செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
வெ

 வெ ve, பெ.(n.)

தமிழ் நெடுங்கணக்கில்

     ‘வ்’ என்ற மெய்யெழுத்தும்

     ‘எ’ என்ற

   உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய் எழுத்து; the compound of ‘v’ and ‘a’.

     [வ் + எ வெ]

வெஃகh

வெஃகh veḵka, பெ.(n.)

   1. காஞ்சிபுரத் தருகில் ஒடும் வேகவதி ஆறு; vekawat, a river near conjeevaram.

     “சேயாற்றாலும் வெஃகாவினாலும் …………………… நீரிழிந்தவழி” (S.I.I.352, 115);.

   2. திருமால் திருப்பதிகளுளொன்று (திவ். இயற். 3,62);; a visnu, shrine.

வெஃகல்

வெஃகல் veḵkal, பெ. (n.)

   1. மிக விருப்பம்; excessive disire.

   2. பேராசை (சது.);; avarice.

     [வெள் → வெள்கு → வெஃகு → வெஃகல், (வேகபக்120); (சது.);]

வெஃகாமை

வெஃகாமை veḵkāmai, பெ.(n.)

   1. அவாவின்மை; absence of desire.

   2. பிறர் பொருளை அடையக் கருதாமை; absence of cupidity.

     “வெஃகாமை வேண்டும் பிறன்கைப்பொருள்” (குறள் 178);

   3. வெறுப்பு. dislike. (w.);.

     [வெஃகு +ஆ+ மை

     ‘ஆ’ எம.இ.நி.

     “வெள் → வெள்கு → வெஃகு + ஆ மை, வெஃகாமை ;

அவாவின்மை] (வேகபக்120);.

வெஃகு-தல்

வெஃகு-தல் veḵkudal, செ.குன்றாவி. (v.t.)

   1. மிக விரும்புதல்; to desire.

வெக

வெக vega, பெ,எ (adj.),

   1. பல; many.

   2. அதிகமான, much,

     “வெகுகனக வொளி குலவும்” (திருப்பு;20);.

     [மிகு → வெகு]

வெகு

வெகு2 veguttal, செ.குன்றாவி. (v.t.)

   மிகுத்தல்; to be excessive, abundant (யாழ்.அக.);.

     [வெகு → வெகு-த்தல்]

 வெகு3 vegu, இடை, (part.)

   1. குறிப்பிடப்படும் தன்மையின் மிகுதியைக் காட்டுவது (வினையடையின் முன்); தன்மையை வலியுறுத்திக் கூறுவது; an intensifier, very.

     ‘காய்கறிவிலை வெகு மலிவு, கதையின் ஆரம்பமே வெகு ஜோர், குதிரை வெகு வேகமாக ஓடத் தொடங்கியது;

   2. (தூரத்தைக் குறிக்கையில்); சராசரி அளவைவிட அதிகமான, (காலத்தைக் குறிக்கையில்); நீண்ட (of distance);

 away or off, (of time); long.

     ‘இந்த ஊருக்குத் தண்ணிர் வெகு தொலைவிலிருந்து கொண்டுவரப்படுகிறது’.

     ‘நாங்கள் வெகு நாட்களாக நண்பர்கள்’.

     [மிகு → வெகு]

 வெகு vegu, பெ.எ. (adj.)

மிகுதியான, excessive.

     [மிகு-விகு-வெகு]

வெகுகாமி

வெகுகாமி vegugāmi, பெ.(n.)

   1. பொன்னிமிளை; yellow bismuth.

   2. தொழுகண்ணி பார்க்க;see tholukanni.

வெகுகொடுமை

 வெகுகொடுமை vegugoḍumai, பெ,(n.)

   கொடிய நஞ்சு; a kind of arsenic.

     [வெகு + கொடுமை]

வெகுசனம்

 வெகுசனம் vegusaṉam, பெ.(n.)

   மக்கள் கூட்டம்; crowd of people.

     [வெகு + Skt. Jana → த. சனம்]

வெகுசனவாக்கு

 வெகுசனவாக்கு vegusaṉavāggu, பெ.(n.)

   பொதுமக்களின் கருத்து; popular voice or opinion.

     [வெகு + Skt. Jana → த. சனம் + வாக்கு]

வெகுசாய்

வெகுசாய் vegucāy, வி.எ. (adv.)

   1. பெரும்பாலும்; almost, most probably.

     ‘வெகுசாய் இன்று மழை பெய்யும்’.

   2. வெகுவாய் பார்க்க;see veguvay.

வெகுச்சுரு

வெகுச்சுரு veguccuru, பெ.(n.)

வெகுசுரதம் 1, 2 (பொருட். நி.); பார்க்க;see vegu-curadam 1, 2.

     [வெகு + சுரு]

வெகுச்சுருதம்

வெகுச்சுருதம் veguccurudam, பெ.(n.)

வெகுச்சுருதம் 1,2 பார்க்க;see vegu-c-curutam 1, 2.(w.);.

     [வெகு + சுருதம்]

வெகுடு

 வெகுடு veguḍu, பெ.(n.)

   நாணல்; reed.

     [வெகு → வெகுடு]

வெகுட்சி

வெகுட்சி2 veguṭci, பெ.(n.)

   சினம்; wrath, rage.

     “கடையிடை தெரியார். தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள்” (பெருங். இலாவாண.2, 83-84);.

     [வெகுள் → வெகுட்சி]

வெகுட்டல்

 வெகுட்டல் veguṭṭal, பெ.(n.)

   அச்சுறுத்தல்; to threaten.

     [வெகு → வெகுட்டல்]

வெகுணோக்கு

வெகுணோக்கு veguṇōggu, பெ.(n.)

   சீற்றப்பார்வை; angry look.

     “வெருக்கு விடையன்ன வெகுணோக்கு” (புறநா. 324);.

     [வெகுளி + நோக்கு]

வெகுண்டம்

 வெகுண்டம் veguṇṭam, பெ.(n.)

   கரும்பு (மூ.அ.);; sugancane.

     [வெகு + கண்டம் → வெகுண்டம்]

வெகுதாவம்

 வெகுதாவம் vegutāvam, பெ.(n.)

விடம்தேர் பார்க்க;see vida-t-ter.

வெகுதூரமோடல்

 வெகுதூரமோடல் vegutūramōṭal, பெ.(n.)

   பொன்னுக்கு மாற்றுயர்தல்; in alchemy to incrase the quality of gold.

வெகுநாயகம்

வெகுநாயகம் vegunāyagam, பெ.(n.)

   பலருடைய ஆட்சி; government, rule or leadership in the hands of many.

     “மொழியும் வெகுநாயகஞ் சேரிடமும்” (அறப். சத. 57);

     [வெகு + தூரம் + ஒடல்]

வெகுநியாயம்

 வெகுநியாயம் veguniyāyam, பெ.(n.)

   வெளியரங்கபூசை; external worship (w.);.

     [வெகு + Skt. Nyaya → த. நியாயம்]

வெகுபத்திரி

வெகுபத்திரி vegubattiri, பெ.(n.)

   1. கத்தரிக்காய்; brinjal.

   2. சிறுநெல்லி; otaheite gooseberry.

   3. முள்ளுள்ள செடி; thorny plant.

   4. வற்றியபொருள்; that which is dry.

     [வெகு + Skt. Patra → த, பத்திரி]

வெகுபரணி

 வெகுபரணி vegubaraṇi, பெ,(n.)

   சிறு செடிவகை; stemless plant.

வெகுபிட்டம்

 வெகுபிட்டம் vegubiṭṭam, பெ,(n.)

   விரிவு (யாழ்,அக,);; expanse.

     [வெகு + பிட்டம்]

வெகுபுத்திரி

வெகுபுத்திரி vegubuttiri, பெ,(n.)

   1. கீழா நெல்லி (தைலவ);; a small plant.

   2. துளசி (சங்,அக,);; sacred basil.

வெகுபுத்திரிகை

 வெகுபுத்திரிகை vegubuttirigai, பெ.(n.)

   நரிப்பயறு; dew gram-phaseolus aconitifolius.

வெகுமஞ்சரி

 வெகுமஞ்சரி vegumañjari, பெ.(n.)

   துளசிச்செடி (இலக். அக.);; sacred basil.

வெகுமதி

வெகுமதி vegumadi, பெ.(n.)

   நன்கொடை; reward, present.

     [வெகு + மதி]

 வெகுமதி2 vegumadiddal, செ.குன்றாவி. (v.t.)

   1. மேலாக மதித்தால்; to consider to be of great value, to estimate highly.

   2. கண்ணியம் பண்ணுதல்; to treat with respect.

     [(வெகுமதி → வெகுமதித்தல்]

வெகுமானக்காரன்

வெகுமானக்காரன் vegumāṉaggāraṉ, பெ,(n.)

   பாசாங்குக்காரன்; man of pretensions (w.);.

     [வெகுமான + காரன்]

 வெகுமானக்காரன் vegumāṉaggāraṉ, பெ,(n.)

   1. நன்கொடை; present.

   2. பெருமதிப்பு; great respect.

     “வெகுமானமாகிலுமவமானமாகிலும் மேன்மையோர் செய்யிலழகாம்” (அறப், சத, 45);,

   3. பாசாங்கு; pretension.(w,);.

   4. பண்புநயம்; civility (w,);.

     [வெகு + மானம்]

வெகுமானம்

 வெகுமானம் vegumāṉam, பெ. (n.)

நன் மதிப்புக் கருதி தரப்படும் பரிசு

 a gift or prize given as a recognition of talent or good well.

     [மிகு-விகு-வெகு+மானம்]

வெகுமானி

வெகுமானி2 vegumāṉittal, செ.கு.வி (v.i.)

   பெருமை பாராட்டுதல்; to pretend to greatness (w.);.

     [வெகுமானம் → வெகுமானித்தல்]

வெகுமானி” -த்தல்

No results found

வெகுமாரி

வெகுமாரி vegumāri, பெ.(n.)

   1. பெருமழை; heavy rain.

   2. மிகுதி; increase.

     [வெகு + மாரி]

வெகுமுகம்

 வெகுமுகம் vegumugam, பெ. (n.)

   பலவாறாகக் கிளைப்பது (யாழ்.அக.);; that which divides in to several branches in many directions.

     [வெகு + முகம்]

வெகுமூத்திரம்

வெகுமூத்திரம்1 vegumūttiram, பெ.(n.)

   அடிக்கடி நீரிறங்கும் நோய், அதிமூத்திரம், இதைத் தண்ணிர் விட்டான் கிழங்கு நிறுத்தும்; polyurea, this is cured by water root.

     [வெகு + மூத்திரம்]

 வெகுமூத்திரம்2 vegumūttiram, பெ.(n.)

   நீரழிவு நோய்; diabetes.

     [வெகு + மூத்திரம்]

வெகுமூலம்

வெகுமூலம்1 vegumūlam, பெ.(n.)

   வெட்டி வேர்; khus-khus-vetiveria zizanioides.

 வெகுமூலம்2 vegumūlam, பெ.(n.)

   முருங்கை மரகை (இலக்.அக.);; horse-radish tree.

வெகுரகாலி

 வெகுரகாலி veguragāli, பெ.(n.)

   வெக்காளி; a tree.

வெகுரசம்

 வெகுரசம் vegurasam, பெ.(n.)

   கரும்பு (மலை);; Sugarcane.

     [வெகு + Skt. Rasa → த. இரசம்]

வெகுரூபன்

வெகுரூபன் vegurūpaṉ, பெ.(n.)

   1. அனைத்து விதமான வடிவங்களை எடுக்கும் பச்சை ஓணான்; chamelion.

   2. திருமால் (யாழ்.அக.);; Visnu.

   3. சிவன்; siva.

   4. மன்மதன் (யாழ்.அக.);; kama.

   5. பிரமன்; brahma.

வெகுர்

வெகுர் vegur, பெ.(n.)

   1. சூட்டினால் வரும் பரு; a wort caused by heat.

   2. வேர்க்குரு; rash due to prickly heat.

வெகுலாங்கம்

 வெகுலாங்கம் vegulāṅgam, பெ.(n.)

   ஆடு தின்னாப் பாளை (மலை.);; worm killer.

வெகுலாதி

 வெகுலாதி vegulāti, பெ.(n.)

வெகுலாலி பார்க்க (சங்.அக.);;see vekulali.

வெகுலாதிகம்

வெகுலாதிகம் vegulātigam, பெ.(n.)

   1. வெட்டுப்பாக்கு; cut arecanut.

   2. சிற்றேலம்; small cardamum.

வெகுலாலி

 வெகுலாலி vegulāli, பெ.(n.)

   சிற்றேலம் (மலை);; a species of cardamum.

வெகுளல்

வெகுளல் veguḷal, பெ.(n.)

   வெகுளுதல்; choler, anger.

     [வேக → வெகள் + அல் → வெகளல். [ [வே.க.பக். 135]]

வெகுளாமை

வெகுளாமை veguḷāmai, பெ.(n.)

   கோபியாமை; absence of anger.

     ” புணரின் வெகுளாமைநன்று” (குறள்,308);,

     [வெகுள் + ஆ + மை]

வெகுளி

வெகுளி veguḷi, பெ.(n.)

   1. முக்குற்றங்களுள் ஒன்றான கோபம்; anger, one of mu-k-kuram, q.v.

     “‘வெகுளிகணமேனுங் காத்த வரிது” (குறள், 29);.

   2 வெறுப்பு; dislike.

     “ஒரு பொருளிடத்தும் விழைவொடு வெகுளியுறாது” (திருப்போ. சந். குறுங்கழி 5, 3);.

   3. கபடமற்றவ –ன்-ள்; simple-minded person.

     [வேகு → வெகுள் + இ. →. வெகுளி.

     [வே.க.பக் 135)]

வெகுளிப்பு

வெகுளிப்பு veguḷippu, பெ.(n.)

   1. கோபம்; anger. (திவ்.இயற்.திருவிருத்.17,வ்யா.பக். 117);.

     [வேகு → வெகுள் → வெகுளி + இ → வெகுளிப்பு. [வே.க.பக் 135]

வெகுளிவிலக்கு

 வெகுளிவிலக்கு veguḷivilaggu, பெ.(n.)

   ஒரலங்காரம், அது வெகுளி தோன்றக்கூறி விலக்குவது; avoid anger.

     [வெகுளி + விலக்கு]

வெகுள்

 வெகுள் veguḷ, பெ.(n.)

   கூரை வேய்வதற்குப் பயன்படும் ஒருவகைப்புல் (செங்கை. வழ.);; a grass used for thatched roof.

வெகுள்(ளு)-தல்

வெகுள்(ளு)-தல் veguḷḷudal, செ.குன்றாவி. (v.t.)

& செ.கு.வி.(v.i.);

   1. கோபித்தல்; to be angry.

     “வேர்த்து வெகுளார் விழுமியோர்” (நாலடி,64);.

   2. பகைத்தல்; to hate, dislike.

     “கல்லான் வெகுளுஞ் சிறுபொருள்”(குறள், 870);.

     [வே → வேகு → வெகுள் →. வெகுள்தல். (வேகபக் 135);]

வெகுள்வு

வெகுள்வு veguḷvu, பெ.(n.)

   முக்குற்றங்களுள் ஒன்றான கோபம்; anger (w.);.

     [வேகு → வெகுள் + உ → வெகுள்வு. [வே.கயக், 135]]

வெகுவசனம்

வெகுவசனம் veguvasaṉam, பெ.(n.)

   பன்மை எண்ணிக்கை (பி.வி.24, உரை,பக்.44);; plural number.

     [வெகு + Skt. vasana → த. வசனம்]

வெகுவாக

 வெகுவாக veguvāga, வி.எ.(adv.)

   மிகவும்; very much.

     ‘புயல் தென் மாநிலங்களை வெகுவாகப் பாதித்தது, மருந்து நோயை வெகுவாக ஊறுபடுத்தியது’.

     [மிகு → வெகு → வெகுவாக]

வெகுவாசமுடையோகி

 வெகுவாசமுடையோகி veguvācamuḍaiyōgi, பெ.(n.)

   வசம்பு; Sweet flag-acorus calamas.

வெகுவாதகம்

 வெகுவாதகம் veguvātagam, பெ.(n.,)

   வெட்டிவேர்; khus-khus-vetiveria zizanoides.

வெகுவாய்

 வெகுவாய் veguvāy, வி.எ.(adv.)

   மிகுதியாக; very much, greatly.

     [வெகு → வெகுவாய்]

வெகுவாய்ச்சொல்(லு)-தல்)

வெகுவாய்ச்சொல்(லு)-தல்) veguvāyccolludal, செ.குன்றாவி (v.t.)

   1 விளத்தமாகச் சொல்லுதல்; to speak at great length.

   2. வற்புறுத்திக் கூறுதல்; to speak with great insistence (w.);.

     [வெகுவாய் → சொல்]

வெகுவிதம்

 வெகுவிதம் veguvidam, பெ.(n.)

   நானா வகை (சூடா.);; multiplicity.

     [வெகு Skt, vita → த. விதம்]

வெகுவிரீகி

வெகுவிரீகி veguvirīgi, பெ.(n.)

   அன்மொழித்தொகை (பி.வி. 20, உரை);; an elliptical compound word.

வெங்கடுப்பு

வெங்கடுப்பு veṅgaḍuppu, பெ.(n.)

   1. அழற்சியின்றி வரும் கண்ணோய்; sore eyes without inflammation.

   2. வெண்கடுப்பு பார்க்க;see ven-kapuppu.

     [வெம்மை + கடுப்பு → வெங்கடுப்பு]

வெங்கணன்

 வெங்கணன் veṅgaṇaṉ, பெ.(n.)

   கொடியவன்; cruel man.

     [வெம்மை + கண்ணன் → கணன்]

வெங்கணாத்தி

 வெங்கணாத்தி veṅgaṇātti, பெ.(n.)

வெங்கிணாத்தி பார்க்க;see venkipātti.

வெங்கண்

வெங்கண்1 veṅgaṇ, பெ.(n.)

   1. வெங்காயம்; onion-alliumcepa.

   2. மீன்வகை; a fish with protruburent eyes.

     [வெம்மை + கண் → வெங்கண்]

 வெங்கண்2 veṅgaṇ, பெ.(n.)

   1. அழலெடி விழிக்குங்கண்; fried eye.

     “வெங்கட் புள்ளுர்ந்து வந்து” (திவ். திருவாய். 6, 8, 5);.

   2. கொடுமை; cruelty.

     “வெங்கண் வேந்தர்” (பெருங். வத்தவ. 6, 32);.

   3. பொறாமை; jealousy (w.);.

   4. பகைமை; enmity, spite (w.);.

   5. கண்னூறு; evil eye.

   6. குத்துவா பார்க்க;see kuttuva.

     ‘தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும்’.

     [வெம்மை + கண் → வெங்கண்]

வெங்கண்டல்

 வெங்கண்டல் veṅgaṇṭal, பெ.(n.)

   மரவகை; a kind of tree.

     [வெண்மை + கண்டல் → வெங்கண்டல்]

வெங்கண்ணனார்

வெங்கண்ணனார் veṅgaṇṇaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sangam poet.

இவர் நற்றிணையில் 232-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

வெங்கண்ணன்

 வெங்கண்ணன் veṅgaṇṇaṉ, பெ.(n.)

   குழந்தை நோய்வகை; a kind of children disease.

வெங்கதிரோன்

வெங்கதிரோன் veṅgadirōṉ, பெ.(n.)

வெங்கதிர்ச்செல்வன் பார்க்க;see verikadir-c-celvan.

     “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி” (திவ். பெருமாள். 10,1);.

     [வெம்மை + கதிரோன்]

வெங்கதிர்

 வெங்கதிர் veṅgadir, பெ.(n.)

வெங்கதிர்ச் செல்வன் பார்க்க;see verikatir-c-celvan.

     [வெம்[மை] + கதிர்]

வெங்கதிர்ச்செல்வன்

வெங்கதிர்ச்செல்வன் veṅgadirccelvaṉ, பெ.(n.)

   சூரியன்; sun.

     “விசும்பி னுரி

ருளகற்றும் வெங்கதிர்ச்செல்வன் போல” (புறநா. 56);.

     [வெங்கதிர் + செல்வன்]

வெங்கதிர்மதலை

 வெங்கதிர்மதலை veṅgadirmadalai, பெ.(n.)

   கர்னன் (பிங்.);; karna.

     [வெங்கதிர் + மதலை]

வெங்கனை

 வெங்கனை veṅgaṉai, பெ.(n.)

   கடல்மீன் (முகவை. மீனவர்);; seafish.

வெங்கன்

 வெங்கன் veṅgaṉ, பெ.(n.)

   வறுமையாளன்; pauper.

     [வெங்கம் → வெங்கன்]

வெங்கம்

வெங்கம் veṅgam, பெ.(n.)

   மிக்கவறுமை; extreme poverty.

     ‘வெங்கம் பரந்த அம்மையார்க்கு திருவிளக்கெண்ணெய் அழுதுபடி’.

     [வெள் → வெண்கு → வெங்கு வெங்கம் (வே.க.பக் 155);]

வெங்கருது

 வெங்கருது veṅgarudu, பெ.(n.)

   விளை வில்லாத கதிர், நன்கு விளைந்த வயலிலும் ஊடுடே இந்த மாதிரி வெண் நிறக் கதிர் பறிந்திருக்கும்; chaff, empty ears of grain.

     [வெம்மை + கதிர் → வெங்கதிர்]

வெங்கலக்கல்வம்

 வெங்கலக்கல்வம் veṅgalakkalvam, பெ.(n.)

   மருந்துகள் உலோகக் களிம்பேறாதபடி வெங்கலத்தினால் செய்த மருந்தரைக்கும் கல்வம், கண் நோய் மருந்துகள் அரைக்குங் கருவி; mortar for grinding medicines made of bell-metal.

     [வெங்கலம் + கல்வம்]

வெங்கலக்கல்வம்செப்புக்குழவி

 வெங்கலக்கல்வம்செப்புக்குழவி veṅgalakkalvamceppukkuḻvi, பெ. (n.)

   உலோகக் களிம்பேறாதபடி வெங்கலத்தினால் செய்த மருந்தரைக்கும் கருவி, கண் நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுவது; bell metal mortar and copper pestle to grind medicines for the eyes.

     [வெங்கலம் + கல்வம் + செப்புக்குழவி]

வெங்கலக்கும்பா

 வெங்கலக்கும்பா veṅgalakkumbā, பெ.(n.)

   வெண்கலத்தால் ஆன சாப்பிடும் கும்பா உயரமாக இருக்கும். குடவம் (பித்தளை); போல் களிம்பூறாது. ஒசைக்குப் பெயர் போனது வெங்கலம்; a bronze fowl not rusty as brass famous for sowed.

     [வெங்கலம் + கும்பா]

வெங்கலச்சிலை

வெங்கலச்சிலை veṅgalaccilai, பெ.(n.)

   ஒரு வகை கடைப்பொருள்; a mineral stone – one of the 120 kinds of nature substance referred to in tamil siddha medicine.

     [வெண்கலம் + சிலை]

வெங்கலத்தாலம்

 வெங்கலத்தாலம் veṅgalattālam, பெ.(n.)

   வெங்கலத்தட்டு, தாம்பாளம்; plate or dish made of bell-metal.

     [வெங்கலம் + தாலம்]

வெங்கலபாத்திரம்

 வெங்கலபாத்திரம் veṅgalapāttiram, பெ.(n.)

   வீட்டுக்குரிய வெண்கலத்தாற் செய்த ஏனம்; bronze vessel for domestie use.

     [வெங்கலம் + Skt. patra → த. பாத்திரம்]

வெங்கலம்

வெங்கலம்1 veṅgalam, பெ.(n.)

   1. இரண்டு பாகம் செம்பும் ஒரு பாகம் வெள்ளியமும் சேர்த்து உருக்கி வார்த்து, கிண்ணி முதலிய ஏனங்கள் செய்யுமோர் மாழை; alloy of 2 parts copper and one part of tin (pewter);.

   2. வெண்கலம் பார்க்க;see Venkalam.

     [வெண்கலம் → வெங்கலம்]

 வெங்கலம்2 veṅgalam, பெ.(n.)

வெண்கலம் பார்க்க;see ven-kalam.

 வெங்கலம்3 veṅgalam, பெ.(n.)

   செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி உண்டாக்கும் கலப்பு உலோகம்; bell-metal, bronze an alloy of copper and tin.

     [வெண்கலம் → வெங்கலம்]

வெங்கலாமை

 வெங்கலாமை veṅgalāmai, பெ.(n.)

   ஆமைவகை; a kind of tortoise.

     [வெங்கலம் + ஆமை]

வெங்கல்

வெங்கல் veṅgal, பெ.(n.)

   பூச்சு வேலைகளில் பூச்சு பளபளப்பாக இருக்க பூசப் பயன்படும் கல் சுவரில் சுண்ணாம்புப் பூச்சு பளபளப்பாக இருக்க இக்கல்லால் நன்றாகத் தேய்ப்ப துண்டு (கோ. வழக்.); (தஞ். வழ.);; a kind of stone used for shining on plastering in the wall. It is also used to rub on whitewash to glitter.

     [வெள் → வெண்கு → வெங்கு → வெங்கல். (வேகபக். 155);]

வெங்களம்

வெங்களம் veṅgaḷam, பெ.(n.)

   போர்க்களம்; battle field.

     “மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து'” (பு.வெ. 9,11);.

     [வெம்[மை] + களம்]

வெங்கள்

வெங்கள் veṅgaḷ, பெ.(n.)

   கடுக மயக்குங்கள்; highly intoxicating liquor.

     “வெங்கட் டொலைச்சியவிருந்திற்பாணி” (சிலப்.10,131);.

     [வெம்[மை] + கள்]

வெங்காக்கணம்

 வெங்காக்கணம் veṅgākkaṇam, பெ.(n.)

   வெள்ளைக்காக்கணம் பார்க்க (பரி.அக.);; sea Vellai-K-kákkanam.

     [வெண்-மை + காக்கணம்]

வெங்கான்வெளி

 வெங்கான்வெளி veṅgāṉveḷi, பெ.(n.)

   நீரற்ற நிலப்பகுதி (யாழ்.அக.);; desert, arid land.

     [வெம்[மை] + கான் + வெளி]

வெங்காயக்கிழங்கு

 வெங்காயக்கிழங்கு veṅgāyakkiḻṅgu, பெ.(n.)

   நாக்கு அச்சரத்தைப் போக்கக்கூடிய வெங்காயத்தின் அடி மூலம்; bulb of onion capable of removing ulcers on the tongue. it is vegetable of all round value it assists digestion and gives tone to the stomach and is a good septic for indigestion it increases the healthy action of kidneys and produces proper sleep. it is long used for ulcer stomach. the syrup of onion is specific for colds and cough even for colds in the chest and throat. the gas from the well crused onion heals chronic ulcers when they are exposed to it.

     [வெங்காயம் + கிழங்கு]

வெங்காயக்கோரை

 வெங்காயக்கோரை veṅgāyakārai, பெ.(n.)

   புல்வகை; a kind of grass.

     [வெங்காயம் + கோரை.]

வெங்காயத்தழை

 வெங்காயத்தழை veṅgāyattaḻai, பெ.(n.)

   வெங்காயத்தினிலை; leaf of onion.

     [வெங்காயம் + தழை]

வெங்காயத்தாமரைப்பாசி

 வெங்காயத்தாமரைப்பாசி veṅgāyattāmaraippāci, பெ.(n.)

   நீர்ப்பூடுவகை; a parasitic water-plant.

     [வெங்காயம் + தாமரை]

 வெங்காயத்தாமரைப்பாசி veṅgāyattāmaraippāci, பெ.(n.)

   ஒருவகைக் கடற்பாசி; a kind of ceylon moss. (தஞ்சை. மீன.);.

     [வெங்காயம் + தாமரை + பாசி]

வெங்காயப்பூ

 வெங்காயப்பூ veṅgāyappū, பெ.(n.)

   வெங்காயத்தைப் போன்று மடல்களைக் கொண்ட பூ, குன்மம் குடல் ஊதை நோய் அறவே போம்; onion flower.

     [வெங்காயம் + பூ]

வெங்காயப்பூக்கோரை

 வெங்காயப்பூக்கோரை veṅgāyappūkārai, பெ.(n.)

   கோரைவகை; a kind of sedge.

     [வெங்காயம் + பூ + கோரை.]

வெங்காயப்பூண்டு

 வெங்காயப்பூண்டு veṅgāyappūṇṭu, பெ.(n.)

   கடற்கரையோரங்களில் வளரும் செடி; a coasted plant or shrub. (தஞ்சை. மின.);.

     [வெங்காயம் + பூண்டு]

வெங்காயம்

வெங்காயம்1 veṅgāyam, பெ.(n.)

   ஈருள்ளி; onion-allium cepa.

   1. வெங்காயம்.

   2. ஈர வெங்காயம்.

   3. நரிவெங்காயம்.

   4. வெள்ளை வெங்காயம்.

   5. சிறு வெங்காயம்.

     [வெண்[ மை] + காயம்]

 வெங்காயம்2 veṅgāyam, பெ.(n.)

   இதில் 2 வகையுண்டு, சிவப்பு, வெள்ளை. இதன் சாற்றை மூக்கினால் உறிஞ்ச மூச்சு அழற்சியைத் தடுக்கடும். வயிற்று வலி குன்மம் குடலைப் பற்றிய இழுப்பு நோய் இவைகளைக் குணப்படுத்தும்; it is used as condiment. it acts as refeingent stimulent and diuretic, it is capable of healing chronic ulcers.

 வெங்காயம்3 veṅgāyam, பெ.(n.)

   உரிக்க உரிக்க தனித் தனியாக வந்துவிடக் கூடிய தோல் அடுக்குகளால் ஆன, காரச்சுவை கொண்ட ஒரு வகை பூண்டு; onion.

     [வெண்-மை + காயம் → வெங்காயம்]

 வெங்காயம்4 veṅgāyam, பெ.(n.)

வெண்காயம் பார்க்க (பதார்த்த. 445);;see ven-kayam.

வெங்காயவடகம்

 வெங்காயவடகம் veṅgāyavaḍagam, பெ.(n.)

   நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை சேர்த்துச் சிறு உருண்டையாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள்; a kind of onion preparation dried in the sun and fried before use.

     [வெங்காயம் + வடகம்]

வெங்காயவெடி

 வெங்காயவெடி veṅgāyaveḍi, பெ.(n.)

   சிறுவெடி; small fireworks.

     [வெங்காயம் + வெடி]

வெங்காய்ச்சல்

 வெங்காய்ச்சல் veṅgāyccal, பெ.(n.)

   உப்பிடப்படாமல் வெறுமனே வெயிலிற் காயும் மீன் காய்ச்சல் (முகவை. மீன.);; drying of unsalted fish.

     [வெறுமை + காய்ச்சல் → வெங்காய்ச்சல்]

வெங்காரப்பொடி

 வெங்காரப்பொடி veṅgārappoḍi, பெ.(n.)

   புண்களுக்குப் போடும் மருந்து; borax powder.

மறுவ, வெண்காரம், பொரிகாரம், டங்கணம்.

     [வெண்காரம் + பொடி]

வெங்காரம்

வெங்காரம்1 veṅgāram, பெ.(n.)

   மருந்துச் சரக்குவகை (பதார்த்த. 1103);; borax.

     “வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும்” (நீதிநெறி 59);.

வெங்காரம்”

 வெங்காரம்” veṅgāram, பெ.(n.)

   புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்; a kind of caustic.

வெங்காரிப்பு

 வெங்காரிப்பு veṅgārippu, பெ.(n.)

   வயல்நிலம் அதிகவெப்பத்தால் வெடிக்கை; cracking of agricultural land by excessive heat.

     [வெங்கார் → வெங்காரிப்பு]

வெங்காரிப்புவெட்டு-தல்

 வெங்காரிப்புவெட்டு-தல் veṅgārippuveṭṭudal, செ.குன்றாவி.(v.t.)

   அறுவடைக்குப் பிறகு வயலுக்கு நீர்விட வரப்பு வெட்டுதல்; to open the ridge for watering a field for the first time after harvest.

     [வெங்காரிப்பு + வெட்டுதல்]

வெங்காருடைப்பு

 வெங்காருடைப்பு veṅgāruḍaippu, பெ.(n.)

   கதிரவன் வெப்பத்தால் வயல்வரப்பு பிளந்திருக்கை; cracking of ridges in wet lands owing to venkar.

     [வெங்கார் + உடைப்பு]

வெங்கார்

வெங்கார்1 veṅgār, பெ.(n.)

   வெப்பம் (யாழ்.அக.);; heat.

     [வெம் [மை] + கார்]

 வெங்கார்2 veṅgār, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

     [வெம் [மை] + கார்]

வெங்கார்நாற்றம்

வெங்கார்நாற்றம் veṅgārnāṟṟam, பெ.(n.)

   தலைப்பெயன் மழையாற் சாய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம்; odour caused by rain falling on hot. dry ground.

     “காடுகள் தரும் வெங்கார் நாற்றமும்” (பரிபா. 20, 10, உரை);.

     [வெங்கார் + நாற்றம்]

வெங்கார்மண்

வெங்கார்மண் veṅgārmaṇ, பெ.(n.)

   கதிரவன் வெப்பத்தாற் சூடேறிய நிலம் (சீவக. 250, உரை);; soil hot with sun’s heat.

     [வெங்கார் + மண்]

வெங்கிங்கல்

 வெங்கிங்கல் veṅgiṅgal, பெ.(n.)

கண்ணாடி போன்று பளபளப்பாக உள்ள சிக்கிமுக்கிக்கல். கோலப்பொடி செய்யப் பயன்படுகிறது (வ.ஆ.வழ.);.

     [வெண் → வெண்கு→ வெங்கு → வெங்கி + கல்]

வெங்கிணாத்தி

 வெங்கிணாத்தி veṅgiṇātti, பெ.(n.)

   பெரிய மலைப்பாம்பு வகை; a huge, mountain snake (w.);.

வெங்கியம்

வெங்கியம் veṅgiyam, பெ.(n.)

   1. குறிப்புப் பொருள் (நன். 269, விருத்.);; suggested sense, meaning hinted at.

   2. (குத்தலான சொல்; wit, sarcasm (w.);.

   3. எல்லை வரம் (யாழ்.அக.);; line of demarcation.

வெங்கிராயன்வெளி

 வெங்கிராயன்வெளி veṅgirāyaṉveḷi, பெ.(n.)

வெங்கான்வெளி பார்க்க;see verikān-veli.

     [வெங்கான் → வெங்கிரான் → வெங்கிராயன் + வெளி]

வெங்குசம்பா

 வெங்குசம்பா veṅgusambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை; a kind of campa paddy.

     [வெண் → வெண்கு → வெங்கு + சம்பா]

வெங்குமரிப்பூடு

 வெங்குமரிப்பூடு veṅgumarippūṭu, பெ.(n.)

   பேராமணக்கு; castor plant producing large seeds-ricinus communis.

     [வெங்குமரி + பூடு]

வெங்குரு

வெங்குரு1 veṅguru, பெ.(n.)

   1. சீர்காழி; sikali.

     “சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே” (தேவா. 85, 1);,

     [வெம்[மை] + குரு]

 வெங்குரு2 veṅguru, பெ.(n.)

   1. கூற்றுவன்; yama.

     “கடுந்துதர்……….. பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட” (போற்றிப் பஃறொடை);.

   2. தோல் அழற்சி; sun burn.

     [வெம்[மை] + குரு]

வெங்குருவேந்தர்

 வெங்குருவேந்தர் veṅguruvēndar, பெ.(n.)

   வெங்குரு என்பது சீர்காழியின் பெயர்களில் ஒன்று; verguru is a one name of Sigali.

அசுரர்கள் வழிபட்டமையால் இப்பெயர் உண்டாக்கியது. திருஞான சம்பந்தர் இவ்வூரில் தோன்றிச் சிறந்து விளங்கியமையின் திருஞான சம்பந்தர் வெங்குரு வேந்தர் என்று சிறப்புப் பெயரை அடைந்தார்.

     [வெங்குரு + வேந்தர்]

வெங்கெடுத்தை

 வெங்கெடுத்தை veṅgeḍuttai, பெ.(n.)

   நச்சுத் தன்மையுள்ள வெண்ணிறக் கெடுத்தை மீன் (தஞ்சை. மீன.);; poisonous white keduttai fish.

வெங்கைக்கலம்பகம்

 வெங்கைக்கலம்பகம் veṅgaiggalambagam, பெ.(n.)

   சிவபிரான் மீது சிவப்பிரகாசர் பாடிய திருவெங்கைக் கலம்பகம் என்னும் நூல்; a kalampakam poem on siva at venkai by civa-p-pirakācar.

     [வெங்கை + கலம்பகம்]

வெங்கைக்கோவை

 வெங்கைக்கோவை veṅgaikāvai, பெ.(n.)

   வெங்கைச் சிவபிரான் மீது சிவப்பிரகாசர் இயற்றிய கோவைச் சிற்றிலக்கியம்; a kövai poem on siva at venkai, by civappirakasar.

     [வெங்கை + கோவை]

வெங்கைபடுகனி

 வெங்கைபடுகனி veṅgaibaḍugaṉi, பெ.(n.)

   சீந்திற் கொடி; moon creeper-tinospora cordifolia.

     [வெங்கை + படுகனி]

வெங்கையலங்காரம்

 வெங்கையலங்காரம் veṅgaiyalaṅgāram, பெ.(n.)

   வெங்கை சிவபிரான் மீது சிவப்பிரகாசர் பாடிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று; a work on siva at verikai, by civappirakācar.

     [வெங்கை + அலங்காரம்]

வெங்கையுலா

 வெங்கையுலா veṅgaiyulā, பெ.(n.)

   வெங்கைச் சிவபிரான் மீது சிவப்பிரகாசர் மீது சிவப்பிரகாசர் இயற்றிய உலாநூல்; a ula poem on siva at verikai, by civappiakācar.

     [வெங்கை + உலா]

வெங்கொதிப்பு

 வெங்கொதிப்பு veṅgodippu, பெ.(n.)

   பெருங்கொதிப்பு; great heat.

     [வெம்-மை + கொதிப்பு → வெங்கொதிப்பு]

வெங்கோன்மை

 வெங்கோன்மை veṅāṉmai, பெ.(n.)

   கொடுங்கோல்; cruel government.

     [வெங்கோல் + மை]

வெங்கோலன்

வெங்கோலன் veṅālaṉ, பெ.(n.)

   கொடுங் கோலையுடைய மன்னன்; tyran, cruel ruler.

     “வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்” (குறள், 563);,

     [வெங்கோல் + அன்]

வெங்கோல்

 வெங்கோல் veṅāl, பெ.(n.)

வெங்கோன்மை பார்க்க;see werkermal.

     [வெம்மை + கோல்]

வெசவி

 வெசவி vesavi, பெ.(n.)

   வெப்பகாலம்; hot weather.

     [வெச்சு → வெசவி]

வெச்சமுது

வெச்சமுது veccamudu,    பெ.(n,), சமைத்த உணவு; cooked;

 food;

     “வெச்சமுத்து மண்டதுமும்” (T.A.s.i, 100);.

     [வெச்சு + அமுது]

வெச்சம்

வெச்சம் veccam, பெ.(n.)

   மாணிக்கக் குற்றவகை; a defect in rubies.

     “வெச்சம் பொரிவு” (கல்லா. 98);.

வெச்சாப்பு

 வெச்சாப்பு veccāppu, பெ. (n.)

இளஞ்சூடு, warmness.

வெச்சு

 வெச்சு veccu, பெ.(n.)

   வெம்மை; heat.

     [வெய்து → வெச்சு]

வெச்சுவெச்செனல்

 வெச்சுவெச்செனல் veccuvecceṉal, பெ.(n.)

வெச்செனல் பார்க்க;see Veccenal. (w.);

     [வெச்சு + வெச்சு + எனல்]

வெச்சுவெந்நீர்

 வெச்சுவெந்நீர் veccuvennīr, பெ.(n.)

   சுடுநீர் (யாழ்.அக.);; hotwater.

     [வெச்சு + வெந்நீர்]

வெச்செனல்

வெச்செனல் vecceṉal, பெ.(n.)

   1. வெம்மைக் குறிப்பு; being hot, becoming heated.

     “தண்ணென்று வெச்சென்று” (குமர. பிர. மீனாட்பிள்ளைத்1);.

   2. கடுமையாதற்குறிப்பு; being harsh.

     “தமதீஞ் சொல் வெச் சென்றிடச் சொல்லி” (சீவக. 2015);.

     [வெச்சு + எனல்]

வெச்செனவு

வெச்செனவு vecceṉavu, பெ.(n.)

   சூடு; heat.

     “தண்னெனவும் வெச்செனவுந் தந்து” (சேதுபு கடவுள். 3);.

     [வெச்செனல் → வெச்செனவு]

வெஞ்சனபண்டாரம்

வெஞ்சனபண்டாரம் veñjaṉabaṇṭāram, பெ.(n.)

வெஞ்சனம்1 பார்க்க;see vencnam.

     [வெஞ்சனம் + பண்டாரம்]

வெஞ்சனம்

வெஞ்சனம் veñjaṉam, பெ.(n.)

   1. சமைத்த கறியுணவு; vegetable relish.

   2. கறியுணவு; condiment.

   3. குழம்பு; sauce (w.);.

   4. மெய்யெழுத்து; consonant (w.);.

ஆணம் – வெஞ்சணம் என்னும் இரு சொற்களும் பெரும்பாலும் கீழ்வகுப்பாரிடையே வழங்குகின்றன. ஆணம் என்னும் சொல்லே வெந்த குழம்பைத்தான் குறிக்கும். ஆயினும் பச்சடியினின்று தெளிவாய் வேறுபடுத்திக் காட்டற்கு வெந்த என்னும் அடை பெற்றது.

     “நண்டாணமுங் களியும் தின்றாலோ தெரியும்” என்பது பழமொழி. இதில் ஆணம் என்பது சமைத்த குழம்பைக் குறித்தல். காண்க. (வ.மொ.வ. பக். 267);.

     [வெந்த + ஆணம் → வெஞ்சணம் → வெஞ்சனம்]

 வெஞ்சனம் veñjaṉam, பெ. (n.)

   வஞ்சிர மீனின் பக்கத்து சொதுவல்; a part of vanjiram fish.

வெஞ்சமன்

 வெஞ்சமன் veñjamaṉ, பெ.(n.)

இயமன், yaman (w.);.

     [வெம்மை + சமன்]

வெஞ்சமம்

வெஞ்சமம்1 veñjamam, பெ.(n.)

   பாலைப் பண்வகை (நம்பியகப்.);; a melody-type of the pālai class.

     [வெம்மை + சமம்]

 வெஞ்சமம்2 veñjamam, பெ.(n.)

   கொடுமையான போர்; war, battle.

     “விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில்” (பாரத, பன்னிரண்டாம். 73);.

     [வெம் [மை] + சமம்]

வெஞ்சம்

வெஞ்சம்1 veñjam, பெ.(n.)

வஞ்சம்’ பார்க்க;see vassam1.

     [வஞ்சம் → வெஞ்சம்]

 வெஞ்சம்2 veñjam, பெ.(n.)

   கோபம் (யாழ்.அக.);; anger.

     [வஞ்சம் → வெஞ்சம்]

வெஞ்சினக்காரன்

 வெஞ்சினக்காரன் veñjiṉakkāraṉ, பெ.(n.)

   கடுங்கோவக்காரன்; man of strong feeling of anger.

     [வெஞ்சினம் + காரன்]

வெஞ்சினம்

வெஞ்சினம்1 veñjiṉam, பெ.(n.)

   கடுங்கோபம்; extreme anger.

     “வெஞ்சின மின்மையும்” (சிறுபாண். 210);,

     [வெம்மை + சினம்]

 வெஞ்சினம்2 veñjiṉam, பெ.(n.)

வெஞ்சனம் 1, 2, 3 பார்க்க;see vencanam 1,2,3,

     “வெஞ்சினங்களென்றும்விரும்பாளே” (தனிப்பா. 1,304,25);.

     [வெஞ்சனம் → வெஞ்சினம்]

வெஞ்சிலைச்செல்வன்

 வெஞ்சிலைச்செல்வன் veñjilaiccelvaṉ, பெ.(n.)

   வீரபத்திரன்; virabhadra (w.);.

     [வெம்[மை] + சிலை + செல்வன்]

வெஞ்சுடர்

வெஞ்சுடர் veñjuḍar, பெ.(n.)

   சூரியன்; sun.

     “வெஞ்சுடரொளியுநீ” (பரிபா. 3,6,7);.

     [வெம்மை + சுடர்]

வெஞ்சொல்

வெஞ்சொல் veñjol, பெ.(n.)

   கடுஞ்சொல்; harsh word;

     “கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங்காரன்” (சீவக. 744);.

     [வெம்-மை + சொல்]

வெஞ்சோறு

வெஞ்சோறு1 veñjōṟu, பெ.(n.)

   சுடுசோறு; cooked rice, as hot.

     “எயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு” (சிறுபாண்.175);.

     [வெம்[மை] + சோறு]

 வெஞ்சோறு2 veñjōṟu, பெ.(n.)

   கறி சேர்க்கப்படாத சோறு; plain rice, without Curry.

     [வெண்[மை] + சோறு]

வெடங்குறுணி

 வெடங்குறுணி veḍaṅguṟuṇi, பெ.(n.)

   மர வகை; stag’s-horn trumpet-flower tree.

வெடவெட-த்தல்

 வெடவெட-த்தல் veḍaveḍattal, செ. குன்றாவி.(v.t.)

 shiver (markedly);.

     ‘அதிகாலையில் ஆற்றில் குளித்து விட்டு ஈர வேட்டியுடன் வெடவெடத்தபடி நின்றான்.

     ‘சிறு வயதில் அவரைப் பார்க்கும் போது எனக்கு கைகாலெல்லாம் வெட வெடக்கும்’.

     [வெட + வெட-,]

வெடி

வெடி1 veḍittal, செ.கு.வி. (v.i.)

   1. பிள வடைதல்; to crack, to split.

     “வெடிக்கின்ற விப்பியுணித்திலம்” (தஞ்சைவா. 232);.

   2. ஓசையெழப் பிளவுறுதல்; to burst with a noise.

   3. அதிர் வேட்டு முதலியன எழுதல்; to explode.

   4. வெடியோசையுண்டாதல்; to make an explosive noise.

     “வெடித்த வேலை” (கம்பரா. இலங்கையெரி.10);.

   5. மலர்தல்; to blossom.

     “வெடித்த போதெல்லாம். . . . . . . கொய்தான்” (செவ்வந்திப்பு. உறையூரழி. 47);.

   6. வெளிக் கிளம்புதல்; to shoor forth, as tender leaves.

     ‘இந்தச் செடியில் மூன்றிலை வெடித்திருக்கிறது’.

   7. விறைத்து மேலே கிளம்புதல்; to stiffen and stand upright, to be raised.

     “வெடித்தவாற் சிறு கன்று” (அரிச்பு. விவாக, 267);.

   8. பொறாமையால் துடித்தல்; to burst with envy.

     [விள் → வெள் → வெடி] [வ.மொ.வ. 259].

 வெடி2 veḍi, பெ.(n.)

   1. வேட்டு; explosion, as of a gun.

   2. ஓசை; noise.

     “மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிர” (குறிஞ்சி. 161);.

   3. இடி (சூடா.);; thunder.

   4. வேட்டெஃகம்; gun.

   5. வாணம்; fire works.

   6. வெடியுப்பு பார்க்க;see _,

   7. சிற்றேலம் (மூ.அ.);; a kind of cardamom.

   8. பிளவு; split, cleft.

     “வெடியோடும் வெங்காணம் (ஐந், ஜம், 36);.

   9. பகை; hate.

     “வெடிபடு போர்த்தொழில் காண” (சீவக. 776);.

   10. கேடு; ruin.

     “வெடிபடக் கடந்து” (மதுரைக் 233);.

   11. அச்சம் (பிங்.);; fear.

   12. நிமிர்ந் தெழுகை; shooting up.

     “வெடிவேய் கொள்வதுபோல” (புறநா. 302);.

   13. தாவுகை, leaping.

     “வெடியோன பருவவாளை” (அரிச்.பு. விவாக 2.18);.

   14. நறும்புகை (பிங்.);; fragrant incense.

   15. தீய நாற்றம்; bad smell.

     “வெடிதரு தலையினர்” (தேவா. 912, 6); 16.நறுமணம், good smell (w);.

   17. கள் (சூடா.);; boddy.

   18. கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி; a cant term, in dice-play.

     “விஞ்சிய மகிழ்வொடு வெடியென றோதுவா” (கந்தபு. கயமுகனுற். 167);.

   19. பெரும்பொய்; big lie.

     [விள் → வெள் → வெடி); (வ.மொ.வ, 259);.

 வெடி3 veḍidal, செ.கு.வி.(v.i.)

   1. விடிதல்; to dawn, to break.

     “சூபாதெல்லா மென்றூழ் வெடியாத போதிற் கொய்தான்” (செவ்வந்திப்பு. உறையூரழி. 47);.

   2. நற் காலத்தால் துன்பம் நீங்கி துன்புறுதல்; to see better days.

   3. Upon Qug|55); to come to an end.

     [விடி → வெடி]

 வெடி4 veḍi, பெ.(n.)

   விடிவெள்ளி (பிங்.);; venus, as the morning star.

     [விடி → வெடி]

 வெடி5 veḍi, பெ.(n.)

   வெளி (பிங்,);; open plain.

     [வெளி → வெடி]

வெடிகாரம்

 வெடிகாரம் veḍikāram, பெ.(n.)

   உப்பு வகை (மூ.அ.);; a kind of salt.

     [வெடி + காரம்]

வெடிகிரந்தி

 வெடிகிரந்தி veḍigirandi, பெ.(n.)

   மேகப் புண்வகை; venereal ulcer (w.);.

     [வெடி + கிரந்தி]

வெடிகுரல்

வெடிகுரல் veḍigural, பெ.(n.)

   1. இயல்பு மாறிய குரல்; hoarse voice.

   2. இசைக்கு மாறுபட்ட ஒசை; discordant note orvoice.

     “காகுளி கீழோசை வெடிகுரனாசி”(திருவிளை விறகுவிற்ற, 30);.

     [வெடி + குரல்]

வெடிக்கச்செய்-தல்

 வெடிக்கச்செய்-தல் veḍikkacceytal, செ.கு.வி. (v.i.)

   முழக்கத்துடன் வெடிக்கச் செய்தல்; detonate.

     [வெடிக்க + செய்-,]

வெடிக்கயிறு

 வெடிக்கயிறு veḍikkayiṟu, பெ.(n.)

   வெடி மருந்திலிடுந் திரிக்கயிறு; quick-match.

     [வெடி → கயிறு]

வெடிக்குதல்

 வெடிக்குதல் veḍikkudal, பெ.(n.)

   வெடித்தல்; sprout.

     [வெடி → வெடிக்குதல்]

வெடிசன்னி

 வெடிசன்னி veḍisaṉṉi, பெ.(n.)

   சன்னி வகை (யாழ்.அக,);; a kind of canni.

     [வெடி + சன்னி]

வெடிசிரிப்பு

வெடிசிரிப்பு veḍisirippu, பெ.(n.)

   பெருஞ் சிரிப்பு (சிலப். 15, 64, உரை);; loud laugh, boisterous laugh.

     [வெடி + சிரிப்பு]

வெடிசூலை

 வெடிசூலை veḍicūlai, பெ.(n.)

   சூலை நோய்வகை; a kind of colic.

     [வெடி + சூலை]

வெடித்தகுரல்

வெடித்தகுரல் veḍittagural, பெ.(n.)

   1. ஒரத்த குரல்; loud voice (w.);.

   2. வெடி குரல் 1, 2 பார்க்க;see Vedi-kural 1, 2.

     [வெடித்த + குரல்]

வெடித்தசொல்

 வெடித்தசொல் veḍittasol, பெ.(n.)

வெடுவெடுப்பான பேச்சு (யாழ்.அக.);

 harsh speech.

     [வெடித்த + சொல்]

வெடித்துக்கிளம்பு-தல்

 வெடித்துக்கிளம்பு-தல் veḍiddukkiḷambudal, செ.குன்றாவி.(v.t.)

   பல்வகையில் ஈற்றினை ஊடுருவி வெளிப்படுதல்; erupt.

வெடிபடு-தல்

வெடிபடு-தல் veḍibaḍudal, செ.கு.வி. (v.i.)

   1. பேராசையுண்டாதல்; to explode with a loud noise.

     “வெடிபட முழங்குஞ்சொல் லான்” (சீவக. 265);.

   2. சிதறுதல்; to scatter.

     “மாற்றார் வெடிபட்டோடல்” (புறநா.93);.

   3. அச்சமுறுதல்; to fear.

     “வெடிபட்டு வீற்று வீற்றோடு மயிலினம் போல்” (கவைழி 29);.

     [வெடி + படு-]

வெடிபலவன்

வெடிபலவன்1 veḍibalavaṉ, பெ.(n.)

   பூடுவகை; a kind of plant whose seedpods burst with noise(w.);.

     [வெடி + பலவம் → வெடிபலவன்]

 வெடிபலவன்2 veḍibalavaṉ, பெ.(n.)

   படுவங்கீரை (மலை);; a kind of greens.

     [வெடி + பலவன்]

வெடிபாணவுப்பு

வெடிபாணவுப்பு veḍipāṇavuppu, பெ.(n.)

வெடியுப்பு பார்க்க (விறலிவிடு. 619);;see vedi-y-uppu.

     “இந்துப்பு வெடிபானவுப்பு” (விறலிவிடு. 619);.

     [வெடி + பாணம் + உப்பு]

வெடிபோடு-தல்

 வெடிபோடு-தல் veḍipōḍudal, செ.கு.வி. (v.i.)

வெடிதீர் பார்க்க;see vedi-tir.

     [வெடி + போடு-,]

வெடிப்புண்டகால்

 வெடிப்புண்டகால் veḍippuṇḍakāl, பெ.(n.)

   பித்தத்தினால் வெடிப்பாகி வலியைத் தரும் குதிகால்; fissured heel.

     [வெடிப்புண்ட + கால்]

வெடிப்புபாண்டுக்கல்

வெடிப்புபாண்டுக்கல் veḍippupāṇḍukkal, பெ.(n.)

   கவர் வெடிப்பிற் பொருத்தப் படுங்கல் கவர்களில் வெடிப்பு அல்லது விரிசல் ஏற்படும்போது சுவர் அகலத்திற்கு சுமார் 1/2 அடி கணத்தில் வெடிப்பு வாக்கில் இரண்டு அல்லது மூன்று பாண்டுக்கற்கள் சுவரில் பொருத்தப்படும். சுவரில் பொருத்தப்படும் இக்கற்கள் சுவரில் மேலும் வெடிப்புகள் விழாமல் காக்கும் (பொ.வழ.);; a stone inserted to thwart or arrest crakes.

     [வெடிப்பு + பாண்டுக்கல்]

வெடிமருந்து

 வெடிமருந்து veḍimarundu, பெ.(n.)

   வெடிப்பதாற் குண்டு முதலியவற்றை வெளிக் கிளப்பும் வான மருந்து; gun powder (w.);.

 |வெடி ;

மருந்து

வெடியல்

வெடியல்1 veḍiyal, பெ.(n.)

வெடி2 பார்க்க;see vedi2 (w.);,

     [வெடி → வெடியல்]

 வெடியல்2 veḍiyal, பெ.(n.)

   விடியல்; dawn.

     [வெடி → வெடியல்]

வெடியாதி

 வெடியாதி veḍiyāti, பெ.(n.)

   சீந்திற் கொடி; moon-creeper-menispermum cordifolium.

வெடியுப்பியம்

 வெடியுப்பியம் veḍiyuppiyam, பெ.(n.)

   ஈயவுப்பு வகை; nitrate of lead.

     [வெடியுப்பு + ஈயம்]

வெடியுப்பு

வெடியுப்பு1 veḍiyuppu, பெ.(n.)

   1. ஓர் உப்பு; salt petre-potassium nitrade.

   2. பூநீரில் காய்ச்சும் ஐந்தாம் காய்ச்சலுப்பு; a salt which is prepared after fire process from fuller’s earth.

   3. பொட்டிலுப்பு; salt petre.

   4. தலை முடியுப்பு; salt prepared from the human skull.

     [வெடி + உப்பு]

 வெடியுப்பு2 veḍiyuppu, பெ.(n.)

   வெடி மருந்துக்கு உதவும் உப்பு (பதார்த்த 1092);; nitre, saltpeter.

     [வெடி + உப்பு]

 வெடியுப்பு veḍiyuppu, பெ.(n.)

   ஒருவகை பொட்டாசியம் உப்பு; a kind of potassium salt.

த.வ.அழலுப்பு

     [வெடி+உப்பு]

வெடியுப்புக்கட்டி

வெடியுப்புக்கட்டி1 veḍiyuppukkaḍḍi, பெ.(n.)

   1. கொறுக்காய்ப் புளி; a thorny treepithecolobium dulce.

   2. சுரம்புன்னையின் வேர்ச்சாறு; juice of the root of surappunnai

     [வெடியுப்பு + கட்டி]

வெடியுப்புக்கட்டு

வெடியுப்புக்கட்டு1 veḍiyuppukkaḍḍu, பெ.(n.)

   1. அம்பளங்காய்; a plant-spondias mangifera, consolidated petre.

   2. தலையோட்டின் மாவு மேல் கீழ் வைத்து எரிக்க மேற்படி உப்புகட்டும்; a single piece of salt petre is placed in the midst of cranial bone powder and heated it gets consolidated.

     [வெடியுப்பு + கட்டு]

 வெடியுப்புக்கட்டு2 veḍiyuppukkaḍḍu, பெ.(n.)

   வெடியுப்பை வேங்கை செய நீரில் போட்டுக் காயவைத்து எடுக்கக் கட்டிவிடும், கட்டியபின் கரிநெருப்பில் வைத்து உருக்கிட இளகி உருகும், இந்த வெடியுப்பு கட்டு மாந்தை அரிசி எடை 3 நாள் சாப்பிட குன்மம் போம்; the method of preparing consolidated salt-petre, and its alchemical use and medicinal use are mentioned above.

     [வெடியுப்பு + கட்டு]

வெடியுப்புக்கிரந்தி

 வெடியுப்புக்கிரந்தி veḍiyuppukkirandi, பெ.(n.)

   ஒரு வகை கழலை நோய்; a kind of tumour.

     [வெடியுப்பு + கிரந்தி]

வெடியுப்புச்சுண்ணம்

 வெடியுப்புச்சுண்ணம் veḍiyuppuccuṇṇam, பெ.(n.)

   ஒருவகை சுன்ன மருந்து; a kind of calcined medicine with basic property of calcium prepared out of saltpetre.

இதை இரண்டு மண்டலம் சாப்பிட இதனால் நரப்பணைப்பு போகும், சதை வலுத்திடும், தேகம் மெத்த நாளிருக்கும், வாசி திறப்படும், நரை திரை பறக்கும்.

     [வெடியுப்பு + சுண்ணம்]

வெடியுப்புத்தம்பி

 வெடியுப்புத்தம்பி veḍiyupputtambi, பெ.(n.)

   புளி நறளைக் கிழங்கு; root of a plantcissuc acida.

     [வெடியுப்பு + தம்பி]

வெடியுப்புத்திராவகம்

வெடியுப்புத்திராவகம்1 veḍiyupputtirāvagam, பெ.(n.)

   1. வெடியுப்பினால் இறக்கிய திராவகம்; nitric acid.

   2. வாலை நீர்; a medicinal liquid obtained by distillation.

   3. வாய் நீர்; saliva.

   4. குமரி நீர்; urine of a female.

     [வெடியுப்பு + Skt drdwaka→த. திராவகம்]

 வெடியுப்புத்திராவகம்2 veḍiyupputtirāvagam, பெ.(n.)

   வெடியுப்பினின்றும் எடுக்கப்படும் வெடிய அமிலம்; nitric acid (w);.

     [வெடியுப்பு + Skt. drdvaka→த திராவகம்]

வெடியுப்புமண்

 வெடியுப்புமண் veḍiyuppumaṇ, பெ.(n.)

   வெடியுப்புச் சத்துள்ள மண்; soil containing salt petre or potash.

     [வெடியுப்பு + மண்]

வெடியுப்பைக் கண்டவர்

 வெடியுப்பைக் கண்டவர் veḍiyuppaikkaṇḍavar, பெ.(n.)

   வெடியுப்பைக் கட்டியவர்; one who has consolidated salt-petre.

வெடியோசைக்காரி

 வெடியோசைக்காரி veḍiyōcaikkāri, பெ.(n.)

அண்டக்கல் பார்க்க;see anga-k-kal.

     [வெடியோசை +காரி]

வெடிரசம்

 வெடிரசம் veḍirasam, பெ.(n.)

   ஒரு வகை சாறு; fulminating mercury.

     [வெடி + Skt rasam →த. இரசம்]

வெடிலுப்பு

 வெடிலுப்பு veḍiluppu, பெ.(n.)

வெடியுப்பு பார்க்க;see vedi-yuppu.

     [வெடில் +உப்பு]

வெடில்

வெடில் veḍil, பெ.(n.)

   1. வேட்டு; explosion, as of a gun.

   2. தீய நாற்றம் (யாழ். அக.);; foul smell.

     [வெடி + வெடில்]

வெடிவத்தை

 வெடிவத்தை veḍivattai, பெ.(n.)

   வெடி வைத்து மீன் பிடித்தற்குரியதோர் மரக்கலம் (முகவை. மீன,);; a catamaran with deternators or explosives.

     [வெடி + வத்தை]

வெடிவால்

 வெடிவால் veḍivāl, பெ.(n.)

   மாட்டுக் குற்றவகை (மாட்டுவை.சிந்.);; to an inauspicious mark in the tail of cattle.

     [வெடி + வால்]

வெடிவு

வெடிவு veḍivu, பெ.(n.)

   1. விடிகை; dawning.

   2. நற்காலம் வருகை; dawning of better days.

     “வெடிவு காலம் வாராதா”.

   3. விடியற்காலம்; dawn.

     [வெடி → வெடிவு]

வெடிவை

வெடிவை1 veḍivaittal, செ.குன்றாவி. (v.t.)

   1. துப்பாக்கியாற் சுடுதல்; to shoot with a gun.

   2. கெடுக்கப் பார்த்தல்; to seek an opportunity to destroy or injure.

 வெடிவை2 veḍivaittal, செ.கு.வி. (v.i).

   1. திகைக்கும்படி பொய்ச் சொற்கள் சொல்லுதல்; to make a surprisingly false statement.

   2. சண்டைமூட்டுதல்; to foment or start a gwarrel.

     ‘இல்லாவற்றை யெல்லாஞ் சொல்லி அவன் வெடிவைத்து விட்டான்’.

     [வெடி + வை-,]

 வெடிவை3 veḍivaittal, செ.கு.வி.(v.i.)

   திட்டம் போட்டுக் கெடுத்தல்;   உலை வைத்தல்; to everthing to undermine ruin (S.O.);.

     ‘அதிகாரியிடம் ஏதோ சொல்லி என் வேலைக்கு வெடி வைத்துவிட்டான்’.

     [வெடி + வை-,]

வெடுக்-என்று

வெடுக்-என்று veḍugeṉṟu, வி.எ. (adv.)

   1. எதிர்பாராத முறையில், திடீரென்று; unexpectedly, suddenly.

     ‘பின்னால் வந்து கொண்டிருந்த நாய் வெடுக்கென்று காலைக் கடித்து விட்டது.

   2. ஓரிரு சொற்களில் மனத்தை வருத்தும் படியான; sharply,Curtly.

     ‘என்னால் முடியாது என்று வெடுக்கென்று பதில் சொன்னான்’.

     [வெடுக் + என்று]

வெடுக்கன்

வெடுக்கன் veḍukkaṉ, பெ.(n.)

   1. கடுகடுப் புள்ளவன்; crabbed person (w.);.

   2. சினங் கொள்பவன் (யாழ்.அக.);; angry person.

     [வெடுக்கு → வெடுக்கன்]

வெடுக்கு

வெடுக்கு1 veḍukku, பெ.(n.)

   1. வெடுவெடுப்பு பார்க்க;see vedu-veduppu.

   2. வெட்டெனவு பார்க்க (யாழ்.அக.);;see veffenavu.

     [வெடுக்கெனல் → வெடுக்கு]

 வெடுக்கு2 veḍukku, பெ.(n.)

   புலால் நாற்றம் (இலங்.);, தீய நாற்றம்; foul odour.

வெடுக்குச்சொடுக்கு

 வெடுக்குச்சொடுக்கு veḍukkuccoḍukku, பெ.(n.)

வெடுவெடுப்பு பார்க்க;see vedu-Veduppu.

     [வெடுக்கு + சொடுக்கு]

வெடுக்குனுசொல்லுதல்

 வெடுக்குனுசொல்லுதல் veḍukkuṉusolludal, பெ.(n.)

   முகத்தை முறித்துக் கொண்டு சினத்துடன் பேசுவதை வெடுக்கென்று சொல்வார்கள்; an expression of wrath or anger.

     ‘புள்ளெரிய எதுக் கெடுத்தாலும் இப்படியா வெடுக்கு வெடுக்குனு சொல்றது?’ என்பார்கள்.

     [வெடுக்குனு + சொல்லுதல்]

வெடுக்குவெடுக்கெனல்

 வெடுக்குவெடுக்கெனல் veḍukkuveḍukkeṉal, பெ.(n.)

வெடுக்கெனல் பார்க்க;see Vedu-k-kenal.

     [வெடுக்கு + வெடுக்கு + எனல்]

வெடுக்கெனல்

வெடுக்கெனல் veḍukkeṉal, பெ.(n.)

   1. ஒடிதலின் ஓசைக்குறிப்பு; noise of breaking.

     “அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென் றொடித்த” (இராமநா. ஆரணி. 20);.

   2. திடீரெனக் குறிப்பு; suddenness and unexpectedness.

   3. விரைவுக் குறிப்பு; quickness.

     “காலின் முட்டைக்கவும் வெடுக் கென்றசைத் தெடுத்தால்” (தாயு. சுகவாரி 5);.

   4. பேச்சிற் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு; churishness in talk.

     ‘வெடுக்கென்று பேசுகிறான்’.

   5. குத்து நோவுக் குறிப்பு; shooting pain.

     [வெடுக்கு + எனல்]

வெடுத்தலாம்

 வெடுத்தலாம் veḍuttalām, பெ.(n.)

   விடத்தேரை (இலத்);; ashy babool.

வெடுபாலை

 வெடுபாலை veḍupālai, பெ.(n.)

   பாலைமரவகை; a tree.

வெடுப்பு

 வெடுப்பு veḍuppu, பெ.(n.)

வெடுவெடுப்பு பார்க்க (யாழ்.அக.);;see vegu-veguppu.

     ‘வெடுவெடுப்பு காட்டுதல்’ (உ.வ);.

     [வெடிப்பு → வெடுப்பு]

வெடுப்புக்காட்டுதல்

 வெடுப்புக்காட்டுதல் veḍuppukkāḍḍudal, பெ.(n.)

   சினப்புக் கொள்ளுதல்; exasperation.

     [வெடுப்பு + காட்டுதல்]

வெடுவெடு-த்தல்

வெடுவெடு-த்தல் veḍuveḍuttal, செ.கு.வி. (v.i.)

   1. சினத்தாற்கோபத்தாற் படபடத்தல்; to quiver with rage.

     “வெடுவெடுத் தெழுந்தவன் றனாற்றலை யழிக்கவல்லார்” (தேவா. 776);.

   2. கடுகடுப்பாய்ப் பேசுதல்; to speak roughly.

     [வெடுவெடெனல் → வெடுவெடு-,]

வெடுவெடுத்தசொல்லி

 வெடுவெடுத்தசொல்லி veḍuveḍuttasolli, பெ.(n.)

   கடுஞ்சொற் கூறுபவ-ன்-ள் (வின்,);; one who is churlish in speech.

     [வெடுவெடு + சொல் → சொல்லி →

வெடுவெடுத்தசொல்லி,

     ‘இ’ உடைமைப் பொருளீறு)

வெடுவெடுத்தவன்

 வெடுவெடுத்தவன் veḍuveḍuttavaṉ, பெ.(n.)

வெடுக்கன் பார்க்க (வின்.);;see vegukkan.

     [வெடுவெடு + அன் → வெடுவெடுத்தவன்]

வெடுவெடுப்பு

 வெடுவெடுப்பு veḍuveḍuppu, பெ.(n.)

   கடுகடுப்பு (வின்.);; crabbedness.

     [வெடுவெடு + பு → வெடுவெடுப்பு]

வெடுவெடெனல்

வெடுவெடெனல் veḍuveḍeṉal, பெ.(n.)

   1. பெருஞ்சிரிப்பின் ஒலிக்குறிப்பு (பிங்.);; laughing loudly.

     “வெடுவெடென்ன நக்கு” (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2);.

   2. நடுக்கக் குறிப்பு; shivering with cold.

     ‘குளிர் வெடுவெடென்றாட்டுகிறது’.

   3. விரைவுக் குறிப்பு; being quick.

   4. சினக் குறிப்பு; being angry, petulant.

     ‘வெடுவெடென்று பேசுகிறான்’.

   5. ஒல்லியா யிருத்தல் குறிப்பு; being thin or slender.

     [வெடுவெடு + எனல்]

வெட்கக்கேடு

 வெட்கக்கேடு veṭkakāṭu, பெ.(n.)

வெட்கம் பார்க்க;see vetkam.

     [வெட்கம் + கேடு]

வெட்கங்கெட்டவன்

 வெட்கங்கெட்டவன் veṭkaṅgeṭṭavaṉ, பெ.(n.)

   இழிவானவன்; shameless fellow.

     [வெட்கம் + கெட்டவன்]

வெட்கஞ்சிக்கி

 வெட்கஞ்சிக்கி veṭkañjikki, பெ.(n.)

   நாணமின்மை; want of modestry (w.);

     [|வெட்கம் + சிக்கி]

வெட்கப்படு-தல்

வெட்கப்படு-தல் veḍkappaḍudal, செ.கு.வி. (v.i.)

   1. நாணமடைதல்; to be ashamed.

   2. கூச்சமடைதல்; to be bashful.

     ‘அந்தப் பெண்புருடர் முன் வர வெட்கப்படுகிறாள்’.

     [வெட்கம் + படு-]

வெட்கப்படுத்து-தல்

 வெட்கப்படுத்து-தல் veḍkappaḍuddudal, பெ.(n.)

செ.கு.வி. (v.i.);

   இழிவு படுத்துதல்; to put to shame (w.);.

     [வெட்கம் + படுத்து-,]

வெட்கம்

வெட்கம் veṭkam, பெ.(n.)

   1. அவமானம் (சூடா.);; shame.

     “வெட்கத்துக்குக் காடிளனி நானோ” (இராம. யுத்த. 32);.

   2.கூச்சம்; coyness, bashfulness.

     [வெட்கு → வெட்கம்]

வெட்கம்கெடு-த்தல்

 வெட்கம்கெடு-த்தல் veḍkamkeḍuttal, செ.குன்றாவி. (v.t.)

   இழிவு படுத்துதல்; to disgrace (w.);.

     [வெட்கம் + கெடு]

வெட்கறை

 வெட்கறை veṭkaṟai, பெ.(n.)

வெட்கங்கெட்டவன் பார்க்க;see vetkan- kettavan.(w.);

     [வெட்கு + அறு → வெட்கறை]

வெட்காலி

 வெட்காலி veṭkāli, பெ.(n.)

   மரவகை; a kind of button tree.

     [வெண்-மை + கால் → வெட்காலி]

வெட்கிளுவை

 வெட்கிளுவை veṭkiḷuvai, பெ.(n.)

   காட்டுக்கிளுவை; hill balsam tree. (w.);

     [வெண்-மை + கிளுவை → வெட்கிளுவை]

வெட்கு

 வெட்கு veṭku, வி.(v.)

   அவமானம் அடைதல்; feel disgraced.

     ‘நாங்கள் வெட்கித் தலைகுனியும்படி ஒரு செயலைச் செய்து விட்டாயே, மனைவியை அடித்தது வெட்கும்படியான செயல் இல்லையா’.

     [வெள்கு → வெட்கு]

வெட்கு-தல்

வெட்கு-தல் veṭkudal, செ.கு.வி. (v.i.)

   1. நாணப் படுதல்; to be ashamed.

   2. கூச்சப்படுதல்; to be bashful.

   3. அஞ்சுதல்; to be afraid (w.);.

     [வெள்கு → வெட்கு]

வெட்குவெட்கெனல்

 வெட்குவெட்கெனல் veṭkuveṭkeṉal, பெ.(n.)

   வெட்கக்குறிப்பு (யாழ்.அக.);; expr. of shame.

     [வெட்கு + வெட்கு + எனல்]

வெட்கெனல்

வெட்கெனல் veṭkeṉal, பெ.(n.)

   வெள்ளறிவினனாதற்குறிப்பு; expr. of shallowness, empty-headedness.

     “வெட்கென்றார் வெஞ்சொலாவிண்புறுவார்” (நான்மணி. 73);.

     [வெட்கு + எனல்]

வெட்சி

வெட்சி veṭci, பெ.(n.)

   1. செடிவகை; scarlet ixora.m.sh.

     “செங்கால் வெட்சிச் சிறிதழ்” (திருமுரு. 21);.

   2. போர்த் தொடக்கமாக வெட்சிப் பூ அணிந்து பகைவர் நிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை (தொல்.பொ. 57);; theme describing a king’s follower wearing vetci flowers and capturing the cows of the enemy.

வெட்சிக்கரந்தை

வெட்சிக்கரந்தை veṭcikkarandai, பெ.(n.)

   பகைவர் கவர்ந்து கொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 57, உரை);; theme-describing had captured them.

     [வெட்சி + கரந்தை]

வெட்சிப்பூ

 வெட்சிப்பூ veṭcippū, பெ.(n.)

   நறுமணப் பூ வகை; a fragrant white flower of Ixora coccinea.

     [வெட்சி + பூ]

வெட்சிமறவர்

வெட்சிமறவர் veṭcimaṟavar, பெ.(n.)

   பகைவர் நிரையைக் கவரச் செல்லும் மறவர் (தொல். பொ. 58, உரை);; soldiers who captue the cows of the enemy.

     [வெட்சி + மறவர்]

வெட்சிமாலையன்

 வெட்சிமாலையன் veṭcimālaiyaṉ, பெ.(n.)

   குமரன்; god of kumaran.

     [வெட்சி + மாலையன்]

வெட்சியரவம்

வெட்சியரவம் veṭciyaravam, பெ.(n.)

   பகைமுனையிடத்து நிரைகவரப்போகும் போது உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் பிறத்துறை (பு.வெ. 1, 3);; theme describing the tumult of warriors making preparation to go forth to capture enemy’s cows.

     [வெட்சி + அரவம்]

வெட்ட

வெட்ட veṭṭa, பெ.எ. (adj.)

   1. அதிகமான; much.

   2. தெளிவான; clear (w.);.

     [வெள் → வெட்ட]

 வெட்ட5 veṭṭa, பெ.(n.)

   வேலை என்பதோடு இணைந்து வரும் சொல்; a word which occurs in combination with velai.

     [வெற்று → வெட்டு → வெட்டி]

வெற்றுவேலை → வெட்டுவேலை

வெட்டதிராமூலி

 வெட்டதிராமூலி veṭṭadirāmūli, பெ.(n.)

யானைநெருஞ்சில் பார்க்க;see yanai neruncil.

வெட்டத்தண்ணீர்

 வெட்டத்தண்ணீர் veṭṭattaṇṇīr, பெ.(n.)

   இருட்பொழுதில் பளபளக்கும் கடல்நீர் (நெல்லை.மீன.);; shining or glittering sea at dark night-sea-water.

     [வெட்ட + தண்ணீர்]

வெட்டனம்

 வெட்டனம் veṭṭaṉam, பெ.(n.)

வெட்டெனம் பார்க்க (யாழ்.அக.);;see vettenam.

வெட்டனவு

வெட்டனவு veṭṭaṉavu, பெ.(n.)

   1. கடுமை (யாழ்.அக.);; cruelty.

   2. கெட்டியாயிருக்கை; hardness.

   3. வெடுக்குத்தனம்; being cut and dry.

   4. மனவுறுதி (வலிமை);; force.

     [வெட்டெனல் → வெட்டனவு]

வெட்டம்

 வெட்டம் veṭṭam, பெ.(n.)

   வெளிச்சம்; light.

     [வெள் → வெட்டம்]

வெட்டரிவாள்

 வெட்டரிவாள் veṭṭarivāḷ, பெ.(n.)

   அரிவாள் வகை; bilihook.

     [வெட்டு + அரிவாள்]

வெட்டறாமூலி

 வெட்டறாமூலி veṭṭaṟāmūli, பெ.(n.)

   நத்தை சூரி (யாழ்.அக.);; bristly button weed.

வெட்டல்

வெட்டல் veṭṭal, பெ.(n.)

   1. வெட்டுதல்; cutting.

   2. கொல்லுதல்; killing.

     [வெட்டு → வெட்டல்]

வெட்டவழி

 வெட்டவழி veṭṭavaḻi, பெ.(n.)

   பலர் செல்லும் நெறி; beaten track (w.);.

     [வெட்ட + வழி]

வெட்டவிடி

வெட்டவிடி veḍḍaviḍi, பெ.(n.)

அதிகாலை (திவ். திருப்பா. 29, வ்யா. பக். 248);.

     [வெட்ட + விடி]

வெட்டவெடி-த்தல்

வெட்டவெடி-த்தல் veḍḍaveḍittal, செ.கு.வி. (v.i.)

   அதிகக் கோபங்கொள்ளுதல்; to be wild with anger.

     “வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழலன் காண்” (தேவா. 1143, 9);,

     [வெட்ட + வெடி]

வெட்டவெளி

வெட்டவெளி veṭṭaveḷi, பெ.(n.)

   1. திறந்த வெளியிடம்; open plain.

     “வெட்ட வெளியாக விளங்கும் பராபரமே” (தாயு. பராபர. 362);.

   2.வெறிப்படையானது; that which is clearly evident. (w.);

     [வெட்ட + வெளி]

வெட்டவெளிச்சம்

வெட்டவெளிச்சம் veṭṭaveḷiccam, பெ.(n.)

   1. பெரும் பிரங்கொளி; broad day light.

   2. வெளிப்படையானது; that which is clearly evident. (w.);

     [வெட்ட + வெளிச்சம்]

வெட்டவெளியாக

 வெட்டவெளியாக veṭṭaveḷiyāka, வி,எச்.(adv.)

   வெளிப்படையாக; publicity. (w.);

     [வெட்டவெளி + ஆக]

வெட்டவெளிவிமலன்

 வெட்டவெளிவிமலன் veṭṭaveḷivimalaṉ, பெ.(n.)

   கல்லுப்பு; rock salt.

வெட்டாங்கிளி

 வெட்டாங்கிளி veṭṭāṅgiḷi, பெ.(n.)

   வெட்டுக்கிளி; large locust (w.);.

     [வெட்டு → வெட்டாம் + கிளி]

வெட்டாட்டம்

 வெட்டாட்டம் veṭṭāṭṭam, பெ.(n.)

   தாய ஆட்டவகை; a game of dice.

     [வெட்டு + ஆட்டம்]

வெட்டாந்தரை

வெட்டாந்தரை1 veṭṭāndarai, பெ.(n.)

   காய்ந்திறுகிய நிலம் (யாழ்.அக.);; dry hard ground, without vegetation.

     [வெட்டை + ஆ + தரை]

 வெட்டாந்தரை2 veṭṭāndarai, பெ.(n.)

   கடலடிப்பரப்பு (தஞ்சை. மீன.);; undepth sea.

வெட்டி

வெட்டி1 veṭṭi, பெ.(n.)

   மண்வெட்டி; spade (w.);.

   2. வழி (சது.);; path, road, way.

     “ஒளியெலா நிரம்பிய நிலைக்கோர் வெட்டியே”

     “(அருட்பா. vi, ஆற்றாமை கூறல், ii, 2);.

   3. பழைய வரிவகை;   4. வெட்டியான் 1, 2 பார்க்க;see vețiyāņ1, 2.

     [வெட்டு → வெட்டி]

 வெட்டி2 veṭṭi, பெ.(n.)

   பயனின்மை; uselessness.

     ‘என்னை வெட்டிக்குப் பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா’?

     [வெற்று → வெட்டு → வெட்டி]

 வெட்டி3 veṭṭittal, செ.கு.வி.(v.i.)

   கடுகடுப்பாதல்; to be harsh.

     “இத்தனை போது படுத்தின சிறுமையாலே வெட்டித்து” (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 188);.

     [வெட்டு → வெட்டி]

 வெட்டி4 veṭṭi, பெ.(n.)

வெட்டிவேர் பார்க்க (யாழ்.அக.);;see vetti-vér.

வெட்டிக்காக

வெட்டிக்காக veṭṭikkāka, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax. (I.M.p.cg. 1068);.

     [விள் → வெள் → வெட்டு → வெட்டி காசு

→ வெட்டிக்காக. (வே.க.பக்.15);]

வெட்டிக்கால்நண்டு

 வெட்டிக்கால்நண்டு veṭṭikkālnaṇṭu, பெ.(n.)

   வலையை வெட்டுங் கடல் நண்டு (குமரி.மீன.);; a sea crab that cuts net.

     [வெட்டு → வெட்டி + கால் + நண்டு]

வெட்டிக்குப்பெறு-தல்

 வெட்டிக்குப்பெறு-தல் veṭṭikkuppeṟudal, செ.குன்றாவி.(v.t.)

   இலவசமாகக் கிடைத்தல்; to get grat is or for nothing.

     [வெற்றுக்குப் பெறுதல் → வெட்டிக்குப் பெறுதல்]

வெட்டிக்கொடு-த்தல்

வெட்டிக்கொடு-த்தல் veḍḍikkoḍuttal, செ.குன்றாவி. (v.t.)

   1. தாராளமாகக் கொடுத்தல்; to give liberally.

   2. உதவுதல்

 to help one with.

     [விள் → வெள் → வெட்டு → வெட்டி + கொடு]

வெட்டிக்கொட்டு-தல்

வெட்டிக்கொட்டு-தல் veṭṭikkoṭṭudal, செ.குன்றாவி. (v.t.)

   1. மண் முதலியன தோண்டி அப்புறப்படுத்துதல்; to dig and remove, as earth.

   2. வெட்டிச்சசாய்3 பார்க்க;see well-c-cay.

     ‘அவன் வெட்டிக் கொட்டினானோ’?

   3. வெட்டிக்கொடு பார்க்க;see veffi-k-kodu.

     [விள் → வெள் → வெட்டு → வெட்டி + கொட்டு-தல்]

வெட்டிச்சாய்-த்தல்

வெட்டிச்சாய்-த்தல் veṭṭiccāyttal, செ. குன்றாவி .(v.t.)

   1. மரம் முதலியன முறித்து வீழ்த்துதல்; to cut down.

   2. கொல்லுதல்; to kill out right.

   3. பெருங்காயெங்களைச் செய்தல்; to accomplish, as great things.

   4. வெட்டிக்கொடு பார்க்க;see vetti-k-kodu

     [விள் → வெள் → வெட்டு + வெட்டி + சாய்த்தல்]

வெட்டிச்சோறு

வெட்டிச்சோறு1 veṭṭiccōṟu, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax (Insc.);,

     [வெட்டி + சோறு]

 வெட்டிச்சோறு2 veṭṭiccōṟu, பெ.(n.)

   தண்டச்சோறு; food given to a useless mouth.

     [வெற்று + சோறு]

வெட்டிது

வெட்டிது veṭṭidu, பெ.(n.)

   கடுமையானது; that which is harsh.

     “வெட்டிதாக வார்த்தை சொல்ல” (ஈடு. 3,5,7);.

     [வெட்டி-மை → வெட்டிது]

வெட்டிநிலம்

 வெட்டிநிலம் veṭṭinilam, பெ.(n.)

   தரிசுநிலம்; waste land, as lying waste.

     [வெற்று + நிலம்]

வெட்டிப்பயல்

 வெட்டிப்பயல் veṭṭippayal, பெ.(n.)

   பயனற்றவன்; worthless fellow (w.);

     [வெட்டி + பயல்]

வெட்டிப்பாடு-தல்

 வெட்டிப்பாடு-தல் veṭṭippāṭudal, செ.கு.வி. (v.i.)

   ஒரு புலவன் தன்னைப் பழித்துக் கூறிய சொற்களாலன்றிப் பிறவாறு அவனைப் பழித்துப்பாடுதல்; to compose a poem in retort, without using the opponent’s qhraseology.

     [வெட்டி + பாடு]

வெட்டிப்பாட்டம்

 வெட்டிப்பாட்டம் veṭṭippāṭṭam, பெ.(n.)

   பழைய வரி வகை; an ancient tax.

     “வெட்டிப் பாட்டமும் …….. எப்பேர்ப்பட்ட இறைகளு முட்பட” (Insc);.

     [வெட்டி + பாட்டம்]

வெட்டிப்புடவை

வெட்டிப்புடவை veḍḍippuḍavai, பெ.(n.)

   பழையவரிவகை; an ancienttax. (S.I.l.i, 91);.

     [வெட்டி + புடவை]

வெட்டிப்புரட்டு-தல்

 வெட்டிப்புரட்டு-தல் veṭṭippuraṭṭudal, செ.கு.வி.(v.i.)

   கடுமையாக வேலை செய்தல்; to work hard.

     [வெட்டு + புரட்டு → வெட்டிப்புரட்டு]

வெட்டிப்பேசு

வெட்டிப்பேசு1 veṭṭippēcudal, செ. குன்றாவி.(v.t.)

   1. எதிர்த்துச் சொல்லுதல்; to retort.

   2. கண்டித்துச் சொல்லுதல் (சங்.அக);; to rebuke.

     [வெட்டு பேசு → வெட்டிப்பேசு]

 வெட்டிப்பேசு1 veṭṭippēcudal, செ.கு.வி. (v.i.)

   கடுமையாகப் பேசுதல்; to speak harshly.

     [வெட்டு பேசு → வெட்டிப்பேசு]

வெட்டிப்பேச்சு

 வெட்டிப்பேச்சு veṭṭippēccu, பெ.(n.)

   வீணான பேச்சு; vain talk, useless speech.

     ‘வெட்டிப்பேச்சுப் பேசாதே காரியத்தை முடி’.

     [வெட்டி + பேச்சு]

வெட்டிமுறி

வெட்டிமுறி1 veṭṭimuṟittal, செ.கு.வி. (v.i.)

 வெட்டிமுறி2 veṭṭimuṟittal, செ. குன்றாவி. (v.t.)

வெட்டிச்சாய் 1,2,3 பார்க்க;see veffi-c-cay 1,2,3.

     [வெட்டு + சாய் → வெட்டிமுறி]

வெட்டிமை

வெட்டிமை veṭṭimai, பெ.(n.)

   1. கொடுமை; harshless.

   2. வன்பேச்சு; harshless of speech.

     “உறவற்ற சொல்லாலே வெட்டிமை யெல்லாம் சொல்லவில்லை” (திவ்.திருப்பா. 15, வ்யா. பக். 149);.

   3. சினம் (சங்.அக.);; anger.

   4. வெட்டியானூழியம்; service of vettiyan.

     [வெட்டு → வெட்டிமை]

வெட்டியான்

வெட்டியான் veṭṭiyāṉ, பெ.(n.)

   1. ஒரு வகைச் சிற்றூர் ஊழியக்காரன்; a village menial servant.

   2. பிணஞ்சுடுவோன் (யாழ்.அக.);; one who exemates corpres.

   3. பயிர்களை வெட்டியழிக்கும் பூச்சிவகை; an insect that cuts off the leaves of crops (w.);.

     [வெட்டு → வெட்டியான்]

வெட்டியார்பறையர்

வெட்டியார்பறையர் veṭṭiyārpaṟaiyar, பெ.(n.)

   சில விழா நிகழ்ச்சிக் காலங்களில் பறை கொட்டல் புரியும் பறையர்வகையார்; a sub-division of the paraiyas, who act as drummers on certain ceremonial occasions (M.M.655);.

     [வெட்டியான் + பறையர் → வெட்டியார்பறையர்]

வெட்டிரம்

 வெட்டிரம் veṭṭiram, பெ.(n.)

   இலந்தை; indian plum-zizyphus jujuba.

வெட்டிரும்பு

 வெட்டிரும்பு veṭṭirumbu, பெ.(n.)

   இரும்பு வெட்டும் உளி (யாழ்.அக.);; cold chisel.

     [வெட்டு + இரும்பு]

வெட்டிவரி

 வெட்டிவரி veṭṭivari, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax.

     [வெட்டி + வரி]

வெட்டிவார்த்தை

 வெட்டிவார்த்தை veṭṭivārttai, பெ.(n.)

வெட்டிப்பேச்சு பார்க்க;see vetti-p-peccu.

     [வெட்டி + Skt. vartta → த. வார்த்தை]

வெட்டிவீரன்

 வெட்டிவீரன் veṭṭivīraṉ, பெ.(n.)

   சிறந்த வீரன் (யாழ்.அக.);; man of supreme heroism.

     [வெற்றி → வெட்டி + வீரன்]

வெட்டிவேதினை

வெட்டிவேதினை veṭṭivētiṉai, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax (I.M.p.Tj.94);,

     [வெட்டி + வேதினை]

வெட்டிவேர்

வெட்டிவேர்1 veṭṭivēr, பெ.(n.)

   ஒரு வகைப் புல்லின் அடிவோ; khus-khus whitish yellow root-vetiveria zizaniodes. it contains a resin and volatilc oil. it is a stimulent, diaphoretic and aromatic,

மறுவ. விழல்வேர், குறுவேர், விலாமிச்சை

வேர், கஸ்கஸ்,

     [வெட்டு → வெட்டி + வேர்]

 வெட்டிவேர்2 veṭṭivēr, பெ.(n.)

   இலாமிச்சைப் புல் (புதாத்த. 477);; cuscus-grass.

   2. கருப்பு இலாமிச்சை; black cuscus-grass.

     [வெட்டு → வெட்டி + வேர்]

வெட்டிவேலை

 வெட்டிவேலை veṭṭivēlai, பெ.(n.)

   பயனற்ற செயல்; futile enterprise.

     [வெற்றுவேலை → வெட்டிவேலை]

வெட்டிவை

வெட்டிவை veṭṭivai, பெ.(n.)

வெட்டிமை 1,2,3 பார்க்க (யாழ்.அக.);;see vettimai 1,2,3.

     [வெட்டிமை → வெட்டிவை]

வெட்டு

வெட்டு2 veṭṭudal, செ.கு.வி. (v.i.)

   1. பளிச் சென மின்னுதல்; to flash suddenly, as light ring.

   2. கடுமையாதல்; to be harsh.

     “வெட்டிய மொழியினன்” (கம்பரா. குகப். 9);.

   3. திடீரென்று நற்பேறு உண்டாதல்; to have a sudden stoke of fortune.

     [விள் → வெள் → வெட்டு-தல்]

 வெட்டு3 veṭṭu, பெ.(n.)

   1. துண்டிப்பு; cutting.

     ‘ஒரு வெட்டில் அந்த மரம் விழும்’.

   2. வெட்டுதலா லுண்டாம் புண் முதலியன; wound, cut.

   3. எழுத்து முதலியன பொறிக்கை; engraving.

     ‘கல்வெட்டுச் சாசனம்’.

   4. ஒருவகைப் பழைய சிறு காசு; an ancient small coin.

     “தன்னுடைய வெட்டென்றும்” (பணவிடு. 143);.

   5. தையல் துணி வெட்டுகை; Cutting by tailor.

   6. தலை முடி கத்திரிக்கை; cropping the hair.

   7. ஆட்டக்காயை நீக்குகை; removing a piece in chess and other games.

   8. தீடீரென வரும் நற்பேறு; stroke of fortune.

     ‘அவனுக்குத் திடீரென ஒரு வெட்டு வெட்டிற்று’.

     ‘இரண்டாயிர உரூபா கிடைத்தது’.

   9. பாட்டு; ostentation.

   10. வஞ்சனை; cunning.

   11. நாயை ஒட்டும் போது கூறும் சொல்; an expression used in driving away dogs.

     [விள் → வெள் → வெட்டு (வே.க.பக்.15);]

வெட்டுகிற

 வெட்டுகிற veṭṭugiṟa, பெ.எ. (adj.)

   கூரிய, ஊடுருவிச் செல்லுந் தன்மையுடையது; trenchant.

வெட்டுக் கறியாளன்

 வெட்டுக் கறியாளன் veṭṭukkaṟiyāḷaṉ, பெ.(n.)

ஆடுமாடுகளை வெட்டி இறைச்சியை விற்பவன், கசாப்புக்காரன்,

 butcher.

     [வெட்டு+கறியாளன்]

வெட்டுக்கட்டை

வெட்டுக்கட்டை veṭṭukkaṭṭai, பெ.(n.)

   கிளையற்ற அடிமரம்; stump.

     [விள் → வெள் → வெட்டு + கட்டை → வெட்டுக்கட்டை. [வே.க.பக்.151]]

வெட்டுக்கத்தி

வெட்டுக்கத்தி veṭṭukkatti, பெ.(n.)

   கத்திவகை; cleaver, chopper.

     [விள் → வெள் → வெட்டு + கத்தி → வெட்டுக்கத்தி. [வே.க.பக்.151]]

வெட்டுக்கன்று

 வெட்டுக்கன்று veṭṭukkaṉṟu, பெ.(n.)

   பால் மறந்த கன்று (யாழ்.அக.);; weaned calf.

     [விட்ட → வெட்ட → வெட்டு +கன்று]

 வெட்டுக்கன்று veṭṭukkaṉṟu, பெ.(n.)

   திருத்தியமைத்த காட்டு நிலம்; jungle land cleared and brought under cultivation.

     [வெட்டு + காடு]

வெட்டுக்கறிக்காரன்

 வெட்டுக்கறிக்காரன் veṭṭukkaṟikkāraṉ, பெ.(n.)

வெட்டுக் கறியாளன் பார்க்க;see vettu-k-kariyalan.

     [வெட்டு+கறி+காரன்]

வெட்டுக்கல்

 வெட்டுக்கல் veṭṭukkal, பெ.(n.)

   சொறிக்கல்; laterite.

     [வெட்டு + கல்]

வெட்டுக்காயப்பச்சிலை

 வெட்டுக்காயப்பச்சிலை veṭṭukkāyappaccilai, பெ.(n.)

   செடிவகை; a plant-clitoria ternata.

     [வெட்டு + காயம் + பச்சிலை]

வெட்டுக்காயம்

 வெட்டுக்காயம் veṭṭukkāyam, பெ.(n.)

   வெட்டினாலுண்டாம்புண்; cut. incised wond.

     [விள் → வெள் → வெட்டு + காயம் → வெட்டுக்காயம்]

வெட்டுக்கால்

 வெட்டுக்கால் veṭṭukkāl, பெ.(n.)

   மாட்டின் தீச்சுழிவகை (பெ.மாட்.);; an inauspicious sign or mark in cattle.

     [வெட்டு + கால்]

வெட்டுக்கிடங்கு

 வெட்டுக்கிடங்கு veḍḍukkiḍaṅgu, பெ.(n.)

   ஆடு மாடுகள் அடிக்குமிடம் (கசாப்புக் கிடங்கு);; slaughter-house.

     [வெட்டு+கிடங்கு]

வெட்டுக்கிளி

 வெட்டுக்கிளி veṭṭukkiḷi, பெ.(n.)

   ஒருவகைப் பூச்சி; grass hopper. (w.);

     [வெட்டு + கிளி]

வெட்டுக்குத்து

 வெட்டுக்குத்து veṭṭukkuttu, பெ.(n.)

   கத்தி முதலிய கூரான படைக்கலங்களைக் கொண்டு செய்யுஞ் சண்டை; fighting with sharp weapons.

     [வெட்டு + குத்து]

வெட்டுக்குத்துப்பழி

 வெட்டுக்குத்துப்பழி veṭṭukkuttuppaḻi, பெ.(n.)

வெட்டுப்பழி பார்க்க;see vetti-p-palli.

     [வெட்டுக்குத்து + பழி]

வெட்டுக்குருத்து

 வெட்டுக்குருத்து veṭṭukkuruttu, பெ.(n.)

   வெட்டுப்பட்ட இடத்தில் தோன்றும் குருத்து (திவா,);; shoot sprouting in a lopped tree.

     [வெட்டு + குருத்து]

 வெட்டுக்குருத்து veṭṭukkuruttu, பெ.(n.)

   செடிகளின் இளங்குருத்து அல்லது தண்டு; newly sprouted part of a plant.

     [வெட்டு + குருந்து]

வெட்டுக்குளம்பு

 வெட்டுக்குளம்பு veṭṭukkuḷambu, பெ.(n.)

   கால்நடையின் பிளவுற்ற குளம்பு (அபி.சிந்.);; cloven hoofed.

     [வெட்டு + குளம்பு]

வெட்டுக்கூர்

 வெட்டுக்கூர் veṭṭukār, பெ.(n.)

   கூராண; pointed nail.

     [வெட்டு + கூர்]

வெட்டுக்கை

 வெட்டுக்கை veṭṭukkai, பெ.(n.)

   குறுக்கு வடிவாக இணைக்கப்பட்ட கைமர அமைப்பு; a wooden instrument jointed horizontally.

     [வெட்டு + கை]

வெட்டுச்சட்டை

 வெட்டுச்சட்டை veṭṭuccaṭṭai, பெ.(n.)

   பெண்கள் அணியும் ஒருவகை அங்கி; a kind of jacket for girls.

     [வெட்டு + சட்டை]

வெட்டுச்சந்தம்

 வெட்டுச்சந்தம் veṭṭuccandam, பெ.(n.)

   சந்தனச் சிராய்; pieces of sandal wood.

     [வெட்டு + சந்தம்]

வெட்டுடையாதி

 வெட்டுடையாதி veḍḍuḍaiyāti, பெ.(n.)

   காட்டெருமை; wild buffalo.

வெட்டுணி

வெட்டுணி1 veṭṭuṇi, பெ.(n.)

   திப்பிலி மூலம் (சா.அ.);; root of long pepper-piper longum.

 வெட்டுணி2 veṭṭuṇi, பெ.(n.)

   1. கீழ்ப்படியாத பிள்ளை; disobedient child.

   2. கொடூரன்; villain.

     [வெட்டுண் + இ]

வெட்டுண்(ணு)-தல்

 வெட்டுண்(ணு)-தல் veṭṭuṇṇudal, செ.கு.வி. (v.i.)

   முற்படுதல்; to be cut.

     [வெட்டு + உண்]

வெட்டுண்டபுண்

 வெட்டுண்டபுண் veṭṭuṇṭabuṇ, பெ.(n.)

வெட்டுக்காயம் பார்க்க;see vettu-k-kayam.

     [வெட்டுண்ட + புண்]

வெட்டுதல்

வெட்டுதல்1 veṭṭudaldal, செ.குன்றாவி. (v.t.)

   1. வாள் முதலியவற்றால் பிளவுபட எறிதல்; to cut, as with a sword or axe.

     “அரியயன்றலை வெட்டி வட்டாடினார்” (தேவா. 369, 2);.

   2. எழுத்து முதலியன பொறித்தல்; to engrave.

   3. தோண்டுதல்; to dig, as a well.

     ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது’.

   4. தவச அளவில் தலை வழித்தல்; to strike of, as the top of a measure, in measuring grain.

     ‘தலைமுடியைக் வெட்டி அள’.

   5. தலைமுடியைக் கத்தரித்தல்; to crop, as the head.

   6. துணி முதலியன துண்டித்தல்; to cut, as a cloth.

   7. ஆட்டக் காயைப் பயனற்றதாக நீக்குதல்; to take away, as a piece in chess and other games.

   8. புழுக்கடித்தல்; to injure, as insects.

   9. அழித்தல; to destroy.

   10. மறுத் துரைத்தல்; retort, refute.

     ‘எப்போதும் வெட்டியே பேசுகிறான்’.

   11. கடிந்து பேசுதல்; to speak harshly.

     [விள் → வெள் → வெட்டு-தல்]

வெட்டுத்தட்டு

 வெட்டுத்தட்டு veṭṭuttaṭṭu, பெ.(n.)

   பறையின் வாய்வார்; ear of a drum (w.);.

     [வெட்டு + தட்டு]

வெட்டுத்தாக்கு

 வெட்டுத்தாக்கு veṭṭuttākku, பெ.(n.)

   மண்ணெடுத்த குழி; excavated pit.

     [வெட்டு + தாக்கு]

வெட்டுத்தாவு

 வெட்டுத்தாவு veṭṭuttāvu, பெ.(n.)

   குளம் ஏரி முதலியவற்றில் வெட்டப்பட்ட ஆழமான பகுதி; tank pit, deep portion of a tank.

     [வெட்டு + தாவு]

வெட்டுப்பகை

 வெட்டுப்பகை veṭṭuppagai, பெ.(n.)

வெட்டுப்பழி பார்க்க;see vettu-p-pali.

     ‘இட்டவன் இராவிட்டால் வெட்டுப்பகை’.

     [வெட்டு + பகை]

வெட்டுப்படு-தல்

வெட்டுப்படு-தல் veḍḍuppaḍudal, செ.கு.வி.(v.i.)

வெட்டுண் பார்க்க;see vettun.

     ‘வெட்டுப்பட்டாய் மகனே தலை நாளின் விதிப்படியே’ (தனிப்பா. 1, 149, 54);.

     [வெட்டு +படு-,]

வெட்டுப்படை

 வெட்டுப்படை veḍḍuppaḍai, பெ.(n.)

   வாட்படை; army of swordsmen (w.);.

     [வெட்டு + படை]

வெட்டுப்பட்ட வாதைகள்

 வெட்டுப்பட்ட வாதைகள் veṭṭuppaṭṭavātaigaḷ, பெ. (n.)

   வில்லுப்பாட்டில், இறப்புப் பற்றிய கதையாடல்களுக்கு உரியவர்; lyrist who writes the songs of the deceased in villuppattu comprise a bow along with other instrument.

வெட்டுப்பழி

 வெட்டுப்பழி veṭṭuppaḻi, பெ.(n.)

   தீராப்பகை; martal feud.

     ‘அவனுக்கும் இவனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாக இருக்கிறது’.

     [வெட்டு + பழி]

வெட்டுப்பாக்கு

 வெட்டுப்பாக்கு veṭṭuppākku, பெ.(n.)

   இரண்டாகப் பிளக்கப்பட்ட மட்டமான பாக்கு; split arecanut of inferior greality.

     [வெட்டு + பாக்கு]

வெட்டுப்பாக்குவெட்டி

 வெட்டுப்பாக்குவெட்டி veṭṭuppākkuveṭṭi, பெ.(n.)

   பாக்குவெட்டிவகை; a kind of arecanut cracker.

     [வெட்டு + பாக்கு + வெட்டி]

வெட்டுப்பாய்ச்சி

 வெட்டுப்பாய்ச்சி veṭṭuppāycci, பெ.(n.)

   கருத்த கடல் மீன் (தஞ்சை.மீன.);; a blackish sea fish.

     [வெட்டு + பாய்ச்சி]

வெட்டுப்பூச்சி

 வெட்டுப்பூச்சி veṭṭuppūcci, பெ.(n.)

வெட்டுக்கிளி பார்க்க;see vettu-k-kili.

     [வெட்டு + பூச்சி]

வெட்டுமரம்

 வெட்டுமரம் veṭṭumaram, பெ.(n.)

   கட்டடப் பணிகளுக்குப் பயன்படும் மரங்கள்; woods used for building activities.

     [வெட்டு + மரம்]

வெட்டுமருந்து

 வெட்டுமருந்து veṭṭumarundu, பெ.(n.)

   வெட்டிக் கொள்ளப்படும் மருந்து வகை; medicinal herbs, roots, barks, etc., as obtained by cutting.

     [வெட்டு + மருந்து]

வெட்டுமாறன்

 வெட்டுமாறன் veṭṭumāṟaṉ, பெ.(n.)

   வெறிதரும் ஒருவகைப் பண்டம் (யாழ்.அக.);; an intoxicant.

     [வெட்டு + மாறு → வெட்டுமாறன்]

வெட்டுமாலை

 வெட்டுமாலை veṭṭumālai, பெ.(n.)

வெட்டுத்தாக்கு பார்க்க;see vettu-t-takku.

     [வெட்டு + மாலை]

வெட்டுமுனை

 வெட்டுமுனை veṭṭumuṉai, பெ.(n.)

   உளி, வாள் போன்ற தச்சுக்கருவிகளின் வெட்டும் கூர்மைப் பகுதி (தச்.பொறி.);; sharp end of carpentry instiverts like saw, chisel etc.

     [வெட்டு + முனை]

வெட்டுமுளை

 வெட்டுமுளை veṭṭumuḷai, பெ.(n.)

   புதிதாக அடிக்கப்பட்ட காசு; money recently minted (W.);.

     [வெட்டு + முளை]

வெட்டுருக்கு

 வெட்டுருக்கு veṭṭurukku, பெ.(n.)

   ஒன்பானுலகில் ஒன்று, அதாவது கருவங்கம்; one of nine metals lead.

     [வெட்டு + உருக்கு]

வெட்டுரை

வெட்டுரை1 veṭṭurai, பெ.(n.)

   வெடு வெடுப்பான பேச்சு (யாழ்.அக.);; cutting word, harsh speech.

     [வெட்டு + உரை]

 வெட்டுரை2 veṭṭurai, பெ.(n.)

வெட்டுரைப் பணம் பார்க்க;see vetturai-p-panam (W.);.

 |வெட்டு + உரை]

வெட்டுரைப்பணம்

 வெட்டுரைப்பணம் veṭṭuraippaṇam, பெ.(n.)

   கள்ள நாணயம் (யாழ்.அக.);; bad coin.

     [வெட்டுரை + பணம்]

வெட்டுளி

 வெட்டுளி veṭṭuḷi, பெ.(n.)

வெட்டிரும்பு பார்க்க;see vettirumbu.

     [வெட்டு + உளி]

வெட்டுவாய்

வெட்டுவாய் veṭṭuvāy, பெ.(n.)

   1. அறுபட்ட புண்வாய்; gash, opening of a cut.

   2. பொருத்து; joining(w.);.

     [வெட்டு + வாய்]

வெட்டுவாலி

 வெட்டுவாலி veṭṭuvāli, பெ.(n.)

வெட்டுக்கிளி பார்க்க;see vettu-k-kili.(w.);.

     [வெட்டுக்கிளி → வெட்டுவாளி → வெட்டுவாலி]

வெட்டுவாள்

 வெட்டுவாள் veṭṭuvāḷ, பெ.(n.)

   வெட்டுக் கத்திவகை (யாழ்.அக.);; a kind of chopper.

     [வெட்டு + வாள்]

வெட்டுவெட்டெனல்

வெட்டுவெட்டெனல் veṭṭuveṭṭeṉal, பெ.(n.)

   1. இனக்குறிப்பு; being angry.

   2. கடுமைக் குறிப்பு (யாழ்.அக.);; being harsh.

   3. அச்சுக் குறிப்பு; being frightened.

   4. ஒளி விடற் குறிப்பு; dazzling (w.);.

     ‘வெயில் வெட்டுவெட்டென்றெறிக்கிறது’.

     [வெட்டு + வெட்டு + எனல்]

வெட்டுவேர்

வெட்டுவேர் veṭṭuvēr, பெ.(n.)

வெட்டிவேர்1 பார்க்க (பிங்.);;see vettvēr1.

     [வெட்டு + வேர்]

வெட்டுவேளாண்மை

 வெட்டுவேளாண்மை veṭṭuvēḷāṇmai, பெ.(n.)

   அறுவடை; harvest (w.);.

     [வெட்டு + வேளாண்மை]

வெட்டெனல்

வெட்டெனல்1 veṭṭeṉal, பெ.(n.)

   கடுமைக் குறிப்பு; expr. of harshness.

     ‘வெட்டெனப் பேசன்மின்’ (தேவா. 1241,3);.

     [வெட்டை + எனல்]

 வெட்டெனல்2 veṭṭeṉal, பெ.(n.)

   மெளனமாய் இசைத்தற்குறிப்பு; expr. of giving consent by silence.

     “ஆய்ச்சி……….. குறுங் கயிற்றாற் கட்ட வெட்டென் றிருந்தான்” — (திவ். பெரியதி 5, 9, 7);.

     [வெற்றெனல் → வெட்டெனல்]

வெட்டெனவு

வெட்டெனவு veṭṭeṉavu, பெ.(n.)

   1. கடுமை; severity, harshness.

   2. வன்மை; hardness.

   3. வன்மையானது; that which in severe or hard.

     “வெட்டெனவு மெத்தெனவை வெல்லாவாம்”(மூதுரை, 33);.

     [வெட்டெனல் → வெட்டெனவு]

வெட்டெழுத்து

 வெட்டெழுத்து veṭṭeḻuttu, பெ. (n.)

   கல்வெட்டு எழுத்து; inscription.

     [வெட்டு+எழுத்து]

வெட்டேறு

 வெட்டேறு veṭṭēṟu, பெ.(n.)

   போர்க் கருவிகள் (யாழ்.அக.);; a weapon.

     [விட்டேறு → வெட்டேறு]

வெட்டை

வெட்டை1 veṭṭai, பெ.(n.)

   1. வெப்பம்; heat.

     “அனல் வெட்டையாற் சுருண்டு” (இராமநா. உயுத்.14);.

   2. நிலக்கொதி; heat of the ground (w.);.

   3. காமவிச்சை; passion, lust.

     “காம வேட்டையிலே மதிமயங்கி” (தனிப்பா, i, 195, 10);.

   4. நோய்வகை; gonorrhoea.

     [வெட்கை → வெட்டை]

 வெட்டை2 veṭṭai, பெ.(n.)

   1. வெறுமை; emptiness.

   2. பயணின்மை; uselessness.

     ‘தங்கம் வெட்டையாய்ப் போய்விட்டது’.

   3. காய்ந்திறுகிய நிலம்; hard ground.

   4. அழிவு; ruin.

     ‘அவன் தொட்டவிட்வெல்லாம் வெட்டை தான்’.

   4. கடினத்தன்மை; hardness (w.);.

     [வெட்டி → வெட்டை]

 வெட்டை3 veṭṭai, பெ.(n.)

   வெளி (சங்.அக.);; open land.

     [வெளி → வெட்டை]

வெட்டைக்கிரந்தி

 வெட்டைக்கிரந்தி veṭṭaikkirandi, பெ.(n.)

வெட்டைச் சூட்டினாலேற்பட்ட கரப்பான்புண்,

 rashes caused by venereal disease.

     [வெட்டை + கிரந்தி]

வெட்டைச்சுரம்

 வெட்டைச்சுரம் veṭṭaiccuram, பெ.(n.)

உடம்பின் அதிக சூட்டினால் வந்த காய்ச்சல்,

 fever due to venereal heat.

     [வெட்டை + சுரம்]

வெட்டைச்சூடு

 வெட்டைச்சூடு veṭṭaiccūṭu, பெ.(n.)

   பெண்ணின்பத்தினாலேற் பட்ட சூடு; heat caused by inter course-venereal heat.

     [வெட்டை + குடு]

வெட்டைநாள்

 வெட்டைநாள் veṭṭaināḷ, பெ.(n.)

   மிகுந்த (சூடான தட்பவெட்பம்; very hot weather.

     [வெட்டை + நாள்]

வெட்டைப்பிடிப்பு

வெட்டைப்பிடிப்பு veḍḍaippiḍippu, பெ.(n.)

   1. வளிப்பிடிப்பு நோய்வகை; rheumatism.

   2. விதை வீக்கம்; inflammation of the testicles, orchitis.

     [வெட்டை + பிடிப்பு]

வெட்டைமுடிதல்

 வெட்டைமுடிதல் veḍḍaimuḍidal, பெ.(n.)

   மேக வேட்டை தீர்தல்; cure of venereal affection.

     [வெட்டை + முடிதல்]

வெட்டையனல

 வெட்டையனல veṭṭaiyaṉala, பெ.( n.)

   வெட்டைச்சூடு; congenital heat.

     [வெட்டை + அனல்]

வெட்டையாய்ப்போதல்

 வெட்டையாய்ப்போதல் veṭṭaiyāyppōtal, பெ.(n.)

   தீய்ந்து போதல்; over heated not malleable, becoming brittle.

     [வெட்டையாய் + போதல்]

வெட்டையிருமல்

 வெட்டையிருமல் veṭṭaiyirumal, பெ.(n.)

   சூட்டினால் உண்டாகும் இருமல்; cough due to excess heat.

     [வெட்டை + இருமல்]

வெட்டைவாள்கூடு

வெட்டைவாள்கூடு veṭṭaivāḷāṭu, பெ.(n.)

   1. விட்டில் கட்டுகிற அரக்கு; lac taken from the wasp nest built in houses.

   2. குழவிக்கூடு; waspnest.

     [வெட்டை + வாள் + கூடு]

வெட்டைவெளி

வெட்டைவெளி veṭṭaiveḷi, பெ.(n.)

வெட்டவெளி1 (சங்.அக.); பார்க்க;see vetta-veli1.

     [வெட்டை + வெளி]

வெட்டொழிவு

 வெட்டொழிவு veṭṭoḻivu, பெ.(n.)

   நிலத்தைப் பயன்படுத்திய செலவிற்குக் கொடுக்கும் தொகை; allowance for improvements made on land by the tenant.

     [வெட்டு ஒழிவு]

வெட்பகடம்

 வெட்பகடம் veḍpagaḍam, பெ.(n.)

   வெளிப்பகட்டு; outward show.

     [வெள் + பகடம்]

வெட்பலாவிகம்

 வெட்பலாவிகம் veṭpalāvigam, பெ.(n.)

   வெள்வேல்; white babool.

     [வெட்பலா + விகம்]

வெட்பாடம்

 வெட்பாடம் veṭpāṭam, பெ.(n.)

   வாய்ப்பாடம்; lesson learnt merely by rote.

     [வெள் + பாடம்]

வெட்பாலை

வெட்பாலை veṭpālai, பெ.(n.)

   1. மரவகை (பிங்.);

 dyeing rosebay.

   2. குடசப் பாலை; connesibark.

     [வெள் + பாலை]

வெட்பாலையரிசி

 வெட்பாலையரிசி veṭpālaiyarisi, பெ.(n.)

   மருந்துச் சரக்குவகை; a medicinal druk.

     [வெட்பாலை + அரிசி]

வெட்பாலைவிதை

 வெட்பாலைவிதை veṭpālaividai, பெ.(n.)

வெட்பாலரிசி பார்க்க;see vetpalarisi.

     [வெட்பாலை + விதை]

வெட்பாவட்டை

வெட்பாவட்டை veṭpāvaṭṭai, பெ.(n.)

   1. பாவட்டைவகை(வின்.);; a species of pavattai plant.

   2. ஆடாதோடை; a shrub adhathoda vesica.

     [வெள் + பாவட்டை]

வெட்புகார்

 வெட்புகார் veṭpukār, பெ.(n.)

   மழை நீரற்ற மேகம் (யாழ்.அக.);; rainless cloud.

     [[வெள் + புகார்]

வெட்புலம்

வெட்புலம் veṭpulam, பெ.(n.)

   வெற்றிடம்; bare ground.

     ‘வெட்புலந் தன்னிற் சோகமிஞ்சவே'(பாரத துச்சுப், 33);.

     [வெள் + புலம்]

வெட்பூண்டு

 வெட்பூண்டு veṭpūṇṭu, பெ.(n.)

   வெள்ளைப் பூண்டு; garlic-allium satirum.

     [வெள் + பூண்டு]

வெட்பூலா

 வெட்பூலா veṭpūlā, பெ.(n.)

   சாம்பல் நிறப்பூலா; a variety of poola.

     [வெள் + பூலா]

வெட்பூல்

வெட்பூல்1 veṭpūl, பெ.(n.)

   சாம்பல் நிறப் பூலா; a variety of poola.

     [வெள் + பூல்]

 வெட்பூல்2 veṭpūl, பெ.(n.)

வெள்ளைப்பூலா பார்க்க;see velli-p-poola _,

     [வெள் + பூல்]

வெண் அல்லி

 வெண் அல்லி veṇalli, பெ.(n.)

   வெண்மை நிற நீர் அல்லி; white water lily.

     [வெண் [மை] + அல்லி]

வெண்கடன்

 வெண்கடன் veṇkaḍaṉ, பெ.(n.)

வெண்ணிலைக்கடன் பார்க்க (இ.வ.);;see Vennilas-k-kadan.

வெண்கடம்பு

வெண்கடம்பு veṇkaḍambu, பெ.(n.)

   மரவகை; a kind of tree.

     “வெண்சுடம்பு பந்தணிந்தவே” (சீவக. 1650);.

     [வெண் [மை] + கடம்பு]

வெண்கடலி

 வெண்கடலி veṇkaḍali, பெ.(n.)

   வெண் தேக்கு; white teak-lager-Iroemia lanceolata.

     [வெண் [மை] + கடலி]

வெண்கடலை

 வெண்கடலை veṇkaḍalai, பெ.(n.)

   ஒரு வகை கொண்டைக் கடலை; white bengal gram-cicer arietinum.

     [வெண் [மை] + கடலை]

வெண்கடல்

வெண்கடல் veṇkaḍal, பெ.(n.)

   பாற்கடல் (பெருங், உஞ்சைக் 57,113, அரும்.);; sea of milk.

     [வெண் [மை] + கடல் வெண்கடல்]

வெண்கடவன்

 வெண்கடவன் veṇkaḍavaṉ, பெ.(n.)

வெண்கொட்டை பார்க்க;see ver-kottai.

     [வெண் [மை] + கடவன்]

வெண்கடிகம்

 வெண்கடிகம் veṇgaḍigam, பெ.(n.)

வெப்பாலை பார்க்க;see Veppalai

     [வெண் [மை] + கடிகம்]

வெண்கடுகு

 வெண்கடுகு veṇgaḍugu, பெ.(n.)

   கடுகுவகை (பிங்.);; white mustard.

     [வெண் [மை] + கடுகு → வெண்கடுகு]

வெண்கடுப்பு

 வெண்கடுப்பு veṇkaḍuppu, பெ.(n.)

   கண்ணோய் வகை;     [வெண் [மை] + கடுப்பு → வெண்கடுப்பு]

வெண்கட்டுக்கொடி

 வெண்கட்டுக்கொடி veṇkaḍḍukkoḍi, பெ.(n.)

   சிறு கட்டுக் கொடி; small variety of coagulating creeper-cocculus villosus.

     [வெண் [மை] + கட்டு + கொடி]

வெண்கண்

வெண்கண் veṇkaṇ, பெ.(n.)

வெங்கண் 6 பார்க்க (வின்.);;see verigan.

     [வெண் [மை] + கண் → வெங்கண்]

வெண்கண்டங்கத்தரி

 வெண்கண்டங்கத்தரி veṇkaṇṭaṅgattari, பெ.(n.)

   வெள்ளைக் கண்டங் கத்திரி; thorny plant bearing white flowers and fruits-solanumjacquini.

     [வெண் [மை] + கண்டங்கத்தரி]

வெண்கண்டர்

 வெண்கண்டர் veṇkaṇṭar, பெ.(n.)

   வெள்ளைத் துரிசி, பால் துத்தம்; white vitriol-zinc sulphate country.

     [வெண் [மை] + கண்டர் → வெண்கண்டர்]

வெண்கண்டல்

வெண்கண்டல் veṇkaṇṭal, பெ.(n.)

   1 சிறு மரவகை (இலத்,);; white mangrove, s.tr.

   2. மரவகை; papery-barked obtuse-leaved mangrove,m.tr.

     [வெண் [மை] + கண்டல் → வெண்கண்டல்]

வெண்கண்ணன்

வெண்கண்ணன் veṇkaṇṇaṉ, பெ.(n.)

   கழகக்காலப் புலவர், இவர் பெயர் பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் எனவும் காணப்படும்; a sangam poet another name was called podumbil-kilāmweakamnagar.

இவர் அகநானூற்றில் 130192-ஆம் பாக்களைப் பாடியுள்ளார்.

வெண்கதிரோன்

 வெண்கதிரோன் veṇkadirōṉ, பெ.(n.)

   கதிரவன் (வின்.);; the sun.

     [வெங்கதிரோன் → வெண்கதிரோன்]

வெண்கதிர்

 வெண்கதிர் veṇkadir, பெ.(n.)

வெங்கதிரோன் பார்க்க (இலக்.அக.);;see Verikadiron);.

     [வெண் [மை] + கதிர்]

வெண்கன்னான்

வெண்கன்னான் veṇkaṉṉāṉ, பெ.(n.)

   வெண்கல வேலை செய்யும் கன்னான்; smith working in bell-metal.

     “வெண் கன்னானுக்குக் கைங்கர்யம்……………… எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப் பண்ணுகிறது” (கோயிலொ. 94);.

     [வெண் [மை] + கன்னான்]

வெண்கமலம்

வெண்கமலம் veṇkamalam, பெ.(n.)

   1. வெண்டாமரை; white lotus.

   2. நிரைய வகை (சிவதரு. சுவர்க்க நரக.114);; a hall.

     [வெண் [மை] + கமலம்]

 Skt. Kamalam → த. கமலம்

வெண்கமலை

 வெண்கமலை veṇkamalai, பெ.(n.)

   கலைமகள் (இலக்.அக.);; sarasvati.

     [வெண் [மை] + கமலை]

 Skt. Kamala → த. கமலம்

வெண்கயல்

 வெண்கயல் veṇkayal, பெ.(n.)

   வெள்ளியைப் போலிருக்கும் ஒரு வெண்ணிறக்கெண்டை மீன் (சங்.நூல. மீன்கள்.);; silvery kendai fish.

     [வெண் [மை] + கயல்]

வெண்கரப்பான்

 வெண்கரப்பான் veṇkarappāṉ, பெ.(n.)

பாற்கரப்பான் பார்க்க;see par-karappan.

     [வெண் [மை] + கரப்பான்]

வெண்கரு

 வெண்கரு veṇkaru, பெ.(n.)

   முட்டையின் வெள்ளைக்கரு; the white of egg.

     [வெண் [மை] + கரு]

வெண்கருங்காலி

வெண்கருங்காலி veṇkaruṅgāli, பெ.(n.)

   1. வெக்கால் பார்க்க;see vekkal.

   2. வெள்ளைக்கருங்காலி பார்க்க;see vekkal-k-karunkali.

     [வெண் [மை] + கருங்காலி]

வெண்கருங்குழல்

 வெண்கருங்குழல் veṇkaruṅguḻl, பெ.(n.)

   தாமரைக் கிழங்கு; root of lotus.

     [வெண் [மை] + கருங்குழல்]

வெண்கருச்சத்து

 வெண்கருச்சத்து veṇkaruccattu, பெ.(n.)

   முட்டையின் வெள்ளைக் கருவைப் போன்ற புரதம்; protein or albuminoids.

     [வெண் [மை] + கருச்சத்து]

 Skt. Sakthi → த. சத்து.

வெண்கருநீர்

 வெண்கருநீர் veṇkarunīr, பெ.(n.)

   முட்டையின் வெண்கரு; white of an egg.

     [வெண் [மை] + கருநீர்]

வெண்கரும்பு

 வெண்கரும்பு veṇkarumbu, பெ.(n.)

   ஆலைக் கரும்பு; white sugancane-saccharum officinarum.

     [வெண் [மை] + கரும்பு]

வெண்கருவிளை

வெண்கருவிளை1 veṇkaruviḷai, பெ.(n.)

   வெள்ளைக் காக்கணம்; a twiner bearing white flowers-chitoria ternalia.

     [வெண் [மை] + கருவிளை]

 வெண்கருவிளை2 veṇkaruviḷai, பெ.(n.)

வெண்காக்கணம் பார்க்க (சங்.அக.);;see ven-kakkanam.

     [வெண்-மை + கருவிளை]

வெண்கற்றாழை

 வெண்கற்றாழை veṇkaṟṟāḻai, பெ.(n.)

   ஒரு வகைக் கடல் மீன். சாம்பல் நிறம் படர்ந்த இம்மீனின் முதுகுப் பரப்பு பச்சை நிறத்தினால் மேலும் கருமையாய்க் காணப்படும். உடலின் பக்கப் பகுதிகளும் வயிற்றுப் பரப்பும் வெண்ணிற முடனிருக்கும் (மீன.பொ.வ.);; a kind of sea fish with dark colour on its back, because of combination of green and ash colours. It sides and lower portion are white in colour.

     [வெண் [மை] + கற்றாழை]

வெண்கற்றுகள்

 வெண்கற்றுகள் veṇgaṟṟugaḷ, பெ.(n.)

   சலவைகற்பொடி; marble dust.

     [வெண் [மை] + கற்றுகள்]

வெண்கற்றை

 வெண்கற்றை veṇkaṟṟai, பெ.(n.)

சவரிக் காரம் பார்க்க;see cavari-k-karam.

     [வெண் [மை] + கற்றை]

வெண்கல நிமிளை

வெண்கல நிமிளை1 veṇkalanimiḷai, பெ.(n.)

   நிமிளை; bismuth pyrites.

     [வெண்கலம் + நிமிளை]

 வெண்கல நிமிளை2 veṇkalanimiḷai, பெ.(n.)

   அம்பாரை; bismuth, a tonic.

     [வெண்கலம் + நிமிளை]

வெண்கலக்குரல்

 வெண்கலக்குரல் veṇkalakkural, பெ.(n.)

   வெண்கலக் குழல் போன்று கணீரென ஒலிக்கும் குரல்; resounding voice, full throated voice.

     [வெண்கலம் + குரல்]

வெண்கலபற்பம்

 வெண்கலபற்பம் veṇkalabaṟbam, பெ.(n.)

   வெண்கலமாகிய உலோகத்தைப் புடமிட்டப் பொடி; white calcined powder of bell metal.

     [வெண்கலம் + பற்பம்]

வெண்கலப்பட்சி

 வெண்கலப்பட்சி veṇkalappaṭci, பெ.(n.)

   பறவை வகை (இ.வ.);; a bird.

     [வெண்கலம் + பட்சி]

வெண்கலப்பாத்திரம்

 வெண்கலப்பாத்திரம் veṇkalappāttiram, பெ.(n.)

   பொருட்கலங்களிலொன்று; vessel made of bell metal.

 |வெண்கலம் + skt. patra → த. பாத்திரம்]

வெண்கலப்பானை

 வெண்கலப்பானை veṇkalappāṉai, பெ.(n.)

   வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திர வகை; pot of bronze.

     [வெண்கலம் + பானை]

வெண்கலம்

வெண்கலம்1 veṇkalam, பெ.(n.)

   செம்பும் வெள்ளியமும் கலந்து உருக்கி உண்டாக்கும் கலப்பு உலோகம் (பிங்.);; bell-metal, bronze, an alloy of copper and tin.

     “வெண்கலப் பத்திரங் கட்டி விளையாடி” (திவ். பெரியாழ்.1,9,8);.

     [வெண் [மை] + கலம்]

 வெண்கலம்2 veṇkalam, பெ.(n.)

   நாள் (அக.நி.);; day.

வெண்கலி

வெண்கலி1 veṇkali, பெ.(n.)

   வெண்கடுகு; White mustard-brassica alba.

 வெண்கலி2 veṇkali, பெ.(n.)

வெண் கலிப்பா பார்க்க (வின்.);;see wenkalippa.

     [வெண் [மை] + கலி]

வெண்கலிப்பா

 வெண்கலிப்பா veṇkalippā, பெ.(n.)

   வெண்டளை பெற்றுவரும் கலிப்பாவகை; a kind of kali verse with ven-dalai.

     [வெண்கலி +பா]

வெண்கல்

வெண்கல் veṇkal, பெ.(n.)

   1. வெள்ளைக் கல்;   2. சலவைக்கல் (வின்.);; white marble.

     [வெண் [மை] + கல்]

வெண்கல்கொட்டை

 வெண்கல்கொட்டை veṇkalkoṭṭai, பெ.(n.)

   மலை வெண் கொட்டை; a hill tree loptopetallum wightianum.

     [வெண் [மை] + கல் கொட்டை]

வெண்கல்லு

 வெண்கல்லு veṇkallu, பெ.(n.)

   சலவைக் கல்; white stone-marble stone-cilabluster.

     [வெண் [மை] + கல் → கல்லு]

வெண்களமர்

வெண்களமர் veṇkaḷamar, பெ.(n.)

   1. மருதநில மாக்கள் (தொல். சொல். 16,உரை);; inhabitants of the agricultural tract.

   2. வேளாளர் (அக.நி.);; Velasas.

     [வெண் [மை] + களமர்]

வெண்களி

 வெண்களி veṇkaḷi, பெ.(n.)

   வெள்ளைக் கரும்பு; white sugarcane-saccharum officinarum.

     [வெண் [மை] + களி]

வெண்களிமண்

 வெண்களிமண் veṇkaḷimaṇ, பெ.(n.)

   வெள்ளைக் களிமண்; white clay-claymarl.

     [வெண் [மை] + களிமண்]

வெண்களிற்றரசு

வெண்களிற்றரசு veṇkaḷiṟṟarasu, பெ.(n.)

   வேந்தனின் வெள்ளை யானை (ஐராவதம்);; indra’s elephant.

     “வால் வெண்களிற்றரசு வயங்கிய கோட்டத்து” (சிலப் 5, 143);.

     [வெண் [மை] + களிறு + அரசு]

வெண்கழற்சி

 வெண்கழற்சி veṇkaḻṟci, பெ.(n.)

   வெள்ளைக் கழற்சிக் கொடி; thorny creeper bearing white bonduc nut caesalpinia bonducella (alba.);.

     [வெண் [மை] + சுழற்சி]

வெண்கவி

வெண்கவி veṇkavi, பெ.(n.)

   1. வெண்பா; venpa verse.

   2. பொருளாழமற்ற கவி; verse, not pregnant with ideas.

     [வெண் [மை] + கவி]

 Skt. kavi → த. கவி

வெண்காகம்

 வெண்காகம் veṇkākam, பெ.(n.)

   வெள்ளைக் காக்கை; white crow.

     [வெண் [மை] + காகம்]

வெண்காக்கட்டான்

 வெண்காக்கட்டான் veṇkākkaṭṭāṉ, பெ.(n.)

   வெள்ளைக்காட்டான்; a twining plant-clitoria ternatea (albiflora);.

     [வெண் [மை] + காக்கட்டான்]

வெண்காக்கணம்

வெண்காக்கணம் veṇkākkaṇam, பெ.(n.)

   வெள்ளைக்காக்கணம் (குறிஞ்சிப். 68, உரை);; white-flowered-shell creeper.

     [வெண் [மை] + காக்கணம்]

வெண்காக்கியம்

 வெண்காக்கியம் veṇkākkiyam, பெ.(n.)

   வெள்ளை மிளகு; white pepper-piper nigrum.

     [வெண் + காக்கியம்]

வெண்காக்கை

 வெண்காக்கை veṇkākkai, பெ.(n.)

வெண்காக்கணம் பார்க்க;see verkakkanam.

     [வெண் [மை] + காக்கை]

வெண்காசம்

 வெண்காசம் veṇkācam, பெ.(n.)

   கண்நோய்வகை (யாழ்.அக.);; sore-eyes.

     [வெண் [மை] + காசம்]

வெண்காசுக்கட்டி

 வெண்காசுக்கட்டி veṇkācukkaṭṭi, பெ.(n.)

வெண்ணிறமான காசுக்கட்டி,

 white catachew-palladium.

     [வெண் [மை] + காசுக்கட்டி]

வெண்காடு

வெண்காடு1 veṇkāṭu, பெ.(m.)

   திருவெண்காடு என நாகை மாவட்டத்தில் உள்ள ஊர்; a village tiruvenkaguin Nagai district.

சீர்காழிக்குத் தென் கிழக்கே ஏழு-எட்டு கல் தொலைவில் இருக்கும் இடம் இது, முக்குளம். ஆல், வில்வம், கொன்றை என்ற மூன்று கோயில் மரங்கள் இக்கோயிலின் சிறப்பு. திருநாவுக்கரசர்,

     “பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப் பரிசறித் தென் வளைகவர்ந்தார் பாவியேனை மேக முகிலரிஞ்சும் சோலை குழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே” (249-4); எனப் பாடுகின்றார்.

 வெண்காடு2 veṇkāṭu, பெ.(n.)

   ஒரு சிவதலம்; siva temple.

வெண்காட்டுநங்கை

 வெண்காட்டுநங்கை veṇkāṭṭunaṅgai, பெ.(n.)

   திருவெண்காட்டு நங்கை (அபி.சிந்);, திருத்தொண்டருடைய மனைவி; wife of ciru-t-tongar.

     ‘சிறுத்தொண்டருடைய தொண்டுகட்கு உடந்தையாயிருந்து மகனாகிய சீராளனை அறுத்துக் கறி சமைத்தாள்’.

     [வெண் [மை] + காடு + நங்கை]

வெண்காந்தள்

வெண்காந்தள்1 veṇkāndaḷ, பெ.(n.)

   வெள்ளைப் பூவுடைய காந்தள்; november flower plant bearing white flowersgloriosa superba-opposite of cherikantal.

     [வெண் [மை] + காந்தள்]

 வெண்காந்தள்2 veṇkāndaḷ, பெ.(n.)

செடிவகை (புறநா.90, உரை);,

 white species of malabar glory lily.

     [வெண் [மை] + காந்தள்]

வெண்காமாலை

 வெண்காமாலை veṇkāmālai, பெ.(n.)

   ஒரு வகைக் காமாலை நோய்; a variety of jaundice.

     [வெண் [மை] + காமாலை]

வெண்காயத்தாள்

 வெண்காயத்தாள் veṇkāyattāḷ, பெ.(n.)

   வெங்காய இலை; onion leaves.

     [வெண்காயம் + தாள்]

வெண்காயம்

வெண்காயம் veṇkāyam, பெ.(n.)

   1. பூடுவகை (வின்.);; onion, allium cepa,

   2. உள்ளி (யாழ்.அக.);; gariic.

     [வெண் [மை] + காயம்

வெண்காய்ச்சல்

 வெண்காய்ச்சல் veṇkāyccal, பெ.(n.)

   சிறு சுரம்;வெண் [மை] + காய்ச்சல்]

வெண்காய்வேளை

 வெண்காய்வேளை veṇkāyvēḷai, பெ.(n.)

வெள்ளைக் கொள்ளுக் காய் வேளை,

 white species of vellai-kollu-k-kay-velai, a plant tephrosia purpurea.

     [வெண் [மை] + காய் வேளை]

வெண்காரக்களிம்பு

 வெண்காரக்களிம்பு veṇkārakkaḷimbu, பெ.(n.)

   களிம்பு மருந்து வகை; boric ointment.

     [வெண்காரம் + களிம்பு]

வெண்காரக்குடோரி

 வெண்காரக்குடோரி veṇkārakkuṭōri, பெ.(n.)

   பொன்னாக்கம் செய்யும் போது உருக்கு முகத்தில் பயன்படுத்துவது; a mixture of borax (act as a catalatic agent); added to aid quick melting of substances in alchemy.

வெண்காரசிகம்

 வெண்காரசிகம் veṇgārasigam, பெ.(n.)

   வெப்பாலை; a tree.

     [வெண்காரம் + சிகம்]

வெண்காரசுத்தி

 வெண்காரசுத்தி veṇkārasutti, பெ.(n.)

   பொரித்த வெண்காரம், பொரிகாரம்; purification of borax.

     [வெண்காரம் + சுத்தி]

வெண்காரச்சுண்ணம்

வெண்காரச்சுண்ணம் veṇkāraccuṇṇam, பெ.(n.)

   1. முப்பூச் கண்ணம்; a king like medicine prepared of the three salts.

   2. வெங்காரத்தினின்றும் புடமிட்டெடுக்கும் ஒரு வகைச்சுண்ண மருந்து; a calcined powder prepared of borax.

     [வெண்காரம் + சுண்ணம்]

வெண்காரத்துள்

 வெண்காரத்துள் veṇkārattuḷ, பெ.(n.)

   களிம்புத் தூள்; powder of borax, boric powder.

     [வெண்காரம் + தூள்]

வெண்காரப்பதங்கம்

 வெண்காரப்பதங்கம் veṇkārappadaṅgam, பெ.(n.)

   ஒரு விதப் பதங்கம்; boric acid.

     [வெண்காரம் + பதங்கம்]

வெண்காரமது

 வெண்காரமது veṇkāramadu, பெ.(n.)

   வெண்காரத்தினின்று உருவாக்கிய தேன்; borax honey.

     [வெண்காரம் + மது]

வெண்காரம்

வெண்காரம்1 veṇkāram, பெ.(n.)

   வெங்காரம்; borax.

     “ஏலம் வெண்காரம்” (விறலிவிடு. 616);.

     [வெண்-மை + காரம் → வெண்காரம்]

 வெண்காரம்2 veṇkāram, பெ.(n.)

   1. பொரியகாரம்; borax-barborate of sodasodium biboras.

இது வாய்ப்புண் உதடு வெடிப்பு முலைக்காம்பு வெடிப்புகளுக்கு மேல் தடவலாம்.

   2. 3 மாதத்திய இருப்பிண்டம்; foetus of third month.

     [வெண் [மை] + காரம் → வெண்காரம்]

வெண்காரலவனம்

 வெண்காரலவனம் veṇkāralavaṉam, பெ.(n.)

   சாறு வராத் தழைகளில் சாறு வரச் செய்யும் ஒரு வகை தயாரித்த வுப்பு; a prepared salt which is capable of extracting juice from brittle leaves which ordinarily don’t yield juice.

     [வெண்காரம் + இலவணம்]

வெண்காரவுள்ளி

 வெண்காரவுள்ளி veṇkāravuḷḷi, பெ.(n.)

   வெள்ளை வெங்காயம்; white onion-allium сере (alba);.

     [வெண் [மை] + காரம் + உள்ளி]

வெண்காரி

 வெண்காரி veṇkāri, பெ.(n.)

   சினக்காரம்; alum.

வெண்காரை

வெண்காரை1 veṇkārai, பெ.(n.)

   அரைத்த சுண்ணாம்பு (யாழ்.அக.);; pounded chunam.

     [வெண் [மை] + காரை → வெண்காரை]

 வெண்காரை2 veṇkārai, பெ.(n.)

   சீரமைக்கொஞ்சி; micro-nuton extoca.

     [வெண் [மை] + காரை]

வெண்காலி

வெண்காலி1 veṇkāli, பெ.(n.)

வெட்காலி பார்க்க (பதார்த்த 457);;see ver-kalli.

     [வெண் [மை] + காலி]

 வெண்காலி2 veṇkāli, பெ.(n.)

   மரவகை; a tree.

கருங்காலியை ஒத்தது. இதனால் பித்தம் அரத்த குற்றம் தினவு, குட்டம் கபம் போகும்.

 வெண்காலி3 veṇkāli, பெ.(n.)

   ஒருவகை மரம்; a kind of button tree.

     [வெண் [மை] + காலி]

வெண்கால்

வெண்கால் veṇkāl, பெ.(n.)

   யானை மருப்பினால் செய்த கட்டில் முதலியவற்றின் கால் (பெருங், உஞ்சைக். 33, 63);; leg made of ivory, as of cot, etc.

     [வெண் [மை] + கால்]

வெண்காழ்

வெண்காழ் veṇkāḻ, பெ.(n.)

   1. மரத்தின் உள்ளீடு; core of tree.

   2. முயலெறியுந் தடிவகை (ஐந்குறு. 421);; a small stick, used in hunting rabbits.

     [வெண் [மை] + காழ்]

வெண்காவல்

 வெண்காவல் veṇkāval, பெ.(n.)

   வெறுங்காவல் (இ.வ.);; simple imprisonment.

     [வெண் [மை] + காவல்]

வெண்காவளி

 வெண்காவளி veṇkāvaḷi, பெ.(n.)

   வெள்ளைப் பூடு; garlic-allium sativum.

     [வெண் [மை] + காவளி]

வெண்காவிளை

 வெண்காவிளை veṇkāviḷai, பெ.(n.)

   கொடிவகை; white-flowered.

     [வெண்-மை + காவிளை]

வெண்காவெளி

 வெண்காவெளி veṇkāveḷi, பெ.(n.)

வெள்ளைப்பூண்டு பார்க்க (மூ.அ.);;see velai-p-pundu.

     [வெண் [மை] + காய் +உள்ளி]

வெண்காவேளை

 வெண்காவேளை veṇkāvēḷai, பெ.(n.)

வெண்காவிளை பார்க்க (மூ.அ.);;see venkavilai.

     [வெண் [மை] + காய்வேளை]

வெண்கிடை

வெண்கிடை veṇkiḍai, பெ.(n.)

   நெட்டிவகை; white-flowered.

     “சிறுகோல் வெண்கிடை” (புறநா. 75);.

     [வெண் [மை] + கிடை]

வெண்கிடைச்சி

 வெண்கிடைச்சி veṇkiḍaicci, பெ.(n.)

வெண்கிடை பார்க்க (வின்);;see ven-kidal.

     [வெண் [மை] + கிடைச்சி]

வெண்கிலுகிலுப்பை

 வெண்கிலுகிலுப்பை veṇgilugiluppai, பெ.(n.)

பேய்மிரட்டு பார்க்க;see pey-mirattu.

     [வெண் [மை] + கிலுகிலுப்பை]

வெண்கிளி

 வெண்கிளி veṇkiḷi, பெ.(n.)

   வெள்ளைக் கிளி; white parrot.

     [வெண் [மை] + கிளி]

வெண்கிளுவை

 வெண்கிளுவை veṇkiḷuvai, பெ.(n.)

   முள்ளில்லாக் கிளுவை மரவகை (வின்);; a species of thornless balsam.

     [வெண் [மை] + கிளுவை]

வெண்கிளுவைப்பட்டை

 வெண்கிளுவைப்பட்டை veṇkiḷuvaippaṭṭai, பெ.(n.)

   கிளுவைமரப்பட்டை; bark of balsa modeoran caudatum.

     [வெண் [மை] + கிளுவைப்பட்டை]

வெண்கிழமை

வெண்கிழமை veṇkiḻmai, பெ.(n.)

   வெள்ளிக்கிழமை; friday.

     “வெண்கிழமை யம்பிகை தரும் வரத்தால்” (உபதேசகா. சிவவிரத 322);.

     [வெண் [மை] + கிழமை]

வெண்கீரி

 வெண்கீரி veṇāri, பெ.(n.)

வெள்ளைக்கீரி பார்க்க (வின்.);;see vella-k-kiri.

     [வெண் [மை] + கீரி]

வெண்கீரைத்தண்டு

 வெண்கீரைத்தண்டு veṇāraittaṇṭu, பெ.(n.)

   வெள்ளைக் கீரைத்தண்டு; amaranth stem.

     [வெண் [மை] + கீரை + தண்டு]

வெண்குகம்

 வெண்குகம் veṇgugam, பெ.(n.)

   வெண்கடலை; சிறு கடலை; white bengal gram-cicer arietinum.

     [வெண் [மை] + குகம்]

வெண்குங்கிலியம்

 வெண்குங்கிலியம் veṇkuṅgiliyam, பெ.(n.)

   வெள்ளைக் குங்கிலியம்; conkany resin, boswellia serrata (glabra);.

     [வெண் [மை] + குங்கிலியம்]

வெண்குஞ்சம்

 வெண்குஞ்சம் veṇkuñjam, பெ.(n.)

   வெள்ளைக் குன்றி மணி; white jeweller’s bead.

     [வெண் [மை] + குஞ்சம்]

வெண்குடக்கு

 வெண்குடக்கு veṇkuḍakku, பெ.(n.)

   வெண்தேக்கு; white teak-lageristro-emia lanceslata.

     [வெண் [மை] + குடக்கு]

வெண்குடை

வெண்குடை veṇkuḍai, பெ.(n.)

வெண்கொற்றக்குடை பார்க்க;see venkorra-k-kuda.

     “மண்டலமின்செய் வெண்குடை” (சீவக. 860);.

     [வெண் [மை] + குடை]

வெண்குட்டசாந்தி

 வெண்குட்டசாந்தி veṇkuṭṭacāndi, பெ.(n.)

   வெண்குட்டத்தைப் போக்கும் மருந்து;   வெள்ளைப் பூண்டை ஒன்பான்சாரத்துடன் அரைத்து வெண் குட்டத்தின் மேல் தடவ மாறும்; a remedy for leucoderma, sal ammoniac, and garlic are made into a paste and applied over the affected part.

     [வெண்குட்டம் + சாந்தி. சமந்தி → சாந்தி]

வெண்குட்டம்

வெண்குட்டம் veṇkuṭṭam, பெ.(n.)

   உடலில் வெள்ளையாகப் படரும் குட்ட நோய்வகை (கடம்ப.பு.இல்லா.118);; white leprosy.

     [வெண் [மை] + குட்டம் → வெண்குட்டம்]

வெண்குட்டம்போக்கி

 வெண்குட்டம்போக்கி veṇkuṭṭambōkki, பெ.(n.)

இலந்தைக்கட்டைத்தைலம் பார்க்க;see ilandai-k-kattai-t-tailam.

வெண்குண்டுமணி

 வெண்குண்டுமணி veṇkuṇṭumaṇi, பெ.(n.)

   வெள்ளைக்குண்டுமணி; white jeweller’s bead.

     [வெண் [மை] + குண்டுமணி]

வெண்குந்தி

 வெண்குந்தி veṇkundi, பெ.(n.)

   வெள்ளைக் குங்கிலியம்; conkany resin boswellia serrata (glabra.);,

     [வெண் [மை] + குந்தி]

வெண்குந்திரிக்கபற்பம்

 வெண்குந்திரிக்கபற்பம் veṇkundirikkabaṟbam, பெ.(n.)

   பல் நோயைப் போக்கும் வெள்ளைக் குங்கிலிய பற்பம்; purified resin of boswellia serrata (glabra.); is powdered and used as baspam, it is purified by boiling with tender cocoanutwater.

     [வெண் [மை] + குந்திரிக்கற்பம்]

வெண்குன்றி

வெண்குன்றி veṇkuṉṟi, பெ.(n.)

   1. வெள்ளைக்குன்றி பார்க்க (வின்.);;see vellai-k-kupri.

   2. அதிமதுரம்2, 1 பார்க்க (மலை.);;see adimaduram.

     [வெண் [மை] + குன்றி]

வெண்குன்று

வெண்குன்று veṇkuṉṟu, பெ.(n.)

   முருகன் எழுந்தருளியுள்ள இடங்களுள் ஒன்று (சுவாமிமலை); (சிலப்.குன்றக்குரவை. பாட்டுமடை.1);; a shrine sacred to skanda.

     [வெண் [மை] + குன்று]

வெண்குப்பைமேனி

 வெண்குப்பைமேனி veṇkuppaimēṉi, பெ.(n.)

   குப்பைமேனி; rubbish plant – acalypha indica.

     [வெண் [மை] + குப்பைமேனி]

வெண்குமுதம்

வெண்குமுதம்1 veṇkumudam, பெ.(n.)

வெண்ணெய்தல் (யாழ்.அக.); பார்க்க;see venneydal.

     [வெண் [மை] +குமுதம்]

 வெண்குமுதம்1 veṇkumudam, பெ.(n.)

   1. கண்களில் பஞ்சு போல் வெண்புள்ளி யுடைத்தாய்ப் பரவிக் குத்தலுடன் பார்வை மழுங்கி வலியை உண்டாக்கும் ஒரு வகைக் கண்ணோய்; disease of the pupil of the eye, marked by pain and which dots on the black of the eyes.

   2. வெள்ளாம்பல்; flower-white lily white nymphane.

     [வெண் [மை] + குமுதம்]

வெண்குருகடம்

 வெண்குருகடம் veṇgurugaḍam, பெ.(n.)

   உடம்பின் அரத்தத்தில் பரவியிருக்கும் அணுக்கிருமி; white corpuscle.

     [வெண் [மை] + குருகடம்]

வெண்குருக்குச்செடி

 வெண்குருக்குச்செடி veṇkurukkucceḍi, பெ.(n.)

குருக்கு பார்க்க;see kurukku.

     [வெண் [மை] + குருக்குச்செடி]

வெண்குருதி

 வெண்குருதி veṇkurudi, பெ.(n.)

   புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர், நிணநீர்; lymph.

     [வெண் [மை] + குருதி]

வெண்குருவை

 வெண்குருவை veṇkuruvai, பெ.(n.)

   வெண்ணிறமான ஒரு குருவை நெல்; a variety of paddy.

     [வெண் [மை] + குருவை]

வெண்குறண்டி

 வெண்குறண்டி veṇkuṟaṇṭi, பெ.(n.)

   வெள்ளைக் குறண்டி; a white variety of thorny shrub.

மறுவ, வெண் கொறண்டி.

     [வெண் [மை] + குறண்டி]

வெண்குறிஞ்சி

 வெண்குறிஞ்சி veṇkuṟiñji, பெ.(n.)

   பூநிறு; effloresscence grown on the soil of fuller’s earth.

     [வெண் [மை] + குறிஞ்சி]

வெண்குறைப்பாட்டு

 வெண்குறைப்பாட்டு veṇkuṟaippāṭṭu, பெ. (n.)

   கூத்து வகைகளுக்கு உரிய பாட்டு; a song composed for dance varieties.

     [வெண்குறை+பாட்டு]

வெண்குவளை

 வெண்குவளை veṇkuvaḷai, பெ.(n.)

   வெள்ளை அல்லி; indian white water lily.

     [வெண் [மை] + குவளை]

வெண்கூதாளம்

வெண்கூதாளம்1 veṇātāḷam, பெ.(n.)

   நீர்த்தாளி; a plant.

   2. தாளி; a creeper of convolrulus order.

     [வெண் [மை] + கூதாளம்]

 வெண்கூதாளம்2 veṇātāḷam, பெ.(n.)

வெண்டாளி1 பார்க்க;see Vendasi.

     “வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்”(பட்டினம் 85);.

     [வெண் [மை] + கூதாளம்]

வெண்கூளி

 வெண்கூளி veṇāḷi, பெ.(n.)

   வெண்ணிறப் பருந்து; white eagle.

     [வெண் [மை] + கூளி]

வெண்கெண்டை

வெண்கெண்டை veṇkeṇṭai, பெ.(n.)

வெண்மை நிறமுடையதும் 12 அங்குலம் வளர்வதுமான கெண்டை மீன் வகை,

 white carp, silvery, attaining 12 in length.

     [வெண் [மை] + கெண்டை]

வெண்கை

வெண்கை veṇkai, பெ.(n.)

   1. தொழில் செய்து பழகாத கை; hand unused to work.

     “வெண்கை மகளிர்” (பதிற்றும் 29, 6);.

   2. சங்கு வளை யணிந்த கை (பதிற்றுப். 29, வரை);; hand wearing conch bangles.

   3. நளிநயம் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை; hand that beats time, without being engaged in gesticulation.

     “முடிவிற் போக்கிய வெண்கை” (பதிற்றுப் 61, 7);.

   4. வெள்ளிய கைப்பிடி,

 whitecoloured handle.

     “வெண்கை யொள்வாள்” (பெரும்பாண். 71);

     [வெண் [மை] + கை]

வெண்கொக்கு

 வெண்கொக்கு veṇkokku, பெ.(n.)

   வெள்ளைக்கொக்கு; white stork.

     [வெண் [மை] + கொக்கு]

வெண்கொடி

வெண்கொடி veṇkoḍi, பெ.(n.)

   1. வெற்றிக் கொடி; flag of victory.

     “விசய வெண்கொடி” (புறநா. 362);.

   2. சரசுவதி (பெரியபு. தடுத்தாட் 97);; saraswadi.

     [வெண் [மை] + கொடி]

வெண்கொடிமூலம்

 வெண்கொடிமூலம் veṇkoḍimūlam, பெ.(n.)

   வெள்ளைபடமூலம்; root of leadwort bearing white flowers plumbage geylanica.

     [வெண் [மை] + கொடிமூலம்]

வெண்கொடிவேலி

வெண்கொடிவேலி1 veṇkoḍivēli, பெ.(n.)

வெண்படமூலம்

 keadwirt bearing white flowers-plumbagozeylanica,

     [வெண் [மை] + கொடிவேலி]

 வெண்கொடிவேலி2 veṇkoḍivēli, பெ.(n.)

   கொடுவேலி வகை (சங்.அக.);; a species of ceylon lead-wort.

     [வெண் [மை] + கொடிவேலி]

வெண்கொம்பன்பாகல்

 வெண்கொம்பன்பாகல் veṇkombaṉpākal, பெ.(n.)

   பாகல் கொடிவகை; a creeper bearing white long carilla fruitsmomordica charantia.

     [வெண் [மை] + கொடி]

வெண்கொம்புப்புல்

 வெண்கொம்புப்புல் veṇkombuppul, பெ.(n.)

பேய்ப்புடல் பார்க்க;see pey-p-pudal.

     [வெண் [மை] + கொம்புப்புல்]

வெண்கொற்றக்குடை

வெண்கொற்றக்குடை veṇkoṟṟakkuḍai, பெ.(n.)

   அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக் குடை (சிலப். 5, 173, உரை);; white umbrella of victory, one of the theinsignia of royalty.

     [வெண் [மை] + கொற்றம் + குடை]

வெண்கொற்றன்

வெண்கொற்றன் veṇkoṟṟaṉ, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sangam poet.

தன்னை வருத்தும் ஈயின் குரலோசையைக் கேட்ட அளவிலேயே ஆவு (பசு); நடுங்க அதன் கழுத்திலுள்ள மணி ஒலிக்கும் என்று இவர் ஈயின்பால் ஆவுக்குள்ள அச்சத்தைப் புலப்படுத்தி அம்மணியோசை தலைவிக்குக் காமநோயை மிகுப்பதை இந்த ஒரு குறுந்தொகைப் பாட்டில் காட்டியுள்ளார்.

     “சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குநர் உளர்கொல் உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆனுளம் புலம்புதொ_றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே” (குறுந் 86);.

வெண்கொல்

 வெண்கொல் veṇkol, பெ.(n.)

   வெள்ளி (இலக்.அக்.);; silver, as the white metal.

     [வெண் [மை] + கொல்]

வெண்கொளுஞ்சி

 வெண்கொளுஞ்சி veṇkoḷuñji, பெ.(n.)

   வெள்ளைக் கொழுஞ்சி; wild indigo bearing white flowers-tephrosia-purpurea.

     [வெண் [மை] + கொளுஞ்சி]

வெண்கொள்ளு

 வெண்கொள்ளு veṇkoḷḷu, பெ.(n.)

   நரைக்கொள்ளு; white horse gramdolichos biflorus.

     [வெண் [மை] + கொள்ளு]

வெண்கோடல்

வெண்கோடல் veṇāṭal, பெ.(n.)

வெண்காந்தள் பார்க்க;see ver-kantal.

     “வெண்கோட விலைச்சுருளில்” (பெரியபு. ஆனாய.16);

     [வெண் [மை] + கோடல்]

வெண்கோட்டம்

வெண்கோட்டம்1 veṇāṭṭam, பெ.(n.)

   1. ஓமாலிகை முப்பத்திரண்டனுளொன்றான நறும்பண்டம் (சிலப். 4,77, உரை);; a fragrant substance one of 32 omalikal. g. v.

   2. செடிவகை; Arabian costum.

     “பால்வெண் கோட்டமும்” (பெருங். உஞ்சைக் 50, 29);

   3. சுற்றுமதிற்கவர்; pellitory root.

     [வெண் [மை] + கோட்டம்]

 வெண்கோட்டம்2 veṇāṭṭam, பெ.(n.)

கோட்டம் பார்க்க;see kolam.

     [வெண் [மை] + கோட்டம்]

வெண்கோல்

 வெண்கோல் veṇāl, பெ.(n.)

   வெள்ளி; silver.

 |வெண் [மை] + கோல்]

வெண்கோழி

 வெண்கோழி veṇāḻi, பெ.(n.)

வெண்ணிறமான கோழி,

 white bowl.

     [வெண் [மை] + கோழி]

வெண்சங்கு

 வெண்சங்கு veṇcaṅgu, பெ.(n.)

   ஒரு மூலி, வெண் காக்கட்டான், வெண் காக்கணம்; a twining plant bearing white flowers.

     [வெண் [மை] + சங்கு]

வெண்சதைவிழியுந்தல்

 வெண்சதைவிழியுந்தல் veṇcadaiviḻiyundal, பெ.(n.)

   கண்களில் வெள்ளைச் சதையைப், படரச்செய்து வலியை உண்டாக்கும் ஒரு வகைக் கண்நோய்; appearance of white film over the black part of the eye, slowly shrounding it entirely and attended with acute pain.

     [வெண் [மை] + சதை + விழியுந்தல்]

வெண்சந்தனச்சிராய்

 வெண்சந்தனச்சிராய் veṇcandaṉaccirāy, பெ.(n.)

   வெள்ளைச் சந்தனக் கட்டையினின்று பிளந்த சிறு துண்டுகள்; small pieces of white sandal-shaving or scraping of white sandal.

     [வெண் [மை] + சந்தனச்சிராய்]

வெண்சந்தனம்

 வெண்சந்தனம் veṇcandaṉam, பெ.(n.)

   வெள்ளைச் சந்தனம்; white sandal treesantanum album.

     [வெண் [மை] + சந்தனம்]

வெண்சலசம்

 வெண்சலசம் veṇsalasam, பெ.(n.)

   வெண்டாமரை; white lotus.

     [வெண் [மை] + சலசம்]]

 Skt. salasa → த. சலசம்.

வெண்சலசை

 வெண்சலசை veṇsalasai, பெ.(n.)

   கலைமகள்; sarasvati

 Skt. salasa → த. சலசம்.

வெண்சாந்து

 வெண்சாந்து veṇcāndu, பெ.(n.)

   சுண்ணாம்புச்சாந்து; lime mortar, as white.

     [வெண் [மை] + சாந்து]

வெண்சாமரம்

 வெண்சாமரம் veṇcāmaram, பெ.(n.)

வெண்சாமரை பார்க்க;see wer-samarai

     [வெண் [மை] + சாமரம்]

வெண்சாமரை

வெண்சாமரை veṇcāmarai, பெ.(n.)

   அரசச் சின்னமாகக் கொள்ளப்படும் கவுரி மானின் மயிர்க்கற்றை (பதார்த்த 1475);; white hair of the yak, used as fly-whisk and reckoned as one of the insignia of royalty.

     [வெண் [மை] + சாமரை]

வெண்சாயத்தான்

 வெண்சாயத்தான் veṇcāyattāṉ, பெ.(n.)

   ஒருவகைக் கொடிய நஞ்சு; a kind arsenic.

வெண்சாய்மரை

 வெண்சாய்மரை veṇcāymarai, பெ.(n.)

வெண்சாமரை பார்க்க;see ver-samarai.

     [வெண்சாமரை → வெண்சாய்மரை]

வெண்சாரணை

 வெண்சாரணை veṇcāraṇai, பெ.(n.)

   வெள்ளைச் சாரணை; it is useful for rejuvenation.

     [வெண் [மை] + சாரணை]

வெண்சாரை

வெண்சாரை1 veṇcārai, பெ.(n.)

   சாரைப்பாம்பு; white rat-snake (w.);.

     [வெண் [மை] + சாரை]

 வெண்சாரை2 veṇcārai, பெ.(n.)

   1. வழலை பார்க்க;see Valalai.

   2. சுக்கிலம்; semen.

   3. அரியதாய் அகப்படும் வெள்ளைச் சாரைப்பாம்பு

 white ral snake found rarely.

   4. நஞ்சுக்கொடி; placental cord.

   5. மருத்துவ உப்பு; the three universal salt.

     [வெண் [மை] + சாரை]

வெண்சாரைக்கொழுப்பு

வெண்சாரைக்கொழுப்பு veṇcāraikkoḻuppu, பெ.(n.)

   1. வழலை நாதவுப்பு; a kind of prepared salt.

   2. வெள்ளைச் சாரைப் பாம்பின் கொழுப்பு; fat of white rat snake.

வெண்சாரைச்சுன்னம்

வெண்சாரைச்சுன்னம் veṇcāraiccuṉṉam, பெ.(n.)

   1. நஞ்சக் கொடிச் சுன்னம், குடற் சுன்னம்; calcined navel cord.

வெண்சாறடை

 வெண்சாறடை veṇcāṟaḍai, பெ.(n.)

வெள்ளைச் சாரணை பார்க்க;see vellai-c-caranai.

     [வெண் [மை] + சாறடை]

வெண்சித்தகத்தி

 வெண்சித்தகத்தி veṇcittagatti, பெ.(n.)

வெண்சிற்றகத்தி பார்க்க;see ven-Sirrakatti.

     [வெண் [மை] + சித்தகத்தி]

வெண்சித்திரமூலம்

 வெண்சித்திரமூலம் veṇcittiramūlam, பெ.(n.)

வெண்கொடிவேலி பார்க்க;see ven-kodi-ves.

     [வெண் [மை] + சித்திரமூலம்]

வெண்சிறுகடுகு

வெண்சிறுகடுகு1 veṇciṟugaḍugu, பெ.(n.)

   வெண்கடுகு; white mustard.

     “நெய்யோடே வெண்சிறுகடுகையும் அப்பி” (திருமுரு. 228, உரை);.

     [வெண் [மை] + சிறு [மை] + கடுகு]

 வெண்சிறுகடுகு2 veṇciṟugaḍugu, பெ.(n.)

   கதவுகளில் பூசப்படும், பேய்க்குப் பகையானது (சிலப்.);; painted in doors to anest evil spirit.

     [வெண் [மை] + சிறு [மை] +கடுகு]

வெண்சிறுமா

 வெண்சிறுமா veṇciṟumā, பெ.(n.)

   கண்ணோய்க்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து; a medicine used for the diseases of the eye.

வெண்சிற்றகத்தி

 வெண்சிற்றகத்தி veṇciṟṟagatti, பெ.(n.)

   வெண்செம்பை; a plant bearing white flower-cassia cupidata.

     [வெண் [மை] + சிற்றகத்தி]

வெண்சிவதை

வெண்சிவதை1 veṇcivadai, பெ.(n.)

   பூடுவகை (பதார்த்த. 1061);; white bindweed.

     [வெண் [மை] + சிவதை]

 வெண்சிவதை2 veṇcivadai, பெ.(n.)

சிவதை

   வேர், கைப்பு துவர்ப்பு பித்தம் வயிற்றுப் பூச்சி போகும்; root of a plant ipomaea trupenthum, it is purgative the black variety is a drastic purgative.

வெண்சிவப்பு

 வெண்சிவப்பு veṇcivappu, பெ.(n.)

   ஒரு நிறம்; russet.

     [வெண் [மை] + சிவப்பு]

வெண்சீடம்

 வெண்சீடம் veṇcīṭam, பெ.(n.)

கொட்டைக் கரந்தை பார்க்க;see kottaik-karandai.

வெண்சீந்தில்

 வெண்சீந்தில் veṇcīndil, பெ.(n.)

அமுதவல்லிக் கொடி,

 moon creepertinosper-mum cordifolia.

வெண்சீரகம்

 வெண்சீரகம் veṇcīragam, பெ.(n.)

   சீரகம்; Cumin seed.

     [வெண் [மை] + சிரசம்]

வெண்சீர்

வெண்சீர் veṇcīr, பெ.(n.)

   வெண்பாவுரிச்சீர் (இலக். வி. 718);; a metrical foot.

     [வெண் [மை] + சீர்]

வெண்சீர்வெண்டளை

வெண்சீர்வெண்டளை veṇcīrveṇṭaḷai, பெ.(n.)

   வெண்பாவுரிச் சீர் முன் நேர் வந்து ஒன்றுந் தளைவகை (காரிகை. உறுப்.10);; a kind of talai in which a venpa-v-uri-c-cir foot succeeds another foot beginning with ner.

     [வெண்சீர் + வெண்டளை]

வெண்சுண்ணத்தி

 வெண்சுண்ணத்தி veṇcuṇṇatti, பெ.(n.)

   சீனக்காரம்; alum.

வெண்சுதை

 வெண்சுதை veṇcudai, பெ.(n.)

   சுவர்களிலும் மேற்கட்டியிலும் உருவங்கள் செய்யப் பயன்படும் அரைத்த சுண்ணாம்பு; hime mortar used for shaping figures on walls and outer structure.

     [வெண் [மை] + சுதை]

வெண்சுதைக்குன்று

வெண்சுதைக்குன்று veṇcudaikkuṉṟu, பெ.(n.)

   செய்குன்று வகை; a kind of artificial mound.

     “தலைத்தோன் றருவிய வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்”(பெருங், உஞ்சைக் 33,5);.

     [வெண் [மை] + கதை + குன்று]

வெண்சுரம்

 வெண்சுரம் veṇcuram, பெ.(n.)

   ஒரு வகைச் சுரநோய்; a variety of fever.

 |வெண் (மை); கரம்);

வெண்சுருமாக்கல்

 வெண்சுருமாக்கல் veṇcurumākkal, பெ.(n.)

   ஒரு வகை மருந்துக்கல்; white antimony.

வெண்செந்துறை

வெண்செந்துறை veṇcenduṟai, பெ.(n.)

   இரண்டடிகள் தம்முள் அளவொத்து வருஞ் செய்யுள் வகை (வீரசோ. யாப். 14);; couplet of lines of equal feet.

     [வெண் [மை] + செந்துறை]

வெண்செம்பை

 வெண்செம்பை veṇcembai, பெ.(n.)

வெண்சிற்றகத்தி பார்க்க;see vensirrakatti.

     [வெண் [மை] + செம்பை]

வெண்சேல்

 வெண்சேல் veṇcēl, பெ.(n.)

   வெண்ணிற முடையதோர் ஆற்று மீன் (தஞ்சை. மீன.);; a whitish river fish.

     [வெண் [மை] + சேல்]

வெண்சோறு

வெண்சோறு veṇcōṟu, பெ.(n.)

   வெள்ளரிசியாற் சமைத்த வெறுஞ் சோறு; white rice looked but unmixed with sauce or condiment.

     “வெண்சோற்றுப் புக்கடகு வைக்க” தனிப்பா. 1,273,14)

 |வெண் (மை); சோறு);

வெண்சோளம்

 வெண்சோளம் veṇcōḷam, பெ.(n.)

   சோளவகை; species of great millet.

     [வெண் [மை] + சோளம்]

வெண்டகரை

வெண்டகரை1 veṇṭagarai, பெ. (n.)

   வெள்ளைப் பூவுடைய தகரை;வெள்ளைப் பூவுடைய

 white flowered cassia tora.

     [வெண் [மை] + தகரை]

 வெண்டகரை2 veṇṭagarai, பெ.(n.)

   மரவகை; a kin of tree, cassia glauca.

     [வெண் [மை] + தகரை]

வெண்டணக்கு

 வெண்டணக்கு veṇṭaṇakku, பெ.(n.)

   வெள்ளைத்தணக்கு; white catamaran tree.

     [வெண் [மை] + தனக்கு]

வெண்டன்

 வெண்டன் veṇṭaṉ, பெ.(n.)

   வெண்டேக்கு; white teak-legerstramiq lancealata.

     [வெண் [மை] + வெண்டன்]

வெண்டயம்

வெண்டயம் veṇṭayam, பெ.(n.)

வெண்டையம பார்க்க;see vengayam.

     “துரோகரைக்காய் வெண்டயத்தாற் சூபெனை” (விறலிவிடு, 30);.

     [வெண்டையம் → வெண்டயம்)]

வெண்டரளமேனி

 வெண்டரளமேனி veṇṭaraḷamēṉi, பெ.(n.)

   வெள்ளை நஞ்சுவகை; a kind of arsenic.

வெண்டலை

வெண்டலை veṇṭalai, பெ.(n.)

   1. தசைநீங்கி எலும்பு மாத்திரமாகியதலை; fleshless, bony head.

     “வெண்டலையுட்கச் சிரித்து” (நாலடி, 50);.

   2. தலையோடு; skull.

     “படுவெண்டலையிற் பலிகொண்டுடில்வீர்” (தேவா. 946, 3);.

   3. வெண்டலைக்கடன் பார்க்க;see vengalai-k-kadan).

     [வெண் [மை] + தலை]

வெண்டலைக்கடன்

 வெண்டலைக்கடன் veṇḍalaikkaḍaṉ, பெ.(n.)

வெண்னிலைக்கடன் பார்க்க;see Vesnilal-k-kadan.

     [வெண்ணிலை → வெண்டலை +கடன்]

வெண்டளை

 வெண்டளை veṇṭaḷai, பெ.(n.)

   வெண்பாவுக்குரிய தளை; a kind of talai peculiar to venpaverse.

     [வெண் [மை] + தளை]

வெண்டாது

வெண்டாது veṇṭātu, பெ.(n.)

   1. திருநீறு (பிங்.);; sacred ashes.

   2. வெள்ளி (இலக்.அக.);; silver.

     [வெண் [மை] + தாது]

வெண்டான்

 வெண்டான் veṇṭāṉ, பெ.(n.)

வெண்டேக்கு பார்க்க;see vengekku.

 |வெண்டன் → வெண்டான்)

வெண்டாமரை

வெண்டாமரை veṇṭāmarai, பெ.(n.)

   வெண்மை நிறமான தாமரைப்பூ; white lotus.

     “செந்தாமரைவெண்டாமரை” (தக்கயாகம் 319);.

     [வெண் [மை] + தாமரை]

வெண்டாமரைமகள்

 வெண்டாமரைமகள் veṇṭāmaraimagaḷ, பெ.(n.)

   நாமகள் (பிங்.);; saraswati.

     [வெண்டாமரை + மகள்]

வெண்டாமரையாள்

 வெண்டாமரையாள் veṇṭāmaraiyāḷ, பெ.(n.)

வெண்டாமரைமகள் பார்க்க (திவா.);;see vengamarai-magal.

     [வெண்டாமரை + ஆள்]

வெண்டாளி

வெண்டாளி1 veṇṭāḷi, பெ.(n.)

   தாளிவகை (திருமுருகு. 192, உரை);; white catamaran tree.

     [வெண் [மை] + தாளி]

 வெண்டாளி2 veṇṭāḷi, பெ.(n.)

   இறந்துபட்ட கடைக்கழக நூல்களுள் ஒன்று (இறை, 1, உரை, பக். 5);; a poem of the middle sangam, not now extent.

வெண்டாழிசை

வெண்டாழிசை veṇṭāḻisai, பெ.(n.)

   மூன்றடியாய் வேற்றுத்தளை விரவி ஈற்றடி முச்சீரான் இறுவதாகவேனும் சிந்தியல் வெண்பா ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வருவதாகவேனுமுள்ள வெண்பாவின் இனம் (urū.5%. 66, a sons);; a kind of stanza which either consists of a single triplet of which the first two lines are of four each and the last line is of three feet or forms one of a set of three cintiyal-venpa bearing on a single theme.

     [வெண் [மை] + தாழிசை]

வெண்டாழை

வெண்டாழை1 veṇṭāḻai, பெ.(n.)

   வெள்ளைத் தாழை மரம்; white pandanus or screw pine-pandanus odoratissimus its white flower has no smell.

     [வெண் [மை] + தாழை]

 வெண்டாழை2 veṇṭāḻai, பெ.(n.)

   தாழை வகை; a kind of talai.

     “வெண்டாழை (பூத்து விளக்கெரிய” (தனிப்பா. 1,153,62);.

வெண்டாவி

 வெண்டாவி veṇṭāvi, பெ.(n.)

   பட்டினி கிடந்து பின் உண்கையாலுண்டாம் அசதி; drowsiness caused by taking food after a fast (w.);.

     [வெண்டு + ஆவி]

வெண்டாவியத்துவருதல்

 வெண்டாவியத்துவருதல் veṇṭāviyadduvarudal, பெ.(n.)

   மிகவும் களைத்துச் சோர்வடைந்த நிலை; extreme tiredness.

     [வெண்டாவியுற்று → வெண்டாவியத்து . + வருதல்]

வெண்டி

வெண்டி1 veṇṭi, பெ.(n.)

   1. இன்மையால் வருந்துபவன்; one who is in great want.

   2. வீண்; useless.

     [வெண்டு → வெண்டி]

 வெண்டி2 veṇṭi, பெ.(n.)

   ஆடை நெய்யும் பாவகை; warp after it has been sized.

     [வெண்டு → வெண்டி]

 வெண்டி3 veṇṭi, பெ.(n.)

வெண்டை பார்க்க;see vengai (w.);.

     [வெண்டு → வெண்டி]

 வெண்டி4 veṇṭi, பெ.(n.)

   வெண்டிக்காய்; a vegetable fruit, ladies finger-hibiscus esculentus.

     [வெடி → வெண்டி. ஒ.நோ. கடி → கண்டி)

வெண்டிக்காய்

வெண்டிக்காய்1 veṇṭikkāy, பெ.(n.)

வெண்டை பார்க்க;see vengai.

     [வெண்டி + காய்]

 வெண்டிக்காய்2 veṇṭikkāy, பெ.(n.)

   வெண்டிச் செடியின் காய்; ladies finger.

     [வெண்டி + காய்]

வெண்டிரை

வெண்டிரை veṇṭirai, பெ.(n.)

   கடல்; sea.

     “தகைபெற்ற வெண்டிரை” (கலித். 124);.

     [வெண் [மை] + திரை]

வெண்டு

வெண்டு1 veṇṭudal, செ.கு.வி. (v.i.)

   1. வற்றிப் போதல்; to dry, as in the sun.

     “வெண்டிப் பழுத்தெழும்பிய முதுகும்” (திருப்பு. 802);.

   2. களைத்தல்; to be exhausted (w.);.

     ‘வெண்டி வெறித்து வந்தான்’.

   3. இல்லாததற்கு ஆசைப்படுதல்; to be in great want, to hanker, or சோற்றுக்கு வெண்டிக்கிடக்கிறான்’. (உ.வ);.

     [விள் → வெள் → வெண்டு → வெண்டுதல். (இ.வ.); (வே.க.பக்.120);. வெண்டுதல் இளைத்துப்போதல்.]

 வெண்டு2 veṇṭu, பெ.(n.)

   1. உட்டுளை; hollowness, as of a pipe (w.);.

   2. மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை; a disease which causes hollowness intrees.

     “உயிரை வெண்டார் குழலாக்க வேண்டுமோ” (திருக்காளத். உலா 567);.

   3. கரும்பு (மலை.);; sugarcane.

   4. நெட்டி; sola pith.

   5. கடுக்கன்புரி (யாழ்.அக.);; twist of an ear-ring.

     [விள் → வெள் → வெண்டு]

வெண்டுகில்

 வெண்டுகில் veṇṭugil, பெ.(n.)

   வெள்ளைத்துணி; white cloth (w.);.

 |வெண் [மை] + துகில்]

வெண்டுக்காய்

 வெண்டுக்காய் veṇṭukkāy, பெ.(n.)

வெண்டை பார்க்க;see vendai (w.);.

 |வெண்டி + காய் → வெண்டுக்காய்]

வெண்டுத்தம்

வெண்டுத்தம்1 veṇṭuttam, பெ.(n.)

   மயிற்றுத்தம் (யாழ்.அக.);; Suphate of copper.

     [வெண் [மை] + துத்தம்]

 வெண்டுத்தம் veṇṭuttam, பெ.(n.)

   வெள்ளைத் துத்தம், பால் துத்தம்; white vitroil-sulphate of zinc.

     [வெண் [மை] + துத்தம்]

வெண்டுமிளகாய்

 வெண்டுமிளகாய் veṇṭumiḷakāy, பெ.(n.)

   காய்ந்துலர்ந்த ஒரு வகைக் குண்டு மிளகாய். குடமிளகாய்; a variety of dried chilly which is round.

     [விள் → வெள் → வெண்டு மிளகாய்]

வெண்டுறை

வெண்டுறை1 veṇṭuṟai, பெ.(n.)

   மூன்றடி முதல் ஏழடியிறாக அடிகளைப் பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை (காரிகை); (யாப். வி. பக். 537);; a kind of stanza consisting of three to seven lines of unequal length.

     [வெண் [மை] + துறை]

 வெண்டுறை2 veṇṭuṟai, பெ.(n.)

   திருவண்டு துறை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்; now, in ttanjavur district a village as called tiru-Vangu-durai.

சேக்கிழார் இதனைத் திருமலி வெண்டுறை என்பார் (34-574);. சம்பந்தர் பதிகம் இறைவன் விரும்புமிடம் வெண்டுறை என்பதை எல்லாப் பாடல்களிலும் குறிக்கிறது (319);. துறை என்பது ஆற்றுத் துறையாக இருக்கலாம். வெண்ணிலம் என்பதற்கு வெறுந்தரை, மணற்பாங்கான தரை என்று தமிழ் சென்னை அகராதி பொருள் உரைப்பதை நோக்க, மணற்பாங்கான துறை என்ற நிலையில் வெண்டுறை என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

     [வெள் வெண் + துறை]

வெண்டுறைச் செந்துறைப்பாட்டு

வெண்டுறைச் செந்துறைப்பாட்டு veṇṭuṟaiccenduṟaippāṭṭu, பெ.(n.)

   கலிவரி சிற்றிசை பேரிசை சிற்றிசைச் சிற்றிசை என்ற பகுதிகளையுடை இன்னிசைப்பாட்டு வகை (யாப். வி. பக்.538);;     [வெண்டுறை + செந்துறை + பாட்டு]

வெண்டுறைப்பாட்டு

 வெண்டுறைப்பாட்டு veṇṭuṟaippāṭṭu, பெ.(n.)

   கூத்து வகைகளுக்கு உரிய பாட்டு; a song composed for dance varieties.

வெண்டுளசி

வெண்டுளசி veṇṭuḷasi, பெ.(n.)

   1. திருநீற்றுப் பச்சை; sweet basil.

   2. துளசி வகை; cimumgratissimum.

     [வெண் [மை] + துளசி]

வெண்டூகிக்கரும்பு

 வெண்டூகிக்கரும்பு veṇṭūkikkarumbu, பெ.(n.)

வெள்ளைக் கரும்பு,

 white sugancane saccharum officinarum.

     [வெண் [மை] + தோகை +கரும்பு]

வெண்டேக்கு

 வெண்டேக்கு veṇṭēkku, பெ.(n.)

   நீண்ட மரவகை; a kind of lager tree.

     [வெண் [மை] + தேக்கு]

வெண்டேர்

வெண்டேர் veṇṭēr, பெ.(n.)

   கானல்; mirage.

     “வெண்டே ரோடுங் கடங்காய் மருங்கில்” (அகநா. 179);.

     [வெண் [மை] + தேர்]

வெண்டேர்ச்செழியன்

வெண்டேர்ச்செழியன் veṇṭērcceḻiyaṉ, பெ.(n.)

   இடைக் கழகத் தொடக்கத்தில் இருந்தவனாகக் கூறப்படும் பாண்டியன் இறை1, உரை, பக்.5); a pandya king who is said to have reigned at the beginning of the middle sangam.

     [வெண் [மை] + தேர் + செழியன்]

வெண்டை

வெண்டை veṇṭai, பெ.(n.)

   1. செடிவகை; okra, s.sh.

   2. வெண்டைக்காய்; ladies finger.

     [விள் → வெள் → வெண்டு → வெண்டை]

வெண்டைக்காய்

 வெண்டைக்காய் veṇṭaikkāy, பெ.(n.)

வெண்டிக்காய் பார்க்க;see vendi-k-kay.

     [விள் → வெள் → வெண்டு வெண்டை + காய்]

வெண்டையம்

வெண்டையம் veṇṭaiyam, பெ.(n.)

   1. வீரர்; warriors anklet.

     “வீரவெண்டைய முழங்க” (திருப்பு. 750);.

   2. குதிரை முதலியவற்றின் காற்சதங்கை; hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants.

     “வெண்டையங் கவடி” (அரிச். பு. வேட்டந் 13);.

   3. கட்டை விரல்; thumb-ring.

     [வெண்டு → வெண்டையம்]

வெண்டொழுநோய்

வெண்டொழுநோய் veṇṭoḻunōy, பெ.(n.)

வெண்குட்டம பார்க்க;see ven-kuttam.

     “கருஞ் சிரங்கு வெண்டொழுநோய்” (ஏலாதி. 57);,

     [வெண் [மை] + தொழுநோய்]

வெண்டோடு

வெண்டோடு veṇṭōṭu, பெ.(n.)

   பனந்தோடு; calyx-leaf of palmyra.

     “வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமம்” (பதிற்றுப். 40, 10);.

     [வெண் [மை] + தோடு]

வெண்டோன்றி

வெண்டோன்றி1 veṇṭōṉṟi, பெ.(n.)

   வெள்ளைத் தோன்றி மலர்; white november flower-gloriosa superba.

     [வெண் [மை] + தோன்றி]

 வெண்டோன்றி2 veṇṭōṉṟi, பெ.(n.)

வெண் காந்தள் பார்க்க;see venkantal (w.);.

     [வெண் [மை] + தோன்றி]

வெண்டோன்றித்தைலம்

 வெண்டோன்றித்தைலம் veṇṭōṉṟittailam, பெ.(n.)

   குட்டத்திற்குப் பயன்படுத்துவதும் கிழங்கினின்றும் வடிக்கப்பட்டதுமான நெய்மம் (தைலம்);; medicated oil extracted from the plough root by the process of kuli-t-tailam, it is used for leprosy.

வெண்ணகரு

 வெண்ணகரு veṇṇagaru, பெ.(n.)

   வெள்ளை அகிற் கட்டை; aquila or eaglewood-aquilaria agalocha.

     [வெண் [மை] + அகில் → .அகிர் + அகிரு]

வெண்ணகில்

 வெண்ணகில் veṇṇagil, பெ.(n.)

   வெள்ளை அகில்- மரவகை; white cedar-dysaxylum malabaricum.

     [வெண் [மை] + அகில்]

வெண்ணகை

வெண்ணகை veṇṇagai, பெ.(n.)

   1. வெள்ளிய பல்; clean, white tooth.

     “முத்தன்ன வெண்ணகையாய்” (திருவாச. 7, 3);.

   2. புன்னகை; smile.

     “அல்லமன் வெண்ணகை செய்து வெப்பும்” (பிரபு லிங், சித்தரா. 36);.

     [வெண் [மை] + நகை]

வெண்ணஞ்சு

வெண்ணஞ்சு veṇṇañju, பெ.(n.)

   1. ஊன்விசேடம்; a kind of fleshy substance.

     “விழுக்கொடு வெண்ணெஞ்சு” (சீவக. 1584);.

   2. நிணம் (சீவக. 1584, உரை);; marrow in the bone.

     [வெண் [மை] + நஞ்சு]

வெண்ணத்தை

 வெண்ணத்தை veṇṇattai, பெ.(n.)

   நத்தைவகை; a kind of snail.

     [வெண் [மை] + நத்தை]

வெண்ணரி

வெண்ணரி veṇṇari, பெ.(n.)

   நரிவகை; a kind of fox.

     “விளகிக் கொட்பின் வெண்ணரிகமுகுலென்”(புறநா.291);

     [வெண் [மை] + நரி]

வெண்ணறிவு

 வெண்ணறிவு veṇṇaṟivu, பெ.(n.)

   அறிவின்மை; ignorance.

     [வெள் + அறிவு → வெள்ளறிவு → வெண்ணறிவு]

வெண்ணறுகு

 வெண்ணறுகு veṇṇaṟugu,    வெள்ளறுகு; a plant-adenema hyssopifolium-or exacum hyssopifolium.

     [வெண் [மை] + அறுகு]

வெண்ணலாத்தி

 வெண்ணலாத்தி veṇṇalātti, பெ.(n.)

   ஒரு வகைப் பாம்பு; a kind of snake.

     [வெண் [மை] + ஆத்தி]

வெண்ணலாந்தை

 வெண்ணலாந்தை veṇṇalāndai, பெ.(n.)

வெண்ணாந்தை பார்க்க;see vennantai.

     [வெண்ணாந்தை → வெண்ணலாந்தை]

வெண்ணலாற்றி

 வெண்ணலாற்றி veṇṇalāṟṟi, பெ.(n.)

   மிளகு தக்காளி; a plant good for angular stomatitis-solanum nigrum.

வெண்ணலை

 வெண்ணலை veṇṇalai, பெ.(n.)

   வெண்ணலை. எவ்வகை ஈடும், பிடிபாடும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கடன். நெல்லை வட்டாரத்தில் நிர்கதியாய் விடப்பட்டவர்; a loan given without any mortgage or security.

     ‘என்னெ இப்படி வெண்ணலையா விட்டிட்டுப் போயிட்டாரே’ என்பார்கள்.

     [வெண்ணிலை → வெண்ணலை]

வெண்ணாகனார்

வெண்ணாகனார் veṇṇākaṉār, பெ.(n.)

   கழகக்காலப் புலவர்; a sangam poet.

இவர் அகநானூற்றில் 247-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

வெண்ணாகம்

 வெண்ணாகம் veṇṇākam, பெ.(n.)

   வெள்ளியம்; tin.

     [வெண்-மை + நாகம் → வெண்னாகம்]

வெண்ணாகை

 வெண்ணாகை veṇṇākai, பெ.(n.)

   வெள்ளை நாகை ; milling tona hortensis.

     [வெண் [மை] + நாகை]

வெண்ணாங்கு

வெண்ணாங்கு veṇṇāṅgu, பெ.(n.)

   1. ஓடை செடி; crotolaria-ochlandra travancorica.

   2. ஓடைக்கொடி; a creeper com bretum ovalifolium.

   3. சிற்றிலைப்புலவு; pterospermum suberi folium alias qacerifolium.

   4. மரவகை; creamy-leaved lancewood, m.tr.

   5. நீண்ட மரவகை; maple-leaved lance wood, I.tr.

     [வெண் [மை] + நாங்கு]

வெண்ணாத்தி ¬

வெண்ணாத்தி ¬ veṇṇātti, பெ.(n.)

   1. வெள்ளையாத்தி, ஆத்தி; bearing white flowers-bauhinia variegata (candida);.

   2. ஒரு வகைப் பாம்பு; a snake.

     [வெள் → வெண் + ஆத்தி]

வெண்ணாந்தை

 வெண்ணாந்தை veṇṇāndai, பெ.(n.)

   பெரும்பாம்புவகை; python.

வெண்ணாயுருவி

 வெண்ணாயுருவி veṇṇāyuruvi, பெ.(n.)

   நாயுவி வகை; white species of indian burr. (W.);.

     [வெண் [மை] + நாயுருவி]

வெண்ணாரி

 வெண்ணாரி veṇṇāri, பெ.(n.)

   பூடுவகை (சங்.அக.);; a plant.

வெண்ணாரை

வெண்ணாரை veṇṇārai, பெ.(n.)

   1. நாரை வகை (சூடா.);; indian crane.

   2. மரவகை; a tree.

     [வெண் [மை] + நாரை]

வெண்ணாவல்

வெண்ணாவல்1 veṇṇāval, பெ.(n.)

   1. வெள்ளை நாவல் மரம்; jambo tree yielding white fruits.

     ‘இது அரத்த அணுக்களையும் விந்து அணுக்களையும உண்டாக்குவதும் உட்சூடு போக்குவதுமான ஒரு மூலிகை’.

   2. ஒருவகைச் செயற்கை உப்பு (சத்தியுப்பு);; a kind of prepared salt.

   3. மருதுவ உப்பு; a medicine prepared out of the three salt used for all diseases-kind of medicine.

   4. நஞ்சுக் கொடி; navel cord.

     [வெண் [மை] + நாவல்]

 வெண்ணாவல் veṇṇāval, பெ.(n.)

   நாவல் வகை; a kind of rose-apple, in tr.

     “வீனுயர் வெண்ணாவற் கனியொன்று” (திருவானைக் சம்பு.5);.

     [வெண் [மை] + நாவல்]

வெண்ணாவல்சுரல்

 வெண்ணாவல்சுரல் veṇṇāvalcural, பெ.(n.)

   ஏழுமலை; the sacred gold mountain one of the eight chief ranges in india.

வெண்ணாவி

 வெண்ணாவி veṇṇāvi, பெ.(n.)

   வெள்ளை ஆவிரை; white bachnang.

     [வெண் [மை] + ஆவிரை → ஆவி]

வெண்ணாவிரை

 வெண்ணாவிரை veṇṇāvirai, பெ.(n.)

   வெள்ளை ஆவிரையாகிய ஒரு வகைக் கற்ப மூலி; a kind of cassia auriculate used for longevity.

     [வெண் [மை] + ஆவிரை]

வெண்ணி

 வெண்ணி veṇṇi, பெ.(n.)

   தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; a village at Thanjavur Dt.

சோழநாட்டில் நீடாமங்கலத்திற்கு மேற்கேயுள்ள ஒரு ஊர். அது தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. கோயில் வெண்ணி என இக்காலத்து வழங்கும். அவ்வூரையும், அதனைச் சூழ்ந்துள்ள இடங்களையும் பார்க்கையில் அந்த இடம் பண்டைக்காலத்தில் மிகப்பெரிய நகராக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.

வெண்ணிக்குயத்தியார்

 வெண்ணிக்குயத்தியார் veṇṇikkuyattiyār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a sangam poet.

வெண்ணிர்த்தெளிவு

 வெண்ணிர்த்தெளிவு veṇṇirtteḷivu, பெ.(n.)

   தேத்தான் கொட்டை; clearing nut-strychnos potatorum.

     [வெண்ணிர் + தெளிவு]

வெண்ணிறம்

 வெண்ணிறம் veṇṇiṟam, பெ.(n.)

   சங்க நஞ்சு; a kind of white arsenic.

வெண்ணிலம்

வெண்ணிலம் veṇṇilam, பெ.(n.)

   1. வெறுந் தரை; bare ground (w.);.

   2. மணற்பாங்கான தரை (யாழ்.அக.);; sandy soil.

     [வெண் [மை] + நிலம்]

வெண்ணிலவு

வெண்ணிலவு veṇṇilavu,    மதியொளி; moonlight.

     “வெண்ணிலவின் பயன்றுய்த்தும்” (பட்டினப். 114);.

     [வெண் [மை] + நிலவு]

வெண்ணிலாவொழுகு

 வெண்ணிலாவொழுகு veṇṇilāvoḻugu, பெ.(n.)

   நில நஞ்சு வகை; a kind of blue arsenic.

வெண்ணிலுவை

வெண்ணிலுவை veṇṇiluvai, பெ.(n.)

   1. பணக்கடன் மீதி; arrears of cash debt.

   2. கைமாற்றுக்கடன் (யாழ்.அக.);; temporary loan without security.

     [வெண் [மை] + நிலுவை]

வெண்ணிலை

 வெண்ணிலை veṇṇilai, பெ.(n.)

வெண்ணிலைக்கடன் பார்க்க;see Vennilal-k-kadan.

     [வெண் [மை] + நிலை]

வெண்ணிலைக்கடன்

 வெண்ணிலைக்கடன் veṇṇilaikkaḍaṉ, பெ.(n.)

   ஈடுகாட்டாது வாங்குங்கடன்; loan obtained wihtout pledge or mortgage.

     [வெண்ணிலை + கடன்]

வெண்ணிலைப்பத்திரம்

வெண்ணிலைப்பத்திரம் veṇṇilaippattiram, பெ.(n.)

   1.ஈடுகாட்டாத கடனைக் குறிக்கும் ஆவணம்; simple bond, without pledge or mortgage.

   2. ஈடுகாட்டாது எழுதிக் கொடுக்குங் கைக்குறிப்பு; note.of,hand, as without security (w.);.

     [வெண்ணிலை + Skt. patra → த. பத்திரம்]

வெண்ணீர்

வெண்ணீர் veṇṇīr, பெ.(n.)

   வெண்மையான நீர்; semen.

     “வெண்னர் வாயுவினான் மாதர் செந்நீரோடு கூடி………. கருவாகும்” (சூத. ஞான. 10, 9);.

     [வெண் [மை] + நீர்]

வெண்ணீறு

வெண்ணீறு1 veṇṇīṟu, பெ.(n.)

   திருநீறு; sacred ashes.

     “விடிவதுமே வெண்ணற்றை மெய்யிற்பூசி” (தேவா. 811,2);.

     [வெண் [மை] + நிறு]

 வெண்ணீறு2 veṇṇīṟu, பெ.(n.)

   1. கற் சுண்ணாம்பு நீறு; slaked lime.

     [வெண் [மை] + நிறு]

வெண்ணீலம்

 வெண்ணீலம் veṇṇīlam, பெ.(n.)

   நிறம்; slate blue, blush.

     [வெண் [மை] + நீலம்]

வெண்ணுருட்டி

 வெண்ணுருட்டி veṇṇuruṭṭi, பெ.(n.)

   விட்ணுகாந்தி; a prostate plantsphoeranthus indicus.

வெண்ணுரை

வெண்ணுரை veṇṇurai, பெ.(n.)

   1. மீன் நீரில் இரைதலினாலுண்டாகும் நுரை; fishing movement escaped foam.

   2. கடலடிக் பாறையில் மோதுதலால் உண்டாகும் நுரை (செங்கை.மீன.);; foam bubbles due to dashing in the rocky area under the sea.

     [வெண் [மை] + நுரை]

வெண்ணூமத்தை

 வெண்ணூமத்தை veṇṇūmattai, பெ.(n.)

   வெள்ளுமத்தை; dhatura bearing white flowers-dhatura alba.

     [வெண் [மை] + ஊமத்தை]

வெண்ணெட்டி

 வெண்ணெட்டி veṇīeṭṭi, பெ.(n.)

வெண்கிடை பார்க்க (புறநா. அரும்.);;see ven-kidai.

     [வெண் [மை + நெட்டி]

வெண்ணெய்

வெண்ணெய் veṇīey, பெ.(n.)

   1. தயிரிலிருந்து கடைந்தெடுக்கப்படும் சத்து; butter.

     “சேதாநறு மோர் வெண்ணெயின்” (பெரும்பாண். 306);.

   2. வெண்ணெய்ப்பதம் பார்க்க;see vendey-p-padam.

     [வெண் [மை] + நெய்]

வெண்ணெய்க்கல்

 வெண்ணெய்க்கல் veṇīeykkal, பெ.(n.)

   மலையின் ஒட்டில் நிற்கும் பெரிய குண்டுக்கல்; ball of rock standing on a hill.

     [வெண்ணெய் + கல்]

வெண்ணெய்ச்சுறா

வெண்ணெய்ச்சுறா veṇīeyccuṟā, பெ.(n.)

   1. வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமுடையதும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை; batten fish, silvery shot with purple, attaining 18 in. in length.

     [வெண்ணெய் + சுறா]

வெண்ணெய்தல்

 வெண்ணெய்தல் veṇīeytal, பெ.(n.)

   ஆம்பல் வகை (பிங்.);; white indian water-lily.

     [வெண் [மை] + நெய்தல்]

வெண்ணெய்த்தாழி

வெண்ணெய்த்தாழி veṇīeyttāḻi, பெ.(n.)

   1. வெண்ணெய் வைக்குஞ் சட்டி; butterstoring pot.

   2. வெண்ணெய்தாழிதிருவிழா பார்க்க;see venney-t-tali-tiruvila.

     [வெண்ணெய் + தாழி]

வெண்ணெய்த்தாழிதிருவிழா

 வெண்ணெய்த்தாழிதிருவிழா veṇīeyddāḻidiruviḻā, பெ.(n.)

   கண்ணன் வெண்ணெய் திருடிய நிகழ்வுத் தொடர்பாக நடத்தப்பெறும் பெருமாள் கோயில் திருவிழா; a Perumal temple festival in which kannan’s of stealing butter is represented.

     [வெண்ணெய் + தாழி + திருவிழா]

வெண்ணெய்த்தெழி

வெண்ணெய்த்தெழி veṇīeytteḻi, பெ.(n.)

   கடைந்த மோரைக் கையால் அலைக்கும் ஓசை; sound produed in shaking the churned butter-milk with the hand.

     “வெண்ணெய்த்தெழி கேட்குமண்மையால்”(கலித்.108);

     [வெண்ணெய் + தெழி]

வெண்ணெய்நல்லூர்

வெண்ணெய்நல்லூர் veṇīeynallūr, பெ.(n.)

   1. நம்பியாரூரரைச் சிவபிரான் தடுத்தாட் கொண்டதும் மெய்கண்ட தேவர் பிறந்ததும் கடலூர் மாவட்டத்தினுள்ளதுமான சிவத் தலம்; a siva shirine in the south arcot district, where saint suntarar was claimed by Iord siva as his salve and devotee and where meykanda-távar was born,

   2. கம்பருக்குப் புரந்த சடையப்ப வள்ளல் வாழ்ந்ததும் தஞ்சை மாவட்டத்திலுள்ளதுமான ஒர் ஊர்; a place in the Tanjore district where cataiyan the patron of the poet kamgar, lived.

     [வெண்ணெய் + நல்லூர]

வெண்ணெய்ப்பதம்

 வெண்ணெய்ப்பதம் veṇīeyppadam, பெ.(n.)

   நெய்ம (தைல); மருந்து காய்ச்சும் பக்குவ வகை; a stage in the pereparation of midicinal oil, when it is in the form of a pulqy mass.

     [வெண்ணெய் + பதம்]

வெண்ணெய்ப்பாரை

வெண்ணெய்ப்பாரை veṇīeyppārai, பெ.(n.)

   சாம்பல் நிறமுள்ளதும் ஓர் அடி நீளம் வளர்வதுமான மீன் வகை; horse-mackerel, greyish, attaining 1 ft. in length, caranyire.

     [வெண்ணெய் + பாரை]

வெண்ணெய்ப்புளி

 வெண்ணெய்ப்புளி veṇīeyppuḷi, பெ.(n.)

   வேர்வையில் கலந்துள்ள ஒரு வகைப் புளிப்புப் பொருள்; a sour substance mixed in perpiration.

     [வெண்ணெய் + புளி]

வெண்ணெய்மதுரம்

 வெண்ணெய்மதுரம் veṇīeymaduram, பெ.(n.)

கண்டில்வெண்ணெய் பார்க்க;see kangilvenney.

     [வெண்ணெய் + மதுரம்]

வெண்ணெய்விரை

 வெண்ணெய்விரை veṇīeyvirai, பெ.(n.)

   சாப்பிராவிரை; arnotto seed.

     [வெண்ணெய் + விரை]

வெண்ணெய்வெட்டி

வெண்ணெய்வெட்டி veṇīeyveṭṭi, பெ.(n.)

   1. கூர் மழுங்கியது; anything blunt.

   2.பயனற்றவன்; worthless fellow.

   3. வீரமில்லாதவன்; coward.

     ‘அவன் வெண்ணெய் வெட்டி வீரன்’.

     [வெண்ணெய் + வெட்டி]

வெண்ணெல்

வெண்ணெல் veṇīel, பெ.(n.)

   ஒருவகை மலைநெல்; mountain paddy.

     “அடுமகண் முகந்த வளவா வெண்னெல்” (புறநா. 399);.

     [வெண் [மை] + நெல்]

வெண்ணை

வெண்ணை veṇṇai, பெ.(n.)

   1. வெண்ணெய் நல்லூர் 1 பார்க்க (சி.சி.சுப. பாயி. 2);;see venney-nallor.

   2. வெண்ணெய்நல்லூர் 2 பார்க்க (கம்பரா. நூகபள். 263);;see Venney-nallor.

வெண்ணையூர்

வெண்ணையூர் veṇṇaiyūr, பெ.(n.)

வெண்ணெய்நல்லூர் 2 பார்க்க (கம்பரா. திருமுடி. 38);;see venney-nallor.

     [வெண்ணை + ஊர்]

வெண்ணொச்சி

வெண்ணொச்சி veṇṇocci, பெ.(n.)

   மரவகை (பதார்த்த.528);; five leaved chaste tree.

     [வெண் [மை] + நொச்சி]

வெண்ணொச்சில்விரை

 வெண்ணொச்சில்விரை veṇṇoccilvirai, பெ.(n.)

   வாய்விளங்கம்; berries-emblica ribes.

வெண்ணோ

வெண்ணோ1 veṇṇō, பெ.(n.)

   ஒரு கண்ணோய் வகை; an eye disease.

 வெண்ணோ2 veṇṇō, பெ.(n.)

வெண்ணோவு 1 பார்க்க (யாழ்.அக.);;see vennovu.

     [வெண் [மை] + நோ]

வெண்ணோக்காடு

வெண்ணோக்காடு1 veṇṇōkkāṭu, பெ.(n.)

   கண் கூசி கடுத்து நீர் வடிந்து உடம்பில் எரிச்சல் கண்டு கண் சீறு சிவப்பாகி நிலவு வெளிச்சத்தில் விழிக்க முடியாது கண்ணொலி குன்றி நடக்க முடியாமற் செய்யுமோர் கண்ணோய்; an eye disease.

     [வெண் [மை] + நோக்காடு]

வெண்தகரை

 வெண்தகரை veṇtagarai, பெ.(n.)

வெண்டகரை பார்க்க;see vendakarai.

     [வெண் [மை] + தகரை]

வெண்தகர்

 வெண்தகர் veṇtagar, பெ.(n.)

   வெள்ளாடு; goat.

     [வெண் [மை] + தகர்]

வெண்தணக்கு

 வெண்தணக்கு veṇtaṇakku, பெ.(n.)

   சாம்பல்தணக்கு; white catamaran tree. girrtia rottleriformis.

     [வெண் [மை] + தணக்கு]

வெண்தாது

 வெண்தாது veṇtātu, பெ.(n.)

   வெள்ளி; silver.

     [வெண் [மை] + தாது]

வெண்தாழை

 வெண்தாழை veṇtāḻai, பெ.(n.)

வெண்டாழை பார்க்க;see vendalai.

     [வெண் [மை] + தாழை]

வெண்தீவிரம்

வெண்தீவிரம் veṇtīviram, பெ.(n.)

   1. வெள்ளைக்காக்கணங்கொடி பார்க்க;see vellal-k-käkkanari-kodi.

     [வெண் [மை] + Skt. tivசa → த. தீவிரம்]

வெண்துதகி

 வெண்துதகி veṇdudagi, பெ.(n.)

வெண்சாரணை பார்க்க;see ven-săranai.

வெண்துதுவளை

 வெண்துதுவளை veṇduduvaḷai, பெ.(n.)

   வெள்ளைத்தூதுவளைச்செடி; a thorny climber-solanum trilobatum.

 |வெண் [மை] + தூதுவளை]

வெண்துத்தம்

 வெண்துத்தம் veṇtuttam, பெ.(n.)

வெள்ளைத்துத்தம் பார்க்க;see vellai-t- tuttam.

     [வெண் [மை] + துத்தம்]

வெண்துத்தி

 வெண்துத்தி veṇtutti, பெ.(n.)

பால்துத்தி

பார்க்க;see pal-tutti.

     [வெண் [மை] + துத்தி]

வெண்துருசி

 வெண்துருசி veṇturusi, பெ.(n.)

   வெள்ளைத் துருக; white vitriol-sulphate of zinc.

     [வெண் [மை] + துருசி]

வெண்துளசி

 வெண்துளசி veṇtuḷasi, பெ.(n.)

வெண்டுளசி பார்க்க (மலை.);;see vendulasi.

     [வெண் [மை] + துளசி]

வெண்துவரை

 வெண்துவரை veṇtuvarai, பெ.(n.)

   வெள்ளைத்துவரை; white red-gram-cajanus cajan.

     [வெண் [மை] + துவரை]

வெண்தேக்கு

வெண்தேக்கு1 veṇtēkku, பெ.(n.)

   மரவகை; a tree-lager slroemia lanceolata.

     [வெண் [மை] + தேக்கு]

 வெண்தேக்கு2 veṇtēkku, பெ.(n.)

வெண்டேக்கு பார்க்க;see ven-dakku.

     [வெண் [மை] + தேக்கு]

வெண்தேமல்

 வெண்தேமல் veṇtēmal, பெ.(n.)

   தேமல் நோய் வகை; afungus, disease of the skin.

     [வெண் [மை] + தேமல்]

வெண்தொயிலி

 வெண்தொயிலி veṇtoyili,    துயிலிக்கீரை; agreens.

     [வெண் [மை] + தொயிலி]

வெண்நொச்சி

 வெண்நொச்சி veṇnocci, பெ.(n.)

வெண்ணொச்சி பார்க்க;see vennocci

     [வெண் [மை] + நொச்சி]

வெண்னடம்பு

 வெண்னடம்பு veṇṉaḍambu, பெ.(n.)

வெள்ளையடப்பங்கொடி பார்க்க;see vellai-yadappari-kodi.

     [வெண் [மை] + அடம்பு]

வெண்னோவு

வெண்னோவு veṇṉōvu, பெ.(n.)

   1. வெக்கடுப்பு பார்க்க;see vekkaduppu.

   2. வெண்ணோக்காடு பார்க்க;see vennōkkādu.

     [வெண் [மை] + நோவு]

வெண்பசலி

 வெண்பசலி veṇpasali, பெ.(n.)

   வெள்ளைப் பசலைக் கீரை; a creeper-basella alba.

     [வெண் [மை] + பசலி]

வெண்பசும்பால்

 வெண்பசும்பால் veṇpasumbāl, பெ.(n.)

   வெண்ணிறமான பசுவின் பால்; milk of white COW.

     [வெண் [மை] பசு + பால்]

வெண்பச்சைக்கடலை

 வெண்பச்சைக்கடலை veṇpaccaikkaḍalai, பெ.(n.)

   பசுமைக்கடலை; green bengal gram.

     [வெண் [மை] + பச்சை + கடலை]

வெண்படலம்

 வெண்படலம் veṇpaḍalam, பெ.(n.)

   கண்ணிற் படரும் நோய் வகை; an eye disease.

     [வெண் [மை] + படலம்]

வெண்படலிகை

வெண்படலிகை veṇpaḍaligai, பெ.(n.)

   வெள்ளித்தட்டு; silver tray.

     “மணிக்குஞ்சி வெண்படலிகைக் குமரனீப்பது” (சீவக.3031);.

     [வெண் [மை] + படலிகை]

வெண்படி

 வெண்படி veṇpaḍi, பெ.(n.)

வெண்சோறு பார்க்க;see ven-soru.

     ‘இன்று கோவிலுக்கு நாழியரிசி வெண்படிக்காகக் கொடுத்திருக்கிறேன்'(உ.வ.);.

     [வெண் [மை] + படி]

வெண்படை

வெண்படை veṇpaḍai, பெ.(n.)

   நெய்தற்கரிய நூற்பா; warp, in weaving.

     “ஒன்றேற்றி வெண்படைக்கோளொன்று” (பழமொழி.125);.

     [வெண் [மை] + படை]

வெண்பட்டு

வெண்பட்டு veṇpaṭṭu, பெ.(n.)

   வெள்ளை நிறமுள்ள பட்டு; white silk.

வெண்பட்டுடுத்து (சீவக. 2358);.

     [வெண் [மை] + பட்டு]

வெண்பதம்

 வெண்பதம் veṇpadam, பெ.(n.)

   இளம்பதம்; condition of being heated slightly (w.);.

     [வெண் [மை] + பதம்]

வெண்பயறு

 வெண்பயறு veṇpayaṟu, பெ.(n.)

   கரும்பயறு; black pulse.

     [வெண் [மை] + பயறு]

வெண்பருத்தி

 வெண்பருத்தி veṇparutti, பெ.(n.)

   வெள்ளைப் பருத்திப் பஞ்சு; white cotton.

     [வெண் [மை] + பருத்தி]

வெண்பலகறை

 வெண்பலகறை veṇpalagaṟai, பெ.(n.)

   கவடி; cowry white.

     [வெண் [மை] + பலகறை]

வெண்பலி

 வெண்பலி veṇpali, பெ.(n.)

   சாம்பல் (பிங்.);; ash.

     [வெண் [மை] + பலி]

வெண்பா

வெண்பா veṇpā, பெ.(n.)

   நால்வகைப் பாக்களுள் ஒன்று(தொல்.பொ.417);; one of the four principal kinds of stanzaforms.

     [வெண் [மை] + பா]

வெண்பாக்கம்

வெண்பாக்கம் veṇpākkam, பெ.(n.)

   சென்னை மாவட்டத்தில் இருந்த ஒர் ஊர்; a village once existed in chennai District.

சென்னைக்கருகில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்துள் மூழ்கியது. நீர்த்தேக்கக் கரையில் புதிய கோயிலொன்று கட்டப்பட்டுள்ளது என்ற எண்ணம் இதனைக் குறித்து அமைகிறது. நம்பியாரூரர் பதிகம் இதனைக் குறித்தமைகிறது. ஏராரும் பொழினிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட காராரு மிடற்றான் எனப் பாடுகின்றார் இவர் (99-41);.

வெண்பாசி

வெண்பாசி veṇpāci, பெ.(n.)

   பாசிமணி வகை; a kind of white bead.

     “வெண்பாசி பூண்டு” (திருவாலவா. 52,3);.

     [வெண் [மை] + பாசி]

வெண்பாட்டம்

வெண்பாட்டம் veṇpāṭṭam, பெ.(n.)

   1. கோடையிற் பெய்யும் மழை; summer shower.

     “வெண்பாட்டம் வெள்ளம் தரும்” (பழமொழி. 300);.

   2. முன் பணமின்றி விடுங் குத்தகை; lease in which no premium is paid, dist. Fr.

     [வெண் [மை] + பாட்டம்]

வெண்பாட்டு

 வெண்பாட்டு veṇpāṭṭu, பெ.(n.)

   வெண்பா; one of the four principal kinds of poetic forms, vemba verse.

     [வெண் [மை] + பாட்டு]

வெண்பாண்டம்

 வெண்பாண்டம் veṇpāṇṭam, பெ.(n.)

   அரத்த மில்லாத வெளுத்த உடம்பு; pale, anemic body.

     [வெண் [மை] + பாண்டம்]

வெண்பாண்டு

 வெண்பாண்டு veṇpāṇṭu, பெ.(n.)

   பிறந்தது முதல் மீந்தோல் வெண்மை ஆவதற்குக் காரணமான நோய்வகை; albinism.

     [வெண் [மை] + பாண்டு]

வெண்பாதிரை

வெண்பாதிரை veṇpātirai, பெ.(n.)

   1. பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை; yellow-flowered fragrant trumpt flower tree.

   2. வெள்ளைப் பூவுடைய மரவகை; white-flowered trumpet-flower tree.

     [வெண் [மை] + பாதிரை]

வெண்பாப்பாட்டியல்

 வெண்பாப்பாட்டியல் veṇpāppāṭṭiyal, பெ.(n.)

   குணவீரப்பண்டிதர் வெண்பாவினால் இயற்றிய பாட்டியல் நூல்; a work on poetics in venpä verse, by kunavīra-pântitar.

     [வெண்பா + பாட்டியல்]

வெண்பாப்புலி

வெண்பாப்புலி veṇpāppuli, பெ.(n.)

   1. வெண்பா பாடுவதில் வல்லவன்; title of poets who are experts in composing Venpa verse (w.);.

     [வெண்பா + புலி]

வெண்பாமாலை

 வெண்பாமாலை veṇpāmālai, பெ.(n.)

   புறப்பொருள் வெண்பாமாலை; a treatise on the topic of puramin venpäverse.

     “புறப்பொருள் விழாவின்று விளங்க வெண் பாமாலையெனப்பெயர்நிறிஇ” (பு.வெ.சிறப்.);.

     [வெண்பா + மாலை]

வெண்பார்க்கல்

 வெண்பார்க்கல் veṇpārkkal, பெ.(n.)

   சுக்கான்கல்; calcareous earth.

     [வெண் [மை] + பார் + கல்]

வெண்பாவுரிச்சீர்

வெண்பாவுரிச்சீர் veṇpāvuriccīr, பெ.(n.)

   நேர்நேர்நேர், நிரைநேர்நேர், நேர்நிரைநேர், நிரைநிரைநேர் என வெண்பாவுக்கு உரியவவையாக வரும் நேரீற்று மூவசைச் சீர் (யாப். வி. 12, 61);; a metrical foot of three acai, i.e. of the value of three long syllables, chiefly found in veMpA, of four varieties, viz, nér-nér-nér (—);, nirai-nirai-nér (uu–);, mēr-nirai-nēr(-uu-);, nirai-nirai-nēr(uuuu);.

     [வெண்பா + உரிச்சீர்]

வெண்பாவை

 வெண்பாவை veṇpāvai, பெ.(n.)

   நாமகள்; sarasvati.

     “திருப்பூவணர்மேல் வெண்பாவையுலாம் பூவையுலாப் பாடலே” (பூவண. உலா. காப்பு);.

     [வெண் [மை] + பாவை]

வெண்பித்தளை

 வெண்பித்தளை veṇpittaḷai, பெ.(n.)

வெள்ளைப்பித்தளை பார்க்க;see vellai-p-pittalai.

     [வெண் [மை] + Skt.pitala → த.பித்தளை]

வெண்பிறப்பு

வெண்பிறப்பு veṇpiṟappu, பெ.(n.)

   வெள்ளியுயிர் (மணி.27,152);; a kind of birth.

     [வெண் [மை] + பிறப்பு]

வெண்பிறை

வெண்பிறை veṇpiṟai, பெ.(n.)

   வெள்ளிய பிறைத் திங்கள்; the bright crescent moon.

     “அந்தி வானத்து வெண்பிறை தோன்றி” (சிலம். 4, 23);.

     [வெண் [மை] + பிறை]

வெண்பீலி

 வெண்பீலி veṇpīli, பெ.(n.)

   சீனக்காரம்; alum.

     [வெண் [மை] + பீலி]

வெண்பு

 வெண்பு veṇpu, பெ.(n.)

   வெண்ணிலம்; plain land.

     [வெண் [மை] + பூ.Skt.bhu → த.பூ]

வெண்புகைச்சல்

 வெண்புகைச்சல் veṇpugaiccal, பெ.(n.)

   கண் விழியில் சதை வளர்ந்து கருத்த பாவை வெளுப்பேறி வலியுண்டாகி அரிப்பெடுத்து பீளைக் கட்டி பார்வை பலவிதமாய்க் காட்டுமோர் வகைக் கண்ணோய்; an eye disease.

     [வெண் [மை] + புகைச்சல்]

வெண்புடலை

 வெண்புடலை veṇpuḍalai, பெ.(n.)

வெள்ளைப்புடலை பார்க்க;see vellai-p-pudalai.

     [வெண் [மை] + புடலை]

வெண்புணர்ச்சிமாலை

 வெண்புணர்ச்சிமாலை veṇpuṇarccimālai, பெ.(n.)

   முந்நூறு வெண்பாக்கள் கொண்ட சிற்றிலக்கிய வகை; a poem of three hundred stanzas in venpá metre (W.);.

     [வெண் + புணர்ச்சி + மாலை]

வெண்புரசு

 வெண்புரசு veṇpurasu, பெ.(n.)

   புண்ணாற்றுதல் வேண்டிசித்தருண்ணும் மூலிகை; butea bearing white flowers butea- frondosa.

வெண்புறா

 வெண்புறா veṇpuṟā, பெ.(n.)

   வெள்ளைபுறா; white dove.

இதன் கறி பத்தியத்திற்குதவும், வெண்குட்டம் கரப்பான் சொறி போகும்.

     [வெண் [மை] + புறா]

வெண்புழுக்கல்

வெண்புழுக்கல் veṇpuḻukkal, பெ.(n.)

   1. இளம்புழுக்கல்; under boiling.

   2. இளம் புழுக்கல்ரிசி; rice obtained by husking parboiled paddy.

     [வெண் [மை] + புழுக்கல்]

வெண்புழுக்கு

 வெண்புழுக்கு veṇpuḻukku, பெ.(n.)

வெண்புழுக்கல் பார்க்க (யாழ்.அக.);;see ven-pusukkal.

     [வெண் [மை] + புழுக்கு]

வெண்புழுங்கல்

 வெண்புழுங்கல் veṇpuḻuṅgal, பெ.(n.)

வெண்புழுக்கல் பார்க்க;see ven-pulukkal.

     [வெண் [மை] + புழுங்கல்]

வெண்பூகன்

வெண்பூகன் veṇpūkaṉ, பெ.(n.)

   கழகக்காலப் புலவர்; a sangam poet.

இவர் குறுந்தொகை 83- ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

வெண்பூசனை

 வெண்பூசனை veṇpūcaṉai, பெ.(n.)

   திருமணப் பூசினி; ashpumpkin-benincasa cerifera.

     [வெண் [மை] + பூசுனை பூசனை]

வெண்பூசினி

 வெண்பூசினி veṇpūciṉi, பெ.(n.)

   மணப் பூசினி; ash pumpkin-benincasa cerifera.

     [வெண் [மை] + பூகனை → பூசினி]

வெண்பூதச்சி

 வெண்பூதச்சி veṇpūtacci, பெ.(n.)

   இரசித நஞ்சு; a kind of arsenic.

வெண்பூதனார்

வெண்பூதனார் veṇpūtaṉār, பெ.(n.)

   கழகக் காலப்புலவர்; a sangam poet.

இவர் குறுந்தொகையின் 83-ஆம் பாடலை உவமை நயத்துடன் பாடி சங்க இலக்கியத்திற்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.

வெண்பூதியார்

வெண்பூதியார் veṇpūtiyār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர், வெள்ளுர் கிழார் மகனார் வெண்பூதியார் எனவும் இவர் பெயர் காணப்படும்; a sangam poet, another name was called vellur-kilan-maganar-venpandiyan.

இவர் குறுந்தொகையில் 97, 174, 219-ஆம் பாடல்களைச் சிறப்பாகப் பாடி புகழ் சேர்த்துள்ளார்.

வெண்பூனைக்காஞ்சொறி

 வெண்பூனைக்காஞ்சொறி veṇpūṉaikkāñjoṟi, பெ.(n.)

   பூனைக்காஞ்சொறி; bearing white seeds.

     [வெண் [மை] + பூனை + காஞ்சொறி].

வெண்பூபூத்தல்

 வெண்பூபூத்தல் veṇpūpūttal, பெ.(n.)

 bearing white flowers-albiflora.

     [வெண் [மை] + பூ + பூத்தல்]

வெண்பூமான்

வெண்பூமான் veṇpūmāṉ, பெ.(n.)

   நாமகள் (நாமதீப. 56);; sarasvati.

 |வெண் [மை] + பூமகள் → அபூமாள் பூமான்]

வெண்பூம்பட்டு

வெண்பூம்பட்டு veṇpūmbaṭṭu, பெ.(n.)

   வெண்பட்டாடைவகை; a kind of cloth of white silk.

     ” வெண்பூம்பட்டிற்றிண் பிணியமைந்த பள்ளிக் கட்டில்” (பெருங். இலாவான. 3, 136);.

     [வெண் [மை] + பூ + பட்டு]

வெண்பூலி

 வெண்பூலி veṇpūli, பெ.(n.)

   மரவகை; a tree.

     [வெண் (மை); பூலி]

வெண்பெருமான்

 வெண்பெருமான் veṇperumāṉ, பெ.(n.)

   கடமை என்ற விலங்கு; nilghau, the great antelope.

     [வெண் [மை] + பெரு-மை + மான்]

வெண்பொங்கல்

 வெண்பொங்கல் veṇpoṅgal, பெ.(n.)

   பருப்பு, நெய் முதலியன சேர்த்துச் செய்த பொங்கல் வகை; a preperation of rice boiled with dhal, ghee, etc.

     [வெண் [மை] + பொங்கல்]

வெண்பொடி

வெண்பொடி veṇpoḍi, பெ.(n.)

   திருநீறு; sacred ash.

     “வெண்பொடியும்………. அக்கமாமணிகளுமே………… வனைந்தார்” (பிரமோத். 20, 17);.

     [வெண் [மை] + பொடி]

வெண்பொத்தி

வெண்பொத்தி veṇpotti, பெ.(n.)

   துகில்வகை (சிலப்.14, 108, உரை);; a kind of garment.

     [வெண் [மை] + பொத்தி]

வெண்பொன்

வெண்பொன் veṇpoṉ, பெ.(n.)

   1. வெள்ளி; silver.

     “வெண்பொற் கட்டின்மேல்” (சீவக. 2421);.

   2. சுக்கிரன்; venus.

     “மேலா வெண்பொன் போருறு காலை” (புறநா. 389);.

     [வெண் [மை] + பொன்]

வெண்பொன்மலை

 வெண்பொன்மலை veṇpoṉmalai, பெ.(n.)

   கயிலைமலை; mount kailash.

     [வெண் [மை] + பொன் + மலை]

வெண்மட்டம்

வெண்மட்டம் veṇmaṭṭam, பெ.(n.)

   மேலெழுந்த வாரித் தீர்மானம்; superficial judgement (w.);.

     [வெண்மட்டம் + கருத்து]

 வெண்மட்டம் veṇmaṭṭam, பெ.(n.)

   1. மேலெழுந்த வாரி; superficiality (w.);.

   2. நுணுக்க வேலைபாடில்லாத சாதாரண); வேலை (யாழ்.அக.);; plain work.

     [வெண் [மை] + மட்டம்]

வெண்மட்டவேலை

வெண்மட்டவேலை veṇmaṭṭavēlai, பெ.(n.)

   1. பொதுவகை வேலை; plain work.

   2. மேலெழுந்த வாரியாகச் செய்யும் வேலை; superficial work (w.);.

     [வெண்மட்டம் + வேலை]

வெண்மணல்

 வெண்மணல் veṇmaṇal, பெ.(n.)

   வெள்ளை மணல்; white sand.

     [வெண் [மை] + மணல்]

வெண்மணி

வெண்மணி veṇmaṇi, பெ.(n.)

   1. முத்து; pearl (w.);.

   2. கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளை வட்டம்; the white ring round the pupil of the eye, the white eye.

     [வெண் [மை] + மணிபொடி]

வெண்மணிப்பூதி

வெண்மணிப்பூதி veṇmaṇippūti, பெ.(n.)

   கழகக் காலப் பெண் புலவர்; a female sangam poet.

இவர் குறுந்தொகையின் 299-ஆம் பாடலில் தலைவியின் காதல் ஏக்கத்தை அழகு நயத்துடன் பாடியுள்ளார்.

வெண்மண்டலம்

 வெண்மண்டலம் veṇmaṇṭalam, பெ.(n.)

   வெள்ளை விழி; white of the eye-sclera.

வெண் [மை] + மண்டலம்]

வெண்மண்டை

வெண்மண்டை veṇmaṇṭai, பெ.(n.)

   இரப்போர் கைக்கொள்ளும் உண்கலவகை; a kind of beggar’s bowl.

     “ஊன் கொண்ட tவெண்மண்டை”(புறநா. 386);.

     [வெண் [மை] + மண்டை]

வெண்மதி

வெண்மதி veṇmadi, பெ.(n.)

   1. சந்திரன்; the moon (w.);.

   2. வெள்ளைச்சேம்பு (சங்.அக.);; indian kales.

     [வெண் [மை] + மதி]

வெண்மத்தன்

 வெண்மத்தன் veṇmattaṉ, பெ.(n.)

   வெள்ளுமத்தை; dhatura bearing white flowers-datura alba.

     [வெள் + உன்மத்தன்]

வெண்மயிர்

வெண்மயிர் veṇmayir, பெ.(n.)

   1. நரைத்த மயிர்; grey hair (w.);.

   2. வெண்சாமரை (சது.); பார்க்க;see ven-sâmarai.

     [வெண் [மை] + மயிர்]

வெண்மருது

 வெண்மருது veṇmarudu, பெ.(n.)

   பிள்ளை மருது; a tree-terminalia paniculata.

     [வெண் [மை] + மருது]

வெண்மறி

 வெண்மறி veṇmaṟi, பெ.(n.)

   வெள்ளாடு; goat.

     [வெண் [மை] + மறி]

வெண்மலக்கழிச்சல்

 வெண்மலக்கழிச்சல் veṇmalakkaḻiccal, பெ.(n.)

   இதுவே குழந்தைகளுக்குக் காணும் வெள்ளுடைப்புக் கழிச்சல்; white faeces or excrements as a sign of indigestion in children.

     [வெண் [மை] மலம் + கழிச்சல்]

வெண்மலம்

 வெண்மலம் veṇmalam, பெ.(n.)

   வெள்ளை நிறமாக மலம் வெளிப்படல்; white faeces a sign of jaundice.

     [வெண் [மை] + மலம்]

வெண்மலர்நாயகம்

 வெண்மலர்நாயகம் veṇmalarnāyagam, பெ.(n.)

   கருவண்டு; black beetle.

     [வெண் [மை] + மலர் + நாயகம்]

வெண்மலை

 வெண்மலை veṇmalai, பெ.(n.)

வெள்ளி மலை பார்க்க;see vess-malai (w.);.

     [வெண் [மை] + மலை]

வெண்மழை

வெண்மழை veṇmaḻai, பெ.(n.)

வெண்முகில் 1 பார்க்க;see wer-mugil.

     “வெண்மழை போலாச் சென்றா லியரோ” (பதிற்றுபப். 55);.

     [வெண் [மை] + மழை]

வெண்மாசுபடலம்

 வெண்மாசுபடலம் veṇmācubaḍalam, பெ.(n.)

   கண்ணில் வெள்ளை மாசு படர்ந்து கரகரத்து வலி உண்டாக்கும் ஒரு வகைக் கண்ணோய்; an eye disease albugineaoculi.

     [வெண் [மை] + மாசு + படலம்]

வெண்மாடம்

வெண்மாடம் veṇmāṭam, பெ.(n.)

   ஒருவகை ஊர்தி; a kind of vehicle.

     “வையமுந் தேரும் வகை வெண்மாடமும்” (பெருங், உஞ்சைக். 42,18);.

     [வெண் [மை] + மாடம்]

வெண்மாதுளை

 வெண்மாதுளை veṇmātuḷai, பெ.(n.)

   வெள்ளை மாதுளஞ் செடி; po megranate tree bearing fruits which remain colourless.

     [வெண் [மை] + மாதுளை]

வெண்மாழை

 வெண்மாழை veṇmāḻai, பெ.(n.)

   வெள்ளிப் பொருள்; things made of silver.

     [வெண் [மை] + மாழை]

வெண்மிளகாய்

 வெண்மிளகாய் veṇmiḷakāy, பெ.(n.)

   வெள்ளை மிளகாய்; white chilly.

     [வெண் [மை] + மிளகாய்]

வெண்மிளகி

 வெண்மிளகி veṇmiḷagi, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy.

 |வெண் [மை] + மிளகு → மிளகி]

வெண்மிளகு

 வெண்மிளகு veṇmiḷagu, பெ.(n.)

   வெள்ளை மிளகு; white pepper.

     [வெண் [மை] + மிளகு]

வெண்மிளகுதக்காளி

 வெண்மிளகுதக்காளி veṇmiḷagudaggāḷi, பெ.(n.)

   வெள்ளை மிளகுத் தக்காளி, மிளகுத் தக்காளி; solanum nigrum.

     [வெண் [மை] + மிளகு + தக்காளி]

வெண்மீன்

வெண்மீன் veṇmīṉ, பெ.(n.)

   விடிவெள்ளி; venus.

     “வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும்” (பட்டினப். 14);.

     [வெண் [மை] + மீன்]

வெண்முகில்

வெண்முகில் veṇmugil, பெ.(n.)

   1. மழை பெய்யும் நிலையை அடையாத வெற்று மஞ்ச; white, rainless cloud.

     “வெண்மிகுற் பொடிக்கும் வெய்யோன் போல” (பெருங். உஞ்சைக் 47, 198);.

   2. மழை மிகுதியாய்ப் பெய்யும் வெண்ணிறமான மஞ்சு; a mythical white cloud believed to rain heavily.

     “ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை” (தேவா. 176, 2);.

     [வெண் [மை] + முகில்]

வெண்முருக்கம்

 வெண்முருக்கம் veṇmurukkam, பெ.(n.)

   வெள்ளை மண முருக்கம்; thorny indian coral tree bearing white flowers-erythrina indica (alba);.

மறுவ. வெண் முருங்கை.

     [வெண் [மை] + முருக்கம்]

வெண்முள்ளி

 வெண்முள்ளி veṇmuḷḷi, பெ.(n.)

   வெள்ளை முள்ளிக் கீரை; a thorny plant-barleria Cuspilata.

     [வெண் [மை] + முள்ளி]

வெண்மெழுகு

 வெண்மெழுகு veṇmeḻugu, பெ.(n.)

   வெண்மெழுகு; white wax-cera alba.

     [வெண் [மை] + மெழுகு]

வெண்மேகப்படுவன்

 வெண்மேகப்படுவன் veṇmēkappaḍuvaṉ, பெ.(n.)

   தோல் நோய் வகை; a skin disease.

     [வெண்மேகம் + படுவன்]

வெண்மேகம்

 வெண்மேகம் veṇmēkam, பெ.(n.)

   வெள்ளை மேகம்; gonorrhoea.

     [வெண் [மை] + மேகம்]

வெண்மை

வெண்மை2 veṇmai, பெ.(n.)

   1. நீர்க்கடம்பு; a tree-stephegyne parviflora.

   2. வேலை; a plant-cleome pentaphylla.

     [வெள் → (வெள்மை); → வெண்மை]

வெண்மை’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வெண்மைப்புரட்சி

 வெண்மைப்புரட்சி veṇmaippuraṭci, பெ.(n.)

   நாட்டில் பெருமளவில் பால் பண்ணைகளைப் பெருக்கும் திட்டம்; scheme for increasing milk production (in India); white revolution.

     [வெண்மை + புரட்சி]

வெண்யோக்காடு

வெண்யோக்காடு2 veṇyōkkāṭu, பெ.(n.)

   குழந்தை பிறப்புக்கு முன் உண்டாகும் வேதனை; false labour pains (w.);.

     [வெண் [மை] + நோக்காடு]

வெதிரன்

வெதிரன் vediraṉ, பெ.(n.)

 deat person.

     “மகர் வெதிரர்” (சேதுபு. 2-வது சக்கர, 14);.

     [வெதிர் → வெதிரன்]

வெதிரம்

வெதிரம்1 vediram, பெ.(n.)

   செவிடு; deafness.

     [வயிர் → வெதிர் → வெதிரம்]

 வெதிரம்2 vediram, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

     “குட்சமும் வெதிரமும்” (சிலம் 13, 157);.

     [வெதிர் → வெதிரம்]

வெதிரி

 வெதிரி vediri, பெ.(n.)

வெதிரம் பார்க்க (மலை);;see vetiram.

     [வெதிர் → வெதிரி]

வெதிரேகம்

வெதிரேகம் vedirēkam, பெ.(n.)

   1. வேறுபாடு; difference.

   2. எதிர்முறை; negation.

   3. மரபு வழி (மேருமந். 697.உரை);; transformation.

     [வெதுக்கு → வெதக்கலன்]

வெதிர்

வெதிர்1 vedir, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

     [வெடி → வெடில் → வெதில் → வெதிர்]

 வெதிர்3 vedirddal, ெ.கு.வி.(v.i.)

   நடுங்குதல்; to tremble.

     “வெதிர்க்கு நரகமே” (தணிகைப்பு விராட்ட.50);.

     [விதிர் → வெதிர்]

 வெதிர்4 vedir, பெ.(n.)

   1. நடுக்கம்; trembling.

     “வடலை குமட்டி வெதிரெழுத்து” (காசிக வயிர. 22);.

   2. வெதிரம் பார்க்க;see vetriam.

     “சிறியிலை வெதிரினெல் விளையும்மே” (புறநா. 109);.

   3. விரிமலர் (பிங்.);; open flower.

     [விதிர் → வெதிர்]

 வெதிர்5 vedir, பெ.(n.)

   செவிடு (பிங்.);; deafness.

     “வெதிரெனுங்கொ லென்னு மாறு…… வைகினான்” (பாரத. சூது. 187);.

     [வயிர் → வெதிர்]

வெதிர்ங்கோல்

 வெதிர்ங்கோல் vedirṅāl, பெ.(n.)

   மூங்கிற்கோல்; bamboo rod.

     “ஒரு வெதிர்ங் கோலைமுறித்து நீட்ட” (தொல், பாயி. உரை);.

     [வெதிரங்கோல் → வெதிர்ங்கோல்]

வெதிர்த்தல்

வெதிர்த்தல்2 vedirddal, பெ.(n.)

   அஞ்சுதல், சினத்தல், நடுங்குதல்; fear, angry, trembling.

     [விதிர் → வெதிர் → வெதிர்த்தல்]

வெதிர்ப்பு

வெதிர்ப்பு vedirppu, பெ.(n.)

   1. அச்சம்; fear (w.);.

   2. நடுக்கம் (சது.);; trembling.

   3. கலக்கம் (திவா.);; confusion.

   4. ஓர் சினக் குறிப்பு; a symptom of anger (w.);.

     [விதிர் → வெதிர் → வெதிர்ப்பு]

வெதுக்கலன்

 வெதுக்கலன் vedukkalaṉ, பெ.(n.)

   துன்பம் முதலியவற்றால் உடல் இளைத்தவன் (யாழ்.அக.);; person emaciated by grief.

     [வெதுக்கு → வெதக்கலன்]

வெதுக்கல்

 வெதுக்கல் vedukkal, பெ.(n.)

   வெதுப்பல், வெதும்பலன்; whisper, murmur.

     [வெதுக்கு → வெதுக்கல்]

வெதுக்கு-தல்

 வெதுக்கு-தல் vedukkudal, செ.குன்றாவி. (v.t.)

வெதுப்பு பார்க்க;see vetuppu.

வெதுப்பச்சூரி

 வெதுப்பச்சூரி veduppaccūri, பெ.(n.)

நத்தைச்சூரி பார்க்க;see nattai-c-cori.

     [வெதுப்பம் + சூரி]

வெதுப்படக்கி

வெதுப்படக்கி2 veduppaḍakki, பெ.(n.)

   1. செடிவகை; false nettle (w.);.

   2. பேய் மருட்டி (பதார்த்த.543);; malabar catamint.

     [வெதுப்பு + அடக்கி]

வெதுப்பம்

வெதுப்பம் veduppam, பெ.(n.)

   1. இளஞ்சூடு; warmth, moderate heat.

   2. சூட்டால் , உண்டாகும் வயிற்றுப் போக்கு; frothy diarrhoea, due to heat in the system (w.);.

     [வெதும்பு → வெதுப்பு → வெதுப்பம்]

வெதுப்பல்’- தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வெதுப்பி

வெதுப்பி veduppi, பெ.(n.)

   ஒற்றைப் பேய்மிரட்டி (பாலவா .494);; a medicinal herb.

     [வெதுப்பு → வெதுப்பி]

வெதுப்பு

வெதுப்பு veduppu, பெ,(n.)

   1. வெதுப்பம் 1 பார்க்க;see veduppam1.(w.);.

   2. மாட்டு நோய் வகை (மாட்டுவை. சிந், 63);; a cattled disease.

   3. காய்ச்சல் நோய் வகை (சங்.அக.);; a fever.

     [வெதும்பு → வெதுப்பு]

வெதும்பு-தல் Vetumpய, செ.கு.வி. (v.i.);

   1. இளம் சூடாதல்; to become warm.

   2.சிறது வாடுதல்; to lose freshness (w.);.

   3. வெம்மையாதல்; to be hot or heated.

     “விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்புமாயின்” (குளா. மந்திர, 26);.

   4. கொதித்தல்; to boil.

     “விழிநீர்களுற்றென வெதும்பியூற்ற” (தாயு. கருணாகர 9);.

   5. சினங்கொள்ளுதல் (பிங்.);; to be enraged.

   6. மனங்கலங்குதல்; to be disturbed in mind.

     “வெதும்பி யுள்ளம்” (திருவாச. 5, 1);.

     [வெது → வெதும்பு]

வெதுப்பு’-தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வெதுப்புக்கழிச்சல்

 வெதுப்புக்கழிச்சல் veduppukkaḻiccal, பெ,(n.)

   குழந்தைகளுக்கு நுரைக்காணும் ஒரு கழிச்சல்; brothy diarrhoea in children.

     [வெதுப்பு + கழிச்சல்]

வெதுப்புக்கொள்ளல்

 வெதுப்புக்கொள்ளல் veduppukkoḷḷal, பெ,(n.)

   சூடேறல்; to get body heated.

     [வெதுப்பு + கொள்ளல்]

வெதுப்புண்டாதல்

 வெதுப்புண்டாதல் veduppuṇṭādal, பெ,(n.)

   சூடுண்டாதல்; getting heated or warm.

     [வெதுப்பு + உண்டாதல்]

வெதுப்புதல்

 வெதுப்புதல் veduppudal, பெ,(n.)

   வாட்டுதல்; heating the medicinal leaf gently in the fire.

     [வெதும்பு → வெதுப்பு → வெதுப்புதல்]

வெதுப்புவந்துற்றபோது

 வெதுப்புவந்துற்றபோது veduppuvanduṟṟapōdu, பெ,(n.)

   காய்ச்சல் கண்ட போது; when feverish.

     [வெதுப்பு + வந்துற்றபோது]

வெதுப்பைவிருவித்தல்

 வெதுப்பைவிருவித்தல் veduppaiviruviddal, பெ,(n.)

   சூட்டைப் போக்கமல்; to abate the heat.

     [வெதுப்பை + வெருவித்தல் → விருவித்தல்]

வெதும்பக்காய்ச்சல்

 வெதும்பக்காய்ச்சல் vedumbakkāyccal, பெ,(n.)

   மருந்து நெய்யைச் சூடுண்டாகும்படி காய்ச்சுதல்; to heat the medicated oil.

     [வெதும்பு → வெதும்ப + காய்ச்சல்]

வெதும்பல்

வெதும்பல் vedumbal, பெ,(n.)

   1. வாடல்; withering.

   2. ஒரு நோய்; a disease.

     [வெதும்பு → வெதும்பல்]

வெதும்பா

 வெதும்பா vedumbā, பெ,(n.)

   வெள்ளை யாதளை; a plant.

வெதும்பிக்கொள்ளல்

 வெதும்பிக்கொள்ளல் vedumbikkoḷḷal, பெ,(n.)

   இடித்துக் கொள்ளல்; pulverising or powdering.

     [வெதுப்பி → வெதும்பி + கொள்ளல்]

வெதும்பு-தல்

வெதும்பு-தல் vedumbudal, பெ,(n.)

செ.கு.வி.(v.i.);

   1. வாடுதல்; be withered, wilt.

     ‘கடுமையான வெயிலால் வெற்றிலைக் கொடி வெதும்பி விட்டது’.

   2. (மனம்); குமைதல், வருந்துதல்; be grieved.

     ‘வீட்டின் அவல நிலையை எண்ணிமனம் வெதும்பினார்’.

     [வெதும்புதல் → வெதும்புதல்]

வெதும்புதல்

 வெதும்புதல் vedumbudal, பெ,(n.)

வெதும்பல்;see vedumbal.

     [வெதும்பு → வெதும்புதல்]

வெதுவெது-த்தல்

வெதுவெது-த்தல் veduveduddal, பெ,(n.)

செ.கு.வி. (v.i.);

   1. அரைகுறையாக வேதல்; half cooked.

   2. இளஞ் சூடாயிருத்தல்; to become lukewarm.

   3. சிறிது வாடுதல்; to be partially withered (w.);.

     [வெதுவெதெனல் → வெதுவெது-த்தல்]

வெதுவெதுப்பு

 வெதுவெதுப்பு veduveduppu, பெ,(n.)

   இளஞ்சூடு; lukewarmness (w.);

     [வெதுவெது + வெதுவெதுப்பு]

வெதுவெதெனல்

 வெதுவெதெனல் veduvedeṉal, பெ,(n.)

   இளஞ்சூடாதற் குறிப்பு; lukewarm.

     [வெதுவெது → வெதுவெதெனல்]

வெது்பபட்கிக

வெது்பபட்கிக1 vebabaṭgiga, பெ.(n.)

   1. எரு முட்டைப் பீநாறி, இதுவே பேய் மிரட்டி; a plant-ballota disticha.

   2. வெ்பப்ததை, ஆற்றி; cooler.

   3. வெளுத்த கழிச்சல், வளிக்காய்ச்சல் போகும்; it cures white diarrhoea and fever.

     [வெதுப்பு + அடக்கி]

வெந்

 வெந் ven, பெ,(n.)

   முதுகு (பிங்.);; back.

     [வெரிந் → வெந்]

வெந்தசூடாமணி

 வெந்தசூடாமணி vendacūṭāmaṇi, பெ,(n.)

   வெட்பூலா; a plant-caeya arborea.

வெந்தநெல்

 வெந்தநெல் vendanel, பெ,(n.)

   புழுங்கல் நெல்; parboiled paddy.

     [வே → வெந்த + நெல்]

வெந்தபுண்

 வெந்தபுண் vendabuṇ, பெ,(n.)

   வெந்நீர் பட்டு கொப்பளித்த புண்; scald.

     [வே → வெந்த + புண்]

வெந்தம்

 வெந்தம் vendam, பெ,(n.)

   பந்தம்; bondage.

     [பந்தம் → பெந்தம் → வெந்தம்]

வெந்தயக்காடி

 வெந்தயக்காடி vendayakkāṭi, பெ,(n.)

   வெந்தயம் உழுந்து அரிசி முதலியன சேர்த்துச் செய்யுங் காடி; a kind of gruel made of Fenugreek seeds, black gram, rice, etc.

     [[வெந்தயம் + காடி]

வெந்தயக்காய்

 வெந்தயக்காய் vendayakkāy, பெ,(n.)

   வெந்தயம் சேர்ந்த ஒருவகை ஊறுகாய்; pickle mixed up with seed of fenu-greek.

     [வெந்தயம் + காய்]

வெந்தயக்கீரை

 வெந்தயக்கீரை vendayakārai, பெ,(n.)

   வெந்தயச் செடியின் இலை; fenugreek plant, which is used as vegetable greens-trigonella foenum graecum.

இதனால் வயிற்றுப்பிசம் போகும்.

     [வெந்தயம் + கீரை]

வெந்தயச்சம்பா

 வெந்தயச்சம்பா vendayaccambā, பெ,(n.)

   சம்பா நெல்வகை; a kind of campapaddy.

     [வெந்தயம் + சம்பா]

வெந்தயச்சாறு

 வெந்தயச்சாறு vendayaccāṟu, பெ,(n.)

   கறிவகை; a kind of sauce.

     [வெந்தயம் + சாறு]

வெந்தயம்

வெந்தயம் vendayam, பெ,(n.)

   1. வெந்தய அரிசி; fenugreek seed.

   2. செடிவகை (பதார்த்த. 1042);; fenu greek, s.sh.

     [மெல் → மெல்து) → மெத்து → மெந்து → மெந்தியம் → வெந்தியம் → வெந்தயம்]

வெந்தயவம்மை

வெந்தயவம்மை vendayavammai, பெ,(n.)

   1. வெந்தய விரை போல் கொப்புளங் கண்டு தொண்டை கம்பி 2-3 நாளில் இறங்கும் ஒரு அம்மை நோய்; a variety of small pox in which the pustules are as big as fenugreek which fades in 3 days-scarlatna simplx.

   2. காய்ச்சலடித்து 3 நாளில் தலையில் குருதோன்றி 7-ம் நாளில் நிர்க்கட்டி. 9-ம் நாளிலிறங்கும் ஒருவகை அம்மை நோய்l; a kind of small pox.

     [வெந்தையம் + அம்மை]

வெந்தலயம்

 வெந்தலயம் vendalayam, பெ,(n.)

வெந்தயம் பார்க்க;see vendayam.

     [வெந்தயம் → வெந்தலயம்]

வெந்தலையோடு

 வெந்தலையோடு vendalaiyōṭu, பெ,(n.)

   வெள்ளைத் தலை மண்டையோடு; white skull bone.

     [வெண்டலை → வெந்தலை + ஒடு]

வெந்தல்

 வெந்தல் vendal, பெ,(n.)

வெந்தயம் பார்க்க (மலை.);;see Ventayam.

     [வெந்தயம் → வெந்தல்]

வெந்தல்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

வெந்தழலல்

 வெந்தழலல் vendaḻlal, பெ,(n.)

   புழுக்கமடைதல்; swelter.

     [வே → வெந்து + அழல் → அழலல்]

வெந்தழல்

வெந்தழல் vendaḻl, பெ,(n.)

   சிவந்தெரியும் தீ; glowing fire.

     “வெந்தழலின் வீழ்வனிது வேதமொழியென்றான்” (பாரத பதின்மூன். 179);.

     [வெம் [மை] + தழல்]

வெந்தழிவு

 வெந்தழிவு vendaḻivu, பெ,(n.)

   பயிர் காய்ந்து கருகிப் போதலால் உண்டாகும் பயிரழிவு; loss of crop due to the withering up of plants.

     [வே → வெந்து + அழிவு]

வெந்தாரைச்சூடு

 வெந்தாரைச்சூடு vendāraiccūṭu, பெ,(n.)

   நீர்த்தாரைச்சூடு; heat in the urethra.

     [வெந்தாரை + குடு]

வெந்தி

வெந்தி1 vendittal, செ.கு.வி. (v.i.)

   1. சினங் கொள்ளுதல் (திருப்பு.136);; to get angry.

   2. சூடாதல்; to be hot.

     [வே → வெந்தி-த்தல்]

 வெந்தி2 vendittal, செ.கு.வி. (v.i.)

   ஒற்றுமையாதல்; to be united.

     [வெந்தம் → வெந்தி-த்தல்]

 வெந்தி3 vendittal, செ.குன்றாவி. (v.t.)

   கட்டுதல்; to bind.

     [வெந்தம் →வெந்தி-த்தல்]

வெந்திப்பு

வெந்திப்பு1 vendippu, பெ.(n.)

   1. கொதிப்பு; heat.

   2. சினம்; anger.

     “வெந்திப்புடன் வருமவுணேசனையே”(திருப்பு, 136);,

     [வெந்தி வெந்திப்பு]

 வெந்திப்பு2 vendippu, பெ,(n.)

   கட்டு (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு);; bond, union.

     [வெந்தி → வெந்திப்பு]

வெந்தியம்

 வெந்தியம் vendiyam, பெ.(n.)

வெந்தயம் பார்க்க;see ventayam.

     [மெந்தியம் → வெந்தியம்]

வெந்திறல்

வெந்திறல் vendiṟal, பெ,(n. )

   பெருவலிமை; great strength.

     “வெந்திறற் நடக்கை, வென்வேற் பொறை”

     ‘(பதிற்றும் 86);.

     [வெம் [மை] + திறல்]

வெந்து

 வெந்து vendu, பெ,(n.)

   சுற்றம் (யாழ்.அக.);; relative.

     [பந்து → பெந்து → வெந்து]

வெந்துசனம்

 வெந்துசனம் vendusaṉam, பெ,(n.)

   சுற்றத்தார்; rrelative, kith and kin.

     [வெந்து + Skt. Jana → த. சனம்]

வெந்துபோதல்

 வெந்துபோதல் vendupōtal, பெ,(n.)

   வெந்துழலல்; swelter.

     [வே → வெந்து + போதல்]

வெந்துப்பு

வெந்துப்பு venduppu, பெ,(n.)

வெந்திறல் பார்க்க;see ventiral.

     “வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்” (குறள், 895);.

     [வெம் [மை] + துப்பு]

வெந்துயர்

 வெந்துயர் venduyar, பெ,(n.)

   மிக்கவலி; extreme pain.

     [வெம் [மை] + துயர்]

வெந்துயர்க்கண்ணீர்

 வெந்துயர்க்கண்ணீர் venduyarkkaṇṇīr, பெ,(n.)

   ஆறாத வெந்த புண்ணால் உண்டாகும் துன்பக் கண்ணீர்; teers of deep and bitter grief.

     [வே → வெந்து + துயர் + கண்ணீரி]

வெந்துருகல்

வெந்துருகல் vendurugal, பெ,(n.)

   பழைய காசு வகை (பணவிடு.138);; an ancient coin.

     [வே + உருகு → உருகல்]

வெந்துருதாசை

 வெந்துருதாசை vendurutācai, பெ,(n.)

ஊர்க்கள்ளி பார்க்க;see or-k-kalli.

வெந்துளி

வெந்துளி venduḷi, பெ,(n.)

   துன்பக் கண்ணீர்; tear-drops of sorrow, as hot.

     “வீழ்தரு வெந்துள விரலி னீக்கி” (பெருங். இலாவாண. 10, 63);.

     [வெம் [மை] + துளி]

வெந்தேக்கிரி

 வெந்தேக்கிரி vendēkkiri, பெ,(n.)

   நெருப்பெதில்; burning fire.

     [வே → வெந்து → வெந்தேகு + எரி]

வெந்தேக்கு

 வெந்தேக்கு vendēkku, பெ.(n.)

   வெண்தேக்கு; whiteteak-lager-stroemia lanceolata.

     [வெண்தேக்கு → வெந்தேக்கு]

வெந்தேட்கொடுக்கி

 வெந்தேட்கொடுக்கி vendēḍkoḍukki, பெ.(n.)

பெரியதேட்கொடுக்கி பார்க்க;see periya-téd-kodukki.

     [வெம் [மை] + தேள்+ கொடுக்கி]

வெந்தேளி

 வெந்தேளி vendēḷi, பெ.(n.)

   வெண்ணிறத் தேளிமீன் (தஞ்சை. மீன.);; a kind of sea fish.

     [வெண் [மை] + தேளி]

வெந்தை

வெந்தை vendai, பெ.(n.)

   1. நீராவியிலே புழுங்கியது; anything cooked in steam.

     “புளிப்பெய்தட்ட வேனை வெந்தை வல்சியாக” (புறநா. 246);.

   2. பிட்டு (பிங்);; meal-cake.

     “வெந்தை தோசையே” (கந்தபு, தானப்ப, 8);,

     [வே → வெந்தை]

வெந்தையம்

 வெந்தையம் vendaiyam, பெ.(n.)

வெந்தயம் பார்க்க;see ventayam,

     [வெந்தியம் வெந்தயம்]

வெந்தோதிகம்

 வெந்தோதிகம் vendōtigam, பெ.(n.)

   அழிஞ்சில்; hill sack tree-alangium acuminatum.

வெந்தோன்றி

வெந்தோன்றி1 vendōṉṟi, பெ.(n.)

வெண்காந்தன் பார்க்க;see ven-kantan.

     [வெண் [மை] + தோன்றி]

 வெந்தோன்றி2 vendōṉṟi, பெ.(n.)

   மேல் நோக்கிப் படரும் செடி (மூ.அ.);; a climbing shrub.

     [விண் [வெண் → வெம்] + தோன்றி]

வெந்தோன்றிகா

 வெந்தோன்றிகா vendōṉṟikā, பெ.(n.)

   கண்ணுப்பீளை; waxy deposit in the corners of the eye.

     [வெண் [மை] + தோன்றிகா]

வெந்நிடு-தல்

வெந்நிடு-தல் venniḍudal, செ.கு.வி.(v.i.)

   புறங்காட்டுதல் (பு.வெ. 7, 12, உரை);; to retreat, as turning one’s back.

     [வெரிந் → வெந் + இடு-,]

வெந்நீரூறல்

 வெந்நீரூறல் vennīrūṟal, பெ.(n.)

   சுருக்குச் சாயம்; decoction.

     [வெந்நீர் + ஊறல்]

வெந்நீர்

வெந்நீர் vennīr, பெ.(n.)

   சுடுநீர்; hot water.

     ‘வெந்நீர்………இல்லஞ் சுடுகலாவாறு”

     [பழ.51] [வெம் [மை] + நீர்]

வெந்நீர்காயம்

 வெந்நீர்காயம் vennīrkāyam, பெ.(n.)

   சுடுநீரால் உண்டாகும் புண்; scald caused by boiling water.

     [வெந்நீர் + காயம்]

வெந்நீர்க்கொப்புளம்

 வெந்நீர்க்கொப்புளம் vennīrkkoppuḷam, பெ.(n.)

   வெந்நீர் படுவதினாலெழுங் கொப்புளம்; vesicles caused by hot water.

வெந்நீர்விரணம்

 வெந்நீர்விரணம் vennīrviraṇam, பெ.(n.)

   உடம்பில் வெந்நீர் படுவதினா லேற்பட்ட புண்; ulcer caused by hot water-scald.

     [வெந்நீர் + விரணம்]

 Skt. Ranam → த.விரணம்

வெனப்பீலி

 வெனப்பீலி veṉappīli, பெ.(n.)

   இருவேலி; khus-khus root -vetiveria zizanioides.

வெனப்பீலிகம்

 வெனப்பீலிகம் veṉappīligam, பெ.(n.)

   இருவேலி; khus-khus root – vetiveria zizanioides.

வே

வென்

வென்1 veṉ, பெ.(n.)

   வெற்றி; victory.

     “வென்டுவற் செழிய” (புறநா. 19);.

     [வெல் → வென்]

 வென்2 veṉ, பெ.(n.)

வெந் பார்க்க;see ven.

     “மயில்வென் றனில்வந்தருளுங் கனபெரி யோனே” (திருப்பு. 10);.

   தெ. வென்னு;க. பென்னு.

     [வெளிந் → வென்]

 வென் veṉ, பெ.(n.)

   முதுகு; back.

     [வெரிந் → வென்]

வென்னிடுதல்

வென்னிடுதல் veṉṉiḍudal, பெ.(n.)

   புறங் Qöm Gä5á); retreat.

     [வெரிந் வெந் வென் இடுதல்]

வென்னிர்

 வென்னிர் veṉṉir, பெ.(n.)

   சூடான நீர்; hot water.

     [வெந்நீர் → வென்னி]

வென்னிர்ப்புண்

 வென்னிர்ப்புண் veṉṉirppuṇ, பெ.(n.)

   கொதிநீர்பட்ட புண்; scalds.

     [வெந்நீர் → வென்னிர் + புண்]]

வென்னிறாதல்

 வென்னிறாதல் veṉṉiṟātal, பெ.(n.)

   நீற்றுப் போதல், பற்பமாதல்; to slake, as lime.

     [வெறுநீறு → வென்னிறு + ஆதல்]

வென்றநாமங்கொடு-த்தல்

வென்றநாமங்கொடு-த்தல் veṉṟanāmaṅgoḍuttal, செ.கு.வி. (v.i.)

   ஒருவனுக்கு அவனை வென்றடக்கியவன் பெயரைக் கொடுத்தல்; to give a person the name of his conqueror.

     “உத்தம சோழனென்றிவர் தமக்கு வென்ற நாமங் கொடுத்து” (S.I.I.iv,29-30);.

     [வெல் + நாமம் + கொடு-,]

 Skt. Naman → த. நாமம்.

வென்றவன்

வென்றவன் veṉṟavaṉ, பெ.(n.)

   1. வெற்றி பெற்றவன்; victor.

     “வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை” (தேவா. 1024, 5);.

   2. பற்றற்றுப் பேறுபெற்றவன்; siddha, as one who has renounced the world.

     “வென்றவ ருலகம் பெற்ற வேந்து” (சீவக 956);.

   3. வென்றோன், 2 பார்க்க;see verror.2.

     “வென்றவன் பாதஞ் சேர்ந்து” (சீவக. 1437);,

     [வெல் → வென் → வென்றவன்]

வென்றான்

 வென்றான் veṉṟāṉ, பெ.(n.)

வென்றோன் பார்க்க;see venron.

     “வென்றான் வினையின் றொகை” (சூளா. காப்பு);.

     [வெல் → வென் → வென்றான்]

வென்றி

வென்றி veṉṟi, பெ.(n.)

   வெற்றி; victory, triumph.

     “வேலன்று வென்றி தருவது” (குறள், 546);.

ம. வின்னி,

     [வெல் → வென் → வென்றி]

வென்றிக்கூது

வென்றிக்கூது veṉṟikātu, பெ.(n.)

   மாற்றானொடுக்கமும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங் கூத்து (சிலப். 3,13, உரை);;     [வென்றி + கூத்து]

வென்றிக்கொடி

 வென்றிக்கொடி veṉṟikkoḍi, பெ.(n.)

   வெற்றிக்கொடி; victoriya triumph.

     [வென்றி + கொடி]

வென்றிமாலை

வென்றிமாலை veṉṟimālai, பெ.(n.)

   1. வெற்றிவாகை (யாழ்.அக.);;see verrivakai.

   2. வெற்றி வரிசை; series of victories.

     “வென்றிமாலை கேட்டு” (சீவக. 2325);.

     [வென்றி + மாலை]

வென்றிமாலைக்கவிராயர்

வென்றிமாலைக்கவிராயர் veṉṟimālaikkavirāyar, பெ.(n.)

   17-ஆம் நூற்றாண்டி லிருந்து வரும் திருச்செந்தூர்ப் புராணம் இயற்றியவருமாகிய ஆசிரியர்; a poet author of tiruccentur-p-puranam, 17th C.

     [வெற்றிமாலை + கவிராயர்]

வென்றியன்

வென்றியன் veṉṟiyaṉ, பெ.(n.)

வென்றோன்

   1 பார்க்க;see venron 1.

     “செருமேம்பட்ட வென்றியர்” (கலித் 27, 25);.

     [வெல் → வென் → வென்றியன்]

வென்றோன்

வென்றோன் veṉṟōṉ, பெ.(n.)

வென்றவன் 1,2 பார்க்க;see venravan 1, 2,

   2. அருகக் கடவுள் (சூடா.);; arhat, as one who conquered the world by his renunciation.

     [வெல் → வென் → வென்றோன்]

வென்றோர்

 வென்றோர் veṉṟōr, பெ.(n.)

   புலனடங்கப் பெற்றோர், வெற்றியடைந்தோர்; controiler of senses, victorious person.

     [வெல் → வென் → வென்றோர்]

வெப்பகற்றல்

 வெப்பகற்றல் veppagaṟṟal, பெ.(n.)

   உடம்பின் சூடு தணித்தல்; to abate the heat in the body.

     [வெப்பு + அகற்றல்]

வெப்பகலல்

 வெப்பகலல் veppagalal, பெ.(n.)

   உடற்சூடு நீங்கல்; vanishing of heat in the body.

     [வெப்பு + அகலல்]

வெப்பக்கட்டி

 வெப்பக்கட்டி veppakkaṭṭi, பெ.(n.)

வெப்புக்கட்டி பார்க்க;see veppu-k-katti(w.);.

     [வெப்பம் + கட்டி → வெப்புக்கட்டி]

வெப்பக்கதிர்ப்புமானிகள்

 வெப்பக்கதிர்ப்புமானிகள் veppaggadirppumāṉigaḷ, பெ.(n.)

வெப்பநிலை பார்க்க;see veppa-nillai.

     [வெப்பம் + கதிர்ப்புமானிகள்]

வெப்பக்குடுவை

 வெப்பக்குடுவை veppakkuḍuvai, பெ.(n.)

   வெப்பத்தைக் காத்து நிற்கும் குடுவை (அ); சாடி; thermos flask.

     [வெப்பம் + குடுவை]

வெப்பங்கொள்ளல்

 வெப்பங்கொள்ளல் veppaṅgoḷḷal, பெ.(n.)

   வெப்பமுறல்; to get warm or becoming heated.

     [வெப்பம் + கொள்ளல்]

வெப்பசாரம்

வெப்பசாரம் veppacāram, பெ.(n.)

   1. மனத்துயர்; grief (w.);.

   2. சினம்; indignation.

   3. பொறாமை; spite, spleen.

     [வெப்பம் + சார் → வெப்பசாரம்]

வெப்பத்தால்திணறல்

 வெப்பத்தால்திணறல் veppattāltiṇaṟal, பெ.(n.)

   கொதிப்பினால் திக்குமுக்காடல்; sweltry,

     [வெப்பம் → வெப்பத்தால் + திணறல்]

வெப்பத்தி

 வெப்பத்தி veppatti, பெ.(n.)

   வறட்பூலா (சங்.அக);; Indian snowberry.

     [வெப்பம் → வெப்பத்தி]

வெப்பநிலை

 வெப்பநிலை veppanilai, பெ.(n.)

   ஒரு பொருளில் வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் குறிப்பதாகும்; indication of grade of heat.

     [வெப்பம் + நிலை]

வெப்பநிலைக்குறைவுவிகிதம்

 வெப்பநிலைக்குறைவுவிகிதம் veppanilaigguṟaivuvigidam, பெ.(n.)

   வளி மண்டலத்தில் மேல் நோக்கிச் செல்லும் பொழுது வெப்பநிலை மாறும் கோணம் வெப்பநிலைக் குறைவுக் கோணமாகும்; low rates in the any region.

முகில் உருவாதல், இடி, மழை, வளி மண்டலத்தில் கொந்தளிப்பின் மிகுதி முதலியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வானிலையியலாருக்கு இக்குறைவுக் கோணம் மிகவும் உதவுகிறது.

வெப்பந்தணித்தல்

 வெப்பந்தணித்தல் veppandaṇittal, பெ.(n.)

   சூடுதணிதல்; cooling or lowering the temperature.

     [வெப்பம் + தணித்தல்]

வெப்பமானி

 வெப்பமானி veppamāṉi, பெ.(n.)

 thermometer.

     [வெம்பு → வெப்பு → வெப்பம் + மானி]

வெப்பம்

வெப்பம் veppam, பெ.(n.)

   1. சூடு, heat.

     ‘நீர்கொண்ட வெப்பம் போற்றானே தணியுமே” (நாலடி, 68);.

   2. காய்ச்சல்நோய்; fever.

     “மீனவற்சுடு வெப்ப மொழித்து” (திருவாலவா. 37,1);.

   3. கோபம்; indignation.

     “வெப்பமுற்றோ னவிநயம் (சிலப் பக். 70);,

   4. பொறாமை; spite.

   5. ஆசை ((சூடா.);; desire.

   6. துயர்; sorrow.

   7. நிரையம் (நரகம்); (இ.போ.பா. 2, 3, பக்.20);; a hell.

     [வெம்பு → வெப்பு → வெப்பம் (தே. நே. பக் 103]

வெப்பர்

வெப்பர் veppar, பெ.(n.)

   1. வெப்பம் பார்க்க;see Veppam.

     “அணிமுலைத் தடத்தி

னொற்றி வெப்பராற் றட்பமாற்றி” (சீவக.1746);.

   2. சூடான உணவு; hot food.

     “புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர். உண்டபிள்ளை” (புறநா. 269,4);.

     [வெம்பு → வெப்பு → வெப்பர்]

வெப்பல்

வெப்பல் veppal, பெ.(n.)

   சாம்பல் நிறங் கலந்த செந்நிறமுள்ளதும் கல்லின்றிக் கட்டி கட்டியாக உள்ளதுமான நிலவகை; an inferior of soil, light greyish brown earth, limpy and free stones.

     [வெம்பு → வெப்பு → வெப்பல். தே.நே.பக்103]

வெப்பாற்றி

 வெப்பாற்றி veppāṟṟi, பெ.(n.)

   அனலாற்றி; Cooler.

     [வெம்பு → வெப்பு → வெப்பாற்றி]

வெப்பாலரிசி

 வெப்பாலரிசி veppālarisi, பெ.(n.)

வெட்பாலை அரிசி;seeds of vegpalaiaris.

     [வெப்பால் + அரிசி]

வெப்பாலை

 வெப்பாலை veppālai, பெ.(n.)

   மருந்துப் பூடுவகை; a medicinal tree wrightia tinctoria alias wanti dysenterica.

     [வெம்பு → வெப்பு → வெப்பாலை]

வெப்பி-த்தல்

வெப்பி-த்தல் veppittal, செ.குன்றாவி. (v.t.)

   1. சூடாக்குதல்; to heat.

   2. மனக்கொதிப்பு உண்டாக்குதல்; to make one hot with anger.

     “வென்றடுகிற பாரை வெப்பித்து” [பழமொ. 294].

     [வெப்பு → வெப்பி → வெப்பித்தல்]

வெப்பிடி

 வெப்பிடி veppiḍi, பெ.(n.)

   வெயில் தாக்கல்; sun-stroke.

     [வெப்பு → வெப்பி → வெப்பிடி]

வெப்பியாரம்

 வெப்பியாரம் veppiyāram, பெ.(n.)

   மனத் துயர் (யாழ்.அக.);; grief.

     [வெப்பத்துயரம் → வெப்பியாரம்]

வெப்பிரத்தம்

 வெப்பிரத்தம் veppirattam, பெ.(n.)

   இதனால் வாய் நாற்றமுண்டாகும்; blood vitiated with heat and it causes bad smell in the mouth.

     [வெப்பு + ரத்தம்]

வெப்பிராளம்

 வெப்பிராளம் veppirāḷam, பெ.(n.)

   மனக்குழப்பம்; mental agitation.

     [வெப்பியாரம் → வெப்பிராளம்]

வெப்பு

வெப்பு veppu, பெ.(n.)

   1. சூடு; heat.

   2. காய்ச்சல் நோய்; fever.

   3. கோபம்; anger.

     “வெப்பமுற்றோனவி நயம்” (சிலப் பக். 70);.

   4. சீற்றம்; anger.

     “வெப்புடை மெய்யுடை விரன்” (கம்பரா.அயோமுகி 62);.

   5. பொறாமை; spite.

   6. ஆசை (சூடா);; desire.

   7 .கொடுமை; severity.

     “வெப்புடை யாடுஉச் செத்தனென் மன்யான்” (பதிற்றுப் 86,4);.

   8. தொழுநோய் (சிலப்.உரைபெறு கட்டுரை.1 உரை);; leprosy.

     [வெம்பு → வெப்பு]

   ம, தெ. வெப்பு;து. பெப்பு (b);

வெப்புக்கட்டி

வெப்புக்கட்டி1 veppukkaṭṭi, பெ.(n.)

   1. சூட்டினாலேற்பட்ட கட்டி; boils abscess formed due to heat.

   2. வெப்பினால் வயிற்றிலுண்டாகும் கட்டி; enlargement due to fever.

   3. காய்ச்சற்கட்டி; enlargement of spleen or liver or both.

     [வெப்பு + கட்டி]

 வெப்புக்கட்டி2 veppukkaṭṭi, பெ.(n.)

   நாட்பட்ட காய்ச்சலினால் உண்டாகும் வயிற்றுக்கட்டிவகை; a smelling in the intestines, accurring after chronic fevers. (w.);.

     [வெப்பு + கட்டி → வெப்புக்கட்டி]

வெப்புக்கழிச்சல்

 வெப்புக்கழிச்சல் veppukkaḻiccal, பெ.(n.)

   சூட்டினாலுண்டாகும் கழிச்சல்; diarrhoea caused by excessive heat in the system.

     [வெப்பு + கழிச்சல்]

வெப்புக்கொதி

வெப்புக்கொதி1 veppukkodi, பெ.(n.)

   வெப்பத்தினாலுண்டாகும் ஒரு வகைக் கணச் சூடு; feeling hot due to congenital heat-there may be no rise in temperature.

     [வெப்பு + கொதி]

 வெப்புக்கொதி veppukkodi, பெ.(n.)

   காய்ச்சலினால் உண்டாகும் காங்கை; slight fever (w.);.

     [வெப்பு → கொதி → வெப்புக்கொதி]

வெப்புக்கொதிப்பு

 வெப்புக்கொதிப்பு veppukkodippu, பெ.(n.)

   வெப்பத்தினாலுண்டாகும் ஒரு வகைக் கணச்சூடு; feeling hot due to congenital heat.

     [வெப்பு + கொதிப்பு]

வெப்புசன்னி

 வெப்புசன்னி veppusaṉṉi, பெ.(n.)

   சூடு; apoplexy due to sunstroke or long exposure in sun’s heat.

     [வெப்பு + சன்னி]

வெப்புச்சுரம்

 வெப்புச்சுரம் veppuccuram, பெ.(n.)

   சூட்டுக் காய்ச்சல்; fever caused by heat in the system.

     [வெப்பு + சுரம்]

வெப்புத்தாகம்

 வெப்புத்தாகம் vepputtākam, பெ.(n.)

   சூடு அல்லது வறட்சியினாற் காணும் தாகவிடாய்; thirst due to heat.

     [வெப்பு தாகம்]

வெப்புத்தீரல்

 வெப்புத்தீரல் vepputtīral, பெ.(n.)

   சூடு) கழிதல்; being cured of heat in the system.

     [வெப்பு + தீரல்]

வெப்புநட்சத்திரம்

வெப்புநட்சத்திரம் veppunaṭcattiram, பெ.(n.)

   காய்ச்சல் விண்மீன் (விதான. (விதான. குணாகுண. 40, உரை);; the 7th or 9th naksatra from that with which Jupiter is in conjunction.

     [வெப்பு + நட்சத்திரம்]

 Skt. Nakshatra → த. நட்சத்திரம்.

வெப்புநாற்றம்

வெப்புநாற்றம்1 veppunāṟṟam, பெ.(n.)

   1. முடைநாற்றம்; foul smell (w.);.

     [வெப்பு + நாற்றம்]

 வெப்புநாற்றம்2 veppunāṟṟam, பெ.(n.)

   1. கெட்ட நாற்றம்; foetid smell.

   2. அழுகல் நாற்றம்; putrid smell.

     [வெப்பு + நாற்றம்]

வெப்புநீர்

வெப்புநீர் veppunīr, பெ.(n.)

   1. ஆவிநீர்; vapour.

   2. நோய்; a disease.

     [வெப்பு + நீர்]

வெப்புநோய்

வெப்புநோய் veppunōy, பெ.(n.)

   1. காய்ச்சல் சூடு; slight fever.

     “வெப்புநோயர் நீரின் மூழ்கின் வெம்மையாறுமே கொலாம்” (நைடத கைக்கிளை. 2);.

   2. தொழுநோய்; leprosy.

     “வெப்பு நோயுங் குருவும்” (விலப். உரைபெறுகட். 1);.

     [வெப்பு + நோய்]

வெப்புப்பார்வை

 வெப்புப்பார்வை veppuppārvai, பெ.(n.)

வெப்புப்பாவை பார்க்க;see veppuppavai.

     [வெப்பு + பார்வை]

வெப்புப்பாவை

வெப்புப்பாவை1 veppuppāvai, பெ.(n.)

   கட்டிவகை; a kind of distemper in the bowels with offensive smell, swelling in the bowels after chronic fever.

     [வெப்பு + பாவை]

 வெப்புப்பாவை2 veppuppāvai, பெ.(n.)

வெப்புக்கட்டி பார்க்க (யாழ். அக.);;see Veppu-k-katti.

     [வெப்பு + பாவை]

வெப்புப்பாவைக்கட்டு

 வெப்புப்பாவைக்கட்டு veppuppāvaikkaṭṭu, பெ.(n.)

வெப்புக்கட்டி பார்க்க;see Veppu-k-katti (w.);.

     [வெப்பு + பாவை + கட்டு]

வெப்புப்பிணி

 வெப்புப்பிணி veppuppiṇi, பெ.(n.)

   காந்தப் பொடியால் தீரும் ஒருவகை நோய்; disease due to heat, the remedy is kantha (load stone); chenduram.

     [வெப்பு + பிணி]

வெப்புமிஞ்சல்

 வெப்புமிஞ்சல் veppumiñjal, பெ.(n.)

   சூடதிகரித்தல்; increase of heat in the body.

     [வெப்பு + மிஞ்சல்]

வெப்புறுதல்

 வெப்புறுதல் veppuṟudal, பெ.(n.)

   சூடுண்டதால்; growing warm.

     [வெப்பு + உறுதல்]

வெப்புள்

வெப்புள் veppuḷ, பெ.(n.)

   வெம்மை; heat.

     “வெப்புள் விளைந்த வெங்கை” (புறநா. 120);.

     [வெம்பு → வெம்புள்]

வெப்புவெப்பெனல்

 வெப்புவெப்பெனல் veppuveppeṉal, பெ.(n.)

   சினக்குறிப்பு, துயர்க்குறிப்பு; fury agony.

     [வெப்பு + வெப்பு எனல்]

வெப்பூட்டுதல்

வெப்பூட்டுதல் veppūṭṭudal, பெ.(n.)

   1. சூடுண்டாக்கல்; to heat gently.

   2. வேக வைத்தல்; to boil.

     [வெப்பு + ஊட்டுதல்]

வெம்பகல்

வெம்பகல் vembagal, பெ.(n.)

   நடுப்பகல் (தக்கயாகப். 164, உரை);; midday.

     [வெம் [மை] + பகல்]

வெம்பசி

 வெம்பசி vembasi, பெ.(n.)

   வயிற்றைக் கிள்ளும் பசி (பெரும் பசி);; pinching hunger.

     []வெம் [மை] + பசி]

வெம்பரப்பு

வெம்பரப்பு vembarappu, பெ.(n.)

   1. வெற்று நிலம்; uncultivated waste.

   2. மிகுதியான பரபரப்பு; excessive flurry to.

     [வெறும் + பரப்பு]

 வெம்பரப்பு vembarappu, பெ. (n.)

   புறம்போக்கு நிலம், தரிசு; barren land.

ஏனைக்கானை-முரண்பாடு

வெம்பறவை

 வெம்பறவை vembaṟavai, பெ.(n.)

   எண்காற்புள்; fabulous eight-legged bird.

     [வன்பறவை → வெம்பறவை]

வெம்பற்று

 வெம்பற்று vembaṟṟu, பெ.(n.)

   சூடான பற்று; warm plaster.

     [வெம் [மை] + பற்று]

வெம்பல்

வெம்பல்1 vembal, பெ.(n.)

   1. மிகுவெப்பம்; tropical heat.

     “வெயில் வீற்றிருநத் வெம்பலை யருஞ்சுரம்”(நற். 34);.

   2. சீற்றம் (சூடா.);; anger.

   3. வாடலானது; that which has faded.

   4. பிஞ்சிற் பழுத்துக்கெட்ட காய்; prematurely ripe fruit (w.);.

     [வெம்பு → வெம்பல்] (வே.க.பக். 130);

 வெம்பல்2 vembal, பெ.(n.)

     [வெம்பு → வெம்பல்]

வெம்பளிக்கை

 வெம்பளிக்கை vembaḷikkai, பெ.(n.)

   இறுமாப்பு; pride (w.);.

     [வெம்பு → வெம்பளிக்கை]

வெம்பா

 வெம்பா vembā, பெ.(n.)

   மூடபனி; mist.

     ‘வெம்பாப் பெய்தால் சம்பா விளையும்’.

     [வெண்பு → வெம்பு → வெம்பா]

வெம்பாடம்

 வெம்பாடம் vembāṭam, பெ.(n.)

   மரவகை; a kind of tree-ventilago madras patam.

     [வெம்பாடு → வெம்பாடு → வெம்பாடம்]

வெம்பாடல்

வெம்பாடல் vembāṭal, பெ.(n.)

   1. வாடல்; fading-withering.

   2. சினங்கொள்ளல்; to getting angry.

     [வெம்பு + ஆடல் + வெம்பாடல்]

வெம்பியகாய்

 வெம்பியகாய் vembiyakāy, பெ.(n.)

   பிஞ்சில் வெம்பிய பழம்; premature fruit.

     [வெம்பு → வெம்பிய + காய்]

வெம்பிளாந்தி

 வெம்பிளாந்தி vembiḷāndi, பெ.(n.)

   மனங்குழம்பியவன் (யாழ்.அக.);; on who is confused.

     [வெம் [மை] + பிராந்தி → பிளாந்தி]

வெம்பிளிக்கை

வெம்பிளிக்கை1 vembiḷikkai, பெ.(n.)

   செவ்வெருக்கிலை; yellow or riped madar leaf.

 வெம்பிளிக்கை2 vembiḷikkai, பெ.(n.)

   1. இறுமாப்பு; pride (w.);.

   2. புறக்கணிப்பு; disregard.

     “தரும்பொருளை வெம்பிளிக்கை பண்ணாதே”.

     [விம்பளிக்கை → வெம்பிளிக்கை]

வெம்பு

வெம்பு1 vembudal, செ.கு.வி.(v.i.)

   1. மிகச் சூடாதல்; to be very hot.

     “மலை வெம்ப” (கலி 13);.

   2. வாடுதல்; to fade.

     “வேரோடு மரம்வெம்ப” (கலித். 10, 4);.

   3. மனம் புழுங்குதல்; to be distressed in mind.

     “வெம்பினாரரக்கரெல்லாம்” (தேவா.776 வ);.

     [வெம் → வெம்பு → வெம்பு-தல்] [வேக.பக். 130)

 வெம்பு2 vembudal, செ.கு.வி. (v.i.)

   1. விரும்புதல்; to desire.

     “வெம்பவூர்ந்துலாம் வேனிலானினே” (சீவக. 410);

   2. சினத்தல்; to be angry.

   3. பிஞ்சில் பழுத்தல்; to become prematurely ripe.

   4. வெஞ்சினம்; violent anger.

     [வெம் → வெம்பு → வெம்புதல்);. (தே.தே.பக்.102);

 வெம்பு3 vembudal, செ.கு.வி. (v.i.)

   ஒலித்தல்; to sound.

     “பம்பை வெம்பின” (சீவக. 2222);.

 வெம்பு4 vembu, பெ.(n.)

   வாடுதல்; becoming prematurely ripe.

     [வெம் → வெம்பு]

வெம்புனல்

 வெம்புனல் vembuṉal, பெ.(n.)

உத்தாமணி,

 a twining plant hedge cotton-daemia extense.

வெம்புறு

 வெம்புறு vembuṟu, பெ.(n.)

   வெம்மை; heat (w.);.

     [வெம் → வெம்பு → வெம்புறு]

வெம்புழுங்கல்

 வெம்புழுங்கல் vembuḻuṅgal, பெ.(n.)

   இளம்புழுக்கலரிசி; rice obtained by husking parboiled paddy.

     [வெம் → வெம்பு → வெம்புழுங்கல்)

வெம்போடு

 வெம்போடு vembōṭu, பெ.(n.)

   பெரும்போட்டு ஆளுக்கு எதிரிடை வெத்துவேட்டு, ஏமாற்றுக்காரன்; deceirt, crafty person.

வெம்மணல்

வெம்மணல்1 vemmaṇal, பெ.(n.)

   உதவிச்சாறு வகைகளிலொன்று; one of the 120 natural substance.

 வெம்மணல்2 vemmaṇal, பெ.(n.)

   நிரையம் (இறந்தோர் உலகு);; a hell.

     [வெம் [மை] + மணல்]

வெம்மாலி

 வெம்மாலி vemmāli, பெ.(n.)

   வெள்ளுமத்தை; dhature bearingwhiteflowers-dature alba.

     [வெண்மாலி → வெம்மாலி]

வெம்மூற்று

 வெம்மூற்று vemmūṟṟu, பெ..(n.)

   வெந்நீர் ஊற்று; hot spring, thermal spring.

     [வெம் [மை] + ஊற்று → வெம்முற்று]

வெம்மை

வெம்மை vemmai, பெ.(n.)

   1. வெப்பம்; heat.

     “அழலென்ன வெம்மையால்” (கலித் 11);.

   2. கடுமை (சீவக. 744);; severity, harshness.

   3. சீற்றம்; anger.

     “வேகயானை வெம்மையிற்கைகெள” (சிலப். 15, 47);.

   4. விருப்பம் (தொல். சொல். 334);; desire.

   5. வல்லமை; mightiness, valour.

     “உலகமூன்றுமென் வெம்மையினாண்டது” (கம்பரா. அதிகா.4);.

ம. வெம்பு, தெ. உம்ம.

     [வெள் → வெய் → வெய்மை → வெம்மை. (தே.நே.பக்.10.2);

வெம்மைப்பொட்டணம்

 வெம்மைப்பொட்டணம் vemmaippoṭṭaṇam, பெ.(n.)

   ஒற்றிடம்; hotfomentation.

     [வெம்மை + பொட்டணம்]

வெம்மையாற்றல்

 வெம்மையாற்றல் vemmaiyāṟṟal, பெ.(n.)

   சூட்டைத் தணித்தல்; cooling the heat in the system.

     [வெம்மை + ஆற்றல்]

வெயர்

வெயர்1 veyarttal, செ.கு.வி.(v.i.)

   1. வேர்வை நீர் உண்டாதல்; to perspire,

     “புனைநுதல் வெயர்க்க” (பாரத. பன்னிரண். 47);,

   2. சீற்றம் கொள்ளுதல்; to be angry.

     [வியர் → வெயர் → வெயர்-த்தல்] [வே.க. 129]

 வெயர்2 veyar, பெ.(n.)

   வேர்வை நீர்; sweat.

     “வெயர்பொடிப்பச் சினங் கடைஇ” (பு;வெ. 7. 13. கொளு);.

     [வியர் → வெயர்] [வே.க. 129]

வெயர்ப்பு

வெயர்ப்பு veyarppu, பெ.(n.)

   1. வெயர் 2 பார்க்க;see veyar.

     “குறுவெயர்ப் பொழுக்கென” (கல்லா. 16, 5);.

   2. வேர்வை உண்டாகை; sweating.

   3. சீற்றம்; anger.

     “வெஞ்சமம் விளைத்தன. வெயர்ப்பால்” (இரகு.திக்குவி. 12);.

     [வியர் → வெயர் → வெயர்ப்பு]

வெயர்வு

வெயர்வு veyarvu, பெ.(n.)

வெயர் 2 பார்க்க (திவா.);;see veyar.

     [வியர் → வெயர் → வெயர்வு]

வெயர்வை

வெயர்வை veyarvai, பெ.(n.)

வெயர் 2 பார்க்க;see veyar.

     [வியர் → வெயர் → வெயர்வை] [வே.க.பக். 129]

வெயினோ

 வெயினோ veyiṉō, பெ.(n.)

வெயிலின் பாதிப்பால் உண்டாகும் நோய்,

 sun-stroke.

     [வெயில் + நோ → வெயினோ]

வெயின்மறை

வெயின்மறை veyiṉmaṟai, பெ.(n.)

   வெயிலை மறைக்கும் கருவி; that which protects one from the heat of the sun, as an unbrells.

     “கற்பகவல்லி சாதியைத் தமக்கு வெயின்மறையாக” (தக்கயாகப். 11, உரை);.

     [வெயில் + மறை → வெயின்மறை]

வெயிற்காய்தல்

 வெயிற்காய்தல் veyiṟkāytal, பெ.(n.)

   வெயிலிற் குளித்தல், வெயிலிற் குளிர்த்தலால் மினுமினுப்புப் பெறுதல்; to take sun bath, the sun shining.

     [வெயில் + காய்தல்]

வெயிற்குளி-த்தல்

வெயிற்குளி-த்தல் veyiṟkuḷittal, பெ.(n.)

   1. வெயிலில் காய்தல்; to be exposed to the sun,

   2. கதிரவன் வெப்பத்தில் குளிர் காய்தல்; to bath in the sun.

     [வெயில் +குளி-த்தல்]

வெயிற்குளிர்-தல்

 வெயிற்குளிர்-தல் veyiṟkuḷirtal, செ.கு.வி. (v.i.)

   மாலையில் கதிரவன் மெல்ல மறைதல் பொருட்டு வெம்மை தணிதல் (யாழ்.அக.);; to become mild, as the evening sun.

     [வெயில் + குளிர்-தல்]

வெயிற்பாழ்

 வெயிற்பாழ் veyiṟpāḻ, பெ.(n.)

மழையின்றி வெயில் காய்வதால் உண்டாகும் பயிர்க்கேடு,

 loss of crop due to drought, one of mu-p-pal.q.v.

     [வெயில் + பாழ்]

வெயிற்றுகள்

வெயிற்றுகள் veyiṟṟugaḷ, பெ.(n.)

   வெயிலில் பறக்கும் அணுத்துகள்; mote in a sunbeam.

     “வாய்ப்பறியலனே வெயிற்றுகளனைத்தும்” (பதிற்றும் 20, 6);.

     [வெயில் + துகள்]

வெயிலடித்தல்

வெயிலடித்தல் veyilaḍittal, பெ.(n.)

   1. கதிரவன் வெளிச்சம்; sun light.

   2. வெப்பக்கதிர்; sunshine.

     [வெயில் + அடித்தல்]

வெயிலுந்தரவிந்தம்

வெயிலுந்தரவிந்தம் veyilundaravindam, பெ.(n.)

   1. தாமரை; lotus-which is opens when the sun appears.

   2. வெண்டாமரை; white lotus.

     [வெயில் + உந்து அரவிந்தம்]

 Skt. Aravinda → த. அரவிந்தம்.

வெயிலுறைத்தல்

 வெயிலுறைத்தல் veyiluṟaittal, பெ.(n.)

   கதிரவன் ஒளி வீசுதல்; sunshine (w);.

     [வெயில் + உறைத்தல்]

வெயிலெறித்தல்

 வெயிலெறித்தல் veyileṟittal, பெ.(n.)

வெயிலடித்தல் பார்க்க;see veyil-adittal.

     [வெயில் + எறித்தல்]

வெயிலோன்

வெயிலோன் veyilōṉ, பெ.(n.)

   ஞாயிறு; the sun.

     “வெயிலோனு மேல்பாற்குன்றிற்கிட்ட” (பாரத முதற்போர். 73);.

     [வெயில் + அன் → வெயிலோன்]. .

வெயில்

வெயில் veyil, பெ.(n.)

   1. கதிரவன் வெளிச்சம்; sunlight, sunshine.

     “துகில் விரித்தன்ன வெயில விருருப்பின்” (நற். 43);.

   2. கதிரவன் வெப்பம்; heat and glare of the sun, as on a tropical day.

     “என்பிலதனை வெயில் போலக் காயுமே” (குறள், 77);.

   3. கதிரவன்; the sun.

     “வெயிலிள நீலவே போல் விரிகதிரிடை வீச” (கம்பரா. வனம்புகு. 2);.

   4. ஒளி (சூடா);; brilliance.

     “மணியிழையின் வெயில்” (கம்பரா.நாட். 42);.

     [வெள் → வெய் → வெயில்]

   ம. வெயில்;க. பிகில் (b);.

வெயில்தடுப்பி

 வெயில்தடுப்பி veyiltaḍuppi, பெ.(n.)

   கட்டட வாயில் பலகணிகளில் வெயில் மறைக்கும் சுவரில் அமைந்த தடுப்பு அமைப்பு (பொ. வழக்);; sun shade.

     [வெயில் + தடுப்பி]

வெயில்தாழ்-தல்

 வெயில்தாழ்-தல் veyiltāḻtal, செ.குன்றாவி. (v.t.)

   மாலை; evening, sunset.

     [வெயில் + தாழ்-,]

வெயில்நீக்கி

வெயில்நீக்கி veyilnīkki, பெ.(n.)

   குடை (தக்கயாகப். 257, உரை);; unbrells.

     [வெயில் + நீக்கி]

வெயில்படர்ந்தநீர்

 வெயில்படர்ந்தநீர் veyilpaḍarndanīr, பெ.(n.)

   வெயிலினால் சூடு கொண்ட நீர்; water heated by the sun, it is used to give bath to the patients cured of small poх.

     [வெயில் + படர்ந்த + நீர்]

வெயில்வதக்கம்

 வெயில்வதக்கம் veyilvadakkam, பெ.(n.)

   வெயிலிற் காய்தல்; to dry in the sun.

     [வெயில் + வதக்கம்]

வெய்து

வெய்து veytu, பெ.(n.)

   1. வெப்பமுள்ளது; that which is hot.

     “சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி” (அகநா. 203);.

   2. வெப்பம் (மதுரைக் 403, உரை);; heat.

   3. வெப்பமுள்ள பொருளாலிடும் நற்றடம்; fomentation.

   4.துக்கம்; sorrow.

     “வெய்துறு பெரும்பயம்” (ஞானா. 35, 3);

வி.எ.(adv.);

   விரைவில்; speedily.

     “வேந்தன் வெருவந்து வெய்துகெடும்” (குறள், 569);.

     [வெய்யது → வெய்து (வேக.பக் 130);

வெய்துபிடி-த்தல்

வெய்துபிடி-த்தல் veytubiḍittal, செ.கு.வி. (v.i.)

   1. ஒற்றடங்கொடுத்தல்; to apply formentation.

   2. நீராவியால் உடலை வேர்க்கச் செய்தல்; to use steam as a sudorific.

     [வெய்து + பிடி]

வெய்துயிர்-த்தல்

வெய்துயிர்-த்தல் veytuyirttal, செ.கு.வி.(v.i.)

   வெப்பமாக மூச்சு விடுதல்; to breath hot, as in grief.

     “வெய்துயிர்த்துப் பிறைநுதல் வியர்ப்ப” (அகநா.207);.

     [வெய்து + உயிர்-த்தல்]

வெய்துரை

 வெய்துரை veyturai, பெ.(n.)

   கடுஞ்சொல்; harsh word.

     [வெய்து + உரை]

வெய்துறல்

 வெய்துறல் veytuṟal, பெ.(n.)

   அச்சக்குறிப்பு சினக் குறிப்பு, துன்பம்; fear, rage, woe, pain.

     [வெய்து + உறல்]

வெய்துறு-தல்

வெய்துறு-தல் veyduṟudal, செ.கு.வி.(v.i.)

   1. மனங்கலங்குதல் (பிங்.);; to be perplexed.

   2. துன்புறுதல்; to be distressed.

   3. சீற்றங் கொள்ளுதல்; to be angry.

     [வெய்து + உறு-தல்]

வெய்தெனல்

வெய்தெனல் veyteṉal, பெ.(n.)

   1. வெப்பக் குறிப்பு; being hot.

   2. விரைவுக் குறிப்பு (சூடா.);; being in haste.

   3. கொடுமைக் குறிப்பு; being creel.

     [வெய்து + எனல்]

வெய்ய

வெய்ய veyya, பெ. எ.(adj.)

   1. வெப்பமான; hot.

     “வெய்ய கதிரோன் விளக்காக” (திவ். இயற். 1, 1);,

   2.. கொடிய; fierce, cruel.

   3. விரும்புதற்குரிய; desirable.

     “வெய்ய நெய்” (தக்கயாகப் 506);.

     [வெள் → வெய் → வெய்ய]

வெய்யது

வெய்யது veyyadu, பெ.(n.)

   1. சூடானது (யாழ்.அக.);; that which is hot.

   2. கொடியது; that which is cruel.

   3. தாங்க முடியாதது; that which is unbearable.

     “அரும் பெரு மூப்பும் வெய்யதாயது” (கம்பரா. மந்திரப் 62);.

     [வெய் → வெய்யது]

வெய்யநட்சத்திரம்

வெய்யநட்சத்திரம் veyyanaṭcattiram, பெ.(n.)

   1. அறிவன் கோள் நின்ற நாளுக்குப் பதினெட்டா நாளும், இருபத்து நான்காம் நாளும் (விதான. குணா. 40, உரை);; the 18th and 24th naksatra counted from the naksatra occupied by mercury.

   2. மகம், பூரம், பணி நாட்கள் (விதமான. பஞ்சாங்க. 20, உரை);; the 10th, 11th and the 2nd naksatram.

     [வெய்ய + நட்சத்திரம்]

 Skt. natchathra → த. நட்சத்திரம்.

வெய்யநீர்

 வெய்யநீர் veyyanīr, பெ.(n.)

   வெந்நீர் (யாழ்.அக.);; hot water.

     [வெய்ய + நீர்]

வெய்யனீர்

 வெய்யனீர் veyyaṉīr, பெ.(n.)

   கதிரவன் ஒளிக்கதிரால் சூடான நீர்; water heated by the rays of the sun.

     [வெய்யல் + நீர்]

வெய்யன்

வெய்யன் veyyaṉ, பெ.(n.)

   1. கொடியவன்; cruel person.

     “வெய்யனா யுலகேழுடனலிந்தவன்” (திவ். பெரியதி. 5, 3, 3);.

   2. வெய்யவன் 3 பார்க்க;see veyyavan

   3. வெய்யோன் 2 பார்க்க;see veyyon.

   4. விருப்பமுள்ளோன்; one who is desirous or eager.

     “நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின்” (கலித் 75, 10);.

     [வெள் → வெய் → வெய்யன்] [வே.கயக். 129]

வெய்யமாந்தம்

 வெய்யமாந்தம் veyyamāndam, பெ.(n.)

   சூட்டினால் ஏற்பட்ட மாந்த நோய்; indigestion caused through excess of heat.

     [வெய்ய + மாந்தம்]

வெய்யல்

 வெய்யல் veyyal, பெ.(n.)

   வெயில்; sunlight (w);,

     [வெயில் → வெய்யல்]

வெய்யவன்

வெய்யவன் veyyavaṉ, பெ.(n.)

   1. வெய்யன் 1, 2 பார்க்க;see veyyan.

   2. வெய்யோன் 2 பார்க்க;see veyyon

     “வெய்யவனூருந் தேரின்” (பெருங். இலாவாண. 8,172);.

   3. தீத் தெய்வம்; fire-god.

     “வெய்யவன் படையை விட்டான்” (கம்பரா. அதிகாய 203);.

   4. வெய்யன் பார்க்க;see veyyan.

     [வெய் → வெய்யவன்]

வெய்யிற்குளிர

 வெய்யிற்குளிர veyyiṟkuḷira, வி.எ.(adv.)

வெய்யில்தாழ பார்க்க;see veyyil-tala (w);.

     “வெய்யிற் குளிரவா”.

     [வெயில் → வெய்யில் + குளிர]

வெய்யிற்சூடு

 வெய்யிற்சூடு veyyiṟcūṭu, பெ.(n.)

   கதிரவன் வெப்பம்; sun’s heat.

     [வெயில் → வெய்யில் + சூடு]

வெய்யில்

வெய்யில் veyyil, பெ.(n.)

வெயில் பார்க்க;see veyil.

     “நிழல் வெய்யில் சிறுமை பெருமை” (திவ். திருவாய். 6, 3, 10);.

     [வெய் → வெயில் → வெய்யில்)

வெய்யில்தாழ

 வெய்யில்தாழ veyyiltāḻ, வி.எ.(adv.)

   மாலையில்; in the evening (w.);.

     ‘வெய்யில் தாழவா’.

     [வெயில் → வெய்யில் + தாழ]

வெய்யோன்

வெய்யோன் veyyōṉ, பெ.(n.)

   1. வெய்யன் 1 பார்க்க;see veyyan.

     “ஆர்த்தனர் வெய்யோர்” (கந்தபு. முதனாட்போ. 49);.

   2. சூரியன்; sun.

     “வெய்யோனொளி” (கம்பரா. கங்கை.1);.

   3. வலது மூக்குத் துளை; right nostril.

     “இலகு வெய்யோனிற் பதினாறளவை விடல்”

     “(காசிக. யோக. 23);.

   4. வெய்யவன்3 பார்க்க;see veyyavan).

   5. வெய்யன் 4 பார்க்க;see veyyan.

     “பொன்னறைதான் கொடுத்தான் புகழ்வெய்யோன்” (சீவக. 237);

     [வெய் → வெய்யோன்]

வெரிக்குது

 வெரிக்குது verikkudu, பெ.(n.)

   வெருட்சி கொள்ளுகிறது; bewildening lead or go astray.

     ‘யோவ், குடையை மடக்கு, மாடு வெளிக்குது’.

வெரிந்

வெரிந் verin, பெ.(n.)

   முதுகு; back.

     “வெரிருஞெனிறுதி” (தொல், எழுத், 300);.

     [வெந் + வெரிந்]

வெரிமருந்து

 வெரிமருந்து verimarundu, பெ.(n.)

விட மருந்து (மூ.அ.);

 poisonous drug.

     [எரி + மருந்து → வெரி மருந்து]

வெரு

வெரு veru, பெ.(n.)

   எச்சம்; fear.

     “வெருவரு நோன்றாள்__கரிகால்வளவன்” (பொருந.147);

     [வெருவு → வெரு]

வெருகங்கிழங்கு

வெருகங்கிழங்கு1 verugaṅgiḻṅgu, பெ.(n.)

வெருகு1, 4 பார்க்க;see verugu.

     [வெருகு → வெருகம் + கிழங்கு]

 வெருகங்கிழங்கு2 verugaṅgiḻṅgu, பெ.(n.)

   ஒருவகை மூலிகைக் கிழங்கு; a stout long root of the plant-arum macrorhizon.

     [வெருகன் + கிழங்கு]

வெருகடி

வெருகடி verugaḍi, பெ.(n.)

   1. பூனையின் அடி (யாழ்.அக.);; cat’s paw.

   2. மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு; a large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers (w);.

     ‘அந்தச் சூர்ணத்தில் வெருகமுத்துள் உட்கொண்ன வேண்டும்’.

     [வெருகு + அடி → வெருகடி]

வெருகடித்துள்

 வெருகடித்துள் verugaḍittuḷ, பெ.(n.)

   ஒரு சிட்டிகைப் பொடி; one pinch of powder.

வெருகடு

 வெருகடு verugaḍu, பெ.(n.)

பூனைக்காலி பார்க்க;see punai-k-kali.

வெருகம்

 வெருகம் verugam, பெ.(n.)

   வாலின் கீழிடம் (பிங்.);; the under side of tail.

வெருகா

 வெருகா verukā, பெ.(n.)

   நீர் முள்ளி; a thorny weed used as medicinehygrophila auriculate alias astercantha longifolia.

வெருகு

வெருகு1 verugu, பெ.(n.)

   1. ஆண் பூனை(திவா.);; tom-cat

   2. காட்டுப்பூனை (பிங்.);; wild cat.

     “வெருக்கு விடையன்ன” (புறநா. 324);.

   3. மரநாய்; toddy cat.

   4. வெண்கிடை (பிங்,);; white-flowered sola.

     [மெருகு → வெருகு]

 வெருகு2 verugu, பெ.(n.)

   மெருகு (யாழ்.அக.);; polish.

     [மெருகு → வெருகு]

வெருக்குவிடை

வெருக்குவிடை verukkuviḍai, பெ.(n.)

   காட்டுப் பூனையின் ஆண்; male of wild ceet.

     “வெருக்குவிடையன்னவெகணோக்கு” (புறநா. 324);.

     [வெருகு + விடை → வெருக்குவிடை]

வெருக்கொள்(ளு)-தல்

வெருக்கொள்(ளு)-தல் verukkoḷḷudal, செ.கு.வி.(v.i.)

   அச்சங்கொள்ளுதல்; to be afraid.

     “வெருக்கொண்டு பதைபதைத்து” (குசேலோ. குசேலர்வைகுந்த. 57);.

     [வெரு + கொள்]

வெருக்கொள்ளி

 வெருக்கொள்ளி verukkoḷḷi, பெ.(n.)

   மனத்திண்மையில்லாதவன்; person who lacks courage, coward.

     [வெருக்கொள் → வெருக்கொள்ளி]

வெருக்கோள்

வெருக்கோள் verukāḷ, பெ.(n.)

   அச்சங் கொள்ளுகை; fearing.

     “வெருக்கோளுற்றதுநீங்க” (பெரியபு தடுத்தாட். 114);.

     [வெருக்கொள் → வெருக்கொள்ளுகை]

வெருட்சி

வெருட்சி1 veruṭci, பெ.(n.)

   1. மருட்சி; bewiderment.

   2. மருளுகை; shyness.

   3. அச்சம்; fear.

     [வெருள் → வெருட்சி]

 வெருட்சி2 veruṭci, பெ.(n.)

   மயக்கம்; giddiness.

     [வெருள் → வெருட்சி]

வெருட்டல்

 வெருட்டல் veruṭṭal, பெ.(n.)

   அச்சமுறுத்தல், மயக்கல்; fear, allurement.

     [வெருள் → வெருட்டு → வெருட்டல்]

வெருட்டி

வெருட்டி veruṭṭi, பெ.(n.)

   வெருட்டுவது; that which frightens.

     “வேழவெண்டிரடடக்கை வெருட்டி” (சீவக. 174);.

     [வெருட்டு → வெருட்டி]

வெருட்டு

வெருட்டு2 veruṭṭu, பெ.(n.)

   1. கூச்ச முண்டாக்குகை; causing shyness (w.);.

   2. அச்சமுண்டாக்குகை; causing fear,

   3. ஒட்டுகை; driving away.

   4. வேகமாகச் செல்லத் தூண்டுகை; driving fast.

     [வெருள் → வெருட்டு]

வெருட்டு-தல்

வெருட்டு-தல் veruṭṭudal, செ.குன்றாவி.(v.t.)

   1. அச்சமுறுத்துதல்; to terrify, frighten.

     “பாம்பினொடு படர்சடைக வைகாட்டி வெருட்டி” (தேவா, 676, 2);.

   2. மலைக்கச் செய்தல்; to confuse, stupefy.

     “வடி வழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமன்” (ஈடு. 2, 7 8);.

   3. விலங்குகள் முதலியவற்றை ஓட்டுதல்; to drive away an animals.

   4. வேகமாகச் செல்லத் தூண்டுதல்; to drive fast.

     ‘வண்டி மாட்டை வெருட்டு’ (உவ.);.

     [வெருள் → வெருட்டு]

வெருணி

 வெருணி veruṇi, பெ.(n.)

   ஆடு தீண்டாப் பானை; a bitter worm killer – an ash coloured prostate plant aristolochia bracteata.

வெருணை

வெருணை1 veruṇai, பெ.(n.)

   1. செடிவகை (பதார்த்த 534);; pavetta.

   2. ஒருவகைச் சிறு மரம் (மூ.அ.);; common bottle flower, s.tr.

     [வெருணை → வெருணை]

 வெருணை2 veruṇai, பெ.(n.)

   பாவட்டை; a small tree-pavata indica.

வெருனை

வெருனை veruṉai, பெ.(n.)

   1. செடிவகை (பதார்த்த.534);; pavetta indica.

   2. ஒருவகைச் சிறுமரம்; common bottle flower, s.tr.

     [வெருணை → வெருனை]

வெருப்பறை

வெருப்பறை veruppaṟai, பெ.(n.)

   போர் முரசு; war-drum.

     “வென்றி யெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி” (பெருங். மகத. 24, 29);.

     [வெரு + பறை]

வெருளல்

வெருளல் veruḷal, பெ.(n.)

   மயங்கல்; to be infatuated.

   2. பயப்படல், மருளல்; fearing.

     [வெரு → வெருள் → வெருளல்]

வெருளார்-த்தல்

வெருளார்-த்தல் veruḷārttal, செ.கு.வி.(v.i.)

   1. திகைத்தல்; to be startled.

   2. மயங்குதல் (யாழ்.அக.);; to be confused.

     [வெருள் → ஆர் → வெருளார்-த்தல்]

வெருளி

வெருளி1 veruḷi, பெ.(n.)

   1. வெருட்சி; bewilderment.

     “வெகுளி மாடங்கள்” (சீவக. 532);.

   2. வெருளச் செய்யும் புல்லுரு முதலியன; scare-crow, that which causes terror.

   3.செல்வச் செருக்கு; pride of riches.

     ‘”வெருளி மாந்தர்” (சீவக. 73);.

     [வெருள் → வெருளி]

 வெருளி2 veruḷi, பெ.(n.)

   சோளக்கொல்லைப் பொம்மை; scarecrow.

     [வெரு → வெருள் → வெருளி]

வெருளிப்பிணை

வெருளிப்பிணை veruḷippiṇai, பெ.(n.)

   பெண்மான் வகை (பெருங். இலாவாண. 15, 31);; a kind of doe.

     [வெருளி + பிணை → வெருளிப்பிணை]

வெருளுதல்

 வெருளுதல் veruḷudal, பெ.(n.)

வெருளல் பார்க்க;see verulal.

     [வெரு → வெருள் → வெருளுதல்]

வெருள்

வெருள்1 veruḷḷudal, செ.கு.வி.(v.i.)

   1. மருளுதல்; to be startled, perplexed.

     “எனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே” (திருவா. 32,3);.

   2. அஞ்சுதல்; to be frightened.

     “பெருங்குடியாக்கம் பீடறவெகுளி” (பெருங். மகத. 24,84);.

   3. குதிரை முதலியன மருளுதல்; to shy, to be skittish.

     [வெருள் → வெருள்ளு)-தல்]

 வெருள்2 veruḷ, பெ.(n.)

   1. மனக்கலக்கம் (சூடா.);; per plexity.

   2. பயம்; fear.

   3. அஞ்சத்தக்கது; that which is fearful.

     “‘நின்புகழிகழ்வார் வெருளே” (திருவாச. 6.17);.

     [வெரு → வெருள்]

வெருள்வு

வெருள்வு1 veruḷvu, பெ.(n.)

   வெருட்சி; skittishness.

     [வெரு → வெருள் → வெருள்வு]

 வெருள்வு2 veruḷvu, பெ.(n.)

   மயக்கம்; vertigo.

     [வெரு → வெருள் → வெருள்வு]

வெருவந்தம்

வெருவந்தம்1 veruvandam, பெ.(n.)

   அச்சம்; fear (w.);.

     [வெருவா → வெருவந்தம்)]

 வெருவந்தம்2 veruvandam, பெ.(n.)

   ஒரு வகைக் கொடி; a kind of creeper.

வெருவயிறு

 வெருவயிறு veruvayiṟu, பெ.(n.)

   வெறும் வயிறு; empty stomach.

     [வெறுவயிறு → வெருவயிறு)]

வெருவருநிலை

வெருவருநிலை veruvarunilai, பெ.(n.)

   அம்பு தன் மார்பைப் பிளப்பவும் நிலத்தில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை (பு.வெ. 7, 23, கொளு.);; theme describing the attitude of a warrior who does not fall down even when his breast is pierced through and through by the arrows of his enemies.

     [வெருவரு + நிலை]

வெருவலர்

வெருவலர் veruvalar, பெ.(n.)

   பகைவர்; enemies.

     “வெருவலர் புரந்திய” (உபதேசகா குராதி. 3);.

     [வெரு + அல் + அர் → வெருவலர்]

வெருவல்

 வெருவல் veruval, பெ.(n.)

   வெருவுதல்; to be alarmed.

     [வெரு → வெருவல்]

வெருவா-தல் (வெருவருதல்)

வெருவா-தல் (வெருவருதல்) veruvādalveruvarudal, செ.கு.வி.(v.i.)

   1. அச்சந்தருதல்; to be fearful.

     “வெருவெரு தானைகொடு செருப்பல கடந்து” (பதிற்றுப். 70, பதி.);.

   2. அஞ்சுதல்; to be afraid.

     “வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்”(குறள், 599);,

     [வெரு + வா → வெருவா]

வெருவு

வெருவு1 veruvudal, செ.குன்றாவி.(v.t.)

& செ.கு.வி.(v,i);

   1. அஞ்சுதல்; to be afraid of, to be alarmed.

     “யானை வெரூஉம் புலிதாக் குறின்” (குறன், 599);.

     [வெருள் → வெருவு]

 வெருவு2 veruvu, பெ.(n.)

   அச்சம்; fear.

     “வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்” (தொல், பொ. 111);.

     [வெருள் → வெருவு]

வெருவெரு-த்தல்

வெருவெரு-த்தல் veruveruttal, செ.கு.வி.(v.i.)

   அஞ்சுதல்; to be afraid.

     “உயிர் நடுங்கி….. வெருவெருத்து நின்றனரால்” (உபதேசகா. குராதி. 49);.

     [வெருள் → வெருவு → வெருவெரு-த்தல்]

வெரூஉதல்

வெரூஉதல் verūudal, பெ.(n.)

வெருவு பார்க்க;see veruvu.

     ‘வெரூஉப்பறை” (பொருந.171);.

     [வெருவு → வெரூஉ]

 வெரூஉதல் verūudal, பெ.(n.)

   மருண்டஞ்சுகை; being afraid.

     “அலமர லரயிடை வெரூஉத லஞ்சி” குறிஞ்சிப். 137),

     [வெருவு → வெரூஉதல்]

வெர்ப்பேந்தி

 வெர்ப்பேந்தி verppēndi, பெ.(n.)

   மலைதாங்கி; a plant.

     [வெர்ப்பு + ஏந்தி]

வெறி

வெறி1 veṟidal, செ.கு.வி.(v.i.)

   செறிதல் (பிங்.);; to be abundant.

 வெறி2 veṟi, __,

பெ.(n.);

   1. ஒழுங்கு; order, orderliness.

     “வெறி நிரை வேறாகச் சார்ச்சாரலோடி” (கலித். 11);.

   2. வட்டம் (பிங்);; circle.

 வெறி3 veṟi, பெ.(n.)

   1. கள் (பிங்.);; toddy.

   2. குடிமயக்கம் (வின்.);; drunken ness, drunken fury, intoxication.

   3. மயக்கம் (வின்.);; giddiness.

   4. கலக்கம் (பிங்.);; bewilderment, confusion, perturbation.

   5. பித்து (பயித்தியம்);; madness, insanity.

     ‘வெறிநாய்’.

   6. மதம் கொள்கை; frenzy.

   7. சினம்; anger.

   8. விரைவு (அக.நி.);; quickness, hastiness.

   9. நறுமணம்; fragrance.

     “வெறிகமழ் வணரைம் பால்” (கலித். 57);.

   10. வெறியாட்டு பார்க்க (பிங்.);;see veri-y-attu.

     “வெறிபுரி யேதில் வேலன்” (அகநா. 292);.

   11. வெறிப்பாட்டு பார்க்க;see verip-pattu.

     “வேலனேத்தும் வெறியுமுளவே” (பரிபா. 5, 15);.

   12 முரட்டுத் தனம்; savagery, wildness.

   13. பேய் (பிங்);; devil.

   14. தெய்வம்; deity.

     “வெறியறி சிறப்பன்”(தொல், பொ. 60, உரை);

   15. ஆடு,

 sheep.

     “இறும்கலா வெறியும்” மணி 19,97).

   16. பேதைமை (பிங்.);; ignorance.

   17. அச்சம் (பிங்);; fear.

     “வெறிகொளாக மாயையாதலின்” (ஞானா. 59, 5);.

   18. நோய் (பிங்.);; disease.

     [வெள் → வெறு → வெறி]

 வெறி4 veṟittal, செ.கு.வி.(v.i.)

   1. குடியால் மயங்குதல்; to be drunk, intoxicated.

   2. பித்துப் பிடித்தல்; to become mad.

     ‘வெறித்த நாய்’.

   3. மதங்கொள்ளுதல்; to be frenzied.

     “வெறி பொறி வாரணத்து” (கலித். 43);,

   4. திகைத்தல் (வின்);; to stare

   5. கடுமையாதல்; to be furious,

     “உருமேறு வெறித்து விழ” (கம்பரா. வாலிவ. 30);.

   6. வெருவுதல், அஞ்சுதல்; to be fringhtened.

     “நெஞ்சம் வெறியா” (கலித். 143);.

   7. விலங்கு முதலியன வெருளுதல்; to shy, as a beast.

     “வெறித்து மேதியோடி” (தேவா. 693,3);.

   8. ஆவலெபாடு பார்த்தல் (வின்.);; to look with longing eyes.

   9. விறைத்து நிற்றல்; to stand stiff, to stand on end, as hair.

     “வெறித் குஞ்சியன்” (காசிக. சிவ. நிருதி 16);.

 வெறி5 veṟittal, செ.கு.வி.(v.i.)

   1. ஆட்களின்றி வெறுமையாதல்; to become empty, as a place devoid of inhabitants.

     ‘அரசனில்லாத அரண்மனை வெறித்துப் போயிற்று’ 2.வானந்தெளிதல்;

 toclear away, as clouds.

     ‘மழை நின்று வெறித்துவிட்டது’.

     [வெள் → வெறு → வெறி-த்தல்]

 வெறி6 veṟi, பெ.(n.)

வெறிச்சு பார்க்க;see vericcu.

     “இல்லம் வெறியோடிற் றாலோ” (திவ். பெரியாழ். 3, 8, 1);.

 வெறி7 veṟi, பெ.(n.)

   நாற்றம்; smell.

     [வெறு → வெறி]

 வெறி8 veṟittal, செ.கு.வி.(v.i.)

   வெறுமையுடன் உற்று நோக்குல், பார்வை ஒன்றின் மீது நிலைத்தல்; stare blankly, give a vacant stare.

     ‘சாப்பிடப் பிடிக்காமல் சோற்றை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்’.

   2. (மாடு முதலியவை); மிரளுதல்; be faightened.

     ‘குடையைக் கண்டால் மாடு வெறிக்கும் என்று தெரியாதா?’

     [வெறு → வெறி-தல்]

வெறிகொள்(ளு)-தல்

வெறிகொள்(ளு)-தல் veṟigoḷḷudal, செ.கு.வி. (v.i)

   1. மயக்கங் கொள்ளுதல்; to become dizzy, to be intoxicated.

   2. பித்து கொள்ளுதல்; to be crazy or mad.

   3. வெறி4-. 3 பார்க்க;see veri4 -3.

     “வெறி கொண் மத மலைகளும்” (பாரத. பதினாறாம்போர். 25);.

   4. (மூர்க்கம்); முருடம் கொள்ளுதல்; to become furious.

     [வெறி + கொள்ளு]-தல்]

வெறிகோள்

வெறிகோள் veṟiāḷ, பெ.(n.)

வெறியாட்டு பார்க்க;see veri-y-attu.

     “வெறிகோள் பண்ணியுந் தொழிறலை பெயர்த்தவன்” (பெருங், உஞ்சைக் 32, 94);.

     [வெறி + கோள்]

வெறிக்கடுக்காய்

 வெறிக்கடுக்காய் veṟikkaḍukkāy, பெ.(n.)

   பேய்க் கடுக்காய்; a kind of wild gallnut.

     [வெறி + கடுக்காய்]

வெறிக்கப்பார்-த்தல்

வெறிக்கப்பார்-த்தல் veṟikkappārttal, பெ.(n.)

   பரக்கப் பார்த்தல், மரணக்குறி; staring, a death symptom.

     [வெறிக்க + பார்த்தல்]

 வெறிக்கப்பார்-த்தல்2 veṟikkappārttal, செ.குன்றாவி. (vt.)

   இமையாது வெகுண்டு; to glare at.

     [வெறிக்க + பார்-.]

வெறிக்கல்

 வெறிக்கல் veṟikkal, பெ.(n.)

   சுக்கான்கல்; lime-stone.

     [வெறி + கல்]

வெறிக்களம்

வெறிக்களம் veṟikkaḷam, பெ.(n.)

   வெறியாட்டயரும் இடம்; place where veriy-attu takes place.

     “வெற்க்களங் கடுப்ப” (பெருங். இலாவான. 2,104);.

     [வெறி + களம்]

வெறிக்குதல்

 வெறிக்குதல் veṟikkudal, பெ.(n.)

வெறி கொள்ளல் பார்க்க;see veri-kollal.

     [வெறு → வெறி → வெறிக்குதல்]

வெறிக்கூத்து

வெறிக்கூத்து1 veṟikāttu, பெ.(n.)

வெறியாட்டு பார்க்க;see veri-y-attu. (பு.வெ.12. இருபாற். 10, தலைப்பு);.

     [வெறி + கூத்து]

 வெறிக்கூத்து2 veṟikāttu, பெ.(n.)

   இது தெய்வம் ஏறியாடுகிற வெறிக் கூத்தாகும்; priest dancing under possession by skanda.

வேலனாகிய பூசாரிகையில் வேலேந்திச் செம்பட்டாடையுடுத்திச் செவ்வணியணிந்து, செஞ்சந்தனம் பூசித் தொண்டகப்பறை ஒலிக்க ஆடுவான். இவன் வேலையேந்தியாடுகிற படியால் வேலன் எனப்படுவான்.

     [வெறி + கூத்து]

வெறிசிங்கி

 வெறிசிங்கி veṟisiṅgi, பெ.(n.)

வயிற்றுப்புண்,

 ulcer.

     [வெறி + சிங்கி]

வெறிச்சி

வெறிச்சி veṟicci, பெ.(n.)

   அழுகண்ணி; a plant found in marshing places from which water contionuously oozes out a carnirorous plant – drosera indica.

   2. சண்பகம்; a flower-champaca.

     [வெறி → வெறிச்சி]

வெறிச்சு

வெறிச்சு veṟiccu, பெ.(n.)

   ஆட்களின்றி வெறுமையாகை; emptiness, as of a place devoid of inhabitants.

     “வெறிச்சான திருமாளிகை” (திருபுரம், 536);.

     [வெறிது → வெறிச்சு]

வெறிச்செனல்

 வெறிச்செனல் veṟicceṉal, பெ.(n.)

   ஆட்களின்றி வெறுமையாதற்குறிப்பு; expr. of being vacant or empty, as a place devoid of inhabitants.

     ‘மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போன பிறகு வீடு வெறிச்சென இருக்கிறது’.

     [வெறிச்சு + எனல்]

வெறிச்சோடு-தல்

 வெறிச்சோடு-தல் veṟiccōṭudal, செ.கு.வி. (v.i.)

 wear a desolate look.

     ‘திருமணம் முடிந்த பிறகு விடுவெறிச்சோடி விட்டது’.

     [வெறு → வெறி + சோடு-,]

வெறிதருமருந்து

 வெறிதருமருந்து veṟidarumarundu, பெ.(n.)

   மயக்கத்தையுண்டாக்கு மருந்து; an intoxicating drug-bang.

     [வெறிதரு + மருந்து]

வெறிது

வெறிது veṟidu, பெ.(n.)

   1. ஒன்றுமில்லாமை; emptiness.

   2.பயனி்னமை; uselessness, futility.

     “வெறிது நின் புகழ்களை வேண்டாரி லெடுத்தேத்தும்” (கலித், 72);.

   3. அறிவின்மை (யாழ்.அக.);; stupidity.

     [வெறு-மை → வெறிது]

வெறித்தசிங்கம்

வெறித்தசிங்கம் veṟittasiṅgam, பெ.(n.)

   1. உப்பு மணி; a bead made by melting to consolidated salt.

   2. கட்டியகல்லுப்பு; consolidated rock-salt.

   3. உப்பு; the three universal salts.

வெறித்தபார்வை

 வெறித்தபார்வை veṟittapārvai, பெ.(n.)

   அச்சுறுத்தும் பார்வை; fearful look.

     [வெறித்த + பார்வை]

வெறித்தல்

 வெறித்தல் veṟittal, பெ.(n.)

   மயக்குறல்; being intoxicaled or stupified.

     [வெறி → வெறித்தல்)

வெறிநாய்

 வெறிநாய் veṟināy, பெ.(n.)

   வெறி பிடித்த நாய்; rabid dog.

     [வெறி + நாய்]

வெறிநாய்கடிப்பைத்தியம்

 வெறிநாய்கடிப்பைத்தியம் veṟināykaḍippaittiyam, பெ.(n.)

   வெறிநாய் கடியால் ஏற்பட்ட பித்து; canine madness.

     [வெறிநாய் + க + பித்து Skt. பைத்தியம்]

வெறிநாய்க்கடி

 வெறிநாய்க்கடி veṟināykkaḍi, பெ.(n.)

   நச்சனுக்களால் உண்டாகும் கொடி நோய் வகை; rabie.

இந்நோய் கண்டிருக்கும் நாய், பூனை, நரி, ஒநாய் ஆகிய விலங்குகள் கடித்தால் மக்களுக்கு இந்நோய் தொற்றும். இந்நோய் கண்ட விலங்குகளின் உமிழ் நீரில் நச்சணுக்கள் நிறைந்திருக்கும். இவை மக்களை நக்கினாலும், நக்கின இடத்தில் புண் இருந்தால் அதன் மூலம் நோய் தொற்றிக்கொள்ளும். சில நாடுகளில் சிலவகை வெளவால்கள் கடிப்பதனாலும் மக்களுக்கு இந்நோய் பரவுகிறது. மூளைப் பிறழ்ச்சியும், தாங்க முடியாத துன்பமும், நீர் வேட்கையும், தண்ணிரைக் கண்டால் நடுக்கமும், எதையும் விழுங்க முடியாத தவிப்பும் இந்நோயின் அறிகுறிகள், இறுதியில் இந்நோய் கண்டவர்கள் இறந்து போகின்றார்கள்.

     [வெறிநாய் + கடி]

வெறிநாற்றம்

வெறிநாற்றம் veṟināṟṟam, பெ.(n.)

   புணர்ச்சிக்குப் பின் பிறக்கும் நாற்றம் (ஐங்குறு, 93, வரை);; a kind of odour perceived after sexual inter course.

     [வெறி + நாற்றம்]

வெறிநீர்

வெறிநீர் veṟinīr, பெ.(n.)

   1. சாராயம்; arrack.

   2. பருகை; drink causing giddiness.

     [வெறி + நீர்]

வெறிபாடியகாமக்கண்ணியார்

வெறிபாடியகாமக்கண்ணியார் veṟipāṭiyakāmakkaṇṇiyār, பெ.(n.)

   கழகக் காலப் பெண் புலவர்; a female sangam poet.

வெறியென்பது தெய்வமேறப்பெற்று ஒருத்தியாடுதல். இது வெறியாட்ட மெனவும் வழங்கும். இதன் இயல்பை நன்றாக விளக்கிப் பாடியிருத்தலால்

     ‘வெறிபாடிய’ என்னும் அடைமொழி இவர் பெயர்க்குமுன் சேர்க்கப் பெற்றது. (அகநா. 22, 92; நற். 268);.

இவர் புறநானூற்றில் பாடிய செருவிடை வீழ்தல், குதிரை மறமென்னுந் துறைப்பாடல்கள் அறிதற் பாலன.

வெறிபிடி-த்தல்

 வெறிபிடி-த்தல் veṟibiḍittal, செ.கு.வி.(v.i.)

வெறிகொள்- பார்க்க;see veri-kol.

     [வெறி + பிடி-,]

வெறிப்பாட்டு

வெறிப்பாட்டு veṟippāṭṭu, பெ.(n.)

   வெறியாட்டில் நிகழும் பாடல் (பரிபா. 5, 15, உரை);; song sung in veri-y-aţtu.

     [வெறி + பாட்டு]

வெறிப்பானவேரு

 வெறிப்பானவேரு veṟippāṉavēru, பெ.(n.)

வெள்ளரிசி பார்க்க;see vellarisi.

     [வெறிப்பான + வேரு]

வெறிப்பு

வெறிப்பு1 veṟippu, பெ.(n.)

   1. கண்கூச்சம்; dazzle, glare.

     “கோல வெறிப்பினான்…. மாலைக் கண் கொண்டவே” (சீவக. 2397);.

   2. ஏக்கறவு (வின்.);; longing in consequence of privation.

   3. கொடுமை; jarring.

     ‘அந்தப்பாட்டு வெறிப்பாயிருக்கிறது’.

   4. மது மயக்கம் (வின்,);; drunkenness.

     [வெறி → வெறிப்பு]

 வெறிப்பு veṟippu, பெ.(n.)

   பஞ்சம் (வின்.);; famine.

     [வெறு → வெறி → வெறிப்பு]

 வெறிப்பு2 veṟippu, பெ.(n.)

   மயக்கம்; intoxication, drunkness.

     [வெறி → வெறிப்பு]

வெறிமகள்

 வெறிமகள் veṟimagaḷ, பெ.(n.)

   இழிமகள்; hell-cat.

     [வெறி + மகள்]

வெறிமயக்கம்

 வெறிமயக்கம் veṟimayakkam, பெ.(n.)

   குடிவெறி; drunkness.

     [வெறி + மயக்கம்]

வெறிமருந்து

வெறிமருந்து veṟimarundu, பெ.(n.)

   1. நஞ்சு; arsenic.

   2. மயக்கத்தையுண்டாக்கு மருந்து; drug causing giddinessintoxicating drug.

     [வெறி + மருந்து]

வெறிமலர்

வெறிமலர் veṟimalar, பெ.(n.)

   1. நறுமண மலர் (திருக்கோ. 96, உரை);; fragrant flower.

   2. தெய்வத்துக்குரிய பூ (திருக்கோ. 96, உரை);; flower offered to a god.

     [வெறி + மலர்]

வெறிமுண்டன்

 வெறிமுண்டன் veṟimuṇṭaṉ, பெ.(n.)

   பித்துப்பிடித்த தடியன்; mad fellow.

     [வெறி + முண்டன்]

வெறியன்

வெறியன்1 veṟiyaṉ, பெ.(n.)

   1. பித்துக் கொண்டவன்; an insane man.

   2. மயக்கங் கொண்டவன்; a giddy person.

   3. குடியன்; drunkard.

   4. கஞ்சா பிடித்தவன்; ganjah smoker.

     [வெறி → வெறியன்]

 வெறியன்2 veṟiyaṉ, பெ.(n.)

   1. குடிவெறியுள்ளவன்; drunkard.

   2. பித்தன்; madman.

   3. கடுமையானவன்; furious person.

     [வெறி → வெறியன்]

 வெறியன் veṟiyaṉ, பெ.(n.)

   யாதும் அற்றவன்; empty, distitute person.

     “வெறியரன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலாமேலானோர்” (கம்பரா.உருக்காட்டு. 111);.

     [வறியன் → வெறியன்]

வெறியயர்-தல்

வெறியயர்-தல் veṟiyayartal, செ.கு.வி.(v.i.)

வெறியாடு-, பார்க்க;see veri-y-adu-.

     “வேலன் வெறியர் வியன்களம் பொற்ப” (அகநா. 97);.

     [வெறி + அயர்-,]

வெறியாடல்

வெறியாடல் veṟiyāṭal, பெ.(n.)

   1. வெறி கொள்ளல்; becoming mad.

   2. யோட்டம்; devil dance.

   3. மயக்கத்தினால் கூத்தாடல்; dancing through intoxicating.

     [வெறி + ஆடல்]

 வெறியாடல் veṟiyāṭal, பெ.(n.)

வெறியாட்டு பார்க்க;see veri-y-attu.

     [வெறி + ஆடல்]

வெறியாடு-தல்

 வெறியாடு-தல் veṟiyāṭudal, செ.கு.வி.(v.i.)

   வெறியாட்டாடுதல்; to dance under possession by skanda.

     [வெறி + ஆடு-,]

வெறியாட்டம்

வெறியாட்டம் veṟiyāṭṭam, பெ.(n.)

   1. வன் முறைச் செயல், மிகுசினம்; rampageous conduct, frenzy.

     ‘இனங்க்கலவரத்தைத் தகுந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கயவர்கள் வெறியாட்டம் போட்டனர்.

   2. (குறி சொல்பவர்); தெய்வ வெறி வந்து ஆடும்; dance (of a soothsayer); possessed by spirit, frenzied state.

     [வெறி + ஆட்டம்]

வெறியாட்டாளன்

வெறியாட்டாளன்1 veṟiyāṭṭāḷaṉ, பெ.(n.)

   1. பித்துப்பிடித்தவன்; madman.

   2. தேவர்க் காடுவேன்; dance before the fanes of tutelarly gods bacchanalian.

     [வெறி + ஆட்டாளன்]

 வெறியாட்டாளன்2 veṟiyāṭṭāḷaṉ, பெ.(n.)

   வெறியாடல் புரியும் வேலன் (பு.வெ.9.41, உரை);; priest dancing under possession by skanda.

     [வெயாட்டு + ஆளன்]

வெறியாட்டு

வெறியாட்டு1 veṟiyāṭṭu, பெ.(n.)

   1. வேலனாடல் (பு.வெ.1, 21, தலைப்பு);; dance of a priest possessed by skanda.

   2. களியாட்டம; frantic or mad play.

     “வெறியாட்டுக் காளாய்” (தாயு. கற்புறு. 2);.

     [வெறி + ஆட்டு]

 வெறியாட்டு2 veṟiyāṭṭu, பெ.(n.)

   பித்து பிடித்திடுதல்; madness.

வெறியாட்டுப்பறை

வெறியாட்டுப்பறை veṟiyāṭṭuppaṟai, பெ.(n.)

   வெறியாட்டில் முழங்கும் குறிஞ்சி நிலப்பறை (இறை.1,பக்.17);; drum of kurinji tract, used in veri-y-attu.

     [வெறியாட்டு + பறை]

வெறியாள்

வெறியாள் veṟiyāḷ, பெ.(n.)

வெறியாட்டாளன் (குறுந்.366); பார்க்க;see veryattalan.

     [வெறி + ஆள்]

வெறியுறை

வெறியுறை veṟiyuṟai, பெ.(n.)

   1. மயக்க முண்டாக்கும் ஒரு வகை மருத்துவமுறை; giving chloroform.

   2. பித்துப் பிடிக்கச செய்யும் மருநது; medicine causing insanity.

     [வெறி + உறை]

வெறியெடு-த்தல்

வெறியெடு-த்தல் veṟiyeḍuttal, செ.கு.வி. (v.i)

   வெறியாட்டு நிகழ்த்துதல்; to conduct a veri-y-attu.

     “தமர்வெறி யெடுப்புழி அதனை விலக்கக் கருதிய தோழி” (ஐங்குறு. 28, உரை);.

     [வெறி + எடு-,]

வெறியெடுத்தல்

 வெறியெடுத்தல் veṟiyeḍuttal, பெ.(n.)

   வெறிகொள்ளல், மதங்கொள்ளல்; becoming fascivious of rusty.

     [வெறி + எடுத்தல்]

வெறியேறி

 வெறியேறி veṟiyēṟi, பெ.(n.)

   நெருப்பு; fire.

     [வெறி + ஏறி]

வெறியோடு

வெறியோடு1 veṟiyōṭudal, செ.கு.வி. (v.i.)

   1. ஒளி மிகுதியால் கண் வெறித்துப் போதல்; to be dazzled, as eyes by excessive brilliancy.

     “பல புண் மின்னலுங்கண்கள் வெறியோடி விட்டனவே” (பாரத. பதினேழாம் போர் 168);.

   2. ஆற்றாமையுறுதல்; to be in despair, to be inconsolable.

     [வெறி + ஒடு-,]

வெறியோடு-தல்

வெறியோடு-தல் veṟiyōṭudal, செ.கு.வி. (v.i.)

வெறிs—, 1 பார்க்க;see veris-, 1.

     “இல்லம் வெறியோடிற்றாலோ” (திவ். பெரியாழ், 3, 8, 1);.

     [வெறி + ஒடு-,]

வெறியோன்

 வெறியோன் veṟiyōṉ, பெ.(n.)

   பேய்த்துவரை; a wild gram.

வெறிவாகை

 வெறிவாகை veṟivākai, பெ.(n.)

   பன்றி வாகை; bastard rose wood-dalbiergia paniculata.

     [வெறி + வாகை]

வெறிவிலக்கல்

வெறிவிலக்கல் veṟivilakkal, பெ.(n.)

வெறிவிலக்கு (ஐங்குறு.247, உரை); பார்க்க;see veri-Vilakku.

     [வெறி + விலக்கல்]

வெறிவிலக்கு

 வெறிவிலக்கு veṟivilakku, பெ. (n.)

   தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்க வேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அசுத்துறை; theme of opposing the veriy-attu performed with a view to curing a lovesick women under a mistaken impression that she is ill.

     [வெறி + விலக்கு]

வெறு

வெறு1 veṟuttal, செ.குன்றாவி. (v.t.)

   1. அருவருத்தல்; to detest, loathe.

     “வெறுமின்வினைதியார் கேண்மை” (நாலடி, 172);.

   2. பகைத்தல்; to hate.

   3. வெகுளுதல் (சூடா);; to be angry at.

   4. விரும்பா திருத்தல்; to dislike.

   5. பற்றுவிடுதல்; to renouce, to be free from attachments.

     “வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே” (தேவா. 310, 10);.

     [வெறு → வெறுத்தல்]

 வெறு2 veṟuttal, செ.கு.வி.(v.i.)

   1. மிகுதல் (தொல். சொல். 347);; to abound.

     “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” (புறநா. 53);,

   2. துன்பமுறுதல்; to be afflicted.

     “எதிரேவருமே கரமே வெறுப்பவொரேந்த லோடே” (திருக்கோ.243. உரை);.

     [வெறு → வெறுத்தல்]

 வெறு veṟu, பெ.(n.)

   வெறுமை, வெறு வென்னேவல்; vapidness.

     [வெள் → வெறு]

வெறுக்கச்சாப்பிடல்

 வெறுக்கச்சாப்பிடல் veṟukkaccāppiḍal, பெ.(n.)

   மணம் சலிக்கும் வரையுண்ணல்; to eat to satiety.

     [வெறுக்க + சாப்பிடல்]

வெறுக்கவெறுக்க

 வெறுக்கவெறுக்க veṟukkaveṟukka, வி.எ.(adv.)

   வேண்டாமென்று தள்ளக்கூடிய வளவு மிகுதியாக; in a surfeiting measure.

     [வெறு → வெறுக்க]

வெறுக்கை

வெறுக்கை1 veṟukkai, பெ.(n.)

   1. அருவருப்பு; aversion, Ioathing.

     “தாதுண வெறுகையை வாகி” (ஐங்குறு. 93);.

   2. வெறுப்பு; dislike.

   3. மிகுதி; abundance.

   4. செல்வம்; wealth.

     “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்டு” (பதிற்றுப். 55, 4);.

   5. பொன் (பிங்.);; gold.

   6. வாழ்வின் அடிப்படையாயுள்ளது; lifespring.

     “பரிசிலர் வெறுக்கை” (பதிற்றும் 38, 9);.

   7. கையுறை; offering, as to a superior.

     “தொடைமலர் வெறுக்கையேந்தி” (சீவக.2708);.

   8.ஊக்கம்; self-assertion.

     “ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை” (குறள், 971);

 வெறுக்கை2 veṟukkai, பெ.(n.)

   கனவு (அக.நி.);; dream.

     [வெறு → வெறுக்கை]

வெறுக்கைக்கிழவன்

வெறுக்கைக்கிழவன் veṟukkaikkiḻvaṉ, பெ.(n.)

   செல்வத்துக்குரியவன் (குபேரன்.);; kubéra, as the god of wealth.

     ‘okugoso கிழவன் மகளென்ன'(சீவக. 1871);.

வெறுங்கல்லறை

 வெறுங்கல்லறை veṟuṅgallaṟai, பெ.(n.)

   பிணத்தை அடக்கம் செய்யாது நினைவுக் குறியாகக் கட்டப்பட்ட கல்லறை (பொ.வழ.);; cemetery.

வெறுங்காய்

 வெறுங்காய் veṟuṅgāy, பெ.(n.)

   பாக்கு; areca-nut.

     [வெறு-மை , காய்]

வெறுங்கால்

 வெறுங்கால் veṟuṅgāl, பெ.(n.)

   வெற்றுக் கால்; bare foot.

     [வெறு-மை + கால்]

வெறுங்காவல்

 வெறுங்காவல் veṟuṅgāval, பெ.(n.)

   வேலை வாங்குதலில்லாமல் அடைத்து வைத்திருக்குஞ்சிறை; simple imprisonment, opp. to kadun-kaval.

     [வெறு-மை + காவல்]

வெறுங்கை

வெறுங்கை veṟuṅgai, பெ.(n.)

   1. ஒன்று மில்லாத கை; emptyhand.

     “வெறுங்கை யோடிலங்கைபுக்கான்” (கம்பரா. கும்பக் 1);.

   2. வறுமை; powerty.

     “வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மை செய்யும்” (சேதுபு. இலக்குமி. 3);.

     [வெறு-மை + கை]

வெறுங்கைது

 வெறுங்கைது veṟuṅgaidu, பெ.(n.)

வெறுங்காவல் பார்க்க;see verun-kaval.

     [வெறு-மை + கைது]

வெறுங்கோது

வெறுங்கோது veṟuṅātu, பெ.(n.)

   1. பயனற்றது; chaff, worthless staff.

   2. ஒன்றுக்குமுதவாத-வன்-வள்-து; good for nothing person or thing.

     [வெறு-மை + கோது]

வெறுஞ்சோறு

 வெறுஞ்சோறு veṟuñjōṟu, பெ.(n.)

   வெஞ்சனமில்லாத உணவு; plain rice without curry, etc.

     [வெறு-மை + சோறு]

 வெறுஞ்சோறு veṟuñjōṟu, பெ.(n.)

   வெறும் சோறு (சுத்தானம்);; cooked rice.

     [வெறும்+சோறு]

வெறுத்தகு-தல்

வெறுத்தகு-தல் veṟuddagudal, செ.கு.வி. (v.i.)

   செறிதல்; to abound.

     “வெறுத்தக்க பண்பொத்தல்;(குறள், 993);,

     [வெறு + தகு-,]

வெறுத்தார்

வெறுத்தார் veṟuttār, பெ.(n.)

   1. வெறுப் புற்றவர்; haters, those who dislike.

   2. பற்றற்றோர்; those who have renounced the world.

     “வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே” (தேவா. 310, 10);.

     [வெறு → வெறுத்தார்]

வெறுத்தாள்

 வெறுத்தாள் veṟuttāḷ, பெ.(n.)

   பல பெண் குழந்தைகளைப் பற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாக (சம்பூரணம்); என்று பிறந்த பெண்குழந்தைக்கிடும் பெயர்; name given to the last of a number of female children, showing that their parents wish to have no more daughter.

     [வெறு → வெறுத்தாள்]

வெறுத்திசை

வெறுத்திசை veṟuttisai, பெ.(n.)

வெறுத் திசைப்பு பார்க்க;see veru-t-tisappu.

     “இன்னோசைத்தாய் வெறுத்திசையின்றாம்” (தொல், பொ. 323. உரை);.

     [வெறு + இசை]

வெறுத்திசைப்பு

வெறுத்திசைப்பு veṟuttisaippu, பெ.(n.)

   யாப்பின் ஒசைக் குற்றவகை (யாப். வி. பக்.403);; discordant rhythm in a stanza.

     [வெறு + இசைப்பு]

வெறுநரையோர்

வெறுநரையோர் veṟunaraiyōr, பெ.(n.)

   முழுநரையுள்ள முதயிவா; very old persons, as having their hair turned completely grey.

     “விரவு நரையோரும் வெறுநடை யோரும்” (பரிபா. 10, 22);.

     [வெறு-மை + நரை]

வெறுநிலம்

வெறுநிலம் veṟunilam, பெ.(n.)

வெறுந் தரை 1 பார்க்க;see veru-n-tarai1.

     “நின்மகன் அவந்தனாய் வெறு நிலத்திருக்கலான போது” (கம்பரா. மந்தரைப். 55);.

   2. வெறுந்தரை 2 பார்க்க;see Veru-n-tarai 2.

     [வெறு-மை + நிலம்]

வெறுநுகம்

வெறுநுகம் veṟunugam, பெ.(n.)

   விளக்கு (சோதி); நாள்; the 15th naksatra.

     [வெறு[மை] + நுகம்]

வெறுநெற்றி

 வெறுநெற்றி veṟuneṟṟi, பெ.(n.)

   நீறணியா நெற்றி; bare forehead without sectarian marks.

     [வெறுமை] + நெற்றி]

வெறுந்தண்ணிர்

 வெறுந்தண்ணிர் veṟundaṇṇir, பெ.(n.)

   இயல்பான நீர்; water only (in prescribing diet);.

     [வெறுமை] + தண்ணிர்]

வெறுந்தப்பறை

 வெறுந்தப்பறை veṟundappaṟai, பெ.(n.)

   முழுத்தவறு (வின்.);; complete error.

     [வெறு-மை + பறை]

வெறுந்தரை

வெறுந்தரை veṟundarai, பெ.(n.)

   1. விரிப்பு முதலிய இடாத தரை; bare, uncovered floor or ground.

     ‘வெறுந் தரையில் அவர் இருந்தார்’.

   2. கட்டாந்தரை; land devoid of vegetation.

   3. பயனில்லாப் பொருள்; worthless thing.

     ‘அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையா யிருக்கிற எனக்கு” [ஈடு. 1, 4, 2).

     [வெறு-மை + தரை]

வெறுந்தலை

 வெறுந்தலை veṟundalai, பெ.(n.)

   தலைப் பாகையணியாத தலை (வின்.);; bare uncovered head.

     [வெறு-மை + தலை]

வெறுப்பு

வெறுப்பு veṟuppu, பெ.(n.)

   1. அருவருப்பு; disgust, aversion.

   2. பகைமை; hatred, enmity

   3. சினம் (சூடா);; wrath.

   4. விருப் பின்மை; dislike displeasure.

     “வெறுப்பில் வேண்டும்” (குறள், 696);.

   5. துன்பம் (பிங்.);; affliction.

   6. கலக்கம் (திவா.);; confusion.

   7. அச்சம் (பிங்.);; fear.

   8. செறிவு (தொல். சொல். 347);; abundance.

     [வெறு → வெறுப்பு]

 வெறுப்பு2 veṟuppu, பெ.(n.)

   வெறுமை உணர்வு, மனச்சோர்வு, சலிப்பு; feeling of emptiness (caused by frustration);.

     ‘வாழ்க்கையில் வெறுப்புத் தட்டிவிட்டது’.

     ‘பதவி உயர்வு கிடைக்காததால் வெறுப்பு அடைந்திருக்கிறார்’.

     [வெறு → வெறுப்பு]

வெறுப்புக்காட்டுதல்

 வெறுப்புக்காட்டுதல் veṟuppukkāṭṭudal, பெ.(n.)

   பரிவுகாட்டாமை; unaffection.

     [வெறுப்பு + காட்டுதல்]

வெறுப்புக்கொடு-த்தல்

வெறுப்புக்கொடு-த்தல் veṟuppukkoḍuttal, செ.கு.வி.(v.i.)

   1. அருவருப்பு உண்டாம்படி நடத்தல்; to behave in a disgusting manner.

   2. அருவருப்பு உண்டாக்குதல் (யாழ்.அக.);; to be disgusting.

     [வெறுப்பு + கொடு-,]

வெறுமணம்

 வெறுமணம் veṟumaṇam, பெ.(n.)

   மணமின்மை; odorless.

     [வெறு[மை] + மணம்]

வெறுமனே

வெறுமனே veṟumaṉē, வி.எ. (adv.)

   1. வீணாக; in vain, without advantage.

   2. வேலையின்மை; without doing anything, idly.

     “வெறுமனே தாளத்திற்கு இசைவிடும் எழிற்கையினை” (பதிற்றும். 61, உரை);.

     [வெறுமன் → வெறுமனே)

வெறுமனை

 வெறுமனை veṟumaṉai, வி.எ.(adv.)

வெறுமனே (யாழ். அக.); பார்க்க;see verumane.

     [வெறுமன் → வெறுமனை]

வெறுமன்

வெறுமன் veṟumaṉ, பெ.(n.)

   வீண்; worthlessness.

     “அப்பச்சை வெறுமனாகாமே” (ஈடு. 4, 10, 7);.

     [வெறு[மை] + மன்]

வெறுமை

வெறுமை veṟumai, பெ.(n.)

   1. ஒன்றுமின்மை; emptiness, rapidness.

   2. பயனின்மை; profitlessness, uselessness.

     “வெறுமையின் மனைகள் வாழ்ந்து” (தேவா. 838, 3);.

   3. அறிவின்மை; ignorance.

     “வெறுமையினவரைப் போக்கி” (சீவக. 1908);,

   4. வறுமை; poverty.

     “வெறுமை யிடத்தும்……… மறுமை மனத்தரே யாகி” (நாலடி, 329);.

   5. கலப்பின்மை; quality of being unmixed or pure.

     ‘பெறுஞ் சிவப்பு’. [வெறு → வெறுமை]

வெறுமைநிலை

 வெறுமைநிலை veṟumainilai, பெ.(n.)

   வறிதான நிலை; state of being empty.

     [வெறுமை + நிலை]

வெறுமைபோக்கி

 வெறுமைபோக்கி veṟumaipōkki, பெ.(n.)

முண்டினிவிருட்சம் பார்க்க;see murdinivirutsam.

     [வெறுமை + போக்கி]

வெறுமொன்று

வெறுமொன்று veṟumoṉṟu, பெ.(n.)

   தனித்த ஒன்று; single, solitary thing.

     “தாம வில்லு வெறுமொன்று முன்னம்” (தக்கயாகப். 23);.

     [வெறு[மை] + ஒன்று]

வெறுமொருவன்

வெறுமொருவன் veṟumoruvaṉ, பெ.(n.)

   தனித்த ஒருவன்; single, solitary person.

     “கலகமாரன் வெறுமொருவனால்” (தக்கயாகப். 25);.

     [வெறு[மை] + ஒருவன்]

வெறும்

வெறும் veṟum, பெ.எ.(adj.)

   1. உள்ளடக்கம் இல்லாத; empty.

     ‘எண்ணெய் இல்லாத வெறுங் குடுவை’.

     ‘வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடாதே’,

   2 (உடல், உடலுறுப்பு முதலியவை குறித்து வருகையில்); எதுவும் அணியாத உடன் வேறு எதுவும் இல்லாத,

 bare, naked.

யாரோ அலறும் ஒலி கேட்டதும் வெறும் உடம்போடு தெருவுக்கு ஓடிவந்தார்.

   3.’வேறு எதுவும் இல்லாமல் குறிப்பிட்டது மட்டும் தான்’ என்பதைக் கூறப்பயன்படும சொல்; mere, nothing but.

     ‘இதெல்லாம் வெறும் பொய்ச்செய்தி’.

     ‘வெறுசோற்றை எப்படிச் சாப்பிட முடியும்?’.

     [வெறு → வெறும்]

வெறும்பருக்கை

 வெறும்பருக்கை veṟumbarukkai, பெ.(n.)

வெறுஞ்சோறு பார்க்க;see verun-corn.

     [வெறு[மை] + பருக்கை]

வெறும்பாட்டம்

 வெறும்பாட்டம் veṟumbāṭṭam, பெ.(n.)

வெண்பாட்டம் பார்க்க;see ven-pattam,

     [வெறு-மை + பாட்டம்]

வெறும்பானை

 வெறும்பானை veṟumbāṉai, பெ.(n.)

   வெற்றுப்பானை, ஒன்றுமில்லாப்பானை; empty pot.

     [வெறுமை] + பானை]

வெறும்பிலுக்கு

 வெறும்பிலுக்கு veṟumbilukku, பெ.(n.)

   வீண்பகட்டு; mere glitter, foppery.

     ‘வெறும்பிலுக்கு வண்ணான்மாற்று’.

     [வெறு[மை] + பிலுக்கு]

வெறும்புறங்கூறு-தல்

வெறும்புறங்கூறு-தல் veṟumbuṟaṅāṟudal, செ.கு.வி.(v.i)

   1. குறளை கூறுதல் (திவா.);; to spread tales.

   2. அலர் தூற்றுதல் (யாழ்.அக.);; to utter slanderous words.

     [வெறு[மை] + புறம் + கூறு]

வெறும்புறங்கூற்று

 வெறும்புறங்கூற்று veṟumbuṟaṅāṟṟu, பெ.(n.)

   அலர்மொழி (யாழ்.அக.);; scandal.

     [வெறும்புறங்கூறு → வெறும்புறங்கூற்று]

வெறும்புறம்

வெறும்புறம் veṟumbuṟam, பெ.(n.)

   1. ஒன்றுமில்லாத நிலை; empty condition.

     “வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங் கையிலே” (ஈடு. 1, 8, 9);.

   2. காரணமின்மை; absence of reason or purpose.

     “வெறும்புறத்திலே தன்ன தல்லாததைத் தன்னதென்று ஏறட்டுக் கொள்ளக் கடவ அவன்” (ஈடு. 9, 8, 7);.

     [வெறு[மை] + புறம்]

வெறும்பூ

 வெறும்பூ veṟumbū, பெ.(n.)

   பிஞ்சில்லாப்பூ; flower only.

     [வெறு[மை] + பூ]

வெறும்பெரியவன்

 வெறும்பெரியவன் veṟumberiyavaṉ, பெ.(n.)

   அறிவில் முதிராது தோற்றத்தால் மட்டும் பெரியவனாகத் தோன்றுபவன்; one who is a grown-up physically but not intellectually.

     [வெறு[மை] + பெரியவன்]

வெறும்பேச்சு

 வெறும்பேச்சு veṟumbēccu, பெ.(n.)

   வீண்சொல்; unneccessary-talk.

     [வெறு[மை] + பேச்சு]

வெறும்பொய்

 வெறும்பொய் veṟumboy, பெ.(n.)

   மெய்யின் கலப்பு அற்ற முழுப்பொய்; down fight le, unmixed false hood.

     [வெறு[மை] + பொய்]

வெறும்வயிறு

வெறும்வயிறு veṟumvayiṟu, பெ.(n.)

   1. ஒன்றுமில்லா வயிறு; empty stomach.

   2. கருவுறாத வயிறு; abdomen with impregnation.

     [வெறு[மை] + வயிறு]

வெறுவயிறு

வெறுவயிறு veṟuvayiṟu, பெ.(n.)

   1. ஒன்று மில்லா வயிறு; empty stomach.

   2. கருவுறாத வயிறு; abdomen with impregnation.

     [வெறு[மை] + வயிறு]

வெறுவாக்கிலங்கெட்டவன்

 வெறுவாக்கிலங்கெட்டவன் veṟuvākkilaṅgeṭṭavaṉ, பெ.(n.)

வெறுவாய்க்கிலை கெட்டவன் பார்க்க;see veru-vay-k-kilai-kettavan.

     [வெறுவாய்க்கு + இலை + கெட்டவன்]

வெறுவாயலட்டு-தல்

வெறுவாயலட்டு-தல் veṟuvāyalaṭṭudal, செ.கு.வி.(v.i.)

   1. வீண் பேச்சுப் பேசுதல் (யாழ்.அக.);; to ulter empty or useless words.

   2. வெறுவாய்கூறு-, பார்க்க;see veru-way-kuru-

   3. தற்பெருமை பேசுதல்; to brag.

     [வெறு[மை] + வாய் + அலட்டு-தல்]

வெறுவாய்

 வெறுவாய் veṟuvāy, பெ.(n.)

   வறிதானவாய்; empty mouth.

     [வெறு[மை] + வாய்]

வெறுவாய்கூறு-தல்

 வெறுவாய்கூறு-தல் veṟuvāyāṟudal,    செ.கு.வி.(v.i) பிதற்றுதல் (வின்.); to babble.

     [வெறு[மை] + வாய் + கூறு]

வெறுவாய்க்கிலைகெட்டவன்

 வெறுவாய்க்கிலைகெட்டவன் veṟuvāyggilaigeṭṭavaṉ, பெ.(n.)

   ஒன்றுமில்லாத ஏழை எவறும் வாயில் வெற்றிலை போட்டுக் கொள்ளவும் ஏதுமற்றவன் (சீவக. அரும்.);; extremely poor man, as not even having a betel leaf to chew, used in contempt.

     [வெறுவாய்க்கு + இலை + கெட்டவன்]

வெறுவாய்க்குமட்டல்

 வெறுவாய்க்குமட்டல் veṟuvāykkumaṭṭal, பெ.(n.)

வெள்ளோர்க்காளம் பார்க்க;see vellor-k-kasam.

     [வெறு[மை] + வாய் + குமட்டல்]

வெறுவாய்பசப்பு

வெறுவாய்பசப்பு1 veṟuvāypasappudal, செ.கு.வி.(v.i.)

வெறுவாயலட்டு 1 பார்க்க (யாழ்.அக.);;see veru-vay-alattu 1.

     [வெறு[மை] + வாய் + பசப்பு]

 வெறுவாய்பசப்பு2 veṟuvāypasappudal, செ.குன்றாவி.(v.t.)

   வெறுஞ் சொற்களால் வசப்படுத்துதல்; to loax with empty words.

     [வெறு[மை] + வாய் + பசப்பு]

வெறுவியர்

வெறுவியர் veṟuviyar, பெ.(n.)

   1. பயனற்றவர்; worthless, insignificant persons.

     “இருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற் கேட்டு” (தேவா. 962,5);.

     [வெறு[மை] + இயர்]

வெறுவெளி

 வெறுவெளி veṟuveḷi, பெ.(n.)

   வெற்றிடம்; etheric space.

     [வெறு [மை] + வெளி → வெறுவெளி]

வெற்பஞ்சனம்

 வெற்பஞ்சனம் veṟpañjaṉam, பெ.(n.)

   நீலாஞ்சனக்கல், துருக; blue vitriol-copper sulphate.

வெற்பன்

 வெற்பன் veṟpaṉ, பெ.(n.)

   குறிஞ்சி நிலத் தலைவன் (பிங்.);; chief of kurinicitract.

     [வெள் → வெறு → வெற்பன்]

வெற்பிரதம்

 வெற்பிரதம் veṟpiradam, பெ.(n.)

   ஒருவகை மருந்துக்கல் (தைலவ.);; foliated crystallised gypsum.

வெற்பு

வெற்பு veṟpu, பெ.(n.)

   1. மலை (பிங்.);; mountain, hill.

     “மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில்’ (திருமுரு. 12);.

   2. பக்க மலை (ஐங்குறு. அரும்.);; foothill spur.

வெற்பேந்தி

வெற்பேந்தி1 veṟpēndi, பெ.(n.)

   செடிவகை; sickle-leaf.

 வெற்பேந்தி2 veṟpēndi, பெ.(n.)

   மலை தாங்கிப் பூடு; a plant-sida acuta.

இதனால் பாரிப்பு, இழுப்பு நோய் நீங்கும்.

வெற்றம்

வெற்றம் veṟṟam, பெ.(n.)

   1. வெற்றி பார்க்க;see verri.

     “வேற்றுப்புலம் போகி நல் வெற்றங்கெடுத்து” (சிலப். 11, 212);.

   2. வீரம் (அக.நி.);; courage.

     [வெல் → விர் → விறு → வீறு → வெற்றம்)

வெற்றர்

வெற்றர் veṟṟar, பெ.(n.)

   1. ஏழைகள்; poor people.

     “வீடுதோ றிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளந் துடித்தேன்”(அருட்யா. iv, பிள்ளைப் பெரு. 58);.

   2. பயனற்றார்; worthless persons.

     “நின்றனடியரோடன்றி மற்றுமோர் வெற்றருள் வாழேன்” (அருட்பா. ii,அவத்தொழிற். 8);.

     [வெற்று + அர்]

வெற்றல்

வெற்றல் veṟṟal, பெ.(n.)

வெற்றி பார்க்க;see verri.

     “வெற்றல் வேல்வேந்தர்க் கினது” (இனி. நாற். 36);.

வெற்றாள்

வெற்றாள் veṟṟāḷ, பெ.(n.)

   1. வேலையில்லாத வ-ன்-ள்; un employed person.

   2. குடும்பச் சுமையின்றித் தனித்திருப்பவன்-ள்;(யாழ்.அக.);; lonely person without any family responsibilities.

   3. பயனற்றவன்-ள்; worthless person.

     [வெற்று + ஆள்]

வெற்றி

வெற்றி1 veṟṟi, பெ.(n.)

   வெல்கை, வாகை (பிங்);; victory, success, conquest, triumph.

     “வெற்றிக்கருளக்” (கொடியான். திவ். நாய்ச். 13,7);.

     [வெல் → விர் → விறு → வீறு = வெற்றி] [தே.நே.பக். 89]

 வெற்றி2 veṟṟi, பெ.(n.)

   1. (போர், போட்டி

   முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வு; victory, success,

     ‘அவர் ஆயிரம் ஒப்போலை வேறுபாட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

     ‘வெற்றி தோல்வி இல்லாமல் போட்டி முடிவடைந்தது’.

   2. (எடுத்துக் கொண்ட முயற்சியின்); பயன் நிறைந்த முடிவு; successful completion.

     ‘உன் முயற்சிகள் வெற்றி பெற என் வாழ்த்துகள்’.

     ‘பேச்சு வெற்றி அடைந்தது’.

   3. (திரைப்படம் நாடகம் முதலியவை நல்ல வசூல் கொடுத்து); நீண்ட நாள் நடைபெறும் நிலை;     ‘கலைப் படங்கள் வெற்றி அடைவதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

     [வெல் → (வில்); → (விர்); → விறு (வில்); → வீறு வெற்றி] [தே.நே.பக்.89]

வெற்றிகாண்(ணு)-தல்

 வெற்றிகாண்(ணு)-தல் veṟṟikāṇṇudal, செ.கு.வி.(v.i.)

   வெற்றிபெறுதல் (வின்.);; to gain a victory, to win.

     [வெற்றி + காண்[ணு]-,]

வெற்றிகொண்ட சோழன்

 வெற்றிகொண்ட சோழன் veṟṟigoṇṭacōḻṉ, பெ.(n.)

   முதலாம் இராச இராசன் சிறப்புப் பெயர் (சயங்கொண்ட சோழன்);; surname of the chola king Raja Raja.

     [வெற்றி+கொண்ட+சோழன்]

வெற்றிகொள்ளல்

 வெற்றிகொள்ளல் veṟṟigoḷḷal, பெ.(n.)

   வெல்லுதல்; win, succeed.

     [வெற்றி + கொள்ளல்]

வெற்றிக்கடுக்காய்

 வெற்றிக்கடுக்காய் veṟṟikkaḍukkāy, பெ.(n.)

   பெரிய மரவகை (தைலவ.);; crape myrtle.

     [வெற்றி + கடுக்காய்]

வெற்றிக்கம்பம்

 வெற்றிக்கம்பம் veṟṟikkambam, பெ.(n.)

வெற்றித்தம்பம் பார்க்க (யாழ்.அக.);;see verri-t-tambam.

     [வெற்றி + கம்பம்]

வெற்றிக்கரந்தைமஞ்சரி

வெற்றிக்கரந்தைமஞ்சரி veṟṟikkarandaimañjari, பெ.(n.)

   தொண்ணுற்றாறு வகைப் பனுவ(பிரபந்தம்);லுள் பகைவர் கவர்ந்து சென்ற நிரையைக் கரந்தை மாலை சூடிய வீரர் மீட்பதைக் கூறும் நூல் வகை; a poem celebrating the recovery of cattle from the enemies who had captured them by warriors in pursuit wearing karantai, one of 96 kinds pirapantam.

     [வெற்றி + கரந்தை + மஞ்சரி]

வெற்றிக்கீர்த்தி

வெற்றிக்கீர்த்தி veṟṟikārtti, பெ.(n.)

வெற்றிப்புகழ் பார்க்க (தக்கயாகப், 483, உரை);;see Verri-p-pugal.

     [வெற்றி + கீர்த்தி]

வெற்றிக்குதிரை

 வெற்றிக்குதிரை veṟṟikkudirai, பெ.(n.)

   போட்டி (பந்தயம்);யில் வென்ற குதிரை (யாழ்.அக.);; winning horse in a race.

     [வெற்றி + குதிரை]

வெற்றிக்கொடி

வெற்றிக்கொடி veṟṟikkoḍi, பெ.(n.)

   வாகையைக் குறிக்க எடுக்கும் கொடி; flag of victory.

     “இவ்வாயர் மகள் தோள்……. வெற்றிக்கொடியை உண்டாக்கினவாம்” (கலித்.101,37, உரை);.

     [வெற்றி + கொடி]

வெற்றிசூடு-தல்

 வெற்றிசூடு-தல் veṟṟicūṭudal, செ.கு.வி. (v.i.)

   வெற்றி பெறுதல்; to gain a victory. [வெற்றி + சூடு-,]

வெற்றிச்சின்னம்

 வெற்றிச்சின்னம் veṟṟicciṉṉam, பெ.(n.)

   வென்ற பரிசிற்பொருள்; trophy.

     [வெற்றி + சின்னம்]

வெற்றிச்சீட்டு

 வெற்றிச்சீட்டு veṟṟiccīṭṭu, பெ.(n.)

   குலுக்கல் பரிசுச் சீட்டில் வெற்றியைக் குறிக்குஞ் சீட்டு (யாழ்.அக.);; the winning tickets, as in a lottery.

     [வெற்றி + சிட்டு]

வெற்றிடக்குழல்கள்

 வெற்றிடக்குழல்கள் veṟṟiḍakkuḻlkaḷ, பெ.(n.)

   தொடக்ககாலக் கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு உறுப்பு; vacumm tubes.

     [வெற்றிடம் + குழல்கள்]

வெற்றிடம்

வெற்றிடம்1 veṟṟiḍam, பெ.(n.)

   வெறுமையான இடம் (பொருந. 245, உரை);; vacant place.

     [வெற்று + இடம்]

 வெற்றிடம்2 veṟṟiḍam, பெ.(n.)

   1 காற்றில்லாதவிடம்; vaccum.

   2. வெறுவெளி; etheric space.

     [வெற்று + இடம்]

வெற்றித்தண்டை

 வெற்றித்தண்டை veṟṟittaṇṭai, பெ.(n.)

   வீரக்கழல் (யாழ்.அக.);; anklet warn on the leg, as a sing of victory.

     [வெற்றி + தண்டை]

வெற்றித்தம்பம்

வெற்றித்தம்பம் veṟṟittambam, பெ.(n.)

   1. வாகைக்கம்பம் (வின்.);; column erected in commemoration of a victory, triumphal column.

   2. வெற்றிக் கொடியைக் கட்டியுள்ள கம்பம் (யாழ்.அக.);; staff on which is hoisted the flag of victory.

     [வெற்றி + தம்பம்]

 Pkt. Tamba → த. தம்பம்.

வெற்றித்துவசம்

 வெற்றித்துவசம் veṟṟittuvasam, பெ.(n.)

   வெற்றிக்கொடி; victory or triumph.

     [வெற்றி + துவசம்]

 Skt. Dhvaja → த. துவசம்,

வெற்றிப்பத்திரம்

வெற்றிப்பத்திரம் veṟṟippattiram, பெ.(n.)

   இரு பக்கத்தார் உரையையும் கேட்ட பின்னர் கொடுக்கப்படும் வெற்றியாவணம்(சுக்கிரநீதி. 92);; document embodying the judicial decision in a contested case.

     [வெற்றி + பத்திரம்]

 Skt. Bhadra → த. பத்திரம்.

வெற்றிப்பரிசு

 வெற்றிப்பரிசு veṟṟipparisu, பெ.(n.)

   வெற்றி வாகை சூடிய பொருள்; memorial of victory.

     [வெற்றி + பரிசு]

வெற்றிப்பாடு

வெற்றிப்பாடு veṟṟippāṭu, பெ.(n.)

   வெற்றியாற் பெற்ற பெருமை; greatness attained by victory.

     “வெற்றிப்பாடுங் குணப்பாடும்…… தெற்றிப்பாட” (தமிழ்நா.234);

     [வெற்றி + பாடு]

வெற்றிப்புகழ்

வெற்றிப்புகழ் veṟṟippugaḻ, பெ.(n.)

   1. வெற்றியால் உண்டாகும் புகழ் (வின்.);; fame due to victory, as in war.

   2. போரில் அடைந்த வெற்றியைப் புகழ்கை; eulogy on a viclorious campaign.

     [வெற்றி + புகழ்]

வெற்றிப்பூ

 வெற்றிப்பூ veṟṟippū, பெ.(n.)

   வெற்றிக் குறியாக அணியப்படும் பூ, வாகை மாலை (பிங்.);; flower worn as a sign of victory.

     [வெற்றி + பூ]

வெற்றிமகள்

வெற்றிமகள் veṟṟimagaḷ, பெ.(n.)

வெற்றி மடந்தை பார்க்க;see verri-madantai.

     “பிறரை வென்று வெற்றி மகளைத் தன்னிடத்து மீட்டுக்கொண்டு”(பு. வெ.ஒழிபு. 13);.

     [வெற்றி + மகள்]

வெற்றிமடந்தை

 வெற்றிமடந்தை veṟṟimaḍandai, பெ.(n.)

   வெற்றித்திருமகள் (செயலெட்சுமி);; the goddess of victory.

     [வெற்றி + மடந்தை]

வெற்றிமாலை

 வெற்றிமாலை veṟṟimālai, பெ.(n.)

வெற்றி வாகை பார்க்க;see verri-Vagai.

     [வெற்றி + மாலை]

வெற்றிமுரசு

வெற்றிமுரசு1 veṟṟimurasu, பெ.(n.)

   வெற்றிக் குறியாக முடிக்கப்படும் பேரிகை; drum beaten in token of victory.

     [வெற்றி + முரசு]

 வெற்றிமுரசு veṟṟimurasu, பெ.(n.)

   வெற்றியை அறிவிக்க அடிக்கப்படும் முரசு (சுயபேரிகை.);; drum of victory.

மறுவ, வெற்றிபேரிகை

     [வெற்றி+முரசு]

வெற்றிமை

வெற்றிமை1 veṟṟimai, பெ.(n.)

   1. வெற்றியாகிய தன்மை; victoriousness, victory.

   2. மேம்பாடு; distinctive, greatness.

     “ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்” (தோ. 1019, 9);.

     [வெற்றி → வெற்றியை]

 வெற்றிமை2 veṟṟimai, பெ.(n.)

   வெறுமை; emptiness, barrenness, bareness.

     “முதுகுந் தலையும் வெற்றிமைப் பட்டுப் பருஷ்மா யிராதபடி” (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 173);.

     [வெறுமை → வெற்றுமை]

வெற்றிலை

வெற்றிலை veṟṟilai, பெ.(n.)

   1. கொடிவகை; betel pepper.

   2. பாக்குஞ் சுண்ணாம்புஞ் சேர்ந்து மென்று தின்பதற்குரிய வெற்றிலைக் கொடியின் இலை; betel leaf.

     “பருகுநீர் தின்னும் வெற்றிலை” (திவ். திருவாய். 6,7,1);.

     [வெள்ளிலை → வெற்றிலை]

     [தே.நே.பக். 126]

வெள்ளிலை பூ காய் கனியில்லாத வெறுங்கொடியின் இலை.

வெற்றிலை பாக்குக்கொடு- த்தல்

வெற்றிலை பாக்குக்கொடு- த்தல் veṟṟilaipākkukkoḍuttal, செ.கு.வி.(v.i.)

   1. தம்பலம் (தாம்பூலம்); வழங்கி மதிப்புரவு (மரியாதை); செய்தல்; to show civility by the distributiion of betels and areca-nuts.

   2. வெற்றிலையிடு-, 2 பார்க்க;see verrilai-y-idu-, 2.

     [வெற்றிலை + பாக்கு + கொடு-,]

வெற்றிலைக்கத்துரி

 வெற்றிலைக்கத்துரி veṟṟilaikkatturi, பெ.(n.)

   செடிவகை; musk mallow.

வெற்றிலைக்காய்

 வெற்றிலைக்காய் veṟṟilaikkāy, பெ.(n.)

   வெற்றிலைக் கொடியின் காய் (யாழ்.அக.);; fruit of betel vine.

     [வெற்றிலை + காய்]

வெற்றிலைக்கால்

 வெற்றிலைக்கால் veṟṟilaikkāl, பெ.(n.)

வெற்றிலைத்தோட்டம் (வின்.); பார்க்க;see verrilai-t-tottam.

     [வெற்றிலை + கால்]

வெற்றிலைக்காளாஞ்சி

 வெற்றிலைக்காளாஞ்சி veṟṟilaikkāḷāñji, பெ.(n.)

வெற்றிலைப்படிக்கம் பார்க்க;see Verrilai-p-padikkam.

     [வெற்றிலை + காளாஞ்சி]

வெற்றிலைக்கொடி

 வெற்றிலைக்கொடி veṟṟilaikkoḍi, பெ.(n.)

   தம்பல (தாம்பூல);வல்லி; betel vine.

     [வெற்றிலை + கொடி]

வெற்றிலைக்கொழுந்து

வெற்றிலைக்கொழுந்து1 veṟṟilaikkoḻundu, பெ.(n.)

வெற்றிலை 1 பார்க்க;see verrilai 1.

     [வெற்றிலை + கொழுந்த]

 வெற்றிலைக்கொழுந்து2 veṟṟilaikkoḻundu, பெ.(n.)

   இளவெற்றிலை; tender betel leaf.

     [வெற்றிலை + கொழுந்து]

வெற்றிலைசுருட்டி

 வெற்றிலைசுருட்டி veṟṟilaisuruṭṭi, பெ.(n.)

   ஒரு வகைப் புழு; a kind of worm which rools the betel leaf.

     [வெற்றிலை + சுருட்டி]

 வெற்றிலைசுருட்டி veṟṟilaisuruṭṭi, பெ.(n.)

   வெற்றிலைப் புழுவகை (யாழ்.அக.);; a betel pest.

     [வெற்றிலை + சுருட்டி]

வெற்றிலைச்சருகு

 வெற்றிலைச்சருகு veṟṟilaiccarugu, பெ.(n.)

   காய்ந்த வெற்றிலை இல்லை; dried betel leaf.

     [வெற்றிலை + சருகு]

வெற்றிலைச்சரை

 வெற்றிலைச்சரை veṟṟilaiccarai, பெ.(n.)

வெற்றிலைத்தட்டி (யாழ்.அக.); பார்க்க;see verrilai-t-tatti.

     [வெற்றிலை + சரை]

வெற்றிலைச்சாறு

 வெற்றிலைச்சாறு veṟṟilaiccāṟu, பெ.(n.)

   வெற்றிலையைக் கசக்கி எடுக்கும் சாறு, நஞ்சை சுருக்கிடவுதவும்; juice of betel leaf, used for treating arsenic.

     [வெற்றிலை + சாறு]

வெற்றிலைச்சுருள்

 வெற்றிலைச்சுருள் veṟṟilaiccuruḷ, பெ.(n.)

   வெற்றிலையிற் பாக்குவைத்துக் கட்டிய சுருள்; betel leaves rolled up with areca-nut parings.

     [வெற்றிலை + சுருள்]

வெற்றிலைச்செல்லம்

 வெற்றிலைச்செல்லம் veṟṟilaiccellam, பெ.(n.)

வெற்றிலைப்பெட்டி பார்க்க;see verrilal-p-petti.

     [வெற்றிலை + செல்வம்]

வெற்றிலைத்தட்டம்

 வெற்றிலைத்தட்டம் veṟṟilaittaṭṭam, பெ.(n.)

வெற்றிலைத்தட்டு பார்க்க;see Verrilal-t-tattu.

     [வெற்றிலை + தட்டம்]

வெற்றிலைத்தட்டி

வெற்றிலைத்தட்டி1 veṟṟilaittaṭṭi, பெ.(n.)

   வெற்றிலையை உள்ளடக்கி வைக்கும் வாழையிலை முதலியவற்றாலான கூடு (யாழ்.அக.);; cover made of plaintain leaves, straw or ola, for betels.

     [வெற்றிலை + தட்டி]

 வெற்றிலைத்தட்டி2 veṟṟilaittaṭṭi, பெ.(n.)

   வெற்றிலைச்சருகு; dried betel leaf.

     [வெற்றிலை + தட்டி]

வெற்றிலைத்தட்டு

 வெற்றிலைத்தட்டு veṟṟilaittaṭṭu, பெ.(n.)

   வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு முதலியன வைக்குந் தட்டம்; salver for betels, areca-nut, chunam, etc.

     [|வெற்றிலை + தட்டு]

வெற்றிலைத்தண்டுலம்

 வெற்றிலைத்தண்டுலம் veṟṟilaittaṇṭulam, பெ.(n.)

   வேம்பின் மேற் புல்லுருவி; parasitic plant on neem tree.

     [வெற்றிலை + தண்டுலம்]

வெற்றிலைத்தம்பலம்

 வெற்றிலைத்தம்பலம் veṟṟilaittambalam, பெ.(n.)

   வெற்றிலை பாக்கு மென்ற எச்சில் (யா.அக.);; red spittle of chewed betel leaves.

     [வெற்றிலை + தம்பலம்]

வெற்றிலைத்தாம்பாளம்

 வெற்றிலைத்தாம்பாளம் veṟṟilaittāmbāḷam, பெ.(n.)

வெற்றிலைத்தட்டு பார்க்க;see verrilai-t-tattu.

     [வெற்றிலை + தாம்பாளம்]

வெற்றிலைத்தோட்டம்

 வெற்றிலைத்தோட்டம் veṟṟilaittōṭṭam, பெ.(n.)

   வெற்றிலைக்கொடி பயிர் செய்யுந் தோட்டம்; betel garden.

     [வெற்றிலை + தோட்டம்]

வெற்றிலைநறுக்கி

 வெற்றிலைநறுக்கி veṟṟilainaṟukki, பெ.(n.)

   செடிவகை (யாழ்.அக.);; a kind of plant.

வெற்றிலைநாரி

 வெற்றிலைநாரி veṟṟilaināri, பெ.(n.)

   ஒருவகைப் புல்; a kind of grass.

வெற்றிலைநாறி

 வெற்றிலைநாறி veṟṟilaināṟi, பெ.(n.)

   ஒரு வகைப் புதர் (யாழ்.அக.);; a kind of shrub.

     [வெற்றிலை + நாறி]

வெற்றிலைபாக்கு

 வெற்றிலைபாக்கு veṟṟilaipākku, பெ.(n.)

   தம்பலம் (தாம்பூலம்);; betels andareca-nuts.

     [வெற்றிலை + பாக்கு]

வெற்றிலைபாக்குவை-த்தல்

 வெற்றிலைபாக்குவை-த்தல் veṟṟilaipākkuvaittal, செ.கு.வி.(v.i.)

வெற்றிலை வை-, பார்க்க;see Verrilai-vai-.

     [வெற்றிலை + பாக்கு + வை-,]

வெற்றிலைப்படலிகை

வெற்றிலைப்படலிகை veṟṟilaippaḍaligai, பெ.(n.)

   வெற்றிலை வைக்குங் கூடை (சீவக. 826, உரை);; basket for betels.

     [வெற்றிலை + படலிகை]

வெற்றிலைப்படிக்கம்

 வெற்றிலைப்படிக்கம் veṟṟilaippaḍikkam, பெ.(n.)

   தம்பலந் துப்புங் கலம்; spittoon.

     [வெற்றிலை + பழக்கம்]

வெற்றிலைப்பட்டி

 வெற்றிலைப்பட்டி veṟṟilaippaṭṭi, பெ.(n.)

வெற்றிலைச்சுருள் பார்க்க;see verrilai-c-curul.

     [வெற்றிலை + பட்டி]

வெற்றிலைப்பட்டை

 வெற்றிலைப்பட்டை veṟṟilaippaṭṭai, பெ.(n.)

   காட்டுக்குமிழ்; mulberry of western ghatscallicarpes lanata.

     [வெற்றிலை + பட்டை]

வெற்றிலைப்பழு

 வெற்றிலைப்பழு veṟṟilaippaḻu, பெ.(n.)

   பழுத்த வெற்றிலை; sere betel.

     [வெற்றிலை + பழு]

வெற்றிலைப்புழு

 வெற்றிலைப்புழு veṟṟilaippuḻu, பெ.(n.)

வெற்றிலைப்பூச்சி பார்க்க;see verrilai-p-ppucci.

     [வெற்றிலை + புழு]

வெற்றிலைப்பூச்சி

 வெற்றிலைப்பூச்சி veṟṟilaippūcci, பெ.(n.)

   வெற்றிலையிலுள்ள நச்சு புழு; a kind of small worm in betel leaves, said to be poisonous.

வெற்றிலைப்பூமணி

 வெற்றிலைப்பூமணி veṟṟilaippūmaṇi, பெ.(n.)

   மகளிரணி வகை (யாழ்.அக.);; a kind of jewel worn by women.

     [வெற்றிலை + பூமணி]

வெற்றிலைப்பெட்டி

 வெற்றிலைப்பெட்டி veṟṟilaippeṭṭi, பெ.(n.)

   வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்கும் சிறு பெட்டி; a small box for betels, areca-nuts, chunam, etc.

     [வெற்றிலை + பெட்டி]

வெற்றிலைப்பை

 வெற்றிலைப்பை veṟṟilaippai, பெ.(n.)

   தம்பலம் (தாம்பூலம்); வைக்கும் பை; a bag for betels, areca-nut, parings, etc.

     [வெற்றிலை + பை]

வெற்றிலைமடல்

 வெற்றிலைமடல் veṟṟilaimaḍal, பெ.(n.)

   வெற்றிலை வைக்கும் பெட்டிவகை; a small box for betels.

     [வெனற்றிலை + மடல்]

வெற்றிலைமடிப்பு

 வெற்றிலைமடிப்பு veṟṟilaimaḍippu, பெ.(n.)

   வெற்றிலைச் சுருள்; roll of betel leef and Arecaunut.

     [வெற்றிலை + மடிப்பு]

வெற்றிலையமுது

வெற்றிலையமுது veṟṟilaiyamudu, பெ.(n.)

   இறைவன் படையலுக்கான வெற்றிலை; betels offered to deities.

     “வெற்றிலை யமுது அறுபதுக்குமாக” (S.I.I.iii,116,32);.

     [வெற்றிலை + அமுது]

வெற்றிலையிடு-தல்

வெற்றிலையிடு-தல் veṟṟilaiyiḍudal, செ.கு.வி. (v.i.)

   1. வெற்றிலைபாக்குக்கொடு-,1 பார்க்க;see versilai-pakku-k-kodu-.

   2. பிரிந்து செல்வதற்கு வெற்றிலை வழங்கி விடை கொடுத்தல்; to give permission to leave, by the giving of betels and arecanuts.

     “கொன்று வருகிறோம் எங்களுக்கு வெற்றிலையிட்டருளிர்” (ஈடு 4,1,2);.

     [வெற்றிலை + இடு-,]

வெற்றிலையோடு-தல்

 வெற்றிலையோடு-தல் veṟṟilaiyōṭudal, செ.கு.வி.(v.i.)

   தம்பலம் பூணுதல்; to chew betel.

     [[வெற்றிலை + போடு-,]

வெற்றிலைவல்லி

 வெற்றிலைவல்லி veṟṟilaivalli, பெ.(n.)

   வெற்றிலைவல்லி; betelvine-piper betel.

     [வெற்றிலை + வல்லி]

வெற்றிலைவள்ளி

 வெற்றிலைவள்ளி veṟṟilaivaḷḷi, பெ.(n.)

   வள்ளிக்கொடிவகை (இலத்);; betel yam.

     [வெற்றிலை + வள்ளி]

வெற்றிலைவள்ளிக்கிழங்கு

வெற்றிலைவள்ளிக்கிழங்கு veṟṟilaivaḷḷikkiḻṅgu, பெ.(n.)

__,

பெ.(n.);

   1. உணவுக்குரிய ஒரு வகைக் கிழங்கு

 vegetable root.

இதுவே காய்த்துளசிக் கிழங்கு.

   2. நாகவள்ளிக் கிழங்கு; dioscorea opposititolia.

     [வெற்றிலை + வள்ளி + கிழங்கு]

வெற்றிலைவாணியர்

வெற்றிலைவாணியர் veṟṟilaivāṇiyar, பெ.(n.)

இலைவாணியர் பார்க்க;see ilai. vaniyar(S.I.I.iv.496);.

     [வெற்றிலை + வாணியர்]

வெற்றிலைவெடிபதம்

 வெற்றிலைவெடிபதம் veṟṟilaiveḍibadam, பெ.(n.)

   இட்ட வெற்றிலை வெடிக்கும் பருவம் வரை காய்ச்சப்படும் மருந்தெண்ணெய்ப்பதம் (யாழ்.அக.);; a stage in the boiling of medicinal oil, when a betel thrown into it will crackle.

     [வெற்றிலை + வெடிதம்]

வெற்றிலைவை-த்தல்

 வெற்றிலைவை-த்தல் veṟṟilaivaittal, செ.கு.வி. (v.i)

   வெற்றிலைபாக்கு வைத்து திருமணம் முதலிய சிறப்பிற்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல்; to invite relations, friends, etc. by offering betels and areca-nuts, as to a wedding.

     [வெற்றிலை + வை-,]

வெற்றிழுப்பு

 வெற்றிழுப்பு veṟṟiḻuppu, பெ.(n.)

   பயனற்ற செயல்; rain attempt, futile effort.

வெற்றிவாகை

 வெற்றிவாகை veṟṟivākai, பெ.(n.)

   வெற்றிக் குறியாகச் சூடும் வாகைமாலை; wreath of siris flowers, worn as an emblem of victory.

     [வெற்றி + வாகை]

வெற்றிவெறிது

வெற்றிவெறிது veṟṟiveṟidu, பெ.(n.)

   பயன் சிறிதுமின்மை; absolute worthlessness.

     “வெற்றி வெறிதே பெற்றதாய் வேம் பேயாக வளர்த்தாளே” (திவ். நாய்ச். 137);.

     [வெற்றி + வெறிது]

வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை veṟṟivēṟkai, பெ.(n.)

   தமிழில் உள்ள ஒரு அறநூல்; code of laws, treatise on civil and religious duties in tamil.

ஆத்திசூடி என்பதைப் போல் இது வெற்றிவேற்கை என்று தொடங்கும் முதலை யுடைமையால் இவ்வாறு பெயர் பெற்றது. இதற்கு நறுந்தொகை யெனவும் பெயர் உண்டு. இந்நூற் செய்யுட்கள் யாவும் நூற்பா வடிவில் அமைந்துள்ளன. இப்பாக்கள் பெரும்பாலும் ஒவ்வோரடியால் ஆகியவை 84 பாடல்கள் இதனில் உள்ளன. இதனை இயற்றியவர் அதி வீரராமபாண்டியர் என்னும் அரசராவர்.

     [வெற்றி + வேற்கை]

வெற்றிவேற்செழியன்

 வெற்றிவேற்செழியன் veṟṟivēṟceḻiyaṉ, பெ.(n.)

   இவன் பாண்டி நாட்டில் கொற்கையில் இருந்து அரசு செய்தவன்; he was administration at korkai in pandinagu.

பாண்டியன் நெடுஞ்செழியன் தான் அரசு முறை கோயதன் விளைவாக மாண்ட பிறகு மதுரை நகர் புரப்பாரின்றிக் கெட்டழிந்து நல்ல மழையில்லாமையாலும் வேறு பல செயல்களாலும் நாடு நாடோறுஞ் சீரழிந்து கொண்டிருந்தது. கொற்கையில் இருந்த இவன் மதுரையை அடைந்து அரசாட்சியை மேற்கொண்டான். நேர்ந்துள்ள தீமைகட்கெல்லாம் கழுவாய் செய்தான். அதன் பிறகு நாடு செழித்து நன்னிலைக்கு வந்தது.

வெற்று

வெற்று veṟṟu, பெ.எ.(adj.)

   1. (ஒன்றில் இருக்க வேண்டியது); எதுவும் இல்லாத வெறும்; empty, bare, blank.

     ‘வெற்றுத்து முக்கியைக் காட்டி அச்சுறுத்தி விட்டான். இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு வெற்று மார்போடு நின்று பூசை செய்தார்’.

   2. எதிர்பார்க்கும் பயனை விளைவிக்காத; useless.

     ‘சிக்கலுக்குத் தீர்வு இல்லை, ஆக நாம் இதுவரை வெற்றுப் பேச்சுதான் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்’.

     [வெள் → வெறு → வெற்று] [தே.நே.பக்.126)

வெற்றுகம்

 வெற்றுகம் veṟṟugam, பெ.(n.)

   வட்டத்துத்தி; a plant-abutilon indicum.

வெற்றுக்கட்டை

வெற்றுக்கட்டை veṟṟukkaṭṭai, பெ.(n.)

வெற்றாள் 2 பார்க்க;see verral 2.

     [வெள் → வெறு → வெற்று → கட்டை)

வெற்றுக்கால்

 வெற்றுக்கால் veṟṟukkāl, பெ.(n.)

   வெறுங்கால்; bare foot.

     [வெள் → வெறு → வெற்று + கால்]

வெற்றுடம்பு

வெற்றுடம்பு veṟṟuḍambu, பெ.(n.)

   1. சதைப் பிடிப்பில்தவுடம்பு; body without much flesh.

   2. இயல்பானவுடம்பு; body in its natural state, mere body.

   3. கருப்பமில்லாதவுடம்பு; body without conception.

   4. உடையுடுத்தாதவுடம்பு; naked body.

     [வெறு → வெற்று + உடம்பு] [தே.நே.பக்.126]

வெற்றுடம்புக்காரி

 வெற்றுடம்புக்காரி veṟṟuḍambukkāri, பெ.(n.)

   கருப்பமடையாத பெண்; woman not carring.

     [வெற்றுடம்பு + கார]

வெற்றுடல்

வெற்றுடல் veṟṟuḍal, பெ.(n.)

   1. வெறிதாய உடம்பு; bare, unadorned body.

   2. பிணம்; corpse, as lifeless.

     “விருந்தினராய வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி” (சீவக. 1969);.

     [வெள் → வெறு → வெற்று வெற்றுடல்] [தே.தே.பக்.126]

வெற்றுப்பேச்சு

 வெற்றுப்பேச்சு veṟṟuppēccu, பெ.(n.)

   வீண்பேச்சு; ldle talk.

     [வெற்று + பேச்சு]

வெற்றுரை

வெற்றுரை veṟṟurai, பெ.(n.)

   பொருளற்ற சொல்; meaningless word.

     “வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை” (நீதிநெறி.21);.

     [வெள் → வெறு → வெற்று → வெற்றுரை)

வெற்றுவட்டி

 வெற்றுவட்டி veṟṟuvaṭṭi, பெ.(n.)

   வட்டிப் பணம்; pure interest.

மொத்த வட்டியில், உருவாக்க வட்டி, முதலீடு, வரவு செலவுகள் வட்டியை கழித்தபின் எஞ்சி நிற்பதே வெற்று வட்டி.

     [வெற்று + வட்டி]

வெற்றெனத்தொடுத்தல்

வெற்றெனத்தொடுத்தல் veṟṟeṉattoḍuttal, பெ.(n.)

   நூற்குற்றம் பத்தனுள் பயனில் சொற்றொடர்படக் கூறுவது (நன். பொது.);; prolixity or verbosity in literary composition, as being barren of ideas, one of 10 nur-kurram.

வெற்றெனல்

 வெற்றெனல் veṟṟeṉal, பெ.(n.)

   வெறுமை யாதற்குறிப்பு; expr, of being empty.

     [வெறு → வெற்று → வெற்றெனல்]

வெற்றெலும்பன்

 வெற்றெலும்பன் veṟṟelumbaṉ, பெ.(n.)

   ஒல்லியானவன்; bare bone.

     [வெற்று + எலும்பன்]

வெற்றெலும்பு

 வெற்றெலும்பு veṟṟelumbu, பெ.(n.)

   சதை கழிந்தவெலும்பு; bone rid of flesh.

     [வெற்று + எலும்பு]

வெற்றொழிப்பு

 வெற்றொழிப்பு veṟṟoḻippu, பெ.(n.)

   ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி வகை (யாழ்.அக.);; a figure of speech, being a variety of avanuti.

வெற்றோலை

வெற்றோலை veṟṟōlai, பெ.(n.)

   1. எழுதப் படாத ஓலை; blank, unwritten ola.

   2. மகளிரணியும் பனையோலைச் சுருளாலான காதணி; roll of palmyra leaf, worn in the ear-lobe, by women.

     ‘உமக்கு வாழ்க்கைப்பட்டு வெறுங் காதும் வெற்றோலையுமாய் நிற்கிறேனே’.

     [வெறு → வெற்று → வெற்றோலை) [தே.நே.பக். 126]

வெலங்கப்பாறை

 வெலங்கப்பாறை velaṅgappāṟai, பெ.(n.)

   தொலைதூரக் கடலடிப்பாறை (மீன.பொ.வ.);; rock in the deepest ocean.

     [விலகு → விலங்கம் → வெலங்கம் + பாறை]

வெலங்கப்போதல்

 வெலங்கப்போதல் velaṅgappōtal, பெ.(n.)

   தொலைவாய்க் கடல் மேற்செல்லுதல் (முகவை.மீன.);; sailing for a long distance.

     [விலகு → விலங்கு → வெலங்கம் + போதல்]

வெலத்தி

வெலத்தி velatti, பெ.(n.)

வெலித்தி2 பார்க்க;see veslitti.

வெலவெல-த்தல்

வெலவெல-த்தல் velavelattal, செ.கு.வி.(v.i.)

   1. களைத்தல்; to be faint with fatigue.

     ‘பசியால் வெலவெலத்துப் போனான்’.

   2. கைகால் உதறுதல்; to guake, temble, as one’s limbs.

     “குளிரால் கைகால்கள் வெலவெலக்கின்றன”.

   3. மலைத்தல்; to be dazed, astonished.

     ‘அவன் பேச்சைக் கேட்டு வெலவெலத்துப் போனான்’.

     [வெலவெல → வெலவெல-த்தல்]

வெலவெலப்பு

வெலவெலப்பு velavelappu, பெ.(n.)

   1. சோர்வடைதல்; fainting by fatigue.

   2. களைப்பு; weariness.

   3. கைகால் உதறல்; shivering of the limbs.

   4. வலுக்குறைவால் நோதல்; convulsion due to weakness.

     [வெலவெல → வெலவெலப்பு]

வெலி

வெலி veli, பெ.(n.)

   1. புறம்பாக்குகை; banishment.

   2.எழுத்தினின்றும் தவறான பகுதியை விலக்குகை; expunging.

     [வலி → வெலி]

வெலிகம்

 வெலிகம் veligam, பெ.(n.)

   கற்றாழை (மலை.);; aloe.

     [வெலி → வெலிகம்]

வெலிகயம்

 வெலிகயம் veligayam, பெ.(n.)

   சுக்காக் கீரை; country sorrel-rumex vesicarius.

வெலிசாத்து

 வெலிசாத்து velicāttu, பெ.(n.)

   ஆளைப் பிடிக்கவும், சொத்தைக் கட்டுப் படுத்தவும் இடுங் கட்டளை; warrant, as of arrest or attachment.

     ‘வெலிச்சாத்து விட்டு வீட்டைத் தடைப்படுத்தியிருக்கிறேன்’.

     [வலி → வெலி → சாற்று → சாத்து]

வெலித்தி

வெலித்தி velitti, பெ.(n.)

   1. ஒல்லி; lean person.

   2. ஆடை முதலியன கடுத்தமின்றி யிருக்கை; being lose in texture.

   3. வெள்ளோசை 1, 2 பார்க்க;see vellosai.

     [வெலி → வெலுத்த]

வெலீ இயோன்

வெலீ இயோன் velīiyōṉ, பெ.(n.)

   வெல்வித்தோன்; on who caused victory.

     “நிற்கூறும்மே வெலிஇயோ னிவனென” (புறநா. 125);.

     [வெல் → வெலஇ → வெலஇயோன்]

வெலுப்பி

 வெலுப்பி veluppi, பெ.(n.)

   ஒற்றைப் பேய் மருட்டி; a plant-phlomis zeylanica.

வெலுமசந்தி

 வெலுமசந்தி velumasandi, பெ.(n.)

   மூலிகை, உத்தாமணி; a twining plant, hedge cotton-daemia extensa.

வெல்(லு)-தல்

வெல்(லு)-தல் velludal, செ.குன்றாவி.(v.t.)

   1. வெற்றி கொள்ளுதல்; to conquer, over come.

     “எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்” (முல்லைப். 57);.

   2. ஒழித்தல்; to destroy, romove.

     “வல்வினை வெல்லவன்’ (திருநூற். 99);.

   3. ஒத்தல்; to resemble.

     “வேங்கை வென்ற கணங்கு” (ஐங்குறு. 324);. செ.கு.வி.(v.i);.

   4. மேம்படுதல்; to excel.

     “விதிமுறை யுலகினில் விளங்கி வெல்கவே”(பெரியபு. பாயி 4);.

     [வெல் → வெல்லு)-தல்]

வெல்புகழ்

வெல்புகழ் velpugaḻ, பெ.(n.)

   போர்க்கண் வெற்றியினால் உண்டாகும் புகழ்ச்சி; fame due to victory in war.

     “பாடினார் வெல்புகழைப் பல்புலவர்” (பு.வெ. 8, 1);.

     [வெல் + புகழ்]

வெல்லச்சாராயம்

 வெல்லச்சாராயம் vellaccārāyam, பெ.(n.)

   வெல்லப் பாகினின்று காய்ச்சும் சாராயம்; liquor from jaggery.

     [வெல்லம் + சாராயம்]

வெல்லச்சீருடை

 வெல்லச்சீருடை vellaccīruḍai, பெ.(n.)

   அரிசிமாவும் வெல்லமும் சேர்த்துச் செய்த சீருடைப் பணியாரம்; ball-cake of rice-flour made with coarse cane-sugar.

     [வெல்லம் + சீடை]

வெல்லடி

 வெல்லடி vellaḍi, பெ.(n.)

   வலைவகை; a kind of net.

     [வல் → வெல் → வெல்லடி]

வெல்லந்தி

 வெல்லந்தி vellandi, பெ.(n.)

   விடத்தேர்; a plant-mint-mentha crispa.

வெல்லப்பாகு

வெல்லப்பாகு1 vellappāku, பெ.(n.)

   கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி உண்டாக்கும் குழம்பு; treacle.

     [வெல்லம் + பாகு]

 வெல்லப்பாகு2 vellappāku, பெ.(n.)

   1. இன்தேன்பாகு நீர்; syrup.

   2. வெல்லப் பருகை; solution of jaggery.

     [வெல்லம் + பாகு]

வெல்லப்பாணி

 வெல்லப்பாணி vellappāṇi, பெ.(n.)

   வெல்லம் கரைத்த நீர்; solution of jaggery.

     [வெல்லம் + பாணி]

வெல்லம்

வெல்லம்1 vellam, பெ.(n.)

   கருப்பஞ்சாற்றுக் கட்டி; jaggery, unrefined cane-sugar.

     “வெல்லச்சொ னாவலர்க்கு” (தனிப்பா. 305,1);.

 வெல்லம்2 vellam, பெ.(n.)

   1. கரும்பு வெல்லம்; sugarcane jaggery.

   2. பனைவெல்லம்; palmyra jaggery.

   வகைகள் ;   1. நல்ல வெல்லம்.

   2. பனை வெல்லம்.

   3. ஈச்ச வெல்லம்; date jaggery.

   4. தெங்கின் வெல்லம்; jaggery from cocoanut toddy.

     [வெல் → வெல்லம்]

வெல்லல்

 வெல்லல் vellal, பெ.(n.)

   கொடிவகை; small elliptic-cuspidate leaved windberry.

வெல்லவட்டு

வெல்லவட்டு vellavaṭṭu, பெ.(n.)

   வெல்லத்தைக் காய்ச்சிச் சக்கரமாக ஊற்றிய துண்டு; circular piece of juggery.

     “வெல்லவட்டுப் போல் வார்த்தை சொல்லி” (கவிகுஞ் 10);.

     [[வெல்லம் + வட்டு]

வெல்லவல்

 வெல்லவல் vellaval, பெ.(n.)

   வெல்லஞ் சேர்த்துப் பிசறிய அவல்; a sweet preparation of aval or parched rice.

     [வெல்லம் + அவல் → வெல்லவல்]

வெல்லி

வெல்லி1 velli, பெ.(n.)

   சிற்றேலம் (மலை.);; a species of cardamom.

 வெல்லி2 velli, பெ.(n.)

   திறமை சாலிப்பெண்; clever woman.

     [வெல் → வெல்லி]

வெல்லுமா

 வெல்லுமா vellumā, பெ.(n.)

   புலி; tiger (w;);.

     [வெல் + மா → வெல்லுமா]

வெல்லை

வெல்லை vellai, பெ.(n.)

வெள்ளை நிறம்,

 whiteness.

     “வெல்லை யறுவை நீக்கி” (சிவதரு, சிவஞானதான. 36);.

     [(வெள்ளை → வெல்லை]

வெல்வி

 வெல்வி velvi, பெ.(n.)

   வெற்றி; victory.

     [வெல் → வெல்வி]

வெல்வினி

 வெல்வினி velviṉi, பெ. (n.)

   அறை கூவுதல், நெடுமொழி கூறல்; throwing challenge.

ம. வெல்லு விளி

     [வெல்+விளி]

உறுதியாக வெல்வேன் என விளித்துச் சூளுரைத்தல்.

வெள

வெள1 veḷa, பெ.(n.)

தமிழ் நெடுங்கணக்கில்

     ‘வ்’ என்ற மெய்யெழுத்தும்

     ‘ஒள’ என்ற உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய் எழுத்து;

 the compound of ‘வ்’ and ‘ஔ’.

     [வ் + ஒள]

 வெள2 veḷavudal, செ.குன்றாவி.(v.t.)

வெளவு பார்க்க;see vauvu.

வெளம்

 வெளம் veḷam, பெ.(n.)

   சினம், கடுப்பு; angry, impatience, exasperation.

     ‘வௌம் வந்தா அவ்வளவுதான். போட்டு ஒடைச்சிட்டுப் போயிடுவான்’.

     [வலம் → வெலம் → வெளம்]

வெளவானத்தி

வெளவானத்தி veḷavāṉatti, பெ.(n.)

   மண்டபத்தின் ஒருவகை மேல் முகடு (பெருங். மகத. 4, 16, குறிப்புரை);; a kind of vaulted roof.

     [வெளவால் + நத்து + இ]

வெளவாலோட்டி

 வெளவாலோட்டி veḷavālōṭṭi, பெ.(n.)

வவ்வாலோட்டி பார்க்க;seee vauvalotti.

     [வெளவால் + ஒட்டி]

வெளவால்

 வெளவால் veḷavāl, பெ.(n.)

வவ்வால் பார்க்க;see vavval.

வெளவால்வலை

 வெளவால்வலை veḷavālvalai, பெ.(n.)

   மீன் பிடிக்கும் வலை வகை; a kind of fishing net.

     [வவ்வால் + வலை]

வெளவு-தல்

வெளவு-தல் veḷavudal, செ.குன்றாவி.(v.t.)

   1. கைப்பற்றுதல்; to seize, snatch.

   2. ஆறுலைத்தல்; to commit highway robbery.

     “வெளவுநர் மடிய” (அகநா. 1);.

   3. திருடுதல் (யாழ்.அக.);; to steal.

   4. கவர்தல்; to rivet attention, fascinate.

     “கண்வெளவு காட்சிய” (சீவக. 1774);.

   5 .பாவம் பேய் முதலியன பற்றிக் கொள்ளுதல்; to attack as sin;

 to possess, as an evil spirit

     “பொய்யாநின்வாயில்குள் வெளவல்” (பரிபா. 8, 84);,

   6. மேற் கொள்ளுதல்; to undertake.

     “அவ் விரதத்தை வெளவுவோர்” (விநாயகபு. 38, 9);.

   7. வவ்வு3 பார்க்க;see vavvu3.

     [வ் + ஒள + உ]

வெளவுலம்

வெளவுலம் veḷavulam, பெ.(n.)

   மரவகை (சுக்கிரநீதி.228);; a kind of tree.

 வெளவுலம் veḷavulam, பெ. (n.)

   மரவகை (சுக்கிரநீதி, 228);; a kind of tree.

     [Skt. babbula → த. வௌவுலம்]

வெளி

வெளி1 veḷi, பெ.(n.)

   1. புறம்; outside.

     ‘வெளியே போ’.

   2. நிலப்பரப்பு; open space, plain.

   3. விண்வெளி; space, as an element, sky.

     “வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி” (திருவாச. 4, 141);.

   4. இடைவெளி; intervening space, room, gap.

     “வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே” (கம்பரா. திருவவதாரம், 85);.

   5. வெளிப்படை,

 openness, plainness.

   6. விளம்பரம்; publicity.

     ‘கமுக்கங்கள் வெளியாய் விட்டன’.

   7. வெளித்தோற்றம் பார்க்க see veli-t-torram.

   8. வழிவகை; means, way.

     “அன்னவை தீரும் வெளி பெற்றோம்” (கம்பரா. மகேந். 3);.

     [விள் → வெள் → வெளி)

 வெளி2 veḷittal, செ.கு.வி.(v.i.)

   1. வெளிப் படையாதல்; to be open or public.

     “வெளித்து வைகுவ தரிதெனவவருருமேவி ஒளித்து வாழ்கின்ற தருமமன்னாள்” (கம்பரா. ஊர்தேடு. 136);.

   2. உத்தி முதலியன வெளியாதல் (சப்.);; to come to light, as dishonest tricks.

     [விள் → வெள் → வெளி வெளி-]

 வெளி3 veḷi, பெ.(n.)

   1. தூய்மை; purity.

     “உளம்வெளி செய்திடும்” (சேதுபு. அசுவ. 76);.

   2. வெண்பா; venpa metre.

     [விள் → வெள் → வெளி]

 வெளி4 veḷittal, செ.கு.வி.(v.i.)

   1. விடிதல்.

 to break, as the day.

   2. தெளிதல்; to clear as the sight after dimness, or the sky after cloudiness, to brighten, as the sun or moon after being obscured, to become clear, as the meaning of an obscure verse.

   3. வெண்ணிறம்கொள்ளுதல் (கம்பரா. ஊர்தேடு. 136);; to become white.

   4. பயனிலதாதல் (இலக். அக.);; to become useless.

   5. வெறிதாதல் (யாழ்.அக.);; to be vacant.

     [விள் → வெள் → வெளி-.]

 வெளி5 veḷi, பெ.(n.)

   1. மீன்வகை; a fish.

   2. பெண்; girl.

     [வெள் → வெளி]

வெளிகண்டசொல்

 வெளிகண்டசொல் veḷigaṇṭasol, பெ.(n.)

   வெளிப்படையான சொல் (வின்.);; plain word.

     [வெளிகண்ட + சொல்]

வெளிகாண்(ணு)-தல்

 வெளிகாண்(ணு)-தல் veḷikāṇṇudal, செ.கு.வி. (v.i)

   மழை பெய்தபின் வானம் முகிலின்றித் தோன்றுதல் (இ.வ.);; to clear, as the sky after rain.

     [வெளி + காண்[ணு]-,]

வெளிகொடுவெளியே

வெளிகொடுவெளியே veḷigoḍuveḷiyē, வி.எ. (adv.)

   வெளிப்படையாய்; publicity.

     “வெளிகொடு வெளியே தேவர்களுக்கு அம்ருதத்தைக் கொடுத்துவிட்ட மஹாபாஹு” (ஈடு 1, 3, 1);.

     [வெளிகொடு + வெளியே]

வெளிகொண்டமூலி

 வெளிகொண்டமூலி veḷigoṇṭamūli, பெ.(n.)

   வெள்ளூமத்தை; dhatura bearing white flowers-datura alba.

     [வெளிகொண்ட + மூலி]

வெளிகொள்(ளு)-தல்

 வெளிகொள்(ளு)-தல் veḷigoḷḷudal, பெ.(n.)

வெளிச்சைக்கெண்டை பார்க்க;see vesiccai-k-kengal.

     [வெளி + கொள்]

வெளிக்கட்டு

 வெளிக்கட்டு veḷikkaṭṭu, பெ.(n.)

   வீட்டின் முன்பாகம்; front portion of a building.

     [வெளி + கட்டு]

வெளிக்கண்

 வெளிக்கண் veḷikkaṇ, பெ.(n.)

   வெளிப் புறக்கண்r; external eye.

     [வெளி + கண்]

வெளிக்கரு

வெளிக்கரு veḷikkaru, பெ.(n.)

   1. பூப்புச் சேலை; menustral cloth.

   2. வணிகக்குலப் பிண்டக்கரு; foetus of merchant class.

     [வெளி + கரு]

வெளிக்கவசம்

 வெளிக்கவசம் veḷikkavasam, பெ.(n.)

   வெளிப்புறக்குப்பாயம்; external coat.

     [வெளி + கவசம்]

வெளிக்காட்சி

 வெளிக்காட்சி veḷikkāṭci, பெ.(n.)

வெளித் தோற்றம் பார்க்க (வின்.);;see veli-t-torram.

     [வெளி + காட்சி]

வெளிக்காது

 வெளிக்காது veḷikkātu, பெ.(n.)

   வெளிப்புறக்காது; external ear.

     [வெளி + காது]

வெளிக்கால்

 வெளிக்கால் veḷikkāl, பெ.(n.)

   நீர்வெளியேறிச்செல்லும் வாய்க்கால்; outlet, drainage or surplus channel.

     [வெளி + கால்]

வெளிக்கிடு

 வெளிக்கிடு veḷikkiḍu, செ.கு.வி. (v.i.)

   புறப்படுதல், வெளியில் செல்லுதல்; to go out, start. (யாழ்ப்.);.

     [வெளி+கு+இடு]

ஏழன் பொருளில் நான்கன் உருபு வந்த உருபு மயக்கம்.

வெளிக்கிடு-தல்

 வெளிக்கிடு-தல் veḷikkiḍudal, செ.கு.வி. (v.i.)

   வாய்ப்பகட்டாகச் சொல்லுதல்; to speak formally or glibly.

     [வெளிக்கு + இடுதல்]

வெளிக்குப்பேசு-தல்

 வெளிக்குப்பேசு-தல் veḷikkuppēcudal, செ.குன்றாவி.(v.t.)

மனத்திற் பகைமை யிருக்கவும் பார்வைக்கு அது

   தோன்றாதவாறு பேசுதல்; to speak

 smoothly hiding one’s hatred.

     [வெளிக்கு + பேசு-]

வெளிக்குப்போ-தல்

 வெளிக்குப்போ-தல் veḷikkuppōtal, செ.கு.வி. (v.i.)

   மலங்கழித்தல் (கொ.வ.);; to ease one self.

     [வெளிக்கு + போ-,]

வெளிக்குவா-தல் (வெளிக்குவருதல்)

வெளிக்குவா-தல் (வெளிக்குவருதல்) veḷikkuvādalveḷikkuvarudal, செ.கு.வ.(v.i.)

   1. வெளிப்படுதல்; to become public.

     ‘அவன் மறைத்து வைத்தது வெளிக்கு வந்து விட்டது’.

   2. மல வெளிப்பாட்டுணர்ச்சி உண்டாதல்; to feel urged to stool.

     [வெளிக்கு + வா-,]

வெளிக்கொட்டு

 வெளிக்கொட்டு veḷikkoṭṭu, பெ. (n.)

   வட்ட ஆட்டத்தில் இடம் பெறும் கொட்டு வகை; a kind ofbeat, while playing dice.

     [வெளி+கொட்டு]

வெளிக்கொணர்-தல்

 வெளிக்கொணர்-தல் veḷikkoṇartal, செ.கு.வி.(v.i.)

   தெரியச் செய்தல், வெளிப்படுத்துதல்; bring out (what is hidden);, draw out.

     ‘கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

     [வெளிக்கு + கொணர்-தல்]

வெளிக்கொண்டுவ(ரு)-தல்

 வெளிக்கொண்டுவ(ரு)-தல் veḷikkoṇṭuvarudal, செ.கு.வி.(v.i.)

   வெளிப் படுத்துதல், வெளிக்கொணர்தல்; bring out (the abilities, talent, etc.);.

     ‘குழந்தையின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் பயிற்சி இது’.

     [வெளிக்கு + கொண்டுவரு-தல்]

வெளிக்கோட்டுருவம்

 வெளிக்கோட்டுருவம் veḷikāṭṭuruvam, பெ.(n.)

 contour, silhouette.

     ‘கதிரவன் மறைவின் போது கோயில் கோபுரம் வெளிக் கோட்டுருவமாகத் தெரிந்தது’.

     [வெளிக்கோட்டு + உருவம்]

வெளிக்கோணம்

 வெளிக்கோணம் veḷikāṇam, பெ.(n.)

   சுவர் கட்டும்போது கொத்து வேலைக்காரர் முதலில் அதன் வெளிக்கோணங்களை ஆறு அல்லது ஏழு வரிசைகள் வரை அமைத்துக் கொண்டு அவற்றை மிகத் திருத்தமாகச் சரி செய்து கொண்டு பின்னர் இடையிலுள்ள நேரான பகுதியைச் செங்கற்களால் நிரப்புலாகும். (பொ.வழ.);; initial anything, selling of angles with six or seven layer of bricks for walls before actually filling the straight line with bricks.

     [வெளி + கோணம்]

வெளிக்கோபம்

 வெளிக்கோபம் veḷikāpam, பெ.(n.)

மேலெழக் காட்டுஞ் சினம் (வின்);,

 out ward, pretended displeasure.

     [வெளி + கோபம்]

 Skt. Kopa → த. கோபம்.

வெளிக்கோயில்

 வெளிக்கோயில் veḷikāyil, பெ.(n.)

   பெரிய கோயிலைச் சார்ந்ததும் அதற்குப் புறம்பிலேயுள்ளதுமான கோயில் (பொ.வழ.);; outer spaced temple attached to a big temple.

     [வெளி + கோயில்]

வெளிக்கோள்

வெளிக்கோள் veḷikāḷ, பெ.(n.)

   வெளியாக்குகை (நாமதீப. 733);; revealing.

     [வெளி + கோள்]

வெளிசங்கம்

 வெளிசங்கம் veḷisaṅgam, பெ.(n.)

வெளியரங்கம் பார்க்க (வின்.);;see veliyararigam.

     [வெளி + சங்கம்]

 Skt. Sangha → த. சங்கம்.

வெளிசம்

வெளிசம் veḷisam, பெ.(n.)

   தூண்டில் (நாமதீப. 450);; fish-hook.

     [வெளி + வெளிசம்]

வெளிசுரம்

 வெளிசுரம் veḷisuram, பெ.(n.)

   உடலில் பரவும் ஒரு வகை காய்ச்சல்; a kind offever that is felt outside.

     [வெளி + சுரம்]

வெளிச்சங்காட்டு

வெளிச்சங்காட்டு2 veḷiccaṅgāṭṭudal, செ.கு.வி.(v.i.)

   1. தோன்றுதல் (வின்.);; to appear.

   2. பகட்டுப் பேச்சால் மழுப்புதல் (இ.வ.);; to put one off with empty words.

   3.வெளிக்குப்பகட்டாகத் தோன்றுதல்; to be showy, gandy in dress.

     [வெளிச்சம் + காட்டு]

வெளிச்சங்காட்டு-தல்

வெளிச்சங்காட்டு-தல் veḷiccaṅgāṭṭudal, செ.கு.வி.(v.i.)

   1. வழி முதலியன தெரிய விளக்கு முதலியவற்றால் ஒளி காண்பித்தல்; to furnish light, to brandish a torch in order to light one’s path.

   2. ஒளியாற் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல்; to show a light as a signal at sea.

   3. ஒளி செய்தல்; to shine.

     [வெளிச்சம் + காட்டு-.]

வெளிச்சங்காணுதல்

வெளிச்சங்காணுதல் veḷiccaṅgāṇudal, பெ.(n.)

   1. விடியற்காலமாகை; day break.

   2. தெளிவாகை (இ.வ.);; becoming clear.

     [வெளிச்சம் + காணுதல்]

வெளிச்சப்பாடு

 வெளிச்சப்பாடு veḷiccappāṭu, பெ. (n.)

   மருளாடுவோர் தெய்வமேறிய பின் சொல்லும் வாக்கு; utterings of a village temple priest after being occupied by the spirit or deity.

மறுவ, அருள்வாக்கு

     [வெளிச்சம்+பாடு வெளிச்சப்பாடு-வெளிப்படுத்தல்]

வெளிச்சமா-தல்

வெளிச்சமா-தல் veḷiccamātal, செ.கு.வி. (v.i.)

   1. விடிதல்; to dawn,

   2. விளக்குதல்; to come to light.

     [வெளிச்சம் + ஆதல் + வெளிச்சமா-தல்]

வெளிச்சம்

வெளிச்சம்1 veḷiccam, பெ.(n.)

   1, ஒளி; light.

   2. விளக்கு; lamp.

     ‘அந்த அறைக்கு ஒரு வெளிச்சங் கொண்டுவா’.

   3. தெளிவு (வின்.);; clearness.

 வெளிச்சம் veḷiccam, பெ.(n.)

   1. வெளிப் படை; publicity.

     “வீரமெல்லா மின்றைக்கு வெளிச்சமாக” (இராமநா. உயுத். 28);.

   2. பகட்டு; show.

வெளிச்சம்போடு

வெளிச்சம்போடு1 veḷiccambōṭudal, செ.கு.வி.(v.i.)

   1. வணிகப்பொருள் ஒளிபடத் தோன்றச் செய்தல் (வின்.);; to make a display, to make things, appear in a favourable light.

   2. விளக்கேற்றுதல்; to light, as lamp to switch on, as electric light.

     [வெளிச்சம் + போடு-,]

வெளிச்சம்போடு-தல்

 வெளிச்சம்போடு-தல் veḷiccambōṭudal, செ.கு.வி.(v.i.)

   உள்ளதை மறைத்துப் பொய்த் தோற்றங்காட்டுதல் (வின்.);; to make false pretensions.

     [வெளிச்சம் + போடு-,]

வெளிச்சம்போட்டுக்காட்டு-தல்

 வெளிச்சம்போட்டுக்காட்டு-தல் veḷiccambōṭṭukkāṭṭudal, செ.குன்றாவி. (v.t.)

   விளம்பரப்படுத்துதல்; make public.

     ‘இந்த வாரப் பத்திரிகை அவரைப் பற்றிய உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

     [வெளிச்சம் + போட்டுக்காட்டு-,]

வெளிச்சவீடு

 வெளிச்சவீடு veḷiccavīṭu, பெ.(n.)

   கலங்கரை விளக்கம்; lighthouse.

     [வெளிச்சம் + வீடு]

வெளிச்சாடை

வெளிச்சாடை veḷiccāṭai, பெ.(n.)

   1. வெளிப்பகட்டு (வின்.);; outward show, mere profession.

   2. வெளித்தோற்றம், 1 பார்க்க;see vess-t-torram 1.

     [வெளி + சாடை]

வெளிச்சாயல்

வெளிச்சாயல் veḷiccāyal, பெ.(n.)

வெளித்தோற்றம், 1 பார்க்க (வின்.);;see ves-t-torram 1.

     [வெளி + சாயல்]

வெளிச்சி

வெளிச்சி1 veḷicci, பெ.(n.)

   1. காதுநோய் வகை; abscess in the external ear.

   2. விளாம்பிசின் (மூ.அ.);; gum of the woodapple tree.

 வெளிச்சி2 veḷicci, பெ.(n.)

   1. ஒளி மரம் (நாஞ்.);; a tree said to shine at night.

   2. மரவகை (இலத்.);; small obovate oblong cuspidate leaved cornel.

   3. மீன்வகை; a kind of fish. Shell.

வெளிச்சிப்பிசின்

 வெளிச்சிப்பிசின் veḷissippisiṉ, பெ.(n.)

   விளாம் பிசின்; gum of wood-apple treegum of feronia elephantum.

     [வெளிச்சி + பிசின்]

வெளிச்சியெண்ணெய்

 வெளிச்சியெண்ணெய் veḷicciyeṇīey, பெ.(n.)

   விளவ எண்ணெய்; oil from Velicci.

     [வெளிச்சி + எண்ணெய்]

வெளிச்சிறப்பு

வெளிச்சிறப்பு veḷicciṟappu, பெ.(n.)

   வெளிப்பகட்டாகச் செய்யுங் கோலம்; adornment of the outside, out ward decoration.

     [வெளி + சிறப்பு]

 வெளிச்சிறப்பு veḷicciṟappu, பெ.(n.)

   அறிவுத் தெளிவு; clearness of wisdom.

     “பகவத் பிரசாதத்தால் வந்த வெளிச்சிறப்பாலே” (ஈடு, 3, 4, 2);.

     [வெளி + சிறப்பு]

வெளிச்செண்ணெய்

 வெளிச்செண்ணெய் veḷicceṇīey, பெ.(n.)

   தேங்காயெண்ணெய் (நாஞ்);; coconut oil.

     [வெளி + எண்ணெய் → வெளிச்செண்ணெய்]

வெளிச்செலவு

 வெளிச்செலவு veḷiccelavu, பெ.(n.)

   குடும்பத்திற்கன்றிப் புறம்பாகச் செய்யப்படும் பொருட்செலவு (கொ.வ.);; expenses other than the ordinary house hold expenses.

     [வெளி + செலவ]

வெளிச்சை

வெளிச்சை veḷiccai, பெ.(n.)

வெளிச்சைக் கெண்டை பார்க்க;see “வெளிச்சை மீறும்” (அழகர்கல. 86);.

     [வெளி → வெளிச்சை]

வெளிச்சைக்கெண்டை

வெளிச்சைக்கெண்டை veḷiccaikkeṇṭai, பெ.(n.)

   1. வெண்ணிறமும் அறுவிரல வளர்ச்சியுமுள்ள கெண்டைமீன்வகை; a kind of carp, silvery, attaining 6 in in length chela argen tea.

   2. வெண்மை நிறமுடையதும் ஏறக்குறைய ஆறுவிரலம் வளர்வதுமான கெண்டைமீன் வகை; a kind of carp, silvery, attaining at lease 6 in. in length chela culpeoides.

     [வெளிச்சை + கெண்டை]

வெளிச்சைப்பிசின்

 வெளிச்சைப்பிசின் veḷissaippisiṉ, பெ.(n.)

முருங்கை அல்லது நறுவிலிப்பிசின்,

 gum of moringa or naruvili.

     [வெளிச்சை + பிசின்]

வெளிதிற

வெளிதிற1 veḷidiṟaddal, செ.குன்றாவி. (v.t.)

   1. வெளியிடுதல் (யாழ்.அக.);; to let out express.

   2. வெளிப்படையாதல் (வின்.);; to be frank.

     “வெளிதிறந்து சொன்னான்”.

     [வெளி + திற-,]

 வெளிதிற2 veḷidiṟaddal, செ.கு.வி.(v.i.)

வெளிர்த்துக் காட்டு-, 1 பார்க்க;see Velirttu-k-kattu- 1.

     [வெளி + திற-,]

வெளிது

வெளிது veḷidu, பெ.(n.)

   1. வெண்மையானது; that which is white.

     “நிறம் வெளிது செய்து” (திவ். இயற். 3, 56);.

   2. வெள்ளிய ஆடை; white cloth.

     “வெளிது விரித்துடீஇ” (புறநா.279);.

வெளித்தட்டு

 வெளித்தட்டு veḷittaṭṭu, பெ.(n.)

   பொறுப்பின்றி செயல் நடத்துகை (யாழ்.அக.);; irresponsible action.

     [வெளி + தட்டு]

வெளித்தாமரை

 வெளித்தாமரை veḷittāmarai, பெ.(n.)

   வா (ஆகாய);த் தாமரை; sky lotus.

     [வெளி + தாமரை]

வெளித்துகம்

 வெளித்துகம் veḷittugam, பெ.(n.)

   முருக்க மரம்; a tree-butea frondosa.

வெளித்தோற்றம்

வெளித்தோற்றம் veḷittōṟṟam, பெ.(n.)

   1. மேற்பார்வைக்குக் காணும் காட்டு; out ward appearance.

   2. உருவெளித் தோற்றம் (வின்.);; hallucination, vision.

   3. விளைச்சல் (யாழ்.அக.);; birth, growth, evolution.

   4. காட்சி; being manifest or perceptible to the senses.

     [வெளி + தோற்றம்]

வெளித்தோல்

 வெளித்தோல் veḷittōl, பெ.(n.)

   மேல்தோள்; epidermis.

     [வெளி + தோல்]

வெளிநடப்பு

 வெளிநடப்பு veḷinaḍappu, பெ.(n.)

 walkout (in an assembly);.

     ‘கூறியவற்றைத் திரும்பப்பெற அமைச்சர் மறுத்ததால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்’.

வெளிநபர்

 வெளிநபர் veḷinabar, பெ.(n.)

   நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர்; out sider, stranger.

     ‘வெளிநபர்கள் முன் அனுமதி பெற்றுத்தான் தொழிற்சாலைக்குள் நுழைய வேண்டும்’.

     [வெளி + நபர்]

 U. Nafar →த. நபர்.

வெளிநாடு

வெளிநாடு1 veḷināṭudal, செ.கு.வி.(v.i.)

   வெளியிற் காணப்படுதல் (யாழ்.அக.);; to be seen outside or in public.

   2. தீய நெறியில் ஒழுகுதல் (இ.வ.);; to lead an immoral life.

     [வெளி + நாடு]

 வெளிநாடு2 veḷināṭu, பெ.(n.)

   1. வேற்று நாடு; foreign country.

   2. வெளியுலகம்; the world at large.

     “வெளிநாடுகாணப் புறப்பட விட்டும்” (ஈடு. 4, 5, 10);.

     [வெளி + நாடு]

வெளிநாட்டம்

 வெளிநாட்டம் veḷināṭṭam, பெ.(n.)

   தீ நெறியில் ஒழுகுகை (இ.வ.);; leading an immoral life.

     [வெளி + நாட்டம்]

வெளிநீருண்ணிர்

 வெளிநீருண்ணிர் veḷinīruṇṇir, பெ.(n.)

   இதுவே முன்னீர், பின்னிர்; coryza.

     [வெளிநீர் + உள்நீர்]

வெளிநீர்

 வெளிநீர் veḷinīr, பெ.(n.)

   மழைநீர்; rain water.

     [வெளி + நீர்]

வெளிபொருள்

 வெளிபொருள் veḷiboruḷ, பெ.(n.)

வெளிப்பொருள் பார்க்க (யாழ்.அக.);;see veli-p-porul.

     [வெளி + பொருள்]

வெளிப்பகடு

 வெளிப்பகடு veḷippagaḍu, பெ.(n.)

வெளிமயக்கு பார்க்க;see veli-mayakku.

     [வெளி + பகடம்]

 வெளிப்பகடு veḷippagaḍu, பெ.(n.)

வெளிப்பகட்டு பார்க்க;see vli-p-pagattu.

     [வெளி + பகடு]

வெளிப்பகட்டு

 வெளிப்பகட்டு veḷippagaṭṭu, பெ.(n.)

வெளிமயக்கு பார்க்க;see veli-mayakku.

     [வெளி + பகட்டு]

வெளிப்பசப்பு

வெளிப்பசப்பு veḷippasappu, பெ.(n.)

   1. வெளிமயக்கு பார்க்க;see velimayakku.

   2. வெளித்தோற்றத்தில் அமைதியாய்ப் பேசுகை; speaking blandly.

     [வெளி + பசப்பு]

வெளிப்படல்

வெளிப்படல் veḷippaḍal, பெ.(n.)

   1. தோன்றல்; appearing.

   2. பிண்டம் வெளிப்படல்; presentation of the foetus.

     [வெளி + படல்]

வெளிப்படு

வெளிப்படு1 veḷippaḍudal, செ.கு.வி. (v.i)

   1. வெளியே வருதல்; to come out, issue forth as breath.

   2. வெளிப்படத் தோற்றுதல்; to become manifest or evident, to become public, to be revealed.

     “பரவா வெளிப்படா…. உரவோர்கட் காமநோய்” (நாலடி, 88);.

   3. பொருள் விளக்கமாதல்; to be clear, explicit.

     “வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா” (தொல், சொல். 298);.

   4. வெளி வா-, 2 பார்க்க;see veliva-, 2.

     [வெளி + படு-,]

 வெளிப்படு2 veḷippaḍuttal, செ.கு.வி. (v.i.)

வெளிப்படுத்து-, பார்க்க;see veli-p-paduttu-.

     “தத்தமாற்றல்……….. வெளிப்படுத் தன்று” (பு.வெ.4,6, கொளு);.

     [வெளி + படு-]

வெளிப்படுத்து-தல்

வெளிப்படுத்து-தல் veḷippaḍuddudal, செ. குன்றாவி.(v.t.)

   1. பலர் அறியத் தெரிவித்தல் (வின்.);; to reveal, divulge.

   2. காட்டுதல்; to show express,

   3. வெளியே வரச்செய்தல்; to cause to issue or come out, to eject.

   4. புத்தகம் பதிப்பித்தல் (இ.வ.);; to publich, as a book.

   5. வெளியேற்று-, 1 பார்க்க;see veliyerru,1.

     [வெளி + படுத்து-,]

வெளிப்படை

வெளிப்படை veḷippaḍai, பெ.(n.)

   1. தெளிவானது (நான். 269);; that which is evident, clear or obvious.

   2. மேற் பார்வையில் தோன்றுவது; that which is aparent.

   3. விளம்பரம்; publicity.

   4. பல பொருள் குறிக்குஞ் சொல்லை ஒரு பொருட்கு உரித்தாக்கும் பொருட்டு ஏற்றதோர் அடை கொடுத்துக் கூறும் அணிவகை (புறநா. 17, உரை);; a figure of speech in which the meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word, as payavenkai

     [வெளி + படை]

வெளிப்படைச்சொல்

 வெளிப்படைச்சொல் veḷippaḍaiccol, பெ.(n.)

   இயல்பாய் விளங்கி நிற்கும் மொழி; clear word.

     [வெளிப்படை + சொல்]

வெளிப்படைநிலை

வெளிப்படைநிலை veḷippaḍainilai, பெ.(n.)

   அறத்தொடு நிற்றல் (களவியற். 122);;     [வெளிப்படை + நிலை]

வெளிப்படையுவமம்

வெளிப்படையுவமம் veḷippaḍaiyuvamam, பெ.(n.)

   குறிப்பானன்றித் தெளிவாக அறியப்படும் உவமம் (இலக். வி. 639, உரை);; explicil simile.

     [வெளிப்படை + உவமம்]

வெளிப்பயன்

வெளிப்பயன் veḷippayaṉ, பெ.(n.)

   1. வெளிப்படத் தெரியக்கூடிய பயன்; visible gain or advantage.

   2. வெளிப்பொருள் பார்க்க (வின்.);;see veli-p-porul.

     [வெளி + பயன்]

வெளிப்பாடு

வெளிப்பாடு1 veḷippāṭu, பெ.(n.)

   மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை; coming out, appearing in public.

     “வெளிப்பாட்டுச் சருக்கம்” (பாரத.);.

   2. பெரியோர்க்கு அளிக்குங் கையுறை (சப்.);; presents to great persons.

     [வெளி + பாடு]

 வெளிப்பாடு veḷippāṭu, பெ.(n.)

 manifestation, over sign.

     ‘நாங்கள் தேர்தலில் அடைந்திருக்கும் வெற்றி எங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு’. 2. (எண்ணம், உணர்வு முதலியவற்றை); வெளிப்படுத்துவது அல்லது வெளியிடுவது;

 expression, communication.

     ‘கவிதை கவிஞனின் எண்ண வெளிப்பாட்டுச் சாதனம்’.

     [வெளி + பாடு]

வெளிப்பிடம்

 வெளிப்பிடம் veḷippiḍam, பெ.(n.)

கடலடிப்பரப்பில் வலை பாய்ச்சுதற்கேற்ற இடம் (தஞ்சை. மீன.);.

     [வெளி + பிடம்]

 வெளிப்பிடம் veḷippiḍam, பெ. (n.)

வலை வீசு வதற்கு உதவும் வகையில் கல், பாறை போன்றவையில்லாத அடிக்கடல் பகுதி,

 plain sea bed without stones or rocks.

     [வெளி-வெளிப்பு+இடம்]

வெளிப்பு

வெளிப்பு1 veḷippu, பெ.(n.)

   1. வெளிப்புறம் (யாழ்.அக.);,

 outside.

   2. வெளியிடம்; open space unenclosed place.

 வெளிப்பு2 veḷippu, பெ.(n.)

   தெளிவு (யாழ்.அக.);; clearness, brightness.

வெளிப்புடம்போடல்

 வெளிப்புடம்போடல் veḷippuḍambōḍal, பெ.(n.)

   மறைப்பில்லாமல் திறந்தபடி புடமிடுதல்; ordinary calcination with cow dung cakes.

     [வெளிப்புடம் + போடல்]

வெளிப்புரைச்சவ்வு

 வெளிப்புரைச்சவ்வு veḷippuraiccavvu, பெ.(n.)

   உடம்பின் வெளிப்புற தோல் பாகங்களை அடிப்படையாகக் கொண்டு நிற்கும் சவ்வு; an external tining membrance.

     (வெளிப்புரை சவ்வு);

வெளிப்புறப்படப்பிடிப்பு

 வெளிப்புறப்படப்பிடிப்பு veḷippuṟappaḍappiḍippu, பெ.(n.)

 outdoor shooting.

     [வெளிப்புறம் + படப்பிடிப்பு]

வெளிப்புற்று

 வெளிப்புற்று veḷippuṟṟu, பெ.(n.)

   புற்று நோய்வகை; cancer (m.l.);.

     [வெளி + புற்று]

வெளிப்பேச்சு

வெளிப்பேச்சு veḷippēccu, பெ.(n.)

   1. நாட்டுச் செய்தி; rumour.

   2. உண்மையற்ற பேச்சு; hallow in sinceretalk.

     [வெளி + பேச்சு]

வெளிப்பொருள்

 வெளிப்பொருள் veḷipporuḷ, பெ.(n.)

   தெளிவாயறியப்படும் பொருள் (வின்.);; obvious meaning.

     [வெளி + பொருள்]

வெளிமடை

 வெளிமடை veḷimaḍai, பெ.(n.)

   கோயிற்புரம் பேயுள்ள சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் படையல் (சப்.);; offerings to the attendent deities outside a temple.

     [வெளி + மடை]

வெளிமனிதன்

 வெளிமனிதன் veḷimaṉidaṉ, பெ.(n.)

   அயலான்; stranger.

     [வெள் + மனிதன்]

 Skt. manu-ja → த. மனிதன்.

வெளிமயக்கம்

 வெளிமயக்கம் veḷimayakkam, பெ.(n.)

   கண்ணோய் வகை; an eye disease.

     [வெளி + மயக்கம்]

வெளிமருந்து

 வெளிமருந்து veḷimarundu, பெ.(n.)

   வெளித்தோற்றத்தாலுண்டாம் மதிமயக்கம்; fascination due to outward show.

     “எல்லாம் வெளிமயக்கே” (பட்டினத் தனிப்பா.);.

     [வெளி + மயக்கு]

 வெளிமருந்து veḷimarundu, பெ.(n.)

   புறத்திடும் மருந்து; medicine for external application or use (C.G.);.

     [வெளி + மருந்து]

வெளிமா

 வெளிமா veḷimā, பெ.(n.)

   காட்டுமா; wild mango.

     [வெளி → வெளிமா]

வெளிமான்

வெளிமான்1 veḷimāṉ, பெ.(n.)

   1. மான்வகை (வின்.);; revine deer.

   2. பெண்மான்வகை (யாழ்.அக.);; hind, female deer.

     [வெளு + மான்]

 வெளிமான்2 veḷimāṉ, பெ.(n.)

   கழகக் காலத்துத் தலைவருள் ஒருவன்; a chief of the sargam age.

     “வெளிமானுழைச் சென்றார்க்கு” (புறநா. 162);.

     [வெளி + மான்]

 வெளிமான்3 veḷimāṉ, பெ.(n.)

   பெருஞ் சித்தரனரால் பாடப்பட்ட சிற்றரசன்; a chieftarin, sung by peruncittanar.

     [வெளி + மான்]

மிக்க கொடையுளோன். இவன் இறக்கும் போது பெருஞ்சித்திரனார்க்குப் பரிசு கொடுக்குமாறு தம்பிக்கு ஆணை செய்திருந்தான். அவன் கூறிய அளவிற் சிறிது கொடுப்ப பெருஞ்சித்திரனார் ஏற்றுக் கொள்ளாமற் போய், குமணனை யடைந்து, யானையும் பொன்னும் பெற்று, மீண்டுபுக்கு அவனை நோக்கி, இரப்போர்க்குக் கொடுப்பவ ரில்லையுமல்லர். யான் பெற்று வந்து ஊர்ப்புறத்தே கட்டியிருக்கும் யானை குமணன் தந்த பரிசில், யான் போய் வருகிறேன் என்னுங் கருத்தினை யுடைய “இரவலர் புரவலை நீயுமல்லை, புரவல ரிரவலர்க்கில்லையுமல்ல ரிரவலருண்மையுங் காணினியிரவலர்க், கீவோருண்மையுங் காணினி நின்னூர்க், கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த, நெடுநல்யானை யெம் பரிசில், கடுமான்றோன்றல் செல்வல் யானே” என்னும் பாடலைக் கூறிப் போயினார்.

வெளிமுகடு

வெளிமுகடு veḷimugaḍu, பெ.(n.)

   உலகில் புறவெல்லை; the atmost limit of space.

     “அகிலவெளிமுகடிய” (பாரத ஆறாம்பேர் 22);.

     [விள் → வெள் → வெளி + முகடு] [தே.நே.பக்.124]

வெளிமுற்றம்

வெளிமுற்றம் veḷimuṟṟam, பெ.(n.)

   1. காட்டு முசுக்கை; wild climber with hairy stem and leaves-bristly bryonia-mukia Scabrella.

     [வெளி + முசுக்கை]

 வெளிமுற்றம் veḷimuṟṟam, பெ.(n.)

   1. வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்த வெளி; courtyard of a house.

   2. சமையலறையில் ஏனம் முதலியன தூய்மை செய்யும் முற்றம்; place marked off in a kitchen for washing utensils.

     [விள் → வெள் → வெளி + முற்றம்]

வெளிமூலம்

 வெளிமூலம் veḷimūlam, பெ.(n.)

   குடலிறக்க நோய் (மூளைகள் வெளித்தோன்றும் மூலநோய் வகை);; external piles (M.L.);.

     [விள் → வெள் → வெளி + மூலம்]

வெளியங்கம்

 வெளியங்கம் veḷiyaṅgam, பெ.(n.)

   பகட்டு; outward show, pomp.

     [வெளி + அங்கம்]

 Skt. Arga → த. அங்கம்.

வெளியச்சு

 வெளியச்சு veḷiyaccu, பெ.(n.)

   தேரின் வெளிப்புறச் சக்கரங்கள் நான்கிற்கும் முன்பின் அமைந்த இரண்டு அச்சு (பொ.வழ.);; two axis for front and book wheels of chariot.

     [வெளி + அச்சு]

வெளியடை

 வெளியடை veḷiyaḍai, பெ.(n.)

   திரைச்சீலை (வீன்.);; curtain, veil.

     [வெளி + அடை]

வெளியந்தரம்

வெளியந்தரம் veḷiyandaram, பெ.(n.)

   இடைவெளி (தக்கயாகப். 147, உரை);; intervening space.

     [வெளி + அந்தரம்]

 Skt. Antara → த. அந்தரம்.

வெளியரங்கம்

வெளியரங்கம் veḷiyaraṅgam, பெ.(n.)

   1. வெளிப்படை; openness, publicity.

     “வெளியரங்கம் பெறத்தந்தோம்” குற்றா. தல 16, 54).

   2. தெளிவானது (வின்.);; that which is clear, obvious or evident.

     [விள் + வெள் → வெளி + அரங்கம்]

வெளியா-தல்

வெளியா-தல் veḷiyātal, செ.கு.வி.(v.i.)

வெளிப்படு1-, பார்க்க;see veli-p-padu.

     “வெளிநின்ற மாற்றம் வெளியான பின்” (பாரத வெளிப்பாட்டு 17);.

     [விள் → வெளி → வெளியா-தல்)

வெளியாகாமை

 வெளியாகாமை veḷiyākāmai, பெ.(n.)

   மாதவிடாயாகாதிருத்தல்; absense of menses.

     [வெளி + ஆகாமை]

வெளியாகு-தல்

வெளியாகு-தல் veḷiyākudal, செ.கு.வி.(v.i.)

 be released.

   பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்’. 2. (உண்மை முதலியவை); வெளிப்படுதல்; become public, become known.

     ‘என்றாவது ஒரு நாள் உண்மை வெளியாகும்’.

     [வெளி + ஆகு]

வெளியாக்கு

வெளியாக்கு2 veḷiyākkudal, செ. குன்றாவி.(v.t.)

   வெளிப்படுத்துதல்; make public disclose.

     ‘வினாத்தானை முன்னதாக வெளியாக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை’.

     [வெளி + ஆக்கு-,]

வெளியாக்கு-தல்

 வெளியாக்கு-தல் veḷiyākkudal, செ. குன்றாவி.(v.t.)

வெளிப்படுத்து-, பார்க்க;see velli-p-paguttu-.

     [வெள் → வெளி +ஆக்கு-,]

வெளியாடை

வெளியாடை veḷiyāṭai, பெ.(n.)

   1. ஒப்பனைத் தொங்கற் சீலை (வின்.);; curtain, hanging, tapestry.

   2. உடலை மூடிக்கொள்ளும் ஆடை; veil outer-wear.

     [வெளி + ஆடை]

வெளியார்

வெளியார்1 veḷiyār, பெ.(n.)

   அறிவிலார்; senseless persons.

     “வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல்” (குறள், 714);.

     [வெள் → வெளி → வெளியார்]

 வெளியார்2 veḷiyār, பெ.(n.)

   புறம்பானவர்; outsiders, strangers.

     [வெள் → வெளி → வெளியார்)

வெளியாள்

 வெளியாள் veḷiyāḷ, பெ.(n.)

   தொடர்பில்லாத பேர்வழி; அயலான், வேற்றவன்; a person who is not connected (with the affair);, out sider.

     ‘வெளியாள் வேண்டாம் நாமே செய்து கொள்வோம்’.

     [வெள் → வெளி → வெளியாள்]

வெளியிடு-தல்

வெளியிடு-தல்1 veḷiyiḍudal, செ.குன்றாவி. (v.t.)

வெளிப்படுத்து-, பார்க்க;see veli-p-paduttu.

     [வெள் → வெளி → வெளியிடு-தல்]

 வெளியிடு-தல்2 veḷiyiḍudal, செ.கு.வி.(v.i.)

வெளிவாங்கு-, (யாழ்.அக.); பார்க்க;see veli-vanku.

     [வெள் → வெளி →வெளியிடு-தல்]

வெளியில்

 வெளியில் veḷiyil, வி.எ.(adv.) வெளியே பார்க்க;see veliye.

     [வெள் → வெளி → வெளியில்]

வெளியீடு

வெளியீடு veḷiyīṭu, பெ.(n.)

   1. (அச்சடிக்கப் பட்டு அல்லது உருவாக்கப்பட்டுப் பொது மக்களுக்காக); வெளியிடுதல்;     ‘புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.

     ‘புதிய பங்குப் பத்திரங்களின் வெளியீடு நாளை தொடங்கும்’.

   2. (வெளியிடப்பட்ட நூல் முதலியவற்றின்); படி; copy (of the publication);.

     ‘எங்களிடம் எல்லாப் பதிப்பகத்தாரின் வெளியீடுகளும் கிடைக்கும்’.

   3. (எண்ணம், கற்பனை முதலியவற்றை); வெளிப்பாடு; expression.

     ‘கருத்து வெளியீட்டுச் சுதந்திரம்’.

     ‘வெளியீட்டுத் திறன் உள்ளவன் கலைஞன் ஆகிறான்’.

     [வெள் → வெளி → வெளியிடு → வெளியீடு]

வெளியீடு-தல்

வெளியீடு-தல் veḷiyīṭudal, பெ.(n.)

 release (stamps, film, etc.);.

     ‘புதிய அஞ்சல் தலையை அரசு வெளியிட்டது’.

     ‘அந்தப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படும்’.

   2. செய்தி, உணர்ச்சி முதலியவற்றைப் பலரும் அறியும் வகையில் வெளிப்படுத்துதல்; reveal, publich.

     ‘தயங்கித் தயங்கி செய்தியை வெளியிட்டான்’.

     ‘மேற்கூறிய செய்திகளை அந்தத் தாளிகை வெளியிட்டிருக்கிறது’. தன்னுடை வியப்பை வெளியிடாமல் இருக்க முடியவில்லை’.

   3. (நூல் முதலியவற்றை); அச்சிட்டு வெளிக்கொண்டு வருதல்; publich.

     ‘வெளியிட்ட ஆயிரம் படிகளும் விற்பனையாகிவிட்டன’.

     [வெள் → வெளி → வெளியிடு → வெளியீடு] (தே.நே.பக். 124);

வெளியீட்டாளர்

 வெளியீட்டாளர் veḷiyīṭṭāḷar, பெ.(n.)

   நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர்; publisher.

     [வெள் → வெளி → வெளியிடு → வெளியீடு → வெளியீட்டாளர்]

வெளியுப்பு

 வெளியுப்பு veḷiyuppu, பெ.(n.)

   கட்டுப்பு, இயல்பாக உணவில் பயன்படுத்தும் கறியுப்பு; common salts.

     [வெள் → வெளி + உப்பு]

வெளியுறவு

 வெளியுறவு veḷiyuṟavu, பெ.(n.)

ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், பண்பாடு, வாணிபம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு,

 foreign affairs, foreign relations (of a country);.

     ‘வெளியுறவு அமைச்சர்’.

     ‘வெளியுறவுக் கொள்ளை’.

     [வெள் → வெளி + உறவு]

வெளியூர்

 வெளியூர் veḷiyūr, பெ.(n.)

 place other than one’s residence.

     ‘அப்பா வெளியூர் போயிருக்கிறார், நாளை தான் வருவார்’.

     [வெளி + ஊர்]

வெளியெரிப்பொறிகள்

 வெளியெரிப்பொறிகள் veḷiyerippoṟigaḷ, பெ.(n.)

   வெல்லப் பொறிகளில் ஒருவகை; a combustion.

வெப்பப்பொறிகள் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாகப் பயன்படத்தக்க வடிவில் மாற்றுகின்றன. ஒரு பொருள் எரிந்து அதனால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு இயக்க ஆற்றலை உண்டு பண்ணும் பொறிகளுக்கு எரிபொறிகள் என்று பெயர். இவற்றை உள்ளெரி பொறிகள், வெளியெரி பொறிகள் என இருவகைப் படுத்தலாம். தானியங்கி (automobiles); பொறிகளும், வளிமப் பொறிகளும் (Gas turbines); முதல்வகையைச் சாரும். நீராவி பொறிகளும், நீராவி விசையாழிகளும் இரண்டாவது வகையைச் சேர்ந்தன. வளி மண்டலத்தின் அழுத்தத்தை விட அதிகமான அழுத்த நிலையில் கொதி கலத்தினுள் நீராவி உருவாக்கம் செய்யப்படுகிறது. அழுத்தம் அதிகமாக இருப்பதனால் வெப்ப நிலையும் அதிகமாகவே இருக்கும் அந்த நிலையில் நீராவியில் நிறைந்த அளவு வெப்பம் அடங்கியிருக்கும். நீராவியிலுள்ள வெப்பத்தை வேலைக்கு மாற்றுகின்ற பொறிகளே வெளியெரி பொறிகள்.

     [வெளியெறி + பொறிகள்]

வெளியே

வெளியே veḷiyē, வி.எ.(adv.)

   1. எல்லையைத் தாண்டி, உள்ளே இல்லாமல்; outside, out.

     ‘வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்’.

     ‘கடையை விட்டு வெளியேவந்தார்’. உறையிலிருந்துகத்தியை

வெளியே எடுத்தான்’.

   2. (பேச்சால் அல்லது செயல்பாடுகளால்); பிறர அறியும்படி, மறைவாக இல்லாமல்

 in public, openly.

     ‘வெளியே சொன்னால் வெட்கக் கேடு’.

     ‘என் மேல் உள்ள சிற்றத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை’.

     [வெள் → வெளி → வெளியே]

வெளியேறு-தல்

வெளியேறு-தல் veḷiyēṟudal, செ.கு.வி.(v.i.)

   1. Qsus flou Gurăşū; to get out, as from a house.

   2. வீட்டை விட்டு ஒடிப்போதல்; to abandon one’s home and go away.

அவன் வெளியேறி விட்டான்’

   3. வெளியூருக்குக் குடிபோதல்; to migrate.

   4. ஏதத்தினின்று தப்பித்து வருதல்; to escape from a danger.

     [விள் → வெள் → வெளி + ஏது]

வெளியேற்று-தல்

வெளியேற்று-தல் veḷiyēṟṟudal, செ. குன்றாவி.(v.t.)

   1. வெளியே போகச் செய்தல்; to expel.

   2. நாடு கடத்துதல்; to transport, to extern,

   3. வெளிப்படுத்து-, 3 பார்க்க;see veli-p-paduttu-.

     [விள் → வெள் → வெளி +ஏற்று-,]

வெளிர்

 வெளிர் veḷir, பெ.எ.(adj.)

 light, pale.

     ‘வெளிர் மஞ்சள்’.

     ‘வெளிர் நீலம்’.

     [வெளி → வெளிர்]

வெளிர்த்துக்காட்டு-தல்

வெளிர்த்துக்காட்டு-தல் veḷirddukkāṭṭudal, செ.கு.வி.(v.i.)

   1. மழை பெய்த பின் வானம் வெளுத்தல்; to clear, as the sky after rain.

   2. வெளிறின நிறமாகத் தோன்றுதல்; to appear pale.

     [வெளிர்த்து + காட்டு-தல்]

வெளிறன்

வெளிறன் veḷiṟaṉ, பெ.(n.)

   1. அறிவில்லாதவன் (யாழ்.அக.);; ignorant man.

   2. கீழ் மகன் (பிங்.);; mean person.

     [வெளி → வெளிறன்]

வெளிறர்

 வெளிறர் veḷiṟar, பெ.(n.)

   அறிவில்லார்; fools, shipid people.

     [வெளி → வெளிறர்]

வெளிறல்

 வெளிறல் veḷiṟal, பெ.(n.)

   வெளுத்தல்; becoming pale.

     [வெள் → வெளி → வெளிறல்]

வெளிறின

 வெளிறின veḷiṟiṉa, பெ.(n.)

   சோகை பிடித்த; Wan.

     [வெளி →. வெளிறின]

வெளிறு

வெளிறு2 veḷiṟu, பெ.(n.)

   1. வெண்மை; whiteness.

     “வெளிறு சேர்நிணம்” (கம்பரா. கரன். 155);

   2. நிற்க்கேடு; paleness, pallor.

   3. வெளிச்சம்; light.

     “கதிர்வே றுணையா வெளிறுவிரவ வருதிகண்டாய்” (பதினொ. திருவாருர்மும், 9);.

   4. வெளிப்படுகை; becoming clear or manifest.

     “வெளிற்றுரை வான்பழியாம்.” (திருக்கோ 254);.

   5. பயனின்மை,

 uselessness.

வெளிற்றுரை” (சீவக. 1431);,

   6. அறியாமை; stupidity, ignorance.

     “ஆசற்றார் கண்ணும் …… இன்மை யரிதே வெளிறு” (குறள். 503);.

   7. இளமை; tenderness, youth.

     “வெளிற்றுப் பனந்துணியின்” (புறநா. 35);.

   8. திண்மையற்றது; that which is not dense.

     “வெளிறான இருளன்றிக்கே” (ஈடு. 2, 1, 8);.

   9. குற்றம்; fault, defect.

     “வெளிறில் வாள்” (சீவக. 3074);,

   10. காழ்ப் (வயிரம்); பின்மை; having no hard core.

     “வெளிறினோன் காழ்” (புறநா. 23);.

   11 வெளிற்று மரம் 1 பார்க்க;see velirru-maram 1.

     “வெளிறு முன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ’சீவக. 2613); (திவா.MSS);

   12. செடி வகை (மலை);; common sebesten.

     [வெள் → வெளி →வெளிறு]

 வெளிறு veḷiṟu, பெ.(n.)

   1. அலிமரம்

 a tree without a solid portion either inside or outside.

   2. வெளுத்தல்; becoming pale.

   3. நறுவிலி; a tree.

     [வெள் → வெளி → வெளிறு] (தே.நே.பக்85);.

வெளிறு-தல்

வெளிறு-தல் veḷiṟudal, செ.கு.வி.(v.i.)

   1.வெண்மையாதல்; to grow white.

   2. நிறங் கெடுதல்; to become pale.

     ‘அவன் முகம் வெளிறிப் போயிற்று’.

     [வெள் → வெளி → வெளிறு-தல்] (தே.நே.பக்.85);.

வெளிற்றுக்குணம்

 வெளிற்றுக்குணம் veḷiṟṟukkuṇam, பெ.(n.)

   இழிவான குணம்; immodesty, indecency.

     [வெளிற்று + குணம்]

வெளிற்றுப்பனை

வெளிற்றுப்பனை veḷiṟṟuppaṉai, பெ.(n.)

   கூர்மையற்ற பனை; palmyra having no hard core.

     “வேனில் வெளிற்றுப் பனை போலக் கையெடுத்து” (அகநா. 333);.

     [[வெளிற்று + பனை]

வெளிற்றுமரம்

வெளிற்றுமரம் veḷiṟṟumaram, பெ.(n.)

   1. காழ்ப்பில்லாத மரம் (பிங்.);; soft, pithy tree with out core.

   2. மரவகை (முள்ளுமுருக்கு); (அக.நி.);; east indian coral tree.

     [வெளிற்று + மரம்]

வெளிற்றுரை

வெளிற்றுரை veḷiṟṟurai, பெ.(n.)

   பயனில்சொல்; unmeaning word, rain, empty speech.

     “வெளிற்றுரை விடுமினென்றான்” (சீவக. 1431);.

     [வெள் → வெளி → வெளிற்றுரை]

வெளில்

வெளில்1 veḷil, பெ.(n.)

   1. யானைத்தறி; post to which elephants are tied.

     “களிறிலவாகிய புல்லரை நெடுவெளில்” (புறநா. 127);.

   2. தயிர் கடைதறி (பிங்.);; churning rod.

   3. கம்பம் (வின்.);; stake, post.

   4. அணில்; squirrel.

     “நீடுமரச் சோலை விழைவெளிலாடுங் கழை வளர் நனந்தலை” (அகநா. 109);.

     [வெளி → வெளில்]

 வெளில்2 veḷil, பெ.(n.)

வெள்ளில்2 (பிங்.); பார்க்க;see velli!.

     [வெளி → வெளில்]

வெளிவ(ரு)-தல்

வெளிவ(ரு)-தல் veḷivarudal, செ.குன்றாவி. (v.t.)

   1. (புத்தகம், கட்டுரை, கதை முதலியவை தாளிகையில்); வெளியாதல், (திரைப்படம் முதன் முறையாக); திரையிடப்படுதல்;     ‘தாளிகையில் தன் கட்டுரை வெளி வந்திருக்கிறதா என்று ஆவலோடு பார்த்தார்’.

     ‘இப்போது வெளிவரும் படங்களில் கதை இருப்பதாகத் தெரியவில்லை’.

     [வெள் → வெளி → வெளிவரு-தல்]

வெளிவட்ட நகர்தல் அடவு

 வெளிவட்ட நகர்தல் அடவு veḷivaḍḍanagartalaḍavu, பெ. (n.)

   கும்மியில் இடம் பெறும் ஓர் அடவு; physical movement while clapping hands and dance.

வெளிவந்தை

 வெளிவந்தை veḷivandai, பெ.(n.)

   மாட்டின் மேலுள்ள உணண்; tick, an external parasite, on cattle.

     [வெளி → வெளிவந்தை]

வெளிவர்த்தகம்

 வெளிவர்த்தகம் veḷivarttagam, பெ.(n.)

   இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் வாணிபம்; foreign trade, trade between two regions.

     [வெளி + Skt. vartaka → த. வர்த்தகம்]

வெளிவா-தல் (வெளிவருதல்)

வெளிவா-தல் (வெளிவருதல்) veḷivādalveḷivarudal, செ.கு.வி.(v.i)

   1. பலராலுமறியப்படுதல்; to be public.

   2. பலருக்கும் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல்; to be published.

     [வெள் → வெளி → வெளிவா-தல்]

வெளிவாங்கு-தல்

 வெளிவாங்கு-தல் veḷivāṅgudal, செ.கு.வி. (v.i.)

   மழை பெய்தபின் முகில் கலைந்து வெளிச்சமாதல் (யாழ்.அக.);; to become clear, as the sky after rain.

     [வெளி + வாங்கு-,]

வெளிவாசலுக்குப்போ-தல்

 வெளிவாசலுக்குப்போ-தல் veḷivācalukkuppōtal, செ.கு.வி.(v.i.)

வெளிக்குப் போ-, பார்க்க;see velikku-p-po-.

     [வெளிவாசலுக்கு + போ-தல்]

வெளிவாசல்

வெளிவாசல் veḷivācal, பெ.(n.)

   1. கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல்; outer gate.

   2. வீட்டின் முகப்பிலுள்ள முற்றம்; open space in front of a house.

     [வெளி + வாசல்]

வெளிவாயன்

 வெளிவாயன் veḷivāyaṉ, பெ.(n.)

   பூட்டகத்தை (இரகசியம்); வெளிவிடுபவன் (யாழ்.அக.);; one who lets out secrets.

     [வெள் → வெளி + வாயன்]

வெளிவாய்

வெளிவாய் veḷivāy, பெ.(n.)

   1. மறை பொருளை வெளியிடும் சொல் (யாழ். அக.);; word disclosing a secret.

   2. பாண்டத்தின் வெளிப்புற விளிம்பு; the outer rim or lip of a vassel.

     [வெளி + வாய்]

 வெளிவாய்2 veḷivāy, பெ.எ.(adj.)

   வெளிப் படையாய்; openly.

     ‘வெளிவாய்ச்சொல்’.

     [வெளி + வாய்]

வெளிவாய்க்கல்

 வெளிவாய்க்கல் veḷivāykkal, பெ.(n.)

   கட்டடச் சுவரில் அழகியற் கூறுகள் முன்பக்கத்தில் தோன்றுமாறு செதுக்கப்பட்ட கல் (பொ.வழ.);; a stone projected in architectural design in the wall of a building.

     [வெளி + வாய்க்கல்]

வெளிவாய்ப்படுகை

 வெளிவாய்ப்படுகை veḷivāyppaḍugai, பெ.(n.)

   ஆறு குளங்களையடுத்துப் புறம்பாகவுள்ள நிலம்; land adjacent to and outside the bund of a river or tank.

     [வெளிவாய் + படுகை]

வெளிவிடு-தல்

 வெளிவிடு-தல் veḷiviḍudal, செ.குன்றாவி. (v.t.)

   பலரிறியச் செய்தல்; to reveal, make known.

     [வெளி + விடு-தல்]

வெளிவிருத்தம்

வெளிவிருத்தம் veḷiviruttam, பெ.(n.)

   மூன்றடியாலேனும் நான்கடியாலேனும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிசொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பாவகை (காரிகை. செய். 7, உரை);; a kind of stanze belonging to the venpa class and consisting of three or four lines, each line ending with the same tani-c-co.

     [வெளி + விருத்தம்]

 Skt. vrtta → த. விருத்தம்.

வெளிவிழுதல்

 வெளிவிழுதல் veḷiviḻudal, பெ.(n.)

   குடல் நிலத்தில் தாழ்க்கை; ruptured intestines, hemia.

     ‘அவனுக்கு வெளிவிழுந்திருக்கிறது’.

     [வெளி + விழுதல்]

வெளிவிவகாரம்

 வெளிவிவகாரம் veḷivivakāram, பெ.(n.)

வெளியுறவு பார்க்க;see veli-yuravu.

     [வெளி + விவகாரம்]

 Skt. Vyava-håra → த. விவகாரம்.

வெளிவீதி

 வெளிவீதி veḷivīti, பெ.(n.)

   கோயில் முதலியவற்றிற்கு வெளிப்புறமுள்ள தெரு; boulevard or street surrounding a temple, fort or town.

     [வெளி → விதி]

வெளிவு

வெளிவு veḷivu, பெ.(n.)

வெளிப்படை 1, 2 பார்க்க;see veli-p-padai.

     [விள் → வெள் → வெளி → வெளிவு); (தே.நே.பக். 86);

வெளிவெருட்டு

 வெளிவெருட்டு veḷiveruṭṭu, பெ.(n.)

வெளிப்பகட்டு பார்க்க (யாழ்.அக.);;see veli-p-pagattu.

     [வெளி + வெருட்டு]

வெளிவேடம்

வெளிவேடம் veḷivēṭam, பெ.(n.)

   1. தன்னுருவைப் பிறர் அறியாதபடி பூச்சு முதலியவற்றால் மறைக்கை; disguise.

   2. வெளித்தோற்றம்; outward show.

   3. வஞ்சகம்; hypocrisy.

     [வெளி + வேடம்]

 Skt. Vesa → த. வேடம்.

வெளு

வெளு1 veḷuttal, செ.கு.வி.(v.i.)

   1. வெண்மையாதல்; to become white.

     “கீர்த்தி வெளுத்ததே” (கலிங். 243);.

   2. நிறங்கெடுதல்; to become pale, to lose colour.

     ‘அந்தப் புடவை வெளுத்துவிட்டது’.

   3. விடிதல்; to dawn.

     ‘கிழக்கு வெளுத்தது’.

   4. உண்மை நிலை வெளிப்படுதல்; to become clear or manifest.

     ‘அவர் பெருமையெல்லாம் வெளுத்துவிட்டது’.

     [வெ → வெளு → வெளு-த்தல்] [தே.நே.பக்.85]

 வெளு2 veḷuttal, செ.குன்றாவி.(v.t.)

   1. ஆடையொலித்தல்; to whiten, bleach, wash, as clothes.

   2. புடைத்தல்; to durb, beat hard.

     [வெ → வெளு → வெளுத்தல்]

வெளுக்கங்கல்

 வெளுக்கங்கல் veḷukkaṅgal, பெ.(n.)

   சுக்கான் கல்; lime stone.

     [வெளுக்கம் + கல்]

வெளுச்சி

 வெளுச்சி veḷucci, பெ.(n.)

விளாம் பிசின்,

 gum of wood-apple-feronia elephantum.

வெளுத்தபாதிரி

 வெளுத்தபாதிரி veḷuttapātiri, பெ.(n.)

   மரவகை; indian calosanthas.

     [வெளுத்த + பாதிரி]

வெளுத்தமுகம்

 வெளுத்தமுகம் veḷuttamugam, பெ.(n.)

   வெளுத்தற் பிசின்; white gum.

     [வெளுத்த + பிசின்]

 வெளுத்தமுகம் veḷuttamugam, பெ.(n.)

   வெளிறிய முகம்; pale face.

     [வெளுத்த + முகம்]

வெளுத்தமேகசலம்

 வெளுத்தமேகசலம் veḷuttamēkasalam, பெ.(n.)

   வெள்ளை நோய்; gonorrhoea.

     [வெளுத்த + மேகசலம்]

வெளுத்தலரி

 வெளுத்தலரி veḷuttalari, பெ.(n.)

   அலரிவகை; pagoda tree.

வெளுத்தல்

வெளுத்தல்1 veḷuttal, பெ.(n.)

   மரவகை (யாழ்.அக.);; a tree.

 வெளுத்தல்2 veḷuttal, பெ.(n.)

   1. மரவகை; a tree.

   2. வெள்ளையாக்கல்; calcining.

   3. வெண்மையாதல்; growing whitealbication.

     [வெ → வெளு → வெளுத்தல்] [தே.நே.யக். 85).

வெளுத்துக்கட்டு-தல்

 வெளுத்துக்கட்டு-தல் veḷuddukkaṭṭudal, செ.குன்றாவி.(v.t.)

 do very well.

     ‘அப்பா வேடத்தில் நடிகர் வெளுத்துக் கட்டியிருக்கிறார்’.

     [வெளுத்து + கட்டு-.]

வெளுத்துநீறுதல்

 வெளுத்துநீறுதல் veḷuddunīṟudal, பெ.(n.)

   மருந்து வெண்ணிறமாகி தூளாகுதல்; medicine turning white and powdery.

     [வெளுத்து + நீறுதல்]

வெளுத்துவாங்கு

வெளுத்துவாங்கு1 veḷudduvāṅgudal, செ.கு.வி.(v.i.)

   மிக நன்றாகச் செய்தல்; to do a thing in an admirable manner.

     [வெளுத்து + வாங்கு}

 வெளுத்துவாங்கு2 veḷudduvāṅgudal, செ.குன்றாவி.(v.t.)

வெளு-, பார்க்க;see Velu-.

     [வெளுத்து + வாங்கு]

வெளுத்துவிடு-தல்

 வெளுத்துவிடு-தல் veḷudduviḍudal, செ.கு.வி & செ.குன்றாவி.(v.i. & w.t.)

வெளுத்து வாங்கு-, பார்க்க;see veluttu-vanku

     [வெளுத்து + விடு]

வெளுப்பத்தி

 வெளுப்பத்தி veḷuppatti, பெ.(n.)

   எலும்பு; bone.

வெளுப்பி

வெளுப்பி veḷuppi, பெ.(n.)

   1. குண்டுமணி,

 jeweller’s bead.

   2. புறங்கைநாறி பார்க்க;see purankai-nari.

     [வெளு → வெளுப்ப]

வெளுப்பு

வெளுப்பு veḷuppu, பெ.(n.)

   1. வெண்மை; whiteness.

   2. நோயால் உடல் வெளிறுகை; pallor, as from illness.

   3. ஆடை வெளுக்கை; bleaching, washing of clothes.

   4. புடைக்கை; drubing, beating.

     [வெ → வெளு → வெளுப்பு] [தே.நே.பக். 85).

வெளுப்புக்கலவை

 வெளுப்புக்கலவை veḷuppukkalavai, பெ.(n.)

   வெண்மையாக்கும் பொருள்; bleaching.

     [வெளுப்பு + கலவை]

வெளுப்புக்காகச்சி

 வெளுப்புக்காகச்சி veḷuppukkākacci, பெ.(n.)

   வெண்கரும்பு; white sugar-canesaccharum offcinarum.

     [வெளுப்பு + காகச்சி]

வெளுப்புடும்பு

 வெளுப்புடும்பு veḷuppuḍumbu, பெ.(n.)

   வெள்ளையுடும்பு; white guana.

     [வெளுப்பு + உடும்பு]

வெளுப்புநீர்

 வெளுப்புநீர் veḷuppunīr, பெ.(n.)

வெளுப் பதற்கு பயன்படும் நீர்மம்

 washing fluid.

     [வெளுப்பு + நீர்]

வெளுப்பேறல்

 வெளுப்பேறல் veḷuppēṟal, பெ.(n.)

   வெளுத்தல்; to become white.

     [வெளுப்பு + ஏறல்]

வெளுரல்

 வெளுரல் veḷural, பெ.(n.)

   வெளுத்தல், கண்ணாமாகல்; to be calcined.

     [வெ → வெளு → வெளுரல்]

வெளுரி

 வெளுரி veḷuri, பெ.(n.)

   வெளுத்தல்; to become white.

     [வெ → வெளு → வெளுரி]

வெளுவெளு-த்தல்

வெளுவெளு-த்தல் veḷuveḷuttal, செ.கு.வி. (v.i.)

   1. வெண்மையாதல் (வின்.);; to become white.

   2. நிறங்கெடுதல்; to become pale.

     [வெளு + வெளு-,]

வெளுவெளுப்பு

வெளுவெளுப்பு1 veḷuveḷuppu, பெ.(n.)

   1. வெளுப்பு 1 பார்க்க;see veluppu.

   2. வெளுப்பு 2 பார்க்க (யாழ்.அக.);;see veluppu 2.

     [வெ → வெளு → வெளுவெளுப்பு]

 வெளுவெளுப்பு2 veḷuveḷuppu, பெ.(n.)

   நோயடைந்த வெண்மை; pale.

     [வெளு → வெளுவெளுப்பு]

வெளுவெளுவெனல்

வெளுவெளுவெனல் veḷuveḷuveṉal, பெ.(n.)

   1. மிக வெண்மையாதற் குறிப்பு; extreme whiteness.

   2. நிறம் வெளிறுதற் குறிப்பு; extreme paleness.

   3. நையப் புடைத்தற் குறிப்பு; sound thrashing.

   4. கொண்டாடத்தக்க விதத்தில் ஒன்றைச் செய்தற் குறிப்பு; doing a thing in an admirable manner.

     [வெளுவெளு + எனல்]

வெளுவை

 வெளுவை veḷuvai, பெ.(n.)

   வெண்மையாகை (யாழ்.அக.);; becoming white.

     [வெ → வெளு → வெளுவை]

வெளே ரெனல்

வெளே ரெனல் veḷēreṉal, பெ.(n.)

   1.வெண்மையாதற்குறிப்பு; appearing white.

   2. நிறம் வெளிறுதற்குறிப்பு; looking pale.

     [வெளேர் + எனல்]

வெளைநோக்கம்

 வெளைநோக்கம் veḷainōkkam, பெ.(n.)

– வெள்ளைநோக்கு பார்க்க;see wellai. nõkku.

     [வெள்ளை+ நோக்கம்]

வெள்

வெள்1 veḷ, பெ. எ. (adj.)

   1. வெண்மையான; white.

     “வெள்ளரைக் கொளிஇ” (மலைபடு. 562);.

   2. உள்ளீடற்ற; empty, blank.

   3. கலப் பில்லாத; pure, unadulterated.

   4. ஒளி பொருந்திய; shining bright.

     “வெள்வேல் விடலை” (அகநா);.

     [வெண்-மை → வெள்]

 வெள்2 veḷ, பெ.(n.)

   கூர்மை (நாமதீப. 427);; sharpness.

     [வள் → வெள்]

வெள்கல்

 வெள்கல் veḷkal, பெ.(n.)

   அச்சம், வெட்கம், வெட்குதல்; fear, shame, ashame.

     [வெள் → வெள்கல்]

வெள்காடு

வெள்காடு veḷkāṭu, பெ. (n.)

   1. இடுகாடு; burial ground.

   2. சுடுகாடு; cremation ground.

   க. பெள்காடு;தெ. வல்லகாடு

மறுவ, ஈமக்காடு

     [வெள்+காடு]

வெள்-வெறுமை, பயன்பாடின்மை. இடுகாடு வேறெந்த நல்ல பயன்பாட்டுக்கும் உதவாத நிலமாதலின் வெள்காடு (பயனற்றது); எனப் பெயர் பெற்றது.

வெள்கு-தல்

வெள்கு-தல் veḷkudal, செ.கு.வி.(v.i.)

   1. வெட்டுதல்; to be ashamed.

     “வெள்கிட மகுடஞ் சாய்க்கும்” (கம்பரா. வாலிவதை. 73);,

   2. கூச்சப்படுதல்; to be coy, bashful.

     “தான்றன் வென்றியை யுரைப்பவெள்க” (கம்பரா. திருவடி. 9);.

   3. அஞ்சுதல்; to fear.

     “வெந்தனகள் கொன்டெறிய வெள்கிம் மயிர்க் கவுரிமா விரியுமே” (சீவக. 1897);.

   4. மனங்குலைதல் (பிங்.);; to shudder, to be perplexed.

     [வெள் → வெள்கு-தல்]

வெள்னைமிளகு

வெள்னைமிளகு2 veḷṉaimiḷagu, பெ.(n.)

   1. வெண்ணிறமான மிளகு; white peppers only black-pepper rid off its skin.

வயிற்று வலி முதலியவற்றுக்குப் (கிரகணி, சிலேஷ்மவாதம், சீழ்ப்பிரமேகம்); பயன்படுத்த நல்ல குணம் தரும்.

   2. தோலைப் போக்கின மிளகுப் பழத்தின் வித்து; pepper rid of its skin.

   3. பழத்தின் விதை; seed of a fruit.

     [வெள்ளை + மிளகு]

வெள்யாடு

வெள்யாடு veḷyāṭu, பெ.(n.)

வெள்ளாடு பார்க்க (தொல். சொல். 17, உரை);;see velladu.

     [வெள் + யாடு]

வெள்ள வாசி

 வெள்ள வாசி veḷḷavāci, பெ.(n.)

   அகவிலையின்படி விதிக்கப்படும் தீர்வை; rate of assessment according to the market-price of grain.

     [விலைவாசி → வெள்ளவாசி]

வெள்ளகத்தி

 வெள்ளகத்தி veḷḷagatti, பெ.(n.)

   அகத்தி வகை (மூ,அ.);; west indian pea-tree.

     [வெள் + அகத்தி]

வெள்ளகில்

 வெள்ளகில் veḷḷagil, பெ.(n.)

   அகில் மரம்; a white species of eagle wood tree-aquilaria agalocha.

     [வெள் + அகில்]

வெள்ளக்கட்டுப்பாடு

வெள்ளக்கட்டுப்பாடு veḷḷakkaṭṭuppāṭu, பெ.(n.)

   ) வெள்ளத்தடுப்பு; flood control.

   வெள்ளக்கட்டுப்பாடு;   வெள்ளத்தின் அளவைக் கணக்கிட்ட பின்னர், அடுத்து அதனால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கு வேண்டிய வழிகளைக் கையாள வேண்டும். பொதுவாகக் கையாளப்படும் வழிகளாவன;   1. ஆற்றுப்பகுதியைத் துப்புரவாக்கி நீரோட்டத்தைத் விரைவுபடுத்துதல்.

   2. நீர்த்தேக்கங்கள் (Reservoirs); அமைத்தல்.

   3. மண்ணாலான கரைகள் (levees); அல்லது

வெள்ளத்தடுப்பு மதில்கள் (flood walls); அமைத்தல், 4. வெள்ளத் திருப்பு வழிகள் (flood ways); அமைத்தல்.

   5. நீர்புகா (flood proof); நிறுவனங்கள் அமைத்தல்.

   6. நில காப்பு முறைகளால் வெள்ளத்தைக் குறைத்தல்.

   7. வெள்ளப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றல் வெள்ளப் பகுதியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தல் (flood plain zoning);.

வெள்ளத்தால் ஏற்படும் சேதம் வெள்ள நீரின் அளவைவிட நீரோட்டத்தில் ஏற்படும் நீர்மட்ட உயரத்தையே பொறுத்திருக்கிறது. எனவே ஆற்றுப் படுகையிலும் அதன் இரு மருங்கிலும் வளரும் களைகளைக் களைவதன் மூலமும் நீரோடும் பகுதியைச் சற்று ஆழமாக்குவதன் மூலமும், துப்புரவாக்குவதன் மூலமும், ஆற்றுப் போக்கில் உள்ள வளைவுகளைக் குறைத்து நேராக்குவதன் மூலமும் நீரோட்டத்தை அதிகப்படுத்தி நீர் மட்டத்தைக் குறைக்கலாம். வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு மிகுதியாகப் பயன்படுபவை நீர்த்தேக்கங்களாகும். வெள்ளத்தைத் தடுத்துத் தேக்கி, அத்தேக்கத்தின் கீழுள்ள நீரோட்டத்தின் இருபுறத்திலும் சேதம் ஏற்படாத அளவில் தண்ணிரைக் கட்டுப்படுத்தி ஓடவிடுவது ஒரு நோக்கமாகும். ஆங்காங்கு வெள்ளக் கட்டுப்பாட்டிற்கென்றே நீர்த்தேக்கங்கள் கட்டப்படுகின்றன வெனினும், பெரும்பாலான நீர்த்தேக்கங்கள்

     ‘பலநோக்கு நீர்த்தேக்க’ வகையைச் சேர்ந்தவை. வெள்ளக் கட்டுப்பாடு மட்டுமின்றி வேளாண்மை, மின்னாக்கம், குடிதண்ணீர் ஆகியவற்றிற்கும் அவை அமைக்கப்படுகின்றன. வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதற்கு முயன்ற நாள் தொடங்கி மண் கரைகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் வெள்ளத்தடுப்பு மதில்களும் பயன்படுத்தப்பட்டன. மண் கரைகள் மண்ணாலும், வெள்ளத்தடுப்பு மதில்கள் கற்காரை, கருங்கற்கள் இவற்றாலும் கட்டப்படுகின்றன. மண்ணைப்

பயன்படுத்தினால் வெள்ளக் காலத்தில் தீங்கு நேராமல் கண்காணிப்பது இன்றியமையாததாகும். இதற்கென வெள்ளத் தடுப்புப் படைகள் (flood fighting squads); நிறுவப்பட்டுள்ளன.

ஆற்றின் ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதைவிட, அவ் வெள்ளத்தின் அளவை அதன் தோற்றவாயிலேயே குறைப்பது சிறந்ததாகும். ஒரு நீர்ப்பரப்பில் பெய்யும் மழையின் முழு அளவும் ஆற்றுக்கு வந்து சேருவதில்லை. ஆற்றுக்கு வரும் மழைநீரின் அளவு பல காரணங்களால் குறைகிறது. நீர் வரும் பரப்பின் நிலம் பயன்படுத்தப்படும் முறை அக்காரணங்களில் ஒன்றாகும். செடி கொடி வகைகளும் வயல்களும் நிறைந்திருந்து, நீரோடும் சரிவுகளில் ஆங்காங்கு நீரோட்டத்தைத் தடுக்கும் வரப்புகளும் நிறைந்திருக்குமாயின், ஆற்றை வந்தடையும் மழைநீர் குறைகிறது. இதுபோன்ற முறைகளை நீர் வரும் பரப்பின் முதன்மையான பகுதிகளில் கையாண்டு வெள்ளத்தைக் குறைப்பதும் பயனுள்ளதாகும். வெள்ளத்தைத் தடுப்பதை விட, அதனால் ஊறுபடக்கூடிய பகுதிகளிலிருந்து வெளியேறி விடுவது சில சமயங்களில் எளிதாக இருக்கலாம். வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கை செய்ய வசதிகள் இருக்குமாயின், இம் முறையைக் கையாண்டு வெள்ளம் வருமுன் ஊறுபடக் கூடிய பகுதிகளிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் வெளியேற்றலாம். மக்கள் உயிர்ச் சேதத் தடுப்பு, உடல்நலப் பாதுகாப்பு போன்றவை பொருளியல் அடிப்படையில் அளவிடமுடியாத நன்மைகளாகும்.

     [வெள்ளம் + கட்டுப்பாடு]

வெள்ளக்காடு

வெள்ளக்காடு veḷḷakkāṭu, பெ.(n.)

   1. நீரால் நிலப்பரப்பு நிறைகை; inundation by flood.

     “புழைக்கடை யெல்லாம் வெள்ளக் காடாய்விட்டது” (பே.வ.);.

   2. பெருவெள்ளம்; excessive flood.

     [வெள்ளம் + காடு → வெள்ளக்காடு]

வெள்ளக்கால்

வெள்ளக்கால் veḷḷakkāl, பெ.(n.)

   வெள்ளநீர்; great flood.

     “கழனியை வெள்ளக்கால் வந்து கோத்ததென” (பரிபா. 7, 33. உரை);.

     [வெள்ளம் + கால்]

 வெள்ளக்கால் veḷḷakkāl, பெ.(n.)

   மழைநீர் செல்லும் கால்வாய்; canal of rainflow.

     [வெள்ளம்+கால்]

வெள்ளக்குடி

 வெள்ளக்குடி veḷḷakkuḍi, பெ.(n.)

   தாகநீர்; drink.

     “இன்று காருவா (அமாவாசை); ஆதலால் இரவில் கொஞ்சம் வெள்ளக்குடி இருக்கட்டும்”.

     [|வெள்ளம் + குடி]

வெள்ளக்கேடு

வெள்ளக்கேடு veḷḷakāṭu, பெ.(n.)

வெள்ளப்பாழ் பார்க்க;see vella-p-pal.

     “வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே” (திவ். திருப்பா. 3, வ்யா);.

     [வெள்ளம் + கேடு]

வெள்ளங்காட்டி

 வெள்ளங்காட்டி veḷḷaṅgāṭṭi, வி.எ. (v.i.)

   விடியற் காலையில்; early in the morning.-

     [வெள்ளெனல் + காட்டி]

வெள்ளச்சாவி

வெள்ளச்சாவி veḷḷaccāvi, பெ.(n.)

வெள்ளப்பாழ் பார்க்க;see vela-p-pal (Insc. Pudu. 343);.

     [வெள்ளம் + சாவி]

வெள்ளச்சி

வெள்ளச்சி veḷḷacci, பெ.(n.)

   1. ஒரு வகை தொட்டி நச்சு; a kind of arsenic.

   2. சீனக்காரம்; alum.

வெள்ளச்சிப்பி

 வெள்ளச்சிப்பி veḷḷaccippi, பெ.(n.)

   பொன்னிமிளை; yellow bismuth.

     [வெள்ளம் + சிகுப்பி]

வெள்ளச்சேதம்

வெள்ளச்சேதம் veḷḷaccētam, பெ.(n.)

   1. வெள்ளப்பாழ் பார்க்க;see vela-p-pal (w.);.

     “தமிழ்நாட்டில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட நடுவணரசுக் குழு வருகை”

     [வெள்ளம் + சேதம்]

வெள்ளஞ்க

 வெள்ளஞ்க veḷḷañka, பெ.(n.)

   காட்டுப்பச்சிலை; dal bergia lanceolaria.

வெள்ளடம்பு

 வெள்ளடம்பு veḷḷaḍambu, பெ.(n.)

   கொடி வகை; moon-flower, m,ch.

     [வெள் + அடம்பு]

வெள்ளடி

வெள்ளடி veḷḷaḍi, பெ.(n.)

   1. வெளிப்படை; openness (w.);.

   2. விளம்பரப்படுத்துதல்; publicity.

   3. உள்ளீடின்மை; emptiness (w.);.

   4. எளிமை; simplicity.

   5. பொதுவிடம்; common place.

     [வெள் → வெள்ளடி]

 வெள்ளடி2 veḷḷaḍi, பெ.(n.)

   1. வெறுங்கால்; uncovered foot.

   2. வெண்பாவுக்குரிய அடி (யாப்.வி.85, உரை);; metrical line pertaining to venpā.

     [வெள் + அடி]

 வெள்ளடி3 veḷḷaḍi, பெ.(n.)

   வெருட்டு (யாழ்.அக.);; Intimidation.

     [வெள் → வெள்ளடி]

வெள்ளடிச்சேவல்

 வெள்ளடிச்சேவல் veḷḷaḍiccēval, பெ.(n.)

   காலின் முள் செதுக்கப்படாத சண்டைச் சேவல்; fighting cock with spurs uncut (w.);.

     [வெள் + அடி + சேவல்]

வெள்ளடிவலை

 வெள்ளடிவலை veḷḷaḍivalai, பெ.(n.)

   மணிவலையில் ஒரு கூறு (தஞ்சை. மீன.);; a part of gem studded net.

வெள்ளடிவெருட்டு

 வெள்ளடிவெருட்டு veḷḷaḍiveruḍḍu, பெ.(n.)

வெள்வீச்சு பார்க்க;see vel-viccu.

     [வெள்ளடி + வெருட்டு]

வெள்ளடை

வெள்ளடை1 veḷḷaḍai, பெ.(n.)

   வெற்றிலை; betel.

     “வெள்ளடைத் தம்பல்” (கம்பரா. கார்காண். 29);.

     [வெள் + அடை]

 வெள்ளடை2 veḷḷaḍai, பெ.(n.)

   1. விண்வெளி; the great cosmic space.

   2. திருக்குருகா வூரிலுள்ள சிவன் கோயில்; the siva shrine at Tiru-k-kurukāvūr.

     “விளங்கொளி குருகாவூர் வெள்ளடை யுறைவானே” (தேவா. 61,10);.

     [வெள் + அடை]

வெள்ளட்டை

 வெள்ளட்டை veḷḷaṭṭai, பெ.(n.)

   மர அட்டை; wood louse.

வெள்ளணங்காட்டி

 வெள்ளணங்காட்டி veḷḷaṇaṅgāṭṭi, செ.கு.வி. (v.i.)

வெள்ளங்காட்டி பார்க்க;see ve/ari-kātti.

     [வெள்ளம் + அணங்காட்டி]

வெள்ளணி

வெள்ளணி veḷḷaṇi, பெ.(n.)

   தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன் அறிந்து கொள்ளும் பொருட்டுத் தோழி அணிந்து கொள்ளும் வெண்மை நிறமுள்ள ஆடைமுதலியன (தஞ்சைவா. 388, தலைப்பு);; white dress worn by a maid to signify to her load that her lady is delivered of a son.

   2. அரசன் பிறந்தநாள் ஒப்பனை (சீவக. 614,உரை);; decorative dress of the king’s on his birthday.

   3. அரசன் பிறந்த நாள் விழா; festival celebrating the king’s birthday.

     “அடித்தளை நீக்கும் வெள்ளணியாம்” (சிலப். 27, 229);.

     [வெள் + அணி]

 வெள்ளணி veḷḷaṇi, பெ.(n.)

   வெண் பாதிரிமரம்; a tree-stereos-permum chelonoides.

     [வெள் + அனி]

வெள்ளணி நாள்

 வெள்ளணி நாள் veḷḷaṇināḷ, பெ.(n.)

   பிறந்த நாள் பெருவிழா (சயந்தி);; birth_day celebration.

     [வெள்+அணி+நாள்]

வெள்ளணிவிழா

வெள்ளணிவிழா veḷḷaṇiviḻā, பெ.(n.)

வெள்ளணி3 பார்க்க;see valani3.

     [வெள்ளணி + விழா]

வெள்ளந்தி

வெள்ளந்தி1 veḷḷandi, பெ.(n.)

   வஞ்சகமின்மை, வெள்ளை மனம்; honesty, plain-hearted man.

வெள்ளப்பெருக்கு

 வெள்ளப்பெருக்கு veḷḷapperukku, பெ.(n.)

   பெருமழையால் ஏற்படும் வெள்ளநீர்; heavy fall of rain.

     [வெள்ளம் + பெருக்கு]

வெள்ளமெடு-த்தல்

வெள்ளமெடு-த்தல் veḷḷameḍuttal, செ.கு.வி. (v.i.)

   1. நீர் பரவுதல்; to be deluged (w.);.

   2. பெருக்கெடுத்தல்; to be in floods.

     [வெள்ளம் + எடு-த்தல்]

வெள்ளம்

வெள்ளம் veḷḷam, பெ.(n.)

   1. நீர்ப்பெருக்கு (பிங்.);; flood, deluge.

     “வெள்ளந்தாழ் விரிசடையாய்” (திருவாக. 3, 1);.

   2. கடல்; sea.

     “மகர வெள்ளத் திறத்தால்” (கம்பரா. கடல்காண். 2);.

   3. கடலலை (பிங்.);; sea-wave.

   4. நீர்; water.

     ‘குடிக்க வெள்ளங் கொண்டுவா’.

   5. ஈரம் (பிங்.);; moisture.

   6. மிகுதி (சூடா.);; abundance.

   7. பேரெண் (தொல். எழுத். 393);; a large number.

   8. உண்மை; truth (w.);.

     ‘இது கள்ளமா வெள்ளமா?’.

     ‘தமிழில் வெள்ளமென்பது மிகுதிப் பொருளைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவும், மலையாளத்தில் பொதுப் பொருளைக் குறிக்கும் சொல்லாகவும் வழங்கப்படுகிறது’.

     [வெண்-மை → வெள்ளம்]

வெள்ளம்பர்

 வெள்ளம்பர் veḷḷambar, பெ.(n.)

   வெண்மை நிறமான ஒரு வகை அம்பர்; white amber.

வெள்ளம்போடு-தல்

வெள்ளம்போடு-தல் veḷḷambōṭudal, செ.கு.வி. (v.i.)

   1. கட்குடித்தல்; to drink liquor.

   2. வெள்ளமெடு பார்க்க;see vella-medu.

     [வெள்ளம் + போடு]

வெள்ளயம்பெருமலை

 வெள்ளயம்பெருமலை veḷḷayamberumalai, பெ.(n.)

   விஞ்சையர்களுடைய மலை; a mountain of demigods.

     [வெள்ளயம் + பெருமலை]

வெள்ளரசு

 வெள்ளரசு veḷḷarasu, பெ.(n.)

   அரசமரவகை (சங்.அக.);; a kind of pipal tree.

     [வெள் + அரசு]

வெள்ளரணை

 வெள்ளரணை veḷḷaraṇai, பெ.(n.)

   சீலைப் பேன் (சங்.அக.);; lice in clothes.

     [வெள் → அரணை → வெள்ளரணை]

வெள்ளரளி

வெள்ளரளி veḷḷaraḷi, பெ.(n.)

   1. பழக்கொடி; a creeper cucumis sativus.

     [வெண்-மை + அரளி]

வெள்ளரவம்

 வெள்ளரவம் veḷḷaravam, பெ.(n.)

விடியற்கால ஒசை.

     “வெள்ளரவம் கேட்டிலையோ” (திருப்பாவை);.

     [வெள் + அரவம்]

வெள்ளரவவெற்பு

 வெள்ளரவவெற்பு veḷḷaravaveṟpu, பெ.(n.)

   திருவேங்கடமலை; mount Tiruvēňkadamalai.

வெள்ளரா

வெள்ளரா veḷḷarā, பெ.(n.)

   நீலநிறமுடையதும் நான்கு அடி வளர்வதுமான கடல் மீன் வகை; sea-fish, bluish, attaining 4 ft. in length.

     [வெள் → வெள்ளரா]

வெள்ளராமுள்ளி

 வெள்ளராமுள்ளி veḷḷarāmuḷḷi, பெ.(n.)

   வெள்ளரா மீனைப் பிடிக்க உதவும் தூண்டில் வகை; a fish-hook for catching sea-fish.

     [வெள்ளரா + முள்ளி]

வெள்ளரி

வெள்ளரி veḷḷari, பெ.(n.)

   1. கொடிவகை (பிங்.);; cucumber.

   2. புள்ளி முலாம்பழம்; mottled-melon.

     “பிட்டு வெள்ளரிப் பழம்” (திருப்பு. விநாயகர்துதி. 3);.

   3. கத்திரி; kakkari-melon.

     [வெள் + அரி → வெள்ளரி]

வெள்ளரிசி

வெள்ளரிசி1 veḷḷarisi, பெ.(n.)

   அறுகும் அரிசியும் கூடியது (திவா.);; grains of rice used in benediction.

     [வெள் + அரிசி]

 வெள்ளரிசி veḷḷarisi, பெ.(n.)

   பச்சரிசி; raw rice.

     [வெள் + அரிசி]

வெள்ளரிஞ்சகெண்டை

வெள்ளரிஞ்சகெண்டை veḷḷariñjageṇṭai, பெ.(n.)

   மஞ்சள் நிறமுள்ளதும் ஒரடி வளர்வதுமான ஆற்று மீன் வகை; corp, orange, attaining 1 ft. in length.

     [வெள்வரி + கெண்டை]

வெள்ளரிதாரம்

 வெள்ளரிதாரம் veḷḷaritāram, பெ.(n.)

   வெள்ளை அரிதாரம்; white realgar.se.

     [வெள் + அரிதாரம்]

வெள்ளரிப்பழம்

வெள்ளரிப்பழம்1 veḷḷarippaḻm, பெ.(n.)

   1. எளிதில் நோயுறும் தன்மையுள்ளவன்; a person of delicate health.

     ‘பிள்ளை வெள்ளரிப் பழம் தான்’.

   2. நோயுற்றவன்; person of sound health, as fresh and plump as a ripe cucumber.

     [வெள்ளரி + பழம்]

 வெள்ளரிப்பழம்2 veḷḷarippaḻm, பெ.(n.)

   பழவகை; musk melon-fruit of cucumber.

     [வெள்ளரி + பழம்]

வெள்ளரிப்பிஞ்சு

 வெள்ளரிப்பிஞ்சு veḷḷarippiñju, பெ.(n.)

   பிஞ்சு வெள்ளிரிக்காய்; tender fruit of cucumber diuretic.

     [வெள்ளரி + பிஞ்சு]

வெள்ளரிவிதை

 வெள்ளரிவிதை veḷḷarividai, பெ.(n.)

   வெள்ளரிப் பழத்தின் விதை; seed of cucumber.

     [வெள்ளரி + விதை]

வெள்ளரிவித்து

 வெள்ளரிவித்து veḷḷarivittu, பெ.(n.)

   வெள்ளரிப் பழத்தில் உள்ள விதை; the seed of cucumber fruit.

     [வெள்ளரி + வித்து]

வெள்ளரிவிரையெண்ணெய்

 வெள்ளரிவிரையெண்ணெய் veḷḷariviraiyeṇīey, பெ.(n.)

   வெள்ளரி விதையினின்று இறக்கும் நெய்மம்; an oil extracted from the seeds of cucumber of musk melon.

     [வெள்ளரி + விரை + எண்ணெய்]

வெள்ளரிவேர்

 வெள்ளரிவேர் veḷḷarivēr, பெ.(n.)

   வெள்ளரியின் வேர்; root of cucumber.

     [வெள்ளரி + வேர்]

வெள்ளர்

வெள்ளர் veḷḷar, பெ.(n.)

   1. வெண்ணிற முடையார்; whitemen.

   2. கவடமற்றவர்; honestmen.

     “கள்ளரோ புகுந்தீரென்ன……. வெள்ளரோ மென்று நின்றார்” (தேவா. 1190, 9);.

     [வெள் → வெள்ளர்]

வெள்ளறிவன்

 வெள்ளறிவன் veḷḷaṟivaṉ, பெ.(n.)

   அறிவீனன்; uneducated, fool.

     [வெள் + அறிவன்]

வெள்ளறிவு

வெள்ளறிவு veḷḷaṟivu, பெ.(n.)

   அறிவின்மை; Senselessness.

     “விலங்கன்ன வெள்ளறிவினார்” (நாலடி, 375);

     [வெள் + அறிவு]

வெள்ளறுகு

வெள்ளறுகு veḷḷaṟugu, பெ.(n.)

   1. அறுகம் புல்வகை; whie bermuda grass.

   2. புல்வகை; small chiretta (w.);.

     [வெள் + அறுகு]

வெள்ளறுவை

வெள்ளறுவை veḷḷaṟuvai, பெ.(n.)

வெள்ளைத்துளி,

 white cloth.

     “தூவெள் ளறுவை” (புறநா. 286);.

     [வெள் + அறுவை]

வெள்ளலத்திப்பட்டை

 வெள்ளலத்திப்பட்டை veḷḷalattippaṭṭai, பெ.(n.)

   வெள்ளலத்தியின் பட்டை; bark of vesllalatti.

     [வெள்ளலத்தி + பட்டை]

வெள்ளலரி

வெள்ளலரி veḷḷalari, பெ.(n.)

   அலரி வகை; linear-leaved Oleander.

     [வெள். + அலரி → வெள்ளலரி]

 வெள்ளலரி2 veḷḷalari, பெ.(n.)

   1. அலரிப்பூ மரம்; a tree.

   2. வெள்ளரளி; nerium odorum bearing white flowers.

வெள்ளல்லி

வெள்ளல்லி1 veḷḷalli, பெ.(n.)

வெள்ளாம்பல்1 பார்க்க (பிங்.);;see vellambal.

     [வெள் + அல்லி → வெள்ளல்லி]

 வெள்ளல்லி2 veḷḷalli, பெ.(n.)

   வெள்ளாம்பல்; white water lily-nympha esiellate stellate bearing white flowers.

வெள்ளல்லிவிரை

 வெள்ளல்லிவிரை veḷḷallivirai, பெ.(n.)

   வெடளளையல்லி விதை;;seeds of white water lily.

     [வெள் + அல்லி + விரை]

வெள்ளல்லிவேர்

 வெள்ளல்லிவேர் veḷḷallivēr, பெ.(n.)

   வெண்மை நிற அல்லி வேர்; root of white water lily.

     [வெள் + அல்லி + வேர்]

வெள்ளளை விரலி

 வெள்ளளை விரலி veḷḷaḷaivirali, பெ.(n.)

   விலாரி, செடிவகை; a plant.

     [வெள்ளை + விரலி]

வெள்ளழிஞ்சில்

 வெள்ளழிஞ்சில் veḷḷaḻiñjil, பெ.(n.)

   வெள்ளை அழிஞ்சில்; white variety of alińjil.

வெள்ளழுகல்

வெள்ளழுகல்1 veḷḷaḻugal, பெ.(n.)

   பூஞ்சைக் காளாண் பிடித்தழுகியது (யாழ்.அக.);; that which has become putrid and mossgrown.

     [வெள் + அழுகல்]

 வெள்ளழுகல்2 veḷḷaḻugal, பெ.(n.)

   அழுகி வெண்ணிறம் பூத்தல்; formation of white coating-fungus growth-after putrefaction.

     [வெள் + அழுகல்]

வெள்ளவரை

 வெள்ளவரை veḷḷavarai, பெ.(n.)

   அவரைவகை; country bean.

     [வெள் + அவரை]

வெள்ளவாரி

வெள்ளவாரி veḷḷavāri, பெ.(n.)

   1. வரத்து வாய்க்கால்; feeder channel.

   2. வெள்ளநீர் வடியும் வடிகால்; channel to drain off floodwater.

     [வெள்ளம் + வாரி]

வெள்ளவிளர்-த்தல்

 வெள்ளவிளர்-த்தல் veḷḷaviḷarttal, செ.கு.வி. (v.i.)

   மிக வெண்மையாதல்; to become very white, as a washed cloth.

     [வெள் → வெள்ளவிளர்]

வெள்ளவெளி

வெள்ளவெளி veḷḷaveḷi, பெ.(n.)

   விண்வெளி; the great cosmic space.

     “கலந்திடில் வெள்ளவெளி யாம்” (தொல், எழுத். 482, உரை);.

     [வெள் → வெள்ளவெளி]

வெள்ளா

 வெள்ளா veḷḷā, பெ.(n.)

   ஒரு வகை கடல் மீன் (முகவை. மீன.);; a kind of sea-fish.

வெள்ளாங்கம்

 வெள்ளாங்கம் veḷḷāṅgam, பெ.(n.)

வெள்வரியங்கம் பார்க்க;see vell-vari.yarikam.

வெள்ளாங்கு

 வெள்ளாங்கு veḷḷāṅgu, பெ.(n.)

வெள்ளாஞ்சு பார்க்க;see vellancu.

வெள்ளாங்குடி

 வெள்ளாங்குடி veḷḷāṅguḍi, பெ.(n.)

   வேளாளர் வாழும் ஊர்ப்பகுதி; part of a village where vélalas live.

     [வெள்ளான் + குடி]

வெள்ளாங்குருகு

வெள்ளாங்குருகு veḷḷāṅgurugu, பெ.(n.)

   வெண்ணாரை வகை; a species of white crane.

     “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தன” (ஐங்குறு. 151);.

     [வெள் + ஆ + குருக → வெள்ளங்குருகு]

வெள்ளாஞ்செட்டி

 வெள்ளாஞ்செட்டி veḷḷāñjeṭṭi, பெ.(n.)

   வேளாளருள் வாணிபஞ் செய்யும் பிரிவினர்; person belonging to class of velalas who trade (w.);.

     [வெள்ளான் + செட்டி]

வெள்ளாடிச்சி

வெள்ளாடிச்சி veḷḷāṭicci, பெ.(n.)

வெள்ளாளச்சி பார்க்க (இலக். வி.178);;see vesllaiacci.

     [வெள்ளாழச்சி + வெள்ளாடிச்சி]

வெள்ளாடியனார்

 வெள்ளாடியனார் veḷḷāṭiyaṉār, பெ.(n.)

   கழகக்காலப்; a sangam poet.

இவர் மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளோடு என்னும் ஊரினராக இருக்கலாம். புலி தான் அடித்த யானை இடப்புறமாக விழின் மிசையாது என்று புலியின் மானத்தினை விளக்குகின்றார். இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் காணப்படுகின்றது. இவர் பாலைத்திணையின் சிறப்பினை விளக்குகின்றார். இவர் வெண்வட்டியார் என்றும் வழங்கப் பெறுவர்.

வெள்ளாடு

வெள்ளாடு veḷḷāṭu, பெ.(n.)

   ஆடுவகை (நன். 266, உரை);; goat.

     “மனிதர் காராட்டை வெள்ளாடென்ப தொக்குமால்” (பிரபுலிங். பிரபு தேவர்வந்த. 59);.

     [வெள் + ஆடு → வெள்ளாடு]

வெள்ளாடைச் சமணர்

 வெள்ளாடைச் சமணர் veḷḷāṭaiccamaṇar, பெ.(n.)

   வெள்ளாடை அணிந்த சமண முனிவர் (சுவேதாம்பரர்);; Jaina medicants clad ir white robe tigambaram.

     [வெண்மை+ஆடை+சமணர்]

வெள்ளாட்டி

வெள்ளாட்டி veḷḷāṭṭi, பெ.(n.)

   1. பணிப் பெண்; maid servant.

     “ஒரு வெள்ளாட்டி யையும் சம்பாதித்து” (ஈடு. 4, 1, 7);.

   2. வைப்பாட்டி; concubine.

     [வெள் → வெள்ளாட்டி]

வெள்ளாட்டிறைச்சி

 வெள்ளாட்டிறைச்சி veḷḷāṭṭiṟaicci, பெ.(n.)

   வெள்ளாட்டுக் கறி; mutton.

     [வெள்ளாடு + இறைச்சி]

வெள்ளாட்டுக்கண்டம்

 வெள்ளாட்டுக்கண்டம் veḷḷāṭṭukkaṇṭam, பெ.(n.)

   வெள்ளாட்டு உப்புக் கண்டம்; salted dried meat of goat.

     [வெள்ளாடு + கண்டம்]

வெள்ளாட்டுக்குட்டி

 வெள்ளாட்டுக்குட்டி veḷḷāṭṭukkuṭṭi, பெ.(n.)

   ஆட்டுக்குட்டி; kid.

     [வெள்ளாடு + குட்டி]

வெள்ளாட்டுநீர்

 வெள்ளாட்டுநீர் veḷḷāṭṭunīr, பெ.(n.)

   வெள்ளாட்டு மூத்திரம்; urine of a goat.

     [வெள்ளாடு + நீர்]

வெள்ளாட்டுநெய்

 வெள்ளாட்டுநெய் veḷḷāṭṭuney, பெ.(n.)

   ஆட்டுப்பால் நெய்; goat’s ghee.

     [வெள்ளாடு + நெய்]

வெள்ளாட்டுப்பால்

 வெள்ளாட்டுப்பால் veḷḷāṭṭuppāl, பெ.(n.)

   வெள்ளாட்டின் பால்; goat’s milk.

     [வெள்ளாடு + பால்]

வெள்ளாட்டுப்பித்து

 வெள்ளாட்டுப்பித்து veḷḷāṭṭuppittu, பெ.(n.)

   வெள்ளாட்டு ஆசை; bile of goat.

     [வெள்ளாடு + பித்து]

வெள்ளாட்டுப்புழுக்கை

 வெள்ளாட்டுப்புழுக்கை veḷḷāṭṭuppuḻukkai, பெ.(n.)

   வெள்ளாட்டின் மலம்; the dung of goat.

     [வெள்ளாடு + புழுக்கை]

வெள்ளாட்டெச்சம்

 வெள்ளாட்டெச்சம் veḷḷāṭṭeccam, பெ.(n.)

வெள்ளாட்டுப்புழுக்கை பார்க்க;see vellattu-p-pulukkai.

     [வெள்ளாடு + எச்சம்]

வெள்ளாண்செட்டி

 வெள்ளாண்செட்டி veḷḷāṇceṭṭi, பெ.(n.)

வெள்ளாஞ்செட்டி பார்க்க;see vellan cetti.

     [வெள்ளான் + செட்டி]

வெள்ளாண்பிள்ளை

வெள்ளாண்பிள்ளை veḷḷāṇpiḷḷai, பெ.(n.)

   1. வேளாளச் சிறுவன் (தொல். எழுத். 338);; velala boy.

   2. வேளாளன் பார்க்க;see velalaŋ.

     [வெள்ளாண் + பிள்ளை]

வெள்ளாண்மரபு

 வெள்ளாண்மரபு veḷḷāṇmarabu, பெ.(n.)

   வேளாளர் இனம்; the valala caste.

     “வெள்ளாண் மரபுக்கு வேதமென” (நாலடி, தனிப்பா.);.

     [வெள்ளான் + மரபு]

வெள்ளாண்மை

 வெள்ளாண்மை veḷḷāṇmai, பெ.(n.)

   வேளாண்மை; cultivation.

     [வேளாண்மை → வெள்ளாண்மை]

வெள்ளாண்வாழ்க்கை

 வெள்ளாண்வாழ்க்கை veḷḷāṇvāḻkkai, பெ.(n.)

   வேளாளனது வாழ்வு; calling of velala.

     [வெள்ளாண்மை + வாழ்க்கை]

வெள்ளாத்திபோளம்

 வெள்ளாத்திபோளம் veḷḷāttipōḷam, பெ.(n.)

வெள்ளைப்போளம் பார்க்க (இங்.வை.);;see vellai-p-polam.

வெள்ளாந்தை

வெள்ளாந்தை1 veḷḷāndai, பெ.(n.)

   மலைப் பாம்பு வகை; a species of rock snake (w.);.

     [வெள் → (வெள்ளான்); → வெள்ளாந்தை);

 வெள்ளாந்தை2 veḷḷāndai, பெ.(n.)

   1 ஆந்தை; a bird-owl.

   2. மலைப்பாம்பு; mountain snake.

     [வெள் → (வெள்ளான்); → வெள்ளாந்தை]

வெள்ளானனயத்தி

 வெள்ளானனயத்தி veḷḷāṉaṉayatti, பெ.(n.)

   சாறு; mercury.

வெள்ளானை

வெள்ளானை1 veḷḷāṉai, பெ.(n.)

   1. இந்திரனது யானை,

 Indra’selephant.

     “வெள்ளானைச் சருக்கம் “(பெரியபு.);.

   2. வெள்ளை யானை; white elephant.

     [வெள் + ஆனை]

 வெள்ளானை2 veḷḷāṉai, பெ.(n.)

   வாலை சாறு; mercury extracted from virmilion and other mercurial compounds.

வெள்ளானையுள்ளோன்

வெள்ளானையுள்ளோன் veḷḷāṉaiyuḷḷōṉ, பெ.(n.)

   அய்யனார் (நாமதீப. 43);; aiyanar.

     [வெள்ளானை + உள்ளோன்]

வெள்ளானையூர்ந்தோன்

வெள்ளானையூர்ந்தோன் veḷḷāṉaiyūrndōṉ, பெ.(n.)

   இந்திரன் (நாமதீப.60);; Indra,

     [வெள்ளானை + ஊர்ந்தோன்]

வெள்ளானைவாழை

வெள்ளானைவாழை veḷḷāṉaivāḻai, பெ.(n.)

   வாழை வகை; a kind of plantain (Insc. Pudu. 929);.

     [வெள்ளானை + வாழை]

வெள்ளான்

வெள்ளான் veḷḷāṉ, பெ.(n.)

வெள்ளாளன் பார்க்க;see vellalan.

     “வெள்ளான் நத்தங்கள்”(S.I.I.ii,114);.

     [வெள்ளாளன் → வெள்ளான்]

வெள்ளான்குடி

 வெள்ளான்குடி veḷḷāṉkuḍi, பெ.(n.)

வெள்ளாங்குடி பார்க்க;see vellan-kudi.

     [வெள்ளான் + குடி]

வெள்ளான்செட்டி

 வெள்ளான்செட்டி veḷḷāṉceṭṭi, பெ.(n.)

வெள்ளாஞ்செட்டி பார்க்க;see vellan cetti (w.);.

     [வெள்ளான் + செட்டி]

வெள்ளான்வகை

வெள்ளான்வகை veḷḷāṉvagai, பெ.(n.)

   வேளாளர்க்குரிய ஊர்ப்பங்கு முதலியன; that which belongs to the vélala class, as lands in a village.

     “வெள்ளான் வகையாய் வருகின்ற நிலம்” (S.I.I.ii,54);.

     [வெள்ளான் + வகை]

வெள்ளாப்பு

வெள்ளாப்பு1 veḷḷāppu, பெ.(n.)

   வெள்ளை மேற்கட்டி; white awning or canopy.

     [வெள் + ஆப்பு. யாப்பு → ஆப்பு]

 வெள்ளாப்பு2 veḷḷāppu, பெ.(n.)

   வெண்ணுரைக் கடலை (செங்கை. மீன.);; foam sea waves.

     [வெள் + ஆப்பு. அலைப்பு → ஆப்பு]

 வெள்ளாப்பு3 veḷḷāppu, பெ.(n.)

   வைகறை; dawn, early morning.

     [வெள் → வெள்ளப்பு]

 வெள்ளாப்பு veḷḷāppu, பெ. (n.)

வெண்னுரை

   யுடன் கூடிய அலைவாய்க்கரையொட்டி வரும் கடலலை; sea wave with white foam touching sea-shore.

வெள்ளாப்புத்தொழில்

 வெள்ளாப்புத்தொழில் veḷḷāpputtoḻil, பெ.(n.)

   வைகறைப் பொழுதில் கடல்மேற் சென்று மீன் பிடிக்கும் தொழில் (நெல்லை. மீன.);; fishing activities in sea in early morning.

     [வெள்ளாப்பு + தொழில்]

வெள்ளாமணக்கு

வெள்ளாமணக்கு veḷḷāmaṇakku, பெ.(n.)

   காட்டாமணக்கு வகை (பதார்த்த. 530);; common physic nut.

     [வெள் + ஆமணக்கு]

வெள்ளாமை

வெள்ளாமை1 veḷḷāmai, பெ.(n.)

   வேளாண்மை; cultivation.

     [வேளாண்மை → வெள்ளாமை]

 வெள்ளாமை2 veḷḷāmai, பெ.(n.)

   1. கடலாமை வகை; white sea turtle.

   2. பறையாமை; a fresh-water tortoise.

     [வெள் + ஆமை]

வெள்ளாம்பல்

வெள்ளாம்பல் veḷḷāmbal, பெ.(n.)

   1. நீர்க் கொடிவகை; esculent white water-lily.

     “அளியதாமே சிறுவெள்ளாம்பல்” (புறநா. 248);.

   2. வெண்ணெய்தல் பார்க்க (பிங்.);;see Venneytal.

     [வெள் + ஆம்பல்]

வெள்ளாம்பிள்ளை

வெள்ளாம்பிள்ளை veḷḷāmbiḷḷai, பெ.(n.)

வெள்ளாண்பிள்ளை1 பார்க்க;see velan. pilla.

     [வெள்ளாண் + பிள்ளை]

வெள்ளாயன்

 வெள்ளாயன் veḷḷāyaṉ, பெ. (n.)

ஆட்டிடையன் goat keeper.

வெள்ளாரல்

வெள்ளாரல் veḷḷāral, பெ.(n.)

   மீன்வகை; a kind of fish.

     “தகு வெள்ளாரல் தும் பையன்” (பறாளை. பள்ளு. 16);.

     [வெள் + ஆரல்]

வெள்ளாரை

 வெள்ளாரை veḷḷārai, பெ.(n.)

   நஞ்சுக்கொடி; umbilical card.

வெள்ளாரைச்சுன்னம்

 வெள்ளாரைச்சுன்னம் veḷḷāraiccuṉṉam, பெ.(n.)

   குடற்சுன்னம்; a medicinal powder prepared out of umbilical card.

வெள்ளாறு

வெள்ளாறு veḷḷāṟu, பெ.(n.)

புதுக் கோட்டையில் உள்ளதும் சோழ பாண்டிய நாடுகளுக்கு இடையெல்லை ஆனதுமான ஓர் ஆறு (தனிப்பா. 1, 126, 2);,

 a river that flows through the pudukkottah state. forming the traditional boundary between the cosa and the pandya kingdoms.

     [[வெள் + ஆறு]

வெள்ளால்

 வெள்ளால் veḷḷāl, பெ.(n.)

   நீண்ட மரவகை; java fig.l. tr.

வெள்ளாளச்சி

 வெள்ளாளச்சி veḷḷāḷacci, பெ.(n.)

   வேளாள இனப்பெண்; velala woman.

     [வெள்ளாளன் → வெள்ளாளச்சி]

வெள்ளாளன்

வெள்ளாளன் veḷḷāḷaṉ, பெ.(n.)

வேளாள மரபினன் (தொல். எழுத். 338, உரை);,

 man of the velala caste.

     [வேளாளன் → வெள்ளாளன்]

வெள்ளாளர்

 வெள்ளாளர் veḷḷāḷar, பெ.(n.)

   பூவைசியர், மருத நிலமாக்கள்; agriculturists, formers, peasants.

     [வேளாளர் → வெள்ளாளர்]

வெள்ளாழச்சி

 வெள்ளாழச்சி veḷḷāḻcci, பெ.(n.)

வெள்ளாளச்சி பார்க்க;see vellalacci.

     [வெள்ளாளச்சி → வெள்ளாழச்சி]

வெள்ளாழன்

 வெள்ளாழன் veḷḷāḻṉ, பெ.(n.)

வெள்ளாளன் பார்க்க;see vellalan (w.);.

     [வேளாளன் → வெள்ளாழன்]

வெள்ளாவலை

 வெள்ளாவலை veḷḷāvalai, பெ.(n.)

   கரைக்கடற்பரப்பில் – அண்மைக் கடற்பரப்பில் வலைத்தற்குரிய மீன் வலைகளுளொன்று (தஞ்சை. மீன.);; fish.net knitted in coastal areas.

 வெள்ளாவலை veḷḷāvalai, பெ. (n.)

   வெள்ளத்தின் ஒட்டத்திற்குரிய திசையறிந்து இழுக்கும் வலை; a fishing net.

     [வெள்ளம் – வெள்ளா+வலை]

வெள்ளாவலைக்காரன்

 வெள்ளாவலைக்காரன் veḷḷāvalaikkāraṉ, பெ.(n.)

   வெள்ளாவலை வைத்து மீன்பிடிப்பவர் (தஞ்சை. மீன.);; fisherman who uses net prevelant in coastal areas.

     [வெள்ளாவலை + காரன்]

வெள்ளாவி

வெள்ளாவி1 veḷḷāvi, பெ.(n.)

   ஆடையை வெளுக்க உதவும் நீராவி; steam used for bleaching cloths.

     [வெளு + ஆவி]

 வெள்ளாவி2 veḷḷāvi, பெ.(n.)

   துணியினின்று எண்ணெய் கக்கி அழுக்கு நீங்குவதற்கு வண்ணார் உவர்மண்ணிட்டு வேக வைத்தல்; boiling clothes by washerman in fuller’s earth solution.

     [[வெளு + ஆவி]

வெள்ளாவிகட்டு-தல்

 வெள்ளாவிகட்டு-தல் veḷḷāvigaṭṭudal, பெ.(n.)

செ.குன்றாவி. (v.t.);

   வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியில் இடுதல்; to treat clothes with steam.

     [வெள்ளாவி + கட்டு-,]

வெள்ளாவிதட்டல்

 வெள்ளாவிதட்டல் veḷḷāvidaṭṭal, பெ.(n.)

   ஆவி பிடித்தல்; vapour bath.

     [வெள்ளாவி + தட்டல்]

வெள்ளாவிநீர்

 வெள்ளாவிநீர் veḷḷāvinīr, பெ.(n.)

   வண்ணார் வெள்ளாவிக்காக வைத்து எரித்த நீர், இதில் உடம்பு குளித்தால் சொறி போகும்; the liquid that remains after boiling the clothes in fuller’s earth solutions.

     [வெள்ளாவி + நீர்]

வெள்ளாவிபிடி-த்தல்

 வெள்ளாவிபிடி-த்தல் veḷḷāvibiḍittal, பெ.(n.)

வெள்ளாவிதட்டல் பார்க்க;see veļļāvidațai.

     [வெள்ளாவி + பிடி-,]

வெள்ளாவிரை

வெள்ளாவிரை1 veḷḷāvirai, பெ.(n.)

   சிறு மரவகை; glaucous-leaved eglandular Senna, S.tr.

     [வெள்ளா + விரை]

 வெள்ளாவிரை1 veḷḷāvirai, பெ.(n.)

   ஆவிரை வகை; a kind of plant-cassia auriculata.

வெள்ளாவிவை

வெள்ளாவிவை1 veḷḷāvivaittal, செ. குன்றாவி.(v.t.)

   1. நன்றாக அடித்தல்; to beat severely.

     “பயலை நன்றாக வெள்ளாவி வைத்தனுப்பி விட்டான்” (பே.வ.);.

   2. வெள்ளாவிகட்டு பார்க்க;see welavi. katfu (w.);.

     [வெள்ளாவி + வை-,]

வெள்ளாவிவைத்தல்

வெள்ளாவிவைத்தல்2 veḷḷāvivaittal, பெ.(n.)

   ஆவிபட வைத்தல்; to keep in the vapour.

     [வெள்ளாவி + வைத்தல்]

வெள்ளி

வெள்ளி1 veḷḷi, பெ.(n.)

   1. வெண்மை; whiteness.

     “வெள்ளி நோன்படை” ‘(புறநா. 41);.

   2. வெண்ணிறமுள்ள மாழைவகை (பிங்.);; silver.

     “விண்ணரு வெள்ளி வெற்பின்” (சீவக. 1646);.

   3. வெள்ளிக் காசு வகை; a silver coin.

   4. விண்மீன்; star.

     “வானத்திலுள்ள வெள்ளியைக் கணக்கிட முடியுமா?” (உவ.);,

   5. வெள்ளிக்கோள்; the planet venus.

     “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (புறநா. 35);.

   6. அறிவின்மை; ignorance.

     “வெள்ளியை யாதல் விளம்பினை” (கம்பரா. வேள்வி. 29);.

   7. இனம் பெருக்க விந்து; semen virile.

     “வெள்ளியுருகியே பொன்வழி யோடாமே” (திருமந்;834);.

     [வெள் → வெள்ளி ‘இ”உடைமைப்பொருளிறு]

 வெள்ளி2 veḷḷi, பெ.(n.)

   1. மாழை வகை; silver argentum.

   2. கருக்கன் வெள்ளி; impure silver.

   3. சொக்க வெள்ளி; pure silver.

   4. கல்வெள்ளி; hard and inferior with much alloy.

   5. சாறு வெள்ளிl; silver obtained from mercury.

வெள்ளி நோட்டம்

வெள்ளி நோட்டம் veḷḷinōṭṭam, பெ.(n.)

   வெள்ளிக்கு (சுக்கிரன்); உரிய இருபதாண்டு ஆட்சிக் காலம் (சுக்கிரதசை);; the period 20 years in which venus excercise its influence.

   2. நல்லகாலம்; period of great prosperity.

     [வெள்ளி+நோட்டம்]

வெள்ளிக்கட்டன்

வெள்ளிக்கட்டன் veḷḷikkaṭṭaṉ, பெ.(n.)

   1. வெள்ளைக் கட்டுகளையுடைய விரியன் பாம்பு; russell’s viper.

   2. கண்ணாடி விரியன் பார்க்க;see kannādi-viriyan.

வெள்ளிக்கண்

 வெள்ளிக்கண் veḷḷikkaṇ, பெ.(n.)

 Wall eye.

     [வெள்ளி + கண்]

வெள்ளிக்கரு

 வெள்ளிக்கரு veḷḷikkaru, பெ.(n.)

   மருந்துப் புடம் வைப்பதன் முன் அதனை மூடும் மூடிவகையில் ஒன்று (மூ.அ.);; a kind of covering for drugs, used in sublimating them.

     [வெள்ளி + கரு]

வெள்ளிக்கலியாணம்

 வெள்ளிக்கலியாணம் veḷḷikkaliyāṇam, பெ.(n.)

   மணமக்கள் திருமணம் முடித்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுபெறும் நாளன்று கொண்டாடும் விழா; silver wedding.

     [வெள்ளி + கலியாணம்]

வெள்ளிக்காசு

வெள்ளிக்காசு veḷḷikkācu, பெ.(n.)

   1. வெள்ளித் துட்டு; silver coin.

   2. ஒருவகை மீன் (சங்.அக.);; a kind of fish.

     [வெள்ளி + காசு]

வெள்ளிக்காடிக்காரம்

வெள்ளிக்காடிக்காரம் veḷḷikkāṭikkāram, பெ.(n.)

   1. காடிக்காரம்; silver nitrate-agno3.

   2. இது கண் விளிம்புகள் வீங்கிக் கண்ணில் பூ வளர்ந்திருப்பதைக் கரைக்கும்; lunar caustic-agentina nitrus, useful for eye disease.

     [வெள்ளி + காடிக்காரம்]

வெள்ளிக்காரம்

 வெள்ளிக்காரம் veḷḷikkāram, பெ.(n.)

   நெருப்புக்கல் (மூ.அ.);; nitrate of silver.

வெள்ளிக்காறு

 வெள்ளிக்காறு veḷḷikkāṟu, பெ.(n.)

   உருக்கி வார்த்த வெள்ளிக்கட்டி; bar of silver (w.);.

     [வெள்ளி + காறு]

வெள்ளிக்கிழங்கு

 வெள்ளிக்கிழங்கு veḷḷikkiḻṅgu, பெ.(n.)

   வள்ளிக்கிழங்கு; sweet potato.

     [வெள்ளி + கிழங்கு]

வெள்ளிக்கிழமை

 வெள்ளிக்கிழமை veḷḷikkiḻmai, பெ.(n.)

   கிழமையின் (வாரம்); ஆறாவது நாள்; Friday.

     [வெள்ளி + கிழமை]

வெள்ளிக்குன்றம்

 வெள்ளிக்குன்றம் veḷḷikkuṉṟam, பெ.(n.)

   இரசிமலை; silver mountain.

     [வெள்ளி + குன்றம்]

வெள்ளிக்கோல்

 வெள்ளிக்கோல் veḷḷikāl, பெ.(n.)

   துலாக் கோல்வகை; a kind of steel-yard.

     ‘வெறுநாய் சந்தைக்குப் போனால் வெள்ளி அடிபட்டு வரும்’.

     [வெள்ளி + கோல்]

வெள்ளிக்கோல்வரையன்

 வெள்ளிக்கோல்வரையன் veḷḷikālvaraiyaṉ, பெ.(n.)

   வெள்ளிக்கோலின் வரைகளைப் போன்ற வரிகளையுடைய பாம்புவகை (சங்.அக.);; a snake with white marks resembling those on a vell-k-kol.

     [வெள்ளிக்கோல் + வரை]

வெள்ளிக்கோள்

 வெள்ளிக்கோள் veḷḷikāḷ, பெ.(n.)

   கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது வான்கோள்; the prightest planet second in order of distance from the sun, venus.

     [வெள்ளி + கோல்]

வெள்ளிச்சரிகை

 வெள்ளிச்சரிகை veḷḷiccarigai, பெ.(n.)

   வெள்ளியால் இழைத்த ஆடைக் கரை; silver lace.

     [வெள்ளி + சரிகை]

வெள்ளிச்சி

 வெள்ளிச்சி veḷḷicci, பெ.(n.)

கழுதைமான் புள்ளி பார்க்க;see kasutai-mān-puff.

வெள்ளிச்சுண்ணம்

 வெள்ளிச்சுண்ணம் veḷḷiccuṇṇam, பெ.(n.)

   கண்ணச்சாந்து; a white calcined powder with properties of calcium.

இதனால் மூலச்சூடு போகும், சிறு பிள்ளை உடல் போல் விசை கொண்டு இருக்கும், நடந்தால் இளைப்புத் தோன்றாது.

     [வெள்ளி + கண்ணம்]

வெள்ளிடைமன்றம்

 வெள்ளிடைமன்றம் veḷḷiḍaimaṉṟam, பெ.(n.)

   காவிரிப்பூம்பட்டினத்தில் முன்னாளில் இருந்த ஒரு மன்றம்; once upon a period were hall at käviri-p-pumpattinam.

இம் மன்றத்தில் வைக்கப்பட்ட பொருள்களை எவருங் கனவு செய்யத் துணியார்.

     [வெள்ளிடை + மன்றம்]

 வெள்ளிடைமன்றம் veḷḷiḍaimaṉṟam, பெ. (n.)

   பூம்புகாரில் இருந்த பகுதி; a place in Pumpugar

     [வெள்ளிடை+மன்றம்]

வெள்ளிண்டங்கொடி

 வெள்ளிண்டங்கொடி veḷḷiṇḍaṅgoḍi, பெ.(n.)

வெள்ளிண்டு பார்க்க;see vellindu.

     [வெள்ளிண்டு → வெள்ளிண்டம் + கொடி]

வெள்ளிண்டு

வெள்ளிண்டு1 veḷḷiṇṭu, பெ.(n.)

   கொடிவகை; shining-leaved soap pod.

     [வெள் + இண்டு]

 வெள்ளிண்டு2 veḷḷiṇṭu, பெ.(n.)

   ஒரு நுரையிண்டு, ஒரு வகை இண்டஞ்செடி; angular stalked acacia-acacia intsia.

வெள்ளிது

வெள்ளிது veḷḷidu, பெ.(n.)

   வெளிப்படை யானது; that which is plain.

     “நுண் பொருட்டாகிய பொருள் கேட்டார்க்கு வெள்ளித்தன்றி உள்ளுடைத்தாகி” (தொல், பொ. 656, உரை);.

     [வெண்-மை + வெள்ளிது]

வெள்ளித்தகடு

 வெள்ளித்தகடு veḷḷittagaḍu, பெ.(n.)

   வெள்ளிப்பட்டை; silver sheet.

     [வெள்ளி + தகடு]

வெள்ளித்தடி

 வெள்ளித்தடி veḷḷittaḍi, பெ.(n.)

   பெரியோர் முன் எடுத்துச்செல்லும் விருதுகளுள் ஒன்றான வெள்ளி கட்டியதடி; silver rod, an item of paraphernala, carried in procession before great person.

     [வெள்ளி + தடி]

வெள்ளித்தடிச்சேவகன்

 வெள்ளித்தடிச்சேவகன் veḷḷittaḍiccēvagaṉ, பெ.(n.)

   வெள்ளித்தடியைத் தூக்கிச் செல்லும் பணியாளன்; peon who carries a velli-t-tadi.

     [வெள்ளி + தடி + சேவகன்]

வெள்ளித்திருமணம்

 வெள்ளித்திருமணம் veḷḷittirumaṇam, பெ.(n.)

வெள்ளிக்கலியாணம் பார்க்க;see well-k-kasiyānam.

     [வெள்ளி + திருமணம்]

வெள்ளித்திரை

 வெள்ளித்திரை veḷḷittirai, பெ.(n.)

 silver screen (for screening films);.

     [வெள்ளி + திரை]

வெள்ளித்தோற்றம்

 வெள்ளித்தோற்றம் veḷḷittōṟṟam, பெ.(n.)

   புதன் கோளின் தோற்றம் (சுக்கிரோதயம்);; rising of verrus.

     [வெள்ளி + தோற்றம்]

வெள்ளிநகம்

 வெள்ளிநகம் veḷḷinagam, பெ.(n.)

   கைலாசம்; celestrial city, sky or heaven.

     [வெள்ளி + நகம்]

வெள்ளிநண்டு

 வெள்ளிநண்டு veḷḷinaṇṭu, பெ.(n.)

   வெள்ளிபோற் பளபளத்துக் காணக் கூடுமொரு கடல்நண்டு (செங். மீன.);; a silvery sea erab.

     [வெள்ளி + நண்டு]

வெள்ளிநாணயம்

 வெள்ளிநாணயம் veḷḷināṇayam, பெ.(n.)

   வெள்ளியில் அடிக்கப்பட்ட பணம்; silver coin.

     [வெள்ளி + நாணயம்]

 Skt. Nanaka → த.நாணயம்.

வெள்ளிநிதுருசு

 வெள்ளிநிதுருசு veḷḷinidurusu, பெ.(n.)

   கடிகாரம்; silver nitrate.

     [வெள்ளி + நீதுருக]

வெள்ளிநிமிளை

வெள்ளிநிமிளை veḷḷinimiḷai, பெ.(n.)

   1. நிமிளை வகை; bismuth ore, 2 நிமிளை மருந்துவகை;

 silver coloured bismuth (w.);.

     [வெள்ளி + நிமிளை]

வெள்ளிநிலை

வெள்ளிநிலை veḷḷinilai, பெ.(n.)

   துன்பம் நீங்க வான்கோள் மழை பெய்வித்தலைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு.வெ. 9, 16);; theme praising the planet on his pavers to cause rain and relieve distress.

     [வெள்ளி + நிலை]

வெள்ளிபற்பம்

 வெள்ளிபற்பம் veḷḷibaṟbam, பெ.(n.)

   வெள்ளியை நீற்றிச் செய்த மருந்து வகை; block oxide of silver.

     [வெள்ளி + பற்பம்]

 Skt. Bhasman → த.பற்பம்.

வெள்ளிபழுத்தல்

 வெள்ளிபழுத்தல் veḷḷibaḻuttal, பெ.(n.)

   பொன்னாதல்; silver transmuted into gold.

     [வெள்ளி + பழுத்தல்]

வெள்ளிப்பணம்

 வெள்ளிப்பணம் veḷḷippaṇam, பெ.(n.)

   வெண் பொற்காக; a silver coin.

     [வெள்ளி + பணம்]

வெள்ளிப்பணிதி

வெள்ளிப்பணிதி veḷḷippaṇidi, பெ.(n.)

   1. வெள்ளிநகை; silver ornament.

   2. வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டம்; decorated silver-plate (w.);.

     [வெள்ளி + பணிதி]

வெள்ளிப்பல்லக்கு

 வெள்ளிப்பல்லக்கு veḷḷippallakku, பெ.(n.)

   பல்லக்குவகை; a palanguin.

     [வெள்ளி + பல்லக்கு]

வெள்ளிப்பாடல்

 வெள்ளிப்பாடல் veḷḷippāṭal, பெ.(n.)

   பழைய நூல்களில் வெள்ளி என்ற பாவலரால் புதியனவாகப் பாடிச் செருகப்பட்ட பாடல்; stanzas interpolated in ancient poems by a poet called velli.

     [வெள்ளி + பாடல்]

வெள்ளிப்பாட்டு

 வெள்ளிப்பாட்டு veḷḷippāṭṭu, பெ.(n.)

வெள்ளிப்பாடல் பார்க்க;see velli-p_padal.

     [வெள்ளி + பாட்டு]

வெள்ளிப்பாளம்

 வெள்ளிப்பாளம் veḷḷippāḷam, பெ.(n.)

   உருக்கி வார்த்த வெள்ளியின் பாளம்; bar of silver (w.);.

     [வெள்ளி + பாளம்]

வெள்ளிப்பிரிவு

 வெள்ளிப்பிரிவு veḷḷippirivu, பெ.(n.)

   வெள்ளிக்கோள் மாறுநிலை; declination of the planet venus (w.);.

     [வெள்ளி + பிரிவு]

வெள்ளிப்பிள்ளையார்

 வெள்ளிப்பிள்ளையார் veḷḷippiḷḷaiyār, பெ.(n.)

வெள்ளிப்பிள்ளையார்நோன்பு பார்க்க;see velli-p-pillaiyar-nonbu.

     [வெள்ளி + பிள்ளையார்]

வெள்ளிப்பிள்ளையார்நோன்பு

 வெள்ளிப்பிள்ளையார்நோன்பு veḷḷippiḷḷaiyārnōṉpu, பெ.(n.)

   வேளாளக் கட்டுக் கழுத்திகள் கொண்டாடும் நோன்பு வகை; a fast observed by velàla married women.

     [வெள்ளி + பிள்ளையார் + நோன்பு]

வெள்ளிப்பூசணி

 வெள்ளிப்பூசணி veḷḷippūcaṇi, பெ.(n.)

   பூசணி வகையிலொன்று; cucumis melon-a creeper.

     [வெள்ளரி + பூசணி]

வெள்ளிப்பூச்சு

 வெள்ளிப்பூச்சு veḷḷippūccu, பெ.(n.)

   வெள்ளி மெருகு; coating with silver.

     [வெள்ளி + பூச்சு]

வெள்ளிப்பொடி

வெள்ளிப்பொடி veḷḷippoḍi, பெ.(n.)

   1. வெள்ளி அரவிய பொடி; silver fillings.

   2. வெள்ளிமணல்; silver.ore.

     [வெள்ளி + பொடி]

வெள்ளிமடந்தான்

 வெள்ளிமடந்தான் veḷḷimaḍandāṉ, பெ.(n.)

   சிறிய ஆற்றுக்கெண்டை மீன்; avery small river fish.

     [வெள்ளி + மடந்தான்]

வெள்ளிமடந்தான்கெண்டை

 வெள்ளிமடந்தான்கெண்டை veḷḷimaḍandāṉkeṇḍai, பெ.(n.)

   கெண்டை மீன்வகை; a kind of kendai fish (w.);.

     [வெள்ளி + மடந்தான் + கெண்டை]

வெள்ளிமடந்தாள்

 வெள்ளிமடந்தாள் veḷḷimaḍandāḷ, பெ.(n.)

   வெள்ளிமடந்தான்கெண்டை பார்க்க (யாழ்.அக.);; vell-madandan-kendai.

     [வெள்ளி + மடந்தாள்]

வெள்ளிமடந்தை

 வெள்ளிமடந்தை veḷḷimaḍandai, பெ.(n.)

   நீண்ட செடிவகை; moossanda of ceylon.I.sh.

     [வெள்ளி + மடந்தை]

வெள்ளிமணல்

வெள்ளிமணல் veḷḷimaṇal, பெ.(n.)

   1. வெள்ளி கலந்த மணல்; silver ore.

   2. வெண்மணல்; white sand.

     [வெள்ளி + மணல்]

வெள்ளிமண்

 வெள்ளிமண் veḷḷimaṇ, பெ.(n.)

   இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை துணைநீர்மப் பொருள்; one of the natural substances mentioned in siddha medicine.

     [வெள்ளி + மண்]

வெள்ளிமதிப்பு

 வெள்ளிமதிப்பு veḷḷimadippu, பெ.(n.)

   விண்மீனை அடையாளங்கண்டு நேரங் காலத்தை மற்றும் திசையையறிதல் (மீன. பொ.வ.);; finding of time, period and direction based on stars.

     [வெள்ளி + மதிப்பு]

வெள்ளிமன்றம்

வெள்ளிமன்றம் veḷḷimaṉṟam, பெ.(n.)

வெள்ளியம்பலம் பார்க்க (திருவாலவா. நகரச். 4);;see velliyambalam.

     [வெள்ளி + மன்றம்]

வெள்ளிமயமான

 வெள்ளிமயமான veḷḷimayamāṉa, பெ.(n.)

   வெண்ணிறமான; argent.

     [வெள்ளி + மயமான]

வெள்ளிமயிர்த்தழை

 வெள்ளிமயிர்த்தழை veḷḷimayirttaḻai, பெ.(n.)

   வெள்ளிலை; white leaf plant.

     [வெள்ளி + மயிர்த்தழை]

வெள்ளிமறை

 வெள்ளிமறை veḷḷimaṟai, பெ.(n.)

   இரவில் வெள்ளிமீன் கண்களுக்குப்புலப்படாத காலம் (சுக்கிரன்பாடு);; the time of the year when sukra is invisible at nights.

     [வெள்ளி+மறை]

வெள்ளிமலாம்

 வெள்ளிமலாம் veḷḷimalām, பெ.(n.)

வெள்ளிமுலாம் பார்க்க (யாழ்.அக.);;see velli-mulam.

     [வெள்ளி + மலாம்]

வெள்ளிமலை

வெள்ளிமலை veḷḷimalai, பெ.(n.)

   1. கயிலை மலை; mt. kailas.

     “வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங்காவலோன்” (கம்பரா. சூர்ப்ப. 39);.

   2. ஒருமலை (சூடா.);; a mountain.

     [வெள்ளி + மலை]

வெள்ளிமாடம்

வெள்ளிமாடம் veḷḷimāṭam, பெ.(n.)

   அரண்மனைவகை (சிலப். 25,5);; seakind of royal residence.

     [வெள்ளி + மாடம்]

வெள்ளிமித்துரு

 வெள்ளிமித்துரு veḷḷimitturu, பெ.(n.)

   கோடா சூரி; a kind of arsenic.

வெள்ளிமீன்

வெள்ளிமீன் veḷḷimīṉ, பெ.(n.)

   வெள்ளிக் கோள்; venus.

     “வெள்ளிமீனை யொருகைக் குட்பிடித்து”(கொண்டல்விடு. 191);.

     [வெள்ளி + மீன்]

வெள்ளிமுலாம்

 வெள்ளிமுலாம் veḷḷimulām, பெ.(n.)

   வெள்ளிப்பூச்சு; coating or plating with silver.

     [வெள்ளி+ முலாம்]

வெள்ளிய நூல்

 வெள்ளிய நூல் veḷḷiyanūl, பெ. (n.)

   ஒவியம் வரைவற்குரிய கருவி; a device use to draft paintings.

வெள்ளியகாகச்சி

 வெள்ளியகாகச்சி veḷḷiyakākacci, பெ.(n.)

   வெண்கருத்பு; white sugarcane-saccharum officinarum.

     [[வெள்ளிய + காகச்சி]

வெள்ளியங்கிரி

வெள்ளியங்கிரி veḷḷiyaṅgiri, பெ.(n.)

வெள்ளிமலை1பார்க்க (பிங்.);;see velli-mala

     [வெள்ளி + அம் + கிரி]

 Skt. Giri → த.கிரி.

வெள்ளியங்குன்று

 வெள்ளியங்குன்று veḷḷiyaṅguṉṟu, பெ.(n.)

வெள்ளிமலை பார்க்க;see vell-malai.

     [வெள்ளி + அம் + குன்று]

வெள்ளியச்சீலை

வெள்ளியச்சீலை veḷḷiyaccīlai, பெ.(n.)

   துணை நீர்மப் பொருள்; one of 120 natural substances mentioned in siddha medicine.

     [வெள்ளியம் + சிலை]

வெள்ளியப்பிரகம்

 வெள்ளியப்பிரகம் veḷḷiyappiragam, பெ.(n.)

   வெள்ளையப்பிரகம்; white mica.

வெள்ளியப்பிறப்பி

 வெள்ளியப்பிறப்பி veḷḷiyappiṟappi, பெ.(n.)

வெள்ளைநாகணம் பார்க்க;see vellai. nakaslam.

     [வெள்ளியம் + பிறப்பி]

வெள்ளியமணல்

வெள்ளியமணல்1 veḷḷiyamaṇal, பெ.(n.)

   வெள்ளியங்கலந்த மணல்; sand mixed with tin.

     [வெள்ளியம் + மணல்]

வெள்ளியம்

வெள்ளியம் veḷḷiyam, பெ.(n.)

   மரவகை (மலை.);; wood-apple.

     [வெள்ளில் → வெள்ளியம்]

 வெள்ளியம்1 veḷḷiyam, பெ.(n.)

   மாழை வகை (பதார்த்த. 1174); (வி.);; tin.

     [வெள் + ஈயம்]

 வெள்ளியம்2 veḷḷiyam, பெ.(n.)

   வெண்ணாகம்; white lead-slannum pewter.

இதன் பொடி மலத்தை உண்டு பண்ணவும் மேகத்தைப் போக்கவும் பசி தீர்வும் பயன்படும்.

வெள்ளியம்பலத்தம்பிரான்

வெள்ளியம்பலத்தம்பிரான் veḷḷiyambalattambirāṉ, பெ.(n.)

வெள்ளி1.8 பார்க்க;see vell1,8.

     [வெள்ளியம்பலம் + தம்பிரான்]

வெள்ளியம்பலம்

வெள்ளியம்பலம்1 veḷḷiyambalam, பெ.(n.)

   மதுரைக் கோயில் ஆடவல்லான் மன்றம்; the sacred hall dedicated to nataraja in the siva temple a madurai.

     “வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன” (சிலப். பதி. 40, 41);.

     [வெள்ளி + அம்பலம்]

 வெள்ளியம்பலம்2 veḷḷiyambalam, பெ.(n.)

   வெண் பொற்றகடு வேயப்பட்ட மன்றம்; mountain containing silver ore.

வெள்ளியம்பலவாணத்தம்பிரான்

வெள்ளியம்பலவாணத்தம்பிரான் veḷḷiyambalavāṇattambirāṉ, பெ.(n.)

வெள்ளி

   1. 8 பார்க்க;see velli1, 8.

     [வெள்ளியம்பலம் + வாணன் + தம்பிரான்]

வெள்ளியவுப்பு

 வெள்ளியவுப்பு veḷḷiyavuppu, பெ.(n.)

   துத்த நாகவுப்பு; white vitriol, zincisulphas.

     [வெள்ளியம் + உப்பு]

வெள்ளியா

 வெள்ளியா veḷḷiyā, பெ.(n.)

   நெத்தி போலுஞ் சிறிய மீன் (நெல்லை.மீன.);; a kind of tiny fish.

வெள்ளியார்

வெள்ளியார் veḷḷiyār, பெ.(n.)

   1. வெண்ணிற முடையவர்; white coloured person.

   2. பெருமகன்; noble-man.

     “வெள்ளியார் ணங்க விரைந்தருள் செய்வான்” (திவ். பெரியதி. 4, 10, 7);.

   3. சிவன் (திவ். பெரியதி. 9, 7, 9, வ்யா);; siva.

   4. வெள்ளி (திவ். பெரியதி. 4, 10, 7, வ்யா);; sukra.

     [வெள்ளி → வெள்ளியார்]

வெள்ளியிலைச்செடி

 வெள்ளியிலைச்செடி veḷḷiyilaicceḍi, பெ.(n.)

வெள்ளி மடந்தை பார்க்க;see velli-madantas.

     [வெள்ளி + இலை + செடி]

வெள்ளியுயிர்

வெள்ளியுயிர் veḷḷiyuyir, பெ.(n.)

   மக்கட் பிறப்பு (சீவக. 3111, உரை);; human being.

     [வெள்ளி + உயிர்]

வெள்ளியூத்தல்

வெள்ளியூத்தல் veḷḷiyūttal, பெ.(n.)

   1. விண்மீன்களின் தோற்றம்; rising of the stars.

   2. விடியற்காலை வெள்ளிக்கோள் தோன்றுதல்; rising of the planet venus at early dawn.

     [வெள்ளி + பூத்தல்]

வெள்ளியெழுதல்

வெள்ளியெழுதல் veḷḷiyeḻudal, பெ.(n.)

   விண்மீன் தோன்றுதல் (திவ். திருப்பா. 13);; rising of the morning star.

     [வெள்ளி + எழுதல்]

வெள்ளிரேக்கு

 வெள்ளிரேக்கு veḷḷirēkku, பெ.(n.)

   மிக மெலிதாக அடிக்கப்பட்ட வெள்ளித் தகடு; silver leaf.

     [வெள்ளி + இரேக்கு]

 U. Rek → த. இரேக்கு.

வெள்ளிறகுமந்தாரை

 வெள்ளிறகுமந்தாரை veḷḷiṟagumandārai, பெ.(n.)

வெள்ளைமந்தாரை பார்க்க (யாழ்,அக);;see velai-mantãrai.

     [வெள் + இறகு + மந்தாரை]

வெள்ளிறா

 வெள்ளிறா veḷḷiṟā, பெ.(n.)

வெள்ளிறால் பார்க்க (வி.);;see velliral.

     [வெள் + இறால்]

வெள்ளிறால்

வெள்ளிறால் veḷḷiṟāl, பெ.(n.)

   1. மீன்வகை; white prawn.

   2. உடல் மீன் வகை; a sea-fish.

     [வெள் + இறால்]

வெள்ளிலங்காடு

வெள்ளிலங்காடு veḷḷilaṅgāṭu, பெ.(n.)

   சுடுகாடு; cremation ground.

     “வெள்ளிலங் காட்டிடை… நடமாடியநாதன்” (தேவா. 439,10);.

     [வெள்ளில் + காடு]

வெள்ளிலத்தி

 வெள்ளிலத்தி veḷḷilatti, பெ.(n.)

   விளாம்பழம் (தைலவ.);; wood-apple.

     [வென்னில் + அத்தி]

வெள்ளிலை

வெள்ளிலை1 veḷḷilai, பெ.(n.)

   1. வெற்றிலை; betel leaf.

     “வெள்ளிலைத் தம்பல் கண்டார்” (கம்பரா. வரைக். 49);.

   2. வெள்ளிமடந்தை பார்க்க;see velli-madantai,

     [வெள் + இலை]

 வெள்ளிலை2 veḷḷilai, பெ.(n.)

   படைக்கலத்தின் அலகு; sharp edge, as of a spear.

     “வெள்ளிலை வேலினான்” (சீவக. 328);.

     [வெள் + இலை]

வெள்ளிலைப்பற்று

வெள்ளிலைப்பற்று veḷḷilaippaṟṟu, பெ.(n.)

   வெற்றிலைக்கவளி; bundle of betel leaves.

     “அடைக்காயமுதுக்கு…… வெள்ளிலைப் பற்றொன்பதும்” (S.I.I.iii, 188);.

     [வெள்ளிலை + பற்று]

வெள்ளிலையமுது

 வெள்ளிலையமுது veḷḷilaiyamudu, பெ.(n.)

   வெற்றிலைத் தம்பலப் படையல்; offering of betel, as to a diety.

     [வெள்ளிலை + அமுது]

வெள்ளிலோத்தி

 வெள்ளிலோத்தி veḷḷilōtti, பெ.(n.)

   செடிவகை; a plant.

வெள்ளிலோத்திரம்

வெள்ளிலோத்திரம் veḷḷilōttiram, பெ.(n.)

   1. வெண்பூவுள்ள மரவகை; a tree with white flowers.

     “வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக்கதைத்த சாந்தின்” (சீவக. 622);.

   2. விளாம்பழம்; wood-apple.

   3. விளாம் பட்டை; bark of wood-apple tree (w.);.

     [|வெள்ளி + உலோத்திரம்]

 Skt. lðdhra → த. உலாத்திரம்.

வெள்ளில்

வெள்ளில்1 veḷḷil, பெ.(n.)

   1. விளாம்பழம்; fruit of wood-apple.

     “மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்”(புறநா. 181);.

   2. விளா1 பார்க்க (பிங்.);;see viļā.

     [வெள் + இல்]

 வெள்ளில்2 veḷḷil, பெ.(n.)

   பாடை; bier.

     “வெள்ளிற்பாடை” (மணி. 6, 93);.

     [வெள் + இல்]

வெள்ளிழுது

வெள்ளிழுது veḷḷiḻudu, பெ.(n.)

   வெண்ணெய்; butter.

     “வெண்மைவெள்ளிழுது” (குறுந். 277);.

     [வெள் + இழுது]

வெள்ளிவரைகாப்போன்

வெள்ளிவரைகாப்போன் veḷḷivaraikāppōṉ, பெ.(n.)

   நந்தி (நாமதீப. 42);; nanti. as guarding mt. kailas,

     [வெள்ளி + வரை + காப்போன்]

வெள்ளிவள்ளி

வெள்ளிவள்ளி veḷḷivaḷḷi, பெ.(n.)

   மகளிரணியும் வெள்ளித் தோள்வளை; a kind of silver armlet, worn by women.

     “வெள்ளிவள்ளியின் விளங்கு தோணலார்” (சீவக. 420);.

     [வெள்ளி + வள்ளி]

வெள்ளிவவ்வால்

வெள்ளிவவ்வால் veḷḷivavvāl, பெ.(n.)

   சாம்பல் நிறமும், சிவப்பு நிறமும் கலந்ததும் ஒரடி வளர்வதுமான மீன்வகை; silver pomfret, greyisl netural tint with purplish reflexions, attaining 1 ft. in length.

     [வெள்ளி + வவ்வால்]

வெள்ளிவாரம்

வெள்ளிவாரம் veḷḷivāram, பெ.(n.)

வெள்ளிக்கிழமை பார்க்க (சிலப். 23, 135);;see vess-k-kijamai.

     [[வெள்ளி + வாரம்]

வெள்ளிவிழா

வெள்ளிவிழா veḷḷiviḻā, பெ.(n.)

   ஓர் அமைப்பின் அல்லது இயக்கத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவுக் கொண்ட்டம்;   25th anniversary of an event.

     [வெள்ளி + விழா]

வெள்ளிவெற்பு

 வெள்ளிவெற்பு veḷḷiveṟpu, பெ.(n.)

   கயிலை மரை (சூடா.);; mt. kailas.

     [வெள்ளி + வெற்பு]

வெள்ளிவேர்

 வெள்ளிவேர் veḷḷivēr, பெ.(n.)

   சல்லி வேர் (சங்.அக.);; rootlet.

     [வெள்ளி + வேர்]

வெள்ளீயபற்பம்

 வெள்ளீயபற்பம் veḷḷīyabaṟbam, பெ.(n.)

   மருந்து பொடி; calcined powder of tin good for skin diseases.

     [வெள்ளியம் + பற்பம்]

 Skt. Bhasman → த. பற்பம்

வெள்ளீரல்

வெள்ளீரல் veḷḷīral, பெ.(n.)

   1. மணிக்குடர்; mesentery.

   2. நுரையீரல்); lungs.

     [வெள் + ஈரல் → வெள்ளிரல்]

 வெள்ளீரல் veḷḷīral, பெ.(n.)

   நெஞ்சாங்குலை (வி);; lung.

     [வெள் + ஈரல்]

வெள்ளுகா

 வெள்ளுகா veḷḷukā, பெ.(n.)

உகாமரம் பார்க்க;see ukā-maram.

     [வெள் + உகா]

வெள்ளுக்காப்பியனார்

 வெள்ளுக்காப்பியனார் veḷḷukkāppiyaṉār, பெ.(n.)

   இடைக் கழகப் புலவருளோருவர்; a middle sangam poet.

வெள்ளுச்சி

 வெள்ளுச்சி veḷḷucci, பெ.(n.)

   நத்தை வகை; a kind of snail.

     [வெள் + ஊச்சு → வெள்ளுச்சி]

வெள்ளுடும்பு

 வெள்ளுடும்பு veḷḷuḍumbu, பெ.(n.)

   உடும்பு sகை; white guana.

     [வெள் உடும்பு]

வெள்ளுடைக்கழிச்சல்

 வெள்ளுடைக்கழிச்சல் veḷḷuḍaikkaḻiccal, பெ.(n.)

   வெண் மலக் கழிச்சல்; white coloured purging.

     [வெள்ளுடை + கழிச்சல்]

வெள்ளுடைப்பணி

 வெள்ளுடைப்பணி veḷḷuḍaippaṇi, பெ.(n.)

   மெய்நோகாமல் (அழுக்குப்படாமல்); மேலோட்டமாகச் செய்யும் வேலை; whitescholar job.

     [[வெள்ளுடை + பணி]

வெள்ளுப்பு

வெள்ளுப்பு1 veḷḷuppu, பெ.(n.)

   வெண்மை நிறமான உப்பு; white salt.

     “வெள்ளுப்புப் பகருநர்” (மணி. 28, 31);.

     [வெள் + உப்பு → வெள்ளுப்பு]

 வெள்ளுப்பு veḷḷuppu, பெ.(n.)

   1. வெள்ளை யுப்பு; white common salt.

     [வெள் + உப்பு]

வெள்ளுமத்தை

வெள்ளுமத்தை veḷḷumattai, பெ.(n.)

   1. சிறிய ஊமத்தை வகை; white flowered asiatic thorn-apple.

   2. பெரிய ஊமத்தை வகை; thorn-apple.

   3. அடுக்கூமத்தை பார்க்க;see agu-k-kümatta.

     [வெள் + ஊமத்தை]

வெள்ளுயிர்

வெள்ளுயிர் veḷḷuyir, பெ.(n.)

   செம்மை உயிர்த்துடிப்பு; pure soul.

     “என்னை வெள்ளுயிராக்கவல்ல” (திவ் திருப்பல், 8);.

     [வெள் + உயிர்]

வெள்ளுரம்

 வெள்ளுரம் veḷḷuram, பெ.(n.)

   வெள்ளை யுரம்; a medicine prepared with tin and other mineral salt.

     [வெள் + உரம்]

வெள்ளுருட்டு

 வெள்ளுருட்டு veḷḷuruṭṭu, பெ.(n.)

   வெறுமனே அச்சுறுத்துகை (வி.);; empty threat.

     [வெள் + உருட்டு]

வெள்ளுறட்டி

 வெள்ளுறட்டி veḷḷuṟaṭṭi, பெ.(n.)

   பணியார வகை (யாழ்.அக.);; a kind of sweetmeat.

     [வெள் + ரொட்டி]

வெள்ளுறி

வெள்ளுறி veḷḷuṟi, பெ.(n.)

   சமணத் துறவிகள் கைக்கொண்ட உறிவகை (பெருங். உஞ்சைக். 36,228);; a kind of net-bag used by Jain monks.

     [வெள் + உறி]

வெள்ளுளுவை

 வெள்ளுளுவை veḷḷuḷuvai, பெ.(n.)

   உளுவை மீன்வகை (சங்.அக.);; a kind of uluvai fish.

     [[வெள் + உளுவை]

வெள்ளுள்ளி

வெள்ளுள்ளி veḷḷuḷḷi, பெ.(n.)

   வெள்ளைப் பூண்டு (சிலப். 11,. 88, உரை);; garlic.

     [வெள் + உள்ளி]

வெள்ளுள்ளித்தைலம்

 வெள்ளுள்ளித்தைலம் veḷḷuḷḷittailam, பெ.(n.)

   வெள்ளைப் பூண்டு நெய்; oil extracted from garlic.

     [வெள்ளுள்ளி + தைலம்]

 Skt. Taila → த.தைலம்.

வெள்ளுள்ளிநெய்

 வெள்ளுள்ளிநெய் veḷḷuḷḷiney, பெ.(n.)

   வெள்ளைப் பூண்டினின்று செய்யப்படும் மருந்து நெய்; medicated ghee prepared with garlic as chief ingredient.

     “இது பெண்கள் அத்தி வெட்டைக்குக் கொடுக்கலாம்”.

     [வெள்ளுள்ளி + நெய்]

வெள்ளுள்ளிப்பருப்பு

 வெள்ளுள்ளிப்பருப்பு veḷḷuḷḷipparuppu, பெ.(n.)

   பூண்டுப்பல்; tooth of garlic.

     [வெள்ளுள்ளி + பருப்பு]

வெள்ளுழவு

 வெள்ளுழவு veḷḷuḻvu, பெ.(n.)

   நிலத்தில் ஈரம் அல்லது காய்ச்சல் அதிகம் இல்லாத காலத்திர் உழும்; ploughing while the land is neither very dry nor very wet.

     [வெள்+ உழவு]

வெள்ளுழவுப்பயிர்

 வெள்ளுழவுப்பயிர் veḷḷuḻvuppayir, பெ.(n.)

   பக்குவமான ஈரத்தில் உழுது விதைத்து உழவுசால் தோன்ற விளையும் பயிர்; young crops on land properly moist when sown, the furrows being visible.

     [வெள்ளுழவு + பயிரி]

வெள்ளுவரி

வெள்ளுவரி veḷḷuvari, பெ.(n.)

   நல்ல நீர்; good drinking water.

     “வெள்ளுவரி சேய்க்கு” (சினேந். 366);.

     [வெள் + வரி]

வெள்ளுவா

வெள்ளுவா veḷḷuvā, பெ.(n.)

   வெள்ளை யானை; white elephant.

     “வெள்ளுவாப்பிட ரேறிய வேந்தனே முதல்” (பறாளை, பள்ளு. 8);.

     [வெள் + உவா]

வெள்ளூர்க்காப்பியன்

 வெள்ளூர்க்காப்பியன் veḷḷūrkkāppiyaṉ, பெ.(n.)

   இடைக்கழகப் புலவருளொருவர் (இ.க.உ.);; a middle sangam poet.

     [வெள்ளுர் + காப்பியன்]

வெள்ளெடுப்பு

 வெள்ளெடுப்பு veḷḷeḍuppu, பெ.(n.)

   வெளுப்பான கழிச்சல்; white coloured diarrhoea.

     [வெள் + எடுப்பு]

வெள்ளெண்ணெய்

 வெள்ளெண்ணெய் veḷḷeṇīey, பெ.(n.)

   மரவெண்ணெய்; wood oil tree of indiadipterocarpus indicus.

     [வெள் + எண்ணெய்]

வெள்ளென

வெள்ளென veḷḷeṉa, பெ.(n.)

   1. அதி சாலையில்; early in the morning.

     ‘வெள்ளென எழுந்திருக்க வேண்டும்’ (பே.வ.);.

   2. குறித்த காலத்திற்கு முன்னமே; beforehand, betimes.

     ‘பகலில் வெள்ளென வந்துவிட்டாய்’.

     [வெள்ளெனல் → வெள்ளென]

வெள்ளெனல்

வெள்ளெனல் veḷḷeṉal, பெ.(n.)

   1. வெண்மை யாதற்குறிப்பு; becoming white.

     ‘வெள்ளென விளர்த்தது’ (நன். 423, மயிலை);.

   2. தெளிவாதற்குறிப்பு; becoming clear,

     “வெள்ளென நோவா தோன்வயிற்றிரங்கி” (புறநா. 207);.

   3. பொழுது விடிதற் குறிப்பு; dawning of day.

     [வெள் + எனல்]

வெள்ளென்பு

வெள்ளென்பு veḷḷeṉpu, பெ.(n.)

வெள்ளெலும்பு பார்க்க;see vellelumbu.

     “வெள்ளென்பூழ்பெற” (சீவக. 803);.

     [வெள் + என்பு]

வெள்ளெரி

 வெள்ளெரி veḷḷeri, பெ.(n.)

   நரம்பிலுண்டாகும் கட்டியைப் போக்கும் ஒர் பூண்டு; a plant.

     [வெள் + எரி]

வெள்ளெரிக்காய்

 வெள்ளெரிக்காய் veḷḷerikkāy, பெ.(n.)

வெள்ளரிக்காய் பார்க்க;see vellarikkay.

     [வெள் + எரி + காய்] .

வெள்ளெருக்கங்காய்ப்பஞ்சு

வெள்ளெருக்கங்காய்ப்பஞ்சு veḷḷerukkaṅgāyppañju, பெ.(n.)

   இக் காயின் பஞ்சைப் பாலில் தோய்த்து உருள்கடலையளவு உண்டை செய்து 2,3 மாதப் பிண்டங்களை வெளிப்படுத்தக் கொடுக்கலாம்; the hairs on the seeds of the calolropis can be used to expel 2 or 3 foet us the method of administering it is given above.

     [வெள்ளெருக்கங்காய் + பஞ்சு]

வெள்ளெருக்கம்பழுப்பு

 வெள்ளெருக்கம்பழுப்பு veḷḷerukkambaḻuppu, பெ.(n.)

   மஞ்சள் நிற எருக்கஞ் சருகு; the yellow old leaf of calortropis which bears white flowers.

     [[வெள்ளெருக்கம் + பழுப்பு]

வெள்ளெருக்கம்பால்

வெள்ளெருக்கம்பால்1 veḷḷerukkambāl, பெ.(n.)

   எருக்கம்பால் சுளுக்கு, பேரூதை (மகாவாதம்);, நளிர் (சன்னிபாதம்); போகும்; the milk of calotropis is subificient can be used externally for sprain etc. it enters into the preparation of some medicated oils.

     [வெள்ளெருக்கம் + பால்]

 வெள்ளெருக்கம்பால்2 veḷḷerukkambāl, பெ.(n.)

   வெள்ளைப்பூ பூக்கும் ஒரு வகை எருக்கஞ்செடி; calotropis bearing white flowers.

     [வெள்ளெருக்கம் + பால்]

வெள்ளெருக்கிலையார்

வெள்ளெருக்கிலையார் veḷḷerukkilaiyār, பெ.(n.)

   கழக்காலப் புலவர்; a sangam poet.

இவரால் பாடப்பட்டோன் வேள் எவ்வி அவனிறந்த பின்பும் இவரிருந்து புலம்பினர். இறந்த அவனுக்கு அவன் மனைவி சிறிய இடத்திற் பிண்டம் வைத்தலைக் கண்டு கூறுதல் வாயிலாக அவன் பெருங்கொடையைப் புலப்படுத்தினர். இவர் பாடியனவாகப் புறநானூற்றில் இரண்டு செய்யுட்கள் உள்ளன. (புறம்.234);

வெள்ளெருக்கு

வெள்ளெருக்கு veḷḷerukku, பெ.(n.)

   எருக்குவகை; white madar, 1 sh.

     “வெள்ளெருக்கரவம் விரவுஞ்சடை” (தேவா. 160,1);.

     [வெள் + எருக்கு]

வெள்ளெருக்குத்தைலம்

வெள்ளெருக்குத்தைலம் veḷḷerukkuttailam, பெ.(n.)

வெள்ளெருக்கினின்றும் செய்யப்படும் மருந்து நெய்,

 medicated oil of calotropis an old calcifie mercury and bind sal ammoniac.

     “நாட்சென்ற வெள்ளருக்கின் தைலந்தன்னில் ரசம் நீறும் நவச்சாரம் கட்டிப்போமே” (பிரம-200);

     [வெள்ளெருக்கு + தைலம்]

 Skt. Taila → த + தைலம்

வெள்ளெருக்குநார்

 வெள்ளெருக்குநார் veḷḷerukkunār, பெ.(n.)

   இரசமணியை கோப்பதற்காக கயிறாகத் திருத்த எருக்கம்நார்; fibre extracted from (white); calotropis is used as waist thread for infants and to thread mercury ball.

     [வெள்ளெருக்கு + நார்]

வெள்ளெலி

வெள்ளெலி veḷḷeli, பெ.(n.)

   எலி வகை; a species of rat.

     “குருமயிர்ப் புன்றாள் வெள்ளெவி” (அகநா. 133);.

     [வெள் + எலி]

வெள்ளெலிச்செவிச்செடி

 வெள்ளெலிச்செவிச்செடி veḷḷeliccevicceḍi, பெ.(n.)

கத்தரிமணியிலை பார்க்க;see kattari-maniyilai.

     [வெள்ளெலி. + செவிச்செடி]

வெள்ளெலும்பு

வெள்ளெலும்பு veḷḷelumbu, பெ.(n.)

   சதையற்ற வெண்ணிற எலும்புத் துண்டு; white bone without ay flesh.

     ‘நாய் கடித்த வெள்ளெலும்பு’. |

     [வெள் + எலும்பு]

 வெள்ளெலும்பு veḷḷelumbu, பெ.(n.)

   தேய்ந்து தசை கழிந்த எலும்பு; balanced bone.

     “உள்ளங்கால் வெள்ளெலும்புநோவ” (பெருந்தொ. 1239);.

     [வெள் + எலும்பு]

வெள்ளெல்

வெள்ளெல் veḷḷel, பெ.(n.)

   1. வெள்ளை எள்; white gingelly seeds.

   2. கழுவித் தூய்மை செய்த எள்; loashed and rubbed gingelly seeds which look white.

     [வெள் + எல்]

வெள்ளெள்

வெள்ளெள் veḷḷeḷ, பெ.(n.)

   வெள்ளை வெள்ளை நிறமான எள்வகை; a white species of sesame.

     “வெள்ளெட்சாந்து” (புறநா.246);

     [[வெள் + எள்]]

வெள்ளெழுச்சி

 வெள்ளெழுச்சி veḷḷeḻucci, பெ.(n.)

   வெள்ளைக் கொப்புளத் தொற்றுநோய்வகை; white impetigo.

     [வெள் + எழுச்சி]

வெள்ளெழுத்து

வெள்ளெழுத்து veḷḷeḻuttu, பெ.(n.)

   1. கண்புகைச்சலினால் உருவங்கள் புலப்படாது கண் கூசிப் படிக்க முடியாது மறைக்கும் ஒரு கண்ணோய்i; an eye disease marked by inability to read.

   2.கண் புகைச்சல்; shortan eye sight due to old age.

     [[வெள் + எழுத்து]

 வெள்ளெழுத்து veḷḷeḻuttu, பெ.(n.)

   எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை; long sight.

     [வெள் + எழுத்து]

வெள்ளேடு

வெள்ளேடு veḷḷēṭu, பெ.(n.)

   1.”வெள்றேடு; blank dia, palm leaf not written upon.

     “வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய” (பெருங், உஞ்சைக். 32 69);.

     [[வெள் + ஏடு]

வெள்ளேறன்

 வெள்ளேறன் veḷḷēṟaṉ, பெ.(n.)

   பழுதான இரும்பு (யாழ்.அக.);; scrapiron.

     [[வெள் + ஏறன்]

வெள்ளேறி

 வெள்ளேறி veḷḷēṟi, பெ.(n.)

   வீட்டின் புறக்கடைத் தடுப்புத் தட்டி கட்டப் பயன்படும் மரவகை (தருச். வழக்.);; a kind of wood used for fencing or screening partition.

     [வெள் + ஏறி]

வெள்ளை

வெள்ளை1 veḷḷai, பெ.(n.)

   1. வெண்மை; whiteness.

     “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” (புறநா. 286);.

   2. பலராமன்; balaraman.

     “மேழிவலனுயத்த வெள்ளை” (சிலப். 14, 9);.

   3. சுண்ணாம்பு; lime mortar.

   4. சுண்ணாம்பு, பால், மோர் என்ற மூன்று வெண்மையான பண்டங்கள்; the three whitethings, viz, cunnāmpu, pāl, mõr;

     “வெள்ளை வெள்ளை என்பார்கள் மேதினியோர்” (பணவிடு. 341);.

   6. வெள்ளீயம்; white lead (w.);.

   7. வயிரம்; diamond.

   8. பச்சை மணிக் குற்றம் எட்டனுள் ஒன்று (சிலப், 14, 184, உரை);; a flaw in emeralds.

   9. சங்கு (ஈடு. 6, 1, 5, அரும்.);; conch.

   10. கள் (பிங்.);; toddy.

   11. மலைப் பூண்டு; wight’s indian nettle.

   12. வெள்ளைப்பாடாணம் (மூ.அ.);; a mineral poison.

   13. நோய் வகை; gonorrhea.

   14. கடினத்தன்மை (வி.);; hardness.

   15. வேங்கை மரம் (மலை.);; Indian Kinotree.

   16. வெள்ளைத்துணி; white cloth.

   17. வெளுப்பு; wash.

     “கோடியொரு வெள்ளை குமரி யொரு பிள்ளை”.

   18. வெள்ளை மாடு; white cow.

     “பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளை”. (கலித். 104);.

   19. வெள்ளாடு; goat.

     “துருவை வெள்ளை யொடு விரைஇ” (மலைபடு. 414);.

   20. சம்பா நெல் வகை; a variety of campa paddy.

   21. கபடமற்றவன்-வள்-து; guileless person or animal.

     “வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை” (கொன்றைவே.);.

   22. அறிவில்லா தவன்; ignorant person.

   23. பற்றற்றவன் (ஈடு. 6, 1, 5, அரும்.);; person who has no attachments.

   24. புன்மை;     “வெள்ளைமழை யென்றே விளம்பு” (சினேந். 421);.

   25. வெண்பா; venpä metre.

     “வெள்ளையுட்பிரதளை விரவா” (யாப். 22);.

     [வெண் (மை); → வெள்ளை]

 வெள்ளை2 veḷḷai, பெ.(n.)

   வெள்ளைப் புரசு; bastored kino-butea frondosa bearing white flowers.

   2. வெள்ளாட்டுக் குட்டி; kid.

   3. வெள்ளி; silver.

   4. பொடி; calcined medicinal powder.

   5. வெள்ளை நஞ்சு; white arsenic.

   6. சங்கு நஞ்சு; sanku pazhanam.

   7. கள்; toddy.

   8. இளம் பருவம்; young age.

   9. வழலை; soap.

   10. பூவழலை பார்க்க;see povlalalai.

   11. முட்டையின் வெண்கரு; white of an egg.

   12. வெட்டை; gleet.

   13. மேக வெட்டை; ochitis.

   14. பொரித்த சீனாகாரம்; roasted alum.

வெள்ளை நண்டு

 வெள்ளை நண்டு veḷḷainaṇṭu, பெ.(n.)

   வெண்ணிறமான நண்டு; white crab.

     [வெள்ளை + நண்டு]

வெள்ளை நமை

 வெள்ளை நமை veḷḷainamai, பெ.(n.)

   வெள்ளை நாகை; button tree – anogeissus latifolia.

     [வெள்ளை + நமை]

வெள்ளை நாகம்

 வெள்ளை நாகம் veḷḷainākam, பெ.(n.)

வெள்ளைநாகை பார்க்க;see vellai-nagai.

     [வெள்ளை + நாகம்]

வெள்ளை நாவல்

வெள்ளை நாவல்1 veḷḷaināval, பெ.(n.)

   நாவல் வகை (இலத்.);; hemispheric-tubed rose-apple.

     [வெள்ளை + நாவல்]

 வெள்ளை நாவல்2 veḷḷaināval, பெ.(n.)

   1. பயன் மிகுதி; white jamun.

   2. வெண்ணாவல் பார்க்க;see vennaval.

அகப்படுவதரிது.

     [வெள்ளை + நாவல்]

வெள்ளை நாவினி

 வெள்ளை நாவினி veḷḷaināviṉi, பெ.(n.)

   வெள்வேல்ங்காய்; fruit of white babool tree-acocia leucophtaea.

     [வெள்ளை + நாவினி]

வெள்ளை நுணா

 வெள்ளை நுணா veḷḷainuṇā, பெ.(n.)

   மரவகை (இலத.);; bracteate dyeing mulberry.

     [வெள்ளை + நுணா]

வெள்ளை நொச்சி

 வெள்ளை நொச்சி veḷḷainocci, பெ.(n.)

   வெண்ணொச்சி (இலத்.);; five leaved chast tree.

     [வெள்ளை + நொச்சி]

வெள்ளை மைனா

வெள்ளை மைனா veḷḷaimaiṉā, பெ.(n.)

   பாப்பாத்தி மைனா; pagod-thrush (M.M.533);

     [வெள்ளை + மைனா]

வெள்ளை வெங்காயம்

 வெள்ளை வெங்காயம் veḷḷaiveṅgāyam, பெ.(n.)

வெள்ளைவெண்காயம் பார்க்க;see Vellai-ven-kayam.

     [வெள்ளை + வெங்காயம்]

வெள்ளை வெட்சி

 வெள்ளை வெட்சி veḷḷaiveṭci, பெ.(n.)

   வெடிவகை (இலத்.);; white flowered pink jungle geranium.

     [வெள்ளை + வெட்சி]

வெள்ளை வெளவால