செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
ரகசியம்

ரகசியம் ragasiyam, பெ.(n.)

இரகசியம் பார்க்க;see eragasiyam.

   2. பெண்குறி; pudendum muliebre.

     [Skt. rahasya → த. ரகசியம்]

ரகம்

 ரகம் ragam, பெ (n.)

   வகை; class, sort.

     [U. ragam → த. ரகம்]

ரகளை

ரகளை ragaḷai, பெ.(n.)

   1. குழப்பம்; confusion.

   2. கன்னடப்பாட்டு வகை; a kind of metre in Kanarese.

   3. கலவரம்; row.

     [Skt. yaudhika → த. யெளதம்]

ரகளைப்படு-தல்

 ரகளைப்படு-தல் ragaḷaippaḍudal, செ.கு.வி. (v.i.)

ரணகளப்படு பார்க்க;see ranagappadu-,

ரகிதம்

 ரகிதம் ragidam, பெ.(n.)

   நீக்கம்; desertion, destitution, separation.

     [Skt. rahita → த. ரகிதம்]

ரகீம்

 ரகீம் raām, பெ.(n.)

   கடவுள்; God the all- merciful.

     [Ar. rahim → த. ரகீம்]

ரகுமான்

 ரகுமான் ragumāṉ, பெ. (n.)

   கடவுள்; God, the all-beneficient.

     [Ar.{} → த. ரகுமான்]

ரக்கை

 ரக்கை rakkai, பெ.(n.)

   இறக்கை; wing.

ரக்தா

 ரக்தா raktā, பெ.(n.)

   ஐஞ் (பஞ்சம); சுரத்தின் வகையுளொன்று; a division of the five notes of the gamut.

     [Skt. {} → த. ரக்தா]

ரங்கநாதன்

 ரங்கநாதன் raṅganātaṉ, பெ. (n.)

   அரங்கநம்பி (பிங்.);; a proper name.

     [Skt. {} → த. ரங்கநாதன்.]

ரங்கமண்டபம்

 ரங்கமண்டபம் raṅgamaṇṭabam, பெ (n.)

   கோயிலின் உள் மண்டபம்; inner hall of a temple.

     [Skt. {} + {} → த. ரங்கமண்டபம்]

ரங்கம்

 ரங்கம் raṅgam, பெ (n.)

பார்க்க அரங்கம்;see {}.

ரங்கவல்லி

 ரங்கவல்லி raṅgavalli, பெ.(n.)

   கோலப்பொடி; flour used in drawing decorative figures on the floor.

     [Skt. {}-ralli → த. ரங்கவல்லி]

ரங்கு

ரங்கு raṅgu, பெ.(n.)

   1. நிறம்; colour.

   2. சாயம்; dye.

   3. வண்ணந்தரும் பொருள்; pigment.

   4. சீட்டைக் கொண்டு ஆடும் சூதாட்டவகை; a game of chance played with cards.

   5. காதலிக்கப்படுபவள்; woman that is loved.

   6. வேசை; prostitute.

     [Skt. {} → த. ரங்கு]

ரங்கூன் மல்லிகை

 ரங்கூன் மல்லிகை raṅāṉmalligai, பெ.(n.)

   மல்லிகை வகை; a kind of jasmine.

ரசகுல்லா

 ரசகுல்லா rasagullā, பெ (n.)

   தித்திப்பான சிற்றுண்டி வகை; a kind of sweet confection.

     [Skt. rasa+{} → த. ரசகுல்லா]

ரசக்கர்ப்பூரம்

 ரசக்கர்ப்பூரம் rasakkarppūram, பெ (n.)

இரசக்கர்ப்பூரம் பார்க்க;see era-k-{}.

     [Skt. rasa+{} → த. ரசகர்ப்பூரம்]

ரசதகுன்றம்

 ரசதகுன்றம் rasadaguṉṟam, பெ. (n.)

வெள்ளிமலை;(கயிலை);

 Mt. Kailas as of silver.

     [Skt. rajata+ → த. ரசதகுன்றம்]

ரசதம்

 ரசதம் rasadam, பெ.(n.)

   வெள்ளி; silver.

     [Skt. rajata → த. ரசதம்]

ரசதாளி

 ரசதாளி rasatāḷi, பெ.(n.)

   வாழைவகை; a species of plantain.

த.வ. மென்வாழை

     [Skt. rasa-{} → த. ரசதாளி]

ரசதாளிக்கரும்பு

 ரசதாளிக்கரும்பு rasatāḷikkarumbu, பெ. (n.)

   கரும்புவகை; a species of sugar-cane.

     [ரசதாளி + கரும்பு]

     [Skt. rasa-{} → ரசதாளி]

ரசத்தைலம்

 ரசத்தைலம் rasattailam, பெ.(n.)

   இதளியத்தை (பாதரசத்தை); முதன்மைச்சரக்காகக் கொண்டு செய்த மருந்தெண்ணெய் வகை; a medicinal oil prepared with mercury as the chief ingredient.

     [Skt. rasa+taila → த. ரசத்தைலம்]

ரசனை

ரசனை1 rasaṉai, பெ.(n.)

   சுவையுணரும் பொறி யாகிய நாக்கு; tongue, the organ of taste.

     [Skt. {} → ரசனை]

 ரசனை2 rasaṉai, பெ (n.)

   அமைப்பு; arrange- ment, style.

     [Skt. {} → ரசனை]

ரசப்

 ரசப் rasap, பெ.(n.)

   அராபியர்களுடைய ஆண்டின் ஏழாவது மாதம்; the seventh Arabic month.

     [Ar. rajab → ரசப்]

ரசப்பிடிப்பு

 ரசப்பிடிப்பு rasappiḍippu, பெ.(n.)

   இதளியத்தை (பாதரச); உட்கொண்டதாலுண்டாகும் முடக்குவாதம்; rheumatism due to mercurial poisioning.

     [Skt. rasa+ {} → ரசப்பிடிப்பு]

ரசப்புகை

 ரசப்புகை rasappugai, பெ.(n.)

   இதளியத்தின் (பாதரசத்தின்); ஆவி; mercurial vapour.

     [Skt. rasa + puka → ரசப்புகை]

ரசமெழுகு

 ரசமெழுகு rasameḻugu, பெ (n.)

   இதளிய (பாதரச);ஞ் சேர்த்துச் செய்த மெழுகு மருந்து வகை; blue pill, pilula hydrargyri.

ரசம்

 ரசம் rasam, பெ. (n.)

   தெளிசாறு, சாறு; juice.

     [Skt. rasa → த. சாறு.]

ரசா

ரசா racā, பெ.(n.)

   1. அனுமதி; permission, leave.

   2. விடுமுறை; cessation from work, recess, holiday, vacation.

த. வ. விடுப்பு இசைவு

     [Arab. {} → த. ரசா]

ரசாஞ்சனம்

 ரசாஞ்சனம் racāñjaṉam, பெ.(n.)

   துத்தம் சேர்த்த மைவகை; an unguent prepared with vitriol of copper.

     [Skt. {} → ரசாஞ்சனம்]

ரசிதம்

 ரசிதம் rasidam, பெ.(n.)

   வெள்ளி; silver.

     [Skt. rajata → ரசிதம்]

ரசீது

 ரசீது racītu, பெ. (n.)

   பற்றுச்சீட்டு; receipt.

     [Skt. rasid → த. ரசீது.]

ரச்சீத்கவுல்

 ரச்சீத்கவுல் raccītkavul, பெ (n.)

   குத்தகைத் தொகையைப் படிப்படியாக அதிகப்படுத்தும் கட்டுப்பாட்டு நிலக்குத்தகை; grant of land on cowle, providing progressive rates of assessment.

     [Persn.rasid+kavul → த. ரச்சீத்கவுல்]

ரச்சு

ரச்சு raccu, பெ.(n.)

   1. கயிறு; cord, rope, string.

   2. மயிற்பின்னல்; lock of braided hair.

   3. தாலிச்சரடு; cord of the marriage badge.

     [Skt. rajju → த. ரச்சு]

ரச்சுப்

 ரச்சுப் raccup,  raccu-p-poruttam,

பெ. (n.);

   திருமணப் பொருத்தம்; a felicitous corresondence between the horoscopes of the bride and bridegroom.

     [Skt. rajju → த. பொருத்தம்]

ரஞ்சனி

ரஞ்சனி rañjaṉi, பெ.(n.)

   இராக வகை; a specific melody type.

ரஞ்சான்1

__,

பெ.(n.);

   அராபியர்களுடைய ஆண்டின் ஒன்பதாவது மாதம்; the ninth Arabic month.

     [Skt. {} → ரம்சான் → ரஞ்சான்]

ரஞ்சான்

ரஞ்சான்2 rañjāṉ, பெ.(n.)

   ஊதுகொம்பு வகை; bugle.

ரட்சகன்

 ரட்சகன் raṭcagaṉ, பெ. (n.)

   பாதுகாப்பாளன், புரவலன்; patron.

     [Skt. raksaka → த. ரட்சகன்.]

ரட்சி-த்தல்

 ரட்சி-த்தல் raṭcittal, பெ.(v.) பார்க்க இரட்சி-த்தல்.

     [Skt. {} → த. ரட்சி-]

ரட்சை

 ரட்சை raṭcai, பெ.(n.)

பார்க்க இரட்சை;see eraksai.

     [Skt. {} → த. ரட்சை]

ரணம்

 ரணம் raṇam, பெ. (n.)

   புரைக்காயம்; deep sore.

     [Skt. {} → த. ரணம்.]

ரணவீரி

 ரணவீரி raṇavīri, பெ.(n.)

   ஒரு சிற்றூர்க் கடவுள்; a village goddess.

ரணவைத்தியம்

 ரணவைத்தியம் raṇavaittiyam, பெ. (n.)

   அறுவைப்பண்டுவம்; surgery.

     [Skt. {}-vaidya → த. ரணவைத்தியம்.]

ரதகாரன்

 ரதகாரன் radakāraṉ, பெ.(n.)

   தச்சன்; carpenter, coach-builder.

     [ரதம் + காரன்]

     [Skt. ratha → த. ரத+ காரன்]

ரதிதேவி

 ரதிதேவி radidēvi, பெ.(n.)

   மன்மதன் மனைவி; manmathan’s wife.

ரதோற்சவம்

 ரதோற்சவம் ratōṟcavam, பெ.(n.)

   தேர்த் திருவிழா; car-festival.

     [Skt. {}+sava → த. ரதோற்சவம்]

ரத்தபலவீனம்

ரத்தபலவீனம் rattabalavīṉam, பெ.(n.)

 anemia, சோகை1 பார்க்க;see {}.

     [Skt. rakta + → த. ரத்தபலவீனம்]

ரத்தபித்த ரோகம்

 ரத்தபித்த ரோகம் rattabittarōkam, பெ.(n.)

   அரத்தம் வெளிப்படும் நோய்; haemorrhage.

     [Skt.rakta+pitta+{} → த. ரத்தபித்தரோகம்]

ரத்தபேதி

 ரத்தபேதி rattapēti, பெ.(n.)

   வயிற்றளைச்சல்; dysentry.

     [Skt. rakta + {} → த. ரத்தபேதி]

ரத்தம்

ரத்தம் rattam, பெ (n.)

   குருதி; blood.

     “சிந்து ரத்தந் துதைந்தெழுஞ்செச்சையான்” (கம்பரா. அங்கத. 42);

     [த. அரத்தம் → Skt. rakta → த. ரத்தம்]

ரத்தவண்டம்

 ரத்தவண்டம் rattavaṇṭam, பெ.(n.)

   வயிற்றிலுண்டாகும் குருதிக் கட்டி; haemato- cele, accumulation of blood in the testicle.

ரத்திகை

 ரத்திகை rattigai, பெ (n.)

   பண்வகை மூன்றனுள் ஒன்று; a division of the second note of the gamut, one of three kinds of {}.

     [Skt. {} → த. ரத்திகை]

ரத்தினகண்டி

ரத்தினகண்டி rattiṉagaṇṭi, பெ.(n.)

   மணி (இரத்தின);க் கற்கள் இழைத்த கழுத்தணி வகை; ruby necklace.

     “ர்ங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டி” (விறலிவிடு.1130);.

     [Skt. ratna → த. ரத்தினகண்டி]

ரத்து

 ரத்து rattu, பெ.(n.)

   தள்ளுபடி, நீக்கம் செய்கை, நீக்குகை; rejection, repulsion, retutation, repeal, abrogation, making null and void.

     [Arab. radd → த. ரத்து]

ரத்னம்

ரத்னம் ratṉam, பெ.(n.)

   1. இரத்தினம் பார்க்க; gem, precious stone. see {}.

   2. வைரம்; diamond.

     [Skt. ratna → த.ரத்னம்]

ரத்னாங்கி

 ரத்னாங்கி ratṉāṅgi, பெ.(n.)

   மேளகர்த்தாக் களுளொன்று; a primary {}.

ரப்

 ரப் rap, பெ.(n.)

   கடவுள்; god, the all nourishing.

     [Ar. rab → த. ரப்]

ரப்பமிடு-தல்

ரப்பமிடு-தல் rappamiḍudal,    20.செ.கு.வி. (v.i.)

ஏப்பம் விடு பார்க்க: see eppamvidu.

     [ஏப்பம் + விடு – ஏப்பம்விடு → ஏப்பமிடு]

ரப்பமெடு-த்தல்

ரப்பமெடு-த்தல் rappameḍuttal,    4.செ.கு.வி. (v.i.)

ஏப்பம் விடு பார்க்க see eppamvidu.

     [ஏப்பம் + ஏடு.]

ரப்பம்விடு-தல்

ரப்பம்விடு-தல் rappamviḍudal,    20.செ.கு.வி. (v.i.)

   தேக்கெறிதல்; to belch, to eject as of wind, from the mouth – Bructate

     [ஏ → ஏப்பம் + விடு.]

ரப்பாடு

ரப்பாடு rappāṭu, பெ. (n.)

   அம்பு விழும் எல்லை (பெருங்.உஞ்சைக். 53,68);; distance to which an arrow can fly.

     [ஏ + பாடு. படு → பாடு. ஏ = அம்பு. பாடு = படுமிடம், விழும் இடம்]

ரப்பிசானி

 ரப்பிசானி rappicāṉi, பெ.(n.)

   அராபியர்களின் ஆண்டில் நான்காவது மாதம்; the fourth Arabic month.

     [Ar.rabiath{} → ரப்பிசானி]

ரப்பியன்

 ரப்பியன் rappiyaṉ, பெ. (n.)

   பேதை(கொ.வ.);; simpletion fool.

     [ஏ → ஏய்ப்பு + அன் – ஏய்ப்பியன் → ஏப்பியன். (எளிதில் ஏமாற்றப்படுபவன்);.]

ரப்பிராசி

 ரப்பிராசி rappirāci, பெ. (n.)

ஏப்பியன் பார்க்க;see eppiyan.

   க. ஏப்ராசி, எப்ராசி, எப்ரேசி;   து.எபுளந்தெ;தெ. எப்பெராசி.

ரப்பிலவ்வல்

 ரப்பிலவ்வல் rappilavval, பெ.(n.)

   அராபியர்களுடைய ஆண்டின் மூன்றாவது மாதம்; the third Arabic month.

     [Arab. rabiulawwal → ரப்பிலல்வல்]

ரப்பு

ரப்பு1 rappu, பெ.அ.(adj.)

   கரடுமுரடான; rough.

     [E. rough → த. ரப்பு]

 ரப்பு2 rappu, பெ.(n.)

   இழையோட்டுகை; darning.

     [E. {} → த. ரப்பு]

ரப்புழை

ரப்புழை rappuḻai, பெ. (n.)

   அம்பு எய்யக் கோட்டை மதிலில் அமைக்கப்பட்டிருக்கும் துளைமாடம் (சீவக. 105 உரை);; loop-hole in a fort-wall for discharging arrows through.

     [ஏ + புழை – ஏப்புழை. ஏ = அம்பு. புழை = துளைமாடம்.]

ரப்பை

 ரப்பை rappai, பெ.(n.)

   கண்ணிமை; eyelid.

ரமணன்

ரமணன் ramaṇaṉ, பெ.(n.)

   1. கணவன்; husband

     “ராதாரமணன்”

   2. தலைவன்; lord.

     “வேங்கடரமணன்”.

     [Skt. {} → த. ரமணன்]

ரமா

 ரமா ramā, பெ.(n.)

   இலக்குமி; Lakshmi.

     [Skt. {} → ரமா]

ரமாரமி

ரமாரமி ramārami, வி.அ. (adv.)

   1. ஏறக்குறைய; more or less.

   2. சராசரி; on an average.

     [T. {}-rami → த. ரமாரமி]

ரமை

 ரமை ramai, பெ.(n.)

   இலக்குமி; Laksmi.

     [Skt. {} → ramai]

ரம்சான்

 ரம்சான் ramcāṉ, பெ.(n.)

   பகல் முழுவதும் பட்டினி இருந்து கொண்டாடப்படுவதும் முகமதியர் வழங்கும் மாதங்களுள் ஒன்பதாவதுமான மாதம்; the nineth month of the Muhamadan year, each day of which is observed as a fast from dawn till sunset.

     [Ar. {} → த. ரம்சான்]

ரம்டோல்

 ரம்டோல் ramṭōl, பெ.(n.)

   பெரிய பறை (நகரா);; big drum.

த. வ. பெரும்பறை

     [Hlnd. {} → த. ரம்டோல்]

ரம்பை

ரம்பை rambai, பெ.(n.)

   வானுலகத்து (தேவலோகம்); நாடகமகளிரிலொருத்தி (திவ்.பெரியாழ். 3,6,4.);; a courtesan of the Gods.

     [Skt. {} → த. ரம்பை]

ரயத்

 ரயத் rayat, பெ.(n.)

   குடியானவன்;     [U.raiyat → த. ரயத்]

ரயத்வாரி

 ரயத்வாரி rayatvāri, பெ.(n.)

   தனித்தனியாகக் குடிகளுக்கு விதிக்குந் தீர்வையொழுங்கு (C.G.);; settlement of land revenue directly with individuals.

     [U. {} → த. ரயத்வாரி]

ரயாதி

ரயாதி rayāti, பெ.(n.)

   1. நிலவரித்தள்ளுபடி (வரிவஜா);; remission of government claim.

   2. ஆதாயம்(இலாபம்);; benefit, profit.

     [U. riayat → த. ரயாதி]

ரயிலடுக்கு

 ரயிலடுக்கு rayilaḍukku, பெ.(n.)

   பயணஞ்செய்வோர் சென்றவிடங்களிற் சமைக்க உதவும் அடுக்குப்பாத்திரம்; a compact set of cooking utensils used by travellers.

     [E. rail → த. ரயில்]

ரயில்

 ரயில் rayil, பெ.(n.)

   நீராவியால் அல்லது மின்சாரத்தாற் செல்லும் வண்டித் தொடர்; train propelled by steam or electricity.

     [E. rail → த. ரயில்]

ரவாணா

ரவாணா ravāṇā, பெ.(n.)

   1. அனுப்புகை(C.G.);; sending, despatch.

   2. அனுமதிச்சீட்டு(வின்.);; pass, permit.

   3. தம்பட்டவகை (madr); tabour.

த. வ. செலுத்து

     [Persn. {} → த. ரவாணா]

ரவாலட்டு

 ரவாலட்டு ravālaṭṭu, பெ. (n.)

   நொய்யுலட்டு; a sweet.

     [H. {} + Skt. laddu → த. ரவாலட்டு]

ரவாலாடு

 ரவாலாடு ravālāṭu, பெ.(n.)

   கோதுமையின் குறுநொய்யி(ரவாவி);னால் செய்த இன்னுருண்டை; a kind of confection made of wheat-flour.

     [Hind. {} → த. ரவாலாடு]

ரவி

ரவி ravi, பெ.(n.)

   1. கதிரவன்; sun.

   2. ஞாயிறு இருக்கும் ஒரை(இராசி);யைக் குறிக்குஞ் சொல்லோடு சேர்ந்து மாதத்தைக் குறிக்குஞ் சொல்; a term meaning ‘month’ occuring as the second member of comound words the first being the name of the section of the zodiac in which the sun remains during that month.

     [Skt. ravi → த. ரவி]

ரவிக்கை

 ரவிக்கை ravikkai, பெ.(n.)

   பெண்கள் மார்பிலணியும் சட்டை; tight fitting bodice, jacket, corset.

த. வ. இறுவி, இறுக்கை

     [T. ravika, K. ravake → த. ரவிக்கை]

ரவிசு

 ரவிசு ravisu, பெ.(n.)

   இரைச்சல்; noise.

ரவை

ரவை1 ravai, பெ. (n.)

   1. நுண்ணிய பொருள்; small particle.

   2. கோதுமையின் குறு நொய்; wheat flour.

   3. வைரம்; diamond.

   4. சுடுவதற்கு உதவும் சிறிய ஈயக்குண்டு; small lead shot.

   5. கோலி; marble.

   6. சிறிது; a little.

த. வ. குறுணை

     [Hind. {} → த. ரவை]

ரா

ரா rā, பெ.(n.)

   இரவு (இராத்திரி); (நாம தீப. 553);; night.

ராகப்

 ராகப் rākap, பெ.(n.)

   அங்கவடி; stirrup.

     [Arab. {} → த. ராகப்]

ராகமாலிகை

 ராகமாலிகை rāgamāligai, பெ.(n.)

   ஒரு பாடலிற்பல பண் (ராகங்);களும் தொடர்ந்துவரப் பாடும் பண் (ராகத்);தொடர்; head ornament worn by women.series of {} in which the successive parts of a song or sung.

த.வ. கூட்டுப்பண்

     [Skt. {} → த. ராகமாலிகை]

ராகம்

ராகம் rākam, பெ.(n.)

   1. ஆசை; desire.

   2. நிறம்; colour.

     “மாக ராக நிறைவா ளொளியோனை”

   3. சிவப்பு (பிங்);; redness.

   4. பாட்டு (பிங்.);; music, musical measure.

     “உதயராகத்தோடு” (பாரத.இந்.5);.

   5. பண் ;(mus.);

 specific melody types.

   6. சுந்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று;     [Skt. {} → த. ராகம்]

ராகவன்

 ராகவன் rākavaṉ, இராகவன் பார்க்க;see {}.

     [Skt. {} → த. ராகவன்]

ராகவர்த்தனி

 ராகவர்த்தனி rākavarttaṉi, பெ.(n.)

   மேளகர்த்தாக்களுளொன்று; a primary {}.

     [Skt. {}→ ]

ராகி

ராகி rāki, பெ.(n.)

இராகி2 (வின்); பார்க்க;see {}.

த.வ. இறகி

     [Skt. {} → த. ராகி]

ராகு

 ராகு rāku, பெ. (n.)

கருங்கோள்;{}.

     [Skt. {} → த. ராகு.]

ராகுத்தராயன்

ராகுத்தராயன் rākuttarāyaṉ, பெ.(n.)

   பார்க்க இராவுத்தன்1; trooper, cavalier.

     “இராகுத்தராயன் என்று” (திருவாலவா. 28, 83, பிம்);.

     [K. {} → த. ராகுத்தராயன்]

ராக்கடி

 ராக்கடி rākkaḍi, பெ.(n.)

   உச்சந்தலையணிவகை; an ornament worn by women on the crown of the head.

த. வ. சூளாமணி

     [U. {} → த. ராக்கடி]

ராக்கடை

 ராக்கடை rākkaḍai, பெ.(n.)

ராக்கடி பார்க்க;see {}.

     [ராக்கடி → த. ராக்கடை]

ராக்கெட்

 ராக்கெட் rākkeṭ, பெ. (n.)

   ஏவுகணை; rocket.

     [E. rocket → த. ராக்கெட்.]

ராங்கி

 ராங்கி rāṅgi, பெ.(n.)

   செருக்கு (கொ.வ.);; affectation, vanity, haughtiness.

     [E. rank → த. ராங்கி]

ராசஅம்சம்

 ராசஅம்சம் rācaamcam, பெ.(n.)

   அன்னப்பறவை வகை; flamingo, phoenicopterus, roseus.

ராசக்காணம்

 ராசக்காணம் rācakkāṇam, பெ. (n.)

   அரசனுக்குரிய வரி முதலியன; revenue, king’s share of the produce.

     [Skt. {}+M. {} → த. ராசக்காணம்]

ராசக்கிரீடை

ராசக்கிரீடை rācakkirīṭai, பெ. (n.)

   1. அரசர்களின் புனல் விளையாட்டு; sportive play of the royal family in a water pool.

   2. கண்ணபிரான் ஆயமகளிரொடு ஆடிய கூத்துவகை; a sportive dance of {} with the {}.

     [Skt. {}+ த. ராசக்கிரீடை]

ராசசம்மானம்

 ராசசம்மானம் rāsasammāṉam, பெ.(n.)

   அரசன் அளிக்கும் பரிசு; present made by a king.

     [Skt. {} → த. ராசசம்மானம்]

ராசசூயம்

 ராசசூயம் rācacūyam, பெ. (n.)

   ஒரு வகை வேள்வி; a kind of sacrifice.

     [Skt. {} → த. ராஜசூயம்]

ராசசேகரி

 ராசசேகரி rācacēkari, பெ.(n.)

   இடைக்காலச் சோழரின் பட்டப் பெயர்; a title of later cholas.

     [Skt. {} → {}]

ராசசேவை

 ராசசேவை rācacēvai, பெ.(n.)

   அரச வேலை; service under a king, state service.

     [Skt. {} → த. ராசசேவை]

ராசதண்டனை

 ராசதண்டனை rācadaṇṭaṉai, பெ.(n.)

   முறை (நீதி);மன்றத்தால் குற்றத்திற்கேற்றவாறு வழங்கப்படும் தண்டனை; punishment awarded by a court of law.

மறுவ. அரச தண்டனை.

     [Skt. {}+த. தண்டனை → த. ராசதண்டனை]

ராசதானி

ராசதானி rācatāṉi, பெ. (n.)

   1. தலைநகர்; capital city.

   2. மாநிலம்; province, presidency.

     [Skt. {} → த. ராசதானி]

ராசதோரணை

 ராசதோரணை rācatōraṇai, பெ.(n.)

   பெருஞ்சிறப்பு; splendour, pomp, as befitting a king.

மறுவ. அரச தோரணை.

     [Skt. {} → த. ராசதோரணை]

ராசத்துரோகம்

 ராசத்துரோகம் rācatturōkam, பெ. (n.)

   அரசனுக்குக் கேடு சூழ்கை; treason.

மறுவ. அரசஇரண்டகம்

     [Skt. {} → த. ராசத்துரோகம்]

ராசத்துரோகி-

 ராசத்துரோகி- rācatturōki, பெ.(n.)

   அரசனுக்குக் கேடு சூழ்பவன்; traitor.

மறுவ. அரசஇரண்டகன்

     [Skt. {} → த. ராசத்துரோகி]

ராசநடை

 ராசநடை rācanaḍai, பெ.(n.)

   மிடுக்கான (கம்பீரமான); நடை; stately gait, as of a king.

     [Skt. {}+த. நடை → த. ராசநடை]

ராசநிந்தனை

 ராசநிந்தனை rācanindaṉai, பெ.(n.)

   அரசினைப் பழிக்கை; sedition.

     [Skt. rajya → த. ராச+நிந்தனை]

ராசநோய்

 ராசநோய் rācanōy, பெ.(n.)

   எலும்புருக்கி நோய்; tuberculosis.

     [Skt. {} → த.ராச+நோய்]

ராசன்

 ராசன் rācaṉ, பெ.(n.)

   அரசன்; king.

     [த. அரசன் → Skt. rajan → த. ராசன்]

ராசபக்தி

 ராசபக்தி rācabakti, பெ.(n.)

   அரசனிடம் குடிகளுக்குள்ள பற்று; loyalty to the king.

     [Skt. {}+pakti → த. ராசபக்தி]

ராசபத்திரம்

 ராசபத்திரம் rācabattiram, பெ.(n.)

   அரசனளிக்கும் ஆவணம் முதலியன; royal edict or grant.

     [Skt. {}+ patra → த. ராசபத்திரம்]

ராசபாகம்

ராசபாகம் rācapākam, பெ.(n.)

   1. அரசனுக்குரிய பங்கு; royal share.

   2. அரசாங்கத்துக்குரியதான விளைச்சல் முதலியவற்றின் பகுதி; share of produce due as revenue to the government.

     [Skt. {} → த. ராசபாகம்]

ராசபாட்டை

ராசபாட்டை rācapāṭṭai, பெ. (n.)

   1. பெருவழி; royal road, king’s highway.

   2. நேர்முறையான வழி; straight path.

     [Skt. {}+ த. பாட்டை → த.ராசபாட்டை]

ராசபிளவை

 ராசபிளவை rācabiḷavai, பெ.(n.)

   பிளவை நோய் வகை; a disease.

     [Skt. {} + த. பிளவை → த. ராசபிளவை]

ராசபுத்திரன்

 ராசபுத்திரன் rācabuttiraṉ, பெ.(n.)

   அரசன் மகன்; prince.

     [Skt. {}+putra → த. ராசபுத்திரன்]

ராசபோகம்

ராசபோகம் rācapōkam, பெ.(n.)

   1. இன்ப வாழ்க்கை; life of great ease and enjoyment, as of a king.

இராசபாகம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. ராச+போகம்]

ராசமண்டலம்

ராசமண்டலம் rācamaṇṭalam, பெ.(n.)

   அரசர் கூட்டம்; assembly of kings.

     “அன்றிருந்த ராசமண்டலம்” (பாரத.வாரணா.63);

     [Skt. {} → த. ராசமண்டலம்]

ராசமான்ய

ராசமான்ய rācamāṉya, பெ. (adj.)

   1. அரசனால் மதிக்கத்தக்க; most excellent as worthy of the king’s regard.

     [Skt. {} → த. ராசமான்ய]

ராசமுதலிகள்

 ராசமுதலிகள் rācamudaligaḷ, பெ.(n.)

   தலைமையதிகாரிகள்; ministers and chieftains.

ராசயோகம்

ராசயோகம் rācayōkam, பெ.(n.)

இராசயோகம் 1,2,3, பார்க்க;see {}.

மறுவ. அரசவோகம்.

ராசராசநரேந்திரன்

 ராசராசநரேந்திரன் rācarācanarēndiraṉ, பெ. (n.)

   வேங்கி நாட்டரசன்; a king name of {}

     [Skt. rajan + raja+{} → த. ராசராச நரேந்திரன்]

ராசராசன்காசு

 ராசராசன்காசு rācarācaṉkācu,    நாணய வகை; a coin.

ராசராசேசுவரி

 ராசராசேசுவரி rācarācēcuvari, பெ.(n.)

   கொற்றவை;{}.

     [Skt. {} → த. ராசராசேசுவரி]

ராசரிகம்

 ராசரிகம் rācarigam, பெ.(n.)

   ஆட்சி; rule, government.

     [T. {} → {} → த. ராசரிகம்]

ராசரிசி

 ராசரிசி rāsarisi, பெ.(n.)

   துறவுநிலையிலுள்ள அரசன்; royal sage.

     [Skt. {} → த. ராசரிசி]

ராசவிசுவாசம்

 ராசவிசுவாசம் rāsavisuvāsam, பெ.(n.)

இராசபக்தி பார்க்க;see {}.

     [Skt. {} → த. ராசவிசுவாசம்]

ராசவிழி

 ராசவிழி rācaviḻi, பெ.(n.)

   மிடுக்கான நோக்கு; royal or majestic look.

     [Skt. {} → த. ராசவிழி]

ராசா

ராசா rācā, பெ.(n.)

   1. அரசன்; king, ruler.

   2. மிகச்சிறந்தவன்; that which is most excellent of its kind.

   3. அரசு அளிக்கும் பட்டப் பெயர்; a title of honour conferred by the government.

     [Skt. {} → த. ராசா]

ராசாகுடுமிபண்ணு-தல்

ராசாகுடுமிபண்ணு-தல் rācākuḍumibaṇṇudal, செ.குன்றாவி. (v.t.)

   1. மறைவாகப் போய் ஒருத்தன் குடுமியை அவிழ்த்து விளையாட்டுச் செய்தல்; to make sport of one by stealthily untying his hairtuft.

   2. இறுதிரத்தாரில் ஒருவர்க்கும் நன்மையாகாதபடி செய்தல் (இ.வ);; to be beneficial to neither party.

ராசாங்கம்

 ராசாங்கம் rācāṅgam, பெ.(n.)

   அரசு; kingship.

     [Ar. {} → ராசாங்கம்]

ராசாத்தி

 ராசாத்தி rācātti, பெ.(n.)

இராசாத்தி பார்க்க;see {}.

 ராசாத்தி rācātti, பெ.(n.)

ராணி பார்க்க;see {}.

ரிக்

 rik,

பெ.(n.);

இருக்கு பார்க்க;see irukku.

     [Skt. {} → த. ரிக்]

ராசாமந்திரி

 ராசாமந்திரி rācāmandiri, பெ.(n.)

   ஒருவனை அரசனாகவும் மற்றவர்களை மந்திரி முதலானவர்களாகவும் கொண்டு சிறுவர் விளையாடும் விளையாட்டு வகை; a sport among children in which the players act the parts of a king, his ministers, etc.

ராசாளி

 ராசாளி rācāḷi, பெ.(n.)

இராசாளி பார்க்க;see {}.

ராசி

ராசி1 rāci, பெ.(n.)

   வரிசை; row.

 ராசி2 rāci, பெ.(n.)

   1. கூட்டம் (வின்.);; collection.

   2. குவியல் (பிங்.);; heap

     “சுட்டன துரக ராசி” (கம்பரா. நாகபாசப்.94);.

   3. இனம்; kind, sort.

   4. மொத்தம்; aggregate.

   5. மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனசு, மகரம், கும்பம், மீனம்.(சூடா.);; sign of the zodiac.

     “ஏக ராசியினினெய்த” (கம்பரா. இராவணன் தானை19);.

   6. நல்லூழ் (கொ.வ);; lack.

   7. சுபாவம்(கொ.வ.);; agreement, harmony.

   9. வட்டி முதலியன கணக்கிடும் பொழுது கொள்ளும் கணித எண் (Arith.);

 product of terms, used in the calculation of interest, etc.

   10. பணம்(இ.வ.);; coin.

     [Skt. {} → த. ராசி2]

 ராசி3 rāci, பெ.(n.)

   இணக்கம் (சமாதானம்);; amicable settlement between litigants, reconciliation.

     [Skt. {} → த. ராசி3]

ராசிநாமா

ராசிநாமா rācināmā, பெ.(n.)

   1. வழக்காளிகள் இருவரும் தம்முள் ஒத்துப் போவதாக எழுதித்தரும் ஆவணம்; Document in writing where by the parties to a suit agree to adjust their differences.

   2. இராசிநாமா பார்க்க;see {}.

   3. பட்டாவிலக்குப் பத்திரம்

 deed of relinquishment executed by the cultivator when he gives up his {} lands.

ராசிபாளையன் பணம்

 ராசிபாளையன் பணம் rācipāḷaiyaṉpaṇam, பெ.(n.)

   நாணய வகை; a coin.

ராசிபொன்

 ராசிபொன் rāciboṉ, பெ.(n.)

   நாணய வகை; a coin.

ராசிபோகம்

 ராசிபோகம் rācipōkam, பெ.(n.)

   கோள் ஒன்று ஓர் இராசியைக் கடந்து செல்லுகை; the passage of a planet through a sign of the zodiac.

     [Skt. {} → த. ராசிபோகம்]

ராசிமானம்

ராசிமானம் rācimāṉam, பெ.(n.)

   கோள்களின் நிலையைக் கணிக்கும் முறை; calculation of the position of a planet in the zodiac.

   2. குறித்த இராசி முற்றும் தோன்று(உதயமா); வதற்காகும் காலம்; time taken for a particular sign of the zodiac to pass the horizon.

     [Skt. {} → த. ராசிமானம்]

ராசு

 ராசு rācu, பெ.(n.)

   ஒரு தெலுங்கப் பிரிவினர்; a telugu caste.

     [T. {} → {} த. ராசு]

ராசோபசாரம்

ராசோபசாரம் rācōpacāram, பெ.(n.)

   1. அரசர்க்குரிய விருந்தோம்பல்; honours

 pertaining to a king.

   2. பெரும மதிப்புரவு; great civility, as be fitting a king.

     [Skt. {} → த. ராசோபசாரம்]

ராட்சதன்

 ராட்சதன் rāṭcadaṉ, பெ.(n.)

   அரக்கன் (இராக்கதன்); (வின்);; giant, demon, goblin.

     [Skt. {} → த. ராட்சதன்]

ராட்டினம்

ராட்டினம் rāṭṭiṉam, பெ.(n.)

   1. சுழலும் சக்கரம்; spinning wheel.

   2. நீரிறைக்க உதவும் சக்கரம்; pulley for drawing water, reel ginning machine whirligig.

த. வ. உருளி

     [U. {} → த. ராட்டினம்]

ராட்டிரகூடம்

 ராட்டிரகூடம் rāṭṭiraāṭam, பெ.(n.)

   இரட்டர் களுடைய நாடு; country of the {}.

     [Skt. {} → த. ராட்டிரகூடம்]

ராட்டிரம்

 ராட்டிரம் rāṭṭiram, பெ.(n.)

   அரசாங்கம்; kingdom.

     [Skt. {} → த. ராட்டிரம்]

ராட்டு

 ராட்டு rāṭṭu, பெ.(n.)

இராட்டினம்(கொ.வ); பார்க்க;see {}.

ராட்டை

ராட்டை1 rāṭṭai, பெ.(n.)

இராட்டினம் (கொ.வ); பார்க்க;see {}.

     [Hind. {} → த. ராட்டை]

 ராட்டை2 rāṭṭai, பெ.(n.)

   நூல் நூற்க உதவும் சக்கரம்; ambar {}.

     [Hind. {} → த. ராட்டை]

ராணி

ராணி rāṇi, பெ.(n.)

   அரசி; queen.

   2. இளவரசி; princess.

     [Pkt. {} < {} → த. ராணி]

ராணு

ராணு rāṇu, பெ.(n.)

   காலாட்படை; infantry.

     “வாரிட்டா ராணு வரிசையாய் நிற்க”(விறலிவிடு. 1049);

ராணுவப்பேர்

ராணுவப்பேர் rāṇuvappēr, பெ.(n.)

   சேனைத் தலைவர்; persons in command of armies.

     “அச்சமில்லை ராணுவப்போர்” (கூளப்ப.53);.

     [T. {} → த. ராணுவம்]

ராணுவம்

 ராணுவம் rāṇuvam, பெ.(n.)

   பட்டாளம்; army.

     [T. {} → த. ராணுவம்]

ராதா மனோகரம்

 ராதா மனோகரம் rātāmaṉōkaram, பெ.(n.)

   பூங்கொடி வகை (இ.வ.);; a flowering creeper.

ராதை

 ராதை rātai, பெ.(n.)

   திருமால் மனைவியருள் ஒருத்தியான ராதா; one of the wife of {}.

     [Skt. {} → த. ராதை]

ராத்தல்

 ராத்தல் rāttal, பெ.(n.)

   எடையளவு; a measure of weight.

ராத்தல் தராசு

 ராத்தல் தராசு rāttaltarācu, பெ.(n.)

தோல்

   முதலியன நிறுக்கும் நிறைகோல் வகை; the spring balance, used chiefly in weighing hides, wool, palmyra-fibre, yarn, etc.

ராத்திரி

ராத்திரி rāttiri, பெ.(n.)

   இரவு (இராத்திரி);; night.

     “ராத்திரி மேனியம்மான்” (அஷ்டப். திருவேங்கடத்.24);

     [Skt. {} → த. ராத்திரி]

ராப்தா

ராப்தா rāptā, பெ. (n.)

   1. இணைப்பு; bond, that which binds one thing with another.

   2. நட்பு; friendliness.

   3. வழக்கம்; habit, custom.

   4. மாமூல்; mamool, precedent.

   5. அரசவீதி (ராஜபாட்டை);; thorough fare.

     [Arab. {} → த. ராப்தா]

ராப்பாடி

 ராப்பாடி rāppāṭi, பெ.(n.)

   இரவில்பாடி இரந்துண்போர்; washerman of the low castes, who begs his food at night, singing along the streets.

ராப்புச் சர்க்கரை

 ராப்புச் சர்க்கரை rāppuccarkkarai, பெ.(n.)

   தூய்மை செய்யாத சருக்கரை (இ.வ.);; unrefined sugar.

     [U. {} → த. ராப்பு]

ராப்பொடி

 ராப்பொடி rāppoḍi, பெ.(n.)

   அராப்பொடி(வின்.);; filings.

ராமகேளி

 ராமகேளி rāmaāḷi, பெ.(n.)

   பண் வகை; a musical mode.

     [Skt. {} → த. ராமகேளி]

ராமக்கோழி

 ராமக்கோழி rāmakāḻi, பெ.(n.)

   நீர்க்கோழி வகை (இ.வ.);; water hen, as having a mark resembling vaisnava mark.

ராமசேகரலு

 ராமசேகரலு rāmacēkaralu, பெ.(n.)

   நெல் வகை; a kind of paddy.

ராமபாணம்

 ராமபாணம் rāmapāṇam, பெ.(n.)

இராமபாணம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. ராமபாணம்]

ராமப்பிரியை

 ராமப்பிரியை rāmappiriyai, பெ.(n.)

   பண் வகை; a musical mode.

     [Skt. {} → த. ராமப்பிரியை]

ராமராச்சியம்

 ராமராச்சியம் rāmarācciyam, பெ.(n.)

   மிகு பயனுள்ள அரசு; most beneficient government, as the rule of {}.

     [Skt. {} → த. ராமராஜ்யம்]

ராமர்

 ராமர் rāmar, பெ.(n.)

   திருமால் தோற்றரவுகளுள் ஒன்று; an appearance of {}.

     [Skt. {} → த. ராமர்]

ராமானுசம்

ராமானுசம் rāmāṉusam, பெ.(n.)

   1. தீபக் கால் வகை; a kind of standard for a light.

   2. செம்பினாலியன்ற ஒரு வகைக் குடிநீர்; a copper cup.

   3. தென்கலைத் திருமண்காப்பிடு கின்ற பாதம்; the pedestal of the y mark of the Ten-Kalai {}.

     [Skt. {} → த. ராமானுசம்]

ராமாயணம்

ராமாயணம் rāmāyaṇam, பெ. (n.)

   1. இராமாயணம் பார்க்க; the epic {}.

   2. இராமராவணயுத்தம்; the war between {} and {}.

     [Skt. {} → த. ராமாயணம்]

ராம்பாடி

 ராம்பாடி rāmbāṭi, பெ.(n.)

 a wandering caste.

     [Mhr. {} → த. ராம்பாடி]

ராயசக்காரன்

 ராயசக்காரன் rāyasakkāraṉ, பெ. (n.)

   எழுத்தர்; clerk, secretary.

     [T. {}. k. {} → த. ராயசக்காரன்]

ராயசம்

ராயசம் rāyasam, பெ.(n.)

   1. கட்டளை; order.

   2. இராயசம் (பார்க்க);; business of a writer.

   3. கருவம்; if {} hangting.

     [T. rayacame, K. {} → த. ராயசம்]

ராயசீமரக்கால்

ராயசீமரக்கால் rāyacīmarakkāl, பெ.(n.)

   பட்டணம்படி 21/4 முதல் 23/4 வரை கொள்ளும் ஒரு முகத்தலளவை; measure of capacity = 2 1/4 to 2 3/4 Madras measure.

     [Mhr. {} → த. ராயசீ]

ராயன்

ராயன் rāyaṉ, பெ.(n.)

   1. அரசன்; king.

   2. இராயன்; caesan.

   3. மாத்துவப்பிராமணர் முதலானோர் பட்டப்பெயர்; title of certain castes like {} Brahmins.

     [Skt. {} → த. ராயன்]

ராயப்பர்

 ராயப்பர் rāyappar, பெ.(n.)

   பேதுரு என்ற கிறித்துவப் பெரியார்; St. Peter.

     [Skt. {} → த. ராயப்பர்]

ராயர்

 ராயர் rāyar, பெ.(n.)

   சில சாதியாரின் பட்டப்பெயர்; title of certain kallar and other castes.

     [K. {}. T. {} → த. ராயர்]

ராய்சாகிப்

 ராய்சாகிப் rāycākip, பெ. (n.)

   முகமதியரல்லாத இந்தியருக்கு அரசு அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the Government on Indians other than Muhammadans.

     [U. rai+{} → த. ராய்சாகிப்]

ராய்த்தா

 ராய்த்தா rāyttā, பெ.(n.)

பழம் முதலியவற்றை மோரில் ஊறவைத்துச் செய்த உணவு வகை.

     [U. {} → த. ராய்த்தா]

ராவடம்

 ராவடம் rāvaḍam, பெ.(n.)

   அராவு தொழில்; filing.

     [T. {} → ராவடம்]

ராவணன்

 ராவணன் rāvaṇaṉ, பெ.(n.)

   பார்க்க இராவணன்;{}.

     [Skt. Ravana → ராவணன்]

ராவணன் விழி

ராவணன் விழி rāvaṇaṉviḻi, பெ.(n.)

   1. நீரில் வாழும் உயிரி; a mollusc.

   2. நீரில் வாழும்ஒரு வகை உயிரியின் ஓடு; shell of a mollusc.

ராவு-தல்

 ராவு-தல் rāvudal,    வி.(v.) அராவுதல்; to file.

     [Skt. அராவு-ராவு]

ராவுத்தன்

ராவுத்தன் rāvuttaṉ, பெ.(n.)

   குதிரைவீரன்; horseman.

சூர்க்கொன்ற ராவுத்தனே (கந்தரலங். 37);

   2. ஒரு பட்டப் பெயர்; a title.

     [U. raut → ராவுத்தன்]

ராவுராப்பலகை

ராவுராப்பலகை rāvurāppalagai, பெ.(n.)

   1. வாத்தாட்டுப்பலகை; eaves.

   2. மச்சுத்தளத்தின் கீழ்க் கைமரங்களின் மீது பரப்பப்படும் பலகை; ceiling.

ராவ்

 ராவ் rāv, பெ.(n.)

   மகாராட்டிரர். மாத்துவப் பிராமணர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்; title of Maharattas. Madhva Brahmins.

     [U. {} → ராவ்]

ராவ்சாகிப்

 ராவ்சாகிப் rāvcākip, பெ.(n.)

   முகமதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the government on Indians other than muhammadans.

     [U. {} +U. {} → ராவ்சாகிப்]

ராவ்பகதூர்

 ராவ்பகதூர் rāvpagatūr, பெ.(n.)

   முகமதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the government on Indians other than Muhammadans.

     [U. {} → ராவ்பகதூர்]

ரிகாமி

 ரிகாமி rikāmi, பெ.(n.)

   வேலையற்றவன்; unemployed person.

     “கச்சேரியில் வேலை காலியாயிருக்கிறது; ஆனால் ரிகாமி ஒருவனுமில்லை.” (இ.வ.);

     [U. riktakarman → {} → ரிகாமி]

ரிக்சா

 ரிக்சா rikcā, பெ.(n.)

   ஆள் இழுத்துச் செல்லும் பயண வண்டி வகை; rickshaw.

த.வ. ஆள்வண்டி

     [Japanese jinrikisa → rickshaw → ரிக்சா]

ரிங்கின்கயிறு

 ரிங்கின்கயிறு riṅgiṉkayiṟu, பெ.(n.)

   கப்பல்களின் பாய்களை விரிக்கவுஞ் சுருக்கவும் உதவுங்கயிறு; rigging. [E. rigging → த. ரிங்கின் + கயிறு]

ரிசபதேவர்

 ரிசபதேவர் risabatēvar, பெ.(n.)

   நந்திதேவர்; the holy bul nanti.

     [Skt. {} + த. தேவர்]

ரிசபம்

 ரிசபம் risabam, பெ. (n.)

   எருது, காளை; ox.

     [Skt. {} → த. ரிசபம்]

ரிசி

 ரிசி risi, பெ.(n.)

   முனிவன்; sage, saint.

     [Skt. {} → ரிசி]

ரித்ததிதி

 ரித்ததிதி riddadidi, பெ.(n.)

   நான்காவது, ஒன்பதாவது, பதினான்காவது ஆகிய பிறைநாட்களைக் குறிக்கும் பொதுச்சொல்; a common term for the fourth, nineth and fourteenth titi of the lunar fortnight.

த.வ. ஐந்திடையிட்டபிறைநாள்

     [Skt. rikta-tithi → ரித்ததிதி]

ரிபு

 ரிபு ribu, பெ.(n.)

   பகைவன்; enemy.

     [Skt. ripu → ரிபு]

ரியாயத்

 ரியாயத் riyāyat, பெ.(n.)

   வரியின் தள்ளுபடி; abatement of assessment.

ரிவாசா

 ரிவாசா rivācā, பெ.(n.)

   வழக்கம்; custom, practice, usuage.

     [Arab. {} → ரிவாசா]

ரிவாசு

 ரிவாசு rivācu, பெ.(n.)

ரிவாசா பார்க்க;see {}.

ரீகர்

 ரீகர் rīkar, பெ.(n.)

   கரிசல்தரை; black cotton soil.

     [U. {} → ரீகர்]

ரீங்காரம்

 ரீங்காரம் rīṅgāram, பெ.(n.)

   வண்டு முதலியவற்றின் நீள்மென் ஒலி; humming as of bees.

ரீதி

ரீதி rīti, பெ.(n.)

   1. நிலைமை;     “காலரீதி” state, condition.

   2. முறை; mode, method, model, system.

     [Skt. {} → ரீதி]

ரீதிகெளளை

 ரீதிகெளளை rītigeḷaḷai, பெ.(n.)

   ஒரு பண்வகை; a melody type.

     [Skt. {}-gauda → ரீதிகெளளை]

ரீப்தாங்கல்

 ரீப்தாங்கல் rīptāṅgal, பெ.(n.)

   கப்பற்பாயின் உறுப்புகளுள் ஒன்று; reef-band.

     [E. reef → ரீப்தாங்கல்]

ரீப்பர்

 ரீப்பர் rīppar, பெ.(n.)

   வரிச்சல் பட்டை; reeper, long strip or lath of palmyra or other timber.

     [Mhr. rip → E. reeper → ரீப்பர்]

ரீப்பா

 ரீப்பா rīppā, பெ.(n.)

ரீப்பர் பார்க்க;see {}.

ருக்

ருக் ruk, பெ.(n.)

   இருக்கு மறை(வேதம்);; Rg-{}.

   2. வேதமந்திரம்;{}

 hymn.

     [Skt. {} → ருக்]

ருக்கா

 ருக்கா rukkā, பெ.(n.)

   சீட்டு; note, chit, memorandum.

     [U. {} → ருக்கா]

ருக்மினி

 ருக்மினி rukmiṉi, பெ.(n.)

   திருமாலின் மூத்த மனைவி;{} Krishna’s first wife.

     [Skt. {} → ருக்மினி]

ருசி

 ருசி rusi, பெ.(n.)

உருசி பார்க்க;see {}.

     [Skt. ruci → ருசி]

ருசு

ருசு rusu, பெ.(n.)

   1. சான்று; proof.

   2. கையெழுத்து; signature.

     [U. {} → ருசு]

ருசுச்செய்-தல்

 ருசுச்செய்-தல் rususseytal, செ.கு.வி. (v.i.)

   மெய்ப்பித்தல்; to prove or establish by evidence;

 to bring home, as a charge or accusation.

     [U. {} → த. ருசுச்செய்தல்]

ருசுப்படுத்து-தல்

 ருசுப்படுத்து-தல் rusuppaḍuddudal, செ.கு.வி. (v.i.)

ருசுச்செய்-, பார்க்க;see rucuccey-,.

ருசுப்பண்ணு-தல்

 ருசுப்பண்ணு-தல் rusuppaṇṇudal, செ.கு.வி. (v.i.)

ருசுச்செய்-, பார்க்க;see rucuccey-,.

ருசுப்பொறுப்பு

 ருசுப்பொறுப்பு rusuppoṟuppu, பெ. (n.)

   உண்மையெனக் காட்ட வேண்டிய பொறுப்பு; burden of proof.

ருசுப்போடு-தல்

 ருசுப்போடு-தல் rusuppōṭudal, செ.கு.வி (v.i.)

   கையெழுத்துப்போடுதல்; to affix one’s signature.

ருசும்

 ருசும் rusum, பெ.(n.)

   சில பணியாளர் வழக்கமாகப் பெறும் உரிமைப்பணம்; fees, money, payments received by public officers, as perquisites attached to their office.

     [U. {} → ருசும்]

ருசுவு

 ருசுவு rusuvu, பெ.(n.)

ருசு பார்க்க;see {}.

ருத்திரகணப்பெருமக்கள்

 ருத்திரகணப்பெருமக்கள் ruttiragaṇapperumaggaḷ, பெ.(n.)

   ஒரு சார் சிவனடியார்; the a class of {} devotees.

     [Skt. rudra+த. ருத்திர+கணம்+பெருமக்கள்]

ருத்திரன்

 ருத்திரன் ruttiraṉ, பெ.(n.)

உருத்திரன் பார்க்க;see {}.

     [Skt. rudra → ருத்திரன்]

ருத்திரவீணை

 ருத்திரவீணை ruttiravīṇai, பெ.(n.)

உருத்திர வீணை பார்க்க;see {}.

     [Skt. rudra+{} → ருத்திரவீணை]

ருத்திராபிடேகம்

 ருத்திராபிடேகம் ruttirāpiṭēkam, பெ.(n.)

   உருத்திரசூத்தத்தைச் சொல்லி துய்மையான நீரால் நீராட்டுதல்; a ceremonial bath in water sanctioned with the recital of {}.

     [Skt. rudre+{} → ருத்திராபிடேகம்]

ருத்ராட்சம்

 ருத்ராட்சம் rutrāṭcam, பெ.(n.)

   உருத்திராட்ச மணி; rudrak bead.

த.வ. அக்கமணி

     [Skt. {} → ருத்ராஷம்]

ருப்பு-தல்

 ருப்பு-தல் ruppudal, செ.கு.வி.(v.i.)

   தோசை மாவு முதலியன அரைத்தல்; to grind.

     [T.K. rubbu → ருப்பு]

ருப்புக்கல்

 ருப்புக்கல் ruppukkal, பெ.(n.)

   ஆட்டுக்கல் ; stone mortar.

ருப்புக்குழவி

 ருப்புக்குழவி ruppukkuḻvi, பெ.(n.)

   மாவரைக்குங் குழவி; stone roller for grinding.

ருப்புரல்

 ருப்புரல் ruppural, பெ.(n.)

ருப்புக்கல் பார்க்க;see ruppukkal.

ருப்புலக்கை

 ருப்புலக்கை ruppulakkai, பெ.(n.)

   மாவிடிக்கும் உலக்கை; pestle for grinding flour.

ருமானி

 ருமானி rumāṉi, பெ.(n.)

   மாதுளம் வித்தைப் போன்ற சிவந்த நிறமுள்ள மாம்பழவகை; a round reddish mango fruit as resembling in colour the pips of pomegranate.

த.வ. செம்மாங்கனி

     [U. {} → ருமானி]

ருமாலை

 ருமாலை rumālai, பெ.(n.)

   தலைப்பாகை; a head dress.

     [Persn. {} → ருமாலை]

ரூடி

 ரூடி rūṭi, பெ.(n.)

   இடுகுறிப் பெயர்; term used in its conventional sense.

     [Skt. {} → ரூடி]

ரூட்டி

ரூட்டி rūṭṭi, பெ.(n.)

   தொந்தரை; annoyance;

 trouble.

     “ரூட்டி செய்தல் தேதென்று” (விறலிவிடு.855);

     [Skt. {} → ரூட்டி]

ரூட்டியடி-த்தல்

 ரூட்டியடி-த்தல் rūḍḍiyaḍittal, செ.குன்றாவி.(v.t.)

   தொந்தரை செய்தல்; to cause annoyance.

     [Skt. {} → ரூட்டியடி]

ரூபகதாளம்

 ரூபகதாளம் rūpagatāḷam, பெ.(n.)

   ஏழு தாளத்தொன்று; a variety of time measure, one of catta-{}.

த.வ. உருவகத்தாளம்

     [Skt. {} → ரூபகதாளம்]

ரூபகம்

ரூபகம் rūpagam, பெ.(n.)

   1. உருவகம்; metapher.

   2. ரூபகதாளம் பார்க்க;see {}.

   3. பத்துவகைப்பட்ட நாடகம்; drama of which there are ten species.

     [Skt. {} → ரூபகம்]

ரூபம்

ரூபம் rūpam, பெ.(n.)

   1. உருவம்; form, appearance, figure likeness.

   2. ஒளியாகிய புலன்; sense of sight.

   3. அழகு; beauty.

     [Skt. {} → ரூபம்]

ரூபலாவண்ணியம்

 ரூபலாவண்ணியம் rūpalāvaṇṇiyam, பெ. (n.)

   வடிவழகு; beauty of form, loveliness.

     [Skt. {} → ரூபலாவண்ணியம்]

ரூபவதி

 ரூபவதி rūpavadi, பெ.(n.)

   வடிவழகுள்ளவள்; beautiful, handsome woman.

த.வ. வடிவழகி

     [Skt. {} → ரூபவதி]

ரூபா

 ரூபா rūpā, பெ.(n.)

ரூபாய் பார்க்க;see {}.

     [Skt. {} → ரூபா]

ரூபாய்

ரூபாய் rūpāy, பெ.(n.)

   ஒரு தோலா எடையுள்ள வெள்ளி நாணயவகை; a current silver coin of 180 gr, composed of 165 parts pure silver and 15 parts alloy=1 tola in weight.

த.வ. வெண்பொன்

     [Skt. {} → ரூபாய்]

ரூபாவதி

 ரூபாவதி rūpāvadi, பெ.(n.)

   மேளகர்த்தாக்களு ளொன்று; a primary {}.

ரூபாவரி

 ரூபாவரி rūpāvari, பெ.(n.)

   தோட்டக்கால்களுக்கு விதிக்கும் வரிவகை; a special tax on garden lands.

ரூபி

ரூபி1 rūpittal, செ.கு.வி. (v.i.)

   மெய்ப்பித்தல்; to prove, demonstrate.

     [Skt. {} → ரூபி]

 ரூபி2 rūpi, பெ.(n.)

   1. உருவமுடையது; that which has shape, visible object, as having form.

   2. அழகுடையவன்/ள்; handsome, well-shaped person.

     [Skt. {} → ரூபி]

ரூப்காரி

 ரூப்காரி rūpkāri, பெ.(n.)

   வழக்கு நடவடிக்கை; judicial proceeding.

     [Persn. {} → ரூப்காரி]

ரூப்ரூப்

 ரூப்ரூப் rūprūp,    து.வி.(adv.) முன்னிலையில்; in person, in one’s presence, personally, face to face.

     [Persn. {} → ரூப்ரூப்]

ரூலர்

 ரூலர் rūlar, பெ.(n.)

   கோடு இடுதற்குதவுங் கோல்; ruler.

த.வ. கோட்டுக்கோல்

     [E. ruler → ரூலர்]

ரூல்கட்டை

 ரூல்கட்டை rūlkaṭṭai, பெ.(n.)

ரூலர்(இக்.வ); பார்க்க;see {}.

     [E. rulle → ரூல்+கட்டை]

ரூல்கம்பு

ரூல்கம்பு rūlkambu, பெ.(n.)

ரூலர் பார்க்க;see {}.

     [E. rule+ கம்பு1 → ரூல்+கம்பு]

ரூல்கழி

ரூல்கழி rūlkaḻi, பெ.(n.)

ரூலர்(சிக்.வ.); பார்க்க;see {}.

     [E. rule+ கழி4 → ரூல்+கழி]

ரூல்தடி

ரூல்தடி rūltaḍi, பெ.(n.)

ரூலர் பார்க்க;see {}.

     [E. rule+ தடி2 → ரூல்+தடி]

ரெட்டநாடி

 ரெட்டநாடி reṭṭanāṭi, பெ.(n.)

இரட்டை நாடி பார்க்க;see {}.

     “அவன் ரெட்ட நாடி”

ரெட்டி

 ரெட்டி reṭṭi, பெ.(n.)

   தெலுங்கு நாட்டினின்று குடியேறிய உழுதுண்ணுந் தொழிலினர்; an immigrant caste of telugu cultivators.

     [T.K. {} → த. ரெட்டி]

ரெட்டு

ரெட்டு reṭṭu, பெ.(n.)

இரட்டு 2 (வின்.); பார்க்க;see {}.

     [T.K. {} → த. ரெட்டு]

ரெப்பை

 ரெப்பை reppai, பெ.(n.)

   கண்இமை; eyelid.

     [T. reppa, k.reppe → த. ரெப்பை]

ரெம்மி-த்தல்

 ரெம்மி-த்தல் remmittal, செ.கு.வி. (v.i.)

   பொருத்துதல்; to join as boards or planks.

     [E. ram → த. ரெம்மி]

ரெளத்திராகாரம்

 ரெளத்திராகாரம் reḷattirākāram, பெ.(n.)

   வன் கொடுமையின் (பயங்கரத்தின்); வடிவு; embodiment of ferocity.

     [Skt. raudra + {} → த. ரௌத்தராகாரம்]

ரேகடி

 ரேகடி rēkaḍi, பெ.(n.)

   கரிசல் நிலம்; black cotton soil.

     [U. {} → T. {} → த. ரேகடி]

ரேகாமூலம்

 ரேகாமூலம் rēkāmūlam, பெ. (n.)

   அடிப்படை ஆவணத்தின் மூலச்சான்று; documentary evidence.

     [Skt. {}+ → ரேகா+மூலம்]

ரேகாம்சம்

 ரேகாம்சம் rēkāmcam, பெ.(n.)

   குறிப்பிட்ட வரிகை (ரேகை);க்குந் துவக்கமாகக் கொண்ட வரிகை (ரேகை);க்கும் இடைப்பட்ட கோணத்தின் நடுஅளவு; longitude.

த.வ. வரிகைக் கோணம்

     [Skt. {} → த. ரேகாம்சம்]

ரேகை

ரேகை1 rēkai, பெ.(n.)

   நாணயவகை; a coin.

 ரேகை2 rēkai, பெ.(n.)

   1. (வரிகை); இரேகை பார்க்க;see {}.

   2. கோளங்களில் துருவத்தின் வழியே செல்வதாகக் கருதப்படுங்கோடு; meridian.

த.வ. வரிகை

     [Skt. {} → த. ரேகை]

ரேக்கு

ரேக்கு rēkku, பெ.(n.)

   1. பூவிதழ்; petal of flowers.

   2. தங்கம் முதலியவற்றின் மெல்லிய தகடு; toil of metal.

     “தங்கரேக்காற் சமைத்திட்டபாரக் கொங்ககைக் குறியும்” (தனிப்பா.1-378,21);

     [U. {} → த. ரேக்கு]

ரேக்ளா

 ரேக்ளா rēkḷā, பெ.(n.)

ரேக்ளாவண்டி பார்க்க;see {}

     [U. {} → த. ரேக்ளா]

ரேக்ளாவண்டி

 ரேக்ளாவண்டி rēkḷāvaṇṭi, பெ.(n.)

   ஒருவன் மாத்திரம் உட்கார இடமுள்ள ஒற்றை மாட்டுவண்டி வகை; a kind of single bullock-cart with only one seat.

த.வ. ஒற்றை வண்டி

     [U. {}+ → த. ரேக்ளா+வண்டி]

ரேங்கு-தல்

 ரேங்கு-தல் rēṅgudal, செ.குன்றாவி(v.t.)

   சினமூளுதல்; to rage, to be angry.

     [T.K. {} → த. ரேங்கு]

ரேடியோ

 ரேடியோ rēṭiyō, பெ. (n.)

   வானொலி; radio.

     [E. radio → த. ரேடியோ.]

ரேணு

 ரேணு rēṇu, பெ.(n.)

   பொடி; dust.

     [Skt. {} → ரேணு]

ரேந்தா

 ரேந்தா rēndā, பெ.(n.)

   சித்திரப்பின்னற்குரிய ஊசி வகை; a needle used in embroidery work.

ரேந்தாத்தையல்

 ரேந்தாத்தையல் rēndāttaiyal, பெ.(n.)

   பூவேலைத் தையல்; lace-work.

ரேந்தை

 ரேந்தை rēndai, பெ.(n.)

ரேந்தாத்தையல் பார்க்க;see {}-ttaiyal.

ரேழி

 ரேழி rēḻi, பெ.(n.)

இரேழி பார்க்க;see {}.

     [இடைகழி-டேகழி-ரேழி]

ரேவதி

ரேவதி rēvadi, பெ. (n.)

   இருபத்தேழாம் நாள்மீன்; the 27th naksatra.

     [Skt. {} → த. ரேவதி]

ரேவு

ரேவு rēvu, பெ.(n.)

   1. இறங்கு துறை; landing place, ford, port, harbour.

   2. ஆயத்துறை; custom-house.

     [T.K. {} → ரேவு]

ரையசைக்கிளவி

ரையசைக்கிளவி raiyasaikkiḷavi, பெ. (n.)

   ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல் (தொல், எழுத். 34);; word used in inviting attention, as கேள், I.e, listen in கேண்மியா. (செ.அக.);.

     [உரை6 + அசை + கிளவி.]

ரையனுமானம்

 ரையனுமானம் raiyaṉumāṉam, பெ. (n.)

உரை யுய்த்துணர்வு பார்க்க;see urai-y-uyfumarwu.

ரையன்

ரையன் raiyaṉ, பெ. (n.)

     ‘செப்பினஞ் செலினே’ எனும் குறுந்தொகைப் பாவைப் பாடிய சங்க மருவிய தமிழப் புலவருள் ஒருவர்;

 a poet of later Sangam age.

     [உரை5 + அன்.]

ரையறிகருவி

ரையறிகருவி raiyaṟigaruvi, பெ. (n.)

   1. உரைகல் (திவா.);; touch stone.

   2. மாற்றறிவிக்கும் ஆணி; tounch needle. (W.); (செ.அக.);.

     [உரை5 + அறி + கருவி.]

ரையல்

ரையல் raiyal, பெ. (n.)

   சொல்லுகை; narrating. relating.

     “கனவின் றலையிட்டுரையல்” (கலித். 92,57);. (செ.அக.);.

ம. உரய்பு.

     [உரை5 + அல்.]

ரையளவை

ரையளவை raiyaḷavai, பெ. (n.)

முறைமை அளவை (ஆகமப் பிரமாணம்); (சி. சி. அளவை,

   2. சிவஞா.]; proof from the sastras. (செ.அக.);.

     [உரை + அளவை.]

ரையாசிரியன்

ரையாசிரியன் raiyāciriyaṉ, பெ. (n.)

   உரைகாரன் (இலக் கொத்.6);; comentator. (செ.அக.);.

     [உரை6 + ஆசிரியன்.]

ரையாசிரியர்

ரையாசிரியர் raiyāciriyar, பெ. (n.)

   1. உரையாசிரி யன் பார்க்க see urai-y-asiriyan.

   2. இளம்பூரணர்; IIampuranar the first commentator of Tolkappiyam.

     “உரையா சிரியரும்…. விரிப்புழி” (தொல். சொல்.

   2. சேனா.).

     [உரை6 + ஆசிரியர்.]

ரையாடு-தல்

ரையாடு-தல் raiyāṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. சொல்லுதல்; to say, tel.

     “பணிந்த சொல்லுரை யாடினன்” (பிரபுலிங் இட்டலிங். 42);.

   2. கலந்து பேதல்; to converse. (செ.அக.);.

     [உரை5 + ஆடு.]

ரையாணி

ரையாணி raiyāṇi, பெ. (n.)

   மாற்றறிவிக்கும் ஆணி; touch-meedle,

     “சிவஞானசித்தி சிவாகமார்த்தங்களுக் கெல்லாம் உரையாணி” (சிவசம. 33);. (செ.ஆக.);.

     [உரை5 +ஆணி.]

ரொக்க வியாபாரம்

 ரொக்க வியாபாரம் rokkaviyāpāram, பெ.(n.)

   பணத்திற்குப் பண்டங்களை விற்கும் வியாபாரம்; cash transactions.

த.வ. கைப்பணவணிகம்.

     [Skt. {} → த. ரொக்கவியாபாரம்]

ரொக்கக்காரன்

ரொக்கக்காரன் rokkakkāraṉ, பெ. (n.)

   1. முதலாளி; capitalist.

   2. பணக்காரன்; rich man as having cash.

ரொக்கசாமீன்

 ரொக்கசாமீன் rokkacāmīṉ, பெ.(n.)

   பணமாகக் கொடுக்கும் பிணை; security in money, cash security.

ரொக்கப்பட்டா

 ரொக்கப்பட்டா rokkappaṭṭā, பெ.(n.)

   பணத்துக்குக் குத்தகையாக விடப்படும் நிலத்திற்குக் கொடுக்கப்படும் பட்டா; a patta for land leased for cash rent.

ரொக்கம்

 ரொக்கம் rokkam, பெ.(n.)

   அணியமாக இருக்கும் பணம்; cash, ready money.

த.வ. கைப்பணம்.

     [K. rokka → Skt. {} → த. ரொக்கம்]

ரொக்காதாயம்

ரொக்காதாயம் rokkātāyam, பெ.(n.)

   1. பணமாக வரும் வரும்படி; cash receipts or income.

   2. செலவு நீங்கிய மிச்சவரும்படி; net profit.

த.வ. கைப்பணவருவாய்.

     [Skt. {}+ → த. ரொக்காதாயம்]

ரொச்டு

ரொச்டு rocṭu, பெ.(n.)

   1. தொந்தரவு; trouble, annoyance.

   2. சீர்குலைகை; confusion, disorder.

     [T.K. {} → ரொச்டு]

ரொட்டி

 ரொட்டி roṭṭi, பெ.(n.)

   கோதுமை மாவாற் செய்த உணவு வகை; bread, wheaten cake.

த.வ. உருட்டி, அடை

     [U. {}(k.{}); → த. ரொட்டி]

ரோகசாந்தி

ரோகசாந்தி rōkacāndi, பெ.(n.)

   நோய் குணமாகை; alleviation or cure of disease.

   2. நோய் நீங்கும் பொருட்டுச் செய்யுஞ் சடங்கு வகை; a purificatory ceremony for the cure of diseases.

த.வ. நோய்தணுப்பு

     [Skt. {} → த. ரோக+சாந்தி]

ரோகநிதானம்

 ரோகநிதானம் rōkanitāṉam, பெ.(n.)

   நோயை இன்னதென்று கண்டறிகை; diagnosis of disease.

த.வ. நோய்நோட்டம்

     [Skt. {}+ → த. ரோக+நிதானம்]

ரோகநிவாரணம்

 ரோகநிவாரணம் rōkanivāraṇam, பெ.(n.)

   நோய் நீங்குகை; cure of disease.

     [Skt. {}+ → த. ரோக+நிவாரணம்]

ரோகா

ரோகா rōkā, பெ. (n.)

   1. துண்டு; bit, piece.

   2. சீட்டு; note, chit.

     [U. {} → ரோகா]

ரோகி

 ரோகி rōki, பெ. (n.)

   நோயாளி; diseased person.

     [Skt. {} → ரோகி]

ரோக்கா

ரோக்கா rōkkā, பெ.(n.)

   1. ரோகா பார்க்க;see {}.

   2. கடன் தொகையைக் குறிக்கும் உறுதிச்சீட்டு; a written acknowledgment of a debt.

   3. பணம் அல்லது பண்டங்களை யனுப்புமாறு கூறும் அரசு ஆணை (அப.பா);; an order issued by the government authorising specific payments or supplies.

     [U. {} → ரோக்கா]

ரோசனபிளாசுதிரி

 ரோசனபிளாசுதிரி rōcaṉabiḷācudiri, பெ.(n.)

   ஒட்டுத்துணி; sticking plaster, resinplaster, emplastrum resinae.

த.வ. ஒட்டொட்டி

ரோசனம்

 ரோசனம் rōcaṉam, பெ.(n.)

   காய்ச்சியபிசின்; resin.

     [E. Rosin → த. ரோசனம்]

ரோசனா

 ரோசனா rōcaṉā, பெ.(n.)

   பார்ப்பார், பக்கிரி, ஏழை போன்றவர்க்குக் கொடுக்கும் நாட்படி; a daily allowance granted to Brahmins, fakirs and poor persons.

     [Hind. {} → த. ரோசீனா]

ரோசம்

ரோசம் rōcam, பெ.(n.)

   1. மானம் ; keen sensibility, high sense of honour.

   2. கோபம்; anger.

     [Skt. {} → த. ரோசம்]

ரோசா

 ரோசா rōcā, பெ.(n.)

   பூச்செடி வகை; rose.

     [Lat. rosa → த. ரோசா]

 ரோசா rōcā, பெ. (n.)

   முளரி; rose.

     [Lentin. rosa → த. ரோசா.]

ரோசாம்பரம்

 ரோசாம்பரம் rōcāmbaram, பெ (n.)

   பூச்செடிவகை; a flowering plant.

ரோச்

ரோச் rōc, பெ.(n.)

   1. நாள் வழிக்கணக்கு; journal, day-book.

   2. நாள்; day.

     [Skt. {} → த. ரோச்]

ரோச்கார்

 ரோச்கார் rōckār, பெ.(n.)

   தொழில்; service, employment.

     [Persn. {} → த. ரோச்கார்]

ரோதனம்

ரோதனம்3 rōtaṉam, பெ.(n.)

   தடை; obstruction.

     [Skt. {} → ரோதனம்]

ரோதம்

ரோதம்1 rōtam, பெ.(n.)

   1. நீர்க்கரை; bank, shore.

     “சீத ரோதக் குருதித் திரையொரீஇ” (கம்பரா.இராவணன்கோ.2);.

   2. அணை; dam.

     [Skt. {} → ரோதம்]

 ரோதம்2 rōtam, பெ.(n.)

ரோதனம்2 பார்க்க;see {}.

     [Skt. {} → ரோதம்]

ரோந்தடி-த்தல்

ரோந்தடி-த்தல் rōndaḍittal, செ.கு.வி.(v.i.)

   1. இரவில் ஊரைச் சுற்றிச் சென்று காத்தல்; to keep watch at night.

   2. அலைந்து திரிதல்; to roam, wander about.

     “உத்தியோகத்துக்கு ரோந்தடிக்கிறான்”

ரோந்து

 ரோந்து rōndu, பெ.(n.)

   இராக்காவல்; night patrol.

     [Fr ronde → ரோந்து]

ரோந்தை

ரோந்தை rōndai, பெ.(n.)

   1. சீத்தை (அசங்கியம்);; filthiness.

ரோமம்

 ரோமம் rōmam, பெ.(n.)

   மயிர்; hair.

     [Skt. {} → த. ரோமம்]

ரோமான்கத்தோலிக்கன்

 ரோமான்கத்தோலிக்கன் rōmāṉkattōlikkaṉ, பெ.(n.)

   கிறித்தவரில் ஒரு பிரிவினன்; Roman Catholic.

     [E. Romancatholic → த. ரோமான் கத்தோலிக்கன்]

ரோமாபுரி

 ரோமாபுரி rōmāpuri, பெ.(n.)

   இத்தாலிய தேசத்துத் தலைநகர்; rome.

     [Lat. {}+ → த. ரோமா+புரி]

ரோம்புவாசல்

 ரோம்புவாசல் rōmbuvācal, பெ. (n.)

   கப்பலில் பெரிய பாய்மரத்தின் கீழுள்ள அடித்தளத்துக்குச் செல்லும் வழி; main hatch way.