தலைசொல் | பொருள் |
---|---|
வ் | வ் v, தமிழ் நெடுங்கணக்கில் பதினான்காம் மெய்யாகப் பல்லிதழில் ஒலிக்கப்பெறும் இடையினவெழுத்து, இவ்வெழுத்து சில விடத்தே அரையுயிராகவும், உடம்படு மெய்யாகவும் ஒலிக்கும் தன்மைத்து: the fourteenth letter of medial consonant in Tamil alphabet. It functions as dental labial and glide. தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களில் இயம்பியவாறும் மாந்தர்தம் நாவில் நன்கு பலுக்கும் பான்மையிலும், மேற்பல்லும், கீழிதழும் ஒன்றிப் பொருந்துங்கால், ஒலிப்பொடு மூச்சு வெளிவரும் போது, பிறக்கும் மெய்யொலி. மொழியியலார், இம்மெய்யொலியின் பிறப்பிடம் நோக்கி, இதழ்ப் பல்லொலி (labiodental); என்றும் ஈரிதழ்த் திறப்பொலி (bio-labial); என்றும், அரையுயிர் (semi-vowel); என்றும், ஒழுகொலி (continuant); என்றும், பலவாறு பகுத் துக் கூறுவர். தொல்காப்பியர் அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு மொழிகளில், இம் மெய்யொலி ஈறாக வரும் என்று வரையறுத்துள்ளார். இந்நூற்பா வருமாறு :- “வகரக் கிளவி, நான்மொழி ஈற்றது” (தொல், எழுத்து.81);. ஆனால், காலப்போக்கில், இம் மெய்யீற்றிற்குப் பின்னும் உகாச் சாரியை பெற்று. உகர ஈறாக வழங்குவது வழக்கமாகிவிட்டது. அவ்(வு);தல் – ஒன்றைக் கவ்வுதலை யொத்த வாய்ச் செய்கை நிலை “அவ்” என்னும் ஒலியைத் தோற்றுவிக்கும். கவ்(வு);தல்-மேல்வாய்ப்பல் கீழுதட்டோடு பொருந்துதலே கவ்வும் நிலையாகும். இந்நிலை வகர மெய்யொலிப்பிற்கே ஏற்கும். இதனை நன்னூலார், “மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே” (நன்.85); என்று குறித்துள்ளது காண்க. வவ்(வு);தல் – என்னுஞ் சொல்லிற் பயிலும் வகர மெய், ஒன்றைக் கையினாற் பற்றுதல் என்னும் பொருண்மையைக் குறிக்கும். அ(வ்+ஐ); – அவை அவ் + ஐ – அவ்வை → அவை. தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், என்ற ஈன்னூலாரின் கூற்றினுக்கு ஏற்றவண்ணம் “அவ்வை” என்னும் சொல்லில், மெய்யொலி பயின்று வந்த ஞான்றும், புணர்ச்சியின் கண்ணே, “ஐ”காரம் வரும்போதும், இம் முதனிலையில் உள்ள (அவ்);, “வ”கர உடம்படுமெய் கெடும். இதனைக் கீழ்காணும் நூற்பாவால் அறியலாம். “அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஒள வென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” இந் நூற்பாவினைத் தொல்காப்பியர், எழுத்ததிகாரத்தில் 56-வது நூற்பாவினுக்கு அடுத்திருக்க வேண்டும் என்பது, ஆய்வாளர் கருத்தாகும். |