தலைசொல் | பொருள் |
---|---|
ரோகசாந்தி | ரோகசாந்தி rōkacāndi, பெ.(n.) நோய் குணமாகை; alleviation or cure of disease. 2. நோய் நீங்கும் பொருட்டுச் செய்யுஞ் சடங்கு வகை; a purificatory ceremony for the cure of diseases. த.வ. நோய்தணுப்பு [Skt. {} → த. ரோக+சாந்தி] |
ரோகநிதானம் | ரோகநிதானம் rōkanitāṉam, பெ.(n.) நோயை இன்னதென்று கண்டறிகை; diagnosis of disease. த.வ. நோய்நோட்டம் [Skt. {}+ → த. ரோக+நிதானம்] |
ரோகநிவாரணம் | ரோகநிவாரணம் rōkanivāraṇam, பெ.(n.) நோய் நீங்குகை; cure of disease. [Skt. {}+ → த. ரோக+நிவாரணம்] |
ரோகா | ரோகா rōkā, பெ. (n.) 1. துண்டு; bit, piece. 2. சீட்டு; note, chit. [U. {} → ரோகா] |
ரோகி | ரோகி rōki, பெ. (n.) நோயாளி; diseased person. [Skt. {} → ரோகி] |
ரோக்கா | ரோக்கா rōkkā, பெ.(n.) 1. ரோகா பார்க்க;see {}. 2. கடன் தொகையைக் குறிக்கும் உறுதிச்சீட்டு; a written acknowledgment of a debt. 3. பணம் அல்லது பண்டங்களை யனுப்புமாறு கூறும் அரசு ஆணை (அப.பா);; an order issued by the government authorising specific payments or supplies. [U. {} → ரோக்கா] |
ரோசனபிளாசுதிரி | ரோசனபிளாசுதிரி rōcaṉabiḷācudiri, பெ.(n.) ஒட்டுத்துணி; sticking plaster, resinplaster, emplastrum resinae. த.வ. ஒட்டொட்டி |
ரோசனம் | ரோசனம் rōcaṉam, பெ.(n.) காய்ச்சியபிசின்; resin. [E. Rosin → த. ரோசனம்] |
ரோசனா | ரோசனா rōcaṉā, பெ.(n.) பார்ப்பார், பக்கிரி, ஏழை போன்றவர்க்குக் கொடுக்கும் நாட்படி; a daily allowance granted to Brahmins, fakirs and poor persons. [Hind. {} → த. ரோசீனா] |
ரோசம் | ரோசம் rōcam, பெ.(n.) 1. மானம் ; keen sensibility, high sense of honour. 2. கோபம்; anger. [Skt. {} → த. ரோசம்] |
ரோசா | ரோசா rōcā, பெ.(n.) பூச்செடி வகை; rose. [Lat. rosa → த. ரோசா] ரோசா rōcā, பெ. (n.) முளரி; rose. [Lentin. rosa → த. ரோசா.] |
ரோசாம்பரம் | ரோசாம்பரம் rōcāmbaram, பெ (n.) பூச்செடிவகை; a flowering plant. |
ரோச் | ரோச் rōc, பெ.(n.) 1. நாள் வழிக்கணக்கு; journal, day-book. 2. நாள்; day. [Skt. {} → த. ரோச்] |
ரோச்கார் | ரோச்கார் rōckār, பெ.(n.) தொழில்; service, employment. [Persn. {} → த. ரோச்கார்] |
ரோதனம் | ரோதனம்3 rōtaṉam, பெ.(n.) தடை; obstruction. [Skt. {} → ரோதனம்] |
ரோதம் | ரோதம்1 rōtam, பெ.(n.) 1. நீர்க்கரை; bank, shore. “சீத ரோதக் குருதித் திரையொரீஇ” (கம்பரா.இராவணன்கோ.2);. 2. அணை; dam. [Skt. {} → ரோதம்] ரோதம்2 rōtam, பெ.(n.) ரோதனம்2 பார்க்க;see {}. [Skt. {} → ரோதம்] |
ரோந்தடி-த்தல் | ரோந்தடி-த்தல் rōndaḍittal, செ.கு.வி.(v.i.) 1. இரவில் ஊரைச் சுற்றிச் சென்று காத்தல்; to keep watch at night. 2. அலைந்து திரிதல்; to roam, wander about. “உத்தியோகத்துக்கு ரோந்தடிக்கிறான்” |
ரோந்து | ரோந்து rōndu, பெ.(n.) இராக்காவல்; night patrol. [Fr ronde → ரோந்து] |
ரோந்தை | ரோந்தை rōndai, பெ.(n.) 1. சீத்தை (அசங்கியம்);; filthiness. |
ரோமம் | ரோமம் rōmam, பெ.(n.) மயிர்; hair. [Skt. {} → த. ரோமம்] |
ரோமான்கத்தோலிக்கன் | ரோமான்கத்தோலிக்கன் rōmāṉkattōlikkaṉ, பெ.(n.) கிறித்தவரில் ஒரு பிரிவினன்; Roman Catholic. [E. Romancatholic → த. ரோமான் கத்தோலிக்கன்] |
ரோமாபுரி | ரோமாபுரி rōmāpuri, பெ.(n.) இத்தாலிய தேசத்துத் தலைநகர்; rome. [Lat. {}+ → த. ரோமா+புரி] |
ரோம்புவாசல் | ரோம்புவாசல் rōmbuvācal, பெ. (n.) கப்பலில் பெரிய பாய்மரத்தின் கீழுள்ள அடித்தளத்துக்குச் செல்லும் வழி; main hatch way. |