தலைசொல் | பொருள் |
---|---|
ழ | ழḻ, a, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘அ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and அ. [ழ் + அ] |
ழா | ழாḻā, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘ஆ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and ஆ. [ழ் + அ] |
ழி | ழிḻi, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘இ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and இ. [ழ் + இ] |
ழீ | ழீḻī, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘ஈ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and ஈ. [ழ் + ஈ] |
ழு | ழுḻu, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘உ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and உ. [ழ் and உ] |
ழுவகையளவை | ழுவகையளவைḻuvagaiyaḷavai, பெ. (n.) நிறுத்த ளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத் தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல் ஆகிய ஏழுவகையான அளவை முறைகள் (தொல். எழுத் 7, உரை);: seven ways of measuring (செ.அக.);. [ஏழு + வகை + அளவை] |
ழுவான் | ழுவான்ḻuvāṉ, பெ. (n.) கிழக்குத்திசை; The East as the place of sun rise opp to படுவான். எழுவான் தொடங்கிப் படுவான் மட்டும். (செ.அக.);. [எழு → எழுவான்.] |
ழுவாயெழுஞ்சனி | ழுவாயெழுஞ்சனிḻuvāyeḻuñjaṉi, பெ. (n.) பத்தா வது நாண்மீன், கொடுநுகம்.(மகம் (திவா.);, 10th nakşatra (செ.அக.);. [எழுவாய் + எழும் + சனி.] |
ழுவாய் | ழுவாய்ḻuvāy, பெ. (n.) 1. தோற்றம்; beginning. origin source. “எழுவா யிறுவா யிலாதன” (தேவா. 292.5);. 2. முதல்; first “எழுவாயுகத்தி லொரு சிலம்பி” (சீகாளத்.பு.சீகாள1);. 3. முதல் வேற்றுமை; nominative case. “எழுவாயுருபு திரிபில் பெயரே” (நன். 295);. 4. கருத்தன்; [எழு + வாய் – எழுவாய் (தோன்றுதல்);.] ழுவாய்2ḻuvāy, பெ. (n.) 1.கட்டியின் முகம்; point of an abscess. 2. கிளம்புமிடம்; to place wherefrom anything rises. 3. சீழ் எழுமிடம்; the place from which the pus of an abscess approaches the surface. (சா.அக.); [எழு + வாய்.] |
ழுவு-தல் | ழுவு-தல்ḻuvudal, பெ. (n.) 5.செ.குன்றாலி (v.t.); 1. எழச்செய்தல்; to cause to rise, raise. “எழுவுஞ் சீப்பு” (சிலப்.15.215);. 2. ஒசை யெழுப்புதல்; to produce or cal forth sound “எழுவும் முரசு” (சூளா.கலியான. 248);. 3. இசைக் கருவி யினின்று ஒலியெழச் செய்தல்; lo produce musical note, சாத்தியா ழெழுஉம் (சேனா.உரை);. [எழு → எழுவு. எழுவுதல்.] |
ழூ | ழூḻū, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘ஊ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர் மெய்யெழுத்து; the compound of ழ் and ஊ. [ழ் + ஊ] |
ழெள | ழெளḻeḷa, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘ஒள’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ழ் and ஔ. [ழ் + ஒள] |
ழோ | ழோḻō, தமிழ் நெடுங்கணக்கில் ‘ழ்’ என்னும் இடையின மெய்யெழுத்தும் ‘ஒ’ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of ழ் and ஒ. [ழ் + ஒ] |
ழ் | ழ்ḻ, தமிழ் நெடுங்கணக்கில் பதினைந்தாம் மெய்யான இடையெழுத்து; the 15th consonant, a liquid medial. |