தலைசொல் | பொருள் |
---|---|
லொங்காரி | லொங்காரி loṅgāri, பெ.(n.) அடங்காப்பிடாரி (செ.அ.);; termagant. [Arab. {} → த. லொங்காரி] |
லொங்கு-தல் | லொங்கு-தல் loṅgudal, 5 செ.கு.வி. (v.i.) ம்ப பணிந்து நடத்தல் (செ.அ.);; to be humble, submissive, to be servile. [ l. {} → த. லொங்கு] |
லொங்குலொங்கெனல் | லொங்குலொங்கெனல் loṅguloṅgeṉal, பெ.(n.) உடலின் தளர்ச்சிக்குறிப்பு (செ.அ.);; signifying physical exhaustion. |
லொசுக்கு | லொசுக்கு losukku, பெ.(n.) ஒன்றுமின்மை (செ.அ.);; almost nothing, nothingness. |
லொடலொட-த்தல் | லொடலொட-த்தல் loḍaloḍattal, 4 செ.கு.வி. (v.i.) 1. கட்டுக்குலைதல்; to become rickety; to be dismembered, to become loose. 2. உள்ளீடின்றிக் கூடாயிருத்தல்; to be hollow or empty. 3. பயனற்றுப் போதல் (செ.அ.);; to become useless. |
லொடலொடவெனல் | லொடலொடவெனல் loḍaloḍaveṉal, பெ.(n.) 1. ஓர் ஒலிக்குறிப்பு; ratting or rumbling. 2. கட்டுக்குலைவின் குறிப்பு (செ.அ.);; ricketiness. |
லொடலொட்டை | லொடலொட்டை loḍaloḍḍai, பெ.(n.) 1. கட்டுக்குலைந்தது; anything rickety. 2. உள்ளீடின்றிக் கூடானது; anything hollow or empty. 3. பயனற்றது (செ.அ.);; anything useless. |
லொடுக்கு | லொடுக்கு loḍukku, பெ.(n.) உள்ளே வெற்றிடமாகை; emptiness, hollowness, want of solidity. “லொடுக்கு விழுந்து போயிற்று” (செ.அ.);. |
லொடுக்கு லொடுக்கெனல் | லொடுக்கு லொடுக்கெனல் loḍukkuloḍukkeṉal, பெ.(n.) 1. குதிரை வண்டி முதலியன ஒடும்போது ஆட்டங்கொடுத்தற் குறிப்பு (செ.அ.);; signifying shakiness, as of a running carriage. 2. லொடலொடவெனல் பார்க்க;see {}. 3. லொங்கு லொங்கெனல் பார்க்க;see {}. |
லொட்டி | லொட்டி1 loṭṭi, பெ.(n.) 1. கள்; toddy. “அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான்”, 2. கள் இறக்கும் குடுவை (செ.அ.);; small earthen pot for drawing toddy. [l. {} → த. லொட்டி] லொட்டி2 loṭṭi, பெ.(n.) ரொட்டி பார்க்க;see {}. |
லொட்டி மூஞ்சி | லொட்டி மூஞ்சி loṭṭimūñji, பெ.(n.) கட்குடியன் (செ.அ.);; drunkard. [l. {} → த. லொட்டிமூஞ்சி] |
லொட்டுலொசுகு | லொட்டுலொசுகு loṭṭulosugu, பெ.(n.) சில்லறைப் பொருள்கள் (செ.அ.);; odds and ends, stray articles. |
லொட்டுலொடுக்கு | லொட்டுலொடுக்கு loḍḍuloḍukku, பெ.(n.) லொட்டு லொசுகு பார்க்க;see {} losuku. |
லொட்டை | லொட்டை loṭṭai, பெ. (n.) தாழ்ந்தது; anything inferior. 2. லொட்டையாட்டம் பார்க்க;see {}. 3. ஒரு வகைப் பணிகாரம் (செ.அ.);; a kind of cake. [Skt. {} → த. லொட்டை] |
லொட்டைதாளி-த்தல் | லொட்டைதாளி-த்தல் loṭṭaitāḷittal, 4 செ.கு.வி. (v.i.) ஏழையாதல் (செ.அ.);; to become a pauper, to be impoverished. [Skt. {} → த. லொட்டைதாளி] |
லொட்டையாட்டம் | லொட்டையாட்டம் loṭṭaiyāṭṭam, பெ.(n.) கோலி விளையாட்டு வகை (செ.அ.);; a game of marbles. [Skt. {} → த. லொட்டையாட்டம்] |
லொத்து லொத்தெனல் | லொத்து லொத்தெனல் lottulotteṉal, பெ.(n.) 1. நையப்புடைத்தற்குறிப்பு; beating hard. giving repeated blows. 2. உள்ளீடற்ற பொருளைத் தட்டுங்கால் எழும் ஒலிக்குறிப்பு (செ.அ.);; hollow sound. |
லொத்து-தல் | லொத்து-தல் loddudal, 4 செ.கு.வி. (v.i.) நையப்புடைத்தல் (செ.அ.);; to beat or strike hard, to belabour. [U. {} → த. லொத்து] |
லொத்துகத்தோல் | லொத்துகத்தோல் lottugattōl, பெ.(n.) வெள்ளிலத்தியின் பட்டை (செ.அ.);; bark of lodhra tree. |
லொள்ளெனல் | லொள்ளெனல் loḷḷeṉal, பெ.(n.) “நாய் குரைத்தற்குறிப்பு (செ.அ.);; expr. of dog’s bark. |