தலைசொல் | பொருள் |
---|---|
லேககன் | லேககன் lēgagaṉ, பெ.(n.) எழுத்து வேலை செய்பவன் (செ.அ.);; writer. [Skt. {} → த. லேககன்] |
லேகணி | லேகணி lēkaṇi, பெ.(n.) லேகனி பார்க்க;see {}. |
லேகனி | லேகனி lēkaṉi, பெ.(n.) எழுதுகோல் (செ.அ.);; pen style. [Skt. {} → த. லேகனி] |
லேகம் | லேகம்1 lēkam, பெ.(n.) லேகியம் பார்க்க;see {}. [Skt. {} → த. லேகம்] லேகம்2 lēkam, பெ.(n.) எழுத்து (செ.அ.);; writing, letter. [Skt. {} → த. லேகம்] |
லேகா | லேகா lēkā, பெ.(n.) லேகாவுண்டை பார்க்க;see {}. [Prob. {} → த. லேகா] |
லேகாவுண்டை | லேகாவுண்டை lēkāvuṇṭai, பெ.(n.) கஞ்சாவுண்டை (செ.அ.);; ball of ganja. |
லேகியம் | லேகியம் lēkiyam, பெ. (n.) 1. இளகியம் (நக்கியுண்ணு வதற்கு உரியது);; food that is eaten by licking. 2. நக்கியுண்ணும் மருந்து வகை (செ.அ.);; electuary, in medicine. 3. லேகாவுண்டை பார்க்க;see {}. [Skt. {} → த. லேகியம்] |
லேகை | லேகை lēkai, பெ.(n.) இரேகை பார்க்க;see {}. “சங்கலேகையும் சக்கிரலேகையும்” (சூளா. குமார.45);. |
லேசம் | லேசம் lēcam, பெ. (n.) 1. அற்பம்; small bit particle. 2. இரண்டு கலை கொண்ட காலவளவு; a measure of time equal to two kalai. 3. இலேசவணி (செ.அ.);; a figure of speech. [Skt. {} → த. லேசம்] |
லேசு | லேசு1 lēcu, பெ.(n.) இலேசு பார்க்க;see {}. லேசு2 lēcu, பெ.(n.) 1. ஒரு வகை ஒப்பனைப் பின்னற்றுணி; lace. 2. சரிகை (செ.அ.);; silver or gold lace. [E. lace → த. லேசு] |
லேஞ்சி | லேஞ்சி lēñji, பெ.(n.) கைக்குட்டை kerchief, scarf. [Port. Lengo → த. லேஞ்சி] |
லேஞ்சு | லேஞ்சு lēñju, பெ.(n.) லேஞ்சி பார்க்க;see {}. |
லேட் | லேட் lēṭ, பெ. (n.) காலத்தாழ்வு; late. [E. late → த. லேட்] |
லேணி | லேணி lēṇi, பெ.(n.) கடன் வாங்குகை (செ.அ.);; borrowing. [Hind. {} → த. லேணி] |
லேணிதாரன் | லேணிதாரன் lēṇitāraṉ, பெ.(n.) கடன் கொடுத்தவன் (செ.அ.);; creditor. [Hind. {} → த. லேணிதாரன்] |
லேனாதேனா | லேனாதேனா lēṉātēṉā, பெ.(n.) லேவாதேவி பார்க்க;see {}. [Hind. {} → த. லேனாதேனா] |
லேபனம் | லேபனம் lēpaṉam, பெ.(n.) 1. பூச்சு; anointing, smearing. “ம்ருகமத படீர லேபன” (திருப்பு.43);. 2. பூசும் பொருள்; plaster, ointment, unguent, salve. 3. தாதுவன்மை (செ.அ.);; virility, erection of penis. [Skt. {} → த. லேபனம்] |
லேலம் | லேலம் lēlam, பெ.(n.) ஏலம் (செ.அ.);; auction. [Port. leilao → த. லேலம்] |
லேவாதேவி | லேவாதேவி lēvātēvi, பெ.(n.) கொடுக்கல் வாங்கல் (செ.அ.);; money – dealings. [Hind. {} → த. லேவாதேவி] |
லேவாலேவி | லேவாலேவி lēvālēvi, பெ.(n.) லேவாதேவி பார்க்க;see {}. |
லேவு | லேவு1 lēvu, பெ.(n.) ஒற்று; spying, espionage. [வேய் → வேவு] லேவு2 lēvu, பெ.(n.) வேகை ; burning, boiling. [வே → வேவு] |