செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
வே

வே1 vē, பெ.(n.)

தமிழ் நெடுங்கணக்கில்

     ‘வ்’ என்ற மெய்யெழுத்தும்

     ‘ஏ’ என்ற உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய் எழுத்து;

 the compound of v and a.

     [வ் + ஏ+ வே]

 வே2 vē, செ.கு.வி. (v.i.)

   1. எரிதல்; to burn.

     “புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே” (நாலடி, 180);.

   2. வெப்பமாதல்; to be hot, sultry, as the weather, to be scorched.

     ‘வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது’. 3 அழலுதல்;

 to be inflamed, as the stomach.

   4. கொதிக்கும் நீர் எண்ணெய் முதலிய வற்றிற் பக்குவப்படுதல்; to be boiled, cooked, as rice.

     ‘சோறு வேகவில்லை’.

   5. புடம் வைக்கப்படுதல்; to be refined by burning in a crucible as gold.

     “வெந்தெரி பசும்பொன்” (சீவக. 585);,

   6. துன்பமுறுதல்; to be distressed by grief or passion.

     ‘துயரச் செய்தி கேட்ட என் மனம் வேகின்றது’.

   7. சினமுறுதல்; to be angry.

     “கட்டுர் நாப்பண் வெந்து வாய்மடித்து” (புறநா.295);.

     [வ் + ஏ + வே]

 வே3 vē, பெ.(n.)

   வேவு (யாழ்.அக.);; spying.

வேக வடிவம்

 வேக வடிவம் vēkavaḍivam, பெ. (n.)

   இறையின் சிற்ப வடிவ நிலை; sculptural form of god.

வேகசரம்

 வேகசரம் vēkasaram, பெ.(n.)

   ஒட்டகம் (வின்.);; camel.

வேகசாரம்

வேகசாரம் vēkacāram, பெ.(n.)

   1. ஒட்டகம்; camel.

   2. குதிரை; horse.

   3. வேகமாக மூச்சு விடல்; hard breathing.

   4. துரிதமாக நடத்தல்; fast walking.

வேகடன்

வேகடன் vēkaḍaṉ, பெ.(n.)

   1. வேகடி பார்க்க;see vegadi.

   2. இளைஞன்; youth.

     [வே → வேகடன்]

வேகடம்

வேகடம் vēkaḍam, பெ.(n.)

   1. மணியின் மாசுநீக்குகை; polishing and cleaning gems.

     “வேகடஞ்செய் மணியென மின்னினார்” (கம்பரா. நீர்விளை. 22);.

   2. புதுமை வேலை (வின்.);; fancy work.

   3. இளமை; youthfulness.

   4. மீன் வகை (வின்.);; a kind of fish.

     [வே → வேகடம்]

வேகடி

வேகடி vēkaḍi, பெ.(n.)

   1. மணிமாக நீக்குவோன்; one who cleans and polishes gems.

     “வேகடி துரிசறுத்தடுக்கு வானது போல்” (உபதேசகா. சிறப்புப். 12);.

     [வேகடம் → வேகடி]

வேகடை

 வேகடை vēkaḍai, பெ.(n.)

வேகடம் பார்க்க (வின்.);;see vegadam.

     [வேகடம் → வேகடை]

வேகடைத்தாள்

வேகடைத்தாள்2 vēkaḍaittāḷ, பெ.(n.)

   ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத் தகடு (வின்.);; foliated tinsel.

     [வேகடை + தாள்]

வேகடைத்தாள்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வேகடையாள்

 வேகடையாள் vēkaḍaiyāḷ, பெ.(n.)

   வீண்பகட்டான ஆள் (வின்.);; top.

     [வேகடை + ஆள்]

வேகடைவேலை

 வேகடைவேலை vēkaḍaivēlai, பெ.(n.)

   உண்மையில்லாத (போலி); வேலை (வின்.);; unsubstantial work.

     [வேகடை + வேலை]

வேகத்தடுப்பு / வேகத்தடை

 வேகத்தடுப்பு / வேகத்தடை vēkattaḍuppuvēkattaḍai, பெ.(n.)

 speed breaker.

     ‘இந்த சாலையின் சந்திப்பில் வேகத்தடை வந்த பின் விபத்துகள் குறைந்து விட்டன’.

     [வேகம் + தடுப்பு/வேகம் + தடை]

வேகத்தி

 வேகத்தி vēkatti, பெ.(n.)

   பூ வழலை; a kind of salt obtained from fuller’s earth.

வேகப்பந்துவீச்சு

 வேகப்பந்துவீச்சு vēkappanduvīccu, பெ.(n.)

     ‘அவருடைய வேகப்பந்து வீச்சுதான் இன்றைய கட்டத்தின் சிறப்பு அம்சம்’ (உவ);.

     [வேகம் + பந்து + வீச்சு]

வேகப்புள்

வேகப்புள் vēkappuḷ, பெ.(n.)

   கருடன்; sacred kite.

     “வேகப்புள்ளின் வெவ்விசை கேட்ட நாகமகளிரின்” (பெருங், உஞ்சைக் 44,44);.

     [வேகம் + புள்]

வேகமடக்கல்

 வேகமடக்கல் vēkamaḍakkal, பெ.(n.)

வேகநிரோதம் பார்க்க;see veganirodam.

     [வேகம் + மடக்கல்]

வேகமானி

 வேகமானி vēkamāṉi, பெ.(n.)

கப்பல் வேகத்தை அளக்குங் கருவி(டப்பு); ,

 log an instrument for ascertaining the speed of a ship.

     [வேகம்+மானி]

வேகம்

வேகம்1 vēkam, பெ.(n.)

   1. விரைவு; swiftness, quickness.

     “மதியினுக்கிவர்ந்த வேகமா மணிநாகம்

     “(சீவக. 982);.

   2. விரை வளவு; speed, velocity, impetuosity.

     ‘அவன் குதிரை வாயுவேகமாய்ச் சென்றது’.

   3. விசை; force.

     “வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு” (திருவாலவா. 7, 6);.

   4. வலிமை; power, strength.

     ‘மருந்தின் வேகம் இன்னுந்தணியவில்லை’.

   5. கோபம்,

 anger.

     “ஒவா வேகமொடுருத்து” (கலி. 103);.

   6. மனக் கலக்கம்; agitation, unrest.

     “வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” (திருவாக. 1, 6);.

   7. கடுமை; severity.

     ‘சுரம் வேகமாயடிக்கிறது’.

   8. மலக்கழிவு (சாரங்க. 244, கீழ்க்குறிப்பு);; expulsion of urine, faeces, etc.

   9. விந்து (யாழ்.அக.); semen.

   10. நச்சு; poison.

     “அரசு கான்ற வேகம் மிக்கட்ட தன்றே” (சீவக. 1274);.

   11. நாற்றம் பார்க்க;see narram, bad odour

     ‘வேகமடிக்கின்றது’.

   12. வெள்ளப் பெருக்கு (இலக்.அக.);; flood.

   13. கீழ் (அக.நி.);; lowness.

   14. பரவுகை (அரு.நி.);; circulation, as of poison.

   15. உடம்பு (அரு.நி.);; body.

   16. கொடி வகை (சங்.அக.);; hare leaf.

   17. சினம்; anger.

     “ஒவா வேகமோ டுருத்து” (கலித்.103);.

     [வே → வேகு → வேகம்] [வே.க.பக். 135]

வேகரம்

வேகரம் vēkaram, பெ.(n.)

   1. கடுமை(சங்.அக.);; severity.

   2. உறைப்பு (யாழ்.அக.);; pungency.

     [வேகம் → வேகரம்]

வேகர்

வேகர் vēkar, பெ.(n.)

   தூதுவர்; messenger, courier.

     “நல்வேந்தனுக் குரைத்தனர் வேகர்” (கம்பரா. அகலி. 39);.

தெ. வேகருலு.

     [வேயர் → வேகர்]

வேகவதி

வேகவதி vēkavadi, பெ.(n.)

   1 வைகை; the vaigai river in the madura district.

     “வேகமொடு வந்தெழு வேகவதி யாறு”

     (திருவாலவா. 7, 6);.

   2. காஞ்சீபுரத்தருகில் ஒடும் கம்பாநதி (குருபரம். 170); (காஞ்சிப்பு. தலவி. 23);; the kampa river near kanjeevaram.

   3. தன் காதற்றிறத்தாற் புகழ் விளங்கிய ஒர் இளவரசி; a princess famed for her constancy.

     “வேகவதி யென்றுரைக்குங் கன்னி” (திவ். இயற். பெரிய. ம. 52);.

     [வேகம் → வேகவத]

வேகவை-த்தல்

 வேகவை-த்தல் vēkavaittal, செ.குன்றாவி. (v.t.)

   சூடாற் பக்குவப்படுத்துதல்; to boil.

     [வே → வேகு → வேகவை-,]

வேகா

வேகா vēkā, இடை. (part)

   1. வேகாது; unboiled.

   2. வேகமின்மை; slow.

     [வேகாது → வேகா]

வேகாதம்

 வேகாதம் vēkātam, பெ.(n.)

   மலக்கட்டு; a state of bowels in which the irregular evacuations are very hard and expelled with difficulty-costiveness.

     [வே → வேகாதம்]

வேகாதுப்பு

 வேகாதுப்பு vēkātuppu, பெ.(n.)

   முடியண்ட படருப்பு; a kind of salt prepared out of human skull.

     [வே → வேகாதுப்பு]

வேகாத்தலை

 வேகாத்தலை vēkāttalai, பெ.(n.)

   விண் வெளி; open atmosphere.

     [வேகா + தலை]

வேகாத்தலைவழுக்கை

 வேகாத்தலைவழுக்கை vēkāttalaivaḻukkai, பெ.(n.)

   இள வழுக்கை; a foetus three months old.

     [வேகாத்தலை + வழுக்கை]

வேகாமை

 வேகாமை vēkāmai, பெ.(n.)

   பச்சை; raw.

     [வே → வேகாமை]

வேகாரி

வேகாரி1 vēkāri, பெ.(n.)

   கட்டாய வேலை (இ.வ.);; compulsory labour.

     [வே → வேகாரி]

 வேகாரி2 vēkāri, பெ.(n.)

   பழைய வரி வகை (S.I.I.V.95);; an ancient tax.

     [வே → வேகாரி]

வேகாளம்

வேகாளம்1 vēkāḷam, பெ.(n.)

   1. காங்கை; heat.

   2. வேக்காடு; sultriness.

     “அணிலத்தாம் வேகாளத்தைத் தணிக்கும்” (பதார்த்த 428);.

   2. கோபம் (வின்.);; anger.

     [வேக்காளம் → அவேகாளம்]

 வேகாளம்2 vēkāḷam, பெ.(n.)

   விரைவு (வின்.);; swiftness.

     [வேகம் → வேகாளம்]

 வேகாளம்3 vēkāḷam, பெ.(n.)

வெக்காளம் பார்க்க;see vekkalam.

     [வெக்காளம் → வேக்காளம்]

வேகாவரி

வேகாவரி1 vēkāvari, பெ.(n.)

   நன்றாகச் சுடப்படாத செங்கல் (இ.வ.);; underburnt brick.

     [வே + ஆ + வரி]

 வேகாவரி2 vēkāvari, பெ.(n.)

   ஒன்றுக்கும் உதவாதவ-ன்-ள் (இ.வ.);; good-for-nothing person.

இ. பேகர்.

     [வே + ஆ + வரி]

வேகாவாரி

வேகாவாரி vēkāvāri, பெ.(n.)

வேகாவரி1 பார்க்க;see vega-vari.

     [வே + ஆ + வாரி]

வேகி

வேகி1 vēkittal,    11 செ.கு.வி. (v.i.)

   1. விரைதல்; to be swift.

     “பாசதரனெதிர் நீலமயிலொரு பாகனென வேகியா” (பாரத மணி மான். 52);.

   2. கோபித்தல்; to be angry.

     “சம்பரன் வேகித்து மதமுறு மிமையோர் சேனை வதஞ்செய்வான்”(ஞானவா. வீம.16);.

     [வேகம் → வேகு → வேகி]

 வேகி2 vēki, பெ.(n.)

   1. வேகமுடையவ-ன்-ள் (இலக்.அக.);; one who is agile or quick.

   2. கோபமுடையவ-ன்-ள்; angry person.

     “வேகியானாற்போற் செய்த வினையினை விட்டலோரார்” (சி.சீ.1,50);,

   3.வஞ்சகமுடைய வ-ன்-ள் (நாமதீப. 171);; deceilful person.

     [வேகம் → வேகு → வேகி]

 வேகி3 vēki, பெ.(n.)

   மிளகாய்; chilly.

வேகிகம்

 வேகிகம் vēgigam, பெ.(n.)

அடம்புக்கொடி பார்க்க;see adambu-k-kodi.

வேகிதன்

வேகிதன் vēkidaṉ, பெ.(n.)

   விரைவுடையான் (சுக்கிரநீதி.114);; one who is quick, as in action.

     [வேகம் → வேகு → வேகிதன்]

வேகிதை

 வேகிதை vēkidai, பெ.(n.)

   விரைவு (யாழ்.அக.);; swiftness.

     [வேகம் → வேகு → வேகிதை]

வேகு-தல்

 வேகு-தல் vēkudal, செ.கு.வி. (v.i.)

   காய்தல்; boiling.

     [வே → வேகு → வேகுதல்]

வேக்கா

 வேக்கா vēkkā, பெ.(n.)

   கொருக்காப்புளி; a tree-pithecolobium duice.

     [வே → வேக்கா]

வேக்காடு

வேக்காடு1 vēkkāṭu, பெ.(n.)

   1. எரிகை; burning.

     ‘செங்கலுக்கு வேக்காடுபற்றாது’.

   2. கொதிக்கும் நீர் முதலியவற்றில் வேகுகை; boiling, cooking.

   3.அமுற்சி; inflammation, as of the stomach.

   4. வெந்த புண் (வின்.);; burn, scald.

   5. வெப்பம்; heat.

     ‘இன்றைக்குக் காற்றில்லாமல் வேக்காடா யிருக்கிறது?’

   6.’இந்த வேக்காடு உனக்கேன்?’

     [வே + காடு]

 வேக்காடு2 vēkkāṭu, பெ.(n.)

   1. (அரிசி காய்கறி முதலியவை); வெந்திருக்கும் நிலை; boiled state.

     ‘முட்டையை அரை வேக்காட்டில் கொடு’,

   2. புழுக்கம்; sultriness.

     ‘மின்விசிறி இல்லாமல் இந்த வேக்காட்டில் எப்படி வேலை செய்வது?’

     [வே + காடு]

வேக்காளப்படு-தல்

வேக்காளப்படு-தல் vēkkāḷappaḍudal,    20 செ.கு.வி. (v.i)

   1. மனத்துயரப்படுதல்; to be pained.

   2. வெட்கப்படுதல்; to be shy.

     [வேக்காளம் + படுதல்]

வேக்காளம்

வேக்காளம்1 vēkkāḷam, பெ.(n.)

   1. வேக்காடு (இ.வ.); பார்க்க;see vekkadu.

   2. கோபம் (இ.வ.);; anger.

   3. மனத்துயர்; grief, sorrow.

   4. வெட்கம் (யாழ்.அக.);; shyness.

     [வே → வேக்காளம்]

 வேக்காளம்2 vēkkāḷam, பெ.(n.)

   1. மழையில்லாக் காலம்; a dry period without rain.

   2. வெக்காளம்; sultriness.

   3. வாய் வேக்காளம்; navsia.

     [வே → வேக்காளம்]

வேங்கக்கல்

 வேங்கக்கல் vēṅgakkal, பெ.(n.)

   ஒரு வகைக்கல்; a kind of stone, white translucent quartz.

வேங்கடக்கோட்டம்

 வேங்கடக்கோட்டம் vēṅgaḍakāḍḍam, பெ.(n.)

   தொண்டை மண்டலத்தின் கோட்டங்களுள் திருப்பதி மலையைச் சூழ்ந்த நாட்டுப்பகுதி; Mt. tiruppati and the surrounding region, a division of tondaimandalam.

     [வேங்கடம் + கோட்டம்]

வேங்கடம்

வேங்கடம்1 vēṅgaḍam, பெ.(n.)

   1. தமிழ் வழங்கு நிலத்தின் வடவெல்லையான திருப்பதி மலை; the tiruppati hills which formed the northern boundary of ancient tamil country.

     “வடவேங்கடந் தென்குமரி” (தொல், பாயி);.

   2. திருப்பதி என்ற திருமால் திருக்கோயில்; tiruppatia vispushrine.

வேங்கடாசலன்

 வேங்கடாசலன் vēṅgaṭācalaṉ, பெ.(n.)

வேங்கடாசலபதி பார்க்க;see venkatacala-pati.

வேங்கடாசலபதி

 வேங்கடாசலபதி vēṅgaṭācalabadi, பெ.(n.)

   திருவேங்கடத்துக் கோயில் கொண்ட திருமால்; Visnu, as the lord of it, tiruppati.

     [வேங்கடாசலம் + பதி]

வேங்கடாசலமூர்த்தி

 வேங்கடாசலமூர்த்தி vēṅgaṭācalamūrtti, பெ.(n.)

வேங்கடாசலபதி பார்க்க;see vengadacala-pati.

     [வேங்கடாசலன் + மூர்த்தி]

வேங்கடாசலம்

வேங்கடாசலம் vēṅgaṭācalam, பெ.(n.)

வேங்கடம் 1 பார்க்க;see venkagam.

     [வேங்கடம் + அசலம்]

வேங்கடேசன்

 வேங்கடேசன் vēṅgaṭēcaṉ, பெ.(n.)

வேங்கடாசலபதி பார்க்க;see vengadacala-pati.

     [வேங்கடம் + ஈசன்]]

வேங்கடேசுவரன்

வேங்கடேசுவரன் vēṅgaṭēcuvaraṉ, பெ.(n.)

வேங்கடாசலபதி பார்க்க;see venkațasalapati(M.N.A.327);.

     [வேங்கடம் + ஈசுவரன்]

வேங்கியம்

வேங்கியம் vēṅgiyam, பெ.(n.)

   1. குறிப்புப் பொருள் (சங்.அக.);; suggested sense,

   2. வியங்கியம் 2 பார்க்க;see viyangiyam.

   3. வெட்கம்; shame.

     ‘அவளை வேங்கிய மில்லாமற் பேசினான்’.

வேங்கை

வேங்கை1 vēṅgai, பெ.(n.)

   1. புலிவகை; tiger. felis tigris.

     “குயவரி வேங்கை யனைய வயவர்” (பு.வெ. 3,23);.

   2. நீண்ட மரவகை; east indian kino tree.

   1. tr., ptero carpus marsulpium.

     “சந்தனமும் வேங்கையும் வேமே” (நாலடி, 180);.

   3. மலை; a hill.

     “வேங்கை வெற்பின்” (புறநா. 336);.

   4. வேங்கைநாடு பார்க்க;see vengai-nadu.

     “வேங்கை வளநாடன்” (வீரசோ. அலங். 23);.

   5. பொன் (பிங்.);; gold.

   6. புலி தொடக்கி; a thorny shrub which see.

   தெ. வேகி;ம. வேன்னா.

     [வேம் → வேங்கை] மு.தா.145

 வேங்கை2 vēṅgai, பெ.(n.)

   நீண்ட மரவகை; east indian kino tree.

   1. tr., ptero carpus marsulpium.

     “சந்தனமும் வேங்கையும் வேமே” நாலடி, 180).

   வேங்கை வகைகள் ;   1. வேங்கை; indian kino tree.

   2. சிறு வேங்கை; Bredelia retusa.

   3. முள்வேங்கை; Bredelia montana.

   4. சந்தன வேங்கை; Pterocarpus santalina.

   5. உதிர வேங்கை; pterocarpus marsu pium.

   6. சோலை வேங்கை (காட்டு சாதிக்காய்);; wild mace-myristica malabarica;

   7, சாற்று வேங்கை (பெண் மரம்);.

   8. பெண் வேங்கை (same as No.7);.

   9 மணி முத்து வேங்கை.

   10. வச்சிர வேங்கை.

வேங்கை மரம்

 வேங்கை மரம் vēṅgaimaram, பெ.(n.)

   உறுதிவாய்ந்த மரவகைகளுள் ஒன்று, கட்டட வேலைகளுக்குப் பயன்படும் சிறந்த மரவகையாகும் (பொ.வழ.);; a kind of wood strongest.

வேங்கைக்கல்

 வேங்கைக்கல் vēṅgaikkal, பெ.(n.)

வேங்கக்கல் பார்க்க;see venga-k-kal.

     [வேங்கை + கல்]

வேங்கைக்குறித்தோன்

 வேங்கைக்குறித்தோன் vēṅgaikkuṟittōṉ, பெ.(n.)

   சிங்கம்; lion.

     [வேங்கை + குறித்தோன்]

வேங்கைநாடு

வேங்கைநாடு vēṅgaināṭu, பெ.(n.)

   கோதாவரி கிருட்டினா மாவட்டத்தைச் சேர்ந்ததும் பத்துப் பதினோராம் நூற்றாண்டுகளில் சோழமன்னனால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததுமான ஒர்நாடு; the vengi country comprising the godavari and the Kistna districts, ruled by the colas in the 10th and 11th C.

     [வேங்கை + நாடு]

வேங்கைப்பிசின்

 வேங்கைப்பிசின் vēṅgaippisiṉ, பெ.(n.)

   வேங்கை மரத்தின் பிசின்; the gum obtained from the indian kino tree.

     [வேங்கை + பிசின்]

வேங்கைமணட்லம்

 வேங்கைமணட்லம் vēṅgaimaṇaṭlam, பெ.(n.)

வேங்கைநாடு பார்க்க;see vengai nadu.

     “வடதிசை வேங்கை மண்டலங் கடந்து’.

     [வேங்கை + மண்டலம்]]

வேங்கையூறாகம்

 வேங்கையூறாகம் vēṅgaiyūṟākam, பெ.(n.)

   வேங்கைப்புலி; a large streaked tigar-man eater.

     [வேங்கை + யூறாகம்]

வேங்கைவயிரம்

 வேங்கைவயிரம் vēṅgaivayiram, பெ.(n.)

   வேங்கை மரத்து வயிரப்பாகம்; the middle hard core of the trunk of the tree-indian kino.

     [வேங்கை + வயிரம்]

வேசகம்

வேசகம்1 vēcagam, பெ.(n.)

   1. யானை வாலின் நுனி (பிங்.);; tip of an elephant’s tail.

   2. வால் (சூடா.);; tail.

   3. குதிரையின் பிடரிமயிர் (நாமதீப.211);; horse’s mane.

 வேசகம்2 vēcagam, பெ.(n.)

   வீடு (யாழ்.அக.);; dwelling place, house.

வேசங்கை

 வேசங்கை vēcaṅgai, பெ.(n.)

   ஒன்பது நிதியுளொன்று (சீவசம். MS.);; one of nava-niti.

வேசடை

 வேசடை vēcaḍai, பெ.(n.)

   துக்கம் (யாழ்.அக.);; sorrow.

வேசதாரி

 வேசதாரி vēcatāri, பெ.(n.)

வேடதாரி பார்க்க;see vegadari.

     [வேடதாரி → வேசதாரி]

வேசனம்

வேசனம் vēcaṉam, பெ.(n.)

   1. மருதநிலத்தூர் (வின்.);; town in an agricultural teract.

   2. வீடு (யாழ்.அக.);; house.

   3. வாயில் (யாழ்.அக.);; gate.

வேசனைநாற்றம்

வேசனைநாற்றம் vēcaṉaināṟṟam, பெ.(n.)

   கதிரவன் வெப்பத்தாற்குளம் முதலியவற்றின் நீரினின்றேழும் நாற்றம்; odour due to the action of the sun’s heat, as from a pond, etc.

     “யாற்று வெந்நாற்று வேசனை நாற்றங் குதுகுதுப்ப” (பரிபா. 20,13);.

     [வேசனை + நாற்றம்]

வேசம்

வேசம்1 vēcam, பெ.(n.)

வேடம்1 பார்க்க;see vegam.

     [வேடம் → வேசம்]

 வேசம்2 vēcam, பெ.(n.)

   1. நுழைவு; entrance.

   2. வீடு (யாழ்.அக.);

 house.

   3. வேசையர் தெரு (யாழ்.அக.);; street of harlots.

 வேசம்3 vēcam, பெ.(n.)

   கூர்ப்பு (யாழ்.அக.);; vehemence.

 வேசம்4 vēcam, பெ.(n.)

வேடகம் பார்க்க (வின்.);;see vedagam.

 வேசம்5 vēcam, பெ.(n.)

வேசை2 பார்க்க (யாழ்.அக.);;see vecai.

 வேசம்6 vēcam, பெ.(n.)

   ஒனித்து வாரம்; vestribule of vulva-vagina.

வேசயப்பத்திரி

 வேசயப்பத்திரி vēcayappattiri, பெ.(n.)

   இலவங்கப் பத்திரி; cinnamon leaf.

     [வேசயம் + பத்திரி]

வேசயம்

 வேசயம் vēcayam, பெ.(n.)

   இலவங்கம்; Clove.

வேசரம்

வேசரம்1 vēcaram, பெ.(n.)

வேசறவு பார்க்க;see vesaravu.

தெ. வேசாமு.

 வேசரம் vēcaram, பெ.(n.)

   1. தெலுங்கு மொழி (வின்.);; the telugu language.

   2. சிற்ப வகை; a style of architecture.

     “நாகரந் திராவிடம் வேசர மற்றுங் கிளந்துவற்றுளோர் பெற்றியின்………. ஆலயங் காண்டக வெடுபோர்” (காஞ்சிப்பு. சிவ.52);.

 வேசரம்3 vēcaram, பெ.(n.)

   ஒட்டகம் (யாழ்.அக.);; Camel.

 வேசரம் vēcaram, பெ. (n.)

கோயில் விமான அமைப்பின் ஒரு கூறு

 a component of a temple turret.

வேசரி

வேசரி vēcari, பெ.(n.)

   கோவேறு கழுதை; mule.

     “மணியணி வேசரி” (பரிபா. 22,24);.

   2. கழுதை (பிங்.);; ass.

     [(வே → வேசரி]

வேசறவு

வேசறவு vēcaṟavu, பெ.(n.)

   1. மனச்சோர்வு; weariness, fatique.

   2. துக்கம்; sorrow.

     “வேசற வொழிதி” (காஞ்சிப்பு. தழுவக். 214);.

     [வேசறு + உ]

வேசறிக்கை

வேசறிக்கை vēcaṟikkai, பெ.(n.)

வேசறவு பார்க்க;see vesaravu.

     “இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக்கை தீர்வேனா” (திருப்போ. சந்/ கொச்சகக்கலி 4);.

     [வேசறு + அறிக்கை]

வேசறு-தல்

வேசறு-தல் vēcaṟudal,    6 செ.கு.வி. (v.i.)

   1. மனஞ் சோர்தல்; to be weary, fatiqued.

   2. வருந்துதல்

 to be vexed, distressed.

     “என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை” (திருவாக. 6, 50);.

   தெ. வேசறு;க. பேசறு.

     [ஏசறு → வேசறு]

வேசா

வேசா vēcā, பெ.(n.)

வேசி பார்க்க;see vesi.

     “வேசாக்கள் பின்செல் வறியானில் விளங்க” (கந்தபு. பானுகோ. 41);.

     [வே → வேசா]

வேசாடல்

 வேசாடல் vēcāṭal, பெ.(n.)

   மனக்கலக்கம் (யாழ்.அக.);; mental agitation.

க. பேகாடா.

     [வேசறவு + ஆடு-.]

வேசாடை

 வேசாடை vēcāṭai, பெ.(n.)

வேசடை (யாழ்.அக.); பார்க்க;see vesadai.

வேசாறல்

வேசாறல் vēcāṟal, பெ.(n.)

   1. சோர்வு; weariness.

   2. துக்கம்; sorrow.

     “நினைக்கினும் வேசாறலாறுமடி” (அருட்பா. vi. அனுபவ. 44);.

   3. ஆறுகை (யாழ்.அக.);; becoming consoled or pacified.

   4. களைப்பாறுகை (யாழ்.அக.);; rest.

   தெ. வேசாறு;   க. பேஜாறு;ம. பேஜாறா.

     [வேசாறு → வேசாறல்]

வேசாறு

வேசாறு1 vēcāṟudal, செ.கு.வி. (v.i.)

   1. வேசறு-, 1 (வின்); பார்க்க;see vesaru-.

   2. வேசறு-, 2 பார்க்க (யாழ்.அக.);;see vesaru-.

   3.களைப்பாறுதல் (யாழ்.அக.);; to rest.

   4. ஆறுதல் (யாழ்.அக.);; to be consoled or pacified.

     [வேசறு → வேசாறு]

 வேசாறு2 vēcāṟu, பெ.(n.)

வேசாறல் பார்க்க;see vesaral.

     ‘உடம்பு மிகவும் வேசாறா யிருக்கிறது’.

வேசி

வேசி1 vēci, பெ.(n.)

   1. பரத்தை (பிங்.);; courtesan, whore.

   2. கூடா ஒழுக்கம் (விபசாரி); (யாழ்.அக.);; adult.

 வேசி2 vēci, பெ.(n.)

   1. மிளகுத் தக்காளி; a plant-solanum nigrum.

   2. வேசை பார்க்க;see vesai.

வேசிகை

வேசிகை vēcigai, பெ.(n.)

   1. வாயில்; entrance.

   2. போனிவாய்; vagina.

     [வேசி → வேசிகை]

வேசிக்கள்ளன்

 வேசிக்கள்ளன் vēcikkaḷḷaṉ, பெ.(n.)

   பரத்தையர்தரகன் (வேசியுறவுள்ளவன்); (வின்);; whore-monger.

     [வேசி + கள்ளன்]

வேசிதம்

 வேசிதம் vēcidam, பெ.(n.)

ஊடிழைமம்

 seton.

அறுவையில் சிறப்பாக விலங்குடல் தோலடி யூடாக ஊருதல் தடுப்பிற்காகவும் செயற்கைப்புண் மூலம் மருந்துச் சீநீர் பெறுவதற்காகவும் ஊடு செலுத்தப்படும் மயிர் அல்லது இழையாலான துய்க்கற்றை ஊடுசீநீர், ஊடிழைமம் வழிப் பெறப்படும் செயற்கைச் சீநீர்.

வேசித்தனம்

வேசித்தனம் vēcittaṉam, பெ.(n.)

   1.பரத்தைமை (வின்.);; harlotry.

   2. பிறர்மனை நயத்தல்; adultery.

   3. பகட்டு; coquetry.

     [வேசி + தனம்]]

வேசிநங்கை

 வேசிநங்கை vēcinaṅgai, பெ.(n.)

   மிளகாய் நங்கை; a plant.

     [வேசி + நங்கை]

வேசிப்பழம்

 வேசிப்பழம் vēcippaḻm, பெ.(n.)

   எலுமிச்சம்பழம்; lime fruit.

     [வேசி + பழம்]

வேசிப்பார்வை

 வேசிப்பார்வை vēcippārvai, பெ.(n.)

   புணர்ச்சி நோக்கு; look with a desire for sexual intercourse.

     [வேசி + பார்வை]

வேசியம்

வேசியம் vēciyam, பெ.(n.)

   1. வேசம்2, 3 பார்க்க (சங்.அக.);;see vesam.

   2. பரத்தையர் வீடு; house of prostitute.

     [வேசி → வேசியம்]

வேசியர்பால்

 வேசியர்பால் vēciyarpāl, பெ.(n.)

   பரத்தையின்பால்; breast milk of prostitutesnot useful for any kind of medicines – internal or external.

     [வேசியர் + பால்]

வேசியாசாரியன்

 வேசியாசாரியன் vēciyācāriyaṉ, பெ. (n.)

   நட்டுவன் (யாழ்.அக.);; dancing master.

     [Skt. {} → த. வேசியாசாரியன்]

வேசியாடு-தல்

 வேசியாடு-தல் vēciyāṭudal, செ.கு.வி.(v.i.)

   கற்பொழுக்கந் தவறி நடத்தல் (யாழ்.அக.);; to become an adulteress, to walk the street, as a prostitute.

     [வேசி + ஆடு-,]

வேசியை

 வேசியை vēciyai, பெ.(n.)

வேசி (யாழ்.அக.); பார்க்க;see vesi.

     [வேசி → வேசியை]

வேசிவிடையான்

 வேசிவிடையான் vēciviḍaiyāṉ, பெ.(n.)

   கழுதை; ass.

     [வேசி + விடையான்]

வேசை

வேசை1 vēcai, பெ.(n.)

வேசி பார்க்க;see vesi.

     “வேசையர் நட்பும்” (நாலடி, 371);.

     [வேசி → வேசை]

 வேசை2 vēcai, பெ.(n.)

   ஊதியம் (சம்பளம்); (யாழ்.அக.);; wage, remuneration.

வேச்சென்றிரு-த்தல்

 வேச்சென்றிரு-த்தல் vēcceṉṟiruttal, செ.

குன்றாவி. (v.t.);

   சூடு ஆறாதிருத்தல்; to remain warm.

{வே + சென்றிரு]

வேடகம்

 வேடகம் vēṭagam, பெ.(n.)

   காதணிவகை (அக.நி.);; an ear-ornament.

வேடங்கட்டு-தல்

 வேடங்கட்டு-தல் vēṭaṅgaṭṭudal, செ.கு.வி. (v.i.)

   மாறுவேடம் கொள்ளுதல்; to put on a disguise.

     [வேடம் + கட்டு-,]

வேடங்காட்டு-தல்

 வேடங்காட்டு-தல் vēṭaṅgāṭṭudal, செ.கு.வி. (v.i.)

   போலியாக நடித்தல் (வின்.);; to dissemble, to appear in false light.

     [வேடம் + காட்டு-,]

வேடசம்

 வேடசம் vēṭasam, பெ.(n.)

   பிரம்பு; calamus rotang.

வேடச்சி

 வேடச்சி vēṭacci, பெ.(n.)

   வேட்டுவகுலப் பெண்; women of the hunter tribe.

     [வேடன் → வேடச்சி]

வேடச்சேரி

 வேடச்சேரி vēṭaccēri, பெ.(n.)

   வேடரூர்; hamlet of hunters.

     [வேடன் + சேரி]

வேடணம்

 வேடணம் vēṭaṇam, பெ.(n.)

   வளைக்கை (சங்.அக.);; surrounding.

வேடதாரி

வேடதாரி vēṭatāri, பெ.(n.)

   1. (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக); வேடம் தரித்தவர்; one who plays a role in a drama.

   2. (சுய ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன்); வெளியில் வேறு விதமாகப் பேசி நடிப்பவர், வெளிவேடம் போடுபவர்; one who masks his intentions hypocrite.

     “சமூக சேவை என்ற போர்வையில் வேடதாரிகள்’.

     [வேடம் + தாரி]

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்1 vēṭandāṅgal, பெ.(n.)

   தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஊர்; this village located at madurandagam taluk in cengarpattu district state of tamil-nādu.

சென்னையில் இருந்து 54 மைல் தொலைவில் இருக்கிறது. இங்கு 74 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. அதற்குள் ஏராளமான கடப்ப மரங்கள் இருக்கின்றன. அம்மரங்களில் ஆயிரக் கணக்கான பறவைகள் பல நாடுகளிலும் இருந்து செப்டம்பர்த் திங்கள் முதல் மார்ச்சுத் திங்கள் வரையில் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. ஏரி நீரில் மரங்கள் இருப்பதால் பறவைகளுக்குத் தீங்குண்டாவதில்லை. வேடந்தாங்கல் மக்கள் இப்பறவைகளுக்கு எவ்வகையான தீங்கும் நேராதவாறு 150 ஆண்டு களாகப் பாதுகாத்து வருகின்றனர். இவைகளைப் பார்ப்பதற்குப் பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருகின்றதால் கற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது.

 வேடந்தாங்கல்2 vēṭandāṅgal, பெ.(n.)

   பறவைகள் புகலிடம்; birds shelter.

தமிழக வனவிலங்குப் புகலிடங்களில் கருங்குழிக்கு அருகில் நீர்ப்பறவைகள் வந்து தங்கும் வேடந்தாங்கல் புகலிடம் முக்கியமான இடமாகும். சுமார் 15 வெவ்வேறு வகை நீர்ப்பறவைகள், நத்தைகுத்தி நாரை, நரையான் (gray herons);, வக்கா (night herons);, மடையான் (pond herons);, வெண்கொக்கில் நான்கு வகைகள், கங்கணம் (ibis);, கரண்டி அலகி (spoon bill);, மூன்று வகை நீர்க் காக்கைகள், பாம்புத்தாரா ஆகிய பறவைகள் வேடந்தாங்கல் ஏரியின் மையத்தில் உள்ள கடப்ப மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.

வேடன்

வேடன்1 vēṭaṉ, பெ.(n.)

   1. வேட்டுவன்; hunter, fowler.

     ‘வெந்தொழில் வேடரார்த்து” (சீவக. 421);.

   2. பாலை நிலத்திற்குரியவன் (திவா.);; man of the palaitract.

     [வேடு → வேடன்]

 வேடன்2 vēṭaṉ, பெ.(n.)

வேடதாரி 1 பார்க்க (கந்தபு.);;see vedadari1.

     [வேடம் → வேடன்]

வேடம்

வேடம்1 vēṭam, பெ.(n.)

   1. உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்று வடிவம்; disguise.

     “கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்…. கொங்கை நற்றடம் படிந்தும்” (திருவாச. 2, 15);.

   2. உடை; clothes, dress.

     [வேள் → வேடம்]

 வேடம்2 vēṭam, பெ.(n.)

   விருப்பம்; desire.

     “வேண்டற் கரிய விடயங்களின் வேட மாற்றி” (பாரத. சம்பவ. 53);.

க. வேட.

     [வேள் → வேடம்]

 வேடம்3 vēṭam, பெ.(n.)

   1. (நடிப்பவர்); பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் ஒப்பனை; costume due to a part in a drama, make-up.

   2. (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்); பாத்திரம்; role (in a film, etc.);.

     ‘கதாநாயகியாக நடித்தவர் அம்மா வேடத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்’.

     [வேள் → வேடம்]

வேடம்கட்டு-தல்

 வேடம்கட்டு-தல் vēṭamkaṭṭudal, செ. குன்றாவி.(v.t.)

 play roles (in drama, etc.);.

     ‘அந்த காலத்தில் அவர் கள்ள பார்ட் வேடம் கட்டிக்கொண்டு வசனம் பேசினால் அரங்கமே அதிரும்’.

     [வேடம் + கட்டு-,]

வேடாங்கயிறு

 வேடாங்கயிறு vēṭāṅgayiṟu, பெ.(n.)

   கட்டுமரத்தில் நுனி மற்றும் அடிப்பக்கத் தினைக் கட்டியிணைக்கும் பெருங்கயிறு (தஞ்சை.மீன.);; large rough.

     [வேடம் + கயிறு]

வேடிக்கை

வேடிக்கை vēṭikkai, பெ.(n.)

   1. விளையாட்டு; amusement, diversion, fun.

     “மெள்ளக் கூடிக் கலந்திருந்து கொள்வதோ வேடிக்கை” (பணவிடு 314);.

   2. வியப்புக்காட்சி; show.

     ‘வேடிக்கை பார்க்கப் போனான்’.

   3. அணி செய்தல் (அலங்கரிப்பு); (இலக்.அக.);; decoration.

தெ. வேடுகா.

வேடிக்கைகாட்டு-தல்

 வேடிக்கைகாட்டு-தல் vēṭikkaikāṭṭudal, செ.கு.வி.(v.i.)

   வியப்பாணச் செயல் செய்தல்; to divert, amuse.

     [வேடிக்கை + காட்டுதல்]

வேடிக்கைக்காரன்

 வேடிக்கைக்காரன் vēṭikkaikkāraṉ, பெ.(n.)

   வியப்புச் செய்கையுடையவன்; droll person.

     [வேடிக்கை → காரன்]

வேடிக்கைசெய்-தல்

 வேடிக்கைசெய்-தல் vēṭikkaiseytal, செ.கு.வி. (v.i.)

வேடிக்கைகாட்டு-, பார்க்க;see vedikkai-kattu-.

     [வேடிக்கை + செய்-,]

வேடிக்கைபார்-த்தல்

 வேடிக்கைபார்-த்தல் vēṭikkaipārttal, செ. குன்றாவி. (v.t.)

 enjoythe scenes, witness passively.

     ‘நீ அவனை அடித்தால் நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்போமா?’

     [வேடிக்கை + பார்-,]

வேடிக்கைப்பேச்சு

 வேடிக்கைப்பேச்சு vēṭikkaippēccu, பெ.(n.)

   விளையாட்டு தனமான சொல்; divertin talk, banter.

     [வேடிக்கை + பேச்சு]

வேடிக்கைமனிதன்

 வேடிக்கைமனிதன் vēṭikkaimaṉidaṉ, பெ.(n.)

வேடிக்கைக்காரன் பார்க்க;see vedikkai-k-karan.

     [வேடிக்கை + மனிதன்]

வேடிக்கையரங்கம்

 வேடிக்கையரங்கம் vēṭikkaiyaraṅgam, பெ.(n.)

   உடற்பயிற்சி மற்றும் உலாவரும் காட்சி முதலான வேடிக்கைகள் காட்டுமிடம் (வட்டங்கு);; circus.

     [வேடிக்கை + அரங்கம்]

வேடிச்சி

வேடிச்சி vēṭicci, பெ.(n.)

வேடச்சி பார்க்க;see vepacci.

     “வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை” (கந்தரல. 53);.

     [வேடச்சி → வேடிச்சி]

வேடிதம்

 வேடிதம் vēṭidam, பெ.(n.)

   மூலிகைகளைக் காய்ச்சுவதால் உண்டாகும் நாற்றம் (வின்.);; unpleasent smell, as in boiling medicinal plants.

     [வேடு → வேடிதம்]

வேடு

வேடு vēṭu, பெ.(n.)

   1. வேடர் தொழில்; hunting.

     “வேட்டொடு வேய்யியிலழுவத்துப் பிரித்து நின்னாய்” (அகநா. 318);.

   2. வேட குலம்; the caste of hunters.

     “வேடுமுடை வேங்கடம்” (திவ். இயற். நான்மு. 47);.

   3. வேடன் (இலக்.அக.);; hunter.

   4. வரிக் கூத்துவகை (சிலப். 3, 13, உரை);; a kind of masquerade dance.

க. பேடா.

     [வேள் → வேடு]

 வேடு2 vēṭu, பெ.(n.)

   1. கலத்தின் வாயை மூடிக்கட்டும் ஆடை (வின்.);; cover for the mouth of a vessel.

   2. மூடுகை (யாழ்.அக.);; covering.

   3. வடிகட்டுசீலை; cloth for filtering or straining.

   4. பொட்டணம் (யாழ்.அக.);; small packet.

   தெ. வேசை;   க. வேடி;ம. வேடு. [வேள் → வேடு]

வேடுகட்டல்

 வேடுகட்டல் vēṭugaṭṭal, பெ.(n.)

   பாத்திரத்தின் வாயை சீலைத் துணியால் மூடல்; covering the mouth of a vessel with a cloth on which the substance to be boiled in vapour is put.

     [வேடு + கட்டல்]

வேடுகட்டு-தல்

வேடுகட்டு-தல் vēṭugaṭṭudal, செ.கு.வி.(v.i.)

   1. பானையின் வாயை சீலையாற் கட்டுதல் (வின்.);; to tie a cloth over the mouth of a pot.

   2. பொட்டணங் கட்டுதல் (யாழ்.அக.);; to tie into a bundle.

     [வேடு + கட்டு-,]

வேடுகா

 வேடுகா vēṭukā, பெ.(n.)

   பாதிரி; trumpet flower tree-sterospermum chelonoides.

வேடுபறி

வேடுபறி vēṭubaṟi, பெ.(n.)

   1. வழிப்பறி; highway robbery.

     “சுந்தரர் வேடுபறி.”

   2. திருமங்கை மன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடுந் திருவிழா (பெருந்தொ. 1863, தலைப்பு);; a festival celebrating tirumargai;

-mannan’s attempt to rob Visnu on the highway.

     [வேட + பறி]

வேடுமுள்

 வேடுமுள் vēṭumuḷ, பெ.(n.)

   வேலமரவகை (இலத்.);; pulpy podded black babool.

     [வேடு + முள்]

வேடுவன்

வேடுவன் vēṭuvaṉ, பெ.(n.)

   1. வேடன்; hunter.

     “வீரத்தாலொரு வேடுவனாகி” (தேவா. 485, 4);.

   2. வேட்டுவன் 4 பார்க்க (தேவா. 485, 4); see vettuvan.

     [வேடு → வேடுவன்]

வேடுவழி

வேடுவழி1 vēṭuvaḻi, பெ.(n.)

நீண்ட மரவகை,

 pulpy-podded black babul.

     [வேடு + வழி]

 வேடுவழி vēṭuvaḻi, பெ.(n.)

வேடுமுள் பார்க்க;see vedu-mul.

வேடை

வேடை1 vēṭai, பெ.(n.)

   1. வேட்கை; desire longing.

     “வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே” (திருப்பு. 288);.

   2. காமநோய்,

 lovesickness.

     “கொண்டதோர் வேடை தீரும்” (கந்தபு. ததீசியுத். 74);.

   3. தாகம்; thirst.

     “சால வருந்தின வேடையோடி”(கம்பரா. திருவடி, 24);.

க. வேட.

     [வேண் → வேடு → வேடை] [தே.நே.பக்.99]

 வேடை2 vēṭai, பெ.(n.)

   மரக்கலம் (யாழ்.அக.);; boat, vessel.

 வேடை3 vēṭai, பெ.(n.)

   1. வெப்பம்; heat, intense dryness.

     “வேடையதெய்த வெதுப்பினும்” (திருவாரூ. 522);.

   2. மழையில்லாக் காலம்; season of drought.

     “கொடி வேடைப்படலாற் சோர்ந்து” (இரகு, திருவவ. 29);.

   3. வேடைக்காலம் 1 பார்க்க;see vedai-k-kalam.

     [வேடு → வேடை]

 வேடை4 vēṭai, பெ.(n.)

   செட்டிகள் வசிக்குந் தெரு (யாழ்.அக.);; street where merchants live.

வேடைக்காலம்

வேடைக்காலம் vēṭaikkālam, பெ.(n.)

   1. கோடைக்காலம் (வின்.);; hot season, summer.

   2. வேடை3, 2 பார்க்க;see vedai.

     [வேடை + காலம்]

வேட்களம்

 வேட்களம் vēṭkaḷam, பெ.(n.)

   திருவேட்களம் என்ற பெயரில், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஊர்; its name tiru-vetkalam village placed in ten-arkkadu district.

சிதம்பரத்திற்குப் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ளது என்ற எண்ணம் அமைகிறது. ‘வேட்களம்’ என்ற நிலையில் பார்க்கும்போது, வேட்டையாடும் நிலைவாய்ந்த களம் என்ற பொருள் அமைகிறது. எனவே வேடர்கள் வாழ்ந்த பகுதியக இருந்திருக்கலாம். சம்பந்தர், அப்பர் இத்தலத்து இறைவனைப் பாடிப் பரவியுள்ளனர்.

வேட்கை

வேட்கை1 vēṭkai, பெ.(n.)

   1. பற்றுள்ளம்; desire, want, appetite.

     “வேட்கையெல்லாம் விடுத்தென்னை…… திருவடிக்கட்கூட்டினை” (திவ்.திருவாய். 4, 9, 9);.

   2. பத்துநிலைகளுள் ஒன்றான காம விருப்பம் (நம்பியகப்.36, உரை);; amorousness, one often avattai, q.v.

     [வெள் → வேள் → வேட்பு → வேட்கை]

     [தே.நே.பக். 145]

 வேட்கை2 vēṭkai, பெ.(n.)

   காமவிருப்பம்; sexual desire.

     [வெள் → வேள் → வேட்பு → வேட்கை]

வேட்கைத்துணைவி

 வேட்கைத்துணைவி vēṭkaittuṇaivi, பெ.(n.)

   மனைவி (வின்);; wife.

     [வேட்கை + துணைவி]

வேட்கைநீர்

வேட்கைநீர் vēṭkainīr, பெ.(n.)

   1. விடாய் தணிக்கும் நீர் (வின்.);; water to quench one’s thirst.

   2. காமநீர்; a fluid discharge in a woman from orgasm in sexual inter course.

     [வேட்கை + நீர்]

வேட்கைநோய்

வேட்கைநோய் vēṭkainōy, பெ.(n.)

   1. வேட்கை பார்க்க;see vetkai.

     “வேட்கை நோய் கூர நினைந்து கரைந்துகும்” (திவ். திருவாய் 9, 6, 7);.

   2. வயா (புறநா. 20, 14, உரை);; morbid appetite or longings of women during pregnancy.

     [வேட்கை + நோய்]

வேட்கைபெருக்கம்

 வேட்கைபெருக்கம் vēṭkaiberukkam, பெ.(n.)

   காமநோய்; excess of love for intercourse-amorousness.

     [வேட்கை + பெருக்கம்]

வேட்கைப்பெருக்கம்

 வேட்கைப்பெருக்கம் vēṭkaipperukkam, பெ.(n.)

   பேராசை (பிங்.);; great desire.

     [வேட்கை + பெருக்கம்]

வேட்கைமுந்துறுத்தல்

வேட்கைமுந்துறுத்தல் vēṭkaimunduṟuttal, பெ.(n.)

   தலைவி தன் விருப்பத்தைத் தலைவன் முன் கூறும் புறத்துறை (பு.வெ.12, 1);; theme of a woman giving expression to her love in the presence of her loneq.

     [வேட்கை + முந்துறுத்தல்]

வேட்கைமை

வேட்கைமை vēṭkaimai, பெ.(n.)

வேட்கை பார்க்க;see vetkai.

     “வேட்கைமை யென்னு நாவில்” (சீவக. 2729);.

     [வேள் → வேட்கைமை]

வேட்கோ

வேட்கோ vēṭā, பெ.(n.)

   குயவன்; potter.

     “வேட்கோச் சிறா அர் தேர்க்கால் வைத்த பசு மட்குருஉத்திரள்” (புறநா.32);.

     [வேள் + கோ3]

வேட்கோபன்

 வேட்கோபன் vēṭāpaṉ, பெ.(n.)

வேட்கோ (யாழ்.அக.); பார்க்க;see vetko.

     [வேட்கோ → அன்]

வேட்கோவன்

வேட்கோவன் vēṭāvaṉ, பெ.(n.)

வேட்கோ பார்க்க (பெரியபு. திருநீல கண்டநாய.1); see vețko.

     [வேட்கோ + அன்]

வேட்கோவர்

 வேட்கோவர் vēṭāvar, பெ. (n.)

மட்பாண்டங் களைச் செய்யும் தொழிலாளி,

 earthern potmaker.

     [வேள்+கோவ]

வேட்சாடை

 வேட்சாடை vēṭcāṭai, பெ.(n.)

   வேட்டாடை; a mode of wearing clothes by males.

     [வேட்டி + ஆடை]

வேட்சி

வேட்சி vēṭci, பெ.(n.)

வேட்கை பார்க்க;see vetkai.

     “வெளிப்பட்டிறைஞ்சினும் வேட்சியு மாமே” திருமந். 437).

     [வேள் → வேட்சி]

வேட்சை

வேட்சை1 vēṭcai, பெ.(n.)

   விருப்பம் (யாழ்.அக.);; desire.

     [வேள் → வேட்சை]

 வேட்சை2 vēṭcai, பெ.(n.)

   புடைவை (யாழ்.அக);; sагее.

வேட்டகண்ணனார்

 வேட்டகண்ணனார் vēṭṭagaṇṇaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sangam poet.

இவர் சாதியில் வேடர் என்று தெரிகிறது. வேட்டம்-வேட்டை. இவர் தாம் வேடர் என்பதற்கியைக் குறுந்தொகையில் தோழி கூற்றில்

     “தலைமகனுடைய குற்றேவல் மகன்”,

     “நெய்கனி குறும் பூழ் காயமாக ஆர்பதம் பெறுக” என்று

நெய்யிற் பொரித்த காடை இறைச்சியைக் கூறியுள்ளார். வேட்டக் கண்ணனார் என்பது

கண்ணப்ப நாயனாரை நினைவுறுத்துகின்றது.

வேட்டகம்

வேட்டகம்1 vēṭṭagam, பெ.(n.)

   மனைவியின் பிறந்த வீடு; house of one’s wife’s people.

     “புக்கு வேட்டகத்தினி லுண்ணும் புன்மையோர்”(நைடத.நகர்நீங்.17);.

     [வேள் + அகம்1]

 வேட்டகம்2 vēṭṭagam, பெ.(n.)

   தலைப்பாகை(யாழ்.அக.);; turban.

     [வேள் + அகம்]

 வேட்டகம்3 vēṭṭagam, பெ.(n.)

   பிசின்; gum.

வேட்டக்குடி

வேட்டக்குடி1 vēḍḍakkuḍi, பெ.(n.)

   வேட்டுவர் வீடு.; hunter’s quarer.

     “வேட்டக் குடிதொறும்” (புறநா. 333);.

     [வேடு + குடி]

 வேட்டக்குடி2 vēḍḍakkuḍi, பெ.(n.)

   வேட்டக்குடி என, காரைக்காலுக்கு அருகில் அமைந்துள்ளது இவ்வூர்; this village near by kara-k-kal as called vetta-k-kudi.

வேட்டம் குடி வேட்டையாடும் மக்கள் வாழ்ந்த குயிருப்புப் பகுதி (வேட்டை-வேட்டையாடுதல்); என்பதே பொருத்தமாக அமைகிறது. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் புகழ்கின்றார். இவ்வேட்டக் குடி வேடர்கள் வாழ்ந்த குடியிருப்பாக இருக்கலாம் என்பது, காட்டுப்பகுதி என்ற எண்ணத்தாலும் உறுதிப்படுகிறது.

வேட்டஞ்செய்-தல்

 வேட்டஞ்செய்-தல் vēṭṭañjeytal, செ. குன்றாவி (v.t.)

வேட்டையாடு பார்க்க;see vettai-y-adu-,

     “வேட்டஞ் செய் காண்டாம்”

     [அரிச். பு.]. [வேட்டம் + செய்-,]

வேட்டணம்

வேட்டணம் vēṭṭaṇam, பெ.(n.)

   1. சூழ்கை; surrounding.

   2. காது; ear.

   3. சுவர்; wall.

     [வேள் → வேட்டணம்]

 வேட்டணம் vēṭṭaṇam, பெ.(n.)

   கூத்தின் உறுப்புகளுள் ஒன்று (சிலப். பக். 81, கீழ்க்குறிப்பு);; a gesture or movement in dancing.

வேட்டம

வேட்டம1 vēṭṭama, பெ.(n.)

   1. வேட்டை; hunting, chase.

     “வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன்” (அகநா. 182);.

   2. கொலை (பிங்);; murder.

   தெ., க. வேட;ம. வேட்ட.

     [வேள் → வேட்டை → வேட்டம்)

வேட்டமாடு-தல்

வேட்டமாடு-தல் vēṭṭamāṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

வேட்டையாடு-, பார்க்க;see vettai-y-adu-.

     “செழுங்கடல் வேட்ட மாடி” (சீவக. 2770);;

     [வேட்டம் + ஆடு-,]

வேட்டம்

வேட்டம்2 vēṭṭam, பெ.(n.)

   1. விருப்பம்; desire.

     “உயர்ந்த வேட்டத்துயர்ந்திசி னோர்க்கு” (புறநா.214);.

   2. விரும்பிய பொருள்; the thing desired.

     ” வேட்டம் போகிய…….. தும்பி” (கலித். 46);.

க. வேட.

     [வேள் → வேட்டை → வேட்டம்)

 வேட்டம்3 vēṭṭam, பெ.(n.)

   1. பிசின்; gum.

   2. சாரம்; essence.

வேட்டல்

வேட்டல் vēṭṭal, பெ.(n.)

   1. வேள்வி செய்தல்; sacrificing, one of antanan-aru-tolil, q.v.

     “ஒதல் வேட்டலவையிறர் செய்தல்” (பதிற்றுப் 24, 6);.

   2. மணம்; marriage.

   3. விரும்புகை (பிங்.);; desiring.

   4. ஏற்கை (அரு.நி.);; begging.

     [வேள் → வேட்டல்]

வேட்டான்

வேட்டான் vēṭṭāṉ, பெ.(n.)

   1. விரும்புவோன்; one who desires.

     “வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கிணி தென்றுண்பவோ நீருண்பவர்” (கலித். 62);.

   2. கணவன் (யாழ்.அக.);; husband.

   3. மணமானவன் (வின்.);; married man.

   4. நண்பன் (யாழ்.அக.);; friend.

     [வேள் → வேட்டான்]

வேட்டாரன்

வேட்டாரன் vēṭṭāraṉ, பெ.(n.)

வேட்டைக் காரன் 2 (நாஞ்); பார்க்க;see vettai-k-karan.

     [வேள் → வேட்டை → வேட்டாரன்]

வேட்டாள்

வேட்டாள் vēṭṭāḷ, பெ.(n.)

   1. மனைவி (யாழ்.அக.);; wife.

   2. மணமானவள் (வின்.);; married woman.

     [வே → வேட்டாள்]

வேட்டாவளியன்

வேட்டாவளியன் vēṭṭāvaḷiyaṉ, பெ.(n.)

வேட்டுவன் 4 (இ.வ.); பார்க்க;see vettuvan.

     [வேட்டம் + வளியன்]

வேட்டி

வேட்டி vēṭṭi, பெ.(n.)

   ஆடவர் புனையும் ஆடை; man’s clothes.

     “வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும்” (ஒழிவி. சரியைக் கழற்றி. 4);.

     [வெட்டி → வேட்டி]

வேட்டிதகம்

 வேட்டிதகம் vēṭṭidagam, பெ.(n.)

வேட்டிதம் பார்க்க;see vettidam.

     [வேட்டி → வேட்டிதகம்]

வேட்டிதம்

வேட்டிதம் vēṭṭidam, பெ.(n.)

   1. சூழ்கை (இலக்.அக.);; surrounding.

   2. சூழப் பெற்றது; that which is surrounded.

   3. தடை (இலக்.அக.);; obstacle.

   4. மடிப்பு (யாழ்.அக.);; folding.

   5. ஒரு வகைக் கூத்து (யாழ்.அக.);;     [வேட்டி → வேட்டிதம்]

வேட்டித்துணி

 வேட்டித்துணி vēṭṭittuṇi, பெ.(n.)

வேட்டி பார்க்க;see vetti.

     ‘வேட்டித் துணிக்கு விதியில்லாதவன்’.

     [வேட்டி + துணி]

வேட்டு

வேட்டு1 vēṭṭu, பெ.(n.)

   வேட்டையாடுந் தொழில்; the occupation of hunting.

     “வேட்டென்னுந் தொழிலுடையானை வேட்டுவன் என்றலின்” (தொல். பொ. 21, உரை);.

     [வேடு → வேட்டு]

 வேட்டு2 vēṭṭu, பெ.(n.)

   வெடி; report of a gun.

     ‘தப்பட்டை யொலிவல் வேட்டு’ (அறப். சத. 63);,

     [வேடு → வேட்டு]

வேட்டுப்பறி-தல்

வேட்டுப்பறி-தல் vēṭṭuppaṟidal,    20 செ.கு.வி. (v.i.)

   1. வெடி வெடித்தல்; to burst, explode, as a cartridge.

   2. கீழ்நோக்குக் காற்று விடுதல்; to break wind.

     [வேட்டு + பறி]

வேட்டுவன்

வேட்டுவன் vēṭṭuvaṉ, பெ.(n.)

   1. வேடன்1 பார்க்க (சூடா.);;see vedam.

     “வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று” (குறள், 274);.

   2. வேட்டைக்குச் செல்வோன்; one who goes hunting.

     “யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா.214);.

   3. குறிஞ்சி நிலத்திற் குரிய ஆடவன்,

 man of the kurincitrack.

     “ஆயர் வேட்டுவா” (தொல். பொ. 21);.

   4. குளவி (பிங்.);; hornet.

     “வேட்டுவனாமப் புழுப்போல்” (சி.போ. 1,2,2);.

   5.நாண்மீன்களுள் பத்தாவது (மகம்); (பிங்.);; the 10-th naksatra.

     [வேடு → வேட்டுவன்]

வேட்டுவாளி

வேட்டுவாளி vēṭṭuvāḷi, பெ.(n.)

வேட்டுவன்

   4. பார்க்க (சங்கற்ப,9, உரை);;see vettuvan.

     [வேட்டுவாள் + இ]

வேட்டுவாளியன்

 வேட்டுவாளியன் vēṭṭuvāḷiyaṉ, பெ.(n.)

வேட்டுவாளி (சங்.அக.); பார்க்க;see vettuvali.

     [வேட்டுவாளி + அன்]

வேட்டுவிடு

வேட்டுவிடு1 vēḍḍuviḍudal, செ.குன்றாவி. (v.t.)

   திருடுதல்; to steal, rob.

     [வேட்டு + விடு-,]

 வேட்டுவிடு2 vēḍḍuviḍudal, செ.கு.வி.(v.i.)

   1. வேட்டுப்பறி-, பார்க்க;see véttu-p-pari.

   2. பொய்சொல்லுதல்; to bib.

     [வேட்டு + விடு-,]

வேட்டுவித்தி

வேட்டுவித்தி vēṭṭuvitti, பெ.(n.)

   குறிஞ்சி நிலப்பெண் (தொல்.பொ.20, உரை);; women of the kurinictract.

     [வேட்டு + வித்தி]

வேட்டுவேளான்

வேட்டுவேளான் vēṭṭuvēḷāṉ, பெ.(n.)

வேட்டுவன் 4 பார்க்க;see vettuvan.

     “கிட்டமும் வேட்டுவேளானும் போலே” (ஆசார்ய 11);.

     [வேட்டு + வேளான்]

வேட்டுவை

 வேட்டுவை vēṭṭuvai, பெ.(n.)

வெடிவை பார்க்க;see vedivai.

     [வேட்டு + வை]

வேட்டை

வேட்டை1 vēṭṭai, பெ.(n.)

   1. வேட்டம்1,1 பார்க்க;see vettam.

     “வேட்டை வேட்கை மிக” (கம்பரா.நகர்நீங், 74);

   2. வேட்டையிற் கிடைக்கும் பொருள்; hunt, game killed in hunting.

     “பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்ததின்று” (திருவாலவா. 44, 38);.

   3. கொலை; murder.

     “ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை” [திருநூற்.56).

     [வேடு → வேட்டை]

 வேட்டை2 vēṭṭai, பெ.(n.)

   1. இணைப்பு; weariness.

   2. துன்பம்; affliction.

வேட்டை நடனம்

 வேட்டை நடனம் vēḍḍainaḍaṉam, பெ. (n.)

   நாட்டுப்புற நடனக் கலைகளில் ஒரு வகை; one among rustic dance.

மறுவ விலங்குப் போலிகள்

வேட்டைகட்டு-தல்

வேட்டைகட்டு-தல் vēṭṭaigaṭṭudal, செ.கு.வி. (v.i.)

   வேட்டை மேற் செல்லுதல்; to go hunting.

     “பொங்குகடல் வேட்டைகட்டி” (கொண்டல் விடு. 71);.

     [வேட்டை + கட்டு-,]

வேட்டைக்கடா

 வேட்டைக்கடா vēṭṭaikkaṭā, பெ.(n.)

   வேட்டைக்குப்பழக்கிய கடா (யாழ்.அக.);; ram trained for hunting.

     [வேட்டை + கடா]

வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்1 vēṭṭaikkāraṉ, பெ.(n.)

   1. வேடடுவன் 1 பார்க்க;see Vettvan.

   2. வேட்டையாடும் ஒரு வகையினர்; person belonging to the hunting caste.

     [வேட்டை + காரன்]

 வேட்டைக்காரன்2 vēṭṭaikkāraṉ, பெ.(n.)

   1. செந்நாய் பார்க்க;see cennay.

   2. வேட்டைநாய் பார்க்க;see Vettai-nay.

     [வேட்டை + காரன்]

வேட்டைக்கும்மி

 வேட்டைக்கும்மி vēṭṭaikkummi, பெ. (n.)

   கும்மி வகையினுள் ஒன்று; one among a dance which is performed by clapping hands to time and singing.

     [வேட்டை+கும்பி]

வேட்டைநாய்

வேட்டைநாய் vēṭṭaināy, பெ.(n.)

   வேட்டையாடப் பழகிய நாய்வகை; a special breed of hunting dogs.

     “வேட்டை நாய்போற்கடிக்க வருஞ் சிலநேரம்” (தனிப்பா. i, 264,1);.

   2. கடிக்கும் நாய் (யாழ்.அக.);; biting dog.

     [வேட்டை + நாய்]

வேட்டைபிடி-த்தல்

 வேட்டைபிடி-த்தல் vēḍḍaibiḍittal, செ.கு.வி. (v.t.)

வேட்டையாடு-, பார்க்க;see vettai-y-adu-.

     ‘குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?’

     [வேட்டை + பிடி-,]

வேட்டைப்பல்

வேட்டைப்பல் vēṭṭaippal, பெ.(n.)

   வளைந்த யானைக்கோடு (வின்.);; tusk, fang.

     [வேட்டை + பல்2]

வேட்டைப்பை

 வேட்டைப்பை vēṭṭaippai, பெ.(n.)

   வேட்டையாடுதற்குரிய மருந்து வெடி முதலியவை வைக்கும் பை; hunters pouch for cartridges, etc.

     [வேட்டை + பை]

வேட்டையவியல்

 வேட்டையவியல் vēṭṭaiyaviyal, பெ.(n.)

   அவியற்கறி வகை (யாழ்.அக.);; a kind of curry preparation.

     [வேட்டை + அவியல்]

வேட்டையாடு-தல்

வேட்டையாடு-தல் vēṭṭaiyāṭudal, செ. குன்றாவி.(v.t.)

   கொல்லுதற் கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு முதலியற்றைத் துரத்திச் செல்லுதல்; to chase, hunt.

     “கானகத் தெய்தி நீ வேட்டையாடி விலங்கின மாய்த்து” (அரிச்.பு. வேட்டஞ். 3);.

     [வேட்டை + ஆடு-,]

வேட்டையிராகம்

 வேட்டையிராகம் vēṭṭaiyirākam, பெ.(n.)

   வேட்டைக்குரிய பண்; hunting note.

     [வேட்டை + இராகம்]

வேட்டைவாளி

வேட்டைவாளி vēṭṭaivāḷi, பெ.(n.)

   குளவி வகை (கோயிற்பு. பதஞ். 80, உரை);; a kind of hornet.

     [வேட்டை + வாளி]

வேட்டோன்

வேட்டோன் vēṭṭōṉ, பெ.(n.)

   மணமானவன் (சங்க.அக.);; married man.

   2. கணவன் (நாமதீப. 193);; husband.

   3. நண்பன் (யாழ்.அக.);; friend.

   4. விரும்புவோன் (பிங்.);; one who desires.

வேட்பாளர்

 வேட்பாளர் vēṭpāḷar, பெ.(n.)

   தேர்தலில் போட்டியிடுபவர்; candidate (for election to an office);.

     ‘எங்கள் தொகுதி வேட்பாளர்’.

     [வேள் → வேட்பு → வேட்பாளர்]

வேட்பித்தல்

 வேட்பித்தல் vēṭpittal, பெ.(n.)

   அந்தணரறு தொழிலுள் ஒன்றான வேள்வி செய்விக்கை (பிங்.);; conducting sacrifies as priests, one of antanar-aru-tolil, q.v.

வேட்பு

 வேட்பு vēṭpu, பெ.(n.)

விருப்பம் (யாழ்.அக.); desire.

     [வேள் → வேட்பு]

வேட்புமனு

 வேட்புமனு vēṭpumaṉu, பெ.(n.)

   தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்); அளிக்கும் படிவம்; nomination papers.

     ‘கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர்’.

     [வேட்பு + மனு]

வேண

 வேண vēṇa, பெ.எ.(adj.)

வேண்டிய பார்க்க;see vendiya.

     [வேண்டு → வேண]

வேணகை

 வேணகை vēṇagai, பெ.(n.)

   சுற்றுமதில் (பிங்.);; surrounding wall, outer fortification.

வேணன்

 வேணன் vēṇaṉ, பெ.(n.)

   வைதேகனுக்கு அம்பட்டப் பெண்ணினிடம் பிறந்தவன் (சங்.அக.);; person born of a barber girl and a vaitekan.

வேணற்கட்டி

 வேணற்கட்டி vēṇaṟkaṭṭi, பெ.(n.)

   வேனிற் காலத் துண்டாஞ் சிரங்கு; summer boil.

     [வேனல் + கட்டி]

வேணவா

வேணவா vēṇavā, பெ.(n.)

   வேட்கைப் பெருக்கம் (பெருவிருப்பம்); (தொல், எழுத். 288, உரை);; ever-increasing desire, intense desire.

     [வேண் + அவா = வேணவா] [தே.நே.பக்.95]

இதை வேட்கை + அவா என்று பிரிப்பது பொருந்தாது.

வேணாடர்

வேணாடர் vēṇāṭar, பெ.(n.)

வேணாட்டடிகள் பார்க்க (திருவிசைப். பாயி. 2);;see venattaggal.

     [வேணாடு + அர்]

வேணாடு

வேணாடு vēṇāṭu, பெ.(n.)

   கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர் நாட்டில் அடங்கிய பெரும் பகுதி; the region comprising the major portion of modern travancore, whre a dialect of tamil was spoken, one of 12 kotun-tamil-nadu q.v.

     [வேள் + நாடு]

வேணாட்டடிகள்

வேணாட்டடிகள் vēṇāḍḍaḍigaḷ, பெ.(n.)

   1. வேணாட்டு அரசன்; ruler of venattu (TA.S.ii,184);.

   2. திருவிசைப்பாவியற்றிய ஆசிரியருள் ஒருவரான பெரியார் (திருவிசைப்பாயி. 3);; a saiva saint one of the authors of tiru-v-icai-p-pa.

     [வேணாடு + அடிகள்]

வேணாவியோர்

வேணாவியோர் vēṇāviyōr, பெ.(n.)

   கதிரவன் வெப்பத்தால் உலகந் துன்புறாமல் அதனை தம்மேல் தாங்கி அக்கதிரோனுடன் செல்லும் ஒருசார் முனிவர் குழாம் (புறநா.43, உரை);; a band of rsis who accompany the sun obstructing the heat of the sun from affecting the earthfully and thus prevent suffering.

     [விண்ணாவியோர் → வேணாவியோர்]

வேணி

வேணி vēṇi, பெ.(n.)

   1. சடை (பிங்.);; matted hair.

   2. பின்னிய மயிர்; plaited hair.

   3. மரவேர் (யாழ்.அக.);; root.

   4. வசம்பு (தைலவ. தைல.19);; sweet flag.

   5. நதி (பிங்);; river.

   6. நீர்ப்பெருக்கு (இலக்.அக.);; flood.

 வேணி2 vēṇi, பெ.(n.)

   1. தெரு; street.

   2. சேரி; village.

 வேணி3 vēṇi, பெ.(n.)

   1. வானம் (பிங்.);; atmospheric space.

   2. வெளி (இலக். அக.);; open space.

 வேணி4 vēṇi, பெ.(n.)

   பேய்ப்பீர்க்கு; loofalufaaegyptiaca.

வேணிகை

 வேணிகை vēṇigai, பெ.(n.)

   பின்னிய மயிர் (யாழ்.அக.);; braided hair.

வேணினர்

வேணினர் vēṇiṉar, பெ.(n.)

   விரும்புபவர்; those who love or desire.

     “வேலன திருபதமும் வேணின. ரேணினரே” (சிவதரு. சுவர்க்க. சேட. 48);

     [வேண்டு + அர் + வேணினர்]

வேணியளம்

வேணியளம் vēṇiyaḷam, பெ.(n.)

   மத்தள வகை (பரத. ஒழிபி.13);; a kind of mattalam.

வேணிரம்

வேணிரம் vēṇiram, பெ.(n.)

பூவந்தி1,1 (மூ.அ.); பார்க்க;see puvandi.

வேணிர்

வேணிர் vēṇir, பெ.(n.)

   தாகவேட்கை நீங்க உண்ணு நீர்; water to allay thirst.

     “வேணீருண்ட குடையோரன்னர்” (கலித். 23);.

     [வேள் + நீர்]

வேணீறு

வேணீறு vēṇīṟu, பெ.(n.)

   1. நறுவிலி; cordia obligua.

   2. வெண்ணீறு பார்க்க;see venniru.

வேணு

வேணு1 vēṇu, பெ.(n.)

   1. குழலா தொண்டை; a plant-cappans aphylles.

   2. பற்பாடகம்; fever plant-mollugo cerviana.

   3. தலைச்சன் குழந்தை தலை மண்டை யோட்டிலிருந்து செய்யப்படும் ஒருவித அண்டச் சுண்ணம்; the calcined white powder prepared from cranial bones of the first born.

     [வேள் + உ → வேணு]

 வேணு2 vēṇu, பெ.(n.)

   1. மூங்கில் (பிங்.);; bamboo.

   2. இசைக்குழல்; reed-pipe.

வேணுகானம்.

   3. உட்டுளையுள்ள குழல்(பிங்.);; hollow tube.

   4. வில் (பிங்.);; bow.

     “வேனுப்புரி தொடை புரளவாங்கி” (இரகு. மீட்சிப். 65);.

   5. தனுராசி (இலக். வி. 882);; sagittaripus of the zodiac.

   6. வாள் (சூடா.);; sword.

வேணுகம்

 வேணுகம் vēṇugam, பெ.(n.)

   யானைத் தொட்டி (சிந்தாமணி. நிகண்டு.);; elephants goad.

     [வேணு → வேணுகம்]

வேணுகானம்

 வேணுகானம் vēṇukāṉam, பெ. (n.)

   புல்லாங்குழலிசை; music of the reed-pipe.

வேணுகோபாலன்

 வேணுகோபாலன் vēṇuāpālaṉ, பெ. (n.)

புல்லாங்குழல் வாசிக்குங் கண்ணபிரான்;{},

 as a cowherd playing the reed- pipe.

வேணுசபலம்

 வேணுசபலம் vēṇusabalam, பெ.(n.)

   மூங்கிலரிசி; bamboo seed.

     [வேணு + சபலம்]

வேணுசம்

 வேணுசம் vēṇusam, பெ. (n.)

மூங்கிலரிசி;(இலக்.அக.);

 bamboo seed.

வேணுநம்

 வேணுநம் vēṇunam, பெ.(n.)

   மிளகு; pepper-piper nigrum.

     [வேணு + நம்]

வேணுநாதன்

 வேணுநாதன் vēṇunātaṉ, பெ. (n.)

குழல் வாசிப்போன்;(யாழ்.அக.);

 flute-player.

வேணுபத்திரி

வேணுபத்திரி vēṇubattiri, பெ.(n.)

   1. மூங்கிலிலை; bamboo leaf.

   2. பால் பெருங்காயம்; white asafoetida.

   3. மூங்கிலிலையில் மனோசிலை சிவந்திடும்; red orpiment is calcified as red powder by the leaf of bamboo.

     [வேணு + பத்திரி]

வேணுபலம்

 வேணுபலம் vēṇubalam, பெ. (n.)

வேணுசம் பார்க்க;(மூ.அ.); see {}

வேணுமளவு

 வேணுமளவு vēṇumaḷavu, வி.அ. (adj.)

   வேண்டுமட்டும்; to the desired amount Adlibitum, as much is requisite quantum tibet.

     [வேணும் + அளவு]

வேணுமென்று

 வேணுமென்று vēṇumeṉṟu, எ.வி.(adv.)

வேண்டுமென்று பார்க்க;see vendumeru.

வேணும்

வேணும் vēṇum, து.வி.(v.opl.)

வேண்டும் பார்க்க;see ventum.

     “வேணுமாகில் வேணுமென்று” (பாரத. சூது. 165);.

     [வேணு → வேணும்] [பாரத. சூது. 65]

வேணூல்

வேணூல் vēṇūl, பெ.(n.)

   காமநூல்; treatise on erotics.

     “அம்மடாவாரியலானவும்….. ஆடவர் செய்கையும்…… விளம்பிடும் வேணூல்” (கந்தபு. இந்திரபுரி 25);.

     [வேள் + நூல்]

வேண்

வேண்1 vēṇ, பெ.(n.)

வேணாடு பார்க்க;see vepadu.

     “குடங்கற்க வேண்பூழி” (நன். 272 மயிலை.);.

     [வெள் → வேள் → வேண்] [தே.நே.பக்.145]

 வேண்2 vēṇ, பெ.(n.)

   விருப்பம் (யாழ்.அக.);; desire.

     “ஒன்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி” (நன். 272, மயிலை);.

ம. வேண்.

     [வேள் → வேண்]

 வேண்3 vēṇ, பெ.(n.)

   ஆசைப் பெருக்கம்; excess desire.

     [வேள் → வேண்]

வேண்டப்பாடு

வேண்டப்பாடு1 vēṇṭappāṭu, பெ.(n.)

வேண்டற்பாடு பார்க்க (தக்கயாகப். அரும்.);;see vendar-padu.

     [வேண்டல் + பாடு]

 வேண்டப்பாடு2 vēṇṭappāṭu, பெ.(n.)

பொருள் நிரம்புதற்குரியதாய்த் தொக்கு நிற்குஞ் சொற்றொடர் (Gram);

 words which are understood, in an elliptical constraction.

     “நின்றவில்லி, வீரபத்திர தேவர்க்கு எதிரே பொருதற்கு நின்றவில்லி யென்பது வேண்டப்பாடு” (தக்கயாகப் 704, உரை);.

     [வேண்டல் + பாடு]

வேண்டற்பாடு

வேண்டற்பாடு vēṇṭaṟpāṭu, பெ.(n.)

   1. விருப்பம் (தக்கயாகப், 506, உரை);; desire.

   2. தேவை; need.

   3. பெருமை; greatness, as compelling obeisance.

     “அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்” (ஈடு 2, 4, 4);.

   4. கருவம்; pride.

     “பூதகனநாதர் கருட பகவானை வேண்டற்பாடு கெடுத்தது” (தக்கயாகப். 554, உரை);.

     [வேண்டல் + பாடு]

வேண்டலன்

 வேண்டலன் vēṇṭalaṉ, பெ.(n.)

   பகைவன் (சேதுபு.);; enemy.

     [வேண்டு + அ + அன்]

வேண்டல்

வேண்டல் vēṇṭal, பெ.(n.)

   1. விரும்புகை (பிங்.);; desiring.

   2. விண்ணப்பம்; petition.

     [வேண்டு → வேண்டல்]

வேண்டவிருப்பு

 வேண்டவிருப்பு vēṇṭaviruppu, பெ.(n.)

   விருப்பின்மை; reluctance.

     [வேண்டு + ஆ + விருப்பு]

வேண்டாத

 வேண்டாத vēṇṭāta, பெ.எ. (adj.)

சிக்கல் ஏற்படுத்தக் கூடிய, தேவையில்லாத,

 unnecessary.

     ‘வேண்டாத வேலைகளை யெல்லாம் ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாய்?’

     [வேண்டு + ஆ → வேண்டாத]

வேண்டாதகாரியம்

 வேண்டாதகாரியம் vēṇṭātakāriyam, பெ.(n.)

   தேவையில்லாத செயல்; unnecessary act or business.

     [வேண்டு + ஆ + அன்]

வேண்டாதவன்

வேண்டாதவன் vēṇṭātavaṉ, பெ.(n.)

   1. விரும்பப்டாதவன்; undesirable man.

   2. பகைவன்; enemy.

     [வேண்டு + ஆ + அன்]

வேண்டாதார்

வேண்டாதார் vēṇṭātār, பெ.(n.)

   1. விருப்பமற்றவர்; those who have no desires.

     “வளம்பட வேண்டாதார் யார் யாருமில்லை” (நாலடி, 103);.

   2. வேண்டார் 2 பார்க்க;see vendar.

     “வேண்டாதார் நெஞ்சுட்க” (கலித்.100);.

     [வேண்டு + ஆ + அர்]

வேண்டாத்தனம்

வேண்டாத்தனம் vēṇṭāttaṉam, பெ.(n.)

   1. தவறு; wrong, wickedness.

   2. வேண்டாப்பொறுப்பு பார்க்க;see venda-p-poruppu.

     [வேண்டு + ஆ + தனம்]

வேண்டாத்தலையன்

வேண்டாத்தலையன் vēṇṭāttalaiyaṉ, பெ.(n.)

   1. அஞ்சாதவன்; dare-devil.

   2. முரடன்; rough-mannered person.

     [வேண்டு + ஆ + தலையன்]

வேண்டாப்பாடு

 வேண்டாப்பாடு vēṇṭāppāṭu, பெ.(n.)

வேண்டாப்பொறுப்பு பார்க்க;see vendaр-poruppu.

     [வேண்டு + ஆ + பாடு]

வேண்டாப்பொறுப்பு

 வேண்டாப்பொறுப்பு vēṇṭāppoṟuppu, பெ.(n.)

   பொறுப்பின்மை; indifference, irresponsibility.

     [வேண்டு + ஆ + பொறுப்பு]

வேண்டாமை

வேண்டாமை vēṇṭāmai, பெ.(n.)

   1 வெறுப்பு; aversion, dislike.

     “வேண்டுதல் வேண்டாமை யிலான்” (குறள், 4);.

   2. அவாவின்மை; absence of desire, contentment.

     “வேண்டாமையன்ன விழுச் செல்வ மீண்டில்லை” (குறள், 363);.

     [வேண்டு + ஆ + மை]

வேண்டாம்

வேண்டாம் vēṇṭām, வி.(v.i)

   1 இன்றியமையாது வேண்டத்தக்கதன்று என்பது குறிக்கும் வியங்கோள்வினை; verb meaning will not be required or will not be necessary, indispensade.

     “ஓதாம லொருநாளுமிருக்கவேண்டாம்”.

   2. இன்றியமையாத தன்று என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர் கால வினைமுற்று; verb in the future tense used in all genders, numbers and persons meaning (a); will not be required;

   உறவின்மை முதலியவற்றைக் குறிக்கும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று;   3. அவசியமின்மை என்பதைக் குறிக்கும் வினை; auxiliary verb meaning must not.

     [வேண்டு + ஆ + அம்]

வேண்டார்

வேண்டார் vēṇṭār, பெ.(n.)

   1. வேண்டாதார் 1 பார்க்க;see vengadar.

   2. பகைவன்; enemies.

     ”வேண்டார் பெரியர் விறல்வேலோன்றாணிளையன்” (பு.வெ. 10, பொது, 6);.

     [வேண்டு + ஆ + அர்]

வேண்டாவெறுப்பு

 வேண்டாவெறுப்பு vēṇṭāveṟuppu, பெ.(n.)

   மெத்தனம், கருத்தின்மை; indifference, unconcern.

     ‘அவன் அந்தக் காரியத்தை வேண்டா வெறுப்பாய்ச் செய்கிறான்’.

     [வேண்டு + ஆ + வெறுப்பு]

வேண்டி

 வேண்டி vēṇṭi, மு.செ.(prep.)

   பொருட்டு; for the sake of.

     ‘அதை எனக்கு வேண்டிச் செய்’.

     [வேண்டு + இ]

வேண்டிக்கேள்-தல் (வேண்டிக்கேட்டல்)

 வேண்டிக்கேள்-தல் (வேண்டிக்கேட்டல்) vēṇṭikāḷtalvēṇṭikāṭṭal, செ. குன்றாவி.(v.t.)

   மன்றாடிக் கேட்டல் (யாழ்.அக.);; to besseech.

     [வேண்டு + கேள்-தல்]

வேண்டிக்கொள்(ளு)-தல்

 வேண்டிக்கொள்(ளு)-தல் vēṇṭikkoḷḷudal, செ.குன்றாவி. (v.t.)

   வழிபாடு; to solicit, pray for, request.

     [வேண்டு + கொள்[ளு]-தல்]

வேண்டிய

வேண்டிய1 vēṇṭiya, பெ.எ.(adj.)

   1. இன்றியமையாத; indispensable.

   2. தேவையான; required.

   3. போதுமான; sufficient.

   4. மிகுதியான; many.

     “வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ” (தாயு. மண்டலத். 10);.

     [வேண்டு → வேண்டிய]

 வேண்டிய2 vēṇṭiya, பெ.எ. (adj.)

   1. தேவையான, போதுமான; necessary, adequate.

     ‘கல்லூரி தொடங்குவதற்கு வேண்டிய வசதிகள் கிராமத்தில் இல்லையா?’

   2. (பழக்கத்தில் ); நெருக்கமான; close (to S.O.);

     ‘அவர் உனக்கு வேண்டியநபர் என்று தெரிகிறது’.

   3. (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்); நிர்ப்பந்தத்தையோ அவசியத்தையோ வெளிப்படுத்தப் பயன்படுவது;செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது’.

     ‘படிக்க வேண்டிய புத்தகம்’.

     [வேண்டு → வேண்டி]

வேண்டியது

வேண்டியது vēṇṭiyadu, பெ.(n.)

   1. இன்றியமைதது; that which is indispensable.

     “பயிருக்கு வேண்டியது மழை”.

   2. தேவையானது; that which is required.

     ‘பானை செய்யக் குயவனுக்கு மண்னோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது’.

   3. போதுமானது; that which is sufficient.

   4. மிகுதியானது; that which is abundant.

   5. வேணது 2 பார்க்க;see venadu.2.

     [வேண்டு + அது]

வேண்டியமட்டும

வேண்டியமட்டும vēṇṭiyamaṭṭuma, வி.எ.(adv.),

பெ.(n.);

   1. அவசியமான அளவில்; as much as is indispensable.

   2. தேவையான அளவில்; as much as is required.

   3. போதுமான அளவில்; sufficiently.

   4. மிகுதியாக; abundantly.

     [வேண்டிய + மட்டும்]

வேண்டியவன்

வேண்டியவன் vēṇṭiyavaṉ, பெ.(n.)

   1. அன்பிற்குரியவன்; friend, favourite.

   2. ஒருவனது நன்மையை நாடுபவன், நலன் விரும்பி; well-wisher, interested person.

     ‘அரசனுக்கு மந்திரிவேண்டியவன்’.

     [வேண்டு + அவன்]

வேண்டியிரு-த்தல்

 வேண்டியிரு-த்தல் vēṇṭiyiruttal, செ.கு.வி. (v.i)

   இன்றியமையாததாயிருத்தல்; to be necessary or indispensable.

     ‘இந்தக் காலத்திற்குப் படாடோபம் வேண்டியிருக்கிறது’.

     [வேண்டு + இரு]

வேண்டு

வேண்டு1 vēṇṭudal, செ.குன்றாவி.(v.t.)

   1. விரும்புதல்; to want desire.

     “பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன்” (கலித், 145);.

   2. வழிபடுதல் (பிங்.);; to beg, entreat, request.

     “வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும்” (திவ். திருவாய். 6, 4, 5);.

   3. விரும்பிக் கேட்டல்; to listen to with eagerness.

     “அன்னை வாழி வேண்டன்னை” (ஜங்குறு. 101);.

   4. விலைக்கு வாங்குதல் (நாமதீப. 704);; to buy purchase.

     [வேள் → வேண்டு-தல்]

 வேண்டு2 vēṇṭudal, செ.கு.வி.(v.i.)

   இன்றியமையாததாதல்; to be indispensable, to be necessary.

     “வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்” (நாலடி. 41);.

     [வேள் → வேண்டு]

வேண்டு-தல்

 வேண்டு-தல் vēṇṭudal, செ.குன்றாவி, (v.t.)

   வாங்குதல்; to buy, purchase (யாழ்ப்);.

     [வேண்டு-வேண்டிப்பெறுதல், வாங்குதல்]

வேண்டுகோள்

வேண்டுகோள் vēṇṭuāḷ, பெ.(n.)

   மன்றாடுதல், வழிபடுதல்; supplication, request, entreaty.

     “வென்று பத்திரஞ் செயது நின் வேண்டுகோளென்றார்” (திருவிளை. விறகு. 51);.

     [வேண்டு-, + கொள்-,]

வேண்டுகோள்வரி

வேண்டுகோள்வரி vēṇṭuāḷvari, பெ.(n.)

   வரிவகை (S.I.I.iv.79);; a tax,

     [வேண்டு + கொள் + வரி]

வேண்டுநர்

வேண்டுநர் vēṇṭunar, பெ.(n.)

   விரும்புவோர்; those who wish for or desire a thing.

     “வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட” (திருமுரு. 248);.

     [வேண்டு + நர்]

வேண்டுமளவு

 வேண்டுமளவு vēṇṭumaḷavu, பெ.(n.)

   போதுமட்டும்; as much as required, quantum sufficit.

     [வேண்டும் + அளவு]

வேண்டுமென்று

வேண்டுமென்று vēṇṭumeṉṟu, வி.எ. (adv.)

   1. முழுமனதோடு; intentionally.

     ‘அதை வேண்டுமென்று செய்தேன்’.

   2. பிடி வாதமாய்; wilfully.

     ‘பலர் தடுக்கவும் வேண்டுமென்று அந்தக் காரியத்தைச் செய்கிறான்’.

     [வேண்டும் + என்று]

வேண்டும்

வேண்டும் vēṇṭum, வி.வி.(v.opt.)

   1. இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள் வினை; verb meaning ‘will be required’ or’will be necessary, indispensable’.

     “வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்” (சீவக. 201);.

   2. இன்றியமையாதது என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று; verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a); will be required.

     ‘எனக்குப் புத்தகம் வேண்டும்’. உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று’;

     ‘அவன் உனக்கு என்ன வேண்டும்?’.

   3. அவசியம் என்பதைக் குறிக்கும் வினை; auxiliaryverb meaning ‘must’.

     [வேள் → வேண்டும்]

வேண்மான்

வேண்மான் vēṇmāṉ, பெ.(n.)

   வேளிர் குலத்து மகன்; male member of vesirtribe.

     “நன்னன் வேண்மான்” (அகநா. 97);.

     [வேண் + மான்]

வேண்மாள்

வேண்மாள்1 vēṇmāḷ, பெ.(n.)

   வேளிர்குலப் பெண்; women of veliri-tribe.

     “வேண்மாள் அந்துவஞ் செள்ளை” (பதிற்றுப். 9-ஆம்பதி);.

     [வேண்மான் → வேண்மாள்]

 வேண்மாள்2 vēṇmāḷ, பெ.(n.)

   சேரன் செங்குட்டுவனுடைய மனைவி; wife of | ceran-cenguttuvan

     ‘கண்ணகிக்குக் கோயிலமைக்க வேண்டுமென்று தன் கணவனிடந் தெரிவித்து அவ்வாறே கோயில் அமைப்பித்தவன்’.

     [வேண்மான் → வேண்மாள்]

வேதகன்

வேதகன்1 vētagaṉ, பெ. (n.)

ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன்

 one who transmutes or changes the nature of things.

     “போதகன் வேதகன் பொருவிலன்” (சிவதரு. கோபுர.104.);.

 வேதகன்2 vētagaṉ, பெ. (n.)

   அறிவிப்பவன்; one who reveals.

     “வித்தகன் வேதக னாதி விளம்பிய வாய்மொழி” (சிவதரு. சிவஞானதான. 21);.

     [Skt. {}-ka → த. வேதகன்]

வேதகப்பொன்

வேதகப்பொன் vētagappoṉ, பெ.(n.)

   புடமிட்ட பொன்; refined gold.

     “அல்லாத பொன்னிற்காட்டில் வேதகப் பொன்னுக்கு ஏற்றமுண்டு”

     [திவ். திருமாலை, 39, வ்யா.).

வேதகம்

வேதகம்1 vētagam, பெ.(n.)

   1. புடமிடுகை; refining, as of gold.

     ‘வேதகப் பொன்’.

   2. புடமிட்டபொன்; refined gold.

     “விளங்காநின்ற வேதகமே” (தாயு. பெற்ற. வட். 10);.

   3. இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்; agent to transmute baser metals into gold.

     “இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல” (பெரியபு. கண்ணப். 154);.

 வேதகம்2 vētagam, பெ.(n.)

   1. சூடம் (இலக்.அக.);; camphor.

   2. தவசம் (வித்து); (யாழ்.அக.);; grain.

 வேதகம்1 vētagam, பெ. (n.)

   1. வேறுபடுத்துகை; distingushing.

     “உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாணடவங்கணனே” (கோயிற்பு. இரணிய. 56);;

   2. வேறுபாடு; differentiating, change, modification.

     “விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே” (திருவாச. 49, 1);;

   3. பகைமை (விரோதம்);; dissension, disunion.

     “அவனால் இவ்வளவு வேதகமு முண்டாயிற்று”

   4. இரண்டகம் (துரோகம்);; treachery treason.

வேதகமுண்டானால் இராச்சியம் சளைக்கும்.

   5. புடமிடுகை; refining, as of gold.

   6. புடமிட்ட பொன்; refined gold.

     “விளக்காகின்ற வேதகமே” (தாயு. பெற்றவட் 10.);;

   7. இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்; agent to transmute baser metals into gold.

     “இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல”(பெரியபு கண்ணப். 154);;

   8. சிறுதுகில் (பிங்.);; small fine cloth.

த.வ. வேறாக்கம்

     [Skt. {} → த. வேதகம்]

 வேதகம்2 vētagam, பெ. (n.)

   1. கர்ப்பூரம் (இலக். அக.);; camphor.

   2. தவசம், (தானியம்); (யாழ். அக);.

 grain.

 வேதகம்3 vētagam, பெ. (n.)

   வெளிப்படுத்துகை; disclosure.

     “இரகசியத்தை வேதகம் பண்ணலாகாது”

த.வ. வெளிப்பாடு

வேதகருப்பன்

வேதகருப்பன் vētagaruppaṉ, பெ. (n.)

   1. பிரமன் (யாழ்.க.);; Brahma.

   2. பார்ப்பான்; Brahmin.

     [வேதம் + கருப்பன்]

     [Skt. {} → த. வேதம்]

வேதகலாபம்

 வேதகலாபம் vētagalāpam, பெ. (n.)

மதப்பற்றுக் காரணமாக விளைக்கும் துன்பம் (இம்சை);;(வின்.);

 religious persecution.

வேதகாரன்

வேதகாரன் vētakāraṉ, பெ.(n.)

   1. கூடை

பின்னுவோன் (சூடா. 2, 32);,

 worker in bamboo.

   2. நெய்வோன் (யாழ்.அக.);; weaver.

வேதகிரி

 வேதகிரி vētagiri, பெ. (n.)

   திருக்கழுக்குன்றம்; the hill of Tiru-k- {}.

வேதகீதன்

வேதகீதன் vētaātaṉ, பெ. (n.)

 god as praised in the {}.

     “வேதியா வேதகீதா (தேவா. 870, 1); நச்சுநா கனைக்கிடந்த நாதன் வேத கீதனே” (திவ். திருச்சந்.117);;

வேதகோட்டி

 வேதகோட்டி vētaāṭṭi, பெ. (n.)

   கோயில் முதலியவற்றில் வேதம் ஒதும் பார்ப்பனர் தொகுதி; band of brahmins chanting {}, in temple, etc.

வேதக்கட்டி

 வேதக்கட்டி vētakkaṭṭi, பெ. (n.)

   வேதத்தை நன்கு ஒதியவன்; one who has learned the {} by heart.

வேதக்காரன்

 வேதக்காரன் vētakkāraṉ, பெ. (n.)

   கிறித்தவன்; christian.

வேதக்கொடியோன்

 வேதக்கொடியோன் vētakkoḍiyōṉ, பெ. (n.)

   துரோணாசாரியன்;

வேதங்கம்

வேதங்கம் vētaṅgam, பெ.(n.)

   ஒரு வகைத் துகில் (சிலப். 14, 108, உரை);; a kind offine cloth.

 வேதங்கம் vētaṅgam, பெ. (n.)

   ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.);; a kind of fine cloth.

வேதசங்கிதை

 வேதசங்கிதை vēdasaṅgidai, பெ. (n.)

   சிறுசிறுவாக்கியமாகவன்றித் தொடர்ச்சியாக ஓதப்படும் வேதப்பகுதி; portions of the vedas recited in long sections.

     [Skt. {}-samhita → த. வேதசங்கிதை]

வேதசன்னம்

 வேதசன்னம் vētasaṉṉam, பெ.(n.)

   அத்தி; fig tree-ficus.

வேதசம்

வேதசம் vētasam, பெ.(n.)

   1. பிரம்பு வகை (இலக்.அக.);; rattan palm, m.cl., calamus rotang.

   2. நாண புல் (ஈடு.);; sacred grass.

 வேதசம்2 vētasam, பெ.(n.)

   பெருவிரலடி (யாழ்.அக.);; part of the hard under the root of the thumb.

 வேதசம்3 vētasam, பெ.(n.)

   ஒரு வகை வெள்ளி; a variety of silver.

 வேதசம்1 vētasam, பெ. (n.)

   1. பிரம்புவகை (இலக். அக.);; rattan palm.

   2. நாணற்புல் (ஈடு.);; sacred grass.

 வேதசம்2 vētasam, பெ. (n.)

   பெருவிரலடி (யாழ்.அக.);; part of the hand under the root of the thumb.

     [Skt. {} → த. வேதசம்]

வேதசாட்சி

 வேதசாட்சி vētacāṭci, பெ. (n.)

   மதத்தை நிலைநாட்டுவதற்காக உயிர்கொடுத்தவன்; martyr for religion. R.C.

வேதசாத்திரம்

வேதசாத்திரம் vētacāttiram, பெ. (n.)

   1. வேதமாகிய நூல்; the {}.

   2. வேதங்களும் அதன் அங்கங்களாகிய சாத்திரங்களையும் நன்கு ஒதியவன்; the vedas and the sastras.

   3. சமயஞானம்; theology. (chr);.

வேதசாத்திரி

வேதசாத்திரி vētacāttiri, பெ. (n.)

   1. வேதங்களையும் சாத்திரங்களையும் நன்கு ஒதியவன்;

வேதசாரம்

வேதசாரம் vētacāram, பெ.(n.)

   1. நாணற்புல்; reed, a kind of grass.

   2. வெண் கருங்காலி; a white species of Acacia tree-Diospyros tupru.

 வேதசாரம்1 vētacāram, பெ. (n.)

   1. வேதத்தின் சாரமானது; the essence of the Vedas.

     “ஆகையால் இது சகல வேதசாரம்” (அஷ்டாதச. முமுட்சுப்.திருமந்திர.34);.

   2. வேதசிரசு பார்க்க;(சங்.அக.); see {}.

 வேதசாரம்2 vētacāram, பெ. (n.)

   வேதசம்1 பார்க்க;

வேதசிரசு

வேதசிரசு vētasirasu, பெ. (n.)

   உபநிடதம் (சி.போ.வ.தீ. 32.);; the upanisads.

     [Skt. {} → த. வேதசிரசு]

வேதஞ்ஞன்

 வேதஞ்ஞன் vētaññaṉ, பெ. (n.)

   வேதமறிந்தவன் (இலக். அக.);; vedic scholar.

     [Skt. {} → த. வேதஞ்ஞன்]

வேததத்துவம்

 வேததத்துவம் vēdadadduvam, பெ. (n.)

வேதத்தின் மெய்ப்பொருள்; (யாழ். அக.);

 the {} truth.

வேததுடங்கன்

 வேததுடங்கன் vēdaduḍaṅgaṉ, பெ.(n.)

   சாரைப்பாம்பு; male cobra.

வேதத்தன்

வேதத்தன் vētattaṉ, பெ. (n.)

பிரமன்;{}.

     “வெங்கா தராவுக்குச் செய்தானிலைமலர் வேதத்தனே” (தனிப்பா. 1, 225, 16.);.

வேதத்திரயம்

 வேதத்திரயம் vētattirayam, பெ. (n.)

   இருக்கு யசு சாமம் என்ற மூன்று வேதங்கள்; the three {} rukku, yacu, {}.

வேதநாதன்

வேதநாதன் vētanātaṉ, பெ. (n.)

வேதநாயகன் பார்க்க;see {}.

     “வேதாநாரதனைப் பாடலே கடன்” (திருவிளை. விறகு. 69);;

வேதநாதம்

 வேதநாதம் vētanātam, பெ.(n.)

   வெள்ளெருக்கு; madar bearing white flowers-calotropis gigantea (albiflora);.

     [வேதம் + நாதம்]

வேதநாயகன்

வேதநாயகன் vētanāyagaṉ, பெ. (n.)

 god, as the lord of the {}.

     “வேதநாயகன் மார்பகத் தினிது வீற்றிருக்கும் ஆதிநாயகி” (கம்பரா. அகலிகைப் 16.);.

வேதநாயகம்பிள்ளை (மாயவரம்)

வேதநாயகம்பிள்ளை (மாயவரம்) vētanāyagambiḷḷaimāyavaram, பெ.(n.)

 he has belongs to 18th century.

பெண் புத்தி மாலை, நீதி நூல், சர்வ சமரச கீர்த்தனை, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம், முதலியன இவர் செய்த நூல்கள் (1887);.

வேதநாயகி

வேதநாயகி vētanāyagi, பெ. (n.)

   1. பார்வதி;{}.

     “வேதநாயகி தோகை விழுங்கவே” (தக்கயாகப் 609);.

   2. இலக்குமி; Laksmi.

வேதநாவர்

வேதநாவர் vētanāvar, பெ. (n.)

   பிராமணர்; Brahmins

     “வேதநாவர் விரும்புந் திருக் கண்ணபுரத் தாதியானை” (திவ். திருவாய். 9, 10, 9);.

வேதநி

 வேதநி vētani, பெ.(n.)

   வெந்தயம்; fenegreek seed – Trigonella foenumgracum.

வேதநீயம்

வேதநீயம் vētanīyam, பெ. (n.)

   எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம் (பிங்.); (சிலப். 29, 277 உரை.);; the karma which causes one of experience pleasure and pain, one of {}.

வேதநூல்

வேதநூல் vētanūl, பெ. (n.)

வேதசாத்திரம் பார்க்க;see {}.

     “வேதநூற் பிராய நூறு” (திவ். திருமாலை.3);

வேதனம்

வேதனம் vētaṉam, பெ.(n.)

   பொன் (யாழ்.அக.);; gold,

 வேதனம்1 vētaṉam, பெ. (n.)

   1. கூலி; hire. (Loc);.

   2. கூலியாகக் கொடுக்கப்படும் சம்பளம்; salary, monthly

 wages.

 வேதனம்2 vētaṉam, பெ. (n.)

   1. அறிவு; knowledge, wisdom.

   வேதனவடிவானான் (ஞானவா. உத்தா. 68);;   2. வேதம்; the {}.

வேதனத்ரய வேளே நமோநம (திருப்பு. 996);

   3. உணர்ச்சி (சுக்கிரநீதி. 98);; feeling, sensation.

   4. வேதனை (யாழ்.அக.);; pain, torment, agony.

 வேதனம்3 vētaṉam, பெ. (n.)

   பொன் (யாழ். அக.);; gold.

 வேதனம்4 vētaṉam, பெ. (n.)

   துளைக்கை; piercing, perforating.

கர்ண வேதனச் சடங்கு.

வேதனா

 வேதனா vētaṉā, பெ.(n.)

   செவ்விறகு; red fuel or red feather.

வேதனி

வேதனி1 vētaṉi, பெ.(n.)

   வெந்தயம்; fenugreek.

 வேதனி2 vētaṉi, பெ.(n.)

   நோயை உண்டாக்குவது; that which causes pain or disease.

 வேதனி vētaṉi, பெ. (n.)

   யானையின் காது (செவி);களைத் தொளையிடுங் கருவி (யாழ். அக.);; an instrument for perforating elephant’s ear.

வேதனை

வேதனை vētaṉai, பெ.(n.)

   1. நோய்; disease.

   2. துன்பம்; suffering, affliction.

வேதனைதீர்தல்

 வேதனைதீர்தல் vētaṉaitīrtal, பெ.(n.)

   வருத்தந் தீர்தல்; being releived off pain.

     [வேதனை + தீர்தல்]

வேதனைப்படல்

வேதனைப்படல் vētaṉaippaḍal, பெ.(n.)

   1. துன்பப்படல்; being tormented.

   2. நோயினால் வருந்தல்; suffering from disease or pain.

     [வேதனை + படல்]

வேதன்

வேதன்1 vētaṉ, பெ.(n.)

   கடுக்காய் (மலை);; chebulic myrobalan.

 வேதன் vētaṉ, பெ. (n.)

   1. பிரமன்(பிங்.);;{}.

   2. கடவுள்; God.

     “வேதனை வெண்புரி நூலனை” (திவ். இயற். திருவிருத்.79);;

   3. வியாழன் (பிங்.);; Brhaspati.

வேதபாகியன்

 வேதபாகியன் vētapākiyaṉ, பெ. (n.)

   வேதத்துக்குப் புறம்பானவன்; one who does not believe in the authority of the {}.

வேதபாகியம்

 வேதபாகியம் vētapākiyam, பெ. (n.)

   வேதத்துக்குப் புறம்பானது; that which is outside the authority of the {}.

     [Skt. {} → த. வேதபாகியம்]

வேதபாடசாலை

 வேதபாடசாலை vētapāṭacālai, பெ. (n.)

   வேதங்கள் கற்பிக்கப்படும் பள்ளிக்கூடம்; school where the {} are taught.

வேதபாடம்

வேதபாடம் vētapāṭam, பெ. (n.)

   1. வேதமோதுகை; study of the {}.

   2. வேத மோதும் முறை; the mode of reciting the {}.

வேதபாரகன்

வேதபாரகன் vētapāragaṉ, பெ. (n.)

   1. (வேதங் கரைகண்டவன்); பிராமணன்; brahmin, as well versed in the {}.

   மணிமுத்தின் சிவிகை நின்றும் வேதபாரக ரிழிந்து;   2. யூதவேதத்தை விளக்குபவன்; study of the {}.

   3. வேத மோதும் முறை; scribe, expounder of the jewish law.

வேதபாராயணன்

 வேதபாராயணன் vētapārāyaṇaṉ, பெ. (n.)

   வேதத்தை ஒதுபவன்(அஷ்டப். திருவேங்கடமா. காப்பு);; reciter of the {}.

வேதபாராயணம்

 வேதபாராயணம் vētapārāyaṇam, பெ. (n.)

   கோயில் முதலிய இடங்களிற் பிராமணர் வேதத்தை ஓதுகை; chanting of the {}, in temple, etc., by Brahmins.

வேதபீசம்

 வேதபீசம் vētapīcam, பெ. (n.)

   வேதமூலமான பிரணவ மந்திரம்; the mystic letter om or pranava, as the source or origin of the {}.

வேதபுட்பி

 வேதபுட்பி vētabuṭbi, பெ.(n.)

   வெள்ளை காக்கணம்; a twiner bearing white flowers-fitoria ternatea (albiflora);.

வேதப்பிரமாணம்

 வேதப்பிரமாணம் vētappiramāṇam, பெ. (n.)

   வேதமாகிய அளவை; the {},

 considered as a source of right knowledge.

வேதப்பிரமாணியம்

 வேதப்பிரமாணியம் vētappiramāṇiyam, பெ. (n.)

   வேதம் பிரமாணமாயிருக்குந் தன்மை; the authority or evidence of the {}.

     “பெளத்தர் வேதப்பிராமாணியம் கொள்வதில்லை”

வேதப்பிரான்

வேதப்பிரான் vētappirāṉ, பெ. (n.)

வேதநாயகன் பார்க்க;see {}.

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் (திவ். பெரியதி. 5,2,1);.

வேதப்புரட்டு

வேதப்புரட்டு vētappuraṭṭu, பெ. (n.)

   1. வேதவாக்கியங்களைப் புரட்டிக் கூறுகை; tampering with the {}.

   2. புறமதம்; Heresy.

வேதமத்தியம்

வேதமத்தியம் vētamattiyam, பெ. (n.)

   தாளத்துக்குரிய யதியுள் ஒன்று (பரத. தாள. 52.);; a yati in time-measure.

வேதமந்திரம்

 வேதமந்திரம் vētamandiram, பெ. (n.)

வேதத்திலுள்ள மந்திரம்;{}

 mantra.

வேதமாதா

வேதமாதா vētamātā, பெ. (n.)

 mantra, as the mother of the {}.

     “வேதமாதவென விமலமுற்றிடும் ……காயத்திரி” (சேதுபு. சேதுபல. 131.);;

வேதமாந்தர்

வேதமாந்தர் vētamāndar, பெ. (n.)

   பார்ப்பனர்; Brahmins.

     “வேதமாந்தர் வேந்தரென்று” (நம்பியகப். 75.);.

வேதமார்க்கம்

வேதமார்க்கம் vētamārkkam, பெ. (n.)

   வேதத்திற் சொல்லப்பட்ட மதம் (பிங்.); (தக்கயாகப் 7, உரை);;{} religion or faith.

வேதமுதல்வன்

வேதமுதல்வன் vēdamudalvaṉ, பெ. (n.)

   1. கடவுள்; God.

     “வேதமுதல்வனென்ப தீதற விளங்கிய திகிரியோனே” (நற். 1);

   2. பிரமன்; Brahma.

     “வேதமுதல்வற் பயந்தோன்” (சிலப்.14, 48.);;

வேதமுதல்வி

வேதமுதல்வி vēdamudalvi, பெ. (n.)

   1. நாமகள் (சரசுவதி);;{}

   2. திருமகள் இலக்குமி;{}.

   3. மலைமகள், பார்வதி;{}.

வேதமுனி

வேதமுனி vētamuṉi, பெ. (n.)

வேதவியாசன் பார்க்க;see {}.

     “வேதமுனி சூதமுனி” (திருக்காளத். பு. அவையடக். 1);.;

வேதம்

வேதம்1 vētam, பெ. (n.)

   1. இந்து சமயங்களுக்குரிய சுருதி (பிங்.);; the {}, the sacred books of the Hindus.

   2. விவிலியநூல்; the bible.

   3. சாத்திரம்; art of science.

     “ஆயுர்வேதம், தனுர்வேதம்”

   4. சமயமுதனூல்; religious code of any sect.

   5. அறிவு (யாழ்.அக.);; knowledge.

   6. விவரிக்கை (யாழ். அக.);; exposition.

 வேதம்2 vētam, பெ. (n.)

   1. துளையிடுகை; boring, drilling.

     “வேத நன்மணி” (கம்பரா. மீட்சிப். 29);.

   2. ஆழம் (யாழ். அக.);; depth.

வேதரஞ்சகன்

வேதரஞ்சகன் vētarañjagaṉ, பெ. (n.)

   பிராமன்; Brahma.

     “வேதரஞ்சகன் மால்புரந்தான்” (செளந்த. 26.);;

வேதரிக்கண்டபூடு

 வேதரிக்கண்டபூடு vētarikkaṇṭapūṭu, பெ.(n.)

   பிரண்டை; a climbing planti-vitex quadrangularis.

வேதர்

வேதர் vētar, பெ. (n.)

   பிராமணர்; Brahmins.

     “வேதரார்த்தனர்” (கந்தபு. தெய்வயா. 195);;

     [Skt. {} → த. வேதம் – வேதர்]

வேதவரிசி

 வேதவரிசி vētavarisi, பெ.(n.)

   வாலுவையரிசி; seeds of gymnosporia motana.

வேதவல்லி

 வேதவல்லி vētavalli, பெ.(n.)

   ஒரு வகை பூண்டு; a plant-acacia farniciana alias vechellia farniciana.

   இது பெரிய செடியாகவும் அல்லது மரமாகவும் இருக்கும், முட்களுண்டு, இதன் விதைகள் இரண்டு வரிசையாயிருக்கும், பூக்கள் உருண்டை வடிவமாயும் இலைகள் தழைகளின் இரு பக்கங்களிலும் உண்டு. வங்காளம், அசாம் மற்றெங்கும் விளையும், இதிலிருந்து சிறப்பாக பிசின் எடுப்பதுண்டு;இதன் பூ வாலையில் வைத்தால் வாசனைத் திரவியம் வரும்,

மார்கழி, தையில் பூ பூக்கும்.

வேதவாக்கியசொரூபம்

வேதவாக்கியசொரூபம் vētavākkiyasorūpam, பெ. (n.)

   விதிவாதம் அர்த்தவாதம், மந்திரவாதம், நாமதேயம் என்று நான்கு வகைப்படும் வேதவாக்கிங்களின் இயல்பு;(விவேகசிந். வேதாந்தபரிச்.5.);; nature of {} text, of four kinds, viz., viti-{}, {}, mantira-{}, {}.

வேதவாக்கியம்

வேதவாக்கியம் vētavākkiyam, பெ. (n.)

   1. வேதத்திலுள்ள சொற்றொடர்;{}

 text.

   2. உண்மை; gospel.

     “அவன் சொல்வது வேத வாக்கியமாக வழங்குகின்றது”

வேதவாக்கு

 வேதவாக்கு vētavākku, பெ. (n.)

வேதவாக்கியம் பார்க்க;see {}.

வேதவாணர்

வேதவாணர் vētavāṇar, பெ. (n.)

   பார்ப்பனர்; Brahmins. வேதவாணர் ……. நீதியால் வணங்குகின்ற நீர்மை (திவ். திருச்சந். 9);.

வேதவாதம்

 வேதவாதம் vētavātam, பெ. (n.)

   வைதிக மதத்தைப்பற்றிய வாதம்; exposition of the {} religion.

வேதவாதச் சருக்கம் (நீல.);

வேதவாரிதி

 வேதவாரிதி vēdavāridi, பெ.(n.)

   கத்தூரியலரி; a variety of nerium odorum,

வேதவிண்ணப்பம்

 வேதவிண்ணப்பம் vētaviṇṇappam, பெ. (n.)

   சிறப்பான காலங்களிற் கோயில் முதலிய இடங்களில் வேத மோதுகை; the chanting of the {}, in temples, etc. on ceremonial occasions.

வேதவித்தாரம்

 வேதவித்தாரம் vētavittāram, பெ.(n.)

வாலைப்பூநீர் பார்க்க;see valai_p-pu-nir.

     [வேதம் + வித்தாரம்]

வேதவித்து

வேதவித்து vētavittu, பெ. (n.)

   1. வேதங்களை நன்கறிந்தவன்; one who is learned in the {}.

     “வேதவித்தாய மேலோன் மைந்த” (கம்பரா. பாசு. 36);;

   2. கடவுள்; God.

     “வேதியனை வேதவித்தை” (தேவா. 162,7);;

வேதவியாக்கியானம்

வேதவியாக்கியானம் vētaviyākkiyāṉam, பெ. (n.)

   1. வேதத்தின் விளக்கவுரை; one commentaries on the {}.

   2. விவிலியநூற்பொருளை விவரிக்கை; expounding the Bible. (வின்.);

வேதவியாசன்

வேதவியாசன் vētaviyācaṉ, பெ. (n.)

   1. (வேதத்தைத் தொகுத்தோன்); வியாச முனிவன் (தக்கயாகப் 334, உரை.);;{}, as the compiler of the {}.

வேதவியாதன்

 வேதவியாதன் vētaviyātaṉ, பெ. (n.)

   வேதவியாசன் பார்க்க;

வேதவிருத்தம்

வேதவிருத்தம்1 vētaviruttam, பெ. (n.)

   1. வேதத்துக்கு மாறானது; that which is contrary to or against the {}.

 வேதவிருத்தம்2 vētaviruttam, பெ. (n.)

   வேதபோதனை (யாழ்.அக.);; teaching of the {}.

     [Skt. {}+vrtta → த. வேதவிருத்தம்]

வேதவிருத்தி

 வேதவிருத்தி vētavirutti, பெ. (n.)

வேதமோதற்காக அளிக்கப்படும் இறையிலி நிலம்;(lnsc.);

 lnam land for reciting the {}.

வேதவீணை

வேதவீணை vētavīṇai, பெ. (n.)

   வீணைவகை; a kind of {}.

     “நாரதாதிகள் வேதவீணை தொடங்கவே

     ” (தக்கயாகப். 623, விசேடக்.);;

வேதவேதாந்தன்

வேதவேதாந்தன் vētavētāndaṉ, பெ. (n.)

   கடவுள்; God, as revealed in the {} and the {}.

     “விண்ணிலா ரறிகிலா வேதவேதாந்தனூர்” (தேவா. 399,4);;

வேதவேத்தன்

வேதவேத்தன் vētavēttaṉ, பெ. (n.)

   வேதவேத்தியன் பார்க்க;வேதவேத்தனு மவன் மலர்த் தாண்மிகை வீழ்ந்தான் (கம்பரா. மீட்சிப். 116.); see {}.

வேதவேத்தியன்

 வேதவேத்தியன் vētavēttiyaṉ, பெ. (n.)

   வேதத்தினாலே அறியக்கூடியவனான கடவுள்; God, as knowable through the {}.

வேதவொலி

வேதவொலி vētavoli, பெ. (n.)

   வேதத்தை யோதும் ஒலி; the sound of chanting the {}.

     “வேதவொலியும் விழாவொலியும்” (திவ். திருவாய். 7,3,1);;

வேதாகமம்

வேதாகமம் vētākamam, பெ. (n.)

   1. வேதமும் ஆகமமும்; the {} and the {}.

     “வேதாகமங்கள் விரிப்போரும்” (அருட்பா, நெஞ்சறி. 668);;

   2. விவிலிய நூல்; the Bible. (Chr);.

வேதாக்கினி

 வேதாக்கினி vētākkiṉi, பெ.(n.)

   வேதமந்திரத்தினால் வளர்க்கப்படும் காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்னும் மூவகைத் தீ (அக்கினி);; sacred fire, of three kinds, viz., {}-pattiyam, {}.

     [Skt. {} → த. வேதாக்கினி]

வேதாக்கினிகுமரன்

 வேதாக்கினிகுமரன் vētāggiṉigumaraṉ, பெ.(n.)

   குப்பைமேனி; rubbish plantacalypha indica.

வேதாங்கம்

வேதாங்கம் vētāṅgam, பெ. (n.)

சிட்சை வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப் பொருளை யுணர்தற்குரிய கருவி;(மணி. 27, 100 – 102, உரை);.

 works, regarded as helps to the study of the {} six in number, viz., {}, cantacu, niruttam, {}.

வேதாசாரியர்

 வேதாசாரியர் vētācāriyar, பெ. (n.)

   வேதப்பொருளைக் கற்பிக்கும் (உபதேசிக்கும்); ஆசிரியர்; preceptor who teaches the {}.

வேதாத்தியயனம்

 வேதாத்தியயனம் vētāttiyayaṉam, பெ. (n.)

   வேதமோதுகை; chanting of the {}.

வேதாத்தியாபகன்

 வேதாத்தியாபகன் vētāttiyāpagaṉ, பெ. (n.)

   வேதத்தை யோதுவிப்பவன்; on who teaches the {}.

வேதாத்தியாபனம்

 வேதாத்தியாபனம் vētāttiyāpaṉam, பெ. (n.)

   வேதமோதுவிக்கை; teaching the {}.

வேதாத்தியாயி

 வேதாத்தியாயி vētāttiyāyi, பெ. (n.)

   வேதமோதுவோன்; one who chants the {}.

வேதாந்தசாரம்

 வேதாந்தசாரம் vētāndacāram, பெ.(n.)

   தாமரைக் கிழங்கு; root of lotus.

வேதாந்தசூத்திரம்

 வேதாந்தசூத்திரம் vētāndacūttiram, பெ. (n.)

   வியாசமுனிவர் இயற்றிய உத்தரமீமாஞ்சை சூத்திரம்; a treatise on{} by {}, in the form of {}.

வேதாந்தசூளாமணி

 வேதாந்தசூளாமணி vētāndacūḷāmaṇi, பெ. (n.)

   சிவப்பிரகாசர் இயற்றிய வேதாந்தசமய நூல்; a metaphysical treatise on the Advaita philosophy, by {}.

வேதாந்ததேசிகர்

வேதாந்ததேசிகர் vētāndatēcigar, பெ. (n.)

   14ஆம் நூற்றாண்டில் விளங்கியவரும் மாலிய (வைஷ்ணவ);ருள் வடகலையாரால் தலைமையகப் போற்றப்படுபவருமான மாலிய (வைஷ்ண);வாசாரியர் (தேசிகப். வாழித். 3);; a famous {} acarya who lived in 14th C., specially revered by the vatakalai sect of {}.

வேதாந்தபாம்பாட்டி

 வேதாந்தபாம்பாட்டி vētāndapāmbāṭṭi, பெ.(n.)

   பாம்பாட்டி சித்தர்; one of the pampatti siddhar.

வேதாந்தமோது-தல்

வேதாந்தமோது-தல் vēdāndamōdudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உத்தரமீமாஞ்சை கற்றல்; to study the {}.

   2. ஞானிபோலத் தத்துவம் பேசுதல்; to speak with affected wisdom or spirituality.

நீ என்னிடத்து வேதாந்தமோத வேண்டாம்.

வேதாந்தம்

வேதாந்தம் vētāndam, பெ. (n.)

   1. உபநிடதம்; the upaniasads, as the concluding portions of {}.

     “வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” (திவ். பெரியாழ். 4,3,11);;

   2. வியாசராற் செய்யப்பட்டதும் உபநிடதங்களின் பொருளைக் கொண்டதுமான வேதாந்தசூத்திரத்திற் கூறும் உத்தரமீ மாஞ்சை மதம் (தக்கயாகப். 246, உரை.);; the Uttara- {} system of philosophy founded by {} and expounded in his {}, as containing the essence of the upanisads.

வேதாந்தவாதி

 வேதாந்தவாதி vētāndavāti, பெ.(n.)

   துருசு (மயில்துத்தும்);; blue vitriol, copper sulphate.

வேதாந்தாசாரியர்

வேதாந்தாசாரியர் vētāndācāriyar, பெ. (n.)

வேதாந்ததேசிகர் பார்க்க;see {}. (தேசிகப். வாழித். 5.);

வேதாந்தி

வேதாந்தி vētāndi, பெ. (n.)

   1. உத்தரமீமாஞ்சையாகி வேதாந்தக் கொள்கையினன்; follower of the {} or Uttara-{} system, of philosophy.

   2. அத்துவைதி (சி.சி. அளவை, 1, மறைஞா.);; follower of the Advaita system.

   3. உலகப் பற்றற்றவ-ன்-ள்; unworldly person.

வேதாப்பியாசம்

 வேதாப்பியாசம் vētāppiyācam, பெ. (n.)

   வேதங்களைப் பயிலுகை; learning the {}.

வேதாரன்

 வேதாரன் vētāraṉ, பெ.(n.)

   பல்லி; lizard.

வேதாரம்பம்

 வேதாரம்பம் vētārambam, பெ. (n.)

   சிராவணதினத்தினன்று வேதாத்தியயனந் தொடங்குஞ் சடங்கு; the ceremony of beginning the study of the {}, on the Upakarma day.

வேதாள ஆட்டம்

 வேதாள ஆட்டம் vētāḷaāṭṭam, பெ. (n.)

மரத்தாற் செய்யப்பட்ட வேதாளத்தின் கோர முகமூடியை அணிந்து ஆடும் ஆட்டம்

 rocking dance of a demon performed by wearing the gruesome mask of a demon.

     [வேதாளம்+ஆட்டம்]

வேதாளக்கன்னி

 வேதாளக்கன்னி vētāḷakkaṉṉi, பெ.(n.)

 flous

   நிலவாகை; a tree which see.

வேதாளம்

வேதாளம் vētāḷam, பெ.(n.)

   1. பேய் (திவா.);; demon, ghost, goblin, vampire.

   2.பிசாசு; devil.

     “வேதாள கடகமேய மாயோளே” (தக்கயாகப். 104);,

 வேதாளம் vētāḷam, பெ. (n.)

   1. பேய் (திவா.);; demon, ghost, goblin, vampire.

   2. பிசாசு; devil.

     “வேதாள கடகமேய மாயோளே” (தக்கயாகப். 104.);.

வேதாளி

 வேதாளி vētāḷi, பெ. (n.)

   காளி (பிங்.);; Kali.

     [Skt. {} → த. வேதாளி]

வேதாளிகர்

வேதாளிகர் vētāḷigar, பெ. (n.)

வைதாளிகர் பார்க்க;(சிலப்.5, 48.); (பிங்.); see {}.

வேதாளியர்

 வேதாளியர் vētāḷiyar, பெ. (n.)

   வைதாளிகர் பார்க்க;

வேதி

வேதி1 vētittal, செ.குன்றாவி.(v.t.)

   1. வேதி பார்க்க;see vedi.

   2. உலோகத்தை மற்றொன்றாக மாற்றுதல்; transmuting.

   3. பிளத்தல்; splitting, dividing.

 வேதி2 vēti, பெ.(n.)

   1. வேறாக்கல்; to transmute metals as in alchemy.

   2. விவகாரப்படுத்தல்; to practice alchemy.

   3. பிரித்தல்; chemically decomposing.

   4. பேதி பார்க்க;see pedi.

 வேதி1 vēti, பெ. (n.)

   1. அறிந்தவன்; one who knows.

     “வேதிபோற்றி விமலாபோற்றி” (திருவாச. 4, 106.);;

   2. பிரமன் (அரு.நி.);; Brahma.

   3. பண்டிதன் (இலக். அக.);; learned person.

 வேதி2 vēti, பெ. (n.)

   1. மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை; low platform within a house, for sacrifice, weddings, etc.,

     “மைந்தனைச் செம்பொன்வேதி யெறிக்குங் கிரணமணிப் பீடம தேற்றினரே” (பாரத. திரெள. 91);

   2. வேதிகை1 பார்க்க;see{}.

   கீதசாலை வேதிநிறைய (பெருங். உஞ்சைக். 34, 224.);;   3. மதில் (சூடா.);; outer wall of a fortification;

 compound wall.

 வேதி3 vētittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வேறுப்படுத்துதல் (யாழ். அக.);; to cause change.

   2. தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுதல்; to change, transmute, as baser metals.

     “புகலிக்கிறை….. வேதிக்க வுடம் பொரு பொன்மயமாயொளிவிட்டு” (தக்கயாகப். 217);.

   வெந்தழலி னிரதம்வைத் தைந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் (தாயு. தேசோ. 8.);;   3. முரண் (விரோதப்);படுத்துதல்; to render hostile.

 வேதி4 vēti, பெ. (n.)

   தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை; transmuting.

     “குளிகை கொடு பரிசித்து வேதி செய்து” (தாயு. சின்மயா.7);;

 வேதி5 vētittal,    4 செ.கு.வி. (v.i.)

   நலிதல்; to oppress.

     “வேதியா நிற்கு மைவரால்” (திவ். திருவாய். 7,1,3);.

வேதிகை

வேதிகை1 vētigai, பெ.(n.)

   பிரிக்குந் தன்மை; the act of chemical decomposition.

 வேதிகை2 vētigai, பெ.(n.)

   1. திண்ணை (பிங்.);; plat form, pial.

     “பவளத் தரிள்காற்பைம்பொன் வேதிகை” (சிலப். 5, 148);.

   2. மணமேடை (பிங்.);; marriage dais.

   3. காலுள்ள இருக்கை மேடை (கோயிலொ. 15);; stool, pedestal.

   4. கடவுகளுக்கு உணவாக உயிர்களைக் கொன்று காணிக்கையிடும் மேடை; altar, raised platform for oblations of rice, etc. in temple.

   5. பூசனை செய்யும் இடம்; place of worship (saiva.);.

   6. பலகை (அக.நி.);; plank.

   7. தெரு (பொதி.நி.);; street.

 வேதிகை1 vētigai, பெ. (n.)

   1. திண்ணை (பிங்.);; platform, pial.

     “பவளத் திரள்காற் பைம் பொன் வேதிகை” (சிலப். 5, 148);.

   2. மணமேடை;(பிங்.);

 marriage dais.

   3. காலுள்ள பீடம் (கோயிலொ.);; stool, pedestal.

   4. பலிபீடம் (யாழ். அக.);; altar, raised platform for oblations of rice, etc., in temples.

   5. பூசை செய்யும் இடம் (Loc); ({}.);

 place of worship.

   6. பலகை (அக. நி.);; plank.

   7. தெரு (பொதி. நி.);; street.

     [Skt. {} → த. வேதிகை]

 வேதிகை2 vētigai, பெ. (n.)

   1. வேறுபடுத்துகை; transmuting.

     “வேதிகை செய்தெய்வமணி கொல்லோ” (கம்பரா. உருக். 68);;

   2. கேடகம்;   3. அம்பு (பொதி. நி.);; arrow.

     [Skt. {} → த. வேதிகை]

வேதிதம்

வேதிதம் vēdidam, பெ. (n.)

   1. துளைக்கை; perforating, drilling.

   2. துளையுடைப்பொருள்; tube.

     [Skt. {} → த. வேதிதம்]

வேதித்தார்

வேதித்தார் vētittār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “வேதித்தார் புரமூன்றும்” (தேவா. 159, 9);;

வேதினம்

வேதினம் vētiṉam, பெ.(n.)

   ஈர்வாள்; saw.

     “வேதினத்துப்பவும்” (சிலப். 14, 176);.

வேதிப்பான்

வேதிப்பான் vētippāṉ, பெ. (n.)

   வேதகஞ்செய்வோன்; one who transmutes.

     “தானெல்லாம் வேதிப்பா னாகி” (சி.சி.11, 12);;

வேதியன்

வேதியன் vētiyaṉ, பெ.(n.)

   சீனக்காரம் (மூ.அ.);; alum.

 வேதியன்1 vētiyaṉ, பெ. (n.)

   1. பார்ப்பனன்; Brahmin.

     “நான்மறை வேதியர்தேத்து” (திருவாலவா. 40,2);

   2. பிரமன்;{}.

     “வேதியன் முதலாவமரரும்” (கல்லா. 25 13);

   3. கடவுள்; God.

     “வேதியா வேதகீதா” (தேவா. 870,1);.

 வேதியன்2 vētiyaṉ, பெ. (n.)

   சீனக்காரம் (மூ.அ.);; alum.

வேதியியல்

 வேதியியல் vētiyiyal, பெ.(n.)

   பொருள்களில் மூலக் கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை வேதியியல்; chemistry.

வேது

வேது1 vētu, பெ.(n.)

   1. வெம்மை; heat, warmith.

     “வேது செய் சாந்தமும்” (சீவக. 2675);.

   2. சூடான ஒற்றடம; fomenatation.

     “வேதினொற்றி” (கலி. 106);.

   3. கார மருந்து (சங்.அக.);; caustics pungent medicine.

     [வெய்து → வேது] [வே.க.பக். 130]

 வேது2 vētu, பெ.(n.)

   மூலிகை அல்லது சரக்குகளை தண்ணிரிற் போட்டுக் காய்ச்சியிறக்கி, அந்த ஆவியை வேதனையுள்ள இடத்தில் படும்படி செய்தல், அதாவது ஆவி; vapour bath with using drugs or without using drugs.

     [வெய்து → வேது]

 வேது3 vētu, பெ.(n.)

   1. தண்ணிர்; water.

   2. வெய்து; that which is warm.

   3. வேர்வையுண்டாக்கு மருந்து; sudorific medicine – that which produces perspirationDiaphoretic.

வேதை

வேதை vētai, பெ.(n.)

   1. பொன்னாக்கல்; transmuting into gold.

   2. துயரம்; grief.

     “ஏதையா விந்த வேதை” (இராமநா. கிசு. 14);.

     [வேது → வேதை]

வேதைக்கனிப்பூடு

 வேதைக்கனிப்பூடு vētaikkaṉippūṭu, பெ.(n.)

   நாய்வேளை; a plant – cleome viscosa.

வேதைக்கன்னி

 வேதைக்கன்னி vētaikkaṉṉi, பெ.(n.)

வேதைக்கணிப்பூடு பார்க்க;see Vedai-k-kanippudu.

வேதைக்குரு

 வேதைக்குரு vētaikkuru, பெ.(n.)

   மட்டரக உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சியில் பயன்படுத்தும் உப்பு; universal salt or substance used in alchemy.

     [வேதை + குரு]

வேதைசத்துரு

 வேதைசத்துரு vētaisatturu, பெ.(n.)

   வெள்ளிய மணல்; tin-ore.

     [வேதை + சத்துரு]

வேதைசிந்தூரம்

 வேதைசிந்தூரம் vētaisindūram, பெ.(n.)

   உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து; a red calcified powder used to transmute base metal into gold.

     [வேதை + சிந்துாரம்]

வேதைமருந்து

 வேதைமருந்து vētaimarundu, பெ.(n.)

   வேதியல்; elixir.

     [வேதை + மருந்து]

வேதைமுகம்

 வேதைமுகம் vētaimugam, பெ.(n.)

   உருக்குமுகம்; melting point.

     [வேதை + முகம்]

வேதையாடல்

 வேதையாடல் vētaiyāṭal, பெ.(n.)

   சமராடுதல், (வாதஞ் செய்தல்);; practising alchemy.

     [வேதை + ஆடல்]

வேதைவேங்கை

 வேதைவேங்கை vētaivēṅgai, பெ.(n.)

உதிர வேங்கை,

 a tree-pterocarpus marsupium.

     [வேதை + வேங்கை]

வேத்தன்

வேத்தன்1 vēttaṉ, பெ.(n.)

   அறிந்தோன் (இலக்.அக.);; one who knows.

 வேத்தன்2 vēttaṉ, பெ.(n.)

வேத்தியன் பார்க்க (கம்பரா. மீட்சிப்.116);;see vettiyan.

வேத்தவை

வேத்தவை vēttavai, பெ.(n.)

   அரசவை; royal assembly.

     “இசைபெறு திருவின் வேத்தவை” (மலைபடு. 39);.

     [வேந்து + அவை3]

வேத்தாள்

 வேத்தாள் vēttāḷ, பெ.(n.)

   வேறு ஆள், சூழ்நிலைக்கு அன்னியர்; the other person.

வேத்தியன்

 வேத்தியன் vēttiyaṉ, பெ.(n.)

   அறியத்தக்கவன்; one who is knowable.

     “சட்சுவினால் வேத்தியன்”

வேத்தியன் மண்டபம்

வேத்தியன் மண்டபம் vēttiyaṉmaṇṭabam, பெ.(n.)

   அரசனது பேரோலக்க மண்டபம்; durbar hall of a king.

     “வேத்தியன் மண்டப மேவிய பின்னர்” (சிலப். 28, 79);.

     [வேத்தியன் + மண்டபம்]

வேத்தியன்மலிவு

வேத்தியன்மலிவு vēttiyaṉmalivu, பெ.(n.)

   மறமன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ.2,13);; theme in which warriors expatiate upon the greatness of a heroic-king.

     [வேத்தியன் + மலிபு]

வேத்தியம்

வேத்தியம் vēttiyam, பெ.(n.)

   1. அறியப் படுவது; that which is known.

     “அநுபலத்தி” (சி.சி. அளவை, 1, சிவாக. பக.113);.

   2. அடையாளம் (யாழ்.அக.);; mark, sign.

வேத்தியல்

வேத்தியல் vēttiyal, பெ.(n.)

   1. வேந்தனது தன்மை (நன். 409, மயிலை);; kingly nature.

   2. அரசன்முன் ஆடும் கூத்துவகை; a kind of dance performed in the presence of a king, opp. to potu-v-iyal.

     “வேத்தியல் பொதுவியலென விருதிறத்துக் கூத்தும்” (சிலப். 14, 148, உரை);.

   3. வேத்தியன்மலிபு பார்க்க (புறநா.அரும்.);;see vettiyan-malipu.

     [வேந்து + இயல்]

வேத்திரகரன்

 வேத்திரகரன் vēttiragaraṉ, பெ.(n.)

   நந்திதேவன் (இலக்.அக.);; nant.

வேத்திரச்சாய்

 வேத்திரச்சாய் vēttiraccāy, பெ.(n.)

   பிரப்பங்கோரை (தைலவ.);; sedge.

     [வேத்திரம் + சாய்]

வேத்திரதரன்

வேத்திரதரன் vēddiradaraṉ, பெ.(n.)

   1. வாயிற்காவலன் (வின்.);; gate-keeper.

   2. நந்திதேவன் (யாழ். அக.);; nanti.

   3. கட்டியக்காரன் (யாழ்.அக.);; herald, panegyrist.

வேத்திரத்தாள்

 வேத்திரத்தாள் vēttirattāḷ, பெ.(n.)

   பிரப்பங் கிழங்கு (தைலவ.);; tuber of ratten reed.

     [வேத்திரம் + தாள்]

வேத்திரபாணி

வேத்திரபாணி vēttirapāṇi, பெ.(n.)

   கூட்டத்தை ஒதுக்குதற்குக் கையிற் பிரம்பு தாங்கியுள்ள பணியாளன் (கோயிலொ. 57);; attendant who, with a cane in his hand, maintains order in a crowd.

வேத்திரப்படை

வேத்திரப்படை vēttirappaḍai, பெ.(n.)

   பிரம்பாகிய கருவி; cane, as a weapon.

     “வேத்திரப் படையாற் றாக்கி” (திருவிளை. பாயி. 17);.

     [வேத்திரம் + படை]

 வேத்திரப்படை vēttirappaḍai, பெ. (n.)

   பிரம்பாகிய ஆயுதம்; cane as a weapon.

     “வேத்திரப்படையாற் றாக்கி” (திருவிளை. பாயி. 17);.

வேத்திரம்

வேத்திரம்1 vēttiram, பெ.(n.)

   உப்பங்கோரை; a kind of grass.

 வேத்திரம்2 vēttiram, பெ.(n.)

   1. பிரம்பு; rattan.

     “வேத்திரக் கரத்தோர்” (தணிகைப்பு. அகத்தி. 84);.

   2. அம்பு (வின்.);; arrow.

 வேத்திரம்3 vēttiram, பெ.(n.)

   இலந்தை (மலை.);; jujube tree.

வேத்திராசனம்

 வேத்திராசனம் vēttirācaṉam, பெ. (n.)

   பிரப்பம்பாய் (இலக். அக.);; rattan mat.

     [Skt. {} → த. வேத்திராசனம்]

வேநிபம்

 வேநிபம் vēnibam, பெ.(n.)

   வேப்ப மரம்; neem tree-melia indica.

வேந்தன்

வேந்தன்1 vēndaṉ, பெ.(n.)

   1. இமையவர் கோன்; indra.

     “வேந்தன் மேய தீம்புன லுலகமும்” (தொல். பொ.5);.

   2. அரசன்; king.

     “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே” (புறநா. 11);.

   3. பகலவன் 1 (சூரியன்); (சூடா.);;   4. திங்கள் (சந்திரன்); (சூடா.);; moon.

   5. வியாழன் (சூடா.);; brhaspati.

     [வேய் → வேய்ந்தோன் → வேந்தன்] (வே.க.பக் 121);

 வேந்தன்2 vēndaṉ, பெ.(n.)

   1. அரசமரம்; a tree-ficus religioga.

   2. வெள்ளிக்கோள்; venus.

   3. புதன்கோள்; mercury.

வேந்தன்தாரம்

 வேந்தன்தாரம் vēndaṉtāram, பெ.(n.)

   வாணகெந்தி; sulphur used in fire works.

     [வேந்தன் + தாரம்]

வேந்தன்பட்டை

 வேந்தன்பட்டை vēndaṉpaṭṭai, பெ.(n.)

   அரசம்பட்டை; bark of peepal tree-ficus relisiosa.

     [வேந்தன் + பட்டை]

வேந்தன்வெகுளி

 வேந்தன்வெகுளி vēndaṉveguḷi, பெ.(n.)

   கொடிய நஞ்சு; a kind of arsenic.

     [வேந்தன் + வெகுளி]

வேந்தர்படை

 வேந்தர்படை vēndarpaḍai, பெ.(n.)

   இந்திரகோபம்; an insect which is of red velvety appearance.

     [வேந்தர் + படை]

வேந்தவை

வேந்தவை vēndavai, பெ.(n.)

வேத்தவை பார்க்க;see vettavai.

     “இவ்வகை யுரைசெய விருந்த வேந்தவை” (கம்பரா. மந்திரப் 80);.

வேந்திசம்

 வேந்திசம் vēndisam, பெ.(n.)

   வெண்மிளகு; white pepper.

வேந்து

வேந்து vēndu, பெ.(n.)

   1. அரசபதவி; kingly position.

     “வேந்தறும் வேந்து கெடும்” (குறள், 899);.

   2. அரசியல் (பு.வெ. 4,5, உரை);; kingdom, royalty.

   3. பகலவன் (அரு.நி.);; indra.

   4. அரசன்; king.

     “வெந்தப்பின் வேந்து செறப்பட்டவர்” (குறள், 895);.

     [வே → வேந்து]

வேந்துரு

 வேந்துரு vēnduru, பெ.(n.)

   ஏழாந்தலை முறையில் தந்தைவழி முன்னோன் (வின்.);; ancestor in the sixth degree in the paternal line.

வேந்தோன்றி

வேந்தோன்றி vēndōṉṟi, பெ.(n.)

   1. காந்தள்; a climber-Gloriosa superba.

   2. கார்த்திகை கிழங்கு; plough root- Gloriosa superba.

 வேந்தோன்றி2 vēndōṉṟi, பெ.(n.)

   கலப்பைப் கிழங்கு (வின்.);; malabar glory lily.

வேனது

வேனது vēṉadu, பெ.(n.)

   1. வேண்டியது 1,2,3,4 பார்க்க;see vengiyadu.

   2. மனத்துத் தோன்றியது; whatever strikes the mind.

     “காணாமல் வேனதெல்லாங் கத்தலாம்” (தனிப்பா. i, 92, 6);.

     [வேண்டியது → வேணது]

வேனல்

வேனல்1 vēṉal, பெ.(n.)

   1. வெப்பம்; heat.

     “வேனன்மல்கி வெண்டேர் சென்ற வெந்நிலம்” (சீவக. 2578);.

   2. வேனிற்காலம்,

 hot season.

     “நீடிய வேனிற்பாணி” (சிலப். 8, வெண்பா,.2);.

   3. சினம்; anger.

     “வேனலானை யுரித்த விரட்டரே” (தேவா 960,5);.

     [வேனில் → வேனல்]

 வேனல்2 vēṉal, பெ.(n.)

   கானல்; glare.

     [வேனில் → வேனல்]

வேனிகா

 வேனிகா vēṉikā, பெ.(n.)

   கத்துரி; musk.

வேனின்மாலை

வேனின்மாலை vēṉiṉmālai, பெ.(n.)

   நூற்றொகுதி (பிரபந்தம்); தொண்ணுாற் றாறனுள் இளவேனில் முதுவேனில் என இருதிறப்பட்ட பருவங்களையும் சிறப்பித்துக் கூறும் நூல் (வீரசிங்காதன. அகளங்க.7);; a poem describing the two divisions of the hot season, ila-vénil and mudu-vénil, one of 96 pirapantam.

     [வேனின் + மாலை]

வேனிற்காலம்

 வேனிற்காலம் vēṉiṟkālam, பெ.(n.)

   கோடைக்காலம்; hot season, summer.

     [வேனில் + காலம்]

வேனிற்பச்சை

 வேனிற்பச்சை vēṉiṟpaccai, பெ.(n.)

தேட்கொடுக்கி பார்க்க;see ter-kodukki.

     [வேனில் + பச்சை]

வேனிற்பள்ளி

வேனிற்பள்ளி vēṉiṟpaḷḷi, பெ.(n.)

   நிலாமுற்றம்; open terrace of a house, as a place for resting and enjoying the moon light during summer.

     “மேனிலை மருங்கின் வேனிற் பள்ளியேறி” (சிலம் 8, 18);.

     [வேனில் + பள்ளி]

வேனிற்பாசறை

வேனிற்பாசறை vēṉiṟpācaṟai, பெ.(n.)

   போர் மேற் சென்ற அரசன் வேனிற்காலத்துத் தங்கும்படை வீடு (தொல்.பொ.76);; summer camp of a king waging war, dist. fr., kirtir-p-pâcara.

     [வேனில் + பாசறை]

வேனிற்று

 வேனிற்று vēṉiṟṟu, பெ.(n.)

வேனிற்பச்சை umsföð;see vénir-pacca.

     [வே → வேனிற்று]

வை

வேனிலவன்

வேனிலவன் vēṉilavaṉ, பெ.(n.)

வேனிலான் பார்க்க;see venilan.

     “வேனிலவன் மேனுதல் விழித்தவன்” (பாரத முதற்போர். 63);.

     [வேனில் + அவன்]

வேனிலான்

வேனிலான் vēṉilāṉ, பெ.(n.)

   காமன்; kama, as god of spring.

     “வேனிலான் வருநெறி வெண்முன் வித்தினார்” (சீவக. 2635);.

     [வேனில் + ஆன்]

வேனிலாளி

 வேனிலாளி vēṉilāḷi, பெ.(n.)

வேனிலான் பார்க்க (பிங்);;see vēnilan.

     [வேனில் + ஆனி]

வேனில்

வேனில்1 vēṉil, பெ.(n.)

   1. வேனிற்காலம் பார்க்க;see venir-kalam.

     “வேனிலாயினுந் தண்புனலொழுருந் தேனூர்” (ஐங்குறு. 54);

   2. இளவேனில்; spring season.

   3. வெப்பம்; heat.

     “வேனி னீடிய சுரனிறந்தோரே” (அகநா. 201);.

   4. கானல் (பிங்.);; mirage.

     [வே → வேனில்]

 வேனில்2 vēṉil, பெ.(n.)

   1. ஒப்பனை; decoration.

   2. அழகு; beauty.

   3. பொலிவு; splendour.

     [வேய் → வேனில்]

 வேனில்3 vēṉil, பெ.(n.)

   1. வெயிற்காலம்; summer season.

   2. எச்சிலுமிழ் நீர்; saliva-sputum.

     [வே → வேனில்]

வேனில்நீர்

வேனில்நீர் vēṉilnīr, பெ.(n.)

   1. எச்சில் நீர்; spit.

   2. உமிழ் நீர்; saliva.

     [வேனில் + நீர்]

வேன்

 வேன் vēṉ, பெ.(n.)

   மிகுதி (வின்.);; excess.

     [வியன் + வேன்]

வேன்காண்(ணு)-தல்

 வேன்காண்(ணு)-தல் vēṉkāṇṇudal, செ.கு.வி. (v.i.)

   அளவில் அதிகமாயிருத்தல்; to be in excess.

நெல்லை யளந்ததில் இரண்டு மரக்கால் வேன்கண்டது’.

     [வேன் + காண்[ணு]-,]

வேன்மகன்

வேன்மகன் vēṉmagaṉ, பெ.(n.)

   முருக பூசை செய்பவன்; the sacrificing priest.

     “வெறியவர் வெங்களத்து வேன்மகன்” (நாலடி, 16);.

     [வேன் + மகன்]

வேபனம்

வேபனம் vēpaṉam, பெ.(n.)

   அசைவு; movement, shaking.

     “வேயமொன்றில்லாத சிந்தை” (மேருமந் 99);,

 வேபனம் vēpaṉam, பெ.(n.)

   1. வேபம் பார்க்க (இலக்.அக.);;see vepam.

   2. பயம் (யாழ்.அக.);; fear.

வேபாக்கு

வேபாக்கு vēpākku, பெ.(n.)

   வேகுகை; heating, boiling.

     “வேபாக் கறிந்து” (குறள், 1128);.

வேபி-த்தல்

வேபி-த்தல் vēpittal, செ.கு.வி.(v.i.)

   நடுங்குதல்; to tremble, quake.

     “வேபியாப் பசியின் வாடி” (மேருமந். 366);.

வேப்பங்கள்

 வேப்பங்கள் vēppaṅgaḷ, பெ.(n.)

   வேப்ப மரத்தினின்று வடியும் நீர் (வின்.);; a sour juice that oozes from margosa trees, used medicinally.

     [வேப்பம் + கள்]

வேப்பங்காய்

 வேப்பங்காய் vēppaṅgāy, பெ.(n.)

     (the bitter); fruit of the neem tree.

     ‘அவனுக்கு கணக்கு என்றால் வேப்பங்காய்’.

     [வேப்பம் + காய்]

வேப்பங்குடிநீர்

வேப்பங்குடிநீர் vēppaṅguḍinīr, பெ.(n.)

   வேப்பம் பட்டையினின்று வடித்த கருக்குநீர்; decoction prepared from margosa bark.

     “இவ்வேப்பங்குடிநீரையன்றே நானுன்னைக் குடிக்கச் சொல்லுகிறது” (ஈடு. 1, 10, 4);.

     [வேப்பம் + குடிநீர்]

வேப்பங்கொட்டை

 வேப்பங்கொட்டை vēppaṅgoṭṭai, பெ.(n.)

   வேம்பின் விதை; seeds of margosa.

     [வேப்பம் + கொட்டை]

வேப்பங்கொழுந்து

 வேப்பங்கொழுந்து vēppaṅgoḻundu, பெ.(n.)

   வேப்பிலைக் கொழுந்து; tender leaf of margosa tree.

     [வேப்பம் + கொழுந்து]

வேப்பநெய்

வேப்பநெய் vēppaney, பெ.(n.)

வேப்பெண்ணெய் பார்க்க (பதார்த்த. 157);;see veрреnnеу.

     [வேப்பம் + நெய்]

வேப்பமுத்து

 வேப்பமுத்து vēppamuttu, பெ.(n.)

   வேம்பின் கொட்டை (வின்.);; seed of margosa fruit.

     [வேப்பம் + முத்து]

வேப்பமொட்டு

 வேப்பமொட்டு vēppamoṭṭu, பெ.(n.)

   வேப்பம் பூவின் அரும்பு; flower buds of margosa.

     [வேப்பம் + மொட்டு]

வேப்பம்பட்டை

வேப்பம்பட்டை vēppambaṭṭai, பெ.(n.)

   வேம்பின் பட்டை இப்பட்டையை விட காய்ச்சல் தளிர் காய்ச்சல் இவற்றிற்கு பயன்படுத்துவதுண்டு, இதன் சூரணம் கல்பமாக பயன்படுத்தலாம், இம்மருந்துக் குடிநீர் (கஷாயம்); காய்ச்சலுக்கு பிற்பாடு பலகாரியாகவும் பல புண்ணிற்கும் அக்கினி மந்தத்திற்கும் பயன்படுத்தலாம். வேப்ப மரத்தின் பட்டை, 100 வருடத்திய வேப்பம் பட்டையும் பூவரசம் பட்டையும் கற்பத்துக்குச் சாமானமாகக் கருதப்படும்; bark of margosa tree used a tonic in medicine-melia azardirachta.

     [வேப்பம் + பட்டை]

வேப்பம்பதினி

 வேப்பம்பதினி vēppambadiṉi, பெ.(n.)

   வேப்ப மரத்தினின்றிறக்கும் பதனி; unfermented liquid got from very aged neem tree.

     [வேப்பம் + பதினி]

வேப்பம்பருப்பு

 வேப்பம்பருப்பு vēppambaruppu, பெ.(n.)

   வேப்பங் கொட்டையினுட் பருப்பு, இது மருந்துப் பொருளாகப் பயன்படும்; the kernal of the seed of margosa, it is an general antidote.

     [வேப்பம் + பருப்பு]

வேப்பம்பாசி

வேப்பம்பாசி1 vēppambāci, பெ.(n.)

   ஒரு நீர்ப்பூண்டு; a water plant, moss-chara corallina.

     [வேப்பம் + பாசி]

 வேப்பம்பாசி2 vēppambāci, பெ.(n.)

   பயிரைக் கெடுக்கும் ஒரு வகைப் பாசி (யாழ்.அக.);; a kind of moss, affecting crops.

     [வேப்பம் + பாசி]

வேப்பம்பிசின்

 வேப்பம்பிசின் vēppambisiṉ, பெ.(n.)

   வேப்ப மரத்தின் பிசின்; gum of margosa.

     [வேப்பம் + பிசின்]

வேப்பம்பூ

வேப்பம்பூ vēppambū, பெ.(n.)

   1. வேப்ப மரத்தின் பூ இதன் மருந்துக்குடிநீர் கல்லீரலின் தொழிலைச் சரிபடுத்தும்; flowers of margosa. its decoction regulates the action of liver.

   2. நாட் சென்ற வேப்பம் பூவால் பித்தத்தாலுண்டான பெரு மூர்ச்சை நாக்கு தோசம் மலக் கிருமி போகும்; old dried flowers are better than the fresh flowers.

     [வேப்பம் + பூ]

வேப்பம்ரம்

வேப்பம்ரம் vēppamram, பெ.(n.)

வேம்பு 1 பார்க்க;see vembu1.

     [வேப்பம் + மரம்]

வேப்பம்வித்து

 வேப்பம்வித்து vēppamvittu, பெ.(n.)

   வேப்பங்கொட்டை; margosa seed.

     [வேப்பம் + வித்து]

வேப்பம்வேர்

 வேப்பம்வேர் vēppamvēr, பெ.(n.)

   வேம்பின் வேர்; root of margosa.

     [வேப்பம் + வேர்]

வேப்பரிசி

 வேப்பரிசி vēpparisi, பெ.(n.)

   வேப்பம் பருப்பு; kernel of the margosa seeds.

     [வேப்பம் + அரிசி]

வேப்பலகு

 வேப்பலகு vēppalagu, பெ.(n.)

   வேப்பிலையின் ஈர்க்கு (வின்.);; petiote or rib of margosa leaf.

     [வேப்பம் + அலகு]

வேப்பாலிகம்

 வேப்பாலிகம் vēppāligam, பெ.(n.)

   வெட்பாலை; a tree-nerium antidysenterica.

வேப்பாலை

வேப்பாலை1 vēppālai, பெ.(n.)

   கசப்பு வெட்பாலை (பதார்த்த.235);; conessi bark.

 வேப்பாலை2 vēppālai, பெ.(n.)

   1. ஒரு செடி; a plant.

   2. வேப்பாலிகம் பார்க்க;see veppaligam.

வேப்பிலைக்கட்டி

வேப்பிலைக்கட்டி1 vēppilaikkaṭṭi, பெ.(n.)

   நாரத்தையிலை உப்பு மிளகாய் முதலிய வற்றாற் செய்யும் மணமிக்க உணவு வகை; a kind of relish made of narrata’s leaves, salt, chilies, etc.

     [வேப்பிலை + கட்டி]

 வேப்பிலைக்கட்டி2 vēppilaikkaṭṭi, பெ.(n.)

   புளி, விளா எலுமிச்சை கிச்சிலி இவைகளின் சேர்த்திடித்து உண்டை செய்துலர்த்திப் பித்தத்தைத் தணிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு உருண்டை; a bolus got by grinding margosa tender leaves, tamerind, wood-apple leaves, tamerind, wood-apple leaves, lime and bitter-orange leaves.

     [வேப்பிலை + கட்டி]

வேப்பிலைக்கருககு

 வேப்பிலைக்கருககு vēppilaiggarugagu, பெ.(n.)

   வாசல் அமைக்கப்படும் அழகிய மரவேலைப்பாடுகளுள் ஒன்று (பொ.வழ.);;     [வேப்பிலை + கருக்கு]

வேப்பிலைநங்கை

 வேப்பிலைநங்கை vēppilainaṅgai, பெ.(n.)

மிளகாய் நங்கை பார்க்க;see milagaymargai.

     [வேப்பிலை + நங்கை]

வேப்பிலையடி-த்தல்

வேப்பிலையடி-த்தல் vēppilaiyaḍittal, செ.கு.வி.(v.i.)

   1. வேப்பிலையால் உடம்பில் அடித்து மந்திரித்து நோய் தீர்த்தல்; to effect a magic cure by passing a handful of neem twings over the body.

   2. இசையாத புலனத்தில் ஒருவனை இசைவிக்க முயலுதல்; to coax a person to yield.

     [வேப்பிலை + அடி-,]

வேப்பீர்க்கு

 வேப்பீர்க்கு vēppīrkku, பெ.(n.)

   வேப்பிலையின் ஈர்க்கு; the rib of the margosa leaf.

     [வேம்பு + ஈர்க்கு → வேப்பீர்க்கு]

வேப்பு

 வேப்பு vēppu, பெ.(n.)

வேம்பு பார்க்க;see Vembu.

     [வேம்பு → வேப்பு]

வேப்பூலிகம்

 வேப்பூலிகம் vēppūligam, பெ.(n.)

பூனைக்காலி பார்க்க;see punai-k-kali.

வேப்பெண்ணெய்

 வேப்பெண்ணெய் vēppeṇīey, பெ.(n.)

   வேப்பங் கொட்டையினின்று எடுக்கும் நெய்; oil extracted from margosa seeds.

     [வேப்பம் + எண்ணெய்]

வேமண்கல்

வேமண்கல் vēmaṇkal, பெ.(n.)

   செங்கல்; brick

     “வேமண்கல்லே விரிசுடர்ச் செம் பொற்றின் கல்லாயின” (பெரியபு. ஏயர். 50);.

     [வேமண் + கல்]

வேமம்

வேமம் vēmam, பெ.(n.)

   நெய்வார் தறி; loom.

     “வேம முதல தாமினி தகற்ற” ஞான.15).

வேமா

வேமா vēmā, பெ.(n.)

வேமம் பார்க்க;see vemam.

     “ஆடைக்கு நாடா வேமா முதலியன” (தருக்க. சங். 42);.

வேமானியர்

வேமானியர் vēmāṉiyar, பெ.(n.)

   வானவர் (விமானத்திற் திரிதல்);; celestials, as borne in heavenly cars.

     “வேமானியர்தம் மகளிரின்” (சீவக. 2455);.

வேம்

 வேம் vēm, பெ.(n.)

   வேகம்; will boil.

வேம்பனம்

 வேம்பனம் vēmbaṉam, பெ.(n.)

   கள் (யாழ்.அக.);; toddy.

வேம்பன்

வேம்பன் vēmbaṉ, பெ.(n.)

   பாண்டியன்; pandiyan, as wearing a garland of margosa flowers. (வேப்பம்பூ மாலையையுடையவன்);

     “சினையலர் வேம்பன்றேரானாதி” (சிலம். 16, 149);.

வேம்பருலக்கை

 வேம்பருலக்கை vēmbarulakkai, பெ.(n.)

   நீர்க்குழாய்க் கருவியில் நீரை இழுப்பதற்குரிய உலக்கை; plunger of a pump.

வேம்பர்

 வேம்பர் vēmbar, பெ.(n.)

   நீர் முதலியன இறைக்குங் குழாய்; pump.

வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தனார்

வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தனார் vēmbaṟrkkaṇṇaṉāttaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sargam poet.

வேம்பற்றுார் என்பது மதுரைக்கு வடகிழக்கில் இரண்டு காதத்தில் வையை நதிக்கு வடக்கே உள்ளது. பண்டைக்காலந்தொட்டுத் தமிழ் அறிஞர் வாழும் இடம் இது. இப்போது மேம்பத்துர் என்று வழங்குகிறது. வேம்பற்றுார்க் குமரனார் என்பவரின் பாடல்கள் அகத்திலும், புறத்திலும் உள்ளன. இவர் கூத்தாடுந் தொழிலையுடையவர்.

     “வேல, நீ கொடுக்கும் பலியைச் சிலம்பன் ஒண்டாரகலமும் உண்ணுமே” என்று தோழி கூற்றில் இவர் அமைத்துள்ள கருத்தைப் பிற்காலத்தவர் அங்ணமே எடுத்தாண்டனர். (தமிழ் நெறி. மேற் 104;

   பாண்டிக் கோவை;கிளைவித் தெளிவு); குறுந்தொகையில் இவர் பாடிய பாடலொன்று இடம் பெற்றுள்ளது (குறுந் 362);.

வேம்பற்றுார்க்குமரனார்

வேம்பற்றுார்க்குமரனார் vēmbaṟrkkumaraṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sargam poet.

   வேம்பற்றுார் என்பது மதுரைக்குக் கிழக்கே உள்ள ஒரு ஊர்;   வேம்பத்துரரென இக்காலத்து வழங்கும்;குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயர் உண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது. கடைச்சங்கப் புலவர் காலந்தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண் கூடாதலாலும், பெயராலும்

இவர் அந்தணராகக் கருதப்படுகிறார். இவர் பாடியனவாக அகநானூற்றில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன. (புறம். 317);.

வேம்பா

வேம்பா1 vēmbā, பெ.(n.)

வேம்பர் பார்க்க;see vembar.

 வேம்பா2 vēmbā, பெ.(n.)

   வெந்நீர் சுடவைக்குங் கலம்; vessel for heating water, salamander.

வேம்பா-தல்

வேம்பா-தல் vēmbātal, செ.கு.வி.(v.i.)

   1. கசப்பாதல்; to be bitter.

   2. வெறுப்புக் குரியதாதல்; to be disliked.

     “என்னையும் வேம்பாக்கி” (தனிப்பா. 411,45);.

வேம்பாடம்

 வேம்பாடம் vēmbāṭam, பெ.(n.)

வேம்பாடை பார்க்க;see vem-padai.

வேம்பாடம்பட்டை

 வேம்பாடம்பட்டை vēmbāṭambaṭṭai, பெ.(n.)

   சுருள் பட்டை, சாயப்பட்டை; a barkventiligo madras patana.

     [வேம்பாடம் + பட்டை]

வேம்பாடை

 வேம்பாடை vēmbāṭai, பெ.(n.)

   ஒரு வகை கோடி; red creeper.

வேம்பாணி

வேம்பாணி1 vēmbāṇi, பெ.(n.)

   சிறிய ஆணிவகை (வின்.);; small nail.

 வேம்பாணி vēmbāṇi, பெ.(n.)

   கிராணி, ஒரு நாட்பட்ட நோய்; a disease-chronic diarrhoea.

வேம்பாதிகம்

 வேம்பாதிகம் vēmbātigam, பெ.(n.)

   நிலவேம்பு; ground neem, the creatandrographi’s paniculata.

வேம்பின்கண்ணியன்

 வேம்பின்கண்ணியன் vēmbiṉkaṇṇiyaṉ, பெ.(n.)

வேம்பன் பார்க்க (பிங்.);;see vermban.

     [வேம்பின் + கண்ணியன்]

வேம்பின்மேற்புல்லுருவி

வேம்பின்மேற்புல்லுருவி vēmbiṉmēṟpulluruvi, பெ.(n.)

ஒரு கற்ப மூலிகை, 108 கற்ப மூலிகைகளுள் ஒன்று

 a parasitic plant on neem tree.

     [வேம்பின் + மேல் + புல்லுருவி]

வேம்பு

வேம்பு vēmbu, பெ.(n.)

   1. மரவகை; neem, margosa, m.tr. azadirachta indica.

     “வேம்பின் பைங்கா யென்றோழி தரினே” (குறுந். 196);.

     ‘மனைக்கு வேம்பு, மன்றுக்குப் புளி’ (பழ);.

   2. கசப்பு; bitterness of taste.

   3. வெறுப்பு; dislike.

     “வேம்புற்ற முந்நீர் விழுங்க” (சீவக. 513);.

   ம. வேம்பு;   தெ. வேமு;க.து. பேவு (b);

     [வே → வேம்பு] [வே.க.பக். 80]

வேம்புக்கொட்டை

 வேம்புக்கொட்டை vēmbukkoṭṭai, பெ.(n.)

   வேப்பம் விரை; seed of margose.

     [வேம்பு + கொட்டை]

வேம்புசிமிழ்

 வேம்புசிமிழ் vēmbusimiḻ, பெ.(n.)

   வேப்பங் கட்டையினால் செய்த மருந்து வைக்கும் பரளை; a small box made of margosa wood for preserving medicines.

     [வேம்பு + சிமிழ்]

வேம்புவகை

வேம்புவகை vēmbuvagai, பெ.(n.)

   வேப்ப மரம்; margosa tree-neem tree Axardirachta indica alias melia indica.

   1. சிவனார் வேம்பு – shiva’s neem – indigofera asphalathoides.

   2. மதகிரி வேம்பு – Bischopia javanica.

   3. கரு வேம்பு – black neem – Garuga pinnate.

   4. மலை வேம்பு, நாய் வேம்பு – Melia azardirachta.

   5. சாக்கரை வேம்பு,

   6. நிலவேம்பு – Indian chiretta – Andro – graphis paniculata,

   7. கறி வேம்பு – curry leaf – Murraya Koenegil.

   8. நீர் வேம்பு – Pteris genus.

   9. சன்னத் துருக்க வேம்பு —

   10. வடிவேம்பு – cippadessa fruiticosa.

   11. சந்தன வேம்பு – cedrela toona.

   12. பெரு வேம்பு,

   13. சிறு வேம்பு.

     [வேம்பு + வகை]

வேயரிசி

 வேயரிசி vēyarisi, பெ.(n.)

   மூங்கிலரிசி (திவா.);; seed of the bamboo.

     [வேய் + அரிசி]

வேயர்

வேயர்1 vēyar, பெ.(n.)

   ஒற்றர் (பிங்.);; sples.

     [மேய் → வேய் → வேயர்]

 வேயர்2 vēyar, பெ.(n.)

வேயல் பார்க்க (வின்.);;see veyal.

 வேயர்3 vēyar, பெ.(n.)

   பார்ப்பனக்குடிவகை; a class of brahmins.

     “வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன்” (திவ். பெரியாழ். 5, 4, 11);.

வேயல்

வேயல் vēyal, பெ.(n.)

   சிறுமூங்கில் (நன். 71, மயிலை.);; short-sized bamboo.

     [மேய் → வேயல்]

வேயாங்பூர்வா

 வேயாங்பூர்வா vēyāṅpūrvā, பெ. (n.)

   பொம்மலாட்ட வகைகளில் ஒன்று; a kind of puppet show.

வேயாமாடம்

வேயாமாடம் vēyāmāṭam, பெ.(n.)

   நிலாமுற்றம்; open terrace of the upper storey, as uncovered.

     “வேயா மாடமும் வியன்கல விருக்கையும்” (சிலப். 5, 7);.

     [வேயா + மாடம்]

வேயாம்

 வேயாம் vēyām, பெ.(n.)

வேரடம் பார்க்க (மூ.அ.);;see veradam.

வேயிகாரம்

 வேயிகாரம் vēyikāram, பெ.(n.)

   வெண்காரம்; borax.

     [வேய் + காரம்]

வேயிலை

 வேயிலை vēyilai, பெ.(n.)

   மூங்கிலிலை; leaf of bamboo, it is an emmenagogue.

     [வேய் + இலை]

வேயுள்

வேயுள் vēyuḷ, பெ.(n.)

   1. மூடுகை; covering.

     “வேயுள் விசும்பு” (பு;வெ. 8, 28);.

   2. மலர்கை; blossoming.

     ‘வேயுளம் பட்டுப் பூசை கண் கறுப்பு’ (கல்லா 20, 5);.

   3. வேயந்த மாடம் (சூடா.);; terraced house.

   4. மேன்மாடி; upper storey.

     “விசித்திரத் தியற்றிய வித்தக வேயுள்” (பெருங் இலாவண 6, 65);.

   5. மாடம் (நாமதீப. 494);; mansion.

     [மேய் → வேய் → வேயுள்) [மு.தா.பக். 80)

வேய்

வேய்2 vēy, பெ.(n.)

   1. மூங்கில்; bamboo.

     “வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்” (மலைபடு. 171);.

   2. மூங்கிற்கோல்; bamboo rod.

     “வேயகமாயினுஞ் சோராவகையிரண்டேயடியாற்றான்” (திவ், இயற். திருவிருத் 61);.

   3. உட்குளைப் பொருள் (பிங்.);; tube anything hollow.

   4. புனர்பூசமும்; the seventh naksatra.

     “வேய்புனர் பூசமும்” (கம்பரா. திருவவதாரப். 102);.

   5. வேய்கை (அக.நி.);; covering, roofing.

   6. மாடம் (நாமதீப. 494);; mansion.

   7. வினை (அக.நி.);; karma.

   8. யாழ் (அரு.நி.);; yal

   9. உன்னிப்புச் (கவனம்); செய்கை (அரு.நி.);; composition, as of a song.

 வேய்3 vēyttal, செ.குன்றாவி.(v.t.)

   ஒற்றராற் செய்தியறிதல் (மதுரைக். 642, உரை);; to spy out.

     “வேய்த்திறே, களவு காண்பது” (ஈடு. 3, 8, 3);.

     [மேய் → வேய்-,1] [மு.தா.யக். 80]

 வேய்4 vēy, பெ.(n.)

   1. குறளைச் சொல்; report, as of a spy.

     “ஒற்றனாகிய வேயே” (தொல். பொ. 58);.

   2. ஒற்றன்; spy.

     “வேயுரைப்பதென வந்து விளம்ப” (கம்பரா.இராவணன்றா 15);.

   3. ஒற்றனைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும்புறத்துறை (புவெ1,6);; theme describing the choice on spies.

 வேய்5 vēyttal, செ.குன்றாவி.(v.t.)

   வஞ்சித்தல்; to deceive.

வேய்-தல்

வேய்-தல் vēytal, செ.குன்றாவி.(v.t.)

   முடுதல்; to cover, as a building, to roof, thatch.

     “பிறங்கழல் வேய்ந்தன” (பு.வெ. 3, 22);.

   2. சூடுதல்; to put on, as a garland, to Wear, as Crown.

     “புதன் மானப் பூவேய்ந்து” (மதுரைக் 568);.

   3. சூழ்தல்; to surround.

     “மாலையை வேய்ந்தரிக்கு மிகுநிறு” (சீவக. 1769);.

   4. பதித்தல்; to set, as gems,

     “வேய்ந்த மாமணிக் கவசமும்” (பாரத. காண்டவ. 8);.

     [மேய் → வேய் → வேய்தல்]

     [தமி.வ.பக். 72]

வேய்க்கண்

வேய்க்கண் vēykkaṇ, பெ.(n.)

   மூங்கிற் கணு (நாமதீப. 297);; bamboo joint.

     [வேய் + கண்]

வேய்ங்குழல்

வேய்ங்குழல் vēyṅguḻl, பெ.(n.)

   புல்லாங் குழல்; bamboo pipe.

     “ஆயர்கள் வேய்ங்குழலோசையும் விடைமணிக் குரலும்” (திவ். திருப்பள்ளியெழுச். 4);.

     [வேய் + குழல்]

வேய்தல்

வேய்தல்1 vēytal, பெ.(n.)

   கூரையால் மூடப்பட்ட வீடு (பிட.);; thatched house.

   2. துளை (அரு.நி.);; tube.

     [மேய் → வேய் → வேய்தல்]

 வேய்தல்2 vēytal, பெ.(n.)

   ஒற்று (அரு.நி);; Spying.

வேய்நெல்லு

வேய்நெல்லு vēynellu, பெ.(n.)

   குடிகள் செலுத்துங் கடமைகளுளொன்று; a customary due from the cultivator (T.A.S.iii.32);,

     [வேய் + நெல்லு]

வேய்ந்துணி

வேய்ந்துணி vēynduṇi, பெ.(n.)

   ஊதுகுழல்; bamboo pipe.

     “வேய்ந்துணியலமரும்Galińg/swf wavuodouň புறத்தர்” (சீவக. 1848);.

     [வேய் + துணி]

வேய்ம்பரம்பு

 வேய்ம்பரம்பு vēymbarambu, பெ.(n.)

   மூங்கிற்பாய்; bamboomat.

     [வேய் + பரம்பு]

வேய்வனம்

வேய்வனம் vēyvaṉam, பெ.(n.)

   திருநெல்வேலித் தலம் (திருவிளை. 31, 2);; tiru-nel-vell believed to have been originally a bamboo forest.

     [வேய் + வனம்]

வேய்வு

வேய்வு vēyvu, பெ.(n.)

   மூடுகை (சங்.அக.);; covering.

     [மேய் → வேய் → வேய்வு]

     [தமி.வ.பக். 72)

 வேய்வு2 vēyvu, பெ.(n.)

   ஏய்ப்பு (சங்.அக.);; deceiving.

வேய்வை

வேய்வை vēyvai, பெ.(n.)

   யாழ் நரம்புக் குற்றவகை; a defect in a lute string.

     “வேய்வை போகிய விரலுளர் நரம்பின்” (பொருந. 17);.

வேரகம்

 வேரகம் vēragam, பெ.(n.)

   கருப்பூரம் (மூ.அ.);; camphor.

வேரச்சுக்கொடி

வேரச்சுக்கொடி vēraccukkoḍi, பெ.(n.)

   சந்தன வகை (சிலப். 14, 108, உரை);; a species of sandal wood.

     [வேரச்சு + கொடி]

வேரடம்

 வேரடம் vēraḍam, பெ.(n.)

   முள்மரவகை (சூடா.);; jujube tree.

வேரமுட்டி

வேரமுட்டி vēramuṭṭi, பெ.(n.)

   செடிவகை (நாமதீப. 326);; pink-tinged white sticky mallow.

வேரம்

வேரம்1 vēram, பெ.(n.)

   வெகுளி (பிங்.);; anger, wrath.

     “காணா நின்ற வேரங்கனற்ற” (மேருமந்;149);.

 வேரம்2 vēram, பெ.(n.)

   1. மஞ்சள் (மலை.);; turmeric.

   2. (அடப்பங்); கொடிவகை (மலை.);; hare leaf.

   3. ஒரு வகை செடி (யாழ்.அக.);; indian kales.

 வேரம்3 vēram, பெ.(n.)

   1. செய்குன்று; artificial mound.

     “சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடர நின்ற வேரமொன்று” (கந்தபு. நகரழி. 1);.

   2. கோபுரம் (நாமதீப. 493);; tower.

   3. மேகக்கூட்டம் (வின்);; mass of clouds, as in the morning with the sun behind.

 வேரம்4 vēram, பெ.(n.)

   உடம்பு; body.

வேரறப்பிடுங்கல்

வேரறப்பிடுங்கல் vēraṟappiḍuṅgal, பெ.(n.)

   1. வேரொடு பறித்தல்; to weed out.

   2. முழுதும் குணமாக்கல்; to root out as in disease.

     [வேர் + அறுப்பிடுங்கல்]

வேரறு-த்தல்

வேரறு-த்தல் vēraṟuttal, செ.குன்றாவி.(v.t.)

   வேரோடு அழித்தல்; to root out, extirpate.

     “அவர் வேரெறுப்பென் வெருவன் மின்” (கம்பரா. அகத்தியப். 22);.

     [வேர் + அறு-,]

வேரற்கு

 வேரற்கு vēraṟku, பெ.(n.)

   சீந்தில்; moon creeper-Tionospernum cordifolia.

     [வேர் + அற்கு]

வேரல்

வேரல்1 vēral, பெ.(n.)

   1 சிறுமூங்கில்; small bamboo.

     “நுண் கோல் வேரல்” (மலைபடு. 224);.

   2. புறக்காழ்வுள்ள மூங்கில் வகை (சூடா.);; spiny bamboo.

   3. மூங்கிலரிசு (பிங்.);; seed of bamboo.

 வேரல்2 vēral, பெ.(n.)

   வேர்க்கை (இ.வ.);; perspiring.

வேரி

வேரி1 vēri, பெ.(n.)

   1. தேன்; honey.

     “கமலங் கலந்த வேரியும்” (திருக்கோ. 30);.

   2. கள்; toddy.

     “கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல” (பு.வெ.4,25);.

   3. ஒருவகை நறுமண வேர் (திவா,);; cuscuss grass.

   4. ஓமாலிகை முப்பத்திரண்டனுளொன்று (சிலப். 6, 77, உரை);; an aromatic, one of 32 omalikai.

   5. நறுமணம்; frangrance, scent.

 வேரி2 vēri, பெ.(n.)

   1. பூந்தேன்; honey in flowers.

   2. பழச்சாறு; juice of fruits.

   3. வெட்டிவேர்; fragrant yellow root-khus khus -vetivaria zizanioides alias Andropogam aromaticus.

வேரிசாத்தன்

வேரிசாத்தன் vēricāttaṉ, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sangam poet.

     [வேரி + சாத்தான்]

இவர் குறுந்தொகையில் 278-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

வேரிச்சுமம்

 வேரிச்சுமம் vēriccumam, பெ.(n.)

   வெள்ளெருக்கு (சங்.அக.);; white madar.

     [வேரி + சுமம்]

வேரித்தண்டு

 வேரித்தண்டு vērittaṇṭu, பெ.(n.)

   தேன் வைக்குங் குழாய் (இலக்.அக.);; tube for keeping honey.

     [வேரி + தண்டு]

வேரிமீதகம்

வேரிமீதகம் vērimītagam, பெ.(n.)

   1. இருவேலி; khus khus root.

   2. வேரி பார்க்க;see veri.

     [வேரி + மீதகம்]

வேரியன்

வேரியன் vēriyaṉ, பெ.(n.)

   பகைவன்; foe.

     “பண்டை வேரியர் கடாம்” (நீலகேசி. 95);.

வேரில்லாக்கொத்தான்

 வேரில்லாக்கொத்தான் vērillākkottāṉ, பெ.(n.)

   ஒரு வகை கொத்தான் கொடி; a variety of

கொடுத்தான்

 moss creeper – cassytha americana.

     [வேரில்லா + கொத்தான்]

வேருக்குள்பாடாணசித்தி

 வேருக்குள்பாடாணசித்தி vērukkuḷpāṭāṇasitti, பெ.(n.)

உரோம விருட்சம்

 a kind of tree.

வேரூன்றல்

 வேரூன்றல் vērūṉṟal, பெ.(n.)

   வேர்பற்றல்; taking root.

     [வேர் + ஊன்றல்]

வேரூன்று-தல்

வேரூன்று-தல் vērūṉṟudal, செ.கு.வி.(v.i.)

   1. செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின் வேர் நிலத்திற் பதிந்தோடுதல் (ஈடு. 4, 8, 5);; to take root.

   2. அசைக்க முடியாத படி உறுதியாய் நிலை நாட்டப் பெறுதல்; to be established or settled firmly.

     [வேர் + ஊன்று-,]

வேரூன்றுகட்டி

 வேரூன்றுகட்டி vērūṉṟugaṭṭi, பெ.(n.)

   அடிகனத்த கட்டி; thick based abscessdeep rooted abscess.

     [வேரூன்று + கட்டி]

வேரெழுத்து

வேரெழுத்து vēreḻuttu, பெ.(n.)

   மூலவெழுத்து (திருமந். 970);; primary, basic or

 fundamental letter, as of a mantra.

     [வேர் + எழுத்து]

வேரையாட்டுபயிர்

 வேரையாட்டுபயிர் vēraiyāṭṭubayir, பெ.(n.)

   இலவங்கப்பட்டை; cinnamon barkcinnamomum zeylanicum.

     [வேரையாட்டு + பயிர்]

வேரோடழிதல்

 வேரோடழிதல் vērōṭaḻidal, பெ.(n.)

   வேருடன் கெடுதல்; being ruined totally.

வேரோடு-தல்

வேரோடு-தல் vērōṭudal, செ.கு.வி.(v.i.)

வேரூன்று-தல் பார்க்க;see verunru-,

     “பழமறையினுச்சிமிசைவேரோடி” [பிரமோத். 22, 102)]

வேர்

வேர்1 vēr, பெ.(n.)

   1. மரஞ்செடிகளை மண்ணின் மேல் நிலை நிற்கச் செய்து அவை உணவேற்க உதவுவதான அடிப்பகுதி (சூடா);; root.

   2. ஒரு வகை நறுமண வேர்; black cuscuss grass.

     “வேர் சூடுமவர்கள் மண்பற்றுக் கழற்றாதாப் போலே” (. (ஸ்ரீ வசன. 169);.

   3. திப்பிலிவேர் (தைலவ.);; root of long pepper.

   4. வே்ா போ்னறது; anything root like.

     “அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் கலவமஞ்ஞை” (மலைபடு. 234);.

   5.அடிப்படை; foundation.

   6. காரணம்; cause.

     “வேரறு ………… வடிவாகி” (ஞானவா. வைராக். 76);.

க. பேரு.

     [விள் → விளர் → வியர் → வேர்) [செல்வி.77. வைகாசி, 499]

 வேர்3 vēr, பெ.(n.)

   1. வேர்வை; perspiration.

     “வேரொடு நனைந்து” (பொருந. 80);.

   2. சினம் (வின்.);; anger,

     [வெயர் → வேர்]

 வேர்4 vēr, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

     “வேர் என்று மூங்கிலுக்குப் பேராய்” (திவ். பெரியாழ். 2, 6, 1 வ்யா. பக். 360);.

     [விளர் → வியர் → வேர்] [தமி.வ.பக். 72)

வேர்-த்தல்

வேர்-த்தல் vērttal, செ.கு.வி.(v.i)

   1. உடலின் மேல்புறத்து நீர்த்துளி தோன்றுதல்; to sweat, perspire.

     “வேர்த்து வெகுளார் விழுமியோர்” (நாலடி, 64);.

   2. மனப்புழுக்கம்; to feel irritated.

   3. சினங்கொள்தல்; to be angry, indignant.

     “பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று” (தேவா. 82, 7);.

   4. அஞ்சுதல்; to be afraid.

     “வேர்த்தா ரதுகண்டு விசும்புறைவோர்” (கம்பரா. அதிகா. 22);.

க. பேமர்.

     [வெயர் → வேர் → வேர்த்தல்]

வேர்கல்(லு)-தல்

வேர்கல்(லு)-தல் vērkalludal, செ.குன்றாவி. (v.t.)

   வேரோடு அழித்தல்; to oot out.

     “அறத்தை வேர் கல்லும்………. பொய்ச் சூதை மிக்கோர்கள் தீண்டுவரோ” (நள. கலிதொ.40);.

     [வேர் + கல்[லு]-,]

வேர்க்கசாயம்

 வேர்க்கசாயம் vērkkacāyam, பெ.(n.)

வேர்களைக் கொண்டு இறக்குங் கசாயம்

 a decoction prepared from roots, e.g., தசமூல கசாயம்.

     [வேர் + கசாயம்]

வேர்க்கடலை

 வேர்க்கடலை vērkkaḍalai, பெ.(n.)

   நிலக்கடலை; ground-nut.

     [வேர் + கடலை]

வேர்க்கடலைபிண்ணாக்கு

 வேர்க்கடலைபிண்ணாக்கு vērkkaḍalaibiṇṇākku, பெ.(n.)

   வேர்க்கடலைப் பருப்பை செக்கிலிட்டு ஆட்டுவதால் உண்டாகும் பிண்ணாக்கு;   இது உரமாகவும், மாடுகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது; ground nut cake-used as manure and food for cattle.

     [வேர்க்கடலை + பிண்ணாக்கு]

வேர்க்கடலைப்பருப்பு

 வேர்க்கடலைப்பருப்பு vērkkaḍalaipparuppu, பெ.(n.)

   நிலக்கடலை விதை; ground nut kernel.

     [வேர்க்கடலை + பருப்பு]

வேர்க்கடலையெண்ணெய்

 வேர்க்கடலையெண்ணெய் vērkkaḍalaiyeṇīey, பெ.(n.)

   வேர்க்கடலை பருப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய்; ground nut oil used for cooking.

     [வேர்க்கடலை + எண்ணெய்]

வேர்க்கட்டை

 வேர்க்கட்டை vērkkaṭṭai, பெ.(n.)

   வசம்பு; sweet flag – a drug – A corus calamus.

     [வேர் + கட்டை]

வேர்க்கல்

 வேர்க்கல் vērkkal, பெ.(n.)

   காப்பின் மேற்பரப்பிலுள்ள சிறு கற்கள் அல்லது மணல் (முகவை. மீன.);; piece of rock.

     [வேர் + கல்]

வேர்க்காந்தி

 வேர்க்காந்தி vērkkāndi, பெ.(n.)

   விட்ணு காந்தி; a prostate plant with blue flowers used for fevers-sphoeranthes indicus.

     [வேர் + காந்தி]

வேர்க்கியாழம்

 வேர்க்கியாழம் vērkkiyāḻm, பெ.(n.)

வேர்க்கசாயம் பார்க்க;see ver-k-kasayam.

வேர்க்கிறது

வேர்க்கிறது vērkkiṟadu, பெ.(n.)

   1. வியர்க்கிறது; to be perspiring.

   2. சினமாயிருக்கிறது; to be angry.

வேர்க்கிழங்கு

 வேர்க்கிழங்கு vērkkiḻṅgu, பெ.(n.)

வேரிலுள்ள கிழங்கு tuber, rhizome.

     [வேர் + கிழங்கு]

வேர்க்குச்சு

 வேர்க்குச்சு vērkkuccu, பெ.(n.)

   நெய்வார் கருவிவகை; weaver’s brush, as made of rools of grass.

     [வேர் + குச்சு]

வேர்க்குமருந்து

 வேர்க்குமருந்து vērkkumarundu, பெ.(n.)

   வியர்வையை உண்டாக்கும் மருந்து; sudorific.

     [வேர்க்கு + மருந்து]

வேர்க்குரு

வேர்க்குரு vērkkuru, பெ.(n.)

   வியர்வையாலுண்டாகும் சிறுபரு; rash due to.

ம. வேர்குரு.

     [வேர்3 + குரு3]

வேர்க்குறி

 வேர்க்குறி vērkkuṟi, பெ.(n.)

   சினக்குறிப்பு (வின்.);; sign of anger.

     [வேர் + குறி]

வேர்க்கொம்பு

வேர்க்கொம்பு vērkkombu, பெ.(n.)

   1. பூடுவகை (மலை.);; ginger-plant.

   2. சுக்கு (தைலவ.);; dried ginger.

     [வேர்1 + கொம்பு]

வேர்க்கொழுந்து

 வேர்க்கொழுந்து vērkkoḻundu, பெ.(n.)

   வேலங்கொழுந்து; tender leaves of Acacia arabica, uses for eye diseases.

     [வேர் + கொழுந்து]

வேர்ச்சாயம்

 வேர்ச்சாயம் vērccāyam, பெ.(n.)

   சாய வேரிலிருந்து இறக்கிய சாயம் (வின்.);; dye from chay root.

     [வேர் + சாயம்]

வேர்த்துக்கொட்டு-தல்

 வேர்த்துக்கொட்டு-தல் vērddukkoṭṭudal, செ.கு.வி.(v.i.)

   அதிகமாக வேர்வை நீர் வடிதல்; to perspire profusely.

     [வேர்-, + கொட்டு-,]

வேர்த்துவடி-தல்

வேர்த்துவடி-தல் vērdduvaḍidal, செ.கு.வி. (v.i.)

   1. வேர்த்துக் கொட்டு-தல் பார்க்க;see verttu-k-kottu-.

   2. ஆவி குளிர்ந்து திரவமாக வடிதல்; to be distilled, as liquors.

     “வேர்த்து வமுந்தாற் சாராயம்”.

     [வேர்த்து + வடி-,]

வேர்த்தோல் வேர்த்தோலி

 வேர்த்தோல் வேர்த்தோலி vērttōlvērttōli, பெ.(n.)

   வேர்ப்பட்டை; bark of the root.

     [வேர் + தோல், வேர் + தோலி]

வேர்நீர்

 வேர்நீர் vērnīr, பெ.(n.)

வேர்வை பார்க்க;see vervai.

     [வேர் + நீர்]

வேர்பு

வேர்பு vērpu, பெ.(n.)

வேர்3 பார்க்க (சங்.அக.);;see ver

வேர்பொடி-த்தல்

வேர்பொடி-த்தல் vērpoḍittal, செ.கு.வி. (v.i.)

   வேர்வை நீரரும்புதல்; to perspire.

     “இடைப்புருவங் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப” (கம்பரா. ஊர்தேடு 111);.

     [வேர் + பொடி-,]

வேர்ப்படலம்

 வேர்ப்படலம் vērppaḍalam, பெ.(n.)

   கண்ணோய் வகை (யாழ்.அக.);; an eyedisease.

     [வேர் + படலம்]

வேர்ப்பலா

வேர்ப்பலா vērppalā, பெ.(n.)

   மரவகை (வீரசோ. தொகை.8);; jack tree.

     [வேர் + பலா]

வேர்ப்பார்

 வேர்ப்பார் vērppār, பெ.(n.)

   சினமாயிருக்கிறவர்; one who is angry.

     [வேர் + பார்]

வேர்ப்பிடுங்கல்

 வேர்ப்பிடுங்கல் vērppiḍuṅgal, பெ.(n.)

   நோய் குணப்படுவதற்கு மந்திரம் சொல்லி செடியின் வேரைப் பிடுங்கல்; plucking the root as a sign of curing diseases,

     [வேர் + பிடுங்கல்]

வேர்ப்பு

வேர்ப்பு vērppu, பெ.(n.)

வேர்3 பார்க்க (வின்.);;see ver.

க. பேவரு.

     [வியர் → வேர் → வேர்ப்பு)] [தமி.வ.பக்.72]

வேர்ப்புழு

 வேர்ப்புழு vērppuḻu, பெ.(n.)

வேர்ப்பூச்சி பார்க்க;see ver-p-pucci.

     [வேர் + புழு]

வேர்ப்பூச்சி

 வேர்ப்பூச்சி vērppūcci, பெ.(n.)

   வேரிலிருந்தபடி அதனைத்தின்று செடியைக் பூச்சிவகை; a grub that eats off the root-tips and fibrils of a plant and quickly destroys it.

     [வேர் + பூச்சி]

வேர்வாசம்

 வேர்வாசம் vērvācam, பெ.(n.)

   ஒருவகை நறுமண வேர் (திவா.);; cuscuss grass.

     [வேர் + வாசம்]

வேர்வாளி

வேர்வாளி vērvāḷi, பெ.(n.)

   காதணி வகை (S.I.l. viii, 68);; an ear-ornament.

     [வேர் + வாளி]

வேர்விடு-தல்

 வேர்விடு-தல் vērviḍudal, செ.கு.வி.(v.i.)

வேர்விழு-தல் பார்க்க;see ver-vilu-.

     [வேர் + விடு-,]

வேர்விழு-தல்

 வேர்விழு-தல் vērviḻudal, செ.கு.வி.(v.i.)

   செடி முதலியன நிலத்தில் நிலைத்து நிற்கும் படி வேர் பதிந்தோடுதல்; to take root.

     [வேர் + விழு-,]

வேர்வு

வேர்வு vērvu, பெ.(n.)

வேர்3, 1 பார்க்க;see vēr.

     “தென்றல் வந்தெனையன் திருமுகத்தின் வேர்வகற்ற” (கூளப்ப.99);.

     [வேர் → வேர்வு]

வேர்வெட்டு

 வேர்வெட்டு vērveṭṭu, பெ.(n.)

   ஒரு வகைப் பல்நோய்; a disease of the tooth.

வேர்வை

வேர்வை vērvai, பெ.(n.)

வேர்3, 1 பார்க்க;see ver.

க. பேவரு.

வேர்வைகரம்

 வேர்வைகரம் vērvaigaram, பெ.(n.)

   வேர்வைக் காய்ச்சல்; sweating fever, a vontagious malignant fever marked by dark coloured sweat-Ephemera maligna – Anglicus sudor.

     [வேர்வை + சுரம்]

வேர்வையுண்டாக்கி

 வேர்வையுண்டாக்கி vērvaiyuṇṭākki, பெ.(n.)

   வியர்வையுண்டாதல்; perspiring.

     [வேர்வை + தட்டல்]

 வேர்வையுண்டாக்கி vērvaiyuṇṭākki, பெ.(n.)

   வியர்வையுண்டாக்கு மருந்து; a medicine or drug which promotes sweating – Diaphoretics.

     [வேர்வை + உண்டாக்கி]

வேர்வைவாங்கி

வேர்வைவாங்கி vērvaivāṅgi, பெ.(n.)

   வியர்வை சுரப்பிகள் வாயிலாக வியர்வை வெளிப்படுதல் (M.M.966);; sudorific.

     [வேர்வை + வாங்கி]

வேறா-தல்

வேறா-தல் vēṟātal, செ.கு.வி.(v.i)

   1. பிரிதல்; to be separated, disunited.

   2. பிறிதாதல்; to be different.

     ‘உடல் உயிரின் வேறாயது’.

   3. மாறுபடுதல்; to become different or altered.

     “வளம் பெறினும் வேறாமோசால்பு” (பு.வெ. 8, 31);.

   4. மனம் மாறுபடுதல்; to change in one’s mind.

     “வினை வகையான் வேறாகு மாந்தர் பலர்” (குறள், 514);.

   5. முன்னைய தன்மை குலைதல்; to be spoilt, as in quality.

     “வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து” (கலித். 93);.

   6. சிறப்புடையதாதல்; to be distinguished

 or particularised;

 to be special.

     “‘நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக் கொண்டு” (திணைமாலை. 90, உரை);,

   7. ஒதுக்காதல்; to be away from.

     “வேறாகக் காவின் கீழ்ப்போதரு” (கலித். 94);.

   8. தனியாதல்; to be alone.

     “சீவக சாமி வேறா விருந்தாற்கு” (சீவக. 1872);.

     [வேறு + ஆ]

வேறிடம்

 வேறிடம் vēṟiḍam, பெ.(n.)

   தனியிடம் (யாழ்.அக.);; solitude, retreat.

     [வேறு + இடம்]

வேறு

வேறு vēṟu, பெ.(n.)

   1. பிறிது; other, that which is different.

     “வேறோர் பரிசிங்கொன்றில்லை.” (திருவாச 33, 5);.

   2. பிரிந்தது,

 that which is separated.

   3. கூறுபாடு; class, kind.

     “இருவேறுலகத்தியற்கை” குறள், 374).

   4. பகைமை (சீவக. 755);; enmity, opposition.

   5. எதிரிடையானது; that which is opposite.

   6. தீங்கு; evil.

     “அறிந்ததோ வில்லைநீ வேறோர்ப்பது” (கலித். 95);.

   7. புதிது; that which is new.

     “யாம் வேறியைந்த, குறும்பூழ்ப்போர் கண்டேம்” (கலித். 95);. 8, சிறப்புடையது;

 that which is special or distinct;

 that which is distinguished or particularised.

     “அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்” (குறள், 120 உரை);,

     “வேறாக நின்னை வினவுவேன்” (திணைமாலைநூற். 90);,

   9. தனி (சீவக. 1872);; solitariness.

   10. காவியம் முதலியவற்றில் செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச் சொல்; a word used as a heading in poems, to indicate change of metre.

     [விறு → வெறு → வேறு] (வேக. பக்.145);

வேறுகாணல்

வேறுகாணல் vēṟukāṇal, பெ. (vbl.n.)

   வெற்றி பெறக் காணுதல்; seeing some one coming victorious.

கள்ளராற்புலியை வேறு காணிய. உரைத்தனள். (சீவக.741);.

கள்ளா வாபுலியைத் குத்து (பழ.);.

     [வேறல்-வேறு(வெற்றி);+காணல்]

பகைவர்களைத் தமக்குள் மோதச் செய்து தான் தப்பித்துக்கொள்ளும் உத்தியைக் குறித்த சொல் லாட்சி.கள்ளனிடமிருந்தும்புலியிடமிருந்தும் தப்பிக்க வழிப்போக்கன் உரைத்த சூழ்ச்சி மொழி.

வேறுகொள்(ளு)-தல்

வேறுகொள்(ளு)-தல் vēṟugoḷḷudal, பெ.(n.)

செ. குன்றாவி.(v.t.);

   1. தனிமையான இடத்தைச் சேரவிடுதல்; to remove to a secluded place.

     “கொடிய வல்வினையேன் றிறங் கூறுமின் வேறுகொண்டே” (திவ். திருவாய். 6, 1 9);.

   2. சிறப்புடையதாக மதித்தல்; to mark out, to treat with special regard.

     “வேறு கொண்டும்மையானிரந்தேன்” (திவ். திருவாய். 6, 1, 10);.

   3. மாறாகக் கொள்ளுதல்; to understand differently.

     “வெளிறிலாகக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னான்” (சீவக. 200);.

     [வேறு கொள்ளு-,]

வேறுசெய்-தல்

வேறுசெய்-தல் vēṟuseytal, செ.குன்றாவி. (v.t.)

   1. பகை விளைத்தல்; to cause dissensions;

 to create enmity.

     “வேந்தனும்மையும் வேறுசெய்து” (சீவக. 755);,

   2. வேறுகொள்-2, பார்க்க;see veru-kol.

     “வீரனார் வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமையால்” (திவ். திருச்சந். 116);.

     [வேறு செய்-,]

வேறுநினை-த்தல்

வேறுநினை-த்தல் vēṟuniṉaittal, செ.கு.வி. (v.i.)

   1. திரிபாக நினைத்தல்; to think differently to is understand.

   2. உதவி செய்தவர்க்கு தீங்கு செய்ய எண்ணுதல்; to be ungreateful and think of doung evil.

     [வேறு + நினை-,]

வேறுநினைவு

 வேறுநினைவு vēṟuniṉaivu, பெ.(n.)

   கருத் தின்மை; absence of mind, inattention.

     [வேறு + நினைவு]

வேறுபடு

வேறுபடு1 vēṟubaḍudal, செ.கு.வி.(v.i.)

வேறா-, பார்க்க;see vera.

     “வேறுபட் டாங்கே கலுழ்தி” (கலித். 91.

     [வேறு + படு-,]

 வேறுபடு2 vēṟubaḍuttal, செ-குன்றாவி. (v.t.)

வேறுபடுத்து-, பார்க்க;see veru-paduttu-.

     [வேறு + படு-,]

வேறுபடுத்து-தல்

வேறுபடுத்து-தல் vēṟubaḍuddudal, செ. (குன்றாவி. (v.t.)

   1. மாற்றுதல்; to change. alter.

   2. வேற்றுமை; to make different.

   3. நட்புப் பிரிவினை செய்தல் (குறள், 467, a உரை);; to sow discord between, to alienate.

   4. பிரித்தல் (சங்.அக.);; to separate.

     [வேறு + படுத்து-,]

வேறுபண்ணு

வேறுபண்ணு1 vēṟubaṇṇudal, செ. குன்றாவி.(v.t.)

வேறுபடுத்து-தல் பார்க்க;see véru-paguttu

     [வேறு + பண்ணு-,]

 வேறுபண்ணு2 vēṟubaṇṇudal, செ.கு.வி. (v.i.)

   1. மன வருத்தங் கொள்ளச் செய்தல்; to create misunderstanding.

     ‘அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறு பண்ணுகிறான்’.

   2. எதிரிடை செய்தல்; to do the very opposite.

     ‘தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்’.

     [வேறு + பண்ணு-,]

வேறுபாடு

வேறுபாடு vēṟupāṭu, பெ.(n.)

   1. வேற்றுமை; difference.

     “மேலைக் கிளவியொடு வேறுபாழலிவே” (தொல், சொல் 217);.

   2. மன மாறுபாடு; disagreement.

     “சுண்ணத்திற்றோன்றிய வேறுபாடு வேறுபாடு” (சீவக. 903);.

   3. வேறுமை 2 பார்க்க;see vētrumai 2.

     “காமதன் மங்குற்றப் படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு” (கலித். 12, உரை);.

வேறுபாட்டொழிப்பு

 வேறுபாட்டொழிப்பு vēṟupāṭṭoḻippu, பெ.(n.)

   அவநுதியணிவகை (யாழ்.அக.);; a variety of avanuti.

     [வேறு + பாட்டொழிப்பு]

வேறுமருந்து

 வேறுமருந்து vēṟumarundu, பெ.(n.)

   ஒரு மருத்துவரிடம் மருந்து சாப்பிடுங்காலத்தில் அதை விட்டு மற்றொருவரிடம் வாங்கி சாப்பிடும் மருந்து; to take medicine from another physician while taking from one.

     [வேறு + மருந்து]

வேற்கழலி

 வேற்கழலி vēṟkaḻli, பெ.(n.)

   உடம்பின் நரம்பு; nerves of the body.

வேற்காரன்

வேற்காரன் vēṟkāraṉ, பெ.(n.)

   1. வேற் கருவியுடைய மறவன்; spearman.

   2. அரச பணியின் படைக்கலக் கையன்; armed servant of a king.

     “ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே” (ஈடு. 1, 4, 9);.

     [வேல் + காரன்]

வேற்குஞ்சரன்

 வேற்குஞ்சரன் vēṟkuñjaraṉ, பெ.(n.)

   தேவாங்கு; an animal, sloth.

     [வேல் + குஞ்சரன்]

வேற்கோட்டம்

வேற்கோட்டம் vēṟāṭṭam, பெ.(n.)

   முருகவேள் கோயில்; temple of skanda.

     “உச்சிக்கிழான் கோட்ட மூர்க்கோட்டம் வேற்கோட்டம்” (சிலப். 9, 11);.

     [வேல் + கோட்டம்]

வேற்றமைவிரி

 வேற்றமைவிரி vēṟṟamaiviri, பெ.(n.)

   வேற்றுமையுருபு விரிந்து நிற்குந்தொடர்;     [வேற்றுமை + விரி]

வேற்றலம்

 வேற்றலம் vēṟṟalam, பெ.(n.)

   காற்று (பிங்.);; wind.

வேற்றவன்

வேற்றவன் vēṟṟavaṉ, பெ.(n.)

   1. அயலான்; stranger.

     “வேற்றவர்க் கெட்டா யோகர்” (சேதுபு. தோத். 43);.

   2. பகைவன்; enemy.

     “வேற்றவ ரார்த்தனர்” (கம்பரா. இராவணன்வதை. 78);.

 |வெறு → வேறு + அன்] [வே.க.பக். 147]

வேற்றானை

 வேற்றானை vēṟṟāṉai, பெ.(n.)

   அறுவகைத் தானையுள் ஒன்றான வேற்படை (திவா.);; force of spearmen in an army, one of aruvakai-t-tana.

     [வேள் + தானை]

வேற்றான்

வேற்றான் vēṟṟāṉ, பெ.(n.)

   1. வேற்றவன் 1 பார்க்க;see weravar.

     “வேற்றார்க டிறத்திவன் றஞ்சமென் விரவென்றான்” (கம்பரா. வாலிவ. 33);.

   2. வேற்றவன் 2 பார்க்க;see verravan.

     “வேற்றாரை வேற்றார் தொழுதலிளிவரவு” (பரிபா. 20, 71);.

     [வெறு → வேறு → வேற்று + ஆன்] [வேக.பக். 147]

வேற்றாள்

வேற்றாள் vēṟṟāḷ, பெ.(n.)

   1. அன்னிய மானவ-ன்-ள்; stranger.

     “வேற்றாளென்ன வொண்ணாதபடி” (ஈடு. 5, 10, 2);.

   2. பறை (வின்.);; pariah.

     [வெறு → வேறு → வேற்று + ஆள்]

வேற்றிசைப்பா

 வேற்றிசைப்பா vēṟṟisaippā, பெ.(n.)

   சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசைபெற்று வரும் பா வகை (திவா.);; a verse in a distinctive metre at the end of a carukkam orilampakam.

     [வேறு + இசை + பா]

வேற்று

வேற்று vēṟṟu, பெ.(n.)(adj.)

   1. பிற; other, besides one’s own.

     ‘வேற்று தொழிச் சொற்கள் பல் நம் மொழியில் வழங்குகின்றன’.

   2. தொடர்பு இல்லாத, புதிய; unfamiliar, new.

     ‘வேற்று மனிதர்களைக் கண்டு குழந்தை அழுகிறது’.

     [வெறு → வேறு → வேற்று] (வே.க.பக். 147);

வேற்றுக்காற்று

வேற்றுக்காற்று vēṟṟukkāṟṟu, பெ.(n.)

   1. திசைமாறி வீசுங்காற்று; wind from a different direction.

   2. அபானவாயு; fart.

     [வெறு → வேற்று + காற்று]

வேற்றுக்குடக்கன்வெட்டு

வேற்றுக்குடக்கன்வெட்டு vēṟṟukkuḍakkaṉveḍḍu, பெ.(n.)

   பழைய நாணய வகை (கணவிடு. 133);; an ancient coin.

     [வேறு → வேற்று + குடக்கன்வெட்டு]

வேற்றுக்குரல்

வேற்றுக்குரல் vēṟṟukkural, பெ.(n.)

   1. அன்னியகுரல்; strange voice.

   2. மாறுகுரல்; unnatural tone, disguised voice.

வேற்றுக்குழல்

வேற்றுக்குழல் vēṟṟukkuḻl, பெ.(n.)

   1. மாறு குரல்; change of voice.

   2. தொண்டைக்கம்மல்; hoarse voice.

     [வேறு → வேற்று + குழல்]

வேற்றுடம்பு

 வேற்றுடம்பு vēṟṟuḍambu, பெ.(n.)

   மாறான வுடம்பு; change in the appearance of body – through diseases.

     [வேறு → வேற்று → உடம்பு]

வேற்றுத்தாய்

 வேற்றுத்தாய் vēṟṟuttāy, பெ.(n.)

   நற்றாயல்லாத மாற்றாந்தாய்; step-mother.

     [வேறு → வேற்று + தாய்]

வேற்றுநர்

வேற்றுநர் vēṟṟunar, பெ.(n.)

   மாறுவடிவங் கொண்டவர்; persons in disguise.

     “நூற்றுவர் முற்றி வேற்று ராகென” (பெருங்.மகத. 1, 94);.

     [வேறு → வேற்று → வேற்றுநர்]

வேற்றுநிலைமெய்ம்மயக்கம்

வேற்றுநிலைமெய்ம்மயக்கம் vēṟṟunilaimeymmayakkam, பெ.(n.)

   க்,ச்,த்,ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை (நன். 110, உரை);;     [வேறு → வேற்று + நிலை + மெய் + மயக்கம்]

வேற்றுப்புலம்

வேற்றுப்புலம் vēṟṟuppulam, பெ.(n.)

   1. தனக்கு அன்னியமான விடம்; strange place, foreign place.

   2. பகையிடம்; enemy’s country.

     “வேற்றுப் புலத்திறத்து” (புறநா. 31);.

     [வேறு → வேற்று + புலம்]

வேற்றுப்பொருள்வைப்பு

வேற்றுப்பொருள்வைப்பு vēṟṟupporuḷvaippu, பெ.(n.)

   சிறப்புப் பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப் பொருளையும் அமைத்துக் கூறும் அணி (தண்டி. 46);; a figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa.

     [வேறு → வேற்று + பொருள் + வைப்பு]

வேற்றுமணாளன்

 வேற்றுமணாளன் vēṟṟumaṇāḷaṉ, பெ.(n.)

   அயலான் (யாழ்.அக.);; paramour.

     [வேறு → வேற்று + மணாளன்]

வேற்றுமனிதன்

 வேற்றுமனிதன் vēṟṟumaṉidaṉ, பெ.(n.)

   அன்னியன்; stranger.

     [வேறு → வேற்று + மனிதன்]

வேற்றுமுகம்

வேற்றுமுகம் vēṟṟumugam, பெ.(n.)

   1. அன்னியமுகத்; face of a stranger, unfamiliar face.

     ‘அந்தக் குழந்தைக்கு வேற்றுமுகமில்லை’.

   2. விருப்பு வெருப்பைக் காட்டும் மாறுமுகம்; altered face, indicating one’s displeasure.

     [வேறு → வேற்று + முகம்]

வேற்றுமுனை

வேற்றுமுனை vēṟṟumuṉai, பெ.(n.)

   பகைப்படை; enemy’s army.

     “வேலூன்று பலகை வேற்றுமுனைகடுக்கும்.”(அகநா. 67);.

     [வேறு → வேற்று + முனை]

வேற்றுமை

வேற்றுமை vēṟṟumai, பெ.(n.)

   1. வேறுபாடு; difference.

     “வேற்றுமையின்றிக் கலந் திருவர் நட்டக்கால்” (நாலடி. 75);.

   2. முரண்; antipathy.

     “காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய்” (கலித். 12);.

   3. ஓப்புமையின்மை; dissimilarity, disagreement.

   4. ஒரு பொருளின் வேறு பாடு காட்டற்குரிய தன்மை; characteristic mark distinguishing an in dividual or species.

   5. செயப்படு பொருண் முதலாயின வாகப் பெயர்பொருளை வேறுபடுத்துவது (தொல். சொல். 62);;   6. வேற்றுமை யுருபு பார்க்க (நன்.420);;see (Gram); větruma-yurubu.

   7. வேற்றுமை புணர்ச்சி பார்க்க (நன். 151);;see verumai, p_punarcci.

   8. வேற்றுமையணி பார்க்க (தண்டி. 49);;see vérrumai-y-ani

     [வெறு → வேறு → வேற்றுமை] (வே.க.பக். 146);

வேற்றுமை நிலை

வேற்றுமை நிலை vēṟṟumainilai, பெ.(n.)

   பொருளணிவகை (யாப். வி.பக.51);; a figure of speech.

     [வேற்றுமை + நிலை]

வேற்றுமைகாட்டு-தல்

 வேற்றுமைகாட்டு-தல் vēṟṟumaikāṭṭudal, செ.கு.வி.(v.i.)

   வேறுபாடு காட்டுதல் (யாழ்.அக.);; to differentiate, to make a difference, to make invidious distinction.

     [வேற்றுமை + காட்டு-,]

வேற்றுமைத்துணை

வேற்றுமைத்துணை vēṟṟumaittuṇai, பெ.(n.)

   படை பொருள் முதலிய புறப் பொருள்களால் அரசர்க்கு அமையுந் துணை (குறள், 861, உரை);; external help derived by a king from his army, wealth, etc.

     [வேற்றுமை + துணை]

வேற்றுமைத்தொகை

வேற்றுமைத்தொகை vēṟṟumaittogai, பெ.(n.)

   வேற்றுமையுருபு தொக்கு வருந் தொடர் (நன். 363);; a compound in which the case-ending is elliptical.

     [வேற்றுமை + தொகை]

வேற்றுமைநயம்

வேற்றுமைநயம் vēṟṟumainayam, பெ.(n.)

   வேறுபடுத்திப் பார்க்கும் முறை (நன். 451);; view point of diffrentiation, opp. to orrumal-nayam.

     [வேற்றுமை + நயம்]

வேற்றுமைப்புணர்ச்சி

வேற்றுமைப்புணர்ச்சி vēṟṟumaippuṇarcci, பெ.(n.)

   வேற்றுமையுருபுகள் இடையில் விரிந்து தொக்கும் வரு சொற்கள் புணர்வது (நன். 152, உரை);;     [வேற்றுமை + புணர்ச்சி]

வேற்றுமைமயக்கம்

 வேற்றுமைமயக்கம் vēṟṟumaimayakkam, பெ.(n.)

   ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வருகை;     [வேற்றுமை + மயக்கம்]

வேற்றுமையணி

 வேற்றுமையணி vēṟṟumaiyaṇi, பெ.(n.)

   ஒப்புமையுடைய இருபொருளை ஒரு பொருளாக வைத்து இவற்றை தம்முள் வேற்றுமைப்பட அழகுறக் கூறுவது வேற்றுமையணியாம்; a figure of speech in which the difference between the things compared is mentioned explicitly.

     [வேற்றுமை + அணி]

வேற்றுமையுருபு

 வேற்றுமையுருபு vēṟṟumaiyurubu, பெ.(n.)

   இரண்டு முதல் ஏழு வரையிலுமுள்ள ஆறு வேற்றுமைகளை உணர்த்தும் உருபுச்சொல் (நன்.);;     [வேற்றுமை + உருபு]

வேற்றுரு

வேற்றுரு vēṟṟuru, பெ.(n.)

   மாற்றுருவம்; disguised form or shape.

     “யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென” (மணி 26, 69);.

     [வேற்று + உரு]

வேற்றுவன்

வேற்றுவன் vēṟṟuvaṉ, பெ.(n.)

   அயலான்; stranger.

     “வேற்றுவ ரில்லா நூமரூர்க்கே செல்லினும்” (சீவக. 1550);.

     [வேறு → வேற்று → வேற்றுவன்]

வேற்றுவேடம்

 வேற்றுவேடம் vēṟṟuvēṭam, பெ.(n.)

   மாறுவேடம்; disguise.

     [வேறு → வேற்று → வேடம்]

வேற்றொலிவெண்டுறை

வேற்றொலிவெண்டுறை vēṟṟoliveṇṭuṟai, பெ.(n.)

   முன்பிற் சில அடிகள் ஒரோசையாயும் பின்பிற் சில அடிகள் மற்றோரோசையாயும் வரும் வெண்டுறை வகை (காரிகை செய், 7, உரை);; a kind of ven-tural in which the first few lines have one kind of rhythm and the succeding lines have a different kind of rhythm.

     [வேறு → வேற்று + ஒலி + வெண்டுறை]

வேற்றோன்

வேற்றோன் vēṟṟōṉ, பெ.(n.)

வேற்றுவன் பார்க்க;see veruvan.

     “வேற்றோன் போல மாற்றம்பெருக்கி” (பெருங் இலாவாண 8, 147);.

     [வேறு → வேற்று → வேற்றோன்] (வே.க.பக்.146);

வேலங்காய்க்கொலுசு

 வேலங்காய்க்கொலுசு vēlaṅgāykkolusu, பெ.(n.)

   வேலங்காய்களைப்போலும் குண்டுகளையுடைய காலணி வகை; asilver anklet with beads resembling babul fruit.

     [வேலங்காய் + கொலுசு]

வேலங்குச்சி

வேலங்குச்சி vēlaṅgucci, பெ.(n.)

   கருவேலங்குச்சி, பல்லுக்குறுதி; a twig of Acacia arabica 8 inches long and of finger’s thickness is used as tooth-brush, it strengthens the teeth.

     [வேலம் + குச்சி]

வேலசம்

 வேலசம் vēlasam, பெ.(n.)

   மிளகு (சங்.அக.);; pepper.

வேலத்தலம்

 வேலத்தலம் vēlattalam, பெ.(n.)

வேலைத் தலை பார்க்க கொ.வ.);see vēlai-t-talai.

     [வேலை + தலம்]

வேலனாடல்

 வேலனாடல் vēlaṉāṭal, பெ.(n.)

   வேலன் ஆடும் வெறியாட்டு கூத்து (பிங்.);; dancing of a priest under possession by skanda.

     [வேலன் + ஆடல்]

வேலன்

வேலன் vēlaṉ, பெ.(n.)

   1. வேற்காரன்; spearman.

   2. முருகன் (பிங்.);; skanda.

   3. முருகன் பூசனை செய்பவன் (திருமுரு. 222);; priest worshipping skanda.

     [வேல் → வேலன்]

வேலன்மார்

 வேலன்மார் vēlaṉmār, பெ. (n.)

   காணிப்பழங் குடியினரைச் சுட்டும் வேறு பெயர்; a name denote Kāniaborign.

வேலப்பதேசிகர்

வேலப்பதேசிகர் vēlappatēcigar, பெ.(n.)

   பதினேழாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை யாதீனத்து ஆசானாயிருந்தவரும் திருப்பறியலூர்ப்புராணம் பாடியவருமான ஆசிரியர் (அபி.சிந்.);; a head of tiruvadutural mutt and author of tiruppariyalur-p-puranam, 17C.

வேலமரம்

 வேலமரம் vēlamaram, பெ.(n.)

 babul.

வேலம்

வேலம்1 vēlam, பெ.(n.)

   ஒரு வகை மரம்; a thorny tree- Acacia genus.

 வேலம்2 vēlam, பெ.(n.)

   தோட்டம் (யாழ்.அக.);; garden.

வேலம்பட்டை

 வேலம்பட்டை vēlambaṭṭai, பெ.(n.)

   வேலமரத்துப்பட்டை; babul bark.

     [வேல் + பட்டை]

வேலம்பட்டைச்சாராயம்

 வேலம்பட்டைச்சாராயம் vēlambaṭṭaiccārāyam, பெ.(n.)

   போதையும் பித்த சினமும் உண்டாகும்; arrack prepared from the bark of Acacia.

     [வேலம் + பட்டை + சாராயம்]

வேலம்பாசி

வேலம்பாசி1 vēlambāci, பெ.(n.)

   பாசிவகை (மூ.அ.);; a kind of moss.

     [வேலம் + பாசி]

 வேலம்பாசி2 vēlambāci, பெ.(n.)

   ஒர் பூண்டு; a herb-vallisneria spirahs.

     [வேலை + பாசி]

வேலம்பிசின்

 வேலம்பிசின் vēlambisiṉ, பெ.(n.)

   பிசின் வகை; gum arabic.

     [வேல் + பிசின்]

வேலா

 வேலா vēlā, பெ.(n.)

   கருவேல்; Acacia arabica.

வேலான்

 வேலான் vēlāṉ, பெ.(n.)

   வேற்படை தாங்கியவன்; spearman.

     [வேல் + அன்]

வேலாமீன்

 வேலாமீன் vēlāmīṉ, பெ.(n.)

   பழுப்பு நிறத்தில் காணப்படும் ஆழக் கடல் மீன் (முகவை. மீன.);; a kind of sea fish.

வேலாமுற்றாழை

 வேலாமுற்றாழை vēlāmuṟṟāḻai, பெ.(n.)

கடற்றாழை பார்க்க;see kadarralai.

வேலாமேற்புல்லுருவி

 வேலாமேற்புல்லுருவி vēlāmēṟpulluruvi, பெ.(n.)

   வேலமரவகை; parasitic plant growing on the acacia tree.

வேலாயுதன்

வேலாயுதன் vēlāyudaṉ, பெ.(n.)

   முருகன்; skanda, as wielding the lance.

     “வேதாகம சித்ர வேலாயுதன்” (கந்தரலங்.17);.

     [வேல் + ஆயுதன்]

வேலாயுதமான்

 வேலாயுதமான் vēlāyudamāṉ, பெ.(n.)

   சிம்மம்; lion.

வேலாயுதம்

வேலாயுதம் vēlāyudam, பெ.(n.)

வேல்1, 1 பார்க்க;see vel.

     [வேல் + ஆயுதம்]

வேலாரை

 வேலாரை vēlārai, பெ.(n.)

கடலாரை பார்க்க;see kadasarai.

வேலாழி

வேலாழி vēlāḻi, பெ.(n.)

   கடல்; sea.

     “வேலாழி குழுலகு” (திணைமாலை 62);.

வேலாவலயம்

 வேலாவலயம் vēlāvalayam, பெ.(n.)

வேலாவலையம் பார்க்க (அ.க.நி.);;see vela-valaiyam.

     [வேல் + வலயம்]

வேலாவலையம்

வேலாவலையம் vēlāvalaiyam, பெ.(n.)

   1. கடல்; sea, as the boundary of the earth.

   2. நிலம்; earth, as boundary by the sea.

     “வேலாவலயம் விளக்கி” (மாறனலங். 217. உதா. 517);.

     [வேல் + வலையம்]

வேலி

வேலி1 vēli, பெ.(n.)

   1. முள், கழி முதலியவற்றாலான அரண்; hedge, fence.

     “வேரல் வேலி வேர்க்கோட் பலவின்” (குறுந். 18);.

   2. மதில் (பிங்.);; wall.

   3. காவல் (பிங்.);; custody, watch, guard.

     “நிறைநாண்வேலிநீங்கி” (கல்லா. 87,3);.

   4. நிலம் (பிங்);; land.

     “சாலிவேலியுந் தழீஇய வைப்பும்” (கம்பரா.நாட்டுப். 12);.

   5. வயல் (பிங்.);; field.

   6. நில அளவு; land measure = 6.74 acres (G.Ti.D. 1, 135);.

   7. பசுக்கொட்டில் (பிங்.);; cowshed.

   8. ஊர் (பிங்.);; village.

     “பன்னிரு வேலி கொண்டருளுஞ் செய்கை கண்டு” (தேவா. 176, 2);

   9. வேலிப்பருத்தி பார்க்க (மூ.அ.);;see veli-p-parutti.

   10. இலவுவகை; red-flowered silk cotton tree.

     “வேலியங்குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்” (கல்லா. 87);.

   11. ஒசை (அரு.நி.);; sound.

   12. காற்று (அரு.நி.);; wind.

   தெ. வேலுகு;   க. பேலி;ம. வேலி. [வேல் → வேலி]

 வேலி2 vēli, பெ.(n.)

   1. கொடிவேலி; plumbago.

   2. கரும்பு; sugar-cane.

     [வேல் → வேலி]

 வேலி3 vēli, பெ.(n.)

     (நில அளவையில்); இருபது மா கொண்ட அளவு;

 a and measure of twenty ma (equal to 6.67 acres);.

     [வேல் → வேலி]

வேலிகட்டு-தல்

 வேலிகட்டு-தல் vēligaṭṭudal, செ.குன்றாவி. (v.i.)

   கழி முதலியவற்றால் இடத்தைச் சூழத்தடுத்துவரம்பிடுதல்; to hedge, fence, as a field’s to make a hedge or fence.

     [வேலி + கட்டு-,]

வேலிகம்

வேலிகம்1 vēligam, பெ.(n.)

   கற்றாழை (சங்.அக.);; aloe.

 வேலிகம்2 vēligam, பெ.(n.)

   ஒரு வகை மலநோய்; a disease due to worms in the intestines.

     [வேலி → வேலிகம்] [மு.தா.8]

வேலிகொளுவு-தல்

 வேலிகொளுவு-தல் vēligoḷuvudal, செ. குன்றாவி.(v.t.)

வேலிகட்டு-தல் பார்க்க (வின்.);;see veli-kattu-

     [வேலி + கொளுவு-,]

வேலிக்கள்ளி

 வேலிக்கள்ளி vēlikkaḷḷi, பெ.(n.)

   கள்ளிவகை (சங்.அக.);; a kind of spurge.

     [வேலி + கள்ளி]

வேலிக்காக

வேலிக்காக vēlikkāka, பெ.(n.)

   பழைய வரி வகை (S.I.I.iii, 142);; an ancient village-tax.

     [வேலி + காசு]

வேலிக்காரம்

 வேலிக்காரம் vēlikkāram, பெ.(n.)

   வெண்காரம்; borax

     [வேலி + காரம்]

வேலிக்கால்

வேலிக்கால் vēlikkāl, பெ.(n.)

   1. வேலி; hedge, fence.

   2. வேலிகட்டிய தோட்டம்; fenced garden.

   3. வேலி கட்ட நடுங்கழி (வின்.);; stake in hedging.

     [வேலி + கால்]

வேலிக்கொடி

 வேலிக்கொடி vēlikkoḍi, பெ.(n.)

வேலிப்பருத்தி பார்க்க;see veli-p-parutti.

     [வேலி + கொடி]

வேலிக்கொவ்வை

 வேலிக்கொவ்வை vēlikkovvai, பெ.(n.)

   கோவை; a climbing plant-Bryonia grandis.

     [வேர + கொவ்வை]

வேலிதம்

 வேலிதம் vēlidam, பெ.(n.)

   கட்டு; bandage.

வேலித்துத்தி

 வேலித்துத்தி vēlittutti, பெ.(n.)

   செடிவகை (இலத்.);; pipal-leaved evening mallow, m.sh., abutilon polyandrum.

     [வேலி + சதுத்தி]

வேலிநாயகம்

 வேலிநாயகம் vēlināyagam, பெ.(n.)

   காட்டாமணக்கு; wild castor plant Jatropha carcas.

     [வேலி + நாயகம்]

வேலிநோய்

 வேலிநோய் vēlinōy, பெ.(n.)

   ஒரு வகை நோய்; a kind of disease.

     [வேலி + நோய்]

வேலின்மேற்புல்லுருவி

 வேலின்மேற்புல்லுருவி vēliṉmēṟpulluruvi, பெ.(n.)

வேலாமேற்புல்லுருவி பார்க்க;see vāsā-mêr-pulluruvi.

     [வேலின் + மேல்+ புல்லுருவி]

வேலிபோடு-தல்

 வேலிபோடு-தல் vēlipōṭudal, செ.குன்றாவி. (v.t.)

வேலிகட்டு-தல் பார்க்க;see velikattu-.

     [வேலி + போடு-,]

வேலிப்பயறு

வேலிப்பயறு vēlippayaṟu, பெ.(n.)

   பழைய நாணய வரி வகை (S.I.I.i, 89);; an ancient tax in cash.

     [வேலி + பயறு]

வேலிப்பயிர்

 வேலிப்பயிர் vēlippayir, பெ.(n.)

   தோட்டங்களில் விளைவிக்கும் பயிர்; plant grown in gardens.

     [வேலி + பயிர்]

வேலிப்பருத்தி

வேலிப்பருத்தி1 vēlipparutti, பெ.(n.)

   உத்தாமணி, உத்தமதாளி, அச்சாணி மூலி; a twiner title being a hedge plant bearing fruit with cottony fibres inside-Dog’s bane, whitlow plant-Daemia extensa. The whole plant is emetic and expectorant, and used mostly in children’s disease.

     [வேலி + பருத்தி]

 வேலிப்பருத்தி2 vēlipparutti, பெ.(n.)

   கொடிவகை (பதார்த்த 578);; stinking swallow wort, m.cl… damia extensa.

     [வேலி + பருத்தி]

வேலிப்பாகல்

 வேலிப்பாகல் vēlippākal, பெ.(n.)

   பாகல் வகை (வின்.);; a kind of caper plant.

     [வேலி + பாகல்]

வேலிப்பாசி

 வேலிப்பாசி vēlippāci, பெ.(n.)

   பாசிவகை (M.M.);; hedge moss, sida humilis.

     [வேலி + பாசி]

வேலிமுறி-த்தல்

 வேலிமுறி-த்தல் vēlimuṟittal, செ.கு.வி.(v.i.)

வேலியழி-தல் பார்க்க;see veli-yali-.

     [வேலி + முறி-,]

வேலிமுள்

 வேலிமுள் vēlimuḷ, பெ.(n.)

   கருவேல் முள்; thorn of Acacia arabica.

     [வேலி + முள்]

வேலிமூங்கில்

 வேலிமூங்கில் vēlimūṅgil, பெ.(n.)

   செடிவகை (வின்.);; a major shrub, Justicia betonica.

     [வேலி + மூங்கில்]

வேலியடை-த்தல்

 வேலியடை-த்தல் vēliyaḍaittal, செ. குன்றாவி.(v.t.)

வேலிகட்டு-தல் பார்க்க;see veli-kattu-.

     [வேலி + அடை-.]

வேலியழி-த்தல்

வேலியழி-த்தல் vēliyaḻittal, செ.கு.வி.(v.i.)

   1. காவலடைப்பை அழித்தல்; to destroy or remove afence.

   2. வரம்பு கடத்தல்; to transgress bounds.

     [வேலி + அழி-,]

வேலிறை

 வேலிறை vēliṟai, பெ.(n.)

வேலாயுதன் பார்க்க (சூடா.);;see velayudan.

     [வேல் + இறை]

வேலுத்தம்பிதளவாய்

வேலுத்தம்பிதளவாய் vēluddambidaḷavāy, பெ.(n.)

   வீரபாண்டியக் கட்டபொம்மன், பூலித்தேவர் முதலியவர்களைப் போல் அந்நாளில் கேரள விடுதலைக்கு வெள்ளைக் காரர்களை எதிர்த்தவர் இவர்; that day agianst britishman Kerala Independent like virapandiya-k-kattabomman, pull-ttēVar.

இவர் பிறந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள தலைக்குளம் என்பதாகும். இவர் கி.பி.1765-ஆம் ஆண்டில் பிறந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை வாழ்ந்திருந்தார். வேணாட்டு அமைச்சராக இருந்து நேர்மையான ஆட்சி புரிந்தவர். தன்மானங்காக்கும் பொருட்டுத் தலையைத் தம்பியிடம் கொடுத்தவர். இவருடைய புகழைப் பரப்பும் நாடகங்களை மக்கள் இன்றும் நடிக்கின்றனர். இவர் பயன்படுத்திய வாளை இவருடைய குடும்பத்தினர் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத்திரடம் கொடுத்தனர். அவ்வாள் தில்லியில் உள்ள தேசியப் பொருட்காட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

     [வேலுத்தம்பி + சதளவாய்]

வேலூர்க்கிழான்

 வேலூர்க்கிழான் vēlūrkkiḻāṉ, பெ.(n.)

   தொண்டை நாட்டில் குமிழம்பட்டு என்னும் சிற்றுரில் இருந்த ஒர வள்ளல்; a small village kumilampattu were one donar at tonga-nādu.

     [வேலூர் + கிழான்]

பஞ்சகாலம் ஒன்று நேரிட்ட பொழுது இவன் தன்னை நாடிவந்த பல புலவர்களையும், பிறரையும் உணவிட்டுக் காப்பாற்றினான்.

வேலேறு

வேலேறு vēlēṟu, பெ.(n.)

   வேல் தைத்த புண்; wound caused with a javelin.

     “வேலேறு படத் தேளேறு மாய்ந்தாற்போல” (இறை. 2, பக். 39);.

     [வேல் + ஏறு]

வேலை

வேலை vēlai, பெ.(n.)

   1. தொழில்; work. labour task.

     “வேலை யுலகிற் பிறக்கும் வேலையொழிந்தோ மில்லை” (அட்டப். திருவரங்கக் 54);.

   2. காரியம்; business, matter.

என்ன வேலையாய் வந்தாய்?’.

   3. வேலைப்பாடு; workmanship.

     ‘இந்த நகையில் அமைந்த வேலை மிகவும் அருமையானது’.

   4. வேலைத்திறன் பார்க்க;see vélai-t-tiran.

   5. பதவி; situation, office.

     ‘உனக்கு எங்கே வேலை?’.

     [வேல் + வேலை]

   ம. வேல;து. பேலு.

 வேலை2 vēlai, பெ.(n.)

   1. காலம் (பிங்.);; time, timit of time.

     “மணந் ருயிருண்ம் வேலை” (குறள். 1221);.

   2. கடற்கரை (பிங்.);; sea-shore.

     “பெளவ வேலை” (கந்தபு. மேரும் 46);,

   3. கடல் (பிங்.);; sea, ocean.

     “வேலை நஞ்சுண் மழை தருகண்டன்” (திருவாக 6, 46);.

   4. அலை (பிங்.);; wave.

     “வேலைப்புனரி” (திவ். இயற். திருவிருத் 75);.

   5. கானல்; sandy tract.

     “வேலை யாத்திரை செல்யாறு” (பரிபா. 19, 18);.

     [வேல் → வேலை]

 வேலை3 vēlai, பெ.(n.)

   1. கரும்பு (மலை.);; sugarcane.

   2. வெண்காரம் (சங்.அக.);; borах.

 வேலை4 vēlai, பெ.(n.)

   1. நிகழ்காலம்; present time.

   2. நோய்; disease.

   3. பனி; dew.

   4. வேளை பார்க்க;see velai.

வேலைகாட்டு-தல்

 வேலைகாட்டு-தல் vēlaikāṭṭudal, செ.கு.வி. (v.i.)

வேலைத்தனம்பண்ணு-தல் பார்க்க;see vélai-t-tanam-pannu-.

     [வேலை + காட்டு-,]

வேலைகொள்(ளு)

வேலைகொள்(ளு)1 vēlaigoḷḷudal, செ.கு.வி.(v.i.)

   அதிக வேலை செய்யும் படியாதல்; to involve labour.

     ‘அதைச் செய்யத் தொடங்கினால் இன்னும் வேலை கொள்ளும்’.

     [வேலை + கொள்ளு]-,]

 வேலைகொள்(ளு)2 vēlaigoḷḷudal, செ.குன்றாவி.(v.t.)

வேலை வாங்கு-தல் பார்க்க;see vélai-vángu.

     [வேலை கொள்ளு)-,]

வேலைக்கந்தகம்

வேலைக்கந்தகம் vēlaiggandagam, பெ.(n.)

   1. கடற்பாசி; sea weeds.

   2.ஒரு கருப்பொருள்; one of the 120 natural substances.

     [வேலை + கந்தகம்]

வேலைக்கள்ளி

 வேலைக்கள்ளி vēlaikkaḷḷi, பெ.(n.)

   வேலை செய்யாமல் ஏமாற்றுபவள்; woman who shirks work.

     “வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாக்கு”

     [வேலை + கள்ளி]

வேலைக்காரத்தனம்

 வேலைக்காரத்தனம் vēlaikkārattaṉam, பெ.(n.)

வேலைத்திறன் பார்க்க;see velai-t-tiran.

     [வேலைக்காரன் + தனம்]

வேலைக்காரன

வேலைக்காரன1 vēlaikkāraṉa, பெ.(n.)

   1. ஊழியன்; man-servant.

   2. தொழிலாளி; workman, labourer.

   3. தொழில்வல்லவன்; skilled worker.

   4. சூழ்ச்சி செய்பவன்.

     ‘அவன் பெரிய வேலைக்காரன்’.

     [வேலை + காரன்]

வேலைக்காரன்

வேலைக்காரன்2 vēlaikkāraṉ, பெ.(n.)

வைக்கோல் தள்ளுந் தடி, rake.

     [வேலை + காரன்]

வேலைக்காரி

 வேலைக்காரி vēlaikkāri, பெ.(n.)

   பணிப்பெண்; servant-maid.

     [வேலை + காரி]

வேலைக்காலம்

 வேலைக்காலம் vēlaikkālam, பெ.(n.)

   வேலை செய்யும் நேரம்; period of work.

     [வேலை + காலம்]

வேலைக்கூலி

 வேலைக்கூலி vēlaikāli, பெ.(n.)

   குறிப்பிட்ட வேலைக்குக் கொடுக்குங் கூலிப்பணம்; wage for a specific item of Work, dist, fr. nat-kuli.

     [வேலை + கூலி]

வேலைக்கேடு

 வேலைக்கேடு vēlaikāṭu, பெ.(n.)

வினைக்கேடு பார்க்க;see vinai-k-kedu.

     [வேலை + கேடு]

வேலைசாய்

வேலைசாய்2 vēlaicāyttal, செ. குன்றாவி.(v.t.)

   1. மேற்கொண்ட தொழில் முடித்தல்; to finish as a job.

     ‘அந்த காரியத்தை வேலை சாய்த்து விட்டான்’.

   2. அழித்தல்; to ruin, make an end of.

     ‘அவன் அந்தக் குடியை வேலை சாய்த்து விட்டான்’.

   3. கொலை புரிதல்; to slay, murder.

     [வேலை சாய்2-,]

வேலைசாய்-தல்

 வேலைசாய்-தல் vēlaicāytal, செ.கு.வி. (v.i.)

   முடிவுக்கு வருதல்); to come an end, as life.

     ‘அவர் பாடு வேலை சாய்ந்து விட்டது’.

     [வேலை + சாய்-,]

வேலைசெய்

வேலைசெய்1 vēlaiseytal, செ.கு.வி. (v.i.)

   1. தொழிலியற்றுதல்; to do work.

     ‘வேலை செய்தாற் கூலி; வேடம் போட்டாற் காசு’.

   2. மழிப்பு செய்தல்; to shave.

   3. சூழ்ச்சி செய்தல்; to play tricks.

   4. வேலைத் தனம்பண்ணு-, 2 பார்க்க;see vésai-t-tanam-pannu.

     [வேலை செய்-,]

 வேலைசெய்2 vēlaiseytal, பெ.(n.)

   1. (இயந்திரம் முதலியவை); இயங்குதல்;     ‘கணிப்பொறி வேலைசெய்யும் விதமே தனி’.

   2 (மருந்து போன்றவை); பாதிப்பை அல்லது பலனைத் தருதல்;     ‘அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்த மருந்து இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது’.

     [வேலை செய்-,]

வேலைச்சுருக்கு

 வேலைச்சுருக்கு vēlaiccurukku, பெ.(n.)

   வேலை அதிகங்கொள்ளாமை; economy of labour.

     [வேலை + சுருக்கு]

வேலைதீர்

வேலைதீர்1 vēlaitīrtal, செ.கு.வி.(v.i.)

வேலைசாய்1-, பார்க்க;see welai.cay.

     [வேலை + தீர்-,]

 வேலைதீர்2 vēlaitīrttal, செ.குன்றாவி. (v.t.)

வேலை சாய2-, பார்க்க;see vela-cay.

     [வேலை + தீர்-,]

வேலைத்தனதம்

 வேலைத்தனதம் vēlaiddaṉadam, பெ.(n.)

வேலைத்திறன் பார்க்க;see velai.t-tran.

 |வேலை + தனம்]

வேலைத்தனம்பண்ணு-தல்

வேலைத்தனம்பண்ணு-தல் vēlaiddaṉambaṇṇudal, செ.கு.வி.(v.i.)

   1. வேலையில் திறமை காட்டுதல்; to show one’s skill or handiwork.

   2. குறும்பு பண்ணுதல்; to do mischief, to create trouble.

   3. வேலை செய்-, பார்க்க;see welai-cey-.

     [வேலைத்தனம் + பண்ணு-,]

வேலைத்தலை

 வேலைத்தலை vēlaittalai, பெ.(n.)

   வேலை நடக்குமிடம்; place of work.

     [வேலை + தலை]

வேலைத்திறன்

வேலைத்திறன் vēlaittiṟaṉ, பெ.(n.)

   1. தொழில் செய்வதில் வல்லமை,

 efficiency or skill, as in an art or craft.

   2. குறும்புச் செயல்; mischief, trick.

     [வேலை + திறன்]

வேலைத்திறமை

 வேலைத்திறமை vēlaittiṟamai, பெ.(n.)

வேலைத்திறன் பார்க்க;see velai.t-tiran..

     [வேலை + திறமை]

வேலைத்திறம்

 வேலைத்திறம் vēlaittiṟam, பெ.(n.)

வேலைத்திறன் பார்க்க;see velai.t-tiran.

     [வேலை + திறம்]

வேலைத்துறட்டு

 வேலைத்துறட்டு vēlaittuṟaṭṭu, பெ.(n.)

   மாவகை; tree caper.

     [வேலை + துறட்டு]

வேலைத்தொல்லை

 வேலைத்தொல்லை vēlaittollai, பெ.(n.)

   அதிக வேலையால் உண்டாகும் நெருக்கடி; pressure of work.

     [வேலை + தொல்லை]

வேலைநாணயம்

வேலைநாணயம் vēlaināṇayam, பெ.(n.)

   1. வேலையில் நேர்மை; honesty in work.

   2. செய்யப்படும் வேலையின் மேம்பாடு; excellence of work.

     [வேலை + நாணயம்]

வேலைநாள்

 வேலைநாள் vēlaināḷ, பெ.(n.)

   பணி நாள்; working day.

     [வேலை + நாள்]

வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம் vēlainiṟuttam, பெ.(n.)

   1. வேலையின்றியிருக்கை; stoppage of work, as on holidays.

   2. வேலைமறியல் பார்க்க;see vésai-mariyal.

     [வேலை + நிறுத்தம்]

 வேலைநிறுத்தம் vēlainiṟuttam, பெ.(n.)

   பொதுப்பணிநிறுத்தம்; General strike.

     [வேலை + நிறுத்தம்]

தொழில் துறையில் வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர் பெற்றுள்ள வன்மையானதோர் கருவியாகும். தத்தம் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஊதிய உயர்வுபெறவும் தொழிலாளர்கள் இந்த கருவியைப் பயன்படத்துகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொழில் முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு மாநிலத்திலோ நடைபெறும் வேலை நிறுத்தத்திலும் பொது வேலை நிறுத்தம் என்று பெயர். சமூகத்தையும் அரசாங்கத்தையும் எதிர்த்து எல்லாத் தொழில் நிறுவனங்களிலும், ஆலைகளிலும், போக்குவரத்துத் துறைகளிலும் பொருளாக்கத்தை நிலைகுலையச் செய்யும் வேலை நிறுத்தம் தேசிய வேலை நிறுத்தம் எனப்படும்.

   19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிற்சங்கத் தலைவர்கள் வேலை நிறுத்தங்களை நடத்தத் தலைப்பட்டனர். 1829 முதல் 1842 வரை வேலை நிறுத்தங்கள் பல நடந்தன. ஒவன் (Owen); என்பார் நாட்டில் இயங்கிவந்த தொழிற் சங்கங்களை யெல்லாம் இணைத்துப் பொது வேலை நிறுத்தம் ஒன்று நடத்தி வெற்றி பெற முயற்சி செய்தார். ஆனால் அவ்வேலை நிறுத்தம் தோல்வியடைந்தது. பொது வேலை நிறுத்தம் மக்கள் கருத்திற்கு ஒவ்வாமல் அவர்களுடைய ஆர்வமும் ஆதரவும் பெறக் கூடாமல் மறைந்துவிட்டது.

   முதல் உலக போருக்குப் பின் தொழிலாளர் களிடையே வேலை நிறுத்தங்கள் மீண்டும் மீண்டும் தோன்றின. நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டன. 1926 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் முதல் ஒன்பது நாட்களுக்குப் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெற்றது. 15 இலட்சம் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் அரசாங்கத்திற்கு 4;   33,000 பவுன் நட்டம் ஏற்பட்டது. ஆனால் இப்பொது வேலை நிறுத்தம் வெற்றியடையவில்லை.

     “வேலை நிறுத்தம் அநீதியானது;

   மனிதத் தன்மையற்றது;   ஊதாரித்தனமானது;கொடுமை வாய்ந்தது சமூக விரோதமானது” என்று ஹாப்சன் (hobson); கூறுகின்றார். வேலை நிறுத்தம் தொழிலாளரின் வாழ்க்கையையே குலைக்கக் கூடியதாகும். அது எய்வோர் மீதே திரும்பிப் பாயும் ஒரு படையாகும். இதனால் தொழில் நிருவாகத் தினரும் தொழிலாளரும் நேர்முகமாகவோ நடுவர்கள் மூலமாகவோ தமக்குள் ஏற்படும் தொழிற் பூசல்களைத் தீர்த்துக் கொள்ளுவது முன்னேற்ற மடைந்த நாடுகளில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. இம்முறையில் வேலை நிறுத்தம் அறவே தவிர்க்கப்படுகிறது.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் சட்டத்தின் மூலம் பெற்றுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால் சமூகத்துக்கு அதனால் ஏற்படும் தீய விளைவுகளினால் மக்கள் அதற்குத் தம் ஆதரவைத் தருவதில்லை.

வேலைநீர்

 வேலைநீர் vēlainīr, பெ.(n.)

   கல்லுப்பு; rock salt.

     [வேலை + நீர்]

வேலைநேரம்

வேலைநேரம் vēlainēram, பெ.(n.)

   1. வேலை செய்தற்குரிய காலம்; period of work.

   2. வேலை செய்கின்ற வேளை; worktime.

     [வேலை + நேரம்]

வேலைபண்ணு-தல்

 வேலைபண்ணு-தல் vēlaibaṇṇudal, செ.கு.வி.(v.i.)

வேலைசெய்-தல் பார்க்க see velai-cey-.

     [வேலை + பண்ணு-,]

வேலைபிடி-த்தல்

 வேலைபிடி-த்தல் vēlaibiḍittal, செ.கு.வி.(v.i.)

வேலைகொள்-தல் பார்க்க;see velai-kol.

     [வேலை + பிடி-,]

வேலைபோட்டுக்கொடு-த்தல்

 வேலைபோட்டுக்கொடு-த்தல் vēlaipōḍḍukkoḍuttal, செ.குன்றாவி.(v.t.)

 help (S.O.); with ajob.

     ‘என் மகனுக்கு உங்கள் நெசவாலையில் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள்’.

     [வேலை + போட்டு + கொடு-,]

வேலைப்பரீட்சை

வேலைப்பரீட்சை vēlaipparīṭcai, பெ.(n.)

   ஒருவனது வேலைத்திறமையை ஆராய்கை; trial of one’s skill in buisiness.

   2. வேலைத்திறன் பார்க்க;see vela-t-tiran.

     [வேலை + பரீட்சை]

வேலைப்பாடு

 வேலைப்பாடு vēlaippāṭu, பெ.(n.)

   கலைப் பொருள், கைவினைப்பொருள், முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை; craftsmanshi, workmanship.

     ‘சிறப் வேலைப்பாடு நிறைந்த கோயில்’. பின்னால் வேலைப்பாடுகள் உடைய கைப்பை’.

     [வேலை + பாடு]

வேலைப்பாடு’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வேலைப்பார்-த்தல்

 வேலைப்பார்-த்தல் vēlaippārttal, செ. குன்றாவி.(v.t.)

   பணிபுரிதல், தொழில் செய்தல்; do work, work (in an office, etc.);.

     ‘ஒரு உணவு விடுதியில் வேலைபார்க்கிறார்’.

     [வேலை + பார்-,]

வேலைமறியல்

வேலைமறியல் vēlaimaṟiyal, பெ.(n.)

   1. ஒருவனை வேலை செய்யவொட்டா மற்றடுக்கை; slopping a person in his work.

   2. தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்துகை; strike.

     [வேலை + மறியல்]

வேலைமானம்

வேலைமானம் vēlaimāṉam, பெ.(n.)

வேலைத்திறன் 1 பார்க்க;see weal-t-train.

     [வேலை + மானம்]

வேலைமினக்கெடு-தல்

 வேலைமினக்கெடு-தல் vēlaimiṉakkeḍudal, செ.கு.வி.(v.i.)

வேலைமெனக்கிடு-தல் பார்க்க;see vésaf-mena-k-kidu.

     [வேலை + மினக்கெடு-,]

வேலைமினக்கெட்டவன்

வேலைமினக்கெட்டவன் vēlaimiṉakkeṭṭavaṉ, பெ.(n.)

   1. பயனற்றவேலை செய்து வீண்பொழுது போக்குபவன்; one who wastes his time in useless work.

   2. வேலையின்றி சோம்பியிருப்பவன்; idler.

     [வேலை + மினக்கெடு + அன்]

வேலைமினக்கேடு

வேலைமினக்கேடு vēlaimiṉakāṭu, பெ.(n.)

   பயனுள்ள வேலை யொன்றுமின்றி யிருக்கை; being without any useful work.

   2. வீணான செயல்; wasted labour.

     [வேலை + மினக்கேடு]

வேலைமுலைமாதர்

 வேலைமுலைமாதர் vēlaimulaimātar, பெ.(n.)

   தூதுவளை; a thorny climber, three tobed night shade-solanum trilobatum.

     [வேலை + முலை + மாதர்]

வேலைமெனக்கிடு-தல்

வேலைமெனக்கிடு-தல் vēlaimeṉakkiḍudal, செ.கு.வி.(v.i.)

   1. பயனுள்ள வேலையொன்று மின்றியிருத்தல்; to be without any useful work.

   2. செய்த காரியம் வீணாதல்; to have one’s labour wasted.

     [வேலை மெனக்கிடு-,]

வேலைமேற்போ-தல்

 வேலைமேற்போ-தல் vēlaimēṟpōtal, செ.கு.வி.(v.i.)

   தன் வேலையைக் கவனிக்கப் போதல்; to go on duty, to go to work.

     ‘மந்திரி வேலை மேற் போயிருக்கிறார்’.

     [வேலை மேல் போ-,]

வேலையாள்

 வேலையாள் vēlaiyāḷ, பெ.(n.)

   கூலிக்கு வேலை செய்பவன்; workman, labourer, servant.

     [வேலை + ஆள்]

வேலையிற்றுயின்றோன்

 வேலையிற்றுயின்றோன் vēlaiyiṟṟuyiṉṟōṉ, பெ.(n.)

   பாற்கடலிற் பள்ளி கொண்டவன், திருமால் (சூடா.);; visnu, as sleeping on the sea of milk.

     [வேலை + துயில் + அன்]

வேலையில்லாத்திண்டாட்டம்

 வேலையில்லாத்திண்டாட்டம் vēlaiyillāttiṇṭāṭṭam, பெ.(n.)

   வேலை கிடைக்காத நிலை; unemployment.

     ‘மக்கள் தொகை அதிகமாக அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகிக் கொண்டு போகிறது’.

     [வேலையில்லா + திண்டாட்டம்]

வேலையைக்காட்டு-தல்

 வேலையைக்காட்டு-தல் vēlaiyaikkāṭṭudal, செ.குன்றாவி.(v.t.)

   குறும்பு செய்தல்; play dirty tricks.

     ‘உங்களிடம் மட்டுமல்ல, வேறு சிலரிடமும் அவன் வேலையைக் காட்டியிருக்கிறான்’.

     [வேலையை + காட்டு-,]

வேலைருசிவஞ்சி

 வேலைருசிவஞ்சி vēlairusivañsi, பெ.(n.)

   சித்தாமுட்டி; a drug – pavonia zeylanica.

     [வேலை + ருசி + வஞ்சி]

வேலைவளர்

வேலைவளர்1 vēlaivaḷarttal, செ.கு.வி. (v.i.)

   வேலையை நீட்டித்தல்; to prolong work.

     [வேலை + வளர்-,]

வேலைவாங்கு

வேலைவாங்கு1 vēlaivāṅgudal, செ. குன்றாவி. (v.t.)

   பிறரை ஏவி வேலை செய்யும்படி ஏவுதல்; to get work done, to exact work from.

     [வேலை + வாங்கு1-,]

 வேலைவாங்கு2 vēlaivāṅgudal, செ.கு.வி. (v.i.)

வேலைகொள்-, பார்க்க;see véla-kol-.

     [வேலை + வாங்கு-,]

வேலைவை

வேலைவை1 vēlaivaittal, செ.கு.வி. (v.i.)

   வீண் வேலையிடுதல்; to cause one to work unnecessarily.

     [வேலை + வை-,]

 வேலைவை2 vēlaivaittal, செ.கு.வி. (v.i.)

   ஒருவனைக் காணுதல் முதலிய வற்றிற்கு நேரங் குறிப்பிடுதல்; to make appointments.

     [வேலை வை-,]

வேல்

வேல்1 vēl, பெ.(n.)

   1. நுனிக் கூர்மையுடைய கைவேல்; dart, spear, lance, javelin.

     “நெடுவேல் பாய்ந்த மார்பின்” (புறநா. 297);.

   2. திரிசூலம்

 trident.

     “கையது வேல் நேமி” (திவ் இயற். 1, 5);.

   3. போர்க்கருவி (பிங்.);; weapon.

   4. ஈட்டிவகை (சிலப். 15,216, உரை);; a kind of spear.

   5. செல்லுகை (அரு.நி.);; conquering.

   6. பகை (அரு.நி.);; enemy.

     [வெல் → வேல்]

 வேல்2 vēl, பெ.(n.)

   1. மரவகை; babul.

   2. வேல் வகை (இலத்.);; Panicled babul.

   3. உடை5 பார்க்க;see ugai.

   4. புறக்காழ் உள்ள மூங்கில் வகை (நாமதீப. 296);; spiny bamboo.

 வேல்3 vēl, பெ.(n.)

   ஒரு மரம்; a thorny tree.

   1. வேலம் or வேலா – Acacia arabica,

   2. பச்சை வேல் – Acacia genus,

   3. சீமை வேல் – Acacia dealbata.

   4. பரங்கி வேல்,

   5. பீவேல் – Acacia Farniciana,

   6. நல்ல வேல்,

   7. வெள்வேல் – Acacia leucophalaca (white babool);,

   8. கருவேல் – Acacia arabica,

   9. சீமைச் சிறுவேல் – Common

 wattle – Acacia decurrenus,

   10. கடிவேல் – Acacia melanoxylon.

   11. கஸ்தூரி வேல் – Acacia farmi ciana.

   12. உடைவேல் – arrow thorn tree-Acacia planifrons alias A. ebornea,

   13. குடை வேல் – Umbrella thorn babool – Acacia tomentosa,

   14. பீக்கருவேல்-Acaciaeburnea,

   15. கந்தர்வேல் – jungle nail – Acacia tomentosa,

   16. சீமை வெள்வேல் – Acacia ferruginea,

   17. வெள்ளை முள்வேல்- same as No.18,

   18. முள்வேல் – rubber thorn – Acacia latronum,

   19. பேய்வேல் – Acacia farmiciana,

   20. கூந்தல் வேல் – Acacia tomentosa,

     [லெல் → வேல்]

வேல்கந்தி

 வேல்கந்தி vēlkandi, பெ.(n.)

   செடிவகை (சங்.அக.);; scabrous ovate unifoliate ticktrefoil.

     [வேல் + கந்தி]

வேல்கம்பு

 வேல்கம்பு vēlkambu, பெ.(n.)

 a long staff with a leaf-like metal edge used as a weapon, a kind of spear.

     [வேல் + கம்பு]

வேல்சங்கு

வேல்சங்கு vēlcaṅgu, பெ.(n.)

   1. முட்சங்கு; a conch with thorny edges.

   2. உபரசச் சரக்கு; a mineral body.

     [வேல் + சங்கு]

வேல்தாரி

 வேல்தாரி vēltāri, பெ.(n.)

   ஒரு வகை நெடுங்கோட்டுப்புடைவை; a kind of saree with long stripes.

     [வேல் + தாரி]

வேல்முகம்

 வேல்முகம் vēlmugam, பெ.(n.)

   கல்லாரை; a creeper.

     [வேல் + முகம்]

வேல்லசம்

 வேல்லசம் vēllasam, பெ.(n.)

   மிளகு; pepper-piper nigrum.

வேல்லி

 வேல்லி vēlli, பெ.(n.)

   கொடி; a creeper.

வேல்விழிமாது

 வேல்விழிமாது vēlviḻimātu, பெ.(n.)

   கண்டங்கத்திலி; a thorny shrub-solanum xanthocarpum.

     [வேல் + விழி + மாது]

வேல்விழியாள்

 வேல்விழியாள் vēlviḻiyāḷ, பெ.(n.)

   கத்தூரி மஞ்சள்; a kind of turmeric-curcuma aromatica.

     [வேல் + விழியாள்]

வேளக்களி

 வேளக்களி vēḷakkaḷi, பெ. (n.)

கேரளத்தில் ஆடப்படும் நாட்டுப்புற நடனம்,

 country side dance of Kerala.

வேளன்

 வேளன் vēḷaṉ, பெ.(n.)

வேளான் பார்க்க;see vélàn.

     [வேள் → வேளன்]

வேளமேற்று-தல்

வேளமேற்று-தல் vēḷamēṟṟudal, செ. குன்றாவி.(v.t.)

   சிறைபிடித்த மகளிரை வேளத்தில் அமர்த்துதல் (S.I.I.iii, 217);; to confine ladies of rank captured in war within a vésam,

     [வேளம் + ஏற்று-,]

வேளம்

வேளம் vēḷam, பெ.(n.)

   1. சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர் குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைத்த அரண்; fortified place where ladies of rank captured in war were kept as slaves by the colas.

     “மீனவர் கானகம்புக…………. வேளம்புகுமடவீர்” (கலிங். 41);.

     “வீர பாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக்கொடியை வேளமேற்றி” (S.I.I.iii,217);.

   2. இருப்பிடம்; quarters (S.I.I.ii,440);.

     [வெள் → வேள் → வேளம்]

வேளா

வேளா1 vēḷā, வி.எ. (adv.)

   ஒரு பயனுமின்றி (பிங்.);; to no purpose.

     [வாள → வேளா]

 வேளா2 vēḷā, பெ.(n.)

   செம்மண் நிறமுள்ளதும் இருபது அடி நீளம் வளர்வதுமான சுறாமீன் வகை; sawfish, sandy brown, attaining 20 ft. in length, pristis zyzrom.

வேளாகெடுத்தை

 வேளாகெடுத்தை vēḷākeḍuttai, பெ.(n.)

   நச்சுத் தன்மையுடன் கூடிய பெரும் முட்களை யுடைய மீன் (தஞ்சை. மீன.);; a kind of fish which have the large poisonous thorns.

     [வேளா + கெடுத்தை]

வேளாச்சுறா

 வேளாச்சுறா vēḷāccuṟā, பெ.(n.)

   பெரிய சுறா மீன் வடிக; a large cetaceous fish Grampus.

     [வேளா + சுறா]

வேளாட்டி

வேளாட்டி vēḷāṭṭi, பெ.(n.)

வெள்ளாட்டி பார்க்க (இலக். வி. 45, உரை);;see vellatti.

வேளாண்கோ

 வேளாண்கோ vēḷāṇā, பெ.(n.)

தலைமைக்

   குடியானவன் (வின்);; head ryot, hereditary cultivator.

வேளாண்மாந்தரியல்பு

 வேளாண்மாந்தரியல்பு vēḷāṇmāndariyalpu, பெ.(n.)

   ஆணை வழிநிற்றல், அழிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துண்மை, ஒக்கல் போற்றல், ஒவாமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய வொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள் (வின்.);; characteristics of the vésàsas, ten in number viz., ānai-vali-nirral, alintorai-niruttal, kaikkatan-arral, kacivaga-t-tunmai, okkal-porral, ova-muyarci, mannirai-tarutal, orrumai-kodal, virundu-purantarutal, tirunitya-v-olukkam.

     [வேளாண்மை + மாந்தர் + இயல்பு]

வேளாண்மாந்தர்

வேளாண்மாந்தர் vēḷāṇmāndar, பெ.(n.)

   வேளாளர் (தொல். பொ. 635);; velalar.

     [[வேளாண் + மாந்தர்]

வேளாண்மை

வேளாண்மை vēḷāṇmai, பெ.(n.)

   1. கொடை (பிங்.);; gift, bounty, liberatity.

   2. உதவி; beneficence, help.

     “விருந்தோப்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள், 81);.

   3. பயிர் செய்யும் தொழில்; cultivation of the soil, agriculture, husbandry.

   4. உண்மை (பிங்.);; truth.

     “வேளாண்மை தானும் விளைந்திட” (கொண்டல்விடு. 84);.

     [வேள் → வேளான் → வேளாண்மை]

வேளாண்மையமர்க்களம்

 வேளாண்மையமர்க்களம் vēḷāṇmaiyamarkkaḷam, பெ.(n.)

   அறுவடைக்காலத்து நிகழும் நெற்களத் தாரவாரம்; stir and bustle of harvest.

     [வேளாண்மை + அமர்க்களம்]

வேளாண்வாகை

வேளாண்வாகை vēḷāṇvākai, பெ.(n.)

   வேளாளன் செய்தற்குரிய கடமைகளை நிறைவேற்றலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 8,11);; theme of exalting a vēlāsa for doing the duties laid upon him by caste rules.

     [வேளாண் + வாகை]

வேளாண்வாயில்

வேளாண்வாயில் vēḷāṇvāyil, பெ.(n.)

   இரத்தல் (யாசிக்கை);; begging, as offering an outlet for liberality.

     “வேளாண்வாயில், வேட்பக் கூறி” (பொருந.75);.

     [வேளாண் + வாயில்]

வேளாதரம்

வேளாதரம் vēḷātaram, பெ.(n.)

   1. ஒருவகைப் ஒருவகைப் புரசமரம்; a tree.

   2. வைம்புரசு; Buteafrodosa.

வேளானுகூலம்

 வேளானுகூலம் vēḷāṉuālam, வி.எ.(adv.)

   விதிப்படி; according to fate.

வேளான்

வேளான் vēḷāṉ, பெ.(n.)

   1. குலப்பெயர்; a caste title.

     “மதுராந்தக மூவேந்த வேளான்” (S.I.l.ii,10);.

   2. குயவர் வகுப்புப் பெயர்; a title of persons belonging to the Kuyavar caste.

     [வேள் → வேளான்]

வேளாரி

 வேளாரி vēḷāri, பெ.(n.)

 Jamaica switch sorrel.

வேளாளன்

வேளாளன் vēḷāḷaṉ, பெ.(n.)

   1. ஈவோன் (பிங்.);; liberal person.

     “வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்” (திரிகடு 12);.

   2. ஒரு குலம்; Velala, a caste.

   3. வேளாள வகுப்பினன்; a person of velala caste.

   4. வணிகன் (வைசியன்); (பிங்.);; vaisya.

   5. கடைமகன் (சூத்திரன்); (பிங்.);;šūdra.

     [வேள் → வேளாளன்]

வேளாளரறுதொழில்

 வேளாளரறுதொழில் vēḷāḷaraṟudoḻil, பெ.(n.)

   உழவு, பசுக்காவல், வாணிபம், கயிலுவம், காருகவினை, இ.ரு பிறப்பாளர்கேவல் செயல் என்னும் வேளாளர்க்குரிய அறுவகைத் தொழில் (திவா.);; the six occupations of the vélalas.

     [வேளாளரறு + தொழில்]

வேளாளர்செய்கை

 வேளாளர்செய்கை vēḷāḷarceykai, பெ.(n.)

வேளாண்மாந்தரியல்பு பார்க்க (பிங்.);;see vésàn-mântar-lyapu.

     [வேளாளர் + செய்கை]

வேளாவளி

வேளாவளி vēḷāvaḷi, பெ.(n.)

   1. பண் (பரத. இராக. 56);;   2. செவ்வழிக்குப் புறமான பண்திற வகை (சிலப். 14, 160-167, உரை);; a secondary melody-type of the cevvali-class.

 வேளாவளி1 vēḷāvaḷi, பெ. (n.)

   பழம்பெரும்பண்களில் ஒன்று; an ancient melody.

 வேளாவளி2 vēḷāvaḷi, பெ. (n.)

   நெய்தல் நிலத்திற்குரிய பண்; a melody type peculiar to marytime.

வேளாவேளை

வேளாவேளை vēḷāvēḷai, வி.எ.(adv.)

   1. சிற்சில சமயத்தில்; at one time or another, occasionally.

   2. உரிய காலத்தில்; at the proper time.

     ‘நீ வேளாவேளையில் வரவேண்டும்’.

     [வேளை + வேளை]

வேளிருகைச்சீலை

 வேளிருகைச்சீலை vēḷirugaiccīlai, பெ.(n.)

   கரும்பு; sugar cane – saccharum officinarum.

     [வேளிருகை + சிலை]

வேளிர்

வேளிர் vēḷir, பெ.(n.)

   1. தமிழ் நாடாண்ட ஒரு சார் அரசர் குலத்தார்; a class of ancient cheifs in the tamil country.

     “நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” (புறநா. 201);.

   2. சளுக்கு வேந்தர் (திவா.);; the calukyas.

   3. குறுநில மன்னர் (சூடா.);; petty cheifs.

     [வேள் → வேளிர்]

வேளுகி

 வேளுகி vēḷugi, பெ.(n.)

வேம்பாடம் பட்டை பார்க்க;see vémpādam-pattai.

வேளுங்கி

 வேளுங்கி vēḷuṅgi, பெ.(n.)

வேம்பாடல் பார்க்க;see vémpādal.

வேளுங்கு

வேளுங்கு vēḷuṅgu, பெ.(n.)

   1. மரவகை (மலை.);; tube in tube wood, tr., dalbergia paniculata.

   2. ஒரு வகைக்கொடி (சங்.அக.);; red creeper.

வேளுசி

 வேளுசி vēḷusi, பெ.(n.)

   அகிற்கட்டை; eagle-wood.

வேளை

வேளை1 vēḷai, பெ.(n.)

   1. காலம், 1,2,3,6 பார்க்க;see kalam.

   2. வினைப்பயன் (கரும வினை.); (யாழ்.அக.);; ethical causation.

     [வே → வேளை]

 வேளை2 vēḷai, பெ.(n.)

   1. நாய்க்கடுகுச்செடி (சங்.அக.);; black vailay.

     “வேளை வெண்பூ” (புறநா. 23);.

   2. செடிவகை; a sticky plant that grows best in sandy places.

     [வேள் → வேளை]

 வேளை3 vēḷai, பெ.(n.)

   1. ஒரு வகை பூடு. இதன் இலைகளைப் பச்சையாகவே பயன்படுத்தலாம்;   இதனின்று ஒரு வித காரமான எண்ணெய் எடுக்கலாம்;   அது சீக்கிரத்தில் ஆவியாய்ப் போகக் கூடியது;   இதன் இலையின் சாற்றைப் பிழிந்து காதுகளில் விட, சீல் வடிதலும் காது வலியும் குணப்படும். இதன் சூரணம் குழந்தை களுக்கு கொடுப்பதுண்டு;   வெள்ளைப் பூண்டுடன் மருந்துக் குடிநீர் காய்ச்சி அதனின்று தைல மெடுத்து குட்டம் முதலாகிய தோல் நோய்களுக்கு கொடுக்கலாம். இதிலிருந்து தைலமிறக்கித் தலை முழுக சீதளம், ஊதை சிலேட்டுமம், ஊதை இவைகள் போகும்;   நல்வேளை வேர் பல் விளக்க உதவும், அழகு உண்டாகும்; a medicinal plant. cleome pentaphylla;

 Its leaves are edible and used as greens. Its root is used as tooth brush, and it causes brightness of the face. Its juice along with that of garlic is used to consolidate vermilion. That vermillion is very useful for fevers (by C.D.);.

   2. மூளையின் இறைச்சி; cerebrum or cerebellu.

   3. காலம் (பிங்.);; time.

   வேளை வகைகள்; the varieties are.

   1. தை வேளை – a plant – cleome felina.

   2. நல்ல வேளை – a useful variety of vélai.

   3. நாள்வேளை – a plant-cleome viscosa.

   4. முக்கா வேளை – Galega spinosa.

   5. கொள்ளுக்காய் வேளை _Tephrosia purpurea alias T.villosa.

     [வேலை → வேளை] (தே.நே.யக். 159);

வேளை பூண்(ணு)-தல்

 வேளை பூண்(ணு)-தல் vēḷaipūṇṇudal, செ.கு.வி.(v.i.)

   மன்றாடுதல் (யாழ்.அக.);; to beseech.

     [வேளை + பூண்ணு]-,]

வேளைக்காரன்

 வேளைக்காரன் vēḷaikkāraṉ, பெ.(n.)

   தீமை உண்டாக்கும் காலக் கடவுள்; eviltime, personified.

     ‘வேளைக்காரன் இப்படி படுத்துகிறான்’.

     [வேளை + காரன்]

வேளைக்காரர்

வேளைக்காரர் vēḷaikkārar, பெ.(n.)

   அரசர்க்கு வேளைப்படி உரிய பணியைத் தாம் செய்யவியலாதபோது தம்முயிரை மாய்த்துக் கொள்வதாக விரதம் பூண்ட பணியாளர்; devoted servants who hold them-selves responsible for a particular service to their king at stated hours and vow to stab themselves to death if they fail in that.

     “பூவேளைக் காரரைப் போலே………. கைமேலே முடிவாரொருவரிறே”(ஈடு 5, 1, 9);.

     [வேளை+ காரர்]

வேளைக்குறை

 வேளைக்குறை vēḷaikkuṟai, பெ.(n.)

   தீயகாலம் (வின்.);; bad times.

     [வேளை + குறை]

வேளைபார்-த்தல்

வேளைபார்-த்தல் vēḷaipārttal, செ.கு.வி. (v.i.)

   1. நன் முழுத்தம் பார்த்தல்; to fix an auspicious hour.

     ‘பெண்ணை ஊருக்கு அனுப்ப வேளை பார்க்க வேண்டும்’.

   2. தக்க அமையம் பார்த்தல்; to wait for an opportunity.

     [வேளை பார்-,]

வேளைப்பாசை

 வேளைப்பாசை vēḷaippācai, பெ.(n.)

   செடிவகை; Rhombleaved morning mallow, sida rhombifolia.

     [வேளை + பாசை]

வேளைப்பிசகு

 வேளைப்பிசகு vēḷaippisagu, பெ.(n.)

வேளைக்குறை பார்க்க;see velai-k-kurai.

     [வேளை + பிசகு|

வேளைப்பிழை

 வேளைப்பிழை vēḷaippiḻai, பெ.(n.)

வேளைக் குறை பார்க்க (வின்.);;see vélai-k-kurai.

     [வேளை + பிழை]

வேளையம்

 வேளையம் vēḷaiyam, பெ.(n.)

   வெற்றிலை பாக்கு; betel leaves and areca-nuts.

க. வீளைய.

வேள்

வேள்1 vēḷtalvēṭṭal, செ. குன்றாவி.(v.t.)

   1. வேள்விசெய்தல்; to ofter sacrifices.

     “ஒதல் வேட்டல்” (பதிற்றும். 24, 6);.

   2. மணம்புரிதல்; to marry.

     “மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட்டார்” (கம்பரா. கடிமணம் 102);.

   3. விரும்புதல்; to desire.

     “வயவுறுமகளிர் வேட்டுணினல்லது” (புறநா. 20);.

   4. நட்பு கொள்ளல்; to love.

     ‘மலர்ந்து பிற்கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி” (நாலடி, 215);.

 வேள்2 vēḷ, பெ.(n.)

   1. திருமணம்; marriage.

     “வேள்வாய் கவட்டை நெறி” (பழமொ 360);.

   2. விருப்பம் (வின்.);; desire.

   3. காமன்; kama.

     “வேள் பட விழி செய்து” (தேவா 1172, 8);.

   4. முருகக்கடவுள்; skanda.

   5. வேளிர் குலத்தான்; one belonging to the veirclass.

     “தோன்முதிர் வேளிர்” (புறநா.24);.

   6. சளுக்கு வேந்தன் (பிங்.);; calukya king.

   7. சிற்றரசன் (சூடா);; petty ruler, chief.

   8. பண்டைத் தமிழரசரால் வேளாளர் பெற்ற ஒரு சிறப்புரிமைப் பெயர் (தொல்.பொ. 30);; title given by ancient tamil kings to velalas.

     “செம்பியன் தமிழவேள் என்னுங் குலப்பெயரும்” (S.I.S.iii,22);

   9. சிறந்த ஆண் மகன் (யாழ்.,அக);; illustrious or great man, hero.

     “பாப்பைவேளே” (பெருந்தொ. 1766);,

   10.மண் (யாழ்.அக.);; earth.

     [வெள் → வேள்] (வே.க.பக்.121);

 வேள்3 vēḷ, பெ.(n.)

   செப்பு நெருஞ்சில்; a prostate plant-Indigofera enno-ophylla.

வேள்புலம்

வேள்புலம் vēḷpulam, பெ.(n.)

   சளுக்கியர்க் குரிய நாடு (S.I.I.iii,160);; the country of the casukyas.

     [வேள் + புலம்]

வேள்புலவரசன்

 வேள்புலவரசன் vēḷpulavarasaṉ, பெ.(n.)

   சளுக்குவேந்தன் (திவா.);; calukyaking.

 a sacrifice.

     [வேள்வி + கபிலை]

வேள்வி அந்தணம்

 வேள்வி அந்தணம் vēḷviandaṇam, பெ. (n.)

உயிர்க்கொலை, வேள்வி செய்து ஆரியவேதம்

   ஓதும் பார்ப்பனன்; chanting priest of vedic faith with through fires.

வேள்விகுண்டம்

 வேள்விகுண்டம் vēḷviguṇṭam, பெ.(n.)

   வேள்விக்குழி (பிங்.);; sacrificial pit.

     [வேளவி + குண்டம்]

வேள்விக்கு வேந்தன்

 வேள்விக்கு வேந்தன் vēḷvikkuvēndaṉ, பெ.(n.)

வேள்வி நாயகன் பார்க்க (சூடா.);;see vélvi-nāyagan.

     [வேள்விக்க + நாயகன்]

வேள்விக்குடி

 வேள்விக்குடி vēḷvikkuḍi, பெ.(n.)

   தேவார பாடல்களில் இடம் பெற்ற குடியிருப்புகளில் ஒன்று; humble dwelling.

குடி என்னும் சொல் ஊர்ப்பெயர்களில் அமைந்த குடியிருப்பை உணர்த்துவதாகும். இளையான் குடியிற் பிறந்த மாறன் என்ற திருத்தொண்டர் இளையான்குடி மாறன் என்று பெரிய புராணத்தில் பேசப்படுகின்றார்.

     [வேள்வி + குடி]

வேள்விச்சாலை

வேள்விச்சாலை vēḷviccālai, பெ.(n.)

   வேள்வி நிகழ்த்தும் இடம்; sacrificial hall.

     “வேள்விச்சாலையின் வேந்தன் போந்தபின்”(சிலப். 30, 170);.

     [வேள்வி + சாலை]

வேள்வித்தறி

 வேள்வித்தறி vēḷvittaṟi, பெ.(n.)

வேள்வித் தூணம் பார்க்க (பிங்.);;see vēlvi-t-tūnam.

     [வேள்வி + தறி]

வேள்வித்துணம்

வேள்வித்துணம் vēḷvittuṇam, பெ.(n.)

   வேள்வியில் கடவுளுக்கு உணவான உயிரியைக் கட்டிவைக்கும் தம்பம்; stake to which the sacrificial victim is fastened.

     “மணிச்சிரல்………. வேள்வித் துரணத் தசைஇ” (பெரும்பாண். 316);.

     [வேள்வி + துரணம்]

வேள்வித்துரண்

 வேள்வித்துரண் vēḷvitturaṇ, பெ.(n.)

வேள்வித்துரணம் பார்க்க (சூடா.);;see vélvi-t-tūnam.

     [வேள்வி + தூண்]

வேள்விநாயகன்

 வேள்விநாயகன் vēḷvināyagaṉ, பெ.(n.)

   இமையவர் கோன் (பிங்);; indra, asthelord of sacrifices.

     [வேள்வி + நாயகன்]

வேள்விநிலை

வேள்விநிலை vēḷvinilai, பெ.(n.)

   1. அரசன் வேள்வி செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு.பெ. 9, 15);;   2. தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச் சிறப்பினைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 90);;     [வேள்வி + நிலை]

வேள்விமலை

 வேள்விமலை vēḷvimalai, பெ.(n.)

   திவ்விய மருந்து மூலிகைகளையுடைய ஒரு மலை; mountain containing many extraordinary drugs.

     [வேள்வி + மலை]

வேள்விமுதல்வன்

வேள்விமுதல்வன் vēḷvimudalvaṉ, பெ.(n.)

   1. வேள்வித் தலைவன் (பரிபா. 3,4,5, உரை);; sacrificer, one who performs a sacrifice.

   2. வேள்வி நாயகன் பார்க்க;see velvi. nayakan

     “விலங்கென விண்ணோர் வேள்விமுதல்வன்” (பரிபா. 5, 31);.

     [வேள்வி + முதல்வன்]

வேள்வியாசிரியன்

வேள்வியாசிரியன் vēḷviyāciriyaṉ, பெ.(n.)

   வேள்வி செய்விக்கும் போற்றாளி (தொல். பொ. 75, உரை);; priest who conducts a sacrifice.

     [வேள்வி + ஆசிரியன்]

வேள்வியாளன்

வேள்வியாளன் vēḷviyāḷaṉ, பெ.(n.)

   1. பார்ப்பனன் (தி.வ.);; brahmin.

   2. கொடை யாளன் (பிங்.);; munificent person.

     [வேள்வி+ஆளன்]

வேள்வியின்பதி

 வேள்வியின்பதி vēḷviyiṉpadi, பெ.(n.)

   திருமால் (பிங்.);; visnu, as the lord of sacrifice.

     [வேள்வியின் + பதி]

வேள்வு

வேள்வு vēḷvu, பெ.(n.)

   1. வேள்வி; sacrifice.

     “விழவும் வேள்வும் விடுத்தலொன்றின் மையால்” (சீவக. 138);.

   2. மணத்தில் மணமக்கள் வீட்டார்கள் வரிசையாக வெடுக்கும் உணவுப்பண்டம்; presents of food-stuffs from the hose of the bridegroom to that of the bride and vice versa, at a wedding (C.N.);.

   3. அரும் பண்டம் (யாழ்.அக.);; rare commodity.

     [வேள் → வேள்வு]

வேள்வெடு-த்தல்

வேள்வெடு-த்தல் vēḷveḍuttal, செ.கு.வி.(v.i.)

   1. மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப் பண்டங்களை யனுப்புதல்; to send presents of food-stuffs from the house of the bride groom to that of the bride and vice versa, at a Wedding.

   2. பல பண்டந்தேடிக் கொண்டு போதல் (யாழ்.அக.);; together and carry varied articles.

     [வேள்வு + எடு]

வேழகம்

 வேழகம் vēḻkam, பெ.(n.)

   பீர்க்கு; loofa ribbed gourd – luffa acutangula.

 வேழகம் vēḻkam, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

வேழக்கரும்பு

வேழக்கரும்பு vēḻkkarumbu, பெ.(n.)

   நாணல்வகை; kaus, a large and coarse grass.

     “வேழக் கரும்பினொடு மென் கரும்பு” (பெரியபு. ஏனாதி. 2);.

     [வேழம் + கரும்பு]

வேழக்கைலாதி

 வேழக்கைலாதி vēḻkkailāti, பெ.(n.)

மதனப்பூ பார்க்க;see madara-p-pa.

     [வேழம் + கைலாதி]

வேழக்கோது

வேழக்கோது vēḻkātu, பெ.(n.)

   சாறு நீங்கிய கரும்புச் சக்கை; refuse of crushed sugarcane after the juice is extracted.

     “சாற்று வேழக்கோது போல்” (காஞ்சிப்பு. நகர. 52);.

     [வேழம் + கோது]

வேழக்கோல்

வேழக்கோல் vēḻkāl, பெ.(n.)

   பேய்க் கருப்பந்தட்டை (பெரும்பாண். 263, உரை);; stem of kaus.

     [வேழம் + கோல்]

வேழம்

வேழம் vēḻm, பெ.(n.)

   1. கரும்பு (பிங்.);; sugar cane.

   2. வேழக்கரும்புபார்க்க (பெரும்பாண். 263, அரும்.);;see véla-k-karumbu.

   3. நாணல் வகை (பிங்.);; european bamboo read.

     “வேழப்பழனத்து” (மதுரைக். 257);,

   4. மூங்கில் (பிங்.);; spiny bamboo.

   5. கொடி வகை (பீர்க்கு); (மூ.அ.);; sponge gourd.

   6. புல்வகை (யாழ்.அக.);; kaus, a large and coarse grass.

   7. இசை (பிங்.);; music.

   8. யானை; elephant.

     “இரவுப் புனமேய்ந்த வுரவுச்சின வேழம்” (அகநா. 309); (பிங்.);.

   9. இடராசி (பரிபா.11, 2, உரை);; aries of the zodiac.

   10. பரணி நட்சத்திரம் (பரிபா.11, 2, உரை);; the 2nd naksatra.

   11. விளாம் பழத்திற்கு வருவதொரு நோய்; a disease affecting the fruit of the wood-apple.

     “வேழந்துற்றிய வெள்ளிலே போல்” (சீவக. 232);.

   12. ஒரு வகைப் பூச்சி (பொதி.நி.);; an insect.

     [வெள் → வேள் → வேளம் → வேழம்]

வேழம்பம்

வேழம்பம் vēḻmbam, பெ.(n.)

   1. வஞ்சகம்; deceit, trick.

     “வேழம்பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்” (தேவா. 472,1);. 2 ஏளனம்;

 ridicule mockery.

     [வே → வேழம்பம்]

வேழம்பர்

வேழம்பர் vēḻmbar, பெ.(n.)

   1. கழைக் கூக்கர் (பிங்.);; pole-dancers.

   2. நகைப் பூட்டுத்திறனாளர் (விதுரஷகர்); (சிலப். 26, 130);; professional wits or humourists.

   3. கேலி செய்வோர் (சிலப். 5, 53, உரை);; those who ridicule or mock.

     [வேழம்பம் → வேழம்பரி]

வேழவெந்தீ

வேழவெந்தீ vēḻvendī, பெ.(n.)

   யானைத்தி நோய்; a disease that causes great hunger.

     “வேழ வெந்தியினிங்கி” (சீவக.401);.

 |வேழம்+ வெம்-மை + தீ]

வேழாகிகம்

வேழாகிகம் vēḻāgigam, பெ.(n.)

   1. பூவந்திக் கொட்டை; soap nut.

   2. பூவந்திக்கொடி; a creeper.

வேழ்

 வேழ் vēḻ, பெ.(n.)

   கரும்பு; sugar cane – saccharum officinarum.

     [வே → வேழ்]

வேழ்வி

 வேழ்வி vēḻvi, பெ.(n.)

   வேள்வி (அரு.நி.);; corr. of.

     [வேள்வி → வேழ்வி]

வேவம்

வேவம்1 vēvam, பெ.(n.)

   தனிமை (அரு.நி.);; loneliness.

     [ஏகம் → வேவம்]

 வேவம்2 vēvam, பெ.(n.)

   துன்பம் (அரு.நி.);; distress.

க. பேவசா.

     [எவ்வம் → வேவம்]

வேவல்

வேவல் vēval, பெ.(n.)

   முற்காலத்து வழங்கிய நாணயவகை; an ancient coin.

     ” வேவல் புழுங்க லென்றும்”(பணவிடு. 25);.

     [வே → வேவல்]

வேவாள்

வேவாள் vēvāḷ, பெ.(n.)

   ஒற்றன்; spy.

     “வேவா எனுப்பும் விசாரிப்பும்” (பணவிடு. 25);.

     [வேவு + ஆள்]

வேவி

வேவி1 vēvi, பெ.(n.)

வேவி-த்தல் பார்க்க;see vévi-.

 வேவி2 vēvi, செ.குன்றாவி.(v.t.)

   வேகவைத்தல்; boiling.

வேவு

வேவு3 vēvu, பெ.(n.)

வேள்வு 2 பார்க்க;see vělvu.

     [வேள்வு → வேவு]

வேவுகாரன்

 வேவுகாரன் vēvukāraṉ, பெ.(n.)

   ஒற்றன்; Spy.

     [வேவு + காரன்]

வேவுபார்-த்தல்

வேவுபார்-த்தல் vēvupārttal, செ.குன்றாவி. (v.t.)

வேய்3-தல் பார்க்க;see wey.

     [வேவு + பார்-,]

வேவெடு-த்தல்

வேவெடு-த்தல் vēveḍuttal, செ.கு.வி.(v.i.)

வேள்வெடு-, 1 பார்க்க;see vel-vedu-.

     [வே + வெடு-,]

வேவை

வேவை vēvai, பெ.(n.)

   வெந்தது; that which is boiled or cooked.

     “பராரை பருகெனத் தண்டி” (பொருந.104);

     [வே → வேவை]