தலைசொல் | பொருள் |
---|---|
வை | வை1 vai, பெ.(n.) தமிழ் நெடுங்கணக்கில் ‘வ்’ என்ற மெய்யெழுத்தும் ‘ஐ’ என்ற உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய் எழுத்து; the compound of ‘v’ and ‘ai’. [வ் + ஐ + வை] வை2 vaidal, செ.குன்றாவி.(v.t.) 1 பழித்தல்; to abuse, revile. “வைதா னொருவ னொருவனை” (நாலடி, 325);. 2. சினந் துரைத்தல்; to curse. “வைத வைவின்” (கம்பரா. சிறப். 5);. 3. ஏய்த்தல்; to deceive. “வையாது வழக்குரைத்தன்று” (பு.வெ.1, 18, கொளு.);. வை3 vaittal, செ.குன்றாவி.(v.t.) 1. இடுதல்; to put, place. “வழக்கினுள் வைக்குந் தன்னாளை” (குறள், 776);. 2. அளித்தல்; to bestow. “ஒர் கண்மணி நிற்கென வைத்ததும்” (கம்பரா. குளா. 81);. 3. இருக்கச் செய்தல்; to seat. “புறங்கடை வைத்திவர் சோறும்” (நாலடி, 293);. 4. பள்ளிக்கு அனுப்புதல்; to put to school. “பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே” (தனிப்பா.);. 5. வேலை முதலியவற்றில் அமர்த்துதல்; to appoint. 6. சேமித்தல்; to lay by, deposit, store up. “வைத்த பொருளும்” (நாலடி, 273);. 7. பாதுகாத்தல்; to keep in custody, to guard. 8. தனியாக ஒதுக்குதல்; to reserve, set apart. “வைத்தனன் றனக்கே தலையுமென்னாவும்” (தேவா. 351, 1);. 9. சிறையிலிடுதல்; to detain, as in prison. 10. உடைத்தாயிருத்தல்; to possess, have, keep, hold in possession. “புன்னை நித்திலம் வைப்பவும்” (சிறுபாண். 149);, “நிரம்பப் பணம் வைத்திருக்கிறான்”. 11. அமைதல்; to obtain. ‘இது எத்தனை அறை வைத்த பெட்டி?’. 12. ஒரு ஆண் தன் மனைவியல்லாத பெண்ணையும், ஒரு பெண் தன் கணவனல்லாத ஆணையும் வைப்புாக வைத்துக் கொள்ளுதல்; keep company with, to keep, as mistress. 13. நிலை மாறாதபடி செய்தல்; to allow to remain unaltered. 14. உண்டாக்கல்; to create, set up “வைத்தானை வானோருலக மெல்லாம்” (தேவா. 384, 8);. 15. உருவாக்குதல்; to prepare. ‘குழம்பு வை’. 16. நடத்துதல்; to conduct or maintain for profit. கடை வைத்திருக்கிறான்’. 17. மதித்துப் போற்றுதல்; to pay due regard to. ‘தந்தை தாயாரை வைத்திருப்பதிலிருந்து ஒருவன் குணத்தை அறியலாம்’. 18. உண்மையென்று கொள்ளுதல்; to imagine, suppose. 19. வரையறுத்தல்; to fix, determine. “வைத்த நாள்வரை யெல்லை” (திவ். திரவாய் 3, 3, 10);, 20. கணக்கு முதலியன எழுதி வருதல்; to maintain, as accounts. 21. எடுத்துச் சொல்லுதல்; to mention. “கண்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்” (கம்பரா. சூளா. 81);. 22. மனத்திற் கொள்ளுதல்; to consider. “மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” (குறள், 214);. 23. வழிபடல்; to meditate upon. “சிந்தை யிலவன்றன் சேவடி வைத்து” (சிலம் 11, 106);. [வை → வை-த்தல்] வை4 vaittal, பெ.(n.) ஒரு துணைவினை; an auxiliary verb. ‘அங்கே போட்டு வை’. வை5 vaittal, செ.கு.வி.(v.i) 1. (போட்டி, தேர்வு முதலியவற்றை); நடத்துதல்; conduct, hld (an event);. ‘பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்த முறை மதுரையில் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது’. 2. (ஒன்றை நடத்துவதற்காக நாள்); தேர்ந்தெடுத்தல், முடிவு செய்தல்; fix (a date);. ‘உங்கள் பெண் திருமணத்தை எந்த மாதம் வைத்திருக்கிறீர்கள்?’ 3. (உணவுப் பொருள் முதலியவற்றை உண்ணத்); தருதல்; provide (sth, as food);, feed. ‘பசிக்கிறது, சிக்கிரம் சாப்பாடு வை’. 4. (கடை); ஏற்படுத்துதல், அமைத்தல், நடத்துதல்; have or run (ashop);. ‘அவர் வெகு நாளாகக் கடை வைத்து நடத்திவருகிறார்’. 5. (தொலைக் காட்சி, வானொலி, இசைத்தட்டு முதலிய வற்றை); இயங்கச் செய்தல்; switch on (a radio);, play (a record, etc.);. அந்த இசைத்தட்டை இன்னொரு தடவை வை’. [வை → வை-த்தல்] வை6 vai, பெ.(n.) கூர்மை (தொல். சொல்.387);; sharpness. keenness, point. [வள் → (வய்); → வை (மு.தா.28); வை7 vai, பெ.(n.) 1. வைக்கோல் பார்க்க;see val-k-kol. “வைத்துறு போலக் கெடும்” (குறள், 435);. 2. புல் (பொதி. நி.);, grass. வை8 vai, இடை.(part.) தொழிற்பெயர் ஈறுகளுள் ஒன்று; suffix of verbal nouns. ‘போர்வை’. வை9 vaittal, செ.குன்றாவி.(v.t.) 1. கடினமான நோய் ; severe disease. 2. வையென்னெவல்; put. |
வைகசரம் | வைகசரம் vaigasaram, பெ.(n.) இலவங்கப் பத்திரி; cinnamon leaf. |
வைகச்சம் | வைகச்சம் vaigaccam, பெ.(n.) மேலாடை (யாழ்.அக.);; upper garments. [மெய் → வை + கச்சம்] |
வைகடிகன் | வைகடிகன் vaigaḍigaṉ, பெ. (n.) இரத்தினங்களைச் சாணைதீட்டுவோன்; jeweller, one who cuts and polishes gems. (W);. |
வைகட்சம் | வைகட்சம் vaigaṭcam, பெ. (n.) மேலாடை (உத்தரியம்); (யாழ்.அக.);; upper garment. |
வைகத்தன் | வைகத்தன் vaigattaṉ, பெ. (n.) துவா தசாதித்தருள் ஒருவர்(பிங்.);; a sun-god, one of {}, q.v. |
வைகமூலி | வைகமூலி vaigamūli, பெ.(n.) சல்லிக்கொடி; naval cord. |
வைகரி | வைகரி1 vaigari, பெ. (n.) வாக்கு நான்கனுள் தெளிவாக காது ({} கேட்கும் திருந்திய (அட்சர); ன ஒலி (சி.சி. 1, 20.);; articulate utterance, audible utterance of sounds or worlds, one of four {}, q.v. [Skt. vaikhari → த. வைகரி] வைகரி2 vaigari, பெ. (n.) 1. வைகரியங்காரம் பார்க்க;see vaikari-y-{}. 2. திட்டம்; regulation. |
வைகரியகங்காரம் | வைகரியகங்காரம் vaigariyagaṅgāram, பெ. (n.) அகங்காரத்திரயத்துள் சத்துவ குணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது (சி.போ.பா.2,2. (வேதா. சூ. 69.);;{} oregoism in which cattiuva-kunam or {} predominates, one of {}- tirayam. q.v. |
வைகறை | வைகறை1 vaigaṟai, பெ.(n.) 1. விடியல்; daybreak. “வைகறைமலரு நெய்தல்” (ஜங்குறு. 188);. 2. வைகறையாமம் பார்க்க (அக.நி.);;see vaikarai-yāmam. [வை + கறை] வைகறை vaigaṟai, பெ.(n.) தங்குமிடம்; residential place. [வை + கறை] |
வைகறைப்பாணி | வைகறைப்பாணி vaigaṟaippāṇi, பெ.(n.) அதிகாலையிற் கொட்டும் இசைக்கருவி வொலி; sound of the drum played early in the morning. “கினை நிலைப் பொருநர் வைகறைப்பாணியும்” (சிலம் 13, 148);. [கறை + பாணி] |
வைகறையாமம் | வைகறையாமம் vaigaṟaiyāmam, பெ.(n.) விடியும் முன்னுள்ள இரவுப்பொழுது; the last yāmamor period of three hours preceding day break. “வைகறை யாமந் தூயிலெழுந்து” [ஆசாரக். 5]. [வைகறை + யாமம்] |
வைகற்பிகம் | வைகற்பிகம் vaigaṟpigam, பெ. (n.) திண்ணமாய்க் கொள்ளப்படாதது; |
வைகலம் | வைகலம் vaigalam, பெ.(n.) வைகல் 4 பார்க்க (அக.நி.);;see Vaikal. [வை + கலம்] |
வைகலும் | வைகலும் vaigalum, வி.எ.(adv) நாடோறும்; daily, everyday. “அடிசல் பிறர்நுகர்க வைகலும்” (புவெ. 10, 8);. [வைகல் → வைகலும்] |
வைகல் | வைகல் vaigal, பெ.(n.) 1. தங்குகை (பிங்.);; dwelling, staying. 2. கழிகை; passing. “மத்துக் கயிறடா வைகற்பொழுது நினையூஉ” (பதிற்றும் 71, 16); 3. வைகறை 1 பார்க்க (சூடா);;see vaikarai. 4. நாள்; day. “இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே” (புறநா. 363);. 5. கழிந்த நாள் (பிங்);; day that has passed away. 6. வேலை; instant, moment. “மாதவி தன்னோ டனைவுறு வைகலி னயர்ந்தனன்” (சிலம் 3, 173);. [வை + கவ்] |
வைகாசி | வைகாசி vaikāci, பெ. (n.) 1. சுமை விண்மீன் விசாகம் (பிங்.); பார்க்க; the 16th naksatra. தமிழ் மாதம் விடை; the month of the Tamil year, corresponding to May-June. த.வ. விடை |
வைகாசிவசந்தன் | வைகாசிவசந்தன் vaikāsivasandaṉ, பெ. (n.) 1. விடை (வைகாசி); மாதத்திற் பெருகியோடுங் காவிரியாறு (யாழ். அக.);; the river Cauvery in floods during the month of {}. |
வைகானசன் | வைகானசன் vaikāṉasaṉ, பெ. (n.) 1. வைகானச ஆகமத்தின் படி ஒழுகுபவன் (நாமதீப. 128);; follower of the {} agama. 2. கான (வன);வாசி (யாழ்.அக.);; hermit, dweller in the forest. |
வைகானசம் | வைகானசம் vaikāṉasam, பெ. (n.) 1. மாலிய (வைணவ); ஆகமங்களுள் ஒன்று; a {} agama. 2. கிருகிய சூத்திரவகை; an aphoristic work on household rites. ஆத்திரேய கோத்திரத்து வைகானச சூத்திரத்து;(s.i.i.vi,5);. |
வைகாபூர் | வைகாபூர் vaikāpūr, பெ.(n.) திருவைகாவூர் என்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது; this vinage tiru-vaigāvūrin tañjāvūr district. கொள்ளிட ஆற்றங் கரைத்தலம் இது. திருஞான சம்பந்தர் இவ்வூரின் சிறப்புக் குறித்து பாடியுள்ளார். [வைகு+ கா + ஊர் + வைகாவூர் → வைகாபூர்] |
வைகாரி | வைகாரி vaikāri, பெ. (n.) 1. வைகரியகங்காரம் பார்க்க;see {}. இராசதஞ்சேர் வாக்காதி வைகாரி மருவிவரும் (சிவப்பிர. 27);.; 2. சத்துவகுணம்; |
வைகாரிகம் | வைகாரிகம் vaigārigam, பெ. (n.) வைகரியகங்காரம் பார்க்க;see vaikar-y- {}. “வளர் தைசதம் வைகாரிகமென்று” (திருக்காளத்.பு. சிவலிங்க. 11);. |
வைகார்ப்பு | வைகார்ப்பு vaikārppu, பெ.(n.) இடையறாத ஆரவாரம்; unceasing, lumultuous noise. “வைகார்ப் பெழுந்த மையடு பரப்பின்” (பதிற்றும் 41, 22);. [வைகு + ஆர்ப்பு] |
வைகாலம் | வைகாலம் vaikālam, பெ.(n.) சாயங்காலம் (யாழ்.அக.);; evening. [வை + காலம்] |
வைகிராந்தம் | வைகிராந்தம் vaigirāndam, பெ. (n.) ஒரு வகை மணி (யாழ். அக.);; a kind of gem. |
வைகிருதம் | வைகிருதம் vaigirudam, பெ. (n.) வெறுப்பு; aversion. |
வைகிருத்தியம் | வைகிருத்தியம் vaigiruttiyam, பெ. (n.) வைகிருதம் பார்க்க (யாழ். அக.);;see vaikirudam |
வைகிருள் | வைகிருள் vaigiruḷ, பெ.(n.) விடியற்காலத் திருள்; darkness-immediately before dawn. [வை + கிருள்] |
வைகு-தல் | வைகு-தல் vaigudal, செ.கு.வி.(v.i.) 1. தங்குதல்; to halt, stay, tarry; to reside dwell. “நெடுந்திமிற் றெழிலொடு வைகிய தந்தைக்கு” (அகநா. 60. “மாலெரியாகிய வரதர் வைகிடம்” (தேவா. 467,9);. 2. போது கழிதல்; to pass, as time. “அமுது செய்கைக்குப் போது வைகிற்று” (ஈடு 7, 10 4);. 3. வற்றுதல்; to dry up, as a river. “காவிரி வைகிய காலத்தினும்” (தஞ்சைவா. 71);. 4. விடிதல்; to dawn, as the day. “வைகுறு மீனின்” (பெரும்பாண். 318);. 5. புணர்தல்; to cohabit. “காசுகண் பரிய வைகி” (சீவக 586);. [வை → வைகு-தல்] |
வைகுசுடர் | வைகுசுடர் vaigusuḍar, பெ.(n.) விடியுமளவும் எரியும் விளக்கு; light that burns all night. “வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர்” (அகநா. 87);. [வைகு + சுடர்] |
வைகுண்டன் | வைகுண்டன் vaiguṇṭaṉ, பெ. (n.) திருமால் (நாம.தீப.47.);;{}. |
வைகுண்டம் | வைகுண்டம் vaiguṇṭam, பெ. (n.) திருமாலுலகம்;{} heaven. |
வைகுண்டவேகாதசி | வைகுண்டவேகாதசி vaiguṇṭavēgātasi, பெ. (n.) சிலை (மார்கழி); மாதத்துச் வெண்பக்கத்து (சுக்கிலபட்சத்து); ஏகாதசியன்று திருமாலின் பொருட்டுக் கொண்டாடப்படுந் திருநாள்; the 11th titi of the waxing moon in the month of {}, as a special day of festivity in honour of {}. த.வ. மாலுலகு பதினோரி |
வைகுந்தம் | வைகுந்தம் vaigundam, பெ. (n.) வைகுண்டம் பார்க்க;see {}. “வைகுந்தங் காண்பார் விரைந்து” (திவ். இயற். நான்மு.70); |
வைகுபுலர்விடியல் | வைகுபுலர்விடியல் vaigubularviḍiyal, பெ.(n.) வைகுறுவிடியல் பார்க்க;see vaikuru-vidyal. “வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வர” (பெருங், உஞ்சைக் 56, 149);. [வைகு + புலர் + விடியல்] |
வைகுரி | வைகுரி vaiguri, பெ.(n.) பெரியம்மை நோய்; small-pox. [வை + குலி → சூரி] வைசூலி, கூர்மையான சூலப்படையையுடைய பெண் தெய்வம். |
வைகுறா | வைகுறா vaiguṟā, பெ.(n.) தும்பை; a plant leucas aspeva. [வை + குறா] |
வைகுறு | வைகுறு vaiguṟu, பெ.(n.) 1. வைகறையாமம் பார்க்க;see vaikarai-yāmam. “வைகுறு விடியல்” (தொல், பொ. 8);. 2. விடியல் (தொல். விருத். 38);; day break. [வைகு + உறு] |
வைகுறுமீன் | வைகுறுமீன் vaiguṟumīṉ, பெ.(n.) விடி வெள்ளி; morning star. “வைகுறு மீனிற்றோன்றும்” (அகநா.17);. [வைகுறு + மீன்] |
வைகுறுவிடியல் | வைகுறுவிடியல் vaiguṟuviḍiyal, பெ.(n.) காலம்; early dawn. “வைகுறுவிடிய லியம்பிய சொல்லே”(புறநா 233);. [வைகுறு + விடியல்] |
வைகை | வைகை vaigai, பெ.(n.) வையை பார்க்க;see Vaiyai. [வையை → வைகை] |
வைகைத்திருமலை | வைகைத்திருமலை vaigaittirumalai, பெ.(n.) வைகானுரை அடுத்திருந்த ஊர்; its next village Vaikānor. வட ஆர்க்காட்டில் திருமலை என்னும் குன்றம் ஒன்றுண்டு. அது வைகானுரை அடுத்திருத்தலால் வைகைத் திருமலை எனவும் வழங்கும். மன்னரால் மதிக்கப்பெற்ற சமண முனிவர்கள் அம் மலையில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இராசராச சோழன் காலத்தில், “கொலை புரியும் படையரசர் கொண்டாடும் குணவீரமாமுனிவன்” என்று புகழப் படுகின்ற ஒரு முனிவர் திருமலை யேரிக்குக் கலிங்குகட்டி, வைகை மலையின் இரு மருங்கும் நெல் விளையக் கண்டு களித்தார் என்று அம்மலைக் கல்வெட்டொன்று கூறுகின்றது. [வைகை + திருமலை] |
வைகைத்துறைவன் | வைகைத்துறைவன் vaigaittuṟaivaṉ, பெ.(n.) பாண்டியன் (பிங்);; the pãngyaking as lord of the vaikai region. [வைகை + துறை + அன்] |
வைக்கோற்கந்து | வைக்கோற்கந்து vaikāṟkandu, பெ.(n.) நெற்களத்தைச் சுற்றி வைக்கப்படும் வரம்பு ; heap of straw enclosing the threshing floor. [வைக்கோல் + கந்து] |
வைக்கோற்குதிரை | வைக்கோற்குதிரை vaikāṟkudirai, பெ.(n.) வெள்ளத்தைத் தடுக்கக் கரையுடைப் பிலிடும் மண்பொதிந்த வைக்கோற்புரியின் கட்டு (வின்.);; bundle of straw and earth to stop the breach of a bund. [வைக்கோல் + குதிரை] |
வைக்கோற்கூளம் | வைக்கோற்கூளம் vaikāṟāḷam, பெ.(n.) வைக்கோற்பதர்; chaff of straw. [வைக்கோள் + கூளம்] |
வைக்கோற்துரும்பு | வைக்கோற்துரும்பு vaikāṟturumbu, பெ.(n.) காய்ந்து உலர்ந்த நெற்பயிர்த்தாள்; straw of paddy. [வைக்கோல் + துரும்பு] |
வைக்கோற்பழு | வைக்கோற்பழு vaikāṟpaḻu, பெ.(n.) வைக்கோற்புரி பார்க்க (யாழ்.அக.);;see Vaikkör-puri. [வைக்கோல் + பழுதை] |
வைக்கோற்பாம்பு | வைக்கோற்பாம்பு vaikāṟpāmbu, பெ.(n.) 1. வைக்கோற்குதிரை பார்க்க (வின்);;see vaikkör-kudira. 2. மாறு வேடம் (யாழ்.அக.);; disguise. 3. மாயை; illusion. [வைக்கோல் + பாம்பு] |
வைக்கோற்புரி | வைக்கோற்புரி vaikāṟpuri, பெ.(n.) வைக்கோலை முறுக்கிய திரி; large, twisted stand of straw, hay-band. [வைக்கோல் + புரி] |
வைக்கோற்பொம்மை | வைக்கோற்பொம்மை vaikāṟpommai, பெ.(n.) வைக்கோற் பழுதுகளை வைத்து செய்யும் ஒரு பொம்மை; man of straw. [வைக்கோல் + பொம்மை] |
வைக்கோற்போர் | வைக்கோற்போர் vaikāṟpōr, பெ.(n.) வைக்கோற்குவியல்; straw stack or haystack. [வைக்கோல் + போர்] |
வைக்கோலட்டை | வைக்கோலட்டை vaikālaṭṭai, பெ.(n.) வைக்கோலால் செய்யப்படும் ஒருவகைத் தட்டி; straw board. [வைக்கோல் + அட்டை] |
வைக்கோல் | வைக்கோல் vaikāl, பெ.(n.) நெற் பயிரின் உலர்ந்த தாள்; straw of paddy. [வை + கோல்] மறுவ. வைக்கல் (யாழ்.அக.); |
வைக்கோல்மெத்தை | வைக்கோல்மெத்தை vaikālmettai, பெ.(n.) நோயாளிகள் படுப்பதற்காக மருத்துவ மனைகளில் அமைக்கும் ஒரு வகைப்படுக்கை அமளி; straw bed-lectus stramineus. [வைக்கோல் + மெத்தை] |
வைக்கோல்வாரி | வைக்கோல்வாரி vaikālvāri, பெ.(n.) கம்பம் பயிர்வகை (யாழ்.அக.);; a kind of kampu crop. [வைக்கோல் + வாரி] |
வைசகி | வைசகி vaisagi, பெ. (n.) வைகாசி பார்க்க;see vaikaci. “பூசனையை…… வைசகியிற் புரிந்தவரும்” (சிவதரு. சிவஞானதா.46);. |
வைசத்தியம் | வைசத்தியம் vaisattiyam, பெ. (n.) 1. தூய்மை; purity. (யாழ்.அக.); 2. உண்மை; truth. |
வைசத்திரம் | வைசத்திரம் vaisattiram, பெ.(n.) அரசாட்சி (யாழ்.அக.);; government rule. [Skt. {} → த. வைசத்திரம்] |
வைசந்தி | வைசந்தி vaisandi, பெ.(n.) முன்னை மரம்; a tree, its root is used in medicine, leaves, edible – premana integrifolia. |
வைசனனம் | வைசனனம் vaisaṉaṉam, பெ. (n.) பிள்ளைப் பேற்றுக்குரிய மாதம் (யாழ். அக.);; closing month of gestation, the period when confinement is expected. |
வைசனி | வைசனி vaisaṉi, பெ.(n.) 1 ஆமிரம்; mango tree. 2. புளியமரம்; tamarind tree. [வை + சனி] |
வைசம்பாயனன் | வைசம்பாயனன் vaisambāyaṉaṉ, பெ. (n.) ஒரு முனிவன் (பாக. வத.i மாயவ. 34);; a sage. |
வைசயந்தம் | வைசயந்தம் vaisayandam, பெ. (n.) 1. இந்திரன் வளமனை (மாளிகை);; the palace of Indra. 2. இந்திரன் கொடி; Indra’s flag. |
வைசயந்தி | வைசயந்தி vaisayandi, பெ.(n.) தபதாழை; a medicinal shrub, used for rheumatismcleodendron phlomoides. [வை + சயந்தி] வைசயந்தி vaisayandi, பெ. (n.) 1. திருமால் அணியும் மாலை; the garland or necklace of {}. “வைசயந்திப் பெயர் மாலையும் மிலைந்திட்டார்” (சேதுபு. இலக். 22); 2. பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முன்புறத்ததுமான கட்டடம்; terraced building in front of a mansion, with a large flag hoisted over it. “வைசயந்திப் பொன்னிலத்தும்” (தேவை. 140); 3. கடம்பரது தலைநகரான வனவாசி;{}, the capital of the Kadambas. 4. தழுதாழை (மலை);; wind-killer. |
வைசயாதி | வைசயாதி vaisayāti, பெ.(n.) தழுதாழை; a tree-cleodendron phlomoides. [வை + சயாதி] |
வைசாகநிலை | வைசாகநிலை vaicākanilai, பெ. (n.) கூத்து நிலையுள் ஒன்று (சிலப். 3,12, உரை.);; a pose in dancing. |
வைசாரிணம் | வைசாரிணம் vaicāriṇam, பெ.(n.) மீன்; a fish. |
வைசிகம் | வைசிகம்1 vaisigam, பெ.(n.) 1. உயிருடன் கூடிய உடலை அறுத்து அறிவது; to learn by cutting the living organism. 2. உடலையும் உயிரையும் பிரித்து அறியும் வல்லமை; a supernatural power of separating body from the soul. வைசிகம்2 vaisigam, பெ.(n.) 1.தளிர்i; tender leaf. 2. காரணம் (யாழ்.அக.);; cause. வைசிகம் vaisigam, பெ. (n.) 1. தளிர்;(யாழ். அக.); tender leaf. 2. காரணம்; cause. |
வைசித்திரி | வைசித்திரி vaisittiri, பெ. (n.) புதுமை; strangeness novelty. “மாயாமற் றன்னை வைத்த வைசித்திரியாலே” (திருவாய். நூற். 68);. |
வைசியநாபி | வைசியநாபி vaisiyanāpi, பெ. (n.) நீலநிறமுள்ள நாபிவகை; (மூ.அ.); blue variety of aconite. |
வைசியன் | வைசியன் vaisiyaṉ, பெ. (n.) நால்வகை வருணத்துள் தனவைசியர், பூவைசியர், கோவைசியர் என்ற முப்பிரிவுள்ள வணிக சாதியான்; trader, merchant, one of {}-vakai-varunam, q.v., of three classes, viz., {}-vaiciyar, {}-vaiciyar, {}-vaiciyar. |
வைசூரிக்காய்ச்சல் | வைசூரிக்காய்ச்சல் vaicūrikkāyccal, பெ.(n.) அம்மையினாலுண்டாகுங்காய்ச்சல், variolous fever. [வைகுரி + காய்ச்சல்] |
வைசூரித்தடிப்பு | வைசூரித்தடிப்பு vaicūrittaḍippu, பெ.(n.) அம்மை காய்ச்சல் variolous fever, வைசூரித்தடிப்பு vaicūrittaḍippu, பெ.(n.) அம்மை நோய் தடிப்பு; red spots preseding the pustulation in small-pox. [வைகுரி + தடிப்பு] |
வைசூரிப்பால் | வைசூரிப்பால் vaicūrippāl, பெ.(n.) அம்மைப்பால்; cow-pox vaccine – virus of cow-рох. [வைகுரி + பால்] வைத்தங்கி |
வைசேடி | வைசேடி vaicēṭi, பெ. (n.) வைசேடிகம் பார்க்க;see vaicetikan. இது தான் வைசேடி யியல்பாகும் (தத்துவப்.177); |
வைசேடிகம் | வைசேடிகம் vaicēṭigam, பெ. (n.) கணாதரால் தோற்றுவிக் (தாபிக்);கப்பட்ட மதம்;(மணி. 27, 79.);; a system of philosophy, founded by {}. |
வைச்சிரம் | வைச்சிரம் vaicciram, பெ.(n.) வச்சிரம் பார்க்க;see Vacciram. |
வைச்சிரவணன் | வைச்சிரவணன் vaicciravaṇaṉ, பெ. (n.) 1. குபேரன் (பிங்.);;{}. 2. இராவணன் (திவ். பெரியாழ். 1,3,5.); {}. [Skt.{} → த. வைச்சிரவணன்] |
வைச்சிரவனாலயம் | வைச்சிரவனாலயம் vaicciravaṉālayam, பெ. (n.) ஆலமரம்; banyan tree. |
வைச்சிரவன் | வைச்சிரவன் vaicciravaṉ, பெ. (n.) வைச்சிரவணன் பார்க்க;(நாமதீப.88); see {} |
வைச்சுப்பாடு-தல் | வைச்சுப்பாடு-தல் vaiccuppāṭudal, செ. குன்றாவி.(v.t.) வைத்துப்பாடு-, பார்க்க;see vaittu-p-pâdu. [வை + பாடு] |
வைச்சூற்றி | வைச்சூற்றி vaiccūṟṟi, பெ.(n.) நீர்மப் பொருள் ஊற்ற உதவும் கருவி (Funnel);, வைத்தூற்றி; funnel. [வைத்து ஊற்றி → வைச்குற்றி] |
வைடம்மியம் | வைடம்மியம் vaiḍammiyam, பெ. (n.) 1. மாறுபாடு; contrariety. 2. பகைமை (யாழ். அக.);; enmity. [Skt. vaisamya → த. வைடம்மியம்] |
வைடாலம் | வைடாலம் vaiṭālam, பெ. (n.) 1. பூனை;(யாழ். அக.); cat. 2. மாய்மாலம்; pretence. |
வைடாலவிரதிகன் | வைடாலவிரதிகன் vaiṭālaviradigaṉ, பெ. (n.) அறச் (தரும); சிந்தையுள்ளவன் போல நடிப்பவன்;(யாழ்.அக.); hypocrite, one who simulates virtue or goodness. |
வைடூரியப்பப்பளி | வைடூரியப்பப்பளி vaiṭūriyappappaḷi, பெ. (n.) சேலை வகை; a kind of saree. |
வைடூரியம் | வைடூரியம் vaiṭūriyam, பெ. (n.) நவமணியி லொன்று; cat’s eye, an opalescent gem, one of navamani q.v. [Skt. {} → த. வைடூரியம்] |
வைட்டணவன் | வைட்டணவன் vaiṭṭaṇavaṉ, பெ. (n.) வைணவன் பார்க்க;see {}. “உன் கோயிலில் வாழும் வைட்டணவனெனும் வன்மை கண்டாயே” (திவ். பெரியாழ். 5,1,3); [Skt. {} → த. வைட்டணவன்] |
வைணவநிலை | வைணவநிலை vaiṇavanilai, பெ. (n.) ஒரு வகைக் கூத்துநிலை (சிலப். 3, 12, கீழ்க் குறிப்பு.);; a pose in dancing. |
வைணவன் | வைணவன் vaiṇavaṉ, பெ. (n.) மாலிய (வைணவ); சமயத்தான்; follower of {}. |
வைணவாகமம் | வைணவாகமம் vaiṇavākamam, பெ. (n.) பாஞ்சராத்திரம், வைகானசம் என இருவகைப்பட்ட வைணவரின் ஆகமங்கள்; the {} Agamas or scriptures, of which there ae two, viz., {}. |
வைணவி | வைணவி vaiṇavi, பெ. (n.) வேய்ங்குழல்;(யாழ்.அக.);; flute, bamboo reed. |
வைணவிகன் | வைணவிகன் vaiṇavigaṉ, பெ. (n.) வேய்ங்குழ லூதுவோன்;(யாழ். அக.);; flute player. [Skt. {} → த. வைணவிகன்] வைணவிகன்2 vaiṇavigaṉ, பெ. (n.) வைணிகன் பார்க்க;(யாழ். அக.);;see vainikan. |
வைணிகன் | வைணிகன் vaiṇigaṉ, பெ. (n.) வீணைவாசிப்பவன்;(யாழ். அக.);; one who plays on the {}. |
வைணுகம் | வைணுகம் vaiṇugam, பெ. (n.) யானைத்தோட்டி;(யாழ். அக.); elephant goad. |
வைதகிகம் | வைதகிகம் vaidagigam, பெ.(n.) திப்பிலி; long pepper-piper longum. |
வைதனிகம் | வைதனிகம் vaidaṉigam, பெ. (n.) அற்றைக்கூலி;(யாழ். அக.); daily hire or wage. = வைதாளி __, பெ. (n.); புகழ்ந்து பாடும் பாட்டு; panegyric song. |
வைதன்மியதிட்டாந்தம் | வைதன்மியதிட்டாந்தம் vaidaṉmiyadiṭṭāndam, பெ. (n.) சாத்தியமெய்தாவிடத்தில் ஏதுவுமின்மையைக் குறிக்குந் திட்டாந்தம் (மணி. 29, 140.);; dissimilar example in which both {} and {} are absent. |
வைதன்மியதிட்டாந்தவாபாசம் | வைதன்மியதிட்டாந்தவாபாசம் vaidaṉmiyadiṭṭāndavāpācam, பெ. (n.) சாத்தியாவியாவிருத்தி, சாதனாவியாவிருத்தி, உபயாவியாவிருத்தி, அவ்வெதிரேகம், விபரீதவெதிரேகம் என ஐவகைப்பட்ட போலியான வைதன்மியதிட்டாந்தம் (மணி. 29, 334-5.);; semblance of {}, of five kinds, viz., {}. |
வைதன்மியம் | வைதன்மியம் vaidaṉmiyam, பெ. (n.) ஒப்பின்மை; dissimilarity. |
வைதருப்பநெறி | வைதருப்பநெறி vaidaruppaneṟi, பெ. (n.) செறிவு தெளிவு முதலிய பத்துக் குணங்களும் அமையப் பாடுமுறை. (தண்டி. 14.);; a style of poetry having ten characteristics, such as terseness, perspicuity, dist, fr. {}. |
வைதருப்பபாகம் | வைதருப்பபாகம் vaidaruppapākam, பெ. (n.) வைதருப்பநெறி பார்க்க;see {}. |
வைதர்ப்பம் | வைதர்ப்பம் vaidarppam, பெ.(n.) பல்நோய்; disease of the root of tooth. [வை + தர்ப்பம்] |
வைதலம் | வைதலம் vaidalam, பெ. (n.) ஒருவகை ஏனம் (யாழ்.அக.);; a kind of vessel. |
வைதளாலம் | வைதளாலம் vaidaḷālam, பெ.(n.) காரல் கத்திரி; apbint. [வை +தளாலம்] |
வைதவியம் | வைதவியம் vaidaviyam, பெ. (n.) கைம்மை, (பு. வெ. 10, சிறப்பிற் பொது. 4, கொளு, உரை);; widowhood. |
வைதாளிகர் | வைதாளிகர் vaitāḷigar, பெ. (n.) அரசரைப் புகழந்து பாடுவோருள் ஒரு வகையினர்; a class of panegyrists attached to kings. “மாகதப் புலவரும் வைதாளிகரும்” (சிலப். 26,74);. |
வைதாளியாடுவார் | வைதாளியாடுவார் vaitāḷiyāṭuvār, பெ. (n.) வைதாளிகர் பார்க்க (சிலப். 5, 48, அரும்.);;see {}. |
வைதிககாரியம் | வைதிககாரியம் vaidigagāriyam, பெ. (n.) வைதிகச் சடங்கு; religious rite. |
வைதிகசைவம் | வைதிகசைவம் vaidigasaivam, பெ. (n.) மறை (வேத);நெறிப்பட்ட சிவனிய (சைவ); மதம்; the {} religion which is in conformity with the {}. “ராசாங்கத்தி லமர்ந்தது வைதிகசைவமாதோ” (தாயு. ஆகாரபு.10); |
வைதிகச்செலவு | வைதிகச்செலவு vaidigaccelavu, பெ. (n.) மறைநெறி (வைதிக);காரியங்கட்குரிய பணச் செலவு; expenses incurred in performing religious rites. |
வைதிகச்சொல் | வைதிகச்சொல் vaidigaccol, பெ. (n.) மறை (வேத); வழக்கான சொல்; word occurring in the {}. “உலகியற்சொல்லை யொழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும்”(தொல். பொருள். 75,உரை); |
வைதிகன் | வைதிகன் vaidigaṉ, பெ. (n.) 1. வேதம் வல்ல பிராமணன்; Brahmin who is versed in the {}. 2. வேதநெறிப்பட்ட ஒழுக்கக் கடைபிடிப்புள்ளவன்; one living in conformity with {} precepts. “வைதிகரே மெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமையினார்” (திவ். இயற். திருவிருத். 94); 3. காலத்தோடொத்த நாகரிகமற்றவன்; one who is not refined or modern. |
வைதிகமார்க்கம் | வைதிகமார்க்கம் vaidigamārggam, பெ. (n.) வேதநெறிப்பட்ட மதம்; the {} religion. “வைதிகமார்க்கத்தளவைவாதியை” (மணிமே. 27,3); |
வைதிகம் | வைதிகம் vaidigam, பெ. (n.) 1. வேதநெறிப்பட்டது; that which is sanctioned or enjoined by the {}; that which is {}. “வைதிகத்தின் வழியொழுகாத ….. காரமண்தேரரை” (தேவா. 865, 2); 2. ஒழுக்க நெறிகளை விழிப்பாய் (ஆசாரங்களைச் சிரத்தையோடு); கடைப்பிடி {} (அனுஷ்டி);க்கை; faithful observance of religious rules, dist. fr. laukikam. 3. காலத்தோடொத்த நாகரிகமற்றது; that which not refined or modern. த.வ. மறைநெறி [Skt. {} → த. வைதிகம்] |
வைதிருதி | வைதிருதி vaidirudi, பெ. (n.) ஒக (யோக);மிருபத்தேழனு ளொன்று; a division of time, one of 27 {} q.v. தருகின்ற காரியங் கைகூடியே பின்பு தவறில் வைதிருதியாகும் (திருவேங். சத. 39.); |
வைதீகம் | வைதீகம் vaitīkam, பெ. (n.) வைதிகம் பார்க்க;(தக்கயா. 139, உரை); see vaitikam. |
வைதூரியம் | வைதூரியம் vaitūriyam, பெ. (n.) வைடூரியம் பார்க்க;see {} “வைரம் வைதூரிய நீலம்” (பாரத. இந்திரப்.12); |
வைதேகன் | வைதேகன் vaitēkaṉ, பெ. (n.) 1. பிராமணப் பெண்ணிடம் வைசியனுக்குப் பிறந்தவன்; 2. வியாபாரி (யாழ். அக.);; trader. [Skt. {} → த. வைதேகன்] |
வைதேகி | வைதேகி vaitēki, பெ. (n.) 1. சீதாதேவி (நாமதீப. 184.);;{}, wife of {}. 2. திப்பிலி (தைலவ);; long pepper. |
வைதேயன் | வைதேயன் vaitēyaṉ, பெ. (n.) அறிவீனன் (யாழ்.அக.);; foolish person. |
வைதேவி | வைதேவி vaitēvi, பெ. (n.) வைதேகி1 பார்க்க;see {}. “வைதேவி விண்ணப்பம்” (திவ். பெரி யாழ். 3,10,4);; |
வைத்தகண்வாங்காமல் | வைத்தகண்வாங்காமல் vaittagaṇvāṅgāmal, வி.எ. (adv.) gazing fixedly at (sth.);. ‘வந்ததிலிருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்’. [வைத்த + கண் + வாங்காமல்] |
வைத்தங்கி | வைத்தங்கி vaittaṅgi, பெ.(n.) கற்றாழை; aloe. [வை + தங்கி] |
வைத்தநிதி | வைத்தநிதி vaiddanidi, பெ.(n.) வைத்தமாநிதி பார்க்க;see vaitta-mā-miti. “வைத்தநிதியே மணியே யென்று வருந்தி” (தேவா. 983, 5);. [வை + நிதி] |
வைத்தமாநிதி | வைத்தமாநிதி vaiddamānidi, பெ.(n.) சேமித்து வைக்கப்பட்ட பொருட்குவை; hoarded wealth. “வைத்தமாநிதியா மது குதனையேயலற்றி” (திவ்.திருவாய். 6, 7, 11);. [வை + மா + நிதி] |
வைத்தியசாத்திரம் | வைத்தியசாத்திரம் vaittiyacāttiram, பெ. (n.) அறுபத்துநான்குகலையுள் ஒன்றான மருந்துவநூல்; medical science, one of {}, q.v. |
வைத்தியசாலை | வைத்தியசாலை vaittiyacālai, பெ. (n.) மருத்துவச்சாலை; hospital, dispensary. |
வைத்தியநாததேசிகர் | வைத்தியநாததேசிகர் vaittiyanātatēcigar, பெ.(n.) 17-ம் நூற்றாண்டினரும் இலக்கண விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர்; Vattiyanata. tecskar, the author of ilakkana-Vilakkam and other works, 17th C. [வைத்தியநாத + தேசிகர்] |
வைத்தியன் | வைத்தியன் vaittiyaṉ, பெ. (n.) 1. மருத்துவன்; physician, medical practitioner. 2. வேதாப்பியாசஞ் செய்பவன் (யாழ். அக.);; one who studies the {}. [Skt. Vaidya → த. வைத்தியன்] |
வைத்தியபாகம் | வைத்தியபாகம் vaittiyapākam, பெ. (n.) நோயாளிக்காகச் செய்யப்பட்ட மருந்தில் மருத்துவனுக்குரிய பகுதி; physician’s share of a medicine prepared by him or under his direction for his patient. |
வைத்தியம் | வைத்தியம் vaittiyam, பெ. (n.) நோய்க்குச் செய்யும் பண்டுவம்; medical treatment. |
வைத்து | வைத்து1 vaittu, இடை.(part.) ஒர் அசைச் சொல்; an expletive. “இப்பாதகத்தைக் கண்டு வைத்தும்” (சீவக 681, உரை);. [வை → வைத்து] வைத்து2 vaittu, இடை.(part.) ( ஒருவரை); கருவியாக அல்லது (ஒன்றை); காரணமாகப் பயன்படுத்து; using (the services of one);, taking advantage of (sth.);. ‘இவனை வைத்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன்’. 2. (இயல்பாக அறிந்திருக்க வேண்டியதையும் அறிந்திராத நிலையில்); முறையாகப் பயன்படுத்தி; using propert “காதை வைத்துக் கேள் உனக்கே தெளிவாகப் புரியும், 3. (இட வேற்றுமை – இல் என்பதன் பின்); ஒருவரைக் குறிப்பிடும் இடத்தோடு தொடர்புபடுத்திக் கூறப் பயன்படுவது; associating the action with the place strongly ‘அவரை மதுரையில் வைத்துப்பார்த்தேன்’. [வை → வைத்து] |
வைத்துக்கொண்டு | வைத்துக்கொண்டு vaittukkoṇṭu, பெ.(n.) இடை. (part.); ஒர் அசைச்சொல்; an expletive. “பெளத்த மதங்களில் வைத்துக் கொண்டு வையாஷிகள்” (ஈடு. அவ.);. [வைத்து + கொண்டு] |
வைத்துக்கொள் | வைத்துக்கொள்2 vaittukkoḷtal, செ. குன்றாவி..(v.t.) suppose (for the sake of argument); assume. ‘அவர் சொன்னது உனக்குப் புரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம்’. [வைத்து + கொள்-,] வைத்துக்கொள்3 vaittukkoḷtal, செ.கு.வி.(v.i.) 1. கவனித்துக் கொள்ளுதல், புரத்தல்; treat, take care of, look after. ‘அவர் என்னை நன்றாகத்தான் வைத்துக் கொண்டார்’. [வைத்து + கொள்-,] |
வைத்துக்கொள்(ளு) | வைத்துக்கொள்(ளு)1 vaiddukkoḷḷudal, செ.குன்றாவி.(v.t.) 1. உரிமையாகக் கொள்ளுதல்; to keep for one’s self. 2. நிகழ்ச்சிக்காக உண்மைபோல் ஒப்புக் கொள்ளுதல்; to suppose, take for granted. ‘நீ சொன்ன படியே வைத்துக் கொள்’. 3. வைப்பாட்டியாக அல்லது கள்ளக் கணவனாக அமர்த்திக் கொள்ளுதல்; to keep as a mistress or concubine. [வைத்து + கொள்[ளு]-,] |
வைத்துப்பாடு-தல் | வைத்துப்பாடு-தல் vaidduppāṭudal, செ. குன்றாவி.(v.t.) மணப்பெண் முதலான வர்களை ஒப்பனை செய்து மணையில் வைத்து நலம்பாடுதல்; to decorate and seat on a platform, as a bride, pregnant woman, etc., and sing auspicious songs. |வைத்து + பாடு-,] |
வைத்துாறு | வைத்துாறு vaitṟu, பெ.(n.) வைக்கோற் குவை; straw-stack. “எரிமுன்னர் வைத்துறு போலக்கெடும்” (குறள், 435);. [வை + தூறு] |
வைத்துாற்றி | வைத்துாற்றி vaitṟṟi, பெ.(n.) கூம்பு வடிவமுள்ள புனல், funnel. [வைத்து + ஊற்றி] |
வைநாகணத்தி | வைநாகணத்தி vainākaṇatti, பெ.(n.) காக்கட்டான்; a twiner plant-cliforia ternatea (typica);. |
வைநாகதம் | வைநாகதம் vainākadam, பெ.(n.) கறியுப்பு; common salt. [வை + நாகதம்] |
வைநாகப்பூ | வைநாகப்பூ vainākappū, பெ.(n.) சிறுநாகப்பூ பார்க்க;see siru-magappu. [வை + நாகப்பூ] |
வைநாகமல்லி | வைநாகமல்லி vainākamalli, பெ.(n.) நாகமல்லிகை பார்க்க;see nāga-malligai. [வைநாகம் + மல்லி] |
வைநாகமாலி | வைநாகமாலி vainākamāli, பெ.(n.) காஞ்சிரை; nux-vomica. [வை + நாகமாலி] |
வைநாகமுட்டி | வைநாகமுட்டி vainākamuṭṭi, பெ.(n.) விசமட்டி; nux-vomica. [வை + நாகமுட்டி] |
வைந்தனை ஆடல் | வைந்தனை ஆடல் vaindaṉaiāṭal, பெ. (n.) ஆண்கள் ஆடுகின்ற ஒரு வகையான கோலாட்டம்; a group dance by gents in which generally women move around striking short coloured sticks to the rhythm of a song. மறுவ வளந்தனையாட்டம் [வளைந்து+அணை+ஆடல்] |
வைந்தவம் | வைந்தவம்1 vaindavam, பெ. (n.) குதிரை;(யாழ்.அக.);, horse. வைந்தவம்2 vaindavam, பெ. (n.) சுத்தமாயை; |
வைந்துனை | வைந்துனை vainduṉai, பெ.(n.) வைந்நுதி பார்க்க; __, wa-l-mudi “வைந்துனைப் பகழி”முல்லைப் 73). [வை + துணை] |
வைந்நுதி | வைந்நுதி vainnudi, பெ.(n.) கூரிய நுனி, sharppoint. “வேற்றலையன்னவைந்துதி” (பெரும்பாண். 87);. [வை + நுதி] |
வைனதேயன் | வைனதேயன் vaiṉatēyaṉ, பெ. (n.) கலுழன், கருடன் (பிங்.); );; garuda, as the son of {}. “வைனதேயனு மன்னமுங் குடிபோகவே” (தக்கயாகப். 61);. |
வைனாசிகம் | வைனாசிகம் vaiṉācigam, பெ. (n.) எண்பத்தெட்டாவது பாதத்தைக் கொண்டதும், பிறப்பு நாண்மீனுக்கு (சன்மநட்சத்திரத்திற்கு); இருபத்துமூன்றாவதுமான நாண்மீன் (நட்சத்திரம்);; (இலக். வி. 797.); the 23rd naksatra from one’s natal naksatra when the 88th {} falls within it. |
வைபவம் | வைபவம் vaibavam, பெ. (n.) 1. பெருமை, மகிமை; greatness. “ஓங்கு வைபவமு மொழிவில் சம்பத்து முடையயனாகுவன்” (திருக்காளத். பு. சிவமா. 31.); 2. வைபோகம் 1. பார்க்க;see {}. 3. பெரியோர் வரலாறு; history, biography, as a great person. பட்டர் வைபவம் |
வைபாடிகன் | வைபாடிகன் vaipāṭigaṉ, பெ. (n.) வைபாடிகமத்தைச் சார்ந்த புத்தன்; follower of the {} sect of Buddhism. |
வைபாடிகம் | வைபாடிகம் vaipāṭigam, பெ. (n.) புத்த (பெளத்த); மதப்பிரிவு நான்கனு ளொன்று;(வேதா. சூ. 24.); one of the four sects of Buddhism. |
வைபோகம் | வைபோகம் vaipōkam, பெ. (n.) 1. பெருஞ்சிறப்பு (விமரிசை);; grandeur, magnificence. இந்தவைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழ்ந்தோனே (இராமநா. உயுத். 123); 2. சீர்; presents made publicly, as at a wedding. “எல்லாரும் முறை முறையா எடுத்தனர் வைபோகம்” (இராமநா. உயுத். 123); 3. மகிழ்ச்சி (யாழ்.அக.);; joy, happiness. 4. பகுத்தறிவு (விவேகம்);;(யாழ். அக.); discrimination. 5. வயணம்; |
வைபோகி | வைபோகி vaipōki, பெ. (n.) பகுத்தறிவாளி (விவேகி);;(யாழ்.அக.); sensible person. |
வைப்பகம் | வைப்பகம் vaippagam, பெ.(n.) 1. வங்கி (பணம் கொடுக்கல் வாங்கல் நிதி மனை);; bank. 2. ஆற்றங்கரை, ஏரிக்கரை land along each side of a river (or); lake. [வைப்பு + அகம்] |
வைப்பன் | வைப்பன் vaippaṉ, பெ.(n.) எய்ப்பினில் வைப்பு போன்றவன்; one who is a treasure. “தொழும் பாள ரெப்ப்பினில் வைப்பனே” (திருவாச. 5,392);. [வைப்பு + அன்] |
வைப்பரிதாரம் | வைப்பரிதாரம் vaipparitāram, பெ.(n.) வைப்பு நஞ்சு முப்பத்திரண்டனுளொன்று; a prepared arsenic, one of 32 vaipp-ppāsānam. [வைப்பு + அரிதாரம்] |
வைப்பாட்டி | வைப்பாட்டி vaippāṭṭi, பெ.(n.) கூத்தியாள்; concubine. [வைப்பு + ஆள்] |
வைப்பிடம் | வைப்பிடம் vaippiḍam, பெ.(n.) பண்டம் முதலியன வைக்குமிடம்; place of deposit. “நின் சேவடிகளிரண்டும் வைப்பிடமின்றியே கலங்கினேன்” (திருவாசக 30, 3);. [வைப்பு + இடம்] |
வைப்பிருக்கை | வைப்பிருக்கை vaippirukkai, பெ.(n.) பண்டசாலை (நாமதீப. 490);; store-house. [வைப்பு + இருக்கை] |
வைப்பிலக்கணம் | வைப்பிலக்கணம் vaippilakkaṇam, பெ.(n.) ஓமசிங்கி, கெந்தி, பச்சைக் கற்பூரம், செய்நஞ்சு வகைகள் முதலான சரக்குகளில் வைப்பு முறையைக் கூறும் மச்சமுனி கலை ஞானம் எண்ணுற்றின் ஐந்து கண்டங் களிலோர் காண்டம்; processes of prepared various drugs. They are given in one of five parts of Machamuni kalaignanam. |
வைப்பு | வைப்பு1 vaippu, பெ.(n.) 1. வைக்கை; placing. “பிற பொருள் வைப்போடு” (சிலம் 10, கட்டுரை, 17);. 2. வைப்பு.; deposit, hoard, treasure. “நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை” (தேவா 818, 2);. 3. புதையல்; buried treasure, treasure-trove. “செண்டெறிந்து வைப்பெடுத்த செயலும்” (திருவிளை. மேருவை, 1);. 4. இடம் (பிங்.);; place. 5. நிலப்பகுதி; land. “கண்ணகன் வைப்பிற்றாயினும்” (புறநா.18);, 6. ஊர; town. “வேறு பல் வைப்பும்” (திருமுரு. 224);. 7. உலகம்; world. “வேத முற்றியங்கு வைப்பின்” (கம்பரா. பிணிவிட். 113);. 8. செயற்கையானது; that which is artificial. 9. செயற்கை சரக்கு; artificial preparation. “வைப்புப் பாசாணம்” 10. கொலை செய்யும் நினைப்பு; witchcraft causing evil, sorcery, black art. 11. பாழ்ப் பொருள்; articles of witch craft. 12. கூத்தியாள் வைத்துக் கொள்கை; concubinage. 13. வைப்பாட்டி பார்க்க;see vappatti 14. கலிப்பா வகையின் இறுதி யுறுப்பு (தொல். பொ. 448);; [வை + வைப்பு] வைப்பு vaippu, பெ.(n.) மருந்துகளை மருத்துவ முறைப்படி செய்தல்; preparation of medicines according to the rules prescribed in the medical science. [வை + வைப்பு] |
வைப்புக்கட்டு | வைப்புக்கட்டு vaippukkaṭṭu, பெ.(n.) பொய்யான கட்டுமானம் (வின்.);; fabrication, concoction. [வைப்பு + கட்டு] |
வைப்புச்சரக்கு | வைப்புச்சரக்கு vaippuccarakku, பெ.(n.) 1. மருத்துவமுறைப்படி செய்யப்பட்ட மருந்துச் சரக்கு; prepared drugs as opposed to (இயற்கைச் சரக்கு); Natural drugs. 2. செய் நஞ்சு வைப்பு, சிவப்பு சவ்வீர வைப்பு, வீரவைப்பு, மலையுப்பு, சூடன் (இரச கற்பூரம்);, பச்சைக் கற்பூரம், மான் மதம், கம்புகம் (அபினி);, பளிங்கு கற்பூர வைப்பு, பெருங்காய வைப்பு, வைர வைப்பு, செம்பு வைப்பு, நாற்பச்சை வைப்பு; [வைப்பு + சரக்கு] |
வைப்புச்செப்பு | வைப்புச்செப்பு vaippucceppu, பெ.(n.) 1. அணிகலன்கள் முதலிய உடைமைகள்; jewels and utensils, belongings. 2. பண்டங்கள் வைக்கும் பெட்டி முதலியன; receptacle for articles. [வைப்பு + செப்பு] |
வைப்புத்தொகை | வைப்புத்தொகை vaipputtogai, பெ.(n.) இருப்புச் செல்வம்; செலுத்தப்பட்ட முன் Lorth; deposit (in a bank or paid to an agency, etc.);. ‘வைப்புத் தொகையிலிருந்து வைப்பகங்கள் கணிசமான ஊதியம் பெறுகின்றன’. [வைப்பு + தொகை] |
வைப்புநிதி | வைப்புநிதி vaippunidi, பெ.(n.) reserves (of money in a bank);;allotted fund. ‘ஆண்டு இறுதியில் இந்த வங்கியின் மொத்த வைப்புநிதி முந்நூறு கோடி ரூபாய்’. [வைப்பு + நிதி] Skt. Nidi → த. நிதி. |
வைப்புப்பவளம் | வைப்புப்பவளம் vaippuppavaḷam, பெ.(n.) செயற்கைப் பவளம் (சினேந். 76);; artificial coral. [வைப்பு + பவளம்] |
வைப்புப்பாசாணம் | வைப்புப்பாசாணம் vaippuppācāṇam, பெ.(n.) முப்பத்திரண்டு வகைப்பட்ட முப்பத்திரண்டு வகைப்பட்ட செயற்கை நஞ்சு வகை; prepared arsenic, of which there are 32 kinds. [வைப்பு + பாசாணம்] |
வைப்புப்பு | வைப்புப்பு vaippuppu, பெ.(n.) செயற்கை யுப்பு; artificial salt. [வைப்பு + உப்பு] |
வைப்புப்புழுகு | வைப்புப்புழுகு vaippuppuḻugu, பெ.(n.) புழுகுப் பூனையினின்று வெளிவரும் புழுகு (வின்.);; civet discharged by the civet cat. [வைப்பு + புழுகு] |
வைப்புப்பொருள் | வைப்புப்பொருள் vaippupporuḷ, பெ.(n.) நற்செல்வம் (சேமநிதி);; reserve fund. [வைப்பு +பொருள்] |
வைப்புமுத்து | வைப்புமுத்து vaippumuttu, பெ.(n.) செயற்கைமுத்து (சினேந். 103, உரை);; artificial pearl. [வைப்பு + முத்து] |
வைப்புமுறை | வைப்புமுறை vaippumuṟai, பெ.(n.) மருந்துகளைச் செய்ய, தூய்மை (சுத்தி); ஈடு, கூட்டு முதலாகிய நெறிமுறைகள்; rules of preparing in several courses. [வைப்பு + முறை] |
வைப்புழி | வைப்புழி vaippuḻi, பெ.(n.) பொருள் முதலியன சேமித்து வைக்கும் இடம்; store house. “பொருள் வைப்புழி” (குறள் 226);. [வைப்பு + உழி] |
வைப்புவை-த்தல் | வைப்புவை-த்தல் vaippuvaittal, செ.குன்றாவி. (v.t.) 1. வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல்; to keep as a concubine. 2. இன்மை இல்பொருள் (சூனியம்); வைத்தல்; to cause evil by witch craft. [வைப்பு வை-,] |
வைமரை | வைமரை vaimarai, பெ.(n.) உடம்பு வலியைப் போக்கும் ஒரு மரம்; a tree useful in removing bodily pain – chloroxylon swietenia. |
வைமாத்திரேயன் | வைமாத்திரேயன் vaimāttirēyaṉ, பெ. (n.) மாற்றாந்தாயின் மகன்;(யாழ். அக.); step mother’s son, step-brother. |
வைம்புரசு | வைம்புரசு vaimburasu, பெ.(n.) 1. கரும் புரசு; the sation wood-chloroxylon swietenia. 2. வைமறை பார்க்க;see Vaimarai. [வை + புரசு] |
வையகமூலி | வையகமூலி vaiyagamūli, பெ.(n.) கொடி வகை (மூ.அ.);; a kind of creeper. [வையகம் + மூலி] |
வையகம் | வையகம் vaiyagam, பெ.(n.) 1. நிலப்பகுதி; earth, world. “வையகம் வணங்க வாளோச்சினன்” (பு.பெ. 3, 7);. 2. வையம் 2,3,4,5, 7. பார்க்க (யாழ்.அக.);;see wayam. [வன் → வய் → வை + அகம்] |
வையங்காரை | வையங்காரை vaiyaṅgārai, பெ.(n.) காரை பார்க்க;see kārai. [வையம் + காரை] |
வையஞ்சேர்-தல் | வையஞ்சேர்-தல் vaiyañjērtal, செ.கு.வி. (v.i.) 1. நிலத்தில் விழுதல்; to fall to the ground. 2. இறத்தல்; to-die. “வையஞ் சேர்வான் அழைத்தது (கம்பரா. உருக்காட்டும். 74);. [வையம் + சேர்-,] |
வையமகள் | வையமகள் vaiyamagaḷ, பெ.(n.) நிலமகள்; the goddess of earth. “வையமகளை யடிப்படுத்தாய்” (பு;வெ. 9, 3);. [வையம் + மகள்] |
வையம் | வையம் vaiyam, பெ.(n.) 1. நிலப்பகுதி; earth. “வையங்காவலர் வழிமொழிந்தொழுக” (புறநா. 8);. 2. குதிரை பூண்டிழுக்கும் தேர் (சிலப். 6, 120); (பிங்.);; chariot drawn by horses. 3. கூடாரவண்டி; covered cart. “மானமர் நோக்கியும் வைய மேறி” (சிலம் 6, 120);. 4. பல்லக்கு (சீவிகை); (சூடா.);; palanquin. 5. ஊர்தி; conveyance. 6. எருத; bullock. 7. உருள் (உரோகிணி); (பிங்.);; the 4th naksatra. 8. விளக்கு; lamp. 9. யாழ் (அக.நி.);; yal. |
வையவித்து | வையவித்து vaiyavittu, பெ.(n.) கடுக்காய்; gall-nut-myrobalam. [வையம் + வித்து] |
வையாகரணன் | வையாகரணன் vaiyākaraṇaṉ, பெ. (n.) இலக்கணம் வல்லவன்; grammarian. “வையாகரணர்கள் நையாயிகர்” (திருவிளை. உலவாக்.19.);; |
வையாபுரி | வையாபுரி vaiyāpuri, பெ.(n.) பழனி, Palani in the madura district. ‘வையாபுரிக்குளம்’. [வை + ஆவி + புரி] கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும் வையாபுரி என்றும் வழங்கிற்று. வையாபுரி vaiyāpuri, பெ. (n.) பழனி, வையாபுரிக்குளம்; Palani, in the Dindukal District. |
வையாரிகம் | வையாரிகம் vaiyārigam, பெ.(n.) கிளியூரற் பட்டை; fragrant drug. |
வையாளி | வையாளி vaiyāḷi, பெ.(n.) 1. குதிரை செல்லும் நீண்ட சாலை; pathway for horses. “‘வையாளியலங்கரித்து” (திருவாலவா. 27, 69);. 2. குதிரை யேற்றம்; riding on horse-back. |
வையாளிவிடு-தல் | வையாளிவிடு-தல் vaiyāḷiviḍudal, செ.குன்றாவி.(v.t.) குதிரை பாய்ந்தோடும்படி ஒட்டுதல் (வின்.);; to gallop a horse. [வையாளி விடு-,] |
வையாளிவீதி | வையாளிவீதி vaiyāḷivīti, பெ.(n.) வையாளி 1 பார்க்க (திவா.);;see vaiyali 1. [வையாளி + வீதி] |
வையாவிக்கோப்பெரும்பேகன் | வையாவிக்கோப்பெரும்பேகன் vaiyāvikāpperumbēkaṉ, பெ.(n.) கடையெழு வள்ளல்களில் ஒருவர் (புறநா. 141);; a chief famed for his liberality. [வையாகி + கோப்பெரும்பேகன்] |
வையிஞ்சி | வையிஞ்சி vaiyiñji, பெ.(n.) நிலப்பனை; ground palm-Curculigo orchioides. |
வையை | வையை vaiyai, பெ.(n.) மதுரை மாவட்டத்தில் ஓடும் ஆறு; the vaigai river in the Madura district. “வையை குழ்ந்தவளங்கெழு வைப்பின்” (புறநா. 71, 10);. [வைகை → வையை] (தே.நே.பக்.159); வைகை . தங்கிச் செல்லும் ஆறு. தங்கிச் செல்லுதலாவது மெல்லச் செல்லுதல். |
வையைத்துறைவன் | வையைத்துறைவன் vaiyaittuṟaivaṉ, பெ.(n.) பாண்டியன் (திவா.); the Pāngya king, as ruling the vaigai region. “வையைத் துறைவன் மதுராபுரித் தென்னன்” (பெருந்தொ. 1410.); [வையை + துறைவன்] |
வைரகரன் | வைரகரன் vairagaraṉ, பெ. (n.) பகைவன் (சத்துரு);; |
வைரகரம் | வைரகரம் vairagaram, பெ. (n.) பகைமை;(யாழ்.அக.); hostility, enmity. |
வைரக்கடுக்கன் | வைரக்கடுக்கன் vairakkaḍukkaṉ, பெ. (n.) வயிரமணி யிட்டமைத்த காதணி; diamond ear-ring. |
வைரக்கல் | வைரக்கல் vairakkal, பெ. (n.) வயிரமணி; diamond. |
வைரசுத்தி | வைரசுத்தி vairasutti, பெ. (n.) பழிவாங்கிப் பகைதீர்க்கை;(யாழ். அக.); retaliation, taking vengeance. |
வைரன் | வைரன் vairaṉ, பெ. (n.) பகைவன் (சத்துரு);(யாழ்.அக.);; enemy. |
வைரம் | வைரம்1 vairam, பெ. (n.) 1. கடினமானது; hardness. 2. மரக்காழ் (திவா.);; core of tree. 3. வயிரம்; diamond. “அட்டுநீ ரருவிக் குன்றத் தல்லது வைரந் தோன்றா” (சீவக. 2925.); வைரம்2 vairam, பெ. (n.) 1. பகைமை; enmity. 2. வீரம்; bravery, heroism. வைரம் vairam, பெ. (n.) இசைக்கருவிகளின் (வாச்சியப்);பொது. (பிங்.);; musical instrument. |
வைரம்பாய்-தல் | வைரம்பாய்-தல் vairambāytal, செ.கு.வி. (v.i.) திண்மையதாதல்; to harden, as the core of a tree. |
வைரவனூர்தி | வைரவனூர்தி vairavaṉūrti, பெ. (n.) நாய் (பிங்.);; dog, as Bhairava’s vehicle. |
வைராகி | வைராகி vairāki, பெ. (n.) வடநாட்டிலிருந்து பிச்சையெடுத்துத் தேசசஞ்சாரஞ் செய்யுங் கூட்டத்தைச் சேர்ந்தவன்; a class of pilgrims and mendicants from Northern India. 2. துறவி (யாழ்.அக.);; ascetic. 3. மனவுறுதியுள்ளவன்; person of strong or adamantine will. |
வைராகிகன் | வைராகிகன் vairāgigaṉ, பெ. (n.) வைராகி 2 பார்க்க;(யாழ்.அக.);;see {}. |
வைராக்கியசதகம் | வைராக்கியசதகம் vairāggiyasadagam, பெ. (n.) சாந்தலிங்கசுவாமிகள் இயற்றிய நூல்; a poem by {}. |
வைராக்கியஞ்சொல்(லு) – தல் | வைராக்கியஞ்சொல்(லு) – தல் vairākkiyañjolludal, செ.கு.வி. (v.i.) தான் துறவு பூணத் துணிந்துள்ளதை ஆசிரியன் முன் தெரிவித்துக் கொள்ளுதல் (சிலப் 30,33 அரும்);; to declare before one’s guru one’s decision to enter upon the way of renunciation. த.வ. துணிவு கூறல், பூட்கை செப்பல் |
வைராக்கியம் | வைராக்கியம் vairākkiyam, பெ. (n.) 1. உலகப்பற்றின்மை; freedom from worldly desires, asceticism. 2. விடாப்பிடி; perseverance, stubbornness. அதைச் செய்யவேண்டுமென்று வைராக்கியமா யிருக்கிறான்; 3. மதாவேசம்; zeal fanaticism. மத வைராக்கியம். 4. பிரசவவைராக்கியம் புராண வைராக்கியம் மயான வைராக்கியம் என மூவகையாய் உள்ளத்தே உறுதிப்பட்டது போலத் தோன்றி மறையும் பற்றின்மை; short lived determination to abstain from wordly pleasures, of three kinds, viz., piracava- {}, {}. 5. வெறுப்பு (யாழ். அக.);; disgust, 6. பகை (யாழ். அக.);; enmity. த.வ. பூட்கை |
வைராங்கியம் | வைராங்கியம் vairāṅgiyam, பெ. (n.) வைராக்கியம்1 பார்க்க;(யாழ். அக.);;see {}. |
வைராவி | வைராவி vairāvi, பெ. (n.) வைராகி பார்க்க;(யாழ்.அக.);;see {}. |
வைரி | வைரி vairi, பெ.(n.) பகைவன்; enemy. [வயிர் → வயிரி → வைரி] (முதா. 246);. வைரி1 vairi, பகைவன்; enemy. வைரி2 vairi, பெ. (n.) வைராகி3 பார்க்க;see {}. வைரி3 vairi, பெ. (n.) வல்லூறு;(வின்.); royal falcon. |
வைரிதை | வைரிதை vairidai, பெ. (n.) வீரம்; heroism, valour. 2. பகைமை; enmity. |
வைரியம் | வைரியம் vairiyam, பெ. (n.) 1. வீரியம்; strength, prowess. 2. வைராக்கியம் 5,6 பார்க்க;see {}. |
வைரூப்பியம் | வைரூப்பியம் vairūppiyam, பெ. (n.) அழகின்மை (அவலட்சணம்);; (யாழ். அக.);; deformity, ugliness. |
வைலட்சணம் | வைலட்சணம் vailaṭcaṇam, பெ. (n.) அழகின்மை (அவலட்சணம்); (யாழ்.அக.);; ugliness. |
வைலட்சணியம் | வைலட்சணியம் vailaṭcaṇiyam, பெ. (n.) வேறுபாடு (சிவசம.);; difference, disparity. |
வைலட்சயம் | வைலட்சயம் vailaṭcayam, பெ. (n.) 1. எதிரிடை; contrariety. 2. வைலட்சணியம் பார்க்க;see {}. |
வைவசுதபட்டணம் | வைவசுதபட்டணம் vaivasudabaṭṭaṇam, பெ. (n.) வைவைச்சுதபுரம் பார்க்க;see vaivaiccuta-puram. |
வைவச்சுதன் | வைவச்சுதன் vaivaccudaṉ, பெ. (n.) 1. மனு பதினால்வருள் ஒருவன் (காஞ்சிப்பு. திருமேற். 6.);; a mythical progenitor of the human race, one of 14 {}, q.v. 2. எமன்;(பிங்.); yama. 3. சனி;(யாழ்.அக.); saturn. |
வைவச்சுதம் | வைவச்சுதம் vaivaccudam, பெ.(n.) மஞ்சள்; turmeric-curcumalonga. |
வைவு | வைவு vaivu, பெ.(n.) 1. வசவு; abuse. 2. சாவிப்பு (சாபம்);; curse. “வைத வைவின்” (கம்பரா. சிறம் 5);. [வை → லைவு] வொ |
வைவைச்சுதன் | வைவைச்சுதன் vaivaiccudaṉ, பெ. (n.) வைவச்சுதன் பார்க்க (யாழ். அக.);;see vaivaccutan. |
வைவைச்சுதபுரம் | வைவைச்சுதபுரம் vaivaiccudaburam, பெ. (n.) எமனுடைய நகரம்; the city of yama. “விளங்கு வைவைச்சதபுர மேவினார்’ (குற்றா. தல. மந்தமா.101.); |