.(n.)

   1. படைக்கலத்தின் நுனி; edge, as of a weapon.

   2. வாய்க்கரை, 1 பார்க்க;see {}.

     [வாய் + தாரை]

வாய்த்திட்டம்

 வாய்த்திட்டம் vāyttiṭṭam, பெ.(n.)

   வாயளவு; upto the mouth.

     [வாய் + திட்டம்]

வாய்த்திரம்

 வாய்த்திரம் vāyttiram, பெ.(n.)

   சாரணை; a plant – Trianthema monogyna.

     [வாய் + திரம்]

வாய்த்தீர்த்தம்

வாய்த்தீர்த்தம் vāyttīrttam, பெ.(n.)

வாய்நீர் பார்க்க;see {}.

     “வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே” (திவ்.நாய்ச்.7, 6);.

     [வாய் + தீர்த்தம்]

வாய்த்துடுக்கு

வாய்த்துடுக்கு1 vāyttuḍukku, பெ.(n.)

   துடுக்கான பேச்சு; saucy or impertinent talk.

     ‘இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன வாய்த்துடுக்கு!’.

     [வாய் + துடுக்கு]

 வாய்த்துடுக்கு2 vāyttuḍukku, பெ.(n.)

   1. பேச்சிற் காட்டும் விரைவு; rashness in speech.

   2. பேச்சிற் காட்டும் செருக்கு; arrogance in speech.

     [வாய் + துடுக்கு]

வாய்நாற்றம்

வாய்நாற்றம் vāynāṟṟam, பெ.(n.)

   1. வாயின் மணம்; sweet smell in the mouth.

   2. வாயிலிருந்து தோன்றுந் தீ நாற்றம் (பைஷஜ);; bad smell in the mouth.

     [வாய் + நாற்றம்]

வாய்நீரொழுகல்

 வாய்நீரொழுகல் vāynīroḻugal, பெ.(n.)

   உமிழ் நீர் கடைவாயினின்றும் வடிதல்; secretion of saliva or rheum.

     [வாய் + நீரொழுகல்]

வாய்நீரோட்டம்

 வாய்நீரோட்டம் vāynīrōṭṭam, பெ.(n.)

   ஒரு நோய்; a disease.

     [வாய்நீர் → வாய்நீரோட்டம்]

வாய்நீர்

வாய்நீர்1 vāynīr, பெ.(n.)

   உமிழ் நீர் (யாழ்.அக.);; saliva;

 spittle.

     [வாய் + நீர்]

 வாய்நீர்2 vāynīr, பெ.(n.)

 nitric acid.

மறுவ. தலைப்பிண்டச் செயநீர்.

     [வாய் + நீர்]

வாய்நீர்சுரப்பு

வாய்நீர்சுரப்பு vāynīrcurappu, பெ.(n.)

   உமிழ் நீர் ஊறிப் பெருகும் ஒருவகை நோய். இதற்கு வழுக்கைத் தேங்காயும் பனங்கற்கண்டும் காலையில் 2 நாள் சாப்பிடப் போம்; supersecretion of saliva- the remedy is given above.

     [வாய்நீர் + சுரப்பு]

வாய்நீளம்

 வாய்நீளம் vāynīḷam, பெ.(n.)

   குறை கூறுந் தன்மை; caustic tongue.

     [வாய் + நீளம்]

வாய்நெகிழ்-தல்

வாய்நெகிழ்-தல் vāynegiḻtal,    3 செ.கு.வி. (v.i.)

   மலர்தல்; to open, as a flower.

     “செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து” (திவ். திருப்பா. 14);.

     [வாய் + நெகிழ்-,]

வாய்நேர்-தல்

வாய்நேர்-தல் vāynērtal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. வழங்குவதாக உறுதிமொழியளித்தல்; to promise to give or bestow.

     “அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்” (திவ்.திருப்பா. 16);.

   2. நேர்த்திக் கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல்; to vow to make a specific offering.

     “நூறுதடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவி வைத்தேன்” (திவ்.நாய்ச்.9, 6);.

   3. பேச்சால் உடன்படுதல்; to give one’s consent orally.

     “நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா” (பெருங். உஞ்சைக்.44,146);.

     [வாய் + நேர்-,]

வாய்நோய்

 வாய்நோய் vāynōy, பெ.(n.)

   மாட்டுக்கு வாயில் வரும் நோய்; mouth disease, in cattle.

வாய்ந்துகொள்(ளு)-தல்

வாய்ந்துகொள்(ளு)-தல் vāyndugoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   பகை வென்று கைப் பற்றுதல்; to obtain by conquest.

     “வாய்ந்து கொண்டடையார் வைவேல்” (இரகு.குறைகூ.7);.

     [வாய்ந்து + கொள்-,]

வாய்பாடு

வாய்பாடு vāypāṭu, பெ.(n.)

   1. குறியீடு; formula, symbolic expression.

   2. பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை; table, as of multiplication.

   3. மரபுச்சொல்; idiom, cant.

     “தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல்” (தொல்.சொல்.17, சேனா.);.

   4. வழக்கம்; practice, custom, usage.

     “எங்க ளுலக வாய்பாடு” (தாயு.சச்சிதா.8);.

   5. சொல்வன்மை; skill in speech.

     “கட்டுரை வாய்பாடும்” (பழமொ. 258);.

   6. பேச்சிடையில் பயின்று வரும் தொடரியம் (இலக்.அக.);; mannerism in discourses.

     [வாய் + பாடு]

ஒரே இலக்கண இயல்பையுடைய நூற்றுக் கணக்கான சொற்களை ஒரே வகையில் அடக்கிக் கொண்டு அந்த வகையில் உள்ள சொல்லை அந்த வகைக்குக் குறியீடு போல ஆளும் வழக்கம் தமிழிலக்கணங்களில் நாம் தொன்றுதொட்டுக் காணும் மரபுகளில் ஒன்று. ஒடு, ஆடு, நில், கேள், செல் முதலாய வினையடிகள் எல்லாவற்றையும் ‘செய்’ என்ற சொல்லால் குறிப்பதும், ஒட, ஆட, பாட, நடக்க என வரும் எல்லாச் சொற்களையும் ‘செய’ என்னும் சொல்லால் குறிப்பதும் மேற்காட்டிய மரபுக்கு எடுத்துக் காட்டுகளாம். இங்கே விளக்கிய இந்த முறையினை வாய்பாட்டு முறை என்பர். ஒரே இலக்கண இயல்புடைய நூற்றுக்கணக்கான சொற்களைக் குறிக்கக் குறியீடாகப் பயன்படும் சொல்லினை வாய்பாட்டுச் சொல் என்பர்.

நில், கேள், செல், முதலாயவற்றைச் செய் வாய்பாட்டு வினைகள் என்றும் ஒட, பாட ஆட முதலாயவற்றைச் செய வாய்பாட்டு வினைகள் என்றும் இலக்கணப் புலவர்கள் சுட்டுவது வழக்கம்.- (இலக். கலைக். பக். 107.);

வாய்பார்-த்தல்

வாய்பார்-த்தல் vāypārttal,    4 செ.கு.வி. (v.i.)

   பிறருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருத்தல் (இ.வ.);; to listen to a talk without taking part in it.

     [வாய் + பார்-,]

வாய்பாறு-தல்

வாய்பாறு-தல் vāypāṟudal,    9 செ.கு.வி. (v.i.)

   அலப்புதல்; to babble, to chatter.

     “ஸாரதி ஸாரதி என்று வாய்பாறிக் கொண்டிறே பையல்கள் வருவது” (ஈடு,36,10);.

     [வாய் + பாறு-,]

வாய்பிடித்தல்

 வாய்பிடித்தல் vāypiḍittal, பெ.(n.)

   இதளிய மருந்துகளை உள்ளுக்குக் கொடுத்தலால் ஈறு வீங்கிப் புண்ணாகி உமிழ் நீர் அதிகமாய் வடிந்து வாயில் நாற்றமுண்டாகி திறக்க வொட்டாதபடி செய்தல்; swelling of the gums and inflammation of the mouth due to mercurial poisoning, it accompanied by excessive salivation and inability to open the mouth.

     [வாய் + பிடித்தல்]

வாய்பிதற்று-தல்

வாய்பிதற்று-தல் vāypidaṟṟudal,    10 செ.கு.வி. (v.i.)

   நாக்குழறிப் பேசுதல்; to speak incoherently.

     [வாய் + பிதற்று-,]

வாய்பினற்று-தல்

வாய்பினற்று-தல் vāypiṉaṟṟudal,    10 செ.கு.வி. (v.i.)

வாய் பிதற்று (யாழ்.அக.); பார்க்க;see {}.

வாய்பிள-த்தல்

வாய்பிள-த்தல் vāypiḷattal,    3 செ.கு.வி. (v.i.)

   1. அங்காத்தல் (நாமதீப.711);; to open one’s mouth wide;

 to gape.

   2. திகைத்தல்; to be non-plussed.

     ‘கேள்வி கேட்டால் வாய் பிளக்கிறான்’.

   3. முடியாதென்று கை விடுதல்; to plead inability.

     ‘பணத்துக்கு அவனை நம்பியிருந்தேன், அவன் கடைசியில் வாய் பிளந்து விட்டான்’.

   4. இறத்தல் (கொ.வ.);; to die, used in contempt.

     [வாய் + பிள-,]

 வாய்பிள-த்தல் vāypiḷattal, செ.கு.வி. (v.i.)

   இறத்தல்; to die..

அவன் வாய் பிளந்தான். (இ.வ.);.

     [வாய்+பிள]

வாய்புதை-த்தல்

வாய்புதை-த்தல் vāypudaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   பெரியோர் முன்னிலையில் மதிப்புரவுக் குறியாக வாயை வலக்கையால் மூடிக் கொள்ளுதல்; to cover one’s mouth with the palm of the right hand, as a mark of respect in the presence of one’s superiors.

     [வாய் + புதை-,]

வாய்புலற்று

வாய்புலற்று1 vāypulaṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பலகாற் சொல்லுதல்; to repeat often.

     “ஸத்துக்கள்….. வாய்புலற்றும் படியான தேசமானால்” (ஈடு.2,3,11);.

     [வாய் + புலம் → புலற்று-,]

 வாய்புலற்று2 vāypulaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

வாய்பிதற்று பார்க்க;see {}.

வாய்பூசறு-த்தல்

வாய்பூசறு-த்தல் vāypūcaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

வாய் பூசு-, 1. (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாய் + பூசறு]

வாய்பூசு-தல்

வாய்பூசு-தல் vāypūcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வாய் கழுவுதல்; to wash or rinse one’s mouth.

     “புகுமதத்தால் வாய்பூசி” (திவ்.இயற்.3,70);.

   2. தூய்மை (ஆசமனஞ்); செய்தல்; to sip water ceremonially, to perform {}.

     “நீராடிக் கால் கழுவி வாய் பூசி” (ஆசாரக்.19);.

   3. வெறும்புகழ்ச்சி பேசுதல்; to flatter.

   4. வாய்முட்டுப்போடு-, (வின்.); பார்க்க;see {},

     [வாய் + பூசு-,]

வாய்பேசு-தல்

வாய்பேசு-தல் vāypēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   தற்பெருமை பேசுதல்; to brag, boast.

     “எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசு நங்காய்” (திவ்.திருப்பா.14);.

     [வாய் + பேசு-,]

வாய்பொத்து-தல்

வாய்பொத்து-தல் vāypoddudal,    10 செ.கு.வி. (v.i.)

வாய்புதை பார்க்க;see {}.

     “கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை” (அருட்பா.VI, உறுதிகூறல்.9);.

     [வாய் + பொத்து-,]

வாய்பொருத்து-தல்

வாய்பொருத்து-தல் vāyporuddudal,    10 செ.கு.வி. (v.i.)

வாய்புதை (யாழ்.அக.); பார்க்க;{}.

     [வாய் + பொருத்து-,]

வாய்பொருமு-தல்

வாய்பொருமு-தல் vāyporumudal,    5 செ.கு.வி. (v.i.)

வாய்குளிறு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாய் + பொருமு-,]

வாய்போக்கு-தல்

வாய்போக்கு-தல் vāypōkkudal,    9 செ.கு.வி. (v.i.)

   எளிதில் உறுதிமொழியளித்தல்; to give one’s word lightly.

     ‘பார்ப்பானுக்கு வாய் போக்காதே, ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே’.

     [வாய் + போக்கு-,]

வாய்போடு-தல்

வாய்போடு-தல் vāypōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒருவன் பேசுகையில் இடையிற் புகுந்து பேசுதல்; to interject or interrupt a person when talking.

     [வாய் + போடு-,]

வாய்போத்திடு-தல்

வாய்போத்திடு-தல் vāypōddiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   மருந்துப் பாண்டத்தின் வாயை மூடுதல்; closing the mouth of the container of the medicine.

வாய்ப்பக்காட்டு-தல்

வாய்ப்பக்காட்டு-தல் vāyppakkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விளங்க உணர்த்துதல்; to indicate clearly.

     “வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே” (நன்.47);.

     [வாய் → வாய்ப்ப + காட்டு-,]

வாய்ப்படு-தல்

வாய்ப்படு-தல் vāyppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வழிப்படுதல்; to find a way.

     “வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி” (புறநா.343);.

   2. நறுஞ்சுவைப்படுதல் (யாழ்.அக.);; to be relished.

     [வாய் + படு]

வாய்ப்பட்சி

வாய்ப்பட்சி vāyppaṭci, பெ.(n.)

   காக்கை; crow.

     “தேமா வனந்தனிற் கூறுவாய்ப் பட்சியுறையும்” (திருவேங்.சத.90);.

     [வாய் + பட்சி. Skt. = பட்சி.]

வாய்ப்பட்டி

வாய்ப்பட்டி vāyppaṭṭi, பெ.(n.)

   1. வாய்க்கு வந்தபடி பேசுவோ-ன்-ள்; chatter-box, babbler.

     “வள்ளல் தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார்” (ஆதியூரவதானி);.

   2. கண்டதைத் தின்பவன்-ள்; one who eats whatever comes to hand.

     [வாய் + பட்டி]

ஒருகா. வாய்ப்படி → வாய்ப்பட்டி.

வாய்ப்பட்டை

 வாய்ப்பட்டை vāyppaṭṭai, பெ.(n.)

வாய்ப்பட்டைக்கழி பார்க்க;see {}.

     [வாய் + பட்டை]

வாய்ப்பட்டைக்கழி

 வாய்ப்பட்டைக்கழி vāyppaṭṭaikkaḻi, பெ.(n.)

   கூரைமுகப்பில் ஒடுதாங்குவதற்காக வைக்கும் மூங்கில் அல்லது மரக்கட்டை; bamboo or piece of timber for supporting the tiles at the edge of a roof.

     [வாய்ப்பட்டை + கழி]

வாய்ப்பந்தல்

வாய்ப்பந்தல் vāyppandal, பெ.(n.)

   பகட்டுரை; empty, ostentatious word, bombast.

     “அந்திவண்ண ரென்றும்… வாய்ப்பந்தலிடுவ தன்றி” (அருட்பா. vi, தத்துவ.10);.

     [வாய் + பந்தல்]

வாய்ப்பன்

 வாய்ப்பன் vāyppaṉ, பெ.(n.)

   ஒருவகைப் பணியாரம்; a kind of cake.

     [வாய் + பன்]

வாய்ப்பன்சட்டி

 வாய்ப்பன்சட்டி vāyppaṉcaṭṭi, பெ.(n.)

   விளிம்புள்ள மட்கல வகை (யாழ்ப்.);; a kind of earthen vessel with a rim.

     [வாய்ப்பன் + சட்டி]

வாய்ப்பரக்கூடம்

 வாய்ப்பரக்கூடம் vāypparakāṭam, பெ.(n.)

   பல்; tooth.

     [வாய்ப்பரம் + கூடம்]

வாய்ப்பறையறை-தல்

வாய்ப்பறையறை-தல் vāyppaṟaiyaṟaidal,    3 செ.குன்றாவி. (v.t.)

   பலருமறிய வெளியிடுதல்; to proclaim, as by beat of drum or tomtom.

     “வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப்பறை யறைந்து தூற்றி” (சீவக.211);.

     [வாய் + பறையறை-,]

வாய்ப்பலி

வாய்ப்பலி vāyppali, பெ.(n.)

வாய்க்கரிசி (தக்கயாகப்.53, உரை); பார்க்க;see {}.

     [வாய் + பலி. Skt. bali → த. பலி.]

வாய்ப்பாடம்

வாய்ப்பாடம் vāyppāṭam, பெ.(n.)

   1. பாராமற் சொல்லும்படி நெட்டுருப் பண்ணிய பாடம்; lesson learnt by heart.

   2. பொத்தகமின்றிக் கேள்வியாற் படித்த பாடம்; lesson taught orally.

     [வாய் + பாடம்]

வாய்ப்பாடு

வாய்ப்பாடு vāyppāṭu, பெ.(n.)

   1. வாய்க்கிடும் உண்டி; anything to gratify the palate.

     “வாய்ப்பாடு வயிற்றுப்பாடு தீர்ந்த பிறகு மற்றப்பாடு”.

   2. வாய்பாடு1,2 (இ.வ.); பார்க்க;see {}.

     [வாய் + பாடு]

வாய்ப்பாட்டு

 வாய்ப்பாட்டு vāyppāṭṭu, பெ.(n.)

   வாயாற்பாடும் பாட்டு; vocal music.

     [வாய் + பாட்டு]

வாய்ப்பானை

 வாய்ப்பானை vāyppāṉai, பெ.(n.)

   அலப்புவோன் (வின்.);; babbler.

மறுவ. உளறுவாயன்.

     [வாய் + பானை]

வாய்ப்பிடிப்பு

வாய்ப்பிடிப்பு vāyppiḍippu, பெ.(n.)

   1. வாய் திறக்க வொட்டாதபடி கிட்டுதல்; lock jaw.

   2. மருந்தின் வேகத்தினால் வாய் வெந்து புண்ணாகி நீர் வடிந்து திறக்க வொட்டாம லிருத்தல்; inflammation of the mouth caused by irritant medicines or mercurial compounds-Mercurial ptyalism or stomatitis.

     [வாய் + பிடிப்பு]

வாய்ப்பிணி

வாய்ப்பிணி vāyppiṇi, பெ.(n.)

   வாயிலுண்டாம் நோய்; mouth disease.

     “வாய்ப்பிணியர்” (கடம்ப.பு.இலீலா.130);.

     [வாய் + பிணி]

வாய்ப்பியம்

வாய்ப்பியம் vāyppiyam, பெ.(n.)

   வாய்ப்பியன் செய்த ஒரு தமிழிலக்கண நூல் (யாப்.வி.பக்.536);; a treatise on Tamil grammar, now not extant, by {}.

வாய்ப்பிரசங்கம்

வாய்ப்பிரசங்கம் vāyppirasaṅgam, பெ.(n.)

   1. உட்கருத்தின்றி உதட்டளவிற் செய்யும் சொற்பொழிவு (யாழ்.அக.);; insincere, lip-deep talk.

   2. தீடிரென்று செய்யும் சொற்பொழிவு; extempore speech.

   3. சொல்வன்மையுள்ள சொற் பொழிவு(வின்.);; oratory.

     [வாய் + Skt. prasanga → த. பிரசங்கம்]

வாய்ப்பிறப்பு

 வாய்ப்பிறப்பு vāyppiṟappu, பெ.(n.)

   வாயிலிருந்து வருஞ்சொல்; word of mouth, saying, declaration.

     ‘அவன் வாய்ப் பிறப்பைக் கேள்’.

     [வாய் + பிறப்பு. ஒ.நோ. வாய்ச்சொல்.]

வாய்ப்பு

வாய்ப்பு vāyppu, பெ.(n.)

   1. ஏற்புடை நிலைமை (ஈடு.1, 9, ப்ர);; favourability, favourable, circumstance.

   2. நேர்பாடு; good chance or opportunity.

     “வாய்ப்போ விதுவொப்ப மற்றில்லை” (திவ். இயற். பெரிய.திருவந். 40);.

   3. நன்கமைந்தது; that which is appropriately formed or situated.

     “நீர் வாய்ப்பும் சோலை வாய்ப்புங் கண்டு” (திவ்.திருமாலை, 24, வ்யா, பக்.83);.

   4. பொருத்தம்; fitness, suitability.

     ‘வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருளதி காரமாய்’ (இறை.1, உரை, பக்.6);.

   5. அழகு; beauty.

     “மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள்” (சிவப். பிரபந். வெங்கையு.232);.

   6. மிகு சிறப்பு (வின்.);; surpassing excellence.

   7. செல்வம்; wealth.

     “எவ்வாய்ப்புமாகு மெமக்கு” (திருப்போ. சந். மாலை.73);.

   8. செழிப்பு (நாமதீப.62.);; fertility.

   9. ஊதியம்; profit, gain.

     ‘நமக்கு நல்ல வாய்ப்பாயிருந்தது’ (ஈடு. 2,10, 10);.

   10. பேறு (இலக்.அக.);; fortune.

     [வாய் → வாய்ப்பு]

வாய்ப்புட்டில்

 வாய்ப்புட்டில் vāyppuṭṭil, பெ.(ո.)

வாய்க்கூடு (வின்.); பார்க்க;see {}.

வாய்ப்புண்

வாய்ப்புண்1 vāyppuṇ, பெ.(n.)

   1. உள்வாயில் தோன்றும் புண்; ulcer in the mouth, stomatitis.

   2. நாக்குப்புண்; inflammation of the tongue – Glossitis.

   3. கடுஞ்சொல்லானுண்டாகும் மன வருத்தம்; wound caused by harsh words.

     “தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது”

     [வாய் + புண்]

 வாய்ப்புண்2 vāyppuṇ, பெ.(n.)

   1. வாய்க் கொப்புளம்; a disease thrush or aphthac.

   2. பெண்ணின் கருவழியில் ஏற்படும் புண்; sore vagina.

     [வாய் + புண்]

வாய்ப்புறம்

வாய்ப்புறம் vāyppuṟam, பெ.(n.)

   உதடு; lip.

     “வாய்ப்புறம் வெளுத்து” (திவ்.நாய்ச்.1,8);.

     [வாய் + புறம்]

வாய்ப்புற்று

வாய்ப்புற்று vāyppuṟṟu,    பெ.(ո.) வாயிலுண்டாம் நோய் வகை; a disease of the mouth.

     “புழுச்செறி வாய்ப்புற்று நோயர்” (கடம்ப.பு.இலீலா.137);.

     [வாய் + புற்று]

வாய்ப்புள்

வாய்ப்புள் vāyppuḷ, பெ.(n.)

   நற்சொல்லாகிய குறி; chance-heard word, considered a good omen.

     “நல்லோர் வாய்ப்புள்” (முல்லைப்.18);.

     [வாய் + புள்]

வாய்ப்பூச்சு

வாய்ப்பூச்சு vāyppūccu, பெ.(n.)

   1. வாயை நீரால் துடைக்கை; cleansing or rinsing one’s mouth with water.

   2. சொல்லி மழுப்புகை; glossing over or varnishing with words.

     ‘அவர் சொன்ன தெல்லாம் வாய்ப்பூச்சே’.

     [வாய் + பூச்சு]

வாய்ப்பூட்டு

வாய்ப்பூட்டு1 vāyppūṭṭu, பெ.(ո.)

   1. தாடையெலும்பின் பொருத்து; joint of the jaw bones.

   2. வாய்க்கூடு (இ.வ.); பார்க்க;see {}.

   3. பேசாமற்றடுக்கை; prohibition from speaking.

     “வாய்ப்பூட்டெனக்கு மிட்டான்” (விறலி விடு.823);.

   4. கீழ்வாய் முகக் கட்டையில்

   இரண்டு சுழியுள்ளதான மாட்டுக் குற்றவகை (பெரிய.மாட் 20);; a defect of cattle, consisting of two curls on the lower Jaw.

   5. கையூட்டு; bribe.

     “இது அவனுக்கு வாய்ப்பூட்டாகக் கொடுத்தது” (இ.வ);.

   6. வாய்வாளாதிருந்து கொண்டு நாக்கை நீட்டிக் குத்தி அல்லது தாடைகளை ஊடுறுவக் குத்திப் பூணுங் கம்பி; pin pierced through the out-stretched tongue or run across the mouth from cheek to cheek of a person who is under a vow of silence.

     [வாய் + பூட்டு]

 வாய்ப்பூட்டு2 vāyppūṭṭu, பெ.(n.)

   வாய் திறக்கவொண்ணா ஒர் இசிவு நோய்; a condition of tetanic spasm of the jaw muscles causing them to be rigidly closed.

     [வாய் + பூட்டு]

வாய்ப்பூட்டுக்காசு

 வாய்ப்பூட்டுக்காசு vāyppūṭṭukkācu, பெ.(n.)

வாய்முட்டுக்காசு பார்க்க;see {}.

     [வாய்ப்பூட்டு + காசு]

வாய்ப்பூட்டுச்சட்டம்

 வாய்ப்பூட்டுச்சட்டம் vāyppūṭṭuccaṭṭam, பெ.(n.)

   பொதுக் கூட்டங்களிற் பேசுவதைத் தடுக்குஞ் சட்டம் (இக்.வ);; law restraining or prohibiting public speech.

     [வாய்ப்பூட்டு + சட்டம்]

வாய்ப்பெட்டி

 வாய்ப்பெட்டி vāyppeṭṭi, பெ. (n.)

வாய்க்கூடு (வின்.); பார்க்க;see {}.

     [வாய் + பெட்டி]

வாய்ப்பெய்-தல்

வாய்ப்பெய்-தல் vāyppeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   வாயிலிட்டுத் தின்னுதல்; to take in, as food, to eat.

     “நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்” (மதுரைக்.25);.

     [வாய் + பெய்-,]

வாய்ப்பேச்சு

வாய்ப்பேச்சு vāyppēccu, பெ. (п.)

   1. வாய்ச்சொல்; utterance, word of mouth.

     “பின்னை யொன்றும் வாய்ப்பேச்சி லீரானால்” (அருட்பா.ii, திருவிண்.3);.

   2. வெறும் பேச்சு; mere words, vain utterance.

     “வாய்ப்பேச்சில் வல்லானடி”.

     [வாய் + பேச்சு]

வாய்ப்பை

வாய்ப்பை vāyppai,    பெ. (п.) கடன் (நாமதீப.628); debt.

ம. வாய்ப

வாய்ப்பொன்

வாய்ப்பொன் vāyppoṉ, பெ.(п.)

   கடிவாளத்தின் ஒருறுப்பு; horse’s bit.

     “உன்னி வாய்ப்பொன் கறித்திட” (இரகு.நகர.51);.

     [வாய் + பொன்]

வாய்ப்பொய்

வாய்ப்பொய் vāyppoy, பெ. (n.)

   மெய்ம்மையின்பாற் படும் பொய்; white lie; lie uttered with a good intention.

     “துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார்” (தணிகைப்பு.நாட்.48);.

     [வாய் + பொய்]

வாய்ப்பொருத்து

 வாய்ப்பொருத்து vāypporuttu, பெ.(n.)

   மூட்டுவாய்; joint, as of two planks.

     ‘கதவின் வாய்ப்பொருத்து விலகிவிட்டது’.

     [வாய் + பொருத்து. பொருத்து = மூட்டுவாய்.]

வாய்மடி-தல்

வாய்மடி-தல் vāymaḍidal,    4 செ.கு.வி. (v.i.)

   கூர்மழுங்குதல்; to become blunt-edged.

     ‘ப்ருஹ்மாஸ்திரம் வாய்மடியச் செய்தே’ (ஈடு.6, 1, ப்ர.);.

     [வாய் + மடி-,]

வாய்மடு-த்தல்

வாய்மடு-த்தல் vāymaḍuttal,    4 செ.குன்றாவி. (v.i.)

   வாயினுட் கொள்ளுதல்; to put into one’s mouth.

     “அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே” (திவ்.திருவாய். 2,3,9);.

     [வாய் + மடு-,]

வாய்மடை

 வாய்மடை vāymaḍai, பெ.(n.)

   செய்வரப்பில் நீர்பாயும் வழி; opening in the ridge of a field for the passage of water.

     [வாய் + மடை]

வாய்மட்டம்

வாய்மட்டம் vāymaṭṭam, பெ.(n.)

   1. ஏனம் முதலியவற்றின் மேல் மட்டம் (வின்.);; top- level’ up to the brim or mouth, as of a vessel.

   2. பொன்னுருச் செய்யும் ஒருமுறை(வின்.);; a process in making golden beads.

   3. ஏனத்தின் வாய் வளையம் (யாழ்.அக.);; ring round the mouth of vessel.

     [வாய் + மட்டம்]

வாய்மணியம்

வாய்மணியம் vāymaṇiyam, பெ.(n.)

   1. வேலை வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம் (கொ.வ.);; ordering persons about, without ability to extract work from them.

   2. சாய்கால் (இ.வ.);; authority, influence.

     [வாய் + மணியம்]

பணி → மணி → மணியம்.’மணியம்’ பெர்சியன் சொல் என்று சென்னை பல்கலைகழக அகரமுதலியில் குறிக்கப்பெற்றுள்ளது.

வாய்மண்போடு-தல்

வாய்மண்போடு-தல் vāymaṇpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. பிழைப்பைக் கெடுத்தல்; to deprive a person of his means of livelihood.

   2. கொடுமை செய்தல் (யாழ்.அக.);; to do a wicked act.

     [வாய் + மண்போடு-,]

வாய்மதம்

வாய்மதம் vāymadam, பெ.(n.)

வாய்க் கொழுப்பு பார்க்க;see {}.

     “வாய் மதமோ வித்தை மதமோ” (குற்றா. குற. 76,1);.

     [வாய் + மதம்]

வாய்மருந்து

வாய்மருந்து vāymarundu, பெ.(n.)

   நச்சுயிரி தீண்டப்பட்டோரின் வாயில் நச்சுமருந்தாக பண்டுவத்தாருமிழும் வாயெச்சில் (திவ். நாய்ச். 13, 5, அரும். பக். 313);; spittle spit by the doctor into the mouth of a snake-bitten patient, as an antidote or poison.

     [வாய் + மருந்து, மரு → மருந்து = நலப்பொருள் தொகுதி]

வாய்மலர்-தல்

வாய்மலர்-தல் vāymalartal,    3 செ.குன்றாவி. (v.t.)

   பேசுதல்; to speak.

     “மைந்தனார் வாய்மலருங்குரல் கேட்டு” (திருவிளை. மண்சும. 19);.

     [வாய் + மலர்]

வாய்முகூர்த்தம்

 வாய்முகூர்த்தம் vāymuārttam, பெ.(n.)

   வெல்லும் பேச்சு, பேச்சு இயல்பு; casual utterance which proves true.

     ‘அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று சொன்னாய் உன் வாய்முகூர்த்தம் அவர் வீட்டில் இல்லை’.

     [வாய் + முகூர்த்தம்]

 Skt. {} → த. முகூர்த்தம். முழுத்தம் என்பது தனித்தமிழாம்.

வாய்முட்டுக்காசு

 வாய்முட்டுக்காசு vāymuṭṭukkācu, பெ.(n.)

   மந்தணத்தை வெளியிடா திருக்குமாறு கொடுக்கும் கையூட்டு; hush money.

     [வாய் + முட்டு + காசு]

வாய்முட்டுப்போடு-தல்

வாய்முட்டுப்போடு-தல் vāymuṭṭuppōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   மந்தணத்தை வெளியிடாதிருக்குமாறு கையூட்டுக் கொடுத்தல்; to bride, to pay hush-money.

     [வாய் + முட்டு + போடு-,]

வாய்முத்தம்

வாய்முத்தம்1 vāymuttam, பெ.(n.)

   முத்தம்; kiss.

     [வாய் + முத்தம்]

 வாய்முத்தம்2 vāymuttam, பெ.(n.)

   பல்; tooth.

     “வாய்முத்தஞ் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே” (தனிப்பா.);

     [வாய் + முத்தம்]

வாய்முத்து

வாய்முத்து vāymuttu, பெ.(n.)

வாய்முத்தம்1 பார்க்க;see {}.

     “வாய்முத் தார்த்தி னல்லது தீரா துயிர்க்கென” (பெருங்.இலாவாண,16,59);.

     [வாய் + முத்து]

வாய்மூ-த்தல்

வாய்மூ-த்தல் vāymūttal,    19 செ.கு.வி. (v.i.)

   பேச்சில் சிறத்தல்; to excel in speech.

     “வாய்மூத்த குடி”(வின்.);

     [வாய் + மூ-,]

வாய்மூடு-தல்

வாய்மூடு-தல் vāymūṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. வாய் புதை-, (யாழ்.அக.); பார்க்க;see {}.

   2. பேச்சு, அழுகை முதலியன நிறுத்துதல்; to cease speaking, crying etc.

     ‘அவரதிகாரத்தில் அழுத பிள்ளையும் வாய்மூடும்’.

   3. குவிதல்; to close, as a flower.

     “தொக்க கமலம் வாய்மூட” (பிரபுலிங்.பிரபுதே. 54);.

     [வாய் + மூடு-,]

வாய்மூட்டு

வாய்மூட்டு1 vāymūṭṭu, பெ.(n.)

வாய்ப் பொருத்து பார்க்க;see {}.

     [வாய் + மூட்டு]

வாய்மூத்தவன்

வாய்மூத்தவன் vāymūttavaṉ, பெ.(n.)

   1. பேச்சில் முந்துவோன் (யாழ்.அக.);; one who is forward in speech.

   2. சிறப்புச் சொற்பொழிவாளர் (வின்.);; chief speaker.

     [வாய் + மூத்தவன்]

வாய்மூப்பன்

வாய்மூப்பன் vāymūppaṉ, பெ.(ո.)

   1. பேச்சிற் சிறந்தவன்; excellent speaker.

   2. பிறர் வழக்கையெடுத்து வழக்காடுவோன் (முகவை);; one who pleads the cause of another, advocate.

     [வாய் + மூ → மூப்பு → மூப்பன்]

வாய்மூர்

வாய்மூர் vāymūr, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ளதும், அப்பர், சம்பந்தரால் பாடப்பட்டதுமான சிவத்தலம்; one of the saiva places having the distinction of being sung by Appar, Sampantar. It is on the south side of {}-river bank in {} District.

     “திங்களொடருவரைப் பொழிற் சோலைத் தேனலங் காலைத் திருவாய்மூர்” (அப்.தேவா.247-11);.

     [வாய்மூர் → திருவாய்மூர்]

வாய்மூழ்-த்தல்

வாய்மூழ்-த்தல் vāymūḻttal,    9 செ.கு.வி. (v.i.)

வாய்மூடு-, 1 பார்க்க;see {}, 1.

     “ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த்தனரே” (புறநா.336);.

வாய்மை

வாய்மை vāymai, பெ.(n.)

   1. சொல்; word.

     “சேரமான் வாராயென வழைத்த வாய்மையும்” (தனிப்பா.i, 97, 19);.

   2. தப்பாத மொழி; ever truthful word.

     “பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு” (கலித்.35);.

   3. உண்மை; truth.

     “வாய்மை யெனப்படுவ தியாதெனின்” (குறள்.291);.

   4. துன்பம் (துக்கம்);, துன்பம் ஏற்படல் (துக்கோற்பத்தி);, துன்பமீட்சி (துக்க நிவாரணம்);, துன்ப மீளல் நெறி (துக்க நிவாரண மார்க்கம்); என நால் வகைப்பட்ட புத்த மத உண்மைகள்; sublime truths numbering four viz., tukkam, {}.

     “ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது” (மணிமே. 30,188);.

   5. வலிமை (சூடா.);; strength.

     “வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிறவுயிர்கட்கும் தீங்குபயவாமை, ‘வாய்மை’ யதிகாரம் திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அறநூலாக்கும் இயல்வரையறையாம். உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒருபொருட்சொல் மூன்றும் முறையே உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய் (substance); போன்றது மெய்ம்மை எனினுமாம்” எனப் பாவாணர் தரும்

     “வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்” (குறள், 291); என்ற குறளுரையில் தரும் விளக்கம் கருதத் தக்கது.

     [வாய் → வாய்மை]

வாய்மைக்குடி

வாய்மைக்குடி vāymaikkuḍi, பெ. (n.)

உயர்குடிபார்க்க see uyarkudi,

     “நகையிகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு”(குறள்.953);.

மறுவ: உயர்குடி, உயர்குலம், மேற்குடி

     [வாய்மை+குடி]

வாய்மொழி

வாய்மொழி1 vāymoḻidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. கூறுதல்; to speak.

     “வாய் மொழிந்துரைக்கலுற்றாள்” (சீவக. 1707);.

   2. தூய மந்திரங்களை யோதுதல்; to consecrate by uttering sacred hymns.

     “வாய் மொழி மங்கலக் கருவி முன்னுறுத்தி” (சீவக. 2411);.

     [வாய் + மொழி-,]

 வாய்மொழி2 vāymoḻi, பெ.(n.)

   1. பேச்சு; speech.

   2. எழுத்து மூலமின்றி வாயாற் கூறுஞ்சொல்; unwritten oral declaration.

   3. உண்மைமொழி; truth, true word.

     “வாய்மொழி வாயர் நின்புக ழேத்த” (பதிற்றுப்.37,2);.

   4. மறை; the vedas.

     “மாயாவாய் மொழி யுரைதர” (பரிபா.3,11);.

   5. திருவாய்மொழி;{}.

     “அவ்வாய் மொழியை யாரு மறையென்ப” (பெருந்தொ.1820);.

     [வாய் + மொழி]

வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு

 வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு vāymoḻivāypāṭṭukāṭpāṭu, பெ. (n.)

   நாட்டுப்புறவியலை ஆய்வு செய்வதற்கான அடிப் படைக் கோட்பாடு; the methodology to explore folklore.

     [வாய்மொழி+வாய்பாடு+கோட்பாடு]

வாய்மொழித்தேர்வு

 வாய்மொழித்தேர்வு vāymoḻittērvu, பெ.(n.)

   மாணவரை நேரடியாக வினவி தெரிவு செய்யும் நிகழ்ச்சி; viva-voce, oral examination.

     [வாய்மொழி + தேர்வு]

வாய்மோசம்

வாய்மோசம் vāymōcam, பெ.(n.)

   1. வாய்க்குற்றம், 1 (கொ.வ.); பார்க்க;see {}.

   2. சொன்ன சொல் தவறுகை; failing to keep one’s word.

     [வாய் + மோசம்]

வாய்வடம்

வாய்வடம் vāyvaḍam, பெ.(n.)

வாய்க் கயிறு (நாமதீப. 210); பார்க்க;see {}.

     [வாய் + வடம்]

வாய்வட்டமாகப்பேசு-தல்

வாய்வட்டமாகப்பேசு-தல் vāyvaṭṭamākappēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   திறமையாகப் பேசுதல் (இ.வ.);; to speak cleverly.

     [வாய் + வட்டமாக + பேசு-,]

வாய்வட்டம்

 வாய்வட்டம் vāyvaṭṭam, பெ.(n.)

வாய்க்கயிறு (பிங்.); பார்க்க;see {}.

     [வாய் + வடம் → வட்டம்]

வாய்வயிறுகட்டல்

 வாய்வயிறுகட்டல் vāyvayiṟugaṭṭal, பெ.(n.)

   பத்தியமாக விருத்தல்; to keep on diet.

     [வாய்வயிறு + கட்டல்]

வாய்வறட்சி

 வாய்வறட்சி vāyvaṟaṭci, பெ. (n.)

   வாய் வறட்டல்; parching of the mouth- xerostomia.

     [வாய் + வறள் → வறட்சி]

வாய்வலம்

வாய்வலம் vāyvalam, பெ.(n.)

   சொல் வன்மை; skill in speech.

     “தம் வாய் வலத்தாற் பாழ்த்துதி செய்து” (திருநூற்.20);.

     [வாய் + வலம்]

வாய்வலி

வாய்வலி vāyvali, பெ.(n.)

   1. வாய்வலம் பார்க்க;see {}.

     ‘தன் வாய் வலியாலே புக்கதாயிற்று’.

   2. அம்பு முதலியவற்றின் முனையுறுதி (ஈடு.4,2,8);; strength of the tip, as of an arrow.

     [வாய் + வலி]

வாய்வளையம்

 வாய்வளையம் vāyvaḷaiyam, பெ.(n.)

   மிடா முதலியவற்றின் விளிம்பிற் பற்றவைக்கும் வளையம்; ring fixed round the mouth of vessel.

     [வாய் + வளையம்]

வாய்வழங்கு-தல்

வாய்வழங்கு-தல் vāyvaḻṅgudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   உண்ணுதல் (யாழ்.அக.);; to eat.

     [வாய் + வழங்கு-,]

வாய்வழிமூச்சு

வாய்வழிமூச்சு vāyvaḻimūccu, பெ.(n.)

   1. வாய் வழியாக விடுமூச்சு; breathing through mouth.

   2. வாய் குறித்து வரும் நோய்கள்; diseases of the mouth.

     [வாய்வழி + மூச்சு]

வாய்வாதம்

 வாய்வாதம் vāyvātam, பெ.(n.)

   வாய்கடுத்து அலகு கிட்டி வியர்த்துப் பேசக் கூடாதிருக்கும் நிலைமை; a diseases causing lock jaw and perspiration.

     [வாய் + Skt. {} → த. வாதம்]

வாய்வாதம்பேசல்

 வாய்வாதம்பேசல் vāyvātambēcal, பெ.(n.)

   வழக்காட்டந் தெரியாமலே பொய்யாக வழக்காடுவதாகச் சொல்லிப் பிதற்றல்; an impostor bragging he knows alchemy.

     [வாய்வாதம் + பேசல்]

வாய்வாயெனல்

வாய்வாயெனல் vāyvāyeṉal, பெ.(n.)

   அச்சமூட்டுதற்குறிப்பு; onom expr. of threatening.

     “நமுசி ப்ரப்ருதிகளை வாய்வாயென்றது திருவாழி” (ஈடு.7,4,1);.

     [வாய் + வாய் + எனல்]

வாய்வார்த்தை

வாய்வார்த்தை vāyvārttai, பெ.(n.)

   1. வாய்ப்பேச்சு; word of mouth.

     “வாய் வார்த்தை நற்றுதி… அயிக்கிய ஞானிகட்கு” (சித்.சிகா.42,7);.

   2. நயம் பொருந்திய சொல் (கொ.வ.);; soft kind of words.

     [வாய் + வார்த்தை. வார்த்தை = skt.]

வாய்வாளாமை

வாய்வாளாமை vāyvāḷāmai, பெ.(n.)

   பேசாதிருக்கை; keeping silent.

     “வாய்வாளாமை… மாற்ற முரையாதிருத்தல்” (மணிமே. 30, 245-49);.

     [வாய் + வாளா → வாளாமை]

வாய்வாளார்

வாய்வாளார் vāyvāḷār, பெ.(n.)

   வாய் பேசாதார்; silent person.

     “வலியாரைத் கண்டக்கால் வாய்வாளாராகி” (பழமொ.302);.

     [வாய் + வாளா → வாளார்]

வாய்வாள்

வாய்வாள் vāyvāḷ, பெ.(n.)

   குறிதப்பாத வாள்; trusty sword, as aim – certain.

     “வலம்படு வாய்வா ளேந்தி” (புறநா.91);.

வாய்விசேடம்

வாய்விசேடம் vāyvicēṭam, பெ.(n.)

   1. வாக்குச்சித்தி, 2 (யாழ்.அக.); பார்க்க;see {}.

   2. வாய்மொழிச் செய்தி (இ.வ.);; oral report.

     [வாய் + Skt. {} → த. விசேடம்]

வாய்விடல்

 வாய்விடல் vāyviḍal, பெ.(n.)

   கொட்டாவி விடல்; yawning.

     [வாய் + விடல்]

வாய்விடாச்சாதி

 வாய்விடாச்சாதி vāyviṭāccāti, பெ.(n.)

   விலங்கு (யாழ்.அக.);; dumb animal.

     [வாய்விடு +

     ‘ஆ’ எ.ம.இ.நி. + Skt. {} → த. சாதி]

வாய்விடாப்புண்

 வாய்விடாப்புண் vāyviṭāppuṇ, பெ.(n.)

   வாயில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் புண்; chronic ulcer of the mouth.

     [வாய் + விடா + புண்]

வாய்விடு

வாய்விடு1 vāyviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. பேசுதல்; to speak.

     “எனப்பல வாய்விடூஉந்தா னென்ப” (கலித்.46);.

   2. வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல்; to speak openly and clearly without any reservation.

     “அர்த்த ப்ராப்தமானது தன்னையே இங்கே வாய்விடுகிறார்” (ஈடு, 10,4,9);.

   3. வெளிப்படுத்துதல்; to divulge, as secrets.

நம்மிருவர்க்கும் நடந்ததை வாய்விடவேண்டாம்’.

     [வாய் + விடு-,]

 வாய்விடு2 vāyviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. மலர்தல்; to blossom, open, as a flower.

     “நிரையிதழ் வாய்விட்ட கடிமலர்” (கலித்.29);.

   2. உரக்கவொலியெழுப்புதல்; to lift up or raise the voice.

     ‘குழந்தை வாய்விட் டழுதது’.

   3. சூளுரை கொள்ளுதல் (சீவக. 592);; to vow.

   4. கொட்டாவி விடுதல் (வின்.);; to yawn.

   5. கடித்த கடிப்பை விட்டிடுதல்; to leave off bitting.

     ‘உதிரங் குடித்து வாய்விட்ட அட்டைபோல’ (ஈடு,4,1,7);.

     [வாய் + விடு-,]

 வாய்விடு3 vāyviḍu, பெ.(n.)

   1. சூளுறுதி; vow.

     “வண்டுபடு தேறனற வாய் விடொடு பருகி” (சீவக.592);.

   2. ஆரவாரம் (சீவக.592, உரை);; tumult;uproar.

     [வாய் + விடு]

 வாய்விடு4 vāyviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   ஒலித்தல்; to make noise.

     “பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த” (இரட்சணிய பக்.36);.

     [வாய் + விடு-,]

வாய்விடை

 வாய்விடை vāyviḍai, பெ.(n.)

   கைம்மரத்தின் நுனிப்பகுதி (நெல்லை.);; the extreme end of a rafter.

     [வாய் + விடு → விடை]

வாய்விட்டு

வாய்விட்டு vāyviṭṭu, வி.எ. (adv.)

   1. ஒளியெழுப்பி, வெளிப்படையாக; loudly.

     ‘வலி தாங்காமல் வாய்விட்டு அரற்றினான்’.

   2. மனம் திறந்து; openly, frankly.

     ‘துக்கத்தை யாரிடமாவது வாய்விட்டுக் சொல்’.

     ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’.

     [வாய் + விட்டு]

வாய்விரணநீர்

 வாய்விரணநீர் vāyviraṇanīr, பெ.(n.)

   வாய்ப் புண்ணால் ஒழுகும் நீர்; salivation due to inflammation of the mouth.

     [வாய் + விரணம் + நீர்]

 Skt. {} → த. விரணம்.

வாய்விரணம்

வாய்விரணம் vāyviraṇam, பெ.(n.)

   1. வாய் வெந்து புண்ணாதல்; inflammation of the mouth, cancrum oris.

   2. கருவாய்ப் புண்; ulcer vagina.

   3. எருவாய்ச் சீழ்ப்புண்; ulcer anus.

     [வாய் + Skt. {} → த. விரணம்]

வாய்விரணம்ஆற்றும்நீர்

வாய்விரணம்ஆற்றும்நீர் vāyviraṇamāṟṟumnīr, பெ.(n.)

   1. வாய் கொப்பளிக்கு மருந்து நீர்; decoction of some astringents for gorgling in stomatitis, ulcer mouth etc. gorgle.

   2. வாய்வேகம் பார்க்க;see {}.

     [வாய்விரணம் + ஆற்றும் + நீர்]

வாய்விரி-தல்

வாய்விரி-தல் vāyviridal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அங்காத்தல்; to gape.

   2. அலப்புதல்; to be garrulous.

     ‘அவன் வாய் விரிந்து கெட்டான்’.

   3. கெட்டாவி விடுதல் (வின்.);; to yawn.

     [வாய் + விரி-,]

வாய்விளங்கம்

வாய்விளங்கம் vāyviḷaṅgam, பெ.(n.)

   1. கொடிவகை (நாமதீப. 30);; small elliptic leaved wind berry.

   2. வாயுவிளங்கத்தின் அரிசி போன்ற மணி (வின்.);; wind bery pepper-corn.

மறுவ. கேரளம், வாய்விடங்கம்.

   தெ. வாயுவிளங்கமு;   ம. விழலரி;க. வாயிவுளங்க.

வாய்விள்(ளு)-தல்

வாய்விள்(ளு)-தல் vāyviḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   1. வாயைத் திறத்தல்; to open one’s mouth.

   2. மலர்தல்; to blossom.

     “வாய் விள்ளு மென்மலர் மணமென” (பிரபுலிங். விமலை. 50);.

     [வாய் + விள்(ளு);-தல்.]

வாய்விழுரத்தம்

 வாய்விழுரத்தம் vāyviḻurattam, பெ.(n.)

   வாய் வழியாகக் குருதி விழுதல்; hematemesis – haemoptysis.

     [வாய்விழு + (அ);ரத்தம்]

வாய்வு

 வாய்வு vāyvu, பெ.(n.)

   கந்தவிடம்; a kind of arsenic.

வாய்வெட்டு

வாய்வெட்டு vāyveṭṭu, பெ.(n.)

   1. பிறர் வியக்கும்படி பேசுகை (கொ.வ.);; skilful, fascinating talk.

   2. வாய்த்துடுக்கு 1 பார்க்க;see {}.

   3. நெல் முதலியவற்றை அளக்கையிற் குவித்து அளக்காமல் தலை வழிக்கை (யாழ்.அக.);; striking off the heaped up grain above the leave top of a measure, in measuring.

     [வாய் + வெட்டு]

வாய்வெருவல்

 வாய்வெருவல் vāyveruval, பெ.(n.)

   மறதியாக அல்லது அறியாமையின் வெளிப்பாடாகச் சொல்லக்கூடாதவற்றையும் சொல்லிவிடுதல்; to reveal what not to be spoken or exposed as a result of ignorance or forgetfulness.

     “வாய்வெருவலாக எல்லாவற் றையும் சொல்லிவிட்டார்” (உவ.);.

     [வாய்+வெருவல்]

வாய்வெருவு

வாய்வெருவு1 vāyveruvudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   வாய் பிதற்றுதல்; to speak incoherently, as in delirium.

     “அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய் வெருவினாள்” (திவ். பெரியதி. 8, 2, 3);.

     “வெருவாதாள் வாய்வெருவி” (திவ். பெரியதி, 5, 5, 1);.

     [வாய் + வெருவு-,]

 வாய்வெருவு2 vāyveruvudal,    10 செ.கு.வி. (v.i.)

வாய்குளிறு, 2 பார்க்க;see {}.

     [வாய் + வெருவு-,]

வாய்வேக்காடு

 வாய்வேக்காடு vāyvēkkāṭu, பெ.(n.)

   வாய் முழுவதும் வெந்தாற் போலிருக்கும் நோய்வகை;     [வாய் + வேக்காடு]

வாய்வேக்காளம்

 வாய்வேக்காளம் vāyvēkkāḷam, பெ.(n.)

   வாய்ப்புண்;     [வாய் + வேக்காளம்]

வாய்வை

வாய்வை1 vāyvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உண்ணுதல்; to eat.

     “சிவன் வாய்வைப்ப னோவாலத்தில்” (தனிப்பா.ii,16,295);.

   2. ஊதுதல்; to blow, as a wind-instrument.

     “நேமியான் வாய் வைத்த வளைபோல” (கலித்.105);.

   3. சுவைத்தல்; to taste.

   4. தலையிடுதல்; to meddle or interfere.

     ‘அவன் எல்லாவற்றிலும் வாய்வைக்கிறான்’.

   5. சிறிது பயிலுதல்; to learn a little, to have a desultory knowledge.

     ‘எல்லாத் துறைகளிலும் வாய் வைத்தவன்.அவன்’.

     [வாய் + வை-த்தல்,]

 வாய்வை2 vāyvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கடித்தல் (யாழ்.அக.);; to bite.

   2. கேட்டல் (யாழ்.அக.);; to hear.

     [வாய் + வை-,]

வார நடை

 வார நடை vāranaḍai, பெ. (n.)

   ஒருவகையான தாளக்கால நடை; a time measure.

     [வாரம்+நடை]

வாரகக்கடன்

 வாரகக்கடன் vāragaggaḍaṉ, பெ.(n.)

   வேளாண்மை பொருட்டு உதவுங் கடன்; agricultural loan.

மறுவ. வேளாண்கடன்.

     [வாரகம் + கடன்]

வாரகசியம்

 வாரகசியம் vāragasiyam, பெ.(n.)

   கிழங்கு வகை (சங்.அக.);; a kind of root.

வாரகம்

வாரகம்1 vāragam, பெ.(n.)

   பயிரிடுவோர்க்கு உதவியாகக் கொடுக்கும் முன் பணம்; advance given to cultivators to enable them to carry on cultivation.

   2. நெல் வட்டிக்குக் கொடுக்கும் பணம் (யாழ்.அக.);; money lent on agreement to pay interest in kind, i.e. paddy.

தெ. வாரகமு.

 வாரகம்2 vāragam, பெ.(n.)

   1. குதிரை; horse.

   2. குதிரை நடைவகை; a pace of horse.

 வாரகம்3 vāragam, பெ.(n.)

   கடல் (அக.நி.);; ocean or sea.

 வாரகம்4 vāragam, பெ.(n.)

   நிலப்பனை (சங்.அக.);; moosly root.

வாரகிருமி

 வாரகிருமி vāragirumi, பெ.(n.)

வாரிகிருமி (சங்.அக.); பார்க்க;see {}.

வாரகீரன்

வாரகீரன் vāraāraṉ, பெ.(n.)

   1. அளியன் (மைத்துனன்);; brother-in-law.

   2. சுமையாள்; porter.

வாரக்கட்டளை

 வாரக்கட்டளை vārakkaṭṭaḷai, பெ.(n.)

   வாரந்தோறும் வீட்டுக்கொரு நாளாக இரவலர்க்கு உணவளிக்கும் திட்டம்; system by which villagers undertake to feed mendicants etc. gratuitously in turn of one day in a week.

     [வாரம் + கட்டளை]

வாரக்கட்டளைத்தம்பிரான்

 வாரக்கட்டளைத்தம்பிரான் vārakkaṭṭaḷaittambirāṉ, பெ. (n.)

   வாரக் கட்டளையில் உண்ணும் சைவத்துறவி (வின்.);; saiva-ascetic fed on {}.

     [வாரக்கட்டளை + தம்பிரான்]

வாரக்கம்

வாரக்கம் vārakkam, பெ.(n.)

வாரகம்1, 1 பார்க்க;see {}.

     “உன்றன் வாரக்கத்தைச் சீரக்கத்தை வாங்கிக் கொண்டேனோ” (குருகூர்ப்பள்ளு);.

   2. பொருநராகப் பதிந்து கொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம் (வின்.);; advance money paid to a soldier on enlisting.

தெ. வாரகமு.

வாரக்காணம்

வாரக்காணம் vārakkāṇam, பெ.(n.)

   வரிவகை (S.l.l.vi.155);; a tax.

     [வாரம் + காணம்]

வாரக்காரன்

 வாரக்காரன் vārakkāraṉ, பெ.(n.)

   உழுங்குடியானவன் (வின்.);; cultivator.

     [வாரம் + காரன். (காரன் = ஆண்பாற் பெயரீறு);]

வாரக்குடி

 வாரக்குடி vārakkuḍi, பெ.(n.)

   குடி வாரத்துக்குப் பயிரிடும் உழவன் (வின்.);; tenant or cultivator who receives a fixed share of the produce.

     [வாரம் + குடி. (வாரம் = மேல்வாரம் குடிவாரங்களாகிய விளைச்சலின் பங்கு);]

வாரக்குடிச்சி

 வாரக்குடிச்சி vārakkuḍicci, பெ.(n.)

   வாரக்குடிப்பெண் (யாழ்.அக.);; woman cultivator.

     [வாரக்குடி → வாரக்குடிச்சி]

ஒ.நோ. வாரம் + குடி → குடிச்சி.

வாரக்குன்னல்

 வாரக்குன்னல் vārakkuṉṉal, பெ.(n.)

   ஒரு வகை மாட்டு நோய்; malarial fever affecting cattle.

     [வாரம் + குன்னல். குன்னல் = சளி, காய்ச்சலோடு வரும் நோய்]

வாரங்கம்

வாரங்கம்1 vāraṅgam, பெ.(n.)

   ஆயுதப்பிடி (சா.அக.);; handle of weapon.

 வாரங்கம்2 vāraṅgam, பெ.(n.)

   பறவை (சங்.அக.);; bird.

வாரசுந்தரி

 வாரசுந்தரி vārasundari, பெ.(n.)

   விலை மகள் (யாழ்.அக.);; prostitute.

     [வாரம் + சுந்தரி. Skt. = சுந்தரி]

வாரசேவை

 வாரசேவை vāracēvai, பெ.(n.)

   பொருட் பெண்டிர் கூட்டம் (யாழ்.அக.);; company of harlots.

     [வாரம் + சேவை. Skt. = சேவை]

வாரச்சட்டம்

 வாரச்சட்டம் vāraccaṭṭam, பெ.(n.)

   குடியானவனுக்குரிய விளை பங்கின் விளத்தம் குறிக்கும்பட்டி (W.G.);; a register showing the cultivator’s share of the crop.

     [வாரம் + சட்டம்]

வாரஞ்சாரம்

வாரஞ்சாரம் vārañjāram, பெ.(n.)

வாரம்2,6,7 (இ.வ.); பார்க்க;see {}.

வாரடகம்

 வாரடகம் vāraḍagam, பெ.(n.)

   தாமரைக் காய்; heart.

வாரடம்

 வாரடம் vāraḍam, பெ.(n.)

   வயல் (சங்.அக.);; field.

வாரடி

வாரடி1 vāraḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   நீர் நிரவியோடுதல் (யாழ்.அக.);; to spread out and flow, as water.

     [வார் + அடி-,]

 வாரடி2 vāraḍi, பெ.(n.)

   பலகறை (சங்.அக.);; cowrie.

 வாரடி3 vāraḍi, பெ.(n.)

   சாட்டையடி (புதுவை.);; whipping.

     [வார் + அடி]

வாரடித்தல்

வாரடித்தல் vāraḍittal, பெ.(n.)

   கம்பியாக நீட்டுதல், வாரடித்துப் புடம் போடுதல் (போகர் 7000);; to elongate as wire.

     [வார் + அடித்தல்]

வாரடை

வாரடை1 vāraḍai, பெ.(n.)

   பனை முதலியவற்றின் ஒலையீர்க்கு (வின்.);; mid- rib, as of a palm leaf.

   தெ. வரட;ம. வரிட.

     [வார் + அடு → அடை]

 வாரடை2 vāraḍai, பெ.(n.)

   துலாக்கோலின் ஏற்றத் தாழ்வான நிலை;   தராசின் ஏற்றத் தாழ்வான நிலை (C.G.);; uneven state of the balance.

 வாரடை3 vāraḍai, பெ.(n.)

வரடை பார்க்க;see {}.

வாரடையோலை

 வாரடையோலை vāraḍaiyōlai, பெ.(n.)

   குத்தகை ஆவணம்; deed of lease.

     [வார் + அடையோலை]

வாரட்டு

 வாரட்டு vāraṭṭu, பெ.(n.)

வாரப்பட்டை பார்க்க;see {}.

வாரட்டை

 வாரட்டை vāraṭṭai, பெ.(n.)

   வாரவட்டை; beam supporting a roof.

     [வாரம் + அட்டை]

வாரணக்கயிறு

 வாரணக்கயிறு vāraṇakkayiṟu, பெ.(n.)

   உழவுக்கயிறு; agricultural plough rope.

     [வாரணம் + கயிறு]

வாரணத்தண்டம்

 வாரணத்தண்டம் vāraṇattaṇṭam, பெ.(n.)

   கோழி முட்டை; fowl egg.

     [வாரணம் + தண்டம்]

வாரணன்

வாரணன்1 vāraṇaṉ, பெ.(n.)

கணபதி;{}.

     “வாரணன் குமரன் வணங்குங் கழற் பூரணன்” (தேவா. 785, 10);.

 வாரணன்2 vāraṇaṉ, பெ.(n.)

   கடற்றெய்வம்; god of the sea tract.

     [வாரணம் → வாரணன்]

வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்,); என்பதை மூலமாகக் காட்டி அனைத்தையும் மூடும் வானம் (all-enveloping sky); என்று பொருள் கூறுவர். இது வருணனை மழைத் தெய்வமாகக் கொண்ட இடைக்காலத்திற்கு மட்டும் பொருந்துமேயன்றி, கடல் தெய்வமாகக் கொண்ட முற்கால, பிற்கால நிலைமைக்குப் பொருந்தாது.

தமிழர் வாரணனை என்றும் கடல் தெய்வமாகவே கொண்டனர்.

     “வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல். 951);.

இது ‘வாரணன் மேய நீர்மணலுலகமும்’ என்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் வருண என்னும் வடசொல் வடிவிற்கேற்ப வருணன் என்று திரித்துக் கொண்டார்.

வடவர் காட்டும் வ்ரு என்னும் மூலத்திற்குச் சூழ்தற் பொருளுமுள்ளது.

இனி, வரி என்னும் தமிழ்ச் சொற்கு மூடுதற் பொருளுமுள்ளது. வரிதல் = மூடுதல்.

     “புண்ணை மறைய வரிந்து” (திவ். திருவாய். 5:1:5);

வளைவுக் கருத்தடிப்படையிலேயே, வாரணம் என்பது கேடகத்தையும் சங்கையும் குறிக்கும். (வ.மொ.வ.86);.

 வாரணன் vāraṇaṉ, பெ. (n.)

   தமிழரின் கடல் தெய்வம்; God of ocean of the Tamils.

மறுவ: உப்பளவண்ணன், சிங்-உழல்வன்

     [வாரணம்-வாரணன்]

முத்துக்குடை ஊர்வலத்தில் இரு கையுடைய வராக சந்தனமரச் சிற்ப தெய்வமாகிய நெய்தல் நில வாரணன் நாளடைவில் திருமாலாகவும், பெளத்தரால் உழல்வனாகவும் மாற்றப்பட்டுள்ளான் என்பர் (மயூரசந்தேசம்,பக்.151);.

வாரணபுசை

 வாரணபுசை vāraṇabusai, பெ.(n.)

   வாழை (சங்.அக.);; plantain.

வாரணம்

வாரணம்1 vāraṇam, பெ.(n.)

   1. சங்கு (பிங்.);; conch.

     “வாரணத்து வாயடைப்ப” (இரகு. நாட்டு 43);.

   2. யானை; elephant.

     “புகர்முக வாரணம்” (மணிமே.7, 115);.

   3. பன்றி (நன். 271, மயிலை.);; pig.

     “கனவாரணம் பயின்றிடுந் தகையால்” (அரிசமய. குலசேக.4);.

   4. தடை (பிங்.);; obstacle, obstruction.

   5. மறைப்பு; screen, cover.

     “வாரண மாயை’ (பாரத. திரெள.17);.

   6. கவசம் (பிங்.);; coat of mail.

   7. சட்டை (சூடா.);; shirt.

   8. காப்பு (வின்.);; protection.

   9. கேடகம் (வின்.);; shield.

   10. நீங்குகை (வின்.);; leaving off, removal.

   11. உன் மத்தம் (அக.நி.);; delirium tremens, madness.

   12. கோழி; fowl.

     “பொறி மயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப” (மணிமே.7,116);.

   13. உறையூர்;{},

 an ancient capital of the {}.

     “வைகறை யாமத்து வாரணங் கழிந்து” (சிலப்.11,11);.

 வாரணம்2 vāraṇam, பெ.(n.)

   மாவிலிங்கம் (வின்.);; round berried cuspidate-leaved lingam tree.

 வாரணம்3 vāraṇam, பெ.(n.)

   1. நிலத்தைச் சூழ்ந்திருக்கும் கடல் (பிங்.);; sea.

     “வாரணஞ் சூழ்புவி” (தனிப்பா.ii,167,414);.

   2. கேடகம்; shield.

   3. சங்கு; conch.

     [வள் → வர் → வார் + அணம். (வே.க.பக்.100);]

 வாரணம்4 vāraṇam, பெ.(n.)

   1. ஊமத்தம்; dhatura.

   2. இலவங்கப் பட்டை; cinnamon bark.

வாரணரேகை

 வாரணரேகை vāraṇarēkai, பெ.(n.)

மக்களின் நல்வாழ்வைக் காட்டும்

   உள்ளங்கை வரை; a kind of auspicious mark on the palm of the hand.

     “வள்ளி கையிற் கண்ட வாரண ரேகையீ தம்மே” (திருவாரூர்க் குறவஞ்சி);.

வாரணவல்லபை

 வாரணவல்லபை vāraṇavallabai, பெ.(n.)

வாரணபுசை (சங்.அக.); பார்க்க;see {}.

வாரணவல்லமை

 வாரணவல்லமை vāraṇavallamai, பெ.(n.)

   வாழை; plantain tree.

     [வாரணம் + வல்லமை]

வாரணை

 வாரணை vāraṇai, பெ.(n.)

   தடை (பிங்.);; obstruction.

வாரணையம்

 வாரணையம் vāraṇaiyam, பெ.(n.)

வாரணை (வின்.); பார்க்க;see {}.

வாரண்டு

வாரண்டு vāraṇṭu, பெ. (n.)

   1. ஆளைக் கட்டுப்படுத்திப் பிடிக்க அரசால் விடுக்கப்படும் கட்டளை; warant for arrest.

   2. பிணை (இ.வ.);; security.

த.வ. பிடி

     [E. warrant → த. வாரண்டு]

வாரத்தண்டு

வாரத்தண்டு1 vārattaṇṭu, பெ.(n.)

வாரத்தளகு (சங்.அக.); பார்க்க;see {}.

     [வாரம் + தண்டு]

 வாரத்தண்டு2 vārattaṇṭu, பெ.(n.)

   கறிமுள்ளி; a thorny-shrub-solamum jacquini.

வாரத்தளகு

 வாரத்தளகு vārattaḷagu, பெ.(n.)

   கத்திரிவகை; Indian night shade.

வாரத்தி

 வாரத்தி vāratti, பெ.(n.)

   வாத நாராயணன்; a tree-Delonix elata.

வாரத்திட்டம்

வாரத்திட்டம் vārattiṭṭam, பெ.(n.)

   1. மேல்வாரங் குடிவாரங்களின் பிரிப்பொழுங்கு; adjustment of the shares of the produce, as {} and {}.

   2. மேல் வாரதார்க்கும் குடிவாரதார்க்கும் உரிய விளை பங்கின் விவரங்குறித்துக் ஊர் கணக்கன் வைக்கும் கணக்கு; a register kept by the village accountant of the respective shares of the produce assignable to the cultivators and proprietors.

     [வாரம் + திட்டம்]

வாரத்துக்குவளர்-த்தல்

வாரத்துக்குவளர்-த்தல் vārattukkuvaḷarttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விற்பதாற் கிடைக்கும் ஆதாயத்தைச் சொந்தக் காரனோடு பகுத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டு கோழி, ஆடு, பன்றி முதலியன வளர்த்தல் (வின்.);; to raise, as fowls, pigs, goats etc. on an agreement to share the proceeds of the sale with the owners.

     [வாரத்திற்கு + வளர்-,]

வாரத்துண்டு

வாரத்துண்டு vārattuṇṭu, பெ.(ո.)

   1. குடிவாரத்தினின்று கழித்துச் அரசு அல்லது நில உரிமையாளரின் மேல்வாரத்தோடு கூட்டும் சிறுபகுதி (R.T.);; deduction made from the cultivator’s share and added to that of the land lord or the government (R.T);.

   2. நில உரிமையாளர்க்குரிய மேல் வாரத்தின் எச்சம் (வின்.);; unrealised balance of the landlord’s share of the produce.

     [வாரம் + துண்டு]

வாரநாரி

 வாரநாரி vāranāri, பெ.(n.)

   விலைமகள் (யாழ்.அக.);; prostitute.

     [வாரம் + நாரி. நாரி = skt]

வாரநாள்

 வாரநாள் vāranāḷ, பெ.(n.)

   நாள்; a day of the weak.

     [வாரம் + நாள்]

வாரநிலம்

 வாரநிலம் vāranilam, பெ. (n.)

   பாடலைப்பாடும் முறை; a method of singing.

     [வாரம்+நிலம்]

வாரபுசை

 வாரபுசை vārabusai, பெ.(n.)

வாரணாபுசை (சங்.அக.); பார்க்க;see {}.

வாரப்படு-தல்

வாரப்படு-தல் vārappaḍudal,    4 செ.கு.வி. (v.i.)

   உருக்கங் கொள்ளுதல் (யாழ்.அக.);; to show mercy;

 to pity.

வாரப்பட்டா

 வாரப்பட்டா vārappaṭṭā, பெ.(n.)

   தவசக்குத்தகையாகக் கொடுக்கும் பட்டா; rent-deed or {} fixing the amount of rent in kind.

     [வாரம் + பட்டா]

வாரப்பட்டை

 வாரப்பட்டை vārappaṭṭai, பெ.(n.)

   மேற் கூரை தாங்கும் உத்தரம்; bressummer, beam placed horizontally to support the roof above.

     [வாரம் + பட்டை]

வாரப்பதிகம்

வாரப்பதிகம் vārappadigam, பெ.(n.)

   சிறுமணவூர் முனுசாமி முதலியார் என்பவரால் 19-20ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூல்; a book written by {} cirumanavur in 19-20th century.

     [வாரம் + பதிகம்]

வாரப்பற்று

 வாரப்பற்று vārappaṟṟu, பெ.(n.)

   அரசு அல்லது நில உரிமையாளர் வாரமாகத் தவசத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு விடும் நிலம் (C.G.);; lands held on the sharing tenure, a share of the produce being received by the government or landlord in kind, op. to {}.

வாரப்பாடு

வாரப்பாடு vārappāṭu, பெ.(n.)

   1. அன்பு; love.

     ‘அவனுக்கு அவளிடத்தில் வாரப்பாடு’.

   2. உருக்கம் (யாழ்.அக.);; pity, mercy.

   3. ஒருபுடைச் சார்பு; partiality, bias, prepossesion.

     [வாரம் + பாடு]

வாரப்பிரிவு

 வாரப்பிரிவு vārappirivu, பெ.(n.)

   மேல்வாரங் குடிவாரங்களின் பிரிவு; division of shares in cultivation.

     [வாரம் + பிரிவு]

வாரப்புன்செய்

 வாரப்புன்செய் vārappuṉcey, பெ.(n.)

   வரியிடத்தக்க புன்செய்ப் பயிர் (PT.L.);; dry crops liable to be taxed.

     [வாரம் + புன்செய்]

 வாரப்புன்செய் vārappuṉcey, பெ.(n.)

   வரியிடத்தக்க புன்செய்ப் பயிர் (PT.L);; dry crops liable to be taxed.

     [வாரம் + புன்செய்]

வாரமரக்கலம்

வாரமரக்கலம் vāramarakkalam, பெ.(n.)

   ஒரு வகை வரி (புதுக்.கல்.149);; a kind of tax.

வாரமாதர்

வாரமாதர் vāramātar, பெ.(n.)

   பொது மகள்; harlot, prostitute.

     “வாரமாதர் போன்ற” (மேரு மந்.வைசயந்.17);.

வாரமிருத்தல்

 வாரமிருத்தல் vāramiruttal, பெ.(n.)

   வேதத் தேர்விற்காக கூடும் வேத வித்துக்களின் அவை (நாஞ்.);; gathering of {} scholars for being examined in the {}.

வாரமிழந்தான்

 வாரமிழந்தான் vāramiḻndāṉ, பெ.(n.)

   வடமேற்கில் உண்டாம் மின்னல் (J.N.);; lightning on the north-west.

     [வாரம் + இழந்தான்]

வாரமுச்சலிக்கை

 வாரமுச்சலிக்கை vāramuccalikkai, பெ.(n.)

   நிலத்திற்குரியவர் பயிரிடுபவரிடம் எழுதி வாங்கிக் கொள்ளும் உடன்படிக்கை; a written agreement executed by tenant to the landlord.

     [வாரம் + முச்சலிக்கை]

வாரமூலி

வாரமூலி vāramūli, பெ.(n.)

   1. வாரத்திற் கொருமுறை வயிற்றுத் தீ தணிதற்காக வேண்டி சித்தர்கள் சாப்பிடும் மூலிகை; a medicinal drug taken by siddhars once a week to appease their hunger.

     [வாரம் + மூலிகை → மூலி]

வாரம்

வாரம்1 vāram, பெ.(n.)

   1. மலைச்சாரல் (பிங்.);; mountain slope.

     “வாரமதெங்கும்….. பண்டிகளுர” (இரகு. திக்கு. 258);.

   2. தாழ் வாரம் (வின்.);; verandah of a house.

   3. பக்கம் (சிலப்.5,136, அரும்.);; side.

   4. சொல்லொழுக்கமும் இசையொழுக்கமு முடைய இசைப்பாட்டு (சிலப்.3,67,அரும்.);; mellifluous song.

   5. கலிப்பா உறுப்புக்களு ளொன்று (தொல். பொருள். 464.);; a member of Kali Verse.

   6. பின்பாட்டு; song of an accompanist sung as a relief to the chief singer.

     “தோரிய மடந்தை வாரம் பாடலும்” (சிலப்.6,19);.

   7. தெய்வப் பாடல்; song in praise of a deity.

     “வாரமிரண்டும் வரிசையிற் பாட” (சிலப்.3, 136);.

   8. கூத்து வகை (வின்.);;({});

 a kind of dance.

 ma. {}, ka. {}.

     [வார் → வாரம். (வே.க.பக்.108);]

 வாரம்2 vāram, பெ.(n.)

   1. உரிமை (யாழ்.அக.);; proprietorship, ownership.

   2. குடியிறை; tax.

     “நடையல்லா வாரங்கொண்டார்” (கம்பரா.மாரீச.180);.

   3. வாடகை (வின்.);; hire, rent.

     ‘நான் அதை வாரத்துக்கு வளர்க்கிறேன்’.

   4. தவசக் கட்டுக்குத்தகை; lease of land for a share of the produce.

   5. மேல்வாரக் குடிவாரங்களாகிய விளைபங்கு; share of a crop or the produce of a field, of two kinds, viz. {}.

   6. பங்கு; share, portion.

     “வல்லோன் புணரா வாரம் போன்றே” (தொல். பொருள். 622, உரை);;

   7. பாதி (தொல்.பொ.464, உரை);; half, moiety.

   8. அன்பு; love.

     “தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே” (திவ். பொருமாள் 2, 7);.

   9. ஒரு பக்கச் சார்பு; partiality.

     “நட்டார்க்கு வாரம்” (சிறுபஞ்.85);.

   10. தடை; impediment, obstacle.

     “வாரமென்னினிப் பகர்வது” (கம்பரா. அயோத். மந்திரப். 39);.

   11. திரை (யாழ்.அக.);; screen.

   12. வாயில் (யாழ்.அக.);; doorway.

   13. திரள் (யாழ்.அக.);; multitude, crowd.

   14. கடல் (பிங்.);; sea.

   15. பாத்திரம் (யாழ்.அக.);; vessel.

   16. தடவை; turn, time.

     “செபிக்க மிருத்துஞ் செய மேழு வாரம்” (சைவச. பொது. 287);.

   17. வேதச் சந்தை;{} chant or recitatioin.

     “வாரமோதும் பரிசு” (T.A.S.i,8);.

     “மண்டப மொண்டொளி யனைத்தும் வாரமோத” (திவ். பெரியதி. 2, 10, 5);.

 ma. {};

 ka. {};

 Kod. va-ra;

 Te. {}-kamu.

 வாரம்3 vāram, பெ.(n.)

   1. வரம்பு; boundary, limit.

   2. நீர்க்கரை; bank, shore.

     [வார் → வாரம்]

 வாரம்4 vāram, பெ.(n.)

   தூண் (பெருங். உஞ்சைக். 58,46);; post, pillar.

     [வார் → வாரம்]

 வாரம்5 vāram, பெ.(n.)

   யானை; elephant.

 வாரம்1 vāram, பெ. (n.)

   தெய்வப் பாடலைக் குறிக்குஞ்சொல்; word denoting hymn.

     [வளர்-வாரம்]

 வாரம்2 vāram, பெ. (n.)

   ஆயாதி மரபுப் பிரிவுகளில் ஒன்று; one among Ayati tradition.

     [வார்-வாரம்]

 வாரம்3 vāram, பெ. (n.)

   ஏழுநாள் கொண்ட கால அளவு; a week of seven days.

     [வரை-வாரை-வாரம்]

 வாரம்4 vāram, பெ. (n.)

   நிலவுரிமையாளரும் நிலம் உழுதவரும் விளைச்சலில் பங்கு பெறும் அளவு; share of produce in the land to be divided between the tiller and the land owner.

     [வரு-வாரு-வாரம்]

ஒவ்வொருவருக்கும்வரும் விளைச்சல் பங்கு. மேட்டு நிலமாயின்-23 எனவும் நன்செய்.நிலமாயின் 1:1 எனவும் சில ஊர்களில் பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம்.

 வாரம் vāram, பெ. (n.)

   1. ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்);, வியாழன், வெள்ளி, காரி (சனி); என்ற ஏழு கிழமைகள்; days of the week, numbering seven, viz., {}, caumiya – {}, kuru-{}, cukkira – {}, cani-{}.

   2. ஏழு கிழமைகள் கொண்ட காலப்பகுதி. (பிங்.);; week.

     [Skt. {} → த. வாரம்1]

வாரம்படு-தல்

வாரம்படு-தல் vārambaḍudal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒரு பக்கஞ் சாருதல்; to be prejudiced or biassed, to show partiality.

     “வாரம்பட்டுழித் தீயவு நல்லவாம்” (சீவக.888);.

     [வாரம் + படு-,]

வாரம்பாடு-தல்

வாரம்பாடு-தல் vārambāṭudal,    4 செ.கு.வி. (v.i.)

   பின்பாட்டுப் பாடுதல்; to sing in accompaniment.

     “வாரம்பாடுந் தோரிய மடந்தையும்” (சிலப்.14,155);.

     “வாரம் பாடுதல் என்பது பாடலைப் பாடும் ஒருமுறையாகும். வாரம் பாடுதல் மிகத் தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. நாயன்மார்கள் வாரம் பாடும் முறையைப் பெரிதும் வளர்த்துப் பேணியவர்கள்.

வாரம்பாடும்முறை

பாடுதுறையிலே முதலில் ஒருவர் அமைத்துக் கொண்டு பாடும் பாடலின் தடைவேகத்தைப் பின்னர் பாடும்போது இரட்டிப்பு வேகத்தில் பாடுவது வாரம் பாடுதல் எனப்பட்டது. அது வாரம் புணர்த்தல் என்றும் அழைக்கப்பட்டது. இன்று நடைமுறையில் அது

     ‘ஒன்றாங்காலம் பாடுதல்’,

     ‘இரண்டாங்காலம் பாடுதல்’ என்று கூறப்படுகிறது. ஒரு எ-டு. தாள எண்ணிக்கைகள் எட்டுக்குள் பாடிய ஒரு பாட்டு வரியை நாலு எண்ணிக்கைக்குள் பாடி முடிப்பது வாரம் பாடுதல் ஆகும். தொல்காப்பிய விளக்கம்

முதல் நூல் இயற்றியுள்ளதை நன்கு அறிந்து கொண்டு அம்முதல் நூலினின்றும் வழிநூல் செய்பவன் கைக்கொள்ளவேண்டிய நெறிகளைத் தொல்காப்பியர் வாரம் புணர்த்தும் நெறிகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். ஒன்றை விளக்குவதற்குக் கூறப்படும் உவமையானது அனைவர்க்கும் தெரிந்ததாய் இருத்தல் வேண்டும். எனவே தொல்காப்பியர் காலத்தில் வாரம் புணர்த்திப் பாடும் முறை அனைவர்க்கும் தெரிந்ததாய், நடைமுறையில் இருந்ததாய் பெரும் வழக்குப் பெற்றுப் பரவியதாய்த் திகழ்ந்தது.” – இசையறிஞர் வீ.ப.கா.சுந்தரம். செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 60 ஆனி – பரல் 11 பக்கம். 473-475.

வாரம்பிரி-த்தல்

வாரம்பிரி-த்தல் vārambirittal,    18 செ. குன்றாவி. (v.t.)

   விளைபடி நெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலிய பங்குப்படி பிரித்தல்; to divide the harvest between the cultivator and the landlord.

வாரம்வை-த்தல்

வாரம்வை-த்தல் vāramvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   விருப்பப்படுதல்; to be attached to, to have a strong liking for, to show concern.

     “என் கண்ணே வாரம் வைத்துக் காத்தனை” (தாயு.பராபர.227);.

வாரயம்

 வாரயம் vārayam, பெ.(n.)

   பூடுவகை (சங்.அக.);; a prostrate herb.

வாரல்வலை

 வாரல்வலை vāralvalai, பெ.(n.)

   வலை வகை; a kind of net.

     [வாரல் + வலை. (வலைஉயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கயிற்றுக் கருவி);]

வாரளமதாடி

 வாரளமதாடி vāraḷamatāṭi, பெ.(n.)

   வெள்ளூமத்தை; white dhatura-Dhatura bearing white flowers – Dhatura alba.

வாரவட்டை

வாரவட்டை1 vāravaṭṭai, பெ.(n.)

வாரை1, 3 பார்க்க;see {}.

 வாரவட்டை2 vāravaṭṭai, பெ.(n.)

   பாம்புச்சட்டம்; bressummer.

     [வாரம் + வட்டை]

வாரவாணம்

வாரவாணம் vāravāṇam, பெ.(n.)

   1. பஞ்சு பெய்து தைத்த மெய்ச் சட்டை (வின்.);; quilted Jacket.

   2. மார்க்கவசம் (யாழ்.அக.);; breast- plate.

வாரவாணி

வாரவாணி1 vāravāṇi, பெ.(n.)

   பொதுமகள் (யாழ்.அக.);; harlot.

     [வாரம் + வாணி]

 வாரவாணி2 vāravāṇi, பெ.(n.)

விறலி பார்க்க;see {}.

     [வாரம் + வாணி]

வாரவாரம்

வாரவாரம்1 vāravāram, பெ.(n.)

   கவசம் (சது.);; armour.

வாரவிலாசினி

 வாரவிலாசினி vāravilāciṉi, பெ.(n.)

வாரமாதர் பார்க்க;see {}.

     [வாரம் + விலாசினி]

வாராகரம்

வாராகரம் vārākaram, பெ.(n.)

   கடல்; sea.

     “வாராகர மேழுங்குடித்து” (திருப்பு:1035);.

வாராகி

 வாராகி vārāki, பெ.(n.)

   ஓர் கிழங்கு; a tuber.

வாராக்கதி

வாராக்கதி vārākkadi, பெ.(n.)

   வீடுபேறு, வானுலகு; heaven, as the place from which there is no return.

     “வாராக்கதி யுரைத்த வாமன்” (சீவக. 1247);.

வாராக்காலம்

வாராக்காலம் vārākkālam, பெ.(n.)

   எதிர்காலம்; future tense.

     “வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும், ஒராங்கு வரூஉம் வினைச்செற்கிளவி, இறந்து காலத்துக் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள என்மனார் புலவர்” (தொல். சொல். வினை. 44);.

     [வாரா + காலம்]

வாராங்கனை

 வாராங்கனை vārāṅgaṉai, பெ.(n.)

   பொதுமகள்; harlot, prostitute.

வாராசனம்

 வாராசனம் vārācaṉam, பெ.(n.)

   நீர்க்குடம் (யாழ்.அக.);; water-pot.

வாராடை

 வாராடை vārāṭai, பெ.(n.)

   தோல்வார்; leather strap.

     [வார் + ஆடை]

வாராததனால்வந்ததுமுடித்தல்

வாராததனால்வந்ததுமுடித்தல் vārādadaṉālvandadumuḍiddal, பெ.(n.)

   ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததோர் நூற்பாலானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளுந் தந்திர வுத்திவகை (தொல். பொருள். 666);; a literary device by which the sense of a {} defectively expressed is rendered complete.

வாராந்தர

 வாராந்தர vārāndara, பெ.(n.)

   கிழமைக்கு ஒரு முறையான; weekly.

     “வாராந்தரப் பரிசுச்

சீட்டு’.

வாராந்தரி

 வாராந்தரி vārāndari, பெ.(n.)

கிழமைத்

   தாளிகை; weekly journal.

வாரானை

வாரானை vārāṉai, பெ.(n.)

   பிள்ளைத் தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம் (பிங்.);; a section of {}-tamil, in which an one year old child is described as being invited by its mother and others to come to them, one of ten {} or {}.

     “மாற்றரிய முத்தமே வாரானை” (வச்சணந். செய்.8);.

வாரானைப்பருவம்

 வாரானைப்பருவம் vārāṉaipparuvam, பெ.(n.)

வாரானை பார்க்க;see {}.

     [வாரானை + பருவம்]

வாராமற்பண்ணு-தல்

வாராமற்பண்ணு-தல் vārāmaṟpaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மனப்பாடஞ் செய்தல் (கொ.வ.);; to get by heart.

வாராவதி

வாராவதி vārāvadi, பெ.(n.)

   ஆற்றின் குறுக்காக நீண்ட வாரையால் அமைக்கப் பெற்ற பாலம்; bridge.

   தெ. வாரதி;க. வாராவதி.

     [வாரைவதி → வாராவதி. (மு.தா.பக். 110);]

வாராவந்தி

 வாராவந்தி vārāvandi, பெ.(n.)

   கட்டாயமாய் வருவது (சங்.அக.);; that which comes or occurs of necessity.

வாராவரத்து

 வாராவரத்து vārāvarattu, பெ.(n.)

   நேர்மைக்கேடாய் வந்தது (யாழ்.அக.);; unjust or inequitable acquisition or income.

வாராவரவு

வாராவரவு vārāvaravu, பெ.(n.)

   அருமையான வருகை; rare visits.

     “வாராவரவாக வந்தருளு மோனருக்கு” (தாயு. பைங்கிளி. 51);.

வாராவாரி

 வாராவாரி vārāvāri, பெ.(n.)

   மிகுதி (யாழ்.அக.);; plenty.

வாராவுலகம்

வாராவுலகம் vārāvulagam, பெ.(n.)

   1. வாராக்கதி பார்க்க;see {}.

   2. வீரர் முதலியோர் அடைதற்குரிய விண்ணுலகம்; heaven, hero’s heaven.

     “வாராவுலகம் புகுத லொன்றென” (புறநா.341);.

வாராவுலகு

வாராவுலகு vārāvulagu, பெ.(n.)

வாராக்கதி பார்க்க;see {}.

     “வாரா வுலகருள வல்லாய் நீயே” (தேவா. 300, 9);.

வாரி

வாரி1 vāri, பெ.(n.)

   1. வருவாய் (பிங்.);; income, resources.

     “புயலென்னும் வாரி” (குறள். 14);.

   2. விளைவு; produce.

     “மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும்” (புறநா.35);.

   3. தவசம் (யாழ்.அக.);; grain.

   4. செல்வம் (பிங்.);; wealth.

     [வார் → வாரி]

 வாரி2 vāri, பெ.(n.)

   1. மூட்டைகளை இறுக்கிக் கட்ட உதவும் கழி (இ.வ.);; pole for tightening a package or pack.

   2. கூரை முனையில் வைத்துக் கட்டுங் குறுக்குக் கழி; lath tied lengthwise at the edge of a thatched roof.

   3. கூரையினின்று வடியும் நீரைக் கொண்டு செல்லுங் கால்; channel for draining off the rain water from a roof, water way.

   4. தோணிப் பலகை (வின்.);; plank across a dhoney.

   5. மடை (வின்.);; sluice.

 ma. {}, Tu, {}.

     [வார் → வாரி]

 வாரி3 vāri, பெ.(n.)

   1. சீப்பு; comb.

   2. குப்பை வாருங் கருவி; rake.

     [வார் → வாரி]

ஓ.நோ: சிக்குவாரி, சிணுக்குவாரி.

 வாரி4 vārittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. தடுத்தல் (சூடா.);; to hinder, obstruct.

   2. ஆணையிட்டுக் கூறுதல் (யாழ்.அக.);; to asseverate, swear.

   3. நடத்துதல்; to conduct, drive, as a horse.

     “பரிமா வாரித்த கோமான்” (இறை.13, உரை,பக்.91);.

 வாரி5 vāri, பெ.(n.)

   1. தடை (சூடா.);; impediment, obstruction.

   2. மதிற்சுற்று (பிங்.);; wall, fortification.

     “வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித்து” (கந்தபு.அசுரர் யாக.36);.

   3. செண்டு வெளி; stadium.

     “குஞ்சரம் வாரியுள் வளைத்தவே” (சீவக.275);.

   4. பகுதி (பிங்.);; portion.

     [வார் → வாரி]

 வாரி6 vāri, பெ.(n.)

   1. நீர் (பிங்.); (தக்கயாகப்.67, உரை);; water.

   2. வெள்ளம் (பிங்.);; flood.

     “வணிக மாக்களை யொத்ததவ் வாரியே” (கம்பரா. ஆற்றுப்.7);.

   3. கடல் (பிங்.); (தக்கயாப். 67, உரை);; sea.

   4. நீர் நிலை (பிங்.);; reservoir of water.

   5. நூல் (அக.நி.);; literary work.

   6. கலைமகள் (யாழ்.அக.);;{}.

   7. வீணை வகை (சூடா.);; a kind of lute.

   8. இசைக் குழல் (பிங்.);; flute, pipe.

   9. யானையகப்படுத்துமிடம்; kheddha.

     “வாரிக்கொள்ளா… வேழம்” (மலைபடு.572);.

   10. யானை கட்டுங் கயிறு (யாழ்.அக.);; rope for tying an elephant.

   11. யானைக் கோட்டம்; elephant stable.

     “குஞ்சரம்… மதிட்புடை நிலை வாரிகள்” (சீவக.81);.

வார்தல் = ஒழுகுதல்.

     “வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள” (தொல்.20);.

     [வார் → வாரி = நீர், வெள்ளம், கடல், நீர்நிலை, வார் = நீர்.]

     “வாராயிர முகமா நுகர்மஞ்சு” (பாரத. அருச்சுனன்றவ. 159); – (பாவாணரின் வ.மொ.வ.85);.

 வாரி7 vāri, பெ.(n.)

   1. வாயில் (பிங்.);; entrance.

   2. கதவு (உரி.நி.);; door.

   3. வழி (பிங்.);; path.

 வாரி8 vāri, பெ.(n.)

   முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல்; suffix meaning according to.

     “வகுப்புவாரி”.

 வாரி9 vāri, பெ.(n.)

   1. உட்காதிலுள்ள ஓர் குழி; vastibule.

வாரிகம்

வாரிகம்1 vārigam, பெ.(n.)

   பொன்முசுட்டை (நாமதீப.291.);; buckler-leaved moon-seed.

 வாரிகம்2 vārigam, பெ.(n.)

   தாமரை; lotus.

     [வார் → வாரிகம்]

வாரிகிருமி

 வாரிகிருமி vārigirumi, பெ.(n.)

   அட்டை (யாழ்.அக.);; leech.

     [வாரி + கிருமி. Skt. = கிருமி.]

வாரிகேசம்

 வாரிகேசம் vāriācam, பெ.(n.)

   வெட்டிவேர்; khus-khus-vetiveria zizanioides alias andropogon muricatus.

வாரிக்காய்ச்சல்

 வாரிக்காய்ச்சல் vārikkāyccal, பெ.(n.)

   கொள்ளை நோயாகிய காய்ச்சல் (யாழ்.அக.);; epidemic fever.

     [வாரி + காய்ச்சல்]

வாரிக்காலன்

 வாரிக்காலன் vārikkālaṉ, பெ.(n.)

   கால்நடை (இ.வ.);; cattle.

வாரிக்கொண்டுபோ-தல்

வாரிக்கொண்டுபோ-தல் vārikkoṇṭupōtal,    8 செ.குன்றாவி. (v.t.)

   ஒரு சேர அழித்தல்; to sweep away;

 to destroy wholesale, as an epidemic.

     [வாரி + கொண்டு + போ-,]

வாரிக்கொண்டுபோதல்

 வாரிக்கொண்டுபோதல் vārikkoṇṭupōtal, பெ.(n.)

   கொள்ளை நோயால் இறத்தல்; to be carried away in pestilence.

     [வாரி + கொண்டு + போதல்]

வாரிசன்

 வாரிசன் vārisaṉ, பெ.(n.)

திருமால் (யாழ்.அக.);;{}.

     [வாரி + ஈசன் → வாரீசன் → வாரிசன்]

வாரிசரம்

 வாரிசரம் vārisaram, பெ.(n.)

   மீன் (யாழ்.அக.);; fish.

     [வாரி + சரம்]

வாரிசாதம்

வாரிசாதம் vāricātam, பெ.(n.)

   தாமரை; lotus.

     “வாரிசாதக் காலை மலரென மலர்ந்த முகமும்” (பாரத. பதினேழா. 247);.

வாரிசாமரம்

 வாரிசாமரம் vāricāmaram, பெ.(n.)

   நீர்ப்பாசி (சங்.அக.);; moss.

வாரிசாலயன்

வாரிசாலயன் vāricālayaṉ, பெ.(n.)

நான்முகன் (தக்கயாகப். 67,-பி.ம்);;{}.

வாரிசாலையன்

வாரிசாலையன் vāricālaiyaṉ, பெ.(n.)

வருணன் (தக்கயாகப். 67);;{}.

வாரிசை

 வாரிசை vārisai, பெ.(n.)

   செந்நாய்; a ferocious dog.

வாரிசோளி

 வாரிசோளி vāricōḷi, பெ.(n.)

   கதிர்க் காந்தக் கல்; sun magnetic stone.

     [வாரி + சோரி]

வாரிச்சி

வாரிச்சி vāricci, பெ.(n.)

   வரிக்கூத்து வகை (சிலப். 3, 13, உரை, பக். 88.);; a kind of masquerade dance.

     [வரி → வாரி → வாரிச்சி]

வாரிதம்

வாரிதம்1 vāridam, பெ.(n.)

   மேகம்; rain- cloud, as giving water.

     “வாரிதத்தின் மலர்ந்த கொடைக்கரன்” (யாசோதா. 1,4);.

 வாரிதம்2 vāridam, பெ.(n.)

   தடை (யாழ்.அக.);; obstacle.

வாரிதி

வாரிதி1 vāridi, பெ.(n.)

   கடல்; ocean.

     “எழுவாரிதி கழியப்பாய” (தக்கயாகப். 269);.

 வாரிதி2 vāridi, பெ.(n.)

   அமுரி; urine.

வாரிதித்தண்டு

 வாரிதித்தண்டு vārididdaṇṭu, பெ.(n.)

   பவளம் (சங்.அக.);; coral.

     [வாரிதி + தண்டு]

வாரிதிநஞ்சு

 வாரிதிநஞ்சு vāridinañju, பெ.(n.)

   கடல் நுரை; bone of cuttle fish.

     [வாரிதி + நஞ்சு]

வாரிதிநாதம்

வாரிதிநாதம் vāridinādam, பெ.(n.)

   1. சங்கு; conch.

   2. கல்லுப்பு; rock salt.

     [வாரிதி + நாதம்]

வாரிதிவிந்து

 வாரிதிவிந்து vāridivindu, பெ.(n.)

   கடனுரை (யாழ்.அக.);; cuttle-bone.

வாரித்திரம்

வாரித்திரம்1 vārittiram, பெ.(n.)

   சகோரப்புள் (யாழ்.அக.);; shepherd koel.

 வாரித்திரம்2 vārittiram, பெ.(n.)

   ஒலைக்குடை (சங்.அக.);; Umbrella of palm leaves.

வாரித்துறை

 வாரித்துறை vārittuṟai, பெ.(n.)

   கடற்றுரை; sea-port.

     [கடல் + துறை]

 வாரித்துறை vārittuṟai, பெ. (n.)

கடல் அல்லது கப்பல்தொடர்பானதுறை:

 maritime.

     [வாளி+துறை]

வாரிநாதன்

 வாரிநாதன் vārinātaṉ, பெ.(n.)

வருணன் (யாழ்.அக.);;{}.

வாரிநாதம்

வாரிநாதம் vārinātam, பெ.(n.)

   1. கடல்; ocean.

   2. கீழுலகம்; the nether world.

   3. மேகம்; cloud.

வாரிநிதி

 வாரிநிதி vārinidi, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; ocean.

     [வாரி + நிதி. Skt. = நிதி.)

வாரிபர்ணி

 வாரிபர்ணி vāribarṇi, பெ.(n.)

   வள்ளை (சங்.அக.);; creeping bindweed.

வாரிபாணி

 வாரிபாணி vāripāṇi, பெ.(n.)

   வள்ளைக் கீரை; a variety of greens-convolvulus ripens.

     [வாரி + பாணி]

வாரிப்பிரசாதம்

 வாரிப்பிரசாதம் vārippiracātam, பெ.(n.)

   தேற்றா (சங்.அக.);; clearing-nut-tree.

     [வாரி + Skt. {} → த. பிரசாதம்]

வாரிப்பிரவாகம்

வாரிப்பிரவாகம் vārippiravākam, பெ.(n.)

   1. நீர்ப்பெருக்கு (யாழ்.அக.);; flood.

   2. அருவி; waterfall.

     [வாரி + Skt. {} → த. பிரவாகம்]

வாரிப்போதல்

 வாரிப்போதல் vārippōtal, பெ.(n.)

   கொள்ளை நோயில் சாதல்; to die in epidemic diseases such as cholea, plague etc.

     [வாரி + போதல்]

வாரியன்

வாரியன்1 vāriyaṉ, பெ.(n.)

   1. மேல் உசாவுகைச் செய்வோன்; supervisor.

     “வாரியர் இருவரும் கரணத்தானுங்கூடி” (TA.Sll.i,7);.

     “வாரியர் விரைவிற் சென்று” (திருவாத. பு. மண் 19);.

   2. களத்து நெல்லைச் சரியாகக் குவித்துச் சாணிப்பாற் குறியிடச் செய்து மேற்பார்க்கும் அலுவலர் (Rd.M.305);; supervising officer who sees that the grain at the threshing-floor is properly heaped up and sealed with cowdung marks.

   3. களத்தில் நெல்லளப்பதற்காக அதனைக் குவித்துக் கொடுப்பவன்; one who heaps up grain on the threshing-floor for measuring, Rd.

   4. பள்ளரிற் சாதி நிகழ்ச்சிகளுக்கு இனத்தாரை அழைப்பவன் (இ.வ.);;{}

 messenger who summons the people of his caste to attend caste meeting, festival, funerals etc.

     [வாரியம் → வாரியன்]

 வாரியன்2 vāriyaṉ, பெ.(n.)

   குதிரைப்பாகன்; horseman.

     “அப்புரத்தை குதிரையாக நீ அரசவாரியனாய்” (கலித்.31, உரை);.

வாரியப்பெருமக்கள்

வாரியப்பெருமக்கள் vāriyapperumakkaḷ, பெ.(n.)

   ஊராளும் அவையோர்; members of a village assembly.

     “ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம்” (S.l.l.i.117);.

     [வாரியம் + பெருமக்கள்]

வாரியம்

வாரியம்1 vāriyam, பெ.(n.)

   வங்கமலை; mountain containing lead ore.

 வாரியம்2 vāriyam, பெ.(n.)

   மேல் உசாவுகைச் செய்யும் அலுவல்; office of supervision.

     “ஸ்ரீ வைஷ்ணவ வாரியஞ்செய்கிற அரட்ட முக்கிதாசனும்” (S.I.I.iii.80);.

வாரியல்

 வாரியல் vāriyal, பெ. (n.)

   துடைப்பம்; broom stick.

வாரியிறை-த்தல்

வாரியிறை-த்தல் vāriyiṟaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. சிதறச் செய்தல்; to scatter.

   2. வீணாக்குதல்; to waste.

   3. மிகுதியாகக் கொடுத்தல்; to give liberally.

     [வாரி →இறை-,]

வாரியுற்பவம்

 வாரியுற்பவம் vāriyuṟpavam, பெ.(n.)

   தாமரை (யாழ்.அக.);; lotus.

     [வாரி + Skt. urphava → த. உற்பவம்]

வாரியுளுயர்நிலம்

 வாரியுளுயர்நிலம் vāriyuḷuyarnilam, பெ.(n.)

   கோட்டை மதிலின் உள்ளிடமாகச் சுற்றி வருவதற்குரிய மேடான ஒடுக்கு வழி (பிங்.);; high ground within the fort, adjoining its walls.

     [வாரியுள் + உயர்நிலம்]

வாரியோட்டு

வாரியோட்டு vāriyōṭṭu, பெ.(n.)

   நீரோடை; stream, canal.

     “வாரியோட்டில் வலாகரித் திட்ட போல்” (மேருமந்.652);.

     [வாரி + ஒடு → ஒட்டு]

வாரிரசிதம்

 வாரிரசிதம் vārirasidam, பெ.(n.)

   வெள்ளிமணல் (சங்.அக.);; silvery sand.

     [வாரி + Skt. {} → த. ரசிதம்]

வாரிரதம்

 வாரிரதம் vāriradam, பெ.(n.)

   தெப்பம் (யாழ்.அக.);; raft, as in a floating, boat festival.

     [வாரி + Skt. {} → த. ரதம்]

வாரிராசி

 வாரிராசி vārirāci, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; ocean.

     [வாரி + Skt. {} → த. ராசி]

வாரிருகம்

 வாரிருகம் vārirugam, பெ.(n.)

   தாமரை (சங்.அக.);; lotus.

வாரிழை

 வாரிழை vāriḻai, பெ.(n.)

   அடையாள இழை; identification thread.

வாரிவளை-த்தல்

வாரிவளை-த்தல் vārivaḷaittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   ஒருசேரத் திரட்டுதல்; to encompass, to gather togather, to take in a sweep.

     ‘வாரி வளைத்துச் சாப்பிடுகிறான்’.

     [வாரு + வளை-,]

வாரிவாகம்

 வாரிவாகம் vārivākam, பெ.(n.)

   மேகம் (சங்.அக.);; cloud.

     [வாரி + Skt. {} → த. வாகம்]

வாரிவிடு

வாரிவிடு1 vāriviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

வாரியிறை-, 3 பார்க்க;see {}.

     [வாரு + விடு-,]

 வாரிவிடு2 vāriviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   மிகுதியாகப் புனைந்துரைத்தல்; exaggiration.

     [வாரி + விடு-,]

வாரீசம்

வாரீசம்1 vārīcam, பெ.(n.)

   1. வாரிசாதம் (சங்.அக.); பார்க்க;see {}.

   2. சிந்தாமணி (நாமதீப.385);; a mythical gem.

     [வார் + Skt. {} → த. ஈசம்]

 வாரீசம்2 vārīcam, பெ.(n.)

   கடல் (சங்.அக.);; ocean.

வாரு

வாரு1 vārudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1.அள்ளுதல்; to take by handfuls, to take in a sweep;

 to scoop.

     “உறியொடு வாரியுண்டு” (கம்பரா. ஆற்றுப். 15);.

   2. ஆவலோடு கொள்ளுதல்; to take in or grasp with avidity.

     “வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணில்” (திவ். திருவாய். 9, 6, 10);.

   3. தொகுத்தல்; to gather.

     “கைவளம் வாரினை கொண்டு வரற்கு” (பு. வெ.9, 29);.

   4. மிகுதியாகக் கொண்டு செல்லுதல்; to remove, carry off in great numbers, as plague, flood, etc.

   5. கவர்தல் (திவா.);; to snatch away.

     “மாதர் வனைதுகில் வாரு நீரால்” (கம்பரா. ஆற்றுப். 15);.

   6. திருடுதல் (யாழ்.அக.);; to rob, steal.

   7. தோண்டி யெடுத்தல்; to dig and take up.

     “வள்ளி வாரிய குழியின்” (சீவக.1565);.

   8. கொழித்தல் (திவா.);; to winnow.

   9. அரித்தல்; to sift, as with a sieve or by immersing in water.

     “வாராதட்ட வாடூன் புழுக்கல்” (பெரும்பாண். 100);.

   10. மயிர் முதலியன சீவுதல்; to comb, as the hair.

     “கோதி வாரி முடித்த பாரிய கொண்டை” (அரிச்.பு.இந்திர.16);.

   11. யாழ் நரம்பைத் தடவுதல்; to play upon, as the strings of a lute.

     “வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்” (பொருந.23);.

   12. ஒலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மை செய்தல்; to trim, as a palmyra leaf to write on.

   13. பூசுதல் (நெடுநல்.110, உரை);; to plaster, smear.

   க. பாரு, பதசு;   ம. வாருக;   து. பார்சுனி, பாசுனி, பார்குனி;குருக். பார்னா.

மால்ட். bare.

 வாரு vāru, பெ.(n.)

   திரளாய் மக்கள் பெருவாரியில் சாதல்; to sweep off or remove people in large numbers out of the world.

வாருகம்

வாருகம் vārugam, பெ.(n.)

   1. வெள்ளரி (மலை.);; cucumber.

   2. பேய்க் கொம்மட்டி (தைலவ.);; colocynth.

வாருகல்

 வாருகல் vārugal, பெ.(n.)

வாருகோல் பார்க்க;see {}.

வாருகோல்

வாருகோல் vāruāl, பெ.(n.)

   துடைப்பம் (பிங்.);; broom.

     “வங்காள மேறுகினும் வாருகோ லொருகாசு மட்டன்றி யதிக மாமோ” (குமரே. சத.46);.

     [வாரு + கோல்]

வாருக்கதிரோன்

 வாருக்கதிரோன் vārukkadirōṉ, பெ.(n.)

   ஆகாச கருடன்; a twiner sky root-bryonia epigea.

     [வாரு + கதிரோன்]

வாருசி

 வாருசி vārusi, பெ.(n.)

   மொச்சை; field bean- dolichos lap.

வாருணம்

வாருணம்1 vāruṇam, பெ.(n.)

   1. வருணனுக் குரியது; that which realates to Varuna.

   2. மேற்கு (பிங்.);; west.

   3. பகல் பதினைந்து முழுத்தத்துள் பதின்மூன்றாவது (விதான. குணாகுண 73, உரை);; the 13th of the 15 divisions of a day.

   4. துணைத்தொன்மம்

   பதினெட்டனுள் ஒன்று (பிங்.);; a secondary {}, one of 18 upa-{} (Q.V.);.

   5. கடல் (பிங்.);; sea.

   6. மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமமைந்த குதிரை வகை; a species of horse whose chest or belly is white in colour.

     “அந்த மை வண்ணப் பரியின்பேர் வாருணமாம்” (திருவிளை. நரிபரி. 115);.

   7. மாவிலிங்கம்; round-berried cuspidate-leaved lingam tree.

     “வாருண மென்போதில்” (காஞ்சிப்பு. சிவ. 61);.

 வாருணம்2 vāruṇam, பெ.(n.)

   கள் (பிங்.);; spirituous liquor.

வாருணி

வாருணி1 vāruṇi, பெ.(n.)

   அகத்திய முனிவன் (அபி.சிந்.);; sage Agastya.

 வாருணி2 vāruṇi, பெ.(n.)

   1. வருணன் மகள்; the daughter of {}.

     “வருணனாருனை வாருணியென்ன” (காஞ்சிப்பு. வீராட். 44);.

   2. வருணனது தேவி; the consort of {}.

   3. வாருணம்2 பார்க்க;see {}.

   4. ஆட்டாங்கொடி (தைலவ.);; the {} plant.

   5. சதயம் (வின்.);; the 24th naksatra.

   6. வாருணம்1 2 பார்க்க;see {}.

 வாருணி3 vāruṇi, பெ.(n.)

பம்பந்திராய் பார்க்க;see {}.

வாருண்டம்

வாருண்டம்1 vāruṇṭam, பெ.(n.)

   என்காற்புள் (பிங்.);; a fabulous eight- legged bird.

 வாருண்டம்2 vāruṇṭam, பெ.(n.)

   1. பீளை; excretion from the eyes.

   2. குறும்பி; excretion from the ears, wax.

வாருதி

 வாருதி vārudi, பெ.(n.)

   நவச்சாரம் (சங்.அக.);; sal ammoniac.

வாருதிக்கெங்கை

 வாருதிக்கெங்கை vārudikkeṅgai, பெ.(n.)

   கெண்டகச் சீலை; a sacred stone found in Gandaha river.

     [வாருதி + கெங்கை]

வாருதித்தண்டு

 வாருதித்தண்டு vārudiddaṇṭu, பெ.(n.)

   பவளம்; coral.

     [வாருதி + தண்டு]

வாருதிநாதம்

 வாருதிநாதம் vārudinādam, பெ.(n.)

   சங்கு; conch.

     [வாருதி + நாதம்]

வாருதிப்பாசி

 வாருதிப்பாசி vārudippāci, பெ.(n.)

   கடற்பாசி; sea weeds gracilaris confervoides.

     [வாருதி + பாசி]

வாருதியோரக்குடிச்சி

 வாருதியோரக்குடிச்சி vārudiyōrakkuḍicci, பெ.(n.)

   சாதிக்காய்; rutmeg, myristica fragrans.

     [வாருதியோரம் + குடிச்சி]

வாருதிவிந்து

 வாருதிவிந்து vārudivindu, பெ.(n.)

   கடல் நுரை; bone of cuttle fish.

     [வாருதி + விந்து]

வாருளம்

 வாருளம் vāruḷam, பெ.(n.)

   இலவங்கப் பூ; clove.

வாருவகை

 வாருவகை vāruvagai, பெ.(n.)

   தண்ணீர் (சங்.அக.);; water.

     [வாரு + வகை]

வாரூணி

வாரூணி vārūṇi, பெ.(n.)

   1. வாருணி1 பார்க்க;see {}.

   2. முற்கொழுங்கால் (பூரட்டாதி);; the 25th naksatra.

வாரெழுத்தாணி

 வாரெழுத்தாணி vāreḻuttāṇi, பெ.(n.)

   எழுத்தாணி வகை (வின்.);; a kind of iron style for writing.

வாரை

வாரை1 vārai, பெ.(n.)

   1. மூங்கில்; bamboo.

     “வாரை கான்ற நித்திலம்” (கந்தபு.ஆற்று. 5);.

   2. காவுதடி (வின்.);; pole for carrying loads.

   3. வாரி2 1, 2 பார்க்க;see {}.

   4. கைமரம் (வின்.);; rafter, beam.

   5. நீண்டு ஒடுக்கமானது; anything long and narrow.

   6. கருஞ்சிவப்பு நிறமும் 16 அங்குல வளர்ச்சியுமுள்ள மீன் வகை; flat fish brownish or purplish black attaining 16 in. in length.

     [வார் → வாரை]

 வாரை2 vārai, பெ.(n.)

   ஆவிரை (சங்.அக.);; tanner’s senna.

 வாரை3 vārai, பெ.(n.)

காய் காத்து வாரை, கடம்பு, குளம்புளன் (தேரை-1001);.

வாரொழுக்கு-தல்

வாரொழுக்கு-தல் vāroḻukkudal,    9 செ.கு.வி. (v.i.)

   கயிற்றுவலைக் கட்டுதல்; to set nets.

     “ஒடியெறிந்து வாரொழுக்கி” (பெரியபு. கண்ணப்ப.75);.

     [வார் + ஒழுக்கு]

வார்

வார்1 vārttal,    11 செ.கு.வி. (v.i.)

அம்மை

   நோயில் முத்து வெளிப்படுதல்; to appear, as pock in small-pox.

     ‘அம்மை வார்த்த மூஞ்சி’ (கொ.வ.);.

 வார்2 vārtal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒழுகுதல்; to flow, trickle.

     “நெய் வார்ந்தனைய திண்கோல்” (சீவக.1697);.

   2. வெளிவிடுதல்; to spread, overflow.

     “நெடுநீர் வார்குழை” (நெடுநல்.139);.

   3. நெடுமையாதல்; to be long.

     “வார்மயி ருளரினள்” (அகநா.102.);.

   4. நேராதல்; to be upright.

     “வார்ந்திலங்கு வையெயிற்று” (குறுந்.14);.

   5. உயர்தல் (பிங்.);; to rise high.

   6. ஒழுங்குபடுதல்; to be in order, to be arranged in order.

     “மணல்வார் புறவில்” (மலைபடு.48);.

   7. நென்மணி முதலியன பால் கட்டுதல்; to form milk, as grain.

     “ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ” (மலைபடு.114);.

   8. உரிதல்; to peel off.

     “பீலி வார்ந்து” (அகநா.69);.

     [வள் → வரு → வா → வார்-,]

 வார்3 vārtal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மயிர் கோதுதல்; to comb, as hair.

     “வாருறு வணரைம்பால்” (கலித்.58);.

   2. தெரிதல் (சது.);; to know.

   ம. வாருக;   தெ. வாரு;   க. பார்;   கோட. வாரி;   பார்ஜி. வார்ஜாவா;குய். வாரு.

     [வழி → வடி → வார்-, (மு.தா.109);]

 வார்4 vārttal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. ஊற்றுதல்; to pour.

     “கிண்ணத்தில் வார்த்தளிக்க” (சீவரக.கணபதியு.13);.

   2. உருக்கி வார்த்தல்; to cast, as metal in a mould.

   3. தோசை முதலிய பணியாரஞ் செய்தல்; to prepare cakes from dough.

     ‘தோசை வார்த்தான்’.

     [வள் → வரு → வார்-,]

 வார்5 vār, பெ.(n.)

   1. நெடுமை (சூடா.);; length, elongation.

   2. கடைகயறு; churning rope.

     “இளமை வாராக்……. கலக்கி” (சீவக.711);

   3. நேர்மை (சூடா.);; straightness.

   4. வரிசை; row.

     “வாரிட்டணி வகுத்து” (விறலிவிடு.75); (நாமதீப.768);.

   5. உயர்ச்சி (நாமதீப.771);; height.

     [வள் → வரு → வார்]

 வார்6 vār, பெ.(n.)

   1. நீர் (சூடா.);; water.

     “வாராயிர முகமா நுகர்மஞ்சு” (பாரத. அருச்சுனன்றவ.159);.

   2. மேகம் (அக.நி.);; cloud.

     [வள் → வர் → வார்]

 வார்7 vār, பெ.(n.)

   வா என்னும் ஏவல்; second person imperative of the verb.

     “வந்திக்க வாரென” (பரிபா.20,70);.

     “வாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்குமோ” (பாரத.வேத்திர.12);.

     [வரு → வா → வார்]

வார் → வா. (ஏவல் ஒருமை);

வார் என்னும் ஒருமை ஏவலிலும் வாரும், வாருங்கள் என்னும் பன்மை ஏவலிலும், வார்தல், வாரானை என்னும் தொழிற்பெயர்களிலும் வார் என்பது பகுதியாயிருத்தலானும்

     ‘வா’ என்னும் ஏவல் ஒருமை வடிவினின்று வாதல் வாவு என ஏதேனும் ஒரு தொழிற்பெயர் பிறவாமையானும், வருதல் என்னம் வினைக்கு ருகரங்கூடிய வரு என்பதே பகுதியாம்.

வார் என்னும் அடியினின்று முதலாவது திரியக்கூடிய வள் → வர் → வரு என்பவையே.

இங்கு வருதல் வினைக்குக் கூறியதைத் தருதல் வினைக்குங் கொள்க கோர் என்னும் சொல்’கோ’ எனக் குறைந்தது போல. வரு என்பதன் திரியான. ‘வார்’ என்னுஞ் சொல்லும்’வா’ எனக் குறைந்ததென்க.’நோ’ என்னும் வினை இறந்த காலத்திலும் ஏவலிலும் நொந்தான், நொம்மாடாஎனக் குறுகியது போல வா, தா என்பனவும் வ, த எனக் குறுகின.

வார் = வா. (ஏவலொருமை); (மு.தா.79.);.

 வார்8 vār, பெ.(n.)

   1. தோல்வார்; strap of leather.

     “வார்பிணி முரச நாண” (சீவக.2372);.

   2. தோல் (நாமதீப. 595);; skin.

   3. முலைக்கச்சு; bodice.

     “வாரடங்கு வனமுலையார்” (தேவா.1232,6); (பிங்.);.

 வார்9 vār, பெ.(n.)

   1. துண்டம் (நாமதீப.457);; bit, piece.

   2. நுண்மை(வின்.);; smallness.

 வார்1௦ vār, பெ.(n.)

   1. சாறு; juice.

   2. சாராயம்; arrack.

வார்காது

வார்காது vārkātu, பெ.(n.)

   வடிகாது; perforated ear lengthened by weighting the ear-lobes.

     “வார்காது தாழப் பெருக்கி” (திவ். பெரியாழ்.2 3,13);.

     [வார் + காது. (வார்-தல் = நீளுதல்);]

வார்குடை

 வார்குடை vārkuḍai, பெ.(n.)

   ஒரு வகை நெல்(A.);; a kind of paddy.

வார்கோல்

 வார்கோல் vārāl, பெ.(n.)

   விளக்குமாறு; broom.

மறுவ. துடைப்பம்.

     [வார் + கோல்]

வார்க்கட்டு

வார்க்கட்டு vārkkaṭṭu, பெ.(n.)

   1. வாராற் கட்டப்பட்டது; that which is tied by thongs.

   2. திவவு (திருமுரு. 140;உரை);; bands of catgut in a {}.

     [வார் + கட்டு]

வார்க்கயிறு

 வார்க்கயிறு vārkkayiṟu, பெ.(n.)

   பின்னிய தோற்கயிறு (வின்.);; braided leather thong.

     [வார் + கயிறு]

வார்க்குதல்

 வார்க்குதல் vārkkudal, பெ.(n.)

   மாழை முதலியவற்றை யுருக்கிச் சாய்த்தல்; to cast in mould.

வார்க்குத்தி

வார்க்குத்தி vārkkutti, பெ.(n.)

வார்க் குத்து (நெஞ்சு விடு. 22, உரை); பார்க்க;see {}.

     [வார் + குத்தி]

வார்க்குத்து

வார்க்குத்து vārkkuttu, பெ.(n.)

   நீர்ப் பெருக்கு சுழித்தோடும் இடம்; whirlpool.

     “கொலைக்களம் வார்க்குத்து” (ஏலாதி,12);.

     [வார் + குத்து]

வார்சிகி

 வார்சிகி vārcigi, பெ.(n.)

   ஒரு வகைக் கொடி மல்லிகை; a climber-Jasminum sambac.

வார்தல்

 வார்தல் vārtal, பெ. (n.)

   இசைக்கரணத்தில் ஒன்று; a performance in music.

     [வளர்-வார்தல்]

வார்தேவி

 வார்தேவி vārtēvi, பெ.(n.)

   வட்டத்திருப்பி; a twiner.

வார்த்தகி

 வார்த்தகி vārttagi, பெ.(n.)

   கற்றாழை; aloe.

வார்த்தகு

 வார்த்தகு vārttagu, பெ.(n.)

   முல்லை; a variety of Jasmine.

வார்த்தம்

 வார்த்தம் vārttam, பெ.(n.)

   நலம்; well being.

வார்த்தரம்

 வார்த்தரம் vārttaram, பெ.(n.)

   தண்ணீர்; water.

வார்த்தருகம்

 வார்த்தருகம் vārttarugam, பெ.(n.)

   கத்தரிக் காய்; brinjal plant-solanum melongena.

     [வார் + தருகம்]

வார்த்தாகிகம்

வார்த்தாகிகம் vārttāgigam, பெ.(n.)

   1. கண்டங்கத்திரி; a prostate thorny shrub.

   2. சிறுவழுதலை; a small species of brinjal plant.

வார்த்திகம்

வார்த்திகம்1 vārttigam, பெ. (n.)

   நூற்பாவின் (சூத்திரம்); கருத்தை விளக்கும் ஒரு வகை யுரை (சி. போ. 1, பக் 41.);; supplementary rule added to a {} critical gloss or annotation.

     [Skt. {} → த. வார்த்திகம்1]

வார்த்தை

வார்த்தை1 vārttai, பெ. (n.)

   1. சொல்; word, phrase.

   2. மறுமொழி (பிங்.);; reply.

   3. உறுதிமொழி; promise

   4. செய்தி; news, intelligence, tiding.

ஒரு வாணிகனை யாட்கொண்ட வார்த்தை (தேவா. 414, 7.);.

வார்னீசு

 வார்னீசு vārṉīcu, பெ. (n.)

   மரப்பொருள் முதலியவற்றிற் பூசப்படும்மினுக்கெண்ணெய்; varnish.

த.வ. மினுக்கெண்ணெய்

     [E. varnish → த. வார்னீசு]

வார்பு

வார்பு vārpu, பெ.(n.)

   நீளவாக்கிற் சீவப்படுகை; being cut lengthwise.

     “வார்புறு வள்பின்” (புறநா.50);.

     [வார் → வார்பு]

வார்ப்படஇரும்பு

 வார்ப்படஇரும்பு vārppaḍairumbu, பெ.(n.)

   வார்த்து ஊற்றிய இரும்பு; cast iron.

     [வார்ப்படம் + இரும்பு]

வார்ப்படம்

வார்ப்படம்1 vārppaḍam, பெ.(n.)

வார்ப்புவேலை (வின்.); பார்க்க;see {}.

     [வார் → வார்ப்பு → வார்ப்படம்]

 வார்ப்படம்2 vārppaḍam, பெ.(n.)

   மாழையை யுருக்கி வேண்டிய வடிவங்களில் வடித்தல்; to make things from foundary.

வார்ப்படவேலைக்காரன்

 வார்ப்படவேலைக்காரன் vārppaḍavēlaikkāraṉ, பெ.(n.)

   வார்ப்புவேலை செய்வோன்; founder, caster.

     [வார்ப்படம் + வேலைக்காரன்]

வார்ப்பனை

 வார்ப்பனை vārppaṉai, பெ.(n.)

கூந்தற்பனை பார்க்க;see {}.

வார்ப்பாலை

 வார்ப்பாலை vārppālai, பெ.(n.)

   இரும்பு முதலியன உருக்கி வார்க்குமிடம் (புதுவை.);; foundry.

     [வார் → வார்ப்பு + ஆலை]

வார்ப்பிரும்பு

 வார்ப்பிரும்பு vārppirumbu, பெ.(n.)

   பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்து விடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்பு; pig iron.

     [வார்ப்பு + இரும்பு]

வார்ப்பு

வார்ப்பு1 vārppu, பெ.(n.)

   1. ஒழுக்குகை; pouring.

   2. உருக்கி வார்க்கை; casting.

     “வார்ப்பி னமைத்த யாப்பமை யரும்பொறி” (பெருங்.இலாவாண.18, 24);.

   3. உருக்கி வார்க்கப்பட்டது; that which is cast.

   4. வயிறு அகன்று வாய் கனமாகவுள்ள பாத்திர வகை (இ.வ.);; a shallow, thick- liped vessel.

   5. கைவளை (அக.நி.);; bangle.

     [வார் → வார்ப்பு]

 வார்ப்பு2 vārppu, பெ.(n.)

   1. அருமந்த மணிகளில் எற்றின மேற்பூச்சு (திவ். பெரியாழ். 3, 3, 3, வ்யா. பக். 567.);; encasing, as precious stones in an ornament.

   2. மாழையை உருக்கி வார்த்தல்; to make things from foundary.

     [வார் → வார்ப்பு]

வார்ப்புருக்கு

 வார்ப்புருக்கு vārppurukku, பெ.(n.)

   வார்த்த எஃகு; cast steel.

     [வார்ப்பு + உருகு → உருக்கு]

வார்ப்புலை

 வார்ப்புலை vārppulai, பெ.(n.)

வார்ப்பாலை (புதுவை); பார்க்க;see {}.

     [வார்ப்பு + உலை]

வார்ப்புவேலை

வார்ப்புவேலை vārppuvēlai, பெ.(n.)

   1. உருக்கி வார்க்குந் தொழில்; work of casting metal.

   2. வார்ப்பு 1, 3 பார்க்க;see {}.

     [வார்ப்பு + வேலை]

வார்ப்பூண்டு

 வார்ப்பூண்டு vārppūṇṭu, பெ.(n.)

   பூநீறு; salt extracted from the fuller’s earth.

வார்முதல்

 வார்முதல் vārmudal, பெ.(n.)

   உப்பளங்களிலிருந்து வாரியெடுக்கப்பட்ட உப்புக்குவியல்; heap of salt from salt-pans.

     ‘அளத்தில் வார் முதல் அதிகமில்லை’.

     [வார் + முதல்]

ஒ.நோ. கண்டுமுதல்.

வார்மூலி

வார்மூலி vārmūli, பெ.(n.)

   1. பூநீறு; salt extracted from the fuller’s earth.

   2. வெடியுப்பு; salt petre.

     [வார் + மூலி]

வார்மை

வார்மை vārmai, பெ.(n.)

   1. ஒழுக்கம் (அரு.நி.);; conduct.

   2. நேர்மை (அரு.நி.);; rectitude.

   3. மதிப்புரவு; polite manners.

     “வார்மை சீர்மை யறியாதவன்” (வின்.);.

     [வார் → வார்மை]

வாறன்விளை

வாறன்விளை vāṟaṉviḷai, பெ.(n.)

   கேரள மாநிலம் கொல்லம் அருகில் அமைந்துள்ள திருமால் பாடல் பெற்ற வைணவத் தலம்; நம்மாழ்வார் இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்; a vaishnava place having the distinction of being sung by saint {}. It is in Kerala state near Kollam.

     “மாகம்திகள் கொடி மாடங்கள் நீடும் மதிள் திருவாறன் விளை” (நாலா -2844);.

     [வாறன்விளை → திருவாறன்விளை]

வாறான்

 வாறான் vāṟāṉ, பெ.(n.)

   கப்பற்பாய் கட்டுங்கயிறு;தெ. வார.

வாறியுளடு

 வாறியுளடு vāṟiyuḷaḍu, பெ.(n.)

   மாறுபாடான அம்மை; modified small pox.

     [வாரி → வாறி + உளடு]

வாறு

வாறு1 vāṟu, பெ.(n.)

   1. வகை; manner.

     “சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர்” (மதுரைச். உலா, 328);.

   2. அடையத்தக்க பேறு; objective, goal.

     “வாறாராயாதே” (திருப்பு. 993);.

     [ஆறு → வாறு]

 வாறு2 vāṟu, பெ.(n.)

   வலிமை (யாழ்.அக.);; strength.

     [ஆற்று → ஆறு → வாறு]

 வாறு3 vāṟu, பெ.(n.)

   வரலாறு; history.

     “வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன்” (பஞ்ச.திருமுக. 870);.

     [ஆறு → வாறு]

வாறுகோ

 வாறுகோ vāṟuā, பெ.(n.)

   கொம்மட்டி; a variety of melon.

     [வாறு + கோ]

வாறோசுசூடன்

வாறோசுசூடன் vāṟōcucūṭaṉ, பெ.(n.)

   கருப்பூரவகை (சிலப்.14, 109, உரை);; a kind of camphor, as probably from the forest in Baros or Fansur in the Celebes.

வாற்கரண்டி

 வாற்கரண்டி vāṟkaraṇṭi, பெ.(n.)

வாற்கிண்ணம் பார்க்க;see {}.

     [வால் + கரண்டி]

வாற்கிண்ணம்

 வாற்கிண்ணம் vāṟkiṇṇam, பெ.(n.)

   எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடியுள்ளதுமான கிண்ண வகை; a kind of cup with a tail-like handle, to hold oil, etc.

     [வால் + கிண்ணம்]

வாற்குறுவை

 வாற்குறுவை vāṟkuṟuvai, பெ.(n.)

   ஒரு வகை நெல்; a kind of paddy.

     [வால் + குறுவை]

வாற்கொடி

 வாற்கொடி vāṟkoḍi, பெ.(n.)

   கப்பலின் பாய்மரத்திற் கட்டும் ஒரு வகைக் கொடி (வின்.);; pennon for the mizen mast.

     [வால் + கொடி]

வாற்கொண்டலாத்தி

 வாற்கொண்டலாத்தி vāṟkoṇṭalātti, பெ.(n.)

   இராப்பாடிக்குருவி; paradise fly-catcher.

     [வால் + கொண்டலாத்தி]

வாற்கோதுமை

 வாற்கோதுமை vāṟātumai, பெ.(n.)

   கோதுமை வகை; barley cereal.

     [வால் + கோதுமை]

வாற்கோதும்பை

 வாற்கோதும்பை vāṟātumbai, பெ.(n.)

வாற்கோதுமை (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வால்+ கோதும்பை]

வாற்சகம்

வாற்சகம் vāṟcagam, பெ.(n.)

   1. கன்றுக் கூட்டம் (யாழ்.அக.);; herd of calves.

   2. ஆநிரை; herd of cows.

     [வால் + சகம். சகம் = skt.]

வாற்படம்

 வாற்படம் vāṟpaḍam, பெ.(n.)

   நவச்சாரம்; sal tammoniac.

     [வால் + படம்]

வாற்பேத்தை

 வாற்பேத்தை vāṟpēttai, பெ.(n.)

   தவளைக் குஞ்சு; tadpole.

     [வால் + பேத்தை]

வாற்றரகு

 வாற்றரகு vāṟṟaragu, பெ.(n.)

வால்தரகு பார்க்க;see {}.

     [வால் + தரகு]

வாலகம்

 வாலகம் vālagam, பெ.(n.)

   விலங்கின் வால் (வின்.);; tail.

     [வால் + அகம்]

வாலகரப்பன்

 வாலகரப்பன் vālagarappaṉ, பெ.(n.)

   குழந்தை அல்லது சிறுவர்களுக்கு வரும் ஒரு வகைத் தோல்நோய்; a skin disease affecting infants and children.

     [வால + கரப்பன்]

வாலகருப்பிணி

 வாலகருப்பிணி vālagaruppiṇi, பெ.(n.)

   கன்னி வயதில் கருக்கொண்டவள்; pregnancy in teenage.

     [வால + கருப்பிணி]

வாலகாசம்

 வாலகாசம் vālakācam, பெ.(n.)

   காலையில் பார்வைப் புகைச்சலுண்டாகி சாமம் கழிந்து நீங்கி, ஒரு தருணம் பார்வை நீல நிறமாகவும், பிறகு வேறுவிதமாயும் காணப்படும் வெள்விழி சதை வளர்ந்து பார்வை நீர் நிறமாகவும் தோற்றுமோர் வகைக் கண்ணோய்; an eye disease in which the vision in the morning will be dim but becomes clear with in three hours, fleshy growth appears in the white coat, the colour of the vision changes, it affects the youth and hence the name.

     [வால + காசம்]

வாலகாரம்

 வாலகாரம் vālakāram, பெ.(n.)

   கரு விழியில் புகை படிந்தது போல் உண்டாகும் ஒரு வகைக் கண்ணோய்; an eye disease.

     [வால + காரம்]

வாலசண்டக்காய்

 வாலசண்டக்காய் vālasaṇṭakkāy, பெ.(n.)

   பெருந்தும்மட்டி; a large variety of melon-water melon.

     [வால + சண்டக்காய்]

வாலசத்து

 வாலசத்து vālasattu, பெ.(n.)

   சிலாசத்து; mineral said to be oozing out from mountain.

     [வால + சத்து]

வாலசூரா

வாலசூரா vālacūrā, பெ.(n.)

   1. மரவகை; fish-poison cedar, walsura.

   2. மலை விராலி; ochre flowered fish-poison cedar.

தெ. வாலரசி.

வாலடித்தண்டன்

 வாலடித்தண்டன் vālaḍittaṇḍaṉ, பெ. (n.)

   சாரைப் பாம்பு; rat snake.

     [வாலடி + தண்டன்]

வாலதநதிரம்

 வாலதநதிரம் vāladanadiram, பெ.(n.)

   மருத்துவ நூல்; mid wifery.

     [வால + தந்திரம்]

வாலதி

வாலதி vāladi, பெ.(n.)

   1. வால்(பிங்.);; tail.

     “விரியுரோம வாலதிகளில்” (பாரத. காண்டவ. 18);.

   2. யானை வால் (திவா.);; tail of an elephant.

வாலதிப்போளம்

 வாலதிப்போளம் vāladippōḷam, பெ.(n.)

   சாம்பிராணி வகை (யாழ்ப்.);; gum-myrrh.

வாலநட்டகம்

 வாலநட்டகம் vālanaṭṭagam, பெ.(n.)

   முசு முசுக்கை; a climber-bryoni-scabra.

     [வால + நட்டகம்]

வாலநாள்

 வாலநாள் vālanāḷ, பெ.(n.)

   இளமைக்காலம்; younger days.

     [வால + நாள்]

வாலன்

வாலன்1 vālaṉ, பெ.(n.)

   1. குறும்பன்; mischievous fellow.

   2. ஒருவகை நெல் (இ.வ.);; a species of paddy.

     [வால் + வாலன்]

வாலன்கண்டல்

 வாலன்கண்டல் vālaṉkaṇṭal, பெ.(n.)

   வெண்மை நிறமுள்ள கடல் மீன்வகை; sea- fish, silvery.

     [வாலன் + கண்டல்]

வாலபத்திரம்

 வாலபத்திரம் vālabattiram, பெ.(n.)

   கருங்காலி (மூ.அ);; ceylon ebony.

வாலபாகிகம்

 வாலபாகிகம் vālapāgigam, பெ.(n.)

   மொந்தன் வாழை; a variety of plantain.

     [வால + பாகிகம்]

வாலபுட்பி

 வாலபுட்பி vālabuṭbi, பெ.(n.)

   முல்லை (மலை.);; arabian Jasmine.

     [வால + புட்பி. புட்பி = skt.]

வாலப்பருதி

 வாலப்பருதி vālapparudi, பெ.(n.)

   குப்பை மேனி; rubbish plant-acalypha-indica.

     [வால + பகுதி]

வாலமஞ்சாடி

வாலமஞ்சாடி vālamañjāṭi, பெ.(n.)

   பழைய வரிவகை (S.I.I.i.108.);; an ancient tax.

 வாலமஞ்சாடி vālamañjāṭi, பெ. (n.)

   வரி; tax.

வால்மஞ்சாடிகண்மாலைநாவின்”(தெ.சா.12.1 எ221);.

வாலமனை

வாலமனை vālamaṉai, பெ.(n.)

   அகப்புறத்தமைந்த சிறுவீடு; out house.

     “வாலமனை யகத்துச் சார்ந்தான் தலைமகன்” (இறை. 21, உரை, பக்.112);.

     [வாலம் + மனை]

வாலமாதரை

 வாலமாதரை vālamātarai, பெ.(n.)

   கொட்டைக் கரந்தை; a porstate plant-sphoeranthus indicus.

     [வால + மாதரை]

வாலமாலம்

 வாலமாலம் vālamālam, பெ.(n.)

   அரிதாரம் (மூ.அ.);; yellow orpiment.

வாலமூடிகம்

வாலமூடிகம் vālamūṭigam, பெ.(n.)

   எலி (சிவதரு. பரிகார. 70);; rat, mouse.

வாலம்

வாலம்1 vālam, பெ.(n.)

   1. வால்; tail.

     “கட்செவி வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி” (காஞ்சிப்பு. மணி கண் 14);.

   2. தலை மயிர் (வின்.);; hair of head.

   3. நீண்டு அகலம் குறுகிய துண்டு; long narrow strip.

   4. கந்தைத்துணி (யாழ்ப்.);, rags, tatters.

     [வார் → வால் → வாலம்]

ஒ.நோ. நீர் → நீல் (வ.மொ.வ.86);

 வாலம்2 vālam, பெ.(n.)

   எறிபடைவகை; short javelin.

     “வாலமுத லாயுதம்” (கம்பரா. ஊர்தே. 69);.

 வாலம்3 vālam, பெ.(n.)

   1. கந்தை; rag.

   2. தலை மயிர்; hair.

வாலரசம்

 வாலரசம் vālarasam, பெ.(n.)

   சாதி லிங்கத்தின் வடித்த சாறு (வின்.);; essence of Vermillon.

     [வாலை + ரசம். ரசம் = Skt.]

வாலரிக்கொடுங்காய்

வாலரிக்கொடுங்காய் vālarikkoḍuṅgāy, பெ.(n.)

   வெள்ளரி (சிலப். 16, 25, உரை);; cucumber.

     [வால் + அரி + கொடுங்காய்]

வாலரியுரி

 வாலரியுரி vālariyuri, பெ.(n.)

கிளியூறற் பட்டை (தைலவ.); பார்க்க;see {}.

     [வால் + அரி + உரி]

வாலருவி

வாலருவி vālaruvi, பெ.(n.)

   வெண்ணிலை ஊழ்கம் (தியானம்);; a form of meditation.

     “வாலருவி வாமன்” (சீவக.291);.

     [வால் = வெள்ளை. வால் + அருவி.]

வாலறிவன்

வாலறிவன் vālaṟivaṉ, பெ.(n.)

   கடவுள்; God, as pure intelligence.

     “வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” (குறள். 2);.

     [வால் + அறிவன்]

வாலவாய்

வாலவாய் vālavāy, பெ.(n.)

   மதுரை; Madura, as encircled by a serpent.

     “வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல்” (கல்லா.48);.

     [ஒருகா. ஆலவாய் → வாலவாய்]

வாலாசம்

 வாலாசம் vālācam, பெ.(n.)

   மாட்டின் பின்வார் (வின்.);; crupper for a bullock.

வாலாட்டிக்குருவி

வாலாட்டிக்குருவி vālāṭṭikkuruvi, பெ.(n.)

   1. கரிக்குருவி; King-crow.

   2. வலியான்; red-wagtail.

இந்தியாவில் காணக்கூடிய வாலாட்டிக் குருவிகளுள்

     ‘கோட்டைக்கரிச்சான்’ (pied wagtail); என்ற குருவியே வலிசை போகாமல் ஆண்டு முழுவதும் இங்குத் தங்கி வாபம். இது கறுப்பும் வெள்ளையுமாக, நீண்ட வால் கொண்டிருக்கும். அளவில் மைனாவைவிடச் சிறியதாகவும் மெல்லியதாகவுமிருக்கும். வண்ணான் துறைகளிலும் ஆற்றங் கரைகளிலும் இந்தக் குருவிகளை இணைகளாகக் காணலாம். சென்னையில் இவற்றைப் பலவிடங்களில் பார்க்கலாம். அடிக்கடி இக்குருவி தன் நீண்டவாலைப் பக்கவாட்டமாக அசைப்பதி லிருந்தும் மேலும் கீழுமாக குலுக்குவதிலிருந்தும் இது வாலாட்டிக் குருவி என்று புலப்படும். ஆண் கோட்டைக்கரிச்சான் உயர்ந்த சீழ்க்கையடிக்கும் குரலில் இனிமையாகப் பாடும்.

வகைகள் :

   1. கருப்பு வெள்ளை வாலாட்டிக் குருவி

   2. கருஞ்சாம்பல் வாலாட்டிக் குருவி

   3. கொடிக்கால் வாலாட்டிக் குருவி

வாலாட்டு

வாலாட்டு1 vālāṭṭudal,    47 செ.கு.வி. (v.i.)

   1. குறும்பு செய்தல்; to do mischief, as wagging one’s tail.

   2. வீண் பெருமை

   காட்டுதல்; to put on airs.

     [வால் + ஆடு → ஆட்டு]

 வாலாட்டு2 vālāṭṭu, பெ.(n.)

   1. சேட்டை; mischief.

   2. செருக்கான செயல்; arrogant deed.

     “எத்தேவர் வாலாட்டும்” (திவ். இயற். நான்மு. 38);.

     [வால் + ஆட்டம் → ஆட்டு]

வாலாதி

 வாலாதி vālāti, பெ.(n.)

பந்தயவோட்டத் திற்குப் பழக்கப்பட்ட குதிரை (வின்.);

 horse trained for racing.

     [வாலாயம் → வாலாதி]

வாலாதிகம்

 வாலாதிகம் vālātigam, பெ.(n.)

   பேராமணக்கு; castor plant yielding big seeds,-ricinus communis.

வாலான்

வாலான்1 vālāṉ, பெ.(n.)

   குட்டத்தைப் போக்கும் ஓர் நெல்; a variety of rice said to cure leprosy.

   2. வீரியத்தரிசி; rice which have much vitamin.

   3. வாலுளுவையரிசி பார்க்க;see {}.

 வாலான்2 vālāṉ, பெ.(n.)

   ஒரு வகை நெல் (பதார்த்த 800.);; a kind of paddy.

வாலாமை

வாலாமை vālāmai, பெ. (n.)

   1. தூய்மை யின்மை (உரி.நி.);; uncleanliness, impurity.

   2. தீட்டு; ceremonial impurity or pollution.

     “வாலாமைந்நா ணீங்கிய பின்னர்” (சிலப். 15, 24);.

     “வாலாமை பார்ப்பா ரிலங்குநூலோ தாத நாள்” (ஆசாரக். 48);.

   3. மகளிர் தீட்டு (சூடா.);; menstrual impurity.

வாலாயம்

வாலாயம்1 vālāyam, பெ.(n.)

   1. நடைமுறை யொழுங்கு; routine or commonness.

     “வாலாயமாகவும் பழகியறியேன்” (தாயு. பரிபூரண. 1);.

   2. வழக்கம்; custom.

     ‘நான் வாலாயமாய்க் காலையில் கோயிலுக்குச் செல்பவன்’.

   3. மிகுபழக்கம்; familiarity.

     “வாலாயமாய்ப் போய் விருந்துண” (அறப்.சத.68);.

தெ. வாலாயமு.

வாலாளி

 வாலாளி vālāḷi, பெ.(n.)

   ஏலரிசி; cardamom seed.

வாலாவி

 வாலாவி vālāvi, பெ.(n.)

   கருநிறக் குன்றிமணி; a black species of crab’s eye.

வாலி

வாலி1 vāli, பெ.(n.)

   1. ஒரு குரக்கு வேந்தன்;வானரர் தலைவன், கிட்கிந்தை மன்னன் (கம்பரா. வாலிவதை.);;{}

 a monkey chief.

   2. வாலுடையது; that which has a tail.

   3. கரிக்குருவி (சங்.அக.);; king-crow.

 வாலி2 vāli, பெ.(n.)

   நிலவின்கலை தோன்றும் காருவாநாள் (அரு.நி.);; the first day after the new moon.

 வாலி3 vāli, பெ.(n.)

   மழைத் தூறல் (அரு.நி.);; drizzle.

   ம. வாலுக;து. பாலுனி.

     [ஆலி → வாலி]

 வாலி4 vāli, பெ.(n.)

   ஒருவகைப் புன்செய்ப் பயிர்; horse tail millet.

மறுவ. குதிரைவாலி.

 வாலி5 vāli, பெ.(n.)

   திருவாலியமுதனார்; the author of a portion of {}.

     “அமுத வாலி சொன்ன தமிழ்மாலை’ (திருவிசைப். திருவாலி. 3, 11);.

வாலிகை

 வாலிகை vāligai, பெ.(n.)

   மணல் (சங்.அக.);; sand.

     [வால் = வெள்ளை. வால் → வாலிகை]

வாலிசை

வாலிசை1 vālisai, பெ.(n.)

   1. மணல்; sand.

   2. கொடிக்காசரைக் கீரை; a kind of edible greens.

     [வால் + இசை]

 வாலிசை2 vālisai, பெ.(n.)

   இளம்பெண்; a young girl.

     [வால் + இசை]

வாலிது

வாலிது1 vālidu, பெ.(n.)

   1. தூயது; that which is pure.

   2. வெண்மையானது; that which is white.

     “வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று” (நாலடி, 258);.

   3. நன்மையானது; that which is good or excellent.

     “வாலி தன்றெனக் கூறி” (சீவக.251);.

     [வால் → வாலிது]

 வாலிது2 vālidu, பெ.(n.)

   வலி (அக.நி.);; strength.

     [வலிது → வாலிது]

வாலிந்தி

 வாலிந்தி vālindi, பெ.(n.)

   மகப்பேறு பெற்ற மாதமே மாதவிடாய்க் கண்டு கணவனுடன் சேர்ந்து மறு கருப்பத்தைக் கொண்ட பெண்; a woman conceiving within a month or two after delivery.

வாலிபம்

வாலிபம் vālibam, பெ. (n.)

   இளமை; youth, juvenility.

     “வாலிப மங்கை” (திருப்பு. 1141.);.

த.வ. இளந்தை, வாலை

     [Skt. {} → த. வாலிபம்]

வாலிமை

வாலிமை1 vālimai, பெ.(n.)

   வன்மை (ஈடு. 7, 7, 2);; strength.

     [வலி-மை → வாலிமை]

 வாலிமை2 vālimai, பெ.(n.)

   பெருமை (ஈடு.7, 7, 2);; greatness.

     [வால் → வாலிமை]

வாலியக்காரன்

 வாலியக்காரன் vāliyakkāraṉ, பெ.(n.)

   வேலைக்காரன்; servant.

வாலியன்

வாலியன்1 vāliyaṉ, பெ.(n.)

   தூய்மை யுடையவன்; holy person.

     “வாலியனல் லாதோன் றவஞ் செய்தல் பொய்” (முது. காஞ். 80);.

ம. வால்.

வாலில்லாப்புச்சம்

 வாலில்லாப்புச்சம் vālillāppuccam, பெ.(n.)

   குறும்புசெய் குழந்தை (இ.வ.);; mischievous child.

வாலு

 வாலு vālu, பெ.(n.)

   வாலுளுவையரிசி (மூ.அ.);; seed of the climbing staff plant.

     [வால் → வாலு]

வாலுகம்

வாலுகம்1 vālugam, பெ.(n.)

   1. மணல்; sand.

   2. வெண்மணல் (பிங்.);; white sand.

     “வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பின்” (சிலப்.6,131);.

     [வால் → வாலுகம்]

வால் = வெள்ளை. மா.அ.வி.

     “of doubtful derivation”

என்று குறித்திருத்தல் காண்க. (வ.மொ.வ.86]

 வாலுகம்2 vālugam, பெ.(n.)

   1. ஒரு வகையுப்பு; a kind of unidentified salt.

   2. ஏலாவாலுகம்; a kind of cardamom.

   3. வெள்ளைக்குங்கிலியம் பார்க்க;see {}.

வாலுகாப்பிரபை

வாலுகாப்பிரபை vālukābbirabai, பெ.(n.)

   எழுவகை நிரயங்களுள் பெருமணல் வட்ட முடையதாகக் கருதப்படும் நிரயம் (சீவக. 2817, உரை);; a hell, said to contain sand, one of elu-narakam (Q.V.);.

     [வாலுகம் + Skt. {} → த. பிரபை]

வாலுகாயந்திரம்

 வாலுகாயந்திரம் vālukāyandiram, பெ.(n.)

   மருந்திட்ட குப்பியைச் சூடேற்றுவதற்குப் பதித்துவைக்குஞ் சுடுமணல் நிரப்பிய பாண்டவகை (இ.வ.);; sand bath, vessel of heated sand, in which a cup containing medicinal drugs is placed and heated.

     [வாலுகம் + Skt. {} → த. இயந்திரம்]

வாலுகி

 வாலுகி vālugi, பெ.(n.)

   கக்கரி (புதுவை.);; kakri melon.

     [வால் → வாலுகி]

வாலுகை

வாலுகை1 vālugai, பெ.(n.)

   1. குப்பி; bottle.

   2. வாலுளுவை பார்க்க;see {}.

   3. அடுப்பு; oven.

 வாலுகை2 vālugai, பெ.(n.)

வாலுளுவை பார்க்க (சங்.அக.);;see {}.

வாலுங்கி

வாலுங்கி1 vāluṅgi, பெ.(n.)

   கக்கரி (சூடா);; kakrimelon.

 வாலுங்கி2 vāluṅgi, பெ.(n.)

வாலுளுவை பார்க்க (சங்.அக.);;see {}.

வாலுந்தி

 வாலுந்தி vālundi, பெ.(n.)

   முள்வெள்ளரி; Kakri-melon.

வாலுருவிவிடு-தல்

வாலுருவிவிடு-தல் vāluruviviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   துன்பஞ் செய்யத் தூண்டி விடுதல்; to stir one to activity, to provoke, as by stroking the tail of an animal.

     “வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே” (பாரத. சூது. 265);.

     [வால் + உருவு + விடு-,]

வாலுறை

 வாலுறை vāluṟai, பெ.(n.)

அடுப்பு (சங்.அக.); oven.

     [வால் + உறை]

வாலுளுவை

வாலுளுவை vāluḷuvai, பெ.(n.)

   1. கொ வகை; climbing staff plant.

   2. முள்வேல் வகை;தெ. வாலுது.

     [வால் + உளுவை]

வாலுவநூல்

வாலுவநூல் vāluvanūl, பெ.(n.)

   பாக நூல்; science of cookery.

     “வாலுவ நூல் போய்த் திருந்தினார்களும் வியப்பன” (கந்தபு. குமார, 69);.

வாலுவன்

வாலுவன் vāluvaṉ, பெ.(n.)

சமைப்போன் cook.

     “நெறியறிந்த கடிவாலுவன் (மதுரைக். 36);.

மறுவ. மடையன்.

வாலுவி

 வாலுவி vāluvi, பெ.(n.)

   ஒருவகைத் தேக்கு; a kind of teak.

     [வால் → வாலுவி]

வாலூகம்

வாலூகம்1 vālūkam, பெ.(n.)

   முசு முசுக்கை; a climber-bryonia scabra.

 வாலூகம்2 vālūkam, பெ.(n.)

   நஞ்சு (விடம்); (சங்.அக.);; poison.

வாலேந்திரபோளம்

வாலேந்திரபோளம் vālēndirapōḷam, பெ.(n.)

வெள்ளைப்போளம் (பதார்த்த. 1052.); myrrh.

     [வாலதிப்போளம் → வாலேந்திரபோளம்]

வாலேபம்

 வாலேபம் vālēpam, பெ.(n.)

வாலேய பார்க்க (பிங்.);;see {}.

வாலேயம்

 வாலேயம் vālēyam, பெ.(n.)

கழுதை (திவா.);

 ass.

வாலை

வாலை1 vālai, பெ.(n.)

   எரிநீர் வடிக்கும் பாண்டம்; still, alembic, retort.

     “மருந்து

வாலையிலேறுகிறது”.

     [வால் → வாலை]

 வாலை2 vālai, பெ.(n.)

   1. தூய்மை; purity.

   2. இதளியம் (சங்.அக.);; mercury.

     [வால் + வாலை]

 வாலை3 vālai, பெ.(n.)

   1. எரிநீர்; acid.

   2. இளம்பெண்; young girl.

   3. சக்தி; the goddess sakti in a girl’s form.

   4. கற்பூர சிலாசத்து சாரம்; essence of ammonium-alum.

 வாலை4 vālai, பெ.(n.)

   சித்திரை நதி (நாமதீப. 528);; the cittira river, a tributary of the Tamiraparuni.

வாலைகலை

 வாலைகலை vālaigalai, பெ.(n.)

   ஞாயிற்றின் கலை; vital air passing through the right nostril.

மறுவ. பிங்கலை.

     [வாலை + கலை]

வாலைக்கடுக்காய்

 வாலைக்கடுக்காய் vālaikkaḍukkāy, பெ.(n.)

   பிஞ்சுக் கடுக்காய்; tender gall nut.

     [வாலை + கடுக்காய்]

வாலைக்காட்டு-தல்

வாலைக்காட்டு-தல் vālaikkāṭṭudal,    15 செ.கு.வி. (v.i.)

வாலைக்கிளப்பு-, பார்க்க;see {}.

     [வால் + ஐ + காட்டு-,]

வாலைக்கிண்ணம்

 வாலைக்கிண்ணம் vālaikkiṇṇam, பெ.(n.)

   வடிப்பதற்காகப் பயன்படுத்தும் வாயகன்ற கலம்; a vessel used for distillation alembic.

     [வாலை + கிண்ணம்]

வாலைக்கிளப்பு-தல்

வாலைக்கிளப்பு-தல் vālaikkiḷappudal,    5.செ.கு.வி. (v.i.)

   குறும்பு செய்தல் (வின்.);; to become mischievous.

     [வால் + ஐ + கிளப்பு-,]

வாலைக்குமரி

 வாலைக்குமரி vālaikkumari, பெ.(n.)

   இளம் பெண்; young girl.

     [வாலை + குமரி]

வாலைக்கும்மி

வாலைக்கும்மி1 vālaikkummi, பெ.(n.)

   கொங்கணநாயனார் என்பவரால் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் வகை; a book written by {} in 15th century.

     [வாலை + கும்மி]

 வாலைக்கும்மி2 vālaikkummi, பெ.(n.)

   வாலையர் என்பவரால் கி.பி.15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்; a book written by {} in 15th century.

     [வாலை + கும்மி]

வாலைக்குறம்

 வாலைக்குறம் vālaikkuṟam, பெ.(n.)

   மனோசிலை என்னும் மருந்துப்பு; a kind of salt.

     [வாலை + குறம்]

வாலைசாரம்

 வாலைசாரம் vālaicāram, பெ.(n.)

   சத்திசாரம் (மூ.அ.);; a salt.

     [வாலை + சாரம்]

வாலைசெயநீர்

 வாலைசெயநீர் vālaiseyanīr, பெ.(n.)

   வழலையுப்பு, செயநீர், மதிசெயநீர்; a pungent liquid preparation from salt.

     [வாலை + செயநீர்]

வாலைநீர்

வாலைநீர்1 vālainīr, பெ.(n.)

   வெடியுப்பு எரிநீர்; nitric acid.

     [வாலை + நீர்]

 வாலைநீர்2 vālainīr, பெ.(n.)

   வாலையிட்டு வடித்தெடுத்த நன்னீர்; water purified by distillation, distilled water.

     [வாலை + நீர்]

வாலைப்பெண்

 வாலைப்பெண் vālaippeṇ, பெ.(n.)

   செவ்வாமணக்கு; red variety of castor-ricinus communis.

     [வாலை + பெண்]

வாலைப்பெண்போகம்

 வாலைப்பெண்போகம் vālaippeṇpōkam, பெ.(n.)

   இதனால் உடம்பிற்கு வெப்பம், மனமகிழ்ச்சி, பசி, உடம்பு வலிவு, ஒளி உண்டாம்; intercourse with young woman will cause strength, good complexion good hunger and happiness.

     [வாலை + பெண் + போகம்]

வாலைமெழுகு

 வாலைமெழுகு vālaimeḻugu, பெ.(n.)

   ஒரு வகை மருந்து (யாழ். அக.);; a kind of medicinal punguent.

     [வாலை + மெழுகு]

வாலையாட்டு-தல்

வாலையாட்டு-தல் vālaiyāṭṭudal,    7 செ.கு.வி. (v.i.)

வாலைக்கிளப்பு-, (கொ.வ.); பார்க்க;see {}.

     [வால் + ஆட்டு-,]

வாலையுப்பு

 வாலையுப்பு vālaiyuppu, பெ.(n.)

   நஞ்சுக் கொடி; placental card.

     [வாலை + உப்பு]

வாலைரகுபதிகாரம்

 வாலைரகுபதிகாரம் vālairagubadigāram, பெ.(n.)

   சீனக்காரம் (அரு.நி.);; alum.

வாலைரசம்

 வாலைரசம் vālairasam, பெ.(n.)

   இதளிய கருப்பூரம் (மூ.அ.);; sublimate of mercury.

வாலைவடி-த்தல்

வாலைவடி-த்தல் vālaivaḍittal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒரு பொருளைச் சூடு செய்து, ஆவியாக மாற்றி, அந்த ஆவியைக் குளிரவிட்டுப் பொருளைத் திரும்பவும் பழைய நிலையில் அடைவது வாலை வடித்தல் எனப்படும்; distillation.

பொதுவாக நீர்மங்களையே இம்முறைக்கு உள்ளாக்குகிறோம், சில திடப் பொருள்களையும் இதற்கு உள்ளாக்கலாம். ஆவியாக மாறாத கரைபொருளைக் கரைத்து, அதை நீர்மத்திலிருந்து பிரிப்பதற்கும், வெவ்வேறு கொதிநிலையுள்ள நீர்மங்களை அவற்றின் கலவையினின்று பிரிப்பதற்கும், பொருள்களைத் தூய்மை செய்வதற்கும் இம்முறை பயன்படும்.

வாலைவயது

வாலைவயது vālaivayadu, பெ.(n.)

   1. இளம் பருவம்; young age.

   2. கற்பத்தினால் முதுமையிலிருந்து இளமையாதல்; rejuvenated body.

     [வாலை + வயது]

வால்

வால்1 vāl, பெ.(n.)

   1. இளமை; youth, tenderness.

     “தாலப் புல்லின் வால் வெண்டோட்டு” (சிலப்.16,35);.

   2. தூய்மை(பிங்.);; purity.

     “ஊர்தி வால்வெள் ளேறே” (புறநா. 1);

   3. வெண்மை; whiteness.

     “பணிமொழி வாலெயிறு” (குறள். 1121);.

   4. நன்மை; goodness.

     “வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்” (மதுரைக். 536);.

   5. பெருமை (பிங்.);; greatness.

     “அரக்கர்தம் வாலிய புரமூன்று மெரித்தான்” (தேவா. 1049, 9);.

   6. மிகுதி (சூடா.);; abundance.

     “வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்” (மலைபடு. 115);.

ம. வால்.

     [விள் → வாள் → வால்]

 வால்2 vāl, பெ.(n.)

   1. விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு; tail.

     “எறிந்தவேல் மெய்யதா வால் குழைக்கு நாய்” (நாலடி,213);.

   2. நீளமானது; anything long or elongated.

   3. குறும்ப-ன்-ள்; mischievous person.

   4. குறும்பு (இ.வ.);; mischief.

மறுவ. வாலம்.

   ம. வால்;   கோத. வால்ம்;   தோட. போச்ம்;   க. பால;   குட. பாலி;தெ. வாலமு.

 வால்3 vāl, பெ.(n.)

வாலுழுவை பார்க்க;see {}.

     “வட்டவாலுடனே கூட்டி” (பாலவா. 774);.

வால்கனி

 வால்கனி vālkaṉi, பெ.(n.)

   மேன் மாடத்தில் முன்புறமாக நீண்டுள்ள அட்டாலை; balcony.

வால்கரண்டி

 வால்கரண்டி vālkaraṇṭi, பெ.(n.)

வாற்கிண்ணம் (இ.வ.); பார்க்க;see {}.

வால்காக்கை

வால்காக்கை vālkākkai, பெ.(n.)

   காக்கையினப் பறவையில் ஒருவகை; a kind of crow.

காக்கை இனத்துடன் ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதால், இது இப்பெயர் கொண்டது. ஆங்கிலத்தில் மாக்பை (magpie); எனப்படும் பறவை வகைக்கு இது நெருங்கின உறவு. வால் காக்கையின் அலகு, காக்கையின் அலகைப் போல் தடித்துக் கறுத்திருக்கும். இது கருந்தலையும், வெள்ளைப் பட்டையுள்ள இறக்கையும், கருமுனை கொண்ட நீண்ட சாம்பல் நிற வாலும், சிவலை உடலும் வாய்ந்தது. அளவில், ஓரடி நீண்டகாலுட்பட ஒரு முழமிருக்கும். காட்டுப் புறங்களிலும் தோப்புக்களிலும் வால்காக்கைகளை இணை களாகவும், சிறு கூட்டங்களாகவும் காணலாம். இவை பழங்களையும், பூச்சிகளையும், சிறு பல்லிகளையும் மரங்களில் தேடியுண்ணும். பிற பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்னும். ரி-ரி-ரி என்ற கரகரப்பும் வெண்கலத்தின் இனிய ஒசையும் கலந்த குரலில் வால் காக்கைகள் சில விதமாக ஒலிக்கும் – கலைக்களஞ்.7.);

மறுவ. அரிகாடை, மூக்குறுணி.

வகைகள் :

   1. வால் காக்கை.

   2. வெள்ளை வயிற்று வால்காக்கை.

வால்கிண்ணம்

 வால்கிண்ணம் vālkiṇṇam, பெ.(n.)

வாற்கிண்ணம் பார்க்க (இ.வ.);;see {}.

வால்சிப்பி

 வால்சிப்பி vālcippi, பெ.(n.)

   சிப்பி முத்து; oyster pearl.

     [வால் + சிப்பி]

வால்தரகு

 வால்தரகு vāltaragu, பெ. (n.)

   கால்- நடைகளுக்கு இடும் வரி (இ.வ.);; tax on cattle, as calculated at so much per tail.

வால்நட்சத்திரம்

 வால்நட்சத்திரம் vālnaṭcattiram, பெ.(n.)

   வால்வெள்ளி; comet.

     [வால் + Skt. {} → த. நட்சத்திரம்]

வால்நறுக்கு

 வால்நறுக்கு vālnaṟukku, பெ.(n.)

   ஒலையின் அடிப்புறத்துண்டு (வின்.);; ola slip cut off from the lower end of a palm-leaf.

     [வால் + நறுக்கு]

வால்நீளம்

வால்நீளம் vālnīḷam, பெ.(n.)

வால்வீச்சு2 (S.I.I.iv,86); பார்க்க;see {}.

     “புழைக்கடை வால்நீளமும்”.

     [வால் + நீளம்]

வால்பேரி

 வால்பேரி vālpēri, பெ.(n.)

   காம்பை உடைய மேல் பகுதி பெரிதாகவும் கீழ்ப்பகுதி சிறியதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய்; pear.

     [வால் + பேரி]

வால்மரக்கால்

வால்மரக்கால் vālmarakkāl, பெ.(n.)

   நீண்டு உயரமான அளவில் உள்ள பெரிய மரக்கால், 4 படி; a elevated measure of four small measures capacity.

     [வால் + மரக்கால்]

வால்மரம்

வால்மரம் vālmaram, பெ.(n.)

   சுண்ணாம் பரைக்கும் உருளை கோத்த மரம் (கட்டட சா.15);; long pole attached to the pivot, used in a mill for grinding lime-mortar.

     [வால் + மரம்]

வால்மிளகு

வால்மிளகு vālmiḷagu, பெ.(n.)

   கொடி வகை (பதார்த்த.953);; piper cubeb.

இரட்டை விதையிலைத் தாவரங்களிலே பைப்பரேசியீ என்னும் மிளகுக் குடும்பத்தைச் (த.க.); சேர்ந்த பைப்பர் க்யூபெயா (piper cubeba); என்னும் இனம். இது போர்னியோ, சுமத்ரா, ஜாவா முதலிய தீவுகளில் வளரும் ஒரு கொடி. இதன் கனியை அது முற்றிலும் முதிர்வதற்கு முன்பே பறித்துவிடுவார்கள். அந்தக் காயுடன் அதன் காம்பும் ஒட்டிக் கொண்டிருக்கும். அது வால் போன்றிருப்பதனால் இந்த மிளகு வால் மிளகு எனப்படும். வால் மிளகு சற்றுக் காரமும், சிறிது கசப்பும், நறுமணமும் உள்ளது. இதன் சுவையும் மணமும் நெடுநேரம் நாவிலும் வாயிலும் நிலைத்திருக்கும். இதை வெற்றிலையோடு நறுமணப் பொருளாகப் பயன்படுத்துவதேயன்றி மருந்தாகவும் கையாள் வார்கள். இதை நீரில் வாலை வடித்து எண்ணெய் எடுக்கின்றனர். வால்மிளகை மூச்சு நோய் களுக்கும், நாட்பட்ட தொண்டை வேக்காடு ஆகியவற்றிற்கும் புகை மருந்தாகப் பயன்படுத்து கின்றனர்.

     [வால் + மிளகு]

வால்மீகி

 வால்மீகி vālmīki, பெ. (n.)

   வடமொழியில் இராமாயணமியற்றிய முனிவர் (வின்.);; a sage, the author of the {}.

     [Skt. {} → த. வால்மீகி]

வால்முறுக்கு-தல்

வால்முறுக்கு-தல் vālmuṟukkudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   தூண்டிவிடுதல்; to provoke, irritate, as an animal twisting its tail.

     [வால் + முறுக்கு-,]

வால்முளைத்தல்

 வால்முளைத்தல் vālmuḷaittal, பெ.(n.)

   குறும்பு செய்கை; becoming mischievous, as resembling a monkey.

     [வால் + முளைத்தல்]

வால்வரிக்கொடுங்காய்

வால்வரிக்கொடுங்காய் vālvarikkoḍuṅgāy, பெ.(n.)

   வெள்ளரிக்காய் (சிலப். 16, 25, அரும்.);; cucumber.

     [வால் + வரி + கொடுங்காய்]

வால்வீச்சு

வால்வீச்சு vālvīccu, பெ.(n.)

   1. வாசல் முதல் கொல்லையினெல்லை வரையுள்ள வீட்டின் நீட்சியளவு; measurement from front to rear, as of a house.

   2. அகலக் கட்டையாய் நீண்டிருப்பது; that which is long and narrow.

     [வால் + வீச்சு]

வால்வீச்சுநிலம்

 வால்வீச்சுநிலம் vālvīccunilam, பெ.(n.)

   நீளமான வரப்பினை உடைய நிலம்; land with long bund.

     [வால் + வீச்சு + நிலம்]

வால்வெடி-த்தல்

வால்வெடி-த்தல் vālveḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கடுஞ்சினத்தினால் வாலைத் தூக்கி அடித்தல்; to lash the tail in rage, as a beast.

     “வால் வெடிப்பனவாகிய சிங்கம்”

     [வால் + வெடி-,]

வால்வெள்ளி

 வால்வெள்ளி vālveḷḷi, பெ.(n.)

வால் நட்சத்திரம் பார்க்க (சங்.அக.);;see {}.

மறுவ. வால்மீன்.

     [வால் +வெள்ளி]

வால்வை-த்தல்

வால்வை-த்தல் vālvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வேண்டிய உறுப்புக்களைச் சேர்த்து நிறைவு செய்தல்; to add details, to give finishing touches.

   2. மிகுத்துக் கூறுதல்; to exaggerate.

     [வால் + வை-,]

வாளகச்சிகை

 வாளகச்சிகை vāḷagaccigai, பெ.(n.)

   சித்திரமூலம் என்னும் மூலிகை; a shrub.

வாளகம்

வாளகம்1 vāḷagam, பெ.(n.)

   குந்துருக்கம்; frankincense.

 வாளகம்2 vāḷagam, பெ.(n.)

   வெட்டிவேர் (நாமதீப. 327);; cuscuss grass.

வாளகிரி

வாளகிரி vāḷagiri, பெ.(n.)

   உட்புறம் ஒளியும் வெளிப்புறம் கருளுங்கொண்டு நிலவுலகைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை (சக்கரவாளம்);; a mythical range of mountains.

     “வாளகிரியை… நிகர்க்கு மெயிலும்” (திருவாலவா. திருநகர.4);.

வாளத்தேலம்

 வாளத்தேலம் vāḷattēlam, பெ.(n.)

   நேர்வாளத் தெண்ணெய்; croton oil.

     [வாள + தேலம்]

வாளநாதிகாமம்

 வாளநாதிகாமம் vāḷanātikāmam, பெ.(n.)

   வெள்ளை நாயுருவி; ordinary white indian burr-achyranthus aspera.

     [வாள + நாதி + காமம்]

வாளப்பன்

வாளப்பன் vāḷappaṉ, பெ.(n.)

   பழனி மலையிலுள்ள குன்றுவர் வணங்கும் ஒரு சிறு தெய்வம் (E.T.iv.122);; a deity worshipped by the {} of the palani hills.

வாளப்பருப்பு

 வாளப்பருப்பு vāḷapparuppu, பெ.(n.)

   நேர் வாளப் பருப்பு; croton seed pulp.

     [வாள + பருப்பு]

வாளமலை

வாளமலை vāḷamalai, பெ.(n.)

வாள்வீச்சு பார்க்க;see {}.

     “கழித்து வாளமலையாடி” (சீவக. 783);.

     [வாள் + அமலை]

வாளம்

வாளம்1 vāḷam, பெ.(n.)

   வாள்; sword.

     “கையொடு புகர்வாளமும்… விழ” (பாரத. பதின்மூன். 113);.

     [வாள் + அம். அம் = பெருமைப்பொருட் பின்னொட்டு]

 வாளம்2 vāḷam, பெ.(n.)

   யாளி (நாமதீப. 199);; a mythical animal.

 வாளம்3 vāḷam, பெ.(n.)

   1. வட்டம்; circle.

     “வாளமாகவோர் பவளமால்வரை… வளைந்தென்ன” (பாரத. காண்டவ. 11);.

   2. சக்கரவாளம் (யாழ்.அக.);; a mythical range of mountains.

   3. சக்கரவாகப் பறவை; the cakra bird.

     “மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம்” (கம்பரா. பம்பை. 21);.

     [வள் → வாள் → வாளம். (வ.மொ.வ.258);.]

 வாளம்4 vāḷam, பெ.(n.)

   நேர்வாளம்; croton.

     [வாள் → வாளம்]

வாளயம்

 வாளயம் vāḷayam, பெ.(n.)

   பிரமி; a prostate plant – Gratiola moniera.

வாளரம்

வாளரம் vāḷaram, பெ.(n.)

   1. ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவகை; two-edged file to sharpen the teeth of a saw.

     “வாளரந் துடைத்த வைவேல்” (சீவக. 461); (வின்.);.

   2. மரமறுக்கும் வாள்; saw.

     ‘வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிரால்’ (பொருந. 144, உரை);.

     [வாள் + அரம்]

வாளரி

 வாளரி vāḷari, பெ.(n.)

   அரிமா (பிங்.);; lion.

     [வாள் + அரி]

வாளவரை

வாளவரை vāḷavarai, பெ.(n.)

   கொடிவகை (பதார்த்த 707);; sword-bean(m); cl, canavalia ensiformis.

மறுவ. தம்பட்டங்காய், வெள்ளையவரை.

     [வாள் + அவரை]

வாளா

வாளா vāḷā, கு.வி.எ. (adv.)

   1. பேசாமல்; silently, quietly.

     “வயப்பட்டான் வாளா விருப்பானேல்” (நாலடி, 325);.

   2. புறக் கணிப்பாய்; indifferently.

   3. பயனின்றி; uselessly, fruitlessly, vainly.

     “தீவிளி விளிவன் வாளா” (திவ். திருமாலை. 30);.

வாளா வலை

 வாளா வலை vāḷāvalai, பெ. (n.)

   பல வகையில் கடலில் வளைத்துப் போட்டு மீன்பிடிக்க உதவும் வலை; a kind offishing net.

     [வளை-வாளா+வலை]

வாளாகம்

 வாளாகம் vāḷākam, பெ.(n.)

   முல்லைக் கொடி; a variety of jasmine creeper.

வாளாங்கு

வாளாங்கு vāḷāṅgu, கு.வி.எ. (adv.)

வாளா பார்க்க;see {}.

     “வாளாங்கிருப்பீர்” (தேவா. 745, 1);.

வாளாண்

வாளாண் vāḷāṇ, பெ.(n.)

வாளாண்மை பார்க்க;see {}.

     “வாளா ணெதிரும் பிரிவினானும்” (தொல். பொ. 107);.

ஒ.நோ. வேளாண் முகத்த களிறு (குறள்.);

     [வாள் + ஆள் → ஆண்]

வாளாண்மை

வாளாண்மை vāḷāṇmai, பெ. (n.)

வாள்வீரம் பார்க்க;see {}.

     “வாளாண்மை செய்தற்கொத்த பிரிவு தோன்றியவழியும்” (தொல். பொருள். 107, உரை);.

     [வாள் + (ஆள் → ஆண் → ஆண்மை = ஆளுந்தன்மை); ஆண்மை (குறள்.);]

வாளாது

வாளாது vāḷātu, கு.வி.எ. (adv.)

வாளா பார்க்க;see {}.

     “வாளாதே போவரான் மாந்தர்கள்” (நாலடி. 30);.

வாளாமை

வாளாமை vāḷāmai, பெ.(n.)

   பேசாதிருத்தல்; silence, quietness.

     “வாய்வாளாமை… புகல்வான்” (மணிமே. 30, 245);.

   2. புறக் கணிப்பு (வின்.);; indifference.

   3. பயனின்மை; uselessness.

   4. உள் ளீடின்மை (வின்.);; emptiness.

     [வாளா → வாளாமை]

வாளால்வழிதிறந்தான்

வாளால்வழிதிறந்தான் vāḷālvaḻidiṟandāṉ, பெ.(n.)

   பாண்டியவரசர் சிலரது பட்டப்பெயர் (I.M.P.Mr.79);; appellation of certain {} Kings.

     [வாள் + ஆல் + வழி + திறந்தான்]

வாளால்வழிதிறந்தான்குளிகை

வாளால்வழிதிறந்தான்குளிகை vāḷālvaḻidiṟandāṉguḷigai, பெ.(n.)

   பழைய நாணய வகை (புதுக். கல். 325);; a {} coin of ancient times.

     [வாள் + ஆல் + வழி + திறந்தான் + குளிகை]

வாளால்வழிதிறந்தான்பணம்

வாளால்வழிதிறந்தான்பணம் vāḷālvaḻidiṟandāṉpaṇam, பெ.(n.)

   காசு வகை (புதுக்கல். 767);; a kind of coin.

     [வாளால் + வழி + திறந்தான் + பணம்]

வாளாளன்

 வாளாளன் vāḷāḷaṉ, பெ.(n.)

வாளுழவன் (பிங்.); பார்க்க;see {}.

     [வாள் + ஆளன்]

வாளாவிரை

வாளாவிரை vāḷāvirai, பெ.(n.)

வாளவரை (M.M.875); பார்க்க;see {}.

     [வாளவரை → வாளவிரை]

வாளி

வாளி1 vāḷi, பெ.(n.)

   1. வாள் வீரன்; swords man.

     “வாளிக ணிலை பெற மறலுவார்” (பரிபா. 9, 54);.

   2. அம்பு; arrow.

     “மார்புற வாங்குவார் வாளி” (பரிபா. 9, 54);.

தெ. வாலி.

     [வாள் → வாளி]

 வாளி2 vāḷi, பெ.(n.)

   வட்டமாயோடுகை; circular course, as of a horse.

     “வாளிவெம்பரி” (பாரத. குரு. 108.);.

     “மாதிர முறப்பல வாளிபோதுமால்” (பாரத. சூது. 121);.

     “மா.வி.அ. சுற்றளவு (Circumference); என்று மட்டும் குறித்துள்ளது” (தேவநேயம். 13, பக். 82);.

     [வள் → வாள் → வாளி]

 வாளி3 vāḷi, பெ.(n.)

   ஒருவகைக் காதணி; a kind of ear-stud or ear-ring.

     “வாளிமுத்தும்” (குமர. பிர. முத்து. பிள். 11); (S.I.I.ii.16);.

     [வாள் → வாளி (வே.க.109);]

 வாளி4 vāḷi, பெ.(n.)

   நீர்ச்சால் வகை (இக்.வ.);; bucket.

     [வாள் → வாளி (வே.க.109, வ.மொ.வ. 258);]

வாளிகை

வாளிகை vāḷigai, பெ.(n.)

வாளி3 பார்க்க;see {}.

     “சுட்டிகையும் வாளிகையும்” (பதினொ. திருக்கைலாய. 68);.

     [வாளி → Skt. {} → த. வாளிகை. (வ.மொ.வ.258);]

வாளிச்சிமேனி

 வாளிச்சிமேனி vāḷiccimēṉi, பெ.(n.)

   மாணிக்கம் (யாழ்.அக.);; ruby.

     [வாளிச்சி + மேனி]

வாளிச்சூத்திரம்

 வாளிச்சூத்திரம் vāḷiccūttiram, பெ.(n.)

   நீர் இறைப்பதற்காக வாளிகள் அடுக்கடுக்காகக் கோத்த இயந்திரம் (இ.வ.);; the persian wheel.

     [வாளி + Skt. {} → த. சூத்திரம்.]

வாளிபோ-தல்

வாளிபோ-தல் vāḷipōtal,    13 செ.கு.வி. (v.i.)

   குதிரை முதலியன வட்டமாயோடுதல்; to run in a circle, as a horse.

     “மாதிர முறப்பல வாளிபோதுமால்” (பாரத. சூது.121);.

வ. பாலி.

     [வாளி + போ-,]

வாளிப்பு

 வாளிப்பு vāḷippu, பெ.(n.)

   உருட்சி திரட்சி; youthfulness.

     “வாளிப்பான தோள்கள்”.

வாளியம்பு

வாளியம்பு vāḷiyambu, பெ.(n.)

   அலகம்பு; a kind of arrow, having a blade at its head.

     “வாளியம்பன வாட்டங் கண்ணி” (அகநா.67);.

     [வாள் → வாளி + அம்பு]

வாளீரல்

 வாளீரல் vāḷīral, பெ.(n.)

   ஈரல் வகை (யாழ்.அக);; spleen.

     [வாள் + ஈரல்]

வாளுச்சம்

 வாளுச்சம் vāḷuccam, பெ.(n.)

   கறுப்புக் கடலை; black bengal gram.

     [வாள் + உச்சம்]

வாளுழத்தி

வாளுழத்தி vāḷuḻtti, பெ.(n.)

   கொற்றவை (சிலப். 12, உரை, பக். 329);; Goddess of victory.

     [வாள் + உழத்தி]

வாளுழவன்

வாளுழவன் vāḷuḻvaṉ, பெ.(n.)

   1. வாள் வீரன்; swordsman.

   2. படைவீரன் (திவா.);; soldier.

   3. தானைத்தலைவன் (சூடா.);; commander.

     [வாள் + உழவன்]

வாளெடுப்பான்

வாளெடுப்பான் vāḷeḍuppāṉ, பெ.(n.)

   அரசனின் முன் வாளேந்தி செல்வோன் (நெடுநல். 182, உரை);; sword-bearer of a King.

     [வாள் + எடு – வாளெடு → வாளெடுப்பான்]

வாளேந்தி

வாளேந்தி vāḷēndi, பெ.(n.)

   1. வாளேந்து வீரன் (வின்.);; warrior armed with a sword.

   2. கொற்றவை (யாழ்.அக.);;{}.

     [வாள் + ஏந்து → ஏந்தி]

வாளேறு

வாளேறு vāḷēṟu, பெ.(n.)

   1. வாட்புண்; sword-cut.

     ‘வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே’ (ஈடு. 3, 9, ப்ர.);.

   2. ஒளி யெறிகை (தக்கயாகப்.106, உரை);; dazzling.

     [வாள் + ஏறு. ஏறு = எறிந்ததனாலான புண் – வடு]

வாளை

வாளை1 vāḷai, பெ.(n.)

   மூளையின் சதைப்பகுதி; a part of brain.

 வாளை2 vāḷai, பெ.(n.)

   16 விரலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன் வகை; scabbard-fish, silvery attaining 16 inch. in length, Trichiurs haumela.

     “வாளை வாயுறைப்ப நக்கி” (சீவக. 1198);.

   2. 6 அடி வளர்வதான ஏரிவாளை; fresh water shark, attaining 6 ft. in length, wallago attu.

   3. நீலங்கலந்த பச்சை வண்ணமுடையதும் 12 அடி வளர்வதுமான முள்வாளை; a sea-fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab.

   தெ. வாலுக;   க. பாளெ;   ம. வாளமீன்; Kod. பாளெமீனி;

து. பாளெமீனு.

     [வாள் → வாளை]

எலும்புச் சட்டகம் உள்ள மீன் இனம். கடலின் மேற்பரப்புக்கு அருகில் பெருங் கூட்டங்களாக வாழ்பவை. இம் மீன்களின் உடல் தட்டையாக, அகலமின்றி, மிக நீளமாக, வால்புறம் கூராகவெள்ளி போல மிளிரும் வெண்ணிற முடையதாக, வாள்போல அல்லது நாடாப்போல இருக்கும். வாலில் துடுப்பு இல்லாமல் மயிர் நீண்டிருக்கும். இதனால் இம் மீன்கள் ட்ரிக்கிகூரஸ் (trichiurus); அதாவது மயிர்வால் எனப் பெயர் பெறும். உடலில் செதில்கள் இருப்பதில்லை. முதுகு நெடுகிலும் ஒரே நீண்ட துடுப்பு இருக்கும். வாயில் பற்கள் பல கூராகவும், பலமாகவும் வடிவு நன்றாக அமைந்தவையாகவும் இருக்கும். இவை இம்மீன்களுக்கு உணவாகிய சிறுமீன்களையும் இறால் முதலியவற்றையும் பிடித்துத் தின்பதற்கு ஏற்றவை.

வாளைகம்

 வாளைகம் vāḷaigam, பெ.(n.)

   பித்தளை; brass.

வாளைக்கடியன்

வாளைக்கடியன் vāḷaikkaḍiyaṉ, பெ.(n.)

   4 அடி வளர்வதும் நச்சு உள்ளதுமான கடற்பாம்பு வகை (யாழ்.அக.);; sea-snake, attaining 4 ft. in length Enhydrinon bengalensis.

     [வாளை + கடியன்]

     [கடற்பாம்புகளுக்கு வழங்கும் பெயர். இவற்றின் வால் பக்கவாட்டிலே மிகவும் அழுந்தித் தட்டையாக இருக்கும். பல இனங்களிலே வால் மட்டுமன்றி வாலுக்கு முன்னே உள்ள உடம்பும் தட்டையாக இருக்கும். இவ்வித வாலும் உடம்பும் நீரில் நீந்துவதற்கு மிகவும் ஏற்றவை. இவற்றின் உடல் வாளை மீனின் உடல்போல நீண்டு தட்டையாக இருக்கின்றது. இக்காரணங்களால் வாளைக்கடியன் என்னும் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

கடற்பாம்புகளின் உடலைப் போர்த்துள்ள செதில்கள் சிறியவையாக இருக்கும். உடலின் அடிப்பக்கத்திலுள்ள செதில்களும் உடலின் மற்றப் பாகங்களில் இருப்பவை போன்ற சிறிய செதில்களே. தலையில் கேடகங்கள் ஒழுங்காக அமைந்திருக்கும்.

கடற்பாம்புகளெல்லாம் மிகக் கொடிய நஞ்சுள்ளவை. இவற்றின் நஞ்சு நாகத்தின் நஞ்சினும் கொடுமையுடையது. கடற்பாம்புகள் மீன்களைப் பிடித்துத் தின்னும்]

வாளைக்கப்பல்

 வாளைக்கப்பல் vāḷaikkappal, பெ.(n.)

   புகையிலை வகை (இ.வ.);; a variety of tobacco.

     [வாளை + கப்பல்]

வாள்

வாள்1 vāḷ, பெ.(n.)

   1. ஒளி (தொல். சொல். 367);; lustre, light, splendour.

     “வாண்முகம்” (புறநா. 6);.

   2. விளக்கம்; brightness.

     “மாலை வாள் கொளா” (கலித். 119);.

   3. புகழ்; fame.

     ‘வலைய வாளராமீது’ (தக்கயாகப். iii, உரை);.

   4. கூர்மை (அரு.நி.);; sharpness, fineness.

   5. கொல்லுகை (தொல். எழுத். 401, உரை);; killing.

   6. கொடுமை; cruelty.

     “வாளரக்கி”.

   7. கத்தி; sword, scimitar.

   8. ஈர்வாள்; saw.

     “நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்” (குறள், 334);.

   9. கலப்பை (நாமதீப. 470);; ploսցհ.

   10. உழுபடையின் கொழு; ploughshare.

   11. கத்திரிக்கோல்; scissors.

     “வாளிடைப்படுத்த வயங்கீரோதி” (கலித்.36);.

   தெ. வாலு; ma. {}. То. po-{}. Ка. {};

 Kod. ba-{};

 Tu. {};

 Te. {}.

     ‘வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாரித்தாலும் மட்டாய்ச் செலவிடு’ (பழ.);.

     [வள் → வாள்]

 வாள்2 vāḷ, பெ.(n.)

   கயிறு (அக.நி.);; string.

 வாள்3 vāḷ, பெ.(n.)

   நீர் (அக.நி);; water.

 வாள்4 vāḷ, பெ.(n.)

   கச்சு (அக.நி.);; bodice.

வாள்அலங்காரம்

வாள்அலங்காரம் vāḷalaṅgāram, பெ.(n.)

   தண்டபாணி அடிகளால் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; a book written by {} swami in 19th century.

     [வாள் + அலங்காரம்]

வாள்கைக்கொண்டாள்

 வாள்கைக்கொண்டாள் vāḷkaikkoṇṭāḷ, பெ. (n.)

கொற்றவை (சூடா.);;{}.

     [வாள் + கை + கொண்டாள்]

வாள்செலவு

வாள்செலவு vāḷcelavu, பெ.(n.)

   எதிர்த்து வந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ.4, 7);;     “அருமுனையான் அறைகூவினபின்செருமுனைமேல் வாள்சென்றன்று” (பு.வெ.4 – 7);.

வஞ்சியார் போர்க்கழைத்தபின் அவர் படையிடத்தே காஞ்சியரசன் வாளினைப் போகவிடுதல் வாள்செலவு என்னும் துறையாம்.

எ-டு:

     “உணங்கு புலவறா ஒன்னார குரம்பை

நுணங்கரில் வெம்முனைநோக்கி – அணங்கிய

குந்த மலியும் புரவியான் கூடாதார்

வந்தபின் செல்கென்றான் வாள்”

     [வாள் + செலவு]

வாள்மங்கலம்

வாள்மங்கலம் vāḷmaṅgalam, பெ.(n.)

   அரசனுடைய வாளைப் புகழ்ந்து உரைக்கும் புறத்துறை;     “கயக்கருங் கடற்றானை வயக்களிற்றான் வான்புகழ்ந்தன்று” (பு.வெ. கொளு. 9-35);.

     “கொங்கவிழ் ஐம்பால் மடவார் வியன்கோயில்

மங்கலங் கூற மறங்கனலும் – செங்கோல்

நிலந்தரிய செல்லும் நிரைதண்தார்ச் சேரன்

வலந்தரிய ஏந்திய வாள்” (பு.வெ.9-35 எ-டு);

     [வாள் + மங்கலம்]

வாள்மாது

 வாள்மாது vāḷmātu, பெ.(n.)

   கொற்றவை; a Goddess.

     [வாள் + மாது]

வாள்மீன்

 வாள்மீன் vāḷmīṉ, பெ.(n.)

   ஒரு கடல் மீன்; sword fish.

மறுவ. ஏமங்கோலா

     [வாள் + மீன்]

வாள்வடக்கிரு-த்தல்

 வாள்வடக்கிரு-த்தல் vāḷvaḍakkiruttal, செ.கு.வி. (v.i.)

   புறப்புண் நாணிய போர்மறவர் வாளை நட்டு வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்விடல்; to fast unto death by a wounded soldier on the back continuing setting the sword upside down on earth, out of shame facing north, since he was not successful in saving the mother earth of the south.

     [வாள்+வடக்கு+இருத்தல்]

வாள்வட்டணை

வாள்வட்டணை vāḷvaṭṭaṇai, பெ.(n.)

   வாட் போரில் இட வலமாகச் சுற்றுகை; moving to the right and left in sword play or fight.

     “மன்னர்விடு சரங்க ளெல்லாம்….. வாள் வட்டணையிலே துணித்து” (பாரதவெண். 803);.

     [வாள் + வட்டணை]

வாள்வரி

வாள்வரி vāḷvari, பெ.(n.)

   புலி; tiger, as marked with curved, brilliant stripes.

     “மதகரிக் களபமும் வாள்வரிப் பறழும்” (சிலப். 25, 49);.

     [வாள் + வரி]

வாள்வரிக்கொடுங்காய்

வாள்வரிக்கொடுங்காய் vāḷvarikkoḍuṅgāy, பெ.(n.)

   வெள்ளரிக்காய்; cucumber melon, as stripes.

     “வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பகங்காய்” (சிலப்.16,25);.

     [வாலரிக்கொடுங்காய் → வாள்வரிக் கொடுங்காய்]

வாள்வலம்

வாள்வலம் vāḷvalam, பெ.(n.)

வாள்வீரம் பார்க்க;see {}.

     “விடலை வாள்வலங் கொண்டு காவலோம்ப” (பெருங். உஞ்சைக். 54, 141);.

     [வாள் + வலம்]

வாள்வாளெனல்

 வாள்வாளெனல் vāḷvāḷeṉal, பெ.(n.)

   அழுது கதறுதற்குறிப்பு; of howling, as of a dog.

     “குழந்தை வாள்வாளென்கிறது”.

     [வாள் + வாள் + எனல்]

வாள்வீச்சு

வாள்வீச்சு vāḷvīccu, பெ.(n.)

   1. வாளைச் சுழற்றுகை; brandishing of a sword, sword-play.

   2. பரவர் நடத்தும் வாள்

   விளையாட்டு; sword game, as practised among paravas.

     [வாள் + வீச்சு. வீசு → வீச்சு]

வாள்வீரம்

வாள்வீரம்1 vāḷvīram, பெ.(n.)

   வாட்போர்த் திறமை; swordsmanship, skill in the use of the sword.

     [வாள் + வீரம். ஒருகா. வால்வலம்]

 வாள்வீரம்2 vāḷvīram, பெ.(n.)

   வில்வம்; bael.

     “வாள்வீரம்” (பரிபா. 11, 19);.

     [மாலூர → வாள்வீரம்]

வாழகம்

 வாழகம் vāḻkam, பெ.(n.)

   வெள்ளைக் குங்கிலியம் (மலை.);; konkany resin.

வாழபுட்பி

 வாழபுட்பி vāḻpuṭpi, பெ.(n.)

   முல்லை (மலை);; arabian Jasmine.

     [வாலபுட்பி → வாழபுட்பி. புஷ்பம் → புட்பம் → புட்பி]

வாழமணத்தாள்

 வாழமணத்தாள் vāḻmaṇattāḷ, பெ.(n.)

   பூநீர்; salt obtained from fuller’s earth or from the efforessence grown on the soil of fuller’s earth.

     [வாழ + மணத்தாள்]

வாழாக்குடி

 வாழாக்குடி vāḻākkuḍi, பெ.(n.)

வாழா வெட்டி (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாழ் + ஆ + குடி.

     ‘ஆ’ எ.ம.இ.நி.]

வாழாக்கேடி

 வாழாக்கேடி vāḻākāṭi, பெ.(n.)

   மணமாகாதிருப்பவள் (யாழ்.அக.);; unmarried woman, spinster.

     [வாழ் + ஆ + கேடி.

     ‘ஆ’ எ.ம.இ.நி.]

வாழாக்கொடி

 வாழாக்கொடி vāḻākkoḍi, பெ.(n.)

வாழா வெட்டி (இ.வ.); பார்க்க;see {}.

     [வாழ் + ஆ + கொடி]

வாழாண்டி

 வாழாண்டி vāḻāṇṭi, பெ.(n.)

   புளி; tamarind.

வாழாதவள்

வாழாதவள் vāḻātavaḷ, பெ.(n.)

   1. வாழா வெட்டி பார்க்க;see {}.

   2. கைம் பெண்; widow.

     [வாழ் + ஆ + (த்); அவள்.

     ‘ஆ’ எ.ம.இ.நி.]

வாழாத்திப்போளம்

 வாழாத்திப்போளம் vāḻāttippōḷam, பெ.(n.)

   சுறாலை (சாம்பிராணி); வகை (யாழ்ப்.);; gum-myrrh.

     [வாலதிப்போளம் → வாழாத்திப்போளம்]

வாழாவெட்டி

 வாழாவெட்டி vāḻāveṭṭi, பெ.(n.)

   கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள் (இ.வ.);; married woman not living with her husband, grass widow.

     [வாழ் + ஆ + வெட்டி. வெற்று → வெட்டு → வெட்டி.

     ‘ஆ’ எ.ம.இ.நி.]

வாழி

வாழி1 vāḻi, வி. (v.opt.)

   வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோட் சொல் (நன்.168);; optative meaning ‘may you prosper’.

     “தடமலர்த்தாள் வாழ” (திருவாச. 24, 6);.

     [வாழ் → வாழி]

 வாழி2 vāḻi, அசைச். (exp.)

   ஓர் அசைச்சொல் (சூடா. 10, 16);; an expletive.

     [வாழ் → வாழி]

 வாழி3 vāḻittal,    11 செ.கு.வி.(v.i.)

   மதர்த்துப்போதல் (யாழ்.அக.);; to be over luxuriant in growth and unproductive.

     [வாழி → வாழி-,]

வாழிகூறு-தல்

வாழிகூறு-தல் vāḻiāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   அனைவரும் நலமுடன் வாழுமாறு வாழ்த்துதல்; wish every-body good luck.

     [வாழி + கூறு-,]

வாழித்திருநாமம்

 வாழித்திருநாமம் vāḻittirunāmam, பெ.(n.)

   ஆசிரியரை வாழ்த்தும் பாடல்; poem of solutation to the {}.

     [வாழி + திரு + நாமம். நாமம் = skt.]

வாழிப்பு

 வாழிப்பு vāḻippu, பெ.(n.)

   மதர்ப்பு (யாழ்.அக.);; over-luxuriant growth.

     ‘வாழிப்பான ஆள்’

     [வாழி → வாழிப்பு]

வாழிய

வாழிய vāḻiya, வி.(v.opt.)

   1. வாழி பார்க்க;see {}.

   2. ஓர் அசைச்சொல் (நன். 440);; an expletive.

     [வாழ் → வாழி]

வாழியாதன்

 வாழியாதன் vāḻiyātaṉ, பெ. (n.)

   குறிப்பிட்ட பகுதியை ஆட்சிபுரியும் அதிகாரம் பெற்ற ஆதன்; Adan the chieftain who got power to rule a certain area.

செல்வக்கடுங்கோ வாழியாதன்(பதிற்.);.

ம. வாழி

     [வாழி+ஆதன்]

வாழுமோர்

வாழுமோர் vāḻumōr, பெ.(n.)

   வாழ்பவர்; those who live in prosperity.

     “யாரிவ ணெடுந்தகை வாழுமோரே” (பதிற்றுப். 71, 27);.

     [வாழ் → வாழ்வோர் → வாழுமோர்]

வாழும்பாம்பு

 வாழும்பாம்பு vāḻumbāmbu, பெ.(n.)

   அகவை மிகுதியால் குட்டையாய்த் தேய்ந்து வீடுகளில் வாழும் என்று நம்பப்படுகின்ற நல்ல பாம்பு; cobra believed to grow short with age and live in houses or house-sites.

     [வாழ் + பாம்பு → வாழும்பாம்பு]

வாழும்புடை

 வாழும்புடை vāḻumbuḍai, பெ.(n.)

   பாம்புப் புற்று (நாஞ்.);; ant-hill, snakehole.

     [வாழும் + புடை]

வாழை

வாழை vāḻai, பெ.(n.)

   வாழையின் மரவகை; Plantain – Musa Paradisiaca.

     “கொழு மடற் குமரி வாழை” (சீவக.2716);.

   க.பாலெ;   ம. வால;   து.வாரெ; ma. {};

 Ko. va-g;

 To. pa-w;

 Ka. {};

 Kod. ba-{};

 Tu. {}.

     [வாழ் → வாழை]

     ‘வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம்’ (பழ.);

     ‘வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப் பார்’ (பழ.);

வாழை வகை

   1. அக்கினீசுவர வாழை;   2. அடுக்கு மொந்தன்;   3. அடுக்கு வாழை;   4. அடைக்காக் குன்னன்;   5. அணில் வாழை;   6. அமிழ்த சாகரம்;   7. அமிருத பாணி;   8. அனுப்பன்;   9. ஆட்டுக் கொம்பன்;   10. ஆட்டு நேந்திரன்;   11. ஆயிரங்காய்ப் பூவன்;   12. ஆயிரங்காய் வெண்கதலி;   13. ஆனைக் கொம்பன்;   14. இலைவாழை;   15. ஈனா வாழை;   16. எரிச்சி வாழை;   17. என்னபனியன்;   18. ஏத்தசிங்கன்;   19. ஏலக்கிபாளை;   20. கப்பூர்;   21. கரிவாழை;   22. கல் வாழை;   23. கருங்கதலி;   24. கருவாழை;   25. கல்மொந்தன்;   26. கற்பூரவாழை;   27. கனயல்;   28. காஞ்சக்கேல;   29. காட்டா வாழை;   30. காட்டிலவு;   31. காட்டு இருப்பை;   32. காட்டு வாழை;   33. காபூலி வாழை;   34. காளி வாழை;   35. கானாம் வாழை (கொட்டை வாழை);;   36. குழிப்பூவன்;   37. குள்ள வாழை;   38. குறி பொந்தா;   39. கொம்பு வாழை;   40. கொம்மரட்டி;   41. சக்கரக்கேளி;   42. சப்பீடவெல்சி;   43. சம்பா;   44. சாம்பல் மொந்தன்;   45. சாம்பல் மொந்தன்;   46. சாம்பிராணி மொந்தன்;   47. சிங்கன் வாழை;   48. சிச்சூ வாழை;   49. சிறுப்பு வாழை;   50. சிறுமலை வாழை;   51. சின்னச் செங்கதலி;   52. சின்ன மொந்தன்;   53. சினாலி;   54. சூரியப் பாளை;   55. செவ்வாழை;   56 சோனேரி;   57. தட்டில்லாக் குன்னன்;   58. துரை வாழை;   59. தேன் குன்னன்;   60. நவரை வாழை;   61. நாங்குநேரிப்பேயன்;   62. நாட்டு வாழை;   63. நாளிப்பூவன்;   64. நெடுநேந்திரன்;   65. நெய்ப்பூவன்;   66. நெய் மன்னன்;   67. நெய்வாழை;   68. நெல்லி வாழை;   69. நேத்திரப் பள்ளி;   70. நேத்திரப் படத்தி;   71. நேந்திரன் வாழை;   72. பச்சை நாடன்;73;   பச்சைப் பந்தீசா;   74. பச்சை யரட்டி;   75. பச்சை வாழை;   76. பசராய்;   77. படத்தி;   78. பம்பாய்ப்பச்சை;   79. பன்றி வாழை;   80. பிடிமொந்தன்;   81. புட்டு வாழை;   82. பூதிப்பாளை;   83. பூநாவல்;   84. பூவன் வாழை;   85. பூவில்லாச் சுந்தன்;   86. பேய் லாடன்;   87. பேயன் வாழை;   88. பொந்தையரட்டி;   89. மகர வாழை;   90. மட்டி;   91. மதுரங்கபாவெ;   92. மயில் வாழை;   93. மர வாழை;   94. மலை மொந்தன்;   95. மலை

   வாழை;   96. மனோரஞ்சிதம்;   97. மான் சுமேரி;   98. மிந்தோலி;   99. மூங்கில் வாழை;   100. பொட்ட பூவன்;   101. மொந்தன்;   102. வெள் வாழை.

ஒற்றை விதையிலை நிலைத் திணைகளில் (ஸ்கைட்டாமினியீ); என்னும் வாழைக் குடும்பத்து மூசேசியீ என்னும் உட்குடும்பத்தைச் சார்ந்த மூசா என்னும் இனம். இதிலே 80 இனங்கள் உண்டு.

   வாழை மரம் ஒரு தடவையே பூக்கும்;காய்க்கும். குலைபோட்டு அது முற்றிய பிறகு மரம் பட்டுப் போகும். அதனால் குலையை வெட்டின பிறகு மரத்தையும் அடிவரையில் வெட்டி விடுவார்கள். கீழ்க் கன்று விடப்பட்டு வந்தது வளர்ந்து பெரிய மரமாகிக் குலைபோடும். அடுத்த தலைமுறையாக அதன் கீழ்க் கன்று வளர்ந்துவரும். அதற்கு மேல் வருபவை செழிப்பாக வளர்வது மில்லை. காய் நன்றாகவோ அதிகமாகவோ விடுவதுமில்லை. அப்போது வேறு இடங்களில் கன்றுகளை நட்டுப் புதிய பயிர் வளர்ப்பார்கள்.

வாழைப் பயிர் பல வகைகளில் பயன்தருகிறது. வாழைக்காய், வாழைப்பழம், வாழையிலை, வாழைச்சருகு, வாழைப்பட்டை, வாழை நார் போன்ற அனைத்துப் பாகங்களும் மக்களுக்குப் பயன்படுவனவாய் உள்ளன.

வாழைக்கச்சல்

 வாழைக்கச்சல் vāḻaikkaccal, பெ.(n.)

   வாழையின் இளங்காய்; very young, unripe plantain fruit.

     [வாழை + கச்சல். கச்சல் = வாழையிளங்காய்]

வாழைக்கட்டை

வாழைக்கட்டை vāḻaikkaṭṭai, பெ.(n.)

   1. வாழைக்கிழங்கு (வின்.);; large bulbous root of the plantain tree.

   2. வாழைத் தண்டு (இ.வ.); பார்க்க;see {}.

     [வாழை + கட்டை]

வாழைக்கன்று

 வாழைக்கன்று vāḻaikkaṉṟu, பெ.(n.)

   வாழை மரத்தின் கிழங்கினின்று உண்டாகும் இளவாழை; plantain sucker or shoot.

     [வாழை + கன்று]

வாழைக்காய்

வாழைக்காய்1 vāḻaikkāy, பெ.(n.)

   துவர்ப்புச் சுவையுடைய வாழையின் காய்; fruit of plantain it is used as vegetable.

     ‘வாழைக்காய்ப் பொரியல்’.

     [வாழை + காய்]

     ‘வாழைக்காய் உப்புறைத்தல் இல்’ (பழ.);

 வாழைக்காய்2 vāḻaikkāy, பெ.(n.)

   அரையாப்புக் கட்டி; bubo.

     [வாழை + காய்]

வாழைக்காய்த்தட்டுவாணி

 வாழைக்காய்த்தட்டுவாணி vāḻaikkāyttaṭṭuvāṇi, பெ.(n.)

   குட்டையான குதிரை வகை (இ.வ.);; a kind of short horse, pony.

     [வாழை + காய் + தட்டுவாணி]

வாழைக்குட்டி

 வாழைக்குட்டி vāḻaikkuṭṭi, பெ.(n.)

வாழைக்கன்று (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாழை + குட்டி]

வாழைக்கொல்லை

 வாழைக்கொல்லை vāḻaikkollai, பெ.(n.)

   வாழைத்தோட்டம் (இ.வ.);; plantain tope.

     [வாழை + கொல்லை]

வாழைத்தடல்

 வாழைத்தடல் vāḻaittaḍal, பெ.(n.)

   வாழை மரத்தின் பட்டை (இ.வ.);; sheathing petiole of the plantain, plantain bark.

     [வாழை + தடல்]

வாழைத்தடை

 வாழைத்தடை vāḻaittaḍai, பெ.(n.)

வாழைத்தடல் பார்க்க;see {}.

     [வாழை + தடை]

வாழைத்தண்டு

வாழைத்தண்டு vāḻaittaṇṭu, பெ.(n.)

   1. வாழை மரத்தின் தலைப்பகுதி நீங்கிய நடுந்தண்டு; stem of the plantain tree.

     “வாளை… வாழைத் தண்டிற் பல துஞ்சும்” (சீவக. 2601);.

   2. வாழை மரத்தின் பட்டையை உரித்த பின் உட்புறத்திருப்பதும் சமைத்துண்டற்குரியதுமான உறுப்பு (கொ.வ.);; internal edible spadix of the plantain tree.

     [வாழை + தண்டு]

வாழைநீர்

 வாழைநீர் vāḻainīr, பெ.(n.)

   எலும் புருக்கியைப் போக்கும் வாழை மரத்தண்டை இடித்து எடுக்கும் நீர், வாழைக் கிழங்கில் சுரக்கும் நீர்; liquid squeezed or it from the plantain stalk, if a pit is made in the stump of the plantain tree fluid will accumulate in it and it can be drawn out, it is diuretic.

     [வாழை + நீர்]

வாழைப்பட்டை

 வாழைப்பட்டை vāḻaippaṭṭai, பெ.(n.)

வாழைத்தடல் பார்க்க;see {}.

     [வாழை + பட்டை]

வாழைப்பழத்தி

 வாழைப்பழத்தி vāḻaippaḻtti, பெ.(n.)

   சனகிப்பூண்டு (யாழ்.அக.);; buffalo-tongue milk-hedge.

மறுவ. எருமை நாக்கிப் பூண்டு.

     [வாழை + பழத்தி]

வாழைப்பழம்

 வாழைப்பழம் vāḻaippaḻm, பெ.(n.)

   முக்கனியுள் ஒன்றான பழுத்திருக்கும் வாழையின் காய்; banana.

     ‘வாழைப் பழத்தில் ஊசியேற்றினாற் போல’ (பழ.);

     [வாழை + பழம்]

வாழைப்பிஞ்சு

 வாழைப்பிஞ்சு vāḻaippiñju, பெ.(n.)

வாழைக்கச்சல் பார்க்க;see {}.

     [வாழை + பிஞ்சு. பிஞ்சு = இளங்காய்]

வாழைப் பிஞ்சினால் அரத்தக் கடுப்பு, அரத்த மூலம், அதிமூத்திரம், வயிற்றுப்புண் ஆகியன போகும் எனச் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகரமுதலி கூறும்.

வாழைப்புருதி

 வாழைப்புருதி vāḻaippurudi, பெ.(n.)

   வைடூரியம்; one of nine gems.

     [வாழை + புருதி]

வாழைப்பூ

வாழைப்பூ1 vāḻaippū, பெ.(n.)

   மீன் (மதி.க.ii,38);; a cant term for fish.

     [வாழை + பூ]

 வாழைப்பூ2 vāḻaippū, பெ.(n.)

   வாழையின் பூ; Plantain flower clusters sheathed in spathes.

     [வாழை + பூ]

வாழைப்பூவிளக்கு

 வாழைப்பூவிளக்கு vāḻaippūviḷakku, பெ.(n.)

   குத்து விளக்கு வகை (இ.வ.);; lamp with a bowl shaped like a sheathing spathe of a plantain flower.

     [வாழைப்பூ + விளக்கு]

வாழைமடல்

வாழைமடல் vāḻaimaḍal, பெ.(n.)

   1. வாழைத்தடல் பார்க்க;see {}.

   2. வாழைப்பூவின் மடல்; sheath of a bunch of plantain flowers.

     [வாழை + மடல்]

வாழைமட்டம்

 வாழைமட்டம் vāḻaimaṭṭam, பெ.(n.)

வாழைக்கன்று (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாழை + மட்டம்]

வாழைமலடி

வாழைமலடி vāḻaimalaḍi, பெ.(n.)

   ஒரே ஒரே பிள்ளையைப் பெற்றவள்; woman who has

 borne a single child, considered barren.

     “அவள் வாழை மலடியாதலால் – புத்திரவதி யல்லள்” (குருபரம். பக். 198, கீழ்க்குறிப்பு);.

ஓ.நோ. கதலிமலடு.

     [வாழை + மலடி]

வாழைமுகை

வாழைமுகை vāḻaimugai, பெ.(n.)

   வாழையின் பூ (சீவக.74, உரை);; flower of plantain.

     [வாழை + முகை]

வாழையடிவாழை

வாழையடிவாழை vāḻaiyaḍivāḻai, பெ.(n.)

   இடையறாது தொடர்ந்து வரும் வழிமரபு; unbroken lineage as plantain suckers from one root.

     “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில்” (அருட்பா. vi, பிரியே. 4);.

மறுவ. கால்வழி.

     [வாழை + அடி + வாழை]

     “தந்தை மகன் வழிமுறையாக அல்லது ஆசிரிய மாணவ வழிமுறையாகத் தொடர்ந்து வரும் வரன்முறையை வாழையடி வாழை முறை என்பர்” – (தேவநேயம் 13. பக்.82);

வாழைவலை

 வாழைவலை vāḻaivalai, பெ.(n.)

   சிறு கண்களையுடைய வலை (இ.வ.);; net of small mesh.

     [வாழை + வலை]

வாழைவெட்டிக்கலியாணம்

 வாழைவெட்டிக்கலியாணம் vāḻaiveṭṭikkaliyāṇam, பெ.(n.)

   மூத்த மகனுக்குத் திருமணம் ஆகாதிருக்கும் பொழுது இளையவனுக்கு ஏற்பாடானால் வாழை மரத்தை முதல் மகனுக்குக் கட்டுவிக்கும் திருமணம்; fictitious marriage of an elder brother with a plantain tree adorned as his bride, in order to enable his younger brother to marry.

     [வாழை + வெட்டு + கலியாணம்]

வாழ்

வாழ்1 vāḻtal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இருத்தல்; to be exist.

   2. வாழ்ந்திருத்தல்; to live.

     “வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை” (குறள், 1124);.

   3. செழித்திருத்தல்; to flourish, prosper.

     “வாழ்க வந்தணர் வானவ ரானினம்” (தேவா. 1177, 1);.

   4. மகிழ்தல்; to be happy.

     “செம்பொற் குன்றினைக் கண்டு வாழ்ந்து” (திருவாலவா. 61, 18);.

   5. மனைக் கிழத்தியாக இருத்தல் (கொ.வ.);; to live the life of a married woman (colloq);.

   6. விதிப்படி ஒழுகுதல்; to shape one’s life according to a definite set of rules.

     “தந்திரத்து வாழ்து மென்பார்” (ஆசாரக். 35);,

     “வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே” (பழ.);.

   தெ., ம., து. வாளு; Ko. va-{}. Kod. ba-{}. Tu, {}. Nk. Batt;

 Go. {}, Kui. {}.

 வாழ்2 vāḻ, பெ.(n.)

   முறைமை (பிங்.);; regularity, order.

தெ., க. வாளி.

வாழ்க

 வாழ்க vāḻka, வி.மு.(v.)

   வாழ்த்திக் கூறும் போது பயன்படுத்தும் வினைவடிவம்; an optative form meaning live.

     [வாழ் + க. க-வியங்கோள் வினைமுற்று விகுதி]

வாழ்கிறவள்

வாழ்கிறவள் vāḻkiṟavaḷ, பெ.(n.)

   1. கணவனோடு வாழ்பவள் (கொ.வ.);; married woman living with her husband.

   2. வாழ்வரசி; married woman.

     [வாழ் → வாழ்கிறவள்]

வாழ்குண்டம்

 வாழ்குண்டம் vāḻkuṇṭam, பெ.(n.)

   மூலாதாரம்; one of the six centres of the human body situated in the anal region. Its God is vigneswarar and Goddess is {}, literally means root of or source of {}.

வாழ்கொளிபுத்தூர்

வாழ்கொளிபுத்தூர் vāḻkoḷibuttūr, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலம்; a saiva place, having the distinction of being sung by saint Sundarar.

     “மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர்” (57);.

     [வாழ்கொளிபுத்துரர் → புத்தூர் → புற்றூர்]

வாழ்க்கை

வாழ்க்கை vāḻkkai, பெ.(n.)

   1. சீவிக்கை; livelihood, living.

     “வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை” (குறள், 435);.

   2. வாழ் நாள்; life-time, career.

     “நெடுவாழ்க்கை” ஆசாரக். 3).

   3. இல்வாழ்க்கை; married life.

     “பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை” (குறள், 44);.

   4. மனைவி (யாழ்அக.);; wife.

   5. நல்வாழ்வு நிலை (யாழ்.அக.);; happy state.

   6. செல்வ நிலை (பிங்.);; wealth, felicity, prosperity.

   7. ஊர்(சூடா.);; village, town.

   8. மருதநிலத்தூர் (திவா.);; agricultural town.

     ‘வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலம்’ (பழ.);.

     [வாழ் → வாழ்க்கை]

வாழ்க்கைக்குறிப்பு

 வாழ்க்கைக்குறிப்பு vāḻkkaikkuṟippu, பெ.(n.)

   ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிடத் தக்க விளத்தங்கள்; biographical details.

     [வாழ்க்கை + குறிப்பு]

வாழ்க்கைத்துணை

வாழ்க்கைத்துணை vāḻkkaittuṇai, பெ.(n.)

   மனையாள்; wife.

     “தற்கொண்டான் வளத் தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள், 51);.

     [வாழ்க்கை + துணை]

வாழ்க்கைப்படு-தல்

வாழ்க்கைப்படு-தல் vāḻkkaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   திருமணமாதல்; to be married, to become a wife.

     “வாழ்க்கைப் பட்டாள் கயற்கண்ணியே” (தனிப்பா. ii. 1, 1);.

     [வாழ்க்கை + படு-,]

வாழ்க்கைப்படுத்து-தல்

வாழ்க்கைப்படுத்து-தல் vāḻkkaippaḍuddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   திருமணம் செய்து கொடுத்தல் (சீவக. 1490, உரை);; to give in marriage.

     [வாழ்க்கைப்பூடு → வாழ்க்கைப்படுத்து-,]

வாழ்செடிப்பூண்டு

 வாழ்செடிப்பூண்டு vāḻceḍippūṇḍu, பெ.(n.)

   பொற்றலைக் கையாந்தகரை என்னும் மூலிகை; a variety of eclypta prostata bearing yellow flowers. (சா.அக.);.

வாழ்ச்சி

வாழ்ச்சி vāḻcci, பெ.(n.)

   1. வாழ்க்கை; living.

     “நிலையின் வாழ்ச்சியின்” (தொல். சொல். 80);.

     “நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி (திவ். திருவாய். 3, 2, 4);.

   2. செல்வநிலை; prospe- rity, wealth, felicity.

   3. வெற்றியாகிய செல்வம்; felicity of victory.

     “வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி” (பதிற்றுப். 56, 7);.

     [வாழ் → வாழ்ச்சி]

வாழ்ச்சிப்படுத்து – தல்,

வாழ்ச்சிப்படுத்து – தல், vāḻccippaḍuddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வாழ வைத்தல்; to cause to prosper.

     “வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின்” (தொல். பொ. 90, உரை);.

     [வாழ் → வாழ்ச்சி + படுத்து-,]

வாழ்த்தணி

வாழ்த்தணி vāḻttaṇi, பெ.(n.)

   இன்னார்க்கு இன்ன நன்மை இயைக வென்று முன்னியது விரிக்கும் அணி வகை (தண்டி. 88);; figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons.

     [வாழ்த்து + அணி]

     “இன்னார்க் கின்னது இயைக என்றுதா

முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிய” (தண்டி.88);.

மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி

ஆவாழி வாழி யருமறையோர்-காவிரிநாட்

டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கீழ்

மண்ணுலகில் வாழி மழை.

வாழ்த்தாரம்

 வாழ்த்தாரம் vāḻttāram, பெ.(n.)

   வாழ்த்து (இ.வ.);; benediction, used in irony.

     [வாழ்த்து + ஆர் → ஆரம்]

வாழ்த்தியல்

வாழ்த்தியல் vāḻttiyal, பெ.(n.)

   தலைவனைப் புலவன் வாழ்த்தும் புறத்துறை (புறநா.2, துறைக்குறிப்பு);; theme describing the praise bestowed on a chief by a bard.

வாழ்த்தியல் எ-டு,

     “மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரு மென்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்

வலியும் தெறலும் அளியும் உடையோய்”

     [வாழ்த்து + இயல்]

வாழ்த்து

வாழ்த்து1 vāḻddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பாராட்டுதல்; to felicitate, congratulate, bless.

   2. போற்றுதல்; to praise, applaud.

     “வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்” (தேவா. 1203, 7);.

   3. மங்கலம் பாடுதல் (யாழ்.அக.);; to sing songs of benediction.

க. பாழிசு.

     [வாழ் → வாழ்த்து]

 வாழ்த்து2 vāḻttu, பெ.(n.)

   1. நல்வாழ்த்து; benediction, felicitation.

   2. போற்றி; praise.

     “அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி” (திவ். இயற். பெரிய திருவந். 40);.

   3. நூலின் தொடக்கத்துக் கூறப்படும் மங்களாசணை மூன்றனுட் கடவுளை வாழ்த்துகை; invocation or praise of the

 deity at the begining of a religious or literary work;one of three {}. (Q.V.);.

     “வாழ்த்து வணக்கம் வருபொருளிவற்றி னொன்று ஏற்புடைத்தாகி” (தண்டி.7);. (தொல். பொ. 421, உரை.);.

   4. மங்களம் பாடுகை (சங்.அக.);; singing songs of benediction.

   5. வாழ்த்தணி பார்க்க (தண்டி.86);;see {}.

க. பாழிசு

     [வாழ் → வாழ்த்து]

வாழ்த்துரை

வாழ்த்துரை vāḻtturai, பெ.(n.)

   பாராட்டுரை; benediction.

     “மூத்தவர் பின்னவர்க்கு வாழ்த்துரை பேசல் வேண்டும்” (காஞ்சிப்பு.

ஒழுக்கப். 12).

     [வாழ்த்து + உரை]

வாழ்த்துரை வகைகள் :

இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து என வாழ்த்துரை மூவகைப்படும்.

ஒருவருடைய சிறந்த பண்புகளையும் அரிய ஆற்றல்களையும் எடுத்துரைத்துப் புகழ்வது அல்லது வாழ்த்துவது, இயன்மொழி வாழ்த்து.

அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும். (தொல்.புறத்.:35);

மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன்.

இயல்பே மொழியினும் அத்துறை யாகும். (பு.வெ.9:195);

கடவுள் (அல்லது நீ வணங்கும் தெய்வம்); உன்னைப் பாதுகாக்க, நீ வழிவழி செல்வத்தோடு சிறந்து விளங்குக என்று, ஒருவரை வாழ்த்துவது புறநிலை வாழ்த்து.

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே…. (தொல்.செய்.109);

நோயாளிக்கு முன்பு கசப்பாகவும் காரமாகவுமிருந்து வருத்தினும், பின்பு நலம் பயக்கும் மருந்து, போன்று நெறி தவறியவருக்கு அல்லது அறியாதவருக்கு முன்பு கேட்பதற்கு வெறுப்பாக இருப்பினும், பின்பு நன்மை பயக்கும் நல்லறிவுரை கூறுவது வாயுறை வாழ்த்து. வாயுறை, மருந்து.

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்

தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்(று);

ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. (தொல்.செய்.111);

வாழ்த்துதல் என்பது ஒருவரை நலமாக நீடு வாழவைத்தல், அது. முற்றத் துறந்த முழு முனிவரான நிறைமொழி மாந்தர் அல்லது ஆன்றவிந் தடங்கிய சான்றோர்

     “நீடு வாழ்க” என்று சொல்வதனாலும், மூதறிஞர் கூறும் அறவுரை அல்லது அறிவுரையாலும் நிகழும். தனிப்பட்டவர்க்கு இவ்விரு வழியும் இயலும்;

ஒரு தொகுதியார்க்கோ பின்னதே ஏற்கும். திருவள்ளுவர், உலகினர் அனைவர்க்கும், சிறப்பாகத் தமிழர்க்கு, உரைத்த அறவுரையும்

அறிவுரையுமான திருக்குறள், திருவள்ளுவ மாலையில் மதுரை யறுவை வாணிகன் இளவட்டனார் என்னும் புலவர் பெயரிலுள்ள.

இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும்

மன்பதைக் கெல்லாம் மனமகிழ – அன்பொழியா

துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்

வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

என்னும் வெண்பாவின்படி,

     ‘வாயுறை வாழ்த்து’ எனப்படினும் உண்மையிற் புறநிலை வாழ்த்து’ங் கலந்ததேயாகும்.

இயன்மொழி வாழ்த்திற் கடவுள் வாழ்த்தும் அடங்குவதனாலும், கடவுளை ஒருவர் புகழ்வதன்றி வாழவைத்தல் என்பது பொருந்தாமையாலும், மாந்தரைப் புகழ்வதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும் வேறுபாடுண்மையாலும், கடவுள் வாழ்த்திலுள்ள சிறப்பான அச்சத்தோடு கூடிய அன்பு வணக்கத்தைக் குறித்தற்கு. வாழ்த்து என்னும் சொல்லின்று வழுத்து (வ.ஸ்துதி); என்னும் சொல் திரிக்கப்பட்டது.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ரென்று. (குறள்.1317);.

என்னும் திருக்குறளில், வழுத்தினாள் என்னுஞ் சொல்லை வாழ்த்தினாள் என்னும் பொருளில் திருவள்ளுவர் ஆண்டிருப்பினும், அதைப் பாவலன் உரிமை (poetic licence); யென்றே அமைத்தல் வேண்டும்.

கடவுளை வழுத்தும் சிறப்பான கலிப்பா வகைகள் தேவபாணியெனப்படும். ஆரியர் தமிழகம் வந்தபின்

     “வருணப் பூதர் நால்வகைப் பாணியும்” (சிலப்.6,35-6); எனச் சிறுதெய்வ வழுத்தும் தேவபாணியெனப்பட்டமையால், முத்தொழில் புரிவோன் என்னுங் கொள்கைபற்றிக் கடவுளையொத்த சிவன் அல்லது திருமால் வழுத்துகள் பெருந்தேவபாணியெனப்பட்டன. – தேவநேயம். 13.78-79.

வாழ்த்தெடு-த்தல்

வாழ்த்தெடு-த்தல் vāḻtteḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. பரவுதல்; to praise.

     “கரிசங்கம்… யாதென்று வாழ்த்தெடுப்பேன்” (குலோத். கோ. 321);.

     [வாழ்த்து + எடு-,]

வாழ்நர்

வாழ்நர் vāḻnar, பெ.(n.)

   வாழ்வோர்; inhabitants, residents.

     “தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்” (புறநா.9);.

     [வாழும் → வாழுமர் → வாழுநர்]

வாழ்நாள்

வாழ்நாள் vāḻnāḷ, பெ.(n.)

   ஆயுட்காலம்; lifetime.

     “வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டலம்” (நாலடி.22);.

     [வாழ் + நாள்]

வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்

மக்களின் மண்ணுலக வாழ்நாட் பேரெல்லை வரவரக் குறைந்து, இன்று நூறாண்டாகக் கொள்ளப்படுகின்றது.

     “மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லை” என்பது கபிலரகவல். ஒருவர் தாம் நினைத்தவுடன் எதிர்வந்து நிற்கும் உறவினரையோ நண்பரையோ பார்த்து, உங்கட்கு அகவை நூறு (நூறாண்டு); என்பது உலக வழக்கு.

     ‘மக்கள் நூறாண்டு வாழ்க்கை’ என்று ஒரு நூலும் மறைமலையடிகள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

     “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்னும் உண்மையினாலும், பிள்ளை பிறந்து ஓராண் டிருப்பதும் உறுதியன்மையாலும், கருவிலேயே இறந்து சாப்பிள்ளையும் வெளிப்படுவதனாலும், கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு, முக்கால் நூற்றாண்டு, நூற்றாண்டு முதலிய பல்லாண்டு வாழ்வுகள் மட்டுமின்றி, பிறந்த நாளும் ஆண்டு நிறைவு நாட்களும் பெரும்பாலும் செல்வப் பெற்றோரால் அல்லது உற்றோராற் கொண்டாடப் படுகின்றன.

குழவியோ பிள்ளையோ இளந்தையரோ வளர்ச்சி முற்றிய ஆளோ சேதமின்றிக் காக்கப்பட்டு வந்தமைபற்றி, இறைவனுக்கு நன்றியொடு காணிக்கை செலுத்துவதும், இயன்றளவு பணஞ் செலவிட்டு உற்றார் உறவினருடன் உண்டாடி மகிழ்வதும், இக் கொண்டாட்டங்களின் நோக்கமாகும்.

அரசன் அல்லது அரசி பிறந்தநாள் ஆட்டை விழா, நாண் மங்கலம் என்றும், வெள்ளணி விழா என்றும் சொல்லப்பெறும்.

மேனாடுகளில் தோன்றிய கால் நூற்றாண்டு விழா (Silver Jubilee); வெள்ளிவிழா என்றும், அரை நூற்றாண்டு விழா பொன் விழா (Golden

 Jubilee); எனப்படும். விகத்தோரியா (Victoria); அரசியார் ஆட்சியின் அறுபான் ஆட்டை விழா 1987 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. வயிர விழாவை மணிவிழா என்றுங் கூறலாம்.

அறுபது நாழிகை ஒரு நாளென்றும், அறுபது நாள் ஒரு பெரும்பொழுது என்றும் காலக் கணிப்புண்மையும்

     ‘அறுபதிற்கு மேற் கிறுகிறுப்பு’ என்னும் கீழ்நாட்டுக் கொள்கையும், வலுவிறக்கத் (Climacteric); தொடக்கம் அறுபதாமாண் டென்னும், மேனாட்டுக் கொள்கையும் கி.மு.57-ல் தொடங்கிய விக்கிரம சகாத்தம் என்னும் அறுபானாண்டு மானத்திற்கும், அறுபானாட்டை விழாவிற்கும் கரணியமா யிருந்திருக்கலாம்.

முக்கால் நூற்றாண்டிற்கும் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட எண்பான் ஆட்டை விழாவைக் கதிரிய விழா (Radium Jubilee); என்னலாம்.

நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழாவை அருட்கதிர் விழா எனல் தகும். இரசிய தேசச் சாக்சியா நாட்டு சிராலி மிசிலிமோவ் (Shirali Mislimov); என்பவர் 168 ஆண்டுகளும் அவருடைய துணைவியார் பக்கு தாழி (Baku Tadzhi); என்பார் 107 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.- தேவநேயம்.

   13. பக்.81-82.

வாழ்னாதி

 வாழ்னாதி vāḻṉāti, பெ.(n.)

   தூதுவளை; a thorny climber.

வாழ்மகி

 வாழ்மகி vāḻmagi, பெ.(n.)

   புண்ணிய வரசு; holy tree, ficus religiosa.

     [வாழ் + மகி]

வாழ்மடந்தை

 வாழ்மடந்தை vāḻmaḍandai, பெ.(n.)

   வைப்பரிதாரம்; a prepared orpiment.

     [வாழ் + மடந்தை]

வாழ்முதல்

வாழ்முதல் vāḻmudal, பெ.(n.)

   கடவுள் (வாழ்வுக்கு முதற்காரணன்);; God, as the source or first cause of existence.

     “மற்றடி யேன்றன்னைத் தாங்கு நரில்லை யென் வாழ் முதலே” (திருவாச. 6,23);.

     [வாழ் + முதல்]

வாழ்மூலம்பாலி

வாழ்மூலம்பாலி vāḻmūlambāli, பெ.(n.)

   புத்தான் பவளம்; one of 120 kinds of natural substances in the tamil medical science.

     [வாழ் + மூலம் + பாலி]

வாழ்வரசி

 வாழ்வரசி vāḻvarasi, பெ.(n.)

வாழ்கிறவள் (இ.வ.); பார்க்க;see {}.

     [வாழ்வு + அரசி]

     ‘மனைக் கிழத்தியை வாழ்வரசி என்பது நெல்லை நாட்டு வழக்கு’ (த. தி. முன். vi);

வாழ்வாடிச்சி

 வாழ்வாடிச்சி vāḻvāṭicci, பெ.(n.)

வாழ்கிறவள் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வாழ்வு + ஆடு → வாழ்வாடு → வாழ்வாடிச்சி]

வாழ்வாட்டி

 வாழ்வாட்டி vāḻvāṭṭi, பெ.(n.)

வாழ்கிறவள் (சங்.அக.); பார்க்க;see {}.

     [வாழ்வு + ஆள் → ஆட்டி]

வாழ்வி-த்தல்

வாழ்வி-த்தல் vāḻvittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. வாழ வைத்தல்; to cause or help one to live.

     “வாழ்விப்பா னெண்ணமோ” (அஷ்டப். நூற்றெட். 47);.

   2. முறைமன்றம் மூலமாகச் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல் (நெல்லை.);;     [வாழ் → வாழ்வி]

வாழ்வினை

 வாழ்வினை vāḻviṉai, பெ.(n.)

   ஆதனால் (ஆன்மா); அடையப்பெறும் நயன்மை முதலான ஐவகைப்பேறு; objectives of human pursuit.

     “ஊழ்வினையும் வாழ்வினையு மோதுங் குருகையர்கோன்…. வேதத்தியல்” (திவ். திருவாய். தனியன்);.

வாழ்விப்பு

 வாழ்விப்பு vāḻvippu, பெ.(n.)

   முறைமன்றம் மூலமாகச் சொத்தை உரியவனிடம் ஒப்படைக்கை;     [வாழ்வி → வாழ்விப்பு]

வாழ்விழ-த்தல்

வாழ்விழ-த்தல் vāḻviḻttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கைம்பெண்ணாதல்; to be widowed.

   2. மனைவியை இழத்தல் (இ.வ.);; to become a widower.

     [வாழ்வு + இழ-,]

வாழ்விழந்தவள்

 வாழ்விழந்தவள் vāḻviḻndavaḷ, பெ.(n.)

   அறுதலி (யாழ்.அக.);; widow.

மறுவ. கைம்பெண்

     [வாழ்வு + இழந்தவள்]

வாழ்வு

வாழ்வு vāḻvu, பெ.(n.)

   1. நல்வாழ்க்கை; prosperity, happiness, felicity, happy life.

     “என்னிதன் மேலவட் கெய்தும் வாழ் வென்றாள்” (கம்பரா. மந்தரை. 49);.

   2. பிழைப்பு; livelihood, living, career.

     “வாழ்வின் வரை பாய்த னன்று” (நாலடி. 369);.

   3. வாழ்க்கைச் செலவுக்காக விடப்படும் இறையிலி நிலம்; endowment of land for maintenance.

     “மன்னிங்கு வாழ்வு தருதும்” (சீவக. 2347);.

   4. உறை (பொரு.நி.);; residing.

   5. உறைவிடம்; residence.

     “மதியொன்ற வுதைத்தவர் வாழ்வு” (தேவா. 276, 2);.

   6. ஊர் (பொரு.நி.);; town.

   7. உயர்ந்த பதவி; high state or position.

     “கொள்ளேன் புரந்தான் மாலயன் வாழ்வு” (திருவாச. 6, 5);.

   8. செல்வம்; wealth.

     “ஏத்தி வந்தார்க்கு வந்தீயும் வாழ்வு” (பு. வெ. 4, 12);.

   9. முறைமை (யாழ்.அக.);; course, system.

     ‘வாழ்வும் சிலகாலம்;

தாழ்வும் சிலகாலம்’ (பழ.);

     ‘வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளப்படாது’ (பழ.);

     [வாழ் → வாழ்வு]

வாழ்வுதாழ்வு

 வாழ்வுதாழ்வு vāḻvutāḻvu, பெ.(n.)

   ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் செல்வ நிலையும் வறுமை நிலையும்; prosperity and adversity.

     [வாழ்வு + தாழ்வு]

வாழ்வுரிமை

 வாழ்வுரிமை vāḻvurimai, பெ. (n.)

வாழ்வதற் கான அடிப்படை மாந்தவுரிமை

 fundamental right to live.

     [வாழ்வு+உரிமை]

வாவனாற்றி

வாவனாற்றி vāvaṉāṟṟi, பெ.(n.)

   வாவன் ஞாற்று (யாப். வி.பக்.502);; a kind of verse.

     [வாவல் + நால்-]

வாவன்ஞாற்று

 வாவன்ஞாற்று vāvaṉñāṟṟu, பெ.(n.)

   சித்திரப்பா வகை (பிங்.);; a verse in which the words or letters are fancifully arranged.

வாவயம்

 வாவயம் vāvayam, பெ.(n.)

   துளசி; sacred basil.

வாவரசி

 வாவரசி vāvarasi, பெ.(n.)

   வாழ்வரசி; married woman.

     ‘அவள் வாவரசியாகப் பல்லாண்டு வாழ, வாழ்த்துகிறேன்.

     [வாழ்வரசி → வாவரசி]

வாவரியுரி

 வாவரியுரி vāvariyuri, பெ.(n.)

   கிளியூறற் பட்டை (சங்.அக.);; a medicinal bark.

வாவல்

வாவல்1 vāval, பெ.(n.)

   1. தாண்டுகை (பிங்.);; jumping over.

   2. கூத்து (பொரு.நி.);; dance.

 வாவல்2 vāval, பெ.(n.)

   1. வெளவால்; bat.

     “விளவினை வாவல் குறுகா” (நாலடி, 261);.

   ம. வாவல்;   க. பாவலி;   குட. பாபாக்கி;   து. பாவலி;   குவி. பாப்ல;கொலா. வெலபெ.

 வாவல்3 vāval, பெ.(n.)

   1. பழுப்பு நிறமுள்ளதும் 2 அடி நீளம் வளர்வதுமான கடல் மீன் வகை; black pomfret brown attaining 2 ft. in length.

     [வாவு → வாவல்]

 வாவல்4 vāval, பெ.(n.)

   வயா (பொரு.நி.);; great desire languor during pregnancy.

     [வவ்வு → வாவு → வாவல். (மு.த.பக்.23);]

வாவி

வாவி vāvi, பெ.(n.)

   1. நீர் நிலை (பிங்.);; tank, reservoir of water.

     “மன்னு தண்பொழிலும் வாவியும்” (திவ். பெரியதி.2,3,10);.

   2. நடைக் கிணறு; well with a flight of steps down to the water.

   3. ஆற்றிலோடை; stream of water running in a river bed.

     “வண்டார் குவளைய வாவியும்” (சீவக. 337.);.

வாவிப்புள்

 வாவிப்புள் vāvippuḷ, பெ.(n.)

   எகினம் (அன்னம்); (இலக்.அக.);; swan.

     [வாவி + புள்]

வாவியோகம்

வாவியோகம் vāviyōkam, பெ.(n.)

   தடாகயோகம் (சாதக சிந். 2036);; an inauspicious {}.

வாவு

வாவு1 vāvudal,    5 செ.கு.வி. (v.i.)

   தாண்டுதல்; to jump over, gallop, leap.

     “குன்றிடை வாவுறு கோளரி போல” (கம்பரா.பஞ்சசே, 63);.

 வாவு2 vāvu, பெ.(n.)

   1. காருவா; the new moon day.

   2. வெள்ளுவா; the full moon day.

   3. விடுமுறை நாள்; holidays, school holiday, vocation, as given especially on the new moon and the full moon days.

     [உவவு → வாவு]

வாவுக்காசு

 வாவுக்காசு vāvukkācu, பெ.(n.)

   சிற்றூர்ப் பள்ளிக் கூடங்களில் வாவு நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்க்கு உதவும் பணம்; holidays gift of coin of small value presented by the pupil to the teacher on the new moon and full moon day in village schools.

     [உவவு → வாவு → காசு]

வாவுடுகள்

 வாவுடுகள் vāvuḍugaḷ, பெ. (n.)

தமிழகத்தில் பாவைக் கூத்து கலைக்கு உரியவராகக்

   கூறப்படுகின்ற ஒரு பிரிவினர்; a team of people who dance the “dance of Lakshmi” traditionally in Tamilnādu.

     [வரவிடு-வாவு+கள்]

வாவுத்தன்

 வாவுத்தன் vāvuttaṉ, பெ.(n.)

   தோணியின் முன்பக்கம் (வின்.);; prow of a vessel.

வாவுமுறை

 வாவுமுறை vāvumuṟai, பெ.(n.)

   விடுமுறை(இ.வ.);; vacation.

     [வாவு + முறை]

வாவொட்டான்

 வாவொட்டான் vāvoṭṭāṉ, பெ.(n.)

   கொட்டைப் பாக்கு; areca nut.

வி

வி1 vi, பெ.(n.)

   வகர மெய்யும் இகரவுயிரும் சேர்ந்தியைந்து பிறக்கும் எழுத்து (வ் + இ);; the comound of வ் and இ.

 வி2 vi, பெ.(n.)

   1. தொழிற்பெயர் விகுதி; ending of the verbal noun.

   2. பிறவினை விகுதி (நன். 138);; suffix indicating form of a causative verb.

 வி3 vi, பெ.(n.)

   1. விசும்பு (யாழ்.அக.);; heaven.

   2. பறவை (இலக்.அக.);; bird.

   3. காற்று (யாழ்.அக.);; wind.

   4. கண் (யாழ்.அக.);; eye.

   5. திசை (யாழ்.அக.);; direction.

   6. அழகு (தக்கயாகப். 506, உரை);; beauty.

   7. வேறாக; to separate.

     [விள் → வி] (வ.மொ.வ.316);

 வி4 vi, இடைச்சொல். (part.)

   இன்மை, எதிரிடை, மாறுபாடு, மிகுதி முதலிய பொருளுணர்த்தும் ஒரு முன்னொட்டு; prefix signifying privation, change, abundance, etc.

     “விராகம், விசயம், விலட்சணம்” (இலக். கொத். 100);.

விகண்டி

விகண்டி1 vigaṇṭittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. குணக்காய்ப் பேசுதல் (யாழ்ப்.);; to raise frivolous or fallacious objections.

   2. மறுத்துரைத்தல் (வின்.);; to refute.

     [விதண்டை → விகண்டை → விகண்டி-,]

 விகண்டி2 vigaṇṭittal,    11 செ.கு.வி. (v.i.)

   வேறுபடுதல் (யாழ்.அக.);; to differ.

     [விதண்டை → விகண்டை → விகண்டி-,]

விகண்டிதம்

விகண்டிதம் vigaṇṭidam, பெ.(n.)

   1. பிரிவு (யாழ்.அக.);; division.

   2. வேறுபாடு (யாழ்.அக.);; difference.

   3. கண்டிப்பின்மை (சங்.அக.);; lack of strictness.

     [விதண்டை → விகண்டை → விகண்டி → விகண்டிதம்.]

விகண்டை

விகண்டை1 vigaṇṭai, பெ.(n.)

   1. விதண்டை; frivolous or fallacious objection.

   2. எதிர்ப்பு (வின்.);; refutation.

   3. கெட்ட எண்ணம் (யாழ்.அக.);; wicked thought.

     [விதண்டை → விகண்டை]

 விகண்டை2 vigaṇṭai, பெ.(n.)

   1. பகைமை; hostility.

   2. மனவுறுதி (யாழ்.அக.);; absence of attachment, firmness.

     [வெகுள் → விகண்டை.]

விகப்பலகை

 விகப்பலகை vigappalagai, பெ. (n.)

   கூத்தரங்கில், தேராகக் கருதப்படும் பலகை; wooden log considered as car in dancing theatre.

     [விசி-விசு+பலகை]

விகவெனல்

 விகவெனல் vigaveṉal, பெ.(n.)

   விரைந்து செல்லுதற் குறிப்பு; expr., of swift movement.

     ‘விகவென்று வந்தான்’ (இ.வ.);.

விகாய்

 விகாய் vikāy, பெ.(n.)

   ஒரு மரம் (சங்.அக.);; a tree.

     [ஒருகா. உகாய் → விகாய்]

 விகாய் vikāy, பெ.(n.)

திறவுகோல், சாவி, key.

க. பீகாய்

     [விழ்க்கை-விழ்கை+வீகாய்+திரிபு]

விகு-த்தல்

விகு-த்தல் vigu- 11 செ.கு.வி. (v.i.)

   செருக்காதல்; to be tight, stiff or hardened.

     “வயிறு வில்லைப்போல விகுத்துக் கொள்ளல்” (சீவரட். 118);.

 ma. {}, Ko. vigu;

 To. Pixy;

 Ka. bigi;

 Tu. bigi, bigu, biguta;

 Te. bigi, bigutu, biguvu;

 Kui. Bija.

     [மிகு → விகு-,]

விகுணம்

 விகுணம் viguṇam, பெ.(n.)

   குணக்கேடு (யாழ்.அக.);; bad nature.

விகுணி

விகுணி viguṇi, பெ.(n.)

   1. குணங்கெட்ட- வன்-வள்-து (சங்.அக.);; person or thing destitute of merit.

   2. கள் (திவா.);; intoxicating drink.

விகுரம்

 விகுரம் viguram, பெ.(n.)

   வெள்ளெருக்கு (சங்.அக.);; white madar.

விக்கல்

விக்கல் vikkal, பெ.(n.)

   தொண்டை விக்குகை; hiccup.

     “நெஞ்சே விக்கல் வராது கண்டாய்” (அருட்பா, vi, நெஞ்சொடுகிள. 10);.

     “உண்ணுநீர் விக்கினானென்றேனா” (கலித். 51);.

     “நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்” (குறள், 335);.

     [இக்(கு); → விக்கு → விக்குள் → விக்கல்.]

   தெ. வெக்கில்லு;   க. பிக்கலு (b);;   ம. எக்கில், விக்குக;   து. பிக்குனி;   குய். வெக;   குர். பெகனா; TO. pik;

 Ma. vikkuka;

 To. pik, piky;

 Ka. bikku;

 Tu. Bikkuni;

 Te. vekku, vegacu, vekkili;

 Kui.

 veka;

 Kur. {}, malt. bege.

 E. hicket, hiccup, hiccough;

 Skt. ஹிக்கா.

இது ஒலிக்குறிப்புச் சொல்லாயினும், ஆரிய இனத்தினும் தமிழ் இனம் முந்தியதாகலின், இது தமிழ்ச் சொல்லேயெனத் தெளிக (வ.மொ.வ.87);.

விக்கல்மாந்தம்

 விக்கல்மாந்தம் vikkalmāndam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு விக்கலுடன் வரும் ஒருவகை மாந்த நோய்; a kind of convulsion attended with hiccup, common among children.

     [விக்கல் + மாந்தம்]

விக்கிள்

 விக்கிள் vikkiḷ, பெ.(n.)

விக்கல் (யாழ்.அக.); பார்க்க;see vikkal.

     [விக்கல் → விக்கிள்]

விக்கு

விக்கு1 vikku-,    5 செ.கு.வி. (v.i.)

   1. விக்கலெடுத்தல்; to hiccup.

   2. விம்மி நிறைதல்; to be superabundant, chokeful.

     “வயல் விக்கின பொதியும் கதிருமா யிருக்கிறது” (நாஞ்.);.

     [இக்கு → விக்கு]

 விக்கு2 vikku-,    5 செ.குன்றாவி. (v.t.)

   விக்கி வெளித்தள்ளுதல்; to hiccup, bring out with interruptions of hiccups.

     “உண்ணுநீர் விக்கினா னென்றேனா” (கலித். 51);.

க. பிக்கு.

     [இக்கு → விக்கு]

 விக்கு3 vikku, பெ.(n.)

விக்குள் (நிகண்டு.311); பார்க்க;see {}.

     [இக்கு → விக்கு]

விக்குள்

விக்குள் vikkuḷ, பெ.(n.)

   விக்கல்; hiccup.

     “நாச்செற்று விக்குண்மேல் வாராமுன்” (குறள், 335);.

க. பிக்குள்.

     [விக்கல் → விக்குள்]

விங்களம்

விங்களம் viṅgaḷam, பெ.(n.)

   1. குறைவு; deficiency, deformity, imperfection.

   2. திரிவு (வின்.);; difference, diversity.

   3. நட்பின்மை (வின்.);; want of cordiality, coolness in friendship.

   4. இரண்டகம்; guile, deception, treachery, tergiversation.

     “இவ்விங்கள மேன் செய்தீர்” (தனிப்பா. i, 18, 30);.

   5. உதவி புரியப் பின் வாங்குகை (வின்.);; with holding proper aid.

   6. களிப்பு (வின்.);; adulteration, alloy.

   தெ. விங்களமு;க. விங்கட.

     [பங்கு → பங்கம் → பிங்கம் → பிங்களம் → விங்களம்.]

விங்களி-த்தல்

விங்களி-த்தல் viṅgaḷittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. நட்பில் மனம் வேறுபடுதல்; to be wanting in cordiality or co-operation.

   2. கீழறுப்பாய் நடத்தல்; to be treacherous, deceptive, to tergiversate.

   3. நிலையற்றிருத்தல்; to be unsteady.

   4. பிரித்தல் (வின்.);; to sift, separate.

     [விங்களம் → விங்களி-,]

விங்களிப்பு

 விங்களிப்பு viṅgaḷippu, பெ.(n.)

விங்களம் பார்க்க;see {}.

     [விங்களி → விங்களிப்பு]

விங்கு

விங்கு1 viṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   மிகுதல்; to be abundant.

     “திங்கள் ………….. ஒளி விங்கி” (தேவா. 1157,3);.

     [வீங்கு → விங்கு]

 விங்கு2 viṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   துளைத்தல் (இலக்.அக.);; to drill, pierce.

விசகடிகை

விசகடிகை visagaḍigai, பெ. (n.)

   விண்மீன்களால் ஏற்படும் தீய காலம் (சோதிடம்); (விதான. குணகல. 25, உரை.);; inauspicious period in the duration of a naksatra.

விசகலி

விசகலி visagali, பெ.(n.)

   மல்லிகை (நாமதீப. 308);; jasmine.

விசகிருமிநியாயம்

 விசகிருமிநியாயம் visagiruminiyāyam, பெ. (n.)

நஞ்சி(விசத்தி);லுண்டாகும் புழுப்போல் தீயதிற் பழகுவோர்க்கு அது தீங்காகத் தோன்றாமை குறிக்கும் நெறி;{}

 of the worm bred in poison, illustrating the principle that an evil to which a person in accustomed will not appear to him as an evil.

விசக்கடி

விசக்கடி visakkaḍi, பெ. (n.)

   1. நஞ்சு விலங்குகளால் தீண்டப்படுகை; poisonous bite, bite of venomous reptiles or animals

   2. பெருந்துன்பம்; serious trouble.

     “எனக்கு ஒருபெரிய விஷக்கடியாயிற்றே”

த.வ. நச்சுக்கடி

விசக்கண்

 விசக்கண் visakkaṇ, பெ. (n.)

   தீமை பயக்கும் பார்வையுள்ள கண்; evil eye.

த.வ. நச்சுக்கண்

     [Skt. {} → த. விசம்]

விசக்கல்

விசக்கல் visakkal, பெ. (n.)

   1. விசத்தையெடுப்பதாகக் கருதப்படுங்கல் (வின்.);; a stone supposd to absorb poison.

   2. காலில் பட்டால் பட்ட இடத்தில் விசமுண்டாக்கும் கல்; poisonous stone that causes pain when it priks the foot.

த.வ. நச்சுக்கல்

     [Skt. {} → த. விசம்]

விசக்காணம்

விசக்காணம் visakkāṇam, பெ.(n.)

   நாட்டுப் புற விளைவில் ஊர்த்தலைவற்குரிய பங்கு (S.I.I.ii.352);; share if the chief of head man in the produce of a village.

     [விழ → விச + காணம்]

விசக்காய்ச்சல்

விசக்காய்ச்சல் visakkāyssal, பெ. (n.)

   1. இசிவு சுரம்; enteric fever, typhoid.

   2. சுரநோய்வகை (வின்.);; pestilential fever.

த.வ. நச்சுக்காய்ச்சல்

     [Skt. Visa → த. விசம்]

விசக்காற்று

விசக்காற்று visakkāṟṟu, பெ. (n.)

   1. நச்சுத்தன்மையுள்ள காற்று; poisonous wind.

   2. வாடைக் காற்று; northerly wind.

த.வ. நச்சுக்காற்று

விசத்தம்

 விசத்தம் visattam, பெ.(n.)

   புடல் (மலை.);; snake gourd.

விசத்துரு

 விசத்துரு visatturu, பெ.(n.)

   அடப்பங்கொடி (மலை.);; hare-leaf.

     [விடத்துரு → விசத்துரு]

விசம்

விசம் visam, பெ.(n.)

   1. வீதம்; rate.

     “மார்கழித் திருவாதிரைக்கும் வைகாசி விசாகத்துக்கும் திருவிழாவிசம் ஒரு ஆட்டைக்கு நெல்” (S.I.I.iii, 314);.

   2. செலவு (S.I.I.V.307);; expense.

   3. படித்தரம் (நாஞ்.);; allowance;batta.

     [விசை → விசம்.]

விசயன்கடுக்காய்

விசயன்கடுக்காய் visayaṉkaḍukkāy, பெ.(n.)

   கடுக்காய் வகை (பதார்த்த. 964);; species of chebulic myrobalan.

விசயம்

விசயம்1 visayam, பெ.(n.)

   1. கருப்பஞ்சாறு; juice of the sugarcane.

     “விசயமடுஉம் புகைசூழாலை தொறும்” (பெரும்பாண். 261);.

   2. கருப்புக்கட்டி; jaggery.

     “விசயங் கொழித்த பூழி யன்ன” (மலைபடு. 444);.

   3. பாகு; treacle.

     “அயிருருப் புற்ற வாடமை விசயம்” (மதுரைக். 625);.

   தெ. வெட்ச, வெட்சு;   க., து. விசி, விசில், விக;ம. வெய்கில்.

     [விசை → விசையம்.]

விசரம்

விசரம் visaram, பெ.(n.)

   1. இரும்பிலி என்னும் செடிவகை (L.);; box leaved satin ebony, supposed to be used in alchemy to convert iron into gold.

   2. முதிரை என்னும் மரவகை (வின்.);; East Indian satin wood, m.tr., chloroxylon swietenia.

விசரி

 விசரி visari, பெ.(n.)

   தும்பை (சங்.அக.);; white dead nettle.

விசலம்

 விசலம் visalam, பெ.(n.)

   தளிர் (யாழ்.அக.);; sprout.

விசலி

விசலி visali, பெ.(n.)

   படர் கொடிவகை; gulancha.

     “வீழ் என்பது ஆல்….. சீந்தில்கட் குரித்து” (நன். 387, மயிலை);.

மறுவ. சீந்தில்.

விசலிகை

 விசலிகை visaligai, பெ.(n.)

   கொடிமல்லிகை (பிங்.);; malabar Jasmine.

விசல்லியகரணி

 விசல்லியகரணி visalliyagaraṇi, பெ.(n.)

   போர்க் கருவிகளினால் ஏற்பட்ட புண்ணை ஆற்றும் மருந்து (திவா.);; medicament which heals wounds, caused by weapons.

விசவல்லி

 விசவல்லி visavalli, பெ.(n.)

   கீழாநெல்லி (மலை.);; a small plant with slender green main branches.

விசாக்கோட்டி

 விசாக்கோட்டி vicākāṭṭi, பெ.(n.)

   வயா நடுக்கம் (இ.வ.);; morning sickness and morbid longings of a pregnant woman.

விசாதி

விசாதி vicāti, பெ.(n.)

   நோய்; disease.

     “கொன்றுயிருண்ணும் விசாதி பசிபகை தீயன வெல்லாம்” (திவ். திருவாய். 5, 2, 6);.

     ‘விசாதி’ (உ.வ.);.

 Skt. வியாதி.

விசாரத்தகடு

 விசாரத்தகடு vicārattagaḍu, பெ.(n.)

   இரும்புவளையம் (வின்.);; iron hoop.

விசாலம்

விசாலம் vicālam, பெ.(n.)

   1. பேய்க் கொம்மட்டி (மலை.);; colocynth.

   2. கடம்பம்1,1 (அக.நி.);; common cadamba.

   3. வெண் கடம்பு (திவா.);; seaside, Indian oak.

   4. பறவைவகை (யாழ்.அக.);; a kind of bird.

   5. மான்வகை (யாழ்.அக.);; a kind of deer.

   6. ஒரு நாடு (அபி.சிந்.);; a country.

விசாலி-த்தல்

விசாலி-த்தல் vicālittal,    11 செ.கு.வி. (v.i.)

   விரிவு பெறுதல்; to extend, spread out, to become wide.

     ‘படித்தால் அறிவு விசாலிக்கும்’.

     [விசாலம் → விசாலி-,]

விசி

விசி1 visittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   இறுகக் கட்டுதல்; to fasten, bind, tie tightly.

     “திண்வார் விசித்த முழவு’ (மலைபடு. 3);.

     [விசி → விசி-,]

 விசி2 visittal,    4 செ.கு.வி. (v.i.)

   விம்முதல்; to become swollen, over- stretched, as the abdomen from over- eating.

     “விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி” (புறநா. 61);.

     [விசி → விசி-,]

 விசி3 visidal,    4 செ.குன்றாவி. (v.t.)

விசி1 பார்க்க;see {}.

     “பசும்பொற் பலவார்

விசிந்து பிணியுறீஇ…… ஏற்றுரிபோர்த்த…… கொற்றமுரசம்” (பெருங். இலாவாண. 2, 26);.

 விசி4 visi, பெ. (n.)

   1. கட்டு; fastening, tie.

     “விசிவீங் கின்னியங் கடுப்ப” (பெரும்பாண். 56);.

   2. பறையிறுக்கும் வார் (யாழ்.அக.);; leather strap for drums.

   3. விசிப்பலகை (திவா.);; bench.

   4. கட்டில் (யாழ்.அக.);; cot.

தெ. பிசி.

 விசி5 visi, பெ.(n.)

   தாமரைத்தண்டு (பிங்.);; lotus stalk.

 விசி6 visi, பெ.(n.)

   அலை (யாழ்.அக.);; wave.

விசிகக்கோல்

விசிகக்கோல் visigagāl, பெ.(n.)

   அம்பு; arrow.

     “விசிகக்கோல் செல்வன சத கோடிகள்” (கம்பரா. மூலபல. 104);.

     [விசிகம் + கோல்]

விசிகிலம்

 விசிகிலம் visigilam, பெ.(n.)

   மல்லிகை (யாழ்.அக.);; jasmine.

விசிகை

விசிகை visigai, பெ.(n.)

   1. முலைக்கச்சு (பிங்.);; bodice.

   2. கருத்து (யாழ்.அக.);; thought.

     [விசி → விசிகை]

விசித்தி

 விசித்தி visitti, பெ.(n.)

   கடுகு (மலை.);; mustard.

விசித்துக்கட்டு-தல்

விசித்துக்கட்டு-தல் visiddukkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   இறுகக் கட்டுதல்; to bind tightly.

     [விசித்து + கட்டு]

விசிப்பலகை

விசிப்பலகை visippalagai, பெ.(n.)

   ஊஞ்சற்பலகை (கொ.வ.);; a board thick plank used as a swing etc.

தெ. விசிப்பலக.

     [விசி3 + பலகை]

விசிப்பு

விசிப்பு visippu, பெ.(n.)

விசிப்பலகை (நாமதீப. 470); பார்க்க;see {}.

     [விசி → விசிப்பு]

விசிமந்தம்

 விசிமந்தம் visimandam, பெ.(n.)

   வேம்பு (மலை.);; neem.

விசியுழி

விசியுழி visiyuḻi, பெ.(n.)

   உண்மையில் நோக்கமின்றி வெற்றியே விழைவோன் செய்யும் சொற்போர்வகை (சங்கற்ப. பாயி. 2, உரை);; a form of polemical discussion, the sole aim of which is victory over one’s opponent and not the ascertainment of truth.

விசிரகந்தி

 விசிரகந்தி visiragandi, பெ.(n.)

   பொன்னரிதாரம் (யாழ். அக.);; yellow orpiment.

விசிறி

விசிறி visiṟi, பெ.(n.)

   1. உடம்பு முதலியவற்றிற் படும்படி காற்றை அசைவிக்குங் கருவி (திவா.);; fan.

   2. உயிர்மெய்களில் இகர ஈகாரங்களின் குறியாக எழுதப்படும் மேல் வளையுங் கோடு; curves appended to the consonants as symbols of vowels i and {}.

   3. செடிவகை (வின்.);; box-leaved ivory wood, m.sh., chretia buxita.

   4. வண்ணக் கோடுள்ள சீலை வகை (இ.வ);; a saree with coloured stripes.

     [விசு → விசிறு → விசிறி. (மு.தா.பக்.68);]

வெயில் கடுமையாக உள்ள கோடை காலத்தில் செயற்கை முறையில் காற்றோட்டத்தையுண்டாக்கிக் கொள்ளுவதற்குப் பயன்படும் எளிய கருவி. இயல்பாக விசிறி இருவகைப்படும். மடிக்க முடியாதவாறு எப்போதும் விரிந்த நிலையிலேயே இருப்பது ஒருவகை. தேவையான போது மட்டும் விரித்துப் பயன்படுத்திக் கொண்டு தேவையற்ற போது மடித்து வைத்துக் கொள்ளக்கூடியது, இரண்டாம் வகை. பனையோலை, தென்னையோலை, தாள் அட்டை, மூங்கில் சிம்புகள், மருப்பு, சந்தனக் கட்டை, பட்டுப் போன்ற துணி, தோல், வெட்டிவேர், மயில் இறகு போன்ற இறகுகள் ஆகிய பல பொருள்கள் விசிறி செய்யப் பயன்படுகின்றன. பலவகையான மின்விசிறிகளும் தற்போது புழக்கத்திலுள்ளன.

     [விசிறு → விசிறி]

விசிறி அடவு

 விசிறி அடவு visiṟiaḍavu, பெ. (n.)

   கும்மியில் இடம் பெறும் ஓர் அடவு; a stepping method in Kummi play.

     [விசிறி+அடவு]

விசிறிகட்டிநட-த்தல்

விசிறிகட்டிநட-த்தல் visiṟigaḍḍinaḍattal,    3 செ.கு.வி.(v.i.)

   1. ஆடிநடத்தல்; to walk with a swinging motion.

   2. கை வீசுதல்; to swing the hands.

விசிறிக்கிளிஞ்சில்

 விசிறிக்கிளிஞ்சில் visiṟikkiḷiñsil, பெ.(n.)

   விசிறி வடிவாகக் காணப்படும் கிளிஞ்சில் வகை; a kind of a bivalve.

மெல்லுடலிகளிலே இரண்டு ஓடுகளுள்ள வனவாகிய தகட்டுச் செவுள் வகுப்பிலே ஒருவகைக்

கிளிஞ்சில் (pecton);. இது கடலில் வாழ்வது. இந்தக் கிளிஞ்சலின் ஓடுகள் வட்டமாகவும், வெளிப்புறத்திலே பழு (rib); போன்ற வரம்புகளும், அவவற்றிற்கு இடையே பள்ளங்களும் மாறி மாறி இரண்டு ஓடுகளும் பொருத்தப் பெற்றிருக்கும். இணைப்பு முனையிலிருந்து ஒட்டின் விளிம்பை நோக்கி ஆரங்கள்போலச் சென்றிருப்பதும், இணைப்பின் முன்னும் பின்னும் ஒடுகள், செவிகள் (ears); என்னும் சிறு நீட்சிகள் பிடிகள் போல இருப்பதும் ஆகிய இயல்புகளால் இந்தக் கிளிஞ்சல்கள் விசிறி போலவே காண்கின்றன. சீப்பு போலவும் இவை காண்பதால் அப்பொருள்படும் பெக்ட்டென் என்னும் பெயர் இவற்றிற்கு இடம் பெற்றுள்ளது.

விசிறிக் கிளிஞ்சலின் ஓடுகள் பெரும்பாலும் சற்றுக் குவிவாக (convex); இருக்கும். இரண்டு ஒடுகளும் இயல்பாக ஒரே சமமாக, ஒரு பொருளும் கண்ணாடியில் காணும் அதன் நிழலும் போல ஒத்திருப்பதில்லை. ஓர் ஒட்டைவிட மற்றொன்று தாழ்வான குவிவாக அல்லது தட்டையாகவே இருக்கலாம். ஒட்டுக்குள்ளிருக்கும் போர்வை மடிப்புக்களின் (mantle folds); விளிம்பிலே உணர் நீட்சிகளும் (tentacles); கண்களும் அமைந்திருக்கும்.

     [விசிறி + கிளிஞ்சல்]

விசிறிக்குருவி

 விசிறிக்குருவி visiṟikkuruvi, பெ.(n.)

   விசிறி போன்ற வாலுடைய குருவி வகை; white-browed fantail, leucocerca albofrontata.

மறுவ. ஈப்பிடிப்பான். இனம் : வெண்புள்ளி

விசிறிக்குருவி வெண்புருவ விசிறிக்குருவி.

     [விசிறி + குருவி]

விசிறிமடிப்பு

 விசிறிமடிப்பு visiṟimaḍippu, பெ.(n.)

   மேற்துண்டில் விசிறிப்போல மடிப்புக்கள் ஒன்றன்மேல் ஒன்று அமையும்படி மடிக்கை; a kind of fan-like narrow folding of washed clothes.

     [விசிறி + மடிப்பு]

விசிறிமுருகு

 விசிறிமுருகு visiṟimurugu, பெ.(n.)

   மேற்காதிலணியும் காதணி வகை (வின்.);; fan-shaped ear-ring of gold, worn on the upper part of the ear.

     [விசிறி + முருகு]

விசிறியெறி-தல்

விசிறியெறி-தல் visiṟiyeṟidal,    2 செ. குன்றாவி.(v.t.)

   கழற்றி வீசுதல்; to cast away, to throw away.

     ‘அவள் வீசியெறிந்தாள்’.

     [விசுறு + எறி – விசிறியெறி-,]

விசிறிவாழை

விசிறிவாழை visiṟivāḻai, பெ.(n.)

   நீர்வாழை; traveller’s palm.

   இது ஒரு வியப்பான மரம்;ஒற்றை விதையிலை நிலைத்திணைகளிலே ஒருவகை வாழைக் குடும்பத்தைச் (musaceae); சேர்ந்த பல பருவ மரம். இதில் இரண்டு இனங்கள் உண்டு. ஒன்று தென் அமெரிக்காவிற்குரியது. மற்றோர் இனம் மடகாசுகர், இரீயூனியன் ஆகிய தீவுகளில் வாழ்வது. இந்த இரண்டாவது இனத்தையே வழிப்போக்கர் மரம் (traveller’s tree); என்பார்கள். நீர் வேட்கையால் வருந்தும் வழிப்போக்கர்கள் இதன் இலையின் அடியில் சேர்ந்திருக்கும் நீரைக் குடித்து நாவறட்சி தவிர்வார்கள், ஆதலின் இம்மரம் இப்பெயர் பெற்றுள்ளது. வாழை மரத்திலே தண்டு போலத் தோன்றும் பாகம் இலைகளின் அடிகள் (leaf bases); ஒன்றையொன்று தழுவல் முறையில் அடுக்கி யிருக்கும் பச்சைத் தூண் போன்ற பாகமாகும். உண்மையான தண்டு, தரையின் கீழே இருக்கும் கிழங்கே ஆகும். இவ்வகை மரத்தின் உண்மையான தண்டு தரைக்குமேலே, தென்னை, பனை முதலியவற்றின் தண்டைப்போலத் தூண்போல நிற்கும் கெட்டியான பாகமே. இந்தத் தண்டு 20-30 அடி உயரம் வளரும். தண்டின் நுனியில் நீண்ட காம்புகள் உள்ள பல மிகப்பெரிய இலைகள் இரண்டு செங்குத்தான வரிசைகளிலே ஒரே தளத்திலே (plane); நெருக்கமான, ஒழுங்கான அடுக்காக அழகாக வளர்ந்திருக்கும். இதனால் மரம் ஒரு பெரிய விசிறிப் போலத் தோன்றும். இவ்விலைகள் வாழை இலையை ஒத்திருக்கும். இலைக்காம்பின் அடிப்பாகம் உறைபோலப் பள்ளமாக இருக்கும். அந்தப் பள்ளங்களில் நீர் சேர்ந்திருக்கும். அது குடிப்பதற்கு ஏற்றது. தாராளமாகப் போதுமான அளவில் கிடைக்கும். கத்தியினால் காம்பின் அடியில் குத்தினால் நீர் வெளியே ஓடிவரும். பூக்கள் மடல் கொத்தாக மேலேயுள்ள இலைகளின் கக்கங்களிலிருந்து உண்டாகும். பூக்காம்பிலைகள் (bracts); படகு வடிவில் இருக்கும்; அவை மிகக் கூராக நுனியில் முடியும். கனி வெடிக்கனி. இம்மரம் அழகுக்காகப் பூங்காக்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

     [விசிறி + வாழை]

விசிறு

விசிறு1 visiṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. விசிறியாற் காற்றெழுப்புதல்; to fan.

   2. வாள் முதலியவற்றை வீசுதல்; to wave to and fro, brandish.

     “நாந்தகம் விசிறி நம்புருடோத்தமன்” (திவ். பெரியாழ். 4,7,4);.

   3. வலை முதலியவற்றை விரித்தெறிதல்; to fling, hurl, cast, as a net.

     “அலைகடல்வாய் மீன்விசிறும்” (திருவாச. 8, 2);.

   4. சுழற்றுதல்; to whirl round.

     “விளங்கனிக் கிளங்கன்று விசிறி”(திவ். பெரியதி. 9, 8, 6);.

   5. சொரிதல்; to pour forth, to sprinkle.

   6. வெளித் தள்ளுதல்; to eject, discharge.

     ‘கிடாரி கருவை விசிறி விட்டது’.

   7. போக்குதல்; to remove.

     “பிறவியுமற விசிறுவர்” (தேவா. 618, 4);.

   8. கை முதலியன வீசுதல்; to swing, as the arms in walking.

     “வேயன தோள்விசிறி” (திவ். பெரியதி. 3, 7, 5);.

   9. உயிர்மெய்களுள் இகர ஈகாரங்களின் குறியாக மேல் வளைவுக் கோடிடுதல்; to append the symbols of i and {} to the consonants.

   தெ. விசரு;   க. பிகடு;ம. விசருக.

     [விசு → விசிறு-,]

 விசிறு2 visiṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விசிறியாற் காற்றடிக்கச் செய்தல்; to fan.

     [விசு → விசிறு-,]

விசிலம்

 விசிலம் visilam, பெ.(n.)

   கஞ்சி (யாழ்.அக.);; gruel.

விசிவு

 விசிவு visivu, பெ. (n.)

விளைந்த கதிர் நெல் போன்றவற்றை அறுவடைக்குப் பின் ஒராள் சுமக்கும் அளவுக்கு ஒருமார் அளவு கயிற்றால் இறுகக்கட்டும் சுமைக்கட்டு,

 a head load of reaped crop.

கள்த்தில் பத்து விசிவு கட்டி வைத்தோம்.

க. பிகவு

     [விசை-விசி-விசிவு]

விசு

 விசு visu, பெ.(n.)

   ஒரு மருந்துச் சரக்கு; a bazzar drug called Indian atees.

மறுவ. அதிவிடயம்.

விசுக்கிடு-தல்

விசுக்கிடு-தல் visukkiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வெறுப்புக்கொள்ளுதல் (யாழ்.அக.);; to become displeased.

   2. மன வருத்தங் கொள்ளுதல் (வின்.);; to be pained at heart.

தெ. விசுகுகொனு, விசுகு, விசுவு.

     [விசுக்கு + இடு-,]

விசுக்கு

விசுக்கு1 visukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விரைந்து கைவீசுதல், விசிறுதல்; to fan.

     ‘விசுக்கு விசுக்கென்று நடக்கிறாள்’ (இ.வ.);.

     [விசு → விசுக்கு → விசுக்கு-, (மு.தா.பக்.68);]

 விசுக்கு2 visukku, பெ.(n.)

   வெறுப்பு; displeasure, dislike.

     ‘அந்தச் சொல்லைக் கேட்கவும் அவனுக்கு விசுக்கு வந்து விட்டது’.

     [சிவிட்கு → விசுக்கு]

விசுக்குணி

 விசுக்குணி visukkuṇi, பெ.(n.)

   சிறியது, சிறுதுண்டு; small, small piece.

மறுவ. விசுக்காணி.

     [பிசுக்கு → விசுக்கு → விசுக்குணி]

விசுக்கெனல்

 விசுக்கெனல் visukkeṉal, பெ.(n.)

   விரைந்து செல்லுதற்குறிப்பு; expr. of quick movement.

     ‘விசுக்கென்று புறப்பட்டு விட்டான்’ (நெல்லை.);.

     [விசுக்கு + என → எனல்]

விசுதம்

விசுதம் visudam, பெ.(n.)

   1. கொடிவகை; snake-gourd.

   2. பேய்ப்புடல்; wild snake- gourd.

மறுவ. புடல்.

விசுப்பலகை

 விசுப்பலகை visuppalagai, பெ.(n.)

விசிப்பலகை பார்க்க;see {}.

     [விசு + பலகை]

விசுமந்தச்சூரணம்

 விசுமந்தச்சூரணம் visumandassūraṇam, பெ. (n.)

   எலுமிச்சையிலை, நாரத்தையிலை, கறிவேப்பிலை முதலியன சேர்த்து இடித்துச் செய்த மருந்துப்பொடி; a relish made of citron leaves, sweet neem and spices.

     [விசுமந்தம் + Skt. {} → த. சூரணம்]

விசுமிகினி

 விசுமிகினி visumigiṉi, பெ.(n.)

   வேம்பு (மலை.);; neem.

விசும்பாளர்

விசும்பாளர் visumbāḷar, பெ.(n.)

   தேவர்; celestials.

     “படைவிடா விசும்பாளரைப் பறித்து” (தக்கயாகப். 352);.

     [விசும்பு + ஆள் + அர்]

விசும்பு

விசும்பு1 visumbu, பெ.(n.)

   1. வானம்; visible heavens, sky.

     “விசும்பு தைவரு வளியும்” (புறநா. 2);.

   2. தேவருலகம் (திவா.);; Svarga;heaven.

     “அங்கண் விசும்பி னமரர்” (நாலடி, 373);.

   3. முகில் (திவா.);; cloud.

     “விசும்பிற் றுளிவீழி னல்லால்” (குறள், 16);.

   4. திசை (பிங்.);; direction.

     [விள் → (விசு); → விசும்பு. (மு.தா.பக்.153);]

 விசும்பு2 visumbudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வெறுப்புடன் விலக்குதல் (வின்.);; to throw away in contempt, to toss aside, to cast away.

   2. கயிறு முதலியவற்றைச் சுண்டியிழுத்தல் (தஞ்சை.);; to draw tight, as a rope.

   3. தேம்பி அழுதல்; to sob, cry.

 விசும்பு3 visumbu, பெ.(n.)

   1. வீம்பு; obstimacy.

     ‘விசும்புக்கு வேட்டையாடு கிறான்’.

   2. செருக்கு (இ.வ.);; pride;arragance.

     [வீம்பு → விசும்பு]

 விசும்பு4 visumbudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மீறுதல் (இ.வ.);; to transgress.

 விசும்பு5 visumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   செருக்குக் கொண்டிருத்தல்; to be proud or haughty.

     ‘மாப்பிள்ளை மிக விசும்புகிறான்’.

விசும்புவில்

விசும்புவில் visumbuvil, பெ.(n.)

   ஒளிவட்டம்; the sphere of celestial luminaries.

     “காமனார் சேமவில்லென விசும்புவில் வெருவு தெய்வமாதர்” (தக்கயாகப். 23);.

     [விசும்பு + வில்]

விசும்பேறு

 விசும்பேறு visumbēṟu, பெ.(n.)

   இடியேறு (இலக்.அக.);; thunder bolt.

     [விசும்பு + ஏறு]

விசும்பேற்று-தல்

விசும்பேற்று-தல் visumbēṟṟudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   மானங்காரணமாக ஒருவனை அலுவலில் முனையச் செய்தல் (நெல்லை.);; to appeal to one’s pride, prestige, etc. and urge one to action.

     [விசும்பு + ஏற்று-,]

விசுளி

 விசுளி visuḷi, பெ.(n.)

   கள் (யாழ்.அக.);; toddy.

விசுவநாக்கரம்

 விசுவநாக்கரம் visuvanākkaram, பெ.(n.)

   சுக்கு (சங்.அக.);; dried ginger.

விசுவநாதசெட்டிவெட்டு

விசுவநாதசெட்டிவெட்டு visuvanātaseṭṭiveṭṭu, பெ.(n.)

   பழைய காசுவகை (பணவிடு. 144);; an old coin probably so named after the person who minted it.

விசுவபேடசம்

 விசுவபேடசம் visuvapēṭasam, பெ.(n.)

   சுக்கு (மலை.);; dried ginger, as a general remedy.

விசுவம்

விசுவம்1 visuvam, பெ.(n.)

   சுக்கு (நாமதீப. 356);; dried ginger.

 விசுவம்2 visuvam, பெ.(n.)

   அதிவிடை என்னும் மருந்துச் செடி; atis.

விசூகை

 விசூகை vicūkai, பெ.(n.)

   தலைச்சுழற்சியை மிகச் செய்யும் நோய்வகை (சங்.அக.);; a disease causing severe dizziness.

விசை

விசை1 visai, பெ.(n.)

   1. வேகம்; haste, speed, impetus.

     “வருவிசைப் புனலைக் கற்சிறை போல” (தொல். பொ. 63);.

   2. நீண்டு சுருங்குந் தன்மை; elasticity, spiring.

   3. விரைவு; force.

   4. எந்திரம்; contrivance, as a trap, mechanism, mechanical instrument, as a lever.

   5. பக்கம்; side.

     “முதற் பிரகாரத்து வடக்கு விசையிற் புறவாயிலே கல்வெட்டு விப்பது” (சோழவமி. 63);.

   6. பற்றுக்கோடு (வின்.);; stay, prop.

   7. மரவகை; a tree.

     “விசைமரக்கிளவியும்” (தொல். எழுத். 282);.

   தெ. வெச;   விசெ;ம. விச.

     [ விசை (மு.தா.பக். 67);]

 விசை2 visaittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. விரைவு பண்ணுதல்; to hasten, to cause to move swifly.

   2. வீசுதல்; to swing.

     “கால்விசைத் தோடி” (திருவாசக. 2, 135);.

   3. துள்ளுதல்; to leap, hop.

     “நறுநெய்க்கடலை விசைப்ப” (புறநா. 120);.

   4. சிதறுதல்; to burst, split.

     “கண்டொறும் விசைத்த கருப்புத் தாளமும்” (கல்லா. 59,16);.

   5. கடுமையாதல்; to be forceful.

     “இரும்பு விசைத் தெறிந்த கூடம்” (பெரும்பாண். 437);.

   6. சினமுறுதல் (வின்.);; to become angry.

 விசை3 visai, பெ.(n.)

   வெற்றி (அரு.நி.);; victory.

 விசை4 visai, பெ.(n.)

   தடவை; turn, time.

     “புழைக்கை ஒருவிசை தடிந்தும்” (கல்லா.13);.

ம. பிராவசியம்.

விசைகொள்(ளு)-தல்

விசைகொள்(ளு)-தல் visaigoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. விரைதல்; to make haste.

   2. நீண்டு சுருங்குந் தன்மையாதல்; to be elastic.

     [விசை + கொள்ளு-தல்]

விசைக்கம்பு

விசைக்கம்பு visaikkambu, பெ.(n.)

   நெய்வார் கருவியிலொன்று (யாழ்.அக.);; a weaver’s instrument.

     [விசை1 + கம்பு1]

விசைக்காற்று

 விசைக்காற்று visaikkāṟṟu, பெ.(n.)

   ஒருவன் விரைந்து செல்லும் வேகத்தால் உண்டாகும் காற்று (யாழ்.அக.);; wind or movement of air caused by a person walking swiftly.

     [விசை + காற்று]

விசைக்கால்

விசைக்கால்1 visaikkāl, பெ.(n.)

விசைக்கம்பு பார்க்க;see {}.

     [விசை + கால்1]

 விசைக்கால்2 visaikkāl, பெ.(n.)

விசைக்காற்று பார்க்க;see {}.

     [விசை + கால்2]

விசைக்கொம்பு

விசைக்கொம்பு visaikkombu, பெ.(n.)

   தாழவளைத்துவிட்டதும் மீண்டும் மேற் கிளம்பும் மரக்கிளை; elastic branch of a tree, which when bent down and released springs back to its original position.

     “ஈசுவரனாகிறான் பெரியா னொருவனன்றோ, அவன் விசைக் கொம்பு” (ஈடு, 3, 6, ப்ர);.

     [விசை + கொம்பு]

விசைதிற-த்தல்

விசைதிற-த்தல் visaidiṟaddal,    3 செ.கு.வி. (v.i.)

   வேகமாக வெளிப்படுதல்; to burst out.

     “விசைதிறந் துருமுவீழ்ந்த தென்ன” (கம்பரா. இரணிய. 127);.

     [விசை + திற-த்தல்]

விசைத்தடி

விசைத்தடி visaittaḍi, பெ.(n.)

   1. விசைக்கம்பு (யாழ்.அக.); பார்க்க;see {}.

   2. சிற்றுயிர்களைப் பிடிக்கும் பொறியின் ஒருப்பகுதி (வின்.);; a part of a trap.

     [விசை + தடி]

விசையம்

விசையம்1 visaiyam, பெ.(n.)

விசயம்1 (பிங்.); பார்க்க;see {}.

 விசையம்2 visaiyam, பெ.(n.)

விசயம்2 (பிங்.); பார்க்க;see {}.

     “அசைவி றானை விசைய வெண்குடை….. மன்னர்” (பெருங். இலாவாண. 8, 15);.

 விசையம்3 visaiyam, பெ.(n.)

   1. விசயம்3 1 பார்க்க;see {}.

   2. விசயம்3, 2, 3 (பிங்.); பார்க்க;see {}.

   3. வையம் (அரு.நி.);; the earth.

விசையேற்று-தல்

விசையேற்று-தல் visaiyēṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பொறி முதலியவற்றைத் தொழிற்படுத்த அணியமாக்கி வைத்தல் (யாழ்.அக.);; to set up, as a spring or trap, to put in action, to set in motion.

   2. முட்டி விடுதல்; to egg on.

     [விசை + ஏற்று-,]

விச்சதையன்

 விச்சதையன் viccadaiyaṉ, பெ.(n.)

   புல்லுருவி (மலை.);; honeysuckle mistletoe.

விச்சந்தா

 விச்சந்தா viccandā, பெ.(n.)

   வெள்ளெருக்கு (மலை);; white madar.

விச்சம்

 விச்சம் viccam, பெ.(n.)

   தாமரை வகை (மலை);; a kind of lotus.

விச்சல்லி

 விச்சல்லி viccalli, பெ.(n.)

   கொடிவகை (யாழ்.அக.);; colocynth.

மறுவ. பேய்க்கொம்மட்டி

விச்சா

விச்சா1 viccā, வி.எ.(adv.)

   1. சும்மா; without purpose.

     ‘நான் விச்சா வந்தேன்’.

   2. தொழிலின்றி; without occupation.

     ‘அவன் விச்சா இருக்கிறான்’.

   3. அமைதியாய்; quiety.

     ‘பேசாதே, விச்சா

இரு’.

   4. நலமாக; healthy, in good health.

     ‘விச்சாயிருக்கிறாயா?’

   தெ. வித்ச;   க. வி.தெ;து. விச்சு.

 விச்சா2 viccā, வி.எ.(adv.)

   அடிக்கடி; repeatedly.

     ‘அவன் விச்சா பேசுகிறான்’.

 Pkt. viccha.

விச்சிக்கோன்

விச்சிக்கோன் viccikāṉ, பெ.(n.)

   கடைக் கழகக் காலச் சிற்றரசருள் ஒருவன்; a king of sangam period.

இவன் ஒரு மலைநாட்டுத் தலைவனாக இருக்கலாம் என்பதைக் கபிலர் இவனைக் ‘கல்லக வெற்ப’ என்பதனாற் கொள்ளலாம். கபிலர் பாரி மகளிரை இவனிடம் அழைத்துச் சென்று மணந்துகொள்ள வேண்டினாரென்று இவனை அவர் பாடிய புறநானூற்றுச் செய்யுள் (200); குறிப்பு அறிவிக்கின்றது. இவன் சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையால் வெல்லப் பட்டான் என்பதைப் பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் பதிகம் அறிவிக்கின்றது. இவனை ‘வில்பெருதானை விச்சியர் பெருமகன்’ என்றும், இவன் குறும்பூர் என்னுமிடத்தில் வேந்தர்களோடு பொருதான் என்றும் பரணர் குறிப்பிடுகின்றார் (குறுந். 328);.

விச்சிரல்

 விச்சிரல் vicciral, பெ.(n).

விச்சிறல் பார்க்க (பச்.மூ.);;see {}.

விச்சிரிப்பு

 விச்சிரிப்பு viccirippu, பெ.(n.)

விச்சிலுப்பை (வின்.); பார்க்க;see viccilluppai.

விச்சிரும்பி-த்தல்

விச்சிரும்பி-த்தல் viccirumbittal,    11 செ.கு.வி. (v.i.)

   கிளர்தல்; to burst out.

     ‘அவன் சினத்தினால் விச்சிரும்பித்தான்’.

விச்சிறல்

 விச்சிறல் vicciṟal, பெ.(n.)

   கோரைவகை (மலை.);; a kind of sedge.

விச்சிலுப்பை

 விச்சிலுப்பை vicciluppai, பெ.(n.)

   அம்மை நோய்வகை (இ.வ);; chicken-pox or measles.

மறுவ. சிச்சிலுப்பை.

விச்சு

விச்சு1 viccu-,    5 செ.கு.வி. (v.i.)

வித்து-, பார்க்க;see vittu.

     “நமவென்று நாமத்தை விச்சுமின்” (திருமந். 1850);.

 விச்சு2 viccu, பெ.(n.)

   விதை; seed.

     “விச்சின்றி நாறுசெய்வானும்” (தேவா. 696, 2); (பிங்.);.

து. viija / viijo.

     [வித்து → விச்சு]

 விச்சு3 viccu, பெ.(n.)

   மிகுதி (வின்.);; abundance.

     [விஞ்சு → விச்சு]

விச்சுக்கொட்டு-தல்

விச்சுக்கொட்டு-தல் viccukkoṭṭudal,    9 செ.கு.வி. (v.i.)

   வெறுப்புக்குறியாக ஒருவகை யொலி செய்தல் (வின்.);; to make a peculiar sound, expressive of aversion.

     [விச்சு + கொட்டு-,.]

விச்செனல்

விச்செனல்1 vicceṉal, பெ.(n.)

   வெறுப்பைக் குறிக்கும் ஓர் ஒலிக் குறிப்பு; an expr. of aversion.

 விச்செனல்2 vicceṉal, பெ.(n.)

   வெரிச்செனல் என்பதன் மறுவழக்கு; corr. of {}.

 விச்செனல்3 vicceṉal, பெ.(n.)

   அமைதியாயிருப்பதைக் குறிக்குஞ் சொல் (இ.வ);; expression denoting silence.

விச்சை

விச்சை1 viccai, பெ.(n.)

   1. கல்வி; learning, education.

     “விச்சைக்கட் டப்பித்தான் பொருளேபோல்” (கலித். 149);.

   2. அறிவு(யாழ்.அக.);; knowledge.

   3. மாயவித்தை; magic power, miracle.

     “எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே” (திருவாச. 5, 28);.

   4. மந்திரம்; mantra, incantation.

     “விச்சையின் மெலிந்து” (பெருங். உஞ்சைக். 53, 62);.

   5. தத்துவப் பகுதியில் ஒன்று; a section of tattuvam.

     “அடையா விச்சை யடையத் தடையில் விடையப்பகுதி” (ஞானா. 1, 15);.

 pkt. {}.

     [வித்தை → விச்சை]

 விச்சை2 viccai, பெ.(n.)

   தெரு (பிங்.);; street.

 விச்சை3 viccai, பெ.(n.)

   வெள்ளெருக்கு (மலை.);; white madar.

விச்சைக்கோலம்

 விச்சைக்கோலம் viccaikālam, பெ.(n.)

   மாயக்கோலம்; magic illusion.

     [விஞ்சு → விச்சு → விச்சை + கோலம்.]

விச்சைமன்னன்

விச்சைமன்னன் viccaimaṉṉaṉ, பெ.(n.)

விஞ்சையர் அரசன்;{} king.

     “விச்சை மன்ன னச்சுவ னாகி” (பெருங். நரவாண. 9, 66);.

விச்சோடி

 விச்சோடி viccōṭi, பெ.(n.)

விச்சோடு பார்க்க;see {}.

     [பிச்சு → விச்சு + சுவடி → சோடி]

விச்சோடு

 விச்சோடு viccōṭu, பெ.(n.)

   இரட்டை யாயுள்ளவற்றுள் ஒன்றோடு மற்றொன்று ஒவ்வாதது (கொ.வ.);; that which does not match or equal.

தெ. விட்சொடு.

     [விச்சோடி → விச்சோடு]

விஞ்சு

விஞ்சு1 viñjudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மேலாதல் (பிங்.);; to excel, surpass.

     “விஞ்சிய ஞானம் விளங்கும்” (தாயு. பராபர. 154);.

   தெ. மிந்த்சு;   ம. மிஞ்சு;க., து. மிஞ்சு.

     [மிஞ்சு → விஞ்சு-, (வே.க. 17);].

 விஞ்சு2 viñjudal,    9 செ.கு.வி. (v.i.)

   மிகுதியாதல்; to be excessive.

     “விஞ்சு குளிர்ப் பல்லவ மனுங்க” (கம்பரா. சூர்ப்ப.31);.

     [மீ → மிஞ்சு-, → விஞ்சு-, (சு.வி.பக்.57);]

விஞ்சை

விஞ்சை viñjai, பெ.(n.)

   1. கலை; art, science.

     “ஈரேழ் விஞ்சைத் திறனும்” (பாரத. வாரணா. 33);.

   2. கல்வி (திவா.);; learning, knowledge.

   3. மிகப்பெரியதைப் பற்றின மெய்யுணர்வு; spiritual knowledge.

     “விஞ்சைதனை யறிந்து மறியா தான்போல்” (கம்பரா. பிணிவிட். 122);.

   4. வியத்தகு கலை; magic art.

     “விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொடு… தருகுவன்” (சீவக. 520);.

   5. மறைமொழி; incantation.

     “விஞ்சைக ளிரண்டு மவ்வழி யூக்கினன்” (கம்பரா. தாடகை. 18);.

   6. விஞ்சைப்பதி பார்க்க;see {}.

     “விஞ்சை வேந்தர்” (சீவக. 816);.

     [மிஞ்சு → விஞ்சு → விஞ்சை]

விஞ்சைப்பதி

 விஞ்சைப்பதி viñjaippadi, பெ.(n.)

   மேலுலகம்; the world f the {}.

     [விஞ்சை + பதி]

விஞ்சைமகள்

விஞ்சைமகள் viñjaimagaḷ, பெ.(n.)

மேலுலகப் பெண்;{} woman.

     “விஞ்சை மகளவ் விழைபிடியாகி” (பெருங். நாவண. 5, 43);.

     [விஞ்சை + மகள்]

விஞ்சையன்

விஞ்சையன் viñjaiyaṉ, பெ.(n.)

   புலவன்; learned man, a poet.

     “வாதியைந்த வடபுல விஞ்சையன்” (கல்லா. 42, 25);.

     [வித்தை → விச்சை → விஞ்சை → விஞ்சையன்]

விஞ்சையர்

விஞ்சையர் viñjaiyar, பெ.(n.)

   பதினெண் கணத்துள் ஒரு சாரார் (பிங்.);; a class of demigods, one of {}, q.v.

     “வரைமார்பர் ….. விஞ்சையர் போற் கிடந்தார்” (சீவக. 2241);.

விட

விட viḍa, து.வி. (adv.)

   1. மிகவும்; exceedingly, very.

     “விடக்களியா நம் விழுநகர்” (திருக்கோ. 297);.

   2. இடைச்சொல் (prep.); காட்டிலும்; than, compared with.

     ‘அதைவிட இது நல்லது’ (உ.வ.);.

விடக்கு

விடக்கு viḍakku, பெ.(n.)

   1. இறைச்சி; flesh, meat.

     “மீன்றடிந்து விடக்கறுத்து” (பட்டினப். 176);.

   2. பிணம்; carcass.

     “பரு விடக்கைப்பற்றி இரண்டு பதார்த்தம் விவாதம் ஒண்ணுமா போலே” (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4);.

   க., து. பிக்கு;ம.விடக்கு.

     [விடுதல் = நீத்தல், உயிர்விடுதல். விடு → விடக்கு]

விடங்கன்

விடங்கன்1 viḍaṅgaṉ, பெ.(n.)

   1. உளியினாற் செதுக்கப்படாது, தானேயுண்டான இலிங்கம்; the naturally formed lingam, as unchiselled.

     “விடங்கப் பெம்மான்” (தியாக. லீலை. கடவுள்.17);.

   2. நல்லுருவ முடையவன் ; person of beauteous-form, handsome person.

     “வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்கரானால்” (திருவிளை. மாணிக். 89);.

விடுதல் = தோன்றுதல். முளைவிடுதல், பிஞ்சுவிடுதல் என்னும் வழக்கை நோக்குக. விடங்கன் = தான்றோன்றி.

     [விள் → விடு → (விடங்கு); → விடங்கன்]

 விடங்கன்2 viḍaṅgaṉ, பெ.(n.)

   1. காமுகன்; person of dissolute habits, voluptuary.

     “மனைகடோறும்… விடங்க ராகித் திரிவ தென்னே” (தேவா. 56, 1);.

   2. வம்பளப்பவன்; gossiper, newsmonger.

     ‘வாருங்காணும் விடங்கரே’ (இ.வ.);.

விடுதல் = நீத்தல், கட்டுப்பாடின்மை.

     [விடு → (விடங்கு); → விடங்கன்]

விடங்கம்

விடங்கம் viḍaṅgam, பெ.(n.)

   1. புறாக்கூடு (யாழ்.அக.);; dove-cot.

   2. கொடுங்கை (பிங்.);; curved cornice or projection.

     “துப்பினால் விடங்கம்… செய்து” (திருவிளை. திருமணப். 70);.

   3. சுவர்ப்புறத்து வெளி வந்துள்ள உத்திரக் கட்டை (வின்.);; project- tion of a beam or joist outside the wall of a house.

   4. வீட்டின் முகடு (பிங்.);; ridge of a roof.

     “வெந்நிற் றண்டென்

விடங்கத்து” (ஞானா. 9, 2);.

   5. வீதிக்கொடி (பிங்.);; banner hoisted in a building and projecting into the street.

   6. உளியினாற் செய்யப்படாது இயற்கையாமைந்த இலிங்கம்; the naturally formed lingam, as unchiselled.

     “சோதி விடங்கமே யாயினும்…… மேவினான்” (திருவாரு. 26);.

   7. அழகு (பிங்.);; beauty.

   8. ஆண்மை (பிங்.);; manliness, ability, bravery.

   9. இளமை (அரு.நி.);; youth.

     [விடு → விடர் = பிளவு. விடு → விடுதல் = தோன்றுதல். விள் → விடு (விடங்கு); → விடங்கம்.]

விடங்கர்

விடங்கர்1 viḍaṅgar, பெ.(n.)

   சிறுவழி (பிங்.);; narrow way.

     [ஒருகா. இடங்கர்3 → விடங்கர். இடங்கர் = சிறுவழி]

 விடங்கர்2 viḍaṅgar, பெ.(n.)

   முதலை; crocodile.

     “விடங்கரான் மெலியுறுங் குலத் தின்னக மலை யழைப்ப” (வரத. பாகவத. நாரசிங். 133);.

     [இடக்கு → இடங்கர்1 → விடங்கர்]

விடங்கு

விடங்கு1 viḍaṅgu, பெ.(n.)

   1. அழகு; beauty.

     “விடங்கினான் மிகுவிசயன்” (பாரத. அருச்சுனன்றீர். 77); (இலக்.அக.);.

   2. அரைப் பட்டிகை முதலிய அணிகலன்களின் உறுப்பு; a part of girdle and other ornaments.

     “திருப்பட்டிகை யொன்றில் ….. மொட்டு ஒன்றும் விடங்கு நாலும்” (S.I.I.ii,184);.

தெ., க., து. பெடங்கு.

 விடங்கு2 viḍaṅgu, பெ.(n.)

   சிற்றின்ப நடத்தை (சிருங்கார விலாசம்);; gallantry.

     “விடங்குபடக் குறிபல பாடி” (பதினொ. திருவேக திருவ. 53);.

     [விடங்கன்2 → விடங்கு]

விடதம்

விடதம் viḍadam, பெ.(n.)

   1. முகில்; cloud.

   2. துரிசு; verdigris.

விடதாரி

விடதாரி viḍatāri, பெ.(n.)

   நச்சுமுறி மருத்துவன்; physician who treats cases of poisoning or toxicity.

     “வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி யாங்கதனுக் காகார மானாற்போல்” (வாக்குண். 15, பி-ம்.);

விடதாலி

விடதாலி viḍatāli, பெ.(n.)

   பூரான் (நாமதீப. 264);; centipede.

     [விடம் + தாலி]

விடத்தர்

விடத்தர் viḍattar, பெ.(n.)

விடத்தேரை பார்க்க;see {}.

     “திரிகாய் விடத்தரொடு” (பதிற்றுப். 13, 14);.

விடத்தலை

 விடத்தலை viḍattalai, பெ.(n.)

விடத்தேரை பார்க்க;see {}.

   க. எடத்தர;   ம., து. இடத்தர;தெ. வெனுத்துரு.

விடத்தல்

 விடத்தல் viḍattal, பெ.(n.)

விடத்தேரை (இலக்.அக.); பார்க்க;see {}.

விடத்தாலம்

 விடத்தாலம் viḍattālam, பெ.(n.)

   மருந்து வகை (சங்.அக.);; a medicine.

     [விடம் + தாலம்]

விடத்தாளி

 விடத்தாளி viḍattāḷi, பெ.(n.)

விடத்தேரை (சங்.அக.); பார்க்க;see {}.

     [விடம் + தாளி]

விடத்துக்கரசன்

 விடத்துக்கரசன் viḍattukkarasaṉ, பெ.(n.)

   கருடக்கல் (சங்.அக.);; a medicinal stone.

     [விடத்துக்கு + அரசன்]

விடத்தேதொடரி

விடத்தேதொடரி viḍattētoḍari, பெ.(n.)

விடத்தேரை பார்க்க;see {}.

     “முள்ளுத்தன்னிடத்தே சூழ்ந்தெழுகின்ற விடத்தே தொடரி” (பெரும்பாண். 184, உரை);.

     [விடத்தே + தொடரி]

விடத்தேரை

விடத்தேரை viḍattērai, பெ.(n.)

   முள்ளையுடைய மரவகை (பதார்த்த. 245);; ashy babool.

மறுவ. விடதாரி, விடத்தார், விடத்தல், விடதலை, விடதாளி.

விடத்தேர்

விடத்தேர் viḍattēr, பெ.(n.)

விடத்தேரை பார்க்க;see {}.

     “தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய” (தண்டி. 75, 2, உதா.);

கோடாலி, மண்வெட்டி போன்ற கருவிகளுக்கு வழவழப்பும் வலுவும் கொண்ட பிடிகள் கோடுவதற்குரிய மரம். தானாகவே வேர்ச் செடிகளின் மூலம் படர்ந்து கொள்ளும் இயலுடைய விடத்தேர் ஆடுகளுக்குத் தீவனமாகவும். குதிரைகளின் வயிற்றுப் புழுக்களையும் நீக்கவும்

   பயன்படுவது. மாந்தர்களின் கண்ணோய்க்கும், சிறுநீரகக் கல்லடைப்புக்கும் பயன்படும் குறுமரம்;   ஆனால் பயன் தரும் ஒரு குறுமரம்;பயன்களோ பலப்பல.

– (மரம் தரும் வளங்கன் பக்.260.);

   தெ. வெனுதுரு;   ம. விடத்தேரி;   க. எடத்தரி; Skt. விவ்ரிக்ஷன

விடந்தீஞ்சான்

 விடந்தீஞ்சான் viḍandīñjāṉ, பெ.(n.)

   கொல்லைப் பல்லி என்னும் மூலிகை (மூ.அ.);; a parasitic plant.

     [விடம் + தீய்ந்தான் → தீஞ்சான்]

விடன்

விடன்1 viḍaṉ, பெ.(n.)

   1. இழிகாமமுடையவன் (ஞானா. 35);; voluptuary, sensualist.

   2. கள்ளக்காதலன் (இலக்.அக.);; paramour.

 விடன்2 viḍaṉ, பெ.(n.)

   வீரன்; warrior.

     “விடர் கடலை மலை வான்வளர்ந்தன” (கலிங். 432);.

விடபகதி

 விடபகதி viḍabagadi, பெ.(n.)

   குதிரைநடை ஐந்தனுள் காளையின் பெருநடை போன்ற நடை; bull-like pace of the horse, one of five acuva-kati, q.v.

     [விடப + கதி]

விடப்பு

விடப்பு viḍappu, பெ.(n.)

விடர்1, 1 (சது.); பார்க்க;see {}.

     [விடு1 → விடப்பு]

விடம்

விடம்1 viḍam, பெ.(n.)

   அதிவிடையம் (மலை.);; atis.

 விடம்2 viḍam, பெ.(n.)

   மரக்கொம்பு (பிங்.);; branch of a tree.

 விடம்3 viḍam, பெ.(n.)

   மலை; mountain.

 விடம்4 viḍam, பெ.(n.)

   இடம் என்பதன் மருவிய வழக்கு; corr. of place.

விடம்பனம்

விடம்பனம் viḍambaṉam, பெ.(n.)

   1. நடிப்பு; imitation, imposture, disguise.

   2. நிந்தை; ridicule, mockery.

   3. இடர் (யாழ்.அக.);; distress.

     [விடம்பம் → விடம்பனம்]

விடம்பன்

விடம்பன் viḍambaṉ, பெ.(n.)

   உள்ளொன்று புறம்பொன்றான தன்மையுடையவன் (சைவச. பொது.. 552);; hypocrite, pretender.

     [விடம்பம் → விடம்பன்]

விடம்பம்

விடம்பம் viḍambam, பெ.(n.)

   1. உள்ளொன்று புறம்பொன்றான தன்மை; hypocrisy, pretence.

     “விடம்ப முளைத்துள் விரவினனும்” (சிவதரு. பாவ 36.);.

   2. வேடம் பூணுகை (இலக்.அக.);; wearing actor’s dress.

விடம்பு

விடம்பு viḍambu, பெ.(n.)

விடர்1,1 (வின்.); பார்க்க;see {}, 1.

விடம்பை

விடம்பை viḍambai, பெ.(n.)

   பிளப்பு; cleft.

     “இந்த விடம்பை நாத்தோய்க்கின்” (கலிங். 541.);

விடயி

விடயி1 viḍayittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   பொறிகள் புலனைப் பற்றுதல்; to perceive, to apprehend through the senses.

     “அவையொன்றையும் விடயியா வாகலான்” (சி.போ.பா.5, 1, பக். 106, சுவாமிநா.);

 விடயி2 viḍayi, பெ.(n.)

   1. ஐம்பொறி (இலக். அக.);; five organs of sense.

   2. அரசன்; king.

விடரகம்

விடரகம் viḍaragam, பெ.(n.)

   1. மலைக்குகை; mountain cave.

     “விடரகமுகந்து” (மதுரைக். 308);.

   2. மலை; mountain.

     “விடரக நீயொன்று பாடித்தை” (கலித். 40);.

     [விள் → விடு → விடர் + அகம்] (முதா.100);

விடரளை

விடரளை viḍaraḷai, பெ.(n.)

   மலைப்பிளப்பிடம்; cleft in a mountain.

     “நறும்பழ மிருங்கல் விடரளை வீழ்ந்தென” (ஐங்குறு. 214);.

     [விள் → விடு → விடர் → விடரளை. (வே.க.149);]

விடரவன்

விடரவன் viḍaravaṉ, பெ.(n.)

   பகலிற் கண் பிளவுள்ள பூனை (யாழ்.அக.);; cat.

     [விடர் → விடரவன்] (செல்வி. 77. ஆனி. 549);

விடரி

விடரி viḍari, பெ.(n.)

   மலை; mountain.

     “விடரியங் கண்ணிப் பொதுவனை” (கலித். 101);.

     [விள் → விடு → விடர் → விடரி]

விடரு

 விடரு viḍaru, பெ.(n.)

   அதிவிடையம் (மலை.);; atis.

விடருகம்

விடருகம்1 viḍarugam, பெ.(n.)

   பூனை (நாமதீப. 223);; cat.

     [விடரகம் → விடருகம்] (வே.க.149);

விடர்

விடர்1 viḍar, பெ.(n.)

   1. நிலப்பிளப்பு (பிங்.);; fissure, cleft.

     “கூரெரி விடர் முகை யடுக்கம் பாய்தலின்” (அகநா. 47, 6); (பிங்.);.

   2. மலைப்பிளப்பு; cleft in a mountain.

     “நெடுவரை யருவிடர்” (புறநா. 135);.

   3. மலைக்குகை; mountain cave.

     “பெருமலை விடரகத்து” (புறநா. 37);.

   4. முனிவரிருப்பிடம் (சூடா.);; abode of a sage.

   5. காடு (சூடா.);; forest.

     [விள் → விடு → விடர்] (மு.தா. 100);

 விடர்2 viḍar, பெ.(n.)

   பெருச்சாளி (உரி.நி);; bandicoot.

விடர்வு

விடர்வு viḍarvu, பெ.(n.)

   நிலப்பிளப்பு (பிங்.);; fissure, cleft.

     [விடு → விடர் → விடர்வு. (வே.க.149);]

விடலம்

விடலம் viḍalam, பெ.(n.)

   1. உள்ளி (சங்.அக.);; garlic.

   2. குதிரை (யாழ்.அக.);; horse.

விடலி

விடலி1 viḍali, பெ.(n.)

   1. அடங்காச் சிற்றின்ப வேட்கையுடையவள்; lustful woman.

     “தடவிடலிதலையும்” (சிவதரு. பரிகார. 16);.

   2. திருமணத்திற்கு முன்னர்ப் பூப்படைந்த பெண்; girl whose menstruation commences before she is married.

   3. பன்னீராட்டைப் பிராயத்தாள்; girl of 12 years of age.

   4. பூப்புடையாள்; woman in her periods.

   5. மலடி (யாழ்.அக.);; barren woman.

 விடலி2 viḍali, பெ.(n.)

   கூரை வேய்வதற்குரிய புல் வகை; a kind of grass used for thatching.

     [விழல் → விடல் → விடலி]

   விழல் = பெரும்புல் வகை;கோரைவகை.

ஒ.நோ: குழல் = குடல், புழல் = புடல்.

விடலிபதி

 விடலிபதி viḍalibadi, பெ.(n.)

   ஒழுக்கமற்ற மனைவியொடு வாழ்பவன்; a man living with his wife, whose secret intimacy with another is in jeopardy;one’s wife who leans with her paramour.

     [விடு → விடுதல் = நீத்தல், கட்டுப்பாடின்மை. விடல் → விடலி + பதி]

 Skt. pathy → த. பதி.

விடலை

விடலை1 viḍalai, பெ.(n.)

   தைக்காத விடுதியிலை; loose, unstitched leaf.

     [விடு1 + இலை]

 விடலை2 viḍalai, பெ.(n.)

   1. பதினாறு முதல் முப்பதாண்டு வரையுள்ள அகவையுடையவன்(பன்னிருபா.232);; youth from 16 to 30.

   2. திண்ணியோன் (பிங்.);; strong, powerful man.

     “விறல் கெழுபோர் விடலையை” (கம்பரா. இந்திரசித். 21.);.

   3. பெருமையிற் சிறந்தோன் (பிங்.);; great man.

   4. வீரன்; warrior.

     “முதியாள் விடலைக்கு வெங்கள் விடும்” (பு.வெ.4, 21);.

   5. பாலை நிலத் தலைவன் (பிங்.);; chief of a desert tract.

   6. மருதநிலத் தலைவன்; chief of an agri- cultural tract.

     “விடலை நீ” (கலித். 95);.

   7. மணவாளன் (சூடா.);; bridegroom.

   8. ஆண்மகன் (நாமதீப.119);; man.

   9. இளங் காளைமாடு (நெல்லை);; steer, young bull.

 L. vitulas;

 GK. italos, a calf;

 E. virgin from Gr. orgao, to swell.

     [விடை → விடலை]

 விடலை3 viḍalai, பெ.(n.)

   1 சூறைத் தேங்காய் (நெல்லை);; coconut smashed on the ground before an idol.

   2. இளநீர்; tender coconut.

ம. விடல.

     [விடு1 → விடலை]

விடல்

விடல் viḍal, பெ.(n.)

   1. முற்றும் நீங்குகை; leaving, renunciation.

     “சமந்தமம் விடல்” (கைவல் தத்துவ. 9);.

     “வெல்வது வேண்டின் வெகுளி விடல்” (நான்மணி.);.

   2. ஊற்றுகை (நாமதீப.695.);; pouring.

   3. குற்றம் (சது);; fault.

     [விள் → விடு1 → விடல். (வே.க.பக்.113.);]

விடளி

விடளி viḍaḷi, பெ.(n.)

   பன்னீராட்டை அகவையாள்; girl of 12 years of age.

     “மேலுறு மீராண்டினை யுடையாள் விடளி” (திருவானைக். கோச்செங். 139);.

     [விடலி → விடளி.]

விடவி

விடவி viḍavi, பெ.(n.)

   மரம்; tree.

     “பாங்கர் நின்றதோர் விடவியைப் பிடுங்குவான்” (பாரத. கீசக. 34);.

விடவிடெனல்

விடவிடெனல் viḍaviḍeṉal, பெ.(n.)

   1. குளிர் முதலியவை பற்றி யுண்டாம் நடுக்கக்குறிப்பு; expr.signifying trembling, as from cold ehe.

     ‘குளிர் அவனை விடவிடென்று குலுக்கி விட்டது’.

   2. மெலிவுக்குறிப்பு; being lean, thin or flimsy.

     ‘அவன் விடவிடென் றிருக்கிறான்.

   3. சுரு சுருப்பாயிருத்தற் குறிப்பு; being active.

     [விடுவிடு + எனல்]

விடவு

விடவு1 viḍavu, பெ.(n.)

விடர்1,1 (வின்.); பார்க்க;see {}.

 விடவு2 viḍavu, பெ.(n.)

   இழிகாமமுடைமை; licentiousness.

     “ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து” (திவ். திருவாய். 1, 7, 5);.

விடா வினை நோய்

 விடா வினை நோய் viṭāviṉainōy, பெ.(n.)

   யாதொரு காரணமுமில்லாமலே ஏற்பட்டு ஊழ்வினை தன்னைவிட்டகல அதுவும் கூடவே உடம்பை விட்டகலும் ஊழ்வினை நோய்(கர்ம நோய்);; disease coming on without any apparent cause and dissappeang with the extinction of karma.

     [விடா+வினை+நோய்]

விடாக்கண்டன்

விடாக்கண்டன் viṭākkaṇṭaṉ, பெ.(n.)

   ஒட்டாரமாக நின்று ஒன்றை நிறை வேற்றுபவன்; pertinacious, stubborn, un-yielding man.

     [விடு1 + ஆ (எதிர்மறை); + கள் → கண்டு → கண்டகன் → கண்டன். கண்டன் = பிறர்க்குத் தீங்கு விளைவிப்பவன்.]

விடாக்காய்ச்சல்

விடாக்காய்ச்சல் viṭākkāyccal, பெ.(n.)

விடாச்சுரம் (இங்.வை.157); பார்க்க;see {}.

     ‘விடாக்காய்ச்சலுக்கு விட்டுணு கரந்தை’ (பழ.);.

     [விடு1 + ஆ (எதிர்மறை); + காய்ச்சல்]

விடாச்சுரம்

 விடாச்சுரம் viṭāccuram, பெ.(n.)

   தொடர்ந்து வரும் காய்ச்சல்; continuous fe- ver, pyrexia.

     ‘விடாச்சுரத்துக்கு விட்டுணு கரந்தை’.

     [விடு + ஆ (எதிர்மறை); + சுரம்]

விடாணம்

 விடாணம் viṭāṇam, பெ.(n.)

   விலங்கின் கொம்பு (சூடா.);; horn, tusk.

விடாணி

விடாணி viṭāṇi, பெ. (n.)

   1. கொம்புடைய விலங்கு; horned-animal.

   2. யானை; elephant, as tusked.

விடாதகண்டன்

 விடாதகண்டன் viṭātagaṇṭaṉ, பெ.(n.)

விடாக்கண்டன் (வின்.); பார்க்க;see {}.

விடாதம்

 விடாதம் viṭātam, பெ.(n.)

   மயக்கம் (இலக்.அக.);; lassitude, languor.

விடாதவாகுபெயர்

விடாதவாகுபெயர் viṭātavākubeyar, பெ.(n.)

விடாதவிலக்கணை (வின்.); பார்க்க;see {}.

     [விடாத + ஆகுபெயர்]

தத்தம் பொருளின் நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளோடு புணரும் பெயர்களை விடாததவாகுகுபெயர் என்பர்.

மஞ்சள் என்பது தனக்குரிய பொருளை விடாமலே மஞ்சள் கிழங்கைக் குறிக்கும்போது அது விடாத ஆகுபெயராம். இனிப்புத் தின்றான் என்பதும் அது.

– (இலக்.கலைக்.பக்.108.);

விடாதவாக்கச்சொல்

விடாதவாக்கச்சொல் viṭātavākkaccol, பெ.(n.)

   விடாதவிலக்கணையாக வருஞ் சொல் (யாழ்.அக.);; word which without los- ing its primary sense, has also a sec- ondary sense.

     [விடு1 + ஆ (எதிர்மறை); + ஆக்கச் + சொல்]

விடாதவிலக்கணை

விடாதவிலக்கணை viṭātavilakkaṇai, பெ.(n.)

   இலக்கணை மூன்றனுள் சொல்லின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை (வேதா.சூ.120); (இலக்.அக.);; a variety of {}, in which the primary sense of a word is retained along with its secondary sense, one of three {}, q.v.

     [விடாத + இலக்கணை. இலக்கணை = ஒரு பொருளைக் காட்டற்குகு உரிய சொல்லை மற்றொரு பொருட்கு தந்துரைப்பது.]

 Skt. Laksana → த. இலக்கணை.

விடாதுபேசு-தல்

விடாதுபேசு-தல் viṭādupēcudal,    9 செ.கு.வி. (n.)

   பிதற்றுதல் (திவா. 1925);; to blabber, to chatter interminably.

     [விடாது + பேசு-,]

விடாதுரை-த்தல்

விடாதுரை-த்தல் viṭāturaittal,    4 செ.கு.வி. (v.i.)

விடாதுபேசு-, (நாநார்த்த. 673); பார்க்க;see {}.

விடானி

 விடானி viṭāṉi, பெ.(n.)

   சதுரக்கள்ளி (சங்.அக.);; square spurge.

விடாப்படை

விடாப்படை viḍāppaḍai, பெ.(n.)

   கையினின்றும் விடுபடாத வாள் குந்தம் போன்ற படைக்கலன் (நாமதீப. 426);; weapon held in hand and used, nonmissile weapon.

     [விடா + படை]

விடாப்பிடி

விடாப்பிடி viḍāppiḍi, பெ.(n.)

   1. உறுதியாகப் பற்றுகை; firm hold or grasp.

   2. உறுதியாக நிற்கை; tenacity, pertinacity.

   3. தன் முரண்டு; obstinacy.

   4. மாறாமல் ஒரே நிலையி லிருக்கை; unchange-ableness.

     [விடா + பிடி]

விடாப்பிடியாக

 விடாப்பிடியாக viḍāppiḍiyāka, வி.எ. (adv.)

   தன்னிலையிலிருந்து சிறிதும் மாறாமல், சிறிதும் விட்டுக் கொடுக்காமல்; tenaciously.

     ‘அந்தச் செய்தியாளர் விடாப்பிடியாக ஒரே கேள்வியை மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்’ (உ.வ.);.

     [விடாப்பிடி + ஆக]

விடாப்பூட்டு

 விடாப்பூட்டு viṭāppūṭṭu, பெ.(n.)

   ஓய்வில்லாமை (யாழ்.அக.);; being always in harness;having no rest or leisure.

     [விடா + பூட்டு]

விடாமல்

 விடாமல் viṭāmal, வி.எ. (adv.)

   இடையீடின்றி; without obstruction.

     ‘விட்டுவிட்டுப் பெய்கிற மழையினும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது” (பழ.);.

விடாமழை

விடாமழை viṭāmaḻai, பெ.(n.)

   இடையீடின்றிப் பெய்யு மழை (நாமதீப. 84);; continuous rain.

மறுவ. அடைமொழி.

     [விடா + மழை]

விடாமுயற்சி

 விடாமுயற்சி viṭāmuyaṟci, பெ.(n.)

   ஒன்றை அடைவதற்குத் தொடர்ந்து செய்யும் முயற்சி; perseverance.

     ‘விடாமுயற்சி எப்படிப் பட்டவர்களையும் வெற்றி அடையச் செய்யும்’.

     ‘perseverance is the key to the success’ (pro.);.

     [விடா + முயற்சி]

விடாயன்

விடாயன் viṭāyaṉ, பெ.(n.)

   1. நீர்வேட்கை யுள்ளவன்; thirsty person.

     “விடாயன் தண்ணீர்ப் பந்தலிலே வரக்கொள்ளச் சாலுருண்டு கிடந்தாற் போலே” (ஈடு. 1, 4, 4);.

   2. களைப்புற்றவன்; man faint with fatigue.

     “சில தார்மிகர் ஏரிகல்லினால் … விடாயர் அதிலே மூழ்கி விடாய் தீர்ந்து போகா நிற்பர்கள்” (ஈடு. 1, 3, ப்ர.);.

   3. காமுகன்; sen- sualist, voluptuary.

     [விடாய் → விடாயன்]

விடாயாற்றி

விடாயாற்றி viṭāyāṟṟi, பெ.(n.)

   1. இளைப்பாறல்; rest, repose, as relief from weariness.

   2. இளைப்பாற்றுவது; that which affords rest or relief.

     “இந்திரனது விடாயாற்றி மலை” (தக்க யாகப். 419, உரை);.

   3. பெரிய திருவிழாவை

   யடுத்து தலைவனுக்கு (சுவாமி); இளைப் பாறலாகக் கோயிலுக்குள் நடைபெறும் திருநாள்; festivities within the temple following the main festival, when the moveable image of the deity is supposed to take rest.

     [விடாய் → விடாயாற்றி]

     [ஒருகா. விடாய் + ஆற்று → ஆற்றி]

விடாயெடு-த்தல்

விடாயெடு-த்தல் viḍāyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

விடாய்2 பார்க்க;see {}.

     “தண்ணீர் விடாயெடுத்தால்” (இராமநா. யுத்த. 59);.

     [விடாய் + எடு-,]

விடாய்

விடாய்1 viṭāy, பெ.(n.)

   1. நீர்வேட்கை; thirst.

     “தண்ணீர் விடாயெடுத்தால்” (இராமநா. யுத்த. 59);.

   2. களைப்பு (நாமதீப. 633);; lassi- tude, weariness.

   3. விருப்பம்; longing, craving.

     [விழை → விழாய் → விடாய்] (சு.வி. 37);

 விடாய்2 viṭāy, பெ.(n.)

   வெப்பம்; heat.

     “விண்ணும் புவியும் விடாயாற்ற” (சொக்க. உலா. 59);.

 விடாய்3 viṭāyttal,    11 செ.கு.வி. (v.i.)

   1. நீர்வேட்கையெடுத்தல்; to thirst.

     “விடாய்த்த காலத்திலே வாய் நீருறுதற்கு” (மலைபடு. 136, உரை);

   2. களைப்படைதல்; to grow faint and weary, to be tired out.

     ‘எருது உழுகிறது, உண்ணிவிடாய்க்கிறது.

   3. விருப்பப்படுதல்; to long for.

     [விடை → விடாய் → விடாய்-, (வே.க 120);]

     [ஒருகா. விழை → விழாய் → விடாய்-, (செல்வி. செப்பிடெம்பர். 47);]

 விடாய்4 viṭāy, பெ.(n.)

   விடுமுறைநாள் (வின்.);; holiday.

     [விடு → விடை → விடாய்]

 விடாய்4 viṭāyttal,    11 செ.கு.வி. (v.i.)

   செருக்குக் கொள்ளுதல் (இ.வ);; to be haughty, to be stiff with pride.

     [விடை → விடாய் → விடாய்-,]

விடாய்ப்பு

விடாய்ப்பு viṭāyppu, பெ.(n.)

   1. நீர்வேட்கை; thirsting.

   2. களைத்திருக்கை; being tired.

   3. விருப்பம்; desire, longing.

     [விழை → விழாய் → விடாய் → விடாய்ப்பு]

விடாரகம்

விடாரகம் viṭāragam, பெ.(n.)

விடாலகம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

வ. விடாரக.

     [விடரகம் → விடாரகம்] (வே.க.149);

விடாரம்

விடாரம் viṭāram, பெ.(n.)

   பூனை; cat. (வே.க.149);.

     [விடாலம் → விடாரம்]

விடாலகம்

விடாலகம் viṭālagam, பெ.(n.)

   1. பூனை (சூடா.);; cat.

   2. பொன்னரிதாரம் (யாழ்.அக.);; yellow orpiment.

     [விடாரகம் → விடாலகம். (வே.க.149);]

விடாலம்

விடாலம் viṭālam, பெ.(n.)

   1. விடாலகம்,1 (சங்.அக.); பார்க்க;see {}.

   2. கண்மணி (யாழ்.அக.);; eye-ball.

     [விடாலகம் → விடாலம்] (வே.க.149);

த. விடாலம் → வ. வைடால = பூனை

விடி

விடி1 viḍidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தோற்ற மாதல்; to dawn, to break, as the day.

     “வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே” (சீவக. 219);.

   2. முடிவு பெறுதல்; to come to an end, to be ended or finished.

     “வழிநடப்பதென்று விடியுமெமக் கெங்கோவே” (தனிப்பா, i,212, 5);.

   3. நற் காலத்தால் துன்பம் நீங்கி யின்புறுதல். (பரிபா. 7, 85);; to see better days.

வெள் → வெளு. வெளுத்தல் =

   1. வெண்மையாதல்.

   2. விடிதல். கிழக்கு வெளுத்தது (உ.வ.);. வெள் → வெளி → வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல் – விடிதல்.

வெளி → வெடி. ஓ.நோ. வெளி → வெடி = திறந்த வெளி (பிங்.); களிறு – கடிறு.

கெளிறு → ரகடிறு.

வெடிதல் = விடிதல்.

     “என்றூழ் வெடியாத போதிற்கொய்தான்” (செவ்வந்திப்பு. உறையூரதி.47); வெடி = விடிவெள்ளி (பிங்.);

வெடியல் = விடியல். வெடிவு → விடிவு

வெடி → விடி → விடிதல் = கதிரொளி தோன்றுதல்

     “வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே” (சீவக.219);.

விடி = விடிகாலை.

     “விடிபக லிரவென் றரிவரி தாய” (திவ். பெரிய.4:10:2);

விடி → விடியல்.

     “வைகுறு விடியல்”

     “விடியல் வைகறை யிடூஉ மூர” (அகம். 196);.

விடி → விடிவு → விடிவை.

     “விடிவை சங்கொலிக்கும்”

மா.வி.அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு

வ்யுஷ் (ப்யுஷ்); =

   1. எரி.

   2. பிரி.

   3. தள், வெளிவிடு.

வி + வஸ்2(ஒளிர்); = வ்யுஸ் (vyus); = விடியல் (ச.வே.);

= வ்யுஷ் (இ.வ.); → ஆம் வேற். (இ.வே.);.

வ்யுஷித – (7ஆம் வேற்); = விடியல் வ்யுஷ்ட = விடிந்து வ்யுஷ்டி = விடியல் (இ.வே.);.

இதை நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ்’ என்று திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின்றனர் என்பது தெரிய வருகின்றது (பாவாணர்.வ.மொ.வ.);

     ‘விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?’ (பழ.);

வ்யுங்டி = skt. (வ.மொ.வ.);

தெ. விடியு.

     [விள் → விளி → விடி → விடி-, (வே.க.பக்.136);]

 விடி2 viḍi, பெ.(n.)

விடிகாலை பார்க்க;see {}.

     “விடி பகலிரவென் றறிவரிதாய” (திவ். பெரியதி. 4, 10, 8);.

     [விள் → விளி → விடி] (செல்வி. 77. வைகாசி பக், 498);

 விடி3 viḍi, பெ.(n.)

   1. தனிப்பட்டது (C.G.);; odd item, not one of a set, single article.

   2. திரைச்சீலை (சது.);; curtain.

   தெ. விடி;   க., து. பிடி;ம. விடு.

 விடி4 viḍittal,    11 செ.கு.வி. (v.i.)

   மலங் கழித்தல்; to void excrement.

     [விட்டித்தல் → விடி-,]

 விடி5 viḍi, பெ.(n.)

   நறுவிலி (M.M.802);; sebestan.

ம. விடி.

விடிகாலை

விடிகாலை viḍikālai, பெ.(n.)

   பொழுது விடிகின்ற நேரம் (கொ.வ.);; break of day, early morning.

     [விடி1 + காலை1]

விடிகுண்டு

விடிகுண்டு viḍiguṇḍu, பெ.(n.)

   விடிதற் குறியாக இடும் அதிர்வெடி; gun fired at the break of day, as time-signal.

     [விடி2 + குண்டு1]

விடிகோழி

விடிகோழி viḍiāḻi, பெ.(n.)

   விடியற் காலத்திற் கூவுஞ் சேவற் கோழி; cock crowing at dawn.

     “விடிகோழி கூவுறது” (கோவ. க. 64);.

     [விடி + கோழி]

விடிசங்கு

 விடிசங்கு viḍisaṅgu, பெ.(n.)

   சிலை (மார்கழி); மாதத்துப் புலர் பொழுது ஊதப்படும் சங்கம்; conch blown at the dawn of day, especially in the tamil month of {}.

     [விடி + சங்கு]

விடிநிலா

 விடிநிலா viḍinilā, பெ.(n.)

   பின்னிரவில் தோன்றும் நிலவு (வின்.);; moon that arose in the small hours of the morning.

     [விடி + நிலா]

விடிமீன்

விடிமீன் viḍimīṉ, பெ.(n.)

விடிவெள்ளி பார்க்க;see {}.

     “விடிமீன் முளைத்த தாளம்” (கல்லா.17, 12);.

     [விடி + மீன்]

விடியங்காட்டி

விடியங்காட்டி viḍiyaṅgāḍḍi, பெ.(n.)

   விடிகாலை; dawn.

     ‘தம்பி இன்று விடியங்காட்டி வந்தான்’ (உ.வ.);.

     ‘காட்டில்’

என்பது ஒர் உறழ்தர உருபு. (sign of comparative degree);.

அது உலக வழக்கிற் காட்டி என்று திரிந்து காலப் பொருளில் வழங்கும்போது உறழ் தரத்தை மட்டுமின்றி ஒப்புத்தரத்தையும் (positive degree); குறிக்கும்.

இனி, விடியல்காட்டி விடியங்காட்டி என்று கொள்ளவும் இடமுண்டு, இதில்,

     ‘காட்டி” என்பது உறழ்தரவுருபல்லாத இறந்தகால வினையெச்சம். ‘காட்டில்’ என்னும் உறழ்தர உருபு ‘காட்டிலும்’ என்று ‘உம்’ ஏற்கவும் செய்யும். அது உலக வழக்கில் ‘காட்டியும்’ என்று திரியும்.விடியற்கருக்கல் = விடியும் பொழுதுள்ள இருட்டு. விடியற்காலம், விடியா மூஞ்சி, விடியா வழக்கு, விடியாவிளக்கு – நந்தா விளக்கு.

     “விடியா விளக்கென்று மேவி நின்றேனே” (திருமந். 48);

விடியா வீடு, விடிவிளக்கு (விடியும் வரை எரிவது); விடிவெள்ளி, விடிவேளை என்பன பெருவழக்கான கூட்டுச் சொற்கள். (செல்வி. 77, வைகாசி, 498);.

விடியற்கருக்கல்

 விடியற்கருக்கல் viḍiyaṟkarukkal, பெ.(n.)

   விடிதற்கு முன்னுள்ள இருட்பொழுது; dark- ness preceeding break of day.

     ‘விடியற்கருக்கலில் ஏர் பூட்டச் சென்றான்’ (உ.வ.);.

     [விடியல் + கரு → கருகு → கருக்கு → கருக்கல்]

விடியற்காலம்

விடியற்காலம் viḍiyaṟkālam, பெ.(n.)

   வைகறை; break of day, dawn.

     “விடியற் காலத்தே வந்து” (மதுரைக்.223,உரை);.

     ‘விடியற் காலத்தில் படிப்பது மனத்தில் நன்கு பதியும்’ (உ.வ.);.

     ‘விடியற் காலம் கலியாணம், பிடியடா தம்பலம்’ (பழ.);.

     ‘விடியு மட்டும் இறைத்தவனும் விடிந்த பின்பு சாலை உடைத்தவனும் சரி’ (பழ.);.

     ‘விடியுமட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சில் முளைக்காது’ (பழ.);.

     [விடியல் + காலம்]

விடியற்பண்

விடியற்பண் viḍiyaṟpaṇ, பெ.(n.)

   1. விடியற்காலம் (வின்.); பார்க்க;see {}.

   2. பூபாளம் என்னும் புறநீர்மைப் பண்; a melody type to be sung at dawn (mus.);.

     [விடியல் + பண்]

விடியற்புறம்

விடியற்புறம் viḍiyaṟpuṟam, பெ.(n.)

விடியற்காலம் பார்க்க;see {}.

     [விடியல் + புறம்1]

விடியற்றரம்

 விடியற்றரம் viḍiyaṟṟaram, பெ.(n.)

விடியற்காலம் (வின்.); பார்க்க;see {}.

     [விடியல் + தரம்]

விடியல்

விடியல்1 viḍiyal, பெ.(n.)

   விடியற்காலை, பொழுது விடிகின்ற நேரம்; break of day, dawn.

     “வைகுறு விடியன் மருதம்” (தொல். பொருள். 8.);.

     [விள் → விடி – விடியல். (சு.வி.பக்.17);]

 விடியல்2 viḍiyal, பெ.(n.)

   1. மலங்கழிக்கை; voiding excrement.

   2. வயிற்றுப்போக்கு; purging.

     [விடி → விடியல்]

 விடியல்3 viḍiyal, பெ.(n.)

   வெளியிடம் (பிங்.);; open space or place.

     [வெளி → வெடி → விடி → விடியல். (வ.மொ.வ.88);]

விடியல்வைகறை

விடியல்வைகறை viḍiyalvaigaṟai, பெ.(n.)

   பொழுது விடிதற்கு முன்னர்த்தாகிய வைகறை; twilight before break of day.

     “பிரம்பின் றிரள்கனி பெய்து விடியல்

வைகறை யீடுஉ மூர” (அகநா. 196);.

     [விடியல் + வைகறை]

விடியவிடிய

 விடியவிடிய viḍiyaviḍiya, பெ.(n.)

   இரவு முழுவதும் (கொ.வ.);; all through the night.

     ‘தென் மாவட்டங்களில் விடிய விடியத் தெருக்கூத்து நடக்கும்’ (உ.வ.);.

     ‘விடியவிடிய கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன உறவு என்று கேட்டாற்போல’ (பழ.);.

விடியாப்பானை

விடியாப்பானை viḍiyāppāṉai, பெ.(n.)

   1. பொந்திகையற்றவ-ன்-ள். (வின்.);; one who is never satisfied.

   2. விடியாமூஞ்சி பார்க்க;see {}.

     [விடியா + பானை]

விடியாமூஞ்சி

 விடியாமூஞ்சி viḍiyāmūñji, பெ.(n.)

   தொடர்ந்து வரும் நல்வினைப்பயன் அற்றவ-ள்-ன் (வின்.);; unlucky person, one who never sees the end of ones troubles, inherited by bad action or karma.

     ‘விடியாமூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது’ (பழ.);

     [விடியா + மூஞ்சி]

விடியாலை

 விடியாலை viḍiyālai, பெ.(n.)

   விடிகாலை என்பதன் கொச்சைவழக்கு; corr. of {}.

     [விடிகாலை → விடியாலை]

விடியாவழக்கு

 விடியாவழக்கு viḍiyāvaḻkku, பெ.(n.)

   ஒரு பொழுதும் முடிவுபெறாத வழக்கு (இ.வ.);; never-ending dispute.

     [விடியா + வழக்கு. விடியா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.]

விடியாவிளக்கு

விடியாவிளக்கு viḍiyāviḷakku, பெ.(n.)

   நந்தாவிளக்கு; ever-burning lamp.

     “விடியாவிளக்கென்று மேவி நின்றேனே” (திருமந். 48.);

மறுவ. விடிவிளக்கு.

     [விடியா + விளக்கு]

விடியாவீடு

 விடியாவீடு viḍiyāvīḍu, பெ.(n.)

   தொடர்ந்து வரும் தீவினைப் பயனுள்ள வீடு; a house with continuous bad ‘karma’.

     [விடியா + வீடு]

இதன் மூலம், துன்பம் தொலைந்து இன்பங் கூடுதற்கியலாமை வெளிப்படுத்தப்பட்டது.

விடிவு

விடிவு1 viḍivu, பெ.(n.)

   1. விடிகாலை பார்க்க;see {}.

     “விடபியிதன்கண் விடிவளவு மிருவே மிருத்தும்” (சேதுபு. தரும. 13);.

   2. துன்பம் நீங்கியின்பம் வருகை; approach of good times, dawn of happiness.

நிற்பயம்பாடி விடிவுற் றேமாக்க” (பரிபா. 7, 85);.

   3. ஒழிவு வேளை; leisure.

க. பிடவு (b);.

     [விடி → விடிவு] (செல்வி 77. வைகாசி 499);

 விடிவு2 viḍivu, பெ.(n.)

விடியல்3 (அக.நி.); பார்க்க;see {}.

     [விடி → விடிவு]

 விடிவு3 viḍivu, பெ.(n.)

   1. அச்சம்; fear.

   2. நறும்புகை; incense.

     [விடி → விடிவு]

விடிவெட்டியாள்

 விடிவெட்டியாள் viḍiveḍḍiyāḷ, பெ.(n.)

விடுதியாள் (இ.வ.); பார்க்க;see {}.

     [விடி + வெட்டியாள்]

விடிவெள்ளி

விடிவெள்ளி viḍiveḷḷi, பெ.(n.)

   பின்னிரவில் தோன்றும் வெள்ளி மீன் (சுக்கிரன்); (வின்.);; venus, as the morning star.

     [விடி2 + வெள்ளி]

விடிவேளை

 விடிவேளை viḍivēḷai, பெ.(n.)

விடியற் காலம் பார்க்க;see {}.

     [விடி + வேளை]

விடிவை

விடிவை viḍivai, பெ.(n.)

விடியற்காலம் பார்க்க;see {}.

     “விடிவை சங் கொலிக்கும்” (திவ். திருவாய். 6, 1, 9);.

     [விடி → விடிவு → விடிவை. (வ.மொ.வ.88);]

விடிவோரை

விடிவோரை viḍivōrai, பெ.(n.)

   அதிகாலை; early hours of the morning.

     “விடிவோரை நட்டு” (திவ். திருப்பா. 3, வ்யா);.

     [விடிவு1 + ஒரை2]

விடு

விடு1 viḍudal,    6 செ.குன்றாவி. (v.t.)

   1. நீங்குதல்; to leave, quit, part with.

     “தவ்வையைக் காட்டி விடும்” (குறள், 167);,

     ‘அவன் சென்ற ஆண்டே பள்ளியை விட்டுவிட்டான்;

சம்பளம் போதாதென்று வேலையை விட்டு விட்டான்’.

   2. விலக்குதல்; to remove.

     ‘அவன் காசிக்குச் சென்று வந்ததும் கத்தரிக்காயை விட்டுவிட்டான்’.

   3. நீக்குதல்; to get rid of.

     “தூற்றாதே தூரவிடல்” (நாலடி, 75);.

   4. பிரித்தல்; to split, separate;

 to disentangle, as hair.

   5. கைவிடுதல்; to abandon, forsake.

     ‘அவன் புதுமணஞ் செய்தவுடன் பழைய

மனைவியை விட்டுவிட்டான்’.

   6. போக விடுதல்; to let go.

   7. அனுப்புதல்; to des- patch, send away.

     “தவமுது மகளை விட்டு” (குறள். 501, உரை);.

   8. தொடர்பு விடுத்தல்; to liberate, set free, release.

     ‘அவனுக்கும் எனக்கும் நீண்ட நாட்களாகத் தொடர்பு விட்டுப் போயிற்று’.

   9. நிறுத்துதல்; to give up, to leave off, discontinue.

     ‘அந்த பழக்கத்தை விடு’,

     ‘வண்டியை விட்ட இடத்திலிருந்து ஒட்டி வந்தான்’.

   10. ஒழித்து விடுதல்; to omit, leave out.

     ‘அந்தப் பகுதியை விட்டுப் படித்தான்’.

   11. முடித்தல்; to end, finish, conclude.

   12. வெளி விடுதல்; to emit, issue, to give out, let out.

   13. செலுத்துதல்; to send forth, discharge.

     “எம்மம்பு கடிவிடுதும்” (புறநா. 9);.

   14. எறிதல் (பிங்.);; to throw.

     “விடும் விடுங் கரதலத்து” (தக்கயாகப். 413.);.

   15. சொரிதல்; to pour.

     “கதிர் விடு தன்மையும்” (கலித். 100);.

   16. கொடுத்தல்; to give, bestow.

     “திருப்பணிக்கு விட்டேன்” (S. I. I. iii. 121.);.

   17. சொல்லுதல்; to say, tell.

     “வேலைகடப்பன் மீளமிடுக்கின் றென விட்டான்” (கம்பரா. மகேந்திர. 4);.

   18. விளத்தமாகக் கூறுதல்; to describe in detail, to elucidate.

   19. வெளிப்படக் கூறுதல்; to publish, expose, tell openly.

   20. அனுமதி தருதல்; to permit, let allow.

     ‘அவனை உள்ளே செல்ல விட்டான்’.

   21. காட்டித்தருதல்; to indicate, point out.

     “கெடுதியும் விடீராயின்” (குறிஞ்சிப். 144);.

   22. வெளிப்படுத்துதல்; to express, give out.

     “மறைகாவா விட்டவன் புலம்பு விடு குரலோடு” (நெடுநல். 93, 4);.

     ‘மனத்தி லுள்ளதை விட்டுச் சொல்’ (உ.வ.);.

   23. பிதிர் விள்ளுதல்; to solve, as a riddle.

   24. உண்டாக்குதல்; to form.

     “துளைகள் விடுகழை” (திருப்பு. 51);.

   25. பிடி நெகிழச்

   செய்தல்; to become loose.

     ‘பணப்பையை எங்கோ விட்டுவிட்டான்’.

   26. இடத்தினின்று நீங்குதல்; to depart, leave.

     ‘ஊரை விட்டுவிட்டான்’ (விரும்பி நீங்குதல்);

     ‘கோட்டையை விட்டுவிட்டான்’ (அஞ்சி நீங்குதல்);

   27. விடுதலை செய்தல்; to release from the prison.

     ‘அரசரின் முடிசூட்டு விழாவன்று சிறையாளியரை யெல்லாம் விட்டு விட்டனர்’.

   28. விடுமுறை யளித்தல்; to give holiday.

     ‘வேனிற் காலத்தில் கல்வி நிலையங்களுக்கெல்லாம் விடுமுறை விடப்படும்’.

   29. இசைதல்; to con- sult, agree.

     ‘காசு கொடுத்தபின் ஏவலன் உள்ளே போகவிட்டான்’.

   30. பிறருக்காக இழத்தல்; to loss for somebody.

     ‘பொதுநலத்திற்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுத்தல் வேண்டும்’.

   31. ஏவுதல்; to set on.

     ‘நாயை விட்டுக் கடிக்கச் செய்தான்’.

   32. அடித்தல்; to beat.

     ‘கன்னத்தில் விட்டான் இரண்டு’.

   33. வினைக்கமர்த்தல்; to employ, to appoint.

     ‘தண்ணீருக்கென்று நாலாளை விட்டிருக் கிறார்கள்’.

     ‘காடுகெட ஆடுவிடு’ (பழ.);.

   34. அமைத்தல்; to make.

     ‘வீட்டிற்கு நாற்புறமும் வாசல் விட்டுக் கட்டியிருக் கின்றனர்’.

   35. ஒளிவீசுதல்; to emit light.

     ‘பட்டை தீர்ந்த கல் நன்றாய் ஒளிவிடும்’.

   36. புகுத்துதல்; to put in.

     ‘பாம்புப் புற்றிற்குள் கையை விட்டான்’.

   37. இடையில் ஏடு தள்ளுதல்; to slip or miss a leaf in read- ing or copying.

     ‘கள்ளேடு விட்டுப் படிக்கிறான்’.

   38. இடையில் இடம் விடுதல்; to give space.

     ‘ஒற்றை யிடைவெளி விட்டுத் தட்டச்சடித்தல் வேண்டும்’.

   39. பொறுத்தல்; forbearing.

     ‘கீரையை வளரவிட்டு அறுத்தல் வேண்டும்’.

     ‘கொதிக்கின்ற நீரை ஆறவிட்டுக் குடித்தல் வேண்டும்’.

   40. ஒழித்தல்; to cause to Cease.

     ‘குடியை விட்டு விடு’.

   41. ஒதுக்குதல்; to allot.

     ‘புதிய நகரமைப்பிற் கல்விச் சாலைக்குப் போதிய நிலம் விடப்பட்டிருக்கின்றது’.

     ‘விட்டதடா ஆசை விளாம்பழத்து ஒட்டோடே’ (பழ.);.

 விடு2 viḍudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. பிரிதல்; to be separated, divided.

   2. விள்ளுதல், திறத்தல் (இலக்.அக.);; to be opened.

     ‘ஒரு விடுகதை போடு’.

   3. கட்டு அவிழ்தல்; to loosen, release.

     “தளைவிட்ட தாமரை” (கலித். 77);.

   4. மலர்தல்; to blossom.

     “தாது பொதி போது விட” (தேவா. 1157, 6);.

   5. உண்டாகுதல்; to appear;

 to be formed.

     ‘மரத்தில் தளிர்விட்டிருக்கிறது’.

   6. மிகுதல்; to increase.

     “ஒளிர்விட்ட வாக்கினை” (கலித். 72);.

   7. தங்குதல்; to stay.

     “காவினு ணயந்து விட்டார்களே” (சீவக. 1905);.

   8. தவிர்தல்; to cease, stop.

     ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ (பழ.);.

   9. பிளந் திருத்தல்; to be split, broken or cracked.

     ‘அந்தச்சுவர் விட்டுப் போயிற்று’ (வின்.);.

   10. நிறுத்தல்; to be let off, to be discontinued.

     ‘அது விட்டது தெரியவில்லை’.

   11. இடைவெளி விடுதல்; to leave inter- space, as in writing.

     ‘இடைவெளி விட்டு எழுத வேண்டும்’.

   12. படிக்கையில் நிறுத்துதல்; to pause, as in reading.

     ‘விட்டு விட்டுப் படிக்க வேண்டும்’.

   13. வலுக்குறைதல்; to lose strength.

   14. விலகுதல் (இலக்.அக.);; to become loose, disjointed.

     ‘மூட்டு விட்டுப் போயிற்று’.

   15. அறுபடுதல்; to be cut..

     ‘நூல் விட்டுப் போயிற்று’.

 Ma. {};

 Ko. {};

 To. pir;

 Ka. {};

 Kod. {}, Tս. {};

 Te. vidu, vidusս;

 Go. {};

 Br. Biting.

     [விள் → விடு → விடு-,]

 விடு3 viḍudal, து.வி. (aux.)

   ஒரு துணை வினை; an auxiliary verb having the force of certainty, intensity, etc.

     ‘வந்து விட்டான்’.

 விடு4 viḍuttal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. அனுப்புதல்; to send away, despatch.

     “போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்” (தொல். பொ. 39.);.

   2. போகவிடுதல்; to let go.

     “உயிர் விடுத்தலின்” (கல்லா. கணபதி);.

   3. தொடர்பு (பந்தம்); விடுவித்தல்; to free, lib- erate, release.

     “பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில் புக்கான்” (சீவக. 2917);.

   4. நெகிழ்த்துதல்; to loosen.

   5. பிரித்தல்; to split, separate, to disentangle, as the hair.

     ‘புரை விடுத்துரைமோ’ (சீவக. 1732);.

     “உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றே”.

     ‘தலைமயிர் விடுத்துக் கொண்டிருந்தாள்’.

   6. பிதிர் விள்ளுதல்; to slove, as a riddle.

   7. செலுத்துதல்; to send forth, discharge.

     “ஒருட லிரண்டு கூறுபட விடுத்த…. வேலோய்” (கல்லா. முருகன்றுதி.);.

   8. சொல்லுதல்; to stay, tell.

     “செல்கென விடுத்தன்று” (பு.வெ.12, பெண்பாற். 19);.

   9. வெளிப்படக் கூறுதல்; to publish, to expose, as a secret, to say openly.

   10. வெளிவிடுதல்; to emit, issue, to let out, give out

     “பெருங்காற்று விடுத்த” (கல்லா. கணபதி);.

   11. விளத்தமாகக் கூறுதல்; to elu- cidate, to describe in detail.

   12. விடை தருதல்; to answer, reply.

     “வினாயவை விடுத்தல்” (நன். 40);.

     [விள் → விடு → விடு-த்தல், (மு.தா. 165);]

 விடு5 viḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. விடை பெறுதல்; to receive permission, as from a superior.

     “விடுத்தேன் வாழிய குரிசில்”(புறநா. 210);.

   2. தங்குதல்; to remain.

     “விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி” (திருவாலவா. 54, 5);.

 விடு6 viḍu, பெ.(n.)

   பகலிரவுகள் நாழிகை யளவில் ஒத்தநாள் (வின்.);; equinox.

     “நிகரில் விடுக்களில்” (திருகாளத். பு. தல விசிட். 33);.

விடுகதை

விடுகதை viḍugadai, பெ.(n.)

   புதிர்; riddle, enigma.

     [விடு2- + கதை1]

விடுகவி

விடுகவி viḍugavi, பெ.(n.)

விடுபாட்டு பார்க்க;see {}.

     [விடு1- + கவி]

 Skt. kavi → த. கவி.

விடுகாசு

விடுகாசு1 viḍukācu, பெ.(n.)

   சில்லறைப் பணம் (வின்.);; change, lower denomina- tion of coins, petty cash.

     [விடு + காசு]

 விடுகாசு2 viḍukācu, பெ.(n.)

விடுகாசு வளையல் (வின்.); பார்க்க;see {}.

தெ. காசூ ({});

     [விடு + காசு]

 விடுகாசு viḍukācu, பெ. (n.)

   ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தம்பிடி எனும் மதிப்புள்ள சிறுகாசு; a lowest value coin in a rupee during the English period in India.

மறுவ தம்பிடி

     [விடு+காசு]

   4 விடுகாக-1 துட்டு, 3 துட்டு-1 அனா, 12 விடுகாக-1 அனா, 16 அனா-1 ரூபாய், 192-விடுகாக-1 ரூபாய்.

விடுகாசுவளையல்

விடுகாசுவளையல் viḍukācuvaḷaiyal, பெ.(n.)

   கண்ணாடி வளையல் வகை (வின்.);; a glass armlet or bangle, bracelet.

     [விடுகாசு2 + வளையல்]

விடுகாது

விடுகாது viḍukātu, பெ.(n.)

   வளர்த்துத் தொங்கவிடும் தொள்ளைக் காது; perforated ear-lobe hanging loose without any jewel.

     “விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காண்” (ஈடு. 10, 1, 1);.

     [விடு + காது]

விடுகாலி

விடுகாலி viḍukāli, பெ.(n.)

   1. பட்டி மாடு; cattle allowed to roam at large.

   2. கடங்காதவ-ன்-ள்; person under no moral restraint.

     [விடு + காலி]

விடுகாலிவிளைவு

 விடுகாலிவிளைவு viḍukāliviḷaivu, பெ.(n.)

   பின்னறுவடை (யாழ்.அக.);; belated harvest.

     [விடுகாலி + விளைவு]

விடுகு

விடுகு viḍugu, பெ. (n.)

   1. பிள்ளை; son.

   2. துண்டு; piece.

     [பிடுகு → விடுகு (சு.வி.பக்.15);]

விடுகுதிரை

விடுகுதிரை viḍugudirai, பெ.(n.)

   பகைவர் மேல் விடுங் குதிரைப் பொறி; horse-shaped ngine of war.

     “விற்பொறிகள் வெய்ய விடுகுதிரை” (சீவக. 102);.

     [விடு + குதிரை]

விடுகுறை

விடுகுறை1 viḍuguṟai, பெ.(n.)

விட்டகுறை (வின்.); பார்க்க;see {}.

     [விடு + குறை]

 விடுகுறை2 viḍuguṟai, பெ.(n.)

விடுதுறை (வின்.); பார்க்க;see {}.

     [விடு + குறை]

விடுகோலெருது

விடுகோலெருது viḍuālerudu, பெ.(n.)

   சமயத்திலுதவும் பொருட்டு உடன் கொண்டு செல்லும் எருது (வின்.);; spare bullock.

     [விடு + கோல்1 + எருது]

விடுக்கு

விடுக்கு1 viḍukku, பெ.(n.)

   சிற்றளவான குடிநீர்; small amount of drinking water.

     [முடுக்கு → விடுக்கு (செல்வி. செப். 78-10);]

 விடுக்கு2 viḍukku, பெ.(n.)

   மடக்கு; a mouth- ful water.

     [விழுங்கு → விழுக்கு → விடுக்கு (மு.தா.322);]

விடுதயிர்

 விடுதயிர் viḍudayir, பெ.(n.)

   நீர்கலந்த தயிர் (இ.வ.);; curd mixed with water, loose curds.

     [விடு + தயிர்]

விடுதலம்

விடுதலம் viḍudalam, பெ.(n.)

   1. நிலாமுற்றம்; open terrace.

     “தன்கோயின் மீமிசை விடுதலத்து” (திருவாலவா. 16, 1);.

   2. பொது மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பெற்ற வெற்றுநிலம்; unoccupied or vacant site set apart for the use of the public.

   தெ. விடுதல;க. பிடடெ.

     [விடு + தளம் → தலம்]

 Skt. ஸ்தலம் (முன்மெய்ச் சேர்பு);

விடுதலை

விடுதலை viḍudalai, பெ.(n.)

   1. ஓய்வு; rest, retirement.

   2. தொடர்பு நீக்கம்; release, deliverance.

   3. தன்னுரிமை; liberty.

     “புலையருக்கும் விடுதலை” (பாரதி. தேசீய. விடுதலை. 2);.

தெ. விடுதல.

விடுதலைப்பத்திரம்

 விடுதலைப்பத்திரம் viḍudalaippaddiram, பெ.(n.)

   சொத்திற் பிறர்க்கு உரிமையில்லை யென்பதை உறுதிப்படுத்தும் உறுதி ஆவணம்; release deed, deed of dis- charge, as of mortgage, etc.

     [விடுதலை + Skt. patra → த. பத்திரம்]

விடுதல்

 விடுதல் viḍudal, பெ.(n.)

   விடுதலை (புதுவை.);; release.

     [விடு → விடுதல்]

விடுதா-தல் (விடுதருதல்)

விடுதா-தல் (விடுதருதல்) viḍudādalviḍudarudal,    4 செ. குன்றாவி.(v.t.)

   கொடுத்தனுப்புதல்; to send, as a present.

     “சிறு தொட்டில்….. உனக்குப் பிரமன் விடுதந்தான்” (திவ். பெரியாழ். 1,3,1);.

     [விடு + தா (தரு);-,]

 விடுதா-தல் (விடுதருதல்) viḍudādalviḍudarudal,    4 செ.கு.வி.(v.i.)

   தடையின்றி முன் செல்லுதல்; to advance unchecked.

     “வெஞ்சின வேந்தன் விடுதர” (பு.வெ.4, 1, கொளு.);.

     [விடு + தா (தரு);-,]

விடுதாள்

 விடுதாள் viḍutāḷ, பெ.(n.)

   தனித்தாள் (இ.வ.);; loose sheet of paper.

     [விடு + தாள்]

விடுதி

விடுதி viḍudi, பெ.(n.)

   1. தங்குமிடம்; Iodging place, place of temporary residence;choultry.

     “விடுதியே நடக்கவென்று நவிலுவீர்” (பாரத. சூது. 165);.

   2. விடுதலம், 2 (இ.வ.); பார்க்க;see {}.

   3. தனித்த-வன்-வள்-து; that which is soli- tary or lonely, separated or companionless.

     ‘விடுதியாள்’,

     ‘விடுதி மாடு’,

     ‘விடுதிப்பூ’.

   4. இசைவு; leave, per- mission.

     ‘எனக்கு விடுதி தர வேண்டும்’.

   தெ. விட்டி;   க. பிடதி;ம. விடுதி.

     [விடு → விடுதி]

விடுதிப்பூ

விடுதிப்பூ viḍudippū, பெ.(n.)

விடுபூ பார்க்க;see {}.

     [விடுதி + பூ3]

விடுதிமாடு

 விடுதிமாடு viḍudimāḍu, பெ.(n.)

விடுகோ லெருது பார்க்க;see {}.

     [விடுதி + மாடு]

விடுதியாள்

விடுதியாள் viḍudiyāḷ, பெ.(n.)

   வேலையில்லாதவன் (கொ.வ.);; unemployed person.

   2. குடும்ப அலுவலில்லாத ஆள்; single man, man without any domestic ties or duties.

     [விடுதி + ஆள்2]

விடுதீட்டு

விடுதீட்டு1 viḍutīḍḍu, பெ.(n.)

   கொடை ஆவணம்; gift deed.

     “நாயனார் பண்டாரத் தார்க்கு விடுதீட்டுக் குடுத்த பரிசாவது’ (S.I.I. V. 105);.

     [விடு1 + தீட்டு2]

 விடுதீட்டு2 viḍutīḍḍu, பெ.(n.)

   விடுதலை ஆவணம் (பத்திரம்); (ரகஸ்ய. 281);; release deed.

     [விடு + தீட்டு]

விடுது

விடுது viḍudu, பெ.(n.)

   1. ஆலம் விழுது; aerial root falling down from branch of banyan tree.

   2. ஆழம் பார்ப்பதற்காக ஒரு முனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு; sounding lead.

     ‘கடலில் விடுது விட்டுப் பார்க்கிறது’ (naut.); (வின்.);.

   3. தூக்குருண்டை (இ.வ.);; plumb-line.

     [விழுது → விடுது]

விடுதுறை

 விடுதுறை viḍuduṟai, பெ.(n.)

   படிக்கும் போது நிறுத்திப் படிக்கும் இடம் (யாழ்.அக.);; place for pause in reading, singing, etc.

     [விடு + துறை]

விடுதோல்

விடுதோல் viḍutōl, பெ.(n.)

   மேற்றோல்; epidermis.

     “நரம்பொடு விடுதோல் … கழன்று” (மணிமே. 20, 59);.

     [விடு + தோல்3]

விடுத்தம்

விடுத்தம்1 viḍuttam, பெ.(n.)

   தடவை (வின்.);; turn, times.

     “எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி” (புதுக். கல். 799);.

     [விடு → விடுத்தம்] (வே.க.149);

 விடுத்தம்2 viḍuttam, பெ.(n.)

   1. மரவகை; strychnine tree.

   2. எட்டி (மலை.); பார்க்க;see {}.

விடுத்துவிடுத்து

 விடுத்துவிடுத்து viḍuttuviḍuttu, து.வி. (adv.)

   அடிக்கடி (வின்.);; very often, frequently.

     [விடுத்து + விடுத்து]

விடுநகம்

விடுநகம் viḍunagam, பெ.(n.)

   கிட்டிக்கோல்; clamp consisting of two sticks, an instrument of torture.

     “கேளாதாரை வடுக விடுநக மிட்டு” (ஈடு. 4, 8, 6);.

     [விடு + நகம்2]

விடுநாண்

விடுநாண்1 viḍunāṇ, பெ.(n.)

   இடுப்பிற் கட்டும் அரைஞாண் கொடி, கயிறு (ஈடு. 2, 5, 5);; girdle, cord for the waist.

     [விடு + நாண்2].

 விடுநாண்2 viḍunāṇ, பெ.(n.)

   கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் நாணனிவகை; a neclet ornament hang- ing down to the waist.

     “திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது திருவுந்தியளவும் தாழ” (திவ்.பெரியாழ். 2,10, 2, வ்யா, பக். 488);.

     [விடு + நாண்]

விடுநிலம்

விடுநிலம் viḍunilam, பெ.(n.)

   வெற்று நிலம்; waste land.

     “விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து” (மணிமே. 13, 51);.

     [விடு + நிலம்]

விடுந்தலைப்பு

 விடுந்தலைப்பு viḍundalaippu, பெ.(n.)

   சீலையின் முன்றானை (வின்.);; front end of a cloth, the ornamented end of a saree.

     [விடு + தலைப்பு]

விடுபடு-தல்

விடுபடு-தல் viḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. நீக்கப்படுதல்; to be left, to be aban- doned, relinquished.

   2. விடுதலை யடைதல்; to be released, liberated, as from bondage or prison.

     [விடு + படு-,]

விடுபடை

விடுபடை viḍubaḍai, பெ.(n.)

   எறியப்படும் படை (சுக்கிர நீதி. 328);; missile.

     [விடு + படை]

விடுபதி

 விடுபதி viḍubadi, பெ.(n.)

   மருமகன் (யாழ்.அக.);; son-in-law.

     [விடு + பதி]

விடுபாடு

 விடுபாடு viḍupāḍu, பெ.(n.)

   இலக்கண வரையறை, மற்றும் தொகைப்படுத்துதல் ஆகியவற்றில் சொல்லவேண்டிய ஒன்று சொல்லப்படாதிருத்தல்; be left out, be omitted, be left undone.

     [விடுபடு → விடுபாடு]

விடுபாட்டு

விடுபாட்டு viḍupāḍḍu, பெ.(n.)

   தனிப்பாடல்; stray, occasional verse.

மறுவ. விடுகவி

     [விடு1 + பாட்டு]

விடுபூ

விடுபூ viḍupū, பெ.(n.)

   தொடுக்காத பூ; loose flower, as not strung in a garland.

     “விடுபூத் தொடைப்பூக் கட்டுப்பூ” (சிலப். 5, 14, உரை);.

     [விடு + பூ3]

விடுபேறு

 விடுபேறு viḍupēṟu, பெ.(n.)

   பிறர்க்கு உரிமையாய் விடப்பட்ட நிலம் முதலியன (Insc.);; endowment, as of lands, money, etc.

     [விடு + பேறு]

விடுப்பு

விடுப்பு viḍuppu, பெ.(n.)

   1. நீக்கம்; separa- tion.

     “விடுப்பில் குணகுணி” (வேதா. சூ. 127);.

   2. துருவியறியுந் தன்மை (வின்.);; in- quisitiveness.

   3. புதுமையானது; that which is strange or curious.

     ‘அவன் விடுப்புக் காட்டுகிறான்’ (வின்.);.

   4. விருப்பம் (யாழ்.அக.);; desire.

   5. தானாக எடுக்கும் விடுப்பு; leave

     [விடு → விடுப்பு] (செல்வி. 77, ஆடி.பக். 488);

 விடுப்பு viḍuppu, பெ. (n.)

   முழவால் இசைக்கப்படும் ஒரு திறன்; a method of playing music.

     [விடு-விடுப்பு]

விடுப்புக்காட்டு-தல்

விடுப்புக்காட்டு-தல் viḍuppukkāḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   புதுமைக்காட்சி காட்டுதல் (வின்.);; to present a curious or strange spectacle or show.

     [விடுப்பு + காட்டு-,]

விடுமனை

 விடுமனை viḍumaṉai, பெ.(n.)

   வெற்று மனையிடம் (இ.வ.);; vacant house-site.

     [விடு + மனை]

விடுமலர்

விடுமலர் viḍumalar, பெ.(n.)

   1. மலர்ந்த பூ; blossom.

     “விடுமலர்ப் பூங்கொடி போல நுடங்கி” (பரிபா. 12, 89);.

   2. விடுபூ பார்க்க;see {}.

     [விடு + மலர்]

விடுமுதல்

 விடுமுதல் viḍumudal, பெ.(n.)

   வாணிகத் திற்கு வைத்த முதல் (இ.வ.);; capital.

     [விடு + முதல்]

விடுமுறி

விடுமுறி viḍumuṟi, பெ.(n.)

   1. விடுதலைப் பத்திரம் (இ.வ.); பார்க்க;see {}.

   2. மணமுறிப்பு செய்து கொண்டதைக் குறிக்கும் ஆவணம் (நாஞ்.);; divorce deed. ({});.

     [விடு + முறி]

விடுமுறை

விடுமுறை viḍumuṟai, பெ.(n.)

   1. அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் முறையாக அளிக்கும் ஒய்வுநாள் (இ.வ.);; holiday, vocation.

   2. கோடை விடுமுறை; summer holiday.

   3. கிழமை விடுமுறை; weekly holiday.

     [விடு + முறை]

விடுவம்

விடுவம் viḍuvam, பெ.(n.)

   பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்தநாள்; equinox.

     “அயனமே விடுவந்திங்கட் பிறப்பு” (வேதாரணி. தோற்ற. 82);.

     [விடு → விடுவம்]

விடுவாய்

விடுவாய் viḍuvāy, பெ.(n.)

   நிலப்பிளப்பு; cleft, crevice in the surface of the earth.

     “கருங்கதிரெறித்த விடுவாய் நிறைய” (அகநா. 53);.

     [விடு + வாய்]

விடுவாய்செய்-தல்

விடுவாய்செய்-தல் viḍuvāyceytal,    1 செ. குன்றாவி. (v.t.)

   அரிதல்; to cut up, slice up,

 mince, as vegetables.

     “கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய” (சிலப். 16, 30);.

     [விடுவாய் + செய்-,]

விடுவி-த்தல்

விடுவி-த்தல் viḍuvittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விடுதலை செய்தல்; to liberate, set free,

 Release.

   2. உட்பொருளைக் கண்டு கூறுதல்; to explain, interpret, to solve, as a riddle.

     [விடு → விடுவி → விடுவி-,] (செல்வி. 77, ஆடி,589);

விடுவிடெனல்

விடுவிடெனல் viḍuviḍeṉal, பெ.(n.)

   1. சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு; onom, expr. of being active, busy.

   2. அச்சம் முதலிய வற்றால் மெய்ந் நடுங்குதற் குறிப்பு (இ);; expr. of shivering of body out of fear etc.

   3. சினங்கொள்ளுதற் குறிப்பு; being angry.

     [விடுவிடு + எனல்]

விடுவெட்டி

 விடுவெட்டி viḍuveḍḍi, பெ.(n.)

விடுதியாள் (இ.வ.); பார்க்க;see {}.

     [விடு + வெட்டி]

விடூசி

விடூசி viṭūci, பெ.(n.)

   அம்பு; arrow.

     “விடய மெனும் விடவிடூசி” (ஞானவா. முமுட். 13);.

     [விடு + ஊசி]

விடேலெனல்

விடேலெனல் viṭēleṉal, பெ.(n.)

   ஓசைக்குறிப்பு (சூடா.);; an imitative sound.

     “மாவின் வரிவடு விடேலெனாமுன்” (பெரியபு. அரிவாட். 22);.

     [விடேல் + எனல்]

விடேல்விடுகு

விடேல்விடுகு viḍēlviḍugu, பெ.(n.)

   பல்லவரசர் சிலரின் சிறப்புப் பெயர் (I.M.P.Tj.669);; a creditable title of cer- tain pallava kings.

     “விடேல்விடுகு நீகடவும் வீதிதோறும்” (நந்திக். 74);.

     [விடேல் + விடுகு]

விடேல்விடேலெனல்

விடேல்விடேலெனல் viṭēlviṭēleṉal, பெ.(n.)

   ஈரடுக் கொலிக்குறிப்பு; an imitative sound or echo.

     “மாவடு விடேல்விடேலென் றோசையும்” (பெரியபு. அரிவாட். 18);.

     [விடேல் + விடேல் + எனல்]

விடை

விடை1 viḍai, பெ.(n.)

   1. மறுமொழி (நன். 386, உரை);; answer, reply.

   2. அனுமதி; liberty, leave, licence, permission.

     “கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்” (கம்பரா. கைகேசி. 110);.

   3. விடைக்கோழி (வின்.); பார்க்க;see {}.

   4. அசைவு; movement, shaking.

     “பெயர்த்திட்டானது விடைதந்தில தணுவும்” (சேதுபு. இராமனருச். 158);.

க., து. பிடெ.

     [விடு2 → விடை (வே.க.149);]

 விடை2 viḍai, பெ.(n.)

   மிகுதி; abundance, surplus.

     “விடையரவ மன்றங் கறங்க” (பு.வெ.12. ஒழிவு. 5);.

 விடை3 viḍaittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. வேறுபடுத்துதல்; to seperate or alter.

     “விடைப்பருந்தானை வேந்தன்” (சீவக. 555);.

   2. அடித்தல்; to strike.

     “விடைப்பரே மனிதருந் தம்மில் வெல்லவே” (சிவதரு. சனன. 63);.

   3. கண்டித்தல் (வின்.);; to re- prove.

   4. வெளிப்படுத்துதல் (வின்.);; to re- veal or expose.

     [விடு → விடை → விடை-,] (சு.வி.28);

 விடை4 viḍaittal,    11 செ.கு.வி.(v.i.)

   1. மிகுதல்; to abound;

     “புன்னை மலர் நாற்றம் விடைத்தே வருதென்றல்” (தேவா. 69, 2);.

   2. கடுகுதல்; to be in haste.

     “விடைத்துத் தவரை வெகுள்வானும்” (சிவதரு. பாவ.36);.

 விடை5 viḍaittal,    11 செ.குன்றாவி.(v.t.)

   1. தடுத்தல்; to prevent, abstruct, parry.

     “அவன் புடைத்த கைகளை விடைத்தன னகற்றி” (பாரத. கீசக. 79);.

   2. வருந்துதல்; to affict, cause pain.

     “விடையா வடந்தை செய் வெள்ளியம் பொருப்பினும்” (கல்லா. 51);.

 விடை6 viḍaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. சோர்தல்; to droop, languish.

     “விடையா விடையாசரணம்” (தணிகைப்பு. வீராட்ட. 12);.

   2. விம்முதல்; to sob.

     ‘விடைக்க விடைக்க அழுகிறான்’.

   3. பெருஞ் சினங் கொள்ளுதல் (சூடா.);; to be very angry, to burst into a rage.

     “விடைத்துவரு மிலங்கைக் கோன்” (தேவா. 159, 10);.

   4. வலிப்புக் கொள்ளுதல் (வின்.);; to twitch, as the legs of a beast when dying.

   5. விரைத்து நிற்றல்; to stiffen up, straighten out.

     ‘அவன் விடைத்து நிற்கிறான்’.

   6. செருக்குக் கொள்ளுதல்; to be haughty.

 விடை7 viḍai, பெ.(n.)

   வருத்தம் (யாழ்.அக.);; distress, woe.

     [விடை5 → விடை]

 விடை8 viḍaidal,    3 செ.கு.வி. (v.i.)

   1. பிரிதல் (வின்.);; to become disjointed, to split.

   2. சினங் கொள்ளுதல் (வின்.);; to be angry.

   3. குற்றஞ்சொல்லுதல் (யாழ்.அக.);; to find fault, to prick holes.

   க. பிடய;ம. வெடியுக.

     [விடு → விடை-,] (வே.க. 149);

 விடை9 viḍai, பெ.(n.)

   1. எருது (பிங்.);; bull.

     “பீடுடைய போர்விடையன்” (தேவா. 539, 2);.

     “தோடுடைய செவியன் விடையேறியோர்” (தேவா.);

   2. எருது ஒரை (இடபவிராசி); (பிங்.);; taurus of the zodiac.

   3. எருமைக்கடா; buffalo bull.

     “மதர்விடையிற் சீறி” (பு.வெ. 7,14);.

   4. மரையின் ஆண்; male of the bison.

     “மரையான் கதழ்விடை” (மலைபடு. 331);.

   5. ஆட்டுக்கடா; ram.

     “விடையும் வீழ்மின்” (புறநா.262);.

   6. வெருகு (தொல். பொ. 623, உரை);; tom-cat.

   7. குதிரை (யாழ்.அக.);; horse.

கூடற்கேற்ற நிலையில் எல்லா உயிரினங்களும் அதற்கேற்றவாறு பருத்திருத்தல் இயல்வு. இதனாலேயே, ஆடு மாடு சில விலங்கினங்களும் கோழி மயில் முதலிய பறவையினங்களும் பருத்த இளமை நிலையில் விடையெனப்படும். (த.வ.பக்.46);.

விடைத்தல் = விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல்.

விலங்கினத்தில் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை உணர்த்தும்.

விடை → விடலை = இளங்காளை, காளை போன்ற மறவன், பாலைநிலத் தலைவன்.

விடலை = L. Vitula. Gk. italos-skt. vatsa.

விடை என்பது விலங்கினத்தின் ஆண்பாலைக் குறிக்கும் பொதுச் சொல்லாயினும், வழக்கு மிகுதிபற்றிச் சிறப்பாகக் காளையையே உணர்த்தும்.

வடவர் காட்டும் மூலம் வ்ருஷ் (மழைபெய்); என்பதே. மழைக் கருத்தினின்று, ஆண்மைக் கருத்தை இருவேறு வகையில் கடுகளவும் பகுத்தறிவிற்கொவ்வாதவாறு வலிந்து வருத்தி யிருக்கின்றனர்.

வ்ருஷ் = மழைபெய் (இ.வே.); மழைபோல் அம்பைப் பொழி, ஆண்மைகொள், பிறப்பிப்பு ஆற்றல் பெறு.

வ்ருஷன் = (ஒருகால், முதலில் பெய்கின்ற, தெளிக்கின்ற, சினைப்பிக்கின்ற); ஆண்மையுள்ள வலிமையுள்ள, மைந்துள்ள (இ.வே.); ஆடவன், ஆண், ஆண்விலங்கு, காளை, ஆண்குதிரை, தலைவன்.

வ்ருஷ = ஆடவன், ஆண், கணவன், ஆண் விலங்கு, காளை, விடையோரை, தலைவன் தலைசிறந்தது.

வ்ருஷப(bh.); – வ்ருஷன் (இ.வே.);

வ்ருஷப-ருஷப = காளை (இ.வே.);

வ்ருஷப என்பதன் முதற்குறையே ருஷப என்பது. ஆயினும் வடவர் அதுவந்த வழியை அறியாமலோ, வடசொல்லாகக் காட்டல் வேண்டி வேண்டுமென்றோ, ருஷ்2 என்பதை ருஷப என்னும் வடிவிற்கு மூலமாகக் காட்டுவர்.

   ருஷ்2 = செல், இயங்கு;   குத்து, கொல்;உந்து, தள்.

விடை என்னும் சொல்லின் திரிபாதலாலேயே, வ்ருஷ என்பதில் வகரம் உள்ளது. ஆயின், வ்ருஷ் (மழைபெய்); என்னுஞ் சொல்லொடு அதைத் தொடர்புபடுத்தி உத்திக் கொவ்வா முறையில் பொருள் தொடர்பு காட்டினர். அதனோடமையாது, ருஷப என்னும் முதற்குறைத் திரிபையும் வேறுசொல்லாகக் கொண்டு அதற்கும் பொருள் பொருந்தா முறையிற் பொருள் பொருத்தினர்.

     ‘விடை’ என்பது கொச்சை வடிவில்

     ‘விட’ என்று நிற்கும். இடையின விடைச் செருகல் வழக்கப்படி வி → வ்ரு என்றும், மெய்த்திரிபு மரபுப்படி ட → ஷ என்றும், திரிந்தனவென உண்மையறிக. (வ.மொ.வ.89-90);.

     [விள் → விடு → விட → விடை (சு.வி.பக். 17]

 விடை1௦ viḍai, பெ.(n.)

   இளம்பாம்பு (திவ். பெரியதி. 2, 9, 6, வ்யா.);; young cobra.

விடைகாலெறி-தல்

விடைகாலெறி-தல் viḍaikāleṟidal,    21 செ.கு.வி. (v.i.)

   1. இறக்குங்காலத்தில் கால்கள் வலித்திழுத்தல்; to twitch the legs, as a beast or person when dying.

   2. கால் மடங்குதல்; to bend the legs backward.

     [விடை3 + காலெறிதல்]

விடைகொடு-த்தல்

விடைகொடு-த்தல் viḍaigoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மறுமொழி சொல்லுதல்; to answer.

   2. அனுமதி கொடுத்தல்; to grant leave or permission.

     “வினைக்கு விடை கொடுப்பாம்” (பிரபுலிங். துதி. 1);.

     [விடை1 + கொடு]

விடைகொள்(ளு)-தல்

விடைகொள்(ளு)-தல் viḍaigoḷḷudal,    16.செ.கு.வி. (v.i.)

   1. வெளியேற அனுமதி பெறுதல்; to get permission, to take leave of, as when departing.

     “யானும் விடைகொள்ளத் தந்தருளுகென்றனள்” (தக்கயாகப். 288);.

   2. வந்து சேர்தல்; to arrive.

     ‘இன்றைக்குத்தான் திருவல்லிக் கேணிக்கு விடை கொண்டேன்’.

     [விடை + கொள்(ளு);-,]

விடைகோள்

விடைகோள் viḍaiāḷ, பெ.(n.)

விடைதழால் பார்க்க;see {}.

     “கதழ்விடை கோட் காண்மார்” (கலித். 103);.

     [விடை8 + கோள்]

விடைக்கந்தம்

 விடைக்கந்தம் viḍaikkandam, பெ.(n.)

   செம்மணித்தக்காளி (தைலவ.);; black nightshade.

     [விடை + கந்தம்]

விடைக்குறி

விடைக்குறி viḍaikkuṟi, பெ.(n.)

   காளை முத்திரை; seal with the mark of shiva’s bull.

     “திருக்கடையை விடைக்குறியிட்டு” (திருவாலவா. பதி, 4);.

     [விடை9 + குறி]

விடைக்கோழி

விடைக்கோழி viḍaikāḻi, பெ.(n.)

   தாயைவிட்டுப் பிரிந்து திரியக் கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு (யாழ்.அக.);; chicken old enough to roam about away from its mother hen.

     [விடை1 + கோழி]

மறுவ. கோழிச் சேவல்.

விடைதழால்

விடைதழால் viḍaidaḻāl, பெ.(n.)

   ஏறு தழுவதற்குரிய முல்லை நிலப்பாறையறை வித்து சினமூட்டி விடப்பட்ட ஏற்றினைத் தழுவிப்பிடிக்கை; grappling and subduing enraged bulls, as by a suitor in a test of bravery.

     “தழாஅல் வேண்டும்” (தொல்.

பொருள். 644).

     [விடை + தழுவு → தழால். (தழால் = தழுவுகை);]

விடைதுரத்துதல்

 விடைதுரத்துதல் viḍaiduraddudal, பெ.(n.)

   வளர்ந்து பெரிதான குட்டி அல்லது குஞ்சைத் தாய்விலங்கு அல்லது பறவை தன்னினின்று அகற்றுகை; sending or driving away of the young ones by the mother animal or bird after their tutelage is over.

     [விடை + துரத்துதல்]

விடைப்பாகன்

விடைப்பாகன் viḍaippākaṉ, பெ.(n.)

சிவ பிரான்;{},

 as riding the bull Nandi.

     “மெய்யா விமலா விடைப்பாகா” (திருவாச. 1, 34);.

     [விடை + பாகன்3]

விடைப்பு

விடைப்பு1 viḍaippu, பெ.(n.)

   1. வேறு படுத்துகை; separating, dividing.

     “விடைப் பருந்தானை வேந்தன்” (சீவக. 555);.

   2. நீக்குகை; removal.

     “விடைப்பரு வினையினாக்கம்” (தணிகைப்பு. சீபரி. 603);.

     [விடை3 → விடைப்பு]

 விடைப்பு2 viḍaippu, பெ.(n.)

   1. சினங் காட்டுகை; mani-festation of anger, wrath.

   2. திமிர்; arrogance.

     ‘அவன் மிகவும் விடைப்பாயிருக்கிறான்’.

     [விடை4 → விடைப்பு]

 விடைப்பு3 viḍaippu, பெ.(n.)

   குற்றம் (யாழ்.அக.);; fault, error.

     [விடை5 → விடைப்பு]

விடைப்பேர்

விடைப்பேர் viḍaippēr, பெ.(n.)

   வரிவகை (S.I.I.vii.403);; a tax.

     [விடை + பேறு → விடைப்பேர்]

விடைப்பேறு

விடைப்பேறு viḍaippēṟu, பெ.(n.)

   பழைய வரி வகை (S.I.I.ii.115);; an ancient tax.

     [விடை + பேறு]

விடைமுகன்

விடைமுகன் viḍaimugaṉ, பெ.(n.)

   நந்தி; Nandi, as having the face of a bull.

     “விடைமுக னுரைத்தசொல் வினவி” (கந்தபு. விடை.23);.

     [விடை + முகம் → முகன்]

விடைமுரிப்பு

 விடைமுரிப்பு viḍaimurippu, பெ.(n.)

   எருத்தின் திமில் (திவா);; hump of an ox.

     [விடை + முரிப்பு]

விடையதிகாரி

விடையதிகாரி viḍaiyadikāri, பெ.(n.)

விடையிலதிகாரி பார்க்க;see {}.

     “இப்படிக்கு விடையதிகாரி உய்யக் கொண்டான் எழுத்து” (S.I.I.iii.36);.

     [விடை1 + அதிகாரி]

விடையன்

விடையன்1 viḍaiyaṉ, பெ.(n.)

விடையவன்,1 பார்க்க;see {}.

     “ஒற்றை விடையனு நான்முகனும்” (திவ். பெரியாழ். 4,10,4);.

     [விழை → விடை → விடையன் (வே.க. 120);]

 விடையன்2 viḍaiyaṉ, பெ.(n.)

   மிகு சிற்றின்ப வெறியன், காமுகன்; sensualist.

     [விழை → விடை → விடையன் (வே.க.120);]

விடையம்

விடையம்1 viḍaiyam, பெ.(n.)

   1. காட்சிப்பொருள்; objects of sense.

     “விடையமறுத்து” (காசிக. அக. விந். 14);.

   2. விடயம்1, 1, 4 பார்க்க;see {}.

   3. நாடு; country, nation.

     “விடையமொன்றின்றி வென்ற” (சூளா. மந்திர. 62);.

     [விடு → விடை → விடையம்] (சுவி.28);

 விடையம்2 viḍaiyam, பெ.(n.)

   அதிவிடையம் (அரு.அக.);; atis.

விடையவன்

விடையவன் viḍaiyavaṉ, பெ.(n.)

   1. சிவபிரான் பார்க்க;see {}.

     “விடையவனே விட்டிடுதி கண்டாய்” (திருவாச. 6, 1);.

   2. வருணன்;{}.

     “நெடுந்தேருடை மீளிதானும் விடையவ னாதலால்” (பாரத. குருகுல. 108, அரும்.பக். 12);.

     [விடை → விடையவன்]

விடையாத்தி

 விடையாத்தி viḍaiyātti, பெ.(n.)

விடாயாற்றி பார்க்க;see {}.

     [விடையாற்றி → விடையாத்தி]

விடையான்

விடையான் viḍaiyāṉ, பெ.(n.)

   சிவன்; Sivan.

     “விடையாயெனுமால்” (தேவா. திருமரு. 1);.

     [விடையன் → விடையான்]

விடையாயம்

விடையாயம் viḍaiyāyam, பெ.(n.)

   ஏற்றையுடைய ஆனிரை; herd of cows with a bull in their midst.

     “வேற்காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து” (பு.வெ.1,1);.

     [விடை7 + ஆயம்4 (ஆயம் = ஆக்களின் மந்தை);]

விடையாற்றி

 விடையாற்றி viḍaiyāṟṟi, பெ.(n.)

விடாயாற்றி பார்க்க;see {}.

 விடையாற்றி viḍaiyāṟṟi, பெ. (n.)

   பச்சைக்காளி, பவளக்காளி அம்மீன்கள் அருள் வழங்கியபின் ஓய்வெடுத்தல்; respite of Paccaikkali Pavalakkali Amman’s blessings to the devotees.

     [விடை+ஆற்றி]

விடையிலதிகாரி

விடையிலதிகாரி viḍaiyiladikāri, பெ.(n.)

   அரசாணை விடுக்கும் அதிகாரி; officer, who issues the royal orders.

     “விடையி லதிகாரிகள் உய்யக் கொண்டானும்” (S.I.I.iii.36); (T.A.S.i.166);.

     [விடை → விடையில் + அதிகாரி → விடையிலதிகாரி] (செல்வி 77, ஆடி, 588);

விடையுச்சன்

விடையுச்சன் viḍaiyuccaṉ, பெ.(n.)

   திங்கள் (நாமதீப.97);; moon.

     [விடை7 + உச்சன்]

விடையூர்தி

விடையூர்தி viḍaiyūrti, பெ.(n.)

சிவபிரான்;{}

 as riding with the bull Nandi.

     “விடையூர்தி யருளா லுலவுவீர்” (தாயு. சித்தர், 3);.

     [விடை + ஊர்தி]

விடையூழியம்

 விடையூழியம் viḍaiyūḻiyam, பெ. (n.)

கிறித் துவமதத்தில் ஒரு சிறப்புப்பணியின் பொருட்டு அமைக்கப்படும் குழு mission.

     [விடை+ஊழியம்]

விடையூழியர்

 விடையூழியர் viḍaiyūḻiyar, பெ. (n.)

   ஒரு சிறப்புப் பணியை ஆற்றும் முகத்தான் அப்பணியில் ஈடுபடுபவர்; missionary.

     [விடையூழியம்+அர்]

விடையோன்

விடையோன் viḍaiyōṉ, பெ.(n.)

விடையவன், 1 பார்க்க;see {} 1.

     “விடையோன் யாகசாலை புக” (தக்கயாகப். 728);.

     [விடையன் → விடையோன்]

விட்சி

 விட்சி viṭci, பெ.(n.)

   வெட்சி (சங்.அக.); என்பதன் மறுவழக்கு; corr. of {}.

விட்ட குதிரையார்

 விட்ட குதிரையார் viṭṭagudiraiyār, பெ. (n.)

கடைக்கழகப் புலவரின் புனை பெயர்:

 coined name of sangam poet.

விட்டகுதிரையார்

விட்டகுதிரையார் viṭṭagudiraiyār, பெ.(n.)

   பாடல் வரியினால் பெயர் பெற்ற கடைக் கழகப் புலவர்; a sangam poet.

     “யானையாற் பற்றி விடப்பட்ட மூங்கில், போர்க்களத்திற் செலுத்திவிடப்பட்ட குதிரையைப் போல மேலே எழும் என்று உவமையை அமைத்த சிறப்பினால் இப்பெயர் பெற்றாரென்பர்” (குறுந். 74);.

     [விட்ட + குதிரையார்]

விட்டகுறை

விட்டகுறை viṭṭaguṟai, பெ. (n.)

   முற்பிறவியில் செய்துவந்த வினையை முற்றமுடியாமல் இடையே விட்டுவிட்டதால் இப்பிறப்பில் முன்னேற்றத்திற்குக் காரணமாகும் வினைப் பயன்; karma result- ing from acts left incompletely per- formed in a previous birth, considered as the cause of progress in the present birth, dist. fr. {}.

     “புவிமேல் விட்டகுறை தொட்டகுறை யிரண்டு நிறைந்தனன்” (அருட்பா. vi, சிவதரிசன. 9);.

     [விடு → விட்ட + குறை]

விட்டக்கோல்

விட்டக்கோல் viṭṭakāl, பெ.(n.)

விட்டம்1, 2 (வின்.); பார்க்க;see {},

 diameter.

     [விட்டம் + கோல்]

விட்டடி

விட்டடி1 viḍḍaḍittal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. கைவிட்டுப்போதல்; to desert.

   2. வெருட்டி யடித்தல்; to drive out, chase.

   3. பந்து முதலியவற்றை வெகுதூரஞ் செல்லும்படி அடித்தல் (இ.வ);; to strike a long distance, as a ball.

     [விடு → விட்டு + அடி-,]

 விட்டடி2 viḍḍaḍi, பெ.(n.)

   படித்து நிறுத்திய பாட்டின் இறுதியடி; the line last read or recited, as the place from which the reading or the recitation is to continue.

     “விட்டடியுந் தொட்டடியும் அவனுக்குத் தெரியாது” (வின்.);.

     [விடு → விட்டு + அடி]

விட்டதுறை

 விட்டதுறை viṭṭaduṟai, பெ.(n.)

   முன்னிகழ்த்திய பேச்சு செயல் முதலியவற்றில் நிறுத்தி வைத்த இடம்; place where one stopped, as in singing, read- ing or explaining verse.

     [விடு → விட்ட + துறை]

விட்டபட்டினி

விட்டபட்டினி viṭṭabaṭṭiṉi, பெ.(n.)

   தொடர்ந்து பல நாட்களாகக் கிடக்கும் உண்ணாநோன்பு; fast continued for sev- eral days.

     “விரதங்களால் விட்ட பட்டினியால்” (திருமுரு. 128-36, உரை);.

     [விடு → விட்ட + பட்டினி]

விட்டபம்

 விட்டபம் viṭṭabam, பெ.(n.)

   நிலம் (இலக்.அக.);; earth.

விட்டபிறப்பு

விட்டபிறப்பு viṭṭabiṟabbu, பெ.(n.)

   முற்பிறப்பு; former or previous birth.

     “விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடமுன” (மணிமே, 11, 99);.

     [விடு → விட்ட + பிறப்பு]

விட்டம்

விட்டம் viṭṭam, பெ.(n.)

   1. தலைக்கு மேலுள்ள முகட்டு உத்தரம்; beam or cross-beam in a building.

     “இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென” (அகநா. 167);.

   2. வட்டத்தின் குறுக்களவு; diameter.

   3. குறுக்காக இடப்பட்டது (வின்.);; anything put across.

   4. உடல்; human body.

     “விட்டத்தினுள்ளே விளங்க வல்லார்” (திருமந். 2904);.

ம. விட்டம்.

     [முள் → முடு → முட்டு → (முட்டம்); → விட்டம். (மு.தா.பக்.100);]

விள்ளுதல் = பிரிதல், விடுதல் = பிரித்தல்.

விட்டம் =

   1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் கோடு.

   2. குறுக்குத்தரம்.

     “இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென.” (அகம். 167);,

     “குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்தது போல” (பழமொழி);.

விட்டரம்

விட்டரம் viṭṭaram, பெ.(n.)

   1. தவத்தோர் இருக்கும்மேடை (பிங்.);; seat for the use of ascetics.

   2. இருக்கை (நாமதீப. 445);; seat.

   3. கொள்கலம் (சது.);; receptacle.

   4. மரம் (யாழ்.அக.);; tree.

   5. ஒரு பிடி நாணல் (யாழ்.அக.);; a handful of {} grass.

     [வி(ட்);டு + அரம்.]

விட்டரி

 விட்டரி viṭṭari, பெ.(n.)

   அகத்தி (மலை.);; west Indian pea-tree.

     [விட்டு + அரம் → அரி]

விட்டலக்கணை

 விட்டலக்கணை viṭṭalakkaṇai, பெ.(n.)

   இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட கிளவியத்தின் பொருளை இயைபின்மையாற் கைவிட்டு அக்கிளவியத்திற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது (இலக்.அக.);; a variety of {}, in which a word is used in its secondary sense, its primary sense having been lost, one of three {}, q.v.

     [விடு → விட்ட + இலக்கணை]

 Skt. {} → த. இலக்கணை.

விட்டல்

 விட்டல் viṭṭal, பெ.(n.)

   விடுகை (இலக்.அக.);; leaving;abandoning.

     [விடு → விடல் → விட்டல்]

விட்டவன்விழுக்காடு

விட்டவன்விழுக்காடு viṭṭavaṉviḻukkāṭu, பெ.(n.)

விட்டவிழுக்காடு பார்க்க;see {}.

     “விட்டவன் விழக் காட்டுக்குக் கற்பித்த தளிகையொன்று” (S.I.I.iv.142);.

     [விட்டவன் + விழுக்காடு]

விட்டவர்

விட்டவர் viṭṭavar, பெ.(n.)

   1. பகைவர் (திவா.);; enemies.

   2. துறந்தோர் (சங்.அக.);; ascetics.

     [விடு → விட்டவர்]

விட்டவாகுபெயர்

விட்டவாகுபெயர் viṭṭavākubeyar, பெ.(n.)

விட்டலக்கணை (வின்.); பார்க்க;see {}.

     [விட்ட + ஆகுபெயர்]

விட்டவாகுபெயர் பொருத்தமில்லாத கூற்றான் நின்று ஒரு பெயர் பிறிது பொருளை உணர்த்துமானால் அதனை விட்டவாகுபெயர் என்பர்.

     “இந்தப் புடவை காஞ்சிபுரம்” என்பதில் காஞ்சிபுரம் என்ற ஊரின் பெயர் விட்ட ஆகுபெயராய் புடவையை உணர்த்திற்று.

     ‘இப்பட்டு சீனம்’ என்பதும் அதுவே. (இலக் கலைக். பக். 108);.

விட்டவாக்கச்சொல்

 விட்டவாக்கச்சொல் viṭṭavākkaccol, பெ.(n.)

   விட்டவிலக்கணையாக வருஞ்சொல் (யாழ்.அக.);; word used in its secondary sense, its primary sense having been lost.

     [விடு → விட்ட + ஆக்கச்சொல்]

விட்டவாசல்

விட்டவாசல் viṭṭavācal, பெ.(n.)

   சிறப்புக் காலங்களில் அரசர் முதலியோர் சென்று வரும் கோயில்வாயில்; gate open only on special occasions, as in temples, pal- aces etc,

     “சவரிப் பெருமாள் ….. விட்டவாசலாலே புறப்பட்டு எதிரே வந்து” (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா);.

     [விடு → விட்ட + வாசல்]

விட்டவிலக்கணை

விட்டவிலக்கணை viṭṭavilakkaṇai, பெ.(n.)

விட்டலக்கணை (வேதா.சூ.120, உரை); பார்க்க;see {}.

     [விடு → விட்ட + இலக்கணை]

 Skt. {} → த. இலக்கணை.

விட்டவிழுக்காடு

 விட்டவிழுக்காடு viṭṭaviḻukkāṭu, பெ.(n.)

   கோயிலிற் பெரியோர்க்கு மதிப்புரவுக்காக ஏற்படுத்தப்பட்ட படையல் முதலியன; special share of the offerings, etc., in a temple, set apart for a person, as an honour.

     “கோயிற் கந்தாடை யண்ணனுக்கும் வாதூல ரங்காசாரியருக்கும் விட்ட விழுக்காடுகளுண்டு” (இ.வ.);.

     [விடு → விட்ட + விழுக்காடு]

விட்டவெளி

 விட்டவெளி viṭṭaveḷi, பெ. (n.)

மேய்ச்சலுக் கென்று ஒதுக்கப்பட்ட காலம்

 leavingland to grass for cows.

     [வெட்ட+வெளி-வெட்ட-விட்ட (பே.வ.);]

விட்டாடி

 விட்டாடி viṭṭāṭi, பெ.(n.)

   தனிமையான-வன்-வள்-து (யாழ்.அக.);; lonely person or object.

     [விடு → விட்ட + ஆள் → ஆளி → ஆடி]

விட்டார்

விட்டார் viṭṭār, பெ.(n.)

   பகைவர்; enemies.

     “இன்று நாமவர்க்கு விட்டார்சொல்” (சீகாழி. கோ. 519);.

     [விடு → விட்டார்]

விட்டார்த்தம்

விட்டார்த்தம் viṭṭārttam, பெ.(n.)

   பாதிவிட்டம் (வின்.);; radius, semi-diameter.

     [விட்டம்1 + அர்த்தம்2]

விட்டாற்றி

விட்டாற்றி viṭṭāṟṟi, பெ.(n.)

   இளைப்பாறுகை (நெல்லை.); (வின்.);; rest, repose.

     [விடு1 + ஆற்றி]

விட்டாற்று-தல்

விட்டாற்று-தல் viṭṭāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   துக்கத்தை வெளியிட்டாற்றுதல்; to give vent to one’s grief.

     [விடு → விட்டு + ஆற்று-,]

விட்டி

விட்டி1 viṭṭittal,    11 செ.கு.வி. (v.i.)

   மலங்கழித்தல்; to evacuate the bowels.

 விட்டி2 viṭṭi, பெ.(n.)

   1. நறுவிலி, 4 பார்க்க;see {}.

   4. common sebestan (Nels.);.

   2. கோழி (யாழ்.அக.);; cock.

   3. முன்

   தள்ளிய வயிறு; pot-belly.

     ‘சவலைப் பிள்ளைக்கு விட்டி பாய்ந்திருக்கிறது’.

 விட்டி3 viṭṭi, பெ.(n.)

   செடி கொடிகளின் இலை காய்களை வெட்டும் சிறுவிட்டி (வே.க.152);; a kind of small variety of moth.

     [வெட்டி → விட்டி]

விட்டிகை

விட்டிகை viṭṭigai, பெ.(n.)

   விட்டில்; moth.

     “தீப்பட்ட விட்டிகை போல்” (திருவிசைப். கருவூ. 10, 8);.

     [விட்டில் → விட்டிகை. (வே.க.152);]

விட்டிசை

விட்டிசை viṭṭisai, பெ.(n.)

   1. அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை (தொல். பொ. 411, உரை, பக். 340);; break occuring after a letter of an acai (pros.);.

   2. பாட்டில் வருந்தனிச்சொல் (காரிகை, செய். 10, உரை.);; detached word in a verse (pros.);.

     [விடு → விட்டு + இசை]

விட்டிசை-த்தல்

விட்டிசை-த்தல் viṭṭisaittal,    4 செ.கு.வி. (v.i.)

   அசை முதலியன பிரிந்திசைத்தல்;     “விட்டிசைத்து விந்த குற்றெழுத்து நேரசையாம்” (காரிகை. ஒழிபி. 2, பக். 136, உரை);

     [விடு → விட்டு + இசை-,]

விட்டிரு-த்தல்

விட்டிரு-த்தல் viṭṭiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   பகைமேற் சென்றோர் பாசறையிற் றங்குதல்; to live in camp, as on a military expedition.

     “விட்டிருக்கும் பாசறையினது” (பு.வெ.3, 18, கொளு. உரை.);.

     [விடு → விட்டு + இரு-,]

விட்டில்

விட்டில் viṭṭil, பெ.(n.)

   1. பெரிய வெட்டுக்கிளி; locust.

     “விட்டில்கிளி நால்வாய்” (சீவக. 64,உரை);.

   2. சிறுபூச்சி வகை; moth.

     “செழிகின்ற தீப்புகு விட்டிலின்” (திருவாச. 6, 5);.

   3. கொலை (அரு.நி.);; murder.

   4. பிராய் (சூடா);; paper tree.

   5. நீண்ட மரவகை (மலை.);; medium- papery ovate-to-oblong-acute-leaved kokra laurel.

     [வெட்டி → விட்டி → விட்டில்]

     ‘இல்’ ஒரு சிறுமைப் பொருட் பின்னொட்டு. வே.க.152.

     ‘விட்டிற்பூச்சியைப் போல் பறந்து திரிகிறான்’ (பழ.);,

     ‘விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியைப் போல’ (பழ.);

விட்டு

விட்டு1 viṭṭu, பெ.(n.)

திருமால்;{}.

     “விட்டுவே நீயிங்கே வாராய்” (திவ். பெரியாழ். 2, 3, 5);.

     [விண்டு → விட்டு]

 விட்டு2 viṭṭu, பெ.(n.)

   விசும்பு; sky.

     [விண் → விட்டு]

விட்டுக்காட்டு-தல்

விட்டுக்காட்டு-தல் viṭṭukkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மங்குதல்; to fade, as colour.

     ‘நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம்’ (பஞ்ச. திருமுக. 1157);.

     [விடு → விட்டு + காட்டு]

விட்டுக்கொடு

விட்டுக்கொடு1 viḍḍukkoḍuttal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. காட்டிக் கொடுத்தல் (யாழ்ப்.);; to betray, as a person, to disclose, as secrets.

   2. கூட்டிக்கொடுத்தல் (யாழ்ப்.);; to procure, as a woman, for the gratification of lust.

   3. அடிப்பதற்குப் பந்தயத் தேங்காய் உருட்டிவிடுதல் (யாழ்ப்.);; to bowl a coconut to the striker in a new year’s game.

     [விடு → விட்டு + கொடு-,]

 விட்டுக்கொடு2 viḍḍukkoḍuttal,    5 செ.கு.வி. (v.i.)

   1. இணக்கங்காட்டுதல்; to yield, consent, make concession.

     “ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடார் களிறே” (ஈடு. 7, 4, 1);.

   2. பிறனைக் கருவியாகக் கொண்டு ஒரு செயலை அறிதல் (வின்.);; to use a person as a tool and see how a matter will develop.

     [விடு → விட்டு + கொடு-,]

விட்டுசித்தர்

விட்டுசித்தர் viṭṭusittar, பெ.(n.)

   பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார்; a vaisnava saint and hymnist one of 12 {}.

     “விட்டுசித்தர் தங்கள் தேவரை….. வருவிப்பரேல்” (திவ். நாய்ச். 10, 10);.

     [விண்டு → விட்டு + சித்தர்]

விட்டுச்சொல்(லு)-தல்

விட்டுச்சொல்(லு)-தல் viṭṭuccolludal,    8 செ. குன்றாவி.(v.t.)

   மனத்திலுள்ளதை வெளி யிட்டுக் கூறுதல்; to speak frankly or openly.

     ‘அவள் அவனிடம் மனம்விட்டுச்சொன்னாள்’.

     [விட்டு + சொல்-,]

விட்டுணுகரந்தை

 விட்டுணுகரந்தை viṭṭuṇugarandai, பெ.(n.)

   விட்டுணுகரந்தை என்னும் மூலிகை (M.M.);; Indian globe thistle.

     [விட்டுணு + கரந்தை]

விட்டுணுதந்தி

 விட்டுணுதந்தி viṭṭuṇudandi, பெ. (n.)

   மூங்கில் (சங்.அக.);; bamboo.

விட்டுப்பாடு-தல்

விட்டுப்பாடு-தல் viṭṭuppāṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   குரலை அடக்காது முழக்குவதுடன் பாடுதல்; to sing uninter-ruptedly with full voice.

     [விடு → விட்டு + பாடு-,]

விட்டுப்பிடி-த்தல்

விட்டுப்பிடி-த்தல் viḍḍuppiḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. ஒரு செயலைச் சிறிது காலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல்; to abandon a job temporarily and begin again.

     “அக்காரியந்தன்னை விட்டுப்பிடிக்க அமையும்” (திவ். இயற். திருவிருத். 46, வ்யா. பக். 264);.

   2. கண்டிக்காமற் சிறிது இடங் கொடுத்தல்; to allow some degree of lati- tude.

     ‘பையனிடம் கண்டிப்பாயிராமல் கொஞ்சம் விட்டுப்பிடிக்க வேண்டும்’.

   3. சற்றுப் பொறுத்து மறுபடியும் தொடர்தல்; to pause a little and resume, as in reading etc.

   4.துளைக்கருவியை விரலால் தடவி இசைத்தல்;     “தர்ச்சனி முதலாக விட்டுப்பிடிப்பது ஆரோகணம்” (சிலப். 3, 58, அரும்.);.

     [விடு → விட்டு + பிடி-,]

விட்டுப்போ-தல்

விட்டுப்போ-தல் viṭṭuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. நீங்கிவிடுதல்; to be left, to be abandoned.

   2. மிக்க நோவாயிருத்தல்; to have smarting pain.

     ‘கை கால்கள் விட்டுப் போகின்றன’.

     [விடு → விட்டு + போதல்]

விட்டுமாறு

விட்டுமாறு1 viṭṭumāṟudal,    9 செ.கு.வி. (v.i.)

   வேறுவழியில் திரும்புதல்; to change course, to deviate.

     [விடு → விட்டு + மாறு-தல்]

 விட்டுமாறு2 viṭṭumāṟudal,    5 செ. குன்றாவி.(v.t.)

விட்டுப்பிடி-, 3 பார்க்க;see {}.

     [விடு → விட்டு + மாறு-,]

விட்டும்விடாதவாகுபெயர்

 விட்டும்விடாதவாகுபெயர் viṭṭumviṭātavākubeyar, பெ.(n.)

விட்டும்விடாத விலக்கணை (வின்.); பார்க்க;see {}.

விட்டும்விடாதவாக்கச்சொல்

 விட்டும்விடாதவாக்கச்சொல் viṭṭumviṭātavākkaccol, பெ.(n.)

   விட்டும் விடாதவிலக்கணையாக வருஞ்சொல்(யாழ்.அக.);;

விட்டும்விடாதவிலக்கணை

விட்டும்விடாதவிலக்கணை viṭṭumviṭātavilakkaṇai, பெ.(n.)

   இலக்கணை மூன்றனுள் ஒரு சொல்லிலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் ஆகுபொருளி (இலக்கணை); (வேதா.சூ.119); (இலக்.அக.);;     [விட்டும் + விடாத + இலக்கணை]

 Skt. {} → த. இலக்கணை.

விட்டுரை-த்தல்

விட்டுரை-த்தல் viṭṭuraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

விட்டுச்சொல் (திருக்கோ. 391, உரை); பார்க்க;see {}.

     [விடு → விட்டு + உரை-த்தல்]

விட்டுவாங்கி

 விட்டுவாங்கி viṭṭuvāṅgi, பெ.(n.)

   தன் மனைவியைப் பிறனுக்குக் கொடுப்போன்(யாழ்ப்.);; one who prostitutes his wife for gain.

     [விடு → விட்டு + வாங்கி]

விட்டுவிடு-தல்

விட்டுவிடு-தல் viḍḍuviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. பிடிப்பு விடுதல்; to let go, to loose one’s hold upon.

   2. விலகி விடுதல்; to forego, resign, relinquish, give up, aban- don.

விட்டுவிட்டுமின்னு-தல்

விட்டுவிட்டுமின்னு-தல் viṭṭuviṭṭumiṉṉudal,    15 செ.கு.வி.(v.i.)

   விண்மீன்போல ஒளி வீசுதல்; to twinkle.

     [விட்டு + விட்டு + மின்னு-தல்]

விட்டுவிளங்கு-தல்

விட்டுவிளங்கு-தல் viṭṭuviḷaṅgudal,    10 செ.கு.வி. (v.i.)

   நன்றாக ஒளிர்தல்; to shine with added lustre.

     [விடு → விட்டு + விளங்கு-தல்]

விட்டெறி-தல்

விட்டெறி-தல் viṭṭeṟidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. தூர விழும்படி எறிதல்; to throw away, to fling.

     “ஒருவரை யொருவர் விட்டெறிவர்” (கம்பரா. வாலிவ. 47.);.

   2. நீக்குதல்; to leave, abandon.

     [விடு → விட்டு + எறி-தல்]

விட்டேறரணம்

விட்டேறரணம் viṭṭēṟaraṇam, பெ.(n.)

விட்டேறு 1, 2 (சது.); பார்க்க;see {}.

     [விட்டேறு + அரணம்]

விட்டேறு

விட்டேறு viṭṭēṟu, பெ.(n.)

   1. எறிகோல் (பிங்.); (சிலப். 15, 216, உரை);; missile weapon.

   2. வேல் (பிங்.);; Javelin.

     “புயமறவே விட்டேறு” (இரகு. நகர. 28);.

   3. இகழ்ந்து கூறுங் கடுஞ்சொல்; harsh work of ridicule.

     “விடருந் தூர்த்தரும் விட்டேறுரைப்ப” (பெருங். உஞ்சைக். 35, 226);.

க. புட்டேறு.

     [விடு → விட்டு + ஏறு]

விட்டேற்றாளன்

விட்டேற்றாளன் viṭṭēṟṟāḷaṉ, பெ.(n.)

விட்டேற்றி, 1 பார்க்க;see {}.

     “விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும்” (மணிமே. 14, 61, அரும்.);.

     [விட்டேறு → விட்டேற்று + ஆள் → ஆளன்]

விட்டேற்றி

விட்டேற்றி viṭṭēṟṟi, பெ.(n.)

   1. சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன் (மணிமே. 14, 61, அரும்.);; one who forsakes his relations and induces others to do likewise.

   2. தொடர்பற்றவ-ன்-ள்; one who is unconnected or unconcerned.

     ‘அந்த செய்தியில் விட்டேற் றியா யிருப்பது நலம்’.

மறுவ. விட்டேத்தி.

     [விட்டேறு → விட்டேற்றி]

விட்டை

விட்டை viṭṭai, பெ.(n.)

   விலங்குகளின் சாணம் (நாமதீப. 599);; dung of animals or cattle.

விள்ளுதல் = நீங்குதல், வெளிப்படுத்துதல்.

     [விள் → விட்டை]

     ‘கழுதை விட்டையைக் கைநிறைய ஏந்தினாற் போல’ (பழ.);

வடவர்

     ‘விஷ்’ என்பதை மூலமாகக் காட்டி அதன் புணர்ப்புத் திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர்.

விள் → விஷ் (மலம்);

ஓ.நோ. உள் → உஷ், சுள் → சுஷ்

விள் → விண். பிள் → விள். பிள் → (பிய்); – பீ. பிள் → பீள் → பீளை = கண்மலம்.

 Skt. விஷ்டா (வ.மொ.வ.88);

விட்டோசை

 விட்டோசை viṭṭōcai, பெ.(n.)

   சொல்லின் எழுத்துக்களைப் பிரித்துப் பலுக்குகை (வின்.);;     [விடு → விட்டு + ஓசை]

விட்புலம்

விட்புலம் viṭpulam, பெ.(n.)

   விண்ணுலகம்; heaven.

     “எங்கட் புலங்காண் விட்புலம் போயது” (சிலப்பதி. 8);.

     [விண் + புலம் – விட்புலம்]

ஒ.நோ. மண் + கலம் – மட்கலம்

விணையாலணையும்பெயர்

விணையாலணையும்பெயர் viṇaiyālaṇaiyumbeyar, பெ. (n.)

   வினைமுற்று பெயர்த்தன்மைப்பட்டு வருவது (நன். 286);; verbal noun, personal noun in the form of a finite verb.

     [வினையால் + அணையும் + பெயர்]

வினையின் அடியாகப் பிறந்ததாய்ப் பாலிட விகுதிகளை ஏற்றதாய் அமைந்துள்ள பெயர்களை விணையாலணையும் பெயர் என்பர். இது குறிப்பு வினையாலணையும் பெயர், தெரிநிலை வினையாலணையும் பெயர் என இருவகைப்படும். நல்லவன், தீயவன், வலியவன், எளியவன் என்பன குறிப்பு வினையாலணையும் பெயர்கள். வந்தவன், சென்றவன் முதலான பெயர்கள் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள்.

நல்லன், தீயன் முதலாய குறிப்பு வினைமுற்றுகளே பழந்தமிழில் குறிப்பு வினையாலணையும் பெயர்களாகவும் வருவதுண்டு, அவ்வாறே, வந்தான், சென்றான் முதலாய

முற்றுகளே பழந்தமிழில் தெரிநிலை வினையாலணையும் பெயர்களாக வருவதுண்டு. தொழிற்பெயர் அல்லது வினைப் பெயர் வினையாலணையும் பெயரிலிருந்து வேறுபட்ட ஒன்று (இலக்.கலைக்.117);.

விண்

விண்1 viṇ, பெ.(n.)

   1. விரிந்த அல்லது வெளியாகிய வானம்; sky.

     “விண்பொரு புகழ் விறல்வஞ்சி” (புறநா. 11);.

   2. மேலுலகம்; heaven.

     “விண்மீதிருப்பாய்” (திவ். திருவாய். 6, 9, 5);.

   3. வானத்திலுள்ள முகில் (திவா.);; cloud.

     ‘விண்பொய்த்தால் மண்பொய்க்கும்’ (பழ.);.

     ‘விண் வலிதோ மண் வலிதோ’ (பழ.);

   தெ., ம. விண்ணு;   து. பின்னு;மால்ட். பின்யெ.

 விண்2 viṇ, பெ.(n.)

   காற்றாடிப் பட்டத்தின் ஒரு கருவி (யாழ்.அக.);; a contrivance in a paper kite.

விண்கொள்ளி

விண்கொள்ளி viṇkoḷḷi, பெ.(n.)

விண்வீழ்கொள்ளி (நாமதீப. 76); பார்க்க;see {}.

     [விண்1 + கொள்ளி]

விண்கோ

விண்கோ viṇā, பெ.(n.)

   வானவர் தலைவன் (நாமதீப. 60);; Indra.

     [விண் + கோ3]

விண்சுகம்

 விண்சுகம் viṇcugam, பெ.(n.)

   தகரை (பச்.மூ.);; fetid cassia.

     [விண்டுகம் → விண்சுகம்]

விண்டபூரகம்

 விண்டபூரகம் viṇṭapūragam, பெ.(n.)

   மாதுளை (மலை);; pomegranate.

விண்டலம்

விண்டலம் viṇṭalam, பெ.(n.)

   1. வானம் (சூடா.);; sky.

   2. மேலுலகம்; svarga, heaven.

     [விண்1 + தலம்1]

விண்டல்

விண்டல் viṇṭal, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

     “விண்டலை…. விசும்புற நீட்டிய நெறியும்” (பெருங். மகத. 15, 7); (பிங்.);.

     [விண்டு2 → விண்டல்]

விண்டவர்

விண்டவர் viṇṭavar, பெ.(n.)

விண்டார் பார்க்க;see {}.

     “விண்டவர்பட” (திவ். பெரியதி. 8, 7, 5);.

     [விள் → விண்டவர்]

விண்டாண்டு

விண்டாண்டு viṇṭāṇṭu, பெ.(n.)

   ஊஞ்சல் (சூடா.);; swing.

     [விண்டு2 + ஆண்டு → விண்டாண்டு]

விண்டார்

விண்டார் viṇṭār, பெ.(n.)

   பகைவர்; separated or estranged persons, enemies, foes.

     “விண்டார் பட” (இறை. 3, பக். 47);.

     [விள் → விண்டார்]

விண்டு

விண்டு1 viṇṭu, பெ.(n.)

   1. திருமால் (பிங்.);; visnu.

   2. அறநூல் பதினெட்டனுளொன்று; a sanskrit text-book of Hindu Law ascribed to {}, one of 18 {},q.v.

     [விள் → விண்டு]

 விண்டு2 viṇṭu, பெ.(n.)

   1. வானம் (சூடா.);; sky.

     “விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி” (கந்தபு. தாரக. 2);.

   2. மேலுலகம்; svarga, heaven.

     “விண்டுறை தேவரும் விலகிப் போயினார்” (கம்பரா. கிளைகண்டு. 138);.

   3. முகில் (பிங்.);; cloud.

   4. காற்று (பிங்.);; wind, air.

   5. மலை; mountain.

     “தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி” (மதுரைக். 202);.

   6. மூங்கில் (பிங்.);; bamboo.

   7. விரிந்தது; to spread.

விள்ளுதல் = விரிதல், வெளியாதல்

விள் → வெள் → வெளி

விள் → விண். விரிந்த அல்லது வெளியாகிய வானம்

     “விண்பொரு புகழ் விறல் வஞ்சி” (புறம் 11);

விள் → விண் → விண்டு. விண்டு = வானம். (மு.தா.153);.

குமரிக்கண்ட முல்லை நிலத்து மக்கள் தங்கட்கும், தங்கள் ஆடுமாடுகட்கும் இன்றியமையாத மழையைத் தரும் தெய்வமென்று கருதியே, கரிய வானத்தை அல்லது முகிலை மாயோன் (கரியோன்); என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.

ஒ.நோ. மால் = முகில், மாயோன். இச்சொல்லே திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருமால் எனத் தெய்வப் பெயராய் வழங்கி வருகின்றது. ஆரியர் வேதக் காலத்தில் கதிரவனையே விஷ்ணு என்றழைத்தனர். பின்னர் தமிழரொடு தொடர்பு கொண்டு தமிழ் மதத்தை மேற்கொண்ட பின்பே

     ‘விஷ்ணு’ என்னும் சொல் திருமாலைக் குறிக்கலாயிற்று.

வடவர் காட்டும் மூலம் விஷ்1 = வேலைசெய், ஒடு, மேம்படு, மூடு, உண். மா.வி.அகரமுதலி

     “Prob. for vish,

     ‘All – pervader’ or worker” என்று கருதும்.

எங்கும் நிறைந்திருப்பது என்னும் கருத்தில்,

     ‘விஷ்’ என்பது

     ‘விள்’ என்பதன் திரியே. ஒநோ: உள் – உஷ். கள் = சுஷ் (வ.மொ.வ.90-91);.

 விண்டு3 viṇṭu, பெ.(n.)

விட்டுணுகாந்தி2 (மலை.); பார்க்க;see {}.

மறுவ. விட்டுணுகரந்தை.

 விண்டு4 viṇṭu, பெ.(n.)

விண்டுகம் (மூ.அ.); பார்க்க;see {}.

     [விள் → விண்டு]

விண்டுகம்

விண்டுகம் viṇṭugam, பெ.(n.)

   1. தகரை, 1 (மலை.); பார்க்க;see tagarai,

   2. தாமரை (சங்.அக.);; lotus.

விண்டுசித்தன்

 விண்டுசித்தன் viṇṭusittaṉ, பெ.(n.)

விட்டுசித்தர் (சங்.அக.); பார்க்க;{}.

     [விண்டு + சித்தன்]

விண்டுசொல்(லு)-தல்

விண்டுசொல்(லு)-தல் viṇṭusolludal,    8 செ. குன்றாவி. (v.t.)

   வெளிப்படக்கூறுதல்; to speak freely and openly;

 to speak without any restraint or occult.

     [விள் → விண்டு + சொல்-,]

விண்டுநதி

விண்டுநதி viṇṭunadi, பெ.(n.)

   1. மந்தாகினி என்னும் ஆறு; the celestial Ganges.

   2. பால்வீதி மண்டலம்; the milky way.

     [விண்டு + நதி]

 Skt. Nadi → த. நதி.

விண்டுபதம்

விண்டுபதம் viṇṭubadam, பெ.(n.)

   வானம்; sky.

     “விண்டுபதத் தேறு மேனி” (குமர. பிர. முத்துக். 24);.

     [விண்டு + பதம்]

விண்டுபலி

விண்டுபலி viṇṭubali, பெ.(n.)

   கருவுற்ற பெண்டிர்க்கு அக்கரு நிலைத்தற் பொருட்டுச் செய்யும் சடங்கு (திருவானைக். கோச்செங். 15);; a religious ceremony, performed when a woman is pregnant, with a view to sustaining the embryo in her womb.

     [விண்டு1 + பலி3]

விண்டுபுரம்

 விண்டுபுரம் viṇṭuburam, பெ.(n.)

   காஞ்சிபுரத்தின் வேறு பெயர்; other name of {}.

விண்டுராதன்

விண்டுராதன் viṇṭurātaṉ, பெ.(n.)

   அபிமன்னுவின் மகனான பரீட்சித்து (பாகவத. மாயவ. 41);; king {}, son of Abhimanyu.

விண்டேர்

விண்டேர் viṇṭēr, பெ.(n.)

   கானல்; mirage, as an air-chariot.

     “விண்டேர் திரிந்து வெளிப்பட்டு” (திவ். இயற். பெரிய. ம. 48);.

     [விண்1 + தேர்3]

விண்ணகரம்

விண்ணகரம் viṇṇagaram, பெ.(n.)

   1. திருமால் கோயில்; temple of {}.

     ‘பரமேச்சுர விண்ணகரம்’.

   2. தஞ்சாவூர் மாவட்டத்தில் உப்பிலியப்பன் கோயில் என வழங்கும் திருமால் கோயில்; uppili-y-{}, a place sacred to {}, in the Tanjore district.

     [விண் + நகரம்]

ஒருகா. விண்டு + நகரம் → விண்ணகரம்.

விண்ணகர்

விண்ணகர்1 viṇṇagar, பெ.(n.)

   திருமாலுலகு; vaikuntha, visnu’s heaven.

     “வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்” (திவ். இயற். 1, 77);.

     [விண்டு2 + நகர்]

 விண்ணகர்2 viṇṇagar, பெ.(n.)

விண்ணகரம் (S.I.I.i.87); பார்க்க;see {}.

     [விண்டுநகர் → விண்ணகர்]

விண்ணதிர்ப்பு

விண்ணதிர்ப்பு viṇṇadirppu, பெ.(n.)

   இடி முழக்கம்; rumbling of the heavens,thunder.

     “விண்ணதிர்ப்பும்……. பார்ப்பா ரிலங்குநூ லோதாத நாள்” (ஆசாரக். 48);.

     [விண்1 + அதிர்ப்பு]

விண்ணந்தாயன்

 விண்ணந்தாயன் viṇṇandāyaṉ, பெ. (n.)

கடைக்கழகப் புலவரின் பெயர்:

 name of a sangam poet.

     [விண்+அம்+தாயன்]

விண்ணபத்திரம்

 விண்ணபத்திரம் viṇṇabattiram, பெ.(n.)

விண்ணப்பப்பத்திரம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விண்ணப்பப்பத்திரம் → விண்ணபத்திரம்]

விண்ணப்பக்கடுதாசி

 விண்ணப்பக்கடுதாசி viṇṇappakkaḍutāci, பெ.(n.)

   எழுத்து மூல விண்ணப்பம் (புதுவை.);; petition or written application.

     [விண்ணப்பம் + கடிதம் → கடுதாசி]

விண்ணப்பக்காரன்

விண்ணப்பக்காரன் viṇṇappakkāraṉ, பெ.(n.)

   1. விண்ணப்பஞ்செய்வான் பார்க்க;see {}.

   2. விண்ணப்பம் செய்வோர் (இக்.வ.);; petitioner.

   3. அரண் மனை முதலியவற்றில் காண வருபவர்களின் வரவைத் தெரிவிக்கும் வாயிலோன் (இ.வ.);; Usher, as in a court, whose duty is to announce visitors.

     [விண்ணப்பம் + காரன்1 (காரன் = வினை முதலில் வந்த ஆண்பாற் பெயரீறு);]

விண்ணப்பஞ்செய்வான்

விண்ணப்பஞ்செய்வான் viṇṇappañjeyvāṉ, பெ. (n.)

   கடவுள் திருமுன்பு செய்யுள் முதலியன ஒது முரிமையுள்ளவன் (ஈடு. 6, 9, 3);; person who has the right to sing sacred hymns in the presence of the deity.

     [விண்ணப்பம் + செய்வான்]

விண்ணப்பதார்

 விண்ணப்பதார் viṇṇappatār, பெ.(n.)

   விண்ணப்பம் செய்பவர்; petitioner.

     [விண்ணப்பம் + Skt. dhar → த. தார்]

விண்ணப்பப்பத்திரம்

 விண்ணப்பப்பத்திரம் viṇṇappappattiram, பெ.(n.)

   எழுத்து மூலமான வேண்டுகோள்; written application or petition.

     [விண்ணப்பம் + Skt. {} → த. பத்திரம்]

விண்ணப்பம்

விண்ணப்பம் viṇṇappam, பெ.(n.)

   1. பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு; supplication, respectful, or humble representation.

     “அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திவ். இயற். திருவிருத். 1.);.

     “ஐமேலுந்து மன்றையில் விண்ணப்பமின்றே யடியிட்டேன்” (மதுரைப் பதிற்றுப்.);.

   2. கடவுள் திருமுன்பு செய்யுள் முதலியன ஒதுகை; recitation of sacred hymns in the presence of the deity.

     “திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யவும்” (S.I.I.ii.254, 4);.

   3. மனு (இக்.வ.);; petition.

விண்ணப்பி-த்தல்

விண்ணப்பி-த்தல் viṇṇappittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. பெரியோர்முன் பணிந்தறிவித்தல்; to supplicate.

     “என் பிழையன்றென…… நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன்” (அருட்பா. vi, பிள்ளைப்பெரு. 92);.

   2. செய்யுளைக் கடவுள் திருமுன்பு ஓதுதல்; to sing sacred hymns in the presence of deity, almighty.

   3. விண்ணப்பம் செய்தல்; to petition.

     [விண்ணப்பம் → விண்ணப்பி-,]

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம் viṇṇamaṅgalam, பெ.(n.)

   குலத்தினின்று விலக்கப்பட்ட பறையர் இறந்தபின் செல்வதாகக் கருதப்படும் இடம் (E.T.vi,92);; a region to which excommunicated paraiyas are said to go when they die.

விண்ணல்

 விண்ணல் viṇṇal, பெ.(n.)

   காவட்டம்புல் (மலை.);; citronella-grass.

மறுவ. சாமாட்சிப் புல்.

விண்ணவன்

விண்ணவன் viṇṇavaṉ, பெ.(n.)

   1. தேவன் (சிலப்.10, 189);; celestial being.

   2. அருகன் (சூடா.);; arhat.

     [விண்1 → விண்ணவன்]

விண்ணவிணை-த்தல்

விண்ணவிணை-த்தல் viṇṇaviṇaittal,    11 செ.கு.வி. (v.i.)

   மிக்க ஒளியால் கண் தெறித்தல் (தொல். எழுத்து. 482, உரை);; to throb, as the eye, to be dazzled by the light.

     [விண்விணை → விண்ணவிணை]

விண்ணா

 விண்ணா viṇṇā, பெ. (n.)

   கடுரோகிணி (மலை.);; chiristmas rose.

மறுவ. கடுகுரோகிணி.

விண்ணாங்கு

 விண்ணாங்கு viṇṇāṅgu, பெ.(n.)

   மரவகை (யாழ்.அக.);; a kind of tree.

விண்ணாணம்

 விண்ணாணம் viṇṇāṇam, பெ.(n.)

   நாணம் (யாழ்.அக.);; shame;

 bashfulness.

விண்ணானம்

விண்ணானம் viṇṇāṉam, பெ.(n.)

   1. விரிவுரை, விளக்கம்; a narration, detailed commentary.

   2. வேண்டாத விளக்கம்; unnecessary explanation.

அவன் விண்ணாணம் பேசுகிறான் (இ.வ.);

     [விள்-விண்-விண்ணாணம்]

விண்ணிழிவிமானம்

 விண்ணிழிவிமானம் viṇṇiḻivimāṉam, பெ. (n.)

   திருவிழிமிழலையில் அமைக்கப்பட்ட விமானச் சிற்பம்; sculpture seen on temple at Tiruvili milalai

     [விண்+இழி+விமானம்]

விண்ணு

விண்ணு viṇṇu, பெ.(n.)

திருமால்;{}.

     “விரிந்தெங்குஞ் சென்றமையால் விண்ணுவுமாய்” (யாப். வி. 84);.

     [விண்டு → விண்ணு.]

விண்ணுகம்

 விண்ணுகம் viṇṇugam, பெ.(n.)

   முள்ளி (மலை.);; Indian nightshade.

மறுவ. கறிமுள்ளி.

விண்ணுலகம்

விண்ணுலகம் viṇṇulagam, பெ.(n.)

   1. வானுலகு (பு.வெ.10. காஞ்சிப். 4, உரை);; svarga.

   2. மேலுலகம்; heaven.

     “விண்ணுலகந் தருந்தேவனை” (திவ். திருவாய். 9, 3, 4.);.

     [விண்1 + உலகம்]

விண்ணுலகு

விண்ணுலகு viṇṇulagu, பெ.(n.)

விண்ணுலகம் (பிங்.); பார்க்க;see {}.

     “விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்” (நாலடி, 233);.

     [விண் + உலகு]

விண்ணெனல்

விண்ணெனல் viṇīeṉal, பெ.(n.)

   1. ஓசைக்குறிப்பு; onom. expr. signifying tinkling, as of a bell.

     “விண்ணெனத் தார்மணி யார்ப்ப” (திருவாலவா. 28, 29);.

     “நரம்பு விண்ணென இசைத்தது” (நன். பொதுவிய. 9, உரை);.

   2. வெளியாதற் குறிப்பு (இலக்.அக.);; being made public.

   3. கண் முதலியன தெறித்தற்குறிப்பு (தொல். எழுத்து. 482, உரை);; throbbing, as the eye etc.

   4. விரைவுக் குறிப்பு; great speed.

   5. இறுகியிருத்தற் குறிப்பு; tightness.

     [விண் + எனல்]

விண்ணேறு

விண்ணேறு viṇṇēṟu, பெ.(n.)

   இடி (பிங்.);; thunder.

     ‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ (பழ.);.

     [விண்1 + ஏறு3]

விண்ணோர்

விண்ணோர் viṇṇōr, பெ.(n.)

   தேவர்; celestials.

     “விண்ணோர் பாவை” (சிலப். 11, 214);.

     “வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே” (திருவாச. சதகம்);.

     [விண் → விண்ணோர்]

விண்பகல்

 விண்பகல் viṇpagal, பெ.(n.)

   விண்ணளவு வளர் மூங்கில் (மலை.);; bamboo, as piercing the sky.

     [விண் + பகு → பகல்]

விண்பல்

 விண்பல் viṇpal, பெ.(n.)

விண்டல் (சங்.அக.); பார்க்க;see {}.

விண்மணி

விண்மணி viṇmaṇi, பெ.(n.)

   ஞாயிறு (பிங்.);; Sun, as the gem of the sky.

     “விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை” (வெங்கைக்கோ. 283);.

     [விண் + மணி]

விண்மருந்து

 விண்மருந்து viṇmarundu, பெ.(n.)

   இதளியம் (M.N.);; mercury.

     [விண் + மருந்து]

விண்மீன்

விண்மீன் viṇmīṉ, பெ.(n.)

   வான்வெள்ளி (சூடா.);; star.

     [விண் + மீன்1]

விண்முழுதாளி

 விண்முழுதாளி viṇmuḻutāḷi, பெ.(n.)

   தேவர்களின் தலைவனான இந்திரன் (பிங்.);; Indra, as ruling the entire svarga.

     [விண் + முழுது + ஆளி (ஆளி = ஆள்வோன்);]

விண்மூத்திரம்

விண்மூத்திரம் viṇmūttiram, பெ.(n.)

   நிரய வகை (சி.போ.2, 3, புதுப். பக். 204);; a hell.

     [விண் + மூத்திரம்]

விண்விணை-த்தல்

விண்விணை-த்தல் viṇviṇaittal,    11 செ.கு.வி. (v.i.)

   கண் முதலியன தெறித்தல் (தொல். எழுத்து. 482, உரை);; to throb, as the eye.

     [விண்ணவிணை → விண்விணை-,]

விண்விண்ணெனல்

விண்விண்ணெனல் viṇviṇīeṉal, பெ.(n.)

   1. யாழ் நரம்பு முதலியன இசைத்தற் குறிப்பு; onom. expr. signifying, the sound of thrumming, as of the strings of a lute.

   2. புண் முதலியன தெறித்து நோவெடுத்தற் குறிப்பு; throbbing pain, as of a boil.

     [விள் → விண் + விண் + எனல்]

விண்வீழ்கொள்ளி

விண்வீழ்கொள்ளி viṇvīḻkoḷḷi, பெ.(n.)

   விண்ணினின்று விழும் விண்மீன் போன்ற சுடர் (சூடா.);; meteor, shooting star.

     [விண்1 + வீழ் + கொள்ளி]

வித

வித1 vidaddal,    3 செ.குன்றாவி. (v.t.)

   சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல்; to make a specific mention of, to indicate specially.

     “கசதப மிகும் விதவாதன மன்னே” (நன். 164);.

 வித2 vidaddal,    4 செ.கு.வி. (v.i.)

   மிகுதல் (சூடா.);; to be excessive, abundant.

     “விதந்து பாட்டயர்ந்து” (காசிக. திரிலோசன. சிறப். 19);.

     [மித → வித-,]

விதண்டம்

 விதண்டம் vidaṇṭam, பெ.(n.)

விதண்டை பார்க்க;see {}.

விதண்டவாதி

விதண்டவாதி vidaṇṭavādi, பெ.(n.)

விதண்டாவாதி பார்க்க;see {}.

     “வேறு வேறாகக் கூறும் விதண்ட வாதிகளை யெல்லாம்……… ஈடுறுப் புரிவ னென்றான்” (பிரபோத. 26, 104.);

விதண்டாவாதம்

 விதண்டாவாதம் vidaṇṭāvādam, பெ.(n.)

விதண்டை பார்க்க;see {}.

விதண்டாவாதி

 விதண்டாவாதி vidaṇṭāvādi, பெ.(n.)

   விதண்டை செய்பவன்; captious objector, caviller.

     [விதண்டை → விதண்டா + வாதி]

விதண்டை

விதண்டை vidaṇṭai, பெ.(n.)

   1. பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம்; cavil, captious objection, idle objections against another’s statement without attempting to disprove them and establishing one’s own position.

     “பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ” (தாயு. எங்குநிறை. 7);.

   2. பகை (வின்.);; hostility.

விதந்தோது-தல்

விதந்தோது-தல் vidandōdudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   சிறப்பாக எடுத்துச் சொல்லுதல் (நன். 108, உரை);; to make a specific mention of.

     [விதந்து + ஒது-,]

விதப்பு

விதப்பு1   1. சிறப்பித்து எடுத்துச் சொல்லுகை; specific or special mention.      “விதந்து கட்டிய வழக்கு” (திவா.).

   2. விதப்புவிதி (நன்.165, சங்கர. நமச்.); பார்க்க;see vidappu-vidi.

   3. விளத்தம் (பிங்.);; detail.

   4. புதுமை (யாழ்.அக.);; wonder.

   5. மதிலுறுப்புளொன்று (பிங்.);; a component part of a fortification.

   ம. விதம்ப்புக;   தெ. veda;   க. Bede; Kod. Bede.

     [வித1 → விதப்பு]

 விதப்பு2 vidappu, பெ.(n.)

   மிகுதி (திவா.);; abundance, surplus.

     [வித2 → விதப்பு]

 விதப்பு3 vidappu, பெ.(n.)

   1. விரைவு (நாமதீப. 562);; haste.

   2. நடுக்கம் (பிங்.);; trembling, agitation.

   3. ஆசை (அரு.நி.);; desire.

 Ma. vitukkuka;

 Ka. Bidar;

 Tu. bedaru;

 Kuwi. {};

 Te. bedaru.

     [விதுப்பு → விதப்பு]

விதப்புவிதி

விதப்புவிதி vidappu-vidi, பெ.(n.)

   சிறப்பு விதி (நன். 165, சங்கரநமச்.);; special rule (gram.);.

     [விதப்பு1 + Skt. Vidhi → த. விதி]

விதம்பம்

 விதம்பம் vidambam, பெ.(n.)

   பிறவி நஞ்சு வகை (மூ.அ.); (யாழ்.அக.);; a mineral poison.

விதரம்

 விதரம் vidaram, பெ.(n.)

   பிளப்பு (சங்.அக.);; cleavage.

     [விடர் → விடரம் → விதரம்]

விதர்ப்பு

விதர்ப்பு vidarppu, பெ. (n.)

   1. அச்சம் (யாழ்.அக.);; fear.

   2. நெருக்கம் (யாழ்.அக.);; closeness, intimacy.

   3. மல்லாட்டம் (யாழ்.அக.);; battle, fight.

   4. வெற்றி (சது.);; victory, success.

     [விதிர்ப்பு → விதர்ப்பு]

விதறு

விதறு1 vidaṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நடுங்குதல்; to tremble, to be agitated, to be shaky.

     “விதறாவகை யாம்பற்றி” (ஞானவா. மனத். 8.); (திருப்பு. 162);.

   2. பதறுதல் (வின்.);; to be over hasty.

தெ., க., து. பெடரு.

     [விதிர் → விதறு-,]

 விதறு2 vidaṟu, பெ.(n.)

   நடுக்கம்; trembling, shaking, agitation.

     “விதறு படாவண்ணம் வேறிருந் தாய்ந்து” (திருமந். 2948);.

க. பெதுறு.

விதலம்

 விதலம் vidalam, பெ.(n)

   கீழேழுலகத் தொன்று (திவா.);; a nether world, one of {}, q.v.

விதலை

விதலை1 vidalai, பெ.(n.)

   நடுக்கம்; trembling, shivering.

     “பனிப்படு பைதல் விதலைப் பருவத்து” (பரிபா. 11,75);.

   தெ. விதலு;   க., து. பெடெ;ம.விதரு.

 விதலை2 vidalai, பெ.(n.)

   புவி; the earth.

     “விதலையின் விழுந்த மேவலனை….. பிடித்து” (பாரத. இராசசூ. 26);.

விதலையாப்பு

விதலையாப்பு vidalaiyāppu, பெ.(n.)

   செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளு முறை (இறை. 56, உரை);; a mode of construction in which the central idea is conveyed by the words at the beginning, middle and end of a stanza.

     [விதலை1 + யாப்பு]

விதவிடு-தல்

விதவிடு-தல் vidaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   சிறப்பித்துரைத்தல்; to extol.

     “இளைஞர்கள் விதவிடு கயலாலும்” (திருப்பு. 694.);

     [வித1 + இடு – விதவிடு-,]

விதவிதெனல்

 விதவிதெனல் vidavideṉal, பெ.(n.)

   சிறுசுடுகைக் குறிப்பு (வின்.);; onom. expr. of being luke warm.

மறுவ: வெதவெதவெனல்

விதா

விதா vitā, பெ.(n.)

   மரவகை (பதார்த்த. 212);; battle of plassey tree.

மறுவ. புரசு.

விதி

 விதி vidi, பெ.(n.)

   குதிரை முதலியவற்றி னுணவு; food of horses etc.

விதிப்பாள்

 விதிப்பாள் vidippāḷ, பெ.(n.)

   மகள் (யாழ்.அக.);; daughter.

விதிமாண்டுநெல்

 விதிமாண்டுநெல் vidimāṇṭunel, பெ.(n.)

   நெல்வகை (A.);; a kind of paddy.

விதிர்

விதிர்1 vidir-,    4 செ.கு.வி. (v.i.)

   நடுங்குதல்; to shake, shiver, remble.

     “விதிர்ந்தன வமரர் கைகள்” (கம்பரா. நாகபாக. 93);.

க. பிதிர்.

     [விது → விதிர்-,]

 விதிர்2 vidirddal,    11 செ.கு.வி. (v.i.)

   1. நடுங்குதல்; to tremble, quiver.

     “மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற” (பரிபா.10,47);.

   2. அஞ்சுதல் (வின்.);; to be afraid, to fear.

     [விது → விதிர் → விதிர்-,]

 விதிர்3 vidirddal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. சிதறுதல்; to scatter, throw about.

     “நெய்யுடை யடிசின் மெய்பெற விதிர்த்தும்” (புறநா. 188);.

   2. தெறித்தல்; to sprinkle.

     “விதிர்த்த புள்ளியன்” (சீவக. 2010.);.

   3. அசைத்தல்; to shake, to brandish, as a sword.

     “கையிற்றிருவாழியை விதிர்த்தான்” (ஈடு. 2, 4, 9.);.

   4. உதறுதல்; to shake out, throw off.

     “கலிமா….. எறிதுளி விதிர்ப்ப” (நெடுநல். 180);.

   5. பலவாகப் போகடுதல்; to cut into pieces, to reduce to fragments.

     “கொக்கி னறுவடி விதிர்த்த….. காடி” (பெரும்பாண். 309);.

   6. சொரிதல்; to pour, as ghee in a sacrifice.

     “நெய் விதிர்ப்ப நந்து நெருப்பழல்” (நான்மணி. 62);.

   தெ., து. வெதரு, விதுரு;   க. பிதிரு;   ம. {};   கொலா. vid, vidy;   குர். {}, குய். viti; malt. bidrare.

விதிர்க்குவிதிர்க்கெனல்

 விதிர்க்குவிதிர்க்கெனல் vidirkkuvidirkkeṉal, பெ.(n.)

   படபடத்தற் குறிப்பு (யாழ்.அக.);; expr.of trepidation.

     [விது → விதிர் → விதிர்க்குவிதிர்க்கு → விதிர்க்குவிதிர்க்கெனல்]

விதிர்ப்பு

விதிர்ப்பு1 vidirppu, பெ.(n.)

   1. நடுக்கம்; trembling, shivering, shaking from fear.

     “அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்” (தொல். 799);,

     “என்போற் பெருவிதிர்ப்புறுக” (புறநா.255);.

   2. அச்சம் (திவா.);; tremor, fear.

தெ. விதுர்பு.

     [விது → விதிர் → விதிர்ப்பு. (மு.தா.67);]

 விதிர்ப்பு2 vidirppu, பெ.(n.)

   மிகுதி (பிங்.);; abundance.

     [விதப்பு → விதிர்ப்பு]

விதிர்விதிர்-த்தல்

விதிர்விதிர்-த்தல் vidir-vidir-,    11 செ.கு.வி. (v.i.)

   1. நடுங்குதல்; to throb, flutter, quiver with intensity of feeling, to be tremulous.

     “மெய்யெரி துயரின் மூழ்கி விதிர்விதிர்த்து (சீவக. 1540);.

   2. ஆர்வங் கொள்ளுதல்; to be eager, to be agitated with to be ardour, anxiety.

     “செங்கனகங்கண்டான் விதிர் விதிர்த்தான் சிவனடியார்க் கிடுவா னெண்ணி” (திருவாலவா. 39, 5);.

     [விதிர்ப்பு → விதிர்விதிர்ப்பு] (வ.மொ.வ.315);

விதிர்விதிர்ப்பு

விதிர்விதிர்ப்பு vidir-vidirppu, பெ.(n.)

   நடுக்கம்; to throb.

     [விது → விதிர் → விதிர்விதிர் → விதிர்விதிர்ப்பு (மு.தா.67);]

விதுக்குவிதுக்கெனல்

 விதுக்குவிதுக்கெனல் vidukkuvidukkeṉal, பெ.(n.)

   அச்சத்தால் நெஞ்சாங்குலை படபடவென்று அடித்தற் குறிப்பு; onom. expr. of palpitation of heart due to fear or shock.

     [விது → விதுக்கு → விதுக்குவிதுக்கு → விதுக்குவிதுக்கெனல்]

உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால், விரைவுக் கருத்தில் அச்சக் கருத்துப் பிறந்தது.

இங்ஙனம் அடித்துக் கொள்ளுதலை வெருக்கு வெருக்கென்றிருக்கின்றது என்பர்.

விதுப்பு

விதுப்பு viduppu, பெ.(n.)

   1. நடுக்கம்; trembling, tremor.

     “பிறைநுதல் பசப்பூரப் பெரு விதுப்புற்றாள்” (கலித். 99);.

   2. விரைவு; haste.

     “ஆன்றவர் விதிப்புறு விழுப்பொடு விருந்தெதிர் கொளற்கே” (புறநா. 213);.

   3. பரபரப்பு; hurly-burly.

     “விதிப்புறு

நடுக்கமொடு விம்முவன ளாகி” (பெருங். உஞ்சைக். 36, 61);.

   4. வேட்கை; desire, longing.

     “மைந்தர் விதுப்புற நோக்கும்” (கம்பரா. நாட்டுப். 11);.

     [விது → விதும்பு → விதுப்பு (மு.தா.66);]

விதும்பு

விதும்பு1 vidumbudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நடுங்குதல்; to tremble.

     “மகளிர் வீழ்பூம் பொதும்பருள் விதும்பினாரே” (சீவக. 2718);.

   2. விரைதல்; to hasten.

     “அவர் வயின் விதும்பல்” (குறள். 127-ஆம் அதி.);.

   3 ஆசைப் படுதல்; to desire, long for, hanker after.

     “பேதையர் விதும்பி நின்றார்” (சீவக. 2530);.

     [விது → விதும்பு-,]

     “அவர்வயின் விதும்புதல்” என்னும் திருக்குறள் அதிகாரப் பெயரை நோக்குக.

 விதும்பு2 vidumbu, பெ.(n.)

   நடுக்கம்; trembling, tremor.

     “எனை விதும்புற வதுக்கி” (தணிகைப்பு. நாரதனருள். 8);.

     [விது → விதும்பு]

விதுளநீர்

 விதுளநீர் viduḷanīr, பெ.(n.)

   வாயுவிளங்கம் (சங்.அக.);; wind berry.

     [விதுள + நீர்]

விதுவிது-த்தல்

விதுவிது-த்தல் vidu-vidu-,    11 செ.கு.வி. (v.i.)

   மகிழ்ச்சியுறுதல்; to rejoice.

     “திணியுலகம் விது விதுப்பு” (காஞ்சிப்பு. திருநகரே. 145);.

விதுவிதுப்பு

விதுவிதுப்பு Vidu-viduppu, பெ.(n.)

   1. விருப்பம்; longing, desire.

   2. உடலின் குத்துநோவு; throbbing pain.

     “விதுவிதுப் பாற்ற லுற்றான்” (கம்பரா. நாகபாச. 188);.

   3. நடுக்கம் (இலக்.அக.);; trembling.

     [(முது); → விது → விதுவிது → விதுவிதுப்பு. (மு.தா.66);]

விதை

விதை1 vidaiddal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விதை தெளித்தல்; to sow seed.

   2. பரப்புதல் (இ.வ.);; to publish, make public, to spread abroad.

   3. செலுத்துதல்; to deliver, throw, discharge.

     “விதைக்கு மப்பகழிவிற் பொருநன்” (தக்கயாகப். 726);.

 விதை2 vidai, பெ.(n.)

   1. மரஞ்செடி கொடிகளின் பழங்களிலுள்ளதாய் அம்மரஞ்

செடி கொடிகள் முளைப்பதற்குக் காரணமா யிருக்கும் வித்து;seed.

     “விதைத்த விதை” (மதுரைக். 11, உரை);.

   2. முளை (நாமதீப. 579);; testicle.

   3. தன்மாத்திரை; the subtle,primary element (phil.);.

     “பரிசவிதை யிரதத்தி லெழுவதாங் காற்றசைவை” (ஞானவா.தாசூ. 34);.

   இந்த உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் நம்மைச் சுற்றிலும் காணும் பச்சை நிலைத் திணைகளை (தாவரங்களை); தமக்கு பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. பச்சை நிலைத் திணை உயிரிகள் காற்று மண்டலத்திலுள்ள கரிவளியையும், மண்ணி லிருந்து எடுத்துக் கொண்ட நீரையும் கூட்டி, மாந்தன் உட்பட எல்லா விலங்குகளுக்கும் அடிப்படை உணவுப் பொருளான மாவுப்பொருளை விளைவு செய்கின்றன. இந்தப் பொருளியைபுக் கூட்டுச் செயலுக்கு வேண்டிய மிகவும் ஏராளமான ஆற்றலானது கதிரவனுடைய ஒளிக்கதிர் களினின்றும் பெறப்படுகின்றது. தன் உணவின் பொருட்டு, மாந்தன் நிலைத் திணைகளைப் பாதுகாத்து வளர்க்கத் தொடங்கிய கால முதல், மிகச் சிறியதும், பார்ப்பதற்கு உயிரில்லாதது போலக் காண்பதுமான விதையானது எவ்வாறு மண்ணினின்றும், கதிரொளியினின்றும் தனக்குப் பற்றுக் கோடாகிய உணவைப் பெறுகின்றது;   எவ்வாறு தரமுள்ள நிலைத் திணை தழைத்து வளர்கின்றது;எவ்வாறு அது தன் இனத்தைப் பெருக்குவதற்கான எண்ணிறந்த விதைகளை உண்டாக்குகின்றது என்று வியப்படையலானான். தொடக்கக் காலங்களிலே, மாந்தன் விலங்குகளிலே

     ‘உயிர்’ என்னும் ஒரு கொள்கை இருப்பது போல, விதைகளிலும் அந்தக் கொள்கை இருக்கிறது என்று உணர்ந்திருந்தானோ என்பது தெளிவாவதில்லை. ஆயினும் மாந்தனுடைய வரலாற்றிலே, அவனுடைய வாழ்க்கையின் சின்னங்களும் சான்றுகளும் அகப்படும் தொன்மைக் காலந்தொட்டு, மாந்தன் நிலைத்திணைகளின் விதையைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது எனக் கருதி வந்தான் எனத் தெரிகின்றது. (கலைக்களஞ்சியம்);

   தெ.வெத;   க., து. பெதெ;ம. வித.

     [வித்து → விதை]

 விதை3 vidai, பெ.(n.)

   பெருமை (சது.);; largeness, greatness, nobility.

விதைகட்டு-தல்

விதைகட்டு-தல் vidaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   விதைக்கென்று தவசம் தனியே கட்டி வைத்தல்; to store seed-grain by bundling it up in straw.

     [விதை + கட்டு-,]

விதைக்காய்ச்சல்

விதைக்காய்ச்சல் vidaikkāyccal, பெ.(n.)

   விதைப் பக்குவம் அடையும்படி தவசத்தை உலர்த்துகை; drying of seed-grain.

     [விதை1 + காய் → காய்ச்சல். காய்ச்சல் = உலர்ச்சி.]

விதைக்கொடி

 விதைக்கொடி vidaikkoḍi, பெ.(n.)

   விதைப்பையிலிருக்கும் நரம்பு வகை (M.L.);; spermatic cord.

     [விதை + கொடி]

விதைக்கொட்டை

 விதைக்கொட்டை vidaikkoṭṭai, பெ.(n.)

   விதை; testicle.

     [விதை + கொட்டை]

விதைக்கோட்டை

விதைக்கோட்டை vidaikāṭṭai, பெ.(n.)

   1. ஒரு கோட்டை விதைப்பாடுள்ள நிலவளவு (M.M.968);; superficial measure = 1.62 acres, as requiring a {} of seeds.

   2. கைக்கோற் புரியிற் கட்டிய விதைநெல்; seed-grain of paddy bundled in straw.

     [விதை + கோட்டை]

விதைத்துப்பாழ்

விதைத்துப்பாழ் vidaidduppāḻ, பெ. (n.)

   தண்ணீர்த்தட்டால் விதை செவ்வனே முளைக்காமலேனும் கதிர் பிடிக்காமலேனும் கெட்டுப் பயிரின்றிப் போகை (S.I.I.vii.279);; total failure of crop due either to the seeds not sprouting properly or the seedlings not maturing on account of scanty supply of water.

     [விதை → விரைத்து + பாழ்]

விதைநெல்

விதைநெல் vidainel, பெ. (n.)

   விதைப் பதற்காக வைக்கப்பட்ட நென்மணி; seed- grain of paddy.

மறுவ. விதைமுதல்.

     [விதை1 + நெல்]

விதைநெல்லெறி-தல்

விதைநெல்லெறி-தல் vidainelleṟidal,    3 செ.கு.வி. (v.i.)

   வித்திடுதற்கான நென் மணிகளை கழனியிற் தூவுதல் (வின்.);; to sow seeds of paddy.

     [விதைநெல் + எறி-,]

விதைப்பாடு

விதைப்பாடு vidaippāṭu, பெ. (n.)

   1. குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நென்மணியளவு (M.M.);; quantity of seed required to sow in a specified extent of land.

   2. கலம், கோட்டை முதலிய அளவு கொண்ட விதைகளை விதைத்தற்குரிய நிலம்; standard area for sowing a specified quantity of seed, as kalam etc.

   3. விதை நெல்லிலுண்டாகும் குறைவு (இ.வ.);; shortage allowed for, in paddy seeds.

     [விதை1 + பாடு]

விதைப்பு

 விதைப்பு vidaippu, பெ. (n.)

   வித்திடுகை; sowing.

     ‘விதைப்புக் காலம்’.

     [விதை → விதைப்பு]

விதைப்புக்காலம்

 விதைப்புக்காலம் vidaippukkālam, பெ. (n.)

   வித்திடும் பருவம்; sowing season, seed-time.

     [விதைப்பு + காலம்]

ஒருகா. ஆடிப்பட்டம்.

விதைப்புனம்

 விதைப்புனம் vidaippuṉam, பெ. (n.)

   இதைப்புனம் (யாழ்.அக.);; plot of land newly cultivated.

     [இதைப்புனம் → விதைப்புனம்]

விதைப்பை

விதைப்பை vidaippai, பெ. (n.)

   உயிரின மூலப்பை (இ.வ.);; scrotum.

     [விதை1 + பை4]

விதைமணி

 விதைமணி vidaimaṇi, பெ. (n.)

   விதைப்பதற்குரிய தவசம்; seed-grain.

     [விதை + மணி]

விதைமுளை-த்தல்

விதைமுளை-த்தல் vidaimuḷaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   முதிர்ந்த விதை அதற்குத் தகவான சூழ்நிலையில் முளைத்தல்; sprouting.

விதை முதிரும்போது ஒருவித உறக்க நிலையை அடைகின்றது. விதையானது புதிய உயிர் பரவு வதற்கு அமைந்துள்ள உறுப்பு. ஆதலால் கருவின் உயிர்ச் செயல்கள் சில காலத்திற்கு நடைபெறாமல் தடைபட்டிருப்பது தேவையாகயிருக்கின்றது.

முளைத்தலுக்கு வேண்டிய நிலைமைகள் சிறிது காலமோ நெடுங்காலமோ இவ்வித உறக்க நிலையிலிருந்த விதைக்குத் தக்க நிலைகள் வந்து உதவும்போது, அவ்விதை முளைக்கத் தொடங்கும். உடற் செயல்கள் அடங்கிக் கிடந்த கருவிலே அச்செயல்கள் நடக்கத் தொடங்கிக் கருவின் வளர்ச்சி முன்னுக்குச் செல்லும். இந்த வளர்ச்சி நடத்தற்கு மூன்று ஆதாரங்கள் தேவை.

   1. வெப்பநிலை ஏற்றதாக இருக்கவேண்டும்,

   2. போதுமான நீர் கிடைக்க வேண்டும்,

   3. உயிர்வளி தக்க அளவிற்குக் கிடைக்க வேண்டும். இம்மூன்று நிலைமைகளில் ஏதேனும் ஒன்று சரிவரக் கிடையாவிடின் கருவின் வளர்ச்சி தொடர்ந்து நடக்க முடியாது.

     [விதை + முளை-,]

விதையடி-த்தல்

விதையடி-த்தல் vidaiyaḍiddal,    4 செ. குன்றாவி.(v.t.)

   ஆடு மாடு முதலான கால்நடைகளின் மூலப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்தல்; to castrate, to emasculate.

     [விதை + அடி-,]

விதையெடு-த்தல்

விதையெடு-த்தல் vidaiyeḍuddal,    18 செ. குன்றாவி.(v.t.)

விதையடி-, பார்க்க;see {}.

     [விதை1 + எடு-,]

விதைவீக்கம்

 விதைவீக்கம் vidaivīkkam, பெ. (n.)

   விதை வீங்குகை (M.L.);; swelling of the testicle, orchitis.

     [விதை + வீக்கம்]

வித்தகன்

வித்தகன்1 vittagaṉ, பெ.(n.)

   பேரறிவாளன்; wise and knowledgeable person;a great scholar.

     [வித்தகம் → வித்தகன்]

 வித்தகன்2 vittagaṉ, பெ.(n.)

   1. வல்லவன்; skilful, able person;adept.

     “வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும்” (பு.வெ.12, வென்றிப். 6);.

   2. புதுமைத் தன்மையுடையவன்; mysterious person.

     “பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” (திவ். திருவாய். 1, 3, 1);.

   3. வயிரவன் (சூடா.);; bhairava.

   4. கம்மாளன் (திவா.);; artificer.

     [வித்தகம் → வித்தகன்]

 வித்தகன்3 vittagaṉ, பெ.(n.)

   1. தூதன் (சூடா.);; messenger.

   2. இடையன் (அக.நி.);; shepherd.

வித்தகம்

வித்தகம்1   1. அறிவு; knowledge, wisdom, intellect.    2. கல்வி (அரு.நி.); learning.

   3. வித்தம்1, 3 (பிங்.); பார்க்க;see vittam.

   4. அருண்மொழிக் கையடையாளம் (சின்முத்திரை);; a hand- pose.

     “வித்தகந் தரித்த செங்கை விமலையை” (கம்பரா. காப்பு.);.

 வித்தகம்2 vittagam, பெ.(n.)

   1. திறமை; skill, ability, capability.

     “வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப” (கம்பரா. கார்முக. 19);.

   2. திருத்தம்; accomplishment, perfection.

     “வித்தகத் தும்பை விளைத்ததால்” (பரிபா. 9, 68);

   3. புதுமை (நாமதீப. 643);; wonder, strangeness, unusuals.

   4. பெருமை (அரு.நி.);; greatness.

   5. நன்மை (யாழ்.அக.);; goodness.

   6. வடிவின் செம்மை; regularity, as of form;symmetry.

     “நூல் புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ் சேர் வரிகள்” (சீவக. 1044);.

   7. சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில்; fine, artistic work;minute workmanship.

     “குத்துமுளை செறித்த வித்தக விதானத்து” (பெருங். இலாவண. 5, 24);.

வித்தன்

வித்தன்1 vittaṉ, பெ.(n.)

   1. புலவன்; learned man, man of knowledge.

   2. புரவலர்; benefactor.

     [வித்தகன் → வித்தன்]

 வித்தன்2 vittaṉ, பெ.(n.)

   ஈடுபாடுடையன் (ஈடு.);; one who is absorbingly interested or involved.

 வித்தன்3 vittaṉ, பெ.(n.)

   துறவி (யாழ்.அக.);; ascetic, one who performs penance.

வித்தம்

வித்தம்1 vittam, பெ.(n.)

   1. அறிவு (சூடா.);; wisdom, knowledge.

     “வித்தமிலா நாயேற்கும்” (அருட்பா, i, சிவநேச. 64);.

   2. பொருள் (சூடா.);; wealth, money.

   3. பொன் (திவா.);; gold.

   4. நல்வினை (யாழ்.அக.);; good fortune.

     [வித்து → வித்தம்]

 வித்தம்2 vittam, பெ.(n.)

   பழிப்பு (சூடா.);; derision, mockery.

 வித்தம்3 vittam, பெ.(n.)

   கூட்டம் (உரி.நி.);; company, crowd.

 வித்தம்4 vittam, பெ.(n.)

   குதிற் சிறுதாயம்; a cast in dice play.

     “வித்தத்தாற் றோற்றான் போல்” (கலித். 136, 8);.

வித்தரம்

வித்தரம் vittaram, பெ.(n.)

   1. அகலம்; extension, expansion, enlargement, width.

     “நீளம் வித்தரமொ டுயர்ச்சி” (பாரத. இராசசூ. 8);.

   2. நிரயம் (சிவதரு. சுவர்க்க நரக. 121);; a hell.

வித்தரி-த்தல்

வித்தரி-த்தல் vittari-,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. பெருக்குதல்; to expand, to enlarge.

   2. விரித்துச் சொல்லுதல்; to expound, to narrate in greater detail.

வித்தாண்மை

 வித்தாண்மை vittāṇmai, பெ.(n.)

   புலமை (யாழ்.அக.);; wisdom, scholarship.

     [வித்தகம் → வித்தம் + ஆண்மை]

வித்தாயம்

வித்தாயம் vittāyam, பெ. (n.)

வித்தம்4 பார்க்க;see vittam.

     “வித்தாய மிடைத்தங்கக் கண்டவன்” (கலித். 136, 9);.

     [வித்தம்4 + ஆயம்3]

வித்தி

வித்தி vitti, பெ.(n.)

   1. அறிவு; knowledge.

   2. ஆராய்ச்சி; investigation, research.

   3. வருவாய்; earning, acquisition, income.

வித்திகம்

 வித்திகம் vittigam, பெ.(n.)

   இந்துப்பு (சங்.அக.);; salt petre.

வித்து

வித்து1 vittu-,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விதைத்தல்; to sow.

     “வித்திய வுழவர் நெல்லொடு பெயரும்” (ஐங்குறு. 3);.

   2. பரப்புதல்; to spread, broadcast.

     “அண்ண லிவனேல் விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே” (சீவக. 1611);.

   3. பிறர் மனத்துப் பதியவைத்தல்; to impress or imprint on one’s mind.

     “செவிமுதல் வயங்குமொழி வித்தி” (புறநா. 206);.

 Ma. vittu;

 Ko. vit,vity;

 To. pit;

 Ka. Bittu;

 Kod. bitt;

 Tu. bittuni;

 Te. Vittu, vittanama;

 Kol. vitanam;

 Nk. Vit;

 Pa. vit;

 Go. {}, Konda. Vit;

 Kuwi. vicanga;

 Malt. bici.

 வித்து2 vittu, பெ.(n.)

   1. விதை1, 1 பார்க்க;see vidai.

     “சுரைவித்துப் போலுந்தம் பல்” (நாலடி, 315);.

   2. வித்தமிழ்து (நாமதீப. 601);; semen, virile.

   3. தலைமுறை (வின்.);; race, lineage.

   4. வழிவழி (இ.வ.);; posterity.

   5. கருவி; means, instrument.

     “முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே” (திருமந். 2506);.

   6. காரணம்; cause, reason.

     “நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம்” (குறள், 138);.

   தெ., ம., து. வித்து;க. பித்து.

 Skt. பீஜ.

மா.வி.அ.

     ‘of doubtful origin’ என்று குறித்திருத்தல் காண்க. ஆங்கிலர் மதுரையை

     ‘மெஜூரா’ என ஒலித்தலையும் நோக்குக. (வ.மொ.வ.91);.

வித்துகம்

 வித்துகம் vittugam, பெ.(n.)

சாதிலிங்கம் (அரு.அக.); பார்க்க;see {}.

வித்துக்காளை

 வித்துக்காளை vittukkāḷai, பெ.(n.)

   ஆனேறு (நாஞ்.நா.);; breeding bull.

மறுவ. பொலியெருது, பொலிகாளை.

     [வித்து + காளை]

வித்துசம்

 வித்துசம் vittusam, பெ.(n.)

   கொடி வகை; hedge bind-weed.

வித்துத்து

 வித்துத்து vittuttu, பெ.(n.)

   மின்னல் (சூடா);; lightning.

வித்துத்தெளி-த்தல்

வித்துத்தெளி-த்தல் vittutteḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   விதையைத் தூவுதல்; to scatter seeds, to sow.

மறுவ. விதைத்தல்.

     [வித்து + தெளி-த்தல்]

வித்துப்பாடு

வித்துப்பாடு vittuppāṭu, பெ.(n.)

   விதைப்பிற்குரிய நிலம்; land seasoned for sowing standard area for a specified quantity of seed.

     “பதினாழிக் காலால் எண்கல வித்துப்பாடும்” (T.A.S.i,7);.

     [வித்து + பாடு]

வித்துரு

வித்துரு1 vitturu, பெ.(n.)

வித்துருமம், 1 பார்க்க;see vitturumam.

     “வித்துருவின் கொத்தொப்பானை” (தேவா. 682, 4);.

 வித்துரு2 vitturu, பெ.(n.)

வித்துத்து (பிங்.); பார்க்க;see vittuttu.

வித்துருமம்

வித்துருமம் vitturumam, பெ.(n.)

   1. பவளம் (திவா.);; coral.

     “வாங்குகடல் வித்துரும மாலையொளி கால” (திருவிளை. தடாதகை. 17);.

   2. இளந்தளிர் (யாழ்.அக.);; sprout, tender shoot.

     [வித்துரு → வித்துருமம்]

வித்துவஞ்சம்

வித்துவஞ்சம் vittuvañjam, பெ.(n.)

   1. மதிப்புரவின்மை; insult, disrespect.

   2. பகை; enmity, hostility, antagonism.

   3. வெறுப்பு; dislike;undesirability.

     [வித்து + வஞ்சம்]

வித்துவேடம்

 வித்துவேடம் vittuvēṭam, பெ.(n.)

   பகைமை (யாழ்.அக.);; enmity, hostility, nivalry.

     [வித்து + வேடம்]

வித்தெறி-தல்

வித்தெறி-தல் viddeṟidal,    3 செ.கு.வி.(v.i.)

   விதை விதைத்தல் (வின்.);; to sow seeds.

     [வித்து + எறி-,]

விநாடி

 விநாடி vināṭi, பெ. (n.)

விநாடிகை பார்க்க;see {}.

விநாடிகை

விநாடிகை vināṭigai, பெ. (n.)

   ஒரு காலநுட்பம் (யாழ்.அக.);; minute portion of time = 1/60th {} = 4 seconds.

விந்தம்

விந்தம்1 vindam, பெ. (n.)

   1. அறுபத்து நான்கு கோடி கொண்ட ஒரு பேரெண் (பிங்.);; the number 64,00,00,000.

   2. காடு (பிங்.);; jungle, forest.

 விந்தம்2 vindam, பெ. (n.)

   1. குதிரைப்பற் செய்ந்நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

   2. பச்சைக்கருப்பூரம் (அரு.அக.);; purified camphor.

 விந்தம்3 vindam, பெ. (n.)

   தரக்குறைவான மாணிக்க வகை (சிலப். 14, 186, உரை);; infarior kind of ruby.

     “புதுமமு நீலமும் விந்தமும் படிதமும்” (சிலப். 14, 186);.

 விந்தம்4 vindam, பெ. (n.)

   தாமரை; lotus.

     “விந்தமாப் பிண்டி முல்லை …….. நீலங்கோலலற்கு” (நாமதீப. 59);.

விந்தாக்கினி

 விந்தாக்கினி vindākkiṉi, பெ. (n.)

விந்துத்தீ (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விந்து + அக்கினி. Skt. அக்னி.]

விந்திகை

 விந்திகை vindigai, பெ.(n.)

வெண்கலக்குடம்,

 metal pot made of bronze.

க. பிந்திதெ.

     [வள்-விள்-விந்து-விந்திகை]

விந்தியவாசி துர்க்கை

 விந்தியவாசி துர்க்கை vindiyavācidurkkai, பெ. (n.)

   காளி(துர்க்கை); சிற்பத்தின் பிறிதோர் வடிவம்; another sculpture form of Durga.

     [விந்தியம்+வாசி+துர்க்கை]

விந்து

விந்து vindu, பெ. (n.)

   1. புள்ளி (உரி.நி.);; dot, point.

   2. துளி; drop, globule.

   3. நீர்த் துளியளவு (இலக்.அக.);; drop of water, as a liquid measure.

   4. விழியம் (நாமதீப. 601);; semen, sperm.

   5. இதளியம் (நாமதீப.395);; mercury.

   6. வயிரக் குற்றங்களுள் ஒன்று (சிலப். 14, 180, உரை);; a flaw in diamond.

   7. குறி (யாழ்.அக.);; mark.

   8. நெற்றிப் பொட்டு (யாழ்.அக.);; tilaka.

   9. நென்மூக்கு; sharp edge of grains of paddy.

     “பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே” (ஞானா. 1, 3);.

   10. புருவ நடு (யாழ்.அக.);; the middle portion of the forehead between the eye- brows.

   11. வட்டம் (நாமதீப. 766);; circle.

   12. சிவதத்துவம் பார்க்க;see {}

 tattuvam.

     “அலரைம்பூத மூர்தர விந்துவி னேர்தர வியைந்த” (ஞானா. 56, 19);.

   13. தூயமாயை;     “விந்துவின் மாயையாகி” (சி.சி. 1, 19);.

   14. பதினாறு வகை ஒகக் கலையுள் ஒன்று;     “விடகலைமேல் விந்து” (பிரசாதமாலை, 1);.

     [வித்து → விந்து (வ.மொ.வ.91);.]

விந்துசம்

விந்துசம் vindusam, பெ. (n.)

   தாளி3, 3 (சங்.அக.); பார்க்க;see {}; a medicinal plant.

விந்துடைவு

 விந்துடைவு vinduḍaivu, பெ. (n.)

   விரை விழிய வொழுக்கு; quick flow of semen.

     [விந்து + உடை → உடைவு]

விந்துதத்துவம்

விந்துதத்துவம் vindudadduvam, பெ. (n.)

   சத்துதத்துவம் (சி.போ.பா. 2, 2, பக். 139. புதுப்.);; a category.

     [விந்து + Skt. tattuva → த. தத்துவம்]

விந்துத்தீ

 விந்துத்தீ vinduttī, பெ. (n.)

   காமத்தீ (சூடா.);; sexual heat.

     [விந்து + தீ]

விந்துநட்டம்

 விந்துநட்டம் vindunaṭṭam, பெ. (n.)

   வித்தமிழ்தின் விரைவொழுக்கு; quick flow of semen.

     ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ (பழ.);.

     [விந்து + நட்டம்]

 Skt. நஷ்டம்.

விந்தையம்

 விந்தையம் vindaiyam, பெ. (n.)

   மயிலடிக்குருந்து என்னும் மரம் (மலை.);; false peacock’s foot tree.

வினகம்

வினகம் viṉagam, பெ. (n.)

   சேங்கொட்டை (வின்.);; marking-nut tree.

     [வில் + நகம்1 ]

வினதை

வினதை viṉadai, பெ. (n.)

   கருடனது தாய்; the mother of {}.

     “மழைபுரை பூங்குழல் வினதை” (கம்பரா. சடாயுகா. 27);.

வினயம்

வினயம்1 viṉayam, பெ. (n.)

   1. வினையம்1 1, 4, 5, 6 பார்க்க;see {}.

   2. சூழ்ச்சி; device, means, stratagem.

     “என் மனது கன்ற வினயங்கள் செய்தாள்” (விறலிவிடு. 420);.

   3. கொடுஞ்செயல்; wicked deed.

     “இனம்வள ரைவர்கள் செய்யும் வினயங்கள் செற்று” (தேவா. 212, 7);.

     [வினை → வினயம்]

 வினயம்2 viṉayam, பெ. (n.)

   1. நன்னயம்; good breeding, propriety of conduct.

   2. வணக்கவொடுக்கம்;   பேச்சு, விடை முதலியவற்றில் வெளிப்படுத்தும் பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை; modesty, politeness.

     “வினயத்தொடு குறுக” (தேவா. 908, 8);.

   3. அடக்கம்; self-control, disipline.

   4. தேவரைப் புகழ்ந்து கூறும்

   பாட்டுவகை (சிலப். 8, 26, உரை);; a kind of song in praise of the gods.

வினவு-தல்

வினவு-தல் viṉavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. உசாவுதல்; to question, enquire.

     “அனையையோ நீயென வினவுதி யாயின்” (கலித். 76);.

   2. ஆய்வு செய்தல்; to investigate, to examine or review judicially.

     “நமன்றம ரென்றமரை வினவப்பெறுவா ரலரென்று” (திவ். பெரியதி. 10, 6, 5);.

   3. செவியேற்றல்; to give ear to, listen to, pay attention to.

     “மேயாயே போல வினவி” (கலித். 82);.

   4. கேள்விப்படுதல்; to hear, receive news of.

     “மெலிந்திலன் சுதனென….. காரியும் வினவா” (அரிசமய. பராங்.25);.

   5. நினைதல்; to bear in mind to think over.

     “திருவடி வினவாக் கருவுறை மாக்கள்” (கல்லா. 8);.

     [வினா → வினவு]

வினவுநர்

வினவுநர் viṉavunar, பெ. (n.)

   1. உசாவுவோர்; enquirers, questioners.

   2. செவியேற்பவர்; listeners, hearers.

     “வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறுவாரும்” (சீவக. 466);.

     [வினவு → வினவுநர்]

வினா

வினா1 viṉātal,    5 செ.குன்றாவி. (v.t.)

வினவு- பார்க்க;see {}.

     “வினாதல் வினாயவை விடுத்தல்” (நன். 41);.

     [விள் → (விளவு); → வினவு → வினாவு → வினாதல்] (சு.வி.28);

 வினா2 viṉā, பெ. (n.)

   1. கேள்வி; question.

   2. அறியான் வினா, ஜயவினா, அறிவொப்புக் காண்டல் வினா, அவனறிவுதான் காண்டல்வினா, மெய்யவற்குக் காட்டல் வினா என ஐவகையாகவும் (தொல். சொல். 13, இளம்); அறியான் வினா, ஐயவினா, அறிபொருள் வினா என மூவகையாகவும் (தொல். சொல். 13); அறிவினா, அறியான் வினா, ஐயவினா, கொளல் வினா, கொடைவினா, ஏவல் வினா என அறுவகையாகவும் (நன். 385, உரை); இலக்கண நூல்களிற் கூறப்படும் கேள்விகள்; question, of five kinds, viz., {}, according to {}: of three kinds viz., {}, according to {} of six kinds. viz., {}, according to {}.

   3. சொல் (சூடா.);; word.

   4. நுண்ணறிவு; sagacity, prudence, discretion, sharpness, discernment, shrewdness.

     ‘அவனுக்கு வினாப் போதாது” (வின்.);.

   5. கவனம்; attention. ‘வினாவோடே கேள்’ (வின்.);.

   6. நினைவு; memory, remembrance.

     “அது எனக்கு வினா வில்லை” (வின்.);.

   7. தமிழ்க் கணக்கில் ஒரு தொகையின் பகுதிகளான தனி யெண்ணுக்கும் பின்ன வெண்களுக்குமுரிய பெயர்; a technical term for a part, integral or fractional, of a number.

     ‘இரண்டேகாலரைக்கால் என்பது இரண்டு, கால், அரைக்கால் என்ற மூன்று வினாக்கள் கொண்டது'(வின்.);.

பேசுவோன் கேட்போனிடத்திருந்து விடையை எதிர்பார்த்து வினாச்சொற்களைப் பெய்து அமைக்குந்தொடர் வினாத் தொடராம். இந்த வினாச் சொற்கள் விகுதி வினா, வேர்ச்சொல் வினா என இரு வகைப்படும். யார், யாது, எவள் முதலாயின வேர்ச்சொல் வினாக்கள். ஆகார, ஒகார, ஏகார விகுதிகளைப் பெற்றுவரும் வினாச்சொற்கள் விகுதி வினாக்களாம். தமிழிலக்கணங்கள் வினாத் தொடர்களை

அறுவகையாகப் பிரித்துள்ளன. அவை:

   1. அறிவினா – ஆசிரியன் இந்நூற்பாவிற்குரிய பொருள் யாது ? என்பது.

   2. அறியா வினா – மாணவன் இந்நூற்பாவிற்குப் பொருள் யாது? என்பது.

   3. ஐயவினா – அங்கே கிடப்பது பாம்போ பழுதையோ? என்பது.

   4. கொளல் வினை – வணிகனுழைச் சென்று பொன் உளவோ மணி உளவோ? என்பது.

   5. கொடை வினா – சாத்தனுக்கு ஆடை இல்லையோ? என்பது.

   6. ஏவல் வினா – அமுதா உண்டாயோ? என்பது. (இலக். கலைக். 114.);

 Ma. Uinavuka;

 Ko. vent;

 To. Pint;

 Te. vinu;

 K. vin(u);cu;

 Kol. vin-;

 Nk. vin;

 pa. Ven;

 Konda. ven;

 Kui. Venba;

 Kuwi. venjali;

 Kur. {}, Malt. mene;

 Br. bining;

 Go. {}.

 வினா3 viṉā, இடைச். (prep.)

   அன்றி; without, except.

     ‘தங்களைவினா எனக்கியார் துணை?’

வினாக்குறிப்பு

வினாக்குறிப்பு viṉākkuṟippu, பெ. (n.)

   வினாவுடன் குறிப்பு முற்றுப் பொருளதாய் வருஞ்சொல்; interrogative, functioning as a predicate.

     ‘எவன், யாது’.

     [வினா2 + குறிப்பு]

வினாங்கு

வினாங்கு viṉāṅgu, பெ. (n.)

   நிணம்; fat.

     [விளர் → வினாங்கு] (சு.வி.29);

வினாச்சொற்கள்

வினாச்சொற்கள் viṉāccoṟkaḷ, பெ. (n.)

   வினாவை உணர்த்தும் சொற்கள்; words denoting questions.

     [வினா + சொற்கள்]

பாவாணர் விளக்கம் :

சுட்டுச் சொற்கள் போன்றே வினாச் சொற்களும் தமிழிலும் திரவிடத்திலும் ஒரெழுத்துச் சொல்லாகவும் பலவெழுத்துச் சொல்லாகவும் இருக்கும். எ-டு: எ, எந்த.

வினாவெழுத்துக்கள் மூன்றென்றார் தொல்காப்பியர்

     “ஆ, ஏ, ஓ அம்மூன்றும் வினாஅ” (தொல். 32); இவற்றையே பவணந்தியார் ஐந்தாக விரித்துரைத்தார்.

     “எயா முதலும் ஆஓ ஈற்றும்

ஏயிரு வழியும் வினாவா கும்மே” (நன்.67);

இவ்வைந்தும் மூல அளவில் ஒரெழுத்தாகவே தோன்றுகின்றன. ஏ-எ, ஏ-யா, ஆ-ஒ.

இவற்றுள் சொல்முதலில் வரும் எ, ஏ, யா என்னும் மூன்றும் சுட்டெழுத்துப் போன்றே வகர மெய்யும் தகர மெய்யும் அடுத்து வினாப்பெயராகும் எ-டு. எவன், எது.

எவை என்பதின் திரிபான ‘எவி’ என்னும் தெலுங்கச் சொல் அற்றுச் சாரியையேற்று வேற்றுமைப் படும்பொழுது எவட்டி எனத் திரியும். இங்ஙனமே எவ், ஏவ் என்னும் வினாச் சொற்களும் முறையே வெ, வே, வை முன் பின்னாக எழுத்து முறை மாறி நிற்கும். இத்திரிபுகளின் வகரமுதலே ஆரிய மொழிகளில் ககரமாக மாறியுள்ளது. வெகெ-க. வே-கே-கா.

இவ் வ-க-திரிபு. தெலுங்கை யடுத்த மராத்தியிலேயே தொடங்கி விடுகின்றது. மராத்தி முதலில் ஐந்திரவிடத்துள் ஒன்றளவும், பின்பு நடுத்திரவிடம் என்று கருதத் தக்கதாயும், அதன் ஐம்பிராகிருதத்துள் ஒன்றாயும், இருந்தமை கவனிக்கத் தக்கது.

தமிழ் ஆரிய மொழிகளுக்கு முன்தோன்றிய மொழியாதலின் அதில் நேரியல் வினாச் சொற்களும் உறவியல் வினாச் சொற்களும் (Relative); வினாச் சொற்களும் வேறு பிரிக்கப் பெறவில்லை.

எ-டு,

யார் என்ன செய்தார்? – நேரியல்

யார் என் சொன்னாலும் – உறவியல்

இந்திய ஆரிய மொழிகளில், நேர்வினாச் சொற்களுக்கு வகரத்தின் திரியான ககர வடியும், உறவியல் வினாச் சொற்களுக்கு எகரத்தின் திரிபான யகரவடியும் ஆளப் பெறுகின்றன. யகரம் ஐகரமாகவும் திரியும்.

நேர்வினா – உறவியல் வினா

மராத்தி

இந்தி – கஹான் யவரான் – ஜஹான்

வடமொழி – குத்ர யத்ர

சில தமிழ் வினாச் சொற்கள் வடிவிலேனும் பொருளிலேனும் வடமொழியிற் சற்றே

வேறுபட்டுள்ளன.

தமிழ் வடமொழி

எ-டு. எதோள் = எங்கு யத்ர = எங்கு (வடிவு); எதா = எங்கே யதா = என்று (பொருள்);

– பாவாணரின் வடமொழி வரலாறு – பக் 284.

வினாடி

 வினாடி viṉāṭi, பெ. (n.)

   விநாடிகை; a minute portion of time.

வினாதலிறை

வினாதலிறை viṉātaliṟai, பெ. (n.)

   வினாவடிவமான மறுமொழி (நன்.386);; interrogation serving as a reply to a question.

     [வினா → வினாதல் + இறை2]

வினாதல்விடை

 வினாதல்விடை viṉātalviḍai, பெ. (n.)

   வினாவே இன்னொரு வினாவுக்கு விடையாக வருமாயின் அது வினாதல் விடை; reply in the form of a counter question.

     ‘உன் நண்பனைச் சந்தித்தாயா’ என்றவழி ‘சந்திக்க மாட்டேனா?’ என்பது வினாதல் விடை.

மறுவ. வினாவெதிர் வினாதல்.

வினாப்பெயர்

வினாப்பெயர் viṉāppeyar, பெ. (n.)

   வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் (நேமிநா. சொல். 31);; interrogative pronoun.

   1. ஏ-ஏன் (ஒருமை); – ஏம் (பன்மை); ஏன் – ஏவன். ஏம் – ஏவம் ஏன் என் ஏன் என். என் + அ = என்ன. ஏன் என்னும் வினாப்பெயர், இன்று காரணம் வினவும் குறிப்பு வினையெச்சமாகவும் வினை முற்றாகவும் வழங்குகின்றது.

   2. ஏவன், ஏவன், ஏவர், ஏது, ஏவை

இவ்வடிவங்களால், ஆவன், ஈவன், ஊவன் முதலிய நெடில் முதல் சுட்டுப் பெயர்களும் ஒரு காலத்தில் வழங்கினவோ என ஐயறக் கிடக்கின்றது. ஏது என்னும் பெயர் ஒரு பொருள் வந்த வழியை வினவும் குறிப்பு முற்றாகவும் இன்று வழங்குகின்றது.

   3. யாவன், யாவள், யாவர், யாவது, யாவை

ஏ-யா. யா – யாவை. யாவது – யாது.

சுட்டுவிளக்கம்

   4. எவன், எவள், எவர், எது, எவை

ஏ-எ, எ + அது = எவ்வது – எப்படி ?

வினாப்பெயர்கள் இன்று ‘ஏ’ ‘எவ்’ ‘யா’ என மூவகையடிகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் ‘ஏ’ எவ் அடிகள் தெலுங்கில் வேற்றுமைத் திரிபில், ‘வே’ என இலக்கணப் போலி (metathesis); யாகி, பின்பு ஆரியமொழிகளில் ‘கெ’ எனப் போலித் திரிபு கொள்ளும், வ.க.போலி. எ-டு. சிவப்பு – சிகப்பு. ஆவா (ஆ + ஆ); ஆகா. ‘யா’ அடி ஆரிய மொழிகளில் ‘ஜா’ எனத் திரியாதும் தொடர்கொள் (Relative); வினாச் சொற்களைப் பிறப்பிக்கும். -(தேவநேயம் 12-பக்.133);

     [வினா2 + பெயர்]

வினாப்போக்கு-தல்

வினாப்போக்கு-தல் viṉāppōkkudal,    8. செ.கு.வி. (v.i.)

   கேள்வி கேட்டல்; to question to enquire into.

     “குறிகூடியிருந்து வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டு” (S.I.I.vii, 412);.

     [வினா + போக்கு-,]

வினாமுதற்சொல்

வினாமுதற்சொல் viṉāmudaṟcol, பெ. (n.)

   வினாவெழுத்தை முதலிற் பெற்று வந்துள்ள சொல் (தக்கயாகப். 585, உரை);; prefixed interrogative word.

     [வினா2 + முதற்சொல்]

வினாவறி-தல்

வினாவறி-தல் viṉāvaṟidal,    3 செ.கு.வி. (v.i.)

   அறியுந்திறமை யுண்டாதல் (வின்.);; to begin, to have powers of understanding.

     [வினா + அறி-,]

வினாவறிபருவம்

 வினாவறிபருவம் viṉāvaṟibaruvam, பெ. (n.)

   பகுத்தறிவு உண்டாம் பருவம்; age of discretion, when a child is capable of understanding the meaning of questions put.

     [வினாவறி + பருவம்]

வினாவழு

வினாவழு viṉāvaḻu, பெ. (n.)

   வினாவைப் பொருளியைபில்லாதபடி வழங்குகை (தொல். சொல். 14. சேனா.);; incorrect use of an interrogative.

     ‘இந்தக் காளை எவ்வளவு கறக்கும்’.

     [வினா2 + வழு]

வினாவழுவமைதி

வினாவழுவமைதி viṉāvaḻuvamaidi, பெ. (n.)

   வினா வழுவை ஆமென்று அமைத்துக் கொள்வது (தொல். சொல். 14. சேனா);; sanction by usage of an incorrect use of an interrogative.

     [வினாவழு + அமைதி]

வினாவிசைக்குறி

வினாவிசைக்குறி viṉāvisaikkuṟi, பெ. (n.)

   கேள்விக் குறி; mark of interrogation (?);.

     [வினா2 + இசை4 + குறி]

வினாவிடை

வினாவிடை viṉāviḍai, பெ. (n.)

   1. வினா உருவமான விடைவகை (நன். 386, உரை);; reply in the form of a question.

   2. கேள்வியும் விடையும்; question and answer.

   3. வினாவிடைப்புத்தகம் பார்க்க;see {}.

     [வினா + விடை]

வினாவிடைப்புத்தகம்

 வினாவிடைப்புத்தகம் viṉāviḍaipputtagam, பெ. (n.)

   வினாவும் விடையுமாக அமைந்த நூல் (வின்.);; catechism.

     [வினாவிடை + புத்தகம்]

வினாவினைக்குறிப்பு

 வினாவினைக்குறிப்பு viṉāviṉaikkuṟippu, பெ. (n.)

   வினாவே குறிப்பு வினையாக வருவது; question word which act as a symbolic verb, without variation of tense.

   யாது, யார் என்பன இவ்வாறு வந்த வினாவினைக் குறிப்புச் சொற்கள்;அவன் யார்?,

அவள் யார்?, அவர் யார்? அது யாது? அவை யாவை?

வினாவு-தல்

வினாவு-தல் viṉāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

வினவு-, பார்க்க;see {}.

     “ஆக்க மதர்வினாய்ச் செல்லும்” (குறள், 594);.

வினாவுத்தரம்

வினாவுத்தரம் viṉāvuttaram, பெ. (n.)

   ஒரு பொருளைக் காட்டும் ஒரு மொழியினைப் பிரித்து ஒருவனுடைய பல்வேறு வகை வினாவிற்கும் விடையாகுமாறு அமைக்குஞ் சொல்லணி வகை (மாறனலங். 280); (பிங்.);; a kind of composition in which a word having a particular significance is split into a number of words, each serving as a reply to a question set before.

     [வினா2 + உத்தரம்1]

வினாவுள்ளவன்

 வினாவுள்ளவன் viṉāvuḷḷavaṉ, பெ. (n.)

   தெளிமதியுள்ளவன் (வின்.);; man of judicious or calm temperament.

     [வினா + உள்ளவன்]

வினாவெண்பா

வினாவெண்பா viṉāveṇpā, பெ. (n.)

   மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் வினா வடிவமாய் வெண்பாக்களால் அமைந்ததும் உமாபதி சிவாசாரியர் இயற்றியதுமான சிவனியக் கொண்முடிபு நூல்; a text-box on {} philosophy by {}, in {} metre and in the form of questions, one of 14 {}, q.v.

     [வினா + வெண்பா]

வினாவெதிர்வினாதல்

வினாவெதிர்வினாதல் viṉāvedirviṉādal, பெ. (n.)

   ஒருவனது வினாவுக்கு எதிர் வினா வடிவமாகக் கூறும் உத்தரம் (தொல். சொல். 14. இளம்);; reply in the form of a counter-question.

மறுவ. வினாதல் விடை.

     [வினா + எதிர்வினாதல்]

வினாவெழுத்து

வினாவெழுத்து viṉāveḻuttu, பெ. (n.)

   சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருளைத் தரும் எழுத்து (நன். 67);; initial or final letter of a word, indicating interrogation.

     [வினா + எழுத்து]

வினை

வினை viṉai, பெ. (n.)

   1. தொழில்; act, action, deed, work.

     “செய்திரங்கா வினை” (புறநா.10);.

   2. நல்வினை, தீவினை என இருவகைப்பட்ட முன்வினை; karma, as the accumulated result of deeds done in previous-births, of two kinds, viz. {}.

   3. நான்கு வினைகள் (வேதநீயம் ஆயுஷ்யம் நாமம் கோத்திரம்); (சீவக. 3114, உரை);; the four results of karma, viz., {}.

   4. வினைச்சொல் (தொல். சொல். 198);; verb.

   5. செய்தற் குரியது; thing to be done or performed.

     “அவனை வேறல் வினையன்றால்” (கம்பரா. சூளா. 2);.

   6. நீக்கவினை செயல் (பரிகாரச் செயல்);; remedial measure.

     “வினையுண்டே யிதனுக் கென்பார்” (கம்பரா. நாகபாச. 194);.

   7. மேற் கொண்ட செயல்; work on hand, work undertaken.

     “வினைவகை யென்றிரண்டி னெச்சம்” (குறள், 674);.

   8. தீச் செயல்; evil deed.

     “தாய்வினை செய்யவன்றோ கொன்றனன் றவத்தின் மிக்கோன்” (கம்பரா. கும்பகர்ண. 143);.

   9. முயற்சி; effort.

     “வினைக்கண் வினையுடையான் கேண்மை” (குறள், 519);.

   10. போர்; war.

     “செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர்” (புறநா. 6);.

   11. ஏய்ப்பு; deceitfulness, guile.

     “வினை களைந்தனர் நண்புகொண் டொழுகினர்” (உபதேசகா. பஞ்சாக். 33);.

   12. சூழ்ச்சி; art, cunning, deceit.

     “வினையி னென்வயின் வைத்தனன்” (கம்பரா. அயோத். மந்திரப். 69);.

   13. கருத்து (யாழ்.அக.);; thought, design.

   14. தொந்தரவு; trouble.

     ‘அது அதிக வினை செய்யும் போலிருக்கிறது’ (வின்.);.

   15. சீழ்; pus.

     ‘இந்தப் புண்ணில் இன்னும் வினையிருக்கின்றது’.

   16. இரண்டைக் குறிக்கும் குழூஉக்குறி(தைலவ. தைல.);; a cont term signifying two.

     ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ (பாழ.);.

 Ma. vina;

 Tu. benpini.

வினை வேற்றுமை உருபுகளை ஏலாததாய், காலக் கிளவிகளை ஏற்பதாய் வரும் சொற்கள் வினை எனப்படும். இந்த வினை தெரிநிலை வினை குறிப்பு வினை என இருவகைப்படும். இவற்றின் அமைப்பினைக் கீழ்வருமாறு காட்டலாம்.

தெரிநிலைவினை

பகுதி காலஇடைநிலை பாலிடவிகுதி

செய் த் ஆன்

படி த்த் ஆன்

குறிப்பு வினை

பகுதி பாலிடவிகுதி நல்

அன் ஊர்

அன்

மேற்காட்டிய அமைப்பிலிருந்து வினைக்குப் பகுதியும் பாலிட விகுதியும் இன்றியமையாதன என்பது விளங்குகின்றது. கால இடைநிலைகளைப் பெற்று வரும் வினைகள் தெரிநிலை வினைகள். கால இடைநிலைகளைப் பெறாமல் வரும் வினைகள் குறிப்பு வினைகள். (இலக். கலைக். 115);.

வினைகெடு-தல்

 வினைகெடு-தல் viṉaigeḍudal, செ.கு.வி. (v.i.)

   செய்யும் கடமையில் தவறுதல், செய்யும் பணியை இடையில் விட்டு விட்டு வேறு பணி செய்தல்; to divert to other works failing in regular duty.

     [வினை+கெடு]

மெனக்கெடுதல் என்பது விலக்கத் தகுந்த கடுங்கொச்சை சொல்.

வினைக்கட்டு

வினைக்கட்டு viṉaikkaṭṭu, பெ. (n.)

   வினைகளின் கட்டு; the bondage of karma.

     “தமிழ்….. கேட்பவர் தம் வினைக்கட்டறுமே” (தேவா. 977. 11);.

     [வினை + கட்டு]

வினைக்களம்

வினைக்களம் viṉaikkaḷam, பெ. (n.)

   போர்க்களம்; battlefield.

     “அங்கண் மேவரும் வினைக்களத்து” (திருவாலவா.46, 17);.

     [வினை + களம்2]

வினைக்காலம்

 வினைக்காலம் viṉaikkālam, பெ. (n.)

   நல்வினைக்காலம்; auspicious time.

     ‘வினைக்காலம் வருங்காலம்; மனை வழியும் தெரியாது’ (பழ.);.

வினைக்கீடு

வினைக்கீடு viṉaikāṭu, பெ. (n.)

   செய்த வினையின் பயன் (சி.போ.பா.அவை. பக்.13);; resultant effect of one’s karma.

     [வினை + ஈடு.]

வினைக்குடுக்கை

 வினைக்குடுக்கை viṉaikkuḍukkai, பெ. (n.)

   வஞ்சனை மிக்கவன் (வின்.);; man full of guile and crafty schemes.

     [வினை + குடுக்கை]

வினைக்குணம்

 வினைக்குணம் viṉaikkuṇam, பெ. (n.)

   மனக்கடுப்பு (வின்.);; spitefulness.

     [வினை + குணம்]

வினைக்குறிப்பு

வினைக்குறிப்பு viṉaikkuṟippu, பெ. (n.)

   குறிப்பு வினை (நன். 321, உரை);; conjugated appellative participle, indefinite or finite.

     [வினை + குறிப்பு]

வினைக்குறிப்புமுற்று

வினைக்குறிப்புமுற்று viṉaikkuṟippumuṟṟu, பெ. (n.)

   குறிப்பு வினை முற்றாய் வருவது (புறநா. 68, உரை);; finite, conjugated appellative participle.

     [வினைக்குறிப்பு + முற்று]

வினைக்குறை

வினைக்குறை viṉaikkuṟai, பெ. (n.)

   வினையெச்சம்; vabal participle refairing a verb to complete the sense.

     [குறை என்னும் சொல் ஒரு பொருள் அல்லது உறுப்பு இல்லாக் குறையை முதலிற் குறித்து, பின்பு அக்குறையால் ஏற்படும் தேவையையும் தேவையான பொருளையும் ஆகுபெயராக உணர்த்திற்று.

நிறை என்பதன் மறுதலை குறை (குறள். 612);]

வினைக்கேடன்

வினைக்கேடன் viṉaikāṭaṉ, பெ. (n.)

   1. முன் வினையை யொழிப்பவன்; one who destroys by experiencing the bondage of karma accumulated in previous births.

     “வினைக்கேட னென்பாய் போல்” (திருவாச. 5, 22);.

   2. வேலையைத் தடை செய்து கெடுப்போன் (இ.வ.);; one who puts obstacles or felters in the way of an undertaking with a view to spoil it.

     [வினை + கேடன்]

வினைக்கேடு

வினைக்கேடு viṉaikāṭu, பெ. (n.)

   1. வீணானது; that which is useless.

     “வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்” (தேவா. 677, 5);.

   2. செயலறுகை (நாமதீப. 641);; inactivity

   3. சுணக்கம் (இலக்.அக.);; delay;

 slow approach.

     [வினை + கேடு]

வினைசூழ்-தல்

வினைசூழ்-தல் viṉaicūḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   தீங்கிழைக்க வெண்ணுதல் (வின்.);; to plot evil or harm.

     [வினை + சூழ்-,]

வினைசெயல்வகை

வினைசெயல்வகை viṉaiseyalvagai, பெ. (n.)

   வினையைச் செய்யுந்திறம் (குறள், அதி.68);; method of action, modes of action, conduct of affairs.

     [வினை + செயல்வகை]

வினைசெய்யிடம்

வினைசெய்யிடம் viṉaiseyyiḍam, பெ. (n.)

   ஒருவினை உடனிகழ்கின்ற பிறிதொரு வினைக்கு இடமாவது (பி.வி.16);; locative absolute.

     [வினை + செய்இடம்]

வினைச்செவ்வெண்

வினைச்செவ்வெண் viṉaiccevveṇ, பெ. (n.)

   தொடர்ந்துவரும் வினை யெச்சங்களில் எண்ணிடைச் சொல் தொக்கு வருவது (நன். 429, மயிலை);; ellipsis of connective particles in a series of {}.

     [வினை + செவ்வெண்]

வினைச்சொல்

வினைச்சொல் viṉaiccol, பெ. (n.)

   பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்குஞ் சொல் (நன். 269);; verb.

ஊண் வினைகள் :

உறிதல் நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப்

உறிஞ்சுதல் பொருளையும் காற்றால் வாய்க்குள் இழுத்தல்.

குடித்தல் – நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.

பருகுதல் – நீர்க்கலத்திற் பற்படக் குடித்தல்.

அருந்துதல் – சிறிது சிறிதாகக் குடித்தல்.

மண்டுதல் – மண்டியுட்படக் குடித்தல்.

மாந்துதல் – பேரளவாகக் குடித்தல்.

   சப்புதல் – ஒன்றைமெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி, அதன்சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல்;அல்லது அப் பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல்.

கவைத்தல் – ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.

சவைத்தல் – மெல்லிய பொருளை மெல்லுதல், குழந்தை தாய்ப்பாலைச் சப்புதல்.

சூம்புதல் தித்திப்புக் குச்சும் மூளையெலும்பும்

சூப்புதல் விரலும் போன்றவற்றை வாயிலிட்டுச் சப்புதல்.

தின்னுதல் – பழமும் பலகாரமும் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.

உண்ணுதல் – கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்.

சாப்பிடுதல் – குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று); கலந்த சோற்றைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி); உட்கொள்ளுதல்.

மடுத்தல் கம்பங்கஞ்சியும் கேழ்வரகுக் கூழும்

வாய்மடுத்தல் போன்றவற்றைக் கட்டிகட்டியாகக் கூட்டில் தொட்டுண்ணுதல், கவளங் கவளமாகப் பிறர் ஊட்டுதல்.

அசைத்தல் விலங்கு அசையிடுவதுபோல்

அசைவு அலகையசைத்து மென்று

செய்தல் உட்கொள்ளுதல்.

அயிலுதல் – குழந்தை அளைந்து சோறுண்ணுதல். அயில் – அயின் – அயினி = உணவு.

     “தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே”…… (புறம். எஎ);.

அள்ளல் = நெருக்கம், குழைந்தசேறு. அள் – (அய்); – அயில். அளிதல் = கலத்தல், குழைதல். அள் – அளாவு. அள் – அளை.

     “சிறுகை யளாவிய கூழ்.” (குறள்.64);

     “………………………………….. இன்னடிசில்

புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்

மக்களையிங் கில்லா தவர்.” (நள. கலிதொ.68);.

ஒநோ : பள் – (பய்); – பயில். பயிலுதல் பழகுதல்.

கப்புதல் – மொக்கி விரைந்து உட்கொள்ளுதல்.

மொக்குதல் = வாய்நிறையக் கொண்டு மெல்லுதல்.

     “கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுக னடிபேணி” (திருப்பு. விநாயக. க);

மிசைதல் – விருந்தினரை யுண்பித்து மிஞ்சியதை யுண்ணுதல்.

     “வித்து மிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்” (குறள்.85);.

மொசித்தல் – பலர் கூடி யுண்ணுதல்.

     “விழவின் றாயினும் படுபதம் பிழையாது

மையூன் மொசித்த வொக்கலொடு” (புறம். 96 );.

     “மொய்கொண் மாக்கள் மொசிக்கவூண்

சுரந்தனள்” (மணிமே.19-136);.

மொய்த்தல் = திரளுதல்.

மொய் – மொயி – மொசி.

மொசிதல் = மொய்த்தல்.

     “கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்” (பதிற்றுப். 71 : 6);

ஆர்தல் – வயிறு நிரம்ப வுண்ணுதல்.

விழுங்குதல் – மெல்லாதும் சுவை பாராதும் ஒரே தடவையில் விரைந்து வாய்வழி வயிற்றிற்குள் இடுதல்.

உட்கொள்ளுதல் – எவ்வகையிலேனும் வயிறு சேர்ப்பித்தல். இது எல்லா ஊண் வினைகட்கும் பொதுவாம்.

கடைக்கழகக் காலத்திற் புலவர் பலர் மரபும் (Idiom); தகுதியும் (Propriety); போற்றாமையால், பலசொற்கள் தம் சிறப்புப் பொருளை இழந்து விட்டன.

இன்று, குளம்பி ( காப்பி ); சாப்பிடுதல், சுருட்டுக் குடித்தல், கொசுவலை, தேட்கடி என்பன மரபுவழுவாம். இவை, குளம்பி குடித்தல், சுருட்டுப் பிடித்தல் அல்லது புகைத்தல், உலங்கு வலை அல்லது நுளம்பு வலை, தேட்கொட்டு என்றிருத்தல் வேண்டும். சம்பளத்தை (Salary); ஊதியம் (profit, gain); என்பதும் வழுவாம். இலக்கணப்புலமை நிரம்பாதவர் நூலாசிரியரும் பொத்தக ஆசிரியரும் ஆவதனாலும் மரபு கெடுகின்றது. – ( பாவாணர் தமிழர் வரலாறு 105-107);

     [வினை + சொல்]

வினைஞர்

வினைஞர் viṉaiñar, பெ. (n.)

   1. தொழில் வல்லோர்; workers, artisans, artificers.

     “தண்டமிழ் வினைஞர் தம்மொடுகூடி” (மணிமே. 19, 109);.

   2. மருத நில மாக்கள் (திவா.);; agriculturists.

   3. கம்மாளர் (யாழ்.அக.);; smiths.

   4. கூத்தர் (திவா.);; dancers.

   5. கடைமகள் (சூத்திரர்); (பிங்.);; {}.

   6. வணிகர் (திவா);; {}.

   7. வேளாளர் (இலக்.அக.);; {}.

வினைதீயார்

வினைதீயார் viṉaitīyār, பெ. (n.)

   தீவினையோர்; sinners, men of evil deeds.

     “வெறுமின் வினைதீயார் கேண்மை” (நாலடி, 172);.

மறுவ. கீழ்கள்.

     [வினை + தீயார்]

வினைதீர்-த்தல்

வினைதீர்-த்தல் viṉaitīrttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. முன் வினையைப் போக்குதல்; to eradicate the bondage of karma.

     “வினையேன் வினைதீர் மருந்தானாய்” (திவ். திருவாய். 1, 5, 6);.

   2. இடையூறு நீக்குதல் (யாழ். அக.);; to remove or dismiss obstacles or constraints.

     [வினை + தீர்-,]

வினைதீர்த்தான்

வினைதீர்த்தான் viṉaitīrttāṉ, பெ. (n.)

   1. வேழமுகத்தோன் (யாழ்.அக.);; {}.

   2. புள்ளிருக்குவேளூர்ச் சிவன்; Lord sivan of a abide in the place {}.

மறுவ. அறிவு (ஞான);க் கொழுந்து.

     [வினைதீர் → வினைதீர்த்தான்]

வினைத்தலை

வினைத்தலை viṉaittalai, பெ. (n.)

   போர்க்களம்; battle field.

     “வினைத் தலையிலே வந்தவாறே” (ஈடு. 4, 6, 1);.

     [வினை + தலை]

வினைத்திட்பம்

வினைத்திட்பம் viṉaittiṭpam, பெ. (n.)

   தொழில் செய்வதில் மனத்திண்மை; powerful acts, firmness, resolutensss in action greetness of will.

     “வினைத்திட்ப மென்பது ஒருவன் மனத்திட்பம்” (குறள், 661);.

     [வினை + திட்பம்]

வினைத்திரிசொல்

வினைத்திரிசொல் viṉaittirisol, பெ. (n.)

   1. திரிந்த வினைச்சொல் (சீவக. 223, உரை);; verb in an abnormal form.

   2. வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல் (நன். 273);; verb not in common use or absolute and not easily understood.

     [வினை + திரிசொல்]

வினைத்திரிபு

 வினைத்திரிபு viṉaittiribu, பெ. (n.)

   தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும், மூன்று காலங்களையும் காட்டுதற்கு வினைச்சொல் அடையும் மாற்றம்; conjugation of a verb.

     [வினை + திரிபு]

வினைத்திறப்பொருத்தம்

வினைத்திறப்பொருத்தம் viṉaittiṟapporuttam, பெ. (n.)

   மணமக்கள் இருவரும் சூழ்ச்சி, வலிமையிலும் சுறுசுறுப்பிலும் ஒத்திருப்பது, வினைத்திறப் பொருத்தம் ஆகும். அவருள் ஒருவர் விரைமதியும் தாளாண்மையும் உடையராயிருக்க இன்னொருவர் மந்தமதியும், சோம்பலு முடையவராகயிருப்பின் அவர்தம் இல்லற வாழ்க்கை ஒற்றுமையும் இன்பமும் உடையதாயிராது. (தமி. திரு. 48);; hormony in the life of couple.

வினைத்தூய்மை

வினைத்தூய்மை viṉaittūymai, பெ. (n.)

   செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும் புகழும் பயந்து நல்லவாகை (குறள். அதி.66);; purity in action which brings in not merely wealth but also religious merit and fame.

     [வினை + தூய்மை]

வினைத்தொகை

வினைத்தொகை viṉaittogai, பெ. (n.)

   காலங்கரந்த பெயரெச்சத் தொடர் (நன். 364);; elliptical compound in which a verbal root forms the first component;a compound that can function or be operative in all the three tenses.

     [வினை + தொகை]

மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும் தொகைச்சொல். வினைப்பெயரும் பெயரும் சேர்ந்து அமைந்த தொகையினை வினைத்தொகை என்பர். சொல்யானை, வரு பொருள் முதலாயின வினைத் தொகைகளாம். கேள், கல், பார், நட ஆகிய நான்கு வாய்பாடு களுக்கும் உரிய வினைகள் வினைத்தொகையினை அமைப்பதில்லை. இதற்கு விதிவிலக்காகக் குடிதண்ணீர், அடிமாடு முதலிய சில வினைத் தொகைகளைக் காணலாம்.

பார் யானை, நடயானை என வினைத் தொகைகள் அமையாமை காண்க.

நன்னூலாரின் கருத்துப்படி வினைத் தொகையின் முதலுறுப்பு பெயரெச்சம் என்று கொள்ளப்படும். (இலக்.கலைக்.பக்.116);.

வினைத்தொடர்ச்சி

வினைத்தொடர்ச்சி viṉaittoḍarcci, பெ. (n.)

   தீவினையின் பயன் (நாமதீப. 291);; effect of evil deeds upon the soul.

     [வினை + தொடர் → தொடர்ச்சி]

வினைத்தொழிற்சோகீரனார்

வினைத்தொழிற்சோகீரனார் viṉaittoḻiṟcōāraṉār, பெ. (n.)

   கடைக்கழகக் காலப் புலவர்; a sangam poet.

இவர் செய்யுளில் நள்ளிரவிற் கடற்கரைக் கானலும் கடல் சார்ந்த ஊரின் தெருக்களும் இருக்கும் நிலை அழகுறக் கூறப் பெற்றுள்ளது (நற். 319);. இவர் தம் பெயர்க் காரணம் அறிய முடியவில்லை.

வினைநர்

வினைநர் viṉainar, பெ. (n.)

வினைஞர், 1 பார்க்க;see {}, workmen, artisans.

     ‘அரிய லார்கை வன்கை வினைநர்’ (பதிற்றுப். 62, 16);.

     [வினை → வினைநர்]

வினைபாராட்டு-தல்

வினைபாராட்டு-தல் viṉaipārāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

வினைவளர்-, (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வினை + பாராட்டு-,]

வினைப்பகுதி

வினைப்பகுதி viṉaippagudi, பெ. (n.)

   பகுசொல்லில் வினையைக் குறிக்கும் பகுதியாகிய முதனிலை (நன். 137, சங்கர.);; verbal base of a derivative word.

     [வினை + பகுதி]

வினைப்படுத்துவினை

 வினைப்படுத்துவினை viṉaippaḍuttuviṉai, பெ. (n.)

   தான் சேர்ந்து வரும் வினையல்லாத சொற்களுக்கு வினைத் தன்மை தரும் வினை; verb that serves as a verbalizer.

     ‘சமையல் செய்’ என்பதில் ‘செய்’ என்பது வினைப்படுத்து வினையாகச் செயல்படுகிறது.

     [வினைப்படுத்து + வினை]

வினைப்பயன்

வினைப்பயன் viṉaippayaṉ, பெ. (n.)

   முன் வினையின் விளைவு; result of karma, fruit of action in previous birth.

     “பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்” (மணிமே. 24, 107);.

     [வினை + பயன்]

வினைப்பெயர்

வினைப்பெயர் viṉaippeyar, பெ. (n.)

   1. தொழிற்பெயர்; verbal noun.

     “செயலென்னும் வினைப்பெயர்” (நெடுநல். 171, உரை);.

   2. வினையாலணையும்பெயர் பார்க்க;see {}.

     “வினைப் பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே” (நன். 141);.

     “எழுதாள் மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து”(சிலப். 4, 47-57, உரை);.

   3. செய் தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர்; name given to a person from his action or vocation.

     “நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர்” (தொல். சொல். 165);.

     [வினை + பெயர்]

     [வினையிலிருந்து பிறந்த பெயரை வினைப்பெயர் என்பர். தொல்காப்பியர் வினைப்பெயரையும் வினையாலணையும் பெயரையும் வேறுபடுத்திப் பேசவில்லை;

ஆனால் நன்னூலார் வினைப் பெயரையும் வினையாலணையும் பெயரையும் தெளிவாக வேறுபடுத்தி விளக்குகிறார். நன்னூலார் கருத்துப்படி வினைப்பெயர் அல்லது தொழிற் பெயர் படர்க்கைக்கு மட்டுமே உரியதாம். வினையாலணையும் பெயர், தன்மை, முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடத்திற்கும் உரியதாம்.

உணல், தினல். வரல், செலல் என வருவன வினைப்பெயர் அல்லது தொழிற்பெயர். உண்டேனை, உண்டாயை, உண்டானை என வருவன வேற்றுமை ஏற்ற வினையாலணையும் பெயர்.

வினைப்பெயர் என்பதும் தொழிற்பெயர் என்பதும் ஒன்று. தொல்காப்பியர் வினைப்பெயர், வினையாலணையும் பெயர் இரண்டையுமே வினைப்பெயர் என்றும் (தொல்.சொல்.பெயர்.14);

குறிக்கின்றார்]

மறுவ. வினைப்பெயர்க் கிளவி.

வினைமாற்று

வினைமாற்று viṉaimāṟṟu, பெ. (n.)

   முன்சொன்ன தொழிலொழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை; signification of the introduction of an alternative verb in a sentence.

     “வினைமாற் றசைநிலை” (தொல். சொல். 264);.

     [வினை + மாற்று]

வினைமாற்றுச்சொல்

வினைமாற்றுச்சொல் viṉaimāṟṟuccol, பெ. (n.)

   வினைமாறுவதைத் தெரிவிக்கும் ‘மற்று’ முதலிய இடைச்சொல்; an expletive word in a sentence, introducing an alternative verb, as {}.

     [வினைமாற்று + சொல்3]

வினைமுதற்றொழில்

 வினைமுதற்றொழில் viṉaimudaṟṟoḻil, பெ. (n.)

   செயப்படுபொருள்(வின்);; object.

     [வினைமுதல் + தொழில்]

வினைமுதல்

வினைமுதல் viṉaimudal, பெ. (n.)

   கருத்தா; subject.

     “வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே” (நன். 321);.

மறுவ. வினையன்.

     [வினை + முதல்]

எழுவாயை வினைமுதல் என்று குறிப்பதுண்டு. ‘அவன் உங்களைப் பார்த்துப் பேசினான் என்ற தொடரில் ‘அவன்’ வினைமுதல் அல்லது எழுவாய்.

     “பேசினான்” என்பதை வினை முதலுக்கு உரியவினை என்ற பொருளில் வினைமுதல் வினை என்பர் (நன்.344);.

வினைமுறுகுதல்

வினைமுறுகுதல் viṉaimuṟugudal, பெ. (n.)

   ஊழ்வினை முதிர்ந்து பயன்றரு நிலையிலாகை (யாழ்.அக.);; maturation of one’s past karma or destiny.

     [வினை + முறுகு1-தல்]

வினைமுற்று

வினைமுற்று viṉaimuṟṟu, பெ. (n.)

   முற்றுவிகுதி கொண்ட வினைச்சொல் (நன். 323, மயிலை);; finite verb.

     [வினை + முற்று]

தொடர்ப் பொருள் குன்றி நிற்கின்ற வினையினை வினைமுற்று என்பர். இந்த வினைமுற்று குறிப்பு, வினை என இருவகைப்படும்.

செயல் முடிவதைக் குறிப்பதாகவும் சொற்றொடரில் பயனிலையாகவும் வரும் வினைச்சொல் என்றும் கூறலாம்.

வினைமுற்றுத்தொடர்

 வினைமுற்றுத்தொடர் viṉaimuṟṟuttoḍar, பெ. (n.)

   வினைமுற்றை முதலில் கொண்டு அதனைத் தொடர்ந்து அமையும் முற்றுத் தொடர்; sentence with finite verb in first.

எ.டு. வந்தான் கந்தன்.

வினைமூளுதல்

 வினைமூளுதல் viṉaimūḷudal, பெ. (n.)

வினைமுறுகுதல் பார்க்க;see {}.

     [வினை + மூளுதல்]

வினைமை

வினைமை viṉaimai, பெ. (n.)

   1. செய் தொழிலின் தன்மை; nature of a deed.

   2. தொழிலுடைமை; property of functioning.

     “அவை மூவினைமையில்” (சி.போ.1);.

     [வினை → வினைமை]

வினையகல் வியப்பு

வினையகல் வியப்பு viṉaiyagalviyappu, பெ.(n.)

   அருக சமயத்தார் கூறும் வியப்பு மூன்றனுள் வினை நீங்குகையாகிய வியப்பு (சீவக.28,3;உரை);; pre-eminence arising from annihilation of all karma, one of three aticayam.

     [வினை+அகல்+வியப்பு]

வினையடை

 வினையடை viṉaiyaḍai, பெ. (n.)

   வினைச் சொற்கு அடையாக வரும் சொற்கள்; verb qualifier, adverb.

எ-டு. இன்று வந்தான், அழகாகப்

பாடினான், உரக்கப் பேசினான், நடந்து வந்தான், அங்கே நின்றான், ஏன் சிரிக்கிறான்?

     [வினை + அடை]

வினையன்

வினையன் viṉaiyaṉ, பெ. (n.)

   1. தொழில்செய்பவன்; doer, worker.

     “புலைவினையர்”(குறள், 329);.

   2. வஞ்சகன்; cunning or guileful man.

     [வினையம் → வினையன்]

வினையம்

வினையம்1 viṉaiyam, பெ. (n.)

   1. செய் தொழில் (பிங்.);; action, deed.

     “வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி” (கந்தபு. ஏமகூடப். 30);.

   2. முன்வினை; past karma or destiny.

     “காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து” (கம்பரா. காப்பு);.

   3. வழிவகை; device, means.

     “மிகை செய்வார் வினைகட்கெல்லா மேற்செய்யும் வினையம் வல்லான்” (கம்பரா. இரணிய. 147);.

   4. வஞ்சகம் (கொ.வ.);; cunning, deceit, sly.

   5. வஞ்சக வேலைப்பாடு; deceptive workmanship.

     “மருங்குடை வினையமும்” (கம்பரா. இலங்கைகே. 20);.

   6. வினையம்1, 3 பார்க்க;see {}.

   7. நிகழ்ச்சி; happening, event.

     “மேல்வரும் வினைய மோர்ந்திலை” (கந்தபு. மூவாயிர. 5);.

     [வினை → வினையம்]

 வினையம்2 viṉaiyam, பெ. (n.)

வினயம்2 பார்க்க;see {}.

வினையள-த்தல்

வினையள-த்தல் viṉaiyaḷattal,    3 செ.கு.வி. (v.i.)

வினைவளர்-, (வின்.); பார்க்க;see {}.

     [வினை + அள-,]

வினையழுத்து-தல்

வினையழுத்து-தல் viṉaiyaḻuddudal,    10 செ.கு.வி. (v.i.)

வினைவளர்-, (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வினை + அழுத்து-,]

வினையாட்டி

வினையாட்டி viṉaiyāṭṭi, பெ. (n.)

   1. ஏவல் வேலை செய்பவள்; female servant.

   2. தீவினையுடையவள்; ill-fated woman.

     “விளையாட்டியேன் காதன்மையே” (திவ். திருவாய். 6, 1, 1);.

     [வினையாளன் → வினையாட்டி. ஒ.நோ. திருவாட்டி, மூதாட்டி]

வினையாண்மை

வினையாண்மை viṉaiyāṇmai, பெ. (n.)

   தொழிலைச் செய்து முடிக்குந் திறமை; capacity or talent to accomplish or do a work.

     “வினையாண்மை வீறெய்த லின்று” (குறள், 904);.

     [வினை + ஆண்மை]

வினையாளன்

வினையாளன் viṉaiyāḷaṉ, பெ. (n.)

   1. தொழிலியற்றுவோன்; one who is engaged in a work, worker.

     “கணக்குவினையாள ரொடு”(பெருங். மகத. 12, 50);.

   2. ஏவலாளன் (யாழ்.அக.);; servant.

   3. தீவினையுடையவன்; ill-fated man.

     [வினை + ஆளன்]

வினையாள்

வினையாள் viṉaiyāḷ, பெ. (n.)

வினையாளன், 1 பார்க்க;see {}.

     “வினையாளை வேலையிடத்து” (பெருந்தொ. 404);.

வினையிடைச்சொல்

வினையிடைச்சொல் viṉaiyiḍaiccol, பெ. (n.)

   வினைத்தன்மை பெற்றுவரும் இடைச்சொல்வகை (நன். 269, மயிலை);; particle having the characteristics of a verb.

     [வினை + இடைச்சொல்.]

வினையின்மை

 வினையின்மை viṉaiyiṉmai, பெ. (n.)

   இறைவனெண்குணங்களில் வினைப்பயன் இல்லாமையாகிய குணம் (பிங்.);; being unaffected by karma, one of eight attributs or {} q.v.

     [வினை + இன்மை]

வினையியற்சொல்

வினையியற்சொல் viṉaiyiyaṟcol, பெ. (n.)

   உலக வழக்கிலுள்ள வினைச் சொல் (நன். 269, மயிலை);; verb in popular use.

     [வினை + இயற்சொல்]

செந்தமிழ் நிலத்து மொழியாய்க் கற்றோர்க்கும் கல்லாதவர்க்கும் தம் பொருளை இயல்பாக விளக்கும் வினைச்சொல். (நன். பெயரிய. 14);.

வினையிலி

 வினையிலி viṉaiyili, பெ. (n.)

   கடவுள் (இலக். அக.);; God, as free from karma the Lord.

     [வினை + இன்-மை]

வினையுரிச்சொல்

 வினையுரிச்சொல் viṉaiyuriccol, பெ. (n.)

   வினைக்கு அடையாய் வருஞ்சொல் (வின்.);; adverb.

     [வினை + உரிச்சொல்]

வினையுருபு

வினையுருபு viṉaiyurubu, பெ. (n.)

   வினைச் சொல்லின் உறுப்பான இடைநிலை ஈறு முதலியன (நன். 420, உரை);; component particle of a verb, as {}, vigudi.

     [வினை + உருபு.]

வினையுரைப்போர்

 வினையுரைப்போர் viṉaiyuraippōr, பெ. (n.)

   தூதர் (பிங்.);; messengers, ambassadors.

     [வினை + உரைப்போர்]

வினையுவமம்

வினையுவமம் viṉaiyuvamam, பெ. (n.)

   தொழில் பற்றி வரும் ஒப்புமை (தொல். பொ. 276, உரை);; comparison based on the actions of the objects compared.

     [வினை + உவமம்]

வினையுவமை

 வினையுவமை viṉaiyuvamai, பெ. (n.)

வினையுவம் பார்க்க;see {}.

     [வினை + உவமம்]

வினையெச்சக்குறிப்பு

வினையெச்சக்குறிப்பு viṉaiyeccakkuṟippu, பெ. (n.)

குறிப்புவினையெச்சம் (நன். 342, உரை); பார்க்க;see {},

 partciple of an appellative verb.

     [வினையெச்சம் + குறிப்பு]

வினையெச்சம்

வினையெச்சம் viṉaiyeccam, பெ. (n.)

   வினையைக் கொண்டு முடியும் குறைவினை (நன். 342);; verbal participle, requiring a verb to complete the sense.

மறுவ. வினையெஞ்சு கிளவி.

     [வினை + எச்சம்]

தமிழிலக்கண மரபுப்படி, எச்சவினைகள், வினை கொண்டு முடியும் போது அவை வினையெச்சம் எனப்படும். அந்த வினையெச்சங்களைச் செய்து, செய, செயின் என வாய்ப்பாட்டு முறையில் தமிழிலக்கணங்கள் வகைப்படுத்தி விளக்கும். (இலக். கலைக். 118);.

வினைச்சொல்லைத் தன் பொருள் முடிவிற்கு வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம் என்றும் கூறும்.

வினையெச்சவினைக்குறிப்புமுற்று

வினையெச்சவினைக்குறிப்புமுற்று viṉaiyeccaviṉaikkuṟippumuṟṟu, பெ. (n.)

   குறிப்பு வினைமுற்று வினையெச்சப் பொருளதாய் வருவது (புறநா. 44, உரை);; appellative verb used participially.

     [வினையெச்சம் + வினைக்குறிப்பு + முற்று]

வினையெஞ்சணி

வினையெஞ்சணி viṉaiyeñjaṇi, பெ. (n.)

   வினை யெஞ்சி நிற்பதாகிய ஒப்பனை வகை (யாழ்.அக.);; a figure of speech in which the finite verb is omitted.

     [வினை + எஞ்சு + அணி2]

வினையெஞ்சுகிளவி

வினையெஞ்சுகிளவி viṉaiyeñjugiḷavi, பெ. (n.)

வினையெச்சம் (தொல். எழுத். 204); பார்க்க;see {}.

     [வினை + எஞ்சு + கிளவி]

வினைவயிற்பிரிதல்

 வினைவயிற்பிரிதல் viṉaivayiṟpiridal, பெ. (n.)

   தலைவன் தலைவியை நீங்கி வேந்தனாணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை (முல்லைப். உரையவதாரிகை);; theme describing the separation of a hero from his beloved when he proceeds under orders against his king’s enemy.

     [வினை + வயின் + பிரிதல்]

வினைவர்

வினைவர் viṉaivar, பெ. (n.)

   1. தொழிலினர்; workers, doers, agents.

     “வேந்துபிழைத் தகன்ற வினைவராயினும்” (பெருங். உஞ்சைக். 38, 94);.

   2. சந்துசெய்விப்பவர்; mediators.

     “நட்பாக்கும் வினைவர்போல்” (கலித். 46, 8);.

   3. அமைச்சர்; minister.

     “கொலையஞ்சா வினைவரால்” (கலித். 10.);.

     [வினை → வினைவர். ஒ.நோ. அறிவர்]

வினைவலம்படு-த்தல்

வினைவலம்படு-த்தல் viṉaivalambaḍuttal,    20 செ.கு.வி. (v.i.)

   எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல்; to complete a business successfully (to a successful conclusion);.

     “வினைவலம் படுத்த வென்றியோடு” (அகநா. 74);.

     [வினை + வலம்1 + படு. வலம்படு-தல் வெற்றியுண்டாதல்]

வினைவலர்

வினைவலர் viṉaivalar, பெ. (n.)

   1. பிறரேவிய வினைகளைச் செய்வோர்; those who do an act under orders, as of a king.

     “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்” (தொல். பொ. 23);.

   2. தொழில் செய்வதில் வல்லமை யுள்ளோர்; skilled workmen expert, a dept.

     “வினைவல ரியற்றிய….. புகையகல்” (பெருங். உஞ்சைக். 42, 88);.

     [வினை + வலன்2]

 வினைவலர் viṉaivalar, பெ. (n.)

   வயற்களத் தொழிலாளி, தோட்டத் தொழிலாளி முதலான அடித்தள மக்களைக் குறிக்கும்பெயர்; a name which denotes the base people, who works infields and garden. (64:101);.

வினைவலி

வினைவலி viṉaivali, பெ. (n.)

   1. அரண் முற்றுதல் அரண்கோடல் முதலிய தொழில்களின் அருமை; the difficulty of an enterprise (undertaking);, as besieging or capturing a fort.

     “வினைவலியுந் தன்வலியும்” (குறள், 471);.

   2. வினைத் திட்டம் (வின்.); பார்க்க;see {}.

   3. ஊழ்வினையின் வலிமை; the power of destiny.

     [வினை + வலி1]

வினைவளர்-த்தல்

வினைவளர்-த்தல் viṉaivaḷarttal,    4 செ.கு.வி. (v.i.)

   பகை விளைத்தல் (வின்.);; to create ill- will, enmity or spite.

     [வினை + வளர்-,]

வினைவழிச்சேறல்

 வினைவழிச்சேறல் viṉaivaḻiccēṟal, பெ. (n.)

வினைவயிற்பிரிதல் பார்க்க;see {}.

     [வினை + வழி + சேறல்]

வினைவாங்கு-தல்

வினைவாங்கு-தல் viṉaivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   வினையைப் புலப்படுத்தல்; to indicate the line or course of action, to direct the affairs, as of a state, job description.

     “பேதையோன் வினைவாங்க” (கலித். 27);.

     [வினை + வாங்கு-,]

வினைவிநாசன்

 வினைவிநாசன் viṉaivinācaṉ, பெ. (n.)

   கடவுள் (யாழ்.அக.); (தீவினையை ஒழிப்பவன்);; god, as the destroyer of karma.

     [வினை + Skt. {} → த. விநாசன்]

வினைவிளை-த்தல்

வினைவிளை-த்தல் viṉaiviḷaittal,    5 செ.கு.வி. (v.i.)

   பொல்லாங்கு செய்தல் (யாழ்.அக.);; to do a wicked act.

     ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ (பழ.);.

     [வினை + விளை-,]

வீ

வினோதக்கூத்து

வினோதக்கூத்து viṉōtakāttu, பெ. (n.)

அரசர் முன்பு நடிக்கும் வெற்றிக் கொண்டாட்டக் கூத்து;(சிலப். 3, 13, உரை, பக். 81);.

 dance performed in the presence of kings in celebration of their victories.

வினோதன்

வினோதன் viṉōtaṉ, பெ. (n.)

   1. ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது போக்குபவன் (யாழ். அக.);; votary, devotee.

   2. அகமகிழ்வோன் (உற்சாகி);; jolly person.

வினோதபைரவம்

வினோதபைரவம் viṉōtabairavam, பெ. (n.)

மருந்துக்குளிகை வகை;(பதார்த்த. 1209.);

 a medicinal pill.

வினோதம்

வினோதம் viṉōtam, பெ. (n.)

   1. அவா (யாழ். அக.);; desire.

   2. இயற்கைக்கு மாறானது;(யாழ்.அக.);

 quaintness, quixotism.

வினோதி

வினோதி1 viṉōtittal,    4 செ.கு.வி. (v.i.)

   விளையாடுதல்; to be playful.

     “மெல்ல நடந்து வினோதித்து” (திருக்காளத். பு. தாருகா.17.);.

 வினோதி2 viṉōti, பெ. (n.)

வினோதன் பார்க்க (யாழ்.அக.);;see {}

வினோத்தி

வினோத்தி viṉōtti, பெ. (n.)

ஒரு முக்கியப் பொருள் பிறிதொரு முக்கியப் பொருளோடு பொருந்தாதாயின் முக்கியத் தன்மையைப் பெறாதெனக் கூறும் அணிவகை;(மாறனலங். 236, பக். 355.);.

 a figure of speech in which a thing or fact is said to lose its importance if it is not accompanied by another thing or fact.

வின்னப்படு – தல்

வின்னப்படு – தல் viṉṉappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. சிதைதல்; to be marred, injured, to be damaged, as an idol with pieces broken off.

     “வின்னப்படுத்தி…. வெருட்டுவனே” (தனிப்பா. ii, 158, 394);.

   2. காயப்படுதல் (இ.வ.);; to be hurt, wounded.

   3. தடைப்படுதல்; to be frustrated.

   4. மனம் வேறுபடுதல்; to be estranged.

     [வின்னம் + படு-தல்]

வின்னம்

வின்னம் viṉṉam, பெ. (n.)

பின்னம்1 (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [பிள் → பின் → பின்னம் → வின்னம்]

வின்னா

 வின்னா viṉṉā, பெ. (n.)

   கடுரோகிணி (மலை.);; christmas rose.

வின்னாண்

வின்னாண் viṉṉāṇ, பெ. (n.)

   வில்லை வளைத்துப் பூட்டுங் கயிறு (யாழ்.அக.);; bow-string.

     [வில் + நாண்2]

வின்னூலாளன்

 வின்னூலாளன் viṉṉūlāḷaṉ, பெ. (n.)

விற்பயிற்சியளிக்கும் ஆசிரியன்.

     [வின்னூல் + ஆளன்]

வின்னூல்

 வின்னூல் viṉṉūl, பெ. (n.)

   வில்வித்தை (யாழ்.அக.);; art of archery.

     [வில் + நூல்]

வின்மை

வின்மை viṉmai, பெ. (n.)

   1. விற்றொழில்; archery.

     “தெம்மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்” (பாரத. அருச்சுனன்ற. 88);.

   2. வில்வன்மை (இலக்.அக.);; skill, adept, expertise in archery.

மறுவ. வில்லாண்மை.

     [வில் → வின்மை]

விபஞ்சி

 விபஞ்சி vibañji, பெ. (n.)

   குறிஞ்சிக்குரிய பண்ணாகப் பிங்கல நிகண்டு கூறுவது; melody type written pingalla nigandu peculiar to hilly tract.

விமலம்

விமலம் vimalam, பெ. (n.)

   1 ஒரு சிற்பமுத்திரை,

 a sculpture pose.

   2. சிற்பத்தில் இடம் பெறும்

   முத்திரைகளுள் ஒன்று; a sculptural handpose.

விம்பி-த்தல்

விம்பி-த்தல் vimbittal,    11 செ.கு.வி. (v.i.)

   எதிர்தோன்றல் (வின்.);; to be reflected, as an image.

விம்பிகை

 விம்பிகை vimbigai, பெ. (n.)

   கொவ்வை (மலை.);; a common creeper of the hedges.

விம்மம்

விம்மம் vimmam, பெ. (n.)

   1. விம்மல், 1 பார்க்க;see vimmal.

     “விம்ம முறுதல் வீனாவது முடைத்தோ” (பெருங். வத்தவ. 6, 37);.

   2. விம்மல், 2 பார்க்க;see vimmal.

     “விம்ம முறுமவள்” (பெருங். இலாவாண.16,99);.

     [விம்மு → விம்மம்]

விம்மல்

விம்மல் vimmal, பெ. (n.)

   1. தேம்பியழுகை (பிங்.);; sobbing.

   2. துன்பம்; distress.

     “இன்னதோர் விம்மனோவ” (கம்பரா. உருக். காட்டுப். 88);.

   3. ஏக்கம்; despondency.

     “நெஞ்சிற் சிறியதோர் விம்மல் கொண்டான்” (கம்பரா. பாசப். 17);.

   4. வீங்குகை; being puffed up or swollen.

     “உவகை பொங்க விம்ம லானிமிர்ந்த நெஞ்சர்” (கம்பரா. திருவடிதொ.8);.

   5. உள்ளப் பூரிப்பு; elation of spirits.

     “வீடின ரரக்க ரென்றுவக்கும் விம்மலால்” (கம்பரா.திருவவ.15);.

   6. ஒலிக்கை (பிங்.);; sounding.

   7. யாழ்நரம் போசை (பிங்.);; sound of lute strings.

     [விம்மு → விம்மல்]

விம்மல்பொருமல்

விம்மல்பொருமல் vimmalporumal, பெ. (n.)

   1. இன்பதுன்ப மேலீட்டால் உண்டாம் உடல் வேறுபாடு; change in the body due to great joy or sorrow.

   2. வருத்த மிகுதி; in expressible grief.

     “விம்மல் பொருமலாய்ப் படுகிறாயாகாதே” (ஈடு. 2, 1, 3);.

     [விம்மல் + பொருமல்]

விம்மா-த்தல்

விம்மா-த்தல் vimmāttal,    12 செ.கு.வி. (v.i.)

விம்மு 1, 2, 3 பார்க்க;see vimmu-

     “விம்மாந்தி யான்வீழ” (சீவக. 1801);.

     [விம்மு → விம்மா-,]

விம்மிட்டம்

 விம்மிட்டம் vimmiṭṭam, பெ. (n.)

   புழுக்கம்; feeling of suffocation, feeling close and sultry.

     “இரவு முழுவதும் இச்சிறு அறையுட் கிடந்து விம்மிட்டப் பட்டேன்” (நாஞ்.);.

     [விம்மு → விம்மிட்டம்]

விம்மிதம்

விம்மிதம்1 vimmidam, பெ. (n.)

   உடல் (பிங்.);; body.

 விம்மிதம்2 vimmidam, பெ. (n.)

   1. வியப்பு (திவா.);; admiration.

     “விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ” (ஞானா. 49, 9);.

   2. உவகை; delight.

     “ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்தி” (சிலப். 16, 52);.

   3. அச்சம் (வின்.);; fear.

விம்மீன்

 விம்மீன் vimmīṉ, பெ. (n.)

   விண்மீன் (இ.வ.);; star.

     [விண்மீன் → விம்மீன்]

விம்மு

விம்மு1 vimmudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தேம்பியழுதல் (பிங்.);; to heave a sob, as a child.

     “சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரலூழ் தெறியா விம்மி” (நாலடி, 394);.

   2. வருந்துதல்; to be in distress, agony.

     “கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி” (கம்பரா. நகர்நீங்கு. 124);.

   3. மகிழ்வுறுதல் (வின்.);; to rejoice.

   4. பருத்தல்; to swell, to become enlarged.

     “வார்செலச் செல்ல

விம்மும் வனமுலை” (சீவக. 469);.

   5. மிகுதல்; to extend, expand, to increase.

     “விம்மகிற் புகையின் மேவி” (சீவக. 2667);.

   6. நிறைதல்; to be full.

     “விம்ம வங்கமரர்க் கமுதளித்த வமரர் கோவே” (திவ். பெரியாழ். 2, 2, 9);.

   7. மலர்தல்; to open, as a flower.

     “விம்மிய பெருமலர்” (கல்லா. 22, 48);.

   8. ஒலித்தல்; to sound.

     “கண்மகிழ்ந்து துடிவிம்ம” (பு.வெ.2, 8, கொளு);.

   க. பிம்மு;   ம. விம்முக;து. பிம்மகெ.

 விம்மு2 vimmudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஈனுதல்; to bring forth.

     “சங்குவிம்மு நித்திலம்” (சீவக. 145);.

 விம்மு2 vimmu, பெ. (n.)

   எடை (நாமதீப. 794);; weight, burden.

விம்முட்டம்

 விம்முட்டம் vimmuṭṭam, பெ. (n.)

விம்மிட்டம் (நாஞ்.); பார்க்க;see {}.

     [விம்மிட்டம் → விம்முட்டம்]

விம்முயிர்-த்தல்

விம்முயிர்-த்தல் vimmuyirttal,    11 செ.கு.வி. (v.i.)

   பெருமூச்சு விடுதல்; to heave a sigh, as from grief.

     “விம்முயிர்த் தினையை யாத லொண்டொடி தகுவ தன்றால்” (சீவக. 271);.

     [விம்மு + உயிர்-,]

விம்முறவு

விம்முறவு vimmuṟavu, பெ. (n.)

   துன்பம்; trouble, grief, suffering, distress.

     “வேட்கையூர்தர விம்முற வெய்திய மாட்சி யுள்ளத்தை மாற்றி” (சீவக. 1634);.

     [விம்மு → விம்முறு → விம்முறவு]

விம்முறு-தல்

விம்முறு-தல் vimmuṟudal,    1 செ.கு.வி. (v.i.)

   வருந்துதல்; to be in distress.

     “விம்முறு நுசுப்பு நைய” (சீவக. 606);.

     [விம்மு + உறு-,]

விம்மெனல்

 விம்மெனல் vimmeṉal, பெ. (n.)

   இறுகிய தாதற் குறிப்பு; onom. expr. of becoming tight.

     “கட்டு விம்மென்றிருந்தது”.

     [விம்மு → விம்மெனல்]

விய

விய1 viyattal,    12 செ.கு.வி. (v.i.)

   1. வியப்படைதல்; to wonder.

     “கேட்டவர் வியப்பவும்” (திருவாச. 3, 154);.

   2. செருக் குறுதல்; to be proud.

     “செல்வமெய்தி வியந்தனை யுதவி கொன்றாய” (கம்பரா. கிட்கிந். 81);.

து. bediyuni.

 விய2 viyattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   1. வியத்தல்; to wonder at.

   2. நன்கு மதித்தல்; to esteem, admire, honour.

     “வம்பமள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே” (புறநா.77);.

   3. பாராட்டுதல்; to praise, extol, compliment, felicitate.

     “விழைந்தொருவர் தம்மை வியப்ப” (நாலடி, 339);.

 விய3 viyattal,    2 செ.கு.வி. (v.i.)

   1. கொடுத்தல் (ஈடு. 1, 1, 8, பக். 57);; to give.

   2. கடத்தல் (ஈடு. 1, 1, 8, பக்.57);; to transcend.

வியக்கம்

 வியக்கம் viyakkam, பெ. (n.)

   பெருமை (வின்.);; greatness, pride, highness, nobility.

வியக்களை

 வியக்களை viyakkaḷai, பெ. (n.)

   குடிக்கூலி (யாழ்.அக.);; house rent.

     [வாழகை → வியக்களை]

வியங்கொள்

வியங்கொள்1 viyaṅgoḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   ஏவலைக்கொள்ளுதல்; to obey orders or command, to submit.

     “வினைகடைக் கூட்ட வியங்கொண்டான்” (சிலப். 9, 78);.

     [வியம் + கொள்-,]

 வியங்கொள்2 viyaṅgoḷḷudal,    12 செ. குன்றாவி. (v.t.)

   செலுத்துதல்; to drive, as a chariot.

     “தேர்வியங் கொண்ட பத்து” (ஐங்குறு. பக். 139);.

     [ஒய் → உய் → உயம் → வியம் + கொள்-, (ஒய் = செலுத்து);, (உய் = செலுத்து); வியம் = ஏவல்.]

ஒ.நோ: ஏ-ஏவு = ஏகு.

     ‘ஏவு’ பிறவினைப் பொருளிலும் ‘ஏகு’ தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ் இருபொருளும் உள. உயம் → வியம். ஏவல் குறித்த ‘வியம்’ என்னும் சொல் மதிப்பான ஏவலுக்குப் பெயராயிற்று.

     “தேர்வியங்கொண்ட பத்து” என்னும் சொற்றொடரில் ‘வியங்கொள்’ என்னுஞ் சொல் செலுத்தற் பொருளில் வந்திருத்தல் காண்க. (ஒ.மொ.2,பக்.142);

வியங்கோளசை

வியங்கோளசை viyaṅāḷasai, பெ. (n.)

   வியங்கோள் பொருளில் வரும் அசைச் சொற்கள்; expletive words with the meanings of command.

     “மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல்” (தொல் காப்பியம்); (இலக். கலைக். பக். 109);.

வியங்கோள்

வியங்கோள் viyaṅāḷ, பெ. (n.)

   1. ஏவல் (சூடா.);; command.

   2. வினைமுற்று வகை; optative mood of verbs (Gram.);.

     “முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி” (தொல். சொல். 224);.

மறுவ. வியங்கோள் கிளவி.

     [வியங்கொள் → வியங்கோள்]

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிடத்தும் உரைப்போனின் விருப்பத்தை வெளிப் படுத்தி ஏவல் போல வரும் கிளவிகளை வியங்கோட் கிளவி என்பர் (வியங்கோள் எனினும் ஒக்கும்);

எ-டு. நான் வாழ்க!

நீ வாழ்க!

அவன் வாழ்க! (இலக்.கலைக்.பக்.109);.

வியஞ்சனம்

வியஞ்சனம் viyañjaṉam, பெ. (n.)

   1. உணவுக்குப் பக்கத்துணையாம் கறி முதலியன (கொ.வ.);; curry, as a relish for rice, sidedish.

   2. கறிக்குதவும் பொருள்கள்; condiments.

     [வெந்த + ஆனம் = வெந்தானம் → வெஞ்சனம் → வியஞ்சனம்]

வியநெறி

வியநெறி viyaneṟi, பெ. (n.)

   பெரும்பாதை (வின்.);; highway, main street, avenue, broad road.

     [வியம்1 + நெறி]

வியந்தை

 வியந்தை viyandai, பெ. (n.)

   ஒரு வகையான நெய்தற்பண்; a kind of melody type peculiar to maritime.

     [வியம்-வியந்தை]

வியனிடை

வியனிடை viyaṉiḍai, பெ. (n.)

   பரந்த வெளி, விசும்பு, வானம்; sky.

     “வியனிடை முழுவதுகெட” (தேவா. 833:7);.

     [வியன் + இடை]

வியனிலைமருட்பா

வியனிலைமருட்பா viyaṉilaimaruṭpā, பெ. (n.)

   வெண்பாவடியும் ஆசிரியவடியும் ஒவ்வாது வரும் மருட்பாவகை (இலக். வி.749, உரை);;     [வியன் + நிலை + மருட்பா]

வியனிலைவஞ்சி

வியனிலைவஞ்சி viyaṉilaivañji, பெ. (n.)

   மூச்சீரடி வஞ்சிப்பா (தொல். பொருள். 350, உரை);; a kind of {} verse with three metrical feet in each line.

     [வியன் + நிலை + வஞ்சி2]

வியனுலகம்

வியனுலகம் viyaṉulagam, பெ. (n.)

   விண்ணுலகம் (சூடா.);; celestial world.

     [வியன்1 + உலகம்]

வியன்

வியன்1 viyaṉ, பெ. (n.)

   1. வானம்; sky.

     “வியனிடை முழுவதுகெட” (தேவா. 833, 7);.

   2. பெருமை (திவா.);; greatness.

   3. சிறப்பு (ஈடு, 8, 10, 1);; excellence, speciality.

   4. வியப்பு (ஈடு, 8, 10);; wonderfulness.

   5. அகலம் (வின்.);; vastness.

     [வியம் → வியன்]

 வியன்2 viyaṉ, பெ. (n.)

   எண்ணின் ஒற்றை (சிநேந். 178);; oddness of numbers.

வியப்ப

வியப்ப viyappa, பெ. (n.)

   ஓர் உவம வாய்பாடு; a particle of comparison.

     “நேர வியப்ப” (தொல். பொ. 291);.

வியப்பணி

வியப்பணி viyappaṇi, பெ. (n.)

வியப்பு1, 2 (அணியி. 40); பார்க்க;see viyappu.

     [வியப்பு + அணி2]

வியப்பம்

வியப்பம் viyappam, பெ. (n.)

வியப்பு1, 1 பார்க்க;see viyappu.

     “வேம்பணி தோளினான் வியப்ப மெய்தியே” (திருவிளை. நரிபரி. 97);.

     [வியப்பு → வியப்பம்]

வியப்பு

வியப்பு1 viyappu, பெ. (n.)

   1. புதுமை; amazement, surprise.

     “வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்” (மதுரைக். 764);.

   2. ஒரு பயனைக் கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி (அணியி. 40);; a figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended.

   3. பாராட்டு (யாழ்.அக.);; admiration.

   4. மேம்பாடு; greatness, excellance.

     “சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்” (குறிஞ்சிப். 15);.

   5. அளவு; measurement.

     “இசைத்த மூன்றின் வியப்பற விறந்த” (ஞானா. 18);.

 Tu. {}.

     [விய → வியப்பு]

 வியப்பு2 viyappu, பெ. (n.)

வியர்ப்பு 2, 3 (பிங்.); பார்க்க;see viyappu.

வியமம்

வியமம் viyamam, பெ. (n.)

   பாராட்டத் தக்கது; that which is worthy of admiration.

     “வியமே வாழிகுதிரை” (கலித். 96);.

     [விய → வியமம்]

வியம்

வியம்1 viyam, பெ. (n.)

   1. ஏவல்; command, order.

     “வியங்கொள்வருதல்” (தொல். சொல். 67);.

   2. உடல் (பிங்.);; body.

   3. போக்கு (சீவக. 1886, உரை);; sending a person on his way.

   4. வழி; way.

     “ஆங்குவியங் கொண்மின்” (மலைபடு. 427);.

 Ka. besa, besasu, besana.

 வியம்2 viyam, பெ. (n.)

   1. விரிவு; extensiveness.

     “வியம்பெறு தோற்றமும்” (திருக்காளத். பு. ஞானோப. 62);.

   2. உயரம் (திவ். பெரியதி. 8, 7, 1, வ்யா.);; height.

 Ma. Viyam.

வியர்

வியர்1 viyarttal,    11 செ.கு.வி. (v.i.)

   1. உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல்; to sweat, perspire.

     “முயங்க யான் வியர்த்தன னென்றனள்” (குறுந். 84);.

   2. பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்; to feel irritated, as from envy.

     “வியர்த்த லைய மிகை நடுக் கெனாஅ” (தொல். பொ. 260);.

   3. சினங் கொள்ளுதல் (பிங்.);; to be angry.

க. பெமர்.

     [விள் → விளர் → வியர்-,] (வெம்மைக் கருத்து, வே.க. 129);

 வியர்2 viyar, பெ. (n.)

   1. உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி; perspiration.

     “குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள்” (மணிமே. 18, 40);.

   2. இளைப்பு; weariness, exhaustion.

     “பந்தெறிந்த வியர்விட……. ஆடுபவே” (கலித். 40);.

     [விள் → விளர் → வியர்]

வியர்ப்பு

வியர்ப்பு viyarppu, பெ. (n.)

   1. வியர்வை பார்க்க;see viyarvai.

     “வெய்துண்ட வியர்ப்பல்லது” (புறநா. 387);.

   2. சினம் (திவா.);; anger.

   3. சினக்குறிப்பு (திவா.);; mark of anger.

     [வியர் → வியர்ப்பு]

வியர்வு

 வியர்வு viyarvu, பெ. (n.)

வியர்வை பார்க்க;see viyarvai.

     [வியர் → வியர்வு]

வியர்வை

வியர்வை viyarvai, பெ. (n.)

   1. வியர், 1, 2 பார்க்க;see viyar.

   2. சினக்குறிப்பு (பிங்.);; mark or indication of wrath.

     [வியர் → வியர்வு → வியர்வை]

வியர்வைக்கட்டி

 வியர்வைக்கட்டி viyarvaikkaṭṭi, பெ. (n.)

   கோடையில் வேர்வையால் உண்டாம் புண்கட்டி (M.L.);; summer boil.

     [வியர்வை + கட்டி]

வியர்வையுண்டாக்கி

 வியர்வையுண்டாக்கி viyarvaiyuṇṭākki, பெ.(n.)

   வியர்வை பிறப்பிக்கும் மருந்து (சுவேதகாரி);; diaphoietics.

     [வியர்வை+உண்டாக்கி]

வியலகம்

வியலகம் viyalagam, பெ. (n.)

வியலிடம், 1 பார்க்க;see {}.

     “விரிகடல் வேலி வியலகம் விளங்க” (சிறுபாண்.114);.

     [வியல் + அகம்]

வியலிகை

வியலிகை viyaligai, பெ. (n.)

   பெருமை (யாழ்.அக.);; greatness.

     [வியல் → வியலிகை] (வே.க.146);

வியலிடம்

வியலிடம் viyaliḍam, பெ. (n.)

   1. உலகம்; the wide world.

     “இவ்வியலிடத்தே” (திருக்கோ. 277);.

   2. அகலம் (சூடா.);; breadth.

     [வியல் + இடம்]

வியலுள்

வியலுள் viyaluḷ, பெ. (n.)

   அகன்ற இடம்; wide, open space.

     “விழவுவீற் றிருந்த வியலு ளாங்கண்” (பதிற்றுப். 56, 1);.

     [வியல் + உள்]

வியலூர்

 வியலூர் viyalūr, பெ. (n.)

   சேரநாட்டின் வட பகுதி; northern part of Kerala.

மறுவ: வயநாடு

     [வயல்+ஊர்]

வியல்

வியல்1 viyal, கு.பெ.எ.(adv.)

   அகன்ற, பரந்த; extansiveness.

     “விழவு வீற்றிருந்த வியலுளாங்கண்” (பதிற். 53:1);,

     “இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே” (நன்னெறி. 18); வே.க.146.

 வியல்2 viyal, பெ. (n.)

   1. பெருமை; greatness.

     “மூழ்த்திறுத்த வியன்றானை” (பதிற்றுப். 33, 5);.

   2. அகலம்; width, expansion, extension, vastness.

     “வியலென் கிளவி யகலப் பொருட்டே” (தொல். கொல். 364);.

   3. மிகுதி (சிலப். 5, 7, உரை);; abundance.

   4. பொன் (சங்.அக.);; gold.

   5. காடு (பிங்.);; forest, jungle.

   6. மரத்தட்டு (அக.நி.);; wooden tray.

     [விள் → (விய்); → வியம் → வியன் → வியல்] (மு.தா.100);

 வியல்2 viyal, பெ. (n.)

   பலதிறப்படுகை; diversity.

     “வியன்கல விருக்கையும்” (சிலப். 5, 7);.

     [வியம் → வியல்]

வியல்கனா

வியல்கனா viyalkaṉā, பெ. (n.)

திப்பிலி (மலை.); பார்க்க;see tippili, long pepper.

     [வியல்1 + கனா]

வியல்பூதி

 வியல்பூதி viyalpūti, பெ. (n.)

   வில்வம் (மலை.);; beal.

வியவன்

வியவன் viyavaṉ, பெ. (n.)

   1. ஏவல் செய்வோன்; servant.

     “இளையரை வியவரின் விடவே” (சீவக. 601);.

   2. ஏவுவான் (பிங்.);; commander, person in authority.

   3. தலைவன்; headman, leader.

     “நாட்டுவியவன் சொல்லிய எல்லை போய்” (S.I.I.ii, 352);.

   4. திண்ணியன் (பிங்.);; strong, bold man.

   5. வழிச்செல்வோன் (பிங்.);; traveller, wayfare.

க. பெசதவன

     [வியம் → வியவன்]

வியவு

வியவு viyavu, பெ. (n.)

   வேறுபாடு; diversity, variation.

     “ஒண்பொருள்க ளுலப்பில்லனவாய் வியவாய்” (திவ். திருவாய். 7, 8, 3);.

     [வியம் → வியவு]

வியாகரணம்

வியாகரணம் viyākaraṇam, பெ. (n.)

   1. அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றான இலக்கணம்; grammar, one of {}, q.v.;

   2. வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம்; Sanskrit grammar, one of six {}.

     “ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும்” (கலித். கடவுள்வா. உரை.);

த.வ. இலக்கணம்

     [Skt. {} → த. வியாகரணம்]

வியாகரி-த்தல்

வியாகரி-த்தல் viyākarittal,    4 செ.கு.வி. (v.i.)

   விரித்துரைத்தல்; to propound, explain.

     “வாக்கிய முப்பதினால் வகை செய்து வியாகரித்தோம்”

     [Skt. {} → த. வியாகரி-த்தல்]

வியாகுலம்

வியாகுலம் viyākulam, பெ. (n.)

   1. துக்கம்; sorrow, trouble.

   2. கவலை; anxiety.

     “ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி” (திருப்பு. 176.);,

   3. மயக்கம் (இ.வ.);; perplexity, bewilderment.

த.வ. துயரம்

     [Skt. {} → த. வியாகுலம்]

வியாக்கியானம்

வியாக்கியானம் viyākkiyāṉam, பெ. (n.)

   உரை; exposition, explanation, comment, commentary.

     “தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம்….. வியாக்கியானஞ் செய்து” (சிவ.சம.33);.

த.வ. விளக்கவுரை

     [SKt. {} → த. வியாக்கியானம்]

வியாசன்

வியாசன் viyācaṉ, பெ. (n.)

   வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலிய நூல்களை இயற்றியவனுமான முனிவன்; an ancient sage, the original compiler of the four {} and author of the brahma sutras, the {}, the 18 chief {}, etc.,

     [Skt. {} → த. வியாசன்]

வியாசபாரதம்

 வியாசபாரதம் viyācapāradam, பெ. (n.)

   வியாசர் இயற்றிய வடமொழி மகாபாரதம்; the Maga Bharada composed by {} Sanskrit.

     [Skt. {} → த. வியாசபாரதம்]

வியாசம்

வியாசம் viyācam, பெ. (n.)

   1. பிரிவு, பகுக்கை; separation, division, classification.

   2. ஒரு செயலைச் பற்றி எழுதும் கட்டுரை (இக்.வ.);; written paper, essay.

   3. அற (தரும); நூல் பதினெட்டனுள் வியாசர் இயற்றியதாகக் கூறப்படும் சுமிருதி; a Sanskrit text-book on Hindu law,

 aescribed to {}, one of 18 taruma- {}, գ.v.

     [Skt. {} → த. வியாசம்]

வியாசர் கடகம்

 வியாசர் கடகம் viyācargaḍagam, பெ. (n.)

   இசைத் தொடர்பான அரிய நூல்; a rare treatise pertain to music.

     [வியாசர்+கடகம்]

வியாச்சியம்

வியாச்சியம் viyācciyam, பெ. (n.)

   1. வழக்கு; dispute.

   2. முறைமன்ற (நியாய); வழக்கு (இக்.வ.);; law-suit.

     [Skt. {} → த. வியாச்சியம்]

வியாதன்

வியாதன்1 viyātaṉ, பெ. (n.)

   1. வியாசன்; the sage {}.

     “வியாதனாய்…மாமறை நான்கென வகுத்து…….. உரைத்தான்” (பாகவத.1, மாயவனமி. 33);.

   2. வேடன்; hunter.

     [Skt. {} → த. வியாதன்]

வியாதி

வியாதி viyāti, பெ. (n.)

   1. நோய்; disease, ailment, sickness, malady.

     “ஆதியும் வியாதியுமின்றி” (ஞானவா. மாவலி. 28.);.

   2. தொழுநோய்; leprosy.

     [Skt. {} → த. வியாதி]

வியாதிக்காரன்

 வியாதிக்காரன் viyātikkāraṉ, பெ. (n.)

நோயாளி;(வின்.);

 sickman.

த.வ. நோயாளி

     [Skt. {} → த. வியாதி]

வியாதிசாந்தி

 வியாதிசாந்தி viyāticāndi, பெ. (n.)

   நோய்நீங்கச் செய்யும் சடங்குவகை; a propitiatory ceremony for the cure of disease.

     [Skt. {} → த. வியாதிசாந்தி]

வியாதிபரீட்சை

 வியாதிபரீட்சை viyātibarīṭcai, பெ.(n.)

   நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா உடல் தொனி என்ற எட்டினால் நோயைச் சோதிக்கை; diagnosis of a diseae by an examination of {}, mukam, malam, {}.

வியாதுதம்

 வியாதுதம் viyādudam, பெ. (n.)

   இயங்கியற்பொருள்; movable thing.

     [Skt. {} → த. வியாதுதம்]

வியானன்

 வியானன் viyāṉaṉ, பெ. (n.)

   பத்துவளி (தசவாயு);யுள் ஒன்றானதும் அரத்த வோட்டத்தை யுண்டாக்குவதுமான வளி; the vital air of the body, which causes circulation of blood, one of taca-{},

 q.v.

     [Skt. {} → த. வியானன்]

வியானபூமி

 வியானபூமி viyāṉapūmi, பெ. (n.)

   சுடுகாடு (யாழ்.அக.);; burial and burning ground.

வியாபகன்

வியாபகன் viyāpagaṉ, பெ. (n.)

   1. கடவுள் (எங்குமிருப்பவன்);; god as omnipresent.

   2. எங்கும் அறியப்படுத்தன்மை படைத்தவன்; widely known person.

வியாபகம்

வியாபகம் viyāpagam, பெ. (n.)

   1. பரவியிருக்குந் தன்மை; pervasion, diffusion.

   2. எங்குமிருக்குந்தன்மை; omnipresence.

   3. எங்கும் அறியப்படுந்தன்மை; being widely known.

     “அவன் வியாபகமுள்ளவன்”.

     [Skt. {} → த. வியாபகம்]

வியாபகி

வியாபகி viyāpagi, பெ. (n.)

எங்கும் வியாபிக்குஞ் சிவசத்தி.

 energy of Siva, a all – pervasive.

     “விமலை வியாபகி” (சிவதரு சிவஞானயோ. 22.);;

வியாபரி

வியாபரி1 viyāparittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தொழிற்படுதல்; to operate, act. to be worked.

   2. நன்கொடை சேகரித்தல்; to collect funds, as for a festival.

     “இந்த உற்சவத்தை அவர் வியாபரித்துப் பண்ணுகிறார்.”

 வியாபரி2 viyāparittal,    11 செ.கு.வி. (v.i.)

   சொல்லுதல்; to tell.

வியாபாதனம்

 வியாபாதனம் viyāpātaṉam, பெ. (n.)

   கொலை; murder, killing.

     [Skt. {} → த. வியாபாதனம்]

வியாபாதம்

 வியாபாதம் viyāpātam, பெ. (n.)

   வஞ்சகம்; evil design.

வியாபாரச்சரக்கு

 வியாபாரச்சரக்கு viyāpāraccarakku, பெ. (n.)

   விலைபடுதற்கான பண்டம்; articles of merchandise.

வியாபாரம்

வியாபாரம் viyāpāram, பெ. (n.)

   1. தொழில் ; action, operation, funtion.

மண் முதலைந்திற்கும் வியாபாரம்

   2. வாணிகம்; trade, commerce transaction.

வியாபாரி

வியாபாரி viyāpāri, பெ. (n.)

   வாணிகன்; merchant, dealer, trader.

     [Skt. {} → த. வியாபாரி]

வியாபி1

__,

பெ. (n.);

எங்கும் நிறைந்திருப்பது.

 that which is all – pervasive, as air.

     “சித்தன் மெய்த்தகு குணமிலி வியாபி”(ஞானா. 1,7);;

வியாபி-த்தல்

வியாபி-த்தல் viyāpittal,    4 செ.கு.வி. (v.i.)

   எங்கும் பரந்து நிறைந்திருத்தல்; to pervade.

     “எங்கும் வியாபித்துணர்வா முனக்கு” (தாயு. பாயப்புலி. 52.);.

     [Skt. {} → த. வியாபி].

வியாபினி

வியாபினி viyāpiṉi, பெ. (n.)

   1. சோடசகலைகளுள் ஒன்று.

 a mystic centre in the body, one of {}, q.v.

   இதன் மேனாலின் வியாபினி (தத்துவப் 141.);;   2. எங்கும் நிறைந்திருப்பது (யாழ். அக.);; that which is all-pervasive.

வியாபிருதி

வியாபிருதி viyāpirudi, பெ. (n.)

மறைக்கப்படாதிருக்கை being uncovered or open.

     “லகுதை வியாபிருதி” (சிவப்பிர. 30.);.

வியாப்தம்

 வியாப்தம் viyāptam, பெ. (n.)

   பரப்பப்பட்டது; that which is pervaded.

     [Skt. {} → த. வியாப்தம்]

வியாப்தி

வியாப்தி viyāpti, பெ. (n.)

   1. எங்குமிருக்கை; omni presence.

   2. பரந்திருக்கை; pervasion.

வியாப்பியம்

வியாப்பியம் viyāppiyam, பெ. (n.)

   1. பரப்பப்படுவது;  that which is pervaded.

     “அரனவற்கு வியாப்பியமே விமலை (சிவதரு. சிவஞான. 22);.

வியாமம்

 வியாமம் viyāmam, பெ. (n.)

   நான்குமுழம்; fathom, the length of the extended arms.

     [Skt. {} → த. வியாமம்]

வியாமோகம்

வியாமோகம் viyāmōkam, பெ. (n.)

   பெருமோகம் (திவ். திருவாய். 6,1 பன்னீ.பர.);; excessive attachment.

     [Skt. {} → த. வியாமோகம்]

வியாயாமம்

வியாயாமம் viyāyāmam, பெ. (n.)

   உடற் பயிற்சி (சுகசந்.71.);; bodily exercise.

     [Skt. {} → த. வியாயாமம்]

வியாயோகம்

வியாயோகம் viyāyōkam, பெ. (n.)

   ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீங்கி தலைவனது வீரச்செயலைக் கூறும் ஓரங்கமுடைய நாடக வகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.);; a species of drama in one act, describing a military or heroic exploit and excluding the sentiments of love and mirth, one of ten {}. q.v.

வியார்த்தி

 வியார்த்தி viyārtti, பெ. (n.)

   பொருள்; meaning, exposition.

வியாள உருவம்

 வியாள உருவம் viyāḷauruvam, பெ. (n.)

   ஒவியங்களின் வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்ற உருவம்; shows the chronical stages ofan art.

     [வியானம்+உருவம்]

வியாளக்கிராகி

 வியாளக்கிராகி viyāḷakkirāki, பெ. (n.)

பிடாரன் பார்க்க;see {}.

வியாளம்

வியாளம் viyāḷam, பெ. (n.)

   1. பாம்பு (சூடா.);; snake.

   2. புலி (சூடா.);; tiger.

   3. யாளி1 1 பார்க்க;see {} a mythological animal.

   4. கெட்ட குணமுள்ள யானை (வின்.);; vicious elephant.

 வியாளம்1 viyāḷam, பெ. (n.)

ஒவியத்தில் அதி களவில் இடம்பெறும் உருவ அமைப்பு

 galore of structural figure drawn in art.

 வியாளம்2 viyāḷam, பெ. (n.)

சிற்பத்தில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுகின்ற உருவம்,

 sculptural structure which take place abundantly in sculpture.

 வியாளம் viyāḷam, பெ. (n.)

   1. பாம்பு (சூடா);; snake.

   2. புலி; tiger.

   3. யாளி; a mythological animal.

   4. கெட்ட குணமுள்ள யானை; vicious elephant. (W);.

வியாளவரி

 வியாளவரி viyāḷavari, பெ. (n.)

   கோயிற் கருவறை மதிலின் உச்சியில் யாளியுருவி லமைந்த அழகு வரி;     [வியாள + வரி]

 வியாளவரி viyāḷavari, பெ. (n.)

   கோயிற் கருவறை (கர்ப்பக்கிரக); மதிலின் உச்சியில் யாளியுருவிலமைந்த ஒப்பனை (அலங்கார); வரி; a line of carbel stones having {} images, in the inner shrine of a temple.

வியாளவியூகம்

வியாளவியூகம் viyāḷaviyūkam, பெ. (n.)

   பாம்பு வடிவான படையமைப்பு (சுக்கிரநீதி, 338.);; serpent-like array of an army.

வியாழக்கிழமை

 வியாழக்கிழமை viyāḻkkiḻmai, பெ. (n.)

   கிழமையின் ஐந்தாவது நாள்; Thursday.

     [வியாழன் + கிழமை]

வியாழக்குறிஞ்சி

வியாழக்குறிஞ்சி viyāḻkkuṟiñji, பெ. (n.)

   குறிஞ்சியாழ்த்திறத் தொன்று (பிங்.);;     [வியாழம்2 + குறிஞ்சி]

வியாழசினேகன்

வியாழசினேகன் viyāḻciṉēkaṉ, பெ. (n.)

   கதிரவன் (நாமதீப. 94);; sun.

     [வியாழன் + Skt. {} → த. சினேகன்]

வியாழச்சக்கரம்

வியாழச்சக்கரம் viyāḻccakkaram, பெ. (n.)

   அறுபது ஆண்டு வட்டம் (வின்.);; the jupiter cycle of 60 years.

     [வியாழன் + சக்கரம்]

வியாழநோக்கம்

வியாழநோக்கம் viyāḻnōkkam, பெ. (n.)

   1. பிறப்பியச் சக்கரத்திற் காணப்படும் குருநோக்கம்;     (Astral.); aspect of the planet jupiter, in an horoscope.

   2. வியாழானுகூலம் பார்க்க;see {}.

     [வியாழன் + நோக்கம்]

வியாழன்

வியாழன் viyāḻṉ, பெ. (n.)

வியாழம்1 பார்க்க;see {}.

கோள்களுள் வியாழன் பெரிதா யிருப்பதும், வடமொழியில் அது பிருகஸ்பதி என்று பெயர் பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கன. பொன் என்பது வியாழனுக்கொரு பெயராதலால் வியல் என்னும் சொல்லிற்கு பொன்னென்னும் பொருளும் தோன்றிற்றுப் போலும் (வே.க.146);

வியாழமாலை

 வியாழமாலை viyāḻmālai, பெ. (n.)

வியாழமாலையகவல் (சிலப். உரைப்பா.); பார்க்க;see {}.

     [வியாழம் + மாலை]

வியாழமாலையகவல்

வியாழமாலையகவல் viyāḻmālaiyagaval, பெ. (n.)

   இடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று (இறை. 1, பக். 5);; a literary piece or poem of the middle {}, not now extant.

     [வியாழமாலை + அகவல்]

வியாழம்

வியாழம்1 viyāḻm, பெ. (n.)

   1. தேவகுரு; brahaspati, the preceptor of the gods.

     “வியாழத்தோடு மறைவழக் கன்று வென்ற” (திருவாலவா. திருநகரப். 13);.

   2. ஒரு கோள்; jupiter, planet.

     “முந்நீர்த் திரையிடை வியாழந் தோன்ற” (சீவக. 2467);.

   3. வியாழக் கிழமை; thursday.

     “வியாழத்தின் மிக்க சம்பத்தி னொடு சிறுவரைப் பெற்றெடுப்பான்” (அறப். சத. 69);.

     [வியல் → வியலன்) → வியாழன் – கதிரவனைச் சுற்றும் கோள்கள் எல்லாவற்றிலும் பெரியது.

     “வியல்என் கிளவி அகலப் பொருட்டே” (தொல்.உரி.66); வியல் → வியலம் → வியாழம்]

 வியாழம்2 viyāḻm, பெ. (n.)

   பாம்பு; serpent.

     “வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக் கண்டு” (குற்றா. குற. 35, 5);.

     [வியல் → வியலம் → வியாழம்] (வே.க.146);

வியாழவட்டம்

வியாழவட்டம்1 viyāḻvaṭṭam, பெ. (n.)

   1. வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு (சங்.அக.);; the period of 12 years, being the time taken by jupiter for one revolution or rotation in the universe.

   2. வியாழச்சக்கரம் (வின்.); பார்க்க;see {}.

     [வியாழ + வட்டம்]

 வியாழவட்டம்2 viyāḻvaṭṭam, வி.எ.(adv.)

   வியாழக்கிழமை தோறும் (வின்.);; every thursday.

     [வியாழ + வட்டம்]

வியாழானுகூலம்

 வியாழானுகூலம் viyāḻāṉuālam, பெ. (n.)

   திருமணம் முதலிய நல்ல பயன்களைக் குறிக்கும் குருநோக்கம் (இ.வ.);; beneficent aspect of the plant jupiter, as conducive to matrimonial happiness, etc.

     [வியாழ + Skt. {} → த. அனுகூலம்.]

வியாவகாரிகம்

வியாவகாரிகம் viyāvagārigam, பெ. (n.)

   வழக்கத்தில் இருப்பது (வேதா. சூ. 32.);; that which relates to everyday life or practice.

வியாவர்த்திதம்

வியாவர்த்திதம் viyāvarddidam, பெ. (n.)

   இணையாவினை (அபிநய);க்கைவகை. (சீவக. 1257, உரை.);; a hand-pose.

வியாவிருத்தி

 வியாவிருத்தி viyāvirutti, பெ. (n.)

   தள்ளுகை (யாழ்.அக.);; exclusion, rejection.

     [வியா + Skt. {} → த. விருத்தி]

 வியாவிருத்தி viyāvirutti, பெ. (n.)

   தள்ளுகை; exclusion;

 rejection.

வியுற்பத்தி

வியுற்பத்தி viyuṟpatti, பெ. (n.)

   1. மொழிப் பொருட்காரணம் (யாழ்.அக.);;   2. கல்வியறிவு; proficiency in language, literature, etc.

வியுற்பத்திபண்ணு-தல்

வியுற்பத்திபண்ணு-தல் viyuṟbaddibaṇṇudal,    11 செ.குன்றாவி (v.t.)

   புதிதாயுண்டாக்குதல்; to create a new.

வியுற்பன்னன்

 வியுற்பன்னன் viyuṟpaṉṉaṉ, பெ. (n.)

   கல்வியறிவுள்ளவன்; erudite scholar, one who is proficient in language, literature, etc.

வியூககாரன்

 வியூககாரன் viyūkakāraṉ, பெ. (n.)

தையற்காரன் (யாழ். அக.);.

 tailor.

வியூகபேதம்

 வியூகபேதம் viyūkapētam, பெ. (n.)

   படையணி முறிகை (யாழ். அக.);; breaking of the serried ranks of an army.

வியூகம்

வியூகம் viyūkam, பெ. (n.)

   1. படை வகுப்பு (குறள். 767, உரை.);; military array.

   2. திருமால் நிலை ஐந்தனுள் சங்கருஷணன் பிரத்தியும்நன் அநிருத்தன் என்று மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவுமுள்ள நிலை. (அஷ்டாதச. தத்வத். 3,43.); (பரிபா. 3, 81, உரை.);; manifestation of Visnu as three divinities, viz., {} or as four divinities, including {}, one of five {}-nilai, q.v.

   3. திரள்; multitude, collection.

   4. விலங்கின் கூட்டம். (சூடா.);; herd, flock.

வியூகாவதாரம்

வியூகாவதாரம் viyūkāvatāram, பெ. (n.)

   1. வியூகம் பார்க்க;see viyugam.

     “சங்கருடணர் அநிருத்தரென்னு நால்வியூகாவதாரம்” (பிரபோத. 45, 4);.

வியோகம்

வியோகம் viyōkam, பெ. (n.)

   1. சாவு; death.

   2. பிரிவு; separation.

     “யோக வியோக முடைத்தோன்” (ஞானா 61, 9.);;

   3. பிறவி நீக்கம்;

வியோமமஞ்சரம்

 வியோமமஞ்சரம் viyōmamañjaram, பெ. (n.)

   கொடி (சங்.அக.);; flag.

     [Skt. vyoma + manjara]

வியோமமண்டலம்

 வியோமமண்டலம் viyōmamaṇṭalam, பெ. (n.)

வியோமமஞ்சரம் பார்க்க (சங்.அக.);;see viyoma-{}.

     [Skt. vyoma+mandala]

வியோமம்

வியோமம் viyōmam, பெ. (n.)

   வானம் (ஆகாசம்); (பிங்.);; sky atmosphere.

     “நாமமும் வடிவுங் கிளைத்திடு வியோம வடிவமாய்த் தோன்றும்” (திருக்காளத். பு. சிவமான்.22.);.

வியோமரூபிணி

வியோமரூபிணி viyōmarūpiṇi, பெ. (n.)

   சோடசகலையுளொன்று; a mystic centre in the body, one of {}-kalai.

     “நிற்கின்ற வியோம ரூபிணி நீலாகாயம்” (தத்துவப். 142.);.

வியோமாட்சரேகை

 வியோமாட்சரேகை viyōmāṭcarēkai, பெ. (n.)

கோள் (கிரகங்);களின் அட்சாம்ச நிலை;(வின்.); ({});

 celestial latitude, as of planets.

விரகதம்

 விரகதம் viragadam, பெ. (n.)

விரகறம் (மலை.); பார்க்க;see {}.

விரகதாபம்

 விரகதாபம் viragatāpam, பெ. (n.)

விரகநோய் பார்க்க;see virakanoy.

விரகநோய்

 விரகநோய் viraganōy, பெ. (n.)

   காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம்; distress or sorrow of lovers due to separatrion from each other.

     [Skt. viraha + த. நோய்]

விரகன்

விரகன் viragaṉ, பெ. (n.)

   1. திறமையுள்ளவன்; skilful, clever person.

     “விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி” (ஈடு.1, 5, 10);.

   2. வல்லவன்; expert.

     “தமிழ்விரகன மொழிகள்” (தேவா.132, 11);.

   3. சுற்றத்தான்; kinsman.

     “விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்” (பழமொ. 123);.

விரகம்

விரகம் viragam, பெ. (n.)

   1. பிரிவு; separation, especially of lovers.

   2. விரக நோய் பார்க்க;see viraga {}.

   3. உலர்த்துகை; drying up.

   மண் முதலைந்திற்கும் வியாபாரம் பொறை பிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும் (வேதா. சூ. 77);;   4. காமம்; lasciviousness, lust. (w);.

விரகறம்

 விரகறம் viragaṟam, பெ. (n.)

   வெள்ளைச் சாரணை (மலை.);; horse purslane.

     [விரகதம் → விரகறம்]

 விரகறம் viragaṟam, பெ. (n.)

   வெள்ளைச்சாரணை; horse purslane.

விரகறியாளன்

விரகறியாளன் viragaṟiyāḷaṉ, பெ. (n.)

   அறிவுடையோன்; wiseman.

     “நறும்பூங் கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட” (புறநா.289);.

     [விறகு + அறி + ஆள்]

 விரகறியாளன் viragaṟiyāḷaṉ, பெ. (n.)

அறிவுடையோன்

 wise man

நறும் பூங்கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட (புறாநா. 289);.

விரகவேதனை

 விரகவேதனை viragavētaṉai, பெ. (n.)

விரக நோய் பார்க்க;see viraga {}.

விரகாவத்தை

 விரகாவத்தை virakāvattai, பெ. (n.)

   பிரிந்த காதலர் துன்புறும் நிலை; love-lorn condition of sparated lovers.

விரகி

விரகி viragi, பெ. (n.)

   பிரிவாற் காமநோயுற்றவ-ள்-ன்; one pining from the seperation one’s beloved.

   2. காமி;(வின்.);

 lascivious person.

விரகிணி

விரகிணி viragiṇi, பெ. (n.)

   1. காதலனை பிரிந்தவள்; woman separated from her lover.

   2. சம்பளம்; salary, wages.

விரகிதன்

 விரகிதன் viragidaṉ, பெ. (n.)

   தனியே விடப்பட்டவன்; lonely man. (இலக்.அக.);.

விரகு

விரகு viragu, பெ. (n.)

   1. வழிவகை; means, expedient, contrivance.

     “கண்ணாலே கண்டாலல்லது பஜிக்க விரகில்லை” (ஈடு. 1, 3, ப்ர);.

   2. திறமை; cleverness, prudence, tact.

     “விரகி னீட்டினான்” (சீவக. 328);.

   3. உத்தி; cunning.

     “காமம் விற்கின்ற விரகிற்றோலாப் பொய்வினை மகளிர்” (கம்பரா. இந்திர சித்துவதை. 28);.

   4. நுண்ணறிவு; discretion, discriminative knowledge, sharpness.

     “விரகினரில்லா வவைபோல்” (திருவானைக். சம்புமு. 41);.

   5. உணர்ச்சிக் கனிவு; enthusiasm.

     “வனஞ்சென்று விரகிற் புக்கான்” (மேருமந். 342);.

   6. பண்ணியாரம்; confectionery.

     “வேறுபல் லுருவின் விரகு தந்திரீஇ” (பொருந.108);.

   தெ. வெரவு;க. பெரகு.

விரகுளி

விரகுளி viraguḷi, வி.எ.(adv.)

   முறையாக; in order.

     “விரகுளி யெழுந்த போழ்தில்” (மேரு மந். 719);.

     [விரகு + உளி]

விரக்தம்

 விரக்தம் viraktam, பெ. (n.)

விரத்தம் பார்க்க;see viratam.

விரக்தி

விரக்தி virakti, பெ. (n.)

விரத்தி பார்க்க;see viratti.

=

விரகசன்னதம்

__,

பெ. (n.);

விரகநோய் பார்க்க;see {}.

     “விரக சன்னதமேற்ற” (தாயு. எங்கு நிறை.10.);

விரசமாக்கு-தல்

 விரசமாக்கு-தல் virasamākkudal, செ.

குன்றாவி(v.t.);

கெடுத்து விடுதல்

 to spoil mismanage.

காரியத்தை விரசமாக்கி விடாதே.

விரசம்

விரசம் virasam, பெ. (n.)

   1. வெறுப்பு; dislike a version.

   2. நிந்தை;(யாழ்.அக.);

 censure.

     [Skt. vi-rasa → த. விரசம்]

விரசல்

விரசல் virasal, பெ. (n.)

விரசு4 பார்க்க;see {}.

     “விரசலாய் நட”.

     [விரை → விரைசு → விரசு → விரசல்.]

விரசாநதி

 விரசாநதி viracānadi, பெ. (n.)

   பரமபதத்தின் புறத்ததோர் யாறு; a river the borders on {} heaven.

விரசு

விரசு1 virasudal,    5 செ.கு.வி. (v.i.)

   செறிதல்; to crowd closely or compactly together.

     “விரசுமகிழ்சோலை” (பதினொ. விநாயகர். இரட். 1);.

 Ma. virakkuka;

 Ka. Berasu;

 Tu. biravuni;

 Te. berayu;

 Kur. {};

 Malt. birge.

     [விரவு → விரசு]

 விரசு2 virasudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பொருந்துதல்; to join, unite.

     “அகிலம் யாவையும் விரசுறு தனிக்குடை” (கம்பரா. திருவவ. 138);.

     “விரசு கோலங்கள் காண விதியிலேன்” (கம்பரா. சூளா. 36);.

 விரசு3 virasu, பெ. (n.)

விரசுகணக்கு (இ.வ.); பார்க்க;see {}.

 விரசு4 virasudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மிகவும் விரைவுப்படுத்தல்; to press hard, to urge vehemently, to hasten.

   2. சொல்லாற் கடிந்து வெருட்டுதல்; to repel by words of rebuke.

     [விரை → விரைசு → விரசு-,]

 விரசு5 virasu, பெ. (n.)

   விரைவு; swiftness.

     ‘கைவிரசு’ (வின்.);.

     [விரை → விரைசு → விரசு-,]

 விரசு6 virasu, பெ. (n.)

   மரவகை (M.M.802);; large sebestan.

மறுவ. விரிச, விருசு.

 Ma. virisu;

 Te. virigi.

விரசுகணக்கு

விரசுகணக்கு virasugaṇaggu, பெ. (n.)

   விளக்கமான கணக்கு (இ.வ.);; detailed or elaborate account.

     [விரசு2 + கணக்கு]

விரசை

 விரசை virasai, பெ. (n.)

   மாட்டுத்தொழுவம் (இலக்.அக.);; shed for cattle.

விரட்டடைப்பன்

 விரட்டடைப்பன் viraḍḍaḍaippaṉ, பெ. (n.)

   மாட்டு நோய் வகை (பெ.மாட்.);; a kind of cattle-disease.

     [வரட்டடைப்பன் → விரட்டடைப்பன்]

விரட்டு-தல்

விரட்டு-தல் viraṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. துரத்துதல்; to chase, to drive away.

   2. அச்சுறுத்துதல்; to frighten, to intimidate.

   3. மிகவும் விரைவுப்படுத்துதல்; to urge vehemently.

     [வெருட்டு → விரட்டு-,]

விரணகம்

 விரணகம் viraṇagam, பெ. (n.)

   ஆமணக்கு (சங்.அக.);; castor plant.

விரணகாசம்

விரணகாசம் viraṇakācam, பெ. (n.)

   கருவிழியிற் படரும் கண்ணோய் வகை (சீவரட். 261.);; a disease of the eye causing film over the pupil of the eye.

     [Skt. {} → த. விரணகாசம்]

விரணகாரி

விரணகாரி viraṇakāri, பெ. (n.)

   1. புண்ணைச் சுடும் மருந்து (பைஷஜ.);; caustic.

   2. தோலினை (சருமத்தை);ப் புண்ணாக்கும் மருந்து (இங். வை. 31.);; escharotic.

விரணகிரந்தி

விரணகிரந்தி viraṇagirandi, பெ. (n.)

   புற்று நோய் (இங். வை. 307.);; cancer.

விரணசன்னி

 விரணசன்னி viraṇasaṉṉi, பெ. (n.)

   இசிவு நோய்வகை;

விரணப்பரு

விரணப்பரு viraṇapparu, பெ. (n.)

கடைக்கண் விளிம்பில் உண்டாகுஞ் சிறுபரு;(சீவரட்.269.);

 pimple in the eye.

விரணம்

விரணம்1 viraṇam, பெ. (n.)

   1. காயம்; wound, sore, bruise.

   2. சிலந்திப்புண்; boil.

   3. புண்கட்டி (வின்.);; ulcer.

   4. முறிவு; fracture

   5. பகைமை; enmity, hatred.

     “தங்கண் மேல் விரணமதாகி” (கந்தபு. இரணியன்யுத்.3);

     [Skt. vrana → த. விரணம்]

விரணம்போக்கி

 விரணம்போக்கி viraṇambōkki, பெ. (n.)

ஆடு தின்னாப்பாளை;(வின்.);

 worm-killer.

விரணவாதம்

விரணவாதம் viraṇavātam, பெ. (n.)

   நோய் வகை (கடம்ப. பு. இலீலா. 123.);; a disease.

விரணவைத்தியன்

 விரணவைத்தியன் viraṇavaittiyaṉ, பெ. (n.)

   புண்ணுக்கு பண்டுவம் செய்வோன்; surgeon.

விரதங்கா-த்தல்

 விரதங்கா-த்தல் viradaṅgāddal, செ.கு.வி. (v.i.)

நோன்பு மேற்கொண்டொழுகுதல்;(வின்.);

 to observe a vow.

விரதத்துவம்

 விரதத்துவம் viradadduvam, பெ. (n.)

   பட்டினி நோன்பு முதலியவற்றால் உடலை ஒறுக்கும் நிலை;

விரதநியமம்

விரதநியமம் viradaniyamam, பெ. (n.)

   1. நோன்போடு ஒழுகுகை; observing austerities.

   2. தீட்சை செய்விக்கை;(வின்.);

 act of religious initiation.

விரதமிறக்கு-தல்

 விரதமிறக்கு-தல் viradamiṟakkudal, செ.கு.வி. (v.i.)

   மனவுறுதி (சங்கற்பித்து); கொண்டு நடத்தும் நோன்பை (விரதத்தை); அமைதி (சாந்தி); செய்து முடித்தல்; to celebrate the conclusion of a religious vow or fast with appropriate ceremonies.

விரதம்

விரதம்1 viradam, பெ. (n.)

   1. நோன்பு; religious vow act of austerity, holy practice as fasting, continence etc.

     “ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் (நாலடி. 51.);

   2. கொள்கையில் கொண்ட மனவுறுதி (சங்கற்பம்); (பிங்.);; solemn vow, oath.

     “தன்னுடன் பிறந்த முன்னவர் விரத முடித்து” (S.I.I.iv. 94);

   3. நல்வினைப் பயன் (புண்ணியம்); ஏழனுள் ஒன்றான தவம் (சூடா.);; penance, one of seven {}.

   4. நடப்பு நிகழ்வினை (சுமாவர்த்தனம்);; aceremony.

த.வ. நோன்பு

     [Skt. vrata → த. விரதம்]

விரதம்பிடி-த்தல்

 விரதம்பிடி-த்தல் viradambiḍiddal, செ.கு.வி. (v.i.)

பட்டினி கிடத்தல்;(வின்.);

 to fast.

விரதவுத்தியாபனம்

 விரதவுத்தியாபனம் viradavuddiyāpaṉam, பெ. (n.)

   நோன்பு (விரத); முடிக்கும் அமைதி (சாந்திச்); நிகழ்வு (சடங்கு); (யாழ். அக.);; ceremonies at the conclusion of a viratam.

விரதி

விரதி viradi, பெ. (n.)

   1. நோன்பு மேற்கொண்டோன்; one who has taken a religious vow

     “விரிகடை விரதிகள்”(தேவா. 700, 3);.

   2. துறவி (சது.);; one who has renounces the world.

   3. ஓதல் திருவாழ்வன் (பிரமசாரி);; celibate student.

     “அருத்திடுகக வன்னாதி

   4. சுமா வர்த்தனம்; a ceremony.

த.வ. நோன்பி

     [Skt. vrata → த. விரதம்]

விரத்தன்

விரத்தன் virattaṉ, பெ. (n.)

   1. உலகப் பற்றில்லாதவன்;  man free from worldly attachments.

     “விரத்தரிற் றலைவனாகி” (கந்தபு. கயமுகனுற் 31.);;

   2. தவசி; male ascetic.

   3. மணமின்றி இருப்பதாக உறுதி செய்து கொண்டவன். (வின்.);;  man who has taken a vow of celibacy.

     [Skt. vi-rakta → த. விரத்தன்]

விரத்தம்

விரத்தம் virattam, பெ. (n.)

   1. உலகப் பற்றுவிடுகை;(வின்.);

 renunciation.

   2. வெறுப்பு;(சங். அக.);

 dislike.

விரத்தி

விரத்தி1 viratti, பெ. (n.)

   1. உலகப் பற்றில்லாதவள்; woman free from worldly attachments.

   2. தவத்தி; female ascetic.

   3. மணமின்றி இருப்பதாக உறுதி செய்து கொண்டவள்;(வின்.);;  woman who has taken a vow of celibacy.

 விரத்தி2 viratti, பெ. (n.)

   1. பற்றின்மை (சூடா.);; freedom from worldly attachments; renunciation of worldly pleasures.

   2. வெறுப்பு; dislike.

     [Skt. vi-rakti →.த. விரத்தி]

விரனெரி-த்தல்

விரனெரி-த்தல் viraṉerittal,    4 செ.கு.வி. (v.i.)

   வருத்தத்தால் விரல்களை நெரித்தல்; to wring one’s hands, squeeze one’s fingers together in sign of great distress.

     “மெல்விர னெரித்து விம்மி வெய்துயிர்த்து” (பதினொ. திருவாரூர்மும். 7);.

     [விரல் + நெரி2-]

விரம்

 விரம் viram, பெ. (n.)

ஒன்பான் நஞ்சுசெய்யப் பயன்படுகின்ற மூலப்பொருட்களில் ஒன்று:

 primary element used in preparing nine kinds of poison.

விரயம்

விரயம் virayam, பெ. (n.)

   1. பயனில்லாச் செலவு; expenditure without utility.

   2. மிகுசெலவு (வின்.);; extravagance, waste, prodigality.

   3. பேதியாகை (வின்.); கழிச்சல்; purging.

     [Skt. vyaya → த. விரயம்]

விரற்கடை

 விரற்கடை viraṟkaḍai, பெ. (n.)

விரற்கிடை (வின்.); பார்க்க;see {}.

விரற்கிடை

விரற்கிடை viraṟkiḍai, பெ. (n.)

   விரலகல முள்ள அளவு (வின்.);; finger’s breadth = 8 grains of paddy = 1/12 {}.

     [விரல் + கிடை2]

விரற்குறி

 விரற்குறி viraṟkuṟi, பெ. (n.)

   கைவிரல் வரியை ஒற்றியெடுத்த அடையாளம் (C.G.);; finger impression.

     [விரல் + குறி]

விரற்கொடி

 விரற்கொடி viraṟkoḍi, பெ. (n.)

   பூடு வகை (திவா.);; a plant growing in hedges and thickets.

     [விரல்கொடி → விரற்கொடி]

விரற்சாடு

விரற்சாடு viraṟcāṭu, பெ. (n.)

   விரலுறை (சீவக. 2202, உரை);; glove for the finger, put on while shooting arrows.

     [விரல் + சாடு4]

விரற்சுற்று

 விரற்சுற்று viraṟcuṟṟu, பெ. (n.)

   நகச்சுற்று (வின்.);; whitlow.

     [விரல் + சுற்று]

விரற்செறி

விரற்செறி viraṟceṟi, பெ. (n.)

   நெளி; curved finger-ring.

     “விரற்செறியினைத் திருத்தலும்” (தொல். பொ. 22, உரை);.

மறுவ. கணையாழி.

     [விரல் + செறி2 -,]

விரற்படுவன்

 விரற்படுவன் viraṟpaḍuvaṉ, பெ. (n.)

   விரலில் வரும் புண்கட்டி வகை (M.L);; abscess finger, thecal abscess.

     [விரல் + படுவன்]

விரற்புட்டில்

விரற்புட்டில் viraṟpuṭṭil, பெ. (n.)

   1. விரற் சாடு பார்க்க;see {}.

     “விரற்புட்டி லிவை சிறிய” (கலிங். 534);.

   2. விரற் சிமிழ் (அங்குஸ்தான்);; thimble.

     [விரல் + புட்டில்1]

விரற்புறப்பாடு

 விரற்புறப்பாடு viraṟpuṟappāṭu, பெ. (n.)

விரற்சுற்று பார்க்க;see {} (M.L.);.

     [விரல் + புறப்படு → புறப்பாடு]

விரற்பூண்

விரற்பூண் viraṟpūṇ, பெ. (n.)

   கணையாழி (மோதிரம்); (நாமதீப. 435);; finger-ring.

மறுவ. விரற்செறி.

     [விரல் + பூண்]

விரலணி

 விரலணி viralaṇi, பெ. (n.)

விரலாழி (சூடா.); பார்க்க;see {}.

     [விரல் + அணி]

     [p]

விரலம்

 விரலம் viralam, பெ. (n.)

   விரலின் அளவு; the tamil term of angulam.

     ‘ஐவிரலம் வளரும் ஆற்று மீன்களுண்டு’ (உ.வ.);.

விரலாழி

விரலாழி viralāḻi, பெ. (n.)

   கணையாழி (மோதிரம்);; finger-ring.

     “விரலாழிக்கண் பல்விதக் கண்கள் சேர்த்து” (திருவாலவா. 22, 13);.

     [விரல் + ஆழி]

விரலி

விரலி virali, பெ. (n.)

   1. விரலிமஞ்சள் (கொ.வ.); பார்க்க;see {}.

   2. வெள்ளரி (மலை.);; cucumber.

 Ma. virali;

 Ko. valary;

 To. Paso.

     [விரல் → விரலி]

விரலிப்பச்சை

 விரலிப்பச்சை viralippaccai, பெ. (n.)

   பச்சைக்கருப்பூரம் (சங்.அக.);; purified camphor.

     [விரவு + பச்சை]

விரலிமஞ்சள்

 விரலிமஞ்சள் viralimañjaḷ, பெ. (n.)

   மஞ்சள் வகை; a kind of turmeric.

     [விரலி + மஞ்சள்]

விரலேறு

விரலேறு viralēṟu, பெ. (n.)

   ஒருவகைத் தோற்கருவி (சிலப். 3, 27, உரை, பக். 106);; hand-drum.

     [விரல் + எறி-,]

 விரலேறு viralēṟu, பெ. (n.)

   தோலினாற் செய் யப்பட்ட பழங்கால இசைக்கருவி; an ancient musical instrument made of leather.

     [விரல்+ஏறு]

விரலேறு பாகம்

 விரலேறு பாகம் viralēṟupākam, பெ. (n.)

   பழம் பெரும் இசைக்கருவி; an ancient musical instrument.

     [விரல்+ஏறு+பாகம்]

விரல்

விரல் viral, பெ. (n.)

   1. கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு; finger, toe.

     “விரலுளர் நரம்பின்” (பொருந. 17);.

   2. விரற்கிடை பார்க்க;see {}.

     “பாதாதி கேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும்” (S.I.I.ii, 395);.

     ‘விரலுக்குத் தக்க வீக்கம்’ (பழ.);, ‘விரல் உதவி விருந்தினர் உதவார்’ (பழ.);,

     ‘விரல் உரலானால் உரல் என்ன ஆகும்’ (பழ.);,

     ‘விரல் போகாத இடத்திலே உரல் போகுமா’ (பழ.);.

   தெ. வ்ரேலு;   ம. விரல்;   க., து. பெரெல்; Ko. verl;

 To. {};

 Kod. bera;

 Kol. vende;

 Nk. Vende;

 Go. Wirinj;

 Kui. Vanju;

 Kuwi (F);. {}.

     [விள் → விரி → விரல்]

விரல்கொடு-த்தல்

விரல்கொடு-த்தல் viralkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   திருமணஞ் செய்தல்; to marry.

     “வேசியவள் நானிருக்க விரல் கொடுத்தா ளாசையென்ன” (கோ.வ.க.33);.

     [விரல் + கொடு-,]

விரல்நொடி

விரல்நொடி1 viralnoḍi, பெ. (n.)

   விரலைச் சொடக்குகை; snapping the fingers.

     ‘ஒரு விரல் நொடி இடாது’ (பழ.);.

     [விரல் + நொடி]

 விரல்நொடி2 viralnoḍi, பெ. (n.)

   பூடுவகை (திவா.);; a plant growing in hedges and thickets.

     [விரல் + நொடி]

விரல்மொழி

 விரல்மொழி viralmoḻi, பெ. (n.)

   விரல்களின் சந்துப் பொருத்து (வின்.);; knuckle, finger- joint.

     [விரல் + மொழி]

விரல்வரியடையாளம்

 விரல்வரியடையாளம் viralvariyaḍaiyāḷam, பெ. (n.)

   உள்ளங்கையில் அமைந்திருக்கும் கைவரி (ரேகை);; line on the palm.

ஒவ்வொரு விரலின் நுனியிலும் வரிகள் குழந்தை, கருவிலிருக்கும் போதே உண்டாகி குழந்தை தொண்டு கிழவனாகும் காலத்திலும் ஒரு சிறிதும் மாறாமல் இருந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்று, உலகில் பலகோடி மக்களுக்கும் ஒவ்வொருவருடைய விரல் வரியும் தனிப்பட்டது. ஒருவருடையதைப் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை. இரட்டைக் குழந்தைகளுடைய விரல் கைவரி (ரேகை);களும் வேறுவேறாகவே காணப்படும். விரல் வரியின் தனிப்பட்ட தன்மை, மாறாத தன்மை என்ற இந்த இரண்டு இயல்புகளையும் வைத்து ஆள் அடையாளம் கண்டுபிடிக்க இயலும்.

     [விரல் + வரி + அடையாளம்]

விரல்விடு-தல்

விரல்விடு-தல் viralviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கைவிரலை விட்டு எண்ணுதல் (இக்.வ.);; to count with one’s fingers.

     [விரல் + விடு-,]

விரல்வை-த்தல்

விரல்வை-த்தல் viralvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   குறும்பு செய்தல் (இ.வ.);; to do or attempt mischief.

     [விரல் + வை-,]

விரளம்

விரளம் viraḷam, பெ. (n.)

   1. செறிவின்மை; being wide apart.

     ‘மாலையில் மலர் விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது’.

   2. இடைவெளி (இலக்.அக.);; intervening space.

   3. கால நீட்டிப்பு (இலக்.அக.);; leisure.

   4. அருமை; rarity.

     ‘படித்தவர்கள் விரளமாயிருக்கிறார்கள்’.

விரளல்

விரளல் viraḷal, பெ. (n.)

   நெருக்கம் (நாமதீப. 777);; narrowness, closeness, closely personal.

விரளிமஞ்சள்

 விரளிமஞ்சள் viraḷimañjaḷ, பெ. (n.)

விரலிமஞ்சள் (இ.வ.); பார்க்க;see {}.

     [விரலி → விரளி + மஞ்சள்]

விரள்(ளு)-தல்

விரள்(ளு)-தல் viraḷḷudal,    2 செ.கு.வி. (v.i.)

   அச்சப்படுதல் (வின்.);; to be frightened, to be afraid of.

விரவலர்

விரவலர் viravalar, பெ. (n.)

விரவார் பார்க்க;see {}.

     “மெலியோர் வலிய விரவலரை யஞ்சார்” (நன்னெறி. 9);.

     [விரவு + அல் + அர்]

விரவல்

 விரவல் viraval, பெ. (n.)

   கலப்பு; mixing, mixture.

     [விரவு → விரவல்]

விரவார்

விரவார் viravār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “விரவாருணாணுப் படலஞ்சி” (நாலடி, 88);.

விரவி

 விரவி viravi, பெ. (n.)

   வெள்ளரி (சங்.அக.);; cucumber.

     [விரலி → விரவி]

விரவியல்

விரவியல் viraviyal, பெ. (n.)

   1. சங்கீரணம் என்னும் கலவையணி (வீரசோ. அலங். 34, உரை);;   2. வடவெழுத்து விரவிவரும் சொல்;     “இடையே வடவெழுத் தெய்தில் விரவியல்” (வீரசோ. அலங். 40);.

     [விரவு + இயல்]

விரவு

விரவு1 viravudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கலத்தல்; to mix, mingle, to join, unite.

     “விரவுமலர் வியன்கா” (நெடுநல். 27);.

   2. அடைதல்; to approach, draw near.

     “விரவினோர் தணக்க லாற்றா” (காஞ்சிப்பு. தக்கீ. 1);.

   3. ஒத்தல்; to be similar, akin.

     “மலைவிரவு நீண்மார்வின் மைந்தன்” (சீவக. 1885);.

   க., து. பெரசு;ம. விரகுக.

 விரவு2 viravudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பொருந்துதல் to be united, joined, to be mingled, mixed.

     “புலியரி விரவிய வரையினர்” (தேவா. 450, 1);.

   2. நட்புக் கொள்ளுதல்; to cultivate friendship, to keep company.

     “பணிவாரொடே விரவுமின்” (தேவா. 469, 5);.

   க., து. பெரசு;ம. விரகுக.

 விரவு3 viravu, பெ. (n.)

   கலப்பு; mixture.

 விரவு4 viravu, பெ. (n.)

விரகு 4 (வின்.); பார்க்க;see viragu.

விரவுத்திணை

விரவுத்திணை viravuttiṇai, பெ. (n.)

   உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வருஞ் சொல்லின் திணை (யாழ்.அக.);;     [விரவு2 + திணை]

விரவுநெல்

 விரவுநெல் viravunel, பெ. (n.)

   கலப்பு நெல்; mixed paddy.

     [விரவு + நெல்]

விரவுப்பெயர்

விரவுப்பெயர் viravuppeyar, பெ. (n.)

   இருதிணைக்கும் அல்லது அஃறிணை யிருபாற்கும் பொதுவாக வரும் பெயர் (நன்.281–282);;     “விரவுப் பெயரின் விரிந்து நின்றும்” (நன்.255);.

     [விரவு + பெயர்]

பெயர்களை உயர்திணைப் பெயர் என்றும் அஃறிணைப் பெயர் என்றும் தமிழிலக்கணங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கும். சில பெயர்கள் அஃறிணைக்கும் உயர்திணைக்கும் பொதுவாக இரண்டு திணையிலும் விரவி வரும். இப்படி இருதிணையிலும் விரவி வரும் பெயர்களை விரவுப் பெயர் என்பர்.

உயர்திணைக்கே உரிய பெயர் அஃறிணைப் பொருளையும் குறிக்கப் பயன்பட்டு இருதிணையிலும் விரவி வருமாயின் அதனை உயர்திணை விரவுப் பெயர் என்பர். அஃறிணைக்கே உரிய பெயர் உயர்திணைப் பொருளையும் குறிக்கப் பயன்பட்டு இரு திணையிலும் விரவி வருமாயின் அதனை அஃறிணை விரவுப் பெயர் என்பர்.

எ.டு.

சாத்தி வந்தாள்

சாத்தி வந்தது

கொற்றன் வந்தான்

கொற்றன் வந்தது

மணி வந்தான்

மணி வந்தது

கோதை வந்தாள்

கோதை வந்தது (இலக்.கலைக்.110);

விராகன்

விராகன் virākaṉ, பெ. (n.)

   1. வராகன் என்பதன் மறுவழக்கு; the derivative of {}.

   2. கடவுள்; one without passion the deity.

   3. அருகன் (சது.);; arha.

விராகம்

விராகம் virākam, பெ. (n.)

பற்றின்மை,

 in difference to worldly pleasures, absence of passion or attachment.

     “விராகத்தை சனி முயன்று” (ஞானவா. வீதக. 31);

விராகு

விராகு virāku, பெ. (n.)

விராகம் பார்க்க;see {}.

     “விராகெனும் வேலின் வீழ” (சீவக. 3080);.

விராசி

 விராசி virāci, பெ. (n.)

   சேவற் போரில், போர் நீண்டநேரம் நீடிக்கும்போது, அதனை முடிவுக்குக் கொண்டுவர கையாளும் சொல்; a word used to end the long hasting cockfight.

     [விறகு-விரவு-விராசி]

விராட் விகவப் பிரம்மன்

 விராட் விகவப் பிரம்மன் virāṭvigavappirammaṉ, பெ. (n.)

   தேவசிற்பியான விசுவ கர்மாவின் வேறு பெயர்; name of Visuvakarma considered as Celestial sculpter.

விராணி

 விராணி virāṇi, பெ. (n.)

யானை;(சங். அக.);

 elephant.

விராதனன்

விராதனன் virātaṉaṉ, பெ. (n.)

   கொலைஞன் (நிகண்டு. 196.);; murderer.

விராதன்

 விராதன் virātaṉ, பெ. (n.)

   இராமபிரானாற் கொல்லப்பட்ட ஒர் அரக்கன். (கம்பரா. விராத.);; a raksasa slain by {}.

விராதம்

விராதம் virātam, பெ. (n.)

   1. கைவேலை; manual labour.

   2. நாட்கூலி வேலை; day- labour.

விராதீனன்

விராதீனன் virātīṉaṉ, பெ. (n.)

   1. நாட்கூலிக்காரன்; day-labourer.

   2. வேலையில்லாதவன்; unemloyed person.

விராத்தக்காரன்

 விராத்தக்காரன் virāttakkāraṉ, பெ. (n.)

   வரி தாண்டுவோன்;

விராத்தம்

 விராத்தம் virāttam, பெ. (n.)

வரி வாங்குதல்;(வின்.);.

 collection of revenue.

     [U. {} → த. விராத்தம்]

விராத்தியன்

விராத்தியன் virāttiyaṉ, பெ. (n.)

   குல நெறியை விட்டதால் குலத்திற்குப் புறம்பானவன்;   2. வேளாப்பார்ப்பான் சாதிக் கலப்பு காரணமாக ஒதுதல் மறுக்கப்பட்ட பார்ப்பனப் பிரிவினன்; mixed caste Brahmins banned from reciting vedas.

விரானு

விரானு virāṉu, பெ. (n.)

   1. கொடிவகை; mussell-shell creeper.

   2. கொடிக் காக்கட்டான் (L.);; sky-blue bindweed.

மறுவ. காக்கட்டான்.

விராமம்

விராமம் virāmam, பெ. (n.)

   1. முடிவு;   2. ஒற்றெழுத்து (பிங்.);; consonant.

   3. இளைப்பாறுகை; rest.

விராயம்

 விராயம் virāyam, பெ. (n.)

   தளவாடம் (யாழ்.அக.);; materials, as for a piece of work.

 விராயம் virāyam, பெ. (n.)

தளவாடம்;(யாழ். அக.);

 materials, as for a piece of work.

விராய்

விராய் virāy, பெ. (n.)

   1. விறகு; fuel, firewood.

     “வல்லிராய் மாய வெரிதழல்” (நீதிநெறி. 64);.

   2. பூச்செடிவகை; a flowering plant.

     “விராய் மலர்க் கோதை” (பெருங். வத்தவ. 12, 38, அரும்.);.

   3. விராயம் (R.); பார்க்க;see {}.

 விராய் virāy, பெ. (n.)

   1. விறகு; fuel fire wood.

வல்லிராய் மாய வெரிதழல் (நீதிநெறி. 64.);

   2. பூச்செடிவகை; a flowering plant.

விராய்மலர்க்கோதை (பெருங். வத்தவ.12, 38, அரும்.);.

விராலம்

 விராலம் virālam, பெ. (n.)

பூனை;(சங். அக.);

 cat.

விராலி

விராலி virāli, பெ. (n.)

   செடிவகை (வின்.);; jamaica switch sorrel.

   தெ. பண்டவ செட்டு;ம. வாவலி.

இரட்டை விதையிலை நிலைத் திணைகளிலே பூந்திக்கொட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு மரம். இது குற்று மரமாகவும் சிறிய புதராகவும் வளர்வதுண்டு. இது கூட்டமாக உலர்ந்த இடங்களிலும் காடுகளிலும் இந்தியா நெடுகிலும் வளர்கின்றது. 8000 அடி உயரம் வரையில் இதைக் காணலாம். இதன் இலையின்மேல் நெய் பூசினது போல மெழுகுப் பொருள் உண்டு. இதன் இலைகள் ஆடுமாடு மேய்வதில்லை. மரம் கடினமானது. கடைசல் வேலைக்கும் , கைத்தடி, கருவிகளின் பிடி முதலியவை செய்யவும் உதவும். குச்சிகளை ஒடித்துக் கட்டித் துடைப்பம் போலப் பயன்படுத்துவர். இலையை எலும்பு முறிவு, அடி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவார்கள். இதன் கனி சிறகு போன்ற நீட்சி உள்ளது. அதனால், காற்றில் எளிதில் அடித்துக்கொண்டு போகப்படும். மண் கரைந்து போகாமலிருக்கவும், மணலைக் காற்று அடித்துக்கொண்டு போகாமலிருப்பதற்கும் இந்தச் செடியை நட்டுப் பயிர் செய்வார்கள். இது பெரும்பாலும் விறகாகப் பயன்படுகிறது. விராலி மலை என்பது இம் மரத்தால் பெற்ற பெயரே.

விராலிச்சம்பா

விராலிச்சம்பா virāliccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை (விவசா. 1);; a kind of {} paddy.

     [விராலி + சம்பா]

விராளி

 விராளி virāḷi, பெ. (n.)

   பிரிவு (வின்.);; separation.

விராளிமஞ்சள்

 விராளிமஞ்சள் virāḷimañjaḷ, பெ. (n.)

விரலிமஞ்சள் (இ.வ.); பார்க்க;see {}.

     [விராளி + மஞ்சள்]

விராவம்

 விராவம் virāvam, பெ. (n.)

   ஒலி (சங்.அக.);; sound.

விராவலங்காரம்

விராவலங்காரம் virāvalaṅgāram, பெ. (n.)

   கலவையணி (தண்டி. 87);; a composite figure of speech in which several figures of speech are blended.

     [விராவு + Skt. {} → த. அலங்காரம்]

விராவு

விராவு1 virāvudal,    5 செ.குன்றாவி. & செ.கு.வி.(v.t.)& (v.i)

விரவு-, பார்க்க;see viravu.

     “செம்பொன் விராவியும்” (கம்பரா. ஆற்றுப். 8);.

     [விரவு → விராவு-,]

 விராவு2 virāvu, பெ. (n.)

விராவலங்காரம் பார்க்க;see {}.

     “பல்லலங் காரஞ் சேர்த்துப் பயிலுவது….. விராவாம்” (வீரசோ. அலங். 34);.

     [விரவு → விராவு]

விரி

விரி1 viridal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பரத்தல்; to expand, to spread out.

     “விரிமுக விசும்பு” (சீவக. 329);.

   2. மலர்தல்; to open, unfold.

     “மணத்துடன் விரிந்த கைதை” (கல்லா. 2);.

   3. தொக்க வேற்றுமையுருபு முதலியன வெளிப்பட விரிதல்;   4. முற்றுதல்; to become developed.

   5. அவிழ்தல்; to be loosened.

     “விரிந்துவீழ் கூந்தல் பாரார்” (கம்பரா. உலாவியற். 4);.

   6. பிளவு கொள்ளுதல்; to split, crack, to burst asunder.

     ‘அந்தச் சுவர் விரிந்து போயிற்று’.

   தெ. விரியு;   க. பிரி;   ம. விரியுக; Kod. Biri;

 Tu. biriyuni;

 Pa. virng;

 Kui. Vringa;

 Kuwi. ringali;

 Kur. {};

 Te. ara-viri.

     [விள் → விரி → விரிவு, விரிதல்] (மு.தா. 100);

 விரி2 virittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விரியச் செய்தல்; to cause to expand, to open, unfold.

   2. விளக்கியுரைத்தல்; to expound, to explain, to elaborate, as in writing or in speaking.

     “நூல் விரித்துக் காட்டினும்” (நாலடி, 341);.

   3. பரப்புதல்; to extend, to spread.

     “பல்கதிர் விரித்தே” (புறநா. 8);.

     “விரித்த நாணல்” (கம்பரா. கங்கை. 50);.

   4. கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழ விடுதல்; to unite, loosen, as the tresses of a woman.

     “விரித்த கருங்குழலும்” (சிலப். 20, வெண்பா, 3);.

     [விரி → விரி-,]

 விரி3 viri, பெ. (n.)

   1. பரப்பு; expanse.

   2. விரிந்த அளவு; fullness.

     “சார்பெழுத்துறு விரி” (நன். 60);.

   3. விரித்தல் 2 பார்க்க;see viri-.

     “தொகைவகை விரியிற் றருகென” (நன். சிறப்புப். );.

   4. பொதிமாட்டின் மேலிடும் மெத்தைப் பை; pannier for pack-oxen, pack.saddle.

   5. விரிப்பு 2 (இ.வ.); பார்க்க;see virippu.

   6. திரை; curtain.

     “விரியை யவிழ்த்துவிர’.

   7. விரியன் 1 பார்க்க;see {}1, viper.

     “நாகம் விரிபெடை யோடாடி விட்டற்று” (நாலடி, 240);.

   8. காட்டுப் புன்னை (L.);; Malabar poon.

   9. விரியன் 2 (L.); பார்க்க;see {}.

 M. viri;

 Ko. viry.

விரி சிறைக்கை

 விரி சிறைக்கை virisiṟaikkai, பெ.(n.)

   பறவை தன் சிறகுகளை சமப்படுத்துவது போல் இரு கைகளையும் இருபுறத்தும் விரித்துக் காட்டும் நாட்டிய வகை(டோளக்கை); ; a pose which consists in extending the hands on both sides in imitation of a bird balancing itself on its wings.

     [வில்+சிறை+கை]

விரிகண்

விரிகண் virigaṇ, பெ. (n.)

   விழியை அகலச் செய்யும் கண்ணிமை நோய்வகை (வின்.);; a disease of the eye-lid that causes the eye to dilate.

     [விரி2-. + கண்]

விரிகண்மணி

 விரிகண்மணி virigaṇmaṇi, பெ. (n.)

   கருவிழியைப் பெருக்கச் செய்யும் மருந்து; drug that causes dilatation of the pupil of the eye.

     [விரி + கண்மணி]

விரிகாங்கூலம்

விரிகாங்கூலம் virikāṅālam, பெ. (n.)

   நளிநயக்கை வகை (சிலப். 3, 12, பக். 94, உரை);; a hand-pose.

     [விரி + காங்கூலம் = ஆட்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல் ஆகியவை ஒட்டிநிற்க மோதிரவிரல் முடங்கிச் சுண்டுவிரல் நிமிர்ந்து நிற்கும் நாட்டிய நளிநயக்கை]

விரிகாசம்

 விரிகாசம் virikācam, பெ. (n.)

   வெங்காரம் (சங்.அக.);; borax.

விரிகி

 விரிகி virigi, பெ. (n.)

விரீகி (தைலவ.); பார்க்க;see {}.

விரிகுடா

 விரிகுடா viriguṭā, பெ. (n.)

   நிலப்பரப்புக்குள் உள் வாங்கியிருக்கும் கடற்பகுதி; bay.

கடல் அல்லது பெரிய ஏரியின் நீர், நிலப் பகுதியினுள் குடைந்து அல்லது உள்வாங்கி இருக்கும். இது குறுகலாயிருப்பின் கழி என்றும், பெரிதாயிருப்பின் குடா என்றும் பெயர் பெறும். இது பொதுவாக, நிலப்பகுதியின் தொடக்கத்தில் குறுகியும், கடல் நோக்கிச் செல்லச்செல்ல விரிந்தும் இருப்பின் விரிகுடா எனப்படும் (உ.ம்.); வங்காள விரிகுடா, பிஸ்க்கே விரிகுடா.

குடாவின் அகலம் ஏறக்குறைய சீராகவோ அல்லது கடலுடன் கலக்குமிடம் குறுகியோ இருப்பின் வளைகுடா எனப்படும் (உ.ம்.); மன்னார் வளைகுடா, மெக்சிக்கோ வளைகுடா.

விரிகுளம்பு

விரிகுளம்பு viriguḷambu, பெ. (n.)

   பிளவுபட்ட காற்குளம்பு (வின்.);; cloven hoof.

     [விரி 1 + குளம்பு]

விரிகொம்பன்

 விரிகொம்பன் virigombaṉ, பெ. (n.)

   பரந்த கொம்புள்ள மாடு (வின்.);; ox with outspread horns.

     [விரிகொம்பு → விரிகொம்பன்]

விரிகொம்பு

 விரிகொம்பு virigombu, பெ. (n.)

   விலங்கின் பரந்த கொம்பு (வின்.);; outspread horns.

     [விரி + கொம்பு]

 விரிகொம்பு virigombu, பெ. (n.)

   மாட்டுக் கொம்பு வகை; a kind of horn.

விரிகோணம்

விரிகோணம் viriāṇam, பெ. (n.)

   நேர் கோணத்தைவிட அகன்ற கோணம் (இக்.வ.);;     [விரி1 + கோணம்2]

விரிக்கட்டு

விரிக்கட்டு virikkaṭṭu, பெ. (n.)

   1. விரி 4 (வின்.); பார்க்க;see viri-, 4,

   2. சேணம் (யாழ்.அக.);; saddle.

 M. viri;

 Ko. viry.

     [விரி + கட்டு]

விரிசற்குளம்பு

 விரிசற்குளம்பு virisaṟkuḷambu, பெ. (n.)

விரிகுளம்பு (வின்.); பார்க்க;see {}.

     [விரிசல் + குளம்பு]

விரிசல்

விரிசல் virisal, பெ. (n.)

   1. பிளவு; split, crack, rent.

   2. அலை; wave.

     “சலங்கு விரிசலில் அகப்பட்டது” (வின்.);.

   3. விரியல் 5 (தஞ்சை); பார்க்க;see viriyal.

     [விரி → விரிசல்]

விரிசா

 விரிசா viricā, பெ. (n.)

   கையாந்தகரை (சங்.அக.); பார்க்க;see {}; a plant growing in wet places.

விரிசிகை

விரிசிகை1 virisigai, பெ. (n.)

விரிசா (மலை.); பார்க்க;see {}.

 விரிசிகை2 virisigai, பெ. (n.)

   36 கோவையுள்ள மாத ரிடையணி (திருமுரு. 16, உரை);; an ornamental waist-band of 36 strings, worn by women.

விரிசு

விரிசு1 virisu, பெ. (n.)

   பெரியநறுவிலி (L.);; large sebesten.

ம. விரிசு.

 விரிசு2 virisu, பெ. (n.)

   புருசு (இ.வ.);; a kind of rocket.

 விரிசு3 virisu, பெ. (n.)

   அயோத்தி (நாமதீப. 506);;{}.

விரிசுழி

விரிசுழி virisuḻi, பெ. (n.)

   முதுகின் இடப்புறமுள்ள மாட்டுச் சுழிவகை; a curl on the top left side of cattle.

     [விரி1 – + சுழி]

விரிச்சி

விரிச்சி viricci, பெ. (n.)

   1. தெய்வக்குறி; oracle.

     “படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி” (தொல். புறத். 3);.

   2. தன் னேர்ச்சியான நற்சொல்; utterance of an invisible speaker.

     [விள் → விடு → விடுச்சி → விடிச்சி → விரிச்சி]

போருக்குச் செல்லுமுன் தெய்வக்குறி கேட்பது பண்டைப் படைமறவர் வழக்கம். விரிச்சி என்னும் தென் சொல்லிற்கும் வினாவைக் குறிக்கும். ‘பிரச்’ என்னும் வடசொல்லிற்கும், யாதொரு தொடர்புமில்லை. தெய்வக்குறி அல்லது வாய்ப்புள், மறை வெளிப்பாடாதலால் விரிச்சியெனப்பட்டது – பாவாணர் (மு.தா.56);.

விரிச்சிகன்

விரிச்சிகன் viriccigaṉ, பெ. (n.)

   குறி கூறுவோன்; one who tell fortune.

     “விசும்பிவர் கடவுளொப்பான் விரிச்சிக னறிந்து கூறு”(சீவக. 621);

     [விரிச்சி → விரிச்சிகன் (வே.க.150);]

விரிச்சிகம்

விரிச்சிகம் viriccigam, பெ. (n.)

விருச்சிகம்1 (யாழ்.அக.); பார்க்க;see viruccigam.

விரிச்சிகை

விரிச்சிகை viriccigai, பெ. (n.)

விரிசிகை2 (அக.நி.); பார்க்க;see {}.

விரிச்சிநில்-தல்

விரிச்சிநில்-தல் viricciniltal,    14 செ.கு.வி. (v.i.)

விரிச்சியோர்-, பார்க்க;see {}.

     “பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப். 11);.

     [விரிச்சி + நில்-,]

விரிச்சியூரார்

 விரிச்சியூரார் viricciyūrār, பெ. (n.)

   கடைக்கழகக் காலப் புலவர்; a sangam poet.

விரிச்சியோர்-த்தல்

விரிச்சியோர்-த்தல் viricciyōrttal,    4 செ.கு.வி. (v.i.)

   நற்சொற் கேட்க விரும்பி நிற்றல்; to wait for the utterance of an invisible speaker.

     “நென்னீரெறிந்து விரிச்சியோர்க்கும்” (புறநா. 280);.

     [விரிச்சி + ஒர்-,]

விரிஞ்சனன்

விரிஞ்சனன் viriñjaṉaṉ, பெ. (n.)

விரிஞ்சி1 (வின்.); பார்க்க;see {}.

விரிஞ்சன்

விரிஞ்சன் viriñjaṉ, பெ. (n.)

விரிஞ்சி1 (பிங்.); பார்க்க;see {}.

     “வேதங்கண்ணிய பொருளெல்லாம் விரிஞ்சனே யீந்தான்” (கம்பரா. இரணிய. 1);.

விரிஞ்சி

விரிஞ்சி1 viriñji, பெ. (n.)

   நான்முகன்;{}.

     “விபுதாதியர் விரிஞ்சி….. சூழ்தா” (பாரத. அருச்சுனன்றவ. 113);.

 விரிஞ்சி2 viriñji, பெ. (n.)

   சித்திரான்னவகை (வின்.);; a special preparation of rice.

உ. பிரிஞ்.

விரிதூறு

விரிதூறு viritūṟu, பெ. (n.)

   புதர் (திவா.);; thicket.

     [விரி1 + தூறு2]

விரித்தல்

விரித்தல் virittal, பெ. (n.)

   1. செய்யுள் விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது (நன். 155);; a poetic licence which consists in the augmentation of letter in the middle of a word, one of nine {} q.v.

   2. நூல் யாப்பு நான்கனுள் முன்னூலிற் தொகுத்துக் கூறப் பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது (தொல்.பொ.652);; elaborate treatment of topics briefly summarised in a former treatise, one of four {}, q.v.

     [விரி → விரித்தல்]

விரித்துரை

விரித்துரை viritturai, பெ. (n.)

   அகலவுரை (பிங்.);; elaborate commentary.

     [விரி + உரை6]

விரிநிலைத்தொடர்

 விரிநிலைத்தொடர் virinilaittoḍar, பெ. (n.)

   தொகைச்சொல் முதலியவற்றை முழுநிலையில் காட்டுதல்; expand, a compound of words, etc.

     ‘சாரைப்பாம்பு’ என்பதைச் ‘சாரையாகிய பாம்பு’ என்று விரித்துச் சொல்லுதல்.

விரிநூல்

விரிநூல் virinūl, பெ. (n.)

   1. தொகுத்துக் கூறாது விரித்துக் கூறும் நூல்; elaborate treatise.

   2. மறை நூல்கள் (ஆகமங்கள்);; the agamas.

     “விரிநூ லந்தணர் விழவு தொடங்க” (பரிபா. 11, 78);.

     [விரி2 + நூல்]

விரிந்த

விரிந்த virinda, பெ. (n.)

   பரப்பு மிகுதியான; abundant surface.

     ‘விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்’ (பழ.);.

     [விரி1 + தூறு2]

விரிபம்

 விரிபம் viribam, பெ. (n.)

   சிறு துகில் (பிங்.);; small piece of cloth.

விரிபுலப்பொருட்டற்குறிப்பணி

விரிபுலப்பொருட்டற்குறிப்பணி viribulabboruṭṭaṟkuṟibbaṇi, பெ. (n.)

   ஒருவகைச் சொல்லணி; one of the thirty five rhetorical figures, a fanciful kind of metaphor.

     [விரி1 + பூ3]

     “காமத்தீயின் புகைபோன்றிருக்கின்றது இருள்” இத் தொடரில் இருளாகிய செய்தி விரிந்து நின்றது. புகைக்கூட்டம் (செய்தி);.

விரிபூ

விரிபூ viripū, பெ. (n.)

   மலர்ந்த பூ; full-blown flower.

     [விரி1 + பூ3]

விரிபூடு

 விரிபூடு viripūṭu, பெ. (n.)

பற்படகம் (மலை.); பார்க்க;see {},

 fever plant.

     [விரி + பூடு]

விரிப்பு

விரிப்பு virippu, பெ. (n.)

   1. விரிக்கை (வின்.);; spreading.

   2. விரிக்குங் கம்பள முதலியன; anything spread, as cloth, carpet, table- cloth, mat.

   3. மலர்த்துகை; opening out.

   4. பிளப்பு (வின்.);; opening, parting.

   5. மாட்டுக் காய்ச்சல் வகை (cm.m.248);; a fever of cattle.

     [விரி → விரிப்பு]

 விரிப்பு virippu, பெ. (n.)

   ஆலாபணம் என்பதற்கு இணையான வேறு பெயர்; a word used instead of “a-lapana” which means improvising a introduction to a melody which helps the singer himself to get into its swing.

மறுவ, ஆளத்தி

     [விரி-விரிப்பு]

விரிமலர்

 விரிமலர் virimalar, பெ. (n.)

விரிபூ (வின்.); பார்க்க;see {}.

     [விரி + மலர்]

விரிமுட்டு

விரிமுட்டு virimuṭṭu, பெ. (n.)

   பழைய சிற்றூர் வரி வகை (I.M.P.TP.234);; an ancient village cess.

     [விரி + முட்டு]

விரிமுரண்

விரிமுரண் virimuraṇ, பெ. (n.)

   ஒருவகை இசைப்பா (சிலப். 6,35, உரை);; a kind of song.

     [விரி1 + முரண்]

விரியன்

விரியன் viriyaṉ, பெ. (n.)

   1. ஒருவகைப் பாம்பு; viper, Daboia elegans.

   2. நறுவல்லி, 1 (L.); பார்க்க;see {},

 common sebesten.

ம. விரியந்.

     [விரி → விரியன்]

     [p]

விரியறுகு

 விரியறுகு viriyaṟugu, பெ. (n.)

   அறுகம்புல்வகை (மலை.);; a kind of harialli grass.

     [விரி + அறுகு]

     [p]

விரியலை

விரியலை viriyalai, பெ. (n.)

விரியல், 5 (தஞ்சை); பார்க்க;see viriyal.

     [விரி + அலை]

விரியல்

விரியல் viriyal, பெ. (n.)

   1. பரப்பு (பிங்.);; spread, expanse.

   2. ஒளி (சூடா.);; light.

   3. மலர்ச்சி; blossoming.

     “தாழை விரியல் வெண்டோட்டுக் கோதை மாதவி” (சிலப். 2, 17);.

   4. பூமாலை; wreath of flowers.

     “விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி” (சிலப். 10, 133);.

   5. தென்னோலையால்

   முடைந்த தட்டிவகை (தஞ்சை.);; screen, plaited of coconut-leaves.

     [விரி → விரியல்]

விரியாப்பு

 விரியாப்பு viriyāppu, பெ. (n.)

   களைப்பால் வரும் மயக்கம் (நெல்லை);; fainting due to exhaustion.

     [விரி + ஆப்பு]

விரியுருவகம்

விரியுருவகம் viriyuruvagam, பெ. (n.)

முற்றுருவகம் (தண்டி. 35); பார்க்க;see {},

 complete metaphor.

     [விரி1 + உருவகம்]

இது ஆகிய முதலிய சொற்கள் வெளிப்பட்டு நிற்றலையுடையது.

விரியுரை

விரியுரை viriyurai, பெ. (n.)

விரித்துரை (வின்.); பார்க்க;see viritturai.

     [விரி6 + உரை6 ]

விரியுவமம்

விரியுவமம் viriyuvamam, பெ. (n.)

   பொதுத்தன்மை விரிந்து நிற்றலுடைய உவமை (தண்டி-30);; a kind of simile where the common qualities of the things compared are clearly and fully expressed, dist fr. togai-y-uvamam.

     [விரி + உவமம்]

இது உவமானமும் உவமையுருபும் பொதுத் தன்மையும் உவமேயமும் வெளிப்படையாய் விரிந்து நிற்க வருவது. (எ-டு);

     “பால்போலும் இன்சொல்”.

விரியூர்நக்கனார்

விரியூர்நக்கனார் viriyūrnakkaṉār, பெ. (n.)

   கடைக் கழகக் காலப் புலவருள் ஒருவர்; a sangam poet.

இவர் பெயர் பலவாறு படிகளிற் சிதைந்து காணப் பெறுகிறது. நக்கனாரென்பது சிவபிரான் திருப்பெயர்களுள் ஒன்று. அதனை இவருக்கிட்டனர் போலும் (புறம். 332);.

விரியோலை

விரியோலை1 viriyōlai, பெ. (n.)

   1. குருத்து விரிந்து முதிரும் பனையோலை; fully developed leaf of the palmyra tree.

   2. விரியல் 5 (வின்.); பார்க்க;see viri-yal.

   3. ஓலைப்பாய் (நாஞ்.);; palm-leaf mat.

     [விரி + ஒலை]

     [p]

 விரியோலை2 viriyōlai, பெ. (n.)

   தாழங்குடை;{} umbrella.

     “வர்ஷாதப பரிஹாரமான விரியோலையும்” (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 569);.

     [விரி + ஒலை]

     [p]

விரிவாக

 விரிவாக virivāka, வி.எ.(adv.)

   இந்தச் செய்தி அந்த நூலில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது; in detail, elaborately.

     [விரிவு + ஆ-,]

விரிவுநிகண்டு

விரிவுநிகண்டு virivunigaṇṭu, பெ. (n.)

   நிகண்டு வகைநூல்; a kind of {}.

   சூடாமணி நிகண்டை அடிப்படையாகக் கொண்டு அதன்படியே எதுகை முறையில் ஆசிரியமண்டிலப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. சூடாமணி நிகண்டிலுள்ள பதினோரந் தொகுதியிற் கண்ட சொற்களுடன் பல உலகவழக்குச் சொற்களையும் சேர்த்துக்கூட்டி மிக விரிவாக அமைத்துள்ளார் இந்நூலாசிரியர். இந்நூலின் இறுதிப் பகுதி பலவாறு சிதைந்துள்ளது. பல செய்யுள்கள் எண்ணிடப்படாமல் உள்ளன. 1100 செய்யுட்களுக்கு மேல் இருக்கலாம்;தெளிவாகத் தெரிவன 1036 செய்யுள்கள்.

இந்நூலாசிரியர் திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள வீரவநல்லூரார், நா. அருணாசல நாவலர் என்னும் பெயரினர். நூலாசிரியரே நூலுக்கு உரையும் இயற்றியுள்ளார். இவர் சைவர். இந்நூலின் காப்புச் செய்யுளில் இந்நூலைப் பற்றி,

     “பொன் பொலி வீரை வேணிப் பூமிநாதன் தன் தாசன் – முன்புறுநிகண்டோடு ஏனை முதுமொழிப் பொருளனேகம் – இன்புறும் எதுகையாக இயற்றுமிந் நிகண்டை” என்னுங் குறிப்புள்ளது. திருநெல்வேலிப் பக்க வழக்குச் சொற்கள் இதன்கண் மிகுதியாக உள்ளன.

     [விரிவு + ஆ-,]

விரிவுரை

விரிவுரை virivurai, பெ. (n.)

   1. நூலின் விரிவான உரை (நன். மயிலை. அரும்.);; elaborate commentary.

   2. சொற்பொழிவு (இக்.வ.);; lecture.

     [விரிவு + உரை5]

விரீஇ

விரீஇ virīi, பெ. (n.)

விரீகி, 1 பார்க்க;see {}.

     “நங்கைமார் வீரிஇ யற்றவர்” (சீவக. 89);.

விரீகி

விரீகி virīki, பெ. (n.)

   1. நெல் (திவா.); (சீவக. 89, உரை);; paddy.

   2. அரிசி (சங்.அக.);; rice.

   3. காரேலம் (யாழ். அக.);; a kind of cardamom.

 விரீகி virīki, பெ. (n.)

   1. நெல்; Paddy.

   2. அரிசி;(சங். அக.);.

 rice.

   3. காரேலம்;(யாழ்.அக.);.

 a kind of cardamom.

விரீடம்

 விரீடம் virīṭam, பெ. (n.)

வெட்கம்;(இலக். அக.);.

 shame.

     [Skt. {} → த. விரீடம்]

விருகதூமம்

 விருகதூமம் virugatūmam, பெ. (n.)

நீர்மேற்படக் கொடி வகை;(மூ.அ.);.

 a water- plant.

     [Skt. {} → த. விருகதூமம்]

விருகம்

விருகம் virugam, பெ. (n.)

   செந்நாய்; a kind of wild dog.

     “மையார் விருகந் துருவி மறைந்தே” (கம்பரா. நகர்நீங்கு. 83); (பிங்.);.

 விருகம் virugam, பெ. (n.)

   விலங்கு; animal beast.

     “பல்விருக மாகி” (திருவாச.1,27);;

     [Skt. mruha → த. மிருகம் – விருகம்]

விருகற்பதி

 விருகற்பதி virugaṟpadi, பெ. (n.)

வியாழன்;(யாழ்.அக.);

 jupiter.

     [Skt. brhaspati → த. விருகற்பதி]

விருகு

 விருகு virugu, பெ. (n.)

வெருகு;(மலை.);

 long-rooted arum.

விருகோதரன்

 விருகோதரன் viruātaraṉ, பெ. (n.)

   பீமன்; the second son of {}, as having a belly like that of a wild dog.

     [Skt. {} → த. விருகோதரன்]

விருக்கத்திரணம்

 விருக்கத்திரணம் virukkattiraṇam, பெ. (n.)

   மூங்கில் (மலை);; bamboo.

விருக்கம்

 விருக்கம் virukkam, பெ. (n.)

மரம்;(சூடா.);.

 tree.

விருக்கவீடு

 விருக்கவீடு virukkavīṭu, பெ. (n.)

மரப்பொந்து;(சங்.அக.);. h

 ollow in a tree.

விருக்கு

 விருக்கு virukku, பெ. (n.)

   சாதிலிங்கம் (சங்.அக.);; vermilion.

விருச்சிகம்

விருச்சிகம்1 viruccigam, பெ. (n.)

   1. தேள் (திவா.);; scopion.

   2. ஒரை (ராசி); மண்டலத்தின் எட்டாம் பகுதி (திவா.);; scorpio of the zodiac.

   3. நளி (கார்த்திகை);த் திங்கள்; the eighth solar month.

     “விருச்சிகத்துறு மாறனாள்” (தணிகைப்பு. இந்திர.18);

   4. நண்டு (இலக். அக.);; crab.

த.வ. நளி

     [Skt. {} → த. விருச்சிகம்]

விருடகம்

விருடகம்1 viruḍagam, பெ. (n.)

   எலி (அரு.நி.);; rat.

 விருடகம்2 viruḍagam, பெ. (n.)

   பூனை (அரு.நி.);; cat.

விருடபம்

 விருடபம் viruḍabam, பெ. (n.)

   எருது (யாழ். அக.);; bull.

விருடம்

விருடம் viruḍam, பெ. (n.)

   1. விருடபம் பார்க்க;see virudapam

   2. எலி; rat.

   3. தருமம்; virtue, justice.

   4. மேன்மை; excellence.

விருடலம்

விருடலம் viruḍalam, பெ. (n.)

   1. குதிரை (யாழ். அக.);; horse.

   2. உள்ளி; garlic.

விருடலோசனன்

 விருடலோசனன் viruḍalōcaṉaṉ, பெ. (n.)

   எலி (யாழ். அக.);; rat.

விருடாங்கம்

விருடாங்கம் viruṭāṅgam, பெ. (n.)

   தாமிரபரணிப் பகுதி (பிரதேசம்); (நாமதீப. 503.);; the region of the river {}.

விருடியம்

 விருடியம் viruḍiyam, பெ. (n.)

   பருத்திருக்கை;     [Skt. {} → த. விருடியம்]

விருட்சம்

விருட்சம் viruṭcam, பெ. (n.)

   மரம்; tree.

     “விருட்சத்துக்கும் வல்லிசாதி சசிபங்களுக்கும் பிராணனு முள” (தக்கயாகப் 38,உரை.);

     [Skt. {} → த. விருட்சம்].

விருட்சராசன்

 விருட்சராசன் viruṭcarācaṉ, பெ. (n.)

   அரசமரம் (மூ.அ.);; papal.

     [Skt. {} → த. விருட்சராசன்].

விருட்டி

விருட்டி viruṭṭi, பெ. (n.)

   மழை; rain.

அதிவிருட்டி (குற்றா. தல. சிவபூசை.46.);.

     [Skt. {} → த. விருட்டி].

விருட்டிணி

 விருட்டிணி viruṭṭiṇi, பெ. (n.)

   கண்ணபிரான் (இலக். அக.);; Lord Krishnan.

விருதம்

 விருதம் virudam, பெ. (n.)

   வெள்ளெருக்கு (சங்.அக.);; white madar.

     [விருத்தம் → விருதம்]

 விருதம் virudam, பெ. (n.)

   வெள்ளெருக்கு (சங்.அக.);; white madar.

விருதர்

விருதர் virudar, பெ. (n.)

   வீரர்; warriors.

     “வாளி கொண்ட விருதர்” (பாரத. வாரணா. 76);.

 விருதர் virudar, பெ. (n.)

   வீரர்; warriors.

     “வாளிகொண்ட விருதர்” (பாரத. வாரணா. 76.);.

விருதா

விருதா1 virutā, பெ. (n.)

   வீண்; useless- ness, fruitlessness, that which is vain or profitless.

 விருதா2 virutā, பெ. (n.)

   வீணாய்; uselessly.

     “விருதாவலைந் துழலு மடியேன்” (திருப்பு. 102);.

 விருதா virutā, பெ. (n.)

   வீண், வீணாய்; uselessness, fruitlessness; that which is vain or profitless; uselessly.

     “விருதாவலைந் துழலு மடியேன்” (திருப்பு. 102.);.

விருதாவன்

விருதாவன் virutāvaṉ, பெ. (n.)

   மக்கட்பதடி; good for – nothing fellow, useless fellow, lazy person.

     “போக்கிடமற்ற விருதாவனை ஞானிகள் போற்றுத லற்றது” (திருப்பு. 266);.

     [விருதா → விருதாவன்]

 விருதாவன் virutāvaṉ, பெ. (n.)

   பயனற்றவன்; good for-nothing fellow.

     “போக்கிடமற்ற விருதாவனை ஞானிகள் போற்றுத லற்றது” (திருப்பு. 266);

விருதாவளி

 விருதாவளி virutāvaḷi, பெ. (n.)

   அரசர் முதலியோர் பெறும் பட்டவரிசை; detailed statement of titles, as for kings ehe.

     [விருது + ஆவளி]

 விருதாவளி virutāvaḷi, பெ. (n.)

   அரசர் முதலியோர் பெறும் பட்ட வரிசை; detailed statement of titles.

விருது

விருது1 virudu, பெ. (n.)

   1. பட்டம்; title.

     “தலம்புகழ் விருது” (திருவாலவா. 46, 9);.

   2. கொடி; banner.

     “கயல் விருதனங்கன்” (தனிப்பா. i, 384, 33);.

   3. வெற்றிச் சின்னம்; trophy, badge of victory.

     “பருதி… விருது மேற்கொண்டுலாம் வேனில்” (கம்பரா. தாடகை. 5);.

   4. குலவழி (வின்.);; pedigree, genealogy.

     ‘விருதுக்கோ வேட்டை யாடுவது?’ (பழ.);.

     ‘விருது கூறிவந்து செடியில் நுழையலாமா?’ (பழ.);.

விருது

வெல் – (வில்); – (விர்); – (வீறு); = வெற்றி

     “வீறு பெற வோச்சி” (மதுரைக். 54);

விர் → விருது.

   1. வெற்றிப்பட்டம்.

     “தலம் புகழ் விருது” (திருவாலவா. 49, 9);.

   2. வெற்றிக் கொடி.

     “கயல்விரு தனங்கன்” (தனிப்பாடல்);

   3. வெற்றிச் சின்னம்.

     “பருதி விருதுமேற் கொண்டுலாம் வேனில்” (கம்பரா. தாடகை. 5);

வடவர் காட்டும் மூலம்:

வி-ருத் (d); = அழு, கரை, ஏங்கு, புலம்பு, துயர் கொண்டாடு. விருத = புகழ்ச்சிச் செய்யுள், பாடாண் பாட்டு, ஏத்துரை.

இரங்கற் செய்யுளாகிய கையறு நிலையில் ஒரு தலைவனை அல்லது வள்ளலைப் புகழ்ந்து பாடுவது வழக்கமேனும் அழுகைக் கருத்தில் வெற்றிக் கருத்துத் தோன்றுமா? என்பதை அறிஞர் ஆய்ந்து காண்க எனப் பாவாணர் (வ.மொ.வ.92); கூறுகிறார்.

   தெ., க. பிருது; Ma. virutu;

 Tu. birdu;

 Te. birudamu.

 விருது2 virudu, பெ. (n.)

   நோன்பு (வின்.);; religious vow.

விருதுகட்டு-தல்

விருதுகட்டு-தல் virudugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நினைப்பளவுக் கொள்ளுதல்; to determine, resolve firmly, as on a course of action.

     “அட்டசித்தியு நலன்பருக்கருள விருதுகட்டியபொ னன்னமே” (தாயு. அகிலா. 1);.

     [விருது + கட்டு-,]

விருதுகாளம்

 விருதுகாளம் virudukāḷam, பெ. (n.)

   வெற்றிக் குறியாகிய காளம் (வின்.);; trumpet of victory.

     [விருது + காளம்]

விருதுக்கொடி

 விருதுக்கொடி virudukkoḍi, பெ. (n.)

   பிறர்க்கில்லாச் சிறப்பை அறிவித்தற்குரிய கொடி; distinguishing ensign or banner.

     [விருது + கொடி]

விருதெழுத்து

 விருதெழுத்து virudeḻuddu, பெ. (n.)

   விருதாகக் கொள்ளும் மொழி (பாண்டிச்.);; motto.

மறுவ. காரணமொழி.

     [விருது + எழுத்து]

விருத்தகங்கை

 விருத்தகங்கை viruttagaṅgai, பெ. (n.)

   கோதாவரி (சூடா.);; the river {}.

     [Skt. {} → த. விருத்தகங்கை]

விருத்தகந்தி

 விருத்தகந்தி viruttagandi, பெ. (n.)

   செய்யுட்கதியிற் பெரும்பாலும் பயின்று வரும் சொல் (வசனம்); (இலக். அக.);; prose with rhymes and rhythms peculiarly appropriate to verse, poetic prose.

விருத்தகிரி

 விருத்தகிரி viruttagiri, பெ. (n.)

விருத்தாசலம் பார்க்க;see

விருத்தக்கலித்துறை

 விருத்தக்கலித்துறை viruttakkalittuṟai, பெ. (n.)

   கலித்துறைப்பா வகை;

விருத்தசங்கம்

 விருத்தசங்கம் viruttasaṅgam, பெ. (n.)

   கிளிஞ்சல் (சங்.அக.);; mussel shell.

விருத்தசம்பந்தம்

 விருத்தசம்பந்தம் viruttasambandam, பெ. (n.)

   தகாததென்று விலக்கப்பட்ட முறை யினரை மணம்புரிகை; marriage with in the prohibited degrees of consanguinity, as invalid and condemned by law (R.F.);.

விருத்தசேதனம்

 விருத்தசேதனம் viruttacētaṉam, பெ. (n.)

   ஆண்குறியின் முன்தோலை எடுத்துவிடுஞ் சடங்கு; circumcision.

விருத்தன்

விருத்தன் viruttaṉ, பெ. (n.)

   1. முதுமையோன்; aged person.

   2. மேலோன்; great man.

     “வானவிருத்தனே போற்றி” (திருவாச. 5, 61);.

விருத்தபோசனம்

 விருத்தபோசனம் viruttapōcaṉam, பெ. (n.)

   பழைய சோறு (யாழ். அக.);; cooked rice preserved in cold water.

விருத்தமல்லிகை

 விருத்தமல்லிகை viruttamalligai, பெ. (n.)

குட மல்லிகை;(மூ.அ.);

 Arabian jasmine.

விருத்தம்

விருத்தம்1 viruttam, பெ. (n.)

   வட்டம் (சூடா.);; circle, anything circular.

   கருவிருத்தக் குழி நீத்த பின் (திவ். இயற். திருவிருத். தனியன்);;   2. சொக்கட்டானாட்டத்தில் விழும் தாயவகை; a fall of dice which entitles the player to another throw.

   3. பாவினம் மூன்றனுள் ஒன்று (யாப்.வி.56.);; a kind of verse, one of three {] q. v.

   4. ஒழுக்கம்; conduct

     “விருத்தமாதவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்” (கம்பரா. கங்கை.41);;

   5. செய்தி (யாழ். அக.);; news.

   6. தொழில்;     (யாழ். அக.);;

 work employment.

   7. ஒரு சிற்பநூல் (பொ.நி.);; a treatise on architecture.

   8. ஆமை (யாழ். அக.);; tortoise.

   9. வெள்ளெருக்கு (மலை.);; white madar.

 விருத்தம்2 viruttam, பெ. (n.)

   1. மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றான மூப்பு. (சூடா.);

 old age, one of the six {}-paruvam.

   ஒரு விருத்தம்புக் குழலுறவீர் (திவ். இயற். திருவிருத். தனியன்);; q.v.

   2. பழமை;   3. அறிவு (யாழ்.அக.);; knowledge, wisdom.

     [Skt. {} → த. விருத்தம்]

 விருத்தம்3 viruttam, பெ. (n.)

   1. முரண்; contrariety, opposition.

     “விருத்தம தணையும்” (ஞான. 63,7);;

   2. முன்பகை (விரோதம்);; hostility, enmity, hatred.

   3. குற்றம்; fault.

   பேரறிவினார்கண்ணும்பட்ட விருத்தம் பலவானால் (பழமொ. 228);;   4. பொல்லா வொழுக்கம் (திவ். இயற். திருவிருத். தனி. வியா.);; wicked conduct.

   5. இடையூறு; obstacle, hindrance.

     “அந்தக் காரியத்துக்கு விருத்தம் பண்ணுகிறான்”

   6. ஏதுப் போலிகளு ளொன்று (மணிமே. 29, 192.);;
 விருத்தம்4 viruttam, பெ. (n.)

   கூட்டம்; multitude, host.

     “விருத்தம் பெரிதாய் வருவானை” (திவ். நாய்ச். 14,7);;

விருத்தவிலக்கணம்

விருத்தவிலக்கணம் viruttavilakkaṇam, பெ. (n.)

   பனுவல் (பிரபந்தம்); தொண்ணுற்றாறனுள் அரசனது வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர்,கொடை இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் புகழ்ந்து பாடும் பனுவல் (பிரபந்தம்); (சது.);; a poem dealing with the bow, sword, spear, sceptre, elephant, horse, country, capital city and liberality of a king, each being praised in a decade of stanzas of a particular rhythm, one of 96 pirapantam.q.v.

விருத்தாசலம்

 விருத்தாசலம் viruttācalam, பெ. (n.)

   கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவதலம்; a {} shrine in the Cuddalore District.

த.வ. முதுகுன்றம், பழமலை

விருத்தாசாரம்

 விருத்தாசாரம் viruttācāram, பெ. (n.)

   பழந்தொடர்பு (பூர்வாசாரம்);;

விருத்தாந்தம்

விருத்தாந்தம் viruttāndam, பெ. (n.)

   1. நிகழ்ச்சி (சம்பவம்);; occurrence, incident, event.

   2. வரலாறு; account, history.

   3. செய்தி; tidings, news, rumour, report.

   4. பொருள்; subject, topic.

   5. கதை;   6. இயல்பு (சுபாவம்);;   7. வகை; kind, sort.

   8. விதம் (யாழ். அக.);; manner.

   9. முழுமை;   10. இளைப்பாறுகை;

விருத்தான்னம்

 விருத்தான்னம் viruttāṉṉam, பெ. (n.)

   விருத்தபோசனம் பார்க்க;

விருத்தாப்பியம்

 விருத்தாப்பியம் viruttāppiyam, பெ. (n.)

   முதுமை;

விருத்தி

விருத்தி1 virutti, பெ. (n.)

   1. ஒழுக்கம்; conduct, behaviour.

     “விருத்தி, வேதியரோ, டெதிர்மேயினான்” (கம்பரா. குகப். 73);.

   2. இயல்பு (சுபாவம்); (யாழ். அக.);; nature.

   3. தொழில்; emloyment, business.

   விருத்தி மாதர் விலக்க (சீவக. 1374.);;   4. தொண்டு; devoted service.

     “கடிமலர்வாளெடுத்தோச்சி….. ருத்திகுழக்க வல்லோர்கட்கு” (தேவா. 292, 8);;

 devoted service.

   5. வாழ்வு வழி (சீவனம்); means of livelihood.

   என் விருத்தி உஞ்சவிருத்தி;   6. வாழ்நிலைக்காக (சீவிதமாக); விடப்பட்ட நிலம்; grand of land for one’s livelihood or maintenance, inam land.

     “சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும்” (பெரியபு. திருநாவுக். 82.);;

   7. அடிமை;   8. விரிவுரை (நன். 22);; gloss, elaborate commentary.

   9. உரியபொருள்; proper meaning.

   10. உரியசொல்;(அக.நி.);

 proper word.

   11. சாத்துவரி, ஆரபடி, கைசிகி, பாரதி என நான்கு வகைப்பட்ட நாடகநூலின் நடை;   சாத்துவதி, ஆரபடி, கைசிசி, பாரதி யென விருத்தி நான்கு வகைப்படும் (சிலப். 3, 13 உரை, பக். 82);;   12. ஆசனம்; posture.

     “ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி” (சிலப். 8,25);;

   13. தூய்மை; neatness, cleanliness, ({});.

   14. வட்டம்;(யாழ்.அக.);

 circumference, circle.

   15. சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழுந் தாயம்;(வின்.);

 a series of throws in one’s turn in dice play.

     [Skt. {} → த. விருத்தி]

விருத்திக்கடன்

விருத்திக்கடன் viruttikkaḍaṉ, பெ. (n.)

   வட்டிக்கு வாங்குங் கடன்; Interest-bearing debt.

     “குன்றாவிருத்திக் கடன்கொண்டு” (திருவிளை.உலவாக்கோட்டை.7);.

விருத்திசந்திரன்

 விருத்திசந்திரன் viruttisandiraṉ, பெ. (n.)

   வளர்பிறை; waxing moon. (C.G.);.

விருத்திசூதகம்

 விருத்திசூதகம் virutticūtagam, பெ. (n.)

   குடும்பத்தில் குழந்தை பிறந்ததாலுண்டாந் தீட்டு; pollution on account of birth of a child in a family.

விருத்தியன்

 விருத்தியன் viruttiyaṉ, பெ. (n.)

   வேலையாள்; servant, slave. (w.);.

விருத்தியுபாயம்

 விருத்தியுபாயம் viruttiyupāyam, பெ. (n.)

   உயிர் வாழ்க்கைக்குச் (சீவனஞ்); செய்யும் வழி; means of livelihood.

விருத்தியுரை

விருத்தியுரை viruttiyurai, பெ. (n.)

விருத்தி1, 8 பார்க்க;see virutti.

விருத்திரன்

விருத்திரன் viruttiraṉ, பெ. (n.)

விருத்திராசுரன் பார்க்க;see {}.

     “ஈங்குவன் விருத்திரனென்ப” (திருவிளை. இந்திரன்.17);

விருத்திராசுரன்

விருத்திராசுரன் viruttirācuraṉ, பெ. (n.)

   இந்திரனால் (வதை); கொலையுண்ட ஓர் அசுரன்; an asura slain by Indra.

     “வீரமிக்க விருத்திராசுரனைக் கொன்ற வோதரும் பழியாலஞ்சி” (திருவாலவா.1,2);.

விருத்திராரி

 விருத்திராரி viruttirāri, பெ. (n.)

   விருத்திராசுரனைக் கொன்றவனான இந்திரன் (திவா.);; Indira, as the slayer of {}.

விருத்துப்பட்டிகை

 விருத்துப்பட்டிகை viruttuppaṭṭigai, பெ. (n.)

   பழைய வரி வகை; an ancient tax.

விருத்தூண்

 விருத்தூண் viruttūṇ, பெ. (n.)

   புத்துணவு (இலக்.அக.);; fresh food.

     [விருந்து + ஊண் ]

 விருத்தூண் viruttūṇ, பெ. (n.)

   புத்துணவு (இலக்.அக.);; fresh food.

விருத்தை

விருத்தை viruttai, பெ. (n.)

   1. அதிக வயதானவள் (பிங்.);; aged woman.

   2. ஐம்பத்தைந்து அகவையைக் கடந்தவள்; a woman past her 55th year.

     “முதியளாம் விருத்தை தன்னை” (கொக்கோ. 4,4); (Erot.);

விருந்தனை

விருந்தனை virundaṉai, பெ. (n.)

   விருந் தோம்பும் மனைவி (பிங்.);; wife.

     [விருந்து → விருந்தனை (வே.க.120);]

விருந்தமர்க்களம்

 விருந்தமர்க்களம் virundamarkkaḷam, பெ. (n.)

   விருந்தாரவாரம் (வின்.);; stir and bustle of a feast.

     [விருந்து + அமர்க்களம்]

விருந்தம்

விருந்தம்1 virundam, பெ. (n.)

   1. பூ பழம் முதலியவற்றின் காம்பு (தைலவ.);; footstalk of leaves, flowers or fruits.

   2. வேம்பு (சங்.அக.);; margosa.

   3. பானை முதலியவற்றை வைக்கும் பாதம் (யாழ்.அக.);; stand for keeping pots, etc.

 விருந்தம்2 virundam, பெ. (n.)

   1. உறவின் முறை (சூடா.);; circle of relatives.

     ‘அவர் விருந்தங்களுக்கும்’ (E.I.XXI.188);.

   2. விலங்கின் கூட்டம் (வின்.);; herd, flock.

   3. குவியல் (யாழ்.அக.);; heap.

 விருந்தம்3 virundam, பெ. (n.)

விருந்தனை (சூடா.); பார்க்க;see {}.

     [விருந்து → விருந்தம் (வே.க.120);]

விருந்தர்

 விருந்தர் virundar, பெ. (n.)

விருந்தினன் பார்க்க;see {}.

     [விருந்து → விருந்தர்]

விருந்தாகம்

 விருந்தாகம் virundākam, பெ. (n.)

   சேம்பு (மூ.அ.);; Indian kales.

விருந்தாடி

விருந்தாடி virundāṭi, பெ. (n.)

   விருந்தாளி; guest.

     [விருந்தாடு → விருந்தாடி] (வே.க. 120);

விருந்தாடு-தல்

விருந்தாடு-தல் virundāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒரு வீட்டிற்கு விருந்தாகப் போதல் (சென்னை);; to go as a guest.

     [விருந்து + ஆடு-,]

விருந்தாட்டு

விருந்தாட்டு virundāṭṭu, பெ. (n.)

   1. விருந்தளிக்கை; giving feasts, feasting.

   2. ஆட்டைத் திருவிழா (சிலப். 6, 4, உரை);; annual festival.

     [விருந்து + ஆட்டு = பெயரீறு]

விருந்தாரம்

விருந்தாரம் virundāram, பெ. (n.)

   1. அழகு; beauty.

   2. மேன்மை; excellence.

     [விருந்து + ஆரம்]

விருந்தாற்றுதல்

விருந்தாற்றுதல் virundāṟṟudal,    9 செ.கு.வி.(v.i.)

விருந்திடு-, (ஐங்குறு. 1, உரை); பார்க்க;see {}.

     [விருந்து + ஆற்று-,]

விருந்தாளி

விருந்தாளி virundāḷi, பெ. (n.)

   விருந்தினன் (வின்.);; guest.

     [விருந்து + ஆளி7]

விருந்தாவனம்

விருந்தாவனம் virundāvaṉam, பெ. (n.)

   கண்ணபிரான் விளையாடியதும் யமுனைக்கரையி லுள்ளதுமான ஒரு தலம்;{}, the scene of {} sports, near Gokula on the banks of the Jumna.

     “விருந்தாவனத்தே கண்டோமே” (திவ். நாய்ச். 14);.

விருந்திடு-தல்

விருந்திடு-தல் virundiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   நண்பர்க்கு உணவளித்து பணிவிடை செய்தல்; to give a feast, to show hospitality.

     [விருந்து + இடு-,]

விருந்தினன்

விருந்தினன் virundiṉaṉ, பெ. (n.)

   1. புதியவன்; newcomer.

     “விருந்தின னிவனு மன்றி” (சீவக. 1647);.

   2. விருந்தினர்; guest.

     “தான்போய் விருந்தின னாதலே நன்று” (நாலடி, 286);.

     [விருந்து → விருந்தினன்]

விருந்து

விருந்து virundu, பெ. (n.)

   1. விருந்தினர் முதலியோர்க்கு உணவளித்துப் பணிவிடை செய்தல்; feast, banquet.

     “யாதுசெய் வேன்கொல் விருந்து” (குறள், 1211);.

   2. விருந்தினர்; guest.

     “விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை” (புறநா. 266);.

   3. புதியவன்; newcomer.

     “விருந்தா யடை குறுவார் விண்” (பு.வெ. 3, 12);.

   4. புதுமை; newness, freshness.

     “விருந்து புனலயர” (பரிபா. 6, 40);.

   5. நூலுக்குரிய எண்வகை வனப்புக்களுளொன்று (தொல்.பொ. 551);; poetic composition in a new style.

     ‘விருந்திட்டுப் பகை தேடினாற் போல’ (பழ.);.

     ‘விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்’ (பழ.);.

     ‘விருந்தில்லாச் சோறு மருந்து’ (பழ.);.

     ‘விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு’ (பழ.);.

     ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ (பழ.);.

   தெ. விந்து;   ம. விருந்நு; Ka. Birdu;

 Tu. binne;

 Go. {};

 Kui. breenju.

     [விள் → விர் → விரு → விருந்து (வே.க. 120);]

விருந்துக்கூடம்

விருந்துக்கூடம் virundukāṭam, பெ. (n.)

   விருந்தினரை வரவேற்கும் மாளிகைப் பகுதி (கட்டட. நாமா. 1);; banqueting hall.

     [விருந்து + கூடம்]

விருந்துசொல்(லு)-தல்

விருந்துசொல்(லு)-தல் virundusolludal,    8 செ.குன்றாவி. (v.t.)

   விருந்துக்கழைத்தல்; to invite to a feast.

     [விருந்து + சொல்-,]

விருந்துவை-த்தல்

விருந்துவை-த்தல் virunduvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   விருந்தூண் அளித்தல் (இ.வ);; to give a feast.

     [விருந்து + வை-,]

விருந்தூட்டு

விருந்தூட்டு virundūṭṭu, பெ. (n.)

   விருந்தினருக்கு உணவளிக்கை; feeding of guests.

     “இவ்விருந் தூட்டு முட்டில்” (S.I.I.iii.13);.

     [விருந்து + ஊட்டு]

விருந்தை

 விருந்தை virundai, பெ. (n.)

   துளசி (மூ.அ.);; sacred basil.

விருந்தோம்பல்

விருந்தோம்பல் virundōmbal, பெ. (n.)

   புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் வரவேற்றல் (குறள்.);; welcoming and entertaing guests.

     “இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள், 81);.

     [விருந்து + ஒம்பு → ஒம்பல்]

விருந்தோர்

விருந்தோர் virundōr, பெ. (n.)

   1. புதியவர் (சூடா.);; newcomers.

   2. விருந்தினர்; guests.

     [விருந்து → விருந்தோர்]

விருபன்

 விருபன் virubaṉ, பெ. (n.)

   வெள்ளெலி (சது.);; a kind of rat.

     [இரும்பன் → விருபன்]

விருப்பன்

விருப்பன் viruppaṉ, பெ. (n.)

   1. விருப்ப முள்ளவன்; one who has desires.

   2. அன்புள்ளவன்; one who likes, lover.

     “திருப்பனையூரில் விருப்ப னாகியும்” (திருவாச. 2, 87);.

     [விருப்பு → விருப்பம் → விருப்பன்]

விருப்பம்

விருப்பம் viruppam, பெ. (n.)

   1. விருப்பம் (சூடா.);; desire, liking.

   2. அன்பு; love, affection.

   3. பற்று (பிங்.);; attachment.

     ‘விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?’ (பழ.);.

ம. விரும்புக.

     [விரும்பு → விருப்பு → விருப்பம் (வே.க.120);]

விருப்பம் desire, lust

விருப்பம் desire, lust      ‘ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால்” (கம்பரா. மாயாசன.83),       [எங்கு + உறு → எங்குறு → ஏக்குறு → எக்குறவு → எக்கறவு.]

விருப்பாவணம்

 விருப்பாவணம் viruppāvaṇam, பெ.(n.)

இறப்பிற்குப் பின் நடைமுறைப்படுத்தக் கோரி எழுதும் விருப்பாவணம் (உயில்:

 bill, legal declaration of a person’s intensions, totake effect after his death.

     [விருப்பு+ஆவணம்]

விருப்பிள-த்தல்

விருப்பிள-த்தல் viruppiḷattal,    3 செ.கு.வி. (v.i.)

   நிலம் வெடித்தல்; to be split in the land.

விருப்பு

விருப்பு viruppu, பெ. (n.)

விருப்பம் பார்க்க;see viruppam.

     “விருப்பறாச் சுற்றம்” (குறள், 522);.

     [விரும்பு → விருப்பு] (வே.க.100);

விருப்புவெறுப்பு

விருப்புவெறுப்பு viruppuveṟuppu, பெ. (n.)

   வேண்டுதல் வேண்டாமை; desire and aversion, like and dislike.

     “வேண்டுதல் வேண்டாமையிலான்” (குறள், 4);.

     [விருப்பு + வெறுப்பு]

விருமதரு

விருமதரு virumadaru, பெ. (n.)

   மரவகை (பதார்த்த.212);; battle of plassey tree.

மறுவ. புரசு.

விருமமூலி

விருமமூலி virumamūli, பெ. (n.)

   பூடுவகை (சீவக. 2703, உரை);; a prostrate herb.

விரும்பன்

விரும்பன் virumbaṉ, பெ. (n.)

விருப்பன் பார்க்க;see {}.

     “துறையூர் விரும்பா” (தேவா. 1005, 4);.

     [விரும்பு → விரும்பன்]

விரும்பார்

விரும்பார் virumbār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “விரும்பா ரமரிடை வெல்போர் வழுதி” (பு.வெ. 10, 2, கொளு.);.

     [விரும்பு + ஆ (எதிர்மறை); + ஆர்]

விரும்பு-தல்

விரும்பு-தல் virumbudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விருப்பப்படுதல்; to wish, long for, to covet, to love, like.

     “நனிவிரும்ப தாளாண்மை நீருமமிழ் தாய்விடும்” (நாலடி, 200);.

   2. அழுத்தமாய்க் கருதுதல் (வின்.);; to think intensely of.

 Mu. virumpuka.

     [விள் → விர் → விரு → விரும்பு-, (வே.க.120);]

விருளை

 விருளை viruḷai, பெ. (n.)

   கடிவாளப் பூண் (பிங்.);; ornamental knob or ring of a bridle.

விருவிரு-த்தல்

விருவிரு-த்தல் viruviruttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கடுத்தல்; to tingle with pain.

   2. காமம் முதலியவற்றால் உடலூருதல்; to itch with sensual desire.

     “மோகமயக்கத்தான் மேல் விரு விருக்கும்” (தனிப்பா. i, 329, 31);.

   3. உறைப்பாயிருத்தல்; to be peppery in Taste.

   4. சினத்தாற் பரபரத்தல்; to get flurried due to angry mood.

   5. விரைதல்; to be in a hurry.

விருவிருப்பு

விருவிருப்பு viruviruppu, பெ. (n.)

   1. கடுப்பு; tingling sensation.

   2. காமம் முதலிய வற்றால் உடலூருகை; itching with sensual desire.

   3. உறைப்பு; pungent, peppery taste.

   4. சினத்தாலுண்டாம் பரபரப்பு; hurry activity due to angry.

   5. விரைவு; haste, hurry.

     [விருவிரு-, → விருவிருப்பு]

விருவிரெனல்

விருவிரெனல் viruvireṉal, பெ. (n.)

   1. கடுப்புக் குறிப்பு; tingling sensation.

   2. காமம் முதலியவற்றால் உடலூருதற் குறிப்பு; itching with sensual desire.

   3. உறைப்பாயிருத்தற் குறிப்பு; being peppery in taste.

   4. சினத்தாலுண்டாகும் பரபரப்புக் குறிப்பு; being in a flurry owing to anger.

   5. விரைவுக் குறிப்பு; hurrying.

     [விருவிரு + எனல்]

விருவு

விருவு viruvu, பெ. (n.)

   நிலச் சிறுவெடிப்பு; a crack in the earth.

     [விள் → விரு → விருவு] (மு.தா.100);

விருவெட்டு

 விருவெட்டு viruveṭṭu, பெ. (n.)

   கருங்காரை வகை (L.);; black honey thorn.

மறுவ. நக்கணி.

விரேசனம்

விரேசனம் virēcaṉam, பெ. (n.)

   1. மலங்கழிகை purging, evacuation of bowels.

     “கடுக்காய்கள் விரேசனத்தைப் பண்ணும்” (ஞானவா. சிகித். 49);

   2. பேதிமருந்து; purgative.

விரேசி-த்தல்

விரேசி-த்தல் virēcittal,    4 செ.கு.வி. (v.i.)

   கழிச்சல்; to purge, have evacuations.

விரை

விரை1 viraittal,    11 செ.கு.வி. (v.i.)

விறை2 பார்க்க;see {}.

 விரை2 viraidal,    12 செ.கு.வி. (v.i.)

   1. வேகமாதல்; to be speedy, swift, rapid.

     “தன்னை வியந்தான் விரைந்து கெடும்” (குறள். 474);.

   2. பதைத்தல்; to hurry, hasten.

   3. சினங்கொள்ளுதல் (வின்.);; to be importunate, intent, eager.

   4. மனங் கலங்குதல்; to be perturbed, disturbed in mind.

     “விரையாது நின்றான்” (சீவக. 513);.

 Ma. Virayuka;

 To. Pern;

 Ka. beragu;

 Kod. beria;

 Tu. birsu.

 விரை3 virai, பெ. (n.)

   1. மணம் (சூடா.);; odour, fragrance.

     “விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செல்வன்” (கந்தபு. திருவவ. 100);.

   2. கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்ற ஐவகை நறுமணப் பண்டம்; perfumes, five in number, viz. {}, turukkam, tagaram, agil, {}.

     “பத்துத் துவரினு மைந்து விரையினும்” (சிலப். 6, 79);.

   3. நறும்புகை (சூடா.);; incense.

   4. கலவைச் சாந்து (சூடா.);; sandal mized with perfumes.

   5. பூந்தேன்; honey of flowers.

     “விரைததும்பு பூம்பிண்டி” (சீவக. 1467);.

   6. மலர்; flower, blossom.

     “விரையுறு கடியின்” (ஞானா. 57, 43.);.

 விரை4 viraittal,    11 செ.கு.வி. (v.i.)

   மணங்கமழ்தல்; to be fragrant, to emit perfumes.

     “விரைக்குந் தீம்புகை” (காஞ்சிப்பு. இருபத். 182);.

 விரை5 virai, பெ. (n.)

   1. விதை; seed, as of plants.

     “விரை வித்தாமலே விளையும்” (வரத. பாகவத. நாரசிங்க. 105);.

   2. வித்து மூலம் (அண்ட பீசம்);; testicle.

     ‘விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?’ (பழ.);

ம. விர.

     [விதை → விரை]

 விரை6 viraittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விதைத்தல்; to sow.

   2. பரவச் செய்தல்; to spread abroad, diseminate.

     ‘செய்தியை ஊரெங்கும் விரைத்தான்’.

ம. விர.

     [விதை → விரை]

விரைகால்

 விரைகால் viraikāl, பெ. (n.)

   விதைத்தற்குரிய நிலம்; land fit for sowing.

     [விதை → விரை + கால்]

விரைக்கரும்பு

 விரைக்கரும்பு viraikkarumbu, பெ. (n.)

   நடுதற்குரிய கரும்பு; sugarcane for planting.

     [விதை → விரை + கரும்பு]

விரைக்காய்

விரைக்காய் viraikkāy, பெ. (n.)

   1. கறிக்கு உதவாது விதைக்குப் பயன்படும் முற்றற்காய்; fruit set apart for obtaining seeds.

   2. விரை5, 2 பார்க்க;see virai.

     [விரை + காய்]

விரைக்குவிடு-தல்

விரைக்குவிடு-தல் viraikkuviḍudal,    18 செ. குன்றாவி.(v.t.)

   விரைக்குதவுமாறு கொடி, மரங்களிற் காய்களை முற்றவிடுதல்; to allow set apart berries, fruits, etc. to ripen on the plant itself for obtaining seeds.

     [விதைக்கு → விரைக்கு + விடு-,]

விரைக்கொட்டை

விரைக்கொட்டை viraikkoṭṭai, பெ. (n.)

   1. நிலக்கடலை மணி; groundnut.

   2. விரை5, 2 பார்க்க;see virai.

     [விதைக்கொட்டை → விரைக்கொட்டை]

விரைக்கோட்டை

விரைக்கோட்டை viraikāṭṭai, பெ. (n.)

   1. ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு (C.G.);; extent of land computed by one {} of seed required to be sown in it = 1.62 acres.

   2. விதைப் பதற்குரிய தவசத்தை உள்ளடக்கிச் சுற்றிக்கட்டிய வைக்கோற்கட்டு (திவ். திருமாலை, 30, வ்யா.);; bundle of straw containing seed-grains of paddy.

   3. விதைப்பை; scrotum.

     [விதைக்கோட்டை → விரைக்கோட்டை]

விரைசொல்

விரைசொல் viraisol, பெ. (n.)

   விரைவைக் குறிக்கும் அடுக்குச் சொல்; word repeated to indicate haste.

     “விரைசொல் லடுக்கே மூன்று வரம்பாகும்” (தொல். சொல். 424);.

     [விரை2 + சொல்]

விரைதெளி

விரைதெளி1 viraideḷiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நாற்றுக்காக விதையிடுதல்; to sow seeds for raising seedlings.

   2. அறுகும் அரிசியும் இடுதல்; to sprinkle a mixture of rice and cynodon grass, as on a newly married couple.

     “மங்கல வச்சுதந் தெளித்து…… வாழ்த்தினர்” (சீவக. 2411);.

     [விதை → விரை + தெளி-,]

 விரைதெளி2 viraideḷi, பெ. (n.)

   விதை முளைக்க வித்திடுகை (இ.வ);; sowing of seeds.

     [விதை → விரை + தெளி]

விரைநாசம்

 விரைநாசம் virainācam, பெ. (n.)

   பயிர் முற்றும் அழிகை; complete or total ruin of crops.

மறுவ. விதைப்பழுது, பதர்.

     [விரை + நாசம்]

விரைநோய்

 விரைநோய் virainōy, பெ. (n.)

விரைவாதம் (பைஷஜ.); பார்க்க;see {}.

     [விரை + நோய்]

விரைபோடு-தல்

விரைபோடு-தல் viraipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. விதையிடுதல்; to sow seed.

   2. அலுவல் தொடங்குதல்; to make a beginning, to commence.

மறுவ. வித்திடு-தல்

     [விரை + போடு-,]

விரைப்பண்டம்

விரைப்பண்டம் viraippaṇṭam, பெ. (n.)

   நறுமணப்பண்டம்; aromatic substance.

     [விரை3 + பண்டம்1 ]

விரைப்பாடு

விரைப்பாடு viraippāṭu, பெ. (n.)

விதைப்பாடு பார்க்க;see {}.

     [விரை5 + படு → பாடு]

விரைப்பு

விரைப்பு1 viraippu, பெ. (n.)

விதைப்பு (வின்.); பார்க்க;see vidaippu.

     [விரை → விரைப்பு]

 விரைப்பு2 viraippu, பெ. (n.)

விறைப்பு பார்க்க;see {}.

     [விரை → விரைப்பு]

விரைமுந்திரிகை

 விரைமுந்திரிகை viraimundirigai, பெ. (n.)

   மரவகை; cashew tree.

     [விரை + முந்திரிகை]

விரையடி

விரையடி1 viraiyaḍittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   காளை முதலியவற்றின் விதைப் பையிலுள்ள விதையை நசுக்கி ஆண்மை இல்லாமற் செய்தல்; to castrate.

மறுவ. விதைவாங்குதல்

     [விதை → விரை + அடி-,]

 விரையடி2 viraiyaḍi, பெ. (n.)

   1. விதைப் பாடு பார்க்க;see {}.

   2. நில வளவு வகை (Rd.);; a measure of land = 1/8 acre.

     [விரை + அடி]

விரையாக்கலி

விரையாக்கலி viraiyākkali, பெ. (n.)

   1. சிவபிரானது திருவாணை; the sacred command of {}.

     “விரையாக்கலி யெனு மாணையும்” (பதினொ. கோயி. 4);.

     “எத்திக்கினும் விரையாக்கலி யிவர்வித்து” (தணிகைப்பு. பிரம. 41);.

   2. சிவபிரானை முன்னிட்டுச் செய்யும் ஆணை வகை. (பெரியபு. கோப்புலி. 4);; an oath calling on {} to witness.

விரையிடு-தல்

விரையிடு-தல் viraiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

விரைபோடு-, பார்க்க;see {}.

     [விதை → விரை + இடு-,]

விரையெடு-த்தல்

விரையெடு-த்தல் viraiyeḍuttal,    4 செ. குன்றாவி.(v.t.)

விதையடி-, பார்க்க;see {}.

     [விதை → விரை + எடு-,]

விரையெடுத்தவன்

விரையெடுத்தவன் viraiyeḍuttavaṉ, பெ. (n.)

   1. விரையெடுக்கப்பட்டவன்; eunuch, castrated man.

   2. வலியும் சுறுசுறுப்பு முள்ளவன்; strong and active man.

   3. முதிர்ந்த பட்டறிவுள்ளவன்; man of ripe experience.

     [விதை → விரை + எடுத்தவன்]

விரைவழி-த்தல்

விரைவழி-த்தல் viraivaḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   நறுமணப்பண்டம் பூசுதல்; to apply aromatic unguents.

     “விரைவழித் திளைய ரெல்லாம்” (சீவக. 699);.

     [விரை + வழி-,]

விரைவாங்கு-தல்

விரைவாங்கு-தல் viraivāṅgudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   விதையடி; to castrate.

     [விதை → விரை + வாங்கு-,]

விரைவாதம்

விரைவாதம் viraivātam, பெ. (n.)

   1. குடற்சரிவு; rupture, scrotal hernia.

   2. விதைப்பெருக்கம் (பைஷஜ.171);; swelled, testicle, orchitis.

   3. நீர்ச்சூலை; dropsy of the testicle, hydrocele.

   4. விதை நோய் வகை; inflammation of the epididymis edidiymitis.

மறுவ. விரைவீக்கம்.

     [விதை → விரை+ வாதம்]

 Skt. {} → த. வாதம்.

விரைவிடு-தல்

விரைவிடு-தல் viraiviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

விரைக்குவிடு-, பார்க்க;see {}.

     [விரை + விடு-,]

விரைவித்து

 விரைவித்து viraivittu, பெ. (n.)

   விதைப்பதற்கென வைத்துள்ள வித்து; seed-grain.

மறுவ. விதைப்பண்டம்.

     [விதை → விரை + வித்து]

விரைவினர்

விரைவினர் viraiviṉar, பெ. (n.)

   செயன் முனைப்புடையவர்; persons swift in action.

     “வெல்வான் விரைவினர் துவன்றி” (சீவக. 615);.

     [விரை → விரைவு + இன் + அர். ‘இன்’ சாரியை, ‘அர்’ பலர்பால் வினைமுற்று ஈறு]

விரைவீக்கம்

 விரைவீக்கம் viraivīkkam, பெ. (n.)

விரைவாதம் பார்க்க;see {}.

     [விதை → விரை + வீக்கம்]

விரைவு

விரைவு viraivu, பெ. (n.)

   1. சடுதி (வேகம்);; swiftness, celerity, despatch.

     “விரைவதின் வருகென” (பெருங். இலாவாண 5, 4);.

   2. வெம்மை (அக.நி.);; heat, warmth.

   3. வேண்டுகை (அக.நி.);; request.

   4. உதவி (அரு.நி.);; hospitality.

     [விரை → விரைவு]

விரைவை-த்தல்

விரைவை-த்தல் viraivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   விதைப்பதற்கு நெல்லை அணியப்படுத்துதல்; to prepare paddy seeds for sowing.

     [விதை → விரை5 + வை-,]

விரோசனன்

விரோசனன் virōcaṉaṉ, பெ. (n.)

   1. சூரியன்;     (பிங்.); sun.

     “விரோசனன் கதனை” (பாரத. வாசுதே.2);;

   2. சந்திரன் (யாழ். அக.);; moon.

   3. தீ அக்கினி (யாழ். அக.);; agni.

   4. மகாபலியின் தந்தையும் பிரகலாதனுடைய மகனுமான ஒரசுரன் (அபி. சிந்.);; an asura son of {} and father of Bali.

விரோசனம்

விரோசனம் virōcaṉam, பெ. (n.)

   1. கழிச்சல் (பேதி); மருந்து: purgative.

     “மறுவறுவிரோசனந்தான் வருஷத்திரண்டு முறை” (குரே. சத. 19);;

   2. பேதியாகை; purging.

     “வசம்பைச் சுட்டருந்த ஒதிய விரோசன மொழியுமே” (பாலவா.1078.);.

விரோதகிருது

 விரோதகிருது virōdagirudu, பெ. (n.)

விரோதிகிருது பார்க்க;see virodhikirtu.

விரோதக்காரன்

 விரோதக்காரன் virōtakkāraṉ, பெ. (n.)

   பகைவன்; enemy.

விரோதசிலேடை

விரோதசிலேடை virōtasilēṭai, பெ. (n.)

   முன்னர் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின்னர் வரும் பொருள்களோடு விரோதிப்பத் தொடுக்கப்படுஞ் சிலேடை (தண்டி. 75, 6);; verbal antithesis following a verbal similitude.

விரோதம்

விரோதம்1 virōtam, பெ. (n.)

   1. பகை; hatred, animosity, enmity.

   2. மாறுபாடு; contrariety, diversity.

   3. விரோதவணி பார்க்க;   4. இருள்;(அக.நி.);

 darkness.

 விரோதம்2 virōtam, பெ. (n.)

மயிர்;(அக.நி.);

 hair.

விரோதம்பேசு-தல்

விரோதம்பேசு-தல் virōdambēcudal, செ.கு.வி. (v.i.)

   1. பொறாமை கொண்டு சொல்லுதல்; to speak enviously or spitefully.

   2. எதிரிடையாகப் பேசுதல்; to speak against or in opposition.

விரோதவணி

விரோதவணி virōtavaṇi, பெ. (n.)

   சொல்லாலாவது பொருளாலாவது மாறுபாட்டுத் தன்மை தோன்ற உரைக்கும் அணி (தண்டி. 80);; a figure of speech in which antithesis or opposition in words or in sense occurs.

விரோதவுவமை

விரோதவுவமை virōtavuvamai, பெ. (n.)

   உவமான வுவமேயங்கள் தம்முள் எதிர்மாறான (விரோத); குணமுடையனவாகச் சொல்லும் உவமை வகை;(தண்டி. 31,4);; a kind of simile in which the objects compared with each other are described as having opposite characteristics.

விரோதார்த்தம்

விரோதார்த்தம் virōtārttam, பெ. (n.)

   1. எதிர்மாறான பொருள்; contrary meaning.

   2. விடாப்பிடியாய் எதிர்க்கை; intentional opposition.

விரோதி

விரோதி1 virōti, பெ. (n.)

   1. பகைவன் (சத்துரு);; enemy.

   2. ஆண்டறுபதனுள் இருபத்து மூன்றாவது (பெரியவரு.);; the 23rd year of the Juiter cycle.

 விரோதி2 virōtittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. பகைத்தல்; to hate.

     “விரோதித்துவிரலிற் சுட்டி”(சீவக. 3080);;

   2. முரண்படுதல்; to be contrary, inconsistent.

     “நீ முன் சொல்லியதோடு பின் சொல்வது விரோதிக்கும்”.

   3. எதிர்த்து நிற்றல்; to oppose to with stand resist. (w);

விரோதிகிருது

விரோதிகிருது virōdigirudu, பெ. (n.)

   ஆண்டறுபதனுள் நாற்பத்தைந்தாவது;(பெரியவரு.);; the 45th year of the Jupiter cycle.

விரோதிசுவரூபம்

 விரோதிசுவரூபம் virōtisuvarūpam, பெ. (n.)

   மாலியத்தின் ஐந்து உண்மை (அர்த்தபஞ்சங்);களுள் வீடடைதற்கு இடையூறுயுள்ளதன் தன்மை;

விர்த்தாந்தம்

 விர்த்தாந்தம் virttāndam, பெ. (n.)

விருத்தாந்தம் பார்க்க;see {}.

விர்த்தி

விர்த்தி1 virtti, பெ. (n.)

விருத்தி1 பார்க்க;see virutti.

 விர்த்தி2 virtti, பெ. (n.)

விருத்தி2 பார்க்க;see virutti.

விற-த்தல்

விற-த்தல் viṟattal,    12 செ.கு.வி. (v.i.)

   1. செறிதல்; to be dense, close, to be intense.

     “கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து” (நெடுநல். 97);.

   2. மிகுதல்; to abound, increase.

     “களிப்பு விறக்கவிடும் பண்டங்கள் பெருகக் கூட்டில்” (பதிற்றுப். 40, 18, உரை);.

   3. வெற்றி பெறுதல்; to conquer.

   4. போர் செய்தல் (வின்.);; to fight.

   5. வெருவுதல்; to fear.

     “விறப்பே வெருஉப் பொருட்டு மாகும்” (தொல். சொல். 348);.

க. வெறெ.

விறகாள்

விறகாள் viṟakāḷ, பெ. (n.)

   விறகு சுமந்து விற்போன்; fire wood seller, one who hawks fire wood.

     “விறகாளாய்ச் சாதாரி பாடுமாறும்” (திருவாலவா. பதி. பாயி. 8);.

     [விறகு + ஆள்2]

விறகு

விறகு viṟagu, பெ. (n.)

   1. எரிக்குங்கட்டை; fire wood, fuel.

     “நாறு நறும்புகை விறகின்” (சீவக. 131);.

   2. வேள்வித் தீக்குரிய கள்ளிகள்; sacrificial fuel.

     “களிறுதரு விறகின் வேட்கும்” (பெரும்பாண். 499);,

     ‘விறகு கோணலானாலும் நெருப்பு பற்றாதா?’ (பழ.);.

     ‘விளங்கா மடையன் விறகுக்குப் போனால்

விறகு கிடைத்தாலும் கொடிகிடைக்காது’ (பழ.);.

 Ma. {};

 Ko. verg;

 To. Berkh;

 Tu. bejakire;

 Konda. {};

 Kui. veju, vejgu, (pl. veska);;

 Kuwi. {} (pl. veska);.

விறகுகாடு

விறகுகாடு viṟagugāṭu, பெ. (n.)

   1. விறகின் தொகுதி; heap of fire wood.

     “மரக்காடான விறகுகாடு எரிந்த தொத்தது” (தக்கயாகப். 329, உரை);.

   2. விறகு வெட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காடு (இக்.வ.);; reserved forest for fire wood.

     [விறகு + காடு]

விறகுக்கட்டு

விறகுக்கட்டு viṟaguggaṭṭu, பெ. (n.)

   கட்டிய விறகுத் தொகுதி; bundle of fire wood.

     “விறகுக்கட்டு மூன்றும்” (S.I.l. iii, 188, 7);.

     ‘விறகுக் கட்டுக் காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது, ஒன்றே காற்பணம் விற்கும்’ (பழ.);.

     [விறகு + கட்டு.]

விறகுக்கட்டை

 விறகுக்கட்டை viṟaguggaṭṭai, பெ. (n.)

   எரிக்கவுதவும் மரத்துண்டு (வின்.);; piece of firewood.

     [விறகு + கட்டை]

விறகுதலையன்

விறகுதலையன் viṟagudalaiyaṉ, பெ. (n.)

   1. விறகாள் (வின்.); பார்க்க;see {}.

   2. விறகுவெட்டி (யாழ்.அக.); பார்க்க;see {}.

   3. முட்டாள் (வின்.);; stupid person, fool, idiot.

     [விறகு + தலையன்]

விறகுவெட்டி

 விறகுவெட்டி viṟaguveṭṭi, பெ. (n.)

   விறகு தறிப்பவன்; wood-cutter.

     [விறகு + வெட்டு → வெட்டி. ‘இ’ வினை முதலீறு.]

விறன்மிண்டநாயனார்

விறன்மிண்டநாயனார் viṟaṉmiṇṭanāyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் நம்பியாரூரர் (சுந்தரமூர்த்திகள்); காலத்தவரான ஒரு சிவனடியார் (பெரியபு.);; a cononized {} saint, a contemporary of {}, one of 63.

பெரிய புராணத்துட் கூறப்பெறும் அறுபத்து மூவருள் (சிவனடியார்); ஒருவர். இவர் சேர நாட்டில் கொல்லம் துறைமுக நிலையத்திற்குக் கிழக்கே செங்குன்றூரிலே பிறந்தவர். இவர் சிவபெருமா னடியவர்களிடத்திலும் சிவபிரான் திருவடியிலும் பேரன்புடையவர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகளுக்குச் சென்று வழிபடுவது இவர் வழக்கம். அப்பகுதிகளில் சிவனடியார்களை நேரில் வணங்கிய பிறகே திருக்கோயிலுக்குச் செல்வார். ஒருமுறை இவர் திருவாரூருக்குச் சென்றார். அங்குள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த நம்பியாரூரர் அடியார்களை வணங்காமலே திருக்கோயிலுக்கு ஒரு புறமாக ஒதுங்கிச் செல்வதை இவர் கண்டார். இவர் மனம் வருந்தி, ‘அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறகு!’ என்று கூறினார். அம்மொழி கேட்ட நம்பியாரூரர், இவருடைய அன்புடைமை கண்டு வியந்து, திருத் தொண்டத் தொகை பாடி அடியார்களை வணங்கினார்.

இவ்வாறு சிவ நெறியைப் பலகாலும் காப்பாற்றிவந்த விறன்மிண்டர், சிவபெருமா னருளால் சிவகணத்தவராகும் பேறு பெற்றார். இத்தகு சிறப்புடன் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணராயிருந்த இப்பெரியாரை நம்பியாரூரர், ‘விரி பொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டர்க் கடியேன்’ என்று திருத்தொண்டத் தொகையிற் சிறப்பித்துள்ளார்.

விறப்ப

விறப்ப viṟappa, பெ. (n.)

   ஒர் உவம வாய்பாடு (தொல். பொ. 287);; a particle of comparison.

     [விற → விறப்ப]

விறப்பு

விறப்பு viṟappu, பெ. (n.)

   1. செறிவு; crowdedness, density, intensity.

     “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” (தொல். சொல். 347);.

   2. பெருக்கம் (வின்.);; increase.

   3. வலிமை (பிங்.);; strength.

   4. வெற்றி (சூடா);; victory.

   5. போர் (சூடா.);; battle.

   6. அச்சம் (தொல். சொல். 348);; fear.

     [விறு → விற → விறப்பு] (மு.தா.89);

விறற்சொல்

 விறற்சொல் viṟaṟcol, பெ. (n.)

   வெற்றியைக் குறிக்கும் சொல்லின் மூலம் வெற்றி உடையானைக் குறித்தல்; to denote a successful person in the manner of successful word.

விறலி

விறலி viṟali, பெ. (n.)

   1. உள்ளக் குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் (தொல். பொ. 91);; female dancer who exhibits the various emotions and sentiments in her dance.

   2. பாண்குலப் பெண் (பிங்.);; woman of the {} caste.

   3. பதினாறு வயதுப் பெண் (யாழ்.அக.);; girl who is 16 year old.

எண்வகைச் சுவையும் மனத்தின் கண்பட்ட குறிப்புகளில் புறத்துப் போந்து புலப்பட ஆடுகின்றவள். இவ்வாறு ஆடுவது விறலாகலின் ‘விறல்பட ஆடுவாள்’ விறலி எனப்பட்டாள். விறலிக்கு இனவரையறையில்லை யென்பர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள்-91 உரை); பாண் இனப் பெண்ணை விறலி யென்று பிங்கலந்தை என்னும் நிகண்டு கூறும். மதுரைக் காஞ்சியில், ‘பாணர் வருக பாட்டியர் வருக’ (749); என்னுமிடத்துப் பாட்டியர் என்னுஞ் சொற்குப் பாணிச்சியர்என நச்சினார்க்கினியர் கூறுவர். பாணர் பாடுவோரும் விறலியர் ஆடுவோருமாக இருத்தலின் பாட்டியர் என்பவரே பாணிற் பெண்பாலாயிருத்தல் வேண்டும். எனினும் பாணருங் கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடுவோரும் ஆடுவோருமாக அக் கலைகளிலே வல்லவராகத் தமிழகத்தி லிருந்தனரென்றும், அவர்கள் தமிழக முடியுடை வேந்தர் மூவரையும் குறுநிலமன்னரையுஞ் செல்வரையும் கண்டு ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனரென்றும் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது.

     [விறல் → விறலி]

விறலியாற்றுப்படை

விறலியாற்றுப்படை viṟaliyāṟṟuppaḍai, பெ. (n.)

   அரசன்பாற் பரிசில் பெற்ற ஓர் விறலி பரிசில் பெற விரும்பும் விறலியை அவன்பால் ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9, பாடாண் 31);; theme in which a {} who had been rewarded by a king directs another {} to the royal presence to obtain rewards.

     “திறல்வேந்தன் புகழ்பாடும் விறலியை ஆற்றுப்படுத்தன்று” (பு.வெ.9-31);.

வள்ளலிடத்தே விறலியை ஆற்றுப்படுத்துவது, பாணாற்றுப்படை முதலிய நான்கும்

     “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (புறத். 36);

எனத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறினார்.

     [விறலி + ஆற்றுப்படை.]

விறலிவிடுதூது

 விறலிவிடுதூது viṟaliviḍutūtu, பெ. (n.)

   காமுகனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்ததற் கிரங்கிப் பின் ஓர் தலைவனை யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால் ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும் சிற்றிலக்கியம்; a poem in which a person who led the life of a profligate repents and sends a {} as a messenger to his wife to acquaint her with his good fortune in obtaining the partronage of a chieftain and to conciliate her.

     [விறலி + விடு + தூது]

விறலோன்

விறலோன் viṟalōṉ, பெ. (n.)

   1. திண்ணியன் (பிங்.);; robust, strong and verile man.

   2. வீரன்; warrior, hero.

     “விறலோன் மார்பம் புல்லேம் யாமென” (பு.வெ. 9,47);.

   3. அருகன் (பிங்.);; arhat.

     [விறல் → விறலான் → விறலோன்]

விறல்

விறல்1 viṟal, பெ. (n.)

   1. வெற்றி; victory.

     “விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு” (குறள், 180);.

   2. வீரம் (யாழ்.அக.);; bravery.

   3. வலி; strength.

     “விறல்விசயனே வில்லுக்கிவ னென்றும்” (தேவா. 647, 2);.

   4. பெருமை (பிங்.);; greatness nobility.

   5. சிறப்பு; distinctive excellence honour.

     “பெருவிறல் யாணர்த்தாகி” (புறநா. 42, 12);.

   6. உள்ளக் குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு” (தொல். பொ. 249, உரை);; physical expression of emotion.

     [விற → விறல்]

 விறல்2 viṟalludal,    5 செ.கு.வி.(v.i.)

   சினத்தோடு எதிர்த்துச் செல்லுதல்; to rush forward with rage, to oppose in an angry mood.

     “மதுரைமுன்னா விறலி வருகின்றதது” (திருவிளை. மாயப்பசு. 9);.

விறல்கோளணி

விறல்கோளணி viṟalāḷaṇi, பெ. (n.)

   பகை அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும் வலிமையைக் கூறும் அணிவகை (அணியி. 58);; a figure of speech in which is described the heroic acts against an enemy or his allies.

     [விறல் + கோள்1 + அணி2]

விறல்வென்றி

விறல்வென்றி viṟalveṉṟi, பெ. (n.)

   போர் வீரத்தாலுண்டாகிய வெற்றி; victory due to one’s prowess.

     “இன்னிசைய விறல் வென்றித் தென்னவர் வயமறவன்” (புறநா. 380, 4);.

     [விறல் + வென்றி]

விறாசு

விறாசு viṟācu, பெ. (n.)

   பருவான்களைத் (பருங்கொம்பு); திருப்பும்படி அவற்றிற் கட்டுங் கயிறு; brace (M.naut. 86);.

விறாட்டி

 விறாட்டி viṟāṭṭi, பெ. (n.)

   வறட்டி; bratty.

     [வறட்டி → விறாட்டி]

விறாண்டு-தல்

விறாண்டு-தல் viṟāṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பிராண்டு-, (வின்.);; to scratch.

விறாய்

 விறாய் viṟāy, பெ. (n.)

   செருக்கு; sauciness.

     “அவனுக்கு விறாய் அதிகம்” (வின்);.

     [வீறு → விறாய்]

விறிசாய்

 விறிசாய் viṟicāy, வி.எ.(adv.)

   விரைவாக; swiftly.

     “விறிசாய் நடக்கிறான்” (வின்.);.

     [விறிசு → விறிசாய்]

விறிசு

விறிசு viṟisu, பெ. (n.)

   ஒருவகை வாணம்; rocket.

     “விறிசெனவே சிதறி” (திருப்போ. சந். பிள்ளைத். முத்தப். 9);.

   தெ. பிருசுலு;   {};க. பிறிசு.

     [விரைசு → விரிசு → விறிசு]

விறிசுவிடு-தல்

விறிசுவிடு-தல் viṟisuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. விறிசுவாணத்தை மேலெழ விடுதல்; to send up a rocket.

   2. பொய்யுரைகட்டிப் பேசுதல்; to tell lies.

     [விறிசு + விடு-,]

விறுதா

விறுதா viṟutā, பெ. (n.)

வி.எ. (adv.);

விருதா (நாமதீப. 645); பார்க்க;see {}.

விறுனல்

 விறுனல் viṟuṉal, பெ. (n.)

   கப்பலிலுள்ள ஒருவகைத் துளை (naut);; scupper hole.

விறுமதண்டம்

 விறுமதண்டம் viṟumadaṇṭam, பெ. (n.)

   மாதவிக்கொடி; common delight of the woods.

மறுவ. குருக்கத்தி.

விறுமதரு

 விறுமதரு viṟumadaru, பெ. (n.)

   புன் முருக்குப்பூடு (சங்.அக.);; a plant.

விறுமன்

 விறுமன் viṟumaṉ, பெ. (n.)

   சிற்றூர்ப் பெண் தெய்வம் (யாழ்.அக.);; a village deity.

விறுமமூலி

 விறுமமூலி viṟumamūli, பெ. (n.)

   பூடுவகை; a prostrate herb.

மறுவ. பிரமி.

     [பிரமமூலி → விறுமமூலி]

விறுமாண்டி

 விறுமாண்டி viṟumāṇṭi, பெ. (n.)

   சிற்றூர்த் தெய்வம்; a village deity.

விறுவிறு-த்தல்

விறுவிறு-த்தல் viṟuviṟuttal,    11 செ.கு.வி. (v.i.)

   1. மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென் றிழுத்தல்; to twitch, as when a coating of paste on one’s body dries up.

     “சேறு உலர்ந்து விறுவிறுத்த உடல்” (அகநா. 17, உரை);.

   2. காரம் உறைத்தல்; to be pungent.

      ‘மிளகாய் விறுவிறுக்கின்றது’.

   3. புண் குத்தெடுத்தல் (வின்.);; to throb, as a boil.

   4. சினம் பொங்குதல் (இ.வ.);; to fret with anger, to rage.

   5. விரைதல் (சங்.அக.);; to hasten, hurry.

     [விறுவிறு → விறுவிறுத்தல்]

விறுவிறுப்பு

விறுவிறுப்பு viṟuviṟuppu, பெ. (n.)

   1. மேற் பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுக்கை; twitching, as when a coating of paste on one’s body dries up.

   2. சார்ப்பு (உறைப்பு);; pungency.

   3. புண் முதலியன குத்தெடுக்கை; throbbing pain, as of a boil.

   4. கடுஞ்சினம் (வின்.);; rage.

   5. சுறு சுறுப்பு (இ.வ.);; briskness, activity.

     [விறுவிறு → விறுவிறுப்பு]

விறுவிறெனல்

விறுவிறெனல் viṟuviṟeṉal, பெ. (n.)

   1. விறு விறென்றிழுத்தற் குறிப்பு;   மலைத்தல் (வின்.);; twitching pain.

   2. உறைத்தற் குறிப்பு; being pungent in taste.

   3. குத்தெடுத்தற் குறிப்பு; throbbing, as of a boil.

   4. சினக்குறிப்பு; being angry.

   5. விரைவுக்குறிப்பு; speed, rapid motion.

     ‘விறுவிறென்று கல்வந்து விழுந்தது’.

     [விறுவிறு + எனல்]

விறை

விறை1 viṟaittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. மரத்துப்போதல்; to grow stiff, as from cold, to become numb.

   2. குளிர் முதலியவற்றால் நடுங்குதல் (இ.வ.);; to shiver, as from cold.

   3. வியத்தல்; to become bewildered.

     ‘குதிரை விறைத்துப் பார்க்கிறது’.

   4. செருக்குக் காட்டுதல்; to assume airs.

      ‘யாரிடத்தில் விறைக்கிறாய்?’.

   க. பெரெ;   ம. விரக்க; Ko. verk;

 Tu. {};

 Te. {};

 Kui. {}.

     [விறு → விறை → விறைத்தல் (மு.தா.244);]

 விறை2 viṟaittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. பெருமை கொள்ளல்; sense of pride.

   2. சினத்தல்; get angry.

     [விறு → விறை → விறைத்தல் (சு.வி.28);]

விறைப்பு

விறைப்பு viṟaippu, பெ. (n.)

   1. விறைத்துப் போகை (யாழ்.அக.);; numbness, stiffness, as from cold.

   2. நடுக்கம்; shivering.

      ‘குளிர் என்ன விறைப்பு விறைக்கிறது’.

   3. மலைப்பு (யாழ்.அக.);; bewilderment.

   4. செருக்குக் காட்டுகை; assuming airs;

 self-abandon.

 Ma. virakka;

 Ko. Veru;

 To. {};

 Ka. {};

 Tս. {}, Te. {}, birusu.

     [விறை → விறைப்பு]

விறையல்

 விறையல் viṟaiyal, பெ. (n.)

   குளிர்நடுக்கம்; shivering.

     “வெடுவெடென் றுடல் விறையலாகி” (வள்ளி, கதை Ms.);.

     [விறை → விறையல்]

விற்கண்டம்

விற்கண்டம் viṟkaṇṭam, பெ. (n.)

   கட்டட வுறுப்புக்களுள் ஒன்று (S.I.I.V. 236);; arch.

     [வில் + கண்டம்]

விற்காயம்

விற்காயம் viṟkāyam, பெ. (n.)

   முற்காலத்தில் வழங்கிய வரிவகை (S.I.I.vii.404);; an ancient tax.

     [வில் + காயம்]

விற்காரன்

விற்காரன் viṟkāraṉ, பெ. (n.)

   வில்லாளன்; archer, bowman.

க. பில்கார.

மறுவ. வில்லேறுழவர்.

     [வில் + காரன் 1]

விற்கால்

 விற்கால் viṟkāl, பெ. (n.)

   வளைந்த கால் (வின்.);; bowleg.

     [வில் + கால்]

விற்கிடை

விற்கிடை viṟkiḍai, பெ. (n.)

   நான்கு முழங்கொண்ட அளவு; bow’s length = 4 cubits.

     “அத்தவெற்பிரண்டு விற்கிடை யெனப்போயாதவன் சாய்தல் கண்டருளி” (பாரத. பதினேழாம். 237);.

     [வில் + கிடை]

விற்குடி

 விற்குடி viṟkuḍi, பெ. (n.)

   எண்வீரட்டங்களுள் ஒன்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ளது மாகிய ஒரு சிவன் கோயில்; a {} shrine in the Thiruvaerur district, one of {}, q.v.

விற்குன்று

விற்குன்று viṟkuṉṟu, பெ. (n.)

   மேரு மலை; mount {}, as {} bow.

சிவபிரானது வில்.

     “பள்ளிக்குன்றம் விற்குன்று மொழிய” (தக்கயாகப். 536);.

     [வில் + குன்று]

விற்கையன்

 விற்கையன் viṟkaiyaṉ, பெ.(n.)

வில்லைக் கையிலுடைய திருமால் (சாரங்கபாணி);,

 Tirumal as holding sarangam in his hand.

     [வில்+கையன்]

விற்கோடி

விற்கோடி viṟāṭi, பெ. (n.)

   1. சிலைத் தீவு;{}.

     “விற்கோடியிற் குடைந்துளோர் பவம்…… ஒடும்” (சேதுபு. கந்த. 79);.

   2. ஒரு பேரெண் (அரு.நி.);; a big number.

     [வில் + கோடி3]

விற்படை

விற்படை viṟpaḍai, பெ. (n.)

   1. வில்லாகிய படைக்கருவி; bow, as a weapon.

     “விற்படை நிமிர்ந்த தோளான்” (சீவக. 1710);.

   2. விற்றானை பார்க்க;see {}.

     “விற்படை யிருக்கின்ற ஊர்களிலே” (பெரும்பாண். 82. உரை);.

   3. அம்பு; arrow.

     “விற்படை விலக்குவ பொற்புடைப் புரவியும்” (சீவக. 567);.

     [வில் + படை]

விற்பணம்

விற்பணம் viṟpaṇam, பெ. (n.)

   வில்லின் பொருட்டுச் செலுத்தும் வரி (S.I.I.i.81);; a tax on bows.

     [வில் + பணம்]

விற்பனன்

 விற்பனன் viṟpaṉaṉ, பெ. (n.)

விற்பன்னன் பார்க்க;see {}.

     [விற்பன்னன் → விற்பனன்]

விற்பனவு

 விற்பனவு viṟpaṉavu, பெ. (n.)

விற்பனை (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விற்பனை → விற்பனவு]

 விற்பனவு viṟpaṉavu, பெ. (n.)

   விற்பனை; sales (யாழ்ப்.);. –

     [விற்பனை-விற்பனவு]

விற்பனை

 விற்பனை viṟpaṉai, பெ. (n.)

விற்றல் பார்க்க;see {}.

     [வில் → விற்பனை]

விற்பனைப்பத்திரம்

 விற்பனைப்பத்திரம் viṟpaṉaippattiram, பெ. (n.)

   விலை ஆவணம்; sale deed.

 Skt. patra → த. பத்திரம்.

     [விற்பனை + பத்திரம்]

விற்பாட்டு

 விற்பாட்டு viṟpāṭṭu, பெ. (n.)

   விற்போன்ற இசைக்கருவியை யொலிக்கச் செய்து கதை தழுவிப் பாடும் பாட்டு; a kind of narrative poem sung to the accompaniment of a bow-like musical instrument.

மறுவ. வில்லுப்பாட்டு

     [வில் + பாட்டு]

விற்பிடி

விற்பிடி1 viṟpiḍi, பெ. (n.)

   வில்லைப் பிடிக்குங் கையினுள்ளளவு; the inside measure of the hand holding a bow:

     “விற்பிடியளவாதலுமெல்லாம் கொள்க” (தக்கயாகப். 41);.

   2. இணையாவினைக்கை முப்பத்து மூன்றனுள் கட்டை விரலை நிமிர்த்திச் சுட்டுவிரல் முதலிய நான்கு விரல்களையும் உட்புறம் வளைப்பதாகிய மெய்ப்பாடு வகை (சிலப். 3, 18, உரை);; a gesture with one hand in which the four fingers other than the thump are held together and bent in while the thumb is kept separate and held upright, one of 33 {}, q.v.

     [வில் + பிடி2]

 விற்பிடி2 viṟpiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   வில்வித்தை பயிலத் தொடங்குதல்; to stand or commence learning archery.

     “திண்ணன் விற்பிடிக்கின்றா னென்று” (பெரியபு. கண்ணப்ப. 29);.

     [வில் + பிடி-,]

விற்பிடிமாணிக்கம்

 விற்பிடிமாணிக்கம் viṟpiḍimāṇikkam, பெ. (n.)

   சிறந்த மாணிக்கம்; superior ruby.

     “தன் கைக்கடங்காத விற்பிடி- மாணிக்கத்தைப் பெற்றவன்” (திவ். திருப்பல். வ்யா. ப்ர.);.

     [விற்பிடி + மாணிக்கம்]

விற்பு

 விற்பு viṟpu, பெ. (n.)

விறப்பு (அரு.நி.); பார்க்க;see {}.

விற்புட்டில்

விற்புட்டில் viṟpuṭṭil, பெ. (n.)

   விரலுறை; glove.

     “விற்புட்டிலிட்டு” (பாரதவெண். 775);.

     [விரற்புட்டில் → விற்புட்டில்]

விற்புரமுத்திரை

விற்புரமுத்திரை viṟpuramuttirai, பெ. (n.)

   முத்திரைவகை (செந்.x. 424);; a hand-pose.

     [விற்புர + முத்திரை]

விற்புருதி

 விற்புருதி viṟpurudi, பெ. (n.)

விப்புருதி (யாழ்.அக.); பார்க்க;see {}.

விற்புருதிக்கிழங்கு

 விற்புருதிக்கிழங்கு viṟpurudikkiḻṅgu, பெ. (n.)

   அமுக்கிராக்கிழங்கு (சங்.அக.);; tuber of Indian wintercherry.

     [விற்புருதி + கிழங்கு]

     [p]

விற்பூட்டு

விற்பூட்டு viṟpūṭṭu, பெ. (n.)

   1. பூட்டுவிற்பொருள்கோள் பார்க்க;see {}

 a mode of construing verse.

     ‘விற்பூட்டு விதலையாப்பு’ (இறை. 56, உரை);.

   2. கத்தரிவகை (பெருங். வத்தவ.14, 32);; a kind of egg-plant or brinjal.

     [வில் + பூட்டு]

விற்பூட்டுப்பொருள்

 விற்பூட்டுப்பொருள் viṟpūṭṭupporuḷ, பெ. (n.)

   பூட்டுவிற்பொருள்கோள் (வின்.); பார்க்க;see {}; a mode of construing verse.

     [விற்பூட்டு + பொருள்]

விற்பூட்டுப்பொருள்கோள்

 விற்பூட்டுப்பொருள்கோள் viṟpūṭṭupporuḷāḷ, பெ. (n.)

   பூட்டுவிற்பொருள் கோள் (வின்.);; a mode of construing verse.

     [விற்பூட்டு + பொருள்கோள்]

விற்பூண்பொருள்கோள்

விற்பூண்பொருள்கோள் viṟpūṇporuḷāḷ, பெ. (n.)

   பொருள்கோள் எட்டனுள் செய்யுளின் முதலிலும் ஈற்றிலும் உள்ள சொற்கள் தம்முள் இயையப் பொருள் கொள்ளும் முறை (நன். 415);; a method of construng a verse by taking together the first and last words one of eight {}, q.v.

     [ஒரு செய்யுளில் முதலில் நிற்கும் சொல்லும் ஈற்றில் நிற்கும் சொல்லும் இயைந்து பொருள் பயக்குமாயின் அதனை விற்பூண் பொருள்கோள் என்பர். வில்லில் உள்ள நாண் இருதலையும் சேரப்பூட்டி நிற்பது போல இப்பொருள்கோள் அமைவதால் விற்பூண் பொருள்கோள் என்றனர்]

விற்பொறி

விற்பொறி viṟpoṟi, பெ. (n.)

   சேரவரசரது வில்லிலாஞ்சனை; the bow-emblem of the {} kings.

     “இமயஞ் சூட்டிய வேம விற்பொறி” (புறநா. 39);.

     [வில் + பொறி = இலாஞ்சனை]

விற்றல்

 விற்றல் viṟṟal, பெ. (n.)

   விலைசெய்கை; selling, sale.

     [வில் → விற்றல்]

விற்றானை

 விற்றானை viṟṟāṉai, பெ. (n.)

   அறுவகைப் படையுள் வில் வீரர்களாலான படை (திவா.);; the battalion of archerss in an army, one of {} q.v.

     [வில் + தானை]

விற்று

 விற்று viṟṟu, பெ. (n.)

விள்ளுகை (அரு.நி.); பார்க்க;see {}, dividing.

விற்றுமுதல்

 விற்றுமுதல் viṟṟumudal, பெ. (n.)

   விற்றுவந்த பணம் (C.G.);; sale proceeds.

     ‘அவனுக்கு நாள்தோறும் விற்றுமுதல் கொழிக்கிறது’ (உ.வ.);.

     [வில் → விற்று + முதல்]

விற்றூண்

விற்றூண் viṟṟūṇ, பெ. (n.)

   விற்றுண்ணற்குரிய சில்லரைப் பண்டங்கள்; sundry articles which can be sold for daily food.

     “விற்றூ ணொன்றில்லாத நல்கூர்ந்தான் காண்” (தேவா. 1097, 1);.

     [வில் → விற்று + ஊண்]

விற்றூற்றுமூதெயினனார்

விற்றூற்றுமூதெயினனார் viṟṟūṟṟumūteyiṉaṉār, பெ. (n.)

   கடைக்கழகப் புலவர்; a sangam poet.

கடைக்கழகப் புலவர்களில் ஒருவர், இவரை முந்நூற்று மூதெயினனார் என்றும் சில படிகள் கூறும். விற்றூறு, முத்தூறு என்பவை ஊர்களின் பெயர்கள், மூதெயினன் என்னும் பெயர் இவரை வேடர் மரபினரென்றும் முதியவரென்றும் காரணங் காட்டுகின்றன. எனவே, இது இவருக்கியற் பெயரெனலாகாது. தமிழருடைய திருமண முறையை இவர் அகநானூற்றில் மிக அழகாகக் கூறுகிறார். திங்களை சகடு (உரோகிணி); கூடிய நேரம் திருமணத்திற்கு நல்ல நேரம் என்பது இவர் கருத்தென்றும், மண நாளன்று வாகையிலையையும் அறுகின் கிழங்கையும் நூலிற் சேர்த்துக் கட்டி மணமகளுக்குச் சூட்டுவதும், மணநாளிரவிலேயே மணமக்களைப் பள்ளியறையிற் சேர்ப்பதும் அந்நாளைய வழக்கமென்றும் அச்செய்யுள் அறிவிக்கின்றது. தலைமகளைப் போர்த்தியிருந்த போர்வையை நீக்கியவுடன் வெளிப்படும் அவள் உருவம் உறை நீங்கிய வாள்போலக் காணப்பட்டதென்று இவர் கூறியுள்ளார். (அகம்.136);. இவர் பாடிய வேறிரு செய்யுட்களும் அகநானூற்றில் உள்ளன (37, 288);. குறுந்தொகையில் 372 ஆம் செய்யுள் இவர் பாடியது.

விற்றூற்றுவண்ணக்கன்தத்தனார்

விற்றூற்றுவண்ணக்கன்தத்தனார் viṟṟūṟṟuvaṇṇakkaṉtattaṉār, பெ. (n.)

   கடைக்கழகக் காலப் புலவர்; a sangam poet.

கடைக்கழகப் புலவர்களில் ஒருவர். விற்றூறு என்பது ஒர் ஊர். இவ்வூரில் மூதெயினனார் என்னும் புலவரொருவரும் இருந்தனரென அகநானூற்றாலும் குறுந்தொகையாலும் அறிய முடிகிறது. வண்ணக்கன் என்பது காசுத் தேர்வு செய்வோனைக் குறிக்கும். இத் தொழிலினருட் புலவர்கள் பலர் இருந்தனரெனத் தொகை நூல்களால் அறியலாம். தத்தனார் என்பது இவரது இயற்பெயர். இவர் செய்யுளில் பாண்டியனையும் மதுரையையும் கூறுகிறார் (நற். 298);.

விற்றெனல்

 விற்றெனல் viṟṟeṉal, பெ. (n.)

   ஒர் ஒலிக்குறிப்பு (வின்.);; onom. expr. of whirring sound, as a stone whirled in the air.

விற்றொற்றிப்பரிக்கிரயம்

விற்றொற்றிப்பரிக்கிரயம் viṟṟoṟṟipparikkirayam, பெ. (n.)

   விற்றலும் ஒற்றி வைத்தலும் பண்டமாற்றுதலும்; sale, mortgage and exchange or barter.

     “விற்றொற்றிப்பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம்” (s.l.l.i.105);.

     [வில் → விற்று + ஒற்றி + பரிக்கிரயம். பரிக்கிரயம் = விற்பனை.]

விலஃகு-தல்

விலஃகு-தல் vilaḵkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

விலக்கு பார்க்க;see vilakku.

     “விலஃகி வீங்கிரு ளோட்டுமே…… முத்தினினம்” (நன். 90, உரை);.

     [விலகு → விலஃகு-,]

விலகு

விலகு1 vilagudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நீங்குதல்; to withdraw, to leave.

   2. பின்னிடுதல்; to recede.

   3. ஒதுங்குதல்; to step aside and give way.

   4. ஒழுங்கு தவறுதல்; to deviate from, to go astray, to err.

   5. இடம் விட்டுப் பெயர்தல்; to be dislocated, to fall out of position.

   6. பிரிதல்; to separate, to get away.

   7. அசைதல்; to move.

     “விலகு குண்டலத்தன்” (திவ். திருவாய். 8, 8, 1);.

   8. செல்லுதல்; to proceed, go.

     “விலகுஞ் சில வேழம்” (இரகு. யாகப். 19);.

   9. தூரத்தி லிருத்தல்; to be far off.

   10. மாதவிடாயாதல்; to be in menstrual periods.

   11. ஒளிவிடுதல் (வின்.);; to sparkle, shine.

 விலகு2 vilagudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. எறிதல் (பிங்.);; to throw, cast.

     “விலகிற் பிழையாச் சூலத்தே” (தக்கையாகப். 224);.

   2. விட்டு நீங்குதல்; to part from, separate from.

     ‘அவனை விலகிப் போ’.

விலக்கடி

விலக்கடி1 vilakkaḍi, பெ. (n.)

   1. விலக்கத் தக்கது; that which is prohibited.

     “இவ்வடியறியாதாரிறே உபயாந்தரங்களாகிய விலக்கடிகளிற் போகிறவர்கள்” (ஈடு. 4, 1, ப்ர.);.

   2. மாறானது; that which is contrary.

     “ஸம்ஸாரத்துக்கு விலக்கடி தேடிக் கொண்டு” (ஈடு. 1, 2, 8);.

   3. விலக்காக வுள்ளது; that which is an exception.

   4. தடை; obstacle, restraint, felter.

     “இதுக்கு வேறு விலக்கடியில்லை” (ஈடு. 6, 8, 1);.

   5. புறம்பாக்குகை (இ.வ.);; excom- munication, expulsion.

   6. பாதத்தைக் குறுக்கே வைத்தளக்கும் அடியளவு; linear measure, being the breadth of the human foot.

     “22 அடியும் ஒரு விலக்கடியுங் கொண்டது கம்பு” (Rd.);.

     [விலக்கு + அடி]

 விலக்கடி2 vilakkaḍi, பெ. (n.)

   சண்டையிடும் இருவர்க்கு விலக்குபவரால் உண்டாம் அடி (இ.வ);; blow given to two persons fighting with a view to separate them.

     [விலக்கு + அடி]

விலக்கணன்

விலக்கணன் vilakkaṇaṉ, பெ. (n.)

   சிறப்பியல் புடையவன்; one who has special or dis- tinguishing attributes esteemed person.

     “மிழலைமேய விலக்கணா” (தேவா.582, 9);.

     [இலக்கணன் → விலக்கணன்]

விலக்கணி

விலக்கணி vilakkaṇi, பெ. (n.)

   1. முன்ன விலக்கு (தண்டி. 43); பார்க்க;see {}, a figure of speech.

   2. வெளிப் படையான விலக்கை ஒரு சிறப்புக் கருத்தோடு சொல்வதாகிய அணி (அணியி. 98);; a figure of speech in which a well- known negation is stated with a special significance.

     [விலக்கு + அணி]

முன்ன விலக்கணி

     “முன்னத்தின் மறுப்பது முன்னவிலக்கே

மூவகைக் காலமும் மேவியதாகும்”

ஒரு பொருளைக் குறிப்பினால் விலக்கின் அது முன்னவிலக்கு என்னும் அணியாம். அஃது இறப்பு எதிர்வு, நிகழ்வு என்னும் மூவகைப்பட்ட காலங்களோடும் கூடியதாம். இம்முக்காலங்களைக் கூற்றொடுங் குறிப்பொருங் கூட்ட அறுவகையாம்.

எ.டு.

     “பாலன் றனதுருவா யேழுலகுன் – டாலிலையின்

மேலன்று கண்டுயின்றாய் மெய்யென்பர் – ஆலன்று

மேலைநீ ருள்ளதோ விண்னதோ மண்ணதோ

சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்”

விலக்கம்

விலக்கம்1 vilakkam, பெ. (n.)

   1. விலகி யிருக்கை; sparseness, as of plants placed apart, separation.

   2. மாதவிடாய்; menses.

   3. ஊரைவிட்டு நீங்குகை (வின்.);; desertion of a place.

     [விலகு → விலக்கு → விலக்கம்]

 விலக்கம்2 vilakkam, பெ. (n.)

   1. வழங்காமல் விலக்குகை; prohibition.

   2. விலக்கடி1, 5 (வின்.); பார்க்க;see {}.

     [விலக்கு → விலக்கம்]

விலக்கற்பாடு

விலக்கற்பாடு vilakkaṟpāṭu, பெ. (n.)

   ஒழிபு; restriction, exception.

     “இதனால் விலக்கற்பாடின்றி வேண்டியது செய்வர்” (குறள், 1073, உரை);.

     [விலக்கு- + பாடு1]

விலக்கியற்கூத்து

விலக்கியற்கூத்து vilakkiyaṟāttu, பெ. (n.)

   ஒருவகைக் கூத்து (தொல். பொ. 91, உரை);; a kind of dance.

     [விலக்கு + இயல்2 + கூத்து]

விலக்கியற்சூத்திரம்

விலக்கியற்சூத்திரம் vilakkiyaṟcūttiram, பெ. (n.)

   பொது வகையான் விதிக்கப் பட்டதனை அவ்வகையாகா தென்பது குறிக்கும் நூற்பா (யாப். வி. பாயி.1, பக்.11);; rule of exception from the operation of a general rule.

     [விலக்கு + இயல் + Skt. {} → த. சூத்திரம்]

விலக்கு

விலக்கு1 vilakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விலகச் செய்தல்; to turn aside, to divert, to avert, to prevent, to cause, to leave, to put out of the way.

     “விற்படை விலக்குவ” (சீவக. 567);.

   2. கூடாதென்று தடுத்தல்; to forbid, prohibit.

     “யாம் வேண்டேமென்று விலக்கவும்” (கலித். 94);.

   3. தடைசெய்தல்; to check, retard, obstruct.

     “விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினார்” (சீவக. 902);.

   4. அழுத்துதல்; to inset, fix.

     “வேல் விலக்கி” (திணை மாலை. 30);.

   5. மாற்றுதல் (பிங்.);; to change, to vary.

   6. வேலையினின்று தள்ளுதல்; to dismiss, as from a post.

   7. வேண்டாத வற்றை நீக்கிவிடுதல் (வின்.);; to eschew, discard, remove Irrelevent things.

   8. கண்டனம் செய்தல் (வின்.);; to repudiate, to controvert, to condemn.

   9. பிரித்தல்; to separate.

     ‘அவர்களைச் சண்டை செய்யாதபடி விலக்கு’.

 Ma. Villakkam;

 Ka., Te. Vilu.

     [விலகு → விலக்கு]

 விலக்கு2 vilakku, பெ. (n.)

   1. வேண்டாத தென்று ஒதுக்குகை; prohibition, injuction not to do a thing.

     “பிறனில் வேட்கை யின்னன விலக்கதா மே” (பிரபோத. 39, 16);.

   2. தனி; seclusion.

     ‘அவன் யாரோடுஞ் சேராது விலக்காயிருக்கிறான்’.

   3. சிறப்பு நெறியீடு; rule of exception.

     ‘இந்த நூற்பாவிற்கு விலக்கென்ன?’.

   4. தடை; hindrance, obstruction.

   5. விலக்குக் கருமம் பார்க்க;see {}.

     “விலக்கொடு பிராயச்சித்த மெனவைந்து வினைகள்” (பிரபோத.39,13);.

   6. ஐந் தொழில்களுள் வீரன்

   தன்மேல் வரும் அம்புகளைத் தடுக்கை (சீவக. 1676, உரை);; activity of a warrior in warding

 off arrows aimed at him, one of {}- kiruttiyam.

   7. மாதவிடாய்; menses.

   8. வழு (வின்.);; error, fault.

   9. விலக்கணி (தண்டி. 45, உரை); பார்க்க;see {}.

 Ma. Vilakkam;

 Te. vilu.

விலக்குச்சீட்டு

 விலக்குச்சீட்டு vilakkuccīṭṭu, பெ. (n.)

   ஒருவனை நீங்கிக் கொள்ளும்படியனுப்பப் படும் ஆணை (நாஞ், நா);; order to keep oneself away.

     [விலக்கு + சீட்டு]

விலக்குருவகம்

விலக்குருவகம் vilagguruvagam, பெ. (n.)

   உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத் தன்மை யில்லையென்ற விலக்கோடு கூடி வரும் உருவகவணி (தண்டி.36, உரை);; a kind of metaphor in which certain distinguishing features of the object of comparison are pointed out, as absent in the thing compared.

     [விலக்கு + உருவகம்]

     “வல்லி வதன மதிக்கு மதித்தன்மை

இல்லை யுளதே லிரவன்றி – எல்லை

விளக்கு மொளிவளர்த்து வெம்மையா லெம்மைத்

துளக்கு மியல்புளதோ சொல்” (தண்டி.36, உரை);

விலக்குறுப்பு

 விலக்குறுப்பு vilakkuṟuppu, பெ. (n.)

   நாடகவுறுப்புவகை (அபி.சிந்.); அவை பதினான்கு வகைப்படும்; a section in drama.

     [விலக்கு + உறுப்பு]

விலக்குவமை

விலக்குவமை vilakkuvamai, பெ. (n.)

   உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை (தண்டி. 31, உரை);; a kind of simile in which, with the object of praising the {}, certain characteristics absent in {} are pointed out as being present in the {}.

     [விலக்கு + உவமை]

பாரிபாரி யென்றுபல வேத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி யொருவனு மல்லன்

மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே

இதில் பாரிக்கு முகிலை உவமை கூறுதல் புலவர்க்குக் கருத்தன்று என்னும் கருத்தைக் குறிப்பாகக் கூறி உவமையை விலக்குதலால் இது விலக்குவமையாம். (தண்டி. 31, உரை);

விலங்கடி

விலங்கடி1 vilaṅgaḍi, பெ. (n.)

   மாட்டு நோய்வகை (மாட்டு.வை.);; a disease of cattle.

     [விலங்கு + அடு1 → அடி]

 விலங்கடி2 vilaṅgaḍittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   விலங்குமாட்டுதல்; to bind with fetters or handcuffs.

     “இருகால் விலங்கடியா தேவிடில்” (பஞ்ச. திருமுக. 1658);.

     [விலங்கு + அடி-,]

விலங்கன்

 விலங்கன் vilaṅgaṉ, பெ. (n.)

விலாங்கு பார்க்க;see {}.

     [விலங்கு → விலாங்கு → விலங்கன்]

விலங்கம்

விலங்கம் vilaṅgam, பெ. (n.)

விலங்கு, 4 (திவா.); பார்க்க;see {}.

     [விலங்கு → விலங்கம்]

விலங்கரசு

விலங்கரசு vilaṅgarasu, பெ. (n.)

   அரிமா; lion, as the king of beasts.

     “விலங்கரசனைய காளை” (சீவக. 2092);.

     [விலங்கு + அரசு2 ]

     [p]

விலங்கரம்

விலங்கரம் vilaṅgaram, பெ. (n.)

   வாளரவகை; a saw, especially for conch-shells.

     “விலங்கரம் பொரூஉம் வெள்விளை போழ்நரொடு” (மணிமே. 28, 44);.

     [விலகு → விலங்கு + அரம்1 ]

விலங்கல்

விலங்கல் vilaṅgal, பெ. (n.)

   1. குறுக்கா யிருக்கை; lying athwart or across.

   2. மலை; hill, mountain.

     “விலங்கண் மீமிசை” (மலைபடு. 298);.

   3. கலங்கனீர் (திவா.);; turbid water, puddle.

   4. பிரசயம் (தொல். எழுத். 88, உரை); பார்க்க;see {}; a tone occuring in a series of unaccented syllables following a svarita.

   5. பண்மாறி நரம்பிசைக்கை; abrubt change of the tune, change of tune from one to another, as on a stringed instrument.

     “காகுளி விலங்கல்” (திருவாலவா. 57, 26);.

     [விலங்கு → விலங்கல]

விலங்காண்டி

 விலங்காண்டி vilaṅgāṇṭi, பெ. (n.)

   வன்செயல் ஈடுபாடுடையவன்; savagery.

     [விலங்கு+ஆண்டி]

விலங்கி

விலங்கி vilaṅgi, பெ. (n.)

   வேலி (ஞான. 26, 5);; hedge, fence.

தெ. வெலுங்கு

     [விலங்கு → விலங்கி]

விலங்கினர்

விலங்கினர் vilaṅgiṉar, பெ. (n.)

   பகைவர்; enemies, foes.

     “விலங்கினர் தம்மை யெல்லாம் வேரொடும் விளியநூறி” (கம்பரா. மகேந்திர. 21.);.

     [விலங்கு → விலங்கினர்]

விலங்கியல்

 விலங்கியல் vilaṅgiyal, பெ. (n.)

   விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியியல்; zoology.

     [நிலைத்திணைகளும் விலங்குகளுமாகிய உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி உயிரியல் எனப்படும். விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சி விலங்கியலாகும். விலங்குகள் என்னும்போது நாம் நாற்கால் விலங்குகள் மயிர்ப் போர்வையுள்ள

பாலூட்டிகள், இறகுப் போர்வையுள்ள பறவைகள், செதிற் போர்வையுள்ள ஊர்வன, நீரில் வாழும் தவளைகள் ஆகியவற்றை மட்டும் குறிப்பதில்லை. மீன்கள், பூச்சிகள், தேள், புழு, நத்தை, ஒரணு உயிரிகள் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கிறோம். சுருங்கச் சொல்லின் நிலைத்திணை உயிரின் அல்லாத எல்லா உயிருடைப் பொருளும் விலங்கேயாகும். நிலைத்திணை உயிரிகள் தமக்கு வேண்டிய உணவைத் தாமே நிறைவு செய்து கொள்ளக்கூடிய ஆற்றலுள்ளவை. விலங்குகள் என்பவை நிலைத்திணை உயிரிகளிலிருந்து அல்லது வேறு விலங்குகளிலிருந்து தமக்கு வேண்டிய உணவைப் பெறுபவை. இந்தப் பண்பினாலே விலங்குகளை எளிதில் வேறுபடுத்தி யுணர்ந்து கொள்ளலாம்.]

     [விலங்கு → விலங்கியல்]

விலங்கு

விலங்கு1 vilaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குறுக்கிடுதல்; to lie athwart, to be transverse.

     “ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை” (கலித். 2);.

   2. மாறுபடுதல்; to change, become different.

     “விலங்கானே னாதலினால் விலங்கினேன்” (கம்பரா. சடாயு. 22);.

   3. விலகு-, 1, 2, 3, 5, 6 பார்க்க;see vilagu-.

     “பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது” (திருக்கோ. 150, உரை);.

   4. விலகு-, 4 பார்க்க;see vilaցս.

     “வாவெனச் சென்றாய் விலங்கினை” (கலித். 84);.

   5. விலகு-, 11 பார்க்க;see vilagu.

     “வில்விலங்கிய வீரரை” (கம்பரா. பிரமாத். 60);.

     [வில் → விலகு → விலங்கு]

 விலங்கு2 vilaṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. தடுத்தல்; to hinder, obstruct.

     “விலங்குந ரீங்கில்லை வெள்வேலோய்” (பு.வெ.12. பெண்பாற். 19);.

   2. களைதல் (பிங்.);; to pluck, pull up and remove.

   3. கொல்லுதல்; to slay.

     “கழல் வேந்தர் படைவிலங்கி” (பு.வெ.7, 15, கொளு.);.

   4. அழித்தல்; to destroy.

     “ஒரு வரங்கொண்டு விலங்கென….. அவனுருவு திரித்திட்டோன்” (பரிபா. 5, 31);.

   5. எறிதல் (அக.நி.);; to throw.

   6. செலவிடுதல் (அக.நி.);; to let pass.

     [வில் → விலகு → விலங்கு]

 விலங்கு3 vilaṅgu, பெ. (n.)

   1. குறுக்கானது; that which is transverse, across or crosswise.

     “விலங்ககன்ற வியன்மார்ப” (புறநா. 3);.

   2. மாவும் புள்ளும்; beast or bird, as having their bodies not erect but horizontal.

     “விலங்கு மக்களும் வெருஉப்பகை நீங்கும்” (மணிமே. 12, 95);.

     “விலங்கானே னாதலினால் விலங்கினேன்” (கம்பரா. சடாயு. 22);.

   3. மான்; deer.

     “விலங்கு மலைத்தமைந்த….. நாட்டத்து” (மலைபடு. 45);.

   4. கை கால்களில் மாட்டப்படுந் தளை (சூடா.);; fetters, shackles, manacles.

   5. வேறுபாடு; difference.

     “விலங்கோரார் மெய் யோர்ப்பின்” (கலித். 52);.

   6. தடை; obstruction, hindrance.

     “இந்த வினையுடல் விலங்காகும்” (ஞானவா. லீலை. 34);.

   7. உயிர் மெய்யெழுத்துக்களில் இ, ஈ, உ, ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலுங் கீழுமுள்ள வளைவு (தொல். எழுத்.17, உரை);; curve added to a consonant, above or below as the symbol of the vowel i or {} or u or {}.

   8. குன்று (அரு.நி.);; hill.

   9. விலங்கல், 4 (பி.வி. 40, உரை); பார்க்க;see {}.

     ‘விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல’ (பழ.);.

 விலங்கு4 vilaṅgu, பெ. (n.)

   உடல் (திவ். திருச்சந். 56, வ்யா. பக். 162);; body, as fettering the soul.

விலங்குகதி

 விலங்குகதி vilaṅgugadi, பெ. (n.)

   நால்வகை நிலைகளுள் ஒன்றான விலங்குநிலை; birth as living being a stage in the transmigration of souls, one of {}, q.v.

     [விலங்கு + கதி = உயிர்கள் தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி என நான்கு நிலைகளாக எடுக்கும் பிறப்பு]

விலங்குக்காட்சித்தோட்டங்கள்

 விலங்குக்காட்சித்தோட்டங்கள் vilaṅgukkāṭcittōṭṭaṅgaḷ, பெ. (n.)

   உயிர்க்காட்சிச் சாலை; zoological park.

     [காணக் கிடைக்காதனவும், பழக்கமில்லா தனவும், குறிப்பாகக் காட்டில் வாழ்பவனவுமான பல விலங்குகளை உயிருடன், அவற்றின் வாழ்விற்குத் தகவான எந்துகளுடன் பாதுகாத்து வைக்கப்பெறும் இடங்கள். பெரும்பாலும் பல பொருட்காட்சிச் சாலைகளின் தொழில்களுள் பலவற்றை இவையும் செய்கின்றன. இவை பொதுவாக எல்லோருக்கும், முதன்மையாகச் சிறுவர்களுக்கும் ஆங்குச் சேகரித்து வைத்துள்ள விலங்கினங்களின் பழக்க வழக்கங்களையும், அவற்றின் உணவு வகைகள், பிறப்பு, வளர்ச்சி முதலியவற்றையும் நேர்முகமாக அறியக்கூடிய வாய்ப்பைத் தருகின்றன. இவற்றால் மக்கள் விலங்கினங்களை உயிரோடு கண்டு, அவற்றோடு பழக வாய்ப்பு உண்டு. நாட்டுப்புற மக்களொடு நகர மக்களும் இவற்றைக் காணப் பெரிதும் விரும்புகின்றார்கள். உலகத்தின் பல்வேறுபட்ட பல மூலை முடுக்குகளில் உள்ளவற்றை ஒன்றாக ஒரே இடத்தில் காண இத்தோட்டங்கள் வாய்ப்பாகின்றன. பெருக்கமின்றித் தொகையில் குன்றி அற்றுப்போகும் நிலையிலிருந்து வரும் விலங்கினங்களை இந்நிலையங்கள் காப்பாற்று கின்றன. இவை அறிவியலுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. விலங்கினங்களுள் ஏதேனும் ஒருவகை படைப்புக் குன்றுமாயின், உலகத்துள் எந்த ஆற்றலாலும் அவற்றை மறுபடியும் படைக்க இயலாது. இவை விலங்கினங்கள் தாமாகவும், தன்னுரிமை யாகவும், அச்சமின்றியும் இயற்கையாக வாழ வசதியளிக்கப்பட்ட பெரு வியப்புச் சாலைகளாகும். இவையும் ஒருவகையில் விலங்கினக் கண்காட்சிச் சாலைகளே. இவை பல திறப்பட்டவைகளும், குன்றி வருவனவுமான காடுறை விலங்கினங்களின் பெருக்கம் குன்றாமல் வளர உதவுகின்றன.

இறுதியாக, இவ்வகையானெல்லாம் விலங்கினக் கண்காட்சி சாலைகளில் விலங்

கினங்களைப் பற்றி அணியமாக்கப்பட்ட குறிப்புகள், அவற்றைப் பற்றிய அறிவு வளரப் பெரிதும் உதவுகின்றன. மேற்படி காட்சிச் சாலைகளில் விலங்கினங்கள் உயிரோடு வளர்க்கப்பட்டு வருவதனால், விலங்கினங்களின் உடலமைப்பு, மனநிலை, ஒலி, குரல், நடவடிக்கைகள், உணவு, அவற்றை உண்பிக்கும் முறை, இனப்பெருக்கம், காதல், தாய்மை, அகவை, நோய், இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குக் காட்சிச் சாலைகள் சிறந்த கருவியாகின்றன]

விலங்குச்சுழி

 விலங்குச்சுழி vilaṅguccuḻi, பெ. (n.)

   உடையவனைச் சிறைப் புகுத்துவதாகக் கருதப்படும் மாட்டின் முதுகுச் சுழி; involuted curls on the back of cow or ox, as portending imprisonment to its owner.

     [விலங்கு + சுழி]

விலங்குநர்

விலங்குநர் vilaṅgunar, பெ. (n.)

   1. விலகி யிருப்பவர்; those who stand off.

   2. விலக்குபவர்; those who obstruct or cause to turn aside or seperate.

     “விலங்குந ரீங்கில்லை” (பு.வெ.12, பெண்பாற், 19);.

     [விலகு → விலங்கு → விலங்குநர்]

விலங்குபாய்-தல்

விலங்குபாய்-தல் vilaṅgupāytal,    5 செ.கு.வி. (v.i.)

   குறுக்குப்பாய்தல்; to jump aside or across.

     “விலங்குபாய்வன….. கலிமா” (சீவக. 1770.);.

     [விலங்கு + பாய்-,]

விலங்குபோடு-தல்

விலங்குபோடு-தல் vilaṅgupōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

, 19 செ.குன்றாவி. (v.t.);

   கைகால்களில் தளையிடுதல்; to handcuff, put in chains or felleis.

     [விலங்கு + போடு-,]

     [p]

விலங்கூண்

 விலங்கூண் vilaṅāṇ, பெ. (n.)

   விலங்குகட்கு உணவிடும் அறச் செயல் (சூடா.);; feeding animals, considered an act of charity.

     [விலங்கு + ஊண்]

விலத்தல்

 விலத்தல் vilattal, பெ. (n.)

   நீங்குகை (யாழ்.அக.);; separation.

     [விலகு → விலத்து → விலத்தல்]

விலத்தி

 விலத்தி vilatti, பெ. (n.)

   நெருக்கமின்மை; sparseness, being not close.

     ‘இந்த ஆடையில் நூலிழை விலத்தியா யிருக்கிறது’.

     [விலத்து-, → விலத்தி]

விலத்து-தல்

விலத்து-தல் viladdudal,    5 செ.குன்றாவி. (v.t.)

விலக்கு (யாழ்.அக.); பார்க்க;see vilakku.

     [விலக்கு → விலத்து-,]

விலர்

விலர் vilar, பெ. (n.)

   மரவகை; a kind of tree.

     ‘விலர்ங்கோடு’ (தொல். எழுத். 363, உரை);.

விலவில-த்தல்

விலவில-த்தல் vilavilattal,    11 செ.கு.வி. (v.i.)

   1. மிகநடுங்குதல்; to tremble exceedingly.

     “கொக்கு வல்லூறுகண் டென்ன விலவிலத்து” (தனிப்பா.i, 171,23);.

   2. மிகவும் வலுவிழத்தல்; to become extremely weak.

     ‘பசியால் கை கால்கள் விலவிலத்துப் போயின’.

   3. நெருக்க மின்றியிருத்தல்; to be sparse, not close.

     ‘இந்தத் துணி விலவிலவென்று என்று உள்ளது’ (உ.வ.);.

 Ma. vilakkam;

 Ka. (vili. vilivilisu);;

 Te. Vilavila;

 Kui. vida.

விலவு

விலவு1 vilavu, பெ. (n.)

விலா பார்க்க;see {}.

     “விலவறச் சிரித்திட்டேனே” (திவ். திருமாலை. 34);.

     [விலா → விலவு]

ஒ.நோ. நிலா → நிலவு

 விலவு2 vilavudal,    5 செ.கு.வி. (v.i.)

விலாவி-, பார்க்க;see {}.

     “விலவித் தவித்தேனை விழித்தொருகாற் பாராயோ” (தனிப்.);.

விலா

விலா vilā, பெ. (n.)

   1. மார்பின் பக்கம்; sides of the chest in body.

     “கழுகும் பாறும் விலா விற்றுக் கிடந்தவன்றே” (சீவக. 804);.

   2. விலாவெலும்பு பார்க்க;see {}.

ம. விலாவு.

     [வில் → விலா]

விலாக்குடை

விலாக்குடை vilākkuḍai, பெ. (n.)

விலா,1 (நெல்லை); பார்க்க;see {}.

     [விலா + குடை]

விலாக்குறிப்பு

 விலாக்குறிப்பு vilākkuṟippu, பெ. (n.)

   பொத்தகப் பக்கங்களின் யாதானுமொரு மருங்கிடுங் குறிப்பு (இக்.வ.);; marginal note.

     [விலா + குறிப்பு]

விலாக்கூடு

 விலாக்கூடு vilākāṭu, பெ. (n.)

   மார்புக்கூடு (இ.வ.);; chest.

     [விலா + கூடு]

விலாக்கொடி

 விலாக்கொடி vilākkoḍi, பெ. (n.)

   விலாவெலும்பு (யாழ்.அக.);; rib.

     [விலா + கொடி]

விலாங்கு

விலாங்கு vilāṅgu, பெ. (n.)

   பழுப்பு வண்ணமும் நான்கு அடி வளர்ச்சியும் உள்ள பாம்பு போன்ற மீன்வகை (பதார்த்த. 940);; eel, brownish, attaining more than 4 ft. in length.

     [விலங்கு → விலாங்கு]

     [p]

விலாசம்

விலாசம் vilācam, பெ. (n.)

   1. வாழை (அரு.நி.);; plantain.

   2. நீபம்1, 1,2,3,4 (அரு.நி.); பார்க்க;see nibam.

விலாசம் மெட்டு

 விலாசம் மெட்டு vilācammeṭṭu, பெ. (n.)

   தெருக்கூத்தில் இடம்பெறும் ஒரு வகையான மெட்டு; a melody type take part in street dance.

     [விலாசம்+மெட்டு]

விலாசு

விலாசு1 vilācudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அழகுற அணிதல் (சரப. குற. 32, 3, உரை);; to put on attractively.

 விலாசு2 vilācudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. முற்றுந் தோல்வியுறச் செய்தல்; to rout, to defeat out and out, as in a discussion.

     ‘வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான்’

   2. வலுவாக அடித்தல்; to beat soundly or strongly.

     ‘சண்டையில் நன்றாக விலாசி விட்டான்’ (இ.வ.);.

     [விளாசு → விலாசு-,]

விலாச்சுழி

 விலாச்சுழி vilāccuḻi, பெ. (n.)

   விலாவைச் சுருட்டியிழுக்கும் ஒருவகை நுரையீரல் நோய் (M.L.);; rapid respiration producing flattening of the chest-walls in flanks a lung disease.

     [விலா + சுழி]

விலாடன்

 விலாடன் vilāṭaṉ, பெ. (n.)

   குற்றவாளியிடம் கைப்பற்றிய நிலம்; land embezzed from the culprit.

     “நீலபாடி எல்லை இன்னும் விலாடன் குற்றெத்தத் தெல்லை” (பா.செ.ப.);.

 விலாடன் vilāṭaṉ, பெ.(n.)

   குற்றவாளியிடம் கைப்பற்றிய நிலம்; land embezzled from the culprit.

     “நீலபாடி எல்லை இன்னும் விலாடன் குகற்றெத்தத் தெல்லை.” (பா.செ.ப.);.

     [வில்+ஆடன்]

விலாடி-த்தல்

விலாடி-த்தல் vilāṭittal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. எண்ணை பிரித்தல் (இ.வ);; to seperate.

   2. வரி முதலியன இரட்டை மடங்கு கொடுத்தல் (வின்.);; to pay doubly, tribute or tax etc.

   3. பல மடங்கு கொடுத்தல்; to pay manifold.

     ‘ஒன்றுக்கு ஐந்தாக விலாடிக் கொடுப்பா யானால் கடன் கொடுப்பேன்’ (இ.வ.);.

விலாத்தோரணம்

 விலாத்தோரணம் vilāttōraṇam, பெ. (n.)

விலாவெலும்பு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விலா + தோரணம்]

விலாப்பாரிசம்

விலாப்பாரிசம் vilāppārisam, பெ. (n.)

விலா 1 பார்க்க;see {}.

     [விலா + பாரிசம்]

விலாப்புடை

விலாப்புடை vilāppuḍai, பெ. (n.)

விலா 1 பார்க்க;see {}.

     “விலாப்புடை பெரிதும் வீங்க” (சீவக. 400);.

     [விலா + புடை3 ]

விலாப்புடைத்தல்

 விலாப்புடைத்தல் vilāppuḍaittal, பெ. (n.)

   உண்ட உணவின் நிறைவால் இருபக்கமும் விலாப்புறம் வீங்குகை (வின்.);; bulging out of the nib sides, as when the stomach is full.

     ‘விருந்தில் விலாப்புடைக்க வுண்டான்’ (உ.வ.);.

     [விலா + புடைத்தல்]

விலாப்புறம்

விலாப்புறம் vilāppuṟam, பெ. (n.)

விலா 1 பார்க்க;see {}1.

     “இரு விலாப்புறத்தும்” (கொக்கோ, 2, 12);.

     [விலா + புறம்]

விலாமிச்சு

 விலாமிச்சு vilāmiccu, பெ. (n.)

விலாமிச்சை பார்க்க;see {}.

விலாமிச்சை

விலாமிச்சை vilāmiccai, பெ. (n.)

இலாமிச்சை (பதார்த்த. 996); பார்க்க;see {}.

 white cuscus grass.

     [இலாமிச்சை → விலாமிச்சை]

விலாம்பிச்சை

 விலாம்பிச்சை vilāmbiccai, பெ. (n.)

விலாமிச்சை (வின்.); யின் மறுவழக்கு.

விலாய்

விலாய் vilāy, பெ. (n.)

   1. துன்பம் (யாழ்.அக.);; trouble, suffering.

   2. சண்டை (நாஞ்.சா);; quarrel.

விலாரி

விலாரி vilāri, பெ. (n.)

   1. வெள்ளைக்கடம்பு பார்க்க;see {},

 bridal- couch plant.

   2. நீண்ட செடிவகை; jamaica switch sorrel.

விலாளம்

விலாளம் vilāḷam, பெ. (n.)

   1. பூனை (பிங்.);; cat.

     “அலமரு விலாளத்தைப் பார்த்து” (விநாயகபு. 26, 35);.

   2. ஆண்பூனை (திவா.);; tom-cat.

     [விடாரம் → விலாளம்]

விலாழி

விலாழி vilāḻi, பெ. (n.)

   1. குதிரையின் வாய் நுரை; foam from a horse’s mouth.

     “நீங்கா விலாழிப் பரித்தானை” (பு.வெ.4, 22.);.

   2. யானைத் துதிக்கை யுமிழ் நீர் (சூடா.);; spittle or exudation from an elephant’s trunk.

     “அங்கையின் விலாழி யாக்கி” (தாயு. மெளன. 1.);.

விலாவலக்கு

விலாவலக்கு vilāvalakku, பெ. (n.)

விலாவெலும்பு பார்க்க;see {}.

     “விலாவலக்குக…. அடிக்கடி சிரித்தன” (கலிங். 216);.

     [விலா + அலக்கு = எலும்பு]

விலாவி-த்தல்

விலாவி-த்தல் vilāvittal,    11 செ.கு.வி. (v.i.)

   அழுதல்; to bewail, lament.

     “முதுநகர் விலாவிக்கின்றதே” (சீவக. 1092);.

விலாவெலும்பு

 விலாவெலும்பு vilāvelumbu, பெ. (n.)

   மார்பின் பக்கவெலும்பு;   குறுக்கெலும்பு; rib.

மறுவ. விலாக்கூடு.

     [விலா + வெலும்பு]

விலாவொடி

விலாவொடி1 vilāvoḍi, பெ. (n.)

   விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு; side-splitting laughter.

     “வெள்ளை கண்டன வணிவாராகி….. விலாவொடி யாக்கினாரால்” (திருவாலவா. 38, 48);.

     [விலா + ஒடி]

 விலாவொடி2 vilāvoḍittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. கடுமையாக வேலை வாங்குதல்; to extract hard work from.

   2. பெருஞ் சிரிப்பு மூட்டுதல்; to cause side- splitting laughter.

     “வீதியினுறுமவர் தங்களை விலாவொடிப்பும்” (திருவாலவா.54,22);.

     [விலா + ஒடி-,]

விலூபன்னிவிழு

விலூபன்னிவிழு vilūpaṉṉiviḻu, பெ. (n.)

   1. பெருங்குரும்பை (மலை.); பார்க்க;see {}.

   2. கிலுகிலுப்பை, 2,3 (மலை.); பார்க்க;see kilu-kilubbai.

விலை

விலை vilai, பெ. (n.)

   1. விற்கை (சூடா.);; selling, sale.

   2. விலைத்தொகை; price, cost, value in exchange.

     “யாரும் விவைப் பொருட்டா லூன்றருவா ரில்” (குறள், 256.);.

   3. மதிப்பு; value.

     “விலையுடைக் கூறை போர்க்கு மொற்றர்” (தேவா. 1082, 9);.

     [வில் → விலை]

விலைகட்டு-தல்

விலைகட்டு-தல் vilaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   விலை மதிப்பை (பெறுமானத்தொகை); உறுதிப்படுத்துதல் (வின்.);; to set or fix a price.

     [விலை + கட்டு-,]

விலைகாரன்

விலைகாரன் vilaikāraṉ, பெ. (n.)

   பெறுமானத் தொகையைக் கொடுத்துப் பண்டங்கொள்வோன் (யாழ்.அக.);; purchaser.

     [விலை + காரன்1]

விலைகூறு-தல்

விலைகூறு-தல் vilaiāṟudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. பண்டத்தின் விலையைச் சொல்லுதல்; to tell the product price.

   2. விற்பதாக கூவிச் சொல்லுதல்; to offer for sale publicly, by crying out.

     “மீன்களை … விலைகூறி விற்ற… மீன் பிடிப்பார்” (மதுரைக். 256, உரை);.

     [விலை + கூறு-,]

விலைகூவு-தல்

விலைகூவு-தல் vilaiāvudal,    5 செ. குன்றாவி. (v.t.)

விலைகூறு-, 2 பார்க்க;see {}.

     [விலை + கூவு-,]

விலைகொடுத்துயிர்காத்தல்

 விலைகொடுத்துயிர்காத்தல் vilaigoḍuttuyirgāttal, பெ. (n.)

   கொல்லப்படும் விலங்குகளைப் பணங் கொடுத்து உயிர் மீட்கும் அறச்செயல் (பிங்.);; saving a life by payment of ransom, considered as an act of charity.

     [விலை + கொடு-, + உயிர்காத்தல்]

விலைகொள்

விலைகொள்1 vilaigoḷḷudal,    16 செ. குன்றாவி.(v.t.)

   விலைக்கு வாங்குதல்; to buy, purchase.

     [விலை + கொள்-,]

விலைகோள்

விலைகோள் vilaiāḷ, பெ. (n.)

   1. விலை மதிப்புப் பெறுகை; worthiness.

   2. சிப்பி முத்தின் குணங்களுள் ஒன்று (திருவாலவா. 25, 16);; a characteristic quality of pearls.

     [விலைகொள் → விலைகோள்]

விலைக்கணிகை

விலைக்கணிகை vilaiggaṇigai, பெ. (n.)

   பொதுமகள்; harlot, prostitute.

     “மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை” (பரிபா. 20,49.);.

மறுவ. விலைமாது, விலைமகள், விலைநலப் பெண்டிர், பரத்தை, பொது மகளிர்.

     [விலை + கணிகை]

விலைக்கழிவு

 விலைக்கழிவு vilaikkaḻivu, பெ. (n.)

   வாங்கிய விலையில் தள்ளுபடியாவது (இக்.வ.);; discount in sale price.

     [விலை + கழிவு]

விலைக்காமர்

விலைக்காமர் vilaikkāmar, பெ. (n.)

   விலைமகள்; harlots.

     “காமனார்புரம் விலைக்காமர் வீதியே” (இரகு. நகரப். 8);.

     [விலை + காமம் → காமர்]

விலைக்காரன்

 விலைக்காரன் vilaikkāraṉ, பெ. (n.)

விலைகாரன் (வின்.); பார்க்க;see {}.

     [விலை + காரன்]

விலைக்கிரயச்சீட்டு

 விலைக்கிரயச்சீட்டு vilaikkirayaccīṭṭu, பெ. (n.)

   விலையாவணம்; sale deed.

     [விலை + கிரயம் + சீட்டு. கிரயம் = உருது]

விலைக்கிரயம்

 விலைக்கிரயம் vilaikkirayam, பெ. (n.)

   பெறுமணத் தொகை (வின்.);; selling price.

மறுவ. விலைமதிப்பு.

     [விலை + கிரயம்]

விலைக்குறி-த்தல்

விலைக்குறி-த்தல் vilaikkuṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   விலைமதித்தல்; to estimate the price.

     [விலை + குறி-,]

விலைக்கொள்(ளு)-தல்

விலைக்கொள்(ளு)-தல் vilaikkoḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   அதிக விலையுடையதாதல்; to be costly or valuable, to be at prohibitive cost.

     [விலை + கொள்-,]

விலைசளை-த்தல்

விலைசளை-த்தல் vilaisaḷaittal,    4 செ.கு.வி. (v.i.)

   விலைகுறைதல்; to decrease or fall in price.

     [விலை + சளை-,]

விலைசவு-த்தல்

விலைசவு-த்தல் vilaisavuttal,    4 செ.கு.வி. (v.i.)

விலைசளை-, பார்க்க;see {}.

     [விலை + சவு-,]

விலைசிராவணை

விலைசிராவணை vilaisirāvaṇai, பெ. (n.)

விலைத்தீட்டு பார்க்க;see {}.

     “சங்கரதேவற்கு இறையிழித்துவிற்று விலைசிராவணை செய்து கொடுத்தோம்” (S.I.I.iii.105);.

     [விலை + சீராவணம் → சிராவணை]

விலைச்சரக்கு

 விலைச்சரக்கு vilaiccarakku, பெ. (n.)

   விலைப்படுத்த வைத்திருக்கும் பண்டம்; products or goods or articles kept ready for sale.

மறுவ. விலைப்பண்டம்.

     [விலை + சரக்கு]

விலைச்சேரி

விலைச்சேரி vilaiccēri, பெ. (n.)

   பலபண்டம் விற்குமிடம்; bazaar, market, fair.

     “பல்விலைவாணிகர் நல்விலைச் சேரி” (பெருங். மகத. 3, 77);.

மறுவ. அங்காடி, சந்தை.

     [விலை + சேரி]

விலைஞன்

விலைஞன் vilaiñaṉ, பெ. (n.)

   1. விற்பவன்; seller.

     “மைந்நிண விலைஞர்” (மணிமே. 28, 33);.

   2. வணிகன் (சது.);; merchant.

     [விலை → விலைஞன்]

விலைதீர்-தல்

விலைதீர்-தல் vilaitīrtal,    4 செ.கு.வி. (v.i.)

   விலை உறுதியாதல் (வின்.);; to settle or confirm the price.

     [விலை + தீர்-,]

விலைத்தண்டம்

 விலைத்தண்டம் vilaittaṇṭam, பெ. (n.)

   பழைய வரிவகை (Insc.);; an ancient tax.

     [விலை + தண்டம்]

விலைத்தரம்

 விலைத்தரம் vilaittaram, பெ. (n.)

   நெல்வரியை கைப்பண வரியாக மாற்றிவந்த பணவரி (நாஞ். நா.);; commuted value of paddy tax.

விலைத்தரவு

விலைத்தரவு vilaittaravu, பெ. (n.)

   விலையாவணம் (S.I.I.viii, 357);; sale deed.

     [விலை + தரவு]

விலைத்தீட்டு

விலைத்தீட்டு vilaittīṭṭu, பெ. (n.)

   விலையோலை; sale-deed.

     “சாத்தனது விலைத்தீட்டு” (தொல். சொல். 81, உரை);.

     [விலை + தீட்டு]

விலைத்துண்டு

விலைத்துண்டு vilaittuṇṭu, பெ. (n.)

   1. சிற்றூர்களில் சில்லறையாக விற்கும் நெல்விலைக்கும் மதிப்பு விலைக்குமுள்ள வேறுபாட்டை ஈடு செய்வதற்காகக் குடிவாரத்திலிருந்து மேல்வாரத்தாருக்குச் செலுத்தும் அதிக வரி; a charge paid out of the {} by cultivators to the {} or to the government on account of the difference between the price at which the cultivators had sold their grain and the estimated retail prices at the place of sale.

   2. அடக்கவிலைக்கும் விற்கிற விலைக்குமுள்ள வேறுபாட்டால் நேரும் இழப்பு (இ.வ.);; loss due to the difference between the sale price and the cost price.

     [விலை + துண்டு]

விலைத்தூக்கம்

 விலைத்தூக்கம் vilaittūkkam, பெ. (n.)

விலையேற்றம் பார்க்க;see {}.

     ‘நல்லெண்ணெய் விலை தூக்கமாக இருக்கிறது’.

     [விலை + தூக்கு → தூக்கம்]

விலைநலப்பெண்டிர்

விலைநலப்பெண்டிர் vilainalappeṇṭir, பெ. (n.)

   பரத்தையர்; harlots.

     “விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற” (புறநா. 365);.

     [விலை + நலம் + பெண்டிர்]

விலைபெறு-தல்

விலைபெறு-தல் vilaibeṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தக்க விலை பெறுதல்; to be worth, a good price.

     “நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉம்” (நாலடி,115);.

   2. விலை போ-, பார்க்க;see {}.

   3. மதிப்பு மேம்படுதல்; to be valued high.

     [விலை + பெறு-,]

விலைபேசு-தல்

விலைபேசு-தல் vilaipēcudal,    9 செ.குன்றாவி. (v.t.)

   விலைப்பற்றி உசாவுதல்; to bargain or discuss the price of, to negotiate price.

     [விலை + பேசு-,]

விலைபொருந்து-தல்

விலைபொருந்து-தல் vilaiborundudal,    5 செ.கு.வி. (v.i.)

   விலை தகுதியாதல் (வின்.);; to be worth the price.

     [விலை + பொருந்து-,]

விலைபோ-தல்

விலைபோ-தல் vilaipōtal,    9 செ.கு.வி. (v.i.)

   விலையாதல்; to fetch a price.

     ‘நல்ல மாடானால் உள்ளூரிலே விலை போகாதா?’.

     [விலை + போ-,]

விலைபோடு-தல்

விலைபோடு-தல் vilaipōṭudal,    9 செ.கு.வி. (v.i.)

   விலைத்தொகை குறித்தல் (வின்.);; to estimate or fix a price.

     [விலை + போடு-,]

விலைப்படு-தல்

விலைப்படு-தல் vilaippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   விலையாதல்; to be sold.

     [விலை + படு-,]

விலைப்பட்டி

விலைப்பட்டி vilaippaṭṭi, பெ. (n.)

   1. விற்ற பண்டங்களின் விலைக் குறிப்பு; list of prices, invoice.

   2. விற்பனைக் கணக்கு; sales account.

     [விலை + பட்டி, பட்டி = அட்டவணை, அட்டவணைக்குறிப்பு.]

விலைப்பணம்

 விலைப்பணம் vilaippaṇam, பெ. (n.)

   விலைத்தொகை (வின்.);; price money.

     [விலை + பணம்]

விலைப்பண்டம்

 விலைப்பண்டம் vilaippaṇṭam, பெ. (n.)

விலைச்சரக்கு பார்க்க;see vilai-c-carakku.

     [விலை + பண்டம்]

விலைப்பருவம்

விலைப்பருவம் vilaipparuvam, பெ. (n.)

   1. விலையின் நிலைமை (யாழ்.அக.);; position of the market.

   2. விலையாகும் காலம்; time of sale.

     [விலை + பருவம்]

விலைப்பலி

விலைப்பலி vilaippali, பெ. (n.)

   பயன்கருதித் தெய்வங்கட்கிடும் படையல்; sacrificial offering given to deities, with a view to gaining their favour.

     “விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகை” (சிலப். 12, 43);.

     [விலை + பலி]

 Skt. Bali → த. பலி.

விலைப்பிரமாணக்கச்சாத்து

விலைப்பிரமாணக்கச்சாத்து vilaippiramāṇakkaccāttu, பெ. (n.)

விலைத்திட்டு பார்க்க;see {}.

     [விலைப்பிரமாணம் + கச்சாத்து. கச்சாத்து = பற்றுச்சீட்டு]

 Skt. {} → த. பிரமாணம்

விலைப்பிரமாணம்

__,

பெ. (n.);

விலைத்தீட்டு (S.I.I.i, 104); பார்க்க;see {}.

     [விலை + பிரமாணம்]

 Skt. {} → த. பிரமாணம்.

விலைப்பிரமாணவிசைவுதீட்டு

விலைப்பிரமாணவிசைவுதீட்டு vilaippiramāṇavisaivutīṭṭu, பெ. (n.)

விலைத்தீட்டு (S.I.I.iv, 127); பார்க்க;see {}.

     [விலைப்பிரமாணம் + இசைவுச்சீட்டு → இசைவுதீட்டு. இசைவுதீட்டு = ஒப்புகை ஆவணம்.]

 Skt. {} → த. பிரமாணம்.

விலைப்போ-தல்

விலைப்போ-தல் vilaippōtal,    8 செ.கு.வி. (v.i.)

விலைபோ-, பார்க்க;see {}.

     [விலை + போ-,]

விலைமகள்

விலைமகள் vilaimagaḷ, பெ. (n.)

   பரத்தை; harlot.

     “விலைமக ளனைய நீயும் கல்லிய லாதி யென்றான்” (கம்பரா. அகலி. 79);,

     ‘விலைமகட்கு அழகு தன்மேனி மினுக்குதல்’ (பழ.);.

மறுவ. பொதுமகள்.

     [விலை + மகள்]

விலைமதிப்பு

 விலைமதிப்பு vilaimadippu, பெ. (n.)

   விலை மதிப்பிடுகை; estimate of price.

     [விலை + மதிப்பு]

விலைமாதர் கும்மி

 விலைமாதர் கும்மி vilaimātarkummi, பெ. (n.)

பரத்தையர் வாழ்வியல் தொடர்பான கும்மி,

 a dance performed by clapping hands which says the life of whores.

     [விலை+மாதர்+கும்மி]

விலைமாது

 விலைமாது vilaimātu, பெ. (n.)

விலைமகள் பார்க்க;see {}.

     [விலை + மாது]

விலைமானம்

 விலைமானம் vilaimāṉam, பெ. (n.)

விலைமதிப்பு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விலை + மானம்]

விலைமேவு-தல்

விலைமேவு-தல் vilaimēvudal,    10 செ.கு.வி. (v.i.)

   1. விலையை ஒத்துக் கொள்ளுதல் (வின்.);; to agree the price.

   2. எளிதாக விலையாதல்; to be easily saleable.

     [விலை + மேவு-,]

விலையருத்தம்

 விலையருத்தம் vilaiyaruttam, பெ. (n.)

   விலைப்பணம் (நாஞ்.நா);; purchase money.

     [விலை + Skt. artha → த. அருத்தம்]

விலையாட்டி

விலையாட்டி vilaiyāṭṭi, பெ. (n.)

   பண்டம் விற்பவள்; trades woman.

     “கள் விலையாட்டி” (சிலப். 12, உரை, பக். 320);.

     [விலை + ஆட்டி. ஆட்டி = பெண்பாலீறு. ஒ.நோ. மூதாட்டி.]

விலையாளன்

 விலையாளன் vilaiyāḷaṉ, பெ. (n.)

   விலைகூறி பண்டம் விற்போன் (வின்.);; seller, dealer, merchant.

     [விலை + ஆள் → ஆளன்.]

விலையாள்

விலையாள் vilaiyāḷ, பெ. (n.)

   அடிமை; slave.

     “விலையாளா வடியேனை வேண்டுதியோ” (திவ். பெரியதி. 5, 5, 2);.

மறுவ. தொழும்பன்

     [விலை + ஆள்1]

விலையாவணம்

விலையாவணம் vilaiyāvaṇam, பெ. (n.)

விலைத்தீட்டு பார்க்க;see {}.

     “நிலமுற்றும் விற்று விலையா வணஞ்செய்து கொடுத்தோம்” (S.l.l.iii.110);.

     [விலை + ஆவணம்]

விலையிடு-தல்

விலையிடு-தல் vilaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

விலையோடு-, பார்க்க;see {}.

     “தேவிக்காவதோர் காற்கணி நீ விலையிடுதற்காதியோ” (சிலப். 16, 112);.

     [விலை + இடு-,]

விலையிறங்கு-தல்

விலையிறங்கு-தல் vilaiyiṟaṅgudal,    10 செ.கு.வி. (v.i.)

   விலைத்தொகைகுறைத்தல்; to reduce or fall in price.

மறுவ. விலை வீழ்-தல்.

     [விலை + இறங்கு-,]

விலையுணி

விலையுணி vilaiyuṇi, பெ. (n.)

   1. விலைக்குத் தன்னை விற்பவன் (வின்.);; one who sells himself, as a slave to clear off or in lieu of a debt.

   2. கடனுக்காக உடைமையை இழந்தவன்; one whose entire property is sold or lost for clearing debt.

   3. விலைக்கு வாங்கி விற்கப்படும் அடிமை (வின்.);; slave, resold.

     [விலை + உண் → உணி]

விலையுயர்-தல்

விலையுயர்-தல் vilaiyuyartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. விலைத் தொகை மிகுதல்; to raise in price.

   2. பெருமதிப்புடையதாதல்; to be valuable.

     [விலை + உயர்-,]

விலையேறு-தல்

விலையேறு-தல் vilaiyēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

விலையுயர் பார்க்க;see vilai-y-uyar.

     [விலை + ஏறு-,]

விலையேற்றம்

விலையேற்றம் vilaiyēṟṟam, பெ. (n.)

   1. விலைத்தொகை மிகுகை; raise in price.

   2. அதிகவிலை யுடையதாகை; costliness, prohibitive cost.

     [விலையேறு → விலையேற்றம்]

விலையேற்று-தல்

விலையேற்று-தல் vilaiyēṟṟudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   பண்டங்களின் விலை மிகும்படி செய்தல்; to raise the price, as of an article.

     [விலை + ஏற்று-,]

விலையொட்டு-தல்

விலையொட்டு-தல் vilaiyoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பண்டங்களின் விலையைச் சிறிது கூட்டிச் சொல்லுதல் (வின்.);; to add slightly to the price.

     [விலை + ஒட்டு-,]

விலையொறு-த்தல்

விலையொறு-த்தல் vilaiyoṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   விலை அதிகமாதல் (யாழ்ப்.);; price on ascending trend.

     [விலை + ஒறு-,]

விலையொறுப்பு

 விலையொறுப்பு vilaiyoṟuppu, பெ. (n.)

   விலையேற்றம் (யாழ்ப்.);; escalation of price.

     [விலை + ஒறுப்பு]

விலையோலை

விலையோலை vilaiyōlai, பெ. (n.)

விலைத்தீட்டு பார்க்க;see {}.

     “இதுவே விலையோலை ஆவதாகவும்” (S.I.I.iii, 154, 23);.

     [விலை + ஓலை]

விலைவன்

விலைவன் vilaivaṉ, பெ. (n.)

   கூலியின் பொருட்டாக ஒன்றைச் செய்பவன்; one who does a thing for money, one does a thing in anticipation of money or remuneration.

     “மற்றிவன் விலைவன் போலான்” (புறநா. 152);.

     [விலை → விலையன் → விலைவன்]

விலைவாசி

 விலைவாசி vilaivāci, பெ. (n.)

   விலையளவு; rate of price, current price trend.

     [விலை + வாசி]

விலைவிழு-தல்

விலைவிழு-தல் vilaiviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

விளையிறங்கு-, பார்க்க;see {}.

     [விலை + விழு-,]

விலைவை-த்தல்

விலைவை-த்தல் vilaivaittal,    19 செ.கு.வி. (v.i.)

விலையோடு-, (யாழ்.அக.); பார்க்க;see {},

     [விலை + வை-,]

வில்

வில்1 viltalviṟṟal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. விலை செய்தல்; to sell, put on sale.

     “விற்றுக்கோ ட்டக்க துடைத்து” (குறள், 220);.

   தெ. வில்சு;   க. பில்;   ம. வில்; To. Pil;

 Kod. bele;

 Tu. bile;

 Te. viluva.

 வில்2 viltal,    4 செ.கு.வி.(v.i.)

   விற்கப் படுதல்; to be sold.

     “அது என்ன விலைக்கு விற்கிறது” (வின்.);.

 To. Pil;

 Ka. bill, bili;

 Kod. Bele;

 Tu. {}, Te. vil(u);cu, viluva,vela.

 வில்3 vil, பெ. (n.)

   வில் வடிவிலுள்ள வாச்சியவகை; a bow-like musical instrument.

     “பாடுகின்ற வில்லா முரசாம்” (தெய்வச். விறலி விடு. 397);.

 வில்4 vil, பெ. (n.)

   1. அம்பு எய்தற்குரிய கருவி; bow.

     “வில்லும் வேலும்” (தொல். பொ. 638);.

   2. வில்லின் நாண் (இலக். வி. 608, உரை, பக். 574);; string of the bow.

   3. விற்கிடை பார்க்க;see {}.

     “நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ” (சீவக. 1773);.

   4. வானவில்; rainbow.

     “வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய” (நெடுநல். 109);.

   5. மூலநாள் (பிங்.);; the 19th naksatra.

   6. ஒளி; light brilliance.

     “தண்ணாரம் வில்விலங்க” (சீவக. 2959);.

     ‘வில்லடியால் சாகாதது கல்லடியால் சாகுமா?’ (பழ.);.

     ‘வில்லம்போ சொல்லம்போ’ (பழ.);.

     ‘வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்’ (பழ.);.

     ‘வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை’ (பழ.);.

   தெ. வில்லு;   க. பில்;   ம. வில்; Kod. billi;

 Tu. Billu;

 Kol. vil;

 Pa. Vil;

 Ga. vind;

 Go. Vil;

   {}. vil, Kui. vidu; Kuwi. {};

 Br. bil;

 Ko. vily.

வில்கண்டம்

வில்கண்டம் vilkaṇṭam, பெ. (n.)

   1. வில்லண்டம் 1, 2 பார்க்க;see {}.

   2. முட்டுப்பாடு; obstruction.

     [வில் + கண்டம்]

வில்சுருள்

 வில்சுருள் vilcuruḷ, பெ. (n.)

   வண்டிகளில் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பு; spring.

     [வில் + சுருள்]

கட்டை வண்டியில் செல்வதை விட வில் வண்டியில் செல்லுவது ஏந்தாக இருக்கும். அதற்குக் காரணம் எளிதாக விளங்கும். சக்கரங்கள் தரையில் உருளும் போது ஏற்படுகின்ற அதிர்ச்சிகளைப் பெரும்பாலும் வில் என்ற உறுப்புத் தாங்கிக் கொள்கிறது. மோட்டார் வண்டி, ரெயில் வண்டி முதலியவற்றிலும் வில் உண்டு. அழுத்தியோ அல்லது இழுத்தோ விட்டுவிட்டால் முன் இருந்த நிலையை அடையும் தன்மையுள்ள உலோகத்தகடு அல்லது கம்பிச்சுருள் வில் அல்லது வில் சுருள் எனப்படும். எஃகு, வெண்கலம், இரும்பு, உலோகக் கலவைகளுள் சில ஆகியவை வில் சுருள் செய்ய பயன்படுபவை. மீள் சக்தி (Elasticity); உடைய பொருள்களே வில் சுருள் செய்ய ஏற்றவை.

கம்பியைச் சுருளாக்கி, ஆற்றிப் பதனிட்டு (Annel); அதே நிலையில் கடினப்படுத்தி வில் சுருள் செய்யப்படுகிறது.

வில்மாடம்

 வில்மாடம் vilmāṭam, பெ. (n.)

   விற்போல் வளைந்த கட்டடப் பகுதி; vault.

     [வில் + மாடம்]

வில்யாழ்

வில்யாழ் vilyāḻ, பெ. (n.)

   வில்வடிவமான யாழ்வகை; a kind of bow-shaped lute.

     “வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி” (பெரும்பாண். 182);.

     [வில் + யாழ்]

     [p]

வில்லகவிரலினார்

வில்லகவிரலினார் villagaviraliṉār, பெ. (n.)

   கடைக்கழகக்காலப் புலவர்களில் ஒருவர்; a sangam poet.

கை நெகிழாமல் தழுவிய நிலைக்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமையாக இவர் கூறியிருக்கும் சிறப்பினால் வில்லக விரலினார் என்னும் பெயர் பெற்றார். (குறுந். 370); இவ்வுவமை,

     “வீட்டிடந்தோறும் வில்லக விரல்போல் பொருந்தி நின்று ஒருங்கெதிர் கொள்கென்று” (சீவக. 2110); என்று திருத்தக்க தேவராலும் எடுத்தாளப்பெற்றது.

வில்லகவிரல்

வில்லகவிரல் villagaviral, பெ. (n.)

   விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல்; the finger that holds the bow, as pressed tightly.

     “வில்லகவிரலிற் பொருந்தி” (குறுந். 370);.

     [வில் + அகம் + விரல்]

வில்லங்கக்காரன்

 வில்லங்கக்காரன் villaṅgakkāraṉ, பெ. (n.)

   வழக்காடுபவன்; one who raises a dispute.

     [வில்லங்கம் + காரன்.]

வில்லங்கசுத்தி

வில்லங்கசுத்தி villaṅgasutti, பெ. (n.)

   1. அடைமானம் முதலிய பந்தகம் இன்மை; absence of charge or encumbrnce on properties.

   2. சொத்துரிமையில் குற்றமின்மை; absence of defect in tittle to properties.

     [வில்லங்கம் + Skt. Suddhi → த. சுத்தி]

வில்லங்கப்படு-தல்

வில்லங்கப்படு-தல் villaṅgappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1.தொந்தரவுக்குள்ளாதல்; to be troubled.

   2. அடைமானம் முதலிய பந்தகத்திற்கு உட்படுதல்; to be subject to a charge or encumbrance, as property.

     [வில்லங்கம் + படு-,]

வில்லங்கம்

வில்லங்கம் villaṅgam, பெ. (n.)

   1. தடை; bar, impediment, difficulty.

   2. துன்பம் (தனிப்பா. 1, 387, 39);; trouble distress.

   3. அடைமானம் முதலிய பந்தகம்; charge or encumbrance חס properties.

   4. சொத்துரிமையிலுள்ள குற்றம்; defect in title to properties.

   5. சிக்கல்; contest, dispute, claim.

   6. வில்கண்டம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

 Ma. villrikam;

 Ka. vilaga.

     [வில் + அடி]

வில்லடி

 வில்லடி villaḍi, பெ. (n.)

   ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கின் குறிப்பு (C.G.);; bill of landing.

     [வில் + அடி]

 வில்லடி villaḍi, பெ. (n.)

   வில்லுப்பாட்டின் மற்றொரு வகை; another name for a folk performance sung with prose interludes to the accompaniment of a huge bow and other instruments.

     [வில்+அடி]

வில்லடிக்குறி

வில்லடிக்குறி villaḍikkuṟi, பெ. (n.)

   மழை பெய்தற்கு அறிகுறியாகிய வானவில் (தஞ்.சர.i, 311);; rainbow, as portending rain.

     [வில் + அடி + குறி]

     [p]

வில்லடிச்சான்பாட்டு

 வில்லடிச்சான்பாட்டு villaḍiccāṉpāḍḍu, பெ. (n.)

வில்லடி பார்க்க;see villadi.

வில்லடிப்பாட்டு

வில்லடிப்பாட்டு villaḍippāḍḍu, பெ. (n.)

   1. வில்லுப்பாட்டுக்கும் வழிங்கும் வேறு பெயர்; another name for a folk performance.

   2. வில்லடி பார்க்க; See villadi.

     [வில்லடி+பாட்டு]

வில்லடியம்

 வில்லடியம் villaḍiyam, பெ. (n.)

வில்லடி (C.G.); பார்க்க;see {}.

வில்லடிவழக்கு

 வில்லடிவழக்கு villaḍivaḻkku, பெ. (n.)

   அலைக்கழிப்பான வழக்கு; troublesome dispute.

     [வல்லடி → வில்லடி + வழக்கு]

வில்லடை

வில்லடை villaḍai, பெ. (n.)

   1. இடையூறு; adversity, distress.

     ‘எனக்கு அநேக வில்லடை வந்திருக்கிறது’.

   2. தடை (வின்.);; impediment.

   3. பகைமை (யாழ்.அக.);; enmity.

     [ஒருகா. வில்கண்டம் → வில்லடை]

வில்லண்டம்

வில்லண்டம் villaṇṭam, பெ. (n.)

   1. வலுக்கட்டாயம் (யாழ்ப்.);; force, compulsion.

   2. வில்கண்டம், 2 (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வில்கண்டம் → வில்லண்டம்]

வில்லன்

வில்லன் villaṉ, பெ. (n.)

வில்லி1, 1, 5,

   6. பார்க்க;see villi1 1,5,6.

     “தொடைமாண்ட கண்ணியன் வில்லன்” (கலித்.37);.

     [வில் → வில்லன்]

வில்லம்

வில்லம்1 villam, பெ. (n.)

வில்வம் பார்க்க;see {}.

     “வடிவுடை வில்லம்” (திருமந். 1720);.

 வில்லம்2 villam, பெ. (n.)

   பெருங்காயம் (யாழ்.அக.);; asafoetida.

 வில்லம்3 villam, பெ. (n.)

   குகை (யாழ்.அக.);; cave.

     [புல் → பில் → பிலம் → (பில்லம்); → வில்லம்]

வில்லரணம்

வில்லரணம் villaraṇam, பெ. (n.)

   விற்படையாலாகிய காவல்; policing by bowmen or archers fence of bows.

     “வில்லரண மரணமாக” (முல்லைப். 42);.

     [வில் + அரணம்]

வில்லவன்

வில்லவன் villavaṉ, பெ. (n.)

   1. சேரன்;{} king, as having a banner with the figure of a bow.

     “வில்லவன் வந்தான்” (சிலப். 27, 238); (திவா.);;

   2. கரும்பு விற்கொண்ட காமன்;{}, as having a sugarcane bow.

     “வில்லவன் விழவினுள்” (கலித். 35);.

     [வில் → வில்லவன்]

வில்லாண்மை

 வில்லாண்மை villāṇmai, பெ. (n.)

   விற்றிறமை (வின்.);; skill or expertise in archery.

     [வில் + ஆண்மை = ஆளுந்தன்மை]

வில்லார்

வில்லார் villār, பெ. (n.)

   1. வில்லாளர்; bowmen.

   2. வேடர்; hunters.

க. பில்லார்.

     [வில் → வில்லார்]

வில்லாளன்

வில்லாளன் villāḷaṉ, பெ. (n.)

   விற்றொழிலில் வல்லவன்; archer, one skilled in archery, an expert archer.

     “சரந்துரந்த வில்லாளனை” (திவ். பெரியாழ். 2, 1, 10);.

     [வில் + ஆள் → ஆளன்]

வில்லாளி

 வில்லாளி villāḷi, பெ. (n.)

வில்லாளன் பார்க்க;see {}.

ஒ.நோ உழைப்பாளி, தொழிலாளி.

     [வில் + ஆள் → ஆளி]

வில்லாள்

வில்லாள் villāḷ, பெ. (n.)

வில்லாளன் (புறநா. 168, உரை); பார்க்க;see {}.

க. பில்லாள்.

     [வில் + ஆள்]

வில்லி

வில்லி1 villi, பெ. (n.)

   1. வில்லாளன் பார்க்க;see {}.

     “மும்மதிலெய்த வில்லி” (திருவாச. 9, 5);.

   2. காமன் (பிங்.);;{}.

   3. வீரபத்திரன் (பிங்.);; virabhadra.

   4. அருச்சுனன் (யாழ்.அக.);; arjuna.

   5. இருளன், 1(கொ.வ.); பார்க்க;see {}, member of the {} caste.

   6. வேடன் (வின்.);; hunter.

க. பில்லா.

     [வில் → வில்லி]

 வில்லி2 villi, பெ. (n.)

வில்லிபுத்தூராழ்வார், 2 பார்க்க;see {}.

     “குறும்பியளவாய்க் காதைக் குடைந்து தோண்டி யெட்டினமட்டும் அறுப்பதற்கு வில்லியில்லை” (தமிழ்நா.230);.

     [வில்லிபுத்தூரார் → வில்லி]

வில்லிங்கம்

 வில்லிங்கம் villiṅgam, பெ. (n.)

வில்லங்கம் (C.G.); பார்க்க;see {}.

வில்லிடு-தல்

வில்லிடு-தல் villiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஒளி வீசுதல்; to shine, sparkle, flash.

     “போலஞ் செய் கோதை வில்லிட” (சிலப். 29, கந்துகவரி.);

     [வில் + இடு-,]

வில்லிபாரதம்

 வில்லிபாரதம் villipāradam, பெ. (n.)

   வில்லிபுத்தூரர் ஆசிரிய மண்டிலப்பாவில் இயற்றிய மாபாரதநூல்; the epic poem {} composed or framed in Tamil viruttam, by {}.

     [வில்லி + பாரதம்]

வில்லிபுத்தூரர்

 வில்லிபுத்தூரர் villibuttūrar, பெ. (n.)

வில்லிபுத்தூராழ்வார் பார்க்க;see {}.

     [வில்லிபுத்தூர் + அர் = பெருமைப் பொருட் பின்னொட்டு]

வில்லிபுத்தூராழ்வார்

வில்லிபுத்தூராழ்வார் villibuttūrāḻvār, பெ. (n.)

   1. பெரியாழ்வார்;{}, as born in {}.

   2. 14-ஆம் நூற் றாண்டினரான தமிழ்ப்பாரத நூலாசிரியர்; a poet, the author of the Tamil {}, 14th C.

மாபாரதத்தைத் தமிழில் பாடிப் புகழ் பெற்றவர்.

தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருமுனைப்பாடி நாட்டில் உள்ள சனியூரில் பிறந்தவர். வீரராகவன் என்பது இவருடைய தந்தையின் பெயர். இவர் மாலியக் குடும்பத்தில் பிறந்ததனால், ஆழ்வார்களுள் ஒருவராகிய வில்லிபுத்தூரார் என்று அழைக்கப்படும் பெரியாழ்வார் பெயரே இவருக்கு இடப்பட்டது.

இவருடைய வரலாற்றுக்கு அடிப்படை யாயுள்ளது. இவருடைய மகனான வரந்தருவார் பாடிய சிறப்புப் பாயிரமே. அதன்படி அவர் பார்ப்பனர் என்றும், கல்வி கேள்விகளில் சிறந்து பல்வகைப்பட்ட தமிழ்ப் பாடல்களைப் பாடும் திறமை பெற்றவரென்றும், அதனால் தமிழ் நாட்டு

மூவேந்தரும் இவருக்கு வரிசை விருது முதலியன வழங்கினார்களென்றும் அறியலாம். இவர் சமயத்தில் மாலியரென்பதை வரந்தருவார் பாயிரத்தாலும், பாரதத்தின் ஒவ்வொரு சருக்கத்தின் முதலிலுள்ள கடவுள் வணக்கச் செய்யுள்களாலும் அறியலாம். ஆனால் இவர் சிவனை வெறுப்பவர் அல்லர். சிவனைப் பற்றிப் பேச நேரிடும் இடங்களிலெல்லாம் அவரை உயர்வாகவே பேசுகிறார். இவ்வுண்மையைப் பதின்மூன்றாம் போர்ச் சருக்கத்திலும் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்திலும் காணலாம்.

இவருக்குப் புரவலனாக விளங்கியவன் வரபதி ஆட்கொண்டான் என்னும் அரசன். அவன் கொங்கர் குலத்தலைவனாய்த் திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகை என்னும் ஊரிலிருந்து ஆட்சி செலுத்தியவன். அவன் இவரைப் பாரதக் கதையைத் தமிழில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி இவரும் பாரதம் பாடினார் என்று வரந்தருவார் பாயிரத்தால் தெரிய வருகிறது. இந்த அரசனை வில்லி பல இடங்களில் புகழ்ந்து பாடி இருக்கிறார்.

     [வில்லிபுத்தூர் + ஆழ்வார்]

வில்லிபுத்தூர்

வில்லிபுத்தூர் villibuttūr, பெ. (n.)

   பெரியாழ்வாரும் ஆண்டாளும் தோன்றிய ஊர்;{}, the birth place of Peri-{} and {}.

     “வில்லிபுத்தூர் விட்டுசித்தன்” (திவ். திருப்பல். 12);.

வில்லிமை

வில்லிமை villimai, பெ. (n.)

   விற்றிறமை; skill or expertise in archery.

     “மிறைத்தார் புரமெய்த வில்லிமை” (பதினொ. திருவேகம். திருவந். 59);.

மறுவ. வில்லாண்மை

     [வில் → வில்லிமை]

வில்லியடி

வில்லியடி villiyaḍi, பெ. (n.)

   உள்ளங்கால் பதியாத அடிச்சுவடு (இ.வ.);; indistinct footprint, as of a man of the Irula caste.

     [வில்லி1 + அடி3]

வில்லியர்

வில்லியர் villiyar, பெ. (n.)

   1. வில்லார் (வின்.); பார்க்க;see {}.

   2. நீலமலை முதலிய இடங்களில் வாழும் இருளர் என்னும் வேட்டுவ இனத்தினர்;{}, a tribe of hunters inhabiting the Nilgiris and the adjacent plains.

     [வில்லி → வில்லியர்]

வில்லியாதன்

வில்லியாதன் villiyātaṉ, பெ. (n.)

   திண்டிவனத்தருகிலுள்ள மாவிலங்கை என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு தலைவன் (புறநா. 379);; a chief of {} town near {}.

     [வில்லி + ஆதன்1]

வில்லுகன்

வில்லுகன் villugaṉ, பெ. (n.)

   சிற்றாமுட்டி; a kind of medicinal herb.

     [வில்லி + ஆதன் 1]

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு villuppāṭṭu, பெ. (n.)

   கொடைவிழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு (நெல்லை.);; song sung to the accompaniment of a vil, in {} festival etc.

பொது மக்கள் மரபுவழிப் பாடி வருகிற பாடலைப் பல்வரிக் கூத்து என்பர் அடியார்க்கு நல்லார். வில்லுப்பாட்டை இதன் வகையிலே ஒன்று எனலாம். ஏனைய ஏற்றப்பாட்டு இறவைப் பாட்டிலும் வில்லடியாகிய இது வேறானது. சிற்றூர்த் தெய்வங்களின் திருவிழாக் காலங்களிலே முத்தாரம்மன், இசக்கி, நீலி, சங்கிலி, பூதத்தார், சாத்தன், கடலைமாடன் கதைகள் வில்லடியுடன் பாடப்பெறும். மேலும், போரிலே இறந்த வீரர் வரலாறுகளும், கணவருடன் உடன்கட்டையேறி உயிர் நீத்த கற்புடை மனைவியர் வரலாறுகளும் வில்லடிக்குப் பொருளாகும். இவ்வினத்தில் சின்னத்தம்பி முத்துப்பாட்டன் கதைகள் பெரும் புகழ் பெற்றன.

பொதுமக்களிடையே பத்தி, கைம்மாறு கருதா உதவி, காதல், வீரம் முதலிய பெருங் குணங்களை வளர்க்க இக்கதைகள் பயன்படுகின்றன. உள்ளத்தின் உணர்ச்சிகளை வெளியிட மாந்தனுக்குக் கிடைத்த கருவிகளிலே வில்லடியும் ஒன்று. வில்லடியின் உறுப்புக்கள் பல. அவற்றுள் கதிரும், குடமும், உடுக்கும் முதன்மையானவை. கதிர் என்பது ஏறத்தாழ ஒன்பதடி நீளமும் 3 1/2 விரலக் கனமும் வாய்ந்த ஒரு கம்பு. இது கூந்தற்பனையின் வயிரம் பாய்ந்த அடிமரத்தால்

ஆயது. இதன் முனைகள் இரண்டிலும் பொருந்தியிருக்கும் குப்பிகளைத் தோல் முறுக்காலமைந்த வடக்கயிற்றால் இழுத்துக் கட்டியிருப்பதால், கதிர் வில்போல வளைந்து காணப்படும். இந்த வில்லிலே வெண்கல வார்ப்பாலான சதங்கைகள் பொருந்தியிருக்கும். ஒருமண் குடத்தினுடைய கழுத்தின் புறத்திலே வில் கட்டப்படும். வைக்கோல் புரியாலாகிய புரிமணை மீது குடம் வைக்கப்படும்.

தோல் பட்டைகளாலான (பந்தடி மட்டை போன்ற); பத்தி கொண்டு குடத்தின் வாயிலே தட்டும்போது மதங்க (மிருதங்கம்); ஒலி போன்ற ஒசை தோன்றும். இதற்கு ஒத்து மதங்கம் போல ஒலிப்பது உடுக்கு. வெண்கல வார்ப்பாலாகிய உடுக்கையின் இருபக்கமும் மாட்டுச் சவ்வால் போர்த்தப்பட்டிருக்கும். வலப்பக்கச் சவ்விலே கைவிரலால் தட்டும் போது எழும்பும் ஒலிக்கு ஒத்து இடப்பக்கச் சவ்வு அதன் குறுக்கே கட்டியுள்ள வீணை என்ற குதிரைவால் மயிர்கள் மீது அதிர்ந்து விண் என்று ஒலிக்கும்.

வெண்கலக் கிண்கிணி பொருத்தப் பெற்ற வீசுகோல் இரண்டு கொண்டு வில்நாண் வடத்திலே சாடும் போது கிண்கிணியும் சதங்கைகளும் மாறிமாறி ஒலிக்கும். தாளக் கருவியாகப் பயன்படும் தாளத்தின் அடித்தாளம் இரும்பாலும் மேல்தாளம் வெண்கல வார்ப்பாலும் ஆனவை-தட்டுவதற்குச் சப்பளாக் கட்டைகளும் உண்டு.

புலவர் பாடும்போது வீசுகோலும் வில் நாணும் இயங்கா, ஏனைய தாளவரிசைகள் அடங்கி ஒலிக்கும். புலவர் பாடிய பாடலை வாங்கி உடன் அமர்ந்தோர் சேர்ந்து பாடும் போது அவர்கள் கையிலே உள்ள கருவிகள். குடம், உடுக்கு, சல்லரி (ஜால்ரா); கட்டை, வீசுகோல் முதலியன வியப்பான ஒற்றுமையுடனும் விரைவுடனும் இயங்கி இசை வெள்ளத்தைப் பெருக்கும். கதைப்போக்கிலே புதிய கட்டம் தொடங்கும் ஒவ்வொரு சமயத்திற்குத் தகுந்த விருப்பம், வெறி, கைநளிநயத்துடன் புலவர் பாடுவதால் கதை முழுவதும் உயிர்க்களைத் ததும்பி நிற்கும்.

தீப்பாய்கிறார்கள். இக்கதை வில்லுப்பாட்டில் சிறப்பாக அமைந்துள்ளது.

இக்காலத்தில் இக்கலை அருகி வந்தாலும் காலச் சூழ்நிலைக்கேற்ப எல்லாப் பொருள் நிலையிலும் கதைப் போக்கினை அமைத்துக் கொண்டு பாடுவோர் ஒருசிலர் உள்ளனர். இக்கலையை ஊக்குவிப்பது தமிழர்தம் மரபை வேரூன்றச் செய்வதாகும்.

     [வில் → வில்லு + பாட்டு]

     [p]

வில்லுமன்

 வில்லுமன் villumaṉ, பெ. (n.)

   செடிவகை (மலை.);; rose-coloured sticky mallow.

மறுவ. சிற்றாமுட்டி.

வில்லுறுதி

 வில்லுறுதி villuṟudi, பெ. (n.)

   வில்லூர்திப் பட்டென்னும் ஒருவகைப் பட்டுத் துணி; a kind of silk cloth.

வில்லுழு-தல்

வில்லுழு-தல் villuḻudal,    1 செ.கு.வி. (v.i.)

   விற்போர் செய்து வாழ்தல்; to earn one’s living as a bowman.

     “வில்லுழு துண்மார்” (புறநா. 170);.

     [வில் + உழு-,]

வில்லுவம்

வில்லுவம் villuvam, பெ. (n.)

வில்வம் 1 (பிங்.); பார்க்க;see vilvam, bael.

     [வில்வம் → வில்லுவம்]

வில்லூதிப்பட்டு

 வில்லூதிப்பட்டு villūtippaṭṭu, பெ. (n.)

   ஒருவகைத் துணி (வின்.);; a kind of cloth.

     [வில்லூதி + பட்டு]

வில்லூன்றிப்புழு

வில்லூன்றிப்புழு villūṉṟippuḻu, பெ. (n.)

   உடலை மேலும் கீழுமாக நெளித்து வளைந்து வளைந்து செல்லும் ஒருவகைப் புழு (ஞான. 20, உரை);; a kind of worm which moves in an undulating manner.

     [வில் + ஊன்றி + புழு]

     [p]

வில்லேப்பாடு

வில்லேப்பாடு villēppāṭu, பெ. (n.)

   அம்பு விழும் எல்லை; the boundary where arrow falls.

     “வில்லேப்பாட்டிடை யெவ்வெம் மருங்கினுந் தெரிவோற்கு” (பெருங். உஞ்சை.க் 53, 68);.

     [வில் + ஏ + படு- ஏப்படு → ஏப்பாடு]

வில்லேருழவர்

வில்லேருழவர் villēruḻvar, பெ. (n.)

   1. வீரர்; warrior, brave soldier, bowmen.

     “வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை” (குறள், 872);.

   2. வேடர்; hunters.

     “கடுங்கணை வில்லேருழவர்….. மாமலை” (பு.வெ.12, இருபாற். 1);.

   3. பாலை நில மாக்கள்; inhabitants of the desert tract.

     “மாரி வளம் பெறா வில்லேருழவர்” (சிலப். 11, 210.);.

     [வில்லேருழவு → வில்லேருழவர்]

வில்லேருழவு

வில்லேருழவு villēruḻvu, பெ. (n.)

   விற்போர் செய்து வாழ்கை; profession of a bowman.

     “வில்லேரு ழவினின் னல்லிசை” (புறநா. 371);.

     [வில் + ஏர் + உழவு]

வில்லை

வில்லை1 villai, பெ. (n.)

   1. வட்டமாயிருப்பது; that which is circular.

   2. நறுமண வில்லை; scented tablet.

   3. ஒட்டுத் துணி; patched cloth.

   4. வில்லைமுருகு (வின்.); பார்க்க; villai-murugu.

   5. ஊழியன் அணியும் வட்டமான மாழைக் தகடு; metal badge on a servant’s belt.

   6. தலையணி வகை; a kind of head-ornament.

   7. வில்லைக் சாதம் பார்க்க;see {}.

     [வல் → வில் –→ வில்லை]

 வில்லை2 villai, பெ. (n.)

வில்வம் (யாழ்.அக.); பார்க்க;see {}

     [விள் → விள → விளவம் → விலவம் → வில்வம் → வில்லம் → வில்லை]

 வில்லை3 villai, பெ. (n.)

   வட்டமான துண்டு; round slice.

     “கைக் கரும்பை வில்லை செய்யக் காணேனான்” (அழகிய நம்பி யுலா. 148);.

     [வல் → வில் → வில்லை]

வில்லைச்சாதம்

வில்லைச்சாதம் villaiccātam, பெ. (n.)

   கோயில்களிற் கிடைக்கும் கட்டிச் சோறு; ball of cooked rice-offering available in temples.

மறுவ. பட்டைச்சோறு.

     [வில்லை1 + Skt. {} → த. சாதம்]

வில்லைச்சேவகன்

வில்லைச்சேவகன் villaiccēvagaṉ, பெ. (n.)

   1. வில்லைத் தகடு அணிந்த ஊழியன்; liveried servant.

   2. வட்டாட்சிப் பணியாளன் (இ.வ.);; Taluk peon.

     [வில்லை + Skt. {} → த. சேவகன்]

வில்லைமுருகு

 வில்லைமுருகு villaimurugu, பெ. (n.)

   காதணிவகை (வின்.);; a kind of ear- ornament.

     [வில்லை + முருகு]

வில்லோர்

வில்லோர் villōr, பெ. (n.)

   வில்லாளர்; bowmen.

     “வடிநவி லம்பின் வில்லோர் பெரும” (புறநா. 168);

 |வில் → வில்லார் → வில்லோர்]

வில்லோர்நிலை

 வில்லோர்நிலை villōrnilai, பெ. (n.)

   வில்லில் அம்பினைத் தொடுத்து எய்வார்க்குரிய (பைசாசம், மண்டிலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என்ற); நால்வகை விற்போர் நிலை (பிங்.);; position of archers in shooting, of four kinds, viz., {}.

     [வில்லோர் + நிலை]

வில்வட்டம்

வில்வட்டம் vilvaṭṭam, பெ. (n.)

   விற்றொழில்; archery.

     “வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை” (தேவா.961, 2);.

     [வில் + வட்டம்]

     [p]

வில்வட்டு

 வில்வட்டு vilvaṭṭu, பெ. (n.)

வில்லூதிப்பட்டு பார்க்க;see {}.

வில்வண்டி

 வில்வண்டி vilvaṇṭi, பெ. (n.)

   குதிரை பூட்டிய susory; cart pulled by horse.

     [வில்+வண்டி]

வில்வதளம்

 வில்வதளம் vilvadaḷam, பெ. (n.)

   சிவ வழிபாட்டிற்கு ஏற்றதான மூவிலைகளை யுடைய வில்வத்தழை; trifoliate bael leaf used in {} worship.

     [வில்வம் + தளம்]

வில்வதிப்பட்டு

 வில்வதிப்பட்டு vilvadippaṭṭu, பெ. (n.)

வில்லூதிப்பட்டு (இ.வ.); பார்க்க;see {}.

வில்வபத்திரம்

 வில்வபத்திரம் vilvabattiram, பெ. (n.)

வில்வதளம் பார்க்க;see {}.

     [வில்வம் + Skt. patra → த. பத்திரம்]

வில்வபத்திரி

 வில்வபத்திரி vilvabattiri, பெ. (n.)

வில்வபத்திரம் (வின்.); பார்க்க;see vilva- pattiram.

     [வில்வம் + Skt. patri → த. பத்திரி]

வில்வமாலை

 வில்வமாலை vilvamālai, பெ. (n.)

   பொன் அல்லது வெள்ளியினால் வில்வஇலை உருக்களாகச் செய்து கோத்த கழுத்தணி (யாழ்.அக.);; a neck ornament consisting of silver or gold bael leaves.

     [வில்வம் + மாலை]

வில்வம்

வில்வம் vilvam, பெ. (n.)

   1. மரவகை (பதார்த்த 448);; bael.

   2. பெரியமாவிலங்கம் (L); பார்க்க;see {},

 a species of garlic-pear.

     ‘வில்வப் பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசிபோக’ (பழ.);.

   தெ. பிலவமு;   க. பீட்டா;   ம. குவலம்; Skt. பில்வ;

 pees. shul;

 Hindi. Bel.

விள் → விளம். வெள்ளையான தோடுடைய கனி.

விள் → விளா → விளவு – விளவம்

விளம் → விளர் → விளரி = விளர். விளா – விளாத்தி.

விளவம் → விலவம் → வில்வம் = கருவிளத்திற்கினமான கூவிளம். வடமொழியில் மூலமில்லை. (வ.மொ.வ. 92);.

பில்வ, வில்வ = skt.

     [இரட்டை விதையிலை நிலைத் திணைகளிலே கிச்சிலிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரம் (Aegle marmeelas);. இது இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இது ஓர் இலையுதிர் மரம். 20-25 அடி உயரம் வளரும், 3-4 அடி சுற்றளவிருக்கும். நேரான கூரிய முட்கள் இலைக் கக்கங்களிலிருக்கும். காட்டு மரங்களில் முள் அதிகம். வளர்க்கும் வகைகளில் முள் குறைவு. இலைகள் மூன்று சிற்றிலைகளுள்ள கூட்டிலைகள். அவை மணமுள்ளவை. பூக்கள் பச்சை கலந்த வெண்மை நிறமுள்ளவை. பன்னீர் போன்ற நறுமணமுள்ளவை. மேழம், விடை, கடக மாதங்களில் இம்மரம் பூக்கும். கனி சிலையில் முதிரும். கனி உருண்டையானது. 2-4 விரல விட்டமிருக்கும்;

ஒடு வழுவழுப்பாகவும், கடின மாகவும், பசுமை கலந்த சாம்பல் நிறம் அல்லது சற்று மஞ்சள் நிறமுள்ளதாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். காட்டு மரங்களில் கனி சிறிதாக இருக்கும். வளர்க்கும் வகைகளில் பெரிதாக இருக்கும். விதைகள் பல. அவை நீள் சதுரமாகப் பக்கத்துக்குப் பக்கம் அழுந்திச் சப்பையாக இருக்கும். விதையின் மேல்தோல் கோழை போன்றிருக்கும். விதைகள் கிச்சிலி நிறமாகத் தடிப்பான, குழகுழப்பான உறையில் அழுந்திக் கிடக்கும். இந்த மரம் வேரிலிருந்து உண்டாகும் குருத்துக்களினாலும் பரவும்.

இம்மரத்தின் வேர், இலை, பூ, பிஞ்சு, காய், பழம் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. வயிற்றுப்போக்கு, குன்மம் முதலிய நோய்களுக்கு இது பயன்படுகிறது. பழம் சற்று இனிப்பாக இருக்கும். அதிலிருந்து இனிப்புப் பருகம் (ஷர்பத்); செய்கின்றார்கள்.]

     [p]

வில்வரி

வில்வரி vilvari, பெ. (n.)

   பழைய வரிவகை (I.M.P. cg.689);; an ancient tax.

     [வில் + வரி5]

வில்வலன்

வில்வலன் vilvalaṉ, பெ. (n.)

   வாதாபியின் தமையனான அசுரன்; an asura elder brother of {}, destroyed by Agastya.

     “மேயின விருமைந்தர் வில்வலன் வாதாவி” (கந்தபு. வில்வலன் வாதா.10);.

வில்வளைவு

 வில்வளைவு vilvaḷaivu, பெ. (n.)

   கட்டடத்தில் விற்போன்ற வளைவு (பாண்டிச்.);; bow- shaped arch, as in a building.

     [வில் + வளைவு]

     [p]

வில்வாதசன்னி

 வில்வாதசன்னி vilvātasaṉṉi, பெ. (n.)

   சன்னிவகை (M.L.);; tetanus.

வில்வாள்

வில்வாள் vilvāḷ, பெ. (n.)

   ஒருவகை வாளரம் (C.E.M.);; bowsaw, locksaw.

     [வில் + வாள்1]

வில்விழா

வில்விழா vilviḻā, பெ. (n.)

   1. விற்போர்; joust or tournament, as a festival of the bow.

     ‘வீரர்…… வில்விழாவை விரும்ப’ (பு.வெ.3, 1, உரை);.

   2. மலைவேடர் தம் சிறுவர்க்கு விற்றொழில் பயிற்றத் தொடங்கும் நிகழ்வு; introductory ceremony of hillmen initiating their children in the art of archery.

     “வில்விழா வெடுக்கவென்று விளம்பினன் வேடர் கோமான்” (பெரியபு. கண்ணப்ப. 31);.

     [வில் + விழா]

வில்வீசு-தல்

வில்வீசு-தல் vilvīcudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒளிவிடுதல்; to shed light.

     “மின்னுமாமணி மகர குண்டலங்கள் வில்வீசும்” (திவ். பெரியதிரு. 8, 1, 3);.

     [வில் + வீசு-,]

வில்வெட்டு

 வில்வெட்டு vilveṭṭu, பெ. (n.)

வில்லூதிப்பட்டு (இ.வ.); பார்க்க;see {}.

வில்வேதம்

வில்வேதம் vilvētam, பெ. (n.)

தனுர்வேதம் பார்க்க;see {}, a secondary {}.

     “ஆயுள் வேதம் வில்வேதம்” (காஞ்சிப்பு. சனற். 41);.

     [வில் + Skt. {} → த. வேதம் = அறிவியம், கலை]

 Skt. {} → த. வேதம்.

விள

விள1 viḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   விலக்கல்; to remove.

     [வில் → வில → விலத்து → விளத்து → விளத்தல் (சு.வி.27);]

 விள2 viḷa, பெ. (n.)

   வெண்தோட்டுக்காய் மர வகை (தொல். எழுத்.181, உரை);; wood-apple.

     [முள் → விள் → விள (மு.தா.161);]

 விள3 viḷa, பெ. (n.)

விளவு4 (பிங்.); பார்க்க;see {}.

 விள4 viḷa, பெ. (n.)

விளவு5 (பிங்.); பார்க்க;see {}.

விளகம்

 விளகம் viḷagam, பெ. (n.)

   சேங்கொட்டை (மலை.);; marking-nut tree.

விளக்கங்காண்(ணு)-தல்

விளக்கங்காண்(ணு)-தல் viḷakkaṅgāṇṇudal,    16 செ.குன்றாவி. (v.t.)

   ஆராய்ந்தறிதல்; to test.

     “தொண்டரை விளக்கங்காண” (பெரியபு. திருநீல கண்ட. 10);.

     [விளக்கம் + காண்-,]

விளக்கணம்

விளக்கணம் viḷakkaṇam, பெ. (n.)

   1. பொடி வைத்துப் பொருத்துகை (யாழ். அக.);; soldering.

   2. பற்றுப்பொடி; solder.

     [விளக்கு → விளக்கணம்] (வே.க.135);

விளக்கணி

விளக்கணி viḷakkaṇi, பெ. (n.)

தீவகம்1, 2 (அணியி. 15); பார்க்க;see {},

 a figure of speech.

     [விளக்கு + அணி]

விளக்கணை-த்தல்

விளக்கணை-த்தல் viḷakkaṇaittal,    4 செ.கு.வி. (v.i.)

   விளக்கைப் பெருக்குதல்; to extinguish a lamp.

கெடுத்தல் எனப் பொருள்படும் அணைத்தல் என்பது மங்கலச் சொல்லன்றாதலின் ‘பெருக்குதல்’ என்று சொல்வது தமிழ்நாட்டு மரபு.

     [விளக்கு + அணை-,]

விளக்கத்தார்கூத்து

விளக்கத்தார்கூத்து viḷakkattārāttu, பெ. (n.)

   வழக்கு வீழ்ந்த ஒரு நாடகத் தமிழ் நூல் (தொல். பொ. 553. உரை);; a treatise on dramaturgy, not now extant.

விளக்கப்பிரைசிதான்

 விளக்கப்பிரைசிதான் viḷakkappiraisitāṉ, பெ. (n.)

   குற்ற உசாவலுக்குரிய நடுவர்; examining magistrate.

விளக்கம்

விளக்கம் viḷakkam, பெ. (n.)

   1. தெளிவான பொருள்; elucidation, explanation.

   2. தெளிவு; clearness, perspicuity.

     ‘நீ சொல்வது விளக்கமாக இல்லை’.

   3. ஒளி; light.

     “ஊர்சுடு விளக்கத்து” (புறநா. 7);.

   4. நிலவின்கலை (சது.);; phase of the moon.

   5. விளக்கு; lamp.

     “குடியென்னுங் குன்றா விளக்கம்” (குறள், 601);.

   6. கணையாழி; ring.

     “செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து” (நெடுநல். 144);.

   7. புகழ்; praise.

     “தாவில் விளக்கந் தரும் (குறள், 853);.

   8. ஆய்கை (யாழ்.அக.);; investigation.

   9. சான்று ஆய்கை நடக்கும் முறைமன்றம்; court of the first instance, where evdence is taken.

   10. மிகை; plenty.

     ‘விளக்கமாய்க் கொடு’ (நெல்லை.);.

க. பெளகு ({});

     [விளக்கு → விளக்கம்] (வே.க.136);

விளக்கவி-த்தல்

விளக்கவி-த்தல் viḷakkavittal,    4 செ.கு.வி. (v.i.)

விளக்கணை-, பார்க்க;see {}.

     [விளக்கு + அவி-,]

விளக்கிசைக்குறி

விளக்கிசைக்குறி viḷakkisaikkuṟi, பெ. (n.)

   படிக்கையில் மூன்று மாத்திரை நிறுத்துவதற்கு இடுங்குறி; colon, a punctuation mark (:);.

     [விளக்கு + இசை4 – + குறி]

விளக்கிடு

விளக்கிடு1 viḷakkiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. விளக்கேற்றுதல்; to light lamps.

   2. கோயிலில் திருவிளக்கேற்றி வைத்தல்; to burn lights in the temple, as an act of piety.

     [விளக்கு + இடு-,]

 விளக்கிடு2 viḷakkiḍudal,    18 செ. குன்றாவி.(v.t.)

   விளங்கச் செய்தல்; to explain to throw light upon.

     [விளக்கு + இடு-,]

விளக்கிடுகல்யாணம்

விளக்கிடுகல்யாணம் viḷaggiḍugalyāṇam, பெ. (n.)

   கார்காத்த வேளாளரில் மணம் புரியாத பெண்களுக்கு 7 அல்லது 11 ஆம் வயதிற் செய்யப்படுஞ் சடங்குவகை (E.T.vii.380);; an auspicious ceremony performed before a girls marriage, generally in her seventh or ninth year, among {}.

     [விளக்கிடு + கல்யாணம்]

விளக்கீடு

விளக்கீடு viḷakāṭu, பெ. (n.)

   திருவாரல் நாளில் (கார்த்திகையன்று); விளக்கேற்றுகை; lamplighting on the evening of {}.

     “கார்த்திகை நாள்….. விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” (தேவா. 1118, 3);.

     [விளக்கிடு → விளக்கீடு]

விளக்கு

விளக்கு1 viḷakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. தெளிவாக்குதல்; to make clear, to explain, elucidate.

     “சொல்லிக் காட்டிச் சோர்வின்று விளக்கு” (மலைபடு. 79);.

   2. அறிவிப்புப்படுத்துதல்; to make illustrious.

     “தம்மை விளக்குமால்” (நாலடி.132);.

   3. துலக்குதல்; to clearn, brighten, polish.

     ‘பல்லை விளக்குகிறான்’,

     ‘பாத்திரத்தை விளக்குகிறான்’.

   4. தூய்மை யாக்குதல்; to purify.

     ‘குருவி னருளிச்செயல் மனத்தை விளக்கும்’.

   5. பரிமாறுதல்; to distribute, serve.

     “அட்டன யாவையும் விளக்கின மிவர்க்கே” (விநாயகபு. 53, 29);.

   6. துடைப்பத்தாற் பெருக்குதல்; to sweep, clear up.

   7. பொடியிட்டுப் பற்றவைத்தல்; to solder.

     “பொன்னின் பட்டைமேற் குண்டுவைத்து விளக்கின வளை” (S.I.I.ii.182);.

     [விள் → விள → விளங்கு → விளக்கு-,] (வே.க.135);

 விளக்கு2 viḷakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பெரிதாக்குதல் (இ.வ.);; to enlarge.

     [விளங்கு → விளக்கு-,

 விளக்கு3 viḷakku, பெ. (n.)

   ஒளிதருங் கருவி; lamp, light.

     “எல்லா விளக்கும் விளக்கல்ல” (குறள், 299);.

   2. ஒளிப்பிழம்பு (அக.நி.);; lustre, band of rays.

   3. ஒளிபெறச் செய்கை; brightening.

     “நிலம் விளக்குறுப்ப” (மதுரைக். 705);.

   4. விளக்கு நாண்மீன் (சுவாதி நட்சத்திரம்);; the 15th {}. ;

விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுகிறதா? (பழ.);,

     ‘விளக்கை வைத்துக் கொண்டு நெருப்புக்குஅலைகிறதா? (பழ.);,

     ‘விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில் போல’ (பழ.);

ஆதியில் குகையில் மாந்தன் வாழ்ந்த காலத்திலேயே ஏதோ ஒருவகையான விளக்கைப் பயன்படுத்தி வந்தான். உருகிய கொழுப்பை அவ் விளக்கில் எரிபொருளாகப் பயன்படுத்தினான். குகை மாந்தர்கள் பயன்படுத்திய விளக்கை எகிப்தியர் சீர்திருத்தி யமைத்தனர். உட்கூடான கல்லில் கொழுப்பை நிரப்பி, பஞ்சாலான திரியை அதனூடே செலுத்தி, எகிப்தியர் தம் விளக்கை யமைத்தனர். சுட்ட மட்பாண்டம், வெண்கலம்

ஆகியவற்றால் செய்த விளக்கைக் கிரேக்கரும் ரோமானியரும் பயன்படுத்தினர். ஆளி விதையெண்ணெயை அவர்கள் எரிபொருளாகப் பயன்படுத்தினர்.

நாகரிகம் முன்னேற்றம் அடைந்தபின் மக்கள் அகல் விளக்கு, குத்து விளக்கு, மெழுகுத்திரி விளக்கு, சிமிழ் விளக்கு, பெட்ரோமாக்ஸ் எனப்படும் ஆவி விளக்கு என பலவகையான விளக்குகளைப் பயன்படுத்தினர்.

விளக்குகள் பலபெயர்களால் உச்சியில் பலவகை உருவங்கள் வைத்துச் செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் குத்து விளக்கு எனவும் அழைப்பர்.

   1. மதியொளி விளக்கு,

   2. அன்ன விளக்கு,

   3. கிள்ளை விளக்கு,

   4. மயில் விளக்கு,

   5. குயில் விளக்கு,

   6. நாகர் விளக்கு,

   7. கிளை விளக்கு,

   8. கம்பி விளக்கு,

   9. காய் விளக்கு,

   10. தண்டு விளக்கு,

   11. சிலை விளக்கு,

   12. குருவி விளக்கு,

   13. அகல் விளக்கு,

   14. நிலை விளக்கு,

   15. புருஷா மிருக விளக்கு,

   16. ஓதிமக் கிளை விளக்கு,

   17. முக்கிளை விளக்கு,

   18. காமாட்சி விளக்கு,

   19. மணி விளக்கு,

   20. மாயோன் விளக்கு,

   21. எழுதலை நாக விளக்கு,

   22. காமதேனு விளக்கு,

   23. சரோருக விளக்கு,

   24. மங்கல விளக்கு,

   25. பத்மாசன முருகன் விளக்கு,

   26. பதும விளக்கு,

   27. கஜலட்சுமி விளக்கு,

   28. சந்நிதி விளக்கு,

   29. கின்னரி விளக்கு,

   30. கிண்கிணி விளக்கு,

   31. கன்னி விளக்கு,

   32. காமன் விளக்கு,

   33. திருமண விளக்கு,

   34. தாரா விளக்கு,

   35. ஈழச்சியல் விளக்கு,

   36. மலையாண்சியல் விளக்கு,

   37. அரைதலை விளக்கு,

   38. சோழியச்சியல் விளக்கு,

   39. ஆரக்குட விளக்கு,

   40. அனந்தலை விளக்கு,

   41. எரிக்கடை விளக்கு,

   42. பகர்வோர் விளக்கு,

   43. கைவினை விளக்கு,

   44. ஊழ்உறு விளக்கு,

   45. குடக்கால் விளக்கு,

   46. கடைக் கெழு விளக்கு,

   47. மீன் திமில் விளக்கு,

   48. ஒழியா விளக்கு,

   49. காவலர் விளக்கு,

   50. மான் விளக்கு

இவையே யன்றித் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள விளக்கு வகைகள்.

   1. கைவிளக்கு,

   2. பாவை விளக்கு,

   3. நந்தா விளக்கு,

   4. தூண் விளக்கு,

   5. தூக்கு விளக்கு

   6. சர விளக்கு,

   7. அகல் விளக்கு.

   தெ. வெளுகு (g);;   க. பெளகு (b);;ம. விளக்கு.

     [p]

விளக்குக்குச்சோறுட்டு-தல்

விளக்குக்குச்சோறுட்டு-தல் viḷakkukkuccōṟuṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நாட்கதிர் கொண்டதும் நெருப்பின் பொருட்டு விளக்கு முன்பாகப் புதிய சோறு படைத்தல் (வின்.);; to make an offering of boiled rice before a burning lamp in thanks-giving to the God of fire, on gathering in the first sheaves.

     [விளக்கு + சோறூட்டு-,]

விளக்குக்குடிமக்கள்

விளக்குக்குடிமக்கள் viḷakkukkuḍimakkaḷ, பெ. (n.)

   கோயிலில் விளக்கிடும் பணியாளர் (S.I.I.iv.281);; lamp-lighters in a temple.

     [விளக்கு + குடிமக்கள்]

விளக்குக்குப்புதிதூட்டு-தல்

விளக்குக்குப்புதிதூட்டு-தல் viḷakkukkuppudidūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

விளக்குக்குச்சோறுாட்டு-, (வின்.); பார்க்க;see {}.

     [விளக்கு + கு + புதிதூட்டு-,]

விளக்குக்கூடு

விளக்குக்கூடு viḷakkukāṭu, பெ. (n.)

   1. விளக்குத்தகழி பார்க்க;see {}.

   2. விளக்குக் கூண்டு 1,3 பார்க்க;see {}.

   3. விளக்குமாடம், 1 (வின்.); பார்க்க;see {}.

   4. விளக்கை உள்வைத்து வானத்துச் செல்லவிருக்கும் கூண்டு; balloon carrying a light.

     [விளக்கு + கூடு]

     [p]

விளக்குக்கூண்டு

விளக்குக்கூண்டு viḷakkukāṇṭu, பெ. (n.)

   1. கலங்கரை விளக்கம் (கொ.வ.); பார்க்க;see {},

 lighthouse.

   2. விளக்குக் கூடு 4 பார்க்க;see {}.

     [விளக்கு + கூண்டு]

     [p]

விளக்குக்கொளுத்து-தல்

விளக்குக்கொளுத்து-தல் viḷakkukkoḷuddudal,    5 செ.கு.வி. (v.i.)

விளக்கேற்று-, பார்க்க;see {}.

     [விளக்கு + கொளுத்து-,]

விளக்குத்தகழி

 விளக்குத்தகழி viḷagguttagaḻi, பெ. (n.)

   விளக்கு ஏற்றுவதற்கு உரிய அகல் (யாழ்.அக.);; oil-receptacle in a lamp.

     [விளக்கு + தகழி]

விளக்குத்தண்டு

 விளக்குத்தண்டு viḷakkuttaṇṭu, பெ. (n.)

   விளக்கு ஏற்றி வைக்கும் தகழியைத் தாங்கும் தண்டு; lamp-stand, standard of a lamp.

     [விளக்கு + தண்டு]

விளக்குத்தாங்கி

 விளக்குத்தாங்கி viḷakkuttāṅgi, பெ. (n.)

   ஒளிகாட்டி (தீவட்டிக்காரன்);; torch-bearer.

     [விளக்கு + தாங்கி]

     [p]

விளக்குத்தாள்

 விளக்குத்தாள் viḷakkuttāḷ, பெ. (n.)

விளக்குத்தண்டு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [விளக்கு + தாள்]

விளக்குத்தூண்

விளக்குத்தூண் viḷakkuttūṇ, பெ. (n.)

   1. மின் விளக்கு இல்லாத பண்டைநாளில் தெருக்கள் தோறும் மூலைச் சந்திப்புகளில் வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் விளக்கைத் தாங்கிய தூண்கள்; pillars having oil lamps in the junction of the streets in olden times.

   2. மதுரையில் உள்ள ஓர் இடத்தின் பெயர்; a place name in Madurai.

     [விளக்கு + தூண்]

விளக்குநாய்ச்சியார்

விளக்குநாய்ச்சியார் viḷakkunāycciyār, பெ. (n.)

   1. திருவிளக்கு நாச்சியார், 1 பார்க்க;see {}, lamp in a house, regarded as a goddess.

   2. திருவிளக்கு நாச்சியார், 2 பார்க்க;see {}, metallic image of a woman holding a lamp in her hands.

     [விளக்கு + நாச்சியார்]

     [p]

விளக்குநிலை

விளக்குநிலை viḷakkunilai, பெ. (n.)

   1. அரசனது கோலோடு விளக்கும் ஒன்று பட்டோங்குவதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 90);; theme describing the royal lamp as flourishing inseparably with the royal sceptre.

   2. வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை (பு. வெ. 9, 12);; theme describing the movement of a lamp from left to right, indicating the victory of a king.

   3. சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறனுள் வேலும் அதன் தலையும் விலங்கா தோங்கியவாறு போலக் கோலும் விளக்கும் விலங்காதோங்குவதாகக் கூறுவது (சது.);; a poem on the theme of {}, in which the royal sceptre and the royal lamp are described as flourishing inseparably, as the spear and the spear-head, one of 96 {} q.v.

   4. விளக்குத்தண்டு (அக.நி.); பார்க்க;see {}.

     [விளக்கு + நிலை]

விளக்குப்பாடம்

 விளக்குப்பாடம் viḷakkuppāṭam, பெ. (n.)

   இரவிலேற்றிய விளக்கின் முன்னிருந்து பிள்ளைகள் படிக்கும் பாடம் (இ.வ.);; lesson learnt at night under a lamp.

     [விளக்கு + பாடம்]

விளக்குப்பாதம்

விளக்குப்பாதம் viḷakkuppātam, பெ. (n.)

   1. விளக்குத்தண்டு (வின்.); பார்க்க;see {}.

   2. விளக்குத் தண்டின் அடிப்பாகம்; foot of the lamp-stand.

     [விளக்கு + பாதம்]

விளக்குப்பார்-த்தல்

விளக்குப்பார்-த்தல் viḷakkuppārttal,    4 செ.கு.வி. (v.i.)

விளக்கேற்று-, (இ.வ.); பார்க்க;see {}.

     [விளக்கு + பார்-,]

விளக்குப்பிணம்

விளக்குப்பிணம் viḷakkuppiṇam, பெ. (n.)

   இருட்டு; darkness.

     “விளக்குப்பிணம் போலே காணவொண்ணாதபடி” (ஈடு. 5, 7, 4);.

     [விளக்கு + பிணம்.]

விளக்குப்புறம்

விளக்குப்புறம் viḷakkuppuṟam, பெ. (n.)

   கோயிலில் விளக்கிடுதற்கு விடப்பட்ட இறையிலி நிலம்; endowment created for lights in a temple.

     “நந்தா விளக்குப்புற மாகென” (சீவக. 2564);.

     [விளக்கு + புறம்]

விளக்குப்பொருத்து-தல்

விளக்குப்பொருத்து-தல் viḷakkupporuddudal,    5 செ.கு.வி. (v.i.)

விளக்கேற்று-, (வின்.); பார்க்க;see {}.

     [விளக்கு + பொருத்து-,]

விளக்குப்போடு

விளக்குப்போடு1 viḷakkuppōṭudal,    8 செ.கு.வி. (v.i.)

விளக்கேற்று-, பார்க்க;see {}.

     [விளக்கு + போடு-,]

 விளக்குப்போடு2 viḷakkuppōṭudal,    8 செ.கு.வி. (v.i.)

   கட்குடித்தல் (யாழ்ப்.);; to drink intoxicating liquors.

விளக்குமாடம்

விளக்குமாடம் viḷakkumāṭam, பெ. (n.)

   1. விளக்கு வைப்பதற்கான சுவர்ப்புரை (வின்.);; niche in a wall for lamps.

   2. திருவிளக்கிடும் கோயிலிடம் (T.A.S.i, 176);; place for lights in a temple.

     [விளக்கு + மாடம்]

விளக்குமாறு

 விளக்குமாறு viḷakkumāṟu, பெ. (n.)

   துடைப்பம் (தைலவ.);; broom.

     ‘புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்’ (உ.வ.);

     ‘விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?’ (பழ.);.

     [விளக்கு + மாறு,]

விளக்குமாற்றுக்கட்டை

விளக்குமாற்றுக்கட்டை viḷakkumāṟṟukkaṭṭai, பெ. (n.)

   1. தேய்ந்த துடைப்பம்; old and worn-out broom.

   2. ஒரு பழிச்சொல் (இ.வ.);; a term of reproach.

     ‘விளக்குமாற்றுக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டியது போல’ (பழ.);.

     [விளக்குமாறு + கட்டை]

விளக்குறு-த்தல்

விளக்குறு-த்தல் viḷakkuṟuttal,    4 செ. குன்றாவி.(v.t.)

   ஒளிபெறச் செய்தல்; to brighten, give splendour to.

     “நிலம் விளக்குறுப்ப” (மதுரைக். 705);.

     [விளக்கு + உறு-,]

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் viḷakkeṇīey, பெ. (n.)

   1. விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக் கெண்ணெய் (கொ.வ.);; castrol oil, as used for lamps.

   2. மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய் (கொ.வ.);; medicinal castor oil.

   3. வேப்பெண்ணெய் (யாழ்.அக.);; oil extracted from neem seeds.

     ‘முதலிச்சம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு’ (பழ.);.

     ‘விளக்கெண்ணெயைத் தடவிக் கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்’ (பழ.);.

     [விளக்கு + எண்ணெய்]

விளக்கேற்றிவை

விளக்கேற்றிவை1 viḷakāṟṟivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. விளக்கேற்று-, பார்க்க;see {}.

   2. திருமணம் செய்து வைத்தல்; to help to marry.

     ‘இவனுக்குக் காலத்தில் ஒரு விளக்கேற்றி வைக்க நினைக்கிறேன்’ (வின்.);.

     [விளக்கு + ஏற்றி + வை-,]

 விளக்கேற்றிவை2 viḷakāṟṟivaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. நிலைநிறுத்துதல்; to set up, establish.

     ‘அழியவிருந்த குடும்பத்தை விளக்கேற்றி வைத்தான்’.

     [விளக்கேற்றி + வை-,]

விளக்கேற்று-தல்

விளக்கேற்று-தல் viḷakāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   விளக்கையேற்றுதல்; to light lamps.

     [விளக்கு + ஏற்று-,]

விளக்கைக்குளிரவை-த்தல்

விளக்கைக்குளிரவை-த்தல் viḷakkaikkuḷiravaittal,    5 செ.கு.வி. (v.i.)

விளக்கணை (இ.வ.); பார்க்க;see {}.

     [விளக்கை + குளிர + வை-,]

விளக்கைச்சமனஞ்செய்-தல்

விளக்கைச்சமனஞ்செய்-தல் viḷakkaiccamaṉañjeytal,    3 செ.கு.வி. (v.i.)

விளக்கணை (இ.வ.); பார்க்க;see {}.

     [விளக்கு + சமனம் + செய்-,]

விளக்கைநிறுத்து-தல்

விளக்கைநிறுத்து-தல் viḷakkainiṟuddudal,    5 செ.கு.வி. (v.i.)

விளக்கணை பார்க்க;see {}.

     [விளக்கை + நிறுத்து-,]

விளங்கம்

விளங்கம் viḷaṅgam, பெ. (n.)

   கொடிவகை (நாமதீப.310);; small elliptic cuspidate- leaved windberry.

விளங்கவை-த்தல்

விளங்கவை-த்தல் viḷaṅgavaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. தெளிவாக்குதல்; to make position clear, to make record clear.

   2. விளக்கேற்றிவை-, பார்க்க;see {}.

   3. புகழ்பெறச் செய்தல்; to make illustrious or renowned.

     ‘பெற்ற வயிற்றை விளங்க வைக்க வேண்டும்’.

     [விளங்க + வை-,]

விளங்கவைத்தல்

விளங்கவைத்தல் viḷaṅgavaittal, பெ. (n.)

   நூலழகு பத்தனுள் கூறப்படும் பொருளைத் தெளியச் சொல்லுவது (நன்.13);; perspicuity, clearness of expression, one of ten {} զ.v.

     [விளங்க + வைத்தல்,]

விளங்கிப்பேர்

 விளங்கிப்பேர் viḷaṅgippēr, பெ. (n.)

   நிலவிளத்த அடங்கல் (இ.வ.);; history of lands, fields, etc., given in the old settlement register or {}.

     [விளங்கு → விளங்கி + பேர்]

விளங்கிழை

விளங்கிழை viḷaṅgiḻai, பெ. (n.)

   பெண்; woman, as wearing bright jewels.

     “விளங்கிழை தமியளானாள்” (சீவக. 303);.

     [விளங்கு + இழை]

விளங்கு

விளங்கு1 viḷaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒளிர்தல்; to shine.

     “பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே” (புறநா. 8);.

   2. வெளிப் படையாதல்; to become renowned, illustrious.

     ‘அவன் பெயர் எங்கும் விளங்கும்’.

   3. பளபளத்தல்; to be polished.

   4. தெளிவாதல்; to be clear or plain.

     ‘நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை’.

   5. வெற்றி வளர்ச்சியாதல்; to be prosperous, successful.

     ‘அந்தக்குடி விளங்கவில்லை’.

   6. மிகுதல்; to excel, become great.

     “திறல் விளங்கு சேர்த்தானை” (பு.வெ. 4, 8);.

   க. பெளகு;   ம. விளங்ஙுக;தெ. வெளுங்கு, ஒண்மைக் கருத்து.

     [விள் → விள → விளங்கு-, (செல்வி வைகாசி பக். 496);]

 விளங்கு2 viḷaṅgudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   அறிதல் (யாழ்ப்.);; to know.

   ம. விளங்ஙு(க);;   தெ. வெளுங்கு;க. பெளகு (belagu);

 விளங்கு3 viḷaṅgu, பெ. (n.)

   அரத்தைவகை (பதார்த்த.985);; lesser galangal.

விளங்குதாரணத்ததாகுதல்

விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅgudāraṇaddadākudal, பெ. (n.)

   நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது (நன். 13);; being furnished with appropriate illustrations, one often {} գ.v

     [விளங்கு + Skt. {} → த. உதாரணம் + அத்து + ஆகுதல்]

விளங்குதிங்கள்

 விளங்குதிங்கள் viḷaṅgudiṅgaḷ, பெ. (n.)

   வெள்ளி மீன் (சுக்கிரன்); (திவா.);; venus, as the shining planet.

     [விளங்கு + திங்கள்.]

விளங்குபொன்

விளங்குபொன் viḷaṅguboṉ, பெ. (n.)

   மாழையாற் செய்த கண்ணாடி; metallic mirror.

     “விளங்கு பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு” (புறநா. 15);.

     [விளங்கு + பொன்]

விளங்கொளி

 விளங்கொளி viḷaṅgoḷi, பெ. (n.)

   அருகன் (திவா.);; arhat, as the shining light.

     [விளங்கு + ஒளி]

விளச்சீர்

விளச்சீர் viḷaccīr, பெ. (n.)

   நிரையசையில் முடியும் இயற்சீர் (யாப்.வி.);; foot of two {} ending in nirai, either {}.

     [விளம்2 + சீர்]

விளத்தம்

விளத்தம் viḷattam, பெ. (n.)

   விளக்கம்; description. (வே.க.136);.

     [விளத்து → விளத்தம்]

விளத்தாரு

 விளத்தாரு viḷattāru, பெ. (n.)

   வெண்கடம்பு (மலை.);; sea-side Indian oak.

விளத்து-தல்

விளத்து-தல் viḷaddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. விலக்குதல் (யாழ்.அக.);; to except, to exclude.

   2. விளக்கமாகக் கூறுபடுத்திக் கூறுதல்; to explain.

     [விள் → விள → விளத்து-, (செல்வி, 77 சைகாசி, 497);]

விளப்பு

விளப்பு viḷappu, பெ. (n.)

   1. சொல்லுகை; saying.

   2. புகழ் பரவுகை; becoming famous.

     “தனிச்சிறையில் விளப்புற்ற” (திவ். திருவாய். 4, 8, 5);.

     [விளம்பு → விளப்பு]

விளமேலடி

விளமேலடி viḷamēlaḍi, பெ. (n.)

   நெல் நீங்கிய மற்றைய தவச விளைவிற்கு இடும் வரி (இ.வ.);; assessment levied on crops other than paddy.

     [விளை3 + மேல் + அடி1]

விளம்

விளம்1 viḷam, பெ. (n.)

   1. அடம்; long-felt hatred, spite.

   2. செருக்கு; self-conceit.

   3. கடுஞ்சினம்; violent anger.

     ‘விருந்திற்குத் தம்மை யழைக்கவில்லை யென்று விளமெடுத்துத் திரிகின்றான்’ (உ.வ.); (வே.க.134);.

   4. பெருஞ் சினத்திற் கொட்டும் நஞ்சு; poison.

 E. Venom;

 Skt. விஷ;

 L. Venenum;

 Fr. Venin.

     [விள் → விளம்]

 விளம்2 viḷam, பெ. (n.)

   1. விளா1(அரு.நி.);;see {},

 wood-apple.

   2. இயற்சீரின் இறுதி நிரை வாய்பாடு; symbolic expression for nirai.

     “விளமுன் னேரும்”.

   3. வெள்ளையான தோடுடைய கனி; wood apple.

க. பெளல.

     [விள் → விளம் (வ.மொ.வ.264);]

விளம்ப நையாண்டி இசை

 விளம்ப நையாண்டி இசை viḷambanaiyāṇṭiisai, பெ. (n.)

   கரகாட்டத்தில், இடம் பெறும் பல்வகை விளையாட்டுக்களுக்கேற்ப, அமைதி யான தாள நடையில் இசைக்கப்பெறும் இசை வகை; a melody type played in a calm wars according to the rhythm in an arobatic folk dance called “karakam”.

     [விளம்பன்+நையாண்டி+இசை]

விளம்பகதி

 விளம்பகதி viḷambagadi, பெ. (n.)

விளம்பம் பார்க்க;see {}.

     [விளம்பம் + கதி]

விளம்பனம்

விளம்பனம்1 viḷambaṉam, பெ. (n.)

விளம்பம், 1 பார்க்க;see {}.

     [விளம்பம் → விளம்பனம்]

 விளம்பனம்2 viḷambaṉam, பெ. (n.)

   பண்டைக்காலத்து மக்களின் வழக்க வொழுக்கம் முதலியவற்றை ஆடியும் பாடியுங் காட்டுகை (திவா.); (யாப். வி. பக். 526);; imitation of ancient customs and manners, with acting and singing.

     [விளம்பம் → விளம்பனம்]

விளம்பம்

விளம்பம் viḷambam, பெ. (n.)

   1. சுணக்கம் (ஈடு. 6, 1, ப்ர.);; slowness, tardiness, delay.

   2. இலயவகை (பரத. தாள. 51);; a variety of ilayai indicating a slow pace.

     [விளம்பு → விளம்பம்]

விளம்பரம்

விளம்பரம் viḷambaram, பெ. (n.)

   அறிக்கை (கொ.வ.);; advertisement, proclamation, notice, publication, publicity.

ம. விளம்பரம்.

     [விளம்பு → விளம்பரம் (வே.க.143);]

விளம்பி

விளம்பி1 viḷambi, பெ. (n.)

   கள் (திவா.);; toddy, as causing unguarded utterance.

     [விளம்பு → விளம்பி (வே.க.143);]

     [கள்ளைச் சொல்விளம்பி என்பது மருத்துவர் குழூஉக்குறி.]

 விளம்பி2 viḷambittal,    11 செ.கு.வி. (v.i.)

   சுணங்குதல்; to delay, procrastinate.

     “நீங்கள் மந்தாயுசுக் களாகையாலே விளம்பிக்க வொண்ணாது” (ஈடு. 1, 3, 11);.

விளம்பிதம்

விளம்பிதம் viḷambidam, பெ. (n.)

   1. சுணக்கம் (நாமதீப. 562);; slowness.

   2. விளம்பம், 2 பார்க்க;see {}.

     “விளம்பித நெறி வழாமல்…… ஆடும்” (கம்பரா. ஊர்தே. 106);.

விளம்பிநாகனார்

 விளம்பிநாகனார் viḷambinākaṉār, பெ. (n.)

   நான்மணிக்கடிகை இயற்றிய ஆசிரியர்; a poet, author of {}.

விளம்பு

விளம்பு1 viḷambudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சொல்லுதல்; to speak, tell, say.

     “உற்றது விளம்ப லுற்றேன்” (சீவக. 1694);.

   2. வெளிப்படக் கூறுதல்; to proclaim openly, make public, reveal.

     “உடையது விளம்பேல்” (ஆத்திசூடி);.

   3. பரப்புதல் (பிங்.);; to spread abroad.

   4. பழகுதற்காகப் பிள்ளைகள் எழுத்தின்மே லெழுதுதல் (இ.வ.);; to trace letters over the model of a copy.

   5. பரிமாறுதல் (நாமதீப. 711);; to serve food.

   6. ஆய்தல் (வின்.);; to inquire into.

   ம. விளம்புக; To. Pily;

 Tu. bulpuni;

 Te. {}.

     [விள் → விளம்பு → விளம்பு-, (வே.க.143);]

 விளம்பு2 viḷambu, பெ. (n.)

   சொல் (நன்.458);; word, speech.

     [விள் → விளம்பு]

விளரி

விளரி1 viḷari, பெ. (n.)

   1. இளமை (பிங்.);; tenderness, youth.

   2. மிக்க வேட்கை (பிங்.);; great or longing desire.

   3. மிகுதி (வின்.);; abundance, surplus.

     [விள் → விளரி (மு.தா.68);]

 விளரி2 viḷari, பெ. (n.)

   1. ஏழிசையு ளொன்று (திவா.);; the sixth note of the gamut, one of seven {}, q.v.

   2. நெய்தற்குரிய இரங்கற்பண்; a melody-type of the neydal class, {} for mourning.

     “விளரியுறு தருந் தீந்தொடை நினையா” (புறநா. 260);.

   3. யாழ் (அக.நி.);;{}.

 விளரி3 viḷari, பெ. (n.)

விளா1 (அரு.நி.); பார்க்க;see {},

 wood-apple.

விளரிப்பாலை

 விளரிப்பாலை viḷarippālai, பெ. (n.)

   பாலைப்பண்களுளொன்று (பிங்.);; a melody- tupe of {} class.

     [விளரி + பாலை]

 விளரிப்பாலை viḷarippālai, பெ. (n.)

   இறை வனின் அருள் பெற இராவணன் பாடிய பண்; a melody type sung by the king Ravana to get god’s grace.

     [விளி+பாலை]

விளர்

விளர்1 viḷartal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வெளுத்தல்; to become pale, to whiten.

     “விளரும் விழமெழும்” (திருக்கோ. 193);.

   2. முதிராதிருத்தல்; to be imperfect, to be immature.

     “விளரா வன்பின்” (விநாயகபு. 52, 18);.

   க. பெளர்;ம. விளர்க.

 விளர்2 viḷarttal,    11 செ.கு.வி. (v.i.)

   1. வெளுத்தல்; to become white or pale.

     “விளாத்த வாளினை அசைத்து” (பு.வெ.7, 21, உரை);.

   2. வெட்குதல்; to feel ashamed.

     “மேய கலைப்பெண் விளர்ப்ப” (பிரபுலிங். மாயை பூசை. 50);.

 விளர்3 viḷar, பெ. (n.)

   1. வெண்மை; whiteness.

     “கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக” (புறநா. 120);.

   2. கொழுப்பு (பிங்.);; fat.

   3. கொழுமை (வின்.);; fertility.

   4. இளமை (பிங்.);; tenderness.

   5. முற்றாதது; that which is immature or imperfect.

     “விளரில் பூசனை” (திருவானைக் குபேர. 2);.

   6. நேர்மை; straightness.

     “விளர்நிறீஇ” (கல்லா. 8);.

   7. பெருஞ்சினம் (அரு.நி.);; great anger, wrath, fury.

   8. வெறுப்பு (அக.நி.);; hatred.

   க. பெளர்;ம. விளர்.

     [விளம் → விளர். (சினக்கருத்து. வே.க.134);]

 விளர்4 viḷartal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கூப்பிடுதல்; to call.

     “வையமுற்றும் விளரியதே” (திவ். இயற். திருவிருத். 82);.

     [விள் → விளர்-,]

 விளர்5 viḷar, பெ. (n.)

   இளங்கொம்பு; twig.

     [வளார் → விளர்]

விளர்ப்பு

 விளர்ப்பு viḷarppu, பெ. (n.)

   வெளுப்பு (யாழ்.அக.);; whiteness.

     [விளர் → விளர்ப்பு]

விளவரிசி

 விளவரிசி viḷavarisi, பெ. (n.)

   அறுவகையரிசியு ளொன்று (சங்.அக.);; a medicinal drug, one of {}.

     [விள + அரிசி]

விளவு

விளவு1 viḷavu, பெ. (n.)

   ஒருவகை நறுமண மரம்; eagle-wood.

மறுவ. அகில்

     [விள் → விள → விளவு]

 விளவு2 viḷavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

விளாவு1-தல் (வின்.); பார்க்க;see {}.

 விளவு3 viḷavu, பெ. (n.)

விளா1 (பிங்.); பார்க்க;see {}.

 விளவு4 viḷavu, பெ. (n.)

   நிலம் முதலியவற்றிற் பிளப்பு (பிங்.);; cleft, crack.

     [பிளவு → விளவு]

 விளவு5 viḷavudal,    5 செ.கு.வி. (v.i.)

   கமராதல் (வின்.);; to split, to burst asunder.

     [விடவு → விளவு-,]

 விளவு6 viḷavu, பெ. (n.)

   இளமை (பிங்.);; youth.

     [விளர்1 → விளவு]

விளா

விளா1 viḷā, பெ. (n.)

   மரவகை (பு.வெ.10. சிறப். 1, உரை);; wood-apple.

இரட்டை விதையிலை நிலைத்திணை உயிரிகளிலே கிச்சிலிக் குடும்பத்தைச் சேர்ந்த மரம். இந்த இனத்தில் ஒரே ஒரு இனமே உண்டு. இந்தோனேசியா, மலேயா பகுதிகளில் வளர்வது. இந்தியா நெடுகிலும் உலர்வான பகுதிகளில் காட்டு மரமாகவும் வளர்ப்பு மரமாகவும் இருக்கிறது. சாலையருகிலும் சிற்றூர்களின் பக்கங்களிலும் இம்மரத்தைக் காணலாம்.

   இது ஒரு சிறிய இலையுதிர் மரம். கிளைகள் முள்ளுள்ளவை;   இலைகள் இறகுக் கூட்டிலைகள்;   கனிகள் உருண்டையாக இருக்கும். கனியின் ஒடுகள் மரப்பொருளால் ஆனது;   கடினமானது;   சொரசொரப்பானது;உள்ளே சற்று இனிப்பும் மணமும் உள்ள, உண்ணக்கூடிய சதை இருக்கும். அதிலே பல தட்டையான விதைகள் புதைந்திருக்கும். கனிகள் நளி மாதம் முதல் மீனம் வரையில் கிடைக்கும். துவர்ப்புச் சுவையுடைய இச்சதைப் பகுதியில் வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து உண்ணச் சுவையாக இருப்பதுடன் பித்தமும் போகும் எனக் (சா.அக.); கூறுகிறது.

மறுவ. கடிப்பகை, கபித்தம், விளவு, வெள்ளில்.

   தெ. வெலக;   ம. விலவ;க. பேலட.

     [விள → விளா]

     [p]

 விளா2 viḷā, பெ. (n.)

   உழவில் வருஞ் சுற்று; a turn or round in ploughing.

     “விளாக் கொண்டு உழும் உழவர்” (சிலப். 27, 230, அரும்.);.

விளாகம்

விளாகம் viḷākam, பெ. (n.)

   1. சூழ்ந்தவிடம்; surrounding area.

     “பைம்பொழில் விளாகத்து” (தேவா. 734, 6);.

     “சோழிய விளாகம்” (ஊர்ப்);.

   2. போர்க்களம்; battlefield.

     “வென்றவர் விளாகந் தன்னுட் சென்றிலேன்” (தேவா. 1193, 1); (பிங்.);.

ம. விளாகம்.

     [வளாகம் → விளாகம்]

விளாக்குலைகொள்(ளு)-தல்

விளாக்குலைகொள்(ளு)-தல் viḷāggulaigoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. எங்கும் நிறைந்திருத்தல்; to overspread, pervade.

     “ஒரு திருவடியே பூமிப்பரப்படங்கலும் போய் விளாக்குலை கொண்டது” (திவ். இயற். திருவிருத். 58. வ்யா. பக். 321);.

   2. உட் கொள்ளுதல்; to swallow..

     “ஸ்துத்ய குணங்களை விளாக்குலை கொள்ளும் படியான பாடல்கள்” (ஈடு, 2.7.6);.

     [வளா → விளா + குலை + கொள்-,]

விளாக்கை-த்தல்

விளாக்கை-த்தல் viḷākkaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   உழுதல்; to plough.

     “நுகமின்றி விளாக்கைத்து” (திருவாச. 26, 8);.

     [விளா2 + கை3-,]

விளாக்கொள்(ளு)-தல்

விளாக்கொள்(ளு)-தல் viḷākkoḷḷudal,    3 செ. குன்றாவி.(v.t.)

   எங்கும் நிறைதல்; to spread everywhere, pervade.

     “தாவியன் றுலகமெல்லாந் தலை விளாக்கொண்ட வெந்தாய்” (திவ். திருமாலை. 35);.

     [வளா → விளா + கொள்-,]

விளாக்கோல்(லு)-தல்

விளாக்கோல்(லு)-தல் viḷākālludal,    10 செ.கு.வி. (v.i.)

   கழனியைச்சுற்றி ஒரு வட்டம் உழுதல் (இ.வ.);; to plough one turn or round.

மறுவ. படைசால்.

     [விளா2 + கோல்-,]

விளாசு-தல்

விளாசு-தல் viḷācudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அடித்தல் (கொ.வ.);; to beat, strike.

   2. மனத்தில் உறுத்தப்பேசுதல்; to harangue.

     [விலாசு2-தல் → விளாசு-,]

விளாத்தி

விளாத்தி viḷātti, பெ. (n.)

   விளா1 (மலை.);; wood-apple.

     [விளா1 → விளாத்தி]

விளாப்பு

விளாப்பு viḷāppu, பெ. (n.)

   பிறர்க்குப் பங்கில்லாமற் கொண்டது (யாழ். அக.);; anything solely and exclusively owned.

     [ஒருகா. வளை2 → விளா → விளாப்பு]

விளாப்பூசை

விளாப்பூசை viḷāppūcai, பெ. (n.)

   சிவன் கோயிலில் வைகறையில் நிகழும் பூசை (இ.வ.);; the early morning worship in a {} temple.

     [விளா + பூசை2]

விளாம்பிசின்

விளாம்பிசின் viḷāmbisiṉ, பெ. (n.)

   விளாமரத்தின் பிசின்; gum exuded by wood-apple tree.

     [விளா1 + பிசின்]

விளாம்பூச்சு

 விளாம்பூச்சு viḷāmbūccu, பெ. (n.)

   சித்திரப் பூச்சு வகை (யாழ்.அக.);; a kind of painting.

     [முலாம்பூச்சு → விளாம்பூச்சு]

விளார்

 விளார் viḷār, பெ. (n.)

   வளார்; twig.

விளாறு

விளாறு1 viḷāṟu, பெ. (n.)

   பெருக்கெடுத் தோடும் ஆறு; flooded stream.

     ‘அடித்து அரத்தம் விளாறாகப் பெருகிற்று’ (கொ.வ.);.

ஒ.நோ. வளாறு.

     [வெள்ளம் + ஆறு → விளாறு]

 விளாறு2 viḷāṟu, பெ. (n.)

வளார் (இ.வ.); பார்க்க;see {},

 twig.

     ‘கையகப்பட்ட திருடனைப் புளிய விளாறால் போட்டுப் பிய்த்து எடுத்துவிட்டனர் ஊர்மக்கள்’.

விளாவு

விளாவு1 viḷāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கலத்தல்; to mix, as cold water with hot water.

     “கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை” (ஈடு. 2, 2, அவ.);.

   2. தழுவிக் கொள்ளுதல் (திவா.);; to embrace, move in a friendly way with.

   3. விளாசு-,

பார்க்க;see {}.

     [வளாவு → விளாவு-,]

 விளாவு2 viḷāvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சுற்றிச்சுற்றி உழுதல்; to plough round and round.

     “பாழ்ச் செய் விளாவி” (திருவாச. 40, 9);.

     [வளாவு → விளாவு-,]

 விளாவு3 viḷāvudal,    9 செ.கு.வி. (v.i.)

   சுற்றுதல்; to wave round.

     “முன்பு வயலிட னாக முன்னி விளாவிய” (தணிகைப்பு. நாட்டு. 129);.

     [வளாவு-தல் → விளாவு-,]

விளி

விளி1 viḷidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இறத்தல்; to die.

     “விளிந்தாரின் வேறல்லர்” (குறள். 143);.

   2. அழிதல்; to perish, to be ruined, to become extinct.

     “விளிவதுகொல்….. மறவர் சினம்” (பு.வெ. 1.15);.

   3. குறைதல்; to diminish.

     “விளியா நோயுழந்து” (கலித். 53);.

   4. கழிதல்; to pass away.

     “வேண்டுநாள் வறிதே விளிந்தால்” (கம்பரா. நிந்தனை. 31);.

   5. ஒய்தல்; to cease, to be interrupted.

     “நாரை… விளியாது நரலும்” (கலித். 128);.

   6. சினம் கொள்ளுதல்; to be angry.

     ‘விளிந்தாரே போலப் பிறராகி’ (பழமொழி. 182);.

   7. நாணமடைதல்; to be overcome with shame, ashamed.

     “கவிதை பரமன் சொலவிளிந்து” (திருவாலவா. 16, 22);.

   8. இழிவடைதல்; to be dishonoured or disgraced.

     “கற்றவ ரவைநடு விளிய” (திருவாலவா. 57, 5);.

   9. வருத்தப்படுதல் (வின்.);; to suffer, regret.

   10.மறிதல் (வின்.); (சது.);; to turn about.

 விளி2 viḷidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   சொல்லுதல்; to say, speak, tell.

     “தீவிளி விளிவன்” (திவ். திருமாலை.30);.

     [விள் → விளி → விளி-,]

 விளி3 viḷittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. அழைத்தல்; to call, summon.

     “கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்” (குறள், 894);.

   2. சொல்லுதல்; to say, speak, tell.

     “இராமநாமம் விளித்திட” (கம்பரா. சம்பா. 59);.

   3. பாடுதல்; to sing.

     “பஞ்சுரம் விளிப்பினும்” (ஐங்குறு. 311);,

     “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்” (திரிகடு. 11);.

   4. அழித்தல்; to destroy, ruin, collapse.

     “முதல் விளிக்கும் வினையைப் புரியற்க” (விநாயகபு. 2, 59);.

   5. கொல்லுதல்; to kill.

     “வெஞ்சின வரக்கரை விளித்து வீயுமோ” (கம்பரா. நிந்தனை. 48);.

   6. சினத்தல்; to anger.

     “விளிந்தாரே போலப் பிறராகி” (பழமொ. 182); (செல்வி. 77 வைகாசி 475);.

   7. மறைந்தவனை வெளிப்படுத்துவது போற் கூப்பிடுதல்; to call.

     [விள் → விளி → விளி-,]

 L. pello;

 E. appeal, repeal etc. (ஒ.மொ.216);

பேசுவோன் படர்க்கையோரைத் தன் முகமாக அழைப்பதனை விளி என்பர். பெயர்கள் விளிப் பொருளையேற்கும் போது அதனைத் தமிழிலக்கணங்கள் எட்டாம் வேற்றுமையாகக் கொள்ளும் (இலக். கலைக்.112);.

 விளி4 viḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   பேராரவாரஞ் செய்தல்; to roar, shout.

     “விளித்துப்பின் வேலைதாவும் வீரன்” (கம்பரா. கடறாவு. 33);.

     [விள் → விளி-,]

 விளி5 viḷi, பெ. (n.)

   1. ஓசை; sound.

     “வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்” (பெரும்பாண். 300);.

   2. இசைப்பாட்டு; song.

     “விளியாக்கொண்டு” (சீவக. 2691);.

   3. சொல்; word, speech.

     “தீவிளி” (திவ். திருமாலை. 30);.

   4. கொக்கரிப்பு; shout of excitement, frenzy or joy.

     “எடுத்தனர் விளியும் சங்கும்” (சீவக. 447);.

   5. அழைப்பு (பிங்.);; call.

   6. எட்டாம் வேற்றுமை;     “விழியெனப் படுப” (தொல். சொல். 114);.

     [விளி2-, → விளி.]

 விளி6 viḷi, பெ. (n.)

   ஐந்தாம் சுரம் (திவா.);;     [இளி3 → விளி]

விளிகொள்பெயர்

 விளிகொள்பெயர் viḷigoḷpeyar, பெ. (n.)

   விளியினையேற்கும் பெயர்கள்; the nouns which accepted the vocative case.

விளிகொள்ளாப்பெயர்கள்

 விளிகொள்ளாப்பெயர்கள் viḷigoḷḷāppeyargaḷ, பெ. (n.)

   விளியினையேற்காத பெயர்கள்; the nouns which are not accepted the vocative case.

     [அவன், அவள் முதலாய பெயர்கள் விளி ஏற்பதில்லை. விளி ஏலாத பெயர்களைத் தமிழிலக்கணங்கள் தொகுத்துக் கூறி அவற்றை விளிகொள்ளாப் பெயர்கள் என்று குறிக்கின்றன.

நுமன், நுமள், நுமர் என்பனவும் எவன், எவள், எவர், எவை, எது என்பனவும் யாவன், யாவள், யாவர், யாவை, யாது என்பனவும் அவன், அவள், அவர், அவை, அது என்பனவும், இவன், இவள், இவள், இவர், இவை, இது என்பனவும், உவன், உவள், உவர், உவை, உது என்பனவும், தாம், தான் என்பனவும், பிறன், மற்றையான் முதலாயினவும் விளிகொள்ளாப் பெயர்கள் என்பர்]

விளிக்கூத்து

விளிக்கூத்து viḷikāttu, பெ. (n.)

   சீழ்க்கைக் கூத்து; dancing with whistling.

     “நாத்தலை மடிவிளிக் கூத்தொடு” (சீவக. 120);.

     [விளி3 + கூத்து]

விளிந்தார்

விளிந்தார் viḷindār, பெ. (n.)

   இறந்தவர்; the dead.

     “விளிந்தாரின் வேறல்லர்” (குறள். 143);,

     “விளிந்தார் ஈமம் – விளக்காக” (சீவக.);.

     [விளி1 → விளிந்தார்]

விளிப்பு

விளிப்பு viḷippu, பெ. (n.)

   1. ஓசை; sound.

     “விளிப்பறை போகாது” (மணிமே. 3, 63);.

   2. இரைச்சலிடுகை (நாமதீப. 670);; calling loudly, shouting.

     [விளி2 → விளிப்பு]

விளிம்பு

விளிம்பு viḷimbu, பெ. (n.)

   1. ஒரம் (நாமதீப. 546);; border, edge, rim.

   2. கரை; brink, margin.

     “விளிம்பு தெற்றி முற்றுவித்து” (கம்பரா. நகரப். 20);.

   3. கண்ணிமை (பிங்.);; eyelid.

   4. எயிறு (பிங்.);; gums.

ஒ.நோ. வடிம்பு.

 Ma. {}.

     [விளி1 → விளிம்பு]

விளிம்புகட்டு-தல்

விளிம்புகட்டு-தல் viḷimbugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பாய் முதலியவற்றிற்கு ஓரம் அமைத்தல்; to form a ring, to form the border, as in mat-making.

   2. புண் ஆறி ஓரம் வைத்தல் (வின்.);; to form proud flesh around a wound.

     [விளிம்பு + கட்டு-,]

விளியொலி

 விளியொலி viḷiyoli, பெ. (n.)

   பிறரை விளிக்கும் ஒலி; vocative sound.

     [விளி+ஓலி]

விளிவி-த்தல்

விளிவி-த்தல் viḷivittal,    11 செ.குன்றாவி.(v.t.)

   1. பிறனொருவனைக் கூப்பிடும்படி ஆளனுப்புதல்; to send one to call another.

   2. கொல்லச் செய்தல்; to cause to kill.

     [விளி2 → விளிவி-,]

விளிவு

விளிவு1 viḷivu, பெ. (n.)

   1. இறப்பு (சூடா.);; death.

   2. கேடு; ruin.

     “விளிவின்று… ஒருநீயாகித் தோன்ற” (திருமுரு. 292);.

   3. உறக்கம்; sleep.

     “காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறா அது” (அகநா. 58);.

   4. இடையறவு; interruption, cessation.

     “விளிவின்று… தளிபொழிசாரல்” (பரிபா. 12. 2);.

   5. நாணம்; shame.

     “பேசரும் விளிவிற் கூடி” (திருவாலவா. 32, 7);.

   6. கடுஞ்சினம்; great anger.

     “பாவிமேல் விளிவு சரத நீங்கலதாம்” (கம்பரா. மீட்சிப். 130); (அக.நி.);.

     [விளி1 → விளிவு]

 விளிவு2 viḷivu, பெ. (n.)

   வீரரார்ப்பு; warriors shout, war-cry.

     “விளிவொடு விழியு மிழந்தார்” (கம்பரா. கிங்கர. 28);.

     [விளி2 → விளிவு]

விளிவேற்றுமை

விளிவேற்றுமை viḷivēṟṟumai, பெ. (n.)

   எட்டு வகை வேற்றுமைகளில் ஒன்று;     [எண் வகை வேற்றுமைகளில் விளி வேற்றுமையும் ஒன்று. பெயர்கள் விளிப்பொருளில் ஆளப்படும் போது அதனை விளிவேற்றுமை என்பர்.

ஏனைய வேற்றுமைகளிலிருந்து விளிவேற்றுமை சொல்லியல்பாலும் தொடரியல்பாலும் வேறுபடு மாற்றை உணர்ந்த தொல்காப்பியர் விளி வேற்றுமைக்கு விளிமரபு என ஒரு தனியியலையே அமைத்திருக்கிறார். எல்லாப் பெயர்களும் விளி ஏற்பதில்லை என்பதும் விளிவேற்றுமை ஏற்கும்போது பெயர்கள் சாரியை பெறுவதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது] (இலக்.கலைக்.113);.

விளை

விளை1 viḷaidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தவசம் முதலியன விளைதல்; to be produced.

     “ஆற்ற விளைவது நாடு” (குறள், 732);.

   2. பயன்றருதல்; to be productive.

     ‘இந்த நிலம் நன்றாய் விளையுமா?’

   3. உண்டாதல் (பிங்.);; to result.

     ‘முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்’.

   4. முதிர்தல்; to mature, ripen, as grain.

     “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே” (ஐங்குறு. 260);.

   5. நிகழ்வித்தல்; to occur, happen.

     “நாசமிவடனால் விளைந்த தென்னா” (கம்பரா. மாயாசீ. 62);.

   க. பெள், ம. விளயுக; Ko. {};

 To. {};

 Ka. {};

 Kod. {};

 Tu. {};

 Te. velayu, belayu.

     [விள் → விளை → விளை-,]

 விளை2 viḷaittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. பயிர் முதலியன வளரச்செய்தல்; to raise cropscet, cause to grow.

     “செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு” (நாலடி, 218);.

   2. உண்டாக்குதல்; to produce, bring into being.

     “புகழ் விளைத்தல்” (பு.வெ.2.14);.

   3. புரிதல்; to perform, as worship.

     “பூசனை விளைத்த வாறும்” (விநாயகபு. பதிக. 22);.

     [விளை1 -, → விளை-,]

 விளை3 viḷai, பெ. (n.)

   1. விளைவு, 1 (அரு.நி); பார்க்க;see {}.

   2. விளைவு, 4 பார்க்க; see {}.

   3. பட்டறிவு; experience, enjoyment.

     “விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்” (குறள், 177);.

   4. புன்செய்க் காடு (நெல்லை.);; dry land.

   5. நீரேறாத மேட்டு நிலம் (வின்.);; high ground far above the level of the water-course.

   6. நகர்சூழ் காவற்காடு (நாமதீப. 519);; forest round a city, serving as a defence.

க. பெளெ.

     [விள் → விளை]

 விளை4 viḷai, பெ. (n.)

   காக்கட்டான் என்னும் கொடி; mussel-shell creeper.

     “விளையின் மென்பூ” (கம்பரா. கார்காண். 32);;

     [கருவிளை → விளை]

 விளை5 viḷai, பெ. (n.)

   1. நரம்பு (அரு.நி.);; string.

   2. மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish.

     [விள் → விளை]

 விளை viḷai, பெ. (n.)

   ஊர்ப்பெயரீறு; place name suffix.

     “அவன் பிறந்த ஊர் திசையன் விளை (நெல்.வ.);.

     [மிளை-விளை(காவற்காடு முட்காட்டு அரண்);]

மலையாள மொழிச் சார்பால் மிளை எனும் சொல் விளை எனத்திரிந்தது. ஒ.நோ. மீண்டும்விண்டும், மிளைப்பகுதி பழைய கோட்டை சார்ந்த காடாகும்.

விளைகரி

விளைகரி viḷaigari, பெ. (n.)

   நிலக்கரி (வின்.);; coal, mineral coal.

     [விளை1- + கரி1]

விளைச்சல்

விளைச்சல் viḷaiccal, பெ. (n.)

   1. விளைவு, 4 (சிலப். 6, 30 அரும்.); பார்க்க;see {}.

   2. முற்றிவரும் பயிர் (வின்.);; ripening grain.

   3. விளைவு 1, 2, 6, 7 பார்க்க;see {}.

   4. இளமையிலேயே முதிர்ந்த அறிவு (இ.வ.);; precocity.

     [விளை-, → விளைச்சல்]

விளைஞர்

 விளைஞர் viḷaiñar, பெ. (n.)

   மருத நிலமாக்கள்; agriculturists.

     [விளை → விளைஞர்]

விளைதயிர்

 விளைதயிர் viḷaidayir, பெ. (n.)

   நன்கு கெட்டியான தயிர்; curd in robustness.

     [விளை + தயிர்]

மறுவ. கெட்டித்தயிர்.

விளைநிலம்

விளைநிலம் viḷainilam, பெ. (n.)

   பயிரிடக்கூடிய நிலம்; fertile ground, arable land, land suitable for raising crops.

     “விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்”(நாலடி, 133);.

     [விளை1 – + நிலம்]

விளைநீரடை-த்தல்

விளைநீரடை-த்தல் viḷainīraḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

   பாசனத்திற்கு வேண்டிய அளவுக்கு நீரைத் தேக்கிக் கொள்ளுதல்; to let water into a field, in quantity sufficient for its irrigation.

     “விளை நீரடைத்துக் கொண்டு” (ஈடு. 6, 2. ப்ர.);.

     [விளைநீர் + அடை-,]

விளைநீர்

விளைநீர் viḷainīr, பெ. (n.)

   பாசனத்துக்குரிய நீர்; water for irrigation.

     “விளைநீராக வளர்ந்தபடி” (திவ்.திருப்பா.17. வ்யா. பக்.164);.

     [விளை + நீர்]

விளைபுலம்

விளைபுலம் viḷaibulam, பெ. (n.)

விளைநிலம் (தக்கயாகப். 2, உரை); பார்க்க;see {}.

     [விளை1 + புலம்]

விளைபொருள்

 விளைபொருள் viḷaiboruḷ, பெ. (n.)

   நிலத்தில் விளையும் பொருள்; produce, product.

     [விளை + பொருள்]

விளைப்பு

விளைப்பு viḷaippu, பெ. (n.)

   செய்கை (யாழ்.அக.);; doing.

     [விளை2 → விளைப்பு]

விளையவை-த்தல்

விளையவை-த்தல் viḷaiyavaittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. முதிரச் செய்தல் (வின்.);; to cause to mature or ripen.

   2. பயன் படச் செய்தல்; to make a thing serve its purpose, to make use of

   3. விளை வுண்டாகச் செய்தல்; to cause to be productive.

   4. இறுகிக் கட்டியாகும்படி விடுதல் (வின்.);; to allow to crystallize, harden.

   5. அவுரிச்சரக்கை அழுகவைத்தல் (வின்.);; to set aside to ferment, as indigo.

   6. ஈமக்காட்டில் பிணத்திற்கு நெருப்பு மூட்டுதல் (வின்.);; to kindle a fire for burning a corpse in burial ground, to cremate.

     [விளைய + வை-,]

விளையாடல்

விளையாடல் viḷaiyāṭal, பெ. (n.)

   1. பொழுது போக்குகை (நாமதீப. 701.);; play, sport.

   2. கடவுளின் திருவிளையாடல்; sport of the gods.

   3. இன்ப ஆடல்; amorous sport.

     [விளையாடு → விளையாடல்]

விளையாடு-தல்

விளையாடு-தல் viḷaiyāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பொழுதுபோக்காக மனத்துக்கு இன்பந்தருஞ் செயலைப்புரிதல்; to play, sport, recreate.

     “காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி” (திருவாச. 7, 12);.

   2. துள்ளிக்குதித்தல்; to gambol.

   3. வேடிக்கையாகச் செய்தல்; to do an act light-heartedly.

   4. பகடி செய்தல்; to be playful, humorous or funny.

     [விள் → விளை → விளையாடு-,]

பிள் → விள் = விளை = விருப்பம். விளையாடுதல் = விருப்பமாய் ஆடியோடித் திரிதல் அல்லது ஒரு வினை செய்தல்.

     “கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு” (தொல்.உரி.); என்பதற்கேற்ப, விளையாடல் என்னும் சொற்குப் பயிர்த்தொழில் செய்தல் போல் நடித்து மகிழ்தல் என்னும் பொருளும் பொருந்துமேனும், விரும்பியாடுதல் என்னும் பொருளே சிறந்ததாகத் தோன்றுகின்றது. (பாவாணர். வே.க.119);.

விளையாட்டம்

விளையாட்டம்1 viḷaiyāṭṭam, பெ. (n.)

விளையாட்டு பார்க்க;see {}.

     “பிள்ளை விளையாட்ட மனைத்தினும்” (திவ். பெருமாள். 7, 9);.

     [விளையாடு → விளையாட்டம்]

 விளையாட்டம்2 viḷaiyāṭṭam, பெ. (n.)

விளைநிலம் பார்க்க;see {}.

     “கோவில் விளையாட்ட மெங்கும்” (குற்றா. குற.98);.

     [விளை1 + ஆடு → ஆட்டம்]

விளையாட்டம்மை

விளையாட்டம்மை viḷaiyāṭṭammai, பெ. (n.)

   1. மணல் வாரியம்மைவகை; measles.

   2. சின்னம்மை; chicken-pox.

     [விளையாட்டு + அம்மை. அம்மை = அம்மை நோய்வகை]

விளையாட்டரங்கம்

 விளையாட்டரங்கம் viḷaiyāṭṭaraṅgam, பெ. (n.)

   விளையாடவும், விளையாட்டுப் பயிற்சி பெறவும், சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க ஏந்துடையதுமான அரங்கம்; stadium.

     [விளையாட்டு + அரங்கம்]

     [p]

விளையாட்டு

விளையாட்டு viḷaiyāṭṭu, பெ. (n.)

   1. பொழுது போக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல்; play, sport, pastime, recreation.

     “இன்று நீர்விளையாட்டினுள்” (சீவக. 903);.

   2. துன்ப மின்றி எளிதாகச் செய்யுந் தொழில்; that which is done with ease without strain.

     “பெருவிளையாட் டைந்தாடும் பிஞ்ஞகன்” (திருவாலவா. நாட்டுச். 1.);.

   3. வேடிக்கை; fun.

     “நான் இதை விளையாட்டாகச் சொன்னேன்” (வின்.);.

   4. விளையாடல், 3 பார்க்க;see {} 3.

   5. கலைத்தொழில் எட்டனுள் பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுகை (சீவக. 657, உரை);; adapting the candam to the {}, one of eight {}, q.v.

விளையாட்டின் கூறுகள்

   1. கட்சி பிரித்தல்

இரு கட்சியார் விளையாடும் விளையாட்டு களிலெல்லாம் முதலாவது கட்சி பிரித்துக் கொள்ளல் வேண்டும். ஆற்றலும் மூப்பும் வாய்ந்த இருவர் முதலில் கட்சித் தலைவராய் அமர்ந்து கொள்வர். அதன்பின், பிறர் இருவர் இருவராய்ச் (இவ்விருவராய்ச்); சேர்ந்து தமக்குக் கவர்ச்சியான வெவ்வேறு புனைபெயரிட்டுக் கொண்டு, கட்சித்

தலைவரிடம் சென்று

     “இவ்விரு பெயராருள் உமக்கு எவர் வேண்டும்?” எனக்கேட்பர். கட்சித்தலைவர் யாரேனும் ஒருவரைத் தெரிந்து கொண்டு அவரைத் தம் கட்சியிற் சேர்த்துக் கொள்வர். இங்ஙனம் இவ்விருவராய்ச் சேர்ந்து செல்லற்கு உத்திகட்டுதல் என்று பெயர். கட்சித் தலைவனைப் பொதுவாக ‘அண்ணாவி’ என அழைப்பர். இவை பாண்டி நாட்டு வழக்கு. உத்தியாளர் கட்சித் தலைவரைக் கேட்கும் போது, காற்றைக் கலசத்தில் அடைத்தவன் வேண்டுமா, கடலைக் கையால் நீந்தினவன் வேண்டுமா? என்றும், வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா, மணலைக் கயிறாய்த் திரித்தவன் வேண்டுமா? என்றும் பிறவாறும், அருஞ்செயல் ஆற்றிய பழமறவரின் சிறப்புப் பெயர்களையே கூறிக்கேட்பர். இத்தகைய பெயர்களைக்

     “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்” என்பர் தொல்காப்பியர் (சொல் : 165);

மகளிராயின், தாந்தாம் விரும்பிய பூப்பெயரைச் சொல்லிக் கேட்பர்.

   2. தொடங்கும் கட்சியைத் துணிதல்

இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணிதற்கு, உடன்பாடு, திருவுளச்சீட்டு ஆகிய இரு முறைகளுள் ஒன்று கையாளப் பெறும். இவற்றுட் பின்னதே பெரும்பான்மை. காசு சுண்டல், ஓடெறிதல் முதலியன திருவுளச் சீட்டின் வகைகளாம்.

இரு கட்சியாரில்லாது ஒருவரே பிறரையெல்லாம் ஒடிப் பிடிக்கும் விளையாட்டுக்களில், புகையிலைக் கட்டை யுருட்டல், மூட்டையெறிதல், நீருட்சுண்டல், கைமேற்கை வைத்தல், மரபுரை கூறல் முதலியன, அவ்வவ் விளையாட்டிற் கேற்பத் திருவுளச் சீட்டு வகையாய் அமையும். கோலி ஆட்டத்தில் கோலிபுருட்டுவதில் பிறரை மேற்கொண்டவர் முந்தியாடுவர்.

   3. இடை நிறுத்தல்

ஒரு விளையாட்டின் இடையில் ஒர் ஆடகர்க்கு ஆடையவிழ்தல் முடிகுலைதல் முதலிய தற்செயலான தடைகள் நிகழின், அன்று அவற்றைத் திருத்தற்கு ஏதேனுமொரு மரபுச் சொல்லைச் சொல்லிச் சற்று ஆட்டை நிறுத்திக் கொள்ளலாம். பாண்டி நாட்டில் ‘தூ’ என்பதும், சேர

கொங்குநாட்டில் ‘அம்பேல்’ என்பதும் இடைநிறுத்த மரபுச் சொல்லாம்.

   4. தோல்வித் தண்டனை

முட்டு வாங்கல், எதிரியைச் சுமத்தல் முதலிய மெய்வருத்தமும் காசுத் தண்டமும் இருவகைத் தோல்வித் தண்டனையாம்.

     ‘இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்’

என்னும் குறளிலுள்ள ‘அடுத்தூர்வது’ என்னும் தொடர் விளையாட்டில் வென்றவர் தோற்றவர் மேல் குதிரையேறும் என்பதைக் குறிப்பான் உணர்த்துவதாகும்.

தண்டனையே யில்லாது விளையாடுவது முண்டு. தண்டனையுண்மையும் இன்மையும், தண்டனையில் வகையும் அளவும் விளையாட்டைத் தொடங்கு முன்னரே, பேசி முடிவு செய்யப் பெறும்.

   5. ஆடைதொடல் கணக்கன்மை

ஒருவர் பிறரைத் தொடும் விளையாட்டுக் களிலெல்லாம் உடம்பைத் தொடுதலின்றி ஆடையைத் தொடுதல் கணக்காகாது.

     “வண்ணான் சீலைக்கு வழக்கில்லை” என்பது இந்நெறிமுறை பற்றிய பழமொழியாகும்.

   6. தவற்றால் ஆடகர் மாறல்

ஆட்டு நிகழும் போது ஆடுகிறவன் தவறின், அடுத்தவன் ஆடல் வேண்டும்.

   7. வென்றவர்க்கு மறு ஆட்ட வசதி

ஒர் ஆட்டையில் வென்றவர்க்கு மறு ஆட்டையில் முந்தியாடுவது அல்லது எதிர்க்கட்சியில் பிடிக்கப்படுவது போன்ற வசதியளிக்கப்பெறும்.

   8. இடத்திற்கேற்ப வேறுபடல்

பல ஆட்டுக்களை ஆடு முறையும், அவற்றிற் சொல்லும் மரபுரைகளும் இடத்திற்கு இடம் சிறிதும் பெரிதும் வேறுபட்டிருப்பது, இயல்பு.

   9. ஆட்டைத்தொகை வரம்பின்மை

எவ்விளையாட்டிலும் இத்துணை ஆட்டை ஆடித் தீர வேண்டும் என்னும் கடுவரம்பில்லை, ஆடுவார் விருப்பம் போல் எத்துணை ஆட்டையும் ஆடலாம். பொதுவாக, ஒர் ஆட்டையில் தோற்றவன் அடுத்த ஆட்டையில் வெற்றி, நம்பிக்கை கொள்ளின், அதை ஆடுமாறு எதிரியை வற்புறுத்துவது வழக்கம்.

   10. நடுநிலை

விளையாட்டு இருபாலர்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைவிப்பதே யாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும் கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர். அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக் கொள்ளாது கலாம் விளைப்பர். அல்லது கரவு நெறியால் வெல்ல முயல்வர்.

விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, ‘சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந் தானைச் சோழன்மகனல்லை யெனத் தாமப்பல் கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43); அறியக் கிடக்கின்றது.

பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின் சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான் சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.

விளையாட்டின்பம் கருதிப் பிறர்க்கு நோவைத் தருவனவும் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன்நோவு போற் பேணுந் தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண் ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப் பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்தது என்று இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது என்றில்லாவாறு கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றல் வேண்டும். (பாவாணர் – தமிழ் நாட்டு விளையாட்டுக்கள்);. ‘விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது’ (பழ.);

     [விளையாடு → விளையாட்டு]

விளையாட்டு எழால்

 விளையாட்டு எழால் viḷaiyāṭṭueḻāl, பெ. (n.)

எழு வகை இசை எழால்களைப் பலவாறு கலந்தும் உறழ்ந்தும் அமைப்பது

 make a music by combining and changing the seven heptatonic.

     [விளையாட்டு+எழால்]

விளையாட்டுக்காட்டு-தல்

விளையாட்டுக்காட்டு-தல் viḷaiyāṭṭukkāṭṭudal,    10 செ.கு.வி. (v.i.)

   1. குழந்தைகட்குப் போக்குக் காட்டுதல்; to divert attention of children.

   2. கண்கட்டு வித்தை முதலியன காண்பித்தல்; to exhibit one’s magical powers, art, etc.

   3. வேடிக்கைக் காட்டுதல்; to play tricks.

     [விளையாட்டு + காட்டு-,]

விளையாட்டுக்கூட்டம்

விளையாட்டுக்கூட்டம் viḷaiyāṭṭukāṭṭam, பெ. (n.)

   1. களித்து விளையாடுவதற்கு உரியவரின் கூட்டம் (தக்கயாகப்.307, உரை);; merry or gay company.

   2. காரணமின்றிச் சேரும் மாந்த ரீட்டம் (யாழ்.அக.);; idle crowd gathering together for no purpose.

     [விளையாட்டு + கூட்டம்]

விளையாட்டுடைமை

 விளையாட்டுடைமை viḷaiyāḍḍuḍaimai, பெ. (n.)

   பொம்மை (புதுவை.);; toy.

     [விளையாட்டு + உடைமை]

விளையாட்டுபொம்மைகள்

 விளையாட்டுபொம்மைகள் viḷaiyāṭṭubommaigaḷ, பெ. (n.)

குழந்தைகள் வைத்து

   விளையாடும் பொம்மைகள்; dolls.

     [பொம்மைகள் குழந்தைகளைக் கவர்ந்து மகிழ்விக்கின்றன. பொம்மைகளால் கவரப்படாத குழந்தையே இல்லை எனலாம். இந்த ஆர்வத்தை அறிவு வளர்க்கும் துறையில் திருப்பி விடுதலே சிறந்த குழந்தை வளர்ப்பு முறையாகும்.

விளையாட்டுப் பொம்மைகள் விலை உயர்ந்தவை என்றும், அதனால் அவை செல்வர்களின் குழந்தைகளுக்குத்தான் ஏற்றவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது. குழந்தைகளை வளர்க்கும் அறிவுடன் புதுமையாகச் சிந்திக்கும் திறன் சிறிதளவேனும் இருந்தால், குறைந்த செலவில் தம் குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டுப் பொம்மைகளைப் பெற்றோர் அளிக்க முடியும்.

குழந்தை விளையாட்டுப் பொம்மைகளில் காட்டும் ஆர்வம், பிற்காலத்தில் வாழ்க்கையில் காட்டும் ஆர்வத்தின் துவக்கமேயாம். வளர வளரக் குழந்தை பொம்மைகளில் கொண்டுள்ள ஆர்வம் வாழ்க்கைசு சிக்கல்களுக்கு மாறுகிறது. விளையாட்டுப் பருவத்தில் பொம்மைகளினால் வளம்பெற்ற ஆர்வமே, மகிழ்ச்சியும் பயனும் மிக்க வாழ்க்கைக்குச் சிறந்த அடிப்படையாகும்]

     [p]

விளையாட்டுப்பண்டம்

 விளையாட்டுப்பண்டம் viḷaiyāṭṭuppaṇṭam, பெ. (n.)

   குழந்தைகள் விளையாடு வதற்கான பொருள்கள்; things for playful children.

     ‘விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது’ (பழ.);.

விளையாட்டுப்பிள்ளை

விளையாட்டுப்பிள்ளை viḷaiyāṭṭuppiḷḷai, பெ. (n.)

   1. சிறுபிள்ளை (யாழ்.அக.);; little child, as playful.

   2. சிறுபிள்ளைத் தனமாக நடப்பவ-ன்-ள்; person behaving in a silly way.

   3. கவலையின்றியிருப்பவ-ன்-ள்; irresponsible.

     ‘விளையாட்டுப் பிள்ளை நஞ்சிற்கு அஞ்சாது’ (பழ.);.

     [விளையாட்டு + பிள்ளை]

விளையாநிலம்

 விளையாநிலம் viḷaiyānilam, பெ. (n.)

   களர்நிலம் (பிங்.);; brackish soil.

மறுவ. உவர்நிலம், உவர்க்களம்.

     [விளை + ஆ.எதிர்மறை இடைநிலை + நிலம்]

விளையுங்காலம்

 விளையுங்காலம் viḷaiyuṅgālam, பெ. (n.)

   அறுப்புக் காலம் (யாழ். அக.);; time of harvest, harvest season.

மறுவ. அறுவடைக்காலம்

     [விளையும் + காலம்]

விளையுள்

விளையுள் viḷaiyuḷ, பெ. (n.)

   1. நாட்டமைதி ஆறனுளொன்றான விளைச்சல்; produce, crop. one of six {}, q.v.

     “பெயலும் விளையுளுந் தொக்கு” (குறள், 545);.

   2. முதிர்கை; maturing.

     “வேய்ப் பெயல் விளையுட் டேக்கட் டேறல்” (மலைபடு. 171);.

   3. வயல் (பிங்.);; field.

   4. உள்ளம் (அரு.நி.);; mind.

     [விளை + உள்2]

நாட்டில் விளைவன : நெல், வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை பாக்கு முதலியன.

காட்டில் விளைவன : எள், பயறு, தேன், அரக்கு, சந்தனம், புனுகு காசறை (கஸ்தூரி); முதலியன.

மலையில் விளைவன : ஏலம், மிளகு, அகில், மருப்பு (தந்தம்); மரம், பொன், மணி, முதலியன.

கடலில் விளைவன : உப்பு, மீன், இறால், சங்கு, முத்து, பவழம், ஒர்க்கோலை முதலியன (குறள். 730);

விளைவி-த்தல்

விளைவி-த்தல் viḷaivittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விளையச் செய்தல்; to cause to grow, to cultivate.

   2. செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல் (வின்.);; to stimulate growth by artificial means.

   3. பயன் தருதல்; to yield results, to bring about consequencesd, to be fruitful.

     [விளை → விளைவி]

விளைவு

விளைவு viḷaivu, பெ. (n.)

   1. விளைகை; growth, ripening.

   2. முதிர்ச்சி; maturity, ripening.

     “விளைவமை தயிரொடு மிசைகுவர்” (சீவக. 122);.

   3. முதுமை (பிங்.);; old age.

   4. விளைபொருள்; produce, crop, yield.

     “விச்ச தின்றியே விளைவு செய்குவாய்” (திருவாச. 5, 96);.

   5. பழம்; fruit.

     “வெள்ளில் விளைவுதிரும்” (பு.வெ.10. சிறப்பிற். 1);.

   6. பயன்; result, consequence.

     “விளைவின்கண் வீயா விழுமந் தரும்” (குறள், 284);.

   7. கைகூடுகை; success, grain.

     “வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு….. சொல்லோர்த்தன்று” (பு.வெ.1, 4);.

   8. ஆக்கம் (நாமதீப. 623);; increase.

   9. நிகழ்ச்சி; event, happening.

     “விளைவுரையென்று விட்டார்….. மெய்ம்மை யோர்வார்” (கம்பரா. பிணிவீ. 116);.

   10. விளையுமிடம்; place where anything is produced.

     “வினைக்கு விளைவாயது” (மணிமே. 4, 113);.

   11. வயல் (யாழ்.அக.);; field.

   12. மேகம் (பிங்.);; cloud.

   13. நாடகச்சந்தி ஐந்தனுளொன்று (சிலப். 3, 13, உரை);; denouement or solution in a play, one of five {}, q.v.

     ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ (பழ.);.

   க. பெளவிகெ;ம. விள.

     [விளை → விளைவு]

விளைவுபலன்

விளைவுபலன் viḷaivubalaṉ, பெ. (n.)

   விளையுபொருள்; produce.

மறுவ. விளைச்சல்

     [விளைவு + பயன் → பலன்1]

விள்

விள்1 viḷḷudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மலர்தல் (சூடா.);; to open out, expand, to unfold, as a blossom.

   2. உடைதல்; to crack.

     ‘அந்தப் பழம் கீழேவிழுந்ததனால் விண்டு போயிற்று’.

   3. வெடித்தல் (யாழ்.அக.);; to split, burst.

   4. மாறுபடுதல்; to be at variance, to be opposed.

     “விள்வாரை மாறட்ட வென்றிமறவர்” (பு.வெ.1.14);.

   5. தெளிவாதல்; to become clear.

 Ma. {};

 Tu. bulluni;

 pa. {};

 Kui. {};

 Kur. {}.

     [புள் → விள் → விள்ளு-,] (வே.க.142);

 விள்2 viḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. பிளத்தல்; to break open, to split.

     ‘பழத்தை விண்டான்’.

   2. பகைத்தல்; to hate.

     “விண்டு…… மண்டினார்” (சீவக. 418);.

   3. நீங்குதல்; to be separated from, to leave.

     “வினைகளும் விண்டனன்”(தேவா. 928, 7);.

   4. சொல்லுதல்; to say, tell, state.

     “தன்னிடத்து வந்து விள்ளான்” (திருவாலவா. 33, 10);.

   5. வெளிப்படுத்துதல்; to reveal, make known.

     “உமக்கே விண்டு பேசினல்லால்” (அஷ்டப். திருவரங்கக். 70);.

   6. வாய் முதலியன திறத்தல்; to open, as the mouth.

     “வாய்விண்டு கூறும்” (பாகவத. 1. தன்புத்திர. 29);.

   7. பிதிர் முதலியன விடுத்தல்; to slove, as a riddle or conundrum.

     ‘இந்தப் பிதிரை விள்ளு’.

   8. கலத்தல், விரும்புதல்; to mingle, to desire.

     [பிள் → விள் → விள்ளு-,] (வே.க.142);

விள்கை

விள்கை viḷkai, பெ. (n.)

   விட்டகலுகை; leaving.

     “விள்கை விள்ளாமை விரும்பி” (திவ். திருவாய். 1, 6, 5);.

     [விள் → விள்கை] (செல்வி 177 ஆனி, 542);

விள்ளல்

விள்ளல் viḷḷal, பெ. (n.)

   1. பிரிவு; separation.

     “விலங்கிற்கும் விள்ள லரிது” (நாலடி, 76);.

   2. மலர்கை (சூடா.);; unfolding, as of a flower.

   3. தழுவுதல் (சூடா.);; embracing.

   4. நெடுநாரை என்னும் மரவகை; wynaad coffee cherry-nutmeg.

     [விள் → விள்ளல்]

விள்ளோடன்தேங்காய்

 விள்ளோடன்தேங்காய் viḷḷōṭaṉtēṅgāy, பெ. (n.)

   உள்ளீடான பருப்பு, சிரட்டை யினின்று எளிதாகப் பெயருந் தேங்காய் (யாழ்ப்.);; coconut in which the kernel parts easily from the shell.

     [விள் + ஒடு + தேங்காய்]

விழ

விழ viḻ, பெ. (n.)

விழா பார்க்க;see {}.

     “விழ வித்தாய் வீடுபெற்றான்” (சீவக. 3114);.

     [விழா → விழ]

விழக்குழிபாய்ச்சு-தல்

விழக்குழிபாய்ச்சு-தல் viḻkkuḻipāyccudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. படுகுழியில் வீழ்த்துதல்; to throw into a deep pit.

   2. பிறனுக்கு இடையூறு செய்து வினைக்கேடு விளைத்தல்; to thwart an undertaking by putting obstacles in the way.

     [விழு → விழ + குழிபாய்ச்சு-,]

விழத்தட்டு-தல்

விழத்தட்டு-தல் viḻddaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. கீழ்விழும்படித் தள்ளுதல்; to overthrow, fell down.

   2. பிறன் கையிலுள்ளதைத் தட்டிவீழ்த்துதல்; to fall a thing dashing out of another’s hand.

     [விழு → விழ + தட்டு-,]

விழத்தள்ளு-தல்

விழத்தள்ளு-தல் viḻddaḷḷudal,    5 செ. குன்றாவி.(v.t.)

விழத்தட்டு-, (வின்.); பார்க்க;see {}.

     [விழு → விழ + தள்ளு-,]

விழம்பு

 விழம்பு viḻmbu, பெ. (n.)

   சோறு (யாழ்.அக.);; boiled rice.

     [அவிழ் → விழம்பு]

விழற்கட்டு

 விழற்கட்டு viḻṟkaṭṭu, பெ. (n.)

   விழற்புல் வேய்ந்த வீடு (யாழ்.அக.);; house thatched with {} grass.

     [விழல் + கட்டு]

விழற்கிறை-த்தல்

விழற்கிறை-த்தல் viḻṟkiṟaittal,    4 செ.கு.வி. (v.i.)

விழலுக்கிறை-, பார்க்க;see {}.

     “சுத்தப் பாமரராய் விழற்கிறைத்துப் பட்டனரால்” (பிரபோத. 13, 14);,

     ‘விழலுக்கு இறைத்த நீர்’ (பழ.);.

     [விழலுக்கு + இறை-,]

விழற்கூரை

 விழற்கூரை viḻṟārai, பெ. (n.)

   விழற்புல் வேய்ந்த கூரை; roof of {} grass thatch.

மறுவ. கூரைவீடு.

     [விழல் + கூரை]

     [p]

விழற்பாய்

விழற்பாய் viḻṟpāy, பெ. (n.)

   விழற்புல்லாற் பின்னிய பாய்; mat made of {} grass.

     ‘வெயில்நாளில் விழற்பாயும் குளிர்நாளில் கோரைப்பாயும்’ (உ.வ.);.

     [விழல் + பாய்2]

விழலன்

விழலன் viḻlaṉ, பெ. (n.)

   ஒன்றுக்கும் உதவாதவன்; idler, worthless man, a man of good for nothing.

     “விழல னெனையாள நினைவாய்” (திருவேங். சத. 86);.

மறுவ. உதவாக்கரை, விழலி.

     [விழல் → விழலன்] (வே.க.156);

விழலரிசி

 விழலரிசி viḻlarisi, பெ. (n.)

   புல்லினத்தைச் சேர்ந்த கோரையரிசி; rice of the sedge.

     [விழல் + அரிசி]

இவ்வரிசியை நொய்யாக்கிக் கஞ்சி காய்ச்சியுண்ண எந்நோய்கள் நீங்கும் என்பதை குணபாடப் பாடல் காட்டுகிறது.

     “விழலரிசி யென்றான் மிகுபித்த மேகும்

அழல் குடலின் வாதம் அகலும் – துழவு

திரிதோட மேகவிவை சேராவா நீயுங்

குறியா இதையறிந்து கொள்” (கு.பா.);

விழலாண்டி

விழலாண்டி viḻlāṇṭi, பெ. (n.)

   சோம்பித்திரியும் வீணன் (வின்.);; idler, worthless man, lazy fellow.

     [விழல் → விழலாண்டி] (வே.க.156);

விழலி

விழலி viḻli, பெ. (n.)

   ஒன்றுக்கும் உதவாதவள்; idle woman, worthless woman, a woman of good for nothing.

     “வீணிகள் விழலிகள்” (திருப்பு. 890);.

     [விழல் → விழலன் → விழவி] (வே.க.156);

விழலுக்கிறை-த்தல்

விழலுக்கிறை-த்தல் viḻlukkiṟaittal,    4 செ.கு.வி. (v.i.)

   வீண்பாடுபடுதல்; to labour unprofitably, as watering unproductive grass.

     ‘விழலுக் கிறைத்த நீர்போல’ (பழ.);.

     [விழலுக்கு + இறை-,]

விழல்

விழல்1 viḻl, பெ. (n.)

   விழுகை; falling.

     “பாவாடை விடலொன்றே நரகத்தில் விழலொன்றே”.

     [விள் –→ விழல்] (வே.க.156);

 விழல்2 viḻl, பெ. (n.)

   1. பயனின்மை; worthlessness, being valueless.

     “அழல தோம்பு மருமறையோர் திறம் விழல தென்னு மருகர்” (தேவா. 366, 7); (பிங்.);.

   2. நாணற்புல் வகை; a variety of sacred grass.

     “காமரெழில் விழலுடுத்த” (திவ். பெருமாள். 9, 7);.

   3. பயனற்ற கோரைவகை; a kind of sedge.

   5. ஒரு நறுமண வேர்; cuscus grass.

     [விள் → வெள் → விழல்]

 Ma. {};

 Ka. {};

 Te. {}.

     [p]

விழல்கட்டி

 விழல்கட்டி viḻlkaṭṭi, பெ. (n.)

   விழற்புல்லாற் பின்னுவோன் (இ.வ);; one who knits sacred grass.

     [விழல் + கட்டு → கட்டி]

விழவணி

விழவணி viḻvaṇi, பெ. (n.)

   நன்னாளில் அணியும் ஒப்பனை; adornment of the person on festive occasions, as marriage etc.

     “வதுவை விழவணி வைகலுங் காட்டினை” (கலித். 98);.

     [விழவு + அணி]

விழவர்

விழவர் viḻvar, பெ. (n.)

   விழா கொண்டாடுவோர்; those who celebrate a festival.

     “தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப” (சிலப். 7, பக். 206);.

     [விழா → விழவு → விழவர்]

ஒ.நோ. உழவு → உழவர்

விழவாற்றுப்படு-த்தல்

விழவாற்றுப்படு-த்தல் viḻvāṟṟuppaḍuttal,    20 செ.கு.வி. (v.i.)

   விழாவை நிறைவு செய்தல்; to bring a festival to a close, ralidiction.

     “விழவாற்றுப்படுத்த பிற் புல்லென்ற களம்போல” (கலித். 5.);

     [விழவு → விழா + ஆற்றுப் படு-த்தல்,]

விழவி

விழவி viḻvi, பெ. (n.)

   பூடுவகை; a plant.

     “ஒருபிடி விழவியிலையும்” (தஞ். சர.iiii, 290);.

விழவு

விழவு viḻvu, பெ. (n.)

   1. விழா பார்க்க;see {}.

     “முந்நீர் விழவி னெடியோன்” (புறநா. 9);.

   2. விளையாட்டு; pastime.

     “ஊரனொடப்பு விழவமரும் பணிமொழி யரிவை” (பு.வெ.12. பெண்பாற். 10);.

   3. அவா (அரு.நி.);; desire, longing.

   4. இரட்டை ஒரை (மிதுனராசி); (பிங்.);; gemini of the zodiac.

     [விழா → விழவு]

விழவுக்களம்

விழவுக்களம் viḻvukkaḷam, பெ. (n.)

   விழா நடைபெறும் இடம்; place of celebration of a festival.

     “விழவுக்கள நந்தி” (குறிஞ்சிப். 192);.

     [விழா → விழவு + களம்2]

விழவேடெடு-த்தல்

விழவேடெடு-த்தல் viḻvēḍeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   நூலினைத் திருடிக் கொள்ளுதல்; to steal one’s book.

     “அவ்வூரில் விழவே டெடுத்துக் கொண்டறிதல்….. செய்வாரில்லை” (திவ். பெரிய்தி. 8, 1, 8. வ்யா.);.

     [விழ + ஏடு + எடு-,]

விழா

விழா viḻā, பெ. (n.)

   1. விழாக்கொண்டாட்டம்; festive occasion, festivity, celebration of an event.

     “ஆலமர் செல்வன்… மகன் விழாக் கால்கோளென்று” (கலித். 83);.

   2. திருமணக் கொண்டாட்டம்; celebration of a marriage.

     “அரசிளங் குமரர்க்குயர் விழா நடத்தி” (திருவாலவா. 25, 24);.

ம. விழா.

     [விழு → விழை → விழா]

     [விழாக்கள் பண்டைக்கால மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டுச் சடங்கிலிருந்து தோன்றியனவாகும். பண்டைமக்கள், தனி ஒருவருக்கோ குழுவினருக்கோ தீங்கான நெருக்கடி உண்டாகும் காலத்தில் அதை நீக்கிக் கொள்வதற்காகவும், அந்தக் காலத்தில் உண்டாகும் உள்ளக்கிளர்ச்சி அமைதி யடைவதற்காகவும் சடங்குகளில் கலந்துகொள்வது வழக்கமாயிருந்தது.

   நாட்டுப்புறத்தில் நடைபெறும் பலவகையான விழாக்கள் பெரும்பாலும் மதத் தொடர்பானவையாகும். இந்த விழாக்கள் புராண இதிகாசங்களிலுள்ள பல நிகழ்ச்சிகளை அடிநிலையாகவுடையன. இவை நாடகம், நடனம், பாடல்கள். விளையாட்டுகள் என்றவாறு கொண்டாடப்பெறும். இவை மக்களை ஒற்றுமைப்படுத்தும்;மதக்கொள்கைகளை இறவாமல் பாதுகாக்கும் ஆற்றலுடையன.

வேளாண்மை செய்வோர் பருவகால வேறுபாடுகளுக்குத் தக்க விழாக்களும், நாற்று நடுதல், அறுவடை செய்தல் போன்ற பல நிகழ்ச்சிகளுக்குத் தக்க விழாக்களும் உடையர். கடக(ஆடி);த் திங்களில் தென்னிந்திய ஆறுகள் வெள்ளப் பெருக்குடையன. அக்காலங்களில் மக்கள் ஆற்றுத் தெய்வங்களை வழிபடும் விழாக்கள் நடத்திப் பயிரிடத் தொடங்குவர். சுறவத்(தை); திங்களில் அறுவடை விழாவாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவர். அச்சமயம் அறுவடை செய்த தவசத்தை ஞாயிற்றுக் கடவுளுக்குப் படைப்பர். இவ்வாறு இந்திய மக்கள் மற்ற நாட்டார் போலவே வாழ்வின் இன்றியமையாத கட்டங்களில் விழாக்களை நடத்தி, நாகரிகத்தை இறவாமற் பாதுகாப்பர்]

விழாக்கடி

விழாக்கடி viḻākkaḍi, பெ. (n.)

   விழாக்காட்சி (வின்.);; sights of a festival.

     [விழா + கடி5]

விழாக்கால்கோள்

விழாக்கால்கோள் viḻākkālāḷ, பெ. (n.)

   திருவிழாத் தொடக்கம்; commencement of a festical.

     “ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்” (மணிமே. 3, 144.);.

     [விழா + கால்கோள்]

விழாக்கோளாளர்

விழாக்கோளாளர் viḻākāḷāḷar, பெ. (n.)

   அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர்; those who conduct a festival, as by order of a king and others.

     “விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇ” (பெருங். உஞ்சைக். 37, 247);.

     [விழாக்கோள் + ஆளர்]

விழாக்கோள்

விழாக்கோள் viḻākāḷ, பெ. (n.)

   திருவிழாக் கொண்டாட்டம்; celebration of a festival.

     “விழாக் கோளெடுத்த நாலேழ் நாளினும்” (மணிமே. 1, 7);.

     [விழா + கோள்]

விழாப்பறை

 விழாப்பறை viḻāppaṟai, பெ.(n.)

   விழாக்களில் காளை மாட்டின் முதுகிலேற்றி வைத்து அடிக்கும் கொட்டு (டமாயி); ; keltle drums mounted on an ox and beaten, as in processions.

மறுவ. ஏற்றுப்பறை

     [விழா+பறை]

விழாப்புறம்

விழாப்புறம் viḻāppuṟam, பெ. (n.)

   திருவிழா நடைபெறுதற்கு விடப்பட்ட இறையிலி நிலம் (T.A.S.i,6);; land-endowment for the conduct of festivals.

     [விழா + புறம்1]

விழாலரிசி

 விழாலரிசி viḻālarisi, பெ. (n.)

   ஒருவகைப் புல்லரிசி (தைலவ.);; seed of a kind of grass.

தெ. விடவலி.

     [விழால் + அரிசி]

விழால்

 விழால் viḻāl, பெ. (n.)

விழாலரிசி (தைலவ.); பார்க்க;see {}.

     [விழல் → விழால்]

விழாவணி

விழாவணி viḻāvaṇi, பெ. (n.)

   1. விழவணி பார்க்க;see {}.

   2. திருவிழாச் சிறப்பு; ceremonial grandeur, as of festivities.

     “நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே” (சிலப். உரைபெறுகட். 4);.

   3. வீரனது போர்க்களம்; state or appearance of an armed warrior for battle.

     “வில்லின் செல்வன் விழாவணி விரும்பி நோக்கி” (கம்பரா. மீட்சிப். 55);.

     [விழா + அணி]

விழி

விழி1 viḻittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. கண்திறத்தல்; to awaken, to open the eyes.

     “இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால்” (கலித். 144);.

   2. உறக்கம் தெளிதல்; to wake from sleep.

     “உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339);.

   3. விழிப்பாக இருத்தல்; to be watchful, beware of, to be vigilant, to be wide awake alert.

     ‘அவன் சோர்வு போகாமல் விழித்துக் கொண்டிருப்பவன்’.

   4. உண்ணித்து நோக்குதல்; to look at attentively or pointedly.

     “நாட்டார்கள் விழித்திருப்ப…. நாயினுக்குத் தவிசிட்டு” (திருவாச. 5, 28);.

   5. மருண்டு நோக்குதல்; to gaze, stare.

     “விண்ணின்று மிழியாம லெப்போதும் வானோர் விழிக்கின்றதே” (பிரபோத. 6, 14);.

   6. ஒளிர்தல்; to shine.

     “பொன்ஞா ணிருள் கெட விழிப்ப” (சீவக. 2280);.

   7. தெளிவாதல்; to be clear.

     “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (தொல். சொல். 394);.

   8. உயிர் வாழ்தல்; to be alive.

     “அழற்கணாக மாருயிருண்ண விழித்தலாற்றேன்” (மணிமே. 23, 70);.

     [விள் → விழி → விழி-,] (வே.க.143);

 விழி2 viḻi, பெ. (n.)

   1. கண் (பிங்.);; eye.

     “விழியிலா நகுதலை” (தேவா. 345, 5);.

   2. மிண்டை; eye-ball.

   3. அறிவு; knowledge, wisdom.

     “தேறார் விழியிலா மாந்தர்” (திருமந். 177);.

 Skt. வித்;

ம. மிழி.

     [விள் → விழி]

விழி =

   1. அறிவு.

   2. ஓதி (ஞானம்);.

     “தேறார் விழியிலா மாந்தர்” (திருமந். 177);.

 L. Vide, E. Vide, Skt. Vid = to know.

வித்யா, வித்வான், வைத்ய, வேத, வேதஸ் (dh.); முதலிய பலசொற்கள் ‘வித்’ என்னும் மூலத்தினின்று பிறந்தவையே.

ஆகவே ஆரியர்க்கு ஞானமும் வித்தையும் தமிழினின்றே தோன்றின என அறிக.

வித்யா என்னும் வடசொல், தமிழில் வித்தை, விச்சை, விஞ்சை என முறையே திரியும். ஆரியர் இதைக் கொண்டு, விழி என்பதன் திரிபே ‘வித்’ என்பதை அறியாத தமிழரை மயக்குவர் (வ.மொ.வ.92);.

விழிகண்குருடு

விழிகண்குருடு viḻigaṇguruḍu, பெ. (n.)

   வெளித்தோற்றத்தில் விழியில் மாறு பாடின்றியே கண்தெரியாமை; blindness without any apparent defect in the eye.

     “அவமுறு விழிகண்குருடொடு மாவி யயர்வுறும்” (கடம்ப. பு. இலீலா. 104.);.

     [விழிகண் + குருடு]

விழிகண்ணன்

விழிகண்ணன் viḻigaṇṇaṉ, பெ. (n.)

   கண்பார்வையுள்ளவன்; one who is not blind.

     ‘குருடர்க்கு வைத்த அறச்சாலையில் விழிகண்ணர் புகுதரலாமோ வென்று’ (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 46);.

     [விழி + கண்ணன்]

விழிக்கட்பேதைப்பெருங்கண்ணனார்

விழிக்கட்பேதைப்பெருங்கண்ணனார் viḻikkaṭpētaipperuṅgaṇṇaṉār, பெ. (n.)

   கடைக்கழகப் புலவர்; a sangam poet.

கடைக்கழகக் காலப் புலவருள் ஒருவர். இவரியற் பெயர் பெருங்கண்ணனார் என்பது இவர் செய்யுளில் (நற். 242); மான் குட்டியை விழிக்கட் பேதையென அழைத்துள்ளதால் இப்பெயர் பெற்றாரென்பர்.

விழிச்சி

 விழிச்சி viḻicci, பெ. (n.)

   காதுக்குள் வெடிக்குங்கட்டி (M.L.);; inflammation of the internal ear, otitis.

மறுவ. எழுச்சி.

விழிஞம்

விழிஞம் viḻiñam, பெ. (n.)

   திருவிதாங் கூரிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம்; a harbour town on the seacost of Travancore.

     “விழிஞக் கடற் கோடியுள் வேல்வலங்கைக் கொண்டான்” (இறை. 3, உரை);.

விழிதுறை

விழிதுறை viḻiduṟai, பெ. (n.)

   1. நீர்க்கரை; shore, bank, ford.

   2. இறங்குதுறை; ghat, ford.

     [இழிதுறை → விழிதுறை]

விழித்திரு-த்தல்

விழித்திரு-த்தல் viḻittiruttal, செ.குன்றாவி (v.t.)

 to be insomnia caused by loweafair.

     “வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு” (திருமந்:564);.

     [விழித்து+இரு]

விழிபிதுங்கு-தல்

விழிபிதுங்கு-தல் viḻibiduṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   வேலை நெருக்கடியால் வருந்துதல்; to suffer from over work.

     [விழி + பிதுங்கு-,]

விழிப்ப

விழிப்ப viḻippa, இடை.(part.)

   முற்றும் விளங்க, தெளிவாக; to be clear, to illustrate.

     “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” (தொல்.உரி.96);.

சொற்களின் பொருட்களுக்குக் காரணம் உண்டு என்பது மட்டும் தேற்றம்.

விழிப்பு

விழிப்பு viḻippu, பெ. (n.)

   1. விழிக்கை; waking up, awakening.

   2. எச்சரிக்கை; watchful ness, vigilance, awareness.

   3. சிறந்து விளங்குகை (வின்.);; conspicuousness, prominence.

   4. செய்வது தெரியாமல் திகைக்கை; blinking caution in ignorance.

     [விள் → விழி → விழிப்பு]

விழிப்புணர்வு

 விழிப்புணர்வு viḻippuṇarvu, பெ. (n.)

   ஒன்றைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்கிற அல்லது உணர்ந்து கொள்கிற நிலை; awareness.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு தேவை (உவ);.

     [விழிப்பு+உணர்வு]

விழிப்புநிலை

 விழிப்புநிலை viḻippunilai, பெ.(n.)

   ஆதன் புருவ நடுவில் நின்று கோட்பாடுகளுடன் கூடி நுகர்ச்சியில் மெத்தென நிற்கும் நிலை (சாக்கிரம்);; waking state in which the soul is in the forehead with all its faculties active.

     [விழிப்பு+நிலை]

விழிப்புவளி

 விழிப்புவளி viḻippuvaḷi, பெ.(n.)

   பத்து உடல் வழிகளும், இமைத்தல், விழித்தல்களைச் செய்யும் காற்று (கூர்மன்);; the vitalair of the body which causes closing and opening of eyelids one of taša-wayu.

     [விழிப்பு+வளி]

விழிப்பேந்துகள்

 விழிப்பேந்துகள் viḻippēndugaḷ, பெ.(n.)

   பொறிகள், புலன்கள், தன் மாத்திரைகள் உயிர்வளி ஆதன் எனும் விழிப்புணர்வுக்கு உரிய கருவிகள் (சாக்கிரக் கருவி);; agentor elements operating in the state of waking, as organs of action, of sense and of mind, vital airs and soul.

     [விழி+பேந்துகள்]

விழிமி

 விழிமி viḻimi, பெ. (n.)

விழுதி (பிங்.); பார்க்க;see {}.

விழியன்

விழியன் viḻiyaṉ, பெ. (n.)

   1. பெருங் கண்ணுடையவன் (வின்.);; one having large prominent eyes.

   2. பிதுங்கிய விழி யுடையவன்; one having bulging eyes.

     [விழி → விழியன்]

விழியம்

 விழியம் viḻiyam, பெ. (n.)

   வித்தமிழ்து; semen.

விழிவாதம்

 விழிவாதம் viḻivātam, பெ. (n.)

   இமைகளையாட்டும் கண்ணோய்வகை (சீவரட்);; a disease of the eye that causes twitching.

     [விழி + Skt. {} → த. வாதம்]

விழிவிழுங்கி

 விழிவிழுங்கி viḻiviḻuṅgi, பெ. (n.)

   கண்ணோய்வகை (யாழ்.அக.);; an eye- disease.

     [விழிவிழுங்கு → விழிவிழுங்கி]

விழு

விழு1 viḻudal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கீழ் நோக்கி யிழிதல்; to fall, fall down, to descend, to flowdown.

     “விழூஉமவ்வெள் ளருவி” (பதிற்றுப். 78, 1);.

   2. நிலம் படியச் சாய்தல்; to lie prostrate, as in reverence.

     “பாடல் புரிந்து விழுந்தெழுந்து….. பயில்வித்தார்” (பெரியபு. திருநா. 309);.

   3. சோர்ந்து வீழ்தல்; to fall down exhausted.

     “வெஞ்சினவீரர் விழுந்தனர்” (கம்பரா. இராவணன்வதை. 36);.

   4. நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல்; to fall sick or ill, to be bed-ridden.

   5. தோற்றுப்போதல்; to be defeated or overthrown.

     ‘அவன் வாக்கு வாதத்தில் விழுந்துவிட்டான்’.

     ‘விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்’.

   6. தாழ்தல்; to fall low, decline, slash as prices, to sink to a lower leve.

     ‘விலை விழுந்து விட்டது’.

   7. கெடுதல்; to be destroyed, ruined.

     “விழுந்தன கொடிய தீவினைப் பரப்பெலாம்” (பிரபுலிங். அக்கமா. உற். 11);.

   8. சாதல்; to die.

     ‘அவர் விழுந்து போனார்’.

   9. மறைதல்; to set, as the sun.

     “விழுந்த ஞாயிறு வெழுவதன் முன்” (கம்பரா. காப்பு. 9);.

   10. வழக்கிலின்றி ஒழிதல்; to fall into desuetude to be iobsolete.

   11. தங்குதல்; to settle, to be fixed.

     ‘அவன் நினைவு அதிலே விழுந்தது’.

   12. திரண்டு கூடுதல்; to crowed to gether, to swarm.

     ‘மக்கள் வந்து விழுகிறார்கள்’.

   13. கிடைத்தல்; to be allotted, to fall to one’s lot or share.

     ‘சீட்டு அவனுக்கு விழுந்தது’.

   14. பதிதல்; to be imprinted.

     ‘புகைப்படம் நன்றாய் விழுந்திருக்கிறது’.

   15. வெளித் தோன்றுதல்; to appear, to be formed, to come out.

     ‘துளை விழுந்த மரம்’.

     ‘மாட்டுக்கு இரண்டு பல் விழுந்திருக்கிறது’.

     ‘கிழங்கு விழுந்தது’.

   16. நேர்தல்; to take place, happen.

   17. கழிதல்; to pass, to pass away.

     ‘இப்படி நாள் விழுகை யாலும்’ (S.I.I.V. 140);.

   18. ஒருவன் மீது தாக்கிச் செல்லுதல்.

     ‘பகைமேல் விழுந்தான்’.

   19. விருப்பங் கொள்ளுதல்; to exhibit desire.

     “ஐம்புலன் மேல் விழுந்து” (திருநூற். 13);.

   20. இடத்திற் பொருந்துதல்; to fit into position.

   21. உரிமை முதலியன இறங்குதல்; to devolve.

   22. பிறத்தல்; to be born, used in contempt.

     ‘பெண் கட்டை விழுந்தது’.

   23. சொல் முதலியன வெளிப்படுதல்; to issue, proceed from, as speech.

   24. பிரிவு படுதல்; to become detached.

   25. கீழ் நோக்கிப் பாய்தல்; to swoop.

   26. ஆறு முதலியன கூடுமிடம்; to decharge, empty as ariver.

   27. தொங்குதல்; to hang down, droop.

   28. கடுஞ்சினங் கொள்ளுதல்; to fall into a rage.

   29. முகம் முதலியன வாடுதல்; to lose animation, as face.

   30. பணம் முதலியன முடங்கிக் கிடத்தல்; to be locked up, as capital.

   க. பீழு; Ma. {};

 Ko. vig;

 To. pid;

 Ka. {};

 Kod. bu.L;

 Tu. {};

 Te. Biddu;

 Kui. {};

 Kuwi. briali.

     [விழ் → விழு-,]

 விழு2 viḻudal,    4 செ.கு.வி. (v.i.)

   விரும்புதல், விருப்பங்கொள்ளுதல்; to desire.

     “ஐம்புலன்மேல் விழுந்து” (திருநூற். 13); (வே.க.119);.

 விழு3 viḻuttal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. விழச் செய்தல்; to cause to fall, to throw down.

     “பழைய கால்விழுத்த நெடுவேலைவீழ் வெற்பனை” (பாரத. இராசசூய. 64);.

   2. மடியச் செய்தல்; to cause to die.

     “நமன்றமர்….. விழுப்பதன் முன்” (தேவா. 420. 6);.

   3. களைதல்; to abandon, to remove, mitigale, enadicate.

     ‘அரைத்துணியை விழுத்து வை’.

     [விழு1 → விழு-,]

 விழு4 viḻu, பெ.எ.(adj.)

   1. சிறந்த; excellent, sublime pure, blessed.

     “விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை” (குறள்,162);.

   2. துன்பமான (சீவக. 2355);; distressing, grievous.

     [விழு1 → விழு]

விழுக்காடிடு-தல்

விழுக்காடிடு-தல் viḻukkāḍiḍudal,    18 செ. குன்றாவி.(v.t.)

   கூறிடுதல்; to apportion.

     “ஒன்று மிரண்டுமாகப் பகழியை விழுக்காடிட்டு” (சீவக. 798, உரை);.

     [விழுக்காடு + இடு-,]

விழுக்காடு

விழுக்காடு viḻukkāṭu, பெ. (n.)

   1. வீழ்கை; falling, flowing down, as of a waterfall.

     “மலைநீர் விழுக்காடு” (திருவாலவா. 54, 9);.

   2. கீழ் நோக்கான பாய்ச்சல்; swoop, as of a kite.

     “பருந்தின் விழுக்காடு” (நன். 18, மயிலை.);.

   3. பங்கு (வின்.);; share, portion, lot.

   4. மேனி; proportion, rate.

     “நூறுகுழிக்குக் கலனேநானாழி நெல்லும் கால் பணமும் விழுக்காடு கொள்ளக் கடவதாகவும்” (S.I.I.i, 93,7);.

   5. தற்செயல்; chance.

     “பகவத் குணானுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணான படி” (ஈடு. 3, 6, 11);.

   6. மேல்வருவது; that which is in store in the future.

     “இவனும் விழுக்காடறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான்” (ஈடு. 6, 1, 5, ஜீ.);.

   7. பொருளின்றிக் கூட்டியுரைக்கப்படுஞ் சொல்; expletive.

     “என்றால் என்பது ஓர் சொல் விழுக்காடு” (சீவக. 1886, உரை);.

   8. எதிர்நிலைப் பொருள்; implication, implied sense.

     “விழுக்காட்டாலே சொன்னார்” (ஈடு. 3, 3, 5.);.

விழுக்கு

விழுக்கு1 viḻukku, பெ. (n.)

   மென்று தின்னாமல் ஒருசேர வுட்கொள்ளுகை; gulp, swallow.

     ‘ஒரு விழுக்கு விழுங்கினான்’.

     [விழுங்கு → விழுக்கு]

 விழுக்கு2 viḻukku, பெ. (n.)

   1. ஊன் கொழுப்பு; fat, suet.

     “விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்” (புறநா. 371);.

   2. எண்ணெய்ப் பிசுக்கு; oiliness, grease.

ஒ.நோ. விழுது.

விழுக்குப்புரட்டு

 விழுக்குப்புரட்டு viḻukkuppuraṭṭu, பெ. (n.)

   எண்ணெயில் வேகவைத்தெடுத்த கறிவகை (நாஞ்.);; a relish prepared in oil.

மறுவ. வறுவல்.

     [விழுக்கு + புரட்டு]

விழுங்கு-தல்

விழுங்கு-தல் viḻuṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மென்று தின்னாமல் ஒருசேர வுட் கொள்ளுதல்; to swallow, gulp, as food.

     “தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று” (குறள், 931);.

   2. முற்றும் விழுங்குதல்; to devour, consume, to absorb, to exhaust.

     ‘நெருப்பு எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது’.

   3. தெளிவின்றிப் பேசுதல் (வின்.);; to ulter indistinctly.

   4. சொற்களை மழுப்புதல்; to be hesitant in speech, slurring over words.

     ‘ஏன் விழுங்கி விழுங்கிப் பேசுகிறாய்’.

   5. வெல்லுதல்; to overcome.

     “வெம்பு காலினை விழுங்கிட… உம்பர் மீதினிமிர் வாசுகி யொத்தான்” (கம்பரா. இராவணன் தானை. 3);.

   6. கவர்தல்; to seize, capture, rob.

     “விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார்” (சீவக. 1817);.

   7. கொல்லுதல்; to kill.

     “கல்லாமந்திரி விஷழுங்கப்பட்டான்” (சீவக. 385);.

   8. எங்கும் நிறைதல்; to pervade, to swarm everywhere.

     “வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே” (கம்பரா. திருவவ. 85);.

   தெ. மிங்கு;   க. முங்கு;ம. விழுங்க.

விழுங்கும்பாம்பு

விழுங்கும்பாம்பு viḻuṅgumbāmbu, பெ. (n.)

   மதிற்பொறிவகை (சிலப். 15, 216, உரை);; a deadly defensive machine in a fortress.

     [விழுங்கு + பாம்பு]

விழுசுமை

விழுசுமை viḻusumai, பெ. (n.)

   பெருஞ்சுமை (யாழ்.அக.);; heavy burden.

     [விழு1 + சுமை]

விழுச்சிறை

விழுச்சிறை viḻucciṟai, பெ. (n.)

   சீரிய சிறைவாசம்; imprisonment without loss of dignity or honour.

     “விலங்கி வில்லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்டபோழ்தும்” (சீவக. 1167);.

     [விழு4 + சிறை]

விழுச்செல்வம்

விழுச்செல்வம் viḻuccelvam, பெ. (n.)

   பெருஞ்செல்வம்; great fortune, immense wealth, imperishable treasure.

     “கேடில் விழுச்செல்வங் கல்வி” (குறள், 400);.

     [விழு1 + செல்வம்]

விழுதி

 விழுதி viḻudi, பெ. (n.)

   மருந்துச் செடிவகை; a straggling shrub with wimple oblong leaves and greenish flowers.

இரட்டை விதையிலை நிலைத்திணைகளிலே ஆதொண்டைக் குடும்பத்தைச் சேர்ந்த புதர் போன்ற குற்றுமரம். இதன் இலைகள் தனியிலைகள். கனி சூலகம் தாங்கியின் முனையில் இருக்கும். அது வெடிக்கும் விதைகளைச் சுற்றிலும் கிச்சிலி நிறமான சவ்வு மூடியிருக்கும். பறவைகள் இதைத் தின்னும். விதைகள் பறவைகளால் பரவலுறும். விழுதியின் இலையும் வேரும் மருந்தாகப் பயன்படும்.

விழுதிக்கீரை

 விழுதிக்கீரை viḻudikārai, பெ. (n.)

   விழுதியின் இலை; leaves of {}.

     [விழுதி + கீரை]

     “விழுதித் தழைகரப்பான் வெண்மேகம் நீங்கும்

பழுபடுவன் சூலைநோய் மாறும் – எழுபேதி

யாக்குமதி மந்தம் அகக் கிருமி துன்மலமும்

போக்கும் அதுவே புகல்” (கு.பா.);

விழுது

விழுது viḻudu, பெ. (n.)

   1. ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி (பெரும்பாண். 357, உரை);; aerial root, as of the banyan.

     “விழுதுடைத் தனியாலென விருந்த தொல்வியாதனை முகநோக்கி” (வில்லி. பாரத. சம்பவச்சருக்கம். 10.);

   2. தலை மயிர்ச் சடையின் ஒருகால் (இ.வ.);; lock of hair.

   3. நெசவுக்கருவி யுறுப்புள் ஒன்று; heddles.

   4. ஆழமளக்குங் கருவி (Naut.);; lead for sounding.

   5. இறுகிக் கட்டியான நெய்; ghee in congealed state.

   6. வெண்ணெய்; butter.

     “ஆய்ச்சி விழுதுண்ட வாயானை” (திவ். இயற். 3. 25);.

   7. கொழுப்பு (வின்.);; fat.

   8. நீர் விட்டரைத்துத் திரட்டியது; paste, pulpy mass.

     ‘இந்த உழுந்து தோசைக் கரைத்தால் விழுது காணுமா?’

   க. பிலலு;   ம. விழுது;தெ. {}.

     [விழு → விழுது]

     [p]

விழுதுக்கயிறு

விழுதுக்கயிறு viḻudukkayiṟu, பெ. (n.)

   1. நெசவுக் கயிறுவகை; thread of linen, wound on the two beams, which the slay moves up and down.

   2. கடலின் ஆழமறிய உதவுங்கயிறு;     [விழுது + கயிறு]

விழுதுசாந்து

 விழுதுசாந்து viḻuducāndu, பெ. (n.)

   மையாக அரைத்த சுண்ணச் சாந்து (இ.வ.);; mortar ground to a pulpy mass.

     [விழுது + சாந்து]

விழுதுவிடு-தல்

விழுதுவிடு-தல் viḻuduviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. ஆல் முதலியவற்றின் கிளைகளி னின்றும் வேர் வெளிப்பட்டுத் தோன்றுதல்; to drop or let down aerial roots, as banyan.

   2. ஆழமளத்தல் (வின்.);; to take soundings, to cast the lead-line.

     [விழுது + விடு-,]

விழுத்தகை

விழுத்தகை viḻuttagai, பெ. (n.)

   பிறர்க்கில்லாத சிறப்பு; unequalled or uncomparable excellence.

     “விழுத்தகை பெறுகென” (பரிபா. 11, 177);.

     [விழு4 + தகை]

விழுத்தண்டு

விழுத்தண்டு viḻuttaṇṭu, பெ. (n.)

   பெரிய ஊன்றுகோல்; large stick for support in walking.

     “தொடித்தலை விழுத்தண் டூன்றி” (புறநா. 243);.

     [விழு + தண்டு]

விழுத்தம்

 விழுத்தம் viḻuttam, பெ. (n.)

கருஞ்சீரகம் (வின்.); பார்க்க;see {}. black cumin.

விழுத்தாட்டு-தல்

விழுத்தாட்டு-தல் viḻuddāṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

விழத்தட்டு-, பார்க்க;see {}.

     [விழுக்காட்டு → விழுத்தாட்டு]

விழுத்திணை

விழுத்திணை viḻuttiṇai, பெ. (n.)

   உயர்குலம்; noble family.

     “வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து” (புறநா.27);.

     [விழு1 + திணை]

விழுத்து

விழுத்து1 viḻuddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

விழு2-, பார்க்க;see {}.

     “விழுத்தினன் சிரமெனும் வெகுளி மீக்கொள” (கம்பரா. இராவணன்வதை. 155);.

க. பிளிசு.

     [விழு → விழுத்து]

 விழுத்து2 viḻuttu, பெ. (n.)

   இலக்கு; direction, aim, goal.

     “அந்த விழுத்திலே ஒடினேன்” (இ.வ.);.

     [விழு → விழுத்து]

விழுந்தான்கொட்டு

 விழுந்தான்கொட்டு viḻundāṉkoṭṭu, பெ. (n.)

   ஒருவன் இறந்ததைக் குறிக்கும் பறைமுழக்கு (இவ);; a peculiar beat of drum, indicating the death of a person.

மறுவ. சாப்பறை.

     [விழுந்தான் + கொட்டு]

விழுந்துபோ-தல்

விழுந்துபோ-தல் viḻundupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. கீழ் விழுதல்; to fall down.

   2. இறத்தல்; to die.

   3. குறுக்கு வழியாகச் செல்லுதல்; to cut across.

     ‘அந்த ஊருக்கு இந்த வழியே விழந்து போகவேண்டும்’.

     [விழு → விழுத்து + போ-,]

விழுபாலை

விழுபாலை viḻupālai, பெ. (n.)

   கொடிவகை (யாழ்.அக.);; a creeper.

     [விழு1 + பாலை]

விழுப்பகை

விழுப்பகை viḻuppagai, பெ. (n.)

   சீரிய பகை; enmity towards the great.

     “வேந்தனொடு நாடுதரு விழப்பகை யெய்துக” (புறநா. 306);.

     [விழ4 + பகை]

விழுப்பம்

விழுப்பம் viḻuppam, பெ. (n.)

   1. விழுமம் 1, பார்க்க;see {}.

     “ஒழுக்கம் விழுப்பந் தரலான்” (குறள், 131);.

   2. நன்மை (பிங்.);; good, benefit.

   3. குலம் (பிங்.);; family ancestry pedigree.

   4. விழுமம், 4 பார்க்க;see {}.

     “நின் விழுப்ப நீக்குதி” (விநாயகபு. 57, 23);.

     [விழு → விழுப்பம்]

விழுப்பரையன்

விழுப்பரையன் viḻupparaiyaṉ, பெ. (n.)

   1. விழுப்பாதராயன், 1 (I.M.P.Tj. 89); பார்க்க;see {}.

   2. விழுப்பாதராயன், 2 பார்க்க;see {}.

     “வேளாளனான விழுப்பரை யனுக்குக் கோயிற்கணக்கனென்றும்” (கோயிலொ. 44);.

     [விழுப்பம் + அரையன்]

விழுப்பாதராயன்

விழுப்பாதராயன் viḻuppātarāyaṉ, பெ. (n.)

   1. தமிழ் அரசர்க்குக் கீழ்ப்பட்ட தலைவரில் ஒருசாராரின் பட்டப்பெயர்; a title of a class of vassals of the Tamil kings.(I.M.P.Sm.47);.

   2. கோயிலிற் கடவுள் திருமுன்பு கணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன்; a class of people whose duty is to read the accounts of a temple in the presence of the deity.

     “பாண்டி பதினாலுக்கும் வேண்டிய விழுப்பா தராயர்” (திருவாலவா. அரும்.);.

     [விழ4 + பாதம்1 + அரையன் → ராயன்]

விழுப்பாதிராசன்

விழுப்பாதிராசன் viḻuppātirācaṉ, பெ. (n.)

விழுப்பாதராயன், 1 (I.M.PTj. 1092); பார்க்க;see {}.

விழுப்பிணி

விழுப்பிணி viḻuppiṇi, பெ. (n.)

   தீராத முற்றிய நோய்; disease in an advanced acute and incurable stage.

     “விழுப்பிணிபபோழ்து மறுமை மனத்தாரேயாகி” (நாலடி, 329);.

     [விழு4 + பிணி]

விழுப்பு

விழுப்பு1 viḻuppu, பெ. (n.)

   1. கழிக்கப்படுவது; anything cast off.

     “விழுப்புற வதுக்கியிட்டு” (சீவக. 2771);.

   2. நீராடுதல் செய்யுமுன் உள்ள தூய்மையின்மை; state of ceremonial impurity before daily bath.

     ‘விழுப்புத் துணி’.

     [விழு → விழுப்பு]

 விழுப்பு2 viḻuppu, பெ. (n.)

விழுப்பம் 1,3,4 (அரு.நி.); பார்க்க;see {}.

     [விழுப்பம் → விழுப்பு]

விழுப்புண்

விழுப்புண் viḻuppuṇ, பெ. (n.)

   1. போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்; wound of a warrior on his face or chest received in battle.

     “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்” (குறள், 776);.

   2. இடும்பை தரும் புண்; grievous wound.

     “கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும்” (சீவக. 2355);.

     [விழு4 + புண்]

விழுப்புரம்

விழுப்புரம் viḻuppuram, பெ. (n.)

   தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்; a place name of Tamil Nadu.

இயற்கை வனப்புகள் இல்லாத சமநிலம். செழிப்பானது. இதன் கிழக்குக் கரையோரம் வங்காள விரிகுடா உள்ளது. புதுச்சேரி இதன் எல்லையருகில் இருக்கின்றது. சென்னைக்குத் தெற்கே 101 கல் தொலைவிலுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள இன்றியமையாத தொடர்வண்டி சந்திப்புகளில் ஒன்று. இங்கிருந்து ஐந்து இருப்புப் பாதைகள் பிரிந்து செல்கின்றன.

     [வில்லிபுரம் → விழுப்புரம்]

விழுப்பேரரையர்

விழுப்பேரரையர் viḻuppēraraiyar, பெ. (n.)

   தமிழ்த் தலைவரில் ஒரு சாரார் பட்டப் பெயர்; a little of a class of Tamil chieftains.

     [விழு + பேர்4 + அரையர்]

விழுப்பொருள்

விழுப்பொருள் viḻupporuḷ, பெ. (n.)

   மேலான பொருள்; the highest object or thing.

     “விண்ணகத்தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே” (திருவாச. 20, 9);.

     [விழு + பொருள்]

விழுமம்

விழுமம் viḻumam, பெ. (n.)

   1. சிறப்பு (தொல். சொல். 353);; excellence, greatness, sublimity, eminence, magnificence, superiority.

   2. சீர்மை (தொல். சொல். 353);; good state.

   3. தூய்மை (இ.வ);; purity.

   4. இடும்பை; distress, affliction.

     “நின்னுறு விழுமங் களைந்தோள்” (அகநா. 170);.

     [விழு4 + விழுமம்]

விழுமலை

விழுமலை viḻumalai, பெ. (n.)

   கதிரவன் மறையும் மலை; the western mountain beyond which the sun is supposed to set.

     “எழுமலை விழுமலை புடைமணி யாக” (கல்லா. 19);.

     [விழு1 + மலை4]

விழுமா-த்தல்

விழுமா-த்தல் viḻumāttal,    12 செ.கு.வி. (v.i.)

   சிறப்படைதல்; to attain to eminence or glory.

     “மகளிர் விழுமாந்தனர் தங்கொழு நரைக் காத்தே” (நற். 320);.

     [விழுமம் + யா4-த்தல் → விழுமா-த்தல்]

விழுமிய

விழுமிய viḻumiya, பெ.எ.(adj.)

   சிறந்த; pre- eminent, excellent.

     “விழுமிய பெறலரும் பரிசி னல்குமதி” (திருமுரு. 294);.

விழுமியதுபயத்தல்

விழுமியதுபயத்தல் viḻumiyadubayaddal, பெ. (n.)

   நூலழகு பத்தனுள் சீரிய பொருளை யுணர்த்தலாகிய அழகு (நன்.13);; inculcating noble teaching, one of ten {}, q.v.

     [விழுமியது + பயத்தல்]

விழுமியர்

விழுமியர் viḻumiyar, பெ. (n.)

விழுமியோர் பார்க்க;see {}.

     “விழுமிய ரென்னினு மவர்பா விரவாமை” (பிரபோத. 30, 72);.

     [விழுமம் → விழுமியர்]

விழுமியோர்

விழுமியோர் viḻumiyōr, பெ. (n.)

   சிறந்தோர்; excellent persons, persons of pre- eminence.

     “வாகனங் கையுறினும் வேண்டார் விழுமியோர்” (நாலடி, 300);.

     [விழுமியர் → விழுமியோர்]

விழுமீன்

விழுமீன்1 viḻumīṉ, பெ. (n.)

வீழ்மீன் பார்க்க;see {}, meteor.

     [விழு 1- + மீன்1 ]

 விழுமீன்2 viḻumīṉ, பெ. (n.)

உல்லம் 1 பார்க்க;see ullam1, hilsa.

     [விழு + மீன்]

விழுமுதல்

 விழுமுதல் viḻumudal, பெ. (n.)

   வாணிகத்தின் முதலீடு (இ.வ.);; capital invested in a business.

     [விழு + முதல்]

விழுமுறு-தல்

விழுமுறு-தல் viḻumuṟudal,    2 செ.கு.வி. (v.i.)

   துன்புறுதல்; to be distressed or afflicted.

     “வேந்து விழுமுறினே” (புறநா. 318);.

     [விழுமம் + உறு-,]

விழுமெனல்

 விழுமெனல் viḻumeṉal, பெ. (n.)

விழு விழெனல் பார்க்க;see {}.

விழுவிழெனல்

விழுவிழெனல் viḻuviḻeṉal, பெ. (n.)

   1. வழ வழப்பாதற்குறிப்பு (வின்.);; sliminess, slipperiness.

   2. பசை பிடித்தற்குறிப்பு (யாழ்.அக.);; pastiness.

     [விழுவிழு + எனல்]

விழை

விழை1 viḻaidal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. விரும்புதல்; to wish, desire, love, to be anxious for, to covet.

     “இன்பம் விழையான் வினைவிழைவான்” (குறள், 615);

   2. நன்குமதித்தல்; to esteem.

     “ஒன்னார் விழையுஞ் சிறப்பு” (குறள், 630);.

   3. ஒத்தல்; to resemble.

     ‘மழைவிழை தடக்கை’ (தொல். பொ. 289, உரை);.

     [விழு – விழை. விழை-, (வே.க.119);]

 விழை2 viḻaidal,    2 செ.கு.வி. (v.i.)

   நெருங்கிப் பழகுதல் (இ.வ.);; to move closely or intimately.

     [இழை → விழை]

விழைச்சி

விழைச்சி viḻaicci, பெ. (n.)

   1. நலவழக்கம்; enjoyment.

     ‘மன்னர்விழைச்சி’ (சிலப். 2, 2, உரை);.

   2. விழைச்சு,1 பார்க்க;see {}.

     ‘அறுவகைப்பட்ட பாசாண்டிகரும் இணைவிழைச்சி தீதென்ப’ (இறை. 1. உரை. பக். 9);.

     [விழை → விழைச்சி]

விழைச்சு

விழைச்சு viḻaiccu, பெ. (n.)

   1. புணர்ச்சி; sexual union, intercourse.

   2. இளமை; tenderness, youth.

     [விழை → விழைச்சு (வே.க.120);]

விழைநன்

 விழைநன் viḻainaṉ, பெ. (n.)

விழைந்தோன் பார்க்க;see {}.

     [விழை → விழைநன்]

விழைந்தேற்றல்

விழைந்தேற்றல் viḻaindēṟṟal, செ.குன்றாவி (v.t.)

   ஒப்புதல் வழங்குதல்(சுவீகரித்தல்);; to agree, accept.

   2. உட்கொள்ளுதல்; totake in imbibe.

   3. ஈவுப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளல்; adopt.

   4. தனக்குரியதாக்குதல்; make one’s own adopt an idea scheme etc.,

     [விழைந்து+ஏற்றல்]

விழைந்தோன்

விழைந்தோன் viḻaindōṉ, பெ. (n.)

   1. நண்பன்; friend.

   2. கணவன்; husband.

     [விழை → விழைந்தான் → விழைந்தோன்] (வே.க.120);

விழைய

விழைய viḻaiya, பெ. (n.)

   ஓர் உவமவாய்பாடு (தொல். பொ. 289);; a particle of comparison.

     [விள் → விழை → விழைய]

விழையார்

விழையார் viḻaiyār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “விழையார் விழையப் படுப” (குறள், 810);.

     [விழை → விழை + ஆர்]

விழைவு

விழைவு viḻaivu, பெ. (n.)

   1. புணர்ச்சி (பிங்.);; copulation.

   2. விருப்பம்; desire.

     “விழைவோ விழுமிதே”{ (பு.வெ.9, 41);.

   3. யாழி னுள்ளோசை (பிங்.);; vibration of a lute.

     [விழை → விழைவு]

விழைவு மடல்

 விழைவு மடல் viḻaivumaḍal, பெ.(n.)

   நிலம் முதலிய பெறற் பொருட்டு அரசாங்கத்தார்க் குச்செய்து கொள்ளும் வேண்டுகோள் (தர்க்காத்து);; tender representation of petition, as for an assignment of land, for the cultivation of land, for forming only

 branch of the revenue, application as for an appointment.

     [விழைவு+மடல்]

விவசாயம்

விவசாயம் vivacāyam, பெ. (n.)

   1. தொழில்; active occupation.

   2. முயற்சி; effort.

   3. வேளாண்மை; agriculture, cultivation.

   4. வணிகம்; buying and selling, trade.

     [Skt. {} → த. விவசாயம்]

விவத்தை

விவத்தை1 vivattai, பெ. (n.)

   1. முடிவு; settlement.

   2. ஒழுங்குமுறை; settled principle.

     [Skt. vyava-{} → த. விவத்தை].

விவரநாலிகை

 விவரநாலிகை vivaranāligai, பெ. (n.)

   மூங்கில் (சங்.அக.);; bamboo.

     [வயிர் → வயிரம் → வெயிரம் → விவரம் + நாலிகை]

விவரம்

விவரம் vivaram, பெ. (n.)

   1. துளை; fissure, hole, cavity, hollow, vacuity.

   2. மலைக் குகை (சூடா.);; cave.

   3. இடைவெளி; intervening space.

     “பிலங்களேழு மதனிடையிடை விழுந்த…. வேர் விவரம்” (தக்கயாகப். 147);.

   4. வரலாற்றுக் குறிப்பு; particulars, details, circumstance, as of a narrative.

     [வயிர் → வயிரம் → வெயிரம் → விவரம்]

 விவரம் vivaram, பெ.(n.)

   1. தொளை (துவாரம்);; fissure hole, cavity hollow.

   2. மலைக்குகை; cave.

   3. இடைவெளி; intervening space.

   4. வரலாற்றுக் குறிப்பு; particulars, details.

விவாகத்திரீ

 விவாகத்திரீ vivākattirī, பெ.(n.)

   முறைப்படி திருமணம் செய்து கொண்ட மனைவி; lawfully wedded.

விவாகம்

விவாகம் vivākam, பெ. (n.)

   திருமணம்; marriage.

     “விவாகமும் காருகத்தமும் கூறினமையும்” (சிலப். 9,28. உரை);.

     [Skt. {} → த. விவாகம்].

விவாதம்

விவாதம் vivātam, பெ.(n.)

   1. தருக்கம்; dispute, wordy warfare.

     “இருவரும் விவாதம் பண்ணி” (உத்தரா. இலவண. 6);

   2. அறமன்றத்தில் நடைபெறும் வழக்கு; legal dispute lawsuit.

     [Skt. {} → த. விவாதம்].

விவிலியமதம்

 விவிலியமதம் viviliyamadam, பெ. (n.)

   கிறித்தவ மதம்; christianity.

     [Gr. biblia + mata → த. விவிலியமதம்].

விவேகசிந்தாமணி

 விவேகசிந்தாமணி vivēkasindāmaṇi, பெ. (n.)

ஒரு வேதாந்த நூல்;(w); {}

 philosophy.

விவேகபருவம்

 விவேகபருவம் vivēkabaruvam, பெ. (n.)

   பகுத்தறியும் பருவம் (பிராயம்);;

விவேகம்

விவேகம் vivēkam, பெ. (n.)

   1. பகுத்தறிவு; discrimination, the capacity to reason and distinguish.

     “நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்” (கைவல். தத். 8);;

   2. அறிவு (புத்தி);க் கூர்மை; ingenuity, penetration, right judgment. (w.);

   3. பாயிரம்; preface of book.

விவேகி

விவேகி2 vivēkittal,    4 செ.கு.வி. (v.i.)

   பகுத்தறிதல்; to discriminate, to understand with discrimination.

விவேசனம்

 விவேசனம் vivēcaṉam, பெ. (n.)

   பகுத்தறிவு; discrimination, distinguishing truth from falsehood, reality from semblance.

வீ

வீ1 vī, பெ. (n.)

     ‘வ்’ என்னும் மெய்யெழுத்தும் நெட்டுயிரான ஈ காரமும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து;

 the compound of ‘வ்’ and ‘ஈ’.

 வீ2 vī, பெ. (n.)

   கருவுறுதல்; conceiving. (சா.அக.);

 வீ3 vītal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அழிதல்; to perish, to cease, to disappear.

     “வீயாச் சிறப்பின்” (புறநா. 15);.

   2. சாதல்; to die.

     “சிலைத் தெழுந்தார் வீந்தவிய” (பு.வெ.3,7);.

   3. நீங்குதல்; to leave.

     “வினைப்பகை வீயாது பின்சென் றடும்” (குறள். 207);.

   4. மாறுதல்; to change, to vary, to deviate as from one’s course.

     “வானின் வீயாது சுரக்கும்” (மலைபடு.76);.

 Ka.{}, Te. {}.

     [விள் → (விய்); → வீ-,]

வடவர் வி-இ5 என்று மூலங்காட்டி வ்யய் (vyay); பிரிந்து போ (to go apart or in different directions); என்று விரித்து விளக்குவர். ‘வி’ என்பது ‘விள்’ என்பதன் திரிபு. ‘இ’ என்பது இயல் என்பதன் முதனிலை. இயல் = செல்கை, நடக்கை. (வ.மொ.வ.93);.

 வீ4 vīttal,    11 செ.குன்றாவி. (v.t.)

   அழித்தல்; to destroy.

     “ஏழுய ருலகமும் வீக்கின்றான்” (கம்பரா. முதற்போ. 118);.

     [வீ → வீ-,]

 வீ5 vī, பெ. (n.)

   1. அழிவு; ruin, destruction.

     “வீகலந்த மஞ்ஞை போல்” (சீவக. 1104);.

   2. இறப்பு (பிங்.);; death.

   3. நீக்கம் (பிங்.);; separation, removal.

   4. மடிவு (பிங்.);; dropping, languishing.

   5. மலர்; flower.

     “வீகமழ் நெடுஞ்சினை” (புறநா. 36);.

   6. மகரந்தம்; pollen.

     “பூவணையின் வீயை” (மேருமந். 1058);.

க. {}, தெ. {}.

     [வீத்தல் → வீ]

 வீ6 vī, பெ. (n.)

   பறவை (பிங்.);; bird.

வீகமுத்திரை

வீகமுத்திரை vīkamuttirai, பெ. (n.)

   கோயிற்கதவைப்பூட்டி இடும் முத்திரை (இ.வ.);; seal set on locked doors. especially of a temple.

     [வீகம்1 + முத்திரை]

வீகம்

வீகம்1 vīkam, பெ. (n.)

   1. பூட்டு (யாழ்.அக.);; padlock.

   2. கணையாழி (திவா.);; ring.

   3. விரைவு; rapidity, speed, hurry.

     “இப்போது நீயிருந்தாயாகில் வீகமென்” (ஈடு. 7, 6. அவ.);.

   தெ. பீகமு;   க. பீக;ம. வீகம்.

 வீகம்2 vīkam, பெ. (n.)

   1. காற்று; wind.

   2. பறவை; bird.

     [வீ → வீகம்]

வீகாசம்

வீகாசம் vīkācam, பெ. (n.)

   1. பகட்டு; pomp and show.

   2. தனிமை; solitude loneliness.

வீக்கக்கணம்

 வீக்கக்கணம் vīkkakkaṇam, பெ. (n.)

   கருவிலுண்டாகிய போதே ஏற்படும் சூட்டினால் ஏற்படுவதும், உடம்பு முழுவதும் வீங்கிக் காணப்படுவதுமான குழந்தை நோய்; a children’s disease caused by congenital heat and marked by swelling of the body.

     [வீக்கம் + கணம். கணம் = குழந்தை நோய்வகை]

வீக்கன்

வீக்கன்1 vīkkaṉ, பெ. (n.)

   குறவர் நடனத்தில் இடம் பெறும் ஓர் இசைக்கருவி; a musical instrument played in “Kurava” dance. (9:55);.

     [வீக்கு-வீக்கன்)

 வீக்கன்2 vīkkaṉ, பெ. (n.)

கேரள இசைக்கருவி

 musical instrument of Kerala.

     [வீக்கு+அன்]

வீக்கமாந்தம்

 வீக்கமாந்தம் vīkkamāndam, பெ. (n.)

   குழந்தைகளுக்கு காதும் கண்ணும் வீங்கி நாக்கு, புண்ணாகிக் காய்ச்சலையுண்டாக்கு மோர் மாந்த நோய்; a digestive disease of children marked by swelling of ears, eyes, inflammation of the tongue and fever.

     [வீக்கம் + மந்தம் → மாந்தம்]

வீக்கமிறங்குதல்

 வீக்கமிறங்குதல் vīkkamiṟaṅgudal, பெ. (n.)

   உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்ல மெல்லக் கீழ்நோக்கி யிறங்குகை (வின்.);; subsiding of a swelling and its transition from the upper to the lower parts of the body.

     [வீக்கம் + இறங்குதல்]

வீக்கம்

வீக்கம்1 vīkkam, பெ. (n.)

   1. உடலுறுப்பு வீங்குகை; enlargement, swelling, inflammation.

     ‘கால் வீக்கம்’.

   2. புண் முதலியவற்றின் புடைப்பு; contusion, cellulitis.

   3. நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய்; dropsy, oedema.

   4. தோள் முதலியன பூரிக்கை (யாழ்.அக.);; puffing of the limes.

   5. மிகுதி (பிங்.);; abundance.

   6. கூட்டம்; crowd.

     “விண்பிளந் தேங்க வார்க்கும் வானர வீக்கம்” (கம்பரா. இராவண. கள.26);.

   7. பெருமை; greatness nobility.

     “விசயனும் வீக்கமற்றான்” (சீவக. 2192);.

   8. செருக்கு; pride.

     “இலங்கைக் கோமான்றன்னை…. வீக்கந் தவிர்த்த விரலார் போலும்” (தேவா. 56, 10);.

   9. விருப்பம் (யாழ்.அக.);; longing, hankering.

     ‘வீக்கமோ தூக்கமோ?’ (பழ.);.

     [வீங்கு → வீக்கம்]

 வீக்கம்2 vīkkam, பெ. (n.)

   1. கட்டு (சூடா.);; bond, tie.

   2. இடையூறு; trouble, obstacle.

     “வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு” (திருவிளை. பன்றிக்குட்டி. முலை. 6);.

   3. மூடுகை (திவா.);; covering, packing.

   4. இறுக்கம்; tightness.

     ‘வீக்கம் கண்டால் தூக்கமாம்’ (பழ.);.

     [வீக்கு → வீக்கம்]

 வீக்கம்3 vīkkam, பெ. (n.)

   வேகம்; swiftness.

     “சில்லிவரன் செல்லும் வீக்கம்” (புரூரவ. போர்புரி.33);.

     [வீங்கு → வீக்கம்]

வீக்கம்வாடல்

 வீக்கம்வாடல் vīkkamvāṭal, பெ. (n.)

   நோயினால் ஏற்பட்ட வீக்கம் குறைதல்; resolving of the swelling.

     [வீக்கம் + வாடல்]

வீக்கு

வீக்கு1 vīkkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. கட்டுதல்; to tie up.

     “கச்சையும் வீக்கினன்” (சீவக. 1836);.

   2. அடக்குதல்; to control, restrain.

     “புலன்கள் வீக்கியும்” (கம்பரா. காட்சிப். 72);.

   3. தடுத்தல்; to hinder.

     “உயிர்ப்பினை வீக்கி” (பாகவத.

   2. மாயவனிலை. 8)

     “கொழும்புகை வீக்கி மாடந் திறந்திட” (சீவக. 534);.

   4. அடித்தல் (நெல்லை.);; to strike.

ம. வீக்குக.

     [வீங்கு → வீக்கு → வீக்கு-,]

 வீக்கு2 vīkku, பெ. (n.)

   1. கட்டுகை; tying, binding.

     “பேர்யாழ்… யாப்புறு புரிஞாண் வீக்கு முதலவிழ” (பெருங். உஞ்சைக். 52, 86);.

   2. இறுகுகை; tightness.

     “தானை வீக்கற விசித்து” (சீவக. 1086);.

   3. அடிக்கை (நெல்லை.);; beating.

     [வீக்கு1 → வீக்கு]

 வீக்கு3 vīkkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. நிறைத்தல்; to fill.

   2. விரைவாகச் செலுத்துதல்; to urge, force out.

     “வீக்கினான் றாரை வெய்தா” (சீவக. 2661);.

     [வீங்கு → வீக்கு-,]

 வீக்கு4 vīkku, பெ. (n.)

   1. பெருமை; greatness, nobility.

     “வீக்கறுத்து….. வஞ்சமறுத் திடுகென்றான்” (சீவக. 2207);.

   2. மிகுதி (பொரு.நி.);; abundance, surplus.

   3. கணித முறை (பொரு.நி.);; a mode of calculation.

     [வீங்கு → வீக்கு]

 வீக்கு5 vīkkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. உயிரைப் போக்குதல்; to kill.

     “வீக்கு….. வெவ்விடத்தை” (கம்பரா.இராவணன் வதை. 122);.

   2. அழித்தல் (யாழ்.அக.);; to destroy, ruin.

     [வீ-, → வீக்கு-,]

வீங்கச்செய்வது

 வீங்கச்செய்வது vīṅgacceyvadu, பெ. (n.)

   உடம்பில் அடிபடுவதனாலோ ஒவ்வா மருந்துகளாலோ உடம்பு வீங்கிப்போவது; to cause swelling-tumescent.

வீங்கப்பண்ணல்

 வீங்கப்பண்ணல் vīṅgappaṇṇal, பெ. (n.)

வீங்கச் செய்வது பார்க்க;see {}

 ceyvadu, tumidity.

     [வீங்க + பண்ணல்]

வீங்கல்

வீங்கல் vīṅgal, பெ. (n.)

   1. மிகுதி (பொரு.நி.);; abundance, plenty.

   2. பொருளைப் பெறும் பொருட்டு ஏக்கங் கொள்ளுகை (வின்.);; morbid desire, longing.

   3. இளைத் திருப்பவ-ன்-ள் (இ.வ);; lean, emaciated person.

   4. வீங்கி,1 பார்க்க;see {}.

     “வீங்கலிவன்” (விறலிவிடு. 825);.

   5. உறங்குகை (வின்.);; sleeping.

     [வீங்கு → வீங்கல்]

வீங்கி

வீங்கி vīṅgi, பெ. (n.)

   1. ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவ-ன்-ள் (யாழ்.அக.);; person having morbid desires.

     “கறிக்கு வீங்கி”.

   2. சேங்கொட்டை, 1 (மலை.);; marking-nut.

     [வீங்கு → வீங்கி]

வீங்கிநாரி

வீங்கிநாரி vīṅgināri, பெ. (n.)

   ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவள்; woman having morbid desires.

     ‘பஞ்சைநாரி பணிகாரஞ் கட்டாள், வீங்கிநாரி விசாரப்பட்டாள்’ (பழ.);.

     [வீங்கி + நாரி4]

வீங்கிவிழி-த்தல்

வீங்கிவிழி-த்தல் vīṅgiviḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கண்ணுறுத்தி இமைகனத்து, திறந்தால் குத்தல் வலியும் கடைக் கண்ணில் மூங்கில் முளைபோல் கூர்மையான சதை வளர்ந்தும் கண் சிவப்பு, எரிச்சல், வீக்கம், புடைப்பு, நீர் வடிதல் ஆகியவிக் குணங்களையுடைய வோர் கண்ணோய்; a disease of the eye marked by irritation, thickening of the eye lids, some growth in the angle of the eye, causing swelling, burning ozing tears etc.

     [வீங்கி + விழி-,]

வீங்கிவெடி

 வீங்கிவெடி vīṅgiveḍi, பெ. (n.)

   ஒன்றன் மீது ஏக்கங் கொண்டு அழுது புலம்புதல்; weeping for not getting or loosing something.

வீங்கிவெடி-த்தல்

வீங்கிவெடி-த்தல் vīṅgiveḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   ஒன்றன் மீது ஏக்கம் கொண்டு அழுது புலம்புதல்; to swell and burst as dead body.

     [வீங்கி + வெடி-,]

வீங்கு-தல்

வீங்கு-தல் vīṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. பருத்தல் (நாமதீப. 710);; to increase in size, to bulge.

   2. பூரித்தல்; to swell.

     “மணந்தநாள் வீங்கிய தோள்” (குறள், 1233);.

   3. வீக்கமுறுதல் (பொரு.நி.);; to become morbidly inflamed and swollen.

   4. வளர்தல் (அ.க.நி.);; to grow.

   5. மிகுதல்; to be copious or excessive,to increase.

     “வளம் வீங்கு பெருக்கம்” (பதிற்றுப். 24, 17);.

   6. நெருங்குதல் (சூடா.);; to be close, crowded.

   7. இறுகுதல்; to become tight and pressing.

     “வீங்கிறை தடக்கையின்” (குறிஞ்சிப். 123);.

   8. விறைப்பாய் நிற்றல்; to be taut and not slack, to be stiff.

     “விளரூண் றின்ற வீங்குசிலை மறவர்” (அகநா. 89.10);.

   9. மேனோக்கிச் செல்லுதல்; to go up, to ascend.

     “நாவிளிம்பு வீங்கி” (தொல். எழுத். 96);.

   10. மெலிதல்; to become emaciated.

     ‘அவன் வீங்கலாயிருக்கிறான்’.

   11. ஏக்கங் கொள்ளுதல்; to have morbid desires.

   12. உறங்குதல் (யாழ்.அக.);; to sleep.

   க. பீகு;   ம. வீங்ஙுக;தெ. வீகு.

வீங்குகரப்பான்

 வீங்குகரப்பான் vīṅgugarappāṉ, பெ. (n.)

   வீக்கத்தை யுண்டாக்கும் ஒருவகைக் கரப்பான் நோய்; an eczema causing swelling.

     [வீங்கு + கரப்பான். கரப்பான் = குழந்தைகளுக்கு உண்டாகும் சொறி, புண்வகை]

வீங்குகால்

வீங்குகால் vīṅgukāl, பெ. (n.)

   பத்து வகை வளிகளுள் ஒன்று (வாயு.);; one of the ten vital airs. It stays in the dead body when all others have left and causes it to swell and burst then it leaves it i.e. on 3rd day.

     [வீங்கு + கால்]

வீங்குபுள்

வீங்குபுள்1 vīṅgubuḷ, பெ. (n.)

   ஒரு பறவை; a bird.

     [வீங்கு + புள்]

 வீங்குபுள்2 vīṅgubuḷ, பெ. (n.)

வீங்குபுள் தோஷம் (பாலவா. 69); பார்க்க;see {}.

     [வீங்கு- + புள்]

வீங்குபுள்தோஷம்

வீங்குபுள்தோஷம் vīṅgubuḷtōšam, பெ. (n.)

   மாலை நள்ளிரவு முதலிய காலமல்லாக் காலங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் எடுத்துச் செல்லுகையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை (பாலவா. 71);; a disease of children, attributed to the flight of certain birds overhead when they are taken outside the house at dusk, midnight or other inauspicious hour.

     [வீங்கு + புள் + Skt. {} → த. தோஷம்]

வீங்குவாயு

வீங்குவாயு vīṅguvāyu, பெ. (n.)

   விதையைப் பற்றிய 6 வகை வளியுளொன்று; swelling of the testicles due to {}.

     [வீங்கு + Skt. {} → த. வாயு]

வீங்குவிரைவாதம்

வீங்குவிரைவாதம் vīṅguviraivātam, பெ. (n.)

   இரண்டு விரையும் வீங்கி இரு கால் நரம்பிழுத்து மிக்க வலியுண்டாய் மலம் போகாமலும் வளி பரியாமலும் குளிர் கண்டு கண் புகைந்து வரும், ஒருவகை நோய் (யூகி-1200);; orchitis marked by constipation, flatulence, chillness, pain in the legs etc.

     [வீங்கு + விரை + வாதம்]

 Skt. {} → த. வாயு.

வீங்கை

வீங்கை vīṅgai, பெ. (n.)

   1. ஒருவகை அசைவு; a movement.

   2. ஆடல் வகை; a mode of dancing.

   3. குதிரை நடைவகை; a pace of a horse.

     [வீங்கு → வீங்கை]

வீசகணிதம்

 வீசகணிதம் vīcagaṇidam, பெ. (n.)

   கணித வகை; algebra.

     [வீசம் + கணிதம்]

வீசகரி

 வீசகரி vīcagari, பெ. (n.)

   வேங்கை மரம் (சங்.அக.);; East Indian kino tree.

     [வீசம் + கரி]

வீசகா

 வீசகா vīcakā, பெ. (n.)

வீசகரி (சங்.அக.); பார்க்க;see {}.

வீசக்கணக்கு

வீசக்கணக்கு vīcakkaṇakku, பெ. (n.)

   கணக்கு வகை (M.E.R.1931-32, P.55);; a mode of calculation.

வீசனம்

வீசனம் vīcaṉam, பெ. (n.)

   1. சிற்றால வட்டம் (சூடா.);; small fan.

   2. விசிறி (திவா.);; fan.

     [வீசு → வீசனம்]

வீசம்

வீசம்1 vīcam, பெ. (n.)

   மாகாணி (பிங்.);; the fraction, 1/16.

   தெ. வீசமு;   க. வீச;   து. வீசு, வீச;ம. வீசம்.

வீசல்

வீசல் vīcal, பெ. (n.)

   1. எறிகை (பிங்.);; throwing.

   2. வரையாது கொடுக்கை (திவா.);; giving liberally unconcelled liberality.

     [வீசு → வீசல்]

வீசானம்

 வீசானம் vīcāṉam, பெ. (n.)

   திருகுவட்டம் (பாண்டிச்.);; a small wedge shaped reel.

     [வீசு → வீசானம்]

வீசி

வீசி1 vīci, பெ. (n.)

   1. அலை; wave, ripple.

     “வீசிகள் கவரியாக” (கந்தபு. திருவவ. 110);.

   2. சிறுக்கம் (இலக்.அக.);; trifle, a little reduction.

     [வீசு → வீசி]

 வீசி2 vīci, பெ. (n.)

   நலம் (இலக்.அக.);; health welfare.

 வீசி3 vīci, பெ. (n.)

   சதகுப்பை; dill or sowa seed.

வீசிக்கட்டு-தல்

வீசிக்கட்டு-தல் vīcikkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விரிவாகக் கட்டுதல்; to build in large proportions.

     “தூணுமெழ வீசிக்கட்டி” (கோயிலொ. 3);.

     [வீசு + கட்டு-,]

வீசிதரங்கநியாயம்

 வீசிதரங்கநியாயம் vīcidaraṅganiyāyam, பெ. (n.)

   அலைகள் போல ஒன்றன்பின் னொன்று தொடர்ந்து வருதலைக் கூறும் நெறி (இலக்.அக.);; the {} of the wave undulation, typifying an uninterrupted and regular succession or series, as of waves.

     [வீசி + தரங்கம் + நியாயம்]

 Skt. {} → த. நியாயம்.

வீசிநட-த்தல்

வீசிநட-த்தல் vīcinaḍattal,    3 செ.கு.வி.(v.i.)

   1. காலை யெட்டி வைத்து விரைவாக நடத்தல்; to take long and quick strides, as in walking.

   2. நெடுந்தொலைவு செல்லுதல்; to go long distance.

     ‘வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்’ (பழ.);

     [வீசி + நட-,]

வீசிப்பிடி-த்தல்

வீசிப்பிடி-த்தல் vīcippiḍittal,    2 செ. குன்றாவி. (v.t.)

   மூச்சை இழுத்து உள்ளே கும்பித்துப் பிறகு சீராக விடுதல்; a breath exercise followed by siddhas.

     “வீசிப் பிடிக்கும் விறகறியாரில்லை” (திருமந்.);.

வீசிப்போ-தல்

வீசிப்போ-தல் vīcippōtal,    8 செ.கு.வி.(v.i.)

வீசிநட-, பார்க்க;see {}.

     [வீசி + போ-,]

வீசிமாலி

 வீசிமாலி vīcimāli, பெ. (n.)

   கடல் (இலக்.அக.);; sea.

     [வீசி + மாலி]

வீசியடி-த்தல்

வீசியடி-த்தல் vīciyaḍittal,    2 செ.குன்றாவி. (v.t.)

   ஒங்கியடித்தல்; to strike with force, swinging the arm.

     [வீசி- + அடி-,]

வீசிவில்லிடு-தல்

வீசிவில்லிடு-தல் vīcivilliḍudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   தேர் முதலிய நெம்பத்தணி போடுதல்; to apply a lever as in raising the wheel of a car.

     “வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுப்பப் போகாதிருத்தல்” (திவ். திருப்பா. 23, வ்யா. பக்.203);.

     [வீசு + வில்லிடு-,]

வீசு

வீசு1 vīcudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. எறிதல் (பிங்.);; to throw, fling, as a weapon, to cast, as a net.

     “நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே” (திவ். இயற். திருவிருத். 53);.

   2. சிறகடித்தல்; to flap, as wings.

     “வீசுஞ் சிறகாற் பறத்திர்” (திவ். இயற். திருவிருத். 54);.

   3. ஆட்டுதல்; to swing, as the arm.

     “மூங்கில் போன்றிருந்துள்ள தோள் வீசி” (திவ். பெரியதி. 3. 7. 5. வ்யா);.

   4. இரட்டுதல்; to fan.

     “முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே” (புறநா. 50.13);.

   5. சுழற்றுதல்; to wave, flourish, as a sword.

     “வருமாய ரோடுடன் வளைகோல் வீச” (திவ். பெரியாழ். 3, 4, 6);.

   6. அடித்தல்; to strike, beat, flog. ‘கழியால் அவனை வீசினான்’.

   7. விரித்து நீட்டுதல்; to open out, spread, to lengthen, stretch.

     “இருஞ்சிறை வீசியெற்றி” (கம்பரா. சடாயுவுயிர். 107);.

   8. மிகுத்திடுதல் (அரு.நி.);; to accumulate.

   9. வரையாது கொடுத்தல் (பிங்.);; to give liberally.

     “இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசா னன்கலம் வரைவில வீசி” (பதிற்றுப். 54. 8);.

   10. சிந்துதல்; to spill.

     “கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ” (கலித். 145);.

   11. சிதறுதல்; to strew, scatter, sow, as seeds.

     “கொள்பத மொழிய வீசிய புலனும்” (புறநா. 23);.

   12. களைதல்; to lay aside, throw off.

     “உடலுறு பாசம்வீசா தும்பர்ச் செல்வாரு மொத்தார்” (கம்பரா. கடறாவு. 11);.

   13. செய்யா தொழிதல்; to abandon, to leave off, to drop.

     “சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன்” (கம்பரா. சூளா. 18);.

   தெ. வீசு;   க. பீசு;   ம. வீசுக; Ko. Vic;

 To. pis;

 Kod. bi-j (bi-di);;

   து. bijuni; Go. {}, Kui. vinja;

 Kur. {}, malt. bengre.

     [விசு → வீசு] (மு.தா.பக்.68);

 வீசு2 vīcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. காற்று முதலியன அடித்தல்; to blow, as the wind.

     “வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்” (தேவா. 1203, 1);.

   2. பரவுதல்; to spread, to be diffused or emitted, as fragrance, rays, etc.

     “ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப” (திருப்பு. 1132);.

   3. தீநாற்றம் அடித்தல்; to be emitted, as a bad foul smell.

வீசுதல் = மணம் வீசுதல், மணத்தல்.

வீச்சம் = மணம், நாற்றம். நாறு என்னும் சொற்போன்றே வீசு என்பதும், செய்யுள் வழக்கில் நறுமணத்தையும் உலக வழக்கில் தீய மணத்தையும் உணர்த்தும்.

வாஸ் → வாஸ = மணம். வாஸ் என்பது பெயரடி வினையே. மா.வி.அகராதி.

     “perhaps only Nom. fr.next” என்று குறித்திருத்தல் காண்க. ‘next’ என்றது ‘வாஸ’ என்னும் சொல்லை. (வ.மொ.வ.93);.

வீசுகாலேணி

 வீசுகாலேணி vīcukālēṇi, பெ. (n.)

   தாங்குகால்களிரண்டுள்ள ஏணி வகை (வின்.);; a kind of ladder with two supporting legs. step-ladder.

     [வீசு- + கால் + ஏணி]

     [p]

வீசுகோற்காரன்

 வீசுகோற்காரன் vīcuāṟkāraṉ, பெ. (n.)

   வில்லுப்பாட்டில் வில்லடிப்போன் (நெல்லை);; one who plays with the vil instrument in {}.

     [வீசு + கோல் + காரன்]

வீசுகோல்

வீசுகோல் vīcuāl, பெ. (n.)

   1. வீசுவில் (வின்.); பார்க்க;see {}.

   2. வில்லுப் பாட்டுப் பாடும்போது வில்லடிக்கப் பயன்படும் கோல் வகை (நாஞ்.நா.);; a kind of rod used for striking the bow in singing {}.

     [வீசு + கோல்]

 வீசுகோல் vīcuāl, பெ. (n.)

   வில்லிசைக் கருவியை மீட்டப் பயன்படும் கோல்;     [வீசு+கோல்]

வீசுதமர்

 வீசுதமர் vīcudamar, பெ. (n.)

   துரப்பண வகை (வின்.);; bow drill.

     [வீசு + தமர்]

வீசுதவர்

வீசுதவர் vīcudavar, பெ. (n.)

வீசுதமர் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [வீசு + தவர்2]

வீசுவிற்குடம்

 வீசுவிற்குடம் vīcuviṟkuḍam, பெ. (n.)

   துரப்பணக் கூடு (வின்.);; case for a drill bow.

     [வீசுவில் + குடம்]

வீசுவில்

 வீசுவில் vīcuvil, பெ. (n.)

   துரப்பண மிழுக்கப் பயன்படும் வில்; drill bow.

     [வீசு + வில்]

     [p]

வீசேறு-தல்

வீசேறு-தல் vīcēṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மேலேறுதல்; to be upraised.

     “வீசேறிய புருவத்தவர்” (தேவா. 69, 10);.

     [வீசு + ஏறு-,]

வீசை

வீசை1 vīcai, பெ. (n.)

   நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை; viss, a measure of weight = 40 palams.

தெ. வீசெ.

 வீசை2 vīcai, பெ. (n.)

   நீண்டு வளரும் மேலுதட்டு மயிர்; moustache.

     [வீசு → வீசை]

தலைமயிரும் தாடியும் நீண்டு வளர்வனவேயாயினும், குறுக்காக நீண்டு வளர்வது மீசையொன்றே யாதலின், அது விசையெனப்பட்டது. (மு.தா.பக்.68);.

 வீசை3 vīcai, பெ. (n.)

   வாழை; plantain.

வீசைத்தூக்கம்

வீசைத்தூக்கம் vīcaittūkkam, பெ. (n.)

   காற்குன்றி மணி எடை; gold-smith’s weight = 1/4 {}.

     [வீசம்2 + தூக்கம்2 ]

வீச்சம்

வீச்சம் vīccam, பெ. (n.)

   நாற்றம்; smell, effluvium.

     [வீசு → வீச்சு → வீச்சம்] (மு.தா.65);

காற்றானது நீண்டு செல்வதால் அதனொடு கலந்த வாசனையும் நீண்டு செல்கின்றதென்க. வீசுதல் என்னும் சொல், வழக்கில் தீய நாற்றத்தையே குறிக்கும்.

வீச்சரிவாள்

 வீச்சரிவாள் vīccarivāḷ, பெ. (n.)

   அறுவாள்வகை (இ.வ.);; a kind of billhook.

மறுவ. புல்லரிவாள்.

     [வீச்சு + அறுவாள் → அரிவாள்]

     [p]

வீச்சலை

 வீச்சலை vīccalai, பெ. (n.)

   ஆழிப்பேரலை; tsunami.

     [வீச்சு + அலை]

வீச்சாட்டம்

வீச்சாட்டம் vīccāṭṭam, பெ. (n.)

   1. பரப்பகலம் (வின்.);; spaciousness, roominess.

   2. வீச்சு, 5 பார்க்க;see {}.

   3. நன்னிலைமை; good circumstances, profilable increase..

     [வீச்சு + ஆடு → ஆட்டம்]

வீச்சு

வீச்சு vīccu, பெ. (n.)

   1. எறிகை; throw, cast, as of a net.

     “எறிந்த வீச்சுத் தவ்விட…… வாளொடுந் தழுவிக் கொண்டான்” (கம்பரா. அதிகா.213);.

   2. சிறகடிக்கை; beat, flat, as of wings.

   3. அடி; blow, strike.

   4. ஆட்டுகை; swinging, oscillation.

     ‘ஊஞ்சலை ஒரு வீச்சு வீசியாடினாள்’.

   5. நீளம்; length.

     ‘அந்த வீடு வீச்சா யிருக்கிறது’.

   6. விரைவு; quickness, rapidity.

     ‘அவன் வீச்சாக நடக்கிறான்’.

   7. ஒட்டம்; sweep, glance.

   8. நோய் வகை (யாழ்.அக.);; a disease.

   9. வலிமை (வின்.);; strength.

   10. தற்பெருமை; self-boasting, arrogant talk.

     ‘யாரிடத்தில் இந்த வீச்சு’.

   11. ஆந்தை முதலியவற்றின் ஒசை; dry, screech as of an owl.

     “வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்” (பெருங். உஞ்சைக். 55, 89);.

   12. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து வரும் போது கொள்ளும் ஒருவகைக் குறியீடு; a vowel- sign of vowel-consonants.

   13. வளைவு (கட்டட. நாமா. 16);; curve.

   14. வீச்சம் (இ.வ.); பார்க்க;see {}.

க. பீசு.

     [வீசு → வீச்சு]

வீச்சு மத்தளிகை

 வீச்சு மத்தளிகை vīccumattaḷigai, பெ. (n.)

ஆடல் இயக்கங்களில் ஒன்று

 one among many dancing movement.

வீச்சுக்காரன்

வீச்சுக்காரன் vīccukkāraṉ, பெ. (n.)

   1. மிகுதியாக செலவு செய்பவன் (யாழ்.அக.);; person driven to extravagance, spend thift.

   2. தற்பெருமை பேசுவோன்; boastful person, braggart.

     [வீச்சு + காரன்]

வீச்சுக்காரி

வீச்சுக்காரி vīccukkāri, பெ. (n.)

   1. வரம்புமீறி செலவு செய்பவள்; extravagant woman.

   2. பெருமை பேசுபவள்; boastful woman.

   3. விலைநலப் பெண்டிர்; prostitute.

     [வீச்சு + காரி]

வீச்சுசன்னி

 வீச்சுசன்னி vīssusaṉṉi, பெ. (n.)

   இசிவு நோய்வகை (வின்.);; lockjaw, tetanus.

     [வீச்சு + சன்னி]

 Skt. Janni → த. சன்னி.

வீச்சுப்புத்து

 வீச்சுப்புத்து vīccupputtu, பெ. (n.)

   ஒரு வகைப் புண்; an ulcer.

     [வீச்சு + புத்து]

வீச்சுமணி வலை

 வீச்சுமணி வலை vīccumaṇivalai, பெ. (n.)

வேகமாக வீசிப்பிடிக்க உதவும் வலை.

     [வீசு-வீச்சு+வலை]

வீச்சுலை

 வீச்சுலை vīcculai, பெ. (n.)

   காற்று வீசும் உலை; blast furnace.

     [வீசு → வீச்சு + உலை]

வீச்சுவலி

 வீச்சுவலி vīccuvali, பெ. (n.)

   நரம்புகளை இழுத்துவிடும் ஒரு வகை வலிப்பு; a spasm in which the muscles or muscular fibres contract and relax alternately in quick succession.

     [வீச்சு + வலி]

வீச்சுவலை

 வீச்சுவலை vīccuvalai, பெ. (n.)

   மீன்பிடி வலைவகை (இ.வ.);; a kind of casting net.

மறுவ. எறிவலை, மணிவலை.

ம. வீச்சுவல.

     [வீசு → வீச்சு + வலை. வலை = மீனுள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கருவி]

வாய்ப்பக்கம் நீர்ப்பரப்பில் எறிந்து மையமூடாக நாற்புறக் கோடியும் இழுக்கப்படத் தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவமான மீன்பிடி வலை.

வீச்சுவிளக்கு

 வீச்சுவிளக்கு vīccuviḷakku, பெ. (n.)

   மாழைகளை (அல்); மாழைகளினாலான அணிகலன்களை உருக்கவும், காய்ச்சவும் பயன்படுத்தும் காற்று வீசும் விளக்கு; blast lamp.

     [வீசுவிளக்கு → வீச்சுவிளக்கு]

     [p]

வீச்சுவீச்செனல்

 வீச்சுவீச்செனல் vīccuvīcceṉal, பெ. (n.)

   கதறுதற்குறிப்பு; onom. expr, of screaming.

     [வீச்சு + வீச்சு + எனல்]

வீச்சுவேனுமாய்

 வீச்சுவேனுமாய் vīccuvēṉumāy, வி.எ. (adv.)

   அளவில் மிகுதியாய்; with a free hand, liberally, as in measuring.

     [வீசு → வீச்சு + வியனுமாய் → வேனுமாய்]

வீச்சேணி

வீச்சேணி vīccēṇi, பெ. (n.)

   வீசுகாலேணி (சங்.அக.);; a kind of ladder.

     [வீச்சு + ஏணி1]

வீடடைத்தல்

 வீடடைத்தல் vīḍaḍaittal, பெ. (n.)

   சாவு முதலியவற்றால் தலைமுறையற்று வீடு மூடிக்கிடக்கை; closing of a house due to extinction of a family, as by death.

     [வீடு + அடைத்தல்]

வீடறு-த்தல்

வீடறு-த்தல் vīṭaṟuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வழக்கு முதலியன தீர்த்தல்; to settle, as a case or dispute.

     “வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன்” (பொருந. 188, உரை);

     [வீடு + அறு-,]

வீடாயிரு-த்தல்

வீடாயிரு-த்தல் vīṭāyiruttal,    2 செ.கு.வி. (v.i.)

   தங்கியிருத்தல்; to encamp, to stay.

     “சீவலவன் மங்கலத்து நாம் வீடாயிருக்க” (T.A.S. vi.158);.

வீடாரம்

வீடாரம் vīṭāram, பெ. (n.)

   1. பாசறை (பு.வெ.8, 16, கொளு, உரை);; camp.

   2. வீடு (வின்.);; house.

   தெ. பிடாரமு;க. பிடார.

     [வீடு → வீடாரம்]

வீடாவழி

 வீடாவழி vīṭāvaḻi, வி.எ.(adv.)

   வீடு வீடாக(வின்.);; door to door.

     ‘இவ்விரவலன் வீடாவழிச்சென்று இருக்கிறான்’ (உ.வ.);.

     [வீடு + ஆ + வழி]

வீடி

வீடி1 vīṭi, பெ. (n.)

   கொற்றன் (மலை.);; a parasitic leafless plant.

 வீடி2 vīṭi, பெ. (n.)

   வேரிலாக் கொத்தான்; rootless plant.

 வீடி3 vīṭi, பெ. (n.)

   வெற்றிலை பாக்கு (தாம்பூலம்); (இலக். அக.);; betel and betel nut.

     [மிடையம் → விடையம் → வீடி]

வீடிகை

வீடிகை vīṭigai, பெ. (n.)

   1. வெற்றிலை (மலை.);; betel.

   2. வெற்றிலைச் சுருள் (வின்.);; roll of betel leaves with arecanut, spices and lime.

     [மிடையம் → விடையம் → வீடிகை]

     [p]

வீடு

வீடு1 vīṭu, பெ. (n.)