தலைசொல் | பொருள் |
---|---|
வீ | வீ1 vī, பெ. (n.) ‘வ்’ என்னும் மெய்யெழுத்தும் நெட்டுயிரான ஈ காரமும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of ‘வ்’ and ‘ஈ’. வீ2 vī, பெ. (n.) கருவுறுதல்; conceiving. (சா.அக.); வீ3 vītal, 4 செ.கு.வி. (v.i.) 1. அழிதல்; to perish, to cease, to disappear. “வீயாச் சிறப்பின்” (புறநா. 15);. 2. சாதல்; to die. “சிலைத் தெழுந்தார் வீந்தவிய” (பு.வெ.3,7);. 3. நீங்குதல்; to leave. “வினைப்பகை வீயாது பின்சென் றடும்” (குறள். 207);. 4. மாறுதல்; to change, to vary, to deviate as from one’s course. “வானின் வீயாது சுரக்கும்” (மலைபடு.76);. Ka.{}, Te. {}. [விள் → (விய்); → வீ-,] வடவர் வி-இ5 என்று மூலங்காட்டி வ்யய் (vyay); பிரிந்து போ (to go apart or in different directions); என்று விரித்து விளக்குவர். ‘வி’ என்பது ‘விள்’ என்பதன் திரிபு. ‘இ’ என்பது இயல் என்பதன் முதனிலை. இயல் = செல்கை, நடக்கை. (வ.மொ.வ.93);. வீ4 vīttal, 11 செ.குன்றாவி. (v.t.) அழித்தல்; to destroy. “ஏழுய ருலகமும் வீக்கின்றான்” (கம்பரா. முதற்போ. 118);. [வீ → வீ-,] வீ5 vī, பெ. (n.) 1. அழிவு; ruin, destruction. “வீகலந்த மஞ்ஞை போல்” (சீவக. 1104);. 2. இறப்பு (பிங்.);; death. 3. நீக்கம் (பிங்.);; separation, removal. 4. மடிவு (பிங்.);; dropping, languishing. 5. மலர்; flower. “வீகமழ் நெடுஞ்சினை” (புறநா. 36);. 6. மகரந்தம்; pollen. “பூவணையின் வீயை” (மேருமந். 1058);. க. {}, தெ. {}. [வீத்தல் → வீ] வீ6 vī, பெ. (n.) பறவை (பிங்.);; bird. |
வீகமுத்திரை | வீகமுத்திரை vīkamuttirai, பெ. (n.) கோயிற்கதவைப்பூட்டி இடும் முத்திரை (இ.வ.);; seal set on locked doors. especially of a temple. [வீகம்1 + முத்திரை] |
வீகம் | வீகம்1 vīkam, பெ. (n.) 1. பூட்டு (யாழ்.அக.);; padlock. 2. கணையாழி (திவா.);; ring. 3. விரைவு; rapidity, speed, hurry. “இப்போது நீயிருந்தாயாகில் வீகமென்” (ஈடு. 7, 6. அவ.);. தெ. பீகமு; க. பீக;ம. வீகம். வீகம்2 vīkam, பெ. (n.) 1. காற்று; wind. 2. பறவை; bird. [வீ → வீகம்] |
வீகாசம் | வீகாசம் vīkācam, பெ. (n.) 1. பகட்டு; pomp and show. 2. தனிமை; solitude loneliness. |
வீக்கக்கணம் | வீக்கக்கணம் vīkkakkaṇam, பெ. (n.) கருவிலுண்டாகிய போதே ஏற்படும் சூட்டினால் ஏற்படுவதும், உடம்பு முழுவதும் வீங்கிக் காணப்படுவதுமான குழந்தை நோய்; a children’s disease caused by congenital heat and marked by swelling of the body. [வீக்கம் + கணம். கணம் = குழந்தை நோய்வகை] |
வீக்கன் | வீக்கன்1 vīkkaṉ, பெ. (n.) குறவர் நடனத்தில் இடம் பெறும் ஓர் இசைக்கருவி; a musical instrument played in “Kurava” dance. (9:55);. [வீக்கு-வீக்கன்) வீக்கன்2 vīkkaṉ, பெ. (n.) கேரள இசைக்கருவி musical instrument of Kerala. [வீக்கு+அன்] |
வீக்கமாந்தம் | வீக்கமாந்தம் vīkkamāndam, பெ. (n.) குழந்தைகளுக்கு காதும் கண்ணும் வீங்கி நாக்கு, புண்ணாகிக் காய்ச்சலையுண்டாக்கு மோர் மாந்த நோய்; a digestive disease of children marked by swelling of ears, eyes, inflammation of the tongue and fever. [வீக்கம் + மந்தம் → மாந்தம்] |
வீக்கமிறங்குதல் | வீக்கமிறங்குதல் vīkkamiṟaṅgudal, பெ. (n.) உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்ல மெல்லக் கீழ்நோக்கி யிறங்குகை (வின்.);; subsiding of a swelling and its transition from the upper to the lower parts of the body. [வீக்கம் + இறங்குதல்] |
வீக்கம் | வீக்கம்1 vīkkam, பெ. (n.) 1. உடலுறுப்பு வீங்குகை; enlargement, swelling, inflammation. ‘கால் வீக்கம்’. 2. புண் முதலியவற்றின் புடைப்பு; contusion, cellulitis. 3. நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய்; dropsy, oedema. 4. தோள் முதலியன பூரிக்கை (யாழ்.அக.);; puffing of the limes. 5. மிகுதி (பிங்.);; abundance. 6. கூட்டம்; crowd. “விண்பிளந் தேங்க வார்க்கும் வானர வீக்கம்” (கம்பரா. இராவண. கள.26);. 7. பெருமை; greatness nobility. “விசயனும் வீக்கமற்றான்” (சீவக. 2192);. 8. செருக்கு; pride. “இலங்கைக் கோமான்றன்னை…. வீக்கந் தவிர்த்த விரலார் போலும்” (தேவா. 56, 10);. 9. விருப்பம் (யாழ்.அக.);; longing, hankering. ‘வீக்கமோ தூக்கமோ?’ (பழ.);. [வீங்கு → வீக்கம்] வீக்கம்2 vīkkam, பெ. (n.) 1. கட்டு (சூடா.);; bond, tie. 2. இடையூறு; trouble, obstacle. “வீக்கஞ் செய்தார் தவத்தினுக்கு” (திருவிளை. பன்றிக்குட்டி. முலை. 6);. 3. மூடுகை (திவா.);; covering, packing. 4. இறுக்கம்; tightness. ‘வீக்கம் கண்டால் தூக்கமாம்’ (பழ.);. [வீக்கு → வீக்கம்] வீக்கம்3 vīkkam, பெ. (n.) வேகம்; swiftness. “சில்லிவரன் செல்லும் வீக்கம்” (புரூரவ. போர்புரி.33);. [வீங்கு → வீக்கம்] |
வீக்கம்வாடல் | வீக்கம்வாடல் vīkkamvāṭal, பெ. (n.) நோயினால் ஏற்பட்ட வீக்கம் குறைதல்; resolving of the swelling. [வீக்கம் + வாடல்] |
வீக்கு | வீக்கு1 vīkkudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கட்டுதல்; to tie up. “கச்சையும் வீக்கினன்” (சீவக. 1836);. 2. அடக்குதல்; to control, restrain. “புலன்கள் வீக்கியும்” (கம்பரா. காட்சிப். 72);. 3. தடுத்தல்; to hinder. “உயிர்ப்பினை வீக்கி” (பாகவத. 2. மாயவனிலை. 8) “கொழும்புகை வீக்கி மாடந் திறந்திட” (சீவக. 534);. 4. அடித்தல் (நெல்லை.);; to strike. ம. வீக்குக. [வீங்கு → வீக்கு → வீக்கு-,] வீக்கு2 vīkku, பெ. (n.) 1. கட்டுகை; tying, binding. “பேர்யாழ்… யாப்புறு புரிஞாண் வீக்கு முதலவிழ” (பெருங். உஞ்சைக். 52, 86);. 2. இறுகுகை; tightness. “தானை வீக்கற விசித்து” (சீவக. 1086);. 3. அடிக்கை (நெல்லை.);; beating. [வீக்கு1 → வீக்கு] வீக்கு3 vīkkudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. நிறைத்தல்; to fill. 2. விரைவாகச் செலுத்துதல்; to urge, force out. “வீக்கினான் றாரை வெய்தா” (சீவக. 2661);. [வீங்கு → வீக்கு-,] வீக்கு4 vīkku, பெ. (n.) 1. பெருமை; greatness, nobility. “வீக்கறுத்து….. வஞ்சமறுத் திடுகென்றான்” (சீவக. 2207);. 2. மிகுதி (பொரு.நி.);; abundance, surplus. 3. கணித முறை (பொரு.நி.);; a mode of calculation. [வீங்கு → வீக்கு] வீக்கு5 vīkkudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. உயிரைப் போக்குதல்; to kill. “வீக்கு….. வெவ்விடத்தை” (கம்பரா.இராவணன் வதை. 122);. 2. அழித்தல் (யாழ்.அக.);; to destroy, ruin. [வீ-, → வீக்கு-,] |
வீங்கச்செய்வது | வீங்கச்செய்வது vīṅgacceyvadu, பெ. (n.) உடம்பில் அடிபடுவதனாலோ ஒவ்வா மருந்துகளாலோ உடம்பு வீங்கிப்போவது; to cause swelling-tumescent. |
வீங்கப்பண்ணல் | வீங்கப்பண்ணல் vīṅgappaṇṇal, பெ. (n.) வீங்கச் செய்வது பார்க்க;see {} ceyvadu, tumidity. [வீங்க + பண்ணல்] |
வீங்கல் | வீங்கல் vīṅgal, பெ. (n.) 1. மிகுதி (பொரு.நி.);; abundance, plenty. 2. பொருளைப் பெறும் பொருட்டு ஏக்கங் கொள்ளுகை (வின்.);; morbid desire, longing. 3. இளைத் திருப்பவ-ன்-ள் (இ.வ);; lean, emaciated person. 4. வீங்கி,1 பார்க்க;see {}. “வீங்கலிவன்” (விறலிவிடு. 825);. 5. உறங்குகை (வின்.);; sleeping. [வீங்கு → வீங்கல்] |
வீங்கி | வீங்கி vīṅgi, பெ. (n.) 1. ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவ-ன்-ள் (யாழ்.அக.);; person having morbid desires. “கறிக்கு வீங்கி”. 2. சேங்கொட்டை, 1 (மலை.);; marking-nut. [வீங்கு → வீங்கி] |
வீங்கிநாரி | வீங்கிநாரி vīṅgināri, பெ. (n.) ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவள்; woman having morbid desires. ‘பஞ்சைநாரி பணிகாரஞ் கட்டாள், வீங்கிநாரி விசாரப்பட்டாள்’ (பழ.);. [வீங்கி + நாரி4] |
வீங்கிவிழி-த்தல் | வீங்கிவிழி-த்தல் vīṅgiviḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) கண்ணுறுத்தி இமைகனத்து, திறந்தால் குத்தல் வலியும் கடைக் கண்ணில் மூங்கில் முளைபோல் கூர்மையான சதை வளர்ந்தும் கண் சிவப்பு, எரிச்சல், வீக்கம், புடைப்பு, நீர் வடிதல் ஆகியவிக் குணங்களையுடைய வோர் கண்ணோய்; a disease of the eye marked by irritation, thickening of the eye lids, some growth in the angle of the eye, causing swelling, burning ozing tears etc. [வீங்கி + விழி-,] |
வீங்கிவெடி | வீங்கிவெடி vīṅgiveḍi, பெ. (n.) ஒன்றன் மீது ஏக்கங் கொண்டு அழுது புலம்புதல்; weeping for not getting or loosing something. |
வீங்கிவெடி-த்தல் | வீங்கிவெடி-த்தல் vīṅgiveḍittal, 4 செ. குன்றாவி. (v.t.) ஒன்றன் மீது ஏக்கம் கொண்டு அழுது புலம்புதல்; to swell and burst as dead body. [வீங்கி + வெடி-,] |
வீங்கு-தல் | வீங்கு-தல் vīṅgudal, 5 செ.கு.வி.(v.i.) 1. பருத்தல் (நாமதீப. 710);; to increase in size, to bulge. 2. பூரித்தல்; to swell. “மணந்தநாள் வீங்கிய தோள்” (குறள், 1233);. 3. வீக்கமுறுதல் (பொரு.நி.);; to become morbidly inflamed and swollen. 4. வளர்தல் (அ.க.நி.);; to grow. 5. மிகுதல்; to be copious or excessive,to increase. “வளம் வீங்கு பெருக்கம்” (பதிற்றுப். 24, 17);. 6. நெருங்குதல் (சூடா.);; to be close, crowded. 7. இறுகுதல்; to become tight and pressing. “வீங்கிறை தடக்கையின்” (குறிஞ்சிப். 123);. 8. விறைப்பாய் நிற்றல்; to be taut and not slack, to be stiff. “விளரூண் றின்ற வீங்குசிலை மறவர்” (அகநா. 89.10);. 9. மேனோக்கிச் செல்லுதல்; to go up, to ascend. “நாவிளிம்பு வீங்கி” (தொல். எழுத். 96);. 10. மெலிதல்; to become emaciated. ‘அவன் வீங்கலாயிருக்கிறான்’. 11. ஏக்கங் கொள்ளுதல்; to have morbid desires. 12. உறங்குதல் (யாழ்.அக.);; to sleep. க. பீகு; ம. வீங்ஙுக;தெ. வீகு. |
வீங்குகரப்பான் | வீங்குகரப்பான் vīṅgugarappāṉ, பெ. (n.) வீக்கத்தை யுண்டாக்கும் ஒருவகைக் கரப்பான் நோய்; an eczema causing swelling. [வீங்கு + கரப்பான். கரப்பான் = குழந்தைகளுக்கு உண்டாகும் சொறி, புண்வகை] |
வீங்குகால் | வீங்குகால் vīṅgukāl, பெ. (n.) பத்து வகை வளிகளுள் ஒன்று (வாயு.);; one of the ten vital airs. It stays in the dead body when all others have left and causes it to swell and burst then it leaves it i.e. on 3rd day. [வீங்கு + கால்] |
வீங்குபுள் | வீங்குபுள்1 vīṅgubuḷ, பெ. (n.) ஒரு பறவை; a bird. [வீங்கு + புள்] வீங்குபுள்2 vīṅgubuḷ, பெ. (n.) வீங்குபுள் தோஷம் (பாலவா. 69); பார்க்க;see {}. [வீங்கு- + புள்] |
வீங்குபுள்தோஷம் | வீங்குபுள்தோஷம் vīṅgubuḷtōšam, பெ. (n.) மாலை நள்ளிரவு முதலிய காலமல்லாக் காலங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் எடுத்துச் செல்லுகையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை (பாலவா. 71);; a disease of children, attributed to the flight of certain birds overhead when they are taken outside the house at dusk, midnight or other inauspicious hour. [வீங்கு + புள் + Skt. {} → த. தோஷம்] |
வீங்குவாயு | வீங்குவாயு vīṅguvāyu, பெ. (n.) விதையைப் பற்றிய 6 வகை வளியுளொன்று; swelling of the testicles due to {}. [வீங்கு + Skt. {} → த. வாயு] |
வீங்குவிரைவாதம் | வீங்குவிரைவாதம் vīṅguviraivātam, பெ. (n.) இரண்டு விரையும் வீங்கி இரு கால் நரம்பிழுத்து மிக்க வலியுண்டாய் மலம் போகாமலும் வளி பரியாமலும் குளிர் கண்டு கண் புகைந்து வரும், ஒருவகை நோய் (யூகி-1200);; orchitis marked by constipation, flatulence, chillness, pain in the legs etc. [வீங்கு + விரை + வாதம்] Skt. {} → த. வாயு. |
வீங்கை | வீங்கை vīṅgai, பெ. (n.) 1. ஒருவகை அசைவு; a movement. 2. ஆடல் வகை; a mode of dancing. 3. குதிரை நடைவகை; a pace of a horse. [வீங்கு → வீங்கை] |
வீசகணிதம் | வீசகணிதம் vīcagaṇidam, பெ. (n.) கணித வகை; algebra. [வீசம் + கணிதம்] |
வீசகரி | வீசகரி vīcagari, பெ. (n.) வேங்கை மரம் (சங்.அக.);; East Indian kino tree. [வீசம் + கரி] |
வீசகா | வீசகா vīcakā, பெ. (n.) வீசகரி (சங்.அக.); பார்க்க;see {}. |
வீசக்கணக்கு | வீசக்கணக்கு vīcakkaṇakku, பெ. (n.) கணக்கு வகை (M.E.R.1931-32, P.55);; a mode of calculation. |
வீசனம் | வீசனம் vīcaṉam, பெ. (n.) 1. சிற்றால வட்டம் (சூடா.);; small fan. 2. விசிறி (திவா.);; fan. [வீசு → வீசனம்] |
வீசம் | வீசம்1 vīcam, பெ. (n.) மாகாணி (பிங்.);; the fraction, 1/16. தெ. வீசமு; க. வீச; து. வீசு, வீச;ம. வீசம். |
வீசல் | வீசல் vīcal, பெ. (n.) 1. எறிகை (பிங்.);; throwing. 2. வரையாது கொடுக்கை (திவா.);; giving liberally unconcelled liberality. [வீசு → வீசல்] |
வீசானம் | வீசானம் vīcāṉam, பெ. (n.) திருகுவட்டம் (பாண்டிச்.);; a small wedge shaped reel. [வீசு → வீசானம்] |
வீசி | வீசி1 vīci, பெ. (n.) 1. அலை; wave, ripple. “வீசிகள் கவரியாக” (கந்தபு. திருவவ. 110);. 2. சிறுக்கம் (இலக்.அக.);; trifle, a little reduction. [வீசு → வீசி] வீசி2 vīci, பெ. (n.) நலம் (இலக்.அக.);; health welfare. வீசி3 vīci, பெ. (n.) சதகுப்பை; dill or sowa seed. |
வீசிக்கட்டு-தல் | வீசிக்கட்டு-தல் vīcikkaṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) விரிவாகக் கட்டுதல்; to build in large proportions. “தூணுமெழ வீசிக்கட்டி” (கோயிலொ. 3);. [வீசு + கட்டு-,] |
வீசிதரங்கநியாயம் | வீசிதரங்கநியாயம் vīcidaraṅganiyāyam, பெ. (n.) அலைகள் போல ஒன்றன்பின் னொன்று தொடர்ந்து வருதலைக் கூறும் நெறி (இலக்.அக.);; the {} of the wave undulation, typifying an uninterrupted and regular succession or series, as of waves. [வீசி + தரங்கம் + நியாயம்] Skt. {} → த. நியாயம். |
வீசிநட-த்தல் | வீசிநட-த்தல் vīcinaḍattal, 3 செ.கு.வி.(v.i.) 1. காலை யெட்டி வைத்து விரைவாக நடத்தல்; to take long and quick strides, as in walking. 2. நெடுந்தொலைவு செல்லுதல்; to go long distance. ‘வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்’ (பழ.); [வீசி + நட-,] |
வீசிப்பிடி-த்தல் | வீசிப்பிடி-த்தல் vīcippiḍittal, 2 செ. குன்றாவி. (v.t.) மூச்சை இழுத்து உள்ளே கும்பித்துப் பிறகு சீராக விடுதல்; a breath exercise followed by siddhas. “வீசிப் பிடிக்கும் விறகறியாரில்லை” (திருமந்.);. |
வீசிப்போ-தல் | வீசிப்போ-தல் vīcippōtal, 8 செ.கு.வி.(v.i.) வீசிநட-, பார்க்க;see {}. [வீசி + போ-,] |
வீசிமாலி | வீசிமாலி vīcimāli, பெ. (n.) கடல் (இலக்.அக.);; sea. [வீசி + மாலி] |
வீசியடி-த்தல் | வீசியடி-த்தல் vīciyaḍittal, 2 செ.குன்றாவி. (v.t.) ஒங்கியடித்தல்; to strike with force, swinging the arm. [வீசி- + அடி-,] |
வீசிவில்லிடு-தல் | வீசிவில்லிடு-தல் vīcivilliḍudal, 5 செ. குன்றாவி.(v.t.) தேர் முதலிய நெம்பத்தணி போடுதல்; to apply a lever as in raising the wheel of a car. “வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுப்பப் போகாதிருத்தல்” (திவ். திருப்பா. 23, வ்யா. பக்.203);. [வீசு + வில்லிடு-,] |
வீசு | வீசு1 vīcudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. எறிதல் (பிங்.);; to throw, fling, as a weapon, to cast, as a net. “நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே” (திவ். இயற். திருவிருத். 53);. 2. சிறகடித்தல்; to flap, as wings. “வீசுஞ் சிறகாற் பறத்திர்” (திவ். இயற். திருவிருத். 54);. 3. ஆட்டுதல்; to swing, as the arm. “மூங்கில் போன்றிருந்துள்ள தோள் வீசி” (திவ். பெரியதி. 3. 7. 5. வ்யா);. 4. இரட்டுதல்; to fan. “முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே” (புறநா. 50.13);. 5. சுழற்றுதல்; to wave, flourish, as a sword. “வருமாய ரோடுடன் வளைகோல் வீச” (திவ். பெரியாழ். 3, 4, 6);. 6. அடித்தல்; to strike, beat, flog. ‘கழியால் அவனை வீசினான்’. 7. விரித்து நீட்டுதல்; to open out, spread, to lengthen, stretch. “இருஞ்சிறை வீசியெற்றி” (கம்பரா. சடாயுவுயிர். 107);. 8. மிகுத்திடுதல் (அரு.நி.);; to accumulate. 9. வரையாது கொடுத்தல் (பிங்.);; to give liberally. “இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசா னன்கலம் வரைவில வீசி” (பதிற்றுப். 54. 8);. 10. சிந்துதல்; to spill. “கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ” (கலித். 145);. 11. சிதறுதல்; to strew, scatter, sow, as seeds. “கொள்பத மொழிய வீசிய புலனும்” (புறநா. 23);. 12. களைதல்; to lay aside, throw off. “உடலுறு பாசம்வீசா தும்பர்ச் செல்வாரு மொத்தார்” (கம்பரா. கடறாவு. 11);. 13. செய்யா தொழிதல்; to abandon, to leave off, to drop. “சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன்” (கம்பரா. சூளா. 18);. தெ. வீசு; க. பீசு; ம. வீசுக; Ko. Vic; To. pis; Kod. bi-j (bi-di);; து. bijuni; Go. {}, Kui. vinja; Kur. {}, malt. bengre. [விசு → வீசு] (மு.தா.பக்.68); வீசு2 vīcudal, 5 செ.கு.வி. (v.i.) 1. காற்று முதலியன அடித்தல்; to blow, as the wind. “வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்” (தேவா. 1203, 1);. 2. பரவுதல்; to spread, to be diffused or emitted, as fragrance, rays, etc. “ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப” (திருப்பு. 1132);. 3. தீநாற்றம் அடித்தல்; to be emitted, as a bad foul smell. வீசுதல் = மணம் வீசுதல், மணத்தல். வீச்சம் = மணம், நாற்றம். நாறு என்னும் சொற்போன்றே வீசு என்பதும், செய்யுள் வழக்கில் நறுமணத்தையும் உலக வழக்கில் தீய மணத்தையும் உணர்த்தும். வாஸ் → வாஸ = மணம். வாஸ் என்பது பெயரடி வினையே. மா.வி.அகராதி. “perhaps only Nom. fr.next” என்று குறித்திருத்தல் காண்க. ‘next’ என்றது ‘வாஸ’ என்னும் சொல்லை. (வ.மொ.வ.93);. |
வீசுகாலேணி | வீசுகாலேணி vīcukālēṇi, பெ. (n.) தாங்குகால்களிரண்டுள்ள ஏணி வகை (வின்.);; a kind of ladder with two supporting legs. step-ladder. [வீசு- + கால் + ஏணி] [p] |
வீசுகோற்காரன் | வீசுகோற்காரன் vīcuāṟkāraṉ, பெ. (n.) வில்லுப்பாட்டில் வில்லடிப்போன் (நெல்லை);; one who plays with the vil instrument in {}. [வீசு + கோல் + காரன்] |
வீசுகோல் | வீசுகோல் vīcuāl, பெ. (n.) 1. வீசுவில் (வின்.); பார்க்க;see {}. 2. வில்லுப் பாட்டுப் பாடும்போது வில்லடிக்கப் பயன்படும் கோல் வகை (நாஞ்.நா.);; a kind of rod used for striking the bow in singing {}. [வீசு + கோல்] வீசுகோல் vīcuāl, பெ. (n.) வில்லிசைக் கருவியை மீட்டப் பயன்படும் கோல்; [வீசு+கோல்] |
வீசுதமர் | வீசுதமர் vīcudamar, பெ. (n.) துரப்பண வகை (வின்.);; bow drill. [வீசு + தமர்] |
வீசுதவர் | வீசுதவர் vīcudavar, பெ. (n.) வீசுதமர் (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீசு + தவர்2] |
வீசுவிற்குடம் | வீசுவிற்குடம் vīcuviṟkuḍam, பெ. (n.) துரப்பணக் கூடு (வின்.);; case for a drill bow. [வீசுவில் + குடம்] |
வீசுவில் | வீசுவில் vīcuvil, பெ. (n.) துரப்பண மிழுக்கப் பயன்படும் வில்; drill bow. [வீசு + வில்] [p] |
வீசேறு-தல் | வீசேறு-தல் vīcēṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) மேலேறுதல்; to be upraised. “வீசேறிய புருவத்தவர்” (தேவா. 69, 10);. [வீசு + ஏறு-,] |
வீசை | வீசை1 vīcai, பெ. (n.) நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை; viss, a measure of weight = 40 palams. தெ. வீசெ. வீசை2 vīcai, பெ. (n.) நீண்டு வளரும் மேலுதட்டு மயிர்; moustache. [வீசு → வீசை] தலைமயிரும் தாடியும் நீண்டு வளர்வனவேயாயினும், குறுக்காக நீண்டு வளர்வது மீசையொன்றே யாதலின், அது விசையெனப்பட்டது. (மு.தா.பக்.68);. வீசை3 vīcai, பெ. (n.) வாழை; plantain. |
வீசைத்தூக்கம் | வீசைத்தூக்கம் vīcaittūkkam, பெ. (n.) காற்குன்றி மணி எடை; gold-smith’s weight = 1/4 {}. [வீசம்2 + தூக்கம்2 ] |
வீச்சம் | வீச்சம் vīccam, பெ. (n.) நாற்றம்; smell, effluvium. [வீசு → வீச்சு → வீச்சம்] (மு.தா.65); காற்றானது நீண்டு செல்வதால் அதனொடு கலந்த வாசனையும் நீண்டு செல்கின்றதென்க. வீசுதல் என்னும் சொல், வழக்கில் தீய நாற்றத்தையே குறிக்கும். |
வீச்சரிவாள் | வீச்சரிவாள் vīccarivāḷ, பெ. (n.) அறுவாள்வகை (இ.வ.);; a kind of billhook. மறுவ. புல்லரிவாள். [வீச்சு + அறுவாள் → அரிவாள்] [p] |
வீச்சலை | வீச்சலை vīccalai, பெ. (n.) ஆழிப்பேரலை; tsunami. [வீச்சு + அலை] |
வீச்சாட்டம் | வீச்சாட்டம் vīccāṭṭam, பெ. (n.) 1. பரப்பகலம் (வின்.);; spaciousness, roominess. 2. வீச்சு, 5 பார்க்க;see {}. 3. நன்னிலைமை; good circumstances, profilable increase.. [வீச்சு + ஆடு → ஆட்டம்] |
வீச்சு | வீச்சு vīccu, பெ. (n.) 1. எறிகை; throw, cast, as of a net. “எறிந்த வீச்சுத் தவ்விட…… வாளொடுந் தழுவிக் கொண்டான்” (கம்பரா. அதிகா.213);. 2. சிறகடிக்கை; beat, flat, as of wings. 3. அடி; blow, strike. 4. ஆட்டுகை; swinging, oscillation. ‘ஊஞ்சலை ஒரு வீச்சு வீசியாடினாள்’. 5. நீளம்; length. ‘அந்த வீடு வீச்சா யிருக்கிறது’. 6. விரைவு; quickness, rapidity. ‘அவன் வீச்சாக நடக்கிறான்’. 7. ஒட்டம்; sweep, glance. 8. நோய் வகை (யாழ்.அக.);; a disease. 9. வலிமை (வின்.);; strength. 10. தற்பெருமை; self-boasting, arrogant talk. ‘யாரிடத்தில் இந்த வீச்சு’. 11. ஆந்தை முதலியவற்றின் ஒசை; dry, screech as of an owl. “வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்” (பெருங். உஞ்சைக். 55, 89);. 12. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து வரும் போது கொள்ளும் ஒருவகைக் குறியீடு; a vowel- sign of vowel-consonants. 13. வளைவு (கட்டட. நாமா. 16);; curve. 14. வீச்சம் (இ.வ.); பார்க்க;see {}. க. பீசு. [வீசு → வீச்சு] |
வீச்சு மத்தளிகை | வீச்சு மத்தளிகை vīccumattaḷigai, பெ. (n.) ஆடல் இயக்கங்களில் ஒன்று one among many dancing movement. |
வீச்சுக்காரன் | வீச்சுக்காரன் vīccukkāraṉ, பெ. (n.) 1. மிகுதியாக செலவு செய்பவன் (யாழ்.அக.);; person driven to extravagance, spend thift. 2. தற்பெருமை பேசுவோன்; boastful person, braggart. [வீச்சு + காரன்] |
வீச்சுக்காரி | வீச்சுக்காரி vīccukkāri, பெ. (n.) 1. வரம்புமீறி செலவு செய்பவள்; extravagant woman. 2. பெருமை பேசுபவள்; boastful woman. 3. விலைநலப் பெண்டிர்; prostitute. [வீச்சு + காரி] |
வீச்சுசன்னி | வீச்சுசன்னி vīssusaṉṉi, பெ. (n.) இசிவு நோய்வகை (வின்.);; lockjaw, tetanus. [வீச்சு + சன்னி] Skt. Janni → த. சன்னி. |
வீச்சுப்புத்து | வீச்சுப்புத்து vīccupputtu, பெ. (n.) ஒரு வகைப் புண்; an ulcer. [வீச்சு + புத்து] |
வீச்சுமணி வலை | வீச்சுமணி வலை vīccumaṇivalai, பெ. (n.) வேகமாக வீசிப்பிடிக்க உதவும் வலை. [வீசு-வீச்சு+வலை] |
வீச்சுலை | வீச்சுலை vīcculai, பெ. (n.) காற்று வீசும் உலை; blast furnace. [வீசு → வீச்சு + உலை] |
வீச்சுவலி | வீச்சுவலி vīccuvali, பெ. (n.) நரம்புகளை இழுத்துவிடும் ஒரு வகை வலிப்பு; a spasm in which the muscles or muscular fibres contract and relax alternately in quick succession. [வீச்சு + வலி] |
வீச்சுவலை | வீச்சுவலை vīccuvalai, பெ. (n.) மீன்பிடி வலைவகை (இ.வ.);; a kind of casting net. மறுவ. எறிவலை, மணிவலை. ம. வீச்சுவல. [வீசு → வீச்சு + வலை. வலை = மீனுள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கருவி] வாய்ப்பக்கம் நீர்ப்பரப்பில் எறிந்து மையமூடாக நாற்புறக் கோடியும் இழுக்கப்படத் தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவமான மீன்பிடி வலை. |
வீச்சுவிளக்கு | வீச்சுவிளக்கு vīccuviḷakku, பெ. (n.) மாழைகளை (அல்); மாழைகளினாலான அணிகலன்களை உருக்கவும், காய்ச்சவும் பயன்படுத்தும் காற்று வீசும் விளக்கு; blast lamp. [வீசுவிளக்கு → வீச்சுவிளக்கு] [p] |
வீச்சுவீச்செனல் | வீச்சுவீச்செனல் vīccuvīcceṉal, பெ. (n.) கதறுதற்குறிப்பு; onom. expr, of screaming. [வீச்சு + வீச்சு + எனல்] |
வீச்சுவேனுமாய் | வீச்சுவேனுமாய் vīccuvēṉumāy, வி.எ. (adv.) அளவில் மிகுதியாய்; with a free hand, liberally, as in measuring. [வீசு → வீச்சு + வியனுமாய் → வேனுமாய்] |
வீச்சேணி | வீச்சேணி vīccēṇi, பெ. (n.) வீசுகாலேணி (சங்.அக.);; a kind of ladder. [வீச்சு + ஏணி1] |
வீடடைத்தல் | வீடடைத்தல் vīḍaḍaittal, பெ. (n.) சாவு முதலியவற்றால் தலைமுறையற்று வீடு மூடிக்கிடக்கை; closing of a house due to extinction of a family, as by death. [வீடு + அடைத்தல்] |
வீடறு-த்தல் | வீடறு-த்தல் vīṭaṟuttal, 4 செ.குன்றாவி.(v.t.) வழக்கு முதலியன தீர்த்தல்; to settle, as a case or dispute. “வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன்” (பொருந. 188, உரை); [வீடு + அறு-,] |
வீடாயிரு-த்தல் | வீடாயிரு-த்தல் vīṭāyiruttal, 2 செ.கு.வி. (v.i.) தங்கியிருத்தல்; to encamp, to stay. “சீவலவன் மங்கலத்து நாம் வீடாயிருக்க” (T.A.S. vi.158);. |
வீடாரம் | வீடாரம் vīṭāram, பெ. (n.) 1. பாசறை (பு.வெ.8, 16, கொளு, உரை);; camp. 2. வீடு (வின்.);; house. தெ. பிடாரமு;க. பிடார. [வீடு → வீடாரம்] |
வீடாவழி | வீடாவழி vīṭāvaḻi, வி.எ.(adv.) வீடு வீடாக(வின்.);; door to door. ‘இவ்விரவலன் வீடாவழிச்சென்று இருக்கிறான்’ (உ.வ.);. [வீடு + ஆ + வழி] |
வீடி | வீடி1 vīṭi, பெ. (n.) கொற்றன் (மலை.);; a parasitic leafless plant. வீடி2 vīṭi, பெ. (n.) வேரிலாக் கொத்தான்; rootless plant. வீடி3 vīṭi, பெ. (n.) வெற்றிலை பாக்கு (தாம்பூலம்); (இலக். அக.);; betel and betel nut. [மிடையம் → விடையம் → வீடி] |
வீடிகை | வீடிகை vīṭigai, பெ. (n.) 1. வெற்றிலை (மலை.);; betel. 2. வெற்றிலைச் சுருள் (வின்.);; roll of betel leaves with arecanut, spices and lime. [மிடையம் → விடையம் → வீடிகை] [p] |
வீடு | வீடு1 vīṭu, பெ. (n.) 1. விடுகை; leaving. “நட்டபின் வீடில்லை” (குறள், 791);. 2. விடுதலை; emancipation, freedom, liberation, release to set free. “நெடுங்கை விலங்கின் வீடுபெறல் யாதென” (பெருங். நரவாண. 3. 107);. 3. வீனைநீக்கம்; freedom from the bondage of karma. “வீடெனப்படும் வினைவிடுதல் (சீவக. 2846);. 4. முடிவு (பிங்.);; completion, settlement, end. 5. அழிவு; dissolution of the universe. “நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடுபேறு” (திவ். திருவாய். 8.10.6);, ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ (பழ.);. 6. படைப்பு (திவ். திருவாய். 8, 10, 6, பன்னீ.);; creation. 7. வீடுபேறு; heaven, as the final release or liberation, immortality. “வீடுடையா னிடை” (திவ். திருவாய். 1, 2, 1);. 8. வானுலகு; Svarga, Indra’s heaven. “வீரிய ரெய்தற் பால வீடு”(பு.வெ. 8.30);. 9. மனை; house, habitation, abode. “வீடறக் கவர்ந்த” (பு.வெ. 3. 15. கொளு);. 10. ஒரை (இராசி.); (இ.வ);; zodiacal sign. 11. சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய இடம் (தானம்); (இ.வ.);; squares, as of a chess board. 12. கட்டாட்டத்திற் பழமெடுத்தற்குரிய இடம்; winning place or goal in a board of an indoor game. 13. தேற்றா பார்க்க;see {}. clearing nut tree. “காழிருள் வீடும்” (பெருங். உஞ்சைக். 41, 33);. 14. ஒன்றைக் குறிக்குங் குழூஉக்குறி (தைலவ.);; a cant term signifying one. ‘வீடு அசையாமல் தின்னும்; யானை அசைந்து தின்னும்’ (பழ.);. ‘வீடு கட்டுவது அரிது; வீடு அழிக்கிறது எளிது'(பழ.);. ‘வீடு கட்டும் முன்னம் கிணறு வெட்ட வேண்டும்’ (பழ.);. ‘வீடு போபோ என்கிறது; காடு வாவா என்கிறது’ (பழ.);. ‘வீடு வெறுவீடு வேலூர் அதிகாரம்’ (பழ.);. ‘வீடு வெறுவீடாய் இருந்தாலும் மணியம் ஏழுஊர்'(பழ.);. ‘வீட்டில் அழகு வேம்பு அடியாகும்’ (பழ.);. ‘வீட்டுக் கருமம் நாட்டுக்கு உரையேல்’ (பழ.);. ‘வீட்டுக்கு அழகு விளக்கு’ (பழ.);. ‘வீட்டுச் செல்வம் மாடு;தோட்டச் செல்வம் முருங்கை’ (பழ.);. ‘வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்’ (பழ.);. ‘வீட்டு வேலை பாராதவன் நாட்டு வேலை பார்ப்பானா?'(பழ.);. ‘வீட்டுக்கு வீடு எதிர்வீடு ஆகாது'(பழ.);. ‘வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடிவைத்தது போல’ (பழ.);. ‘வீட்டைக் கட்டிப்பார்;கலியாணம் செய்துபார்’ (பழ.);. மக்கள் குடியிருக்கும் மனைக்குத் தமிழில் வீடு என்று பெயர். பேரின்ப உலகிற்கும் வீடு என்றே பெயர். இவ்விரு பெயரும் ஒரு சொல்லே. மாந்தன் பகலெல்லாம் உழைத்துக் களைத்து உணவு அல்லது பொருள்தேடி, மாலைக் காலத்தில் மனையாகிய வீட்டையடைந்து இளைப்பாறி இன்புற்றிருக்கிறான். எழுவகையான எல்லையற்ற பிறவிகளில் உழன்று அறத்தை ஈட்டிய ஆன்மா அல்லது அப்பிறவிகளில் அலைந்து திரிந்து வீட்டுநெறிச் செலவை முடித்த ஆன்மா, அடையும் பேரின்ப உலகும் வீடுபோலுதலின் வீடெனப் பட்டதென்க. வீட்டின் வகை 1. வீடு = நிலையான உறைவிடம், 2. மனை = வீட்டு நிலம் (ஆட்சிப் பொருள்);, 3. இல், இல்லம் = வளமான வீடு, 4. அகம் = உள்வீடு, 5. உறையுள் = தங்குமிடம், 6. குடிசை = தாழ்ந்த சிறு கூரை வீடு, 7. குடில் = இலையால் வேய்ந்த சிறுகுடிசை, 8. குடிலம் = பெருங்குடில் (பர்ண சாலை);, 9. குடிகை = சிறுகோயில், 10. குச்சு வீடு = சிறுகூரை வீடு, 11. மச்சு வீடு = மெத்தை வீடு, 12. கூடு = நெற்கூடுபோல் வட்டமான சிறுவிடு, 13. கொட்டகை = சுவர் அல்லது நெடுஞ்சுவர் இல்லாத நீண்ட கூரைவீடு, 14 கொட்டில் = தொழுவம் அல்லது ஆயுதச் சாலை, 15. சாலை = பெருங்கூடம், 16. வளைவு = ஒருவருக்குச் சொந்தமான பலவீடுகள் சேர்ந்த விடம், 17. வளைசல் = வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் அல்லது சூழ்நிலம், 18. வளாகம் = திருமடம், 19. மாளிகை = மாண்பான குடும்பம்;பெருவீடு, 20. மாடம் = மேனிலை, 21. மாடி = மேனிலை வீடு, 22. குடி = ஒரு குடும்பம் அல்லது குலம் வகிக்கும் தெரு அல்லது வீட்டுத் தொகுதி, 23. அரண்மனை = அரண் அல்லது பாதுகாப்புள்ள அரசன் மனை, 24. பள்ளி = படுக்கும் வீடு, 25. மடம் = துறவிகள் தங்கும் பெருங்கூடம் அல்லது மண்டபம். -பாவாணர், (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பக்.49);. Ka. {}; Te. {}. நாகரிகமற்ற பழங்காலத்தில் மக்கள் மண்ணாலும் கற்பாறைகளாலும் கவர்கள் எழுப்பி, இலைகளாலும் கிளைகளாலும் கூரை வேய்ந்து, அதற்குள் வசித்துவந்தார்கள். கிடைத்த பொருள் எதுவானாலும் அதைக் கொண்டு வீடு என்று பெயர் கொண்ட ஒர் உறைவிடம் அமைத்துக் கொண்டார்கள். நாகரிகம் வளரவளர மண்ணைச் சுட்டுச் செங்கற்கள் செய்து, அதனால் வீடு கட்டத் தொடங்கினர். நல்ல களிமண் அகப்படாத இடங்களிலும், கற்பாறை மிகுந்த இடங்களிலும், பாறாங்கற்களைத் தகுந்த அளவுக்கு உடைத்து அதையே வீடு கட்டுவதற்கு இன்றும் பயன்படுத்துகிறார்கள். இக்காலத்தில் கதைமாவையும் கருங்கல் சல்லியையும் மணலையும் சேர்த்துச் செய்த கதைமாக் கலவை எனப்படும் பொருள் மிகவும் பயன்பட்டு வருகிறது இத்துடன் எஃகுக் கம்பிகளையும் சேர்த்து வலுவூட்டிய கதைமாக் கலவை என்பதும் பயன்பட்டு வருகிறது. வீடு2 vīṭudal, 5 செ.கு.வி.(v.i.) 1. கெடுதல்; to perish, to be destroyed. “வினை….. வீடுமே” (தேவா. 360, 8);. 2. சாதல்; to die. “வீடுமளவும் விடுகின்றிலேனே” (திருமந். 1654);. 3. ஒழிதல்; to cease, end. “தளர் நடை வருத்தம் வீட்” (பெரும்பாண். 250);. [வீழ் → வீடு] வீடு3 vīṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) விடுதல் (வின்.);; to let off, leave off. [விடு → வீடு] |
வீடு கட்டுதல் | வீடு கட்டுதல் vīṭugaṭṭudal, பெ. (n.) சிலம்பாட்டத்தின் காலடிவைப்புமுறைகளில் ஒன்று; a way of holding the foot, while brandshing, quarter staff. (14:152);. [வீடு+கட்டு] |
வீடுகட்டுதல் | வீடுகட்டுதல் vīṭugaṭṭudal, 1. இல்லம் எழுப்புதல்; to construct a house. 2. சிலம்ப விளையாட்டில் சிலம்பத்தைச் சுற்றியபடி சுற்றி வருதல்; brandish a staff. |
வீடுகொள்(ளு) | வீடுகொள்(ளு)1 vīṭugoḷḷudal, 13 செ. குன்றாவி.(v.t.) மீண்டும் பெறுதல்; to recover, get back. “ஆருயிரைக் கூற்றம் விழுங்கிய பின் வீடுகொண்டற்றால்” (பு.வெ.2.1.);. [வீடு + கொள்(ளு);-,] |
வீடுகொள்(ளு)-தல் | வீடுகொள்(ளு)-தல் vīṭugoḷḷudal, 13 செ.கு.வி. (v.i.) வரி முதலியன நீங்கப் பெறுதல்; to be exempted from, as from payment of tax. “பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது” (புறநா. 35);. [வீடு + கொள்-ளுதல்] |
வீடுசெய்-தல் | வீடுசெய்-தல் vīṭuseytal, 1 செ.குன்றாவி. (v.t.) 1. துறத்தல்; to renounce, relinguish. “வீடுமின் முற்றவும் வீடுசெய்து” (திவ். திருவாய். 1,2,1.);. 2. விடுதலை செய்தல்; to release. 3. வரி முதலியன விட்டுக் கொடுத்தல்; to remit, as taxes. “கறை வீடு செய்ம்மென” (சிலப். 28, 204);. 4. காணிக்கை செய்தல்; to surrender, as to God. “உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்ம்மினே” (திவ். திருவாய். 1.2. 1.);. [வீடு + செய்-,] |
வீடுசேர்-தல் | வீடுசேர்-தல் vīṭucērtal, 3 செ.கு.வி. (v.i.) அழிதல்; to be destroyed or ruined. “வீடுசேரநீர் வேலைகான் மடுத்து” (கம்பரா. நாட்டுப். 61);. [வீடு + சேர்-,] |
வீடுசேர்-த்தல் | வீடுசேர்-த்தல் vīṭucērttal, செகுன்றாவி (v.t.) பழந்தமிழர் வழக்கப்படி மணமக்களை வீட்டி னுள் விடும் தலைநாள் கூட்டம்; to let married couples inside for first night, a ceremony of ancient Tamils. [வீடு+சேர்] |
வீடுண்ணசாலி | வீடுண்ணசாலி vīṭuṇṇacāli, பெ. (n.) தோலிற் காணப்படும் மச்சம்; mole. மறுவ. மரு. |
வீடுதூங்கி | வீடுதூங்கி vīṭutūṅgi, பெ. (n.) பிறனை யடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் (யாழ்.அக.); (வின்.);; hangeron, sponger, parasite. [வீடு + தூங்கி] |
வீடுநர் | வீடுநர் vīṭunar, பெ. (n.) இறப்பவர்; those who die, mortals. “விண்ணவரும் வீடுநரே” (விநாயகபு. 22. 15);. [விழ்த்து → வீட்டு → வீடு → வீடுநர்] |
வீடுநுழை-தல் | வீடுநுழை-தல் vīṭunuḻaidal, 2 செ.கு.வி. (v.i.) தீயவெண்ணத்துடன் பிறன் வீட்டினுட் புகுதல்; to tresspass, to enter into a house with an evil intent. [வீடு + நுழை-,] |
வீடுபார்-த்தல் | வீடுபார்-த்தல் vīṭupārttal, 4. செ.குன்றாவி. (v.t.) மணவினை முடிந்த சின்னாட் சென்ற பின் மணமகள் பெற்றோர் மணமகன் வீடு சென்று தம் மகள் மனையறம் நடத்தும் திறத்தை பார்த்தல் (த.தி.பக். 21);; parent’s to be examined their bride’s newly married life at her home. |
வீடுபெயர் | வீடுபெயர்1 vīṭubeyartal, 2 செ.கு.வி. (v.i.) இருப்பிடம் விட்டு வேறிடஞ் செல்லுதல் (வின்.);; to change one’s residence or abode or habitat to migrate. ‘வீடு பெயர்ந் தாயிற்றா?’ (உ.வ.);. [வீடு + பெயர்-,] வீடுபெயர்2 vīṭubeyarttal, 3 செ.கு.வி. (v.i.) வீடுபெயர்1 (வின்.); பார்க்க;see {}. [வீடு + பெயர்] |
வீடுபேறு | வீடுபேறு vīṭupēṟu, பெ. (n.) முத்திநிலை; final emancipation, salvation, altainment, bliss divine. “விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை” (தேவா.268.5);. இல்லறத்தாலும் வீடுபெறலாமென்பது தமிழர் மதமும் திருவள்ளுவர் கொள்கையுமாகும். “வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்” (குறள்,38); “அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்” (குறள், 46); “இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை” (குறள், 47); “ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து” (குறள், 48);. என்னுங் குறள்களை நோக்குக. துறவறமும் ஒருகுலத்தார்க்கு மட்டும் உரியதன்றி எல்லார்க்கும் பொதுவாம். அவாவும் செருக்கும் அடியோடு ஒழிந்தாலொழிய ஒருவன் வீட்டையடைய முடியாது. பேய்போல் திரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சை யெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமபோலெவர்க்கும் தாழ்ச்சிசொல்லிச் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே. (பட்டினத். பாடல்); மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. (குறள், 34); மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை. (குறள், 345); நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றித் தொழூஉம் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் ஆற்றைக் கடக்கத் துறைதெரி யாமல் அலைகின்றையே (பட்டினத். பாடல்);. இச்செய்யுட்களால், சிறுபிள்ளைபோல் மறுபடியும் பிறந்து செருக்கடங்கி ஆசை வேரறுத்தவரன்றி, செல்வத் தொடர்புள்ளவரும், ஆரவாரமாக ஆடையணிபவரும் தம்மைப் பிறப்பால் சிறந்தவராகக் கருதுபவரும் மனமாறாது ஆரிய மந்திரங்களை யோதுபவரும், வடமொழியைத் தேவ மொழி யென்றும் தென்மொழியைக் கீழோர் மொழி (நீசபாஷை); யென்று கூறுபவரும் திருக்குறளை ஒதக் கூடாதென்பவரும் வீட்டுலகையடைவது ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவதினும் அரிதாயிருக்கு மென்று அறிந்து கொள்க. இனி, விருந் தோம்பாமையால் இல்லற வகையாலும் செருக்கடங் காமையால் துறவற வகையாலும், ஆரியர் வீடடைவதும் இயலாதென அறிந்து கொள்க. – (தேவநேயம் பக்.136-137); [வீடு + பேறு] |
வீடுமாறு-தல் | வீடுமாறு-தல் vīṭumāṟudal, 5 செ.கு.வி. (v.i.) வீடுமாற்று-, பார்க்க;see {}. [வீடு + மாறு-,] |
வீடுமாற்று-தல் | வீடுமாற்று-தல் vīṭumāṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) ஒரு வீட்டை விட்டு மற்றொரு வீட்டிற்குக் குடிபோதல்; to migrate or shift from one house to another. [வீடு + மாற்று-,] |
வீடுமூலி | வீடுமூலி vīṭumūli, பெ. (n.) முப்பு; the three mystic salts. |
வீடும்விளக்குமாய்வை-த்தல் | வீடும்விளக்குமாய்வை-த்தல் vīṭumviḷakkumāyvaittal, 4 செ.குன்றாவி.(v.t.) ஒருவனை வாழவைத்தல்; to start or settle one in life, to make one prosper in life. ‘அவரை வீடும் விளக்குமாய் வாழவைத்தவர் இவர்தான்’ (உ.வ);. [வீடும் + விளக்குமாய் + வை-,] |
வீடுவாசல் | வீடுவாசல் vīṭuvācal, பெ. (n.) வீடும் அதைச் சார்ந்த பொருளும்; house and its appurtenances. ‘அவன் வீடு வாச லில்லாதவன்’. [வீடு + வாசல்] |
வீடுவி-த்தல் | வீடுவி-த்தல் vīṭuvittal, 9 செ.குன்றாவி.(v.t.) அழிவு செய்தல்; to cause, to perish, to destroy to ruin. “காலனை விடுவித்து” (தேவா. 444, 3);. [வீடு → வீடுவி-,] |
வீடெடு-த்தல் | வீடெடு-த்தல் vīḍeḍuttal, 18. செ.கு.வி.(v.i.) 1. வீடுகட்டுதல்; to build a house. “வீடெடுக்க அஸ்திபாரஞ் செய்பவர்” (பரத. ஒழிபி. 3. உரை);. 2. அடித்தளமிடுதல்; to lay the foundation. “நல்ல வீடெடுப்பவர்” (பரத. ஒழிபி. 3.);. 3. வாடகைக்கு வீடு எடுத்தல்; to take house for rent. [வீடு + எடு-,] |
வீட்டன் | வீட்டன் vīṭṭaṉ, இடை(part), தோறும் என்று பொருள்படும் ஓர் ஈறு; a distributive suffix meaning each, every. “ஆட்டை வீட்டன் பொலிசை காசு அரைக்கால்” (S.I.I.ii. 97);. [வட்டம் → விட்டன் → வீட்டன்] |
வீட்டார் | வீட்டார் vīṭṭār, பெ. (n.) வீட்டிலுள்ள மக்கள்; members of a household family members. [வீடு → வீட்டார்] |
வீட்டாள் | வீட்டாள் vīṭṭāḷ, பெ. (n.) மனைவி (யாழ்.அக.);; wife. [வீடு → வீட்டாள்] ஒ.நோ. இல் → இல்லாள் |
வீட்டினெருப்பு | வீட்டினெருப்பு vīṭṭiṉeruppu, பெ. (n.) அகத்தி; a tree. |
வீட்டிருப்பு | வீட்டிருப்பு vīṭṭiruppu, பெ. (n.) குடும்ப நிலை; state of the family, family affairs. “வீட்டிருப் பறியாத ஆண்பிள்ளை” (விநோதரச. 24);. [வீடு → வீட்டு + இருப்பு] |
வீட்டிறப்பு | வீட்டிறப்பு vīṭṭiṟappu, பெ. (n.) மேற்கூரையின் தாழ்ந்த பக்கம் (சூடா.);; eaves of the roof of a house. [வீடு → வீட்டு + இறப்பு] ஒ.நோ. இறப்பு,7. |
வீட்டிலொன்று | வீட்டிலொன்று vīṭṭiloṉṟu, பெ. (n.) முப்பூவி லொன்று; one of the three salts. [வீட்டில் + ஒன்று] |
வீட்டு | வீட்டு1 vīṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. கொல்லுதல் (சூடா.);; to kill. “அந்தகன் றூதர் வீட்டு முன்னரே” (உபதேசகா. சிவபுரா. 40);. 2. அழித்தல்; to destroy. “என்றன் வெந்தொழில் வீட்டிட” (திருவாச. 41.5);. 3. நீக்குதல்; to remove. “பிணியை வீட்டி மணித்தடந் தோளினாற்குக் கொடுத்தியோ” (கம்பரா. மிதிலைக். 97);. [வீழ்த்து → வீட்டு-,] வீட்டு2 vīṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) தள்ளுதல்; to cast into, throw in. “இரவியைச் சிறையில் வீட்டினான்” (கந்தபு. அமரர் சிறைபு. 3);. [வீழ்த்து → வீட்டு-,] |
வீட்டுக்கப்புறம் | வீட்டுக்கப்புறம் vīṭṭukkappuṟam, பெ. (n.) வீட்டுக்குத்தூரம் பார்க்க;see {}. [வீட்டுக்கு + அப்புறம்] |
வீட்டுக்கரு | வீட்டுக்கரு vīṭṭukkaru, பெ. (n.) ஐங்காய மெழுகு பார்க்க;see {}. |
வீட்டுக்காரன் | வீட்டுக்காரன் vīṭṭukkāraṉ, பெ. (n.) 1. வீட்டுக்குரியவன்; landlord of a house. 2. வீட்டுக்காரர் பார்க்க;see {}. [வீடு → வீட்டு + காரன்1] |
வீட்டுக்காரர் | வீட்டுக்காரர் vīṭṭukkārar, பெ. (n.) கணவர்; husband. [வீடு → வீட்டு + காரர்] |
வீட்டுக்காரி | வீட்டுக்காரி vīṭṭukkāri, பெ. (n.) 1. வீட்டுக் குடையவள்; landlord of a house. 2. மனைவி; wife. மறுவ. மனையாள். [வீடு → விட்டு + காரி] |
வீட்டுக்காரியம் | வீட்டுக்காரியம் vīṭṭukkāriyam, பெ. (n.) குடும்ப வேலை; house hold affairs. “நம் சேனாதிபதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக் காரியம் செய்யும் கோவணவர்” (Pudu. Insc. 791);. [வீடு → வீட்டு + Skt. {} → த. காரியம்] வீட்டுக்கிரியை __, பெ. (n.); வீட்டிற் செய்யுஞ் சாச்சடங்குப் பகுதி (யாழ்.அக.);; part of the funeral ceremonies, performed at the house. [வீடு → வீட்டு + Skt. {} → த. கிரியை] |
வீட்டுக்குடையவன் | வீட்டுக்குடையவன் vīḍḍukkuḍaiyavaṉ, பெ. (n.) 1. வீட்டுக்கு உரியவன் (வின்.);; owner of a house. 2. குடும்பத் தலைவன் (வின்.);; head of a family. 3. ஒரைக்குரிய (இராசி); தலைவர்; lord of a zodiacal sign. [வீடு → வீட்டுக்கு + உடையவன்] |
வீட்டுக்குட்சாட்சி | வீட்டுக்குட்சாட்சி vīṭṭukkuṭcāṭci, பெ. (n.) வீட்டிலிருப்பவர்களுடைய சான்று மூலம் (வின்.);; domestic evidence. [வீடு + உள்2 + Skt. sakshi → த. சாட்சி] |
வீட்டுக்குத்தூரம் | வீட்டுக்குத்தூரம் vīṭṭukkuttūram, பெ. (n.) வீட்டுக்குவிலக்கு (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீடு → வீட்டுக்கு + தூரம்] |
வீட்டுக்குளிர்ச்சி | வீட்டுக்குளிர்ச்சி vīṭṭukkuḷircci, பெ. (n.) தீயபெண்கடவுள்களுக்கு வீடுகளில் இடும் காணிக்கை (யாழ்ப்.);; offerings made to demons when worshipped at home. [வீடு → வீட்டு + குளிர்ச்சி] |
வீட்டுக்குவிலக்கம் | வீட்டுக்குவிலக்கம் vīṭṭukkuvilakkam, பெ. (n.) வீட்டுக்குவிலக்கு பார்க்க;see {}. [வீடு → வீட்டுக்கு + விலக்கம்] |
வீட்டுக்குவிலக்கு | வீட்டுக்குவிலக்கு vīṭṭukkuvilakku, பெ. (n.) மகளிர் மாதவிடாய்; menstruation, as necessitating a woman to stay outside her house during her periods. [வீடு → வீட்டுக்கு + விலக்கு] |
வீட்டுக்குவெளி | வீட்டுக்குவெளி vīṭṭukkuveḷi, பெ. (n.) மாதவிலக்கு; menses. [வீடு → வீட்டுக்கு + வெளி] |
வீட்டுக்கோழி | வீட்டுக்கோழி vīṭṭukāḻi, பெ. (n.) வீடுகளில் வளர்க்கப்படும் கோழி; domesticated fowl. [வீடு → வீட்டு + கோழி] |
வீட்டுச்சாமான் | வீட்டுச்சாமான் vīṭṭuccāmāṉ, பெ. (n.) 1. வீட்டிற்குரிய தட்டு முட்டுகள்; household furniture and utensils. 2. வீட்டுப் பண்டம், 2, 3 பார்க்க;see {}. [வீடு → வீட்டு + சாமான்] saman = urdhu. |
வீட்டுச்சீட்டு | வீட்டுச்சீட்டு vīṭṭuccīṭṭu, பெ. (n.) 1. வீட்டை விலைகொடுத்து வாங்கிய ஒப்பந்தம், உறுதி முதலிய ஆவணம் (வின்.);; title-deeds relating to one’s house. 2. குடும்ப வழக்கு (இ.வ.);; monetary transactions of a family. [வீடு → வீட்டு + சீட்டு] |
வீட்டுச்சுகம் | வீட்டுச்சுகம் vīṭṭuccugam, பெ. (n.) வீட்டிற் பெறக்கூடிய இன்பம்; domestic felicities. [வீடு → வீட்டு + Skt. suga → த. சுகம்1] |
வீட்டுச்செலவு | வீட்டுச்செலவு vīṭṭuccelavu, பெ. (n.) உணவு முதலியவற்றிற்கு ஆகுஞ் செலவு; household expenditure, opp. to {}. [வீடு → வீட்டு + செலவு] |
வீட்டுத்தீ | வீட்டுத்தீ vīṭṭuttī, பெ. (n.) அகத்தி; a tree. (சா.அக.); |
வீட்டுத்தெய்வம் | வீட்டுத்தெய்வம் vīṭṭutteyvam, பெ. (n.) 1. குடும்பப் பெண் கடவுள் (இ.வ.);; household deity. 2. மங்கலப் பெண்டு; woman who dies during the lifetime of her husband and is worshipped as a deity by her family. மறுவ. குலதெய்வம். [வீடு → வீட்டு + தெய்வம்] |
வீட்டுத்தேன் | வீட்டுத்தேன் vīṭṭuttēṉ, பெ. (n.) வீடுகளில் ஈக்கள் கட்டும் அடையின் தேன்; honey collected from the honey comb built in the houses. [வீடு → வீட்டு + தேன்] |
வீட்டுத்தேவை | வீட்டுத்தேவை vīṭṭuttēvai, பெ. (n.) வரிவகை (S.I.I.vii, 63);; a tax. [வீடு → வீட்டு + தேவை] |
வீட்டுநெறி | வீட்டுநெறி vīṭṭuneṟi, பெ. (n.) வீடுபேற்றிற் குரிய வழி; path to salvation. “வீட்டு நெறிப்பால்” (ஒளவைக் குறள்);. [வீடு → விட்டு + நெறி3] அறிவுமிக்கு உலகவாழ்வை வெறுத்து வீட்டு நெறியில் நின்ற தமிழ்நாட்டுத் துறவிகளே அந்தணரென்னும் அறவோ ரெனப்பட்டனர். |
வீட்டுப்பண்டம் | வீட்டுப்பண்டம் vīṭṭuppaṇṭam, பெ. (n.) 1. வீட்டுச்சாமான் (வின்.); பார்க்க;see {}. 2. வீட்டுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள்; household provisions. 3. வீட்டிற் செய்யப்படும் பொருள்கள்; home-made articles. [வீடு → வீட்டு + பண்டம் 1] |
வீட்டுப்பூசை | வீட்டுப்பூசை vīṭṭuppūcai, பெ. (n.) கடவுளுக்கு வீட்டிற் செய்யும் வழிபாடு; worship of the deity at home. [வீடு → வீட்டு + பூசை] |
வீட்டுப்பெண் | வீட்டுப்பெண் vīṭṭuppeṇ, பெ. (n.) 1. குடும்பத்திலே பிறந்த பெண்; daughter of the family. 2. மகன் மனைவி (வின்.);; daughter-in-law. [வீடு → வீட்டு + பெண்] |
வீட்டுப்பெண்சாதி | வீட்டுப்பெண்சாதி vīṭṭuppeṇcāti, பெ. (n.) முறையாக மணந்த மனைவி; one’s own wedded wife. “வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப்பெண்சாதி கரும்பும்” (வின்.);. [வீடு + Skt. {} → த. சாதி, பெண்சாதி] |
வீட்டுமணியம் | வீட்டுமணியம் vīṭṭumaṇiyam, பெ. (n.) 1. வளமனை உட்படு கருமத் தலைவர் (வின்.);; stewardship, management of a house or family. 2. வீட்டு அலுவல்களை மேற்பார்ப்பவன் (இ.வ.);; steward. [வீடு → வீட்டு + மணியம்] |
வீட்டுலகம் | வீட்டுலகம் vīṭṭulagam, பெ. (n.) மேலுலகம்; heaven. “தேவர் பெருமானை… நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே” (சீவக. 1467);. [வீடு → விட்டு + உலகம்] |
வீட்டுள்ளார் | வீட்டுள்ளார் vīṭṭuḷḷār, பெ. (n.) 1. வீட்டுக் குரியார்; inmates of a house. 2. தன் வீட்டில் குடியிருக்கும் வீட்டுடைமையாளர்; house holders. [வீடு → வீட்டு + உள்ளார்] |
வீட்டுவரி | வீட்டுவரி vīṭṭuvari, பெ. (n.) வீட்டுக்காகச் செலுத்தும் வரி; house-tax. “வீட்டுவரி யெப்பொழுதும் வேண்டா மெனநிறுத்தி” (பணவிடு. 46);. [வீடு → வீட்டு + வரி5] வீட்டுவழக்கம் __, பெ. (n.); குடும்பத்தில் நடந்து வரும் வழக்கம்; family usage, tradition, opp. to {}. [வீடு → வீட்டு + வழக்கம்] |
வீட்டுவாசல் | வீட்டுவாசல் vīṭṭuvācal, பெ. (n.) வீட்டின் முன்புற வாயில்; the front gate of a house. [வீடு → வீட்டு + வாசல்] |
வீட்டுவாடகை | வீட்டுவாடகை vīṭṭuvāṭagai, பெ. (n.) குடிக்கூலி; house-rent. [வீடு → வீட்டு + வாடகை] |
வீட்டுவாடை | வீட்டுவாடை vīṭṭuvāṭai, பெ. (n.) வீட்டு வாடகை (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீடு → வீட்டு + வாடை4] |
வீட்டுவிசாரணை | வீட்டுவிசாரணை vīṭṭuvicāraṇai, பெ. (n.) வீட்டுமணியம், 1 (வின்.); பார்க்க;see {}. [வீடு → வீட்டு + Skt. {} → த. விசாரணை] |
வீட்டுவிசாரம் | வீட்டுவிசாரம் vīṭṭuvicāram, பெ. (n.) குடும்பக் கவலை; cares of a householder, worries of a family. [வீடு → வீட்டு + Skt. {} → த. விசாரம்] |
வீட்டுவீரன் | வீட்டுவீரன் vīṭṭuvīraṉ, பெ. (n.) வீட்டிலிருந்து வீரம்பேசும் கோழை (பயங்கொள்ளி); (யாழ்.அக.);; one who effects heroism at home but is really a coward outside. மறுவ. வாய்ச் சொல் வீரன் [வீடு → வீட்டு + வீரன்] |
வீட்டுவேலை | வீட்டுவேலை vīṭṭuvēlai, பெ. (n.) 1. வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை (இக்.வ.);; home-work, home exercise. 2. குடும்ப வேலை (கொ.வ.);; domestic duties. 3. பெருக்குதல், துணிதுவைத்தல் முதலிய தொழில்; menial service, as washing, sweeping, etc. 4. வீடு கட்டுந் தொழில்; house-building work. [வீடு → வீட்டு + வேலை] |
வீட்டெலி | வீட்டெலி vīṭṭeli, பெ. (n.) இல்லெலி (புறநா. அரும்.);; house rat. [வீடு → வீட்டு + எலி] |
வீட்டைச்சுற்று-தல் | வீட்டைச்சுற்று-தல் vīṭṭaiccuṟṟudal, 5 செ.கு.வி.(v.i.) வெளியேறி வேலை செய்யாமல் தன்வீட்டிலேயே திரிந்து கொண்டிருத்தல்; to be hanging about one’s own house, to be a stay-at-home. [வீடு → வீட்டை + சுற்று-,] |
வீட்டோடுங்கூட்டோடும் | வீட்டோடுங்கூட்டோடும் vīṭṭōṭuṅāṭṭōṭum, வி.எ.(adv.) வீடு முழுவதும் (T.A.S.V.224);; throughout the house. ‘பொங்கல் பண்டிகைக்கு வீட்டோடும் கூட்டோடும் தூய்மை செய்தாயிற்று’ (உ.வ.);. [வீட்டோடும் + கூட்டோடும்] வீட்டோடேயிருந்துபத்தியங்காத்தல் __, பெ. (n.); நோய்வாய்க் காலத்தில் வீட்டில் ஒய்வாகவிருந்து மருந்தே உணவாகவும் உணவே மருந்தாகவும் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டில் இருத்தல்; to observe diet and remain at home taking rest. [வீட்டோடே + இருந்து + பத்தியம் + காத்தல்] |
வீணணி | வீணணி vīṇaṇi, பெ. (n.) இழிவான அணிகலன் (பாண்டி.);; trinket. [வீண் + அணி] |
வீணத்தனம் | வீணத்தனம் vīṇattaṉam, பெ. (n.) ஒழுங்கின்மை (நாஞ்.நா.);; wickedness. [வீணன் + தனம்1] |
வீணன் | வீணன் vīṇaṉ, பெ. (n.) 1. பயனற்றவன்; useless fellow. “வீணர்க்குள் வீணன்” (அரிச். பு. 4. சூழ்வினை. 19);. 2. சோம்பேறி (வின்.);; idle or lazy fellow. 3. ஒழுக்கக் கேடனாவன் (இ.வ.);; one given to wicked ways. ‘வீணருக்குச் செய்ததெலாம் வீண்’ (பழ.);. ‘வீணுக்கு உழைக்கிறவன் வீணன்’ (பழ.);. ‘வீண் இழவுக்கு மாரடிக்கிறதா?’ (பழ.);. மறுவ. மக்கட் பதடி. [வீண் → வீணன்] (வே.க.பக்.156); வீணன் vīṇaṉ, பெ. (n.) இருளர் இனத்தில் வாலிபரைச் சுட்டும் சொல்; word which indicates a youth in Erular caste. (63:59);. |
வீணாகரணம் | வீணாகரணம் vīṇākaraṇam, பெ. (n.) யாழ் இசைத்தல் (யாழ்.அக.);; playing on the lute. [வீணை + கரணம்] Skt. {} → த. கரணம். |
வீணாகானம் | வீணாகானம் vīṇākāṉam, பெ. (n.) யாழிசை; music played on the lute. [வீணை + கானம்] Skt. {} → த. கானம் |
வீணாட்டம் | வீணாட்டம் vīṇāṭṭam, பெ. (n.) வீண்பாடு (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீண் + ஆட்டம்] வீணாடிவீணன் __, பெ. (n.); வீணாதிவீணன் (நாஞ்.நா); பார்க்க;see {}. [வீணாடி + வீணன்] |
வீணாதண்டம் | வீணாதண்டம் vīṇātaṇṭam, பெ. (n.) 1. வீணைக்காம்பு; neck of a lute. 2. முது கெலும்பு; spine, as like the neck of the lute. [வீணை → வீணா + தண்டு → தண்டம்] வீணாதண்டம் vīṇātaṇṭam, பெ. (n.) 1. முள்ளெலும்பு; vertebrae 2. முதுகந் தண்டு; vertebral column. மறுவ. வீணாதண்டு. [வீணை → வீணா + தண்டம்] |
வீணாதண்டு | வீணாதண்டு vīṇātaṇṭu, பெ. (n.) வீணாதண்டம், 1 (இலக்.அக.); பார்க்க;see {}. [வீணை + தண்டு] |
வீணாதிவீணன் | வீணாதிவீணன் vīṇātivīṇaṉ, பெ. (n.) 1. முற்றும் பயனற்றவன்; entirely worthless person. 2. கயவன் (இ.வ.);; rogue. 3. உரிமையில்லா திருக்கையிலும் தனக்கு உரிமையுண்டென்று வழக்காடுபவன் (தஞ்சை.);; person who persists in making unjust claims. [வீணன் + அதி + வீணன். அதி = மிகுதிப்பொருள் தரும் முன்னொட்டு] வீணாரவீணன் __, பெ. (n.); வீணாதிவீணன் பார்க்க;see {}. “வீணரவீணனைப் போனீதி செய்வர்” (தண்டலை. சத. 55);. |
வீணாத்தண்டு | வீணாத்தண்டு vīṇāttaṇṭu, பெ. (n.) வீணாதண்டம் பார்க்க;see {}. “வீணாத் தண்டூடே வெளியுறத் தானோக்கி” (திருமந். 588);. [வீணை → வீணா + தண்டு] |
வீணானுபந்தம் | வீணானுபந்தம் vīṇāṉubandam, பெ. (n.) வீணைக்குடம்; the pot of the {}. [வீண் + Skt. {} → த. அனுபந்தம்] |
வீணாவாதன் | வீணாவாதன் vīṇāvātaṉ, பெ. (n.) வீணை இசைப்போன் (யாழ்.அக.);; one who plays on the {}. |
வீணி | வீணி vīṇi, பெ. (n.) மலைக்குறட்டை; spindle tree. வீணி vīṇi, பெ. (n.) இருளர் இனத்தில் இளம் பெண்களைக் குறிக்கும் சொல்; word which denote a young woman in Erular caste. |
வீணிழவு | வீணிழவு vīṇiḻvu, பெ. (n.) பயனற்றது; that which is profitless, as labour. “வீணிழவுக்கு மாரடிக்கிறேன்’. [வீண் + இழவு] |
வீணை | வீணை1 vīṇai, பெ. (n.) யாழ்வகை; a kind of indian lute. “எம்மிறை நல்வீணை வாசிக்குமே” (தேவா. 1199, 7);. “மாசில் வீணையும் மாலை மதியமும்” (தேவா.); விண் = வில்நரம்பு தெறித்தற் குறிப்பு. விண்விண் = 1. யாழ் நரம்பு இசைத்தற் குறிப்பு. 2. புண்ணினால் நரம்பு நோவெடுத்தற் குறிப்பு. [விண் → வீணை] “நாரதன் வீணை நயந்தெரி பாடலும்” (சிலப். 6:18); “மங்கலம் இழப்பவீணை” (சிலப்.6:22); “மாசில் வீணையும் மாலை மதியமும்” (அப்பர்); ஆரியர் வருமுன்பே தலைக்கழகத் தமிழ் முத்தமிழாய் வழங்கி வந்ததினாலும் நாரதர் தமிழ்நாடு வந்தே ‘இசைத்தமிழ் கற்றுப் பஞ்சபாரதீயம்’ என்னும் இசைத்தமிழ் நூலியற்றியதாலும் கி.பி.2 ஆம் நூற்றாண்டுச் சிலப்பதிகாரம் வீணையைக் குறித்தலாலும் 7ஆம் நூற்றாண்டில் அப்பர் “மாசில் வீணை” (குற்றமற்ற யாழ்); என்று பாடியிருத்தலாலும், வீணை 11 ஆம் நூற்றாண்டில் வடக்கினின்று வந்த ஆரிய இசைக்கருவி என்பார் கூற்று, தமிழ் வெறுப்பால் எழுந்தது என்க. வீணை தமிழர் இசைக்கருவியே என்பதைப் ‘பாணர் கைவழி’ என்னும் நூலுட் கண்டு தெளிக. வடவர் வேண் என்றொரு சொல்லைப் படைத்து இசைக்கருவியியக்குதல் என்று பொருள் கூறி, வேணு (மூங்கில்); என்னும் சொல்லோடு தொடர்பு காட்ட விரும்புவர். வேணு என்பது ‘வேய்’ என்னும் தென்சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. மேலும் அதன் பொருந்தாமையையும் ‘விண்’ என்பதன் முழுப் பொருத்தத்தையும் பகுத்தறிவுள்ளார் கண்டறிக. மா.வி.அகராதி. “of doubtful derivation” என்று குறித்திருத்தலையும் மூலங்காட்டாமை யையும், வேண் என்னும் சொல்லைப் பற்றி “prob. artificial” என்று கருதுதலையும் நோக்குக. (வ.மொ.வ.பக்.93-94); “நாரதர் வீணை நயந்தெரி பாடலும் …………………………………………………………………… மங்கல மிழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளென” (சிலப்.ம-18-23); என்பதாலும், நாரதனின் தமிழகத் தொடர்பும் இசைப் புலமையும் அறியப்படும். வீணை என்பது தமிழர் நரப்புக் கருவி;நரம்பு விண்ணென இசைப்பது வீணை. நோயினால் நரம்பு வலிக்கும்போது நரம்பு விண்விண் எனத் தெறிக்கின்றது என்று கூறும் உலக வழக்கை நோக்குக. [விண் → வீண் → வீணை] வ. வீணா. மூங்கிலைக் குறிக்கும் வேணு என்னும் வடசொல்லினின்று, வீணை அல்லது வீணா என்னும் சொல்லைத் திரிப்பது பொருந்தாது. வேதக்காலத்தில் ஆரியருக்கு நரப்புக் கருவியுமில்லை;இசைப்புலமையும் இல்லை. ஒரு நரம்பில் ஒரேயிசை (சுரம்); இசைப்பது யாழ் என்றும், ஒரு நரம்பில் மெலிவு சமன் வலிவு என்னும் முந்நிலைகளுள் ஒன்றும் பலவும் இசைப்பது வீணை என்றும் வேறுபாடறிக. செங்கோட்டி யாழும், சகோட யாழும் வீணை வகைகளே. இவற்றுள் முன்னது மெட்டுள்ளது;பின்னது கோட்டியம் (கோட்டு வாத்தியம்); போல் மெட்டில்லது. – (பாவாணர் – தமிழர் வரலாறு – கலவுநிலைக் காண்டம் பக்.158);. இந்திய இசைக்கே ஓர் அணிகலனாக விளங்கும் இசைக்கருவி வீணையாகும். கலைமகளின் கையில் வீணையிருப்பது அக்கருவியின் பெருமையை நன்கு புலப்படுத்து கிறது. வீணை, வேணு, மதங்கம் (மிருதங்கம்); என்று தொன்றுதொட்டுச் சிறப்பாகப் போற்றப்பட்டு வரும் மூன்று கருவிகளில் வீணை முதல் இடம் பெற்றுள்ளது பண்களின் (இராகங்களில்); வடிவங்களைப் புலப்படுத்தும் நுட்பச் சுருதிகளையும், கமகங்களையும், இந்த கருவியில் தெளிவாக இசைத்துக் காட்டலாம். இசைத் தத்துவங்களையும், இசை நுணுக்கங்களையும் விளக்கிக் காட்டுவதற்கு இது மிக நன்கு பயன்படும். இக்காலத்தில் வீணையென்பது, மெட்டுக்களுடன் கூடி, மீட்டி இசைக்கப்படும் கம்பிக் கருவியையே குறிக்கும். ஆனால் பண்டைக் காலத்தில் வீணையென்னும் சொல்லைப் பொதுவாக எல்லாக் கம்பிக் கருவிகளுக்கும் பயன்படுத்தினர். ‘சத தந்திரி வீணை’ என்பது நூறு கம்பிகளுடன் கூடின கருவியைக் குறித்தது. இந்தச் சததந்திரி வீணையே பாரசீகத்தில் சந்நூர் என்றும், பைபிளில் சால்தரி என்றும் வழங்கி வந்தது. மெட்டுகளுடன் கூடிய வீணை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகக் கூறலாம். மைசூரிலுள்ள பேலூர், ஹளெபீடு கோயில்களிலுள்ள சிற்பங்களில் மெட்டுக்களுடைய வீணையை முதன் முதலில் காண்கிறோம். பட்டீசுவரர் கோயிலிலும் மெட்டுப் போட்ட வீணையின் சிற்பத்தைக் காணலாம். யாழ்க் கருவியில் ஒவ்வொரு கம்பியையும் ஒவ்வொரு சுரத்திற்குஞ் சுருதி கூட்டித் தேவையான பண்ணை வாசித்தார்கள். ஆனால் பண்டைக் காலத்து வீணையில் 2 அல்லது 4 கம்பிகளே பயன்பட்டன. தேவையான சுரங்களை ஒரு கம்பியில் அந்தந்த இடங்களில் விரலால் கம்பியை அழுத்தி இசைத்தனர். இக்காலத்திய வீணை 17 ஆம் நூற்றாண்டில், தஞ்சாவூரில் அரசுபுரிந்த இரகுநாத மன்னரின் காலத்தில் உருவாக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே இதைத் தஞ்சாவூர் வீணையென்றும், இரகுநாத வீணையென்றும் அழைப்பதுண்டு. வீணையின் அமைப்பு வீணை, நரம்புக் கருவிகளில் மீட்டுக் கருவிகள் என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அதில் 31/2 மேலிசை இசைக்கலாம். மாழையினால் செய்யப்படும் கம்பிகளே அதில் பயன்படும். இசைப்பதற்காக 4 கம்பிகள் தண்டியின் மேலும், தாளத்திற்கும் சுருதிக்கும் 3 கம்பிகள் பக்கவாட்டிலும் இருக்கும். இசைப்பதற்காக உள்ள 4 கம்பிகள், குடத்தின் மேல்பாகத்திலுள்ள லங்கர் வளையங்களில் பிணைக்கப்பட்டுக் குதிரையின் மேலும் மெட்டுக்களின் மேலும் சென்று, தலைப் பாகத்திலுள்ள பிரடைகளில் முடுக்கப்பட்டிருக்கும், தாளக் கம்பிகள், லங்கரிலுள்ள வளையங்களில் பிணைக்கப்பட்டுப் பக்கக் குதிரை அல்லது பக்க வளைவின் மேல் சென்று, தண்டியின் பக்கத்திலுள்ள மூன்று பிரடைகளில் முடுக்கப்பட்டிருக்கும். லங்கர்கள் நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும். வீணையின் பாகங்கள் : குடம், குடத்தின் மேல் பலகை, தண்டி, தண்டியின் மேல்பலகை, தண்டியின் மேல் இருபக்கங்களிலுள்ள காடிச்சக்கை, காடிச் சக்கையின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் மெழுகுச் சட்டம், மெழுகுச் சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள 24 வெண்கல மெட்டுக்கள், சுரைக்காய், 7 பிரடைகள், கழுத்துப் பாகம், யாளிமுகம், இரண்டு குதிரைகள், 7 தந்திகள் பிணைக்கப்பட்டிருக்கும் 7 லங்கர்கள். அந்த லாங்கர்களின் மேல் நுட்பச் சுருதி செய்வதற்கு ஏந்தாகவுள்ள வளையங்கள், 7 தந்திகள் (5 எஃகுத் தந்திகளும், 2 பித்தளைத் தந்திகளும்);, நாகபாசம் ஆகியவை. தண்டியானது குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், கழுத்துப் பக்கத்தில் சற்றுச் சிறுத்துமிருக்கும். யாளிமுகம் கீழ்நோக்கி யிருக்கும். மெட்டுக்கள் வெண்கலம், வெள்ளி, பித்தளை, எஃகு என்னும் மாழைகளில் வீணை செய்யப்படும் முறை வீணை பலா மரத்தினால் செய்யப்படும். மைசூரில் கறுப்பு மரத்தினாலும் வீணையைச் செய்கிறார்கள். ஒரே மரத்துண்டினின்றும், குடமும் தண்டியும் குடையப் பட்டிருப்பின், அதை ஏகாண்ட வீணை யென்பர். வழக்கமாகக் குடம் ஒரு மரத்துண்டினின்றும், தண்டி மற்றொரு துண்டினின்றும், தலைப்பாகம் வேறொரு மரத்துண்டினின்றும் செய்து பொருத்தப் பட்டிருக்கும். தந்தத்தினாலும், மான் கொம்பினாலும், தாமரைப்பூ வேலைகள் செய்து, வீணையை அணி செய்வது வழக்கம். வீணையை நிறுத்தி வைத்தும் இசைப்பதுண்டு, படுக்க வைத்தும் இசைப்பதுண்டு, வலக்கை ஆட்காட்டி விரலினாலும், நடு விரலினாலும் தந்திகளை மெட்டுக்களின்மேல் அழுத்தி, வீணையை இசைப்பார்கள். வீணையின் இசை இனிமையாக இருக்கும். மெட்டுக்களைச் சரியான இடங்களில் அமைப்பதற்கு ‘மேளம் செய்தல்’ என்று பெயர். தஞ்சாவூர் வீணையிலும் திருவனந்தபுர வீணையிலும் குடத்தின் மேல் நாபுகள் அல்லது கோடுகள் கீறப்பட்டிருக்கும். மைசூர், பொப்பிலி வீணைகளில் இம்மாதிரி நாபுகள் இல்லை. (கலைக்.); [விண் → வீண் → வீணை] [p] வீணை2 vīṇai, பெ. (n.) மின்னல்; lightning. |
வீணைக்காணி | வீணைக்காணி vīṇaikkāṇi, பெ. (n.) கோயிலில் வீணை இசைக்கும் உரிமை (I.M.P. Tj. 465);; right of playing on the {} in a temple. [வீணை + காணி] |
வீணைச்செல்வம் | வீணைச்செல்வம் vīṇaiccelvam, பெ. (n.) மாதங்கி, 3 (சீவக.411, உரை); பார்க்க;see {}. the Goddess of {}. [வீணை + செல்வம்] |
வீணைத்தண்டு | வீணைத்தண்டு vīṇaittaṇṭu, பெ. (n.) வீணாதண்டம், 1 (சீவக. 717, உரை); பார்க்க;see {}. [வீணை + தண்டு] |
வீணைமிருகம் | வீணைமிருகம் vīṇaimirugam, பெ. (n.) 1. கத்தூரி பார்க்க;see {}. 2. எலும்பு பார்க்க;see elumbu. [வீணை + Skt. mirugha → த. மிருகம்] |
வீணைமீட்டு-தல் | வீணைமீட்டு-தல் vīṇaimīṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) யாழ்நரம்பை ஒன்றியுணர்ந்து சுருதி சேர்த்தல்; to tune the {}. [வீணை + மீட்டு-. மீட்டுதல் = யாழின் நரம்பை விரலாற் சுண்டுதல்] |
வீணையர் | வீணையர் vīṇaiyar, பெ. (n.) 1. வீணை இசைப்பதில் வல்லார்; expert players on the {}. “இன்னிசை வீணையர் யாழின ரொருபால்” (திருவாச. 20,4);. 2. பதினெண் கணத்துள் ஒரு தொகுதியார் (திவா.);; Gandharvas. [வீணை → வீணையர்] |
வீணைவலிக்கட்டு | வீணைவலிக்கட்டு vīṇaivalikkaṭṭu, பெ. (n.) யாழின் வார்க்கட்டு (வின்.);; fret of a {}; place where the strings of a {} are held down by the fingers. [வீணை + வலி + கட்டு] |
வீணைவாசி-த்தல் | வீணைவாசி-த்தல் vīṇaivācittal, 4 செ.கு.வி. (v.i.) யாழ் இசைத்தல்; to play on the {}. [வீணை + வாசி-,] |
வீண் | வீண் vīṇ, பெ. (n.) 1. பயனின்மை (சூடா.);; uselessness, unprofitableness. 2. பயனற்றது; that which is unprofitable. 3. தேவையற்றது; unneccessariness. “வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்” (தேவா. 677, 3);. ம. வீண். [விள் → வீள் → வீண்] (வே.க.155); |
வீண்கத்து | வீண்கத்து vīṇkattu, பெ. (n.) பயனற்ற பேச்சு; profitless words, as empty noise. மறுவ. பயனிற்சொல். [வீண் + கத்து-,] |
வீண்காரியம் | வீண்காரியம் vīṇkāriyam, பெ. (n.) பயனற்ற செயல் (நன். 298, உரை);; useless deed unprodrative work. மறுவ. வெட்டிவேலை. [வீண் + காரியம்] Skt. {} → த. காரியம். |
வீண்காலம் | வீண்காலம் vīṇkālam, பெ. (n.) பயனின்றிப் போக்குங் காலம்; time spent in vain, time wasted to while time away. [வீண் + காலம்] |
வீண்குறிசொல்லுவோன் | வீண்குறிசொல்லுவோன் vīṇkuṟisolluvōṉ, பெ. (n.) போலியாகக் கணியக்குறி (சோதிடக்குறி); சொல்லிப் பிழைப்போன் (சுக்கிர நீதி. 176);; sham astrologer. [வீண் + குறிசொல்லுவோன்] |
வீண்செயல் | வீண்செயல் vīṇceyal, பெ. (n.) வீண்காரியம் பார்க்க;see {}. [வீண் + செயல்] |
வீண்செலவு | வீண்செலவு vīṇcelavu, பெ. (n.) பயனற்ற பணச்செலவு; profitless expenditure. [வீண் + செலவு] |
வீண்சொல் | வீண்சொல் vīṇcol, பெ. (n.) பயனிற் சொல் (வின்.);; idle, word, unprofitable discourse. மறுவ. வெற்றுரை. [வீண் + சொல்3] |
வீண்சோறுதின்னி | வீண்சோறுதின்னி vīṇcōṟudiṉṉi, பெ. (n.) சோற்றுக்குக் கேடாய் ஒன்றுக்கு முதவாதிருப் பவ-ன்-ள் (வின்.);; useless person. [வீண் + சோறு1 + தின்னி] |
வீண்டம்பம் | வீண்டம்பம் vīṇṭambam, பெ. (n.) பயனற்ற ஆரவாரம்; vain show that which is more for show than for use. மறுவ. பகட்டு. [வீண் + டம்பம்] |
வீண்தெண்டம் | வீண்தெண்டம் vīṇteṇṭam, பெ. (n.) 1. சிறிதும் பயனின்மை (கொ.வ.);; sheer waste. 2. முறைகேடான ஒறுப்புக் கட்டணம் (அநீதமான அபராதம்); (வின்.);; unjust fine. [வீண் + தெண்டம்] |
வீண்தேங்காய் | வீண்தேங்காய் vīṇtēṅgāy, பெ. (n.) தேங்காயுருட்டியாடும் பந்தய வாட்டத்தில் எளிதில் உடையுந் தேங்காய் (யாழ்ப்.);; coconut that breaks easily, as in a game. [வீண் + தேங்காய்] |
வீண்நியாயம் | வீண்நியாயம் vīṇniyāyam, பெ. (n.) 1. சாக்கு (இ.வ.);; pretext, excuse. 2. பயனற்ற உரையாட்டு; profitless argument. [வீண் + நியாயம்] Skt. {} → த. நியாயம். |
வீண்பகட்டன் | வீண்பகட்டன் vīṇpagaṭṭaṉ, பெ.(n.) இடம்பன் (டாம்பிகன்);; fop, ostentatious person. [வீண்+பகட்டன்] |
வீண்பத்தி | வீண்பத்தி vīṇpatti, பெ. (n.) மூடநம்பிக்கை (வின்.);; superstition. [வீண் + பத்தி] |
வீண்பாக்கு | வீண்பாக்கு vīṇpākku, பெ. (n.) உணவு கொள்ளாத வேளைகளில் தின்னும் பாக்கு (வின்.);; betel-nut chewed at other times than after meal, dist. fr. {}. [வீண் + பாக்கு 1] |
வீண்பாடு | வீண்பாடு vīṇpāṭu, பெ. (n.) 1. பயனற்ற வேலை; profitless task, non-profitable interprise. 2. பயனற்ற முயற்சி; profitless or wasteful effort. [வீண் + பாடு] |
வீண்பிரதிட்டை | வீண்பிரதிட்டை vīṇpiradiṭṭai, பெ. (n.) தற்பெருமை (வின்.);; vanity, self-boashing. [வீண் + Skt. பிரதிஷ்டை → த. பிரதிட்டை] |
வீண்பொழுதுபோக்கு-தல் | வீண்பொழுதுபோக்கு-தல் vīṇpoḻudupōkkudal, 5 செ.கு.வி.(v.i.) காலத்தை வீணே கழித்தல் (வின்.);; to while one’s time away. [வீண் + பொழுதுபோக்குதல்] |
வீண்போக்கு | வீண்போக்கு vīṇpōkku, பெ. (n.) பொருத்த மற்ற சாக்குவார்த்தை; vain, lame excuse. [வீண் + போக்கு] |
வீண்போக்குப்போக்கு | வீண்போக்குப்போக்கு1 vīṇpōkkuppōkkudal, 5 செ.குன்றாவி.(v.t.) விடுதல் (வின்.);; to let off, leave off. [விடு → வீடு] வீண்போக்குப்போக்கு2 vīṇpōkkuppōkkudal, 5 செ.கு.வி.(v.i.) வீண்பொழுது போக்குதல் (இ.வ.);; to waste or while away the time, to be idle. [வீண் + போக்கு + போக்குதல்] |
வீண்வம்பு | வீண்வம்பு vīṇvambu, பெ. (n.) 1. முறை கேடான பேச்சு அல்லது செயல் (இ.வ.);; mischievous talk or deed. 2. பயனற்ற வம்பளப்பு; idle gossip. 3. தேவையில்லாத தலையீடு; வலுச்சண்டை; unnecessary interference. ‘வீண் வம்புக்குப் போகாதே’. [வீண் + வம்பு] |
வீண்வார்த்தை | வீண்வார்த்தை vīṇvārttai, பெ. (n.) வீண் சொல் (கொ.வ.); பார்க்க;see {}. [வீண் + Skt வார்த்தை] |
வீண்விதி | வீண்விதி vīṇvidi, பெ. (n.) இழக்கச் செய்யும் விதி; illfate, misfortune, evil destiny. மறுவ. போகூழ். [வீண் + Skt. விதி] |
வீண்வீம்பு | வீண்வீம்பு vīṇvīmbu, பெ. (n.) தேவையற்ற விடாப்பிடி; unjustifiable obstinacy stubborn unyielding. [வீண் + வீண்பு → வீம்பு] மறுவ. முரண்டு. |
வீதசாகி | வீதசாகி vītacāki, பெ. (n.) விலாமிச்சை வேர்; fragrant root which is brown or black in colour. (சா.அக.); |
வீதசோகன் | வீதசோகன் vītacōkaṉ, பெ. (n.) அருகக் கடவுள் (சூடா.);; Arhat, as free from sorrow. |
வீதசோகம் | வீதசோகம் vītacōkam, பெ. (n.) அசோகம் (இலக்.அக.);;{}. |
வீதனகோபம் | வீதனகோபம் vītaṉaāpam, பெ. (n.) முன்கழுத்துக் கழலை என்னும் நோய்; goitre, bronchocele. (சா.அக.); |
வீதனகோளம் | வீதனகோளம் vītaṉaāḷam, பெ. (n.) உடலில் உள்ள நாளமில் சுரப்பிகளுள் ஒன்று; thyroid gland. (சா.அக.); |
வீதபுட்பி | வீதபுட்பி vītabuṭbi, பெ. (n.) குக்கில்; a fragrant gum-resin. (சா.அக.); |
வீதம் | வீதம்1 vītam, பெ. (n.) 1. அளவுமுறை; rate, ratio. ‘எனக்கு அவன்வீதங் கொடுத்தான்’. 2. பங்கு; share, portion. [விழு → விகு → விகுதம் → வீதம்] வீதம்2 vītam, பெ. (n.) 1. விடுகை (சூடா);; abandonment, abolition. 2. விடப்பட்டது (இலக்.அக.);; that which is forsaken or relinquished. 3. அமைதி (இலக்.அக.);; peace. [விடு → வீடு → வீடம் → வீதம்] வீதம்3 vītam, பெ. (n.) தகரம்; tin. (சா.அக); |
வீதலகம் | வீதலகம் vītalagam, பெ. (n.) செங்கண் மாரி; letrus. (சா.அக.); |
வீதல் | வீதல் vītal, பெ. (n.) 1. சாவு (சூடா.);; death. 2. வறுமை (திவா.);; poverty. [வீ → வீதல்] (வ.மொ.வ.265);. |
வீதி | வீதி1 vīti, பெ. (n.) 1. தெரு (பிங்.);; street. “வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே” (திருவாச. 7,1);. 2. கதிரவன் முதலிய கோள்கள் செல்லும் வழி; the sun’s path, orbit of celestial bodies. 3. வழி; direction, way. “கனிந்த கீதவீதியே… ஒடியெய்தினார்” (சீவக. 2039);. 4. முறை; means. “தியான வீதியான்… வீட்டுல கெய்தும்” (சூளா. முத். 4);. 5. ஒழுங்கு (வின்.);; row, order. 6. நாடக வகைப் பத்தனுள் காமவிச்சை மிகுந்த பரத்தையிடத்துக் கொண்ட காதலைக் குறித்து ஒருவர் அல்லது இருவர் நடிப்பதான ஓரங்க நாடகவகை(சிலப். பக். 84 கீழ்க் குறிப்பு);; a species of drama in one act and with one or two actors, the theme being love for a lascivious prostitute, one of ten {}, q.v. 7. அகலம்; width, breadth. “வீதிவே னெடுங் கண்ணியர்” (தேவா. 168. 2);. ‘அந்தத் துணியின் வீதி எவ்வளவு?’ 8. நேரோட்டம் (பிங்.);; running straight, as of a horse. “வினைதகு வட்டமும் வீதியும் பத்தியும்” (சீவக. 1839);. 9. வையாளி வெளி (வின்.);; place for breaking horses. 10. ஒளி (இலக்.அக.);; light. 11. மேடை (யாழ்.அக.);; platform. [வியம் → (வியதி); → வீதி] வீதி2 vīti, பெ. (n.) குதிரை (யாழ்.அக.);; horse. |
வீதிகுத்து-தல் | வீதிகுத்து-தல் vīdiguddudal, 10. செ.கு.வி. (v.i.) ஓடியாடுதல்; to run hither and thither. “வீதிகுத்திய குறுந்தாட்பாரிடம்” (கல்லா.41);. [வீதி + குத்து-,] |
வீதிகோத்திரன் | வீதிகோத்திரன் vītiāttiraṉ, பெ. (n.) 1. தீக் கடவுள்; the God of fire. 2. கதிரவன்; sun. [வீதி + Skt. {} → த. கோத்திரன்] |
வீதிகோத்திரம் | வீதிகோத்திரம் vītiāttiram, பெ. (n.) வீதிகோத்திரன், 1 (இலக்.அக.); பார்க்க;see {}. [வீதி + Skt. kothra → த. கோத்திரம்] |
வீதிக்குத்து | வீதிக்குத்து vītikkuttu, பெ. (n.) தெருக்குத்து; an inauspicious position of a house. [வீதி2 + குத்து] |
வீதிச்சடங்கு | வீதிச்சடங்கு vīticcaḍaṅgu, பெ. (n.) இறந்த வர்க்கு வீதியில் நடத்தும்பினச்சடங்கு death rites performed in the street. [வீதி+சடங்கு] இருளர் சொல்லாட்சி. |
வீதிப்பாய்ச்சல் | வீதிப்பாய்ச்சல் vītippāyccal, பெ. (n.) தெருக்குத்து; an inauspicious position of a house. [வீதி1 + பாய்ச்சல்] |
வீதிப்போக்கு | வீதிப்போக்கு vītippōkku, பெ. (n.) இசையின் நேர்செலவு; even movement of music in the same pitch. “அசையொடு வீதிப்போக்கு முருகியல்” (திருவிளை. விறகு. 28);. [வீதி + போக்கு] |
வீதிமறிச்சான் | வீதிமறிச்சான் vītimaṟiccāṉ, பெ. (n.) குறித்த இடங்களில் கீழ்மக்கள் வராதபடி தடுக்க இடப்படும் தட்டி முதலியன (நாஞ். நா.);; tatti, etc. put up in specified localities to shut out low-caste people, as in festivals. [வீதி + மறி → மறிச்சான்] |
வீதியிலேவிடு-தல் | வீதியிலேவிடு-தல் vīdiyilēviḍudal, 20 செ. குன்றாவி.(v.t.) குழந்தை முதலியவற்றை பற்றுக்கோடின்றி விட்டு விடுதல்; to leave adrift, to leave uncared for, as children. [வீதி → வீதியிலே + விடு-,] |
வீதிவர்ணச்சேலை | வீதிவர்ணச்சேலை vītivarṇaccēlai, பெ. (n.) ஒருவகைப் புடைவை; a kind of saree. “வீதிவர்ணச் சேலை யொன்று விந்தையாம்” (விறலிவிடு. 714);. [வீதி Skt. varna → த. வண்ணம் + சேலை] |
வீதிவர்ணம் | வீதிவர்ணம் vītivarṇam, பெ. (n.) வீதிவர்ணச்சேலை பார்க்க;see {}. [வீதி + Skt. {} → த. வர்ணம்] |
வீதிவிடங்கன் | வீதிவிடங்கன்1 vītiviḍaṅgaṉ, பெ. (n.) திருவாரூரில் கோயில் கொண்டு திருவிழாக் காலத்தில் உலாப்புறம் காணும் கடவுளாகிய சிவபெருமான்; the moveable image of siva, worshipped at {}. [வீதி + விடங்கன்] வீதிவிடங்கன்2 vītiviḍaṅgaṉ, பெ. (n.) நான்கு திங்களில் விளையும் நெல்வகை; a kind of paddy, maturing in four months. “வீதிவிடங்க னென்ற மெய்ப்பேரும்” (நெல்விடு. 191);. [வீதி + விடங்கன்] |
வீதிவிலாசம் | வீதிவிலாசம் vītivilācam, பெ. (n.) தெருவில் உலா வருகை (வின்.);; taking a walk along the streets. [வீதி + Skt. {} → த. விலாசம்] |
வீத்து | வீத்து1 vīttu, பெ. (n.) 1. அடிக்கை (வின்.);; flogging. 2. நீளம் (இ.வ);; length. [வீச்சு → வீத்து] வீத்து2 vīddudal, 5 செ.குன்றாவி.(v.t.) அடித்தல் (இ.வ.);; to flog. வீத்து3 vīddudal, 5 செ.குன்றாவி.(v.t.) ஊற்றுதல்; to pour. ‘என் பாத்திரத்திலும் கொஞ்சம் கஞ்சி வீத்துங்கள்’. மறுவ. வீழ்த்து. |
வீத்துகம் | வீத்துகம் vīttugam, பெ. (n.) 1. சதகுப்பை; dill or sowa seeds. 2 வெள்ளரி; cucumber. (சா.அக.); |
வீத்துமம் | வீத்துமம் vīttumam, பெ. (n.) சதகுப்பை, 1 (மலை.);; dill. |
வீபணி | வீபணி vīpaṇi, பெ. (n.) 1. கடைவீதி (சது.);; bazaar-street. 2. விபணி பார்க்க;see {}, shop. |
வீபத்து | வீபத்து vīpattu, பெ. (n.) திங்கள்(சது.);; moon. [வீ + பத்து] |
வீப்பகழி | வீப்பகழி vīppagaḻi, பெ. (n.) காமனது மலரம்பு (உரி.நி);; the flower-arrow of {}. [வீ + பகழி] |
வீமசக்கிரம் | வீமசக்கிரம் vīmasakkiram, பெ. (n.) புளிவஞ்சி பார்க்க;see {}. |
வீமசேனன் | வீமசேனன் vīmacēṉaṉ, பெ. (n.) பீமன் 1; bhima. “அருச்சினன் தமையனான வீமசேனன்” (சிறுபாண். 240. உரை);. |
வீமஞ்சிகாந்தம் | வீமஞ்சிகாந்தம் vīmañjikāndam, பெ. (n.) ஊசிக் காந்தம்; loadstone which attacts small needles magnet. |
வீமதேவன் | வீமதேவன் vīmatēvaṉ, பெ. (n.) பதினொரு உருத்திரருள் ஒருவர் (பிங்.);; a rudra, one of {}, q.v. |
வீமன் | வீமன் vīmaṉ, பெ. (n.) 1. பீமன் 1 பார்க்க;see {}. the second son of {}. “மிடுக்கிலாதானை வீமனே… என்று” (தேவா. 647. 2);. 2. தமயந்தியின் தந்தை; father of damayanti. 3. பச்சைக் கருப்பூரவகை (பதார்த்த. 1077);; a kind of purified camphor. |
வீமபாகம் | வீமபாகம் vīmapākam, பெ. (n.) பீமபாகம் (குற்றா. குற.17);; excellent cooking. |
வீமபீசம் | வீமபீசம் vīmapīcam, பெ. (n.) அண்டவீக்கம் (வின்.);; hydrocele. [வீமம் + Skt. {} → த. பீசம்] |
வீமமந்தி | வீமமந்தி vīmamandi, பெ. (n.) கழுதைத் தும்பை பார்க்க;see {}. |
வீமம் | வீமம் vīmam, பெ. (n.) 1. அச்சம்; fearfulness, dreadfullness. “வீம்ப்பேரொளியாய விழுப்பொருள்” (தேவா. 327.8);. 2. அச்சந் தருவது (வின்.);; fearful thing. 3. நிரய (நரகம்); வகை; a hell. “அதன் கீழ் வீமம்” (சிவதரு. சுவர்க்கநரக. 109);. 4. பருமன் (வின்.);; bulkiness. |
வீமவீடணம் | வீமவீடணம் vīmavīṭaṇam, பெ. (n.) நிரயவகை (நரகம்); (சிவதரு. சுவர்க்க. நரக. 109);; a hell. [வீமம் + வீடணம்] |
வீமி | வீமி vīmi, பெ. (n.) எட்டுவகை எழுத்துகளி லொன்று; one of the eight mystic letters. |
வீமியச்சரம் | வீமியச்சரம் vīmiyaccaram, பெ. (n.) குழந்தைகளுக்கு ஈரல் நொந்து காய்ச்சலுடன் மயக்கம், குளிர், தலைவலி, நீர்வேட்கை போன்ற குணங்கள் காணும் ஒருவகை நோய்; a disease of the children marked by fever, giddiness, chill, head- ache, thirst etc. due to the liver is affected. [விமி + அக்கரம் → அச்சரம்] |
வீமேச்சுரவுள்ளமுடையான் | வீமேச்சுரவுள்ளமுடையான் vīmēccuravuḷḷamuḍaiyāṉ, பெ. (n.) ஒரு கணிய நூல் (சோதிடம்);; an astrological work. |
வீம்பன் | வீம்பன் vīmbaṉ, பெ. (n.) 1. தற்பெருமைக் காரன்; boaster, braggart. 2. செருக் குடையவன்; proud person. 3. விடாப் பிடியாளன்; pertinacious person. [வீம்பு → வீம்பன்] (செல்வி, 77.ஆடி. பக். 595); வீம்பாட்டம் __, பெ. (n.); 1. வீண் பகட்டு; ostentatious display. 2. தற் பெருமை பேசுகை; bragging. [வீம்பு + ஆட்டம்] |
வீம்பு | வீம்பு vīmbu, பெ. (n.) 1. தற்புகழ்ச்சி; boast, swagger, bombast, vaunt. “வீம்பு நாரியர்” (திருப்பு. 772);. 2. செருக்கு; pride. 3. விடாப்பிடி (ஒட்டாரம்);; obstinacy. ‘வீம்புக்கு வேடம் கொள்ளாதே’ (பழ.); ம. வீம்பு. [வீண் → வீண்பு → வீம்பு] (செல்வி, 77, ஆடி.595); |
வீம்புக்காரன் | வீம்புக்காரன் vīmbukkāraṉ, பெ. (n.) வீம்பன் (வின்.); பார்க்க;see {}. [வீம்பு + காரன்] |
வீம்புப்பேச்சு | வீம்புப்பேச்சு vīmbuppēccu, பெ. (n.) தற்புகழ்ச்சி; boasting speech. ‘வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்’ (பழ.);. [வீம்பு + பேச்சு] |
வீம்புவைத்தியன் | வீம்புவைத்தியன் vīmbuvaittiyaṉ, பெ. (n.) போலி மருத்துவர் (புதுவை.);; quack doctor. [வீம்பு + Skt. Vaidya → த. வைத்தியன்] |
வீயம் | வீயம் vīyam, பெ. (n.) 1. வித்து; seed. “அகோசர வீயத்தை” (திருமந். மாயி. 100);. 2. அரிசி (பிங்.);; rice. தெ. பீயமு; க. பீய; Kol. பீயம். |
வீயு | வீயு vīyu, பெ. (n.) ஆடுதின்னாப்பாளை (மலை.);; worm killer. |
வீரகங்கணம் | வீரகங்கணம் vīragaṅgaṇam, பெ. (n.) வீரகடகம் (வின்.); பார்க்க;see {}. [வீரம் + கங்கணம்] |
வீரகடகம் | வீரகடகம் vīragaḍagam, பெ. (n.) வீரர் அணியும் கைவளை (வின்.);; warrior’s bracelet. “கடகம் செறிந்த கையே” (மணிமே. 6, 144);. [வீரம் + கடகம்] |
வீரகண்டாமணி | வீரகண்டாமணி vīragaṇṭāmaṇi, பெ. (n.) வீரக்குறியாக அணியும் மணி கட்டிய கழல்; ring with little bells, worn on the leg, as a mark of heroism. “வீரகண்டாமணி விருது காலிட்டு” (கொண்டல்விடு. 494);. [வீரம் + கண்டாமணி] |
வீரகண்டை | வீரகண்டை vīragaṇṭai, பெ. (n.) வீரக்கழல் (வின்.); பார்க்க;see {}. க. வீரகண்டே. [வீரம் + கண்டை] |
வீரகதவுப்பு | வீரகதவுப்பு vīragadavuppu, பெ. (n.) வளையலுப்பு; a variety of salt used in making glass bangles. (சா.அக.); |
வீரகத்தி | வீரகத்தி vīragatti, பெ. (n.) வீரனைக் கொன்ற தீவினை (இலக்.அக.);; sin of killing a hero or warrior. [வீரம் + Skt. hati → த. கத்தி] |
வீரகம் | வீரகம் vīragam, பெ. (n.) அலரி, 2 (இலக். அக.); பார்க்க; oleander. |
வீரகவசம் | வீரகவசம் vīragavasam, பெ. (n.) வீரர் அணியும் மெய்புகு கருவி; warrior’s armour. [வீரர் + கவசம்] [p] |
வீரகவிராயர் | வீரகவிராயர் vīragavirāyar, பெ. (n.) வீரையாசுகவிராயர் பார்க்க;see {}. |
வீரகாந்தம் | வீரகாந்தம் vīrakāndam, பெ. (n.) ஊசிக் காந்தம்; load-stone attracting needles magnet. [வீரம் + காந்தம்] |
வீரகுடியான் | வீரகுடியான் vīraguḍiyāṉ, பெ. (n.) வீரக்குடியான் (வின்.); பார்க்க;see {}. [வீரம் + குடியான்] |
வீரகெம்பீரன் | வீரகெம்பீரன் vīragembīraṉ, பெ. (n.) வீரச்செருக்குடையான் (வின்.);; proud or magnificent hero. [வீரம் + கம்பீரன் → கெம்பீரன்] Skt. {} → த. கம்பீரன். |
வீரகேசரி | வீரகேசரி vīraācari, பெ. (n.) 1. முருகனின் ஒன்பது வீரர்களுள் ஒருவர்; a hero in skanda’s army, one of {}, q.v. 2. விக்கிரமாதித்தன் (வின்.);; king {}. [வீரம் + கேசரி] Skt. {} → த. கேசரி. |
வீரகேந்திரமங்கை | வீரகேந்திரமங்கை vīraāndiramaṅgai, பெ. (n.) மூக்குறா பார்க்க;see {}. |
வீரகேயூரம் | வீரகேயூரம் vīraāyūram, பெ. (n.) வீரரணிவதற்கு உரியதும் இரும் பொன்னாலானதுமான தோள்வளை (யாழ்.அக.);; warrior’s armlet of iron. [வீரம் + கேயூரம்] |
வீரகோஷம் | வீரகோஷம் vīraāšam, பெ. (n.) வீரர்களின் ஆர்ப்பரவம்; warrior’s shout, war-cry. [வீரம் + Skt. {} → த. கோஷம்] |
வீரக்கட்டி | வீரக்கட்டி vīrakkaṭṭi, பெ. (n.) ஓர் மருந்து; a lump of per Chloride of mercury. (சா.அக.); |
வீரக்கட்டு | வீரக்கட்டு vīrakkaṭṭu, பெ. (n.) 1. வீரத்தைக் கட்டும் முறை; consolidated per-chloride of mercury. 2. வில்வப் பழத்தைக் கீறி வீரத்தை உள்ளே வைத்து, சீலை செய்து மணல் மறைவில் புடம் போட்டு, இப்படி 10 முறை 10 பழத்தில் போட வீரம் கட்டும்; a lump of perchloride of mercury is inserted into the bael fruit, and luted with clay and cloth, then calcined in sand bath, repeat the proces 9 more times, the per-chloride gets consolidated. (சா.அக.); |
வீரக்கல் | வீரக்கல் vīrakkal, பெ. (n.) நடுகல் (இ.வ.);; memorial stone. [வீரம் + கல்.] [p] |
வீரக்கழல் | வீரக்கழல் vīrakkaḻl, பெ. (n.) ஆண்மைக் குறியாக வீரரணியும் காலணி; string of little bells worn on the leg, as a sign of heroism. [வீரம் + கழல்] |
வீரக்கிலேதம் | வீரக்கிலேதம் vīrakkilētam, பெ. (n.) ஒருவகை மஞ்சள் புண் கழுவுநீர்; a yellow lotion for cleaning and dressing ulcers and sores. [வீரம் + Skt. {} → த. கிலேதம்] |
வீரக்குடியான் | வீரக்குடியான் vīrakkuḍiyāṉ, பெ. (n.) மங்கலம் மற்றும் இரங்கத்தக்க காலங்களில் சங்கு கொம்பு முதலியனவூதும் பணி செய்பவன் (வின்.);; one employed to sound the trumpet or conch on joyful or mournful occasions. [வீரம் + குடியான்] |
வீரக்குடிவெள்ளாழன் | வீரக்குடிவெள்ளாழன் vīrakkuḍiveḷḷāḻṉ, பெ. (n.) வேளாளர் குல வகையில் ஒரு பிரிவினர்; a sub-caste of {}. [வீரக்குடி + வெள்ளாழன்] |
வீரக்குட்டி | வீரக்குட்டி vīrakkuṭṭi, பெ. (n.) வீரரிற் சிறந்தோன் (யாழ்.அக.);; eminent warrior. [வீரம் + குட்டி] |
வீரக்குழல் | வீரக்குழல் vīrakkuḻl, பெ. (n.) முன்கையில் அணியும் கரும்பொற்காப்பு (யாழ்.அக.);; a piece of armour for the forearm. [வீரம் + குழல்3] |
வீரக்கொடி | வீரக்கொடி1 vīrakkoḍi, பெ. (n.) வெற்றிக் கொடி (பு.வெ.9, 39, உரை);; banner of victory. [வீரம் + கொடி] வீரக்கொடி2 vīrakkoḍi, பெ. (n.) வெற்றிலைக்கொடி; betelvine-piper betel. [வீரம் + கொடி] [p] |
வீரக்கொம்பு | வீரக்கொம்பு vīrakkombu, பெ. (n.) படையெழுச்சியில் ஊதுங்கொம்பு; martial trumpet. “சங்கும் கரிய வீரக்கொம்பும்” (பு.வெ.2,3, உரை);. [வீரம் + கொம்பு] |
வீரசங்கிலி | வீரசங்கிலி vīrasaṅgili, பெ. (n.) 1. வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி; gold chain worn as an armlet, as a sign of heroism. “வீரசங்கிலி கேயூரம்” (பிரபுலிங். பிர.9);. 2. மகளிர் கழுத்தணி வகை (சிலப். 6, 99, உரை);; a woman’s necklace. [வீரம் + சங்கிலி] |
வீரசம்பன்குளிகை | வீரசம்பன்குளிகை vīrasambaṉguḷigai, பெ. (n.) 14-ஆம் நூற்றாண்டில் வழங்கிய நாணயவகை (I.M.P.N.A.7);; a coin current in the 14th C. [வீரசம்பன் + குளிகை] |
வீரசயந்திகை | வீரசயந்திகை vīrasayandigai, பெ. (n.) 1. போர்; war. 2. வீரர் நிகழ்த்துங் கூத்து வகை; a dance performed by warriors. [வீரம் + சயந்திகை] |
வீரசயனம் | வீரசயனம் vīrasayaṉam, பெ. (n.) திருமாலின் திருப் பள்ளிகொள் நிலைவகை; a reclining posture of {}. [வீர + Skt. {} → த. சயனம்] |
வீரசாகி | வீரசாகி1 vīracāki, பெ. (n.) அழிஞ்சில்; a tree. வீரசாகி2 vīracāki, பெ. (n.) சேங்கொட்டை (மலை.);; marking nut tree. [வீர + சாகி] |
வீரசாசனம் | வீரசாசனம் vīracācaṉam, பெ. (n.) வீரர்களுக்கு கொடுக்கும் நிலம் முதலியன (I.M.P.Cg. 682);; land and other property assigned to warriors. [வீரம் + Skt. {} → த. சாசனம்] |
வீரசிங்காசனம் | வீரசிங்காசனம் vīrasiṅgāsaṉam, பெ. (n.) வீரர்கள் இருத்தற்குரிய அரியுருவவிருக்கை; throne of heroes. “வீரசிங்காசனத்து…… வீற்றிருந் தருளிய” (S.I.I.i. 134);. [வீரம் + சிங்காசனம்] Skt. சிங்காசனம். |
வீரசிங்காதனபுராணம் | வீரசிங்காதனபுராணம் vīrasiṅgātaṉaburāṇam, பெ. (n.) கி.பி. 1719-ல் வேலைய தேசிகரும் கோட்டூர் உமாபதி சிவாச்சாரியரும் இயற்றிய ஒரு வீரசைவ புராணம்; a {}, by {} and {} of {} composed in 1719 A.D. |
வீரசின்னம் | வீரசின்னம் vīrasiṉṉam, பெ. (n.) வீரர் விருதுகளில் ஒன்றான ஊதுகொம்பு; a kind of bugle forming part of the paraphernalia of a hero. “வீரசின்னந் தான்முழங்க” (கூளப்ப. 48);. [வீரம் + சின்னம்] [p] |
வீரசுவர்க்கம் | வீரசுவர்க்கம் vīrasuvarkkam, பெ. (n.) இறந்த வீரரடையுந் வானுலகப் பதவி; warrior’s heaven heavenly abode attained by warriors after their brae death in a combat. [வீரம் + Skt. swarkka → த. சுவர்க்கம்] |
வீரசூடிகை | வீரசூடிகை vīracūṭigai, பெ. (n.) வீரர் நெற்றியிலணியும் அணி வகை; an ornament for the forehead, worn by warriors. “வீர சூடிகை நெற்றியி னயலிட்டு விசித்தார்” (கம்பரா. பஞ்சசேனா. 18);. [வீரம் + சூடிகை] |
வீரசூரன் | வீரசூரன் vīracūraṉ, பெ. (n.) 1. அதிவீரன்; valiant hero. 2. வீரதீரன் பார்க்க;see {}. [வீரம் + சூரன்] |
வீரசூரம் | வீரசூரம் vīracūram, பெ. (n.) போராண்மை (வின்.);; heroic valour. [வீரம் + சூரம்] |
வீரசூலி | வீரசூலி vīracūli, பெ. (n.) ஒரு சிற்றூர்ப் பெண் தெய்வம் (இ.வ.);; a village goddess. [வீரம் + சூலி)] |
வீரசெயநீர் | வீரசெயநீர் vīraseyanīr, பெ. (n.) இதளியம் சேர்த்து வடிக்கப்படும் மருந்து நீர்; pungent liquid extracted from per-chloride of mercury. (சா.அக.); |
வீரசெல்வி | வீரசெல்வி vīraselvi, பெ. (n.) சத்தி சாரணை என்னும் மூலிகை; a prostate plant. |
வீரசேனன் | வீரசேனன் vīracēṉaṉ, பெ. (n.) நள அரசனின் தந்தை (நைடத. நளன்றூது.14);; the father of {}. |
வீரசேஷை | வீரசேஷை vīracēšai, பெ. (n.) வரிவகை(S.I.I.vii.290);; a kind of tax. [வீரம் + Skt. {} → த. சேஷை] |
வீரசைவன் | வீரசைவன் vīrasaivaṉ, பெ. (n.) வீரச்சிவனிய மதத்தான்; a follower of the sect of {}. [வீரம் + சைவன்] |
வீரசைவம் | வீரசைவம் vīrasaivam, பெ. (n.) சிவனியக் (சைவம்); கொள்கையுள் இலங்கம் (இலிங்கம்); அணியச் செய்து கொள்ளும் கோட்பாடு (சமயம்);; the lingayat sect {}. வீரசைவம் என்பது தோன்றியங்களில் (ஆகமம்); கூறியுள்ள சைவ நெறியாகும். இருபத்தெட்டு தோன்றிய நூல்களின் இறுதிப் பகுதிகள் வீரசைவக் கொள்கைகளையும் சடங்குகளையும் கூறுவதால் வீரசைவம் என்பது தோன்றியங்களின் ஒரு வகையாகும். இது சைவ சமயத்தினின்று பிறந்ததாயிருப்பினும், தனி இயல்புடைய ஒரு சமயக் கொள்கையே. இலிங்க உருவத்தில் சிவனைப் பரதெய்வமாக வழிபடுவது சைவத்துக்கும் வீரசைவத்துக்கும் பொதுவான கொள்கையாகும். ஆயினும் சைவமும் வீரசைவமும் வழிபடக் கையாளும் முறைகள் வேறுபடுவன. சைவர்கள் இலிங்கத்தைக் கோயிலில் வைத்து வழிபடுவர். வீரசைவர்கள் அதனைக் கைத்தலத்தில் வைத்து வழிபடுவர். தத்துவங்கள் முப்பத்தாறு என்று கூறுவதும் இரண்டுக்கும் பொதுவானது. ஆனால் சைவமதம் அவற்றை உலகத் தோற்ற முறையில் விளக்குகிறது. வீரசைவ மதம் உளவியல் முறையிலேயே விளக்குகிறது. [வீரம் + சைவம்] |
வீரசொர்க்கம் | வீரசொர்க்கம் vīrasorkkam, பெ. (n.) வீரசுவர்க்கம் (இலக்.அக.); பார்க்க;see {}. [வீரம் + சொர்க்கம்] |
வீரசோ | வீரசோ vīracō, பெ. (n.) வாணாசுரன் நகர்; a city of the Asura {}. “வீரசோ வென்னும் அரணத்தை” (பு.வெ.6, 7, உரை);. [வீரம் + சோ] |
வீரசோழன் | வீரசோழன் vīracōḻṉ, பெ. (n.) 1. பதி னொன்றாம் நூற்றாண்டில் ஆண்டவனும் வீரசோழியத்தை இயற்றுவித்தவனுமான சோழவரசன்; a {} king, 11th C, Patron of the author of {}. “வீரசோழன் றிருப்பெயராற் பூ மேலுரைப்பன்” (வீரசோ. பாயி. 3);. 2. தஞ்சை மாவட்டத்தில் இவனால் வெட்டப்பட்ட ஒர் ஆற்றின் பெயர்; a river name which was orginated by {} king {}. |
வீரசோழர் | வீரசோழர் vīracōḻr, பெ. (n.) சோழ அரசர்களின் பட்டப் பெயர்களுள் ஒன்று; a title for {} Kings. இப்பெயர் பெற்றவர்கள் இரு சோழ அரசரும் ஓர் இளவரசரும் ஆவர். 1. முதற் பராந்தக சோழர் (ஆ.கா.907-953); ராஞ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனை முதலில் நடந்த போரில் வென்றதால் வீரசோழர் என்ற பட்டம் பெற்றார். 2. கங்கை கொண்ட சோழர் என்ற முதலாம் இராசேந்திரரின் (ஆ.கா.1014-1044); மகனான வீரராசேந்திரருக்கு (ஆ.கா.1063-70); இப்பெயர் வழங்கியது. பொன்பற்றி எனும் நகரின் சிற்றரசரான புத்தமித்திரர் என்பவர் இவ்வரசர் விருப்பத்திற்கேற்ப ஐந்திலக்கணங்களும் அடங்கிய நூல் ஒன்றெழுதி, அதற்குச் செய்வித்தோர் பெயரால் வீரசோழியம் எனப் பெயரிட்டுள்ளார். நூலாசிரியர் அரசரைப் பலவாறு பாராட்டியுள்ளார். 3. முதற் குலோதுங்க சோழரின் (ஆ.கா.1070-1122); ஆண் மக்கள் எழுவருள் இரண்டாமவரின் பெயர். இவர் இருமுறை (1078-84, 1089-93); வேங்கியில் அரசப் படிநிகராளியாக இருந்து அதை ஆண்டு வந்தார். அக்காலத்தில் இவர் ஒரு பாண்டியனோடு வடபுலத்தில் பொருது வென்றார். இவர் தம் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இறந்து பட்டதால் இவருக்கு இளவலான விக்கிரம சோழர் தம் தந்தைக்குப் பின் பட்டம் எய்தினார். |
வீரசோழியம் | வீரசோழியம் vīracōḻiyam, பெ. (n.) வீரசோழன் பெயரால் புத்தமித்திரர் இயற்றிய தமிழிலக்கண நூல்; a grammatical treatise, by Puttamittirar, named after {}. [வீரசோழன் → வீரசோழியம்] வடமொழி இலக்கணத்தைத் தமிழில் முதன்முதலாகக் கூறிய இலக்கண நூல்;இது எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி முதலியவற்றைச் சுருக்கிக் கூறுவது. இந்நூலாசிரியர் பொன்பற்றியூர் என்னும் ஊரினர். (அபி-சிந்.);. |
வீரச்சங்கிலி | வீரச்சங்கிலி vīraccaṅgili, பெ. (n.) வீரசங்கிலி (சிலப். 6, 99, அரும்.); பார்க்க;see {}. [வீரம் + சங்கிலி] |
வீரச்சலங்கை | வீரச்சலங்கை vīraccalaṅgai, பெ. (n.) வீரரணியும் காற்சதங்கை (இ.வ.);; string of little bells, worn on the legs by heroes. [வீரம் + சலங்கை] |
வீரச்சுண்ணம் | வீரச்சுண்ணம் vīraccuṇṇam, பெ. (n.) சுண்ணவகை; calcined white powder of per-chloride of mercury which has the properties of calcium i.e. turns, turmeric solution red. [வீரம் + சுண்ணம்] |
வீரச்சுவை | வீரச்சுவை vīraccuvai, பெ. (n.) வீரம்1, 2 (சிலப். 3, 13, உரை); பார்க்க;see {}. [வீரம் + சுவை] |
வீரச்செந்தூரம் | வீரச்செந்தூரம் vīraccendūram, பெ. (n.) திருமூலர் ‘வ’ கார உபதேசம் (அறிவுரை); 200 ல் சொல்லியுள்ள ஒரு வகைச் செந்தூரம்; red calcined powder of per-chloride of mercury mentioned in {}. |
வீரச்செல்வி | வீரச்செல்வி vīraccelvi, பெ. (n.) கொற்றவை (பிங்.);; durgai. [வீரம் + செல்வி] |
வீரடங்கல் | வீரடங்கல் vīraḍaṅgal, பெ. (n.) மருந்தின் வேகமடங்கல்; decrease of the virulence of medicine. [வீறு → வீரு → வீரடங்கல்] |
வீரட்டம் | வீரட்டம் vīraṭṭam, பெ. (n.) வீரட்டானம் (தேவா. 1222, 2); பார்க்க;see {}. |
வீரட்டாணம் | வீரட்டாணம் vīraṭṭāṇam, பெ. (n.) வீரட்டானம் (வின்.); பார்க்க;see {}. |
வீரட்டானம் | வீரட்டானம் vīraṭṭāṉam, பெ. (n.) 1. சிவபெருமானது வீரம் விளங்கிய இடம் (தேவா. 1222,2);; sacred place where {} heroism was manifested. 2. கூத்து வகை (வின்.);; a kind of dance. [வீரம் + தானம் → வீரட்டானம்] எட்டு வீரட்டத் தலங்கள் : 1. கண்டியூர், 2. கடவூர், 3. திருவதிகை, 4. வழுவூர், 5. பறியலூர், 6. கோவலூர், 7. திருக் குறுக்கை, 8. விற்குடி. |
வீரணன் | வீரணன் vīraṇaṉ, பெ. (n.) வீரமுள்ளவன்; brave hero. “அருமுறவினோ டொளிதிகழ் வீரண ருறைவது” (தேவா. 579,9);. [வீரம் → வீரணன்] |
வீரணமூலகம் | வீரணமூலகம் vīraṇamūlagam, பெ. (n.) விலாமிச்சவேர்; a fragrant root of grass. |
வீரணம் | வீரணம் vīraṇam, பெ. (n.) இலாமிச்சை வேர்; khus khus. |
வீரணி | வீரணி1 vīraṇi, பெ. (n.) இலாமிச்சை (வின்.);; cuscus grass. வீரணி2 vīraṇi, பெ. (n.) மிளகு (மலை.);; pepper. |
வீரணுக்கன் | வீரணுக்கன் vīraṇukkaṉ, பெ. (n.) 1. ஓர் இனம்; a caste. 2. வீரணுக்க இனத்தினன் (நன். 275, மயிலை);; man of the caste of {}. |
வீரணுக்கிச்சி | வீரணுக்கிச்சி vīraṇukkicci, பெ. (n.) வீரணுக்க இனப் பெண் (நன்.276, மயிலை);; a woman of the caste of {}. [வீரணுக்கன் -. வீரணுக்கிச்சி] அணுக்கன் (ஆ.பா.); – அணுக்கி, அணுக்கிச்சி (பெ.பா.); |
வீரதச்சுவன் | வீரதச்சுவன் vīradaccuvaṉ, பெ. (n.) காமன் (சது.);; {}. |
வீரதண்டை | வீரதண்டை vīradaṇṭai, பெ. (n.) வீரக்கழல் (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீரம் + தண்டை] |
வீரதத்துவம் | வீரதத்துவம்1 vīradadduvam, பெ. (n.) கொடிவேலி; a shrub. வீரதத்துவம்2 vīradadduvam, பெ. (n.) வீரத்துவம் (வின்.); பார்க்க;see {}. [வீரம் + தத்துவம்] |
வீரதரன் | வீரதரன் vīradaraṉ, பெ. (n.) வீரருள் மிக்கான்; great hero or warrior. “கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடையான்” (கலிங். 515);. Skt. Dharan → த. தரன். [வீரம் + தரன்] |
வீரதரம் | வீரதரம் vīradaram, பெ. (n.) விலாமிச்சவேர்; coleus osmirrhizon. |
வீரதரு | வீரதரு vīradaru, பெ. (n.) 1. வீரசாகி (நாமதீப. 291); பார்க்க;see {}. 2. நீர்மருது (மலை.);; arjuna. 3. விடத்தேரை (மலை);; ashy babool. |
வீரதாரு | வீரதாரு vīratāru, பெ. (n.) விடத்தலை பார்க்க;see {}. [p] |
வீரதீரன் | வீரதீரன் vīratīraṉ, பெ. (n.) 1. துணிவு மிக்க வீரன்; valiant hero. 2. ஒன்பது வீரர்களுள் ஒருவர் (கந்தபு. துணைவர். 33);; a hero in skanda’s army, one of {}, q.v. [வீரம் + தீரன்] |
வீரதுரந்தரன் | வீரதுரந்தரன் vīradurandaraṉ, பெ. (n.) 1. ஆண்மையுள்ள வீரன்; hero, worthy of the name. 2. மாமல்லன்; leader of a band of warriors, champion. [வீரம் + Skt. {} → த. துரந்தரன்] |
வீரதை | வீரதை vīradai, பெ. (n.) வீரம்1, 1 பார்க்க;see {}, heroism. “வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம்” (கம்பரா. கார்கா. 69); [வீரம் → வீரதை] |
வீரத்தட்டி | வீரத்தட்டி vīrattaṭṭi, பெ. (n.) மான்றோற் பட்டை (யாழ்.அக.);; badge of deerskin. [வீரம்1 + தட்டி] |
வீரத்திருவிழா | வீரத்திருவிழா vīrattiruviḻā, பெ. (n.) பெரம்பலூர் மாவட்டதேவேந்திர குலவேளாள இனத் தவர் நடத்தும் முயல் வேட்டை a rabbit hunt, conducted by Devantrakula Velālarcaste in Perambalur. |
வீரத்துக்கதீதம் | வீரத்துக்கதீதம் vīrattukkatītam, பெ. (n.) அண்டச் சுண்ணம்; white calcined powder of cranium bones or egg shell. [வீரத்திற்கு + Skt. {} → த. அதீதம்] |
வீரத்துவம் | வீரத்துவம் vīrattuvam, பெ. (n.) வீரம்1,1 (வின்.); பார்க்க;see {} bravery, heroism. [வீரம் + தத்துவம்] |
வீரத்தைப்பெந்தம்பண்ணி | வீரத்தைப்பெந்தம்பண்ணி vīrattaippendambaṇṇi, பெ. (n.) நீர்க்கடம்பு; a kind of herb which is used in medicine. [வீரத்தை + பெந்தம்பண்ணி] |
வீரநீர் | வீரநீர் vīranīr, பெ. (n.) அமுரி; urine. |
வீரந்தரம் | வீரந்தரம் vīrandaram, பெ. (n.) 1. மயில்; peacock. 2. மார்புக்கவசம்; armour for the chest. |
வீரன் | வீரன் vīraṉ, பெ. (n.) 1. ஆண்மையுள்ளவன்; hero, warrior. “நன்னீர் சொரிந்தனன் வீரனேற்றான்” (சீவக. 489);. 2. வீரபத்திரன்; virabhadra. “நெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே” (தக்கயாகப். 334);. 3. அருகன்; arhat. “வீரன் றாணிழல் விளங்க நோற்றபின்” (சீவக. 409);. 4. படைத் தலைவன் (திவா.);; commander. 5. வீடு மண் (யாழ்.அக.);; {}. 6. மதுரைவீரன்; a village deity. 7. நெருப்பு (யாழ்.அக.);; fire. 8. வேள்வித்தீ (யாழ்.அக.);; sacrificial fire. 9. கூத்தாடி (யாழ்.அக.);; dancer. ‘வீரன் கேண்மை கூர் அம்பாகும்’ (பழ.);. |
வீரபஞ்சரன்காசு | வீரபஞ்சரன்காசு vīrabañjaraṉkācu, பெ. (n.) காசு வகை (M.E.R. 14 of 1924-C);; a coin. [வீரம் + பஞ்சரன் + காசு] |
வீரபட்டம் | வீரபட்டம் vīrabaṭṭam, பெ. (n.) 1. வீரபட்டிகை பார்க்க;see {}. “வீரபட்டத் தொடு திலகமின்னவே” (கம்பரா. கடிம. 54);. 2. தெய்வத் திருமேனிகட்கு அணியும் நெற்றியணிவகை; a jewel on the forehead of deities. [வீரம் + பட்டம்] |
வீரபட்டிகை | வீரபட்டிகை vīrabaṭṭigai, பெ. (n.) வீரர் வெற்றிக்குறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு; frontlet of gold worn on the forhead of a warrior, as a sign of victory. “நுதலணி யோடையிற் பிறழும் வீரபட்டிகை” (கம்பரா. கரன்வ. 159);. [வீரம் + பட்டிகை] |
வீரபத்தினி | வீரபத்தினி vīrabattiṉi, பெ. (n.) 1. வீரனுடைய மனைவி; wife of a hero. 2. மறக் கற்புடையாள்; wife celebrated for her {} or militant chastity, woman of herioc continence. “ஆரளு ருற்ற வீரபத்தினி” (சிலப். பதி. 42);. [வீரம் + பத்தினி] |
வீரபத்திரக்கலிக்கம் | வீரபத்திரக்கலிக்கம் vīrabattirakkalikkam, பெ. (n.) திரிகடுகு, இந்துப்பு, தூய்மை செய்த நேர்வாளம், கடுக்காய், இலவங்கம் சமனெடை கொண்டு வெந்தயச் செடி சமூலச் சாற்றாலரைத்துச் செய்யும் மாத்திரை. அதையிழைத்துக் கண்ணிலிட சன்னி காய்ச்சல், முக்குற்றம் போம்; an eye salve prepared as said above and applied to the eye during delirium. (சா.அக.);. [வீரபத்திரம் + கலிக்கம்] |
வீரபத்திரசாமி வாள் ஆட்டம் | வீரபத்திரசாமி வாள் ஆட்டம் vīrabattiracāmivāḷāṭṭam, பெ. (n.) நாட்டுப்புற ஆட்டங்களில் ஒன்று; a rural dance. |
வீரபத்திரசாமியாட்டம் | வீரபத்திரசாமியாட்டம் vīrabattiracāmiyāṭṭam, பெ. (n.) வீரபத்ர சாமியைத் தாங்கும் பலகையைக் குறும்பரின ஆண்கள் தூக்கியவாறு ஆடும் ஆட்டம்; a dance by Kurumbar caste male, by carrying wooden log that carries Virapatra Swamy. |
வீரபத்திரதேவன் | வீரபத்திரதேவன் vīrabattiratēvaṉ, பெ. (n.) வீரபத்திரன் (சீவக. 2285, உரை); பார்க்க;see {}. [வீரபத்திரன் + தேவன்] |
வீரபத்திரன் | வீரபத்திரன்2 vīrabattiraṉ, பெ. (n.) சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரும் தக்கன் வேள்வியை யழித்தவருமான கடவுள்; the god who emanated from {} frontal eye and destroyed {} sacrifice. “முத்துவீரபத்திரனெனுந் திறலுடை முதல்வன்” (கந்தபு. வீரபத். 14);. [வீரம் + பத்திரன்] |
வீரபத்திரம் | வீரபத்திரம்1 vīrabattiram, பெ. (n.) குதிரை வேள்விக்குரிய குதிரை (இலக்.அக);; horse fit for the horse-sacrifice. [வீரம் + பத்திரம்] |
வீரபத்ராஞ்சனம் | வீரபத்ராஞ்சனம் vīrabatrāñjaṉam, பெ. (n.) சன்னிபாதக் காய்ச்சலுக்காக கண்ணிற்கு இடும் கலிக்கம், இது ஆயுர்வேத மருந்து; an ayurvedic collyrium for delirious fevers. [வீரம் + பத்ரம் + அஞ்சனம். அஞ்சனம், பத்ரம் = Skt.] |
வீரபற்பக்களிம்பு | வீரபற்பக்களிம்பு vīrabaṟbakkaḷimbu, பெ. (n.) ஒரு வகை மருந்துக் களிம்பு; ointment containing ammoniated of mercury. [வீரம் + களிம்பு] |
வீரபற்பம் | வீரபற்பம் vīrabaṟbam, பெ. (n.) இதளியத்தை நீறாக்கிச் செய்யப்படும் ஒருவகை மருந்து; white calcined powder of perchloride of mercury used as medicine, ammoniated mercury. [வீரம் + பற்பம்] |
வீரபாணம் | வீரபாணம் vīrapāṇam, பெ. (n.) வீரபானம் (இலக்.அக.); பார்க்க;see {}. [வீரம் + பாணம்] |
வீரபாண்டியன் | வீரபாண்டியன் vīrapāṇṭiyaṉ, பெ. (n.) 1. பாண்டியவரசருள் ஒருவன்; a {} king. 2. முகத்தலளவைக் கருவி வகை (Insc.);; a dry measure of capacity. [வீரம் + பாண்டியன்] |
வீரபாண்டியன்காசு | வீரபாண்டியன்காசு vīrapāṇṭiyaṉkācu, பெ. (n.) வீரபாண்டியன் காலத்து வழங்கிய ஒரு நாணயம் (புதுக்.கல்.);; a coin issued by {}. [வீரம் + பாண்டியன் + காசு3] |
வீரபானம் | வீரபானம் vīrapāṉam, பெ. (n.) வீரர்கள் மாந்தும் மது; invigorating drink of warriors. “வீரபானமிருக்கும் குழாய்” (சீவக. 1874, உரை);. [வீரம் + பானம்] வீரபாவனை __, பெ. (n.); தென்னங் குரும்பையைக் குடைந்து, வீரத்தை வைத்து இதற்கு 6 பங்கிடை விறட்டி, கீழ் பாதி மேல் பாதியாகப் புடமிட்டு எடுக்கக் கால் கட்டு ஆகும். இப்படியே 10 புடமிட்டு எடுப்பதே வீரபாவனை; இதனால் வீரம் சுத்தியாகிக் கால் கட்டாகும். இப்படியே 40 – 50 தடவை செய்தால் முழுக்கட்டாகும்; another method of consolidating the per-chloride of mercury is given above. (சா.அக.);. |
வீரபுரந்தரன் | வீரபுரந்தரன் vīraburandaraṉ, பெ. (n.) முருகனின் ஒன்பது வீரருள் ஒருவர் (நாமதீப. 35);; a hero in skanda’s army, one of {}, q.v. [வீரம் + Skt. {} → த. புரந்தரன்] |
வீரபுருஷன் | வீரபுருஷன் vīraburušaṉ, பெ. (n.) வீரமுள்ளவன்; warrior, hero. “வீரபுருஷர் குடர்களின் உதிரத்தை” (தக்கயாகப். 100, உரை);. [வீரம் + Skt. {} → த. புருஷன்] |
வீரபைரவி | வீரபைரவி vīrabairavi, பெ. (n.) கொற்றவை கோலம் பூண்ட பெண்துறவி; female ascetic wearing the garb of a bhairavi. “நாக சாகினிகள் வீரபைரவிகள்” (தக்கயாகப். 593);. [வீரம் + பைரவி] |
வீரபோகசாதி | வீரபோகசாதி vīrapōkacāti, பெ. (n.) பயிரபதி இனமாகிய ஆண் இனம் 4-ல் ஒன்று; one of the four divisions of men. [வீரம் + போகம் + சாது] Skt. {} → த. போகம். Skt. {} → த. சாதி |
வீரபோகம் | வீரபோகம் vīrapōkam, பெ. (n.) பழைய வரிவகை (I.M.P.S.A. 86);; an ancient tax. [வீரம் + போகம்] Skt. {} → த. போகம். |
வீரப்பட்டயம் | வீரப்பட்டயம் vīrappaṭṭayam, பெ. (n.) வீரப்பட்டிகை (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீரம் + பட்டயம்] |
வீரப்பல் | வீரப்பல் vīrappal, பெ. (n.) பூதம் முதலியவற்றின் கோரப்பல் (இ.வ.);; long, curved tooth, as of malignant deities. [வீரம் + பல்] |
வீரப்பாடு | வீரப்பாடு vīrappāṭu, பெ. (n.) 1. பேராண்மை; heroism, manliness. “வீரப்பாட்டுக்குத் தலையான சக்ரவர்த்தி திருமகன்” (ஈடு. 6,1, 10);. 2. வெற்றி (வின்.);; victory. [வீரம் + பாடு] |
வீரப்பிரதாபம் | வீரப்பிரதாபம் vīrappiratāpam, பெ. (n.) வீரப்பாடு பார்க்க;see {}. [வீரம் + Skt. pradhaba → த. பிரதாபம்] |
வீரப்பேர் | வீரப்பேர் vīrappēr, பெ. (n.) வீரம் பற்றிப் புனையும் பெயர்; title conferred upon a person in recognition of his heroism. “சீலப்பேர் வீரப்பேர் என்று அநேகமா யிருக்குமே”(ஈடு. 2, 5, 6);. [வீரம் + பேர்] |
வீரப்போர் | வீரப்போர் vīrappōr, பெ. (n.) வீரர்களின் நெறி தவறாத போர்; fight or combat in strict conformity with the code of honour [வீரம் + போர்] |
வீரமகரம் | வீரமகரம் vīramagaram, பெ. (n.) கோயிற்றிருமேனிகள் உலாவருங்காலத்தும் வேந்தர்கள் வீதியுலா வருங்காலத்தும் அவர்களுக்கு முன்னே மதிப்புரவாக எடுத்துச் செல்லும் விருது வகைகளுள் ஒன்று (யாழ்.அக.);; a fish-shaped emblem being part of the paraphernalia carried before deities or kings. [வீரம் + மகரம்] [p] |
வீரமகள் | வீரமகள் vīramagaḷ, பெ. (n.) மலைமகள் (சீவக. 411, உரை);; Malai magal, parvadi. [வீரம் + மகள்] |
வீரமகேச்சுரன் | வீரமகேச்சுரன் vīramaāccuraṉ, பெ. (n.) ஒன்பது வீரருள் ஒருவர் (வின்.);; a hero in skanda’s army, one of nava-virar, q.v. [வீரம் + மகேச்சுரன்] |
வீரமகேந்திரன் | வீரமகேந்திரன் vīramaāndiraṉ, பெ. (n.) ஒன்பது வீரருள் ஒருவர் (வின்.);; a hero in skanda’s army, one of nava-virar, q.v. [வீரம் + மகேந்திரன்] |
வீரமங்கை | வீரமங்கை vīramaṅgai, பெ. (n.) மலைமகள் பார்க்க;see {}. மறுவ. மலைமடந்தை. [வீரம் + மங்கை] |
வீரமடங்கல் | வீரமடங்கல் vīramaḍaṅgal, பெ. (n.) வீரடங்கல்; abatement of virulence. [வீரம் + அடங்கல்] |
வீரமணி | வீரமணி1 vīramaṇi, பெ. (n.) திருமூலர் வகார வுபதேசத்திற் சொல்லியுள்ள ஓர் முறை. வீரத்தைக் கட்டி மணியாகச் செய்து, இதை இழைத்து நாக்கில் தடவச் செத்தவனும் எழுத்து பேசுவான்; per-chloride of mercury is made into a ball by a process mentioned in Tirumoolar vagara upadesham 200. it is said that even a dead will come back to life if it is applied to the tongue. [வீரம் + மணி] வீரமணி2 vīramaṇi, பெ. (n.) 1. விராடக் குரு என்னும் குரு மருந்தினால் வீரத்தைக் கட்டிச் செய்த மணி; perchloride of mercury ball prepared by using magic of விராடக்குரு. 2. வீரமணி கெவுனம் பாய்வதற்கும் வாயிலிட்டு வாயு வேகமாய் நடப்பதற்கும் பிறர் தன்னைக் கண்ட போது நடுங்கும்படி செய்விக்கும் வீரத்தைக் கட்டிச் செய்த ஒரு வித மணி (இதை பசுவின் மேல் வைக்கப் பால் கொடாது);; this ball is useful to make one travel in the air, to walk fast, and to make others tremble. [வீரம் + மணி] |
வீரமத்தாளி | வீரமத்தாளி vīramattāḷi, பெ. (n.) யானை நெருஞ்சில்; a stout-stemmed herb with spiny fruits and slimy leaves. மறுவ. பெருநெருஞ்சில். [p] |
வீரமந்திரம் | வீரமந்திரம் vīramandiram, பெ. (n.) வேண்டும் போது நிற்கவும் பறந்து செல்லவும் குதிரையின் காதில் ஒதும் மறைமொழி; mantra uttered in a horse’s ears, so as to enable it to fly or stop as the rider pleases. “வெம்பரிமான்செவி வீரமந்திரம் —– நீ மொழிகென” (சீவக. 791);. [வீரம் + மந்திரம்] |
வீரமயேசுரன் | வீரமயேசுரன் vīramayēcuraṉ, பெ. (n.) வீரமகேச்சுரன் (நாமதீப. 35); பார்க்க;see {}. [வீரம் + மயேசுரன்] |
வீரமயேச்சுரர் | வீரமயேச்சுரர் vīramayēccurar, பெ. (n.) வீரசைவ முனிவர்;{} ascetic. “பெரிய மடந்தனில் வாழ் வீரமயேச்சுரர் வாழியே” (தக்கயாகப். பக். 255);. [வீரம் + மயேச்சுரர்] |
வீரமயேந்திரன் | வீரமயேந்திரன் vīramayēndiraṉ, பெ. (n.) வீரமகேந்திரன் (நாமதீப. 35); பார்க்க;see {}. [வீரம் + மயேந்திரன்] |
வீரமாகாளன் | வீரமாகாளன் vīramākāḷaṉ, பெ. (n.) ஐயனார் சேனைத்தலைவரான சிற்றூர்த் தெய்வம்; a village deity, the head of {} hosts. “வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமாகாளனென்போன்” (கந்தபு. மகாகாளர். 3);. [வீரம் + மா + காளன்] |
வீரமாகாளி | வீரமாகாளி vīramākāḷi, பெ. (n.) காளிதேவி;{}, as the ferocious goddess. [வீரம் + மா + காளி] [p] |
வீரமாகேசம் | வீரமாகேசம் vīramāācam, பெ. (n.) வரிக்கூத்துவகை (சிலப். 3, 13. உரை, பக். 88);; a kind of masquerade dance. [வீரம் + மாகேசம்] |
வீரமாதிப்பூண்டு | வீரமாதிப்பூண்டு vīramātippūṇṭu, பெ. (n.) நச்சு மூலிகை; a poisonous shrub. [வீரமாதி + பூண்டு] |
வீரமாபுரந்தரன் | வீரமாபுரந்தரன் vīramāpurandaraṉ, பெ. (n.) வீரபுரந்தரன் (கந்தபு. துணைவர். 29); பார்க்க;see {}. [வீரம் + மா + புரந்தரன்] |
வீரமாமகேந்திரன் | வீரமாமகேந்திரன் vīramāmaāndiraṉ, பெ. (n.) வீரமகேந்திரன் (கந்தபு. துணைவர். 27); பார்க்க;see {}. [வீரம் + மா + மகேந்திரன்] |
வீரமாமுனிவர் | வீரமாமுனிவர் vīramāmuṉivar, பெ. (n.) கி.பி.1680 முதல் 1747 வரை வாழ்ந்த கிறித்தவ ஆசிரியர். சதுரகராதி, தேம்பாவணி, தொன்னூல் விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவரும் இத்தாலிய நாட்டவருமான அப்பர்; Father Beschi, an Italian jesuit, 1680-1747, author of {}, etc works. தமிழ் நாட்டிற்கு வந்தபொழுது, தம் பெயரைத் தைரியநாத சுவாமி எனச் சிறப்பாக அமைத்துக் கொண்டார். அவருடைய இயேசு நாதர் பணியின் ஆர்வமும் தமிழ்ப் புலமையும் கண்ட அக்கால மதுரைச் சங்கத்தார், தைரிய நாத சுவாமியை வீரமாமுனிவர் எனத் தமிழால் அழைத்தனர். சந்தா சாகிப் எனும் அவர் நண்பர் அவரது துறவின் மாண்பை உணர்ந்து ‘இஸ்மதி சந்நியாசி’ என அவர்க்குப் பட்டம் அளித்தார். வீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில், முதல் ஐந்து ஆறு ஆண்டுகள், காமநாயக்கன்பட்டி, கயத்தாறு, மதுரை, தஞ்சாவூர், அரியலூர் முதலான இடங்களில் தொண்டாற்றினார். தமிழ் நாட்டின் தட்பவெப்ப நிலைகளால் அவர் நலிவுற்றாரேனும், தளர்வுற்றார் அல்லர்;சமய நூலைத் தமிழனுக்குத் தமிழனாய் இருந்து கற்பிக்க வேண்டும் என்னும் மதுரை மிஷன் தீர்மானத்தை மனத்திற் கொண்டு, தமிழ்மொழியை நன்றாகப் பேசவும் எழுதவும் கற்று, இலக்கிய இலக்கண நூல்களை ஐயந்திரிபற ஆராய்ந்து, தாமும் அந்நூல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றனர். அவர் தொடர்புடைய இரு கோயில்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்புடையதாகக் கூறப்படும் கோனான் குப்பத்தில் அவர் தமிழ் நாட்டுப் பெண்மணிபோல் தேவதாயார் திருவுருவம் அமைத்து, அவரைப் பெரியநாயகி அம்மையார் எனப்போற்றி, அவர் திருவருள் வேண்டித் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் யாத்தார். 1717-இல் தஞ்சாவூர் அரசின் கத்தோலிக்கக் குடிகள் இன்புறுமாறு ஏலாக் குறிச்சியில் அமைந்திருந்த அடைக்கலமாதா கோயிலில் சிறப்பு விழா நடத்தித் திருக்காவலூர்க் கலம்பகம் பாடினார். அந்த ஆண்டு முதல் 1742 வரை ஏலாக் குறிச்சியே அவர் திருத்தொண்டிற்கு நடுநிலைக் களமாக விளங்கியது. 1742-இல் முதுமை காரணமாகத் தூத்துக் குடியில் வந்து ஒருவாறு ஒய்வுபெற்று, அவர் தம் அகராதியையும் இலக்கண நூல்களையும் எழுதி வந்தார். பின்பு சேர நாட்டின் அம்பலக் காட்டில் நிறுவப்பெற்ற குரு மடத்தில் தங்கியிருந்து, 1747 பிப்ரவரி 4 ஆம் நாள் இறைவன் திருவடி நிழல் எய்தினார். அவர் கல்லறை இருக்கும் இடம் இன்னதென ஐயந்திரிபற அறிதற்கு இதுகாறும் போதிய சான்றுகள் கிடைத்தில. அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் அரசியற் புரட்சிகள் நாட்டைத் துன்புறுத்திய காலம், மாராட்டியர்,மொகலாயர், ஆந்திரர் ஆகியோர் தமிழ் நாட்டில் அரசுரிமை பாராட்டிய காலம், மதுரை மன்னர்க்கும் சேது பதியார்க்கும் பகை நிகழ்ந்த காலம், தமிழ் நாட்டின் பற்பல இடங்களில் கொடிய போர்கள் நடந்த காலம். கத்தோலிக்கக் குருக்களுக்குப் பலவகை இன்னல்கள் விளைந்த காலம். முனிவர் தாமும் ஒருகால் சிறையிடப் பெற்றுக் கொள்ளத் தீர்ப்புக்கு ஆளாகி, நண்பர் சிலர் உதவியால் விடுதலை பெற்றார். அவரது கல்விப் புலமையினால், அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு நண்பர்களாகிக் கத்தோலிக்கர் உரிமைகளை உற்ற வேளையில் காப்பாற்றி வந்தனர். சந்தா சாகிப் அவரை நண்பராய்க் கொண்டதும் அல்லாமல், அவரைச் சிலகாலம் தமக்குத் திவானாகவும் நியமித்து வைத்திருந்தனர் என்று கூறுவர். அவருடைய உரைநடைநூல்கள் தரங்கம்பாடியிலுள்ள டேனியர் சபையின் கொள்கைக்கு மறுப்பாக எழுந்தவை. தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னமே, இத்தாலியம், கிரேக்கம், ஈபுறு, இலத்தீன், போர்ச்சுகேசியம் முதலாய மொழிகளையும், அவற்றின் இலக்கியங்களையும் அவர் கற்றுணர்ந்திருந்தனர். இங்கு வந்ததும் தமிழ் மொழியைப் பயின்றறிந்தார். வடமொழி, தெலுங்கு, உருது மொழிகளை நன்கு கற்றார். தமிழுக்குத் தாமே இலக்கணம் வகுக்கப் புகுந்த பொழுது, ஏ, ண, முதலாய எழுத்துக்களின் வடிவங்களில் சிற்சில மாற்றங்கள் அமைத்தனர் என்பர். மேலை நாட்டுக் கலைகளிலும் மொழிகளிலும் புலமை வாய்க்கப் பெற்றவராதலின் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் அவர் புதுமுறைகளைப் புகுத்தவல்ல பெருமையுடையார் ஆயினர். தம் முப்பதாம் ஆண்டிற்குப் பின்னர்ப் பிற மொழிகற்று, இத்துணைப் புலமை எய்தி, பல்வேறு துறைகளில் நூல்கள் இயற்றியுள்ள பெரியார் இவர் ஒருவரை அன்றி, இவர்க்கு இணையாக வேறு எவரேனும் உலக இலக்கியத்திலேயே இதுகாறும் யாம் காணப் பெற்றிலம். பிற்காலத்தில் தமிழில் இயற்றப்பெற்ற கிறித்தவ இலக்கியங்களுக்கு இவரே முனைவராகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும் விளங்குகின்றார். இவர் எழுதிய தமிழ் நூல்களிலும், பற்பல மொழிகளில் வரைந்துள்ள திருமுகங்களிலும், இவருடைய தமிழ்ப் பற்றும் தணியா வேட்கையும் ததும்பி நிற்கின்றன. இவர் எழுதியுள்ள நூல்கள் மிகப் பல. அவை அனைத்தும் நம் காலத்திற்கு வந்து எட்டில. பதிப்பிற்கு வாராத சில ஏடுகள் ஐரோப்பாவின் நூற்கூடங்களில் இருக்கின்றன எனக் கூறுகின்றனர். இதுகாறும் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்துள்ள இன்றியமையாத நூல்கள் பற்றி ஒரு சிறிது இங்கே அறிவது நலம். செய்யுள் நூல்கள் : தேம்பாவணி : இந்நூல் இயேசு பெருமானின் காவல் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றிய பெருங்காப்பியம். விவிலிய மறையிலிருந்து 150 வரலாற்றுப் பகுதிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளும், அறிவுரைகளும், வழிபாட்டு முறைகளும், கதை வடிவாகவும், தத்துவ வடிவாகவும் இதில் இடம் பெற்றுள்ளன. தேம்பாவணி கிறித்தவர்க்குக் கலைக்களஞ்சியமாய் விளங்கி நிற்கின்றது. இது சீவக சிந்தாமணி நடையை ஒட்டிய பெருங் காப்பியம். முன்னோர் மொழிந்த பொருளை மட்டுமே அன்றி, அவர் மொழிகளையும் பொன்னேபோல் இவர் இந்நூலுள் போற்றி வைத்திருக்கின்றார். ஆதலின் திருவள்ளுவர், திருத்தக்கதேவர், சேக்கிழார், மாணிக்கவாசகர், கம்பர் முதலான புலவர் பெருமக்களின் சொல்லும் பொருளும் ஆங்காங்கே மிளிர்கின்றன. அவ்வாறே மேலை நாட்டுப் பெரும் புலவராகிய ஹோமர், வர்ஜில், தாந்தே, தாசோ போன்றவர் கருத்துக்களையும் அவர் தமது காப்பியத்தில் புகுத்தியுள்ளார். இக்காப்பியத்திற்கு அவர் தாமே ஓர் உரை எழுதினார் எனக் கூறுகின்றனர். அவ்வுரை நமக்குக் கிடைத்திலது. திருக்காவலூர்க் கலம்பகம் : கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள ஏலாக்குறிச்சி என்னுமூரில், அடைக்கல மாதா கோயில் நிறுவப் பெற்றிருந்தது. அவ்வூரையே திருக்கோவலூர் எனவும் அழைத்தனர். தஞ்சாவூர்ப் பகுதிகளில் மராட்டியரால் துன்புற்ற கிறித்தவர்களும் இங்குத் தம் ஞானக் கடன்களைத் தீர்க்குமாறு வந்து சென்றனர். அரியலூர் மழவராயர் அக்கோயிலுக்கு ஓர் இடத்தை நன்கொடையாக நல்கினர். முனிவர், அத்திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவை இனிய கலம்பகப் பனுவலால் பாடினார். கித்தேரி அம்மாள் அம்மானை : போர்ச்சுகல் நாட்டில், மன்னர் மகளாராகப் பிறந்து, கன்னி நோன்பு பூண்ட நவகன்னியரில் ஒருவராய், கி.பி.130-ல் தம்மைப் பெற்ற தந்தையின் கட்டளையினாலேயே, திருமறைச் சான்றாராய்த் தலை இழந்து உயிர் துறந்த கித்தேரி அம்மையார் திருவுருவத்தைத் திருக்காவலூரில் நிறுவி, அவர் திருவரலாற்றையும், அவர் நிகழ்த்திய புதுமைகளையும் வெண்செந்துறையால், 1,100 திருக்கண்ணிகள் கொண்ட அம்மானைப் பனுவலாக அவர் பாடினார். உரைநடை நூல்கள் : தமிழ் உரைநடைக்குத் தத்துவபோதகரே தந்தை என்பர். வீரமா முனிவரால் அது வளம்பெற்று உயர்ந்தது. வேதவிளக்கம் தரங்கம்பாடி டேனியர் சபையின் போதனைகளை மறுத்துக் கத்தோலிக்க சபையின் போதனைகளை நிலைநிறுத்துவது. பேதமறுத்தல் டேனியர் கொள்கைகளையும் ஒத்தேரினர் கொள்கைகளையும் ஒருங்கே மறுத்துரைப்பது, வேதியர் ஒழுக்கம் கத்தோலிக்க சபை உபதேசிகர் கடைப்பித் தொழுக வேண்டும் ஒழுக்க முறைகளையும், கடமைகளையும் விளக்கியுரைக்கும் பெருநூல். இதன் அருமை பெருமைகளை உணர்ந்து, இவருடைய எதிர்வாதிகள் தாமும், பிற்காலத்தில் இதனை அச்சிட்டுத் தமது சபை உபதேசிகர் வகுப்பிற்குப் பாடப் புத்தகமாக வைத்து இவற்றை ஞான்றும் வழங்கி வருகின்றனர். இது அவருடைய உரைநடை நூல்களில் சிறந்தது என அறிஞர் போப்பையர் புகழ்ந்துள்ளார். பரமார்த்த குரு கதை நகைச்சுவை நிறைந்து, பஞ்சதந்திரம் போன்று பல நீதிகளை விளக்கியுரைப்பது. இலக்கண நூல்கள் : கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் விளக்கம் ஆகியவையாம். தொன்னூல் விளக்கம் ஐந்திலக்கணங்களையும் நூற்பாக்களால் எடுத்துக் கூறுகின்றது. இது வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் நூல்கள் போன்றது எனச் சிலர் மொழிவர். உற்று நோக்கி ஆராய்வோர் அவற்றிலும் இது பலவகைச் சிறப்புடையது எனக் காண்பர். அகராதிகள் : தமிழ் – லத்தீன் அகராதி, இதில் 9,000 கொடுந்தமிழ்ச் சொற்களுக்கும் சொற்றொடர் களுக்கும், லத்தீன் மொழியில் விரிவாகப் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. போர்ச்சுகேசியம் – தமிழ் – லத்தீன் அகராதி : இந்நூலில் 4,400 போர்ச்சுகீசியச் சொற்களுக்குத் தமிழிலும் இலத்தீனிலும் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது. சதுரகராதி : இதுவே பிற்காலத் தமிழ் அகராதிகளுக் கெல்லாம் தந்தை, பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகள் உடையது. பிங்கலம், திவாகரம், சூடாமணி முதலான பல்வகை நிகண்டுகளிலுமுள்ள சொற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து, அகர வரிசையாகத் தொகுத்து, மேலை நாடுகளில் வழங்கிய அகராதி முறையில் யாத்த அரிய நூல். மொழி பெயர்ப்பு நூல்கள் : திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இவர் லத்தீனில் மொழி பெயர்த்துள்ளார். பிற்காலத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் முதலான ஐரோப்பிய மொழிகளில் தோன்றிய திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களுக்கெல்லாம் இதுவே அடிப்படையாய் உதவியது. பரமார்த்த குரு கதை முதலான நூல்களை லத்தீன் முதலாய வேற்று மொழிகளில் பெயர்த்துள்ளனர். |
வீரமார்த்தாண்டன் | வீரமார்த்தாண்டன் vīramārttāṇṭaṉ, பெ. (n.) 1. பெருமாவீரன்; illustrious hero. 2. ஒன்பது வீரர்களுள் ஒருவர்; a hero in skanda’s army, one of nava-virar, q.v. “மரகதத்தியால் வீரமார்த்தாண்டன் வந்தனனே” (கந்தபு. துணைவர். 31);. [வீரம் + Skt. {} → த. மார்த்தாண்டன்] |
வீரமாலை | வீரமாலை vīramālai, பெ. (n.) 1. வெற்றி மாலை (யாழ்.அக.);; garland of victory. 2. வீரனைப் புகழ்ந்து பாடும் பாடல் வகை (புதுக். கல். 966);; a kind of poem or song in praise of a warrior. [வீரம் + மாலை] |
வீரமுடி | வீரமுடி vīramuḍi, பெ. (n.) வீரரணியுந் தலைக்கவிகை (கீரிடம்);; warrior’s crown. [வீரம் + முடி] [p] |
வீரமுட்டி | வீரமுட்டி vīramuṭṭi, பெ. (n.) வாள் முதலிய படைக்கருவிகளை அணிந்து செல்லும் நெறியில் மனவுறுதி மிக்க வீரசைவத் துறவி; fanatical vira-Saiva mendicant who goes about armed with sword and shield. “உண்பான் தின்பான் சிவப்பிராமணன், கத்துக்கு நிற்பான் வீரமுட்டி” (பழ.);. [வீரம் + முட்டி] |
வீரமுத்திரிகை | வீரமுத்திரிகை vīramuttirigai, பெ. (n.) காலின் நடுவிரலணி (வின்.);; a ring worn on the middle toe. [வீரம் + முத்திரிகை] |
வீரமுரசம் | வீரமுரசம் vīramurasam, பெ. (n.) மயிர்க் கண் முரசம்; a kind of drum. [வீர+முரசம்] |
வீரமுரசு | வீரமுரசு vīramurasu, பெ. (n.) மும்முரசு களுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசம்; drum of heroism, one of {}, q.v. “மயிரான்மிக்க கண்ணினை யுடைய வீரமுரசொலிப்ப” (பு.வெ. 8, 17, உரை);. [வீரம் + முரசு] [p] |
வீரமுழவு | வீரமுழவு vīramuḻvu, பெ. (n.) முரசு, நிசாளம், துடுமை, திமிலை என நால்வகையான போர்ப்பறை; war drum of four kinds viz. {}. “முன்சொன்ன வீரமுழவு நான்கும்” (சிலப். 3, 27, உரை, பக். 106);. [வீரம் + முழவு] |
வீரமெழுகு | வீரமெழுகு1 vīrameḻugu, பெ. (n.) ஈளை நோய்க்கு மருந்தாகிய விலாங்கு மீனின் தைலம் வாங்கி வீரத்திற்கு வீரம் கட்டிய மெழுகு; per-chloride is turned into wax like substance when treated with the fat of eel-snake like fish-it removes phlegm. வீரமெழுகு2 vīrameḻugu, பெ. (n.) ஒரு பலம் வீரத்தை சீலையிலிட்டு முடிந்து பழங்கலையத்தில் நான்கு இளநீர் விட்டு அதில் தோலாந்திரமாகக் கட்டி இரண்டு நாழி எரித்து அடுப்புக்கு மேல் தொங்கவிட்டு உலர்த்தி எடுக்கவும், தேன், முலைப்பால், இஞ்சி ரசம் இவைகளில் கொடுக்கவும், சன்னி காய்ச்சல் குற்றம் போம். இச்சா பத்தியம், மாலை மிளகு கியாழம் கொள்ளவும்; a siddha preparation for cronical fever. |
வீரமொழி | வீரமொழி vīramoḻi, பெ. (n.) துணிவுடன் உரத்து மொழிகை; defiant speech. “கண்ணகி சொல்லிய வீரமொழி” (சிலப். 25, 82, அரும்.);. [வீரம்1 + மொழி2] |
வீரம் | வீரம்1 vīram, பெ. (n.) 1. பேராண்மை; heroism, bravery. “கன்மே னிற்பர் தம்வீரந் தோன்ற” (சீவக. 2302);. 2. ஒன்பது வகை மெய்ப்பாடுகளுள் ஆண்மையை விளக்குஞ் சுவை (சிலப். 3, 13, உரை);; the sentiment of heroism, one of nava-{}, q.v. 3. வலிமை; strength, might. “வீரநோய் வெகுளி” (சீவக. 2771);. 4. மேன்மை (யாழ்.அக.);; excellence, esteem. 5. வரிக்கூத்துவகை (சிலப். 3, 13, உரை);; a kind of masquerade dance. 6. சிவத் தோன்றியம் இருபத்தெட்டனு ளொன்று (சைவச. 333, உரை);; an ancient {} scripture in sanskrit, one of 28 {} q.v. 7. வீராசனம் பார்க்க;see {}. “பதுமநகரில் வீரம்” (பிரபோத. 44, 68);. 8. மிளகு (யாழ்.அக.);; pepper. 9. கஞ்சி (யாழ்.அக.);; gruel. 10. அத்திவகை (யாழ்.அக.);; a kind of fig. 11. முதுகு (நாமதீப. 585);; back. 12. மலை; mountain. “வீரந் துஞ்சுவ வெண்மதி” (இரகு. குசன. 71);, ‘வீரம் பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்’. ‘வீரன் கேண்மை கூர் அம்பாகும்’ (பழ.);. வீரம்2 vīram, பெ. (n.) 1. சவ்வீரம், 2 (வின்.);; corrosive sublimate. 2. மருந்துவகை; a kind of medicine. வீரம்3 vīram, பெ. (n.) இஞ்சி2, 1 (யாழ்.அக.);; ginger. வீரம்4 vīram, பெ. (n.) 1. விலாமிச்ச வேர்; khus khus. 2. கஞ்சி; rice gruel. 3. மலையில் இயற்கையாய் விளையும் பொருள்; a natural kind of medicine found in the mountains. 4. பரங்கி நஞ்சு; a mercurial compound. 5. தங்கம்; refined gold. 6. நஞ்சுக்கொடி; placental cord. 7. வேங்கை; Indian kino tree. |
வீரம்பேசு-தல் | வீரம்பேசு-தல் vīrambēcudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தன் வல்லமையைத் தானே புகழ்தல்; to boast of one’s own prowess. 2. ஆண்மைத் திறங் கூறுதல் (வின்.);; to hector, swagger. [வீரம் + பேசு-தல்] |
வீரயாகம் | வீரயாகம் vīrayākam, பெ. (n.) வீரபத்திரன் பொருட்டுச் செய்யும் வேள்விவகை (யாழ்.அக.);; a sacrifice in honour of {}. [வீரன் + Skt. yakya → த. யாகம்] |
வீரரசம் | வீரரசம் vīrarasam, பெ. (n.) வீரம்1, 2 (சிலப். 3, 13, உரை); பார்க்க;see {}. [வீரம் + Skt. {} → த. ரசம்] |
வீரரதம் | வீரரதம் vīraradam, பெ. (n.) அம்பு (யாழ்.அக.);; arrow. [வீரம் + Skt. {} → த. ரதம்] |
வீரராக்கதன் | வீரராக்கதன் vīrarākkadaṉ, பெ. (n.) வீரராட்சதன் பார்க்க;see {}. (கந்தபு. துணைவர். 30);. [வீர + Skt. rakshasha → த. ராக்கதன்] |
வீரராட்சதன் | வீரராட்சதன் vīrarāṭcadaṉ, பெ. (n.) ஒன்பதுவீரருள் ஒருவர் (வின்.);; a hero in skanda’s army one of {}, q.v. [வீரம் + Skt. rakshasha → த. ராட்சதன்] |
வீரராயன்பணம் | வீரராயன்பணம் vīrarāyaṉpaṇam, பெ. (n.) பழைய காசு வகை (பணவிடு. 142);; an ancient coin. [வீரம் + அரையன்ராயன் + பணம்] |
வீரலட்சுமி | வீரலட்சுமி vīralaṭcumi, பெ. (n.) வீரலஷ்மி பார்க்க;see {}. [வீரம் + Skt. lakshimi → த. லட்சுமி] |
வீரலஷ்மி | வீரலஷ்மி vīralašmi, பெ. (n.) 1. வீரத்திற் குரிய கடவுள்; the Goddess of bravery. 2. வீரமாகிய செல்வம்; bravery, heroism, as wealth. 3. வெற்றிக்குரிய கடவுள்; the Goddess of victory. [வீரம் + Skt. {} → த. லஷ்மி] |
வீரவசந்தம் | வீரவசந்தம் vīravasandam, பெ. (n.) பண்வகை (பரத. ராக. பக். 102);; a specific melody type. [வீரம் + Skt. vasanta → த. வசந்தம்] |
வீரவஞ்சி | வீரவஞ்சி vīravañji, பெ. (n.) வஞ்சிக்கொடி; rattan creeper – calamus rotang. [வீரம் + வஞ்சி] |
வீரவண்டயம் | வீரவண்டயம் vīravaṇṭayam, பெ. (n.) வீரவெண்டையம், 1. (திவ். திருப்பா. 17. வ்யா.); பார்க்க;see {}. [வீரம் + வண்டயம்] |
வீரவரை-த்தல் | வீரவரை-த்தல் vīravaraittal, 4 செ.குன்றாவி. (v.t.) திறங் கொண்ட மட்டும் வலுவாக மருந்தைக் கல்வத்திட்டரைத்தல்; to grind well with the best of ability and power. [வீரம் + அரை-,] |
வீரவளை | வீரவளை vīravaḷai, பெ. (n.) வீரரணியும் கடகம்; warrior’s armlet. “வீரவளையை யுடைய தோளாகிய துடுப்பால்” (புறநா. 26. உரை);. [வீரம் + வளை] |
வீரவாகு | வீரவாகு vīravāku, பெ. (n.) 1. ஒன்பது வீரருள் ஒருவர்; a hero in skanda’s army, one of nava-{}. q.v. “செம்மணிப் பாவை தன் னிடத்தில் வீரவாகுவந் துதித்தனன்” (கந்தபு. துணைவர். 25);. 2. காசியில் அரிச்சந்திரனை விலைக்குப் பெற்ற பறையன்; the {} who purchased hariccandra, in Benares. |
வீரவாதம் | வீரவாதம் vīravātam, பெ. (n.) வீரர் உரத்துக் கூறும் ஆண்மைப் பேச்சு; defiant speech of warriors. [வீரம் + Skt. vata → த. வாதம்] |
வீரவான் | வீரவான் vīravāṉ, பெ. (n.) மாவீரன்; warrior, hero. [வீரன் + அவன் → வீரனவன் → வீரவான்] |
வீரவாரம் | வீரவாரம்1 vīravāram, பெ. (n.) வீரரணியும் வெட்சிமாலை (யாழ்.அக.);; garland of {} flowers, won by warriors. [வீரம் + ஆரம்] வீரவாரம்2 vīravāram, பெ. (n.) பேராரவாரம்; tumultuous noise. ‘அங்கு என்ன சிறப்பு? வீரவாரம் செய்கிறார்களே’. [வீரம் + ஆரவாரம்] |
வீரவாளிச்சேலை | வீரவாளிச்சேலை vīravāḷiccēlai, பெ. (n.) வீரவாளிப்பட்டு (வின்.); பார்க்க;see {}. |
வீரவாளிப்பட்டு | வீரவாளிப்பட்டு vīravāḷippaṭṭu, பெ. (n.) ஒவியப்பட்டுச்சீலை வகை (வின்.);; a kind of silk saree printed with curious devices. [வீரவாளி + பட்டு] |
வீரவிரதம் | வீரவிரதம் vīraviradam, பெ. (n.) வீரன் பயிலுங் கொடிய நோன்பு; rigorous austerities, as practised by a warrior. “வீரவிரதமவள் பிடித்து….. மெலிவுற்றார்” (செவ்வந்திப்பு….. சூரவாதி. 139);. [வீரம் + விரதம்] |
வீரவிருட்சம் | வீரவிருட்சம் vīraviruṭcam, பெ. (n.) சேமரம்; marking nut tree. [வீரம் + விருட்சம்] |
வீரவிருஷம் | வீரவிருஷம் vīravirušam, பெ. (n.) வீரசாகி (வின்.); பார்க்க;see {}. [வீரம் + விருஷம். விருஷம் = Skt.] |
வீரவுப்பு | வீரவுப்பு1 vīravuppu, பெ. (n.) பூரணாதி யுப்பு; a kind of salt. [வீரம் + உப்பு] வீரவுப்பு2 vīravuppu, பெ. (n.) கல்லுப்பு (மூ.அ.);; rock-salt. [வீரம் + உப்பு] |
வீரவெட்சிமாலை | வீரவெட்சிமாலை vīraveṭcimālai, பெ. (n.) தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் வெட்சி மாலை சூடிப் பகைவர் நிரை கவர்ந்து வந்த வீரனது வெற்றித் திறத்தைத் பத்து உறுப்புக்களோடு புகழும் நூல் (சது.);; a poem in praise of {} of a hero who, crowned with a wreath of {} flowers, captures his enemy’s cattle, one of 96 pirapandam, q.v. [வீரம் + வெட்சி + மாலை] |
வீரவெண்டையம் | வீரவெண்டையம் vīraveṇṭaiyam, பெ. (n.) 1. வீரக்கழல் பார்க்க;see {}. 2. திருவாரூர்த்தியாகராசரது பட்டாக்கத்தி; sword of the god TIYAGARAJA at {}. “வீரவெண்டையப் பிரதாபர் தியாகராசர்” (தனிப்பா. i, 280. 25);. [வீரம் + வெண்டையம்] வெண்டையம் = வீரர் காலணி. |
வீரவெறி | வீரவெறி vīraveṟi, பெ. (n.) வீரத்தாலான மதர்ப்பு (யாழ்.அக.);; frenzy of heroism. [வீரம் + நெறி] |
வீரவைணவன் | வீரவைணவன் vīravaiṇavaṉ, பெ. (n.) மதப்பற்றுடைய மாலிய சமயத்தோன்; fanatical, uncompromising, vaisnaya having ardent faith in {}. ‘நெறிப்பற்று மிக்க மாலியக் கோட்பாடுடையவன்’. [வீரம் + வைணவன்] |
வீராகம் | வீராகம் vīrākam, பெ. (n.) வீரயாகம் (இலக்.அக.); பார்க்க;see {}. [வீரம் + Skt. yakya → த. யாகம்] |
வீராகரன் | வீராகரன் vīrākaraṉ, பெ. (n.) மாவீரன்; great warrior. “மின்னும் புகழ்க்கு நல்லோனே வீராகரனே” (திருவாலவா. 54, 4);. |
வீராசனம் | வீராசனம் vīrācaṉam, பெ. (n.) 1. ஒக இருக்கை ஒன்பதனுள் இடது தொடையில் வலது தாளையும் வலது தொடையில் இடது தாளையும் வைத்து உட்காரும் இருக்கை வேறுபாடு; hero-posture, a yogic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh, one of nine {}, q.v. 2. போர்க்களம் (யாழ்.அக.);; battle-field. [வீரம் + Skt. {} → த. ஆசனம்] |
வீராசாரன் | வீராசாரன் vīrācāraṉ, பெ. (n.) வீரசைவன் (அரு.நி. 8); பார்க்க;see {}. [வீர + ஆசாரன்] |
வீராசிகா | வீராசிகா vīrācikā, பெ. (n.) நாணற்புல், தருப்பைப்புல்; sacrificial grass. |
வீராணத்தான் | வீராணத்தான் vīrāṇattāṉ, பெ. (n.) வீராணப்பறை கொட்டும் ஐவர் (பஞ்சமர்); வகையினன்; a division of paraiyar who beat the {} drum. [வீராணம் → வீராணத்தான்] |
வீராணம் | வீராணம்1 vīrāṇam, பெ. (n.) ஒருவகைப் பெரியபறை; a large, double drum. “வீராணம் வெற்றிமுரசு” (திருப்பு. 264); தெ. வீராணமு;க. வீராண்ய. [p] வீராணம்2 vīrāṇam, பெ. (n.) வீரநாராயண ஏரி என்பது வழக்கில் சுருங்கி ‘வீராணம்’ என வழங்கும் தென்னாற்காடு மாவட்ட ஏரி; the term {} conscised as (veeranam); a great lake in south Arcot Dt. |
வீராணிக்கிழங்கு | வீராணிக்கிழங்கு vīrāṇikkiḻṅgu, பெ. (n.) 1. பூடுவகை; viper’s grass. 2. வீராணிக் கிழங்கின் வேர்; root of viper’s grass. [வீரணம் + கிழங்கு] |
வீராணிவாழை | வீராணிவாழை vīrāṇivāḻai, பெ. (n.) ஒருவகை வாழை; a kind of plantain. [வீராணி + வாழை] |
வீராதனம் | வீராதனம் vīrātaṉam, பெ. (n.) வீராசனம் (தத்துவப். 107. உரை); பார்க்க;see {}. [வீரம் + .ஆதனம்] |
வீராதிவீரன் | வீராதிவீரன் vīrātivīraṉ, பெ. (n.) வீரர்களுட் சிறந்த வீரன்; hero among heroes. [வீரன் + அதி + வீரன். அதி = மிகுதிப் பொருள் தரும் முன்னொட்டு] |
வீராந்தகன் | வீராந்தகன் vīrāndagaṉ, பெ. (n.) ஒன்பது வீரருள் (கந்தபு. துணைவர். 32);; a hero in skanda’s army, one of nava-{}, q.v. [வீர + அந்தகன்] வீராப்பு __, பெ. (n.); செருக்கு (யாழ்.அக.);; pride, arrogance. மறுவ. இறுமாப்பு. [வீறாப்பு → வீராப்பு] |
வீராபிடேகம் | வீராபிடேகம் vīrāpiṭēkam, பெ. (n.) பகைவென்ற அரசர்க்குச் செய்யும் திருமுழுக்காட்டு (சீவக. 2326. உரை);; ceremony of anointing a victorious king. |
வீராய்-தல் | வீராய்-தல் vīrāytal, 10 செ.குன்றாவி.(v.t.) சிறிதுசிறிதாக ஒன்றுகூட்டுதல் (யாழ்.அக.);; to scrape together; to gather together little by little. [பீராய் → வீராய்-,] |
வீராளிப்பட்டு | வீராளிப்பட்டு vīrāḷippaṭṭu, பெ. (n.) மாத விலக்குக்குரிய சேலை; menrustal cloth. [வீராளி + பட்டு] வீராளிப்பட்டு vīrāḷippaṭṭu, பெ. (n.) குறுநில மன்னர் உடுக்கும் பட்டுத்துணி வகை; a silk cloth specially used for the chieftains of Tamilnadu. வீராளிப்பட்டும்வயிரமோதிரமும் (உவ);. [விராளி+பட்டு] |
வீராவளி | வீராவளி vīrāvaḷi, பெ. (n.) வீரவெறி (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீரம் + ஆவலிப்பு → வீராவளி ஆவலிப்பு = செருக்கு] |
வீராவேசம் | வீராவேசம் vīrāvēcam, பெ. (n.) வீரவெறி (யாழ்.அக.); பார்க்க;see {}. [வீரம் + Skt. {} → த. ஆவேசம்] |
வீரி | வீரி1 vīri, பெ. (n.) 1. வட்டத்திருப்பி; twiner- cissampelos pareira. 2. பங்கம் பாளை; a bitter prostate plant. வீரி2 vīri, பெ. (n.) 1. வீரமுள்ளவள்; heroic woman. 2. காளி (சூடா.);; {}. 3. கொற்றவை (துர்க்கை);; {}. “வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்” (தேவா. 597.6);. 4. சிற்றூர் பெண் தெய்வம்; a village goddess. 5. அரிவாண்முனைப்பூண்டு; sickle-leaf. [வீரம் → வீரி] |
வீரிடம் | வீரிடம் vīriḍam, பெ. (n.) நாவல்,1 (மலை.);; jumoonplum. தெ. நேரெடு. |
வீரிடு-தல் | வீரிடு-தல் vīriḍudal, 20 செ.கு.வி.(v.i.) திடீரெனக் கத்துதல்; to cry out suddenly, to scream, make a sharp, shrill sound. “வீரிட்டரக்கியர்….. அழ” (இராமநா.உயுத். 58);. [வீறிடு → வீரிடு-,] |
வீரிட்டழு-தல் | வீரிட்டழு-தல் vīriṭṭaḻudal, 1 செ.கு.வி.(v.i.) கூக்குரலெடுத்துக் குழந்தைத் திடுமென் றழுதல்; as in children – to cry deeply. |
வீரிணிகா | வீரிணிகா vīriṇikā, பெ. (n.) வில்வம்; a sacred tree – batel tree – Aegle marme losa. |
வீரிப்பால் | வீரிப்பால் vīrippāl, பெ. (n.) எருக்கம் பால்; milk drawn from calotropis gingantia. |
வீரிப்பாளை | வீரிப்பாளை vīrippāḷai, பெ. (n.) பங்கம் பாளை; a bitter ash coloured prostate plant. |
வீரிப்பாவிகம் | வீரிப்பாவிகம் vīrippāvigam, பெ. (n.) எட்டிவிரை; seeds of nuxvomica. |
வீரிமுத்து | வீரிமுத்து vīrimuttu, பெ. (n.) கொட்டை முத்து; castor seed. |
வீரியதேசு | வீரியதேசு vīriyatēcu, பெ. (n.) வல்லாரை; a prostate plant. |
வீரியத்தரிசி | வீரியத்தரிசி vīriyattarisi, பெ. (n.) வாளானரிசி; a kind of rice. |
வீரியன் | வீரியன் vīriyaṉ, பெ. (n.) ஓர் பூண்டு; a plant. |
வீரியன்னம் | வீரியன்னம் vīriyaṉṉam, பெ. (n.) மருள்; a kind of medicinal herb. மறுவ. மரநாக. [p] |
வீரியாடி | வீரியாடி vīriyāṭi, பெ. (n.) நரிப்பயறு; a green pulse. (சா.அக.); |
வீருஅண்டம் | வீருஅண்டம் vīruaṇṭam, பெ. (n.) அண்ட நோய்; a disease of the scrotum. (சாஅக.); |
வீருதம் | வீருதம்1 vīrudam, பெ. (n.) படர்ந்து காய்க்குங் கொடிகள்; spreading plant. (சாஅக.); வீருதம்2 vīrudam, பெ. (n.) மிடைதூறு (வின்.);; bush, small shrub. (சாஅக.); |
வீருதிங்கனி | வீருதிங்கனி vīrudiṅgaṉi, பெ. (n.) அணிற்பிள்ளை; squirrel. [வீறு + திங்கனி] |
வீரெனல் | வீரெனல் vīreṉal, பெ. (n.) திடீரெனக் கத்தும் ஒலிக்குறிப்பு; onom.expr. of a sharp, shrill cry. ‘குழந்தை வீரென்று கத்திற்று’. |
வீரை | வீரை1 vīrai, பெ. (n.) 1. கடல் (பிங்.);; sea. “திரை வீரை” (திருவிசை. திருமாளி. 3, 5);. 2. துன்பம் (பிங்.);; affliction, trouble. 3. மரவகை; a kind of tree. “புகைந்த வீரை யெரிந்தவே” (கலிங். 63);. 4. நெல்லி, 1 (இலக்.அக.); பார்க்க;see nelli. 5. முந்திரிகை2, 1 (இலக்.அக.);; common grape vine. 6. வட்டத்திருப்பி (தைலவ.);; sickle-leaf. 7. மயிர் மாணிக்கம் (பிங்.);; common snakewood buckthorn. வீரை2 vīrai, பெ. (n.) 1. மனைவி (யாழ்.அக.);; wife. 2. தாய் (யாழ்.அக.);; mother. 3. வாழை (சங்.அக.);; plantain. |
வீரையாசுகவிராயர் | வீரையாசுகவிராயர் vīraiyācugavirāyar, பெ. (n.) 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அரிச்சந்திரப் பழங்கதை (புராணம்); இயற்றிய வருமான புலவர்;{} of virai, author of Ariccandira-{}. [வீரை + ஆசுகவிராயர்] |
வீரோதம் | வீரோதம் vīrōtam, பெ. (n.) நல்ல மாதுளை; good pomegranate. |
வீரோத்துங்கன் | வீரோத்துங்கன் vīrōttuṅgaṉ, பெ. (n.) வீரத்தாற் சிறந்தவன் (வின்.);; person famed for his valour. [வீர + உத்துங்கன்] |
வீர்தி | வீர்தி vīrti, பெ. (n.) வேலி (பிங்.);; hedge, fence. |
வீர்வீரெனல் | வீர்வீரெனல் vīrvīreṉal, பெ. (n.) கத்துதற் குறிப்பு; onom. expr. of screaming, shrieking. Ma. Vlr; Kui. verevere. |
வீறல் | வீறல் vīṟal, பெ. (n.) வெடிப்பு; crack. [வீறு → வீறல்] |
வீறாட்டம் | வீறாட்டம் vīṟāṭṭam, பெ. (n.) இறுமாப்பு; arrogance: “வீறாட்ட முற்றழியு மாறாட்டகத் தடியன்” (பேரின்பக்கீர்த். பக். 104);. [வீறு + ஆடு → ஆட்டம்] |
வீறாப்பு | வீறாப்பு vīṟāppu, பெ. (n.) இறுமாப்பு; arrogance. “இந்தமுறுக்கேன் வீறாப்பேன்” (தனிப்பா. i, 88, 173);. |
வீறார்ந்த குரல் | வீறார்ந்த குரல் vīṟārndagural, பெ.(n.) பொரு ளார்ந்த செய்யுள் (வின்); (கம்பீரவாக்கு);: superior style of writing, pregnant with meaning. 2. எடுப்பான குரல்; manly authoritative majestic voice, grave intonation. [வீறார்ந்த+குரல்] |
வீறிடு-தல் | வீறிடு-தல் vīṟiḍudal, 6 செ.கு.வி.(v.i.) வீரிடு-, பார்க்க;see {}. [வீரிடு → வீறிடு-,] |
வீறிட்டழு-தல் | வீறிட்டழு-தல் vīṟiṭṭaḻudal, 2 செ.குன்றாவி. (v.t.) வீர்வீரெனல்; make a shrill. |
வீறிட்டோடல் | வீறிட்டோடல் vīṟiṭṭōṭal, பெ. (n.) நோய் முழுவதுங் குணப்படுதல்; entirely freed from disease. |
வீறு | வீறு1 vīṟudal, 5 செ.கு.வி.(v.i.) 1. மேம்படுதல்; to be distinguished, to be eminent. “போரூர் வீறிவா ழாறுமா முகனே” (திருப்போ. சந். குறுங்கழி. 3, 1);. 2. மிகுதல்; to increase. “வீறுமுண்டி மிசைந்திட” (கந்தபு.தானப். 20);. 3. கீறுதல்; to scratch, as with the point of an instrument, to tear. “நின்மெய்க்கட் குதிரையோ வீறியது” (கலித். 96);. M. {}; K. {}; Tu. {}; Te.{}. வீறு2 vīṟudal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. வெட்டுதல்; to split, cut. “தெய்வவாள் வீறப் பொன்றினன்” (கம்பரா. சம்பா 43);. 2. அடித்தல்; to beat, flog. ‘அவனை நன்றாய் வீறினேன்’ (இ.வ);. வீறு3 vīṟu, பெ. (n.) 1. தனிப்பட்ட சிறப்பு; distinctive excellence. “வீறெய்தி மாண்டார்” (குறள், 665);. 2. வெற்றி; victory. “வீறுபெற வோச்சி” (மதுரைக். 54);. 3. வேறொன்றிற்கில்லா அழகு; unique beauty. “வீறுயர் கலச நன்னீர்” (சீவக. 489);. 4. பொலிவு; splendour. “சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி” (திருமுரு.283);. 5. பெருமை (இல்க்.அக.);; greatness. 6. மிகுதி; abundance, plenty. “வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல” (சேதுபு. திருநாட். 42);. 7. நல்வினை; good fortune, merit. “விசையை யென்றுல கோடிய வீறிலேன்” (சீவக. 1814);. 8. மருந்து முதலியவற்றின் வினை விளை வேகம்; strenth, as of medicines or poisons power. ‘அந்த மருந்துக்கு வீறில்லை’. 9. தன்முனைப்பு; arrogance. “கங்கை வீறடக்கும்….. சடையாய்” (காஞ்சிப். வாணிச். 84);. 10. வெறுப்பு (யாழ்.அக.);; dislike, disgust. 11. ஒளி (வின்.);; light brightness. 12. வேறு; separateness. “விறுவீ றியங்கும்” (புறநா. 173);. 13. தனிமை (வின்.);; solitariness. 14. அடி; blow, strike. ‘நாலு வீறு வீறினான்’. வீறு4 vīṟu, பெ. (n.) 1. மருந்துச் சத்து; essence of medicine. 2. மருந்தின் பயன்விளைவு திறம்; power of medicine. |
வீறுகம் | வீறுகம் vīṟugam, பெ. (n.) கொடி நவ்வல்; creeper-jamune. |
வீறுகுட்டம் | வீறுகுட்டம் vīṟuguṭṭam, பெ. (n.) நலன குட்டநோய்; virulent leprosy. [வீறு + குட்டம்] |
வீறுதணிதல் | வீறுதணிதல் vīṟudaṇidal, பெ. (n.) மருந்தின் விரைவு குறைவுபடல்; abating of the virulence of medicine. [வீறு + தணிதல்] |
வீறுவாதம் | வீறுவாதம் vīṟuvātam, பெ. (n.) விசியு பார்க்க;see {}, a form polemical discussion. “வீறுவாதம் புகலும் வா வாதநோயாளர்க்கும்” (தாயு. மலை வளர்.3); [வீறு + Skt. {} → த. வாதம்] |
வீறெனல் | வீறெனல் vīṟeṉal, பெ. (n.) வீரெனல் பார்க்க;see {}. |
வீற்றம் | வீற்றம் vīṟṟam, பெ. (n.) வீற்று, 1 (வின்.); பார்க்க;see {}. [வீற்று → வீற்றம்] (செல்வி ’77 ஆனி, 545); |
வீற்றா-தல் | வீற்றா-தல் vīṟṟātal, 6 செ.கு.வி. (v.i.) பிரிவுபடுதல்; to be dismembered, to become separate. “மறிந்து சகடம் வீற்றாகி…… வீழ்ந்ததால்” (பாகவ. 10, சகட.2);. [வீற்று + ஆ-,] |
வீற்றினிதிருந்தபெருமங்கலம் | வீற்றினிதிருந்தபெருமங்கலம் vīṟṟiṉidirundaberumaṅgalam, பெ. (n.) பாடாண் திணையின் வகைகளுள் ஒன்றாக வருவதும், அரசன் தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாமையால் தன் மிகுதி தோன்ற இறுமாந்திருத்தலுமாகிய புறத்துறை; “கூற்றிருந்த கொலைவேலான் வீற்றிருந்த விறல்மிகுத்தன்று” (பு.வெ.920);. அரசன் தனது அரியணை மீது செம்மாந்திருந்த வெற்றியைப் பாராட்டியது இத்துறை. எ – டு. அழலவிர் பைங்கண் அரிமான் அமளி நிழலவிர் பூண் மன்னர் நின்றேத்தக் கழல்புனைந்து வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப் பூமலி நாவற் பொழிற்கு. |
வீற்றிரு-த்தல் | வீற்றிரு-த்தல் vīṟṟiruttal, 3 செ.கு.வி.(v.i.) 1. சிறப்போடிருத்தல்; to sit in state or majestically. “கேள்விக்கோ வீற்றிருந்த” (சீவக. 30);. 2. வேறுபாடு தோன்ற இருத்தல்; to sit with unique distinction. “வீற்றிருந் தேழுலகுந் தனிக்கோல் செல்ல” (திவ்.திருவாய். 4, 5, 1);. 3. இறுமாந்திருத்தல் (சூடா.);; to sit proudly. 4. கவலையின்றி யிருத்தல்; to be care-free. “நாடு….. வீற்றிருந்தாண்மோ வென்றான்” (சீவக. 2901);. 5. தனிமையாயிருத்தல் (யாழ்.அக.);; to sit alone. [வீறு → வீற்று + இரு-,] |
வீற்றிருக்கை | வீற்றிருக்கை vīṟṟirukkai, பெ. (n.) அரசிருக்கை; throne. “நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்” (குறள், 789);. [வீற்றிரு → வீற்றிருக்கை] [p] |
வீற்று | வீற்று vīṟṟu, பெ. (n.) 1. வேறுபடுகை (பிங்.);; being different diversity. 2. துண்டு; piece: “வீற்று வீற்றாகி யோடி விழுதலும்” 3. கூறு; division, class. “தந்தை தன்னைய ராயிரு வீற்றும்” (இறை. 28);. 4. தனிமை (வின்.);; solitariness. 5. வளைவு (வின்.);; curve. 6. பக்கம்; side. “இருவீற்று முரித்தே கட்டுங்காலை” (தொல். பொருளியல். 26);. [வீறு → வீற்று] (செல்வி ‘ஆனி’ 77, பக். 545); |
வீற்றுச்சட்டம் | வீற்றுச்சட்டம் vīṟṟuccaṭṭam, பெ. (n.) வளைவுச்சட்டம்; circular frame-work. [வீற்று + சட்டம்] |
வீற்றுத்தெய்வம் | வீற்றுத்தெய்வம் vīṟṟutteyvam, பெ. (n.) உடலிலமர்ந்து காட்சியின்பத்தை யுண்டாக்குந் தெய்வம் (சீவக. 411, உரை);; the Goddess dwelling in the body and giving it beauty. [வீறு → வீற்று + தெய்வம்] |
வீற்றுப்பொருள் | வீற்றுப்பொருள் vīṟṟupporuḷ, பெ. (n.) சில்லறைப் பண்டம் (வின்.);; sundry goods. [வீற்று + பொருள்] |
வீற்றும் | வீற்றும் vīṟṟum, குவி.எ.(adv.) மற்றும்; in addition, besides. “வீற்று மாயிரம் வெங்கணை யுந்தினான்” (கந்தபு.சிங்கமு.402);. [வீற்று → வீற்றும்] (செல்வி. ’77’ ஆனி 545); |
வீற்றுவளம் | வீற்றுவளம் vīṟṟuvaḷam, பெ. (n.) பிறநாட்டுக்கில்லாத செல்வம் (மலைபடு. 68);; natural wealth peculiar to a country. [வீற்று + வளம்] |
வீற்றுவளைவு | வீற்றுவளைவு vīṟṟuvaḷaivu, பெ. (n.) வட்டமான கட்டட வளைவு; circular arch. [வீற்று + வளைவு] [p] |
வீற்றுவீற்றாக | வீற்றுவீற்றாக vīṟṟuvīṟṟāka, வி.எ.(adv.) வெவ்வேறாக; severally, separately. [வீற்றுவிற்று + ஆக] |
வீற்றுவீற்று | வீற்றுவீற்று vīṟṟuvīṟṟu, பெ. (n.) வெவ்வேறு; separateness. “வெளிற்றுப் பனந்துணியின் வீற்று வீற்றுக் கிடப்ப” (புறநா. 35);. “வீற்று வீற்றோடு மயிலினம்போல்” (களவழி. 29);. [வீற்று + வீற்று] |
வீலி | வீலி vīli, பெ. (n.) வெள்ளி; silver. |
வீளெனல் | வீளெனல் vīḷeṉal, பெ. (n.) திடீரெனக்கத்தும் ஓசைக்குறிப்பு; onom. expr. of a shrill, sudden noise or cry. [வீரெனல் → வீளெனல்] |
வீளை | வீளை vīḷai, பெ. (n.) 1. சீழ்க்கை; whistling. “மடிவிடு வீளையர்” (குறிஞ்சிப். 161);. 2. சிள்ளென்ற ஓசை; shrill sound. “வீளைப் பருந்தின்” (அகநா. 33);. 3. ஒலி; noise. “வீளைக் கடுங் கணையால்” (பு.வெ. 10,8);. தெ. ஈல; Ko. {}. |
வீழ | வீழ vīḻ, இடை. (part.) ஓர் உவமவுருபு (தொல். பொருள். 2);; a particle of comparison. |
வீழி | வீழி1 vīḻi, பெ. (n.) 1. நீர்முள்ளி; a thorny plant. 2. அயத்தை ஈயமாக்கி பார்க்க;see {}. 3. மரவிழுது; adventitious root. வீழி2 __, பெ. (n.); மருந்துச்செடி வகை; a straggling shrub with simple oblong leaves and greenish flowers. “வீழிவாயின் கனிவா யொரு மெல்லியல்” (கம்பரா. புனல்விளை. 28);. 2. தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள திருவீழிமிலை என்னும் சிவன் கோயில்; a {} shrine in the Tanjore district. “ஆய வீழி கொண்டீர்” (தேவா. 600, 9);. “காழிமாநகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே” (தேவா. 3); வீழி3 vīḻi, பெ. (n.) இளமையாக்கும் மருந்துச் சரக்குள் ஒன்று; a rujuvenated drug. மறுவ. விழுதி, நாட்டு விழி. |
வீழிச்சாறு | வீழிச்சாறு vīḻiccāṟu, பெ. (n.) விழுதிச்சாறு; juice of {}. |
வீழிச்சூரணம் | வீழிச்சூரணம் vīḻiccūraṇam, பெ. (n.) வீழிவேர்ப்பொடி; powder of the root of {}. |
வீழிப்பட்டை | வீழிப்பட்டை vīḻippaṭṭai, பெ. (n.) விழுதிப்பட்டை; bark of {}. |
வீழியர் | வீழியர் vīḻiyar, பெ. (n.) பார்ப்பனருள் ஒரு வகையினர்; a division of {}. |
வீழிறாழை | வீழிறாழை vīḻiṟāḻai, பெ. (n.) தென்னை பார்க்க;see {}. coconut-palm. “வீழிறாழைக் குழவித்தீநீர்” (பெரும்பாண்.357);. [விழ் + இல் + தாழை] [p] |
வீழ் | வீழ்1 vīḻtal, 4 செ.கு.வி.(v.i.) 1. விழு1-, 1 பார்க்க;see {}. “விசும்பிற் றுளிவீழி னல்லால்” (குறள், 16);. 2. விழு1-, 2,3,4,5,6 பார்க்க;see {}. 3. விழு1-, 7 பார்க்க;see {}. “பயன்மர மெல்லாங் கணியுதிர்ந்து வீழுந்தற்று” (நாலடி, 17);. 4. விழு1-, 8 பார்க்க; {}. “கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர்” (பு.வெ. 5, 4, கொளு.);. 5. விழு1-, 9. பார்க்க;see {}. “வீழ்கதிரென” (மணிமே. 30, 103);. 6. விழு1-, 10, 11 பார்க்க;see {}. 7. விழு1-, 12 பார்க்க;see {}. “ஒருநாளே வெள்ளநிதி வீழும்” (சீவக. 496);. 8. விழு1-, 13,14,15,16,17, 18. பார்க்க;see {}. 9. நீங்குதல்; to be separated. “திருவீழ் மார்பிற் றென்னவர் கோவே” (சிலப். 20, 23);. 10. விழு1-, 19 பார்க்க;see {}. “அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்” (தொல். பொருள். 68);. “தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்” (குறள், 1191);. 11. விழு1, 20, 21, 22, 23, 24, 25, 26 பார்க்க;see {}. 12. விழு1-, 27 பார்க்க;see {}. “வீழ்கயிற் றூசல்”(அகநா. 38);. 13. விழு1-, 28, 29 பார்க்க;see {}. [விள் → வீள் → வீழ் → வீழ்-,] (மு.தா. 69); வீழ்2 vīḻttal, 5 செ.குன்றாவி.(v.t.) 1. வீழச்செய்தல்; to cause to fall. “கூற்றென வேழம் வீழா” (சீவக. 2283);. 2. வீணாகக் கழித்தல்; to let pass, to waste. “வீழ்த்தவா வினையேன் கெடுங் காலமே” (தேவா. 1203, 7);. க. பீழிசு;து. பூரு. வீழ்3 vīḻttal, 4 செ.கு.வி.(v.i.) தாழ விருத்தல்; to hang down. “கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே” (புறநா. 109);. வீழ்4 vīḻttal, 11 செ.கு.வி.(v.i.) நோயால் விழச் செய்தல்; causing to fall as from disease of illness. வீழ்5 __, பெ. (n.); 1. விழுது, 1 பார்க்க;see {}. “நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்கு” (புறநா. 58);. 2. மங்கலநாண்; cord on which the marriage-badge is strung. “அவர் முலையாகத்து….. நெடுவீழ் தாழ” (நெடுநல். 137);. க. பீழல். [வீ → வீழ்] வீழ்6 vīḻ, இடை. (part.) ஓர் உவமவுருபு (தண்டி. 33);; a particle of comparison. |
வீழ்கதி | வீழ்கதி vīḻkadi, பெ. (n.) நிரயம் (நரகம்); (யாழ்.அக.);; hell. [வீழ்1- + கதி] கதி = நிலை. |
வீழ்கதிர் | வீழ்கதிர் vīḻkadir, பெ. (n.) மறையும் கதிரவன் (மணிமே. 30, 103);; setting sun. மறுவ. படுஞாயிறு. [வீழ் + கதிரி] |
வீழ்க்காடு | வீழ்க்காடு vīḻkkāṭu, பெ. (n.) 1. வீழ்ச்சி; swooping. “பருந்தின் வீழ்க்காடு” (இறை. 4, பக். 57);. 2. வீதம்; rate. ‘ஒவ்வொருவனுக்கும் இரண்டு வீழ்க்காடு கொடுத்தான்’. [வீழ் + காடு] |
வீழ்க்கை | வீழ்க்கை vīḻkkai, பெ. (n.) விளக்கு (சுவாதி); நாள் (பிங்.);; the 15th naksatra. |
வீழ்ச்சி | வீழ்ச்சி vīḻcci, பெ. (n.) வீழ்வு பார்க்க;see {}. [வீழ் → வீழ்ச்சி] |
வீழ்ச்சை | வீழ்ச்சை vīḻccai, பெ. (n.) குற்றம் (நாஞ்.);; fault, defect. ம. விழ்ச்ச. ஒருகா: வரு → வீழ் → வீழ்ச்சை. |
வீழ்த்து-தல் | வீழ்த்து-தல் vīḻddudal, 5 செ.குன்றாவி.(v.t.) வீழ்2-, 1 பார்க்க;see {}. “அம்பா லறுத்தறுத்து வீழ்த்தினனே” (பாரத. பதினேழாம். 170);. [வீழ் → வீழ்த்து] |
வீழ்நாள் | வீழ்நாள் vīḻnāḷ, பெ. (n.) வீணாள்; day spent in vain. “வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்” (குறள், 38);. மறுவ. வீண்காலம். [வீழ் + நாள்] |
வீழ்ந்தாடல் | வீழ்ந்தாடல் vīḻndāṭal, பெ. (n.) துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என ஐவகைப்பட்ட கூத்துவகை (சிலப். 3, 14, உரை, பக். 89);; a kind of dance, of which there are five forms, viz., {}. [விழா → வீழ் → வீழ்ந்து + ஆடல்] வீழ்ந்தாடல் vīḻndāṭal, பெ. (n.) மரக்காலா டலுக்குரிய வேறு பெயராக அடியார்க்கு நல்லார் கூறுவது; another name told by Adiyarkkunallar fora dance on stilts. |
வீழ்பிடி | வீழ்பிடி vīḻpiḍi, பெ. (n.) 1. குறைவு; decrease. 2. வெறுப்பு; dislike. [வீழ் + பிடி] |
வீழ்பு | வீழ்பு vīḻpu, பெ. (n.) சுள்ளி; twig, small stick. “நெடுஞ்சினைத் ததர்வீழ் பொடித்துக் கட்டிய வுடையினன்” (மணிமே. 3, 107);. |
வீழ்ப்பிரமி | வீழ்ப்பிரமி vīḻppirami, பெ. (n.) ஒழுக்குப் பிரமியம், தென்னம் பூவால் போம்; gonorrhoea, gleet, it is cured by coconut flower. |
வீழ்மீன் | வீழ்மீன் vīḻmīṉ, பெ. (n.) விண்வீழ்கொள்ளி (தொல். பொருள்.91, உரை);; meteor. மறுவ. எரிமீன். [வீழ் + மீன்] |
வீழ்வு | வீழ்வு vīḻvu, பெ. (n.) 1. விழுகை; falling descending. 2. பாய்ச்சல்; swoop. “பருந்தின் வீழ்வு” (நன். 19);. 3. விருப்பம்; desire. “வீழ்வுகொடு வாளா விழுகின்றாய்” (அருட்பா.i, நெஞ்சறி. 540);. ம. விழு. [வீழ் → வீழ்வு] |
வீழ்வேயம் | வீழ்வேயம் vīḻvēyam, பெ. (n.) கொடிச் சம்பங்கி; climbing sampak. [p] |
வீவு | வீவு vīvu, பெ. (n.) 1. அழிவு; ruin, destruction. “வீவி லாற்றலொர் மீளி” (சீகாளத். பு. கண்ண. 50);. 2. இறப்பு (பிங்.);; death. 3. கெடுகை; eradication, removal. “வீவருங் கடுநோய்” (குறிஞ்சிப். 3);. 4. முடிவு; end. “வீவில் சீரன்” (திவ். திருவாய். 4,5,3);. 5. குற்றம்; defect, flaw. “போகலர் யாவும் வீவுக வியற்றல்” (ஞானா. 53, 18);. 6. இடையீடு; interruption, intervel. “வீவின்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்” (திவ். திருவாய். 7, 5, 11.);. [வீ → வீவு] |