தலைசொல் | பொருள் |
---|---|
லகம் | லகம் lagam, பெ.(n.) லகான் பார்க்க;see {}. “முதுகிற் கலணையிட்டு லகமிட்டு” (கொண்டல் விடு.);. [U. lagan → த. லகான்] |
லகரம் | லகரம் lagaram, பெ.(n.) லகாரம் (இ.வ.); பார்க்க;see {}. |
லகரி | லகரி1 lagari, பெ.(n.) பேரலை; great wave. “பொங்கு லகரிச் சாமர மிரட்ட” (பிரபோத.30,42);. [Skt. lahari → த. லகரி1] லகரி2 lagari, பெ.(n.) 1. கசமத்தப் பிசின் (அபின்.);; opium. 2. மயக்கம் உண்டுபண்ணும் பொருள்; intoxicant. 3. மது முதலியவற்றால் உண்டாகும் மயக்கம்; intoxication. |
லகான் | லகான் lakāṉ, பெ.(n.) கடிவாள வார்; rein. [Hind. {} → த. லகான்] |
லகாம் | லகாம் lakām, பெ.(n.) லகான் பார்க்க;see {}. [Skt. {} → த. லகாம்] |
லகாய் | லகாய்1 lakāyttal, செ.கு.வி. (v.i.) செயல் வெற்றி பெறுதல் (காரியசித்தி);; to prosper in an eminent degree, to be successful. [Hind. {} (K.{}); → த. லகாய்-த்தல்] லகாய்2 lakāyttal, செ.கு.வி. (v.i.) 1. தண்டித்தல்; to deal severely, to chastise. 2. நிரம்ப உண்ணுதல்; to eat to satiety. [Hind. {} (K. {}); → த. லகாய்-த்தல்] |
லகாரம் | லகாரம் lakāram, பெ. (n.) இலட்சத்தைக் குறிக்கும் ஒரு சொல்; a term denoting a lakh. “அவருக்கு ஒரு லகாரம் இருக்கும்”. (இ.வ.);. |
லகாவ் | லகாவ் lakāv, வி.எ. (v.imp.) அடி என்னேவல்; to beat. “லகாவ், லகாவ் இந்த லண்டனைப் பாவிச் சண்டாளனை” (பிரதாப.விலா.102);. [Hind. lagav → த. லகாவ்] |
லகிமா | லகிமா lagimā, பெ.(n.) ஒரு பொருளை கனமற்றதாக்கும் ஆற்றல்; the supernatural power of levitation, one of {}, q.v. [Skt. laghiman] |
லகு | லகு lagu, பெ.(n.) த. relief. [Skt. laghu → த. லகு] |
லகுத்வம் | லகுத்வம் lagutvam, பெ.(n.) எளிது (இலேசு);; lightness, ease. [Skt. laghu-tva → த. லகுத்வம்] |
லகுபசணம் | லகுபசணம் lagubasaṇam, பெ.(n.) சிற்றுண்டி light refreshments. |
லகுலாட்சி | லகுலாட்சி lagulāṭci, பெ.(n.) வீணை வகை (பரத. ஒழிபி. 16);; a kind of lute. |
லகுவுபிகுவாய் | லகுவுபிகுவாய் laguvubiguvāy, வி.அ. (adv.) ஏற்றதோர் முறையில்; by some means or other; in anyway possible. |
லகோடா | லகோடா laāṭā, பெ.(n.) 1. மெழுகாற் பூசப்பட்டது (இ.வ.);; that which is besmeared with lac. 2. தாளுறை, காகிதவுறை (வின்.);; envelope of paper, as sealed or wafered. [Hind. {} → த. லகோடா] |
லகோடாப்பற்று | லகோடாப்பற்று laāṭāppaṟṟu, பெ.(n.) மிகச்சிறியவளவு (இ.வ.);; lit. small particles of cooked rice for gumming envelopes. [Hind. {} → த. லகோடா] |
லக்கடியடி-த்தல் | லக்கடியடி-த்தல் lakkaḍiyaḍittal, செ.கு.வி. (v.i.) மிகவும் துன்பப்படுதல்; to be in great difficulties. “அவன் சோற்றுக்கு லக்கடி யடிக்கிறான்” (இ.வ.);. [Skt. {} → த. லக்கடி] |
லக்கம் | லக்கம் lakkam, பெ. (n.) 1. குறியிலக்கு; target, butt, aim. 2. நூறாயிரம்; one lakh, 100,000. “இலக்கத் தொன்பதின்மர்” (கந்தபு.திருவவதார.127);. 3. எண்; number, digit. “அந்தமென்று சொல்வதே…. கணைக்கிலக்கம்” (கந்தபு.சிங்கமு.386);. 4. எண் குறி; numerical figure. “குறியிலக்கமெழுதே” (தைலவ. பாயி.15);. [Skt. {} → த. லக்கம்] |
லக்காடி | லக்காடி lakkāṭi, பெ.(n.) தீயவன், கொடும்பன்; rowdy, rascal. [Ar. {} → த. ; லக்காடி] |
லக்காளி | லக்காளி lakkāḷi, பெ.(n.) ஒருவசைச் சொல் (இ.வ.);; a term of abuse. |
லக்கி | லக்கி lakki, பெ.(n.) நற்பேறு, ஆகூழ், நல்வாய்ப்பு; good luck. [E. lucky → த. லக்கி] |
லக்கிடி | லக்கிடி lakkiḍi, பெ.(n.) விறகு; fire wood. [Hind. {} → த. லக்கிடி] |
லக்கினம் | லக்கினம் lakkiṉam, பெ.(n.) 1. பிறக்கும்போது தோற்றமாயுள்ள (உதயம்); ஒரை (ராசி.);; “ஓடை மாகளிநனானுதயராசி” (கம்பரா. திருவவ.110);. 2. தற்காலத்துத் தோன்றும் ஒரை (உதிக்குமிராசி.); (வின்.);; sign rising at the time. 3. நன்முழுத்தம் (சுபமுகூர்த்தம்); (இரகு.முடிசூ.63);; hour fixed for auspicious ceremonies. த. வ. பிறப்போரை [Skt. lagna → த. லக்கினம்] |
லக்குறடு | லக்குறடு lakkuṟaḍu, பெ.(n.) பழுக்கக் காய்ந்தவற்றைப் பற்றவுதவுங் குறடு; fire- tongs, pincers for handling heated articles. த.வ. பற்றுக்குறடு [U. lag → த. லக்+குறடு] |
லக்குவா | லக்குவா lakkuvā, பெ.(n.) பக்கவலிப்பு நோய் (பட்சவாதம்.);; paralysis. [U. laqwa → த. லக்குவா] |
லக்கோடா | லக்கோடா lakāṭā, பெ.(n.) லகோடா பார்க்க;see {}. |
லக்திக்காரன் | லக்திக்காரன் laktikkāraṉ, பெ.(n.) லக்திகாரன் பார்க்க;see {} [U. {} → த. லக்தி] |
லக்திதாரன் | லக்திதாரன் laktitāraṉ, பெ.(n.) அண்டை நிலக்காரன் (C.G.);, owner of an adjoining land. [U. {} → த. லக்திதாரன்] |
லங்கடா | லங்கடா laṅgaṭā, பெ.(n.) நொண்டி (இ.வ.);; lame person. [Persn. {} → த. லங்கடா] |
லங்கணம் | லங்கணம் laṅgaṇam, பெ.(n.) பட்டினி (இ.வ.);; fasting. [Skt. {} → த. லங்கணம்] |
லங்கனம் | லங்கனம் laṅgaṉam, பெ.(n.) 1. கடல் முதலியன வற்றைக் கடக்கை; crossing, as of the sea. 2. நெறி (நியமம்); தவறுகை; violation of prescribed rules. “சமயலங்கனமுந் தெய்வ நிந்தையுஞ் செய்தனர்” (பெரியபு. திருநாவுக்.83);. 3. லங்கணம் பார்க்க;see {}. [Skt. {} → த. லங்கனம்] |
லங்கரடி-த்தல் | லங்கரடி-த்தல் laṅgaraḍittal, செ.கு.வி. (v.i.) 1. நங்கூரம் போடுதல்; to cast anchor. 2. அந்தரடித்தல்; to turn a somersault. |
லங்கர் | லங்கர் laṅgar, பெ.(n.) நங்கூரம்; anchor. [Persn. {} → த. லங்கர்] |
லங்கர்கானா | லங்கர்கானா laṅgarkāṉā, பெ. (n.) அன்னசாலை (வின்.);; alms-house. [Persn. {} → த. லங்கர்கானா] |
லங்கர்பாய்-தல் | லங்கர்பாய்-தல் laṅgarpāytal, செ.கு.வி (v.i.) நங்கூரம் பற்றுதல்; to be moored, to be at anchor. [Persn. {} → த. லங்கர்] |
லங்குனி | லங்குனி laṅguṉi, பெ.(n.) குதிரையின் பற்களுக்கு உண்டாகும் அசைவு (அசுவசா.7.);; looseness of tooth of a horse. |
லங்கேச்சுரம் | லங்கேச்சுரம் laṅāccuram, பெ.(n.) ஒரு வகை மாத்திரை (பதார்த்த.1224);; a kind of medicinal pill. [Skt. {} → த. லங்கேச்சுரம்] |
லங்கேச்சுரரசம் | லங்கேச்சுரரசம் laṅāssurarasam, பெ.(n.) மருந்து வகை (பைஷஜ.154);; a kind of medicinal preparation. [Skt. {}+ rasa → த. லங்கேச்சுரரசம்] |
லங்கோடா | லங்கோடா laṅāṭā, பெ.(n.) லங்கோடு பார்க்க;see {}. |
லங்கோடி | லங்கோடி laṅāṭi, பெ.(n.) லங்கோடு (இ.வ.); பார்க்க;see {}. [Hind. {} → த. லங்கோடி] |
லங்கோடு | லங்கோடு laṅāṭu, பெ.(n.) சல்லடம் (இ.வ.);; strip of cloth fitted to the loin, as of a wrestler. [Hind. {} → த. லங்கோடு] |
லசுகர் | லசுகர்1 lasugar, பெ.(n.) 1. மாலுமி; lascar, sailor. 2. உதவியாள் முதலியோர்; labourer, tent-pitcher. [E. lascar → த. லசுகர்] லசுகர்2 lasugar, பெ.(n.) படை; army. [Persn. {} → த. லசுகர்] |
லசுதர் | லசுதர் lasudar, பெ.(n.) ஒப்பனைத் தொங்கல்; prismatic glass pendants of a chandelier. [E.lustre → த. லசுதர்] |
லசுனி | லசுனி lasuṉi, பெ.(n.) மாணிக்க குணத்தொன்று; a property of rubies. “குழியும் லசுனியு முடையது” (S.l.l.ii,81);. |
லச்சாதத்தம் | லச்சாதத்தம் laccātattam, பெ.(n.) நன்னாளில் தரப்படும் நன்கொடை; customary presents made to relations or friends on auspicious occasions. [Skt. lajja+ → த. லச்சாதத்தம்] |
லச்சி | லச்சி1 lacci, பெ.(n.) குப்பைக்காரி (இ.வ.);; scavenger woman. [T. lacci → த. லச்சி1] லச்சி2 laccittal, செ.கு.வி. (v.i.) கூச்சமடைதல் (தக்கயாகப்.326,உரை.);; to be shy. [Skt. laj → த. லச்சி2-த்தல்] |
லச்சை | லச்சை1 laccai, பெ.(n.) 1. கூச்சம் (பிங்.);; bashfulness, coyness, shyness. 2. வெட்கம்; shame. [Skt. {} → த. லச்சை1] லச்சை2 laccai, பெ.(n.) லச்சி1 பார்க்க;see lacci1. லச்சை3 laccai, பெ.(n.) தொந்தரவு; trouble, annoyance. “என்னை லச்சை பண்ணாதே”. |
லஞ்சம் | லஞ்சம் lañjam, பெ.(n.) கையூட்டு (பரிதானம்);; bribe. [Skt. {} → த. லஞ்சம்] |
லஞ்சாகோர் | லஞ்சாகோர்1 lañjāār, பெ.(n.) கையூட்டு (பரிதானம்); வாங்குவோன்; one who habitually receives bribes. [Skt. {} + U. {} → த. லஞ்சாகோர்1] லஞ்சாகோர்2 lañjāār, பெ.(n.) தீயொழுக்கமுள்ள பெண்; loose woman. |
லஞ்சாக்கொடுக்கு | லஞ்சாக்கொடுக்கு lañjākkoḍukku, பெ.(n.) பரத்தையின் (அவிசாரி); மகன்; whoreson. |
லஞ்ச் | லஞ்ச் lañj, பெ.(n.) நண்பகலுணவு; meal taken in the middle of the day. த. வ. நள்ளுணா. [E. lunch → த. லஞ்ச்] |
லடாய் | லடாய் laṭāy, பெ. (n.) 1. சண்டை; fight, fighting. 2. வாய்க்கலகம்; bickering, abusive quarrel. [Hind. {} → த. லடாய்] |
லடி | லடி laḍi, பெ.(n.) சுமார் 440 கசவளவுள்ள சரிகைக் கண்டு; skein of lace, nearly 440 yards. [Hind. {} → த. லடி] |
லடு | லடு laḍu, பெ.(n.) 1. கப்பலில் கயிறு ஒழுங்காகச் செல்லுதற் பொருட்டு அமைத்த கருவி வகை; fairlead; thimble or cringle to guide a rope. 2. கடலின் ஆழமளப்பதற்கு விடப்படுங் கயிற்றில் கட்டியிருக்கும் ஈயக்குண்டு; plummet. [Hind. {} → த. லடு] |
லட்சகம் | லட்சகம் laṭcagam, பெ.(n.) இலக்கணப் பொருளில் வருஞ்சொல்; word in its secondary signification. [Skt. {} → த. லட்சகம்] |
லட்சணம் | லட்சணம் laṭcaṇam, பெ.(n.) இலக்கணம் பார்க்க;see {}. “சைதன்யம் சலட்சணமாயினும் விலட்சணம்” (கைவல். தத்துவ.1.உரை);. [Skt. {} → த. லட்சணம்] |
லட்சணை | லட்சணை laṭcaṇai, பெ.(n.) இலக்கணை பார்க்க;see {}. secondary significative capacity of a word. [Skt. {} → த. லட்சணை] |
லட்சதீபம் | லட்சதீபம் laṭcatīpam, பெ.(n.) கோயிலில் நூறாயிரம் (இலட்சம்); விளக்குகள் ஏற்றும் திருவிழா; festival of illuminating a temple, by burning 1,00,000 lights. [Skt. {} → த. லட்ச + தீபம்] |
லட்சம் | லட்சம் laṭcam, பெ.(n.) நூறாயிரம் (வின்.);; lakh. [Skt. {} → த. லட்சம்] |
லட்சாதிபதி | லட்சாதிபதி laṭcādibadi, பெ.(n.) நூறாயிரம் உருவாய்க்கு (ரூபாய்); மேற் பெறுமானமுள்ள சொத்து(ஆஸ்தி);யுடையவன். [Skt. {}+adhipati → த. லட்சாதிபதி] |
லட்சியம் | லட்சியம் laṭciyam, பெ.(n.) குறிக்கோள்; aim. [Skt. {} → த. லட்சியம்] |
லட்சுமி | லட்சுமி laṭcumi, பெ.(n.) இலக்குமி பார்க்க;see ilakkumi. [Skt. laksmi → த. லட்சுமி] |
லட்சுமி நரசிம்மன் | லட்சுமி நரசிம்மன் laṭsuminarasimmaṉ, பெ.(n.) திருமகளைத் தழுவிய கோலத்துடன் உள்ள நரசிம்ம வடிவம்; Narasimha in his pose of embracing Laksmi. |
லட்சுமி நாராயணன் | லட்சுமி நாராயணன் laṭcuminārāyaṇaṉ, பெ.(n.) திருமகளைத் தழுவிய நிலையில் காணப்படுந் திருமாலின் வடிவம்;{} in his pose of embracing {}. |
லட்சுமிகடாட்சம் | லட்சுமிகடாட்சம் laṭcumigaṭāṭcam, பெ.(n.) திருமகளின் கடைக்கண்; prosperity, as due to the grace of Laksmi. |
லட்சுமிபஞ்சமி | லட்சுமிபஞ்சமி laṭcumibañjami, பெ.(n.) திருமகளுக்குரிய (சித்திர);மாதத்து முழுநிலா நாளுக்கு அடுத்த ஐந்தாம் நாள்; the fifth titi of the bright fortnight in the lunar month of caittiram, as sacred to {}. |
லட்டு | லட்டு laṭṭu, பெ.(n.) இன்னுருண்டை; ball- shaped sweet meat. [Skt. laddu → த. லட்டு] |
லண்டன் | லண்டன்1 laṇṭaṉ, பெ.(n.) 1. கல்லுளிமங்கன் பார்க்க;see {}. 2. சண்டி; stubborn man. 3. நெறி கெட்டவன்; man of loose conduct. “இந்த லண்டனை… நன்றாய் லகாவ்” (பிரதாப.விலா.102);. [K. lambani → த. லண்டன்] லண்டன்2 laṇṭaṉ, பெ.(n.) ஆண்குறி; membrum virile. [Hind. {} → த. லண்டன்] |
லண்டன்சீனி | லண்டன்சீனி laṇṭaṉcīṉi, பெ.(n.) வெள்ளைச் சர்க்கரை; white sugar. [E. London → த. லண்டன்+சீனி] |
லண்டி | லண்டி laṇṭi, பெ.(n.) 1. சண்டி; stubborn. intractable woman. 2. தீயநடத்தையுடைய பெண்; woman of loose conduct. |
லண்டு | லண்டு laṇṭu, பெ.(n.) சண்டித்தனம் (இ.வ.);; stubbornness. [Hind. launda → த. லண்டு] |
லதாக்கிருகம் | லதாக்கிருகம் latāggirugam, பெ.(n.) கொடியால் அமைந்த வீடு; creeper – bower. [Skt. {} → த. லதாக்கிருகம்] |
லதாங்கி | லதாங்கி latāṅgi, பெ.(n.) 1. கொடி போன்ற உடலுள்ள பெண்; woman of siender,creeper like form. 2. ஒருவகைப்பண்; a specific melody type. [Skt. {} → த. தொங்கி] |
லதாவேட்டிதம் | லதாவேட்டிதம் ladāvēṭṭidam, பெ.(n.) கொடி போலச் சுற்றித் தழுவும் (ஆலிங்கன); வகை; a mode of sexual embrace, lickened to a creeper clinging round a tree. [Skt. {} → த. லதாவேட்டிதம்] |
லதி | லதி ladi, பெ. (n.) கழி; staff cane, cudgel. [U. {} → த. லதி] |
லதை | லதை ladai, பெ.(n.) இலதை1,1, பார்க்க;see ilatai, [Skt. {} → த. லதை] |
லத்தா | லத்தா lattā, பெ. (n.) உதை; blow, kick. “நான் உனக்கு ஒரு லத்தா கொடுப்பேன்” (இ.வ.);. [Hind. lat → த. லத்தா] |
லத்தாடு | லத்தாடு lattāṭu, பெ.(n.) நோய்; vexation, agitation. [K. {} → த. லத்தாடு] |
லத்தி | லத்தி1 latti, பெ.(n.) குதிரை, யானை, கழுதை, ஒட்டகம் இவற்றின் சாணி; dung of horses, asses, elephants, camels. த.வ. புட்டை, விட்டை [T. K. laddi → த. லத்தி] லத்தி2 latti, பெ.(n.) லதி பார்க்க;see lati. |
லத்தி போடு-தல் | லத்தி போடு-தல் laddipōṭudal, செ.கு.வி. (v.i.) மிகவும் அஞ்சுதல்; பயப்படுதல்; to be afraid. |
லத்தீன் | லத்தீன் lattīṉ, பெ.(n.) இத்தாலிய தேசத்தில் முற்காலத்தில் வழங்கின மொழி; [E. latin → த. லத்தீன்] |
லத்தை | லத்தை1 lattai, பெ.(n.) குறித்த விண்மீன்களில் நிலவோடு தீயகோள் கூடுவதாலுண்டாம் தீப்பயன் (பஞ்.);; evil effect due to the conjunction of a malefic planet and the moon in particular {}. லத்தை2 lattai, பெ.(n.) அருள்; mercy, compassion “லத்தையுற் றருள்வாய்” (கந்தரந்.6);. [Perh. {} → த. லத்தை] |
லபக்கெனல் | லபக்கெனல் labakkeṉal, பெ.(n.) 1. விரைவுக் குறிப்பு; suddenness. 2. விழுங்குதற்குறிப்பு; gulping. [U. lapak → த. லபக்கெனல்] |
லபி-த்தல் | லபி-த்தல் labittal, 4 செ.கு.வி. (v.i.) பெறுதல், வெற்றியடைதல்; to be gained, obtained, to accure, to succeed, come to a successful issue. “காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம்” (அறப்.சத.76);. பெறுதல்; to obtain. “ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து” (கோயிலொ.2);. [Skt. labh → த. லபி] |
லபோலபோபண்டிகை | லபோலபோபண்டிகை lapōlapōpaṇṭigai, பெ.(n.) காமன் பண்டிகை (அகங்கையால் வாயிலடித்துக் கொள்ளும் திருவிழா);; the spring festival in honour of {}, as the occasion in which the beating of the open mouth with the palm is a marked feature. |
லபோலபோவெனல் | லபோலபோவெனல் lapōlapōveṉal, பெ. (n.) திறந்துள்ளவாயால் துக்கங் காரணமாகக் கையால் அடித்துக் கொள்ளுதற்குறிப்பு; expression of beating the open mouth with the palm of the handon account of sorrow. |
லப்தகானி | லப்தகானி laptakāṉi, பெ.(n.) பஞ்சதந்திரத்துள் பேரிழத்தலைப்பற்றிக் கூறுவதான நான்காம் பகுதி; artta-{}, the fourth section of {}, treating of the loss of what was gained. [Skt. labdha+{} → த. லப்தகானி] |
லப்தம் | லப்தம் laptam, பெ.(n.) அடையப் பெற்றது; gain, acquisition, that which is obtained. [Skt. labdha → த. லப்தம்] |
லப்பக்கத்தி | லப்பக்கத்தி lappakkatti, பெ.(n.) மக்கு வைக்குங் கருவி; putty-knife. |
லப்பம் | லப்பம் lappam, பெ.(n.) பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி இசைத்தற்குரிய மக்கு; putty, a kind of cement used to fill up cracks in wood, etc. த. வ. மக்கு [Prob. {} → த. =லப்பம்] |
லப்பை | லப்பை lappai, பெ.(n.) தென்னிந்தியக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் தமிழ்ப்பேசும் முகம்மதியர்; a class of Tamil speaking Muhammadans found chiefly on the coasts of south India. |
லம்பாடி | லம்பாடி lambāṭi, பெ.(n.) 1. அலைந்து திரியும் ஒரு சாதி; a wandering caste. 2. ஊர் ஊராய்த் திரிவோன்; vagrant. 3. மாட்டுச்சாதி வகை; a breed of cattle. [T. {} → த. லம்பாடி] [K. {} → த. லம்பாடி] |
லம்பு | லம்பு1 lambu, பெ.(n.) தொந்தரவு; trouble. லம்பு2 lambudal, பெ.(n.) அசைதல்; to be unsteady to shake. |
லயம் | லயம் layam, பெ.(n.) இலயம் பார்க்க;see ilayam. “ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில்” (தாயு.சித்தர்.3);. [Skt. laya → த. லயம்] |
லயாவத்தை | லயாவத்தை layāvattai, பெ.(n.) உலகத்தை ஒடுக்கு நிலை; stage of involuion of the universe; stage of absorption of the universe by the supreme being. [Skt. laya+{} → த. லயாவத்தை] |
லயி-த்தல் | லயி-த்தல் layittal, 4 செ.கு.வி. (v.i.) ஒன்றுதல்; chose intimacy. [Skt. lay → த. இலயி] |
லலனாமணி | லலனாமணி lalaṉāmaṇi, பெ.(n.) லலனை பார்க்க;see {}. [Skt. {} → த. லலனாமணி] |
லலனை | லலனை lalaṉai, பெ.(n.) பெண்; woman. [Skt. {} → த. லலனை] |
லலாடம் | லலாடம் lalāṭam, பெ.(n.) 1. நெற்றி; forehead. 2. மணி முடி (கிரீட);வுறுப்பு வகை; a part of the crown. [Skt. {} → த. லலாடம்] |
லலாடலிபி | லலாடலிபி lalāṭalibi, பெ.(n.) தலையெழுத்து; hand writing of fate. [Skt. {} + lipi → த. லலாடலிபி] |
லலிதாசகசுரநாமம் | லலிதாசகசுரநாமம் lalitāsagasuranāmam, பெ.(n.) உமா தேவியின் ஆயிரந்திருநாமக் கோவை. (தக்கயாகப்.76,விசேடக்.);; the thousand holy names of the Goddess {}. [Skt.{} → த. லலிதாசகசுரநாமம்] |
லலிதை | லலிதை lalidai, பெ.(n.) 1. உமை;{}. 2. பண் வகை; a specific melody-type. [Skt. {} → த. லலிதை] |
லளிதம் | லளிதம் laḷidam, பெ.(n.) 1. திருவிளையாட்டு; wantonness, dalliance, sport. “சிட்டர் பரிபால லளிதக்கார” (திருப்பு.55);. 2. கருணை; grace, charm. 3. இனிமையான; sweetness. 4. எளிமை; case, facility. 5. சிவாகமத்துள் ஒன்று (சைவச.பொது.335,உரை.);; one of 28 {}. [Skt. lalita → த. லளிதம்] |
லளிதை | லளிதை laḷidai, பெ.(n.) லலிதை,1. (நாமதீப.24); பார்க்க;see lalitai. [Skt. {} → த. லளிதை] |
லவக்குலவக்கெனல் | லவக்குலவக்கெனல் lavakkulavakkeṉal, பெ. (n.) 1. ஒட்டக்குறிப்பு; a galloping sound. 2. விரைந்து விழுங்குதற்குறிப்பு; gobbing in eating. |
லவங்கம் | லவங்கம் lavaṅgam, பெ.(n.) இலவங்கம் பார்க்க;see {}. [Skt. {} →. த. லவங்கம்] |
லவடா | லவடா lavaṭā, பெ.(n.) ஆண்குறி; membrum virile. [Hind. {} → த. லவடா] |
லவணசமுத்திரம் | லவணசமுத்திரம் lavaṇasamuttiram, பெ.(n.) உப்புக்கடல் பார்க்க;see uppukkadal. “அமிர்து கடைந்து லவண சமுத்திரத்தென உணர்க” (தக்கயாகப்.248.உரை);. [Skt. lavana+ → த. லவண + சமுத்திரம்] |
லவணம் | லவணம் lavaṇam, பெ.(n.) உப்பு; salt. [Skt. lavana → த. லவணம்] |
லவண்டி | லவண்டி lavaṇṭi, பெ.(n.) லண்டி பார்க்க;see {}. [Hind. {} → த. லவண்டி] |
லவம் | லவம் lavam, பெ.(n.) 1. பசுவின் வால் மயிர்; hair of cow’s tail. “குசலவங்களாற் றுடைத்துக் குறிக்கொண்டார்கள்” (உத்தரரா.இலவ.75);. 2. காலவகை; a variety of {}. “கணமோரெட்டும் லவ மெனப்படுமே” (பரத.தாள.27);. 3. மிகச் சிறுபகுதி; little, small particle. [Skt. lava → த. லவம்] |
லவலேசம் | லவலேசம் lavalēcam, பெ.(n.) சிற்றளவு; smallest degree. “நிலைகாணோம் லவலேசம்” (இராமநா.ஆரணிய.3);. [Skt. lava+ {} → த. லவலேசம்] |
லவாடி | லவாடி lavāṭi, பெ.(n.) வேசி; prostitute. |
லவாலவா | லவாலவா lavālavā, பெ.(n.) லவாலவா என்று பாடிக் கொண்டு பந்தடிக்கும் சிறுவர் விளையாட்டு; children’s game of ball, accompanied by singing {}. |
லவுக்கார் | லவுக்கார் lavukkār, பெ.(n.) சன்னமாய்ப் பூசாத சுண்ணாம்புப் பூச்சு; rough plastering with chunam. [U. {} → {} → த. லவுக்கார்] |
லவுண்டி | லவுண்டி lavuṇṭi, பெ.(n.) லண்டி பார்க்க;see landi. |
லவ்வாலவ்வா | லவ்வாலவ்வா lavvālavvā, பெ. (n.) லவாலவா (இ.வ.); பார்க்க;see {}. |
லாகவம் | லாகவம் lākavam, பெ.(n.) லகுத்துவம் பார்க்க;see laguttuvam. [Skt. {} → த. லாகவம்] |
லாகினி | லாகினி lākiṉi, பெ.(n.) தந்திர சாத்திரங்களிற் கூறப்பட்ட ஒரு சார் பெண் கடவுள் (செ.அ.);; a class of goddesses mentioned in {} lore. [Skt. {} → த. லாகினி] |
லாகிரி | லாகிரி lākiri, பெ.(n.) லகரி2 பார்க்க;see lakari. |
லாகு | லாகு lāku, பெ.(n.) லகுத்வம் (வின்.); பார்க்க;see lakutvam. |
லாகுலுக்சான் | லாகுலுக்சான் lākulukcāṉ, பெ.(n.) லாபநட்டம்(செ.அ.);; profit and loss. [Hindi. {} → த. லாகுலுக்சான்] |
லாகை | லாகை1 lākai, பெ.(n.) பாங்கு; ஒயில்; manner, style. [l. {} → த. லாகை] லாகை2 lākai, பெ.(n.) அந்தரடிக்கை (உ.வ.); (செ.அ.);; somersault. [Skt. {} → த. லாகை] |
லாக்அப் | லாக்அப் lākap, பெ.(n.) சிறைவைப்பு; put into a prison. [E. lock-up → த. லாக்அப்] |
லாக்குப் போடுதல் | லாக்குப் போடுதல் lākkuppōṭudal, செ.கு.வி. (v.i.) மிகவும் துன்பப்படுதல் (செ.அ.);; to be in great straits, to be hard put to it. |
லாசார்படு-தல் | லாசார்படு-தல் lācārpaḍudal, செ.கு.வி. (v.i.) உதவியற்று வருந்துதல்; to be helpless, forlorn. [Hind. {} → த. லாசார்பாடு-தல்] |
லாசுபறுவான் | லாசுபறுவான் lācubaṟuvāṉ, பெ. (n.) கப்பற்பாய்தாங்குங்கட்டை (செ.அ.);; yard arm. |
லாடக்காரன் | லாடக்காரன் lāṭakkāraṉ, பெ.(n.) லாடங்கட்டுபவன் (செ.அ.);; farrier. |
லாடங்கட்டு-தல் | லாடங்கட்டு-தல் lāṭaṅgaṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) குதிரை முதலியவற்றின் கால்கட்கு இரும்புத் தகடு தைத்தல் (செ.அ.);; to shoe as a horse. |
லாடசங்கிலி | லாடசங்கிலி lāṭasaṅgili, பெ.(n.) லாடர் சங்கிலி (இ.வ.); பார்க்க (செ.அ.);;see {}. |
லாடன் | லாடன் lāṭaṉ, பெ.(n.) இலாடன் பார்க்க (செ.அ.);;see {}. [Skt. {} → த. லாடன்] |
லாடம் | லாடம்1 lāṭam, பெ.(n.) ஒரு தேசம்; a country. [Skt. {} → த. லாடம்] லாடம்2 lāṭam, பெ.(n.) a country. இலாடம்2 பார்க்க (செ.அ.);;see {}. [Skt. {} → த. லாடம்] லாடம்3 lāṭam, பெ.(n.) forehead. இலாடம்3 பார்க்க (செ.அ.);;see {}. [Skt. {} → த. லாடம்] லாடம்4 lāṭam, பெ.(n.) குதிரை முதலியவற்றின் குளம்புகளுக்கு அடிக்கும் இரும்புத்தகடு; horse shoe. [U. {} → த. லாடம்] |
லாடர்சங்கிலி | லாடர்சங்கிலி lāṭarcaṅgili, பெ.(n.) இலாடசங்கிலி பார்க்க (செ.அ.);;see {]. [Skt. {} → த. லாடர்சங்கிலி] |
லாடு | லாடு lāṭu, பெ. (n.) a ball shaped sweet meat. இலட்டு பார்க்க;see {}. [Skt. {} → த. லாடு] |
லாடுலகாடு | லாடுலகாடு lāṭulakāṭu, பெ.(n.) தொந்தரவு; trouble scrape, difficulty. “லாடுலகாடு யார் படுகிறது?” (செ.அ.);. |
லாட்டரி | லாட்டரி lāṭṭari, பெ.(n.) ஏலச்சீட்டு; lottery. [E. lottery → த. லாட்டரி] |
லாண்டரி | லாண்டரி lāṇṭari, பெ.(n.) வெளுப்பகம்; laundry. [E. {} → த. லாண்டரி] |
லாத்தித்தள்ளு-தல் | லாத்தித்தள்ளு-தல் lāddiddaḷḷudal, 5 செ.கு.வி. (v.i.) கிறுகிறுத்து விழச்செய்தல் (செ.அ.);; to make dizzy or giddy. |
லாத்து | லாத்து1 lāttu, பெ.(n.) லத்தா பார்க்க (செ.அ.);;see {}. லாத்து2 lāddudal, செ.கு.வி. (v.i.) 1. புடைத்தல்; to belabour, beat heavily. 2. பிடித்தலைத்தல்; to seize and jerk to and fro. 3. நடை தடுமாறுதல் (செ.அ.);; to tumble, to be shaky in gait. லாத்து3 lāddudal, செ.கு.வி. (v.i.) to walk about, to ride about. உலாத்து1 பார்க்க;see {}. |
லாந்தர் | லாந்தர் lāndar, பெ.(n.) ஒரு வகைக் கண்ணாடி விளக்கு (செ.அ.);; lantern. த. வ. கைவிளக்கு [Fr. Lanterne → த. லாந்தர்] |
லாந்தல் | லாந்தல் lāndal, பெ.(n.) லாந்தர் பார்க்க (செ.அ.);;see {}. |
லாந்து | லாந்து1 lāndu, பெ.(n.) 1. பரவுகை; spreading out. 2. பாய்ச்சல்; peunce. “ஒரே லாந்தாக லாந்திப்பிடி” (செ.அ.);. லாந்து2 lāndu, பெ.(n.) கல்லைக் குத்து நிலையில் அடுக்குதல் (செ.அ.);; terracing, setting bricks on edge. [Hind. {} → த. லாந்து] லாந்து3 lāndudal, 5 செ.கு.வி. (v.i.) மேற்றளம் போடுதல் (செ.அ.);; to put up a terrace. |
லாபநட்டம் | லாபநட்டம் lāpanaṭṭam, பெ.(n.) வரவும் இழப்பும் (செ.அ.);; profit and loss. த. வ. ஆகுபோகு [Skt. {} → த. லாபநட்டம்] |
லாபம் | லாபம் lāpam, பெ.(n.) இலாபம் பார்க்க;see {}. [Skt. {} → த. லாபம்] |
லாபலோபம் | லாபலோபம் lāpalōpam, பெ.(n.) லாபநட்டம் பார்க்க;see {}. [Skt. {} → த. லாபலோபம்] |
லாயக்கு | லாயக்கு lāyakku, பெ.(n.) 1. தகுதி; fitness, suitbleness. 2. செருக்கு; haughtiness. [Arab. {} → த. லாயக்கு] |
லாயம் | லாயம் lāyam, பெ.(n.) குதிரைகட்டுமிடம் (செ.அ.);; stable for horse. [I. {} → K. {} → த. லாயம்] |
லாயர் | லாயர் lāyar, பெ.(n.) வழக்குரைஞர்; lawyer. [E. lawyer → த. லாயர்] = லாரி lorry, பெ.(n.); சரக்குந்து; lorry. [E. lorry → த. லாரி] |
லாலனம் | லாலனம் lālaṉam, பெ.(n.) லாலனை பார்க்க;see {}. [Skt. {} → த. லாலனம்] |
லாலனை | லாலனை lālaṉai, பெ. (n.) 1. கொஞ்சுகை; fondling. curessing, coaxing. 2. தாங்குகை (செ.அ.);; support. [Skt. {} → த. லாலனை] |
லாலா | லாலா lālā, பெ.(n.) 1. வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடியேறிய இந்து வணிகன்; a caste of Hindu merchants who migrated into the Tamil country from Northern India. 2. ஒரு சிறப்புப் பெயர்; a term of respect. 3. ஒரு செல்லப்பெயர்; a term of endearment. “நந்தலாலா” (செ.அ.);. [Hind. {} → த. லாலா] |
லாலாடிகம் | லாலாடிகம் lālāṭigam, பெ.(n.) தழுவுகை, ஆலிங்கன வகை (செ.அ.);; a mode of sexual embrace. [Skt. {} → த. லாலாடிகம்] |
லாலி | லாலி1 lāli, பெ.(n.) கந்தை (செ.அ.);; rag. [Prob. {} → த. லாலி] லாலி2 lāli, பெ.(n.) திருமணம் முதலியவற்றிற் பாடப்படுவதும் அடிதோறும் லாலி என்று முடிவதுமான மங்களப் பாட்டு வகை; song consisting of eulogies, compliments, congratulations, etc. sung at weddings and other auspicious occasions, every line; endding in {}. 2. இச்சகவார்த்தை; flattery, adulation. 3. தாலாட்டு (செ.அ.);; lullaby. [T.K. {} → த. லாலி] |
லாளிதம் | லாளிதம் lāḷidam, பெ.(n.) அழகு; beauty, grace, charm. “மதகும்பலாளிதக் கரியென” (திருப்பு.194);. [Skt. {} → த. லாளிதம்] |
லாவணம் | லாவணம் lāvaṇam, பெ. (n.) இலாவணம் பார்க்க;see {}. [l. {}, K. Lavana → த. லாவணம்] |
லாவணி | லாவணி lāvaṇi, பெ.(n.) மராட்டிய மொழியிலுள்ள இசைப்பாட்டு வகை (செ.அ.);; a Maharatta melody. [Mhr. {} → த. லாவணி] |
லாவண்யம் | லாவண்யம் lāvaṇyam, பெ.(n.) எழில், ஒளிரும் அழகு (செ.அ.);; beauty, grace; loveliness; charm. [Skt. {} → த. லாவண்யம்] |
லாவண்யார்ச்சிதம் | லாவண்யார்ச்சிதம் lāvaṇyārccidam, பெ.(n.) இலாவண்ணியார்ச்சிதம் பார்க்க;see {}. [Skt. {} → த. லாவண் யார்ச்சிதம்] |
லாவாதேவி | லாவாதேவி lāvātēvi, பெ.(n.) லேவாதேவி பார்க்க;see {}. த. வ. கொள்கொடை, கொடுக்கல் வாங்கல் [U. {} → த. லாவாதேவி] |
லாவு-தல் | லாவு-தல் lāvudal, 5 செ.கு.வி. (v.i.) 1. பரவுதல்; to spread around. 2. இறாஞ்சுதல் (செ.அ.);; to pounce or dart upon. |
லாவுபண்ணு-தல் | லாவுபண்ணு-தல் lāvubaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.) 1. வழக்காடுதல்; to be constantly questioning and disputing. 2. செருக்குறுதல் (செ.அ.);; to be have in a haughty manner. [E. law → த. லாவு+பண்ணுதல்] |
லிகிதம் | லிகிதம் ligidam, பெ.(n.) இலிகிதம் பார்க்க;see iligitam. [Skt. likhita → த. லிகிதம்] |
லிங்கபுராணம் | லிங்கபுராணம் liṅgaburāṇam, பெ.(n.) A {}. இலிங்கபுராணம் (தக்கயாகப். 340. உரை); பார்க்க;see ilinga-{}. |
லிங்கம் | லிங்கம் liṅgam, பெ.(n.) இலிங்கம் பார்க்க;see {}. “விழுந்தது லிங்கம்” (திருமந். 455);. [Skt. linga → த. லிங்கம்] |
லிங்காபட்டியம் | லிங்காபட்டியம் liṅgāpaṭṭiyam, பெ.(n.) அமரகோசம் என்ற வடமொழி நிகண்டுக்கு லிங்காபட்டர் எழுதிய உரை (செ.அ.);; a commentary on {} by {}. [Skt. {} → த. லிங்காபட்டியம்] |
லிங்காயத்து | லிங்காயத்து liṅgāyattu, பெ.(n.) வீரசைவர்; one who wears a miniature lingam suspended from the neck. இலிங்கங்கட்டி பார்க்க;see {}. [Skt. {} → த. லிங்காயத்து] |
லிடாலிடநியாயம் | லிடாலிடநியாயம் liḍāliḍaniyāyam, பெ.(n.) நக்கினதையே திரும்ப நக்குவதுபோல் ஒரு முறையிலேயே பலகாலும் பார்க்கும் நியாய வகை; a {} in illustration of re- peatedly addressing oneself to one aspect of a matter, as licking what is already licked. “லிடாலிட நியாயமாக அவ்விட மாத்திரையே நோக்குவார்க்கு” (சிவசமவா.பக்.42);. [Skt. {} → த. லிடாலிட நியாயம்] |
லிபாபா | லிபாபா lipāpā, பெ.(n.) கடிதவுறை (செ.அ.);; envelope, cover, wrapper. [Arab. {} → த. லிபாபா] |
லிபி | லிபி libi, பெ.(n.) 1. எழுத்து; letter of alphabet. 2. விதி (செ.அ.);; destiny, fate. [Skt. Iipi → த. லிபி] |
லீலாவதி | லீலாவதி līlāvadi, பெ.(n.) 1. அழகிய பெண்; charming or beautiful woman. 2. பாசுகராசாரியரால் இயற்றப்பெற்ற ஒரு கணித நூல் (செ.அ.);; a mathematical treatise by {}. [Skt. {} → த. லீலாவதி] |
லீலாவினோதம் | லீலாவினோதம் līlāviṉōtam, பெ.(n.) உல்லாச விளையாட்டு (செ.அ.);; diversion, pastime, sport. [Skt. {} → த. லீலாவினோதம்] |
லீலாவிபூதி | லீலாவிபூதி līlāvipūti, பெ. (n.) பிராகிருதவுலகங்கள்; the material worlds, as exhibiting the divine sportiveness in their creation, preservation and destruction. [Skt. {} → த. லீலாவிபூதி] |
லீலை | லீலை līlai, பெ.(n.) 1. விளையாட்டு; play. 2. கடவுள் முதலியவற்றின் விளையாடல்; sport, as of a deity. 3. சுரதல் விளையாட்டு (செ.அ.);; a morous sport, sexual intercourse. [Skt. {} → த. லீலை] |
லீவு | லீவு līvu, பெ. (n.) விடுப்பு; leave. [Eng. leave → த. லீவு] |
லுக்சான் | லுக்சான் lukcāṉ, பெ.(n.) லுச்சாண் பார்க்க;see {}. |
லுங்கி | லுங்கி luṅgi, பெ.(n.) முகம்மதியரணியும் ஆடை வகை; a coloured cloth worn by Muhammadans. [Persn. {} → த. லுங்கி] |
லுச்சா | லுச்சா luccā, பெ.(n.) தூர்த்தன்; vagabond, rake, profigate. [U. {} → த. லுச்சா] |
லுச்சான் | லுச்சான் luccāṉ, பெ.(n.) இழப்பு (செ.அ.);; loss. [Arab. {} → த. லுச்சான்] |
லுத்தன் | லுத்தன் luttaṉ, பெ.(n.) ஈயாமாரி;(உலோபி);; miser. “லுத்தனுக்கு இரட்டிச் செலவு”. [Skt. lubdha → த. லுத்தன்] |
லுப்தன் | லுப்தன் luptaṉ, பெ.(n.) இவறன் (உலோபி); (செ.அ.);; miser. [Skt. lubdha → த. லுப்தன்] |
லுப்தம் | லுப்தம்1 luptam, பெ.(n.) 1. எழுத்துக் கேடு; elision. 2. அழிவு; injury, destruction. 3. இழப்பு (செ.அ.);; loss, deprivation. [Skt. lupta → த. லுப்தம்] லுப்தம்2 luptam, பெ.(n.) இவறன்மை, ஈயாமை, (உலோகம்);; covetousness, miserliness. [Skt. lubdha → த. லுப்தம்] |
லுப்தோபமை | லுப்தோபமை luptōpamai, பெ. (n.) தொகையுபம் பார்க்க;see tokaiyuvamam. [Skt. {} → த. லுப்தோபமை] |
லூடி | லூடி lūṭi, பெ.(n.) 1. லூட்டி, 1 பார்க்க;see {}. 2. லூட்டி, 2 பார்க்க;see {}. |
லூட்டி | லூட்டி lūṭṭi, பெ.(n.) 1. கொள்ளை; plunder, pillage, loot. 2. தொந்தரவு(செ.அ.);; trouble annoyance. [Hind. {} → த. லூட்டி] [K. {}] |
லூதாதந்து நியாயம் | லூதாதந்து நியாயம் lūtātanduniyāyam, பெ. (n.) சிலந்தி தன் வாயாலிழைத்த நூலைத் தானே யுட்கொள்வது போல் தான் செய்ததைத்தானேயழிப்பதாகக் கூறும் நெறி (செ.அ.);; a {}, in illustration of the principle of an author destroying his own creation even as a spider eats up the thread which it throws out. [Skt. {} → த. லூதாந்து நியாயம்] |
லெகு | லெகு legu, பெ. (n.) இலகு பார்க்க;see ilaku. |
லெக்கு | லெக்கு lekku, பெ.(n.) இலக்கு; aim. |
லெச்சி | லெச்சி lecci, பெ.(n.) லச்சி பார்க்க;see lacci. |
லெச்சை | லெச்சை leccai, பெ.(n.) இலச்சை பார்க்க;see ilaccai. |
லெட்டர் | லெட்டர் leṭṭar, பெ. (n.) மடல்; letter. [E. letter → த. லெட்டர்] |
லெப்பை | லெப்பை leppai, பெ.(n.) லப்பை (வின்); பார்க்க;see lappai. |
லெளகிகதந்திரம் | லெளகிகதந்திரம் leḷagigadandiram, பெ.(n.) உலக செய்திகளில் திறமை (செ.அ.);; skil or tact in worldly affairs. [Skt. laukika → த. லோ] |
லெளகிகப்பிரக்கிரியை | லெளகிகப்பிரக்கிரியை leḷagigappiraggiriyai, பெ.(n.) உலகவழக்கு (பி.வி. 18,உரை.); (செ.அ.);; usage in common speech. |
லெளகீகன் | லெளகீகன் leḷaākaṉ, பெ. (n.) 1. உலகப்பற்றுடையவன்; one who is worldly- minded. 2. சமயவொழுக்க விதிகளைச் சரிவரப் பின்பற்றாதவன்; one who does not strictly adhere to the prescribed rites and observances, dist. fr. {}. 3. உலகியலில் (லெளகீகவிருத்தியில்); ஒழுகுபவன்; one who follows secular pursuits. 4. உலகியலறிந்தவன் (செ.அ.);; one who is worldly – wise. [Skt. laukika → த. லௌகீகன்] |
லெளகீகம் | லெளகீகம் leḷaākam, பெ.(n.) 1. உலகிற்குரியது; wordly affairs, that which is of the world. 2. உலகப்பற்றுடைமை (வின்.);; worldliness. 3. அலுவல் (செ.அ.);; office. [Skt. laukika → த. லௌகீகம்] |
லெளகீகவிருத்தி | லெளகீகவிருத்தி leḷaākavirutti, பெ.(n.) வைதீகவிருத்தியை விடுத்து உலக நடைக்குரிய தொழில்களில் முயலுகை (செ.அ.);; secular pursuits, opp. to {} virutti. |
லெவலேசம் | லெவலேசம் levalēcam, பெ.(n.) லவலேசம் பார்க்க;see {}. |
லெவை | லெவை levai, பெ.(n.) பள்ளிவாசல் வழிபாடு செய்வோன் (செ.அ.);; priest in a mosque. [Heb. Levi → த. லெவை] |
லேககன் | லேககன் lēgagaṉ, பெ.(n.) எழுத்து வேலை செய்பவன் (செ.அ.);; writer. [Skt. {} → த. லேககன்] |
லேகணி | லேகணி lēkaṇi, பெ.(n.) லேகனி பார்க்க;see {}. |
லேகனி | லேகனி lēkaṉi, பெ.(n.) எழுதுகோல் (செ.அ.);; pen style. [Skt. {} → த. லேகனி] |
லேகம் | லேகம்1 lēkam, பெ.(n.) லேகியம் பார்க்க;see {}. [Skt. {} → த. லேகம்] லேகம்2 lēkam, பெ.(n.) எழுத்து (செ.அ.);; writing, letter. [Skt. {} → த. லேகம்] |
லேகா | லேகா lēkā, பெ.(n.) லேகாவுண்டை பார்க்க;see {}. [Prob. {} → த. லேகா] |
லேகாவுண்டை | லேகாவுண்டை lēkāvuṇṭai, பெ.(n.) கஞ்சாவுண்டை (செ.அ.);; ball of ganja. |
லேகியம் | லேகியம் lēkiyam, பெ. (n.) 1. இளகியம் (நக்கியுண்ணு வதற்கு உரியது);; food that is eaten by licking. 2. நக்கியுண்ணும் மருந்து வகை (செ.அ.);; electuary, in medicine. 3. லேகாவுண்டை பார்க்க;see {}. [Skt. {} → த. லேகியம்] |
லேகை | லேகை lēkai, பெ.(n.) இரேகை பார்க்க;see {}. “சங்கலேகையும் சக்கிரலேகையும்” (சூளா. குமார.45);. |
லேசம் | லேசம் lēcam, பெ. (n.) 1. அற்பம்; small bit particle. 2. இரண்டு கலை கொண்ட காலவளவு; a measure of time equal to two kalai. 3. இலேசவணி (செ.அ.);; a figure of speech. [Skt. {} → த. லேசம்] |
லேசு | லேசு1 lēcu, பெ.(n.) இலேசு பார்க்க;see {}. லேசு2 lēcu, பெ.(n.) 1. ஒரு வகை ஒப்பனைப் பின்னற்றுணி; lace. 2. சரிகை (செ.அ.);; silver or gold lace. [E. lace → த. லேசு] |
லேஞ்சி | லேஞ்சி lēñji, பெ.(n.) கைக்குட்டை kerchief, scarf. [Port. Lengo → த. லேஞ்சி] |
லேஞ்சு | லேஞ்சு lēñju, பெ.(n.) லேஞ்சி பார்க்க;see {}. |
லேட் | லேட் lēṭ, பெ. (n.) காலத்தாழ்வு; late. [E. late → த. லேட்] |
லேணி | லேணி lēṇi, பெ.(n.) கடன் வாங்குகை (செ.அ.);; borrowing. [Hind. {} → த. லேணி] |
லேணிதாரன் | லேணிதாரன் lēṇitāraṉ, பெ.(n.) கடன் கொடுத்தவன் (செ.அ.);; creditor. [Hind. {} → த. லேணிதாரன்] |
லேனாதேனா | லேனாதேனா lēṉātēṉā, பெ.(n.) லேவாதேவி பார்க்க;see {}. [Hind. {} → த. லேனாதேனா] |
லேபனம் | லேபனம் lēpaṉam, பெ.(n.) 1. பூச்சு; anointing, smearing. “ம்ருகமத படீர லேபன” (திருப்பு.43);. 2. பூசும் பொருள்; plaster, ointment, unguent, salve. 3. தாதுவன்மை (செ.அ.);; virility, erection of penis. [Skt. {} → த. லேபனம்] |
லேலம் | லேலம் lēlam, பெ.(n.) ஏலம் (செ.அ.);; auction. [Port. leilao → த. லேலம்] |
லேவாதேவி | லேவாதேவி lēvātēvi, பெ.(n.) கொடுக்கல் வாங்கல் (செ.அ.);; money – dealings. [Hind. {} → த. லேவாதேவி] |
லேவாலேவி | லேவாலேவி lēvālēvi, பெ.(n.) லேவாதேவி பார்க்க;see {}. |
லேவு | லேவு1 lēvu, பெ.(n.) ஒற்று; spying, espionage. [வேய் → வேவு] லேவு2 lēvu, பெ.(n.) வேகை ; burning, boiling. [வே → வேவு] |
லொங்காரி | லொங்காரி loṅgāri, பெ.(n.) அடங்காப்பிடாரி (செ.அ.);; termagant. [Arab. {} → த. லொங்காரி] |
லொங்கு-தல் | லொங்கு-தல் loṅgudal, 5 செ.கு.வி. (v.i.) ம்ப பணிந்து நடத்தல் (செ.அ.);; to be humble, submissive, to be servile. [ l. {} → த. லொங்கு] |
லொங்குலொங்கெனல் | லொங்குலொங்கெனல் loṅguloṅgeṉal, பெ.(n.) உடலின் தளர்ச்சிக்குறிப்பு (செ.அ.);; signifying physical exhaustion. |
லொசுக்கு | லொசுக்கு losukku, பெ.(n.) ஒன்றுமின்மை (செ.அ.);; almost nothing, nothingness. |
லொடலொட-த்தல் | லொடலொட-த்தல் loḍaloḍattal, 4 செ.கு.வி. (v.i.) 1. கட்டுக்குலைதல்; to become rickety; to be dismembered, to become loose. 2. உள்ளீடின்றிக் கூடாயிருத்தல்; to be hollow or empty. 3. பயனற்றுப் போதல் (செ.அ.);; to become useless. |
லொடலொடவெனல் | லொடலொடவெனல் loḍaloḍaveṉal, பெ.(n.) 1. ஓர் ஒலிக்குறிப்பு; ratting or rumbling. 2. கட்டுக்குலைவின் குறிப்பு (செ.அ.);; ricketiness. |
லொடலொட்டை | லொடலொட்டை loḍaloḍḍai, பெ.(n.) 1. கட்டுக்குலைந்தது; anything rickety. 2. உள்ளீடின்றிக் கூடானது; anything hollow or empty. 3. பயனற்றது (செ.அ.);; anything useless. |
லொடுக்கு | லொடுக்கு loḍukku, பெ.(n.) உள்ளே வெற்றிடமாகை; emptiness, hollowness, want of solidity. “லொடுக்கு விழுந்து போயிற்று” (செ.அ.);. |
லொடுக்கு லொடுக்கெனல் | லொடுக்கு லொடுக்கெனல் loḍukkuloḍukkeṉal, பெ.(n.) 1. குதிரை வண்டி முதலியன ஒடும்போது ஆட்டங்கொடுத்தற் குறிப்பு (செ.அ.);; signifying shakiness, as of a running carriage. 2. லொடலொடவெனல் பார்க்க;see {}. 3. லொங்கு லொங்கெனல் பார்க்க;see {}. |
லொட்டி | லொட்டி1 loṭṭi, பெ.(n.) 1. கள்; toddy. “அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான்”, 2. கள் இறக்கும் குடுவை (செ.அ.);; small earthen pot for drawing toddy. [l. {} → த. லொட்டி] லொட்டி2 loṭṭi, பெ.(n.) ரொட்டி பார்க்க;see {}. |
லொட்டி மூஞ்சி | லொட்டி மூஞ்சி loṭṭimūñji, பெ.(n.) கட்குடியன் (செ.அ.);; drunkard. [l. {} → த. லொட்டிமூஞ்சி] |
லொட்டுலொசுகு | லொட்டுலொசுகு loṭṭulosugu, பெ.(n.) சில்லறைப் பொருள்கள் (செ.அ.);; odds and ends, stray articles. |
லொட்டுலொடுக்கு | லொட்டுலொடுக்கு loḍḍuloḍukku, பெ.(n.) லொட்டு லொசுகு பார்க்க;see {} losuku. |
லொட்டை | லொட்டை loṭṭai, பெ. (n.) தாழ்ந்தது; anything inferior. 2. லொட்டையாட்டம் பார்க்க;see {}. 3. ஒரு வகைப் பணிகாரம் (செ.அ.);; a kind of cake. [Skt. {} → த. லொட்டை] |
லொட்டைதாளி-த்தல் | லொட்டைதாளி-த்தல் loṭṭaitāḷittal, 4 செ.கு.வி. (v.i.) ஏழையாதல் (செ.அ.);; to become a pauper, to be impoverished. [Skt. {} → த. லொட்டைதாளி] |
லொட்டையாட்டம் | லொட்டையாட்டம் loṭṭaiyāṭṭam, பெ.(n.) கோலி விளையாட்டு வகை (செ.அ.);; a game of marbles. [Skt. {} → த. லொட்டையாட்டம்] |
லொத்து லொத்தெனல் | லொத்து லொத்தெனல் lottulotteṉal, பெ.(n.) 1. நையப்புடைத்தற்குறிப்பு; beating hard. giving repeated blows. 2. உள்ளீடற்ற பொருளைத் தட்டுங்கால் எழும் ஒலிக்குறிப்பு (செ.அ.);; hollow sound. |
லொத்து-தல் | லொத்து-தல் loddudal, 4 செ.கு.வி. (v.i.) நையப்புடைத்தல் (செ.அ.);; to beat or strike hard, to belabour. [U. {} → த. லொத்து] |
லொத்துகத்தோல் | லொத்துகத்தோல் lottugattōl, பெ.(n.) வெள்ளிலத்தியின் பட்டை (செ.அ.);; bark of lodhra tree. |
லொள்ளெனல் | லொள்ளெனல் loḷḷeṉal, பெ.(n.) “நாய் குரைத்தற்குறிப்பு (செ.அ.);; expr. of dog’s bark. |
லோககண்டகன் | லோககண்டகன் lōgagaṇṭagaṉ, பெ.(n.) மிகக்கொடியோன் (உலகத்துக்கு முட் போன்றவன்); (செ.அ.);; very troublesome or wicked man, as a thorn afflicting the world. [Skt. {} → த. லோககண்டகன்] |
லோககதி | லோககதி lōgagadi, பெ.(n.) உலக நடைமுறை (செ.அ.);; way of the world. [Skt. {}+kati → த. லோககதி] |
லோககர்த்தா | லோககர்த்தா lōgagarttā, பெ. (n.) உலகத்துக்கு முதல்வன் (செ.அ.);; Lord of the world. [Skt. {} → த. லோககர்த்தா] |
லோகசஞ்சாரம் | லோகசஞ்சாரம் lōkasañsāram, பெ.(n.) பல நாடுகளில் பயணம் செய்கை; traveling in different countries of the world. 2. வெளி முயற்சி (செ.அ.);; business outside one’s house, outwork. |
லோகசஞ்சாரி | லோகசஞ்சாரி lōkasañsāri, பெ.(n.) பல நாடுகளில் பயணம் செய்வோன் (செ.அ.);; traveller in many lands. [Skt. {} → த. லோகசஞ்சாரி] |
லோகசாட்சி | லோகசாட்சி lōkacāṭci, பெ.(n.) கடவுள் (செ.அ.);; god, as the universal witness. [Skt. {} → த. லோகசாட்சி] |
லோகசிந்தூரம் | லோகசிந்தூரம் lōkasindūram, பெ.(n.) அயச்சிந்தூரம் (செ.அ.);; hydrated peroxide of iron-Ferrugo. [Skt. {} → த. லோகசிந்தூரம்] |
லோகதருமணி | லோகதருமணி lōkadarumaṇi, பெ.(n.) a mode of initiation. உலோகதருமிணி பார்க்க; {}. [Skt. {} → த. லோகதன்மணி] |
லோகத்திரயம் | லோகத்திரயம் lōkattirayam, பெ.(n.) மூவுலகு (செ.அ.);; the three worlds. [Skt. {} → த. லோகத்திரயம்] |
லோகபத்ததி | லோகபத்ததி lōkabaddadi, பெ.(n.) லோககதி பார்க்க;see {}. |
லோகபாலகர் | லோகபாலகர் lōgapālagar, பெ.(n.) 1. லோகபாலர், 1 பார்க்க;see {}. ” அட்ட லோக பாலகரே” (தக்கயாகப்.468);. 2. லோகபாலர்,2 பார்க்க;see {}. [Skt. {} → த. லோகபாலகர்] |
லோகபாலர் | லோகபாலர் lōkapālar, பெ.(n.) 1. எண்டிசைக் காவலர்; regents of the eight directions. 2. அரசர்; kings. “லோகபால ரெயில் காவல் கூர்” (தக்கயாகப்.17);. [Skt. {} → த. லோகபாலர்] |
லோகப்பிரசித்தம் | லோகப்பிரசித்தம் lōkappirasittam, பெ.(n.) உலகத்தாரால் நன்கறியப்பட்டது (செ.அ.);; that which is universally known. |
லோகமரியாதை | லோகமரியாதை lōkamariyātai, பெ.(n.) உலகவழக்கம் (செ.அ.);; customs and manners of a country. த.வ. உலகநடை [Skt. {} → த. லோகமரியாதை] |
லோகமாதா | லோகமாதா lōkamātā, பெ.(n.) 1. உலக மாதா பார்க்க;see {}. 2. இலட்சுமி(செ.அ.);;{}. [Skt. {} → த. லோகமாதா] |
லோகம் | லோகம்1 lōkam, பெ.(n.) உலகம்; world. “எல்லா லோகங்களும் இவருடைய” (தக்கயாகப். 38. உரை);. [Skt. {} → த. லோகம்] லோகம்2 lōkam, பெ.(n.) மாழை; metal. [Skt. {} → த. லோகம்] |
லோகயாத்திரை | லோகயாத்திரை lōkayāttirai, பெ. (n.) லோககதி பார்க்க;see {}. “இது ஒரு லோகயாத்திரை” (ஈடு,4,9,6);. |
லோகரஞ்சனம் | லோகரஞ்சனம் lōkarañjaṉam, பெ.(n.) உலகிற்கு மகிழ்ச்சி தருவது (செ.அ.);; that which is popular or pleasing to the world. |
லோகரட்சகன் | லோகரட்சகன் lōgaraṭcagaṉ, பெ.(n.) உலகத்தைக் காப்போன் (செ.அ.);; saviour of the world. |
லோகரட்சை | லோகரட்சை lōkaraṭcai, பெ.(n.) உலகத்தைக் காக்கை (செ.அ.);; protection of the world. “லோகரட்சையுந் தனுர்வேத வில்வலியும்” (தக்கயாகப்.468, உரை);. |
லோகரூடம் | லோகரூடம் lōkarūṭam, பெ.(n.) 1. தேச மெங்கும் பெரும்புகழ் பெற்றது (செ.அ.);; that which is famous throughout the land. 2. லோக மரியாதை பார்க்க;see {}. [Skt. {} → த. லோகரூடம்] |
லோகவிருத்தாந்தம் | லோகவிருத்தாந்தம் lōkaviruttāndam, பெ.(n.) 1. லோகாசாரம் பார்க்க;see {}. 2. ஊர்ப்பேச்சு (செ.அ.);; rumour. |
லோகவேடணை | லோகவேடணை lōkavēṭaṇai, பெ.(n.) உலகவேடணை (நாமதீப.576); பார்க்க;see {}. |
லோகாக்கிரசித்தர் | லோகாக்கிரசித்தர் lōkākkirasittar, பெ.(n.) தேவருட் சிறந்த ஒரு சாரார் (தக்கயாகப். 352. உரை);; a superior class of celestials. [Skt. loha +agra +siddha → த. வோகாக்கிரசித்தர்] |
லோகாசாரம் | லோகாசாரம் lōkācāram, பெ.(n.) உலகத்தாரொழுக்கம் (செ.அ.);; customs of the people, ways of the world, common practice. [Skt. {} → த. லோகாசாரம்] |
லோகாசாரியர் | லோகாசாரியர் lōkācāriyar, பெ.(n.) பிள்ளைலோகாசாரியர் பார்க்க;see {}. [Skt. {} → த. லோகாசாரியர்] |
லோகாதிபதி | லோகாதிபதி lōkādibadi, பெ. (n.) உலகமுதல்வன்; lord of the Universe. 2. மாமன்னன் (செ.அ.);; Emperor. [Skt. {} → த. லோகாதிபதி] |
லோகாதீதம் | லோகாதீதம் lōkātītam, பெ.(n.) உலகத்துக்கு அப்பாற்பட்டது (செ.அ.);; the supernatural; the ultra-mundane. [Skt. {} → த. லோகாதீதம்] |
லோகாந்தரமடை-தல் | லோகாந்தரமடை-தல் lōkāndaramaḍaidal, 2 செ.கு.வி. (v.i.) இறத்தல், மரணமடைதல் (செ.அ.);; to die. |
லோகாந்தரம் | லோகாந்தரம் lōkāndaram, பெ.(n.) வேறுலகம் (செ.அ.);; the world beyond. [Skt. {} → த. லோகாந்தரம்] |
லோகாபவாதம் | லோகாபவாதம் lōkāpavātam, பெ.(n.) பெரும்பழி (செ.அ.);; censure of the world, public scandal. [Skt. {} → த. லோகாபவாதம்] |
லோகாபிராமம் | லோகாபிராமம் lōkāpirāmam, பெ.(n.) 1. உலகத்திற்கு மகிழ்ச்சி தருவது; that which is pleasing to the world. 2. ஊர்ப்பேச்சு (செ.அ.);; general talk, rumour. “லோகா பிராமமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்”. [Skt. {} → த. லோகாபிராமம்] |
லோகாயதன் | லோகாயதன் lōkāyadaṉ, பெ. (n.) உலோகாயதன் பார்க்க;see {}. “லோகாயதன் சமயநடை சாராமல்” (தாயு.மெளன.4.);. [Skt. {} → த. லோகாயதன்] |
லோகாயதம் | லோகாயதம் lōkāyadam, பெ. (n.) உலோகாயதம் பார்க்க;see {}. [Skt. {} → த. லோகாயதம்] |
லோகாலோகம் | லோகாலோகம் lōkālōkam, பெ.(n.) சக்கரவாளம்; a mythical range of mountains. [Skt. {} → த. லோகாலோகம்] |
லோகிதம் | லோகிதம் lōkidam, பெ.(n.) செந்நிறமானது (செ.அ.);; redness, that which is red “லோகிதமலரோடும்” (இரகு.திக்குவி.264);. [Skt. {} → த. லோகிதம்] |
லோகோத்தமரசம் | லோகோத்தமரசம் lōāttamarasam, பெ.(n.) ஒரு வகைப் பேதி மருந்து (செ.அ.);; a purgative. [Skt. {}-rasa → த. லோகோத்தமரசம்] |
லோகோத்தரம் | லோகோத்தரம் lōāttaram, பெ.(n.) மிகச் சிறந்தது (செ.அ.);; that which is excellent in every way. [Skt. {} → த. லோகோத்தரம்] |
லோகோபகாரம் | லோகோபகாரம் lōāpakāram, பெ.(n.) உலக நன்மை(செ.அ.);; public good, general good. [Skt. {} → த. லோகோபகாரம்] |
லோக்கியம் | லோக்கியம் lōkkiyam, பெ.(n.) லெளகீகம் 1, பார்க்க;see {}. “சகல லோக்கியமே தானாளுறு மசுர பார்த்திபனோடே” (திருப்பு.1080);. [Skt. {} → த. லோக்கியம்] |
லோடா | லோடா lōṭā, பெ.(n.) லோட்டா, 1 (வின்.); பார்க்க;see {}. |
லோடு | லோடு lōṭu, பெ.(n.) குறைவு (செ.அ.);; loss, deficiency. [Hind. {} → த. லோடு] |
லோட்டா | லோட்டா lōṭṭā, பெ. (n.) 1. நீர் குடிக்கப் பயன்படும் ஏனம்; pipkin, a small metal pot, generally of brass. 2. கழுத்தணி வகை (செ.அ.);; a necklace of gold beads. [U. {} → த. லோட்டா] |
லோத்திரம் | லோத்திரம் lōttiram, பெ.(n.) வெள்ளி லோத்திரம் (செ.அ.);; lodhra tree. [Skt. {} → த. லோத்திரம்] |
லோத்துகம் | லோத்துகம் lōttugam, பெ.(n.) லோத்திரம் பார்க்க;see {}. |
லோந்து | லோந்து lōndu, பெ.(n.) இராவுக்காவல் (செ.அ.);; night patrol. [Fr ronde → த. லோத்து] |
லோன் | லோன் lōṉ, பெ.(n.) கடன்; loan. [E. loan → த. லோன்] |
லோபன் | லோபன் lōpaṉ, பெ.(n.) miser. உலோபன் பார்க்க;see {}. “லோபன் மகன் டம்பன்” (செ.அ.);. [Skt. {} → த. லோபன்] |
லோபம் | லோபம்1 lōpam, பெ.(n.) 1. கெடுதல் (விகாரம்);; elision. “ஆதேசலோபம்” (பி.வி.26);. 2. குறைவு (செ.அ.);; defect, deficiency. “மந்திர கிரியாலோப மின்றியே” (அறப்.சத.81);. [Skt. {} → த. லோபம்] லோபம்2 lōpam, பெ.(n.) 1. உலோபம்1 பார்க்க;{}. “லோப மருளின்மை கூடக் கலந்துள்ளிருக்க” (தாயு.சின்மயா.3);. 2. கடுஞ்செட்டு (உ.வ.);; stinginess. [Skt. {} → த. லோபம்] |
லோபி | லோபி1 lōpi, பெ.(n.) உலோபி பார்க்க;see {}. [Skt. {} → த. லோபி] லோபி2 lōpittal, செ.கு.வி.(v.i.) உலோபி2 பார்க்க;see {}. [Skt. {} → த. லோபி] லோபி3 lōpittal, 4 செ.கு.வி. (v.i.) உலோபி3 பார்க்க;see {}. [Skt. {} → த. லோபித்தல்] |
லோபு-தல் | லோபு-தல் lōpudal, 5 செ.குன்றாவி. (v.i.) உலோபு பார்க்க;see {}. “லோபியுண்ணார்” (தேவா.55.7);. [Skt. {} → த. லோபு] |
லோபை | லோபை lōpai, பெ.(n.) பார்வதி (கூர்மபு. திருக்கலி.22);;{}. [Prob. {} → த. லோபை] |
லோம்பர் | லோம்பர் lōmbar, பெ.(n.) இரும்பு வகை (இ.வ.);; a kind of iron. |
லோலக்கம் | லோலக்கம் lōlakkam, பெ.(n.) திண்டாட்டம்; restless wandering. “அவன் அங்குமிங்கும் லோலக்கமாடுகிறான்” (செ.அ.);. [Skt. {} → த. லோலக்கம்] |
லோலக்கு | லோலக்கு lōlakku, பெ.(n.) லோலாக்கு பார்க்க;see {}. |
லோலன் | லோலன் lōlaṉ, பெ.(n.) 1. விளையாடித் திரிபவன்; one who is sportive or playful. “முத்தலைச் சூலனே லோலனே” (அறப்.சத.17);. 2. பெண்டிரை நாடித் திரிபவன் (செ.அ.);; one who dallies with woman. [Skt. {} → த. லோலன்] |
லோலம் | லோலம் lōlam, பெ. (n.) 1. அலைவு; unsteadiness, restlessness. 2. ஆசைப் பெருக்கம் (செ.அ.);; greediness, lustfulness. [Skt. {} → த. லோலம்] |
லோலயப்படு-தல் | லோலயப்படு-தல் lōlayappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) லோல்படு (உ.வ.); பார்க்க;see {}. |
லோலாக்கு | லோலாக்கு lōlākku, பெ. (n.) காதில் தொங்கவிடும் அணி வகை (செ.அ.);; a pendant suspended from the lobe of the ear. [Skt. {} → த. லோலாக்கு] |
லோலாயப்படு-தல் | லோலாயப்படு-தல் lōlāyappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) லோல்படு (உ.வ.); பார்க்க;see {}. (செ.அ.);. |
லோலாயம் | லோலாயம் lōlāyam, பெ. (n.) லோலக்கம் பார்க்க;see {}. [Skt. {} → த. லோலாயம்] |
லோலோவென்றலை-தல் | லோலோவென்றலை-தல் lōlōveṉṟalaidal, 2 செ.கு.வி. (v.t.) திண்டாடித் திரிதல்; to wander restlessly (செ.அ.);. |
லோல்படு-தல் | லோல்படு-தல் lōlpaḍudal, 20 செ.கு.வி. (v.t.) 1. திண்டாடுதல்; to wander about restlessly, to be tossed about. “அவன் அங்குமிங்கும் லோல்படுகிறான்”. 2. மலிந்து கிடத்தல் (உ.வ.); (செ.அ.);; to be over plentiful, as a commodity. [Skt. {} → த. லோல்படு-தல்] |
லௌகிகதருமம் | லௌகிகதருமம் laugigadarumam, பெ.(n.) உலகியல் (செ.அ.);; ways of the world. |
லௌகிகன் | லௌகிகன் laugigaṉ, பெ.(n.) லெளகீகன் பார்க்க;see {}. |
லௌகிகம் | லௌகிகம் laugigam, பெ.(n.) லெளகீகம் பார்க்க;see {}. |